தன்னைத் தான் அறிதல் – இராமாயணத்தில் உள்ள மூலம்

தன்னைத் தான் அறிதல் – இராமாயணத்தில் உள்ள மூலம்

 

தசரதனின் கருவிற்குள்…
1.எத்தனையோ உடல்கள் இருப்பினும் பல கோடித் தீமைகளை வென்றிடும் உணர்வுகள் பெற்று
2.அந்த மனைவி என்ற நிலை வரும் போது அதற்குப் பிறந்தவன் தான் இராமன்.

அதே சமயத்தில் உறுதுணையாக இருந்து தன்னைக் காத்திடும் தன்மை தான் லட்சுமணன். ஒரு தாய்க்கு (சுமித்ரை) இரண்டு குழந்தைகள் பிறக்கின்றது.

முதலில் தசரதன் விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தான். தூதுவனை அனுப்பிப் பாயாசத்தைக் கொடுத்தான். முதல் நிலையை இராமனின் தாயாருக்குக் கொடுத்தார். இரண்டாவது பரதனின் தாயாருக்கு கொடுத்த்து. மூன்றாவது லட்சுமணனின் தாயாருக்கு கொடுத்தது… தொக்கியுள்ள மிச்சத்தை மூன்றாவது மனைவிக்கே கொடுக்கின்றான்… சத்துருக்கன்.

இங்கே லட்சுமணன்…! லட்சுமணன் என்றால் என்ன…? சூரியன் தன்னுடைய பாதரசத்தால் தாக்கப்படும் பொழுது அதிலே விஷங்கள் பிரிகின்றது… வெப்பமாகின்றது… காந்தமாகின்றது.

காந்தமானாலும்
1.விஷம் பிரிந்து செல்வதை இந்தக் காந்தம் இழுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
2.அது தான் லட்சுமணா என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

ஆக எதனின் உணர்வின் தன்மை கவர்ந்து கொள்கின்றதோ சத்துருக்களை… சகோதரன் என்ற நிலை வரப்படும் பொழுது
1.சத்துருக்கன் தீமைகள் வராதபடி பரதனுக்கும்…
2.லட்சுமணன் இராமனுக்கு உதவியாக இருப்பதாகவும் காட்டுகிறார்கள்.

ஏனென்றால் விஷம் இயக்கச் சக்தி அது தான் லட்சுமணா. காந்தம் கவர்ந்து கொண்டால்…
1.எந்தக் குணத்தின் தன்மை கொண்டு கவர்ந்து கொண்டதோ அதனின் இயக்கச் சக்தி
2ஆக… காந்தம் கவர்ந்து வெப்பத்துடன் எது சேர்ந்ததோ அதனுடன் சேர்த்து உருவாக்கும் சக்தி என்ற நிலைகளை
3.இப்படித் தனித்தன்மையாகப் பிரித்துக் கொண்டு வருகின்றார்கள்.

விஷ்ணுவை நோக்கித் தவம் என்று வரும் பொழுது உயிர் விஷ்ணுவாகின்றது. அவன் தவத்தின் தன்மை கொண்டு புத்திர பாக்கியம் வேண்டும் என்று எண்ணினான். அதன் உணர்வின் தன்மை கொண்டு தன் உடலில் பல நிலைகள் ஆகின்றது.

சூரியனோ தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தனக்குள் பாதரசமாக மாற்றுகின்றது. மனிதன் புழுவில் இருந்து மிருகம் வரையிலும் அதனதன் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதன் கருத்தன்மை “விந்து தன்மை…” அடைகின்றது.

அந்த விந்தின் தன்மை அடைந்த பின் தான் ஒரு பூச்சியைக் கொன்று தின்றாலும்… அதன் உணர்வின் தன்மை கருவாக்கப்பட்டு அணுத் தன்மை கருவாக மாறுகின்றது. இதைப் போலத் தான் மனிதனின் நிலை.

நன்றாகச் சிந்தனை செய்து பாருங்கள். மெய் ஞானிகள் காட்டிய பேருண்மைகள் இராமாயணத்தில் உள்ளது இன்று அது திசை திரும்பி விட்டது அதைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று எல்லோரும் ஆயத்தமாக இருக்கின்றார்கள். பரதனின் தாயாரும் அதிலே சேர்ந்திருக்கின்றது. இருந்தாலும் பரதன் இராமனுடன் சேர்ந்து வாழ்ந்தவன். நாம் ஏதாவது சொன்னால் அவனுடன் சேர்ந்து விடுவான்… நம்மிடம் மறுத்துப் பேசிவிடுவான் கைகேயி எண்ணுகிறது.

1.இராமனின் தாயார் எல்லோரையும் அரவணைத்தது.
2.பரதனின் தாயார் போரில் ஜெயிக்கும் உணர்வு பெற்றது… தன் சுயநலத்தைக் கொண்டது.
3.ஆனால் இராமனின் தாயாரோ பொது நலத்தைக் கொண்டது என்ற நிலையை பிரித்துக் காட்டுகின்றார்கள்.

அப்பொழுது அதனுடன் வாழும் குழந்தைகள் எல்லாம் இணைந்து வாழும் சக்தியாக வருகின்றது.

காவியத்தில் உள்ள மூலங்களை அவ்வப்போது உங்களுக்குப் பிரித்துக் காட்டுகின்றோம்.

தசரதன் இறந்தாலும்… கைகேயி மலர்ந்த முகத்துடன் இருப்பதாகக் காட்டியதன் உட்பொருள்

தசரதன் இறந்தாலும்… கைகேயி மலர்ந்த முகத்துடன் இருப்பதாகக் காட்டியதன் உட்பொருள்

 

இன்றைய உலக சூழ்நிலையில் நம்முடைய ஆசையின் நிமித்தம் எதன் வழி செல்கின்றமோ அதனால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது. அதாவது
1.பிறரைத் துன்புறுத்த வேண்டும் அழிக்க வேண்டும் அடக்க வேண்டும் என்று இந்த வாழ்க்கையில் விரும்பினால்
2.நமக்குள் வளர்ந்துள்ள நல்ல குணங்களைக் கொல்கிறோம் என்று தான் பொருள்.

அப்படிப்பட்ட உணர்வுகள் உடலில் விளைந்தால் என்ன ஆகும்…? என்பதைத் தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

இராமனுக்குப் பட்டம் சூட்டாமல் அவனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நிலை வரும் பொழுது அதனால் தசரதன் இறந்து விடுகின்றான்.

பரதன் அங்கிருந்து வருகின்றான். அப்பொழுது நகரமே சூனியமாக இருக்கின்றது. யாரிடத்தில் கேட்டாலும் எல்லோருமே மௌனமாக இருக்கின்றார்கள். என்ன நடந்தது… ஏது ஆனது…? என்ற நிலையில் பரதன் உண்மையை அறிய முடியவில்லை.

இராமனின் தாயிடம் கேட்கின்றான். அதுவும் மௌனமாக இருக்கின்றது. கேட்கும் இடமெல்லாம் மௌனமாக இருக்கின்றது. கடைசியில் தன் தாயிடமே கேட்கின்றான்.

ஒன்றுமில்லையப்பா…! என்று சொல்கிறது.
1.அது மலர்ந்த முகத்துடன் இருக்கின்றது… அரசன் இறந்து விட்டான் என்ற நிலையே அங்கில்லை.
2.காரணம் ராமன் காட்டுக்குச் சென்று விட்டான் தன் மகனுக்குப் பட்டம் சூட்டும் நேரம் வந்து விட்டது வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றது.

தசரதன் தன் உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை… அதாவது எதிரியை வீழ்த்தச் சூட்சமமான நிலைகள் கொண்டு எப்படிச் செய்தானோ… அது கூனி என்ற நிலையில் இங்கே வருகிறது.

1.”குறுகும் நிலை” உடலுக்குள் வளர்கிறது என்று கூனி என்ற ஒரு பாத்திரத்தை அமைத்து
2.அது கைகேயியைத் தூண்டி தசரதரிடம் இப்படிக் கேளு…! என்று
3.எதிரியை வீழ்த்திய உணர்வுகள் தனக்குள் கலந்து எப்படிச் செய்கிறது…? என்பதைத் தான் கூனி என்ற பாத்திரத்தைக் கொடுத்து
4.தன் இனத்தைக் குறுக்கி இவளுடைய ஆசையைத்தான் தனக்குள் பெருக்குகின்றது என்று
5.உப பாத்திரங்களைப் போட்டு இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

அதை நாம் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…!

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்…? அங்கே பார்…! கூனி என்னென்ன வேலை எல்லாம் செய்கிறாள்…? என்று அந்தக் கதாபாத்திரத்தை சுட்டிக் காட்டி அவள் எவ்வளவு தவறு செய்கின்றாள்…? என்று நாம் “கடுப்பாவோம்…”

ஏனென்றால் இந்த உணர்வைத் தெளிவாக்கிக் கொண்டு வரும் நிலையில் பரதன் சொல்கின்றான்.
1.”உன் தாயார்” (கூனி) என் பாட்டன் வீட்டையே இப்படித்தான் நாசமாக்கியது.
2.அதே போல என் தந்தையின் குடும்பத்தையும் நீ கெடுக்க வந்திருக்கின்றாய்…
3.இன்று உன்னைக் கொன்றால் தான் என்ன…? என்று இவன் ஆத்திரமான நிலைகள் வருகின்றது.

காரணம்… பரதன் கைகேயியின் மகனாக இருந்தாலும் பழகிய உணர்வு கொண்டபின் அவன் என்ன செய்கிறான்…? என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள். எந்த உணர்வை எடுத்ததோ… “அதிலே உருவானது தான்…” இந்த நிலை. அதிலே உருவாக்கப்படும் போது அதனின் இயல்பு என்று காட்டுகிறார்கள்.

அதாவது விஞ்ஞானத்தினால் விஷத் தன்மைகளை மாற்றி அதை நல்ல வித்துக்களாக இன்று மாற்றுகின்றார்கள். வீரிய உணர்வுகள் அது விஷத்தன்மை கொண்டாலும் நல்ல உணர்வின் தன்மையைச் சேர்த்து அந்த வீரியத்தின் தன்மை கொண்டு நல்ல வித்தாக உருவாக்குகின்றார்கள்.

அதே மாதிரி
1.சாந்தமான நிலைகள் கொண்டதை விஷமான கொடூரமான மிருகத்தின் உணவுக்குள் சேர்த்து
2.நல்ல உணர்வின் தன்மை கொண்ட உடல் அமைப்பாக மாற்றுகின்றார்கள்.
3.கொடூரமான மிருகங்களைச் சாந்தம் கொண்ட மிருகமாகவே மாற்றுகின்றான் இன்று விஞ்ஞானி

இதைப் போலத்தான் அந்த இராமாயணத்தின் காவியத்தின் தெளிவுகள்… அதாவது…
1.போரில் வெற்றி பெற வேண்டும் என்று தசரதன் உடலில் அணுவின் தன்மையாக அது விளைந்தாலும்
2.நல்ல அணுக்களின் தன்மை கலந்து பரதன் அதன் உணர்வு கொண்டு ஒன்று சேர்த்து வாழும் தன்மை பெற்றான் என்று பிரித்துக் காட்டுகிறார்கள்

ஆனால் வீழ்த்த வேண்டும் என்ற உணர்வின் தன்மை வரப்படும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டது.
1.பரதனின் தாயின் பாட்டி தான் அந்தக் குடும்பத்தினை நாசம் ஆக்கியது.
2.ஏனென்றால் இது பரம்பரை நோய் என்ற நிலையைக் கொண்டு வருகின்றார்கள்.

நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மை நமக்குள் எப்படி இயங்குகின்றது…? என்பதைத்தான் இராமாயணம் கூறுகின்றது.

அந்தத் தாயின் நிலைகள் எப்படி…? என்கிற போது நாம் எதன் உணர்வை எடுத்தோமோ அது தாயாக வருகின்றது. இந்த உணர்வின் தன்மை தன் இனத்தைப் பெருக்கப்படும் பொழுது உடலுடன் இணைத்து வரப்படும் பொழுது தீமையாக எப்படி விளைவிக்கின்றது…?

ஆகவே நாம் எதை நீக்க வேண்டும்…? என்பதை இராமாயணம் சுட்டிக் காட்டுகிறது. இராமாயணம் என்றாலே – நம் எண்ணம் தான். நாம் நுகர்ந்த உணர்ச்சிகள் கொண்டு… அந்த உணர்ச்சிகள் எதுவோ அது நம்மை இயக்குகின்றது என்று காட்டுகிறது.

வேனையான உணர்வைச் சூரியன் எடுத்துக் கொண்டால் வாலி. ஆனால் மனிதனான நிலையில் இப்படிப்பட்ட இருளான நிலைகளை நீக்கியவன் அகஸ்தியன் உணர்வை ஒளியாக்கியவன் சுக்ரீவன்.

வேதனைப்படும் அல்லது வேதனைப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்தால் நம்மைப் பலவீனப்படுத்தும்.
1.அதை மாற்றத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்தால்
2.வேதனை என்ற வலுவின் தன்மை குறைந்து அது நன்மை செய்யும் சக்தியாக மாறுகின்றது.
3.அது தான் சுக்ரீவன் – எல்லோருக்கும் நன்மை செய்பவன் என்று காவியங்கள் கூறுகின்றது.

வேதனையான உணர்வுகள் உயிரால் நுகரப்பட்டால் அதனை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்தால் இந்த வீரிய உணர்வு கலக்கப்பட்டு தீமை நீக்கும் உணர்ச்சிகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது.

1.தீமை உருவாகாதபடி நாம் மாற்றியமைக்கும் சக்தி பெறுகின்றோம்.
2.அப்படிப்பட்ட சக்தி பெற வேண்டும் என்பது தான் காவியத்தின் உட்கருத்து.

குருதேவர் அனுபவபூர்வமாக எமக்கு உணர்த்திய உண்மைகள்

குருதேவர் அனுபவபூர்வமாக எமக்கு உணர்த்திய உண்மைகள்

 

நமது குருநாதர் சொன்னபடி மூன்று இலட்சம் பேரை யாம் சந்திக்க நேர்ந்தது, ஒவ்வொருத்தரையும் சந்திக்கும்போது
1.அவர்களுடைய கஷ்டங்கள் எவ்வாறு இருக்கின்றது…?
2.அவர்களுக்குத் துன்பங்கள் எப்படி நேருகின்றது…?
3.நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும் போது அவரகளைத் துயரங்கள் எப்படி வந்தடைகின்றது…?
4.அதிலிருந்து அவர் மீள்வதற்கு வழி இல்லாதபடி எப்படி இருக்கின்றனர்…? என்று காட்டுகிறார்.

பக்தி என்ற நல்லொழுக்கத்தை மட்டும் கடைபிடித்து வாழ்ந்தாலும்… நல்லதை எண்ணுகின்றனர்… ஆனால் அந்த நல்லதைக் காக்கும் திறன் இழக்கும் நிலையில் இன்று ஒவ்வொரு மனிதனும் இருக்கின்றனர். நல்லதைக் காக்கும் வலுவான நிலைகள் ஒவ்வொரு மனிதனிடத்திலும் செயலிழந்து இருக்கின்றது.

நல்லதைப் பெற வேண்டுமென்று அரசர்கள் பக்தி ஒன்றை மட்டும் நமக்குக் காட்டிவிட்டு நல்லொழுக்கத்தைக் காக்கும் திறனை அவர்கள் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அதைப் பெற முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள்.

ஏனென்றால்
1.பக்தி என்ற நிலைகளில் மக்கள் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தாலும்
2.மெய் ஒளி பெற்று உண்மைகளை அவர்கள் உணர்ந்தால் தனக்குக் கீழ் அடிபணியமாட்டார்கள் என்ற நிலையில்
3.அரசர்கள் தங்கள் சுகபோகங்களுக்காக உலக ரீதியிலேயே ஞானிகள் சொன்ன உண்மைகளை மாற்றினார்கள்.

ஞானிகள் கண்ட பேரண்டத்தின் பேராற்றல்கள் பூமிக்குள் வந்தாலும் சாதாரண மக்கள் நாம் பெற முடியாதபடி எப்படித் தடையானது…? அதிலிருந்து மீண்டு நமது உயிராத்மாவை எப்படி ஒளி நிலை பெறச் செய்ய வேண்டும்…? என்ற நிலையை நமது குருநாதர் அவருடைய உயிராத்மா உடலை விட்டு வெளியே செல்லப் போகும்போது முதல் நிலையாக எனக்குச் சொன்னார்.

அவர் உடலுடன் இருக்கும் போதே பிரணவத்தின் தத்துவத்தை முழுமையாக எம்மைப் பெறச் செய்தார். கன்னியாகுமரி முதல் இமயமலை வரை சென்று வரச் செய்து எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

நம் பூமி வட துருவத்திலிருந்தும் தென் துருவத்திலிருந்தும் ஆற்றல் மிக்க சக்திகளை எப்படிப் பெறுகின்றது…? என்பதை குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகவே எமக்கு உணர்த்தினார்.

1.அவர் எங்கே செல்கின்றாரோ அவருடன் எம்மை அணைத்துக் கொண்டு ஆங்காங்கு நிறுத்தி
2.இயற்கையின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்ற நிலையை
3.நாம் எப்படி T.V.க்களில் பார்க்கின்றோமோ அதைப் போன்று எமக்கு உணர்த்தினார்.

சுமார் 12 வருட காலம் பல காடு மேடு அலைந்தேன். உயிரினங்கள் எவ்வாறு செயல்படுகின்றது…? தாவரங்கள் அதனதன் தாவர இனச் சத்தை எப்படி இழுக்கின்றது…? தாவரங்கள் எப்படி வளர்கின்றது…? அந்த வளர்ச்சியின் தன்மை கொண்டு பூமியின் காற்றலைகள் எப்படி மாறுகின்றது…? என்று அவர் உணர்த்தியதை எல்லாம் நானும் உணர்ந்தேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அதை உணர்வதற்கு நேரடி அனுபவத்தைக் கொடுத்தார். அவ்வாறு அனுபவத்தால் பெற்ற உண்மைகளை நீங்களும் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறோம்.
1.எமக்குள் பெற்று வளர்த்த அந்த ஆற்றல் மிக்க சக்திகளை எல்லோரும் பெறுவதற்கே
2.இந்த உபதேசத்தின் மூலமாக உங்களுக்குள் அதைப் பதிவு செய்கின்றோம்.

“என்னுடைய சீடர்கள்…” படிக்க வேண்டிய மிக முக்கியமான உபதேசம்

“என்னுடைய சீடர்கள்…” படிக்க வேண்டிய மிக முக்கியமான உபதேசம்

 

எமது உபதேசங்களைக் (ஒலி நாடாவில்) கேளுங்கள்.. நூல் வடிவில் வந்த புத்தகங்களைப் படியுங்கள். அதனின் விளக்கத்தைச் சொல்லிப் பழகுங்கள்.
1.சாமி இந்த மாதிரிச் சொல்லி இருக்கின்றார்…
2.ஆகவே இந்த மாதிரி நடக்க வேண்டும் என்று வெளிப்படுத்துங்கள்.

காரணம்… எம்முடைய உபதேசங்களைக் கேட்டாலும் வாழ்க்கை நடைமுறைகளில் அதை வெளிப்படுத்தும் போது ஆழமாகப் பதிவாகும்.
1.அப்படிப் பதிவாக்கி விட்டால் தவறு என்று வந்தால்
2.“டக்…” என்று பிரேக் போட்டு… “திருத்தி வாழச் செய்யும் உணர்வுகள்…” நமக்குள் வரும்.

உதாரணமாக… ஒரு இன்ஜின் ஓடிக்கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். கற்றுக் கொண்ட என்ஜினியர்கள் அதில் வரக்கூடிய சப்தத்தை வைத்தே “இன்ன இடத்தில் குறைபாடுகள் இருக்கிறது…” என்று கண்டுபிடிக்கின்றார்கள். அதே போல மெக்கானிக் இதை எல்லாம் செய்கின்றார்.

இந்த இடத்திலே இன்னென்ன உலோகங்கள் இப்படி இப்படிச் செய்தால் இயந்திரத்தில் அந்த இடத்தில் வலுவாக இருக்கும் என்று இஞ்சினியர் சொல்வார்.

1.அவ்வாறு அதைச் செய்து கொண்ட நிலையில் ஓடும் பொழுது சப்தம் வந்தால்…
2.அதிலே இன்ன இடத்தில் பலவீனமாக இருப்பதால் தான் குறைபாடாகின்றது என்று கண்டறிந்து
3.அந்த மெக்கானிக் அதைச் சரி செய்கின்றார்… இல்லையா…?

அதே போன்று தான் மேலெழுந்தவாரியாக யாம் கண்டுபிடித்த உணர்வுகளை உங்களிடம் உபதேசிக்கின்றேன். நீங்கள் மெக்கானிக்காக ஆக மாற வேண்டுமா இல்லையா…!

அதை எடுத்து
1.“சாமி…!” இன்ன இடத்தில் இந்த மாதிரி இருக்கிறது…
2.எப்படித் திருத்தி வாழ்வது என்று கேட்டால் சொல்ல முடியும் அல்லவா…!

ஆகவே… எமது உபதேசத்தைக் கேட்டுப் பதிவாக்கி அதை வளர்த்துக் கொண்டவர்கள் அனைவருமே இந்த அருள் வழியில் தயாராக வேண்டும்… அருள் சேவைக்கு முன்னுக்கு வர வேண்டும்.

ஏனென்றால் ஆரம்பத்திலே நானும்
1.குருநாதர் காட்டிய வழியில் வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகளை முதன் முதலில் வெளிப்படுத்தும் போது
2.கூட்டத்தைக் கண்டபின் பட…பட… என்று சொல்லக்கூடிய நிலையாகி மறந்து போயிருக்கிறது.

எல்லோருக்கும் அப்படித்தான்…! துணிவுடன் பேசும் பொழுது தன்னாலே வந்துவிடும்.

தியானத்தில் எடுத்து சக்திகளைப் பெறுகின்றீர்கள்… இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று சொல்கிறோம். தியானத்தை மட்டும் செய்து கொண்டிருக்கின்றோமே…! என்று சோர்விலே கொண்டு போய் விட்டு விட்டால் என்ன செய்வது…?

தோசையைச் சுட வேண்டும்… எல்லோருக்கும் அதைக் கொடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கின்றது. ஆனால் நெருப்பைக் கூட்டி விட்டால் என்ன ஆகும்…? அடிபிடித்து விடும்… நெருப்பு அதிகமாகும் இடமெல்லாம் கருகிவிடும்.

சீக்கிரம் எல்லோருக்கும் செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினோமே… இப்படிக் கருகிப் போய்விட்டது என்று தோசைச் சட்டியைச் சுரண்டு சுரண்டு என்று இப்படி ஒரு இரண்டு தரம் ஆகிவிட்டால் “அந்தச் சட்டியையே தூக்கி எறிந்து விடுவோம்…”

1.தியான வழியில் நம்முடைய மனது அது போல் ஆகிவிடக்கூடாது.
2.ஏனென்றால் தியான வழியில் நாம் நிதானமாகச் செயல்பட வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும்.
3.நாம் சுவாசிக்கும் உணவுகள் அனைத்தையும் ருசியாக மாற்ற வேண்டும்.

அவசர புத்தி என்ன செய்யும்…? தப்புத் தப்பாகப் பண்ணிவிடும். அப்படிப்பட்ட நிலையினை மாற்றி நல்ல முறையில் செயல்பட வேண்டும்.

இதே போன்று வடை சுடும் பொழுதும் அந்தப் பக்குவ நிலை தேவை. முதலில் சூடு ஏறிவிட்டதா…? என்பதைப் பார்ப்பதற்கு நீரைத் தெளிக்கின்றார்கள். சுர்…ர்ர்… என்று சத்தம் கேட்டபின்… சரி என்று சொல்லி வடையைச் சுட ஆரம்பிப்பார்கள்.

ஆனால்… மூன்றாவது வடையில் சூடு குறைந்து விடும். முதல் வடை கருகும் இரண்டாவது ஓரளவுக்கு இருக்கும்… மூன்றாவது வடை அப்படியே மிதந்து கொண்டிருக்கும்… எண்ணெயெல்லாம் கவர்ந்து கொள்ளும்… வடை வேகாது… சுவையே கெட்டுவிடும்.

ஆனால் பதமான நிலைகள் கொண்டு அந்த எண்ணெயின் சரியான சூட்டைக் கணித்து வடையைச் சுட்டுப் பாருங்கள். “கரெக்டாகச் செய்த பின்…” அது மொறு… மொறு… என்று எல்லா வடையுமே ஒன்று போலச் சுவையாக இருக்கும்.

ஆனால் ஒரே நெருப்பு தான்…!
1.காரணம் எது…? ருசியாக்குவது யார்…? மனது…!
2.நம் மனதைப் பக்குவப்படுத்தினால் ருசியாகின்றது… மனதில் சிறிது அவசரப்பட்டால் கருகி விடுகின்றது.

ஆகவே மனம் தானே காரணம். இதை உருவாக்குவது யார்…? நம் மனதினை நாம் தெளிவாக்க வேண்டும். தெளிவானால் பொறுமை வரும். பொறுமையால் ஞானத்தின் வளர்ச்சி வரும்.

ஆனால் அவசரப்பட்டோம் என்றால் எல்லாம் போய்விடும். இதையெல்லாம் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

1.நாம் அனைவரும் ஞானிகளாக மாற வேண்டும்.
2.சாமி மாதிரி நீங்களும் ஞானத்தைப் போதிக்கக் கூடிய வல்லுனர்களாக மாற வேண்டும்.

என்னுடைய உபதேசங்களைக் கேட்டுப் பதிவாக்கி அதனுடைய விளக்கங்களைத் தெரிந்து கொண்டே வரவேண்டும். இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளையும்… அப்படி விளைய வைக்க வேண்டும்.

1.என்னுடைய உபதேசக் கருத்துக்களை நிதானமாகப் படித்து
2.“முத்து…” மாதிரி எடுத்துச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.

கட… கட… என்று படிக்கக் கூடாது. அப்படிப் படித்தால் படிப்பவருக்கும் அர்த்தமாகாது… அதைக் கேட்பவர்களுக்கும் அர்த்தமாகாது. ஆகவே நிறுத்தி நிதானமாகப் படித்து முடிந்த பின்
1.குரு வழியில் அதன் உள் கருத்துக்களை அறிந்து
2.“சாமி இதைத்தான் சொல்கிறார்… நாம் இதைப் பெற வேண்டும்…” என்று விளக்கமாகச் சொல்ல வேண்டும்.
3.ஏனென்றால் அருள் வழியில் உங்களைப் பேச வைப்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

நான்கு வரி நீங்கள் படித்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகளை
1.“சாமி இவ்வாறு வெளிப்படுத்துகிறார்…! நாம் இதைப் படித்துப் பதிவாக்க வேண்டும்…! இந்த மாதிரி நாம் செயல்பட வேண்டும்…! என்று
2.நிறுத்தி நிதானமாக அதை விளக்கமாக எடுத்துச் சொல்லி கொண்டே வந்தால் எல்லோருக்கும் மனதில் பதியும்.

புத்தகத்தை எடுத்து ஒரு பத்து நிமிடத்தில் வேகமாகப் படித்த பின்… அடுத்தாற் போல் “அதிலே என்ன விளக்கம் இருக்கிறது…?” என்று கேட்டால் படித்தது மட்டும் தான் மிச்சமாக இருக்கும்… விளக்கம் தெரியாது.

ஏனென்றால்… யாம் கொஞ்சம் தான் கற்றிருக்கின்றோம்…!
1.என்னுடைய சீடர்கள் இதைக் காட்டிலும் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்.
2.உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லக்கூடிய நிலை வரும்.

பகைமையுடன் அல்ல…! “நான் தெரிந்து கொண்டேன் என்ற நிலை இல்லாதபடி…” உபதேசக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் படித்துப் பதிவாக்குங்கள். அது ஞானத்தின் வழியில் உங்களை அழைத்துச் செல்லும். அதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துகிறேன்.

காரணம் இந்த உடலில் சிறிது காலமே வாழுகின்றோம். அதற்குள் இந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் வெளிப்படுத்தும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்.

குருநாதர் என்னிடம் எவ்வளவோ சக்திகளைக் கொடுத்தார்.
1.ஆசைப்பட்ட உள்ளங்களுக்கெல்லாம் இதைச் செய்யப்பா என்றார்.
2.அதன் வழியில் நான் உங்களைத் தயாராக்க வேண்டும் அல்லவா.

ஆனால் ஒரு சிலர் யாம் கொடுக்கும் சக்திகளைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தி விடுகின்றனர். அது எல்லாம் வேலைக்கு ஆகாது.

நீங்கள் எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வு வரப்படும் பொழுது எல்லோருடைய உணர்வும் ஒன்றாகின்றது. அதைச் சீராக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றாக இருப்பீர்கள்.

1.உங்கள் வீட்டில் கர்ப்பம் என்று தெரிந்தாலே அங்குள்ள அனைவரும் சொந்தக்காரர்களும் ஒன்று சேர்ந்து
2.கருவில் வளரும் குழந்தை ஞானியாக வளர வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள். பெரிய தத்துவ ஞானியாக அவன் வருவான்.

நாம் பாய்ச்சும் அருள் உணர்வை அந்தத் தாய் நுகர்ந்து அந்த உணர்வுகள் தாயின் ரத்தத்தில் கலந்து அதே அருள் உணர்வு கருவிலிருக்கும் சிசுவிலும் விளையும்.

அப்படிப்பட்ட நிலையில் வளர்ச்சி அடைந்து அந்தக் குழந்தை பிறந்தால் போதும்.

எந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சிக் குழந்தையை வளர்த்தீர்களோ அவன் பிறந்த பின் எண்ணம் சொல் வெளி வரும் பொழுது அது நமக்கு சொந்தமாகின்றது.
1.அவனால் பகைமையை நீக்கும் உணர்வுகளைப் பெறுகின்றோம்.
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான்.

பல உணர்வின் தன்மையை எடுத்து நமக்குள் அணுக்களாக உருவாக்கப்படும் பொழுது அதை விளைய வைத்து உணவாக உட்கொள்கிறோம்.

இதே போல தான் ஞானிகளாகப் பிறக்கச் செய்வதற்கு மனிதனுடைய ஆறாவது அறிவால்
1.கர்ப்பிணி “செவி கொண்டு நுகரப்படும் பொழுது…” தான் இதைப் பெற வேண்டும்
2.தன் கருவில் இருக்கும் குழந்தையும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும்
3.உலக ஞானம் பெற வேண்டும் இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நம்மைப் போன்றவர்களின் தூண்டுதல் ஆகி… அந்தத் தூண்டுதலை நல்ல நிலையில் எடுத்துத் தியானித்து ஞானக் குழந்தை உருவாக வேண்டும் என்று செய்தால் மிகவும் நல்லது.

எதிர்காலத்தில் இத்தகைய ஞானிகள் தேவை. தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்வது போல நாம் இதைச் செய்து பழகுதல் வேண்டும். ஞானிகளை உருவாக்க வேண்டும்.

1.நம் தெருவிலே இரண்டு ஞானிகள் வளர்ந்தால் போதும்
2.அந்தத் தெருப் பக்கம் தீமைகள் வராது அருள் ஞானிகள் உணர்வுகளைப் பெறச் செய்யும்.

ஒவ்வொருவரும் இதைப் போன்று ஆங்காங்கு வாழும் இடங்களில் செயல்படுத்தினால் இந்த நாட்டிலேயே உயர்ந்த நிலைகளை உருவாக்கி நீக்கி விஞ்ஞான உலகின் நஞ்சிலிருந்து மீட்டிடும் அருள் சக்தியாகப் பெருகும்.

ஆகவே அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க மறந்து விடாதீர்கள்…!

1.ஒவ்வொருவரும் குரு காட்டிய வழியில் ஞானிகளாக மாறுங்கள்.
2.கூட்டமைப்பாகச் செயல்பட்டு உலகில் வரக்கூடிய தீமைகள் அனைத்தையும் நீங்கள் மாற்றி அமைக்க முடியும்…!

நிச்சயம் நீங்கள் செய்வீர்கள்…!

தியான வழியில் உள்ள சிலர்… காசுக்காக ஞானத்தை இழந்து தவறான வழியில் சென்று கொண்டுள்ளார்கள்

தியான வழியில் உள்ள சிலர்… காசுக்காக ஞானத்தை இழந்து தவறான வழியில் சென்று கொண்டுள்ளார்கள்

1.இப்பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய சில பொருள்களிலும் சரி உணவுப் பொருள்களிலும் சரி
2.கெமிக்கல் கலக்காதது “இது அனைத்துமே பச்சிலைகள் சார்ந்தது…” என்று சொல்லிக் கொண்டு நிறையப் பேர் வருகின்றார்கள்.

துணிகளிலும் கூட பச்சிலைகளைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அந்த துணிகள் இத்துப் போய்விடும். கெமிக்கல் கலக்காமல் செய்ய வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து அப்படிக் கொண்டு வந்துள்ளார்கள்.

சில பச்சிலைகளைக் கையில் எடுத்தால் அரிப்பு அதிகமாகும். கெமிக்கல் எதிலிருந்து வருகின்றது…?
1.நுகர்ந்த உணர்வுகள் கெமிக்கலாக மாறுகின்றது.
2.பச்சிலைகளிலும் அது இணைந்து நமக்குத் தெரியாமலே அவ்வாறு ஆகின்றது.

அமெரிக்காவிலிருந்து எவ்வளவோ பொருள்கள் இப்படிக் கெமிக்கல் இல்லாதது என்று சொல்லி இறக்குமதியாகி இங்கே வந்து கொண்டிருக்கின்றது.

இது எவ்வளவு பெரிய விளைவுகளைன் உண்டாக்கும்…? என்பது “பின்னாடி தான் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்…”

1.அமெரிக்காவின் ராஜதந்திரம்… மற்றவருடைய புத்திகளைக் கெடுப்பதற்கு அதிலே ஆசையால் மோகம் வரும்படிச் செய்து
2.அனைவரும் அதன் பின் செல்லும் நிலையாக… தன்னை அறியாமலே இயங்கிக் கொண்டுள்ளார்கள்.
3.இதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். நாம் நினைக்கிறோம்… இது நல்லது என்று…!

ஆனால் நம்மை எங்கேயோ அது கொண்டு போய் விட்டு விடும்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களும் சிலர் இதிலே இணைந்து கொண்ட நிலையில் இவ்வளவு பணம் கிடைக்கும் என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்…
1.கடைசியில் தியானத்தை விட்டு விடுவார்கள்.
2.அந்த மோகம் கொண்ட நிலையில் அதன் பின்னாடி தான் சென்று கொண்டிருப்பார்கள்
3.ஏனென்றால் அந்த மோகம் “தன் நிலையை” மறக்கச் செய்யும்.

யாம் கற்றுக் கொடுத்த உணர்வின் தன்மைகள் எல்லாம் அவர்களுக்குள் மாறி… இறக்குமதியாகும் அந்தப் பொருள்களை விற்றால் “இவ்வளவு சம்பாதிக்கலாம்…” என்று வீடு வீடாகச் சென்று கொடுத்தால் நல்லது என்று அவர்களின் ஆசை இப்படிச் சென்று கொண்டிருக்கிறது.

“குருநாதர் காட்டிய வழியில் ஆன்மீகத்தை வலுப் பெறச் செய்வதற்குப் பதில்…” இந்தப் பொருள்கள் இத்தனை வருடம் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்… சுத்தமானது… கெமிக்கல் கலக்காது…! என்று வீட்டு வீட்டுக்குச் சென்று சொல்லி
1.நாலு காசுக்காக இந்த மாதிரிச் செய்து கொண்டுள்ளார்கள்.
2.காசு ஆசையும் உடல் ஆசையும் இந்த உணர்வை இயக்குகின்றது.

கெமிக்கல்களில் உள்ள கெடுதல்களைப் பற்றி யாம் ஏற்கனவே பல முறை உபதேசித்துள்ளோம். ஆக இதிலே எத்தனை பேர் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்பது இனி பின்னாடி தான் தெரியும்.

அமெரிக்காவின் தந்திரங்கள் (TRICKS) இது போன்ற நிலைகளைச் செய்து கொண்டு நுண்ணிய அலைகளை எடுத்து மனிதனின் சிந்தனையைப் பித்து பிடித்துப் பேய் மாதிரி செயல்பட்டுக் கொண்டுள்ளது.
1.அவர்களுக்குச் சிந்தனையே இருக்காது.
2.ஞானத்தை இழக்கும் தன்மைகளுக்கு தான் வந்து கொண்டுள்ளதே தவிர
3.பண்பென்ற நிலைகள் முழுவதும் அழியக்கூடிய நிலை தான் அதில் இருக்கின்றது.

உங்கள் வீடுகளுக்கெல்லாம் தேடி வருவார்கள் இத்தனை வருடத்திற்கு இது பயனுள்ளதாக இருக்கும் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று வந்து “கத்து… கத்து…” என்று சப்தமிட்டுக் கொண்டுள்ளார்கள்.

1.இதுகள் எல்லாம் எங்கே கொண்டு போய் விடும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
2.”இது எல்லாம் தவறான வழி…!”

நாம் இந்த ஆன்மீகத்தின் வழியில்… அழியா உணர்வுகளைப் பெருக்கி நல்வழியில் நாம் ஜீவிக்கும் தன்மைக்கு வர வேண்டும். ஆகையால் தயவு செய்து நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்… நல்வழியில் நீங்கள் வளருவீர்கள்…!

மழை நீர் உருவாகும் விதம்

மழை நீர் உருவாகும் விதம்

 

அகஸ்தியன் தாய் கருவிலிருக்கும் பொழுது நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்றான்.

அவன் குழந்தையாகப் பிறந்த பின் அவன் உடலில் இருந்து வெளிப்படும் மணங்கள் நஞ்சு கொண்ட உயிரினங்கள் அவனை அணுகாது அவனைப் பாதுகாக்கும் நிலையாக அமைந்தது.
1.அத்தகைய மணம் உண்மையின் உணர்வின் தன்மையை இயக்கி அதன்வழி அவன் வளர்ந்து
2.வான் வீதியின் உணர்வுகளை நுகர்ந்து வளர்ச்சி பெற்றான்.

நஞ்சை வென்றிடும் சக்தியைத் தாயின் கருவிலே பெற்றான். அதன் வழி கொண்டு வான் வீதியிலிருந்து நுகர்ந்தான் என்றால்… எதை…?

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து விஷத் தன்மையைத் தான் கவர்கின்றது. பால்வெளி மண்டலங்களாக மாற்றிக் கொள்கின்றது.

பால்வெளி மண்டலங்களாக மாற்றும் பொழுது தூசுகளாக வருகின்றது.
1.இந்தத் தூசிகள் சூரியன் அருகிலே வரப்படும் பொழுது மோதுகின்றது.
2.ஒன்றுடன் ஒன்று மோதி எதிர் நிலையாகி மின்கதிர்களாக மாறுகின்றது.

மின் கதிர்களாக மாறும் ஒளிக் கற்றைகளை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கின்றது. அதிலே விஷத்தின் தன்மை பிரிவதைக் கேதுக் கோள் அந்த விஷத்தினைத் தான் வலு கொண்டு கவர்ந்து கொள்கின்றது. அதே சமயத்தில் இணைத்த உணர்வின் தன்மையை ராகுக் கோள் தனக்குள் கவர்ந்து தன்னுடன் இணைத்துக் கொள்கிறது.

இதிலே வரும் ஓசை… சப்தத்தை செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது. இதிலே வரும் கழிவு ஆவித் தன்மை தனித்தன்மை அடைந்ததைச் சனிக்கோள் எடுத்துக் கொள்கின்றது.

சாதாரணமாக… நாம் சமையல் செய்யும் போது நாம் பல பொருள்களை எடுத்து வேக வைக்கின்றோம் அப்பொழுது அந்தச் சத்தெல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து விடுகின்றது.

ஆவித் தன்மைகள் மேலே செல்லுகின்றது. ஆவித் தன்மை அடைந்தபின் மேகக் கூட்டத்துடன் இணைந்து கொள்கின்றது.
1.அதில் நீர் என்ற நிலைகள் வந்தாலும் மேகக் கூட்டத்திற்குள் கலந்தபின்
2.அதன் உணர்வின் தன்மையை பல வர்ணங்களில் பல ஒளிக் கற்றைகள் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது
3.அதில் கலந்து கொண்ட உணர்வின் தன்மையுடன் மோதுகின்றது….
4.அப்பொழுது பளீர்…ர்ர் என்று மின்னல் ஆகிறது… மின் கதிர்கள் அதைக் கருக்குகின்றது.
5.கருக்கிய நிலைகள் கொண்டு ஆவித் தன்மை மேகம் சுத்தம் ஆகின்றது.
6.சுத்தமான பின் இதிலே பிரிந்த உப்புச் சத்தின் தன்மை கலக்கப்படும் பொழுது மழை நீராகப் பெய்கின்றது.

எத்தனையோ வகைகள் இப்படிச் செல்கின்றது.

ஆனால் மனிதனான பின் விஷம் கலந்த உணர்வின் தன்மை (தொழிற்சாலைகளிலிருந்து வருவது) ஆவியாக மாறப்படும் பொழுது வான் வீதியில் சென்று அது மேகக் கூட்டங்களாக மாறி மழை நீராக வரப்படும் பொழுது “கெமிக்கல் மழை…” என்று விஞ்ஞானத்தின் தன்மையால் ஏற்படுகின்றது.

விஞ்ஞானத்தின் விளைவால் வரும் விஷத்தை அடக்கி அதை ஒளியாக மாற்றுங்கள்

விஞ்ஞானத்தின் விளைவால் வரும் விஷத்தை அடக்கி அதை ஒளியாக மாற்றுங்கள்

 

இன்று “பல கெமிக்கலைக் கலந்து…” பல விதமான வர்ணங்களை உருவாக்குகின்றார்கள். அத்தகைய வர்ணங்களை ஆடைகளில் ஏற்றப்படும் பொழுது விஷத்தன்மையாகின்றது.

1.அந்த ஆடையை நாம் அணிந்திருக்கும் பொழுது அது உடலுடன் ஒட்டி
2.எந்த விஷத்தின் தன்மை (வர்ணமாக) ஆடையில் கலக்கப்பட்டதோ
3.அது வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டுக் காற்றிலே கலந்திருப்பது
4.நம் ஈர்ப்பிற்குள் வந்து உடலில் ஜீவன் பெறும் சக்தியாக மாறும்.

இதன் வழி அந்த விஷத்தன்மைகள் நம் உடலுக்குள் சிறுகச் சிறுக ஊடுருவத் தொடங்கும். எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

விஞ்ஞான உலகில் வாழுகின்றோம்… ஆனந்தமாக இருக்கின்றோம். ஆனால் மேலே சொன்ன விஷ தன்மைகள் பரவி அணுக்களின் தன்மை மாற்றப்படும் பொழுது உறுப்புகள் சிதைந்து விட்டால் “மாற்று உறுப்புகளைச் செய்து…” மனிதனை வாழ வைக்கின்றார்கள்.

எத்தனையோ வகையான மாற்றங்களை இன்று பார்க்கின்றோம் அல்லவா…!

சர்க்கரைச் சத்து உடலில் அதிகமாகும் பொழுது…
1.மற்ற இணைந்து வாழ்ந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளில் அது பிரிக்கப்படும் பொழுது…
2.ஒன்று சேர்த்து வாழும் அந்த சர்க்கரைச் சத்து என்ற நிலைகள் ரத்தத்தில் அதிகமாகி விடுகின்றது.
3.சர்க்கரைச் சத்து என்று சுவை மிக்க நிலை வரும் போது தீய அணுக்களைப் பரப்பும் தன்மை வருகின்றது.
4.ரத்தத்திலே கலக்கும் நல்ல அணுக்களை மாற்றி… ரத்தத்தில் இருக்கும் உணர்வை இது எடுத்துக் கொள்கின்றது.
5.ஆனால் நீராக மாற்றி விடுகின்றது.

ரத்தம் நீராக மாறி விட்டால் என்ன ஆகும்…? ஊடுருவித் தன் நிலைகளை மாற்றி விடுகிறது.

மனிதனாக வாழும் காலத்தில்… உடலுக்குள் தீய விளைவுகளை ஏற்படுத்தும் இத்தகைய கெமிக்கல்களை நுகர்ந்து விட்டால் “டாக்டரிடம் சென்றால்… ரத்தத்தைத் காணோம்…” என்பார்.

மனித வாழ்க்கையில் இப்படி எல்லாம் விஞ்ஞான உலகில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுள்ளது. இதை மாற்றுவது யார்…? இதை மாற்றி அமைத்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அல்லவா.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? இந்த விஞ்ஞான உலகில் இத்தகைய தீய விளைவுகளிலிருந்து மனிதன் தப்ப வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் ஆத்ம சக்தி என்ற கடுமையான ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். பல விதமான உணர்வுகள் தாக்கப்படும் பொழுது
1.அந்த உணர்வின் உணர்ச்சியின் இயக்கங்களைப் பற்றி இந்த உபதேச வாயிலாகச் சொல்லப்படும் பொழுது இதுவும் பதிவாகின்றது.
2.இந்த உணர்வால் வரப்படும் பொழுது தன்னை எது இயக்குகின்றது…? என்பதைத் தன்னை அறிந்து கொள்ள முடியும்.

அடுத்த நிமிடமே ஆத்ம சுத்தி செய்தால் உங்களுடைய மனக் கலக்கம் நீங்குகின்றது… வரும் வேதனை உணர்வுகள் தடுக்கப்படுகின்றது… துருவ நட்சத்திரத்தின் சக்தி ஈர்க்கப்படுகின்றது… அதன் வலுவின் தன்மை நமக்குள் சேர்க்கப்படுகின்றது.

காரணம்… இன்று மின்னல்கள் தாக்கப்படும் பொழுது வெள்ளிக் கோள் அந்த உணர்வின் அலைகளைத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல்
1.உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவு செய்யப்படும் பொழுது
2.மின்னல்கள் கடுமையான நிலைகளை எடுத்தாலும்
3.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பார்த்தாலும் உயிர்வழி ரத்தத்தில் கலக்கப்பட்டு
4.உடலில் உள்ள அணுக்கள் ஒளிக்கற்றைகளாக மாற்றும்.

மின்னல் (ஒளியின் தன்மை) என்பது 27 நட்சத்திரங்களின் எதிர்நிலையான போர் மறை தான் அது.

வினை… வினைப்பயன் என்று சொல்வதன் பொருள்

வினை… வினைப்பயன் என்று சொல்வதன் பொருள்

 

இன்று கசாப்புக் கடையில் பார்க்கலாம்… அங்கே உயிருடன் அறுக்கின்றார்கள்… சூடாக இருக்கும் தண்ணீரில் “டபக்” என்று முக்குகின்றார்கள்… அது வேதனைப்படுகிறது. ஆனால் அந்த மாமிசங்களைத் தான் உட்கொள்கின்றோம்.

சுடு தண்ணீரில் முக்கும்பொழுது அவன் பாவத்தைச் செய்கின்றான்… அதை நாம் உற்று நோக்குகின்றோம். ஆனால் அதற்காக அதை உட்கொள்ளாமல் இருப்பதில்லை.
1.சுடு தண்ணீரில் முக்கும் பொழுது கஷ்டமாக இருக்கின்றது.
2.அந்தப் பாவ நிலைகள் நமக்குள் பாவ வினையாகச் சேருகின்றது.

ஏனென்றால் கண்ணிலே உற்றுப் பார்த்தோம்… சுடு தண்ணீரில் அது எப்படி எரிகின்றதோ அந்த உணர்வை நுகர்கின்றோம்… நம் ரத்தத்தில் அது கலக்கின்றது.

1.ஒரு நான்கு ஐந்து தடவை இவ்வாறு கோழிகளை உயிருடன் சுடு தண்ணீரில் அமுக்கும் போது பார்த்தோம் என்றால்
2.அந்த எரிச்சல் நிச்சயம் நம் உடலில் உருவாகும்.

அந்தக் கோழியைத் தான் சாப்பிடுகின்றோம். அதனுடன் சேர்ந்து அது எப்படி எரிச்சல் அடைந்ததோ அந்த எரிச்சல் நம் உடலில் நிச்சயம் வரும்.

கடைக்காரன் காசுக்காக அவ்வாறு செய்கிறான். பாவமே…! என்று பார்க்கின்றோம். உணவாக உட்கொள்வதற்காக நாம் இதை நுகர வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் உட்கொள்ளும் போது ருசித்து உட்கொள்கின்றோம்.

ஆகவே இந்த உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள். இது எல்லாம் பாவ வினைகள்.

ஒருவன் தீய செயலைச் செய்கின்றான். “இப்படிச் செய்கின்றானே…” என்று நாம் கூர்மையாக உற்று நோக்கிப் பார்க்கின்றோம்… அது தீய அலைகள்…!
1.அந்த உணர்வை நுகர்கின்றோம்.
2.நம் ரத்தத்திலே கலந்து அணுவாக மாறுகின்றது. இது தீய வினை.

ரோட்டில் ஒருவன் எவனையோ பார்த்து நாசமாகப் போ…! என்று சாபமிடுகின்றான். அது சாப அலைகள்.
1.நாம் அதைப் பார்க்க நேர்ந்தால் அவன் விடும் சாபத்தை நுகர்ந்து விடுகின்றோம்.
2.உடலுக்குள் சென்ற பின் அது தீய செயல்களையே செய்கின்றது.

ஆரம்பத்தில் தாய் கருவிலே சிசுவாக இருக்கின்றோம். தாய் இது போன்று எத்தனையோ அதிர்ச்சியான நிலைகளையோ தவறு செய்பவர்களையோ உற்றுப் பார்த்து நுகர்ந்திருக்கும்.
1.தாயின் இரத்தத்தின் வழியாக அந்த உணர்வுகள் கருவிலேயும் சேர்ந்து விடுகிறது
2.இது பூர்வத்தில் வரும் வினை.

இப்படிப் பல விதமான உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு எது எதை நுகர்கிறோமோ அவை எல்லாம் நமக்குள் வந்து சேருகின்றது.

பாவத்தைப் பார்க்கும் பொழுது “அடப் பாவமே…” என்று எண்ணுகிறோம்… அந்தப் பாவத்தை வளர்க்கின்றோம். தீய செயல்கள் செய்பவனை உற்றுப் பார்க்கும் பொழுது தீய வினைகளை நமக்குள் வளர்க்கின்றோம். அந்தந்த அணுக்கள் உருவான பின் அதனதன் ருசியையேத் தேடுகின்றது.

இந்த வினைகளை எல்லாம் போக்க வேண்டுமல்லவா…!

வினை என்றால் வித்து. செடி கொடிகள் வளரும் பொழுது அதில் வித்துக்கள் உருவாவது போல்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் வினையாகி உணர்ச்சியாக இயக்கி
2.உடலில் விளையும் பொழுது அணுக்களாக மாறுகின்றது… வித்தாக மாறுகின்றது…!

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…! இவை அனைத்தையும் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கொடுத்துள்ளது.

உலக மாற்றத்தின் காலம்

உலக மாற்றத்தின் காலம்

 

ஒவ்வொரு நிமிடமும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்… எது… எவ்வாறு… எதனுடன் சேர்ந்தபின்… அதன் உணர்வுகள் எப்படி மாறுகிறது…? என்ற உண்மையை அடிக்கடி சொல்லி வரும் போது அது உங்களுக்குத் தெளிவாகின்றது

1.அருள் உணர்வை நீங்கள் வளர்க்க வேண்டும்…
2.மறந்து விடாதீர்கள்…! கருவில் வளரும் குழந்தைகளுக்கு அந்த அருள் ஞானத்தை உங்கள் வீட்டிலிருந்தே ஊட்டுங்கள்.
3.அருள் உணர்வு பெற்று அந்தக் குழந்தைகள் வளர்ந்தால் உங்கள் துயரைத் துடைப்பான்… அருள் ஞானத்தைப் பெருக்குவான்… உலக சக்திகளைப் பெறுவான்.
4.அவன் பேச்சும் மூச்சும் உங்களை நலமாக்கும் உங்கள் வீட்டையும் நலமாக்கும் ஊரையும் நலமாக்கும்.
5.இப்படி அருள் ஞானிகளை நாம் உருவாக்க வேண்டும்.

அப்பொழுது தான் இந்த உலகத்தில் விஞ்ஞானத்தால் வரும் அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய் ஞான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல முடியும்.
1.மூவாயிரத்திற்கு முன் பேரருள் பெற்ற உலகமாக மாறி
2.இங்கே படர்ந்துள்ள இருள்களை அகற்றி விட்டுப் பேரின்ப பூமியாக மாறும்.

அதே சமயத்தில்… மூவாயிரம் ஆவதற்கு முன் இந்த பூமியில் நீர் நிலைகள் அதிகமாகிவிடும். நாளடைவில் இது சூரியனைக் கடந்து சென்றுவிடும்… பனிப்பாறைகளாக மாறும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் நுகர்ந்த அருள் உணர்வுகள் வளரப்படும் பொழுது இந்த அருள் ஞானிகள் உணர்வின் தன்மை “துருவ நட்சத்திரத்துடன் நாம் இணையும் பருவம் வரும்…”

ஒளியின் சக்தியாக… என்றும் நிலையாக… பிறவி இல்லா நிலையாக… பேரின்ப நிலையாக… என்றும் அருள் ஞான உணர்வாக… வரும் இருளை அகற்றிடும் உணர்வாக… “என்றும் ஏகாந்தமாக வாழும் சக்தியை” நாம் பெறுகின்றோம்.

ஆகவே அருள் ஞானக் குழந்தைகளைக் கருவிலேயே உருவாக்கி விடுங்கள். அருள் உணர்வைப் பெருக்கச் செய்யுங்கள்.

1.இந்தப் பூமி அதனுடைய செயலைக் கூடிய சீக்கிரம் இழக்கத் தான் போகின்றது.
2.எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலும் நாளடைவில் பாழடையத்தான் போகின்றது.

இந்த உண்மைகளை உணர்ந்து நம்முடைய எல்லை… பிறவி இல்லா நிலை… சப்தரிஷி மண்டலம் அடைவது தான்…! என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வாழுங்கள்.

ஐவர் மலையில் வைத்து குருநாதர் எமக்குக் கொடுத்த முழுமையான சக்தி

ஐவர் மலையில் வைத்து குருநாதர் எமக்குக் கொடுத்த முழுமையான சக்தி

என்னை வேலையை விட்டு நிற்கச் சொன்னார் குருநாதர்:-
என்னை மில்லில் இருந்து வேலையை விட்டுப் (நிற்க) போகச் சொன்னார் குருநாதர். இங்கு வீட்டில் சாமி அம்மாவுக்கு (ஞானகுருவின் மனைவி) இது தெரியாது.

அப்பொழுதுதான் அவர் நோயில் இருந்து எழுந்திருக்கின்றார். “சாமி வேலையை விட்டு நின்று விட்டார்…” என்று இங்கு வீட்டில் வந்து சொல்லி இருக்கின்றார்கள்.

அங்கு யாம் வேலைக்குச் சென்றாலும் குருநாதர் என்ன செய்தார்…? அவனை உடனே ரிசைன் (ராஜினாமா) பண்ணச் சொல் என்று ஆபீசில் ஃபோன் அடிக்கின்றது.

ஆனால் இங்கே மில்லில் மேனேஜர் என்னை ரிசைன் செய்ய விட மாட்டேன் என்கிறார். உனக்கு என்னப்பா வேண்டும்…? செலவுக்குப் பணம் வேண்டுமென்றாலும் தருகிறேன்… நீ வேலையைப் பார் என்கிறார்கள்.

அதற்குள் ஃபோனில் குருநாதர்… “அவனை உடனே நீ வெளியே அனுப்புகிறாயா இல்லையா…!” என்று அங்கே கேட்கிறார்.

1.அந்த மேனேஜருக்கு அதைக் கேட்டவுடனே
2.ஒரு அதிர்ச்சி மாதிரி ஆகிக் “கிடு… கிடு… கிடு…” என்று மயக்கமாக வந்து விட்டது.

என்னப்பா இது…? யாரோ உன்னை ரிசைன் பண்ணச் சொல்லி அவனுக்குப் பணத்தைக் கொடுத்து வேலையை விட்டுப் போகச் சொல்… என்று சொல்கிறார்கள். என்னைப் போட்டு வெளுக்கின்றார்கள்…! என்கிறார்.

இப்படி இதைக் கேட்ட பின் அவரும் பயந்து கொண்டு நீ எப்பொழுது வேண்டுமானாலும் வேலைக்கு வரலாம் என்று சொல்லி எம்மிடம் அந்த மேனேஜர் 700 ரூபாய் கொடுத்தார்.

யாம் அதைக் கொண்டு போகவும் உடனே குருநாதர் நடு ரோட்டில் எம்மை மடக்கி “இங்கே பார்…! எத்தனை பேர் பட்டினியாக இருக்கிறர்கள்…? அவர்களுக்கு எல்லாம் வாங்கிக் கொடு…! என்றார்.

அந்தப் பணத்தை நான் வீட்டிலே கூடக் கொடுக்க முடியவில்லை

1.நீ வீட்டில் கொடுத்தால் வேலையை ராஜினாமா பண்ணியது தெரிந்துவிடும். நிச்சயம் அழுகத்தான் போகிறார்கள்.
2.ஆகையால் அந்தப் பணத்தை இங்கே அழுகிறவர்களுக்கெல்லாம் கொடுக்கலாம் என்று சொல்லி வாங்கிக் கொண்டார் குருநாதர்.

இந்த மாதிரியெல்லாம் சில சிரமங்களை ஏற்படுத்தித்தான் அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர். பின் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பேசாமல் உட்கார்ந்து விட்டேன்.

பிறகு குருநாதர் என் பொண்ணு மீராவுக்குக் காட்சி கொடுக்கிறார். ஆனால் என் பையன் தண்டபானி சிறிய பையன். சாமி அம்மாவுக்கும் குருநாதர் காட்சி கொடுக்கவில்லை.

என் பொண்ணுகள் இருவருக்கும் காட்சி கொடுக்கவும் எனக்குச் சாப்பாடு எடுத்து வைத்தார்கள். அந்தச் சாப்பாட்டுத் தட்டு அங்கு போய் நிற்கிறது, போட்டுவிட்டு இங்கே வைத்தால் நான் கையை வைக்கப் போனால் தட்டு நகர்ந்து அங்கே போகிறது.

இப்படியே மாற்றி மாற்றி வந்தவுடன் என் பிள்ளைக்குச் சந்தேகம் வருகின்றது. என்னமோ ஏதோ நடக்கிறது என்று அழுகின்றார்கள்.

அப்பொழுது சாமி படத்தின் மூலம் குருநாதர் காட்சி கொடுத்து உங்கள் அப்பாவுக்கு ஒன்றும் தெரியாது. நான் தான் வேலையை விட்டு நிற்கச் சொன்னேன், அவர் வேலையை விட்டார் இதை யாரிடமும் சொல்லக் கூடாது. சொன்னால்… உனக்குத் தலைவலி வரும் என்று சொன்னவுடன் அந்தப் பொண்ணும் எதுவும் சொல்லவில்லை.

பிறகு இப்படியெல்லாம் ஆகிவிட்டதே…! சாமி அம்மாவும் இப்பொழுதுதான் நோயில் இருந்து எழுந்தார்கள் அவரிடமும் சொல்லவில்லையே என்று எண்ணி எனக்கு மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

மலைக்குச் சென்று, முருகனிடம் என்ன கேட்க வேண்டும்? என்று சொன்னார் குருநாதர்:-
அப்பொழுது இந்த உணர்வை எடுத்து… “நீ நேராகப் பழனி மலைக்குப் போ…!” என்று சொல்கிறார்.

அப்படி அந்த மலைக்குப் போவதற்கு முன்னாடி “முருகன் உனக்குக் காட்சி கொடுக்கும் பொழுது… நீ என்ன கேட்க வேண்டும்…?” என்றும் சொல்கிறார் குருநாதர்.

செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொல்வாக்கு வேண்டும்…! என்று முருகனிடம் நீ கேட்க வேண்டும் என்று சொல்லி இதற்கு விளக்கமும் கொடுத்தார் குருநாதர்.

1.செல்வம் இருந்தாலும் செல்வாக்கு வேண்டும், அது இல்லாமல் போனால் அந்தச் செல்வத்திற்குள் எதிரிகள் வரும். ஆகவே செல்வாக்கு வேண்டும்,
2.இரண்டாவது சொல்வாக்கு வேண்டும். இதைச் சொன்னால் அந்த உணர்வை அவன் கிரகிக்கும் தன்மை.
3.இந்த மூன்று நிலையும் ஒரு மனிதனுக்குத் தேவை என்று குருநாதர் சொல்கின்றார்.

முருகன் உனக்குக் காட்சி கொடுப்பான்… நீ இதைக் கேட்க வேண்டும் என்று சொன்னார். இதே மாதிரிப் பல உணர்வின் உண்மையின் நிலைகளை இயக்கிக் காட்டினார்.

முருகன் என்றால் சாதாரணமாக இப்படித்தான் இருப்பார் என்று நமக்குத் தெரியும். வேறு ஒன்றும் தெரியாது. நானும் படி ஏறிப் போனேன்… சாப்பிடவும் முடியவில்லை கிரக்கமும் அதிகமாகின்றது. என்னுடைய சிந்தனை எங்கெங்கேயோ போகிறது.

சாமி அம்மா உடல் நிலை இப்பொழுது தான் சரியாகி உள்ளது. பிள்ளைகள் எல்லாம் இந்த மாதிரி இருக்கின்றது. மாமனார் இறந்து விட்டார் பார்ப்பதற்கும் வழி இல்லை என்ற வகையில் திகைத்துப் போய் மிகவும் கவலையில் இருந்தேன்.

இப்படி ரொம்பக் கவலையாக இருக்கும் பொழுதுதான் திடீரென்று மலைக்கு போ…! என்ற இந்த உணர்வு வந்து மலைக்குப் போய்க் கொண்டிருந்தேன்

முருகனின் காட்சி:-
அங்கு போனவுடன் நான் போன நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு ஏழெட்டுப் பேர் தான் இருந்தார்கள். அப்பொழுது என் உடலில் “கம..கம…” என்று வாசனை வருகிறது.

அந்த மலையில் உள்ளவர்களில் இதற்கு முன் என்னுடன் பழகிய வாட்ச்மேன் வந்து “நைனா…நைனா… வாங்க..!” என்று அங்கு தாம்பாளத்தில் யாரோ அர்ச்சனை செய்த மாலையை எடுத்து என் கழுத்தில் போட்டார்.

அய்ய..! என் கழுத்தில் ஏன் மாலையைப் போடுகிறீர்கள்…? என்று நான் அவரிடம் கேட்டேன்.

அவர்… “இல்லை நைனா… உனக்குப் போட வேண்டும்… என்று தோன்றியது, போடுகிறேன்…!” என்றார்.

அட… எனக்குப் போட வேண்டும் என்று என்னப்பா வந்தது…? நானே கஷ்டப்பட்டு வருகிறேன்…! என்றேன்

என்னமோ… மாலையை உனக்குப் போட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது… நான் போடுகிறேன்…! என்கிறார் அந்த வாட்ச்மேன்.

முதலில் அங்கே அந்த வரவேற்பு.

அந்த மாலையைப் போட்டவுடனே என்ன நடக்கின்றது…? அந்தச் சிலையில் இருந்து முருகன் அப்படியே எழுந்திருந்து வருகின்றார். அது அந்த உணர்வு, முருகன் அந்தக் குழந்தைப் பருவமாக வருவது தெரிந்தது.

நான் முன்னே பின்னே முருகனைப் பார்த்ததும் இல்லை, அப்பொழுது காட்சியாகச் சிலையிலிருந்து முருகன் வந்தால் எப்படி இருக்கும்…? எனக்கு ஒரே அதிசயம் பொங்குகின்றது…!

“நான் நல்லவனாக ஆகவேண்டும்…” என்றுதான் முருகனிடம் கேட்டேன்:-
முருகன் வந்தவுடன்… எனக்கு என்ன ஆனது…? செல்வாக்கு சொல்வாக்கு தனம் இந்தப் பொருள் வேண்டும் என்ற வகையில் செல்வம் வேண்டும் என்று கேட்பதற்கே எனக்கு மனம் வர வில்லை,

வாழ்கையில் முருகனையே நாம் பார்த்து விட்டோம். இனிமேல் இதைக் காட்டிலும் நமக்கு வேறு என்ன வேண்டும்…?
1.நான் நல்லது செய்ய வேண்டும்,
2.நல்லதைச் செயல்படுத்த வேண்டும்,
3,நல்ல வழியில் நடத்த வேண்டும்,
4,என்னை அறியாது தீயது வந்தால் அது வராது தடுக்கக்கூடிய சக்தி எனக்கு வேண்டும்.

எனக்குள் ஆசை என்ற நிலைகளோ தவறான உணர்வுகள் வந்தாலோ அவைகளை வராது தடுக்கும் அந்தச் சக்தியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று, வேண்டினேன். அவ்வளவுதான்…!

போகர் சமாதியில், போகருடைய அருளைப் பெற்றேன்:-
அதைக் கேட்டுவிட்டு அங்கிருந்து நேராகப் போகர் சமாதிக்குப் போனேன். அங்கேயும் ஆள் இல்லை. போய் நின்றவுடன் போகரைப் பற்றித் தெரிந்தவுடனே சேகண்டிச் சத்தம் கேட்கின்றது.

கேட்கவும் உடனே பூஜை செய்து கொண்டிருக்கின்ற மாதிரி சப்தம் கேட்டவுடன்… அங்கு உள்ளவர் “நைனா…நைனா…” இது என்ன வேலை செய்கிறீர்கள்…? என்று கேட்டுக் கொண்டு அவரும் உள்ளே வருகின்றார். வந்தால் அவருக்கும் சேகண்டிச் சத்தம் கேட்கிறது.

1.அப்படியே நானும் தரையிலிருந்து ஒரு அடிக்கு மேலே இருக்கின்ற மாதிரி இருக்கிறது. எனக்கே தெரிகின்றது.
2.அப்பொழுது பல அற்புதமான வாசனைகளெல்லாம் அங்கே வருகின்றது.
3.அது என்னை எங்கேயோ அழைத்துப் போகின்ற மாதிரி இருக்கிறது.

அப்பொழுது இவர் வந்து பார்த்துவிட்டுச் சிறிது நேரம் கழித்து… “என்ன நைனா…? பெரிய சித்து வேலை எல்லாம் விளையாடுவது போல் இருக்கின்றது…! தரைக்கு மேல் இருக்கிறீர்கள்… சேகண்டி சப்தம் எல்லாம் கேட்கின்றது… போகனுடைய அருளையே பெற்று விட்டீர்கள் போல் இருக்கின்றதே…! என்று சொல்கிறார்.

நான் வழக்கமாக அங்கு போய் வருவதால் அவர் இப்படிக் கேட்கிறார். அங்கே உள்ள பெரியவர் அப்படிக் கேட்கின்றார். போகர் சமாதியில் இது நடந்த நிகழ்ச்சி.

இப்படி நடந்தவுடன் எனக்கு ஒரு பெரிய தனி உற்காகமே வந்தது. நான் சாப்பிடாமல் வந்த நிலையெல்லாம் இங்கே மாறிவிட்டது.

அங்கே முருகனிடம் நான் கேட்டது என்ன…? எனக்குச் செல்வம் வேண்டும், செல்வாக்கு வேண்டும் என்று கேட்பதை விடுத்து நான் நல்லவனாக இருக்க வேண்டும் நல்லதைச் செய்ய வேண்டும் என்றுதான் கேட்டேன்.

எனென்றால் நாம் தப்பித் தவறி தவறு ஏதும் செய்து விட்டால் என்ன ஆகும்…?
1.இவர்கள் எல்லாம் பெரிய மகான்களாகத் தெரிகிறது.
2.ஏதாவது தவறாக ஆகிவிட்டால் இவர்களின் சாபத்துக்கு ஆளாகி விடுவோம் என்ற பயத்திலேதான் நான் அதை அப்படிக் கேட்டேன்.

அங்கிருந்து கீழே இறங்கி வந்தேன். வந்தவுடன் என்னை அறியாமலேயே பெரிய உற்காகம் வந்தது.

ஆவி பிடித்த ஒரு பெண் நலமடைந்தார்:-
இறங்கும் வழியில் சின்ன சேலத்தில் இருந்து வந்த ஒரு ஆவி பிடித்த ஒரு பெண் உடல் பூராவும் பல தாயத்துக்கள். ஆனால் அழகான பெண்.

அவர்கள் எங்கெங்கோ சுற்றி ஒன்றும் முடியவில்லை. ஒரு படையே இவரைக் கூட்டி கொண்டு பழனி மலைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். படி மேல் நின்று கொண்டு “ஏறு…ஏறு…” என்று, மேள தாளங்களோடு சொல்கின்றார்கள். ஆனால் அந்தப் பெண்ணால் ஏற முடியவில்லை.

அப்பொழுது நான் என்ன செய்தேன்…?

போகர் சமாதியில் இருந்து எடுத்த விபூதியை
1.நான் கீழே போகும் பொழுது படி மேல் நின்று கொண்டிருந்த அந்தப் பெண் மேல் வீசி எறிந்துவிட்டுப் போய்விட்டேன்.
2.உடனே… “அரோகரா… முருகா…!” என்று சொல்லிக் கொண்டு அந்தப் பெண் படியில் ஏறிப் போகின்றது. எல்லோரும் மேலே போகின்றார்கள்.

ஆனால் அந்தக் கூட்டதில் இருந்த ஒரு ஆள் என்னைத் துரத்திக் கொண்டு வந்து “ஐயா… நீ முருகனேதான்… நீ என் கூட வரவேண்டும்…!” என்று சொல்கிறார்.

அட… நான் முருகனும் அல்ல… கத்தரிக்காயும் இல்லை…! என்றேன் நான்.

இல்லை… இல்லை… நீங்கள் முருகன் தான்… மாறு வேடத்தில் வந்திருக்கின்றீர்கள்…! என்கிறார் அவர். நாங்கள் இத்தனை பேரும் என்னென்னமோ செய்தோம். எத்தனையோ தாயத்துக்களைக் கட்டினோம் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்தப் பெண் இப்பொழுது வேகமாக ஓடுகின்றது. முருகன் ஏதோ பண்ணியிருக்கின்றார். நாங்கள் வேண்டிக் கொண்டிருந்தோம்… அவர் தான் வந்திருக்கிறார் என்கிறார் அவர்.

ஐயா… நான் சாதாரண ஆள்…! மில்லில் வேலை பார்க்கின்ற ஆள் என்று சொன்னாலும் என்னை அவர் விடவில்லை. அப்புறம் நான் எவ்வளவு சொன்னாலும் விடவில்லை.

அந்த இடத்தில் எமக்கு அவ்வளவு உற்சாகம் ஊட்டுகின்றார் குருநாதர். எனக்கு ஓரே குஷி. ஐயா… நீங்கள் இந்த விபூதியை வேண்டுமென்றால் கொண்டு போங்கள். ஏதாவது ஆனால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

இல்லை நீங்கள் வந்து தான் ஆக வேண்டும் என்று அவரும் சொல்கின்றார்.

ஐயா… நான் வருவதற்கு இல்லை நான் போக வேண்டும்…! என்று சொன்ன பின்பு போய் விட்டார்.

சூட்டையும் கோட்டையும் என்னைப் போடச் சொன்னார் குருநாதர்:-
இங்கே கீழே நான் வந்தவுடன் பஸ்டாண்டில் வைத்து என்னைப் பயங்கரமாக அடிக்கிறார் குருநாதர். உன்னை முருகனிடம் நான் எதைக் கேட்கச் சொன்னேன்…? நீ எதைக் கேட்டாய்…?

பணம் இல்லை என்றால் எதாவது நடக்குமா…? செல்வம் வேண்டும் சொல்வாக்கு வேண்டும் என்று கேட்கச் சொன்னால் நீ என்ன கேட்டாய்…? என்னிடம் இவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…! ஆனால் என்னை எவன்டா மதிக்கிறான்…? நீ அதைப் பெற வேண்டும் என்பதற்காகத் தான் இதைச் செய்கிறேன் என்று குருநாதர் சொன்னார்.

குருநாதர் என்னை அடிக்கும் பொழுது… அந்த மூலைக் கடைக்காரர் மஜீத் வந்து “மாமா… வசமாக மாட்டிக் கொண்டாயா…?” நான் குருநாதரிடம் தைலத்தை வாங்கி என் உடல் சரியான பின்பு என்னைப் போட்டு அவர் உதைத்தார். இப்பொழுது நீ சிக்கிக் கொண்டாய்…! என்றார்.

அதைக் கேட்டவுடன் எனக்கு இன்னும் கொஞ்சம் பயமாகப் போய்விட்டது. ஆனால் உண்மைகள் அனைத்தும் குருநாதருக்கும் நமக்கும் தான் தெரியும்… எப்படி நடந்தது…? எப்படி நடந்து கொண்டிருக்கிறது…! என்று.

இருந்தாலும் எம்மை அடித்து என் சட்டையெல்லாம் கிழித்து விட்டார் அந்தப் பேருந்து நிலையத்தில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு டாக்சி டிரைவர் “இந்தக் கிழவனை அடிடா…!” என்கிறார்,

ஐயா… நீங்கள் பேசாமல் விட்டுவிட்டுப் போங்கள். எங்களுக்குள் எதுவும் இருக்கும், நீங்கள் எதுவும் அவரைத் தொடாதீர்கள்…! என்று நான் சொன்னேன்.

அவர்… “இல்லை இல்லை.. இது பைத்தியம்தான்… இருக்க இருக்க ரொம்ப முத்திப் போய்விட்டது அதனால் எல்லாரையும் அடிக்கிறார்…! என்றார்.

குருநாதர் அப்புறமும் என்னை விடவில்லை… சட்டையெல்லாம் கிழிந்து விட்டது. வேஷ்டியையும் கிழித்து விட்டார். ஜட்டி இல்லையென்றால் அதுவுமில்லை. இப்படி “டார் பார்…” என்று கிழித்து விட்டார்.

அப்புறம் திண்டுக்கல் ரோட்டில் அந்த ஸ்கூல் பக்கம் அழைத்துப் போய் குருநாதர் எம்மிடம் சொல்கின்றார்.

நான் இவ்வளவு பெரிய சக்தி பெற்றேன் என்னை எவனும் மதிக்கவில்லை. அதற்காக வேண்டித்தான் முருகனிடம் செல்வம் வேண்டும் செல்வாக்கு வேண்டும் சொல்வாக்கு வேண்டும் என்று உன்னைக் கேட்கும்படிச் சொன்னேன். நான் சொன்னதை நீ கேட்கவில்லை… உனக்கு யார் பணம் தரப் போகின்றார்கள்…? என்றார் குருநாதர்.

அப்பொழுது நான் சொன்னேன்.
1.முருகனையே எனக்குக் காண்பித்துக் கொடுத்தீர்கள்.
2.இதனுடைய சக்தியை… நீங்கள் குருவாக இருந்து எனக்கு வழி காட்டுகின்றீர்கள்.
3.“நீங்கள் இருவரும் இருந்தால்… எனக்குப் போதாதா சாமி…?” என்றேன்

அவ்வளவுதான்…! உடனே அங்கு பக்கதில் இருந்த கேன்டீனுக்கு அழைத்துப் போய் லட்டு ஜிலேபி வாங்கிக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.

ஆனால் குருநாதர் இதை மட்டுமா செய்தார்…? பல நிலைகளில் சக்தி வந்தவுடன் ஒரு வார்த்தை கேட்கிறார். “நீ நல்ல சூட்டையும் கோட்டையும் போட்டுக் கொள்…!” என்று ஆசையைத் தூண்டுகின்றார்.

ஜவுளிக் கடைக்குப் போய் நல்ல சூட்டை வாங்கிக் கொள்… நல்ல சட்டையைப் போட்டுக் கொள்… நன்றாக “ஜம்…” என்று வரவேண்டும் என்றார் குருநாதர்.

நான்… “எனக்கு இந்தச் சூட்டும் வேண்டாம் சர்ட்டும் வேண்டாம் சாமி…!” இந்த அவஸ்தைப்பட்டது போதும்.

“நீ வாங்கிக் கொள்கிறாயா இல்லையாடா…?” என்று திரும்பவும் கேட்கின்றார்.

எனக்கு வேண்டவே வேண்டாம் என்றேன் நான்..!

நீ சூட்டைப் போட்டுக் கொண்டு நீட்டா (NEAT) இருக்க வேண்டும். உனக்குச் சக்தி நிறையக் கொடுத்திருக்கின்றேன் நீ செய் என்றார். அதிலும் ஆசையைத் தூண்டுகிறார்.

அப்பொழுது அங்கிருந்தவர்கள் எல்லாம் குருநாதர் என்னமோ சூட்டும் சர்ட்டும் வாங்கித் தருகிறேன் என்று சொல்கின்றார்.. “நீ வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே..” என்றனர்.

1.“எனக்கு இந்தச் சூட்டும் வேண்டாம்… சர்ட்டும் வேண்டாம் என்னை ஆளை விடுங்கள் போதும்…” என்றேன்.
2.அதிலே அவர் சந்தோஷப்பட்டு… அந்தச் சந்தோஷத்திலேயே நானும் வந்தேன்.

என் சைக்கிள் கடையில் வேலை செய்த சின்னத்தம்பி என்ற பையன்… அவன் கடைக்கு வந்தேன். அவனுக்கு ஏற்கனவே சைக்கிள் எல்லாம் கொடுத்திருக்கின்றேன்.

அங்கே வந்தவுடன் அவன் என்னை “ஓய்…” பைத்தியம் பிடித்தவன் நீ அந்தப் பக்கம் போயா… இங்கு கடையில் உட்காராதே தரித்திரம் பிடித்தவன்…! என்று என்னைத் திட்டுகின்றான்.

வேலையையும் விட்டு விட்டுப் பிள்ளைகுட்டி எல்லாம் விட்டு விட்டு ஒரு பைத்தியக்காரன் கூடப் போய்ச் சுற்றிக் கொண்டிருக்கின்றாய்…! இங்கே வராதே என்கிறான்.

என்னடா இது வம்பாகப் போய்விட்டது…? என்னை எதிர்த்துப் பேசாதவன் இப்படிப் பேசுகின்றானே…! என்று அதை விட்டு விட்டுப் போனேன்.

அங்கிருந்து போனால் என் வீட்டுக்கு முன்னாடி உள்ள கடைக்காரர் இப்ராஹிம்… “ஓய் நைனா…! உனக்கு நன்றாகப் பைத்தியம் பிடித்து விட்டது, நல்லய்யா நாயக்கர் சம்பாதித்து வைத்திருகின்றார். நீ சொத்தையெல்லாம் தொலைத்து விட்டாய்…” என்று சொல்கிறார்.

நீ இந்தக் கடையில் உட்காராதே… எனக்கும் தரித்திரம் பிடிக்கும் போய்யா…! என்று சொல்கின்றார். எங்கே போனாலும் இதே மாதிரி எம்மைப் பேசுகின்றார்கள்.

என் பொண்ணு மீராவும் எம்மிடம்… நீ வீட்டிற்குள் வராதே தரித்திரம் பிடித்தவர்…! என்று எல்லோரும் பேசுகின்றார்கள் என்று என்னிடம் சொல்கின்றது.

அந்தத் தெருவிற்குள் வரும் போது அங்கிருக்கும் ஒவ்வொருத்தரும் எம்மை மிகவும் மோசமாகப் பேசுகின்றனர். இந்த மாதிரி எதிர்ப்பின் உணர்வுகள் வருகிறது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

கேன்சர் நோயை நீக்கச் செய்தார் குருநாதர்
அப்படி ரொம்பக் கஷ்டமாக இருக்கும் பொழுது தான் பாப்பம்பட்டியில் இருக்கும் நண்பர் இராமசாமியின் தோட்டத்துக்குப் போனேன். அவரிடம்… “எனக்குப் பெரிய அவஸ்தையாக இருக்கின்றது, எல்லோரும் கேவலமாகப் பேசுகிறார்கள்…!” என்று சொன்னேன்.

அங்கேயும் எம்மைச் சும்மா விடவில்லை… குருநாதர். பல நிலைகளை ஏற்படுத்துகின்றார். என்னமோ செய்யப் போகிறாய் என்கிறார் குருநாதர்.

அந்தச் சமயத்தில் அங்கே சிலருடைய உடலில் டெங்குக் காய்ச்சல் மூட்டுக்கு மூட்டு வலிக்கிறது…! என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

அப்பொழுது… வெறும் மண்ணைத் தூக்கிப் போட்டு “இது சரியாகும்…” என்று சொன்னால் அந்த நோய் போகின்றது. அதனால் அங்கே ஒரே கூட்டமாகக் கூடுகின்றது. இப்படியெல்லாம் பல நிலைகள் ஆகின்றது. இப்படியும் செய்கிறார் குருநாதர். எனக்கு என்ன செய்வது…? என்று ஒன்றும் தெரியவில்லை.

அப்பொழுது அங்கிருந்து மகாலிங்கம் என்ற ஜாதகம் பார்க்கிறவர் வீட்டில் போய்த் தங்கி இருந்தேன். அங்கும் பல அற்புதங்கள் நடக்கிறது. கூட்டங்கள் வருகின்றது.

அங்கே மகாலிங்கத்தின் அண்ணன் பையனுக்கு வயிற்று வலி என்று சொல்லி இராமசாமி நாயுடுவின் ரைஸ் மில்லுக்கு என்னை வரச்சொல்லிச் சொன்னார்கள்.

அங்கு போய்ப் பார்க்கும் போது அவன் வயிற்று வலியுடன் வேதனைப்படுகிறான். நான் அங்கு சென்றவுடன் ஹாஸ்பிட்டலுக்கு போவதற்குப் பணம் இருந்தால் பரவாயில்லை. பையனுக்குக் கேன்சர் என்று டாக்டர் சொல்லி விட்டார். கேன்சரை நீக்குவதற்குச் சென்னைக்குப் போக வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இராமசாமி எம்மிடம் “உன் குருநாதரை நினைத்து ஏதாவது செய்…!” என்கிறார்.

1.குருநாதரை எண்ணி அங்கிருந்த விபூதியை எடுத்து அந்தப் பையனுக்குக் கொடுத்தேன். ஆனால் என்ன ஆனது…?
2.விபூதியைக் கொடுத்தவுடன் அவனுக்கு இரத்த இரத்தமாக வெளியில் போக ஆரம்பித்துவிட்டது.

இராமசாமி என்ன செய்தார்…? நான் தான் இந்த விபூதியை, உன்னிடம் கொடுத்தேன். நீ என்னிடம் இருந்த விபூதியைத் தான் நீ அந்தப் பையனுக்குக் கொடுத்தாய். ஒரு வேளை இந்த விபூதியில் யாராவது பாலிடாலைக் (பூச்சி மருந்தை) கலந்து வைத்திருப்பார்களோ என்னமோ தெரியவில்லையே…? என்கிறார் எம்மிடம்.

யாரும் இதைத் தொடாதீர்கள்…! என்று இராமசாமி சொல்கிறார்.

ஏனென்றால் இரத்தமாக அவனுக்கு வெளியிலே போகவும் அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இப்படிப் பல குழப்பங்களில் எல்லோரும் இருக்கின்றனர். நானும் திகைத்துப் போய் இருந்தேன். எனக்கும் காட்சி கொடுக்கவில்லை.

மகாலிங்கத்தினுடைய பையனுக்கு உடனே அருள் மாதிரி வந்து குருநாதர் காட்சி கொடுத்து “நான் தான் வந்துள்ளேன்… அவனுடைய கேன்சரை ஆபரேசன் பண்ணியுள்ளேன்… அதுதான் இப்பொழுது வெளியிலே வந்திருக்கின்றது…!” என்று சொன்னதும் எல்லோருக்கும் ஒரு ஜீவன் வந்தது.

இது நடந்த நிகழ்ச்சி.

நான் ஆபரேசன் செய்த அந்தக் கேன்சர் கட்டி இப்பொழுது வெளியே வந்துள்ளது. இரத்தத்தின் மத்தியில் உள்ளது. அதை எடுத்துத் தண்ணீர் ஊற்றிக் கழுவிப் பார் என்றார் குருநாதர்.

கழுவிப் பார்த்தால் கட்டி இருக்கின்றது.

அந்தப் பையனுக்குச் சாப்பாடு எட்டு நாள் எட்டு மணி நேரம் எட்டு நாழிகை வரையிலும் கொடுக்க வேண்டும். அது இன்னார் வீட்டில் கஞ்சி வடித்திருக்கின்றார்கள் நீ போய்ப் பார்…! என்று சொல்கின்றார் குருநாதர்.

போய்ப் பார்த்தால் அதே மாதிரி கஞ்சி வடித்திருந்தார்கள்.

அந்தக் கஞ்சித் தண்ணீரைக் கொண்டு வா. அதில் இந்த விபூதியைப் போடு. அந்தக் கஞ்சியைத் தான் அவன் இத்தனை நாளைக்குச் சாப்பிட வேண்டும் என்றார் குருநாதர்.

அப்புறம் அதே மாதிரி அவனைச் சாப்பிடச் செய்தேன். அந்த எட்டு நாள் எட்டு மணி நேரம், எட்டு நாழிகை வரையிலும் அந்தக் கஞ்சியைச் சாப்பிட்டவுடன் அந்தப் பையன் எழுந்து குஷியாக விளையாட ஆரம்பித்து விட்டான்.

அங்கேதான் முதன் முதலில் ஆபரேசன் செய்து கேன்சரை நிவர்த்தி பண்ணியது. இப்படிச் சில அதிசயங்கள் அங்கே நடந்து கொண்டே இருந்தது.

டெங்கு காய்ச்சலை நீக்கச் செய்தார் குருநாதர்:-
அப்புறம் ஊரில் உள்ளவர்களுக்குக் கேட்கவா வேண்டும்…! அந்த அற்புதமான நிலைகள் அங்கே பரவுகின்றது. அந்த சமயத்தில் அங்கே எல்லோருக்கும் டெங்குக் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்தது. அனைவருக்கும் யாம் அந்த விபூதியைக் கொடுக்கவும் உடனடியாகக் குணமானது.

அப்பொழுது இராமசாமிக்கு ஓரே குஷியாகப் போய்விட்டது. பரவாயில்லை… நீ கிழவன் கூடச் சேர்ந்து சுற்றியதற்கு உனக்கு நல்ல சக்தி கிடைத்தது…! என்று எம்மிடம் சொல்கிறார்.

நோய்கள் குணமாவதைக் கேள்விப்பட்டு எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் வண்டியைப் போட்டுக் கொண்டு அங்கு வருகின்றனர். கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.

கை கால் முடமான நிலையில், குருநாதர் ஆஸ்பத்திரியில் செய்த செயல்கள்:-
அந்த சமயத்தில் இங்கு பழனியில் கங்கா பைண்டிங் அச்சாபீஸில் உட்கார்ந்து இருந்த குருநாதர் “தெலுங்கு ராஜ்ஜியம்…” என்னமோ பண்ணிவிட்டான்… அவன்தான் எனக்குக் கை கால் வராமல் பண்ணிவிட்டான்…! என்று சொல்லிக் கொண்டு ரோடு பூராம் கத்திக் கொண்டே இருந்திருக்கின்றார்.

இப்படிச் செய்தவுடன் உடனே நீ புறப்பட்டு வர வேண்டும் என்று என்னிடம் சொல்லி விட்டார் குருநாதர்.

டெலிஃபோன் ஆபீஸில் வேலை பார்க்கும் நடராஜன் என்ன செய்தான்…? கை கால் வராமல் பண்ணிவிட்டான்… அதனால் இவரை எங்கேயோ கொண்டு போங்கள்…! என்று சொல்லிவிட்டான்.

ஏனென்றால் நான் தான் ஐவர் மலைக்கு குருநாதரைக் கூட்டிக் கொண்டு போயிருந்தேன். சில அற்புதங்களைப் பார்த்தவுடன்… எல்லாம் அவருக்குத் தானே காட்டினார் குருநாதர் எனக்கு ஒன்றும் காட்டவில்லையே…! இவரை நான் எதற்குப் பார்க்க வேண்டும்…? என்று இது நடராஜனுடைய எண்ணம்.

இங்கு திண்ணையில் படுக்க வேண்டாம்…! என்று சொல்லவும் இராமசாமி என்ன செய்தான்…? குருநாதரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்து விட்டார்.

எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நீ உடனடியாக பாப்பம்பட்டியிலிருந்து வர வேண்டும் என்று என்னைச் சொல்லி விட்டார். ஆனால் இங்கு ஹாஸ்பிட்டலில் இருந்தாலும் குருநாதர் சும்மா இல்லை.

அங்கு ஒவ்வொரு பெட்டில் இருப்பவர்களையும் இழுத்து இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். கடைசியில் அவரைக் கொண்டு போய் சவக்கிடங்கு பக்கத்தில் போட்டு விட்டார்கள்.

அப்பொழுது நான் அங்கு போகவும் டாக்டர் என்ன சொல்கின்றார்…?

எப்படியாவது நீங்கள் இவரை வெளியே எடுத்துக் கொண்டு போங்கள், இங்கு பெட்டில் இருக்கின்றவர்களை எல்லாம் இழுத்து இழுத்துப் போடுகிறார் என்கிறார்.

சாவுக் கிடங்கு பக்கத்தில் போட்டவுடன் அங்கு போனாலும் இதே போல கட்டிலில் தீயை வைக்கின்றார். பிறகு நான் குருநாதரைச் சந்தித்தவுடன்… “அங்கு இருக்கும் தட்டியை எல்லாம் எடுத்துக் கொண்டு வாடா… தீயை வைத்துக் கொளுத்துடா…” என்றார்.

சாமி…! தீயை வைத்துக் கொளுத்தினால், எல்லாம் என்ன ஆகும்..,.? என்றேன் நான்.

நான் சொல்வதைச் செய்கிறேன் என்றாய் அல்லவா “கொளுத்து…” என்கிறார் குருநாதர்.

அப்படிக் கொளுத்தக்கூடிய நிலை வரும் பொழுது நான் மறுத்துக் கொண்டே இருந்தேன்.

இந்த நிலையில் அங்கு ஆஸ்பத்திரியில் சேர்ந்த ஒருவருக்கு எலும்புக்குள் ஏவல் செய்து அவருடைய காலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகள் துண்டு துண்டாக வந்து கொண்டிருந்தது. எலும்பெல்லாம் கருகி அப்படியே அழுகிக் கொண்டிருக்கின்றது. அதை டாக்டரினால் சரி செய்ய முடியவில்லை.

குருநாதர் என்னிடம்… “நீ இதைச் செய்ய வேண்டியதுதானடா…!” என்கிறார்.

செய்கிறேன் என்று நானும் குருநாதர் சொன்ன முறைப்படி சில நிலைகளைச் செய்தவுடன் அந்தக் கறுப்பு இரத்தம் நின்று நல்ல இரத்தம் வந்தது.

உடனே… டாக்டரைக் கூப்பிடுடா…! அவனை அழைத்துப் பான்டேஜ் போட்டுக் கட்டுடா சரியாகிப் போகும்…!” என்றார் குருநாதர்.

அப்பொழுது நான் சென்று நல்ல இரத்தம் வருகிறது என்று டாக்டரிடம் சொன்னவுடன் அவருக்கு மிகவும் குஷியாகிவிட்டது.

இது என்னால் முடியாதது, இப்பொழுது சரி ஆகிவிட்டது என்றார் டாக்டர்.

1.அதிலிருந்து வெளி வந்தது ஒரு தாயத்து.
2.அவர் உடலில் எலும்புக்கு நடுவில் இதை வைத்து ஏவல் பண்ணி வைத்திருக்கிறார்கள்.

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். சொத்தைப் பறிப்பதற்கு அவன் மேல் இருக்கும் பொறாமையில் ஏவல் செய்து விட்டார்கள். இந்த நிலையில் சொத்தையும் இழந்தான். இப்பொழுது அனாதையாக நிற்கிறான் யாரும் அவனைக் கவனிக்கவில்லை என்று சொல்லி இவனை எல்லாம் யார் காப்பாற்றுவது…? என்று கேட்டார் குருநாதர்.

அவருக்கு நன்றாக ஆனவுடன் டாக்டருக்கும் ஒரே சந்தோஷம். இப்படி எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது என்ன செய்கின்றார் குருநாதர்…?

குருநாதர் என்னிடம்… அந்த தட்டியெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து தீயை வைத்துக் கொளுத்தச் சொல்கிறார். தீயை வைத்துக் கொளுத்தச் சொன்னால் அங்கிருப்பவர்கள் எல்லாம் சும்மாவா இருப்பார்கள்…?

உடனே டாக்டர்… நாயுடு நீ இந்த மாதிரி எல்லாம் இங்கே செய்யக்கூடாது, உங்கள் குருநாதரை உடனே இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்…! என்று சொல்கிறார்.

ஆனால் குருநாதர் என்ன சொல்கின்றார்…? “ஏன்டா…? என்னைக் கூட்டிக் கொண்டு போவதற்காகவா இதைச் சொல்கிறேன்…! என்றார்.

ஓடாத ஆட்டோவை ஓட வைத்தார் குருநாதர்:-
அப்பொழுது பாட்ஷா என்ற ஆட்டோ ஓட்டுபவரிடம் சென்றேன். அவர் எனக்கு நண்பர். கொஞ்சம் ஆட்டோ கொண்டாப்பா. குருநாதரைப் பாப்பம்பட்டியில் ரைஸ் மில் வைத்திருக்கும் ராமசாமியின் தோட்டத்தில் கொண்டு போய் வைத்துக் கொள்கிறேன் என்றேன்.

ஆட்டோ ரிப்பேராக இருக்கின்றது என்றார் அவர். சரி செய்தால் தான் எடுக்க முடியும். கொஞ்சம் காசு கொடுத்தால் சரி செய்யலாம் என்கிறார்.

என்னிடம் ஒரு காசும் இல்லை… நீ பாப்பம்பட்டி வரை கொண்டு வந்து விட்டால் நான் அங்கு வந்து காசு வாங்கித் தருகிறேன் என்றேன்.

ரிப்பேர் செய்து தான் எடுத்து வர முடியும் என்று சொல்லிக் கொண்டிருந்த அவருக்குத் திடீரென்று ஒரு அசரீரி போல் வந்தது.
1.அட… ஆட்டோ ஓடும்…! என்று நான் அவனிடம் சொன்னேன்.
2.ஓடும்… ஓடும்… ஓடும்…! என்று விசித்திரமாகச் சப்தம் வருகின்றது.
3.அவன் காதிலேயே “ஓடும்… ஓடும்… ஓடும்…” என்று கேட்டவுடன்
4.சரி நான் ஓட்டித்தான் பார்க்கிறேன் என்று சொல்லிப் பெட்ரோல் வாங்கிப் போட்டவுடன், ஆட்டோவும் ஸ்டார்ட் ஆகியது.

நானும் அவனுமாகச் சேர்ந்து குருநாதரை ஆஸ்பத்திரியில் இருந்து தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ராமசாமியின் தோட்டதுக்கு வந்தோம். அவரது தோட்டம், ஒரு பத்து ஏக்கர் இருக்கும் வெறும் கரும்புத் தோட்டம்.

அந்தத் தோட்டத்திற்குள் குருநாதரைப் படுக்கச் சொல்லி வைத்தவுடன், குருநாதர் என்ன செய்கிறார்…?

கரும்புக் காட்டில் தீ வைத்தார் குருநாதர்:-
அந்தக் கரும்பு ஆலையில் வைத்திருக்கும் பொருள்களை எல்லாம் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு “திருடன்… திருடன்…” எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டான். பூராவற்றையும் திருடி விட்டான் என்று பேசுகிறார், குருநாதர்.

நான் எங்கே திருடினேன்…? ஏதாவது மறந்தால் போல இங்கு வைதிருப்பேன் என்று நான் சொன்னேன்.

குருநாதர்… இல்லை…! இவன்தான் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டான் என்கிறார்.

இப்படிச் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று என்ன ஆகிவிட்டது…? அந்தக் கரும்புச் சோகை எல்லாம் தீ பிடித்தது. இந்த மாதிரி ஆனவுடன் குருநாதர்… தீயை வைத்து விட்டான் தீயை வைத்து விட்டான் என்று என்னைச் சொல்கின்றார்.

பார்த்தோம் என்றால் பத்து ஏக்கரும் பொசுங்கிப் போகும் என்ற நிலையில் ஆகிவிட்டது. இவன் தான் எல்லாவற்றிற்கும் காரணம்…! என்கிறார் குருநாதர்.

என்ன இது வம்பாகப் போய்விட்டது…? சும்மா இருக்கும் போது இப்படி எல்லாம் சொள்கிறார். சுற்றி எல்லாம் நெருப்பாகிப் போனது… வேறு வழி இல்லை.

இவன் தான் செய்கிறான்… இவன் தான் எரிக்கிறான்… இவன் தான்…! என்று என்னைச் சொல்கிறார்.

எனக்கு எப்படி எரிகின்றது…? என்றே தெரியவில்லை என்றேன். அப்பொழுது அங்கு இருந்தவர்கள் எல்லாம் கூட்டமாகக் கூடி விட்டார்கள்..

குருநாதர் என்னைப் பார்த்து… நீ இதை அவிடா…! என்றார். “அவிடா…” என்று சொன்னவுடன்
1.குருநாதர் என்னை அழைத்துக் காதில் ஓதுகிறார்.
2.ஓதியவுடன் இதை அவித்து விடுடா…! என்று சத்தமாகச் சொன்னவுடன் எல்லாம் அப்படியே “கப்…” என்று அடங்கி விடுகிறது.

அவன் தான் வைத்தான் அவன் தான் தீயை வைத்திருக்கிறான் என்று சொல்கிறார். எல்லாம் இவன் செய்த வேலைதான் என்கிறார் குருநாதர்

இந்தக் கல்யாணம் நடக்காது…! என்று சொன்னார் குருநாதர்:-
இப்படி இருக்கவும் நான் குருநாதரை ஐவர் மலைக்குக் கொண்டு போகலாம் என்று சொன்னேன். அங்கு ஒரு முருகன் கோவில் இருக்கிறது. அருகில் இராமலிங்க அடிகள் மண்டபத்திற்குப் பக்கத்தில் ரூம் இருக்கின்றது. அங்கு இருங்கள் என்றார் ராமசாமி. சாப்பாடெல்லாம் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கூட இரண்டு பேரையும் அனுப்பி வைத்தார்.

ஐவர் மலையில் ஏறும் போது என்னால் எப்படிடா ஏற முடியும்…? நான் கை கால் வராமல் இருக்கிறேன். நான் எப்படிடா ஏறுவேன்…? என்று கேட்கின்றார், குருநாதர்.

குருநாதர் எம்மிடம் கையை வைடா என்றார். கையைக் கீழே வைத்தவுடன் கையில் ஏறி உட்கார்ந்து கொண்டு “எழுந்திரிடா…” என்கிறார்.

எப்படி சாமி இந்தக் கையில்…? என்று கேட்டேன்.

நான் தான் சொல்கிறேன் அல்லவா…? எழுந்திரிடா… உனக்குச் சக்தி கொடுத்திருக்கின்றேன்…! என்று சொல்லிக் கொண்டு கையில் உட்கார்ந்து “தை.. தை… தை…” என்று குதிக்கின்றார். மேலே மலையில் ஏறச் சொல்கிறார்.

கொஞ்ச தூரம் சென்றதும்… நான் “சாமி… கை வலிக்கின்றது…!” என்றேன்.

சொன்னவுடன் கீழே இறக்கி விடு என்று சொன்னார். கூட இரண்டு பேர் வந்தவர்களிடம் தூக்கச் சொல்கின்றார். ஆனால் அவர்களால் குருநாதரைத் தூக்கவும் முடியவில்லை… மேலே ஏறவும் முடியவில்லை..

ஏன்டா…? அவன் ஒரு கையில் தூக்கினான். நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து என்னைத் தூக்க முடியாதா…? என்று வழியில் “ஒரே கலாட்டா பண்ணுகின்றார் குருநாதர்…!”

அப்புறம் ஒரு வழியாக மேலே ஏறிப் போகவும்… படி மேலே ஏறினால் “அந்தப் படியில் போகாதே நீ என்னைக் கீழே உருட்டிவிடுவாய்… இந்த வழியில் போடா…!” என்கிறார் குருநாதர்.

பெரிய வம்பு பண்ணி எல்லாம் மேலே ஏறிப் போனோம். மேலே போனவுடன் அங்கு ஒரு கல்யாணக் கூட்டம் வந்தது. குருநாதர் அவர்களிடம் “இந்தக் கல்யாணம் நடக்காது…” என்று அங்கேயும் பெரிய தகராறு செய்கிறார்.

அவர்கள் எல்லோரும் சேர்ந்து குருநாதரை உதைக்க வருகிறார்கள்.

உடனே நான்… “ஐயா…! அவர் ஏதோ சொல்கிறார் நீங்கள் குற்றமாக நினைக்காதீர்கள்…!” என்றேன் நான்.

அதற்கு குருநாதர்… ஏன்…? யாருடா…! என்னடா தெரியாமல் சொன்னது…? என்று சொல்லி “மீண்டும் இந்தக் கல்யாணம் நடக்காது…” என்கிறார்.

ஏனென்றால் ஏற்கனவே பெண்ணைக் கூப்பிட்டு வரும் இடத்தில் தகராறு. அங்கே சொந்த மாமன்காரன் விடமாட்டேன் என்கிறான். கல்யாணம் செய்ய அவர்கள் வந்தார்கள் என்றால் வெட்டி விடுவேன் என்று சொல்கிறான்.

இந்த அளவில் அங்கு தகராறு நடக்கின்றது. இதைச் சொல்கிறார் குருநாதர்.

இவர்கள் அது எப்படிக் கல்யாணம் நடக்காது…? மாப்பிள்ளை எல்லாம் வந்தாகி விட்டது, பொண்ணு எப்படி வராமல் போகும்…? அது வந்து கொண்டிருக்கின்றது…! என்கின்றார்கள்.

ஆனால் குருநாதர் சொன்ன மாதிரியே நடந்தவுடன் அவர்களுக்கு என்ன ஆனது…? இது பெரிய சமாச்சாரம்…! அங்கே நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம், அப்படியே சொல்கிறார். அவரைப் பைத்தியமாகத்தான் நினைத்தோம்…! என்று அடிக்க வந்தவர்களெல்லாம் குருநாதர் காலில் விழுந்து கும்பிட ஆரம்பித்தார்கள்.

“என்னைக் காப்பாற்றுடா” என்கிறார் குருநாதர்:-
அங்கு மேலே போனவுடன் படுத்துக் கொண்டோம். எனக்குப் பயமாக இருக்கிறது… நீ என் பக்கத்தில் படுத்துக்கொள்…! என்றார் குருநாதர். இரவு பனிரெண்டு மணி இருக்கும்.
1.கை கால் வராமல் முடமாக இருந்தவர் எழுந்து நடக்கிறார்… சாதாரணமாக நடக்கின்றார்…!
2.நடந்து போய் அங்கு ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும் அங்கு போய் உட்கார்ந்து கொண்டார்.
3.அவர் செய்வதை நான் முழித்துப் பார்த்து கொண்டே இருந்தேன்.

அங்கே போனவுடன்… “தெலுங்கு ராஜ்ஜியம் இங்கே வாடா…! என்னை எவனோ தூக்கிக் கொண்டு வந்து இங்கே வைத்துவிட்டான் வந்து தூக்குடா…! என்கிறார்.

இரவு நேரத்தில் அங்கே போய் என்ன செய்வது…? சறுக்கலான பாறை…! அப்பொழுது காலையில் விடிகின்றது. அந்த நேரம் அங்கே பார்த்தால், சறுக்கலான இடத்தில் கோயிலில் சென்று உட்கார்ந்திருக்கிறார்.

அந்த இடத்தில் இருந்து கொண்டு என்னைக் காப்பாற்றுடா… என்னைக் காப்பாற்றுடா… என்கிறார். சறுக்கலான பாறையில் பிடிக்க முடியாத இடத்தில் இருக்கின்றார்.

இன்னும் அந்த வழுக்குப் பாறை அங்கே இருக்கின்றது. நான் எப்படி சாமி வர முடியும்…? என்று கேட்டேன். பின் வேஷ்டியைக் கட்டி இதைப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு கீழே போய்க் கொண்டே இருக்கின்றார். நீ வந்து என்னைக் காப்பாற்றுடா…! துண்டு வேஷ்டி எல்லாம் என்னைக் காப்பாற்றாது..! என்கிறார் குருநாதர்.

சாமி…! வேஷ்டியையும் பிடித்துக் கொள்ளுங்கள்… நானும் பிடித்துக் கொள்கிறேன் என்றாலும் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது நான் ஒரு பக்கம் இருந்தாலும் என்னை வழுக்கிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு போகின்றது..

குருநாதர் “என்னை காப்பாற்றுடா…!” என்கிறார்.

சாமி… நான் கீழே போய்த்தான் காப்பாற்ற வேண்டும். கீழே விழுந்தால் நொறுங்கித் தூள் ஆகிப்போகும். அங்கு போய்த்தான் காப்பாற்ற வேண்டும் என்றேன்.

இது நடந்த நிகழ்ச்சி.

ஏறு சிங், இறங்கு சிங் பார்த்திருக்கிறாயாடா…? என்று கேட்டார் குருநாதர்
அப்பொழுதுதான் அதிகாலை விடிகின்றது. கீழே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்தது.
1.உடனே குருநாதர்… “ஏறு சிங்.. இறங்கு சிங்…” என்று நீ பார்த்திருக்கிறாயாடா…? என்றார்.
2.சாமி… இப்பொழுது நான் இறங்கு சிங்கில் கீழே போய்க் கொண்டு இருக்கிறேன்.
3.செத்த பிற்பாடு உடலிருந்து உயிர் ஏறு சிங்காக மாறிவிடும். அதிலே வேண்டுமென்றால் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் சாமி…! என்றேன்.

ஏன்டா நான் சொல்கிறேன்… நீ எதிர்த்துப் பேசுகின்றாயா…? என்றார் குருநாதர்.

பார்த்தால் அந்த இடத்தில் வைத்துக் குருநாதர் பல நிலைகளில் பல அற்புதங்களைக் காட்டுகின்றார். இந்த உலக நிலைகளையும் மற்ற நிலைகளையும் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.

“இப்பொழுது நீ இந்த உலகத்தைப் பாருடா…!” என்கிறார்.

எங்க சாமி பார்ப்பது…? இன்னும் கொஞ்ச நேரத்தில் போய் எல்லாம் அடங்கிவிடும் போல் இருக்கின்றது…! என்றேன் நான்.

நீ உலகத்தைப் பாருடா என்றால்… எங்கடா நீ அடங்கிவிடும்…? என்று சொல்கின்றாய் என்று இப்படி வாதம் பண்ணிக் கொண்டே இருக்கின்றார் குருநாதர்.

அப்படியே பாறையில் நெஞ்சோடு தேய்த்து இரத்தம் வடிகின்றது. வழுக்குப் பாறையாக இருப்பதால் அப்படியே என்னைக் கீழே கொண்டு போகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் “போய் விடுவோம்…” போலத் தெரிகின்றது.

“நீ இதைப் பார்… உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்…” என்று என்னென்னமோ அதிசயங்களை எல்லாம் காட்டுகின்றார் குருநாதர்.

சாமி…! இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் போய்ப் பார்க்கப் போகின்றேன்… அது வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்…! என்றேன் நான்.

ஐவர் மலையில் வைத்துத்தான் முழுமையான சக்தியைக் கொடுத்தார் குருநாதர்:-
அதற்குப்பின் எத்தனையோ உணர்வுகளை ஊட்டுகிறார்… உலக நிலைகளைக் காட்டுகின்றார். இந்த மரண நிலைகளில் வைத்துத் தான் கொடுக்கிறார்.

முழுமையான சக்தியை அங்கே ஐவர் மலையில் வைத்துத் தான் கொடுத்தார் நமது குருநாதர்.

அந்தக் காலையில் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். குருநாதர் அங்கிருந்து எழுந்து வந்து என்ன செய்தார்…?

1.சிவ தாண்டவம் ஆடுகிறார்…!
2.ஒரு பெரு விரலில் நின்று கொண்டு அப்படியே “கிறு…கிறு…கிறு…” என்று பம்பரம் போல் சுற்றி அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார்.
3.எல்லா வேலைகளையும் செய்கின்றார் குருநாதர்.

நீ பல உண்மைகளை அறிவாய்… பல நிலைகளைப் பெறுவாய்…! இந்த உலகம் எப்படி இருக்கிறது…? என்று நீ அறியும் தன்மை பெறுவாய், அதை எப்படிக் காக்க வேண்டும்…? என்று இந்த இடத்தில் வைத்து மரண வாயிலில் வைத்து இந்தச் சக்திகளைக் கொடுக்கிறார்.

1.யாராவது தப்பு செய்தால் கூட என்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை.
2.அதைச் செய்தால் இந்தச் சக்தி விரயம் ஆகும்.
3.அந்த விரயம் ஆகும் நிலைக்குக் கொண்டு செல்லாமல் உருவாக்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார் குருநாதர்.

இப்படித்தான் ஏதேதோ செய்யும்படி பல நிலைகளைச் செய்து
1.“அது சொல்வதற்கில்லை…!” இப்படி எண்ணிலடங்காத நிலைகளைச் செய்து தான் எனக்கு இந்த வாக்குகளைக் கொடுத்தார் குருநாதர்.
2.நமது அகண்ட அண்டமும் பேரண்டமும் எப்படி இயங்குகிறது…? என்ற உண்மைகளை எல்லாம் கொடுக்கிறார்.
3.நமது பிரபஞ்சமும், 27 நட்சத்திரங்களும் எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்பதை நேரடியாகப் பார்த்தால் எப்படி இருக்கும்…!

மரண வாயிலில் வைத்துத்தான் இந்த அற்புதங்களை… பார்க்காத காட்சிகளை எல்லாம் காட்டுகிறார் குருநாதர். ஏறு சிங் இறங்கு சிங் என்று சொல்லி இந்த ஆட்டங்களைக் காட்டி அப்புறம் என்னை எழுப்பி விடுகிறார் குருநாதர்.

மற்றவர்கள் பார்க்கும் போது கால் முடமாக இருப்பது போல இருக்கிறார். அவரைப் பைத்தியம் என்று தான் நினைத்தார்கள். அதனால் காலை முடக்கிக் கொன்டார். ஆனால் அந்த உண்மையின் தன்மையை எமக்குக் கொடுத்து இங்கு நடனம் ஆடுகிறார்.

குருநாதர் ரசமணி செய்வார்… தங்கத்தைச் செய்வார். இந்தச் சரக்குகளைச் செய்தால் அது சரியாகும். தங்கத்திற்காக என்று குருநாதரிடம் ஆசைப்பட்டு அணுகியவர்கள் ஏராளமானோர்.

ஆனால் இதிலிருந்து ஒடுங்கப்பட்டுத் தனித்தன்மையாக எனக்கு ஐவர் மலையில் வைத்துத்தான் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

அப்புறம் அங்கிருந்து புறப்பட்டு இன்றைக்கு வரையிலும் அவர் சொன்ன உண்மையின் நிலைகளைச் செய்கிறேன். அவர் இருக்கும் பொழுதே பல காடுகள் பல மேடுகள் எல்லாம் அலைந்து பார்த்தேன். இருந்தாலும் உண்மையெல்லாம் எமக்குத் தெளிவாகத் தெரிந்த்து இந்த ஐவர் மலையில் தான்.

அந்த உண்மையின் உணர்வு வந்தபின் குருநாதர் என்ன செய்வார்…?

சில இடங்களில் சில மரங்களை கற்களை எடுத்து… “இப்படிச் சொன்னால் அது தூக்கி மேலே போகும்…? அந்தப் பக்கம் தூக்கி வீசுவது என்ற இந்த மாதிரி உணர்வுகளையும் குருநாதர் காட்டுவார்.

அப்பொழுது இந்தச் சக்தி வரும் போது எனக்கு ஒரு திமிர் ஏற்படுகிறது.

ஒரு மரத்தைத் தூக்கி வீசும் பொழுது நம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். ஓர் எதிரி இருந்தால் அவனை வீழ்த்தக்கூடிய சக்தி நமக்கு இருக்கிறது என்று இப்படித்தான் எனக்குச் சிந்தனை வருகிறது.

அதை எப்படி நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும்…? என்று அந்தந்தச் சமயங்களிலெல்லாம் குருநாதர் ஒவ்வொரு உணர்வின் நிலைகளையும் உபதேசித்தார்.

இன்று வரையிலும் எம்மை குருநாதர் எப்படிக் கொண்டு வந்தாரோ அதே போல மற்றவர்களையும் கொண்டு வர வேண்டும் என்றுதான் விரும்புகின்றேன்.

இத்தனை பெரிய சிரமங்களைக் கடந்து, இந்த உலகம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையும் இந்த உடலுக்குப்பின் என்ன…? என்ற நிலையும் பிறவி இல்லா நிலைகள் எப்படி அடைய வேண்டும்…? என்ற உண்மைகளை எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

1.அந்த நிலையில்… எது எது உன்னைச் சந்திக்கும்…?
2.அந்த ஆசையின் நிலைகள் உனக்கு எப்படித் திரும்பும்…?
3.அல்லது ஆசையின் நிலைகள் உனக்குள் திரும்பும் போது உன்னை எதிரி என்ற நிலையில் உன்னைத் தாக்கும் உணர்ச்சி வரும்.

அந்தக் கடுமையான உணர்வை ஏற்றினால் உன்னையும் ஆட்கொண்டு உனது நல்ல குணங்களைக் கொல்லும். அவனையும் காக்க முடியாது. இப்படிக் கடுமையான சோதனைகள்.

போகும் பக்கம் எல்லாம் எதிர்ப்புகள் வரும். நாய் கூடக் கடிக்க வரும், அப்பொழுது என்னென்ன செய்வது…? என்று முதல் அனுபவத்தைக் கொடுத்தார்.

இப்படித்தான் இருபது வருடம் அனுபவம் பெற்று உலகம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையைக் காடு மேடெல்லாம் சென்று நான் அறிந்தேன்.

உங்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு நேரத்திலும் நான் பட்ட அவஸ்தைகள் இன்னதென்று சொல்ல முடியாது.

நீங்கள் அனைவரும் அகஸ்தியனைப் போன்று அருள் ஞானிகளாக உருவாக வேண்டும்:-
நீங்கள் இதைப் பேணிக் காத்து எல்லோருக்கும் இந்த உன்மையை உணரும் தன்மை பெறச் செய்ய வேண்டும். நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சலைகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தியாக வளர வேண்டும்.

அதே சமயத்தில்
1.என்னுடைய ஆசை… நீங்கள் அனைவரும் என்னைப் போல் பெரும் ஞானிகளாக மாற வேண்டும்.
2.பிறருடைய தீமைகளைப் போக்கும் மகான்களாகத் தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர
3.இந்த உடலின் இச்சைக்கு மாறி விடாது உங்களைக் காத்து நல் வழியில் கொண்டு வருவது தான் என்னுடைய முழுமையான தியானம்.

நீங்கள் முழுமை பெற்றால்தான் இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அதைத்தான் இப்பொழுது மிகவும் வலுப்படுத்துகின்றேன்.
1.இந்தச் சக்தி பெற்ற நீங்கள் யாம் இப்பொழுது உபதேசித்த உணர்வுகள் கொண்டு
2.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும் வழி காட்டுதல் வேண்டும்.
3.உங்களை அறியாது உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? அதில் இருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும் என்று உபாயத்தைக் கூறி
4.அந்தப் பதிவின் நிலைகளை அவர்களுக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அந்தப் பதிவின் நிலைகள் அவர்களுக்குள் வளர்ந்து அந்த எண்ணத்தால் தீமையிலிருந்து அவர்கள் விடுபடுவதும்… தீமை செய்தவர்கள் திருத்திக் கொள்வதும்… நன்மை செய்யும் உணர்வு உள்ள மக்களாக அவர்களை மாற்றும் திறன் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத் தான் யாம் இதைச் சொல்வது.

அந்த முழுமையின் தன்மைகளை நாம் எல்லோரும் அடைதல் வேண்டும். இதுதான் நமது லட்சியமே. இந்த லட்சியத்தின் நிலைக்கு வரும் போது
1.செல்வத்தை நாம் தேடிப் போக வேண்டாம்… செல்வம் தன்னாலே வந்து சேரும்.
2.செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அதனுடைய ஆசையின் நிலைகள் உடல் பற்று தான் வரும்.
3.ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் எல்லோரும் அந்த அகஸ்தியனைப் போன்று
4.உலகைக் காக்கும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.

எமது அருளாசிகள்.