வெறும் கல்வி “ஏட்டுச் சுரைக்காய் தான்” – தயவு செய்து ஞானத்துடன் ஒன்றிய கல்வியைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள்
நாம் கற்ற கல்வி இந்த உடலுக்கல்ல. கற்கும் கல்வியில் நாம் எதைக் கற்றாலும் கல்வி நமக்கு இந்த உலகை அறிந்திட உதவும். இந்த ஆறாவது அறிவல்ல.
மெய்ஞானத்தின் உணர்வு கொண்டுதான் கற்ற கல்வியையும் சீராக்க முடியும். ஏனென்றால்
1.கல்வி கற்றுணர்ந்தோர் அனைவரும் “கரையேறியது இல்லை”.
2.அவர்கள் வாழ்க்கையில் வாழ்க்கையைச் “சீர்படுத்தும் நிலையும் இல்லை”
3.கற்றவர்கள் அனைவருமே பெரும்பகுதி “மனக் குழப்பம்” என்ற இந்த நிலையில்தான் இருக்கின்றனர்.
4.உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அதனால் “பொருள் தேடும்” நிலைகளுக்குத்தான் கற்கும் கல்வியைப் பயன்படுத்துகிறார்கள்.
அதே சமயத்தில், அந்தக் கல்வியின் நிலைகளில் தேடிய செல்வம் செழிப்பாக இருப்பினும் பக்குவத்துடன் பற்று கொண்ட நிலைகளில் “குடும்பத்தில் வாழாது” வேதனை கொண்ட நிலையில் வாழ்கின்றனர்.
ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நமக்குள் சேரும் தீமையான உணர்வுகளை அறிந்திடும் நிலையும் அதை நீக்கிடும் அருள் ஞானமும் அங்கில்லை.
தனக்குள் தீமைகள் விளையாது நல்ல உணர்வுகளை வளர்க்கச் செய்யும் ஆற்றலைப் பெறவேண்டும். அதற்கு அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகவேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்த்து
2.பகைமை என்ற உணர்வு நம் உடலுக்குள் சேராது
3.ஒற்றுமையுடன் இணைந்து வாழும்
4.இணைந்து வாழச் செய்யும் அருள் உணர்வுகளை” நாம் வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வெறும் கல்வி ஏட்டுச்சுரைக்காய் தான். ஆகவே கல்வி கற்றாலும் மெய்ஞானத்துடன் ஒன்றி மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலை வேண்டும்.
ஏனென்றால், மனிதனாக ஆக்கியது “உயிர் தான்”. மனிதனான பின் ஆறாவது அறிவை உருவாக்கியதும் “உயிர் தான்”. இந்த ஆறாவது அறிவின் தன்மைதான் “உயிரைப் போல.., உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக” வளர்க்கும் நிலை பெற்றது.
நாளை வரும் எதிர்காலத்தில் நம்மைக் காக்க நமது குழந்தைகளை அருள் உணர்வுகளைப் பெறும்படி செய்தல் வேண்டும். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் இதைப் போன்றே அறிவுரைகளைக் கூறிடல் வேண்டும்.
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய்
2.நீ தெளிந்த மனம் பெறுவாய்
3.நீ தெளிவான வாழ்க்கை வாழ்வாய்
4.கல்வியில் உயர்வு பெறுவாய்
5.உலக ஞானம் பெறுவாய் உலகைக் காத்திடுவாய்
6.உலகைக் காத்திடும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை நம் குழந்தைகளுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் வழி செல்வோம்.
“அன்றைய மெய் ஞானிகள்” எப்படி வாழ்ந்தார்களோ…, அவர்களைப் போன்றே மெய் ஞான வாழ்க்கையை நாம் அனைவரும் வாழ்ந்திடும் நிலையாக இதனைச் சீராகப் பயன்படுத்துவோம்.
தொல்லையான இடங்களிலிருந்து தப்பிக்க “முன் சிந்தனை” வேண்டும் -நடந்த நிகழ்ச்சி
“நாங்கள் தியானம் செய்கிறோம்…!” என்று சொல்லிவிட்டு சிலர் என்ன செய்கின்றார்கள்? என்னை அவன் இப்படிப் பேசினானே.., அப்படிப் பேசினானே… நான் எத்தனை நாளைக்குத்தான் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறது..?
கடன் வாங்கிச் சென்றவன் கொடுக்க மாட்டேன் என்கிறானே…, எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…?
ஏனென்றால் நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது.., உருவாக்குகின்றது. கண்கள் அதன் வழி காட்டுகின்றது.
தீமைகள் உங்களுக்குள் இயங்காது தடுப்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றோம். ஆனால் “தியானம் செய்கின்றோம்” என்று ஒரு சொல்லில் நிறுத்துகின்றார்களே தவிர அதைப் “பயன்படுத்தும் நிலை” இல்லை.
இப்பொழுது இதையல்லாம் நீங்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள். படிக்கின்றீர்கள்.
என் குருநாதர் என்ன செய்வார் தெரியுமா…?
“பல தொல்லைகளான இடங்களுக்குப் போகச் சொல்வார்”. அங்கே போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது…, பயம் வருகின்றது.
1.அப்பொழுது அதை அடக்குவதற்கு உன்னால் முடியவில்லை என்றால்
2.அது தானே உன்னை ஆட்சி புரிகிறது என்பார்.
3.அதையெல்லாம் நீ அடக்க வேண்டும்.
4.உள்ளுக்குள் போய் உன்னைப் பயப்படச் செய்வது யார்…?
5.வெளியில் இருந்துதானப்பா உன் உடலுக்குள் போகின்றது. அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
6.அதைத் தடுப்பதற்கு உனக்கு நான் ஆயுதத்தைக் கொடுத்திருக்கின்றேன். நீ ஏன் அதைத் தடுக்கவில்லை?
7.தடுக்கவில்லை என்றால் “அது… அந்த வேலையைத்தான் செய்யும்” என்கிறார் குருநாதர்.
திருப்பதியில் ஒரு இடத்தில் தண்ணீர் (நீர் வீழ்ச்சி) கீழே விழுந்து போகின்றது. பள்ளத்தாக்கு மாதிரி இருக்கின்றது. இடையில் ஒரு குகை இருக்கின்றது. அங்கே போகச் சொன்னார் குருநாதர்.
இந்தக் குகைக்குள் போகவேண்டும் என்றால் ஒரு கயிறு கட்டித்தான் போக முடியும். அதற்கு மாறாக அங்கே மரத்தின் விழுதுகள் இரண்டு மூன்று இருக்கின்றது.
என்னிடம் ஏது கயிறு…? அந்த விழுதைப் பிடித்துத்தான் போக வேண்டும். “இந்த விழுதைப் பிடித்துக் கொண்டு… இறங்கிப் போடா…,” என்கிறார் குருநாதர்.
போகும் பொழுது… நான் என்ன செய்துவிட்டேன்…! ஒரு பலவீனமான விழுதைப் பிடித்துவிட்டேன். அது என்ன செய்கின்றது? என் காலை அந்தப் பெரு விரலை வைத்தவுடன் அறுந்துவிட்டது.
அறுந்தவுடன் அங்கே விரிசல் விழுகின்றது. அப்பொழுது மனது இங்கே பதறுகின்றது.., “அந்தச் சந்தர்ப்பம்”. அப்பொழுது பதட்டம் வரும்போது “பிடிப்பை” விட வேண்டி வருகின்றது.
அப்புறம் என்ன செய்தேன்…?
“மன உறுதி கொண்டு…” அடுத்துப் பெரிய விழுதைப் பிடிக்க முயற்சி செய்கிறேன். மற்றொன்றைப் பிடிக்கிறேன். பிடித்து அந்தக் குகைக்குள் போய்விட்டேன்.
அன்று அரசர் காலங்களில் எதிரிகளிடமிருந்து தப்ப வேண்டும் என்று வரக்கூடிய அரசர்கள் அந்தக் குகைக்குள் வந்து மறைந்து கொள்கின்றார்கள். மறுபடியும் இங்கிருந்துதான் திருப்பதிக்குப் போகின்றார்கள். அந்தப் பாதைகள் இருக்கின்றது.
மற்ற அரசர்கள் தேடி வந்தால் இவர்கள் தப்பிப் போகக்கூடிய நிலைகளாக அது இருந்தது. உள்ளுக்குள் நுழைந்து குகைக்குள் போய் மாடியில் தங்கிக் கொள்கின்றார்கள்.
அந்த இடத்தில் வெறும் விழுது தான் தெரிகின்றது. ஒரு கயிறு போட்டால் கூடத் (குகை இருப்பது) தெரிந்துவிடும்.
ஆனால் அதற்குள் இருந்துதான் நீர் வருகின்றது. இப்படிப் போய்விட்டோம் என்றால் மலைக்கு மேலே போயிடலாம். இதற்குள் போய்விட்டோம் என்றால் தண்ணீர் வரக் கூடிய பாதைதான்.
அதனால் தான் முதலில் விழுது அறுந்தவுடன் பயம் வருகின்றது. அப்புறம் அந்த தைரியத்தை வரவழைக்கும் போது அந்த விழுதைப் பிடித்துக் குகைக்குள் போனேன்.
குகைக்குள் போனவுடன் நான் உள்ளே சென்றுவிட்டேன். விழுதை விட்டுவிட்டேன்.
விழுதைப் பிடித்து உள்ளுக்குள் போனேன். திரும்பி வரவேண்டும் என்றால் என்ன செய்வது?
விழுதோ வெகு தூரத்தில் இருக்கின்றது. இதை எப்படிப் பிடிப்பது..? அப்பொழுது மன உறுதி இழந்து விட்டேன்.
விழுது வெகு தூரத்தில் இருந்தால் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் கீழே அதல பாதாளத்தில் விழுந்து விடுவோம் என்று சிந்தனை வந்துவிட்டது.
1.நொடிக்கு நொடி மனித உணர்வுகளை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் அந்தச் சந்தோஷம் என்ற நிலைகள் எப்படிப் போகின்றது?
2.பயம்.., என்ற “அரக்க உணர்வுகளுக்குச் சென்றவுடன்” அது எப்படி நம்மைப் பலவீனபடுத்துகின்றது?3.நல்ல சிந்தனைகளை எப்படி இழக்கச் செய்கின்றது..?
இப்படித்தான் எனக்கு அனுபவம் கொடுத்தார் குருநாதர்.
அப்புறம் என்னாகிவிட்டது? வேறு வழியே இல்லை அணிந்திருந்த வேஷ்டியைக் கிழித்தேன். கயிறு மாதிரிச் செய்தேன்.
நான் இருக்கும் இடத்தில் தேடுகின்றேன். அங்கே வேறு ஒரு பொருளும் இல்லை. சிறிய கல் இருந்தது. அந்தக் கல்லை எடுத்து வேஷ்டியில் ஒரு முனையில் முடிஞ்சி கயிறு மாதிரி நல்லா திரித்துக் கொண்டேன். அந்த நேரத்தில் “ஒரு சிந்தனை” வந்தது.
அதை இலாவகமாக அப்படியே வீசினேன். தூரத்தில் இருந்த விழுதில் அந்தக் கல் அடித்தவுடன் அப்படியே சுற்றிக் கொண்டது.
அப்படியே மெதுவாக இழுத்துக் கையில் பிடித்துக் கொண்டேன். அதைப் பிடித்து இந்தப் பக்கம் வந்து சேர்ந்தேன்.
முதலில் உள்ளே போகத் தெரிந்தது ஆனால் வரத் தெரியவில்லை. ஆனாலும் இந்த வேஷ்டி இல்லாமல் வெறும் ஜட்டி போட்டுக் கொண்டு போனால் என்னாகும்? ஆபத்து தான்.
இதையெல்லாம் ஒவ்வொரு இடங்களிலும் மனிதனின் உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது என்பதற்குத்தான் இந்த அனுபவம்.
ஏனென்றால் குருநாதர் அங்கே அரசர்கள் தங்கும் குகை இருக்கின்றது. நீ இதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையை ஊட்டுகின்றார். அந்தக் குகைக்குள் “என்னென்னெமோ… இருக்கின்றது…! என்று காட்டுகிறார்.
அதன் வழியில் நான் போகின்றேன்.
முதலில் பிடித்த விழுது பலவீனமானது என்று சிறிது கவனமாகப் பார்த்திருந்தால் அது அறுந்திருக்காது.
அடுத்த விழுதை மறுபடியும் பிடித்து உள்ளுக்குள் போகத் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்றவுடன் அந்த விழுதை முதலில் எங்கேயாவது ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும் அல்லவா.
விட்டு விட்டால் போய்விடுகிறது. அப்பொழுது என்ன செய்வது? அதற்குண்டான உபாயம்… “முன் சிந்தனை” இல்லாது போகின்றது.
இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
1.அப்படி இல்லாது என் குருநாதர் உள்ளுக்குள் போகச் சொன்னார்.
2.போகச் சொல்லி வசமாகப் இப்படி சிக்க வைத்து விட்டார் என்று எண்ணினால் எப்படி இருக்கும்?
குருவையே நிந்திக்கக்கூடிய நிலை தான் வரும். அப்புறம் “வலு…” எங்கிருந்து கிடைக்கும்?
குரு வழி காட்டுகிறார். அப்பொழுது அந்த இடத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற நிலையில் அவரை எண்ணி இதிலிருந்து மீட்டிடும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால் அந்தத் தெளிவு அனுபவமாகக் கிடைக்கும்.
இது தான் என்னுடைய அனுபவம்.
அவர் சொன்ன நிலையில் அந்த குகையிலே தியானித்தேன். உள்ளே அரசர்கள் ஒளித்து வைத்த விலை உயர்ந்த எத்தனையோ பொருள்கள் நிறைய இருக்கின்றது.
பல விதமான சுரங்கங்கள் போகின்றது. ஒரு இடத்திற்கு மேல் போகப்படும்போது அதற்கு மேலே “நீ போக வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.
இதே தண்ணீர் மாதிரி தான் இருக்கும். அந்தத் தண்ணீருக்குள் முக்குளித்துப் போக வேண்டும். கிணறு மாதிரி இருக்கும். கிணற்றுக்குள் முக்குளித்துப் போனால் அங்கே ஒரு குகை இருக்கும்.
அதற்கு மேலே போனால் மேடாக இருக்கும். தெரிந்தவன்தான் அங்கே போக முடியும். தெரியாதவர்கள் போக முடியாது. இனிமேல் நீ போக வேண்டாம் என்றார் குருநாதர்.
ஆனால் அன்று அந்த அரசர்கள் தன் எதிரியிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எந்தெந்த வகை எல்லாம் செய்து வைத்திருக்கின்றார்கள் என்று “பார்” என்று காட்டுகின்றார்.
ஒவ்வொரு அரண்மனையிலையும் வாய்க்காலை வெட்டி வைத்துத் தண்ணீரை விடுகிறார்கள். அதிலே முதலைகளைப் போட்டு விடுவார்கள்.
நீர் ஓடை இருக்கும் இடத்தில் தான் ஒவ்வொரு அரண்மனையும் கட்டியிருப்பார்கள். அங்கே இருக்கும் அத்தனை பேருக்கும் தண்ணீர் வேண்டுமல்லவா.
ஆறு பக்கத்திலிருந்தால் நீர் எளிதில் கிடைக்கும் அல்லவா.
அதே சமயத்தில் மலைப்பாங்குகளில் செயல்படுத்தப்படும் போது மலையிலேயும் சில குகைகளில் அந்த நீர் ஊற்று இருக்கும்.
ஒரு மழை பெய்தது என்றால் ஒரு வருடத்திற்கு வேண்டிய தண்ணீரை அங்கே எடுக்கலாம். ஏனென்றால் இவ்வாறு அரசனுக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் உண்டு.
காற்றோட்டத்திற்காக வேண்டி நாம் வீடுகளில் ஜன்னல் வைத்திருக்கின்றோம். ஜன்னல் வழியாக நேரடியாகப் பார்க்கலாம்.
ஆனால், அந்தக் குகைகளில் பார்த்தால் வெளியில் இருக்கும் மனிதரை நாம் பார்க்க முடியாது. குகைக்குள் இருப்பவரை வெளியில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அதில் சந்து விட்டிருக்கின்றார்கள்.
சந்து வழியாக வெளிச்சம் வந்தவுடன் அதிலே பாதை தெரிகின்றது. அதே சமயத்தில் அந்த வெளிச்சம் எதிரிக்குத் தெரியாத மாதிரி இங்கேயே ஒரு பட்டன் மாதிரி வைத்திருக்கின்றார்கள்.
தெரியாதவர்கள் உள்ளுக்குள் வர முடியாதபடி வெளிச்சத்தை அடைத்து விடுகின்றார்கள். பாதை தெரியாது. இந்த மாதிரி எல்லாம் அரசர்கள் செய்து வைத்துள்ளார்கள்.
காற்று “ஜம்” என்று ஜிலு… ஜிலு… என்று வருகிறது. ஆனால் அடுத்தவர்கள் பேசுவதை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த மாதிரி அரசர்கள் இராஜதந்திரமான நிலைகளை அரசு ஆட்சி புரிந்தாலும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு “எத்தனை அவஸ்தைப்பட்டு வாழ்ந்தார்கள்” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.
உடல் வலிகளையும் நோய்களையும் போக்கும் எளிய பயிற்சிகள்
படம் 1– துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை உங்கள் உடல் உறுப்புகளில் பெருக்கச் செய்யுங்கள்
பிறருடைய கஷ்டங்களையோ, நஷ்டங்களையோ மற்றும் பல நிலைகளைப் பார்த்தோம் என்றால் நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்?
படத்தில் (படம் – 1) காட்டியபடி காதிலே கையை வைத்துக் கொள்ளுங்கள்.
“ஓம் ஈஸ்வரா குருதேவா” உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற இந்த உணர்வவை உடல் முழுவதும் எண்ணிச் சொல்லிக் கொண்டயிருங்கள்.
1.இதை அங்கே பாய்ச்சி
2.உங்கள் செவிக்குள் கொடுத்து
3.இந்த உணர்வுகளைப் பரப்புங்கள்.
நீங்கள் இந்த மாதிரிச் சொன்னீர்கள் என்றால் இந்த உணர்வலைகள் அங்கே வரும்.
உடலில் எங்கெல்லாம் வலி இருக்கின்றதோ…, அந்த இடங்களிலெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படரவேண்டும் என்று இதே போன்று சொல்லி “நினைவைச் செலுத்தினால்… உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்”.
உங்கள் இருதயத்தில் படபடப்பு வந்தால் இதே மாதிரி கையை வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படரவேண்டும், எங்கள் இருதயத் துடிப்பு சீராக அமைய வேண்டும் என்று இந்த உணர்வினை எடுக்க வேண்டும்.
இன்றைய விஞ்ஞான உலகில் பெரும் துயரங்களும் தொல்லைகளும் வந்து கொண்டிருக்கும் பொழுது இதைப் போல உங்கள் உணர்வுக்குள் உங்களுடைய சொல்லைச் செவிகளைக் கொண்டு
1.அந்த அருள் உணர்வின் தன்மையை உந்தச் செய்து,
2.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலின் வீரிய சக்தியை உங்கள் உடல் உறுப்புகளில் பெருக்க இது உதவும்.
இதைப் போன்று, உடலில் எந்த வலி வந்தாலும் சரி, “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று உங்கள் உயிரை எண்ணி வலி எடுக்கின்ற பக்கம் கண்ணின் நினைவைச் செலுத்தி உடலில் உள்ள வலி நீங்கவேண்டும் என்று சொல்லுங்கள்.
எங்கள் உடலில் உள்ள வாத நீர், பித்த நீர், விஷ நீர் அனைத்தும் இறங்க வேண்டும், “தரையிலே இறங்க வேண்டும்” என்று நீங்கள் எண்ணுங்கள். இவ்வாறு நீங்கள்
1.உங்கள் நினைவுகளை உங்கள் உடலில் வலி உள்ள இடங்களுக்குச் செலுத்தச் செலுத்த,
2.அந்த ஆற்றல்மிக்க உணர்வுகளை நீங்கள் நுகர
3.உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த,
4.துரித நிலைகள் கொண்டு தீமையின் உணர்வுகளை நீங்கள் மாற்றி அமைக்க முடியும்.
5.வேதனையிலிருந்து விடுபட முடியும்.
அருள் வாக்குப்படி “நீங்கள் இப்படிச் செய்யுங்கள்” என்று சொல்கின்றேன். யாம் சொன்ன முறைப்படி நீங்கள் இதைச் செய்தால் உங்கள் உணர்வுகள் உடலுக்குள் பாய்ந்து இதெல்லாம் வாக்குப்படி “சித்தம்தான்”.
யாம் கொடுக்கும் இந்த அருள் வாக்குகள் உங்களுக்குள் பதிவானபின் இதைச் செய்தால் உங்களுக்குள் வரும் எத்தகையை தீமைகளையும் அகற்றும் வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.
ஆகவே, இதையெல்லாம் ஒவ்வொரு நொடியிலும் எடுத்துப் பழகுங்கள். எமது அருளாசிகள்.
படம் 2 – உங்கள் உணர்வே டாக்டர் ஆகும்
சிறிது நேரம் சுவற்றில் கையை வைத்துக் கொண்டு (படம் 2) அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி, எங்கள் உடலில் உள்ள நஞ்சின் தன்மைகள் (நோயை உருவாக்கும் உணர்வுகள்) நீங்க வேண்டும் என்று ஏங்கி இருந்தால் அது அனைத்தும் நீங்கிவிடும் (இறங்கிவிடும்).
உங்கள் உணர்வே டாக்டர் ஆகும். நீங்கள் டாக்டரிடம் போகவேண்டியதில்லை. கூடுமான வரைக்கும் சில சிரமங்களை மாற்றி அமைக்க முடியும்.
ஒவ்வொரு நாளும் இதைச் செய்து வரலாம். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
படம் 3 – உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க என்ன செய்ய வேண்டும்?
கண் பார்வை மங்கினால், உட்கார்ந்து காலை நீட்டிக் குனிந்து (படம் – 3) காலில் பெரு விரலைத் தொடவும். மூன்று முறையாவது செய்யவும்.
1.குனிந்து இருக்கும் பொழுது, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
2.அந்த நினைவு முழுவதையும் கண்ணிலே நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
4.அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணி சிறிது நேரம் மூச்சை அடக்கி, பின் மூச்சை விடவும்.
இதனால் சிறு மூளை பாகங்களுக்குள் உள்ள நுண்ணிய நரம்புகளுக்குள்ளும் இரத்த நாளங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாயும்.
இப்படிச் செய்து வரும் பொழுது உங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க உதவும்.
குறிப்பு: இது மூச்சுப் பயிற்சி அல்ல. துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளை எண்ணத்தின் மூலம் உயிரான ஈசனிடம் வேண்டி நம் உள் உறுப்புகளுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.
அதில் உள்ள விஷத் தன்மைகளை வேக வைத்து உறுப்பை உருவாக்கிய அணுக்களை உற்சாகப்படுத்தி அதை வீரியம் அடையச் செய்து உறுப்பின் இயக்கத்தைச் சீராக்குகின்றோம்.
இது உங்களால் முடியும். உங்கள் எண்ணத்திற்கு எவ்வலவு வலு இருக்கின்றது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காலை மடக்கிக் குனிந்து செய்யும் பயிற்சியைக் கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாது.
பராசக்தி குளிக்கும் குளத்தில் ஆண்கள் குளித்தால் “பெண்ணாக மாறுவார்கள்” என்ற சாபத்தின் விளக்கம்
பாராசக்தி – பார்வதி ஒரு குளத்தில் குளி்த்து வருவது வழக்கம்.
ஆனால் அவர் குளித்த அந்தக் குளத்தில் வேறு யாராவது ஆண்கள் குளித்தால் அது பெண்களாக மாறிவிடுவார்கள் என்று சாபமிட்டதனால் “அந்தக் குளத்தில் யாரும் ஆண்கள் குளிப்பதில்லை”.
இப்படிக் காவியப் படைப்பைப் படைத்து அந்தக் கருத்தினை நாம் தெரிந்து கொள்வதற்காகத் தெளிவாக்குகின்றனர்.
குரங்கு அது தாவிச் செல்லும் நிலையானாலும் அந்தக் குளத்தில் விழுந்து விட்டது. இது ஆண் குரங்காக இருப்பதனால் அந்தக் குளத்தின் உணர்வுகள் இதன் மேல் பட்டுப் பெண்ணாக மாறி விடுகின்றது.
ஏனென்றால் நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் இது ஒரு பெரிய குளம்.
அதிலே நாம் பிறர் படும் கஷ்டங்களையோ வேதனைகளையோ நுகரப்படும் போது நாம் அதிலே விழுந்து விடுகின்றோம் என்பதனை உணர்த்துவதற்காக காவியத் தொகுப்புகளைத் தெளிவாக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.
இப்படி விழுந்த குரங்கு பெண்ணாக மாறிவிடுகின்றது. பெண் என்றால் சக்தி என்று பொருள். ஆகவே அது தனக்குள் கருவாக்கும் தன்மை பெற்றது என்பதனை உணர்த்துகின்றனர்.
நமது பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் இத்தகைய விஷத்தன்மை பெரும் குளமாக இருக்கின்றது. அந்த உண்மைக்கு மாறான நிலைகள் நடப்பவைகளைப் பார்த்து நாம் விழுந்து விட்டால் எப்படி மாற்றம் அடைகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக ஒரு காவியமாகப் படைத்தனர் ஞானியர்கள்.
நம்மை அறியாமலே பிறருடைய நிலைகளைப் பார்த்து அந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் “இப்படி வேதனைப்படுகின்றானே..,” என்று (குளத்தில் பட்டால்) அவன் உணர்வை நாம் எடுத்தால் இந்த உடலுக்குள் என்ன ஆகின்றது?
நாம் பல வேதனைகள் படுகின்றோம் என்பதனைக் காட்டுகின்றனர்.
இப்படிப் பெண்ணாக மாறியபின் அதைக் கண்டு ரசிக்கின்றனர். யார்? வாயு. அதைக் கண்ட பின் எப்படியும் அதனின் அழகைக் கண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதனை அணைத்துக் கொள்ள வேணடும் எனறு விரும்புகின்றது.
வாயு என்பது நாம் நுகர்வது வாயு (சுவாசக் காற்று), அதன் உணர்வின் தன்மை இங்கே நம் உடலுக்குள் சென்றபின் உமிழ் நீராக மாறுகின்றது.
வாயுவுனுடைய நிலைகள் எந்த குணத்தின் உணர்வோ அதனை எண்ணும்போது “அதிலே உருவான கரு தான்” என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.
வேதனைப்படுபர்களைப் பார்த்து அந்த வேதனையான உணர்வை நாம் சுவாசிக்கும் போது நுகர்ந்த உணர்வுகள் வேதனை என்ற உணர்வைக் “கருவாக்கும்” உமிழ் நீராக மாறுகின்றது.
இதை மாற்றி அமைப்பதற்காக “இந்திரன்..,” இரண்டாவது வருகின்றான். இந்த அழகைக் கண்டு தானும் ஆசைப்பட்டு அதை அடைய விரும்புகின்றான்.
1.“இந்திரன்… என்றால் உருவாகும் உணர்வுகள்”
2.உமிழ் நீராக மாறி அது இந்திரீகமாக மாறுகின்றது.
3.இந்திரீகமாக மாறப்படும் போது அந்த வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக எப்படி உருவாகின்றது? என்ற நிலையைக் காட்டுகின்றனர்.
இதையெல்லாம் நாம் புரிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளில் தெளிவாக்கியுள்ளார்கள்.
இதையெல்லாம் எதற்காகச் சொல்கின்றேன்? நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை எல்லாம் நேராக துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்லுகின்றேன்.
இந்த உணர்வை எடுத்து எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் உடலில் எளிதில் சேர்த்துக் கொள்ள இது உதவும்.
உமிழ் நீராக ஆனதால் இந்திரன் என்றால் அவனுக்கும் இரண்டு பேருக்கும் (வாயு, இந்திரன்) சேர்த்துப் பிறந்தது தான்.
ஆகவே வேதனைப்பட்ட உணர்வுகள் வாய்வு. நமக்குள் நுகர்ந்த பின் அது உமிழ் நீராக மாறுகின்றது.
பின் இந்திரன் என்ன செய்தான்…? அதன் உணர்வு கொண்டு அதன் ஆசையிலேயே தான் (உடலாக) உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது என்பதனைக் காட்டுகின்றனர்.
ஏனென்றால் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்து விரும்பித்தான் எடுக்கின்றோம். ஆகவே.., அப்பொழுது நாம் ஆசைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்?
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறவேண்டும் என்று அதை ஆசைப்படுதல் வேண்டும்.
ஏனென்றால் வேதனையை நுகருகின்றோம். வாயுவாகின்றது. நம் உடலுக்குள் வரும்போது வாலியாகிவிடுன்றது. அந்த வலுவின் தன்மை உமிழ் நீராக மாறுகின்றது.
அந்த வலிமையான நிலைகளை மாற்றியமைப்பதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்.
இதைப் போல் அந்தத் தீமைகளை நீக்கிய உணர்வை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அது பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வை நாம் சுவாசிக்க வேண்டும். அது நமக்குள் கலந்து நம் உயிரிலே படுகின்றது.
நாம் குழம்பு வைக்கும் போது உப்பு புளி காரம் என்று பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக மாற்றுவது போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று இப்படி அதை இணைத்துக் கொள்ள வேண்டும்.
இணைத்தால் அந்த வேதனைகளைத் தடுத்து விடுகின்றது. வேதனைப்படும் உணர்வுகள் அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்துகின்றது.
இப்படி நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேருளைப் பெறவேண்டும் என்று செலுத்தப்படும் போது
1.இங்கே புருவ மத்தியில் அந்த உயிரின் நிலைகளில் உள்ளே செல்லாது தடுப்பதும்
2.நம் உடலுக்குள் இரத்தத்தில் கலந்தபின் அந்த விஷத்தின் தன்மை நுகராது தடுப்பது தான் இந்த உண்மையான நிலைகள்.
3.தியானம் என்பது முறைப்படி இது தான்.
நம்முடைய சகஜ வாழ்க்கையில் பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். பார்த்தபின் அவர்களை நல்லதாக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்களுக்குப் பொருளால் உடலால் வேண்டிய உதவிகளைச் செய்து நல்லதாக்கி விடுகின்றோம்.
ஆனால் நாம் நுகர்ந்த தீய உணர்வுகள் அதனுடைய வலிமையான நிலைகள் நமக்குள் நோயாக வந்து விடுகின்றது. அந்தத் தீமைகளை நுகர நேர்ந்தாலும் தீமையின் உணர்வுகள் நமக்குள் பெருகாது தடைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதைப் போன்ற நிலைகளில் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் சேரும் தீமைகளை “நாம் தடைப்படுத்துவதற்குத் தான்” ஞானிகள் இப்படி காவியங்களைக் கொடுத்துள்ளார்.
“பிறரைக் காத்திட வேண்டும்” என்று செயல்பட்ட மகான்கள் விண்ணுலகம் சென்ற நிகழ்வு
நான் ஏதோ.., “கதை சொல்கிறேன்” என்று எண்ணி விடாதீர்கள்.
இயற்கை நிலைகளில் பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேச வாயிலாக அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார்
“மனிதனும் தெய்வமாக வேண்டும்.., தெய்வ நிலை கொண்டு வேகா நிலை பெற வேண்டும்” என்று இராமலிங்க அடிகள் வெளிப்படுத்தினார்.
1.மண்ணுலகில் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.
2.அவர்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
3.மனிதனை மனிதனாக்க வேண்டும்.
4.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் புகுத்த வேண்டும்
5.பகைமை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும்.
6.பற்றுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற நிலையை உணர்த்திய இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், மகாத்மா காந்தி போன்ற இன்றைய நிலையில் எத்தனையோ ஏனைய ஞானிகளும் மகான்களும் நம் பூமியிலே வாழ்ந்தார்கள்.
இதைப் போல ஓவ்வொரு மகானும் சொல்லி இருந்தாலும் அவர்களைப் பின்பற்றியவர்கள் என்ன செய்தார்கள்?
இராமலிங்க அடிகள் இந்த உடலைப் விட்டு பிரிந்த பின் அவரை யாரும் விண் செலுத்தும் நிலை இல்லை. அவரைப் போற்றி துதிக்கும் நிலைதான் இருந்ததை தவிர பற்றுடன் பற்றித் தங்களுடைய வாழ்க்கைக்காகப் பற்றும் நிலை தான் வந்தது.
அவர்களுடைய அன்பைப் பெற்றனர். இந்த மனித வாழ்க்கையைத்தான் எண்ணி அவர்களிடம் வேண்டியிருந்தார்கள். ஆனால், அவர்கள் உடலை விட்டு அகன்ற பின் மகான்களின் ஆன்மாக்களை யாரும் விண் செலுத்தவில்லை.
ஆகவே இது காலத்தால் மறைந்த நிலைகள்.
மகான்கள் மக்களுக்காகப் பாடுபட்டார்கள். பிறர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று ஐக்கிய உணர்வை ஏற்படுத்தினார்கள்.
சூரியன் எவ்வாறு தனக்குள் ஒளியின் சுடராக அனைத்தையும் மாற்றுகின்றதோ அதே போல மகரிஷிகள் எவ்வாறு மாற்றினரோ எல்லோரும் ஒன்றாக வேண்டும் என்று அத்தகையை மகான்கள் எண்ணினாலும் “விண் செல்லும் ஆற்றலை..,” அவர்களும் கற்றுணரவில்லை.
மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. “விண் செல்ல வேண்டும்” என்று யாரும் எண்ணவில்லை.
இத்தகைய மகான்கள் உணர்த்திய உணர்வுகளும் நமக்குள் உண்டு. “நீ முதலில் அவர்களை விண் செலுத்து” என்று அதற்குச் சில உபாயங்களைச் சொல்லி விண் செலுத்தச் செய்தார் குருநாதர்.
காந்திஜி “மதங்கள் இல்லை.., பேதங்கள் இல்லை” என்று உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வெளிப்படுத்தினார்.
மக்களுக்குள் ஐக்கியமாக வாழ்ந்து மனிதன் என்ற ஆறாவது அறிவை கொண்டு நாம் அனைவரும் தீமைகளிலிருந்து விலகி நின்று உலக மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நிலைகள் கொண்டு எடுக்க வேண்டும் என்று உணர்த்தினார்.
அவ்வாறு அவர் உணர்த்தினாலும் இவர்களுடைய வேட்கையின் நிலைகள் கொண்டு வெறி கொண்ட உணர்வு கொண்டு அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சுட்டு வீழ்த்தினார்கள்.
காந்திஜியின் எண்ணங்கள் அப்பொழுதும் மற்றவர் மேல் பகைமை கொள்ளாது “இராமா… இராமா…” என்று உயர்ந்த குணத்தைச் சாந்தம் கொண்டு பிறருக்கு.., “என்னால் தீங்கு வரக்கூடாது” என்றுதான் எண்ணினார்.
அப்படி எண்ணினாலும் அவர் விண் செல்ல வேண்டும் என்ற நிலை அறவே அற்று விட்டது.
அத்தகைய மகான்களை எல்லாம் இன்று போற்றித் துதிக்கின்றோம். ஆனால், அதன் மறைவிலே பல தவறுகள் செய்வோரும் இன்று உண்டாகி விட்டார்கள்.
அவர் செய்த நன்மைகளைப் புகழ்கின்றோம். ஆனால் புகழ்ச்சி நிலைகள் கொண்டு மனிதர்கள் தங்களுடைய சுக போகங்களுக்காகத் தவறு செய்யும் நிலைகளாக அதை உருமாற்றி விட்டார்கள்.
இதைப் போன்ற நிலையிலிருந்து மீள்வதற்கே எமது குருநாதர் இதையெல்லாம் சொன்னார்.
உலகில் எத்தனையோ மகான்கள் தோன்றினர். ஆனால் அந்த மகான்களின் உபதேசங்களை இந்த மனித வாழ்க்கைக்குத்தான் பின்பற்றினார்களே தவிர அவர்கள் காட்டிய அற நெறிகளை யாரும் பின்பற்றவில்லை.
1.இந்த மனித வாழ்க்கையைச் சதம் என்றே எண்ணினார்கள்.
2.சதமற்ற வாழ்க்கைக்கே ஜீவன் கொடுத்தார்கள்.
3.சதமற்ற வாழ்க்கையே இன்று வாழ்ந்து கொண்டு
4.சதமற்றுப் புழுவைப் போல இன்று துடித்துக் கொண்டுள்ளார்கள்.
இதனின்று மீட்டிட வேண்டும் என்பதற்கே சொல்கிறேன் நான் கொடுத்த அருள் உணர்வின் ஞான வித்தை உன்னுள் வளர்த்து விடு என்றார் குருநாதர்.
பிறரைக் காத்திட வேண்டும் என்ற நிலையில் செயல்பட்ட மகான்களின் உயிரான்மாக்களை அந்த மெய் ஞானிகளுடன் இருந்து தனித்து நின்று “நீ விண் செலுத்து” என்றார்.
அவர்களின் துணை கொண்டு இந்தப் புவியிலே விளைந்த அந்த ஆன்மாக்களைச் “சப்தரிஷி மண்டலத்துடன்…, இணைக்கக் கற்றுக் கொடுத்தார்” மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
1.அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கிறது?
2.எதனின் உணர்வை உனக்குள் கவர வேண்டும்?
3.எதனின் வலுவின் துணை கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்?
4.அந்த ஆன்மாக்களை உந்தி விண்ணிலே வீசி விட்டால் அந்த ஞானிகள் அருகிலே செல்லும்போது உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகின்றது.
5.ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது? என்று அவர் எம்முடன் இருந்தே இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.
இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் “நானல்ல…,” குருநாதர் காட்டிய உணர்வின் தன்மையே இது.
ஒரு மரம் எவ்வாறு தன் மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய உணர்வு கொண்டு இயக்குகின்றதோ இதைப்போல ஒரு மனிதனுக்குள் எடுத்துக்கொண்ட உணர்வின் செயல் எதுவோ அதனின் நிலைகளையே பேசுவர். அதனின் நிலையிலேயே வலுப்படுவர்.
இதைப்போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருக்குள் விளைந்த ஆன்ம ஞானத்தை மெய் உணர்வின் தன்மையை விண்ணில் வளர்ந்துக் கொண்டிருக்கும் உணர்வுகளைப் பரப்பும் மார்க்கத்தைக் காட்டினார்.
1.மக்கள் நலமாக இருக்கவேண்டும் என்று வாழ்ந்த மகான்கள்
2.சாதாரண வாழ்க்கையிலிருந்து அவர்கள் ஆன்மா பிரிந்த பின்
3.மீண்டும் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை முதலில் விண் செலுத்து என்றார்.
4.அவருடன் இருந்து அந்த மகான்களை விண் செலுத்தினோம்.
அதனின் நிலை கொண்டுதான் அவர்களின் தத்துவத்தை இன்று நாம் பருகும் நிலையாக எமக்குள் அந்த உணர்வின் சத்தை ஊட்டி நீ இவ்வாறு பருக வேண்டும் என்று உணர்த்தினார்.
அவர்கள் முதலில் விண் செல்லும் போது எல்லோரும் ஐக்கிய உணர்வு பெற வேண்டும் என்று எண்ணச் செய்தார்.
1.அவர்கள் விண் செல்லும் போது
2.அவர்களின் உணர்வின் தன்மை உனக்குள் வருவதும்
3.உன் சொல்லைக் கேட்டுணர்ந்தோரும் ஐக்கிய உணர்வும் மெய் உணர்வைப் பெறும் தகுதியையும் பெறுகின்றனர் என்றார்.
இதைப் போல் நம்மை வளர்த்த தாய் தந்தையர்களின் மூதாதையர்களும் நம்மை வளர்த்திட எத்தனை நிலைகள் நாம் சிறு வயதாக இருக்கும் பொழுது தாத்தா பாட்டி என்று சொன்னால் அவருடைய சிரமத்தையும் பார்க்காது நமக்கு எத்தனையோ நிலைகளைச் செய்தார்கள்.
அதே போல் அந்த ஆன்மாக்களையும் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செலுத்த வேண்டும் என்று இத்தகைய நிலைகளையும் குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகக் காட்டினார்.
ஆனால், இன்றைய நிலையில் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்கள் குல தெய்வங்கள் குடும்பத்தை காத்திட்ட நிலைகள் கொண்டு அவர் ஆன்மாக்கள் பிரிந்து சென்றபின் என்ன செய்கின்றார்கள்?
அமாவாசை அன்று இருண்ட நாளில் அவருக்கு வேண்டிய உணவை வைத்து அவர்களுக்கு வேண்டிய மற்றவைகளையும் படைத்து அழைக்கின்றார்கள்.
அவர்களை மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே இழுத்துப் பழகி விட்டனரே தவிர ஒளி என்ற சரீரம் கொண்ட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கும் நிலை முழுவதுமே அற்றுப் போய்விட்டது.
ஐதீகம் சாஸ்திரம் என்ற நிலைகள் இருளான அமாவாசை நாள்களில் அவர்கள் உணவாக உட்கொண்ட நிலைகள் கொண்டு அவர்களை ஏங்கி இந்தப் புவிக்குள் இழுக்கும் நிலைகளாகச் சாஸ்திர விதிகளை மாற்றி விட்டனர்.
ஆனால், அவர்களுக்கு உணவு எப்படிக் கொடுக்க வேண்டும்?
பிறவா நிலை பெற்ற அருள் மகரிஷிகளின் உணர்வை என்றென்றும் அவர்கள் உணவாகப் பெற்று அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு நாம் விண் செலுத்த வேண்டும்.
“அங்கே இணைத்து” உடல் பெறும் உணர்வைக் கருக்கி விட்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக ஒளிச் சரீரம் பெறச் செய்தல் வேண்டும்.
இவ்வாறு தீமையை ஒடுக்கி ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதை நீ பருகு என்றார். “எல்லோருக்கும் அதைக் கிடைக்கச் செய்” என்றார்.
ஆயிரம் நல்லது செய்து… என்ன பலன்…? “தெய்வம் என்னைச் சோதிக்கின்றது” என்கிறோம்
வாழ்க்கையில் மனிதர்கள் யாரும் தவறு செய்யவில்லை. பக்தி மார்க்கத்தில் இருப்போர் எவரும் குறைகளைச் செய்யவில்லை.
1.நல்லவைகளைச் செய்ய வேண்டும்.
2.நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
3.பிறரைக் காக்க வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டிருந்தாலும்
4.”பிறர் படும் துயரங்களைக் கேட்டுணர்ந்த உணர்வுகள்… பதிவான பின்.., என்ன ஆகின்றது?”
நாம் பலகாரங்களைச் சுவையாகச் செய்து வைத்த பின்பு அதிலே சிறிதளவு உப்பு அதிகமாகிவிட்டால் அதனின் சுவை கெட்டுவிடுகின்றது.
இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் நல்லவைகளைச் செய்தாலும் பிறர் படும் வேதனைகளை நாம் கேட்கும் பொழுது அவர்கள் கஷ்டமெல்லாம் நமக்குள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே இந்தத் தீமையான உணர்ச்சிகள் வளர்ச்சி அடைகின்றது.
பல பொருள்கள் தனித்தனியாக இருக்கின்றது. பலகாரமாகச் செய்யும் பொழுது எல்லாவற்றையும் ஒருக்கிணைந்து அந்த உப்பையும் இணைத்தால் தான் பலகாரம் சுவையாக இருக்கின்றது.
ஆனால் அந்த உப்பு கூடிவிட்டாலோ சுவையின் தன்மையை மாற்றிவிடுகின்றது.
இதைப் போல நம் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் செயல்கள் அதிகமாக இருப்பினும் மற்றவர்களையும் நாம் மகிழ்வடையச் செய்கின்றோம்.
சில பேர் மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் அவர்களை மகிழச் செய்வார்கள். 100க்கு 99 பேர் அந்தக் கொள்கையில் உள்ளவர்கள் என்று கூடச் சொல்லலாம்.
பிறருக்கு உதவி செய்யும் நிலைகளில் அதை மெச்சிச் செய்வார்கள். ஆனால் பின்னாடி “என்ன செய்து…, என்ன பலன்…?” என்று வெறுப்பார்கள்.
பிறர் படும் துயரங்களைக் கேட்டறிந்து கேட்டறிந்து ஒருவருக்கு உதவி செய்தால் அவர் மகிழ்கின்றார். மற்றவர்களுக்கு உதவி செய்தால் அவர் மகிழ்கின்றார்.
1.இதைப் போல ஆயிரக் கணக்கோருக்கு உதவி செய்கின்றார்.
2.அவர்கள் எல்லாம் மகிழ்கின்றார்கள்.
3.ஆயிரம் பேரிடம் கேட்டுணர்ந்த கஷ்டத்தின் உணர்வுகள் இவருக்குள் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து
4.இவரின் சுவையைக் கெடுத்துவிடுகின்றது.
இதைத் “தெளிவாகக் காட்டுகின்றார்…” நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
கோவிலினுடைய தத்துவமே “உதவி செய்” என்று தான் சொல்கிறது. ஆனால் உதவி… “எப்படிச் செய்யவேண்டும்?” என்று நாம் அறிந்துள்ளோமா…?
பக்தி மார்க்கத்தில் இருப்போர் “ஆயிரம் பேருக்கு நன்மை செய்தேன்” என்ற நிலைகளில் பின்னாட்களில் தெய்வத்தை எப்படி எண்ணுகின்றோம்?
1.நான் உன் வழியிலே தான் அனைவருக்கும் உதவி செய்தேன் என்னை ஏன் இவ்வாறு சோதிக்கின்றாய்?
2.உனக்காக நான் எத்தனை காலம் நான் விரதம் இருந்தேன்?
3.எத்தனை யாகச் சாலைகளைச் செய்தேன்? எத்தனை ஆலயங்களை நான் கட்டினேன்.., உதவி செய்தேன்?
4.எத்தனை பக்தர்களை உனக்காக வரவழைத்தேன்? எத்தனை பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்தேன்?
5.உன்னை நாடி வருவோருக்கெல்லாம் எத்தனை உணவைக் கொடுத்தேன்?
6.என்னை ஏன் இவ்வாறு சோதிக்கின்றாய்….? என்று கேட்கும் நிலை வருகின்றது.
இப்படித்தான் பக்தி மார்க்கத்தில் உள்ளோர் நாம் இருக்கின்றோம்.
பக்தி என்றால் நல்ல ஒழுக்கமாக இருந்தாலும் அதைக் காத்திடும் நிலையாக விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.
உன் வாழ்க்கையில் “நீ.., எதனை உனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும்?” என்று கேள்விக்குறி போட்டு திரும்பும் பக்கமெல்லாம் விநாயகரை வைத்துக் காட்டியுள்ளார்கள்.
நல்லதை எண்ணிப் பிறருக்கு உதவி செய்கின்றோம். ஆனால், அவர்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் கேட்டறிந்த பின்பு தானே நாம் உதவி செய்கின்றோம்.
நாம் கேட்டறிந்த கஷ்டங்களையும் துயரங்களையும் நாம் யாராவது தூய்மைப்படுத்துகின்றோமா…? அதைக் கடவுள் வந்து சுத்தப்படுத்துவாரா..?
செடிக்குள் விளைந்தால் வித்து. மனிதனுக்குள் விளைந்தால் வினை. வினைக்கு நாயகனாக விநாயகனாக நாம் மனிதனாக இன்று உருவாகியுள்ளோம்.
மனிதனான பின் கஷ்டங்களையும் துயரங்களையும் நாம் வினையாகச் சேர்த்தால் அந்த வினை நமக்குள் விளைந்தால் நம்மை எங்கே கொண்டு சேர்க்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
அதை உணர்த்துவதுதான் விநாயகர் தத்துவமே. மண்ணுலகில் நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி விண்ணுலகில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி வாழ்ந்து கொண்டுள்ளான்.
அதை (துருவ நட்சத்திரத்தை) அரசாகக் காட்டினார்கள். வாழ்க்கையில் நமக்கு முன்னாடி வரும் கசந்த நிலைகளை வேப்பமரமாகக் காட்டினார்கள்.
அன்றாட வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளிலிருந்து விடுபட அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி அதை வினையாகச் சேர்த்து அந்த வினைக்கு நாயகனாக ஒளி சரீரம் பெறு என்பது தான் விநாயகர் தத்துவம்.
ஒவ்வொரு மனிதரும் இதைப் பெற அன்று செய்து வைத்தான் ஞானி.
ஆகவே,
1.மறுபடியும் இன்னொரு உடலுக்கு வித்திடும் வினைகளைச் சேர்க்கின்றாயா.
2.அல்லது பிறவியில்லா நிலை அடையும் ஒளிச் சரீரம் பெறும் ஒளியான வினைகளைச் சேர்க்கப் போகின்றாயா..? என்று
3.கேள்விக்குறி போட்டு “நீ யார்.., இந்தப் பிள்ளை.., யார்? என்று
4.நாம் போக வேண்டிய மார்க்கங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.
அனுபவம் பெறுவதற்காக ஒரு சமயம் என்னை குருநாதர் இமயமலைக்குச் செல்லச் செய்தார். அப்பொழுது நான் அங்கே செல்லும் பொழுது எத்தனையோ விபரீத நிலைகள் ஏற்படுகின்றது.
அப்பொழுது எனக்குள் பயம் உருவாகின்றது.
என் பெண்டு பிள்ளைகளெல்லாம் ஊரில் இருக்கின்றதே. அவர்களை நான் எப்படிப் பாதுகாப்பது..? அவர்கள் என்ன ஆனார்களோ…? என்ற இந்த எண்ணம் வந்துவிட்டது.
இமயமலையிலே பனி உறையும் தன்மையிலே குருநாதர் என்னை இருக்கச் செய்திருக்கின்றார். ஆனால் அதே சமயம் குருநாதர் சொன்ன நிலையை மறந்த பின் எனக்குள் குளிர் தாங்க முடியவில்லை.
இமயமலைக்குச் செல்லும் போது குளிர் என்னைத் தாக்காது இருப்பதற்காக அவர் சொன்ன உணர்வை ஒரு நட்சத்திரத்தின் உணர்வை நான் எடுத்தேன் என்றால் என்னைப் பாதுகாக்கும் சக்தி வருகின்றது.
ஆனால் குடும்பப் பற்றை நான் எடுக்கும் பொழுது இந்த குளிரின் தன்மை அதிகமான பின் உடலே இறையத் தொடங்கிவிட்டது.
இன்னும் ஒரு நொடியானால் என் இரத்தமே உறைந்துவிடும். பின் யாம் மடிந்துவிடும் நிலை வருகின்றது.
ஆனால் என் ஆசை எதிலே நிற்கின்றது? என் குழந்தை நன்றாக இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும்.., இப்படி இருக்கவேண்டும்.., என்று எண்ணுகின்றேன்.
ஆனால் அவ்வாறு எண்ணிக்கொண்டு இருக்கும் நேரத்தில் குருநாதர் என்னிடம்..,
1.நீ இதையெல்லாம் எண்ணுகின்றாய்… இந்த உடலை விட்டுப் போய்விட்டால் நீ எதைச் செய்யப் போகின்றாய்…?
2.முன்னாடி இருந்தவர்கள்…, வாழ்ந்தவர்கள்.., ஆசைப்பட்டவர்கள் எல்லாம் இருக்கின்றனரா?
3.இந்த வாழ்க்கையில் உனக்குப் பொன்னடி பொருளும், எது சொந்தமாகின்றது?
4.எதுவுமே சொந்தமில்லை…
5.ஆகவே “சொந்தமில்லாததற்கு ஏன் இந்த மனதை நீ வாட்டுகின்றாய்…?” என்று வினாக்களை எழுப்புகின்றார்.
மேலும் குருநாதர் எனக்குத் தெளிவாக்கினார்.
அவர்கள் நலம் பெறவேண்டும்.., அருள் ஒளி பெறவேண்டும்.., அவர்கள் வாழ்க்கையில் உயரவேண்டும்.., என்ற உணர்வை உனக்குள் உயர்த்து.
இந்த உணர்வின் நினைவாற்றல் அவர்களை இயக்க உதவும். அது வலுவான நிலைகளை அங்கே அவர்களுக்குள் உருவாக்கும்.
நீ இங்கிருக்கும் நிலைகள் வேதனையும் வெறுப்பும் கொண்டு எண்ணினால் உன்னைச் சார்ந்தவர் உணர்வுகளிலும் இது பாயும்.
நண்பனுக்குள் நன்மை செய்தான் என்று எண்ணும்போது விக்கலாகின்றது.., அப்பொழுது நன்மை நடக்கின்றது.
நண்பனுக்குள், பகைமை என்ற உணர்வுகள் தோன்றும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான்…, உருப்படுவானா…? என்று எண்ணினால், உணவு உட்கொண்டாலும் புரை ஓடுகின்றது. ஒரு தொழில் செய்தாலும், அங்கே சீராகச் செய்யாதபடி தவறுகள் நடக்கின்றது.
ஆகவே உன் உயர்ந்த உணர்வின் தன்மை உன் மக்கள் அனைவரும் பெறவேண்டும் அருள் ஒளி பெறவேண்டும் என்று அருளை நினை. அதை உனக்குள் பெருக்கு.., அந்த உணர்வைப் பாய்ச்சு.
இந்த உடல் உனக்குச் சொந்தமில்லை.., அவர்களுக்கும் சொந்தமில்லை.
செல்வம் தேடி வைத்தாலும் இப்பொழுது உன் உயிர் இறைந்தது. நீ இந்த உடலை விட்டுப் போய்விட்டால் இந்தப் பொன்னடி பொருளைப் பற்றி நீ நினைக்கப் போகின்றாயா…? அல்லது அவர்களைக் காக்கப் போகின்றாயா…?
இந்த உணர்வை நீ இழுக்கப்படும் பொழுது எதை நிலை கொள்ளவேண்டும்? எவ்வாறு நீ இயக்க வேண்டும்? என்பதை குருநாதர் அங்கே தெளிவாக காட்டுகின்றார்.
இந்த உடல் வாழ்க்கையில்..,<
1.சொந்தமில்லாத உடலுக்காக
2.நாம் சொந்தம் கொண்டாட வேண்டியதில்லை.
சொந்தம் கொண்டாட வேண்டியதெல்லாம் அருள் ஒளி என்ற உணர்வை இணைத்து இந்த உடலே “உணர்வுடன் ஒளியின் உணர்வாகப் பெறும்” அதைச் சொந்தமாக்க வேண்டும்.
ஆகவே அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்து அவர்களை இயக்க உதவும் என்று உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
நரம்புகளுக்குள்ளும் எலும்புகளுக்குள்ளும் ஏற்படும் இராசாயண மாற்றங்களும்… டி.பி. நோயும்
சாதாரணமாக ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு இருக்கிறான் என்றால் அவன் எத்தகைய குணத்தை கொண்டிருந்தானோ உதாரணமாக வாழ்க்கையில் அடிக்கடி வெறுப்பும் வேதனையும் சலிப்பும் சஞ்சலமும் இப்படிக் கலவை கொண்டு எடுக்கப்படும் போது அதற்குத்தக்க நோய் வருகிறது.
1.அடிக்கடி “வேதனை” என்ற உணர்வு எடுத்தால் டி..பி. வருகிறது.
2.அடிக்கடி “எல்லாக் குணங்களிலும் வேதனை” என்ற உணர்வுகளை உருவாக்கி விட்டால் அது கேன்சராக மாறுகின்றது.
இந்த டி.பி. என்ற அணுக்கள் தனித்து எந்த உறுப்பில் நாம் பதிவாக்குகின்றோமோ நாம் ஊழ்வினை என்ற பதிவினை நாம் எலும்புக்குள் உள்ள ஊன்களில் இது பதிவாகி விடுகின்றது.
அடிக்கடி நாம் வேதனைப்பட்டால் நாம் எடுக்கும் உணர்வுகள் இரத்த நாளங்களில் அணுக்களாக மாறி அதன் உணர்வின் தன்மை “இரசாயணமாக” மாறுகின்றது.
அது எலும்புகளில் வரப்படும் போது அதில் உறையச் செய்து அதில் வடித்து இந்த உணர்வுக்கொப்ப ஊழ்வினை என்ற ஒரு அமிலத்தை (எலும்புக்குள்) உருவாக்குகின்றது. கண் கொண்டு உற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள் அந்த ஊனுக்குள் பதிவாகின்றது.
எதை உற்றுப் பார்த்தோமோ எண்ணம் அந்த உணர்வுகளைத் தூண்டும் அந்த உணர்வினைப் பதிவாக்கி அதனை ஈர்க்கும் சக்தியாக உடல் முழுவதும் உள்ள எலும்புகளில் (அந்த இடத்தில்) வைத்து விடுகின்றது.
சற்றுக் கவனமாகக் கவனிக்க வேண்டும்.
மண்ணுக்குள் ஒரு செடியில் விளைந்த வித்தினை ஊன்றினால் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு எந்தச் செடியில் விளைந்ததோ அது எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்ததோ அதன் வழி அந்தச் செடியின் உணர்வுக்கொப்ப ரூபமாகின்றது.
இதே போல ஒரு குணத்தின் தன்மை இங்கே பதிவான பின்
1.வேதனை என்ற உணர்வை நாம் நுகரப்படும்போது
2.வேதனையை உருவாக்கும் அந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் கலந்து அது இரசாயணமாக மாறி
3.நரம்பு மண்டலங்களில் கொண்டு இயக்கப்படுகின்றது.
இந்த இரசாயணக் கலவை நம் நரம்பு மண்டலங்களை அது இயக்குகின்றது.
இது சிறு மூளை பாகங்களில் நாம் எண்ணும் உணர்ச்சிக்கொப்ப அந்த இரசாயணக் கலவை அதன் அழுத்தத்தின் உணர்வின் அழுத்தங்களைக் காட்டும் போதுதான் கைகளை மடக்குவதும் மற்ற நிலைகளைச் செயல்படுவதும் இவை அனைத்தும்.
இப்படி இரசாயணக் கலவைகள் வரப்படும் போது அதனதன் அமைப்பு தன்மைப்படி வேதனை என்ற விஷத் தன்மை வரப்படும் போது இந்த எலும்பை அசைக்கும் நரம்பு மண்டலங்களிலிருந்து வரும் இரசாயணத்தில் அந்த விஷத்தின் அணுக்கள் உருவாகி விடும்.
வேதனை என்ற உணர்வின் தன்மை கொண்ட இரசாயணக் கலவையில் வரப்படும் போது இதனில் எதிர்மறையான விஷத் தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.
சாதாரணமான நிலையில் இந்த எலும்புக்குள் இரசாயணக் கலவை ஊடுருவி அதை எடுத்து எலும்பின் வளர்ச்சியும் அதற்குப் போதுமான நிலைகள் கொண்டு வலு கொடுத்துக் கொண்டேயிருக்கும்.
ஏனென்றால் உருவாக்கிய அந்த அணுக்களை வைத்துத்தான் அதன் மலம் எலும்பாகிறது.
ஆனால் அந்த இரசாயணக் கலவையில் வேதனை என்ற விஷ அணுக்கள் உருவாக்கி விட்டால் எலும்பை உருவாக்கிய அணுக்களை இது விழுங்கத் தொடங்கி விடுகின்றது.
இது விழுங்கத் தொடங்கினால் எலும்புக்கு வலு கொடுக்கும் அந்த அணுக்களின் மலங்கள் கிடைக்கவில்லை என்றால் எலும்பு சொத்தையாகி விடும். தொட்டால் கத்தரித்து விடும். இது போன் டி.பி. (BONE T.B.)
இதைப் போல வேதனை உணர்வுகள் கலந்து ஒவ்வொரு உறுப்புக்களில் வரப்படும் பொழுது மூளையில் டி.பி…, கண்களுக்கு வரும் நரம்பு மண்டலங்களில் டி.பி. என்று காரணப்பெயர் வைக்கின்றார்.
இன்னென்ன அணுக்களின் செயலாக்கங்களால் இந்த அணுக்கள் மற்ற அணுக்களைக் கொன்று சாப்பிடுகின்றது என்று டாக்டர்கள் சொல்வார்கள்.
விஞ்ஞான அறிவுப்படி டி.பி. அணுக்களைக் கொல்லும் போர் முறைக்காக அதைக் காட்டிலும் அதிகமான அணுக்களைச் சேர்த்து பல கலவைகளைச் சேர்த்து (3-4 மாத்திரைகள) அதை உணவுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.
அதே சமயத்தில் இரத்த நாளங்களில் இஞ்சக்சன் மூலம் கலக்கச் செய்கின்றனர். அல்லது நேரிடையாகவே அமில சக்தி உள்ள நரம்பு மண்டலங்களுக்கு ஆசிட் போன்றவைகளைச் செலுத்தச் செய்கின்றார்கள்.
அப்பொழுது அந்த எலும்புகளில் உள்ள அந்த விஷத்தன்மையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்துகின்றனர்.
தடைப்படுத்தினாலும் அதனுடைய கொடுமையான உணர்வுகள் நாம் சிறுகச் சிறுக வேதனையின் உணர்வுகள் எடுத்திருந்து மற்றவைகளுக்கு இணைத்து அந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி அந்த அறிவை ஊட்டும் நிலையில் இது மடிந்து விட்டால் சிந்தனை மாறி விடும்.
இதற்காக இந்தச் சிந்தனையின் நிலையை வைத்து இன்னென்ன உறுப்புகளில் இன்னென்ன இராசாயணக் கலவை கொண்டு இயங்குகின்றது என்று காண்கின்றனர்.
விஞ்ஞான அறிவுப்படி ஈரல் என்றால் அதற்குச் சத்து கொடுப்பதற்காக மற்ற தாவர இனங்களைப் புசித்து அந்த நிலையில் நல்ல அணுக்கள் உருவாக்கும் தன்மையை ஆரம்பத்தில் கொண்டு வந்தார்கள்.
இப்பொழுது நேரடியாகவே மாட்டு இனங்களில் இருந்தோ ஆட்டு இனங்களில் இருந்தோ மனிதனுக்கொத்த உணர்வுகள் கலந்த அந்த ஈரலை மற்ற இராசாயணக் கலவையைக் கொண்டு அதைப் பவுடராக்குகின்றார்கள்.
அந்தக் கலவைகளை இஞ்சக்சன் மூலமோ உணவு மூலமோ உட்செலுத்தி நமது இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றார்கள்.
ஆக, எலும்பை உருக்கும் அணுக்களிலிருந்து மீட்க மருந்துகளினால் அந்த அணுக்களை உருவாக்கி இதனைக் கலந்து மற்ற அணுக்கள் செத்து விடாது அதற்குகந்த உணர்வின் சத்தைச் சேர்க்கின்றனர்.
இன்னென்ன நிலைகளில் இன்னென்ன உறுப்புகளுக்கு அது பாதிக்காத நிலைகள் கொண்டு இந்த இஞ்சக்சன் செய்கின்றார்கள்.
இதையெல்லாம் நான் பேசுகிறேன் என்றால் விஞ்ஞான அறிவில் படித்தவன் அல்ல. மெய்ஞான அறிவை ஊட்டி அந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கிறது என்று குரு காட்டிய அருள் வழியில் தான் இதை வெளிப்படுத்துகின்றேன்.
1.காற்றில் கலந்துள்ள உணர்வை நீ நுகர்ந்து
2.உணர்வின் தன்மை அறிந்து
3.அந்த இயற்கையின் செயலாக்கங்களை நீ அறி
என்று குருநாதர் சொன்னார்.
அவர் கொடுத்த அருள் ஞான வித்தின் துணை கொண்டுதான் இயற்கையின் விளைவு அது எவ்வாறு என்ற நிலைகளில் நான் அறிய முடிகின்றது.
இதையெல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
விஞ்ஞானம் தன் வளர்ச்சியில் நாம் சிறிது காலம் வாழ்வதற்காக வேண்டி இந்த உடலைக் காக்க எவ்வளவோ பல நிலைகளைச் செய்கின்றார்கள்.
ஆனால், மெய்ஞானிகளோ விண்ணின் ஆற்றலைப் பெற்று உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதை நாம் பெற்று பிறவியில்லா நிலை அடைவதே மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் அடைய வேண்டிய எல்லை.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் காடுகளில் வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் காட்டிலே செல்லப்படும் போது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலைகளில் தங்களைப் பாதுகாக்கும் அறிவு அவர்களுக்கு வருகின்றது.
காட்டு விலங்குகளிடம் இருந்தும் விஷ ஜந்துக்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தாவர இன மூலிகைகளை அரைத்துத் தன் உடலிலே பூசிக்கொள்கின்றனர்.
சில நேரங்களில் அதே மூலிகைகளைத் தன் உடலில் பூசாத படியும் சில மூலிகைகளை அணைப்பாக வைத்துப் போட்டு விடுகின்றனர். ஆக இந்தத் தாவர இனங்களின் மணத்தின் தன்மையை மற்ற உயிரினங்கள் கண்டுணர்ந்தால் புலியோ நரியோ நாயோ இவர்கள் பக்கம் வருவதில்லை.
அந்தச் செடிகளை ஒவ்வொன்றும் பக்குவப்படுத்தி அவர்கள் எப்படி வைத்துக் கொண்டார்கள் என்ற நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அக்காலங்களில் நடந்தவைகளை எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.
இப்பொழுது கம்ப்யூட்டரில் ஒவ்வொரு தாவர இனங்களையும் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளில் அந்த உணர்வலைகளைப் பதிவாக்கி அதே அலையில் அந்தக் காலத்தில் எப்படிப்பட்ட உயிரினங்கள் என்னென்ன ரூபங்களில் இருந்தது?
அது எதை எதையெல்லாம் உணவாக உட்கொண்டது. அதை உட்கொண்ட உணவுகளின் நிலைக்கொப்ப அதனின் குணங்களின் வளர்ச்சியும் அந்த உடல்கள் எப்படி அமைகிறது என்றும் விஞ்ஞான நிலைகள் காண்கின்றனர்.
இதே போல நமது குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று இந்த உணர்வுகள் அதன் நடைப்பாதையில் (நடமாடிய இடங்கள்) எப்படி எல்லாம் சில நிலைகள் ஊர்ந்து சென்றது.., பறந்து சென்றது…, மனிதனாக வந்தது… என்று காட்டினார்.
அந்த உணர்வலைகள் அந்த இடங்களில் அக்காலத்தில் இருந்த தாவர இனங்கள் அதனுடைய மணங்கள் இங்கே பட்டது.
அந்த உணர்வைத் தன் உயிருக்குள் எடுத்து குருநாதர் அதை அறிந்ததனால் அதை எனக்குள் பதிவு செய்து அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு மூச்சலைகள் விடும் போது எதிர் அலைகள் தெரிகின்றது
அப்பொழுது அந்த ஒளி அலைகள் பரவப்படும் போது அந்த ரூபங்கள் என் கண்ணுக்கே தெரிகின்றது.
அந்த அலைகள் படமாக்கப்பட்டு பதிவாக்கப்பட்டு அக்காலத்தில் எப்படி இருந்தது என்று அறிய முடிகின்றது.
விஞ்ஞான அறிவில் எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகளை இங்கே இயக்கி பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உருவத்தையும் அமைத்துக் காண்கின்றார்கள். அந்த உயிரினங்களைன் குணத்தையும் வெளிப்படுத்துகின்றார்கள்.
மெய்ஞானியின் அறிவை நம் குருநாதர் அன்று கண்டுணர்ந்ததனால் அதை நான் அறியும் பருவம் வந்தது. பின் அதன் வழிகளில் அவை எப்படி ரூபங்கள் பெற்றது என்ற நிலையையும் அறியும்படி செய்தார்.
அக்காலத்தில் காட்டு விலங்குகளிலிருந்து தப்பிக்கப பல தாவர இனங்களைத் தன் அருகிலே போட்டுக் கொள்வார்கள். சில பகுதிகளில் அடுக்கடுக்காகப் போட்டு இருப்பார்கள்.
சில பச்சிலைகளைத் தன் உடலிலே முலாமாகப் பூசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தக்க அந்தப் பகுதிகளில் எப்படி மற்ற நிலைகள் வருகிறது என்று அடுக்கு வரிசையில் அதை போட்டு இருப்பார்கள்.
அப்பொழுது அவர்கள் வாழ்ந்த காலங்களில் இத்தகையை தாவர இனங்கள் புவியின் நிலைகள் வெப்பத்தினால் காயும் போது ஆவியாகவும் அதன் நீர் சத்து பூமியின் நிலைகள் எப்படி ஈர்த்துக்கொண்டது என்று காட்டுகின்றார்.
இதன் உணர்வின் பதிவு எப்படி இருக்கின்றது என்ற நிலையும் அக்காலப் பச்சிலைகளைக் காண்பித்தார், அன்று உருவான பச்சிலைகளுக்கும் இன்று இருக்கக்கூடிய பச்சிலைகளுக்கும் உள்ள வித்தியாச நிலையையும் காட்டுகின்றார்.
அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அந்தப் பச்சிலைகளைப் போட்டு வைத்தாலும் பின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை இவர்களை அறியாதபடி இவர்கள் சுவாசிக்கின்றனர்.
இதைப் பாதுகாப்பாக வைக்கின்றனர். ஆனால் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுகளை இவர்கள் நுகர்கின்றனர்.
அந்த உணர்வின் அறிவாக அவர்கள் வளர்ந்தாலும் அந்தப் பச்சிலை மூலிகைகளின் உணர்வுகள் இரத்த நாளங்களில் கலக்கப்படுகின்றது.
அவ்வழியில் தான் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அந்தக் கருவுறும் ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் கருவுறும் சிசுக்களில் இந்த மணங்கள் கலந்துவிடுகின்றது.
ஏனென்றால், தாயின் இரத்தத்தில் இருந்துதான் அதற்கு உணவு கிடைக்கின்றது. ஆக இந்த உணர்வின் தன்மை அந்த அணுவின் துடிப்பு வரப்படும்போது நஞ்சினை வென்றிடும் உணர்வாக அணுக்களாக அந்தக் குழந்தைக்குள் விளைகின்றது.
அவ்வாறு நஞ்சினை வென்றிடும் அணுக்கள் விளைந்த குழந்தை பிறந்தபின் அந்தக் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு போனால் போதும். நரியோ பாம்போ நாயோ இவர்களைத் தாக்குவதில்லை.
இவர்கள் செல்லும் பக்கம் பையனை எடுத்துச் செல்லும் போது சில சில விஷச் செடிகள் கூட அப்படியே ஒடுங்கிவிடுகின்றது.
அப்படி ஆதியிலே வளர்ந்த அந்தக் குழந்தைதான் அகஸ்தியன். குருநாதே இதையெல்லாம் அக்காலங்களில் நடந்தவைகளை அப்படியே பார்க்கும்படி செய்கின்றார்.
அந்த அலைகள் காற்றிலே இன்றும் உண்டு. நீங்களும் பார்க்க முடியும். காண முடியும்.
There is a vision in which some fruits are consumed in the same condition in which they are plucked from the trees. Some other fruits the outer covering is removed and then consumed.
There is a jack fruit in which the thorny top part is to be removed first, the fleshy portion is to be opened the sweet portion is to be taken out and after removing the seeds the sweet fruit is eaten.
We enjoy the words of our elders who have said about the triple fruits the mango, plantain and jack fruit.
We keep these fruits and pray. We eat the mango fruit as it is and consume the flesh of the fruit and throw away the seed.
In plantain fruit we remove the outer cover and eat the rest of the portion as it is.
To eat the jack fruit we have to perform several operations.
All the three fruts have got taste but to eat each has got its own way to be followed. These three fruits have been named to impress upon following the truths.
We have to make the Gnana of our soul to proceed in the path of pooja with bhakti as mango fruit enjoy in worship and rejecting the rest as the seed of mango.
We should remove the various states that are surrounding us like the outer covering of a plantain fruit and consume only the path of Gnana and discard many atoms that are mixed with us like the thorns of jack fruit and not thinking of fleshy state enjoy the sweet portion after removing the seed opposition in it.