கணவன் மனைவி தியானத்தால் ஒளிகள் பாய்ந்து குடும்பத்திற்குள் இருள் நீங்கும்

கணவன் மனைவி தியானத்தால் ஒளிகள் பாய்ந்து குடும்பத்திற்குள் இருள் நீங்கும்

 

ரோட்டிலே ஒருவன் யாரையோ கோபமாகப் பேசுகின்றான்… நாம் பார்க்க நேருகின்றது. “நடு ரோட்டில் இந்த மாதிரிப் பேசுகின்றானே” என்ற உணர்வு வந்தவுடனே உயிரில் பட்டவுடனே நமக்கும் அந்த உணர்ச்சியைத் தூண்டுகிறது.

அவன் உணர்வு நம்மை இயக்குகின்றது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.“ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவை உயிருக்கு… புருவ மத்திக்குக் கொண்டு போகவேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
3.எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.
4.இந்த வலுவான நிலைகள் இங்கே வந்தவுடனே அதைத் தள்ளிவிட்டு விடுகிறது.
5.புருவ மத்தியில் அடைத்து வலுக்கூட்டி நாம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

துணியில் அழுக்குப் பட்டவுடன் சோப்பைப் போட்டவுடன் நுரை உள்ளுக்குள் போய் அழுக்கை வெளியே தள்ளிவிட்டு விடுகிறது. சோப்புப் போடாமல் என்னதான் துவைத்தாலும் இருட்டடித்த மாதிரிதான் இருக்கும். வெள்ளையாக வருவதில்லை.

அது போல நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்கு நம் எண்ணத்திற்கு வலு கொடுப்பதற்கு… ஜீவன் ஊட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

காலையில் எழுந்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவனுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று முதலில் எண்ண வேண்டும்.

பின் தன் கணவருக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணி அவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே போல ஆண்களும் தன் மனைவி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இரண்டு பேர் சண்டை போட்டார்கள் என்றால் அமெரிக்காவில் இருந்தாலும் புரையோடுகின்றது. நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கலாகின்றது.

இங்கே குடும்பத்தில் பாசத்துடன் இருந்து “என் குழந்தைக்கு என்ன ஆனதோ…?’” என்று எண்ணிப் பாருங்கள், அங்கே தொல்லை கொடுக்கும்.

கணவர் ரொம்ப உழைத்துக் கொண்டேயிருக்கிறார். அங்கே இருக்கிறவர்கள் எல்லாம் அவரை இப்படிப் பேசுகிறார்களே…! என்று மனைவி எண்ணினால்… ஆண்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் செயலற்றதாக ஆக்கிவிடும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும். என் கணவர் உடலில் ஜீவான்மா முழுவதும் படர வேண்டும். நாங்கள் இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்ற வேண்டும்.

வாழ்க்கையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அதிக நேரம் இல்லையென்றாலும்கொஞ்ச நேரமாவது இரண்டு பேரும் எண்ண வேண்டும். இராத்திரியிலே விழிப்பு வரும் பொழுது இந்த மாதிரிச் செய்து பழக வேண்டும்.

1.தியானத்திலே இருக்கிறவர்களுக்குக் காலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் இந்த உணர்வுகள் தட்டி எழுப்புவதை நீங்கள் பார்க்கலாம்.
2.உங்களை அறியாமலேயே விழிப்பு வரும். அந்த நேரத்திலே அந்த அருள் சக்திகளை நுகருங்கள்.
3.அப்பொழுது பெண்கள் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும்
4.ஆண்கள் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எண்ணியபின்… குரு அருளைப் பெற வேண்டும். என் கணவர் பார்வையில் தீமைகள் அகற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும். அவர் செயலிலே புனிதம் பெற வேண்டும், அவரைப் பார்ப்போரெல்லாம் புனித நிலை பெற வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

அதே மாதிரி கணவன் மனைவியை ஓர் 5 நிமிடம் எண்ணிப் பழக வேண்டும். இப்படி நீங்கள் எண்ணினால் காலையில் விழித்தெழும் பொழுது “ஓர் ஆனந்தமான நிலை வரும்…”

இந்த மாதிரி எண்ணும் பொழுது பார்த்தால் உங்கள் உடலில் “பளீர்… பளீரென்று…” வெளிச்சம் வரும்.
1.ஏனெனில் நுகரப்படும் பொழுது இது பட்டவுடன் மோதி… இருளை நீக்கி
2.வீட்டிற்குள் ஒரு வெளிச்சம் வருவதைப் பார்க்கலாம்.

சூரியன் தான் எடுத்துக் கொண்ட பாதரசத்தால் தன் அருகில் வந்தவுடன் மோதிப் பளீரென்று உலகம் முழுவதும் ஓர் வெளிச்சத்தைக் கொடுக்கிறது.

அதே மாதிரி நம் மூச்சலைகள் பட்டவுடன் நமது வீட்டிற்குள் இவ்வாறு எண்ணும் பொழுது நம் உடலில் எடுத்துக் கொண்ட சக்தி தீமை என்ற நிலையில் மோதியவுடனே அது விலகிப் போகும். உடலில் ஒரு விதமான வெளிச்சம் வரும். உடலில் மகிழ்ச்சி ஏற்படும்.

இதை நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் 4 மணிக்கெல்லாம் செய்து பழக வேண்டும்.
1.அப்படிச் செய்தால் யாம் பதிவு செய்கின்ற ஞான வித்திற்கு
2.அப்பொழுது “நீங்கள் சக்தி ஊட்டுகிறீர்கள்” என்று அர்த்தம்.

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் ஆசீர்வாதம்

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் ஆசீர்வாதம்

 

யாகத்தைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். உண்மையான யாகம் என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1.ஒவ்வொரு உயிரும் சிறு துளி… சிறு நெருப்பு.
2.சிறு துளி சிறு நெருப்பாக இருந்து… நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து “பெரும் நெருப்பாக…”
3.யாம் உபதேசிக்கும் அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை எல்லோரும் சுவாசித்து
4.சுவாசித்த உணர்வலைகள் இந்தக் கூட்டுத் தியானத்தின் மூலம் உங்கள் உடல் முழுவதற்கும் படர்ந்தது.
5.அப்படிப் படரும் நிலை தான் யாகம்… “யாக வேள்வி…” என்பது.

யாகத் தீயில் எந்தப் பொருளைப் போடுகின்றமோ அதனின் மணம் வருகின்றது. இதைப்போல நம் உயிருக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் படரச் செய்து உடலுக்குள் அந்த யாகக் குண்டத்திற்குள் படரும்படி செய்கிறோம்.

அவ்வாறு படர்ந்து… நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தையும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
1.அவ்வாறு வெளிப்படும் இந்த யாக உணர்வுகள் எல்லோருடைய உணர்வுக்குள்ளும் ஊடுருவிப் படர்ந்து
2.நாம் இருக்கக்கூடிய இடம் கல் மண் தாவர இனங்கள் அதில் இருக்கக்கூடிய காந்தப் புலன்கள் இதைக் கவர்ந்து
3.அதிலே மெய்ஞானிகள் உணர்வுகளை படரச் செய்வதுதான் யாக வேள்வி என்பது.

இது உண்மையான யாக வேள்வி.

யாகத் தீயில் நெய்யை விடுகின்றோம். அதனின் உட்பொருள் என்ன…?

இந்த மனித வாழ்க்கையில் உயர்ந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்ற மகரிஷிகள்…
1.சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் அவர்களின் உணர்வின் எண்ணங்களை இயக்கி
2.நம் அனைவரது உயிருக்குள்ளும் யாகக் குண்டத்திற்குள் (உடலுக்குள்)
3.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உள் செலுத்துவது தான் நெய் ஊற்றுவது என்பது.

இந்த உணர்வலைகள் நம் உடல் முழுவதும் படர்ந்து பேச்சால் மூச்சால் பார்வையால் சொல்லால் செயலால் இது அனைத்தும் வெளியிலே படர்ந்து “கேட்போர் உணர்வுகளை மகிழ்ச்சியைத் தூண்டும் உணர்வாக அமைகின்றது…!”

யாகக் குண்டமான உடலில் நம் உயிரான நெருப்பில் போடப்பட்ட
1.அந்த மகரிஷிகள் உணர்வு தான் எல்லோருக்குள்ளும் படர்ந்து
2.நாம் இட்ட மூச்சலைகள் அனைத்தும் நம் வீட்டில் தெருவிலும் ஊரிலும் நாட்டிலும் படர்ந்து உலகம் முழுவதும் “ஊடுருவிப் படர்கின்றது…”

இதைத்தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் கூடி நின்று ஆசீர்வாதம் செய்தார்கள்…” என்று காட்டப்பட்டது.

ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்த்து உணர்வின் எண்ணங்களைக் கூட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பதிவு செய்யும் பொழுது
1.இந்தப் பதிவே ஊக்கச் சக்தியாக இருந்து
2.மெய்ஞானத்தின் தொடராக எல்லா இடங்களிலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

அதற்குத் தான் கூட்டுத் தியானத்தை அமைத்துள்ளோம்… எல்லோரும் அதிலே கலந்து கொள்ளுங்கள்…. அருள் ஞானக் கூட்டமைப்பை உருவாக்குங்கள்.

துருவன் நஞ்சை நீக்கி ஒளியாக மாற்றிய சக்தியை நம் கிட்னிக்குப் பெறச் செய்ய வேண்டும்

துருவன் நஞ்சை நீக்கி ஒளியாக மாற்றிய சக்தியை நம் கிட்னிக்குப் பெறச் செய்ய வேண்டும்

 

வயல்களில் நாம் களைகளை நீக்கினாலும் அதற்குள் மறைந்த வித்துக்கள் மீண்டும் முளைத்து வந்துவிடுகின்றது. இதைப்போலத்தான் நமது வாழ்க்கையில் எத்தனையோ விதமான வெறுப்பு உணர்வுகளை நாம் நுகர நேருகின்றது.

கண்களால் நாம் பதிவாக்கித்தான் நாம் நுகருகின்றோம். நுகர்ந்த உணர்வால் நாம் அறிகின்றோம்.
1.அந்த உணர்வுகள அனைத்தும் நம் இரத்தத்தில் கலந்து
2.நம் இரத்தமே மாசுபடும் நிலைகள் கொண்டு மாசுபடும் இரத்தங்கள் நம் உடல் முழுவதும் படரப்படும் பொழுது
3.நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றிக் கடும் நோயாகி நம் உறுப்புகளில் நோய்கள் உருவாகி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் தடுப்பதற்கு… அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.

அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி தீமைகளை நுகர்ந்திருந்தாலும் அந்த வெறுப்பு, வேதனை, சலிப்பு, சஞ்சலம், சங்கடம், கோபம், குரோதம் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்திவிடும்.

அடுத்து நம் கண்ணின் நினைவு கொண்டு ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அதை உருவாக்கிய அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைந்து இந்த இரத்தங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளை அது ஏற்காது அது கழித்துவிடும்.

பின்… விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் கிட்னிக்குள் “துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும்” என்று வீரிய சக்தி உண்டாக்கப்படும் பொழுது
1.எப்படி அகஸ்தியன் அவன் துருவனாகும் பொழுது விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ
2.அத்தகைய வலுவான நிலைகள் கொண்டு கிட்னி விஷத்தின் தன்மை வடிகட்டி நல்ல இரத்தங்களாக உருவாக்கி
3.நம் இருதயத்தைச் சீராக இயக்கி இருதயத்திலிருந்து மூளை பாகம் செல்லும் இந்த இரத்தங்களைப் பரிசுத்தமாக்கி
4.நமக்குள் நல்ல இயக்கமும் நல்ல நினைவும் உருவாக்குகின்றது.

இவ்வாறு அந்தத் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்” நமக்குள் இருளை நீக்கி ஒளி பெறும் தன்மையாக நமது அறிவாக இயக்கத் தொடங்கும்.

வாழ்க்கையில் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க அதைப் பற்றுடன் பற்றி வாழும் நிலை உருவாகிறது.

சலிப்போ, சோர்வோ, சஞ்சலமோ, வேதனையோ, கோபமோ இந்த உணர்ச்சிகள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்…
1.“ஈஸ்வரா” என்று உங்கள் கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணினால் அங்கே தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.

பின் அதே கண்ணின் நினைவு கொண்டு ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் அந்தச் சக்தியைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியத்தன்மை அடைந்து விடுகின்றது.

அப்பொழுது நாம் அறியாது நுகரும் வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்தாலும் “கிட்னி அதைச் சுத்தப்படுத்தி” நல்ல உணர்வுகளை நம் உடலுக்குள் பரவச் செய்கின்றது.

அதே போன்று எல்லா அணுக்களிலும் “துருவ நட்சத்திரத்தின்” உணர்வுகளை வலுவாக்கப்படும் பொழுது உடலில் உள்ள அணுக்கள் தீமைகளை ஏற்காது அதை நீக்குகின்றது.

இப்படி ஒதுக்கும்போது
1.நமது வாழ்க்கையில் நோய் வராததும் மன வலிமையும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்
2.நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு இயக்காது… நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.

மா… “பிரம்மா” – அம்மா…!

மா… “பிரம்மா” – அம்மா…!

 

“ஓம் ஈஸ்வரா குருதேவா…” என்று அடிக்கடி சொல்கின்றோம். ஓம் என்று சொல்லப்படும் பொழுது சாஸ்திர விதிகளில் “ஓ…ம் – பிரணவம்” என்று சொல்வார்கள்.

அதனுடைய இயற்கையான உண்மையான நிலைகளைப் புரிந்து கொள்வதற்காக மெய் ஞானிகள் நமக்குக் காட்டியது…
1.உயிர் ஜீவனுள்ளதாக இருக்கின்றது
2.நம் உடலுக்குள் அனைத்து அணுக்களையும் அது இயக்கச் செய்கின்றது. அதற்குப் பெயர் “ஓ…!”
3.“ம்…!” என்கிற பொழுது நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ ம் என்று உடலுக்குள் அது இணையச் செய்து அதையும் ஜீவன் பெறச் செய்கின்றது.

அதாவது…
1.ஓ என்பது பிரணவம்
2.ம் என்பது பிரம்மம்.
3.ஓம்… ம் என்று ஆனாலும் நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ பிரம்மா… “மா…” தாயாகின்றது…!

நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தை உயிர் இயக்கச் செய்து ம் என்று உடலுக்குள் ஆகப்படும் பொழுது அது எந்தக் குணமோ அந்த அடிப்படையில் தான் மற்றதெல்லாம் இயங்கும்.
1.ஆகையினால் அது அம்மா… பிரம்மா…!
2.தாயின் நிலையை வைத்துத் தான் பிரம்மா என்று பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

நமது உயிரின் இயக்கத்தை “ஈசன்” என்றும்… நாம் எண்ணும் எண்ணத்தை ஜீவன் பெறச் செய்வதை “ஓ” என்றும்… நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் சத்து உடலுடன் ஐக்கியமாகும் பொழுது “ம்” என்றும் தெளிவாக்குகிறார்கள்.

அது தான் ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்…! என்று பெயரை வைத்து அழைக்கின்றார்கள் நாம் புரிந்து கொள்வதற்கு.

ஆகவே… ஓம் ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது நாம் எதை எண்ண வேண்டும்…?

ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி… குருதேவா என்று சொல்லும் பொழுது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்கள் அனைத்திற்கும் நம் உயிரே குருவாகின்றது என்று எண்ண வேண்டும்.

கோபமாகப் பேசினாலும் சலிப்பாகப் பேசினாலும் சங்கடமாகப் பேசினாலும் சாந்தமாகப் பேசினாலும் உயர்ந்த நிலையில் பேசினாலும் வேதனையாகப் பேசினாலும்
1.இவை அனைத்தும் நாம் எண்ணியதை உயிர் ஜீவனாக்கி ம் என்று நம் உடலாக்கி
2.உடலில் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உயிரே.

இதைச் சொல்வதற்குத் தான் குருதேவா… குரு என்று காட்டுகின்றார்கள்.

பிரபஞ்சத்திற்குக் கோள்கள் உருவாவதற்கும் பிரபஞ்சத்திற்குள் இயக்குவதற்கும் இந்தப் பிரபஞ்சத்திற்குச் சூரியன் குருவாகின்றது. அதைப் போல நம் உடலுக்குள் உயிர் குருவாக இருக்கின்றது.

1.இதையெல்லாம் சாதாரண மக்களும் உணர்ந்து அறிந்து செயல்படுவதற்கும்
2.மனிதனாக ஆனபின் அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்பதற்கும் தான்
3.காவியங்களாக மெய் ஞானிகளால் படைக்கப்பட்டது.

இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்பதற்குத்தான் ஞானிகள் இதையெல்லாம் காட்டினார்கள்.

எல்லா அணுக்களிலும் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறச் செய்வோம்

எல்லா அணுக்களிலும் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறச் செய்வோம்

 

1.உங்களையெல்லாம் யாம் எங்கே கொண்டு போகின்றோம்…?
2.அந்த அகஸ்தியன் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றோம்.
3.குருநாதர் என்னை இப்படித்தான் கொண்டு சென்றார்.

அவர் காட்டிய நிலைகளில் தான் யாம் உங்களையும் அங்கே இணைக்க முடியும்.

ஒவ்வொன்றையும் சேர்த்து உங்கள் உடலில் எத்தனை விதமான குணங்கள் இருந்தாலும் அதனுடன் இணைத்து இணைத்து அதனின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்.

உங்கள் கண்ணின் நினைவு உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் இதைச் சேர்க்கும்.
1.அப்படிச் சேர்க்கும் பொழுது நம் உடலிலுள்ள அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏற்கும் பருவம் வருகின்றது.
2.அதை ஏற்கக்கூடிய பருவத்தைச் செய்தால் தான் ஈர்க்கும்… இல்லையென்றால் எடுக்காது.

அதனால் தான் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு நமது குருநாதர் கொடுத்த அருள் வழியில் இதை உங்களிடம் சேர்க்கின்றோம். இதைப் பக்குவப்படுத்துதல் உங்கள் கையில்தான் இருக்கின்றது. ஆனாலும் உங்களை ஆயுள் மெம்பராகச் சேர்த்துக் கொண்டோம்.

வீட்டில் ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்து விட்டால் “ஈஸ்வரா” என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் படர்ந்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்… உற்சாகம் ஊட்டும்.

குழந்தைகள் ஏதாவது குறும்புத்தனம் செய்தால் இதே போல ஆத்ம சுத்தி செய்து விட்டு… என் பிள்ளை ஞானியாக வேண்டும்…. அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள் என்றால் உடனே “ஈஸ்வரா” என்று எண்ணி அதைத் தடுத்துவிடுங்கள்.
1.அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் செய்வது யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெற வேண்டும்
3.அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இவ்வாறு நாம் எண்ணும் பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

ஏனென்றால்… “ஈஸ்வரா” என்று எண்ணி நம் உடலுக்குள் பெறச் செய்து விட்டு அந்த உணர்வின் தன்மையைச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வு (நாம் எடுக்கும் அருள் உணர்வுகள்) இரத்தத்தில் கலந்து செல்லும். இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது… வலுவாகிறது.

அப்பொழுது இந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அங்கே போய்ச் சேரும். அவன் திருந்தும் நிலை வரும்.
1.அவன் திருந்த எண்ணினால் அவனுக்கு நல்லதாகிறது.
2.நம்மைத் திட்டும்போது நம் உடலுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

இதே மாதிரி வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும்
1.ஒவ்வொரு குணங்களிலும்
2.ஒவ்வொரு உணர்விலும்
3.ஒவ்வொரு செயல்களிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.

பல விதமான குழம்பு வைக்கிறோம், பல விதமான பலகாரம் செய்கின்றோம். அதே மாதிரி நமக்குள் அந்தத் தீமை செய்யும் உணர்வைச் சுவை மிக்கதாக மாற்றிவிடுகிறோம்.

இப்படி நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது நம் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் சேர்கின்றது. “கொஞ்சம் இதில் பொறுமை தேவை…”

ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால் ரோட்டில் போகும் பொழுது பார்த்தால் “போகின்றான் பார்…” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.

இதே மாதிரி ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்த்து விடுகின்றோம். பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அதே உணர்வை எடுத்துத் தவறு செய்யும் அணுக்களைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

ஒருவன் சாபம் விடுகின்றான்… அவன் எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். அவனைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம். இந்த சாப அலைகள் அடுத்து நமக்குள் எதை எடுத்தாலும் தீமை செய்யும் அணுக்களாக வளர்ச்சி பெறுகின்றது.

அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுது
1.அந்தக் கணமே “ஈஸ்வரா”என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் வாழ் நாளில் இதைப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இவ்வாறு செய்து அந்தத் தீமையான உணர்வுகளை நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து தள்ளிப் பழக வேண்டும்..

ஒருவர் திட்டினார் என்று வைத்துக் கொள்ளுங்கள். திட்டியவர்களை எண்ணினால் புரை ஓட வைக்கின்றது. இங்கிருந்து தானே போகின்றது. யார் உடலில் விளைந்ததோ அங்கே போகிறது.

அப்படி உங்களை நினைக்கும்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் என்று நீங்களே இதைப் பெற்றிட வேண்டும்.

அதாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்
2.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் போது இந்த உணர்வு நமக்குள் வருகிறது.
3.அவர்கள் உணர்வு பதிவாகிறது… இதனுடன் கலந்து அதை நாம் மாற்றி விடுகின்றோம்.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளை இங்கே இணைத்து விடுகிறோம். உள்ளே கெட்டது போகாமல் மாற்றி விடுகிறோம். இந்த உணர்வு இரத்தத்தில் கலக்கிறது. இரத்தத்தில் கலந்தவுடன் அதை எடுப்பதற்கு வழிவேண்டுமல்லவா…!

அது கலந்தவுடன் இதை மாற்றிவிட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை முந்திக் கொடுத்துவிடுகிறோம்.
1.அதைக் கொடுத்தவுடன் நாம் கலந்து போவதை எடுத்துப் பழக வேண்டும்.
2.ஒன்றில்லாது ஒன்றில்லை…! எதுவுமே ஒன்று இணைந்தால் தான் அது வளரும்.

வட துருவத்தில் இருப்பது இழுக்கும். தென் துருவத்தில் இருப்பது தள்ளும். ஏனென்றால்
1.தென் துருவம் சூரியனைப் பார்த்து இருக்கின்றது.
2.வட துருவம் மேலே இருந்து இழுக்கிறது.
3.அதாவது காந்தத்தில் மற்றொரு காந்தத்தை வைத்தால் தள்ளிக் கொண்டே போகும்.

இதைப் போன்று நாம் நமது வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

1.நம் உடலில் உள்ள இரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்,
2.நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை நாம் அடைய வேண்டும், அதற்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.

நாம் அனவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை உலகமெங்கும் பரவச் செய்வோம்

நாம் அனவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை உலகமெங்கும் பரவச் செய்வோம்

 

அருள் ஞானச் சக்கரத்தை தினமும் உற்றுப் பாருங்கள். அதிலிருந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வரும்.

என்னென்ன காரியங்கள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை எல்லாம் எண்ணுங்கள்.
1.குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.விவசாயம் செழிக்க வேண்டும்
3.தொழில் பெருக வேண்டும் வாடிக்கையாளர்கள் நலமாக வாழ வேண்டும்.
4.நோயுற்றவர்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைத்து
5.அவர் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சக்கரத்தை வைத்துப் பயபக்தியுடன் செயல்படுங்கள். பாலோ பழமா பதார்த்தத்தையோ வைத்துத் தியானம் இருந்துவிட்டு நீங்களும் உட்கொள்ளுங்கள்… குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த வழியைக் கடைப்பிடித்து வாருங்கள்.

எங்கள் ஊர் நன்றாக இருக்க வேண்டும் தெரு நன்றாக இருக்க வேண்டும் வீடு நன்றாக இருக்க வேண்டும் அடிக்கடி இந்த உணர்வுகள் இங்கே படர வேண்டும் என்று சக்கரத்தை உற்றுப் பார்த்து இந்த உணர்வுகளைப் பரப்புங்கள்.

1.ஊரில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.ஊரிலே விவசாயம் செழிக்க வேண்டும்
3.மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று
4.”சக்கரத்திற்கு முன்…” இதை எல்லாம் சொல்லிக் கொண்டே வாருங்கள்.

அதன் வழி ஓரளவுக்கு அனைவருக்கும் இந்த உணர்வுகள் படரும்… பரவும். ஊரில் உள்ள குடும்பங்களும் நலமாகும் சக்தி பெறும். இந்த உணர்வுகள் பரவப் பரவ எல்லோரும் அதைப் பெறும் தகுதி ஏற்படும்.

டிவி ஸ்டேஷனில் எந்த ஒளிபரப்பு செய்கின்றார்களோ அந்த அலைவரிசையைத் திருப்பினால் அது தான் வரும். அதே போல
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த அல்லைவரிசையை எடுத்துப் பரப்பப்படும் பொழுது
2.மற்ற யாரிடமும் பேசினாலும் கூட அவர்களுக்குள்ளும் இது பதிவாகின்றது.

அவர்களுக்கு இந்த எண்ணம் வந்தால் அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் அவர்களும் அவர்களை அறிய முடிகின்றது. அறியாது வந்த கஷ்ட நஷ்டங்களைப் போக்க முடிகின்றது.

உலகம் நலம் பெற்று வாழ நாம் இந்த முறைப்படி தியானத்தைச் செயல்படுத்த வேண்டும். எல்லோரும் நன்றாக ஆகும்பொழுது நமக்குள் அருள் மகரிஷியின் உணர்வுகளை எளிதில் பெற முடியும்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் கூட்டுத் தியானமிருங்கள். அந்தக் குடும்பம் நன்றாக வேண்டும்… குடும்பத்தில் குழந்தைகளும் மற்றவர்களும் தொழிலும் சீராக வேண்டும் என்று தியானமிருங்கள்.

நோயற்றவர்களுக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவர்கள் நலம் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தில் முயற்சி எடுங்கள்… நலமாக வேண்டும் என்று ஒன்று சேர்ந்து சொல்லுங்கள். கூடுமானவரை சீக்கிரம் அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்.

என்ன தான் நோய் நீங்கினாலும் கூட நாம் வாழக்கூடிய காலம் குறுகியதுதான். எப்படியும் இந்த உடலை விட்டு நாம் பிரியத் தான் வேண்டும்… இந்த உடல் நமக்குச் சொந்தம் இல்லை.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?

1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அருள் ஒளியை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குச் சொந்தமாகின்றது.

உடல் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்யும்… அருள் உணர்வுகள் பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையப்படும் பொழுது உடல் சுருங்கத் தான் செய்யும். ஆனால்
1.பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே பட்டு… ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து அதைக் கவர்ந்து
3.அந்த உணர்வை உணவாக எடுத்து “ஒளியின் பிளம்பாக…” மாறும்.

எப்போதுமே பிறவியில்லா நிலை அடையும் அந்தச் சக்தி பெறுகின்றோம். அதைத்தான் இராமாயணத்தில் இராமன் நேரமாகிவிட்டது என்று மனதைக் குவித்துப் பூஜித்தான் என்று காட்டியிருப்பார்கள்.

நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து… பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உடலில் இருக்கும் பொழுது ஒளியின் உணர்வைச் சேர்த்து… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். கடைசி நிலை அது தான்…!

நம் உடலுக்குள் இருக்கும் தீமையை அகற்றிடும் அணு செல்கள்

நம் உடலுக்குள் இருக்கும் தீமையை அகற்றிடும் அணு செல்கள்

 

பல கோடிச் சரீரங்களில் தீமை என்று உணர்ந்து அதிலிருந்து தன்னைக் காத்திடும் உணர்வுகளைச் செயலாக்கிப் பெற்ற மனிதச் சரீரத்தில்
1.“அனைத்துத் தீமைகளையும் அகற்றிடும் அணு செல்கள்” உள்ளன.
2.ஆகையினால்தான் கார்த்திகேயா என்றும் “ஆயிரம் கண்ணுடையாள்…” என்றும் ஞானிகள் உரைத்தனர்.

மனிதனின் நிலையில் ஆயிரம் குணங்களின் சத்து நமது உடலில் இருக்கின்றது. இதனால் நாம் எத்திசையிலும் எந்நிலையையும் நமது உணர்வின் அறிவு கொண்டு அறிந்து கொள்கின்றோம்.

ஆலயங்களில் 1008 அபிஷேகங்கள் செய்வார்கள். மனிதரிடத்தில் 1008 குணங்கள் உள்ளன. பகைமை உணர்வுகள் வரும் பொழுது அதிலிருந்து மீண்டிடும் நிலையாக அறிவைக் கூட்டிப் பகைமையிலிருந்து விடுபடுகின்றோம்.

பல கோடிச் சரீரங்களில் சேர்ந்துள்ள தீமைகளை வென்ற உணர்வுகள் நமக்குள் இருக்கப்படும் பொழுது பகைமை உணர்வுகளைக் கண்ணால் பார்க்கப்படும் பொழுது நமது உடலில் இருக்கும் அறிவு இது பகைமை கொண்டது என்று உணர்த்துகின்றது. அறியும் தன்மை வருகின்றது.

தீமையை வென்றவர் துருவ மகரிஷி… அவர் துருவ நட்சத்திரமானார்.

“ஈஸ்வரா” என்று நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால் இதன் வழி கொண்டு தீமைகளை வென்றிடும் சக்தியினை நமக்குள் உருவாக்குகின்றது நமது உயிர்.

1.ஏனென்றால் கண்ணால் காக்கும் நிலை பெற்றிருந்தாலும்
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றும் பொழுது உணர்வினை உயிர் வழி கொண்டு உடலில் பரப்புகின்றது.
3.உடலில் பரப்பிய உணர்வுகள் உந்தி… மூக்கின் வழி சுவாசிக்கும் உணர்வின் தன்மையினை இடைமறித்து
4.அருள் ஒளி என்ற உணர்வுகள் இணையும் பொழுது தீமை என்ற நிலை வராது தடுக்கின்றது.

அருள் ஒளியின் உணர்வின் தன்மை, நமக்குள் வலு பெறும் பொழுது பகைமையை உட்புகாது தடுக்கும் நிலை வருகின்றது. இதைத்தான் கார்த்திகேயா என்று உணர்த்தினர் ஞானிகள்.

ஏனென்றால் நாம் நமது ஆறாவது அறிவால் அனைத்தையும் அறிந்திடும் தன்மை இருந்தாலும்… ஆறாவது அறிவு சேனாதிபதியாக நின்று தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது.

1.எண்ணத்தால் உணர்வின் ஒளியை நமக்குள் உருவாக்கினால்
2.உயிரென்ற நிலைகள் இணைந்து அருள் ஒளி எனும் பேரொளியின் தன்மையை நம்முள் உருவாக்கும்.
3.இவையனைத்தும் எதிர்காலத்தில் உங்களைப் பகைமையுணர்வு தாக்காது
4.அதனின்று பாதுகாக்கும் சேனாதிபதியாக உருப்பெறுகின்றது.

அத்தகைய பாதுகாப்புக் கவசத்தின் உணர்வின் அணுக்களைப் பெறுவதற்குத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் உருவாக்கினால் இந்த உணர்வின் எண்ணம் உங்களைக் காக்கும். இதுவே சேனாதிபதி…!

ஞானிகளின் தத்துவக் கருத்துக்கள் மனிதன் தீமைகளிலிருந்து மீளும் மார்க்கத்தைத்தான் உரைக்கின்றன. அதற்காகத்தான் விநாயகரை வணங்கச் செய்தது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பெற்றுத் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்து நம்மை மனிதனாக உருவாக்க மூலமாக இருந்தது நமது உயிர்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து எண்ணத்தின் வலிமை பெற்றது மனித உடல்,

இன்றைய மனிதன் “தன் எண்ண வலுவின் உணர்வின் துணை கொண்டு…
1.1000 டன் எடை உள்ள இராக்கெட்டை விண்ணில் செலுத்துகின்றான்.
2.பெரும் பாறைகளைச் சிறு கடப்பாரை கொண்டு நகர்த்தி இடம் மாற்றுகின்றான்.

இது மனிதனின் எண்ண வலு.

எண்ணத்தின் வலுக் கொண்டு இவன் சுவாசிக்கும் பொழுது “அதனின் உணர்வின் யுக்தியின் அணுக்கள் உருவாகி…” அது காலத்தால் தனக்கேற்ற உணர்வை உருமாற்றிக் கொண்டேயிருக்கும்.

எண்ணத்தின் வலுக் கொண்டு தீமைகளை அகற்றும் உணர்வை நமக்குள் சேர்க்கும் பொழுது அந்த உணர்வினை வலுப் பெறச் செய்யும்… வளர்க்கச் செய்யும் உணர்வினைச் செயல்படச் செய்கின்றது.

ஆகவே நாம் அருள் ஞானிகள் காண்பித்த அருள் நெறிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நமக்குள் சேர்ப்போம்.
1.“ஈஸ்வரா” என்று உயிர் வழி கொண்டு தீமைகளை வெல்லும் அருள் உணர்வினைக் கவர்ந்து உடல் முழுவதும் அதைப் பரப்பி
2.அறியாது நமக்குள் சேர்ந்துள்ள தீமைகளைப் பிளந்திடும் நிலை பெறுவோம்..

இதன் வழியைப் பின்பற்றும் அன்பர்கள் அனைவரும் தம்முள் தீமைகளை வென்றிடும் நிலையாக ஒளியின் உணர்வுகளைப் பெற்று இவ்வாழ்வில் பேரின்பப் பெரு வாழ்வாக பெரு வீடு பெருநிலை பெறும் நிலையாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

குருவினுடைய உதவி அவசியம் தேவை

குருவினுடைய உதவி அவசியம் தேவை

 

27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துச் சூரியன் ஒளியாக மாற்றித் தன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் நட்சத்திரங்களும் வாழ்கின்றது. பிற மண்டலத்திலிருந்து எடுத்துத்தான் இந்தப் பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்கள் கொடுக்கிறது.

அது போல்…
1.நாம் இந்த உடலில் எந்தெந்த உணர்வுகளை எடுக்கின்றோமோ இதில் எது வலுவோ (நாம் எடுக்கும் அருள் சக்திகள்)
2.இரத்தத்திலிருந்து தசை மண்டலத்தில் இருந்து எலும்பு மண்டலத்தில் இருந்து எல்லாவற்றையும் கொண்டு வருகின்றோம்.
3.எல்லாவற்றிலும் அந்த வலுவைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது
4.இந்த வலுவின் தன்மை காற்றிலிருந்து உயர்ந்த உணர்வுகளை எடுத்துக் கொடுக்கின்றது… பிரித்தெடுக்கின்றது.

அதே சமயத்தில் வேதனைப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் எல்லாவற்றிலும் விஷம் கலந்து விடுகிறது. காற்றிலிருக்கக்கூடிய விஷத்தை எடுத்து அடிக்கடி கவலைப்படும்படி செய்வதும் நோயாக்குவதும் வெறுப்படையச் செய்வதும் எல்லாம் செய்கின்றது. மற்ற உயிரினங்களுக்கு இது எல்லாம் தெரியாது.

குருநாதர் இதை எல்லாம் எனக்குள் பதிவு செய்தார்… உணர்த்தினார். அதைத்தான் உங்களிடமும் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.
1.நீங்கள் இதையெல்லாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.அதை வலுப்படுத்திச் செயல்படக்கூடிய சக்திகளாக வளர வேண்டும்.

மற்றவர்கள் என்னிடம் கஷ்டம் கவலை துயரம் நஷ்டம் எல்லாவற்றையும் சொல்கிறார்கள். இதை நான் எதிர்த்துப் போராடிச் சமாளிக்க வேண்டி இருக்கின்றது.

ஏனென்றால் பக்தியில் நாம் வழி வழியாக அதைத் தான் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

உங்களிடம் இதைப் போன்று கஷ்ட நஷ்டங்களைச் சொன்னால் உங்களுக்கும் அந்தக் கவலை வருகிறது அல்லவா. ஆனால் உங்களை அந்தக் கவலை தாக்காமல் நான் பாதுகாக்க வேண்டும்.
1.குருநாதர் எனக்கு எப்படிப் பாதுகாப்பு கொடுத்தாரோ உங்கள் ஒவ்வொருவரையும் நான் பாதுகாக்க வேண்டி இருக்கின்றது.
2.எத்தனை ஆயிரம் பேர் கூடி இருக்கின்றார்களோ அத்தனை பேருக்கும் நான் பாதுகாப்பு கொடுத்தாக வேண்டும்.

நீங்கள் இதை மாதிரிச் செய்யுங்கள் நன்றாக விடும் என்று மற்ரவர்களுக்குச் சொன்னாலும் அவருடைய கஷ்டம்… “அங்கே எப்படி இருக்கின்றது… இங்கே இப்படி நடக்கின்றது… எல்லாம் நஷ்டமாகி விட்டது” என்று சொல்லும் போது கேட்டால் அது உங்களுக்குள் தீமையாக விளைந்து விடாது பாதுகாக்க வேண்டும் அல்லவா.

அவர்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி நாம் நல்வழி காட்ட வேண்டும்.
1.காரணம் பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கின்றது.
2.ஆகவே அந்த அருள் உணர்வுகளை வலுவாக்கி விட்டால் உங்களிடம் எதுவும் வராது.

தங்கத்தில் திரவத்தை ஊற்றிய பின் மற்ற கசடுகள் எல்லாம் ஆவியாக எப்படி மாறுகின்றதோ அதே போல உங்களுக்குள் அந்தச் சக்தி அதிகமான பின் மற்ற தீமைகளை மாற்றிவிடும்.

அது வரையிலும் குருவினுடைய உதவி அவசியம் தேவை.
1.எனக்கு குருநாதர் எவ்வளவு நாள் உதவியாக இருந்து வழி காட்டினாரோ அதே போல
2.அந்தக் குருவின் தன்மையை வளர்க்க வளர்க்க உங்களை அது பாதுகாக்கும்.

மற்றவர்கள் அனைவரும் உடலுக்குத் தான் சொல்கிறார்கள். உடலுக்குப் பின் என்ன…? என்பதை யாரும் சொல்லவில்லை. நாம் இந்த வாழ்க்கையில் நம் எண்ணங்களைப் பரிசுத்தப்படுத்தி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்… கடைசி நிலை,

அது தான் விஜயதசமி… உயிர் விண்ணுலகம் செல்ல வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை உபதேசங்களும் கொடுக்கின்றோம். எல்லோருக்கும் அந்த உற்சாகத்தை ஊட்டிக் கொண்டு செல்கின்றோம்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் ஒவ்வொரு உடலும் கோவில். மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் சக்திகள் காக்கப்பட வேண்டும்.

1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் அதைச் சொல்லும் பொழுது
2.அது உங்களில் வளர்ந்தால் எனக்கும் கிடைக்கின்றது… மற்றவர்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

ஞானியரின் அருள் உணர்வுகள் தீமைகளை விழுங்கிவிடும்

ஞானியரின் அருள் உணர்வுகள் தீமைகளை விழுங்கிவிடும்

 

இப்பொழுது உங்களுக்கு எது எது… எதை எதை விழுங்குகிறது…? என்ற நிலையை உணர்த்துகின்றோம். அதாவது
1.உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அந்த ஞானியர்களுடைய உணர்வுகளுடன் கலந்தவுடன்
2.அது விழுங்கி அந்தத் தீமையை அடக்குகின்றது.

அதை அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக அந்த உணவு தேவைதான். ஆனால் இதனுடைய தன்மை அதற்குத் தேவை.

ஒரு மரக் கட்டை எரிகிறதென்றால் பல உணர்வுகள் சேர்த்து எண்ணெய்ப் பசை இருந்தால்தான் அது எரியும். எண்ணெய்ப் பசை இல்லை என்றால் கருகிவிடும்.

இதைப் போலத்தான் நாம் வைக்கும் குழம்பிற்குள் சுவை தேவை என்றால் காரம் தேவை. அந்தக் காரத்தை எந்த அளவு சேர்க்கின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் அந்த உணர்ச்சிகள் உந்தும்.

இதைப் போல
1.நமக்குள் எத்தகைய தீய குணம் இருப்பினும் அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து விழுங்கிடல் வேண்டும்.
2.அருள் ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால் அது தீமைகளை விழுங்கும்.
3.எனவே நாம் மகரிஷிகளின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

ஞானத்தை அறிய வேண்டும் என்றால் இப்பொழுது நீங்கள் கேட்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும் “அவை அனைத்திலும்…” எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்க வேண்டும்.

அவ்வாறு கலக்கும் பொழுது இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாகத் துகள்களாகச் சேர்கின்றது. இவ்வாறு சேர்த்துக் கொண்ட இந்தத் துகள்கள் இந்த உணர்வுகள் நுகர நுகர எண்ணங்களாக விரிவடைகின்றது.

எண்ணங்களின் தன்மை விரிவடையப்படும் பொழுது இங்கே பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுகின்றது. அந்தத் திறன் இல்லையென்றால் நாம் செயலாக்க முடியாது.

1.அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உணர்வைப் பதிவு செய்வதும்
2.அந்த உணர்வின் துணை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்றும்
3.அதே சமயத்தில் அருள் ஞானிகளின் உணர்வை அடிக்கடி எண்ணும் பொழுது நுகர வேண்டுமென்பதற்கும் இதை உபதேசிப்பது.

நம் உடல் நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில் உணவில் கலந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றிடும் திறன் பெற்றது. அதே போன்று நமக்குள் உணர்வின் தன்மை பதிவு செய்த நிலைகள் கொண்டு கேள்விப்பட்ட தீமையான நஞ்சுகளையும் அது நீக்கி நல்ல உணர்வைப் படைத்திடும் ஆற்றல் பெற்றது.

ஆனால் மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை எல்லாம் நீக்கியவன் மகரிஷி.
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து எடுத்து நமக்குள் இணைத்திட வேண்டும் என்பதற்குத் தான் பல வட்டங்களை இங்கு எழுப்பி
2.உங்கள் உணர்வின் நினைவாற்றலை இணைத்து அதனுடன் மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்து
3.உங்களுக்குள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தியது.

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களை நுகரும்படி செய்யும் பொழுது உங்களுக்கு அது பால்வெளி மண்டலங்களாக வருகின்றது. ஆனால் நீங்கள் இதை நினைவு கொள்ள வேண்டும்.

குறைகளை எவர் சொன்னாலும் அதை எண்ணத்தால் பதிவு செய்யக்கூடாது. உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற நினைவை
1.“அங்கேயே அதிகமாக்கி…” இந்த கணக்கைக் கூட்ட வேண்டும்.
2.எந்த அளவிற்கு நீங்கள் இந்த கணக்கை அளவு கோல் கூட்டுகின்றீர்களோ அந்தத் தீமைகளின் நிலைகள் நமக்குள் வராது.

ஆனால் அவர் தீமை செய்தார் என்ற கணக்கினைக் கூட்டினால் நன்மை செய்யும் கணக்குகள் குறைந்துவிடும். ஆகவே நீங்கள் இதை மாற்றுதல் வேண்டும்.

நன்மை நன்மை, என்று நாம் சொன்னாலும் இந்த நன்மை நன்மையாகாது.
1.நல்லது நல்லதும் ஆகாது…
2.கெட்டது கெட்டதும் ஆகாது.

தீமை என்ற காரத்தினுடன் நன்மை என்ற நல்ல பொருளை அதிகமாகக் கூட்டினால்… அந்தத் தீமையின் நிலைகள் இதுக்குள் உள்ளடங்கி நன்மை பயக்கும் நிலையாக இணைந்தே இயக்கும்.

இதைப் போலத்தான் மகரிஷிகளின் அருள் வட்டத்தை நமக்குள் இணைத்துப் பழக வேண்டும்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் என்னிலே பெற வேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
1.தீமை என்ற கணக்கை இங்கே தள்ளிவிட வேண்டும்.
2.இது சரியில்லை தப்பான கணக்கு என்று அதை நீக்கிப் பழக வேண்டும்.

இது இல்லையென்றால் நாம் இந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்று தான் பொருள்.

ஆறாவது அறிவு தெளிந்திடும் நிலைகள் பெற்றவன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன், மனிதனான பின் நாம் சிருஷ்டிக்கும் வலிமை பெற்றவர்கள்.

மகரிஷிகள் சென்ற பாதையில் நாமும் பிறவியில்லா நிலைகளை அடைவோம். உணர்வுகளை உயிரோடு ஒன்றி உயிரைப் போன்று ஒளியாக மாற்றிடுவோம்.
1.பேரொளியாக மாற்றிப் பெரு வீடு என்ற நிலையாக
2.நாம் அனைவரும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைவோம்…
3.மெய் உலகைச் சிருஷ்டி செய்வோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்

 

திருச்சபையின் ஆயுள் மெம்பராக நாம் சேர்ந்திருக்கின்றோம்.
1.குருதேவர் துருவ நட்சத்திரத்துடன் ஈர்ப்பு வட்ட்த்தில் அவர் ஆயுள் மெம்பராக இருக்கின்றார்.
2.அதன் வழி வளர்ச்சி பெற்று இன்றும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
3.அவர் காட்டிய அருள் வழியில் நான் அவருடன் ஆயுள் மெம்பராக இணைந்து இருக்கின்றேன்.
4.அது போல் நாம் அனைவரும் குரு வழியில் அங்கே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைந்திருக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் என்பதே பல மனிதர்களுடன் ஒன்றி… உணர்வின் தன்மை தெளிவாக்கித் தெளிந்த உணர்வுடன் ஒன்றி… ஒன்றிய நிலைகள் கொண்டு “எல்லோருடைய உணர்வும் பகைமையற்ற உணர்வு கொண்டு…” ஒளிச் சரீரம் பெற்றது.

பலவிதமான பல கோடிக்கணக்கான நச்சுத்தன்மைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம் வாழ்ந்து வருகின்றது.

மனிதரான பின் பிறவி இல்லாத நிலை அடைவதே கடைசி நிலை.

அதாவது இந்த உடலில் கோடிக் கரையில் இருக்கின்றோம். தனுசுக்கோடி… இராமேஸ்வரத்தில் இராமன் நேரமாகி விட்டது என்று எண்ணி மனதைக் குவித்து அவர் பூஜிக்கத் தொடங்குகின்றார்.

1.ஏனென்றால் இந்த மனித உடலில் ரொம்ப நாள் நாம் நீடித்து இருப்பதில்லை.
2.அதற்குள் எல்லோருடைய எண்ணங்களையும் ஒன்றாக்கி புவியின் ஈர்ப்பிற்குள் மற்றவர்கள் நம்மை இழுத்து விடாது
3.பேரருள் என்ற உணர்வின் தன்மை எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நமக்குள் அதை ஒன்றாக்க வேண்டும்.

அருள் உணர்வுகள் மற்றவர்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அந்த உணர்வு தான் அங்கே கிடைக்கின்றது.
2.நம் மீது அவருக்குப் பற்று வருவதில்லை.

இப்படி ஒவ்வொரு மனிதனும் நாம் செயல்படுத்தும் போது கடைசி நிலையில்… நாம் துருவ நட்சத்திரத்துடன் ஐக்கியமாகின்றோம்.

ஆனால் என் குடும்பம் இப்படி இருக்கின்றது… பிள்ளைகளுக்கு நாளை என்ன செய்வேன்…? என்ற எண்ணம் வந்தால் புவியின் பற்று வந்து விடுகின்றது. இங்கே யார் மீது பற்று கொண்டுள்ளோமோ அவர் உடலுக்குள் தான் செல்ல நேரும்.

அவர் உடலுக்குள் சேர்ந்து தன் உடலில் ஏற்கனவே சேர்த்துக் கொண்ட உணர்வுகளை அங்கே பாய்ச்சி அந்த உடலையும் வீழ்த்திவிட்டு மனிதனல்லாத உடலுக்குள் தான் அடுத்து செல்ல முடியும்.

ஆனால் இந்த உயிர் என்றுமே நிலையானது. தீயிலே மனிதன் குதித்தால் உயிர் வேகாது. உடல் கருகும். அந்த நெருப்பின் தன்மை கொண்டு கருகிய உணர்வு தான் எல்லா அணுக்களிலும் பெருகும்.

1.உடல் கருகி இந்த உயிரான்மா வெளியே சென்றால் அடுத்து ஏரி பூச்சியாகத் தான் பிறக்கும்.
2.ஏனென்றால் எல்லா சிந்தனைகளும் எரிந்தது… கருகிய உணர்வுக்கொப்ப அத்தகைய பூச்சியாக மாறுகின்றது.

மனித உடல் மீது இந்தப் பூச்சி பட்டால் சூடு போட்டது மாதிரி ஆகிவிடும். தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் இப்படித்தான் ஏரி பூச்சியாக மாறுகின்றார்கள்.

இதிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செல்ல வேண்டும்.
1.அவர் பேரருளைப் பெற்றார்… நமக்கு அந்த பேரருள் பெறும் முறையைக் கொடுத்தார்.
2.என்னை எப்பொழுதுமே அந்த துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து விடு என்றார்.
3.அதே வழியில் தான் உங்களையும் அங்கே இணைத்து நாம் அதன் வழியில் “துருவ நட்சத்திரத்தின் கிளைகளாக இருக்கின்றோம்…”

பற்றும் பாசமும் கொண்டு அது வரும் பொழுது அவர்களுக்கு இதை உபதேசிப்பதும்… அதை ஏற்றுக் கொள்ளச் செய்வதும்… ஏற்றுக் கொண்டவருக்கு அந்த அருள் உணர்வுகளைக் கொடுப்பதும் என்று செயல்படுத்தி வருகிறோம்..

பேருக்கு ஆயுள் மெம்பர் என்று சொல்லிக் கொள்வதில் பிரயோஜனம் இல்லை.
1.ஆயுள் மெம்பராக இருப்பவர்கள் அனைவருமே குடும்பத்தில் ஒவ்வொரு நொடியிலும் ஒன்றுபட்டு வாழும் உணர்வைச் சேர்த்து பழக வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.