கண்கள் தோன்றிய விதம்

கண்கள் தோன்றிய விதம்

 

உடல் என்பது திரேதா தான். திரேதா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்.
1.வாசுதேவன் – சுவாசித்ததை உருவாக்கக் கூடியவன்.
2.தேவகி – பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள்.

சந்தர்ப்பத்தில் தீமையான உணர்வு மோதினால் அதிர்ச்சி என்ற நிலை வருகின்றது. அதிர்ச்சி என்ற நிலை வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

எந்தச் செடியின் சத்தை அது (கண்ணில்லாத புழு) எடுத்து வளர்த்ததோ அதன் உணர்வின் தன்மை இழக்கப்படுகின்றது. விஷமான செடியின் சத்தை நுகர்ந்த பின் சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.

ஆனால் மோதிய பின் அதன் வழியாகத் தெரியப்படுத்துகின்றது. எதை…?

1.”அறிய வேண்டும் என்ற உணர்வுகள்…”
2.துவாரகா இந்த உடலுக்குள் அதைச் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.ஒளிக்கற்றைகள் சிறுகச் சிறுக மின் அணுவாக மாறி… அணுக்களாகி அது அறியச் செய்யக்கூடிய கற்களாக மாறுகின்றது.
4.உறையும் தன்மை வரும் பொழுது கருவிழி என்ற உணர்வுகள் அணுத் தன்மை அடைந்து
5.நரம்பு மண்டலங்கள் இழுப்பதை ஒளிப் படலமாகப் பார்க்கும் தன்மை வருகின்றது.

இந்த ஒளிப் பிளம்புகள் கரு விழியிலே மறைந்து விட்டால்… ஒளிப் படலங்கள் அதாவது கண் பார்வை தெரியாது.

கண்ணில்லாத புழு “பார்க்க வேண்டும்…” என்று தான் எண்ணிய உணர்வு கொண்டு கற்களாக கருவிழியாக கண்கள் எப்படி உருவானது…?
1.சுவாசிப்பதை உருவாக்கக் கூடியவன் உயிர் அதனால் தான் வாசுதேவன்.
2.தேவகி… பார்க்க வேண்டும் என்ற தேவைக்கு வரும் போது அது (கண்களாக) வருகின்றது.

இந்த மனித உடலுக்குள் நாளை என்ன செய்வோம் என்று கற்பனை செய்கின்றோம்…? அதன் உணர்வின் தன்மை வடிவமைக்கின்றோம். வடிவமைத்தது தனக்குள் பதிவாகின்றது.

துவாரகா… புறத்தால் கண்களானாலும்
1.அகத்திற்குள் முதலிலே அதைப் படமாக்குகிறது.
2.படமாக்கிய பின் புறத்திலே எழுதுகின்றோம். உடலுக்குள் பதிவாகவில்லை என்றால் எழுதவே முடியாது.

உணர்வின் தன்மை பதிவாகும் பொழுது பதிவின் நினைவுகளை நினைவாக்குகின்றோம். துவாரகா இந்த உடலுக்குள் சிந்தனைகள் எடுத்துத் தான் மனிதன் தன் செயல்களைச் செயல்படுத்த வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு தான் இதையெல்லாம் உங்களுக்கு உணர்த்துவது.

பதிவைத் தான் மீண்டும் எழுத்தில் கொண்டு வருகின்றோம். புறத்தால் நாம் எழுதினாலும் அதில் குறைகள் வந்தால் திருத்துகின்றோம்.

இதைப் போல் தான் துவாரகா யுகத்தில் தீமைகளிலிருந்து மீண்டிடும் சக்தியாகத் தன்னுடைய நிலைகள் வருகிறது… கண்களாகின்றது. (சிறைச்சாலைக்குள் இருக்கும் தன் அன்னை தந்தையரைத் தவறிலிருந்து மீட்கக் கண்கள் வருகிறது)

ஒரு படத்தை (சித்திரம்) பார்க்கின்றோம்… பிழை என்ற நிலை வருகிறது. ஒருவன் தவறு செய்கிறான் என்ற நிலைகளில் கண்கள் அதைப் பார்க்கின்றது. ஆனால் அவனின் அந்தத் தவறுகள் நமக்குள் பதிவாகக் கூடாது.

தவறு செய்பவன் உடல் கிரேதா. அவன் செய்யும் தவறை நாம் நுகரும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வு திரேதா யுகத்தில் நம் உடலுக்குள் செல்கிறது.

அப்போது அந்தந்த உணர்வின் உணர்ச்சிக்கொப்ப வைரஸ் (கிருமி) என்று சொல்கிறோமே அத்தகைய அணுக்கள் உருவாகின்றது.

அந்த அணுக்களின் உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகிறது. அதன் மலத்தின் தன்மை கொண்டு இரத்தத்தில் வருகின்றது. தீமையின் விளைவாக நோயாகிறது.

ஆனால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நம் இரத்தத்திலே கலக்கப்படும் போது நம் உடலில் உள்ள உறுப்புகளை அது சீராக்குகிறது. அப்போது அந்த ஞானிகளின் உணர்ச்சியின் எண்ணங்கள் நமக்குள் வரும்.

1.தீமை செய்வோன் அவன் திருந்தி வாழ வேண்டும்
2.தெளிந்து வாழ வேண்டும்
3.தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
4.அமைதி பெற வேண்டும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணி
5.இதன் உணர்வைக் கொண்டு நாம் தெளிவாக்க வேண்டும்.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே கிரேதா திரேதா துவாரகா என்ற நிலையில் நம் உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு நிலையையும் வேதங்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

“உங்கள் கண்களை…” மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுகிறோம்

“உங்கள் கண்களை…” மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுகிறோம்

 

இன்று சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களை வைத்து வெகு தொலைவிலிருந்து ஒளிபரப்பு செய்வதையும் வீட்டிலே டிவி மூலம் நேரடியாக… மிகவும் தெளிவாக அதை நாம் காணும்படி செய்கிறார்கள்.

அதைப் போல விண்ணிலிருந்து ஒலிபரப்பாகும் மகரிஷிகள் ஞானிகள் உணர்வுகளை அந்த விண்ணினுடைய ஆற்றல் வெளியிலே படர்ந்தாலும் அங்கிருந்து வரக்கூடிய நிலைகளைக் கவர முடியும். நீங்கள் அதைப் பெறுவதற்குத் தான் உணர்த்துகின்றோம்.
1.இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வுகளை எந்த அளவுக்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கேட்கின்றீர்களோ
2.அதை உணரச் செய்யும் கண் ஈர்ப்பு நிலைகள் உங்கள் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்கிறது
3.அதன் மூலம் கவர முடியும்.

அதாவது… மெய் ஞானிகள் ஆற்றலைக் கவரும் விதமாக… “உங்கள் கண்களை மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுவதற்குத் தான்…” இதை உபதேசிப்பது.

எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் போது
1.எவ்வாறு அவர் சொல்லும் உணர்வைக் கூர்ந்து கவனித்தேன்
2.என் நினைவை அவர்பால் செலுத்தி அந்த ஆற்றலை நான் நுகர்ந்தேன்
3.அதனின் நிலைகள் கொண்டு கண் புலனறிவு ஆற்றல் மிக்கதாக மாறியது
4.அவர் உபதேசித்த உணர்வுகள் ஊழ்வினையாக எனக்குள் பதிவானது

அதை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுதெல்லம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை குருநாதர் எனக்கு ஏற்படுத்தினார்.

நீங்களும் அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம். உபதேசிக்கும் போது யாரெல்லாம் நினைவு கொண்டு கூர்ந்து கேட்கின்றீர்களோ
1.அந்தச் சக்திகள் உங்கள் கண்களுக்கு உரமாக ஏறி
2.ஆற்றல்மிக்க சக்தியாக “ஆண்டென்னா பவர்” கூடுகின்றது.

சாதாரண ஆண்டனாவை டிவியில் இணைக்கப்படும் பொழுது அருகில் இருக்கக்கூடிய ஸ்டேஷன்களை அது கவர்ந்து ஒளிபரப்பு செய்கின்றது. அதே சமயம் சக்தி வாய்ந்த ஆண்டனாவைப் பொருத்தப்படும் பொழுது வெகு தொலைவில் இருக்கக்கூடியதைக் கவர்ந்து டிவியில் அதைக் காட்டுகின்றது.

இராக்கெட்டுகளை ஏவிப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய கோள்களைப் பற்றி அறிந்தாலும்… அந்த உணர்வின் தன்மையைக் கீழே தரையில் வைத்திருக்கக் கூடிய ஆண்டென்னா கவர்ந்து தெளிவாகக் காட்டுகின்றது.

அதே போல் மகரிஷிகள் காட்டிய உணர்வினை “இந்த உபதேசத்தின் மூலம் கேட்டறியப்படும் பொழுது…”
1.விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான
2.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிவரும் உணர்வினை நீங்கள் நுகர்ந்து எடுக்கும் ஆற்றலை
3.உங்கள் கண்களுக்கு ஆற்றல்மிக்க ஈர்ப்பு சக்தியாக அதைப் பெற முடியும்.

இந்த உபதேசத்தினை எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அதனின் ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.

அதைப் பெருக்கி நம் எண்ணத்தை விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கும் சக்திகளை…
1.நாம் எண்ணும் பொழுதெல்லாம் சுவாசித்து உடலுக்குள் வினையாகச் சேர்த்து
2.நம்மை அறியாது வந்த தீய வினைகளைத் துடைத்து விடலாம்.

பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!

பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!

 

ஜாதகம் ஜோசியம் பார்த்து மணமக்களுக்கு எல்லாப் பொருத்தங்களும் இருக்கின்றதா…? என்று பார்த்து நல்ல நேரம் பார்த்துத் தான் திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.

ஆனாலும்
1.திருமணம் முடிந்து வந்தவுடன் இல்லற வாழ்க்கை தொடங்கும் காலத்தில் இல்லத்தில் பல இன்னல்கள் வந்து சேர்கின்றன.
2.இதனால் கணவன் மனைவிக்குள் வேறுபட்ட உணர்வுகள் தோன்றுகின்றன.

இப்படி வேறுபட்ட உணர்வுகள் வரும் பொழுது பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகளாலும் வேதனைகளாலும் வெளிப்படும் உணர்வுகள் எல்லோரையும்தான் சாரும்.

ஏனென்றால் பெண்கள் வெளிப்படுத்தும் வேதனையின் உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றன.

நாம் இவ்வேதனையின் உணர்வுகளைக் கேட்டறிய நேரும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது. பதிவின் நிலை கொண்டு நாம் நுகர்கின்றோம்.

நம்மை அறியாமலே அவர்களுடைய வேதனைகளை நுகர்ந்து “நமக்குள்ளும் வேதனையான உணர்வுகளாகவே மாற்றி விடுகின்றோம்…” அதனின் உணர்ச்சியும் நம்முள் அதிகரித்து விடுகின்றது.

கணவனும் மனைவியும் வெறுப்பு என்ற நிலைகளோ வேதனை என்ற உணர்வுகளோ இல்லாதபடி
1.அதிகாலையில் துருவ தியானத்தில் அமர்ந்து “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.என் கணவர் / மனைவி பெற வேண்டும்… எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும்
3.எங்கள் வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை இருவரும் பெருக்குதல் வேண்டும்.

இது போன்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை தங்களுக்குள் பெருக்கி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள்.

நமது வாழ்க்கையில் இயற்கையின் உண்மைகளை அறிந்து கொள்தல் வேண்டும். வெப்பம் காந்தம் விஷம் என்று இந்த மூன்று நிலைகளும் இணைந்து ஒரு அணுத் தன்மை அடைகின்றது.
1.காந்தம் “ஆதிலஷ்மி…” எதையும் ஈர்க்கும் சக்தி கொண்டு எதனையும் தன்னுள் இழுத்து வளர்க்கும் தன்மை என்றும்
2.வெப்பம் “ஆதிபராசக்தி…” அனைத்தையும் உருவாக்கும் தன்மை பெற்றது என்றும்
3.விஷம் “ஆதிசக்தி…” எதனிலும் மோதலாகி அது இயக்க உணர்வுகளை இயக்கும் என்றும்
4.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

அதாவது பெண்பால் ஆகித்தான் ஆண்பால் ஆகின்றது. பெண்பால் என்னும் பொழுது அது தாயாகின்றது. பெண்பால் தான் தாய் என்னும் நிலையில் தன் குழந்தைகளையோ மற்ற நிலைகளையோ சீர்படுத்தி வளர்க்கும் நிலையில் செயல்படுகின்றது.

1.ஆகவே நாம் பெண்களைத் தாயாகவும் நம்மை ஒரு சேயாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும்.
2.இது போன்று பெண்கள் ஒவ்வொருவரும் தான் ஒரு தாயாகவும் தான் ஒரு சேயாகவும் இருந்து பழகுதல் வேண்டும்.

இதைத்தான் இராமாயணமும் மற்ற காவியங்களும் நமக்கு உணர்த்துகின்றன. நம்முடைய எண்ணங்களை (கணவன் மனைவி) ஒன்று சேர்த்து இணைத்த உணர்வின் தன்மை கொண்டுதான் நாம் விண் செல்ல வேண்டும்.

நாம் தினமும் அதிகாலையில் சிறிது நேரமாவது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துக் கொண்டு வருவோமேயானால் நமக்குள் அருள் உணர்வுகள் பெருகும்.

நம்மையறியாது சேர்ந்த இருளை நீக்கி இல்லத்தில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை உருவாகும். அங்கே மகிழ்ந்து வாழச் செய்யும் உணர்வுகள் படரும்.

ஒரு இல்லத்தில் பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொழுது “அந்த இல்லம் சொர்க்கலோகமாக மாறுகின்றது…”

அந்த இல்லத்தில் உள்ள பெண்களில் யாரேனும் வாட நேர்ந்தாலும் அந்த இல்லமே குடும்பமே நரக லோகமாக மாறிவிடும். ஆகவே நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலைகளிலிருந்து விடுபட்டு பெண்களை உயர்வாக எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.இல்லத்தில் பெண்களை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கச் செய்கின்றோமோ
2.பெண்களிடத்தில் அன்பு கலந்த உணர்வுகளைச் செலுத்துகின்றோமோ
3.இதனின் உணர்வுகள் கொண்டு அங்கே ஒன்று சேர்ந்து வாழும் தன்மையும் இருளை அகற்றும் சக்தியும்
4.அருள் ஞானத்தைப் பெருக்கும் நிலையும் குடும்பத்தைச் சீர்படச் செய்யும் பண்புகள் வளரவும்
5.அன்பான உணர்வுகள் நமக்குள் பெருகவும் மகிழ்ந்து வாழச் செய்யும் உணர்ச்சிகள் வளரவும்
6.பிறவியில்லா நிலை என்ற நிலைக்கு அழைத்து செல்லும் சக்தியும், பெண்களுக்கு உண்டு.

பெண்களை மதித்து நடங்கள்… ஆதிசக்தி அதுதான்…!

இந்தச் சக்தியின் தன்மை வரும் பொழுது தான் உடல் சிவமாகின்றது. நுகர்ந்த உணர்வுகள் பிரம்மமாகின்றது. பிரம்மத்தின் தன்மை உடலாகின்றது.

எந்தக் குணத்தின் தன்மை உடலானதோ அதனின் உணர்ச்சியாக ஞானமான சரஸ்வதி நம்மை வழிநடத்திச் செல்லும் என்பதை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

ஒரு குடும்பத்தில் தாய்மார்கள் வெறுப்படைந்து விட்டால் அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் குறைகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

வீட்டிற்கு ஒரு மருமகள் வருகிறாள் என்றால் அந்த வீட்டிலிருக்கும் முதியவர்கள் மருமகளாக வந்த பெண்ணிடத்தில் குறைகளைக் கண்டு குறை கூறும் நிலையில் அங்கே குறையின் உணர்வுகளே வந்து விடுகின்றது.

முதியவர்களாக இருப்பவர்கள் அனைவரும், இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது, எதைக் கொண்டு செல்கின்றோம்…? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

முதுமை நிலையில் இருக்கும் நாம்… தெளிந்துணர்ந்து வளர்ந்த நாம் காலை துருவ தியானத்தில்
1.தன் மகன் மருமகளுடன் இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று
3.இதனின் உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

ஏனெனில் ஒரு குடும்பத்தில் பெண்கள் வாடிய நிலைகளிலிருந்தால், அவர்கள் எத்தகைய பயிர் செய்தாலும் அது வாடியே போகும். நல்ல பலன் இருக்காது. பெண்கள் வாடிய முகத்துடன் இருக்கும் பொழுது செய்யும் தொழிலும் சிறப்பாக இருக்காது, அந்தத் தொழிலும் குன்றிவிடும்.

ஆகவே அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து நமக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலையும் வீட்டில் மகிழ்ச்சியான உணர்வுகள் பெற வேண்டும் என்ற உணர்வுகளையும் நமக்குள் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

இது போன்று செய்து வரும் பொழுது
1.நமது இல்லத்தில் செய்வினைகள் இருந்தாலும் சரி தோஷங்கள் ஆகிவிட்டது என்றாலும் சரி
2.அல்லது நம்மை அறியாமலேயே சாப வினைகள் வந்தாலும் சரி
3.அருள் மகரிஷிகளின் அருள் துணை கொண்டு அந்தத் தீய நிலைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைத் தினமும் எடுத்து பழகுதல் வேண்டும். இது உங்களிடத்தில் எத்தனையோ நற்பயன்களை விளைவிக்கும்.

உண்மையான யாகம் எது…?

குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் “துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வைப் பெற வேண்டும்” என்ற உணர்வை
1.உயிரான நெருப்பினுள் போட்டு இதனின் உணர்வின் அலைகளை நமது வீடு முழுவதும் பரப்பினால்
2.வீட்டினுள் எத்தகைய சாப நிலைகள் இருந்தாலும் எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் அவையனைத்தும் அகன்றுவிடும்.

கணவன் மனைவிக்கிடையே எத்தனையோ வேறுபட்ட உணர்வுகளும் மனஸ்தாபங்களும் வரும் போது பெண்கள் நரக வேதனையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளியிடும் வேதனையின் உணர்வலைகள் இங்கே புவியில் படர்கின்றது.

இது போன்ற வேதனையின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அறியும் பொழுது நம்மிடத்தில் இருள் சூழும் நிலைகள் வருகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் இனியாவது… நமது குடும்பம் நமது குழந்தைகள் நமது ஊர் நமது நாடு என்ற நிலைகளில் ஒருங்கிணைந்த நிலை பெற வேண்டும். அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நமது குடும்பமும், நமது ஊரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் பொழுது இதனின் உணர்வுகள் ஊர் மக்கள் ஒன்றுபட்டு வாழ உதவும்.

நாம் ஒவ்வொரு நாளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என் கணவர் பெற வேண்டும் எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற வேண்டும் எங்கள் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பெற வேண்டும் எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் பெற வேண்டும். இந்த உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று இதனின் உணர்வுகளை நாம் எல்லோரும் பரப்புவோம்.

இதனின் தொடர் கொண்டு நமது குடும்பத்திலும் நமது ஊரிலும் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் இருளை அகற்றும் வல்லமையும் மகிழ்ந்து வாழும் தன்மையும் உருவாகும்.

குடும்பமும் ஊரும் நலமாகும் பொழுது நமது உணர்வுகள் அடுத்திருக்கும் ஊரிலும் படர்ந்து அவர்களையும் பண்படச் செய்து மகிழ்ச்சியுடன் வாழச் செய்கின்றது.

மனிதர்களான நாம்
1.கோடிக்கரை (மனித உடல்) எனும் கடைசி நிலையிலிருக்கிறோம் என்று உணர்ந்து
2.தனுசுகோடி என்னும் கடைசி எண்ணத்தின் நிலைகளாக அனைவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மை கொண்டு
3.தம் உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக்கி இனி பிறவியில்லை என்ற நிலை அடைதல் வேண்டும்.

இதனின் உணர்வு கொண்டு மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் செயல்படும் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று இருளை வென்று மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று ஒன்றுபட்டு வாழும் நிலை பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்றுப் பிறவியில்லா நிலை என்னும் அருள் சக்தி பெற்றுப் பெரு வீடு பெரு நிலை எனும் நிலையைப் பெறும் நிலையாக பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

வீட்டைச் சொர்க்கமாக்கும் வழி

வீட்டைச் சொர்க்கமாக்கும் வழி

 

மிருகங்களில் ஆண் பெண் என்ற நிலை இருக்கப்படும் பொழுது ஆணுக்கு ஆணே போர் செய்கின்றன… பெண் மிருகங்களைப் போரில் இணைப்பதில்லை.

மிருகங்களில் ஆணுக்கு ஆண் தான் மோதுகின்றதே தவிர பெண்பாலை அரவணைத்தே செல்கின்றது. ஆனால் மனிதர்களாக இருக்கும் நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலையே இருக்கின்றது.
1.பெண்களைத் துன்புறுத்தும் நிலையில் வேதனை என்ற உணர்வுகள் கலந்தால்
2.ஆண் பெண் என்று இருவருடைய உணர்வுகளிலும் “வேதனை என்ற விஷத்தின் தன்மை கலக்கின்றது…” என்பதை உணர்வதில்லை.

காரணம் பெண்பாலில் உருவாகும் வேதனை என்ற விஷத்தின் தன்மையினை ஆண்பால் நுகர நேர்ந்தால் வெறுப்பாகவோ வேதனையாகவோ இருந்து அதனின் விஷத்தன்மை அதிகரித்து அங்கே படர்கின்றது.

பெண்பால் வேதனை என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது கேட்போர் மற்றும் வேடிக்கை பார்ப்போரின் உணர்வுகளிலும் கூட அது பதிவாகின்றது.

ஆகவே பெண்களைத் துன்புறுத்தும் நிலையினை விடுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் பெண்பால் எத்தகைய துன்பங்களை அனுபவிக்கின்றதோ
1.அந்த உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது வேதனையின் உணர்வுகள் புவியின் காற்றில் பரவுகின்றது.
2.பெண்களைத் துன்புறுத்தும் உணர்வுகள் அதிகரித்தால் ஆண்களும் நரக வேதனை என்ற நிலைகளை அனுபவிக்க நேரும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் திருமணமானபின் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்கள் விடும் மூச்சலைகளெல்லாம் காற்று மண்டலத்தில் படர்கின்றன.

சோகமும், வேதனையும் கொண்ட இத்தகைய உணர்வுகள் காற்றில் படரும் பொழுது நம் பூமியின் நிலைகளில் “மாற்றங்களே ஏற்படும்…” இங்கு மட்டுமல்ல… உலகெங்கிலுமே பெண் இனத்தைத் துன்புறுத்தும் நிலை இருக்கின்றது.

மற்ற உயிரினங்களில் பெண்பாலை அரவணைத்துச் செல்லும் தன்மை இருக்கின்றது. அதனில் அன்பு கலந்த சந்தோஷமும் பெறுகின்றன.

மனிதனானபின் பெண்களைத் துன்புறுத்தும் நிலை அதிகரிக்கும் பொழுது இதனின் உணர்வுகள் நமது உடலில் மட்டுமல்ல வேடிக்கை பார்ப்போரின் உடல்களிலும் கூட வேதனையும் சோகமும் உருவாக்கப்படுகின்றது.

ஆகையால் இணைத்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கேற்ப இப்படி மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாதபடி புவியின் காற்று மண்டலத்திலும் கலந்திருக்கும் நிலையில் “இதனைச் சாப அலைகள் என்று சொல்வார்கள்…”

துன்புறுத்தும் உணர்வுகளும் சரி வேடிக்கை பார்க்கும் உணர்வுகளும் சரி இன்று மனிதருக்குள் தீய உணர்வின் தன்மை அதிகரிக்கும் நிலைகளில் மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் நிலையே வருகின்றது.

இவைகள் அனைத்தையும் நாம் சிந்தித்து
1.பெண்பால் என்ற உணர்வினை அரவணைத்து அன்பு கலந்த உணர்வினைச் சேர்த்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி இருளை அகற்றி
3.நம்மையும் நம் நாட்டு மக்களையும் இனிப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச் செய்வோம்.

ஆண் பெண் என்ற நிலைகளில் பெண்களும் ஆண்களை மதித்து அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களைக் கொண்டால் ஆண்கள் உயரந்த நிலைகள் பெறுகின்றனர், தொழில் வளம் பெறுகின்றனர்… குடும்பத்தில் மகிழ்ச்சி என்ற நிலை உருவாகின்றது.

மகரிஷிகள் என்பவர்கள் தாங்கள் காட்டிற்குள் வசித்தாலும் கணவனும் மனைவியுமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து உணர்வின் சக்தியினை வளர்த்தனர். அதன் தொடர் கொண்டே நமக்கு காவியத் தொகுப்புகள் கிடைத்தன.

ஆனால் பிற்காலத்தவர்களோ இந்தக் காவியத் தொகுப்புகளை அவரவர் நலன்களுக்கேற்ப மாற்றியமைத்து உண்மைகளை மறைத்து விட்டனர்.

இதன் நிலையாக இன்று மனித இனமே அழிந்து போகும் நிலைக்குப் பிரபஞ்சம் முழுவதும் விஷத் தன்மை கொண்டதாக மாறிவிட்டது.

தான் சுகமாக வாழ வேண்டும் என்ற உணர்வின் அறிவுகள் வளர்ந்து விட்ட்து. தீமைகளை அடக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனிதச் சரீரத்தில் நாட்டாசையும் உடலாசையும் பொன்னாசையும் பெண்ணாசையும் கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்து மனித குலத்தைச் சீர்குலைத்து அழிக்கச் செய்யும் நிலைகளையே வளர்த்துள்ளனர்.

மனித குலத்தையே கூண்டோடு அழிக்கச் செய்யும் மிருக உணர்வுகள் புவியில் துரித நிலைகளில் இயங்கிக் கொண்டுள்ளது.

இந்தச் சந்ததிக்குப்பின் பெரும் புயல்களைப் போன்று… சூறாவளிகளைப் போன்று… பெரும் நில நடுக்கங்களைப் போன்று உருவாகி பெரும் பெரும் கட்டிடங்களே நொறுங்குவது போன்று… மனித உணர்வின் தன்மை சீர்குலைந்து… மனிதனுக்கு மனிதன் நொறுங்கி மடியும் தன்மையும் மனித இனமே கூண்டோடு அழியும் தன்மையும் வந்து கொண்டே இருக்கின்றது.

இது போன்ற தீமைகளிலிருந்து நாம் அனைவரும் மீள வேண்டும். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து
2.உயர்ந்த நிலைகளைத் தங்களுக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
3.ஒவ்வொரு நிமிடமும் பெண்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி
4.நாமும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் உயர்வு தரும்.

ஏனென்றால் குறுகிய காலமே நமக்கு இருக்கின்றது. இராமாயணத்தில் இராமன் நேரமாகிவிட்டது என்று இராமேஸ்வரத்தில், இதுவே கடைசி நிலை என்று மணலைக் குவித்துச் சிவலிங்கம் அமைத்து பூஜித்தார் என்று காண்பிக்கப்பட்டது.

ஏனென்றால் இராமன் என்ற எண்ணங்கள் இந்த மனித உடலில் கடைசி நிலையில் இருக்கின்றது.

ஆகவே “நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்” என்ற உணர்வை நமக்குள் கலந்து விட்டால் கடைசி என்ற நிலைகள் வரும்… “தனுசுகோடி…”

நம்முடைய கடைசி எண்ணத்தின் நிலைகளாக…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனுசாக நமக்குள் உட்செலுத்தித் தீமைகளை அகற்றி
2.உணர்வை ஒளி என்ற நிலைகளில் மாற்றி… இனி பிறவி இல்லை என்ற நிலைக்கு நாம் அனைவரும் செல்ல வேண்டும்.

வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட சக்தி

வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட சக்தி

 

மனித வாழ்க்கையில் அதிகமாக சண்டையிடுவரையோ கலவரம் நடக்கும் சில செயல்களையோ நாம் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதே உணர்வுகள் நமக்குள் பதிவாகி நம் ஆன்மாவில் பால்வெளி மண்டலமாக ஆகிவிடுகிறது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் பதிவானாலும்
1.பதிவான உணர்வுகளை அப்போதே நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.ஓ…! என்று ஜீவ அணுவாக மாற்றும் கருத்தன்மையாக ஒரு இயக்கச் சக்தியின் அணுவாக மாற்றும் தன்மை பெறுகின்றது.
3.அப்படிப் பெற்ற அந்த உணர்வுகள் நம் ரத்தத்தில் கலந்தவுடனே அது கருத்தன்மை அடையும் தன்மை வருகின்றது

செடியில் இருந்து வரும் சத்தினைச் சூரியன் கவர்ந்து பரமாத்மாவிலே பரவச் செய்தால் அது மற்ற தாவர இனத்தை ஜீவன் ஊட்டும் சக்தியாக மாறுகின்றது.

இதே போலத் தான் நம் உடலில் பதிவான உணர்வுகள் பதிவான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்ட பின் நம் ஆன்மாவாக மாற்றி… எதன் பசி அதிகமோ அதன் வலு அதிகமாக இயக்கப்படும் பொழுது… அதன் குணத்தின் தன்மை கொண்டு தான் நாம் இயக்குகின்றோம்.

நாம் நினைக்கின்றோம்…! இவன் கோபக்காரன்… அவர்கள் இப்படி… இவர்கள் இப்படி என்று…! ஆனால் சந்தர்ப்பத்தில் பதிவான இந்த உணர்வு தான்… அது எதன் வலுவோ அதைக் கொண்டு இயக்குகின்றது.

எதன் உணர்வு நம் உடலுக்குள் அதிகமாகின்றதோ உள் நின்று இயக்குவது அதன் தன்மை. அதனால் தான் இராமாயணத்திலே தசரதச் சக்கரவர்த்திக்கு “வசிஷ்டர் பிரம்மகுரு…” என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் சண்டை இடுகிறான் என்றால் “என்ன…?” என்று வேடிக்கை பார்க்க மனதினைச் செலுத்தினால் அதைக் கவர்கிறோம் என்று பொருள். அது தான் வசிஷ்டர் என்பது.
1.நாம் எதை உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை கவர்கின்றோமோ
2.அப்படிக் கவர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு உணர்ச்சிகள் இயக்கப்பட்டாலும்
3.அந்த உணர்வுகள் நமக்குள் பிரம்மம் ஆகி விடுகிறது… அதனால் தான் வசிஷ்டர்.

நாம் கவர்ந்து கொண்ட உணர்வுகள் ரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக்கும் தன்மை பெறுகின்றது என்பதைத்தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்று காட்டுகின்றார்கள்.

நாம் தீமைகளைச் சந்தர்ப்பத்தில் பார்க்க நேர்ந்தால்…
1.என்ன செய்கின்றான்…? ஏது செய்கின்றான்…? தவறு செய்கின்ரானா…?
2.குற்றங்கள் செய்கின்றானா…? ரொம்பவும் பிழை செய்கின்றானா…?
3.வேதனைப்படுத்துகின்றானா…? என்ற எண்ணங்கள் கொண்டு அந்த மனிதனை உற்று நோக்கினால்
4.அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகி உயிரிலே பட்டு இயங்கத் தொடங்குகிறது
5.ஆகவே கவர்ந்து கொண்ட அந்த சக்தி வசிஷ்டர்…!

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம்… காந்தம் விஷத்தைக் கவர்ந்து கொண்ட பின் வசிஷ்டர். கவர்ந்து கொண்ட அதே காந்தம் ஒரு சத்தினைக் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர். ஆண்பாலாக மாறுகின்றது ஆண்பாலுக்குப் பிரம்மம் என்று பெயர்.

பிரம்மாவின் மனைவி அங்கே சரஸ்வதி. எந்தச் சத்தின் தன்மை கொண்டு இயக்குகின்றதோ அந்த ஞானத்தின் வழி அந்த அணுக்கள் இயக்கும்…! என்று பொருள்.

இன்று உலகம் எப்படி இருக்கிறது…? என்பதை நாம் தெரிந்து கொண்டோம். ஆனால்
1.இயற்கை நம்மை எப்படி இயக்குகின்றது…? எதன் வழி நாம் செல்கின்றோம்…?
2.நாம் குற்றவாளியா… அல்லது குற்றமற்றவர்களா…?
3.குற்றமற்றவராக இருப்பது குற்றமான செயல்களைச் செய்வது எப்படி…?
4.குற்றத்தை முன்னிலைப்படுத்தி இயக்குவது எது…? என்று
5.நம்மை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றேன்.

கண்ணன் காட்டும் “திருட்டு வழி…”

கண்ணன் காட்டும் “திருட்டு வழி…”

 

இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும்… நாம் பிறருடைய துயரைத் துடைக்கக் கேட்டுணர்ந்த துயரமான உணர்வுகள் நமக்குள் வந்தபின் அந்த உணர்வுகள் நல்ல குணங்களுக்குள் இரண்டறக் கலந்து ஓங்கி வளர்ந்து விடுகிறது.

அடுத்து… மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை அது செயல்படாது தடுத்து உடல் நலிந்து உணர்வுகள் குறைந்து எண்ணங்கள் நலிந்து நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

இதிலிருந்து நம்மைக் காத்திட… இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு நமது குரு காட்டிய அருள் வழியில் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
1.அந்த ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான்
2.அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் சாரத்தை உங்களைக், காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து
3.அதை வலுப்பெறச் செய்யும் நிலையாக இதை உபதேசிக்கின்றேன்.

வியாசர் காட்டிய அருள் வழியில் கண்கள் கொண்டு அதை நாம் நினைவு கூர்ந்து எண்ணும்போது
1.அந்த வலுவின் தன்மை நீங்கள் பெற முடியும்
2.அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற முடியும்
3.உங்களை அறியாது வந்த தீமையை ஒடுக்க முடியும்
4.அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
மற்றவர்களுடைய துயரைக் கேட்டறிந்த நிலைகள் உங்கள் நல்ல குணங்களை நலியச் செய்தது போன்று… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் புகுந்து அந்த நலிந்ததை மீட்டு நல்லுணர்வாக வளர்த்து,க் கொள்ள முடியும்.

உயிருடன் ஒன்றிடும் உணர்வனைத்தையும் ஒளியாக மாற்றிய, அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் கலந்து “நீங்களும் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்…” என்ற ஆசையில் அந்த மாமகரிஷி காட்டிய, உணர்வின் சாரத்தை உங்களுக்குள்ளும் தெளிவு பெறச் செய்யும் நிலைக்கே இதை உணர்த்துகின்றேன்.

கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு “அதோ வருகின்றான் நாரதன்…” என்று நாம் எண்ணும்போது புற நிலைகள் கொண்டு நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

அதாவது… கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி
1.உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றப்படும்போது,
3.“உயிரான கண் “அகக்கண்…” நம்முடய கண் “புறக்கண்…”
4.புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு
5.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கும் பொழுது
6.”சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால்… சுட்டுப் பொசுக்கி விடுவான்…!” என்பதாகும்.

நம் உடலான சிவத்திற்குள் உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில் புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று ஏங்கி அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று…
1.உள் நினைவில் கண்களை மூடி
2.“நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படரச் செய்வதே “கண்ணன் காட்டிய திருட்டு வழி…!”

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளை உள் செலுத்தும்போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்…” அதாவது அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெறச் செய்து வளர்க்கச் செய்கிறோம்.

நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருவதைப் போன்று
1.அந்த மணத்தின் வீரியத் தன்மை (ஞானிகளின் அருள் சக்தி) உள் நின்று வெளி வருவது
2.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை அது பிளக்கின்றது.

நாம் பிறருடைய துயரமான உணர்வுகளை எண்ணி நம் உடலுக்குள் சேர்க்கும் முன் அது நம் ஆன்மாவாக (உடலைச் சுற்றி) மணமாக மாறுகின்றது.

அது மடி மேல் ஆன்மாவாக இருந்தாலும்… கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று… கண்ணான கண்ணின் நினைவுகளை உள் செலுத்தப்படும் போது “நாம் எண்ணிய உணர்வுகள் “பிராணாயாமம்…”
1.அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவது…
2.மடி மீது (நெஞ்சுக்கு முன் இருக்கும்) சுழன்று கொண்டுள்ள துயரப்பட்ட உணர்வினை இது பிளக்கின்றது.

நாராயணன் என்பது சூரியன். நரநாராயணன் என்பது உயிர். நமக்குள் பேரண்டத்தின் பெரு நிலைகள் இருந்தாலும் உணர்வின் எண்ணங்களாக இயக்கி நம்மை ஆண்டு கொண்டிருப்பது நரநாராயணன்.

நமக்குள் இருக்கும் சர்வத்தையும் விண்ணில் பிறந்த நிலையும் ஜீவ அணுக்களாக உருவாக்கி நம்மை உருப்பெறச் செய்து அதனின் உணர்வின் நிலையாக நம்மை இயக்கிக் கொண்டிருப்பதும் நரநாராயணான உயிர்,

ஆகையினால் தான் உயிரான அவன் வாசல்படி மீது அமர்ந்து மடி மீது அமர்த்தி இரண்யனைப் பிளந்தான் என்று எடுத்துரைக்கப்பட்டது.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் நிலைகளை நாம் எண்ணும் போது,
1.உயிரான நிலைகள் “ஓ…” என்று பிரணவமாகி
2.அந்த உணர்வின் சக்தி பிரம்மாவாக உடலுக்குள் அனைத்தையும் இணைத்துச் சிருஷ்டித்து அதனின் ஜீவனாக ஓங்கி வளர்ந்து
3.விண்ணின் வீரிய சத்தாக உள் நின்று வெளிப்படுவது நம் ஆன்மாவிலிருக்கும் தீமையைப் பிளக்கின்றது.

அந்த மகா ஞானிகளின் உணர்வை நாம் “நேர்முகமாகச் சுவாசித்து…” உடலுக்குள் செலுத்தி… நமக்குள் அதை ஓங்கி வளர்த்து வரும் தீமைகளைப் பிளப்பது தான் “நரசிம்ம அவதாரம்…” என்பது.

“நம் இரத்த நாளங்களில்…” அருள் உணர்வைப் பெருக்க வேண்டியதன் அவசியம்

“நம் இரத்த நாளங்களில்…” அருள் உணர்வைப் பெருக்க வேண்டியதன் அவசியம்

 

உதாரணமாக நாம் ஒரு முறை “திடுக்…” என்று பயந்து விட்டால் அதனின் உணர்வின் கரு நம்முள் உருவாகிவிடும். மீண்டும் நினைவு கொண்டால் அது உணர்வின் அணுவாக நமது இரத்த நாளங்களில் விளைந்து நமது உடல் முழுவதும் சுழலத் தொடங்கும்.

அப்படிச் சுழலப்படும் பொழுது
1.உடலில் அந்த அணுக்கள் இணைந்து குஞ்சாகப் பெருகி விட்டால்
2.நம்மையறியாமலேயே “திடுக்…திடுக்…” என அஞ்சும் உணர்வு வரும்.

இதை நீங்கள் அறிய முடியும்.

இவைகளெல்லாம் யாம் உங்களுக்கு நினைவு படுத்துவதற்குக் காரணம் உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்கள் அறிந்து கொள்வதற்குத் தான்.

நமது வாழ்க்கையில் இத்தகைய அஞ்சும் உணர்வோ வெறுக்கும் உணர்வோ தொழில் நஷ்டமோ இவைகளை எண்ணி நுகரும் பொழுது நாம் நுகர்ந்தது அனைத்தும் நம் உடலில் இரத்த நாளங்களில் “கருவாக…” உருவாகிவிடுகின்றது.

உதாரணமாக… தொழிலில் “நஷ்டமாகி விட்டது… நஷ்டமாகி விட்டது…” என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது அடைகாத்தது போன்று ஆகிவிடுகின்றது.

அது உடலில் குஞ்சாக விளைந்து விட்டபின் அவர்களிடம் போய்
1.நீங்கள் நல்லதை எதைச் சொன்னாலும், “எனக்கு நஷ்டம் நஷ்டம்…” என்று தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
2.“நஷ்டத்திலிருந்து மீள வேண்டும்…” என்ற எண்ணங்களே இவர்களுக்கு வராது
3.ஏனென்றால் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் அப்படிப் பேச வைக்கின்றது.

கடல் வாழ் மீன்கள் எங்காவது ஒரு துளி இரத்தத்தினுடைய மணத்தை நுகர்ந்து விட்டால் போதும், விரைந்து அந்த இடத்திற்கு வந்துவிடும்.

தொலைவில் இருக்கக்கூடிய மீன்களை அருகே வரச் செய்து அவைகளைப் பிடிக்க விரும்பினால் தூண்டிலில் இரையை வைத்துச் சிறிது ஒலி எழுப்பினால் அந்த மீன்கள் தூண்டில் இருக்கும் பக்கம் வந்துவிடும்.

இதைப் போன்று நமது உடலிலுள்ள உணர்வின் அணுக்கள் உணர்ச்சிகளை எதன் வழி தூண்டுகிறதென்றால் நமது இரத்த நாளங்களின் வழி தான்.

இராமயாணக் காவியத்தில் “இராமன் குகனை நண்பனாக ஆக்கிக் கொண்டான்…” என்று உரைத்திருப்பார்கள். அதில் குகன் ஆற்றில் படகை ஓட்டி, வாழ்க்கை நடத்தி வருபவன் என்றும் உரைத்திருப்பபார்கள்.

1.நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை ஆறாகவும்
2.நம் எண்ணங்களால் உருவாக்கிய, உணர்வுகள் எதுவோ அவைகள்
3.நமது இரத்த நாளங்களில் சுழன்று வருவதை உணர்த்துவதற்குக் குகனைக் காட்டுகின்றார்கள்.

நமது இரத்த நாளங்களில் நட்புள்ள உணர்வுகளாகச் சேர்த்து விட்டால் “நமக்குள் வெறுப்பை உண்டாக்கும்.. நோய்களை உண்டாக்கும் உணர்வுகளை நாம் ஒவ்வொன்றாகச் சமப்படுத்திவிடலாம்…” என்பதை உணர்த்துவதற்கு இவ்வாறு காவியங்களைப் படைத்தார்கள்.

இப்பொழுது நாம் எண்ணும் எண்ணங்களில் பகைமை உணர்வைக் கலந்து விட்டால்… அது நமது உடலில் நல்ல அணுக்களை உருவாக்கியவைகளுக்குப் பகையாகி… அவைகளுக்கு நல்ல உணர்வுகள் கிடைக்காவிடாமல் தடைப்படுத்துகின்றது.

1.தீய உணர்வின் அணுக்கள் நல்லுணர்வின் அணுக்களை விழுங்க எண்ணும்.
2.ஏனென்றால் அவைகளுக்கு வரும் நல்லுணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது நல்ல அணுக்கள் மடியும்.

இதனை உணர்த்துவதற்குத்தான் முதலில் குகன் என்ற நிலையை உருவாக்கி அதில் இராமன் குகனை நட்பாக்கினான் என்று காட்டுகிறார்கள்.

அதாவது நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில்
1.அருள் மகரிஷிகளின் உணர்வைக் கருவாக்கி அணுக்களாக விளையச் செய்தால்
2.அது உடலில் பதிந்திருக்கும் பகைமை உணர்வுகளை நீக்கி
3.மகரிஷிகளின் அருள் வட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லும்.
3.என்றும் அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய முடியும்.

மற்றவர்களைக் காக்கும் நிலை வந்தால் தான் நம்மைக் காக்கும் நிலை வரும்

மற்றவர்களைக் காக்கும் நிலை வந்தால் தான் நம்மைக் காக்கும் நிலை வரும்

 

1.மகரிஷியின் அருள் சக்திகளைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்கும் சில குறிப்புகளை எழுத வேண்டும்.
2.இருள் நீங்க வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சிறிது நேரமாவது நோட்டில் எழுதுங்கள்.
3.தொழில் வளமாக இருக்க வேண்டும்… நண்பர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள்.
4.நாம் எழுதினோம்… இப்பொழுது அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள் என்ற நிலை உங்கள் அனுபவத்தில் வரும்.

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

குடும்பத்தில் ஏதாவது கேள்விப்பட்டால் நான்கு பேர் ஒன்று சேர வேண்டும். அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதற்கு 100 பேரைக் கூப்பிட வேண்டியதில்லை.

இந்த நான்கு பேரும் சேர்ந்து…
1.முடிந்த மட்டும் மகரிஷிகளின் எண்ண அலைகளை அங்கே பரப்புங்கள்.
2.அந்தக் குடும்பம் ஓரளவுக்கு சீரானால் அவர்களும் திரும்பிப் பார்ப்பார்கள்.

அந்த வீட்டில் நல்ல அலைகளைப் பரப்புகின்றோம். அதன் மூலம் எல்லோரும் நலமாக வேண்டும் என்று இந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பொழுது அது நல்ல வளர்ச்சிக்கு வரும்.

ஒருவரால் கனமான பொருளைத் தூக்க முடியவில்லை என்கிற பொழுது நான்கு பேர் சேர்ந்து தூக்கினால் எளிதாகத் தூக்க முடிகின்றது.

நண்பர்களுக்குள் மிகவும் அவஸ்தைப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்டால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாக எடுத்து அங்கிருக்கும் எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.

அந்தக் குடும்பத்தில் அந்த அருள் சக்தி படர வேண்டும் மகிழ்ச்சி பெறும் நிலைகள் அங்கே உருப் பெற வேண்டும் தொழில் வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இந்த மாதிரிச் செய்தால் தான் நாம் அதைப் பெற முடியும்… வளர்க்க முடியும்.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கச் சக்திகளை எடுத்தாலும் சூரியன் அதை எடுக்கும் பாதையில் மற்றவைகளுக்கும் அதை உணவாகக் கொடுத்து அதனின் உணர்வைத் தனக்குள் எடுத்து அதிலே வந்த நஞ்சைப் பிரித்து ஒளியின் சுடராக மாற்றுகின்றது.

இதைப் போலத் தான்
1.பிறிதொருவருவர் எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது ஞானிகள் எண்ண உணர்வை நமக்குள் வலுப்பெறச் செய்து
2.தீமைகளைப் பிளந்து தீமைகளைப் பிளந்திடும் உணர்வை வளர்த்து ஒளியாக மாறும் உணர்வை நாம் வளர்க்க வேண்டும்.

உங்களுக்குள் ஆழமாக இதைப் பதிவு செய்கின்றோம். இது நம் குருநாதர் காட்டிய வழி இது. இதை நிச்சயம் நாம் அனைவரும் பெற முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் செல்வதற்குத் தியானமும் தவமும் தேவை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற அந்தத் தவம் இல்லை என்றால் நாம் தியானத்தில் எடுக்கும் சக்திக்கு வேலை இல்லை. தவமிருந்தால் தான் உங்களுக்கும் அது கிடைக்கும். இந்தப் பண்புகளை நாம் வளர்க்க வேண்டும்.

உலகம் முழுவதும் நலம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எத்தனையோ அரசியல்வாதிகள் வந்தாலும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எல்லோரும் அந்த நன்மை பெறும் சக்தி பெற வேண்டும் என்று இதை ஓங்கி வளர்க்க வேண்டும்.
1.உலகம் நன்றாக இருக்க வேண்டும்… காற்று மண்டலம் நன்றாக இருக்க வேண்டும்.
2.நாம் பார்ப்போர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதைக் காட்டிலும் முக்கியமானது ஒன்று உண்டு…!

வீட்டிலே திருமணம் ஆகிப் கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டால்… முதல் அந்த மூன்று மாதத்திற்குள் அவர்களை அணுகி எமது உபதேச நூல்களைக் கொடுத்து அதைப் படித்துக் கேட்கும்படிச் செய்து அதை எல்லாம் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் உள்ளோர் தியானமிருந்து கருவிலிருக்கும் சிசு அகஸ்தியன் பெற்ற அருள் சக்தியைப் பெற்று “ஞானக் குழந்தையாக வளர வேண்டும்…” என்று தவம் இருங்கள்.
1.அந்தத் தவம் உங்களைக் காக்கும்.
2.அருள் ஞானி பிறக்கும் அது உலகத்தைக் காக்கும்
3.அப்படிக் காக்கக்கூடிய நிலைகள் உருவாக வேண்டும் என்று தவத்தை நாம் இருக்க வேண்டும்.
4.இந்த உணர்வை வளர்த்தோம் என்றால் தான் இந்த உலகை நாம் மீட்க முடியும்… உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக நாம் பெற முடியும்.
5.இந்த உடலான உலகத்திலிருந்தும் நாம் மீள முடியும்.
6.மீண்டும் உடல் பெறும் நிலைகளிலிருந்து நாம் மீள முடியும்.

இதைச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டு நாம் செயல்படுவோம். குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

கார்த்திகை மாதத்தின் சிறப்பு

கார்த்திகை மாதத்தின் சிறப்பு

 

ஞானிகள் காண்பித்த கார்த்திகைத் தீபத் திருநாளில் நாம் நமது வீட்டு வாசல்படியில் தீபங்களை வைக்கின்றோம். வீட்டிற்குள் இருந்தாலும் புற நிலைகளில் தீபங்களை வைக்கும் பொழுது அங்கே இருள் விலகிப் “பொருள் தெரிகின்றது…”

1.வாழ்க்கையில் நாம் எப்பொழுதுமே பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்ற உண்மையை உணர்த்துவதற்குத்தான்
2.“கார்த்திகை தீபங்களை” வீட்டு வாசல்படியில் ஏற்றச் செய்தனர், ஞானிகள்.

கார்த்திகைத் தீபம் என்கிறோம். ஏனென்றால் நமது பிரபஞ்சத்தில் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுகள் அது எந்தப் பொருளில் எல்லாம் கலக்கின்றதோ அந்தப் பொருளின் தன்மையைப் “பிரகாசிக்கச் செய்யும்” தன்மை கொண்டது.

உதாரணமாக கசப்பான பொருள் ஒன்று இருக்கிறதென்றால் கசப்பின் தன்மையை “உணர்ச்சியின் மூலம் வெளிப்படுத்தும் அறிவாக” அங்கு இருக்கும்.

ஆகவே கார்த்திகை நட்சத்திரம், நமது பிரபஞ்சத்திற்கு ஒரு முக்கியமான நட்சத்திரம்.

நாம் வெளிச்சத்தை வைத்துப் பொருளைக் காண்பதைப் போன்று
1.கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாக எந்தெந்தக் குணங்களில் கலந்துள்ளதோ
2.அந்தக் குணத்தின் சிறப்பு மிக்க நிலையை வெளிப்படுத்தும்,
3.அறியச் செய்யும் ஆற்றல் மிக்கவராக அந்த எண்ணங்களைப் பிரதிபலிக்கச் செய்யும்.

கார்த்திகை மாதத்தில் நமது வீட்டு வாசல்படிகளில் விளக்குகளை ஏற்றி வைக்கிறோமென்றால்… அறிவின் ஒளியின் சுடராக நாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதற்காக ஞானிகளால் உருவாக்கப்பட்ட நிலைதான் அது.

அவசரப்பட்டு ஒரு தொழில் செய்ய வேண்டும் பொருள் சேர்க்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அந்த ஆசை நமக்குள் வளர்ந்து விட்டால் “அதையே முழுமூச்சாகச் செயல்படுத்தத் தொடங்குகின்றோம்…”

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில்…
1.நாம் அறிவின் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் ஆற்றலை இழந்து விடுகின்றோம்.
2.ஏனெனில், அவசரம் எனும் உணர்வால் நாம் சீராகச் சிந்திக்காது எடுத்த முடிவால் விளைந்த நிலையிது.

உதாரணமாக நாம் ஒருவரைச் சந்தித்து வியாபாரத்தைப் பற்றிப் பேசப் போகிறோம் அல்லது அவர் மூலம் வியாபாரம் சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் போகிறோம் என்று செல்லும் பொழுது “அவருடைய சூழ்நிலை எவ்வாறு…?” என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அவரிடம் பேசும் பொழுது அவருடைய முகத்தை உற்றுப் பார்த்தால், அவருடைய நிலை தெரியும். அப்பொழுது நமக்குள் இருக்கும் அறிவு என்பது அவரின் உணர்வின் தன்மைகளை நமக்குள் தெளிவாக்கும்.

தீபத்தைப் பொருத்தியபின் அதனின் வெளிச்சத்தில் நாம் எப்படிப் பொருள்களைக் காண்கின்றோமோ அதைப் போன்று
1.நாம் சிந்திக்கும் அறிவினைப் பயன்படுத்தி சிறிது நேரம் சிந்தித்து அவருடைய செயலாக்கங்களை அறிந்து கொண்டபின்
2.நாம் சொற்களைச் சொல்ல வேண்டும்… அப்பொழுது, அது நமக்கு துணையாக இருக்கும்.

ஆனால் நாம் நம்முடைய காரியத்திற்காக அவரைப் பார்க்கப் போய் அவருடைய சூழ்நிலை தெரியாது அவசரத்தில் அவரிடம் போய்ப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால்… அவர் தன் சலிப்பால் சஞ்சலத்தால் நமக்குச் சீரான பதிலைக் கொடுக்க மாட்டார்.

நாம் விரும்பிப் போய் சந்திக்கும் பொழுது அவர் சரியான பதிலைக் கொடுக்கவில்லை என்றால் அவரைக் குற்றவாளியாகக் கருதுவோம்.
1.அவர் கர்வம் உள்ளவராக இருக்கிறார்
2.நாம் கேட்டால் பதில் சொல்லமாட்டேன் என்கிறார் என்ற உணர்வுகள் வந்து
3.நம்முடைய அவசரத்திற்கு அவரைக் குற்றவாளியாக்கும் நினைவினை ஊட்டுகின்றது.

இதற்கு மாறாக அவர் சந்தோஷமாக இருக்கும் பொழுது அவரைச் சந்தித்தோம் என்றால் அவர் நம்மை வரவேற்று அதற்குண்டான சொல்களைச் சொல்லுவார்.

எப்படி நாம் தீபத்தை ஏற்றி அதனின் வெளிச்சத்தைக் கொண்டு மற்ற பொருள்களைத் தெரிந்து கொள்கின்றோமோ அதைப் போன்றுதான்
1.கார்த்திகை நட்சத்திரத்தின் ஒளியலைகள் ஒன்றோடொன்று மோதும் பொழுது
2.அதன் அறிவின் தன்மை அறிவிக்கும் சக்தி பெற்றது.

ஆகவே நாம் ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று எண்ணினால் சூழ்நிலைகளுக்கொப்பச் சொற்களைச் சொல்ல வேண்டும். அது நமக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

நாம் எப்படியும் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடித்து விடவேண்டும் என்ற அவசர உணர்வுடன் ஒருவரிடம் தொடர்பு கொள்ளப்படும் பொழுது அவருடைய சூழ்நிலைக்கொப்பதான் நமக்கு பதில் வரும். நமது காரியமும் சித்தியாகாது.

அதே சமயம் நாம் அவரைச் சந்தித்ததால் அவர் மேல் வெறுப்படையும் தன்மையும், அதற்குண்டான சூழ்நிலையும் உருவாகும். அவரைக் குறை கூறும் உணர்வுக்கே நமது உணர்வு வலு பெறும்.

1.குறையான உணர்வுகளை நாம் நம்முள் பதிவாக்கி விட்டால்
2.அதன்பின் அவரைச் சந்திக்கும் பொழுது சூழ்நிலை சமமாக இருந்தாலும்
3.அவரை உற்றுப் பார்த்தாலே பழைய நினைவுகள் தோன்றி வெறுப்பின் உணர்வைத் தோற்றுவிக்கும்.
4.அப்படிப்பட்ட நிலையில் நம்முடைய சொல் அவரிடம் சீராகப் பேசும் தன்மையை இழந்து விடுகின்றது.

ஒருவர் மேல் உங்களுக்கு வெறுப்போ அல்லது பயமோ ஏற்பட்டு விட்டால் நீங்கள் அவரிடம் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் கூட உங்களிடத்தில் ஒருவிதமான பதட்ட நிலைகள் ஏற்படும்.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் நம்மையறியாமலே சில சந்தர்ப்பங்கள் நமது நல்ல குணங்களைப் பாழ்படுத்தும்.

ஆகவே தீபத்தின் வெளிச்சத்தில் நாம் எப்படிப் பொருள்களைக் காண்கின்றோமோ இதைப் போன்று
1.நாம் எந்த ஒரு காரியத்திற்குச் சென்றாலும் முதலில் நமக்குள் “அறிவின் ஒளியைப்” பொருத்திக் கொள்ள வேண்டும்.
2.அந்தச் சுடரின் உணர்வின் அலைகளைப் பரப்ப வேண்டும்.

அவ்வாறு நாம் பரப்பினோம் என்றால் நாம் செல்லக்கூடிய காரியமும் பயன் பெறும். நம்முடைய சொற்களும் கேட்போரின் உணர்வுகளில் தெளிவை ஏற்படுத்தும்.

இவைகளெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத்தான் “கார்த்திகை தீபத்தை” ஏற்றி வைப்பது.

நமது உணர்வுகள் எப்படி மாறுபடுகிறதென்றால்… நாம் ஒருவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பி வரப்படும் பொழுது நம்முடைய உணர்வுக்குத் தக்க அவருடைய செயலாக்கங்கள் இல்லையென்றால் “அவரைக் குறை கூறும் தன்மைக்கு…” வந்துவிடுகின்றோம்.

நாம் ஒருவருடன் பிரியமாக பேசிக் கொண்டிருப்போம். இருந்தாலும், நமக்குள் நம் உணர்வின் துணை கொண்டே அவரிடம் பேசப்படும் பொழுது அவருக்குள் பதில் இருக்கலாம். ஆனால் நாம் நம் மனதிற்குள் “ஒரு குற்றவாளி…” என்ற உணர்வைக் கலந்தே நாம் சுவாசிப்போம்.
1.ஆனால் இந்த எண்ணத்தை அவரிடம் வெளிப்படையாக தெரிவிக்காத நிலைகள் இருப்பினும்
2.இந்த உணர்வுகளை நமது முகமும் கண்களும் காட்டிக் கொடுத்துவிடும்.

ஒருவரை நாம் சந்திக்கும் பொழுது இத்தகைய உணர்வுகள் இரண்டையும் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் கண்களின் ஒளி அலைகளாக… “பார்க்கும் பார்வையும் அந்தப் பார்வைக்கொப்ப உணர்வும் இணைந்து சொற்களாக வெளிவரும்…”

ஆகவே நம்மையறியாமலேயே நம்முடைய நினைவாற்றலை வெளிப்படுத்தும். அவர் அன்புடன் பேசினாலும் அதை நாம் நமக்குள் நம்முடைய எண்ணங்களுக்கொப்ப மாற்றி நாம் அவரைக் குறை கூற வேண்டிவரும்.

1.இதைப் போன்று குறை கூறும் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகத்தையும் சொல்லையும் பார்த்தபின்
2.அவரிடத்திலும் குறையான உணர்வுகள் ஏற்பட்டு அவர் சொல்லும் சீராக இல்லாமல் தடுமாற்றமான நிலைகளில் பதில் வரும்.

இது தான், கீதையில் “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” என்ற நிலைகளில் உணர்த்தப்படுகின்றது.

நாம் என்ணும் உணர்வுகள் நமது கண் வழி பாய்வதும் உடலிலிருந்து வெளிப்படும் மணமும் இவை இரண்டும் கலந்து, நாம் சொல்லும் உணர்வின் தொனிகளும் ஒலிகளும் “வித்தியாசமான நிலைகளில் வெளி வரும்…”

இதுவெல்லாம் நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள்.

எனவே நமக்குள் வரும் தீமைகளில் இருந்து விடுபடும் நிலையாக வெளிச்சத்தில் பொருள் எப்படித் தெரிகின்றதோ அதைப் போன்று, நமது வாழ்க்கையில் தெரிந்து தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் ஆறாவது அறிவைச் சீராக்கும் நிலையாக…
1.ஒளியின் சுடராக இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் அனைவரும் நமக்குள் பெருக்கி
2.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுவோம்.

மகரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தியை, நாம் நமக்குள் ஒளியின் சுடராக ஏற்றி, மகிழ்ந்து வாழ்வோம்.
1.பொருளறிந்து செயல்படுவோம்
2.சிந்தித்துச் செயல்படுவோம்
3.பேரருளைப் பெறுவோம் பேரொளியாக மாற்றுவோம்.
4.நாம் அனைவரும், மகரிஷிகள் சென்ற பாதையில் செல்வோம்.
5.இந்த உலகை “மகரிஷிகளின் உலகமாக” மாற்றுவோம்.

ஞானம் எதிலே தோன்றியது…? அதை எல்லோருக்கும் எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் குருநாதர் காட்டினார்

ஞானம் எதிலே தோன்றியது…? அதை எல்லோருக்கும் எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் குருநாதர் காட்டினார்

 

ஞானிகள் உணர்வைப் பெறுகின்றோம்… அதை நமக்குள் வளர்க்கின்றோம். நம்மைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஏனென்றால் உயிர் கடவுளாக இருக்கின்றது
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்திலே சந்தர்ப்பத்திலே தீமைகள் புகுந்து வாட்டுகின்றது.
2.தீமையிலிருந்து விடுபட மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று…
3.மகரிஷிகளின் அருளைத் தியானித்து அந்த வலுவை ஏற்றி எல்லோரும் பெற வேண்டும் என்று நாம் தவம் இருக்க வேண்டும்.

அப்பொழுது உயிரான ஈசனிடத்திலிருந்து மகிழ்ந்திடும் உணர்வுகள் விளைந்து வருகின்றது. அந்தத் தவத்தின் பலனை நாம் பெற முடியும்.

இந்த மூலக்கூறை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டவன் எங்கோ இருக்கின்றான் என்ற நிலை இல்லாதபடி நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் தான் அந்த ஈசன். அதைத் தியானித்து எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த தவத்தின் பயனாக நல்ல விளைவினை நுகர்ந்து அந்த உணர்வை நாம் பெறுகின்றோம்.

மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் இது தியானம். மகரிஷிகள் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணம் அனைவரும் பெற வேண்டும் என்று எடுத்தால் தவம்.

1.மற்ற எத்தனையோ பேர் ஞான மார்க்கங்களைக் காட்டுகின்றார்கள்… ஆனால் அதிலேயே நின்று விடுகின்றார்கள்.
2.ஞானம் எதிலே தோன்றியது…? ஞானத்தை எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் நமது குருநாதர் காட்டினார்.

ஆகையினால் எல்லோருடனும் ஒன்றி இந்த உணர்வை வளர்க்கச் செய்வதற்கும் நாம் எதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதைத்தான் செயல்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

புகழ் தேட வேண்டும் என்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம்… புகழ் வரும்.
1.ஆனால் மெய் ஞானக் கருத்துக்களை யாரும் அறிய முடியாது.
2.நமக்குள் அதை விளைய வைக்கவும் முடியாது.

இந்த உடலில் இச்சைக்காக எதை வேண்டும் என்றாலும் பெறலாம்… நொடியில் பெற முடியும். ஆனால்
1.என்றைக்கும் நிலைத்திருக்கும் அழியாத நிலையான
2.பிறவி இல்லா நிலை அடைய வேண்டுமென்றால் அதற்குக் கொஞ்சம் பொறுப்பும் பொறுமையும் தேவை.

இந்த உடலுடன் யாரும் இருந்ததில்லை மகரிஷிகளும் சரி ஞானிகளும் சரி. ஆகவே… இந்த உடலிலிருந்து அடுத்து இன்னொரு பிறவிக்கு நாம் வரக்கூடாது.