சர்க்கரைச் சத்தையும்… இதய அடைப்பையும் (HEART ATTACK) போக்கும் வழி

Sugar and heart attack

சர்க்கரைச் சத்தும் இதய அடைப்பும் (HEART ATTACK)

நம்முடைய சகஜ வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஆத்திரமும் கோபமும் அதிகமாக நமக்குள் எடுத்துக் கொண்டால் நம்மிடம் இருக்கக்கூடிய மகிழ்ச்சி என்ன செய்கின்றது…?

அது கொதிக்க ஆரம்பிக்கின்றது.

அதாவது மகிழ்ச்சி என்ற உணர்வு சிறுகச் சிறுக நம்மிடம் இணையாதபடி அந்த அமிலத்தின் சக்தியைப் பிரித்திடும் நிலையாகிS சர்க்கரைச் சத்து நோயாக வந்து விடுகின்றது.

சர்க்கரை சத்து – அந்த இனிப்பின் (GLUCOSE) தன்மை கொண்டு இருதயத் துடிப்பின் நிலைகள் குறைவாகும்.

ஏனென்றால் மகிழ்ச்சியான உணர்ச்சியை ஊட்டி அந்த இனிமையின் தன்மையை நகர்த்திக் கொடுக்கும் அந்த நுண்ணிய நரம்புகளுக்குள் சர்க்கரைச் சத்து (நோயால்) இயக்கப்படும் போது இதயத் துடிப்பு குறைவாகும். இதை டாக்டரால் கண்டுபிடிக்க முடியாது.

நமக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மை பிரியப் போகும் போது இணையவில்லை என்றால் துடிப்பைக் குறைக்கத்தான் செய்யும். அதாவது
1.மற்றவர்கள் செய்யும் செயலைக் கண்டு
2.தாங்க முடியாதபடி உணர்ச்சிவசப்படும் நிலையில் (TENSION)
3.ஏற்க மறுக்கும் பொழுது அது நமக்குள் இணையாது.

உதாரணமாகப் பாலைக் காய்ச்சுகிறோம். அதற்குள் தான் வெண்ணெய் இருக்கின்றது.
1.ஆனாலும் புளிப்பின் சத்தை அதனுடன் சேர்த்தவுடனே
2.என்ன தான் கடைந்தாலும் வெண்ணெய் வருமா…?
3.வெண்ணெயைப் பிரித்து எடுக்க முடியுமா…? முடியாது.
4.பால் தயிராக மாறிய பின் தான் அதைக் கடைந்து எடுக்க முடியும்.

இதைப் போன்று தான் நமக்குள் இயக்கச் சக்தியாக இருக்கக்கூடிய நுண்ணிய நரம்புகளுக்குள் (அமிலத்தின் தன்மைகளுக்குள்) நாம் சிந்திக்கும் மாறுபட்ட இந்த உணர்வின் தன்மை இயக்கச் சக்தியாகப் பட்டவுடனே துடிப்பைப் பலவீனமாக்கி விடுகின்றது.

சர்க்கரை சத்து ஒருவருக்கு அதிகமாகி விட்டது என்றால் மயக்க நிலை ஜாஸ்தியாக வரும் – பார்க்கலாம் நீங்கள்.

அதே சமயத்தில் அவர் அதிகமான சந்தோஷமானால் என்ன செய்யும்…? ஏற்றுக் கொள்ளாத நிலைகள் கொண்டு இதயம் பலவீனமாகும். “டக்…!” என்று உயிர் போகும். அதற்கப்புறம் மகிழ்ச்சி எங்கே இருக்கின்றது…?

நாம் என்னமோ நினைக்கின்றோம்…!

ஆனால் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலும் எவ்வாறு நமக்குள் அமிலங்களின் தன்மையாக வடிக்கப்பட்டு நரம்புகளின் நிலைகளில் அது இயக்கச் சக்தியாக மாறி உடலை எப்படிச் செயல்படுத்துகின்றது என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் உடலுக்குள் ஊடுருவி எம்மை (ஞானகுரு) அறியும்படி செய்தார். அதைச் சமப்படுத்திட எதையெல்லாம் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

இதை உங்களிடம் சொல்லக்கூடிய காரணம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்.
2.உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன்.
3.உங்களுக்குள் இருக்கும் ஆயிரத்தெட்டு நற்சக்திகளைத் தெய்வமாக மதிக்கின்றேன்.

இவ்வாறு மனிதரை உருவாக்கிய நிலைகளில் சந்தர்ப்பத்தால் உங்களைத் துன்புறுத்தும் நோய்களிலிருந்து மீண்டு மகிழ்ச்சியான நிலைகள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

சாமி…! நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் செய்தோம்…!
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் பெறச் செய்தோம்
3.அதனால் எங்களுக்கு உடல் நலமும் மன அமைதியும் கிடைத்தது
4.நாங்கள் சந்தோஷமாக இருக்கின்றோம்…! என்ற இந்த
5.நல்ல வார்த்தையைத்தான் உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கின்றேன்.
6.என்னை புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை…!
7.எனக்குப் புகழ்ச்சி தேவையில்லை.

எண்ணத்தினால் உங்களுக்குள் வந்த நோய்களை உங்கள் எண்ணத்தினாலேயே போக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது – எங்கே செல்ல வேண்டும்…?

Ultimate destination

இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது – எங்கே செல்ல வேண்டும்…?

நமக்கு இரண்டு கை இருக்கிறது, இரண்டு கால் இருக்கிறது. மற்ற உயிரினங்கள் என்ன செய்கிறது…?

உதாரணமாகத் தூக்கணாங் குருவியைப் பாருங்கள். அதைப் பார்த்தீர்கள் என்றால் பயங்கரமாகப் பின்னி அது தன் வீட்டைக் கட்டுகிறது. அதே போல இன்னொரு குருவி இருக்கிறது. காலையில் இராகமாகப் பாட்டுப் பாடுகிறது. மிக மிகச் சிறியதாகத் தான் இருக்கும்.

முதலில் எனக்கு (ஞானகுரு) இது என்ன என்று தெரியவில்லை. குருநாதர் காட்டிய வழியில் சில அனுபவங்கள் பெறுவதற்காக நான் கொல்லூரில் இருக்கும் போது அதிகாலையில் பார்த்தால் இராகங்கள் போடுகிறது.

அதைக் கவனிடா…! என்றார் குருநாதர். அப்போது அதைக் கவனித்து பார்க்கும் போது அந்தக் குருவியின் உடல் மிகச் சிறியது. இங்கே இருக்கக்கூடிய சிட்டுக்குருவி வேறு. அதைக் காட்டிலும் உடல் சிறியது.

காலையில் 4.30 மணிக்கு அவை பாட்டு பாடுவதைப் பார்க்க வேண்டும். இந்தப் பக்கம் இது ஒன்று பாடுகிறது, இன்னொன்று அந்தப் பக்கம் பாடுகிறது. அடுத்தடுத்து ஒன்று ஒன்றாகப் பாடுகிறது.

அந்தக் குருவிகளின் பாஷையில் நீ ஒன்றை விடுடா…! என்றார் குருநாதர். ஒன்றொன்றாகத் தொடர்ந்து ஒவ்வொரு பாஷையாக கற்றுக் கொள்ள வைத்தார்.

அப்போது அவர் சொன்ன மாதிரி அதன் பாஷையில் பேசியவுடனே அந்தப் பறவைகள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறது…! என்ன செய்கிறது…! என்று பார்த்தேன்.

அது கூடு கட்டுவதை நீ இன்னும் பார்க்கவே இல்லை. அதைப் போய்ப் பார்… என்று சொன்னார். நீ அந்தக் குருவிகளின் பாஷையில் பேசி “நைஸ்…!” (NICE) பண்ணி விட்டு அது எங்கே கூடு கட்டுகிறதோ அந்த மரத்தடியில் இரு என்றார்.

அது எப்படி எவ்வளவு அழகாகப் பின்னுகிறது என்று பார். இலைக்கு இலைக்கு வைத்து ரொம்ப அபூர்வமாகத் தங்க் கூட்டைப் பின்னுவதைப் பார்..! என்று குருநாதர் இப்படியெல்லாம் என்னைப் பார்க்கச் சொன்னார்.

இப்படிப் பல பல நிலைகளை நேரடியாகக் காட்டினார். காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் நாட்டுக்குள்ளும் சென்று அனுபவம் பெறச் செய்தார் குருநாதர்.

அப்படி அனுபவபூர்வமாகப் பெற்ற நிலைகளை உங்களிடம் அந்த அருள் ஞானிகளைப் பற்றி லேசாகச் சொன்ன உடனே “என்னத்த இவர் சொல்கிறார்,..?” என்று நினைக்கின்றீர்கள்.

தேங்காய் பழம் இரண்டை வாங்கிக் கொண்டு போய் கோவிலில் வைத்து உடைத்து ரெண்டு காசைக் கொடுத்து அர்ச்சனை பண்ணிவிட்டுப் போனால் “எல்லாமே சரியாகப் போகிறது…!” என்று சொல்லிவிட்டுப் போகிறவர்கள் இருக்கிறார்கள்.

விஞ்ஞான நிலைகளால் நடக்கும் எத்தனையோ கொடுமைகளைப் பார்க்கிறோம். அதை மாற்றுவதற்கு என்ன வழி…? என்று அந்த மெய் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை யாம் சொன்னாலும் கூட அதை ஏற்றுக் கொள்வதில்லை.

நம் குழந்தையாக இருக்கலாம். அதே சமயம் அது அறியாத நிலைகளில் அதற்குள் அசுர உணர்வுகள் இருந்தாலும் நாம் குழந்தைக்குச் செய்ய வேண்டியது என்ன…?

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் எடுத்து வலிமை பெறச் செய்து அவனிடம் உள்ள தீய குணங்கள் போக வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

காரணம் நாம் மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இதில் நாம் சொந்தமும் பந்தமும் பாசமும் அதிகமான நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால்
1.பாசத்தால் நாம் எடுத்துக் கொண்ட அந்தச் சுவாசத்தின் தன்மை
2.எத்தகைய நினைவுகள் கொண்டு நாம் விரக்தியான உணர்வைச் சுவாசிக்கின்றோமோ
3.சுவாசித்த உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக்கியே விடுகின்றது. (நம் உடலாகச் சிருஷ்டித்து விடுகின்றது)
4.அந்த உணர்வின் இயக்கத்திலிருந்து யாரும் தப்ப முடியாது.
5.ஆயிரம் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்தாலும் சரி…
6.பெரும் யாகத்தைச் செய்து பல ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போட்டு
7.அவர்களை எல்லாம் மகிழ்ச்சி அடையச் செய்தால் நமக்குப் பெரிய புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்துச் செய்தாலும் சரி…
8.சுவாசத்தின் மூலமாக நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை உயிர் எனக்குள் சிருஷ்டித்தே விடுகின்றான்.
9.அவனிடமிருந்து நான் தப்ப முடியாது.

நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ உயிரிலே பட்டவுடன் அதை இயக்கி உணர்ச்சிகளாக உடல் முழுவதற்கும் பரவச் செய்கின்றது. அந்த உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்படுகின்றது.
1.உடலான சிவத்திற்குள் அது ஐக்கியமாகின்றது.
2.சக்தியின் ஸ்வரூபமாக உடலுக்குள் அது வித்தாக விளைய ஆரம்பித்து விடுகிறது.
3.விளைந்த வித்தின் தன்மையை உயிராத்மாவாகத் (உயிரிலே முலாமாக) தனக்குள் சேர்த்துக் கொள்கிறான்.
4.இந்த கூட்டை விட்டுச் சென்ற உடனே “வா என் பின்னாலே…!” என்கிறான்.

துன்பங்கள் படும் பொழுது அல்லது மற்றவரைத் துன்பப்படுத்தும் பொழுது எதையெல்லாம் குறைக்க வேண்டும் என்று நாம் எண்ணினோமோ இந்த உணர்வுகள் அனைத்தும் உடலில் விளைந்து உயிருடன் ஐக்கியமான பின் அடுத்த பிறவியில் அங்கங்கள் குறைந்த உடலுக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றான் (உயிர்).

அதாவது மற்றவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து எந்த அளவிற்கு மகிழ்ந்தோமோ அந்த வேதனையின் தன்மை நமக்கு மகிழ்ச்சியாகி அடுத்து வேதனைப்படும் உடலாக உருவாக்கி விடுகின்றது.

இரண்டு பேர் நமக்குப் பிடிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நல்ல நிலையில் நாம் இருந்தாலும் சரி அவர்களைப் பார்த்தவுடனே
1.திட்டுவதே உங்களுக்குக் குறியாக வந்து விடும்.
2.அந்த வேகமான நிலைகள் நமக்குள் இருந்து கொண்டே இருக்கும்
3.அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டாலே நமக்குள் எரிச்சலை ஊட்டிக் கொண்டே இருக்கும்
4.ஆனால் அந்த எரிச்சல் வருவது நமக்குத் தெரியாது
5.ஆக அந்த எரிச்சல் இருந்தால் தான் நமக்கு மகிழ்ச்சி
6.அதே சமயம் அந்த எரிச்சல் நம் உடலில் இருந்து கொண்டே இருக்கும
7.நமக்கு வேண்டாதவர்கள் துன்பப்பட்டால் அந்த இடத்தில் தான் நமக்கு மகிழ்ச்சி வரும்.

எந்தத் துன்பத்தின் நிலைகளைக் கண்டு அந்த உணர்வை ரசித்துச் சுவாசிக்கும் பொழுது நமக்குள் மகிழ்ச்சியாகின்றதோ அதன் விளைவாக மற்றதை வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் விஷ ஜெந்துக்களாகப் பாம்பாக நம்மைப் பிறக்கச் செய்துவிடும் நம் உயிர்.

இதை நன்றாகக் கவனமாகக் கவனிக்க வேண்டும் ஏனென்றால் செத்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைப்பீர்கள். இந்த உணர்வினுடைய செயல்கள் இப்படித்தான் ஆகும்.

ஆனால் இந்தத் துன்பத்திற்கெல்லாம் ஆளாக்கித் தான் குருநாதர் எனக்கு அந்தப் படிப்பினையே கொடுத்தார். யாம் நேரடியாகவே உங்களுக்குள் சொல்லாகக் கொடுத்து அந்த மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறோம்.
1.நாம் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்.
2.இந்தச் சரீரத்தில் நாம் எவ்வளவு காலம் இருக்கின்றோம்…?
3.வாழும் காலத்தில் எதை நாம் வளர்க்க வேண்டும்…?
4.உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும்…?

சற்று சிந்தித்துப் பாருங்கள்…! பிறவியில்லா நிலை அடைந்த அந்த மகரிஷிகள் வாழும் இடமே நம் எல்லையாகக் கருத்தில் கொண்டு நாம் வாழ வேண்டும்.

கேரளாவிலும் குமாரபாளையத்திலும் மந்திரவாதிகளிடம் நடந்த பரீட்சைகள்

தியானத்தில் ஆற்றல்

கேரளாவிலும் குமாரபாளையத்திலும் மந்திரவாதிகளிடம் நடந்த பரீட்சைகள் 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் (ஞானகுரு) “உனக்குள் அற்புத சக்தி இருக்கிறது…!” என்று சொல்லிவிட்டு சில நிகழ்ச்சிகளைச் செய்யச் சொல்கிறார். இதிலே நீ ஆசைப்படுவாயோ…! என்று சொல்கிறார்.

குருநாதர் உன் விரலை நீட்டுடா…! என்கிறார். இந்த மாதிரி நீட்டு. இந்த மரம் சாய வேண்டும் என்று சொல்கிறார். அவர் சொன்ன மாதிரிச் செய்தவுடன் ஒரு மரம் அப்படியே சாய்கிறது. கீழே விழுந்து அப்படியே காற்று போலப் பறந்து போகிறது.

உனக்கு யாராவது எதிரி இருந்தால்… “இது போலச் சாய்த்து விடலாம்…!” என்று சொல்கிறார். உனக்குக் கெடுதல் ஏதாவது செய்கிறான் என்றால் நீ விரலை இது போல நீட்டினால் அவனைச் சாய்த்து விடலாம். யாராக இருந்தாலும் இதைச் செய்யலாம்…! என்று சொல்கிறார்.

நான் சந்தேகப்பட்டவுடன் “இன்னொரு மரத்தின் தாவு (மரக் கொப்பு) மீது விரலைக் காண்பிடா…!” என்றார். காட்டியதும் தாவு “சடக்…” என்று அப்படியே ஒடிந்து விழுகிறது.

அப்போது குருநாதர் என்ன சொல்கிறார்,
1.உன்னைக் கண்டால் உலகமே அஞ்சும்.
2.நீ எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை…! என்று சொல்கிறார்.

இந்த மாதிரி ஒரு வலுவைக் கொடுத்து என்னைப் பரிசோதிக்கிறார். எதிலே கொண்டு போய் நம்மை மாட்டப் போகிறார் என்று தெரியவில்லை. அப்போதே எனக்குச் சந்தேகமாகி விட்டது.

இப்பொழுது இதைக் காண்பிக்கிறார். இன்னும் வேறு என்னென்னமோ கஷ்டத்தில் கொண்டு போய்த் தள்ளி விடுவார் போலத் தெரிகிறது…! எத்தனை அடி கிடைக்கப் போகிறதோ…? அல்லது வேறு என்னமும் கிடைக்கப் போகிறதோ…! என்ற இந்த உணர்வு எனக்கு (ஞானகுரு) வந்துவிட்டது.

ஏனென்றால் இவ்வளவு அற்புதங்களைச் செய்யப் போகும் போது குருநாதருக்குப் பிடிக்காதபடி நாம் ஏதாவது செய்துவிட்டால் “என்ன ஆவோம்…!” என்று இந்தப் பயம் தான்.
1.இந்தப் பயத்திலே எனக்குச் சிந்திக்கக் கூட நேரம் இல்லை.
2.என்ன செய்வது…? இவரிடமிருந்து நாம் எப்படிக் கழன்று கொள்வது…?
3.எல்லாம் காண்பிக்கிறார்… எல்லாம் பெறுகிறோம்… அவரிடமிருந்து ஏதாவது சாப அலைகள் வந்தால்
4.நம்மை எதிலே கொண்டு போய்விடுவாரோ…? எந்த நிலையைச் செய்வாரோ…! என்ற இந்தப் பயம் தான் எனக்கு அதிகமாக வருகிறது.

அப்போது தான் குருநாதர் சொல்கிறார்…! நீ ஒன்றும் ஆக மாட்டாய். உனக்கு இந்தப் பயம் வருகிறதில்லையா…? ஒரு எதிரிக் கூட்டதுக்குள் நீ போகிறாய். நீ ஒரு நல்லதைச் செய்கிறாய்.

ஆனால் ஒரு பொறாமைகாரன் ஏதோ ஒன்று செய்கிறான். அப்படி அந்தப் பொறாமைக்காரன் செய்யப் போகும் போது உன்னிடம் இருக்கக்கூடிய இந்த வலுவை நீ அவர்களிடம் பாய்ச்சுவாய்.

பவரையும் (சக்தியையும்) கொடுத்து மரத்தையும் சாய்க்கச் சொல்லி விட்டால்… யாராக இருந்தாலும் “உரசிப் பார்க்க வேண்டும்” என்ற தைரியம் நமக்கு வரும் அல்லவா…!

அவன் கெட்டவன் தான். உன் வலுவை அவன் மேல் பாய்ச்சும் போது அவன் வீழ்ச்சி அடையும் போது அவன் எண்ணம் முழுவதும் உன்னிடம் வரும். ஏனென்றால் அந்தச் சமயத்தில் உன்னிடம் இருக்கக்கூடிய சக்தி கொண்டு அவனை எப்படியும் வீழ்த்தி விடுவேன் என்ற அகம் கொள்கிறாய்.
1.வீழ்த்தி விடுவேன்…! என்ற எண்ணம் வரும் போது
2.முதலில் உன் உயிர் உனக்குள் அதைப் படைக்கிறது என்று சொல்கிறார்.
3.வேறு யாரும் இல்லை “நீ எண்ணும் எண்ணமே உனக்கு எதிரியாக மாறுகிறது…!” என்று சொல்கிறார்.

நீ யாரை வீழ்த்த வேண்டுமென்று எண்ணுகிறாயோ… உன்னுடைய அதே உணர்வு… நான் கொடுத்த சக்தி உனக்குள்ளேயே அது விளைந்து உனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை வீழ்த்திய தீரும்…! என்கிறார். அதாவது
1.முதலில் நீ தான்டா கெடுவாய்.
2.இரண்டாவது தான்டா அவன் கெடுவான் என்கிறார்.
3.அவனும் விழுந்து விடுவான். நீயும் விழுந்து விடுவாய்.
4.இதில் நீ எங்கே தப்பப் போகிறாய்…? என்று கேட்கிறார்.

ஏனென்றால் குருநாதர் பல வகைகளில் எம்மைப் பரிசோதித்தார். ஆசையும் ஊட்டுகிறார். அடுத்தாற்போல் அந்த ஆசையினால் எல்லாம் பெறவும் செய்கிறார். அடுத்த நிமிடம் “தொப்…!” பென்று கீழே விழ வைத்து விடுகின்றார். பயப்படவும் வைக்கிறார்…!

சாதாரண வாழ்க்கையைக் காட்டிலும் இது ஒரு ஏதோ ஒரு நரக லோகத்தில் வாழ்ந்த மாதிரி அல்லவாக இருக்கிறது…?
1.இதையும் செய்ய முடியவில்லை.
2.அதையும் செய்ய முடியவில்லை. என்ன செய்வது…? என்று
3.இப்படி ஒரு திகட்டலை ஊட்டிக் கொண்டே வருகிறார்.

அடுத்து குருநாதர் என்ன சொல்கிறார்…? நீ இரக்கத்துடன் ஒருவருக்கு நல்லது செய்கிறாய் என்றால் அவனுடைய வேதனையான உணர்வுகள் உனக்குள் வந்துவிடுகிறது.

அவன் உடலில் வேதனைகள் அதிகமாகும் போது நீ இரக்கத்துடன் அணுகும் பொழுது “ஈகை….! இது வலு குறைந்தது. ஆனால் அவனிடம் இருக்கக்கூடிய வேதனை என்பது வலு அதிகமானது. அதை நீ நுகர்கிறாய். உனக்குள் அது அணுவாக விளைகிறது. நீ காப்பாற்றிவிடுகிறாய் முதல் தடவை.

ஆனால் நீ நுகர்ந்த வேதனைகள் உன் உடலுக்குள் விளையத் தொடங்கியதும் அவனை காப்பாற்றிய உன்னுடைய நல்ல குணத்தை முழுவதையும் அழிக்கிறதே. இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்…? என்று கேட்கிறார். இப்படி அனுபவரீதியாகக் காட்டுகின்றார்.

அடுத்தாற்போல வேறொரு இடத்தில் நான் இருக்கின்றேன். அங்கே ஒரு மலைப் பாம்பு வருகிறது. நான் படுத்திருக்கின்றேன். அது சுருண்டு… சுருண்டு… சுருண்டு… சுருண்டு… அப்படியே பூஸ்..புஸ்ஸ்… புஸ்ஸ்…! என்று வருகிறது.

இதை இவர் (குரு) ஏவி விட்டாரா அல்லது அது நிஜமாக வருகிறதா என்று எனக்கு ஒரு சந்தேகம். அது இவ்வளவு சீறி வருகிறதே… இதை நிஜமாகவே இவர் உருவாக்கிக் கொடுக்கிறாரா…? என்று என்னுடைய எண்ணம்.

ஆனால் என்னை இங்கே விட்டுவிட்டு அவர் எங்கேயோ போய் விட்டார். காட்டுக்குள் பக்கம் போய் விட்டார். அவர் என்ன செய்கிறார் என்று எனக்கும் தெரியவில்லை. “நிஜமா… பொய்யா…!” என்று தெரியவில்லை.

அதி பயங்கரமான நிலையில் அந்த மலைப் பாம்பு சீறிப் பாய்ந்து வரப்படும் போது அப்பொழுது நான் ஒரு யோசனை செய்தேன். என் மேலே இருக்கும் துண்டில் ஒரு கல்லை முடித்து அந்தப் பாம்பு மீது போட்டேன்.

அதைத் தூக்கிப் போட்டதும் அதன் வாயில் போய்ச் சிக்கிக் கொண்டது. அந்தத் துண்டிலிருந்து வரும் மனித வாசனை காரணமாக அந்த மலைப்பாம்பு அந்தத் துண்டோடு சேர்த்துக் கல்லையும் விழுங்குகிறது. ஆனால் அது கல்லென்று பாம்பிற்குத் தெரியாது.

பலவிதமான உணர்வுகளை எடுத்தபின் எனக்கு அப்பொழுது ஒரு தைரியமும் வருகிறது. சில நேரங்களில் அதிலிருந்து தப்பவும் முடியவில்லை.

அப்புறம் தான் “இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்…!” என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அப்படிச் சிந்திக்க ஆரம்பிக்கும் போது நம்மிடம் குருநாதர் மிகப் பெரிய சக்தியைக் (மரத்தைச் சாய்க்கும் சக்தி) கொடுத்திருக்கிறார் இல்லையா…!

அந்தச் சக்தியை வைத்து இந்தப் பாம்பை நான் ஏதாவது செய்கிறேனா…! என்று பார்க்கிறார் போலிருக்கிறது… என்று எனக்கு அப்படி ஒரு சிந்தனை வந்தது.
1அப்பா……! எது ஆனாலும் சரி… நீயே பார்த்துக் கொள்…!
2.எனக்கு ஒன்றும் தெரியாது.
3.அது என்னை விழுங்கினாலும் சரி… என்னைக் கடித்தாலும் சரி.. நீயே பார்த்துக் கொள்…! என்று சொல்லி விட்டேன்.

ஏனென்றால் இது குருநாதர் ஏவி விட்ட பாம்பு தான். அப்புறம் அந்தப் பாம்பு அப்படியே மறைகிறது. குருநாதர் கெக்கே…கெக்கே… என்று சிரிக்கிறார்…! “என் பரீட்சையில் நீ தப்பி விட்டாயடா…!” என்று.

இப்படி அவர் கொடுத்த சக்தியை வைத்து நான் என்ன செய்கின்றேன் என்று சோதிக்கிறார். இதற்கு அடுத்து கேரளாவில் ஒரு மலைப் பக்கம் போகச் சொல்கிறார்.

அங்கே மந்திரவாதிகள் சில வேலைகளைச் செய்கிறார்கள். என்னுடைய வாசனையை நுகர்கிறார்கள். பரீட்சை செய்து பார்க்கிறார்கள். அதாவது “ஒடியர்கள்” இருக்கக்கூடிய பகுதிக்குக் குருநாதர் அனுப்புகிறார்.

ஒடியர்கள் முன்னாடி வருவதை நுகர்ந்து சில விஷயங்களைச் செய்வார்கள். என்னுடைய வாசனையை நுகர்ந்து பின் உனக்கா… எனக்கா…? என்று வலுவான நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

அவர்கள் செய்வதைப் பார்த்தபின் இவர்களை வீழ்த்தினால் என்ன…? என்ற அந்த எண்ணம் மறுபடியும் வருகிறது. சரி பார்க்கலாம்.. என்ன தான் செய்கிறது என்று பார்ப்போம்…! என்று தோன்றுகிறது.

மலைப் பாம்பிடமிருந்து தப்பினோம். ஆனால் இந்த மந்திரவாதிகளிடமிருந்து எப்படித் தப்புவது…? அவன் ஏவல் செய்யும் போது நாம் சும்மா இருந்தால் நம்முடைய கை கால் போய் விடுமே…! கை கால் போய்விட்டால் என்ன செய்வது…? இப்படி ஒரு சிந்தனை வருகிறது.

முதலில் விரலை நீட்டி மரத்தை எப்படிச் சாய்த்தோமோ அதே போல இவர்கள் கை கால்களையும் விழ வைக்கலாம் என்று இந்த எண்ணம் போகிறது.

அப்பொழுது தான் குருநாதர் ஏற்கனவே சொன்னது நினைவிற்கு வருகிறது. முதலில் நீ இதை எண்ணினால் உன் கை கால்கள் விளங்காமல் போகக் கூடிய உணர்வு உனக்குள் விளைந்து விடும்.
1.அவனும் போகிறான்.
2.அதே போல நோயாக மாறி உன் கை கால் அங்கங்கள் இயங்காமல் போய்விடும் என்று சொல்கிறார்.

அப்புறம் இதற்கு என்ன செய்வது…! என்கிற போது தான் குருநாதர் விளக்கம் கொடுக்கின்றார். அவர்களின் ஏவலின் தன்மை உன்னைத் தாக்காத நிலைகளில்
1.”நான் கொடுத்த சக்தியை” உன் பாதுகாப்புக்காக வைத்துக் கொள்.
2.உன் பாதுகாப்புக்காக இந்தச் சக்தியை நீ பயன்படுத்தினாய் என்றால் உனக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

ஏனென்றால் ஒரு நெல்லிற்கு உமி தேவை தான். அந்த உமி இல்லை என்றால் அதில் பால் பிடித்து அரிசி வராது. இதைப் போன்று தான் உயர்ந்த குணங்களைக் காக்க வேண்டுமென்றால் இந்தச் சக்தியைப் பயன்படுத்த வேண்டிய முறைகள் இது என்று உபதேசிக்கின்றார்.
1.வலுவான சக்தியைக் கூட்டி
2.இதை அரணாக அமைக்கச் சொல்கிறார்.
3.இந்த அரணைத் தாண்டி அது வராது.
4.நீ அவனை அழிக்க வேண்டியதில்லை… அவன் உன்னை அழிக்க முடியாது.
5.அவன் எண்ணம் அவனுக்குள்ளேயே அவனை மாய்க்கும்.
6.அவனில் அவனே போகட்டும்…! என்று சொல்கிறார்.

மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைக் கொடுத்தாலும் அது மனிதன் கைக்கு வரும்போது எப்படி..? என்ற நிலை அனுபவமாக இவ்வாறு காட்டுகின்றார் குருநாதர்.

இப்படி ஒரு அனுபவம் இல்லை. பல முறைகளிலும் பல சந்தர்ப்பங்களிலும் இதே போல ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஒரு சமயம் குமாரபாளயத்தில் நான் இருக்கும் பொழுது என்னை அங்கிருக்கும் மந்திரவாதியும் அவனைச் சார்ந்தவர்களும் உதைப்பதற்கே வந்தார்கள்.

விடிவதற்கு முன் நீ ஊரை விட்டுப் போகவில்லையென்றால் உன்னை என்ன செய்கிறேன் பார்…! என்கிறார்கள். என்னைப் பார்த்துக் கத்தியை எடுத்து ஓங்கி விட்டார்கள்.

அப்பொழுது வலுவை இப்படிப் பாய்ச்சுவதா… அப்படிப் பாய்ச்சுவதா…? என்ற நிலையில் அந்த உணர்வின் தன்மையை “நான் அரண் கட்டப்படும் போது” கத்தியை ஓங்கியவனின் கைகள் இறங்கவில்லை. அந்தக் கை பாட்டுக்கு அப்படியே நிற்கிறது.

அதே சமயம் கூட்டம் கூடி விட்டது. அப்படிக் கூட்டம் கூடியதும்
1.நான் தெரியாமல் செய்துவிட்டேன் என்றேன்
2.அப்புறம் அவன் கை கீழே இறங்கியது…!
3.சில சந்தர்ப்பங்கள் இப்படி வரப்படும் போது நானாக அதைச் செய்யவில்லை.

எதிர்பாராமல் வரும் போது இந்த உணர்வின் தன்மை கொண்டு தடுப்புச் சுவர் போல அமைத்துத்
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தான் எண்ண வேண்டுமே தவிர
2.கை நிற்க வேண்டும் என்று எண்ணக் கூடாது…!
3.நான் கொடுத்த உணர்வின் சக்தியை நீ எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இப்படித்தான் எனக்கு அனுபவத்தைக் கொடுத்தார் குருநாதர்.

அணுவை வைத்து அணுகுண்டாகச் செய்து அதை வெடிக்கச் செய்தால் உலகை அழிக்கின்றது. ஆனால் அந்த அணுவையே அடக்கும் போது அது நமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றது.

அதாவது மரத்தைச் சாய்ப்பது அடுத்தவரைச் செயலிழக்கச் செய்வது இதெல்லாம் மனிதனுக்குள் விளைந்த சக்தி. மந்திர ஒலியால் ஒரு உடலுக்குள் பாய்ச்சப்பட்டு அந்த உணர்வின் தன்மை வலுவாக்கப்பட்டு அதன் நிலைகள் கொண்டு தான் இப்போது உன்னில் இயக்கப்பட்டது. சாதாரண மனிதனின் செயலாக்கங்கள் தான் இது..! என்று விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர்.

தன் வாழ்க்கையில் வந்த இத்தகைய தீமைகள் அனைத்தையும் நசுக்கிப் பொசுக்கியவன் அகஸ்தியன். அகஸ்தியன் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான். அதை நீ நுகர்ந்தாய் என்றால் இதை நீ அழிக்கலாம் என்ற நிலையில் இராமாயணக் காவியத்தைச் சொல்கின்றார்.

வாலி மிக வல்லமை பெற்றவன். ஒரு தீமையான உணர்வை மற்ற எதனுடன் கலக்கச் செய்தாலும் அதனின் வலிமையை அது இழக்கச் செய்துவிடும். ஆனால் அதைப் போன்ற வலிமைகளையும் வென்றவன் துருவ மகரிஷி.

தன்னுடைய எண்ணத்தால் மற்றவைகள் அனைத்தையும் அரவணைத்து ஒளியின் சிகரமாக வாழுகின்றான் அந்தத் துருவ மகரிஷி.

1.நீ இங்கே மந்திரத்தைச் சொல்லிச் சொல்லித்தான் எடுக்க வேண்டும்.
2.நீ மந்திரத்தைச் சொல்லி அந்த உணர்வின் தன்மை வலிமை பெற்ற பின்தான்
3.இந்த உணர்வின் நினைவாற்றலை அடுத்தவனுக்குள் நீ பாய்ச்ச முடியும்.
4.இதில் ஏற்றி மந்திர உருக்களை நீ ஏற்படுத்துவதற்கு முன்
5.நீ ஜெபிக்கும் இந்த அலைகள் குவிவதற்கு முன் அவன் உன்னைத் தாக்கவும் செய்யலாம்.

ஆனால் நீ எண்ணும் போது “நினைத்த மாத்திரத்தில்” அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடியதை நீ பெற முடியும். அது எங்கும் எப்போதும் பரவிக் கொண்டே உள்ளது. அது வந்து கொண்டே உள்ளது

மனித வாழ்க்கையில் வரும் தீமை எதுவானாலும் அந்தத் தீமை தனக்குள் விளையாதபடியும் ஒருவன் தீமை செய்கிறான் என்றால் “தீமை செய்தான்…!” என்ற எண்ணத்தை எடுக்காதபடியும் உயர்ந்த ஞானத்தின் உணர்வை இப்படி நமக்குள் சேர்க்க வேண்டும்.

அன்று அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைத் தன் எண்ணத்தால் எடுத்துக் கொண்ட பின் வரும் விஷத்தை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டான்.

வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் சூரியனிலிருந்து வெளிப்படுகிறது. அதிலே காந்தம் ஒரு பொருளைத் தனக்குள் அரவணைத்துக் கொண்டால் சீதா லட்சுமியாக மாறுகின்றது. துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரக் கூடியதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் சீதா லட்சுமியாக மாறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த எண்ணத்தை எண்ணும் போது அதை நீ பெறுகின்றாய். அந்த உணர்வை நீ நுகரும்போது அந்த எண்ணங்கள் பிரதிபலிக்கின்றது. அதாவது உடலான இந்தத் திரேதா யுகத்தில் சீதா ராமனாகத் தோன்றுகிறான் (எண்ணங்களாகத் தோன்றுகின்றது).

கடும் வேதனைப்படும் நிலையாக விஷத் தன்மை கொண்ட உணர்வின் இயக்கமாக ஒருவன் செய்தான் என்றால் அது வாலி. ஏனென்றால் விஷம் முதலில் தோன்றியது – வாலி. பின் மனிதனாகி ஒளியின் சிகரமாக மாறி ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ நட்சத்திரம் – சுக்ரீவன்.

வாலியின் சகோதரன் சுக்ரீவன் என்றும் “அவனுடைய துணையைத் தான்… இராமன் நாடுகின்றான்…!” என்று காட்டுகின்றார்கள். விஷத் தன்மையான உணர்வுகளை நுகர்ந்தால் அதிலிருந்து விடுபட
1.நம்முடைய எண்ணத்தால் (இராமன்)
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் (சுக்ரீவன்) பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறும் போது
3.அது நம் உடலுக்குள் வலிமை பெற்று
4.இந்த நஞ்சினை (வாலி) நமக்குள் வராதபடி பாதுகாக்கின்றது என்ற நிலையை அங்கு தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆடி மாதம் பலமாகக் காற்று அடிப்பதன் காரணம் என்ன…?

Image

twlve rasi

ஆடி மாதம் பலமாகக் காற்று அடிப்பதன் காரணம் என்ன…?

 

27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் சக்திகளைக் கோள்கள் பெறுகின்றது. எந்தக் கோளின் சக்தி இங்கே வளர்ந்து அதன் வழியில்
1.நம் பூமிக்குள் தாவர இனங்கள் வளர்கின்றதோ
2.அதிலே நட்சத்திரத்தின் கதிரியக்கப் பொறிகளும் அதனின் வீரிய உணர்ச்சிகளும்
3.அந்த அணுக்களில் பெறப்பட்டு “இயக்கச் சக்தி…!” பெற்றது அது.

ஆகவே அந்த விண்ணுலக ஆற்றல் எவ்வாறு நமது பூமிக்குள் வருகின்றது என்ற நிலையை அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொண்டான்.

அவன் அறிந்த இந்தப் பேருண்மையைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காக வேண்டித்தான் பனிரண்டு மாதங்களையும் பனிரெண்டு ராசியின் தன்மையாகக் காட்டினார்கள் அகஸ்தியனுக்குப் பின்னாடி வந்த ஞானிகள்.

இதை வைத்துத்தான் சாஸ்திரங்கள் எழுதப்பட்டது. அதாவது இன்னென்ன காலங்களில் இப்படி வரும். இதனுடைய சுழற்சி வட்டங்கள் இன்னென்ன மாதங்களில் இப்படி வரும் என்கிற வகையில் அமைத்துக் கொண்டு வருகிறார்கள். ஏனென்றால்
1.ஒவ்வொரு வருடமும் சுழற்சியின் வட்டங்கள் மாறுகின்றது.
2;அந்த நேரத்தில் நட்சத்திரங்களின் நிலைகள் எவ்வாறு மாறுகின்றது…? என்றும்
3.அந்த வானயியல் தத்துவம் புவிக்குள் வந்து எப்படி மாறுகிறது…? என்றும் காட்டியுள்ளார்கள்.

ஒவ்வொரு மனிதனின் உயிரும் ஓர் நட்சத்திரத்தின் சக்தி கொண்டது. ஆக பூமிக்குள் இருக்கும் ஒவ்வொரு உயிரும் (எல்லாம்) எந்த நட்சத்திரத்தின் பங்கு விகிதாச்சாரம் அதிகமாக எடுத்திருக்கின்றதோ அதன் வழியில் நம் பூமிக்குள் சக்திகள் கவரப்படுகின்றது.

உதாரணமாக கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரம் இரண்டும் இயக்கும் போது ஆண் பெண் என்ற நிலைகள் உயிரணு உருவாகின்றது.

அதைப் போன்று தான் அதனின் உணர்வின் தன்மை பூமிக்குள் வரும் போது சந்தர்ப்பத்தில் நமது பூமியில் எத்தனை கலர்கள் வருகின்றதோ அது ஓடு பாதையில்

எந்தெந்த நட்சத்திரங்கள் உமிழ்த்துகின்றதோ அதில் எத்தனை எத்தனை நிறங்கள் வருகின்றதோ அதுவெல்லாம் நம் பூமியின் ஓடும் பாதையில் வரும் பொழுது அதைத் துருவப் பகுதி வழியாகக் கவரப்படும் போது அதனதன் சக்திகள் பூமிக்குள் பரவுகின்றது.

அப்படிப் பரவும் பொழுது அந்த நட்சத்திரங்களின் எதிர்மறையான அலைகள் ஒன்றை ஒன்று சந்திக்கப்படும் போது ஒன்றுக்கு ஒன்று ஒத்துக் கொள்ளவில்லையென்றால் பார்க்கலாம்…! ஆடி மாதங்களில் காற்றலைகள் அதிகமாக வரும்.

1.எதிர்மறையான உணர்வுகள் வரப்படும் போது
2.நம் பூமியில் அடுத்தடுத்து அழுத்தமான நிலைகளில் மற்ற கோள்களின் சக்தியோ நட்சத்திரங்களின் சக்தியோ வரும்போதுதான் (பெருகி வருவதை)
3.அதை “ஆடிப் பெருக்கு” என்றார்கள் ஞானிகள்.

பூமியில் வெளிப்படும் இதைப் போன்ற உணர்வுகள் எதிர் நிலையாகப்படும் பொழுது காற்றலைகள் அதிகமாக மாறுவதும் அதன் தொடர் வரிசையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடப்பதைப் பார்க்கலாம்.

ஆனால் சில மாதங்களில் சுத்தமாகக் காற்றே இல்லாத காலங்களும் உண்டு. ஏனென்றால் எதிர்மறையான அணுக் கதிர்கள் இங்கே வரவில்லை என்றால் அது அமைதி கொண்டு தான் இருக்கும்.

அதே சமயத்தில் சூரியனுடைய காந்தப்புலன் அதைக் கவரப்படும் போது தனக்குள் எடுத்து அதை அடக்கும் சக்தியாக அணுக்களாக மாற்றிக் கொள்ளும்.

இப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிலைகள் பெறுவதை ராசி என்றும் பன்னிரண்டு ராசிகளுக்குள்ளும் அதனுடைய இயக்கச் சக்திகள் எப்படி எப்படி உருவாகிறது…? என்றும் அன்று ஞானிகள் தெளிவாக்கியுள்ளார்கள்.

குறைகள் வந்தால் யாரிடம் நாம் சொல்கிறோம்…! யாரிடம் சொல்ல வேண்டும்…?

Adikalar

குறைகள் வந்தால் யாரிடம் நாம் சொல்கிறோம்…! யாரிடம் சொல்ல வேண்டும்…?

தபோவனத்திற்குள் புதிய பூமியில் எல்லோரையும் அழைத்து ஒன்றாக இங்கே சேர்த்து வைக்கலாம் என்று சொன்னால் அதில் நம் தாய்மார்கள் என்ன செய்கிறார்கள்…? துவைத்த துணியைக் காயப் போடுவதில் பகைமையைப் பெருக்குகின்றார்கள்.

இவர்கள் எதற்காக இங்கே வந்தார்கள்…? என்று எனக்கு (ஞானகுரு) ஒன்றும் புரியவில்லை. இங்கே தியான மண்டபத்தில் தியானத்திற்குக் கூட அவர்கள் வருவதில்லை. ஏனென்றால் தியானத்திற்கு வருவதற்குக் கூட அவர்களுக்கு நேரம் இருக்காது.

முதலில் நல்ல நிலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தபோவனத்திற்குள் வருகின்றார்கள். ஆனால் இங்கே வந்த பிற்பாடு துணிகளைக் காயப் போடுவதில் ஒருவருக்கொருவர் பேருக்கும் பகைமை.

இங்கே புதிய பூமியில் எவ்வளவோ பரந்த வெளி கிடக்கிறது. துணிகளைக் காயப் போட எவ்வளவோ இடம் இருக்கின்றது.

ஆனால் இவர்கள் போட்ட இடத்தில் முந்திக் கொண்டு யாராவது துணியைப் போட்டார்கள் என்றால் “என் இடத்தில் நீ போட்டு விட்டாய்…!” என்று அவர்கள் இந்த இடத்தையே சொந்தமாகக் கருதிக் கொண்டு பேசுவதற்குத் துணிந்து விடுகின்றார்கள்.

இந்த மாதிரி நிலைகளை எல்லாம் மாற்றி அமைத்துக் கொள்வதற்காகத் தான் இங்கே கொண்டு வந்து வைத்தது. ஆனால் நம்மையே மாற்றி அமைத்து விடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிற்குப் பகைமையைப் பெருக்கி இருக்கிறார்கள்.

ஏனென்றால் தீமையை அகற்றி அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்று தான் யாம் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.

பெண்கள் தங்களுடைய சக்திகளை எப்படிப் பெருக்க வேண்டும் என்று சொல்கிறோம். தாய்மார்கள் எத்தகைய தீமை வந்தாலும் அதை வராதபடி தனக்குள் சாந்த உணர்வு கொண்டு சமப்படுத்தி கூடுமான வரை மகிழ்ந்த நிலைகளைப் பெருக்க வேண்டும்.

பிறருடைய குறைகளை வளர்க்காது அவர்கள் நிறைவு பெற வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் பெருக்கிக் கொள்ளுங்கள்.
1.அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்.
2.இருள் ஞானத்தைப் பெருக்காதீர்கள் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

ஏனென்றால் இங்கே மட்டும் அல்ல. நமது வாழ்க்கையில் நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ இதைப் போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது பிறருடைய செயல்கள் தவறாக இருந்தாலும் அதை நமக்குள் சேராவண்ணம் தடுத்து அதிலிருந்து விலகிச் செல்வதனால் தப்பில்லை.

குறைகளை நாம் வளர்த்து கொண்டிருந்தால் பகைமைகள் தான் நமக்குள் வளரும். பகைமையற்ற நிலைகளில் நாம் வாழ வேண்டும் என்றால் அந்த ஞானியின் உணர்வை நாம் அவசியம் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.அப்பொழுது மனதில் நிம்மதி என்ற நிலையில் வரும்.
2.மன நிம்மதி ஏற்பட்டால் தான் ஓரளவுக்கு நம் வாழ்க்கையில் எல்லாமே தெளிவாகம் வரும்.

இந்த நாட்டிலோ அல்லது உலகில் எந்த மூலைக்குச் சென்று நாம் குடியிருந்தாலும் நம அருகில் உள்ளோர் எல்லோரும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் தொழிலில் வளம் பெற வேண்டும்.
4.அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சகோதரத்துவம் வளர வேண்டும்.
5.அவர்கள் ஒற்றுமை பெற வேண்டும் என்று
6.ஒவ்வொரு நாளும் இதைத் தான் தியானித்து நமக்குள் பெருக்க வேண்டும்

இதை விட்டு விட்டு அவர்கள் தான் முதலில் அப்படிச் சொன்னார்கள். அதனால் நான் பதிலுக்கு இப்படிச் சொன்னேன் என்று அடுத்தவர்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் பெருக்கக் கூடாது. கடைசியில் “குற்றவாளி யார் என்றே தெரியாது….!”

சத்தான பாலாக இருந்தாலும் அதிலே பாதாமைப் போட்டாலும் விஷம் பட்டுவிட்டால் பாலைக் குடித்த பின் விஷத்தின் இயக்கமாகி இருள் சூழ்ந்த நிலையைத்தான் அது உருவாக்கும்.

அதைப் போன்று தான் நாம் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் பிறர் சொல்லும் குறைகளையோ பிறர் படும் உணர்வுகளையோ நாம் அடிக்கடி உற்றுப் பார்த்து அதை விசாரித்துக் கொண்டேயிருந்தால் அந்தக் குறை உணர்வுகள் நம் உடலிலும் வளர்ச்சியின் தன்மை அடைந்து விடுகின்றது.

ஆனால் நாம் கொஞ்சம் சுதாரித்து அந்தக் குறைகள் நமக்குள் வளராது மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என்னைப் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும்.

அவர்கள் குடும்பத்தில் அருள் ஒளிகள் பரவி அவர்கள் செயல்கள் அனைத்தும் தெளிந்த நிலை பெறவேண்டும்… மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று அந்த நேரத்திலேயே நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

இவ்வளவும் சொன்னாலும் இன்னொன்று கேள்வி கேட்பார்கள்.

அவர்களிடம் நாங்கள் சொல்கிறோம். அவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டே இருக்கின்றார்கள். அதை நாங்கள் எப்படிச் சொல்லாமல் இருப்பது என்பார்கள்.

இந்த நினைவு வந்துவிட்டாலே நமக்குள் அவர்கள் உணர்வுகள் எல்லாமே நமக்குள் வந்திவிடுகின்றது. ஆகவே
1.இதை யாரிடம் சொல்ல வேண்டும்…? சொல்ல வேண்டியது எங்கே…?
2.இதைக் குருவிடம் சொல்லலாம். மற்றவர்களிடம் சொல்வது கூடாது.
3.குருவிடம் சொன்னால் அது விளக்கம் கிடைக்கும்.
4.எந்த நிலையிலும் எப்பொழுதுமே அதை நிவர்த்திப்பதற்குக் குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.
5.குருவல்லாத நிலைகள் போனால் பகைமை உணர்வையே வளர்க்கும்.
6.குருவிடம் வந்தால் பகைமையைக் குறைக்கும்.
7.பகைமை எதனால் எப்படி வளர்கின்றது என்ற நிலையை குரு மூலமாக அறிந்து கொள்ளலாம்.

அந்தக் குருவினுடைய அருள் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் அருள் ஞானிகளின் உணர்வைக் குருவாக மதித்து அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்ற நீங்கள் எண்ணி எடுத்தால் அந்தக் குரு உங்களுக்குள் நல்வழி காட்டும். தெளிந்த மனங்களைக் கூட்டும்.
1.உங்கள் உயிரான குருவிடம் கேட்டு
2.அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளுங்கள்.

எனக்கு இப்படித் தீமை செய்தான் தீமை செய்தான் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் உங்கள் உயிர் நீங்கள் எண்ணியதை உருவாக்கி அதைக் குருவாக இயக்கிவிடும். தீமையைத்தான் உங்களுக்குள் பெருக்க செய்யும்.

ஆகவே அந்தத் தீமையின் நிலைகள் பெருகாதபடி அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பெருக்கிப் பத்தாவது நிலையான கல்கி என்ற அழியா ஒளி நிலை பெறுங்கள். எமது அருளாசிகள்…!

பழனி மலையில் முருகனின் காட்சி கிடைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி…!

Murugan vision

பழனி மலையில் முருகனின் காட்சி கிடைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி…!

அருள் ஞானம் பெற வேண்டும் என்பதற்காக வேண்டி முருகன் கோவிலில் வைத்து என்னைப் (ஞானகுரு) பரீட்சித்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

முருகன் உனக்குத் தரிசனம் தருவார்…! அப்பொழுது எனக்குச் செல்வம் வர வேண்டும். செல்வாக்கு வர வேண்டும். சொல்வாக்கு வர வேண்டும். என்று நீ முருகனிடம் கேள்…! என்றார் குருநாதர்.

ஏனென்றால் அவர் எந்தெந்த வகையில் எல்லாம் என்னைத் தூண்டிப் பார்த்தார் என்று எனக்கும் (ஞானகுரு) தெரியும். அப்புறம் அங்கே போய் முருகன் காட்சி கொடுத்த உடனே… “பார்த்ததும் எனக்குப் பயமாகிவிட்டது…!”

முருகனே காட்சி கொடுக்கிறார்; நாம் ஏதாவது தப்பாகக் கேட்டு விட்டால் நரகலோகம் தான் போக வேண்டியதிருக்கும்… என்ற இந்தப் பயம் வந்துவிட்டது.

ஏனென்றால் குருநாதர் எனக்கு ஏற்கனவே கெட்டது எது…? நல்லது எது…? என்று காட்டினார். ஆசை உணர்வு வரப்போகும் போது உனக்குள் கெட்டது எப்படி சூழுகிறது… பார்…! என்று உபதேசமே செய்திருக்கின்றார் குருநாதர்.

யாராவது குற்றம் செய்தார்கள்…! என்றால் இரு நான் உன்னைப் பார்க்கிறேன்டா…! என்ற அகந்தை தான் வருகின்றது. (என்) குருநாதர் எனக்கு எவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்திருக்கின்றார்…!

நீ என்னை எதிர்க்கின்றாயா…? உன்னை ஒரு கை பார்க்கிறேன்…! என்று இந்த அழிக்கும் உணர்வை எனக்குள் எடுத்துக் கொண்டால் குருநாதர் கொடுத்த சக்தியை நான் அழித்து விடுவேன்….!

இதைப் பரீட்சிப்பதற்கே அன்று குருநாதர் முருகனைப் பார்க்கச் சொன்னார்.

பழனி மலையில் முருகன் எனக்குக் காட்சி கொடுத்தவுடனே அவரிடம் நான் என்ன கேட்டேன்…?

1.நான் நல்லதைச் செய்ய வேண்டும்
2.என்னால் மற்றவர்களுக்கு நல்லது தான் உருவாக வேண்டும்
3.ஆனால் என்னை அறியாது தீமைகள் வந்தால் அதை வராது தடுக்கும் சக்தி உங்களிடம் தான் இருக்கின்றது… தீமைகள் செய்தால் அதைத் தடுத்து நல்லதாகத் தான் ஆக்க வேண்டும். (ஏனென்றால் அது எனக்குத் தெரியாது)

நான் படிக்காதவன். சக்தியை உணராதவன். என்னை வழி நடத்திச் செல்வது உங்களுடைய சக்தியாகத் தான் இருக்க வேண்டும் என்று இதைத்தான் கேட்டேன். குருநாதர் கேட்கச் சொன்ன செல்வத்தையும் செல்வாக்கையும் நான் கேட்க மறந்து விட்டேன்.

அங்கிருந்து கீழே படியில் இறங்கி வரப்படும் போது சில அற்புதங்கள் நடக்கின்றது.

எங்கேயோ வெளியூரிலிருந்து பழனிக்கு வருகின்றார்கள். அவர்கள் செல்வந்தர்கள் போலிருக்கின்றது. ஒரு அழகான பெண் அது உடலில் எத்தனையோ தாயத்துகளை எல்லாம் போட்டு வைத்துள்ளார்கள்.

மேலே மலைக்குக் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் ஒன்றாவது படிக்கு மேல் அந்த பெண்ணால் ஏற முடியவில்லை.

அந்த பெண் முருனைப் “பேய்” என்று பேசுகின்றது. அந்தப் பேயை எவன் போய்ப் பார்ப்பான்…? என்று அகந்தை பிடித்துப் பேசுகிறது. மேலே அழைத்துச் செல்வதற்காக வேண்டி என்னென்னமோ வேலை செய்கிறார்கள். ஒன்றும் நடக்கவில்லை.

நாம் மேலிருந்து வரப்படும் போது என் பார்வை அந்தப் பெண் மீது படுகின்றது. அங்கே மேலிருந்து கொண்டு வந்த விபூதியை அந்தப் பெண் மீது போட்டுவிட்டு நான் கீழே இறங்கிவிட்டேன்.

பார்த்தால் முருகா…! என்று அந்தப் பெண் சொல்லிக் கிடு…கிடு… என்று மேலே ஏறி ஓடுகிறது. தாயத்தெல்லாம் அறுந்து கீழே விழுகின்றது.

கூட வந்தவர்களில் ஒருவன் ஓடி வந்து என்னைப் பிடித்துக் கொண்டான். இங்கே முருகனே வந்துவிட்டான்…! என்று என்னைத் துரத்துகிறான். மாற்று ரூபத்தில் வந்திருக்கின்றான்… என்று சொல்லி “என்னை விட மாட்டேன்” என்கிறான். முருகா… முருகா…! என்று என்னைச் சுற்றுகின்றான்.

அட…! நான் முருகன் இல்லை…! மேலிருந்து கொண்டு வந்த விபூதியைத்தான் இங்கே போட்டேன் என்று சொன்னால் நம்புகிறார்களா என்றால் இல்லை. அப்புறம் சமாளித்துக் கொண்டு வந்துவிட்டேன். இப்படிச் சந்தோஷமான நிலையில் கீழே இறங்கி வருகிறேன்.

ஆனால் பழனி பஸ் நிலையம் அருகே நான் வந்தவுடன் குருநாதர் என்னை என்ன செய்தார் தெரியுமா…?

ஏற்கனவே பழனி கோவிலில் உள்ள யானைக்கு அருகில் என்னை அழைத்துச் சென்று இந்த யானைக்குப் பலமா…? எனக்குப் பலமா…? என்று கேட்டுவிட்டு யானை தும்பிக்கையைப் பிடித்து அலற வைத்தவர் குருநாதர்.

என்னை உதைத்தால் எப்படி இருக்கும்…? உதைத்துச் சட்டை வேஷ்டி எல்லாம் கிழித்து அடி.. அடி… என்று பிய்த்துவிட்டார்…!

அருகில் இருக்கும் என்னுடைய நண்பர்கள் ரொம்பப் பேர் வந்து இந்தக் கிழவனுக்குப் (குருநாதர்) பைத்தியம் அதிமாகிவிட்டது. பைத்தியத்தை அடிடா…! என்று அடிக்க வருகின்றார்கள்.

நான் அவர்களைத் தடுத்து நிறுத்தி “அவர் என்னைத் தான் அடிக்கிறார். நீங்கள் எல்லோரும் பேசாமல் இருங்கள்…!” என்று சொன்னேன். என்ன நைனா…? இப்படிச் சொல்கிறீர்கள்…! என்று எல்லோரும் கேட்கிறார்கள்.

ஏனென்றால் குருநாதருக்கும் எனக்கும் தான் இந்த இரகசியம் எல்லாம் தெரியும். அங்கே என்ன நடந்தது…? அவர் எதனால் அப்படிச் செயல்பட்டார் என்று…!

அங்கிருந்து தர…தர…! என்று திண்டுக்கல் ரோட்டிற்கு இழுத்துக் கொண்டு போனார். ஸ்கூலுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டி கட்டியிருக்கிறார்கள். அதில் ஆள் இல்லாத இடமாகக் கூட்டிக் கொண்டு போனார்.

செல்வமும் செல்வாக்கும் சொல்வாக்கும் வேண்டும் என்று தானே முருகனிடம் உன்னைக் கேட்கச் சொன்னேன். என்னைப் பாருடா…! என்னிடம் செல்வம் இல்லை… ஆனால் எல்லாச் சக்தியும் இருக்கின்றது….! என்னை எவண்டா மதிக்கிறான்…? என்று இப்படியே கேட்கிறார்.

பணமும் செல்வமும் செல்வாக்கும் இருந்தால் தான்டா நீ வாழ முடியும். அப்பொழுதுதான் நான் கொடுத்த சக்தியை நீ எல்லோருக்கும் பரப்ப முடியும். செல்வம் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாதுடா…! முருகனிடம் இதைக் கேட்டால் தானே கிடைக்கும் என்கிறார்.

இதற்கு நீங்கள் என்ன விடை சொல்வீர்கள்…?

அப்போது தான் நான் சொன்னேன்…! உங்கள் சக்தியால் நான் முருகனைப் பார்க்க முடிந்தது. ஆனால் நான் ஏதாவது தவறு செய்திருந்தால் கிடைத்தது எல்லாம் மறைந்து போய்விடுமே…! என்று சொன்னேன்.
1.ஆகையினால் குருவாக இருந்து முருகனை நீங்கள் காட்டியதே எனக்குப் போதுமானது
2.அதையே பெரிய செல்வமாக நான் நினைக்கின்றேன்
3.நான் ஏதாவது தவறாக நடந்தால் நீங்கள் தான் திருத்த வேண்டுமே தவிர நான் தவறைத் தெரிந்து செய்வதில்லை
4.என்னையறியாது தவறு வந்தாலும் அதைக் காப்பாற்றுவது நீங்களாகத் தான் இருக்க வேண்டும்
5.எனக்கு இந்த “ஞானச் செல்வமே போதும் சாமி…! என்றேன்.

அப்போது தான் இதைக் கேட்டுவிட்டுக் குருநாதர் “சிரிக்கிறார்… சிரிக்கிறார்… அளவு கடந்து சிரிக்கிறார்…!” ஏனென்றால் குருநாதர் எனக்குச் சாதாரண நிலைகளில் சக்தியைக் கொடுக்கவில்லை. “ஆட்டிப் படைத்தே… கொடுத்தார்…!”

இதைப் போன்று சிலருடைய நிலைகளில் குரு அருளைப் பாய்ச்சினாலும் அதிலே தப்பிப் பிழைத்தவர்கள் சிலரே.
1.எல்லாம் கிடைத்து விட்டது என்று ஓடியவர் பலர்.
2.எல்லாம் தெரிந்து விட்டது என்று ஓடி விட்டார்கள் பலர்.
3.அதைப் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வுடன் இருப்போர் இங்கே சிலர் தான்
4.அன்று அங்கே பலராக இருந்தோம்… இன்று சிலரே இருக்கின்றோம்.

ஆனால் எப்படியும் அருள் ஞானச் செல்வத்தைப் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வு உள்ளோர் நிச்சயம் பெறுவீர்கள். நீங்கள் அதைப் பெற வேண்டும் என்பது தான் என்னுடைய தவமே…!

அப்புறம் குருநாதர் என்ன செய்தார்…? கடைக்குக் கூப்பிட்டுப் போய் பேண்ட் சூட் எல்லாம் வாங்கிப் போட்டுக் கொள்ளடா என்றார். எனக்கு அதெல்லாம் வேண்டாம் சாமி என்றேன்…!

இப்படி நான் சொன்னதற்காக லட்டும் ஜிலேபியும் வாங்கிக் கொடுத்து
1.உன்னுடைய வாழ்க்கை இனிக்கும்.
2.உன் தொழில் இனிக்கும்.
3.இதைக் கேட்போர் உணர்வுகள் அவர்கள் வாழ்க்கையும் இனிக்கும் என்று இப்படிச் சொல்லி எனக்கு வாக்குக் கொடுத்தார்.

குருநாதர் எனக்குக் கொடுத்த மாதிரி உங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று சில நேரம் ஒரு வேகத்தில்… விபூதியோ சில பதார்த்தங்களையோ யாம் கொடுத்தால் “வேண்டாம்” என்று சொல்கிறார்கள்.

இப்பொழுது தானே கொடுத்தீர்கள்…! என்று சொல்கின்றனர். ஒரு நல்லதை நினைத்துக் கொடுக்கிறோம். வேண்டாம்..! என்கிறார்கள். ஏனென்றால்
1.மக்களுடைய நிலைகள் இது அவர்கள் தவறல்ல
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அவரை எங்கோ அழைத்துச் செல்கின்றது
3.அதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற உணர்வை உனக்குள் வளர்த்துக் கொள்
3.எவரையும் குற்றவாளியாக நீ எண்ணாதே…!
4.குறைகளிலிருந்து மீட்டும் நிலைகளே உன்னுள் இருக்க வேண்டுமே தவிர அவர்களை இழிவுபடுத்தும் நிலைக்கு நீ செல்லாதே…! பழித்துப் பேசாதே…!
5.ஆனால் குறையின் நிலைகளைத் தெளிவாக்கு என்று சொல்லி
6.அதற்காக லட்டையும் ஜிலேபியையும் கொடுத்து உபதேசம் கொடுக்கின்றார்.

குருநாதர் என்னை எந்த வழியில் எல்லாம் ஞானத்தைக் கொடுத்தார் என்றால்…
1.ஒரு நேரத்தில் இனிப்பு வருகிறது
2.ஒரு நாளைக்கு அடியும் உதையும் வருகிறது
3.ஒரு நாளைக்குச் சாப்பாடு கூட இல்லாமல் வேதனைப் பட வேண்டியுள்ளது.
4.இத்தனையும் மாறி மாறி மாறி மாறி மாறி மாறிக் கொடுத்துத் தான் ஞானத்தின் உணர்வின் தன்மையைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வந்தார்.

ஏனென்றால் அனுபவ ரீதியாக குருநாதர் கொடுத்த பல நிலைகளை எனக்குள் பதிவு செய்திருப்பதால் அவ்வப்போது அவருடைய உபதேசத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

நான் பேசுகிறேன் என்று யாரும் எண்ணவே வேண்டாம்…! ஒலி/ஒளி நாடாக்களில் பதிவு செய்ததை அலைகளாகப் பரப்பப்படும்போது அவரவர்கள் வீட்டில் டி.வி,யில் வைத்து நேரடியாகப் பார்க்கின்றீர்கள் அல்லவா…! அதைப் போலத் தான்
1.குருநாதர் எனக்குள் பதிவு செய்தார்
2.பதிவின் செயலை விண்ணிலே இருந்து இன்றும் இயக்குகின்றார்…!
3.அவர் காட்டிய வழிகளை நாம் நினைவு கொண்டு பெற்றால்
4.அவருடன் அரவணைப்பாக நாம் போய் நாம் இணையலாம்.
5.அவர் வழியில் சென்றால் தான் நாம் இணைய முடியும்…! (இது முக்கியம்)

“அஷ்டதிக்கு…!” – எட்டுக் கோளின் உணர்வை ஒளியாக்கும் தத்துவம்…!

Image

Astathik paalaka

“அஷ்டதிக்கு…!” – எட்டுக் கோளின் உணர்வை ஒளியாக்கும் தத்துவம்…!

 

அஷ்ட திக்கிலிருந்தும் வரும் அதாவது எட்டுக் கோளிலிருந்து வரும் உணர்வுகளை சூரியன் எடுத்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொள்கின்றது.

எட்டுக் கோள்களின் சக்தியை ஒவ்வொரு மனிதனும் ஏற்றத் தாழ்வாக வைத்திருப்பார்கள், அதாவது
1.ஒருவர் நான்கு கோளின் தன்மையை அதிகரித்திருப்பார்.
2.ஒருவர் ஒரு கோளின் தன்மையை அதிகமாக முன்னணியில் வைத்திருப்பார்.
3.இன்னொருவர் மூன்று கோளின் தன்மையை முன்னணியில் வைத்திருப்பார்.
4.அதே சமயத்தில் மற்ற உணர்வுகள் தணிந்திருக்கும்.

அந்த உணர்வின் தன்மைகள் மாறும் போது உடற் கூறிலே மாற்றமும் உடலிலே அதனின் தன்மை அதிகமாகப் பெருகி வருகின்றது.

நம் பிரபஞத்தில் இருக்கும் இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை எட்டுக் கோள்கள் கவர்ந்தாலும் ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு சுவை கொண்டதாக ஒவ்வொரு குணங்கள் கொண்டதாகத்தான் அதனுடைய வளர்ச்சிகள் உண்டு.

அதே போல் நம் பூமிக்குள் இருக்கும் தாவர இனச் சத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும் எட்டுக் கோள்களின் சத்தும் கலந்துள்ளது.

ஒவ்வொரு மனிதனும் தாவர இனத்தை (சமைத்து) உட்கொள்வதன் மூலமாக அது எந்தெந்த உணவை உட்கொண்டு பழகுகின்றார்களோ அதற்குத் தகுந்த சத்தின் குணம் கொண்ட உடலின் அமைப்புகளும் உணர்வின் அறிவாற்றலும் அமைகின்றது.

உதாரணமாக ஒரு தாவர இனச் சத்திற்குள் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்றால் அது மற்றொன்றை அறிந்திடும் அறிவாக வளர்த்திடும் உணர்வின் எண்ணங்களாக வளர்கின்றது.

இதைப் போன்று தான் இந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் கலவைகளில் முதன்மையான நிலைகள் வரும் நிலையில்…
1.மனிதன் ஆறாவது அறிவு கொண்ட மனிதனாகப் பிறக்க வேண்டும்
2.அறிவின் ஞானமாக தொடர வேண்டும் என்றால்
3.அந்த கார்த்திகை நட்சத்திரத்தின் இயக்கம் முன்னணியில் இருக்க வேண்டும்.

உதாரணமாக கார்த்திகை நட்சத்திரமும் ஒரு ரேவதி நட்சத்திரமும் இணைந்த நிலையில் சிவசக்தியாக உயிரின் தன்மை பெற்று அதனுடைய வளர்ச்சியில் வந்தாலும் மற்ற மற்ற வேதனை உணர்வுகளை நுகரும் பொழுது ஒளி மங்கும் நிலைகள் வருகின்றது.

அவ்வாறு எடுத்துக் கொண்ட அந்த வேதனை உணர்வுகளுக்கொப்ப மற்ற மற்ற சரீரங்களை எடுத்தாலும் வேதனையிலிருந்து மீட்டிடும் உணர்வுகள் வளரப்படும் போது தான் ஒளியின் கதிராக அறிவாக வளர்ந்து மனிதனாக வருகின்றது.

ஆனால் மனிதனாக வளர்ந்த பின்னும் மீண்டும் மற்ற வேதனை உணர்வுகளை அதிகமாகத் தனக்குள் சேர்த்துக் கொண்டால் அந்த ஒளி பெறும் நிலைகள் மங்கி எல்லா அணுக்களிலும் இது சேர்க்கப்பட்டு இருள் சூழும் நிலைகளுக்கே மீண்டும் அனுப்பி விடுகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் அறிவின் தன்மை மனிதனுக்குள் வந்தாலும் அறிவின் தன்மை தெளிவாக்கி
1.உடலில் வந்த தீமைகளை மகரிஷிகளின் ஒளி கொண்டு நீக்கி
2.மெய்ப் பொருள் கண்டுணர்ந்த அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெருக்கியே ஆகவேண்டும்.

இவர் என்ன சொல்கிறார்…? சொல்வது ஒன்றும் அர்த்தம் புரியவில்லை என்று யாரும் எண்ணி விடாதீர்கள்…! உங்களுக்கு அர்த்தமாக வேண்டும்…! என்பதற்குத்தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களோ மற்ற இன்னல்களோ வரப்படும் போது இப்போது பதிவு செய்த நிலைகள் உங்கள் நினைவுக்கு வந்து உங்களை இயக்கத் தொடங்கும்.

அந்த இயக்கத்தின் தன்மை நினைவூட்டும் போது அதனின் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கவும் அருள் ஞானத்தின் உணர்வைப் பெருக்கவும் உதவும்.

அதற்குத் தான் இதை உங்களுக்குள் சொல்வது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் அவர் முதலில் சொன்னது எனக்கும் அர்த்தமே புரியவில்லை.

1.பின் எனக்குள் இருள் சூழ்ந்த நிலைகள் வரும் போதெல்லாம்
2.அவர் எனக்குள் செய்த பதிவுகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நினைவுக்கு வந்து
3.அதனால் சிந்தித்து செயல்படும் தன்மையும் இருளை நீக்கும் ஆற்றலும் பெருகி
4.பேரொளியாகப் பெருக்கிக் கொண்டு வளர்ந்த நிலை தான் எம்முடைய நிலை (ஞானகுரு)…!

எமக்குள் வளர்த்துக் கொண்ட அதே வழியில் தான் குருநாதர் பாய்ச்சிய உணர்வினை உங்களுக்குள்ளும் பதியச் செய்து அந்த உணர்வின் ஆற்றலை பெருக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

பதிவு செய்த இந்த உபதேசத்தின்பால் உங்கள் நினைவாற்றல் உந்தப்படும் போது இந்த உணர்வின் நினைவே உங்களுக்குள் வரும்.

உதாரணமாக வேதனைப்படும் உணர்வுகள் படர்ந்து விட்டால் வேதனை வேதனை…! என்ற சொல்லும் குறை உணர்வுகள் வளர்ந்து விட்டால் குறை சொல்லும் உணர்வும்… தனக்குள் நிறைவு பெறாத செயல்களைத்தான் செயல்படுத்தச் செய்யும்.

அதைப் போன்றே அருள் ஞானத்தின் உணர்வுகளை (உங்களுக்குப் புரியவில்லை என்றாலும்) உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்யும் போது
1.இருளைப் போக்கிப் பேரொளியைக் காணும் நிலைகளாக
2.மெய்ப் பொருள் காணும் திறன் நீங்கள் பெற்று
3.எந்தத் திக்கிலிருந்து தீமைகள் வந்தாலும் அதை வெல்லும் ஆற்றலாகப் பெறுவீர்கள்…!
4.அழியா ஒளியின் சரீரம் பெற்று என்றென்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து மகிழ்ந்து வாழ்வீர்கள்…!

சைவம் எது…? அசைவம் எது…?

5-senses

சைவம் எது…? அசைவம் எது…?

தாவர இனங்கள் “சைவமாக” இருக்கின்றது. அதன் மணத்தை உயிரணுக்கள் நுகர்ந்தால் அசைவ சக்தியாக “அசைவமாக” மாறுகின்றது.

1.எதை நுகர்ந்து
2.அந்த உணர்வின் சத்து அணுவாகி உயிருடன் ஒன்றியதோ
3.நகர்ந்து சென்று தன் இரையைத் தேடும் சக்தி பெறுவதால் அசைவமாகின்றது.

அதனால் தான் “சைவம்… அசைவம்…!” என்று இவ்வாறு கூறுகின்றார்கள்.

இதன் அடிப்படையில் தான் செடியின் சத்தை நுகரும் உயிரணுக்கள் புழுவாக மாறுகின்றது. அந்தந்தச் செடிகளின் மணத்தின் குணத்திற்கொப்ப… உணர்வின் இயக்கத்திற்கொப்ப அதிலே உருவாகும் புழுவின் ரூபங்களும் மாறும்… குணங்களும் மாறும்…!

ஒரு விஷச் செடியின் சத்தை அந்த உயிரணு நுகர்ந்தால் அது விஷப் புழுவாக மாறுகின்றது.

இவ்வாறு வளர்ச்சி அடைந்து அது வந்தாலும் விஷச் செடியை நுகர்ந்து உடலாக உருவாகி இருந்தால் அதன் மணத்தை நுகர்ந்து அதனின் எண்ணத்தின் உணர்வாக விஷச் செடியின் பக்கம் நகர்ந்து சென்று தன் உணவைத் தேடிக் கொள்ளும்.

இப்படி உயிரணு தான் நுகர்ந்து எடுத்து வரும் போது நுகர்ந்த மணத்தின் எண்ணங்களால் இயக்கப்படுகின்றது. ஆனால்
1எதிர் மறையான உணர்வின் மணங்கள் தனக்குள் வந்தால்
2.“வேண்டாம்…! என்ற எண்ணங்கள் தோன்றி
3.அந்த உணர்வுகள் உணர்ச்சியாகிப் புழுவை விலகிச் செல்லும்படிச் செய்கின்றது.

அதாவது விஷச் செடியில் உருவான புழு விஷமல்லாத மற்ற செடிகளின் சத்தை நுகரப்படும் போது “இது வேண்டாம்…!” என்று ஒதுங்கிச் செல்லுகின்றது.

இருந்தாலும் விஷச் செடியால் வளர்ந்த அந்தப் புழு விஷத்தை உமிழ்த்தி அது யாரைத் தீண்டினாலும் விஷத்தின் தன்மை அங்கேயும் உருவாகும்.

ஆனால் அந்தப் புழுவின் சந்தர்ப்பம் விஷமல்லாத செடிகளின் சத்தை அது பலமுறை நுகர நுகர அதனின் விஷத்தின் தன்மையும் குறையும்.
1.விஷத்தின் தன்மை கொண்டு உடலை உருவாக்கிய இந்த அணுக்கள்
2.விஷமில்லாத தாவர இனங்களின் சத்தை நுகர நுகர விஷத்தின் தன்மை குறையக் குறைய
3.உடல் நலிந்து உடலை விட்டு உயிர் நீங்கிவிடும்.

ஆனால் விஷமில்லாத செடியில் ஒரு உயிரணு பட்ட பின் அந்த உணர்வின் சத்தை அது நுகர்ந்து விஷமற்ற உடலாகப் பெற்று ஒரு புழுவாக உருவாகின்றது.

அதனின் வளர்ச்சியில் தன் எண்ணம் கொண்டு இரை தேடச் செல்லும் போது சந்தர்ப்பத்தால் ஒரு விஷச் செடியின் சத்தை அது நுகர்ந்து விட்டால் அதனின் உடலில் விஷ அணுக்கள் உருவாகி விடுகின்றது.

அப்படி உருவான பின் அந்த உடலை உருவாக்கிய விஷமற்ற அணுக்களைக் கொன்று அதைச் செயலிழக்கச் செய்து அந்தப் புழு மடிகின்றது.

விஷமான அணுக்கள் அந்தப் புழுவின் உடலில் விளைந்தபின் மீண்டும் அடுத்த உடல் பெறும் பொழுது விஷ அணுக்கள் அதிகமாகி விஷமில்லாத செடியில் வளர்ந்த புழுக்களை இது கொன்று புசிக்கத் தொடங்கி விடும்.

தாவர இன சத்தை உட் கொண்ட புழுவே பரிணாம வளர்ச்சியில் அசைவமாக அதாவது சாந்தமாக இருக்கும் மற்ற புழுக்களைக் கொல்கிறது.

இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.
1.ஒன்றுக்குள் ஒன்று ஆகி ஒன்றுடன் ஒன்று கலந்து
2.இப்படி மாறி மாறி மாறித்தான் நாம் வளர்ந்து மனிதனாக வந்துள்ளோம்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்தான்… தன்னை அறிந்தான்… அகத்தை அறிந்தான்… ஒளியாக மாறித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்த அகஸ்தியன் அறிந்துணர்ந்த இயற்கையின் இயக்கத்தின் உண்மையின் நிலைகளை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

குருநாதரின் கட்டளைப்படி ஒரு சேவகனாகத்தான் அருள் சேவை செய்து கொண்டிருக்கின்றேன்…!

Gnanaguru Prayer

குருநாதரின் கட்டளைப்படி “ஒரு சேவகனாகத்தான்” அருள் சேவை செய்து கொண்டிருக்கின்றேன்…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி நாம் அனைவரும் ஐக்கிய உணர்வாக எண்ணி அந்த மெய் உணர்வின் சத்தைப் பெற வேண்டும்.

குருநாதர் ஏனோ… எதற்கோ.. எதுவோ சொன்னார்…! என்ற நிலைகள் வேண்டாம்.
1.இவ்வழியை எவர் ஒருவர் சீராகப் பெறுகின்றாரோ… நீ பெறச் செய்கின்றாயோ…
2.அங்கே நீ என்னைக் காணலாம்…! என்று தான் எனக்கு (ஞானகுரு) ஒரு கட்டளை இட்டார் .

ஆகையினால் அவர் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியை அவர் எனக்கு உபதேசித்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பருகச் செய்து… பெறச் செய்து… பதியச் செய்து கொண்டே வருகின்றோம்.

எந்த அளவிற்கு இதை நீங்கள் ஏங்கிப் பெற்று வளர்த்துக் கொள்கின்றீர்களோ…
1.எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை எங்களால் நீக்க முடிந்தது…
2.எங்கள் சொல்லால் பிறருடைய தீமைகளும் அகன்றதைத் பார்க்கின்றோம் என்று எப்பொழுது சொல்கின்றீர்களோ
3.அங்கே குருநாரை உங்கள் ரூபமாகப் பார்க்கின்றேன்.

எத்தகைய தீமை உள்ளவர்களைப் பார்த்தாலும்
1.நாங்கள் பார்த்த பின் தீமைகள் அங்கே அகன்றது.
2.எங்கள் நினைவாற்றலால் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நீங்கியது.
3.எங்கள் பார்வையால் தொழிலும் விவசாயமும் செழித்தது என்று
4.இதைப் படித்துணர்ந்தோர் உணர்வுகளில் இதைப் பெறும்படி நீ செய்ய வேண்டும் என்று தான் குருநாதர் சொன்னார்.

ஆகவே நீங்கள் எல்லோரும் அந்தத் தகுதி பெறவேண்டும் என்று உங்களைத் தான் நான் தியானிக்கின்றேன் .
1.உங்கள் உயிரைத் தான் கடவுளாக மதிக்கின்றேன்.
2.உங்கள் உணர்வைத்தான் தெய்வமாக எண்ணுகின்றேன்.
3.உங்கள் உடலைத் தான் சிவமென்று மதிக்கின்றேன்
4.உங்களுக்கு வழி காட்டும் கண்களைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
5.உங்கள் உடலுக்குள் சர்வத்தையும் கவர்ந்து வளர்த்திடும் சக்தியை மகா லட்சுமியாக மதிக்கின்றேன்.
6.உங்களுக்குள் சர்வத்தையும் அறிந்திடச் செய்யும் சக்திகளை மகா சரஸ்வதி என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் காணுகின்றேன்.

இந்த உபதேசத்தைப் படித்துணர்ந்த நீங்கள் ஞானிகளின் உணர்வை எங்களுக்குள் வளர்த்துக் கொண்டோம்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றோம்… எங்கள் பார்வையால் சொல்லால் செயலால் எல்லோருக்கும் நல்லதானது…! என்று நீங்கள் அனுபவபூர்வமாகச் சொன்னீர்கள் என்றால் அங்கே ஈஸ்வராய குருதேவரை நான் காணுகின்றேன்.

மனிதனாக இருக்கும் நாம் அனைவருமே படைத்திடும் ஆற்றல் பெற்றவர்கள். நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம் மூதாதையர்கள் அனைவரையும் விண் செலுத்தி இந்த விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து நாம் மீளவேண்டும்… மற்ற மக்களையும் காக்க வேண்டும்…!

அந்த நிலையைப் பெறச் செய்ய குருநாதர் இட்ட கட்டளைப்படி அவரின் சேவையாக இதைச் செய்து கொண்டிருக்கின்றேன். உங்கள் ஒவ்வொருவரது உயிரையும் கடவுளாக மதிக்கின்றேன்.

உங்களை அறியாது சூழ்ந்த தீமைகளைத் தூய்மைப்படுத்தும் நிலையாக குரு காட்டிய அருள் வழியில் உங்களை நான் தியானிக்கின்றேன். நீங்கள் எல்லோரும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

தமிழ் சித்தாந்த முறைப்படி “ஆடி… ஆடிப்பெருக்கு…!

Image

12 rasi

தமிழ் சித்தாந்த முறைப்படி “ஆடி… ஆடிப்பெருக்கு…!

 

விஷத்திற்கே அதிக இயக்கம். ஒவ்வொரு உயிரின் தன்மையும் 27 நட்சத்திரங்களில் ஒன்றின் ஆற்றல் கொண்டது தான். நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலை உண்டு.

ஒரு நட்சத்திரத்திற்குள் இருக்கும் விஷத்தின் இயக்கச் சக்தி குறைந்துள்ள மற்றொன்றை எதிர்த்துத் தாக்கும் போது இது பெண்பால் கொண்ட நட்சத்திரத்தின் ஆற்றலும் ஆண்பால் கொண்ட நட்சத்திரத்தின் ஆற்றலும் இணைக்கப்பட்டு
1.ஆண் பெண் என்ற நிலைகளில் இந்த உணர்வு ஒன்றுடன் ஒன்று மோதி
2.துடிப்பின் நிலை வரும் போது தான்
2.தனக்குள் கவரும் சக்திகளை அணுக்களாக மாற்றும் திறன் பெறுகின்றது.

ஆடி மாதம் பலமாகக் காற்று வீசுவதைப் பார்க்கின்றோம். அப்படி உருவாகும் அந்தக் காற்றினால்
1.இந்தப் புவிக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி அசைந்து செல்லும் பொழுது
2.அது அது நுகர்ந்த உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து
3.அதனின் வளர்ச்சிகள் அது பெருகிப் பெருகிப் பெருகி…!
4.நாம் எப்படி மனிதனாக வளர்ந்து வந்தோம் என்ற நிலையை உணர்த்தும் நாளாகவும்… உணரும் நாளாகவும்…
5.”ஆடிப் பெருக்கு…!” என்று அமைக்கின்றார்கள் ஞானிகள்.

ஆடி மாதத்தில் அணுக்களின் அசைவின் நிலைகள் கொண்டு காற்றலைகள் ஒன்றுடன் ஒன்று அதிகமான எதிர்மறையான நிலைகளில் சக்தி ஒவ்வொன்றும் ஆட்டி அசைத்துப் படைக்கின்றது.

இதைப்போல எதிர்மறையான அணுக்களின் தன்மை மோதும் போது அந்த உணர்வின் அசைவின் இயக்கங்களும் தன் தன் இசைக்கொப்ப ஆடுவதும் சுழற்சியாவதும் போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

ஆடி மாதத்தில் பார்க்கலாம் எதிர்மறையான வழிகளில் காற்று வரப்படும் போது ஒரு சமயம் இந்தப் பக்கம் தள்ளும்… ஒரு சமயம் அந்தப் பக்கம் தள்ளும்… சுழன்றாடும் தன்மைகள் வரும்…!

அதனால் தான் இதற்குத் தமிழ் சித்தாந்த முறைப்படி “ஆடி…!” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் காரணப் பெயரை வைத்துத் தான் இந்த உயிர்களின் இயக்கமும் பன்னிரண்டு இராசிகளின் தன்மையும் தெளிவாக்கியுள்ளார்கள்.

இந்தப் பன்னிரண்டு இராசிகளிலும் அதாவது ஒவ்வொரு மாதத்திலும் நாம் எதனை அறிந்து கொள்ள வேண்டும்…? எதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…?

தொழில் நிமித்தமாகவோ அல்லது வாழ்க்கையின் நிமித்தமாகவோ அன்றாடம் எத்தனையோ வேலைகளைச் செய்து வந்தாலும்
1.இந்தப் பூமியின் உணர்வின் இயக்கங்களையும்
2.பல கோடிச் சரீரங்கள் பெற்று பல பல உணர்வுகள் மாற்றமாகி அதனுடைய பெருக்கமாகி
3.நம்மை மனிதனாகப் பெருக்கியது எது…? என்ற நிலைகளை ஒவ்வொருவரும் சிந்தித்து
4.அடுத்து இந்த மனித உடலிலிருந்து நாம் பெருக்க வேண்டிய நிலைகள் எது…? என்ற நிலைகளை உணர்த்துவதற்காகத் தான்
5.அன்றைய ஞானிகள் ஆடிப் பெருக்கை வைத்தார்கள்.

மனித உடலில் விண்ணின் ஆற்றலைச் சேர்த்து மெய் ஒளி மெய் ஞானத்தைப் பெருக்கும் நிலையாக ஞானிகள் காட்டினார்கள்.

ஒவ்வொரு மாதமும்…
பனிரெண்டு ராசிகளிலும்…
வருடம் முழுவதற்கும்…
மனித குலத்தை உய்விக்கும் நிலையாக நல்ல உணர்வுகளைப் பெறுவதற்காகச் சாஸ்திரங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.

ஆனால் ஆடி மாதம் கல்யாணம் செய்யக் கூடாது…! பொண்ணு மாப்பிள்ளைக்கு ஆகாது…! ஆடி மாதம் நல்ல காரியங்களே செய்யக் கூடாது என்று அதைச் “சாங்கிய சாஸ்திரமாகத் தான்… தலை கீழாக மாற்றி வைத்திருக்கின்றோம்…!”

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!