தினசரி உபதேசம்

guru spiritual wishes

என்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்

இங்கு வெளியிடப்பட்டுள்ள அருள் ஞான நூல்களை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போது உங்கள் வாழ்க்கையில் மனம் சோர்வடைகின்றதோ அப்போது அதை எடுத்துப் படித்தால் அந்தச் சோர்வின் தன்மையை அது மாற்றி அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்களை அழைத்துச் செல்லும்.

ஆகவே இதை ஒவ்வொருவரும் தலையாய கடமையாக வைத்து அதைப் படியுங்கள். படித்ததை நீங்கள் மீண்டும் நினைவு கொண்டால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1.நான் (ஞானகுரு) ஒரு பங்கு தான் வளர்ந்திருக்கின்றேன்
2.என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு உயர்ந்தவர்களாக முடியும்.
3.அருளானந்தத்தைப் பெறக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்.
4.அனைவருக்கும் அருளானந்தத்தைக் கொடுக்கும் உயர்ந்த நிலைகள் நீங்கள் பெறலாம்.

சாமிக்கு மட்டும் ஏதோ சக்தி இருந்து பெற்றதில்லை…! என்னைக் காட்டிலும் நீங்கள் நான்கு மடங்கு அதிகமாக அந்த அருள் சக்தியைப் பெறலாம். இதன் வழி நீங்கள் பின்பற்றிப் பாருங்கள்.

நீங்கள் எந்த அளவுக்கு உயர்கின்றீர்களோ உங்களிடமிருந்து அந்த ஆனந்தமான உணர்வை நானும் பெறுகின்றேன். இதைப் போல பிறருக்கு நீங்கள் போதித்து அவர்கள் வளர்ச்சி அடையும்போது அதைக் கண்டு நீங்களும் ஆனந்தப்படுங்கள்.

இணைந்து வாழும் நிலையும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் நாம் அனைவரும் பெறுகின்றோம். நீங்கள் எல்லோரும் உயர வேண்டும் என்ற கருத்தில்தான் இதை உபதேசித்து அந்த உயர்ந்த உண்மையின் உணர்வை நீங்கள் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

நீங்கள் எந்த அளவுக்கு இதிலே வளர்ச்சி பெறுகின்றீர்களோ அந்த அளவுக்கு எனக்கு ஆனந்தம் வரும்.

ஒரு வித்தினை ஊன்றியபின் அது சீராக முளைத்து நல்ல பலன் கொடுத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்…? சந்தோஷம் என்ற நிலை வரும்.

ஒரு வித்தினை ஊன்றி அது சரியாக முளைக்காவிட்டால் உங்கள் மனம் எப்படி இருக்கும்… சோர்வடைந்துவிடும்…!

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானத்தைப் போதித்து அருள் உணர்வுகள் உங்களில் வளர வேண்டும். இந்த வாழ்க்கையில் துன்பங்களை அகற்றிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும். பேரானந்த நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்றுதான் எனது தியானமே.

இதைக் கேட்டுணர்ந்தோர் நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் வலு கொண்டு துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெருக்குங்கள் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுங்கள். அதைப் போல பேரானந்தத்தைப் பெருக்கும் நிலையை கூட்டுங்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய தீமைகளை அகற்ற உதவும். உங்கள் வாழ்க்கையில் பேரின்ப பெரு வாழ்வு என்ற நிலையில் வாழுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் வளர்வதைக் கண்டால் எனக்கு சந்தோஷம். அதே போல் நீங்கள் உங்களுடன் அணுகி வருவோருக்கு உங்கள் நோயெல்லாம் போய்விடும்… குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொல்லி அதன் மூலம் அவர்கள் சந்தோஷப்படும்போது உங்களுக்கும் சந்தோஷம் வருகின்றது.

ஆகையினால் இந்தத் தியானத்தைச் செய்வோர் பிறருடைய நிலைகளைக் கண்டு “உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று கேட்க வேண்டாம்.

உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு…
1.உங்கள் நோய் ஓடிப் போகும்… நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
2.உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் தொழில் லாபகரமாக இருக்கும் என்ற இந்த வாக்கினைக் கொடுங்கள்.

உங்கள் வாக்கு அது ஒரு ஞான வித்தாகி அவர்கள் நினைவு கொண்டால் நிச்சயம் அவர்கள் நலம் ஆவார்கள். ஒருவருக்கொருவர் இப்படிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாதாரணமாக… ஒருவர் “தான் படும் துன்பத்தைச் சொன்னால்” அதை நாம் கேட்டபின் அந்தத் துன்ப நிலையே நமக்குள்ளும் விளைகின்றது.

இதைப் போல் பேரின்பம் பெற வேண்டுமென்று உங்களுக்குள் அருள் ஞான வித்தை யாம் ஊன்றிய பின் இதன் உணர்வை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

ஒவ்வொருவரும் அதிகாலையில் கூட்டுக் குடும்ப தியானம் இருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பெருக்குங்கள். எல்லா நலமும் வளமும் பெறுவீர்கள்.

தியானத்தில் சக்தி எடுக்க வேண்டிய முறை

நம் கவனம் சிதறக் காரணம் – குரு உபதேசம் – விளக்கம்

வியாபாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும்…?

தியான விளக்கமும் பயிற்சியும்

பிரதோஷம்

செய்வினையிலிருந்து விடுபடும் வழி

சாமி கும்பிட வேண்டிய முறை

Nostradamus

மகரிஷியால் காக்கப்பட்டு வரும் ஞானப் பொக்கிஷம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இவ்வுலக மக்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவர்கள் அறியாமலே அவர்களை இப்பேராசை என்னும் செயற்கைப் பேய் ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.

1.அன்றாண்ட அரசர்களின் ஆவேச உணர்ச்சிகள் அன்றைய மக்களின் எண்ணங்களிலெல்லாம் கலக்கவிட்டு
2.இன்றும் அதே வழி வழியாய் வந்த அவ்வாவேச நிலை கொண்ட உணர்ச்சியினால்
3.இவ்வுலக நிலையே செயற்கைக்கு அடிபணிந்து வாழும் நிலையில் உள்ளது.

இன்றுள்ள மனிதர்களில் பெரும்பாலோரின் எண்ணங்கள் பெரும் பேராசை கொண்ட பணத்திற்கு அடிமைப்பட்டு வாழும் நிலை தான்…! செல்வத்தை ஈட்ட எவ்வழியையும் நாடலாம் என்று தான் உள்ளார்கள்.

இவ்வுலகில் வாழப் பணச் செல்வம் ஒன்றைத்தான் பொக்கிஷத்தின் பொக்கிஷமாகக் கருதி அதற்கே அடிமையாகி இவ்வுலகத்தையே செயற்கையின் கோளமாக்க இந்நூற்றாண்டில் அறிவு வளர்ச்சி பெற்ற மனிதர்கள் இவ்வுலக நிலையை நடத்திச் செல்கின்றார்கள்.

ஆண்டவனையே பல ஜாதி நிலை கொண்டு பிரித்து வைத்துள்ளார்கள். ஜாதி என்னும் வழியை உண்டு பண்ணியவர்களும் அதன் வெறி நிலையில் இன்று தன்னைத் தானே தன் ஜாதிக்குத்தானே அடிமைப்பட்டு உழன்று வாழ்கின்றார்கள் என்று எண்ணுவதில்லை.

தன் ஜாதிக்குத் தான் மதிப்பளிப்பதாக எண்ணுகிறார்கள் அச் ஜாதிக்கு அடிமைப்பட்டவர்களெல்லாம்…!

இவ்வுலக நிலையை இவ்வரசர்கள் ஆண்ட காலம் முதல் இப்பொழுது அரசாட்சி நிலை கொண்டும் ஆட்சியில் உள்ளவர்கள் நடத்திடும் நாடகத்தினால் வந்த வினைச் செயல்தான் இன்று இவ்வுலக நிலையில் உள்ளன.

சூழ்ச்சியான நிலையில் பேராசையின் பேயை வளர விட்டுத்தான் இன்று இவ்வுலக நிலையே உள்ளது.

அனைவரின் எண்ணமும் ஒன்றுபட்டுச் செயல்படும் நிலையாகக் கூடி வரும் நிலையை ஏற்படுத்திட
1.இன்றுள்ள பல மத வழிகளில் உள்ள பெரியோர்கள் எல்லாம் ஒரு நிலைப்பட்டு
2.இவ்வுலக நிலையை இவ்வுலக மக்களின் எண்ண நிலையை ஒன்றுபடுத்திட
3.பக்தி என்னும் நிலையை வளரவிட்டு அன்பு பாசம் என்ற பிணைப்பு நிலையை மக்களின் எண்ணத்தில் சுழல விட்டு
4.இப்பேராசையிலிருந்து விடுபட்டு ஆசையான அமுதை ஊட்டி தெய்வீக நிலையில் ஈர்த்து
5.இன்றுள்ள மக்களின் ஜன நெருக்கத்தை மிகத் துரித நிலையில் பெருகும் நிலையைச் சமப்படுத்தி
6.தாவர வர்க்கங்களை ஓங்கச் செய்து இவ்வுலகை நிலைப்படுத்தும் தன்மைக்கு
7.பல நூறு வருடங்களுக்கு முன் நம்மைப் போல் இவ்வுலகினில் பிறந்து நமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்த
8.இவ்வுலகின் ஞானச்சுடரான மகரிஷி ஒருவர் எழுதி வைத்த பெரும் பொக்கிஷம் ஒன்று
9.அவரால் பாதுகாக்கப்பட்டு அந்நிலையிலேயே ஜெபம் கொண்டும் காத்துள்ளார்.

அவருக்கு ஜாதி மதம் ஒன்றுமில்லை. இன்று இவ்வுலகிலுள்ள சக்தியின் செல்வங்களான சக்தி பெற்ற நம் மக்களில் யாவரும் அறிந்திடலாம் அதை.

அவரவர்களின் நிலையில் நடக்கும் நிலைகொண்டு ஜெபத்தின் அருளைப் பெற்றால் அந்த ஞானச் சுடரின்… அம்மகரிஷியின் அருளைப் பெற்று… அவ்வுலகப் பொக்கிஷத்தை எடுத்து அனைவருக்கும் அதிலுள்ள உண்மையை உணரும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்திடலாம்.

இம்மதம் என்ற நிலையை மாறுபடுத்தி இன்று இவ்வுலக நிலையைக் காத்து ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனின் ஜோதிகளை…
1.பல ஞான நிலைகளை மக்களுக்கு உணர்த்திடும் நல் பெரியோர்கள் அனைவரும் ஒன்றுபட்டால்
2.இவ்வுலகில் உதித்த சக்தியின் செல்வ குழந்தைகளை
3.இச்செயற்கையின் பேராசைப் பேயிலிருந்து விடுபடும் நிலைக்கு அழைத்திடலாம்.

இஜ்ஜாதி மதப் பேயின் வழி நடந்திடாமல் ஒன்றுபட்டுச் செயல் கொண்டு தன்னைத்தானே அடிமைப்பட்டு வாழும் நிலையிலிருந்து மீண்டு அருள் வழி நடந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித உடல் நமக்குச் சொந்தமல்ல.

ஆனால் கோபமோ ஆத்திரமோ வந்து என்னை அவர்கள் இப்படிப் பேசினார்கள்… இவர்கள் குறையாகப் பேசினார்கள்… கேவலமாகப் பேசினார்கள்… அவமதித்துப் பேசினார்கள் என்கிற இந்த உணர்வுகளைத்தான் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிறபோது இந்த உடலைத்தானே அப்படிப் பேசுகின்றார்கள்.

இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே போய்விட்டால் இதை யாராவது மதிக்கின்றார்களா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உடலை யாரும் மதிப்பதில்லை.

எவ்வளவு அழகான உடலாக இருந்தாலும் திடீரென்று ஒரு ஹார்ட் அட்டாக்கோ மற்ற ஏதோ வந்தால் எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்…? என்னென்னவோ செய்து முட்டி மோதுகிறோம்…!

இருந்தாலும் இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா போய்விட்டது என்றால் இந்தச் சரீரத்தை யார் மதிக்கின்றார்கள்…?

கூடக் கொஞ்சம் நேரம் வைத்திருக்கலாம் என்றால் “இல்லை… நாற்றமாகிவிட்டது… சீக்கிரம் கொண்டு போக வேண்டும்…” என்று தான் சொல்கின்றோம்.

ஏனென்றால் வைத்திருக்கலாம் என்றால் அதற்குள் உடல் அழுகிப் போய்விடும் வீடே நாற்றமாகிக் கெட்டுப் போய்விடும்… “கொண்டு போய்ச் சேருங்கள்…” என்று தான் சொல்கின்றோம்.

ஆக இவை அனைத்திற்கும் எங்கே இருக்கின்றது…?

உயிர் தான் மூலமாக இருக்கின்றது. அந்த உயிர் இருக்கும் வரை தான் “இந்த மரியாதை”.

ஆனால் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வை இந்த உயிருடன் ஒன்றிச் சேர்த்துவிட்டால் இந்த உடல் என்ற மரியாதை போய் உயிர் என்ற நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் “அந்த மரியாதை” நமக்குள் வந்துவிடும்.

இதை நாம் பழகிக் கொண்டால் இந்த உடலின் தன்மையைப் பற்றி அதிகமாக நாம் நினைக்க வேண்டியது இல்லை. நினைப்பு வராது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் நாம் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகிவிடுகின்றது. (வினை – வித்து)

ஆனாலும், நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.

நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைச் கேட்டறிகின்றோம்.

இப்படிக் நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அதை அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் மீண்டும் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.

இதைப்போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.

மற்றவர்கள்படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது.

மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர்கள்படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.  “கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.

நாம் அடுத்தவர்களிடம் போய் இந்த மாதிரி…, எல்லாருக்கும் உதவி செய்தேன்… எல்லாம் செய்தேன்… “ஆண்டவன் என்னை சோதிக்கின்றான்” என்று நமக்குள்ளே அதே வித்தை நாம் உருவாக்குகின்றோம்.

உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். “நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும்போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது.

ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை. அந்த நல்லது சொல்வது என்பது சிறிது காலம் இருந்தாலும் அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

செல்வம் தேடுகின்றோம். ஆனால் தேடிய செல்வத்தால் மனிதர் நிலைத்திருக்கின்றனரா..? மனிதனால் தேடிய செல்வத்தைக் காக்க முடிகின்றதா..?

 

செல்வத்தைக் குவித்து வைத்திருந்தாலும்.., நிம்மதி வருகின்றதா..? வேதனையுடன் தான் வாழ்கின்றோம்.

 

செல்வத்தைத் தேட ஆசைப்படுகின்றோம். அதற்கடுத்து அந்தத் தேடிய செல்வத்தைக் காக்க.., மீண்டும் வேதனைப்படுகின்றோம்.

 

நேற்று சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம். இன்று செல்வத்தைத் தேடிக் குவிக்கின்றோம்.

 

சிரமப்படும்பொழுது நண்பராகப் பழகியவர்.., “நீ இவ்வளவு பணம் வைத்திருக்கின்றாயே.., ஏன்.., எனக்குச் பணம் கொடுக்கக்கூடாதா..,?” என்று கேட்பார்.

 

முதலில் ஏழ்மையில் வாடுகின்றோம். பின் வசதியாக வந்து விட்டோம். ஏழ்மையாக இருக்கும் பொழுது நண்பனாகப் பழகியவன் வசதியான பின் நம்மிடம் பணம் கேட்கும்பொழுது நாம் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வான்?

 

“நம்மைக் குற்றவாளியாக ஆக்க வேண்டும்..,” என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு மற்றவர்களிடம் அவ்வாறு சொல்லிப் பறைசாற்றுவான்.

 

“கொடுக்கவில்லை” என்பதற்காக என்னை இப்படியெல்லாம் பேசுகின்றானே என்று வேதனை நமக்குள் வந்துவிடும்.

 

அத்தகைய வேதனை வந்துவிட்டால் நுகர்ந்த உணர்வுகள் நம் ஈஸ்வரலோகமாக இருக்கும் சிரசிற்குள் அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக கருவாக உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.

 

எந்த மனிதன் வேதனைப்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தினானோ ஈஸ்வரலோகத்திற்குள் கருத்தன்மை அடைந்த பின் இந்திரலோகமாக மாறி அந்த அணுவின் தன்மை உருவாகிவிட்டால் பிரம்மலோகமாக மாறுகின்றது.

 

அணுவாகிவிட்டால் எந்த மனிதன் எதனால் குறை கூறி வேதனைப்பட்டானோ அந்த வேதனை உணர்வை நுகர்ந்து வேதனைப்படும் அணுக்களைப் பெருக்கி இந்த உடலையே வேதனைக்குரிய நிலையாக நோயாக மாறுகின்றது.

 

நோயாக மாற்றி சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடுகின்றது. இதை நீங்கள் நடைமுறையில் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

 

ஆகவே, செல்வத்தைத் தேடினாலும் சந்தர்ப்பத்தால் இப்படி ஒரு நிலை. இது போன்று செல்வத்தைக் காக்கும் நிலை இல்லை. செல்வம் தேடினாலும் உடலைக் காக்கும் நிலை இல்லை.

 

நமது ஆசையின் நிமித்தம் இந்த உடலின் இச்சைக்கே தான் வாழ்கின்றோமே தவிர “இந்த உடலுக்குப் பின்.., என்ன..?” என்ற நிலையை யாரும் சிந்திக்கவில்லை.

 

நம்மைக் காக்க வேண்டும் என்றால் அதற்குண்டான சக்தி நமக்குத் தேவை. அதற்குத் தான் இந்த உபதேசம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

டயானா… தான் வாழ்ந்த காலத்தில் ஆடைகளை எவ்வளவோ செலவழித்து வாங்கும் அளவிற்குச் செல்வம் இருந்தது. செல்வாக்கும் தன்னிடம் இருந்தது.

அன்று இறந்த டயானாவின் ஆடைகளை எத்தனையோ கோடி விலைக்கு ஏலத்தில் விற்கிறார்கள். ஆமற்றவர்களுக்கும் பல கோடிப் பணம் கொடுத்து அந்த ஆடையை வாங்க வேண்டும் என்ற ஆசையை அது ஊட்டுகின்றது.

அந்த ஆசையைத்தான் முதலிலே (டயானா) அது வளர்த்தது. ஆனால், “வாழ வேண்டும்..,” என்று எண்ணிய அவளுக்கு அங்கே “நொடிக்குள் மரணம் சம்பவித்தது…!”

அதையும் நாம் நுகர்கின்றோம், அறிகின்றோம். “இருந்தாலும்…. ஆசை நம்மை விட்டபாடில்லை…!

“அவர் வளர்த்துக் கொண்ட ஆசையை” நமக்குள் பதித்துக் கொண்டபின் “ஏன்.., நாமும் அவரைப் போல் வரக்கூடாது…” என்ற இந்த நிலை தான் வருகின்றது.

அதே வழியில், “மெய் ஞானிகள்.., பிறவியில்லா நிலை அடைந்தனரே…!” அதை நாம் பெறலாம்.

நாம் ஏன் அந்தப் “பிறவியில்லா நிலை அடைய முடியாதா..,?” என்று அவர்கள் வழி சென்று அருள் மகரிஷிகளின் உணர்வை வளர்த்தால் நாம் அதைப் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் நாம் எப்படியும் வாழ வேண்டும் என்று வேகத் துடிப்புடன் பல கோடிகளை இணைத்துப் பொருளாகச் சம்பாரித்து வைக்கின்றோம்.

சம்பாரித்து வைத்தாலும் அந்தப் பணத்தைப் பார்க்கலாம். பணம் கோடி கோடியாக இருந்தாலும் என்ன சொல்கிறார்கள்.

இவ்வளவு வைத்திருக்கின்றேன்… ஆண்டவன் என்னை ஏன் சோதிக்கின்றான் என்று தெரியவில்லை…! இந்த வேதனையைத்தான் எடுக்கின்றார்கள்.

இதற்கும் அதற்கும் உடலுக்கும் மனதிற்கும் சீரற்ற நிலைகள் ஆகி கடைசியில் மன நிம்மதியற்ற நிலையில் தான் இருக்கின்றார்கள்.

பல ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாரித்த பின் இன்றைக்குப் பொய் சொல்லி “எப்படிடா தப்பிக்கலாம்…” என்று ஷேர் மார்க்கெட்டிலோ மற்ற தெரியாத வகைகளிலோ கொண்டு போய் அந்தக் கோடிகளைப் போடுகிறார்கள்.

இவ்வளவும் இருந்தாலும் “மன நோய்க்கு…” மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

சொத்துக்களைக் காக்க வேண்டும் என்று சென்றாலும் இந்த மனதிற்கும் உடலுக்கும் நிம்மதி இல்லை. நிம்மதியற்ற உணர்வே நஞ்சாக மாறுகின்றது.

உடலை விட்டுச் சென்றால் இந்தக் கோடிச் சொத்து எங்கே வருகின்றது? வருமா…!

இன்றைக்கு முதல் மந்திரியாக இருப்பவர் பிறர் மேல் பழியைத் தூக்கிப் போட்டுப் “பல கோடி நான் அவருக்குக் கொடுத்தேன்… இவருக்காக இதைச் செய்தேன்…” என்பார்.

இப்படி இருப்பவருக்குத் தன் நாட்டைக் காக்க வேண்டும் என்றால் “நிம்மதி… எங்கிருந்து வரும்?

நாட்டிற்கு முதல் மந்திரியாக இருக்கலாம். அதிகாரத்தின் நிலைகளில் தட்டிக் கேட்கும் நிலையும் இங்கே இருக்கலாம். ஆனால் இவருக்கு நிம்மதி ஏது?

அதைப் போலத்தான் இன்றைய நிலைகள் கொண்டு பெரிய பதவிகளில் இருப்போருக்குப் பேரும் புகழும் இருக்கலாம்.

ஆனால் அதன் மறைவிலே நஞ்சு கொண்ட உணர்வின் தன்மைகள் ”இணைந்தே” இருக்கின்றது. இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

அந்த நஞ்சற்ற நிலையாக நாம் திகழ வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் தன்மையை நாம் பழக வேண்டும்.

ஆகவே அத்தகைய நஞ்சின் தன்மை வரும் நிலையிலிருந்து தப்ப “தனி மனிதன் – எதுவும் செய்ய முடியாது”,

அதற்குத்தான் ஆலயங்களிலே விநாயகரை முன்னிறுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

நம் வாழ்க்கையில் எத்தகைய கஷ்டம் வந்தாலும் அந்த விநாயகரைப் பார்த்தவுடனே மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று உயிருடன் ஒன்றச் செய்து உணர்வின் ஆற்றலை உடலுக்குள் உள் செலுத்துதல் வேண்டும்.

தினசரி வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை நாம் கண்டறிந்த கேட்டுணர்ந்த நம்மையறியாது வந்த நஞ்சான உணர்வுகள் நம் ஆன்மாவாக நிற்கும்.

நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உள் செலுத்தும் பொழுது உள் நின்று வரும் குழம்பின் தன்மை இந்தத் தீமைகளைப் பிளக்கச் செய்யும்.

அந்த விநாயகர் தத்துவத்தின்படி அருள் மகரிஷிகளின் உணர்வை நம்மை நுகரச் செய்து அறிந்திடும் உணர்வாக உயிர் இயக்கி அந்த உணர்வின் ஆற்றலாக நாம் செயல்படும் தன்மையை உருவாக்கினார்கள் ஞானிகள்.

நாம் ஆலயங்களுக்குச் சென்று இந்த முறைப்படி எண்ணினால் இது தான் ஆத்ம சுத்தி என்பது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்றும் அறியாத மூடனான இரக்கமற்ற வான்மீகி சந்தர்ப்பத்தால் பட்சியின் மூலமாகத் தான் நுகர்ந்த உணர்வுகளால் மெய் ஒளி பெறும் தகுதியைப் பெற்றான். தனக்குள் மெய்யை வளர்த்துக் கொண்டான்.

தனக்குள் விளைந்த அந்த உணர்வின் ஆற்றலால் அவன் இராமாயணக் காவியத்தையே வெளிப்படுத்தினான். அவன் எப்படி வெளிப்படுத்தினானோ அதைப் போன்ற நிலைகளைத்தான் உங்களிடம் இப்போது சொல்வது.

புத்தகத்தைப் படித்து யாம் சொல்லவில்லை. குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து விளைய வைத்து அதன் வழியில் அனுபவபூர்வமாக உணர்ந்த மெய் உணர்வுகளைத்தான் வெளிப்படுத்துகின்றோம்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் ஒளி அலைகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே அவர்கள் உணர்வின் எண்ண அலைகளை உங்கள் கண்ணிற்குள் பாய்ச்சச் செய்து மெய் உணர்வின் ஒலியைத் தட்டி எழுப்பச் செய்கின்றோம்.

உங்களுக்குள் பதிவாக்கும் அந்த ஞான வித்தை வளர்க்கும் விதமாக விண்ண நோக்கி ஏங்கித் தியானித்து அந்த ஞானிகளின் அருள் சக்தியை நீங்கள் பெருக்க வேண்டும்.

அதைப் பெறவேண்டும் என்ற அந்த உணர்வை நீங்கள் ஈர்ப்பீர்களேயானால் அந்த மெய் ஒளியைக் காணும் தகுதி நீங்களும் பெறுவீர்கள். ஆகையினாலே உங்களை நம்புங்கள்.

ஏனென்றால் சாமியை நம்புகின்றீர்கள்… சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகின்றீர்கள்… மந்திரத்தை நம்புகின்றீர்கள்… ஆயுள் ஹோமம் செய்கின்றீர்கள்…! அதை எல்லாம் செய்து எதுவும் ஆவதில்லை.

ஒவ்வொரு நிமிடமும் அந்த ஞானியின் அருள் ஒளியைப் பெறுவேன். அந்த அருள் சுடரை நான் பெறுவேன் என்ற இந்த ஹோமத்தைச் செய்தால் உங்களுக்கு நிலையான ஆயுள் ஹோமம் இதுதான்.

ஞானிகள் வெளிப்படுத்திய அந்த உணர்வின் ஒளிகள் இந்தக் காற்றில் இருக்கின்றது. ஒளியின் நிலையாக அதைப் பெற்று நமக்குள் அந்த ஞான வழியின் தொடர் கொண்டு நம்மைச் சார்ந்தோருக்கும் அதைப் பாய்ச்சிடல் வேண்டும்.

ஹோமத்தின் நெருப்பிலே இடப்பட்ட பொருளின் தன்மை கருகி அதன் மணத்தின் தன்மை சுழல்வது போல உங்களுக்குள் வரும் தீயதை மாற்றிவிட்டு மெய் உணர்வாகப் படைக்கும் நிலைகள் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குழந்தையைத் திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றோம். ஆனால் புகுந்த வீட்டில் பல தொல்லைகள் வருகின்றது.

தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளை மேல் உள்ள பாசத்தால் “பாவிகள்…! என் பிள்ளையை இப்படிச் செய்கிறார்களே…” என்று எண்ணி மிகுந்த வேதனைப்படுவோம்.

வேதனை அதிகமாகிக் கடைசியில் நோயாகி அதே ஏக்கத்திலேயே உடல விட்டுப் பிரியும் நிலை ஆகின்றது. பிரிந்த பின் எந்தப் பிள்ளையைப் பாசத்தால் எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தோமோ அந்த உடலுக்குள் தான் போவோம் அங்கே சென்று இந்த உடலில் பட்ட வேதனையைப் பிள்ளை உடலிலும் உருவாக்கிவிடும்.

பின்… யார் யாரெல்லாம் பிள்ளைக்குத் துன்பம் கொடுத்தார்களோ அவர்களை வெறுக்கச் செய்து வெறுப்பின் நிலைகள் அதிகமாகி பிள்ளை உடலிலும் நோயை உருவாக்கும்.

இப்படி பாசத்தால் வளர்த்த பிள்ளைக்குள் சென்று சீரழிந்த நிலைகளாக நோயாக்கி… “குழந்தையையும் அழித்துவிடுகின்றோம்”. பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கின்றோம் என்றாலும் வேதனையுடன் செல்லும் பொழுது பிள்ளையைக் காக்க முடியவில்லை.

இதைத்தான் மெய்ஞானிகள் “சித்திர புத்திரனின் கணக்கு” என்று காவியப்படைப்புகளில் காட்டியுள்ளார்கள்.

சித்திரம் என்பது நாம் கண்களால் பார்ப்பது எல்லாமே “சித்திரம்”.

ஒரு நல்ல படத்தைப் பார்த்தவுடன் மகிழ்கின்றோம். சரியில்லாத படத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுழிக்கின்றோம்…, வெறுக்கின்றோம்.

இதைப் போன்று தான் மற்றவர்களின் செயல்களை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அவர்களைப் படமாகப் பதிவாக்குகின்றோம்.

அவர்கள் செய்வது தவறாக இருக்கும் பொழுது அவர்களையே மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசிக்கின்றோம். அப்பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுடன் சத்தாகும் பொழுது சித்திரம்…, “புத்திரனாக… அணுவாக… உருவாகிவிடுகின்றது”.

எந்தக் குணத்தை எண்ணி எண்ணிச் சுவாசித்தோமோ நம் உடலுக்குள் விளைந்து “குழந்தையாக… அந்தக் குணம்” என்னுடன் இயங்கத் தொடங்குகின்றது.

உடலுக்குள் அது விளைந்தபின் என் உயிராத்மாவில் போய்ச் சேர்கின்றது. உயிராத்மாவில் சேர்ந்தபின் அது சித்திர புத்திரனின் கணக்காகப் போய்விடுகின்றது.

ஆகவே பிள்ளை மேல் பாசமாக இருந்து “வேதனை…வேதனை…” என்று வளர்த்தால் அந்தக் கணக்கின் பிரகாரம் தன் உடலையும் வீழ்த்தி பிள்ளைக்குள் சென்று அந்த உடலையும் வீழ்த்தி கடைசியில் மனிதனல்லாத மாடோ மற்ற மிருக உடலாகவோ தான் பிறக்க நேரும்.

இதையெல்லாம் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா அணுவிற்குள் அணு சென்று (ஒரு உடலுக்குள் சென்று) அது எவ்வாறு செயல்பட்டது என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நேரடியாகவே எமக்கு (ஞானகுரு) உணர்த்தினார்… என் கண்ணாலேயே பார்க்கச் செய்தார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடல்களிலே படகுகளில் சென்றாலும் அவர்கள் அலை கடலிலே எதைக் குறிக்கோளாக வைத்துச் செல்லுகின்றனரோ அந்த அலை கடலில் எதிர் நீச்சலாடி அந்தக் கரையைக் கடந்து செல்கிறார்கள்.

தான் எண்ணிய காரியங்களை நிறைவேற்ற ஒரு ஊரைக் கடக்க வேண்டும் என்றாலும் அல்லது கடலுக்குள் மீன் பிடிக்க வேண்டும் என்றாலும் ஒரு எல்லை வகுத்துத் தான் செல்லுகின்றனர். இதைப்போல தான் மனிதனான நாம் இந்த உடலிலே இருந்தாலும் உடலுக்குப் பின் என்ன என்ற எல்லையை வகுத்து கொள்ள வேண்டும். அருள் ஞானிகள் சென்ற அந்த உணர்வுடன் நாம் ஒன்ற வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் வெறுப்பு வேதனை சங்கடம் சலிப்பு கோபம் குரோதம் என்ற கடுமையான புயல் நிலைகளில் அந்த அலைகளில் சிக்கி இன்று ஒவ்வொருவருமே தவித்துக் கொண்டிருக்கின்றோம்

இதையெல்லாம் மாற்றிவிட்டு சீரான நிலைகள் பெறவேண்டும் என்று வரப்படும் போது தான் அந்த அலைகளைப் பிளந்து நாம் எண்ணும் எல்லைகளை அடைய முடியும்.

இன்று ஒரு தெய்வத்தை வணங்க வேண்டும் என்று சென்றாலும் கூட ஒருவருக்கொருவர் எதிர்க்கும் நிலையில் புயல் போன்று கொந்தளித்து இந்த “வாழ்க்கையில் என்ன ஆகுமோ…? என்று எதிர் சிந்தனையாடிக் கொண்டுள்ளார்கள்.

நம் நாட்டில் வாழும் மக்களும் உலக மக்களும் எத்தனையோ வகைகளில் சிந்தனை சிதறி இன்று அவதிப்பட்டுக் கொண்டு பெரும் புயலில் அந்த அலையில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளார்கள்.

இந்த நேரத்திலும் நாம் ஒவ்வொருவரும் அதைச் சீராக்கிட அந்த மகரிஷியின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை நமக்குள் செலுத்துதல் வேண்டும்.

நாம் அந்த மகரிஷிகளின் அலைகளை எண்ணி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து நம்மை நம்மைக் காத்து நம்மைச் சார்ந்தோர் அனைவருக்கும் அதைக் கிடைக்கப் பெறச் செய்யவேண்டும்.

மகரிஷியின் அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் அவர்கள் பொருள் கண்டுணர்ந்து செயல்பட வேண்டும் என்ற இந்த நிலைக்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் உங்களுக்கு இதை உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

அதாவது உலகம் முழுவதற்கும் பரவிக் கொண்டு வரும் அந்தத் தீமையான அலைகள் – புயல்களிலிருந்து நாம் தப்பித்து மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இந்த உடலிலிருந்தே அழியா ஒளியின் சரீரம் நாம் பெற வேண்டும்.

இன்று இந்த வாழ்க்கையில் வந்த கடுமையான அலைகளிலிருந்து நாம் விபத்தில் சிக்கியது போல் ஆகிவிடக் கூடாது.

நாம் எண்ணும் நல்ல எண்ண அலைகளை மறைத்திடாது அருள் உணர்வின் வலுகொண்டு இந்த வாழ்க்கையில்… வரும் உலகத்தில் வரும்… தீமைகளை வென்றிட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞான அறிவிலே பெண்ணை ஆணாக மாற்றுகின்றனர். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றனர்.

அதே மாதிரி பெண்கள் மீது அதிக மோகம் கொண்டவர்கள் இருந்தால் இந்த உணர்வுகள் மாற்றப்பட்டு அந்த உணர்வுகள் ஜெயித்தாலும் இந்த உடலுக்குப்பின் “எந்த ரூபம் பெற்றாலும்… பெண்ணாகத்தான் மாற்றும்”.

விஞ்ஞானிகள் இயற்கையில் இயற்கையில் மனித உடலில் உருவாக்கப்பட்ட தன்மையை எடுத்து அதை அமிலமாக மாற்றி இன்னொரு உடலிலே பாய்ச்சப்படும் பொழுது அந்த அமிலங்களைப் பெருக்கும் தன்மை வருகின்றது.

அப்பொழுது பெண் ஆணாகவே மாறுகின்றது. அதற்குத்தக்க உறுப்புகளை உருப்பெறச் செய்கிறார்கள். நரம்பு மண்டலங்களை இணைக்கின்றனர். இன்று விஞ்ஞானிகள் செய்கிறார்கள் அல்லவா…!

இதைப் போன்ற (பெண்களைப் பற்றிய) உணர்வுகளை அதிகமாக எடுத்தால் இன்று ஆணாக இருக்கலாம். நாளை பெண்ணாக இருப்போம்.

இதே உணர்வுகள் வரப்படும் பொழுது மற்ற உயிரினங்களைப் பார்க்கலாம். பெண்ணாகப் பிறக்கக்கூடிய ஆடு மாடு எல்லாம் எத்தனை அவஸ்தைப்படுகின்றது?

குழந்தையை ஈன்றெடுக்கும் பொழுது அவஸ்தைப்பட்டாலும் குழந்தை பிறந்த பின் பாசத்துடன் காக்கின்றது. பாசம் இருப்பதால் வேதனையை மறக்கின்றது.

தாய்க்கு வேதனை இருந்தாலும் பிள்ளை மேல் உள்ள பாசத்தால் தன் வேதனையை மறந்து “பிள்ளை சாப்பிட்டதா…” என்று எண்ணுகின்றது. தாயின் பாச உணர்வு இவ்வாறு செயல்படுத்துகின்றது.

இதைப் போலத்தான் நாம் நுகரக்கூடிய உணர்வுகள் உறுப்புக்களையே மாற்றக்கூடிய சக்தியாக வருகின்றது.

அப்பொழுது ஒருவனின் தீமை செய்யும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அணுக்களை மாற்றியவுடன் உடல்களில் உறுப்புக்களை மாற்றிவிடுகின்றது.

உறுப்புகள் மாறியவுடன் அதற்கேற்ப எண்ணங்கள் மாறும். செயல் மாறுகின்றது. வெறுப்பென்ற உணர்வுகள் வருகின்றது. இவ்வளவும் நடக்கின்றது.

நல்ல திடகாத்திரமாக இருப்பவர்கள் பலருடன் பழகப்படும் பொழுது சில உணர்வுகளை எடுத்தவுடன் இந்த அணுக்கள் மாற்றம் அடைந்த பின் “உறுப்புகளே சுருங்கிப் போய்விடுகின்றது… எண்ணங்கள் சுருங்கி விடுகின்றது”.

இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆகவே நம் உடலுக்குள் பிறரின் தீமை செய்யும் உணர்வுகள் புகாமல் தடுக்க வேண்டுமல்லவா…!

அதற்குத்தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

குறைந்தபட்சம் உங்கள் குடும்பத்தில் எந்த நிலையாக இருந்தாலும் அடுத்த நிமிடம் அந்தத் தீமை நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

இல்லை என்றால் நம் உடலில் உள்ள கெட்ட அணுக்கள் சாப்பாடு அதிகம் எடுத்துவிடும். அதற்குச் சக்தி வாய்ந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நாம் எடுத்து அதைத் தடைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் கண்களால் பார்த்து நமக்குள் பதிவான உணர்வுகள் நுகரப்பட்டு நம் ஆன்மாவாக மாறுகின்றது.

நாம் சுவாசிக்கும்பொழுது உயிரிலே பட்டவுடன் அந்தந்த உணர்ச்சிகளாக இயக்குகின்றது. உடலுக்குள் சென்று அணுவாக உருவாகும் கருவாக உருவாகின்றது.

உதாரணமாக ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் அவரிடமிருந்து வெளிப்படும் அலைகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு அலைகளாகப் பரவி வருகின்றது.

அந்த அலைகள் எல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் கலக்கின்றது. அதைத்தான் “பரமாத்மா” என்று சொல்வது. அவர் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய பின் கண்ணின் காந்த புலனறிவு அந்த அலைகளைக் கவரச் செய்கின்றது.

அப்பொழுது சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்ட அந்த வேதனப்பட்ட உணர்வுகள் பரமாத்மாவிலிருப்பது நம் ஈர்ப்புக்குள் வருகின்றது. அது நம் “ஆன்மாவாக” மறுகின்றது.

நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலிருந்துதான் சுவாசிக்கின்றோம். எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ (பரமான இந்தப் பூமியில்) இந்தப் “பரமாத்மாவிலிருந்து தான்.., நம் ஆன்மா” எடுக்கின்றது.

அந்த அலைகள் நம் நெஞ்சுப் பகுதியின் அருகில் வருகின்றது. மூக்கின் துவாரங்கள் கீழ் நோக்கி இருப்பதால் அதைக் கவர்ந்து சுவாசத்திற்குள் செல்கின்றது.

மூக்கின் வழியாக சுவாசிக்கப்பட்ட உணர்வுகள் “கவன ஈர்ப்பு நரம்பு” கவரும் புருவ மத்தியில் உள்ள நம் “உயிரிலே” மோதுகின்றது.

உயிரிலே மோதியபின் “ஒ…ம்”…, வேதனைப்பட்ட உணர்வலைகளைச் சுவாசித்தால் வேதனையை நமக்குள் ஊட்டும் உணர்ச்சிகளை உயிர் ஊட்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மையை நம் உயிர் நுகர்ந்து உடலுக்குள் சென்றபின் ஜீவான்மாவாக மாறுகின்றது. அதாவது உடலுக்குள் நுண்ணணுக்கள் விளைந்து வேதனைப்படும் அணுவாக ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது.

இப்படி எந்தெந்த குணங்களை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ அதையெல்லாம் உயிர் ஜீவ அணுக்களாக ஜீவான்மாவாக உடலாக நம் உயிர் விளைய வைக்கின்றது.

இந்த ஜீவான்மாவில் விளைந்ததைத்தான் “உயிரான்மா” எடுக்கின்றது. பாலிலிருந்து வெண்ணையைப் பிரிப்பது போல் நம் உடலுக்குள் விளைந்த சத்தை உயிர் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

உயிரான்மாவில் இருக்கும் சத்துக்கொப்பத்தான் நாம் அடுத்த உடல் பெறமுடியும். ஆகவே இந்த வாழ்க்கையில் எதனை நாம் எடுக்கின்றோமோ அதனின் வலுத்தன்மையே உருவாக்கப்படுகின்றது.

அப்பொழுது எதை நாம் நம் உயிரான்மாவாக்க வேண்டும்?

நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று கண்களால் பதிவு செய்து அதை நினைவு கொண்டு உயிரான நிலைகள் கொண்டு உந்த வேண்டும்.

அதைத்தான் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்பது.

நம் உடலே சிவம். நம் உயிரே அகக்கண். கண்களோ புறக் கண்.

புறக் கண்கள் கொண்டு பிறரைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை நம் ஆன்மாவாக மாற்றி நாம் சுவாசிக்கும் பொழுது அது அகக் கண்ணுடன் மோதும் பொழுது உடலுக்குள் உணர்வைப் பரப்புகின்றது. உணர்வை அணுவாக மாற்றுகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் அறிகின்றோம்.

தீமைகளிலிருந்து மனிதன் விடுபடுவதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரிலே நினைவினைச் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று “உள் முகமாகக் கொண்டு வர வேண்டும்”.

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்திருப்பினும் இந்த உணர்வுகள் வரும் பொழுது அதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

நம்மை அறியாது வந்து நமக்கு முன் சுருண்டு கொண்டிருக்கும் இந்த தீமையான உணர்வுகளை அந்த ஆன்மாவைப் பிளக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்குள் உள்ள தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

இதை முறைப்படிச் செய்வதற்குத்தான் விநாயகர் தத்துவத்தை அமைத்தனர் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் சொல்லும் முறைப்படி தியானம் இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் கூட்டுக் குடும்ப தியானமிருக்க வேண்டும்.

 

தியானமிருந்த பின் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்து விண்னை நோக்கி உந்தித் தள்ள வேண்டும்.

 

அவர்கள் அங்கே சென்று ஒளிச் சரீரமானபின் அங்கிருந்து எங்களுக்கு நல் ஒளிகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

ஏனென்றால் அவர்கள் அங்கே போகாதபடி நாம் அங்கே செல்ல முடியாது.

 

மூதாதையர்களின் உணர்வுகள் தான் நாம். முதலில் நம் குலதெய்வங்களை விண்ணுக்குச் செலுத்திவிடுகின்றோம். பின் அவர்கள் இருக்குமிடத்திற்கு நாம் போகலாம்.

 

நம்மை மனிதனாக உருவாக்கியவர்கள் அவர்கள். முதுமையாகும் பொழுது போகின்றார்கள். அவர்கள் உடலை விட்டுச் செல்லும்போது அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ள வேண்டும்.

 

அதற்காக வேண்டித்தான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் உங்கள் உணர்வின் எண்ணங்களுக்கு விண்ணை எட்டிப் பிடிக்கும் நிலையும் விண்ணிலே ஊடுருவிச் செல்லகூடிய நிலைக்கும் பழக்கப்படுத்துகின்றோம்.

 

அந்த வலுவின் துணை கொண்டு ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தது என்றால் அதை நீங்கள் உந்திச் செலுத்தும் ஆற்றலைப் பெறச் செய்வதற்கும் உங்களைப் பழக்குகின்றோம்.

 

இவைகள் எல்லாம் “சிறு துளி… பெரு வெள்ளம்”.

 

இப்பொழுது எல்லோரும் நன்றாக இருந்தாலும் கூட யாராவது ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் “ஐய்யய்யோ.., இப்படி இறந்துவிட்டாரே…” என்று எண்ண வேண்டியதில்லை.

 

நீங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த இந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணித் தியானித்தால் அந்த ஆன்மா “ ஜிர்..ர்ர்…ர்ர்..” என்று (அவர்) மேலே போய்விடலாம். அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) தேவை.

 

ஆனால், இதை விட்டுவிட்டு… இந்தச் சரீரத்தை இங்கே புதைக்கலாமா… அல்லது அங்கே எரிக்கலாமா… என்று “அழுகக்கூடிய சரீரத்திற்கு” முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

 

ஆக சமாதியைக் கட்டினேன்… அதற்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் அதை மிகவும் விரும்பிச் செய்து கொண்டிருந்தால் மீண்டும் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் தான் சிக்க வேண்டும்.

 

இந்த நாய் எப்படியோ போகின்றது பூராம் குப்பை என்று இதைத் தூக்கி எறிந்து விட்டு அந்த உயிரான்மா அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும். அதை நிலைத்த இடத்தில் நிலையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) என்னுடைய சிறிய வயதில் தெரியாமல் ஒரு குருவியைப் பிடித்து என்ன செய்தேன்…? நெருப்பில் உயிரோடு வாட்டினேன்.

குருநாதர் பிற்பாடு அதை என்னிடம் சுட்டிக் காண்பித்தார். அந்தக் குருவி எப்படி எரிந்தது தெரியுமாடா…? என்று கேட்டார்.

அது… எரிந்தது…! தெரியும். அது உள்ளுக்குள் எப்படி ஆனது…? என்று எனக்குத் தெரியாது என்றேன்.

இப்பொழுது… “பாருடா…!” என்றார்.

அது உடலில் எத்தனை கொதிப்பானதோ அந்த எரிச்சல் எல்லாம் எனக்குள் அப்படியே வந்தது.

இப்பொழுது என்னடா செய்கிறது…? என்று கேட்டார்

அது எரிந்தது. வேதனைப்பட்ட மூச்சலைகளை வெளிவிட்டிருக்கிறது. அந்த (குருவியின்) உயிரும் உன்னிடம் இருக்கிறது.

தெரியாத வயதில் நீ செய்திருந்தாலும் இப்பொழுது நினைவுபடுத்தியவுடன்  அது எரிந்த உணர்வைச் சுவாசிக்கின்றாய். சுவாசித்தவுடன்… உன் உடலை என்ன செய்கிறது பாருடா…! என்றார்.

நீ தெரியாமல் தான் செய்தாய், “உன் உயிர்” அதை விட்டு விடுகிறதா…? அது வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் கவர்ந்து கொண்டது.

அந்தக் குருவியும் செத்தது. உன் உடலுக்குள்ளே இருக்கிறது. நீ ஆண்பாலாக இருக்கின்றாய் உனக்குள் கருவாக இருக்கின்றது.

இது எந்தக் கருவில் போய் இது பிறக்கின்றதோ “எரிகிறதே…! எரிகிறதே….!” அந்த உடலை எரியச் செய்யும். இப்பொழுது உன் உடலிலேயும் “எரியும்டா… பாருடா…” என்றார்.

இதை அப்படியே அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார். சொல்வது அர்த்தம் ஆகின்றதா…!

அதனால் எல்லாமே சந்தர்ப்பம் தான். பல கோடி உடல்களில் சந்தர்ப்பங்கள் நீக்கி நீக்கி இப்படி வந்து தான் இந்த மனித உடலைப் பெற்றுள்ளோம்.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்தை எண்ணுகின்றமோ அதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது என்றார் குருநாததர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் பெற வேண்டியது எது…? பெறக் கூடியது எது…? பெறக் கூடாதது எது…? என்ற நிலைகளைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஒருவன் தீமை செய்கிறான் என்று பதிய வைத்துக் கொண்டால் “அவன் தீமை செய்தான்.., ஆகவே அவனை விடுவேனா பார்..,?” என்று எண்ணினால் என்ன ஆகும்…?

இந்தக் கணக்கின் பிரகாரம் நாம் சிந்தனை இழந்த நிலையாகச் செயல்படுவோம்.

எந்த எண்ணத்தால் “அவனை அழித்திட வேண்டும்..,” என்ற எண்ணம் ஓங்கி வளர்கின்றதோ அதன் மேல் நாம் கொள்ளும் பாசம் அவனுக்குள் விளைந்த தீயவினைகள் நமக்குள் விளையத் தொடங்குகின்றது.

அதே சமயத்தில் ஒரு நோயாளியை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி விட்டால் பாசத்தால் “இப்படி வேதனைப்படுகின்றாரே..,” என்று எண்ணினால் அவர் நோயின் உணர்வுகள் நமக்குள் வருகிறது.

அப்படி நோயாளியை உற்றுப் பார்த்த அந்தக் கணக்கின் பிரகாரம் அவரையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வளர்ந்துவிடுகிறது. அடுத்து நாமும் வேதனைப்படுவோம்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும்போது அவர்களைப் படமெடுத்து அவர்களில் உருவான உணர்வுகள் அவருடைய நிலைகளை “எவ்வளவு நேரம் எண்ணுகின்றோமோ… எவ்வளவு நேரம் அறிகின்றோமோ… அந்தக் கணக்குகள் கூடிவிடும்.

ஆகவே “இந்த மனித வாழ்க்கையில் பெறப்படாதது… பெறக் கூடாதது… மனிதனின் ஆசை”.

ஆலயங்களில் இது தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரா” என்று காட்டுகின்றார்கள்.

நந்தீஸ்வரன் என்றால் நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும். நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

நாம் சுவாசிக்கும் உணர்வின் கணக்குகள் நம் உடலுக்குள் கூடும்பொழுது அதில் எது அதிகமோ அடுத்த நிலை அடைவாய் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எத்தகைய தீமையைக் கேட்டுணர்ந்தாலும் யாம் உபதேசிக்கும் அருள் உணர்வின் துணை கொண்டு நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் வரும் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும் துயர் பட்ட நிலைகள் இருந்தாலும் வேதனைகள் இருந்தாலும் இதற்கு முன் நம் உடலில் அறியாது சேர்ந்த பல உணர்வுகள் இருந்தாலும் இன்னல்களால் விளைந்த நோய்கள் இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீயவினைகள் நீங்க வேண்டும் சர்வ நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணித் தியானியுங்கள்.

எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை மறக்க இவ்வாறு செய்யுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுங்கள்.

எனக்கு வந்த தீமை மற்றவர்களுக்கு வரக்கூடாது. உலக மக்கள் அனைவரும் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் பரப்புங்கள்.

நாம் ஒவ்வொருவரும் இதைச் செய்வோம் என்றால் இந்த உலகில் உள்ள நஞ்சான நிலைகள் மாறும். பத்தாவது நிலையாக கல்கி தீமை அகற்றும் உணர்வு நமக்குள் விளையும்.

ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் விளைந்த உணர்வு கொண்டு உடலை விட்டு அகன்றாலும் தீமையற்ற உலகில் நாம் வாழ்ந்திட முடியும். இங்கேயும் வாழ்ந்திட முடியும்.

எப்போதும் தீமைகள் நம்மை நாடாத  நிலைகள் கொண்டு என்றும் அழியாத ஒளிச் சரீரமாக நிச்சயம் நாம் பெற முடியும். இந்த உடலை வைத்துதான் அந்த நிலை பெற முடியும்.

இந்த உடலை இழந்துவிட்டு நஞ்சால் இழக்கப்பட்டால் நஞ்சின் செயலாக மாறி மீண்டும் அந்த நஞ்சான சரீரத்திலிருந்து மீண்டிடப் பல கோடிச் சரீரங்கள் ஆகலாம்.

அது வரையிலும் இந்தப் பூமி இருக்குமோ… மனிதனாகப் பிறப்போமோ…! என்று சொல்ல முடியாது.

மனிதனாகப் பிறந்தோம்… மனிதனாக வாழ வேண்டும். இந்த உடலிலே தீமைகள் அகற்றும் உணர்வை விளைய வைக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் – 84

ஒரு மரம் வளர்ந்த பின் தன் இனத்தின் வித்துக்களை உருவாக்குகின்றது. அதிலிருந்து கீழே விழுந்த வித்து மண்ணுக்குள் பதிந்து விட்டால் அந்த மரத்தின் சத்தை இந்தப் பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து “அதே மரமாக…” மீண்டும் விளைகின்றது.

இது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். புதிது ஒன்றும் இல்லை.

ஆனால் மரத்தின் வித்தைப் போட்டால் அது முளைக்கின்றது… மரமாக விளைகிறது என்று தான் தெரியும்.

இதற்கு வேண்டிய சத்து எங்கிருந்து கிடைக்கின்றது…?

சூரியன் எடுத்து அந்த உணர்வுகளைப் பரமாத்மாவில் (நமக்கு முன் இருக்கும் காற்று மண்டலத்தில்) படரச் செய்து வைத்திருக்கின்றது. அது எப்போதும் அழிவதில்லை.

இங்கே விளைந்த மரத்தின் வித்தை எடுத்து அமெரிக்காவிற்குக் கொண்டு போய் ஊன்றினால் சந்தர்ப்பத்திற்கு ஒப்ப சீதோஷ்ண நிலைக்கொப்ப இதே காற்றில் இருந்து தாய் மரத்தின் சத்தை அங்கிருந்து எடுத்து அந்த மரம் விளையும்.

உதாரணமாக ஊட்டி கொடைக்கானல் மற்றும் நீலகிரி போன்ற உயரமான இடங்களில் குளிர்ச்சி அதிகம் இருக்கும்.

இங்கு விளைந்த வித்தினை நாம் சமமான இடத்தில் கீழே குளிர்ச்சி இல்லாத இடங்களில் ஊன்றினோம் என்றால் இந்த இடத்திற்குத் தக்கவாறு அது முளைப்பதில்லை.

ஏனென்றால் குளிர்ச்சியில் இருந்தது. இங்கே வெப்பம் அதிகமாக இருப்பதால் அதன் வளர்ச்சி குன்றுகிறது. சரியான வளர்ச்சி ஆவதில்லை. காரணம் வெப்ப தட்ப நிலைகளுக்கு ஒப்ப இது மாறுகிறது.

அதே சமயத்தில் அந்தக் குளிர்ச்சியான நிலைகளை இங்கேயும் உண்டாக்கி அந்தக் காற்றைக் கொடுத்தோம் என்றால் ஊட்டியில் விளைந்த மாதிரி இங்கேயும் விளையும்.

அதற்கு அந்தக் குளிர்ச்சி இங்கே கொடுக்க வேண்டும். ஏனென்றால் அது எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ அதற்குத் தக்கவாறு விளையும்.

அந்த ஊட்டியில் விளைந்த வித்து ஏதோ ஒன்று தப்பித் தவறி இங்கே விழுந்து முளைத்து அதிலே கொஞ்சம் வளர்ச்சியில்லாத ஒரு வித்து உருவானால் அது மீண்டும் இதிலே விழுந்த வித்தைப் போல இது கொஞ்சம் விளைய ஆரம்பிக்கும்.

அப்புறம் இந்தச் சீதோஷ்ணத்திற்கொப்ப வளர ஆரம்பிக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாக முதலில் வளர்ந்ததன் உணர்வை எடுத்து அடுத்தடுத்து இரண்டாவது மூன்றாவது வளரப்படும் பொழுதெல்லாம் கடைசியில் இதிலே விளைந்த வித்துக்கள் சத்துள்ளதாக விளையும்.

இந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை அறிந்து கொண்டோம் என்றால் இயற்கை எப்படி வளம் பெற்றது..? வளர்ச்சி பெற்றது..? என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் தான் யாம் உங்களுக்குள் அருள் ஞானிகளின் அருள் வித்துக்களை ஊன்றி வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் பிரபஞ்சத்திலுள்ள வியாழன் செவ்வாய் இராகு கேது சனி என்று நவக் கோள்களின் தன்மையும் ஒவ்வொன்றும் தனித் தன்மை கொண்டது.

இருப்பினும் அவை அனைத்தும் உமிழ்த்துவதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து “ஒளியின் சிகரமாக…” மாற்றுகின்றது. இதைப் போல தான் நம் உயிரான நிலையும் நமக்குள் சூரியனாக இருக்கின்றது.

தினசரி நம் வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம். நாம் சந்திப்போர் ஒவ்வொரு உடலிலேயும் சில சில கஷ்டங்களும் இருக்கும் துன்பங்களும் இருக்கும் அனைத்தும் இருக்கும்.

நாம் அனைவரும் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கப்படும் பொழுது இந்தத் துன்பங்களை நீக்கிடும் அகற்றிடும் அந்தச் சக்தியாக நாம் விளைய முடியும்.

பாசத்தின் நிலைகள் கொண்டு வேதனை என்ற நிலைகளைச் சுவாசிப்பதற்குப் பதில் பாசத்தின் பற்று கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவ்வாறு எண்ணும் பொழுது அந்தப் பற்றுதல் அதனின் நிலைகள் கொண்டு நமக்குள்ளும் அந்தப் பாசத்தின் நிலைகள் கொண்டு அருள் ஞானியின் உணர்வைப் பருக முடிகின்றது.

நமக்குள் தீமையை அகற்றும் சக்தியாக விளைகின்றது. ஒவ்வொரு நாளும் இதிலிருந்து நீங்கள் ஆரம்பித்துப் பாருங்கள்.

உங்களை நீங்கள் நம்பிப் பாருங்கள். எண்ணியதை உங்கள் உயிர் இயக்குகின்றது. அதை இயக்கத்தின் நிலைகளில் அறிந்து கொள்கின்றீர்கள். அறிந்த உணர்வை உயிர் உடலாக்குகின்றது.

மீண்டும் நினைவாக்கும் பொழுது நன்மையின் தன்மையை உயிர் உருவாக்கிக் காட்டுகின்றது. எதனின் உணர்வை நமக்குள் விளைய வைக்கின்றோமோ விளைய வைத்த நிலையை உயிர் தன்னுடன் அணைத்துச் செல்கிறது.

எண்ணிய பாதையில் உயிர் அங்கே அழைத்துச் செல்கிறது. என்றும் அழியா நிலையான ஒளியின் சரீரமாக பெருவீடு பெரு நிலையாக உயிர் நம்மை அடையச் செய்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை உருவாக்கிய ஈசனை அவன் துணை கொண்டு ஒளியின் சரீரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கி அந்த உணர்வுகளை நம் உடலுக்குள் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

விநாயகர் தத்துவத்தில் மனிதனின் வாழ்க்கையில் எதைச் சுவாசிக்கின்றோமோ மூஷிகவாகனா என்று காட்டியுள்ளார்கள்.

அந்தக் கசந்த வாழ்க்கையை நடத்தி அப்படிக் கசந்த வாழ்க்கையே கணங்களுக்கு அதிபதியானால் இந்த மனிதப் பிறவியில் எதன் நிலைகளை எடுத்தாயோ அதற்குத்தக்கவாறு பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாக கீழே போவாய் என்று காட்டுகின்றார்கள்.

பௌர்ணமி இன்று முழு நிலாவாக இருக்கின்றது. ஆனால் அடுத்த நாள் பார்த்தால் மற்ற கோள்கள் மறைக்கின்றது. சூரியனின் கதிரியக்கங்கள் இதற்கு வராது தடுக்கப்படும் பொழுது ஒரு பக்கம் இருள் சூழ்ந்த நிலையாக வருகின்றது.

இப்படி நாளுக்கு நாள் இதன் ஒளிக்கதிர்கள் மங்க மங்க சந்திரனே நம் கண்ணுக்குப் புலப்படாமல் இருள் சூழ்ந்த நிலை ஆகிவிடுகின்றது. பின், சூரியனின் ஒளிக்கதிர்களைத் தான் எடுக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக மீண்டும் ஒளியாகின்றது.

இதைப் போன்று தான் நம் உயிர் மற்றவர்களுடைய துன்பங்களை எடுக்கபப்படும் பொழுது மனிதனாக வளர்த்த இந்த அணுக்கள் சிறுகச் சிறுக மறைகின்றது.

இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது நோயாகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றபின் மனிதனல்லாத உணர்வின் உருக்களாக அது உருப்பெறச் செய்கின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக அன்று ஞானிகள் காவியங்களைத் தீட்டியுள்ளார்கள். இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

மீள வேண்டும் என்றால் அந்த விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி நம்முடன் வாழ்ந்த வளர்ந்த முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 184

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் “இனி.., நாம் எப்படி வாழ வேண்டும்? என்று சிந்தித்தல் வேண்டும்.

இந்த உடலே நமக்குச் சதமில்லாத பொழுது தேடி வைத்த செல்வங்கள் நமக்குச் சதமாகுமா..? நிலம், பூமி, காடு, கரை எல்லாம் சதமாகுமா..?

ஏனென்றால், அன்று வாழ்ந்த அரசர்கள் மற்ற நாட்டின் மீது போர் புரிந்து எத்தனையோ கொள்ளையடித்தார்கள். கொள்ளை அடித்த செல்வங்களை அவன் பித்ருக்கள் வைத்துள்ளார்களா..,? சந்ததிகள் வைத்துள்ளார்களா..,?

இல்லை. அனைத்தும் மடிந்துவிட்டது. கட்டிய கட்டடங்கள் நகரங்கள் அழிந்து விட்டது.

“எவரோ ஆண்டார் என்றும்.., இதனை எக்காலத்தில் “எவன் ஆண்டான்..,” என்றும் பூமிக்குள் பல இயற்கையின் நிலைகள் சீற்றமாகி அடக்கமில்லாத நிலை வரும் பொழுது நீர் நிலைகள் பரவப்பட்டு “நாட்டையே அழித்துச் சென்றபின்..,” அந்த மண் மேட்டிற்குள் அனைத்தும் அடங்கிவிடுகின்றது.

அவன் கலாச்சாரம், அவன் செய்த நிலைகள் எல்லாம் மறைந்தது. அரசனும் மடிந்தான். அவன் மீண்டும் மிருக நிலையையே அடைந்தான்.

அதைப் போன்ற நிலைகள் “மனிதனுக்குள் தீவிரவாதம்..,” என்ற நிலைகளில் அதீதமாக வளர்ந்து இன்றும் மனிதன் சிந்தனை இழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளான்.

கடும் விஷத் தன்மைகளைப் பரவச் செய்துள்ளார்கள். அந்த விஷத் தன்மைகள் அனைத்தும் நம் பூமியின் மையைப் பகுதிக்குள் சென்றுவிட்டது.

அதனால், நம் பூமி கூடிய சீக்கிரம் நீர் நிலை அடையப் போகின்றது. நீர் நிலை அடைந்தால் நாம் மீனின் நிலை தான் அடைவோம்.

ஆக, சூரியனைக் கடந்து செல்லப்படும் பொழுது வியாழன் கோளைப் போன்று பனிப் பாறைகளாகி இந்தப் பூமி நகர்ந்து சென்றாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த விஷத்தன்மைகள் சூரியனுக்குள் சென்று “சூரியனே மடியப் போகின்றது”.

அதிலே கதிரியக்கப் பொறிகள் வரப்படும் பொழுது அந்தச் சூரியனுக்குள் கொதிகலனாகின்றது.

பூமிக்குள் இங்கே எரிமலை கக்குவது போல சூரியன் செயலிழக்கும் தன்மை வந்து கொண்டே இருக்கின்றது. இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் பிரபஞ்சத்தில் பரவப்படும் பொழுது மற்ற கோள்களுக்குள்ளும் செல்கின்றது.

இந்தச் சுழற்சி போய்விட்டால் இனி மனிதன் வாழும் இன்னொரு பூமிக்குள் சிக்கி அங்கே மனிதனான பின் தான் அதிலிருந்து மீண்டிட முடியும்.

ஆனால், அது வரையில் எந்த வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க நேரும். இதிலிருந்து சிறிதளவேனும் காக்க வேண்டும்.

ஆகவே, இன்று மனிதனாக வாழும் நிலையில் “நினைவு இருக்கும் பொழுதே” அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் செல்லும்போது அந்த ஞானிகளின் உணர்வுடன் “என்றும் ஏகாந்த நிலை பெற முடியும்..,” என்ற தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 183

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் தாய் நாம் கருவிலிருக்கும் பொழுதும் குழந்தையாக இருக்கும் பொழுதும் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் என்று கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

தன் வேலைகளை எல்லாம் செய்கின்றது. பெருமூச்சு இடுகின்றது. குழந்தை மேல் பாசமாக இருப்பதால் வேதனைகளைத் தாங்கிக் கொள்கின்றது.

எத்தனையோ வேதனைகளைப் பட்டாலும் தன் குழந்தையின் ஆசையை  நிறைவேற்றி அதன் சந்தோஷத்தில் தாயும் மகிழ்கின்றது.

தாய் தன் அன்றாட வாழ்க்கையின் நிலைகளில் உணவினைச் சமைப்பதும் தொழில் செய்வதும் இப்படி எல்லாவற்றையும் செய்து அதிலுள்ள அத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு தன் குழந்தை மேல் உள்ள பாசத்தால் அது வளர்க்கின்றது.

குழந்தை பிறக்கும் பொழுதும் தாயிற்கு வேதனை. குழந்தை வளரும் பொழுதும் தாய் எத்தனையோ வேதனைகள் படுகின்றது.

நாம் பல குறும்புத்தனங்கள் செய்வோம். அதனால் வயிற்று வலி வந்திருக்கும். தலை வலி வந்திருக்கும்.

தாய் இதையெல்லாம் உற்று நோக்கி என் குழந்தைக்கு இப்படி இருக்கிறதே என்று எண்ணி வேதனைப்படும். நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தாய் வேதனைப்படுகின்றது.

தாய் படும் வேதனையில் தந்தையும் பங்குகொள்கின்றார். இதைப் போன்ற எத்தனையோ வேதனைகளை நம் தாய் தந்தையர் அனுபவித்தார்கள். நம்மை வளர்ப்பதறாகப் பல இன்னல்களை அவர்கள் பட்டார்கள்.

அவர்கள் உயிர் கடவுளாக நின்று நம்மை மனிதனாக உருவாக்கி  தெய்வமாக நம்மைக் காக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் தவழ்ந்து நடக்கும் பருவத்தில் குருவாக நின்று இது நல்ல வழி நீ இந்த வழியில் இப்படிச் செல் என்று முதல் குருவாக இருந்து வழி காட்டியதும் நம் தாய் தந்தையர் தான்.

அத்தகையை குருவாக இருந்த தாய் தந்தையரை எப்படி மதிக்க வேண்டும்…? அவருக்குச் செய்ய வேண்டிய காணிக்கை என்ன…? என்பதை ஞானிகள் விநாயகர் தத்துவத்தில் காட்டியுள்ளார்கள்.

எனக்காக அல்லும் பகலும் விழித்து என்னைக் காத்தருளிய தெய்வங்களான அன்னை தந்தையர் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.

அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

விநாயகர் தத்துவப்படி நாம் இதைச் செயல்படுத்தி தாய் தந்தையரை மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்று நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியன் அவர் மனைவி அவர் தாய் தந்தையர் நான்கு பேரும் இணைந்து உருவானது தான் துருவ நட்சத்திரம். அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது தான் “விநாயக தத்துவம்”.

நம் சாஸ்திரங்கள் காட்டிய வழியில் இன்று நடக்கின்றோமா…! சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 182

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

ஒரு புழு எதன் உணர்வை எடுத்ததோ அதற்குள் தான் சிக்கப்பட்டு அது தட்டாண் பூச்சியாக மாறுகின்றது. அதனுடைய முட்டைகளை எதன் எதனில் இடுகின்றதோ அந்த உணர்வுக்கொப்ப மாறுகின்றது.

பல வகையான பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது. இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப்போலத் தான் நமது மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் விஞ்ஞானத்தால் வந்த பேரழிவை அவர்களால்தான் மாற்ற முடியும்.

நாம் இந்த உடலில் குறுகிய காலமே வாழ முடியும். அகஸ்தியரைப் போன்ற உலகைக் காத்திடும் மெய் ஞானிகளை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 181

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கும் துருவ மகரிஷியும் அவரைப் பின்பற்றி சென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர வேண்டும்.

இந்த நிகழ்காலத்தில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் அந்தத் தீமையை நீக்க அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் நம் நிகழ்காலம் எதிர்காலத்தில் ஞானிகள் அடைந்த எல்லையை அடைய முடியும்.

ஏனென்றால் பண்பால் அன்பால் பரிவால் எனக்கு இப்படிச் செய்தார்களே எனக்குத் துரோகம் செய்தார்களே என்று இந்த நிகழ்காலத்தில் நாம் அதிகமாக மற்றவருடைய எண்ணத்தை அதிகரித்து விட்டால் என்ன ஆவோம்?

நாம் யார் மேல் பகைமை கொண்டோமோ அந்த உணர்வுகள் நமக்குள் வளரப்பட்டு இதை நிகழ்காலத்தில் வளர்ந்தபின் எதிர்காலம் அந்தப் பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து அவர் உடலில் புகுந்து இந்தப் பகைமையை தீர்க்கும் உணர்ச்சிகளின் வேதனையை உருவாக்கி அந்த உடலைத்தான் வீழ்த்தும்.

பின் அந்த வேதனையை உருவாக்கிய பின் எத்தகைய வேதனையின் உணர்வுகள் அணுக்கள் ஆனதோ அடுத்து தேய்பிறையாக மற்ற மனிதனல்லாத உடலைத்தான் உருவாக்கும்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வதற்குத்தான் இந்த சிவன்ராத்திரி – நீ விழித்திரு.

பல கோடிச் சரீரங்களில் இருந்து நீ தப்பினாய்… எக்காரணத்தைக் கொண்டும் தீமைகள் வளராதபடி அருள் உணர்வைச் சேர்க்கும் நிலையில் இனி எப்பொழுதும் நீ விழித்திருத்தல் வேண்டும்.

அருள் ஞானியின் உணர்வை ஒவ்வொரு நொடியிலும் நீ நுகர்ந்து இந்த வாழ்க்கையில் வரும் மாசினை நீ துடைக்க வேண்டும் என்பதே ஞானிகள் உரைத்தது.

ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வை நிகழ்காலத்தில் வளர்த்து எதிர்காலத்தில் நமக்குள் அது உருவாக்கிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 180

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய் ஞானிகள் சென்ற அவர்களின் வழிப்பாதைகளில் செல்ல வேண்டும் என்று நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்.

அப்போது அந்த எண்ணத்திற்கு வலு கொடுக்க எமது குருநாதர் பல முறைகளில் அவர் கண்டுணர்ந்த உணர்வை அவர் எனக்குள் பதிவு செய்துள்ளார்.

அவர் உடலுக்குள் விளைய வைத்த ஆற்றல்களை எண்ணத்தின் செயலாகச் சொல்லுகின்றார். அதை உற்று நோக்கும் போது அந்த உணர்வின் சத்து அவர் உடலில் இருந்து வரக்கூடிய ஒலியை என் செவிப் புலன் ஈர்த்தாலும் அந்த உணர்வின் சத்து எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

ஊழ்வினை என்றால் “வித்து” என்று பொருள். அதாவது ஒரு மரத்தின் சத்து தனக்குள் விளைந்து அதனின் வித்தாகும் போது அதை ஒரு நிலத்தில் நாம் பதியச் செய்கின்றோம்.

அப்பொழுது அந்த மரம் எந்த உணர்வின் சத்தை வித்தாக எடுத்ததோ அந்த வித்து அதே உணர்வின் இயக்கமாக பூமியின் துணைகொண்டு நம் முன் படர்ந்திருக்கும் தன் தாய் மரத்தின் சத்தை உணவாக எடுத்து வளரும்.

இதைப் போலத்தான் குருநாதர் அவர் விளைய வைத்த உணர்வின் சத்தை எனக்குள் உபதேசித்தார்.

என் செவிப் புலனறிவால் நான் கேட்டறியும்போது அவர் உணர்வின் உணர்ச்சிகள் எனக்குள் உந்தப்பட்டு அந்த உணர்வின் ஆற்றலை நான் நினைவு கொண்டு “கூர்ந்து…” எண்ணும் போது ”அதைக் கவரும் நிலை” ஏற்படுகின்றது.

கவர்ந்த உணர்வுகள் என் நினைவுகளுடன் இணைக்கப்பட்டுக் கருவின் தன்மையாக ஊழ்வினையாக ஒரு “ஞான வித்தாக” எனக்குள் பதிவாகின்றது.

அவர் உபதேசித்த உணர்வின் தன்மை கூர்மையாகக் கவனித்த பின் அதனின் நிலைகள் எனக்குள் பதிவாகி அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தேன்.

அவர் உடலிலே விளைந்த தீமைகளைக் கண்டறிந்து அதனின் உண்மையின் பொருளை கண்டுணர்ந்து மெய்யுணர்வை அவர் தனக்குள் வளர்த்த உணர்வுகளை என்னால் பெற முடிந்தது.

நமது குருநாதர் அவர் தீமைகளை அகற்றி மெய்யுணர்வைத் தனக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி இன்றும் விண்ணுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்,

இதைப் படித்துப் பதிவாக்கும் அனைவரும் மெய் வழி நடந்து மெய் ஞானம் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து “என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்” என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் பிரார்த்திக்கின்றேன்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 179

நம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பூமி தோன்றிய நிலையை… சூரியனிலிருந்து சிதறி வந்த கோளங்கள் பல ஒன்று சேர்ந்து ஆரம்ப நிலையில் ஆவியாய்க் குளிர்ந்து ஒன்றுபட்டு இப்பூமியாகச் சுழல்கின்றது என்ற யூக நிலையில் உள்ளனர்.

பூமி தோன்றிய நிலையை ஆரம்ப நிலைப்படுத்திப் பல நிலைகளில் செப்பிவந்துள்ளேன். வரிசைத் தொடரை இன்று உணர்த்துகின்றேன்.

இந்தப் பூமியே “ஆண்பால் பெண்பால் கொண்ட இரண்டு ஆத்மாக்களின் ஜோதிக் கலப்பினால்…” உற்பத்தியானது.

இந்தப் பூமியைப் போன்ற… இன்று வாழ்ந்திடும் வளர்ந்த அறிவு நிலை பெற்ற… ஆத்ம உடல் கொண்ட மனித இனம் இப்பூமியில் வளரும் நிலைக்கும் முதலே…
1.நம் சூரியனைச் சார்ந்துள்ள 48 மண்டலங்களில்லாமல்
2.மற்ற சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட நிலையில் வாழும் மண்டலங்களில்
3.பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித ஆத்மாக்கள் உண்டு.

நம் பூமியில் இம்மனித இன வர்க்கங்கள் தோன்றியதெல்லாம் மூன்று மாற்றங்களுக்குப் பிறகு தான் மனித இன வர்க்கமே அறிவு நிலை பெற்று வளர்ச்சி நிலையில் வாழ்ந்து வருகின்றது.

அதுவும் இக்கலியினால் மாற்றம் கொண்டு கல்கியில் இன்னும் மாற்றம் கொண்ட நிலையில்தான் செயல்படப் போகின்றது.

ஆனால் இந்நிலையில் செப்பியபடி மனித ஆத்மாக்கள் வளர்ச்சி கொண்ட மண்டலங்கள் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகின்றன.

அத்தகைய மண்டலங்களில் வாழ்ந்த அறிவு நிலை பெற்ற ஆத்ம உடல் கொண்ட சூட்சும நிலையைக் கொண்டோருக்கு எந்த மண்டலத்திலும் தன் நிலையைச் செயலாக்கும் பக்குவம் உண்டு.

அத்தகைய வளர்ச்சி கொண்ட… ஜீவன் கொண்ட ஆத்மாக்களினால்தான்
1.ஒவ்வொரு மண்டலமுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு
2.ஈர்ப்பு நிலையின் சக்தியினால் ஒவ்வொரு மண்டலமாக (புதிதாக) உருப் பெறுகின்றது.

சப்தரிஷிகளின் மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றனர். இவ் ஏழு நட்சத்திர மண்டலம் மட்டும் சப்தரிஷியினால் உருக்கொண்டு செயல்பட்டு வாழ்கிறார்கள் என்பதல்ல பொருள்.

இந்த ஏழு சப்தரிஷி மண்டலம் என்பதின் பொருள்…
1.இந்தப் பூமியிலிருந்து இம் மனித ஆத்மா உயர் நிலை பெற்று
2.ஜெப நிலை கொண்ட ஆத்ம மண்டலங்கள்தான் அந்த ஏழு நட்சத்திர மண்டலங்களும்.

அனைத்து மண்டலங்களுமே ஆத்ம நிலை பெற்ற ஜீவன் கொண்டு வாழ்ந்து வழி வந்த ஆத்ம மண்டலங்கள்தான். இப்பூமி தோன்றிய நிலையும் இரண்டு ஒன்றுப்பட்ட ஆத்மாக்களின் அன்புக் கலவையினால் ஆண் பெண் என்ற சக்தி நிலையில் உருவானது தான்.

1.மற்ற சூரியக் குடும்பத்தில் இருந்து வீரிய ஜெபம் கொண்டு
2.ஒரே நிலையில் சூட்சுமம் பெற்று
3.இப்பூமியை இரண்டு ஆத்மாக்களுமே ஒன்றுபட்டு ஈர்த்து ஆவி நிலையாக ஆத்மாவுடன் இணைத்து
4.இரண்டு ஆத்மாவுமே ஆத்மாவுக்குகந்த சக்தியின் ஈர்ப்புத் தன்மையினால்
5.பல சக்திகளைத் தன்னுள் ஈர்த்தே சிறுகச் சிறுக வளர்த்துத்தான் உயிருடன்
6.உணர்வுடனே இப்பூமியை இன்றளவும் வளர்த்துக் கொண்டே தன் சக்தியின் செயலினால் சுற்றிக்கொண்டு
7.பல உயிரினங்களை வளர்த்துக் கொண்டே வாழ்கின்றது இந்தப் பூமி.

இப்பூமியில் ஆண் பெண் என்ற பிணைப்பு நிலையினால் மற்ற உயிராத்மாக்களின் உற்பத்தி நிலை ஏற்படுவதின் நிலையும் இப்பூமியின் நிலையும் ஒன்றுபட்டதுதான்.

இப்பூமி தோன்றி உயிரணுக்கள் உதித்துச் சில காலங்களிலேயே இனத்துடன் இனச் சேர்க்கையினால் இன வளர்ச்சி பெறும் நிலை வந்துவிட்டது.

உயிரணு உதித்தால் அந்த உயிரணுவிலிருந்து பல கோடி உயிரணுக்கள் வளர்ச்சி பெறுகின்றன. அதன் தொடர்ச்சியிலே எந்த உயிரணுக்களுமே அழிவதில்லை. உயிரணுவாய் உதித்த பிறகு அவற்றின் உடல் பிம்ப நிலைதான் மாறு கொள்கின்றது.

இந்நிலையில் வளர்ச்சி பெறும் உயிராத்மாவாக ஞானி சித்தன் ரிஷி சப்தரிஷியாக ஆகி சூட்சுமம் கொண்ட பிறகு
1.ஒவ்வொரு சப்த ரிஷியின் நிலையிலும் தான் ஈர்த்து செயல் கொண்ட ஆசை நிலைக்கொப்ப
2.மற்ற மண்டலத்துடன் சேர்ந்தும் தனி மண்டலமாய் உருப்பெற்றும்
3.தான் வாழ்ந்து வழிவந்த மண்டலத்தை ஆண்டவனாய்க் காத்திடும் நிலையிலும்
4.தன் தன் சக்தி நிலைக்கொப்ப இவ்வுலகில் மட்டுமல்லாமல்
5.மற்ற மண்டலங்களிலும் பால்வெளி மண்டலத்திலும் சென்று வரும் நிலையிலும்
6.தான் பெற்ற சக்தியைச் செயலாக்குகின்றனர் சப்தரிஷிகளெல்லாம்.

ஆகவே… பூமியில் இன்று மனித ஆத்மாவாய் வளர்ச்சி கொண்ட நிலையில் நாம் சேமிக்கும் சொத்து நிலைதான் அப்பேரானந்த நிலை. ஆனால் வழியின் நிலையை அறிந்திடாமல் வாழ்ந்திடும் நிலைதான் இன்றுள்ள நிலை.

இன்றுள்ள மக்களின் எண்ண நிலையே “ஆராயும் நிலையையும் தர்க்க நிலையையும்” வளர்த்துக் கொண்ட நிலையாக உள்ளது.

எந்த நிலையையும் ஆராய்ந்து… அறிவு நுட்பத்தின் வழித்தொடரின் ஞான வழியில் வந்திட்டால்… உண்மை நிலையின் வழித் தொடரை அறிந்திடலாம்.

1.ஆனால் இன்றுள்ள ஆராயும் நிலையோ சஞ்சலமுடன் செயல்படுவதினால்
2.மெய் உணர்வை அறிந்திட முடியாமல் உள்ளது.

வேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது…? தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…?

 

கண்ணின் கரு விழிக்குப் பின் இருக்கும் நரம்பு மண்டலம் வழி கொண்டு நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்கும் கண் இணைக்கப்பட்டிருக்கிறது.

வேதனையான உணர்வுகள் நம் கண் வழியாகச் சென்று நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் இந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

தூண்டிய பின் அதனின் வலுவின் தன்மை கொண்டு அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நுகரச் செய்து அந்த வேதனையான உணர்ச்சி கொண்டு எண்ணம் சொல் செயல் என்று இயங்கத் தொடங்குகிறது.

அதே சமயத்தில் சுவாசித்தது வேதனையான உமிழ் நீராக மாறி சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது. அதனால் சிறு குடல் பெரும் குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கமடைகிறது.

சிறு குடல் பெரும் குடல் பலவீனம் அடைந்தால் நாம் உணவாக உட்கொண்ட இந்த உணவுகள் நஞ்சாக மாறி நஞ்சின் தன்மை கொண்ட இரத்தமாக மாற்றுகின்றது.

அப்படி நஞ்சாக மாறும் போது நம் உடல் உறுப்புகளுக்குள்ளும் இரத்தத்தின் வழி விஷத் தன்மை பரவி நம் உடலில் பல விதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நம் உடலில் உள்ள அணுக்களை உற்சாகப்படுத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நாம் அதே கண்கள் வழியாக ஏங்கிக் கவரப்படும் போது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் கண் வழி உள்ள நரம்பு மண்டலம் வழியாக
2.உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் பாய்ந்து உற்சாகமூட்டும் வீரியத் தன்மையாக அடைகின்றது.
3.அதே சமயத்தில் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயங்கி
4.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி நம் சிறு குடல் பெரும் குடல்களில் கலந்து உற்சாகம் அடையச் செய்கிறது
5.சாப்பிட்ட ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

பின் அந்தச் சக்திகள் அனைத்தும் நம் உடல்களில் உள்ள உறுப்புகள் அனைத்திற்குமே கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் கணையங்கள் கிட்னி இருதயம் இந்த நல்ல இரத்தங்கள் செல்லப்படும் அவைகளும் உற்சாகம் அடைந்து தீமையை நீக்கும் வலிமையான உணர்வைப் பெறுகின்றது.

இதைப் போன்று உடல் உறுப்புகளுக்குச் சக்தியைக் கூட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அடிக்கடி பெற்று தீமைகளைத் துடைத்துக் கொண்டே வந்தால்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலிலே அதிகமாகப் பெருகி
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே என்றுமே அழியாத வாழ்க்கை நாம் வாழ முடியும்…!

நல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்

 

“எண்ண நிலைப்படிதான் அனைத்து நிலைகளும் இயங்குகிறது…!” என்று உணர்த்தி வந்தேன். இந்நிலையின் சூட்சும நிலையை உணர்த்துகிறேன்.

முன் பாட நிலைப்படி… மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் அனைவரின் எண்ண நிலையும் மகிழ்ச்சி கொண்டதாகவும்… துக்கம் அனுஷ்டிக்கும் இடத்தில் அந்த நிலைக்கொப்ப அனைவரின் நிலையிலுமே துக்க நிலை சாடும் என்றுணர்த்தினேன்.

இப்படி இவ்வெண்ண நிலையின் சுவாச நிலை கொண்டுதான் இன்றைய “கைரேகை ஜோதிட நிலையும்… மனோவசிய நிலையும்” உள்ளன.

அந்நிலையிலுள்ளோர் (மனோவசியம் செய்பவர்) தன் எதிரில் அமர்ந்துள்ளவரின் எண்ணத்துடன் தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரது எண்ணத்துடன் ஈர்க்கும் நிலையில் மனோவசியம் செய்யப்படுவோரின் அனைத்து நிலைகளுமே செய்யப்படுபவருக்கு இவரின் எண்ணக் கலவையுடன் வந்து மோதி அனைத்து நிலைகளும் அறிகின்றனர். இந்நிலை அறிபவர்கள் மற்ற ஆவியின் தொடர்பை வைத்து ஈர்க்கும் சக்தியைச் செயல்படுத்துகின்றனர்.

ஆனால் நம்மில் உயர்ந்த ரிஷிகளின் நிலையும் எண்ண சக்தியின் சக்தி நிலைத்தொடர் கொண்டுதான் அவர்கள் சூட்சும நிலைக்குச் சென்றதின் நிலையும்.

இவ்வுலகினில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒவ்வொரு நிலையான எண்ணக் கலவையின் வாழ்க்கை நிலையுண்டு.

அவ்வழியில் நல்லுணர்வு கொண்ட சக்தி நிலையின் எண்ணக் கலவையுடன்… வாழ்க்கையில் வழி வந்தவர்களின் நிலையில்தான் இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே…
1.பல சக்தி நிலையை இவ்வெண்ணத்துடனே ஈர்த்து இன்று ஆண்டவனாய்ச் செயல்படுகின்றனர்.
2.அவர்கள் மனித ஆத்மாவாய் நம்மைப் போன்ற நிலையில் வந்தவர்கள் தான்…!

எண்ணமுடன் தீய சக்தியை வளரவிட்டவர்களின் நிலை எல்லாம் எந்த நிலைக்குச் சென்றிட்டார்கள் என்று முன் பாட நிலையிலேயே உணர்த்தியுள்ளேன்.

நல்லுணர்வின் வழி வந்தவர்கள்…
1.தன் வாழ்க்கையில் நடந்திடும் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஜெயித்த நிலை கொண்டு வந்தவர்கள் தான்
2.இவ் உலகில் தோன்றிய மகான்கள் எல்லாரும்.

இதன் வழி வந்தவர்களின் உடல்களைத்தான் இவர்களின் நிலையைக் காட்டிலும் சக்தி கொண்ட ரிஷிகள் தன் உடலாக ஈர்த்துச் செயல்படுகின்றனர்.

ஆதிசங்கரர் போன்றோரும் மற்றும் அருணகிரிநாதர் முகமது நபி புத்தர் இயேசு பிரான் ஐயப்பர் கோலமாமகரிஷி இக்கலியில் வந்திட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் இன்னும் பல ரிஷிகளும் இவ்வழியில் வந்தவர்கள் தாம்…!

நம் போகரே பல உடல்களைத் தன்னுடலாகச் செயல் கொண்டு செயல்படுத்தி வந்தார். இவ்வுலகினிலே ஆறுமுகனாய் இவர்கள் புராணக் கதையில் சொல்லிய நிலையில்லாமல் ஆறு உடல்களைத் தனதாகச் செயல்படுத்தி வந்தார்.

1.பிறவி எடுத்துப் பிறந்து வளர்ந்து வழிபடுத்தவில்லை தன் சக்தி நிலையை நம் போகர்
2.பல ஆத்மாக்களை ரிஷியின் நிலைக்குச் சென்றிடும் பக்குவ நிலை ஏற்படுத்தித் தந்தார் நம் போகர்
3.இன்று அனைவருக்கும் முருகனாய் ஜோதி அருள் அளித்திட ஆண்டவனாய்ச் செயல் கொண்டுள்ளார்.

இவ்வெண்ண நிலையின் தொடர் நிலையை வைத்துத்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலையெல்லாம் செயல் கொண்டு நடக்கின்றது. போகரைப் போன்றே இந்நிலையில் பல சித்தர்கள் இவ்வுலகெங்கும் செயல் நிலைப்படுத்தி நல் உணர்வுகளை இன்றும் செயலாக்கி வருகின்றனர்.

ஆனால் இக்கலியில் பக்தி நிலையும் தன் உணர்வும் குறைந்ததினால் பல நிலைகள் செயல்படாமல் செயற்கைக்கே அடிமைப்பட்டுச் சென்று விட்டனர்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நம் எண்ண சக்தியின் தொடர் நிலையை ஈர்த்து
2.நல்லுணர்வு கொண்ட எந்த ரிஷியின் சக்தியின் தொடரையும் நாம் ஈர்த்துச் செயல் கொண்டிட முடிந்திடும்
3.நாமும் அவர்களின் நிலையை அடைய முடியும் என்பதற்குத் தான்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்

 

நம் உடலில் உறுப்புகள் பழுதானால் மாற்று உறுப்பு கொண்டு சரி செய்கிறோம். உறுப்பை மாற்றி வாழ்ந்தாலும் சிறிது காலமே வாழ்கின்றோம். ஆகவே இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையை நாம் உணர்தல் வேண்டும்.

அதற்குத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்
2.அதன் வழியில் இருளை நீக்க வேண்டும்
3.வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன்
4.இதை ஏங்கிக் கேட்டு கொண்டிருந்தால் உங்களுக்குள் பதிவாகிறது.
5.பதிவான ஞானிகளின் உணர்வை மீண்டும் எண்ணினால் அந்த ஞானத்தை உங்களால் பெற முடியும்… அந்த வழியைக் காட்டும்.

நமக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தாலும் ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் அந்த உணர்வை உற்றுப் பார்த்தால் அது பதிவாகின்றது.

அவன் தவறு செய்தான்… தவறு செய்தான்… என்று திரும்பத் திரும்பச் சொல்லும் போது அந்த உணர்வை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அதனால் தீய உணர்வே வருகிறது

அதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.

நாம் எண்ணும் எண்ணம் எதுவோ அதிலே நம் கண் பார்வையைச் செலுத்திய பின் இந்த காற்றில் உள்ளதைக் கவர்ந்து (சுவாசித்து) நம் உயிரிலே மோதச் செய்கின்றது. இந்த உணர்வுகள் நம் அறிவாக இயக்கக்கூடிய நிலை வருகின்றது.

1.தீமை என்றால் தீமையின் அறிவாக நம்மை இயக்குகின்றது…
2.அப்பொழுது தீமையின் உணர்வையே நம்முள் வளர்த்து விடுகின்றது.

ஆனால் தீமையை நீக்க வேண்டும் என்ற உணர்வை நாம் எண்ணினால்
1.அதற்குண்டான வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக எண்ணி எடுத்து
2.தீமையை நீக்கினால் ஒழிய நாம் வேறு வழியில் அந்தத் தீமையை நீக்க முடியாது.

ஒரு வலிமை கொண்டவனின் (போக்கிரி) உணர்வு நமக்குள் வந்தால் நம் சாந்த உணர்வுகள் அடங்கிவிடுகிறது. என்ன தான் நம் மனதைச் சமாதானப்படுத்தினாலும் அந்த வலிமை நமக்குள் திடுக்… திடுக்… என்று அச்சத்தை ஊட்டி உடலிலே கடும் நோயாக வந்து விடுகின்றது.

நாம் எவ்வளவு நல்லவராக வேண்டுமென்று விரும்பினாலும் இதையெல்லாம் நமக்குள் வளர்ச்சியாகி நம்மை அறியாமலேயே நமது வாழ்க்கையில் கடும் நோய்களாக உருவாகின்றது.

இதைத்தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…” என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
1.இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய குணங்களை அதிகமாகச் சுவாசிக்கின்றோமோ
2.அந்தக் கணக்கின் பிரகாரம் அடுத்த உடலாக நம்மை மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வரும் நஞ்சை வென்ற உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால் அது வசிஷ்டர் பிரம்ம குரு.

அதை நுகர்ந்து உடலுக்குள் பெருக்கிக் கொண்டால்… இந்த வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பற்று அதிகமானால்… அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

ஆகவே அதன் மார்க்கங்களை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் தியானத்தில் உங்களுக்கு பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

உதாரணமாக நம்மை ஒருவன் திட்டினான் என்றால் அந்தத் திட்டியவனை எண்ணி அதை நுகர்ந்த பின் அந்தத் தீமையின் செயலே நமக்குள் வருகின்றது. அதே போல் வேதனைப்படுவோரை எண்ணும்போது அந்த வேதனைப்படும் செயலே நமக்குள் வருகின்றது.

1.வேதனைப்படுவோரை பார்க்கும்போது அதே நிலை.
2.வேதனைப்படுத்துவோரின் செயலை எண்ணும் போது அதுவும் தீய உணர்வாக நம்மை இயக்கி ஆத்திரப்படச் செய்கிறது.

அதைப் போன்ற தீமைகளை நீக்கிடத் தான் உங்களுக்குள் அரும் பெரும் சக்தியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது பெறும்படி செய்கிறோம்.

அகஸ்தியன் எப்படித் தன் தாயின் கருவிலிருந்தே தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்றானோ அதைப் போல நுகர்ந்தறியப்படும் போது உங்கள் இரத்தத்தில் கலந்து… அங்கே கருத்தன்மைகள் உருவாகிறது.

கருவான பின் உடல் முழுவதற்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பரவி உடல் உறுப்புகளில் உள்ள இருளை நீக்கும் உணர்வுகளாகப் அது பெருகத் தொடங்கும்.

1.ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி நம் உடலுக்குள் சேர்க்கப்படும்போது
2.எல்லா உறுப்புக்களிலும் இந்த தீமையை நீக்கும் உணர்வுகள் பெருகி
3.ஒளி என்ற உணர்வின் அறிவைப் பெருக்குகின்றது… ஒளியின் சரீரம் பெற நாம் தகுதி பெறுகின்றோம்.

நல் உணர்வு கொண்ட ஆத்மாக்களுக்காகவே உலகம் இன்றளவும் நிலைத்திருக்கின்றது – ஈஸ்வரபட்டர்

 

\இன்றும் இக்கலியில் ஆத்மீக நெறியும் நல்லொழுக்கம் அன்பு பாசம் பக்தி தர்மம் நியாயம் சமத்துவம் இப்படிப்பட்ட நல்லுணர்வுகளும் சத்தியத்துடன் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.
1.இந்த நிலையில் வாழும் ஆத்மாக்களின் நல்லுணர்விற்காகவே
2.இப்பூமியின் நிலை இன்றளவும் நிலைத்துச் செயல்படுகிறது.

எண்ணத்தில் நல் சக்தியும் தீய சக்தியும் உள்ள நிலையில்… நல்லுணர்வைக் காட்டிலும் தீய உணர்வின் வழி நிலைதான் பெருகும் நிலையில் உள்ளது.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் மட்டுமல்ல தீய உணர்வுடன் வாழ்வது. இவ்வுடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களிலும் தீய சக்தி நிறைந்த எண்ண நிலைகள்தான் நல்லுணர்வைக் காட்டிலும் பெருகிய நிலையில் உள்ளன.

ஆவி உலகிலும் நல்லுணர்வு கொண்ட ஆத்மாக்களின் நிலையுண்டு. வாழும் மனித ஆத்மாக்களிலும் இந்நல்லுணர்வின் நிலை உள்ளதினால்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலை இன்றளவும் இப்பூமியின் நிலையைக் காத்தருளும் நிலையில் செயல் கொண்டு நடக்கின்றது.

இன்றைய விஞ்ஞானத்தினால் செய்து வைத்துள்ள அணு குண்டுகளும் விஷ மருந்துகளும் நிறைந்துள்ள இந்த நிலையிலும்
1.ஒரு நொடியில் அனைத்துமே மாற்றம் கொள்ளும் விஷ சக்தியின் தாக்குதலிலிருந்து
2.நல்லுணர்வு உடையோர் வாழ்வதினால்… இவ்வுலக நிலையே நம் ரிஷிகளினால் காக்கப் பெற்று வருகிறது.

நல்லுணர்வையே உலகெங்கும் பரப்பிடும் நிலைக்காக பக்தி நிலையை வளரவிட்டதின் நிலையே… இன்று பக்தியையே தன் பேராசைக்கு உகந்த சக்தியாக நாடும் நிலையாக இன்றைய எண்ண நிலை உள்ளது.

பூமிக்காகவும் இப்பூமியில் வாழ்ந்திடும் உயிராத்மாக்களுக்காகவும் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திய நம் ரிஷிகளின் சக்தி நிலை செயல்படாமல்… மீட்டுச் செல்லும் நிலைக்கு இன்று வந்துள்ளது.

“மீட்டுச் செல்லும் நிலை…” என்பது…
1.இம் மாறப்போகும் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் இக்கலியுடனே ஈன நிலை பெற்று…
2.கல்கியின் ஆரம்ப நிலை உயிரினமாகிப் பல நிலைகளை எய்தி…
3.பல கோடி ஆண்டுகள் இவ்வெண்ண சக்தியுடனே அல்லல் கொண்டிடாமல் தடுக்கும் நிலை தான்.

இக்கலியிலேயே மனித ஆத்மாவை மனிதனாய் ஞானியாய் சித்த அருள் பெற்று சூட்சும நிலைக்குச் சென்றிடச் செயல் கொண்டிடும் நிலைதான் இன்றுள்ள நம் ரிஷிகளின் செயல் நிலை.

இந்நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து மாறப்போகும் இக்கலியின் நிலையை எண்ணத்தில் கொண்டு இவ்வெண்ண சக்தியினால் செயல் கொண்டே வாழ்ந்திடுங்கள்.

அழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை

 

இன்றைய வாழ்க்கையில் நோயை நீக்க மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கே இன்னொரு விஷத்தின் தன்மை கொண்ட மருந்துகளைக் கொடுக்கப்படும்போது அதில் உள்ள விஷமும் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.

இப்படி மனிதன் நோயை நீக்கப் பல உபாயங்களைச் செய்தாலும் இந்த விஷத் தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் உறுப்புகளைப் பாழாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆக… கொஞ்ச காலம் வாழ்வதற்காக நாம் எத்தனையோ உபாயங்களை வைத்துச் செயல்படுத்துகின்றோம்.

மனிதன் உறுப்புகள் செயலிழந்து விட்டால் நுரையீரலில் இருந்து எல்லா ஈரல்களுக்கும்.. கிட்னி… இருதயம்… போன்றவைகளையும் மாற்று உறுப்புகளை வைத்து மனிதனை வாழ வைக்க முடியும்…! என்று விஞ்ஞானி செயல்படுத்துகின்றான்.

ஒரு எலும்பே இல்லை என்றாலும் அந்த எலும்பைப் போல இன்னொரு உடலில் அந்த எலும்பை உருவாக்கும் அணுக்களை வைத்து மோல்ட் (அச்சு) செய்கின்ற மாதிரி செய்து மனிதனுக்குத்தக்க எலும்புகளை உருவாக்கி… கை கால்களுக்கோ மற்ற இடங்களுக்கோ அதைப் பொருத்தி மீண்டும் சாதாரண மனிதனைப் போல வாழச் செய்ய முடியும்…! என்று விஞ்ஞானிகள் செயல்படுகின்றனர்.

ஏனென்றால் எலும்புகள் உருவாக்கிய அணுக்களை வைத்து மீண்டும் அதைப் பெருக்கப்படும் பொழுது அந்த மலம் உருவாகின்றது. அப்படி வளர்த்து மீண்டும் பொருத்துகின்றான்.

பண வசதி உள்ளவர்கள் இதைப் போல் பல லட்சம் செலவழித்து அதை எடுத்துப் பொருத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படிப் பொருத்தினாலும்…
1.அங்கங்களை இழந்த நிலையை எண்னும் போது
2.மற்றவர்கள் எல்லாம் சுயமாக இருக்கப்படும்போது நமக்கு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று
3.மீண்டும் அந்த நோயின் உணர்வுகள் கிளர்ந்து வருகிறது.

இதைப் போல் தொடர்ந்து வரும் போது அதௌ முழுமையாக நீக்கும் திறன் இல்லை.
1.செல்வத்தைச் செலவழித்து. உறுப்புக்களை மாற்றி அமைத்தாலும்…
2.உடலில் வரும் அந்த வேதனை உணர்ச்சிகள் (வேதனை என்றாலே நஞ்சு)
3.உடலை விட்டுச் செல்லப்படும்போது… உயிருடன் சேர்ந்தே செல்கின்றது.

சேர்த்துக் கொண்ட இந்த வேதனைக்கொப்ப மாற்று உடலாக மற்ற உயிரினங்களாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

ஆனால் நாம்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் இத்தகைய விஷத் தன்மைகளை எல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நம் உடலில் பதிவாக்கிக் கொண்டால்
1.நமது வாழ் நாளில் தீமைகளைக் கண்டாலும் உடனே அதைத் தடுத்து
2.நல்ல உணர்வாக அந்த அணுக்களையே மாற்றிவிட முடியும்.

இன்று எப்படி விஞ்ஞானி இந்த உறுப்புக்களின் தன்மையைப் பெற்று அந்த எலும்பையே உருவாக்கச் செய்கின்றானோ இதைப்போல நல் அணுக்களைப் பெருக்கி அதைச் சீராக்க இயக்கிட முடியும்.

உறுப்புகளை உருவாக்க முந்தி மற்ற பொருள்களால் செய்து வைத்தான். இப்பொழுது அதே போல் உறுப்புகளையே உருவாக்கிச் செயல்படும் நிலைகளை வைத்து கொள்கின்றான்.

மனிதனின் மேல் தோல் பாழாகிவிட்டால் அதைப் போல் தோலை உருவாக்கும் அணுக்களை வைத்து வளர்த்து மீண்டும் அழகான உடலாகவும் உருவாக்கும் நிலையைச் செய்கின்றான்.

1.ஆனால்.. இந்த உயிரைப் போல (அழியாத) உணர்வின் தன்மை உருவாக்கும் செயல் விஞ்ஞானியிடம் இல்லை.
2.உடலைக் காக்கப் பல முறைகள் கொண்டு விஞ்ஞானி செயல்படுத்தினாலும்
3.வேதனை உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
4.உடலுக்கு பின் சேர்த்து கொண்ட வேதனைக்கொப்ப இந்த உயிர் மாற்று உடலை உருவாக்கி விடுகின்றது.

இதிலிருந்து யாரும் தப்ப முடியவில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டால்… நாம் அந்த நினைவினை அடிக்கடி எடுக்கப்படும் பொழுது…
1.ஒரு கஷ்டப்படுவோரோ வேதனைப்படுவோரோ துயரப்படுவோரோ… அல்லது
2.ஒருவர் நம்மிடம் பழகி உடலை விட்டு அவர் பிரியும் போதோ அந்த நேரமெல்லாம்
3.அதைத் தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் நாம் வைத்து
4.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
5.உயிர் வழியாகக் கவர்ந்து நம் உடலுக்குள் கண்ணின் நினைவைக் கொண்டு செலுத்தி
6.நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று உள் முகமாகப் பாய்ச்சப்படும்போது
7.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நம் இரத்தத்தில் பெருகி தீமையான அணு உருவாகாதபடி தடுக்கின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. ஒளியான உணர்வாக மாறுகின்றது.

வாழ் நாளிலே எத்தனை கோடித் தவறுகளை நாம் பார்த்தாலும் அந்தந்தச் சமயத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டுமென்று உள்ளுக்குள் செலுத்தி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும். எந்த நேரத்தில் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் உயிரான்மா துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும். அழியாத நிலைகள் பெறலாம்.

சக்தி பெற்று சூட்சம நிலையில் இருக்கும் ஞானிகளின் இன்றைய முக்கியமான செயல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மாறப் போகும் இஜ் ஜீவ உடலையோ மாற்றம் கொண்டு சுழலப் போகும் இப்பூமியின் நிலையையோ சலிப்பு நிலைப்படுத்தி எண்ணத்தை வளரவிடாமல் நம் ஆத்மாவின் உயர்ந்த நிலையை உயர்த்திடும் எண்ணத்தில் செயல் கொண்டு நடந்திடல் வேண்டும்.

1.பூமி ஆரம்ப நாள் தொட்டு வந்திட்ட உயிரணுவாய் உயிராத்மாவாய்… வளர்ந்த நற்ஜோதியின் நல்தெய்வங்களெல்லாம்…
2.இப்பூமியில் ஒவ்வொரு பிரளயத்திலும் பல நிலையிலும் வாழ்ந்து அந்நிலையின் தொடரினால்…
3.இன்றளவுமுள்ள நல் நிலையில் வந்திட்ட நல் ஆத்மாக்களின் சக்தி நிலையின் தொடராக…
4.சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே இன்று பல நிலைகளுக்கு…
5.நல் ஆத்மாக்களாகப் பலரை ஈர்க்கும் நிலைகொண்டு செயல்படுகின்றன.

இவ்வுலகில் இந்தியாவில்தான் ஞானிகளும் சித்தர்களும் வழி வந்ததின் நிலை அதிகம். இவ்வுலகனத்துமே இவ் இந்தியாவில் இருந்துதான் பல சித்தர்கள் சென்று ஆத்மீக வழியை வழி நடத்தினார்கள்.

இயேசு கிருஸ்து இந்தியாவில் சில இடங்களில் வந்து வாழ்ந்து சென்றார். முகமது நபியும் இவ்விந்தியாவில் வந்து வாழ்ந்தவர்தான். புத்தரின் நிலையும் அதுவே…!

“இந்தியாவை உயர்ந்த எண்ணத்தில் காட்டல் வேண்டும்…” என்ற நிலையில் விளக்கவில்லை. இப்பூமியில் உள்ள அனைத்து நிலைகளும் பொதுவானவையே…!
1.ஆத்மீக நெறியில் தொடர் நிலை வழி வந்த முதல் நிலை இங்குதான்.
2.ஆனால் இன்று நாம் எல்லாரும் முருகராய் வழிபடும் அப்போகரின் ஆரம்ப ஞான சித்து நிலை பெற்ற இடம் சீனாவில்தான்.

இன்று… இன்றைய மக்களினால் பிரித்த நிலைதான் சீனா… இந்தியா என்ற நிலையும்…! அந்நிலையில் வழிவந்தவர்தான் நம் போகர்.

போகர் சித்து நிலையின் தொடர் நிலையில் சூட்சுமத்தில் செயல் கொண்டிடும் சக்தி பெற்ற பிறகு இன்று மெக்கா மதீனா என்று புண்ணிய யாத்திரை ஸ்தலமாகச் சென்றிடும் இடத்தில் இதே நம் போகர்தான் முகமது நபியின் நாமத்தில் செயல் கொண்டு அந்நாட்டில் இப்பக்தி நிலையை அல்லா என்னும் நாமத்தில் வளர விட்டார்.

இன்றைய புண்ணிய ஸ்தலமாய் செயல் கொண்டு துதித்திடும் அம் மெக்கா மதீனாவின் திரைகளுக்குள் பூஜிக்கும் சக்தி நிலை என்ன..?

காட்சி – யானைச் சிலையின் மேல் லிங்க ஜோதியின் காட்சி…!

பல கோடி மக்கள் தரிசிக்கச் சென்றிடும் அந்நிலையிலுள்ள திரையின் மர்ம நிலையென்ன…?

1.ஆண்டவனின் சக்தி நிலை ஒன்றே
2.இஜ் ஜாதி இனம் போர்வையில் வழி வந்ததின் நிலைதான் இன்றுள்ள நிலை.
3.அங்குள்ளவர்கள் சிலருக்கு மட்டும் உண்மையின் நிலை புரியும்.

அல்லாவாய் அங்கு செயல்படுத்துபவர் யார்…?

காட்சி: மேடையில் ஜிப்பா அணிந்து தலையில் துணியுடன் ஒரு பெரியவர் காட்சியளிக்கின்றார்… புன்னகைத்தே தலையை மட்டும் அசைக்கின்றார்…! அடுத்து பெரிய வேல் எதிரில் நிற்கிறது…!

யாரென்று எண்ணுகின்றீர்…?

அல்லாவாய் செயல் கொண்டவரும்… முருகனாய் வழி வந்தவரும்… இலங்கையில் கதிர்காமத்தில் சில நிலைகளைச் செய்தவரும்… “அனைவருமே ஒரே சக்தி நிலை கொண்ட போகரின் நிலைதான்…”

சூட்சும நிலையில் எவ்வுடலையும் தனதாக ஏற்கும் சக்தி பெற்ற போகரினால் பல நாடுகளில் அவரது எண்ணத்தின் செயல் ஜோதி சக்தி “இன்றும்…” செயல் கொண்டு வருகின்றது.

அவர் வாழ்ந்த ஒவ்வொரு சூட்சும நிலையிலும் பல போதனை சக்திகளை வளரவிட்டுச் சக்தியளித்துச் செயலாக்கியுள்ளார். ஜாதகம் நாடி மருத்தவம் இப்படிப் பல நிலைகளைச் சித்து நிலை கொண்ட நாளிலேயே படரவிட்டுள்ளார்.

இன்று இவ்வுலகெங்கும் வெடி நிலையை ஆரம்பித்தவரே நம் போகர்தான். ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு வெடி நிலையினால் பல நிலைகளை ஆரம்ப நாளில் செயலாக்கிக் காட்டியவர் நம் போகர்தான்.

சித்து நிலையில் அவர் அறிந்த நிலைதான் இன்று இவ்வுலகம் முழுவதும் பரவியுள்ள மருத்துவ நிலையும். அந்நிலையின் தொடரை வைத்துத்தான் இன்றைய வளர்ச்சி நிலையெல்லாம்.

அவர் சீனாவில் வாழ்ந்த நாளில்தான் சூட்சுமத்தின் ஆரம்ப நிலையில் பல நிலைகளை முதன் முதலில் செயலாக்கி வெளிப்படுத்தினார். அன்றே பல சக்தி நிலையை சித்து நிலையினால் சூட்சும நிலை பெறும் நிலையெல்லாம் அறிந்து செயலாக்கினார்.

இவரின் நிலை போன்றே…
1.இவ்வுலகம் தோன்றிய நாள் தொட்டு தன் சக்தியைச் செயல் கொண்டு வந்திடும் நல் ஆத்மாக்களெல்லாம்
2.இக்கலியில் வாழ்ந்திடும் பிம்ப நிலை கொண்ட ஆத்மாக்களை
3.நல்லுணர்வு கொண்டு வந்திடும் சக்தி நிலைக்கு அழைத்துச் சென்றே
4.இம் மாறப்போகும் கலியின் பிடியிலிருந்து மீட்டே…
5.கல்கியில் நல் ஆத்மாக்களாய் செயலாக்கிட அழைத்துச் செல்கின்றனர்…!

மனிதனின் எண்ண வலிமை… எண்ண உறுதி… கொண்டு எதைப் பெற வேண்டும்…?

 

மிருகங்களெல்லாம் என்ன செய்கின்றது…? தன் உடல் வலுவைத் தான் காட்டுகிறது.

நான் (ஞானகுரு) வேட்டைக்குப் போயிருக்கின்றேன். புலி கடினமானது அதை ஈட்டி வைத்துக் குத்த முடியுமோ… முடியாது…!

நல்ல கூர்மையான ஈட்டி வைத்துக் கொண்டு புலி அப்படி வருகின்றதென்றால் ஒரு பக்கமாகப் பம்பும். பம்பியவுடன் நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் பார்வைக்குத் தாக்க வரும்போது இப்படி நேராக வைத்தால் சீறித் தாக்கும்.

ஆனால் இலேசாகச் சாய்த்து வைத்தால் போதும். மேலே வந்தவுடன் அது லபக்… என்று ஊடுருவிவிடும். விட்டுவிட்டோம் என்றால் தய்யா… தக்கா… என்று குதிக்கும்.
1.மனிதன் தன் எண்ண வலு கொண்டு… உறுதி கொண்டு
2.அந்த ஈட்டியை வைத்தான் என்றால் புலியைக் கொன்று விடலாம்.

புலி உடல் வலு கொண்டு தான் தாக்கும். மனிதனை ஒரு அடி அடித்தால் குடல் எல்லாம் பிய்த்துக் கொண்டு போட்டுவிடும்.

தெரிந்தோ தெரியாமலோ நான் வேட்டைக்குப் போகும்போது எனக்கு இந்த மாதிரி யுக்தி வரும். ஈட்டியைக் கையில் வைத்துக் கொண்டு புலி வருகின்றது என்று இப்படித் தாக்கினால் பிரண்டு ஓடும். ஈட்டி குத்தியிருந்தால் இன்னும் ஆவேசமாகத் துடிக்கும். கொஞ்ச நேரத்தில் இரத்தமெல்லாம் வெளியில் போய் விட்டது என்றால் சுணங்கி விடும்.

ஒரு கரடிக் கூட்டத்திற்குள் போகும் போதும் இதே யுக்தி கொண்டு ஈட்டியை வைத்தால் போதும்.

அது என்ன செய்யும்…? எதாவது கொடுத்தால் கையில் பிடித்து கொள்ளும். நாம் வலுக்கொண்டு நன்றாகப் பிடித்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பொசுக்கென்று கையை உருவிவிடும்.

நாம் வலுவாக இரண்டு கைப்பிடியை வைத்துக் கொண்டு பிடித்திருந்தால் மண்டி போடும் இப்படியே இழுக்கும். மண்டி போட்டு இழுக்கும் உட்கார்ந்து. நன்றாக இழுத்து வலுவாக விட்டு லபக் என்று விட்டோம் வயிற்றில் ஈட்டி குத்தும்.

மனிதனுடைய எண்ணங்கள் எப்படி இருக்கின்றது…? என்ற வகையிலே குருநாதர் ஒவ்வொரு செயல்களிலும் செய்து காட்டுகின்றார். எது…?

மனிதனின் எண்ண வலுக் கொண்டு எப்படி மிருகங்களைக் கொல்கின்றான்…? என்பதைக் காட்டுகின்றார்.

உணர்வுக்கொப்ப இசை கொண்டு ஊதும் போது பாம்பு மகுடியில் ஆடுகின்றது. அவன் கையில் “விழுது…” (பாம்பு மிரட்டி) வைத்திருப்பான். அந்த விழுதைக் கையில் வைத்தவுடன் பையிலிருந்து பாம்பை எடுத்துக் கொண்டால் படம் எடுப்பதைத் தாழ்த்திவிடும்.

1.மனிதன் எண்ண உணர்வினால் எதையும் அடக்கக் கூடிய வல்லமை பெற்றவன்.
2.நாம் அதிலிருந்து பிறந்து வந்தவர்கள் தான்
3.பல சரீரங்களில் ஒன்றுக்கொன்று இரையாகி வந்தவர்கள் தான்.
4.எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட நிலையில் அதை அடக்கக்கூடிய சக்தி மனித உணர்விற்கு உண்டு.

இதை எல்லாம் காட்டிற்குள் அழைத்துக் கொண்டு போய் குருநாதர் கொடுக்கின்றார்.

கலியிலிருந்து கல்கி உலக மாற்றம்… “பிரளயம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தெய்வ நிலை கொண்ட ரிஷிகளின் சக்தியினால் இப்பூமியில் இன்று வாழ்ந்திடும் மனித இன வர்க்கத்தின் தொடர் நிலையே அடுத்து மாறப்போகும் கல்கியில் வந்திடும் உயிரினங்களின் சக்தி இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை கொண்ட ஆத்மாக்களின் சக்தியைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற நிலை வரப்போகின்றது.

இப்பூமி தோன்றிய நாள் தொட்டு இம் மனித ஆத்மாக்களாய் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட்ட நிலைகள் மாறி மாறிப் பல தடவை (மூன்று) ஏற்பட்டுள்ளன.

இப்பூமியில் ஆரம்பத்தில்…
1.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் இயற்கையின் தாவர வர்க்கத்திலிருந்து மாறு கொண்ட உயிரினங்கள் வளர்ச்சி பெற்றன
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனித உடல் கொண்ட ஆத்ம நிலையும் வந்தது.

அந்நிலையின் வளர்ச்சி கொண்டு இப்பூமியின் பிரளய நிலை மாறி மற்ற நிலை வந்த பொழுதும் ஆரம்ப நாளில் இப்பூமியில் தோன்றிய உயிரணுக்களின் நிலைக்கும் இரண்டாவது மாற்றம் கொண்டு வளர்ந்திட்ட உயிரணுக்களின் நிலைக்கும் மாறு கொண்ட நிலை வந்தது.

அந்நிலையின் தொடர்ச்சியில் பல கோடி ஆண்டுகள் இப்பூமியின் தொடர்ச்சி நிலை இருந்தது. ஒவ்வொரு மாற்றம் கொண்ட நிலையிலும்
1.இப்பூமியின் நிலையும்… உயிரினங்களின் நிலையும்
2.இப்பூமியில் வளர்ந்த தாதுப் பொருட்களின் நிலையும் மாறி மாறித்தான் வந்து கொண்டுள்ளன.

இன்று நம் பூமியில் பல நிலைகொண்ட உலோகங்கள் சில சில இடங்களில் வளர்ந்து வருகின்றன. ஆனால் உலோக சக்தியிலேயே உருளுகின்ற மண்டலங்கள் சில உள்ளன.

மற்ற அமில நிலைகளை ஈர்க்காமல் ஒரு நிலை கொண்ட ஒரே அமில சக்தியின் சக்தியை மட்டும் ஈர்த்து வளருகின்ற சிறிய மண்டலங்கள் சில உள்ளன.

நட்சத்திர மண்டலமாக உருளுபவை நிலையெல்லாம் இந்நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன. மாற்றம் கொண்ட மண்டலமும் உண்டு.

நம் பூமியில் மாறி மாறி வந்திடும் இப் பிரளய நிலையில் உயிரினங்களும் மாற்றம் கொண்டே சுற்றி வருகின்றன என்று சொன்னேன். உயிரினங்கள் சுவாசித்து வெளிப்படுத்தும் நிலைக்கொப்பத் தான் அவற்றின் சக்தி நிலையுள்ளது.

ஆனால் பூமி ஒவ்வொரு தடவையும் மாற்றம் கொண்டு சுழலும் நிலையில்
1.பூமியின் சுவாச நிலையும் மாற்றம் கொண்ட நிலையின் தொடரினால்
2.அந்நிலையிலிருந்து வளர்ச்சியுறும் இன வர்க்கங்கள் அதற்குகந்த நிலையில்தான் வளர்கின்றன.

ஆரம்ப நாளில் உலகம் தோன்றிய நிலையிலிருந்து பல பிரளய நிலை ஏற்பட்டு அன்று தோன்றிய உயிரினங்கள்
1.அன்றிலிருந்தே எவையுமே அழிந்திடாமல் பல எண்ண நிலையில் சக்தி நிலையின் தொடர்பு கொண்டு…
2.இன்றளவும் என்றென்றும் வாழ்ந்து கொண்டேதான் உள்ளன.

பல புராணக் கதைகளைக் கேட்டு வருகின்றீர்கள்… இவற்றின் நிலையெல்லாம் என்ன…?

ஒவ்வொரு பிரளயம் நடப்பதற்கும் முந்தைய வாழ்க்கையில் நடந்த நிலைகளை அவ்வாத்மாவின் தொடர் கொண்டு வந்திட்டவர்கள்… அடுத்த பிரளயத்தில்…
1.சக்தி கொண்ட நிலை பெற்றவர்களின் எண்ணத்தில் உதித்திட்ட நிலைகள்தான்
2.இன்று நாம் நம்ப முடியாமல் கேட்டிடும் புராணக் கதைகளெல்லாம்.

எவ்வெண்ணமும் முன் தொடரில்லாமல் வருவதில்லை…!

வாழ்க்கையில் நடப்பவைக்கும் கனவில் காண்பவைக்கும் மாறுபட்டுக் காண்கின்றோம். எவையுமே பொய்யல்ல…!

இவ்வுலகம் எத்தனை பிரளய நிலை ஏற்பட்டுச் சுற்றிக் கொண்டு வந்தாலும் எண்ணமும்… எண்ணத்தின் கலப்பினால் நாம் கண்டு பேசி வாழ்ந்திடும் நிலையெல்லாம்… “நம்மைத் தொடர்ந்து கொண்டேதான் வரும்…!”

பரமபதம்…!

 

புலி மிகவும் கொடூரமான விஷத் தன்மை கொண்டது. உதாரணமாக புலி ஒரு மானைத் தாக்கப்படும்போது அந்த விஷத்தின் தன்மை மானை உருவாக்கிய அணுக்களுக்குள் ஊடுருவி அந்த உணர்வுகள் வலுப் பெறச் செய்கின்றது.

மான் இறந்து விட்டால் புலியின் ஈர்ப்பிற்குள் வந்து புலியாகப் பிறக்கின்றது. இப்படித் தான் பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.பல உடல்களுக்கு இந்த உடல் இரையாகி…
2.இரையாக்கிய உடலின் உணர்வின் சத்தை நுகர்ந்து தனக்குள் இரையாக்கி..
3.அந்த இரையின் உணர்வை உயிர் செயலாக்கப்படும்போது பரிணாம வளர்ச்சி அடைந்து…
4.இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது என்பதனை நாம் மறந்திடலாகாது.

இதை நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. வைகுண்ட ஏகாதசி அன்று பரமபதம் என்ற நிலையில் ஒரு அட்டையை வைத்திருப்பார்கள். அதிலே பார்க்கலாம்.

முதலில் தாயத்தைப் போடுவார்கள். விழுகும் தாயத்திற்குத் தக்க காய்களை வைத்து அங்கே நகட்டுவார்கள். சிறுகச் சிறுகக் காய்கள் நகற்றப்படும் போது.. பாதையில் ஏணி இருக்கும். ஏணியின் பக்கம் சென்று விட்டால் மேலே சென்று விடுகின்றது.

சிறு ஏணியில் ஏறினாலும் அதற்கடுத்த கட்டம் விஷம் கொண்ட பாம்பு இருக்கும். அது தீண்டிவிட்டால் மீண்டும் கீழே இழுத்துக் கொண்டு வந்துவிடும். நாய் நரி போன்ற நிலைகளை அங்கே போட்டுக் காட்டியிருப்பார்கள்.

அடுத்து மீண்டும் தாயத்தை உருட்டி மேலே செல்லும் போது மிகப் பெரிய ஏணி மூலம் துரித நிலைகள் கொண்டு மேலே சென்று விடுகிறோம்.

மிகவும் வேகமாக மேலே வந்துவிட்டோம்…! என்று இறுமாப்பு கொண்டலும் அடுத்த கணம் அருகிலே பெரிய பாம்பு காத்திருக்கின்றது.

தாயம் அதிலே விழுந்து விட்டால் அதன் வாயின் பக்கம் சென்ற பின் நேராகக் கீழே இறக்கிப் பன்றியின் பக்கம் கொண்டு வந்து விடும்.

பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை எப்படி நீக்கி நல்லதை எடுத்ததோ அதைப் போல மீண்டும் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி நீக்கித் தான் அடுத்து மனித நிலைகளைப் பெற முடியும் என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.

1.அதாவது உயர்ந்த நிலையில் ஏணியில் மேலே சென்றாலும்
2.ஒரு விஷத்தின் தன்மை தாக்கப்படும்போது மீண்டும் கீழான பிறவிகளுக்குப் போய்விடுவோம் என்பதனை
3.இரவு முழுவதும் நாம் விழித்திருந்து சிவன் ராத்திரி… வைகுண்ட ஏகாதசி அன்று
4.இந்த விளையாட்டின் மூலமாக நம்மை உணரும்படி செய்தனர் ஞானியர்.

காரணம்… தீமைகளை நீக்கி மனிதனாக உருவாக்கிய நம் உயிரின் நிலைகள் கொண்டு இந்த மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள்.. தீமையான உணர்விலே சிக்கினால் அதன் உணர்வு கொண்டு மீண்டும் இழி நிலையான சரீரத்தில் கொண்டு போய் நம்மைச் சேர்த்துவிடும் என்று இரவு விழித்திருக்கும் போது இத்தகைய பரமபதத்தை ஆடுவார்கள்.

மனிதர்கள் நாம் தெரிந்து கொள்வதற்காக சாஸ்திர விதிகள் இவ்வாறு கூறுகின்றது.

ஆக… பெரிய ஏணி எடுத்து தப்பிச் சென்றாலும் அடுத்து வரும் பெரிய பாம்பின் தன்மை வரும் பொழுது அதிலிருந்து தப்புவதற்கு என்ன வழி…?

பரமபதம் என்பது… இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் உணர்வு கொண்ட இருபத்தி ஏழு உணர்வுகளும் ஒன்றானால் அடுத்து பிறவியில்லா நிலை அடையும் நிலை.

1.என்றுமே பிறவியில்லா நிலைகள் கொண்டு எதுவும் எதிர்ப்பு இல்லாத நிலைகள் கொண்டு
2.அருள் உணர்வுகளைப் பெற்றால் இருளை அகற்றிப் பேரொளி என ஆக முடியும் என்பதனை
3.பரமபதம் என்று ஒரு காகிததை வைத்து அதிலே தாயத்தை உருட்டி விளையாடும் போது “தன் நிலையை அடையும் படி செய்கின்றனர்…!”

ஆனால் இதையெல்லாம் நாம் விளையாட்டிற்காக என்று நாம் பார்த்துத் தெரிந்து கொள்கின்றோமே தவிர இயற்கையின் உண்மையின் நிலைகளை அறியவில்லை.

சிவன் ராத்திரி என்று விழித்திருப்பதும் வைகுண்ட ஏகாதசி என்று விழித்திருப்பதும் அன்றைய நாள் ஒரு விளையாட்டு மூலமாக
1.பேருண்மைகளை எல்லாம் அறியும்படி நமது நாட்டின் சாஸ்திரங்கள் இருப்பினும்
2.நமது ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வினை இன்னமும் நாம் அறியாமல் தான் இருக்கின்றோம்…!

குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று காதலிப்பவர்கள் தற்கொலை செய்தால் எந்த நிலை அடைகிறார்கள்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

உதாரணமாக வாலிப பருவத்தில் காதலிக்கின்றனர். ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர்.

ஆனால் குடும்பத்தில் பற்றுடன் இருப்போர் (தாய் தந்தையர்) இது எதற்கு…? இது நமக்கு ஆகாத நிலைகள்…! என்று உணர்த்துகின்றனர்.

இதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. இதன்படி என்ன வாழ்க்கை…? என்று இருவருமே மடிந்துவிடுவோம்…! என்று தற்கொலை செய்கின்றனர்.

ஆனால் தற்கொலை செய்யும் இந்த உணர்வுகள் யாரால் இது ஏற்பட்டதோ… இந்த உணர்வின் தன்மை உடலை விட்டு சென்ற அந்த ஆன்மா அவர்கள் உடலில் சேர்ந்து இது உயிரின் தன்மையை அதனை வேதனைப்படச் செய்து இந்த உடலை வீழ்த்திவிட்டு மீண்டும் மனிதனல்லாத உருவுக்கு அழைத்துச் செல்கிறது.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வளர்ந்து வந்தாலும்… தற்கொலை செய்யும் உணர்வு வரப்படும்போது.. “இதிலிருந்து விடுபடலாம்…” என்று எண்ணுகின்றனர்

ஆனால் வெளிவந்தபின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலுக்குள் தான் செல்ல முடிகிறது. அந்த உடலையும் வீழ்த்தி விட்டு மிகவும் நஞ்சான நிலையில் வெளி வருகிறது.

தாய் தந்தையர் பற்றாக இருந்து பிளைகளை வளர்த்து ஆதரித்துப் பண்புள்ளவராக மாற்றினர். இவ்வளவு செய்தும் கடைசியில் தன் குழந்தை இப்படிச் செய்துவிட்டதே என்று அவ்ர்களும் கடும் வேதனைப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட வேதனையுடன் குழந்தையை எண்ணும் போது தற்கொலை செய்த அந்த ஆன்மா தாயின் உடலுக்குள் வருகின்றது.

தற்கொலை செய்யும் உணர்வுகளை அங்கே ஊட்டுகின்றது. அதுவும் பலவீனமாகின்றது. அந்த உடலையும் அதில் உள்ள நல்ல அணுக்களையும் மடியும் தன்மை செய்கிறது

இதன் வழி அந்த உயிரான்மா சென்றால் தான் எந்த நிலை பெற்றதோ அந்தத் தாயின் உடலுக்குள் இந்த ஆன்மா புகுந்து அதன் வழி செயல்பட்டுத் தாயைக் கொல்லவும் செய்கின்றது… நரகலோகத்திற்குத்தான் அனுப்புகிறது. தானும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றது…!

1.ஆக சிறிது நேரம் சந்தோஷத்தை ஊட்டும் இந்த உணர்வுகளில் சிக்குண்ட நிலையில் (தற்கொலை)
2.அடுத்து மனிதன் அல்லாத உருவாகப் பாம்பாக… தேளாகத் தான் உருப்பெற முடியும்.

தாய் தந்தையரை வேதனைப்படச் செய்வோர் இதைப் போல் விஷத் தன்மையைக் கலந்தால் சிந்தனையற்ற நிலை கொண்டு விஷத்தைப் பாய்ச்சி உணவாக எடுக்கும் உயிரினங்களாக நம்மை உயிர் மாற்றிவிடும் என்பதை மறந்திடலாகாது.

அதைக் காட்டுவதற்குத் தான் “சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான்…!” என்று உணர்த்தினார்கள்.

1.நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலிலே பதிவாகி
2.அதன் உணர்வைத் தொடர் வரிசையில் எண்ணும் போது அதனின் உணர்வின் அணுக்களாகி
3.அந்த உணர்வின் செயலாகவே நம்மை இயக்குகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நல்லது.

இன்றைய இப்பூமியின் பூமத்திய ரேகையின் நேர் கோட்டை வைத்து  அந்த நிலையில் இன்றைய விஞ்ஞானிகளால் மேலே வான மண்டலத்தில் வான இயல் நுட்பக் கருவிகளை வைத்து இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தைக் கண்டறிகின்றனர்.
 
அதைப் போல இப்பூமத்திய ரேகையின் மையத்தில் இப்பூமியின் உள் பாகத்தில் சில நிலைகளைச் செய்வித்தால் இப் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் தன்மையைக் கொண்டு…
1.இப்பூமியில் தற்பொழுதும் இனி நடக்கப்போகும் காலத்தின் இயற்கையின் சீற்றத்திலிருந்து
2.எந்தெந்த இடங்களில் நிகழப்போகும் பெரும் மாற்றத்தைக் கண்டறிந்து அந்த ஆத்மாக்களைக் காத்திடவும் முடிந்திடும்.
 
வான நிலையில்தான் இவர்களின் ஆராய்ச்சி நிலை எல்லாம் உள்ளது. பூமியின் உள் நிலைகளை அதிகமாகக் காண முயலவில்லை.  
 
ஆனால் இப்பூமி கவர்ந்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்துதான் இப்பூமியைச் சுற்றியுள்ள வான நிலையும் உள்ளது.
 
வளர்ந்திட்ட விஞ்ஞானத்தின் சக்தி அறிந்த ஆத்மாக்களினால் அவர்களின் சக்தியையே செயல் கொண்டு காத்திடும் நிலைப்படுத்திடும் ஆத்மீக நெறியையும் கலக்க விட்டால் உலகைக் காக்கவும் முடிந்திடும்.
 
இவ்வுலகையே செயலாக்கிடும் சப்த ரிஷிகளின் சக்தி கொண்டு…
1.மனித உடலுடன் உள்ள விஞ்ஞான ஆத்மாக்களினால்
2.இவ்வுலகை இக்கலியின் கடைசி மாற்றத்திலிருந்து காத்திடும் சக்தி நிலையும் உண்டு.
 
ஒவ்வோர் ஆத்மாவிற்குமே ஆதி சக்தியின் செயல் சக்தி அனைத்தும் உண்டு. செயல்படுத்திட்டால் அந்த நற்சக்தியுடன் கலந்தே செயலாக்கிட முடியும்.
 
சக்தி பொதுவானதே…!

மெய் வழி செல்லும் பாதையைத் தான் எம்மால் காட்டிட முடியும்…. ஏற்றுக் கொள்வதும் அதன் வழி செயல்படுத்துவதும் அவரவர்கள் எண்ணத்தால் தான் அது முடியும்.

ஞானிகள் கொடுத்த தத்துவங்கள் காலத்தால் மாற்றப்பட்டு அந்த நூல்கள் அனைத்தும் மாற்றம் கொண்ட உருவில் தான் இன்று உள்ளது

 

வான்மீகி மகரிஷியினால் இயற்றப்பட்ட இராமாயணக் காவியத்தைக் காலப்போக்கிற்கும் அவரவர்கள் வாழ்ந்த எண்ண நிலைக்கொப்ப நாம் மாற்றப்பட்ட இக்காவிய நூலைப் போலவே
1.இன்று இவ்வுலகில் தோன்றிய ஒவ்வொரு நூலும்
2.கால நிலையில் எண்ண நிலைக்கொப்ப மாற்றம் கொண்ட உருவில் தான் உள்ளது.

இயேசு கிறிஸ்து இயற்றியதாக பைபிளை வெளியிட்டு அவ்வுருவில் அவரின் செயலை வெளிப்படுத்துகிறார்கள்.

எழுதியவர் யார்…? வழிப்படுத்துபவர் யார்..? இவ்வுலகம் எந்நிலையில் உருப்பெற்றது…? மனித ஆத்மாக்கள் தோன்றிய நிலையையே ஆதாம் ஏவாள் என்ற இருவரால் மனித வர்க்கம் வளர்ந்தது என்கின்றனர்.

அப்படி இருக்க இயேசு கிருஸ்துவின் உண்மையின் சக்தியான அன்பு ஆசையுடன் கூடிய எல்லா உயிரினங்களையும் ஒன்று போல் அன்புபடுத்திய அவ்வுடலில் ஏறிய மகானின் சக்தியையே பைபிளின் நிலையினால் “உயிரணுக்களை (மாமிசங்களை) உணவாக்கி உண்டிடும் நிலையில் அம் மகான் இருந்தார்…!” என்று உணர்த்துகின்றனர்.

ஏன்…?

அவரது சக்தி நிலையில் பொறாமை கொண்டவரின் எண்ணத்தினால் அம் மகானின் உடலையே அழித்துவிட்டு…
1.அன்று வாழ்ந்த மக்களின் எதிர்ப்பிலிருந்து மீள அவர் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட சக்திச் சொல்லை
2.பிறர் ரூபத்தில் வெளியிட்டதின் நிலைதான் இன்றைய பைபிளின் நிலை.

நீங்கள் புசித்திடும் அனைத்துமே அணுக்கள்தான். “ஒன்றை அழித்து ஒன்று வாழ்கின்றது…” என்பதனைத்தான் முன் பாடத்தில் உணர்த்தியுள்ளேன்.

உயிரணுவாய் வளர்ச்சி பெற்று மனித ஆத்மாவாகப் பல எண்ணங்களுடன் பல ஜென்மங்கள் பெற்று இவ்வெண்ண நிலையில் வந்திட்ட நிலையில் மிருகத்தின் நிலையையே உணவாக உண்டால் என்ன ஆகும்…?

நல் நிலையில் உணர்வு பெற்று மனித ஆத்மாக்களாய் உள்ள நிலையில்…
1.நம்மிலிருந்து கீழ் நிலைக்குச் சென்றிட்ட (மற்ற உயிரினங்களின்) எண்ண அணுக்களின் பிம்ப உடல்களைச் சமைத்து உண்ணும் பொழுது
2.நம் எண்ணமுடன் நம்மைக் காட்டிலும் பல எண்ண நிலைகளுடன் வாழ்ந்திட்ட அணு சக்திகள் நம் உடலில் ஏறி
3.நம் நிலையும் அவற்றின் நிலையுடன் சென்றிடும் நிலை தான் ஏற்படும்.

இம் மாமிச உணவுகளிலிருந்து மாறு கொண்ட உணவை உண்டால்…
1.நம் உடலுடன் பல தீய சக்திகளின் நிலைகள் ஏறாமல்
2.நம்மைக் காத்து கொண்டிட முடியும்.

அனைத்துமே அணுக்கள்தான். அணுவில் வந்த கனியும் ஒன்றுதான் பட்சிகளும் ஒன்றுதான். எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்திய பிறகு எல்லாம் ஒன்றே தான்.

இயேசுபிரான் தான் வாழ்ந்த காலத்தில் அவர் உடலில் ஏறிய அம் மகானுக்கு அனைத்துமே ஒன்றேதான். அன்புடன் அளித்திட்ட உணவு வகைகளை மறுத்திடாமல் எல்லாமே ஒன்றாக எண்ணிப் புசித்திட்டார்.

பாமர ஜென்மங்களாய் வாழ்ந்திடும் நாம்…
1.ஆத்மீக நெறி வழியில் ஆண்டவனின் சக்தி பெற்ற ஜோதிகளாய் வளர்ச்சி பெற்று வந்திட
2.நம் ஆத்மாவுடன் நாம் வாழ்ந்திடும் இந்த உடலில்
3.மற்ற அணுக்களின் எண்ணத் தாக்குதலில் இருந்து மீளத்தான்
4.நம்மைத் தீய சக்திகள் தாக்காமலிருக்கத் தான் வழி முறைகளை உணர்த்துகின்றோம்.

தினசரி நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை

 

குலதெய்வங்களான நம் மூதாதையர்களின் குல வழியில் தான் நாம் வந்தோம். அவர்கள் உணர்வுகள் தான் நம் உடல். அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அத்தகைய மூதாதையர்களை அதிகாலை துருவ தியானமிருந்து விண் செலுத்த வேண்டும்.

அந்த உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்து உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விட்டால் “பரம்பரை நோய்…!” என்று நம் குடும்பத்தில் வராது.

ஏனென்றால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அவர்கள் உயிரான்மாக்கள் செல்லும் பொழுது
2.அடுத்து உடல் இல்லாது கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நிலைத்திருக்கும்.
3.அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நம் மூதாதையரின் உயிரான்மாக்கள் உணவாக உட்கொண்டு
4.அதன் ஈர்ப்பு வட்டத்தில் பெருவீடு பெருநிலை என்ற நிலைகள் அடைந்து
5.பிறவியில்லா நிலை அடையவும் அழியா ஒளிச் சரீரம் பெறவும் இது உதவும்.

ஆகவே தியானம் இருப்போர் அனைவரும் நம் முதாதையரை அவசியம் விண் செலுத்த வேண்டும்.

மூதாதையர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொருத்தரும் சாப அலைகளை விட்டிருப்பார்கள். அந்த வேதனை உணர்வுகள் நம் குடும்பத்தில் பரம்பரை நிலைகளில் அது தொடர்ந்து வரும்.

அனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைப்போன்று மூதாதையர்களை விண் செலுத்தி விட்டால் சாப அலைகளோ தீய அலைகளோ நம்மைச் சாடாது பாதுகாத்துக் கொள்ள இது உதவும்.

ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் உங்கள் குடும்பத்தில் வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை ஒரு இரண்டு நிமிடமாவது எண்ணி அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து உடல் பெரும் உணர்வுகளைக் கரையச் செய்தல் வேண்டும்.

பிறிதொரு ஆன்மாக்களை நம் பழக்கவழக்கங்கள் காரணமாக அதிகமாக நேசித்து இருந்தால் அந்த ஆன்மாக்கள் நம் உடலிலே புகுந்திருக்கும்.

துருவ தியானத்தில் நாம் இருக்கும்போது…
1.என் உடலில் உள்ள அத்தகைய ஆன்மாக்களும் அது பிறவியில்லா நிலைகள் அடைந்து
2.எனக்குள் நல்லது செய்யும் தன்மைக்கு வர வேண்டும்…! என்று இப்படி எண்ணி ஏங்குதல் வேண்டும்.

காரணம் ஒரு உடலில் உருவான உணர்வுகள்தான் நம் உடலிலே வந்து அது இயக்கும். ஆனால் அதற்கு மேல் வளர்ச்சி இல்லை.

நம் இரத்த நாளங்களில் தான் பிறிதொரு ஆவியின் தன்மைகள் இருக்கும்.
1.அது நம் உயிரின் தன்மையில் உராயப்படும் பொழுதுதான் அதனின் உணர்ச்சிகளை ஊட்டும்
2.இரத்தங்களில் சுழன்று கொண்டே வரும்
3.இரத்தத்தின் வழியாக நம் கவன நரம்பு இருக்கும் பக்கம் சென்றபின்
4.அதன் நினைவாற்றல் தூண்டி அந்த உணர்வுகளை இயக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து தப்பிக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

நம் இரத்தங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கப்படும்போது அந்தத் தீய உணர்வு கொண்ட உணர்வின் அணுக்களையும் நம்மால் மாற்ற முடிகின்றது.

அந்த ஆன்மாக்கள் நமக்குள் இருந்து பிறவியில்லா நிலையும் அடையும் தகுதியும் பெறுகின்றது. நாமும் பிறவியில்லா நிலை அடைய இது உதவுகின்றது.

நாம் எத்தனையோ நண்பர்களிடம் பழகுகிறோம். அப்படிப் பழகிய நண்பர் திடீரென்று அகால மரணம் அடைந்தார் என்றால் இறக்கும் சமயம் நம் மீது அவர் எண்ணங்களைச் செலுத்தினால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

வந்து விட்டால் அவர்கள் உடலில் வாழும் காலத்தில் எப்படி அவஸ்தைப்பட்டனரோ அதையெல்லாம் நம் உடலுக்குள் வந்து சேர்த்துவிடும்.

இது போன்ற நிலைகளைத் தடுக்கவும் காலை துருவ தியானத்தில்
1.எங்களுடன் நண்பர்களாகப் பழகி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள்
2.அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அவர்கள் அழியா ஒளிச் சரீரம் பெற்று
4.பிறவி இல்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

நம் ஆத்மாவை ஸ்ரீ இராம ஜெயம் ஆக்கிட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஸ்ரீ இராமனாய் வால்மீகி மகரிஷியினால் எழுதப்பட்ட அக்காவியக் கதையில்
1.ஸ்ரீ இராமருக்கு உகந்த குண நிலைகளை அப்பாத்திரத்திற்கு ஏற்றி
2.ஒவ்வோர் ஆத்மாவும் ஸ்ரீ இராமனின் குணநிலைக்கொப்ப வாழ்ந்திட வேண்டும் என்ற ஆசை நெறியில்தான்
3.வான்மீகி மகரிஷியால் இயற்றப்பட்ட காவிய சக்தி ஸ்ரீ இராமநாதனின் சக்தி.

ஒவ்வோர் ஆத்மாவின் வாழ்க்கையிலும்…
1.குடும்பச் சூழ்நிலையில் ஏற்படும் தாய் தந்தை சகோதர பாசங்கள்
2.வாழ்க்கையுடன் கொடிய எதிர்ப்பு நிலைகள்
3.வாழ்க்கையுடன் உள்ள இயற்கையின் சூழ்நிலைகள்
4.வாழும் நெறி இவற்றையெல்லாம் பிணைத்துத் தாய் தந்தையரையே தெய்வமாக்கி
5.கற்புக்கு நெறி வழி அமைத்து வீரத்திற்குத் தக்க மன பலம் ஏற்றியும் அமைக்கப்பட்ட காவியம் தான் ஸ்ரீ இராம காவியம்.

வாழ்க்கை நெறியுடன் ஒவ்வோர் ஆத்மாவுமே வழிவந்திட வேண்டும் என்பதற்காக இயற்றப்பட்டது தான் இந்தக் காவியம். ஸ்ரீ இராமனுக்கு மட்டும் அப்பலமும் செயல் திறமையும் அன்பும் பாசமும் சொந்தமல்ல.

ஒவ்வோர் ஆத்மாவும் ஸ்ரீ இராமனின் குண நிலைக்கொப்ப வாழ்ந்திட வேண்டுமென்ற நெறி முறையின் காவியத்தை… அன்றிலிருந்து பல கோணங்களில் மாற்றப்பட்ட அக்காவியத்தையே… இக்கலியில் நாம் ஸ்ரீ இராமனின் குண நிலையை நெறி வாழ்க்கையாக வழிபடுத்தி வழிநடத்தி வந்திடும் மன நிலையுடன் நாம் வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இராமர் வாழ்ந்ததாகச் சொல்லிடும் அக்காவியத்தின் பிறப்பிடமான இராமேஸ்வர ஆலயத்தில்…
1.வான்மீகி மகரிஷியின் சக்தி நிலை இன்றும் செயல் கொண்டு வழி நடக்கின்றது.
2.அந்நூலின் உண்மை நிலையும் சக்தி நிலையும்
3.இவ்வியற்கையின் சீற்றத்திலிருந்தும் கால நிலையின் மாற்றத்திலிருந்தும்
4.அந்த ஆலயம் இன்றளவும் தப்பி வருவதின் உண்மை நிலையே அங்கு தவமிருந்த ரிஷிகளின் சக்தியின் நிலையினால்தான்.

உள்ளத்தில் சபல நிலை இல்லாமல் ஸ்ரீ இராமேஸ்வரத்தில் இராம தீர்த்தம் பெறுபவரின் உடலுக்கும் உள்ளத்திற்கும் அந்நல்லருளின் ஜெபத்தின் சக்தி பெற்றே வருகின்றனர்.

1.அந்த நல் எண்ணமேதான் ஒவ்வோர் ஆத்மாவிற்குமே வழி தெய்வம்
2.எவ் வழியில் வழி நடக்கின்றதோ அவ்வழியின் சக்தி நிலை ஒவ்வோர் ஆத்மாவுமே பெறுகின்றது.

எண்ண வழியில் ஆலயத்தில் நாம் வழிபடும் முறை கொண்ட அந்தச் சக்தி நம் ஆத்மாவிற்கும் உடனே வந்தடைந்து அச்சக்தியின் அருளைப் பெறலாம்.

ரிஷிகளினால் ஜெபம் கொண்ட ஆலயங்களில் எல்லாம் அவ்வாலயங்களுக்குச் சென்று நம் எண்ண வழியைச் செலுத்திடும் நிலைக்கொப்ப அவர்களின் அருளாசி நம்முடன் வந்து கலக்கின்றது.

ரிஷிகளினால் வழி நடத்தித் தந்திட்ட பொக்கிஷ வழியுடன் வாழ்ந்திடும் நாம் அந்நல்வழியின் தொடரையே நமதாக ஏற்று ஒவ்வோர் ஆத்மாவுமே ஸ்ரீ இராமனைப் போன்று வாழ்ந்து காட்டிடுங்கள்.

1.சொல்லிலும் செயலிலும் ஆத்மீக அறத்துடன் தியானிக்கும் போது நற்பாக்கியத்தைப் பெறுகின்றோம்
2.மகரிஷிகளின் அருளை நாம் பரிபூரணமாகப் பெறுகின்றோம்.
3.ஆகவே… “நம்முள் உள்ள ஆத்மாவையே ஸ்ரீ இராம ஜெயம் ஆக்கிடுங்கள்…!”

நமக்குள் பிரணவமாக்க வேண்டிய சக்தி

 

ஓ…ம் என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம்.

நாம் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் நிலைகளை எல்லாம் உயிர் ஓ..ம்… ஓ…ம்… என்று பிரணவமாக்குகின்றது. பிரணவம் என்றால் அதை ஜீவன் பெறச் செய்து உடலுக்குள் ஜீவணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது உயிர்.

அதே சமயத்தில் நுகர்ந்த உணர்ச்சிகள் கொண்டு நம்மை இயங்கச் செய்வதும்… அந்த உணர்வே தன்மை நம் உடலை இயக்குவதும்… அதன் வழி நம் வாழ்க்கை வழி நடத்திச் செல்வதும்… நுகர்ந்தது எந்தக் குணமோ அக்குணமே நம்மை ஆள்கின்றது.

அதனால் தான் ஓ…ம்…! என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம் என்று சொல்வது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நுகர்கின்றோமோ பார்க்கின்றோமோ… நாம் எண்ணிய அந்தந்தக் குணங்களை வைத்து நம்மை ஆள்கின்றது. உயிர்… ஆண்டவனாக ஆளச் செய்கின்றது.

1.நமது உடல் ஒரு அரங்கம்
2.நாம் நுகரும் உணர்வுகள் ஒரு நாதம் (உயிரிலே பட்ட பின் உணர்வின் ஒலிகள் கிளம்புகிறதல்லவா…”
3.கோபமான நாதங்களை எடுத்தால் அந்த உணர்வின் தன்மை நம்மை ஆளுகின்றது… நமக்கும் கோபம் வருகிறது.

அதைத் தான் “அரங்கநாதன்” என்று உயிருக்குக் காரணப் பெயர் வைத்து உடலுக்குள் அந்த நாதங்களை (எண்ணங்களை) எழுப்பிக் கொண்டே இருக்கின்றது உயிர் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஆனாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை ஆளுகின்றது என்பதற்கு “ஆண்டாள்” என்று காரணப் பெயர் வைத்து
1.நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை நடத்த…
2.பண்படும் உணர்வுகளை நாம் வளர்க்க ஞானிகள் காவியமாகப் படைக்கின்றனர்
3.ஸ்தல புராணங்களாகவும் வடித்து வைத்துள்ளனர்.

அந்த ஸ்தல புராணங்களில் உள்ள உண்மையின் உணர்வுகளை நுகர்வோமேயென்றால் அந்தப் புராணத்திற்குள் மறைந்துள்ள உணர்வுகள் கொண்ட் நமக்குள் தெளிந்த மனதை ஊட்டவும் நம்மை அறியாது பிறருடைய தீமையின் உணர்வுகள் நம்மை இயக்கினால் அதை இயக்காது தடைப்படுத்திடவும் கொடுத்துள்ளார்கள்.

1.ஏனென்றால் அருள் உணர்வை நாம் பெருக்கி
2.அதன் வழி நமது உணர்வே நம்மை ஆள வேண்டும்
3.நமது செயலும் நமது எண்ண வழிப்படி செயல்படுத்திட வேண்டும் என்பதற்குத்தான்…!

ஆனால் தீமையின் உணர்வுகள் நமக்குள் சென்று விட்டால் தீமையின் செயலும் தீமையான சொல்லும் சொல்லைக் கேட்போர் உணர்வுகளும் நம்மை எதிரியாக்கும் தன்மையும் பகைமையானவனாக மாற்றிவிடும்.

ஆகவே அருள் உணர்வு அனைவரும் பெற வேண்டும் என்று நாம் இத்தகைய நல்ல உணர்வை எண்ணும்போது நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி ஜீவன் பெறுகின்றது.

அதே சமயத்தில் இந்த உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும்போது
1.நமக்குள் தெளிந்த மணமும்..
2.நாம் எதிரிலே நம்மைப் பார்ப்போரை நல்லவராகவும் பண்புள்ளவராகவும் உருவாக்கும் உணர்வுகள் நமக்குள் உருவாகி
3.நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் அத்தகைய நிலைகளை மாற்றியமைக்கும்.

அதனால் தான் ஓ..ம் என்ற நாதமாக இயக்கும்… நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரை வணங்க வேண்டும்… உயிரின் துணையால் அருள் உணர்வுகளை நமக்குள் பிரணவமாக்க வேண்டும்…! என்று சொல்வது.

நீங்கள் ஒவ்வொருவரும் மகா மகானாகுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

எண்ணத்தில் உயர் ஞானத்தையும் நற்செயலையும் ஆத்மீக நெறி கொண்ட அன்பு வாழ்க்கையையும் வழி நடத்திட்டால் அந்த நிலையில் பெறும் சக்தியின் திறன் தானப்பா நாம் அடைந்திடும் பேரானந்த வாழ்க்கை.

ஆரம்ப வழித்தொடர்…
1.வாழ்க்கையுடனும் பிற எண்ணங்களின் மோதலினாலும் தொடரை வழிப்படுவதற்கு சிரம நிலை கொண்டிடலாம்
2.அச்சிரம நிலையிலிருந்து வழி நடந்து வந்திட்டால் இப்பேரின்ப நிலையை அடைந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தினால் செயற்கைக்கோளை இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களின் நிலையறிய ஏவுகின்றனர்.

இப்பூமியின் காற்று மண்டலத்தையும் இப்பூமிக்கு மேல் சில தூர விகிதத்திற்கு அந்த ஏவுகணையைச் (இராக்கெட்) செலுத்திட இவ்வமிலங்களின் (அணுகாந்த மின் அலை) உதவியினால் செலுத்தி அதற்கு மேல் உள்ள நிலைகளுக்கு எந்த அமில சக்தியின் நிலையில்லாமலே இயக்கிடும் நிலைக்கு அவ் ஏவுகணை செல்கின்றது.

குறிப்பிட்ட தூர விகிதத்திற்குத்தான் மற்ற அமில சக்தியின் நிலையினால் இயங்குகிறது அந்த ஏவுகணை. பிறகு செல்லும் நிலைக்கெல்லாம் எரிபொருள் செலவு நிலை இல்லாமலே செல்லும் நிலையைத்தான் செய்வித்து அனுப்புகின்றனர்.

அதைப் போலவே நம் எண்ண சக்தியின் வழித் தொடரினை நற்சக்திக்கு வழிப்படுத்திட்டால் ஆத்மீக நெறிக்கு நம்மை வழி நடத்திட நம் உயிராத்மாவின் சக்தியினால் முடிந்திடும்.

1.இவ்வுடல் என்னும் அமிலங்கள் நிறைந்த இப்பிம்பத்தின் காந்த சக்தியின் நிலையை நாம் உணர்ந்திட்டால்
2.இப்பிம்பத்தையே பறக்கும் நிலைக்கும் பதப்படுத்திடலாம்.
3.நம் உடலிலுள்ள அமில சக்தியின் சக்தியே பெரும் சக்தி…!
4.இச்சக்திதனை நாம் உணர்ந்திடாமல் நம்மையே நாம் விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

செயற்கையினால் இன்று காணும் அனைத்து நிலைகளையுமே… அனைத்து நிலையென்பது ஒலி… ஒளி… இவற்றின் ஈர்ப்பு சக்தி கொண்ட நிலையை எல்லாம் இவ்வுடல் என்னும் அமில சக்தியின் தொடபினாலேயே கண்டிடலாம்.

“இவ்வெண்ண சக்தியின் வழித்தொடர் பெற்றோரின்…” சொல் செயல் பார்வை இவற்றின் சக்தி நிலையினால் அவர்கள் சொல்லும் சொல்வாக்கு பலிதம் கொள்ளும்.

ஒருவரைக் காணும் பொழுது அவரின் மேல் எவ்வெண்ணத்தின் நினைவுடன் அவரின் சுவாசக் காற்று பட்டுக் காண்கின்றனரோ அவ்வெண்ண நிலைப்படியே அவர்களைக் காண்பவரின் நிலையும் நடக்கும்.

1.ஆத்மீக நெறியறிந்து சக்தி நிலை பெற்றோரின் சொல்வாக்கும்
2.அவர்கள் எண்ணத்தில் பாய்ச்சிடும் விழியின் ஒளி நிலையும் பலிதம் கொள்ளும்.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பேரின்ப சக்தியுண்டு. மகான்களின் நிலையிலெல்லாம் இந்நிலையுண்டு.

1.மகான்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2.அவர் புண்ணிய பாதம் பட்ட இடமெல்லாம் செழிப்பு
3.அவரின் பார்வை பட்டாலே புண்ணியம்
4.அவரின் ஆசியினால் பேரின்பம் கிட்டும் என்ற வழித் தொடரிலுள்ள நாம் அத்தொடரினையே
5.அம்மகானின் புண்ணிய நிலையை நம் ஆத்மாவுடனும் கலந்து நாமும் அம்மாகனைப் போன்ற மகான்கள் ஆகலாம்.

இந்த உண்மை உணர்ந்து… உயர்ந்த நிலையிலுள்ளோரைத் தாழ்ந்தே வணங்கி… “தாழ்ந்த நிலையிலேயே இருந்திடாமல்…” அவரின் அடிச்சுவட்டைப் பற்றியே உயர்ந்து… அவரின் நிலையுடனே உயர்நிலை பெறும் மகான்களாய் நல் ஆத்மாவாய் நாமும் கலந்திடல் வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திடல் வேண்டும்.

1.அடிமை கொண்டு வணங்கி வாழ்ந்திடுவதல்ல வாழ்க்கை.
2.அன்பு கொண்டே வணங்கிடல் வேண்டும்.
3.அன்புடனே அன்பாய்க் கலந்து வாழ்ந்திடல் வேண்டும்.

ஆனால் நம் வழி முறையும் செயல் முறையும் அடிமை கொண்ட நிலையில்தான் மகான்களின் நிலையையும் பணிந்து பற்றி வாழ்கின்றனர்.

மகானுடனே மகானாய்க் கலக்கும் மனப்பக்குவ நிலையை வளர்த்து இவ்வுலகின் சக்திச் செல்வமான சக்தி ஆத்மாக்கள் அனைவருமே
1.சக்தி ஜோதியாய்த் திகழ்ந்திடும் உண்மையினை உணர்ந்து
2.உன்னத வழி பெற்றே மகாமகான்கள் ஆகிடுங்கள்.

நம்மையும் உலகையும் அமைதி பெறச் செய்யும் சக்தி

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் உலக மக்களுடைய குறைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் நாம் கண்ணால் உற்றுப் பார்க்கின்றோம்.

ஏனென்றால் பிறருடன் பேசும் போது கண் கொண்டு உற்றுப் பார்க்கப்படும்போது அந்தந்த உணர்வுகளை நம் கண்கள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக நம்முள் பதிவாக்கி விடுகின்றது.

அந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கினால் எந்தெந்த உணர்வுகளைக் கவர்ந்தோமோ அதன் உணர்வுப்படி உயிர் நம்மை வழி நடத்திச் சென்று விடுகின்றது.

அந்த உணர்வுகளை இயக்குவது யார் நமது உயிரே. அதன் வழியில் நம்மை ஆட்சியும் புரிகின்றது நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள்.

அதன் உணர்வுகளைக் கவர்ந்து நுகர்ந்த பின் நம் இரத்த நாளங்களில் கலந்துவிடுகிறது. இரத்தத்தின் வழியாக உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும் அந்த உணர்வுகள் கலந்து தீமை செய்யும் உணர்வுகளாக உருவாகத் தொடங்குகிறது.

அந்தத் தீமை செய்யும் உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் வளராது தடுக்க “எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…!” என்று நாம் எண்ணி ஏங்குதல் வேண்டும்.

அதை நாம் நுகர்ந்தோம் என்றால் அந்த உணர்வு ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் இரத்த நாளங்களில் ஜீவ அணுவாக உருவாகும் நம் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியை நமக்குள் பரப்பும்.

இவ்வாறு நாம் செய்தோமென்றால்…
1.நம் உயிரை நாம் மதித்தவர்கள் ஆகின்றோம்
2.நம் உடலையும் நாம் மதித்தவர்கள் ஆகின்றோம்.

காரணம்… இதற்கு முன்பு பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வு கொண்டு… “தப்பித்துக் கொள்ளும் உணர்வுகளைப் பெற்றுப் பெற்றுத் தான்..” இன்று இத்தகைய மனித உடலை உயிர் உருவாக்கி உள்ளது.

ஆகவே எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உயிர் உருவாக்கிய நிலையில் தீமையென்ற நிலையை நமக்குள் வளர்த்திடாது பாதுகாத்தல் வேண்டும்.

எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…!

நமது பேச்சும்… நமது வாழ்க்கையும்… நமது செயல்களும்… நாம் நுகரும் உணர்வுகள் கொண்டு இந்த உலகில் யாரிடம் பேசினாலும் பழகினாலும்…
1.அவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டுமென்றும்
2.அமைதி பெற வேண்டுமென்றும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்றும்
3.இத்தகைய உணர்வுகளை நாம் நுகர வேண்டும்.

நுகர்ந்த இந்த நல் உணர்வுகளை நமது உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்…” என்று நம் இரத்த நாளங்களில் பரவச் செய்கின்றது. அருள் ஒளியின் உணர்வுகள் உடலுக்குள் இணைந்து உடலில் உள்ள அணுக்களை அமைதி பெறச் செய்கின்றது.

ஏனென்றால் உலக மக்களின் உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலே உண்டு. அந்த அணுக்களுக்கு இது போன்ற நல் உணர்வுகளை ஊட்டினால்
1.வெறுப்பென்றோ பகைமையென்றோ ஆகாதபடி நம் உடலுக்குள் மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளை ஊட்டும்.
2.இதே உணர்வுகள் மற்றவர்களுக்கும் நல் உணர்வின் அலைகளாகப் பாய்ந்து அவர்களையும் அமைதி பெறச் செய்யும்…!

ரசமணியை வைத்துச் சித்து வேலை செய்தவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” இப்படிப் பல மணிகளைத் தன் ஜெபத்தினால் செய்வித்துச் சித்து நிலை பெற்றவர்கள் தம் உடலில் இந்த மணிகளை அணிந்து கொண்டு அவற்றின் ஈர்ப்பு சக்தியின் நிலையினால் தன் ஆத்மாவிற்குச் சில நிலைகளை அறிந்திட இப்படிப் பல நிலைகளை ஜெபம் கொண்டு செய்வித்தனர்.

சந்திர மண்டலத்தில் இருந்தும் சூரிய மண்டலத்திலிருந்தும் நம் பூமியின் தொடர்புடைய மற்ற மண்டலங்களில் இருந்தும் நமக்குக் கிடைக்கும் அணுக்கதிர்களின் சக்தியை உணர்ந்து அமாவாசையில் சந்திரனின் சக்தி இல்லாமல் சூரியனின் ஒளிக்கதிரையே பெற்றிடும் இப்பூமியை நிலைப்படுத்தி மூலிகைகளை வளரச் செய்யும் நாள் கணக்குப்படி அதை நீர் மட்டத்தின் தூர விகிதப்படுத்தி இம் மூலிகைகளை ஒன்றுக்கு நேர்ப்படுத்தி மற்றவற்றை வைத்து அதன் நாள் கணக்கில் வளரும் நிலைப்படுத்தி பக்குவமுடனே இரசமணியுடன் கலந்த ஜெபம் செய்கின்றார்கள்.

துளசி நாமத்தையும் அகஸ்தியர் நாமத்தையும் எம்மணியை உருவாக்குகின்றார்களோ அம்மணிக்குகந்த நாமத்தை ஜெபித்து தம் உடலுடன் ஜெபம் கொண்ட அந்த மணிகளை அணிந்து கொண்டு அதன் ஈர்ப்பு சக்தியின் தொடரினால் பல நிலைகளைச் செய்கின்றார்கள்.

1,இவ்வுடலையே ஒருவர் கண்ணுக்கும் காணாத நிலையெல்லாம் செய்விக்கின்றனர்
2.இவ்வுடலை விட்டு ஆத்மாவைப் பிரித்துப் பல சக்தி நிலைகளை அறிந்திடும் நிலைக்கும் பல நிலைகளைச் செய்கின்றனர்.
3.இயற்கையுடன் வளர்ந்திட்ட இம் மூலிகையின் நிலையறிந்து
4.இயற்கையின் சக்தியினாலேயே ஞான வழியில் சித்து பெற்றவர்கள் செய்திடும் நிலை இவையெல்லாம்.

ஆனால் சூனிய நிலை கொண்ட தீய சக்தியிலும் இந்நிலைகள் செயல்படுகின்றன.

குடுகுடுப்பு ஆண்டிகளும் இன்னும் சில சூனிய சாமியார்களின் நிலையிலும் மை போட்டு மந்திரித்து கறுப்புக் கயிற்றில் தாயத்துக்களை அளித்துப் பல நிலைகளை அவர்கள் செய்கின்றனர்.

இந்தியாவிலும் மற்றைய சீனாவிலும் திபெத்திலும் இன்னும் ஒரு சில நாடுகளிலும் இச்சூனியக்காரர்களின் ஆதிக்க நிலை நிறைந்துள்ளது.

குறைப் பிரசவத்தில் போன சிசுக்களையும் பிறந்த சிசுவையும் அதைப் புதைத்த நிலையிலிருந்து எடுத்துச் சென்று… அதன் ஜீவ சக்தியைத் தன் உடலுடன் ஏற்றிக் கொள்ளும் மந்திர ஜெபங்கள் செய்து தன் உடலுடன் ஏற்றிக் கொள்கின்றார்கள்.

குட்டிச் சாத்தான் வேலையும் இதுவே…!

கூடுவிட்டுப் பறந்து செல்லும் நிலையும் தன் உடலையே பிறர் கண்ணிற்குக் காணாமல் ஆவி உருவப்படுத்தும் நிலையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

இவர்களினால் பல தீய நிலைகள் இன்றும் நடந்து வருகின்றன. தீய எண்ணத்திற்கு இத்தீய சக்தியின் தொடர்பும் கிட்டுகின்றது.

நல்வழிக்கும் தீய வழிக்கும் இந்நாடு கலந்த நிலையில்தான் உள்ளது.

இவ்வெண்ண சக்தியை மேம்படுத்தி இவ்வுலக சக்தியில் ஆத்ம சக்தியை ஒன்றச் செய்தால் நம் ஆத்மாவுடன் நாம் வளர விடும் நற்சக்தியின் பயனால் நாம் வாழ்ந்திடும் காலத்தில் இக் காற்றுடன் கலந்துள்ள தீய சக்திகளின் அணுக்கதிர்களை வளரவிட்டு சோர்வும் நலிவும் இவ்வுடலை அண்டாமல் இவ்வுடல் அகால மரணம் எய்திடாமல் அன்பு கொண்ட ஜீவாதார அறம் கொண்ட நல் வாழ்க்கை வாழ்ந்தே சூட்சும உலகிற்குச் சென்றிடும் பக்குவ நிலைக்குச் சென்று வாழ்ந்திடலாம்.

தீயோரின் சக்தி நிலை வளர்ந்து நற் சக்தியைக் குறைத்துக் கொண்டு வருவதினால் நம் சக்தியையும் நம்மைச் சார்ந்தோரின் சக்தியையும் அவர்களின் தொடர்பு கொண்டோரின் சக்தியையும் கீழான நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தன் இனத்துடன் தன் இனத்தைச் சேர்த்தே ஒவ்வொரு மண்டலமும் ஈர்த்து எப்படி வளர்ந்ததுவோ அந்த நிலை போன்றே…
1.இவ்வுலகில் உதித்த ஆத்மாக்கள் அனைவருமே ஒன்றுடன் ஒன்றை நற்சக்திகளாக்கி
2.இவ்வுலகையே நல் உணர்வு கொண்ட நல் பூமியாக வாழ்ந்திடும் பக்குவம் பெற்ற ஆத்மாக்களாய் வந்திட
3.நல்லுணர்வையே நலமாக்குங்கள் என்றே வழிப்படுத்தி வாழ்த்துகின்றேன் நல் வாழ்த்துக்களை…!

கண்களால் பதிவாக்கப்படும் உணர்வுகள் சந்தர்ப்பத்தால் விசித்திரமான ரூபமாற்றங்களுக்கு எப்படிக் காரணமாகிறது…?

 

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று மிருகங்களைப் பற்றி அறியும்படி செய்தார்.

ஒரு சமயம் ஒரு புலி அது கர்ப்பமுற்று இருக்கிறது. ஆனால் அது அடிபட்டு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றது. அதே சமயத்தில் தன் இரைக்காக வரும் மானை உற்றுப் பார்த்து கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் இது அடிபட்டு நகர முடியாமல் இருப்பதால் தன் இரைக்காக வேண்டி எண்ணி ஏங்கிப் பார்க்கின்றது.
1.மானின் உணர்வை எண்ணி எண்ணித் தன் கண்ணால் பார்க்கப்படும்போது
2.அந்த உணர்வுகள் அந்தப் புலியின் கருவிலே விளையத் தொடங்குகிறது.

அதாவது இந்தச் சந்தர்ப்பத்தில் அது நுகரும் உணர்வுகள் அந்தப் புலிக்கும் மானுக்கும் உண்டான வித்தியாசங்கள் அங்கே வருகிறது. புலி ஏக்கத்தால் தன் இரைக்காக (மானை) ஏங்குகின்றது.

அந்த உணர்வின் சத்து கருவிலே இருக்கக்கூடிய அந்த உயிரணுக்களில் இணைக்கப்பட்டு அது எவ்வாறு விளைகின்றது…? என்பதனை அங்கே காட்டுகிறார்.

இப்பொழுது உங்களிடம் இதை லேசாகச் சொல்கின்றேன். ஆனால் காட்டிற்குள் என்னை பட்டினியாக இருந்து தான் பார்க்கச் சொன்னார் எந்தப் பக்கமும் போகக்கூடாது…! என்று சொல்லிவிட்டார்.

1.உயிரனங்களில் தான் கண்ணால் பார்த்து நுகர்ந்தறிந்த உணர்வுகள்
2.அந்த நுகர்ந்ததை உயிர் தனக்குள் உணர்வாக அலையப் பெற்று உணர்வை அறிவாக இயக்கப் பெற்று
3.அது உடலுக்குள் பதிந்தபின் கருவில் வளரும் சிசுவிற்குள் ஒட்டுன்னி போன்று
4.அந்த உணர்வுகள் எவ்வாறு இயக்கப்படுகின்றது…? என்பதனை தெளிவாகக் காட்டுகின்றார்.

இன்று விஞ்ஞான அறிவில் நாம் எத்தனையோ பல பல உண்மைகளை இயந்திரங்களின் மூலமாகவும் சாதனங்களின் மூலமாகவும் நாம் பார்த்து அறிகின்றோம்.

ஆனால் ஆரம்பத்தில் மெய் ஞானிகள் இதை எல்லாம் கண்டுணர்ந்து தன் புலனறிவாலேயே அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பருகி அவர்கள் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள்…? என்ற நிலையை குருநாதர் உணர்த்தி…
1.என் புலனறிவிற்கு ஊட்டச் சத்தை ஊட்டிப் புலனின் அறிவு கொண்டு
2.அங்கே நடக்கும் சம்பவங்களை உற்றுப் பார்க்கும் சமயம்
3.அதனின் உணர்வின் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று அறியும்படி செய்தார்

அந்த அனுபவத்தைத் தான் சொல்கின்றேன். ஏனென்றால் நான் (ஞானகுரு) கல்வியறிவு அற்றவன்.

குருநாதர் தன் உணர்வின் வலு கொண்ட நிலையால் கண்டுணர்ந்த அந்த உண்மைகளை நீங்கள் அனைவரும் அறிந்துணர வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

நமது சாஸ்திரங்களில் இந்த மெய்யுணர்வுகள் அனைத்தும் உணர்த்தப்பட்டுள்ளளது. மகாபாரதமோ இராமயாணமோ கந்த புராணமோ சிவபுராணமோ அதிலே உணர்த்தப்பட்ட உண்மைகள் அந்த சாஸ்திரம் அனைத்தும் மெய் தான்…!

அந்த உண்மைகளை எல்லாம் மனிதர்கள் உணர்ந்தால்…
1.அந்த ஞானிகள் சென்ற பாதையில் சென்று
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றுமே நிலை பெறுவது திண்ணம்
3.பிறவி இல்லா நிலையை நாம் பெற முடியும் என்பதை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆக… அந்தக் கர்ப்பமான புலி தன் இரைக்காக மானை ஏங்கிய… அந்த ஏக்கத்தின் உணர்வுகள் கருவிற்குள் இருக்கக்கூடிய சிசுவின் உணர்வுக்குள் படப்பட்டு இந்த உணர்வுகள் அதனுடைய ரூபங்கள் எப்படி மாறுகிறது…? என்று காட்டுகின்றார்.

அந்தப் புலி குட்டியை ஈனும் வரையிலும் என்னை அந்த இடத்தை விட்டு நகரச் சொல்லவில்லை. அதனுடைய உணர்வின் வளர்ச்சியையும் மாற்றத்தையும் அங்கேயே அமர்ந்து அதைத் தியானிக்கும்படி செய்தார்.

இன்று ஜோதிடம் பார்க்கின்றார்கள் அல்லவா…! அவர்கள் உடலிலுள்ளதை எல்லாம் நுகர்ந்தறிந்து… “நீங்கள் என்னென்ன நினைத்தீர்கள்…?” என்று அப்படியே சொல்வார்கள்.

இதைப் போலத்தான்… அந்தப் புலியின் கருவிற்குள் உணர்வின் இயக்கமும் அதனின் அலைகள் எவ்வாறு தொடர்ந்து இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக தெளியும்படி அங்கே ஊட்டினார்.

1.மான் இடும் மூச்சலைகள் அந்த உடலிலிருந்து வெளிப்படும் இந்த உணர்வலைகள் இந்தப் புலியின் உணர்வுக்குள் எப்படி இணைகின்றது…?
2.புலி சுவாசித்த உணர்வுகள் இரத்தத்துடன் கலந்து வரும்போது அதன் கருவிலே விளையக்கூடிய அந்த சிசு இந்தப் புலியின் ரூபம் மாறி மானின் நிலைகள் எவ்வாறு இணைகின்றது…?
3.கடைசியில் இரண்டும் கெட்டானாக எப்படி விளைகின்றது…? என்ற நிலையை நேரடியாகவே தெரியப்படுத்தினார்.

மனிதக் கருவில் கூட இது போல் சில மாற்றங்களுடன் குழந்தைகள் மிருக உடலுடனோ அல்லது மிருகத் தலையுடனோ பிறப்பதைப் பத்திரிக்கைகளிலோ டி.வி.யிலோ பார்த்திருப்பீர்கள்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் ரூப மாற்றங்கள் எப்படி அமைகிறது…? கண்களால் பார்த்து நுகரும் உணர்வுகளை நம் உயிர் எப்படி எல்லாம் உருமாற்றுகிறது..? என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்…!

தானாய் ஒளிரும் ஜோதி ஒளியை ஒவ்வொருவரும் தன்னுள் ஏற்றி ஒளி பெற்றிடுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

தீப ஜோதியைக் கண்டிடவே தீபங்களை ஏற்றி வைத்து புனித நன்னாளாய்க் கார்த்திகைத் திருநாளைத் தீபத்தின் ஜோதியிலே ஜோதியாய் வணங்குகின்றீர்.

தீபம் ஏற்றி வணங்கிடும் நாளில்…
1.தீப ஜோதியையே உம்முள் ஐக்கியப்படுத்திடும்
2.ஜோதி தீபங்களாய் வாழ்ந்திடும் “எண்ண தீபத்தை ஏற்றிடுங்கள்…!”

எண்ணெயும் திரியும் ஏற்றுவதற்குத் தீக்கோளப் பெட்டியும் செயற்கை கொண்டு தீபம் ஏற்றி தீப விழாவாக்கி மகிழ்ந்திடும் நன்னாளை…
1.என்றுமே தீபமாய்ச் சுடர்விடும் ஆத்ம விளக்கை
2.”எண்ண தீபத்தில் இயற்கையின் சக்தியில் கலக்கவிடுங்கள்…!”

நம் பூமியின் ஒலியினால் ஒளியாகி ஒளியுடனே வாழ்ந்துள்ள நாம் நம்மைப் போன்ற ஒவ்வொரு மண்டலமும் ஒலி கொண்டு ஒளி பெற்று வாழ்வதைப் போல்…
1.மற்றச் சாதனங்களினால் எரிந்து ஒளிவிடும் ஒளியாய் இல்லாமல்
2.தானாய் ஒளிரும் ஜோதி ஒளியை ஒவ்வொருவரும் தன்னுள் ஏற்றி ஒளி பெற்றிடுங்கள்.

சூரியனும் மற்ற அனைத்து மண்டலங்களும் தானாகவே தன்னுள்ளேயே ஒளியினால் ஒளி பெற்றுச் சுற்றிடும் ஜோதி மயம் போல் ஒவ்வோர் ஆத்மாவுமே…
1.அவரவர்களின் ஆத்மாவுடன் ஜோதியின் சக்தியைப் பெற்று
2.ஜோதி மயமான ஜோதியுடனே கலந்தும் தனிப்பெரும் சக்தியினைப் பெற்றிடலாம்.

நம் ஆத்மாவிற்கு உள்ள சக்தியினை நாம் உணர்ந்திடல் வேண்டும். நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும். ஆனால் நம் சக்தியை நாம் அறிந்திடாமல் பல தீய சக்திகளுக்கு நம்மை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்.

1.வாழ்க்கையுடனே தியான வழியின் ஜோதித் தொடரை வளரவிட்டு வாழ்பவருக்கு
2.நம் ஆத்ம ஜோதியின் சக்தியினைப் பூர்ணமாக அறிந்திடும் சக்தி நிலை வந்தடையும்.

வாழும் காலம் குறுகியதுதான்…! “மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் காலத்தில்தான்…” நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் கிட்டுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களுக்கு… ஆத்ம வளர்ச்சி வளர்ச்சி என்பது சக்தி நிலை கூடிடும் நிலையில்லை. உடலுடன் கொண்ட ஆத்மாக்களினால்தான் வாழ்ந்திடும் பக்குவத்தில் ஆத்மாவை ஜோதியாக்கிட முடிந்திடும்.

வாழ்வும் சாவும் என்ற இரண்டு நிலைகளைத்தான் உணர்ந்துள்ளோம்.
1.பிறந்த பின் நம் நிலையை நாம் உணரப் போகின்றோமா…? என்ற பக்குவம் பெறாத நிலையில்
2.நாம் பிறப்பதுவே நம் தாய் தந்தையரின் நிலையினால் வந்தது…
3.நாமாகப் பிறவிக்கு வரவில்லை… ஆகவே வாழும் காலத்தை அனுபவித்து வாழலாம் என்றெல்லாம்
4.நம் ஆத்ம சக்தியைப் புரிந்திடாமல் எண்ணி வாழ்ந்திடும் நாம்
5.இனி வரும் காலத்தை நாம் எடுத்திடும் சுவாச நிலையின் ஒளியினால்
6.நம் ஆத்மாவை ஒளி கொண்ட ஒளியாக்கித் தீப ஒளியாக வாழ்ந்திட வேண்டும்.

எமது அருளாசிகள்…!

நம் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி கலந்தே வர வேண்டும்

 

உடலில் எந்த நோய் இருந்தாலும் அந்த நோயை மறக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உடலில் படர்ந்து
1.சர்க்கரை சத்தை நீக்கும் அரும் பெரும் சக்தியாக எனக்குள் உருவாக வேண்டும்
2.இரத்தக் கொதிப்பு இருந்தால் அதனுடைய நிலைகள் நீங்க வேண்டும்
3.இருதய நோயோ ஹார்ட் அட்டாக்கோ வந்தால் அதை நீக்கிடும் அந்த அரும் பெரும் சக்திகள் எனக்குள் வளர வேண்டும் என்று
4.இந்த உணர்வினைச் சேர்த்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இத்தகைய ஒரு பழக்கத்திற்கு நீங்கள் வந்து விட்டால் வாழ்க்கையில் நாளை வரும் கடும் விளைவுகளில் இருந்து மாற்றி இந்த உடலைவிட்டு எந்த நேரம் போனாலும் நாம் அங்கே சப்தரிஷி மண்டலம் போய்ச் சேரலாம்.

இல்லை என்றால் நோயின் உணர்வுகள் பங்கு அதிகமாகச் சேர்ந்து விட்டால் இந்த புவியின் ஈர்ப்புக்கு வரும்.

ஆகவே நம் உடல் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்த நஞ்சை எப்படி மலமாக மாற்றுகின்றதோ இதைப்போல் நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் நஞ்சினை அருள் உணர்வுகளை எடுத்து மாற்றி நல்ல அணுக்களுக்கு அதைத் தெளிந்த உணவாகக் கொடுக்க வேண்டும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு உப்புத் தண்ணீரில் உள்ள உப்புச் சத்தை மாற்றி நாம் நல்ல நீராக (RO WATER) மாற்றுகின்றார்கள். அதைத் தான் நாம் இன்று குடிக்கின்றோம்.

1.இதைப்போல… நாம் மகரிஷிகளின் உணர்வை எடுத்து நம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி
2.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளியாக ஆக்க முடியும்.

ஆகவே அப்படி ஒளியாக மாற்றும் திறன் பெறுவதற்குத்தான் அடிக்கடி உங்களுக்குள் நினைவுபடுத்தி அந்த உயர்ந்த சக்தியைப் பெறச் செய்வதற்குத்தான் இதைத் திரும்ப திரும்ப சொல்வது.

என்னடா சாமி திரும்பத் திரும்பச் சொல்கின்றார்…! என்று நினைக்கலாம். இந்த உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அரும்பெரும் சக்தியை நுகரச் செயவதற்குத்தான் இதைச் செய்கிறேன்.

ஒரு தடவை சொல்லிவிட்டுப் பேசாமல் விட்டுவிடலாம்…
1.ஆனால் உங்கள் நினைவின் ஆற்றலை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்
2.அதை நுகரும் ஆற்றலைக் கொண்டுவர வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி நாம் சொல்வது
3.அடிக்கடி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி கொண்டே இருக்கவேண்டும்.

ஏனென்றால் நாம் இன்று பார்க்கலாம்… எந்த நோயாக இருந்தாலும் இரத்தத்தைத்தான் எடுத்துப் பரிசோதிக்கின்றார்கள். சளி சம்பந்தப்பட்டது ஆஸ்மா சம்பந்தப்பட்டது. டி.பி. என்று இப்படி எதுவாக இருந்தாலும் அந்த விஷ அணுக்கள் உருவாகும் தன்மை இருக்கின்றது என்று இரத்தப் பரிசோதனையில் தான் பார்க்க முடிகின்றது.

வாழ்க்கையில் சலிப்பும் சங்கடத்துடன் இருக்கும் ஒரு கூட்டத்துடன் ஒரு மாதம் சேர்ந்து இருந்துவிட்டு வந்து பாருங்கள். உங்கள் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்தால் அதில் நீங்கள் நுகர்ந்த அந்த விஷத் தன்மைகள் இரத்தத்தில் இருக்கும்.

ஆனால் இது போன்று ஆகும் தன்மையில் அதனுடைய உணர்வுகளை எல்லாம் மாற்றுவதற்காகத்தான் மருந்தை உட்கொள்கின்றோம். ஆனால் மருந்திற்குள்ளும் விஷம் உண்டு

அந்த மருந்தைக் கொண்டு உடல் நோயை அழித்தாலும் அந்த மருந்துக்குள் ஊடுருவிவிட்ட அந்த விஷத்தன்மை நமக்குள் கலக்கின்றது

1.நீங்கள் எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் உடலில் உள்ள விஷத்தை ஒன்றை மாற்ற அடுத்து இன்னொன்று வரும்.
2.ஆக இதை எல்லாம் வென்ற அருள் ஞானியின் உணர்வை எடுத்து அதை மாற்றி
3.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வின் எண்ணங்களை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் அணுக்கதிரியக்கங்கள் சூரியனை அணுகி விட்டது. ஒரு நொடிக்குள் எப்படி பூமி நில நடுக்கம் ஆகின்றதோ இதைப்போல அங்கே அதிகமான விஷத் தன்மைகள் பரவினால் நம் சிந்தனைகளை சிதறிவிடும்.

ஆகவே அத்தகைய நேரங்களிலும் நம்முடைய சிந்தனைகள் சிதறிடாது காக்க வேண்டும்.

எப்படி பல்பு ஃபீஸ் (FUSE) ஆகிவிட்டால் வேலை செய்யுமோ…? செய்யாது. அது போல் மனிதனின் உணர்வுகள் ஃபீஸ் ஆகிவிட்டால் மனித நிலை அல்லாது வேறொரு உருவை உருவாக்கிவிடும்.

அந்த நிலைக்கு விஞ்ஞான அறிவினால் ஒரு நொடிக்குள் மாற்றம் ஏற்படப் போகும் தீமைகளில் இருந்து நாம் மீள ஒவ்வொரு நொடியிலும் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பழக வேண்டும்.

காலையிலிருந்து இரவு படுக்கச் செல்லும் நேரம் வரையிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.“சொல்லுக்குச் சொல்… செயலுக்குச் செயல்…! இதை நாம் பெற வேண்டும்.
2.அதற்குத்தான் மீண்டும் மீண்டும் இதைச் சொல்லிக் கொண்டே வருகிறோம்.

புத்தர் ஞானம் பெற்ற பூர்வாங்கத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

புத்தரை ஆண்டவனாய் வழிபடுகின்றனர். புத்தரின் நிலையென்ன…?

சித்தார்த்தராய் அரச குடும்பத்தில் அவதரித்து வாழ்ந்தவருக்கு ஒரே நாளில் துறவு நிலை கொண்ட ஞான நிலை போதி மரத்தடியில் பெற்றார். எந்த நிலையில் அவரின் நிலை இப்படி வந்தது…?

பிறவியின் ஆரம்ப நாள் தொட்டு வாழ்ந்த காலத்தில் அவரின் நிலை எல்லோரின் நிலையை ஒத்த வழியில்தான் வந்தது. ஞான நிலைக்கு அவர் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திடாமல் போதி மரத்தடியில் வந்ததின் நிலையென்ன…?

அவரின் நிலை சித்தார்த்தராய்ப் பிறவி எடுத்து அவர் அரச காலத்துடன் மட்டும் ஏற்பட்டதல்ல.

இவ்வுலகில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி பல ஜென்மங்கள் வாழ்ந்த நாட்கள் தொட்டே…
1.அந்நிலையில் அவரின் தொடர்புடைய ரிஷிகளின் நிலையிலிருந்தெல்லாம் அவர் சேமித்து வைத்து
2.அவருடனே வளர்ந்த ஜீவ சக்தி எந்தப் பிறவியிலும் செயல்படாமல்
3.அவர் கடைசியாக எடுத்த உடலில் ராஜ வம்சத்தில் பிறந்ததின் நிலையினால்
4.வளர்ந்த சூழ்நிலை வளர்ப்பின் நிலை இவற்றினால் அவரின் முன் ஜென்மத்தில் சேமித்த நற்சக்தியுடன் மோதுண்டவுடனே
5.இக்கலவையின் சக்தி கூடி அந்த ஞானி வழிதனை அவரும் வழி நடத்தி ஞானோதயம் பெற்று
6.சூட்சும உலகினில் பலருடன் கலந்து… ஆண்டவனாய் அருள் செய்திடும் அன்பு நிலையில் உள்ளார்.

இவ்வுலகினில் உதித்து… உலகுடனே ரிஷிகளாய் சப்த ரிஷிகளாய்க் கலந்தவர்களின் எண்ணக் கலவைகளின் நற்சக்திகள் அனைத்துமே ஒன்று கூடி இப்பூவுலகிற்கே பூ மழையாய்ப் பல நிலைகளைச் செய்விக்கின்றன.

ஆத்மீக நெறிதனில் ஞானியாய் சித்தனாய் ரிஷியாய் சப்த ரிஷியாய் ஓங்கி நிற்கும் அனைத்து நற்சக்திகள் கொண்ட நல் ஆத்மாக்களின் நிலையில் இன்று நீங்கள் வழிபடும் ஆலயங்களில் இருந்தெல்லாம் அவரவர்களின் எண்ண நிலைக்கேற்ப அவர்களின் சக்தி நிலை ஒன்று கூடிய ஆண்டவனாய்ச் செயல்படுகின்றது.

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று… கோயிலில்லா ஊரில் குடியிருத்தல் வேண்டாம்…!” என்றெல்லாம் உணர்த்தினர் நம் முன்னோர்.

பக்தி நிலையை வளர்க்கவும் ஆத்மீகத்தை நிலைநிறுத்தவுமே இந்நிலைகளை எல்லாம் நமக்குப் போதித்தனர்.

காட்சி:
ஒரு பெரிய யானை விபூதிப் பட்டையுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு பக்தரின் சிரசில் தும்பிக்கை வைத்து ஆசிர்வாதம் செய்கின்றது. அந்த யானையே ஒரு மகா ரிஷியாய் உருமாறிக் காட்சியளித்து ஆசிர்வதிக்கின்றார்.

மக்களின் எண்ணத்தில் அந்த யானையையே ஆண்டவனாய் வணங்கிடும் பொழுது யானையின் நிலையிலும் அந்த ரிஷிகளே வந்து வணங்கிடும் ஆத்மாக்களுக்குச் சில நிலைகளில் பக்தி கொண்டவருக்கு ஆசிர்வதிக்கின்றனர்.

காட்சி:
பாடை கட்டி நான்கு பேர் ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்வது போலவும்… “கோவிந்தா…!” என்ற கோவிந்த ஜெபம் செய்து கொண்டே செல்வது போலவும்… காரியம் முடிந்து வந்து கை கால் அலம்பி ஜோதியைக் காண்பது போலவும் காட்சி தெரிகிறது.

ஆண்டவனின் நிலையை உணர்த்திவிட்டு இந்நிலையின் காட்சியை “ஏன் அளித்தேன்…?” என்று எண்ண வேண்டாம்.

1.புத்தருக்கே இந்த நிலையைக் கண்ட பிறகுதான் ஞான நிலையே வந்தது.
2.எந்த நிலையையும் ஒரு நிலையாய்க் காணும் ஆத்ம ஜெபம் நமக்கு வேண்டும்.

ஆண்டவனின் அருள் ஆலய நிலையில் மட்டும் தான் கிட்டும் என்பதல்ல.

ஆலயங்களுக்குச் சென்று ஆத்ம ஜெபம் பெறும் பொழுது நம் ஆத்மா அமைதி பெறுவதற்குத் தான். வாழ்க்கையுடன் வந்து மோதிடும் பல நிலைகளில் இருந்தெல்லாம் நம் எண்ணப் பயத்தையும் எண்ணச் சோர்வையும் அந்த நிலைக்குச் சென்றிட்டால் அமைதி கொண்டு வந்திடவே நமக்கு வழிப்படுத்தி வைத்தனர் நம்மில் கலந்த ஆண்டவன்கள் எல்லாம்.

காட்சி:
ஜெகஜோதி மயமாய் ஒரு தேர் தானாக ஆடி வருவது போல் காட்சி. அந்தத் தேரே புஷ்பமாய் ஒரு மகா சப்தரிஷியால் அருள் புரிந்து ஆசிர்வதித்திடும் காட்சி தெரிகிறது.

1.காட்சியில் கண்டிடும் இந்த ரிஷியின் அரும் பெரும் சக்திகள் அனைத்துமே
2.இதைக் காண்பவருக்கும் இதை எழுதுபவருக்கும் இவற்றைப் படிக்கும் என் ஆசிகள்.

தேரில் வந்தவர் புத்தர்…!

மந்திரம் தேவையில்லை…! எண்ணினாலே போதும்… உங்களுக்கு அரும் பெரும் சக்தி கிடைக்கும்…!

 

யாம் (ஞானகுரு) சொல்லும் தியானத்திற்கு மந்திரம் சொல்ல வேண்டும்… அது எனக்கு மறந்து போய் விட்டது…! என்று எல்லாம் நீங்கள் சொல்லத் தேவை இல்லை.

ஈஸ்வரா… என்று உயிரை உங்கள் புருவ மத்தியில் நினைக்கின்றீர்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா..! என்று உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்தினாலே போதும்.

எந்த நல்லதைச் செய்ய விரும்புகிறீர்களோ அந்தக் காரியம் நல்லதாக இருக்க வேண்டும் என்று என்ணினாலே போதுமானது.

ஆனால் துருவ நட்சத்திரத்தை நினைத்தேன்… தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கின்றது… என்றைக்குத் தான் போகுமோ…? என் வயிற்று வலி என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று இருக்கிறது என்று இதைத் தியானித்தால்
1.இன்னும் விஷம் அதிகமாகப் போகும்
2.சுத்திகரிக்கும் நிலையே மாறிவிடும்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை விடுத்து விட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறுகின்றேன். துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் இரத்த நாளங்களில் கலக்கின்றது. என் உடல் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது. நோய் நீக்கும் சக்தி அந்த அரும் பெரும் சக்தியை நான் பெறுகின்றேன்…! என்று எண்ணுதல் வேண்டும்.

சர்க்கரைச் சத்தோ… இரத்தக் கொதிப்போ… வாத நோயோ… எதுவாக இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எனக்குள் சர்க்கரைச் சத்தை நீக்கும் அந்த அரும் பெரும் சக்தி வளர வேண்டும்.

அதே மாதிரி இரத்த கொதிப்பை நீக்கிடும் அரும்பெரும் சக்தி பெற வேண்டும். ஆஸ்துமா போன்ற நோய்கள் நீக்கி அந்த அரும்பெரும் சக்தி எனக்குள் பெற வேண்டும் என்று இதை மாற்றியமைக்க வேண்டும்.

இதைப்போல தியானத்தின் முலம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வாருங்கள்.

1.இந்த உணர்வை நீங்கள் அடிக்கடி அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்
2.இத நுகர நுகர உங்கள் இரத்த நாளங்கள் பரிசுத்தமாகும்
3.எந்த நோயாக இருந்தாலும் அதை நீங்கள் மாற்றி அமைக்கும் நிலை வரும்.

உங்கள் எண்ணத்தால் தான் நோய் வருகின்றது. உங்கள் எண்ணத்தாலேயே அதைப் போக்கவும் முடியும்.

எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றது…? பிறர் படும் தீமைகளை அவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வை உற்றுப் பார்க்கின்றோம். அவர் உடலில் இருந்து வருவதை நுகர்கின்றோம்.

நுகர்ந்தது நம் இரத்த நாளங்களில் கலந்து நம் நல்ல குணங்களுக்கும் இதற்கும் போர் முறைகள் வருகின்றது. ஒன்றுக்கொன்று மோதல் அதிகமாகும்போது இந்த உணர்வின் தன்மை வரும்.

இடைப்பட்ட நேரத்தில் இதைச் சமப்படுத்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் இதைச் சமப்படுத்தலாம்.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை…!

ஏனென்றால் ஒருத்தருக்கொருத்தர் குடும்பத்தில் சண்டை போட்டுப் பல சிக்கல்கள் வருகின்றது. இதை யார் பஞ்சாயத்து செய்தாலும் ஒன்றும் நடக்காது.

அந்த உணர்வுக்கொப்பத் தான் இப்படிப்பட்ட செயலாக்கங்களும். அந்த உணர்வுக்கொப்பத்தான் இந்த எண்ணங்களும் வரும்.

அதை மாற்றிட…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என்னை இயக்கும் இந்த சக்தியிலிருந்து நான் விடுபட வேண்டும்.
3.என் பார்வையில் அனைவரும் நலமாக வேண்டும்
4.அனைவரும் நல்ல உணர்வுகளைப் பெறும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வை எண்ணினால் பகைமையான உணர்வு நமக்குள் வளர்க்காது பாதுகாக்கலாம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் மீண்டிட குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கும். இனி வரும் காலத்தில் அனைவரும் பிறவி இல்லை என்ற நிலை பெற வேண்டும்.

ஏகாந்த நிலைகள் கொண்டு… எதுவுமே நம்மைத் தாக்கிடாது… எதையுமே வென்றிடும் உணர்வுகளை நாம் இந்த மனித உடலில் உருவாக்கினால்தான் உடலை விட்டு உயிர் சென்றபின்… இந்த உணர்வின் துணை கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இல்லையென்றால் மீண்டும் மீண்டும் உடலின் தன்மை பெற்று அந்த உடலைக் காத்திடும் எண்ணங்கள் தான் வரும். உயிராத்மாவை ஒளியாக்கும் எண்ணம் வராது.

ஆனால் நம் உணர்வுகளை ஒளியாக்கி விட்டால் இருள் என்ற நிலை வராதபடி ஒளிச் சரீரம் நாம் பெறலாம். ஒளியாக மாற்றும் அந்தத் திறனை உருவாக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருமே துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவனுக்குக் கிடைக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் அன்னை தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று
4.இப்படி நாம் அடிக்கடி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

ஆகவே அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம். ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ்வோம்.

கலி கடைசியில் உலக நாடுகளில் ஏற்படப் போகும் மாற்றம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மாறப் போகும் இக்கலியின் கால நிலைக்காக… இதை உணர்த்துகின்றேன்.

1.இக்கலியுடனும்… இக்கலிக்கு முந்தைய காலங்களிலும்
2.இப்பூமியில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி உங்களுடனே வாழ்ந்த
3.இவ்வுலகுடன் ஒன்றிய நிலை கொண்ட ரிஷிகளின் அருளாசியினால்
4.இவ்வுலகத் தன்மை மாறப் போகும் தற்போதைய காலத்தில்
5.உங்களுடன் கலந்து வாழ்ந்த எங்களின் ஆசையினால்
6.இம்மாற்றத்திலிருந்து அணுவாய்… ஆத்மாவாய்… அனைத்து அறிவும் ஆற்றலும் சக்தி கொண்ட மனித உடல் பெற்ற ஆத்மாக்களை
7.இப்பேறு பெறும் பாக்கிய நிலை அடைந்தவரை நம்முடன் அழைத்திடவே (ரிஷிகளுடன்)
8.இந்நிலையில் இப்போதனை வழியினைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.

பூமியின் பூமத்திய ரேகையின் நிலையைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம். இவ்வுலக நிலை கால நிலைகேற்ப உஷ்ண நிலையும் மாறு கொள்கின்றது. காற்றும் மழையும் பனியும் குளிரும் அனைத்துமே மாறி மாறி வருகின்றன.

அது எவ்வாறு என்ற நிலையில்… இப்பூமியின் பூமத்திய ரேகையின் நிலையில் அதன் சுற்றும் தன்மையில் சூரியனின் நிலைக்கு சூரியனின் தூர விகிதப்படி இவ் இயற்கையின் நியதிகள் மாறுபட்டு வருவதாகப் பண்டைய காலம் தொட்டு இன்றளவும் உணர்ந்து வருகிறீர்கள்.

பல நாட்களுக்கு முதலிலேயே வான சாஸ்திரப்படி என்றென்று சந்திர சூரிய கிரகணங்கள் வருகின்றன என்றும் சரியாக உணர்த்துகின்றனர்.

1.இவ்வான மண்டலங்களில் சுழற்சியில் ஏற்படும் நிலைகளையெல்லாம் பல நிலைகளில் அறிந்துள்ளனர்
2.இருந்தாலும் எல்லாவற்றையும் வெளியிடும் அச்ச நிலையில் உள்ளனர்.

இப்பூமி சுழலும் தன்மையில் ஏற்படும் ஒளி (சூரியனின் ஒளிக்கதிர்கள்) சில இடங்களில் படுவதே இல்லை. என்றுமே இருண்ட பூமியாக சில இடங்கள் உள்ளன.

ஆனால் இப்பூமியின் அசைவு காலத்தில் (மாறப் போகும்) அவ்விருண்ட நிலை கொண்ட இடங்களெல்லாம் ஒளிக்குச் சிக்கிடும் இடங்களாக வந்துவிடும்.

சில இடங்களை இப்பூமியின் மாற்றத்தின்போது ஏற்படும் அசைவுக்குக் குறிப்பிடுகின்றேன்.
1.இன்று மக்கள் நிறைந்து வாழ்ந்திடும் சீனாவும் அமெரிக்காவும் இம் மாற்றத்திற்குச் சிக்கிடும் நிலையில் உள்ளன.
2.அதிக மாற்றம் கொள்ளும் நாடுகள் இவை இரண்டும்தான்…!

மற்ற நாடுகளில் மாற்றம் வந்தாலும் சில நிலைகளில் அந்நீரின் மட்டம் ஏறாமல் நிலமாக இருந்திடும்.

இவ்வுலக மாற்றத்தினால் இன்று இருண்ட நிலையில் உள்ள பூமிகள் எல்லாம் ஒளிக்கு வந்துவிடும்.
1.இன்று செயற்கையுடன் ஒன்றிய வளர்ச்சியடைந்த நாடுகள் என்று நாம் செப்பிடும்
2.பூமிகளில் சில இருண்ட நிலைக்குச் சென்றிடும்.

இம் மாறப்போகும் இப்பூமியின் தன்மையுடன் இயற்கை சக்தியும் இன்றுள்ள நிலையிலிருந்து மாறும் தன்மை படுகின்றது. சித்திரையில் உள்ள வெயிலும் மார்கழியின் குளிரும் இம்மாற்றம் கொள்ளும் இப்பூமியின் நிலையினால் மாற்றம் கொண்டு சுழலப் போகின்றது.

அனைத்து நிலைகளையும் நீங்களும் காணப் போகின்றீர்கள்…!

1.இவ்வெண்ண சக்தியின் செயலைக் கொண்டு ஜெப சக்தியை உயர்வாக்கி
2.ஜெபம் கொண்ட வாழ்க்கையை ஜெயித்தே வந்திடுங்கள்.
3.வழியின் தொடர்பினை அறிந்துள்ளீர்… இனி வருவதற்குச் சிரமம் இல்லை.

ஞானத்தின் வழியறிந்து செயல்பட்டு எல்லோரும் ஞானியாகி… அந்த வழித்தொடரினை வழிப்படுத்தியே “சப்த ரிஷிகளுடன் சங்கமித்தே சகல நிலையுடன் கலந்திடுவோம்…” என்ற ஓ…ம் என்ற நிலையினிலே மன நிலையை ஒன்றச் செய்திடுங்கள்.

இவ்வுலகம் மட்டுமல்ல… அனைத்து உலகங்களுமே நமதாக்கி அனைத்து உலங்கங்களுக்கும் சொந்தமான அவ் ஆதி சக்தியுடனே கலந்திடுவோம்… என்ற “ஒரு நிலை கொண்ட தைரியமுடன் கலந்திடுங்கள்…!”

1.எவ்வாண்டவனும் வந்து நம்மை அழைத்துச் செல்வதல்ல அந்நிலைக்கு…
2.நம்முடன் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனை (உயிரான ஈசனை) நாம் வழி நடத்திட்டால்
3.அனைத்து ரிஷிகளின் அருளைப் பெற்று… அனைத்துடனும் நாமும் கலந்திடலாம்.
4.ஒன்றிடும் பக்குவ நிலையையே அறிந்து… பக்குவப்படுத்தி வளர்ந்து கல்கியின் நிலைக்கே வந்திடுங்கள்.

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை உணர்த்தினால் ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள் இல்லை… என்று வேதனைப்பட்டுச் சொன்னார் குருநாதர்

 

நம் உடலான சிவனுக்குள் எதனையும் உருவாக்கும் அந்த உணர்வுகள் வலுப் பெற்றாலும் எதனின் உணர்வை நாம் அதிகமாக நுகர்ந்தோமோ அதுவே நமக்குள் விளைந்து அடுத்த சரீரத்தை இது நிர்ணயிக்கின்றது.

1.ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசிக்கும் நிலைகள்
2.உடலுக்குள் சென்று எப்படிச் சிவமாகிறது (உடலாக) என்பதை உணர்த்துவதற்குத்தான்
3.சிவன் ஆலயங்களில் நந்தீஸ்வரனை வைத்துள்ளார்கள்.

ஐந்து புலனறிவு கொண்ட மிருகங்கள் அது உணவுகளை உட்கொள்ளும்போது அதில் உள்ள விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்கிறது… மற்றதை மலமாக மாற்றுகின்றது.

ஆனால் நல்லதை உடலாக்கி விஷத்தை மலமாக மாற்றும் திறன் கொண்ட நாம்… இன்றைய வாழ்க்கையில் வேதனைப்படும் ஒரு மனிதனின் உணர்வை நுகர்வோமென்றால் (சுவாசம்) அது நம் உடலுக்குள் சென்று அணுவாக மாறி நம் உடலில் விஷத்தின் தன்மையாக உருவாக்கிவிடும்.

வேதனை என்றாலே விஷம். இதனின் கணக்கின் தன்மை அதிகரித்து விட்டால் அந்த விஷத் தன்மை கொண்ட அணுக்களாக உடலுக்குள் பெருகத் தொடங்குகிறது.

இப்படி நமக்குள் எதனை அதிகரிக்கின்றோமோ… அதன் வழிகளில்… இந்தக் கணக்கின் பிராகரம் தான்… நம்முடைய அடுத்த சரீரத்தை உயிர் உருவாக்கும் என்ற நிலையைத் தெளிவாக கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

1.இதை நாம் அறிவதில்லை…
2.இதை உணர்த்துவாரும் இல்லை…
3.உணர்த்தச் செய்யும் மனிதர் இல்லை….!

இப்பொழுது இதை உணர்த்தினாலும் இன்று ஏற்றுக் கொள்ளும் மனிதர் இல்லை…! என்று வேதனைப்பட்டுச் சொன்னார் நம் குருநாதர் ஈஸ்வரபட்டர்.

சாங்கிய சாஸ்திரங்களைச் சொல்லி சிவனுக்கு அபிஷேகங்களையும் என்றும் ஆராதனையும் செய்தால் “அவன் எனக்கு ஓடி வந்து செய்வான்…!” என்ற இந்த உணர்வைத் தான் தனக்குள் பதிவாக்கியுள்ளார்கள்.

அதன் வழியில் உடலிலே விளைந்த அணு அதே உணர்வின் எண்ணங்களைத் தான் உருவாக்கும். அதன்படி மந்திரங்களைச் சொல்லி அதற்கு வேண்டிய அபிஷேக உணவுகளையும் கொடுத்து இந்த உணர்வை நுகர்ந்து விட்டால் நந்தீஸ்வரா…!

இதே மந்திர உணர்வின் அணுவாக உடலிலே உருவாகி விளைந்து… உயிராத்மாவில் இணைந்துவிடும். இதை வளர்த்துக் கொண்ட நிலையில் உடலை விட்டுப் பிரியும் இந்த ஆன்மா எங்கே போகும்..?

இதே மந்திர ஒலியை அடுத்து இன்னொரு மனிதன் எழுப்புவான் என்றால்…
1.இதனின் கணக்கின் பிராகாரம் அந்த உடலின் ஈர்ப்புக்குள் தான் உயிரான்மா செல்கிறது
2.நாம் சுவாசித்த கணக்கின் பிராகாரம் தான் அடுத்த உடல் என்று தெளிவாக்கினார் குருநாதர்.

ஆகவே சிவாலயத்தில் எதை எண்ண வேண்டும்…? எதைப் பெற வேண்டும்…? என்றும் மக்களுக்கு எடுத்துச் சொல்…! என்றார் குருநாதர்.

ஆகவே நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டும்…?

நம்மைப் போன்று இந்தப் பூமியில் வாழ்ந்தவர்கள் தன் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை வென்று நஞ்சினை ஒளியாக மாற்றினார்கள்.

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியின் சரீரமாகப் பெற்று கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று
2.அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

காலை 4 மணிக்கு இதை எடுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெறவேண்டும் என்று நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்…!

“நான்… செய்வது தான் சரி…!” என்ற எண்ணத்துடன் இருந்தால் ஞானத்தின் வளர்ச்சி இருக்காது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கேள்வி:
எண்ணத்தில் தூய்மையும் நற்செயலுடனும் இருக்கும் ஒருவருக்குத் தியானம் அவசியமா…?

மற்றவரை நோக வைக்கும் எண்ணமோ செயலோ இல்லை. தான் செய்யும் காரியமும் எண்ணமும் சரியானதாகவும் இருப்பதாக இருக்கின்றது.

தான் செய்வது சரியா…? நியாயமா…? என்பது தெரியவில்லை.
1.எனக்கு நியாயம் என்று தோன்றுகிறது.
2.ஆனால் மற்றவர்கள் அதை ஏற்பது இல்லை…!

என் நினைவிலும் செயலிலும் தவறு இருந்தால் அதைத் திருத்திக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

பதில்:
எண்ணமுடனும் உணர்வுடனும் நல் நிலை பெற்றிருந்தாலும் பக்தி என்ற அன்பு நிலையை வளரவிடாமல் “நான்…” என்ற நிலைப்படுகின்றது இந்த வினாவின் நிலை.

கேள்வி கேட்டவர்:
அது சரியா… தவறா..! என்பது தெரியவில்லை. “நான்…” என்று எனக்கு உணரும் நிலை எனக்கு நன்றாகத் தெரிகின்றது.

பதில்:
உணர்வுடனே… “தன் நிலையை நல் நிலை என்றுணர்ந்து.. நான்…!” என்ற உணர்வையும் கலக்கிவிட்டதினால் வந்த நிலை உன் நிலை.

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இவ்வியற்கையின் சக்தியில் எவையுமே இல்லை
2.இந்த நிலையில் தன் உணர்வை நல்லொழுக்கப்படுத்தி அவ்வொழுக்க நிலைக்கே அடிமைப்பட்டு
3.அந்த நிலையையே தெய்வமாக்கித் தன் உணர்வுடன் நானாக இருந்து என்னம்மா பயன்…?

அனைத்து நிலைகளை அறிந்த சப்தரிஷிகளுமே தனித்த நிலையில் இயங்குவதில்லை. உணர்வுடன் உணர்வை ஒன்றச் செய்து தான் செயலாக்குகின்றார்கள்.

1.நீ அமைத்துக் கொண்ட இந்நிலையிலிருந்து விடுபட்டால் தான்
2.உன் உணர்வுடன் சேமித்துள்ள நற்சக்திகள் செயல் கொண்டிட முடியும்.

நல் எண்ணமும் அவ்வெண்ணமுடன் கூடிய உணர்வினால் நம் பார்வையின் சக்தியும் நாம் செப்பிடும் சொல் அழகும் அன்பான ஆசை வாழ்க்கை நிலையும் தான் ஜெப வாழ்க்கையம்மா.

“ஜெபம் என்பதுவே வாழ்க்கையுடன் ஒன்றிட்ட நல் உணர்வைப் பெற்றதுவே…”

எண்ண நிலையை ஒரு நிலைகொண்டு உண்மையுடனும் அன்புடனும் அன்பாசையுடனும் உள்ளவர்களுக்குத் தெய்வ நிலை கிட்டும். தெய்வம் என்பதுவே இந்த நிலை பெற்றோரைத்தான்.

1.ஆதிசக்தியின் இயற்கை சக்திகள்தான் அனைத்து சக்திகளும்.
2.நம்மையே நாம் இவ் இயற்கையுடன் தெய்வமாகக் கலக்கவிட்டு வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இப்பேராசைக்கும் வெறி உணர்வுகளுக்கும் மற்றத் தீய சக்திகளின் உணர்வுகளுக்கும் நாம் அடிமையாகாது வாழ்வதற்கே நல் ஜெபம் எடுத்திடுங்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்வது.

தியானத்தின் மூலம் சக்தி பெற வேண்டிய சரியான முறை

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.நிச்சயம் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றீர்கள்….
2.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்…
3.நிச்சயம் உங்கள் குடும்பத்தில் நோயை எல்லாம் மாற்றி அமைத்து விடுவீர்கள்….!
4.கணவன் மனைவிக்குள் சில குறை உணர்வுகள் இருந்தாலும் அதை எல்லாம் மாற்றி நிச்சயம் உயர்ந்தவர்களாக ஆவீர்கள்
5.இவ்வாறு நல்லதாக மாற்றக்கூடிய சக்தி உங்களிடம் இருக்கிறது.

உங்கள் குடும்பத்தில் உங்கள் குழந்தையோ பிள்ளைகளோ “இப்படி இருக்கின்றார்களே…!” என்று வேதனையுடன் எண்ணுவதிற்குப் பதில் “அவர்கள் நிச்சயம் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள்…” என்று எண்ணி இந்த உணர்வை நிச்சயப்படுத்தி நல்லவராக வேண்டும் என்று எண்ணி வாருங்கள்.

தியானம் செய்ய வேண்டிய முறை இது தான்…!

தியானத்தின் மூலம் அரும் பெரும் சக்தியை வளர்க்கவே இதை வாக்காகக் கொடுக்கின்றோம். இதை நீங்கள் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள முடியும். உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்… உங்கள் தெருவும் நன்றாக இருக்கும்… உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்…! ஊர் ஒற்றுமையாக இருந்தால் விவசாயமும் நன்றாக இருக்கும்.

ஊரில் ஒற்றுமை இல்லாது பகைமை இருந்தால் இந்தப் பகைமையான உணர்வுடன் நாம் பயிரிடும்போது பயிர்களிலும் கெடுதல் வரும். பல பூச்சிகள் விழும். விஷத் தன்மைகள் நம்மிடம் இருந்து அதற்குப் பரவும்.

அதை ஒழிக்க யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி தியானத்தின் வலுக் கொண்டு அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் பயிர்களிலே பாய்ச்சுங்கள். பூச்சிகளைக் கொல்லும் விஷமான மருந்திற்கே வேலை இல்லை.

உங்கள் பார்வையில் விவசாயம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எண்ணிக் காலை துருவ தியானத்தை எடுங்கள்.

அதில் நல்ல அணுக்கள் விளைய வேண்டும். நல்ல அணுக்களால் தாவர இனங்கள் விளைய வேண்டும். அதில் விளைந்திடும் உணவை உட்கொள்வோர் அனைவரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும். உங்கள் விவசாயம் நன்றாக இருக்கும்.

ஏனென்றால் இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கின்றது. இதிலிருந்து நாம் அனைவரும் மீள வேண்டும்.

1.எல்லாரையும் அந்த ஞானத்தின் சக்தியைப் பெற வைக்க வேண்டும் என்றார் குருநாதர்
2.அதைப் பார்த்து நீ பேரானந்தப்பட வேண்டும் என்று தான் என்னிடம் சொன்னார்.

அதே உணர்வுடன் நீங்களும் எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணிச் செயல்படுங்கள். பேரானந்தத்தை உருவாக்குங்கள்.

இந்தப் பூமியில் பிறந்த நாம் அந்தத் தாய்க்குச் சேவை செய்ய வேண்டும்.
1.தாய் பூமியை அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.
2.இதிலிருந்து தான் நாம் உருவானோம்… அந்தத் தாயை மதிக்க வேண்டும்
3.அந்தத் தாய் வீற்றிருக்கும் இந்த இடம் சுத்தமாக இருந்தால் இதில் வாழும் மக்கள் நாமும் நன்றாக இருப்போம்.

இந்த உலகில் நாம் வாழ்ந்து காட்ட வேண்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.இயற்கை உணர்வுடனே கலந்திட்ட நல் நிலை பெற்றோரின் எண்ணச் சக்திக்கு
2.இவ்வெண்ணத்துடன் கலந்திட்ட இயற்கை சக்தியும் உறுதுணையாக நிற்கும்

இயற்கையின் தன்மையில் ஒரே நிலை இருப்பதில்லை.

காற்றும் மழையும் குளிரும் உஷ்ணமும் கால நிலைக்கேற்ப மாறிக் கொண்டு வருகின்றன. இயற்கை அனைவருக்கும் பொதுவான சக்தி தான்.

அச்சக்தியின் அருளைச் சாதக நிலைப்படுத்தி எண்ணத்தில் உயர்வு கொண்டோரின் நிலையின் ஜெபத்திற்கு அவர் எண்ண ஜெபத்தின் நிலைக்கு இயற்கையும் ஒத்துழைக்கும்.

எண்ணத்தில் ஏற்றுவித்த இந்நல் சக்தியின் நிலை கொண்டு இயற்கையின் சீற்றத்தையும் நாம் கட்டுப்படுத்திடலாம்.

நம் எண்ணமே அத்தெய்வ சக்தியை ஈர்த்து ஜெப நிலையில் உள்ள பொழுது… இவ் இயற்கையில் கலந்திட்ட பல நிலை கொண்ட அமில சக்தியை நம் எண்ணத்தின் சக்தியைக் கொண்டு திசை திருப்பிடவும்… ஜெபப்படுத்தி அவ் இயற்கையின் சக்தியையே நம் எண்ண நிலைக்கொப்ப நிலைப்படுத்திடலாம்.

ஆனால் எண்ணத்தில் கறையுண்டோருக்கு இயற்கையும் ஒத்துழைப்பதில்லை.

இன்றைய மனித ஆத்மாக்கள் தன் நிலை உணர்ந்திடாமல்… தான் பிறவி எடுத்து வாழ்ந்த நிலையையும் மடியும் நிலையையும் எண்ணத்தில் கொண்டு
1.இவ் இடை கொண்ட வாழ் நாட்களில் இருந்தென்ன பயன்…? என்றும்
2.இவ்வுடலுடன் நாம் இருந்து அடையும் நன்மை என்ன…? என்றும்
3.இயற்கை எய்திடும் (இறப்பு) நாம் இவ்வாழ்க்கையில் சிக்கி மனக் கலக்கப்பட்டு வாழ்ந்து என்ன பயன்…? என்றும்
4.எண்ணும் எண்ணத்தில்தான் பல ஆத்மாக்கள் உள்ளன.

எண்ணத்திலேயே தன் நிலையை வினாவாக்கி வாழ்பவருக்கு… இவ்வுடலுடன் மட்டுமல்ல… இவ்வுடலை விட்டுச் சென்றிட்ட ஆத்ம நிலையிலும் “இவ்வினா நிலைதான்…” சுற்றிக் கொண்டே இருக்கும்.

இயற்கையின் சக்தியில் இயற்கையே அளித்திட்ட இயற்கையுடன் ஒன்றிய நம் உயிராத்மாவை இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நாட்களிலும் சரி… ஆத்மா பிரிந்து ஆவியுடன் சுற்றிக்கொண்டுள்ள நிலையிலும் சரி… இவ் இயற்கையுடன் ஒன்றியே தான் உயிரணு உதித்த நாள் முதற் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையும் அமில சக்தியும் நம் எண்ண சக்தியுடன் என்றென்றும் அழியாமல் சுற்றிக் கொண்டுள்ளன.

இப்பிறவிக்கு நம் எண்ணம் கொண்டுதான் வருகின்றோம். ஈன்றவரின் நிலையினால் மட்டுமல்ல…!

நாம் பிறவி எடுத்த நற்பயனையே நற்சக்தியாக்கி… இவ்வுலகுடன் ஒன்றியே நம் உயிராத்மாவும் தொடர்பு கொண்டு… நம் பிறவிப் பயனைப் பெற்று…
1.நாம் பிறந்திட்ட உண்மை சக்தியினை இவ்வுலகில் நிலை நிறுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.
2.அகஸ்தியனைப் போன்றும் போகனைப் போன்றும் கொங்கணவரைப் போன்றும் ஒவ்வொரு நிலையிலும் நல் உணர்வு கொண்டு
3.நம்முடன் நம்மை வழி நடத்திச் செயல் கொண்டு செயலாக்கிடும் பல ரிஷிகளின் நிலை பெற்று வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இயற்கையின் சக்தி அனைத்திற்கும் பொது சக்தி. அச்சக்தியின் நல் உணர்வை ஈர்த்து நம் ஆத்மாவை நிலைப்படுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

நல்ல மணமகன் நல்ல மணமகளைத் தேர்ந்தெடுக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறை

 

தன் மகன் திருமணத்திற்குத் தகுந்த மணப்பெண் வேண்டுமென்றால் “மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தைக் காக்கும் அருள் சக்தி கொண்ட பெண் நமக்குக் கிடைக்கும்…” என்று இந்த உணர்வினை எண்ணிச் செயல்படுத்திப் பாருங்கள்.

இதைப் போன்ற உணர்வுகள் வரப்படும்போது அதற்குத்தக்க நல்ல இடத்தை அழைத்துக் சென்று நல்ல மணமகளைப் பார்க்க முடியும். அதே போல் நல்ல மணமகனையும் தேர்ந்தெடுக்கும் சக்தி உங்களிலே பெருகும்.

ஆனால் ஜாதகம் ஜோதிடம் என்று பார்த்தால்… அது உங்களைத் தான் அடிமையாக்குமே தவிர மெய் உணர்வை உங்களை அறியச் செய்யாது.

1.ஜாதகம் ஜோதிடம் பார்க்காது மனம் ஒத்துச் சென்றால்
2.உணர்வின் தன்மை ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

ஜாதகம் பார்த்துப் பார்த்து எதுவும் ஒன்றி வரவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை பதிவாகி… கடைசியில் சோர்வின் தன்மை அடையப்படும்போது அதற்குத் தகுந்த “சோர்வான மாப்பிள்ளையையோ சோர்வான பெண்ணையோ தான்” பார்க்கும்படி வரும்.

அப்படி வந்த பின் கீரியும் பாம்பும் போல தான் அவர்கள் வாழ்க்கை அமையுமே தவிர மகிழ்ச்சி பெறும் தன்மை இல்லை.

ஜாதகம் ஜோதிடம் பார்த்து ஆயுட்காலத்தை நிர்ணயித்துத் தான் திருமணத்தைச் செய்கின்றார்கள். எல்லாப் பொருத்தமும் இருந்தால் அவர்களுக்கு நோய் வராது…! என்பார்கள். அதன் பிரகாரம் வாழ்கின்றனரா…? நோயில்லாமல் வாழ்கின்றனரா…?

1.மனப்பொருத்தத்தைப் பார்த்து அருள் ஒளி பெற வேண்டுமென்று ஏங்கிப் பெற்றால்
2.ஒன்றி வாழும் நிலை பெற்று அவர்கள் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் திறன் பெறுகின்றனர்.

ஆகவே அருள் ஞானி காட்டிய அருள் வழிகள் அவர்கள் பெற வேண்டும் அதன் வழி எங்கள் குடும்பங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

ஜாதகம் ஜோதிடம் என்ற நிலைகளை ஒழித்துத் தள்ளுங்கள். அருள் வழி பெற வேண்டுமென்ற நிலைகளில் நம் குடும்பம் ஒத்து வாழ வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணுங்கள்.

பொண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் அவர்கள் வாழ்க்கையில் நோயின் தன்மையை விசாரியுங்கள். குணத்தின் தன்மையை விசாரியுங்கள். நல்ல ஒழுக்கத்துடன் செயல்படுகின்றாரா…? என்று பாருங்கள்.

இப்படித்தான் பொருத்தங்களைப் பார்க்க வேண்டும். நல்லொழுக்கத்துடன் செயல்பட்டால் இந்த முறைப்படி நாம் தியானித்தால் இந்த நல்லொழுக்கம் மீண்டும் வளர்கின்றது. தவறுகள் வராது.

ஆனால் தவறு செய்வோர் ஆசையின் உணர்வுகளை ஊட்டுவார். அதை ஏற்றுக் கொண்டு ஏமாந்து விட்டால் “நான் ஏமாந்துவிட்டனே…” என்று ஆன பின் திருமணமான பின் தீய பழக்கங்கள் கொண்ட நிலைகளே வருகின்றது.

ஆகவே துருவ தியானங்கள் இருந்து கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நம் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்
2.நம் பெண் எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பம் தொழில் வளம் பெருக வேண்டும்
3.அதன் பார்வை அந்தக் குடும்பத்திற்கு நலம் பெறும் சக்தியாக அமைய வேண்டும்
4.அதே போல வீட்டிற்கு வரும் மருமகளும் மகாலட்சுமியைப் போன்று குடும்பத்தை அழகுபடுத்தும்
5.மகிழ்ச்சி அடையச் செய்யும் அந்த உணர்வுகள் பெற வேண்டும்
6.அத்தகைய மணப்பெண் நம் வீட்டிற்கு வர வேண்டுமென்ற எண்ணத்தைத் தொடருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைகள் நிச்சயம் வரும்.

மனிதன் உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு அக்கால ஞானிகள் காட்டிய மிகவும் எளிதான வழி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இவ்வுலகில் உதித்திட்ட அனைத்து உயிராத்மாக்களும் உயிரணுக்களும் அனைத்துமே தெய்வம் தான்.
1.தெய்வம் என்று அன்பு கொண்டு நாம் காணும் சிறு துரும்பும்
2.நாம் தெய்வம் என்று எண்ணும் நிலையிலேயே
3.நம் உயிராத்மாவும் அத்தெய்வ சக்தியைப் பெறுகின்றது.

கல்லையும் மண்ணையும் ரூபப்படுத்தி தெய்வமாக வணங்குவதெல்லாம்
1.நம் ஆத்மாவையே அத் தெய்வ நிலையில் அன்பு கொண்டு வணங்கிடுங்கால்
2.அச்சக்தியின் திறன் நம் ஆத்மாவிற்கே பதிவு கொள்கின்றது.

உருவ வழிபாடெல்லாம்.. குண நிலையை உணர்த்திட நம் முன்னோர்கள் வழி நடத்திட்ட நல் வழி முறைகள் தாம்.

இம்மனித எண்ணங்களில் வாழ்க்கையுடன் கூடிய பல நிலைகள் கொண்ட எண்ணக் கலவையிலிருந்து
1.ஆண்டவனைப் பக்தி கொண்டு பூஜிக்கும் நிலை ஏற்படும் பொழுதே
2.ஒவ்வோர் ஆத்மாவும் அமைதி கொள்கின்றது.

பாட நிலையில் இந்நிலைகள் அனைத்திற்கும் எல்லா நிலைகளையும் புரியும்படி விளக்கியுள்ளோம். வழிப்படுத்தும் முறைக்காகத்தான் இப்பக்தி நிலை.

நாம் வாழ்ந்த வாழும் இந்த நாட்டில் உள்ள பக்தி நிலையின் தொடர்பினால்தான் இங்குள்ள மக்களின் எண்ணத்தில் அன்பு நிலையும் சில இடங்களில் ஆத்மீக நெறி முறையும் உள்ளன.

ஆனால் இப்பூமியிலேயே மற்ற மேலை நாடுகளில் உள்ள நிலையினை அறிந்திருக்கலாம் எப்படி இருக்கிறது என்று…!

ஏனென்றால் அவரவர்கள் தான் அமைத்துள்ள வழியில்… வந்த தம் தம் தொடர்புப்படி பெற்ற… எண்ணக் கலவையின் வழித்தொடரிலேயே இன்றளவும் எண்ண நிலையுள்ளது.

ஆனால் மனித எண்ணத்தில் அனைத்து நிலைகளையும் அறியும் சக்தித் திறனுண்டு. அதை நல் நிலைப்படுத்தி எடுத்த பிறவியின் பலனை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும் என்பதற்கே இந்தப் போதனைகள்.

நல்ல மக்களை வீட்டிலிருந்தே உருவாக்க ஞானிகள் அன்று காட்டிய நெறி

 

ஒரு குழந்தை அழகாகப் பிறக்க வேண்டுமென்றால்… அருள் ஞானியாகப் பிறக்க வேண்டுமென்றால்… அதற்குண்டான உவமையும் அழகுபடுத்த தெய்வாம்சம் கொண்ட படங்களை வீட்டிலே வைத்து மெய் ஞான அறிவுப்படி கருவுற்ற பெண்களை அதை உற்றுப் பார்க்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

சரஸ்வதி படத்தை உற்று நோக்கி… “கல்வியில் சிறந்தவர் கருத்தறியும் உணர்வுகள் கொண்டவர் இசையில் வல்லவர்” என்ற இந்த உணர்வின் தன்மையை எண்ணி எடுக்கும்படி செய்தனர்.

இலட்சுமி படத்தை உற்று நோக்கி… “அழகையும் செல்வத்தையும் செழிப்பையும்” எண்ணி எடுக்கும்படி செய்தனர்.

பராசக்தி படத்தை உற்றுப் பார்க்கும் பொழுது “சர்வத்தையும் தனக்குள் உருவாக்கும் உணர்வுகள் உண்டு” என்று அந்த ஆற்றல்களை எண்ணி எடுக்கும்படி செய்தனர்.

இந்த மூன்று படங்களை ஒன்றாக இணைத்து… ஒன்று இசை இன்னொன்று அழகு செல்வம் மற்றொன்று சக்தி என்று எண்ணி எடுக்கும் நிலையில்… எந்த குணத்தின் தன்மையோ அதை இலட்சுமி தனக்குள் அதை வளர்த்துக் கொள்ளும் என்று காட்டுகின்றார்கள்.

1.அதாவது உயிரிலே ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும்…
2.உணர்வின் தன்மை எதை இசையோடு இணைக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மையைக் கருவாக்கும் என்றும்
3.ஈர்க்கும் உணர்வுகள் உயிரிலே மோதும் போது அதிலிருக்கும் வெப்பத்தின் தணல் கொண்டு ஒன்றென இணைந்து
4.”அந்த உணர்வின் தன்மைகள் கருவாகும்…” என்பதை நினைவுபடுத்தி
5.சாதாரண மக்களுக்கும் தன் குடும்பத்தில் தன் கருவிலே விளையும் சிசுக்களை
6.அருள் ஞானக் குழந்தைகளாக வளர்த்திட ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

வீட்டிலே இத்தகைய தெய்வப் படங்களை வைத்து அதிலே சூரிய ஒளிக்கதிர்கள் படும்போது அந்த நிலைகள் அலைகளாகப் படர்கிறது.

அதை உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால் அந்த அலைகளை நாம் நுகர நேர்கின்றது. நுகர்ந்தது நம் உயிரிலே படும்போதுதான் அந்த படத்தையே… அந்த அழகையே… ரசிக்கும் தன்மை நமக்குள் வருகின்றது.

இத்தகைய நிலைகளை கருவுற்ற தாய்மார்கள் நுகர்ந்து கருவிலே வளரும் சிசுக்களை அழகாகவும் அருள் ஞானியாகவும் உயர்ந்த குணங்களை வளர்ப்போராகவும்… இப்படிப்பட்ட உயர்ந்த நிலைகளைத் தனக்குள் உருவாக்கும் சக்தியாகப் பெறுவதற்காக இந்த மூன்று படங்களையும் வைத்தனர் ஞானிகள்.

அந்தப் படங்களைப் பார்க்கும் போது அதில் உள்ள கருத்தை எண்ணத்தால் தனக்குள் கருவாக்கி… கர்ப்பமுற்ற அந்தத் தாயை எண்ணும்படி செய்கின்றனர்.

அதே போல் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோரும் கருவில் வளரும் சிசுவிற்கு அந்த ஆற்றல் பெற வேண்டுமென்று இந்த உணர்வின் தன்மையை உருவாக்கப்படும்போது கருவிலே வளரும் அந்த சிசு அழகாகவும் அருள் ஞானியாகவும் கருத்தறிந்து செயல்படும் சக்தியாகவும் வளர்கின்றது.

1.நல்லதை உருவாக்கும் அணுக்கதிர்களை எடுத்து…
2.கருவில் வளரும் சிசுக்களை மெய் ஞானிகளாக வளர்க்க முடியும் என்று தான்
3.வீட்டிலே இததகைய படங்களை வைக்கச் சொன்னார்கள் ஞானிகள்.

ஆனால் அழகான படத்தைப் பார்த்து… அருள் ஞானத்தை எண்ணி எடுப்பதற்குப் பதில்… குடும்பத்தில் இருக்கும் சங்கடங்களையும் வேதனை கொண்ட இசைகளையும் இணைத்து… இந்த உணர்வுகளைக் கருவுற்றிருக்கும் தாய் நுகர்ந்தால் என்ன ஆகிறது…?

கருவிலிருக்கும் அந்த சிசுவிற்கும் இதே சங்கட அலைகள் இணைந்து அதனுடைய அழகான ரூபங்கள் தொலைந்து… சிந்திக்கும் உணர்வுகளும் இழக்கப்பட்டு
1.குழந்தை பிறந்த பின் வெறுப்பும் வேற்றுமையும் கொண்டு
2.மேனியில் அழகு குறைந்த நிலைகளாகவும் சில குடும்பங்களில் இப்படி வளர்கின்றது.

ஆக.. இது போன்று ஆகாதபடி நல்லொழுக்கப்படுத்த அன்று தத்துவ ஞானிகள் இப்படி எத்தனையோ வழிகளை நமக்குக் காட்டியுள்ளார்கள்.

நம் வீடுகளில் சாமி படங்கள் பலவும் உண்டு. அதனை வைத்துப் பூஜிக்கும் அனைவரும் எப்படிப் பூஜிக்கின்றோம்…?

குடும்பத்தில் கஷ்டமாக இருந்தது என்றால் அந்தக் கஷ்டத்தையே சொல்லி வழிபடுவர். நான் உன்னையே எண்ணி நாள் முழுவதும் வழிபடுகின்றேன்… எனக்கு ஏன் இந்தச் சோதனை…? என்ற உணர்வுகளைத் தான் நாம் எண்ணுகின்றோம்.

இந்த நிலையில் நாம் எண்ணிய வேதனை உணர்வுகளை நமது உயிர் “ஓ…” என்று அணுவாக மாற்றுகின்றது. “ம்…” என்று உடலாக மாற்றுகின்றது.

1.நாம் வளர்த்த அந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் ஆண்டவனாக ஆண்டு கொண்டு இருக்கின்றது
2.மீண்டும் அதை எண்ணும்போது அந்த உணர்வை இயக்கி நமக்கே உணர்த்துகின்றது நமது உயிர்.
3.உயிரின் வேலை அதுதான்…!

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஞானிகள் நமக்குக் கொடுத்த நல்வழிகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

eswarpattar and agastyar

பித்தனைப் போன்று சுழன்று கொண்டிருக்கும் ஈஸ்வரபட்டரின் பூர்வீகம்

 

நமது குருநாதர் ஈஸ்வரபட்டர்… தன் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி மெய்ப் பொருளை கண்டுணர்ந்து உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்.

அவர் விண் சென்ற நாள் தான் வைகுண்ட ஏகாதசி. எந்த உடலுக்குள்ளும் புகாது… எதற்குள்ளும் சிக்காது பேரண்டத்தின் உணர்வைத் தனக்குள் உணர்வின் ஒளியாக மாற்றி என்றும் ஏகாந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது குருநாதர்.

அதற்கு முந்திய மகரிஷிகளும் உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

நமது குருநாதர் அவர் வாழ்க்கையில் எத்தனை சரீரங்களை எடுத்தாரோ… எத்தனை வேதனைகளைப்பட்டாரோ… எத்தனை இன்னல்களை அவர் பட்டாரோ… அந்த உணர்வுகளிலிருந்து நீங்கும் எண்ணத்தைக் கொண்டு தான் வளர்ந்தார். ஏனென்றால் அவரும் பல இன்னல்களைச் சந்தித்தவர் தான்…!

மங்களம் என்ற ஊர் ஒன்று உண்டு. அதிலே ஒரு குக்கிராமம் அதாவது கேரளா எல்லையும் கர்நாடக எல்லைக்கு அருகிலே அமைந்தது தான் ஈஸ்வர மங்களா…! என்ற ஊர்.. அந்தக் குக்கிராமம்.

குறைந்தபட்சம் அதிலே பத்து வீடுகள் இருப்பதே அதிகம் தான். ஆக தனித்துத் தனித்து இருக்கும் நிலைகளில் நமது குருநாதரின் பூர்வீகம் அதுவாக இருப்பினும் அவருடைய தாய் தந்தையர்கள் அங்குள்ள ஆலயத்தில் சேவை செய்து பூஜை செய்து அங்கே மந்திர ஒலிகளை ஒலித்துக் கொண்டிருந்தவர்கள்தான்.

அக்காலத்தில் அகஸ்தியன் தனது ஐந்தாவது வயது அடையப்படும் போது தன் அன்னை தந்தையை இழந்த நிலையில் அன்னை தந்தையின் ஏக்கம் கொண்டு இருக்கப்படும் போது அந்த இரண்டு ஆன்மாக்களும் அகஸ்தியன் உடலுக்குள் புகுந்து… அவர்கள் கண்டுணர்ந்த உணர்குகளை எல்லாம் இந்த உடலுக்குள் நின்று அந்ப் பச்சிளங்குழந்தையைக் காத்து மெய் உணர்வைப் பெறும் தகுதி ஏற்படுத்தினரோ அதே போன்றுதான் நமது குருநாதர் வாழ்க்கையிலும் ஏற்பட்டது.

குருநாதருடைய தாய் தந்தையர்கள் கோயில்களில் பூஜை செய்து கொண்டிருக்கும்போது இவர் ஐந்து வயது அடையப்படும் போது அவரது அன்னை தந்தை இருவரும் சந்தர்ப்ப பேதத்தால் உடலை விட்டுப் பிரிந்து விடுகின்றார்கள்.

தவித்துக் கொண்டிருந்த இந்தப் பச்சிளங்குழந்தை தன் அன்னை தந்தையைக் காக்க வேண்டுமென்ற ஏக்க உணர்வு கொண்டு ஏங்கிய நிலையில் அந்த ஆன்மாக்கள் இவர் உடலில் புகுந்து விடுகின்றது.

தாய் தந்தையரோ பல மந்திர ஒலிகளை எழுப்பிப் பல யாகங்களும் பல வேள்விகளும் செய்தவர்கள் தான். அந்த உணர்வின் ஞானத்தால் பல உண்மைகளை அறியும் ஆற்றலும் பெறுகின்றார்.

அதன் வழியில் அன்றைய மகாபாரதப் போரின் நிலைகள் எவ்வாறு…? என்று வியாசகர் வெளிப்படுத்திய தத்துவ நிலைகள் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் கவரப்படுகின்றது.

மகாபாரதமும் அதனின் தொடர் வரிசையில்…
1.சாஸ்திரங்களில் கூறப்பட்டிருந்த உணர்வுகள் அனைத்தும் இந்த பிஞ்சு உள்ளங்களிலே கவரப்பட்டு
2.அந்த உணர்வின் துணையால் இந்த பூமியின் எந்த மூலைக்கும் தன்னிச்சையாகச் செல்லும் சக்தியும் திறனையும் பெற்றார்.

அதன் வழியிலேயே தான் அவருக்குள் அன்னை தந்தையரின் உணர்வுகள் இயக்கப் பெற்றுப் “பேரண்டத்தை அறியும் ஆற்றலும்…” அவருக்குள் கிட்டியது.

சாங்கிய சாஸ்திரப் பிடிப்பில் சிக்கிய அந்தக் குடும்பத்தில் அத்தகைய நிலைகள் கொண்டு கண்டுணர்ந்தாலும்…
1.மந்திர ஒலியில் சிக்காது அவருடைய எண்ணங்கள் விண்ணை நோக்கி ஏகி
2.அந்த உணர்வு கொண்டு சப்தரிஷி மண்டலங்களின் உணர்வினைப் பெறும் தகுதியைப் பெறுகின்றார் நமது குருநாதர்.
3.அதுவும் அவருடைய சந்தர்ப்ப பேதங்கள்தான்.

தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு உலகம் எங்கிலும் சுற்றி வந்து… உலகில் உள்ள சாங்கிய நிலைளைத் தனக்குள் கண்டுணர்ந்து… சாங்கியத்தால் பெற்ற அந்த தீமையில் இருந்து விடுபட வேண்டுமென்ற உணர்வினைத் தன்னுள் பதியச் செய்து…
1.விண்ணுலக ஆற்றலைப் பெற்றுணர்ந்த நமது குருநாதர்
2.அந்த உண்மைகள் மக்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெற வேண்டும் என்றுதான்
3.பித்தனைப் போலவே அவர் பல காலம் பல நிலைகளிலும் சுழன்று கொண்டுள்ளார்…!

Vallalar HD

சாகாக்கலை… வேகா நிலை… போகாப்புனல்… இராமலிங்க அடிகள் சொன்னது

1.அகஸ்திய மாமகரிஷி தன்னுள் கண்டுணர்ந்ததும் தன்னை அறிந்ததும்
2.அணுவின் ஆற்றலை அறிந்து ஆற்றல்மிக்க உணர்வினை தன் உடலிலே வளர்த்து
3.பேரண்டத்தையும் தன்னுள்ளே கண்டுணர்ந்து
4.தனக்குள் கண்டுணர்ந்த உணர்வில் இருள் படர்ந்ததை இருளை நீக்கி
5.தன் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ மகரிஷியாகி
6.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக என்றும் பதினாறு என்ற நிலை அடைந்துள்ளார்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வினை எவர் கவர்ந்தனரோ அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் பெற்று சப்தரிஷி மண்டலங்களாக அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

மனிதனில் உயர்ந்த நிலைகள் பெற்றவர்கள்… வாழ்வில் பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைந்து… அழியா ஒளிசரீரம் பெற்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின்படி அவர்கள் சென்ற பாதையில் நாம் சென்றோமென்றால் இந்த வாழ்க்கையில் வரும் இருளினை நீக்கி இருளுக்குள் பொருள் கண்டுணர்ந்து இருளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக முடியும்.

இவ்வாறு இந்த வாழ்க்கையில் இருளை நீக்கிடும் உணர்வின் தன்மைகளைத் தன்னுள் எவர் பெறுகின்றனரோ அவரே அடுத்த எல்லையாக இந்த உடலிலே பிறவா நிலை என்ற பெரு நிலை அடைகின்றனர். இதற்குப் பெயர் “வேகா நிலை…”

இன்று நமது வாழ்க்கையில் எந்தந்தெந்த ஆசைகளை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ அது சாகாக்கலையாக வளர்ந்து இந்த உடலை விட்டு அகன்றாலும் அந்தக் கலையின் உணர்வின் துணை கொண்டு அந்த உணர்வுக்கொப்ப மீண்டும் உடலின் அமைப்புகள் அமைகின்றது.

இதைத் தான் சாகாக்கலை வேகா நிலை போகாப்புனல்…! என்று தற்காலத்தில் இராமலிங்க அடிகள் இதைத் தெளிவாக்கியுள்ளார்.

தீயில் விழுந்தால் உயிர் கருகுவதில்லை. உயிர் வேகா நிலை…!

1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை சாகாக்கலையாக வளர்த்து
2.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றி உணர்வு அனைத்தையும் வேகா நிலை பெற்று
3.உடலை விட்டு அகன்றால் என்றும் போகாப்புனல் இனி ஒரு பிறவி இல்லை என்ற நிலை அடைய வேண்டும் என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார் இராமலிங்க அடிகள்.

இதைப் போன்று நமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று நம் உயிரையும் உயிரின் இயக்கத்தையும் உயிரால் இயக்கப்பட்டு மனிதனாக ஆன நிலையும் உணர்ந்து
1.மனிதனானபின் நாம் இப்போது எங்கே செல்ல வேண்டும் என்பதை நினைவுப்படுத்தி
2.அதன்படி நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவதே மேல்…!

Big dipper - Ursa major

மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழும் நிலை பெற்றிடுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகின் ஈர்ப்பு நிலை போன்றே… எண்ணத்தின் நினைவும் தொடர் நிலை கொண்டதாக ஒவ்வோர் உயிரணுவும் அது தோன்றிய நாள் தொட்டே உயிராத்மாவுடனும் சேர்ந்து வருவது தான்.

இவ்வுலகின் சுழற்சி நிலை வேகத்தின் நிலைக்கொப்ப அது பெற்ற ஈர்ப்பு சக்திதான் இந்த உலகிற்கு உண்டு. அந்த நிலை போன்றே… நம்முடனே வளர்ந்திட்ட அமில நிலைக்குகந்த எண்ண சக்திதான் ஒவ்வொருவருக்கும் உண்டு.

பல நிலை கொண்ட குண நிலைகள் அமைவதெல்லாம்
1.நம்முள் உள்ள நாம் ஈர்த்துச் சேமித்த உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே
2.வளர்ந்த நிலை கொண்ட… குண நிலை கொண்ட நாம்
3.அந்நிலைக்கே… அச்சுழற்சியுடனே… இன்று வரை வழி நடந்தும்
4.எண்ண நிலை பெற்றும் வாழ்ந்து வருகின்றோம்.

எப்பிறவிக்கு வந்தாலும் நாம் நம் உயிரணுவுடன் சேமித்த அமில சக்தியுடன் தான் (உயிராத்மாவில் விளைந்தது) இன்றளவும் வாழ்ந்து வருகின்றோம்.

பல உலோகங்களும் தாவரங்களும் அதனதன் நிலைக்குகந்த அமிலத்தை ஈர்த்து ஒரே நிலை கொண்ட தன்மையில் வளர்கின்றன. பல உலோகங்களும் திரவங்களும் ஆவியான தன் இனத்திற்கு உகந்த இனத்தையே மேன்மேலும் ஈர்த்துச் செயல்படுகின்றன.

வான மண்டலத்தில் இடியும் மின்னலும் ஓர் இனத்துடன் மற்றோர் இன அமில நிலை மோதிடும் பொழுது “சத்ரு… மித்ரு…” நிலையினால் ஏற்காத நிலையில் இடியும் மின்னலும் ஏற்படுவதாக உணர்த்தியுள்ளேன்.

இவ்வுலகினில் மற்ற எல்லா மண்டலமும் அதனதன் இனத்துடன் தான் வாழ்கின்றன. ஆனால்…
1.இம்மனித ஆத்மா நிலை கொண்ட நம்மால்
2.நம் இன நிலையான இவ்வெண்ண நிலையை
3.நாம் எடுத்திடும் சுவாச நிலையினால் நல் நிலைப்படுத்திட முடியும்.

மண்டலங்களுக்கும்… மண்டலங்களில் தோன்றி வளர்ந்திடும் இயற்கை வளங்களுக்கும்… மற்றத் தாவர இன வர்க்கங்களுக்கும் எவற்றுக்குமே இம் மனித உடல் கொண்ட ஆத்மாவுடன் கூடிய நாம்… வாழ்ந்திடும் இந்த மனிதப் பிறவியின் பாக்கியத்தை… நம்மால் நம் நினைவினில் நமக்குகந்த நிலையினை ஈர்த்து வாழ்ந்து காட்ட முடியும்.

ஆனால்…
1.எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம்.
2.வெறி உணர்வுக்கும்… பேராசைக்கும் அடிமை கொண்டு… பக்தி நிலையை வளர்த்தாலும் பலன் பெறுவது கடினம்.
3.பக்தி என்பதனையே அடிமைப்படுத்திடும் நிலையாக்கிடாமல்
4.அவரவர்களின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அன்பாக்கி
5.அந்நிலையின் தொடரினால் ஜெப நிலையில் நல்லுணர்வு கொண்ட அமிலத்தையே நம் ஆத்மாவின் சொத்தாக்கி
6.மாறப்போகும் கலியில் இருந்து மீண்டு பல மகரிஷிகளுடன் கலந்திடலாம்.
7.இன்று இவ்வுடலில் நாம் சேமித்த ஒளி சக்தியின் தொடர்புடனே மனித வாழ்க்கைக்கும் உயர்ந்த வாழ்க்கையான
8.மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழும் நிலை பெற்றிடலாம்..!

இப்பூமியின் அமில சக்தி உன்னத சக்தி. அனைத்து நிலைகளும் கலந்த சக்தி. இப்பூமியின் தன்மை மாறுபடத்தான் போகின்றது. சூரியனின் நிலையும் மாறுபடத்தான் போகின்றது. ஆனால் நம் எண்ணத்தில் எண்ணிடும் நிலையில் இல்லை.

சூரியனையே நெருப்புக் கோளமாக எண்ணுகின்றனர். ஆனால் அது குளிர்ந்த பூமி. எச்சக்தியையும் அறிந்திடும் நிலை இம்மனித ஆத்மா ஒன்றுக்குத்தான் உண்டு.

யாம் உணர்ந்த ஆத்மீக நெறியையே அனைத்து உலக நிலைகளையும் உணர்த்திட்டால் “நான்…” என்ற அந்நான் நிலை வந்துவிடும்.

1.ஆத்மீக நெறியினில் அன்பு கொண்டே ஜெபம் கொண்டு அறிய வருபவர்களுக்கு
2.அந்நிலையின் தொடரை வழிப்படுத்தி
3.அனைவருக்கும் பொதுவான சக்தியின் சக்தியை உணரும் நிலையை
4.எமக்குக் கிட்டிய சக்தியின் வழித் தொடரை வழிப்படுத்துகின்றோம் (ஈஸ்வரபட்டர்)

path way of Eswarapattar

ஞானிகள் காட்டிய நெறிகளை நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்

 

இன்று நாம் பேசிக் கொள்கின்றோம் இராமன் கடவுள் என்று. அதே போல் கீதாச்சாரத்தில் கூறப்படும் நிலைகள் கொண்டு கண்ணன் கடவுள் என்றும் சொல்கிறோம்.

இவ்வாறு அவர்கள் சொன்ன நிலைகள் எதுவோ அதைத்தான் எண்ணி நாம் வாழ்கின்றோமே தவிர மூலக்கூறுகளைப் பிரித்து “மூலம் எது…?” என்று அறிந்துணர முடியவில்லை.

பேருண்மைகளைத் தனக்குள் உணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் நிலை கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள் காட்டிய சாஸ்திரங்கள் காலத்தால் மறைந்து போய் விட்டது.

இன்று சாங்கிய சாஸ்திரம் செய்வதும்… நைவைத்தியங்கள் செய்வதும்… யாகங்கள் வளர்ப்பதும்… ஜோதிடங்கள் பார்ப்பதும்… அதன் வழி கொண்டு இந்தச் சாங்கியங்களைச் செய்து விட்டால் “கடவுள் நம்மைக் காப்பார்” என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறோம்.

கடவுளின் அருளைப் பெறுவதற்காக யாகங்களைச் செய்வோம். கடவுளால் உருவாக்கப்பட்ட ஜோதிடங்கள் என்ற நிலையில் அதிலே சொல்லப்பட்ட சாங்கியத்தைச் செய்துவிட்டு கடவுளிடம் வரம் கேட்போம்.

1.இது போன்ற சாங்கிய சாஸ்திரத்தில் மூழ்கி…
2.நம்மையே நாம் அறிய முடியாத நிலைகளும்…
3,நமக்குள் புகுந்து தீமைகளைச் செய்யும்… வேதனைப்படச் செய்யும்… தீமையிலிருந்து நாம் விடுபடாத நிலைகளிலும்
4.எவருக்கோ பணம் கொடுத்து அவர் தான் நமக்கு நன்மை செய்வார் என்ற நிலைகளில்
5.தீங்கினையே நாம் நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர
6.நமக்குள் அறியாது புகுந்த தீவினைகளை அகற்றும் ஞானிகள் காட்டிய நெறிகளை நாம் பின்பற்றவில்லை.

காரணம்… இந்தத் தியான வழியில் வந்த அன்பர்களும் உலகை ஒத்து வரப்படும்போது மற்றவர்களுடைய தவறான செயலைக் கண்டு வேதனைப்படுகின்றனர்.

ஆனால் அவர்கள் நல்ல வழியில் திருந்தி வரவேண்டுமென்ற எண்ணங்களைச் செய்வதில்லை.
1.உண்மையை அறிந்தும்… சாமி (ஞானகுரு) சொல்லியும்
2.அவர்கள் பிழைகள் செய்கிறார்கள் என்ற வேதனையைத்தான் வளர்க்க முடிகின்றதே தவிர
3.பிழைகள் செய்வோர் அவர்கள் தவறை உணர வேண்டும்…
4.மூலக்கூறுகளை அறிந்து தெளிந்து தெளிவான நிலையில் அவர்கள் செயல்பட வேண்டும்…! என்று
5.தனக்குள் இந்த நல் எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றனரா என்றால் இல்லை.

ஆக… சாங்கிய உணர்வுகளை நாம் வளர்த்துத் கொண்ட வழியின் துணை கொண்டே பிறர் செய்யும் செயல்களைக் குறைவாக எண்ணி அந்த குறைவு என்ற நிலைகளில் “பலவீனப்படுத்தும்… வேதனைப்படும்…” நிலைகளையேதான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உபதேசித்து உணர்வின் தன்மையை உங்களுக்குள் தெளிவாகக் காட்டிக் கொண்டு வருகிறோம்.

பிறர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வேதனை என்ற நிலைகளில் நமக்குள் புகுந்து தீமையை விளைவிக்கா நிலைகள் பாதுகாக்கும் உணர்வினை உங்களுக்குள் ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று முறைப்படுத்தியும் கொடுத்துள்ளோம்.

அந்த ஆயுதத்தின் வலுக் கொண்டு பதிந்த உணர்வின் தன்மை கொண்டு நினைவு கொள்ளும் பொழுது உங்களில் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும் என்று உங்களைத் தன்னம்பிக்கை கொண்டு வளர்க்கவும் செய்கிறோம்.

இப்படிச் செய்தாலும்…
1.அவரவர்கள் வளர்த்துக் கொண்ட உணர்வின் வினையே அது வலுப் பெற்ற நிலைகள் கொண்டு
2.அது தன்னைச் சீர்படுத்தும் நிலைகள் மாறித் தியான வழியில் உள்ளோரும் இந்த நிலையில் சிக்குண்டு
3.மீளும் நிலையே இல்லாது தவிக்கும் பலர் உண்டு.

ஒரு சிலரே இதனின் உணர்வை உணர்ந்து அறிந்து செயல்படுகின்றனர். தீமைகளை அகற்றிடும் உணர்வினை வலுப்பெற்று
1.தன்னுள் தீமையை நாடா நிலையும்
2.தன்னைச் சார்ந்தோருக்குத் தீமைகள் நாடாதபடி சொல்வாக்கின் நிலைகளைப் பதிவு செய்து
3.வளர்ந்து கொண்டுள்ள தியானவழி அன்பர்களும் உண்டு.

ஆகவே இதை இப்பொழுது தெரிந்து கொண்டோம்… இனி நாம் தெரிய வேண்டியது என்ன…? என்பதைத் தெளிந்து… வாழ்க்கையை புரிந்து…
1.இருள் சூழும் நிலைகளில் இருளைப் பிளந்து
2.பொருள் காணும் உணர்வினை நமக்குள் வளர்த்து
3.என்றென்றும் மெய்ப் பொருள் கண்டுணரும் திறன் பெற்று
4.தீமைகளைப் பிளந்திடும் நிலையை நிச்சயம் நம்முள் வளர்க்க முடியும்.

நம்மை அறியாது இயக்கும் இது போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கே மீண்டும் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

power of divine souls

நம் சுவாச நிலையில் மறைந்துள்ள இரகசியங்கள் – ஈஸ்வரபட்டர்

 

நாம் ஈர்த்து வெளியிடும் சுவாசத்திற்கு “ஈர்க்கும் நிலையை ஒத்த சக்தியே…” நாம் வெளியிடும் சுவாச சக்திக்கும் உண்டு.
1.நாம் எடுக்கும் சுவாசத்தை நேராக நம் உயிரணு ஈர்க்கிறது
2.உயிராத்மா ஈர்த்த நிலையில் அச்சக்தி நம் நெற்றியில் வந்து பாய்ந்து…
3.இவ்வுடல் அனைத்திற்கும் நாம் ஈர்க்கும் சுவாசம் பரவுகிறது.

எந்த நிலையில் அந்த ஈர்த்த நிலை செயல்படுகின்றதோ அந்நிலை போன்றே நாம் வெளிப்படுத்தும் சுவாசமும் வெளிப்படுகின்றது. நாம் எடுத்து வெளிப்படுத்தும் சுவாசித்தின் நிலையினால்தான்… நம் நினைவலைகளும்… சப்த ஒலிகளும்… நாம் காணும் பிம்ப ஒலிகளும்.. நமக்குத் தெரிகின்றன.

இச்சுவாசத்தின் நிலை கொண்டேதான் அனைத்து சக்தி நிலைகளையும் நாம் செயல்படுத்துகின்றோம். இந்நிலையில் நாம் செயல்படுத்திடும் நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாச நிலை நம் உயிராத்மாவுடன் கலந்துதான் நம் உடல் நிலையும் நம்மைச் சுற்றியுள்ள ஒலி ஒளி அலைகளும் உள்ளன.

இச்சுவாச நிலை என்னும் பொக்கிஷ நிலையை நாம் உணர்ந்திட வேண்டும். எந்தெந்த நினைவலைகளுடன் நாம் இருக்கின்றோமோ அந்த நினைவலைகளுடன் நம் எண்ண நிலை உள்ள பொழுதில்… நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தில் நம்முடன் ஒலியாகவும் ஒளியாகவும் அனைத்து நிலைகளும் சுற்றிக் கொண்டுதான் உள்ளன.

நம் வாழ்க்கையில் நடந்த பழைய நினைவுகளை நாம் எண்ணிடுங்கால் “அன்று நாம் கண்ட அக்காட்சியின் பிம்பமும்… ஒலி அலைகளையும்…” நாம் கண்டு கொண்டுதான் உள்ளோம்.

நாமாக நினைவுபடுத்திக் கற்பனையாக அக்காட்சியை நம்முள் காண்பதாக எண்ணுகின்றோம். நாம் எண்ணும் நிலைப்படி அல்லாமல்… ஒலி அலைகளைப் போலவே இவ்வொளி அலைகளும் நம் உயிராத்மா தோன்றிய நாள் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையுடன் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளன.

1.நம் நினைவை ஒரு நிலைப்படுத்தி பல எண்ணங்களின் நினைவின் மோதலைத் தாக்கவிடாமல்
2.ஒரே நினைவுடன் நல்லுணர்வு கொண்ட நிலையில்
3.அவரவர்களுக்கு உகந்த அன்புருவம் கொண்ட எவற்றையும் ஒரே நிலையில் நம் எண்ண சக்தியில் செலுத்தி
4.அந்நிலையில் நாம் எடுத்திடும் சுவாசத்தின் சக்தியினால்
5.நம் உயிராத்மாவில் கலந்து வெளிப்பட்ட அனைத்து நிலைகளையும் அறிந்திடலாம்.

நாம் நம் ஆத்மாவுடன் கூடிய நிலையினைத்தான் அறிந்திடும் நிலையை இந்நிலையில் வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்நிலை போன்றே நாம் உள்ள நிலையில் நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இப்பூமியும் இப்பூமியைச் சார்ந்த அனைத்து நிலைகளையும் நம் எண்ண சக்தியையும் ஒரே நிலையில் பாய்ச்சும்போது நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் அக்காந்த நிலை கொண்ட இச்சுவாச சக்திக்கு நம் எண்ணமுடன் நாம் எண்ணிடும் இடத்திலுள்ள நிலைகளையெல்லாம் அறிந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் காந்த நிலை கொண்ட அமிலக் கற்களைப் பதிய வைத்துப் பல அலைவரிசைகளை ஓர் இடத்தில் ஒலிபரப்பப்படும் ஒலியையே இருந்த நிலையில் இவ் வானொலியின் மூலமாக அவ்வலை வரிசையிலேயே மோதவிடும் பொழுது அங்கு நடக்கும் ஒலியின் அலையையே வானொலியின் மூலமாக நாம் கேட்கின்றோம்.

இந்தக் காற்றினில் கலக்கவிட்டுத்தான் விஞ்ஞானியும் பல செயல்களைச் செய்கின்றான்.
1.இக்காற்றையே சுவாசித்து நம் உயிராத்மாவுடன் மோதவிட்டு
2.அந்நிலையிலேயே எம்மண்டலத்திற்கும் நம் எண்ண நிலையைப் பாய்ச்சி
3.நாம் அந்நிலையில் எடுத்திடும் சுவாசத்தின் அலைகள் நாம் வெளிப்படுத்திடும் நிலையில் அங்கும் பாய்ந்து
4.எங்குள்ள நிலையையும் நம் உயிராத்மாவின் சக்தியுடன் நாம் இருந்த நிலையிலேயே அறிந்திடலாம்.

இத்தியான நிலையில் ஆரம்ப பக்குவ நிலையில் ஞானம் கொண்ட நிலைக்கு வந்திட்டால்… நம் விழியை நாம் மூடி அமர்ந்துள்ள நிலையிலேயே அறிந்திட முடியும்.

பக்குவ நிலைக்குப் பதம் பெற்றுச் செல்லச் செல்ல… இவ்விழியைத் திறந்தே
2.உள்ள நிலை அனைத்தையும்… நம் எதிரிலுள்ள பிம்ப நிலைகளையும் தாண்டி
3.எங்குள்ள நிலையையும் நாம் அறிந்திட முடியும்

ஞானமும் சித்தும் இவ்வாத்மீக நெறியிலுள்ள எந்த நிலைக்குகந்த சக்தி நிலை பெறவும் இவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி… “சிறுகச் சிறுகத்தான் பெருகச் செய்து… வழி நடந்திடல் முடிந்திடும்…”

preachings of Eswarapattar

உலக மாற்றத்தின் ஓட்டத்தில்… “நடப்பது நடக்கட்டும் அனைவருக்கும் ஆவதே நமக்கும்… என்று எண்ணிடலாகாது…! – ஈஸ்வரபட்டர்

 

பல காலங்கள் வெளியிடாமல் இருந்திட்ட சக்தியின் உண்மை நிலையை இங்கு போதனைக்கு அளித்திட்ட நிலைக்குக் காரணம்
1.இப்பொழுது மாறப் போகும் கலியில்…
2.இன்றுள்ள இக்கலியில் வாழ்ந்திடும் அறிவாற்றல் கொண்ட மனித ஆத்மாக்களின் நிலையை
3.இம்மனிதரின் நிலைக்கு உணர்த்தவே இப்போதனை நிலை.

இன்றைய மனிதரின் வாழ்க்கை முறையும் எண்ணக் கலவையும் இன்று வாழ்ந்திடும் மனிதனால் ஏற்பட்டதல்ல. கல்கியில் தோன்றிட்ட கால நிலை தொட்டே வருவது தான்.

மனிதருடன் எண்ண நிலை சப்த அலையாக எப்படிச் சுற்றிக் கொண்டு உள்ளதோ… அந்த நிலையின் தொடர்ச்சியுடன் ஒவ்வொரு உயிராத்மாக்களின் எண்ணத்துடன் கூடிய சப்த அலைகளும் இப்பூமியில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்… “இப்பூமிக்கே உகந்த சப்த அலை ஒன்று உண்டு…” என்று உணர்த்தினேன்.

ஓங்கார இசையுடன் ஓ…ம்… என்ற பிரணவ நாதத்தில் உருளுகின்ற இவ்வுலகினில் உயிராத்மாக்களின் சப்த அலையின் தொடர்ச்சியில் இவ்வுலகிற்கு எண்ண நிலையும் உண்டு. இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் சப்த அலையுண்டு.

சுவாசம் எடுத்திடும் நிலையிலேயே சப்த அலையுண்டு. ஒலி நிலை இல்லாமல் இவ் உலகமே இல்லை என்று உணர்த்தினேன்.
1.இயற்கையில் அமைத்திட்ட உன்னத ஒலிதனில்
2.இன்றைய செயற்கையும் கலந்து செயல்படும் நிலையில்
3.இப்பூமியே மிகவும் தத்தளித்த நிலையில் உள்ளது.

இப்பூமியில் அறிவாற்றல் கொண்டு வாழ்ந்திடும் மனிதர்கள் தன் சக்தியை உணர்ந்து செயல்படாமல் வாழ்ந்ததின் வினையினால் இவ்வினையின் செயல் இவ்வுலகுக்கு மட்டுமல்ல… “இவ்வுலகைச் சார்ந்த அனைத்து மண்டலங்களுக்கும் மாறு கொள்ளும் நிலை…” மிகவும் குறுகிய கால நிலையில் உள்ளன.

பயந்த நிலையில் எண்ணத்தைச் செயல் கொண்டு பேராசைக்கு அடிமைப்பட்டிடாமல் ஆத்மீக நெறியறிந்து ஒவ்வோர் உயிராத்மாக்களும் செயல்பட வேண்டும்.

1.மனித ஆத்மாக்களிடமிருந்து மட்டுமல்ல
2.நினைவாற்றல் உடைய மற்ற ஜெந்துக்களிலும் வெறியுணர்வு பேராசை நிலை இவற்றிலிருந்து விடுபட்டால்தான்
3.மாறப் போகும் இக்கலியிலாவது நாம் மீட்சி கொண்டிட முடியும்.

அடுத்து வரப்போகும் கல்கியில் இன்று இப்பூமியில் அவதார புருஷர்களாக அவதரித்தவரின் எண்ண நிலை கொண்ட பிறப்பு நிலையின் தொடரினால் “நல் நிலையில் அவதரிக்கலாம்…!”

இவ்வுலக நிலையே மாறப் போகின்றது என்றால்…
1.நம் உடல்களும் அனைத்து ஜீவராசிகளும்தான் இயற்கை எய்தப் போகின்றனவே
2.அடுத்த நிலைக்காக ஏன் நம்மை இப்பொழுது செயல் கொண்டிட வேண்டும்…?
3.நடப்பது நடக்கட்டும்… அனைவருக்கும் ஆனது நமக்கும்…! என்று எண்ணிடலாம்.

இயற்கையின் நியதியும் இயற்கையின் சீற்றமும் இயற்கையின் சக்தியுடனே தான் செயல்படுகின்றன.

இந்த இயற்கையில் தோன்றிய உயிரணுக்களிலிருந்து அந்நிலையின் தொடரினால் சக்தி கொண்ட உயிராத்மாக்களாகி… செயலாற்றும் திறமையுடைய “அதிக சக்தி நிலை கொண்ட இம் மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் மண்டலங்கள் சில தான்…”

இவ்வுன்னத பூமித் தாயின் குழந்தைகளாய் இப்பூமியின் சுவாசமுடன் கலந்துள்ள உயிராத்மாக்களான நாம்… நம் ஆத்மாவும்… நம் எண்ணமும்… நம் சப்த அலைகளும்.. என்றுமே அழிவதில்லை என்பதின் உண்மையினை உணர்ந்து… மாறப் போகும் இக்கலியில் நம் ஆத்மாவை உன்னத பொக்கிஷமாக நாம் உணர்ந்து…
1.பல தீய சக்திகளுக்கு நம்மை அர்ப்பணித்திடாமல்
2.நம்முடன் தொடர்பு கொண்டவரின் நிலைக்கும் நம்மிடமுள்ள தீய சக்தி பாய்ந்திடாமல்
3.நல்லுணர்வுகளையே அவர்களுடனும் கலக்கவிட்டு
4.அவர்களின் நற்சொற்களையே நம் ஆத்மாவிற்கும் சுழலச் செய்து
5.உலக சக்தியையே இவ்வியற்கையின் மாற்றத்தில் வரப்போகும் கல்கியின் சுழற்சியில்
6.நல் நிலையாக்கிடத்தான் இப்போதனை நிலையெல்லாம்.

மனிதர்களின் இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை இன்று அவர்களால் ஏற்படுத்திய நிலை மட்டுமல்ல…! கல்கியிலிருந்து கலிவரை வந்த நிலை. இவ்வுலகுடன் கலந்துள்ள சப்த ஒலிகளில் ஈர்த்து எண்ணமுடன் கலந்திட்ட நிலை. இந்நிலையிலிருந்து மீளும் நிலையைத்தான் நாம் அறிந்திடல் வேண்டும்.

“உயிராத்மாக்களின் பொக்கிஷ சக்தி நிலையை… ஆத்மீக நெறிதனில் அழைத்திடவே…” இப்போதனை நிலையெல்லாம் ஈஸ்வரபட்டனாகிய யான் கொடுக்கின்றேன்.

desire for spirituality

இந்த மனித வாழ்க்கையில் நம் வளர்க்க வேண்டிய பேராசை எது…?

 

யாம் (ஞானகுரு) உங்களிடம் பதிவு செய்யும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூர்ந்து கவனிக்கும்போது கண் (ஆண்டனா) மூலம் தான் உங்கள் உடலுக்குள் அதைப் பதிவாக்குகின்றது.

இப்பொழுது மீண்டும் அந்த எண்ணத்தை எண்ணி வரப்படும்போது அந்தக் காற்றில் எது இருக்கின்றதோ அதை இழுத்து நமது கண் நம் ஆன்மாவாக்கி சுவாசித்து நமது உயிரிலே மோதச் செய்கிறது.

இந்த உணர்வை ஏங்கிப் பெறும் போது நமது கண் ஆண்டன்னா… ஏரியல்… மூலம் வெளியிலிருந்து அந்தத் துருவ நட்சத்திர அலைகளை எடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறக்கூடிய அந்த சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று இந்த ஆசை தொடர்ந்து நமக்கு இருக்க வேண்டும்

ஆசைப்பட்டு நாம் நுகரும் இந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி நம் உடலில் இந்தச் சத்தைச் சேர்க்கின்றது. ஒவ்வொரு உடலிலும் உள்ள அணுக்கள் அதைப் பெறுவதற்குத் தனித்து வந்து இதை இயக்கச் செய்வது தான் இந்த வழி.

ஏனென்றால் இந்த விஷத் தன்மையான உலகில் நீங்கள் சீக்கிரம் இதை பெற்றுக் கொண்டீர்கள் என்றால்
1.உங்கள் உடல் நன்றாக இருக்கும்
2.உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும்
3.உங்கள் ஊரும் நன்றாக இருக்கும்
4.உலகமும் நலம் பெறக்கூடிய சக்தி பெற முடியும்.

ஏனென்றால் உலகமே நம் உடலுக்குள் அடங்கி இருக்கின்றது… யாரும் பிரிந்து இல்லை.

இந்த உலக இயல்பு நாம் கேட்டறிந்த உணர்வு பதிவாகி மீண்டும் நமக்குள் இயக்கிக் கொண்டிருப்பதனால் இதை மாற்றுவதற்குத்தான் என் குருநாதர் எப்படி எமக்குச் செய்தாரோ அதே மாதிரி உங்களுக்குச் செய்கின்றேன்.

ஆனால் இந்த வாழ்க்கையில் நம் ஆசையை எங்கேயோ வைத்துக் கொண்டு…
1.தொழில் இப்படி இருக்க வேண்டும்
2.நான் இப்படி எல்லாம் இருக்க வேண்டும்…
3.நான் பெயரும் புகழும் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தில்
3.இந்த ஆசை கொண்டு அந்த ஒன்றிலே போகும் போது சிந்திக்கும் ஆற்றலை இழந்து விடுவோம்.

எதன் மேல் ஆசைப்படுகின்றோமோ அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! நம்மை மாற்றிக் கொண்டே போகும்… கடைசியில் படும் பாதாளத்தில் கொண்டு செல்லும்.

ஆனால் நம் ஆசை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் போனால் அங்கே இணைந்து… வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி ஒளி என்ற உணர்வாக நம்மை மாற்றுகின்றது.

அந்த நிலை பெறச் செய்வதற்காகத்தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் சொல்லி இதை நினைவுபடுத்துகின்றேன்.

நம் அன்னை தந்தையர் தான் இந்த உடலை உருவாக்கியது… நமக்கு நல்ல வழிகளை உணர்த்தியதும் அவர்கள் தான். அது குருவாகவே இருக்கின்றது. குரு எனக்கு இந்த வழியில் தான் காட்டினார்

ஆகவே ஒவ்வொரு முறை தியானிக்கும் போதும் முதலில் அம்மா அப்பாவை மனதில் எண்ணி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

இந்த மனித உடலுக்குப் பின் இருளை நீக்கி அந்த ஒளி பெறும் உணர்வைப் பெறுவதற்கு… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்ன உணர்வை
1.அவர் சொன்னபடி பின்பற்றினேன்
2.அவர் நுகரச் சொன்னதை நுகர்ந்தேன்
3.அந்த உணர்வு என் உடலில் என்ன செய்கிறது என்று அறிந்தேன்.
4.அதைப் போல் நுகர்ந்த உணர்வுகள் என்ன செய்யும்…? என்பதை உங்களுக்கும் உணர்த்துகின்றேன்
5.இதை உணர்ந்தால் உங்கள் தீமைகளை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.

ஒரு பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை எப்படி எடுத்ததோ இந்தச் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து அந்த அருள் ஞானியின் உணர்வைச் சுவாசித்து அந்த ஒளி மயமான நிலைகள் பெற முடியும்.

கணவன் மனைவியும் இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றித் தெய்வீகப் பண்பும் தெய்வீக அன்பும் தெய்வீக சக்தியும் பெற வேண்டும் சொல்லிலே வைரத்தைப் போல் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும்.

தங்கம் எப்படி மங்குவதில்லையோ அதைப் போல எதைப் பார்த்தாலும் நம் மனது மங்காத நிலைகள் நாம் கொண்டு வரவேண்டும். மலர் எப்படி நல்ல நறுமணங்கள் கொடுக்கின்றதோ அதைப் போல் உங்கள் சொல் மற்றவர்களுக்கு நல்ல மணங்களாக மாற்றும் அந்தச் சக்தி கொண்டுவர வேண்டும்.

அந்தச் சக்தியை ஒவ்வொருவரும் பெறுவதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைச் செய்கின்றோம்.
1.நீங்கள் இதை பெற வேண்டுமென்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறோம்.
2.அதே போல் எல்லோருக்கும் இந்தச் சக்தி பெறவேண்டும் என்கிற பொழுது இது பேராசையாக மாறுகின்றது.

நானும் பெறவேண்டும்.. நீங்களும் பெற வேண்டும் என்கிற போது நான் பெறக்கூடிய ஆசை நீங்களும் பெற வேண்டும் என்ற நிலையில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் இந்தப் பேராசை நம்முள் வளரும்.

ஆனால் உங்களுக்கு நான் சொல்லிக் கொடுத்து விட்டுத் தவறான வழியில் ஏமாற்றினால் அது பேயாசைதான்.

அதே போல் சாமி (ஞானகுரு) இப்படியெல்லாம் சொல்கின்றார்…! என்று என் பெயரைச் சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தினால் அது பேயாசை தான்…! அவர்களையும் கெடுத்து… நீங்களும் கெட்டு.. மற்றவர்களையும் பெறக் கூடியதைத் தடுக்கும் நிலை வந்துவிடும்.

1.ஏனென்றால் ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு விதமான தீமைகள் உண்டு
2.அந்தத் தீமைக்குச் சிறிது இடம் கொடுத்தால் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிடும்
3.நாம் பெறக்கூடிய நல்ல பாதையைத் திசை திருப்பி வேறொரு வழிக்கு நம்மை அழைத்துச் செல்லும்
4.முதலில் தெரியாது…. சிக்கலான பிற்பாடு… வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுதுதான் உணர முடியும்.
5.அது போன்ற நிலையிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக வேண்டித் தான் மீண்டும் மீண்டும் இதை எச்சரிக்கை செய்கின்றோம்.

உங்களைக் கட்டுப்பாட்டுடன் கொண்டு வரவில்லை நீங்கள் தெளிவாகுவதற்குத்தான் இதைக் கொண்டு வருகின்றோம்.

அதை நீங்கள் நல்ல வழிக்கு பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கிப் பிறவியில்லா நிலை அடையலாம்.

remote power of sixth sense

நம் ஆறாவது அறிவு தீமைகளைத் தடுக்கும் சேனாதிபதி…!

நம்முடைய ஆறாவது அறிவைக் கார்த்திகேயா… சேனாதிபதி என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள். நம் வாழ்க்கையில் ஒரு கஷ்டம் என்று தெரிகின்றது. அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…” அந்தத் தீமை நமக்குள் இயக்காதபடி தடுக்க வேண்டும்.

அதற்காகத் தன் படைக்கலத்தை எப்படிப் பாதுகாப்பது…? என்ற நிலையில்… சேனாதிபதி எல்லாக் கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.. இல்லையா…?

ஆகவே அந்தத் தீமைகளை நீக்கிடும் சக்தியைப் பெறுவதற்குண்டான முறைகளைத் தான் இங்கே உங்களுக்குப் பழகிக் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லிப் புருவ மத்தியில் எண்ணி இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

ஏனென்றால் தப்பு யாரும் செய்யவில்லை. நாம் நினைக்கின்றோம் நாம் தான் தப்பு செய்கின்றோம்… தப்பு செய்கின்றோம்… என்று..! நாம் அல்ல…!

1.நெருப்பிலே ஒரு பொருள் போட்டால் எப்படி அதனின் வாசனை வருகின்றதோ
2.இதே மாதிரித் தான் நம் உயிரிலே படும் உணர்வுக்குத்தக்க நாம் அடிமையாகின்றோம்.

இந்த ஆறாவது அறிவு நம் உடலில் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நஞ்சினைப் பிரித்து மலமாக விடுகின்றது. நல்ல உணர்வின் சக்திகளை நம் உடலாக்குகின்றது.

ஆக… நஞ்சின் தன்மையைப் பிரிக்கக்கூடிய சக்தி தான் ஆறாவது அறிவு.
1.அந்த ஆறாவது அறிவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம் உயிரிலே மோதச் செய்ய வேண்டும்.
2.அப்பொழுது கெட்டது நமக்குள் போகாதபடி மறைப்பு வந்து விடுகின்றது… சேனாதிபதி…!
3.படைகலன்களான உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி கிடைக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களெல்லாம் அதைப் பெறும் அந்தச் சக்தியை நாம் கொடுக்கின்றோம்.

உடனே இது நமக்குள் வலுவாகின்றது. உள்ளுக்குள் போன பின் என்ன செய்கிறது..?
1.துணியில் ஒரு சோப்பைப் போட்டால் உள்ளுக்குள் அந்த நுரை ஏறி
2.அதில் உள்ள அழுக்கைத் தள்ளிவிடுவது போல் நம் தீமைகளை அகற்றிவிடுகின்றது.

ஆனால் நாம் இப்பொழுது அடிக்கடி குடும்பத்தை எண்ணியோ பையனை எண்ணியோ தொழிலை எண்ணியோ கவலைப்படுவது… சஞ்சலப்படுவது… அல்லது ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்திற்குப் போகச் சொல்வது… இதெல்லாம் அதனுடைய இஷ்டத்திற்குத் தான் நாம் செல்கின்றோம்.

அதை மாற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று சொல்லி உள்ளுக்குள் “கட்டளை இட வேண்டும்… தீமைகள் விலகிப் போகும்…!”

பையனுக்கு நல்ல ஞானமும் புத்தியும் பெற வேண்டும். என் குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என் தொழில் சீராக இருக்க வேண்டும் என்று பதிவு (ரெக்கார்ட்) செய்து கொள்ளுங்கள். உங்கள் சிந்தனை நல்ல முறையில் வரும்.

அதே போல் உடலில் நோய் வந்தால் அந்த நோய்க்குத் தான் எண்ணத்தைச் செலுத்துகின்றோமே தவிர நோயை நீக்க எண்ணம் கொடுப்பதில்லை.

அப்பொழுது அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எங்கே வலிக்கின்றதோ… இடுப்பு வலியோ அல்லது முதுகுத் தண்டிலோ அல்லது மற்ற எந்த இடமாக இருந்தாலும் அங்கே நம் கண்ணால் இந்த வலிமையான சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

ஏனென்றால் “வலிக்கிறது…” என்று எண்ணினாலும் நம் கண்ணின் நினைவு அங்கே தான் செல்கிறது. அதே கண்ணின் நினைவு கொண்டு வலிக்கும் இடத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எந்த இடத்தில் வலி வருகிறதோ அந்த இடத்தில் நினைவினைச் செலுத்தி வலியை உங்களால் குறைக்க முடியும். அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

இந்த மாதிரி இருந்து எண்ணிப் பழகி விட்டோமென்றால் மனத் தூய்மை கிடக்கும்… மன வலிமை கிடைக்கும் சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும். தீமையை அகற்றும் வலிமை நிச்சயம் கிடைக்கும்.

1.ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது
2.அதனாலே நீங்கள் ஒவ்வொருவரும் இந்தப் பழக்கத்திற்கு வந்துவிடுங்கள்.

இப்பொழுது சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…?

Maharishikaludan Pesungal - gnana

உலக நிலை மாறு கொள்ளப் போகின்றது – ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகினில் தோன்றிய உயிர் அணுக்களுக்கும்… உயிரணுவாய் ஜீவ ஆத்மா கொண்ட உடல் பிம்பம் கொண்ட அனைத்திற்கும்… எப்படி மறு ஜென்மம் ஒன்றுள்ளதோ அந்த நிலை போன்றே
1.இவ்வுலகிற்கும் இவ்வுலகைப் போன்ற வளர்ச்சி நிலை பெற்ற ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஜென்ம நிலை உள்ளது.
2.ஜீவன் கொண்டு தனி ஒரு சக்தி நிலை பெற்ற பெரிய மண்டலங்கள் அனைத்திற்குமே ஜென்ம நிலையுண்டு.

இவ்வுலகம் மாறு கொண்ட நிலையில் கல்கியில் தோன்றிய நாளில் உதித்திட்ட உயிரணுக்களின் செயல் சக்தியினை விளக்கியுள்ளோம்.

கல்கியில் தோன்றிய உயிரணுக்கள்… அன்றிருந்த நிலை ஜீவன் கொண்டு பிம்பக் கூடுகள் பெறும் நிலையில் அதிகச் சதை நிலை கொண்ட எலும்புகளின் வளர்ச்சி நிலையில்லா நிலையில்தான் பிம்ப உருவங்கள் இருந்தன.

கல்கியில் இருந்து தொடர்ந்த நிலை கொண்ட… மாறி மாறி வந்திட்ட ஜென்மத் தொடரில் ஈர்த்த சக்தி நிலைதான் இன்றுள்ள மனிதர்களும்… மற்ற இன வர்க்கங்களின் வளர்ச்சி நிலையும். இந்நிலை போன்றே இவ்வுலக நிலையும்.

1.அதிசக்தி நிறைந்த வளர்ச்சியில் வந்த நிலைதனை
2.இன்றைய வளர்ச்சி கொண்ட இக்கலியின் “செயற்கையின் நிலையினால்”
3.இப்பூமியின் சக்தியையே சிதறும் நிலைப்படுத்தி விட்டார்கள்.

ஆனால் நம் பூமியின் தொடர்பு நிலை கொண்ட இச் சூரியனைச் சுற்றியுள்ள மற்ற மண்டலங்களில்… நம்மை ஒத்த மனித பிம்பங்களும் இச்செயற்கையின் நிலையும் அந்நிலையில் இல்லாததினால் அம் மண்டலங்களின் சக்தி நம் பூமியையும் விட மென்மேலும் வளரும் நிலையில் அதிக சக்தி கொண்டதாக உள்ளது.

நம் பூமியும் வளர்ந்து கொண்டு தான் உள்ளது “பலன் இல்லாத நிலையில்…!”

அறிவு வளர்ச்சி கொண்ட… செயலாற்றும் திறமையும் அதற்குகந்த அங்கங்களும் பெற்ற… பிறவியிலேயே உன்னதப் பிறவி பெற்ற இம்மனிதனால் “தன் சக்தியை உணர்ந்திடாமல் வந்ததின் வினைதான்… இன்றுள்ள நம் பூமியின் நிலை…!”

தனக்குகந்த அறிவின் செல்வத்தைப் பேராசைக்கு அடிமை கொண்டு வாழ்வதின் நிலை இன்றைய மனிதனின் நிலையும் இம் மனிதனை வளர்க்கும் பூமிக்கும் உள்ளது.

இன்றைய பாட நிலையிலிருந்து ஜென்ம நிலையை உணர்த்தியதின் நிலை புரிந்ததா…?

இப்பூமியின் பொக்கிஷத்தைத்தான் இக்கலியின் மனிதனின் பேராசைக்காக எடுத்து விட்டீர்கள். இவ்வுலகனைத்தும் உள்ள எண்ண நிலையே இப்பேராசைப் பிடியில் சிக்குண்டு தவித்த நிலையில் உள்ள பொழுது…
1.இந்நிலையில் இருந்து விடுபடும் எண்ணத்தை
2.இவ் உலகனைத்திற்கும் போதிக்கும் சக்தி நிலை இவ் உலகைக் காக்கும் சக்திக்கே இல்லை.
3.உலக நிலை மாறு கொள்ளப் போகின்றது.

அழிவு என்னும் நிலையே எதற்கும் இல்லை. எதுவுமே அழிவதில்லை…! மாறு கொண்ட நிலைதான் ஏற்பட்டிடும். மாறு கொண்ட நிலையில் இவ் உடல் என்னும் கூட்டிலிருந்தும் அனைத்து ஜீவராசிகளும் மாறு கொள்ளத்தான் போகின்றன.

எவ்வாத்மாவும் அழிந்திடாது. இவ்வுலகம் மாறு கொண்டு சுழலும் நிலையில் இவ் உடல் கூட்டை விட்டு வெளிப்படும் உயிராத்மாக்களின் நிலைக்காகவே இந்நிலையில் அளித்திடும் பாட நிலைகள் எல்லாம்…!

இப்பூமியில் வாழ்ந்திடும் இன வர்க்கங்களைப் போன்ற நிலை மற்ற மண்டலங்களில் மாறு கொள்கின்றது. இவ்வுலக நிலை மாறுபட்டு உயிராத்மாக்கள் இப்பால் வெளி மண்டலத்தில் உள்ள நிலையில் இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் இருந்த நிலை கொண்டு மற்ற மண்டலங்களின் நிலைக்குச் சென்று உடல் பெறலாம்.

அந்த நிலைக்காகத்தான் இப்போதனை நிலையும்… இப்பாட நிலையும்…!

இவ்வுலக நிலை மாறு கொள்ளும் நிலை நெருங்குவதினால் இந்த நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் ஆத்மீக நெறிக்கு வந்து அந்நிலையின் மூலமாக மீட்சி பெறுங்கள்…!

Powers of Human

மனித ஆத்மாவின் தெய்வீக சக்தியை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் மனித உடலுக்குத்தான் பல நிலை கொண்ட அமில சக்தியும் காந்த சக்தியும் கலந்த நிலை நிறைந்துள்ளது. இவ்வுடலுடன் பல அணுக்களின் நிலையும் ஏறி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலையும் குண நிலையும் உண்டு.

நம் ஆத்மாவை நாம் செயல்படுத்திடும் நிலை கொண்டு
1.எந்த நிலைக்குகந்த எண்ண சக்தியை ஈர்க்கின்றோமோ
2.அந்த நிலைக்குகந்த சக்தியுடன் கூடிய நிலைகளை எல்லாம் இவ்வாத்மாவுடன் ஒன்றச் செய்திடலாம்.

இன்றைய செயற்கையில் விஞ்ஞான நிலைப்படுத்தி இரசாயன முறையில் பல செயல்களைச் செய்கின்றனர்.
1.ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவும் ஒன்றுடன் ஒன்றைச் சேர்க்கவும்
2.பல நிலைகளை இன்றைய விஞ்ஞானத்திலும் செயலாக்குகின்றனர்.

விஞ்ஞான சக்திக்கும்… மெய் ஞான சக்திக்கும்… அனைத்திற்குமே… இக்காற்றிலிருந்து நமக்குக் கிடைத்திடும் சூரியன் அளித்திட்ட அமில சக்தி கொண்டுதான் இவ்வுலக சக்திகள் செயல்படுகின்றது.

அதன் மூலம் நம் ஆத்மாவின் துணையினாலே..
1.நம்முள்ளே அனைத்து சக்தியையும் ஈர்த்துச் செயல் கொண்டிடும் “உன்னத தெய்வீக அருள் கொண்ட நாம்…”
2.இன்றைய கலியில் மிகவும் ஈன நிலையில் அடிமை கொண்ட பேராசையில்
3.இக்குறைந்த வாழ் நாட்களை விரயம் செய்தே வாழ்கின்றோம்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இன்றைய விஞ்ஞானத்தில் கண்டிட்ட சக்தியின் நிலைக்கு மேலே “இவ்வாத்மாவின் சக்தியை ஈர்த்தே…” பல நிலைகளை ஒவ்வொருவரும் செயலாக்கிட முடியும்.

பண்டைய காலம் தொட்டே பல ரிஷி நிலை கொண்ட தேவர்கள் எல்லோரும் அவர்கள் இப்பூமியில் வாழ்க்கையுடன் வாழ்ந்திட்ட நாட்களில்… அவர்களால் உணர்த்தப்பட்ட… பதிவு செய்வித்த அனைத்து உண்மை நிலைகளையுமே… இன்றுள்ள இக்கலியின் எண்ணத்திற்கு செயல்படுத்திட முடியாத வண்ணம் பல நிலைகள் மறைக்கப்பட்டன.

நம் எண்ண நிலையை ஒரு நிலை கொண்டிட்டால் அவர்களின் துணையுடனே பல நிலைகளை நாம் இன்று பெறலாம்.

தாவரங்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு தாவரமும் ஒரே நிலை கொண்ட சக்தியைத்தான் (அமிலம்) ஈர்த்து வளர்கின்றது. சில வகைத் தாவரங்களின் நிலையுடன் சில அமிலங்களைக் கலக்கும் போது இப்பூமியில் இருந்து நாம் எடுத்திடும் கனி வளங்களைப் போன்ற பல வகை உலோகங்களை நாம் செய்திடலாம்.

தங்கம் தாமிரம் ஈயம் செம்பு இப்படிப் பல நிலைகள் நாமே செய்திடலாம். செய்து என்ன பயன்…? இப்பேராசையை வளர்க்கும் நிலைதான் ஏற்படும்.

தாவரங்களைப் போன்றே சில ஊரும் நிலை கொண்ட அட்டை என்னும் இன வர்க்கத்தை உடைய புழுவும் இன்னும் சில புழுக்களும் ஒரே அமில சக்தியை ஈர்க்கும் நிலையுடையதாக உள்ளன.

அந்த அட்டைப் புழுவின் நிலையெல்லாம் தாமிர சக்தியை ஈர்த்து வளர்ந்த நிலை. இவ்வுலகினில் இப்படிப் பல நிலைகள் உள்ளன. எத்தகைய விஷத்தையும் எடுத்திடும் தாவர வர்க்கங்கள் பல உள்ளன.

அனைத்து நிலைகளுக்கும் குறிப்பு நிலைகள் நம் சித்தர்களால் பதியச் செய்து மறைக்கப்பட்டுள்ளன.

அது எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற சாதாரண நிலையில் அந்த எண்ணத்தின் நிலைக்கு நாம் அடிமைப்பட்டிடலாகாது என்பதற்காக… “பல நிலைகளை மறைத்தே வெளிப்படுத்துகின்றோம்…!”

இருந்தாலும் சக்தியின் நிலையில்…
1.இம் மனித ஆத்மாவின் தெய்வீக சக்தியை உணர்த்திடவே
2.சில குறிப்புகளை இங்கே வெளிப்படுத்தினோம்.

pranav

சூரியகலை சந்திரகலை – பிராணாயாமம்

 

இந்த வாழ்க்கையில் எப்படித்தான் இருந்தாலும் எதாவது குறைபாடுகள் வரும். எவ்வளவு நல்லது செய்தாலும் கூட இந்த நிலை வரும்.

நம்மைச் சங்கடத்திலோ சலிப்பிலோ வெறுப்பிலோ ஆழ்த்தக்கூடிய நிலைகள் நமக்கு வந்தால்…
1.அந்த உணர்வுகள் எல்லாம் மூக்கின் வழியாகச் சென்று
2.புருவ மத்தியில் உயிரிலே பட்டுத்தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
3.ஆண்டென்னாவான (ANTENNA) நமது கண் தான் அதை எடுக்கின்றது.
4.அதன் அழி ஆன்மாவிலிருந்து சுவாசித்துக் கொண்டே இருக்கும்
5.அந்தக் கெட்ட அணுக்கள் தான் வளரும்… சிந்திக்கும் தன்மை போய்விடும்.

அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…” என்று சொல்லி ஒரு பிரேக்…!

நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒட்டி ஈஸ்வரா…! என்று எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். அப்பொழுது அந்தச் சங்கட அலை மூக்கின் வழி உள்ளே போவதை இங்கே தடுக்கின்றது.

நெருப்பிலே ஒரு பொருள் பட்டால் தான் அந்த வாசனை தெரியும். அதே மாதிரி உயிரிலே பட்டால் தான் இயங்கும். ஆகவே
1.தீமை செய்யும் உணர்வுகள் உயிரிலே படாமல் அதை முதலில் தடுத்துப் பழக வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இதன் வழி (புருவ மத்தி) உள்ளுக்குள் இழுக்க வேண்டும்.
3.இது தான் பிராணயாமம் என்பது.

பிராணயாமம் என்றால் மூச்சை ஒரு பக்கமாக இழுத்து இன்னொரு பக்கமாக விடுவதில்லை. மூக்கு வழி போவதை நிறுத்தி… புருவ மத்தி வழி உள்ளே கொண்டு செல்ல வேண்டும். இது தான் சூரியகலை என்பது.

சந்திரகலை என்பது சாதாரணமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. நாம் வழக்கமாக எடுக்கும் சுவாசம் தான் அது.

ஆனால் உயிர் வழி எடுக்கும் போது சூரியகலை.

சூரியன் இழுத்துத் தான் எல்லாவற்றிற்கும் ஒளி அலைகளை அனுப்புகின்றது. அதாவது காற்றில் வரக்கூடிய அலைகளை அது எது எது வருகிறதோ… அதை எல்லாம் எடுத்து அந்தந்த அலைகளாக இயக்கச் செய்கின்றது

சூரியகலை என்கிறபோது நாம் என்ன செய்கின்றோம்…?

நம் ஆறாவது அறிவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று சொல்லி “உயிர் வழி…” உள்ளுக்குள் நேரடியாகக் கொண்டு போகிறோம்.

அதே சமயத்தில் நம் ஆன்மாவில் இருப்பது சுவாசத்தின் மூலம் உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றோம்.

1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்தோமோ அந்த உணர்வுகளை
2.உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இணைத்து இயக்குவதுதான் பிராணயாமம்.
3.நல்ல அணுக்களை நமக்குள் உயர்த்த வேண்டும்… அதனால் தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா என்பது…!

ஆனால் இவர்கள் பிராணயாமத்தை எத்தனையோ அர்த்தங்களில் கொண்டு போகின்றார்கள்.