சந்தேக உணர்வுகளும் கலக்க உணர்வுகளும் நமக்குள் தோன்றுவதன் காரணம் என்ன?

Image

emotions

“சந்தேக உணர்வுகளும்… கலக்க உணர்வுகளும்…,!” நமக்குள் தோன்றுவதன் காரணம் என்ன?

 

உதாரணமாக நாம் மிகுந்த வெறுப்பாகும்படி ஒருவர் செயல்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் வெறுப்பான உணர்வுகள் செயல்படுவதைப் பார்த்தவுடன் அந்த வெறுப்புடன் நான் இருக்கின்றேன்.

அந்த வெறுப்பின் தன்மை வரப்படும்போது என் நண்பன் வருகின்றான். நம்மைப் பார்த்து.., “ஏம்ப்பா பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது…! என்று சொல்லிச் சிரிக்கின்றான்.

நண்பன் சிரிப்பதைப் பார்த்தவுடன் இந்த வெறுப்பின் தன்மையுடன் இருக்கும் பொழுது “என்ன..! இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்…?” அவன் அப்படிப் பேசினான்.., ஆனால் இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்.

ஆக சந்தோஷமாகச் சிரித்தாலும் இங்கே வெறுப்பு வருகின்றது.

அப்பொழுது என்ன செய்கின்றது? அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகள் இதனுடன் கலந்தபின் நண்பனின் உணர்வு இங்கே “எதிரியாகத் தெரிகின்றது”.

விஷத்திற்குள் நல்ல பொருளைப் போட்டால் என்ன செய்யும்? ருசியாக இருக்குமா…? அதுவும் மயக்கத்தான் செய்யும்.

இதைப் போன்று இயற்கையின் நிலைகள் வருவதை நாம் மனத் தூய்மை செய்ய வேண்டும். நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் யார் சங்கடப்பட்டார்களோ வேதனைப்பட்டார்களோ அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் அவர்கள் மன பலம் பெறவேண்டும் சிந்தித்துச் செயல்படும் திறன் பெறவேண்டும் அவர்கள் செயல்கள் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது அவர்கள் உணர்வை நாம் எடுப்பதில்லை.

ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது நண்பன் சிரித்ததைப் பார்த்தவுடன் இந்த வெறுப்பின் உணர்வை ஊட்டி என்ன செய்கின்றோம்?

1.அந்த நண்பன் மேல் உணர்வு வரப்படும் பொழுது

2.அவனைப் பார்க்கும் பொழுது நம்மைக் கேலி செய்கின்றான் கிண்டல் செய்கின்றான்

3.நாம் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது என்ற இந்த உணர்வு வரும்.

சில பேரைப் பார்த்துமே…, “நம்மைப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது…” என்று சொல்வோம். அப்பொழுது எது நம்மை இயக்குகின்றது?

1.“நாம் நுகர்ந்த உணர்வை நம் உயிர் இயக்குகின்றது”.

2.தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

3,நல்லதைக் கெட்டதாகக் காட்டும். கெட்டதை நல்லதாகக் காட்டும் (நாம் நுகரும் உணர்வுகளே அதற்குப் பொறுப்பு).

ஆகவே அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அந்த உணர்வை உயிர் இயக்கும்படி நாம் பயிற்சியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

மற்ற தீமையான உணர்வுகள் வந்தாலும் அதன் மீது பற்று கொள்ளாது அருள் உணர்வைப் பற்றுடன் பற்றிக் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் நாம் பழக்கப்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் அமைதியும் சாந்தமும் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும்.

2014 லிருந்து உருவாகும் உலகைக் காக்கும் சக்திகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

polaris agastyar

2014லிருந்து உருவாகும் உலகைக் காக்கும் சக்திகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

கர்ப்பமுற்ற தாயின் குடும்பத்தில் அந்தப் பத்து மாதங்களும் ஒரு தெய்வீகக் குடும்பமாக இருந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து வேறு எந்தக் குறைகளையும் எண்ணாதபடி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த பேரருள் கருவிலே வளரும் சிசுக்களைப் பெறச் செய்தல் வேண்டும்.

அகஸ்தியனின் பார்வையில் சர்வ நஞ்சுகளையும் அடக்கியது போன்று கருவிலே வளரும் அந்தச் சிசு நஞ்சுகளை நீக்கும் சக்தியும் அகண்ட அண்டத்தையும் அறிந்திடும் ஆற்றலும் விஷத்தை வென்று ஒளியாக மாற்றும் ஆற்றலும் பெறவேண்டும் என்றும் குடும்பத்தில் உள்ளோர் ஏகோபித்த நிலையில் 10 மாதங்களும் இப்படிச் செயல் படுத்த வேண்டும்.

1.துருவநட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இந்த உலகம் முழுவதும் படரவேண்டும்
2.உலகில் உள்ள அஞ்ஞானம் அகல வேண்டும்…அசுர உணர்வுகள் அழிந்திடவேண்டும்
3.அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற உணர்வை
4.எந்தக் கர்ப்பமுற்ற தாய் எண்ணி எடுத்ததோ
5.அப்படி உருவான அந்தச் சிசு நம்மையும் காப்பான்…!
6.அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உலகையும் காக்கும்
சக்தியாக வருவான்….!

நமது பூமியில் பிரளயம் போன்று 2004ல் ஆனபின் 2014க்குள் அசுர உணர்வுகள் அழிந்து விடும். 2014க்கு மேல் தான் நாம் “தென்னாடுடைய சிவனே போற்றி..” என்று சொல்கின்றோம் அல்லவா…!

அவன் உணர்வைக் கருவில் பெற்று வளர்ந்த சிசுக்கள் ஞானிகளாகத் தோன்றுவார்கள்.

இப்படி உருவாகும் ஞானக் குழந்தைகள் திசைக்கு ஒரு 100 பேர் இருந்தால் போதும். அவர்கள் இடும் மூச்சலைகள் வெளி வரும் பொழுது நஞ்சை அகற்றும் ஆற்றலாகப் பரவத் தொடங்கும்.

இன்று எப்படி அணுக் கதிரியக்கப் பொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது சூறாவளியாக மாறுகின்றதோ அதே போல அந்தக் குழந்தைகள் விடும் மூச்சலைகள்
1.கடும் விஷத்தை ஒதுக்கித் தள்ளும் தன்மை வருகின்றது.
2.உங்கள் வாழ்க்கையிலே நீங்கள் இதைச் சந்திக்கலாம்.

ஏனென்றால் இப்போது (உபதேசம் செய்த வருடம் 2002) 40 வயது 50 வயதில் உள்ளவர்கள் எல்லாம் இருக்கின்றீர்கள். 20 முதல் 30 வயது உள்ளவர்களும் இருக்கின்றீர்கள்.

நான் (ஞானகுரு) சொன்னதைப் பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள். இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

கருவில் வரும் சிசுக்களை ஞானிகளாக (குழந்தைகளை) உருவாக்கும் தன்மை பெற்றுத் தான் நாளை வரும் கொடூர அரக்க உணர்வுகளிலிருந்து மீட்டுத் தரும் நிலை வரும்.

இது நிச்சயம்…!

நம் எண்ணங்களும் உணர்வுகளும் எப்படித் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது? நம்முடைய செயலை அது எப்படி மாற்றுகின்றது…?

Image

நம் எண்ணங்களும் உணர்வுகளும் எப்படித் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது? “நம்முடைய செயலை… அது எப்படி மாற்றுகின்றது…?”

 

ஒரு ரேடியோ ஸ்டேசனில் உணர்வலைகள் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருக்கின்றது. சில நேரங்களில் காரசாரமான உணர்ச்சிகள் இன்னொரு அலைவரிசையில் வருகிறது என்றால் இதே அலை வரிசையில் வரப்படும் பொழுது இதிலிருந்து இந்த ஏரியல் வழி கூடித்தான் எடுக்கும்.

அந்த ஏரியலில் வரும் பொழுது இந்த அலை வரிசை அதிகமாகிவிட்டதென்றால் இதனின் அதிர்வலை “ஜிர்..ர்ர்..ர்ர்” என்று சப்தம் போடும்.

ஆகவே இதில் அலை வரிசையில் வரும் பொழுது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் வந்தாலும் எலெக்ட்ரிக்கின் உணர்வலைகள் வரப்படும் பொழுது அந்த எலெக்ட்ரிக்கின் தொடர்பு கொண்டுதான் இங்கே இயக்குகின்றது.

அந்த உணர்வின் தன்மை எரியல் வழி கூடி அது வந்தாலும் இது எர்த் ஆன பின் இன்னொரு ஸ்டேசனை வலுவான நிலைகளை இழுத்து என்ன செய்கின்றது?

அந்த அதிர்வுகளையே காட்டுகின்றது. (நீங்கள் கேட்டிருப்பீர்கள் – இரண்டு ஸ்டேசன் ஒரே அலைவரிசையில் வந்தால் ரேடியோவாக இருந்தாலும் டி.வி.யாக இருந்தாலும் அதிர்வாகி இரைச்சலாகும்)

இதைப் போல

1.நம் உயிர் எலெக்ட்ரிக் என்றாலும்

2.ஒரு எதிர் உணர்வான எலெக்ட்ரிக் அந்த எலெக்ட்ரானிக்காக மாற்றப்படும் பொழுது

3.நம்முடைய சிந்தனை குலைந்து

4.நம்மை அறியாமலே தவறான சொல்களைச் சொல்லச் செய்து

5.தவறான செயல்களைச் செய்யச் செய்துவிடுகின்றது.

உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுவதைப் பார்க்கின்றோம். ஒருவன் மற்றொருவனை மிரட்டிப் பேசுகின்றான்.

1.அவன் உடலிலிருந்து வெளிவந்த அலைகள் இங்கே இருக்கின்றது.

2.அவனுக்குள் விளைந்திருக்கின்றது. அவனிடமிருந்து வெளி வருகின்றது.

3.நமக்குள் பதிவாகியிருக்கின்றது. அந்த அலைகளை நுகரச் செய்கின்றது.

4.அது அழிவதில்லை.

5.அதை (அந்த ஸ்டேசனை) அழிக்க வேண்டுமல்லவா…!

அது நமக்குள் இருக்கும் பொழுது என்ன செய்கின்றது?

நாம் சோர்வடையப்படும் பொழுது காரமான உணர்ச்சி கொண்டு நம்மை இயக்கச் செய்கின்றது. திடீரென்று நமக்குக் கோபம் வரும்.

அப்பொழுது எதை எடுத்தாலும் வேகம் வரும். ஒரு பொருளை எடுத்தாலும் அந்த வேகம் வரும். சோர்வடைந்த அந்த நேரத்தில் தூக்கி எறிவார்கள்.

ஒரு பலகாரம் சுட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்த மாதிரி ஆகட்டும். உடனே என்ன செய்வார்கள்?

வடையை எணணெய்ச் சட்டிக்குள் மெதுவாகப் போடுவதற்குப் பதில் தூக்கி “டப்..” என்று போடுவார்கள். எண்ணெய் மேலே படும்.

செய்வது எது…? நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள் தான்.

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் அந்த உணர்வுகள் நம்மை இயக்காது நாம் அதை அடக்க வேண்டும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதா…?

ஆகவே நம்மை அறியாமல் இத்தகைய தீமைகள் இயக்கக்கூடிய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் “அருள் மகரிஷிகளின் பால்” நினைவைச் செலுத்த வேண்டும் “அந்த அலை வரிசையை…” எடுக்க வேண்டும்.

தீமையான உணர்வைக் கண்ட அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் உயிரிலே படும் இந்த அருள் உணர்வுகள் நம்மை இயக்கும் தீமையின் நிலைகளை உணர்த்தும். தீமையின் நிலைகளை அடக்கும். சிந்தனைத் திறனைக் கூட்டும். தீமையான உணர்வலைகள் நம் அருகிலே வராது தள்ளிவிடும்

அப்பொழுது நம் சொல்லில் இனிமையும் செயலில் தெளிவும் வரும். நமக்கும் நல்லதாகும் எல்லோருக்கும் நல்லதாகும்.

தீவிரவாத உணர்வுகளை நம் மூச்சலைகளால் அகன்று செல்ல வைக்க முடியும்

Image

Comets

தீவிரவாத உணர்வுகளை “நம் மூச்சலைகளால்..” அகன்று செல்ல வைக்க முடியும்

 

நம் பிரபஞ்சததில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றது.

அந்த உணர்வுகள் நம் பூமியிலே கலந்து கொண்டு இருக்கும்போது ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் சேரவில்லை என்றால் ஒதுக்கப்பட்டுச் சுழிக்காற்றுகள் வருகின்றது.

கடல்களிலும் இதே போன்றுதான் எதிர் நிலையான நட்சத்திர அலைகள் தாக்கப்படும் போது அது புயலாக மாறுகின்றது.

மனிதனான நமக்குள்ளும் அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருக்கப்பட்டுள்ளது. அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் இருந்தாலும்

1.எதிர் நிலையான நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் எந்த அளவுக்கு வலுவாக இருக்கின்றதோ

2.அதன் உணர்வு வழிப்படிதான் நம் உடலுக்குள் மற்ற உணர்வுகளை அடிமைப்படுத்துவதும்

3.அதன் நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் உண்டு.

அகண்ட பேரண்டத்தில் 2000 சூரியக் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று துணை கொண்டு ஓடி அது வாழ்ந்து கொண்டு சுழன்று கொண்டு இருக்கின்றது.

இருப்பினும் 2000 சூரியக் குடும்பங்களிலிருந்து வரக்கூடிய தூசி மண்டலங்கள் வால் நட்சத்திரமாக அது தனித்துத் தனித்து ஒதுங்கி இருக்கின்றது.

2000 சூரியக் குடும்பங்களுக்கும் நேர்ப்பாதையில் அத்தகைய தூசி மண்டலம் வரும் போது இதைக் கவர்ந்து மீண்டும் சூரியன் அந்தக் கொடிய விஷத் தன்மைகளை மாற்றிவிடுகின்றது.

சூரியனுக்குப் போகும் பாதையில் நமது பூமியின் ஈர்ப்பிற்குள் (வால் நட்சத்திரம்) வந்துவிட்டால்

1.பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இந்தத் தூசி மண்டலங்கள் மோதும் போது நெருப்பாகி

2.அதனின் விஷத் தன்மைகள் நம் பூமிக்குள் பரவுகின்றது.

3.எந்தப் பகுதியில் பரவுகின்றதோ அங்கெல்லாம் விஷத்தன்மை பரவுகின்றது.

4.தாவர இனங்களானாலும் மற்ற எதுவானாலும் விஷத்தன்மை பரவுகின்றது.

(இப்பொழுது பல வால் நட்சத்திரங்கள் நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றது. பூமிக்குள்ளும் வந்து கொண்டிருக்கின்றது. பத்திரிக்கைகளிலும் டி.வி,யிலும் பார்ப்பீர்கள்)

இத்தகைய விஷத் தன்மைகள் பூமிக்குள் வந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில் மனிதருக்குள் கொடூர அசுர உணர்வுகள் ஒவ்வொரு மனித உடலில் தீவிரவாதம் என்ற நிலையில் பரவிக் கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து தப்ப குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம் ஆன்மாவில் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை அதிகமாகப் பெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அருள் வட்டமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வலுவான பின்

1.நாம் விடும் மூச்சலைகளால் இந்த விஷத் தன்மையான தீமையான உணர்வுகள்

2.அது ஒதுங்கி ஓடத் தொடங்கும்.

ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்து வெளிப்படும் நிலையில் ஒதுங்கிய அந்த விஷமான உணர்வுகள் மற்ற எதனின் ஈர்ப்பிற்கும் செல்லாதபடி சூரியனால் ஈர்க்கப்பட்டுவிடும்.

அவைகளைச் சூரியன் கவர்ந்து சென்று அந்த விஷத்தைப் பூராம் கருக்கி விடுகின்றது. எதிர் நிலையான உணர்வுகள் அனைத்தும் மாற்றப்படுவதை நாளடைவில் நீங்கள் இதை உணர முடியும்.

சூரியன் அந்த விஷத் தன்மைகளை எப்படிக் கவர்கின்றது..? எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலையைக் குருநாதர் என்னை எப்படிக் காண வைத்தாரோ அதைப் போல நீங்களும் பார்த்திட முடியும்.

அந்த நிகழ்ச்சிகளை உங்களிலே அறிந்திடவும் முடியும்.

“கோப உணர்வை” வளர்த்துக் கொண்டால் பின் விளைவுகள் எப்படி இருக்கும்…?

Image

“கோப உணர்வை” வளர்த்துக் கொண்டால் பின் விளைவுகள் எப்படி இருக்கும்…?

 

1.கோபமான உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து

2.அந்த உணர்வின் ஞானமாக அதனின் உணர்ச்சிகள் நமக்குள் செயல்படும் பொழுது

3.கோபமான உணர்வின் அணுக்கள் பெருக்கமாகின்றது.

4.கோபத்தின் அணுக்கள் பெருக்கமானபின் அதனின் ஞானத்தைக் கொண்டு

5.அதையே உணவாக உட்கொள்ளும் ஞானத்தைப் பெருக்குகின்றது.

தன் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற கோப உணர்ச்சிகள் வருகின்றது. அதற்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யும்…!

அதே கோப உணர்ச்சியைத் தூண்டச் செய்து

1.பையனைத் திட்டச் சொல்லும்.

2.நண்பனை வெறுக்கச் சொல்லும்.

3.வியாபாரம் செய்து கொண்டிருந்தோம் என்றால் அதை மறக்கச் செய்யும்.

4.பொருள்களைக் கோபத்தால் வீசி எறியச் செய்யும்.

அந்த உணர்ச்சிகள் உணர்வான பின் அந்தச் சூட்சம உணர்வை எடுத்து அந்த அணுக்கள் விளைந்து இந்தக் கணக்குகள் நமக்குள் கூடினால் அந்த வினைக்கு நாயகனாக “இரத்தக் கொதிப்பாக” உருவாகின்றது.

இரத்தக் கொதிப்பான பின் எல்லோரையும் நாம் வெறுக்கும் நிலையாகி நம் உடலுக்குள்

1.நல்ல குணங்களை வெறுக்கும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலற்ற நிலைகள் வரும் பொழுது

2.நம் உடலின் அங்கங்கள் குறுக்கப்படும்.

3.நரம்பு சம்பந்தப்பட்ட (வாத) நோய்கள் வரும்

4.அந்த நிலையான பின் நம்மால் உடலால் நடந்து செல்ல முடியாது.

முடியவில்லை என்றால் ஒருவரை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்போம். எதிர்பார்த்தவுடன் வரவில்லை என்றால் அவன் மீது சீறிப் பாயும் நிலைகள் வரும்.

“நம்மால் முடியவில்லை…” என்று அவர் சிரமப்பட்டுக் கொண்டு நமக்காக வந்தாலும்

1.நினைத்த மாத்திரத்தில் வரவில்லை என்றால்

2.வெறி கொண்ட நாயைப் போலத் தாக்கிப் பேசும் உணர்வுகள் தான் வருகின்றது.

நம்மால் முடியவில்லை. ஆனால் கோபத்தின் நிலை வரும். அதுவும் முடியவில்லை என்றால் “அழுகை” வரும்.

முந்தைய வாழ்க்கையும் இன்றைய நிலைகளும் முடியவில்லை என்ற நிலைகள் சேர்ந்து வெகு நேரம் ஆகிவிட்டால் கடைசியில் தேம்பித் தேம்பி அழுகும் நிலை ஆகின்றது.

இப்படி இரத்தக்கொதிப்பாகச் சுருங்கிவிட்டால் நண்பன் என்ற நிலைகள் பழகிய உணர்வு பட்டபின் நண்பனைப் பார்க்கும் பொழுது – என் நிலை இப்படி ஆகிவிட்டது… சொல்லால் பேச முடியவில்லை என்றால்…, “அழுகையால் காட்டும் ஞானம்” வருகின்றது.

கோபம் கோபம் என்று அந்தக் காரமான உணர்வுகளைச் சுவாசித்து கோப உணர்வுகளை அதிகமாக வளர்த்துக் கொண்டபின் அந்தக் கணக்கின் பிரகாரம் வினைக்கு நாயகனாக முடிவு இப்படித்தான் ஆகும்.

இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காகத்தான் பார்க்கும் இடங்களில் எல்லாம் விநாயகரை வைத்து நீ எதை உனக்குள் நாயகனாக்கப் போகிறாய் நீ சிந்தித்துப் பார் என்று கேள்விக் குறி போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

நாம் ஞானிகள் சொன்ன முறைப்படி சிந்திக்கின்றோமா…!

விநாயகரைப் பார்த்து “சலாம்…!” போட்டுவிட்டால் அவன் நம்மைக் காப்பாற்றுவான் என்றால் எப்படிக் காப்பாற்றுவான்?

விநாயகரை வணங்காமல் சென்றால் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை என்றால் என்ன அர்த்தம்?

உயிரால் உருவாக்கப்பட்ட உடல் தான் இது. உயிரும் உடலும் சேர்ந்தது தான் இது. உன்னில் நீ பார்…! உன்னில் நீ காண்…! உன்னை நீ அறிவாய்…!” உயிரால் உருவாக்கப்பட்ட பிள்ளைதான் இது.

நீ யார்…, இந்தப் பிள்ளை யார்…? ஒவ்வொரு நொடிப் பொழுதும் உனக்குள் உள் நின்று கடவுளாக இயங்கிக் கொண்டிருக்கும் உன் உயிரான ஈசனையும் அவனால் உருவாக்கப்பட்ட உன் உடலை ஆலயமாகவும் நீ மதிக்கவில்லை அறியவில்லை என்றால் அதனால் பல ஏதும் இல்லை என்று தான் ஞானிகள் சொன்னார்கள்.

நமக்குள் இருக்கும் அந்த உயிர் தான் நாம் பார்ப்பதை நுகர்வதை எண்ணுவதை கேட்பதை அனைத்தையும் இயக்கி…, அணுவாக மாற்றி…, உடலாக உருவாக்கிக் கொண்டுள்ளான் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

தீமைகளை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உயிர் வழி நாம் சுவாசித்தால் அந்த ஆற்றல்கள் நம் உடலில் அணுக்களாக விளைந்து வினைக்கு நாயகனாக அது ஆகி இன்றைய செயல் நாளைய சரீரமாக ஒளியின் சரீரம் பெறலாம்.

மிருக உடலிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த மனிதன் அடுத்த நிலையாக ஒளிச் சரீரம் தான் பெறவேண்டும்.

கௌரவத்திற்காகவும் சொத்துக்காகவும் சுகத்திற்காகவும் வாழ்ந்தால் மீண்டும் உடல் பெறும் நிலையாகி மனிதனல்லாத உருவைத்தான் பெற முடியும்.

இந்த உடல் வாழ்க்கையில் வாழும் காலம் என்பது மிகவும் குறுகிய காலமே. அதற்குள் பேரருள் பேரொளி உணர்வுகளைச் சேர்த்து என்றுமே விண்ணிலே வாழும் நிலை பெறலாம்.

நம் உயிரான்மாவிற்குச் சேமிக்க வேண்டியது அழியாச் சொத்து தான். நாம் அனுபவிக்கும் அழியக் கூடிய சொத்துக்களால் உயிரான்மாவிற்குப் பலன் இல்லை.

இன்றைய காலகட்டத்தில் மந்திரம் சொல்லக்கூடாது என்று ஏன் சொல்கிறோம்…?

Vasiya mantram

இன்றைய காலகட்டத்தில் மந்திரம் சொல்லக்கூடாது என்று ஏன் சொல்கிறோம்…?

 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல மந்திரங்களைக் கற்றுணர்ந்தவர்.

1.மந்திரத்தின் உண்மைகளையும் அறிந்தார்.
2.மந்திரத்திற்குள் இருக்கும் உட்பொருளை அறிந்தார்.
3.மெய்ப்பொருளைக் காணும் நிலையில் தன் எண்ணத்தைச் செலுத்தினார்.
4.மெய்ப்பொருளை அடைந்தார்.

தன் வாழ்க்கையில் மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டால் அதன் பின் விளைவுகள் என்ன ஆகும் என்று குருநாதர் தெளிவுபடுத்தினார்.
1.யார் யார் எந்தெந்த மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டார்களோ
2.அதே மந்திரத்தைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது
3.அந்த மந்திரத்தைப் பதிவு செய்தவரின் உணர்வுகள்
4.அந்த உடலை விட்டு உயிர் பிரிந்தபின் (இறந்தபின்) அந்த ஆன்மா மந்திரம் சொல்பவர் உடலுக்குள் வருகின்றது.
5.இந்த மனிதனின் உடலுக்குத்தான் இது பயன்படுத்த முடியும் என்ற நிலையைக் குருநாதர் தெளிவாக உணர்த்துகின்றார்.
7.ஆகவே இதைப் போல மந்திரங்களை எவர் சொன்னாலும் அதை நீ பதிவு செய்யாதே.

அந்த மந்திரங்களை மற்றவர்கள் சொல்வதை நீ கேட்டறிந்தாலும் உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என் உடல் முழுவதும் அது படரவேண்டும் என்று மெய் ஒளியின் உணர்வை வைத்துத் துடைத்துக் கொள்.

கேட்டு…, இரசித்து…, “மந்திரம் தானே…!” என்ற நிலைகள் நீ கேட்டறிந்தாலும் அது உனக்குள் பதிவாகிவிடுகின்றது.

பதிவான பின் அதை நீ நுகர நேரும். இந்த உடலை விட்டுச் சென்றபின் அந்த “மந்திர ஒலிகளிலே” உயிரான்மா அது இயக்கப்பட்டுவிடும்.., சிக்கிவிடும்.

ஆகையினால் எந்த மந்திர ஒலிகளை ஒருவர் சொன்னாலும் அதை அழித்திட “ஓ…ம் ஈஸ்வரா” என்று உயிரை வேண்டு.

நல்லதைச் செயல்படுத்துவதைத் தடுக்கும் இத்தகைய தீமைகளை உடனடியாகச் சுத்தப்படுத்த வேண்டும். ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு “விண்ணை நோக்கி ஏகு” என்றார் குருநாதர்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தியானித்து தீமை செய்யும் உணர்வின் தன்மையைத் துடைத்துவிடு என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

அகஸ்தியன் வெளிப்படுத்திய மூச்சலைகளைக் கவர்ந்து அகண்ட அண்டத்தை நீங்களும் அறியுங்கள்

Image

Lightning special

“அகஸ்தியன் வெளிப்படுத்திய மூச்சலைகளைக் கவர்ந்து…” அகண்ட அண்டத்தை நீங்களும் அறியுங்கள்

 

இருபத்தேழு நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதும் போது அந்த இயல்பால் மின் கதிர்களை அது விலக்கிச் செல்லும் உணர்வுகளைக்

1.சில தாவர இனங்கள் கவர்ந்து கொள்கின்றது,

2.இத்தகைய உணர்வுகள் விளைந்த செடிகளின் விழுதுகளைக் கையில் வைத்துக்கொண்டால்

3.மின்னலின் ஆக்கங்கள் அது நம்மைத் தாக்காது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் தாய் தந்தையர் அத்தகைய செடிகளை அறிந்திருந்தார்கள்.

அகஸ்தியன் கருவில் இருக்கும் பொழுது அந்தத் தாய் அந்த மின்னலைத் தணிக்கும் அத்தகைய விழுதுகளின் மணங்களை நுகர்ந்தது. கர்ப்பிணி அதை நுகரப்படும் போது கருவிலிருக்கும் சிசுவுக்கும் (அகஸ்தியன்) அந்த விழுதுகளின் மணங்கள் இரத்தத்தின் வழி கிடைக்கின்றது.

1.மின்னல் பாயும் பொழுது

2.மின் கதிர்கள் எவ்வளவு தூரம் செல்லுகின்றதோ…

3.அந்த ஆற்றல்களைக் கருவிலிருக்கும் சிசு (அகஸ்தியன்) பெறுகின்றது.

1.ஒவ்வொரு தாவர இனங்களின் இயல்புகளையும்

2.வானஇயல் இயல்புகளையும் பூமி உருவான நிலையும்

3.பூமி உருவாவதற்கு முன் சூரியன் எப்படி உருவானது என்ற நிலையும்

4.வான்வீதி முதலில் எப்படி இருந்தது என்ற நிலையும்

5.கண்டறியக்கூடிய சக்தி அகஸ்தியன் பெற்றதற்குக் காரணமே

6.அவருடைய மூதாதையர் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும்

7.தாய்  கருவிலேயே அவன் பெற்று வளர்ந்தது தான்.

அகஸ்தியனால் காட்டப்பட்ட உண்மையால் தான் மற்ற சூரியக் குடும்பங்களைப் பற்றியும் நம்முடைய சூரிய குடும்பத்தைப் பற்றியும்  இப்படி “எத்தனையோ வகையான எண்ணிலடங்காத சூரிய குடும்பங்கள் இருக்கின்றது…!’ என்று விஞ்ஞான அறிவில் இன்று கண்டு கொண்டுள்ளார்கள்.

அந்த மெய்ஞானியான அகஸ்தியன் ஓர் சூரியன் உருவானதும் அந்த சூரியக் குடும்பத்திற்குள் 27 நட்சத்திரம் உருவானதையும் கண்டுணர்ந்தான்.

அதே சமயத்தில் அந்த 27 நட்சத்திரங்களும் ஒரு காலம் சூரியனாக மாறுகின்றது. அப்பொழுது முதலில் உருவான சூரியன் செயல் இழக்கின்றது என்பதையும் அகஸ்தியன் கண்டுணர்ந்தான்.

ஏனென்றால் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலத்தின் சக்திகளைக் கவரும் பொழுது தான் சூரியனும் சீராக இயங்க முடியும். பிற மண்டலங்களிலிருந்து வரவில்லை என்றால் சூரியனுக்கு உணவில்லை… மடிந்துவிடும்.

1.ஆக சூரியனுக்கு உபகாரமாக இருக்கும் 27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறுவதையும்

2.இதைப் போல பல பல சூரிய பிரபஞ்சங்களாக எப்படி மாறி வந்தது என்ற நிலையையும்

3.அகஸ்தியன் தெளிவாகக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தி இருக்கின்றான்.

4.அவன் வெளிவிட்ட அந்த மூச்சலைகளை நீங்களும் நுகரமுடியும்.

அவனில் விளைந்த உணர்வுகள் ஒளியின் உடலாகத் துருவ நட்சத்திரமாக இன்று இருக்கின்றான். அவன் மனிதனாக வாழ்ந்த காலத்தில் தாய் கருவிலிருக்கும் பொழுது பெற்ற உணர்வுகளும் நம் பூமியில் பரவிக் கிடக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் இதைப் பதிவாக்கி அந்த அகஸ்தியன் மூச்சலைகளைக் கவரும் சந்தர்ப்பத்தை உருவாக்கினார்.

குருநாதர் எனக்குப் பதிவாக்கிய அதே உணர்வுப்படி தான் உங்களுக்கும் பதிவாக்கிக் கொண்டுள்ளேன். உங்கள் சந்தர்ப்பத்தால் அதை நீங்கள் கவரும் தகுதி பெறுகின்றீர்கள். அண்டத்தை அறியும் ஆற்றலும் பகைமை உணர்வுகளை அகற்றும் சக்தியும் நீங்கள் பெறுவீர்கள்.

இந்தக் காற்று மண்டலத்தில் பகைமையான உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கும் தீமைகளை அகற்றும் சக்தியும் நீங்களும் பெற வேண்டும்.

1.நான் ஒருவன் கண்டேன் என்றால் அது பத்தாது.

2.என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது.

3.நீங்கள் எல்லோரும் செயல்படுத்த வேண்டும்.

ஆகவே அந்த அகஸ்தியனின் அருள் சக்திகளை நீங்கள் உங்களுக்குள் பெருக்கிக் கொண்டால் இனி வரும் அசுர உணர்வுகளில்
இருந்து உங்களை மீட்டுக் கொள்ள முடியும்.

இந்த பூமியில் உள்ள விஷத் தன்மைகளை அகற்றும் அருள் ஞானிகளாக நீங்கள் வளர முடியும்.

 காய்ச்சலுக்கு ஊசி போட்டால் (அதிக டோஸ்) சர்க்கரை நோய் வருமா…?

Health bliss

காய்ச்சலுக்கு ஊசி போட்டால் (அதிக டோஸ்) சர்க்கரை நோய் வருமா…?

இன்றைய விஞ்ஞான உலகத்தில் எந்த உடல் உபாதையாக இருந்தாலும் உடனே அருகிலிருக்கும் மருந்துக் கடையில் மருந்து மாத்திரைகளை நாமே சாப்பிடும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றோம். விளைவுகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

அந்த நேரத்திற்கு வலியும் வேதனையும் குறைய வேண்டும். உடலை விட்டுச் சென்றால் எங்கே செல்வோம் என்ற அக்கறையில்லை.

ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டுமா அல்லது எங்கேயாவது கடுமையான வலி இருக்கின்றதா கடுமையான காய்ச்சல் இருக்கின்றதா… உடனே ஒரு இஞ்செக்சன்.

ஒரு டோஸ் போட்டவுடன் காய்ச்சல் நிற்கவில்லை என்றால்

1.இன்னொரு டோஸ்…, அப்புறம் இன்னொரு டோஸ் சேர்த்துப் போடுவார்கள்.
2.காய்ச்சல் உடனே நின்றுவிடும்.
3.நம் உடலில் இனிப்புச் சத்தெல்லாம் சுருங்கிப் போகும்.
4.காய்ச்சலுக்கு ஊசி போட்டால் அடுத்தாற்போல் சர்க்கரை வியாதி வந்துவிட்டது என்பார்கள்.

அதிகமான காய்ச்சல் இருந்தது. எல்லாம் நிவர்த்தியானது. அடுத்து நான்கு டோஸ் போட்டேன்.

1.அப்புறம் கிட்னி – சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டது.
2.உடலில் உள்ள இரத்தத்தில் உப்புச் சத்து அதிகமாகிவிட்டது என்று சொல்வார்கள்.
3.ஆக, விஷம் கலந்த மாத்திரைகளையும் மருந்துகளையும் தான் உட்கொள்கின்றோம்.

“தலை வலிக்கின்றது…தலை வலிக்கின்றது…” என்று சொல்லி அடிக்கடி மாத்திரையைச் சாப்பிடுவார்கள். தலை வலி போய்விடுகிறது.

ஆனால் கிட்னி இந்த விஷத்தை முறியடிக்க முடியாதபடி செயலிழந்துவிடுகின்றது. கிட்னி வேலை செய்யாமல் போய்விடுகின்றது.

இந்த மாதிரி விஞ்ஞான உலகில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். “அவசரத்திற்குத் தலை வலி நீங்கினால் போதும்…” என்று எண்ணுகின்றார்கள். பின் விளைவுகளைப் பற்றிய சிந்தனை இல்லை.

ஆனால் அதிலுள்ள விஷத்தன்மைகள் கிட்னிக்குள் சென்றால் அது அதைப் பிரிக்க முடியாது போய்விடுகின்றது. அடுத்து அதைச் சரி செய்யலாம் என்றாலோ அல்லது மாற்று கிட்னி பொருத்தலாம் என்றாலோ பணம் இலட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும்.

இதுவும் போக இதைக் காட்டிலும் யாராவது இந்த மாதிரிச் சிக்கினால் கிட்னியையே எடுத்து வியாபாரம் செய்துவிடுகின்றார்கள். “குழந்தைகள் காணோம் அல்லது முதியவர்கள் காணோம்…” என்றால் அவர்கள் உடலில் உள்ள உறுப்புகளை அலுங்காமல் எடுத்து வியாபாரம் ஆகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து தப்ப என்ன வைத்திருக்கின்றோம்?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்…, அவர் எம்மைக் (ஞானகுரு) காடுகளில் மனித நடமாட்டமே இல்லாத சில இடங்களுக்கு எம்மை அழைத்துச் சென்று மெய்ஞானிகள் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகளைப் பெறும்படி செய்தார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அதை உங்கள் உடலுக்குள் சேர்த்து தீமைகள் உங்களுக்குள் விளையாது தடுத்துக் கொள்ள முடியும்.

விஞ்ஞான விஷத்தால் வந்த தீமைகளை நீக்க முடியும்.

1..உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களுக்குள்ளும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணையச் செய்து
3.விஷத்தைக் கழிக்கக்கூடிய
4.விஷத்தைக் கரைக்கக்கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்.
5.விஞ்ஞானத்தால் விளைந்த விஷத்தை உங்கள் எண்ணத்தால் நிச்சயம் அகற்ற முடியும்.

இல்லை என்றால் மருந்து மாத்திரைகளின் விஷத்தன்மைகள் இரத்தத்தில் கலந்து உடலுக்குள் நஞ்சு விளைந்து உயிராத்மா நஞ்சாகிவிடும்.

உயிராத்மாவில் பெருகிய நஞ்சின் விளைவால் இன்று மருந்துகளை எப்படிப் பாம்பிலிருந்தும் விஷம் கொண்ட மற்ற உயிரினங்களில் எடுத்துப் பவுடாராக்கினார்களோ அந்த உடலுக்குள் போய்ப் பிறக்கலாம்.

எப்படியும் உடலை விட்டு ஒரு நாள் போகத்தான் போகின்றோம்.

1.நஞ்சை நீக்கி அருள் உணர்வை வளர்க்கும் நிலையில் பிரிந்து சென்றால் வளர்ச்சி.
2.ஆனால் நஞ்சின் சேமிப்பாக வளர்த்து வளர்த்து நல்லதை இழந்தால்
3.மனித நிலையிலிருந்து தேய்மானமாகி விஷம் கொண்ட உயிரினமாகப் பிறக்க நேரிடும்.
4.விஷத்தை வெல்ல வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வளர்த்தே ஆக வேண்டும்.

ஏனென்றால் நஞ்சை உணவாக எடுத்து ஒளியாக மாற்றும் ஆற்றல் பெற்றது துருவ நட்சத்திரம்.

உங்களால் நஞ்சை வெல்ல முடியும். நம்புங்கள்.

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து “ஆத்ம சுத்தி” செய்ய வேண்டிய முறை

Souls cleaning

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து “ஆத்ம சுத்தி” செய்ய வேண்டிய முறை

எப்படிப் பிரபஞ்சத்தில் வரும் சக்திகளைச் சூரியன் தன் அருகிலே வரும் பொழுது பாதரசத்தால் மோதி விஷத்தை பிரிக்கின்றதோ இதே போல மனித உடலில் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகளிலே கலந்து வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றுகின்றது.

நஞ்சை விலக்கிச் செல்லும் ஆற்றல் மிக்க உணர்வைக் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டினார்கள். மனிதனின் ஆறாவது அறிவு தான் கார்த்திகேயா.

நாம் வெறுப்பென்றோ வேதனை என்றோ கோபம் என்ற உணர்வுகளை நுகர்ந்தால் இந்த ஆறாவது அறிவால் “அறிந்து கொள்கிறோம் – கார்த்திகேயா…” என்று நமது சாஸ்திரத்தில் தெளிவாகக் கூறப்படுகிறது.

பூமியில் மனிதனாகத் தோன்றியவன்
1.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.நஞ்சென்ற நிலையை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அந்த ஆற்றலை நாமும் பெற்று விண் செல்ல வேண்டும்.

புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரை “ஈஸ்வரா..” என்று நாம் எண்ண வேண்டும். கண்ணின் நினைவால் அங்கே இணைக்கப்பட்டுத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைப் பெறவேண்டும் என்று ஈர்க்க வேண்டும். அவ்வாறு
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஈர்க்கும்போது
2.நம் உடலுக்குள் தீமைகளை விளையச் செய்யும் விஷத் தன்மையான அணுக்களுக்கு
3.ஆகாரம் செல்லாது தடைபடுகின்றது.
4.(புருவ மத்தியில் – உயிரில் பட்டால் தான் எதுவும் இயக்கமாகும்)

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அதே கண்ணின் நினைவலைகளை நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.

நம் உடல் முழுவதும் பரவி வரும் இரத்தங்களில் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது இரத்தங்கள் தூய்மையாகின்றது.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெறவேண்டும் என்று நினைவினைச் செலுத்தினால் அது வீரியத் தன்மை அடைந்து இதற்கு முன் நாம் நுகர்ந்த விஷத் தன்மைகளை நுகராது தடைப்படுத்திவிடுகின்றது.

அப்பொழுது உடலுக்குள் விஷத்தை உருவாக்கி அதை உணவாக எடுத்து வளரும் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் இல்லாது தடைபடுத்துகின்றது.

நம் ஆன்மாவில் இருக்கும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகள்
1.உடலுக்குள் போகாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது
3.அவைகள் எல்லாம் அனாதையாகின்றது.
4.அடுத்த கணம் அனாதையான தீமையின் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து சென்றுவிடுகின்றது.
5.நம் ஆன்மா சுத்தமாகின்றது – இது தான் ஆத்ம சுத்தி என்பது.

ஒவ்வொரு நாளும் சலிப்பு சஞ்சலம் வேதனை வெறுப்பு குரோதம் போன்ற உணர்வுகளைக் கேட்க நேர்ந்தாலோ பார்க்க நேர்ந்தாலோ இவ்வழியில் அவைகளை நீக்கி பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலில் உள்ள எல்லா அணுக்களும் வீரியம் அடைந்து உடலை விட்டுச் செல்லும் நம் உயிரான்மா எதிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து விடுகின்றது.
1.தொக்கியுள்ள விஷங்கள் அங்கே கரைக்கப்பட்டுப் பிறவியில்லா நிலை அடைகின்றோம்
2.என்றுமே ஏகாந்த நிலையாக எதிர்ப்பே இல்லாத நிலையில் பேரானந்த நிலையை அடைகின்றோம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரத்திரமான அதனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் இதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆறாவது அறிவு கொண்டு அவ்வாறு ஏழாவது நிலையைப் பெற்றவர்களைத் தான் சப்தரிஷி மண்டலம் என்பது.

அது தான் மனிதனின் கடைசி முடிவான நிலை.

ஜாதகமா…! சாதகமா…? எது சரி…?

Image

ஜாதகமா…! சாதகமா…? எது சரி..?

 

இன்று எந்த ஜாதகக்காரரும் நம்மிடம் கேட்பது உங்கள் நட்சத்திரம் எது?

பிறந்த நேரத்தை வைத்து நட்சத்திரத்தைச் சொல்கிறோம். அதை வைத்து சில கணக்கீடுகளைச் சொல்வார்கள்.

இந்த இந்த நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஆகாது. சில நட்சத்திரங்கள் இணை சேரும். கலவையாகும் பொழுது அந்த இராசிகள் இப்படி என்று கூட்டிக் கழித்துப் பார்த்து இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கணிக்கின்றார்கள்.

ஆனால் என்ன தான் ஜாதகம் பார்த்தாலும் அவர்களால் நடந்ததைத்தான் சொல்ல முடிகிறதே தவிர நடக்கப் போவதை யாராலும் கணிக்க முடியவில்லை.

கணித்துச் சொன்னாலும் அது ஆயிரத்தில் ஒன்று நடந்தாலே பெரிதுதான். ஏனென்றால் ஞானிகள் மனிதனுக்கு அவ்வாறு கணிக்கவுமில்லை. அப்படிச் சொல்லவுமில்லை.

ஞானிகள் வான இயல் சாஸ்திரத்தைக் கண்டார்கள். நட்சத்திரங்கள் கோள்கள் சூரியன் எல்லாவற்றின் இயக்கத்தையும் அறிந்தார்கள். அது உண்மைதான்.

அதையெல்லாம் அறிந்து கொண்ட அவர்கள் இயற்கையின் அந்த இயக்கத்துடன் ஒன்றி இயற்கையின் செயலாகச் சாதகப்படுத்துவதைத்தான் சாதகம் என்று சொன்னார்கள். இன்று இவர்கள் சொல்லும் ஜாதகம் ஜோதிடம் போல் இல்லை.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியை யார் யாரெல்லாம் தங்களுக்குள் சேர்த்து உயிராத்மாவில் அதன் ஆற்றலை விளைவிக்கின்றார்களோ அவர்களுக்கு எல்லாமே சாதகம் தான்.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகளையும் எடுத்துத் தனக்குள் விளைய வைத்துத்தான் அகஸ்தியர் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

அவரைப் போன்று அவரைப் பின்பற்றி 27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்தவர்கள் எல்லாமே இன்று அவரின் அணைப்பில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

27 நட்சத்திரங்களின் சக்தியைச் சாதாரண மனிதனால் எடுக்க முடியாது. அப்படியே எண்ணி எடுத்தாலும் உடலுக்குள் கடுமையான விஷத்தன்மையாகி உடலைக் கருக்கி விடும்.

குரு துணையில்லாமல் அதை எடுக்க முடியாது.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் தாய் தந்தையைக் கடவுளாக எண்ணி உயிரைக் கடவுளாக மதித்து ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி குரு அருளால் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி எடுத்தல் நமக்குள் சிறுகச் சிறுக அந்தச் சக்தி கூடும்.

வாழ்க்கையில் எத்தகைய எதிர் நிலை வந்தாலும் எல்லாமே நமக்கு நேர் நிலையாக “சாதகமாக” மாறும்.

27 நட்சத்திரத்தின் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டியதில்லை. அகஸ்தியரை எண்ணி துருவ நட்சத்திரத்தை எண்ணி மகரிஷிகளை எண்ணினால் குறிப்பாக விண்ணிலிருந்து புருவ மத்தி வழியாகச் சுவாசித்தால் அந்தச் சக்தி எளிதில் கிட்டும்.

சாதகம் – சாதகம் பண்ணுகிறார் என்பதெல்லாம் விண்ணின் ஆற்றலைப் பெறுவதற்குத்தான். இது தான் ஞானிகள் நமக்குச் சொன்ன “யோகம்..!”

நாமும் விண்ணிலே ஒளிச் சுடராக ஒரு மண்டலமாகத் திகழலாம்.., படைக்கலாம். மனிதனின் வீரியத்தின் உண்மை இது. மகரிஷிகள் அடைந்த பேரின்ப நிலை இது