அரசர்கள் உருவாக்கிய ஐதீகங்களில் தான் இன்றும் உள்ளோம்…! ஞானிகள் கொடுத்த மெய் வழியில் நாம் செல்லவேண்டும்…!

Image

wisdom-light
அரசர்கள் உருவாக்கிய ஐதீகங்களில் தான் இன்றும் உள்ளோம்…! ஞானிகள் கொடுத்த மெய் வழியில் நாம் செல்லவேண்டும்…!

 

இயற்கையின் செயல் ஆற்றல்கள் எவ்வாறு இயங்குகின்றது என்ற உண்மையின் நிலைகளை அருள் ஞானமாக அதைத் தெளிவுற நமக்கு எடுத்துரைத்தவர்கள் அன்றைய மகா ஞானிகள்.

அவர்கள் கண்டுணர்ந்ததைச் சாதாரண பாமரனும் அறிவதற்காகவும் அந்த ஆற்றல்களைப் பெறுவதற்காகவும் ஒவ்வொரு மாதமும் விழாக்களாக நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.
1.அதை நாம் உணரவும் முடியவில்லை
2.அதை அறியவும் எந்த முயற்சி எடுக்கவில்லை
3.இது தான் இன்றைய நிலை.

ஏனென்றால் பிற்காலத்தில் வந்த அரசர்கள் அந்த மஹா ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த நிலைகளை “ஐதீகம்…!” என்ற நிலைகளில் உரு மாற்றி விட்டார்கள்.

ஆனால் அதே சமயம்
1.இயற்கையில் உணர்வின் தன்மை கொண்டு உடல்கள் எவ்வாறு உருவானது…?
1.மனித உடலுக்குள் எத்தகைய பேருண்மைகள் நிகழ்கின்றன…?
2.ஒவ்வொரு குணங்களின் செயல்களும் எவ்வாறு இயக்குகிறது…?
3.சேர்த்துக் கொண்ட குணங்களுக்கொப்ப உயிர் அந்த உணர்வின் இயக்கமாக உடலாகவும்
4.அந்த உணர்வின் இயக்கமாக அறிந்து தன்னைப் பாதுகாத்து கொள்ளுதலும்
5.நுகரும் (சுவாசிக்கும்) மணத்தால் தன்னைப் பாதுகாக்கும் நிலையும்
6.உணர்வால் தன்னை இயக்கித் தன்னை வளர்த்துக் கொள்வதும்
7.அது எவ்வாறு என்ற உண்மைகளைத் தன்னைத்தானே அறிந்திடும் நிலைகளுக்கு
7.மகரிஷிகளால் தெளிவாக மக்களுக்கு உணர்த்தப்பட்டது

இவையெல்லாம் ஞானிகள் வெளிப்படுத்தியிருந்தாலும் தன்னைத்தானே அறியாத நிலைகள் தடைப்படுத்தப்பட்டு
1.அரசர்களின் உருவாக்கிய ஐதீகப்படித்தான்…
2.அரசர்ளின் வழிகளில் தான் நாம் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றோம்.
3.ஞானிகள் சொன்ன வழியில் நாம் செல்லவில்லை.

ஆறாவது அறிவை “முருகன்…” என்று ஞானிகள் சொன்னால் அதனை ஓர் அரசன் முருகனே எனக்குக் குலதெய்வம் என்றும் முருகனல்லாது வேறு யாரையும் வணங்குவதில்லை தனித்துப் பிரித்து கொண்டான்.

முருகன் யார்…? என்று தத்துவ ஞானிள் நமக்குத் தெளிவுற எடுத்து உரைத்திருந்தாலும் அதனை அந்த அரசனுக்கு கீழ் இருக்கும் குடிமக்கள் அறிய முடியாத நிலைகளில் தடைப்படுத்தப்பட்டது. அறிய முடியாத நிலைமை ஆகிவிட்டது.

அந்த அரசனுக்குக் குலதெய்வம் என்ற நிலைகளில் ஸ்தல புராணத்தை வடித்து யாகங்கள் வேள்விகள் செய்து அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றினார்கள்.

நம் குலதெய்வம் இட்ட நிலைகளில் இந்த அரசு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி அந்த சட்டத்தின் அடிப்படையில் மதம் என்ற நிலைகளை இயக்கிவிட்டார்கள்.

விஷ்ணு மதம் சிவ மதம் முருகன் மதம் விநாயகன் மதம் என்று இப்படிப் பல மதங்களாக இயக்கப்பட்டுவிட்டது.
1.உலகில் எண்ணிலடங்காத மதங்கள் உண்டு
2.எண்ணிலடங்காத இனங்கள் உண்டு

இலட்சுமி தான் எங்கள் குலதெய்வம் என்று செல்வமும் மற்ற பொருள்களையும் வைத்து அதை ஒரு அரசன் கடைபிடித்து அந்தச் சட்டத்தை இயற்றி அந்தக் குடிமக்களைத் தன் கீழ் கொண்டு வந்து விட்டான்.

இதே மாதிரி சரஸ்வதியை எடுத்துக் கொண்டால் “சாரதாதேவி…!” என்று அதற்கு மறு பெயரிட்டு அதை எனது குலதெய்வம் என்று ஒரு அரசன் கூறி ஒரு மதத்தை உருவாக்கித் தனது குடிமக்களை ஆட்சி புரியும் நிலைகளுக்குக் கொண்டு வந்து விட்டான்.

விநாயகர் தத்துவத்தை எடுத்துக் கொண்டால் விநாயகன் எங்கள் குலதெய்வம் என்ற நிலைகளில் “அவனே முதல் கடவுள்..!” என்று ஒரு சாரார் அதை எடுத்துக் கொண்டனர்.

அந்த மதத்தின் அடிப்படையில் எங்கள் விநாயகர்… கணபதி எங்கள் குலதெய்வம்…! என்ற நிலைகளுக்கு அவர்கள் இயற்றிய சட்டத்தின் கீழ் அந்தக் குடிமக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்.

இன்று அந்த விநாயகர் தத்துவத்தையே நாம் அறிய முடியாத நிலைகளாகி காலத்தால் மறைந்தே போய் விட்டது.

விஷ்ணு எங்கள் குலதெய்வம் என்று அதை ஒரு மதம் என்ற நிலைகள் இயக்கப்பட்டு
1.அதிலே வடகலை தென்கலை என்ற நிலைகளில்
2.நாமம் இடுவதிலும் முத்திரை இடுவதிலும் தனக்குள் போர் செய்து கொண்டு
3.உண்மை நிலைகளை அறிய முடியாத நிலைகளில் விரயமாகி விட்டது.

“அரங்கநாதன்…!” எங்கள் குலதெய்வம் என்று அதை ஒரு சாரார் ஒரு அரசன் கடைப்பிடித்து அதன் வழிகளிலே போதனை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதே போன்று “பெருமாள்…” தான் எங்கள் குலதெய்வம் என்றும் அவன் கையிலே தான் எங்கள் உயிரும் எங்கள் இயக்கமும் என்று அதை ஒரு அரசன் கடைபிடித்து அவன் ஒரு தத்துவத்தை எடுத்துக் கொடுத்தான்.

அந்தப் பெருமாள் யார் என்றும்… அந்த அரங்கநாதன் யார் என்ற நிலைகளையும் அறிய முடியாத நிலை ஆகிவிட்டது. அதே சமயம் விஷ்ணு யார்…? என்று இன்றும் கேள்விக் குறியையே எழுப்பிக் கொண்டுள்ளோம். இது அல்லாது
1.“சாமுண்டீஸ்வரி… அழகு நாச்சி… துர்கா தேவி…!” என்றும்
2.அதை அவரவர்கள் குணங்களுக்கொப்ப அரசன் அதைக் கடைபிடித்து
3.எங்கள் குலதெய்வம் இது தான் என்று மதங்களை வளர்த்து
4.அரசன் தன்னைப் பாதுகாக்கும் நிலைகளுக்குக் குலதெய்வமாக உருவாக்கிக் கொண்டான்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான்.

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் வீற்றிருந்து ஒளி சுடர் வீசிக் கொண்டிருப்பது அந்தத் துருவ மகரிஷி.

1.துருவ மகரிஷி என்றாலும்
2.அவன் ஒளிச் சுடராகத் துருவ நட்சத்திரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றான்
3.மனிதனுக்கு அறிவின் ஞானத்தைப் புகட்டிக் கொண்டிருக்கின்றான்.

அவனின்று வெளிப்படும் உணர்வின் சத்துக்கள் அனைத்தும் நாரதன் என்றும்… அவன் கலகப் பிரியன் என்றும் பின் வந்த ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.

நமக்குள் அறியாது வரும் தீமைகளை நீக்க நாரதன் என்ற அந்த அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்தால்
1.நமக்குள் இருக்கும் தீமைகள் அகன்று
2.மெய் ஒளியின் உணர்வுகளைக் காணும் நிலையை
3.நாம் அடைவோம் என்ற தத்துவத்தைத்தான் அன்று காட்டினார்கள்.

சுரங்கப் பாதைகளை கோவிலுக்குள் யார் வைத்தார்கள்…? ஏன் வைத்தார்கள்…?

Image

agastya-temple-siddhantha

சுரங்கப் பாதைகளை கோவிலுக்குள் யார் வைத்தார்கள்…? ஏன் வைத்தார்கள்…?

 

அன்று வாழ்ந்த அரசர்கள் தன் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்தால் அந்தத் தாய்க்குப் பலவிதமான விஷத் தன்மைகளை ஊட்டுகின்றான்.

பிறக்கும் தன் குழந்தைக்கு எந்த விஷமும் பாதிக்காமல் இருப்பதற்காக வேண்டித் தாய் உணவாக உட்கொள்ளும் ஒவ்வொரு (சோற்று) பருக்கையிலும் தலை முடியில் விஷத்தைத் தொட்டு அந்தப் பருக்கையுடன் சேர்த்துக் கொடுத்து விடுகின்றான்.

ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமான விஷமான பருக்கைகள்.

கர்ப்பமுற்றிருக்கும் தாயை அமர வைத்து
1.நம்முடைய அரசின் சட்டங்கள் இப்படி இருக்கின்றது…?
2.நம்முடைய போர் செய்யும் முறைகள் எப்படி…?
3.நம் எதிரிகள் இப்படி இருக்கின்றார்கள்…?
4.அந்த எதிரிகளை எப்படி வீழ்த்துவது..? என்ற அறிவுகள் அனைத்தையும் போதிக்கின்றார்கள்.
5.குழந்தை பிறக்கும் பொழுதே அந்த அறிவுடன் வருவதற்காக அவ்வாறு செய்கின்றார்கள்.

பல விஷமான சத்துக்களைத் தாய் உட்கொண்டதால் அந்த உணர்வுகள் இரத்தத்தின் வழி குழந்தைக்குச் சேர்ந்து அவன் பிறந்து வளர்ந்த பின் மிக மிக வலிமையான ஆயுதங்களை எடுத்து எதிரிகளை வீழ்த்தும் வீரிய ஆற்றல் கொண்டவனாக வருகின்றான்.

அரசர்கள் தங்கள் குழந்தைகளை இப்படித்தான் வலிமை மிக்கவர்களாக உருவாக்கினார்கள்.

அதே போல அரசன் தன் மதத்தின் நியாயங்களையும் அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையும் அரசாட்சிக்கு வரும் போது குல தெய்வங்களை உருவாக்கிச் சட்டங்களை இயற்றிவிடுகின்றார்கள்.

அந்தக் குலதெய்வம் தான் நம்மைக் காக்கின்றது என்ற நிலையில் ஸ்தலப் புராணத்தை வடித்து ஆலயமாகக் கட்டி அங்கே தெய்வத்தை உருவாக்கிவிடுகின்றார்கள்.

மேலும் அந்தத் தெய்வத்திற்கென்று மூல மந்திரத்தையும் உருவாக்கி எல்லோரையும் அதை ஜெபிக்கும்படி செய்வார்கள். இதையெல்லாம் உருவாக்கி
1.அதன் வழியில் மக்களை ஒன்றிணைக்கச் செய்து
2.மக்களைத் தன் வசப்படுத்தி
3.எதிரிகளை வீழ்த்துவதற்குத் தான் அதைப் பயன்படுத்தினார்கள்.

அரசர்கள் கட்டிய பெரும்பகுதி ஆலயங்களில் பார்த்தால் கோயிலுக்குள் (UNDER GROUND) சுரங்கப்பாதை வைத்திருப்பார்கள்.

எதிரிகள் ஜெயித்து வந்து விட்டால்…, “நீங்கள் எல்லாம் எப்படியும் செத்துப் போங்கள்… நான் தப்பித்து ஓடிப் போய்விடுகிறேன்…!” என்று ஆலயங்களில் உள்ள சுரங்கப் பாதை வழியாகத் தப்பிச் சென்று விடுவார்கள்.

எப்படிப் பார்த்தாலும் அரசர்கள் தான் சுகமாக வாழ எல்லா வேலைகளையும் அன்று செய்தார்கள். ஏனென்றால் அவனைக் காக்கும் நிலையில்
1.உயிரோடு இருக்கும் போது அவனுக்கு அடிமை
2.நாம் இறந்த பிற்பாடு நாம் ஜெபித்த அந்த மந்திரத்தைச் சொன்னால்
3.நம் ஆன்மா அவனுக்கு கைவல்யம் ஆகின்றது.

கைவல்யம் செய்த ஆன்மாக்களை எதிரிகளை வீழ்த்த அன்று பயன்படுத்தினார்கள் அன்றைய அரசர்கள்.

ஒருவர் செத்த பிற்பாடு என்ன செய்கின்றோம்..?

மாவிலே ஒரு பிண்டத்தைச் செய்து அதற்கு மந்திரத்தைச் சொல்லி ஆற்றிலே போய்ப் போட்டுவிட்டு வந்தால் “இறந்தவர்கள் செய்த பாவமெல்லாம் போகும்…!” என்பார்கள்.

அதை முடித்து பின் வீட்டில் வந்து எண்ணெய் தேய்த்து மூழ்கி விட்டு விநாயகர் கோவிலுக்குப் போய் மாவிளக்கு வைத்து நெய் தீபம் இட்டு தலைமகன் அங்கே அர்ச்சனை செய்தால்
1.அது மோட்ச தீபம் என்பார்கள்
2.இப்படி நம்மை முட்டாள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள்.

அடுத்து அமாவாசைக்கு என்ன செய்யச் சொல்கிறார்கள்…? பித்ருக்களுக்குச் சாப்பாடு கொடுத்துப் பழக வேண்டும் என்பார்கள். ஏனென்றால் பித்ருகளுக்குச் சாப்பாடு கொடுத்தால் அது புண்ணியம்.

புண்ணியமா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

ஒரு நோயாளியை உற்றுப் பார்த்து அவரின் நிலையை அதிகமாக நேசித்தால் என்னாகும்..? அவன் இறந்த பின் அவன் ஆன்மா நமக்குள் தான் வந்து விடுகின்றது.

அது நமக்குள் வந்தால் அவன் எப்படியெல்லாம் நோயால் அவஸ்தைப்பட்டானோ அதே மாதிரி நமக்கும் நோய் வந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் பித்ருக்களுக்காக வேண்டி மந்திரத்தை ஜெபித்தால் அவர்கள் ஆன்மாவை நமக்குள் இழுத்துக் கொள்ளலாம். அவர்கள் பட்ட நோய்களும் அவஸ்தைகளும் தான் நமக்கும் வரும்.

ஞானிகள் காட்டியதை அரசர்கள் தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்தி மக்களை மாக்களாக்கி எல்லோரையும் அவனுக்கு அடிமையாக்கும் நிலைக்கே கொண்டு சென்று விட்டார்கள்.

அதன் வழி தான் நாம் இன்றும் வழி நடந்து வருகின்றோமே தவிர ஞானிகள் காட்டிய மெய் வழியில் செயல்படுத்தவில்லை.

உடலை விட்டு மனிதன் பிரிந்து சென்றால் அவன் உயிரான்மா ஒளியின் நிலை அடைய வேண்டும் என்பது தான் ஞானிகள் சொன்னது. இதைத்தான் ஆலயங்களில் காட்டியுள்ளார்கள்.

1.இன்றைய செயலாக தெய்வ குணத்தை உன் வாழ்க்கையில் நீ வளர்த்தால்
2.நாளைய சரீரமாக நீ அழியாத நிலைகள் பெறலாம் என்பதைக் காட்டும் இடமே
3.ஞானிகளால் நிர்மாணிக்கப்பட்ட “ஆலயங்களின் நோக்கம்…!”

“ஓ…ம்…” என்ற நாதமாய் இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை நம்மை ஆளும் ஆண்டவனாக வணங்க வேண்டும்

Image

Om - ohm

“ஓ…ம்…” என்ற நாதமாய் இயக்கிக் கொண்டிருக்கும் உயிரை “நம்மை ஆளும் ஆண்டவனாக” வணங்க வேண்டும்

 

நாம் எதையெல்லாம் கேட்டு பார்த்து நுகர்கின்றோமோ (சுவாசிக்கின்றோமோ) நம் உயிரிலே பட்டபின் “ஓ… என்று இயங்கி “ம்…”என்று நம் உடலாக மாற்றுகின்றது.

நாம் எந்த குணத்தின் தன்மை இயக்குகின்றமோ அதன் உணர்வின் இயக்கமாக உயிர் நம்மை ஆளுகின்றது.

நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றமோ அந்த உணர்ச்சியின் இயக்கமாகத்தான் நம் சொல்லும் வருகின்றது. செயலும் செயல்படுகின்றது. அந்த உணர்வுக்கொப்பதான் நம் உடலும் இயக்குகின்றது.

உதாரணமாக நாம் ஒரு குணத்தை எண்ணிச் சுவாசிக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.நம் உடல் ஓர் அரங்கம்
2.இந்த அரங்கத்தில் நாம் நுகரும் உணர்வுகள் நாதம் (உயிரில் பட்டதும்)
3.அதைத் தான் “அரங்கநாதன்…” என்பது.

எதை நுகர்கின்றோமோ அதை நம் உயிர் நாதமாக நம்மை இயக்குகின்றது.

அந்த நாதத்தின் உணர்ச்சியை உதாரணமாகக் கோபமாகச் சொல்லப்படும்போது நீங்கள் கேட்டால் என்னவாகும்…?

அந்தக் கோபத்தின் உணர்வே உங்களை ஆளும். அது தான் “ஆண்டாள்…”

நாம் நுகரும் உணர்வுகள் அதே உணர்ச்சியின் தன்மையாக இயக்கப்பட்டு அந்தச் சொல்லாக சொல்லப்போகும் போது நீங்கள் கேட்டால்
1.அந்த கோபத்தின் உணர்வே உங்களை ஆளும்.
2.அந்தக் கோபத்தின் உணர்வே என்னையும் ஆளும்.
3.கோபத்தின் உணர்வை அடிக்கடி நாம் எடுத்தால் அந்த உணர்வின் தன்மை உடலாக ஆகி விட்டால் “ஆழ்வார்…”

அந்தக் கோபமான உணர்வுகள் உடலுக்குள் அதிகமானால் இரத்தக் கொதிப்பாக ஆகி
1.அந்த இரத்த கொதிப்பு தான் நம்மை ஆளும்.
2.இதைத் தான் ஆழ்வார் என்று ஞானிகள் தெளிவாகக் கூறி உள்ளார்கள்.

நமது வாழ்க்கையில் நாம் எப்படி எண்ண வேண்டும்…?

இருளை அகற்றும் அருள் ஞானம் பெற வேண்டும். நாங்கள் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும். தெளிந்த மனம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணினால் அந்த அருள் உணர்வுகள் நம் உடலுக்குள் அரங்கநாதனாகி கேட்பவர்களையும் அந்த உணர்வுகள் ஆளும். நன்மை செய்யும் உணர்வுகளை நாம் எடுக்கும் போது மற்றவரும் நன்மை செய்பவராக மாறுவர்.

நன்மை செய்யும் உணர்வுகள் நமக்குள் பெருகி நம் உடலுக்குள் நன்மைகள் ஏற்படும். நம் சொல் அடுத்தவர்கள் (இசை) செவிகளில் பட்டு அவர்களையும் நல்லதைச் செய்ய வைக்கும். அதனால் தான்
1.“ஓ…ம்…” என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை
2.எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம் என்று
3.உயிரை வணங்கச் சொல்கிறோம்.

ஆகவே நம்மை ஆள்வது யார்…? நம் உயிர் தான் ஆண்டவனாக ஆள்கின்றது.

எண்ணியதை இயக்குகின்றது.
எண்ணியதை உடலாக்குகின்றது
எண்ணியதை வைத்து இந்த உடலையே ஆள்கின்றது நம் உயிர்…!

“உடல் ஆசை… உயிர் ஆசை…” நமக்கு எந்த ஆசை வேண்டும்…?

Markandaeyan

“உடல் ஆசை… உயிர் ஆசை…” நமக்கு எந்த ஆசை வேண்டும்…?

நாம் இப்போது எதை ஆசைப்படுகின்றோம்…? இந்த உடலில் நான் வளர வேண்டும் என்றும் இதிலே மகிழ்ந்து வாழ வேண்டும் என்று
1.இந்த உடல் ஆசைதான் வருகின்றது.
2.உயிரான ஈசன் நமக்குள் இருந்து நல் வழி காட்டுகின்றான் என்ற நிலையைச் சுத்தமாக மறந்துவிடுகின்றோம்.

ஒருவன் எனக்குத் தவறு செய்தான் என்ற உணர்வை நுகர்ந்தால் அந்தத் தவறு செய்யும் உணர்ச்சி நமக்குள்ளே இயக்கி நம்மையும் தவறு செய்பவனாக மாறுகின்றது.

இந்த உடலின் இச்சைக்குத்தான் மாறுகின்றதே தவிர
1.தீமையான உணர்வுகளை நமக்குள் மாற்றி அமைக்கும் சக்தி இருந்தும்
2.அதைச் செயல்படுத்த முடியாது போய்விடுகின்றது.

அதனால் தான் என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டச் சொல்கின்றம்.

1.நீ ஒளியாக இருந்து…
2.உணர்வின் தன்மை எனக்கு எப்படித் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றாயோ
3.உன்னைப் போல இருளை அகற்றிடும் சக்தியாக
4.மெய்ப் பொருள் காணும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
4.உடல் ஆசை இல்லாது உயிரான ஆசை தான் எனக்கு வேண்டும்.

இதைத்தான் இராமயாணத்தில் உடலின் ஆசையைச் சிவ தனுசு என்று காட்டியுள்ளார்கள். அதாவது
1.உடலைக் காக்கும் (தன்னைக் காக்க) ஆசையில்
2.உடலில் விளைந்த பிறிதொரு தீமை செய்யும் உணர்வுகளைக் கவர்ந்து
3.நாமும் தீமை செய்து தீமையான உடலாகத் தான் வளர்த்து விடுகின்றோம்.

எதிரி என்றால் வீழ்த்திடும் உணர்வு வருகின்றது.
1.ஆனால் வீழ்த்திடும் உணர்வு வரும் போது
2.அந்தத் தீமையின் உணர்வே… நம் உடலையும் வீழ்த்துகின்றது…! என்பதனை நாம் மறந்து விடுகின்றோம்.
3.இத்தகைய உடல் ஆசை வரப்படும் போது தவறின் தன்மைய வருகின்றது.

ஆனால்…,
1.உயிரான ஈசன் அவன் எனக்குள் இருக்கின்றான்
2.எண்ணியதை அவன் உருவாக்குகின்றான்… இருளை அகற்றுகின்றான்… தெளிந்த மனம் பெறச் செய்கிறான்…
3.அவன் அருளால் அருள் மகரிஷிகளின் உணர்வை என்றுமே நான் பெறுவேன் என்ற
4.இந்த உயிர் ஆசையை நமக்குள் வளர்க்கப்போகும் போது
5.அருள் ஆசை நமக்குள் என்றுமே இருந்து கொண்டே இருக்கும்.

அந்த அருள் ஆசை இருந்தால் நமக்குள் பொருள் அறிந்து செயல்படும் திறனும் பிறவியில்லா நிலை அடையும் ஆற்றல்களையும் பெறுகின்றோம்.

உயிருடன் ஒன்றியே நாம் வாழ்கிறோம். அவனுடன் ஐக்கியமாகும் நிலை பெற்று விட்டால் உயிர் நம்மை (அவனுடன் இணைந்த நிலையில்) நேரடியாக மகரிஷிகள் வாழும் இருப்பிடத்திற்கே அழைத்துச் செல்லும்…!

சிந்தித்துச் செயல்படும் பரிபக்குவ நிலையாக “ஞானச் சுடராகப் பெறுவோம்…!”

Image

human aura

சிந்தித்துச் செயல்படும் பரிபக்குவ நிலையாக “ஞானச் சுடராகப் பெறுவோம்…!”

 

என் குழந்தையை வளர்க்கின்றேன். “அவன் நல்லவன்…” என்று நான் போற்றுகின்றேன். ஆனால் சரியான நேரத்தில் அவன் தவறு செய்தான் என்றால்
1.முதலில் போற்றிப் பேசியதை மாற்றிவிட்டு
2.அடுத்து நாம் அவனைத் தூற்ற ஆரம்பித்து விடுகின்றோம்.

அந்த இடத்தில் நாம் பரிபக்குவமாகச் செயல்பட வேண்டும் என்றால்
1.அவன் ஏன் சேட்டை செய்தான்…?
2.அவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
3.அவனை அறியாது இயக்கும் தீமைகளைத் தடுத்து நல்ல வழியை எப்படிக் காட்ட வேண்டும் என்று
4.அருள் உணர்வை எடுத்து அதைத் தெளிவாக்க வேண்டும்.

அதே மாதிரி இப்போது நண்பர்களுக்குள் ஒருத்தருக்கொருத்தர் பழகுகின்றோம். சந்தர்ப்பபேதத்தால் ஒருத்தருக்கொருத்தர் பகைமை வருகின்றது.

நாங்கள் நண்பர்களாக உயர்ந்து வளர்ந்தோம். நண்பர்களாக ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று சொல்கின்றோம்.

சந்தர்ப்பத்தில் சிறு சிறு குறைகள் வந்தால் அங்கே பக்குவ நிலை தவறினால் அது பகைமையாக மாறுகின்றது. இந்த மாதிரி நேரங்களில் நாம் எப்படிப் பக்குவமாக நடந்து கொள்வது என்பதற்காகத் தான்
1.பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல்
2.பரிபக்குவ நிலை நான் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று
3.உயிரான ஈசனை வேண்டும்படி சொல்கிறோம்.

நான் அப்படிச் செய்தேன்.. இப்படிச் செய்தேன்… பாவி…! எனக்கு இப்படி இந்த மாதிரித் துரோகம் செய்கின்றானே…! என்று இப்படி இந்த நினைவுகளால் “இந்தப் பாட்டையே பாடிக் கொண்டிருப்போம்…”

ஆகவே நம்முடைய உணர்வுகள் மாறி நம்மை எப்படி குறைகளாக மாற்றுகின்றது..? இதிலிருந்தெல்லாம் நாம் பக்குவநிலை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா..!

ஒருவன் கோபிக்கின்றான் என்றால்…, அவன் ஏன் கோபிக்கின்றான்…? என்று சற்றுச் சிந்தித்தோம் என்றால்
1.நாம் செய்தோமா…!
2.தவறு அவர்கள் செய்கின்றனரா…? என்ற எண்ணத்தில் எண்ணி
3.தவறை நீக்கும் பரிபக்குவ நிலையை நாம் பெற்று விட்டால் தவறு நமக்குள் வராது
4.தவறு செய்பவன் வளரவும் மாட்டான்…! (முக்கியமானது)

இதைப்போன்ற நிலைகளை நாம் வளர்த்துப் பழகுதல் வேண்டும். நம்முடைய பக்குவம் இப்படிச் செய்து வந்தால் நாளடைவில் நம்மை அறியாமல் வரும் தீமைகளை அகற்றலாம்.

நாம் நண்பர்களுக்குள் பகைமை உணர்வு வராது தடுக்கலாம். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் தெளிந்த நிலைகள் பெறலாம்.

“காலையில் எவன் முகத்தில் விழித்தேனோ தெரியவில்லை…,” என்று சொல்லி வேதனைப்படுகின்றோம் …

Morning prayer

“காலையில் எவன் முகத்தில் விழித்தேனோ தெரியவில்லை…,” என்று  சொல்லி வேதனைப்படுகின்றோம்

காலையில் எப்படி உடல் அழுக்கைப் போக்கித் துணியில் உள்ள அழுக்கைத் துவைத்து அழுக்கைப் போக்குகின்றோமோ அதைப் போன்று நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

துணியில் உள்ள அழுக்கு போகவில்லை என்றால் சோப்பைப் போட்டு நுரை ஏற்றி அழுக்கை நீக்குகின்றோம்.

அதைப்போல அருள் மகரிஷிகளின் உணர்வை உள்ளுக்குள் சேர்த்து நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வின் அழுக்கை நாம் வெளியேற்ற வேண்டும்.

எல்லோரும் இது மாதிரி எண்ணினால் என்ன ஆகும்…?

காலையில் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் வந்து விடுகின்றது. நாம் ஒதுக்கித் தள்ளிய தீமையான உணர்வுகளை அது கவர்ந்து மேலே சென்று கடலுக்குள் சென்று அமிழ்த்தி விடுகின்றது.

நமது ஆன்மா தூய்மையாகி விடுகின்றது. இந்தப் பரமாத்மாவும் தூய்மை அடைகின்றது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

உதாரணமாக என் பிள்ளையைப் பார்க்கிறேன். அவன் சேட்டை பண்ணினால் நான் திட்டி இருப்பேன். அப்பொழுது அவன் குறும்புத்தனத்தைத் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆனால் அவன் நல்லவனாக வேண்டும் என்று நினைக்க முடிகின்றதா…? என்றால் இல்லை.

அதிகாலையில் எழுந்தவுடன் மகரிஷிகளின் உணர்வை எடுத்து
1.என் குழந்தை அருள் ஞானம் பேற வேண்டும்
2.அவன் தெளிந்த நிலைகள் பெற வேண்டும்
3.பிறர் போற்றும் தன்மை அவனுக்குள் விளைய வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதே போல் மனைவியை எண்ணும் பொழுது
1.மனைவியின் உடலில் அறியாது சேர்ந்த நிலைகள் இருள் நீங்க வேண்டும்
2.அருள் ஒளி பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேணடும்
3.பண்பும் பரிவும் வளர வேண்டும்
4.குடும்பத்தில் ஒன்று சேர்த்து வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதே போல மனைவியும் தன் கணவன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் அருள் வழி வாழ வேண்டும் என்று இரண்டு பேருமே சேர்த்து அந்தந்தக் குடும்பங்களில் எண்ண வேண்டும்.

அந்த அருள் ஒளியை நமக்குள் சேர்த்து பகைமை என்ற உணர்வுகள் நமக்குள் வராதபடி சுத்தப்படுத்த வேண்டும். குடும்பத்தில் ஒன்று சேர்த்து வாழும் நிலை வேண்டும்.

இந்த மாதிரிச் சுத்தப்படுத்தும் நிலை இல்லை என்றால்
1.சிறு குறை வந்துவிட்டது என்றால்
2.பெரும் குறையாக மாற்றிக் கொண்டே போகும்
3.அதை நீங்கள் நீக்க முடியுமா..! என்று நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

ஏனென்றால் சந்தோஷமாக இருப்பவர்கள் எல்லோருடைய வீட்டிலும் பாருங்கள். நேற்று வரை நன்றாக இருந்திருப்பார்கள். சந்தர்ப்பத்தில் ஏதாவது கொஞ்சம் போல் குறை வந்தால்
1.நீதான் செய்தாய் தப்பு…!
2.இல்லை இல்லை நீதான் தப்பு செய்தாய்…!
3.”உன்னால் நான் அழிந்தேன்…” என்ற பகைமை வந்துவிடுகின்றது
4.அப்பொழுது பற்றும் பாசமும் அந்த இடத்திலே போய் விடுகின்றது.

இந்த மாதிரி ஆன பின்…
1.ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும் பொழுது நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நாம் நினைக்கின்றோமா…?
2.அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமா…?

“எனக்குத் துரோகம் செய்தான் பாவி…!” என்று காலையில் எழுந்திரித்தவுடனே இப்படித்தான் எண்ணுகின்றோம்.
1.இன்று எவன் முகத்தில் விழித்தோமா…! தெரியவில்லை…!
2.”இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்போம்.

இந்த வேதனையுடன் தொழிலுக்குச் செல்லும் போது தொழில் சரியாக நடப்பது இல்லை. வேதனையுடன் கணக்கெழுதும் போது கணக்கு தப்பாகி விடுகின்றது.

வேதனையுடன் நாம் இருக்கும் போது வரும் நண்பர்களுடன் பேசும் போது நம் சொல் தடுமாறிவிடுகின்றது. அதனால் பகைமையாகி விடுகின்றது.

இதையெல்லாம் எதனால் வருகின்றது…? என்று சிந்திக்கின்றோமா…!

அதற்குத்தான் ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் காலையில் படுக்கையில் விழித்தவுடன்
1.”ஈஸ்வரா…..” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.அது எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
5.நான் பார்க்கின்ற குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
6.எங்கள் சொல் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
7.இதைக் கொஞ்ச நேரமாவது நினைக்கலாம் அல்லவா…!

யாராவது காலையிலே படுக்கையில் விழித்தவுடன் நாம் இப்படி நினைக்கின்றோமா…? பிரார்த்தனை செய்கின்றோமா…? எண்ணுகின்றோமா…?

இதைத் செய்வதற்குத்தான் அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கோவிலில் வைத்துக் காட்டியிருக்கிறார்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்தி உள்ளார்கள்.

அரச மரத்தைப் பார்த்தவுடனே நமக்கு எந்த நினைவு வர வேண்டும்..?

இந்த பிரபஞ்சத்திற்கே அரசாக இருந்து ஒளியின் சரீரமாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெற வேண்டும்.

வேப்ப மரத்தைப் பார்த்தவுடனே எதை எண்ண வேண்டும்…?

பிறருடைய கஷ்டங்களை எண்ணும் போதெல்லாம் நமது வாழ்க்கை கசக்கின்றது. ஆகவே அதிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

அந்த அருளொளியைப் பெற வேண்டும்… இருளை நீக்கி மெய்ப் பொருள் காண வேண்டும்.. என்ற உணர்வினை நமக்குள் சேர்த்துப் பழகுவதற்காக வேண்டி அரசையும் வேம்பையும் விநாயகருக்கு அருகில் வைத்திருக்கின்றார்கள்.

வேதனை என்ற உணர்வுகள் வந்தால் அடுத்த நிமிடமே அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உள்ளுக்குள்ளே செலுத்த வேண்டும்.

ஒரு வித்தை வேகவைத்தால் அதை மீண்டும் நிலத்தில் ஊன்றினால் முளைக்குமா…? அதைப் போல நமக்குள் தீய வினைகள் வரும் சமயம் அதைத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு உடனடியாக வேக வைக்க வேண்டும்.

அப்பொழுது அந்தத் தீமை நமக்குள் வளராது. தீமை நம்மை இயக்காது. ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் சாதாரணமானதல்ல. செய்து பாருங்கள்.

மகிழ்ச்சியும் செல்வமும் நம்மைத் தேடி வரும்…!

நம் மனதிற்குள் ஏற்படும் போராட்டத்திலிருந்து மனதை அமைதிப்படுத்தி “மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வழி முறை”

Inner peace

நம் மனதிற்குள் ஏற்படும் போராட்டத்திலிருந்து மனதை அமைதிப்படுத்தி “மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வழி முறை”

ஒரு நெருப்பை வைத்து அதற்குள் ஒரு காரமான பொருளைப் போட்டால் என்ன செய்யும்…? அதிலிருந்து கிளம்பும் நெடி தாக்கி நம்மை அங்கே இருக்கவிடாது செய்யும்.

அந்த உணர்ச்சியின் தன்மை நம்மை என்ன செய்கின்றது?
1.இருமச் செய்கின்றது.
2.தொல்லை கொடுக்கச் செய்கின்றது.

இதைப்போல தான் நாம் நுகரும் ஒவ்வொரு குணங்களின் உணர்வுகளும் அது எதுவோ
1.அந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து
2.நம் உடலில் நல்ல குணங்களை இயக்கும் அந்த அணுக்களில் பட்டபின்
3.அது ஏற்றுக் கொள்ள மறுக்கும் போது போர் முறை வருகின்றது.

நம்மை இரும வைக்கின்றது… அல்லது தும்மலாகின்றது…! ஆக நம்மை அறியாமலே அது இயக்கப்படுகின்றது.

இவ்வாறு இய்க்கும் இத்தகைய வலிமை மிக்க நிலைகளை வாலி என்று பெயரை வைத்து இராமாயணத்துல் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

நன்மை செய்ய எண்ணினாலும் பிறரின் வலிமையை நுகரப்படும் போது அதன் செயலாக நம்முடைய நல்ல குணங்களின் வலுவை அது எடுத்துக் கொள்கின்றது.

இதிலிருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்றும் இராமாயணத்தில் வான்மீகி மகரிஷி தெளிவாக்கியுள்ளார்.

குகையிலிருந்து இந்த வாலியின் தன்மை வெளிவராதபடி குகை மேல் இருக்கும் பாறையைத் தன் அம்பால் ஏவி அந்தக் குகையை மூடி விடுகின்றான்.

1.வாலி வெளியே வந்தால் அவனுடைய வலிமை கொண்டு
2.(நம்மை) நம்முடைய வலுவை இழக்கச் செய்வான் என்று
3.அவனை அடைத்துவிட்டான் இராமன் என்று காட்டுகின்றார்கள்.

எப்பொழுது வலிமை மிக்க நிலைகளைப் பார்க்கின்றமோ… நம் கண்ணின் நினைவு கொண்டு எதை நுகர்கின்றோமோ உயிரான ஈசன்
1.அந்த உணர்வைத்தான் உருவாக்குகின்றது
2.அந்த உணர்ச்சியின் தன்மை தான் நம்மைச் செயலாக்குகின்றது.
3.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு தான் நம் உடல் எண்ணம் சொல் செயல் எல்லாம் இயங்குகின்றது.

அப்போது அதைத் தடைபடுத்த வேண்டுமா… இல்லையா…?

அதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தச் சக்திகளை நாம் ஏங்கிப் பெற்றுப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும். உடல் முழுவதும் அந்தச் சக்திகளைப் பரப்ப வேண்டும்.

திட்டியவனை எண்ணும் போது கோபம் வருகிறது. வேதனைப்படுவோரை நாம் எண்ணும் போது நமக்கும் வேதனையாகின்றது.

கோபமோ வேதனையோ அத்தகைய உணர்ச்சியானால் நாம் ஒரு கணக்கைச் சீராகப் பார்க்க முடியுமா…? சரியாக ஒரு தொழிலில் வேலை செய்ய முடியுமா…? முடியாது….!

ஒரு சமயம் பதிவானால் அந்த நினைவு வந்தால் நமக்குள் நல்லதைச் செயலாக்க முடியவில்லை. சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ போன்ற உணர்வுகள் வந்தாலும் உயிரிலே பட்டுத் தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

அதைப் போன்று தான் அடுத்த நிமிடமே “ஈஸ்வரா….!” என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அவனிடம் வேண்டி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.அது எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
4.இந்தச் சக்தியை நமக்குள் கூட்டப்படும் போது தீமைகள் உட்புகாது தடைபடுத்துகின்றோம்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் இயக்கச் சக்தியாக மாற்றிக் கொள்கிறோம்
6.அந்த அருள் சக்திகளை நம் உடலிலே பெருக்குகின்றோம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெருக்கிக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை வலுவாகி நம் ஆன்மாவில் முன்னாடி இருக்கின்ற தீமைகள் அனைத்தையும் விலகிச் செல்லச் செய்கின்றது.

தீமைகள் அனைத்தும் அனாதையாகின்றது. அருள் ஒளி பெருகி நம் ஆன்மா பேரொளியாக மாறுகின்றது.

நஞ்சின் இயக்கமே முதன்மையானது என்பதை நாம் அறிதல் வேண்டும் – இதை அறிந்து கொண்டால் நாம் ஒளியாக மாறுவது எளிதானது…!

Image

mind-powers

நஞ்சின் இயக்கமே முதன்மையானது என்பதை நாம் அறிதல் வேண்டும் – இதை அறிந்து கொண்டால் நாம் ஒளியாக மாறுவது எளிதானது…!

 

இப்போது நாம் ரோட்டில் போகின்றோம் என்று வைத்துக்கொள்வோம்.

வாழ்க்கையில் நாம் ஒருவருக்கொருவர் நண்பராகப் பழகுகின்றோம். சந்தோஷப்படுகின்றோம். ஆனால் சில காலங்களில் ஒருவருக்கொருவர் பிடிக்காத நிலையாகி விட்டால் வெறுப்பாகி விடுகின்றது. பகைமை ஆகின்றது.

அப்படி இருகும் நிலையில் ஒரு சந்தர்ப்பம் நாம் வேறு ஒரு நண்பருடன் அன்பாகப் பேசிக் கொண்டு ரோட்டில் நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது வெறுப்படைந்த நண்பன் ஏதேச்சையாக அந்தப் பக்கம் போனால் “பார்த்ததும் நாம் என்ன சொல்கிறோம்..?”

அன்பாகப் பேசும் உணர்வை விட்டு விட்டுப் “போகிறான் பார்… அயோக்கியன்..!” என்று சொல்லத் தொடங்குகின்றோம்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த உணர்வுகள் நமக்குள் வலுவாகி அன்பாகப் பேசிய நிலைகளை மாற்றிவிடுகின்றது.

இங்கே அன்புடன் பண்புடன் வேறு நண்பருடன் உறவாடிக் கொண்டிருந்தாலும்
1.வெறுப்படைந்த நண்பனைப் பார்த்த பின்
2.நல்ல உணர்வின் இயக்கத்தைத் தடைப்படுத்திவிடுகின்றது.
3.நம் நல்ல மனமும் கெடுகின்றது.

மாவை வைத்து தோசையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அதிலே ஒரு துளி காரமான பொருளோ அல்லது ஒரு விஷத்தின் தன்மை பட்டால் தோசை ருசியாக இருக்குமா…? சுவையைக் கொடுக்குமா…?

அல்லது தோசையைச் சுட்டு விடுகின்றோம். தொட்டுச் சாப்பிடும் சட்டினியில் ஒரு துளி காரம் பட்டுவிட்டால் தோசையை ரசித்துச் சாப்பிட முடியுமா…? இதைப் போன்று தான்
1.நமது வாழ்க்கையில் நாம் நல்லவர்களாக இருந்தாலும்
2.தெளிவான நிலைகளை நாம் பெற்றிருந்தாலும்
3.பண்புடன் பார்க்கப்படும் போது ஒரு தீமையான உணர்வைச் சந்திக்க நேர்ந்தால்
4.அதனின் வலிமை நம்மை இயக்கிவிடுன்றது.

இதைத் தெளிவாக்குவதற்குத் தான் வாலியைக் காட்டுகின்றனர்.

அதாவது சூரியனின் காந்தப் புலனறிவுகள் வேதனைப்படும் உணர்வுகளை கவர்ந்து வைக்கப்படும் போது அதனின் இயக்க வலு ஜாஸ்தி என்ற நிலையைக் காட்டுகின்றனர்.
1.ஆக மொத்தம் சூரியனின் பிள்ளையில்
2.”வாலி முதன்மையானவன்…!” என்று காட்டுகின்றனர்.

சூரியன் உருவாவதற்கு விஷமே காரணமாகின்றது. விஷத்தின் தாக்குதலால் தான் சூரியனின் சுழற்சி வேகம் கூடி அதனால் வெப்பமாகின்றது.
1.”வெப்பமாகும் போது தான்…” விஷம் பிரிகின்றது…! என்பதனை
2.நமது சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது
3.இது மிகவும் முக்கியமானது – நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு விஷமான பொருளை நெருப்பில் போட்டுப் பாருங்கள். நெருப்பில் விஷம் மடிந்து விடுகிறது. ஆனால் நெருப்பு வளர்ந்து விடுகிறது.

சூரியனின் நிலைகளில் இப்படி மாறி வந்தாலும் மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வந்த விஷத்தின் தன்மைகளை எல்லாம் நீக்கி ஒளியின் தன்மை பெற்றது “இந்த உயிர் தான்…!”

முதலிலே விஷத்தின் தாக்குதலால் வெப்பத்தின் தன்மையாகி “துடிப்பு நிலையே..” (உயிர்) ஏற்படுகின்றது. விஷத்தின் இயக்கமே முதன்மையானது. துடிப்பின் நிலை வரும் போது இயக்கமாகின்றது.

ஆறாவது அறிவு வரப்போகும் போது துடிப்பிற்குள் இருளை நீக்கி மனித உடலாக்குகின்றது. மனித உடலாக்கிய பின் இதில் கலந்து வரும் நஞ்சினை நீக்குகின்றது.
1.நஞ்சை நீக்கும் உணர்ச்சிகள் நமக்குள் வருகின்றது
2.நஞ்சை நீக்கும் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நாம் செயல்படுத்தத் தவறினால்
3.நஞ்சு அதிகமாகி மீண்டும் பிறவியின் தன்மைக்கே வருகின்றோம்.

ஆனால் நஞ்சை நீக்கி அந்த நஞ்சையே ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள் மகரிஷிகள். முதல் மனிதன் அகஸ்தியன் இன்று துருவ நட்சத்திரமாக உள்ளான். அவனைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகள் நம் துருவப் பகுதி வழியாக பூமிக்குள் வந்து கொண்டிருக்கின்றது. அந்த அருள் சக்திகளை நாம் கவர்ந்து நம் உணர்வுகளை ஒளியாக மாற்றிடல் வேண்டும்.

நம் எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான்…!

வேலி முள் செடியின் விளைவுகளும் நாட்டைத் தரித்திரமாக்கும் சில விஞ்ஞான அறிவின் செயல்களையும் அறிந்து கொள்ளுங்கள்

Image

seemai Karuvel tree

வேலி முள் செடியின் விளைவுகளும் நாட்டைத் தரித்திரமாக்கும் சில விஞ்ஞான அறிவின் செயல்களையும் அறிந்து கொள்ளுங்கள்…!

 

மேகங்கள் கூடி வருவதை அதை நீராக வடித்து எடுத்து வளர்த்துக் கொள்ளும் சக்தி சில மரங்களுக்கு இருக்கின்றது.

வேலி முள் செடியை எடுத்துக் கொள்வோம். அதனுடைய விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகமானது. தரையில் உள்ள நீர் சத்தையும் அது கவர்ந்து கொள்கின்றது.

இத்தகைய முள் செடிகள் அதிகமாக இருக்கப்படும் போது அதற்குப் பக்கத்தில் வேறு நல்ல தாவர இனங்கள் வளர்ந்தால் அதற்குப் போகும் நீரை முள் செடி தனக்குள் கவர்ந்து இழுத்து விடும். நல்ல தாவர இனங்கள் சரியாக வளராது.

ஆனால் அந்த முள் செடி நமக்கு அதிகமாக விறகைக் கொடுக்கும். விறகை எரித்தால் வரும் புகைகள் விஷத்தின் தன்மையாகி காற்று மண்டலத்தில் பரவலாகப் படரும்.

அந்த வேலி முள் செடியின் விதைகளை யார் விதைக்கின்றார்களோ அவர்களுக்கு கை கால் குடைச்சல் நிச்சயமாக வரும்.

அந்த முள் ஒரு தரம் குத்தி விட்டது என்றால் கடுகடுப்பு ஆகி உடலுக்குள் விஷத்தின் தன்மை ஊடுருவி விடுகின்றது.

சமையலுக்கு விறகிற்கு உதவும் என்று உபயோகப்படுத்தினாலும் விஷத்தின் புகை காற்று மண்டலத்தில் கலக்கப்படும் போது மனிதருக்கு எந்த நிலை செய்கின்றது…? என்பதைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

பஞ்ச காலங்களில் அடுப்பு எரிப்பதற்காகவாவது உதவும் என்று வெளி நாட்டில் உருவானதை விமானம் மூலம் கொண்டு இங்கே தெளித்து அதை உருவாக்கினார்கள்.

ஏனென்றால் மலைகளிலும் மற்ற காடுகளிலும் உள்ல மற்ற மரங்களை வெட்டி விட்டால் மழையே இல்லாமல் போகும் என்ற நிலையி மேலை நாடுகளில் செய்ததை இங்கேயும் செய்தார்கள்.

ஆனால் இங்கேயும் மாசுபடும் நிலை வந்து விட்டது.

இதைப்போல சில வளர்ச்சி அடைந்த நாடுகள் நம் நாட்டைத் தாழ்த்துவதற்காக விஞ்ஞான அறிவுப்படி கொத்தமல்லி போல வெள்ளைப்பூ போல பூத்துக் கொண்டு இருக்கும் பாலை செடி போன்ற நிலைகளையும் மற்றதுகளுடன் கலந்து இங்கே விதைத்து விட்டார்கள்.

அது காற்றில் கலந்து வரப்படும் போது
1.மனிதன் மேலே பட்டால் அரிப்புத் தன்மை வருகின்றது
2.சொறி சிரங்கு போல ஆவதும் விஷத் தன்மைகள் வளர்வதும்
3.நம் நாட்டில் வளரும் தாவர இனங்களைச் சீராக வளர விடாமல் தடுப்பதும்
4.இதைப்போல பல விஷக் கிருமிகளை உருவாக்கும் சக்திகள் வளர்ந்து விட்டது.

விஞ்ஞானத்தின் அறிவால் நாட்டில் தரித்திர நிலைகள் உருவாக்கும் நிலைக்கு இன்று வந்து விட்டது. வளர்ச்சி அடைந்த நாடுகள் “இராஜ தந்திரம்…” என்ற நிலைகளில் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த இதைப் போன்ற நிலைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்றும் சில நிலைகளில் இது தொடர்ந்து கொண்டு தான் இருகின்றது.
1.”நீர் வளத்தையும் குறைத்து…”
2.காற்றையும் விஷத் தன்மையாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள்

மெய் ஞானிகள் கொடுத்த மெய் உணர்வுகளை யாரும் எடுப்பதில்லை.

உடலுக்குள் பித்தம் எதனால் அதிகமாகின்றது…? அதிகமானால் அதைத் தடுப்பது எப்படி…?

human body

உடலுக்குள் பித்தம் எதனால் அதிகமாகின்றது…? அதிகமானால் அதைத் தடுப்பது எப்படி…?

 

குடும்பத்தில் மனைவி குழந்தை மேல் அன்பிருந்தாலும் அந்த அன்பு கொண்ட நிலையில் சிறிது குறைகள் வந்து விட்டால் மகிழ்ச்சி இல்லாது போகின்றது.

அதற்கு என்ன காரணம்…?

கணவன் தொழிலின் நிமித்தம் வெளியிலே வெறுப்படைந்தால் அதே உணர்வு தாக்கப்பட்டு மனைவி மீதும் வெறுப்படையும் தன்மை வருகின்றது.

வெறுப்பான உணர்வுடன் வீட்டுக்குள் வரப்படும் போது மனைவி ஆகாரத்தைச் சுவையாக செய்து வைத்திருந்தாலும் சுவையான உணவை ரசித்து சாப்பிடும் நிலை இழக்கப்படுகின்றது.
1.அப்போது சோர்வடைந்து “என்ன சாப்பாடு இது…?”
2.வெளியிலேயும் ஒரே சிக்கலாக இருக்கின்றது…
3.நாம் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாரித்தாலும் கூட
4.வீட்டில் சாப்பாடு கூட மோசமாக இருக்கிறது என்று
5.இப்படிக் குறையான உணர்வுகளைச் சுவாசித்து
6.நம்மை அறியாமலே அன்பு கொண்ட மனைவியும் கூட வெறுக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் நாம் அல்ல….!

நாம் எடுத்து கொண்ட நல்ல உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் அது மறைக்கப்படும் போது விஷம் கலந்த அமிலங்கள் கலக்கப்படும் போது சுவை மிக்க உணவை ருசி இல்லாத நிலைகளாக மாற்றி விடுகின்றது.

பித்தம் அதிகமாகிவிட்டால்… நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் வாந்தி வரும். ருசியான உணவை நீங்கள் உட்கொண்டாலும் அதை உங்கள் உடல் ஏற்க மறுக்கின்றது. உடல் வலு பெற வேண்டும் என்றாலும் முடியாத நிலை செய்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் தான்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்டு உணர்ச்சிகளாக மாறி வாயிலே அதற்குத் தகுந்த அமிலமாக (உமிழ் நீராக) மாறுகின்றது.

அந்த உமிழ் நீர் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலக்கின்றது. அந்த உணர்வுக்கொப்ப தான் (உமிழ் நீர்) தான் ஜீரணிப்பதும் ஜீரணமற்ற நிலை உருவாவது.

சலிப்பும் சஞ்சலமுமாக இருக்கும் பொழுது நல்ல சுவையான உணவை நீங்கள் உட்கொண்டால் ஜீரண சக்தியே குறைகின்றது.

கஷ்டப்பட்டு உழைத்து வரும் நிலையில் நல்ல உணவைச் சாப்பிட்டு உடல் வலு பெற வேண்டும் என்று எண்ணிச் சாப்பிட்டாலும்
1.சலிப்பு சஞ்சலம் என்ற உமிழ் நீர் கலந்து
2.ஜீரணிக்கும் சக்தியை இழந்து புளித்த ஏப்பம் வரும்
3.புளித்த ஏப்பம் வந்த பின் வாய்வாகி வயிறு உப்பிசமாகும்
4.வயிறு உப்பிசமாகி வாயுவின் தன்மை நுரையீரல்களில் அதிகமாகி மூச்சுத் திணறல் போன்று வரும்.
5.நமக்கு ஆயாசமாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்தோமா…? என்றால் இல்லை.

கடைசியில் குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் இருக்கும் அன்பைக் குறைத்து மகிழ்ச்சியைக் குறைக்கச் செய்து நம் உடலையும் நலியச் செய்து விடுகிறது.

இதைப்போல சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எப்படியெல்லாம் இயக்குகின்றது என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உணர்த்திக் காட்டினார்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றிட என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறு குடல் பெருங்குடல் முழுவதும் படர்ந்து சிறு குடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா…..! என்று
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
2.அந்த ஜீரண உறுப்புகள் பலவீனமடையாதபடி உற்சாகப்படுத்தி
3.சாப்பிடும் ஆகாரத்தை ஜீரணிக்கும் ஆற்றல்கள் பெற வேண்டும்
4.ஆகாரத்தில் உள்ள சத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இதைப் போன்று நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

அப்பொழுது சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமையான உணர்வுகளை நம் உடல் உறுப்புகள் வடிகட்டும் திறன் பெறும். நல்ல உமிழ் நீராகச் சுரக்கச் செய்யும். சாப்பிடும் ஆகாரமும் சுவையுள்ளதாக மாற்றிவிடும்.

உடல் நலம் பெறுவோம். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படுத்துவோம்.