இந்தப் பிரபஞ்சத்தின் முடிவு

இந்தப் பிரபஞ்சத்தின் முடிவு

 

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் என்று இப்படி நான்கு ஐந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு பிரபஞ்சமாக அமைத்து விட்டது.

சூரியன் தனக்குள் கோள்களை வளர்த்து… நட்சத்திரங்களையும் வளர்த்து… தனித் தன்மையாக முதலில் எப்படி உருவானதோ அதைப் போல
1.இதிலே வளர்ச்சியடைந்த நட்சத்திரங்கள் அனைத்தும்
2.நம் சூரியனைப் போல ஒரு பிரபஞ்சமாக உருவாக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றது.

குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் ஒவ்வொருவரும் கல்யாணம் செய்து தனக்கென்று ஒரு குடும்பமாகிப் பிரிந்து செல்கிறார்கள் அல்லவா…!

அப்பொழுது அங்கிருக்கும் தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லாம் ஒரு காலத்தில் காணாமல் போய் விடுகின்றார்கள். கொள்ளுப் பேரன் என்றெல்லாம் வந்த பிற்பாடு யாரையாவது பார்க்க முடிகின்றதா…! அல்லது அப்படியே இருந்தாலும் வயதானவர்களை அவர்கள் கவனிப்பதில்லை.

இதே மாதிரித் தான் இந்த நட்சத்திரங்கள் தனக்கென்று பிரபஞ்சத்தை உருவாக்கி விட்டால் இந்தச் சூரியனைக் கவனிப்பதில்லை. அது தன் வளர்ச்சியைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.

இந்த இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் சூரியனாக மாறும் பொழுது இது உருவாகக் காரணமாக இருந்த சூரியனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது அழிகின்றது.

உதாரணமாக நம் உடல் அழிந்த பின் பார்த்தோம் என்றால்… அந்த உடலை உருவாக்கிய அணுக்கள் அந்த உடலையே உணவாக உட்கொண்டு வெளி வந்துவிடுகின்றது.

1.ஆனால் நல்ல உடலாக இருக்கும் போது முதலில் வெறும் அணுக்களாகத் தான் இருந்தது
2.பின் உயிரணுக்களாக மாறும் தன்மை வருகின்றது.
3.உயிரணுக்களாக ஆன பின் அதனதன் உணர்வுகளை தன் இரைகளைத் தேடி அதன் வளர்ச்சி பெறுகின்றது.

மனிதன் இறந்தால் அந்த உடலிலே உருவாகும் அந்த உயிரணுக்கள் மற்ற உடலிலே சேர்த்து அதை உணவாக எடுத்து வளர்க்கும் தன்மை வருகின்றது.

அதைப் போலத் தான்…
1.சூரியன் அழிந்தால் அந்த உணர்வுகள்
2.புதிதாக உருவாகும் பிரபஞ்சங்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்.

சூரியன் அழிந்த பின் அந்த உணர்வின் சக்தி ஒரு புயல் போன்று இருக்கும். அதில் ஏதாவது ஒரு கோளோ அல்லது மற்ற பாறையோ அதில் சிக்கினால் அதை மீண்டும் ஆவியாக மாற்றித் தனது நிலைகளுக்குள் பரப்பும்.

அப்பொழுது இந்தப் புதிய பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றும் தனது ஈர்ப்பு வட்டத்தில் அதைக் கவர்ந்து அந்தந்தப் பிரபஞ்சத்திற்கு அது உணவாக ஊட்டுகின்றது.

குருநாதர் அவர் கண்ட அகண்ட அண்டத்தின் உண்மைகளை எல்லாம்
1.உன்னால் நுகர முடியும்… பார்க்க முடியும்… என்று தான் எனக்குச் சொன்னார்.
2.அவர் சொன்ன வழியில் இதை எல்லாம் நான் (ஞானகுரு) பார்த்துத் தான் சொல்கிறேன்.
3.நீங்களும் பார்க்க முடியும்.

எண்ணத்தின் வலுக் கொண்டு இந்த உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் பதிவாக்கும் பொழுது இது வளர்ச்சி அடைய அடைய நமது பிரபஞ்சமும் நமது பிரபஞ்சத்திற்கு மற்ற பிரபஞ்சத்திலிருந்து எப்படி உணவு கிடைக்கிறது…? என்பதையும் நீங்கள் அறிய முடியும்.

ஆனால் கல்வி அறிவு இல்லாதவன் தான் இத்தனையும் பேசுகிறேன். இருந்தாலும் படித்தவர்கள் நீங்கள் இதைக் குறித்து வைத்துக் கொண்டு நிச்சயம் எடுக்க முடியும்.

எனக்குக் குறித்து வைக்கக் கூட நேரமில்லை. குருநாதர் சொன்னதை மனதில் பதிய வைத்து அதைத்தான் உங்களிடம் இப்பொழுது சொல்கிறேன்.

நீங்கள் சொன்னதை இரண்டாவது தரம் திருப்பிச் சொல்ல வேண்டும் என்றால்
1.வாழ்க்கையில் வருவது எனக்கு நினைவு இல்லை
2.குருநாதர் கொடுத்த அந்தப் பேரருள் கொண்டு எனக்குள் அது பதிவான பின்
3.நினைவு கொண்டு எண்ணும் போது அந்த உணர்வை அறிய முடிகின்றது.

இந்த உணர்வின் தன்மை இப்பொழுது வெளிப்படும் பொழுது செவி வழி நீங்கள் கேட்ட பின் நுகர்ந்தறிந்து இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் கருவாக உருவாக்கி விடுகின்றது. கூர்ந்து கவனிக்கும் உணர்வுகள் ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் உருவாகின்றது.

இதை எல்லாம் நீங்கள் வளர்த்துக் கொண்டால் நான் எதையெல்லாம் பார்த்தேனோ…
1.அதையெல்லாம் நீங்களும் காட்சியாகக் காண முடியும்
2.தீமைகளை அகற்றும் அந்த வல்லமையும் நீங்கள் பெற முடியும்.

இந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கினால் பிறவியில்லா நிலையையும் நீங்கள் அடைய முடியும்.

இன்றைய மருத்துவ முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்றைய மருத்துவ முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை உணர்ந்து “அளவறிந்து மருந்து கொடுப்பது…” என்பது அனுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்…” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை…” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதி முறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு “அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி” நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்… “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் வருகிறது…” அவ்வாறு ஏற்படக் காரணம் என்ன…?

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைபடுகிறது.

இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்…?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம் மீது மோதும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு…” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
2.வாழ்க்கை நிலையும் கூட… உயர்வு பெற முடியும்.

கணஹோமம்

கணஹோமம்

 

எந்த ஆலயத்திற்குள் நாம் சென்றாலும்…
1.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் மகிழ்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும்
4.எங்கள் அனைவரது உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
6.ஆலயத்திற்குள் வருவோருக்கெல்லாம் நல் வாழ்வு கிடைக்க வேண்டும்
7.அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தான் உண்மையான பக்தி…!

இதைக் கணங்களுக்கு அதிபதி ஆக ஆக்கினால் கணஹோமம்…!

கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் என்று எப்படிச் செய்கின்றோமோ அது போல்
1.புருவ மத்தியில் இருக்கும் உயிருக்குள் அருள் உணர்வுகளை எடுத்து… அதை உயிரான நிலைகள் கொண்டு ஹோமம் ஆக்கி
2.அந்த அருள் உணர்வின் தன்மைகளை உடலுக்குள் பரப்பி
3.அதிலே வரும் மணத்தின் தன்மையை வெளிப்படுத்தி
4.எல்லோரும் போற்றும் நிலையாக… நம்மைப் பார்க்கும் பொழுதே மற்றவர்களுக்கு அந்த மகிழ்ந்த நிலை வர வேண்டும்.

இதைத் தான் ஒவ்வொருவரும் தனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால் இந்தப் பரமான பூமியில்
1.பரமாத்மாவைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாகவும்
2.நமது ஆன்மாவைத் தெளிவுபடுத்தும் நிலையாகவும்
3.நமக்குள் இருக்கும் ஜீவாத்மாவை உயர்வுபடுத்தும் நிலையாகவும்
4.நம் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதும் ஆகும்.

ஆகவே இருளைப் போக்கி… ஒளி பெறும் நிலைகளாக உருவாக்குவதுதான் பக்தி. இதைத்தான் நாம் தியானமாக இருக்க வேண்டும்.

தனித்துத் தியானித்தாலும்… மேலே சொன்ன நல்ல ஒழுக்கத்தைத் தனக்குள் சேர்க்க்கவில்லை என்றால் அந்தத் தியானம் கைகூடாது.

அருள் ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்து… அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வை நமக்குள் தெளிவாக்கி… அதனின் நினைவு கொண்டே வாழ்க்கையில் கடைப்பிடித்து வர வேண்டும்.

வாழ்க்கையில் எத்தகைய தீமை செய்வோரைக் கண்டாலும்
1.அதனின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாக்கி விடக்கூடாது.
2.அவர் நிலைகளைப் பகைமையும் ஆக்கிவிடக் கூடாது.

நாம் மற்றவர்களுக்கு நல்லதையே செய்கின்றோம் வைத்துக் கொள்வோம். நம்மிடம் உதவி பெற்றவர்களில் ஒருவரைப் பார்த்தவுடன் அவரைக் கூப்பிடுகின்றோம்.

ஆனால் அவரோ ஏதோ அவசரத்தில் போகின்றார். (அது நமக்குத் தெரியாது…!) நம்மிடம் வரவில்லை. அப்பொழுது நாம் என்ன நினைக்கின்றோம்…?

அன்று என்னிடம் காசு வாங்கும் பொழுது என்னை மதித்தார். இப்பொழுது பார்… அவர் பாட்டுக்குப் போகின்றார்… கொஞ்சம் கூடக் கவனிக்காது செல்கிறார்…! என்று அவர் மேல் வெறுப்பை ஊட்டிக் கொள்கின்றோம்.

இத்தகைய வெறுப்பு நமக்குள் வளராது அந்தப் பகைமையற்ற நிலைகளாக உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள் அன்று ஞானிகள்.

அந்த ஆலயத்திற்குச் சென்று…
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு
2.நம் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதும் ஜீவாத்மாவைத் தூய்மைப்படுத்துவதும் தான் கணஹோமம் என்பது.

ஆனால் அபிஷேகம் என்ற நிலையில் அங்கே ஆராதனை செய்து விட்டுக் கணஹோமம் என்று நெருப்பிலே பல பொருள்களைப் போட்டு வேக வைத்தால் இது தான் பக்தி என்று இன்று செய்கின்றோம்.

இப்படி மறைமுகமாக எடுத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு “காசை விட்டெறிந்தால் ஆண்டவனை விலைக்கு வாங்கலாம்…” என்று இறுமாப்புடன் செய்யக் கூடியவர்களும் மந்திரத்திலே சிக்கி… அடுத்தவன் கையில் சிக்கி… அவர்களுக்குப் பொருள் தேடும் நிலைகளுக்குத் தான் பயன்படுவார்கள். ஆக அவனும் அழிந்து இவனும் அழிந்தது போன்ற நிலைள் தான் ஏற்படும்.

யார் மந்திரத்தை ஒலித்தாலும் சரி… அல்லது அதைக் கேட்டாலும் சரி… அதன் நிலையிலே தான் சிக்க முடியும்… அதிலிருந்து தப்ப முடியாது.

நம்முடைய பற்று அதுவாக இருக்கக்கூடாது. ஞானிகள் காட்டியது அது அல்ல…!

ஆக… அருள் ஞானம் பெற வேண்டும் என்று அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கி அந்தப் பக்தி கொண்டு யாரெல்லாம் எண்ணுகின்றார்களோ அந்த உணர்வு கொண்டு தான் அங்கே விண் செல்ல முடியுமே தவிர இங்கே சுற்றிக் கொண்டிருப்பதற்கு அல்ல…!

1.பிறர் நலமுடன் வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணுங்கள்… இந்தப் பக்தியை கூட்டுங்கள்.
2.தீமையாகப் பேசுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
3.அவரும் உண்மையை அறியும் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
4,அதைச் செயல்படுத்துங்கள்… இது தான் தியானம் என்பது.

ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காத்திடும் சக்தியாகப் பெருகட்டும். உங்கள் உணர்வுகள் மற்றவர்களின் தீமையை அகற்றும் சக்தியாக வளரட்டும்.

இதன் வழி செயல்படுவோர் பேரின்பப் பெருவாழ்வு பெற்று ஒளியின் சரீரம் பெற்றுப் பிறவி இல்லா நிலையை அடைவீர்கள் (ஞானகுரு).

கணங்களுக்கு அதிபதி கணபதி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கணங்களுக்கு அதிபதி கணபதி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும் அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்கள் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து… ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்… பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி… அறிவொழிந்து…! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.

1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே… பக்தி என்ற குளிரை விரட்டும்…! என்று அறியாமல் போனதென்ன…?
2.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை…!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி… ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு… பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்… பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்… அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயல்படும் தொடர்புகளை அறிந்து கொள்வதே “பிரம்மம்…!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்…!”

அவர் உயிரணுவின் செயல்… சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில்… வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர்…! என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த… தான் பெற்ற தன்மை கொண்டு… ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது…” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை…” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே காரணம்…” என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்…!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி…”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே “விநாயகர்…” என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

அகண்ட அண்டத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் அவசியம் பெற வேண்டும்

அகண்ட அண்டத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் அவசியம் பெற வேண்டும்

 

1.2000 சூரியக் குடும்பத்திற்குள் விளையும் அந்த உணர்வின் தன்மையையும்
2.அந்த அண்டத்திலிருந்து வரக்கூடிய கோள்களின் உணர்வுகளையும் ஊடுருவி
3.துருவ தியானத்தின் மூலம் வலுக் கொண்டு எடுத்து அதை நாம் நுகர முடியும்.

அதை நுகர்ந்து சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொண்ட பின் அதனின் வலுக் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் தனது உணர்வின் தன்மை வளரச் செய்து கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இவ்வாறு நாம் வளர்ந்த பின் அந்த அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று பெரும் சக்தியாகத் திகழ முடியும்.

1.ஒன்றின் பின் ஒன்று வளர்ச்சி அடைவதும்
2.ஒன்றில் சிக்குண்டு ஒன்றுக்குள் மடிந்து அது மாற்றங்களாவதும்
3.இயற்கையின் உண்மை நிலைகள் மாறிக் கொண்டு வரும் இந்த நேரத்தில்
4.உயிருடன் ஒன்றிய உணர்வுகள ஒளியாக மாற்றிடும் நிலையாக
5.அனைத்தையும் அறிந்திடும் அருள் சக்தி பெற்ற நாம் அந்த அகண்ட அண்டத்தின் சக்தியைச் செயல்படுத்துவோம் என்றால்
6.இந்த வாழ்க்கையில் என்றுமே ஏகாந்த நிலை என்ற நிலைகளில் வாழ முடியும்
7.அது தான் நமக்கு நிரந்தரமானது…!
8.இந்த உடல் நிரந்தரமானதல்ல… நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமும் நிரந்தரமானது அல்ல.

ஆகவே நம் உயிரின் உணர்வுடன் ஒன்றி அருள் உணர்வுகளை வலுக் கொண்டதாகச் சேர்க்க வேண்டும்.

அதைத் தான் இந்தப் பூமிக்கு ஓசோன் திரை என்றும் சூரியனுக்கு ஓசோன் திரை என்றும் மற்ற கோள்களுக்கும் அதனதனதற்குத் தக்கவாறு அந்தப் பாதுகாப்புக் கவசம் இருக்கின்றது.

ஆடு மாடுகளுக்கும் அது ஓசோன் திரையாக உள்ளது. ஏனென்றால் அது தன் உணர்வை மாற்றி விடாதபடி தனக்குள் எடுத்துக் கொள்வதும் இருந்தாலும் மற்றொன்று ஊடுருவிச் செயல்படுத்தும் பொழுது அதனுடைய மாற்றங்களானால் பல நோய்கள் ஆகி அது கெடுவதும் போன்ற நிலை ஏற்படுகின்றது.

நம் பூமிக்கும் இதே போன்று தான் அது நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பற்ற நிலைகளாகி… தீமையின் உணர்வுகள் ஊடுருவும் போது மாற்றமடைந்து ஓசோன் திரை கிழிகின்றது.

1.இருந்தாலும் இதை எல்லாவற்றையுமே பிளந்து
2.எதையுமே தகர்த்து எறியும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம்.
3.அது எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
4.அதை நாம் பெறுதல் வேண்டும்… நமக்குப் பாதுகாப்புக் கவசம் அது தான்…!

உதாரணமாக சர்க்கரை ஆலைகளில் சர்க்கரைப் பாகு உற்பத்தி செய்யும் போது அதிலே சில கெமிக்கல்களைப் போட்டு அது போகும் போதே அதில் உள்ள அழுக்கை பிரித்துவிட்டு தூய்மையான சர்க்கரையாக மாற்றுகின்றார்கள்,

அது போன்று தான் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து ஒவ்வொரு நொடியும் நமக்குள் தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மையாக ஒவ்வொரு அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்க்கும் பழக்கம் வர வேண்டும்.

நமக்குள் தீமைகளை மறந்து நமது உணர்வின் தன்மையை அது வருகின்றது

ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் சரியாகவில்லை… என் காரியங்கள் தோல்வி அடைந்து விட்டது… என் பையன் இப்படி இருக்கின்றானே…! என்றே எண்ணுவார்கள்.

இப்படி எண்ணுவதற்கு மாறாக… பையன் இப்படித் தான் நல்லவனாக வர வேண்டும் எங்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் உட்புகாது மன உறுதியும் மன வலிமையும் பெறும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சோர்வோ சங்கடமோ வந்தால் அதை எல்லாம் மறந்துவிட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து நாம் பழகிக் கொண்டால் அந்தச் சோர்வு அகலும். புதிய உணர்வு நமக்குள் தோன்றும்.

பரிவு பண்பு கொண்டவர்கள் பிறருடைய துன்பங்களைக் கேட்க நேர்ந்தால் அது எல்லாம் அவர்கள் உடலில் எளிதில் ஊடுருவிவிடும்.

அப்பொழுது பூமிக்கு ஓசோன் திரை எப்படிக் கிழிகின்றதோ இதைப் போல நமது ஆன்மாவில் இருக்கும் நல்லதைப் பிளந்து விட்டு உள்ளுக்குள் சென்று விடுகின்றது.

உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளைக் குறைவாக்கச் செய்கின்றது. அதனால் நம் உடலில் வேதனை ஏற்படும் நிலையும் நல்ல சிந்தனையை மாற்றிடும் நிலைகளும் வருகின்றது.

1.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் விடுபட குருநாதர் கொடுத்த அருள் வழிப்படி
2.இந்த உலகத்தையும் அகண்ட அண்டத்தையும் அறியக் கூடிய சக்தியையும்
3.தீமைகளை அகற்றக் கூடிய வல்லமைகளையும் நீங்கள் பெற வேண்டும் என்று
4.உங்களுக்குள் துரிதமான நிலைகள் கொண்டு அரும் பெரும் சக்திகளைப் பதிவு செய்கிறேன்.
5.இந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே ஒவ்வொருவருக்கும் “கடமை என்ற விதியாகும்” – ஈஸ்வரபட்டர்

தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே ஒவ்வொருவருக்கும் “கடமை என்ற விதியாகும்” – ஈஸ்வரபட்டர்

 

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டவன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாக “பேரருள்…” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதத்தால்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலக நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான்.

குரு என்றால் என்னப்பா…? குரு என்றாலே “ஒளி நிலை…” (வழி காட்டும் நிலை) என்பது பொருள்…!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு என்பவர்… எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி… சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் அது குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி… உலக நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானு கோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர்.
1.ஆனால் சிலரே அனைத்து உயிர்களும்
2.அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்…!” என்ற நிலை இல்லையப்பா…!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்…! என்ற சொல்லும் எதற்கப்பா…?

“தனித்துவமான சக்தி…” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்… மாமகரிஷிகளின் ஆசியுடன்… “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை…” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது…?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்… சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்… கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே…?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்…! குருதேவரே ஊட்டட்டும் என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே…?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்…? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.

வீட்டையும் ஊரையும் நாட்டையும் உலகையும் தூய்மைப்படுத்தும் சக்தி

வீட்டையும் ஊரையும் நாட்டையும் உலகையும் தூய்மைப்படுத்தும் சக்தி

 

தியானம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவருமே கூட்டுத் தியானம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கு பேர் சேர்ந்தாலும் கூட்டுத் தியானங்கள் அமைக்கலாம்.
1.ஏனென்றால் ஒருவர் கை தட்டுவதைக் காட்டிலும்
2.பலர் சேர்ந்து கை தட்டும் போது ஓசை அதிகரிக்கும்.

அதைப் போன்று தான் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… குடும்பத்தில் கணவன் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ வேண்டும்… என்று எல்லோரும் சேர்ந்து எண்ணுதல் வேண்டும்.

அதே போல் அருள் ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளைக் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களையும் தியானத்தில் கலந்து கொள்ளும்படி பழக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்…! என்று இந்த உணர்வுகளைப் பாய்ச்சி… இந்த உணர்வுகளை கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

1.இதைப் போன்று எண்ணி எடுக்கும் இந்த உணர்வுகள் ஒவ்வொன்றும்
2.நமக்குள் தெளிந்த மனம் பெறச் செய்யும்…
3.அது நமக்குள் பேரருளாக மாறும்… பேரொளியாக மாறும்

இந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்லப்படும்போது அவர் மனதைத் தெளிவாக்கி… அவர்களையும் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும்.

அந்தத் தெளிவான மனதையும் தெளிந்திடும் மனதையும் அங்கே உணர்த்தும். அதே சமயத்தில் நமக்குள்ளும் அந்த தெளிவான உணர்வும் தெளிந்த மனமும் உருவாகும்.

இதைப் போன்ற ஒரு பழக்கத்திற்கு வந்தால் மனிதன் என்ற முழுமையை நாம் அடையலாம். பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையலாம்.

வீட்டைப் புதிதாகக் கட்டினாலும் அதை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொண்டே தான் வருகின்றோம்.

இங்கே இந்தத் தியான மண்டபத்தையே அமைத்திருக்கிறோம் என்றாலும் சில காலம் அதைத் தூய்மைப்படுத்தவில்லை நெடி ஏறி விடும். பின் இங்கே வரும் போதே உள்ளுக்குள் நுழையும் போதே சங்கடம் வந்து விடும்.

அதே போல் தான் நம் வீட்டைச் சில காலம் திறந்து உபயோகப்படுத்தாதபடி விட்டு விட்டால் வீட்டிற்குள் நுழைந்தால் நெடி வரத் தான் செய்யும்.

அன்றாடம் நாம் குளிக்காமல் இருந்தால் உடம்பில் அரிப்பு வரும். நாம் அணிந்திருக்கும் துணியைத் துவைக்காமல் விட்டு விட்டால் அது இற்றுப் போகும். எல்லோருக்கும் இது தெரிந்தது தான்.

ஆகவே நம் ஆன்மாவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தூய்மைப்படுத்த வேண்டுமா இல்லையா…?
1.அருள் ஞானிகளின் அருள் உணர்வைக் கொண்டு
2.நமது ஆன்மாவை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்
3.நம் வாழ் நாள் முழுவதுமே தூய்மைப்படுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

இப்படி எந்த அளவிற்கு நாம் அதைத் தூய்மைப் படுத்துகின்றோமோ அது அனைத்தும் நமக்குள் பேரருளாக மாற்றும். எதனையுமே நல் சொல்லாகவும் நல் செயலாகவும் நாம் செயல்படுத்தும் அந்த அருளாக மாறும்.

1.நமது வாழ்க்கை பிறருடைய தீமைகளை அகற்ற உதவும்.
2.நம் சொல்லின் உணர்வுகள் நமக்கும் நன்மை செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும்.

பிறருடைய நிலைகளை மகிழச் செய்யும் பொழுது தான் அது பேரொளி ஆகின்றது. நமக்குள் பேரொளியின் அணுக்களாக விளைஉஅத் தொடங்குகின்றது.

ஒவ்வொருவரும் இதனை மனதில் வைத்து இந்த இல்லற வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழச் செய்யுங்கள். அதற்குண்டான உணர்வுகளையும் உபாயங்களையும் கூட்டுங்கள்.

நீங்கள் கணவன் மனைவி ஒன்றுபட்டு வாழ்ந்தால் வீட்டுக்கு மட்டுமல்ல… ஊருக்கு மட்டுமல்ல… எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

1.ஒரு பத்து குடும்பங்கள் இது போன்று ஒன்றுபட்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்தால் அந்தத் தெருவே சுத்தமாகும்
2அங்கு வசிக்கக்கூடிய மக்களும் தெளிவு அடைவார்கள்.
3.ஒருவருக்கொருவர் அறியாமல் வரும் பகைமை உணர்வையும் மாற்றிடும் அரும் பெரும் சக்தியாக இது மாறும்.
4.அந்த வீடோ தெருவோ ஒரு சொர்க்கலோகமாக மாறும்
5.மற்ற இடத்திலிருந்து அங்கே யார் வந்தாலும் அவர்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் சக்தியாக இது வரும்.

ஆகவே தெளிந்த மனதுடன் வாழ்ந்திடும் உணர்வினை முதலில் உங்கள் குடும்பங்களில் இத்தககைய உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதனை அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற முயற்சிகளை நாம் ஒவொருவரும் அவசியம் கொண்டு வர வேண்டும்.

ஆத்மாவின் முழுமை எப்பொழுது புலப்படும்…? – ஈஸ்வரபட்டர்

ஆத்மாவின் முழுமை எப்பொழுது புலப்படும்…? – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைப் பற்றிய உண்மையை உணரச் சிந்திக்கும் தொடரில் “நான் என்பது யார்..?” என்கிற வினா எழும் பொழுது தன் சுயத்தின் வளர்ப்பாகத் தியானத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும் பொழுது “ஆத்மாவின் முழுமை” புலப்படும்.

உடலுக்கு உயிர் குரு. உயிரின் குரு சூரியன் என்ற விளக்கத்தின் பொருளில் ஆத்மா என்பதே மறை பொருளாக்கப்பட்டு விட்டது.

எண்ணத்தின் செயல்பாட்டில் செயல்பாட்டின் வினைப் பொருள் எதுவோ அதுவே விளை பொருளாக ஆக்கம் பெறுகிறது
1.எண்ணத்தின் செயல்பாட்டில் “நான்…” என்பது வினையானால்
2.அந்த வினையின் விளை பொருள்
3.விளைப் பொருளாக ஆக்கும் “சக்தி” வலுக் கொண்டு ஒன்றுவது எங்கே..? என்ற வினாவின் மூலத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும்.

ஆத்ம பலம் பெற வேண்டும் என்று சொல்வது எதற்கப்பா…?

ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்று உரைத்த உரையில்… இயற்கையின் கதியில் சூரியனை மையம் கொண்டே சுழன்றோடும் கோளங்களும்… ஒன்றுடன் ஒன்று ஒளி காந்த ஈர்ப்பில் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சி கொண்டு வளர்ந்திடும் செயலை ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வளர்ப்பின் சக்தியில் முழுமை பெற்றிட
1.அந்த இயற்கையின் கதியில் ஒன்றி
2.சுய சக்தி வளர்ப்பாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு உயிராத்மா மற்றொரு உயிராத்மாவை எண்ணியே சக்தி பெறும் பாஷாண்டகம் – பிற ஆத்மாக்களை அடிமை கொண்டு தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலுக்குச் சென்றால் இறந்த ஆவி ஆத்மாக்கள் செயல் கொள்ளும் நிலைக்கே செல்ல வேண்டி வரும்.

1.உண்மையின் சக்தி…
2.என்றும் நிலை பெறும் பரிபூரணத்துவ…
3.அகண்ட… பிரகாச… பேரின்ப ஜோதியாக…
4.ஆத்மாவாக – உயிராத்மாவாகச் செயல் கொள்ளும் செயலுக்கு
5.ஆத்மாவிலிருந்து பெற்றிடும் ஒளியே அறிவின் செயல்பாட்டின் காரணமாக
6.அந்தக் காரணத்தின் உண்மையை உணர்ந்து கொள்ளும் செயலில் ஆனந்தமும்
7.இவைகளின் செயல்பாட்டில் எண்ணத்தின் வலுவாக வினையின் பொருள் “நான் என்பதே ஆத்மா” என்று உணர்ந்திடும் பக்குவத்தில்
8.அறிவு… காரணம்… ஆனந்தம்…! அனைத்துச் செயல்பாட்டின் நிகழ்வில் ஒன்றுடன் ஒன்று ஒன்றி
9.ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று வளர்ச்சியின் வலுவை எப்படிக் கொண்டதோ…
10.அந்த வலுவே ஒளியாக மீண்டும் ஆத்மாவின் வலுவை வலுவாக்கும் சூட்சமமே மூல சக்தி…!

ஆக மொத்தம் பேரானந்தப் பேரருளின் ஒளியின் ஒளிக் கதிர்களில் “ஒரு ஒளிக் கதிர் தானப்பா ஓர் ஆத்மா என்பது…!”

நச்சுத் தன்மை உலகில் பரவினாலும் அதை அடக்கிடும் சக்தியை நம்மால் பெருக்க முடியும்

நச்சுத் தன்மை உலகில் பரவினாலும் அதை அடக்கிடும் சக்தியை நம்மால் பெருக்க முடியும்

 

இந்தக் காற்று மண்டலத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பரவிக் கொண்டே உள்ளது. அந்த அகஸ்தியன் பெற்ற இயற்கையின் உண்மைகளையும் அவன் நஞ்சினை நீக்கிய உணர்வுகளையும் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஒரு இயந்திரத்தையோ உபகரணத்தையோ விஞ்ஞான அறிவால் காட்டப்படும் பொழுது… “இன்னது… இன்னது…” (FEATURES) என்று சொல்லி அதிலே முழுமையின் நிலைகள் காட்டி அதனைப் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டு வருவார்கள்.

அதைப் போன்று தான்
1.மெய் ஞானத்தின் நிலைகள் கொண்டு முழுமை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும்
2.அகஸ்தியனுக்குள் விளைந்த உணர்வுகளையும் அவன் ஒளியின் உணர்வாகப் பெற்றதையும் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

1.வாழ்க்கையில் தீமைகளும் கஷ்டங்களும் துயரங்களும் நுகரப்படும் பொழுது
2.அது உள் புகுந்து தீமையை உருவாக்கும் அணுக்களாக உருவாகிடாது
3.அருளொளி என்ற உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து அதை அடக்கி
4.தனக்குள் இணைந்த நிலைகள் கொண்டு செயல்படும் நல்ல சக்திகளாக அதை மாற்றி அமைத்தல் வேண்டும்.

உங்களை நீங்கள் திரும்பிப் பாருங்கள்…! கோபிப்பது நீங்களா…? வேதனைப்படுவது நீங்களா…?

இல்லை…!

நுகரும் உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது. ஆக ஆறாவது அறிவு கொண்ட நாம் அந்தத் தீமைகளை நீக்கும் வலிமையை எப்படிப் பெற வேண்டும் என்று சீராக்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக எண்ணைய் சம்பந்தப்பட்ட வகையில் (பிசுபிசுப்பு) கையிலோ மற்ற இடத்திலே அழுக்காகப் படிந்திருந்தால் வெறுமனே தண்ணீரை வைத்துக் கொண்டு அதைக் கழுவ முடியாது.

ஆனால் மண்ணெண்ணை வைத்து அழுத்தமான நிலைகள் கொண்டு தேய்த்தால் எளிதில் அதை நீக்கி விடலாம். அது தன்னுடன் இணைத்து இணைத்து அந்த அழுக்குகளைப் பிரித்துவிடும்.

இதைப் போலத் தான் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் கலந்து மெய் உணர்வின் தன்மையை நீங்கள் பெற்றால் அது இரண்டறக் கலந்த தீமைகளைப் பிரித்து அகற்றிவிடும். ஆன்மா சுத்தமாகிவிடும்.

1.ஏனென்றால் விஞ்ஞான அறிவில் வரும் பேரழிவிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளவும்
2.பிறவியில்லா நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்ற இந்த ஆசையில்தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் உங்களை நீங்கள் காத்து உங்கள் அருகில் உள்ளவருக்கும் இந்த அருள் வழியினைச் சொல்லி அந்த ஞானிகளின் உணர்வைப் பதிவாக்குங்கள்.

நீங்கள் எடுக்கும் தியானத்தால் அந்தப் பொது விதிப்படி வெளி பரப்பப்பட்ட அருள் உணர்வுகளை அனைவரும் நுகர… எதிர்காலத்தில் தீமையை வென்றிடும் சக்தியாக எல்லோரையும் வளரச் செய்வது… “நமது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்…” என்று வேண்டிக் கொள்கின்றேன்.

உயிரே கடவுள்… நுகர்ந்ததை உருவாக்கும் போது உடலாக அதுவே சிவமாகின்றது. ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் அது என்ற நிலையில் நாம் ஒவ்வொரு மனிதனையும் எண்ணி மதித்திடல் வேண்டும்.

பகைமை உணர்வு புகாதபடி தடுக்கச் செய்யும் இத்தகைய உயர்ந்த ஞானத்தை நாம் வெளிப்படுத்தும் போது இந்த உணர்வின் தன்மை பதிவாகி அந்த உடலான ஆலயம் பரிசுத்தமாக நம் உணர்வுகள் செயல்படும்.

அதே சமயத்தில் நமக்குள் தீமை புகாது தடுக்கவும் இது உதவும். ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். இருந்த இடத்திலிருந்தே நீங்கள் அருள் உணர்வைப் பெருக்க முடியும்.

ஒவ்வொரு நிமிடமும் இந்த எண்ணங்கள் வளர்ச்சியாகி…
1.டி.வி.யில் ஒளிபரப்பு செய்வது போன்று எல்லா இடத்திலும் இது பரவி
2.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ளும் சக்தியாக இது வளரும்.

ஆங்காங்கு உள்ளோர் ஒன்று சேர்ந்து கூட்டுத் தியானத்தை அமைத்து கூட்டமைப்பாக இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிப் பெறுங்கள்.

1.இந்த உலகில் பரவி வரும் நச்சுத் தன்மைகள் நீங்க வேண்டும்
2.மக்கள் மத்தியில் அருள் ஒளி பரவ வேண்டும் …இருளை அகற்றும் அருள் ஒளி பரவ வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று நாம் பரப்ப வேண்டும்.

ஏகோபித்த நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை இப்படிப் பரப்பப்படும் பொழுது நாம் வாழும் பகுதிகளில் நஞ்சை வென்றிடும் அருள் சக்திகள் படரும். சிறுகச் சிறுக மற்றவரையும் காத்திடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம். காலம் நெருங்க நெருங்க…
1.உங்களைக் காத்திடும் சக்தியாக நீங்கள் வளர்த்து அதன் மூல்ம் உங்கள் சார்புடையோரைக் காத்திடவும்
2.அவர்கள்… அவர்களுடைய சார்புடையோரைக் காத்திடவும்
3.இந்த பூமியில் அசுர குணங்களை மாற்றி அருள் ஒளி என்ற உணர்வை பரப்பச் செய்திடவும்
4.அருள் ஒளி என்ற உணர்வினைப் பரவச் செய்து விஷத்தன்மை கொண்டு இயக்கும் உணர்வுகளை மாற்றிடவும்
5.உலகில் வாழும் மனிதருக்குள் பேரருள் என்ற உணர்வினை உருவாக்கிடவும்
6.இது உதவ வேண்டும் என்று உங்கள் அனைவரது உயிரான ஈசனை வேண்டுகின்றேன்
7.உங்கள் உடலுக்குள் அரும் பெரும் சக்தி பரவ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

குரு என்ற பெயரில் தனி மனிதனின் துதி தேவையில்லை – ஈஸ்வரபட்டர்

குரு என்ற பெயரில் தனி மனிதனின் துதி தேவையில்லை – ஈஸ்வரபட்டர்

 

மனிதன் தன்னாலே சிந்திக்கத் தலைப்பட்டுத் தன்னுள் எழுந்த வினாவாக “நான் என்பது யார்…?” என்றே தன்னைத் தான் அறிந்து கொள்ளும் முயற்சியாகத்
1.தான் கண்டுணர்ந்த வழி வகைகளை… மெய் உணர்வுகளை
2.மறை பொருளாக்குபவர்களும் உண்டு.

ஏனென்றால் மேன்மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள மனித எண்ணத்தின் செயல்பாட்டில்
1.“விதி முறைகள்…!” என்றே சூட்சமப்படுத்தி
2.அப்படி இருக்கக்கூடாது… இப்படிச் செய்யக் கூடாது…
3.அது தீட்டு… இது தோஷம்… இது பாவம்…! என்பார்கள்.

இப்படி உணர்த்திக் கொண்டு அவ்வாறு உபதேசிப்பவனையே (தன்னையே) எண்ணும்படியும்… தன்னையே ஜெபித்திடும் நிலைகளுக்கும்… ஏற்படுத்திக் கொண்டு
1.குரு என்ற பெயரில் குருவின் சரீரத்தையே எண்ணி ஜெபித்திடும்
2.பிற ஆத்மாக்களின் எண்ணத்தின் செயல்பாட்டின் வலுவைத் தான் ஒருவனே பெற்று
3.தன்னை உயர்த்திக் கொள்ளச் செயல்படும் புறச் செயல்களில் “உருவ வழிபாடும் ஒன்று…”

“நான் என்பது எண்ணத்தின் செயல்பாடு..” என்றால் அந்தச் செயல்பாட்டின் உந்துதல் கொண்டு எதை வளர்ச்சிப்படுத்துதல் வேண்டும்…?

பழி தீர்க்கும் உணர்வு கொண்டு மற்ற ஆன்மாக்களைத் தன்னுடன் இணைக்கும் செயலாக (மாந்திரீகமும் தாந்திரீகமும் செய்யும் சில சாமியார்கள்) தன் எண்ணத்தின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு உலவிடும் ஆவி ஆத்மாக்களின் தன்மைகளையும்… இறந்தபின் அதன் தன்மைகளையும் பல முறை விளக்கி வந்துள்ளேன்.

உடலுடன் உள்ள பொழுதே சரீர பக்தியெனும் போர்வையில் தான் கொண்ட எண்ணத்தையே ஊட்டி
1.தன் சரீர பிம்பத்தையே… தன் உருவத்தை எண்ணி ஜெபிப்போரிடம் பதிவு நிலைப்படுத்திக் கொண்டு
2.தன் ஆன்மாவிற்குப் பிற ஆன்மாக்களையும் அடிமையாக்கிக் கொண்டு
3.உபதேசிகன் ஒருவன் தன்னை உயர்த்திடும் செயல்… அன்றைய “பாஷாண்டகம்..!”
4.அந்த எண்ணத்தின் செயல்பாட்டில் இரு விதம் உண்டு.

பிறிதொன்றின் ஈர்ப்பில் ஒன்றுவது ஒன்று… மற்றொன்று தன் உயிராத்ம சக்தியை வலுக்கூட்டும் “தன் நல வளர்ப்பு…”

நான் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் பிறிதொருவன் சக்தியை ஈர்த்துக் கொண்டு தனக்களித்துத் தான் வளர்வது என்ற தன் எண்ணம் தன்னுள் வளர்ந்து விட்டால் அந்த எண்ண வளர்ச்சியின் முதிர்வே சூட்சமப் பொருள் பதிந்த பாஷாண்டகமாம்.

1.தன் ஆன்மாவைத் தான் வளர்க்க…
2.உயிர் கொண்ட உடலே கருவிகளாக..
3.உணர்வு கொண்ட தியானத்தின் வழியாக…
4.எண்ணத்தின் செயல்பாடே நான் என்று உணரும் பொழுது…
5.இரு விதச் செயல் நிலைகளை ஆங்கு தெளிந்து கொண்டால்
6.நான் என்பது உடலா…?
7.நான் என்பது உயிரா…?
8.நான் என்பது உணர்வா…?
9.நான் என்பது எண்ணமா…? ஆத்மாவா…? என்ற வினாக்களுக்கும்
10.தன்னுள் தெளிந்த தெளிவைப் பெற்றிடலாம்…!

ஆத்ம முலாமின் வலுவை வலுவாக்கிக் கொண்டு
1.“தான்..” என்பதே ஆத்மாவாக உயிருடன் ஒன்றியே.. உயர் நிலை பெற்றே…
2.எண்ணத்தின் செயல்பாட்டில் நானும் வேண்டுமப்பா…!

ஒவ்வொரு உயிராத்மாவும்… ஒன்றுடன் ஒன்று ஒன்றி…!
1.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றுடன் ஒன்றியே பல வளர்ந்து… சக்தி ஈர்த்தல்…! என்று கூறியதிலும்
2.அதற்குள் இருக்கும் உண்மைகளை அறிந்துணர்ந்து கொண்டால்
3.தன் உயிராத்மாவின் சுய வளர்ச்சி நிலை… “மிக மிகத் தெளிவு பெறும்…!”