விக்கல்

விக்கல்

 

நம்முடைய நண்பர்கள் பலராக நாம் இருப்பினும் அமெரிக்காவில் ஒருவர் இருக்கிறார் என்றால் நம் நட்பின் தன்மை அவர் உடலிலே பதிவாகி இருக்கும்.

அப்படிப் பதிவாகி இருந்தால் அந்த நண்பன் நமக்குத் தக்க நேரத்தில் உதவி செய்தான் என்று நாம் எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் அங்கே மோதி விக்கல் ஆகின்றது.

அப்பொழுது அவர் நினைப்பார்… யாரோ என்னை நினைக்கிறார் என்று. இப்படி நட்பினால் விக்கல் ஏற்படுவது ஒன்று.

அதே சமயத்தில் தன் ஆசைகளால் ஏற்பட்ட உணர்வின் அணுக்களின் தன்மை அது அதிகமாகி விட்டால் இந்த நினைவின் தன்மை அந்த அணுக்கள் மோதும் பொழுது ஈர்க்கும் சக்தி அதற்கு அதிகமாகும்.

அப்பொழுது சிலருக்கு அது விக்கலாக அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அதை நிறுத்துவதற்காக வைத்தியத்திற்குச் செல்வார்கள்.

நண்பன் என்று வரும் பொழுது இவரின் நினைவின் ஆற்றல் அங்கே விக்கலாகின்றது. ஆனால்
1.ஆசையின் உணர்வுகள் அதைப் பெற வேண்டும் இதைப் பெற வேண்டும் என்று இப்படி அதிகரித்து விட்டால்
2.இடைமறித்து அந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் இந்த உணர்வுகள் இரண்டும் மோதும் பொழுது
3.ஒன்று இதனுடைய ஆசைக்கு இழுப்பதும் மற்றொன்று அதனுடைய ஆசைக்கு இழுப்பதும் இத்தகைய நிலை வரும்பொழுது
4.அந்த ஏக்க நிலைகளில் இரண்டும் அதனுடைய உணர்வுகள் எதிர்மறையாகி இழுக்கப்படும் பொழுது விக்கல் அதிகமாகும்.

அப்போது அதை நீக்க மருத்துவரைத் தான் தேடிச் செல்வார்கள். இந்த விக்கல் வேறு… நட்பினால் ஏற்படும் விக்கல் வேறு.

இயற்கையின் இயக்க நிலைகள் எவ்வாறு இருக்கிறது…? என்றும் நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் எவ்வாறு இயக்குகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

ஒலி அதிர்வு – எக்கோ – உணர்வு – ஞானம் – இயக்கம்

ஒலி அதிர்வு – எக்கோ – உணர்வு – ஞானம் – இயக்கம்

 

மான் புலியிடமிருந்து தப்பிக்க வலுவான எண்ணங்களை எடுக்கின்றது. மானின் கண்ணோ புலியிடமிருந்து தப்பிக்கும் உபாயத்தின் உணர்வை ஊட்டுகின்றது.

அதனுடைய வலு பெற்ற பின் மானின் தசைகள் புலிக்கு இரையானாலும் புலியின் வலுவான உணர்வைத் தன் உடலுக்குள் கவர்ந்து புலியின் உணர்வை இரையாக்கி இந்த உடலை விட்டுச் சென்ற பின் அதனின் வலுவின் துணை கொண்டு புலியின் உடலுக்குள் சென்று புலியாக உருப் பெறுகின்றது.

வீட்டில் நாம் எலியை[ பார்க்கின்றோம்.. பூனை தன் குரலை எழுப்புகின்றது ஒலியை எழுப்பிய பின் இந்த உணர்வின் நிலைகள் அஞ்சி கடா…புடா… என்று என்று ஓடுகின்றது.

பூனை வருகிறது என்ற எதிரொலியைக் கண்டபின்… அதாவது ஒரு சப்தத்தை இட்டபின் எலிகள் களைந்து ஓடுகிறது.

பூனை அதைப் பார்த்தபின் எலிகள் எந்தத் திசையில் ஓடுகிறது…? என்பதைப் பார்த்த பின் காதுகளை விட்டு மடித்து அதைக் கூர்ந்து கேட்கின்றது.

உதாரணமாக… உங்கள் காதுகளைக் கையை வைத்து மடக்கி மறைத்துக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் பேசினால் அது மைக்கில் பேசுவது போன்று அந்த எக்கோ சப்தம் வரும்… உங்கள் நினைவாற்றல் நீங்கள் பேசினால் அவ்வாறு வரும்.

நீங்கள் ஏதாவது இப்படி பேசிப் பார்த்தீர்கள் என்றால் காதை இப்படி மறைத்துக் கொண்டால் போதும். பெரிய மைக் போன்றே எதிரொலிகள் வரும்.

இதைப் போன்று தான் ஒவ்வொரு உயிரினங்களும் அதில் உள்ள காந்தப் புலனறிவு கவர்ந்து நுண்ணிய அலைகளையும் அறிந்து அதை நுகர்ந்து கொள்கிறது.

அப்படித் தான் இந்தப் பூனை எலிகளை விரட்டி அது ஓடிய பின் எங்கே எப்பகுதிக்குச் செல்கின்றது…? என்ற இந்த உணர்வின் மூச்சலைகளைக் கவர்ந்து அங்கே போய்ப் படுத்துக் கொள்ளும்.

அதே உணர்வின் தன்மை கொண்டு அந்த இனத்தின் (எலியின்) உணர்வைப் பாய்ச்சுகின்றது. எலி வரும் வரையிலும் காத்திருந்து இந்த உணர்வின் தன்மை கொண்ட பின் எலியின் மணத்தை வீசும்.

ஏனென்றால்… பல எலிகளை உணவாக உட்கொண்ட பின் பூனை அந்த மணத்தை வெளிப்படுத்தும் போது தன் இனம் என்று எலி வருகிறது. வந்தபின் அதை லபக் என்று இந்தப் பூனை பிடித்துக் கொள்கின்றது.

ஆக உயிரினங்கள் தன் உணவுக்காக என்னென்ன தந்திரங்களைச் செய்கிறது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

வெப்பம் காந்தம் விஷம் – மூன்று சக்தி

வெப்பம் காந்தம் விஷம் – மூன்று சக்தி

 

சக்தி வாய்ந்த விஷம் கொண்ட ஆவியின் நிலைகள் தான் ஆதியில் இருந்தது. பேரண்டத்தில் இன்று இருக்கக்கூடிய கோள்களோ சூரியன்களோ எதுவுமே இல்லாத சூனியமாக இருக்கும் பொழுது விஷம் கொண்ட நிலைகள் பேரண்டத்தில் பரவிக் கொண்டிருப்பதையும் அதிலே முதன்மை பெற்றது தான் விஷம்.

அதைத்தான் ஆதிசக்தி என்று காரணப் பெயரைக் கொடுக்கின்றார்கள். மகரிஷிகள்.

விஷமான சக்தி விஷமற்றதைத் தாக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் தாக்குதல் தாங்காது வெப்பம் ஆகின்றது. இந்த வெப்பத்தின் நிலைகள் கொண்டு சுக்கு நூறாக ஆவியின் தன்மை அணுக்களாகச் சிதறுண்டு ஓடுகின்றது.

அவ்வாறு ஓடும் நிலைகளில் உருப் பெற்றது தான் காந்தம். முதலிலே நெருப்பும் வெப்பத்தின் தணல் கூடும் பொழுது ஈர்க்கும் சக்தி அடைகிறது.

இவ்வாறு அடைந்ததைத் தான் முதலிலே விஷம் ஆதிசக்தி என்றும் அதில் வெப்பமாக உருவாகும் நிலையை ஆதிபராசக்தி என்றும் அதில் ஈர்க்கும் காந்தம் தனக்குள் இழுத்து வளரும் தன்மையே ஆதிலட்சுமி என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

இவ்வாறு உருப்பெற்ற இந்த மூன்று நிலையும்… அதாவது வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் சேர்த்து ஒரு அணுவாக மாறுகின்றது.

அந்த அணுவின் தன்மை அணுக்களாகப் பிரபஞ்சத்திற்குள் இயக்கச் சக்தியாக அது ஓடும் நிலைகளில் மற்ற எப்பொருளை… எந்த ஆவியின் சக்தியை இது கவர்கின்றதோ அந்த அணு சேர்த்துக் கொண்டால் அதை மணம் என்றும் ஞானம் என்றும் பெயரை வைக்கின்றார்கள்.

காந்தம் தனக்குள் இழுத்து மோதும் பொழுது அது வெப்பமாகி அந்த உணர்வினை இரண்டறத் தனக்குள் அணுவின் தன்மையாக அடைந்து விடுகிறது.

அவ்வாறு அணுவின் தன்மை அடையப் படும்போது மனம் ஞானம் அதனுடன் சேர்த்து இயக்கத்தின் தன்மை வரப்படும் பொழுதுதான் அதைக் காயத்ரி என்று பெயரை வைக்கின்றார்கள்.

இந்த மூன்று நிலைகள் எப்பொருளைத் தனக்குள் கலக்கின்றதோ அதைக் காந்தம் இழுத்துத் தன்னுடன் மோதச் செய்யும் பொழுது அதில் இருக்கக்கூடிய விஷம் வெப்பத்தை உருவாக்கி வெப்பத்தின் தணலுக்கு ஆற்றலை ஊட்டித் தனக்குள் எடுத்துக் கொண்ட சத்தினை இரண்டறக் கலந்து அதன் ஞானமாக அந்த அணுவின் தன்மை இயக்கத் தொடங்கி விடுகிறது.

அவ்வாறு இயங்கிய மணம் தான் ஞானம் என்பதைச் சரஸ்வதி என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள். இரண்டற அந்த அணுவின் தன்மை இயக்குவது காயத்ரி.

காயத்ரி என்றால் எதைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டதோ அதன் வழுவாக அது இயக்கும் என்று பொருள்.

சாதாரண மக்களும் இதை புரிந்து கொள்வதற்கு மகரிஷிகள் தன்னுள் கண்டறிந்த நிலையும் விண்ணில் படர்ந்த நிலையும் விண்ணில் உருவான நிலையும் தன்னுள் இயக்கும் நிலையும் தனக்குள் கண்டுணர்ந்து சாஸ்திரங்களாக இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார்கள்.

மிகவும் சக்திவாய்ந்த சக்தி

மிகவும் சக்திவாய்ந்த சக்தி

 

நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அந்த குணத்தின் அணுவின் தன்மை நம் உடலுக்குள் ஜீவ அணுவாக மாற்றும் பொழுது உயிர் எவ்வாறு கடவுளாக இருக்கின்றதோ அதே குணத்தை நமக்குள் கடவுளாக இருந்து இயக்கும் சக்தி பெறுகின்றது.

இதுதான் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் என்பது. நம் உயிரின் தன்மை ஓ…ம் என்று இயக்கினாலும் நாம் எண்ணும் குணங்கள் ஓம் என்று அதே ஜீவ அணுவாக வளர்வதைத்தான் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் ஓமுக்குள் ஓ…ம் என்பது.

ஜீவ அணுவிற்குள் அணுவாக மாறி அணுவின் தன்மை அணுவாக மாறிக் கொண்டே உள்ளது என்பது ஞானிகளால் சாஸ்திரங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஆகவே நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ அதை நமக்குள் ஜீவ அணுவாக மாற்றி விட்டால் அது நமக்குள் இருந்து கடவுளாக அந்தக் குணத்தை அது வளர்த்துக் கொண்டே இருக்கும்.

உயிரும் கடவுள் தான். நாம் எண்ணிய உணர்வுகள் ஜீவ அணுவாக மாறி விட்டால் அதுவும் கடவுள் தான்.

கடவுள் என்ற தனித்தன்மை எங்கும் இல்லை இன்றும் இல்லை. தனித்து… தனியாக ஒரு கடவுள் இருக்கின்றான் என்றால் அப்படி இல்லை.

இந்தப் பிரபஞ்சமும் மற்ற உலகங்களோ உருவாவதற்கு முன் சக்தியின் தொடராக உருவாவதைச் சக்தி என்று பொருள்படும்படி அன்றைய ஞானிகள் காரணப் பெயர்களை இட்டுள்ளார்கள்.

சக்திகளில் எத்தனையோ வகையான சக்திகள் உண்டு. அவைகளில் விஷமே மிகவும் சக்தி வாய்ந்த சக்தி.

“போர் முறை இல்லாது… எதிர்ப்பு இல்லாது…” சுழலும் வியாழனின் இயக்கம்

“போர் முறை இல்லாது… எதிர்ப்பு இல்லாது…” சுழலும் வியாழனின் இயக்கம்

 

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து சக்திகளைக் கவர்ந்து நம் பிரபஞ்சத்திற்குள் அனுப்புகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கோளுக்குள்ளும் சென்று வரும் அந்தச் சக்திகள்
1.வியாழன் கோளுக்கு வரும் பொழுது எத்தகைய நட்சத்திரங்களின் மோதலின் கலவைகளில் வருகின்றதோ
2.அது 27 உபக்கோள்களை வைத்து அவைகளைக் கவருகின்றது.

சூரியன் எப்படி எடுத்துக் கொள்கின்றதோ அதைப் போல் தனக்குள் அதை எடுத்து எடுத்து… கோள்களிலே வளர்ச்சி அதிகமாகி.. சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் உபக் கோள்களை வியாழன் வளர்த்து வைத்திருக்கின்றது.

வளர்த்துக் கொண்ட உணர்வுக்குத் தக்கவாறு வியாழன் கோள் 27 நட்சத்திரங்களின் சக்தியை ஒன்றாகச் சமைத்து அதை ஆவியாக மாற்றி உறைபனியாக மாற்றிக் கொள்கின்றது.

இது கவர்ந்து கொண்ட உணர்வுகள் வெளிவரும் பொழுது
1.வியாழனின் சுழற்சி அதிகமாகும் பொழுது எல்லாவற்றையும் அதனுடன் இணைத்து
2.புதுவிதமான அணுக்களை இணைத்துக் கொள்ளும் ஒரு பாலமாக அமைகின்றது.

நம் உயிர் இந்த உடலுக்குள் இயங்கும் பொழுது எந்த உணர்வின் தன்மை பெற்றோமோ… உதாரணமாக வேதனை என்று வரப்படும் பொழுது அந்த உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது எதன் வலுவோ அதன் வழி நமக்குள் மாற்றுகின்றது.

உடலான இந்தக் கோளுக்கு நமது உயிர் குருவாக இருக்கின்றது. இதைப் போன்று தான் இந்தப் பிரபஞ்சத்திற்குச் சூரியன் ஆனாலும்
1.வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்திற்குக் குருவாக இருக்கின்றது.
2.அதனால் தான் குரு என்று காரணப்பெயராக வைத்தார்கள்.

அதற்குள் வரும் அனைத்தையும் இணைத்துப் புது விதமான அணுக்களாக மாறுகின்றது. இதற்குள் நட்சத்திரங்களின் மின்னல் கதிரியக்கங்கள் ஊடுருவினால் இரண்டும் ஆண் பெண் என்ற நிலைகளில் உருவாகும் பொழுது அணுக்களாக மாறுகின்றது… வளர்ச்சியடைகின்றது.

அப்படி வளர்ச்சி அடைந்த உணர்வின் தன்மை தான் சூரியன் கவரும் தன்மை வருகின்றது.

27 நட்சத்திரங்கள் சக்தியை வியாழன் எடுத்துத் தன் சுழற்சியின் வேகத்தில் வெப்பத்தின் தணல் கூடி ஆவியாக மாற்றி மேல் பரப்பில் உறையும் தன்மை வருகின்றது.

கரண்டை வைத்து நாம் ஐஸ் பெட்டியை (ஃபிரிட்ஜை) உருவாக்குவது போன்று அதே கரண்டை வைத்து சூட்டை உருவாக்குவது போன்று
1.வியாழன் கோள் பல விதமான உணர்வுகள் கொண்டு அமைதிப்படுத்திப் “போர் முறை இல்லாதபடி…”
2.அந்த உணர்வின் தன்மை வேக வைத்து அமைதியின் தன்மை “எதிர்ப்பு இல்லாதபடி…” உருவாக்குகின்றது.

அது தான் 27 நட்சத்திரத்தின் உணர்வை தனக்குள் சேர்த்துக் கொள்கின்றது.

ஆனால் ஜாதகங்களில் பல விதமாகக் காட்டியிருப்பார்கள் ஆனால் உண்மை எதிலிருந்து வருகிறது…? என்று தெரியாது.

கோள்களைப் பிரித்துத் தான் எழுத முடியுமே தவிர சூரியனுக்கு நேராக வரும் போது ஒரு கோளின் தன்மை இணைந்து சுழல் வட்டத்தில் வரும் என்று இப்படித்தான் அவர்கள் அதைப் பிரித்து காட்ட முடியுமே தவிர இயற்கையின் உண்மையின் இயக்கங்களைச் சொல்ல முடியாது.

1.இதையெல்லாம் மனிதனுக்கு உகந்த நிலைகளாக எழுதப்பட்டு மதத்திற்குத் தக்கவாறு ஜாதகத்தைப் பிரித்து
2.இந்த நேரத்தில் இதைச் செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது என்பார்கள்.
3.ஆனால் ஆண்டவன் அதை எல்லாம் மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் என்று
4.ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு இடத்திற்கும் தக்கவாறு ஜாதகத்தைக் குறித்து விட்டார்கள்.

இதை வைத்துத்தான் நாம் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்து அலைந்து கொண்டுள்ளோம்.

ஆக எது பதிவோ அந்த நினைவு நமக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. எந்தெந்த நிலைகளை இப்படி எடுத்துக் கொள்கிறோமோ அந்தப் பதிவுதான் செயல் ஆகின்றதே தவிர நல்ல நேரமோ கெட்ட நேரமோ இல்லை.

1.அந்த கோள்களின் இயக்கத்தில் மனிதன்… இவர்கள் சொல்வது போன்று இல்லை.
2.ஆனால் சூரியன் எல்லாவற்றையும் கவர்ந்து வரும் போது தாவர இனங்களுக்கோ கல் மண் இவைகளுக்கோ அது சேரும்… அதனின் இயக்கமாகும்.

நாம் புறத்திலிருந்து சுவாசிப்பது உடலில் அணுக்களாக விளைந்து அடுத்த உடலுக்கு வித்திடும் விசித்திரம்

நாம் புறத்திலிருந்து சுவாசிப்பது உடலில் அணுக்களாக விளைந்து அடுத்த உடலுக்கு வித்திடும் விசித்திரம்

 

பேட்டரிகளை எல்லா வகைகளிலும் இன்று உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றோம். அதனுடைய பயன்பாடுகள் முடிந்தபின் அதை மறு சுழற்சி செய்கின்றார்கள்.

வேண்டாத பாகங்களை நெருப்பிலிட்டுப் பொசுக்குகின்றார்கள். அப்போது புகைகள் வெளி வருகின்றது. இந்தப் புகைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.

1.அது எந்தத் திசையை நோக்கிச் செல்கின்றதோ அந்தப் பக்கம் நாம் வந்து கொண்டிருந்தோம் என்றால் அதைச் சுவாசிக்க நேர்கிறது.
2.சுவாசப் பைகளுக்குள் சென்று அந்தக் கெமிக்கல் நமக்குள் இருக்கும் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களை மடியச் செய்கின்றது.
3.மடிந்து விட்டால் அந்த உறுப்பின் திறன் இழக்கப்படுகின்றது.
4.இதனால் நம்மை அறியாமலே மூச்சுத் திணறலும் கடும் நோய்களும் உருவாகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நாம் சுவாசித்த உணர்வுகள் அந்தக் கெமிக்கல் இரத்த நாளங்களிலே கலந்து விட்டால் சுத்திகரிக்கும் கிட்னிக்குள் புகுந்து வடிகட்டி வெளி வரும் பொழுது வடிகட்டும் திறனை இழக்கச் செய்து கிட்னியைச் செயலிழக்கச் செய்கின்றது. சுத்திகரிக்கும் நிலை தவறும் பொழுது ரத்த நாளங்கள் தெளிவாகும் நிலை இழந்து விடுகின்றது.

இதைப் போன்று நம்மை அறியாமலே வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் இத்தகைய உணர்வுகள் தீமை விளைவிக்கும் சந்தர்ப்பமாகின்றது.

1.இப்படி நமக்குள் உருவாகும் உணர்வுகள் உடலுக்குள் பரவும் பொழுது
2.அது சிறுமூளை பாகம் வரை சுழன்று கொண்டிருக்கும்.

ஒரு கோழி கருவான பின் ஒவ்வொரு நிமிடமும் எப்படிக் கேறுகின்றதோ இதைப் போல ஒரு மனிதன் ஒரு காரியம் தனக்கு நடக்கவில்லை என்றால் அதனால் திரும்பத் திரும்ப வேதனையை நுகர்கின்றான்.

1.அது 48 நாட்கள் ஆனால் கோழி கருவுற்று முட்டையாக மாறுவது போல நாம் நுகர்ந்த உணர்வு கருவுற்று விடுகின்றது… முட்டையாக மாறுகின்றது.
2.இப்படி முட்டை ஆனபின் அதனுடைய செயலாக்கங்கள் உள்ளுக்கே அடைபட்டு இருக்கின்றது.
3.இரத்த நாளங்களில் அது சுழன்று வரும்பொழுது சிறுகச் சிறுக எல்லா உறுப்புகளிலும் ஊடுருவுகிறது.

எல்லா உறுப்புகளுக்கும் அணுக்களுக்கும் உணவாக கொடுக்கும் நிலை பெற்றது தான் நம் இரத்தங்கள். ஆனால் நாம் நுகர்ந்த வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் ரத்த நாளங்களிலே செல்லும் பொழுது அதை அந்த நல்ல அணுக்கள் ஏற்க மறுக்கின்றது.

அதன் வட்டத்தில் சென்ற பின் சோர்வடையத் தொடங்குகிறது… உடலும் சோர்வடைகின்றது. நம் எண்ண வலுவும் குறைகின்றது.

எதனைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதை நுகர முடியாதபடி ஆனபின் பலவீனமாகி நல்ல உடலை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரம் செல்வதில்லை. சோர்வடைந்தால் மீண்டும் நலிந்து கொண்டுதான் இருக்கும்.

ஒரு சிலர் நிறையச் சாப்பிடுவார்கள். ஆனால் சோர்வின் தன்மை வரும் போது உறுப்புகளில் அஜீரண சக்தி ஏற்படும். அது அதிகரித்து விட்டால் உடல் நலியும். நல்ல அணுக்கள் வாடும் தன்மை வருகின்றது.

இது எல்லாம் இயற்கையில் நடக்கும் சில நிகழ்ச்சிகள்.

இதை அணுக்கள் இருதய வாயிலில் ஊடுருவி விட்டால் என்ன நடக்கிறது…? இருதயம் அழுத்தம் கொடுத்து எல்லா இடங்களுக்கும் ரத்தத்தை அனுப்பும் சக்தி பெற்றது.

1.ஆனால் இருதயத் துடிப்பிற்குள் சென்று அதிலே வெறுப்படையச் செய்யும் அந்த அணு நுழைவாயிலில் புகுந்து விட்டால் போதும்.
2.வெறுப்பின் உணர்ச்சிகள் அங்கே அணுவாக மாறி இந்த உணர்ச்சிகளை அதன் வழி பரப்பிக் கொண்டிருக்கும்.
3.அப்படிப் பரப்பும் பொழுது சிறு மூளையில் அதன் உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.பின் உயிரான காந்தப் புலனுக்குள் இந்த உணர்வின் தன்மை இயக்குகின்றது.
5.பின் கண் காது மூக்கு உடல் என்ற நிலையில் இந்த உணர்ச்சிகளை உயிர் அணுக்களாக ஒலி அலைகளாக மாற்றுகின்றது.
6.அதன் வழி எதனின் உணர்வு கொண்டு மூச்சாக வெளியிடுகிறோமோ அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.
7.அதை ஈர்க்கும் சக்தி பெறுகின்றது… நமது ஆன்மாவாக மாற்றுகின்றது… சுவாசித்த பின் ரத்த நாளங்களில் கலந்துவிடுகிறது.

முட்டைகள் பொரித்துக் குஞ்சுகளாக ஆன பின் கோழி அதற்கு சத்தத்தை எழுப்பிக் கூவி இரை எடுத்து உண்ணும்படி எப்படிக் கற்றுக் கொடுக்கின்றதோ அதைப் போல்.. நமக்குள் உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக ஒலிகளைப் பரப்பப்படும் போது உயிர் நமது ஆன்மா வழி நுகர்ந்து உணவை ஊட்டிச் சாந்தப்படுத்தும்.

வேதனையான உணர்வை எடுத்துக் கொண்ட பின்
1.அது எனக்கு வேண்டாம் மகிழ்ச்சியின் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த உணர்வு மீண்டும் துடிக்கும்… உணர்வின் வேகம் அதிகரிக்கும்,
3.எந்த உறுப்பில் எந்தப் பாகத்திலே அந்த அணுக்கள் தேங்கி இருக்கின்றதோ
4.அந்த உறுப்பிலே வேதனை என்ற உணர்வின் ஒலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கும்.
5.நல்ல செயல்களைச் செயல்படுத்தும் சிந்தனை இழந்து விடும்… நம் அங்கங்களை இயக்கும் சக்தியும் குறையும்.

யாரையோ குறை கூறி வெறுப்பாகின்றோம்… யாரோ எவரோ என்று இருக்கலாம். ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவு அந்தக் குறையை உருவாக்கும்.

யாரை எண்ணி இந்த உணர்வைத் தனக்குள் உருவாக்குகின்றோமோ அதன் அணுக்களாக மாறுகின்றது. நாளடைவில் கரு முட்டையாகின்றது. முட்டையாக மாறி எந்தெந்த உறுப்புகளில் தேங்கி வெடித்து அணுவாக மாறுகின்றதோ
1.அதனை இருப்பிடமாக வைத்து அதன் துணை கொண்டு உணர்ச்சிகளை உந்தி
2.இரத்த நாளங்கள் வழியாக உயிருக்கு அனுப்பி இந்த உணர்ச்சிகளைத் தூண்டி
3.யாரைக் குறையாக எண்ணினோமோ அவரின் உணர்வுகளை உணவாகக் கொடுத்து உடல் உறுப்புகளைக் குறையாக்கி விடும்.

அப்போது அந்த வேதனையான உணர்விலிருந்து நாம் தப்ப முடிவதில்லை. அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

ஒருவரைப் பற்றிக் குறையான உணர்வு வரப்படும் பொழுது அவர் வாழ்க்கையில் தொழில் செய்யும் பொழுதும் எத்தனையோ அதிலே வலிகள் வேதனைகள் வரும். அவரில் விளைந்த உணர்வுகள் இங்கே இருக்கும்.

அந்தக் குறையைத் தான் நுகர முடியுமே தவிர சொல்லால் செயலால் அன்பு கொண்டு பண்பு கொண்டு பாசமான உணர்வை அவர் வைத்திருந்தால் அதைத் தடுத்து விடும்.
1.ரேடியோ டிவிக்களில் ஒலி… ஒளி அலைகளைப் பரப்பினாலும்
2.எந்த ஸ்டேஷனில் திருப்பி வைக்கின்றோமோ அதைத்தான் எடுக்கும்.

இப்படிச் சந்தர்ப்பத்தில் நாம் எடுக்கும் உணர்வின் தன்மை நம் உடலில் அணுக்களாக விளைந்து விட்டால்… தன் இனத்தின் தன்மையாகப் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வின் எண்ணங்கள் அதிகரித்து நமக்குள் அது உருவாகி வளர்ச்சியாகி… அந்த எண்ணத்தின் வழியே அடுத்த சரீரத்தை உருவாக்குகின்றது.

இன்றைய செயல் நாளைய சரீரம்…!

மூன்று சக்திகளின் இயக்கம் தான் இயற்கை

மூன்று சக்திகளின் இயக்கம் தான் இயற்கை

 

ஓர் விஷமான ஆவியின் நிலைகள் விஷமற்றதைத் தாக்கப்படும் பொழுது அந்தத் தாக்குதல் தாங்காது வெப்பமாகி அணுக்களாகச் சிதறுண்டு பரவுகின்றது ஆதியில்,

அவ்வாறு தாக்கி அணுக்களாகப் பரவிய நிலைகளைத் தான் நாம் அறிந்து கொள்வதற்காக இதை உண்மையில் கண்டுபிடித்த அகஸ்தியன் சாதாரண தன் இன மக்கள் கண்டு கொள்வதற்காகக் காரணப் பெயர்களை வைத்தான்.

1.வெப்பத்தை வைத்துத் தான் நாம் பல பொருள்களைச் சமைக்கின்றோம்.
2.மனித உடலில் அந்த வெப்பம் இருந்தால் தான் அணுக்களும் இயங்குகின்றது.
3.மரத்திற்கு வெப்பம் இருந்தால் தான் அதுவும் வளர்கின்றது.

கடல் நீரிலே வாழும் உயிரினங்கள் இருப்பினும்
1.பூமியின் வெப்ப அலைகள் அதனால் ஏற்படும் காந்த அலைகள் நீருக்குள் பரவும் பொழுது தான்
2.அந்த மீன்களில் உள்ள உயிரில் வெப்ப நிலைகள் ஊடுருவி அது தனக்குள் கவரும் ஓட்டத்தில் எலக்ட்ரானிக்காக மாற்றி
3.அதனால் தனக்குள் வெப்பத்தை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் விண்ணின் ஆற்றலில் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெப்பம் அது நகர்ந்து செல்லும் பொழுது காந்தமாக அமைகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் ஆதியிலே இந்த மூன்றும் ஒன்றாக உருப் பெறும் சந்தர்ப்பத்தால் தான் உலகமே இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

1.வெப்பம் உருவாகும் சக்தி…
2.காந்தம் தன்னுடன் எப்பொருளையும் ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் சக்தி.
3.அதனுடன் சேர்ந்த விஷமோ எப்பொருள் அதனுடன் கவர்ந்ததோ அந்தப் பொருளின் மணத்தையும் குணத்தையும்
4.உணர்ச்சிகளைத் தூண்டி அது இயக்கச் சக்தியாகச் செயல்படுகின்றது.

இதனைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தான் “ஆதிசக்தி விஷம்… ஆதிபராசக்தி வெப்பம்… ஆதிலக்ஷ்மி காந்தம்…” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றார்கள்.

மும்முனையாக நமக்குள் இயக்கும் சில உணர்வின் இயக்கங்கள்

மும்முனையாக நமக்குள் இயக்கும் சில உணர்வின் இயக்கங்கள்

 

ஒருவரை நண்பன் என்று நாம் கருதிக் கொண்டிருக்கும் பொழுது அவனில் விளைந்த உணர்வு நாம் ஏற்றுக் கொண்ட உணர்வு இவை இரண்டும் கலந்து ஊழ் வினையாகப் பதிவாகும் பொழுது அந்த நண்பனை அணுகி அவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று எண்ணுகின்றோம்.

அந்த நண்பன் பால் நாம் ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டு பற்றுடன் பதிவு செய்த உணர்வுகள் அந்த நண்பன் ஒரு தவறு செய்திருப்பான் என்றால்
1.அதாவது இன்னொருவனுக்கு எதிர்நிலையான தவறுகளைச் செய்திருப்பார்
2.அவர் எனக்கு இப்படித் துரோகம் செய்தார் என்று அவர் நம்மிடம் சொன்னாலும்
3.நண்பன் துரோகி அல்ல எனக்கு நல்லவனாகத் தான் இருக்கின்றான் அவன் நல்லவனே…! என்று
4.இந்த உணர்வின் தன்மை வினைக்கு நாயகனாக… அவன் உணர்வு நமக்குள் பதிவு செய்தது இவ்வாறு தான் இயக்கும்.

இன்னொருவன் கூறிய கூற்றை ஏற்றுக் கொள்ளாது.

ஆனாலும்… அவன் பேசிய உணர்வுகள் நமக்குள் பதிவான பின் அவனை ஏற்றுக் கொள்ளாத நிலைகள் கொண்டு அவனை நினைக்கும் போதெல்லாம் நண்பனைக் குற்றவாளியாகப் பேசினான் என்ற உணர்வுகள் நமக்குள் பதிவாகும்.

இருந்தாலும் நம் நண்பன் ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ அவருடைய சூழ்நிலை காரணமாக நாம் சொன்னதை அந்த நண்பன் செய்யவில்லை என்றால் என்ன ஆகிறது…?

அந்த இன்னொருவன்… வேண்டாதவன் நம்மிடம் கூறினான் அல்லவா…! அந்த உணர்வு நம் ஆன்மாவில் கலந்தே இருக்கும்.
1.ஊழ் வினையாக நமக்குள் வித்தானாலும் ஆன்மாவில் கலந்து இருக்கும்.
2.இது இரண்டையும் கலந்து நாம் சுவாசிக்கும் போது அவன் கடுமையாக நண்பனைக் குற்றம் கூறிய உணர்வு கலந்த பின்
3.நண்பனைக் குற்றவாளி என்று நாமும் கருதும் நிலைக்கு வந்து விடுகின்றோம்.
4.அப்படி வந்து விட்டால் சிறிதளவு அந்த எதிர்ப்பு நிலைகள் பதிவாகி விட்டது என்றால் “மும்முனையாக…” அது இயங்கத் தொடங்கி விடும்.

பாலுக்குள் பாதாமைப் போட்டாலும் சுவையாகத் தான் இருக்கின்றது. அதில் சிறிதளவு காரத்தை இணைத்து விட்டால் இந்தக் காரத்தின் சுவையைத் தனித்துப் பிரித்தே காட்டுகிறது.

1.ஒருவன் தவறு செய்யும் உணர்வுகள் அவன் நண்பன் என்று இருந்தாலும்
2.நண்பன் மீது குறை கூறிய உணர்வுகளோ நண்பனுடன் பற்று கொண்டதுடன் இணைத்த உணர்வுகள்
3.மும்முனையால் இயக்கப்பட்டு மாற்று வித்தாக ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

பதிவான உணர்வுகள் அந்த நண்பன் வெளியிட்ட உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கிறது. நம்முடன் நட்பு கொண்ட உணர்வும் இங்கே பதிவாகி இருக்கின்றது.

ஆனால்
1.நட்பின் நிலைகள் ஓங்கி இருப்பினும்
2.சந்தர்ப்பத்திற்கு எதிர்ப்பு உணர்வுகள் ஏற்பட்டிருந்தால்
3.அதைச் சொல்லி இதனுடன் இணைத்து நாம் கேட்டிருந்தால்
4.அப்படிப் பதிவான நிலைகள் வந்து விடுகின்றது… பகைமையாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானியாக நீங்கள் மாறியே ஆக வேண்டும்

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானியாக நீங்கள் மாறியே ஆக வேண்டும்

 

1.இவ்வளவு பெரிய உண்மையைச் சொல்கிறேன்…! எவனும் என் சொல்லைக் கேட்க மாட்டேன் என்கிறான் என்று
2.நீங்கள் இப்படிச் சொல்லி மற்றவர்களைக் கோபித்துக் கொண்டால் என்ன ஆகும்…?
3.இந்த உணர்வை அவர்களால் ஏற்க முடியவில்லை…. நம்மால் நல்லதை வளர்க்க முடியவில்லை…! என்ற இந்த நிலை தான் வருகின்றது.

அதைப் போன்ற நிலை இல்லாதபடி குருநாதர் சொன்ன அருள் வழிப்படி
1.அவர் கண்ட அகண்ட நிலையைப் போல்
2.நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக மாறியே ஆக வேண்டும்.

யாம் கொடுக்கும் அருள் சக்திகளை நீங்கள் எடுத்தால் உங்களுக்குள் சிந்திக்கும் ஆற்றல் வரும். வாழ்க்கையில் கஷ்டமோ நஷ்டமோ வந்தால் அதை ஈடுகட்டும் உணர்வின் வலு வரும்.

சிந்தனையுடன் செயல்படும் சக்திகள் பெருகும்… குடும்பத்தில் அன்புடன் பண்புடன் வாழும் இந்த உணர்வுகள் வளரும். ஞானத்தின் தன்மை பதிவாக்கி உணர்வின் தன்மை செயலாக்கப்படும் பொழுது அன்புள்ள குடும்பமாகவும் அருள் ஞானத் தெய்வீக குடும்பமாகவும் நாம் மாற முடியும்.

ஆக நீங்கள் எல்லோரும் பிறருக்கு எடுத்துக்காட்டாக வளர வேண்டும். கஷ்டத்தையும் நஷ்டத்தையும் விடுத்து விட்டு அருள் செல்வத்தைக் கூட்டி இருளைப் போக்கும் சக்தியாக வளர்ந்து அருள் வழியில் பண்புடன் வாழ்வோம்.

நீங்கள் தான் அனைவருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். காரணம்
1.உங்களை வழி நடத்துவதற்கு அனைத்தையும் எடுத்துச் சொல்லி விட்டேன்.
2.நீங்கள் அதை எடுத்து வளர்த்துக் கொள்வதில் தான் இனி இருக்கின்றது.
3.வளர்த்தால் நாம் வளர்கின்றோம்… நஞ்சின் தன்மையிலிருந்து மீளலாம்…. பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

நல்லதைப் பேசினேன்… தெரிந்து கொண்டேன்… என்ற நிலையில்
1.நான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன் என்று எண்ணினால் ஏமாந்து விடுவோம்.
2.தெரிந்து கொண்டே தான் இருக்கின்றோமே தவிர முழுமையாக நான் தெரிந்து கொண்டேன் என்று எவருமில்லை.

சொல்லின் உணர்வின் தன்மை அறிந்து கொண்டாலும் முழுமையாக நாம் ஒரேடியாகத் தெரிந்து கொள்ள முடியாது… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் இயக்கும். அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு நாம் அருளைச் சேர்த்துச் செயல்படுத்த வேண்டும்.

1.வெயில் அடிக்கும் பொழுது ஒரு உணர்வு
2.மழை பெய்யும் பொழுது ஒரு உணர்வு
3.குளிர் அடிக்கும் போது ஒரு உணர்வு
4.காற்று அடிக்கும் போது ஒரு உணர்வு

கால நிலைகள் இப்படி நமக்குள் மாறிக் கொண்டே தான் இருக்கும். “எந்த நேரத்தில் எதைச் செயல்படுத்த வேண்டும்…?” என்ற உணர்வினை அறிந்து அந்த ஞானத்தின் வழிப்படி நாம் வாழ்வோம்.

அனைவரையும் அந்த அருள் வழியில் வாழ வைப்போம். அருள் வழி செல்வோம் இந்த உடலுக்குப் பின் ஒளியின் உணர்வாக முழுமையான நிலையை நாம் அடைவோம். ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம்… பத்தாவது நிலையான கல்கி அடைவோம்.

தொழில் ரகசியம்

தொழில் ரகசியம்

 

தொழிலைப் பற்றிய ரகசியங்களை உங்களுக்கு வேண்டிய நண்பர்களுக்குச் சொல்வதற்கு முன்பு “அவர் எப்படி உங்களுடன் பழகுகின்றார்…?” என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிலில் என்றைக்குமே கை மூடியே வைக்க வேண்டும். வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஓரளவுக்கு வருவாய் வந்து கொண்டிருக்கின்றது என்று இதை மட்டும் சொல்லலாம்.

நடப்பது அனைத்தையும்…
1.நான் இந்தப் பக்கம் போய்த் தொழில் செய்தேன்… பின் இந்தப் பக்கம் சென்றேன்…
2.எனக்கு அதில் வருமானம் இப்படி எல்லாம் வந்தது என்று சொல்லக் கூடாது.

ஆனால் உங்கள் கூட்டாளியாக இருப்பவரிடம் போகும் பாதைகளை இப்படி இருக்கின்றது… இதை எப்படி வழி நடத்தலாம்…? என்று இரண்டு பேரும் சிந்தனை செய்து செயல்படுத்துவது நல்லது.

இருவரும் கூட்டாளியாக இருந்து செயல்படுத்தும் போது ஒரு சிறு விஷயத்தை மறைத்து விட்டால் அவருக்கு உடனே நம்மிடம் மறைக்கின்றார் என்ற சந்தேகம் வந்துவிடும். ஆகவே அவரிடம் விஷயங்களைச் சொல்லக்கூடிய கடமைகள் உண்டு.

அதே சமயத்தில் மனைவியிடம் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு சந்தோஷத்தை ஊட்டலாம்… தொழில் உயர வேண்டும் என்ற உணர்வை ஊட்டலாம்.

ஆனால் மிக முக்கிய நண்பராக இருந்தாலும்
1.ஏதோ உங்கள் ஆசியினால் தொழில் நன்றாக இருக்கின்றது…
2.உங்கள் ஆசி மீண்டும் தேவைப்படுகிறது என்று அவர்களை உயர்த்தி நாம் இப்படிக் கொண்டு வர வேண்டும்.

ஆனால் பப்ளிக்காக நாம் இதைச் சொல்ல தொடங்கினால் ஒருத்தருடைய உணர்வு விஷத் தன்மையாக இருக்கும். நாம் சொல்லும் பொழுதே அப்படியா…! என்று அவர்கள் கண்ணின் பார்வையும்… உற்று நோக்குவதும் இந்த நினைவாற்றலை அதற்குள்ளேயே நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே தொழிலின் ரகசியங்களை நாம் சொல்லவே கூடாது.

உலகிலேயே ஒரு புதிய தொழிலில் ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்றால் அதில் என்னென்ன சரக்கைப் போட்டிருக்கின்றோம்…? என்று விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் முக்கியமான பொருளைக் காட்டவே மாட்டார்கள்.

1.அரசாங்கம் கட்டாயப்படுத்தினாலும் அதில் ஒரு முக்கியமான பொருளையும்
2.அதனுடைய கலவை விகிதம் எவ்வளவு என்று சொல்ல மாட்டார்கள்.
3.மற்றதையெல்லாம் இன்னென்ன அளவு என்று எழுதியிருப்பார்கள்.

ஆனால் முக்கிய பொருளை மாற்றி விடுவார்கள். அதிலே போட்டிருப்பது போன்று மற்றவர்கள் கலவை செய்து பொருளை உற்பத்தி செய்தால் தரம் சரியாக வராது… வித்தியாசமாகிவிடும்.

அரசின் சட்டப்படி சொன்னாலும் அதற்காக வேண்டி இவர்கள் அளவுகோல்களை மாற்றி விடுவார்கள். அதிலே இல்லாத சரக்கையும் சேர்த்து விடுவார்கள். மற்றவர்கள் செய்து பார்த்தால் கடைசியில் வராது. அவர்கள் கொண்டு வரும் தரத்தை இங்கே கொண்டுவர முடியாது.

தொழில் ரீதியிலே நாம் மறைத்துச் சொல்ல வேண்டி இருக்கின்றது.

ஆன்மீக ரீதியிலே நீங்கள் வளரக்கூடிய உண்மை நிலைகளைச் சொல்லலாம். அந்த ஆன்மீகத்திலும் கூட
1.எனக்கு இவ்வளவு பெரிய காட்சிகள் கிடைத்தது… சக்திகள் கிடைத்தது என்று சொன்னால்
2.பார்…! அவருக்குக் கிடைக்கின்றது… எனக்குக் கிடைக்கவில்லை…! என்று இதிலும் பொறாமை உணர்வு வரும்.

உங்களுக்கு எப்படி இவ்வளவு கிடைக்கிறது…?
1.சாமி உங்களுக்கு ஸ்பெஷலா கொடுக்கின்றாரா…? என்று ஒருவர் கிண்டலாகவும் கேட்பார்.
2.உனக்கு மட்டும் தெரிகின்றது… எனக்கு ஏன் தெரியவில்லை…? என்று பொதுத் தன்மையில் வருபவர்கள் சிலர் இப்படியும் வந்து விடுவார்கள்

ஆகவே எதைச் சொல்ல வேண்டும்…? எதைப் பேச வேண்டும்…? என்று உணர்வின் தன்மை முழுமை அடைய நம் எண்னத்தைச் செலுத்துதல் வேண்டும்.

நாம் தெரிந்து கொண்ட உணர்வுகளைப் பக்குவப்படுத்த நாம் இப்படி இருக்க வேண்டும்… இப்படிச் செய்ய வேண்டும் என்று
1.உங்களுக்குள் தெரிந்த கருத்தை… நீங்கள் சொல்வதாக இருக்க வேண்டுமே தவிர
2.இந்தக் கருத்துக்கள் எனக்குத் தெரிந்தது என்று சொல்லக்கூடாது.

இதனால் பெரும் பிழைகளும் சந்தேகமும் அவமதிப்பும் சில நிலைகள் எல்லாம் ஏற்படும். இன்றைக்கு இருக்கும் சமுதாயத்திற்கு மத்தியில் இப்படி எல்லாம் நாம் வழி நடத்திச் செல்ல வேண்டி இருக்கின்றது.

பார்… அவருக்கு மட்டும் எல்லாம் தெரிகிறது…! அவர் என்னமோ உளறுகின்றார்… எல்லாம் தெரிந்த மாதிரிப் பேசுகிறார்…! என்று மற்றவரிடம் சொல்வார்கள்.

இதை நீங்கள் கேட்டால் என்ன செய்வீர்கள்…? ஆகவே உண்மை நிலைகள் தெரிந்தால்
1.அவர்களைப் பக்குவப்படுத்தக்கூடிய ஒரு ஞானத்தின் வழிகளிலே நீங்கள் சொன்னால்…
2.நீங்கள் சொல்வதாகத் தெரிந்து கொள்வார்கள்.

எனக்குத் தெரிந்தது இப்படி நீங்கள் நடந்து பாருங்கள்…! என்று சொன்னால் பிழையாகும். ஆன்மீகத்திலும் இப்படி ஒரு நிலை. மனிதனின் உணர்வுகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் உணர்வின் தன்மை அழுத்தமான பின் இன்னொரு மனிதன் இதைத் தாங்கும் நிலை இல்லை.

அவருக்கு அதைத் தாங்க முடியவில்லை என்றால் எதிர்மறை பொறிகளாகிவிடும்… அவர் உடலுக்குள் அந்த எதிர்ப்புகள் ஏற்படும். ஆனால் அவர்களுடைய குற்றம் அல்ல.

யாரும் வேண்டுமென்று அவ்வாறு சொல்வதில்லை.

ஆனால் இந்த உணர்வின் அழுத்தங்களாகும் பொழுது உணர்ச்சிகள் மாறுபட்டுவிடும். அழுத்தமாகும் போது அவர் உடலுக்குள் எதிர்ப்பு நிலைகள் உருவாகும் பொழுது வித்தியாசமாக வந்துவிடும். இது எல்லாம் உணர்வின் இயக்கம் தான்.

ஆகவே நீங்கள் பக்குவப்படுத்தி நடந்து கொள்ளுங்கள்.