சாமி (ஞானகுரு) சொன்னபடி “அருள் சக்தியைப் பெறுவேன்…” என்ற எண்ணத்திற்கு நீங்கள் வர வேண்டும்

சாமி (ஞானகுரு) சொன்னபடி “அருள் சக்தியைப் பெறுவேன்…” என்ற எண்ணத்திற்கு நீங்கள் வர வேண்டும்

 

ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானியுங்கள்.
1.கண்களைத் திறந்து ஒரு நிமிடம் எண்ணுங்கள்
2.கண்களை மூடி ஒரு நிமிடம் அந்தச் சக்திகளை உடலுக்குள் செலுத்துங்கள்.

இங்கே யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாயிலாகப் மகரிஷிகளின் அருள் சக்திகளை இங்கே பதிவு செய்து வைத்திருக்கின்றோம்… காற்றிலேயும் பரப்பி வைத்திருக்கின்றோம்.

அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணி எடுக்கும் பொழுது உங்கள் உடலுக்குள் தன்னாலே வந்து சேருகிறது.
1.கண்களை மூடி… பின் திறந்து
2.மறுபடி கண்களை மூடி… திறந்து அந்தச் சக்திகளை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
3.கண்களைத் திறந்த பின் “வீட்டில் கஷ்டம்…” என்று சொல்வதை விட்டு விடுங்கள்
4.உங்கள் வார்த்தையில் கஷ்டம் என்ற சொல்லை நீக்கி விட்டு
5.அதனை நீக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். சகோதர உணர்வுகள் வளர வேண்டும் நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று இப்படித் தொடர்ந்து எண்ணுங்கள்.

இதைத் தான் நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றேன். “சாமியார் சொன்னார்” என்றால் அதை மட்டும் நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நீங்கள் எண்ணி எடுக்கலாம் அல்லவா…!

மிகவும் கஷ்டமாக இருக்கிறது… என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… தொழில் சீராக இல்லை… என்று இங்கே வந்து இப்படித்தான் என்னிடம் கேட்கின்றார்கள்.

காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பரவியுள்ளது. வீட்டில் அமர்ந்தபடியே அந்த அருள் சக்திகளைப் பெற்று நீங்களே எடுத்து உங்கள் வீட்டிலே பரப்பிக் கொள்ள முடியும்.

இதை நீங்களே செய்யலாம்.

1.என்னை நம்பி என்னிடம் எதிர்பார்க்கின்றார்கள்.
2.ஆனால் தன்னை நம்பி நான் சொன்ன உணர்வுகளை நீங்களே எண்ணி எடுக்க முடியும்.
3.அதற்குத் தான் இங்கே தியான மண்டபம் அமைத்தது.

உயர்ந்த சக்திகளை அவரவர் எண்ணி எடுப்பதற்குத் தான் இந்த மண்டபமே தவிர அது எனக்காக அல்ல. இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்…?

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணி எடுக்கும்போது நான் அங்கே செல்கின்றேன்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தியைப் பெறுகின்றேன். என்னை நாடி வருபவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக நீ ஆகின்றாய் என்று கீதையிலே சொல்வது போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணும் போது “நான் அதுவாக ஆகின்றேன்…”

ஆகவே…
1.உங்களை அறியாது இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப் பொருள் காணும் திறன் நீங்கள் பெற வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
4.தொழில் நன்றாக இருக்க வேண்டும்… செல்வச் செழிப்பாக வாழ வேண்டும்
5.உங்களுடைய மூச்சுகள் எல்லாம் பரமாத்மாவில் கலந்து அனைவரையும் நலமுடன் வாழச் செய்ய வேண்டும் என்று
6.நான் உங்களுக்குச் செய்வது போல் நீங்களும் மற்றவர்களுக்கு இப்படி எண்ணினால் நீங்களும் ஞானியாக முடியும்.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று முதலில் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்…
1.எங்கள் வீடு முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3,எங்கள் தாய் தந்தையின் அருளாசி எங்களுக்குக் கிடைக்க வேண்டும்
4.எங்கள் மூதாதையர்களின் நல்லாசி கிடைக்க வேண்டும்
5.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்
6.எங்களுக்கு நல்ல மனதும் எங்களைப் பார்ப்பவர்களுக்கு நல்ல மனதும் வர வேண்டும் என்று
7.உங்கள் உயிரிடம் கேட்டால் அவன் அதை எல்லாம் உருவாக்கித் தருவான்…!

இதை நீங்கள் கேட்டுப் பெறலாம் அல்லவா.

சாமியிடம் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. உங்களாலே அது முடியும்… உங்களை நீங்கள் நம்புங்கள் என்று சொல்கிறேன்.

என்னை நம்புகிறீர்கள்… ஏதோ பெரிய சக்தி படைத்தவர் என்று…!
1.ஆனால் நான் சொன்னபடி நீங்கள் எண்ணி எடுத்துப் பாருங்கள்.
2.உங்களுக்குள் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

காளி… பராசக்தி… என்று அம்மனை வணங்கும் வழி எல்லாம் அரசர்களால் உருவாக்கப்பட்டது தான் – ஈஸ்வரபட்டர்

காளி… பராசக்தி… என்று அம்மனை வணங்கும் வழி எல்லாம் அரசர்களால் உருவாக்கப்பட்டது தான் – ஈஸ்வரபட்டர்

 

ஆதிசங்கரர் காலங்களிலும் அதற்கு முந்தைய காலங்களிலும் இப்பூமியில் பல மகான்கள் வளர்ந்தார்கள். தன் ஞானத்தால் தெய்வசக்தி பெற்று சப்தரிஷியின் தன்மைக்குத் தன் வலுவையும் வலுவாக்கிக் கொண்ட மகான்களை வளர்த்த பூமி தான் “நம் தாய் பூமி…”

1.அதன் தன்மையின் தொடர் வளர்ப்பு நிலையற்று
2.அந்த ஞானச் செயலே விஞ்ஞானச் செயலாக
3.ஞானத்தின் தொடர் அலையின் செயல் “செயற்கை ரூபத்தில்…”
4.ஏட்டுப் படிப்பு வழி முறையிலும் இவ்வொலி அலை மின் சாதனத் தொடர்பலையிலும் சென்று விட்டது.

இதுவல்லாமல் தன் ஞானத்தால் வளர்ந்த சக்தியைச் செயல்படுத்த வந்தவர்கள் எல்லாம் தன் வலுத் தன்மையின் வலுவை எடுக்கவல்ல ஆத்ம வளர்ச்சி ஞானம் குன்றிய தன்மையில்
1. கல்லில் சிலை செய்து ரூப வழிபாட்டு முறைப்படுத்திக் கொண்டு
2.தன் பக்தியைக் காட்ட “வணங்கும் தொடரை” ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அதுவுமல்லாமல் இந்தப் பூமியின் வளர்ப்பில் சுழற்சி ஓட்ட கதியில் மண்டல ஈர்ப்பு சந்திப்பு நிலைகளிலெல்லாம் இப்பூமியின் வளர்ப்புத் தன்மையினால் பல மாற்ற “பிரளய காலங்கள்” ஏற்பட்டது.

ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இப்பூமியின் ஈர்ப்பு வளர்ப்பு செயல் ஓட்டமானது வளர்ப்பின் நிலைக்குகந்த மாற்றச் செயலினால் அந்தந்த மாற்றத்திற்குப் பிறகு வளரக்கூடிய அணு வளர்தன்மையும் மாறியே வந்தது.

1.குண ஈர்ப்பின் அமிலமே பிரளய மாற்றத்திற்கு முன் இருந்த நிலை வேறு…
2.மாறிய பிறகு வளரும் நிலை வேறாக
3.இப்பூமியில் படியும் அமில வலு மாறிவிடுகின்றது.

தங்கத்திலோ மற்ற உலோகத்திலோ செய்யப்படும் பொருள்களை மாறி மாறி அதை அழித்து நாம் மற்றொன்றாக உருவாக்கும் பொழுது அதனுடைய தரத்தில் மாற்றம் ஏற்படுகின்றதல்லவா…!

அதைப் போன்ற நிலை தான் இத்தொடரில் வந்துள்ள ஞான வளர்ப்பு நிலை வளர்ச்சி தொடர் அலையே இப்பூமி வெளிக்கக்கும் அமில வளர்ப்பின் நிலைக்கொப்பத்தான் ஞானமும் வளர்கின்றது இன்றளவும்.

இந்த ஞானத்தின் செயல் முறை வழித் தன்மையே ஆதிசங்கரரின் காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து அவரின் காலம் வரைக்கும் ஞான சக்தி வளர்ச்சியின் பாதையில் இருந்தது.

அவருக்குப் பிந்தைய காலத்தில்…
1.அரசர்களின் போற்றலின் பேராசை உணர்வு நிலை அதிகப்பட்டு விட்டதாலும்
2.மனித இன (மக்கள் தொகை) வளர்ச்சிப் பெருக்க நிலையினாலும்
3.மனிதனின் எண்ண ஈர்ப்பே இப்பேராசை உணர்வில் சிக்கி
4.அரசர்கள் ஆண்ட கால உணர்வில் அவர்களின் ஆதிக்க ஈர்ப்புப் பிடிப்பில் சிக்கிய தொடர்பலை வளர்ப்பாக
5.ஒன்றின் தொடர் கொண்ட தொடர் வட்டச் சுழற்சியில் சுழன்று வருகின்றது இன்றளவும்.

அரசர்களின் காலத்தில் தான் இப்பக்தி வழி முறை அதிகமாக வளர்ந்தது.

அதுவுமல்லாமல் இவ்வரசர்களினால் சில அலைத் தொடர்களைச் சில சக்தி வாய்ந்த பக்தி கொண்ட தெய்வ குண சித்து நிலை கொண்ட அலைத் தொடர்புடைய தெய்வ ஆவி அலைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்.

தன் ஆதிக்க அரசு வாழ பிற அரசர்களின் போர்த் தொடர்புகளுக்கு இவ்வாவி அலை தெய்வ குணச் சக்திகளை இவர்களின் பூஜாபலனால் உருவேற்றிக் கொண்டார்கள்,

விக்கிரமாதித்தன் காலத்திலும் அசோக சக்கரவர்த்தி காலத்திலும் அதைப் போன்றே வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்திலும் பல அரசர்களும் இப்பூஜை வழிபாட்டுச் சித்து முறை பெற்று ஆவிகளின் தெய்வ குண தேவதைகளின் தாய் சக்தியை வணங்கி வந்தார்கள்.
1.அவர்கள் நாட்டை அரசாண்ட காலத்தில்
2.அரசர்களின் வலுவுக்கு வலுவாக இச்சக்திகள் தான் ஆண்டன.

புராண இதிகாச நூல்களில் சித்தர்கள் பால் தொடர் கொண்ட காவியங்களில் எல்லாம் ஆண் பெண் குண சக்தியின் தொடர்பில் உணர்த்தித்தான் உண்மை நிலைகளை எல்லாம் காட்டினார்கள்.

சிவ சக்தி… விநாயகன்… முருகன்… விஷ்ணு… என்றும் நாரதர் என்றும் ஆணின் தொடர்பு முறையை வலியுறுத்திய தெய்வ குணங்களாக இராமரையும் கிருஷ்ணரையும் ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இராமரின் குண சக்தியையே பல ரூப அலை ஞான செயல் குண இராமனாக உணர்த்தினார்கள்.

சீதாராமன்… பலராமன்… பரசுராமன்… இப்படிக் கால மாற்றத்தின் குண நிலை வளர்ப்பு அமில எண்ணத்திற்குகந்த செயல் உருவ வளர்ப்பிற்கு அந்தந்தக் காலங்களின் வீரியத் தன்மைக்குகந்த நாமகரணங்களைச் சூட்டி ஆண் குண அமிலத் தன்மைக்குகந்த தெய்வச் செயலைத்தான் “சப்தரிஷிகளின் சித்தர்களின் காலங்கள்” உணர்த்தின.

“அரசர்கள் காலத்தில்” வணங்கிய தெய்வங்கள் யாவையுமே பெண் சக்தியான காளி மாதா… என்றும் அதன் தொடர்புடைய ரூபத்தில் பராசக்தி… என்றும் ஜக்கம்மா… என்ற தாய் சக்தியும் உஜ்ஜயினி காளி சக்தியும்… சௌண்டம்மனின்.. தொடர்பும் இத்தொடரால் வந்தவை தாம்.

1.மனித சக்தியின் தெய்வ சக்தி பெற்ற
2.சித்து நிலை கொண்ட தாய் குணத்தின் பூஜிப்பின் அலைத் தொடர் வசச் செயலினால் தான்
3.அரசர்கள் பலர் அத்தொடர்பினால் தன் வலுவுக்கு வலு கூட்டிக் கொண்டு அரசர்களின் காலம் நடந்தது.

அந்தத் தொடர்பின் வழி முறையில் தான் “இக்கலியே நடக்கின்றது…!”

வாழ்க்கை வேதனையாகவே இருக்கிறது என்று சொன்னாலும் உடலுக்குப் பின் எங்கே செல்வோம் என்பதை அறிந்திருக்கின்றோமா…!

வாழ்க்கை வேதனையாகவே இருக்கிறது என்று சொன்னாலும் உடலுக்குப் பின் எங்கே செல்வோம் என்பதை அறிந்திருக்கின்றோமா…!

 

உதாரணமாக… வேதனைப்படுகிறார் என்று ஒருவர் மேல் எண்ணம் கொண்டு “அவரைக் காத்திட வேண்டும்…” என்ற எண்ணங்களைச் செலுத்துகின்றோம்.

ஆனால் அதை அதிகமாகச் சுவாசித்து நமக்குள் வளர்த்தாலே
1.அந்த உடலை விட்டு உயிராத்மா சென்றபின் அவருடைய மணமே நமக்குள் வந்து
2.அவர் இறந்தபின் உயிரான்மா நமக்குள் வந்துவிடும்.

எந்த நோயைத் தனக்குள் விளைய வைத்தாரோ… அதே உணர்வு… அதே புலம்பல்… அதே செயல்… என்று நமக்குள்ளும் வந்துவிடும்.

அவருடைய எண்ணமும் நம்முடைய எண்ணமும் ஒன்றான பின் நமக்குள்ளும் அவர் வளர்த்த அதே நஞ்சினை ஊட்டி இங்கிருந்து உணவாக உட்கொண்டு நம்மையும் வீழ்த்தி விட்டு அந்த உயிரான்மா வெளியே சென்று விடும்.

தன் உடலில் எத்தனை வேதனைப்பட்டதோ அடுத்த உடலிலும் எத்தனை வேதனைப்படுத்தியதோ அந்த வேதனை அதிகமான பின் மனிதனுடைய எண்ண அலைகளே வராது… நஞ்சு கொண்ட எண்ணம் தான் அந்த உயிரான்மாவில் இருக்கும்.

அந்த நஞ்சு உயிருடன் சேர்ந்து வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைத் தான்
1.”உன் நிழல் உன்னுடனே தான் இருக்கும்…” என்று நமது சான்றோர்கள் அன்று சொன்னார்கள்
2.இந்த உயிர் உடலில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் நிழல்
3.அதில் எத்தனை வேதனைப்பட்டதோ அந்த வேதனையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்

தேள் பாம்பினங்கள் இவை அனைத்தும் நஞ்சினை ரசித்துச் சாப்பிடும் உயிரினங்கள் தான். எந்த இரையைப் பிடித்தாலும் அதற்குள் தன் நஞ்சினைப் பாய்ச்சி அதை உணவாக எடுத்துத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி கொண்டவைகள் தான்.

நஞ்சின் வலு கொண்டு அது ஊர்ந்து சென்றாலும் வேதனை அறியாத உடலாகத் தான் அவை பெறுகின்றது.

கட்டுவிரியனுக்கு ஒரு விஷம்… நல்ல பாம்பிற்கு ஒரு விஷம்… கண்ணாடி வீரியனுக்கு ஒரு விஷம்…! இப்படித் தரையிலே ஊர்ந்து செல்லும் பிராணிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விஷம் உண்டு.

அதைப் போல்
1.மனித உடலில் எத்தனை வேதனைகளை எடுத்துக் கொண்டோமோ
2.எத்தகைய விஷத்தை நமக்குள் ஏற்றுக் கொண்டோமோ
3.அது எல்லாம் நாம் உடலில் கலந்து நம் உணர்வுகளில் கலந்து நோயாகிறது.

நோயின் உணர்வுகள் விளைந்து உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றபின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் விஷத்தின் தன்மையை அங்கே பரப்பி அதையே உணவாக எடுத்து அந்த உடலையும் வீழ்த்திவிடும்.

உதாரணமாக நாம் செய்யும் பலகாரத்தில் சிறிதளவு விஷம் பட்டால் சாப்பிட்டால் மயக்கம் வருகின்றது. அதிகமான விஷம் பட்டு விட்டால் சாப்பிட்டவர் நினைவையே இழக்கச் செய்து விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனுக்குள் விளைந்த நஞ்சின் தன்மை மனித உருப் பெறச் செய்யும் நல்ல உணரவுகள் அனைத்தையும் அடக்கிவிடுகிறது.

இத்தகைய உயிரான்மா வெளியே வந்தபின் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு வேதனையை அனுபவித்துக் கொண்டே தான் இருக்க முடியும்.

1.கடைசியில் நஞ்சினை ரசித்துச் சாப்பிடும் உடல்களின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகவோ தேளாகவோ அது வாழும்.
2.மனித வாழ் நாளில் பெற்ற விஷத் தன்மை அங்கே சென்று தான் அடங்கும்.

அந்த உடலிலிருக்கும் போது ஒரு மனிதன் அடித்துக் கொன்றான் என்றால் மீண்டும் மனித உரு பெறும் வாய்ப்பு கிடைக்கும். அது அல்லாது பருந்தோ கோழியோ மற்ற பிராணிகள் உட்கொண்டால் அந்த உடலாகத் தான் பிறக்கும். மனித உடல் பெற முடியாது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

உடலை விட்டுப் பிரிந்தவரின் உணர்வு தான் பெரும் பகுதி எல்லோரையும் இயக்கிக் கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

உடலை விட்டுப் பிரிந்தவரின் உணர்வு தான் பெரும் பகுதி எல்லோரையும் இயக்கிக் கொண்டுள்ளது – ஈஸ்வரபட்டர்

 

பெரியோர்களின் வாக்குப்படி மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற சொல் கூற்று உள்ளது… அதன் தொடர் யாவை…?
1.பேயைப் பார்க்க முடியுமா…?
2.பிசாசு உண்டா…?
3.இரத்தக் காட்டேரிகள் வாழ்கின்றனவா..? என்பது யாவையும் உண்மைதான்.

தற்கொலை செய்து கொண்ட ஆவேச அலை உணர்வுடன் ஜீவன் பிரிந்த ஆவி உலக உயிர் ஆத்மாக்கள் சில இல்லங்களிலும் அவை வாழ்ந்த பழக்கப்பட்ட இடங்களிலும் அதன் எண்ண ஆசையைச் செயல்படுத்த வேண்டியவர்களின் தொடர் வட்டமுடன் இந்தக் காற்றலையின் சுழற்சியில் சுழன்று கொண்டே இருக்கும்.

அத்தகைய ஆவி உலக ஆத்ம உயிரின் அமிலக்கூறானது உள்ள இடங்களுக்கு சரீர ஜீவ பிம்ப உடல் கொண்ட எண்ண உணர்வுடைய மனிதன் பயம் கலந்த அச்ச நிலையுடன் பல உணர்வுகளில் செல்லும் பொழுது
1.ஆவி உலக ஆத்மாவின் அலைத் தொடரும்
2.சரீர பிம்ப உடலின் அலைத் தொடரும்
3.இவ் ஈர்ப்பலையில் மோதும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில்
4.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு நிலை பெற்ற எண்ண உணர்வுடன் அவ்வெண்ணம் மோதியவுடன்
5.இக்காந்த ஈர்ப்புக் குண மின் அலைத் தொடர்பு கொண்ட இச் சரீர கோள நிலையுடன் மோதியவுடனே
6.எந்தப் பயமுடன் இந்த ஆத்மா சென்றதோ
7.அந்தத் தொடர் அலைக்குகந்த எண்ண குண ஆவி ஆத்மாவின் அமிலக் கூற்றை
8.நிழல் படம் போல் இவ்வொலி நாத் சக்தி கொண்ட சரீர சுவாச மோதல் அதன் அலை மேல் பாய்ந்தவுடன்
9.அது பேசிய நாதத்தையும் (வாழ்ந்த காலத்தில்) அதன் நிழல் உருவை மனிதனால் பார்க்க முடியும். (இன்று காணும் ஒளிக்காட்சி ஒலி அலையைப் போல்)

இதைப் போன்ற தொடர் அலையில் இருந்தெல்லாம் மனித உணர்வுப் பிடி சிக்காவண்ணம் தன் ஆத்ம வலுவை… ஞான ஈர்ப்பு வழித் தொடர்பு கொண்ட “மகரிஷிகளின் தொடர் அலையுடன்…” வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய வலுக் கொண்ட ஜீவத் துடிப்பு ஆத்ம நிலை பெற்று விட்டால் நம் எண்ணமே நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.

எண்ணத் தொடர் அலையின் செயல் இல்லா நிலை (மனிதனுக்குள்) ஒரு நொடிப் பொழுதும் இல்லை.

நித்திரை உணர்வுகளிலும்… இச்சரீரச் செயல் நடைபெறும் வழித் தொடரில்… சுவாசமுடன் கூடிய உணர்வு எண்ண அலை ஈர்ப்பில் தொடர் கொண்ட நிலையுடன் தான் எண்ணச் சுழற்சி கொண்ட இயந்திரக் கோளமாக இந்த உடல் உள்ளது.

பிரபஞ்சத்தில் மற்ற கோளங்கள் எல்லாம் எப்படி நிற்காமல் ஓடிக் கொண்டே உள்ளனவோ அதைப் போன்றே
1.ஓடிக் கொண்டே உள்ள இவ்வெண்ண உணர்வு வளர்ப்பு நிலை
2.ஜீவ சக்தி கொண்ட மனித உடலுக்குத்தான் உண்டு.

ஆவி உலக ஆத்மாக்களின் எண்ண ஓட்டத்தின் வலு எப்படி உள்ளது…?

இன்று நாம் எப்படி சில ஒலிப் பதிவுகளை நாடாக்களில் பதிய வைத்து ஒலி பரப்புகின்றோமோ… அதைப் போன்று அவை சரீரக் கூறுடன் வாழ்ந்த காலத்தில்… தன் ஆத்மாவில் பதிய வைத்த அலைத் தொடர் நாதச் சேர்க்கையுடன் தான்… அதே தொடர்பு சுழற்சியுடன் அதே சுற்றலில் சுற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிலையில்… வளர் நிலை கொண்ட எண்ண சரீர உணர்வு இயந்திர மின் அலைத் தொடர்பு அவ்வலைத் தொடர்புடன் பொருந்தும் பொழுது தான் இவ் இயந்திரக் கோளப் பெட்டியின் (மனித உடல்) செயலைக் கொண்டு அதன் நிலை பெறுகின்றது.

இவ்வாவிகளின் சுழற்சி வலுக் கூடி அதன் தொடர்பு விட்ட செயலாகச் செயல் கொண்டுள்ள வழித் தொடர் ஜீவ ஆத்மாக்கள் தான் “இன்று பிறப்பில் வரும் ஆத்மாக்களின் தொடர் அலையே உள்ளது…!”

1.தன் ஞானத்தை வளர்த்து சித்து நிலை கொண்ட ஆத்மாக்களின் நற்சக்தியின் தொடர் அலையை அறியாவண்ணம்
2.பல வலுக் கொண்ட வெறி கொண்ட பக்தி இயக்க ஆத்மாக்களின் தொடர்பு தான் இன்று வலுவாகியுள்ளது.

சரஸ்வதி இலட்சுமி பராசக்தி என்ற மூன்று தெய்வங்களையும் வணங்கச் சொல்வதற்குக் காரணம் என்ன…?

சரஸ்வதி இலட்சுமி பராசக்தி என்ற மூன்று தெய்வங்களையும் வணங்கச் சொல்வதற்குக் காரணம் என்ன…?

 

காந்தம் வெப்பம் மணம் இந்த மூன்றும் சேர்ந்துதான் ஒரு அணுவாக அதனின் இயக்கமாக இருக்கிறது என்பதனை அதை நாம் அறிந்து கொள்வதற்காகத் தான் காரணப் பெயர் அவ்வாறு வைத்திருக்கிறார்கள்.

நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகிறேன் என்றால் மைக் என்றும் ஆம்ப்ளிபையர் என்றும் ஸ்பீக்கர் என்றும் சொல்வது போன்று ஞானிகள் அணுவிற்குள் இயங்கும் ஆற்றலுக்கு அவ்வாறு பெயர் வைத்திருக்கிறார்கள்.

நம் உயிரின் இயக்கத்தால் துடிப்பின் நிலை வரும் பொழுது அந்தத் துடிப்பின் இயக்கத்திற்குப் பெயர் ஈசன்.

சூரியன் பல விஷத்தன்மையான நிலைகளால் தாக்கப்படும்போது அதனின் சுழற்சியின் வேகம் அதிகமாகி வெப்பமாகி… அந்த வெப்பத்தால் அதில் கலந்துள்ள விஷத்தின் தன்மையை வெளியே பிரித்து விடுகின்றது.

அதிலிருந்து வந்த பல நிலைகள் சேர்ந்து ஒரு உயிரணுவாக உண்டாகின்றது. சாதாரண அணுக்கள் சூரியனிலிருந்து வெளிப்படும் போது வெப்பம் காந்தமாக வெளிப்படுகின்றது.

அந்த வெப்ப காந்த அணுக்கள் வெளியேறும் பொழுது சூரியனைச் சுற்றி வெளியே இருக்கக்கூடிய அல்ட்ரா வயலட் என்ற விஷத்தை காந்தம் இழுத்து வெளிவரும் பொழுது மூன்று நிலையாக மாறுகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் என்ற மூன்று இயக்கச் சக்தியாக மூன்று நிலைகள் கொண்டு இயங்குகிறது.
1.வெப்பம் உருவாக்கக்கூடிய சக்தியாக இருக்கிறது
2.காந்தம் எதனையும் தனக்குள் எடுத்து இணைத்துக் கொள்ளக் கூடிய திறன் கொண்டது
3.தேள் கொட்டினால் நாம் எப்படித் துடிக்கின்றோமோ அதே மாதிரி விஷம் என்பது ஒரு இயக்கச் சக்தியாக இருக்கின்றது.

வெப்பத்துடன் அது இணையப்படும் பொழுது மூன்று நிலையான இயக்கச் சக்தியாக மாறுகின்றது. சூரியனை விட்டு வெளி வரப்படும் பொழுது மூன்று நிலைகளில் இப்படித் தான் வெளிப்படுகின்றது.

அதே போல் ஒரு உயிரணுவும் சூரியனை விட்டு வெளிவரும் பொழுது இந்த மூன்று நிலை கொண்ட ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

1.ஞானம் (மணம்) என்பது இயக்கச் சக்தியாகவும் – சரஸ்வதி
2.அது எந்த மணமோ அதனை ஈர்க்கப்படும் போது காந்தம் வளர்க்கும் சக்தியாகவும் – இலட்சுமி
3.ஈர்த்துத் தனக்குள் மோதியவுடன் வெப்பமாகி உருவாக்கும் சக்தியாகவும் – பராசக்தியாகவும்
4.இந்த மூன்று சக்திகளும் இயங்குகிறது.

பூமிக்குள் விஜயம் செய்யும் ஒவ்வொரு உயிரணுவிலும் இந்த மூன்று நிலைகள் கொண்ட இயக்கம் இருப்பதால் தான் பல கோடித் தாவர இனச் சத்துக்களை எடுத்து எடுத்துப் பல உடல்கள் மாறி இன்று நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது.

1.ஒன்பதாவது நிலையான நவராத்திரியாக இருக்கும் மனிதர்கள் நாம்
2.பத்தாவது நிலையான தசமி என்ற அழியா ஒளிச் சரீரம் எப்படிப் பெற வேண்டும்…?
3.அதைப் பெறுவதற்கு ஞானிகள் உணர்வை எடுத்து எப்படி நமக்குள் அதை வளர்க்க வேண்டும்…? என்று
4.நாம் உணர்ந்து கொள்வதற்குத் தான் வியாசர் இதைக் காட்டியுள்ளார்.

ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் முக்கியமான நோக்கம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் முக்கியமான நோக்கம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

உயிரணுவாகத் தோன்றிய பின் அவ்வுயிரணுவின் வளர்ப்பு முலாம் ஒவ்வொரு செயலிலும் வளர்ப்பு செயல் மோதுண்டு மோதுண்டு… அவ்வுயிரணுவின் மோதலின் வளர்ப்பு வலுக் கொண்டு… ஆத்ம நிலை பெறும் நிலையை முந்தைய பாடத்தில் உணர்த்தினேன்.

உயிரின் ஆத்ம நிலைக்கு எப்படி அதன் உராய்வுத் தன்மையால் வலுக் கூடுகின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு தென்னை மரத்தின் பலனாக அதன் உச்சியிலே பல காய்கள் வருகின்றது.
1.அந்தக் காய்களில் இளநீர் வளர்ந்து
2.அந்த நீரானது அதன் உஷ்ண அலையில் அம்மட்டையில் உள் பாகத்தில் உராய்ந்து
3.வேடு கட்டி… வேடு கட்டி… நீரின் நிலை சுண்டி… பருப்பு வளர்ந்து… பின் முற்றி…
4.அதன் பலனான எண்ணை வித்தை வளர்க்கின்றது

தென்னை மரத்தின் வேர் நிலையிலிருந்து அது சத்து எடுப்பதில்லை.

மேல் நோக்கிய சுவாசம் கொண்டு தாவர இனத்தின் ஈர்ப்பு நிலையில் மோதலில் ஒளி பட்டு அது ஈர்த்துக் கீழிருந்து மேல் வளரும் வளர்ப்பின் பலனின் தன்மையில் பல வித்துக்களைத் தென்னை மரம் வளர்த்துக் கொள்கிறது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு வளர்ப்பின் வித்தின் தொடர் வளர்ப்பும். அதாவது ஒரு அணு வளர்ச்சியின் முலாம் ஒன்றில் மோதி வலுக்கொண்ட தன்மை பெறுவது போன்றே
1.இந்த மனித ஆத்ம உயிரின் வளர்ப்பு நிலையின் வலுவை
2.இவ்வாத்மா சேமித்துக் கொள்கின்றது.

சேமித்த வலுவின் தன்மை எத்தகையது…?

1.நீரில் மிதக்கும் மரங்களைப் போன்ற வலுக் கொண்ட நிலையை
2.இந்த ஆத்ம உயிர் பெற்றதென்றால்
3.எவ்வீர்ப்பின் பிடிக்கும் சிக்காமல்
4.இச்சரீர பிம்பமே காந்த மின அலை ஒளி சக்தி பூண்ட உயர்வு நிலை கொண்ட ஆத்மாவாகலாம்.

அன்றைய சித்தர்களும் சப்தரிஷிகளும் தன் சரீர பிம்பத்தையே இந்நிலைக்குகந்த வளர் நிலைக்கு உட்படுத்தித்தான் தன் வளர்ப்பின் வளர் நிலையைப் பெற்றார்கள்.

நல் வழியின் ஒளி நிலை கொண்ட உயர் ஆத்ம வழித் தொடர் பெறாத நிலையில் பல எண்ண நிலையுடன் வாழக்கூடிய தன்மையில் பிரிந்து சென்ற ஆன்மக்கள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள இக்காற்றலையில் படர்ந்தே உள்ளது.

அத்தகைய பல எண்ணங்கள் கொண்ட ஆத்மாக்கள் அதற்குகந்த அதன் செயலைச் செய்விக்க அதற்குச் சொல்லாற்றலும் செயல் திறமையும் இல்லாத தன்மையில் அதன் எண்ண ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உடலுடன் வாழும் மனித உடலில் சாடுகிறது.

1.அப்படிச் சாடும் பொழுது தான் சிலருக்கு வாதத் தன்மையும் இதன் தொடர்பு கொண்ட சில வியாதிகளும்
2.அந்த அலைகள் உடல் மேல் பாய்ந்தவுடன் அதன் தன்மையை உடல் ஏற்காத பட்சத்தில்
3.எந்த இடத்தில் எவ்வலை சாடியதோ அவ்விடத்தில் வளரும் அணு வளர்ச்சி குன்றி
4.பாய்ந்த பிற ஆன்மாவின் குணத் தன்மைக்குகந்த அணுவை வளர்ப்பதனால்
5.அந்த வளர்ப்பின் வலுவை உடலுக்குகந்த ஆத்மா ஏற்காத பொழுது
6.உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானது அவ்விடங்களுக்குத் தன் அலையை அனுப்ப முடியாதததனால்
7.அந்த இடங்களில் உள்ள உறுப்புகள் செயலிழந்த நிலை ஆகின்றது

இளம்பிள்ளை வாதங்களில் செயலற்ற தன்மையிருந்தாலும் அங்கங்களின் நரம்பு மண்டலத்தில் உதிர ஓட்டங்களும்… துடிப்பு நிலையும் உள்ளது.

உதிர ஓட்டம் இல்லாவிட்டால் உடல் அழுகிய தன்மையல்லவா பெற்றிருக்கும். உடல் முழுமைக்கும் தொடர்பு கொண்டல்லவா அச்செயல் இருக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் பாய்ந்த மாறு கொண்ட அணு வளர்ப்பின் நிலையினால் இவ்வாதத் தன்மை கொண்ட வியாதியின் வளர்ப்புகள் வளர்ந்துள்ளன.

சமமான வாழ்க்கையற்றவர்களின் வாழ்க்கையில் எல்லாம்… அவரவர்களின் குண நிலைக்குகந்த சுவாசத்தால்… அதற்குகந்த பலனான தொடர் அலை செயலைத்தான்… இந்தக் காற்று மண்டல ஈர்ப்பிலிருந்தும் பெற முடியும்.

அதாவது காற்றில் கலந்துள்ள ஆத்மாக்களுக்கு நாம் தரும் இடத்திற்குகந்த வலுவாகத்தான் நம் சரீர பிம்பத்தின் ஆரோக்கிய நிலையே வளர்கின்றது.

1.எதனையும் செயலாக்கக்கூடிய எண்ண சக்தியின் வலுவைக் கொண்ட மனித ஆத்மாக்கள்
2.ஆவி உலக ஆத்மப் பிடியில் தான் இன்றைய காலத்தில் சிக்கியுள்ளது (இது தான் உண்மை)
3.அதிலிருந்து மீளும் நிலையில்லாத செயலாகத் தான் தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்த ஆவி உலக ஆத்மாக்களின் பிடியிலிருந்து விடுபடத்தான் ஆத்ம சுத்தி பயிற்சியே கொடுக்கின்றோம்.. இந்தப் பாட நிலைகள் அனைத்துமே அதற்குத்தான்…!

இருதய வாயில் என்பது என்ன…?

இருதய வாயில் என்பது என்ன…?

 

விஷ்ணு நரசிம்ம அவதாரமாக எடுத்து இரண்யனை மடி மீது வைத்து அவனைப் பிளந்தான் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்..
1.விஷ்ணு என்பது நம் உயிர்
2.மடி என்பது நம் இருதயம்
3.இரண்யன் என்பது தீமை செய்யும் உணர்வுகள்.

இருதய வாயிலில் இருக்கும் “மேக்னட்…” புறத்தால் ஒரு பொருளைப் பார்க்கப்படும் போது அவர்கள் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வலைகளை இழுத்து அலையாகக் குவிக்கும் இடம் அது.

அது தான் மடியாகின்றது.

இங்கே தேங்கி நிற்கும் நிலைகளில் கெட்டவரின் நினைவுகளை எடுத்து இங்கிருந்து மறுபடியும் சுவாசித்து உயிரிலே பட்ட பின் எதுவோ அது இயக்குகின்றது.

ஒரு நாடாவிலே எதைப் பதிவு செய்கின்றோமோ அதை மீண்டும் ஓட்டப்படும் போது அந்த நாடாவில் உள்ளதைத்தான் ரேடியோவோ மற்ற இயந்திரங்களோ பேசுகின்றது. ட்ரான்சிஸ்டர் அந்த அலைகளை எடுத்துக் கொடுக்கின்றது.

இதைப் போல்
1.கூர்ந்து பார்க்கும் போது நம் கண்கள் அதை எடுத்து
2.அந்த உணர்வின் அலைகளை நமக்குள் அலைகளாகக் குவித்துக் கொடுப்பதைச் சுவாசித்து
3.அந்த அலைகளுக்குள் இருக்கும் உணர்வைத் தான் சொல்லாகவும் செயலாகவும் அது நம்மைப் பேசச் செய்கிறது.

ஆகவே இந்த உணர்வின் சக்தியை நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தான் என்றால் நம் உயிர் இங்கே நரசிம்மனாக மாறி அதன் வழியில் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்று காவியங்களில் காட்டப்பட்டது.

ஒருவன் கெடுதல் செய்கிறான் என்று எண்ணும் போது அந்த உணர்வின் சக்தியை நாம் எடுத்து அவர்களைக் கவரப்படும் போது அந்த உடலிலிருந்து வந்த எண்ணங்கள் எல்லாம் நமக்குள் தெரிகின்றது.

அந்த உணர்வு நமக்குள் இயக்கி அவனை உதைக்க வேண்டும் என்று சொல்கிறது.
1.அதே உணர்வு என் உடலுக்குள் சென்றவுடனே என் நல்ல குணத்துடன் சண்டையிடுகின்றது.
2.நீ இரு நான் பார்த்துக் கொள்கிறேன்… என்று.

என் உடலுக்குள் நல்ல குணங்களுடன் கலந்தவுடனே நீ இரு… நான் பார்த்துக் கொள்கிறேன்..! என்று சொல்லப்படும் போது நல்ல குணங்கள் இந்த உணர்வைத் தாங்காது
1.மேல் வலிக்கிறது தலை வலிக்கிறது
2.கை குடைகிறது கால் குடைகிறது
3.நெஞ்சு வலிக்கிறது இரத்தக் கொதிப்பு வருகிறது வாத நோய் வருகிறது என்று
4.சீராக இயக்கக்கூடிய நிலைகள் அனைத்தையுமே நிறுத்தி விடுகின்றது.

இதை மாற்றுவதற்குத் தான் நரசிம்மா…!

கெடுதல் செய்தவர்களை எண்ணும் போது என்னை அந்தத் தீமை எப்படி இயக்குகிறதோ அதைத் துடைப்பதற்குத் துடைத்துப் பழகிய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் மனித உடலில் உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டான்.

துருவத்தை அறிந்தான்… துருவத்தை அடைந்தான்… துருவத்தின் உணர்வைத் தனக்குள் சேர்த்தான்… துருவ மகரிஷியானான். சிருஷ்டிக்கும் நிலை பெற்றான்… அந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் ஒளியாக உள்ளான்…!

அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் ஏழாவது அறிவு கொண்டு சப்தரிஷிகளாக ஒளியாக மாறிச் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

அந்த அருள் சக்திகளைப் பெற்றால் நரசிம்மா..! தீமைகளை நீக்கி விட்டு ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். இந்த உடலிலிருந்து தான் அதை நாம் பெற வேண்டும்.

உடலைப் பற்றியும்… ஆத்மாவின் இயக்கத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

உடலைப் பற்றியும்… ஆத்மாவின் இயக்கத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

மனிதன் எடுக்கும் குண நிலையில்…. அவன் எண்ண உணர்வில் சமைக்கப்பட்ட ஆவியின் வலு தான்
1.ஆத்மாவின் உராய்வுக் கவசமாக உராய்ந்து உராய்ந்து
2.அதன் வலுத் தன்மையைக் காந்த ஈர்ப்பு வளர்ப்பாக
3.இந்தப் பிம்ப உடலின் அச்சான எலும்புகளின் வளர்ப்பின் உராய்வு வலுக்கூடி ஆத்மாவின் வலுவும் வளருகின்றது.

இந்தப் பிம்ப உடலின் நிலை கொண்டு பல செயல்களைச் செயல்படுத்த முடியும். பல கோடி ரூபத்தில் வளர்ப்பின் வளர்ப்பாக… பல கோடி மண்டலங்களை வளர்க்கக்கூடிய… “வளர் நிலைக்குகந்த வலுவான வித்துத்தான் இந்தப் பிம்ப உடல்….!”

சப்தரிஷிகளின் செயலை வளர்க்கவும் இவ்வொளி நாதச் செயல் கொண்ட… “ஜீவத் துடிப்பு உள்ள எண்ணத்தின் சரீரத்தினால் தான்” முடிகின்றது.
1.பல கோடிச் சக்திகளை உருவாக்கும் சப்தரிஷிகளே…
2.இப்பிம்ப உடலின் தொடர்பு கொண்டு தன் வலுவை வளர்க்கின்றார்கள்.

அதனின் உண்மைப் பொருள் தான் நாம் இன்றளவு காணும் இயேசு கிறிஸ்து ஐயப்பன் முகமது நபி ஆதிசங்கரர் போன்ற தெய்வீக வளர் நிலையின் உண்மைத் தன்மை கொண்டவர்கள்.

ஆகவே…
1.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு ஆத்மாவினால் தான்
2.இச்சரீரம் சமைக்கும் உணர்வின் வலுவைக் கொண்டு
3.பல வலுவான வளர்ப்பின் வளர்ப்பாக இச்சரீரக் கூட்டின் தொடருடன் வளர்க்கலாம் என்ற
4.இச்சரீர பிம்பத்தின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

ஜீவன் பிரிந்த ஆத்ம உயிருக்குத் துடிப்பு நிலையும் நாத ஒலி வெளிப்படுத்தும் ஜீவத் தொடர்பும் இல்லாததனால் அதன் எண்ணத்தின் ஈர்ப்பைத் தன் எண்ண அலைக்குகந்த ஆத்ம உடலில் ஈர்க்கப்பட்டு தன் ஆத்மாவின் உயிரையே தன் குண நிலைக்கொத்த உணர்வு நிலை கொண்ட ஜீவ சரீர ஈர்ப்பிற்கு (தாய் உடலில்) வந்து பிறப்பெடுக்கும் ஆத்மாவும் உண்டு.

ஆனால் இப்படி
1.இயல்பாகப் பிறப்பிற்கு வரும் ஆத்மாவிற்கு மேல்
2.வலுவான எண்ண வேட்கை கொண்ட ஆத்ம உயிர் பிற உடலுடன் உள்ள ஆத்மாவின் மேல் படரும் பொழுது
3.அதனின் வலுவுக்கு மேல் வலுவான ஆத்மாக இது செயல்பட்டு
4.அதனால் சிலருக்குப் புத்தி பேதலித்த நிலையும்
5.சிலருக்குக் கொடூர எண்ணங்களின் வெறி நிலை கொண்ட குண நிலையும் அமைகின்றது.

இந்தக் குண நலத்தின் எண்ண மாற்ற உணர்வினால் சில அலைத் தொடர்புகளின் ஆத்ம உணர்வின் ஈர்ப்பினால் மனிதன் தன் நிலையையே மறக்கின்றான்.

பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்தது…! என்றெல்லாம் இதைத்தான் சொல்வது…!

தியானம் என்பது… உட்கார்ந்து தியானிப்பது மட்டும் தியானமல்ல. வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்… எப்படி…?

தியானம் என்பது… உட்கார்ந்து தியானிப்பது மட்டும் தியானமல்ல. வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்… எப்படி…?

 

நமக்குள் பெற்ற சக்தியின் தன்மையை நமது நண்பர்களோ மற்றவர்களோ நம்மை அணுகி தொழில் செய்யும் நிலைகள் வரப்படும் பொழுது “நாங்கள் பெற்ற சக்தி அவர்கள் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தை எடுங்கள்.

உதாரணமாக… ஒரு கஷ்டமோ நஷ்டமோ அவர்கள் படுகின்றார்களென்றால் அப்பொழுது நம்மை அணுகி வருவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் கற்றுணர்ந்த உணர்வை உபதேசமாகச் சொல்லுங்கள்.
1.அப்பொழுது நீங்கள் அதை தியானிக்கின்றீர்கள்
2.அருள் ஒளியை அவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஏனென்றால் அவருடைய கஷ்டத்தையோ துன்பத்தையோ உங்களுக்குள் பதிவாகாதபடி
1.அருள் ஞானத்தின் சக்தியை அவர்களுக்குக் கொடுத்து
2.நீங்கள் இதைச் செய்யுங்கள்… நலமாக இருப்பீர்கள் என்று
3.இந்த அருளைப் பெறவதற்குண்டான வழியைச் சொல்லுங்கள்.

இதைப் படிப்போர் ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு உங்களுக்குள் கண்டுணர்ந்த இந்த நல் உணர்வின் தன்மை கொண்டு ஒருவருக்கொருவர் இதைப் பரிமாற்றம் செய்து எல்லோரையும் வளர்ச்சி பெறச் செய்யுங்கள்.

இந்த வாழ்க்கையையே… “துன்பங்கள் நுகராது… அருள் வழியின் உணர்வை நுகரச் செய்யும் பண்பாக உருவாக்குங்கள்…!”

நாம் நண்பர்களுடன் பழகும்போது அவர்களின் துன்பத்தைப் பற்றிக் கேட்டுணர்ந்தாலும் அதைப் பக்குவமாக்கிட வேண்டும். இப்பொழுது இருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் “இப்படியெல்லாம் பேசுகின்றார்கள் நியாயமா…?” என்று நம்மிடம் சொல்ல வருவார்கள்.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் சண்டை போடுபவர்களிடம் சென்று… கட்டாயப்படுத்தி அந்த நல்லதைச் சொல்லப் போனால் அதற்கு எதிர்ப்பு உணர்வுகள் தான் வரும்.

இப்படிச் சொல்கின்றார்கள் என்று நண்பர் உங்களிடம் அணுகி வரப்படும் பொழுது இந்தத் தத்துவத்தை அந்த நண்பருக்குச் சொல்லுங்கள்.

1.அவருடைய உணர்வை உங்களுக்குள் வளர்க்க வேண்டாம்.
2.எதிரியை உங்களுக்குள் ஒதுங்கிச் செல்ல வழி விடுங்கள்.
3.எதிர்த்துக் கொண்டே இருந்தால் அது உங்கள் நல்ல செயலை எல்லாம் குறைத்துவிடும்…! என்று
4.நண்பரிடம் தெளிவாக இதை எல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.

சண்டை போட்டவர் உடலில் விளைந்த தீமையை உங்கள் உடலில் விளையாதபடி தடுக்க
1.“மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்…” என்று எண்ணுங்கள்.
2.உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்று எண்ணுங்கள்
3.இந்த எண்ணங்களை நீங்கள் ஒரு பாதுகாப்புக் கவசமாக வளர்த்துக் கொள்ளுங்கள்…! என்று உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்.

இதை எல்லாம் அவர் கடைப்பிடிக்க நேர்ந்தால் அவர்களது எதிரியின் உணர்வுகள்… “இந்த எதிரியான அணுக்கள்” நண்பர் உடலுக்குள் விளையாதபடி தடுக்க இது உதவும்.

அதே சமயத்தில் நண்பர் மூலமாகக் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம்முள்ளும் வளராது தடுக்கப்படுகிறது. நண்பருக்குச் சொல்லும் நிலையில் அந்த அருள் ஞானத்தை நாம் நினைத்துச் சுவாசிக்கும் பொழுது இதுவே நமக்குத் தியானமாகி விடுகின்றது.
1.பிறருக்கு நாம் எடுத்துச் சொல்லும் பொழுது
2.நம் நினைவுகள் வேறு எங்கும் (தீமைகளுக்கு) போவதில்லை.

இதைப் போல வாழ்க்கையில் எப்பொழுது எங்கே எதனின் நிலைகளில் தீமைகள் ஏற்பட்டாலும் அப்பொழுது நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு இந்தத் தத்துவத்தைச் சொல்லுங்கள்.

1.தீமைகள் எதனால் வருகின்றது..?
2.நாம் எண்ணியதை நம் உயிர் எப்படி உருவாக்குகின்றது…?
3.அதனால் நம் உடலில் தீமைகள் எப்படி உருவாகின்றது…?
4.தீமையை நாம் எந்த வழியில் அடக்க வேண்டும்…? என்று சிந்திக்கும்படி செய்து
5.ஆத்ம சுத்தி செய்யும் உணர்வுகளை அவர்களுக்குக் கொடுத்து
6.சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சொல்ல முற்படுங்கள்.

இதன் மூலம் தீமைகளை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் சுவாசித்து உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டால் அவர்கள் செய்த தீமைகள் நமக்குள் வருவதில்லை.

இவ்வாறு நாம் தடுக்கும் சமயத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வு நமக்குள் அதிகமாக இணைகின்றது. அதை நீங்கள் நினைவுபடுத்தும் பொழுது உங்கள் உடலிலுள்ள உணர்வுகளிலும் அணுக்களிலும் அது வளரத் தொடங்கி அதற்கு நல்ல ஆகாரமாகக் கிடைக்கின்றது.

ஆனால் சண்டை போடுபவர்களை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து சண்டை போடும் அணுக்களுக்கு (அந்த உணர்ச்சியைத் தூண்டும் அணுக்களுக்கு) ஆகாரமாகக் கிடைக்கும்.

அடுத்த நிமிடமே… மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் எடுக்க வேண்டும். வேடிக்கை பார்த்தாலும்… அவர்களுக்குள் சகோதரத்துவம் வளரவேண்டும்.. எங்கள் பார்வை வைரத்தைப் போல் ஜொலிக்க வேண்டும்.. அவர்கள் வாழ்க்கையை ஜொலிக்கச் செய்யும் ஆற்றல் எங்களுக்குள் வளரவேண்டும்… என்று இப்படி உங்களுக்குள் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் செயல் அனைத்தும் எல்லோரையும் நல்லவராக்கும் செயலாக எங்களுக்குள் உருவாக வேண்டும்.

எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் மகிழும் சக்தி பெறவேண்டும் என்று இப்படி இதை ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொள்ளுங்கள்.

1.உங்களை உங்கள் எண்ணமே காக்கும்
2.அதுவே கடவுள் ஆகின்றது.

எண்ணியதை உயிர் ஈசனாக இருந்து உருவாக்குகின்றது. உங்கள் உணர்வின் தன்மையை இப்படி உருவாக்கப்படும் பொழுது அதுவே உங்களுக்குள் அதிகமாக உருவாகும் சக்தி பெறுகின்றது.

இப்படி அந்த உருவாக்கும் ஆற்றலை நமக்குள் பெருக்கிக் கொண்டே வந்தால் என்றும் அருள் ஒளியின் சுடராக இந்த வாழ்க்கையை நாம் நிச்சயமாக வாழலாம்.

உயிர் நெருப்பு… உடல் அடுப்பு… அதிலே சமைக்கப்படும் எண்ணங்களுக்கு ஒப்பத்தான் வாழ்க்கை…! – ஈஸ்வரபட்டர்

உயிர் நெருப்பு… உடல் அடுப்பு… அதிலே சமைக்கப்படும் எண்ணங்களுக்கு ஒப்பத்தான் வாழ்க்கை…! – ஈஸ்வரபட்டர்

 

1.இந்தப் பிம்ப உடலையே அடுப்பாக்கி
2.இச்சரீர உடல் எதைச் சமைத்து அனுப்புகின்றதோ இதன் சத்தை ஆத்மா எடுத்து
3.அவ்வாத்மாவின் செயலுக்குகந்த நிலையைத்தான் உயிர் செயல்படுத்துகிறது.

சரீரத்தில்… சரீரத்தையே வளர்க்க… வலுவாக்கி.. ஆத்மாவின் அமில வளர்ச்சிக்குகந்த… சுவை கொண்ட உணர்வாகத்தான் இந்தச் சரீரக் கூடு உள்ளது.

ஆத்மா பெற்ற வலுவைக் கொண்டு அவ்வாத்மாவின் உயிரானது
1.எந்த நிலத்தில் (தாய் கருவில்) ஆத்ம உயிரின் அமிலக் கலவைக் கூடு உராய்ந்து
2.இவ்வாத்மாவின் ஆவி நிலை சுழற்சியில்… பிம்பமற்ற முறையில்…
3.தன் அமிலச் சுவைக்கு உணர்வு சொல் நாத சக்தியும் இல்லா நிலையில்…
4.நிலமான தாய்க் கருவில் வளர்ப்பு நிலைக்கு வந்தவுடன்
5.தாயின் உணர்வு சுவாச நாத நிலையினால் இவ்வாத்ம உயிருக்கு உணர்வு எண்ண மோதல் உருவாகும் தருணத்தில்
6.இந்நாதத்தின் துடிப்பு இயக்கத்தால்
7.ஆத்ம உயிரின் உராய்வு சேர்க்கை கொண்ட சரீர அவயங்களின் உருவக வளர்ப்பு நிலை கொண்டு பிறப்பெடுத்து வளரும் தருவாயில்
8.இதில் எடுக்கும் உணர்வுத் துடிப்பு சுவாசத்தில் உண்ணும் உணவை மட்டுமல்லாமல்
9.எந்தெந்த எண்ணக் கலவைகளை எண்ணி எண்ணி இச்சரீரச் சுவாசத் துடிப்பு உள்ளதுவோ
10.அதற்குகந்த அமில இனத்தை இச்சரீரம் சமைத்து வெளிப்படுத்தும் அலை உணர்வைத் தான்
11.ஒவ்வொரு ஆத்மாவும் வலு கூட்டிக் கொள்கின்றது.

இப்பிம்ப உடலின் மோதலினால்… அதாவது “மோதல்…” என்பது இந்தப் பூமியின் பிடிப்பிலும் சூரியனின் அலை வீச்சிலும்… இச்சுழற்சியின் சுழலுடன் இவ்வலை மோதலின் பிடிப்புடன் வாழும் இச்சரீரத்தின் மேல்… இந்தப் பூமியைச் சுழல வைக்கும் இக்காற்றலையின் ஆகர்ஷண சக்தியானது இந்தப் பிம்பத்தின் மேல் மோதுகிறது.

மோதி… அந்தப் பிம்பத்தின் துடிப்பு நிலை செயல்பட்டால் தான் சுவாச நிலை வரும். சுவாசமெடுத்த பின் நெற்றியில் கவன நரம்பிற்குள் மோதும். அடுத்து அதன் தொடர் கொண்ட ஈர்ப்பு சிறு மூளைக்குச் செல்கிறது.

அங்கே சென்ற பின் இந்தச் சரீர பிம்பக் கோளமே இயங்கவல்ல அடுப்பைப் போன்று அதில் போடப்படும் எண்ண உணர்வையும் உண்ணும் உணவும் சரீர அவயங்கள் அதைச் சமைத்து “ஆவியாக்குகின்றது…” அந்த ஆவியின் சக்தியை இவ்வாத்மா ஈர்த்துத் தான் இந்தப் பிம்ப உடல் வாழுகின்றது.

அப்படி வாழ்ந்தாலும்.. உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் குண நிலைக்குகந்த சம நிலை கொண்ட வாழ்க்கை நிலை அமைத்துக் கொண்ட மனிதனால் தான்… ஆரோக்கிய நிலையுடனும் நீண்ட நாள் வாழ்க்கை வாழ முடிகின்றது.

தான் பெற்ற வலுத் தன்மையின் சக்திக்கு உகந்த செயலை அந்த உடலுக்குத் தரும் பொழுது உடல் என்ற இயந்திரக் கோளமானது சீராகச் செயல் கொள்ளும்.

அதை விட்டு மனிதன் தன் எண்ண உணர்வையே இன்று பல ஈர்ப்பின் பிடியில் சிக்கிப் பேராசைப் பிடி அலைக்காகத் தன் எண்ணத்தைப் பல நிலைகளில் மோதவிட்டுத் தனக்கு எண்ணத்தின் சாதகமற்ற நிலை ஏற்படும் தருவாயிலெல்லாம்
1.சலிப்பு… கோபம்… ஆத்திரம்… வேதனை… என்ற இப்படிக் கனமான சுவாச அலையை எடுத்து எடுத்து
2.அக்குணமுடன் உள்ள நிலையில் எண்ணக்கூடிய உணவும்
3.அதே அமிலத்தைத்தான் இந்த உடலுக்குள் வளர்க்க முடிகின்றது.

இச்சரீரத்தில் சமைக்கப்படும் நிலையையே இந்த எண்ணத்தால் கனமாக்கி அதன் வலுவை அவ்வாத்ம உயிருக்குத் தரும் பொழுது ஏற்கனவே பழக்கப்பட்ட வலுவாகி வாழ்ந்திருக்கும் ஜீவத் துடிப்புடன் இது கலந்து… சிறுகச் சிறுக மாறு கொண்டு விடுகின்றது.

1.மாறு கொண்ட எண்ண உணர்வுகளை இந்தச் சரீர பிம்பம் எடுக்கும் பொழுது
2.அதை ஏற்காத நிலை கொண்டு இச்சரீர அமைப்பில் சுகவீனம் காணுகின்றது.

இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?