YouTube VIDEOS – சாமிகள் உபதேசம்

தன்னை அறிந்து செயல்படும் நிலையே விநாயகர் தத்துவம்

அக்காலங்களில் ஆற்றங்கரையில் தான் விநயகர் கோவில் இருக்கும். கோயிலுக்கு அருகில் இருக்கும் ஆற்று நீரில் குளித்து உடலையும் உடைகளையும் தூய்மையாக்குகின்ற மாதிரி நம் மனதை… நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் தத்துவத்தைத்தான் விநாயகர் தத்துவமாக ஞானிகள் அழகாகக் கொடுத்து இருக்கின்றார்கள். மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதன் மீது பற்று அதிகமானால் நாம் அங்கே போகின்றோம்.

அப்படி இல்லாதபடி… விநாயகரைப் பார்த்து எல்லோருக்கும் உதவி செய்தேன்…! கடனை வாங்கியவன் திரும்பக் கொடுக்கவில்லை நீ பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றாய்…! நான் உதவி செய்தவனே எனக்கு இடைஞ்சல் செய்து கொண்டு இருக்கின்றான்… உனக்கு எல்லா நைவேத்யமும் செய்தேன்… கண ஹோமம் எல்லாம் செய்தேன்…! என்று எண்ணினால் இங்கே தான் சுழன்று கொண்டிருக்க வேண்டும்…!

எங்கே…? யார் மேலே வருத்தப்படுகின்றீர்களோ… யாரை எண்ணிக் கோபப்பட்டீர்களோ அந்த உணர்வை எடுத்து அந்த உடலுக்குள் தான் போகும். அந்த உடலுக்குள் சென்று நோயை மீண்டும் உருவாக்கி அவனையும் வீழ்த்திவிட்டு மனிதன் அல்லாத உருவைத் தான் அங்கே உருவாக்கும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலேயும் குறைகளைக் கண்டால் கணவனும் மனைவியும் அந்த உணர்வை உள்ளே விடாதபடி “ஈஸ்வரா…!” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஊட்டி இங்கே அடைத்திடல் வேண்டும்.

குடும்பத்திற்குள் இருந்தாலும் சரி நமது கர்ம காரியங்கள் செய்யும் போது அத்தகைய நிலை ஏற்பட்டாலும் சரி துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தடுத்து நிறுத்திப் பழகவேண்டும்.

ஏனென்றால் மனிதனுக்குத்தான் தெய்வ சக்தியைப் பெறக்கூடிய அந்தத் தகுதி உண்டு. கணவன் மனைவி இரண்டு உயிரும் ஒன்றாக இணைந்தால் அதற்குப் பின் பிறவியில்லை…! விநாயகர் தத்துவத்தின் மூலம்…!

ஹார்ட் அட்டாக் (HERT ATTACK) எப்படி வருகின்றது…?

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் சந்தர்ப்பத்தால் தவறு செய்பவர்களை உற்றுப் பார்த்து வேதனையுடன் அதை நுகர்ந்தறிந்தால் உமிழ் நீராகி உணவுடன் கலந்து இரத்தங்களில் அது மாசு படுகின்றது. சுத்தப்படுத்தாத அந்த விஷ அணுக்கள் சிறுநீரகங்கள்… இதயம்… சிறு மூளை பாகம்,,, சென்றால் அடைப்பு போன்று ஆகி இரத்தம் போவதைத் தடைப்படுத்தத் தொடங்குகின்றது.

பார்வதி பஜே ஹரஹரா சம்போ மகாதேவா

காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பார்த்து எண்ணிக் கவர்ந்து கொண்ட உணர்வின் சக்திகள் அனைத்தும் நமது உடலாகின்றது என்பதை உணர்த்தும் விதமாக “பார்வதி பஜே.., ஹரஹரா சம்போ மகாதேவா..,” என்று சிவ தத்துவத்தில் தெளிவாக்கியுள்ளார்கள்.

பார்வதி பஜே – பார்த்த உணர்வின் உணர்ச்சிகளை உயிரானது நமது உடலுக்குள் ஊட்டி
ஹரஹரா – அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி
சம்போ – நாம் பார்த்த இந்த சந்தர்ப்பம்
மகாதேவா – நாம் பார்த்த உணர்வுகளையெல்லாம் நமக்குள் உருவாக்கக்கூடியதாக நம் உயிர் இருக்கிறது.

“பார்வதி பஜே நமச்சிவாய” என்று பாடினார்கள். அதாவது கண்களால் “பார்க்கப்படும் உணர்வுகள்” நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் உயிரில் மோதும் பொழுது உணர்வின் தன்மை இயக்கப்படுகின்றது.

உயிரில் பட்டு அந்த உணர்வின் இயக்கமாக.., “பஜே நமச்சிவாய” இந்த உடலுக்குள் அதனின் உணர்வை இயக்கும் “உணர்வின் ஒலிகளை எழுப்பும் உடலாக.., அமைந்துவிடுகின்றது” என்பதை உணர்த்துவதற்காக பாடல்களாகப் பாடினார்கள்.

நாம் எதையெல்லாம் பார்த்தோமோ அவை அனைத்தும் நம்முள் சதாசிவமாக ஆக்கிக் கொண்டேயுள்ளது (நம் உடலாக) என்பதைச் சிவ தத்துவம் நமக்குத் தெளிவாக்குகின்றது.

வாழ்க்கையில் நாம் நம்மிடத்தில் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சேர்த்து மன உறுதியை மன வலிமையைப் பெருக்கினோம் என்றால் நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கித் தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறமுடியும்.

இந்த உடலில் அருள் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க உடலில் விளைந்த உணர்வுகள் உயிருடன் ஈஸ்வரனுடன் ஒன்றி “அவனுடன் அவனாக..,” நாம் அழியா நிலைகள் கொண்டு என்றுமே பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்திடலாம் என்பதே நம் சாஸ்திரங்களில் கூறப்பட்ட உண்மைகள்.

புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானி உருவாக்குவது போல் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும்

செத்த பிற்பாடு… “கொள்ளி வைக்கக் குழந்தை வேண்டும்” என்ற சாங்கிய சாஸ்திரப்படி குழந்தை இல்லாதவர்கள் கூட தத்து எடுத்துக் குழந்தையை வளர்க்கின்றனர். ஆனால் ஞானிகள் சொன்ன மூலத்தை மாற்றி விட்டோம். அவர்கள் சொன்ன முறைப்படி ஞானக் குழந்தைகளை உருவாக்கினால் அவன் நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வான்.. ஏகாந்தமாக நம்மை வாழச் செய்வான்.

ஆற்றல்மிக்க சக்திகளை எலெக்ட்ரானிக் முறைப்படி அழுத்தமாகக் கொடுக்கின்றோம்

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் இயக்கம் போல் உயர்ந்த அழுத்தம் கொண்ட மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

தையல் வேலையை நன்கு பழகிக் கொண்டவர்கள் பேசிக் கொண்டே சரியானபடி தங்கள் வேலையைச் செய்வார்கள். அவர்கள் கை தன்னாலே வேலை செய்யும். அது போல் குருநாதர் காட்டிய வழியில் அருள் உணர்வுகளைப் பெற்றுப் பழகிக் கொண்டால் எளிதில் தீமையை நீக்கலாம். உயிருடன் ஒன்றிய ஒளி நிலை பெறலாம்.

அஞ்சனை… ஆஞ்சநேயன் – சுக்ரீவனின் மந்திரி

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் இது ஒரு பெரிய குளம். அதிலே நாம் பிறர் படும் கஷ்டங்களையோ வேதனைகளையோ நுகரப்படும் போது நாம் அதிலே விழுந்து விடுகின்றோம் என்பதனை உணர்த்துவதற்காக காவியத் தொகுப்புகளைத் தெளிவாக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

நமது பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் இத்தகைய விஷத் தன்மை பெரும் குளமாக இருக்கின்றது. அந்த உண்மைக்கு மாறான நிலைகள் நடப்பவைகளைப் பார்த்து நாம் விழுந்து விட்டால் எப்படி மாற்றம் அடைகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக ஒரு காவியமாகப் படைத்தனர் ஞானியர்கள்.

நம்மை அறியாமலே பிறருடைய நிலைகளைப் பார்த்து அந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் “இப்படி வேதனைப்படுகின்றானே..,” என்று (குளத்தில் பட்டால்) அவன் உணர்வை நாம் எடுத்தால் இந்த உடலுக்குள் என்ன ஆகின்றது? நாம் பல வேதனைகள் படுகின்றோம் என்பதனைக் காட்டுகின்றனர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று இணைத்தால் அந்த வேதனைகளைத் தடுத்து விடுகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்துகின்றது.

இப்படி நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேருளைப் பெறவேண்டும் என்று செலுத்தப்படும் போது இங்கே புருவ மத்தியில் அந்த உயிரின் நிலைகளில் உள்ளே செல்லாது தடுப்பதும் நம் உடலுக்குள் இரத்தத்தில் கலந்தபின் அந்த விஷத்தின் தன்மை நுகராது தடுப்பது தான் இந்த உண்மையான நிலைகள். தியானம் என்பது முறைப்படி இது தான்.

நம்முடைய பழைய ஊழ்வினைகளை (விதியை) எப்படி மாற்றவேண்டும்…?

வயலில் களைகள் முளைக்க யாரும் விதை போடுவதில்லை. ஆனால் களைகளைப் பிடுங்கவில்லை என்றால் நல்ல பயிர் வளராது.

அந்த வயலில் களை முளைப்பது போல் தான் அறியாமலே தீமைகள் நமக்குள் வருகிறது. ஆக மனிதனுக்குள் ஊழ் வினையாகப் பல வித்துகள் உண்டு.

அவைகளை அவ்வப்பொழுது வளரவிடாது தடுக்கவில்லை என்றால் மனிதன் செயல் இழந்து விடுவான். அதைத் தடுக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் வித்துக்களாக அதே ஊழ் வினைக்குள் ஊன்றிப் பழக வேண்டும்

இது வளர அது குறையும். மனிதன் நாம் ஞானியாக முடியும்.

வடக்குவாசல்

நாம் நேரடியாகச் சக்தி பெறும் வழியே வடக்குவாசல்…!

உலக மாற்றத்தைப் பற்றி அன்றே குருநாதர் உணர்த்தியுள்ளார்

இன்று இந்த உடலை இழந்தால் மீண்டும் மனிதாக உருப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் மனிதனாக இன்று இருந்தாலும் வேதனைப்படும் உணர்வையே நுகர நேர்ந்தால் உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றி அதை அனுபவிக்க நேரும். விஞ்ஞான அறிவின் வீரியத்தால் நம் பிரபஞ்சமே செயலிழக்கும் தருணம் வந்து கொண்டிருக்கின்றது. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பே குருநாதர் இதைக் காட்டினார்.

கஷ்டம் என்று சொல்லாதீர்கள்.. நிவர்த்திக்கும் சக்தி வேண்டும் என்று கேளுங்கள்

தியானம் செய்யும் பொழுது தீமைகள் அகல வேண்டும் என்றே எண்ணுங்கள். துன்பங்களையும் துயரங்களையும் எண்ணாதீர்கள்…!

ஈஸ்வரபட்டரின் அருள் ஆசி – அருள் பிரசாதம்

அகஸ்தியன் இருக்கும் இடத்திற்குச் சென்றவர் ஈஸ்வரபட்டர். குரு அருளின் வரப்பிரசாதம் உங்களுக்குள் ஊடுருவட்டும். உங்களுக்குள் ஈஸ்வரபட்டரின் அருள் பரவி வருவதை உணர முடியும். உங்களைச் சுற்றி ஒளி வட்டம் வருவதை உணரலாம்.

எலும்புக்குள் இருக்கும் ஊனை மாற்ற விஞ்ஞானத்தால் மாற்ற முடியாது

ஊசி மருந்தைச் செலுத்தித் தசைகளில் உள்ள நோய்களை விஞ்ஞானம் நீக்கினாலும் எலும்புக்குள் இருக்கும் ஊழ்வினையை மாற்ற முடியாது. அதை மாற்றினால் தான் நம் பிறப்பின் பலனை அடைய முடியும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வை வலுப்படுத்திக் கொண்டால் அந்த ஊழ்வினையை மாற்றலாம்.

உடல் உறுப்புகள் தியானப் பயிற்சி

உடலில் உள்ள உறுப்புக்களான சிறு குடல் பெரும் குடல்… கணையங்கள்… கல்லீரல் மண்ணீரல்… நுரையீரல்… சிறுநீரகங்கள்.. இருதயம்… கண்களில் உள்ள கருமணிகள்… நரம்பு மண்டலம்… எலும்பு மண்டலம்… நெஞ்சின் பாகம் உள்ள விலா எலும்புகள்… எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன்… தசை மண்டலம்… தோல் மண்டலம்… போன்ற எல்லா உறுப்புகளிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி இணைக்க வேண்டும் என்ற தியானப் பயிற்சி.

குடியிருந்த கோவில் எது…?

அசாம் காட்டுக்குள்ளும் பழனி பாப்பம்பட்டி மலையிலும் நடந்த நிகழ்ச்சிகள்

குரு வழியில் உலகுக்கே எடுத்துக் காட்டும் அருள் ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்

மெய் ஞான உலகிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். நீங்கள் பண்பட வேண்டும்.

உலகைக் காக்கும் சக்தி எது…?

தமிழ் நாடு உலகுக்கே எடுத்துக்காட்டாக வரும்

நாம் எல்லாம் ஞானிகளாக உருவானால் உலகிலேயே ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக நம் தமிழ் நாடு அந்த உயர்ந்த நிலைகளாகப் பெறும். இந்த உலகைக் காக்கும் அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வை நாம் மீண்டும் வளர்த்து உலக மக்களுக்குத் தெளிவான நிலைகளை ஊட்டும் நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

ஈஸ்வரபட்டரின் அருளையும் துருவ நட்சத்திரத்தின் அருளையும் பெறச் செய்யும் தியானம்

“சரியான குரு யார்…?” என்று உங்களுக்குக் காட்டுகின்றோம். அவரின் காட்சியும் உங்களுக்கு நிழற்படமாகத் தெரியலாம். உங்கள் உடலில் அது புது உணர்வாகப் படரும்… மகிழ்ச்சியான உணர்வையும் ஊட்டும். உலகையே காக்கும் ஞானிகளாக உங்களை இந்தத் தியானம் உருவாக்கும்.

தவமிருக்கும் தபோவனம் – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தியான மண்டபத்தை அமைத்திருக்கிறோம். அங்கே அமர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்களை உலகம் முழுவதற்கும் படரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உலகத்தையே அழித்துக் கொண்டு இருக்கும் விஷத் தன்மை ஒரு பக்கம் படர்ந்து மனிதனுடைய எண்ணத்தையும் அது அழித்துக் கொண்டு இருந்தாலும் அந்த விஷத் தன்மையிலிருந்து எல்லோரையும் மீட்ட வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகள் கற்பித்த நிலைகள் நான்கு திசைகளிலும் பரவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உலக மக்கள் அனைவரும் பெறும் தகுதியாக இப்போது அதுவும் வளர்ச்சியாகிக் கொண்டே வருகிறது.

தியானத்தை நாம் மட்டும் செய்யவில்லை…! உலகில் எல்லாப் பாகங்களிலும் இதைப் போன்ற தியானத்தின் உண்மைகளை உணர்ந்து “உலகைக் காக்கும் சக்தியாகத் திசை திரும்புகிறது…!” அந்த மாமகரிஷிகள் ஒவ்வொரு பாகங்களிலேயுமே இதைப்போல அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

நமது மனதை வலு பெறச் செய்யும் சக்தியாக நமது எல்லையில் நம்மை அணுகி உள்ளவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் செயல்படுத்தியது.

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்குள் வந்தாலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற்று நீங்கள் இடும் மூச்சுகள் அனைத்தும் உலக நன்மை பயக்கும் அருள் சக்தியாகவும் மற்றவர்களின் தீமையை அகற்றி அவர்களுக்குள் நல் உணர்வின் சக்தி விளையும் தன்மையாகவும் அதைச் செயல்படுத்தும் நிலையாகத் தான் இங்கே அமைத்திருக்கின்றோம்.

இந்தத் தபோவனத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டாலே மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஆத்மசுத்தி செய்து விட்டு அடுத்து உங்களுக்கு எது எல்லாம் நல்லதாக வேண்டுமோ அதை எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு அந்தச் சக்தி கிடைத்து நல்லதே நடக்கும்.

சீதா கடைசியில் மண்ணுக்குள் போகிறது – நம் உடலும் கடைசியில் மண்ணுக்குள் தான் போகிறது…!

சீதா என்ற நிலை இராமனிடம் பட்ட துன்பங்களும் அது எண்ணாதபடி அதன் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது எத்தனையோ இன்னல்களை இராவணனிடத்தில் பட்டது.

சீதா பட்ட இன்னல்கள் இன்னது என்று சொல்ல முடியாது.

அத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக் கொண்டு உயிரின் உணர்வின் தன்மையை உண்மையை நிலைப்படுத்திய அந்த உணர்வுகள் இந்த உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா சொர்க்கத்தை அடைந்தது.

இந்த உடல் என்ற சீதா பூமிக்குள் மண்ணைப் பிளந்து மீண்டும் மண்ணுடன் மண்ணாக மற்றவைகளுக்கு உணவாக மக்கியே விட்டது.

இதை இராமாயாணத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

மனித உடலின் கடைசி முடிவையும்… உயிராத்மா அடைய வேண்டிய எல்லையையும்… இராமாயணத்தில் வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார். உடல் அழியக்கூடியது. உடல் நமக்குச் சொந்தமல்ல.உயிர் என்றும் அழிவதில்லை. உயிர் தான் நமக்குச் சொந்தமானது.

விண்ணிலிருந்து வந்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சத்துகளை எடுத்து பல உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகின்றது.

மனிதனான பின்பு அனைத்தையும் அறியும் அறிவாக ஒளியின் உணர்வாக வளர்ந்து நான் “விண் செல்ல வேண்டும்”

இராமன் என்பது நம் எண்ணங்கள். சீதா என்பது சுவை (உடல்). சுவைக்கொப்ப நமக்குள் எண்ணங்கள் தோன்றுகின்றது. சீதாராமன் தான். இராமாசீதா அல்ல.

இராவணன் என்பது நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட ஒலிகள் (நாதங்கள்).

லவ குச என்பது நஞ்சை வென்று உயிருடன் ஒன்றி ஒளியான “விண்ணுலக ஆற்றல்”

வான்மீகி மகரிஷி தான் கண்டறிந்த பேருண்மைகளை சீதாவின் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஓதினார் என்று காவியப் படைப்பு உண்டு.

அதாவது மனித உடல் பெற்ற நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று நுகர்ந்தால் “லவ குசா…!” ஒளியான அணுக்களாக நமக்குள் உருப்பெறும்.

லவ குசா வளர்ந்த பின் இராம காவியைத்தைப் பாடுகின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்…?

நாம் எடுக்கும் மெய் உணர்வுகள் உடலுக்குள் (சீதாவிற்குள்) விளைந்தபின் நம்மைப் பற்றியும் நமக்குள் இயங்கும் அனைத்தையும் அறிந்து அது வெளிப்படுத்திக் காட்டும்.

தன்னைத் தான் அறியும் நிலையாக நாம் நம்மை அறிய முடியும்.

மனித உடலுக்குப் பின் ஒளியின் சரீரம் பெற்று அந்த மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்பதை வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார்.

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

ஏமாற்றுபவன் தான் இன்று நன்மை பெறுகின்றான்

நாடு நலம் பெறவேண்டும் என்றால் நாம் எல்லாம் ஞானிகளாக வேண்டும். நல்ல உணர்வுகளைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும். நல்லவர்களை உருவாக்கிப் பழகுதல் வேண்டும். நல்ல நிர்வாகத்தை உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

நல்லது என்றால் மற்றவர்களைக் குறை கூறுவதல்ல…!

திருடு போன பொருளை மீட்கும் வழி

பணத்தையோ பொருளையோ எடுத்துச் சென்றவன் போலீஸிடம் சிக்க வேண்டும். நம் பொருள் கிடைக்க வேண்டும் என்று எண்ணித் தியானித்துப் பாருங்கள். உங்கள் பொருள் நிச்சயம் திரும்பக் கிடைக்கும். உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்…!

ஈஸ்வரபட்டரைப் போல நீங்களும் ஞானியாக வேண்டும்

அருள் உணர்வைப் பெற்றேன் என் பார்வையால் சொல்லால் செயலால் மற்றவர்களின் தீமைகள் அகன்றது. அவர்கள் நல்லவர்களாக ஆனார்கள் என்ற நிலைக்கு வளர வேண்டும்.

நான்கு வேதங்களின் இரகசியம்

மற்றவருடைய வேதனைகளையும் குறைகளையும் நாம் உற்றுப் பார்த்து அதை நுகர்ந்தால் உயிரிலே பட்ட பின் நம் நல்ல குணங்களை மறையச செய்கின்றது… அதர்வண…! திரும்பத் திரும்ப எண்ணினால் அது நமக்குள் ஒரு வித்தாகின்றது… யஜூர்.

நமக்குள் வித்தாக உருவான பின் அதே கோப உணர்ச்சியோ வேதனை உணர்ச்சிகளையோ தூண்டி நம்மையும் அதே வழியில் பேசச் செய்கின்றது… சாம…!

அதே சமயத்தில் தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அது நம் இரத்தநாளங்களில் கலந்து தீமைகளை அடக்குகின்றது.. அதர்வண…! அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியான அணுக்கள் நமக்குள் விளைந்தால் யஜூர்…!

அதன் பின் நாம் வெளிப்படுத்தும் சொல் செயல் எல்லாம் நல்லாதாகின்றது… சாம…!

உயிர் நெருப்பு… அதிலே எதைப் போட்டு யாகம் நடத்த வேண்டும்…?

உண்மையான நெருப்பில் அந்த அருள் ஞானிகளின் உணர்வு பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.

மற்றவர்கள் தீமைகளையோ குறைகளையோ துன்பங்களையோ எண்ணாது அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள். உங்கள் உயிரிலே (புருவ மத்தியிலே) செலுத்துங்கள்.

அவர்கள் அனைவரும் தெளிவானவர்களாகவும் இந்த உலகுக்கே நன்மைச் செய்பவர்களாகவும் வர வேண்டும் என்று எண்ணுங்கள். உலக மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை உங்களுக்கு வளர்த்துக் கொள்ளுங்கள்.

மற்றவர்கள் உணர்வு நம்மை இயக்காது நமக்குள் பக்குவப்படுத்திக் கொள்ள முடியும். ஆக தீமைகள் வந்தாலும் அதை நமக்கு வேண்டியதாக மாற்றிக் கொள்ளலாம் இந்த உயிரான நெருப்பிலே…!

ஆகவே ஒவ்வொருவரும் இந்த உண்மையான யாகத்தை நடத்துங்கள். உயிர் நெருப்பு அதிலே நல்ல உணர்வைச் செலுத்துங்கள்.

தீமையை நீக்கிப் பழகிய குரு உணர்வு மீது நாம் இச்சைப்பட வேண்டும்

குருநாதர் பேரொளியாக மாறியது போல் நாமும் ஆக வேண்டும்…! என்று ஆசைப்படுங்கள். தீமையை நீக்கிய குருவின் உணர்வில் இச்சைப்பட்டு அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு அது கிரியையாகும். பின் அந்தக் குருவின் ஞான வழிப்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

மணிக் கணக்கில் உட்கார்ந்து செய்வது தியானம் அல்ல…!

நாம் உட்கார்ந்து மணிக்கணக்கில் ஜெபம் இருந்து ஆண்டவனை அடைவேன் அந்தச் சக்தியைப் பெறுவேன் என்றால் அது முடியாது.

அப்படி மணிக்கணக்கில் ஜெபமிருந்து முடிந்தாலும் முடிந்த பின் வாழ்க்கைக்கு வரும் பொழுது தீமைகள் வரும். அப்படி ஜெபமிருந்து பல நிலைகளைப் பெற்றாலும் அது “முனி” என்ற நிலையாகத்தான் வரும். ஒரே வைராக்கிய நிலைகள் கொண்டு “மற்றதைச் சிந்திக்கவிடாது” செயல்படுத்தும் நிலைகள் தான் வரும்.

ஆகவே, அருள் ஞானத்தை வளர்த்து மெய்ப்பொருள் காணும் நிலையை இந்த உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த உபதேசங்களை ஒவ்வொரு நாளூம் திரும்பத் திரும்பப் படியுங்கள். வேலைக்குச் சென்று வீட்டுக்கு வந்தால் ஒரு 10 நிமிடமாவது இதைப் படியுங்கள்.

இதுவே ஒரு தியானமாகின்றது. இதைப் படித்து முடித்த பின்பு “எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்” என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள். அப்பொழுது இந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மற்றவர்களை நலமாக்க இது உதவும்.

அருள் ஒளி பெறுவோம். இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக என்றும் எகாந்த நிலை என்ற நிலையில் வாழும் அந்த அருள் சக்தியைப் பெறுவோம்.

அருள் உணர்வின் சக்தியை நமக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றியே நிலைத்தே வாழ்வோம். அவனுடன் நாம் ஒன்றியே வாழ்வோம். என்றும் எதனையும் அறிந்திடும் உணர்வுடன் வாழ்வோம். எல்லாம் ஏகாந்தம் என்ற நிலையில் வாழ்வோம்.

பகைமையற்ற உணர்வுடன் வாழ்வோம். பகைமையான உணர்வுகள் சேராது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குவோம். நம் பார்வையில் பகைமை உணர்வு ஓடவேண்டும்.., நஞ்சு கொண்டோர் உணர்வுகள் நீங்க வேண்டும்,

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற்றோம் என்றால் நம் பார்வை பிறருடைய நஞ்சை போக்கும். அவருடைய நஞ்சின் தன்மை நமக்குள் வராது காக்கும்.

ஏனென்றால் நாம் இந்த மனித உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் ஒரு பிறவிக்கு வரக்கூடாது. இன்னொரு உடல் பெறக்கூடாது.

கடும் விஷத் தன்மையாக மாறிக் கொண்டிருக்கிறது இந்த உலகம்

நீர் நிலம் எல்லாம் ஏற்கனவே மாசடைந்த நிலையில் இன்று இந்தக் காற்று மண்டலமும் மிகவும் நச்சுத் தன்மையாக மாறிக் கொண்டுள்ளது. தப்பும் வழியில்லை. உயிர் இருக்கும்… ஆனால் மனிதனுடைய சிந்தனைகள் அழியும் தருணம் வந்து விட்டது. அருள் உணர்வை எடுத்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறும் பக்குவத்திற்கு வாருங்கள்.

மனதை ஒன்று சேர்த்தால் தன்னாலே மகிழ்ச்சி வரும்.. கல்யாணராமா…!

தீமை செய்யும் உணர்வுகளை அகற்றினால் உங்களுக்குள் எண்ணங்கள் ஒன்றாகிச் சந்தோஷம் வரும். எண்ணங்களை எல்லாம் ஒன்று சேர்த்து வாழக்கூடிய வாழ வைக்கக் கூடிய இடம் ஆலயம் என்ற நிலைகளைத்தான் ஞானிகள் காட்டினார்கள்.

சிலைக்குள் மறைந்துள்ள உண்மைகளை அறிந்திருக்கின்றோமா…?

இந்தத் தெய்வ குணத்தைப் பின்பற்றினால் உன் குடும்பம் நலமாக இருக்கும் உன் குணங்கள் எல்லாம் நலமாக இருக்கும் என்று புராணங்கள் காட்டியிருந்தாலும் அந்த மகரிஷிகளைப் பின்ன்பற்றாது அந்தச் சிலை தான் நமக்கு எல்லாம் செய்கிறது என்ற எண்ணத்தில் ஆராதனை அபிஷேகம் செய்கின்றோம். மேலும் அங்கே வேதனையைத்தான் கொட்டுகின்றோம். தீமையை அகற்றத் தெரிவதில்லை.

நீங்கள் எல்லோரும் ஞானிகளாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்

நீங்கள் செய்த நன்மை நன்மையாகவே இருக்கும். உங்களுக்குள் தீமைகள் வராது எப்பொழுதும் தடுத்துக் கொள்ள முடியும். அத்தகைய அதிகாரத்தைக் கொடுக்கின்றோம்.

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவரின் அனுபவங்கள் எப்படி இருக்கும்…?

யாம் உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கிச் சீராகத் தியானிப்பவர்களுக்குத் தீமையை நுகரும் உணர்வை மாற்றி அதிலிருந்து விடுபடும் உணர்ச்சிகள் வரும். உங்கள் அனுபவத்தில் நிச்சயம் அது வரும். அந்த உயர்ந்த ஆயுதம் உங்களுக்குப் பயனுள்ளதாகக் கிடைக்கும்.

போஸ்ட் கம்பியில் ஈஸ்வரபட்டர் தட்டுவதன் ரகசியம்

ரோட்டிலே செல்லும்போது பைத்தியக்காரர் மாதிரி டெலிஃபோன் போஸ்ட் கம்பியில் தட்டுவார் குருநாதர்.

போஸ்ட் கம்பியில் தட்டும்போது “என் சாமி தட்டுகிறீர்கள்..?” என்று கேட்டேன்.

நீ தான்டா… கேட்கிறாய்.. வேறு எவன் கேட்கிறான்…? என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள். “நீ… ஏன்…?! என்று கேட்பதால் உனக்கு விளக்கம் சொல்கிறேன்… என்பார் குருநாதர்.

நமது குருநாதர் அவர் பைத்தியக்காரராக இருந்தார். அவர் இந்த உடலுக்கு இச்சைப்படவில்லை.

ஒவ்வொரு உயிருக்கும் டெலிஃபோன் கம்பியை அடித்து அவர்களுக்கு ஞானத்தை கொடு. நல் வழியைக் கொடு என்று சொன்னேன், அதற்காக வேண்டித்தான் டெலிஃபோன் அடித்தேன்.

ஒவ்வொரு உயிரும் அவன் கடவுள் அவனுக்கு இதைச் செய்து… ஏன்டா…! இந்த உடலில் வீற்றிருக்கும் “நீ…” அந்தக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்ற உணர்வை ”ஏன் நீ கொடுக்கவில்லை…?” என்று அவனிடம் முறையிடுகிறேன்.

அவனிடம் (ஒவ்வொரு உயிரிடமும்) முறையிடுகின்றேன். அதே சமயத்தில் என்னை இயக்கிக் கொண்டிக்கின்ற இவனிடமும் (என் உயிரிடமும்) முறையிடுகின்றேன்.

அப்படி என்றால் என்ன அர்த்தம் ஆகின்றது?

நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னால் எனக்கு நல்லதாகின்றது. நீங்கள் உயர வேண்டும் என்று சொன்னால் (என் உயிர்) எனக்கு நல்லதைச் செய்வான்.

அதற்குத் தான் இப்படிச் சொன்னேன் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்கிறார். இப்படி சூட்சம நிலையில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தார். அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நாம் நுகர்ந்த உணர்வின் இயக்கமே எல்லாவற்றுக்கும் காரணம்

நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அந்த உணர்ச்சியின் எண்ணங்களாக நமக்குள் வரவைத்து அந்த எண்ணத்தின் வழிதான் நாம் இயங்குகின்றோம், வாழுகின்றோம்.

ஒருவன் கோபப்படுகின்றான் என்பதை கண் தெரியப்படுத்துகின்றது. ஆனால், உயிரில் பட்டவுடன் அந்த உணர்வுகள் அந்தக் கார உணர்ச்சிகள் நரம்பெல்லாம் “டைட்” ஆகிவிடுகின்றது.

நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள். கோபப்படுவர்களைப் பார்த்தவுடன் உங்கள் நரம்புகளெல்லாம் “டைட்” ஆகின்றது. நீங்கள் “டைட்” செய்கின்றீர்களா? அல்லது நீங்கள் நுகர்ந்த உணர்வு அந்த மாதிரி மாற்றுகிறதா?

அப்பொழுது நம் வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகளே உணர்ச்சிகளைத் தூண்டி இரத்த நாளங்களில் கலந்துவிடுகின்றது. அதிக நேரம் கோப உணர்வை எடுத்துவிட்டோம் என்றால் அந்த எதிர்ப்பு சக்தியைக் குறைத்து விடுகிறது.

அந்தக் கார உணர்வு வரும்போது அதைத்தான் நமக்குள் அதிகமாக எடுக்க நேருகிறது. யாரைப் பார்த்தாலும் நமக்குத் திடீரென்று கோபம் வரும். எதைச் சொன்னாலும் இந்த உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவோம்.

சில பேரைப் பாருங்கள்… எதை எடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். சொல்வதற்கு முன்னாடி முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக் கொண்டு அதைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

அந்த உணர்ச்சிகள் இதைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். அப்பொழுது எது இயக்குகின்றது? நாம் நுகரும் உணர்வுகள்தான் நம்மை இயக்குகின்றது. இதையெல்லாம் நாம் நமது வாழ்க்கையில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறு வயதில் செய்யும் தவறின் விளைவுகள் பின்னாடி எப்படி வருகிறது…?

என்னுடைய சிறு வயதில் நான் (ஞானகுரு) அறியாமல் ஒரு குருவியை உயிருடன் எரித்தேன். பின்னாளில் அதனுடைய தீய வினை எப்படி வருகிறது…? அந்தக் குருவி எரியும் பொழுது என்னென்ன எரிச்சல் பட்டிருக்குமோ அதே எரிச்சல் எனக்குள்ளும் வந்து என்னையும் அழிக்கும் உணர்ச்சிகளை எப்படித் தூண்டுகிறது..? என்று நேரடி அனுபவம் கொடுத்தார் குருநாதர்.

மனிதனின் உயர்ந்த பண்புகள் எது…?
தீமைகளையும் துன்பங்களையும் போக்கும் உயர்ந்த சக்தியைப் பெறுவதும் அதை மற்றவர்களையும் பெறச் செய்வதும் தான் உயர்ந்த பண்பாகும்

தீமைகளைச் சுட்டுப் பொசுக்க ஆத்ம சுத்தி என்ற துப்பாக்கியைக் கொடுக்கின்றோம்
கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டு… ‘’புலி வருது… புலி வருது’’ என்று சொன்னால் துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்…?

துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம் சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம். ‘’ஐய்யய்யோ…! புலி வருது… புலி வருது…!’’ என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடாமல் இருந்தால் என்ன பண்ணும்…? அது நம்மைத் தாக்கிவிடும்.

இதைப் போலத்தான் “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். சந்தர்ப்பத்தில் நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும், ‘’நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்’’.

உதவி செய்தாலும் அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள், உங்களுக்குள் ஆட்டிப்படைக்காதபடி ‘’ஆத்மசுத்தி’’ என்ற இந்த ஆயுதத்தை எடுத்து ‘’ஈஸ்வரா’’ என்று புருவ மத்தியில் உள்ள உங்கள் உயிரை வேண்டி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி தியானிக்க வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, உடல் முழுவதும் படர்ந்து, இரத்தங்களில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன், கண் திறந்து ஒரு நிமிடமும், கண்ணை மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக் கொண்டபின் கண்ணைத் திறந்து துன்பப்பட்டவர்களிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று சொல்லிவிட்டு அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்க முடிகின்றது,

நாம் நகை வாங்கியபின் அடுத்த நகை செய்யும்போது, அதில் உள்ள வெள்ளியையும், செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல அடுத்த நிமிடமே கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது.

நமக்குள் தீயது சேராது தடுக்கும் இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு நமக்குள் தியானமிருக்க வேண்டும்.

‘’தியானம்’’ என்பது எது…?

நமக்குள் கெட்டதைச் சேரவிடாது வைராக்கியமான நிலைகள் பெறவேண்டும். இதுதான் தியானம் என்பது.

பக்தியில் என்ன செய்கின்றோம்…?

நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள், ஆனால் தியானம் என்பது, நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வது.

பக்தி என்பது நல்லதை நினைப்பது.

தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்திகொண்டு, நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது. இந்த சக்தி இல்லையென்றால் செயல்படுத்த முடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை இந்த ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகளில் வலு கொண்டு உங்களுக்குள் பெறச் செய்து, வாக்கின் நிலையாக ஆத்ம சுத்தியை கடும் ஆயுதமாக யாம் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

நீங்கள் எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகளில் துன்பம் என்று பார்க்கின்றீர்களோ… நுகர்கின்றீர்களோ… கேட்கின்றீர்களோ… அவைகளையெல்லாம் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான்… இந்த ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகள்.

எண்ணியவுடனே உயர்ந்த சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்கின்றோம்
இந்த உபதேசத்தைப் புதிதாகக் கேட்பவர்கள் “சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கின்றார்…!” என்ற எண்ணங்கள் இல்லாதபடி “சாமி சொன்ன சக்தியை நாங்கள் பெறவேண்டும்” என்ற எண்ணத்தை எண்ணினாலே அந்த நிமிடத்தில் அச்சக்தி ஊடுருவி உங்களுக்குள் தீமையை நீக்கி நன்மையைப் பெறக்கூடிய தகுதி, உங்கள் எண்ணத்திற்குள் பெறச் செய்வதற்கே, அந்த மகரிஷிகளின் உயர்ந்த சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

இனி எண்ணத்தால் சக்தி பெறுவது, உங்களிடம்தான் உள்ளது. ஒவ்வொரு நாளும், அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை யாம் உங்களுக்குள் உரமேற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

அப்படி உரமேற்றப்பட்டு, அதன் வழிகளிலே மெய்ஞானியைக் காணும் சக்தியையும் மெய் ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டுமென்றும் அதைத் திரும்பத் திரும்ப யாம் உபதேசிப்பதும் உங்களுக்குள் பதிவின் நிலைகளை ஏற்படுத்துவதற்ககுத்தான்.

இந்தப் பதிவுகளின் மூலம், நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியை, நீங்கள் எளிதில் பெற முடியும். அதைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய கொடிய தீமைகளிலிருந்தும் விடுபடமுடியும். எமது அருளாசிகள்.

ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை
“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று, புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும். பின் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

அடுத்து இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், நமது ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.

பின், ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள, அருள் ஞானிகளின் அருள் உணர்வை, எண்ணி ஏங்கி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.

இவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்தி, நமது கண்களின் காந்தப் புலனறிவால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து, ஈர்த்து, உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து, உயிர் வழி சுவாசிக்கவேண்டும்.

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என எண்ணி, நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும். இதுவே “ஆத்மசுத்தி”.

நம்மை அறியாமலே நம்மைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான், தக்க ஆயுதமாக ”மிஷின் கண்” (Machine Gun) போன்று உங்களுக்கு ‘’ஆத்மசுத்தி’’ என்ற ஆயுதத்தை கையில் கொடுக்கிறோம்.

“ஓம் ஈஸ்வரா” என்று, அந்த உணர்வின் ஆற்றலான ஆயுதத்தை எடுத்து, மகரிஷிகளின் அருள் சக்திகளை, உங்கள் உடலுக்குள் செலுத்தி (ஆத்ம சுத்தி செய்து), உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும், வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும், அந்த உணர்வின் தன்மைகளை, அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே, அடக்கச் செய்யுங்கள். அப்போதுதான் அடங்கும்.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெற முடியும்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும், உணவாகக் கொடுக்கும் பொழுது, எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளியின் சுடராக மாற்றிவிடும்.

இந்த ஆத்ம சுத்தியை, நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பொழுது, வாழ்க்கையில் வரும் அனைத்துத் தீமைகளையும், நாம் அகற்ற முடியும். பேரின்பப் பெரு வாழ்வை எண்ணி எடுக்கின்ற உணர்வுகளால், நம்முடைய சொல், செயல் புனிதம் பெறும்.