குழந்தைகள் இன்று அதிக அளவில் தவறு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதன் காரணம்

குழந்தைகள் இன்று அதிக அளவில் தவறு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதன் காரணம்

 

இன்றைய வாழ்க்கையில் டி.வி. ஃபோன் மூலமாக அநாகரீக செயல்களை உற்றுப் பார்க்கின்றோம். கர்ப்பமுற்ற தாய்மார்கள் அதைப் பார்த்தால் அதன் வழியில் கருவில் வளரும் சிசுக்களுக்கும் இந்த உணர்வுகள் பதிவாகிறது… வளர்கின்றது.

1,விஞ்ஞான அறிவு கொண்டு எதை எதையெல்லாம் காட்டுகிறார்களோ
2.குழந்தை பிறந்த பின் அவனும் அத்தகைய தவறுகளை எல்லாம் செய்யத் தொடங்குவான்.
3.தாய் தந்தையரை மதிப்பதும் இல்லை… சொல்லைக் கேட்பதும் இல்லை
4.அவன் வழியின் செயலுக்கே அவன் செல்கின்றான்… தீமையே வளர்கின்றது… தீமையே விளைகின்றது.

நாம் கேட்டறிந்த அந்தத் தீமையின் விளைவு கருவில் வளரும் பொழுது பதிவாக்கி விட்டால் பிறந்த பின்பு அந்த குழந்தை நமக்கே எதிரியாக வளர்கின்றான்… சொல்லைக் கேட்பதில்லை.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தாய் தந்தையின் வார்த்தையை மீறித் தன்னிச்சையான நிலைகள் கொண்டு அவர்கள் செயல்படுவதும் அதனால் தாய் தந்தையர் வேதனைப்பட்டு விஷத்தன்மை கொண்டு என்ன வாழ்க்கை என்று வேதனை கொண்டு தன்னை இழந்தே தன்னை மறந்தே வாழ்கின்றார்கள்.

குழந்தை வளர வளர அவர்கள் செயலைப் பார்க்கப் பார்க்க அத்தகைய நிலைகள் வந்து விடுகிறது.

1.இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட அருள் ஞானிகள் உணர்வைக் கருவுற்ற தாய்மார்களைப் பெறச் செய்யுங்கள்.
2.உங்கள் உடலான உலகுக்குள் இதை விளையச் செய்து இந்த அருள் உணர்வைப் பரவச் செய்ய வேண்டும்.
3.குழந்தைகளுக்கும் இதைப் பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யச் செய்ய மனிதன் என்ற முழுமை அடைகின்றோம். பத்தாவது நிலையை அடைகிறோம். இந்த உடலுக்குப் பின் இன்னொரு உடல் நாம் பெறுவதில்லை. உயிருடன் ஒன்றி கணவன் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி என்றுமே ஒளியின் உணர்வாக உருவாக்கும் நிலையைப் பெறுகின்றீர்கள்.

அதைப் பெற வேண்டும் என்று
1.எமது குரு அருள் உங்களுக்குக் கிடைத்து குரு அருளால் மகரிஷிகள் அருள் உணர்வு பெற்று அருள் ஒளி உங்களுக்குள் பெருகி
2.உங்களை அறியாத இருள் நீங்கி மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி உங்களை நீங்கள் வளர்த்தும்
3.உங்கள் பார்வையால் பேச்சால் பிறிதொரு தீமைகளை அகற்றிடும் சக்தி பெற்று
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

அருள் ஒளி உங்களில் பரவி இருள் நீக்கும் அருள் சக்தி பெற்று உங்கள் பேச்சால் மூச்சால் உலகின் தீமைகளை அகற்றவும் கேட்போர் உணர்வுகளில் இருளைப் போக்கவும் மெய் ஞானிகள் உணர்வாக வளரச் செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

இதை நீங்கள் உங்கள் எNண்ணத்தால் கூர்மையாக எண்ணினால் உங்களுக்குள் இதை வளர்க்க முடியும்… அருள் ஒளி பெற முடியும். எமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.