மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “ஆயிரம் முறை” சொல்லுங்கள்

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “ஆயிரம் முறை” சொல்லுங்கள்

 

நம்மை அறியாதபடி உள் புகுந்து நம்மை கவலைப்படச் செய்வதற்கும்… நம்மை அறியாத உள் புகுந்து வேதனையான சொல்களைச் சொல்லச் செய்வதற்கும்… சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகளே… (குணங்கள்) காரணமாகின்றது.

அத்தகைய வேதனைகள் வளர்ந்தால் உடலில் கடும் நோயாகின்றது.

ஆனால் நாம் அதைத் தடைப்படுத்தி… மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி… என்றும் நிலை கொண்ட நிலைகளில் அதைப் பற்றுடன் பற்றி… அந்தப் பற்றின் நிலைகள் கொண்டு ஏழாவது நிலையான ஒளியின் சரீரம் பெற முடியும்.

மறவாதீர்கள்…!
1.எந்த நோய் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “ஆயிரம் முறை சொல்லுங்கள்…”
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

உங்கள் உடலுக்குள் இது பெருகப் பெருக நோயின் தன்மை குறையும். மகரிஷிகளின் அருள் சக்தியால் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
1.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனான உயிரை நீங்கள் கேட்டுக் கொண்டால்
2.நாம் எதைக் கேட்டோமோ அந்த உணர்வின் அலையாக அவன் (உயிர்) நமக்குள் படரச் செய்வான்
3.நம்மை அறியாத உள் புகுந்த தீமைகளை அது நீக்கும்.

மறவாதீர்கள்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள். உங்கள் ஈசனான உயிரிடம் வேண்டுங்கள். தீமைகளை அகற்றிட எண்ணும் பொழுது தீமைகளை அகற்றிடும் செயலாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிடம் விளைகின்றது.

மறவாதீர்கள்…! ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சக்தி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் பிறவிக் கடலைக் கடந்து சென்ற அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்து… அதைப் பற்றுடன் பற்றி இந்த உடலே ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.

சிவன் இராத்திரி உயிர் உடல் பெற்ற நாள்…! அந்த உடல் பெற்ற நாள் என்றால் அந்த உடலுக்குள்ளே “நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் மறைந்தே இருக்கின்றது…”

இருளுக்குள் மறைந்த அந்த உணர்வின் ஆற்றலை அறிந்துணர்ந்து செயல்படும் அடுத்த நிலை தான் நாம் மனிதனாக வளர்ந்த நிலை. மனிதனாக வளர்ந்த நிலையில் இந்த உடலை விட்டு அகன்ற பின் உத்தராயணம்…! அது முருகனுக்கு உகந்த நாள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நமக்குள் மாற்றி அமைக்கும் உத்தராயண நேரத்தில் “பங்குனி உத்திரம்…” என்று அங்கே காட்டுகின்றார்கள்.

அதாவது ஆறாவது அறிவின் துணை கொண்டு ஞானிகள் சென்ற வழியில் நம் நினைவாற்றல் அங்கே சென்று இந்த உடலை விட்டு அகன்ற பின் பிறவியில்லா நிலை அடைவது தான் உத்தராயணம்.

1.இந்த உடலின் தன்மை நமக்கு நமக்கு வேண்டாம்
2.உயிருடன் ஒன்றி ஒளி நிலைகள் பெறுவதே நமக்கு வேண்டும்.

பங்குனி உத்திரம் – ஆறாவது அறிவின் துணை கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி மெய் ஒளியுடன் ஒன்றி மெய் ஒளியின் சரீரம் பெறும் நன்னாள்தான் அது.

தாம்பத்ய சக்திக்குண்டான உண்மை நிலை என்ன…?

தாம்பத்ய சக்திக்குண்டான உண்மை நிலை என்ன…?

 

சப்தரிஷிகளாலும் சித்தர்களாலும் போற்றப்பட்டு வணங்கப்பட்ட உயர் சக்தியின் நிலைகள் எல்லாம் ஊன்றிப் பார்த்தால்
1.ஒவ்வொரு சப்தரிஷியும் தன் சக்தியால் வணங்கப்படும் தெய்வங்கள்
2.பெண்மை உருவங்களாகத் தான் இருக்கும்.

ஆகவே பராசக்தியையும் ஆதி சக்தியையும் பெண்மையின் சக்தியாக வணங்கும் நிலை என்ன…?

ஒவ்வொரு சப்தரிஷியின் உயர்ந்த சக்திக்கும் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அவர்களின் ஆரம்பகால தாம்பத்ய வாழ்க்கையின் உணர்வின் எண்ண மோதலின் ஒன்றுபட்ட உயர் சக்தியின் வழித் தொடர் பெண்மையின் சக்தி கொண்டு தான் ஆண் வலுப் பெற்று ரிஷியாக சப்தரிஷியாக உயர்ந்தான்.

1.ஜீவனற்ற… ஜீவனை வளர்க்கும் சக்தியற்ற நிலை…
2.அமில குண ஆண்மைக்கு வலுத் தந்த சக்தியே
3.இத்தாம்பத்ய எண்ண வலு பெண்மையின் ஜீவ வளர்ச்சி வாழ்க்கையின் கூட்டினால் தான்…!

இக்கலியிலும் ஆதாம் ஏவாள் என்று உணர்த்திய மனித இன வளர்ச்சியின் செயல் முறையும் இதன் உண்மை கொண்டு தான்.

அமிலமான சிவ உருவம் கொண்டு திருவள்ளுவருக்கு வாசுகி அம்மையாரின் உயர் ஞான ஈர்ப்புக் கரு அமில செயல் சக்தி கூடித் தான்
1.அவர் (வாசுகி) வளர்த்த ஞானக் கருவை இவர் உருவில் வெளிப்படுத்தி
2.இன்றளவும் வள்ளுவனையும் வாசுகியையும் போல் என்று
3.பெரியோர்களின் வாழ்த்தாக அமையப் பெற்ற வாழ்த்தின் சொல்லின் உண்மை இதுவே…!

பெண்மையின் கரு வளர்ச்சியினால் உயர் இன வளர்ச்சியின் வித்தை உருவாக்க முடிகின்றது. ஒரு சித்தர் தன் பாடலில் “பூவையரை அன்னையெனப் புகழ்ந்தாய் போற்றி…!” என்றும் உணர்த்தியுள்ளார்.

அதன் உட்பொருள் என்ன…? படைப்பின் படைப்பே
1.பூவையரை அன்னையாகக்கூடிய செயலுக்கு
2.இந்த மனிதக் கரு இன வளர்ச்சியைப் பெருக வைத்து
3.உயர் சக்தியை வளர்க்க செயலாக்க வழி தந்த படைப்பிற்கே
4.பூவையரை அன்னையாகும் வளர்ச்சியைத் தந்ததற்காகப் போற்றி வணங்கினார்.

அதே போல் மகாத்மா காந்திக்கு வலுத் தந்ததே அவரின் மனையாளான கஸ்தூரிபா காந்தியின் பக்தி மார்க்க வழி முறை தான்.

பூவையரின் சுவாச அலையே “கரு வளர்ச்சி” அலை. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் ஈர்ப்பலைக்கு வீரிய சக்தி உண்டு. ஆனால்
1.சிவனான அமிலமுடன் மோதுண்டு வெளிப்படும் சக்தியில் தான்
2.அச்சக்திக்கே சக்தி கிடைக்கின்றது.

மனித இன வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வு நிலைக்கொப்ப ஒன்றுடன் ஒன்று இந்த எண்ணத்தின் செயல் இணையும் பொழுது தான் படைப்பு முழுமையாகின்றது.

பாவாகவும் ஊடையாகவும் நூற்பு நெய்யப்படும் துணியைப் போல் இரண்டு நிலைக்குள்ள எண்ணங்கள் ஒன்றாக இணைந்து மோதுண்டு இந்தத் தாம்பத்ய எண்ண உணர்வில் அமில பிம்ப சிவ ஊடைக்கு சக்தி ஈர்ப்புப் பாவாய் இந்தத் தாம்பத்ய நிலை அமைந்து
1.பெண்மையின் உயர் வழியைச் செயல் கொள்ளும் ஆண்மையின் நிலையில் தான்
2.இந்தப் பூமியின் உயர் ஞானங்களும் சித்து நிலைகளும் சப்தரிஷியின் நிலையும் உருவானதே…!

தாய் கருவிலே பூர்வ புண்ணியம் பெற்றவர்கள் தான் “எம்முடைய உபதேசங்களைக் கூர்ந்து பதிவாக்குவார்கள்…”

தாய் கருவிலே பூர்வ புண்ணியம் பெற்றவர்கள் தான் “எம்முடைய உபதேசங்களைக் கூர்ந்து பதிவாக்குவார்கள்…”

 

1.மனிதனாக உருப்பெறக் காரணமாக இருந்த நம் தாய் தந்தையரை முதலில் கடவுளாக மதித்துப் பழகுதல் வேண்டும்.
2.ஏனென்றால் எத்தனையோ தொல்லைகள் பட்டுத்தான் அவர்கள் மனிதனாக ஆனார்கள்.

நாம் ஈயாக எறும்பாக பாம்பாக தேளாக இருந்திருப்போம். அதை அடித்திருப்பார்கள். நம் உயிர் அவர் உடலின் ஈர்ப்பிற்குள் சென்றிருக்கும். அவர் உடலில் சேர்த்த உணர்வைக் கவர்ந்தது நம் உயிர். நம் உயிர் அவர் உடலுக்குள் சென்று அவர் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கவர்ந்தது.

கவர்ந்து வளர்ந்து அவருடைய கருவாக நாம் உருவானாலும் அவர் கருவில் இருக்கக்கூடிய காலத்தில்
1.அவர்கள் நல்லதைப் பற்றி ஏங்கி இருந்தால்
2.நல்ல உணர்வுகள் சேர்த்து நல்ல உடலை உருவாக்கும்.

ஆனால் நாம் கருவிலே இருக்கப்படும்போது வேதனையும் துயரமும் அதிகமாக அந்த உணர்வின் தன்மைகளைத் தாய் எடுத்திருந்தால் நம் உடலில் பல நோய்களும் ஊனமான உடலும் உருவாக்கும் தன்மை வருகின்றது.

ஆக நம்முடைய சந்தர்ப்பம் கருவில் இருக்கும்போது தாய் எடுத்துக் கொண்ட உணர்வுக்குத்தக்கத்தான் நம்மை நல்ல மனிதனாக உருவாக்கியது… சிந்தித்துச் செயல்படும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

நாம் கருவில் இருக்கும்போது தாய் எடுத்த உணர்வால்தான் நாம் நல்லவராகவும் சிந்திக்கும் தன்மையும் இப்பொழுது இதைப் போன்ற நல்ல உபதேசங்களைக் கேட்கும் அருளும் நமக்குள் வலுக்கொடுத்தது.

எந்தத் தாய் அவ்வாறு எடுத்ததோ…
1.அப்படிப்பட்ட தாய் உடலில் வளர்ந்த உணர்வு கொண்டவர்கள் இருப்பின்
2.அவர்கள் தான் இந்த உபதேசத்தைக் கேட்பார்கள்… கூர்ந்து கவனித்து எடுத்துக் கொள்வார்கள்.

அந்த உணர்வின் தன்மை இருந்தால் தான் இதைக் கவர முடியும்.

அப்படிப்பட்ட உணர்வுகள் (தாய் கருவில் பெற்ற நிலைகள்) இல்லை என்றால்
1.கேட்பார்கள்… படிப்பார்கள்…
2.தனக்கு வேண்டியதை எதிர்ப்பார்ப்பார்கள்
3.அது இல்லை என்றால் போய்க்கொண்டே இருப்பார்கள்.

அந்த நல்ல உணர்வுகள் பெற வேண்டுமென்று உணர்வின் தன்மை அன்று தாய்க் கருவில் பெற்ற நிலை தான் இன்று உங்களை இங்கு அமர்ந்து கேட்கும்படி… கூர்ந்து கவனிக்கும்படிச் செய்கின்றது.

ஆகவே எத்தனையோ தொல்லைகள் இருப்பினும் எத்தனையோ துயரங்கள் இருப்பினும் மெய் உணர்வை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்தியது உங்கள் தாயே. அதனால் அந்தத் தாயை நீங்கள் கடவுளாகவும் தெய்வமாகவும் மதித்துப் பழகுதல் வேண்டும்.

எத்தனை இன்னல் வந்தாலும் ஒவ்வொரு நொடியிலேயும்
1.நம்மை எத்தனையோ வகையில் காத்தருளிய தெய்வம் நம் தாய் தான்.
2.நமக்கு நல்ல வழி காட்டிய குருவும் தாயே.

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தாயை மதித்து நடந்து பழக வேண்டும்.

ஏனென்றால் தாய் கருவில் இருக்கும்போது எடுத்துக் கொண்ட உணர்வே நம்மை நல்லவனாக்குவதும்… கெட்டவனாக்குவதும்…!

ஆகையினால் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து… தந்தையரின் உயிரைக் கடவுளாக மதித்து… அவர்களைத் தெய்வமாக மதித்து… இந்த வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் செயல்படுத்துங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.உங்களுக்குள் யாம் ஆழப் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.உங்கள் வாழ்க்கையில் அந்த அருள் சக்திகளைப் பெறலாம்.
3.உங்களுக்குள் அறியாது வரும் இருளைப் போக்கலாம்
4.தெளிந்த மனம் பெறலாம்… தெளிவான வாழ்க்கை வாழலாம்.

முருகன் என்றால் அழகன்…! நாம் முருகனாக வேண்டும்

முருகன் என்றால் அழகன்…! நாம் முருகனாக வேண்டும்

 

ஆரம்பக் கல்விக்குக் குழந்தையை நாம் அனுப்பும் பொழுது சில குழந்தைகள் பள்ளி செல்லவே… பயம் கொண்டு அழுது… பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறது.

பள்ளியில் கல்வி போதனையை அந்தந்தக் காலங்களில் வைக்கும் தேர்வு
1.அக்குழந்தைக்கு அதன் எண்ண வளர்ச்சியின்
2.அறிவின் அடிப்படையில் தான் அதன் ஞானம் வளர்ந்திருக்கும்.
3.அதைக் கொண்டு தேர்வு எழுதும் பொழுது… அதற்குகந்த பயம்… அச்சம்… இருந்து கொண்டு தான் இருக்கும்.

வளர… வளர… அதற்குகந்த அறிவின் செயல் ஞானத்திற்கொப்ப முதிர்ச்சியுற்ற பிறகு ஆரம்பக் கல்வியானது மிக மிகச் சுலபமாகவும் குழந்தையின் கல்வி போலவும் வளர்ந்தவர்களுக்குத் தெரிகிறதல்லவா…!

அதைப் போன்று மனிதனின் குண அமிலத்தை நற்குணங்களின் வழித் தொடர் கொள்ள அன்பு பாசம் வீரம் ஞானம் ஆசை என்ற இந்த ஐந்து குணங்களைச் சாந்தமாக்கி நம் குண அமிலத்தையே நற்குண அமிலமாகச் செயல் கொள்தல் வேண்டும்.

அப்படிச் செயல் கொள்ளும் பொழுது நம் உணர்வின் அலைத் தொடர் உயர் சக்தியின் அமில ஈர்ப்பில் இவ்வெண்ணம் செலுத்தும் முறை கொண்டு
1.முருகனின் அழகுடையவன்
2.குணமுடையவன் இனிமை கொண்டவன்
3.மணமுள்ளவன் ஒளியானவன் ஒலியானவன் என்ற தத்துவ உயர் ஞான முருகனாக
4.நம் உணர்வின் எண்ணம் முருகனாகச் செயல் கொள்ளும் நிலைக்கு வளரும்
5.ஐம்புலன்களான நற்குணங்களை ஆறாம் புலனாக வழிப்படுத்தி முருகனாக உருவாக வேண்டும்.

ஆக… வளர்ந்த கல்வியில் உள்ளவனுக்குப் பள்ளிப் பாடத்தில் முதல் வகுப்புப் பாடம் எப்படி எளிதாக உள்ளதோ… ஒவ்வொரு வகுப்பாகப் பரீட்சையில் தேறிய உயர் கல்வியில் உள்ளவனுக்கு முதல் பாட நூலில் தேர்வு வைத்ததைப் போன்று…
1.வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு இக்கட்டான செயலையும் வரும் இன்னலையும் மாற்றியமைப்பது என்பது
2.இந்த முருக குணம் கொண்டவனுக்கு மிக மிக எளிதாகிவிடும்.

நற்குணங்களின் வழித் தொடர் செயல் ஞான ஈர்ப்பிற்கு… நம் உணர்வைச் செலுத்தும் காலங்களில் ஏற்படும்… வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்…!”

இந்தத் தேர்வில் இருந்தெல்லாம் நாம் பெறும் மதிப்பெண் நிலைக்கொப்ப அடுத்த தேர்விற்கு நாம் உகந்தவர்கள் ஆகின்றோம் என்ற உணர்வின் எண்ணத்தில் சென்று கொண்டே நம் செயல் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஆன வளர்ச்சி இருக்குங்கால் இந்நற்குணங்களின் செயலுடன் ஒன்றிய “முருகனின்… அழகனின் அழகென்ற பட்டத்தை..” நாம் பெற முடியும்… இனிமை என்ற உணர்வின் செயலுடன் நம் எண்ணத்தின் ஈர்ப்பு ஒலியின் ஒளியாகக் கலந்துவிடும்.

இச்சக்தி நிலை கொண்ட உருவம் தானப்பா முருகனேயன்றி தனித்தொரு சக்தி வந்து நற்குணங்களாக அவதரித்து நற்படைப்பைப் படைக்கவில்லை…!

ஆகவே…. இடும்பன் என்ற அரக்க குணத்தை வளரவிட்டு… வாழ்க்கையை இருள் என்ற அழுகையின் ஊடே சோர்வென்ற சக்திதனில் சுழலவிட்டு… உயிர் என்ற ஆத்மலிங்கத்தைச் சதா சர்வ காலமும் நிந்தித்துத் துவேஷித்து… உயர் சக்தியான உயிர் ஆத்மாவை மண்ணுடன் மண்ணாக புழுவாகப் பூச்சியாக சக்திதனில் சுழல விடாமல்…
1.உயர் வழித் தொடர் கொண்டு மனித பிம்பம் பெற்ற நாம்
2.உயர் அலைத் தொடரின் உணர்வின் வழித் தொடர் செல்ல
3.முருகனின் உருவாக நம்மை உருவாக்க வேண்டும்.

உணர்வின் இனிமையையும் உணர்வின் அழகையும் உணர்வின் மணத்தையும் உணர்வின் ஒலியையும் உணர்வின் ஒளியாக உயர் ஞானச் செயலின் ஈர்ப்பில் செயல் செல்ல… இந்த ஐம்புலன் என்ற நற்குணக் கூட்டைச் “சாந்தம்…!” என்ற சக்தி கொண்டு செயலாற்ற வேண்டும்.

“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்…

“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்…

 

ஒரு பயிற்சி:-

1.நீங்கள் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண் பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.

அப்போது
1.நம் கண் பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
2.நம் நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்

செய்து பாருங்கள்.

இதைப் போன்று தான் ஒருவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

சாபமிட்ட அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம் அங்கே அது முதலில் வந்து விடுகின்றது.

நண்பர் நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ.. நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த நேரத்தில் “நின்று…”
3.அந்தச் சாபமிடுபவன் சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.

“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்.

இந்த மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.

அதே மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

அவன் உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம். அடுத்தது என்ன எண்ண வேண்டும்…?

1.யாம் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு. ஆனால் நாம் சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு… அதிலிருந்து போன பிற்பாடு நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நல்ல குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச் சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது…?
3.சாப அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.

அப்பொழுது நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதை… “சொல்லால் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்…!”

சாபமிட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்…?

1.நம் உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள் ஒன்று பட்டு வாழ வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.

இப்படிச் செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்..?

நடு ரோட்டில் சாபமிட்டார்கள்…! என்று நினைக்கும் போதெல்லாம்
1.இவர்கள் விட்ட சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி
2.அவர்களிடம் இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
3.நமக்குள்ளும் இதை வளர்த்துக் கொள்கிறோம்.

“இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் இப்படியெல்லாம் நடக்கின்றது…” இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டால் சாபமிட்ட உணர்வுகளும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளும் தீமையான உணர்வுகளும் அனாதையாகிவிடுகின்றது.

நாம் யாரும் ஈர்க்கவில்லை என்கிற பொழுது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது.

1.எது எது பிடிப்பில் இல்லையோ
2.அதையெல்லாம் சூரியன் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் அதை மாற்றி
3.நல்ல கதிர்களாக உருவாக்கி வெப்பமும் காந்தமுமாக அனுப்புகின்றது.
4.இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் பயிற்சி…” இது தான். செய்து பாருங்கள்…!

ஞானத்தைப் பகுத்தறியும் உயர் ஞானமாக்கி உயரக்கூடிய நிலைக்கு உயர் ஞானமாக்கி “ஞானியாகுங்கள்…!”

ஞானத்தைப் பகுத்தறியும் உயர் ஞானமாக்கி உயரக்கூடிய நிலைக்கு உயர் ஞானமாக்கி “ஞானியாகுங்கள்…!”

 

அறிவு மார்க்கம் பக்தி மார்க்கம் சித்து மார்க்கம் இப்படி ஒவ்வொரு வழியினரும் ஞானத்தை மனிதனுக்குகந்த மார்க்கமாகத்தான் உணர்த்துகின்றனர்… உணர்கின்றனர்.

ஞானம் என்பது மனிதனுக்கு மட்டும் தான் உண்டு. மிருகங்களுக்கு ஞானம் இல்லை…! என்கிறான் மனிதன். அறிவு மட்டும் மிருகத்திற்குண்டு. பகுத்தறியும் நிலை கொண்ட மனிதனுக்கு ஞானம் உண்டு என்று உணர்த்துகின்றான்.

1.அறிவு-கூர்மை…
2.அறிதல்-தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம்…
3.அறிவோம்-அறிவின் ஆற்றலைச் செயல்படுத்தச் செல்லும் வழி.

எறும்பு அதற்குகந்த அறிவைக் கொண்டு ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…?

தனக்கு வேண்டிய ஆகாரத்தை அறிவைக் கொண்டு அறிகின்றது. தன் செயலைக் கொண்டு அவ்வுணவைச் சேமிக்க மண்ணைப் பறித்து அவ்வுணவை அதில் சேமித்து பிறருக்குத் தெரியாவண்ணம் பாதுகாக்கின்றது.
1.அறிவைக் கொண்டு செயல்படுத்தி
2.தனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பாதுகாக்கும் எறும்பிற்கு ஞானமில்லையா…?

ஒவ்வொரு சிறு பிராணியும் தனக்குகந்த அறிவின் ஞானத்தைச் செயல் கொண்டுதான் ஜீவிக்கின்றது. மனிதனைக் காட்டிலும் அறிவும் ஞானமும் சில மிருகங்களிடம் உண்டு.

ஆனால் அதற்குகந்த அங்க அவயங்களும் சொல் வெளிப்படுத்தும் ஒலி பாஷையும் இல்லாததனால் உணர்வின் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தக்கூடிய பகுத்தறியும் ஞானம் இல்லை.

அறிவின் செயல் ஞானமுண்டு. உயர் ஞானத்தை உணர்வின் தன்மையை மாற்றியமைத்துச் சக்தி கொள்ளக்கூடிய ஞானத்தின் வளர்ச்சி அங்கில்லை.

இந்த ஞானத்தைச் செயலாக்கி ஒன்றுடன் ஒன்று சேர்த்து பிறிதொன்றின் கூட்டமைக்க மனிதனின் ஞானத்திற்குச் செயல் திறமை சொல்லாற்றல் இவை உண்டு.

இந்த ஞானத்தின் உயர் ஞானம் கொள்ளத்தான் பக்தி மார்க்கம்… சித்து மார்க்கம்… யோக மார்க்கம்…! என்றெல்லாம் இந்த மனித உடலின் உணர்வை எண்ணத்தால் ஒருநிலைப்படுத்தி “ஜெபம்…” என்று வழிப்படுத்துகிறார்கள்.

ஒவ்வொருவரும் அறிந்த ஒவ்வொரு மந்திரச் சொற்களைச் சொல்லி உயர் ஞானத்தைப் பெற்று ஆண்டவனிடம் முக்தி பெறும் மார்க்கத்தை இவ்யோக சாதனையால் உணர்வைக் கட்டுப்படுத்தி சுவாசத்தை ஒவ்வொருவரும் தான்… தான்… அறிந்த மார்க்கங்களை உணர்த்துகின்றார்கள்.

1.பக்தியினால் ஞானம் கொண்டு
2.சக்தியினால் உணர்வை ஒரு நிலை கொண்டு
3.எண்ணத்தால் உயர் ஞானத்தின் அலையை நாம் செயல்படுத்த
4.நற்குணங்களின் அலைத்தொடரில் இந்த ஞானத்தைச் செலுத்தி அந்த ஞானச் செயலாக நாம் ஒன்றாகலாம்.

இயற்கையின் படைப்பில் உயிரணுத் தோன்றி உருவாய் உருவமாக உருக்கொண்டு இயற்கைச் சுவாச முறையை மாற்றியமைத்துச் சகல சித்து நிலை பெறுவதல்ல…! உயர்ந்த ஞான சக்தியின் வழித் தொடர் பெறுவதற்கு.

இந்த ஞானம் கோபத்தில் உள்ளவனுக்கும் துணை செல்கிறது… திருடனுக்கும் துணை செல்கிறது… வஞ்சகனுக்கும் துணை செல்கிறது.. பெரும் காமுகனுக்கும் துணை செல்கின்றது.

அவரவர்கள் அறியும் அறிவின் செயலைச் செய்விப்பதே ஞானம் தான்.
1.ஞானத்தைப் பகுத்தறியும் உயர் ஞானமாக்கி
2.உயரக்கூடிய நிலைக்கு உயர் ஞானமாக்கி “ஞானியாகுங்கள்…!”

நற்குணங்களின் படைப்பை ஞானத்தின் சாந்தம் கொண்டு “மனிதனும் தேவனாகலாம்…!” என்று சித்தர்கள் உணர்த்திய முறை இதுவே.

உணர்வின் எண்ணத்தை “ஆண்டவனின் நாமத்தை” ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி…!
1.உணர்வின் எண்ணத்தை நற்குணங்களின் அமிலமாக
2.நாம் வளர்க்கும் செயல் முறை ஞானம் தான் மனிதன் தெய்வமாகும் முறை.

வீரத்தை… ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி.. “வீரிய சக்தியாக…” மாற்றிக் கொள்ள வேண்டும்

வீரத்தை… ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி.. “வீரிய சக்தியாக…” மாற்றிக் கொள்ள வேண்டும்

 

1.வீரமான உணர்வலைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியம்.
2.வீரத்தின் உணர்வாற்றல் சக்தி தான் மனிதனின் வாழ்க்கை அமையும் நிலைதனை.

இந்த வீரத்தை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் மனித வாழ்க்கையின் வெற்றிக்கு இவ்வீரம் தான் வித்தப்பா…!

இவ்வுலக நடைமுறை அரசியல் தலைவர்களின் உண்மை நிலையினை ஊன்றிப் பார்த்தால் வீரத்தின் ஞான சாந்தநிலை புலப்படும்.

ஆனால் நம் உணர்வில் கலந்ததுள்ள வீரத்தை நாம் அதன் நிலையிலேயே செலுத்தி விட்டால் வீரத்தின் வீழ்ச்சியை விரைவில் அடைவோம்.

1.வீரத்தை ஞானத்தால் சாந்தமாக்கிச் செயல்படும் பொழுது
2.அந்த வீரத்தின் வீரிய சக்தியை வளர்த்துக் கொண்டேயிருக்கலாம்.

வீரத்தைக் கோபத்தால் செலுத்தும் பொழுது நம் வீரத்தின் செயல் தெறித்துவிடும்… அதை நாம் உடனே அறியலாம்.

இஞ்ஞானத்தை எப்படி வழிப்படுத்துவது…?

திருடனுக்கும் ஞானம் உண்டு.. குருடனுக்கும் ஞானம் உண்டு… மிருகங்களுக்கும் ஞானம் உண்டு. பக்தி யோகம் எவ்வழிக்குச் செல்பவனுக்கும் ஞானம் உண்டு.

ஞானம் இல்லாவிட்டால் திருடன் எப்படிச் சாதுரியமாகப் பிறரை ஏமாற்றித் திருட முடியும்…?

திருடனும்…
1.தன் ஞானத்தைக் கொண்டு திருட வேண்டிய நிலைக்கு
2.பிறரை ஏமாற்ற அந்தச் சாந்தத்தைக் கற்றுத்தான்… பொறுமையுடன்…
3.தன் திருட்டைப் பிறர் அறியாவண்ணம் திருடிக் கொண்டு வர
4.மிகவும் சாதுரியமாகத் தன் ஞானத்தைச் சாந்தமாக்கித் தன் நிலையைச் சாந்தமாக்கிக் கொள்கின்றான்.

அதையே… ஏன் நாம் நல்வழியின் உணர்வுக்கு… ஞானத்தைச் சாந்தமாக்கி உயர் ஞானம் கொள்ள முடியாது…!

கண் ஒளியற்றவன் தன் ஞானத்தைச் சாந்தமாக்கி உணர்வின் எண்ணம் கொண்டே தன்னைக் காத்துக் கொள்கின்றான் அல்லவா…?

தான் வாழ வேண்டும் என்ற ஒரே ஆசை உள்ளவன் உணர்வை இச்சாந்தத்தின் பால் செலுத்தி ஞானம் கொண்டு கண் ஒளி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் ஜீவிக்கின்றான்.

மிருகத்திற்கு ஞானம் உண்டு. அந்த ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…? எல்லா நிலைகளையும் மிருகம் உணர்ந்திருந்தாலும் அங்க அவயங்களும் சொல்லாற்றல் திறமையும் மனிதனை ஒத்த நிலை இல்லாததனால் அதன் ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…?

1.ஒலியின் ஈர்ப்பை ஒளி கொண்டு
2.தன்னை வளர்க்கும் எஜமானரின் சொல் ஒலியை இவ்வொளியால் கவனித்து
3.தன் ஞானத்தை உடலுக்குள் பதியச் செய்து கொள்கின்றது.

சில குறிப்பிட்ட ஒலி அலைகளை… தன் மேல் விசுவாசம் கொண்டு பரிவுடன் செலுத்தும் வளர்ப்பவனின் ஒலியை…
1.தன் ஒலியால் ஈர்த்து எடுத்துப் பதிய வைத்துள்ள நிலைக்கொப்ப…
2.வளர்க்கப்பட்டவனின் ஒலி பாய்ச்சிய முறை கொண்டு
3.அதன் ஞானத்தின் செயல் இருக்கும்.

மனிதனின் வளர்ப்பில் உள்ள பிராணிகளுக்கு அந்தந்தப் பிராணிகளின் கூக்குரலின் நிலைக்கொப்ப இவன் ஒலியை அதன் ஒளியுடன் பாய்ச்சும் பொழுது அதன் ஈர்ப்பில் அதனுடைய ஞானம் வெளிப்படுகின்றது.

பக்தியின் நிலை ஞானம் எப்படிச் செயல்படுகின்றது..?

ஆண்டவனை வணங்கினால் அவன் அருள்வான் பல…! என்று தன் உடல் தேவைக்கும் செல்வத்திற்கும் வாழ்க்கையில் உழன்றுள்ள மற்ற நிலைகளுக்கும் ஆண்டவனை நினைத்து வணங்கும் ஞானம் எப்படிச் செயல் கொள்ளும்…? ஆகவே
1.அவரவர்களின் உணர்வுக்குகந்த
2.எதிர்பலனின் நிலையைத்தான் அவனவன் அடைய முடியும்.

தீமையை மாற்றியமைக்கும் “இந்தப் பயிற்சிகள் உங்கள் அனுபவத்திற்கு வர வேண்டும்…”

தீமையை மாற்றியமைக்கும் “இந்தப் பயிற்சிகள் உங்கள் அனுபவத்திற்கு வர வேண்டும்…”

 

இன்று மனிதனின் வாழ்க்கையில் தீமைகள் எப்படி எல்லாம் வருகின்றது…? என்று தெரிந்து கொள்தல் வேண்டும்.
1.இதை மாற்றுவதற்கு உங்களுக்குச் சக்தி வேண்டும்.
2.உங்களுக்குத் தெரியாது… தெரிய வைக்கின்றோம்.
4.அந்தச் சக்தி பெறுவதற்குண்டான ஊக்கத்தையும் கொடுக்கின்றோம்.
5.தெரியக்கூடிய அளவிற்கு அருள் ஞானிகளின் அருள் வித்துக்களைப் பதிய வைக்கின்றோம்.

(1) ஞானம் கிடைக்கும் சந்தர்ப்பம் எது…?
திட்டியவனை நினைத்தவுடன் உடனே நமக்கு ஆத்திரம் வருகின்றது. நம்முடைய காரியங்கள் எல்லாம் தடைப்படுகின்றது.

அப்பொழுது அந்தச் சங்கடம் வரும்போது நான் (ஞானகுரு) உங்களுக்குள் பதிவாக்கியதை எண்ணினால் உங்களுக்குள் ஞானம் வரும். தீமையை விலக்கக்கூடிய யுக்தி வரும்.

உங்கள் சொல் என்ன செய்யும்…?

அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் நாம் பேசும் இந்த உணர்வலைகள் திட்டியவர்கள் மனதிற்குள் போய்… நம் மீது உள்ள கடுப்பைக் கொஞ்சம் குறைக்கச் செய்யும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

(2) நம் உணர்வு அடுத்தவருக்குள் புகுந்து மீண்டும் நமக்கே திரும்ப வந்து இயக்கும் நிலை
1.“என்ன்னிடம் இப்படிப் பேசினான்” ஆகவே… என்னை இப்படித்தான் எப்போதும் பேசுவான்…! என்ற உணர்வு வந்து
2.நாம் அந்த அச்ச உணர்வோடு பேசும் பொழுது ஏதாவது ஒன்று பதில் சொன்னோம் என்றால்
3.அவர்களுடைய செவியில் பட்டு “நம்முடைய அந்தப் பயப்படும் உணர்வே…” அவர்கள் உடலுக்குள் போய்
4.நம்மை அவர்கள் மிரட்டும் நிலையை உருவாக்கிவிடும்.

ஒருவரிடம் கடன் வாங்கி இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம் திருப்பிச் செலுத்தச் சிறிது கால தாமதம் ஆகின்றது. நாம் எப்படியும் வாங்கிய பணத்தைக் கட்டவேண்டும் என்று விரும்புவோம்.

அப்பொழுது அதை எப்படி எண்ண வேண்டும்…?

ஏனென்றால்… அவன் சரியான நேரத்தில் கொடுத்து உதவினான். அது நியாயம் தான். ஆனால்… நாம் வாங்கினோம் அவனுக்குக் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும்
1.சரியான முறையில் எப்படியும் கொடுக்கக்கூடிய சக்தி எனக்கு வர வேண்டும்.
2.நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்டு அமைதியாக இருந்து
3.எனக்கு அந்த வழி கொடுக்க வேண்டும்… அந்த நிலை பெற வேண்டும்… என்று நாம் எண்ணினோம் என்றால்
4.அந்த வலுவான உணர்வுகள் நாம் எண்ணும்போது மூச்சலைகள் வெளிப்படுகின்றது.

கடன் கொடுத்தவர் நம்மை எண்ணி வரும்போது அதை அவர் சுவாசித்தால் அவர் உடலில் இது இணைந்து நம் மேல் இருக்கக்கூடிய வெறுப்பின் தன்மையை “நிச்சயம் குறைக்கும்…”

இதே மாதிரி தொழிலே ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு… இந்தப் பொருளை வாங்குவோர் நன்றாக இருக்க வேண்டும். அதற்குண்டான மன பலம் பெற வேண்டும்.

நம்மிடம் பழகும் நண்பர்களுக்கும் ஒத்துழைக்கக்கூடிய தன்மை வரவேண்டும். நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நம்முடன் ஒத்துழைக்கும் தன்மை வரவேண்டும் என்று இப்படித்தான் இணைத்துக் கொண்டு போக வேண்டும்.

(3) சங்கடத்தை நீக்குங்கள்
வேலை செய்பவர்களிடம் போய்… சங்கடத்துடன் எண்ணி நீங்கள் ஒரு வேலையைச் சொன்னால் இதே சங்கடம் அவனை இயக்கி அவனைத் தவறு செய்ய வைத்துவிடும்.

நீங்கள் சங்கடத்துடன் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் வாடிப் போகும். நம்மை அறியாமல் இயக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு வலுவான சக்தி வேண்டும். அந்த வழி அறிந்து செயல்படும் நிலைகள் பெற வேண்டும்.

1.ஒரு பள்ளிக்குச் சென்றால் விஞ்ஞானியாக வேண்டும் என்றால் அது எப்படி…? என்ற நிலைகளைச் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.
2.ஒரு இஞ்சினியராக வேண்டும் என்றால் எப்படி…? என்றும்
3.ஒரு ஆசிரியராக வேண்டும் என்றால் எப்படி…? என்றும் சொல்லிக் கொடுக்கின்றார்கள்…
4.அதற்குண்டான பாடங்களைப் படிக்கின்றார்கள்.

இதைப் போன்று தான் குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்த அந்த உணர்வை நினைவுபடுத்தி உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவானது மீண்டும் உங்கள் நினைவுக்கு வரும் பொழுது
1.சங்கடங்களைச் சமாளிக்கும் ஞானம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
2.அந்த ஞானத்திற்குண்டான யுக்தி கிடைக்கச் செய்வதற்குதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் பெற வேண்டும் என்று
3.அடிக்கடி சொல்லி அதை உங்களுக்குள் ரிக்கார்டு செய்து வைத்து விடுகின்றேன்.

அப்பொழுது “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது தீமையை நீக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குள் பெருகத் தொடங்குகின்றது.

(4) தீமையை நல்லதாக மாற்றும் முறை
உதாரணமாக… பாலில் சர்க்கரையைப் போட்டால் இனிப்பாக இருக்கின்றது. அந்தச் சர்க்கரையுடன் சேர்த்துக் காபித் தூளைப் போட்டால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.

சர்க்கரையுடன் கொஞ்சம் புளிப்பைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது. அந்தப் புளிப்புடன் இலேசான காரத்தைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.

மிளகைப் போட்டுப் பாருங்கள் அது ஒரு ருசியாக இருக்கும். மிளகாயைப் போட்டுப் பாருங்கள். அந்தப் புளிப்பு காரம் எல்லாம் சேர்த்து “பானக்கம் கரைத்தால்” அது ஒரு ருசியாக இருக்கும்.

இதைப் போலத்தான் உங்களுக்குள் எத்தகைய தீமையான நிலைகள் வந்தாலும் அதை நல்ல சுவை மிக்கதாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வேண்டும்.

அதற்குத்தான் இந்த வழிமுறைகளைச் சொல்கின்றோம்.

“ஞானிகள் பெற்ற ஞானத்தை” நாம் பெற வேண்டியதன் அவசியம் என்ன…?

“ஞானிகள் பெற்ற ஞானத்தை” நாம் பெற வேண்டியதன் அவசியம் என்ன…?

 

உணர்வின் எண்ணத்தை உணர்த்தி வந்தேன். மனித உடலின் அமில குணங்களையும் குணத்தினால் விளையும் உணர்வு உடல் ஆரோக்கியம் இவற்றையும் சில குறிப்பிட்டுள்ளேன்.

அணுவுக்குள் அணுவாக அணுவின் அணுவுக்குள் உள்ள நாம்
1.நம் எண்ண வலிமையை எப்படி வழி நடத்துகின்றோம்…?
2.மனிதனின் நற்குண அமிலமான அன்பு பாசம் பரிவு ஞானம் வீரம் சாந்தம் இவற்றை நாம் எப்படிச் செயல்படுத்துகின்றோம்…?

நம் குழந்தையிடம் அன்பை மட்டும் செலுத்தி அன்பின் செயலால் வளர்க்கப்படும் குழந்தை அவ்வன்பையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும்.
1.அவ்வன்பிலேயே வளர்ந்த நிலை கொண்டு
2.தனக்குச் சாதகமான… தனக்கு வேண்டிய உணர்வு தேவையின் நிலையைத்தான்
3.நம்மிடம் எதிர்பார்த்துப் “பிடிவாதத்தில்” நிற்கும்.

இப்படி வெறும் அன்பினாலேயே வளர்க்கப்பட்ட குழந்தை… அது வளர்ந்த பிறகு நம்மிடம் இந்த உணர்வின் குணத்தைத்தான் எதிர்பார்க்கும்.

அன்பினால் மட்டும் எச்சக்தியையும் செயல்படுத்திட முடியுமா…? அவ்வன்பே கடும் விஷம் ஆகி எதிர்த்துத் தாக்கும்.

அன்பைக் கொண்டு செயல்படுத்தி அச்செயலே நமக்கு எதிராகும் தருணத்தில் நம் உணர்வில் கோபம் குடிகொள்ளும். இதனை எப்படிச் செலுத்துவது…?

1.அன்புடன் ஞானத்தைச் செலுத்தி
2.சாந்தமாக நாம் ஊட்டும் அன்பினாலேயே
3.அக்குழந்தையை உயர் ஞானக் குழந்தையாக நாம் வளர்க்க முடியும்.

பரிவும் இதே போன்றது தான்…! பரிவை ஒருவருக்குச் செலுத்தப்படும் பொழுது… பரிவுடன் கூடிய ஞானத்தால் சாந்தம் கொண்டு அப்பரிவைச் செலுத்தும் பொழுது பரிவினால் விளையக்கூடிய நற்பயனை நாம் காணலாம்.

ஆசையின் நிலையும் ஆசையினால் உள்ளது தான் இந்த உலகமே..! உண்ண உடுக்க உணர எண்ண வாழ்க்கையின் ஆணிவேரே இவ்வாசை தான்.

ஆசை கொண்டு நாம் புதிதாக ஒரு தொழிலுக்கு வித்தூன்றி வளரச் செய்கின்றோம் என்றால்
1.அவ்வாசையின் வித்திற்கு ஞானம் என்ற முதல் போட்டு
2.சாந்தம் என்ற நீரை ஊற்றினால் தான்
3.அவ்வித்து வேரூன்றி வளர ஏதுவாகும்.

ஞானமில்லா வழியில் சாந்தம் கொள்ளாமல் ஆசை கொண்டு எதைச் செய்தாலும் அது வியாபாரமாக இருந்தாலும் சரி… வாழ்க்கை நடைமுறைச் செயலாக இருந்தாலும் சரி.. ஒரு வீட்டையே கட்டுகிறோம் என்றாலும் சரி… அது நிறைவு தராது.

ஆசைப்பட்டுத்தான் வீட்டைக் கட்ட நாம் முற்படுகின்றோம்.

ஆனாலும் வீட்டைக் கட்டி முடிக்கத் தன்னிடமுள்ளள பொருளாதாரச் சூழ்நிலை… மற்றும் அந்த வீட்டிற்குகந்த பொருள் கிடைக்கும் நிலை… இவற்றை எல்லாம் இந்த ஞானத்தால்
1.தன் ஆசையின் உருவத்தை ஞானம் கொண்டு
2.தன் ஆசையின் செயலை எந்த வடிவில் அமைக்க முடியும்…? என்ற ஞானம் அறிய “சாந்தம்” தேவை.

ஆசையை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் நாம் அமைக்கும் வீடு நம் உணர்வின் ஆசைக்கு உகந்த நிலையில் அமையுமப்பா..!

“யாம் கொடுக்கும் சக்தியை…” நீங்கள் பெற வேண்டும்… அதை வளர்க்க வேண்டும்… மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்

“யாம் கொடுக்கும் சக்தியை…” நீங்கள் பெற வேண்டும்… அதை வளர்க்க வேண்டும்… மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்

 

காட்டிற்குள் சென்று தவம் இருப்பது என்பது… நம் உடலுக்குள் அதுவே பெரும் காடாகத்தான் இருக்கின்றது. வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் என்று எத்தனையோ கொதித்தெழும் உணர்வுகள் உள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் தவமாக்கி நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களிலும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் சேர்ப்பிப்பபதுதான் உண்மையான தவம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளுக்கு அதைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

1.சொந்தமில்லாத இந்த உடலுக்குச் சொந்தம் கொண்டாடி
2.வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் என்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்து விடாதீர்கள்…
3.அதை வளராது தடுத்து விடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்து பிறவி இல்லை என்ற நிலையை அடையுங்கள். உயிரணு தோன்றி மனிதனான பின் கடைசி நிலை அது தான்.

பெண்கள் இந்த உண்மையின் இயக்கங்களை நீங்கள் உணர்ந்து வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிப் பழகுங்கள்.
1.தன் கணவருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்
2.அதே போன்று கணவன் தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
3.இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் தியானிக்க வேண்டும்.

அகஸ்தியன் தன் மனைவியோடு எப்படி ஒன்றி வாழ்ந்தானோ அதைப் போன்று கணவன் மனைவி நீங்கள் வழி தொடர்ந்து செயல்படுத்தி வாருங்கள்.

இந்த உடலுக்கு பின் பிறவி இல்லை என்ற நிலை அடைய “எமது குரு அருளும்… மகரிஷிகளின் அருள் சக்தியும் உறுதுணையாக இருக்கும்…”

1.குரு அருளை நீங்கள் அனைவரும் பெற்று
2.குரு துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று இருளை அகற்றி
3.உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று
4.அமைதியும் சாந்தமும் ஞானமும் விவேகமும் பெற்று
5.உங்கள் வாழ்க்கையில் தீமைகள் புகாது அருளைப் பெருக்கி
6.அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி நீங்கள் பெற எமது ஆசியும் அதுவாகி
7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெருகி பேரின்பம் பெற எமது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்.

உங்கள் உடலில் எத்தகைய வலியோ வேதனையோ வந்தாலும் உயிரான ஈசனை வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருளை அங்கே செலுத்திப் பழகுங்கள்.

“உங்களை உங்கள் எண்ணமே காக்கும்…”

எண்ணியதை உயிர் இயக்குகின்றது… எண்ணியதை உடலாக்குவதும் உயிர் தான். இதைப் போன்று உங்கள் வாழ்க்கையில் பேரின்பம் பெற எமது ஆசிகள்.

நான் சொன்ன முறைப்படி தியானப் பயிற்சியைச் சீராக மேற்கொள்ளுங்கள் யாம் (ஞானகுரு) கொடுக்கக்கூடிய உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

1.யாம் சொன்ன அருள் வழியைக் கடைப்பிடிக்கும் போது அது எப்படி உங்களுக்கு நல்லதாகின்றதோ இதைப் போன்று
2.குரு காட்டிய வழியில் பெற்ற சக்திகளை… நீங்கள் மற்றவருக்குள் பாய்ச்சப்படும் பொழுது
3.அவருடைய நோய் போக வேண்டும்… அவருடைய தீமைகள் அகல வேண்டும்.
4.உங்கள் சொல்லைக் கேட்டாலே மற்றவருடைய கஷ்டங்கள் போக வேண்டும்
5.”அத்தகைய சக்தி நாங்கள் பெற வேண்டும்” என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

நான் சொல்லும் பொழுது உங்களுக்கு நல்லது ஆகிறது அல்லவா…! ஏன் இதைப் போன்று நீங்கள் சொல்லி அவர்களுக்கு நல்லதாகும் பொழுது அந்தக் கெட்டது வராமல் தடுக்கலாம் அல்லவா.

உங்களால் ஏன் இதைச் செயல்படுத்த முடியாது…? நிச்சயம் முடியும்.

1.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும்
2.இந்தப் பழக்கத்திற்கு வந்தால் சாமியார் பேரைச் சொல்லியோ தெய்வத்தின் பேரைச் சொல்லியோ யாரும் ஏமாற்ற முடியாது.