தீமைகளை எரித்து ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்தால் “நம் உணர்வுகளும் ஒளியாக மாறும்”

Image

Eternity

தீமைகளை எரித்து ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்தால் “நம் உணர்வுகளும் ஒளியாக மாறும்”
நான் (ஞானகுரு) ஒன்றும் அறியாதவன். மூன்றாவது வகுப்பு கூட முழுமையாகப் படிக்கவில்லை. இத்தனை பேசுகின்றேன். நான் எங்கிருந்து பேசுகின்றேன்…!
1.புத்தகங்களைப் படித்ததும் இல்லை.
2.படிக்க விரும்பவும் இல்லை.
3.படித்தாலும் அது அர்த்தம் புரிவதில்லை.

திருவள்ளுவர் திருக்குறளைப் பாடியிருக்கின்றார் என்றால் அதைப் பற்றிப் படித்தவர்களுக்குத் தெரியும். படித்தால் எனக்கு என்ன அர்த்தம் தெரியும்…!

இராமயாணத்தை கவியாகப் பாடியுள்ளார்கள். கவிகள் பாடியவர்களுக்கு அல்லது கவி தெரிந்தவர்களுக்கு அதைப் பற்றி விளக்கம் சொல்ல முடியும்.

ஒருவர் இராமயாணத்தில் ஒன்றைச் சொல்வார். இன்னொருத்தர் அதை படித்து வியாக்கியானம் கொடுத்தால் இவருடைய இராமயாணம் வேறு விதமாக இருக்கும்.

படித்த உணர்வின் நிலைகள் அவர் உணர்வுடன் ஒன்றி செயல்படும் போது அந்த உணர்வுக்கொப்பத் தான் உணர்வின் எண்ணங்களும் செயல்களும் வருவது.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்து விண்ணுலகம் சென்ற முதல் மனிதனான அகஸ்தியனின் உணர்வலைகளை எனக்குள் பதிவாக்கினார்.

அகஸ்தியர் தன் தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு வானியல் புவியியல் உயிரியல் அடிப்படையில் அவர் கண்டுணர்ந்த பேருண்மைகளை என்னையும் அறியும்படி அதை உணரும்படிச் செய்தார்.

அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான நிலைகளை குருநாதர் எமக்குக் காட்டினார்.

அந்த அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் மகரிஷிகளாக சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருப்பதையும் காட்டி அந்தச் சக்திகளைப் பெறும் பாக்கியத்தை எனக்கு ஏற்படுத்தினார்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகள் இந்தப் புவியில் படர்ந்துள்ளது. அதை மனிதர்கள் நாம் நுகரும் திறன் பெற வேண்டும். நமக்குள் அதை வளர்க்க வேண்டும்.

அதனின் உணர்வுகள் வலு பெற்ற பின் அறியாது வந்த தீமைகளை அது கரைத்து விடும்.

விறகில் நெருப்பு வைக்கப்படும் போது அந்தக் கட்டைக்குள் இருக்கும் எண்ணெய்ச் சத்து எரிந்து கட்டையைக் கருக்கி விட்டு ஒளியாக மாற்றுகின்றது.

இதைப் போல தீமையான உணர்வுக்குள் இருக்கும் வீரிய சக்தியை எரித்து ஒளியாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் மெய் ஞானிகள். எத்தகைய தீமைகள் வந்தாலும் அதைக் கருக்கி விட்டு ஒளியின் தன்மை மாற்றிக் கொண்டவர்கள்.

அப்படிப்பட்ட மெய் ஞானியின் உணர்வை நமக்குள் இணைத்து விட்டால் அது தன்னிச்சையாக தீமையான உணர்வுகளை எரி பொருளாக்கி ஒளியின் சக்தியாக மாற்றும் தன்மை வருகின்றது என்ற நிலையை நேரடியாகக் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நான் (ஞானகுரு) சொல்வதெல்லாம் உங்களுக்கு அதிசயமாக இருக்கும்.

நான் சொன்னதையெல்லாம் நீங்கள் பார்க்கும் போது என்னிடம் சொல்வீர்கள்.
1.சாமி இதெல்லாம் நான் பார்க்க முடிந்தது…!
2.”என்னால் தீமையைப் போக்க முடிந்தது…!” என்ற
3.அந்த மகிழ்ச்சியான நிலைகள் உங்களுக்குள் வரும்.

மகரிஷிகள் உணர்த்திய “தீமையை அடக்கியாளச் செய்யும் தியானம்”

Life meditation

மகரிஷிகள் உணர்த்திய “தீமையை அடக்கியாளச் செய்யும் தியானம்”

நாம் தங்க நகை செய்யும்போது அதிலே செம்பும் வெள்ளியும் இணைத்துத் தான் செய்கின்றோம். ஆனால் அடுத்த நகை செய்யும் போது திரவகத்தை ஊற்றிச் செம்பையும் பித்தளையையும் நீக்கித் தங்கத்தைப் பரிசுத்தமாக்குகின்றோம்.

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் நல்லதைச் செயல்படுத்த சந்தர்ப்பத்தால் பயம் கோபம் ஆத்திரம் அவசரம் சஞ்சலம் சோர்வு எரிச்சல் போன்ற எத்தனையோ உணர்வுகளைக் கவர்ந்துதான் நம் காரியத்தை முடிக்கின்றோம்.

நல்லதைச் செயல்படுத்தினாலும் அதனுடன் இரண்டறக் கலந்து வந்த பயம் கோபம் சஞ்சலம் போன்ற உணர்வுகளைச் சுத்தப்படுத்தாமல் விட்டு விட்டால்
1.அடுத்த காரியங்களை நாம் செய்யும் பொழுது
2.இந்த எரிச்சலும் கோபமும் வேதனையும் சேர்ந்தே வந்து விடுகின்றது.
3.சீராக நடக்காது அதுவே தடைப்படுத்திவிடுகின்றது.

இதை நிறுத்த வேண்டும் அல்லவா…!

ஆனால் மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையிலே தீமையை அகற்றிப் பழகியவர்கள். விண்ணின் ஆற்றலை எடுத்து ஒளியாக மாற்றும் திறன் கொண்டவர்கள்.

மகரிஷிகளின் உணர்வுகள் மிகவும் வலு பெற்ற சக்திகள் கொண்டது. குருநாதர் காட்டிய அருள் வழிகளில் அந்த உணர்வை நாம் நுகர்வதற்குண்டான தகுதியை ஏற்படுத்துவதே தியானம்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் தன்மை நாம் கொள்ளும் போது அதுவே சிறந்த தியானமாகின்றது.

அந்த உணர்வின் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தப்படும் போது உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு உரமாகின்றது.

அப்பொழுது சந்தர்ப்பத்தால் நமக்குள் பிறரின் தீமையான உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகள் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் போது
1.அது (தீமையானது) அணுவாக வளர்வதற்கு முன்
2.அந்த அணுவையே நமக்குச் சாதகமான நிலையிலே மாற்றிவிடுகின்றோம்.

அதீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்திடும் போது ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் நமக்கு வலு கூடிக் கொண்டே வருகின்றது.

குற்றமாகச் சொல்லி விட்டான்… தவறாகப் பேசுகின்றான்…! அறிவு கெட்டதனமாக நடக்கின்றான்…! என்று இரண்டு தரம் நான்கு தரம் சொல்லி விட்டீர்கள் என்றால் அந்த உணர்வு வளர்ந்து விட்டது என்றால் நல்லது செய்த நிலைகள் வலு குறைந்து விடுகின்றது.

ஆனால் அடுத்த கணமே
1. மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.அந்த உணர்வுடன் இதை இணைத்து விட்டால்
3.அந்த அணு நாம் செல்லும் மெய் வழியில் இணைந்து விடும்.
4.அப்போது இது நமக்குள் நம்மைக் காக்கும் அந்த உணர்வின் அணுவாக விளையத் தொடங்கி விடுகின்றது.

மகான்கள் அனைவருமே அனுபவவாயிலாக அறிந்தவர்கள் தான் – “சந்தர்ப்ப வசத்தால் தான் ஞானம் பெற்றவர்கள்…!

Image

கல்வியில் நாட்டமில்லாத மெய்ஞானிகள்

மகான்கள் அனைவருமே அனுபவவாயிலாக அறிந்தவர்கள் தான் – “சந்தர்ப்ப வசத்தால் தான் ஞானம் பெற்றவர்கள்…!

 

வியாசகர் வான்மீகி சமீபத்தில் வந்த அருணகிரிநாதர் இராமலிங்க அடிகள் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ஏனைய மகான்கள் என்று சொல்லும் அனைவருமே
1.கல்வி கற்று உணர்ந்தவர்கள் அல்ல கல்வியில் ஞானம் பெற்றவர்கள் அல்ல…!
2.அவர்கள் கற்றுணர்ந்ததெல்லாம் தங்களுடைய அனுபவத்தில் கண்டுணர்ந்தவைகள் தான்.

அனுபவபூர்வமாகத் தான் பெற்ற உயர்ந்த சக்திகளையும் தங்கள் உடலில் விளைய வைத்த ஆற்றல் மிக்க உணர்வுகளையும் போதனைகளாக மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

சந்தர்ப்பத்தால் நுகர்ந்த சக்தி தான் அவர்களுக்குள் அது அவ்வாறு உருப்பெறுகின்றது.

அவர்கள் பெற்றது போல் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றோம்.

நான் (ஞானகுரு) கல்வி கற்காதவன் தான். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அவரைப் பின்பற்றிய உணர்வு கொண்டு அதைப் பதிவு செய்து அதனின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற முடிந்தது.

மக்களின் உணர்வின் தன்மையும் தீமைகளை அகற்றும் உணர்வையும் கண்டறிய முடிந்தது. தீமைகளை அகற்றும் சக்திகளை எனக்குள் வளர்த்துக் கொள்ள முடிந்தது.

கற்றவர்களோ கற்காதவர்களோ… அறிந்தவர்களோ அறியாதவர்களோ… என்று (உங்களை) நீங்கள் யாரும் எண்ண வேண்டாம். அறிய வேண்டும் என்பதற்காகத்தான் வருகிறோம்.

பள்ளிக்குச் செல்வோர் அனைவரும் அறிந்து கொண்டு செல்வதில்லை.
1.அறிந்து கொண்ட பின் பள்ளிக்குச் செல்லவில்லை.
2.அறிவதற்குத் தான் பள்ளிக்குச் செல்கிறோம்.

அதைப் போன்று உலகை அறிவதற்காகவும் மெய் ஞானம் பெறுவதற்காகவும் தான் இங்கே வந்துள்ளோம். அதைப் பெறும் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அருள் ஞானிகளின் உணர்வைச் சந்தர்ப்பத்தால் நமக்குள் கூட்டி அதைப் பெறவேண்டும் என்ற ஆசையிருந்தால்… அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால்…,
1.கல்வி வேண்டியதில்லை…!
2.மெய் ஞானம் தன்னிச்சையாக வரும்.

தீமைகளை அகற்றும் ஞானங்கள் பிறந்தால் அருள் ஞானத்தின் உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்யும் உயர்ந்த எண்ணத்தை நீங்கள் கவர முடியும், அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொருவரும் பெற முடியும்.

மகா மகான்களாக வளர உங்களாலும் முடியும்…!

மெய் ஞானத்தை வளர்க்கும் “விழுதுகள்”

Image

Tap root for Spirituality

மெய் ஞானத்தை வளர்க்கும் “விழுதுகள்”

 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் உணர்வைத் தன்னுள் கண்டுணர்ந்து இந்த மண்ணுலகை வென்று விண்ணுலகைச் சென்றடைந்து முழுமை பெற்றார்.

விண் செல்வதற்குண்டான பாதையை அவர் கற்றார். இந்த உணர்வை முழுமை பெறுவதற்குத் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று எண்ணினார்.

அந்தத் துணையைத் தான் பெற்றாலும் விண்ணுலகம் செல்வதற்கு விண்ணிலே உந்தித் தள்ளுவதற்கு தனக்குகந்த ஆதாரங்கள் தேவை.
1.விழுதுகள் இல்லாது மரம் வளர்ந்திடாது
2.ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார்.
3.அதே போலத்தான் ஒவ்வொரு உயிருக்கும் விழுதுகள் தேவை.

நாம் எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு விண் சென்ற மகா ஞானிகளின் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் எடுத்து அந்த விழுதுகளாக நாம் ஓவ்வோருவரும் உருவாக வேண்டும்.
1.உங்களுக்கு நான் விழுது
2.எனக்கு நீங்கள் விழுது என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.

விழுது இல்லாது ஒன்றின் துணை இல்லாது ஒன்று விளையாது என்ற நிலையைக் குருநாதர் தெளிவாகக் காட்டினார். அதே சமயத்தில்
1.நான் மட்டும் தனித்துத் பெறுவேன்.
2.மற்ற அனைத்தையும் வெறுப்பேன் என்ற நிலையில் பெற இயலாது.

அன்று அகஸ்தியன் தனக்குள் அனைத்தையும் இணைத்துத்தான் ஒளியாக்கினார்.
1.வருவதைத் தனக்குள் அரவணைத்துத்
2.தீங்கு செய்யாது அதை அடக்கினார்.

அதனால் தான் எதையுமே ஒளியாக மாற்றும் திறன் பெற்றார் அப்படிப் பெற்ற அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் கவரப்படும் பொழுது நிச்சயம் நாம் அனைவரும் அதைப் பெறலாம்.

இதை எல்லாம் “துணுக்குத் துணுக்காகச் சொல்கிறேன்…!” என்று எண்ண வேண்டாம்.

இதை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் நினைவாக்கும் பொழுது சந்தர்ப்பத்தில் தீமைகளைப் போக்கும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

நீங்கள் அனைவரும் அவ்வாறு பெறவேண்டும் என்பதற்காகத்தான் தெளிவாக்குகின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படிப் போதித்தாரோ…? மகரிஷிகளின் உணர்வுகளை நான் பெறும்படி எப்படிச் செய்தாரோ…? அவ்வாறே நீங்களும் பெறவேண்டும். பெற முடியும் என்ற அந்த நம்பிக்கையில் சொல்லுகின்றேன்.

1.உங்கள் நினைவலைகள் கூர்மையாக இருக்க வேண்டும்.
2.கூர்மையாக ஆக்க உபதேசிக்கும் உணர்வை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்.
3.பதிந்ததை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவேண்டும்.
4.அந்த நினைவின் ஆற்றல் உங்களை வளர்க்கும்.
5.முதலில் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் வளர்க்க வேண்டும்
6.பின் அது உங்களை வளர்க்கும்
7.அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிக்கும்
8.அருள் வழியில் அழைத்துச் செல்லும்.

அகஸ்தியரைப் போல் மெய் ஞானியாக நீங்கள் மாற முடியும்…!

Agastiyar Eswaran

அகஸ்தியரைப் போல் மெய் ஞானியாக நீங்கள் மாற முடியும்…! 

எத்தனையோ கோடி சரீரங்களைப் பெற்ற பின் மனிதனாக நாம் உருவானாலும் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகள்
1.மனித உடலை எப்படி அழிக்கின்றது?
2.நம் நினைவாற்றலை எப்படி மாற்றுகின்றது?
3.மீண்டும் பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாகி
4.மனிதனல்லாத உடலுக்குள் எப்படிச் செல்லுகின்றோம்? என்று
5.இதையெல்லாம் நாம் யாருமே சிந்திப்பதில்லை…!

அந்தத் தேய் பிறையான நிலைகளுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும் என்றால் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் விளைய வைக்க வேண்டும்.

தீமையின் நிலைகளுக்குச் செல்லாது அருள் ஞானியின் உணர்வை எடுத்து ஒளியாக மாற்றி என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே குருநாதர் எமக்கு (ஞானகுரு) இட்ட அருள் பணியாகும்.

உங்களுடைய நினைவாற்றல் மகரிஷிகளின் பால் இருக்கச் செய்வதே இந்த உபதேசத்தின் நோக்கம். உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் ஊடுருவும் போது தீமையின் நிலைகளைக் கரைத்துவிடும்.

நான் வெறும் சொல்லாகச் சொல்வதாக நீங்கள் எண்ணலாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (குருநாதர்) என்னிடம் சொல்லும்போது
1.அவன் சொல்லுகின்றான்… நான் எதைப் பெற முடியும்..?
2.அவன் காட்டுகின்றான்… நான் எதைப் பெற முடியும்…! என்று இப்படித்தான் முதலில் எண்ணினேன்.

அவன் (குருநாதர்) சொன்னதை
1.அந்த வலுவின் தன்மை எனக்குள் வரப்படும் பொழுது
2.பின்னாடி தான் அவர் சொன்ன உணர்வுகள் அனைத்தையும்
3.காட்சிகளாக நான் காண முடிந்தது… உணரவும் முடிந்தது…!

மெய் ஞான அறிவின் தன்மை அது எப்படி…? என்றும் ஒவ்வொரு உயிரிலும் உணர்வுகள் எப்படி விளைகின்றது…? என்ற நிலையும் பின் தான் நான் உணர முடிந்தது.

அதைப் போல இன்றைய நிலைகள் நான் சொல்வதை “ஏதோ…” என்று இலேசாக விட்டுவிடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த தீமையின் நிலைகளை நிறுத்த அருள் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள்.

தீய வினைகளைக் கரைத்து மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் அதிகரிக்கும் போது அது உங்கள் ஆன்மாவின் முன்னாடி நின்று தீமைகளை அகற்றும் நிலையாக மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக உருப்பெறுகின்றது. ஆன்மா சுத்தமாகின்றது.

இதையே கூட்டமைப்பாக அனைவரும் ஒன்று கூடி அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற நிலையில் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் மகரிஷிகளின் எண்ண அலைகளைப் பரப்பப்படும் போது பூமியில் தீமைகளை விளைவிக்கும் உணர்வின் அணுக்கள் விலகுகின்றது.

அப்பொழுது இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

Image


[1/28, 11:43 PM] Bhakya: அருள் ஞானம் பெறுவதை உணரும் வழி

மனிதனாக உருவாக்கிய எத்தனையோ கோடி சரீரங்களைப்பெற்ற பின் இந்த உணர்வுகள் மனிதனை எப்படி அழிக்கின்றது?

இந்த நினைவாற்றலை மாற்றுகின்றது?

மீண்டும் பரிணாம வளர்ச்சி தேய்பிறையாக எப்படி செல்லுகின்றோம்?
இதிலிருந்து அந்த தேய்பிறையான நிலைகளை நிறுத்தல் வேண்டும்.

அருள்ஞானியின் உணர்வை உங்களுக்குள் விளைய வைக்க வேண்டும்.

இன்று விநாயகர் சதுர்த்தி.
தீமையின் நிலைகளுக்கு அழைத்துச் செல்லாது அருள்ஞானியின் உணர்வை ஒளியாக மாற்றி என்றும் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலைகளுக்கு உங்களை அழைத்துச்செல்ல வேண்டும். உங்களுடைய உணர்வுகள் அந்த எண்ணத்தில் நினைவு ஆற்றல் பெருக்க வேண்டும்.

இது உங்கள் உடலுக்குள் ஊடுருவப்போகும் போது தீமையின் நிலைகளை அது கரைத்து, நீங்கள்நான் வெறும் சொல்லாக சொல்வதாக நீங்கள் எண்ணலாம்.

நான் என் குருநாதர் சொல்லும்போது இப்படித்தான் எண்ணினேன்.
அவர் சொல்லுகின்றார்,
நான் எதைப்பெற முடியும் என்று.
காட்டுகின்றார்,
எதைப்பெற முடியும் என்று.

அவர் முதலில் சொன்னதை சொல்லப்படும் போது பின் நிலைகளை இந்தக்காட்சிகளாக நான் காண முடிகின்றது. பின்அந்த அறிவின்தன்மை எப்படி என்ற உலகம் ஒவ்வொரு உயிராலும் உணர்வுகள் எப்படி விளைகின்றது என்ற நிலையை பின்தான் நான் உணர முடிகின்றது.

ஆகவே அதைப்போல இன்றைய நிலைகள் உங்களுக்குள் இந்த வாழ்க்கையில் அறியாது வந்த தீமையின் நிலைகளை அது நிறுத்தி அதை கரைத்து அதன் அருள் ஒளிகளை
அதைப்பெருக்கச்செய்ய வேண்டும்.

இதைப்போல இன்று நீங்கள் கேட்கும் உணர்வுகள் அதிகரிக்கும் போது உங்கள் ஆன்மாவின் நிலைகள் முன்நின்று தீமைகளை அகற்றும் நிலை பெறுகின்றது.

இதவே நாம் கூட்டமைப்பாக நாம் கூடிஇந்த உணர்வின்தன்மை நாம் அனைவரும் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வுகள் அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்து இந்த எண்ண அலைகளைப்பரப்பப்படும் போது பூமியில் அந்த தீமைகளை விளைவிக்கும் இந்த உணர்வின் அணுக்கள் விலகுகின்றது.
[1/29, 12:20 AM] Bhakya: உடலிலுள்ள அணுக்களின் இயக்கமும், ஆன்மாவின் செயல்களும்

உங்கள் உடலுக்குள் இருக்கும் எண்ணில் அடங்காத ஆன்மாக்கள் உண்டு. அதன் எதனெதன் நிலைகள் விளைந்ததோ அதனின் உணர்வின்தன்மை ஈர்க்கப்படும் போது நம் உடலுக்குள் பரவிவரும் உணர்வுகளை அது கவர்ந்து இழுத்து தன் ஆன்மாவாகி தன் உணர்வின்தன்மை எடுத்து ஒரு அணுவின் கருவாக மாற்றிக்கொண்டு இருக்கும்.

இப்போது தீயவர்களை பார்க்கப்படும் போது தீய உணர்வின் அணுக்களாக நம் உயிர், உணர்ச்சியால் நம்மை அறியச்செய்தாலும் உணர்வின் அணுவாக மாற்றி விடுகின்றது.
அணுவின்தன்மை மலமாக மாற்றி உடலாக மாற்றுகின்றது.

அதற்குள் அது தேங்கி நின்று தன் உணர்வை எடுப்பதற்கு அந்த உணர்ச்சியைதூண்டும்.
இதே உணர்ச்சி களை தூண்டும் போது நமக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் அறிவோ நாம் எதில் இருந்து தீமைகளை உருவாக்கியதோ அதைக்கவர்ந்து நமது
ஆன்மாவாக மாற்றி நாம்சுவாசித்து உயிரிலே பட்டு,அந்த உணர்வின் இயக்கங்களை நம் உடலுக்குள் பரப்பச்செய்து அதன் நிலைகள் கொண்டு தனக்குள் சேமித்து வைத்துக்
கொள்ளும்.

இன்று நாம் எப்படி உணவாக உட்கொள்வதை நாம் எடுத்து உடலுக்குள் அது சேர்த்துஅது சிறுகச்சிறுக கலந்து அதுஇரத்தமாகவும்,
உணர்வின் அணுக்களாகவும் நாம் மாற்றி கொண்டு உள்ளோமோ,இதைப்போல தான் தனது சேமிப்பாக அது எடுத்து அந்த உணர்வின்தன்மை வளர்க்கும்.

அதில் கொஞ்சம் குறைகின்றது என்றால் உடனே உணர்ச்சிகளைத் தூண்டும்.அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது அதை எதனின் உணர்வின்தன்மை பட்டதோ அதே காந்தப்புலன் அருகில் இருக்கும் இந்த உணர்ச்சியின் வேகம் அதிகமாகும் போது இன்னொரு மனிதன் உடலில் தீமைகள் விளைந்த உணர்வை இது கவரநேரும்.
அவ்வாறு கவர்ந்தால் நமது ஆன்மாவாக இங்கே சேருகின்றது.

நாம் சுவாசித்து உயிர் வழி கொண்டு தனக்குள் அதை எடுத்துக்கொள்கின்றது. இந்த இயற்கையின் நியதிகளே இது தான்.

ஆகவே அது எடுக்கப்படும் போது, தன் ஆன்மாவில் சேமித்துக்கொள்ளும்.

இப்போது எப்படி நாம் சாப்பாடு சாப்பிட்டு
நிறைந்தவுடனே, நாம் தூங்குகின்றமோ அதேபோல அந்த எந்தெந்த அணுக்களின்
தன்மை வருகின்றதோ அது வந்து சேர்த்து விடும்.

அப்போது அது உறங்கச்செல்லும். ஆனால் அதேசமயத்தில் அந்த விஷத்தன்மையான அணுக்கள் வரப்படும் போது தன்னை அறியாமலே துடிப்பின் வேகம் அதிகமாகும். அப்போது நமக்குள் வேதனையின் தன்மைகளும் உருவாகும்.

இது இயற்கை யின் சில நியதிகளில் நிலையானது.

இந்த துருவதியானத்தை ஒவ்வொரு நொடியிலும் கடைப்பிடிக்க அந்தந்த குடும்பத்தில் முயற்சி எடுங்கள். குழந்தைகளும் அந்த நேரத்தில் நாம் 5மணிக்கு எழுந்தால் போதும். நீங்கள் ரொம்ப நேரம் எழ வேண்டாம். ஐந்தரை மணிக்கு எழுந்தாலும் போதும்.

காலையில் ஆறரை மணிக்கு அந்த சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தின் ஒளிகளைத் தாங்கி வருகின்றது. ஆகவே அது பெரும்பாக்கியமாகத்தான் உங்களில் பதிவாக்கி உள்ளது. இப்போதைக்கு வேண்டும் என்பதில்லை. உங்களது ஆன்மாவைப் பிடிக்கின்றீர்கள். எது…? இப்போது உடலை விட்டுப் பிடிக்க இந்த நீரைப் போடுகின்றோம்.

இப்பொழுது நமக்குள் ஆன்மாவைப் பிடிக்க அருள்ஞானிகளின் உணர்வைப் போடுகின்றோம். அதை வைத்துத்தான் தூய்மையாக்க வேண்டும். ஆகவே இதை ஒவ்வொரு குடும்பத்திலும் தவறாது இதைச் செய்து பழகுங்கள்.

நேரமில்லை என்று விட்டு விடாதீர்கள்.

முடியவில்லை என்று விட்டு விடாதீர்கள்.

ஏனென்றால் நீங்கள் பெற வேண்டுமென்று அந்த மகரிஷிகளின் ஆற்றல் நாம் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன்.

குருவினுடைய உணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவு செய்து இருக்கின்றேன்.

நீங்கள் எளிதில் பெறுவதற்கு உங்களை நான் நினைக்கின்றேன்.

என்னைச் சந்திப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் உணர்வு பெற வேண்டுமென்று சதா தவமிருக்கின்றேன்.

நீங்கள் வளர்ந்தால் தான் அந்த அலைகள் குவியும்.

ஏனென்றால் இந்த உணர்வின் சத்து குருவின் அருள் இங்கே படர்ந்துள்ளது.

ஒரு நெல் செடியின் உணர்வின் சத்து இணைந்தபின் அது பரவிஇருப்பதை ஒரு நெல்லை ஊன்றும் போது அந்த நெல் எந்த நிலையிலிருந்து அந்தச் செடியிலிருந்து விளைந்ததோ அந்த சத்தினை அது கவர்ந்து தன் இனத்தைப் பெருக்குகின்றது.

இதைப்போல குருப்பெற்ற அந்த உயர்ந்த சக்தி நமக்கு அனைவரிலும் இது பெருக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை உலகிலே பரப்பப்பட்டால் தான் இந்த தீமை கொண்ட உலகிலிருந்து மக்களை மீட்க முடியும்.

ஆகவே நாம் அவர்களுடைய அருளை நமக்குள் வளர்த்து அனைவரும் பெற வேண்டுமென்று இந்தக் காலை துருவதியானத்தை ஆரம்பியுங்கள். ஏனென்றால் நஞ்சு கொண்ட உலகிலிருந்து மக்களை நம்மை மீட்டுவோம் என்ற உணர்வை நம்முள் வளர்க்க வேண்டும். அவரைப் பகைமை கொண்டு பார்த்தார்கள்; பகைமை உள்ளவர் என்று எண்ணாதீர்கள்; தீமை கொண்ட உணர்வுகள் உள்ளவர் என்று எண்ணாதீர்கள்.

தீமை கொண்ட கருணைக்கிழங்கையும் நாம் வேக வைத்து அதனுடன் புளியும் காரமும் உப்பும் போட்டு சுவை கொண்டதாக மாற்றுகின்றோம். இதைப் போன்றுதான் எவரின் நிலைகள் கொண்டு தீமை என்ற நிலைகள் மாற்றி அவர்கள் தீமையற்றவர்களாக வாழ வேண்டும் என்று உங்களுடைய எண்ணத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். தீமையற்றவர்களாக வாழ்வதற்காக அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டுமென்று தவம் இருங்கள். அருள்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். கணவனும் மனைவியும் ஒன்றி இருங்கள்.

இரவு படுக்கையில் தூங்கும் முன் தியானம் செய்ய வேண்டிய முறை – “பறக்கும் நிலை”

பறக்கும் நிலை

இரவு படுக்கையில் தூங்கும் முன் தியானம் செய்ய வேண்டிய முறை – “பறக்கும் நிலை”

 

இரவு தூங்கச் செல்லும் போதெல்லாம் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் ஒளி காந்த சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை எண்ணுங்கள்.

காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனை பேரைப் பார்த்தீர்களோ அவர்களுக்கெல்லாம் அந்த துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் ஒளி காந்த சக்தியும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நாம் எத்தனை பேரை சந்தித்தோமோ அவர்களெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதை நாம் எண்ணி ந்த உணர்வை நமக்குள் வளர்த்து கொண்டால் அது நமக்குள் அணு தினமும் விநாயகர் “சதுர்த்தி…” தீமை என்ற நிலைகள் நிறுத்தப்படுகிறது.

கண்களைத் திறந்தே எண்ணி எடுக்கவேண்டும். பிறகு புருவ மத்தியில் எண்ணும் பொழுது தானாகவே கண்களை இறுக்கி மூடச் செய்யும். நீங்கள் கட்டாயப்படுத்தி கண்களை மூடவேண்டாம்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி இதை உங்கள் உடலுக்குள் நினைவைச் செலுத்தி உங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வை எண்ண வேண்டும். பெருகியபின் நம் ஆன்மா தூய்மை ஆகும்.

என்னுடன் தொழில் செய்பர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். நாங்கள் தொழில் செய்த இடங்களில் பார்த்துப் பழகிய அத்தனை பேரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலமாக இருக்கவேண்டும்.

இப்படி எண்ணினால் இதற்குப் பெயர் தவம்.

தெய்வத்தை எண்ணித் தவமிருப்பதைவிட ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்த்து மற்றவர்கள் அதைப் பெறவேண்டும் என்று இதைத் தவமாக்க வேண்டும்.

மனிதனை உருவாக்கிய அந்த நல்ல உணர்வுகளுக்கெல்லாம் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அது தவமாக மாறுகின்றது.

இரவு முழுவதும் நீங்கள் எண்ண வேண்டும்.

தொழில் செய்யும் போது நம்மிடம் வியாபாரம் வாங்கிச் சென்றவர்களுக்கும் நாம் யார் யாரை எங்கெங்கெல்லாம் அன்றைய வாழ்க்கையில் பழகினோமோ அவர்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.அப்படியே அந்த நினைவை வைத்துக் கொண்டே தூங்க வேண்டும்.
2.நீங்கள் சிறிது காலம் இதைச் செய்து பழக்கப்படுத்தினால்
3.அந்த வான மண்டலத்தில் மிதப்பது போல அந்த உணர்வு வரும்
4.சப்தரிஷி மண்டலத்துடன் தொடர்பு கொள்ளும்.

யார் யாரையெல்லாம் பார்த்து அதனால் வேதனைப்பட்டு நமக்கும் நோயானதோ அந்த நோயெல்லாம் குறையத் தொடங்கும். காலையில் எழும் பொழுது ஒரு உற்சாக உணர்வு வரும்.

அன்றாடக் காரியங்கள் மகிழ்ச்சியாக நடக்கும். நமக்குள் சோர்வோ சஞ்சலமோ வராது.

இரவு படுக்கப்போகும் போதும் காலை எழுந்திருக்கும் போதும் பின் வெளியிலே வேலைக்குச் செலலும் பொழுதும் இதை எல்லாம் வரிசைப்படுத்தி எண்ண வேண்டும்.

செய்து பாருங்கள்…!

ஞானிகளால் வைக்கப்பட்டுள்ள தெய்வச் சிலையின் மகிமையை அறிந்திருக்கின்றோமா…!

பழனியாண்டவர்

ஞானிகளால் வைக்கப்பட்டுள்ள தெய்வச் சிலையின் மகிமையை அறிந்திருக்கின்றோமா…! 

ஒருவர் கஷ்டமாக இருப்பார் நஷ்டமாக இருப்பார் வேதனைப்பட்டு இருப்பார் துன்பப்பட்டு இருப்பார் துயரப்பட்டு இருப்பார் எல்லாம் பட்டிருப்பார்.

ஆனாலும் இங்கே கோவிலுக்குள் போனவுடன் அந்த ஞானிகளின் எண்ணங்களை எடுத்து ஒருங்கிணைக்க வேண்டும்.

எப்படிக் குழம்பு வைக்கும் பொழுது எல்லாம் ஒன்றாகச் சேர்த்துச் சுவையாக இருக்கின்றதோ இதைப் போல நாம் துன்பத்தை நீக்கி இன்பத்தின் நிலைகள் பெறவேண்டும் என்று எல்லோரும் ஒருங்கிணைந்த நிலைகளில் சொல்லி கோவிலுக்குள் ஒலிபரப்பும் பொழுது அங்கே எதிரொலிக்கும்.

எப்படி..?

ஒரு மேக்னட்…! (காந்தம்). அதாவது மலைகளிலே அதிகமாக உயரமாக வளர்ந்து தன் காந்தத்தின் நிலையாக இழுக்கப்பட்டு நெடு நெடு என்று வளர்ந்திருக்கும். அதே சமயத்திற்குள் அந்தக் கல்லுக்குள் மறைந்த நிலையில் காந்த அலைகளும் பதியப்பட்டு இருக்கும்.

அத்தகைய மலைகளில் எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு தான் ஆலயத்தில் தெய்வச் சிலையாக வைத்துள்ளார்கள் ஞானிகள்.

கோவிலுக்குள் சென்று நாம் அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் இடும் இன்பமான அலைகள் அங்கே படரப்பட்டு சிலையின் காந்தத்தால் ஈர்க்கப்படுகின்றது.

சாதாரண மக்களும் அந்தச் சிலையைப் பார்த்து எண்ணியதும் அந்த உயர்ந்த சக்தியைப் பெறச் செய்வதற்காக வேண்டி அந்த மெய்ஞானி ஆலயத்தை அவ்வாறு அமைத்தான்.

கோவிலுக்குள் போனவுடன் தீபாராதனை காட்டுகின்றார்கள். இருட்டறைக்குள் சாமி இருக்கின்றது.

நம் உடலுக்குள் மறைந்திருக்கும் நல்ல குணம் அதைப் பார்க்கப்படும் பொழுது தெரிந்துணர்ந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று வானை நோக்கி எண்ணி நாம் ஏங்கவேண்டும்.

சாமி மேலே நறுமணமான மலர்களைப் போட்டிருப்பார்கள்.

எனக்குள் நல்ல குணத்தைத் தெய்வமாக உருவாக்கி இந்த உடலுக்குள் நீ எந்த மணம் பெற வேண்டும் என்று காட்டுவதற்காக மலரைப் போட்டிருக்கிறார்கள்.

மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் மணக்க வேண்டும். எங்கள் பேச்சும் மூச்சும், நறுமணங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது, இந்த உடலிலே நறுமணம் வருகின்றது.

ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இப்படி ஏகோபித்த நிலைகள் ஒவ்வொருவரும் எண்ணும்படி வைத்துள்ளார்கள் அன்றைய ஞானிகள்.

இதையெல்லாம் நான் (ஞானகுரு) சொல்லவில்லை. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்னது.

நான் படிக்கவில்லை. எமக்குக் கோவிலைப் பற்றியும் தெரியாது. இந்த ஸ்தல விருட்சத்தைப் பற்றியும் தெரியாது. அவர் சொன்னதைத் தான் உங்களிடம் சொல்லுகின்றோம்.

குருநாதர் எம்மிடம் கோவிலுக்குப் போனால் இப்படித்தான் கும்பிட வேண்டும் என்றார்.
1.நாம் அந்த எண்ணத்தை எடுக்கும் பொழுது தெய்வமாகின்றது.
2.எண்ணிய எண்ணம் இறையாகின்றது இறைவானாகின்றது.
3.அந்த உணர்வின் சக்தி நமக்குள் தெய்வமாகின்றது.
4.அந்த செயலின் தன்மையாக நாம் ஆகின்றோம் என்ற செயலின் தன்மையை குருநாதர் சொன்னார்.

அதைத்தான் யாம் உங்களிடம் சொல்லுகின்றோம்.

காலையில் தியானம் செய்யும் முறை – பிரம்ம முகூர்த்தம்

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்

காலையில் தியானம் செய்யும் முறை – “பிரம்ம முகூர்த்தம்”

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் அரும்பெரும் சக்திகளைப் பெறுவதற்காக அதிகாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள் துருவ தியானம் செய்ய வேண்டும்.

எழுந்து வசதியாக உட்கார்ந்து செய்யவும் செய்யலாம். படுக்கையில் விழிப்பு வந்தபின்
1.நேரடியாகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் தொடர்பு கொண்டு
2.புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் எண்ணத்தைச் செலுத்தி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெரொளி உடல் முழுவதற்கும் படரவேண்டும் என்று உள் முகமாகச் செலுத்த வேண்டும்.

உள் முகமாகச் செலுத்தச் செலுத்த நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொண்டு இருக்கும்.

காலையில் நீரை ஊற்றி நம் உடல் அழுக்கைப் போக்கக் குளிக்கின்றோமோ அதைப் போல ஆன்மாவில் பட்ட தீமைகளை நீக்க அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் இப்படிச் செலுத்த வேண்டும்.
1.உடலுக்குள் வலு பெறச் செய்து தான்
2.ஆன்மாவில் உள்ள தீமைகளை நீக்க வேண்டும்.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் வலு பெற்றால் அதனின் உணர்வு நம் ஆன்மாவாகி நாம் சுவாசிக்கும் போது வேதனையின் எண்ணங்கள் தான் வரும்.

ஆகையினால் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்தே ஆகவேண்டும். உங்களைக் காக்க இந்த எண்ணம் உங்களுக்கு உதவும்.

நான் சொல்வது கொஞ்சம் சிக்கலாகவும் தெரியும். கடினமாகவும் தெரியும். பதிய வைத்து விட்டால் சந்தர்ப்பம் வரும் போது நினைவிற்கு வரும்.

பள்ளிக்கூடத்தில் போய் நாம் பாடத்தைப் படித்தவுடனே எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது இல்லை. அதைத் திரும்பத் திரும்பப் படிக்கும் போது தான் அந்த நினைவாற்றல் நமக்குள் பெருகுகின்றது.

ஒரு தடவை பதியச் செய்து விட்டாலும்
1.அதைப் பெற வேண்டும் என்று எண்ணம் இருந்தால் தான்
2.திரும்பத் திரும்ப நாம் மனதில் பதிவு செய்வோம்.
3.அதை வளர்ப்போம்.

ஏனென்றால் இரண்டு சூடத்தையும் தேங்காயையும் பழத்தை விநாயகருக்குக் கொண்டு போய் வைத்து இரண்டு அருகம்புல்லையும் கொடுத்துவிட்டால் “அவன் பார்த்துக் கொள்வான்” என்கிற நினைவில் நாம் இருந்தவர்கள். அந்தப் பழக்கத்தில் இருந்ததால்
1.ஒரு நிமிடத்தில் எண்ணி
2.எங்கேயோ இருக்கக்கூடிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுகின்றோம் என்று
3.இப்படிச் சொல்கிற பொழுது இது கொஞ்சம் கடினமாக இருக்கின்றது.
4.ஆனால் அதைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு கொடுக்கின்றோம்.

நல்ல வித்தைக் கொடுத்து அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம். அதை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நிலையில் தான் இருக்கின்றது.

இதற்கு முன்னாடி நாம் இதையெல்லாம் செய்யாமல் இருந்தாலும் கூட இப்பொழுது அந்த அருள் ஞானிகளின் ஞான வித்தைக் கொடுக்கின்றோம்.

அதை முறைப்படி பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் சரியாக நான்கு நான்கரை மணிக்கெல்லாம் அவசியம் விழிப்பு வரும்.

அந்த நேரத்தில் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். எழுந்து உட்கார்வதற்கு உங்களுக்குச் சோம்பேறித்தனமாக இருந்தாலும்
1.உங்கள் எண்ணத்தை நேராகத் துருவ மகரிஷிக்கு அனுப்புங்கள்.
2.அந்த துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

காலையில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலைகள் நமக்குள் ஒளிக் கதிராக வருகின்றது. அதை எண்ணி இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் வலு சேருங்கள்.

உங்கள் கண்ணின் நினைவை விண்ணிற்குச் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் நினைவை உயிருடன் ஒன்றி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

பத்து நிமிடத்திலிருந்து அரை மணி நேரமாவது செய்ய வேண்டும்.உள்ளுக்குள் செலுத்தச் செலுத்த ஆன்மா தூய்மை அடையும். உடல் நலம் பெறுவீர்கள்.

எந்த அளவுக்கு நன்னீரை விட்டுக் குளிக்கின்றீர்களோ இதைப் போல அருள் ஞானியின் உணர்வை உங்கள் உடலுக்குள் சேர்த்து உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சிருஷ்டியாக்கும் நேரம் என்று பொருள்.

மெய் ஞானத்தை வளர்க்கும் “விழுதுகள்”

Image

Tap root for Spirituality

மெய் ஞானத்தை வளர்க்கும் “விழுதுகள்”

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் உணர்வைத் தன்னுள் கண்டுணர்ந்து இந்த மண்ணுலகை வென்று விண்ணுலகைச் சென்றடைந்து முழுமை பெற்றார்.

விண் செல்வதற்குண்டான பாதையை அவர் கற்றார். இந்த உணர்வை முழுமை பெறுவதற்குத் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று எண்ணினார்.

அந்தத் துணையைத் தான் பெற்றாலும் விண்ணுலகம் செல்வதற்கு விண்ணிலே உந்தித் தள்ளுவதற்கு தனக்குகந்த ஆதாரங்கள் தேவை.
1.விழுதுகள் இல்லாது மரம் வளர்ந்திடாது
2.ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார்.
3.அதே போலத்தான் ஒவ்வொரு உயிருக்கும் விழுதுகள் தேவை.

நாம் எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு விண் சென்ற மகா ஞானிகளின் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் எடுத்து அந்த விழுதுகளாக நாம் ஓவ்வோருவரும் உருவாக வேண்டும்.
1.உங்களுக்கு நான் விழுது
2.எனக்கு நீங்கள் விழுது என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.

விழுது இல்லாது ஒன்றின் துணை இல்லாது ஒன்று விளையாது என்ற நிலையைக் குருநாதர் தெளிவாகக் காட்டினார். அதே சமயத்தில்
1.நான் மட்டும் தனித்துத் பெறுவேன்.
2.மற்ற அனைத்தையும் வெறுப்பேன் என்ற நிலையில் பெற இயலாது.

அன்று அகஸ்தியன் தனக்குள் அனைத்தையும் இணைத்துத்தான் ஒளியாக்கினார்.
1.வருவதைத் தனக்குள் அரவணைத்துத்
2.தீங்கு செய்யாது அதை அடக்கினார்.

அதனால் தான் எதையுமே ஒளியாக மாற்றும் திறன் பெற்றார் அப்படிப் பெற்ற அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் கவரப்படும் பொழுது நிச்சயம் நாம் அனைவரும் அதைப் பெறலாம்.

இதை எல்லாம் “துணுக்குத் துணுக்காகச் சொல்கிறேன்…!” என்று எண்ண வேண்டாம்.

இதை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் நினைவாக்கும் பொழுது சந்தர்ப்பத்தில் தீமைகளைப் போக்கும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

நீங்கள் அனைவரும் அவ்வாறு பெறவேண்டும் என்பதற்காகத்தான் தெளிவாக்குகின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படிப் போதித்தாரோ…? மகரிஷிகளின் உணர்வுகளை நான் பெறும்படி எப்படிச் செய்தாரோ…? அவ்வாறே நீங்களும் பெறவேண்டும். பெற முடியும் என்ற அந்த நம்பிக்கையில் சொல்லுகின்றேன்.

1.உங்கள் நினைவலைகள் கூர்மையாக இருக்க வேண்டும்.
2.கூர்மையாக ஆக்க உபதேசிக்கும் உணர்வை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்.
3.பதிந்ததை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவேண்டும்.
4.அந்த நினைவின் ஆற்றல் உங்களை வளர்க்கும்.
5.முதலில் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் வளர்க்க வேண்டும்
6.பின் அது உங்களை வளர்க்கும்
7.அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிக்கும்
8.அருள் வழியில் அழைத்துச் செல்லும்.