குருநாதர் கொடுத்தது எக்கச்சக்கமாக எனக்குள் இருக்கின்றது… கொஞ்சம் தான் சொல்கின்றேன்

குருநாதர் கொடுத்தது எக்கச்சக்கமாக எனக்குள் இருக்கின்றது… கொஞ்சம் தான் சொல்கின்றேன்

 

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரில் எண்ணிலடங்காதவைகளைப் பதிவு செய்கின்றார்கள். பதிவு செய்த பின் மீண்டும் இயக்கப்படும் பொழுது அனைத்தும் தெரிய வருகிறது.

இன்றைய நவீன நிலைகள் கொண்டு அதனுடைய இயக்கங்களில் தவறுகள் வந்தாலும் கூட “தன்னாலேயே அதைத் திருத்திக் கொள்ளும்படியாக அதில் வைத்திருக்கின்றார்கள்…”

அதே போன்று
1.அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் நாம் காலையிலிருந்து இரவு வரை
2.எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்… நமக்குள் சேமிக்கப்படுகின்றது.

கம்ப்யூட்டர்களில் பார்த்தோம் என்றால் பல கோடி நிலைகளைப் பதிவாக்கி அதை இயக்கும் வசதிகளையும் (CAPACITY) இன்றைய நவீன நிலைகள் கொண்டு உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அதே போன்று நமது மனித உடலில் எத்தனையோ விதமான ரெக்கார்டுகள் உண்டு.

அனுபவம் பெறுவதற்காக நான் காட்டிற்குள் சென்று மிருகங்களை எல்லாம் பார்த்தேன் என்றால்
1.அங்கே பெற்ற அனுபவங்களை எல்லாம் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகிறேன் என்றால்
2.நான் சென்ற இடமெல்லாம் இப்பொழுது நினைவலைகளில் வந்து (அது தெரிந்து தான்) தான் சொல்ல முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் ரோட்டிலே செல்கின்றீர்கள். யாராவது திட்டினார்கள் என்றால்… சண்டை போட்டு அவர்கள் மோசமாகத் திட்டியிருந்தார்கள் என்றால்… ஒருவருக்கொருவர் தாக்கியிருந்தால்… அதை ஒரு தரம் நாம் பதிவாக்கி விட்டோம் என்றால்
1.அந்த இடத்திற்குச் சென்ற பின் இருவர் சண்டையிட்டால்
2.அவருடைய நினைவலைகள் அங்கே தெரிய வரும்… உடனே தெரிந்து கொள்ளலாம்.

ஏனென்றால் நம் உடலில் இது போன்று கண் கருவிழி ருக்மணி பதிவாக்கி விடுகின்றது. மீண்டும் அந்த மனிதர்களை எண்ணும் பொழுது அது இயக்குகின்றது.

இதே போன்றுதான்
1.இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்காக குருநாதர் எண்ணிலடங்காத பதிவுகளைக் கொடுக்கின்றார்…
2.எக்கச்சக்கமாக எனக்குள் இருக்கின்றது.
3.கொஞ்சம் மட்டும் தான் உங்களிடம் சொல்லி வருகின்றேன்
4.அந்தந்தச் சமயத்திற்குத் தக்கவாறு.

காரணம்… ஒரு உடலில் விளைந்ததை அடுத்த உடலுக்குள் பாய்ச்சினால் அதன் நிலைக்கே மாற்றும்.

அது போல் தான் அகஸ்தியன் தான் கண்டறிந்த உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். இருவரும் ஒன்றாகிறார்கள்.

நம் பூமி துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றலை எவ்வாறு கவர்கிறது…? என்பதை உற்று நோக்குகின்றார்கள். அதிலிருந்து வரக்கூடிய சக்தியை நுகர்கின்றார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட சக்தியால் கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாகின்றது… உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாக்குகின்றார்கள்.
1.மின்னல்கள் வரும் பொழுது ஒளிக் கற்றைகளை இவர்கள் சுவாசிக்கின்றார்கள்
2.இரண்டு பேர் உடலிலும் ஒளியான அணுக்கள் உருவாகின்றது.

துருவப் பகுதியை எண்ணி வளர்த்துக் கொண்ட நிலையில் இரு உயிரான்மாக்களும் வெளி வரும் பொழுது எதைக் கூர்மையாக உற்று நோக்கினார்களோ அங்கே செல்கின்றார்கள். இரு உயிரும் ஒன்றாகிறது.

1.அகஸ்தியன் உடலில் இரண்டு நட்சத்திரத்தினுடைய சக்தி கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம்
2.அவன் மனைவி உடலில் அதே போன்று இரண்டு நட்சத்திரம் வேறு ஒரு ஆண் நட்சத்திரம் வேறு ஒரு பெண் நட்சத்திரம்
3.அவர்கள் இரு உயிரும் ஒன்றான நிலையில் “அந்த நான்கும் சேர்ந்து பிரம்மமாகின்றது…”
4.மின்னல் எப்படி ஆகின்றதோ… அதை உருவாக்கக்கூடிய சக்தி பெறுகின்றார்கள்.

அப்படியானது தான் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரம் நம் பூமியின் வடகிழக்குப் பகுதியில் துருவப் பகுதியின் ஈர்ப்புக்கு நேராக இருக்கின்றது. அதன் வழி தான் அதனுடைய சக்திகள் இங்கே உள்ளே வருகின்றது
1.அதை நுகர்ந்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்குத் தான்
2.இத்தனை உபதேசங்களையும் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply