மகாபாரதத்தையும் அதற்குள் கீதா உபதேசத்தையும் காவியமாகப் படைக்கும் ஆற்றல் ஒன்றுமறியாத மீனவனுக்கு எப்படி வந்தது? – வியாசக பகவான்

Image

Vyasa Bhagavan Image

“மகாபாரதத்தையும்… அதற்குள் கீதா உபதேசத்தையும்…” காவியமாகப் படைக்கும் ஆற்றல் ஒன்றுமறியாத மீனவனுக்கு எப்படி வந்தது? – வியாசக பகவான்

 

நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மை புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரிலே பட்டவுடன் அந்த நாதங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வின் அலைகள் கொண்டு தான் நாம் பேசுகின்றோம். அந்த உணர்வின் நாதங்கள் தான் நம்மை (உடலை) இயக்குகின்றது.

 

நீரை வெப்பமாக்கிக் கொதிக்கச் செய்யும் பொழுது சப்தங்கள் வருகின்றது.

 

இதே போன்று நம் உயிரின் துடிப்பான வெப்பத்திற்குள் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் பட்டவுடன் இந்த உணர்வின் ஆற்றல் நாதங்களாக இயக்குகின்றது.

 

1.நாம் எத்தகைய குணத்தின் தன்மை கொண்டு சுவாசிக்கின்றோமோ

2.அது நமக்குள் நாத ஒலிகளாக எழுப்பி

3.அந்தத் தொனிக்குத் தக்கவாறு  நம் உடலை இயக்குகின்றது.

 

ஒருவர் கோபமாகப் பேசுகின்றார் என்று காதிலே கேட்டவுடன் செவிப்புலன் இயக்கி அந்த உணர்ச்சிகள் தூண்டுகின்றன. அதே போன்று ஒரு மகிழ்ச்சியான சொல்களைச் சொல்லும் பொழுது செவிப்புலனில் ஈர்க்கப்பட்டவுடன் அந்த உணர்வுகள் நம்மை மகிழச் செய்கின்றன.

 

ஏனென்றால் அந்த உணர்வின் அலைகள் நமக்குள் அவ்வாறு இயக்குகின்றன.

 

“சப்தரிஷி” (சப்த+ரிஷி) – உயர்ந்த ஆற்றல்மிக்க நாதத்தின் நிலைகள் கொண்டு உள்ளடக்கி ஒளியின் சரீரமாகப் பெற்ற அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு அணுவின் தன்மை தான் “நாரதன்” என்று பெயர் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

 

அவருக்கு வீணையைக் கையில் கொடுத்து மனிதனுடைய ரூபத்தைப் போட்டுக் காட்டினார்கள்.

 

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய அந்த ஒளியான அணு நாரதன் என்பது

1.அது எத்தகைய ஆற்றல் பெற்றதோ

2.அந்த உணர்வின் நிலைகள் கொண்டு விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் “மெய் உணர்வு”.

 

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் வியாசர் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலால் சிக்கப்பட்டுக் கடலில் வீழ்ந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்.

 

அப்பொழுது தான் காக்கப்பட வேண்டும் என்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உணர்வின் எண்ணத்துடன் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதே உணர்வு கொண்ட மீனின் (டால்பின்) உணர்ச்சிகள் தூண்டி இவன் எண்ணத்திற்குப் பக்கபலமாக இருந்து இவனைக் கரைசேர்க்கின்றது.

 

கரை சேர்க்கும்போது இவனுடைய எண்ணத்தின் துடிப்பின் நிலைகளும் மீன் இவனைக் காத்த உணர்வும் இந்த இரண்டு உணர்வுகளும் வியாசர் உணர்வுக்குள் சேர்த்தவுடனே

1.”பயம் கலந்த… தான் தப்பித்துவிட்டோம்…” என்ற ஆற்றல்மிக்க அந்த உணர்வின் சக்தி இவனுக்குள் கூடி

2.இந்த உணர்வலைகள் தன் புலனறிவான கண்ணுக்குள் பாய்ந்து

3.எந்த மீனைக் கொன்று புசித்தோமோ அந்த மீனே தன்னைக் காத்தது என்ற

4.அளவு கடந்த ஏக்கத்தின் தன்மை கொண்டு விண்ணை நோக்கி ஏகும் பொழுது

5.அந்த உணர்வின் ஆற்றலுக்குள் சிக்கியது தான்

6.சப்தரிஷி மண்டலங்களின் ஒளியான அணு (நாரதன்).

 

அது ஒரு சந்தர்ப்பம். அதற்கு முன் மீனவனுக்கு ஒன்றும் தெரியாது.

 

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் இவர் உடலிலே புகப்பட்டு இந்த உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டு இவர் சுவாசித்த உணர்வின் தன்மை இவர் உயிரிலே படுகின்றது.

 

உயிரிலே படும் பொழுது சப்தரிஷி மண்டலமாக இயங்கிய அந்த உணர்வின் ஆற்றல் விண்ணுலகை எப்படித் தனக்குள் கண்டறிந்ததோ

1.அந்தப் பேருண்மையினுடைய தன்மைகள் அனைத்தும்

2.இந்த வியாசனான “ஒன்றும் தெரியாத” அந்த மீனவருடைய உடலில் தென்படுகின்றது.

 

இந்த உணர்வுகளின் சுவாசத்தாலேதான் பேரண்டத்தின் பெரு நிலையினுடைய நிலைகளை விண்ணுலகின் ஆற்றலை “நாராயணா…” என்றும் “விஷ்ணு…” என்றும் அழைத்தார்

 

பேரண்டத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று இணைந்து அந்த ஆற்றல் பெற்றது. வலுவானது வலுவற்ற அணுவிற்குள் மோதியவுடனே அது தனக்குள் கவர்ந்து சென்று தனது ஆற்றலைப் பெருக்கி இப்படித்தான் பிரபஞ்சமே வளர்ந்தது.

 

ஒன்றுக்குள் ஒன்று சென்று ஒன்றின் தன்மை வளர்ந்து அவ்வாறு வளர்ந்து வந்த அணுக்கள் தான் பேரண்டத்தின் இயக்க நிலைகள் என்பதை வியாசர் கண்டறிந்தார்.

 

இயற்கையில் ஒரு அணுவின் தோற்றமும் அந்த உயிரணுவின் தோற்றத்திற்குள் கண்ணனாகத் தோன்றி

1.அந்தக் கண் ஒவ்வொரு மனிதனுக்கும் கீதா உபதேசம்

2.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எப்படிச் செய்கின்றது என்பதை

3.மகாபாரதம் என்றும் அதற்குள் கீதா உபதேசம் என்றும் வெளிப்படுத்தினார்.

 

கண்ணால் பார்த்து நாம் நுகரும் உணர்வுகள் நமக்குள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை இயக்குகின்றது என்ற தத்துவத்தைத் தெளிவாக்கினார்.

 

வியாசர் படித்துணர்ந்து கற்றுணர்ந்து வரவில்லை.

 

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்பட்ட ஒளியான உணர்வே இன்று நாம் அழைக்கும் மெய்ஞானியான “வியாசக பகவான்” அன்று ஒன்றுமறியாத மீனவனுடைய உடலுக்குள் புகுந்து இந்த ஆற்றல்மிக்க நிலைகளைச் செய்தது.

“அதிகாலையில் கடவுளின் தரிசனத்தைக் காணலாம்…” என்று ஏன் சொல்கிறார்கள்…?

sivalingeswaran

“அதிகாலையில் கடவுளின் தரிசனத்தைக் காணலாம்…” என்று ஏன் சொல்கிறார்கள்…?

மகரிஷிகள் இந்த உலகப் பற்றை உடலின் பற்றை விட்டுவிட்டு உயிரின் பற்றிலே சென்றவர்கள் உடல் பற்றாக இருப்பதை விட்டு உயிர் பற்றை வளர்த்தவர்கள்.

“உயிரின் சேர்க்கை” அதாவது உயிரின் ஒளியால் உணரப்பட்ட உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றப்படும் பொழுது உயிருடன் ஒன்றிய சேர்க்கை – ஒளி.

அவ்வாறு ஒளியானவர்கள் மகரிஷிகள்.

அந்த நிலைகளில் குருநாதர் காட்டும் இந்த நெறியை நாம் அனைவரும் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஏனென்றால் விண்ணுலக ஆற்றலை இந்த மண்ணுலகில் வந்து அதனைத் தனக்குள் கண்டான் விஞ்ஞானி. மண்ணுக்குள் கண்டாலும் புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான்.

அதே சமயத்தில் இராக்கெட்டை ஏவும் போது இந்தப் பூமியின் ஈர்ப்பு நிலை சுற்று அதைப் போல பன் மடங்கு வேகத் துடிப்பினை உந்து விசையாக்கி அனுப்புகின்றான்.

புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்றபின் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு தானே “மிதக்கும் நிலை” வருகின்றது.

எந்த வேகத் துடிப்பின் நிலை கொண்டிருக்கின்றானோ அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.

இதைப் போலத்தான் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்தான். “அகஸ்தியன் கண்டுணர்ந்ததை” இதனுடன் இணைத்துப் பதிவு செய்து கொள்ளத்தான் இதைப் பதிவாக்குகிறோம்.

1.குருநாதர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் இணைத்தார்.
2.அதை யாம் இப்பொழுது உங்களுக்குள் இணைக்கின்றோம்.

அணுவின் ஆற்றலைத் தனக்குள் அறிந்த அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதையும் சேர்க்கின்றார்.

நமது பூமி தனக்குள் இழுக்கும்போது இடைமறித்து உணர்வை நுகர்ந்து அந்த வலுவைப் பெறுகின்றார். அதனால்தான்
1.அதிகாலையில் 4.00 மணிக்குத் துருவ நட்சத்திரத்தை இடைமறித்து
2.அந்த வழிகளில் உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.

மற்ற மதங்கள் 4.30 மணிக்கு கடவுளின் தரிசனத்தைக் காணலாம் என்று சொல்வார்கள். அது இதெல்லாம் தெரிகிறது என்று, இந்து மதத்திலும் சொல்வார்கள். ஆனால் மூலம் தெரியாது. ஏனென்றால் மறைக்கப்பட்ட உண்மையைத் தான் நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகையினால் இதைக் கடந்து சென்று அந்த மெய் உணர்வின் தன்மையை உங்களிடம் பதிவு செய்வதற்குத்தான் இதைச் செய்வது.

இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாக வளர்ச்சியாக அந்த மகரிஷிகள் கண்ட உண்மைகளை இங்கே வளர்க்கின்றோம். இந்த மனித வாழ்க்கையில் இருளைச் சேர்ப்பதை நாம் இப்பொழுது விலக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அங்கிருக்கும் பொருள் தெரிவது போல் அந்த மகரிஷிகள் உடலில் விளைந்த உணர்வுகளை நமக்குள் ஒளியாக மாற்றும்போது நம்மை அறியாது பிறிதொரு உடலில் விளைந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது என்பது தெரிகின்றது.

திடீரென்று “ஒருவர் ஏதாவது சொல்லிவிட்டார்… என்றால் நம்மால் அடக்க முடிகின்றதா…?” அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பாய்ந்தபின் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து நமக்குள் சேர்க்கப்படும்போது நமக்குள் அந்த உணர்வின் இயக்கத்தையும் உணரமுடிகின்றது.

ஏனென்றால் பிறிதொரு உணர்வு நமது தெளிந்த அறிவை அது மறைக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது.

இருளிலிருந்து விடுபட முடியாத போது அருள் ஒளி என்ற உணர்வைச் சேர்க்கும்போது
1.அந்த ஒளி கண்டபின்
2.இருளிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கின்றது.

அதனால்தான் உங்களை அதிகாலையில் எப்படியும் அந்த நேரத்திற்குத் தட்டி எழுப்பி விடுவதும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

1.நம் நினைவினை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
3.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து
4.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.
5.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்ற வேண்டும்.

நல்லதை உருவாக்கும் நேரம்

Auspicious day

நல்லதை உருவாக்கும் நேரம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மெய்ஞானிகளின் அருள் சக்திகளை யாம் (ஞானகுரு) பெறுவதற்குப் பல சம்வங்களை நிகழ்த்தினார். எமக்குப் பல சிரமங்களை ஏற்படுத்தி அதைக் கொடுத்தார்.

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது சிரமங்கள் வருகின்றதோ
2.சந்தர்ப்பம் எது உங்களை இன்னலையும் மன பயத்தையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் விரக்தியையும் ஏற்படுத்துகின்றதோ
3.அப்பொழுது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்த்து அந்தத் துன்பத்தை விளைய வைக்கும் உணர்வின் ஆற்றலைத் தணியச் செய்யுங்கள்.

உங்கள் உடலில் வியாதியும் எண்ணத்திலே பல கலக்கமும் மன வேதனையும் மனக் குடைச்சலையும் ஏற்படுத்தும் இந்த உணர்வின் ஆற்றலை அது நம்மை ஆட்டிப்படைக்காதபடி நமக்குள் நல்லதாக மாற்றிடல் வேண்டும்.

கருணைக் கிழங்கை வேக வைத்துப் பல பொருள்களை அதனுடன் இணைத்துச் சுவையாக்கி நாம் உட்கொள்கின்றோம். அதன் மூலம் உடலுக்கு நாம் ஆரோக்கியமான நிலைகள் பெறுகின்றோம்.

அதைப் போன்று எத்தகைய துன்பங்கள் நமக்குள் வந்தாலும் அந்தத் துன்ப உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாவண்ணம் அதை அடக்கி
1.இன்பத்தின் சொல்லாலும்
2.இன்பத்தின் உணர்வுகளை நமக்குள் தூண்டி
3.விண்ணின் ஆற்றலை நாம் பெறும் தகுதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இதைப் போன்று விண்ணின் ஆற்றலைக் கூட்டிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ளலாம்.

அப்பொழுது அந்த மெய் ஞானிகளின் அருளாற்றல்கள் உங்களுக்குள் பெருகும். யாம் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் மெய் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வுகள் தான்.

அந்த மெய்ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள எத்தகைய உணர்வின் ஆற்றலைத் தனக்குள் கூட்டிக் கொண்டார்களோ அத்தகைய உணர்வின் தன்மையை
1.நீங்கள் சாதாரணமான நிலையில் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே
2.உங்களுக்குள் பதியச் செய்து விடுகின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரன ஈசனிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் பாய்ச்சுங்கள்.

இவ்வாறு நீங்கள் தியானிக்கும் பொழுது உங்கள் உடலுக்குள் துன்பத்தை விளைய வைத்த உணர்ச்சிகளை அகற்றி
1.உங்களுக்குள் ஆற்றல்மிக்க சிந்தனையைக் கிளரும் நிலையை ஊட்டும்
2.அடுத்து உங்களுக்குள் ஒரு வலுவான எண்ணத்தை ஊட்டும்.

சங்கடங்களும் கஷ்டங்களும் வரும் பொழுதெல்லாம் இந்த முறைப்படி செய்து அந்தச் சந்தர்ப்பங்களை எல்லாம் நல்லதை உங்களுக்குள் பெருக்கும் சந்தர்ப்பமாக மாற்றிட முடியும்.

இதற்குப் பெயர் தான் “தியானம்” என்பது.

இந்த வாழ்க்கையில் வரும் சங்கடங்களை நம் மேல் பட்ட “தூசியைத் துடைப்பதுபோலத் துடைக்க வேண்டும்”

Image

Divine cleaning of soul

இந்த வாழ்க்கையில் வரும் சங்கடங்களை – நம் மேல் பட்ட “தூசியைத் துடைப்பதுபோலத் துடைக்க வேண்டும்”

 

இன்று கலி என்ற நிலைகளில் எல்லாமே கடவுளாக உருவாக்குகின்றார்கள். எல்லாமே கடவுளாக உருவாக்கிக் கொண்டு வருகின்றார்கள். “இதுதான் கலி”.

 

நான் ஒரு தெய்வத்தை வைக்கின்றேன். அது இது மாதிரிச் செய்கின்றது. எனக்கு இந்தக் கடவுள் இதைச் செய்து கொடுத்தார். இது போன்ற நிலைகள் கலி என்ற பெயரில் எல்லோர் மத்தியிலும் உருவாகிவிட்டது.

1.நான் உருவாக்குகின்றேன்.

2.நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன் என்று எல்லோரும் சொல்கின்றார்கள்.

3.நானே உனக்கு உள் நின்று இயக்குகின்றேன் என்று சொல்கின்றார்கள்.

 

இப்பொழுது நான் கூட உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று சொல்லுகின்றேன். அதனுடைய பொருள் என்ன?

 

யாம் உபதேசத்தின் மூலம் அருள் ஞானிகளின் ஞான வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். யாம் சொன்ன முறைப்படி இதை எடுத்ததுமே நான் கொடுத்த எண்ணங்களுக்கு வலுக் கூடுகின்றது.

 

பதிவாக்கிய வித்தை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொண்டால்தான் அது வேலை செய்யும்.

 

உங்கள் உதவி வேண்டாம் என்றால் ஒன்றும் இல்லை.

 

உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறேன் என்று நான் காப்பாற்றுகின்றேன் என்றால் நான் கடவுள் அல்ல.

1.நான் காப்பாற்றுகின்றேன் என்று சொன்னால்

2.நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள்.

3.சாமி நம்மைக் காப்பாற்றி விடுவார் என்று தான் எண்ணுவீர்கள்.

 

நீங்கள் நல்ல மருந்தைச் சாப்பிட்டால் அது உங்களைக் காக்கும்.

 

வேதனையை நீக்க வேண்டுமென்றால் வேதனையை உருவாக்கித்தான் அந்த வேதனையை நீக்க வேண்டும். அந்த மருந்து அதற்கு வேதனையை உருவாக்கும்.

 

சாதாரணமாக வேதனையை உருவாக்கும்போது அந்த அணு அங்கு உருவாகின்றது. இதை நல்லதாக்க வேண்டுமென்றால் விஞ்ஞான அறிவுப்படி நல்ல மருந்தைச் சேர்க்கின்றார்கள்.

 

இந்த நல்ல மருந்துடன் சேர்க்கப்பட்ட விஷம் உடலில் வேகமாக ஊடுருவி உடலில் அலைய ஆரம்பித்து விடும். நல்ல சத்தின் தன்மை வரப்படும்போது

1.மருந்தில் இருக்கும் விஷம் அதற்குள் போனவுடனே தேங்கி நின்று இது சேமிக்க ஆரம்பிக்கின்றது.

2.வேதனையால் உருவான நோய்க்கு (அந்த அணுக்களுக்கு) வேதனை ஆகின்றது.

 

அப்பொழுது மருந்து சாப்பிடும் பொழுது (ஏற்கனவே உருவான) வேதனையைக் கலைத்துவிட்டால் “அய்யோ..! அம்மா…! உடலெல்லாம் கலையுதே!” என்பார்கள்.

 

கலைந்த உணர்வின் தன்மை நீராக மாறும்போது சிறுநீராகப் போகும். அல்லது அந்த உணர்வின் தன்மை சீதமாக வெளியே போகும்.

1.அப்பொழுது உடம்பெல்லாம் வலிக்கும்.

2.அந்த மருந்தின் தன்மை அதனுடைய உற்பத்தியைக் குறைக்கும்.

 

“அய்யய்யோ…! எனக்கு இந்த மருந்து கொடுத்தார்… இப்படி ஆகிவிட்டது” என்று சொல்லிவிட்டு வேறு ஒரு மருந்து சாப்பிட்டால் என்ன ஆகும்?

 

இது இரண்டையும் ஏற்றுக்கொள்ளாத நிலைகளில் மீண்டும் நோயாக மாறும்.

 

இந்த விஷத்திற்கு இவ்வளவு பெரிய ஆற்றல். வாழ்க்கையில் நாம் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

குருநாதர் மூன்று இலட்சம் பேர்களைப் பற்றி யாம் தெரிந்து கொள்வதற்காக எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் சொன்னார்.

1.காலில் செருப்பில்லாமல் நடக்கச் சொன்னார்.

2.வெயிலில் நடக்கச் சொன்னார்.

3.இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் உந்துகின்றது என்று காட்டினார்.

4.அதே சமயத்தில் உனக்குள் ஆசைகள் வரும்போது கஷ்டங்கள் வந்தால் அது உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது?

5.உன்னுடைய ஆசைகள் மனக்கோட்டைகள் எல்லாம் தகர்ந்து போகும் பொழுது உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது?

6.இதே மாதிரி ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தெந்த அளவிலே ஈர்க்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டினார் குருநாதர்.

 

குருநாதர் மூலம் அனுபவ வாயிலாகப் பெற்ற கண்டறிந்த பேருண்மைகளைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டிக் கொண்டே வந்தால் வரும் இன்னல்களை நீக்கலாம்.

 

உடலுக்குப் பின் எங்கே போகவேண்டும் என்பது தெளிவாகும்.

தியானத்தில் நாம் கவர்ந்து கொள்ள வேண்டிய சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் சக்தி

“தியானத்தில் நாம் கவர்ந்து கொள்ள வேண்டிய சக்தி” அது எதுவாக  இருக்க வேண்டும்…?

தீமையை நீக்கும் உணர்வுகளை நமக்குள் பிரம்மம் ஆக்க வேண்டும்

இன்றைய விஞ்ஞான அறிவால் உலகில் நச்சுத்தன்மைகள் வந்து கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் இனி “நாம் யார்…?” என்று ஒருவருக்கொருவர் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத நிலை வரும் வாய்ப்புகள் இருக்கின்றது. (ஏற்கனவே 2004 டிசம்பரில் இப்படித்தான் நடந்தது)

அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடிய அளவிற்காவது நாம் தியானம் எடுத்தாக வேண்டும்.  இல்லை என்றால் நம்மை நாம் அறிய முடியாது. என் குழந்தை யார்…! என் பிள்ளை யார்…! என்பதை அறியவே முடியாது.

அத்தகைய சூழ்நிலை ஏற்கனவே வந்தாகிவிட்டது.

அணுக்கதிரியக்க நிலையும் கடும் விஷக் கதிரியக்கங்களும் கெமிக்கல் கலந்த குண்டுகளையும் நீரிலும் காற்றிலும் உணவுப் பொருள்களிலும் பல வகையிலும் தூவுகின்றனர்.

இதை போன்ற நிலை வரும் பொழுது மனிதனுடைய சிந்தனை இழக்கும் பொழுது நீங்கள் யாரைத் தேடி எவரிடம் முறையிடப் போகின்றீர்கள்? எந்தக் கடவுள் உங்களைக் காப்பாற்றப் போகிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உயிரே கடவுள். உங்கள் எண்ணமே இறைவனாகின்றது. இறையின் உணர்வு செயலாக்கப்படும் பொழுது
1.காக்கும் உணர்வு பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.உங்கள் உடலுக்குள் இறையாக்குங்கள்
3.அந்த உணர்வைச் செயலாக்குங்கள்
4.வாழ்க்கையில் உங்கள் சிந்தனையைச் சீர்படுத்துங்கள்.
5.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையுங்கள்.

இதையெல்லாம் நீங்கள் தெளிந்து கொள்ளுங்கள்.

சும்மா சாமியைப் பார்த்தேன்… சாமியாரைப் பார்த்தேன்… கடவுளைக் கும்பிட்டேன்… அதைச் செய்தேன் இதைச் செய்தேன்…, என்று சொல்லலாம்… எந்தக் கடவுள்…!

நாம் எண்ணும் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுதுதான் கடவுளாகின்றது. உணர்வின் தன்மை இறையாகிவிட்டால் உணர்வைச் செயலாக்கும் பொழுது அந்தக் குணமே நமக்குள் தெய்வமாகச் செயல்படுத்துகின்றது.

நம் சாஸ்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறுகின்றது.

உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்குமே தவிர…,
1.எண்ணத்தை வைத்துக் காக்கும் உணர்வை எண்ணினால்
2.”உயிர் காக்கின்றது”.
3.அது தான் வசிஷ்டர் பிரம்ம குரு.

வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்ம குரு. தீமையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் பொழுது நம் உடலிலே “தீமையை நீக்கிடும் உணர்வுகள் பிரம்மமாகின்றது”.

அந்தச் சக்திக்குப் பெயர் அருந்ததி என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்காக இப்படிப் பெயர் வைத்துள்ளார்கள் ஞானிகள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நமக்குள் பிரம்ம குருவாகி “அருந்ததி” தீமையை நீக்கிய அந்தச் சக்தி (அது) நமக்குள் உள் நின்று இயக்கும்.

அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி நம் உடலாகின்றதோ இந்தப் பத்தாவது நிலை அடையும் அதனுடன் இணைந்து வாழும் சக்தி என்ற நிலைகளைத் தெளிவாக்கப்படுகின்றது.

இதை உங்கள் மனதில் வைத்து இந்த உடலுக்கு முக்கிய தத்துவம் கொடுக்காதபடி உங்கள் உயிருடன் ஒன்றியே வாழுங்கள்.

அதைப் போல ஒளியின் அறிவாக நமக்குள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவை ஊட்டுங்கள். இருளை நீக்கும் அருளைப் பெருக்குங்கள்.
1.உங்கள் உணர்வுகள் அனைத்தும் ஒளியாகும்.
2.உணர்வுகள் ஒளியின் தன்மை பெற்றுவிட்டால் எத்தகைய விஷத் தன்மை வந்தாலும் அது நம்மைப் பாதிக்காது.

நீங்கள் ஒவ்வொருவரும் துருவ நட்சத்த்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் பேரொளியாக வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான் என்றால் அர்த்தம் என்ன…?

Sun God with horses

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான் என்றால் அர்த்தம் என்ன…?

அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே பெற்று அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்.
1.அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி
2.உங்கள் நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி இதனுடன் சுழன்று உணர்வுகளை தனக்குள் சேர்க்கப்படும் பொழுது அகண்ட அண்டத்தில் வருவதையும் உங்கள் உணர்வுக்குள் அது பெறும் உணர்ச்சியின் நிலையை அணுவாக மாற்றும் நிலை கொண்டு அது உருப்பெற்று விட்டால் தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.

உங்களால் “நினைத்த நேரத்தில்” அகண்ட அண்டத்தினையும் அதன் செயலாக்கங்களையும் காணமுடியும்.

அதில் வெளிப்படும் உணர்வில் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் சேர்த்துப் பகைமை உணர்வு உங்களுக்குள் வராது பேரின்ப உணர்வினை உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது.

எமது அருள் குரு அருளால் கிடைத்தது.  குரு அருள் பேரருளைக் கவர்ந்து அவர் உணர்வு என்னை பக்குவப்படுத்தியது போல் உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன்.

இதில் எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும் அடுத்துச் சீராக என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும் இது உதவுகின்றது.

குறுகிய காலமே இருக்கும் இந்த உடலுக்கு வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும் உயிருக்கு அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.  இதுதான் வாழ்வின் கடைசி எல்லை.

ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஒளியின் உணர்வாக நம் அணுக்களை ஆறாவது அறிவின் துணை கொண்டு உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான்” என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது. அதே சமயத்தில் அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகும் பொழுது உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஆக்கப்படும் பொழுது நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது.

இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்று சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து இது  தவறு இது கெட்டது என்று உணர்வினை நுகர்ந்து நுகர்ந்து இதனைக் கலந்து கலந்து இந்த உடலினை உருவாக்கியது உயிர்.

1.ஈசனாக இருந்து அவனே உருவாக்கினான்
2.கடவுள் என்ற நிலையில் உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான்,
3.நாம் எதனை நுகர்ந்தோமோ அவை நம்முள் நின்று அதனின் துணை கொண்டு அங்கே இயக்குகின்றது.
4.அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை.
5.அவன் தான் உருவாக்குகின்றான்.
6.ஆகவே உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.

நம் குரு என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து உங்கள் கண்ணின் நினைவை என்னிடத்தில் செலுத்தினாலும் “நீங்களும்… அண்டத்தில் மிதக்கின்றீர்கள்”.

அதனின் உணர்வை நினைவை கொள்ளும் பொழுது அதன் அருளை நீங்களும் பெறமுடியும்.

அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு அகண்ட அண்டத்தைத் தெளிவுபடுத்தியவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமானான். அவன் அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றுகின்றான்.

அதன் உணர்வின் தன்மை இந்தப் பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது  அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிடும் திறன் நீங்கள் பெறவேண்டும்.

நீங்கள் சிறிதளவே இருப்பினும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்த பூமியிலும் பரவுகின்றது. அதன் உணர்வின் நினைவு கொண்டு கவருங்கள்.

சூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு ஏழாவது ஒளி. இதைத்தான் “சூரிய பகவான் வருகின்றான்…” என்று வேக ஓட்டத்தைக் காட்டி ரதத்தைக் காட்டியது.

அந்த ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால் நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும்.

மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும்போது… “ஏழாவது”  ஒளியின்  நிலைகள் அடைதல் வேண்டும்.

1.இதுதான் “ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்”  என்பது.
2.அவன் தனி உலகமாக ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான்.
3.அவன் ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.

சூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு. ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு மற்றதைத் தெளிந்து உணர்ந்து ஒளியாக மாற்றுவது ஏழு.

காவியங்களில் ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன் என்று சொல்லுகின்றனர். மனிதனுக்குள் உணர்வுக்குள் இந்த ஏழு லோகத்திற்குள் தேடி நாம் காணுதல் வேண்டும்.

மேலே ஏழு என்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு.  நமக்குள் தேடினால் உண்டு.

பேரருள் என்ற உணர்வினை எடுத்து நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும். அந்த உணர்வின் தன்மையை உங்களில் உருவாக்கத்தான் இந்த நிலை.

அவனவன் செய்யும் செயலே சரி…! என்ற “கலி” உலகெங்கிலும் உருவாகி விட்டது

Kali - purush

அவனவன் செய்யும் செயலே சரி…! என்ற “கலி” உலகெங்கிலும் உருவாகி விட்டது 

அன்று அரச காலங்களில் ஒரு மனிதனுக்கு ஒரு தத்துவம் கிடைத்துவிட்டால் அந்த நாட்டிற்குள் வந்துவிட்டால் அது அந்த அரசனுக்கே உரிமையானது.

அவரை வரவேற்று அவருக்கு வேண்டியதைக் கொடுத்துச் செய்தியை வாங்கிக் கொள்கின்றார்கள். அந்தச் சரக்கு அனைத்தையும் அரசனுக்குத்தான் சொந்தமாக்குகின்றார்கள்.

அப்படி அவர் கொடுக்கவில்லை என்றால் மரண தண்டனை கொடுக்கின்றார்கள். அதற்கு அஞ்சித் தன்னிடம் உள்ளதை அரசனிடம் கொடுத்து விடுகின்றார்கள்.

பண்டைய காலப் புலவர்களைப் பார்த்தால் தெரியும். ஒவ்வொரு அரச சபையிலும் அந்தப் புலவர்கள் உண்டு. அந்தப் புலவர்கள் அனைவரும்
1.அரசனைப் புகழ் பாடித்தான் வந்திருப்பார்கள்.
2.புகழ் பாடிப் பொருள் தேடுவார்கள்.

அந்தப் புகழ் பாடும் நிலைகளில் அரசருடைய மக்கள்களில் (தன் பிள்ளைகள்) இரு பிரிவு ஆகிவிட்டால் இவர்கள் எதிர் கவி பாட ஆரம்பிப்பார்கள்.

எதிர் கவி என்ற நிலைகளில் இதைப் போன்ற ஒரு மரணமடைந்த உணர்வுகள் இங்கு வந்தபின் கவியில் அந்தப் புலமை பாடும் பொழுது இந்த அரசன் இப்படித்தான் போவான் என்று சொல்வதை இவர்கள் “அறம்…” என்று சொல்வார்கள்.

ஆனால் இதெல்லாம் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் இவன் உடலுக்குள் வந்து அந்தச் செயல்களை செய்கின்றது.

மகரிஷிகள் காட்டிய உண்மையின் நிலைகள் அரசன் கையில் சிக்கப்பட்டு அதை அவர்கள் தனக்குகந்ததாக மதங்களாகப் பிரித்துவிட்டனர்.

அதனால் அதிலுள்ள பேருண்மையின் நிலைகளை அறிய முடியாமல் போனது. மகரிஷிகள் காட்டிய பேருண்மையின் நிலைகளை நாம் அறிய முடியாமல் போனதற்கு மூலமே இது தான்.

இன்னும் ஒவ்வொரு மதமும் “கடவுளைத் தேடிக் கொண்டுதான்… உள்ளது”.

நாம் இந்தப் பணிகளைச் செய்தால் கடவுள் நமக்கு வேண்டியதைச் செய்வான். “கடவுள் எங்கேயோ இருக்கின்றான்…” என்ற எண்ணத்தில் அரசர்கள் மதத்தின் அடிப்படையில் காட்டிய நிலைகள் கொண்டாலும் தர்மம் நியதி என்று பதிவு செய்து கொள்கின்றார்கள்.

அவ்வாறு பதிவு செய்த உணர்வு கொண்டு அவர்கள் எண்ணி ஏங்கும் பொழுது “வேதனை கலந்த” உணர்வுகளையே சுவாசிக்கின்றார்கள். ஒரு நல்ல பதார்த்தத்தைச் செய்து அதில் விஷத்தைக் கலந்து உணவாக உட்கொண்டால் மயக்கமடையச் செய்யும்.

உயர்ந்த எண்ணங்களையும் பிறருக்குப் பண்புடன் செயல்படும் நிலைகளையும் எண்ணி வாழ்ந்தாலும் என்ன ஆகின்றது?

“உலகில் இப்படித் தீமைகள் நடக்கின்றதே…” என்ற வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது
1.அது இவர்கள் உடலில் தீமை செய்யும் அணுக்களாக உருவாகின்றது.
2.அப்பொழுது இவர்கள் எண்ணிய நல்ல எண்ணம் அவர்களையும் காக்கவில்லை.
3.அந்த நாட்டையும் காக்கவில்லை.

இத்தகைய உணர்வுகள் தான் இன்று காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி படர்ந்திருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

உலகில் உள்ள அனைத்து நிலைகளிலும் இது வளர்ந்து வந்திருக்கின்றது. இது வளர்ந்து வளர்ந்து “பழி தீர்க்கும் உணர்வுகளாக” ஒவ்வொரு சாதாரண மனிதனுக்குள்ளும் உருவாகி இன்று உலகெங்கிலும் “தீவிரவாதம்” என்று பரவிவிட்டது.

அரசர்கள் வெளிப்படுத்திய அந்த உணர்வின்படி “எதிரி…” என்ற நிலைகளில் மற்றவரை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.

1.எல்லோருடைய உணர்வுகளிலும் இதே உணர்வுகள் வளர்ந்து
2.”மற்றவர்களை அடக்க வேண்டும்” என்ற நிலையே உருவாகிவிட்டது.

இதைத்தான் அவனவன் ஆட்சி புரியும் நிலைகளில்… “அவனவன் செய்யும் செயலே சரி…” என்ற உணர்வுகளுக்குச் செல்லப்படும் பொழுது “கலி” உருவாக்குகின்றான் என்பது.

இதற்குக் காரணமே அரசர்களின் நிலை தான்.

வாழ்க்கையில் வந்த கஷ்டத்தை எண்ணாமல் கொடுக்கும் “உயர்ந்த ஆற்றல்களை” எடுத்துக் கொள்ளுங்கள்

Spiritual power and energy

வாழ்க்கையில் வந்த கஷ்டத்தை எண்ணாமல் கொடுக்கும் “உயர்ந்த ஆற்றல்களை” எடுத்துக் கொள்ளுங்கள்  “

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் அறிவிற்குத் தக்கவாறுதான் நம்முடைய சொல்கள் வெளிப்படும்.
1.அது மற்றவர்களுக்குள்ளும் பதிவாகும்
2.அந்தப் பதிவிற்குத் தக்கவாறு தான் நண்பனாக்குவதோ
3.நண்பனை உயர்த்துவதோ பகைவனாக்குவதோ இதுதான்.

நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தின் வேகம் நம்மைத் தடைப்படுத்தும். அந்த சந்த்ர்ப்பங்களில் அந்த மகரிஷிகளை எண்ணி நாம் இதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இதற்குத்தான் கோவிலை வைத்தார்கள்.

ஒருவர் மேல் சந்தர்ப்பத்தில் பகைமை ஆகிவிட்டால் கோவிலில் தீப ஆராதனை காட்டும்போது பொருளறிந்து செயல்படும் இச்சக்தி கிடைக்க வேண்டும்.

இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும், என்று அந்த உணர்வை ஒளியாக்க வேண்டும்.

அந்த அறிவு இல்லையென்றால் “இப்படிச் செய்கின்றார்களே” என்ற இந்த அறிவு தான் நம்மை இயக்கும்.

இதுவும் அறிவு தான் அதுவும் அறிவு தான்.

ஆகவே எதன் உணர்வு எதனுடன் இயக்குகின்றதோ அதன் அறிவின் இயக்கமாக உயிர் நம்மை இயக்கும்.

1.உயிரின் இயக்கத்தைச் செயல்படுத்துவதற்குத்தான்
2.ஆலயங்களில் “இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…” என்று கதைகளை எழுதினார்கள்.

அந்தத்  தெய்வ குணத்தை எடுத்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்து இந்தத் தெய்வகுணம் நாங்கள் பெற வேண்டும்.

எங்களைப் பார்ப்போரெல்லாம் அந்த தெய்வநிலை பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த தெய்வநிலை பெறவேண்டும். அவர்கள் குடும்பமெல்லாம் அந்த நிலையாக வளரவேண்டும் என்ற  இந்த உணர்வை நமக்குள் வளர்க்கச் சொல்லுகிறார்கள்.

ஏனென்றால் “குருநாதர் எனக்கு எவ்வளவு கொடுத்தாரோ” அதைக் காட்டிலும் பன்மடங்கு உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்… கொடுக்கின்றேன்… “அந்தச் சக்தியின் துணை கொண்டு” நீங்கள் எடுக்க வேண்டும்.

சாமி சொல்கின்றார்… ஆனால் “நான் படுகின்ற இம்சை எனக்குத்தான் தெரியும்” என்று இதைக் கலந்து விட்டால் இதைப் பெற முடியாது.

குரு சொன்னதைச் செய்தால் நாம் அனைவரும் அதைப் பெறமுடியும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் எண்ணங்களாக்கி மணங்கள் வந்துவிடும்.

குருநாதர் கொடுத்த இந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை இங்கு பதிவு செய்யப்படும் பொழுது இதை எடுக்கச் சொல்லுகின்றோம்.

உங்களிடம் உபதேசத்தின் வாயிலாக அருள் உணர்வுகளைப் பதியச் செய்துவிடுகின்றோம். “நீங்கள் பெறவேண்டும்” என்ற உயர்ந்த எண்ணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கின்றோம்.

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து இந்த உணர்வை உங்களிடம் பதிவு செய்கின்றோம். இதை நீங்கள் வலுவாக்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளை அறியும் ஆற்றல் பெறுவீர்கள்.

 

ஒலிக்கொப்ப உணர்வும்… உணர்வுக்கொப்ப ஒலியும்… உணர்வுக்கொப்ப ரூபமும்… பெற்ற நாம் அடுத்து எந்த ரூபத்தை அடைய வேண்டும்? என்பதை வேதங்களின் மூலமாக வியாசகர் காட்டியுள்ளார்

Image

 

Veda Vyasar

ஒலிக்கொப்ப உணர்வும்… உணர்வுக்கொப்ப ஒலியும்… உணர்வுக்கொப்ப ரூபமும்… பெற்ற நாம் அடுத்து எந்த ரூபத்தை அடைய வேண்டும்? என்பதை வேதங்களின் மூலமாக வியாசகர் காட்டியுள்ளார்

 

வேதங்கள் என்றாலே “நாதங்கள்…” என்று பொருள். உணர்வின் ஒலிகள் – அந்த ஒலிகளின் உணர்வுக்கொப்ப ரூபங்கள் அடைந்தது என்பதைத் தான் அங்கே காட்டுகின்றார்கள்.

 

அது தான் சைவ சித்தாந்தம்.

 

1.சைவம் என்பது தாவர இனங்கள்.

2.அசைவில்லாத நிலைகள் கொண்டது.

3.அதை உயிரணு நுகரப்படும் பொழுது வேதாந்தம் என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

 

இயக்க உணர்வின் தன்மை கொண்டு

1.ஒலிகளால் உணர்வுகள் வளர்வதும்

2.உணர்ச்சிக்கொப்ப அந்த ஒலிகள் எழுப்புவதும்

3.உணர்வுக்கொப்ப உடலானது என்றும் “சைவ சித்தாந்தம்” தெளிவாகக் கூறுகின்றது.

 

வியாசகரால் உருவாக்கப்பட்ட வேதங்கள் என்ற நிலைகளில் இருந்தாலும் அந்த ஒலியின் “ஓசைகளைத்தான் இன்று ஓதுகின்றனர்” பலர்.

 

ஆனால் ஓதும் (ஒலியின்) உணர்வின் தன்மையை நாம் அறிய முடியாத நிலைகளில் சாங்கிய சாஸ்திரங்களில் இணைக்கப்பட்டு அதன் உணர்வு கொண்டு வளர்க்கப்பட்டுவிட்டது.

 

சாங்கிய சாஸ்திரங்கள் செய்வதைக் கண்ணுற்றுப் பார்த்து எந்த உணர்வின் ஒலிகளை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோமோ அதனின் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகின்றது.

 

வளர்ச்சி அடைந்த பின் இதைப் போல் இன்னொரு மனிதன் உணர்வின் ஒலிகளை எழுப்பினால் இந்த உணர்வின் வலு கொண்டு இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா

1.அவன் ஈர்ப்புக்குள் தான் செல்லும்

2.அந்த எல்லைக்குள் தான் சுழற்சியாகும்.

 

பின் அந்த உடலுக்குள் சென்றபின் அந்த உடலிலே கலந்த நஞ்சின் உணர்வுகள் அதிகரித்து அந்த உடலை வீழ்த்திவிட்டு உடலை விட்டு வெளி வந்த பின் “தேய்பிறையாக” இதனின் உணர்வுகள் மாறுபடும்.

 

சாங்கிய சாஸ்திரங்களின் வழியில் இன்று வாழும் மக்கள் தன் எல்லையை அடைய முடியாது “மனித உடலே எல்லை…” என்ற நிலைகளில் சுழன்று கொண்டுள்ளனர்.

 

இத்தகைய சாங்கிய சாஸ்திரங்களால் வியாசகர் வெளிப்படுத்திய உண்மையின் உணர்வுகள் காலத்தால் மறைக்கப்பட்டுவிட்டது.

 

இயற்கையின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அந்த உணர்வுகள் விளைந்ததைத்தான் அன்று ஞானிகள் கூறினார்கள்.

1.உருவம்.., திடப் பொருள் என்பது “ரிக்”

2.அந்தப் பொருளிலிருந்து மணங்கள் வரும்போது “சாம”.

3.ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது “அதர்வண”.

4.இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது “யஜூர்”.

 

ஆகவே மனித உடல் பெற்று விண்ணின் ஆற்றலை உணர்ந்த அகஸ்தியன் தன் உணர்வின் தன்மையை உயிருடன் சேர்த்து ஒளியாக்கித் தான் பெற்ற சக்தியைத் தன் மனைவிக்குப் பாய்ச்சி கணவன் மனைவியாக இணைந்து உருப்பெற்றது தான் “துருவ நட்சத்திரம்”.

 

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகர்ந்தோர் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியான உணர்வைச் சந்தர்ப்பத்தால் பெற்றுத்தான் மீணவனான வியாசகனும் ஒளியின் தன்மை பெற்றான்.

 

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை நாம் பெறுவதற்காக வியாசகர் உணர்த்தியிருந்தாலும் பிற்காலத்தில் வந்த மக்கள் அரசன் என்ற போர்வையில் “ஆண்டவனின் உணர்வுகள் எனக்கே சொந்தம்” என்று வந்துவிட்டனர்.

 

அதனின் வழிகளில் மக்களைத் தன் பக்கம் ஈர்க்க மந்திர ஒலிகளாக மாற்றி அதன் அடிப்படையில் ஞானிகள் கொடுத்த காவியப் படைப்புகளை மாற்றி உருவமாக்கி விட்டனர்.

 

அவ்வாறு இவர்கள் உருவமாக்கியபின் அதற்கு ஜீவனூட்ட பல சத்துகள் இடப்பட்டு அதன் வழி மந்திரங்களை ஓதி அந்த மந்திரங்களை ஓதும் பொழுது அந்த “மந்திரத்தால் உருவாகும் சக்தியைத்தான்” இவர்களால் நுகர முடிந்தது.

 

வியாசகர் கொடுத்த வேதங்களில் உள்ள மூலங்களும் அதனின் உண்மைகளையும் நுகர முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள் அரசர்கள்.

 

இன்றும் அதன் வழியில் தான் நாமும் விடாப்பிடியாக கடவுள் எங்கேயோ இருந்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றான் என்று நமக்குள் உள் நின்று இயக்கும் சக்தியை மறந்து தேடிக் கொண்டேயுள்ளோம்.

 

உயிரே கடவுள் உடலே ஆலயம். நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்டபின் உணர்ச்சிகளாக மாறி உமிழ்நீராக மாறி அணுவாக மாறும் கருவாகிப் பின் “உடலாக உருவாகிக் கொண்டேயுள்ளது”.

 

1.எதை அதிகமாக நுகர்ந்தோமோ அதனின் கணக்கின் பிரகாரம் தான்

2.”அடுத்த உடலின் ரூபம் அமைகின்றது” என்பதே

3.வேதங்களில் காட்டப்பட்ட உண்மை.

திறமைசாலிகளாக… சக்திவான்களாக… அனுபவம் மிக்கவர்களாக… மாற முடியும்

Mentor Master

திறமைசாலிகளாக… சக்திவான்களாக… அனுபவம் மிக்கவர்களாக…” மாற முடியும்

புத்தகத்தைப் படித்துவிட்டு ஒரு இயந்திரத்தில் அமிலத்தைக் கலந்து துணிக்குச் சாயத்தைக் கொடுக்கின்றோம்.

படித்தவர்கள் இந்த அளவுகோலில் திராவகத்தை ஊற்றினால் நூல் கெட்டுப் போய்விடும் என்று அந்த அளவுகோலை நினைத்திடுவார்கள்.

அளவுகோல் தெரியாதவர்கள் இந்த திராவகத்தை ஊற்றிவிட்டார்கள் என்றால் நூலோடு கலந்து சாயத்தைக் கெட்டிச் சாயமாகக் கொண்டு போய்விடும். சிறிது நாளைக்கு இந்தச் சாயம் இருக்கும். பின் துணி கிழிந்து போய்விடும்.

அந்த அமிலத்தின் அளவுகோல் குறைவாக இருந்தால், இதை இழுத்து வைக்கக்கூடிய நிலைகள் குறைந்துவிடும். தண்ணீருக்குள் போட்டவுடனே இந்தச் சாயம் போய்விடும்.

சாயம் ஒன்றுதான். ஆனால் அமிலத்தின் அளவுகோல் இதனுடன் இணைந்திருக்கும் போது
1.எது அதிகமோ,
2.எது குறைவோ,
3.அதற்குத் தகுந்த நிலைகளைச் செய்யும்.

அவர்கள் படித்த உணர்வு கொண்டு அவர்கள் அறிவுக்கெட்டிய நிலைகள் கொண்டு நிதானிக்கின்றார்கள். ஒருவர் போடுவதைப் பார்த்த உடனே இவர் துணியின் அளவுகோலைப் பார்க்கின்றார்.

நூல் எந்த அளவிற்குப் போடுகின்றார்களோ அதற்குத்தகுந்த நிலைகளைப் போடுகின்றார்கள். அது பழக்கத்திற்கு வரும் வரையிலும் சரியாக வராது.

படித்தவர்கள் அளவுகோல்படி கெட்டியாக இருக்கவேண்டுமென்று எண்ணிச் செய்தால் துணி இத்துப் போய்விடும் என்று தெரியாது.

அதே சமயத்தில், பெயர் வாங்கவேண்டும் என்று அளவுகோலை அதிகப்படுத்திவிட்டால் துணி போய்விடும். கெட்டிச் சாயம் என்று துணி வாங்குவோம் துணி போய்விடும்.

இந்த மாதிரி நமது குருநாதர் தெளிந்த நிலை பெற்றவர். அந்த உணர்வை உங்களிடம் பதிவு செய்யப்படும்போது
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியை இங்கே சேர்த்து
2.அந்தந்தப் பக்குவ நிலைக்கு
3.குருவாக நின்று வழி நடத்தும்.

நம் குருநாதர் கண்டுணர்ந்த மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும்போது… ஒவ்வொரு நிமிடத்திலும்… “அது அளவுகோல் கொடுக்கும்”.

ஒரு கம்ப்யூட்டரில் சீராகப் பதிவு செய்யும்போது ஒவ்வொரு நிமிடத்திலும் அது அளவுகோல் கொடுக்கும்.

அதே போன்று ஒரு எல்லை வரும்போது ஒரே நிமிடத்தில் உணர்வின் அழுத்தத்திற்குத் தக்கவாறு பல நிலைகளை நாம் பதிவு செய்ததை கம்ப்யூட்டர் இயக்கித் தெளிவாக்குகின்றது.

இதைப் போலத்தான் மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்கப்படும்போது அந்தத் தீமையின் நிலைகளை ஒவ்வொரு நொடிக்கும் இது மாற்றி நமக்குள் அந்த ஒவ்வொரு உணர்வுகளும் கிளர்ந்தெழும்.

ஏனென்றால் இந்த ஆன்மாவில் பல நிலைகள் உண்டு.

அந்த உணர்வின் தன்மை வரும்போது அந்த மகரிஷியின் அருள் சக்தியால்
1.இது ஒவ்வொன்றையும் பிளந்து
2.நமக்கு ஒவ்வொரு ஞானத்தையும் கொடுக்கும்.

தியானவழியில் இருப்பவர்கள் இதை அனுபவத்தில் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கடும் சிக்கலாக இருக்கும்போது, ஆன்மாவில் வந்துவிடும். ஆத்மசுத்தி செய்து கொண்டிருக்கும்போது, அந்த உணர்வின் தன்மை வசப்படும்போது உடனுக்குடன் அதை மாற்றித் தெளிவாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்கின்றேன் இடைஞ்சல் வந்து கொண்டே இருக்கிறது என்றால்…, “அதை நீக்குவதற்குத்தான்” இதை எடுக்கின்றோம்.

வீட்டைக் கூட்டுகின்றோம். கூட்டியபின் ரோட்டில் இருக்கின்ற தூசி இங்கே வந்துவிடும்.

அதில் நாற்றமான பொருளும் கலந்திருக்கும். இந்த வெயிலின் உணர்வுகள் தாக்கப்படும்போது அது தூசியாக மாறும். அது வசப்படும்போது மோதி உள்ளுக்குள் வந்துவிடும்.

எவ்வளவோ சுத்தப்படுத்தியிருக்கின்றேன். இந்த மாதிரி நாற்றமாக இருக்கின்றதே என்று கூறுவதுபோல காற்றிலிருந்து நாம் அந்த
1.மற்றவர்களுடைய நிலையை எண்ணும்போது
2.ஆன்மாவில் இந்த தூசி படத்தான் செய்கின்றது.
3.இதை உடனுக்குடன் நாம் நீக்க வேண்டும்.

தீமைகள் எதைக் கண்டுணர்ந்தாலும் “ஓ…ம் ஈஸ்வரா” என்று அவனிடமே வேண்ட வேண்டும். இதுதான் ஆக்ஞை என்பது. நமக்குள், உயிர்தான் எண்ணியதை உருவாக்குகின்றது. இதுதான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” என்பது.

தீங்கு செய்து கொண்டே இருக்கின்றான் என்று இந்த உணர்வைப் பதிவு செய்துவிட்டால் இந்தத் தீங்கின் நினைவே நமக்குள் உருவாகும்.

அப்பொழுது “ஈஸ்வரா” என்று உடனே இதை இடைமறிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை, நாம் நமக்குள் பதிவு செய்திருக்கின்றோம். நமது உயிரை ஈஸ்வரா என்று வேண்டி மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.தீங்கு செய்வோருடைய உணர்வுகள் பதிவானதை விட்டுவிட்டோம் என்றால் உள்ளுக்குள் போய்விடும்.
2.கண்ணோடு பார்த்தது ஆன்மாவாக மாறிவிடும்.
3.நாம் சுவாசித்தவுடன் உயிரிலே படுகின்றது.
4.உணர்வுகள் உடலுக்குள் படருகின்றது
5.இதை நிறுத்த வேண்டும்.

அதற்குப் பழக்கம் வேண்டும். இல்லையென்றால் அதை நிறுத்த முடியாது.