மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவருடன் உங்களை இணைப்பதே எமது வேலை

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவருடன் உங்களை இணைப்பதே எமது வேலை

 

ஆயிரம் தான் சொல்லுங்கள் மீண்டும் ஜாதகத்தைத் தேடி நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் வருகின்றதா…? என்ற நிலையில் தான் தேடிச் செல்ல முடியும். நேரத்தை உங்களால் மாற்ற முடியாது.
1.இந்த உடலுக்காக நல்ல நேரத்தைத் தேடி அலைவீர்கள்.
2.பதிந்த உணர்வுகளால் ஆசை ஓங்கிக் கொண்டேயிருக்கும்.
3.அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக் கொண்டே வரும்.
4.வேதனை கூடித் தன்னை அழிக்கும் உணர்வுகள் விளைந்து விடும்\
5.பின் அதனின் நிலைகள் மனித உருவைச் சீர்குலைக்கும் தன்மையாகத் தான் வரும்.

மனிதனாகப் பிறந்து அறிந்திடும் அறிவு ஏழாக இருப்பினும் ஏழாவது நிலையான ஒளி நிலை பெறவில்லை என்றால் அறிந்திடும் அறிவின் துணை கொண்டு இருளைப் போக்க வேண்டுமே தவிர இருளைச் சேர்ப்பது அல்ல.

ஏழாவது அறிவு கொண்டு பொருளைக் காண முடியும். மனிதனால். பொருளைக் கண்டபின் இருளை நீக்கிட வேண்டும்.

மனிதரான நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினை உடல் பிளக்கின்றது… நல்ல உணர்வினை வலுவாக மாற்றுகின்றது. நல்ல உணர்வின் தன்மை கொண்டு அறிந்திடும் அறிவு வருகின்றது.

1.அறிந்திடும் அறிவு கொண்டு நாம் நுகர்ந்திட்ட உணர்வுக்குள் இருக்கும் இருளை நீக்க வேண்டும்.
2.இருளை நீக்கி ஒளியின் தன்மையாக மாற்றிடும் சக்தி பெற வேண்டும் என்பதுதான் ஞானிகள் காட்டி அறநெறிகள்.

அதனை நீங்கள் பெற வேண்டும்.

இதனை ஏன் சொல்கிறேன் என்றால் செடிகளுக்கு என்று ஒவ்வொரு குணங்கள் உண்டு. ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு உரம் உண்டு..

நாம் இங்கே கூடி உள்ளோம் என்றால் பல கோடித் தாவர இனங்களுடைய சத்தை உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் சத்தே உடலாக ஆனது… ஜீவ அணுக்களாக மாற்றியது… அதனின் மலம் கொண்டு சரீரம் பெற்றவர்கள் நாம்.

அதைப் போன்ற உணர்வுகளில் வாடிய குணங்கள் எத்தனையோ உண்டு… வாடிய உணர்வுகள் பலவும் உண்டு.

1.அருள் ஞானிகள் உணர்வின் நிலைகளை நினைவு கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைத்து இணைத்து
2.இணைத்திடும் உணர்வின் தன்மை கொண்டு வாடிய பயிரை நீக்கி
3.அருள் ஞானிகள் உணர்வு கொண்டு உங்களைச் செழிக்கச் செய்கின்றோம்.

அக்ரிகல்ச்சரில் பல வீரிய உணர்வின் சக்தி கொண்ட உணர்வை இணைத்து புதுப் புது வித்துக்களை எப்படி உருவாக்குகின்றார்களோ இதைப் போலத் தான் ஞானிகள் உணர்வின் தன்மையை உங்களுடன் இணைக்கின்றோம்.

அன்றைய மகரிஷிகள் காட்டிய நிலைகளில்
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கொடுத்த உணர்வின் துணை கொண்டு பேரண்டத்தின் நிலைகளை அறிந்து
2.அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தீமைகளைப் பிளந்து தீமைகளைப் பிளந்திடும் உணர்வைத் தன்னுள் விளைய வைத்து
3.விளைந்த உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றி நிலை கொண்டிருக்கும் அவரின் உணர்வை
4.நினைவு கொண்டு உங்களுடன் இணைத்து இணைத்து இணைத்து… உங்களுக்குள் அதை உரமாக இணைப்பதே எமது வேலை.

உயிர் இருக்கும் வரை தான் நமக்கு மதிப்பு

உயிர் இருக்கும் வரை தான் நமக்கு மதிப்பு

 

வியாசகர் அன்று காட்டியது… கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் தான் மகாபாரதப் போர் நடக்கின்றது… குருக்ஷேத்திரப் போராகக் கண்ணன் வழி நடத்துகின்றான் என்று காட்டப்பட்டது.

நமக்குள் எண்ணிய உணர்வுகள் உயிரான குருவின் இயக்கத்தில் தான் வருகின்றது.

எதிர் நிலைகள் கொண்டு கண் மற்றொருவர் செயலைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வினைச் சுவாசித்து உயிரான குருச்சேத்திரத்தில் மோதச் செய்கிறது.

1.நம் நல்ல எண்ணமும் பிற நிலையில் நடக்கும் உணர்வுகளும் குருச்சேத்திரப் போரில்
2.நம் கண் அந்த உணர்வினை இழுத்துக் கொடுக்கும் போது நாதத்தின் உணர்வாக அது இயக்கி…
3.சொல்லாகப் பேசுவதும் மற்ற நிலைகள் நம்மை இயக்குவதும் இதுதான்.

அதைத் தான் கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் குருச்சேத்திரப் போர் நடக்கின்றது என்று சொல்வது.

புறக்கண்ணால் பார்க்கும் உணர்வுகள் கண் அதைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி உயிரான குருச்சேத்திரத்தில் இணைந்த பின் நமக்குள் இருக்கும் எண்ணங்கள் இரண்டும் அது பிணைந்து எதனின் வலுவோ அதனின் நிலைகள் கொண்டு இயக்குகின்றது என்ற இந்த நிலையைத் தெளிவாக எடுத்துரைப்பதற்குத் தான் அந்த அருள் ஞானிகள் இவ்வாறு சொன்னார்கள்.

இதைப் போல
1.ஒவ்வொரு நொடியிலும் அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது
2.அந்த குருச்சேத்திரத்தில் ஞானிகள் உணர்வு வலுக் கூடி
3.மனித வாழ்க்கையில் வந்த இருளை வென்று தூய்மையான நிலைகளையும் என்றும் பிறவா நிலை அடையச் செய்யும் இந்த நிலை வரும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதையே கண் அந்த உணர்வின் ஆற்றலால் கவர்ந்து நம் உடலின் இணைப்புக்குள் கொண்டு வருகின்றது என்று அன்று தெளிவாக எடுத்துரைத்தனர்.

1.நமது குருநாதர் இந்த நூற்றாண்டிலே வெளிப்படுத்திய அருள் சக்திகள்… அவருடைய உணர்வுகள் இங்கே படர்ந்துள்ளது.
2,அவரின் அருள் துணை கொண்டு வலு கொண்டு விண்ணை நோக்கி நாம் ஏகி
3.அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது இந்த உணர்வு நமக்குள் கிடைக்கின்றது.

அவ்வாறு கிடைக்கப் பெறச் செய்வதற்குத் தான் உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக வணங்கி உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை எல்லாம் தெய்வங்களாக எண்ணி அந்த மகரிஷிகள் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று அதை உரமாக ஏற்றி அதைச் செருகச் செய்து அந்த மெய்ப்பொருளைக் காணும் நிலையாக வைகுண்ட ஏகாதசி பத்தாவது நிலையான நம் குருநாதர் அடைந்த நிலையை நாமும் பெற முடியும் என்று உங்களைத் தன்னம்பிக்கை கொள்ளச் செய்கிறோம்..

நாம் எதை கொடுக்கின்றோமோ நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தான் நம் உயிர் படைக்கின்றது. அந்த உணர்வினை உடலில் பரவச் செய்கின்றது அதையே விளையச் செய்கின்றது விளைந்ததைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.

1.நமக்குள் ஈசன் இருக்கும் பொழுது அவனின்றி அணுவும் அசையாது என்பது போல
2.நமக்குள் உயிர் இல்லை என்றால் நான் என்ற நிலை ஏது…?

நான் இன்று பேசுவதெல்லாம் மகிழ்ந்து உறவாடுகின்றேன் மகிழ்ச்சியாக எண்ணுகின்றேன். ஆனால் இந்த உடலை விட்டு என் உயிர் போய்விட்டால் என்ன செய்யப் போகின்றீர்கள்…?

உடனே இது சவம் என்றும்… இந்த உடலை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்…? என்று தான் கேட்பீர்கள். பேசிய உணர்வின் நிலைகள் நிலைத்திருக்கிறதா என்றால் இல்லை.

இந்தச் சரீரத்திற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. என் உடலுக்குள் இருக்கும் உயிரின் இயக்கத்தைத் தான் மதிக்கின்றார்கள். இதைப் போன்று உடலுக்குள் உயிர் இருக்கும் வரை தான் நமக்கு மதிப்பு. உயிர் வெளியேறி விட்டால் நமக்கு மதிப்பு இல்லை.

ஆகவே ஒவ்வொருவரும்…
1.உடலுக்குள் உயிர் இருக்கும் போது உயிரைக் கடவுளாக மதித்து
2.அவனுடன் ஒன்றிய உணர்வாக என்றும் நாம் ஒளியாகச் செல்வோம் என்றால் உயர்ந்த நிலைகளை அடைய முடியும்.
3.அதைச் செய்வதற்கு நாம் துணிந்து செயல்பட வேண்டும்.

சும்மா… திரும்பத் திரும்பச் சொல்வது தான் என் வேலை என்று எண்ணுவார்கள்

சும்மா… திரும்பத் திரும்பச் சொல்வது தான் என் வேலை என்று எண்ணுவார்கள்

 

காலையில் எழுந்தவுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவணுக்கள். ஜீவான்மாக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுங்கள்.

யாம் இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகிறோம் என்று நீங்கள் எண்ண வேண்டியதில்லை. யாம் உபதேசிப்பதைக் கேட்டு விட்டு இப்போது சாமி என்ன சொன்னார்…? என்று திரும்பக் கேட்டால் தலையைச் சொறிவீர்கள்.

1.ஆனால் நான் திரும்பச் சொன்னால்… அப்பொழுது சொன்னதைத்தான் திரும்பச் சொல்கின்றார்.
2.சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது தான் இவர் வேலை போலிருக்கிறது என்பீர்கள்.

இராமாயணத்தைச் சொல்லிக் கொண்டே வருவார்கள். எத்தனையோ காலம் காலமாகச் சொன்னாலும் அதிலே மாற்றி ஏதாவது சொல்கின்றார்களா…? இல்லை.

இராமாயணத்தைத் திரும்பத் திரும்பப் படித்து அல்லது கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். யாம் திரும்பத் திரும்ப உங்களுக்கு உபதேசித்தால் தான் அந்த அணுக்களின் பெருக்கமாக ஆகும்.

நூறு தரம் மற்றதைச் சொல்லிவிட்டு இரண்டு தரம் இதைச் சொல்லும் பொழுது இது மறைந்து விடுகின்றது.
1.அவன் இப்படிச் செய்தான்…. குடும்பத்தில் இப்படி ஆனது தொழில் நஷ்டம் ஆனது என்று நூறு தடவை வேதனையுடன் சொல்கின்றீர்கள்.
2.நல்லதை ஒரு தரம் சொன்னால் அது அழிந்து விடுமே…. பின் எங்கிருந்து அது மாறுவது…?

அதனால் தான் உங்களுக்குள் இதைத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தி நல்ல சக்திகளைப் பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றோம். அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை ஊற்ற ஊற்றத்தான் அது தெளிவாகிக் கொண்டு வரும்.

1.எத்தனையோ சங்கட உணவுகள் கொண்டு நாம் வாழும் நிலையில்
2.மீண்டும் மீண்டும் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்திகளை உங்களுக்குள் செலுத்தத் செலுத்தத் தான் அந்த உணர்வின் வலிமை பெறுவீர்கள்.
3.அப்படி நீங்கள் வலுப்பெற வேண்டும் உங்களுக்குள் அதை வலுப்பெறச் செய்ய வேண்டும் என்பதற்குதான்
4.திரும்பத் திரும்ப உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

ஆகவே நாம் இந்த வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும்.

என்னிடம் கஷ்டம் என்று சொன்ன குடும்பங்கள் எல்லாம் மகிழ்ந்து வாழ வேண்டும். அவர்கள் கஷ்டங்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்.

அவர்கள் நன்றாக ஆக வேண்டும் என்று இப்படி நாம் எண்ணும் பொழுது இது நமக்கு முன்னாடி வந்து விடுகின்றது. அந்த உணர்வு என்னுடன் சேர்த்துத் தான் வாழ்கின்றது. அவர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது எனக்குள் அது நலமாகின்றது.

1.ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று
2.எல்லா உணர்வுகளுக்கும் திரும்பத் திரும்பச் சேர்க்கும் ஒரு பழக்கம் நம்மிடம் வர வேண்டும்

உங்கள் விலா எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாக்க வேண்டிய முக்கியமான சக்தி

உங்கள் விலா எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாக்க வேண்டிய முக்கியமான சக்தி

 

அகஸ்தியன் தாய் கருவிலே சிசுவாக இருக்கப்படும் பொழுது பல விஷத்தன்மையான மிருகங்களிடமிருந்தும் உயிரினங்களிடமிருந்தும் தப்பித்துக் கொள்ள பல மூலிகைகளைப் பரப்பி வைத்து யானை பாம்பு தேள் இவைகள் வராதபடி அந்த மணத்தால் காத்துக் கொண்டவர்கள். இந்த மணத்தைக் கண்டால் அந்த மிருகங்கள் அஞ்சி ஓடிவிடும்.

1.இப்படிப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு புலனறிவால் தாவர இன்ங்கள் ஒவ்வொன்றின் இயக்கத்தை அவைகளின் மணத்தை அறிந்து…
2,மிருகங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள குகைகளில் அதைப் பரப்பி வைத்துக் கொள்வார்கள்.

மரத்திலே செடிகளிலே விழுதுகள் உண்டு. அந்த விழுதுகளை வைத்தால் அது இழுக்கும்… இழுத்து அந்த மணத்தை வீசும் தன்மை வருகின்றது. பாம்பிடம் ஒரு வேரைக் காட்டினால் அது படம் எடுப்பது நின்று விடுகின்றது. ஒரு வேரைக் காட்டினால் யானை விலகிச் செல்கின்றது… யானை மிரட்டி என்று சொல்வார்கள்.

இந்த மாதிரி விழுதுகளை அகஸ்தியனுடைய தாய் தந்தையர் அவர்கள் உறங்கும் குகை முன்பு போட்ட பின் அந்த மணங்களை இழுக்கும்.
1.செடி இழுப்பது போன்று அது இழுத்து அந்த அலைகளை மாற்றிக் கொண்டிருக்கும்.
2.அந்தக் குகை வாசலிலே இதைப் போட்ட பின் உயிரினங்களோ மிருகங்களோ ஒன்றும் தாக்குவதில்லை… நிம்மதியாகத் தூங்குகின்றார்கள்.

இதையெல்லாம் உணர்த்துவதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று காட்டுகின்றார். ஒரு கரடி இருக்கக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இரவிலே அங்கே என்னைப் படுக்க வைத்து விட்டுச் சென்று விட்டார்.

குருநாதர் என் உடலிலே எனக்குத் தெரியாமலே அந்த வேரைக் கட்டி வைத்திருக்கின்றார். அது என்ன வேர்…? என்று எனக்குத் தெரியாது. உனக்குப் பந்தோபஸ்தாக இருக்கும் என்று சொல்லி ஏன் இடுப்பிலே அதைக் கட்டினார்.

காட்டிற்குள் நடந்து வந்த களைப்பினால் அந்தப் பாறையில் படுத்துத் தூங்கி விட்டேன். இருட்டு நேரம். அது பெரிய பாறையாக இருக்கின்றது குருநாதர் சென்று விட்டார்.

தூங்கி எழுந்து பார்க்கிறேன். உர் உர் என்று சப்தத்துடன் கரடி உறுமிக் கொண்டு வருகின்றது. பார்த்தவுடனே சரி… வசமாகச் சிக்கிக் கொண்டோம்…! என்று நினைத்தேன்.

ஆனால் வெகு தூரத்தில் இருந்து தன் இட்த்திற்கு வருகின்றது. பக்கத்தில் உறுமல் சத்தத்துடன் வந்து “ஹும்ம்..” என்று சப்தமிட்டு வேறு பக்கம் திரும்பி ஓடி விடுகின்றது. ஊறுமிக் கொண்டே வந்தது வாசனையைக் கண்டவுடன் திரும்பி ஓடுகின்றது.

விடிந்தவுடன் குருநாதர் வருகின்றார் நான் ஒரு அவசர ஜோலியாகப் போனேன்டா என்று சொன்னார். இரவு நன்றாகத் தூங்கினாயா…? என்று கேட்டார்.

தூங்கினேன்… கரடிச் சத்தம் கேட்டு முழித்துக் கொண்டேன் என்றேன். அப்பொழுது சொல்கின்றார்.. இந்தப் பாறைக்குக் கீழ் தான் கரடி கூடு கட்டியிருக்கின்றது. அதனால் தான் இங்கே வந்தது. உன் மணத்தைக் கண்டவுடன் ஓடி விட்டது என்றார்.

என் மேலே என்ன இருக்கிறது…? என்று கேட்டேன்.

உன் உடலில் கட்டியிருக்கும் வேர் தான் அந்த வேலையைச் செய்கிறது என்று குருநாதர் சொல்கின்றார்.
1.அந்த வேருக்கு எப்படி அந்தச் சக்தி வந்தது என்றெல்லாம் விளக்கம் கொடுக்கின்றார்.
2.இந்தச் செடிக்கு எப்படிச் சக்தி வந்தது…? இந்தச் செடிக்கு எப்படிச் சக்தி வந்தது…?
3.செடி எப்படி எல்லாம் உருவானது…? எது எது கலவையானது…?
4.அந்தக் கலவையானதற்குச் சந்தர்ப்பம் என்ன…? என்று அதையெல்லாம் கதையாகச் சொல்லிக் கொண்டே வருகின்றார்.

அதே மாதிரித்தான் உங்களிடம் நான் கதையாகச் சொல்கின்றேன். இதையெல்லாம் அறிந்து உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்கும் திறன் நீங்கள் பெற வேண்டும்.

1.குருநாதர் என்னிடம் சொன்னது போன்று உங்களிடமும் சொல்லிக் கொண்டு வருகின்றேன்..
2.இந்த ஞாபகம் இருந்தால் சாமி சொன்னார் என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் டக் என்று அந்த மன வலிமை வரும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று உள்ளே செலுத்தினால் அது வலுவாகின்றது.

அந்தச் சங்கடமான உணர்வு உடலுக்குள் செல்லும் முன் அதைத் தடைப்படுத்துகின்றது. சிறிது நேரத்தில் உங்களுக்குச் சிந்திக்கும் சக்தி வருகின்றது.. எதனால் நாம் சங்கடப்படுகின்றோம்…? எப்படி அதைச் சமாளிப்பது…? என்ற யுக்தி வரும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்… நாங்கள் பார்க்கும் அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அந்த மன பலம் வரும்.

இந்த உணர்வுகளை மற்றவர்களுக்கும் சொல்லும் பொழுது நமக்கு அவர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

1.நெருக்கடியாக வரும் சந்தர்ப்பங்களில் இதைப் போன்று நீங்கள் செய்து பழகினீர்கள் என்றால்
2.உடனே உங்கள் எண்ணம் இந்த வேலையைச் செய்யும்… அப்போது அது நல்ல நேரமாகின்றது.

சங்கடமான நிலை வரும்போது அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் அது நல்ல நேரமாக மாறுகின்றது.

ஆனால் சங்கடத்தை எண்ணிக் கொண்டிருந்தால் அது கெட்ட நேரமாகின்றது எப்படிச் சமாளிப்பது…? கடன் கொடுத்தவர் கேட்டால் என்ன சொல்வது…? கேட்பார்களே…? நாளைக்கு உணவுக்கு என்ன செய்வது…? பிள்ளை கேட்ட பொருளை எப்படி வாங்கிக் கொடுப்பது…? என்று இந்தச் சங்கடங்களை எல்லாம் எண்ணினால் அந்தக் குழந்தைக்கு ஏதாவது இடைஞ்சலாகிவிடும். நடந்து செல்லும் போது கீழே விழுந்து விடுவான்.

நம் நேரமே மோசமாகிவிட்டது.. பிள்ளையும் கீழே விழுந்துவிட்டான் காலில் அடிபட்டது கை பிசகி விட்டது என்றெல்லாம் நாம் சொல்வோம்.

இந்த உணர்வுக: குடும்பத்தில் எப்படி எல்லாம் வேலை செய்கிறது…? என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். அந்த நல்ல நேரத்தை உருவாக்குவதற்கும் நல்ல சந்தர்ப்பத்தை உண்டாக்குவதற்கும் தான் இத்தனையும் சொல்கிறேன்.

ஏனென்றால் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்டது. குருநாதர் கொடுத்த அந்தச் சக்திகளை உங்களிடம் பாய்ச்சுகிறேன்.

காற்றில் இருக்கும் விஷத் தன்மைகளிலிருந்து அந்த அருள் ஞானிகள் உணர்வை நுகர்ந்து உங்கள் கஷ்டத்தை மாற்றும் நல்ல நேரத்தை உங்களிடம் கொண்டு வர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன்.

தீமையை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்குத் தான் உங்களிடம் இதைப் பதிவு செய்கின்றேன்.

1.விலா எலும்பிலே இந்த மேக்னெட் சிறிதளவு தான் அது இருக்கின்றது.
2.பல கோடி உணர்வுகளைப் பதிவாக்கும் சக்தி அதற்கு உண்டு.
3.கூர்ந்து கவனித்துப் பதிவாக்கி… எப்படியும் சாமி சொல்வதைப் பெற வேண்டும்.
4.அதன் வழி என் வாழ்க்கையைச் சீர்படுத்த வேண்டும்.
5.என் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்
6.அந்த அருள் வழியில் வாழ்க்கை நடத்தும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள்.
7.உங்கள் மனது… அது எவ்வளவு பெரிய மனதாக மாறும்…? என்பதை நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்வீர்கள்.

ஆகவே வாழ்க்கையில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் அதற்கு இடம் கொடுக்காதீர்கள். அது கெட்ட நேரமாக ஆகிவிடும்.

உடனே ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி அந்த வலுவை ஏற்றுங்கள். அது நல்ல நேரமாக மாறுகின்றது.

யாம் கொடுக்கும் ஞானமும் யுக்தியும்

யாம் கொடுக்கும் ஞானமும் யுக்தியும்

 

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் பல நிலைகள் நடக்கின்றது என்பதைத் தெரிந்து அதை நீங்கள் மாற்றிக் கொள்வதற்குச் சக்தி வேண்டும்.

1.அது உங்களுக்குத் தெரியாது… தெரிய வைக்கின்றோம்.
2.அந்தச் சக்தி பெறுவதற்குண்டான ஊக்கத்தையும் கொடுக்கின்றோம்.
3.அதைத் தெளிவாக்கும் அளவுக்குப் பதிவாக்குகின்றோம்.

திட்டியவனை நினைத்தவுடன் நமக்கு ஆத்திரம் வருகின்றது… அன்றைய காரியங்கள் கெடுகின்றது. சங்கடம் வரும் பொழுது நான் சொன்ன பதிவை நினைவுக்குக் கொண்டு வந்தால் “ஞானம்” வரும். சங்கடத்தை விலக்கக்கூடிய “யுக்திகள்” வரும்.

உங்கள் சொல் கேட்பவர்களுக்கு நிவர்த்தியாகும். அவர்கள் மனதிற்குள் இந்த உணர்வுகள் சென்று நம் மீது உள்ள கசப்பையும் கடுப்பையும் குறைக்கும். உங்கள் அனுபவத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

என்னை இப்படிப் பேசினார்களே… பேசுவார்களே…! என்ற எண்ணம் வரப்படும் போது அந்த அச்ச உணர்வோடு நாம் பேசும் பொழுது
1.நாம் சொல்லக்கூடிய பதில் அவர்கள் செவிகளிலே பட்டு
2.நம்முடைய பயப்படும் உணர்வே அவர்கள் உடலுக்குள் சென்று நம்மை மிரட்டும் நிலைக்கு அது இயக்குகின்றது

அவரிடம் செய்த பணம் பரிவர்த்தனையில் சொன்ன நேரத்தில் கொடுக்க முடியவில்லை. ஆனால் எப்படியும் அதைத் திரும்பச் செலுத்தும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும். நாம் சொல்வதை அவர்கள் கொஞ்சம் அமைதியாகக் கேட்டு எங்களுக்கு அந்த வழி கொடுக்க வேண்டும்.

அந்த நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் அவ்வாறு வலுவாக எண்ணும் உணர்வுகள்.. அவர்கள் நம்மை எண்ணி வரப்படும் பொழுது நம்முடைய மூச்சலைகளை… அவர்கள் சுவாசித்தால் அந்த உடலில் மாறி நம் மீது உள்ள வெறுப்பை நிச்சயம் குறைக்கும்.

வாழ்க்கையில் எந்தக் கஷ்டம் வந்தாலும் ஆத்ம சுத்தி செய்து விட்டு அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அதற்குண்டான மன பலம் பெற வேண்டும். நம்மிடம் பழகும் நண்பர்களும் நம்மிடம் ஒத்துழைக்கும் அந்த நல்ல பண்புகள் வரவேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஏனென்றால் சங்கடத்துடன் மற்றவரிடம் பேசினால் மற்றவர்களையும் அந்த தவறான நிலைகளுக்கு அது இயக்கிவிடும். சங்கடத்துடன் செடிக்கு நீர் ஊற்றினாலும் அது பட்டுப் போகிறது. இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

1.இதையெல்லாம் அனுபவத்தில் நீங்கள் சீர்படுத்த… சமப்படுத்த ஒரு வலுவான சக்தி வேண்டும் என்பதற்குத்தான்
2.வழியறிந்து செயல்பட உபதேசிக்கின்றோம்.

உயர் கல்விகளிலே மருத்துவத்திற்கும் இஞ்சினியர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதன் வழி படிக்கின்றோம்.

இதைப் போலத் தான் எனக்கு குருநாதர் கற்றுக் கொடுத்த உணர்வை உங்களுக்குள் நினைவாக்கிப் பதிவாக்குகிறோம், உங்கள் நினைவுக்கு வரும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் சங்கடத்தைச் சமாளிக்கும் அந்த ஞானம் உங்களுக்குக் கிடைக்கும்.
2.அந்த ஞானத்திற்கு உண்டான யுக்தியைத் தான் அடிக்கடி சொல்லி அதை ரெக்கார்ட் செய்து வைக்கிறேன்,

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைக்க வேண்டும் அது உங்களிடம் பதிவாகி இருக்கின்றது அதோடு கலந்து எலக்ட்ரானிக்… இந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றோம்.

பாலிலே சர்க்கரை போட்டால் இனிப்பாக இருக்கின்றது. அதிலே காபித் தூளைப் போட்டால் ருசியாகின்றது. பாலில் சர்க்கரை சேர்த்து அதனுடன் புளிப்பைப் போட்டால் அந்தப் புளிப்பு ஒரு ருசியாக இருக்கின்றது.

அந்த புளிப்புடன் லேசாகக் காரத்தைச் சேர்த்தால் அது தனி ருசி தான். மிளகைப் போட்டுப் பாருங்கள்… மிளகாயைப் போட்டுப் பாருங்கள். அது ஒரு ருசியாக இருக்கும். பானக்கம் கரைத்தது போன்று தனி ருசியாக இருக்கும்.

இதைப் போன்று தான் உங்கள் உணர்வுக்குள் எதையுமே சுவையாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களிடம் உண்டு. அதற்குத் தான் வழி சொல்கிறேன்.

ஏனென்றால் இன்றைய விஷ உலகம் பயங்கரமான நிலையாக வருகிறது
1.அதிலிருந்து மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாகத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை
2.உங்களுக்குள் பூராம் ரெக்கார்ட் செய்து வைக்கின்றோம்… இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

மாறுபட்ட உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…?

மாறுபட்ட உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…?

 

நாம் வெண்மையான துணியைப் போட்டிருக்கின்றோம். ரோட்டிலே செல்லும் போது எங்கேயோ வெளிப்பட்ட தூசி காற்றிலே மிதந்து வந்து நம் சட்டை மீது படுகிறது.

எங்கேயோ மிளகாயைக் காய வைத்திருப்பார்கள். அதைத் தட்டி உலர்த்திக் கொண்டு இருக்கப்படும் பொழுது அது காற்றுக்குள் கலந்து நம் மீது பட்டு விடுகின்றது… நமக்கு எரிச்சலாகின்றது.

ஒரு சந்தன மணமோ அல்லது வேறு ஒரு வாசனைப் பொருளிலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுகளும் காற்றிலே பரவி வருகின்றது. அதை இன்னொருவர் சுவாசிக்கின்றார். அது அவருக்கு அங்கே மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. நாம் வந்த அதே பாதையிலே தான் அவர் வந்திருப்பார்.

ஆனால் நாமோ…
1.நமக்கு கப கப என்று எரிச்சலாக இருந்தது… முதுகிலே எரிச்சலானது என்று சொல்வோம்.
2.ஆனால் நான் அந்தப் பாதையில் தானே வந்தேன்… எனக்கு அப்படி இல்லையே என்று அவர் சொல்வார்.
3.காரணம்… ஒரு நொடிக்கு நொடி காற்றலைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

அதைப் போன்று தான் நாம் கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்யும் பொழுது லாபத்தைப் பெருக்கலாம் என்று எண்ணுவோம்.

கடைக்கு வரும் ஒரு சிலர் குடும்பக் கஷ்டத்துடன் வருவார்கள். எப்படியும் அவர்களுக்குச் சாமான் தேவைப்படும். அந்தக் கஷ்டத்துடன் இங்கே வருவார்கள். அந்த உணர்வோடு நம்மிடம் அரிசி என்ன விலை…? பருப்பு என்ன விலை…? என்று கேட்பார்கள்.

அந்தக் கஷ்டத்திற்குத் தகுந்தாற்போல் சொல்லிக் கேட்கும் பொழுது நமக்குச் சரியாக இந்த உணர்வுகள் காதிலே விழுகாது. நாம் அவரிடம் என்னையா கேட்கின்றாய்…? என்று அழுத்தமாகக் கேட்போம்.

இந்த அரிசி தான் என்ன விலை…? என்று கேட்பார்.

அந்த உணர்வு அழுத்தமாக நம் செவிகளில் படும்பொழுது அவர் குடும்பத்திலே வீட்டிலே கஷ்டமாக விளைந்தது நம் உணர்வுக்குள் பட்டு நாம் சுவாசித்து நம் உடலுக்குள்ளும் அது சேரத் தொடங்குகிறது.

நாம் யாரும் ஒருவருக்கொருவர் பிரிந்து செல்வதில்லை.

27 நட்சத்திரங்களும் வான் வீதியிலே வரக்கூடிய விஷத்தின் தன்மை முறித்து பிரபஞ்சத்திற்குள்ளே அனுப்பினாலும் அதனுடைய வட்டப் பாதையில் எந்தக் கோள் செல்கின்றதோ அது இழுத்து அதைத் தனக்குள் சேர்க்கின்றது.

சனிக்கோளின் சக்தி அதிகமாகப் படரும் பொழுது நம் பூமி அந்தப் பகுதிக்குச் சென்றால் மழையாகப் பொழிகின்றது. அந்த சனிக்கோளிலிருந்து வரக்கூடியது புதன் கோளில் பட்டால் வெடிக்கும் தன்மையாக வருகின்றது.

1.வெப்பத்தில் நீரை ஊற்றினால் எப்படி வெடித்துச் சிதறுகின்றதோ அதைப் போன்று ஆகின்றது.
2.ஒவ்வொரு கோளுக்கும் சனிக்கோளின் சத்து எதிர்மறையாகிறது.

புதன் கோளில் சூரியன் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அந்த வெப்பத் தணல்கள் இதற்குள் பட்ட உடனே வெடிக்கும் தன்மையாக வருகின்றது.

இதைப்போல சில பாறைகளிலே பட்டபின் நீர் அதிலே பட்டால் அது இஞ்சாத நிலைகள் ஏற்படும். இதைப் போன்று மற்ற கோள்களில் சனிக்கோளின் சத்து பட்டால் அதை வெறுத்து நீரின் தன்மையை வெப்பத்தின் தன்மை கொண்டு வெப்ப அலைகளாக மாற்றி விடுகின்றது.

நீரைக் கொதிக்க வைக்கும் போது அந்த நீரின் சக்தி மாறி கொதிப்படைந்த வெப்பத்தின் தணல் கொண்டு ஆவியாக மாறுகின்றது. இதைப்போலத் தான் சில கோள்களில் எதிர் நிலையாகின்றது.

இவைகள் எப்படியோ அது போன்று தான் நல்ல குணங்கள் கொண்டு நாம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தாலும் பிறருடைய துன்பமான உணர்வுகளைக் கேட்டுணரும்போது உயிரிலே பட்டபின் நம் உணர்வுடன் கலக்கும் போது எதிர்மறையாகி வித்தியாசமான நிலைகள் உருவாகிறது.

நாம் நன்றாகப் பேசிக் கொண்டிருப்போம்… வியாபாரம் நன்றாக இருக்கின்றது. ஆனால் சங்கடப்பட்டவர்களை வேதனைப்பட்டவர்களுடைய குடும்ப கஷ்ட நஷ்டங்களைப் பற்றி அதைப் பேசி நாம் அதைக் கேட்டால் அந்த உணர்வோடு சரக்கை எடுத்துக் கொடுத்தால் போதும்.

அதற்குப்பின் சிறிது நேரம் கழித்துப் பார்த்தால்
1.நம் உடலில் என்னமோ மாதிரி இருக்கிறது கிறு கிறு என்று வருகிறது தும்மல் வருகிறது
2.உடலில் பளீர் பளீர் என்று குத்துவது போல் உள்ளது என்று நாம் சொல்லத் தொடங்குவோம்.

இந்த மாதிரி இருந்தால் அடுத்து சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால் அதற்கு முன் என்ன நடந்தது…? எப்படிப் பேசினார்கள்…? என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்படிப் பேசியவர் வீட்டிலே பின் தொடர்ந்து சென்று அங்கே எந்தச் சூழ்நிலை இருக்கிறது…? என்று பாருங்கள். அந்தக் குடும்பத்தில் அவருக்குக் கஷ்டமாக இருந்திருக்கும். அவர் அதை நுகர்ந்து நம்மிடம் வெளிப்படுத்தியதால் நாம் வியாபாரத்தில் இருந்தாலும் நம்மை அறியாமலே இத்தகைய நிலை ஆகிவிடுகின்றது.

கோளின் தன்மை ஒன்றுக்குள் ஒன்று கலந்து தான் சுழல்கிறது. எதுவும் தனித்து வாழ்வதில்லை.
1.ஒன்றின் சக்தி எடுத்து மற்றது வாழ்வது போல மனிதராக நாம் இருந்தாலும்
2.வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் நாம் சந்திக்கும் பொழுது இத்தகைய நிலைகள் மாறிவிடுகிறது.

நேற்று இருந்த நிலை இன்று இல்லை. நேற்று மகிழ்ச்சியாக நாம் இருந்திருந்தாலும் இன்று துன்பப்படுபவரைப் பற்றி நாம் கேட்டால் அந்த உணர்வு நம்மை இயக்கத் தான் செய்யும்.

மகிழ்ச்சியாக இருந்து அங்கே செல்ல வேண்டும் இங்கே செல்ல வேண்டும் என்று எண்ணி இருப்போம். அன்று குண்டு வைத்தார்கள்… ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார் என்று கேள்விப்பட்ட பின் எல்லோருடைய நிலையும் பதட்டம் உருவாகி பயமான உணர்வுகளும் ஆகி ரோட்டிலே நடந்தால் என்ன ஆகுமோ…/ ஏதாகுமோ…? என்ற பய உணர்வு அதிகமாகி ஒருவருக்கொருவர் செல்லப்படும் பொழுது மனதிற்குள் சோர்வும் சஞ்சலமும் பயமும் ஏற்பட்டது என்பது அந்தச் சூழ்நிலையில் இருந்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

சந்தர்ப்பத்திலே இந்த உணர்வுகள் நல்ல குணங்களுடன் சேர்க்கப்பட்டால் ஒவ்வொரு நொடியிலும் விஷத்தன்மையாக மாறுகிறது… நமக்குள் அது சேருகின்றது.

மனிதர்கள் நம்முடைய ஆறாவது அறிவு கொண்டு கசப்பையே நாம் சுவையாக மாற்றுகின்றோம். காரத்தையும் நாம் சுவையாக்குகின்றோம்.

இவ்வாறு உயர்ந்த சக்திகளை பெற்ற நாம்… மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் எல்லோரையும் சந்தித்துத் தான் ஆக வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருப்பார்கள். அவைகள் எதிர்மறையாக நமக்குள் மாறும்.

நமது நண்பர் நம்மை மகிழ்ச்சியாகச் சந்திக்கின்றார். ஆனால் அதே நண்பர் மற்றவரிடம் வேதனையும் கஷ்டத்தையும் கேட்டுணர்ந்து வருகின்றார். அந்த உணர்வான சத்து அவருக்குள் கலக்கின்றது.

அந்த நண்பருடன் நாம் பாசத்துடன் கலந்து உறவாடப்படும் பொழுது அவர் உடலில் உருப் பெற்ற அந்த உணர்வு நம்முடலில் கலந்து விடுகின்றது. அவர் உடலிலே அது அதிகமானாலும் இந்த உணர்வின் தன்மை பாசத்துடன் நாம் பார்க்கப்படும் பொழுது நமக்குள் வந்து விடுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா.
1.சந்தர்ப்பம் இவ்வாறு இயக்கினாலும் நல்ல சந்தர்ப்பமாக அதை மாற்றி அமைப்பதற்குத் தான்
2.தியானமும் ஆத்ம சுத்தியும் உங்களுக்குத் தொடர்ந்து பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
3,மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் உடலுக்குள் சேர்த்துத் தீமையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஊழ்வினை என்ற வித்துக்குள் சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவம்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஊழ்வினை என்ற வித்துக்குள் சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவம்

 

உதாரணமாக விளக்கெண்ணெய் இருக்கின்றது. அதற்குண்டான வித்திலே பச்சைப் பாம்பின் தைலத்தை இறக்கி அதை மாற்றி அந்தப் பச்சை பாம்பின் உணர்வுகளை விளக்கெண்ணெய் வித்திற்குள் கலந்து விட்டால் அதிலிருந்து ஆட்டி எண்ணையை எடுத்து விளக்கை எரித்தால் “சுற்றிப் பாம்புகளாகத் தெரிய வரும்…”

இந்த உணர்வின் தன்மை எதுவோ அதைப்போல ஒவ்வொரு நிலைகளிலும் இதை உருவாக்க முடியும்.

அதாவது…
1.எண்ணெய்க்குள் சில ஜீவ அணுக்களின் நிலைகளைச் சேர்த்து அந்த எண்ணெயை விளக்கிலே ஊற்றிப் பொருத்தினால்
2.அந்த உணர்வின் மணத்தைக் கொடுத்தால் வித்தியாசமான நிலைகள் உருவாகும்.

அதே போல் புலியின் உணர்வை எடுத்து அந்த வித்துக்களுக்குள் ஊற வைத்து அந்த வித்தை ஊன்றினால் அந்த எண்ணெய் வித்துக்களாக உருவாக்கப்பட்ட பின் அதிலிருந்து ஆட்டி எண்ணையை எடுத்து எரித்தால் எங்கே பார்த்தாலும் புலிகள் வருவது போல அச்சுறுத்தும் உணர்வுகள் தோன்றும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

குருநாதர் அனுபவரீதியிலே அதற்கொத்த வித்துக்களை எடுத்து அதை எவ்வகையில் ஊற வைக்க வேண்டும்…? மற்ற சத்துக்களை எப்படிக் கலக்க வேண்டும்…?

அதில் இணைந்த பின் வித்துக்களாக உருவானதை எடுத்து ஆட்டியபின் அந்த எண்ணெயை எடுத்துப் பொருத்தப்படும் பொழுது…
1.வித்தியாசமான அந்த எண்ணையின் ஒளி அலைகள்
2.இந்த உணர்வுகளை எப்படிக் குவித்துக் காட்டுகிறது என்று குருநாதர் தெளிவாக எனக்குக் காட்டினார்.

இதைப் போன்று நம் உடலில் ஊழ்வினை என்ற வித்துக்களாக எலும்புக்குள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வை அதற்குள் செலுத்த வேண்டும்.

அக்ரிகல்ச்சரில் தாவர இன வித்துக்களை விஷக்கிருமிகள் தாக்கிடாது அதற்கென்று சில அமில சக்திகளை அதனுடன் சேர்த்து ஊற வைத்து விடுவார்கள்.

அதற்குப் பின் அதை எடுத்து நிலத்தில் ஊன்றப்படும் பொழுது
1.அந்த உணர்வின் சத்து வலுப்பெற்றால் மற்ற கிருமிகள் அந்தச் செடிகளைத் தாக்குவதில்லை.
2.எதிர்த்துத் தாக்கும் அந்த உணர்வின் சக்தி அந்த வித்துக்களுக்குக் கிடைக்கப் பெறுகின்றது.

இதே போலத் தான் நமது வாழ்க்கையில் பிறருடைய வேதனை உணர்வுகளோ கோபப்படுவோர் உணர்வுகளோ ஊழ்வினை என்ற வித்தாகின்றது. இப்படி எத்தனையோ உணர்வின் செயலாக நமக்குள் தீமையின் வித்துகள் செயல்படுகின்றது.

அந்தந்த மனிதர்களை உற்றுப் பார்த்தால் அவர் உடலில் இருந்து வரக்கூடிய உணர்ச்சியை உணர்வை ஊழ்வினை என்று வித்துக்களாக எலும்புக்குள் பதிவாகி விடுகின்றது.

ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றினோம் என்றால் பூமியின் துணை கொண்டு அந்த உணர்வைக் கவர்ந்து அதே செடியாக வளர்கின்றது. ஆனாலும் அந்தச் செடிக்குள் இதைப் போல வித்தியாசமான நிலைகளில் மற்ற உணர்வுடன் அதை இணைக்கச் செய்து அந்த வித்துக்களை ஊன்றும் பொழுது கிருமிகளோ பூச்சிகளோ வருவதில்லை.

இதைப் போன்று
1.தீமை என்ற உணர்வை நுகர்ந்தறிந்தாலும் அடுத்த கணம் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றித் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் என்று பெற வேண்டும் என்று பதிவு செய்த உணர்வுடன் இதைக் கலந்து விட்டால்
4.அந்த நோயின் உணர்வுகளை தீமையின் உணர்வுகளைச் சுருக்கி
5.அவர்கள் நோயிலிருந்து விடுபட வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணி விட்டால்
6.அந்த உணர்வுடன் கலந்து அருள் ஞான வித்தாக நமக்குள் மாறுகின்றது. இது மனிதனால் உருவாக்கப்படும் நிலை.

இயற்கையின் நிலையை உயிர் உருவாக்கினாலும்… மனிதன் ஆறாவது அறிவு கொண்டு உயிருடன் இணைத்து எதை மாற்ற வேண்டுமா அதை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன். அது தான் முருகன் என்ற நிலைகளில் ஆறாவது அறிவுக்கு முருகு மாற்றி அமைக்கும் சக்தி என்று காட்டுகின்றார்கள்.

முருகா என்றால் அழகா என்று எதையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் சக்தியாக ஆறாம் அறிவுக்கு உண்டு என்று காரண பெயரை வைத்துத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுகின்றோம். அந்த வலுப்பெற்ற நாம் அனைவருமே வாழ்நாள் முழுவதும் எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் அறிந்த பின் அந்த உணர்வுகள் உடலில் விளையாதபடி ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அதை முந்திச் செலுத்தி விட்டால் தீமையான உணர்வுகளை ஒதுக்கி அதை மாற்றிவிடும்.

நம் இரத்த நாளங்களில் இத்தகைய அருள் உணர்வுகள் பட்டபின் தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றிய பின் தங்கம் பரிசுத்தமாவது போன்று விஷத்தின் தன்மைகளைக் கரைத்து விடுகின்றது.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடல் உறுப்புகள் முழுவதும் படரும் பொழுது
2.நம் உடலில் உள்ள கிட்னியிலும் மற்ற உறுப்புகளிலும் விஷத்தை வடிகட்டும் ஆற்றல்மிக்க சக்தியாக நாம் பெறுகின்றோம்.
3.விஷத்தைக் குறைத்து ஒளியின் சக்தியாக நாம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

மக்களை வழி நடத்துபவர்களுக்கு காந்திஜி சொன்னது

மக்களை வழி நடத்துபவர்களுக்கு காந்திஜி சொன்னது

 

அரசியல் நடத்துபவர்கள் அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும்.

நம் நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் நல்ல குணங்களை அவரவர்கள் உடலிலே சுதந்திரமாக இயக்கப்பட வேண்டும். நம் நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை அனைவரும் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

1.பகைமை கொண்டு ஒருவரை அழித்து விடலாம் என்று நினைத்தால் அழிக்கவே முடியாது.
2.அது வளருமே தவிர குறையாது. காந்திஜி அன்று அதைத்தான் சொன்னார்.

இந்த உடலைத்தான் அவன் வீழ்த்தினான்.. என் உணர்வை வீழ்த்த முடியாது. அவனுக்கு அந்தத் திறன் இல்லை. இந்த உடலை வீழ்த்தினாலும் அவன் அந்த உயர்ந்த நிலை பெறும் தகுதி பெற வேண்டும் என்று நாம் எல்லோரும் எண்ணுவோம் என்றால் அடுத்து நாம் செய்யும் தவறுகளில் இருந்து நாம் மீள்வோம் என்று காந்திஜி இதைத்தான் சொன்னார்.

ஒவ்வொரு நிலைகளிலும் நமக்குள் தெளிவான நிலைகள் வளர வேண்டும்.
1.ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக மதித்தால் வேண்டும்.
2.அந்தக் கடவுள் என்ற நிலை வரப்படும் பொழுது ஒவ்வொன்றையும் அறிந்துணர்ந்து செயல்படும் எண்ணங்களாக அங்கே உருவாக்க வேண்டும்
3.அன்று காந்திஜி நமக்கெல்லாம் வழிகாட்டியாக அதைத் தான் உணர்த்தி உள்ளார்.

திடீரென்று ஏதாவது ஆனால் அம்மா…! என்று அலறுவோம். ஆனால் அவர் என்ன செய்தார்…? சுடப்பட்டு குண்டு நெஞ்சிற்குள்ளே பாய்ந்தாலும் அந்த உணர்வின் வேகம் அவர் கொள்ளவில்லை.

அஞ்சிடும் உணர்வுகள் அவருக்குள் வரவில்லை… “ஹரே ராம் ஹரே ராம்…” என்று இதைத்தான் சொன்னார்.

கடைசி மொழியாக அவர் சொன்னது… அவன் செய்த அந்தச் செயலை மற்றவர்கள் யாரும் எடுத்து விட வேண்டாம்.
1.அவனுக்கு எந்தத் தீங்கும் செய்ய வேண்டாம்.
2.அந்தக் குணத்திலிருந்து அவனை மீட்டிடும் பக்குவத்தைக் கொண்டு வாருங்கள் என்று நான் காந்திஜி சொன்னார்.

கூர்மை அவதாரத்திற்குக் குருநாதர் கொடுத்த தெளிவான விளக்கம்

கூர்மை அவதாரத்திற்குக் குருநாதர் கொடுத்த தெளிவான விளக்கம்

 

பாறை எப்படி வலுவாக இருக்கின்றதோ இந்த வலுவான உணர்வை ஒரு புழு சுவாசித்து அதனுடைய வலுவான எண்ணங்கள் கொண்டு நுகர்ந்து ஆமையாக மாறுகின்றது/

இது போன்று அந்தப் பாறைகளை எண்ணி எண்ணி எண்ணி நுகர்ந்து பாருங்கள். மேல் தோலில் அடுக்கடுக்காக சொறி போல் உருவாகிவிடும்.
1.கண் கொண்டு கூர்மையாக வெப்பத்துடன் இருக்கும் பாறையை உற்றுப் பார்த்தால் அதிலிருந்து அனல்கள் தெரியும்.
2.அதை அடிக்கடி நுகர்ந்தால் உடலில் பக்குப் பக்காக ஏற்படும்.

எனக்குள் அப்படி ஏற்படும்படி செய்தார் குருநாதர். பின் அதை மாற்றி அமைக்கும் உபாயத்தையும் சொல்லிக் கொடுத்தார். கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம் என்று அனுபவத்தில் காட்டினார். அதைத் தான் சொல்கின்றேன்.

காற்று வாக்கில் மலைப்பகுதியில் செல்லப்படும் போது அங்கே விஷப் பாறைகளாக இருப்பினும் அதில் தாக்கப்பட்ட அனல்கள் வந்தால் அந்த உணர்வுகள் இவர்கள் உடலில் பட்டது என்றால் உடலில் அது உருவாகும்.

சாதாரண பாறைக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கும்… மேலே பக்குப் பக்காக வரும். அது உதிர்ந்து கொண்டே போகும். தோல் மொந்தையாகும். மனிதனாக இருந்தாலும் இதை உற்று நோக்கிக் கூர்மையாக எண்ணினால் மாற்றங்கள் ஏற்படும்.

நன்றாக இருப்போர் உடலில் தீமையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தால் எப்படி உடலுக்குள் தீய அணுக்கள் உருவாகின்றதோ சந்தர்ப்பத்தில் இப்படி ஆகிவிட்டால் உயிர் உருவாக்கி அணுவாக மாற்றி அதையே இரையாகத் தேடி நம் மேல் தோலில் இதை சேர்த்து விடும். இது இயற்கையின் நியதிகள்.

குருநாதர் என்னை அந்த அளவுக்குப் பார்க்கவும் சொல்லி… பத்து நாள் அங்கேயே உட்காரும்படி சொன்னார். மேல் தோலில் பக்குப் பக்காக வர ஆரம்பித்தது.

தோலைத் தொட்டால் சொர…சொர… என்று இருக்கும். கையை மடக்கினால் வலி எடுக்கும். அதிலிருந்து ரத்தம் கசியும். இதை மாற்றுவதற்கு என்ன வழி…? என்று சில இதுகளைச் சொல்கின்றார்.

அனுபவரீதியிலே அதை மாற்றும் படி செய்தார் குரு காட்டிய வழிகளிலே இதைச் செய்தது. குரு இல்லாதபடி தவறாகி விட்டால் பின் அந்த நிலைக்கு மாறிவிடுவோம். இருந்தாலும் மாற்றும் நிலைக்கு அனுபவத்தைக் கொடுத்ததால் தீமைகளிலிருந்து விடுபடும் நிலையும் வருகின்றது.

பொக்குப் பாறை என்று உண்டு… அத்தகைய பாறையில் புழு ஊர்ந்து செல்லப்படும் பொழுது
1.அதிலிருந்து வெளிவரும் சத்துக்கள் அந்த வெயிலில் வந்தால் கூர்மையான உணர்வுகளை எடுத்து
2.வெயிலிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் நிழலைத் தேடி அது செல்வதற்கு முன்
3.அது எத்தனை வகையான உணர்வுகளைப் புழு பார்க்கின்றதோ அது எல்லாம் அதற்குள் இணைந்து புழு ஆமையாக அடுத்த சரீரம் பெறுகின்றது.

ஆமை எந்த வெப்பத்தையும் தாங்கும் சக்தி பெற்றது. மற்ற உயிரினங்கள் நெருப்பிலே பட்டால் கருகிவிடும். ஆனால் ஆமைக்கோ அதைத் தாங்கும் சக்தி உண்டு.

ஒரு இடத்தில் ஆமை இருக்கின்றது… எனக்கும் அது தெரியாது. ஆனால் அந்த இடத்தில் செத்தையைப் போட்டுத் தீயை வைத்து ஏரிடா என்றார்/ அது எரிந்து கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து திடீரென்று முட்டிக் கொண்டு வெளியே வருகின்றது பெரிய ஆமை. எனக்குப் பயமாகி விட்டது விழுந்தடித்து இந்தப் பக்கம் ஓடி வந்து விட்டேன்.

பத்து நிமிடம் எரிகின்றது. அதுவரையிலும் அதற்குள் அது தாங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்குப் பின்னர் வெளி வருகின்றது. இதைப் பார்த்தாயா…? என்று குருநாதர் கேட்டார்.

1.புழுவாக இருந்தது அது எந்தெந்த வகையில் அந்த உணர்வுகளை அது சுவாசித்த்தோ அதிலே விளைந்ததை இந்த உயிர் உடலாக மாற்றியது.
2.அது தான் கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம் என்று
3.எதனைக் கூர்மையாக வலிமையாக எண்ணியதோ அந்த உணர்வின் அணுவாக மாறி
4.இந்த உணர்வுக்குத் தக்க அடுத்த உடல் எப்படி அமைந்தது…? என்று அப்படியே எனக்குள் உருவாக்கிக் காட்டுகின்றார்.

காட்டுக்குள் வைத்துத் தான் இதையெல்லாம் காட்டுகின்றார்… அனுப்வத்தில் யாம் தெரிந்து கொண்டது. உங்களிடம் சொல்கிறேன் என்றால் கதையாகப் படித்து விட்டு வந்து சொல்லவில்லை. அனுபவத்திலே நேரடியாகப் பார்த்தது.

ஆமை போன்று எனக்குள் உருவாக்கப்பட்டு எதைக் கூர்மையாக எண்ணுகின்றாயோ உன் உடலில் எப்படி அது படர்கின்றது…? முற்றிப் போய்விட்டால் வைத்தியம் பார்க்க முடியாது. அது முற்றுவதற்கு முன் மாற்றிக் கொள் என்று அதற்கு மாற்று வழிகளைக் காட்டுகின்றார்.

நீருக்குப் பக்கம் செடி இருக்கின்றது. அதை எடுத்துப் பிழிந்தால் ஆவியாக வருகின்றது. இது எப்படி ஆவியாக மாற்றுகின்றதோ அதைப் போன்று இன்ன செடியும் இன்ன செடியும் நீ எடுத்து நுகர்ந்து பார்.

நுகர்ந்தால் மட்டும் பிரயோஜனம் இல்லை.
1.எண்ணங்களைக் கூர்மையாகச் செலுத்த வேண்டும்… செலுத்தும் பொழுது உனக்குள் பதிவாகும்.
2.மீண்டும் அதை இழுத்து நுகரப்படும் பொழுது அந்தக் கூர்மையால் அணுவாக மாறுகின்றது… உனக்குள் மாற்றி அமைக்கின்றது.

என் உடலிலே கால் ஆணி… அப்படியே நடக்க வைக்கின்றார்… வேதனைப்படும்படி செய்கின்றார் குருநாதர்… அழைத்துச் சென்று அந்தச் செடியினைக் காட்டுகிறார்,

அவர் சொன்ன இரண்டு செடியை எடுத்து நுகர்கின்றேன்… அதிலே ஒரு விதமான உணர்வு வருகிறது. அதை ஒரு பாறையின் மீது எடுத்துப் போடுகின்றார். பின் அந்தப் பாறையைச் சுரண்டச் என்று சொல்கின்றார். கையிலே சுரண்டினால் மணல் போன்று வருகின்றது.

அக்காலங்களில் இதைப் போன்ற செடிகளை வைத்து உருவாக்கப்பட்ட குகைகள் உண்டு. இந்தப் பச்சிலைகள் சத்ரு மித்ரு என்று உருவாக்கப்படும் பொழுது இதைப் பூசினால் அந்த பாறையே மண் போன்று சுரண்டும் போது எப்படி வருகின்றதோ இந்த உணர்வுகள் பட்ட பின் இந்த அணுவின் தன்மை உதிரும்.

இந்த மாதிரிப் பச்சிலைகளை எடுத்துப் போனோம் என்றால் வைத்தியத்தைப் பார்த்து ஜம் என்று இருக்கலாம்.

1.நுகர்ந்து கூர்மையான நிலைகள் கொண்டு வலுவாக எண்ணி எடுத்துப் பிறவி இல்லா நிலை அடைய வேண்டுமே தவிர
2.மனித உடலுக்காக எடுத்துக் கொண்டால் இந்தப் பூமியிலே சுற்றிக் கொண்டு இருக்க வேண்டியது தான். கரையேறப் போவதில்லை.

அடுத்து நமக்கு யாராவது எதிரிகள் இருந்து தவறு செய்கிறார் என்றால் அவர்களைக் கூர்மையாக எண்ணினால் அவர்கள் எப்படிக் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணினார்களோ அந்த உணர்வை நாம் சுவாசித்து நாம் கெட்டு நம் நிலையெல்லாம் அவன் மீது வலுவாகக் கூர்மை அவதாரமாக அவர் உடலுக்குள் புகுந்துவிடும்.

அந்தப் புழு பாறையின் வலு கொண்டு தனக்குள் அதை எடுத்துத் தனக்குப் பாதுகாப்பாக அமைத்துக் கொண்டது. மனிதன் இதை நுகரப்படும் பொழுது பாதுகாப்பாக இருப்பது இங்கே எதிரியாக மாறுகின்றது.

1.ஆமைக்குத் தன் எதிரிகளிடமிருந்து தப்ப அந்த ஓடு பாதுகாப்பாகின்றது.
2.நாம் எடுக்கும் பொழுது நமக்கு எதிரி ஆகிறது.

இரண்டுக்கும் உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார். இன்று மனிதனாக வளர்ந்து விட்டாய்.
1.ஆனால் அப்படியெல்லாம் முந்தி இருந்துதான் நீ மனிதனாக வந்தாய் என்று
2.கூர்மை அவதாரத்திற்கு இத்தனை விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர்.

குழந்தைகள் இன்று அதிக அளவில் தவறு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதன் காரணம்

குழந்தைகள் இன்று அதிக அளவில் தவறு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதன் காரணம்

 

இன்றைய வாழ்க்கையில் டி.வி. ஃபோன் மூலமாக அநாகரீக செயல்களை உற்றுப் பார்க்கின்றோம். கர்ப்பமுற்ற தாய்மார்கள் அதைப் பார்த்தால் அதன் வழியில் கருவில் வளரும் சிசுக்களுக்கும் இந்த உணர்வுகள் பதிவாகிறது… வளர்கின்றது.

1,விஞ்ஞான அறிவு கொண்டு எதை எதையெல்லாம் காட்டுகிறார்களோ
2.குழந்தை பிறந்த பின் அவனும் அத்தகைய தவறுகளை எல்லாம் செய்யத் தொடங்குவான்.
3.தாய் தந்தையரை மதிப்பதும் இல்லை… சொல்லைக் கேட்பதும் இல்லை
4.அவன் வழியின் செயலுக்கே அவன் செல்கின்றான்… தீமையே வளர்கின்றது… தீமையே விளைகின்றது.

நாம் கேட்டறிந்த அந்தத் தீமையின் விளைவு கருவில் வளரும் பொழுது பதிவாக்கி விட்டால் பிறந்த பின்பு அந்த குழந்தை நமக்கே எதிரியாக வளர்கின்றான்… சொல்லைக் கேட்பதில்லை.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தாய் தந்தையின் வார்த்தையை மீறித் தன்னிச்சையான நிலைகள் கொண்டு அவர்கள் செயல்படுவதும் அதனால் தாய் தந்தையர் வேதனைப்பட்டு விஷத்தன்மை கொண்டு என்ன வாழ்க்கை என்று வேதனை கொண்டு தன்னை இழந்தே தன்னை மறந்தே வாழ்கின்றார்கள்.

குழந்தை வளர வளர அவர்கள் செயலைப் பார்க்கப் பார்க்க அத்தகைய நிலைகள் வந்து விடுகிறது.

1.இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட அருள் ஞானிகள் உணர்வைக் கருவுற்ற தாய்மார்களைப் பெறச் செய்யுங்கள்.
2.உங்கள் உடலான உலகுக்குள் இதை விளையச் செய்து இந்த அருள் உணர்வைப் பரவச் செய்ய வேண்டும்.
3.குழந்தைகளுக்கும் இதைப் பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யச் செய்ய மனிதன் என்ற முழுமை அடைகின்றோம். பத்தாவது நிலையை அடைகிறோம். இந்த உடலுக்குப் பின் இன்னொரு உடல் நாம் பெறுவதில்லை. உயிருடன் ஒன்றி கணவன் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி என்றுமே ஒளியின் உணர்வாக உருவாக்கும் நிலையைப் பெறுகின்றீர்கள்.

அதைப் பெற வேண்டும் என்று
1.எமது குரு அருள் உங்களுக்குக் கிடைத்து குரு அருளால் மகரிஷிகள் அருள் உணர்வு பெற்று அருள் ஒளி உங்களுக்குள் பெருகி
2.உங்களை அறியாத இருள் நீங்கி மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி உங்களை நீங்கள் வளர்த்தும்
3.உங்கள் பார்வையால் பேச்சால் பிறிதொரு தீமைகளை அகற்றிடும் சக்தி பெற்று
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

அருள் ஒளி உங்களில் பரவி இருள் நீக்கும் அருள் சக்தி பெற்று உங்கள் பேச்சால் மூச்சால் உலகின் தீமைகளை அகற்றவும் கேட்போர் உணர்வுகளில் இருளைப் போக்கவும் மெய் ஞானிகள் உணர்வாக வளரச் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

இதை நீங்கள் உங்கள் எNண்ணத்தால் கூர்மையாக எண்ணினால் உங்களுக்குள் இதை வளர்க்க முடியும்… அருள் ஒளி பெற முடியும். எமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.