Archive

இன்றைய உலகச் சூழ்நிலையிலிருந்து தப்ப முடியுமா…!

ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி வருகின்றது. ஆனால் ஒரு பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்த ஒருவனை நினைத்தே குடும்பம் சிக்குண்டு சுக்குநூறாகத் தெறித்து விடுகின்றது. எவ்வளவு கோடிச் செல்வம் இருப்பினும் இதைப் போல் நிகழந்துவிடுகிறது

சூரியனை மையமாக வைத்து ஒரு பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றதோ நம் உயிர் சூரியனாக இருந்து இந்த உடலை இயக்குகிறது.

பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்ததிரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி… அது உமிழ்த்துவதைக் கோள்கள் உணவாகக் கவர்ந்து… கோள்களிலிருந்து வருவதைச் சூரியன் தனக்கு உணவாக எடுத்து உட்கொள்கின்றது,

இதைப் போல் பிறருடைய உணர்வுகள் வெளி வருவதை நம் எண்ணத்தால் (நட்சத்திரம் போல்) கவர்கின்றோம். கவர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் உடலாக (கோள்கள் போல்) அந்தச் சத்தாக விளைகின்றது. உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை உயிருடன் சேர்த்து உயிராத்மாவாக (சூரியனைப் போல்) விளைகின்றது.

ஆகவே…
1.பிறரிடம் இருந்து வரும் உணர்வுகளை ஒன்று சேர்த்துக் கவர்ந்து
2.அந்த உணர்வுகள் நம் உடலாக ஆக்கப்படும் போது
3..நமக்குள் தெளிந்திடும் உணர்வாக உயிருடன் ஒன்றி…
4.அந்த ஞானியின் உணர்வுடன் நாம் இணைப்போம் என்றால்
5.அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றது போன்று நாமும் பெற முடியும் என்பது தான் ஆலயங்களின் தத்துவம்.

ஆனால் அந்த ஆலயத்தில் இப்பொழுது நாம் எப்படிப் போகின்றோம்…?

வெளியில் கடைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்கின்றனர் காசுக்காக. ஆனால் அவர்களும் இந்தத் தெய்வத்தை வணங்கக்கூடியவர்கள் தான்.

சாமி பேரைச் சொல்லி ஏமாற்றுகின்றான். அதே சமயத்தில் அர்ச்சனை என்று இங்கே காசைக் கொடுத்து ஏமாற்றச் செய்கின்றான்.

அதை எல்லாம் செய்தால்…
1.ஆண்டவன் நமக்கு அதைச் செய்வான் இதைச் செய்வான் என்று
2.நம் ஆசைக்குகந்தபடி தான் நாமும் அங்கே நடக்கின்றோம்.

ஆனால் ஆலயம் என்பது நம்மைப் புனிதமாக்கும் இடமாகும்…!

பெரும்பகுதியான ஆலயங்களுக்கு முன்னாடி பார்க்கலாம்… தெய்வத்தின் பேரைச் சொல்லி நமக்கு நாமே ஏமாற்றும் நிலை தான் அதிகமாக இருக்கின்றதே தவிர… “ஆலயம் வரும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நிலைகள் இல்லை…!”

1.சாமிக்காக அபிஷேகம் ஆராதனை என்றெல்லாம் காட்டி
2.அந்த உணர்வினை நுகர்ந்தால் (ஐந்து புலனறிவாலும்) நமக்குள் பஞ்ச அமிர்தமாக அந்தச் சக்திகள் இணையும் என்று
3.ஆறாவது அறிவினைத் தெளிவுற எடுத்துரைத்த அந்த போகனின் நிலையை எடுத்துக் கொள்ளாது…
4.போகன் காட்டிய அறவுரைகளை அழித்துவிட்டு மனிதனின் நல்ல எண்ணங்களை அழித்திடும் நிலையாக
5.வியாபார ஸ்தலமாகத் தான் ஆக்கி விட்டார்கள்.

இங்கிருந்து நாம் அருள் ஒளி பெறவேண்டும் என்று சென்றாலும் புனிதத் தன்மை இழக்கும் நிலைகளைத் தான் அங்கே காணுகின்றோம். அங்கே நிர்வகிப்பவர்களும் அப்படித்தான் உள்ளனர். ஆலயத்தின் மறைவில் தனக்குப் பொருள் தேட வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்கள்.

1.அந்த மெய் ஞானிகள் காட்டிய தத்துவங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.ஒவ்வொரு மனிதனும் முழுமை பெறவேண்டும்…
3.இந்தப் பூமியில் இருளைப் போக்க வேண்டும்… தீமைகள் அகல வேண்டும்… என்ற நிலைகளை வழி காட்டவில்லை.

அந்த மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை நாம் யாரும் பெறவில்லை. இன்று யாம் (ஞானகுரு) அதை எல்லாம் சொன்னாலும்
1.இதை ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாது
2.இதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைகளில் தான் உள்ளனர்.

ஒரு மது குடிப்பவரிடம் போய்… “நீ குடிக்காதே…!’ என்றால் ஐயா… உங்களுக்கு என்ன தெரியும்…? இதைக் கொஞ்சம் போட்டால் சொர்க்கமே வரும்… நீங்களும் கொஞ்சம் குடித்துப் பாருங்கள்…! என்று நம்மிடமே திரும்பச் சொல்வார்கள்.

அதைப் போன்று தான் அநாகரீகமான நிலைகளில் அதர்வண வேதத்தின்படி இந்த நிலைகள் உருவாக்கப்பட்ட நிலைகளே இன்றும் உள்ளது.

இன்னென்ன மந்திரங்களைச் சொல்லி விட்டால் அந்த இறைவன் இறங்கி வந்து உனக்கு எல்லாம் செய்வான்..! என்ற நிலைகளில் மந்திர உச்சாடணங்களை அங்கே சொல்லி அதை ஆழமாக நமக்குள் பதிவு செய்து விட்டனர்.

அந்த உணர்வின் சக்திக்கு நாம் வந்த பின் ஒரு போதை ஏற்றியது போன்று இதிலிருந்து மீளாது சிக்கிக் கொண்டு…
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் அழிவில் இருந்து தப்ப முடியாதபடி
2.இருள் சூழ்ந்த நிலைகளாகப் போகும் நிலையே அதிகமாக உருவாகிக் கொண்டுள்ளது

ஆக ஐதீகம் என்றும் சாஸ்திரம் என்றும் மனிதனுடைய நிலைகளில் ஆசைகளைத் தான் வளர்க்கப்பட்டுள்ளது.

மனிதன் என்றால் ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால்…
1.அதைத் தணியச் செய்யும் சக்தியான அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து
2.நமக்குள் இருள் சூழும் அந்த நிலைகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று
4.அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் செல்வோம் என்றால் இனி தப்பலாம்…!

உயிரில் ஏற்ற வேண்டிய  தீபம்  

அமாவாசை அன்று முன்னோர்களைக் கூப்பிடலாமா…?

 

வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

 

நம்முடைய சகஜ வாழ்க்கையில் ஏற்படும் சஞ்சலமும் சோர்வும்… சோர்விலிருந்து ஏற்படும் கோபமும்… கோபத்தினால் உண்டாகும் ஆத்திரமான வெறியுணர்வுகளாலும்…
1.இதிலிருந்து விடும் சுவாசத்தினால் ஏற்படும் உடலின் அமில சக்தி மாறுபட்டு
2.அதிலிருந்து பல உபாதைகளை நாமே நம் உடலுக்குள் ஏற்றிக் கொள்கின்றோம்.

கோபம் ஏற்பட்டவுடன் நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் துரிதம் கொள்கின்றது. அந்த நிலையில் நாம் எடுக்கும் சுவாசமே கடினமாக நம் உடலில் ஏறுகின்றது.

1.இக்கனமான சுவாசத்தை ஈர்க்க ஈர்க்க…
2.நம் உடலிலுள்ள அனைத்துப் பாகங்களும் ஒருநிலைப்படாமல் துடிக்கும் நிலை கொள்கின்றது.

அதனால் நம் உடலிலுள்ள இரத்த நாளங்கள் துரிதமாகச் செயல்பட்டு மனிதனின் உடல் நிலைக்கே மூலகாரண வித்தாக இருக்கும் நல் நிலைகள் மாறி பல வியாதிகள் ஏற்படும் நிலைக்கு நாம் ஆளாக வேண்டியுள்ளது.

மனச் சஞ்சலத்திலிருந்து நாம் ஏற்றிக் கொள்ளும் நிலைதான் நமக்கு ஏற்படும் தொடர் நிலையெல்லாம்…!

1.சஞ்சல நிலை ஏற்பட்டவுடன் மன நிலையை அமைதிப்படுத்தி
2.அதனால் ஒரு நிலை கொண்ட சுவாசத்தை ஈர்த்தால் சஞ்சலத்திற்குத் தெளிவு பெறலாம்.
3.தெளிவை நாமே தான் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

உதாரணமாக நாம் செய்யாத தவறுக்காக ஒருவர் ஏசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஏசலைக் கொண்டு இப்படிச் செய்கின்றாரே… நாமென்ன தவறு செய்தோம்…? என்று எண்ணுகின்றோம்.

ஆனாலும்… நம்மிடம் தவறில்லாத பொழுது நம்மை ஏசுபவனை ஆத்திரத்துடன் எண்ணி…
1.இப்படியெல்லாம் செய்பவன் அவனே அந்தத் தண்டனையை அனுபவிக்கட்டும் என்று
2.தவறு செய்பவன் இருக்க நம்மையே நாம் தவறாக்கிக் கொள்கின்றோம்.

நம் எண்ணத்தில் அவன் ஏசும் சொல்லை ஏன் அண்டவிட வேண்டும்…?

1.அவர்கள் நல் உணர்வு பெறட்டும்… நல் வழி படட்டும் என்ற எண்ணத்தில்
2.நம்முடன் அச்செயலை மோத விடாமல் எண்ணும் பொழுது நம் உணர்வே நலம் பெற்று
3.நம் எண்ணத்தில் தீட்சண்ய சொல் தாக்காமல் நம்மைப் புனிதப்படுத்திக் கொண்டால்
4.நம்மையே நாம் பல இன்னல்களிலிருந்து காத்துக் கொள்கின்றோம்.

வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…?

ஏனென்றால் பிறரை ஏமாற்றியோ வஞ்சனை செய்தோ துவேஷித்தோ வருபவனெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். பிறரை ஏமாற்றுவதாக எண்ணி தன்னையேதான் ஏமாற்றி வாழ்கின்றான்.

1.மன நிலையை ஒரு நிலைப்படுத்தி…
2.சமமான வரையறை கொண்ட வாழ்க்கைதனை வாழும் பக்குவத்திற்குப் பல நெறி முறைகள் உண்டப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையின் நிலைகளில் “உடலின் ஆசைகளைக் கூட்டும்போது” நம் உயிர் ஈசனாக இருந்து அதையே உருவாக்கி அந்த உணர்வின் தன்மைகளை உடலாக்கிவிடும்.

அதன் வழியில் மீண்டும் எண்ணினால் அந்தக் குருவின் வழியில் நமக்குள் உடலின் இச்சைதான் வளரும். அதனின் ஆசை எங்கே செல்லும்?

இப்பொழுது சிலர் மீடியம் பவரை – ஆவிகள் வைத்து (MEDIUM POWER) சில ஆன்மாக்களை இப்படி இடறி விழுந்தால் அந்த மீடியத்தை வைத்து அபூர்வ சக்தி பெறுவதாகச் செய்கிறார்கள்.

அதில் நம் எண்ணத்தைச் செலுத்தினால்
1.பிறிதொரு ஆன்மா உங்களுக்குள் வந்துவிடும்.
2.அதனின் ஆசைகளையெல்லாம் உங்களுக்குள் வந்து வெளிப்படுத்தும்.
3.அதே உணர்வுகள் உங்களுக்குள் வளர்ந்துவிட்டால் அந்த ஆசையின் தன்மையே உங்களுக்குள் விளைவிக்கின்றது.

(அதாவது அதனின் வலுவை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த ஆன்மாக்கள் நமக்குள் வந்துவிடுகின்றது)

ஒரு ஆன்மா மனித உடலுக்குள் வந்தபின் அது எந்த நிலையிலும் வெளியில் வரவே முடியாது. அந்த உடலுடன் இருப்பவர் மடியும் பொழுது தான் அதுவும் வெளியேறும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.சிலர் வழி தெரியாதபடி புத்தகங்களைப் படித்துக் கொண்டு
2.இதைப் போல் செய்தால் மீடியம்களுடன் தொடர்பு கொண்டு ஆவியுடன் பேசலாம்.
3.அருள் சக்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்றெல்லாம் விளையாட்டாகச் செய்து எளிதில் அதற்குள் சிக்கிக் கொள்கின்றார்கள்.
4.பின்பு வெளியில் சொல்ல முடியாதபடி பல அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்

ஆகவே உங்களுடைய சக்தி எதுவாக இருக்க வேண்டும்?

இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகில் ஒளியின் சுடராக வாழும் அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்ட பின் உங்கள் எண்ணம் உங்கள் நினைவு மகரிஷிகளின் அலைவரிசையுடன் அங்கே செல்ல வேண்டும்.

மகரிஷிகளின் உணர்வை எடுத்துக் கொண்டவர்கள் நீங்கள்
1.மீடியம் (ஆவிகள்) பவர் உள்ள இடத்திற்கு எங்கே சென்றாலும்
2.அது வேலை செய்யாது… இதைப் பார்க்கலாம்.

யாம் சொல்லும் தியானத்தைச் சரியான வழிகளில் செய்து வந்தால் மீடியம் வைத்துச் செயல்படுவோர்கள் “அந்த மீடியம் உணர்வுகள்” என்று அவர்கள் உடலில் இருந்தாலும்
1.அந்த இயக்கச் சக்தி மாறிவிடும்.
2.அது பேசாது. அதனின் உணர்வுகள் செயல்படாது. இதையும் பார்க்கலாம்.

ஏனென்றால் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் மீடியமாக்கப்படும் பொழுது இந்த உணர்வு உங்களை அங்கே விண்ணுக்கே அழைத்துச் செல்லும்.

குலதெய்வங்களாக இன்று நாம் நம் ஊரில் வணங்கிக் கொண்டிருப்பதெல்லாம் நம் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் தான்.

அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அவர்கள் எண்ணங்களை எடுத்தால் அவர்கள் இங்கே நம் உடலுக்குள் வந்து அருளாடுவார்கள். அதைப் பார்க்கலாம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றுவோம். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் பெறுவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து தீமைகளை நீக்கி நல்ல உணர்வின் தன்மையை வளர்க்கச் செய்யும் மனித உடலைப் பெற்றோம்.

ஆனால் அதர்வணவாதிகள் விஷத் தன்மையை வளர்க்கும் மாட்டின் நிலைக்குத்தான் நம்மைக் கொண்டு செல்கின்றார்கள்.

சரணாகதி என்ற தத்துவத்தைக் கொடுத்து “யாகங்களைச் செய்… பாவங்களைப் போக்கு…” என்று சொல்லி இதனின் மணத்தைக் கூட்டி எடுத்து ஒருவரின் உடலுக்குள் சேர்க்கச் செய்தபின் இவர் இறந்த பின் இவர் ஆன்மாவை ஆகாதவர் உடலில் தான் பாய்ச்சுகின்றர்கள்.

இது போன்ற நிலைகளிலிருந்து என்று நாம் விடுபடுவது?

நாம் எதனின் உணர்வை எடுத்தோமோ அது சாகாக்கலை. வேதனையான உணர்வுகளை நாம் நுகர்ந்து பெருக்குவோமேயானால் பெருக்கிய உணர்வின் கலையின் பிரகாரம் நம் உடல் நலிவடைகின்றது.

நலிந்த உடலை நம் உயிர் உருவாக்கும். இது “சாகாக்கலை”.

பழனியில் சிலர் எம்மை வைத்தியரீதியில் அணுகி “போகர் சமாதியானது உங்களுக்குத் தெரியுமா…?” என்று கேட்டார்கள்.

எமக்குத் தெரியாது… என்றோம்.

போகர்… காயகல்ப சித்தியாகி “சாகாக்கலையாக இருக்கிறார்” என்றார்கள்.

போகர் சாகாக்கலையாக “எங்கே…” இருக்கிறார் என்று அவர்களிடம் கேட்டோம்.

போகர் முருகன் பக்கத்தில் சமாதியாகிவிட்டார் என்று கூறினார்கள்.

சமாதியைத் தோண்டி “அவரைப் பாருங்கள்” என்று கூறினோம்.

அது எப்படித் தோண்டுவது…! என்றார்.

போகர் உயிருடன் தான் இருக்கின்றார் சமாதியைத் தோண்டி போகரை அணுகி அனைவரும் அருள் வாக்கு வாங்கலாம்… நீங்கள் எல்லோரிடமும் சொல்லுங்கள் என்று கூறினோம்.

இப்படி எம்மிடம் பேசிக் கொண்டிருந்தவர் போகர் பன்னிரெண்டாயிரத்தைக் கற்றுக் கொண்டவர். தமிழ் வைத்தியர் சாகாக்கலையைக் கற்றிருக்கின்றேன் காயகல்ப சித்தியைக் கற்றிருக்கின்றேன் என்று கூறினார்.

இன்று விஞ்ஞானிகள் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்” என்ற நிலை கொண்டு உணர்வின் இயக்கங்கள் எப்படி என்று கண்டறிந்துள்ளனர்.

1.ஒரு உணர்வுடன் மற்றொரு உணர்வை மோதச் செய்து
2.அதனில் உணர்வுகள் விரிவடைவதைக் காண்கின்றனர்.
3.கெமிக்கல் (இரசாயணம்) கலந்து ஒரு தக்டை வைத்து
4.எலெக்ட்ரிக்கைப் பயன்படுத்தி அதனில் உள்ள காந்தப் புலன்களைத் தட்டிவிடுவது.

நாம் இரண்டு கல்லை உரசினால்… “ஒளி” வருகிறதல்லவா.

இதைப் போன்று உராய்ந்த உணர்வுகள் அழுத்தமான பின் ஒளிக் கற்றைகளை வெளிப்படுத்தும். இதனின் உணர்வின் அழுத்தம் எதுவோ அழுத்தத்தின் வேகத்திற்குத்தக்க எழுத்து வடிவமோ உருவமோ உணர்வின் தன்மையோ உருவாக்கிக் காட்டுகின்றது.

இது மனிதனின் சிந்தனையில் உருவானது.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையைக் கண்டறிந்த பின் அதன் உணர்வுகள் கொண்டு “மனிதரைப் போன்று வேலை செய்ய முடியும்” என்று காண்பிக்கின்றனர்.

ஒரு நொடிக்குள் உணர்வின் தன்மையினைக் கணக்கிடுகின்றனர். இதன் தொடர் கொண்டு நாம் எப்படி நுகர வேண்டும் எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் இயந்திர நிலைகளைக் கூட்டிக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் போகர் பன்னிரெண்டாயிரத்தைக் கற்றுக் கொண்டவர்கள் காயகல்ப சித்தி சாகாக்கலை என்ற நிலையில் எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

சாகாக்கலை காயகல்ப சித்தி கற்றுக் கொண்டேன் என்னிடம் போகர் பேசுகின்றார் என்று சொல்பவர்களின் நிலை என்ன?

இவரைப் போன்றே ஒருவர் சாகாக்கலை என்ற தத்துவ உணர்வைப் படித்து மனதில் பதிய வைத்து தன்னுள் அந்த உணர்வை வளர்த்து அவர் இறந்திருப்பார்.

இவர்கள் இப்பொழுது புதிதாகச் சாகாக்கலைப் புத்தகங்களைப் படித்துக் கொண்டு “மீடியம் பவர்… 1..,2..,3…” என்று எடுத்து இறந்த ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு “போகரிடம் பேசுகின்றேன்…” என்று கூறுவார்கள்.

இவர் எப்படிப் பச்சிலைகளுக்கு அலைந்தாரோ கண்டாரோ இதனின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் இவருடைய உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா இதே நிலை கொண்ட இன்னொரு உடலுக்குள் புகுந்துவிடும்.

அதன் பிறகு புகுந்து கொண்ட உடலில் சாகாக்கலையாகச் செயல்படுத்திவிடும்.

இப்படிப் போகர் என்னிடம் பேசினார் என்று சொன்னால் இதைத் தேடிக் காசைச் சேர்க்கும் நிலைக்குத்தான் வருகின்றனர். உடலை வளர்க்கத்தான் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் போகர் இன்று இருக்கின்றாரா என்றால் இல்லை.

தன் உணர்வின் தன்மையை
1,தன் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையும்
2.தன் கவர்ச்சியின் நிலைகள் கொண்டு
3.உயிருடன் தொடர்பு கொண்டு விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து,
4.உணர்வின் தன்மையைத் தன் சுழற்சிக்குள் இருக்கச் செய்தார்.

இதுதான் “காயகல்ப சித்து” என்பது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நுகரும் ஆற்றல் கொண்டு ஒருவருக்கு ஜோதிடம் பார்ப்பது போல் முன்னாடியே அறியக்கூடிய நிலையும் நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் பார்த்துச் சொல்லலாம்.

அத்தகைய நிலைகள் சென்றால் ஒரு மனிதனுக்குள் விளைவைத்த “தீமையின் உணர்வும்…” நமக்குள் வந்து சேரும்.

சாதாரணமாக உங்கள் உடலிலிருந்து பல உணர்வுகள் வெளிப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

உங்களைச் சந்தித்தவுடனே உங்கள் உணர்வின் தன்மை அனைத்துமே நான் அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் வாழ்க்கையிலே எத்தகைய துன்பங்களை அனுபவித்தீர்களோ
1.அந்த உணர்வை இழுத்து
2.அதை நான் சுவாசித்துத்தான்
3.உங்கள் நிலையைச் சொல்ல முடியும்.

ஒருவன் துன்பப்படுவதைப் பார்த்தபின் “இப்படிக் கஷ்டப்படுகின்றானே…!” என்று பரிவுடன் ஏக்கத்துடன் பார்த்தால் அவன் உடலில் விளையக்கூடிய துன்ப உணர்வின் அலைகள் நமக்குள் நிச்சயம் வந்துவிடும்.

வந்த பின் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நடுக்கமும் பயத்தையும் சோர்வையும் அல்லது மயக்கத்தையும் நமக்கு உண்டாக்கும்.

நமக்குச் சம்பந்தமே இல்லை என்று கூடச் சொல்லலாம். திடீரென்று எதிர்ப்பார்க்காதபடி ஒருவர் விபத்துக்குள்ளாகிவிட்டால் அந்தப் பரிவான குணம் கொண்டு பார்க்கும்போது
1.பயம் கலந்த நிலைகளில் ஈர்த்துவிட்டால்
2.நாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும்
3.அது நுகரப்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி மயக்கமடையச் செய்யும்.

இதைப் போன்று வலுக்கட்டாயமாக ஒருவர் உடலிலிருக்கும் துன்பத்தை அறிந்துணர்ந்து சக்தியின் தன்மை பெற்றவர்கள் அதைச் சொல்ல வேண்டும் என்றாலும் அவர் கஷ்ட நஷ்டங்களையும் அவர் எதிர்கால நிலைமைகளையும் சுவாசித்துத்தான் அதை உணர்ந்து தான் சொல்ல முடியும்.

சொன்னாலும் அந்த வலுக்கட்டாயமாகக் கவர்ந்த பிறர் உடலிலிருக்கக்கூடிய தீய சக்திகள் நம் உடலில் பெருகத் தொடங்கும்.

சிலர் இதே மாதிரி “ஒவ்வொருவருடைய துன்பங்களையும் நான் போக்குவேன்…” என்ற நிலையில் மந்திரங்கள் யந்திரங்கள் செயல்படுத்திச் சொல்வார்கள்.

இதே மாதிரியான ஈர்க்கும் ஆற்றல் கொண்டு பிறருக்கு மந்திரித்து அல்லது மந்திரங்கள் சொல்லி அவர் உடலில் உள்ள தீமையின் விளைவுகளை இந்த உடலில் இழுத்துக் கொள்ள முடியும்.

ஏனென்றால் “அறிதல்…” என்ற நிலையில்
1.ஈர்த்துச் சொல்லக்கூடிய பக்குவம் வந்துவிட்டாலே
2.ஒருவர் உடலிலிருப்பது தன்னிச்சையாகவே
3.இவர் நினைக்கும் பொழுது வந்துவிடுகின்றது.

அவரைப் பற்றியதெல்லாம் அறிந்து சொல்வார். அவரின் வியாதியைப் போக்கும் நிலையும் வரலாம். நான் நல்லது செய்தேன் என்று அவரும் நினைக்கலாம்.

வியாதியைப் போக்கும் பொழுது இவர் உடலில் அவரின் வியாதியை உருவாக்கிய தீய சக்திகள் விளைந்து மறுபடியும் மனித உணர்வல்லாத ஈர்ப்புக்குள் தான் இவர் செல்ல முடியும்.

மிருக இனங்களுக்குத்தான் அழைத்துச் செல்லும். ஞானிகளின் உணர்வலைக்குள் செல்ல முடியாது.
காரணம் சாதாரண மனிதனின் எண்ணங்களைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த மெய் ஞானிகளின் அருள் அருகில் போனால் என்ன செய்யும்?

மெய் ஞானிகள் தீமைகளை மாய்க்கும் கடும் அக்கினி சக்தி பெற்றவர்கள். அந்த நெருப்புக்கு அருகில் சென்றால் சுட்டுப் பொசுக்கிவிடும். நம் உணர்வுகளைக் கருக்கிவிடும். ஞானிகள் அருள் மிக்க ஆற்றல் பெற்றவர்கள்.

நம் எண்ணத்தால் சாதாரணமாக அவர்களைக் கவர வேண்டும் என்றால் நடக்காது. அந்தச் சக்திகளைக் கவர வேண்டும் என்றால்
1.அவர்களின் உணர்வை நமக்குள் பதிவாக்கி இருக்க வேண்டும்.
2.பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து
3.விண்ணிலிருந்து அதைப் பெறவேண்டும் என்றால் கவர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தினசரி மனித வாழ்க்கையில் எத்தனையோ சிரமங்கள் படுகின்றோம். கஷ்டப்படுகின்றோம் கோபப்படுகின்றோம் ஆத்திரப்படுகின்றோம்.

ஆக வீணாகக் கவலைப்பட்டோ சங்கடப்பட்டோ சலிப்படைந்தோ வெறுப்படைந்தோ வேதனைப்பட்டோ அதையே மீண்டும் மீண்டும் நமக்குள் வளர்த்தால் மனித உடலுக்குள் தீமைகள் அதிகமாகி அடுத்து மனித உருவல்லாத உடலாகத்தான் நம்மை உயிர் உருவாக்கும்.

ஜோதிடமோ ஜாதகமோ நல்ல நேரமும் கெட்ட நேரமும் உங்களுக்கு ஒன்றும் செய்யாது.

தீமையை நீக்க வேண்டும் என்று எப்பொழுது எண்ணுகின்றீர்களோ அந்த நேரமே உங்களுக்கு நல்லது.

1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “அந்த நேரத்தைப் பயன்படுத்தி”
3.எங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால்
4.அந்த நேரம் தான் உங்களுக்கு நல்ல நேரமாகும்.

ஏனென்றால் மனிதன் எல்லாவற்றையும் உருவாக்கக்கூடியவன்.
1.நல்லதை உருவாக்கப்படும் பொழுது அந்த நல்ல நேரம் வருகின்றது.
2.நல்ல செயல்கள் வருகின்றது.
3.மன பலம் கிடைக்கின்றது. மன உறுதி கிடைக்கின்றது.

என்னை இப்படிச் செய்தானே… என்ற நிலைகளில் கோபமும் ஆத்திரமும் வரும் பொழுது அந்த நேரம் கெட்ட நேரம்.

“எனக்கு இப்படித் தீங்கு செய்தானே… நான் தொழில் செய்தேனே நஷ்டமாகி விட்டதே… என் பையன் சொன்னபடி கேட்கவில்லையே…,” இப்படி எல்லாம் எண்ணிக் கொண்டிருந்தால் இதெல்லாம் கெட்ட நேரம் தான்.

எனக்குத் தீங்கு செய்பவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று பொருளறிந்து செயல்பட வேண்டும். சிந்தித்து அவன் செயல்பட வேண்டும். நல்லது செய்யக்கூடிய உயர்ந்த எண்ணங்கள் வர வேண்டும்.

நான் செய்யும் தொழில்கள் அனைத்தும் சீராகி அதில் உற்பத்தியாகும் பொருள்களைப் பயன்படுத்துவோர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும். என் வியாபாரம் விருத்தியாக வேண்டும் என்று இப்படி எண்ணினால் அதுவெல்லாம் நல்ல நேரமாகின்றது.

என் பையன் ஞானம் பெற்று நல்ல தெளிவானவனாக வர வேண்டும். அவன் அந்த அருள் சக்திகள் பெறவேண்டும் என்று எண்ணினால்
1.அவனுக்கு அது நல்ல நேரம்.
2.அவனைப் பற்றி இப்படி நாம் எண்ணினால் நமக்கும் அது நல்ல நேரமாக வருகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோவில்களில் ஜோதிடம் பார்ப்பார்கள். நல்ல நேரம் வருகின்றதா… கெட்ட நேரம் வருகின்றதா…! என்று பூ வைத்துக் கேட்பார்கள்.

இவர்கள் எந்த எண்ணம் கொண்டு வைக்கின்றார்களோ அந்த நிலையில் வைத்துப் பூவைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பார்த்தவுடனே
1.இவர்கள் உணர்வுகள் அங்கே செல்லும்.
2.அந்த உணர்வலைகள் என்ன செய்யும்?

உதாரணமாக கல்யாணப் பெண் சம்பந்தமாகப் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

கெட்ட நேரம் வர வேண்டும் என்றால் சிவப்புப் பூ வரட்டும்… நல்ல நேரமாக இருந்தால் வெள்ளைப் பூ வரட்டும்…! என்று முதலில் எண்ணிக் கொள்வார்கள்.

1.கேட்ட நேரம் என்று எண்ணும் பொழுது (இவர்களின் எண்ணம்)
2..அழுத்தமாக எண்ணும் பொழுது
3.அங்கே சிவப்புப் பூ விழுகும்.

விழுந்தவுடனே கெட்ட நேரம் வந்துவிட்டது… இந்தப் பெண் வேண்டாம்…! என்பார்கள்.

ஒரு காரியத்திற்குப் போக வேண்டும் என்றால் இந்த உணர்வின் அலைகள் கண்களில் படரப்படும் பொழுது எதிர் நிலையான உணர்வு வரப்படும் பொழுது உணர்வுகள் எப்படி இயக்குகின்றது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

“சாமி மேல் உள்ள பூ” விழுகின்றதா… விழுகவில்லையா…! என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

பெண்ணைக் கொடுப்போர் ஒரு பக்கமும் மாப்பிள்ளை கொடுப்போர் ஒரு பக்கமும் இருப்பார்கள். “எப்படியோ…” வெள்ளைப் பூ விழுந்தால் பரவாயில்லை என்று ஒரு சாரார் (பெண்ணைக் கொடுப்போர்) நினைக்கின்றார்கள்.

அந்த வேதனையும் மகிழ்ச்சியும் இருந்தாலும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்?

மாப்பிள்ளை வீட்டில் அவர்கள் சார்புடைய பெண்கள் அந்தப் பெண் வீட்டுக்கு வந்தால் சரியில்லை. இந்தத் தெய்வம் அதற்குத் தகுந்த மாதிரிச் சொல்ல வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எண்ணிப் பார்க்கப்படும் பொழுது என்ன நடக்கும்…?

அங்கே எதிர்மறையான நிலைகள் உருவாகும்.

1.இத்தகைய உணர்வு வரப்படும் பொழுது
2.எவருடைய உணர்வின் எண்ணங்கள் வலுவாகின்றதோ
3.அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு தான் இந்த உணர்வுகள் இயக்கும்.
4.வலுவான உணர்வுகள் இயக்கி “அந்தப் பூவை விழுகச் செய்யும்”

அந்தத் தெய்வத்தின் மேல் உள்ள பூ விழுகும் நேரத்தில் இந்தப் போராட்ட முறைகளைப் பார்க்கலாம்.

ஆனால் நாம் என்ன எண்ணுகின்றோம்…!?

“தெய்வம் அருள் சக்தி கொடுக்கின்றது… வரம் கொடுக்கிறது…” என்று இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நாம் எண்ணக்கூடிய உணர்வின் எண்ணங்கள் தான் இயக்குகின்றது. இதைத் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

நம் வாழ்க்கையில் எத்தனையோ செயல்கள் இதைப் போன்று தான் நடக்கிறது.

ஒரு மனிதன் அரிப்பின் காரணமாக மேலில் அரித்துக் கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். உற்று நாம் அதைப் பார்த்தால் போதும்.

பார்க்கலாம்…! உடனே நம்மை அறியாமலே நம் உடலில் எங்கேயாவது கையை வைத்துத் தேய்க்க (அரிக்க) ஆரம்பிப்போம். அந்த உணர்வின் உணர்ச்சிகள் நம்மை அறியாமலே அதே உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்.

ஏனென்றால் இது இயற்கையின் உணர்வுகள்.

1.நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ
2.அது நம் சுவாசத்திற்கு வருகின்றது. அதை நுகர்கின்றோம்.
3.”அதே உணர்வு” நம்மை அறியாமலே அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.

ஒருவர் தன் தலையைச் சொறிவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும். நம்மை அறியாமலே நம் கை என்ன செய்யும்…? தலையைச் சொறியப் போகும்.

காரணம் அந்த உணர்வின் எண்ணங்கள் நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஜோசியம் ஜாதகம் என்ற நிலையில் நீங்கள் வேண்டி விரும்பிப் பார்க்கிறீர்கள். அதில் இருக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு சமயம் யாம் (ஞானகுரு) சுற்றுப் பயணம் வந்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். நம்மிடம் அவர் பழகியிருந்தார்.

அவரிடம் சினிமா தியேட்டர் ஒன்று உண்டு. அவர் குடும்பத்தில் அதாவது ஏறுசிங் இறங்குசிங் என்ற நிலையில் விவசாயம் செய்து கொண்டிருந்தால் பயிர் நன்றாக விளைச்சலாகி வரும். பின் சில சமயங்களில் அதில் ஒன்றுமே விளைந்திருக்காது.

சினிமா தியேட்டர் ரைஸ் மில் என்று எத்தனையோ வைத்திருந்தார். அவை அனைத்தும் ஓடும். ஆனால் காசு இருக்காது. மூடியே கிடந்தது.

இப்படி அவர் முயற்சி எடுத்து எத்தனையோ செய்து பார்த்திருக்கிறார். முடியவில்லை.

அப்போது யாம் கொல்லூர் மூகாம்பிகையில் தியானம் இருந்தோம். மூகாம்பிகாவைக் கடந்து குடசாஸ்திரி என்று ஒன்று உண்டு. அங்கே மேலே தபோவனம் உண்டு.

அங்கே ஐந்து ஆறு வருடம் இருந்தேன்.

இங்கே அடிக்கடி வந்து சென்றாலும் அங்கே சென்று தியானத்தை மேற்கொள்வது. ஆதிசங்கரரின் இயக்கம் கோலமா மகரிஷி அவர் பெற்ற நிலையும் அந்த உணர்வின் தன்மை அறிவதற்காக இந்த தியானத்தை அங்கே மேற்கொண்டேன்.

கோலமாமகரிஷி அவர் பெற்ற உணர்வுகள் அதை அறிவதற்கு இந்தத் தவத்தை மேற்கொண்டது.

இந்த நண்பர் தன் தியேட்டர் ஓடாததையும் விளைச்சல் இல்லாததையும் பற்றி என்னிடம் வந்து விபரம் கேட்டார்.

அதர்கு நீங்கள் இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று நான் சொன்னேன்.

அதன் பின் அவர் வீடுகளில் புதைத்து வைத்திருந்த சில யந்திரங்கள் தகடுகள் எல்லாம் வெளி வந்திருக்கின்றது. வந்த பின் எனக்குத் தபால் எழுதியிருந்தார்.

எல்லாமே எடுத்துவிட்டோம். தன்னாலே எப்படி வந்தது என்று தெரியவில்லை.. எனக்கு அந்த உணர்வு தோன்றியது. அதை வைத்து எல்லாவற்றையும் எடுத்து விட்டேன் என்று கூறினார்.

மறுபடி தீபாவளி அன்று சினிமா தியேட்டரில் படம் ஓட்டப் போகின்றேன். அந்தச் சமயம் “சாமிகள்” நீங்கள் வர வேண்டும் என்று எனக்குத் தகவல் கொடுத்திருந்தார்.

மூகாம்பிகாவிலிருந்து பண்ணாரி வந்து அங்கே இருந்தேன்.

“என்ன நடக்கின்றது…!” என்று பார்த்துவிட்டுத் தீபாவளி அன்று மதியம் இரண்டு மணிக்கு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

இங்கே படம் ஓட்டுகிறார்கள். படம் ஓட்டினால் சத்தம் இல்லை. சத்தம் வந்தால் படம் தெரியவில்லை. டிக்கெட் எல்லோருக்கும் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் படம் ஓட மாட்டேன் என்கிறது.

இருக்கிறவர்கள் பொறுமை இழந்து தியேட்டரே அல்லாடிக் கொண்டிருக்கின்றது. காசைக் கொடு என்று இந்த மாதிரி சூழ்நிலைகள் அங்கு வந்துவிட்டது.

அப்பொழுது நான் அங்கே வருகின்றேன்,

“சாமி வருவார்…! வந்தால் தியேட்டருக்குள் உள்ளே விட்டுவிடுங்கள்…” என்று அவர் ஏற்கனவே சொல்லி வைத்திருக்கின்றார்.

நான் தியேட்டருக்குள் போய் உட்கார்ந்தேன். உட்கார்ந்த உடனே படம் பாட்டுக்கு தாராளமாக ஓடுகிறது.

நன்றாக ஓடியவுடனே விழுந்தடித்து ஓடி வந்தார். யாராவது வந்தார்களா?

ஆமாம்…! சாமி உள்ளே உட்கார்ந்து இருக்கிறார்… என்று சொல்கிறார்கள்.

அப்புறம் உள்ளுக்குள் வந்தார். படம் முழுவதும் ஓடி முடியும் வரையில் கூடவே இருந்தார்.

இந்த நண்பர் ஏற்கனவே இந்த ஜோசியம் ஜாதகம் எல்லாம் பார்த்து அடிக்கடி பதிவு செய்து கொண்டவர்,

இவர் நட்சத்திரம் இவர் பெயர் இவர் பூர்வ புண்ணியம் இவர் எந்த எந்த வழி என்கிற வழியில் சொல்லால் அங்கே ஜாதகம் பார்க்கிறவரிடம் பதிவு செய்திருக்கிறார்.

தியேட்டர் வைத்திருக்கின்றார். ஆனால் இவருக்கு ஆகாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்?

இவருக்கு ஆகாதவர்கள் அந்த ஜாதகம் பார்ப்பவரிடம் குறிப்பை எடுத்துக் கொண்டு இவருக்கு “எந்த வகையில் கெடுதல் செய்கிறது…? என்று பார்க்கின்றார்கள்.

அந்த ஜோசியக்காரர் என்ன செய்கிறார்?

அவர் காசை வாங்கிக் கொண்டு இவருடைய தியேட்டரைச் சூனியமாக்கி விவசாயத்தை நாஸ்தியாக்கும் நிலைக்குச் சூனியம் ஏவல் செய்து வைத்துவிட்டார்.

அதற்காக அந்த ஜோசியக்காரருக்குக் நிறையக் காசு கிடைக்கிறது.

ஆனாலும் அந்த ஜோதிடக்காரர் ஜாதகம் பார்ப்பதில் பேரும் புகழும் கொண்டவர். குட்டிச் சாத்தானை வைத்துக் கொண்டு நீங்கள் நினைப்பதை எல்லாம் சொல்வார்.

ஆகையினால் பெரிய ஜோதிடக்காரர் ஆகி விடுகிறார்.

ஜோதிடம் ஜாதகம் எல்லாம் நன்றாகப் பார்க்கிறார். நன்றாகத் தெளிவாகச் சொல்கிறார் என்று தேடி வருகின்றார்கள்.

குட்டிச் சாத்தானையும் கருவித்தைகளையும் வைத்து ஜாதகம் பார்ப்பதில் இப்படியெல்லாம் சில வேலைகள் செய்கிறார். அந்தக் கருவித்தைகளைப் பார்த்து வருபவர்களுடைய ஜாதகங்களைப் பார்ப்பது. அதன் வழியில் அவர்களுக்கு எல்லாம் சொல்கிறார்.

இதை நான் (ஞானகுரு) அனுபவத்தில் உங்களிடம் சொல்கிறேன்.

ஏனென்றால்
1.ஜாதகம் பார்ப்பதால் எத்தனையோ பேர் கெட்டிருக்கின்றார்கள்.
2.ஜாதகங்கள் பார்த்து எத்தனையோ குடும்பங்கள் எல்லாவற்றையும் தொலைத்திருக்கின்றார்கள்.
3.அந்த நம்பிக்கையினால் எத்தனையோ பேர் தன்னை இழந்து அவதிப்பட்டிருக்கின்றார்கள்.
4.அவரவர்கள் அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.
5.ஆயிரத்தில் ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி நல்லதாக நடந்திருக்கும்.

ஜாதகக்காரருடைய என்னுடைய இந்த நண்பர் வீட்டிற்கு அங்கே வந்திருக்கின்றார். ஏனென்றால் அடிக்கடி நான் அங்கே போகக்கூடியவன்.

ஆனால் அந்தச் சமயத்தில் வெளியில் வரப்படும் போது என்னைப் பற்றிய உண்மையைச் சொல்ல மாட்டேன். “சாமியார்…” என்று சொல்ல மாட்டேன். அரசியல் பற்றி ரொம்பக் கடுமையாகப் பேசிக் கொண்டு இருப்போம்.

ஆகையினால் யாருக்கும் நான் “சாமி…” என்கிற வகையில் தெரியாது. “சாமி..” என்கிற வகையில் தியேட்டரில் ஓடாத படத்தை ஓட்ட வைக்கும் பொழுது தான் தெரியும்.

அதே சமயத்தில் சூனியம் வைத்த அந்த ஜோதிடம் பார்ப்பவர் என் நண்பரிடம் (தியேட்டருக்கு வந்து) வந்து சொல்கிறார்.

எனக்கு வீட்டுக்குப் போவதற்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது. இந்த பக்கம் வருவதற்குத்தான் எனக்குக் கண் தெரிகிறது என்றார்.

“என்ன…! என்று நண்பர் கேட்டார்.

நான் இன்னென்ன தவறுகளையெல்லாம் செய்திருக்கின்றேன். உங்களுக்குக் கெடுதல்கள் செய்திருக்கின்றேன்.

அவர் “தன்னாலே…” உண்மைகளை வெளிப்படுத்துகிறார்.

இந்த மாதிரி இங்கே ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிறார் என்கிறார் அவர்.

“எந்தச் சாமியார்..?” என்று கேட்டார்.

அவர் உங்கள் கடைக்குக் கூட அடிக்கடி வந்திருக்கின்றார். நான் கூட உங்கள் கடைக்கு அடிக்கடி வந்து அவர் அரசியல் பேசும் பொழுது பார்த்திருக்கிறேன் என்று சொல்கிறார்.

“அப்படியா” சரி பார்க்கலாம் என்று என்னிடம் அழைத்து வருகிறார். இந்தப் பக்கம் தான் (நான் இருக்கும் பக்கம்) வருகிறார். அந்தப் பக்கம் போனால் அவருக்குக் கண் தெரிய மாட்டேன் என்கிறது.

சாமியைப் பார்த்து நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார். நான் காசை வாங்கி இத்தனைத் துரோகம் செய்து விட்டேன் என்றும் அவர் சொல்கிறார்.

அவர் இப்படிப் பேசியவுடன் என்னிடம் கூப்பிட்டு வந்தார். நான் தியேட்டருக்குள் உட்கார்ந்திருந்தேன்.

வந்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டு நான் பாவங்கள் நிறையச் செய்துவிட்டேன் என்றார்.

நான் ஜாதகம் பார்த்ததுடன் மட்டும் இல்லாமல் பணத்தின் மீது ஆசைகள் கொண்டு ஒருவருக்கொருவர் அங்கங்கே போய்க் கேட்டுச் சில விபரங்களைத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்த தீயவினைகளைச் செய்தேன்.

அதனால் இப்பொழுது எனக்கு அந்தப் பக்கம் போனால் கண் தெரிய மாட்டேன் என்கிறது என்றார். அவர் செய்த உணர்வுகள் அவருக்குள் உள்ள அனைத்தையும் சொன்னார்.

என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இந்தப் பாவச் செயலைச் செய்யவே மாட்டேன் என்று சொல்கிறார்.

சரி.. என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தேன்.

இனிமேல் யாருக்கும் இந்தத் தீங்கைச் செய்யாதே. இந்த ஜாதகத்தைத் தொடாதே… நீ ஜாதகத்தைத் தொட்டால் மீண்டும் இந்தக் காசு ஆசைதான் வரும் என்று சொல்லி அனுப்பினேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனக் கவலையில் இருந்து விடுபடுவதற்காக வேண்டித் தண்ணீ போடுவார்கள். குடித்தபின் எல்லா கவலையையும் மறந்து விடுவார்கள்.

தண்ணீ போடுகிறவர்கள் மாமிசமும் அதிகமாகச் சாப்பிடுவார்கள்.

கடைசியில் இந்த உணர்வெல்லாம் சேர்த்துச் சேர்த்து இவர்களுக்குள் இந்த நிலை நிறுத்த முடியாதபடி வந்து விடும். உயிரான்மாவில் அந்த வாசனை அதிகமாகிவிடும்

இவர்கள் இறந்த பிற்பாடு எங்கே போவார்கள்…?

மந்திரக்காரர்கள் தண்ணீ கறி இரண்டையும் வைத்து என்ன செய்வார்கள்?

ஆரம்பத்தில் இந்த மந்திரங்கள் உற்பத்தி செய்வது எல்லாமே அந்தச் சோமபானம் வைத்துத்தான். அதனால் சில மயக்க நிலைகளை ஏற்படுத்தித்தான் வசியப்படுத்துவார்கள். மது இல்லாத மந்திரம் கிடையாது.

மந்திரத்தை எப்படி உருவாக்கினார்கள் என்ற நிலையில் முழுமையாக இப்போது நான் (ஞானகுரு) சொல்லத் தயாராக இல்லை. அது நமக்கு ஆகாத வேலை.

சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்று சொன்னால் மாமிசத்தையும் தண்ணீயையும் வைத்து அதற்கென்று சில மந்திரங்கள் இருக்கின்றது. ஜெபித்து இந்த ஆத்மாக்களைப் பிடித்து இழுத்துக் கொள்வார்கள்.

ஏனென்றால் தண்ணீ போடும் பழக்கம் ஏற்படுவதன் காரணமே
1.பெண்டு பிள்ளைகள் மீது கவலை அதனால் அவஸ்தைப்படுவது,..
2.பிறிதொருவர் அவமரியாதையாகப் பேசினார் என்னால் தாங்க முடியவில்லை…
3.வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்தேன் அந்தக் கவலையை மறக்க முடியவில்லை..
4.இந்த மாதிரி இருப்பவர்கள் கதி எல்லாம் இறந்த பிறகு மந்திரக்காரன் கையில் போய்ச் சிக்கும்.
5.இந்தக் கறியும் தண்ணியைச் சாப்பிட்டு இருப்பவர்கள் மந்திரக்காரனுடைய பிடியில் ரொம்ப சீக்கிரம் போய்ச் சிக்கிவிடும்.

அப்புறம் சிக்கிய பின் என்ன கத்தினாலும் முடியாது. அது அங்கே போய்ச் சிக்கிக் கொண்டதும் அவர்கள் என்ன செய்கின்றனர் தெரியுமா இல்லையா…!

காசைக் கொடுத்து அடுத்தவர்களைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தகைய மந்திரக்காரர்களை நாடுகின்றனர்.

காசை வாங்கிக் கொண்டு ஆகாதவர்கள் உடலில் இந்த ஆவிகளை ஏவி விடுவார்கள். அங்கே போய் எல்லாக் கெடுதலையும் செய்து அது சாப்பிடும். அங்கே நிர்மூடத்தனமான வேலைகளைச் செய்யும்.

ஏற்கனவே வாழ்ந்த உடலில் பல வேதனைகள் ஆன்மாவில் இருக்கிறது. அடுத்து மந்திரக்காரன் கையில் சிக்கி அடுத்த உடலில் போய் அங்கே இன்னும் அதிகமான விஷத்தையெல்லாம் இழுத்துக் கொண்டு இந்த ஆவி வரும்,

விஷங்கள் அதிகமான பின் மீண்டும் அதை எடுத்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த வேதனையான உணர்வு இன்னொரு உடலில் போய் என்ன செய்யும்?

அவனைத் திருப்பி அடித்துக் கொல்லும்.

எதிலெல்லாம் ஏவினானோ கொன்று விட்டு மீண்டும் பிறவிக்கு வரப்போகும் போது விஷமான உயிரினமாகத்தான் உருவாகும்.

உருவான பின் அந்த உடலில் உடல் உறுப்புகள் என்ன செய்யும்…? சாப்பிடும் பொழுது மிகவும் அவஸ்தைப்பட்டுத் தான் சாப்பிட வேண்டும். சில உயிரினங்களைப் பார்க்கின்றோம்.

பாம்பு தேள் சில விஷப் பிராணிகள் மற்றதைத் தன் விஷத்தால் கொன்றுவிடும். ஆனால் அதைச் சாப்பிடும் பொழுது நரக வேதனைப்படும். அது எத்தனை அவஸ்தை எல்லாம் படுகின்றது.

1.பல உடல்களுக்குள் சென்று எல்லாவற்றையும் வேதனைப்படச் செய்தாய்
2.முழுவதும் நஞ்சாக நீ உருவாக்கினாய்.
3.இப்பொழுது நீ அவஸ்தைப் படு…! என்று இந்த உயிர் செய்யும்

தண்ணீ போடுகிறவர்கள் நீங்கள் யாரும் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தண்ணீ போட்டதன் விளைவுகள் சீக்கிரம் மந்திரவாதிகளிடம் போய்ச் சிக்கிக் கொள்வீர்கள்.

இன்றைக்கு மந்திரம் ஜாஸ்தியாக (வியாபாரமாக) வந்து விட்டது. எங்கே பார்த்தாலும் “ஒருவரைத் தொட்டு…” புத்தியை மாற்றி விட்டுக் காசை எடுத்துக் கொண்டு செல்கின்றவர்கள் நிறைய வந்தாகி விட்டது.

டிரெயினில் உட்கார்ந்து கூட்டத்திற்குள் இருந்து வந்தால் “நகையைக் கழற்றிக் கொடு…!” என்று வாங்கிக் கொண்டு போகக்கூடிய நிலைமை வந்து விட்டது.

ஏனென்றால் விஞ்ஞான உலகமாக இருந்தாலும் இன்றைக்கு மந்திரங்கள் நிறைய வந்துவிட்டது. இந்த விஞ்ஞான உலகில் சில
1.விஞ்ஞானச் செயல்களை அழிப்பதற்கும் கூடச்
2.சில வேலைகளைச் செய்கின்றனர்.

ஏனென்றால் வாழ்வதற்கு எவ்வளவு பெரிய வசதி இருந்தும் சிறு விஷயங்கள் நடந்ததென்றால் அந்த விஷத்தன்மையில் இருந்து மீளாத நிலைகளில் இருக்கின்றோம்.

கடைசியில் எங்கே கொண்டு போய் விடும்?
1.மந்திரக்காரனிடம் போய்
2.ஆகாத உடலுக்குள் சென்று பேயாகப் போய் ஆட்டிப் படைத்து கொண்டே இருக்கும்.
3.அங்கே அத்தனை வேலையும் செய்யும்.

இதைப்போல நிலைகள் நம்மை அறியாமலே இயக்கிக் கொண்டு இருக்கக்கூடிய நிலைகளில் இருந்து நம்மை மீட்டுக்கொள்ள வேண்டும்.

“நான் தவறாகச் சொல்கின்றேன்…!” என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இயற்கையில்
1.மந்திரக்காரர்களின் செயல்களையும்
2.உடலை விட்டுப் போகும் உயிரான்மாக்களை எப்படிக் கவர்கிறார்கள் என்ற நிலையும்
3.அது என்னென்ன அல்லல்படுகிறது என்றும்
4.நேரடியாகவே இழுத்துக் காண்பித்தார்.

1.இன்னென்ன நிலைகளை நீ சொல்லு என்றார்
2.இந்த ஆவிகள் என்ன செய்கிறது என்று பார்…!
3.தண்ணீ போட்டவர்களை இறந்தவுடனே சுலபமாக வந்து அழைத்துக் கொள்ளலாம்…! என்று காட்டினார்
4.என்னென்ன வேலைக்கு நீ பயன்படுத்திக் கொள்கிறாயோ நீ வைத்துக்கொள்…! என்றார் குருநாதர்.

மந்திரத்தை சொல்லி அவர்களை இழுத்துக் கெட்ட வேலைக்குப் பயன்படுத்தினால் அப்புறம் இந்தப் புத்தியெல்லாம் உன்னிடம் வந்து அவர்கள் பின்னால் “நீ போக வேண்டியதுதான்…! என்று அதையும் சொல்லி விட்டார் குருநாதர்.

இப்படிச் செய்தாய் என்று சொன்னால் கடைகியில் உன் கதியும் அப்படித்தான் வந்து விடும் என்று காட்டினார்.

ஆனால் அவர்கள் அந்தத் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும் என்று எண்ணினால் நீக்கும் உணர்வுகள் உனக்குள் வருகின்றது என்று இதைச் சொல்லிக் காண்பித்தும் நேரடி அனுபவமாக செய்து காட்டி உணர்த்தவும் செய்தார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் எனக்கு இடைஞ்சல் செய்தவனை எண்ணுகின்றேன். “என் பிள்ளை படிக்கவில்லையே… நாளைக்கு எதிர்காலம் என்ன ஆகுமோ…!” என்று நான் எண்ணிச் சிந்திக்கின்றேன்.

அப்பொழுது இந்தச் சிந்தனை எங்கே போகின்றது?

என் பிள்ளை படிக்கவில்லை என்றால் நாளை அவன் எதிர் காலம் என்னவாகும் என்று நான் நினைத்துக் கொண்டே இருந்தேன் என்றால் போதும்…! (ஒரு நல்ல பையனைப் பற்றிக் கூடச் சிந்திக்க மாட்டோம். நல்லது எண்ணத்திற்கு வராது.)

இவன் சொன்னபடி கேட்கவில்லை…. படிப்பு சரியாக இல்லை… என்ற இந்த நிலையில் இருந்தால்
1.அவனைப் பற்றியே எண்ணி
2.அவன் உயர்ந்தவனாக வர வேண்டும் ஆனால் வரவில்லையே என்று எண்ணிக் கொண்டே இருக்கின்றேன் என்றால்
3.நான் இறந்த பிற்பாடு இந்த உயிராத்மா அவன் உடலுக்குள் தான் போகும்.

அவனை எண்ணியே வேதனைப்பட்டேன். அந்த வேதனையான நிலைகள் எனக்குள் நோயாக வந்தது. நோயாக உருவான இந்த உயிராத்மா நான் இறந்த பிற்பாடு என் பையன் உடலில் தான் போகும்.

அங்கே போய் அங்கே நல்லதை விளைய வைக்கின்றதா…? என்றால் இல்லை. அவனை வீழ்த்தச் செய்வேன்.

மந்திரங்கள் தந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள்
1.மனித உடலில் விளைந்த உணர்வு எண்ணங்களைத் தனக்குள் கவர்ந்து கொண்டவர்கள்
2.வாமன அவதாரம் என்று சொல்வார்கள்.

இதுகளெல்லாம் மந்திரத்தாலே அப்போதைக்கு அப்போது அந்தந்தக் காரியங்களை ஜெயித்துக் கொண்டு வந்தவர்கள்.

அதை எல்லாம் “தெய்வப் பண்புகளிலே பார்க்கப்பட்டு…” அந்த உணர்வின் தன்மை திசை திருப்பி அன்றைய வாழ்க்கையை எப்படியோ பொழுது போக்க வேண்டும் என்று செய்வார்கள்.

வீட்டில் மாடி கட்டுவதற்கு பொய்ப் பந்தலைக் கட்டி அதன் மேலே தளம் சுவர் எழுப்பிக் கட்டுவோம். செய்து முடித்தபின் பொய்ப் பந்தலை உடனுக்குடனே எடுத்து விடுவது போல் தான் மந்திரம் சொல்வதை அது நிரந்தரமாகக் கட்டி விட்டார்கள்.

1.மனித உடலிலே விளைய வைத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ள
2.இந்த மனித வாழ்க்கையிலே தன்னுடைய பேருக்கும் புகழுக்கும்
3.தன் சுகபோகங்களுக்கும் எண்ணி எடுத்துக் கொண்டது தான் இந்த மந்திர ஒலிகள்.

அந்த மந்திர ஒலிகள் எங்கிருந்து வந்தது?

ஒரு மனித உடலில் விளைய வைத்த அந்த எண்ணங்களைக் கவர்ந்து தனக்குள் அது உருவாக்கித் தன்னுடன் இயக்கச் செய்யும் நிலையே அது.

சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் குணம் கொண்டு ஒரு ஆன்மா நம் உடலில் எப்படி நுழைந்து விடுகின்றதோ இதைப்போல
1.செயற்கையில் ஒரு மனிதன் மந்திர ஒலிகளைப் பரப்பச் செய்து
2.அந்த மந்திரத்தை எவன் உருவாக்கினானோ
3.அந்த மந்திர ஒலி கொண்டே மீண்டும் தனக்குள் கவர்ந்து
4.இன்னொரு ஆத்மாவினுடைய செயலைத் தனக்குள் கவர்ந்து கொள்வது
5.இது தான் மந்திரம்.

கவர்ந்து கொண்ட நிலைகள் கொண்டு சில காலம் இன்னொரு உடலுக்குள் போய்ப் பேயாகவும் அருளாகவும் தெய்வமாகவும் செயல்படுத்தி மாற்றிக் காட்டலாம்.

பல வித்தைகளைச் செய்து காட்டலாம். ஆனால் பயன் ஒன்றுமே இல்லை. அப்படிச் செய்தவர்கள் அனைத்தும் மீண்டும் விஷத்தின் தன்மை கொண்டு பாம்பாகவோ தேளாகவோப் பிறந்து தான் மீண்டும் மனிதனாக வரவேண்டும்.

இதைப்போல நாம் மந்திரம் என்ற இந்த நிலைகளில் இருந்து விடுபட்டு பத்தாவது நிலையான கல்கி என்ற நிலையில் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.

ஏனென்றால் நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நம்மை அறியாமல் நமக்குள் சென்ற இந்த அழுக்கினைத் துடைக்கத்தான் இந்தத் தியானம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பக்தி நிலைகளில் நாம் போகும் போது கோயில்களுக்குப் போகிற இடத்திலே சிலர் ஆண்டவன் எனக்கு நேரிடையாகச் சொல்கிறான் என்று சொல்வார்கள்.

இந்த மாதிரிச் சொல்லிக் கொண்டு பழனியில் ஒருவர் இருந்தார். நான் மிலிட்டரிக்குப் போய் விட்டு வந்தேன். அது… இது… என்று சொல்கிறார்.

ஜோசியங்களை சொல்லிக் கொண்டு அது இப்படி நடக்கிறது. அப்படி நடக்கிறது என்றெல்லாம் சொல்வார்.

உங்கள் வீட்டில் இந்தச் சக்கரத்தை வைத்திருந்தால் மிகவும் நல்லது என்று சொல்வார். அதைக் கொடுத்துக் காசுகளை வாங்குவார்.

கோயில்களுக்கு வருபவர்களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டு அவர்களை எப்படி மடக்குவது என்று சில வேலைகளைச் செய்வார்.

நான் (ஞானகுரு) சித்து ஆகியிருக்கும் நிலையில் அவரைச் சந்திக்கும் போது சொன்னேன்.

உன்னுடைய மந்திர வித்தை சிறிது காலம் செல்லும். ஆனால் இது உன்னையே வீழ்த்தும். நீ முழுமையாகக் கற்றுக் கொள்ளவில்லை.

காசைக் கொடுத்து நீ வாடகைக்கு வாங்கி இந்த வேலையைச் செய்கிறாய்.
1.அற்பக் காசுக்காக இதைச் செய்கிறாய்.
2.அந்த வினைகளை எப்படி நீ தெரிந்து கொள்ளப் போகின்றாய் பார்…! என்றேன்.

அதெல்லாம்… என்னால் எதை வேண்டும் என்றாலும்… செய்ய முடியும்…! என்றார். கடைசியில என்ன செய்தார்…?

ஒருவரைக் கொல்வதற்காக வேறொருவரிடம் சக்தியை வாங்கி வைத்துப் பழனி வையாபுரி குளத்தில் வைத்துச் செய்தார். அவர் அங்கேயே செத்து மடிந்தார்.

இதே மாதிரி பழநி பஸ் ஸ்டாண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி. இதே மாதிரி கோவிலுக்குப் போவோரை ஒருவர் மடக்கிக் காசுக்காகச் செய்து கொண்டிருந்தார்.

ஒருவர் அவர் இரண்டு சம்சாரத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

சார்…! இங்கே வாருங்கள்…! என்றார். நீங்கள் உங்கள் பாக்கெட்டில் வைத்திருந்த காசெல்லாம் காணாமல் போய்விட்டது…! என்றார்.

அதெல்லாம்… “ஒன்றும் இல்லை…!” என்றார்கள் அவர்கள்.

“இல்லை இல்லை… நீங்கள் பாருங்கள்…!” என்றார்.

உங்கள் பாக்கெட்டில் இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது… பாருங்கள்…! என்றார்.

“பணம் காணாமல் போய்விட்டது…!” என்று சொல்லிவிட்டு இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது என்று சொல்லி அதை அவர்கள் பார்த்தவுடனே இவர் மீது முழு நம்பிக்கை வந்துவிடுகிறது.

அப்புறம் “போனது வந்தது… சண்டை போட்டது… அவர் வாழ்க்கையில் நடந்தது…” எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார்.

எல்லாம் அவர்கள் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால் முருகன் உங்களுக்கு நிறைய இந்த மாதிரி அருள் கொடுத்திருக்கின்றார். சரி…! நீங்கள் மலைக்குப் போய் முருகனைத் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

முதலில் “வெறும் ஒரு ரூபாய் தான்… அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம்…!” என்று சொல்லிக் கவர்ச்சி செய்து கொள்கிறார்கள்.

அடுத்தாற்போல் என்ன சொல்கிறார்?

உங்களை மடக்குவதற்காக எதிரிகள் இருக்கின்றார்கள். அதைச் சரி செய்ய வேண்டும்…! எதற்கும் ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்கள். அப்புறம் நல்லதான பிற்பாடு மிச்சத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கேட்கிறார்.

“அதற்காக உங்களுக்குச் சக்தி தருகிறேன்…! என்று சொல்லிக் கோவிலுக்கு வருபவர்களிடம் சொல்லி ஒவ்வொரு நாளும் இப்படித் தட்டிப் பறிக்கின்றார்கள்.

இந்த மாதிரி ஜோதிடங்கள் நிறைய உண்டு. ஏனென்றால் கரு வித்தைகளை வைத்து அந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி இப்படிச் செய்வார்கள்.

சமுதாயத்தின் மத்தியில் “இப்படி எத்தனையோ பேர்…” மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள்.

கோவில்கள் இருக்கும் பக்கம் போனால் ஜோசியம் ஜாதகம் மந்திரம், தந்திரம் ஏவல் பில்லி சூனியம் என்று ஏகப்பட்டது இருக்கின்றது. ஏனென்றால் அங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள் அல்லவா…!

இதை வைத்து ஏமாற்றி “இது தான் கடவுள்” என்ற நிலைகளில் முருகனே சொல்வதாகச் சொல்கிறார்கள்.

அப்புறம் இன்னொரு இடத்தில் என்ன செய்கிறார்கள்?

எல்லாம் உட்கார்ந்திருக்கின்றார்கள்.

முருகா…! வாடா…! என்று அங்கிருப்பவம் சொல்கிறான். தீபத்தைப் பொருத்துடா…! என்கிறான். “டக்…” என்று அந்தக் கற்பூரம் எரிகிறது.

ஆகா..! உனக்கு முருகன் ஆசி கொடுத்திருக்கின்றார். உனக்கு எல்லாம் நன்றாக இருக்கிறது.. அது இது…! என்று இந்த மாதிரி இரண்டு பேரிடம் சொல்லிக் காசை வாங்குகிறான்.

நல்ல பண்பு உள்ள ஆலயங்களில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

பக்தி கொண்ட மக்களும் அதில் ஏமாற்றம் அடைந்து உண்மையின் உணர்வை அறிய முடியாதபடி
1.இந்த உடலின் ஆசைக்கு இதற்குள் சிக்கப்பட்டுத்
2.தனது பண்புகளை இழந்த நிலையில் இருக்கிறார்கள்.

பெரும் பகுதி பாருங்கள்…! திருவண்ணாமலை ஆனாலும் சரி பழனி ஆனாலும் சரி திருப்பதி ஆனாலும் சரி இப்படிப் பல பேர் அங்கிருந்து இந்த வேலைகளைச் செய்கிறார்கள்.

நாடி சாஸ்திரம் என்று எடுத்துக் கொண்டால் யட்சினி நாடி- அரசர்கள் தனக்குள் அனுபவித்த இப்படி நாடி சாஸ்திரங்கள் உண்டு.

எதன் வழிகளில் அரசர்கள் செய்தார்களோ விஸ்வாமித்திரர் நாடி கௌசிகர் நாடி என்று அன்று வைத்த சிலதுகளை வைத்து நாடிகளைப் பார்த்து நடந்தவைகளைச் சொல்லும். நடக்கப் போவதைச் சொல்லாது.

இதைப் போன்று சில தவறான நிலைகளை செயல்படுத்தப்பட்டுத் தவறின் பாதைக்கே அழைத்துச் செல்கின்றனர். எல்லா மதத்திலும் சரி இதே தான்.

உடலிலிருந்து பிரிக்கப்பட்ட ஆன்மாக்களை வைத்து சில மந்திர ஜாலங்களைச் செய்து இது தான் ஆண்டவன் செயல் என்ற நிலையில் செய்கின்றார்கள்.

உண்மையின் இயக்கத்தைப் பெறுவதற்கு மாறாக உடலின் இச்சைகள் கொண்டு பல தவறுகள் நடக்கின்றது. இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

நாம் ஞானிகள் காட்டிய மெய் வழியில் அந்த அருள் ஞானத்தைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுதல் வேண்டும்.

உண்மையின் உணர்வின் தன்மையை உணர்ந்து அந்த ஆலயத்தின் பண்புகளைத் தெளிவாகத் தெரிந்து ஆலயத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தர்மபுரியில் பவானி என்ற ஊரில் ஒருவன் (அக்காவின் மகன்) தன் சின்னம்மாவிடம் தன் செலவுக்காகக் காசு கேட்டு வந்திருக்கின்றான்.

அவன் ஊர் சுற்றித் திரிவதால் பணம் கேட்டதும் அவர்கள் “இல்லை…” என்று சொல்லி உள்ளார்கள்.

நீ என்ன கொடுப்பது…! நானே எடுத்துக் கொள்கிறேன்…! உன்னைக் கொன்று விட்டு நான் எடுத்துக் கொள்வேன் என்று தன் சின்னம்மாவைக் கொன்று விட்டான்.

பணத்தையும் எடுத்துக் கொண்டு ஜாலியாக ஐயாயிரம் ரூபாய் செலவு அளித்து விட்டான்.

சின்னம்மாவைக் கொன்ற பின்னர் சேலத்தில் அவர்கள் அக்கா வீட்டுக்குப் போயிருக்கின்றான். அங்கே போய் “இப்படி ஆகிவிட்டது…! ஆனால் யார்… எவர்…! என்று தெரியவில்லை…” என்று சொல்லி இருக்கின்றான்.

ஏனென்றால் சின்னம்மாவைக் கொன்றவன் இவர்களைக் கொலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? இந்த உணர்வுகள் அவர்களுக்குச் சந்தேகம் ஆனவுடன் அவனைப் போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டார்கள்.

இன்று இந்த மாதிரி நிறைய நடக்கின்றது. நீங்கள் யாரை நம்பி வாழப் போகின்றீர்கள்?

1.எத்தனையோ கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குகின்றோம்.
2.ஜாதகம் ஜோதிடம் பார்த்துத் தான் கல்யாணத்தைச் செய்கின்றோம்.
3.அக்கா மகன் இப்படிச் செய்வான் என்று ஜோதிடத்தில் கூறினார்களா?
4.கல்யாணம் முடிக்கப்படும் போது ஜாதகத்தில் எழுதி இருந்ததா?
5.ஜாதகம் சொன்னவன் ஏன் தவற விட்டான்? சொல்லி இருக்க வேண்டும் அல்லவா…!

அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்வது எப்படி என்று ஞானிகள் மக்களை ஒழுங்குபடுத்தி ஒரு சீரான பாதையில் செல்வதற்காக வானவியல் புவியியல் உயிரியலைக் காட்டினார்கள்.

27 நட்சத்திரங்களும் பல விதமான விஷத் தன்மைகள் கொண்டது. அதை அதிகமாகக் கவர்ந்து கொண்ட கோள்களிலும் விஷத் தன்மைகள் பரவி இருக்கும்.

அவைகள் வெளிபடுத்தியதைச் சூரியன் கவர்ந்து செல்லப்படும் போது பூமியின் ஈர்ப்புத் தன்மைக்குள் வந்து விட்டால் இங்கே விஷத் தன்மைகள் பூமியிலே பரவுகின்றது.

அது எந்தப் பகுதியில் பரவுகின்றதோ அந்தப் பகுதியில் விஷத் தன்மைகள் பரவி வருகின்றது.

இன்றுள்ள ஜாதகப்படி இன்ன நிலையில் இன்ன நட்சத்திரத்தில் வருகின்றது. அப்போது இன்ன கோள்கள் இன்ன திசையில் சேர்க்கப்பட்டு இந்தக் கோள்கள் இப்படி இயங்குகிறது என்று குறிப்பிட்ட கோள்களின் உணர்வுகளைத்தான் எழுத முடிகின்றது.

இப்படி (நட்சத்திரங்கள் கோள்கள்) கலவையாகி வரக்கூடிய உணர்வுகளைச் சூரியன் எடுத்து தன் உணவாக எடுத்துக் கொள்ளும் நிலைக்குச் செல்லப்படும் போது பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அது வந்தவுடனே இழுத்து இங்கே காற்றழுத்த மண்டலத்தில் மோதியவுடனே நெருப்பாகவும் புகையாகவும் ஆவியாகவும் மாற்றி விடுகின்றது.

அப்போது இவர் ஜாதகத்தை இன்னது நல்லது இன்னது கேட்டது என்று இப்படி எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். வானவியலைப் பற்றி ஜாதகத்தில் எழுதியிருந்தாலும் (அந்தக் குறிப்பிட்ட) ஜாதகத்தில் எல்லாம் நல்லதாகும் என்று எண்ணியிருந்தாலும் இந்த விஷத்தன்மையான நிலைகளில் பட்டபின் பல விதமான நோய்கள் வந்து மடிகின்றார்கள்.

பிறகு ஜாதகம் நிஜமாகுமா பொய்யாகுமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

ஜாதகத்தைப் பார்த்து “ஏழரை நாட்டுச் சனியன் வந்துவிட்டான்…” அதனால் என் தொழில் சரி இருக்காது என்று மனதில் பதிவு செய்து கொண்டால் அதற்கு என்ன அர்த்தம்?

அந்த ஜோசியக்காரன் நமக்குள் இதை ஆழமாகப் பதிய வைத்து விட்டான் என்று அர்த்தம்.
1.அப்படிப் பதிந்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும் போது
2.”காரியம் தோல்வியாகுமே…” இந்த ஏழரை வருஷம் நாம் எப்படி இருப்பது..? என்று
3.அவன் கூறிய உணர்வுகளை நமக்குள் திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துக் கொள்கிறோம்.
4.நாம் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தையும் மன உறுதி கொள்ளும் நிலையும் இழந்துவிடுகின்றோம்.

நமது வாழ்க்கையில் நல்லதை உறுதிபடுத்தும் நிலையையே மாற்றி ஒவ்வொரு கேட்டது நடக்கும் போதும்
1.ஏழரை நாட்டுச் சனி நடப்பதால் இப்படித்தான் இருக்கும்…! என்று
2.நல்லதைப் பெறும் தகுதியையும் நல்லதாக்கும் பண்புகளையும்
3.சுத்தமாகவே இழக்கச் செய்துவிடுகின்றது.

நம் நாட்டைக் காட்டிலும் ஜப்பானில் மத நம்பிக்கை உண்டு. ஜாதக நம்பிக்கை அதிகமாக உண்டு.

ஒரு செருப்பு வைத்தாலும் கூட எந்தத் திசையில் வைத்தால் வைக்க வேண்டும் என்று பார்ப்பார்கள். இன்ன வீட்டிற்குப் போனால் இன்ன திசையில் வைக்க வேண்டும் என்றெல்லாம் பார்த்து வைக்கக்கூடிய அந்த அளவிற்குச் சாங்கியங்கள் உண்டு.

ஆனால் அதே ஹிரோஷிமாவில் அணுகுண்டுகள் வெடித்தபின் இவர்கள் சாஸ்திரமோ மதமோ அல்லது கடவுளின் அடிப்படையில் சாங்கியங்கள் செய்த நிலைகளோ அவர்களைக் காப்பாற்றியதா…? அவர்களால் தப்ப முடிந்ததா…? இல்லையே.

எல்லா இடமும் கட்டிடங்களும் கருகியது. அவர்கள் எண்ணமும் கருகியது.

அதே சமயத்தில் ஹிரோஷிமாவில் அந்தக் காற்றலையில் பரவிக் கொண்டிருந்த விஷக் கதிரியக்கங்கள் எங்கெங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் கருவில் உள்ள குழந்தைகள் தாக்கப்பட்டது.

இன்றும் அங்கே கருச் சிதைவாகின்றது. ஊனமாகின்றது. கண்கள் இழக்கப்படுகின்றது. உறுப்புகள் சிதைகின்றது. அந்தக் கதிரியக்கம் கருவில் இருக்கக்கூடிய குழந்தையைச் சிதையச் செய்கின்றது.

புத்தர் காட்டிய அருள் வழியில் அவர்கள் கடைப்பிடித்துச் சென்றாலும் அவர்கள் எழுதிய சாஸ்திரங்கள் இன்று விஞ்ஞான உலகால் நிலைத்து இருக்கின்றதா?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

“இது நிலையற்றது…” என்ற நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக மிளகாயைத் தூவுகின்றனர். அல்லது சமையலுக்காக வேண்டி மிளகாயை வறுக்கின்றார்கள். அது கருகிக் காற்றில் வருகிறது.

இங்கே நாம் இருக்கும் பக்கம் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். நுகர்ந்தால் உங்களுக்கு இருமல் வருகின்றது.

அப்பொழுது நான் சொல்வதைக் கேட்பீர்களா? அல்லது மிளகாய் நெடியைச் சுவாசித்ததும் இருமுவீர்களா?

இந்தத் திசைப் பக்கம் வருகின்றது என்றால் அதை நீங்கள் நுகர்கின்றீர்கள்.
1.அது உங்களை இப்படித் திருப்புகின்றது.
2.ஆனால் நெடி எங்கேயோ இருந்து வருகின்றது.

இதைப் போன்று நமது வாழ்க்கையின் நிலையில் எத்தகைய கொடிய தன்மைகள் வந்தாலும் அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தாது அதிலிருந்து நாம் பிரிந்திருத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில விஷத் தன்மைகளை முறிக்கும் உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து பல மந்திர ஒலிகளாக மந்திரங்களைப் பாய்ச்சப்பட்டு இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்துக் கொண்ட பின் என்ன செய்கின்றது…! என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்னொரு மனித உடலின் வீரிய உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதற்கென்ற மந்திர ஒலியை எடுத்துக் கண் கொண்டு பார்த்தான் என்றால்
2.புலி அப்படியே தனக்குள் ஒடுங்கிவிடும்.

மனிதனுக்குள் வந்தபின் இதே மந்திரத்தால் தனக்குள் ஜெபித்து அதர்வண வேதம் என்ற நிலைகள் கொண்டு அதை எப்படிப் பக்குவப்படுத்துவது என்று பின் வந்த “அரசர்கள்…” செய்தனர்.

அதே நிலைகள் கொண்டு வந்து (சித்தர்கள் என்ற நிலையில்) காட்டிற்குள் போனால் இந்தப் புலிகள் ஒடுங்கும்.

இந்த மாதிரி மந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள் புலித் தோலை விரித்து வைத்து அந்தப் புலி எப்படி வீரிய உணர்வுகள் எடுத்ததோ இதன் மேல் அமர்ந்து சில மந்திரங்களை ஜெபிக்கின்றார்கள்.

அப்படி உட்கார்ந்து ஜெபித்தார்கள் என்றால் அந்தப் புலியினுடைய உணர்வுகள் இங்கே வந்தபின் புலியைக் கண்டால் எப்படி அஞ்சுகின்றனரோ இதைப் போல பிறர் அஞ்சி ஒடுங்கும் நிலை வருகின்றது.

இந்த இந்த மந்திரத்திற்கு இப்படிச் செய்தால் இப்படி என்று புலித் தோல்களை விரித்து வைத்து அதன் மேல் இருந்து சில ஜெபங்களைச் செய்தார்கள்.

அவன் உடலில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளை நாம் கேட்டோம் என்றால் நாம் அவர்களுக்கு அடிமையாக இருப்போம். இது வசிய மந்திரங்களில் எதன் மேல் உட்கார்ந்து எதைச் செய்வதென்று செய்தார்கள்.

எப்படிப் புலியின் தன்மை அடைந்ததோ புலியின் உணர்வுகளை இவர் நுகர்ந்தால்
1.இவர் எவ்வளவு பெரிய சித்தராக இருந்தாலும் சரி
2.(கடைசியில்) அவர் செத்தவராகத் தான் ஆகின்றார்.
3.இந்தப் புலியின் தன்மை ஆனபின் இந்தப் புலியின் மணமே வரும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு மற்றவர்களை இவர் ஒடுக்கக் கற்றுக் கொண்டாலும் இவர் வெளியிலே சென்றபின் மனிதனின் உணர்வு இவருக்குக் கிடைக்காதபடி இவரை அடிமையாக்கிவிடும்.
1.புலித் தோலில் உட்கார்ந்தார்.
2.கடைசியில் புலிக் குட்டியாகத்தான் போவார்.
3.இது இவர்களுக்குத் தெரியாது.

குருநாதர் இதை எல்லாம் தெளிவாக்கினார்.

என்னைச் சில காலம் மான் தோலில் புலித் தோலில் உட்கார்ந்து இந்த உணர்வின் மணங்கள் வரப்போகும் போது இதனால் மற்றவர்களை நீ எப்படி வசியப்படுத்த முடிகின்றது…? என்று காட்டினார்.

முந்தி நான் (ஞானகுரு) மான் தோலை வைத்திருப்பேன். அது தனக்குள் எளிமையாகப் போகும் போது அப்புறம் புலித் தோலையும் வைத்திருந்தேன்.

அந்த உணர்வுகளை நுகரப்படும்போது அந்தப் புலியின் உணர்வுகள் வரப்படும் போது மற்றவர்களை எப்படி அடிமையாக்குகின்றது…? என்று காட்டினார் குருநாதர்.

நீங்கள் வந்தவுடனே இரண்டு வார்த்தை கேட்டால் போதும். நான் சொல்கின்ற மாதிரி பூனைக்குட்டி மாதிரி நீங்கள் வருவீர்கள். இது வசியம்.

சில மந்திரங்களுக்கு இப்படிப்பட்ட இந்தச் சக்தி உண்டு.

ஆளைப் பார்த்தவுடனே அவரை வசியம் செய்ததும் ஆஹா… மகான்…, “பெரிய மகான்…!” என்று நாம் போற்றலாம்.
1.ஆனால் அவரும் மகானாகப் போவதில்லை.
2.நாம் கேட்டவர்களும் மகானாகப் போவதில்லை.
3.உடலின் தன்மை கொண்டு நம் செயலை இழந்தது தான் மிச்சம்.

ஆனால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அகஸ்தியன் தன் தாய் கருவில் பெற்ற சக்தியால் நஞ்சை வென்றிடும் நிலை வரும்போது இவன் காட்டிற்குள் சென்றால் மற்ற உயிரினங்களோ மற்ற மிருகங்கள் எல்லாமே அடங்கிவிடுகின்றது.

அதுதான் அகஸ்தியனைக் காட்டு ராஜா என்பது.

அகஸ்தியனுடைய தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது மிருகங்கள் விஷ ஜெந்துக்களிலிருந்து தன்னைக் காத்ததுக் கொள்ள பல பச்சிலைகளையும் மூலிகைளையும் அரைத்துத் தன் உடலில் பூசியது. அந்த மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.

அந்த மணங்கள் கருவிலிருக்கும் அகஸ்தியருக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது. அகஸ்தியனுக்கு அந்தச் சக்திகள் சந்தர்ப்பத்தில் உருவானது தான்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு காட்டு விலங்குகளுடன் செல்லப்படும் போது எல்லாமே ஒடுங்கிவிடும். இவன் உடலில் வெளிப்படும் மணத்தை நுகரும் காட்டு விலங்குகள் எல்லாம் அதனுடைய வீரியத்தன்மை குறைவதால் சாந்தமாக ஒடுங்கிவிடுகின்றது.

அகஸ்தியன் காட்டுக்குள் போகின்றான் என்றால் அவன் பின் படையே போகும். அதனால் அகஸ்தியனுக்குக் “காட்டு ராஜா…” என்று பெயரை வைத்தார்கள்.

காடு இருக்கின்றது என்றால் அனைத்திற்கும் ராஜா இவன். தன் வளர்ச்சியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் ஒளியான அணுக்களைசு சுவாசித்தவர்கள் தங்களுக்குள் வளர்த்து இன்று சப்தரிஷி மண்டலமாக அவன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மனித வாழ்க்கையில் மிகவும் இக்கட்டான நிலைகளாகி வீழ்ந்து விட்டால் என்ன செய்வார்கள்?

சில பேர் வசதியாக இருப்பார்கள். வசதியற்ற நிலைகளில் இருந்தால் ஆண்களாக இருந்தால் அந்தத் துன்பங்களை மறப்பதற்காகப் போதை வஸ்துக்களைப் பயன்படுத்திச் சிந்தனையற்றவர்களாகி விடுகின்றனர்.

பெண்களாக இருந்தால் துன்பத்தைத் தாங்க முடியவில்லை என்றால் “என்ன வாழ்க்கை..!” என்று இந்த உடலை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

விஷத்தை அருந்தி மனித எண்ணமே இல்லாதபடித் தன் உடலை அழித்துக் கொள்கின்றனர்.

எந்த விஷத்தை உட் கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்றார்களோ அந்த விஷத்தின் தன்மை உயிராத்மாவில் பரவி விஷம் கொண்ட பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று மறு பிறவியில் பாம்பாக உருவாக்கிவிடும்.

இதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்…!

வீட்டில் கஷ்டம் வந்தால் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு என்ன வாழ்க்கை என்று இவர்கள் வெறுக்கலாம். கடைசியில் சமாளிக்க முடியாத நிலைகளில் விஷத்தை உட்கொண்டால் மீண்டும் பாம்பாகப் பிறக்கிறார்கள்.

ஆண்கள் தன் மனதை மாற்றுவதற்காக வேண்டி போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தன்னை மறந்து நல்ல எண்ணங்களை எல்லாம் இழந்து கடைசியில் உடலை விட்டு இந்த உயிராத்மா செல்லும்போது மந்திரக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

போதை வஸ்துக்களை யார் யார் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மாமிசமும் உட் கொள்வார்கள். அந்த மாமிசம் இருந்தால் தான் அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும்.

இந்த இரண்டையும் அவர்கள் பயன்படுத்தினால் அந்த உயிராத்மாக்களை மந்திரக்காரர்கள் வெகு சுலபமாகப் பிடித்து விடுவார்கள்.

மாமிசத்தையும் போதை மருந்தையும் வைத்து அதற்கென்று சில மந்திரங்களைச் சொன்னால் போதும். உயிராத்மா அந்த மந்திரக்காரனின் கைகளில் போய்ச் சிக்கிவிடும்.

அவனிடம் சென்றபின் பல பல செயல்களைச் செய்யும். கெட்டதையும் செய்யும். நல்லதையும் செய்யும்.

ஒருவருக்கு தலை வலி போக வேண்டுமென்றால் இந்த ஆத்மாவை இழுத்துச் சேர்த்துக் கொள்வார்கள். அவர் நோய் தீரும்.

ஆனால் மந்திரக்காரன் கையில் சிக்கிய ஆன்மா அந்த உடலில் உள்ள நோயையெல்லாம் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொள்ளும். மந்திரக்காரன் ஆட்டிப் படைக்கும் சக்தியாக இருக்கும்.

ஒருவருக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்றால் இந்த உயிராத்மாவை அங்கே ஏவி விடுவார்கள். தொல்லை கொடுக்கும் நிலைகளை அங்கே உருவாக்கி அந்த உணர்வைத் தனக்குள் விளைய வைத்து இன்னும் அதிகமான விஷத் தன்மையாகும்.

1.முதலில் மந்திரக்காரன் கையில் சிக்கும்.
2.பின் பல உடல்களிலிருந்து வேதனையெல்லாம் சேர்க்கும்.
3.அந்த வினைக்கு நாயகனாகப் பாம்பாய் பிறக்கும்.

இன்று மந்திரங்களைக் கற்றுக் கொண்ட உயிராத்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்று அவருடைய நோயை நீக்க.. “டேய் உனக்கு நோயெல்லாம் போய் விடும்…!” என்று மந்திரத்தைச் சொல்லி ஜபிப்பார்.

நோயாளிக்கு உடல் நலமாகிப் போகும். அவர் உடலில் இருந்த நோயெல்லாம் இந்த மந்திரக்காரன் உடலில் வந்து சேர்ந்துவிடும். இது தான் கடைசி முடிவு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எல்லோருமே ஜோசியரிடம் சென்று ஜாதகத்தைக் காட்டி ஜோசியம் கேட்க விரும்புகின்றோம். ஜோசியக்காரர் “ஏழரை நாட்டான் சனியன் பிடித்திருக்கிறது…!” என்று சொன்னால் “சனியனை…” நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.

ஏழரை நாட்டான் சனி நான்கு வருடங்கள் கழித்து வருகிறது என்று சொன்னவுடனே இந்த நான்கு வருஷத்திற்கும் கொஞ்சம் கொஞ்சமாக வரும். ஆரம்ப நிலைகளிலே இன்னென்ன இடைஞ்சல் வரும் என்று பதிவு செய்வார்கள்.
1.உங்கள் பையனுக்கு இப்படி ஆகாது,
2.உங்கள் தொழிலில் எது எடுத்தாலும் நஷ்டம் ஆகும்,
3.உங்கள் நண்பர்களுக்குள் பகைமையாகும் என்று
4.ஜாதகத்தின் படி அவர் சொல்லி விடுவார்.

அதை எல்லாம் உங்கள் எண்ணத்தில் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.
மீண்டும் நினைவுக்கு செய்தவுடனே அது என்ன செய்யும்…!

டேப் ரெகார்டில் ஒன்றைப் பதிவு செய்து விட்டு அதனை மீண்டும் போட்டால் என்ன செய்யும்? அதே பாடலைத்தான் பாடும்.

உங்கள் உடலில் ஜோதிடக்காரன் பதிவு செய்ததைத் திருப்பி எண்ணினால் அந்த உணர்வு தான் முன்னாடி வரும்.

நீங்கள் யாரிடம் போய் வியாபாரத்தைப் பற்றிப் பேசினாலும் இந்த உணர்வு வரப்போகும் போது நீங்கள் சொல்லக்கூடிய சொல் அவர் காதிலே பட்டபின் அவர் என்ன செய்வார்…?

அவர் கண் உங்களை உற்றுப் பார்க்கின்றது.

ஏழரை நாட்டான் சனியன் பிடித்து விட்டது… கஷ்டம் இருக்கிறது…! என்று இந்த உணர்வுகள் உங்கள் உடலிலிருந்து வெளி வருகிறது. உங்களை அவர் கூர்ந்து கவனிக்கும் போது நீங்கள் வெளிப்படுத்தும் வாசனையை அவர் நுகர்கின்றார்.

1.நாம் முதலில் சொன்ன சொல்லை அவர் கேட்டறிந்தாலும்
2.உடலிலிருந்து போன வாசனையை அவர் சுவாசித்தவுடனே
3.நம் பலவீனத்தைக் காட்டிக் கொடுத்து விடுகின்றது.
4.”நம் வியாபாரம் மட்டமாகத்தான் இருக்கும்…, என்னத்த…?” என்கின்ற நிலையை அது காட்டிக் கொடுத்துவிடும்.

“யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே” என்கிற மாதிரி ஏழரை நாட்டான் சனியன் பிடித்து விட்டது கஷ்டம் வரும் என்று பதிவான நிலைகள் எவ்வளவு பெரிய முயற்சி எடுத்துச் செய்தாலும் அது தான் நினைவுக்கு வரும்.

அந்த ஜோசியக்காரன் கஷ்டம் என்று சொல்லி இருக்கின்றான்…! என்ன ஆகப் போகிறதோ…! என்ற இந்த சந்தேக உணர்வுகள் உடலிலிருந்து அந்த மணமாக வந்து விடும்,

நீங்கள் சொல்லும் போதெல்லாம் உங்கள் உடலில் இருந்து போகக்கூடிய மணம் உங்களை எதிரியாக்கி விடும்.

ஜோசியக்காரன் சொன்னதை ரெகார்டு செய்து வைத்துக் கொண்டு அதன் வழியில் தான் உங்களால் நடக்க முடிகின்றது. ஜோசியப்படி மிகவும் சரியாக நடக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள்.

ஏனென்றால் அவர்கள் சொன்னதை அப்படியே உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொண்டு அந்த எண்ணத்தை வளர்த்து கொண்டால் அதன்படி தான் நடக்கும்.

“எண்ணியது தான் பதிவாகின்றது” என்று (அன்றைய) அரசனுக்கும் சரி ஜோதிடக்காரர்களுக்கும் தெரிகின்றது.

எந்த பக்தியின் தன்மையில் எதை அரசன் அன்று உருவாக்கினானோ அதை மதமாக்கி மதத்தின் அடிப்படையில் மக்களைத் தனக்குள் அடிமைப்படுத்திக் கொண்டு வருவதற்காக “ஜாதகக் குறிப்புகளைக் கொடுத்து” அவனவன் மதத்திற்குத் தகுந்தவாறு இணைத்து எடுத்து வைத்துக் கொண்டார்கள்…!

ஒவ்வொரு மதத்தின் அடிப்படையில் அவர்கள் காட்டியதைத்தான் எடுத்து இந்த நேரம் நல்லது… இந்த நேரம் கெட்டது… என்று நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

அந்தச் சட்டப்பிரகாரம் “இப்படித்தான்…!” என்று வகுத்து கொண்ட அந்த ஜாதகக் குறிப்பு தான் பதிவாகி வேலை செய்யும்.

1.அருள் சக்திகளை நமக்குள் கூட்டப்படும் போது
2.அந்த உணர்வின் சக்தி கெட்டதை நீக்கி
3.நல்லதை உருவாக்கும் என்று தான் ஞானிகள் சொன்னார்கள்.

இவ்வாறு அந்த மெய் ஞானியினுடைய உணர்வினைப் பதிவாக்கி இந்த உணர்வின் சக்தியை நீ இப்படி வளர்த்துக் கொண்டால் இந்த வேலையைச் செய்யும் என்று அன்றைக்கு அந்த ஞானிகள் சொன்னார்கள்

மனிதன் தான் எண்ணிய நிலைகளே திருப்பி வேலை செய்கின்றது என்று ஞானிகள் சொன்னதைத்தான் ஜாதகங்களாக எழுதி வைத்து விட்டு “கஷ்ட காலங்களை எல்லாம்…” நாம் வரவழைத்துக் கொள்கின்றோம்.

அதற்கு இடைவெளியில் இந்த இந்த மாதத்தில் நல்லதாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் பாலிற்குள் ஒரு விஷத்தைப் போட்டு விட்டால் என்ன செய்யும்?

அந்த நான்கு மாதத்தில் கொஞ்சம் தெளிவாக இருந்தாலும் அந்த விஷத்தைத் சுத்தமாக துடைக்க முடியாது.
1.என்னமோ முயற்சி எடுத்தேன்…,
2.கஷ்டம் இன்னும் என்னை விட்டுக் போகமாட்டேன் என்கிறதே…! என்று தான் சொல்வார்கள்.

இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்குள் தெளிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அந்த உணர்வுகள் விளைந்ததைத்தான் வியாசகர் அன்று வேதங்களாகக் கூறினார்.
1.உருவம்.., திடப் பொருள் என்பது “ரிக்”
2.அந்தப் பொருளிலிருந்து மணங்கள் வரும்போது “சாம”.
3.ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது “அதர்வண”.
4.இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது “யஜூர்”.

ஒரு சத்து மற்றொன்றை எப்படி அது விழுங்கியது? அதன் மூலமாகப் புதிதாக ஒரு பொருள் எப்படி உருவாகின்றது என்பதை இவ்வாறு நான்கு வேதங்களாகக் காட்டியுள்ளார்.

சூரியனில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் அது ஒன்றோடு ஒன்று சேர்த்து அந்தப் பதிவான உருவான உணர்வுகள் “ரிக்…”

அதே சமயத்தில் அது பூமிக்குள் அது வந்தவுடனே தாவர இனங்களாக மணங்களாக வீச ஆரம்பிக்கின்றது.

மற்ற கோள்கள் அதிகமாக மணங்கள் வீசாது. ஆனால் அதனின் சத்து மற்ற பொருள்களுடன் நெகட்டிவ் பாசிட்டிவ் ஆனவுடனே மணத்தை வீசும் இது “சாம…”

ஒரு வேப்ப இலையை எடுத்துக் கொண்டால் அது மணம் வீசுகின்றது. அது தான் நாதங்கள். இப்படிப் பல நிலைகள்.

ஆனால் அதை எடுத்துச் சாப்பிடும் பொழுது யஜூர். அது பதிவாகின்றது. பதிவான நிலைகள் கொண்டு அது எதை எதை இணைத்து இது ஒன்றாக வேப்ப மரமாக ஆனதோ அது யஜூர் – ஒரு வித்தாக முழுமை அடைகின்றது.

அதே சமயத்தில் அவை ஒன்றை ஒன்று விழுங்குகின்றது “அதர்வணம்…” வலு கொண்டது வலுவற்றதை விழுங்குகின்றது. அப்போது அது விழுங்கி எது வலு கொண்டதோ அதனுக்குக் கீழ் மற்றதை அடிமையாக்குகின்றது.

(உதாரணமாக வேப்ப மரத்தின் மணம் ரோஜாப்பூவின் மணம் விஷச் செடியின் மணம் மூன்றும் ஒன்றானால் கருவேப்பிலையாக உருவாகின்றது)

வலு கொண்டது ஒரு எளிமையானதை விழுங்கினாலும் அதனின் இயக்கம் எப்படி இருக்கிறது?

மிளகாயில் காரம் ஜாஸ்தியாக இருக்கின்றது. அதற்குள் சிறிதளவு “சப்…” என்று இருக்கும் மாவைப் போட்டவுனே மாவு காரமாகத்தான் இருக்கின்றது.

ஆனால் “சப்…” என்று இருக்கும் மாவு அதிகமாகி விட்டது என்றால் மிளகாயின் காரம் உள்ளுக்குள் மறைந்து காணாமல் போய்விடும். காரத்தின் வீரியத்தைக் குறைத்து விடுகின்றது.
1.மாவு அதிகமாக இருக்கும் போது
2.காரத்தைப் போட்டால் ருசியாக இருக்கின்றது.

இதைப் போலத் தான் நம்மிடம் நல்ல குணங்கள் இருப்பினும் “இப்படிச் செய்கின்றார்களே… இப்படிச் செய்கின்றார்களே…!” என்று அடுத்தவர்களின் குறைகளை எடுத்துக் கொண்டோம் என்றால் அது நல்ல குணத்திற்குள் சேர்ந்து சேர்ந்து நல்லது மறைந்து குறையான குணமாக வளர்ந்து விடும்.

அப்பொழுது நல்ல குணத்தால் உடலாக வளர்ந்த பூரிப்பான சதையும் கரையும். இது தான் அதர்வண வேதம் என்பது.
1.நாம் எதனை எடுத்து எதனை அதிகமாக்குகின்றோமோ
2.அதனின் வலு கொண்டு மற்றதை அழிக்கின்றது.

மந்திரம் ஜெபிப்பவர்கள் இந்த மந்திரத்தை நீ 1008 தரம் ஜெபிக்க வேண்டும் 108 தரம் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லி அதற்கென்று சில முறைகள் வைத்து அந்த மந்திரங்களை உச்சாடணம் செய்யச் சொல்வார்கள்.

“இவ்வாறு செய்து கொண்டே வந்தாய்…!” என்றால் உனக்குக் காளி வசியமாவாள். மாரி உனக்கு வசியமாவாள் என்றெல்லாம் சொல்வார்கள்.

நோயான நிலை எதைக் கேட்கின்றாயோ அது மாறி உனக்குள் வந்து எவ்வளவு தீமையை விளைய வைக்கின்றதோ அதைப் போன்று இதைச் சொல்லி மீண்டும் ஒருவருக்கு ஏவினாய் என்றால் “அவர்கள் பூராமே கரைந்து போவார்கள்…!” என்றெல்லாம் அதர்வண வேதத்தில் காட்டுவார்கள்.

தான் எண்ணியபடி மற்றவர்கள் தன்னை வணங்கவில்லை… மதிக்கவில்லை…, என்றால் அந்த எதிரியை வீழ்த்திடும் நிலையாக அவனை அடிபணியச் செய்கின்றேன் என்று மந்திர ஒலிகளை வைத்து இவ்வாறெல்லாம் செய்வார்கள்.

பாலுக்குள் விஷம் பட்டவுடனே நல்ல சத்தை அடக்குவது போல
1.மனிதனுக்குள் விளைந்த நஞ்சின் உணர்வைக் கவர்ந்து
2.”நான்” என்ற ஆணவத்தைக் காட்டி மற்றவரை வீழ்த்தத்தான்
3.இந்த மந்திர ஒலிகள் பயன்படுகின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் உள்ள உண்மைகள் காலத்தால் மறைந்துவிட்டது. எல்லாம் சாங்கிய சாஸ்திரமாகிப் போய்விட்டது.

விநாயகருக்கு அருகம்புல்லை மட்டும் இரண்டு வைத்தால் போதும்…! ஏற்றுக் கொள்வார். அதுவும் முடியாவிட்டால் பக்தியோடு பக்கத்தில் இருக்கும் தழைகளைப் போட்டு “இந்தாப்பா உனக்குச் சாப்பாடு…!” என்று சொன்னால் அதையும் ஏற்றுக் கொள்வார் என்று இப்படி மாற்றி அமைத்துவிட்டார்கள்.

அரசன் தான் வாழ உருவாக்கிய நிலைகளில் “சரணாகதி தத்துவமாகத்தான்…” இன்று இயக்கப்பட்டு அதைக் காக்கும் நிலைகளில் தான் எல்லா மதங்களுமே செயல்பட்டுக் கொண்டுள்ளது.

அதைப் பாதுகாக்கும் குருமார்களாகத் தான் இருக்கிறார்களே தவிர மெய் ஞானிகள் காட்டிய நிலைகளில் இந்து என்றோ முஸ்லீம் என்றோ கிறிஸ்துவன் என்றோ அல்லது மற்ற நிலைகளிலோ எதுவுமே கிடையாது.
1.உணர்வுக்கொப்ப உணர்ச்சியும்
2.உணர்ச்சிக்கொப்ப இயக்கமும் (சொல் செயல்) என்ற நிலைகள் தான் ஞானிகளால் உணர்த்தப்பட்டது.

ஆண்டவன் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று ஒரு சாரார் உணர்வைப் பதிவு செய்கிறார்கள். அடுத்து கடவுள் எங்களுக்கு இப்படிச் சொல்கிறார் என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.

இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் இந்த இருவருக்கும் ஒத்துக் கொள்வதில்லை.

கர்த்தர் வான் வெளியில் இருந்து எடுத்துக் கொண்டு வந்தார் என்று சொல்கிறார்கள். அந்த மெய் ஞானிகளின் உண்மை வழிப்படி நமது உயிரே கர்த்தராகிறது.

“ஆண்டவா…” என்று சொல்கிறார்கள். எதனின் உணர்வை எடுத்தோமோ அது நம் உடலாகிறது.
1.இந்த உடலை ஆள்வது யார்?
2.நமது உயிர் தான் – “ஆண்டவா…!”

கட + உள் = கடவுள் – ஆகவே உள் நின்று நம்மை இயக்கி உணர்வை உடலாக உருவாக்குவது “கடவுள்…” உருவாக்குவதால் ”ஈஸ்வரா…” என்று உயிரைச் சொல்கிறார்கள்.

உருவாக்கிய உணர்வுக்குள் நம்மை ஆளும் ஆண்டவனாக இருக்கிறான். நம்மை ஆள்வது அவன் தான்.

நாம் எண்ணிய உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை இரையாக்குகிறார்.
1.இரையின் உணர்வு உடலாகிறது.
2.உணர்வின் இயக்கம் செயலாகிறது… “தெய்வமாகிறது…!” என்று
3.ஆதியிலே தோன்றிய “அகஸ்தியன்” தெளிவாகக் கூறியுள்ளார்.

இதைச் சீராகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த மெய் ஞானிகள் சொன்ன உணர்வுகளை இணைத்து இணைத்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஒன்று போல் வரும்.

கார்… ரேடியோ… போன்ற உபகரணங்களில் அதற்குள் இருக்கும் உறுப்புகளைத் தனித் தனியே செய்கின்றார்கள். அதில் இந்தெந்த உறுப்புகள் (பாகங்கள்) இந்தெந்த வேலைகள் செய்யும் என்று உருவாக்கி வைத்து விடுகிறார்கள்.

அதைச் சேர்த்து இணைத்து முழுமையாக ஆன பிறகு அது அது அதனதன் வேலைகளைச் செய்யும். அந்த உபகரணம் சீராக இயங்கும்.

உதாரணமாக ஒரு மைக் (MIC) வைத்துப் பேசினால் அங்கே சப்தம் வெளி வருகிறது. ஒலியைப் பெருக்கும் ஆம்ப்ளிபையர் (AMPLIFIER) ஒன்றோடொன்று சேர்த்து ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்யும். ஆனால்
1.அதிலே கொஞ்சம் (அழுத்தமாகி எதிர் நிலையானால்) ரிப்பேர் ஆனால்
2.“கரா… புரா… உஸ்ஸ்ஸ்… உய்ய்ய்…” என்று சப்தம் எழுப்பிவிடும்
3.மைக்கில் யார் பெசினாலும் கேட்க முடியாது அர்த்தமும் ஆகாது
4.மீறிக் கேட்டாலும் எரிச்சலாகிவிடும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உணர்த்திய அருள் வழிப்படி அந்த ஞானிகளும் மகரிஷிகளும் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நாம் சாமியை இப்படிக் கும்பிட்டோம்…! “இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே…?” என்று நினைத்தால் “கரா…புரா…” ஆகிப் போய் விடுகிறது.

நாம் விநாயகரைக் களிமண்ணால் செய்து (விநாயகர் சதுர்த்தி அன்று) எப்படியெல்லாம் கும்பிட்டோமே…, “இவர் இப்படிச் சொல்கிறாரே” என்று
1.இரண்டையும் கிராஸ் (CROSS) பண்ணி நினைத்தீர்களானால்
2.நான் சொல்வதை நீங்கள் CROSS பண்ணிக் கொண்டே..
3.”கரா..புரா…” என்று பண்ணிக் கொண்டே இருப்பீர்கள்.
4.அர்த்தமே உங்களுக்கு ஆகாது.

ஆகவே இயற்கையின் உண்மையின் நிலைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மெய் ஞானிகளின் உணர்வுகளை முதலில் பதிவு செய்துக் கொள்ளுங்கள். அதைப் பதிவு செய்த பின் உங்கள் வாழ்க்கையில் எது… எப்படி…? என்ற நிலைகள் தெளிவாகத் தெரியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அமாவாசை என்றால் இருள் சூழ்ந்த நாள். அதாவது சூரியனுடைய ஒளிக்கதிர் கிடைப்பது இல்லை.

முன்னோர்களை வணங்குகின்றோம் என்ற நிலையில் சாமி கும்பிடுவதற்காக மந்திரம் சொல்லி யாகங்கள் செய்வோம். அதிலே புஷ்பங்கள் நெய் சோமபானம் எல்லாம் போடுவார்கள்.

அமாவாசை அன்று இந்த உணர்வுகள் எல்லாம் பூமியில் அதிகமாகச் சுற்றி கொண்டிருக்கும்.

நம் மூதாதையர்கள் என்னென்ன சாப்பிட்டார்களோ அதை எல்லாம் வைத்துக் கும்பிடுவோம். அவர்கள் நினைவு மறக்காமல் இருப்பதற்காக எங்களை இப்படி வளர்த்தீர்கள் அப்படிச் செய்தீர்கள் என்று எண்ணி அவர்களை அழைத்துச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கும்பிடுவோம்.

அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பிற்பாடு நாம் என்ன செய்கிறோம்.

சுட்ட சாம்பலை எடுத்துக் கங்கையிலோ ஆற்றங்கரையிலோ கொண்டு போய்க் கரைக்கின்றோம். கரைத்தால் அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்று நினைத்துக் கொள்கிறோம்.

வீட்டிற்கு வந்த பிற்பாடு சொந்த பந்தம் எல்லாம் ஒன்று கூடி எண்ணையை தேய்த்துக் குளிக்க வைத்து நல்ல புதுத் துணி எல்லாம் கொடுக்கின்றார்கள்.

புதுத் துணியைக் கட்டிக்கொண்டு தலை மகனை மாவிளக்குத் தீபம் ஏற்றச் செய்கின்றார்கள். பின் முக்காடு போட்டுக் கொண்டு அந்தத் தீபம் அணையாதபடி விநாயகர் கோயிலில் போய் அர்ச்சனை செய்து விட்டால் இறந்தவர்கள் மோட்ச லோகம் போவதாகச் சொல்கிறார்கள்

நாம் தீபாவளி அன்று. புத்தாடைகளை அணிகிறோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி விட்டு அருள் உணர்வுகளைப் புத்தாடையாகப் போடுகின்றோம்.

ஆனால் இங்கே ஒருவர் இறந்துவிட்டால் பாவத்தைப் போக்கிவிட்டு சொந்த பந்தங்களைக் கூப்பிட்டுச் சொந்த பந்தத்திற்காக வேண்டிப் புத்தாடைகள் அனியச் சொல்கிறார்கள்…!

நெய் தீபம் ஏற்றிக் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டால் மோட்ச தீபம் என்கிறார்கள்,

இந்த மஹாளய அமாவாசை மிகவும் முக்கியமா முன்னோர்களுக்காக வணங்குவார்கள். ஆனால் அந்த மந்திரவாதிகள் (குடுகுடுப்புக்காரர்கள்) என்ன செய்வார்கள் தெரியுமா…?

நம் வீட்டு வாசற்படியில் இருக்கும் கொஞ்சம் மண்ணை எடுத்துக் கொண்டு செல்வார்கள். வீட்டில் உங்களுக்குத் தெரியாமல் சிநேகிதமாக வந்து தலைமுடியை எடுத்துக் கொள்வார்கள்.

குடுகுடுப்புக்காரன் வந்தால் நம்மிடம் பழைய துணியைத்தான் கேட்பான். கொடுத்துவிடுவோம்

இந்த மூன்றையும் எடுத்துச் சென்று என்னா செய்கிறார்கள்…!

முன்னோர்களின் உணர்வு தான் உடலாக நாம் உருவாகியுள்ளோம். அமாவாசை அன்று சாப்பாடு கொடுத்து அவர்களை நாம் கூப்பிடுவோம். அப்பொழுது அந்த உணர்வு எல்லாம் அங்கே குவிந்து வரும்.

நம் பாதம் பட்ட மண் தலை முடி எல்லாவற்றையும் வைத்து எங்கே அந்த உடலைச் சுட்டார்களோ அல்லது எங்கே புதைத்தார்களோ அங்கே சென்று அதற்கென்ற மந்திரத்தைச் சொல்வார்கள். மதுபானம் மாமிசம் எல்லாம் வைத்து ஜெபிப்பார்கள்.

மந்திரத்தை ஜெபித்தவுடன் இங்கே அம்மா அப்பாவைச் சாப்பாடு வைத்துக் கூப்பிடுவோம்… அவன் மந்திர சக்தியால் இழுக்கும் பொழுது அந்த ஆன்மா அங்கே சென்றுவிடும்.

யாகம் என்றால் என்ன? யாக வேள்வி என்றால் அன்றைய காலங்களில் அதிலே மனிதனைப் பொசுக்கினது உண்டு. ஆடு கோழிகளை குதிரைகளைப் பொசுக்கினது உண்டு.

இராமாயணத்தில் சொல்லியிருப்பார்கள். அசுவமேத யாகம் என்பது, நம் உயிரணு தோன்றியதிலிருந்து புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் மனிதனின் மாற்றங்கள் ஏற்பட்டதற்குத் தகுந்த மாதிரி
1.ஒவ்வொரு மாற்றத்திற்குத் தக்க
2.1008 குணங்கள் உருவான நிலையைத்தான் யாகத்தீயில் போட்டு
3.அந்த ரிக்கியர்கள் மந்திரங்களைச் சொல்லி
4.அதற்கு வேண்டிய சாப்பாடு மற்றும் மயக்கமாக்கும் பல உணர்வுகளைக் கொடுத்து,
5.சோமபானம் என்ற மதுவைக் கொடுத்து நினைவை மாற்றச்செய்து,
6.மந்திரங்களைச் சொல்லிக் கடைசியில் யாகத் தீயில் போட்டுப் பொசுக்குவார்கள்.

மந்திரத்தைச் சொன்னவுடன் அந்த உடலில் (பொசுக்கிய உடலில்) மந்திரவாதி பதிவாக்கிய உணர்வெல்லாம் வெளிவரும்.

உதாரணமாக ஒரு மனித உடலில் நோயாகி விட்டதென்றால் பாசத்தால் அந்த நோயின் உணர்வை நாமும் எடுத்தால் அந்த மனிதன் இறந்தவுடன் அந்த உணர்வு நமக்குள் வந்து அதே நோய் நமக்கு வரும்.

இதைப் போன்ற் மந்திரத்தை ஜெபித்த பிற்பாடு இறந்த பின் அதே மந்திரத்தைச் சொன்னால் அந்த ஆன்மாக்களைக் கைவல்யம் செய்து கொள்வார்கள்.

கைவல்யம் ஆன பின் சில பக்குவங்களைச் செய்து மற்றவர்கள் மீது ஏவல் செய்வார்கள்.
1.நோய் நீங்க வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்
2.நோயை உருவாக்க வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்
3.ஒரு குடும்பத்திற்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்.

இறந்தவர்களின் உயிரான்மாக்களை இதற்குத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விஞ்ஞான காலத்தில் வாழ்ந்தாலும் இதையெல்லாம் விஞ்ஞானத்தையும் ஏமாற்றிச் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு வித்திட்டவர்கள் அன்றைய அரசர்கள் தான்.

சரியான முரடனை உண்டாக்கி நாட்டுப் பற்றை ஏற்றி
1.“நீ தான் இந்த நாட்டைக் காப்பாற்றுகின்றாய் என்று சொல்லிக் கொடுத்து
2.அவனுக்குத் தெரியாமலே தீயில் போட்ட பிற்பாடு
3.மந்திரத்தைச் சொல்லி அந்த உயிரான்மாவை எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
4.தன் நாட்டைக் காக்கும் காவல் தெய்வம் என்று தன் எல்லையின் முகப்பில் வைத்திருப்பார்கள்.

தான் சுகமாக வாழ்வதற்காக அரசர்கள் உருவக்கியது தான் இந்த நிலைகள். குலதெய்வங்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள். பெரும்பகுதியானவர்கள் எங்கள் குலதெய்வம் தீயிலே மாண்டது என்று தான் சொல்வார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானிகள் காட்டிய வழிக்கு மாறாக மனிதன் விண் செல்லும் நிலைகளைத் தடைப்படுத்திவிட்டார்கள். இன்று இந்த உண்மைகளைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள ஆள் கிடையாது.

இதற்கு முன்னாடிச் செய்ததெல்லாம் தப்பா…? என்று வாதத்திற்கு வருவார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்


பண்டைய அரச காலங்களில் மந்திர சக்தியால் பில்லி சூனியம் ஏவல் என்ற நிலைகளில் செயல்பட்டார்கள்…? அதனின் தொடர்ச்சியாக இன்றும் பல பல இடங்களில் மந்திரத்தால் என்னென்ன தவறுகள் செய்கின்றார் என்பதை குருநாதர் காட்டினார்.

ஒரு வயதிற்கு வந்த பெண்ணை அது திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றவுடனே ஏவல் செய்து விட்டார்கள்.

அந்தப் பெண் விட்டத்தில் அப்படியே தலை கீழாகத் தொங்கும். அப்புறம் கீழே இறக்கி விட்டு விடுவார்கள். இறக்கி விட்ட பின்னாடி ஆகாரம் சாப்பிடப் போனால் உச்சந்தலையில் இருந்து வெறும் இரத்தமாகக் கொட்டும்.
1.சாப்பிட விடாது செய்கின்றது.
2.ஆனால் இத்தனை இம்சைகளையும் பட்டு அது வாழுகின்றது.

இன்னொரு ஆவி அந்த உடலுக்குள் நின்று ஏவல் செய்த நிலைக்கொப்ப எப்படி இம்சிக்கின்றது என்று காட்டுகிறார் குருநாதர். அந்தப் பெண் எந்தத் தவறும் செய்யவில்லை.

எதை எதையெல்லாம் உருவாக்கி அந்த உடலைக் கொன்றானோ கொல்வதற்கு எது மூலமாக இருந்ததோ அதை வைத்து ஏவல் செய்கிறார்கள். ஏவல் வேலைக்காக என்றே இப்படித் தயார் செய்கிறார்கள்,

மந்திரம் செய்பவர்கள் பிறருடைய நிலைகள் அறியாதபடி பொருளுக்காகச் செய்கிறார்கள்.

1.தன்னுடைய புகழைத் தேடவும்
2.தன்னை எல்லோரும் போற்ற வேண்டும் என்றும்
3.தன்னைக் கண்டால் மற்றபர்கள் பயப்பட வேண்டும் என்றும்
4.நிலையற்ற உடலுக்காகவே அவ்வாறு செய்கிறார்கள்.

பிறரை இம்சிக்கச் செய்து பொருளை வாங்கி இவன் அனுபவித்தாலும் இவன் கண்ட வித்தைகள் அனைத்தும் பிறரைத் துன்புறுத்தும் நிலைகளில் தான் செய்து விட்டேன் என்று அகந்தை கொள்வதும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அகம் கொண்டு செயல்படுபவர்களையும் குருநாதர் காட்டுகின்றார்.

மனித உடலில் எந்த ஆசையின் உணர்வுகள் விளைய வைத்தார்களோ அதனின் அடிப்படையில் மந்திரங்கள் ஜெபிக்கப்படும் போது அந்த அலைகளைக் கவர்ந்து பெரிய தத்துவ ஞானியாகவும் பெரிய கடவுளாகவும் அவர்கள் செயல்படுத்துகின்றார்கள்.

தனக்கு மீறி எவரும் இல்லை…! நானே கடவுள்…! என்ற நிலையும் மந்திர ஒலிகள் பெற்றவர்கள் அவர் எவ்வாறு அலைகின்றனர்…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

ஆவியை வைத்துச் செயல்படுத்தும் போது அந்த உடலிலே இம்சைகளைக் கொடுத்தாலும் அவன் (மந்திரவாதி) இறந்தபின் இந்த ஆன்மா எவ்வாறு போகும் என்ற நிலையும் நிலைப்படுத்திக் காட்டுகின்றார்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் அவன் எந்த காரியத்தைச் செய்தானோ அதே உணர்வு இவர்களுக்குள் வந்து
1.அடுத்தவன் கையில் சிக்கி இதே காரியத்தைச் செய்து
2.அதில் எத்தனை வேதனைப்படுகின்றான் என்ற நிலையும் காட்டுகின்றார்.

அதே சமயத்தில் மந்திர சக்தி பெற்றவர்கள் மந்திரம் அல்லாது ஞானத்தின் தொடர் கொண்டு ஞானியின் வழியில் செல்ல வேண்டும் என்று அந்த வழியில் செல்ல முற்படுபவர்களுக்கு தீமையான நிலைகளைச் செய்து அவர்கள் பெற முடியாத நிலைகள் எவ்வாறு தடைபடுத்துகின்றனர்..?

ஆகவே ஒரு மந்திரக்காரனிடம் அவனுடைய தொழில் எவ்வாறு இருக்கின்றதென்றால்
1.நீ நன்மையே செய்தாலும்
2.அவன் தீமையின் வலு கொண்டு
3.உன் நல்லதைச் செய்யாது எவ்வாறு தடைபடுத்துவான் என்ற நிலையையும் உணர்த்துகின்றார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட அவனுக்குத் தொல்லைகள் வருவதைப் பார்த்து “அவனுக்கு இப்படித் தான் ஆகவேண்டும்…” என்று நாம் ரசித்தோம் என்றால் அவனுக்குள் வந்த தொல்லைகளும் அந்த துயர உணர்வுகளும் நமக்குள் வந்து அதே உணர்ச்சிகளைத் தூண்டி நமக்கும் அந்த நிலை வந்து விடும்.

துயரப்படுபவன் யாராக இருந்தாலும்… அல்லது நமக்கு ஆகாதவனே துயரப்பட்டாலும்…
1.அவர்கள் அறியாத நிலையிலிருந்து விடுபட்டு
2.அருள் உணர்வுகள் அவர்கள் பெற்று
3.மெய் பொருள் காணும் நிலை பெற்று
4.பற்றும் பாசத்துடன் வளரும் நிலையும் நன்மை செய்யும் உணர்வுகள் அவருக்குள் வளரவேண்டும் என்று
5.இதனை நாம் நுகர்ந்தால் இந்த உணர்வுகள் நம் உயிரான ஈசனிடம் பட்டு
6.அந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலந்து
7.பகைமை என்ற உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கும்.

இதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் சொல்…! இந்த உணர்ச்சிகளை “நீ அனைவருக்கும் பரப்பு…!” என்றார் குருநாதர்.

அதன் வழி உங்கள் உயிரைத்தான் நான் கடவுளாக மதிக்கின்றேன். அவனால் உருவாக்கப்பட்ட உடல் என்ற நிலைகளில் மதித்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆரம்பத்தில் என்னைக் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அழைத்துச் சென்றார் குருநாதர். பின் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று
1.ஒவ்வொரு உணர்வுகளுக்கும் என்னென்ன உருவங்கள் இருக்கிறது…?
2..அந்தத் தெய்வ குணத்தின் சிறப்பு என்ன…?
3.அதனை எப்படி மக்கள் வளர்க்கின்றனர்…? என்று உணர்த்தினார்.

ஞானிகள் தாம் கண்டுர்ந்த உண்மையின் உணர்வை (மெய்யை) உணர்த்துவதற்கு உருவச் சிலையை அமைத்தனர்.

ஆனால் அதைத் தவறான வழியில் தான் இன்று பயன்படுத்துகின்றனரே தவிர நல்வழிப்படுத்தும் நிலை அற்றுப் போய் விட்டது.

ஆகவே ஒவ்வொரு மக்களுக்கும் ஞானிகள் கண்ட மெய்யை நீ தெளிவுபடுத்த வேண்டும் என்றார் குருநாதர்.

உதாரணமாக குலதெய்வங்களை வணங்குகின்றோம். அதே சமயத்தில் நாம் குலவழியில் எந்தெந்தத் தெய்வங்களை வணங்கிச் செயல்பட்டோமோ அதன் வழி தான் இன்று அந்தந்தக் குடும்பங்களில் பல உட்பிரிவுகளும் அதிகமாக வளர்கின்றது.

அந்தக் குலதெய்வம் எப்படி உருவானது என்ற நிலையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

அன்று ஆண்ட அரசர்கள் மற்ற எதிரிகளை வீழ்த்துவதற்காக சில மந்திரங்களைச் சொல்லிச் செயல்படுத்துவார்கள். அந்த அரசன் ஒரு கூட்டமைப்பாகப் போருக்குச் செல்லும்போது அதிலே ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்வார்கள்.

1.நாட்டைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் சேர்ந்து
2.தன் எதிரியை வீழ்த்தவேண்டும் என்ற உணர்வை அந்தக் குழந்தைக்கு ஊட்டி
3.அதனைத் தீயிலே போட்டுப் பொசுக்கி விட்டு
4.அதிலிருந்து உணர்வுகளைப் (மந்திர ஒலிகளாக) பிரித்து எடுத்துக் கொள்வார்கள்.

அந்த மந்திர ஒலி கொண்டு பிறிதொரு போர் முறையில் வரும் எதிரிகளுக்குள் பாய்ச்சி அடுத்த நாட்டுக்காரர்களைச் செயலற்றவர்களாக ஆக்குவதற்காக அக்காலங்களில் இவ்வாறு செய்தனர்.

இதனை நாம் ஒவ்வொரு குடும்பங்களிலும் பார்க்கலாம். குலதெய்வம் யார் என்றால் “நெருப்பிலே மாண்டவர்கள்…!” என்று தான் வைத்திருப்பார்கள்.

அதன் வழி கொண்டு “அவர்களின் ஆடைகளையும் ஆபரணங்களையும்…” வைத்துக் குல வழியில் நாங்கள் வணங்கி வருகிறோம் என்று தான் சொல்வார்கள்.

“இல்லை…” என்று யாரும் இதை மறுக்க முடியாது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இதை எல்லாம் அந்த அரசக் காலங்களில் வளர்த்துக் கொண்ட அந்தப் பரம்பரை வழிகளில் தான் வருகின்றனர்.

இன்று நம் குடும்பத்தில் மூதாதையர் இறந்து விட்டால் அந்தக் குல வழியில் நாம் அவர்கள் என்னென்ன வழி மார்க்கங்கள் செய்தார்களோ அதே போன்று தான் நாமும் அவர்களை வணங்கி வருகின்றோம்.

வணங்கினாலும் அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அந்தக் குடும்பத்தில் யார் பற்று கொண்டனரோ அந்த உடலுக்குள் மீண்டும் வந்து விடுகின்றது.

வந்த பின் அருளாடத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் குடும்பத்தில் சகோதரர் பத்துப் பேர் இருக்கின்றார்கள் என்றால் (அக்காலங்களில் பத்துப் பேர் உண்டு) அங்கு பங்கு பிரிப்பதில் தவறு நடந்து விட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் போர் செய்து பிரிந்து விடுவார்கள்.

பிரிந்து கொண்ட பின் என்ன நடக்கின்றது…?

1.என் சொத்தை நீ அபகரித்துக் கொண்டாய்…!
2.உன் குடும்பமெல்லாம் சீரழிந்து விடும்…! என்றும்
3.ஒருவருக்கொருவர் சாபம் இட்டுக் கொள்வார்கள்.

ஆக கூட்டாக இருந்து நான் சம்பாதித்தேன். என் பங்கை அவன் எடுத்துக் கொண்டான் என்று பகைமை உணர்வுகள் வந்து விடுகின்றது.

அப்படிப் பகைமை உணர்வு வந்த பின் அந்தக் குலதெய்வம் என்று வணங்கி வந்தவர்கள் அதை வணங்குவதில்லை.

அந்தக் குலதெய்வத்தை வணங்கவில்லை என்றாலும் இந்த இரண்டு பேர் பிரிந்த உணர்வுகளில் உடலை விட்டு உயிராத்மா பிரிந்த பின் இவர் சார்புடைய நிலையில் இந்த ஆன்மா புகுந்து குல வழியாக மாறுகின்றது.

அதைப் போன்று அங்கேயும் சகோதரர் பிரிந்து சென்றார் என்ற நிலையில் இறந்தால் அதே குலதெய்வங்களை வணங்கும் பொழுது
1.உயிருடன் இருக்கும் பொழுதே அவர் தொல்லை கொடுத்தார்…!
2.உடலை விட்டுச் சென்றாலும் புகுந்த உயிரான்மாக்கள் இவர்கள் உடலில் அருளாடும்…!

குலதெய்வங்கள் வணங்கும் குடும்பங்களில் அருளாடும் குடும்பங்களில் இதைப் பார்க்கலாம். அருளாடுபவர்களில் குடும்பங்களில் நிம்மதி இருக்குமா என்றால் இருக்காது.

1.குல வழியில் வரக்கூடிய அனைத்தும்
2.நாம் இந்த மனித உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
3.பழி தீர்க்கும் உணர்வும் பகைமையை வளர்த்துக் கொள்ளும் நிலையும் தான்
4.(அருளாடும் இடங்களில்) குலதெய்வங்களை வணங்கும் பொழுது இம்முறைப்படிதான் வருகின்றது.

குலதெய்வங்களை வணங்குபவர்கள் எல்லாம் இன்றும் ஒவ்வொரு உடலிலும் அந்த உணர்வுகள் கலந்தே தான் வருகின்றது.

ஏனென்றால் சகோதர்களுக்குள் சாபமிட்டு என் சொத்தை அபகரித்துக் கொண்டார் என்ற உணர்வினைத் தொடரப்படும் பொழுது
1.நம் செவிகளிலும் படுகின்றது.
2.அந்த உணர்வுகள் இரத்தநாளங்களில் கலக்கிறது
3.திருமணமாகி வரப்படும் பொழுது கருவிலே வளரும் குழந்தைக்கும்
4.இதே போல அந்த உணர்வுகள் வழி வழி வந்து பழி தீர்க்கும் உணர்வுகள் வளரப்பட்டு
5.உண்மையின் உணர்வை அங்கே மாற்றிக் கொண்டே வருகின்றது.

இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்,

மக்கள் அன்பு கொண்டு வாழ்ந்து வரப்படும் பொழுது அங்கே தெய்வீக பண்பையும் உயர்ந்த குணங்களையும் அது வளர்ப்பதற்கு மாறாக பகைமை உணர்வை மாற்றிப்
1.பகைவனை அழிக்க வேண்டும்..
2.அவனைக் கொல்ல வேண்டும்…
3.அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வுகளே குல வழிகளில் வளர்கின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஜாதக ரீதியாக எடுத்துக் கொண்டாலும் மதங்கள் வகுக்கப்பட்ட ஜாதகம் தான் எல்லாம். ஒவ்வொரு மதத்திற்கும் அதற்கென்ற கால நேரங்களை வகுத்துள்ளார்கள்.
1.ஒரு மதம் எனக்கு 1 மணிக்கு நல்ல நேரம் என்கின்றது
2.மற்றொரு மதமோ அது 2 மணிக்கு நல்ல நேரம் என்கின்றது
3.இன்னொரு மதமோ 1.30 மணிக்கு நல்லது என்கின்றது
4.இன்னொரு மதமோ 12 மணிக்குத் தான் எங்களுக்கு நல்ல நேரம் என்கின்றது.

மதத்தின் அடிப்படையில் இப்படிப் பிரிந்தாலும் இனத்தின் நிலைகள் கொண்டு திருமணங்கள் திருப்பூட்டும் போது எடுத்துக் கொண்டால் இனங்களில்
1.எங்களுக்கு மாசி மாதம் தான் நல்ல நேரம்
2.எங்கள் இனத்திற்கு மாசி மாதம் ஒத்து வந்தது
3.எங்கள் இனத்திற்கு ஆடி மாதம் ஒத்துக் கொள்கின்றது
4.எங்கள் இனத்திற்கு மார்கழி மாதம் ஒத்துக் கொள்கின்றது என்று
5.இவ்வாறு இனத்திற்கு ஒரு சட்டத்தை இயற்றி
இதைக் கடவுள் அவர்களை ஏற்றுக் கொள்வதாகத் தான் இன்று நடைமுறை சம்பிரதாயங்கள் நடக்கின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

மதம் மக்களைக் காத்தாலும் மக்களைப் பாதாளத்தில் அமிழ்த்துகின்றது, ஓர் மதத்தின் தன்மை அவர்கள் வகுத்துக் கொண்ட நிலைகளில் நியதிகள் இருப்பினும் அதற்குள் இருக்கும் நியதிகளில் இனங்கள் பிரிக்கப்படும் போது அதற்குள்ளும் போர் முறைகளே தான்…!

இனங்கள் பிரித்துக் கொண்ட பின் குலங்கள் பிரிக்கப்பட்டு
1.எங்கள் குலத்திற்கு இந்தத் தெய்வம் ஆகாது
2.இ்தை வணங்கினால் எங்கள் குடும்பத்திற்கு அழிவு
3.உங்கள் தெய்வத்தை நாங்கள் வணங்கினால் எங்கள் குடும்பத்திற்கு அழிவு
4.இப்படி இனங்களுக்குள் தெய்வமும் தெய்வத்திற்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் இதிலேயும் போர் முறை…!

எங்கள் குல தெய்வத்தை மீறி மற்ற இனங்களிலிருந்து எடுத்துக் கொண்ட உங்கள் குலதெய்வம் எங்களுக்கு ஆகவில்லை. அதனால் நீ வீடு புகுந்த நாள் முதல் எங்கள் குடும்பம் சீர் கெட்டு விட்டது என்று இப்படி ஒரு போர் முறை…!

அன்று ஆண்ட அரசர்களால் பிரிக்கப்பட்ட நிலைகளில் நமக்குள் எதனை ஊன்றி வேராக வளர்த்து வைத்திருக்கின்றோமோ அந்த நிலையே தான் நம்மை இயக்குகின்றது. இதைப் போன்று
1.நமக்குள் பதிவு செய்து கொண்ட உணர்வு எதுவோ
2.அதுவே “ஓ…ம் நமச்சிவாய…” என்று உடலாக மாற்றி
3.“சிவாய நம ஓ…ம் உடலாக மாற்றியதை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
4.அந்த உணர்வின் இயக்கமாக நம்மிடமிருந்து வெளிப்பட்டு இயக்கும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு நாடாவில் நாம் பதிவு செய்து கொண்டதை மீண்டும் அதைக் காந்த ஊசியுடன் இணைக்கப்படும் போது பதிவு செய்ததை அது மீண்டும் அப்ப்டியே பேசுகின்றது.

பல நாடாக்களைப் ஏக காலத்தில் போட்டுப் பதிவாக்கிய பின் அதனை எந்தச் செயல் வேண்டுமோ அதற்குத் தக்க இயக்கப்படும் பொழுது அந்த நாடா ஒலி/ஒளி அலைகளை வெளிப்படுத்துகின்றது.

இதைப் போல உலகில் உள்ள மதங்களில் எத்தனை நிலைகளில் சட்டங்கள் இயற்றினாலும் அதை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டபின்
1.மீண்டும் அதை நினைவு கொள்ளும் போது
2.நமக்கு (மதத்திற்கு) இது விரோதமானது என்ற நிலைகளுக்குக் கொண்டு வரும்.
3.ஏனென்றால் நமக்குள் இருக்கும் அந்தப் பதிவு தான் நம்மை இயக்குகின்றது.
4.நாம் எண்ணியது அனைத்தையும் நம் உயிரே பதிவாக்குகின்றது.
5.பதிவின் நிலையே நினைவாகி நினைவின் செயலாகத்தான் நாம் இயங்கிக் கொண்டுள்ளோம்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலும் உடலில் உள்ள அணுக்களுக்கும் நினைவைச் செலுத்துதல் வேண்டும்.

நம் உடலிலே துருவ நட்சத்திரத்தின் வலிமை பெறப்படும் பொழுது அந்த ஈர்க்கும் சக்தியால் நம் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் (ஆன்மாவில்) உள்ள வேதனை மனக்கலக்கம் போன்ற உணர்வுகளை ஈர்க்காது அவைகளை ஒதுக்கித் தள்ளும் சக்தி பெறுகின்றது.

வெறுப்போ கோபமோ ஆத்திரமோ பயங்கரமோ மற்ற எத்தனையோ வகையான உணர்வுகள்
1.நம் உடலைச் சுற்றி அந்த உணர்வுகள் படர்ந்திருப்பதை
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி
3.நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது
4.அது வலு பெற்று நம் உடலைச் சுற்றியுள்ள அந்த ஆன்மாவைத் தூய்மைப்படுத்தித்
5.தீமையான உணர்வுகளை விலக்கித் தள்ளிவிடும்.

நாம் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நாம் எண்ணும் பொழுதெல்லாம் நம் “விலா எலும்புக்குள்ளும்…” பதிவாகி விடுகின்றது.

1.சந்தர்ப்பத்தால் நாம் கொடிய உணர்வுகளைப் பார்த்தாலும்
2.கொடிய உணர்வுகளை நீக்கிய அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும்
3.நமக்குள் இது அதைக் காட்டிலும் வலுக் கூடிக் கொண்டே வரும்.

இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமது “விலா எலும்புகளில் அதைப் பதிவாக்கி… அதனின் கணக்கைக் கூட்டிப் பழக வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“பஸ்ஸில் ஒருவன் அடிபட்டுத் துடிக்கின்றான்…” என்று வைத்துக் கொள்வோம். அடிபட்டு அவன் துடி துடிக்கும் உணர்வுகள் பாவ வினைகள். அவனுக்குள் எத்தனை இம்சைகள் வந்ததோ பார்க்கும் பொழுது அது நமக்குள் வந்துவிடுகிறது.

“ஒருவன் ஆட்டைக் கத்தக் கத்த அறுக்கிறான்…” என்று வைத்து கொள்வோம், பார்த்தவுடன் முகதைச் சுளிக்கின்றோம். ஆட்டின் உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளி வருகின்றது.

ஆட்டை அறுப்பவன் செய்கின்றான் பாவம், நாம் பார்க்கின்றோம். ஆடு துடி துடிக்கும் உணர்வுகள் நமக்குள் பாவ வினைகளாக வந்து விடுகிறது.

“மற்றொரு ஜீவனை நாய் கடித்துக் குதறுகிறது…” பரிவு மனம் கொண்ட நாம் துடிக்கும் உணர்வைப் பார்க்கின்றோம். அது நமக்குள் வந்துவிடுகின்றது.

1.கொன்று புசித்த உணர்வின் வேகமும் அலைகளாகப் படர்கின்றது
2.தாக்கப்படும் பொழுது துடி துடிக்கும் உணர்வும் அலைகளாகப் படர்கின்றது
3.இந்த இரண்டு உணர்வும் வித்தாகப் பாவ வினைகளாக இணைந்து நம் நல்ல குணங்களைக் கொன்று விழுங்கி
4,நம்மைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்ற சாப வினைகளையும் பாவ வினைகளையும் நீக்க வேண்டும் என்றால் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு விண்ணிலே ஒளியாக இருக்கும் மகரிஷிகளின் ஆற்றலை நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

விண்ணிலே வாழும் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் எளிதில் பருகுவதற்குத் தான் “விநாயகனை நாம் வணங்கும் முறையை” ஏற்படுத்தினார்கள் ஞானிகள்.

1.மண்ணுலகில் தான் வாழும் பொழுது
2.தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தையும் நீக்கி
3.நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற
4.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
5.ஒவ்வொருவரும் தன் உயிரான ஈசனிடம் வேண்டுவதற்காக விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

தீமையை விளைவிக்கும் உணர்வுகளில் இருந்து தப்புவதற்காக அந்த மகா ஞானியான அகஸ்தியர் அருளாற்றலை இது வரையில் எடுத்துக் கொண்டவர்கள் “எத்தனை பேர்…!” என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை.

ஏதோ சாமியிடம் (ஞானகுருவிடம்) சென்றோம். அவர் இரண்டு வாக்கைக் கொடுத்தால்
1.நம் குடும்பம் நன்றாக இருக்கும்…
2.தொழில் கிடைத்தால் நமக்கு நன்றாக இருக்கும்…! என்ற
3.இந்த நிலையில் தான் வருகின்றார்கள்.

யாம் உபதேசிக்கும் பொழுது அதிலுள்ள உள் கருத்தினை எடுத்து உங்களுக்கு வேண்டிய உணவை நீங்கள் உட்கொண்டால் தான் அந்த ஞானிகளின் ஆற்றல் உங்களுக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவு கொண்டுதான் நாம் வாழுகின்றோம். அதே சமயத்தில் சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும்போது அவர்களை நாம் பண்புடன் அணுகி அதைக் கேட்டறிகின்றோம்.

அப்பொழுது அந்த உணர்வுகள் நாம் நுகர்ந்தறிந்தாலும் அது நம் உடலுக்குள் அணுக்கருக்களாக மாறிவிடுகின்றது.

அவர்கள் உடலில் வேதனையால் நோயானபின் தன் குடும்பத்திற்காகச் செல்வமோ சொத்தோ இதைச் சேர்த்து வைத்து இந்த உடலைவிட்டு பிரியப் போகின்றோமே என்ற ஏக்கத்துடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று மரணமடைகின்றார்.

1.அப்பொழுது அவரைப்பற்றி நாம் கேட்டறிந்த உணர்வுகள்
2.நமக்குள் அந்த அணுவின் தன்மை அதிகமாக வளர்ந்திருந்தால்
3.அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி நமக்குள் மன வேதனை கொடுக்கும் நிலையாக முதலில் மாறும்.

அதே சமயத்தில் அந்த வேதனையுடன் வெளிப்பட்ட அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்தால்
1.அது இந்த வேதனை உணர்வை உணவாக எடுத்து
2.அதனுடைய இனங்களை நம் உடலுக்குள் பெருக்கிவிடும்.

அப்படி இருந்தால் இப்பொழுது யாம் சொல்லும் இந்த உபதேசத்தின் உணர்வுகளை நுகரவிடாது தடுக்கும்.

இதைத் தடைப்படுத்தும் நிலைகள் வரப்படும்போது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்ற நிலையில்
2.இப்பொழுது தியானத்தில் உட்கார்ந்திருந்தாலும்
3.எழுந்து ஓட வைக்கும்.
4.ஏனென்றால் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதனால் அதன் வழி அதை வழிப்படுத்தும்.

ஆகவே, இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் அதை அடக்கப் பழகிக் கொள்வதற்கே இதைச் சொல்கின்றோம்.

ஆனால் பழகவில்லை என்றால் உடலுக்குள் இருக்கும் ஆன்மா அதன் வழியில் நம்மை அழைத்து சென்றுவிடும். மீண்டும் உடல் பெறும் உணர்வைத் தான் நாம் பெற முடியும்.

உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் இந்த மன வேதனை வரப்படும் பொழுது மன நோயாக வருகின்றது. உடல் நோயாக மாறி பின் இந்த உடலையே மாற்றியமைக்கும் சக்தியாக மனிதனல்லாத உருவாக மாற்றிவிடுகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

எத்தகைய நிலையாக இருந்தாலும் சரி தியானத்தில் உட்கார முடியவில்லை.., எண்ணங்கள் எங்கெங்கோ ஓடுகின்றது.., ஒரு நிலைப்படுத்த முடியவில்லை.., இப்படியெல்லாம் சொல்லி “உங்களை எண்ணவிடவில்லை” என்றால்
1.உடனே கண்களைத் திறங்கள்.
2..உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
3.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும். எனக்குள் இருக்கும் இருள் மறைய வேண்டும்.
4.மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும்
5.என் உடலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
6.இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7.என் உடலிலுள்ள ஆன்மா அந்த மெய்ஞானிகளைப் போன்ற உயர்ந்த நிலை
8.என்னுள் இருந்தே பெற வேண்டும் என்று ஏங்கினால் அது நமக்குள் அடங்கும்.

ஆக இவ்வாறு எண்ணும்போது அந்த ஆன்மாக்களுக்கும் நற்பயன் கிடைக்கும். அதே சமயத்தில் நம் உடலில் உள்ள அணுக்களை அந்த ஒளியின் அணுவாக மாற்றிவிடலாம்.

இதை மறவாது செய்து பழகுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான்கு நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நண்பர் என்று பழகிப் பாசத்துடன் ஒன்றிவிடுகின்றோம். அதே சமயத்தில் ஒரு நண்பருக்கு அவர் குடும்பத்தில் சிக்கல் வந்துவிடுகின்றது. அவர் மீது குடும்பத்தில் மிகுந்த வெறுப்பின் தன்மை அடைகின்றார்கள்.

அதைத் தாங்காது குடும்பத்தின் மேல் வெறுப்பு வந்தபின் “என்ன வாழ்க்கை…!” என்று அந்த நண்பர் மருந்தைக் குடித்துவிடுகிறார். தற்கொலை செய்து கொள்கிறார்.

அப்பொழுது அந்தக் குடும்பத்தின் மேல் வெறுப்பும் அதே சமயத்தில் சாப உணர்வுகளும் அங்கே வரும்.

என் குடும்பத்தில் இப்படிச் செய்தார்களே.., “அவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…!” என்ற சாப அலைகளை அங்கே பதிவு செய்கின்றது.

சாப அலைகள் அந்தக் குடும்பத்திலுள்ளோர் மீது பதிவாகி விடுகின்றது. இறந்த பின் அந்த உடலில் எந்த நிலைகள் பதிந்ததோ அந்த வீட்டிலும் பதிவாகின்றது.

அவரைச் சார்ந்தவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது. அதன் உடலில் எவ்வளவு கெடுதல் செய்ததோ அதுவெல்லாம் இங்கே வந்துவிடுகின்றது.

அதே சமயத்தில் நண்பர் என்ற நிலைகளில் பாசமாகப் பழகி இருந்தார் அல்லவா. மருந்தைக் குடிக்கும் பொழுது

1.“நண்பனே…, நாம் இருவரும் எவ்வளவு பழகியிருந்தோம்…! இந்த மாதிரி ஆகிவிட்டதே…,
2.நான் உன்னை எப்படி வந்து பார்ப்பது?” என்றே தெரியவில்லை.
3.உனக்குத் தெரியாமல் நான் இப்படிச் செய்துவிட்டேன் என்ற எண்ணத்தை அதிகமாகச் சேர்த்துவிட்டால் இந்த ஆன்மா எங்கே போகும்?
4.எந்த நண்பன் மேல் பாசமாக இவ்வாறு எண்ணினாரோ அந்த நண்பனின் உடலுக்குள் வரும்.

எப்படி? ஏன்?

தற்கொலை செய்த நண்பரைப் பற்றி இவர் கேள்விப்படுவார். கேள்விப்பட்டவுடன் நண்பனைப் பற்றிப் பாசத்தால் எண்ணுவார்.

“அடடா.., நேற்று வரையிலும் என்னிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தானே… அதற்குள் இப்படிப் போய்விட்டானா…!” என்று இந்த எண்ணத்தை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது இறந்த ஆன்மா இங்கே வந்துவிடும்.

பாசத்தால் எண்ணும்பொழுது இரண்டு பேரின் எண்ணங்களும் ஒன்றும்போது ஆன்மா நண்பரின் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

தற்கொலை செய்து கொண்ட ஆன்மா அந்தக் குடும்பத்தில் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்ததோ இவை அனைத்தும் நண்பர் உடலுக்குள் ஆகி…, “இல்லாத கஷ்டங்களை எல்லாம்” அவருக்கு உண்டாக்கும்.

இவரும் தவறு செய்யவில்லை. அவர்களும் தவறு செய்யவில்லை. ஆனால், அந்தக் குடும்பத்தில் இந்தச் சாப அலைகள் அதன் தொடர்பு கொண்டு இது வளர்ந்து கொண்டே இருக்கும்.

இது ஒவ்வொரு குடும்பத்திலும் இது இல்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு வகையிலும் இதனுடைய தொடர்பு இல்லாது இருக்காது.

இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

யாராக இருந்தாலும் சரி…, “உடலை விட்டுப் பிரிந்துவிட்டார்கள்…,” என்று கேள்விப்பட்டாலே உடனே நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து எங்களுடன் நண்பராகப் பழகிய உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

1.உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.உயிருடன் ஒன்றிய “ஒளியின் சரீரம் பெறவேண்டும்”
என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இதைப் போன்று குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து கூட்டாகத் தியானித்து அந்த உயிரான்மாவை எளிதில் விண் செலுத்தலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் பிச்சையோ யாசகமோ எடுத்துக் கொண்டு வருகின்றார் என்றால் அவனிடத்தில் கடும் வேதனையும் சங்கடமும் துன்பமும் இருக்கும்.

விரக்தியின் நிலைகள் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராது நம்மிடத்தில் யாசகத்திற்கு வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனைக் கடுமையான சொற்கள் கொண்டு திட்டும் பொழுது பதிலுக்கு அவன் கடுயான வாக்கு கொண்டு நம்மைச் சொல்லிவிட்டால் அந்த வாக்கு உடனடியாகப் பலிக்கும்.

ஏனென்றால் அது நஞ்சின் தன்மை.

நான் (ஞானகுரு) பல வருடங்கள் சிரமப்பட்டு பல ஆற்றல்கள் பெற்று நீங்கள் நலம் பெறவேண்டும் என்று ஒரு வாக்கைக் கொடுத்தால் அந்த வாக்கை நீங்கள் ஏற்றுக் கொண்ட நிலைகளுக்கொப்பத்தான் அது நல்லதாகின்றது.

இது கால தாமதமாகும்.

நான் கொடுத்த வாக்கின்படி நல்லதாக ஆனாலும் நீடித்த நாள் அது செயல்பட வேண்டும் என்றால் உங்கள் எண்ணத்தைக் கொண்டு அதை ஊடுருவச் செய்து நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் ஒரு தீயவனின் சக்தியோ அவன் சாபமிட்டால் அந்த உணர்வுகள் உடனடியாக வேலை செய்யும்.

பாலுக்குள் விஷம் பட்டால் அந்த விஷமான பாலைக் குடித்தால் எப்படி நஞ்சாக மாய்த்துவிடுகின்றதோ அதைப் போல சாதாரண மனிதனாக இருந்தாலும் அவன் சாபமிடுகின்ற நிலைகள் அப்படி விஷத் தன்மை வாய்ந்தது தான்.

நம்மைச் சாபமிட்டான் என்றால் நாம் என்ன செய்வோம்?

என்ன சொன்னாய்…? என்று எதிர்த்துக் கேட்போம். அவன் மீண்டும் ஏதாவது சொன்னால் அடிக்கத் துணிவோம்.

அந்த ஆத்திரத்தை நாம் ஊட்டப்படும் பொழுது அவன் மீண்டும் கடுமையான சொற்களைச் சொன்னால் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடும்.

அவ்வாறு சேர்ந்துவிட்டால் அந்தச் சாப அலைகள் குடும்பப் பரம்பரைக்குள் வந்துவிடும். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அது ஆட்டிப் படைத்துவிடும்.

செல்வம் இருக்கும். ஆனால் உடலுக்குள் துன்பம் இருக்கும். அவர்களுக்குள் மகிழ்ச்சி இருக்காது. ஆசையின் நிலைகளில் அதிகமாகப் பேசலாம். இதைப் போன்ற துன்புறும் நிலைகள் நிச்சயம் வந்தே தீரும்.

ஆனால் சாபமிட்டவன் அது எப்படி ஏழ்மை என்ற நிலைகளில் எப்படியெல்லாம் துன்பம் அனுபவித்தானோ
1.பணமில்லாது உள்ளுக்குள் வேதனை கொண்டு அனுபவித்தாலும்
2.பொருள் இல்லாததால் அவன் தாங்கும் சக்தி இருக்கின்றது.
3.ஏனென்றால் அந்த விஷத்தின் தன்மை வரப்படும் பொழுது அவன் தாங்கிக் கொள்ள முடிகின்றது.

செல்வச் செழிப்புடன் ஆனந்தமாக இருப்பவர்கள் இத்தகைய சாபத்தினால் அவர்களுக்கு வேதனையாகிவிட்டால் அவர்களுக்கு அதைத் தாங்கக்கூடிய சக்தி இல்லை.

வேதனைகள் அதிகமாக இருக்கும். பொருள்கள் எல்லாம் இருக்கும். உள்ளுக்குள் அதைச் சுவைக்கும் நிலை இல்லை. மகிழும் நிலை இல்லை.

உடல் முழுவதற்கும் நரகத்தை அனுபவிப்பது போல் ஒவ்வொரு நிமிடமும் வேதனையை அனுபவிப்பார்கள். இதைப் போன்ற வேதனையான உணர்வுகளை இந்த உடலில் விளையை வைத்தால் உடலை விட்டுச் சென்ற பின் எதுவாகப் பிறக்க முடியும்?

மிருகங்கள் அனைத்தும் விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொண்டது. அதைப் போல இவர்கள் இறந்தால் இவர்கள் உடலிலிருக்கக்கூடிய வேதனையான உணர்வின் அணுக்கள் விளைந்த அனைத்துமே அந்த செல்கள் உயிராத்மாவில் சேர்ந்து மிருகத்தின் தன்மையாகத்தான் பிறக்க முடியும்.

மிருகத்தின் அலைகளின் உணர்வுகள் சேர்க்கப்பட்ட அணு செல்கள் அந்த வாசனை வரப்போகும் பொழுது இவன் எத்தனை அநாகரிகமான முறையில் சாபமிட்டானோ அந்தச் சாபத்தின் நிலைகளுக்கொப்ப உடல் உருமாறிவிடும்.

ஒரு மெய்ஞானி சொல்லக்கூடிய வாக்கைக் காட்டிலும் ஏழ்மையிலே தரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய உணர்வின் விஷத்தன்மைகள் அவ்வளவு சீக்கிரம் வேலை செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் யாம் சொல்லும் முறைப்படி கணவனும் மனைவியும் தியானத்தையும் ஆத்ம சுத்தியையும் சரியானபடி செயல்படுத்துதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அடிக்கடி எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ நிலைகளைப் பத்திரிக்கை வாயிலாகவும் தொலைக்காட்சி வழியாகவும் தினசரி பார்க்கின்றோம்.

தொலைக்காட்சி வழியாகப் பார்த்தோம் என்றால் உலகில் நடக்கின்ற அசம்பாவிதங்களை எல்லாம் “ஆ…” என்று பார்க்கின்றோம். கண்கள் அப்படியே அதை ஈர்த்து நமக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றது.

டி.வி.யில் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் பொழுது நம் நினைவு முழுவதும் அங்கே அந்த இடத்திற்கே போகின்றது. அங்கே பரவியிருக்கும் நினைவையே நாம் சுவாசிக்க நேர்கின்றது.

அவ்வாறு நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் செய்த (அசம்பாவித) உணர்வெல்லாம் இந்த விஞ்ஞான அறிவால் நமக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு நாட்டினை அழிக்கத் தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ஒலி அதிர்வுகளைக் கொடுத்து நமக்குள் பதிவாக்கி நம்மை அப்படியே புத்தியை செயலிழக்கச் செய்வதற்கும் விஞ்ஞான அறிவு இன்று சென்றுவிட்டது.

இப்படி ஒலிபரப்பும் நிலைகளில் நாம் டி.வியைப் பார்க்கப்பப்படும் பொழுது நம் மனித எண்ணங்களையே சீரழிக்கும் நிலைகள் வருகின்றது.

விஞ்ஞான அறிவால் கேட்ட உணர்வுகள் நாம் வீட்டிலிருந்தபடியே தீமையின் உணர்வை நமக்குள் வளர்ப்பதும் பகைமை உணர்வுகள் ஊட்டுவதும் ஒருவனை எப்படி மாற்றுவது என்ற நிலைகள் வருகின்றது.

டி.வி.யில் காண்பித்த நிலைகளையும் மற்றவைகளையும் உற்றுப் பார்க்கும் போது (சினிமாவில்) காட்டும் காட்சிகளில்
1.கொலை செய்வது எப்படி?
2.கொலையிலிருந்து தப்புவது எப்படி? என்ற நிலையெல்லாம் வந்த பின் இந்த உணர்வுகளே நமக்குள் பதிவாகின்றது.
தன் வாழ்க்கையில் ஒரு சிரமம் வந்தால் அது மாதிரி நாம் ஏன் இதைச் செய்யக்கூடாது என்ற உணர்வுகள் தூண்டுகிறது. அதன் வழியிலே தான் தவறுகள் அதிகமாக இன்று உலகம் முழுவதும் வளர்கின்றது.

ஆக மொத்தம் விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கையே நாம் வாழுகின்றோம்.

மெய் ஞானத்தின் நிலைகளில் பக்தி என்ற நிலை வந்தாலும் அதிலேயும் குறைகளைக் கூறி நல்ல நிலைகள் எடுக்க முடியாதபடி ஆலயங்களையும் அசுத்தப்படுத்துகின்றோம்.

எந்த ஆலயத்திற்குள் சென்றாலும் நம் குறைகளைத்தான் சொல்கின்றோம்.
1.பாவி எனக்குத் துரோகம் செய்தான்…
2.நீ பார்த்துக் கொண்டே இருக்கின்றாயே…!
3.”உன்னைத்தான் நான் வணங்குகின்றேன்…” என்று சொல்லிக்
4.கடவுளையே சாபமிடும் நிலையில் மனிதனின் உணர்வு வந்து விட்டது
5.உனக்குக் கண் இல்லையா…? மூக்கு இல்லையா…?
6.இனி உன்னை எட்டிக் கூட பார்க்கப் போவதில்லை,
7.அவன் செத்தால் தான் உன்னை வந்து பார்ப்பேன் அவன் தொலைந்தால் தான் உன்னை வந்து பார்ப்பேன் என்று
8.பக்தியில் முத்தி்ய நிலைகளாக அஞ்ஞான வழிகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதைப்போன்ற நிலைகளிலெல்லாம் இருந்து நாம் விடுபட வேண்டும். அன்று அகஸ்தியன் கண்ட பேருண்மையின் உணர்வின் வழிப்படி
1.நம் வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும்.
2.ஒவ்வொரு தீமைகளிலிருந்தும் பகைமையிலிருந்தும் நாம் மாறுபடுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நமது வாழ்க்கையில் சீராக வாழ்ந்து கொண்டிருந்தாலும் இரண்டு தலை முறைக்கு முன்னாடி வாழ்ந்த நம் மூதாதையர்களின் உணர்வுகள் நம்மை இயக்கத்தான் செய்கின்றது.

நம் மூதாதையர்கள் அவர்கள் வாழ்க்கையில் அண்ணன் தம்பிகளாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து வரும் பொழுது வரும் சம்பாத்தியத்தையும் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

உதாரணமாக நான்கு பேர் சகோதரர்களாக இருந்தாலும் சந்தர்ப்ப பேதத்தால் கொடுக்கல் வாங்கல்களில் ஒருவருக்கு குறைத்துக் கொடுக்கும் போது என்ன ஆகின்றது?

ஏனென்றால் ஒரு சகோதரனால் தொழில் செய்ய முடியவில்லை. அவன் நோயின் காரணமாக எழுந்து வரவில்லை என்றால்
1.நாம் தான் உழைத்தோம்…
2.அவனுக்கென்ன கொடுப்பது…? என்று
3.மூன்று பேர் வலுவின் தன்மை வரப்படும் போது நான்காவது சகோதரன் வலுவற்றதாக மாறுகின்றான்.
4.அப்பொழுது அவன் வெறுப்படைகின்றான்.

மூன்று பேரும் சேர்ந்து எனக்கு இப்படிச் செய்து விட்டார்களே…! என்ற வேதனையின் தன்மை வரப்படும் போது இந்த மூன்று பேர் மீதும் வெறுப்பு வருகின்றது.

இந்த வெறுப்பு வளர… வளர… வளர… வெறுப்பான பேச்சுகளைப் பேசப் பேச… மூன்று பேர் மேலேயும் வெறுப்பான உணர்வுகள் பதிவாகின்றது. அதே சமயத்தில் மூன்று பேரும் சேர்த்து இவரைப் பழித்துப் பேசுவதும் அவருக்கு மீண்டும் இன்னல்களை உருவாக்கும் நிலையும் வருகின்றது.

இது தான் “ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம்.” அதாவது யார் வெறுப்பாக எண்ணுகின்றாரோ அந்த எண்ணத்தை உயிர் “ஓ…” என்று பிரணவமாக்கி “ம்…” என்று உடலாக்குகின்றது.

வெறுப்பின் உணர்வுகள் ஒவ்வொருவர் உடலிலும் ஜீவ அணுக்களாக உருவாகி உடலான சிவமாகின்றது. உடலாக ஆன உணர்வுகள் சொல் வடிவமாகும் போது அவர் மேல் வெறுப்பாகப் பேசச் செய்கின்றது.

இது தான் “ஓ…ம் நமச்சிவாய…!” நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எதுவோ அதை உயிர் “ஓ…” என்று ஜீவனாக்கி “ம்…” என்று உடலாக்கி விடுகின்றது. அப்பொழுது சகோதரர்கள் மூன்று பேருக்கும் வெறுப்பின் தன்மை அடைகின்றது. அது ஒரு வித்தாக உருபெற்று விடுகின்றது.

இப்படிப் பேசுகின்றான் என்று சொல்லும்போது இந்த உணர்வும் இந்த மூன்று பேருக்கும் வளர்கின்றது. நான்காவது சகோதரன் தனித்த நிலைகள் இருந்தாலும் அவர்கள் மீது வெறுப்பாக வெறுப்பாக இவர் உடலிலே அது நோயாக மாறுகின்றது. உடல் பலவீனமடைகின்றது.

மூன்று பேரும் வலு கொண்டு இவரைத் தாக்கிப் பேசும் உணர்வுகள் அதிகமாக அதிகமாக
1.இந்த மூன்று உணர்வுகளும் இவர் உடலுக்குள் வரும் போது
2.அவரிடம் உள்ள நல்ல உணர்வுகள் தணிந்து
3.மூன்று பேரும் சேர்த்து… “எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்…!” என்ற எண்ணம் அதிகமாகின்றது.

ஆனால் கடைசியில் இவர் மரணமடையப்படும் போது என்ன எண்ணுவார்?

அண்ணன் தம்பிகளில் மூத்த வரிசை யாரோ… “இவன் கூட இப்படிச் சேர்ந்து எனக்குத் துரோகம் செய்கின்றானே…! பாவி…!” என்று ஏக்கத்துடன் உடலை விட்டுச் சென்றால் இந்த உயிரான்மா அவரின் உடலுக்குள் சென்று விடுகின்றது.

இவர் எப்படி நோயால் வேதனைப் பட்டாரோ அந்த வேதனைகள் அனைத்தும் மூத்தவரின் உடலுக்குள் செயலாக்கி அந்த உணர்வுகள் மற்ற குடும்பங்களிலும் பரவத் தொடங்கி விடுகின்றது.

இந்த நிலை வருவதற்குள் அந்தக் குடும்பம் நான்கு விதத்திலேயும் அது வேதனைகள் அனுபவிக்கத் தொடங்குகின்றனர். நலிவடைகின்றனர்.

1.அந்தத் தலைமுறைக்கு அதுவானாலும்
2.பின் வரும் தலைமுறைகளில் வேறு வேறு நிலைகளில் திருமணம் செய்து கொண்டு வந்தாலும்
3.இந்த மூதாதையர்கள் சண்டையிட்ட உணர்வுகள் பதிவாகிப் பதிவாகி
4.பெண்கள் கர்ப்பம் ஆகும் போது பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்கின்றது.

அதாவது அந்த நான்கு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சாபமிட்ட நிலைகளில் உன் குடும்பம் நசிந்து போகும்; கண் தெரியாது. குருடாகிப் போவாய்; கால் ஊனமாகும் என்று பேசி இருந்தால்
1.பிறக்கும் குழந்தைகளுக்குள் அது வித்தாக ஊன்றி
2.இந்த உணர்வுகள் வழித் தொடர் கொண்டு
3.கருவிலேயே அது ஊனமான குழந்தையாகத்தான் வரும்.

மூதாதையர்கள் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்ட உணர்வுகளைச் சாபமாக இட்டார்களோ
1.வழி வழி வந்த அந்த உணர்வுகள் தான்
2.பலவிதமான பகைமைகளாக உருவெடுத்து
3.மனிதனின் நிலைகள் (இன்று) மறைந்து கொண்டே வந்து விட்டது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மனிதனுக்குள் ஒருவருக்கொருவர் பாசமாக அன்பாகத்தான் வாழ்கின்றார்கள்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால் சில சிரமங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து மீளத் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக நண்பர்களையோ உறவினர்களையோ தேடி வருகின்றார்கள்.

ஏனென்றால் அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தை வாங்கிச் சமாளிக்கலாம் என்று வாங்குகிறார்கள்.

சீக்கிரம் திரும்பத் தந்துவிடுவேன் என்று சொன்னபின் அவர்களும் பணத்தைக் கொடுக்கிறார்கள்.

எப்படியோ (ஏமாற்றி) பணத்தை வாங்கிக் கொள்வார்கள். வாங்கிய பணத்தைச் செலவழிக்கின்றார்கள்.

ஆனால் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

இப்பொழுது கொடுக்க முடியவில்லை. “தருகிறேன்…” என்று சொல்வார்கள்.
1.இரண்டாவது தடவை கேட்கும் பொழுதும் அதே பதில் வருகிறது.
2.மூன்றாவது தடவையும் கேட்டவுடனே என்ன சொல்வார்கள்?

“நான் தான் கொடுக்கிறேன்…!” என்று சொன்னேனே அதற்குள் என்ன அவசரம் என்பார்கள். அன்று
1.தக்க சமயத்தில் தனக்கு உதவி செய்தார்கள் என்ற
2.அந்த நல்ல எண்ணம் வருவதில்லை.
3.ஆக பணத்தைத் திருப்பிக் கேட்பவருக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை.

அப்பொழுது அவருக்குக் கோபம் வரும்.

கோபத்தின் தன்மை பணம் கொடுத்தவருக்கு வரப்படும் போது உதவி செய்தார்கள் என்ற எண்ணம் பணம் வாங்கியவருக்கு மறந்துவிடுகின்றது. அப்புறம் அவருக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பணம் கொடுத்தவர் என்ன சொல்வார்? பார்… அன்றைக்கு உதவி செய்தேன். பாவிப் பயல் இன்றைக்கு அவன் எனக்குத் தொல்லை கொடுக்கிறான்…! என்பார்.

அப்பொழுது தொல்லையின் உணர்வுகளைத்தான் இவர் உடலிலே வளர்க்க முடிகிறது. தொல்லைகளை நீக்கும் நிலை இல்லை.

இப்படி மனிதனுக்கு மனிதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் உணர்வுகள் இப்படி மாறுகின்றது.
1.பகைமை உணர்ச்சிகள் உருவாகி உடலுக்குள் வந்தவுடன்
2.உறுப்புகள் சீர் கெடுகின்றது. கடும் நோயாக மாறுகின்றது.
3.இந்த நோயை மாற்ற என்ன வழி?

மனிதன் சந்தர்ப்பத்தால் நல்ல குணங்களை நல்ல முறையில் பயன் படுத்தினாலும் வாங்கிய பணத்தைத் திருப்பி அவர்களால் கொடுக்க முடியவில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் அங்கே என்ன நடக்கின்றது?

“என்னைத் தொந்தரவு செய்கின்றார்களே… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள்” என்ற உணர்ச்சிகள் தன்னை அறியாமலே அதிகரித்துவிடுகின்றது.

உண்மையில் அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாத நிலையில் இருந்தாலும் இரண்டு தடவை பணத்தைத் திருப்பிக் கேட்டாலே போதும். அங்கே உணர்ச்சிகள் மாறும்.

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருக்கிறது. “தருகிறேன்…” என்று சொல்வார்.

ஆனால் முயற்சி எடுக்கும் பொழுது வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளால் இவர் செல்வம் தேடுவதும் இழந்து விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் இரண்டு தரம் பணத்தைத் திரும்பக் கேட்டு நிர்ப்பந்தப்படுத்தும் போது அந்த வெறுப்பு காழ்ப்புணர்ச்சியாக வருகின்றது. இந்த வேதனையின் உணர்வைத் தனக்குள் எடுத்தவுடன்
1.ஒன்று இவர் தவறு செய்பவராக மாறுகின்றார்.
2.இல்லை என்றால் அவர் நுகர்ந்த உணர்வு கடும் நோயாக மாறுகின்றது.
3.இதன் உணர்வுகள் இப்படித் தான் போகின்றது.

பணம் கொடுத்தவரோ… பாருங்கள்… அன்றைக்குக் கொடுத்தேன். இன்றைக்கு எதிர்க்கிறான்… கொடுக்காமல் ஏமாற்றுகிறான்.. என்பார்.

ஏனென்றால் இயற்கையில் (உண்மையில்) பணத்தை அவரால் திரும்பக் கொடுக்க முடியவில்லை.

அவருக்கு எப்படியோ நல்ல நேரம் வரட்டும். அவருக்குக் கொடுக்க வேண்டிய வலு வரவேண்டும். பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் வரவேண்டும் என்று “பணம் கொடுத்தவர்கள்… எண்ணுகிறார்களா…!” என்றால் இல்லை.

அப்படி எண்ண முடியவில்லை.

பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற வேதனை உணர்வு தான் வருகிறது. அப்பொழுது அந்த வேதனையைச் சமைக்கும் உணர்வுகள் பணம் கொடுத்தவர் உடலிலும் வருகிறது.

நான் அவ்வளவு உதவி செய்தேன். இந்த மாதிரி எல்லாம் செய்கிறானே என்று இவர் சந்தர்ப்பத்தில் விளைந்த உணர்வுகள் கடன்காரனை எண்ணி எடுக்கும் போது “ஓ…ம்” வெறுப்பான உணர்வுகள் ஜீவனாகி
1.இவனெல்லாம் உருப்படுவானா…?
2.என்னை இப்படி ஏமாற்றுகிறான் பார்…! என்று
3.சாபமிடும் நிலைக்கு வந்துவிடுகின்றார்.

அன்றைக்குக் கேட்டதும் பணத்தைக் கொடுத்தேனே… இவன் உருப்படுவானா…? என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்து இந்த உணர்வுகள் உடலிலே விளைகின்றது.

இதே போல உணர்வுகள் அங்கே பணத்தை வாங்கியவர் உடலிலும் படருகிறது. இதை எண்ணும் போது அவரின் செயலின் தன்மையும் இழக்கச் செய்கிறது.

கடைசியில் பணம் கொடுத்தவருக்கும் வேதனை வருகின்றது. பணம் வாங்கியவருக்கும் வேதனை வருகின்றது. நல்லதின் பலனை இரண்டு பேரும் அடைய முடியவில்லை.

இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைப்பதற்காகத்தான் ஆலயங்களில் தீப ஆராதனை காட்டுகின்றார்கள். ஏனென்றால் அப்பொழுது அங்கே மறைந்திருக்கும் பொருள்கள் அந்த வெளிச்சத்தால் தெரிகின்றது.

அப்பொழுது நாம் எண்ண வேண்டியது எது? பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

1.இந்த ஆலயத்திற்கு வரும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
2.எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
3.என்னிடம் தொழில் செய்வோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
4.என்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
5.என்னைப் பார்க்கும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாடிப்பட்டியிலிருந்து ஒரு பையன் வந்தான். அந்தப் பையனுக்கு பத்து வயதுக்கு மேல் ஆனவுடன் உடலெல்லாம் அப்படியே சுருங்கிக் (முடங்கி) கொண்டே வந்துள்ளது.

இங்கே எம்மிடம் வந்தால் சரியாகும் என்று அழைத்து வந்திருந்தார்கள்.

முதலில் நன்றாக நடந்து கொண்டிருந்தான். இப்பொழுது இந்த மாதிரி ஆகிவிட்டது. உடலில் இப்பொழுது எதுவும் வேலை செய்யவில்லை என்றார்கள்.

அப்பொழுது நான் சொன்னேன். உங்கள் மூதாதையர் யாராவது இதே வயதில் கை கால் எல்லாம் அடித்து முடங்கி “அதனால் இறந்திருக்கின்றார்களா…!” என்றேன்.
1.யாராவது அப்படி இறந்திருந்தால்
2.அந்த மாதிரித்தான் “இதுவும் இருக்கும்” என்று சொன்னேன். போய்க் கேட்டு வாருங்கள் என்றேன்.

எனக்குத் தெரியாமல் அது எப்படி இருக்கும்? யாரும் இல்லையே… என்றார்கள்.

நன்றாக விசாரித்துக் கொண்டு வாருங்கள் அப்புறம்தான் என்ன என்று பார்க்க முடியும் என்று சொல்லி அனுப்பினேன்.

அப்புறம் அவரைச் சேர்ந்த ஆட்கள்.., “ஆமாம்… நீங்கள் சொன்ன மாதிரி நடந்திருக்கிறது” என்றார்கள்.

ஒரு பெண் இருந்தது. அவர்கள் ஆசைப்பட்டு ஒருவருக்கொருவர் ஏதோ ஆகவில்லை போலிருக்கின்றது.

அவர்கள் ஆசாரி. அதனால் அந்தப் பெண்ணைச் சுத்தியலில் அடித்துப் போட்டு நகையெல்லாம் கழட்டிக் கொடு என்று சொல்லி ஒரு குழியைத் தோண்டி அதிலே போட்டுக் கொன்று விட்டார்கள்.

“அடப்பாவிகளா…! என் குடும்பம் எப்படி இப்படி ஆனதோ உன் குடும்பமும் ஆகும்…” நான் வேதனைப்பட்டேனோ…, “உன் குடும்பமும் உருப்படியாகாமல் போய்விடும்” என்று அங்கே சாபமிட்டது.

அதற்குப் பின் ஒரு பெண் வாரிசு வந்தால் அந்தப் பெண் குழந்தை எங்கே போனாலும் கல்யாணம் ஆகி அந்த வயதானால் துடிக்கத் துடிக்க இறந்து போகும்.

ஆண் வாரிசு என்றால் அந்தக் கை கால் முடங்கிக் கொண்டே வரும். அது எப்படிக் குறுகி இறந்ததோ அதே மாதிரி இறக்கும்.

இது கரு வழி. இது சாபம்.

நாம் நினைக்கின்றோம் ஒருவரை அடித்து நொறுக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று.
1.ஆனால் சாகும் பொழுது என்ன ஆகும்…?
2.அந்த அலைகள் எல்லாம் உடலுக்குள் வரும்.
3.இதிலிருந்து “யாரும்” தப்ப முடியாது.

நாம் நினைக்கலாம் எல்லாம் கெட்டிக்காரத்தனமாகச் செய்துவிட்டோம் என்று. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் மனிதனாகப் பிறந்த பின் எப்படியெல்லாம் ஆகின்றோம் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதைப் பற்றி அதிகமாகவும் சொல்ல முடியாது. சொன்னால் பிறகு பயந்து போய்விடுவீர்கள்.

ஏனென்றால் “தவறு செய்துவிட்டால்… அதன் பின்பு என்ன ஆகும்…” என்று ஒரு உதாரணத்திற்கு உங்களுக்குத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றோம்.

எல்லாம் இப்பொழுது மன தைரியமாக இருப்பீர்கள்.

ஆனால் வீட்டில் சிறிது குறை என்றால் அது கடினமாக ஆகிவிட்டால் “உன்னால் தான் இப்படி ஆகிறது” என்று ஒருவருக்கொருவர் சாபமிடும் நிலைகள் ஆகின்றது.

அதிகமாகி வளர்ந்துவிட்டால் அடித்துக் கொல்லும் நிலைக்கே வந்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிய அந்த மகரிஷிகளைப் பற்றிய உணர்வுகளைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு நொடியிலேயும் உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் ஞாபகப்படுத்துகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

பேரண்டமே ஒளிமயமாக மாறும் காலமும் உண்டு

 

நம் பூமியில் பரிணாம வளர்ச்சியில் மனிதனானவர்கள்… தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிவிட்டு ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாமும் அந்த எல்லையைச் சென்றடையலாம்.

ஆக… தீமைகளை வென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்தால்
1.நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை நாமும் வென்று
2.என்றும் ஒளியாக அந்த மகரிஷிகள் வாழ்வது போல் பிறவியில்லா பெரு நிலைகள் அடையலாம்.

இதைத் தான் வேகா நிலை என்பது…!

மாறாக… இந்த வாழ்க்கையில் பந்தம் பாசம் என்ற நிலைகள் வந்து விட்டாலோ… நம்முடைய பார்வையில் பிறர் செய்யும் தீமைகளை அதிகமாக எண்ணி அந்தத் தீமையின் பற்று வளர்ந்து விட்டாலோ… நாம் புவியின் ஈர்ப்புக்கே வந்து விடுகின்றோம்.

அதை எல்லாம் விடுத்துவிட்டு அந்த மெய் ஞானியின் உணர்வின் தன்மை நாம் நினைவு கொண்டால் இந்த மனித உடலிலிருந்தே அந்தச் சொர்க்க பூமியான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ முடியும்.

1.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வுகளும் ஒன்றாகி
2.நாம் நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளி உணர்வுகளாக மாற்றி
3.அழியா ஒளிச் சரீரம் பெற்று… சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்திட முடியும்.

இந்தப் பிரபஞ்சம் முழுமையாக அழிந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் அழிவதில்லை.

இதைப் போல் எத்தனையோ கோடிப் பிரபஞ்சங்கள் உண்டு. அதில் விளைந்த மனிதர்களும் இதைப் போல் விண் சென்றவர்கள் பேரண்டத்தில் வெளி வந்த பின் அவர்கள் ஐக்கிய உணர்வு கொண்டு இந்த ஒளியின் சரீரமாக வாழ்கின்றார்கள்.

அதன் வழியில் பிறவியில்லா பெரு நிலை பெற்று இந்தப் பேரண்டமே ஒளிமயமாகும். அந்த நிலை அடையப் பல கோடி ஆண்டுகளாகும்.

ஆகவே… பேரண்டம் என்பது அகண்ட நிலைகள் பெற்றது. மனிதனான பின் நாம் நுகரும் உணர்வின் தன்மையை ஒளியாக்கி விட்டால் நமக்கு என்றும் அழிவில்லை.

அந்த அழியாத நிலைகள் பெறுவதற்குத் தான் இங்கே உணர்த்துகின்றோம். நாம் அனைவரும் அந்த வேகா நிலை பெறுவோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மெய் உணர்வுகளை நமக்குள் எடுத்து வளர்த்து… நமக்குள் வரும் தீமைகளை அகற்றி அந்த மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற நாம் தியானிப்போம்.
1.நமக்குள் தீமைகள் புகாது தடுப்போம்.
2.நாம் பார்ப்போருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம்.

தவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது…?

 

உதாரணமாக ரோட்டில் செல்லும் போது விபத்துக்களைப் பார்க்க நேர்கிறது. அடிபட்டவர்கள் அவர்கள் வெளிப்படுத்தும் வேதனை உணர்வுகள் பூமியில் படர்கிறது.

நம் கண் பார்த்து அந்த விபத்தான உணர்வுகளை… அந்த உடலைப் பதிவாக்கிய பின் அந்த உணர்வுகள் அலைகளாக வெளி வருகிறது.
1.அதை நாம் நுகர்ந்தால் நமக்குள் அது விளைந்து
2.அந்த உடல் சிதைந்திருந்தால் அதே உடலிலிருந்து உணர்வுகள் நமக்குள் விளைந்து நம் உடலையும் சிதையச் செய்துவிடும்.

இல்லை என்றால் அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாகி அவர்களைப் போல் நம்மையும் விபத்துக்குள்ளாக்கும் செயல்களை உண்டாக்கிவிடும்.

ஒரு பேருந்திலேயே பிரயாணம் செய்கிறோம் என்றாலும்… ஒரு விபத்தைக் கண் கொண்டு பார்த்த உணர்வின் எண்ணம் நமக்குள் பயத்தை ஏற்படுத்தி நாம் செல்லும் வண்டியின் ஓட்டுநரை அந்த உணர்வுடன் பார்த்தால் போதும்.

இந்த உணர்வுகள் அவரை இயக்கச் செய்து அவரின் சிந்தனைகள் குறைக்கப்பட்டு தன்னை அறியாமலே எதிரில் வரும் வாகனத்தைக் கண்டு மாற்றி அமைத்தால்… ஒரு மனிதனோ மாடோ குறுக்கே வந்தால் வண்டியை ஓரமாக ஒதுக்கினால்… அருகில் உள்ள மரத்தில் மோதி நாம் உட்கார்ந்திருக்கும் அந்தத் திக்கிலேயே உராயும் தன்மை வரும்.

இது எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் இயல்புகள்.

விமானத்தில் அல்லது இராக்கெட்டுகளில் ஒரு ரிமோட் என்ற உணர்வின் தன்மையை வைத்து விஞ்ஞான அறிவு கொண்டு எப்படி இயக்குகின்றனரோ… இங்கிருந்து ஆணையிடும் அந்த ரிமோட் அதிலே எதைப் பதிவு செய்திருக்கின்றனரோ… அதே உணர்வின் அழுத்தத்தை இங்கே இயக்கும் போது அந்த விமானங்களையும் இராக்கெட்டுகளையும் திசை மாற்றுகின்றனர்.

இதே போல் தான் மனிதனுக்குள் விளைந்த (முதலிலே சொன்ன) உணர்வுகள் இதைப் போன்ற எண்ணங்கள் கொண்டு
1.தன்னுடைய எண்ணமே அது ரிமோட் ஆகி
2.யாரைப் பார்க்கின்றோமோ அந்த ஓட்டுநரையே திசை திருப்பச் செய்து விடுகிறது.

இதே போல் தான் நம்முடைய நண்பர்கள் என்று எண்ணும் போது… நட்பின் தன்மை கொண்டு “உதவி செய்தார்…” என்று மற்றொரு நண்பரிடம் புகழ் பாடும் போது அந்த உணர்வுகள் அங்கே விக்கலாகி அவருடைய குடும்பங்களோ தொழிலோ நலமாகின்றது.

ஆனால் பகைமை உணர்வு கொண்டு “எனக்குத் துரோகம் செய்தான் பாவி…” என்று எண்ணி விட்டால்… ஒரு காரையே அந்தச் சமயம் ஓட்டிக் கொண்டிருந்தால் அல்லது வியாபாரம் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தால் அல்லது அதனின் பலன்களை எண்ணிப் பார்க்கும் பொழுது அந்த நேரத்தில் பார்த்தால் புரையோடும்.

புரை என்றால்… எனக்குத் துரோகம் செய்தவன் எங்கே சென்றாலும் உருப்பட மாட்டான்…! என்ற இந்த உணர்வுகளைச் சொல்லும் போது அவர் உடலில் பதிந்தது ரிமோட் செய்து அந்த வியாபாரத்தையே தடை செய்துவிடும்.

அதே சமயத்தில் தான் ரோட்டில் செல்லும் போது தான் இதைப் போல் புரையோடினால் சிந்தனை குறையப்பட்டு வாகனங்களை அது திசை திருப்ப அது ஒரு நொடி கவனம் மாறினாலும் மரத்திலோ அல்லது எதிரில் செல்லும் ஒரு மனிதன் மீது மோதி விபத்துக்குள்ளாக்கும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் பதிவு செய்த உணர்வுகள் நம்மை இப்படியெல்லாம் ரிமோட் செய்து கொண்டிருக்கும்.
1.இது இயற்கையின் நிலைகள் (தவறில்லாது இயக்குகிறது)
2,இதை விதி என்றும் சொல்லலாம்.

ஏனெனன்றால் பதிவு செய்த அந்த உணர்வின் தன்மை வலு கொண்டது.

உதாரணமாக தாய் கருவிலே விளையப்படும் போது கருவின் சிசுவிலே இதைப் போன்ற உணர்வு பதிவானால் எந்த வயதில் அவர்கள் விபத்துக்குள்ளானார்களோ அதே உணர்வு பதிவாக்கப்படும் பொழுது அதே உணர்வுகள் அந்த உணர்வு வரப்படும் பொழுது அந்தக் கால நிலையில் இப்படி ரிமோட் செய்துவிடும்… விபத்தாகிவிடும்.

நாம் தவறு செய்யாமலே…
1.தாய் கருவில் இருக்கப்படும் பொழுதே இத்தகைய பதிவுகள் ஆகி விட்டால்
2.நம்மை அறியாமலே இது இயக்கி… விபத்துக்களும் பல தீமைகளும் உருவாகும் சந்தர்ப்பமாகிவிடுகிறது.

உயிரின் இயக்கம் எலெக்ட்ரிக் என்றாலும் நுகர்ந்ததை எலெக்ட்ரானிக்காக அந்த உணர்ச்சியாக இயக்கிவிடுகிறது. எலும்புகளில் உள்ள ஊனில் பதிவாக்கி விடுகிறது.

அதனின் விளைவுகளாகத் தான் இயக்கமாகிறது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு தீமையின் விளைவுகளிலிருந்து தப்ப அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அவ்வப் பொழுது (விபத்தாகும் போதும் எதிர்பாராத இயக்கங்கள் நடை பெறும் போதும்) ஆத்ம சுத்தி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

முன் ஜென்ம வாழ்க்கை என்று ஒன்று உண்டா…? – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகில் சில இடங்களில் சில ஆத்மாக்கள் குழந்தைப் பிராயத்திலேயே அதன் வயதுக்கு ஒவ்வாத நிலையில் சில நிலைகளை ஞானோதயம் பெற்று “வயதுக்கு மீறிய செயல்கள் செய்கிறது…” என்றால் அது எந்த நிலையில்…?

அவ்வாத்மாவின் ஒளி அலைகள்…
1.அதனுடைய முன் ஜென்மத்தில் சில மகான்களின் தொடர்புடன் வாழ்ந்திருந்து
2.அவர்களின் எண்ணத்திலேயே ஆத்மா பிரிந்து…
3.மறு ஜென்மத்திற்கு வரும் பொழுது தான் இத்தகைய நிகழ்வுகள் வருகிறது.

ஒவ்வோர் உடலுக்குள்ளும் பல அணுக்கள் உள்ளன… பல ஆவிகளும் உடலில் ஏறிக் கொண்டுள்ளன…! என்று ஏற்கனவே உணர்த்தியுள்ளோம்.

அந்த மகானானவர் அவர் வாழ்ந்து ஞானம் பெற்று சக்தியின் நிலையில் ஒளியுடன் கலக்கப் பெறும் பொழுது அவர் உடலுடன் உள்ள நிலையிலேயே அவர் எடுத்த ஜெபத்தினால் அவ்வுடலில் இருந்த மற்ற ஆவிகளும் அணுக்களும் (பல கோடி எண்ண அணுக்கள்) அவரின் ஞானத்தினால் இவைகளும் நல்ல நிலை எய்துகிறது.

மகான் உடலைவிட்டுச் செயல்படும் நிலையிலேயே இவ்வுடலில் தங்கிய இவ்வாவிகளுக்கும் அவற்றின் எண்ணமெல்லாம் நீங்கி இம் மகானுடன் அவர் உடலில் சாடியதின் பயனால் அவர் பெற்று ஏற்றிய ஞானத்தின் ஒளியில் பங்கு பெறுகிறது.

அடுத்து மறு ஜென்மத்திற்கு வந்து வாழும் நிலையில்…
1.அந்த மகானுடன் (மகான் உடலில்) ஒன்றியதினால்
2.அவ்வொளி அலையை ஈர்க்கும் அமில குணமுடன் இச்சிசு பிறப்பில் வாழும் பொழுது
3.அம்மகானின் சக்தி அலை இச்சிசுவின் மேல் பாய்ந்து பல அபூர்வ நிலையெல்லாம்
4.வயதிற்கு மீறிய செயலாக இன்றளவும் நடந்து வருகின்றது.

திருஞானசம்பந்தரின் மொழி அமுதை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறது என்றால் அது இந்த நிலையில்தான்.

இன்று மட்டுமல்ல பல கால கட்டங்களாய் சில சில இடங்களில் இப்படி வியக்கத்தகும் நிலைகள் நடந்து வருகின்றன. இதன் வட்ட ஒளியிலேயே ஞானம் பெற்று செயல்பட்டால் மீண்டும் மீண்டும் சக்தி நிலை பெருகிப் பல நிலைகளைச் செயலாக்கிடலாம்.

பெற்ற பயனைப் பொருளாக்கும்… புகழுக்கும்… விரயப்படுத்தி விட்டால் ஞான சக்தியின் வலு குன்றிவிடுகின்றது.

திருவையாறு தியாகராஜரின் நிலை இந்த நிலையில் வந்தது தான்…!

அவர் தன் உடலை விட்டுப் பிரியும் நாள் வரை அச்சங்கீத ஞானத்துடனே ஐக்கியப்பட்டு தான் அடைந்த ஞானத்தின் பொக்கிஷத்தை இம்மியளவும் சிதறவிடாமல் செயல் கொண்டதினால் நல் ஒளி பெற்றார்.

இந்த நிலை தெய்வீக நிலையில் மட்டும் ஏற்படுகின்றதா…? மற்ற நிலைகளில் இல்லையா…,? என்ற வினா எழும்பலாம்.

இன்று உலகத்தில் பல பாகங்களில் தன் பூர்வ ஜென்மத்தில் இந்த இந்த இடத்தில் வாழ்ந்ததாகவும்…
1.இவர் தான் என் தாய்… இவர் தான் என் தந்தை…! என்று சொந்தபந்தங்கள் உணர்த்தியும்
2.தன் முந்தைய நாமகரணத்தையும் சொந்தபந்தங்களின் நாமகரணத்தையும் மற்ற எல்லாக் குறிப்புக்களையும்
3.மறு ஜென்மம் எய்திய பிறகும் முன் ஜென்மத்தில் நடந்த இடத்தை உணர்த்துகின்றார்கள்.

இது எல்லாம் எந்த நிலையில்…?

ஓர் ஆத்மா வாழுகின்றது. அது வாழும் நிலையில் இன்று பேய் பிடித்து விட்டது. பிசாசு பிடித்து விட்டது என்றெல்லாம் சிலரைச் செப்புகின்றனர்.

எந்தப் பேயும் யாரையும் பிடிப்பதில்லை. ஆனால் இம்மனித ஆத்மாவின் எண்ணச் சிதறலினால் அந்த அந்தந்த எண்ண நிலைக்கொப்ப ஆவி உலக ஆத்மாக்கள் அதன் எண்ணத்தை ஈடேற்றச் சில உடல்களில் ஏறுகின்றன.

உடலில் ஏறிய எந்த ஆத்மாவுமே அவ்வுடலுக்குச் சொந்தமான ஆத்மா பிரிந்த பிறகுதான் இவ்வாவி ஆத்மாவும் வெளியேற முடிகின்றது.

“ஓர் உடலில் இப்படி ஏறிய ஆவி ஆத்மாவானது…”
1.அந்த உடலுக்குச் சொந்தமான ஆத்மாவைக் காட்டிலும்
2.சக்தியுடையதாய் ஏறிச் சில செயல்களைப் புரிவதினால்தான் சிலர் (சில உடல் ஆத்மாக்கள்)
3.தன் நிலை பெற முடிந்து தன் எண்ணத்தைக் கொண்டு வாழ்ந்திட முடியாமல்
4.ஆவி ஆத்மாவின் செயலிலேயே வாழ்வதினால்தான் “பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்து விட்டது…” என்கின்றனர்.

இப்படி வீரிய சக்தி கொண்ட ஆவி ஆத்மாக்கள் ஏறிய உடல் ஆத்மாக்கள் நீண்ட நாளும் வாழ்வதில்லை. அகால மரணம் எய்துகின்றனர்… தன் நிலை மறந்து…!

அந்த நிலையிலேயே அவ்வுடலில் இருந்து உடலுக்குச் சொந்தமான ஆத்மாவும்… உடலில் ஏறிய ஆவி ஆத்மாவும்… பிரிந்து செல்கின்றது.

ஆனால் அந் உடலில் ஏறிய ஆவி ஆத்மாவிற்குத் தன் செயலைச் செயல்படுத்த மற்றோர் உடலில் ஏறியதினால்…
1.தன் முந்தைய நிலையும் மறந்து
2.எந்த உடலில் ஏறிச் செயல் கொண்டதோ அவ் உடலின் சொந்த பந்தங்களுடன் தன் எண்ணமும் செயல்பட்டதினால்
3.இவ்வுடலுக்குச் சொந்தமான சொந்த பந்தங்களும் வாழ்ந்த இடங்களையும் தனதாக ஒன்றிவிடுகின்றது.

பொதுவாக… உடலை விட்டுப் பிரிந்த எந்த ஆத்மாவானாலும் சரி உடனே பிறப்பிற்கு வருவதில்லை. தன் உதிரத் தொடர்புடைய தாய் தந்தையர் மக்கள் இவர்கள் உள்ளவரை பிறப்பிற்கு வருவதில்லை.

அப்படி இருக்க… இந்தக் குறுகிய காலத்தில் பிறப்பெய்தி இவர்கள்தான் என் தாய் தந்தையார் சுற்றத்தார்…! என்றெல்லாம் முன் ஜென்மத்தின் நிலையை உணர்த்துகிறது என்றால்
1.இவ்வுடலில் ஏறிய ஆவி ஆத்மாவானது தாயின் கரு நிலைக்கு வந்தவுடன் அதன் இரண்டு நிலைகொண்டு
2.இரண்டு நிலையென்பது அதன் முன் ஜென்ம நிலையும் ஆவியாக மற்ற உடலில் சாடியதின் நிலையும் கொண்டு கர்ப்பத்திற்கு வந்தவுடன்
3.இவ்வாத்மாக்களுக்கு பன்னிரண்டு வகையான அமிலத்தை ஈர்க்கும் குணமுடைய சக்தியைக் காட்டிலும்
4.மற்றோர் உடலில் ஏறி வெளிப்பட்டதின் நிலையினால் தாயின் கருவில் அதன் நிலையும் மறக்கப் பெற்று
5.பிறப்பிற்கு வந்த பிறகு அது எடுக்கும் சுவாசத்தினால்
6.எண்ண நினைவுகள் எல்லாம் நினைவில் சாடும் பருவத்திலேயே
7.அதன் பேசி உறவாடும் கால கட்டத்தில்
8.அவை ஏறிய உடலாத்மாவின் சொந்த பந்தங்கள்… வாழ்ந்த நினைவலைகள்… எல்லாம் இவ்வாத்மா செப்புகின்றது.

மற்றோர் உடலில் குடியேறித் தன் முந்தைய ஆவி நிலையை மறந்து அவ்வுடலின் எண்ணத்தில் வாழ்ந்து செயல்பட்ட ஆவிகளினால்தான் இப்படி முந்தைய ஜென்மத்தைச் செப்ப முடியும்.

ஆனால் இவற்றிலேயே எல்லா ஆவிகளும் இப்படி மற்ற உடலில் ஏறிய பிறகு ஜென்மத்திற்கு வர முடியாது.

நல்ல ஆத்மாவின் எண்ணமுடன் ஏறிச் செயல்பட்ட ஆத்மாக்களுக்குத்தான் இப்படிப் பிறப்பெடுக்கும் நிலை பாக்கியமும் வருகின்றது.

ஆனால் முந்தைய ஜென்ம வாழ்க்கையை உணர்த்தி வாழும் ஆத்மாக்களும் நீண்ட நாட்கள் வாழ்ந்திடாது…!

பனை மரத்தில் பேய் இருக்கிறது…! என்ற எண்ணம் எப்படி உருவாகிறது…?

 

ஒரு சமயம் குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். பனை மரம் ஒன்று இருந்தது. அந்தப் பனை மரத்தில் ஒரு கோடைப் போடச் சொன்னார்… போட்டேன்…!

இராத்திரி இந்தப் பனை மரத்தில் ஒரு இராட்சசன் வந்தான்.. ஆகையினால் இந்த வழியாகப் போகும் பொழுது பார்த்துப் போங்கள்…! என்று யாரிடமாவது சொல்லு என்றார்.

அதே மாதிரிச் சொன்னேன்.

இந்த எண்ணத்தைப் பதிவு செய்த பின் அதே எண்ணத்திலேயே அங்கே போகின்றார்கள்.
1.வெண்மையாகக் கோடு போட்டத்தைப் பார்த்ததும்
2.இவன் எண்ணத்திற்கு அது தெரியப்படும் பொழுது பளீர்… பளீர்…! என்று மின்ன ஆரம்பித்தது.
3.இராட்சசன் வருகின்றான்…! என்ற உணர்வு அவனுக்கு வருகிறது.

ஏனென்றால் இதே எண்ணத்தில் இறந்த ஆன்மாக்கள் இவனுக்குள் குவிக்கப்படுகின்றது. வந்ததும்… அது இவனுக்குள் வருவதாகவே அந்த நினைவு வருகின்றது.

அப்படி வந்ததும் இவனின் இதயங்கள் வேகமாகத் துடிக்கின்றது. உணர்ச்சி வேகங்கள் இரத்தநாளங்களில் ஆனவுடனே அது வெடித்து விடுகின்றது… அல்லது இதயத்தில் வெடித்து விடுகின்றது. இரத்தம் இரத்தமாகக் கக்குகின்றான்.

இப்படி அச்சுறுத்தும் நிலை வரும் பொழுது “பேயடித்து விட்டது..!” என்று சொல்கிறார்கள். அவன் இப்படிக் கிடக்கின்றான் என்றவுடன் அடுத்தாற்போல் அந்தப் பக்கம் யார் போனாலும் இதே பயம் வருகிறது.

1.ஏனென்றால் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள்
2.அதே நினைவு கொண்டு அதையே நமக்குள் உருவாக்குகின்றது.

இப்படித்தான் ஆலயங்களில் இந்தத் தெய்வம் அதைச் செய்யும் இதைச் செய்யும் என்றும் யாகங்கள் நடத்தி… அந்த உணர்வை நமக்குள் உருவாக்கி வைத்துள்ளார்கள். அந்த உணர்வின் நினைவு வரப்படும்போது அது தான் பக்தி என்று நாமும் எண்ணுகிறோம்.

சில தெய்வங்களுக்கு ஆட்டையும் கோழியையும் வெட்டி அதில் நைவைத்தியம் செய்து படைக்கின்றார்கள். இப்படிச் செய்தால் அந்தத் தெய்வம் நம்மைக் காப்பாற்றும்…! என்று நினைக்கின்றோம்.

இது போன்ற தெய்வங்களுக்கு என்று விசேஷமான வாத்திய இசைகள் உண்டு. உறுமி மேளம் அது போன்று மற்றதை வாசிப்பார்கள். அதையும் நமக்குள் பதிவு செய்து வைத்திருப்போம்.

பூஜைக்கு என்று எதை வெட்டி அங்கே படைத்துக் கொடுத்து விட்டு நாம் அதைச் சாப்பிடுகின்றோமோ அதன் உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் வளர்ந்தபின் நாம் இறந்தபின் என்ன நடக்கின்றது..?

அடுத்தாற்படி பூஜைக்கு வருபவர்கள்..
1.இந்த உறுமிக் கொட்டை மீண்டும் கொட்டியவுடனே… அதைக் கேட்டு அந்த உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.அவர்கள் உடலில் போய் இந்த ஆன்மாக்கள் சேர்ந்துவிடும்.

சேர்ந்த பின்… ஏன்டா எனக்கு இன்னும் ஆடு கொடுக்கவில்லை…? உன் குடும்பத்தை நான் பார்க்கின்றேன் பார்…! என்று அருளாடும்.

இது எல்லாம் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் தான்…!

ஏனென்றால் அதே உணர்வு கொண்டு இங்கே எண்ணி ஏங்கி வரப்படும்போது இந்த உடலுக்குள் அது புகுந்து விடுகிறது. அந்த அசுர குணங்கள் கொண்டே அது கேட்கும்.

ஆனால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்றால்…
1.அந்த மாடனுக்கு அதைச் செய்யவில்லை
2.அதனால் இந்த நிலை உருவானது என்று…!

இவை எல்லாம் அரசர் காலங்களில் “ரிக்கியர்கள்…” என்று சொல்வார்கள். மாட்டுக்கு ஒரு உணர்வும் பன்றி போன்ற மற்ற மிருகங்களுக்கு என்று அதனின் அசுர குணங்களும் உண்டு. அதைப் பலியிடுவார்கள்.

இதைப் போன்ற மிருக உணர்வுகளைச் சொல்லி (மந்திர ஒலி கொண்டு) அந்த உணர்வைத் தனக்குள் உருவாக்கப்பட்டு அந்த உணர்வின் மந்திரத்தை இதே மனிதனுக்குள் எடுக்கப்பட்டு இதே மாமிசத்தை அவனுக்குள் உணவாக உட்கொள்ளச் செய்வார்கள்.

இந்த உணர்வின் தன்மை பதிவானபின் அந்த அசுர குணங்கள் கொண்டு மனிதனே அசுரனாக மாறுகின்றான் இதனுடைய நிலைகளில்.

அக்கால அரசர்கள் தனக்குப் பாதுகாப்புக்காக இப்படி மாற்றப்பட்டு ஞானிகள் காட்டிய அருள் உண்மையின் உணர்வுகளை இவர்களுக்குச் சாதகமாக்கி தீமையின் விளைவாக உருவாக்கிக் கொண்டார்கள்.

அதர்வண என்று நல்ல குணங்களை அடக்கி எதிரி நாட்டு அரசனையோ அவன் நாட்டு மக்களையோ அடிமைப்படுத்தும் நிலைகள் கொண்டு வந்தார்கள்.

இதே அசுர உணர்வுதான் மக்கள் மத்தியிலும் சுழன்று கொண்டுள்ளது. இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் இவையெல்லாம் கடந்து போய்விட்டது. விஞ்ஞான அறிவு ஓங்கிவிட்டது. கதிரியக்கச் சக்திகள் அதிகமாகப் பரவியிருக்கின்றது.

சிந்தனை குறையும் நிலைகள் வந்துவிட்டது. மனிதனுக்குள் இருக்கும் நல்ல சிந்தனையே இழந்து மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் நிலை வந்துவிட்டது.

ஆனால் இதையெல்லாம் வென்று பழகியவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நமது மனதை நாம் கட்டுபடுத்துதல் வேண்டும்.
2.அதைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிட வேண்டும்.
3.எவர் இதைச் செய்கின்றனரோ அவரே பற்றற்ற நிலைகள் கொண்டு பிறவியில்லா நிலைகள் அடைகின்றார்.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைப் பெறுவோம் அருள் ஞானத்தைப் பெருக்குவோம்.

மனிதனான பின் தனக்குள் வரும் தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றும் பயிற்சியே பிரம்ம சூத்திரம்

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசம் செய்கின்றோம். பெரும்பகுதியான படித்தவர்கள் என்ன நினைக்கின்றார்கள்…? யாம் சொல்வதை சரியா தப்பா…! சரியா தப்பா…? சரியா தப்பா…? என்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

ஆனால் அந்த அளவுக்குப் படிப்பில்லாதவர்கள்
1.யாம் என்ன சொன்னாலும் அதைப் பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.
2.குருநாதர் சொன்னார் அல்லவா… இதை நாம் செய்து பார்ப்போமே…! என்று
3.அந்த உணர்வுகள் தூண்டும்போது அவர்கள் ஞானத்தைப் பெறுகின்றார்கள்.

படித்தவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

நான் மகாபாரதத்தைப் படித்தேன் கந்த புராணத்தை படித்தேன்… பிரம்ம சூத்திரத்தையும் படித்தேன். ஆனால் அதையெல்லாம் இங்கே சாமி (ஞானகுரு) சொல்லவில்லை.

ஆக அவர்கள் படித்ததைப் பதிவு செய்து கொள்வார்கள். ஆனால் இங்கே யாம் சொல்லும் ஞானத்தின் நிலைகள்
1.அந்த அருள் ஞானிகள் பெற்றதைச் சொல்லும்போது இந்தச் சூத்திரத்தை விட்டுவிடுவார்கள்.
2.காலி செய்து கொண்டே இருப்பார்கள்…
3.தான் பதிவும் ஆக்க முடியாது. அதைப் பெறவும் முடியாது.

அவர்கள் படித்த பிரம்ம சூத்திரத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் மனு நீதி சாஸ்திரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1.மனிதனான பின் இந்த தீமைகளை அகற்றுவது எப்படி…?
2.தீமையை அகற்றியவன் யார்…?
3.தீமையை அகற்றிய உணர்வுகளை நாம் எப்படி எடுப்பது…? என்று
4.இந்த மனு நீதி சாஸ்திரத்தில் இது உண்டு.

மனுஷாள்…! என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அந்தச் சாஸ்திரத்தை தெளிவாக்கும் நிலைகள் இல்லை.

மனு நீதி சாஸ்திரத்தை நான் படித்து இருக்கின்றேன்… இவர் சொல்வது எங்கே இருக்கின்றது…? காணவில்லையே…! இந்த நிலைகள் தான் படித்தவர்களுக்கு எண்ணமாக வரும்.

மகாபாரதத்தைப் படிக்கும்போது படித்த நிலைகள்… அந்தப் படித்தது மட்டும் தான் இருக்கும். குருநாதர் சொல்வதை அதிலே காணோமே…! என்பார்கள்.

உதாரணமாக கேரளாவில் மொக்கை அரிசியைச் சாப்பிடுகின்றார்கள். அதனின் ருசி வேறாக இருக்கின்றது. இங்கே நாம் பொன்னி அரிசியைப் போட்டுச் சாப்பிட்டோம் என்றால் அந்த ருசி வேறு இருக்கும்.
1.அந்த ருசியை இதிலே காணோமே… என்பது போன்று
2.அந்தப் படித்த உணர்வுகள் எதுவோ அதே தான் வரும்.

நம்மிடம் மொக்கை அரிசியைச் சாப்பிடச் சொன்னால் பார்த்தவுடனே பொன்னி அரிசியின் ருசி அதில் வரவில்லையே என்று தான் சொல்வோம்.

ஏனென்றால் அந்தந்த உணர்வின் சுவை எதுவோ அதனால் வளர்ந்த அணுக்களும் அதே போல் தான் உணர்வினை இயக்கும். ஆக மதங்கள் ஆனாலும் இனங்கள் ஆனாலும்
1.எதன் மேல் பற்று வைத்து நாம் பதிந்து கொண்டோமோ
2.அதன் சுவை தான் அவர்களுக்கு ரசிப்பாக இருக்கும்.

நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் ஞானியின் உணர்வை நாம் பெற வேண்டும். இருள் சூழா நிலைகள் கொண்டு நம்மை எப்படிப் பாதுகாக்க வேண்டுமென்று இங்கே யாம் கொடுக்கும் உபதேசங்களைப் பதிவாக்கிக் கொண்டால் அதன் சாரமாக நமக்குள் அருள் ஞானியரின் உணர்வைப் பெருக்கி நமக்குள் அறியாது வரும் தீமைகளை மாற்ற முடியும்.

படித்ததை வைத்து நாம் தெளிவாக்க வேண்டுமென்றால்…
1.படித்தது பாதைகளை அறிவதற்கு உதவும்.
2.ஞானத்தின் நிலைகள் வளர்வதற்கு அருள் ஞானியின் உணர்வைப் பெறுதல் வேண்டும்.
3.ஞானத்தை வைத்துத்தான் படித்த கல்வியின் நிலைகள் ஞானத்தில் கொண்டு செல்ல முடியும்.

கல்வி உடலின் உணர்வுக்குதான் உதவுமே தவிர… உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை வளர்க்கும் ஞானத்திற்கு இது உதவாது.

நமக்கு நற்பாதையை காட்டுவதற்குத்தான் கல்வி. அந்தக் கல்வியை நாம் சீராக எண்ணி
1.அந்த அருள் ஞானியின் உணர்வுடன் ஒன்றிப் பார்த்தால்
2.இன்றைய விஞ்ஞான உணர்வின் தீமையான விளைவுகளை மாற்றியமைக்கலாம்.

ஒளியுடன் ஒளி சேரின் ஒளிருமே.. அறு குண நிலையுடன் உயருமாம் ஆன்மா…! – ஈஸ்வரபட்டர்

 

உயிரணு உதித்து உயிராத்மாவாய் ஆத்ம சக்தியை அவ் உயிரணு சேமிக்கும் நிலையிலேயே உயிரணுவின் ஆரம்ப உறுப்பாய் இக்கவன நரம்பின் செயல்தான் முதலில் தாயின் வயிற்றில் உதிக்கிறது.

1.அதுவே… உயிரணுவிற்குச் செயல் கருவியாய்
2.அது ஈர்க்கும் அமில குணமான ஆத்மா என்ற ஆவி அமிலம் திடப்பட்டு
3.அதன் தொடர்ச்சியில் இருந்துதான் ஒவ்வோர் உறுப்புகளும் உருக்கொள்கின்றது.

மனித ஆத்மாவுக்குகந்த பன்னிரண்டு வகையான குண அமிலத்தையும் ஈர்க்கவல்ல சக்தியாய் இக்கவன நரம்பு ஆரம்ப கட்டத்திலிருந்தே செயல் கொள்கின்றது.

சாதாரண மனித ஆத்மாக்கள் இதன் தொடர்ச்சி வட்டத்தில் எக்குண அமில சகக்தியை அதிகப்படியாக ஈர்த்துப் பழக்கப்படுத்தி வாழ்ந்தனவோ அதே தொடர் நிலையில் வாழ் நாள் முழுவதும் வாழ்கின்றன.

வாழ் நாள் முடிந்த பிறகும் ஆவி உலகிலும் மறு ஜென்மத்திலும் இதன் தொடரில் இருந்து மாறுபடுவதில்லை.

ஆனால் இப்பன்னிரண்டு வகையான அமில வட்டத்தில் வாழும் மனிதன்… தன் நிலை உணர்ந்து… சம நிலை பெற்று…
1.இங்கே உணர்த்தும் ஞான மார்க்கத்தின் தொடர் நிலை எய்துங்கால்
2.இப்பன்னிரண்டு வகையான குண அமிலத்திற்கும் அப்பாற்பட்ட
3.உயர்ந்த குண அமிலமான ஞான அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால்
4.அதன் தொடரினால் ஒவ்வோர் ஆத்மாவும் இவ்வுலகினில் நம்முள் கலந்துள்ள
5.தீய சக்தி எது…? நற்சக்தி எது…? என்ற பாகுபாட்டை அறியலாம்.

ஒருவரைக் காணும் பொழுதே அவரின்ம் குண நிலையையும்… அவர் எவ்வெண்ணமுடன் நம்மை நாடுகிறார்…? என்ற செயலையும் “அவர் சுவாசமுடன் நம் சுவாசம் மோதும் நிலையிலேயே…” அவரது எண்ண நிலையை நாம் அறியலாம்.

ஆனாலும் இந்த ஞானத்தொடர் வழி பெற்றுத் தெய்வத்துடன் ஐக்கியமாகி தெய்வமாகிப் பேரானந்தம் அடையலாம்…! என்ற ஆசையில் செயல்பட்டால் அது கொடிய விஷத் தன்மையுடைய நான் என்னும் அகந்தையில் செல்லும் மார்க்கம்.

நாம் பிறந்த பூமியில் நம்முடன் கலந்துள்ள ஜீவ ஆத்மாக்களின் நிலையிலிருந்து ஒதுங்கி… “தான் மட்டும்…” ஆண்டவனாகச் செல்லும் ஞான மார்க்கம் உகந்த மார்க்கமல்ல.

நம்முடன் கலந்துள்ளவர்களின் விரோதத்தையும் கோபத்தையும் சாடி வாழ்ந்து… பொருளாசையில் தனக்கே சொந்தமாகப் பொருள் பெற்று… “நான் என்ற வட்டத்தில் வாழ்வதினால் நம் ஆத்மாவிற்கு என்ன பயன்…?”

1.நம்முடன் கலந்துள்ள ஜீவ ஆத்மாக்களுக்கு அன்பு என்ற கலசத்தை ஏற்றிக் கலந்து வாழ்ந்து…
2.நாம் பிறந்ததின் நலனை உணர்ந்து…
3.நாம் அறிந்த இந்த உண்மையின் ஞானத்தைப் பலருக்குப் போதித்து
4.வாழும் இக்குறுகிய வாழ் நாட்களில் அன்பின் அடிப்படையில் வாழும் பக்குவத்தையும்
5.நம் சக்தியைக் கொண்டு சேமிக்கும் பொருளினால்
6.பல ஜீவன்களையும் வாழ வைக்கும் முறையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.

நமக்கு உள்ள பொருளை எடுத்து அடுத்தவர்களுக்குத் தானமளித்து அவர்களைச் சோம்பேறி நிலைப்படுத்திடச் செப்பவில்லை.

ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் தனக்குகந்த செயல் புரிந்து தான் ஜீவிதம் கொள்ள வேண்டும். அதன் வழித் தொடருக்குப் பொருளிடுங்கள். அங்கவீனமுற்ற ஆத்மாக்களுக்கு ஜீவிதம் செய்திடப் பொருள் அளித்திடலாம்.

பட்சிகளோ மற்ற மிருக இனங்களோ தனக்கு வேண்டிய உணவை எப்படித் தானாகச் சம்பாதித்துக் கொள்கிறதோ அதைப் போன்ற பக்குவ ஆத்மாக்கள் மனித ஆத்மாவில் குறைவு.

பன்னிரண்டு வகையான குண அமிலத்தைப் பெற்ற மனித ஆத்மாதான் இன்று தன் நிலை உணராமல் வாழ்கின்றான். மிருக இனங்கள் மனிதனைக் காட்டிலும் இன்று உயர்ந்ததாகிவிட்டது.

1.நாம் நம் நிலையை (தன் நிலை) உணரும் பக்குவம் பெற்ற பிறகு
2.ஞானத் தொடரின் ஓளியை ஈர்க்கும் குண நிலை கொண்ட பிறகு
3.ஞானத்தின் வட்டத்திலுள்ள பல ஒளி ஞானிகள் (மகரிஷிகள்) எல்லாம் நமக்கு உதவுவர்.

ஆரம்ப நாளிலேயே ஏன் அவர்கள் நம்மை ஏற்கவில்லை…? என்ற வினா எழும்பலாம்.

நம் ஆத்மாவைக் கொண்டு நாம் பெறும் சக்தியின் ஞான ஈர்ப்பில் “நம் செயல் சென்ற பிறகுதான்…” அச் செயலின் ஒளியும் நம்முடன் கலக்குமே அன்றி
1.அவர்கள் சக்தியை எல்லாம் தீய ஆத்மாக்களின் வட்டத்தில் செலுத்தி விட்டால் அவர்கள் பெற்ற சக்தியும் குறைந்துவிடும்.
2.குறைந்துவிடும் என்பது மட்டுமல்ல வீண் விரயப்பட்டுவிடும்…!

இதனை உணர்ந்துதான் சில கால கட்டங்களில் இத்தியான மார்க்கத்தை ஈர்த்து ஞானத்தின் வழிபெறும் ஆத்மாக்களின் நிலையுடன் இவ்வுலகிற்குத் தன் ஒளியை எப்படி எப்படி எல்லாம் பரப்பிடலாம்..? என்ற ஆர்வத் துடிப்புடன்… இன்று நாம் எப்படிப் பல சித்தர்களின் நிலையை உணருகின்றோமோ அதைப் போன்று பல காலமாய் இச்செயல் நிலைகள் நடந்து வந்தன.

1.தானாக எந்த நிலையும் செயல் கொள்ளாது…!
2.ஒளியுடன் நல்லொளியாய்க் கலக்கத்தான் செய்யுமே ஒழிய வீண் விரயப்படுத்திச் செயல்படாது.

ஞானிகளின் வழித் தொடரை நாம் ஒவ்வொருவரும் அவசியம் பெற வேண்டும்

 

உதாரணமாக ஒரு மனிதன் மிகவும் பயந்த நிலைகள் கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனின் உடலில் விளைந்த உணர்வுகள் “ஐயோ… பயமாக இருக்கின்றது… பூதம் வருகின்றது…” என்று நாம் கற்பித்த உணர்வின் தன்மை கொண்டு (விளையாட்டாகப் பேய் பிசாசு ஆவி என்று சொல்கிறோம் அல்லவா…!) அவன் ஏற்றுக் கொண்ட உணர்வுகள் அந்த அலைகளாகப் படர்ந்து அவனுக்குள் விளைந்து விடுகின்றது.

தான் கற்பனையாகச் செய்து கொண்ட “பூதகணங்கள்…” இவ்வாறு இருக்கிறது என்ற அச்சத்தால் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மை இவனுக்குள் விளைந்த பின் அவன் வெளியிட்ட இந்த அலைகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.

அதே சமயத்ததில் இவனைப் போலவே இன்னொரு மனிதன் அச்சப்படுவான் என்றால்
1.ஏற்கனவே முதல் மனிதன் பயந்த உணர்வுகள் வெளிப்படுத்தியதை
2.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அந்த அச்ச அலைகளை இவன் நுகர நேருகின்றது.

நுகர்ந்த பின்… “பூதம் வருகின்றது… இதோ பேய் வருகிறது…! என்று சொல்ல ஆரம்பிப்பான். நமக்குத் தெரியாது ஆனால் அவர்களுக்குத் தெரியும்.

என்னென்ன உணர்வு கொண்டு அதைப் பிரித்தார்களோ அந்தந்த உணர்வு கொண்டு பூதம் வருகின்றது… ஐயோ… ஐயோ… என்னை நசுக்க வருகின்றது…” என்னைப் பிடிக்க வருகின்றது…! என்று சொல்வதை நாம் கேட்கலாம்.

ஒரு மனிதனில் விளைந்த உணர்வுகள்… அவன் எதைக் கொண்டு எதனை அஞ்சிடும் உணர்வு கொண்டு எண்ணினானோ… அவனின் உணர்வுகளுக்குள் விளைந்ததோ அவனில் விளைந்த உணர்வின் அலைகள் வெளியே வரப்படும்போது சூரியனின் காந்த சக்தியால் அது கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படித்தான் நாம் நுகரும் ஒவ்வொருவரும் உணர்வும் நம்மை இயக்கிக் கொண்டுள்ளது.

இது எல்லாம் ஞானிகள் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகள்…!

1.நல்லது… கெட்டது… என்ற நிலைகளில் சூட்சும நிலைகளில் உலகில் எது எப்படி இயக்குகின்றது….?
2.நுகர்ந்த அறிவாகத் தனக்குள் வந்தபின் உடலில் அது எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துள்ளார்கள் மகரிஷிகள்.

இயற்கையில் மனிதனாக உருவாவதற்கும் மற்ற உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் எப்படி உருவானது…? என்ற நிலையையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்கள் அந்த “மகரிஷிகள்…”

மகரிஷிகளிலே அகஸ்தியன் தான் முதன்மை பெற்றவன். அவன் கண்டுணர்ந்த உணர்வு தான் மெய் (ஞான) உலகிற்கு இன்றும் வழி காட்டிக் கொண்டுள்ளது.

அவன் வழியினைப் பின்பற்றிய மெய் ஞானிகள் காட்டிய உணர்வுகள் அனைத்தும் மனிதனுக்குள் உணர்வலைகளாகப் படர்ந்து படர்ந்து… அது பரவிக் கிடப்பதைத் தான் எழுத்தறிவு என்று வரப்படும்போது விண்ணுலக ஆற்றலை வான இயல் சாஸ்திரம் என்று கொண்டு வருகின்றார்கள்.

இன்னென்ன இடத்தில் சூரியன் இருக்கின்றது… வியாழனும் மற்ற கோள்களும் இருக்கின்றது… என்ற நிலையும் அதனின் திசைகளையும் அதனின் ஓட்ட நிலைகளையும் அதனின் ஓட்டப் பாதைகளையும் அதனுடைய பாதையின் திசைகளையும் அன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகஸ்தியன் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியுள்ளான்.

அவனில் வெளிப்பட்டதைப் பின் வந்த வியாசகன் தன் உணர்வின் ஆற்றலால் அதைக் கண்டுணர்கின்றான். அகஸ்தியன் கண்டுணர்ந்த கோள்கள் எதுவோ…
1.அவனுக்குள் படமெடுத்த உணர்வுகள் எண்ண அலைகளாகப் பரப்பியதையும்
2.அவனின்று வெளிப்பட்ட உணர்வுகளயும் வியாசகனால் அது சந்தர்ப்பத்தால் கண்டுணர முடிகின்றது.

ஏனென்றால் இதை எல்லாம் நம் தத்துவ ஞானிகள் சந்தர்ப்பத்தால் இதை பெறுகின்றனர். ஆகவே வியாசகன் அவனுக்குள் எதை விளைய வைத்தானோ அந்த உணர்வின் அணு செல்கள் வரப்படும்போது அது மற்றொரு உடலுக்குள் வரும்போது அதுவே வரும்.

ஆகவே ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அந்த உணர்வினை நாம் நுகர்ந்தால் நம்மையும் அது ஞானியாக மாற்றும். ஞானியாக நீங்கள் மாற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும் அதன் சக்தியை ஈர்க்கும் நிலை எங்குள்ளது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.நெற்றியின் மையத்தில் மஞ்சளும் குங்குமமும் தரித்து
2.ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்த இடமாக எண்ணி
3.நம் நெற்றியில் திலகமோ திருநீறோ இட்டுக் கொள்கின்றோமே
4.அங்குதான் உள்ளது மனிதனை இயக்கும் ஜீவத் துடிப்புள்ள கவன நரம்பு.

மனிதனின் எண்ணத்தைச் செயல்படுத்தும் முக்கிய இடம் அக்கவன நரம்புதான்…!

ஒவ்வொரு மனிதனின் அக்கவன நரம்பு செய்யும் செயல் கொண்டுதான் அம் மனிதனின் உடல் நிலையும் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

கவன நரம்பிலுள்ள ஈர்க்கும் பணி…
1.நாமெடுக்கும் சுவாசமுடன் நம் உயிர் சக்திக்கு ஈர்த்து
2.அவ்வுயிர்த் துடிப்புடன் இக்கவன நரம்பு அதனை ஈர்த்து
3.நம் மண்டையின் பின் பாகத்திலுள்ள சிறு மூளையில் மோதச் செய்து
4.அதன் வழித்தொடரில் இருந்துதான் உடல் உறுப்புகள் அனைத்திற்குமே செயல் நிலை ஏற்படுகின்றது.

இக்கவன நரம்பு பாதிக்கப்பட்டாலோ… பின்னப்பட்டாலோ… உடல் உறுப்புகளின் நிலையும் சரி… நம் உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானாலும் சரி.. “அதன் வழித்தொடர் நிலையைச் செயல்படுத்திட முடியாது…!”

“இதயத்தில்தான் இவ்வுடலுக்குகந்த நிலை உள்ளது…” என்று நம்முடன் கலந்த ஆத்மாக்கள் நம்பி வந்தனர்.
1.மாற்று இதயம் இணைக்கப் பெற்று வாழும் மனிதர்கள்
2.பெறப்பட்ட இதய எண்ணமுடனா வாழ்கின்றனர்…?

இதயத்தையே இயக்கும் செயல் இக்கவன நரம்பின் மூலமாய் ஈர்க்கப் பெற்று சிறு மூளையின் வழித்தொடரினால் செயல்படுகின்றது.

இவ்வுடலிலுள்ள எந்தப் பாகத்தையும் இவர்களினால் மாற்று உறுப்புகளைப் பொருந்தி உயிர் வாழ வைத்திட முடிந்திடும்.

ஆனால் இந்த நெற்றியில் உள்ள கவன் நரம்பிற்கு மேல் ஏற்படும் பின்னத்திலிருந்து பைத்தியம் பிடித்த ஆத்மாவையோ கவன நரம்பில் அடிபட்டு அதனால் அதன் நினைவிழந்த ஆத்மாவையோ சரிப்படுத்துவது முடியாத காரியம்.

நம் தலையில் உள்ள பெருமூளையை மாற்றி அமைத்தாலும் கூட நம் எண்ணமும் மாறாது செயலும் அதே நிலையில்தான் இருந்திடும். ஆனால்…
1.இக்கவன நரம்போ… இக்கவன நரம்பை ஈர்த்துச் சிறு மூளையின் உதவி கொண்டு
2.இவ்வுடலையும் ஆத்மாவையும் வளர்க்கும் இதில் பின்னப்பட்டால்
3.தன் நிலையில் எவ்வாத்மாவும் வாழ்ந்திட முடியாது.

உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தின் துரித நிலை அதிகப்பட்ட ஆத்மா… இக்கவன நரம்பின் தொடர் கொண்ட சிறு மூளைக்குச் செல்லும் நிலையில் வெடித்து விட்டால்தான்… “இதய வலியினால் இறந்து விட்டதாகச் சொல்கின்றோம்…”

இதயத்திலுள்ள எந்த நரம்புகள் பாதிக்கப்பட்டாலும் இன்றைய அறிவியல் மருத்துவரால் குணப்படுத்திடலாம். இதயத்திற்கும் இரத்த அழுத்த விகிதத்திற்கும் தொடர்பு கொண்டது இக்கவன நரம்புகள் சிறு மூளையும்தான்.

முதலில் செப்பியப்படி இவ்வுடலில் உள்ள எந்த உறுப்பையும் இன்றைய அறிவியல் மருத்துவ ஞானத்தினால் செய்விக்கும் செயல் திறமையுண்டு.

இக்கவன நரம்பை மட்டும் படைக்கப் பெற்றவன் இவ்வாத்ம சக்தியைத் தந்த ஆதி சக்தியின் செயல் சக்தியின் செயல்தான்.

இவ்வுடலில் எப்பாகங்கள் பின்னப்பட்டு ஆத்மா பிரிந்திருந்தால் கூட அவ்வுடலை ஏற்கச் சில சித்தர்கள் செயல்பட்டாலும்… கவன நரம்பும் சிறு மூளையும் பின்னப்படாமல் இருந்தால்தான் அவ்வுடலையும் சித்தர்கள் ஏற்பார்கள்.

ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்ததாகவும் நெற்றிக் கண்ணை வைத்துத்தான் உலகை ஆண்டதாகவும் புராணம் கூறுகின்றது. ஒவ்வோர் ஆத்மாவிற்குமே நெற்றிக்கண் உண்டு. நெற்றிக்கண்ணினால் தான் நம் விழிக்கு ஒளியைக் காணும் நிலை பெற முடிகின்றது.

1.கவன நரம்பைத்தான் நெற்றிக்கண்ணாகவும் ஞானக்கண்ணாகவும்
2.நம் முன்னோர்கள் புராணக்காலங்களில் இதனை உணர்ந்து அதற்கு உருவம் தந்து சிவனாக்கி
3.சிவனுக்கு நெற்றிக்கண்ணைப் படைத்து அன்றைய கால மனித ஆத்மாக்கள் புரிந்திடும் பக்குவத்தை ஊட்டினார்கள்.

புராணக் கதைகளில் அன்றே பல நிலைகளைப் புரியாத நிலையில் சூட்சுமமாக… ஆண்டவன் வாழ்ந்ததாகவும் அதற்குகந்த நிலைகளை உணர்த்த “ஆண்டவனையே கதையின் நாயகனாக்கி…” பல நிலைகள் சித்தர்களினால் கதைப்படுத்தி வழங்கப்பட்டன.

இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் உள்ள உண்மை நிலைகள் மறைக்கப்படாமல் அதனை அவரவர்கள் எண்ணத்திற்குகந்து திரிக்கப்பட்டு சில நிலைகளை ஏற்றி இராவிட்டால் உண்மை நிலைகளை உணர்ந்திருக்கலாம்.

இராமாயணமும் மகாபாரதமும் உயர்ந்த பொக்கிஷமாய் அதிலுள்ள கருத்தாற்றலைக் கொண்டு பல நடைமுறை பொக்கிஷ நிலையெல்லாம் இன்று நாம் தவற விட்டு இருக்கும் நிலையை எய்தியிருக்க வேண்டியதில்லை.

1.அன்று போதிக்கப்பட்ட அரும் பெரும் பொக்கிஷமெல்லாம்
2.இன்று கேலிக்குரிய நடைமுறைச் செயலுக்குப் பொருள் என்ற வியாபார நிலைக்கு வந்துவிட்டது.

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் உகந்த உயர்ந்த ஞான சக்தியையும் நமக்குள்ள இக்கவன நரம்பு நல்ல நிலையில் செயல்படுங்கால்…
1.இக்கவன நரம்பின் துணையினாலேயே
2.ஒளியின் ஞானத்துடன் செல்லும் பேற்றை அடையலாம்…!

ஆண்டவனால் ஒருவருக்கு அதிக அறிவுத் திறனும் குறைந்த அறிவும் படைக்கப்படவில்லை – ஈஸ்வரபட்டர்

பன்னிரண்டு வகையான குண அமிலங்களைச் சேமித்துப் பக்குவ நிலை பெற்ற பிறகுதான் மனித ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை இப்பூமியில் ஆதி காலத்தில் மனித உயிர் ஆத்மா தோன்றிய நாட்களில் வழி பெற்றது.

அதன் தொடர் நிலையில் இன்று வரை அக்குண அமிலமே வலுக்கொண்ட சக்திகளாய் ஒவ்வொரு வகையான குண அமிலமும் வலுப்பெற்று வழி வந்துள்ளது.

இவை எந்த நிலையில்…?

நம் நிலையில் அறிவியல் வளர்ச்சி நிலை முந்தைய காலத்தைவிட இந்தக் காலத்தில் கூடி உள்ளது. எந்த நிலைகொண்டு இது கூடிற்று…?

பன்னிரண்டு வகையான அமில குணம் என்கின்றோம். இவற்றில் சரி பாதி நல் அறிவை ஈர்க்கும் சக்திகளும் தீய சக்தியை உடைய குண நலன்களையும் கொண்டவைதான்.

அறிவுத் திறமையில் இரண்டு வகையிலுமே இப்பன்னிரண்டு வகையான அமில குணங்கள் இன்றைய கலியில் வலுப்பெற்றுத்தான் உள்ளன.
1.ஒரு மனிதனுக்கு வேண்டப்படும் குணாதிசயங்களைத்தான்
2.இப்பன்னிரண்டு வகையான அமில சக்தி என்று உணர்த்தியுள்ளோம்.

இந்நிலையில்தான் எல்லா ஆத்மக்களுமே உள்ளனவா என்ற வினாவும் எழும்பலாம்.

ஆதியில் மனித உயிரணுவாய்த் தோன்றப் பெறும் தருவாயில் மனிதக் கருவிற்கு வரும் அனைத்து ஆத்மாக்களுமே ஒன்றைப் போன்ற குண நிலையைக் கொண்ட அமில சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில்தான் இம்மனித ஆத்மா பிறவிக்கு வருகின்றது.

அதிலிருந்து…
1.தனக்களிக்கப்பட்ட சக்தியை எக்குண நிலை கொண்ட அமிலத்தை அவ்வாத்மா வளர்ச்சி நிலை (வலு) ஏற்படுத்திக் கொண்டதோ
2.அதன் தொடரில்தான் அவ்வாத்மாவின் புத்தி எனப்படும் அறிவின் நிலை ஒவ்வொரு பிறவியிலும் வெளிப்படுகின்றது.
3.ஆண்டவனால் ஒருவருக்கு அதிக அறிவுத் திறனும் குறைந்த அறிவும் படைக்கப்படவில்லை.

அவ்வாத்மாவே அதனுடைய எண்ணத்தை எவ்வமிலத்தை முக்கியத்துவம் அளித்து வளர்க்கப் பழக்கிக் கொண்டதோ அதன் தொடர் சுற்றலில்தான் அன்பு பண்பு பாசம் ஆசை ஆனந்தம் பக்தி இப்படி ஒவ்வொரு குண நிலையும் சலிப்பு கோபம் குரோதம் காமம் வெறி வஞ்சனை இப்படிப்பட்ட நிலைகளையும் வளர்க்க நேர்கிறது.

இதிலே எதன் தொடர் நிலையில் எண்ணச் சுற்றல் அதிகமாக ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டோமோ அதன் குணப் பலனை வைத்து
1.அன்பானவன் பண்பானவன் நாணயஸ்தன் பக்திமான் தர்மவான் என்றும்
2.சங்கடம் கொண்டவன் கோபக்காரன் குரோதக்காரன் நயவஞ்சகன் வெறி உணர்வு கொண்டவன் காமுகன் என்றும்
3.நாமகரணம் பிறரினால் பெறப்படவில்லை…
4.அவ்வுடலின் வீரிய அமில குணத்தைக் கொண்டுதான் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நாமகரணம் சூட்டப்படுகின்றது.

இந்த மனித ஜென்மத்தில் பிறவி எடுக்கும் நாள் வரை ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பன்னிரண்டு வகையான அமில குண வகைகள் உண்டு.

மனிதனாய் உள்ள நிலையிலேயே இது நாள் வரை இக்குண அமிலத்தில் எந்த ஒன்றை அதிகப்பட்டுச் செயல்பட்டு வாழ்ந்திருந்தாலும்…
1.நாம் வாழ்ந்திடும் காலத்திலேயே இப்பன்னிரண்டு வகையான அமிலத்தில் உள்ள
2.ஆறு தீய குணங்களை எந்நிலையில் அதிகமாய் நம் எண்ணத்தை அதிகப்படுத்தி வளர்த்துக் கொண்டிருந்தாலும்
3.இவ்வாழும் பக்குவத்தில் நம்மை நாம் உணர்ந்து தியானம் என்ற முறைப்படி நற்சக்திகளைப் பெற
4.நம் உயிராத்மாவுக்குள் உள்ள உயிரான ஈசனின் சக்தியைக் கொண்டு
5.நமக்குகந்த நல்ல குணங்களுடைய மறு பாதையில் உள்ள நற்குணங்களை ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்.

நாம் உடலுடன் இரண்டறக் கலந்த தீமைகளை நீக்க வேண்டுமென்றால் எதிலிருந்து… எப்படி நீக்க முடியும்…?

 

1.ஈசனால் உருவாக்கப்பட்ட நம் உடலில் தீமையான உணர்வுகள் ஊடுருவி
2.தீமையின் உணர்வுகள் உடலிலே வளர்ந்து விட்டா;ல்
3.உயிரால் உருவாக்கப்பட்ட இந்த ஈசனுக்கே நாம் தீங்கு செய்வது போன்று ஆகும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றித் தங்கதைப் பரிசுத்தப்படுத்துவது போன்று உங்களை அறியாது நல்ல உணர்வுடன் இரண்டற இணைந்த தீமையான உணர்வுகளை அகற்ற இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கும் இந்தச் சக்தியின் துணை கொண்டு…
1.நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவீர்கள் என்றால்
2.உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகளோ சாப வினைகளோ தீய வினைகளோ
3.இவை அனைத்தும் அகல உங்கள் எண்ணம் உங்களுக்குள் உதவும்.

இப்படி… அறியாது சேர்ந்த தீமைகளை நீக்க… அந்தத் தீமைகளை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தியை… சப்தரிஷி மண்டலத்தில் விளைந்த உணர்வுகள் இங்கே முன்னாடி படர்ந்திருப்பதை நீங்கள் கவருவதற்கே இதை உபதேசிப்பது.

இதைப் பதிவு செய்து கொண்டபின் நீங்கள் “எப்போது எண்ணினாலும்…” அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்.

உதாரணமாக சாதாரண ஆண்டனா மூலம் லோக்கலில் ஒளிபரப்பு செய்வதை டி.வி. அதை ஈர்த்து நமக்கு முன் படமாகக் காட்டுகின்றது… நாம் காணுகின்றோம்.

இதைப் போல சப்தரிஷிகளின் அருளாற்றல்களை… சக்தி வாய்ந்த நிலையாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கிறோம். அப்பொழுது உங்கள் கண் சக்தி வாய்ந்த ஆண்டனாவாக மாறுகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… அன்பான குணமோ கோப குணமோ தீய குணமோ உங்களுக்குள் ஏற்கனவே பதிவானதை மீண்டும் எண்ணினால் அது கண்ணின் நினைவிற்கே வருகின்றது.

அப்பொழுது அந்த நினைவின் ஆற்றலை யாருடன் பகைமை கொண்டோமோ யாருடன் அன்பு கொண்டோமோ யாருடன் பரிவு கொண்டோமோ யாருடன் பண்பு கொண்டோமோ இதைக் கவர்ந்து நாம் அறியவும் முடிகின்றது.

ஆனால் தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை உங்களைப் பெறச் செய்யும்போது…
1.சக்தி வாய்ந்த ஆண்டனாவாக உங்கள் கண் மாறுகின்றது.
2.அதனின் துணை கொண்டு நமக்கு முன் படர்ந்திருக்கும் மகரிஷியின் உணர்வை நுகரப்படும் போது நம் ஆன்மாவாக அது மாற்றுகின்றது
3.பின் அந்தத் தீமையின் உணர்வை அகற்றும் நிலையாக அது நமக்குள் நிலை பெறுகின்றது.

அந்தச் சக்தியைப் பெறுவதற்குத் தான் இப்பொழுது கூட்டுத் தியானத்தில் பலருடைய உணர்வையும் ஒன்றாக இணைத்து… ஒரு நிலை கொண்டதாக உருவாக்கி.. அந்த உணர்வின் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

இது சக்தி வாய்ந்த ஆண்டனாவிற்குப் பொருந்தும்…!

ஆகவே இதனின் துணை கொண்டு உங்கள் முதாதையரை எளிதில் விண் செலுத்தவும் முடிகின்றது. ஏனென்றால் மூதாதையரின் உணர்வு தான் உங்கள் உடலே…!

அவர்களை விண் செலுத்திய பின் ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தை எண்ணும் போதெல்லாம்… அந்த உணர்வின் ஆற்றல் இங்கே பதிந்திருக்கும்… படர்ந்திருக்கும்… பேரருள் பேரொளி உணர்வின் தன்மையை எளிதில் நுகர முடிகின்றது.

1.ஆகவே நீங்கள் செய்த இந்தச் சக்தியினை விரயமாக்காது
2.ஒவ்வொரு நாளும் இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் சப்தரிஷி மண்டலங்களை எண்ணி எடுத்து
3.தங்கத்தில் திரவகத்தை ஊற்றிச் செம்பையும் வெள்ளியையும் நீக்குவது போல்
4.மேலுக்குக் (உடல்) குளிப்பது போல் உங்கள் உணர்வைச் சுத்தப்படுத்துங்கள்.

தூங்கச் சொல்லும்போது சப்தரிஷிகளின் அருள்சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி அந்தச் சப்தரிஷிகளை எண்ணி கண்ணைத் திறந்தே சிறிது நேரம் ஏங்கி எடுங்கள்.

பின்.. கண்ணை மூடி சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டுமென்று நூறு முறையாவது ஏங்கி எடுங்கள். எவ்வளவு தூரம் இதை எண்ணி எடுக்கின்றீர்களோ அவ்வளவுக்கு லாபம் உங்களுக்கு….!

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீர் ஊற்றும் போது அழுக்கு நீர் குறைந்து கொண்டே வரும். செம்பும் தழும்பாது. ஞானியரின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க… அது பெருகப் பெருக அந்தத் தீமைகள் தணியும்.

உதாரணமாக ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அது குடிப்போரை மடியச் செய்கின்றது.
1.இதில் பல ஆயிரம் குடம் பாலை ஊற்றும் போது
2.விஷத்தின் தன்மை சிறுகச் சிறுகக் குறைந்து
3.அந்தப் பாலிற்கே வீரிய சக்தியாக இந்த விஷத் தன்மை அமைகின்றது.

இதைப் போல் நமக்குள் விஷம் கொண்ட உணர்வுகள் நமக்குள் பல இருப்பினும்…
1.நஞ்சினை வென்ற அருள் ஞானியின் உணர்வை நாம் நூறு முறையாவது எடுத்துக் கொள்வோம் என்றால்
2.இந்த உணர்வுகள் நமக்குள் ஒரு தூய்மைப்படுத்தும் சக்தியாக மாறும்.
3.நம் நினைவின் ஆற்றலும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே ஒன்றுகின்றது.

அதைப் பற்றுடன் பற்றும் நிலையும்… அந்த அருள் ஞான சக்தியை நமக்குள் பற்றுடன் பற்றச் செய்வதற்கும் தான் இதைச் சொல்கிறோம்.

ஏழு ஜென்மத்திற்குள் உயர்ந்த நிலை பெறத் தவறினால் மீண்டும் அடுத்த சந்தர்ப்பம் கிடைக்க பல கோடி ஆண்டுகள் ஆகிவிடும் – ஈஸ்வரபட்டர்

ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அதனதன் ஜீவ அமில குணங்கள் உண்டு. அக்குணத் தொடர்ச்சியில் எவ் அமிலத்தின் விகித நிலை கூடியுள்ளதோ அதன் சக்தித் தொடரில் அவ்வாத்மாவின் செயல் சென்றிட்டால் அவ்வாத்மாவின் ஒளி பிரகாசிக்கும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் பன்னிரண்டு வகையான அமில குணங்கள் உண்டு.
1.எதன் தொடரில் உயிரணு உதித்து உயிராத்மாவான மனித உடல் பெறுகின்றோமோ
2.அதிலிருந்தே இந்தப் பன்னிரண்டு வகையான குணங்களில் ஒன்றை ஒவ்வோர் ஆத்மாவும்
3.அதன் ஈர்ப்பிலேயே வளர்ச்சியை ஈடுபடுத்தி இழுக்கின்றது.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இப்பன்னிரண்டு வகையான குண அமிலங்கள் இருந்தாலும்…
1.ஏதாவது ஒன்றின் வளர்ச்சியின் வட்டத் தொடரில்தான் ஒவ்வோர் ஆத்மாவும் வளர்ந்து கொண்டே செல்கின்றதே ஒழிய
2.தனக்குள்ளுள்ள மற்றக் குண அமிலத்தை எண்ணுவதோ செயல்படுத்துவதோ இல்லை.

மனித ஆத்மாவாய் வரும் காலத்திலேயே இப் பன்னிரண்டு வகை குண அமில சக்தி பெற்ற பிறகுதான் மனிதனாகவே மனிதக் கருவிற்கு வர முடிகின்றது.

இயற்கையின் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகை நிலை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பொழுதைய செயற்கையிலேயே எப்படி ஒரு தாவரத்திற்கு அளிக்கும் எருவை (உரம்) மற்றொரு தாவரம் ஏற்பதில்லையோ அதைப்போல் ஒவ்வோர் இன வளர்ச்சிக்கும் உயிரணுவிலிருந்து அவை ஈர்க்கும் குண வளர்ச்சியின் தொடர்படுத்தித்தான் இன வளர்ச்சியும் வளர்கின்றது.

இந்தப் பன்னிரண்டு வகை குண அமில வளர்ச்சி பெற்ற பிறகு தான் மனித உருப் பெறுகின்றது. இம் மனித உருவில் அக் குண வளர்ச்சியின் சக்தியை அதன் வழித்தொடரிலேயே செயல்படுத்தினால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் தொடர் நிலையினால் ஏழு ஜென்மங்கள் எடுக்கக்கூடிய அளவிற்கு மனித உருப்பெற்ற காலத்திலேயே சக்தி கூடிவிடுகின்றது. அதன் தொடரில் ஏழு ஜென்மம் எடுக்கக் கூடிய சக்தி ஆற்றலுண்டு.

1.இச்சக்தியை உபயோகப்படுத்திச் செயல்படும் நல்லாத்மாக்கள்
2.இந்த ஏழு ஜென்மத்திற்குள் இப்பன்னிரண்டு வகையின் குண அமிலத்தை உரமாக்கி
3.சூட்சுமம் கொண்டு என்றென்றும் அழியாத வழித்தொடர் பெற்று விடுகின்றனர்.

இதில் சில ஆத்மாக்கள் இவ் ஏழு ஜென்மத்தின் வழித்தொடர் வந்து “கரை சேராத நிலையில்…” உலக மாற்றத்தில் சிக்குண்டு மற்றொரு பிரளயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளின் சுழற்சி வட்டத்திற்குச் செல்கின்றது.

மனித ஆத்மா உடலுடனே மனித வளர்ச்சிக்கு அடுத்த வளர்ச்சியில் அதிவிரைவில் மனித உடல் பெறும் பக்குவத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றது.

சில ஆத்மாக்களின் நிலையில்… இவ் ஏழு ஜென்மத்திற்குச் செல்லுவதற்குள்ளேயே
1.தான் பெற்ற இப்பொக்கிஷ குண சக்தியை உணராமல்
2.பேராசைக்கும் வெறி உணர்விற்கும் காம இச்சைக்கும் உட்பட்டு
3.அவ்வாத்மா வெறி உணர்வு கொண்ட மிருக வட்டத்திற்குள் சென்று
4.அதன் வழித் தொடர்ச்சியில் மிகவும் அல்லல்பட்டு அடுத்த சுழற்சி வட்டத்திலும்
5.மனித இனம் பெற வேண்டிய இப்பன்னிரண்டு வகையான குண அமிலம் பெறப் பல நாட்கள் சென்று விடுகின்றன.

இம் மனித ஆத்மாக்களுக்கு மனிதனாய் வாழக்கூடிய குண அமிலத்தைப் பெற்ற சக்தியை உணராமல் தன்னைத்தானே சிதறவிட்டு வாழும் நிலையை உணர்ந்தீரா…?

அகண்ட அண்டத்தில் பல கோடி மண்டலங்கள் இருந்தாலும் எல்லா மண்டலத்திலும் மனித உருப்பெற்ற ஜீவன்கள் இல்லையல்லவா…? ஆக… இன்று இந்த மனித உருப்பெறவே பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.

பல கோடி வகையான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனைப்போல அறிவு வளர்ச்சியுற்ற செயல் திறன் மற்றவற்றிற்கு இல்லை.
1.நாம் எதனை உணர்ந்தோம்…?
2.இன்றிருக்கும் நிலை நாளையில்லை
3.நேற்று நடந்த நிலை இன்று கனவுதான்.
4.இன்றைய நடைமுறை நாளை கனவு

கனவு என்பதையே மறந்து… நம்முள் ஏற்படும் இச்சைக்கெல்லாம் நம்மை நாமே அடிமைப்படுத்தி… கால வெள்ளத்தை விரயம் பண்ணி… வீண் சஞ்சலமான வட்டத்திற்குள் நம்மைச் சிக்க வைத்து வாழும் நிலைதான்… “இன்று நாம் வாழ்ந்திடும் நிலை…”

சில தாவரங்கள் எப்படி அதன் ஈர்ப்பின் தன்மையினால் வைரம் பாய்ந்த மரமாய் தன்னையே வளர்த்துக் கொண்டுள்ளனவோ அதைப்போல் நம் ஆத்மாவை வைரம் பாய்ந்த ஞான வட்டத்தின் சுழற்சியாக்கி அச் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தின் வழித்தொடரில் செல்ல வேண்டும்.

அவ்வளர்ச்சியின் வட்டத்திற்குச் சென்றுவிட்டால் அதன் தொடரில் பல சக்தி நிலையை நாம் உணரலாம்.
1.அந்த உணர்வின் சக்தியை உண்மையாக்கி
2.தன்னடக்கம் பெறும் பக்குவம் கொண்டு செயல்பட்டால்
3.அதன் தொடர்பில் அடையும் பேரானந்தம் உள்ளதே அவ்வானந்தத்தில்தான் அகிலமே கலந்துள்ளது.

இந்நிலையில் தான் பெற்ற நிலையை சிதறவிட்ட ஆத்மாக்களும் பல உண்டு… “நான்” என்ற நிலை ஏற்பட்டதினால்…!

தான் பெற்ற சக்தியை எக்காரணம் கொண்டும் நானாக்கிக் காட்டினால் அச்சக்தி நிலைத்திடுமா…? ஞானம் பெறவே பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பல காலம் சேமித்த இஞ்ஞான சக்தியையே நான் என்ற நிலையில் சிதறவிட்ட ஆத்மாக்கள் பலர் உள்ளனர் இன்று நம்முடனே.

சிதறவிட்ட பிறகு அவ்வாத்மாக்கள் அதன் தொடர்ச்சியில் செல்ல முடியாமல் அதன் கீழ் நிலைக்குத் தான் திரும்பவும் சென்று விடுகின்றன.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஒரு இயந்திரத்தைக் காட்டிலும் மனிதனின் எண்ண வேகம் மிக அதிகம்…!

 

மனிதனுக்கு மனிதன் இங்கே நாம் நேரடியாகப் பழகி ஒருத்தருக்கொருத்தர் நண்பர்கள் என்று உதவி செய்து கொண்டால் உதவி செய்த உணர்வு இரண்டும் கலந்து வெளி வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கிறது.

இது அலைகளாக மாறும்போது… நீங்கள் அமெரிக்காவில் இருந்தாலும்
1.நண்பன் ஒரு நல்ல காரியம் செய்யும் பொழுது
2.நான் அமெரிக்காவிற்கு வந்ததே அந்த நண்பனின் உதவியால் தான்…! என்று எண்ணும்போது
3.உடனடியாக அங்கே அந்த நண்பனுக்கு விக்கலாகின்றது.

அதே சமயத்தில் ஒரு நண்பருடன் சந்தோஷமாக இருந்து பழகி பின்னாடி.. தொழில் விஷயத்தில் ஒருவருக்கு ஒருவர் பகைமையாகி விட்டால் இருவருமே என்ன நினைக்கின்றோம்…?

1.இவரால் தான் நஷ்டமானது… இவனெல்லாம் உருப்படுவானா…? என்று
2.இருவருக்குள்ளும் இந்த உணர்வுகள் கூடி.. இரு உடலிலிருந்தும் இப்படிப் பரவச் செய்துவிடுகின்றோம்.

அடுத்து இவர் அமெரிக்காவிற்குச் சென்றாலும் இன்னொரு நண்பர் இங்கே வருகின்றார். நான் அமெரிக்காவில் உன் நண்பரைப் பார்த்தேன். அந்த நண்பர் உயர்ந்த நிலை பெற்று நல்ல நிலையில் இருக்கின்றார் என்று சொல்கிறார்.

சொன்னவுடன் பாவிப்பயல்… எனக்கு மோசம் செய்தவன் அங்கே போய் விட்டானா…! அவன் எல்லம் உருப்படமாட்டான்…! என்று அந்த உணர்வை வெளிப்படுத்தினால்
1.அது அங்கே சென்று அவனுக்குள் ஊடுருவுகிறது.
2.ஏற்கனவே பதிவானதன் துணை கொண்டு இந்த வீரிய உணர்வுகள் அவரின் உடலில் பாயத் தொடங்குகின்றது.

அந்தச் சமயத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால்… இந்த உணர்வுகள் அந்த நேரத்தில் இது பாய்ந்தால்… உறுப்புகள் சீராக இயங்காதபடி புரை ஓடும். புரை ஓடும்போது நுரையீரல் பாகம் ஒரு சோற்றுப் பருக்கை இழுத்து விட்டால் போதும். திக்கு முக்காடச் செய்துவிடும்.

உதாரணமாக வாய்க்காலில் ஒரு பக்கம் தண்ணீர் போகின்றது என்றால் அதில் ஒரு பக்கம் சிறு ஓட்டை விழுந்தால் போதும்…!
1.அதன் வழி தண்ணீர் சென்றால்…
2.தண்ணீர் வரும் நிலைகள் இருந்து காற்றின் நிலைகள் வரும்.
3.ஜிர்ர்..ர்ர்ர்… என்று இழுக்கும்…. இந்த இடத்தில் சுழிக்காற்று வரும்.
4.இனம் புரியாத நிலையில் அந்த பக்கம் ஒரு ஓசையும் வரும்.

அதைப்போலத்தான் இங்கே இந்த உணர்ச்சியின் தன்மை வரப்படும்போது குறுக்காட்டி நுரையீரலில் அந்த உணர்வின் வேகம் கூடிய பின் நாம் உணவாக உட்கொள்ளும் நிலையை இடைமறித்து வேகமாக இழுத்துவிடும்.

நுரையீரலில் உணவுப் பொருள் சென்றுவிட்டால் நாளடைவில் நாற்றமாகி அதிலே புழுக்கள் உருவாகி நுரையீரல் பின்னமாகிக் கடும் நோயாகி… மரணமடையவும் நேரும்.

அதே போல் ஒரு காரையே ஓட்டிச் சென்று கொண்டிருந்தாலும் கண் கொண்டு முன்னாடி உற்றுப் பார்த்து… உணர்வினை நுகர்ந்தறிந்து இந்த வாகனத்தைச் சீராக ஓட்டினாலும்..
1.ஓட்டிக் கொண்டிருக்கும் போது இங்கே நண்பர் வந்து
2.உன் நண்பர் அமெரிக்காவில் நன்றாக இருக்கின்றான் என்று சொன்னால்
3.அவன் எங்கே சென்றாலும் தொலைந்து போவான்… அடிபட்டுச் சாவான்…! என்று எதாவது உணர்வினைச் சொன்னால் போதும்.

அந்த உணர்வின் தன்மை இங்கே ஊடுருவி… அவன் உணர்வை நுகரக்கூடிய தன்மை வந்து…
1.அதே சமயத்தில் இந்த இரண்டு எண்ணங்கள் கலந்து உயிரிலே பட்ட பின்
2.வேகமான உணர்வுகள் வந்து சிந்திக்கும் தன்மை இழந்து
3.வாகனத்தைச் சீர்படுத்த முடியாத நிலையில் எங்கேயாவது ஆக்சிடெண்டாகும்.

எதிரே ஒரு மனிதர் வந்தாலும் பிரேக்கை அணைக்கும் தன்மை இழந்துவிடும். மோதியபின் தான் தனக்குள் தெரிய வரும். இப்படி எல்லாம் மனிதனை அந்தச் சந்தர்ப்பங்கள் இயக்கிடும் நிலை வருகின்றது.

உதாரணமாக கர்ப்பத்தில் குழந்தை இருக்கின்றது என்று வைத்து கொள்வோம். அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் யாராவது சாபமிட்டு இருந்தால் அதன் வழியில் அந்தக் குடும்பத்தின் சார்புடையோர் வேதனைப்பட்டால் போதும்.

இப்படிச் செய்தார்களே… அவர்கள் குடும்பம் உருப்படுமா…! என்று இந்த உணர்வின் சாப அலைகள் கர்ப்பிணித் தாய் நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய இந்தச் சிசுவிற்கும் பாதிப்பாகிறது.

அந்த நேரத்தில் வீட்டிற்குள்ளும் ஒரு நெடி கலந்த உணர்வுகள் வரும்.

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பியோ சகோதரர்களோ வீட்டிற்குள் பாகம் பிரிப்பதில் தவறான முறையில் பிரிக்கப்பட்டால் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அது வீரியம் கொண்டதாக மாறுகிறது.

கண்ணின் நினைவலைகளை இங்கே ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் போது அந்த எல்லையில் வரும்போது இந்த உணர்வின் தன்மை இங்கே வருகின்றது. அதே எண்ணத்தின் உணர்வுகளை இங்கே பரப்புகின்றது.

1.ஒரு இயந்திரத்தைக் காட்டிலும் கண்ணின் நிலைகள் வெகு தூரம் ஊடுருவி
2.அந்த உணர்வின் தன்மை அறியும் தன்மையும் அதை இயக்கும் தன்மையும் வருகின்றது.

இதை போன்று இந்த இயற்கையின் நியதிகள் இருப்பதை குருநாதர் ஒவ்வொரு செயலாக்கங்களிலும் எமக்குக் காட்டுகின்றார்.

இத்தகைய உண்மைகளை எல்லாம் அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்து அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் பெற்றவன் என்பதனையும் உணர்த்தி அகஸ்தியனின் ஆற்றலை நாம் அனைவரும் பருக வேண்டும் என்று தெளிவாக்கினார் குருநாதர்.

உயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது

 

ஒன்றுடன் ஒன்று மோதுண்டு ஒன்றை ஒன்று பின்னியே அண்ட கோளங்களும் அனைத்து நிலைகளும் உள்ளன.

ஓ…ம் என்ற நாதத்தின் உண்மை நிலையென்ன…? ஓ…ம் என்ற ஒலி எப்படி ஒலிக்கின்றது…? விஞ்ஞானத்தினால் கண்டுபிடித்த மின் விசிறிக்கு அதன் சுழலும் நிலை எப்படி வருகின்றது…?

மின் விசிறி சுழல மின்சாரத்தை அதில் பாய்ச்சியவுடன் அதன் காந்த சக்தியை ஈர்த்து அந்த மின் விசிறி சுழலுகின்றது. சுழலும் நிலையில் காற்றை நாம் எந்த எண்ணில் வைத்துச் சுழல விடுகின்றோமோ அதன் தன்மை கொண்டு அது சுழலுவதற்கு ஏற்ப அது பரப்பிடும் காற்று வருவதை உணர்கின்றோம்.

அதே போல் தான் நம் பூமி சுழல…
1.சூரியனிலிருந்து பாயும் காந்த அலையை நம் பூமி இழுத்து…
2.பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியைக் கொண்டு இக்காற்று ஏற்படுகின்றது.

காற்றுடன் ஒளியும் நீரும் கலந்துள்ளன. நீரின் நிலையுடன்தான் நம் பூமி அவ்வொளியை ஈர்த்து வெளிக்கக்கி… அதிகாற்றாக… பூமியைச் சுழலவிடும் அந்த ஓசைதான் ஓ…ம் என்ற நிலையில் நமக்குத் தெரிகின்றது.

இந்த ஒலியை ஒவ்வொருவரும் உணரலாம்.

ஏனென்றால் நம் பூமி எதையெல்லாம் ஈர்த்து உண்டு கழிக்கின்றதோ அந்தச் சக்தியெல்லாம் நமக்கும் உண்டு.
1.நீரிலிருந்து மின்சாரத்தைக் காந்த அலையுடன் எடுக்கின்றார்கள்.
2.நம் உடலில் உள்ள காந்த மின் அலையை நாம் அறிவதில்லை.

நம் காந்த மின் அலையை நாம் உணரும் பக்குவம் பெற்றோமானால் அதன் தொடரில் நம்மையே அவ்வொளியாகச் செயல்படுத்திட முடிந்திடும்.

இப்பூமி வெளிப்படுத்தும் இக்காற்று மண்டலம்தான் நம் உடலிலும் மோதுண்டு செல்லுகின்றது. சிறு எறும்பையும்… மென்மையான பூவையும் இந்தக் காற்றே மோதிச் செல்கின்றது.

1.இக்காற்று மோதும் இடமெல்லாம் ஒலி பெறுகின்றது.
2.அந்த ஒலியுடனே நீரும் சேருவதினால் ஒளியாகின்றது.
3.காற்று இல்லாவிட்டால் மணம் வீசிடாது.
4.அந்த மணம் பெறவும் அவ்வொளியும் ஒலியும் சேர்ந்துதான் அம்மணமே வீசுகின்றது.

காற்றில் உள்ள ஜீவனுக்கு இக்காற்றினிலேயே படர்ந்துள்ள நீர் தான் ஜீவ சக்தி. நம் பூமியில் வீசிடும் காற்றின் நிலைக்கும் பால்வெளி மண்டலம் மற்ற மண்டலங்களின் நிலைக்கும் பல கோடி மாறுபாடுகள் உண்டு.

ஜீவனுடன் கூடிய அதிசக்தி வாய்ந்த காற்று மண்டலம் நம் பூமியின் காற்று மண்டலம்…!

மற்ற மண்டலங்களின் தன்மையில் இந்நிலை மாறு கொள்கின்றது.
1.நம் பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலத்தில்
2.அக்காற்றுடன் கலந்துள்ள நீர் அலைகள் அதிகம்.

ஒவ்வொரு மண்டலமும் அதன் சுழற்சியில் அதன் சுவாசம் கொண்டு அவை உண்டு வெளிப்படுத்தும் பக்குவ நிலைக்கொப்பத்தான் அதற்குகந்த காற்று மண்டலம் உண்டு.

சூரியன் வளர்ந்து கொண்டே… சக்தியைப் பெற்றுக் கொண்டே… சுழன்று ஓடிக்கொண்டே… அனைத்து மண்டலங்களைக் காத்துக் கொண்டே… இருந்திட்டாலும் “நம் பூமியின் ஜீவ சக்தி சூரியனுக்கில்லை…”

அறிவு வளர்ச்சி பெற்ற ஆத்மாக்களைக் கொண்ட பூமி மட்டுமல்ல நம் பூமி. நம் பூமியின் ஆத்மாவிற்கே அறிவின் சக்தி ஜீவ பூமியப்பா நம் பூமி.

இப்பூமியின் ஆத்மாக்களின் நிலையை மாற்றி…
1.நம் பூமிக்குகந்த நிலையை
2.நம் பூமியின் ஆத்மாவே செயல் கொள்ளப் போகின்றது சிறிது காலத்திற்குள்…!

நாம் தான் நம் விஞ்ஞானத்திற்காக பூமியின் மட்டத்தை நகரங்களாக்கித் தார் ரோடுகளாகவும்… இல்லங்களை அழகுபடுத்தப் பல நிலைகளைச் செய்தும்… பூமியின் ஆத்மா சுவாசிக்கத் தடைப்படுத்தியும்… தாவரங்களின் இன வளர்ச்சியை காடுகளையெல்லாம் அழித்தும்… பூமியின் பொக்கிஷங்களையெல்லாம் நம் உல்லாசச் செயற்கைக்காகப் பாழ்படுத்தி விட்டோமே…!

ஆகவே… நம் பூமியின் ஆத்மா ஜீவன் கொண்டது. அது தன்னைத்தானே காத்துக் கொள்ளும்.

இம்மனித ஆத்மா எப்படி ஒவ்வொரு பிறவியாய்…
1.ஓர் உடல் கெட்டு மறு பிறவிக்கு வந்து.. மறு உடல் எடுத்து வாழ்கின்றனவோ
2.அதைப்போல் நம் பூமியின் ஆத்மாவிற்கும் பூமியின் கோளமென்ற இவ் உருவ உடல் வியாதிப்பட்டுவிட்டது.
3.எந்த நேரத்திலும் அதன் நிலை மாறும் கால கட்டத்தில்தான் நம் பூமியின் ஜீவ ஆத்மாவின் நிலை இன்று உள்ளது.

இதனை உணர்ந்து… நாமும் நம் ஆத்மாவை இக்குறுகிய காலகட்டத்திற்குள் உயர் சக்தி நிலை பெறும் பக்குவ நிலையை எய்திடல் வேண்டும்.

“நம் பூமி ஆத்மாவிற்கே ஜீவனுண்டு…” நம் சக்தியையும் அச்சக்தியே காக்கும் பக்குவத்தை… அந்த வழி முறையை நாம் உணரல் வேண்டும்.

நல்ல குணங்களைக் காப்பதற்காக வேண்டி சக்தி வாய்ந்த ஆற்றல்களை உங்களைப் பெறச் செய்கின்றோம் – ஞானகுரு

 

குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்கு நான் (ஞானகுரு) தொடர்ந்து உபதேசம் சொல்கின்றேன். ஆனாலும் எத்தனையோ பேர் வந்து கஷ்டங்களை எல்லாம் சொல்கின்றீர்கள்… நான் கேட்கின்றேன்.

ஒருத்தர் கஷ்டம் என்று சொல்வதை நீங்கள் கேட்டாலே உங்களுக்கு முடியாது போய் நோய் வருகின்றது. ஆயிரம் பேர் கஷ்டம் என்று சொல்வதை நான் கேட்டால் எனக்கு எத்தனை நோய் வரும்…? என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்…!

உங்களைக் காட்டிலும் பல வேதனைகள் எனக்கு வரும். எனக்கு அதைத் துடைக்கத் தெரியவில்லை என்றால் அப்புறம் நான் குருவாக உங்களிடம் வந்து சொல்ல முடியாது.

தீமைகளைத் துடைக்கத் தெரிய வேண்டும். இல்லையென்று சொன்னால் அந்த நோயெல்லாம் என்னைச் சேரும். கடைசியில் என்னையே மாற்றிவிடும்.

பாலிலே பாதாமைப் போட்டிருந்தாலும் சிறிது விஷத்தைப் போட்டால் என்ன ஆகும்…? அந்த நிலைதான் அடையும். ஆகையினால் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் மாற்றிக் கொள்கிறேன்… தூய்மைப்படுத்திக் கொள்கிறேன்.

உதாரணமாக ஒரு விஷமான பொருளைக் கையால் எடுத்துப் பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலை முடிந்ததும் அந்த விஷத்தை நீக்கிட அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததை வைத்துக் கையைக் கழுவிக் கொள்கிறோம் அல்லவா…!

வயல்களிலே பூச்சிகளைக் கொல்லும் மருந்தினைத் தெளிக்கின்றார்கள். எல்லாம் தெளித்துவிட்டுச் சாதாரண தண்ணீரில் கையைக் கழுவி விட்டு உணவை உட்கொண்டார்கள் என்றால் அந்த மருந்தின் விஷம் உடலுக்குள் ஊடுருவிப் போய்விடும்.

அப்புறம் அவர்கள் இருக்க மாட்டார்கள்…!

பூச்சியைக் கொன்றார். இருந்தாலும் அதற்குத்தகுந்த சோப்பை எடுத்துச் சுத்தமான நிலைகளில் கைகளைக் கழுவவில்லை என்றால் இவரைக் கொன்றுவிடும்.

இதைப் போலத்தான் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும் வேதனைப்படுவோரை எல்லாம் சந்தர்ப்பத்தால் உற்றுப் பார்க்கின்றோம்… விபரங்களையும் நாம் கேட்டறிகின்றோம்.

உயர்ந்த மனிதர் என்ற பண்பால் பல உதவிகளை நாம் செய்தாலும் அவர்கள் கஷ்டம் நமக்குள் வந்த பின் நம் நல்ல குணங்கள் இங்கே அழிந்து விடுகின்றது. இதைச் சுத்தமாக்க வேண்டுமா இல்லையா…?

1.தப்பு செய்தவர் யாரும் இல்லை
2.ஆனாலும் நாம் தவறு செய்யாமலேயே இத்தகைய நிலைகள் வருகின்றது
3.இயற்கையின் உணர்வை… இயற்கையின் இயக்கங்கள் எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையை
4.நம்மை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் நம் எல்லை எது…? என்று அறிதல் வேண்டும்.

நம் உயிர் ஒளியானது… நுகர்ந்த உணர்வைக் கொண்டு உடலை உருவாக்கியது. உடலைக் கொண்டு இருளை நீக்கும் ஒளியின் தன்மை பெற்றது… கார்த்திகேயா…!

நம்மை அறியாமல் வரும் தீமைகளை அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அகற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்வதே அது.

இந்தத் தெய்வம் செய்யும்… அந்தத் தெய்வம் செய்யும்…! என்பது எல்லாம்
1.நாம் எண்ணிய உயர்ந்த குணங்களே
2.நமக்குள் தெய்வமாக… அந்த உணர்வாக நம்மைச் செயலாக்கும்.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மையைத் தான் உயிர் இயக்குகின்றது. ஈசனாக இருந்து அதனின் உணர்வுகளை… நாம் எண்ணியதை நமக்குள் இருக்கும் மற்றதுடன் இரண்டறக் கலக்கின்றது. அது பிரம்மமாக நமக்குள் உடலாகச் சிருஷ்டிக்கின்றது.

இந்த உயிருடன் இயக்கப்படும் அதன் தொடர் வரிசையில் எக்குணமோ அதை இயக்கி அதனின் நிலைகள் கொண்டு இங்கே வளர்க்கின்றது நமது உயிர்.

நாம் தவறே செய்யவில்லை என்றாலும்… தவறு செய்வோனை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் இயக்கப்பட்டு… தவறை அறியச் செய்கின்றது. ஆனாலும் அறிந்த தவறின் உணர்வோ நம் உடலுடன் ஒன்றி விடுகின்றது.

ஒன்றிய நிலைகள் கொண்டு உயிரின் இயக்கத்தால் நம் அறிவால் அறியச் செய்யும் அதனதன் அறிவை அது இயக்குகின்றது.

வேப்ப மரம் தன்னுடைய கசப்பின் அறிவால் தான் தனது மணத்தைக் காற்றிலிருந்து நுகர்ந்து அது வளர்கின்றது. அதே சமயம் தன் மணத்தால் அது தன்னைப் பாதுகாத்து கொள்கின்றது.

ரோஜாப்பூவும் தன் நறுமணத்தால் தன்னைப் பாதுகாத்து கொள்கின்றது. தன் உணர்வால் தன் சத்தை எடுத்து கொள்கின்றது.

இதைப் போல்தான் நாம் எத்தனை கோடி மணங்களை நாம் நுகர்ந்தாலும் எத்தனை கோடி குணங்கள் இருந்தாலும் அதை எல்லாம் அறியச் செய்யும் நமது உயிர். அறிந்ததை மீண்டும் ஜீவ அணுவாக… உடலாக மாற்றிவிடும் நமது உயிர்.

உணர்வின் தன்மை உடலாக்கப்படும்போது ஓ…! என்று ஜீவனாக்குகின்றது உயிர். அதே சமயம் அந்த உடலாக இயக்கப்படும்போது அதுவும் ஓ…! என்று ஜீவனாக இயங்கிக் கொண்டிருக்கும்… அதன் தொடர் வரிசையில்…!

தவறு என்று கண்டு கொண்டாலும் அதை நாம் சுத்தப்படுத்தவில்லை என்றால் அதுவும் நம் உடலுக்குள் ஜீவன் பெற்று விடும். இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

ஏனென்றால் நான் படிக்காத மூடன் பேசுகின்றேன்…! ஆனால் இயற்கையின் உணர்வின் அளவை குரு காட்டிய உணர்வு கொண்டு அதை அறியும் ஆற்றலைப் பெற்றேன்.

1.நான் படித்துப் பேசவில்லை… அனுபவப்பட்டுப் பேசுகின்றேன்.
2.குருநாதர் எமக்குள் இருக்கும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு என்று உணர்த்தினார்
3.ஒவ்வொரு உணர்வும் எம்மை அது எவ்வாறு இயக்குகின்றது..? என்று அறிந்து பார்…! என்று
4.தனித்துத் தனித்துத் தனித்துத் தனித்துப் பிரித்துக் காட்டினார்.

ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் நுகரும் ஆற்றல் உனக்குள் எவ்வாறு வருகின்றது…? நுகர்ந்தபின் அந்த உணர்வின் குணங்கள் உனக்குள் எவ்வாறு ஜீவன் பெறுகின்றது….? அந்த உணர்வால் உன்னை எப்படி இயக்குகின்றது…? என்ற இந்தத் தெளிந்த மனதை குருநாதர் அனுபவப்பூர்வமாக எமக்கு ஊட்டினார்.

உடலில் இருக்கப்படும்போதே… அவருக்குள் கற்றுணர்ந்த உயர்ந்த உணர்வை… அவரின் உணர்வின் வலு கொண்டு எனக்குள் பதியச் செய்தார்.
1.பதிவு செய்ததை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு எடுக்கும்படி சொன்னார்
2.அதனின் துணை கொண்டு அதை எடுத்து வளர்ச்சியின் தன்மை பெற்றேன்.

அதே வழிப்படித்தான் உங்களுக்கும் இதை உணர்த்த்துகின்றேன்…!

முடிவு நிலையில் உள்ள நாம்… முதல் நிலைக்குச் செல்லும் பக்குவம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

தியானத்தில் நம் சுவாச நிலை சமநிலைப்பட்டவுடன்…
1.நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் எண்ணத்தை ஒரு நிலையில் குவித்து
2.எந்த மகரிஷியை எண்ணுகின்றோமோ அந்நிலை கொண்ட அருள் ரிஷியின் ஒளிக்கதிர்கள்
3.நம் உயிராத்மாவுடன் நாமெடுக்கும் சுவாசமுடன் மோதுண்டு
4.நாம் எடுக்கும் இச்சக்தியின் அருளைக் கூட்டச் செய்கின்றது.

முந்தைய கால புராணங்களிலும் நடைமுறை வாழ்க்கையிலும் ஆண்டவனே வந்து சில நிலைகளைக் கவியாக உணர்த்தியதாக உணர்ந்திருப்பீர்.

பல ஆயிரம் காலங்களாக இம்மனித எண்ண அறிவு வளர்ச்சி கொண்ட நாள் தொட்டே பல ரிஷிகளின் சக்தி நிலை நம் பூமியில் செயல்பட்டு வருகின்றது.

அந்தந்தக் கால நிலைகளுக்கொப்ப இச்செயல் நிலை கலந்து வந்தது.

இன்றைய மனித ஆத்மாக்களின் எண்ணத்தில்… இச்செயற்கை நிலையிலும் புத்தக அறிவின் உறவிலும் செயல்படும் நிலையில் பக்தி கொண்டு உள்ளதால்
1.தன் எண்ணத்தைக் குவித்து
2.சப்த ரிஷிகளின் நிலையுடன் தொடர்பு கொள்ளும் பக்குவ நிலை இக்கலிக்கு வரவில்லை.
3.இன்றைய கலியின் நிலையில் உணரும் பக்குவமும் இல்லை.

சப்த ரிஷிகளின் நிலையுமே இன்றைய இக்கலிக்குகந்ததாகத்தான் எவ்வெண்ணத்தில் மனித ஆத்மாக்கள் செல்லுகின்றனரோ அதே வழித் தொடர்கொண்ட சக்தியைத்தான் அவர்களும் நமக்கு உணர்த்துகின்றனர்.

கவியிலும் காவியத்திலும் இன்றைய சக்தி நிலையை உணர்த்தி… அதை ஏற்கும் பக்குவ ஆத்மாக்கள் “சில தான் உள்ளன…!” என்பதனைப் புரிந்தே கால நிலைகேற்ப அருள் ஒளிதான் அவ்வாண்டவனின் ஜெபம் கொண்டவர்களின் நிலையிலும் செயல்படுகின்றது.

நம் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி… இவ்வுலக வாழ்க்கையுடன் நம் வாழ்க்கையை ஜெயித்துக் காட்டிட வேண்டிய பக்குவ நிலை பெறவும் நமக்கேற்படும் அனைத்து நிலைகளிலிருந்து நம் நிலையை உயர்ந்ததாக்கும் செயல் நிலைதான் நமக்கு இன்று தேவைப்படுகின்றது.

அந்நிலை பெறவும்… இயற்கையின் உண்மை நிலையை அறியவும்… நம் எண்ணத்தை அவனிடம் செலுத்தும் பக்குவத்தைத்தான்… இன்றைய நம் நிலை இருந்திடல் வேண்டும்.

1.எண்ணத்தை ஒரு நிலைப்படுத்திக் குவிக்கக் குவிக்க
2.நம் சக்தி உயிரான ஈசனிடம் ஐக்கியப்பட்டு… உரமாய் அவன் சக்தியை நம்முள் ஊன்றச் செய்து
3.அவனும் நாமும் ஒன்றான நிலையில் நம் உயிராத்மாவும் நம் உடலும் இருந்திடும்.
4.இந்த நிலையில் நமக்கு ஏற்படும் நம்மைச் சுற்றியுள்ள எந்நிலையும் நம் அருகில் நெருங்காது.

இவ்வுலக மாற்ற நிலை கூடிய விரைவில் ஏற்படப் போவதினால் நம்மை அதிபக்குவப்படுத்தி நாம் செயல் கொண்டிடல் வேண்டும்.

மனித ஆத்மாக்களுக்குத்தான் இந்நிலையில் புகட்டுகின்றீர்…! மற்ற ஜீவன்களுக்கு அதன் ஆத்மாவைக் காத்திடும் பக்குவம் எப்படி ஏற்படும்…? என்ற வினாவும் எழலாம்.

இன்றைய நிலையில் எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்பவன் இம்மனிதன் தான்…!

மிருகங்களில் சிலவற்றின் நிலையும் பறவைகளில் சிலவற்றின் நிலையும் சில உயர்ந்த நிலையில் வாழுகின்றன. இம் மாற்றத்தினால் பறவைகளில் சிலவற்றின் நிலை சிதறுண்ட நிலையில் செயல்படப் போகின்றது.

பூமிக்கு மாற்றம் வரும் நிலையில் பறக்கும் பட்சிகளுக்குத் தப்ப முடியாதா…? என்று எண்ணலாம்.

காற்று மண்டலமே மாற்றம் கொண்டுள்ள இந்நிலையில் இப்பொழுதே பறவைகளின் எண்ணச் சிதறலின் வளர்நிலை தொடர்பட்டுவிட்டது. இவ்வுலக மாற்றத்திற்குள்ளேயே பறவைகளின் நிலை மிகவும் குறைந்துவிடும்.

நம் பூமியிலேயே பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பறவைகளின் நிலை இருந்ததைக் காட்டிலும் படிப்படியாய் இன்று குறைந்துவிட்டது.

மற்ற ஜீவராசிகளின் நிலையும் ஒரு சில இன வர்க்கங்கள் மிகவும் குறைந்து விட்டதற்குக் காரணமே…
1.தாவரங்களை அழித்ததினால் இக்காற்று மண்டலமே விஷத்தன்மை அதிகப்பட்டதிலிருந்து இம்மாற்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
2.முந்தைய காலங்களில் வயல்களில் விளையும் கதிர்களை பட்சிகளிலிருந்து காக்கத் தக்க நடவடிக்கை இருந்திட்டது
3.இன்றைய நிலையில் தாவரங்களை புழு, பூச்சி இவற்றிலிருந்து காக்கும் நிலைதான் அதிகப்பட்டுவிட்டது.

காலங்கள் மாற மாற இன வளர்ச்சியின் நிலையும் மாறிக் கொண்டே வருகின்றது. இப்பூமியில் கல்கியில் தொடர்ந்து இக்கலி வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் முடிவு நிலைதான்… இன்று நாமுள்ள நிலை…!

1.முடிவு நிலையில் உள்ள நாம்…
2.முதல் நிலைக்குச் செல்லும் பக்குவ நிலைதான் இங்கு உணர்த்தும் உண்மை நிலை…!

நாம் சுவாசிப்பது எது…? நாம் சுவாசிக்க வேண்டியது எது…?

 

பல கோடித் தாவர இனங்கள் வளர்ச்சிக்குப் பின் பல கோடி உயிரினங்கள் உருவாகி… உணர்வுக்கொப்ப உடல் பெற்று அதிலிருந்து உணர்வின் எண்ணங்கள் இன்றும் ஏராளமாக உண்டு.

1.மற்ற உயிரினங்கள் நுகர்ந்தது ஒரு உடலுக்குள் ஒரு உடல் ஐக்கியமாகி விடுகின்றது
2.ஆனால் மனித உடலுக்குள் உருவான உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தது.

அதை எல்லாம் சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்தந்த உணர்வைத் தாங்கி இன்றும் அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது “சூரியனின் இயக்கச் சக்தியாக…”

சூரியனைப் போல் தான் நாம் உயிரின் தன்மையும்…!

நாம் எதை எல்லாம் நுகர்கின்றோமோ இந்த உயிரின் துடிப்பால் அதை இயக்கிக் கொண்டே உள்ளது… அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது.
1.உடலை விட்டு உயிர் வெளியே சென்றாலும்
2.இந்த உடலின் தன்மை கரைந்தாலும்
3.உயிருடன் இந்த உணர்வுகள் நிலைத்தே இருக்கும்.

அதாவது… இந்த உயிருடன் நிலைத்து இருந்தாலும் இந்த உணர்வுக்கொப்ப உடல் இல்லை என்றாலும் உடலில் வேதனைப்பட்ட உணர்வுகள் அதிலே நிச்சயம் உண்டு.

ஒரு மனிதன் உடலுக்குள் இது சென்றால் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அங்கேயும் அதே உணர்வாக இயக்கும்.

ஒரு இயந்திரத்தில் நாம் ஒரு நாடாவில் பதிவு செய்து கொள்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதையே நீங்கள் எடுத்து மற்ற எந்திரங்களில் போடும் போது அந்த ஒலி அதிர்வுகளை எடுத்து ட்ரான்சாக்ஸன் கொடுத்து ஒலி/ஒளிப்பதிவைப் பதிவாக்கவும் ஒலி அலைகளைப் பெருக்குவதும் உணர்ச்சிகளைத் தூண்டுவதும் என்று பல செயல்களைச் செயல்படுத்துகின்றோம்.

ஒரு மைக்கின் (MIC) வழி கூடி நாம் சொல்வது போல…
1.இயந்திரமான இந்த உடலுக்குள் ஒரு மனிதனுக்குள் விளைந்த உணர்வை நுகரப்படும் போது
2.உயிரான காந்த ஊசியில் இந்த உணர்வலைகள் படர்ந்து அதன் மூலமாக
3.அந்த எண்ணங்களை அந்த உணர்ச்சிகளையும் நாம் அறிகின்றோம்.
4.அறிந்தாலும் இதை உயிர் உடலுக்குள் ஜீவ அணுக்களாக மாற்றி விடுகின்றது.

இந்த இயற்கை நிலைகளை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன் அவனில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு.

மனிதனாக வளர்ந்தவர்கள் தீமைகளை விளைய வைத்தாலும் சரி தீமையினுடைய உணர்வுகள் அவர்கள் உடலிலிருந்து வந்தாலும் சரி அடுத்தவர்கள் உடலுக்குள்ளும் ஊடுருவி… அங்கும் அது விளைந்து அதன் உணர்வுகள் இவ்வாறு பரவிக் கொண்டே தான் இருக்கின்றது… அழிவதில்லை…!

ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டான் என்றால் அந்த தற்கொலை செய்து கொண்ட உணர்வின் அலைகள் வெளிப்படும்போது
1.ஒரு மனிதன் பாசத்தால் அந்த உணர்வைக் கவர்ந்து கொண்டால்
2.அதே தற்கொலை செய்யும் உணர்வுகள் இங்கே தூண்டப்பட்டு
3.இவனையும் தற்கொலை செய்யும் நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தற்கொலை செய்யும்போது… அவன் உடலை எப்படிச் சிதையச் செய்ததோ இதே உணர்வுகள் வெளி வந்தபின் இதே சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

எப்போது… எந்த மனிதன் சோர்வடைந்து… என்ன வாழ்க்கை…? என்று வெறுப்பு அடைகின்றானோ அப்பொழுது இந்த உணர்வுகள் ஊடுருவுகின்றது.

அதே உணர்வுகள்… அதே உணர்ச்சிகள் அவனை இயக்கி… அவனையும் தற்கொலை செய்யும்படி செய்கின்றது. அவனாக அதைச் செய்வதில்லை. (உள் புகுந்த அலைகள் தான் இயக்குகிறது)

இந்த உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் எண்ணங்கள் செயலாக்கி அவனை அறியாமலே அந்த உடலை தற்கொலை செய்ய இயக்குகின்றது.

அதைப் போலவே… தீமைகள் வரும்போதெல்லாம்
1.நாம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்று எண்ணி
2.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி அதன் உணர்வை நாம் கவர்ந்தால்
4.நமக்குள் தீமையை அகற்றும் உணர்வின் வலுகூடும்.

ஏனென்றால் வலிமை கொண்ட உணர்வுகள் கொண்டு அதை அடக்கி விட்டால் நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாக மாறி… அந்த உணர்வின் ஞானமாக நமக்குள் இயக்குவதும்… நம் வாழ்க்கையைச் சீர்படுத்தவும் இது உதவும்.

நமது குருநாதர் இத்தகைய உண்மையின் உணர்வை அறிவதற்காக மலைக் காடெல்லாம் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்றார்.

1.மலைப்பகுதியில் அகஸ்தியன் பாதங்கள் பட்ட இடங்களில்
2.அவன் உணர்வுகளை அங்கே புவியில் ஈர்க்கப்படுவதும்
3.அவனின் உணர்வின் எண்ண அலைகள் அங்கே பரவியிருப்பதையும்
4.எந்தெந்த இடத்தில் எவ்வாறு அவன் செயல்படுத்தினானோ
5.அதன் நிலையெல்லாம் உணரும்படி செய்கின்றார்… உணர்த்தி வருகின்றார்

அந்த அலைகள் உலகம் எங்கிலும் கலந்துள்ளது. அதை நீங்களும் பெற வேண்டும்… பெறச் செய்ய வேண்டும் என்பதற்கே இந்த உபதேசம்.

ஆத்மா பிரிந்து விட்டது என்றால் “ஆத்மா என்பது என்ன…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தும் பக்குவ நிலைக்கு நம் ஆத்மாவைச் செயல்படுத்திட வேண்டும் என்று சொல்கிறோம். அந்த ஆத்மா என்பது எங்குள்ளது…?

இறந்து விட்டால் ஆத்மா பிரிந்து விட்டது…! என்கின்றோம். ஒரு ஜீவ உடல் இறக்கும் பொழுது அவ்வுடலில் இருந்து அவ்வுடலின் “உயிரணுதான்” முதலில் பிரிகின்றது.

1.அவ்வுயிரணுவிற்கும் அவ்வுடலில் உள்ள ஜீவனற்ற ஆத்மாவிற்கும் தொடர்பு கொண்டுதான்
2.அவ்வுடலிலிருந்து ஓர் அங்குல வட்டத்திற்குள் தான் அவ்வுயிரணு
3.அவ்வுடலின் மேல் பகுதியிலேயே அவ்வாத்மாவுடன் இருக்கும்.

ஆத்மா என்பது என்ன…? அவ்வுயிரணு சேமித்த அமில சக்தி தான் ஆத்மா…!

அவ்வுடலை எந்த நிலைப்படுத்துகின்றோமோ அதன் பிறகுதான் அவ்வுடலைச் சுற்றிக் கொண்டே உள்ள அவ்வுடலின் ஆத்மா இந்த உயிரணுவுடன் கலந்து ஆவி உலகிற்கு வருகின்றது.

எவ்வுடலும் அதன் ஜீவன் பிரிந்த உடனே அதனுடைய செயல் நிலை ஏற்படுத்துவதில்லை. அவ்வுடலை எரிக்கும் நிலையில் அதனுடைய உயிருடன் அவ்வாத்மா சுற்றிக் கொண்டு ஆவி உலகில் கலக்கின்றது.

மற்ற நிலையில் அடக்கம் செய்யும் உடலாத்மா அதன் உயிரணுவுடன் சேர்ந்து உடலில்லாமல் செயல் கொள்ளப் பல நாட்களாகின்றன.

1.ஆத்மா என்பது உடலின் அனைத்து உறுப்புகளிலுமே ஆவித்தன்மையில்
2.உடலில் மட்டுமல்லாமல் உடலைச் சுற்றியுள்ள நிலையிலும் படர்ந்துள்ளது.
3.உயிரணுவிற்கும்… ஆவி ஆத்மாவிற்கும்.. ஜீவனுடன் கூடிய ஆத்மாவிற்கும் பொருள் புரிந்ததா…?
4.ஆவி உலக ஆத்மாவிற்கும் ஜீவ உடல் ஆத்மாவிற்கும் மாறுபட்ட நிலை இதுதான்.

ஜீவ உடலை விட்ட ஆத்மாவிற்கு எண்ணத்தின் நிலையைச் செயலாக்கிட பிற எண்ணமுடன் (உடலுடன் கொண்ட) மோதித்தான் அதன் செயல் நிலை இருந்திடும். அதனால் தான் அதில் சிக்கிவிடக் கூடாது என்று சொல்கிறோம்.

நம் எண்ணத்தை ஒரு நிலை கொண்டு ஒவ்வோர் ஆத்மாவும் ஆசையுடன் வாழும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

1.அனைத்திற்குமே ஆசை வேண்டும்
2.அன்பு கொள்ளவும் ஆசை வேண்டும்
3.கோபத்தை விடவும் ஆசை வேண்டும்
4.எந்நிலை செயல் கொள்ளவும் அவ் ஆசை வேண்டும்
5.நமக்குகந்த ஆசையை நாம் ஆசைப்பட்டால்தான் எச்செயலும் நடக்கும்.

பேராசைக்குத் தான் நாம் இடம் தரலாகாது…!

அமுதான உணவானாலும் நாம் நம் உடலுக்கு வேண்டிய அளவுதான் உண்ணுகின்றோம். எப்படி உண்டாலும் அதிகமாய் நம் உடம்பு ஏற்றுக் கொள்கின்றதா…? இல்லையே…!

ஆக… உடலே தனக்குகந்த அளவு உணவைத்தான் செரிக்கும் பொழுது நம் எண்ணத்தையும் அளவுடன் கூடிய ஆசையை எண்ணியே செரிக்கும் பக்குவத்தை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

பித்தப்பையிலும் சிறுநீரகத்திலும் உருவாகும் கற்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

 

ஒன்றுடன் ஒன்று இணைந்து எண்ணிலடங்கா தாவர இனங்கள் உருவாகி அதை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு வளர்ந்த பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக உருப்பெறுகின்றது.

மனித உடல் மடிந்த பின் இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அழுகிய நிலைகள் ஆகும்போது அதிலே புழுக்கள் உருவாகின்றது.

அந்த உடலை உருவாக்கிய அணுக்களை எல்லாம் அது உணவாக உட்கொண்டு அதுவும் மடியும்போது அந்த மடிந்த நிலைகள் கொண்டு மற்றொரு ஆகாரத்தை எடுத்து அந்தப் புழுக்கள் பூச்சிகளாக மாறுகின்றது.

அது போன்ற புழுக்களின் தன்மை மடிந்த நிலையில்… மழைக்காலம் வந்தால் வெப்பமும் மற்றதும் இணைந்து கொண்டபின் பல பல பூச்சிகள் உற்பத்தியாவதைப் பார்க்கலாம்.

இதிலே பெரும்பகுதி மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவு தானியங்களில் இது பட்டால் அதை எல்லாம் அழித்துவிடும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள் என்பதை குருநாதர் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் செல்லப்படும்போது அக்காலங்களில் எவ்வழியில் மனிதன் வளர்ந்தான்…? மனித உடலில் விளைந்த நிலைகள் எவ்வாறு அலைகளாகச் செல்கின்றது…? என்று காட்டினார்.

1.மனிதனாக வளரும்போது உடலில் அணுக்களாக இருக்கின்றது.
2.மடிந்தால்… உடலிலிருந்து உயிர் பிரிந்து சென்ற பின்
3.தனித்து அதற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் அந்த உணர்வின் அணுக்களின் தன்மை எதுவோ
4.அதற்குத்தக்க புழுவின் தன்மை அடைகின்றது.

அந்தப் புழுக்களும் மடிந்த பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு மீண்டும் மற்ற தாவர இனங்களில் விழுந்து அதை உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது..

தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் புழுத்தன்மையை அடைந்தபின் இந்த உடல் மடிந்தால் இது நுகர்ந்த உணர்வுகளுக்கொப்ப பூச்சிகளின் ரூபங்களாக வருகின்றது.

பார்க்கலாம்… பல விதமான புழுக்களையும் பூச்சிகளையும்…!
1.மழைக் காலத்திற்கு முன்னாடி இருக்காது
2.மழை பெய்த பின் புவியின் வெப்பத்தின் தன்மை கொண்டு… இந்த உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு…
3.உருவாகும் சக்தியும் பெறுகின்றது என்பதனைக் குருநாதர் காட்டுகின்றார்.

இந்த உண்மைகளை குருநாதர் எவ்வாறு காட்டுகின்றார்…?

அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டு அவன் அறிந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

குருநாதர் அதைப் பின்பற்றி எடுத்து அந்த உண்மையின் உணர்வை வெளிப்படுத்தும் போது எமக்குள் பாய்ச்சினார்.
1.சூட்சுமத்தில் நடப்பதைக் காட்சிகளாகவும் அந்த உணர்வை நுகர்ந்தபின்
2.நுகர்ந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையையும் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றார்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவு கொண்டு கற்றுணர்ந்த பின் ஆய்வுக்கூடத்தில் (LABORATORY) வைத்து மனித உடலில் பல பல பரிசோதனைகளைச் செய்கிறார்கள்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றது… பித்தப்பையில் கற்கள் உருவாகின்றது என்றால் கற்கள் உருவாகுவதற்குக் காரணம் என்ன…? என்று அன்று மெய்ஞானி கண்டான்

நம் உடலுக்குள் வரும் நோயை போக்க பல விதமான ஆங்கில மருந்துகளை இன்று உட்கொள்கிறோம். இரத்தநாளங்களில் கலக்கப்படும்போது அந்த உணர்வின் சத்து இரத்தங்களில் கலந்து உடல் முழுவதும் சென்ற பின் பித்தசுரபி அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் வடிக்கின்றது.

அப்படி வடிக்கப்படும்போது உறைக்கும் உணர்வு கொண்ட மருந்து அங்கே சேர்ந்தபின் அது உறையும் தன்மையாக வருகின்றது. பித்த சுரபிகளில் கற்களாக உருவாகின்றது.

அதே சமயத்தில் இரத்தத்தில் கலந்து வருவதைக் கிட்னி அது சுத்திகரிக்கக்கூடிய நிலை வரும்போது உப்புத் தன்மை அடைந்திருந்தால் அங்கேயும் உறையும் தன்மை அதிகரிக்கின்றது.

பின் சிறு மணலாக மாறினால் அதனின் வளர்ச்சியின் தன்மை கல்லாக மாறுகின்றது… ஒரு சிலருக்குப் பெரும் கல்லாகக் கூட மாறுகின்றது.

இது எல்லாம்…
1.இந்த இயற்கையின் நிலைகள் ஒவ்வொன்றும் தான் சுவாசித்த நிலைகளும் உணவாக உட்கொள்ளும் நிலைகளும்
2.தான் வாழ்க்கையில் மற்ற உணர்வின் தன்மைகளைக் கவர்ந்திருந்தாலும்
3.அந்த உணர்வுக்குள் ஏற்படும் இரத்தத்தின் கசிவுகளை (உப்பு நீராகக் கசிவது போல்) இது எப்படி மாற்றுகின்றது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

காரணம்… சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும் உணர்வுகளையோ சலிப்பு கொண்டவர்களையோ நாம் காண நேர்கின்றது. உதாரணமாக ஒரு சிறுநீரகக் கோளாறு உள்ள மனிதனை உற்றுப்பார்க்கின்றோம்… பழகுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிகமாக அவரிடம் பழகி இருந்தால் அவனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகரப்படும் போது அவன் உடலில் உணர்வான அந்த உறையும் தன்மை நமக்குள்ளும் வருகின்றது.

1.ஆனால் டாக்டர்கள் பார்க்கப்படும்போது
2.நோயை நீக்க வேண்டுமென்ற உணர்வு வரப்படும்போது இதைக் கவர்வதில்லை.
3.ஒரு இரக்கம் ஈகை கொண்ட டாக்டர் இதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தால் அவருக்கும் இதே நோய் வரும்.

ஆகவே இதைப் போல் தான் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் கலந்து நம் இரத்தநாளங்களில் கலக்கப்படும்போது
1.ஒன்றில் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் அதே செயல்களாகச் செயல்படுகின்றது என்று
2.இதையெல்லாம் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர்.

இது போன்ற விஷத் தன்மைகள் நம் உறுப்புகளில் சேராதபடி தடுக்க வேண்டும் என்பதற்குத்தான் தியானத்தில் அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடல் உறுப்புகளில் சேர்த்துக் கொண்டே வர வேண்டும் என்று சொல்கிறோம்.

உறக்கத்தில் வரும் கனவுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் எண்ண நிலையைத் திசை திருப்பிடவும் இவ்வுலகில் பல நிலைகள் பல வழியில் நம்மை வந்து மோதத்தான் செய்யும். நாம் தான் இந்நிலையிலிருந்து நம் எண்ணத்தை ஓ…ம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஞானிகளின் உணர்வுடன் சுழல விடவேண்டும்.

காலையில் துயிலெழுந்து இரவு உறங்கும் காலம் வரை நம் எண்ணத்துடன் பல செயல்கள் மோதுண்டு நம்மைப் பல நிலைகளுக்கு ஆளாக்குவது என்பது மட்டுமல்ல.

பகலில் ஏற்படும் செயல்களின் நினைவுடனே நாம் உறக்கம் கொள்வோமானால்…
1.அந்நினைவின் தொடரில் அதே நினைவுடன் கூடிய இக்காற்று மண்டலத்தில் கலந்துள்ள பல ஆத்மாக்களின் நினைவலைகளும்
2.நாம் நம் செயலின் நினைவலைகளும் உள்ள நிலையில் அதுவும் இதுவும் மோதுண்டு
3.அதன் எண்ணச் சுழற்சியில் நம் எண்ணம் சிக்குண்டு
4.உறக்கத்தில் உள்ள நிலையில் நம் செயல் எண்னத்தின் தொடர் எண்ணத்தில் நம்மைச் செல்லவிடாமல்
5.நம் எண்ணத்துடன் மோதுண்ட பிற ஆத்மாவின் எண்ணச் செயல் நிலையின் எண்ண ஓட்டத்திற்கே
6.நம்மை அவ்வாவி ஆத்மா தூண்டி அதன் எண்ண கலவையின் ஓட்டமுடனே நாம் செல்லும் நிலையில் தான்
7.நமக்கு ஏற்படும் கனவுகளில் நம் வாழ்க்கைக்கும் எண்ணத்திற்கும் ஒட்டாத செயல்களை எல்லாம் கனவில் காணுகின்றோம்.

உடலை விட்ட ஆத்மாக்களுக்கு உணவுமில்லை உறக்கமுமில்லை. மனித ஆத்மாக்கள் உறங்கிடும் வேளையில்… இவ்வாவி உலக ஆத்மாக்கள் தன் எண்ணத்தைச் செயல்படுத்த அதனுடைய எண்ண நிலைகேற்ப ஆத்மாக்களின் நிலைகளில் “நம் வட்டத்திற்குள் வந்து… நம் எண்ணத்தைத் தூண்டுகின்றது…”

இரவில் நாம் காணும் துர்க்கனவானாலும் ஆனந்த நிலை கொண்ட கனவாய் இருந்தாலும் நாம் உறங்கி எழுந்த பிறகு காலையில் நம் நினைவில் வருவதை வைத்து என்ன செய்கிறோம்…?

அதே எண்ண ஓட்டத்தில்…
1.இப்படிக் கனவு கண்டு விட்டோமே…
2.கனவு பலித்திடும் என்று செப்புகின்றனரே…! என்ற எண்ணத்தில் மோதவிட்டு
3.அதே நினைவுத்தொடரில் நாம் எடுக்கும் சுவாசத்தினால்
4.நம் சப்த அலையுடன் இந்நிலையும் கலந்து அதன் தொடர்ச்சியில் நம் செயல் நிலை இழுக்கப்படுகின்றது.

நல்ல ஆனந்த நிலை கொண்ட கனவும் இந்த நிலையே…! கனவில் ஏற்படும் நிலையினாலும் நம் வாழ்க்கையில் சில நிலைகள் தொடர் கொள்கின்றன.

பகலில் மட்டும் நம் செயலின் எண்ணம் கொண்டு நம் நிலை ஏற்படுவதில்லை. பகலிற்கு மேல் இரவிலும் நம் எண்ணம் செயல்படுகின்றது என்பதனை உணர்ந்தீரா…?

நாம் உறங்குவதற்கு முன் ஒரு ஐந்து நிமிடமாவது நம்மையே தியானத்துடன் கலக்கும் நிலைப்படுத்தி நம் தாய் தந்தையரை வணங்கி ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகள் ஞானிகளை எண்ணி அதைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடனே உறங்கினால் உறக்கத்தில் உள்ள நிலையில் நம் உயிரைச் சுற்றியுள்ள நம் ஆத்மாவுடன் நாம் எடுக்கும் இந்தச் சுவாசமே சுழன்று கொண்டிருக்கும்.

அந்த நிலையில் நம் எண்ணமும் நாம் விழித்துள்ள நிலையில் செய்த செயல் எண்ணமும் அதன் தொடரில் நாம் காணும் பல பல (கற்பனை) எண்ணங்களும் தியான நிலையில் உள்ள ஆத்மாவுடன் வந்து மோதுவதுமில்லை. பல கனவுகளைச் சிதறுண்டு நாம் காணவும் முடிந்திடாது.

உறங்கும் நிலையிலும் நாம் நல் சக்திகளை வளர்த்திட முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

செல்வத்தைத் தேடும் ஆசையால் கடைசியில் நாம் வேதனையைத் தான் அனுபவிக்கின்றோம்

 

அகஸ்தியன் அவன் கண்டுணர்ந்த நஞ்சினை வென்றிட்ட வழிகளிலேயே நாமும் செயல்பட வேண்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு மனமும் ஒன்றிட வேண்டும் என்று உணர்வின் தன்மையை வளர்த்து இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இரு உணர்வும் ஒன்றி ஒளியின் உணர்வாக உருவாக்கி எத்தகைய நஞ்சினையும் வென்றிடும் ஒளியின் தன்மை பெற்று ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவன் வழியிலேயே நாமும் சென்று எந்த நேரம் இந்த உடலிலிருந்து நாம் பிரிந்தாலும் பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திட நாம் ஒவ்வொரு நாளும் முயற்சிப்போம்.

இதை ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் நமது செல்வம் நிலைப்பதில்லை நம் உடலும் நிலைப்பதில்லை.

நிலையில்லாத இந்த உடலுக்கு நிலையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டு தேடிய செல்வத்தைச் சீராக பயன்படுத்தத் தவறும் போது அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகி விடுகின்றது.

ஏனென்றால் நாம் சேமித்த செல்வத்தை நம் பிள்ளைகள் செலவழிக்கின்றார்கள் அல்லது கடன் கொடுத்தது திரும்ப வரவில்லை என்றால் அதன் வழி கொண்டு வேதனையைத் தான் எண்ணுகின்றோம்.

1.அந்த வேதனைப்படும் நிலையே நமக்குள் எதிரி என்ற உணர்வுகளை உருவாக்கி
2.செல்வத்தைக் காக்கும் செயலை இழந்து
3.உடலின் தன்மை கொண்டு நாம் செல்வத்தைச் சேமித்தாலும்
4.அதனால் வேதனை என்ற உணர்வுகள் நுகர்ந்து இந்த உடலையே அழித்திடும் தன்மை வருகின்றது.

ஆகவே அந்தச் செல்வம் நம் உடலைக் காப்பதில்லை. அந்தச் செல்வம் நல்ல குணங்களையும் காப்பதில்லை. இருப்பினும் மனிதன் என்ற நிலையைச் சீர்குலையச் செய்து செல்வத்தால் பேரழிவு வருகின்றது.

செல்வம் தேவைதான்… செல்வத்தினைத் தேடும் முறைகள் வேறு. செல்வத்தைத் தேடும் முறைகள இருப்பினும் “போதும்…” என்ற மனம் இருந்தால் செல்வம் தன்னை நாடியே அது வரும்.

ஆனால் தனக்குச் செல்வம் வேண்டும் என்ற நிலை வரப்படும்போது அந்த உணர்வின் இயக்கமாகக் குறைகளைச் செயல்படுத்தத் தான் செய்யும். மற்றவருடைய பொருளை (மனத்தை) அறியத் தெரியாது. உண்மையின் உணர்வை அறியத் தெரியாது.

செல்வத்தையே தேடும் நிலையோ அல்லது அதை நமக்குள் பெறும் நிலையோ வரும்போது
1.ஈகை என்ற நிலை வராது… இரக்கம் என்ற நிலைகளும் வராது…!
2.பண்பென்ற நிலைகளை அழிக்கப்படுகிறது
3.துன்புறுத்தும் உணர்வே அங்கே விளைகின்றது… ஒதுக்கும் நிலையே இங்கு வருகின்றது.

இப்படிப்பட்ட உணர்வின் தன்மைகளத் தனக்குள் எடுக்கும் பொழுது செல்வத்தால் நமக்குள் தீமையின் தன்மை தான் வருகின்றதே தவிர நன்மை இல்லை.

செல்வத்தைப் பெற்றிருந்தாலும்… கடைசியில் செல்வத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்…! என்று பின்னாட்களில் வேதனை என்ற உணர்வே வருகின்றது.

ஆக… தேடிய செல்வத்தால் விஷத்தின் தன்மை தனக்குள் உருவாக்கப்பட்டு உடலிலிருந்து நாம் அகன்ற பின் விஷத்தின் உணர்வு அதிகரித்தால் மனிதன் சிந்தனையை இழக்கப்பட்டு மனிதனல்லாத உடலை உருவாக்கிடும் நிலையே வருகிறது.

இன்னொரு பற்று கொண்ட மனித உடலுக்குள் இந்த உயிரான்மா சென்றாலும்… எடுத்துக் கொண்ட வேதனைப்படுத்தும் உணர்வு கொண்டு ஒருவர் நமக்குக் கொடுக்கவில்லை என்றால் இவன் தான் என்னை வேதனைக்குள்ளாக்கினான் என்று எண்ணினால் அந்த உடலுக்குள் புகுந்து இதே வேதனை என்ற உணர்வை உருவாக்கி அதையும் வீழ்த்தத் தான் செய்யும்.

வீழ்த்திய பின் அடுத்து பாம்பினமோ தேளினமோ போன்ற நிலையை உயிர் உருவாக்கி விடுகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

ஏனென்றால் விஷத்தின் தன்மை அதிகரித்தால் அந்த விஷத்தின் துணை கொண்டு மற்றதைக் கரைத்து தான் உணவாக உட்கொள்ளும் இதற்கே உதவும்.

தன் உணவுக்காக ஊர்ந்து சென்று பிறிதொரு எதிரி என்ற நிலை தன்னை தாக்கிடாது அஞ்சி வாழும் நிலையில் நரக வேதனையே அது அனுபவிக்கின்றது. அத்தகைய நரக லோகத்தின் நிலைக்கு நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

1.ஆகவே பல கோடிச் சரீரங்களைக் கடந்து
2.சொர்க்க பூமியாக சொர்க்க உடலாக சொர்க்க லோகமாக உருவாக்கிடும் உயிரை நாம் மதித்திடல் வேண்டும்
3.தீமைகள் நமக்குள் உருவாகாதபடி ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை உருவாக்க வேண்டும்.

ஆன்மாவுக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்து என்ன பயன்…? – ஈஸ்வரபட்டர்

காட்சி:
பாட்டிலில் புனலை வைத்துத் திரவத்தை ஊற்றும் நிலை தெரிகின்றது.

விளக்கம்:
முந்தைய காலங்களில் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்திய ஜெப அருளினால் மட்டும்தான் ஞான நிலை பெற முடிந்தது. எழுதி வைத்துப் படிக்கும் நிலை அன்றில்லை…!

குப்பியில் புனலை வைத்துத் திரவத்தை ஊற்றுவதைக் கண்டோம். அக்குப்பிக்குப் புனல் உள்ளதினால் அதில் ஊற்றும் திரவம் சிந்தாமல் ஊற்ற முடிந்தது.
1.புனல் இல்லாவிட்டால்…
2.எண்ணத்தைச் சிறிது மாற்றினாலும்…
3.அத்திரவம் சிந்தி விடுகின்றது.

இன்றைய ஏட்டு நிலை கொண்டு ஆரம்ப நிலையிலேயே அறியும் பக்குவத்தை நாம் உணரப் பல நிலைகள் எழுத்து வடிவினில் தரப்படுகின்றன.

ஆனாலும் புனலைப்போல் நம் ஆத்மாவுக்குகந்த ஈர்ப்பு நிலையை நாம் உணராமல் வாழுகின்றோம். இம்மனித ஆத்மாவுக்கு மட்டும்தான் காந்த அமில சக்தியுடைய ஈர்ப்பு சக்தி அதிகம்.

இவ்வுலகின் ஈர்ப்பு நிலைக்குகந்த அமில சக்தியில் தாவர வர்க்கங்களும் மற்ற உலோகங்களும் அதற்குகந்த அமிலத்தைத் தான் ஈர்க்கும்.

மற்ற ஜீவ ஜெந்துக்கள் அதன் எண்ண வளர்ச்சியில் எச் சக்தியில் ஜீவன் பெற்றதோ அதன் வளர்ச்சித் தொடரில்தான் செல்லும். அனைத்து நிலைகளையும் உணரும் சக்தி சில ஜீவராசிகளுக்கு இருந்திட்டாலும் செயல்படத்தக்க இயற்கை நிலை இல்லாததினால் மனித ஆத்மாவை ஒத்த செயல் நிலை அவற்றிற்கும் இல்லை.

1.இம் மனித ஆத்மா ஒன்றுக்கு மட்டும்தான் இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி அமில நிலையினில்
2.தனக்கு வேண்டியதைப் பிரித்தெடுக்கும் ஆற்றல் உண்டு.

இம் மனித ஆத்மா ஒரு நிலை கொண்ட ஜெப அருள் பெற்று விட்டால் எண்ண சக்தியை ஒரு நிலையில் எண்ணி எடுக்கும் சுவாசத்தில் இருந்து அவ்வெண்ண சக்தியின் தொடர் நிலை கொண்ட அமிலத்தின் ஈர்ப்பினால்… “எதை எண்ணி நம் ஜெபக் குறி உள்ளதோ…” அந்நிலையை நாம் எடுக்கும் சுவாசத்தில் அலையுடன் நம் உயிராத்மா அவ் ஈர்ப்பு காந்த அமிலத்தை நமக்கு ஈர்த்தெடுத்து அளிக்கின்றது.

1.விழியை மூடிக் கொண்டே நாம் எடுக்கும் சுவாசத்திலிருந்து
2.எவ்வெண்ணத்தைப் பாய்ச்சி நம் தியானம் உள்ளதோ
3.அதன் தொடர்நிலை அனைத்தும் விழியுடன் காண்பதைப் போலவே காணலாம்.

இக்காற்றிலுள்ள ஜீவ அணுக்களை நமக்குகந்த அமிலத்தை நம் சுவாசம் எடுக்கும் நிலை பெறல் வேண்டும்.
1.காற்று மண்டலமே இன்றைய நிலையில் விஷத்தன்மை கூடி விட்டது என்றாலும்
2.நம் சுவாசத்திற்கு வேண்டிய நல் அணுக்களை நாம் சுவாசிக்கும் ஈர்ப்பு நிலை பெற வேண்டும்.

இத்தொடர் நிலை ஜெபத்தினால் நம் ஜெப சக்தியில் எவ் அமிலத்தையும் நாம் நமதாக எடுத்திடாமல்.. எம் மண்டலத்திலிருந்தாலும் நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து வாழும் பக்குவத்தை அறியலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் செயற்கைக் கோளைக் கொண்டு நம் மண்டலத்திலிருந்து பிற மண்டலம் செல்ல நம் பூமியின் அமிலக் காற்றை அதில் செல்லும் ஜீவ ஆத்மாவிற்கு எடுத்துச் சென்றும் பல பாதுகாப்பு நிலைகளைப் புகைப்படமாக்கி இப்பூமிக்கு அறியும் நிலையை ஏற்படுத்தி வர ஏவுகின்றனர்.

ஜெப நிலை கொண்டு தன் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை இக்காற்று மண்டலத்தில் எக் கோளத்தில் இருந்தாலும் ஈர்க்கும் பக்குவம் பெற்றுவிட்டால் இவர்கள் அனுப்பும் செயற்கைக் கோளில் எப்பாதுகாப்பு சாதனமும் இன்றி ஆகாரம் எடுத்துச் செல்லாமல் இவ்வுடலுடனே குறிப்பிட்ட காலங்களுக்குச் சென்று வர முடிந்திடும்.

1.எண்ணத்தில் ஜெப நிலை பெறல் வேண்டும்
2.அச்சாதனை நிலைபெற்ற ஆத்மாவினால் இச்செயல் நிலை கொள்ள முடியும்
3.பயமும் திகிலும் கொள்ளும் சிறு எண்ணப் பிசிறு உள்ள நிலையிலும் இச்செயல் நிலை சாத்தியமல்ல.
4.இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நிலையிலேயே சப்தரிஷியின் நிலை பெறும் ஆத்மாவினால்தான் அந்த நிலை பெறல் முடியும்.

சூட்சுமத்தில் உள்ளோரின் நிலை வேறு…! இவ்வுடலுடன் கொண்ட சூட்சும நிலை கொள்ளும் ஆத்மாவினால் இச்செயல் நிலை செயல்படுத்திட முடிந்திடும்.

“மனித ஆத்மா ஒவ்வொன்றிற்கும் இச்சக்தி நிலையுண்டு…!” என்பதனை உணர்த்தத்தான் இந்நிலை விளக்கப்பட்டதேயன்றி நம் வாழ்க்கையின் நம் ஆத்மாவின் குறிக்கோளுக்குச் செப்பவில்லை.

இவ்வாத்மாவிற்கு உகந்த சக்தியை உணர்த்திடத்தான் இந்நிலை உணர்த்தப்பட்டது.

இக்கால நிலையுடன் கலந்து வரும் பூகம்பத்தையும் இடி மின்னலையும் எரிமலை கக்கும் நிலையையும் பனிமலை உறையும் காலத்தையும் கடல் கொந்தளிக்கும் நிலையையும் இவ்வுடல் மண்டலத்தில் ஈர்க்கும் நிலைப்படுத்தி உணர்ந்திடலாம்.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே உடலுடன் இருந்த பல ஆத்மாக்கள் பல நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நிலைகளையெல்லாம் அறியும் பக்குவம் பெற்று இப்பூமியிலேயேதான் வாழ்ந்தார்கள்.

1.இன்று நாம் நமக்குகந்த உண்மை நிலையை உணராமல் செயற்கையில் மகிழ்ந்து வாழ்கின்றோம்
2.நம் ஆத்மாவையே செயற்கையுடன் ஒன்றச் செய்து விட்டோம்
3.ஆன்மாவுக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்து என்ன பயன்…?

“சீதா” ஜனகச் சக்கரவர்த்திக்கு வளர்ப்பு மகள் என்றால் அதனுடைய விளக்கம் என்ன…?

 

இராமாயணத்தில் காட்டப்பட்ட ஜனகச் சக்கரவர்த்தி என்பது சூரியன். பூமியிலிருந்து வெளிப்படும் சத்துக்களை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கிறது.

அதிலே சுவை கொண்ட உணர்வின் எண்ணங்கள் கொண்டே மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலையை உணர்த்துவதற்காக ஜனகச் சக்கரவர்த்தி என்று சூரியனைக் காட்டுகின்றனர்.

ஒரு நிலத்தினைப் பண்படுத்தி நல்ல வித்தினை ஊன்றினால் அதிலே விளைந்த சத்து (வித்துகள்) சீதா என்றும் அதை உணவாக சுவைக்கப்படும் பொழுது மகிழ்ச்சியின் நிலைகளை நாம் பெறுகின்றோம் என்று காட்டுகின்றனர்.

1.அதாவது உணர்வின் சத்தைத் தான் சூரியன் கவர்ந்து வைத்திருக்கின்றது
2.ஜனக சக்கரவர்த்தி அதைத் தத்தாக எடுத்து (சீதா என்ற சத்தை) அவன் வளர்க்கின்றான் என்ற பேருண்மையைக் காட்டுகின்றார்கள்.

மனிதனில் எடுத்துக் கொண்ட கோபமோ காரமோ மற்ற உணர்வுகள் எல்லாமே சீதா தான். அதைத்தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.

ஆனால் காடுகளில் விளைந்த விஷத் தன்மைகளை நாம் நுகர்ந்தால் என்னவாகும்..? நம்மைக் கொன்றுவிடும். இதைப் போல உணர்வுகள் அதனதன் விளைவுகளை… அதன் ஒலி அலைகளைப் பாய்ச்சப்படும்போது அதனுடைய திறமைகளைத்தான் காட்டும்…! என்பதனை உணர்த்துகின்றனர்.

அதே சமயத்தில் ஜனக சக்கரவர்த்தி சுயம்வரத்தை வைக்கின்றார். திறமைகளைக் காட்டுபவர்களுக்கே தன் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து தருவேன் என்று…!

ஒரு கொடியவன் மற்றவரை வீழ்த்திடும் திறமையைக் காட்டுகின்றான். வில்லிலே நாண் ஏற்றி அம்பை எய்து மற்றவரை மரணமடையச் செய்கின்றான். மற்றதைத் துன்புறுத்தும் நிலைகளையே அவன் உருவாக்குகின்றான்.

முதலிலே சொன்ன மாதிரி காடுகளின் விளையும் விஷச் செடிகளின் உணர்வினை நாம் நுகர்ந்தால் அது நம்மைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால்
1.மனிதனாக உருவான பின்… மனிதன் வளர வேண்டும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்ற உணர்வினை எடுத்து
2.அந்த உணர்வினைச் சீதாவாக எடுத்து சூரியன் வளர்க்கப்படும்போது
3.அதனை நாம் அரவணைக்கும் சக்தியாக எப்படிப் பெற வேண்டுமென்று தான் இராமயாணத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதனை நாம் சற்றும் சிந்தித்தோமா…? என்றால் இல்லை.

இராமாயணம் என்ற காவியத்தைக் கடவுளாக்கப்பட்டு அந்தக் கடவுளை வேண்டினால்… இராம நாம ஜெபத்தை நாம் ஜெபித்தால் நமக்கு உதவி செய்வான்…! என்று இப்படித்தான் நமக்குள் ஊட்டிவிட்டார்கள்.

அந்த இராம நாமத்தை நாம் சொன்னாலும் நாம் எந்தக் குணத்தை எடுத்தோமோ அது தான் சீதா. உதாரணமாக…
1.நான் வாழ வேண்டுமென்ற உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.ஒருவன் எதிரியாக வரும்போது அவனைப் பழித்துப் பேசும் உணர்வு கொண்டு
3.அவனைத் தாக்கும் நிலைகளே வரும்… ஒதுங்கி நிற்கும் நிலைகளே வரும்…!

இது போன்ற தீமைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்காகத் தான் சீதாவைத் திருமணம் செய்வதற்காக… தன் மகளைத் திருமணம் செய்ய அவரவகள் திறமைகளைக் காட்டும்படி செய்தார் என்ற நிலையைக் காவியமாகப் படைத்து நம்மைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

அவரவர்கள் திறமையைக் காட்டும் போது அங்கே பிறரைத் தாக்கக்கூடிய அம்புகளை வைத்து… மற்றவரைக் குறி வைத்துத் துன்புறுத்தும் இயக்கங்களே வருகின்றது.

ஆனால் பிறரைத் துன்புறுத்தும் அந்த உணர்வின் தன்மையை…
1.இராமன் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்
2.பிறரைத் துன்புறுத்தும் எண்ணத்தையே அக்ற்றி விட்டால் அந்த வேதனை என்ற நிலையே வராது.

சுவை கொண்ட உணர்வினைத் தனக்குள் உணவாக்கும் போதுதான் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக நமக்குள் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

ஆகவே அந்தக் குணத்தை எடுத்து அரவணைக்கும் தன்மையாகப் பெற்றான்… கல்யாணராமா…!

துன்புறுத்தும் உணர்வை நம் மீது ஒருவன் தாக்கினால் அவனை எதிர்த்துத் தாக்கும் உணர்வே வரும். இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்ளுவான்.

இனிமையான சொல்லைச் சொன்னால் அதையே திருப்பி எனக்குள் இனிமையாகி அரவணைக்கும் தன்மையே மீண்டும் வரும்.

ஆக… சுவை கொண்ட சீதா தன்னுடன் இணைந்து வாழும் சக்தியை உருவாக்குகின்றது என்று எல்லோரும் புரியும் வண்ணம் கொடுத்துள்ளார்கள்.

இராமயாணக் காவியத்தில் உள்ள மூலங்களை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நிலை கொண்ட தியானத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பத்தை எச்செயலுக்கும் உகந்ததென உட்படுத்தலாம்.
1.எண்ணத்தை ஒரு நிலைகொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால்
2.இவ்வுடல் என்ற பிம்பமும் இக்காற்றுடன் காற்றாய்ப் படர்ந்திடும் சக்தியைப் பெறலாம்.

உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களும் ஒரு நிலைப்பட வேண்டும். அந்நிலையில் இவ்வுடலை எந்நிலையில் வருத்தினாலும் அவ்வுடலுக்கு உணர்வு இராது.
1.எல்லா உயிர் அணுக்களும் ஒரு நிலைப்பட்டு தியானத்தில் உள்ள நிலையில்
2.இவ்வுடல் என்ற பிம்பம் ஜீவனற்ற பிம்ப நிலை கொள்கின்றது.
3.அந்நிலையில் அவ்வுடலுக்கு உணரும் சக்தி தடைப்பட்டு விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட ஜெப நிலையுடன் உள்ள உடலை அவ் உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எத்தகைய அறுவை சிகிச்சைகளையும் போதை நிலைப்படுத்திச் செயலாக்காமல் செய்திடலாம்.

உடலில் இருந்தே நீரிலும் நடக்கலாம்… அமரலாம்… உறங்கலாம்… நாம் கனவில் காணும் நிலை போன்று பறக்கவும் செய்யலாம்…! உடலில் பின்னப்படாவண்ணம் எச் செயலையும் அவ்வுடல் தாங்கிடும்.

இவ்வுடல் என்ற பிம்பம் அவ்வுயிராத்மாவிற்குச் சொந்தம்.
1.உயிராத்மாவின் ஆணைப்படித்தான் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் செயல் கொள்கின்றன.
2.உயிராத்மாவின் ஜீவனே இவ்வெண்ணத்தில்தான் செயல் கொள்கின்றது
3.இவ்வெண்ணமே நாம் எடுக்கும் சுவாசத்தினால்தான் நம் உயிராத்மாவை நிலைக்கச் செய்கின்றது என்பதனை உணர்ந்து
4.நம் எண்ணத்தினால் ஒரு நிலை கொண்டு ஜெபம் பெறும் நிலையில் நாம் எடுக்கும் சுவாசம் இருந்திடல் வேண்டும்.

எந்த வகையான மோதலின் நிலையையும் நம் எண்ணத்தில் பற்றாமல் எண்ணத்தைப் பற்றற்றதாக்கி ஒரு நிலை கொண்ட ஜெபம் எடுத்திடல் வேண்டும்.

நம்மை எதிர் நோக்கி வரும் எவ்வெண்ணத்தின் பற்றுதலையும் நம் எண்ணமுடன் ஒரு நிலை கொண்டிடல் வேண்டும்.

தியானத்தில் ஒரு நிலை கொண்டவரின்… அவர்கள் இல்லத்தையும் அவர்களின் உடலையும் அவர்கள் சார்ந்து செய்யும் எத்தொழிலையும் எத்தடங்கலும் இன்றி நல் நிலையாய் செயல் கொண்டிடும்.

1.எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்ந்திடுங்கால்
2.நமக்கு நடக்கும் எந்நிலையும் சிதறுண்ட நிலையில்தான் நம்மைத் தாக்கும்.

இன்றைய கால நிலையில் தெரிந்தோ தெரியாமலோ இவ்வுலகம் முழுவதுமே ஆத்மீக நெறி உணர்த்த… ஆண்டவனை இவர்களின் செயலுக்கு உகந்த பொருளாக்கி… இன்றைய அரசியலும் சரி… ஆலயங்களும் சரி… “பல ஆவிகளின் வசியத் தொடர்பு கொண்டு இவ்வுலகமே ஆடிக்கொண்டுள்ளது…”

இவ்வுலகினில் மேலை நாட்டில் ஆயிரம் உடல் ஆத்மாக்களை ஒரு மனித ஆத்மா வசியப்படுத்திச் செயல்படுத்தி வந்த நிலையில் இதன் நிலை வெளியுலகிற்கு அறியப்பட்டவுடன் அனைத்து ஆத்மாக்களையும் உடலுடன் வசியப்படுத்திட எண்ணியவன் அவ்வாத்மாவுடன் தன் ஆத்மாவை செயல்படுத்திட அனைத்து உடல்களையும் தன் உடலுடன் அழித்து இன்று அவ் ஓர் ஆத்மாவே அதன் வசியத்தில் அது அழித்த அனைத்து ஆத்மாக்களையும் வசியப்படுத்தி இவ்வுலகத்திலே அதன் நிலையைச் செயல்படுத்திக் கொண்டுள்ளது.

தலைவனாய் வசியப்படுத்திய அவ்வாத்மா உடலுடன் இருந்திருந்தால் அவன் அழித்த மற்ற உடல் ஆத்மாக்கள் இவன் வசியத்திற்கு வந்திருக்காது.

இன்னும் இந்திய நாட்டிலேயே உண்மை நிலை வழி நாமம் கொண்ட சில நிலைகள் நடக்கின்றன. ஆவிகளை வசியப்படுத்தி அதிகார வர்க்கமுள்ளவர்களையும் பொருட்செல்வம் கொண்டவர்களையும் தன் வசியத்திற்கு ஈர்த்து “உண்மை வழி…” என்ற போர்வையில் வாழுகின்றனர்.

இந்நிலையெல்லாம் இக்கலியில் வந்தது மட்டுமல்ல. அரசர்கள் ஆண்ட கால நிலைத்தொட்டே வந்து கொண்டுள்ளது.

ஆவி ஆத்மாவின் வசிய நிலை கொண்டு பல ஊடுருவல் வேலையெல்லாம் செய்வித்து… ஒரு நாட்டுடன் பிற நாடு சண்டை இட்டு போர்க்களம் கொண்டு அவ்வாவிகளுக்கு மற்ற ஆத்மாவின் குருதிகளை உணவாக்கிப் பல தேசங்களைப் பிடித்தார்கள்.
1.அவ்வாவிகளின் எண்ணமும் வெறி உணர்வு கொண்ட ஆக்ரோஷ நிலைப்பட்டு வழி வழியாய்
2.எத்தீய செயலுக்கும் எண்ணத்தில் பயமில்லாமல் இன்றைய பல ஆத்மாக்கள் செயல் கொள்கின்றன.

எவ்வுயிரணுவும்தான் அழிவதில்லையே…!

ஆக… இன்றைய உலகமும் இவ்வுலகினில் உள்ள அரசியல் நிலைகளும் ஆவியின் பிடியில் சிக்குண்ட நிலையில்
1.நமது ஆத்மாவை நாம் ஒரு நிலைகொண்ட ஜெப சக்தியில்
2.சலிப்பு கோபம் குரோதம் இப்படி எண்ணத்தை வளர்க்காமல்
3.நமது ஆத்மாவை ஒரு நிலைகொண்ட தியானம் ஒன்றினால் மட்டும்தான் நல் வழி கொண்டிட முடியுமப்பா…!

நாம் உருவாக்க வேண்டிய “பாதுகாப்பு அரண்”

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் முழுவதும் தலையிலிருந்து கால் வரை அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுகின்றீர்கள்.

உங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்கி உடலில் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உருவாகி அந்த அருள் ஞான சக்தி உங்களுக்குள் பெருகும்.

நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களிலே விளையும். நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்போது நீங்கள் உணரலாம். கை கால் குடைச்சலோ சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ மன நோயோ இவை அனைத்தும் அகலும்.

அருள் ஞான ஒளி உங்களிலே பெருகும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வுகள் உங்களில் விளையும். உங்களை மகிழச் செய்யும் அணுக்கள் விளையும்.

அருள் ஒளி வளரும் மெய்ப் பொருள் காணும் திறன் பெறுவீர்கள். உங்கள் பார்வையால் உங்கள் நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

பிறருடைய துன்பங்களைப் போக்கும் வலு பெற்றால் பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடைப்படுத்த முடியும் உங்கள் உணர்வால்…!

தியானமிருக்கும் அனைவரது உடலிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிலே படர்ந்து மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுவீர்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாகப் படரும். சகோதர உணர்வுகள் விளைந்து மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அத்தகையை அருள் சக்திகள் கொண்ட உங்கள் மூச்சலைகள் காற்றிலே படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்திட குருவைப் பிரார்த்திக்கின்றேன்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களில் படர
2.மகிழ்ச்சி பெறும் உணர்வை வளர்த்திட
3.அந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.அந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக உருவாகி
5.உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் சொல்லாக உருவாக்கும் சீதா இராமனாக எண்ணங்கள் தோற்றுவிக்கவும்
6.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்திடவும்
7.மகரிஷிகள் உணர்வுகள் அரணாக உங்கள் உடலுக்கு அமைந்து
8.இந்தப் பிறவியிலேயே பேரின்பப் பெரு வாழ்வு பெற்றிடவும்
9.எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கிடவும்
10.உங்கள் உடலைச் சொர்க்க லோகமாக்கி உங்கள் உயிரைச் சொர்க்க வாசலாக அமைத்திடவும்
11.அந்த மாமகரிஷிகளின் அருளாசி படர்ந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திடவும்
12.உங்கள் பார்வையிலேயே தீமைகளை அகற்றிடவும் மெய் ஒளியைப் பரப்பிடவும்
13.என்றுமே அழிவில்லா வாழ்க்கையாக வாழ்ந்திடவும்
14.மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடும் அருள் ஒளி உங்களில் படர்ந்திடவும்
15.உங்கள் பேச்சால் மூச்சால் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகள் வளர்ந்திடவும்
16.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களுக்கு உறுதுணையாக இருந்திடவும்
17.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்திட குரு அருள் உங்களுக்குள் எப்பொழுதும் உறுதுணையாக இருந்திடவும்
18.அந்த அருள் ஞான குரு வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தியாக விளைந்திடவும்
19.நான் (ஞானகுரு) பிரார்த்திக்கின்றேன்… தியானிக்கின்றேன்…!

இதைக் கேட்டுணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் குறைந்திருப்பதையும் காணலாம்.

இதைப் போன்ற அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ள அதிகாலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலே படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும்… இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… நல்ல இரத்தங்கள் உருவாக வேண்டும்… நல்ல ஞானங்கள் எங்களுக்குள் வளர வேண்டும்…. ஒரு பத்து நிமிடமாவது ஏங்கிப் பெறுங்கள்.

இப்போது கொடுக்கும் இந்த அருள் ஞான வித்துக்களை உங்கள் நினைவால் நீங்கள் மீண்டும் மீண்டும் எண்ணும்போது
1.உங்கள் உயிரே அந்த அணுக்களை வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உடலில் வளர்த்து
3.மன பலம் மன நலம் பெறச் செய்து
4.அருள் ஒளி பெறும் அருள் ஞான வழியில் அழைத்துச் சென்று
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் உங்கள் உயிர்…!

ஆகவே
1.எண்ணியதை உருவாக்குவது உயிரான ஈசன்.
2.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே
3.எண்ணியதை காத்தருளுவதும் உயிரே
4.ஆண்டவனாக இருப்பதும் உயிரே.

நம்மைக் காத்தருளுவதும்… ஈசனாக இருந்து உருவாக்குவதும்… என்றென்றும் பாதுகாப்பு அரணாக இருந்து நம்மைக் காப்பதும் உயிரே…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகிச் செல்லும் எந்தச் சந்நியாசியாக இருந்தாலும் ரிஷித் தன்மை பெற முடியாது – ஈஸ்வரபட்டர்

ஆத்மீக நெறிக்கு வருபவர்களும் சந்நியாசிக் கோலத்தை மனிதர்களுக்கு உணர்த்தி…
1.குடும்பப் பற்றையும் மற்ற எல்லா ஆசை நிலையையும் துறந்துதான் ஆத்மீக நெறிக்கு வர வேண்டும் என்பதனை ஒரு சாரார் உணர்த்திவிட்டனர்
2.இன்னும் ஒரு சாரார் அப்பக்தியைப் பொருளாக்கி வளரவிட்டு விட்டனர்
3.இன்னும் ஒரு சாரார் தனக்கு அனைத்து நிலைகளும் தெரிந்துள்ளதாகவும்
4.அவ்வாண்டவனே இவர்களின் மூலமாய்த்தான் பிறருக்கு அச்சக்தியை அளிப்பதாகவும் எண்ணத்தில் கொண்டு
5.மடாலயம் கட்டி மத குருக்களாய் அனைவரையும் வணங்கச் செய்கின்றனர்.

எல்லா மதத்திலும் இந்த நிலைதான்…! உலகுடன் பல காலமாய் எண்ணத்துடனே வளர்ச்சியின் பல நிலைகள் வந்துவிட்டன.

இதிலிருந்தெல்லாம் நமது ஆத்மாவை எல்லாமில் எல்லாமாய் அவனருள் எப்படிக் கலந்துள்ளதோ அதைப் போன்றே எல்லாவற்றுடனும் எல்லாமாய்த்தான் நாம் நம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்திடல் வேண்டும்.
1.அழுக்குப்படிகிறதே…! என்று அஞ்சி ஒதுங்கி விடலாகாது…
2.அழுக்கை அகற்றிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

மண்ணிலிருந்து கரும்பை எடுத்து அதனைச் சாறாக்கும் நிலையில் அதன் நிறமும் அதன் மணமும் கண்ணுற்றால் இதையா நாம் உண்ணுகின்றோம் என்று எண்ணுகின்றோம்…!

அச்சாறே அதனுடன் சில கலவையை ஏற்றிய பிறகு தூய கற்கண்டாய் உள்ள நிலையில் அதன் வெண்மையும் சுவையும் கண்டு நாம் அருவருப்பதில்லை.

அதைப்போல் உலகத்துடன் ஒன்றியுள்ள நாம் பிற ஆத்மாக்களின் தீய எண்ணத்தைக் கண்டு ஒதுங்கிடலாகாது. கரும்புச்சாறு பார்க்க அருவருப்பாய் உள்ளதென்று ஒதுக்கிவிட்டால் கற்கண்டு கிடைக்குமா…?

மற்ற ஆத்மாக்களையும் நம் நிலையினால் தூய்மைப்படுத்த வேண்டுமேயன்றி எதையுமே வெறுத்து ஒதுக்கலாகாது.

ஆதவனுடன் ஆதவனாய் ஜோதி நிலை பெற்றுக் கலந்திட அவ்வாதவன் எப்படி நன்மை தீமை கொண்டு அவ்வொளியைப் பாய்ச்சவில்லையோ அதைப் போல் உலகுடன் கலந்துள்ள பல நிலை கொண்ட எல்லாமில் எல்லாமாய்த்தான் நம் ஒளியையும் நாம் பெறல் வேண்டும்.

வாழ்க்கையுடன் இருந்திட்ட பெரியோர்கள்தான் இன்று அவ்வொளியுடன் ஒளியாய்க் கலந்து ஆண்டவனாய் உள்ளார்கள் என்பதனை யார் வினா எழுப்பினாலும் அவர்களுக்கு விடையளிக்கப்படும்.

1.குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகி
2.இமயமலைச் சாரலுக்குச் சென்று ஜெபமிருக்கும் எந்த ஆத்மாவானாலும் சரி
3.அவ்வாத்மாவும் உடலை விட்டுப் பிரிந்த பிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறந்து வாழத்தான் வேண்டும்.
4.சித்தனாகவும் முனிவனாகவும் சப்தரிஷியாகவும் எந்த நிலையும் பெற முடிந்திடாது என்பதனை இங்கே வெளிப்படுத்துகின்றேன்.

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் நம் எண்ணமுடன் சுவாசத்தை எடுக்கும் முறையில் இருந்துதான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் அமில சக்தி கூடுகின்றது.

ஒவ்வொரு நாளும் பல தரப்பட்ட எண்ணத்தின் மோதலில் இருந்தும் நாம் தப்பி நல்லுணர்வையே நம் ஆத்மா சேமிக்கும் அமிலமாய் நம்மை நாம் பக்குவப்படுத்திப் பல ஆத்மாக்களை அப்பக்குவ ஜெபத்திற்கு ஈர்த்துச் செயல்படுத்த வேண்டும்.

இதை உணர்ந்து கொண்டு…
1.நான் என்ற தனித்த நிலையை விட்டு விட்டு
2.எல்லாமுடனும் எல்லாமாய் நம் ஆத்மாவும் ஒளிரும் வழி முறை பெற்று
3.எல்லாமே ஒளிரச் செய்யல் வேண்டும்.

தன்னிச்சையாகத் தீமைகளை அகற்றிடும் வல்லமையை வளர்த்துக் கொள்ளுங்கள்

 

மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்பதற்கே அழுத்தமாகவும் உங்களுக்குள் தெளிவாக்கவும் சிறிது வேகமாகச் சொல்கிறேன் (ஞானகுரு).

யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மைகளை யார் கூர்மையாக எண்ணி எடுக்கின்றார்களோ அவர்கள் உடலிலே இந்த அணுத் தன்மை பெருகும்.

தீமைகளை அடக்கும் வல்லமை பெறுகின்றீர்கள். புரியவில்லை என்றால் அந்த உணர்வின் தன்மை கலக்கப்படும் போது அதே தான் ஆகும்.

ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக்கை வைத்து எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். ஒரு நாடாவில் முலாம்களைப் பூசி அதை உயர் அழுத்தத்தில் இணைக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒலிகள் அதிலுள்ள அதிர்வுகளை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதன் ஒளி அதிர்வுகளை இந்த எலெக்ட்ரிக் தன்னுடைய ஒளிப் பேழைகளில் மாற்றியமைத்து ரூபமாகவும் எழுத்தாகவும் ஆணைகளாகவும் கூட்டுகின்றது.

இதிலே இடைமறித்து எதையாவது தவறுதலாக ஓசை மாறி விட்டால் உடனே அதனின் அழுத்தங்கள் மாறிவிடுகின்றது.

1.ஏனென்றால் ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்க வேண்டும் என்றால்
2.அல்லது இந்த நேரத்தில் நிறுத்த வேண்டும் என்றால் இடைமறித்து இது தாக்கப்படும் பொழுது
3.குறித்த நேரத்தில் இது தாக்கி அந்த இயந்திரத்தைப் பாதுகாப்பாக நிறுத்திவிடும்.

இப்படி இயந்திரங்களை இயக்குவதும் விமானங்களை ஓட்டுவதும் இராக்கெட்டுகளை இயக்குவதும் விஞ்ஞானத்தில் செயல்படுத்துகின்றனர்.

இதே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற பேழையை அங்கே வைத்து விட்டு அதன் ஒலி அதிர்வுகள் கதிர்களை இயக்கப்படும் பொழுது தொலை தூரத்தில் செல்லும் இராக்கெட்டையே இயக்கச் செய்கின்றது.

இராக்கெட்டுகளில் ஏதாவது குறைகள் இருந்தாலும்…
1.கம்ப்யூட்டர் மூலம் இந்த ஒலி அதிர்வுகளை ஏவி அதன் கட்டளைப்படி
2.அதை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் மீண்டும் சீராக்குகின்றான் மனிதன்.

இதைப் போன்று தான் நமக்குள் நுகர்ந்த தீமையின் விளைவுகளை மாற்ற வேண்டும் என்றால்… “நம் எண்ணத்தின் நிலையை அருள் மகரிஷிகளுடன் ஒன்றச் செய்ய வேண்டும்…”

மகரிஷிகளுடன் நாம் ஒன்றி…
1.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்கி
2.அந்த எண்ணத்தை இங்கே இயக்கினால் அதன் துணை கொண்டு
3.நமக்குள் சேரும் தீமையின் உணர்வுகளை மாற்றியமைக்க முடியும்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாம் விஞ்ஞானத்தை நம்புகின்றோம். ஞானிகள் கொடுத்த மெய் ஞானத்தை இழந்து விட்டோம்.
1.மெய் ஞானத்தின் உண்மைகளை அறிந்தால் மனிதனுக்கு உதவும்.
2.பிறவியில்லா நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் அடைய உதவும்.

ஆனால் மனித ஆசையின் உணர்வுகள் கொண்டு ஒவ்வொன்றையும் வளர்க்கப்பட்டால் அது இந்த உடலுக்கே உதவும். இந்த உடல் அழிந்து விட்டால் இதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மீண்டும் அடுத்த உடலாக மாற்றிவிடும்.

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டு அகன்ற பின் மெய் ஞானியின் உணர்வுடன் ஒன்றச் செய்யும்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றச் செய்யும்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

அகஸ்தியன் இளமைப் பருவத்தில் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகள்

 

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகி மின்னல்களாகப் பாய்கிறது.

தாய் கருவிலே விஷத்தை வென்றிடும் ஆற்றல் பெற்ற அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது அத்தகைய மின்னலை எல்லாம் உற்றுப் பார்க்கின்றான்.
1.பார்க்கும் பொழுது அதிலுள்ள விஷக் கதிரியக்கங்களை அடக்கி
2.அதை எல்லாம் ஒளிக்கதிர்களாக மாற்றும் தன்மையாக
3.தன் உடலில் ஒளியான அணுக்களாக மாற்றும் தன்மை அவனுக்குள் உருவாக்குகின்றது.

இதைப்போல சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையும் அந்தக் குழந்தை உற்றுப் பார்க்கின்றது.

இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானதோ…? இதற்குள் நட்சத்திரங்கள் எப்படி உருவானதோ…? அகண்ட அண்டங்கள் எப்படி உண்டானதோ..? இந்த உணர்வெல்லாம் சூரியனுக்குள் உண்டு.

இதன் வரிசைப்படுத்தி வந்த உண்மைகளை எல்லாம் அந்த நட்சத்திரங்களின் சக்திகளை இவன் நுகரப்படும்போது அந்த உணர்வின் எண்ணங்கள் (ஞானமாக) வருகின்றது.

ஒரு குளவி மண்ணைப் பிசைந்து கூட்டைக் கட்டி அதற்குள் புழுவை எடுத்து வந்து வைக்கின்றது. புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. எத்தனையோ உணர்வுகள் கலந்து தான் அந்த விஷத்தின் தன்மை குளவிக்குள் வருகின்றது.

குளவி புழுவைத் தன் விஷத்தால் கொட்டிய பின் அந்த விஷம் புழுவின் உடலுக்குள் சென்று அந்த விஷத்தின் தன்மைகள் கொண்டு துடிப்புகள் அதிகமாகிறது.

அதுவே புழு உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இந்திரீகமாக மாறி அது இந்திரலோகமாக மாறி அந்தப் புழுவின் தன்மை குளவியாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் இவன் அறியவில்லை என்றாலும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் வரப்படும் பொழுது நட்சத்திரங்களிலிருந்து வரும் மின்னல்களையும் மற்றவைகளையும் இவன் அடக்குகின்றான்.

உதாரணமாக பல நட்சத்திரங்களின் சக்திகள் வந்தாலும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியைச் சூரியன் கவரும்பொழுது அடுத்த நட்சத்திரத்தின் சக்தி அங்கே வந்தால் இந்த இரண்டும் மோதும் போது எர்த் (EARTH) ஆகின்றது.

அப்பொழுது பளீர்…” என்று மின்னுவதும் அந்த உணர்வுகள் மற்றதோடு ஊடுருவதும் அதன் அலைவரிசையில் ஊடுருவும்போது மரங்களில் விழுந்தால் அதைக் கருக்கி விடுகின்றது.

இந்த மின்னல்கள் அடுத்து பூமியின் ஈர்ப்புக்குள் அதிகமாகச் சேர்த்தால் இது கொதிகலனாக மாறுகின்றது.

அணுவைப் பிளந்து அதன் வீரியத்தன்மை கொண்டு அணு உலைகளில் (ATOMIC POWER STATION) வைக்கும்போது அது எவ்வளவு வேகமாக வெப்பத்தை உண்டாக்குகின்றதோ இதைப்போலத்தான் இந்த மின்னல்கள் ஊடுருவி அந்த பூமியின் அடியில் சென்றபின் கொதிகலனாக மாற்றுகின்றது.

வெப்பத்தின் துரிதத்தால் பாறைகள் உருகுகின்றன. உருகிய பின் அந்தப் பாறைகள் கீழே இறங்கப்படும் போது நிலநடுக்கம் வருகிறது. அந்த ஒரு நொடிக்குள் எல்லாம் கூழான பின் இதில் அடங்கி விடுகின்றது.

அதே மின்னல்கள் கடல்களிலும் பாய்கிறது. கடல்களில் உள்ள ஹைட்ரஜன் அது உப்புச்சத்து கொண்டது. அதிலே மின்னல்கள் பரவினால் இது பூராமே அடக்கி மணலாக மாற்றுகின்றது. கதிரியக்கத் தனிமங்களாக உருவாகிறது.

1.இதைப் போலத்தான் அகஸ்தியனுடைய பார்வையில் மின்னல்கள் பட்டாலும்
2.விஷத்தை ஒடுக்கும் சக்தி இவனுக்குள் இருக்கும்போது
3.அந்த உணர்வின் தன்மை கடல் எப்படி தனக்குள் அடக்கியதோ
4.இதே உணர்வின் அணுவாக இவனுக்குள் இவனுக்குகந்த அணுவாக மாற்றும் திறன் பெறுகின்றான்.
5.அவன் இளமை பருவத்தில் அவனுக்குத் தெரிந்தல்ல.

அவனுடைய சந்தர்ப்பங்கள் அவன் அத்தகைய நிலைகளில் வளர்ச்சி பெறுகின்றான். அப்படி வளர்ச்சி பெற்றவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றோம் என்றால் நாமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

நாம் ஞானத்தின் சக்தி பெறுவது என்பது ஆத்மாவிற்குத் தான்… செல்வத்திற்கும் புகழுக்கும் அல்ல…! – ஈஸ்வரபட்டர்

 

தியான முறையும் ஞான முறையும் பெற்றிட நம்மை நாம் பல பக்குவ நிலைப்படுத்திச் செயல் கொண்டு நாம் அந்த ஞானம் பெறுவது என்பது நம் ஆத்மாவிற்குத்தான்…!
1.நம் எண்ண்ம் செயல் எல்லாமே… “நமக்குச் சாதகமாக”
2.மற்றைய நிலையிலிருந்து தப்பி ஒதுங்கிப் பெறுவதல்ல தியானமும் ஞானமும்.

நம் எண்ணம் செயல் உடல் அனைத்துமே சத்தியம் கொண்டு தூய்மையுடன் நாம் உள்ளோம். மற்றவர்களுக்கு அந்த நிலை தெரியவில்லை என்று எண்ணினாலும் நமக்கு அந்த “நான்” என்ற நிலை வந்து விடுகின்றது.

நம்முள் பல நற்சக்திகளையே ஈர்த்துச் செயலாக்கி வருகின்றோம் என்ற நிலையில் நாம் இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள ஆத்மாக்களின் நிலையுடன் நம்மை நாம் ஒன்றித்தான் செயல் கொண்டிடல் முடியும்.

நம் உடலைத் தினமும் நீர் விட்டுக் குளித்துத் தூய்மைப்படுத்துகின்றோம். நம் உடல் தூய்மையாய் உள்ளதென்று நாம் வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா…?
1.வெளி உலகில் கலந்துள்ள காற்றும் மண்ணும் நம் மேல் படத்தான் செய்யும்
2.மீண்டும் மீண்டும் இவ்வுடலைத் தூய்மைப் படுத்திக் கொள்கின்றோம்.

புற உலகின் அழுக்கு நம் மீது வேண்டும் என்றே படிகிறதென்று நாம் வெளியில் செல்லாமலே இருக்க முடியுமா…?

அதைப்போல் நம் எண்ணம் ஒரு நேர்கோடான சத்தியச் செயலைச் சார்ந்துள்ள நிலையில் நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஆத்மாக்களின் நிலையும் நம்மை ஒத்திருந்தால்தான் நாம் அதனுடன் கலந்து வாழ்ந்திட முடியும்.

1.தீய பழக்க வழக்கம் கொண்டவனை விட்டு நாம் விலகித்தான் வாழ வேண்டும் என்று நம் எண்ணத்தில் எண்ணினோமானால்
2.நம் எண்ணத்தில் உள்ள அச் சத்திய நேர்கோட்டின் பிடிக்கு நாம் அடிமைப்பட்டு
3.”நான்” (நான் ஒழுக்கமானவன்) என்ற வைராக்கிய ஆத்மாவாகத்தான் நாம் இருந்திட முடியும்.

நாம் பெற்ற சக்தியை நமக்கே சொந்தமாக்கி நம் ஆத்மாவிற்கு எத்தனை செல்வங்கள் சேமித்தாலும் அதுவும் “நான்” என்ற சக்தியாகத்தான் இருந்திடுமப்பா.

1.நான்… எனது… என்ற அணுவளவு எண்ணத்தில் பிற பேராசை பற்று இருந்தாலும்
2.ஆண்டவனை பூஜிக்கும் பற்றானாலும் சரி
3.தான் கற்ற வித்தையின் பலனை எண்ணினாலும் சரி அந்த நிலை அந்த நானாகிவிடுகின்றது.

பல ஆத்மாக்கள் இயற்கையிலேயே பல உன்னத சக்தியைப் பெற்று வாழ்கின்றனர்… மருத்துவம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், ஓவியம், விவசாயம் எல்லாவற்றிற்கும் மேன்மையான சமையல் திறன்.

இப்படி ஒவ்வோர் ஆத்மாவும் இயற்கையிலேயே உன்னத சக்தி பெற்றிருந்தாலும் அச் சக்தியைத் தன் நலம் நாடாமல் பொருள் ஆசையின் நிலையில் அத் திறனை வளரவிட்டால் “நான் என்ற நிலையில்தான்… அவர்கள் பெற்ற பயன் சிக்குண்டு விடுகின்றது…!”

பொருள் இல்லாவிட்டால் எப்படி ஜீவிதம் கொள்ள முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

பொதுவான நிலைப்படுத்தி அவரவர்கள் பெற்ற பயனைச் செயலாக்கித் தேவை என்ற அடிப்படையில் ஜீவிதத்திற்குகந்த பொருள் நிலை பெற்றுத்தான் அஜ்ஜீவன் நடக்கும்… உண்மைதான்.

ஆனால்… அதற்காக ஆண்டவன் அருளில் பெற்ற அதி பொக்கிஷ செயல் திறமையை நாம் பேராசைக்கு அடிமைப்பட்டு உழலும் காலமாய் இன்றைய கால நிலை உள்ளது.

தேவை என்ற அடிப்படையில் பொருள் சேமிக்கலாம்…!
1.அதி தேவையாக்கி நம்மையே நாம் அதற்கு அடிமைப்பட்டு சேமிக்கும் பொருளினால்தான்
2.இன்றைய இவ்வுலகமே இப்பேராசைப் பிடிக்கு அடிமை கொண்டு வாழ்கின்றது.

காற்றே தான் கடவுள்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காற்றேதான் கடவுள்…! காற்றையே தெய்வமாக்கி நாம் எடுக்கும் சுவாசத்தில் கலக்கவிடுங்கள் என்றெல்லாம் இப்பாடநிலை உணர்த்திய நாள் தொட்டே செப்பி வருகின்றோம்.

ஆனால் மனித ஆத்மாக்களுக்கு…
1.மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதையும் சர்க்கஸில் ஆடும் கோமாளியின் லீலையில் மகிழவும்தான் பேராவல் உள்ளது.
2.மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதை மந்திரக்காரன் செய்கிறானே…
3.அதில் உள்ள உண்மை என்ன…? என்று அறியும் நிலை கொண்ட எண்ணமுடையோர் மிகச் சிலர் தான்.

இவ்வுலகமே வேடிக்கையான உலகம் தான்.

உலகம் என்பது இவ்வுலகின் ஜீவ ஆத்மாக்கள்தான்.
1.இக்காற்றைச் சுவாசமாய் ஈர்க்கும் ஒவ்வோர் ஆத்மாவுக்குமே
2.இக்காற்று எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் சுவாசத்தினாலேயே அங்குள்ள நிலையினை உணர்த்திட முடியும்.

சுழலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அம் மண்டலத்தின் உருவ அளவைக் கொண்டு அம்மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் காற்று மண்டலம் (அடர்ந்த காற்று மண்டலம்) அம்மண்டலத்தின் அளவைப் பொறுத்து உள்ளது.

நட்சத்திர மண்டலங்களுக்கும் அதன் சுழற்சியைக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள அதன் சுவாச நிலை கொண்ட காற்று மண்டலம் உண்டு. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் அததற்குகந்த அமிலக் காற்று மண்டலமுண்டு.

நம் பூமியிலிருந்து பத்து மைல் சுற்றளவில் கொஞ்சம் கூடவும் குறையவும் நம் பூமிக்குகந்த காற்று மண்டலமுண்டு. அனைத்திற்கும் பொதுவான “சூனிய மண்டலம்” என்று உணர்த்துகிறார்களே அங்கும் உண்டு காற்று. அதன் தன்மை வேறு…! மண்டலங்கள் வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் தன்மை வேறு.

இப்பூமியில் பல இயற்கைத் தாதுப் பொருட்கள் தானாகவே வளர்கின்றன. இத்தாதுப் பொருள் வளர அதற்கு மூலப் பொருளாய் இவ் இரசமணி ஒன்று வளர்ந்தால்தான் பல தாதுப் பொருள்கள் வளர முடியும்.

இந்த இரசமணியின் சக்தி நிலை மனித ஜீவ ஆத்மாக்களுக்கும் சிங்கத்திற்கும் நாய் நரி பூனை இவற்றிற்கும் வாழை மரத்திற்கும் இந்நிலை அதிகம்.
1.நம் முன்னோர்கள் வாழை இலையில் சூடான உணவைப் படைத்து
2.நம்மை உணவாக உட்கொள்ளச் செய்ததன் இரகசியம் இது தான்…!

இம் மனித ஆத்மாவினால் இயற்கையில் வளரும் தாதுப்பொருளையே செயற்கையில் இவ் இரசமணியின் சேர்க்கையினால் சில குறிப்பிட்ட தாவரங்களின் இலையின் சாறு எடுத்து இவ் இரசமணியின் கலவையுடன் இவ் எண்ணத்தை அவ்வமில சக்தியுடன் ஜெபப்படுத்தினால் எவ்வுலோகத்தையும் பூமியில் இருந்து எடுக்காமலும் பணம் தந்து வாங்காமலும் செய்விக்க முடியும்.

அந்தத் தாவரங்களின் நாமம் மறைக்கப்பட்டதின் நிலை மனித ஆத்மாக்கள் இப்பேராசையில் சிக்கிடாமல் இருப்பதற்கே.

தன் ஆத்மாவையே… தன் ஆத்மாவுடன் உடலுடன் கலந்துள்ள இரசமணியின் ஈர்ப்பினால் நம் எண்ணம் தங்கமாகவும் நம் செயல் வைரமாகவும் ஆக்கிடலாம்.

1.நம்முள்ளேயே அனைத்துப் புதையலும் உள்ளன…
2.அழியாச் செல்வப் புதையல் இச்சக்தியை உணர்ந்து
3.நம் சக்தியை வளரவிடும் சத்தியமாக வாழ்ந்திடுங்களப்பா…!

வெப்பம் காந்தம் விஷம் – இராமா சீதா இலட்சுமணா

 

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் விஷமும் மும்மலம் என்று சொல்வார்கள். அதிலே… தான் நுகர்ந்த மணம் என்ற நிலை இருந்தாலும் அந்த சுவை – சீதா ஒரு திடப்பொருளாக மாறுகின்றது.

திடப்பொருளாக மாறும்பொழுது அதனுடைய மணம் ஞானம் சரஸ்வதி என்றும் இதிலே இணைந்த சக்தியை சீதா என்றும் அதன் உணர்வின் தன்மை இந்த மூன்று நிலைகள்
1.வெப்பம் தனக்குள் உருவாக்குவதும்
2.காந்தம் தனக்குள் அரவணைப்பதும்
3.விஷம் இயக்கும் தன்மை வரப்படும்பொழுது
4.நாராயணன் (சூரியன்) லட்சுமி நாராயணனாக அங்கு உருவாகிறது.

சூரியன் விஷத்தின் தன்மையைப் பிரித்த பின் இங்கே அந்தக் காந்தம் இதை மீண்டும் கவர்ந்து கொள்ளும் போது லட்சுமணா. அதே சமயத்தில் சூரியன் மோதி இந்த உணர்வின் தன்மை வெப்பமாகும்போது நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு ஆகின்றான்.

ஆனால் அதனுடன் இணைந்த நிலையோ லட்சுமி ஆகின்றது. ஆக விஷ்ணு லட்சுமி இரண்டும் இணை சேர்க்கப்படும் பொழுது இதனால் பிரிக்கப்பட்ட விஷத்தின் தன்மை தனக்குள் இருக்கப்படும்போது அந்த விஷத்தின் தன்மை தான் லட்சுமணா.

1.ஆக… இந்த வெப்பம் அந்த இராமனாக எண்ணத்தின் நிலை உருவாக்கும் நிலைகள் பெற்றது.
2.காந்தம் தனக்குள் அந்த மணத்தை சீதா அந்தச் சுவையின் தன்மை தனக்குள் இணைத்து மற்றதை வளர்க்கும் தன்மை கொண்டது
3.விஷம் இலட்சுமணா இந்த உணர்ச்சியைத் தூண்டும் (மணத்தை) வல்லமை பெற்றது.

இப்படி மூன்று நிலைகள் கொண்டது.

நுகர்ந்த மணம் ஞானம் என்றாலும் சீதா என்றாலும் நான்காவது நிலை அடைகின்றது. இதனுடன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது இயக்கச் சக்தியாக மாறும் பொழுது காயத்ரி.. முழுமை பெறுகின்றது.

அதாவது இந்த அணு எதனைக் கவர்ந்ததோ அதன் வலுவாக அது மற்றொன்றுடன் புகப்படும்போது அதனின் செயலாக்கமாக மாற்றும் ஆகவே புலனறிவு ஐந்து என்ற நிலை.

சூரியன் (ஆதிசேஷன்) விஷத்தின் துணை கொண்டு விஷத்தின் உருவால் உருவாக்கப்பட்ட நிலைகள் ஐந்து புலனறிவாக ஐந்து நிலைகளில் இது உருவாக்குகின்றது. இதே விஷத்தின் இயக்க தொடராக…!

இந்த நிலையைக் காட்டுவதற்குத் தான் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன் என்று காட்டுகின்றார்கள்.

இதனின்று வெளிவந்த உயிரின் தன்மைகள் பல விஷத்தன்மை கொண்ட தாக்குதலில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு உயிரின் துடிப்பின் நிலை வரப்படும்போது “உயிரணுவாக மாறுகின்றது…”

கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை என்பது ஆண்பாலை உருவாக்கும் தன்மை பெற்றது. ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால் ஒன்றுடன் இணைந்து ஒன்றை வளர்க்கும் திறன் பெற்றது

இயக்கச்சக்தி ஒன்றுடன் ஒன்று மோதும்போது… அதாவது உராயப்படும்போது பூமி சுழற்சியாகி அதனால் வெப்பமாவதும் ஒரு பக்கம் ஈர்த்து தனக்குள் ஒன்றை கருவாக உருவாக்கிறது அல்லவா…!

அதைப் போன்று தான் கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் இரண்டு மோதலும் ஏற்படும்போது இந்த மோதலினால் துடிப்பின் நிலை வருவதும் அந்தத் துடிப்பால் தனக்குள் ஈர்க்கும் சக்தியும் பெறுகின்றது

அத்தகைய ஈர்க்கும் சக்தி பெறுவதற்கு…
1.கதிரியக்கப் பொறிகளை உருவாக்கும் வியாழன் கோளால் உருவான நிலைகள் இதனைத் தாக்கப்படும்பொழுது
2.துடிப்பின் நிலைகளாகி மும்மண்டலங்களாக மாறுகின்றது.

ஒன்று விஷம்… ஒன்று ரேவதி நட்சத்திரம் வளரும் பருவம் பெற்றது… மற்றொன்று உறையும் தன்மை பெற்றது. இந்த மூன்று நிலைகள் பெற்று துடிக்கப்படும்போதுதான் இயக்கமாகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு எடுத்தாலும் இன்று பெரும் பெரும் சக்திகளை இயக்கப்பட வேண்டுமென்றால்
1.மூன்று நிலைகள் கொண்ட மூன்று வயர்களை வைத்துத்தான் இயக்குவார்கள்
2.இதைச் சக்தி வாய்ந்த அழுத்தம் (THREE PHASE CURRENT) என்று கூறுவார்கள்.

அதைப் போலத்தான் இந்த உணர்வின் சத்து மூன்றும் சக்தி வாய்ந்த அழுத்தமாக எதனையும் தனக்குள் ஜீரணித்து அணுவின் தன்மை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

துடிப்பால் ஈர்க்கும் காந்தமாகி அந்தக் காந்தத்தால் தன்னுடன் இணைத்து உணர்வின் தன்மை தனக்குள் ஒளிக்கதிராக மாற்றும் திறன் பெறுகின்றது.

ஏனென்றால் பௌதீக நிலையில் உங்களுக்குள் விளக்கத்தைக் கொடுத்து உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

அகஸ்தியனுக்குள் விளைந்த உணர்வுகள் அணுக்களாக நமக்கு முன் உலாவிக் கொண்டுள்ளது

கடவுள் என்றால் என்ன…? உணர்வு என்றால் என்ன…? என்ற நிலையை
1.தனக்குள் இயங்கும் அணுவின் இயக்கங்களையும்
2.விண்ணின் அணுக்களின் இயக்கமும்
3.மண்ணின் அணுக்களின் இயக்கமும்
4.தாவர அணுக்களின் இயக்கமும்
5.தாவர இனச் சத்தை நுகர்ந்தபின் அணுக்களின் இயக்கமும் என்ற இந்த உட்பிரிவினை எல்லாம் அறிந்துணர்ந்ததனால்
6.அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்த சக்தி தனக்குள் கவர்ந்து வைத்துள்ளது.
1.இன்றும் அது இருக்கின்றது… அது அழியவில்லை அழிந்து போகவுமில்லை.
2.அணுக்களாக உலாவிக் கொண்டுள்ளது நம் பூமியில்…!

இங்கு மட்டுமல்ல… நமது சூரிய குடும்பத்தில் நம் பிரபஞ்சித்திற்குள்ளே அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வுகள் விண்ணிலும் சரி இம்மண்ணுலகிலும் சரி இது உலாவிக் கொண்டே உள்ளது.

சந்தர்ப்பத்தால் நமக்குள் நுகர்ந்து அதை பதிவாக்கி விட்டால் அதே நினைவின் எண்ணங்கள் வருகின்றது.
1.அதைக் கவர்ந்து நமக்குள் வளர்க்கவும் முடியும்…வளரவும் முடியும்.
2.மற்றோரை வளர்த்திடவும் முடியும்…! என்று இந்த நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
3.அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்த அந்தச் செயலாக்க உணர்வுகள்.

நான் சொல்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்…. நீங்கள் புரிந்து கொள்வதற்கு. ஏனென்றால் இன்றைய உலகில் கற்றுணர்ந்த உணர்வின் நிலைகளை எழுத்தறிவாக பாட உணர்வுகளைக் கொடுக்கப்பட்டு அதனின் பதிவாக்கங்களாகத் தான் வந்துள்ளது.

ஞானியர்கள் உண்மைகளைக் காட்டியிருந்தாலும் அதன் பின் வந்தவர்கள் தான் நுகர்ந்த உணர்வின் தன்மையை அவர்கள் மதங்களாக உருவாக்கப்பட்டு அவர்களுக்குகந்த சட்டங்களை இயற்றுகின்றனர்.

ஒவ்வொரு மதமும் தனக்குள் எண்ணத்தால் உருவாக்கப்பட்டதை அதைப் படித்து உணர்ந்தால் அவை நமக்குள் கடவுளாக இயங்கத் தொடங்குகின்றது “உள் நின்று அந்த உணர்வுகள்…”

ஆகவே ஒவ்வொரு மதமும் அதற்குள் எத்தனையோ வகையான உணர்வுகளைப் பதிவு செய்தாலும்… “அதற்குள் இனங்கள் பல” தான் எண்ணிய உணர்வுகளைப் பதிவாக்கப்படும்போது அது உள் நினறு கடவுளாக நம்மை உருவாக்குகின்றது.

இப்படி மதங்களால் எண்ணங்களை உருவாக்கப்பட்டு அதன் வழிகளிலே தான் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அவைகளை நமது பூமியில் பரவச் செய்துள்ளது. அதுவும் இன்றுள்ளது…!

இருந்தாலும்…
1.அந்த மெய்யை நம்மில் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால்
2.அகஸ்தியன் வழியில் நாம் சென்றோமென்றால் தான்
3.அந்த அணுவின் இயக்கப்பொறியின் ரூபங்கள் எவ்வாறு…? என்ற நிலையை நாம் அறிந்திட முடியும்.

நாம் எதையெல்லாம் பெற்று அந்தந்த உணர்விற்கொப்பப் பரிணாம வளர்ச்சி அடைந்து எப்படி வந்தோம்….? இந்த உணர்வின் கலவையால் நமது உயிர் எவ்வாறு நம்மை மனிதனாக உருவாக்கியது…? உடலுக்குப் பின் ஒளியின் தன்மையை எப்படி அடைய வேண்டும் என்ற நிலையையும் நாம் அறிந்திட முடியும்.

அதற்குத் தான் இதைத் தெளிவாக்குகின்றோம்.

நம் ஆத்மாவை நற்சக்தியுடன் கலக்கவிடும் பக்குவ நிலை பெற வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒரு நொடியில் ஜீவிதம் பெற்றுச் சில நிமிடங்கள் வாழ்ந்து மறையும் விட்டில் பூச்சிகளும் உயிராத்மாதான். பல கோடி ஆண்டுகளாய் வாழும் மண்டலமும் (சூரியனும்) ஜீவன் பெற்ற ஜீவ ஆத்மாதான். அதனதன் வளர்ச்சியில் அது அது எடுக்கும் சுவாச நிலைகொண்டுதான் நீடித்து வாழும் பக்குவம் கொள்கின்றது.

பல நாட்களாய் நம் உலகம் கலியின் பிடியில் சிக்குண்டிருக்க இன்றைய நிலையில் மீளச் சொல்வதின் பொருளென்ன…? என்ற வினாவும் எழும்பலாம்.

1.இவ்வுலகிற்காக இப்பூமி நிலைத்துச் செயல் கொண்டிட
2.நல் ஆத்மாக்களின் சக்தி நிலை இருந்தால்தான் இப்பூமி வாழ முடியும்.

இப்பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் நற்சக்தியை ஈர்த்து ஞானம் பெற்று இன்று சூட்சுமத்தில் உள்ள அனைத்துச் சித்தர்களுமே…
1.இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் அவர்களின் சக்தி நிலையை உயிராத்மாக்களின் நிலையில் உணர்த்தி
2.நம் பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான்
3.இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன.

எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி ஓ…ம் என்ற நாதத்தை உயிரணுவில் கலக்கவிடும் சத்திய நிலையை ஒவ்வொரு உயிராத்மாக்களுக்கும் உணர்த்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்கு நற்பயன் தேட எவ்வாத்மாவும் செயல் கொண்டிடவில்லை. கொண்டிடவில்லை என்பதன் பொருள் புரியாமல் உள்ளதின் நிலை.

1.பக்தியையே ஜாதகத்தின் வழியில் காணுகின்றனர்.
2.எதிர்காலம் என்பதனையே இவ்வுலகில் வாழும் இக்குறுகிய நிலைக்காக
3.தாமடைந்த இவ்வுடல் கொண்ட ஜீவ ஆத்மாவைச் சிதறவிட்டு
4.பொருளுக்கும் பதவிக்கும் போற்றலுக்குமே வாழ்நாளைக் கழித்து
5.நமக்குக் கிடைத்த இவ்வாய்ப்பின் நழுவ விட்டே வாழ்கின்றனர்.

நமக்குக் கிடைத்துள்ள இக்கால சந்தர்ப்பம் என்பது நம் ஆத்மாவை நற்சக்தியுடன் கலக்கவிடும் பக்குவ நிலைக்காகத்தான்…!

நம் உலகினில் பல அரசியலின் தலைவர்கள் தோன்றித் தோன்றிப் பெரும் புகழும் அழிவும் கொண்டெல்லாம் வளர்ந்து வாழ்ந்தனர்.

உலகையே அடிமைப்படுத்தும் அதிகாரப் பதவியில் இருந்து வாழ்ந்தாலும் அவ்வாத்மாவிற்குப் பேராசை நிலையின் அதி பற்றிருந்ததினால் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்தும் மீண்டும் மீண்டும் பல பிறவிக்குத் தன் ஆசையைப் பூர்த்தி செய்யப் பிறந்து கொண்டே உள்ளது.

1.திருவள்ளுவர் அரசனாக வாழவில்லை
2.தன் ஆத்மாவையே கவியாக்கி ஞான சக்திச் சொற்களை உலகிற்கு உணர்த்த ஆசைப்பட்டுச் செயல் கொண்டார்.

அவர் ஆத்மா இன்றளவும் அவரின் மனையாளின் ஆத்மாவுடன் ஒன்றியே சூட்சுமம் கொண்டு இன்று உலகமே போற்றும் அத் திருக்குறளில் உள்ளார். அவரின் குறட்பாக்களைப் படிக்கும் ஆத்மாக்களின் எண்ணமுடனே அவரின் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

“பேரானந்த நிலை… தெய்வீக நிலை…!” என்பதெல்லாம் நாம் காணும் இன்றைய மாயக் கனவு வாழ்க்கையில் இல்லை…! – ஈஸ்வரபட்டர்

 

உலக சக்தி என்பதைத் தனித்து எதனைச் செப்புவது…?

இன்றைய உலகமே பிம்பத்தைத்தான் உலகமாகக் காண்கின்றது. எப்பிம்பமும் நிலைத்த பிம்பமல்ல.
1.இன்றைய பிம்பம் மாறிவிட்டால் காற்றுதான் (ஆவி)
2.அன்றைய காற்று இன்றைய பிம்பம்.

காற்றில் தான் அனைத்தும் உள்ளன. நீரும் காற்றுத்தான் நெருப்பும் காற்று தான். நீரும் ஆவியாகிக் காற்றுடன் கலக்கின்றது. நெருப்புக் கோளங்களும் எரிந்து ஆவியாகிக் காற்றுடன் தான் கலக்கின்றன.

1.அனைத்து பிம்பமும் காற்று தான்.
2.காற்றே தான் கடவுள்
3.அக்காற்றிலிருந்து ஜீவன் கொண்ட அனைத்துமே கடவுள்தான்.

பால்வெளி மண்டலத்தைக் காற்றாய்க் காண்கின்றோம். அப்பால்வெளி மண்டலத்தில் இருந்துதான் ஆதவனாய் உள்ள சூரியனும் பிறந்தான். பூமித்தாயும் வளர்ந்தாள். மற்ற அனைத்துக் கோளங்களுமே பிறந்து… வளர்ந்து… வாழ்கின்றன.

இந்தப் பால்வெளி மண்டலத்தில் காற்றில் கலந்துள்ள அமிலமே நீராயும் நெருப்பாயும் ஒன்றை ஒன்று பற்றியே சுழன்று கொண்டு உள்ளது.

1.இவ்வமிலமே திடமாகி… அத்திடத்தில் இக்காற்று பட்டு
2.அதை ஈர்த்து அது வெளிப்படுத்தி… அந்நிலையிலேயே வளர்ந்து
3.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றின் அமிலம் மற்றொன்றில் கலந்து
4.அது ஈர்த்து சமைத்து வெளிக்கக்கும் அமிலம் மற்றொரு கலவையுடன் சேர்ந்து… அவை எடுத்து அவை வெளிப்படுத்தி
5.இப்படியே மோதுண்டு மோதுண்டு… ஒன்று உண்டு அதன் கழிவு வெளிப்பட்டு
6.அக்கழிவு அதன் இனமுடன் சேர்ந்து அவை உண்டு அவை சமைத்து வெளிப்படுத்தும் அமிலம் படர்ந்தே
7.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஜீவன் கொண்டு
8.ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டு மண்டலமாய் உருப்பெற்று
9.அம்மண்டலம் எடுக்கும் உணவு (சுவாசத்தை) கொண்டு அதன் சக்தி நிலை வளர்ந்து
10.அது வெளிப்படுத்தும் அமிலத்திலிருந்து பல நிலை பெற்று
11.பால்வெளி மண்டலத்தை… இக்காற்று மண்டலத்தை… மையமாய்க் கொண்டு சுழலுவது தான்
12.அனைத்து மண்டலங்களும்… நாமும்… எல்லாமுமே…!

ஆவிதானப்பா அனைத்துமே…!

ஆவியான இக்காற்றில் நிறைந்துள்ள அமில சக்தியைக் கொண்டு நம் ஆத்மாவிற்கு உகந்த அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து உயர்ந்த ஞான நிலைபெறும் பக்குவ அமிலத்தை உணரும் சக்தி பெறல் வேண்டும்.

இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்களெல்லாம் தனக்குகந்த அமிலத்தையே ஈர்த்து வளரும் பக்குவ நிலை உள்ள பொழுது நாமும் அனைத்துமே ஆவிதான்.

நாமும் ஆவிதான் நம் உடலில் உள்ள அனைத்துமே ஆவிதான் என்பதனை உணர்ந்து நமக்குகந்த ஆவி அமிலத்தை எண்ணத்திலேயே ஒரு நிலை கொண்டிடும் பக்குவ நிலைப்படுத்திட வேண்டும்.

1.பக்குவத்திய முறையில் ஞானத்தின் வழித்தொடர் பெற்று
2.ஆவியாய்ப் பிரியப் போகும் பிம்பத்தை பேராசைப் பொருளாய் எண்ணிடாமல்
3.அனைத்தும் ஆவிதான் என்பதனை உணர்ந்து ஒவ்வோர் உடல் கொண்டு வாழ்ந்து பல எண்ணத்தை ஈர்த்து
4.பல கோடி ஆண்டுகளுக்கு ஜீவன் கொண்ட பல பிம்ப உடல்களை ஏற்று ஏற்று (பிறவிக் கடனாக)
5.நம் ஆத்மாவைப் பெரும் இன்னல் படுத்திடாமல் உயர் ஞானம் பெறும் நல்லுபதேசம் பெற்று
6.சித்தாதி சித்தர்களும்… ஞானாதி ஞானியர்களும்… சத்திய ஞானம் பெற்ற சப்தரிஷிகளும் இக்காற்றில்தான் கலந்துள்ளார்கள் என்ற எண்ணம் கொண்டு இவ்வுண்மையை உணர்ந்து
7.ஆண்டவனுக்கு மத வேறுபாடு இல்லை…. எவ்வாண்டவனை வணங்கினாலும் ஒன்றே என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு
8.உம்மின் அன்பை ஆண்டவனாய் ஒருநிலைப்படுத்தி
9.உம் எண்ணத்தில் ஆண்டவனாய் வரித்துள்ளவரையே ஆண்டவனாக்கி உம் எண்ணத்தில் செயல்படுத்தி…
10.நீவிர் எடுக்கும் சுவாசமெல்லாம் உம் உயிர் ஆத்மாவின் அமில வட்டத்தில் ஞானத்தின் சக்தித் தொடரை ஈர்க்கும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.

ஞானத்தின் வழித்தொடர் பெற்று விட்டால் நம் எண்ணமும் செயலும் ஞானமாகி அதன் தொடர்பிலேயே பல நிலைகளை நாமும் உணர்ந்திடலாம்.

இத்தொடரின் வழியினால் நம் ஆத்மா நம் நிலையில் அக்காற்றுடன் காற்றாய் செயல் கொள்ளும் பக்குவத்தை நம் எண்ணத்தினால்தான் செயல்படுத்திட முடியும்.

உயிரணுவாய்த் தோன்றிய நிலையிலேயே ஈர்க்கும் நிலைப்படுத்தி அவ்வுயிரணு தோன்றிச் சேமித்துச் சேமித்துப் பழக்கப்படுத்தி பல நிலைகளை ஈர்த்த பின் மனித ஆத்மாவாகப் பல நாள் சேமிப்பின் அமிலத்தை வளர்த்துக் கொண்டுள்ள நிலையில்
1.தன் ஆத்மாவைக் காற்றுடன் கலக்கவிடும் பக்குவத்தை உணர்ந்து செயல்படுத்தினால்
2.ஞானம் என்ன…? சித்தென்ன…? சப்தரிஷிதான் என்ன…? சகலத்திலும் சகலமாய் உள்ள அவ் ஆதி சக்தியுடனே ஒன்றிடலாம்.

“பேரானந்த நிலை… தெய்வீக நிலை…!” என்பதெல்லாம் இன்று வாழ்க்கையில் நாம் காணும் இந்த மாயக் கனவு வாழ்க்கையில் இல்லை…! என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

யாம் சொல்வது வெறும் வார்த்தையல்ல – ஞானகுரு

 

நம் வீட்டில் சிறு குழந்தையாக இருப்பது டி.வி.யைப் பார்க்கும் பொழுது அதில் வரும் பாடலோ ஆடலோ அது மனதில் பதிவாகிறது. மற்ற கலக்கம் இல்லாத நிலையில் தான் குழந்தை டி.வி.யைப் பார்க்கின்றது.

இப்படி அந்த ஆடல் பாடல்களை உற்றுப் பார்க்கப்படும் பொழுது மீண்டும் அதே உணர்வுகள எண்ணத்தால் எண்ணும் போது ஆடிக் காட்டுகின்றது… பாடவும் செய்கிறது.

குழந்தை இதை எல்லாம் தெரிந்து செய்யவில்லை. பதிவானது இயக்குகிறது.. இயங்குகிறது.

இதைப் போல் தான் இங்கே யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞானிகளின் அருள் உணர்வுகளை
1.நீங்கள் கற்கவில்லை என்றாலும்… கற்றறியும் திறன் இல்லை என்றாலும்
2.யாம் சொல்வதைக் கூர்ந்து பதிவாக்கப்படும் பொழுது
3.மீண்டும் இதனின் நினைவாற்றல் வந்தால் இந்த ஞானத்தின் உணர்வின் இயக்கமாக மாற்றும்.
4.உங்களில் உள்ள தீமைகளை மாற்றிடும் தன்மையும் வரும்.

நான் கற்காதவனாக இருந்தாலும் கல்வியற்றவனாக இருந்தாலும் குருநாதர் எனக்குள் அதைப் பதிவு செய்தார். அந்த உணர்வை நுகர்ந்தேன். அந்த உணர்வின் அறிவாக எனக்குள் அது இயக்கச் சக்தியாக வளர்ச்சி அடைந்தது.

1.அப்படி வளர்ச்சி அடைந்த ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அதன் செயலாக்கங்களாக… அதே வழியில்… உங்களுக்குள்ளும் உருவாக்கும் நிலைகள் வர வேண்டும் என்பதற்குத் தான் இதனைச் சொல்வது.

ஏனென்றால் நான் வெறும் வார்த்தையாகப் பேசவில்லை…!

குரு அருளின் உணர்வுகளைத் தான் வாக்காக… ஞான வித்தாக… உங்களுக்குள் அது பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கிடும் மனிதர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும்.

இந்தப் பிரபஞ்சம் அழியும் தருவாயில் இருக்கும் பொழுது
1.மனிதனான நாம் அந்த அருள் ஒளியைப் பற்றுடன் பற்றி
2.இனி பிறவியில்லா நிலை அடைந்து
3.என்றும் ஒளியின் சரீரமாக நாம் மாறிடல் வேண்டும். (இந்தப் பிரப்ஞ்சம் அழிவதற்கு முன்)

அந்த நிலை பெறாதபடி இங்கே வேதனை என்ற உணர்வு கொண்டால் மனிதனல்லாத ரூபமாக மாற்றி நரக வேதனைப்படும் உணர்வின் அணுக்களாக மாற்றிவிடும். நஞ்சின் தன்மை அடைந்து விட்டால் மனித உடலை இழந்து விடுவோம்.

அப்படியே தப்பித் தவறி மனிதனாகப் பிறந்தாலும் “அசுர சக்திகள்” கொண்டு செயல்படும் உணர்வாகத் தான் அது மாற்றும். ஆகவே இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதாவது… மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றாலும் மனித உடலில் வாழும் போது “யார் உணர்வைக் கவர்ந்தோமோ” அந்த உடலுக்குள் சென்று தான் இந்த உணர்வைக் கருவாக்க முடியும்.

ஆனாலும் இப்பொழுது வாழும் இந்த மனித உடலில்… நஞ்சு கொண்ட உணர்வுகளால் நல்ல அறிவின் ஞானத்தை இங்கே இழந்து விட்டால்… அந்த உணர்வின் அணுக்களாகத் தான் நம் உயிராத்மாவிலே விளையும்.

உடலை விட்டுப் பிரிந்தாலும் மீண்டும் பற்று கொண்ட மனித உடலுக்குள் நாம் செல்லப்படும் பொழுது இங்கே விளைந்த உணர்வுகள் அந்த மனிதனையும் வீழ்த்திடும் உணர்வைத்தான் உருவாக்கும்.

அங்கே சென்று குழந்தையாகப் பிறக்காதபடி நஞ்சினை வளர்த்திடும் நிலை கொண்டு… மனித ரூபத்தையே மாற்றிவிட்டு… மாற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு வெளி வந்த பின்
1.மனிதனல்லாத உணர்வின் வலு கொண்ட உடலுக்குள்ளே ஈர்க்கப்பட்டு அதனின் ரூபமாக நம் உயிர் மாற்றிவிடும்.
2.இன்றைய செயல் நாளைய சரீரமாக ஆகும்.
3.ஆகவே இன்றைய நம் செயல் எதுவாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு நாமும் ஞானியாக வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

தீய வினைகளிலிருந்தும் சாப வினைகளிலிருந்தும் விடுபடுங்கள்

 

நமது வாழ்க்கையில் எத்தனையோ சலிப்பு பட்டவர்கள் சங்கடப்பட்டவர்கள் கோபப்பட்டவர்களை எல்லாம் பார்த்திருப்போம்… நுகர்ந்திருப்போம். அந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் தீய வினைகளாக இருக்கும். அதே போல் நாம் தாய் கருவில் இருக்கப்படும்பொழுது பெற்ற பூர்வமும் இருக்கின்றது.

அதாவது தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது நோயாளியைப் பார்த்திருப்பார்கள் சாபமிட்டவரைப் பார்த்திருப்பார்கள் எத்தனையோ வேதனைப்பட்டோரையும் பார்த்திருப்பார்கள். அதே சமயத்தில் ஒரு சிலருக்குச் செய்வினை செய்திருக்கின்றார்கள் என்றெல்லாம் கூட கேட்டிருப்பார்கள்.

இந்த உணர்வை எல்லாம் தாய் நுகர்ந்த பின் தாய் கருவில் இருக்கும் பொழுது அது பூர்வ புண்ணியமாக நமக்குள் விளைகின்றது.
1.இது எல்லாம் அந்தந்தக் காலகட்டங்களில் அந்த வளர்ச்சிகள் வரும் போது
2.நம்மை அறியாது எத்தனையோ நோய்களாகவோ மற்ற தீமை செய்யும் இயக்கங்களாகவோ வருகிறது.
3..நாமும் தவறு செய்யவில்லை… தாயும் தவறு செய்யவில்லை
3.நுகர்ந்த உணர்வோ தாய் தந்தையரால் நுகரப்பட்டது தான்.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது அந்தத் தாய் விஷத் தன்மையில் இருந்து தப்பிப்பதற்காகப் பல பல பச்சிலைகளையும் விஷத்தை முறிக்கும் மூலிகைகளையும் நுகர்ந்தது.

1.அந்த உணர்வுகள் தாய் கருவிலே இருக்கும் அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாகின்றது
2.விஷத்தை முறிக்கும் சக்திகளை அகஸ்தியன் பெறுகின்றான்.
3.அதன் மூலம் அவன் அண்டத்தையே அறியும் அருள் சக்தி பெறுகின்றான்
4.நஞ்சை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் வல்லமையும் பெறுகின்றான்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களைப் பெற்றால் தான் முதலிலே சொன்ன… அறியாமல் வந்த எத்தனையோ தீய வினைகளிலிருந்தும் தாய் கருவிலே பெற்ற பூர்வம் என்ற நிலைகளிலிருந்தும் ஒவ்வொருவரும் தப்ப முடியும்.

அந்தச் சக்திகளைப் பெற நாம் இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து… ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து
1.எங்கள் வாழ்க்கையில் அறியாது செர்ந்த தீயவினைகளால் விளைந்த சாப வினைகளால் விளைந்த பாவ வினைகளால் விளைந்த பூர்வ ஜென்ம வினைகளால் விளைந்த
2.கேன்சர் டி.பி. இரத்தக் கொதிப்பு சர்க்கரைச் சத்து ஆஸ்த்மா வாத நோய் முடக்கு வாதம் சரவாங்கி நோய் போன்ற சர்வ நோய்களும் நீங்கி
3.நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று உடல் நலம் பெற்று மன பலம் பெற்று
4.நாங்கள் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற்று எங்கள் இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி பேரருள் பெற்றுப் பேரொளியாகி… தெளிந்த மனமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வும் பெற்று.. பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று… தொழில் வளம் பெருகி செல்வம் பெற்று… அருள் ஞானம் பெருகி அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

கூட்டுத் தியானங்களில் இது போன்று எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பின் எந்த நேரம் எண்ணினாலும் அந்த ஆற்றலை எளிதில் பெற முடியும்.

ஐக்கியத் தொடர் ஜெனிப்பினுள்ளே… ஐக்கியமாகிவிடு ஈஸ்வரபட்டாய குருதேவா – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு மதத்தவரும் ஆண்டவனை அவரவர்கள் உணர்ந்த நிலையில் உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். அனைத்து ஆத்மாக்களுக்குமே நல்லுணர்வு பெற வேண்டுமென்று அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள்ளும் ஓர் எண்ண நிலை ஓடிக்கொண்டுதான் உள்ளது.
1.ஆனால் அவரவர்கள் வளர்ந்த நிலையினால்
2.அந்த நல் உணர்வுகளைச் செயல்படுத்த முடியவில்லை.

பல காலமாய் நல்லுணர்வு கொண்ட சப்தரிஷிகளும் பல மகான்களும் எண்ணங்களில் பக்தியைச் செலுத்தியும் இன்றளவும் செயல் கொண்டுள்ளார்கள்.

ஆனால் இம் மகான்கள் எல்லாம் ஏன் பிறப்பில் வந்து செயலாக்குவதில்லை…?

சப்தரிஷியாய் சகலத்துடன் கலந்திட்ட ஒளி பிம்ப சக்தி பூண்ட ஆண்டவன்களெல்லாம் பிறப்பில் வருவதில்லை. ஏனென்றால் பிறப்பில் வரும் பொழுதே இவ் ஆண் பெண் என்ற இச்சையில்… ஆசையில் உட்பட்டால் அவர்கள் பெற்ற சக்தி தடைப்படுகிறது.

1.ஒவ்வோர் ஆத்மாவும் பிறப்பிற்கு வரும் பொழுது
2.முன் பிறப்பு நிலை மறைக்கப்படுவது இந்த இச்சை நிலையினால் தான்.

பிறப்பிற்கு வந்து விட்டால் முன் ஜென்மத்தில் முந்தைய நாட்களில் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும் “பிறப்பு…” என்று ஆசைப்பட்டவுடனே பெற்ற பலன் சிதறுண்டு இவ்வுலக ஆசையில் சிக்குண்டு விடுகிறது. அதனால்தான் எம் மகான்களும் பிறப்பில் வந்து பிறப்பதில்லை.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன்.

பதினாறாவது வயதில் ஈஸ்வரப்பட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல் கொண்டார். அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை வெளிப்படுத்தினார் “பைத்தியக் கோலம் பூண்டு…!”

பல அன்பர்களின் இல்லத்தில் வைத்திய முறையை உணர்த்தியும் சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச் செய்வித்தும் அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.

அந்த நிலையில் அவர்களுக்கும் பல ஆசை நிலைகளையூட்டி இவ் உலக மக்களின் பேராசையான “தங்கம்” செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின் மூலமாய் உணர்த்தி அவர்களின் ஆத்மா இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு அல்லல் படுவதையும் உணர்த்திட்டேன்.

1.எம்மை ஒரு கருவியாக்கி எம்மால் அடையும் பலனைப் பற்றித் தான் விரும்பினார்களே தவிர
2.அழியாத பொருளான ஆத்மச் செல்வத்தை யாரும் விரும்பவில்லை.

பல இல்லங்களில் ஈஸ்வரப்பட்டரின் உடல் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தி ஞானத்தைப் போதிக்க முயன்றோம்…
1.எம்மிடமுள்ள வித்தை என்ன…?
2.அதனால் பெறப்போகும் பயனென்ன…?
3.பயன் என்பதையே அழியப் போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா…!

அந்நிலையில்தான் வேணுகோபால நாயகனையும் (ஞானகுரு) பிடித்தேன். அவனது முன் ஜென்மத்தில் பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான்.

அஜ்ஜென்ம ஆசையிலிருந்து விடுபடாமல் வேணுகோபால பிம்ப உடலைக் கொண்ட ஜென்மத்திற்கும் வந்தான். அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே பல இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.

மற்ற ஆத்மாக்களாய் இருந்தால் இன்றைய இக்கலியில் மீளுவது கடினம். பல இன்னல்களைத் தந்துதான் அவனை ஞானத்தின் வழித்தொடர் அறிய வைத்தேன்.

1.பல காலமாய் இவ் இன்னலில் இருந்த பிறகுதான் அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன்
2.பல ஆசை நிலைகளையும் ஊட்டி விட்டேன்
3.இவ்வாத்மாவையே முடித்துக் கொள்ளலாம் (தற்கொலை) என்னும் சங்கட நிலையையும் ஊட்டிவிட்டேன்.

பல ஊர்களுக்கு அலையவிட்டு ஒவ்வோர் ஆத்மாக்களின் எண்ண நிலை ஆசை நிலை அனைத்தையும் அறியச் செய்து அவ் வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கி பல சக்திகளை வெளிப்படுத்தி பல ஆத்மாக்களுக்கு ஞான வழித் தொடர் பெறும் நிலையை எல்லாம் செயலாக்கினேன்.

அந்த நிலையிலேயே எமக்குச் சிஷ்யனாக்கி… அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம் என்பதனை உணர்ந்து ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலேயே விட்டுப் பிரிந்தேன். அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது.

ஈஸ்வரப்பட்டரின் உடலில் இருந்து பிரிந்து வேணுகோபாலின் மூலமாய் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை உணர்த்தினேன்.

எம்மைப் போல் உள்ளவர்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு ரூபத்திலும்… மனித ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்க பல செயல்களைச் செய்விக்கின்றோம்.

1.அனைத்து ஆத்மாக்களுமே எமக்கு ஒன்றுதான்…!
2.எம் செயலை வெளிப்படுத்திட உடல் ஆத்மா ஒன்று தேவை.
3.எம் செயலை ஈர்க்கும் ஞானத்தின் சக்தியைத்தான் எம் செயலுக்குகந்த சக்தியாகச் செயல்படுத்த முடியும்.
4.அதன் வழி வருவோர் அனைவரும் அவர்கள் வேறல்ல யான் (ஈஸ்வ்ரபட்டர்) வேறல்ல என்ற நிலையில் ஐக்கியப்பட்டே
5.எம் செயல் நிலை இவ்வுலகினில நடந்திடும்.