உங்கள் கரு விழிக்குள் யாம் பதிவாக்கும் உயர்ந்த சக்தி

உங்கள் கரு விழிக்குள் யாம் பதிவாக்கும் உயர்ந்த சக்தி

 

“நீங்கள் மெய் வழி செல்ல வேண்டும்…” என்ற உணர்வின் நிலைகளைச் செலுத்துகின்றீர்கள்.
1.இதற்கு உங்களைப் பிரார்த்திக்கக்கூடிய குரு வேண்டும்.
2.அப்படிப் பிரார்த்திக்கக்கூடிய குருவினுடைய தன்மை பெற்றால் தான் உங்கள் உணர்வின் தன்மை வலு கூடும்.

நாம் அனைவருமே T.V. RADIO மூலமாக அனைத்தையும் பார்த்து… கேட்டு அறிகின்றோம். இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு செயற்கைக்கோள் எங்கேயோ விண்ணிலே பரவக்கூடிய அந்த உணர்வின் அலைகளை எடுத்துப் படங்களை அனுப்புகின்றது.

அந்தப் படங்களை எடுத்துக் கொள்வதற்காக வேண்டி கம்ப்யூடர் சிஸ்டம் என்று வைத்துள்ளார்கள். ஒன்றுக்குள் ஒன்று இணையச் செய்து
1.அது விண்ணிலே எத்தனையோ கோடி மைல்களுக்கு அந்தப் பக்கம் பறந்து கொண்டிருந்தாலும்
2.அது அங்கிருக்கும் உணர்வலைகளைப் படமெடுத்துத் தரையிலிருக்கும் ஆண்டெனாக்களிலே இயக்கப்படுகின்றது.
3.கம்ப்யூடர் அந்த நிலையை இழுத்துப் பதிவு செய்து விடுகின்றது.

இதைப் போன்று
1.உங்கள் உடலின் தன்மை அனைத்துமே “இயந்திரம்…!” நம் கண்ணின் புலனறிவு “ஆண்டெனா…!”
2.அந்தப் பவரின் சக்தி கொண்டு (மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று) தியானிக்கப்படும் போது
3.நம் உடலுக்குள் எத்தனை உணர்வுகள் இருந்தாலும் கண்ணுக்குள் தொடர்பு உண்டு.

நாம் எந்தெந்த நிலைகளில் நினைவைச் செலுத்துகின்றோமோ அந்த உணர்வின் தன்மை ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு கண்ணுக்குள் இருக்கக்கூடிய கரு விழிக்குள் அது தொடர்பு கொள்கின்றது.

அவ்வாறு அது தொடர்பு கொள்ளும் பொழுது நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கக்கூடிய அந்தக் கரு விழிகளிலே
2.மெய் ஞானிகளின் அருளாற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை உந்தச் செய்து அங்கே பதிவு செய்கின்றோம்.

அதாவது கண்ணாலே பார்ப்பதும் அந்தப் பார்வையின் நிலைகள் கொண்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்யும் நிலையாக இது அமைகிறது.

குருநாதர் எமக்கு எவ்வாறு காட்டினாரோ அந்த உணர்வின் நிலைகள் கொண்டே
1.உங்கள் கருவிழிக்குள் அந்த உணர்வின் திரை ஈர்ப்பின் சக்தியைப் பெறச் செய்யும் போது
2.நீங்கள் இரவிலே படுத்துக் கொண்டிருக்கும்போது இது பதிவு ஆகின்றது.

இவ்வாறு நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இரவிலே ஆத்ம சுத்தி செய்து விட்டு நீங்கள் படுக்கும் போது “இந்த உணர்வலையின் ஓட்டங்கள்…” இருந்து கொண்டிருக்கும். அப்பொழுது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்தும் துருவ நட்சத்திரத்தில் இருந்தும் வரக்கூடிய அலைகளை
2.அது தன்னிச்சையாகவே அந்த உணர்வுகளைக் கவர்ந்து இழுத்துவிடும்.
3.இரவு முழுவதுமே தியானமாக அது அமைந்து விடும்.

கண் கருவிழிக்குள் இருக்கும் லென்ஸ் பற்றிய பேருண்மை

கண் கருவிழிக்குள் இருக்கும் லென்ஸ் பற்றிய பேருண்மை

 

உதாரணமாக… ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டான் என்றால் அதிலே பொருள் அறிதல் வேண்டும்.

காரணம்… பாசத்தால் அவருடைய துயரைக் கேட்டறிந்தோம். கேட்டறிந்த உணர்வுகள் அந்த நோயின் வலிமை நம் நல்ல குணத்தைச் செயலற்றதாக மாற்றி உடலுக்குள் அதே பலவீனமான நிலைகள் வருகிறது என்று இந்தப் பொருளை நாம் அறிதல் வேண்டும்.

தெய்வம் நல்லதைச் செய்யும் என்று ஆலயத்தில் வரப்படும் பொழுது
1.அந்தத் தெய்வ குணத்தைக் காட்டுவதற்காகத் தீப ஆராதனை காட்டப்படுகின்றது.
2.அவ்வாறு காட்டப்படும் பொழுது தெய்வமும் தெரிகின்றது.
3.தெய்வத்திற்குக் கனி வைத்திருப்பதும் மலர் மாலைகளைச் சூட்டியிருப்பதும் தெரிய வருகின்றது.
4.தெய்வத்தின் மேல் வைர கிரீடம் வைத்திருப்பதும் தெரிகின்றது.

ஆக… பொருளை அறியக்கூடிய தன்மை அந்த வெளிச்சத்தினால் வருகின்றது.

1.நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது அங்கிருக்கும் நல்ல நறுமணங்களும் நல்ல மணங்களும் பார்க்க அல்லது நுகர முடிகின்றது.
2.ஆனால் வேதனை என்று வந்துவிட்டால் குடும்பத்தில் ஒரு நல்ல பொருளைப் பார்த்துச் சந்தோஷப்படுகின்றோமா…?
3.நல்ல குணம் கொண்ட நம் பையனைப் பார்த்தால் சந்தோஷம் வருகின்றதா…? இல்லை…!

நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ கண் வழி தான் பாய்ச்சுகின்றோம். கண் வழி பாய்ச்சப்படும் பொழுது ஒரு கண்ணாடியில் எந்தக் கலரின் தன்மை போடுகின்றோமோ அதன் வழி தான் முன்னாடி இருக்கக்கூடிய பொருள் தெரிய வரும்.

எக்குகுணத்தை எண்ணி எடுக்கின்றோமோ
1.நம் கருவிழிக்குள் கண்ணாடி என்ற ஒரு பொருள் உண்டு.
2.அந்தந்த உணர்வுக்கொப்பக் கலர்கள் மாறும்… இந்த உணர்ச்சிகள் மாறும்.
3.அதைப் போன்று தான் நாம் அறிந்திடும் தன்மை வருகின்றது… இயற்கையின் நியதிகள் இது.

அதாவது எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அதற்குத் தக்க தான் எண்ணங்கள் வருகின்றது.

கோவிலில் தீபாராதனை கொடுக்கப்படும் பொழுது…
1.வீட்டில் நம் பையன் இப்படிச் செய்கின்றானே என்று வேதனைகளை எண்ணினால்
2.இந்த இருள் சூழ்ந்த நிலையே கண் பார்வையில் தெரிய வரும்.

அங்கிருக்கும் பொருளைக் காண முடியுமா…? நல்லதைச் சொன்னால் கேட்க முடியுமா…? என்றால் முடியாது. அந்த விஷத்தின் தன்மை கரு விழியிலே படப்படும் பொழுது அழுகையும் வேதனையும் வருகின்றது.

நான் தெய்வத்தை வழிபட்டேனே… எல்லோருக்கும் நன்மை செய்தேனே எனக்கு ஏன் இந்தத் தொல்லைகள் வருகின்றது…? என்ற இந்த உணர்வு தான் வரும்.

இந்த உணர்வை ஏற்றுக் கொண்ட பின் கருவிழியின் தன்மைகள் அந்தச் சிலையின் ரூபத்தையோ அங்கே அலங்காரமாகப் போடப்பட்டுள்ள மலர்களையோ ஆபரணங்களையோ வைரக்கல்களையோ ரசிக்காது… ரசிக்க விடாது. வேதனை என்ற உணர்வே மீண்டும் வரும்.

1.இருளில் நாம் பார்த்தால் பொருளின் ரூபத்தைக் காண முடியாது…
2.ஒளி கொண்டு தான் பார்க்க முடியும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஆலயப் பண்புகளாக அங்கே வெளிச்சத்தைத் தான் காட்டுகின்றனர். அதனால் பொருட்கள் தெரிகின்றது… அப்பொழுது
1.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.
2.நாம் சுவாசித்த உணர்வு கண்ணில் இந்த உணர்ச்சிகள் படப்படும் பொழுது இந்த வெளிச்சத்தின் உணர்வு நமக்குள் வருகின்றது.
3.அப்பொழுது தெளிந்த மனம் வருகின்றது.

அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்….?

இந்த ஆலயம் வருபவர்கள் எல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ண வேண்டும்.

கண் பார்வை… உணர்ச்சி… ரூபம்… இயக்கம்…!

கண் பார்வை… உணர்ச்சி… ரூபம்… இயக்கம்…!

 

குருநாதர் ஒரு சமயம் ஒரு வேடிக்கையைக் காட்டுடா…! என்று சொன்னார். ஒரு வாழை மட்டை குப்பைத் தொட்டி அருகே நல்ல பாம்பு படம் எடுத்தது போன்று இருந்தது.

ஐயோ… நல்ல பாம்பு…! என்று நீ சொல் என்றார். சொன்னேன்…! எல்லோரும் பார்த்து ஆமாம் என்கிறார்கள். இது நடந்த நிகழ்ச்சி.

1.மனிதனின் உணர்வுக்குள் எதை ஏற்றுகின்றோமோ அந்த உணர்ச்சியின் இயக்கங்கள் எப்படி ரூபமாகக் காட்டுகிறது…?
2.வாழை மட்டை தான்…! நாகப்பாம்பு போன்று தெரிகின்றது.

இதை ஏற்றுக் கொண்ட பின் மனிதனுக்குள் இந்த உணர்வு எப்படி இயக்குகின்றது…? பாம்பின் ரூபமாக எப்படிக் காட்டுகிறது…? என்று காட்டுகின்றார்.

ஐயோ பாம்பு…! என்று சொன்னேன் எல்லோரும் ஆமாம் என்கிறார்கள். அது அந்தி நேரம். வாழை மட்டையிலே லேசாக மினு மினு என்று மின்னிய பின் அந்த நேரத்திலே அப்படித் தெரிகின்றது. சுருக்கம் சுருக்கமாக இருப்பதால் நிஜமாகவே அது நாகப் பாம்பு போலவே தெரிகின்றது.

எல்லாம் விழுந்து அடித்து ஓடுகின்றார்கள். பாம்பை அடிக்க வேண்டும் கட்டையை எடு… கம்பை எடு…! என்கிறார்கள். ஒருவன் பெரிய கம்பால் அதை அடிக்கின்றான். கம்பிலே அடித்தவுடன் சுற்றி எங்கேயோ சென்று விட்டது… தெரியவில்லை.

காலுக்குள் சென்றது… இல்லை அங்கே போய்விட்டது என்று அலறிக் கொண்டுள்ளார்கள். ஆனால் அடித்தவுடன் சுற்றி மேலே சென்று தூரத்தில் விழுந்து விட்டது.

ஆனால் அந்தப் பக்கம் போனால் அது வாழை மட்டையாகத் தான் இருக்கின்றது. அவன் அதை அடிக்கவில்லை. எங்கேயோ போய்விட்டது… இல்லை இந்தப் பக்கம் போய்விட்டது…! என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த உணர்வுகள்… “நாம் சமைத்த உணர்வுகள் கண்ணிலே எதைக் காட்டுகின்றது…?” என்று இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

வேறு ஒன்றும் வேண்டியதில்லை. ஒரு பொருளை உங்களுக்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
1.கண்ணிலே சிறிது நேரம் அப்படியே உற்றுப் பாருங்கள்.
2.பார்த்துவிட்டுத் திரும்பி வேறு பக்கம் பாருங்கள்.
3.அந்தப் பொருள் சுவரிலே தெரியவரும்.

புள்ளிப் புள்ளியாக ஓட்டையிட்டு ஒரு பொருளை வைத்துக் கொள்ளுங்கள்… அடையாளம் தெரிந்து கொள்வதற்கு…! சிறிது நேரம் அதை உற்றுப் பாருங்கள்

பார்த்துவிட்டு அந்தப் பக்கம் பாருங்கள் அதே ஓட்டை அந்தப் பொருள் எல்லாம் தெரிய வரும்.
1.அதே பொருளைப் பார்த்து விட்டு நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
2.சுவரிலே பார்த்தால் அப்படியே தெரியும்.

இந்த உணர்வுகள் நம் கண்ணிலே அதனுடைய பிரதி பிம்பமாக அப்படித் தெரிய வருகிறது.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வார்கள்.
1.அந்த உணர்வின் தன்மை தனக்குள் வரும் போது
2.குவித்து… உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

பல கோடிச் சரீரங்கள் கடந்து மனிதனான பின்
1.உணர்வின் நோக்கங்கள் கவர்ந்து கொண்டது எதுவோ…
2.அந்த உணர்ச்சிகளைத் தனக்குள் நுகரச் செய்து
3.இந்த உணர்வுக்கொப்பவே “ரூபத்தைக் காட்டுகின்றது…”

இதையெல்லாம் அனுபவித்துச் சொல்லுகின்றேன். குருநாதர் கொடுத்த சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்பதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

கண்களால் உருவான அணுக்களுக்கு அதே கண் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறச் செய்ய முடியும்

கண்களால் உருவான அணுக்களுக்கு அதே கண் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறச் செய்ய முடியும்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… ரத்தங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் அடிக்கடி கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அதாவது மற்ற உணர்வுகள் நம் உடலுக்குள் அணுவாக உருவாகாதபடி முந்தி இதைச் செய்ய வேண்டும்.
1.காரணம் உடலுக்குள் உருவான அணுக்கள் அனைத்துமே கண்கள் பதிவானது தான்…
2.கண்கள் வழி நுகர்ந்து தான் உடலில் அணுக்கள் உருவானது.

அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ரத்தங்களிலே இணைக்கப்படும் பொழுது அது வலுவாகின்றது.
1.கண்கள் மூலம் எளிதில் அந்த அணுக்களுக்கு அந்த ஆற்றலைப் பாய்ச்ச முடியும்.
2.ரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வட்டமாக வலுவாக அமைத்து விடுகின்றது.

ஞானிகள் கண்ட உண்மைகள் இது.

பின்… தீமையான உணர்வுகளை நாம் ஈர்க்க மறுக்கப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் அந்த அணுக்களும் ஈர்க்க மறுத்தால் தீமைகள் அனாதையாகி விடுகின்றது. அனாதையாகி விட்டால் சூரியன் கவர்ந்து செல்கின்றது.

2000 சூரியக் குடும்பங்களில் “ஒதுங்கிய தூசி மண்டலம்” வால் நட்சத்திரமாக ஆவது போன்று நம் உடலில் இந்த மண்டலங்கள் ஏற்பட்டு ஒதுங்குகின்றது… அதைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து கொண்டு சென்று விடுகின்றது.

நம் ஆன்மா பரிசுத்தம் ஆகின்றது… ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பரிசுத்தம் அடைகின்றது. ஜீவான்மாக்கள் பரிசுத்தமானால் பரிசுத்தமான ஜீவணுக்களாக உருவாகி உயிரான்மா ஒளியாக ஆகிறது.

உயிருடன் ஒளியான உணர்வுகள் ஆன்மாவாகும் பொழுது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஒளியான அணுக்களாக ஆன்மாவாக மாறியதோ
2.உயிர் வெளியே சென்றால் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பெருக்கினோமோ அது பெருகி
3.துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றது நம் உயிர்.

அங்கே சென்றபின் தொக்கியுள்ள விஷத்தைக் கரைக்கின்றது… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நிலை கொள்ளச் செய்கின்றது.

பிரபஞ்சத்திலும் சரி பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய நிலைகளும் சரி… பூமியின் துருவத்திற்கு நேராக வரும் அவைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளிமயமாக மாற்றி விடுகிறது. உயிரைப் போன்றே ஜீவணுக்களை உருவாக்கி ஒளியாக மாற்றி விடுகின்றது.

மனிதன் ஒருவன் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்க்க முடியும்.

1.குருநாதர் எனக்குள் இதைப் பதிவு செய்தார்.
2.எனக்குள் எடுக்கப் பழக்கச் செய்தார்… எடுத்து எனக்குள் வளர்க்கச் செய்தார்
3.அதன் உணர்வைத் தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிவாக்குகின்றேன்.

அந்தப் பதிவை நினைவாக்கி உங்களுக்குள் வளர்த்து அந்தப் பேரருள் பேரொளியாக நீங்கள் அனைவரும் உருவாக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

நம் விலா எலும்புக்குள் இருக்கும்… “பதிவாக்கும் பவர் அதிகமானது…!”

நம் விலா எலும்புக்குள் இருக்கும்… “பதிவாக்கும் பவர் அதிகமானது…!”

 

சில பண்பற்ற குடும்பங்களை நாம் பார்க்க நேர்ந்தால் “என்ன இப்படிச் சண்டை போடுகிறார்கள்…?” என்று எண்ணுவோம்… அதைக் கவர்ந்து விடுவோம். ஆக… சந்தர்ப்பத்தால் நாம் எதை இப்படி உற்று நோக்குகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.

இதை இராமாயணத்தில் வசிஷ்டர்… பிரம்ம குரு என்று காட்டுவார்கள்.
1.நாம் எதை அறிந்து கொள்ள விரும்புகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.
2.உயிரிலே பட்டால் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் பிரம்மமாகிறது… அது அணுவாக மாறுகிறது.
3.அணுவாகிவிட்டால் அது எந்தக் குணமோ அந்த உணர்வின் சக்தியாகத் தான் அது இயக்கும்… அது தான் அருந்ததி.
4.திருப்பி எண்ணும் பொழுது அவர்கள் எதைச் செய்தார்களோ அந்த உணர்வைத் திருப்பிச் செயல்படுத்தும் குரு தான் அது.

அதைத்தான் வசிஷ்டர் பிரம்மகுரு அவரின் மனைவி அருந்ததி என்று சொல்வது.

அதாவது… யார் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் சக்தியை மீண்டும் எண்ணும் போது அதனுடைய இனத்தைப் பெருக்கும் பிரம்மமாகிறது. அந்த அசுத்தத்தை வளர்க்கும் சக்தியாகவே பெறுகின்றது.

ஆகவே… நாம் எதை ஆசைப்படுகின்றோமோ அதுவே வளர்கின்றது. ஆனால் நாம் ஆசைப்பட வேண்டியது எது…?

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதை விடுத்து விட்டு
1.தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற ஆசைப்பட்டால்
2.அது நமக்குள் பிரம்மாகி அதன் வளர்ச்சியில் நாம் அதுவாக மாறுகின்றோம்.

அதற்குத் தான் அடிக்கடி யாம் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம் உங்களுக்குள் அதை நினைவுபடுத்துகின்றோம். எந்த அளவுக்கு இதை உற்று நோக்கிக் கவனிக்கின்றீர்களோ
1.உங்கள் நெஞ்சின் எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் இது பதிவாகின்றது… ரெக்கார்ட் செய்கின்றது.
2.முதுகு பக்கம் இருக்கும் எலும்பின் நிலை வேறு… முன்பக்கம் உள்ள எலும்புகளின் இருப்பது வேறு
3.விலா எலும்புகளில் முன்னாடி தான்… அதில் அனைத்தையும் ரெக்கார்ட் செய்கின்றது.
4.அதிலே உள்ள பவர் அதிகமானது… எதைப் பதிவாக்குகின்றதோ அதைக் கவரும் சக்தி பெற்றது.
5.ஆகையினால் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே பதிவாக்குகின்றேன்.
6.அதை நினைவு கூர்ந்து கவரும்… அந்த வலிமை பெறும் சக்தியைத் தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் தியானத்தின் மூலம் பெறுவோம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அதைப் பாய்ச்சுவோம்… அந்த ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவோம்.

அதைச் சுத்தப்படுத்தும் போது நம் ஆன்மா தூய்மை அடைகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களின் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவோம்.

இப்படித் தூய்மைப்படுத்திக் கொண்டே வந்தால் வாழ்க்கையில் எந்த நேரம் எது வந்தாலும் “உடனடியாக… ஈஸ்வரா என்று உயிரின்பால் நினைவைச் செலுத்தி…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களை அறியாது சேர்ந்த பகைமைகள் அகல வேண்டும் என்று நாம் இதை எண்ணி எடுக்க முடியும்.
1.நமக்குள் பகைமை வராது தீமைகள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.
2.என்றென்றும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

“தீமையை அகற்றிடும் சாரம்” – வியாசகர் கொடுத்தது

“தீமையை அகற்றிடும் சாரம்” – வியாசகர் கொடுத்தது

 

ஒருவர் வேதனைப்படும் போது அந்த வேதனையான உணர்வுகள் உள் சென்றபின் நம் நல்ல குணங்களை அது கொன்று கொண்டிருக்கும். இதற்கு இரண்யன் என்று ஞானிகள் பெயர் வைத்தார்கள்.

நல்ல குணத்துடன் இருக்கும் போது ஒருவர் வேதனைப்படுவதைக் கண் கொண்டு பார்த்தவுடனே
1.நம் கண்ணின் கருவிழி அவரைப் படம் எடுக்கின்றது.
2.அவர் உடலிலிருந்து வரும் வேதனையான உணர்வை நம் கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து
3.நம் புலனறிவுக்கு உணர்த்திய அந்த உணர்வின் இயக்கம் கொண்டு
4.அவர் உடலிலிருந்து வரக்கூடிய வேதனை உணர்வின் சத்தை நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

ஒரு மரம் தனக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்தின் துணை கொண்டு… காற்றிலிருந்து எவ்வாறு தன் இனச் சத்தை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றதோ இதைப் போன்றுதான்
1.ஒருவரை நாம் கூர்ந்து கவனிக்கும் பொழுது அவர் படும் வேதனையை ஊழ்வினையாகப் பதிவு செய்து
2.அதனின் துணை கொண்டு அவர் உடலிலிருந்து வெளிப்படும் அந்த உணர்வலையைக் கவர்ந்து
3.நமது ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து நம்முள் உட்புகுத்திக் கொள்கின்றோம்.

இவ்வாறு நாம் சுவாசித்து உயிருக்குள் போனவுடனே நம் உயிருக்குள் இது இயங்கியபின் உடலுக்குள் சென்று அவர் படும் வேதனையை நமக்கும் உணர்த்துகின்றது.

இருப்பினும் நம் நல்ல குணங்களை அது மறைத்து விடுகின்றது.

நம் ஆன்மாவாக இருக்கும் பொழுது அவர் வேதனைப்பட்ட நிலையும் இது போன்ற பல நிலைகள் கண்ணால் பார்த்த உணர்வுகள் நம் மடி மீது இங்கே சுருண்டு கொண்டுள்ளது.

இவ்வாறு சுருண்டு கொண்டு நல்ல சிந்தனை இல்லாது நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் உணர்வின் தன்மைகளை உயிர் என்ன செய்கிறது…?

நாம் எண்ணுகின்றவற்றை எல்லாம் அவை உடலுக்குள் செல்லும் பொழுது அணுவின் தன்மையாக இரத்தங்களில் உருப்பெறச் செய்து இந்திரலோகமாகச் சிருஷ்டிக்கின்றது.

சிருஷ்டிக்கும் நிலையாக இருக்கும் பொழுது
1.அந்தச் சிருஷ்டியைத் தடுத்திடும் நிலையாக இந்த வேதனையான உணர்வுகள் உள் சென்று
2.அது செயல்படாது எவ்வாறு இருக்கிறது..? என்ற நிலையின் விளக்க உரைதான் கீதா உபதேசம் என்றாலும் இதனுடைய சாரம் இதுதான்.

கண்ணால் காட்டிய உணர்வுகளினால் உடலுக்குள் அது உணர்வின் செயலாக அதனின் சாரமாக இயங்குகிறதென்ற நிலையை எமக்கு நமது குருநாதர் தெளிவுற எடுத்துக் காட்டினார்.

கீதையில் உணர்வின் இயக்கங்களை வியாசர் காட்டியுள்ளார். உணர்வின் இயக்கம் எவ்வாறு இயங்குகிறதென்ற நிலையை அந்த ஞானிகள் வகுத்துக் கொடுத்திருந்தாலும் நாம் நுகர முடியாது அது காலத்தால் மறைந்து விட்டது.

1.அப்படி மறைந்த நிலைகளை நமது குருநாதர் எமக்குத் தெளிவுற எடுத்துரைத்து அதனின் உணர்வின் சாரத்தை வெளிப்படுத்தினார்
2.அதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை வெளிப்படுத்துகின்றேன்.

ஏனென்றால் நீங்கள் நல்லது செய்யும் இந்த நிலைகள் ஒருவரைக் காத்திட நீங்கள் எண்ணினாலும் அவர் பட்ட வேதனையின் நிலைகள் உங்களுக்குள் நல்ல குணத்தை மறைத்து நீங்களும் வேதனைப்பட நேருகின்றது.

அதனின்று விடுபட… அந்த அருள் ஞானி வியாசர் காட்டிய அருள் நெறி கொண்டு அந்த உணர்வின் சக்தியை நினைவு கூர்ந்து உங்களுக்குள் கவரச் செய்கின்றோம்.

1.அருள் ஞானியின் உணர்வைச் சக்தி வாய்ந்த வித்தாக உங்களுக்குள் ஊன்றி ஊழ்வினையாக மாற்றி
2.அதனின் நினைவு கொண்டு நீங்கள் எண்ணும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் நுகர்ந்து
3.உங்களையறியாது உட்புகுந்த தீமைகள் விளையாதபடி… உங்களை மீட்டுக் கொள்ளும் நிலைக்குத்தான் இதை உபதேசிப்பது.

ஏனென்றால் இவ்வாறுதான் நமது குருநாதர் எமக்கு உபதேசித்தருளினார். எம்மையறியாது எமக்குள் உட்புகுந்த அந்தத் தீமைகளை நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீக்கினேன்.

எம்மைப் போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை எடுத்துரைக்கின்றோம்.

உணர்வின் தன்மையின் இயக்கத்தை “கீதை” என்று வியாசர் சொன்னாலும் அந்த உணர்வின் சாரத்தைக் குரு காட்டிய நிலைகள் கொண்டு நீங்கள் உணர்ந்தறிய முடியும்.

நீங்கள் செய்த நன்மைக்குள் உங்களை அறியாது தீமைகள் எவ்வாறு உட்புகுந்ததோ
1.அந்தத் தீமைகளை அகற்றிடும் “சாரத்தை…”
2.அருள் ஞானி வியாசகர் காட்டிய அருள் நெறி கொண்டு நீங்கள் கவர்ந்து
3.தீமையை அகற்றிடும் திறனாக உங்களுக்குள் அது விளைய வேண்டும் என்பதற்கே யாம் இதை உபதேசிப்பது.

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்

 

வீட்டை அழகாகக் கட்டுகின்றோம்… தூசி பட்டால் தூய்மைப்படுத்துகின்றோம். ஆடைகளை அழகாக அணிகின்றோம்… அழுக்குப் பட்டால் துவைத்து விடுகின்றோம். நம் உடலில் அழுக்குப்பட்டாலும் குளித்து விடுகின்றோம்.

அப்போது நம் ஆன்மாவில் அழுக்குப்பட்டால் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…! அதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். உபதேசத்தைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம் உபகாரமும் செய்கின்றோம் அவர் வேதனைப்படுவதை நம் கண்கள் பதிவாக்குகின்றது மீண்டும் நினைவாக்கும் பொழுது கண் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

ரேடியோ டிவி இவைகளுக்கு ஏரியல் ஆண்டன்னா இருப்பது போன்று
1.நமது கண்கள் இந்த உடலுக்கு ஆண்டென்னாவாகச் செயல்படுகின்றது.
2.பதிவு செய்ததை மீண்டும் எண்ணும் பொழுது காற்றிலிருந்து கவருகின்றது.
3.அதனால் தான் அதைப் பரமாத்மா என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
4.கண்களைக் கண்ணன் என்று பெயர் வைத்தாலும் “கண்ணன் – திருடன்…” என்று விளக்க உரை கொடுக்கின்றார்கள்.

ஒருவன் நல்லதைச் செய்கின்றான். நாம் உற்றுப் பார்த்தால் நல்லது செய்யும் உணர்வினைக் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ அவன் உடலிலிருந்து வெளிப்படும் அந்த நல்ல உணர்வை நுகர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது.

மோதிய உணர்வுகள் அந்த நல்லது நம் ரத்தத்தில் கலக்கின்றது. நல்லது செய்யும் உணர்வுகளை இதே கண்கள் தான் கவர்கின்றது… திருடுகின்றது. அதே உணர்ச்சிகள் மீண்டும் இயக்கப்பட்டு “நல்லது செய்ய வேண்டும்…” என்று எண்ணம் வருகின்றது.

ஒருவன் கோபமாகப் பேசுகின்றான். கருவிழி ருக்மணி அந்த கோபக்காரனைப் பதிவாகிய பின் அந்தக் கோபத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இதே கண்கள் தான் அந்த காரமான உணர்வினைத் திருடுகின்றது.

அதனால் தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகிறான் என்று காட்டுகின்றார்கள். இப்படிப் பிறருடைய தீமைகளை எடுக்கப்படும் பொழுது அதை கவர்ந்து நம் உடலுக்குள் சேர்த்து விடுகின்றது.

நாம் எத்தகைய மனிதனாக இருப்பினும் கண் கொண்டு ஒருவரை உற்றுப் பார்த்தால்
1.அந்த உயர்ந்த குணங்கள் வரும் பொழுது உணர்வின் தன்மை பதிவாக்கி நாமும் உயர வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகின்றது.
2.ஆனால் தவறு செய்கிறான் என்ற உணர்வினை நுகர்ந்து கொண்ட பின் அதே உணர்வு நமக்குள் வந்து நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.

அந்த வெண்ணையைத் திருடிய பின் அதன் உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. இது எல்லாம் கண்களுக்குள் நடக்கக்கூடிய இயக்கங்கள்.

அது தான் பரமாத்மா…!
1.நமக்கு முன் பரவிக் கிடக்கக்கூடிய நிலையினைக் கண்கள் இழுத்துக் கவர்ந்து
2.நமக்குள் ஒவ்வொன்றையும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றான் என்பதைக் கண்களுக்குக் காரணப் பெயர் வைத்துத் தெளிவாக்கி உள்ளார்கள்.

அடிக்கடி வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை நுகர நேர்ந்தால் என்ன ஆகும்…? வேதனை என்ற அந்த விஷத்தின் தன்மையால் நரம்புகள் வழி கூடி நல்லதைச் சிந்திக்கும் தன்மைகள் இழக்கப்பட்டு கண்கள் இருண்டு விடுகின்றது… குருடாகி விடுகின்றது.

வேதனைகளை அதிகமாகச் சுவாசித்தால் உயிரிலே பட்டு நம் ரத்தத்தில் கலந்து உடலில் விஷத்தின் தன்மை பாய்ந்து விடுகின்றது. இது தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்று இதே உணர்வுகள் வரப்படும் பொழுது அதற்குத் தக்க இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

கண்கள் இருண்டு விட்டால் நாம் எதைப் பார்க்க முடியும்…? பார்க்க முடியாது. இது எல்லாம் எதனால் வருவது…? நாம் சுவாசித்ததனால் வருவது. சுவாசித்ததை உயிர் தான் உருவாக்குகின்றது.

அதை மாற்ற வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் உடல் நஞ்சை எப்படி மலமாக மாற்றியதோ… ஆறாவது அறிவு வாழ்க்கையில் வந்த நஞ்சினைப் பிரிக்கும் சக்தி பெற்றது.
1.விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சையும் வென்று ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாற்றுகின்றது. துருவத்தின் வழி பூமி கவருகின்றது.

அதைப் பெறச் செய்வதற்கு தான் இத்தனை உபதேசங்களையும் கொடுக்கின்றோம். அதை ஆழமாகப் பதிவு செய்த பின் நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்யக்கூடிய பயிற்சியாக அமைத்துக் கொள்ள வேண்டும். எத்தகைய வேதனையாக இருந்தாலும் தீமையான உணர்வாக இருந்தாலும் அதை ஒடுக்கி தீமை புகாது நீங்கள் தடுத்துக் கொள்ள முடியும்.

கண்கள் தோன்றிய விதம்

கண்கள் தோன்றிய விதம்

 

உடல் என்பது திரேதா தான். திரேதா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்.
1.வாசுதேவன் – சுவாசித்ததை உருவாக்கக் கூடியவன்.
2.தேவகி – பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள்.

சந்தர்ப்பத்தில் தீமையான உணர்வு மோதினால் அதிர்ச்சி என்ற நிலை வருகின்றது. அதிர்ச்சி என்ற நிலை வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

எந்தச் செடியின் சத்தை அது (கண்ணில்லாத புழு) எடுத்து வளர்த்ததோ அதன் உணர்வின் தன்மை இழக்கப்படுகின்றது. விஷமான செடியின் சத்தை நுகர்ந்த பின் சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.

ஆனால் மோதிய பின் அதன் வழியாகத் தெரியப்படுத்துகின்றது. எதை…?

1.”அறிய வேண்டும் என்ற உணர்வுகள்…”
2.துவாரகா இந்த உடலுக்குள் அதைச் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.ஒளிக்கற்றைகள் சிறுகச் சிறுக மின் அணுவாக மாறி… அணுக்களாகி அது அறியச் செய்யக்கூடிய கற்களாக மாறுகின்றது.
4.உறையும் தன்மை வரும் பொழுது கருவிழி என்ற உணர்வுகள் அணுத் தன்மை அடைந்து
5.நரம்பு மண்டலங்கள் இழுப்பதை ஒளிப் படலமாகப் பார்க்கும் தன்மை வருகின்றது.

இந்த ஒளிப் பிளம்புகள் கரு விழியிலே மறைந்து விட்டால்… ஒளிப் படலங்கள் அதாவது கண் பார்வை தெரியாது.

கண்ணில்லாத புழு “பார்க்க வேண்டும்…” என்று தான் எண்ணிய உணர்வு கொண்டு கற்களாக கருவிழியாக கண்கள் எப்படி உருவானது…?
1.சுவாசிப்பதை உருவாக்கக் கூடியவன் உயிர் அதனால் தான் வாசுதேவன்.
2.தேவகி… பார்க்க வேண்டும் என்ற தேவைக்கு வரும் போது அது (கண்களாக) வருகின்றது.

இந்த மனித உடலுக்குள் நாளை என்ன செய்வோம் என்று கற்பனை செய்கின்றோம்…? அதன் உணர்வின் தன்மை வடிவமைக்கின்றோம். வடிவமைத்தது தனக்குள் பதிவாகின்றது.

துவாரகா… புறத்தால் கண்களானாலும்
1.அகத்திற்குள் முதலிலே அதைப் படமாக்குகிறது.
2.படமாக்கிய பின் புறத்திலே எழுதுகின்றோம். உடலுக்குள் பதிவாகவில்லை என்றால் எழுதவே முடியாது.

உணர்வின் தன்மை பதிவாகும் பொழுது பதிவின் நினைவுகளை நினைவாக்குகின்றோம். துவாரகா இந்த உடலுக்குள் சிந்தனைகள் எடுத்துத் தான் மனிதன் தன் செயல்களைச் செயல்படுத்த வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு தான் இதையெல்லாம் உங்களுக்கு உணர்த்துவது.

பதிவைத் தான் மீண்டும் எழுத்தில் கொண்டு வருகின்றோம். புறத்தால் நாம் எழுதினாலும் அதில் குறைகள் வந்தால் திருத்துகின்றோம்.

இதைப் போல் தான் துவாரகா யுகத்தில் தீமைகளிலிருந்து மீண்டிடும் சக்தியாகத் தன்னுடைய நிலைகள் வருகிறது… கண்களாகின்றது. (சிறைச்சாலைக்குள் இருக்கும் தன் அன்னை தந்தையரைத் தவறிலிருந்து மீட்கக் கண்கள் வருகிறது)

ஒரு படத்தை (சித்திரம்) பார்க்கின்றோம்… பிழை என்ற நிலை வருகிறது. ஒருவன் தவறு செய்கிறான் என்ற நிலைகளில் கண்கள் அதைப் பார்க்கின்றது. ஆனால் அவனின் அந்தத் தவறுகள் நமக்குள் பதிவாகக் கூடாது.

தவறு செய்பவன் உடல் கிரேதா. அவன் செய்யும் தவறை நாம் நுகரும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வு திரேதா யுகத்தில் நம் உடலுக்குள் செல்கிறது.

அப்போது அந்தந்த உணர்வின் உணர்ச்சிக்கொப்ப வைரஸ் (கிருமி) என்று சொல்கிறோமே அத்தகைய அணுக்கள் உருவாகின்றது.

அந்த அணுக்களின் உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகிறது. அதன் மலத்தின் தன்மை கொண்டு இரத்தத்தில் வருகின்றது. தீமையின் விளைவாக நோயாகிறது.

ஆனால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நம் இரத்தத்திலே கலக்கப்படும் போது நம் உடலில் உள்ள உறுப்புகளை அது சீராக்குகிறது. அப்போது அந்த ஞானிகளின் உணர்ச்சியின் எண்ணங்கள் நமக்குள் வரும்.

1.தீமை செய்வோன் அவன் திருந்தி வாழ வேண்டும்
2.தெளிந்து வாழ வேண்டும்
3.தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
4.அமைதி பெற வேண்டும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணி
5.இதன் உணர்வைக் கொண்டு நாம் தெளிவாக்க வேண்டும்.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே கிரேதா திரேதா துவாரகா என்ற நிலையில் நம் உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு நிலையையும் வேதங்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

“உங்கள் கண்களை…” மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுகிறோம்

“உங்கள் கண்களை…” மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுகிறோம்

 

இன்று சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களை வைத்து வெகு தொலைவிலிருந்து ஒளிபரப்பு செய்வதையும் வீட்டிலே டிவி மூலம் நேரடியாக… மிகவும் தெளிவாக அதை நாம் காணும்படி செய்கிறார்கள்.

அதைப் போல விண்ணிலிருந்து ஒலிபரப்பாகும் மகரிஷிகள் ஞானிகள் உணர்வுகளை அந்த விண்ணினுடைய ஆற்றல் வெளியிலே படர்ந்தாலும் அங்கிருந்து வரக்கூடிய நிலைகளைக் கவர முடியும். நீங்கள் அதைப் பெறுவதற்குத் தான் உணர்த்துகின்றோம்.
1.இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வுகளை எந்த அளவுக்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கேட்கின்றீர்களோ
2.அதை உணரச் செய்யும் கண் ஈர்ப்பு நிலைகள் உங்கள் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்கிறது
3.அதன் மூலம் கவர முடியும்.

அதாவது… மெய் ஞானிகள் ஆற்றலைக் கவரும் விதமாக… “உங்கள் கண்களை மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுவதற்குத் தான்…” இதை உபதேசிப்பது.

எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் போது
1.எவ்வாறு அவர் சொல்லும் உணர்வைக் கூர்ந்து கவனித்தேன்
2.என் நினைவை அவர்பால் செலுத்தி அந்த ஆற்றலை நான் நுகர்ந்தேன்
3.அதனின் நிலைகள் கொண்டு கண் புலனறிவு ஆற்றல் மிக்கதாக மாறியது
4.அவர் உபதேசித்த உணர்வுகள் ஊழ்வினையாக எனக்குள் பதிவானது

அதை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுதெல்லம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை குருநாதர் எனக்கு ஏற்படுத்தினார்.

நீங்களும் அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம். உபதேசிக்கும் போது யாரெல்லாம் நினைவு கொண்டு கூர்ந்து கேட்கின்றீர்களோ
1.அந்தச் சக்திகள் உங்கள் கண்களுக்கு உரமாக ஏறி
2.ஆற்றல்மிக்க சக்தியாக “ஆண்டென்னா பவர்” கூடுகின்றது.

சாதாரண ஆண்டனாவை டிவியில் இணைக்கப்படும் பொழுது அருகில் இருக்கக்கூடிய ஸ்டேஷன்களை அது கவர்ந்து ஒளிபரப்பு செய்கின்றது. அதே சமயம் சக்தி வாய்ந்த ஆண்டனாவைப் பொருத்தப்படும் பொழுது வெகு தொலைவில் இருக்கக்கூடியதைக் கவர்ந்து டிவியில் அதைக் காட்டுகின்றது.

இராக்கெட்டுகளை ஏவிப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய கோள்களைப் பற்றி அறிந்தாலும்… அந்த உணர்வின் தன்மையைக் கீழே தரையில் வைத்திருக்கக் கூடிய ஆண்டென்னா கவர்ந்து தெளிவாகக் காட்டுகின்றது.

அதே போல் மகரிஷிகள் காட்டிய உணர்வினை “இந்த உபதேசத்தின் மூலம் கேட்டறியப்படும் பொழுது…”
1.விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான
2.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிவரும் உணர்வினை நீங்கள் நுகர்ந்து எடுக்கும் ஆற்றலை
3.உங்கள் கண்களுக்கு ஆற்றல்மிக்க ஈர்ப்பு சக்தியாக அதைப் பெற முடியும்.

இந்த உபதேசத்தினை எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அதனின் ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.

அதைப் பெருக்கி நம் எண்ணத்தை விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கும் சக்திகளை…
1.நாம் எண்ணும் பொழுதெல்லாம் சுவாசித்து உடலுக்குள் வினையாகச் சேர்த்து
2.நம்மை அறியாது வந்த தீய வினைகளைத் துடைத்து விடலாம்.

கண்ணன் காட்டும் “திருட்டு வழி…”

கண்ணன் காட்டும் “திருட்டு வழி…”

 

இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும்… நாம் பிறருடைய துயரைத் துடைக்கக் கேட்டுணர்ந்த துயரமான உணர்வுகள் நமக்குள் வந்தபின் அந்த உணர்வுகள் நல்ல குணங்களுக்குள் இரண்டறக் கலந்து ஓங்கி வளர்ந்து விடுகிறது.

அடுத்து… மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை அது செயல்படாது தடுத்து உடல் நலிந்து உணர்வுகள் குறைந்து எண்ணங்கள் நலிந்து நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

இதிலிருந்து நம்மைக் காத்திட… இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு நமது குரு காட்டிய அருள் வழியில் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
1.அந்த ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான்
2.அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் சாரத்தை உங்களைக், காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து
3.அதை வலுப்பெறச் செய்யும் நிலையாக இதை உபதேசிக்கின்றேன்.

வியாசர் காட்டிய அருள் வழியில் கண்கள் கொண்டு அதை நாம் நினைவு கூர்ந்து எண்ணும்போது
1.அந்த வலுவின் தன்மை நீங்கள் பெற முடியும்
2.அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற முடியும்
3.உங்களை அறியாது வந்த தீமையை ஒடுக்க முடியும்
4.அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
மற்றவர்களுடைய துயரைக் கேட்டறிந்த நிலைகள் உங்கள் நல்ல குணங்களை நலியச் செய்தது போன்று… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் புகுந்து அந்த நலிந்ததை மீட்டு நல்லுணர்வாக வளர்த்து,க் கொள்ள முடியும்.

உயிருடன் ஒன்றிடும் உணர்வனைத்தையும் ஒளியாக மாற்றிய, அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் கலந்து “நீங்களும் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்…” என்ற ஆசையில் அந்த மாமகரிஷி காட்டிய, உணர்வின் சாரத்தை உங்களுக்குள்ளும் தெளிவு பெறச் செய்யும் நிலைக்கே இதை உணர்த்துகின்றேன்.

கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு “அதோ வருகின்றான் நாரதன்…” என்று நாம் எண்ணும்போது புற நிலைகள் கொண்டு நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

அதாவது… கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி
1.உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றப்படும்போது,
3.“உயிரான கண் “அகக்கண்…” நம்முடய கண் “புறக்கண்…”
4.புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு
5.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கும் பொழுது
6.”சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால்… சுட்டுப் பொசுக்கி விடுவான்…!” என்பதாகும்.

நம் உடலான சிவத்திற்குள் உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில் புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று ஏங்கி அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று…
1.உள் நினைவில் கண்களை மூடி
2.“நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படரச் செய்வதே “கண்ணன் காட்டிய திருட்டு வழி…!”

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளை உள் செலுத்தும்போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்…” அதாவது அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெறச் செய்து வளர்க்கச் செய்கிறோம்.

நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருவதைப் போன்று
1.அந்த மணத்தின் வீரியத் தன்மை (ஞானிகளின் அருள் சக்தி) உள் நின்று வெளி வருவது
2.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை அது பிளக்கின்றது.

நாம் பிறருடைய துயரமான உணர்வுகளை எண்ணி நம் உடலுக்குள் சேர்க்கும் முன் அது நம் ஆன்மாவாக (உடலைச் சுற்றி) மணமாக மாறுகின்றது.

அது மடி மேல் ஆன்மாவாக இருந்தாலும்… கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று… கண்ணான கண்ணின் நினைவுகளை உள் செலுத்தப்படும் போது “நாம் எண்ணிய உணர்வுகள் “பிராணாயாமம்…”
1.அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவது…
2.மடி மீது (நெஞ்சுக்கு முன் இருக்கும்) சுழன்று கொண்டுள்ள துயரப்பட்ட உணர்வினை இது பிளக்கின்றது.

நாராயணன் என்பது சூரியன். நரநாராயணன் என்பது உயிர். நமக்குள் பேரண்டத்தின் பெரு நிலைகள் இருந்தாலும் உணர்வின் எண்ணங்களாக இயக்கி நம்மை ஆண்டு கொண்டிருப்பது நரநாராயணன்.

நமக்குள் இருக்கும் சர்வத்தையும் விண்ணில் பிறந்த நிலையும் ஜீவ அணுக்களாக உருவாக்கி நம்மை உருப்பெறச் செய்து அதனின் உணர்வின் நிலையாக நம்மை இயக்கிக் கொண்டிருப்பதும் நரநாராயணான உயிர்,

ஆகையினால் தான் உயிரான அவன் வாசல்படி மீது அமர்ந்து மடி மீது அமர்த்தி இரண்யனைப் பிளந்தான் என்று எடுத்துரைக்கப்பட்டது.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் நிலைகளை நாம் எண்ணும் போது,
1.உயிரான நிலைகள் “ஓ…” என்று பிரணவமாகி
2.அந்த உணர்வின் சக்தி பிரம்மாவாக உடலுக்குள் அனைத்தையும் இணைத்துச் சிருஷ்டித்து அதனின் ஜீவனாக ஓங்கி வளர்ந்து
3.விண்ணின் வீரிய சத்தாக உள் நின்று வெளிப்படுவது நம் ஆன்மாவிலிருக்கும் தீமையைப் பிளக்கின்றது.

அந்த மகா ஞானிகளின் உணர்வை நாம் “நேர்முகமாகச் சுவாசித்து…” உடலுக்குள் செலுத்தி… நமக்குள் அதை ஓங்கி வளர்த்து வரும் தீமைகளைப் பிளப்பது தான் “நரசிம்ம அவதாரம்…” என்பது.