தியானத்தில் நம் உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது…?

meditation-technique

தியானத்தில் நம் உயிரிடம் முதன்மையாகக் கேட்க வேண்டிய எண்ணம் எது…?

 

தியானிக்கும் போதும் சரி… ஆத்ம சுத்தி செய்யும் போதும் சரி… இப்படி நோயாக இருக்கிறதே…! என்று எண்ணிக் கேட்காதீர்கள். நோய் நீங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தியானியுங்கள்.

அதே போல் என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… என் குழந்தைக்குத் திருமணம் ஆக வேண்டும்.. அந்த அருள் வேண்டும். எங்கள் தொழிலில் வளம் பெற வேண்டும்… எனக்கு வர வேண்டிய பாக்கி வர வேண்டும்… அதற்கு அருள் சக்தி வேண்டும்…! என்று இப்படிக் கேட்டு பழகுங்கள்.

அதை விட்டு விட்டுக் கடன் வாங்கியவன் கொடுக்கவே மாட்டேன் என்கிறான்… எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்…! என்று எண்ணாதீர்கள்.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி…
1.அவர்களுக்கு வருமானம் வர வேண்டும்
2.வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்கும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று
3.மீண்டும் மீண்டும் நீங்கள் எண்ண எண்ண…
4.நமக்குள் இந்த உயர்ந்த நிலைகள் வர வர…
5.அவன் தன்னாலே வந்து பணத்தைக் கொடுக்கும் நிலையும் வரும்… பார்க்கலாம்.

உங்கள் எண்ணம் அவர்களை உயர்த்தும். அவர்களுக்கு வருவாய் வர வைக்கும். நமக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணம் வரும். கொஞ்சம் கால தாமதம் ஆகும்.

ஆனால் அவசரப்பட்டு… “ஆத்திரப்பட்டு விட்டோம்…” என்றால் கொடுக்க வேண்டும் என்று வருபவனையும் தடுத்து அவர்களும் வராதபடி ஆக்கி அந்தப் பாக்கியும் திரும்ப வராது.

கொடுக்க முடியவில்லையே…! என்று அவர்கள் மீண்டும் சங்கடப்பட்டால் அந்தச் சங்கடத்தால் அவர்களுக்கு வருமானம் வராது… நமக்கும் பணம் வராது… நாமும் சங்கடப்படுவோம்…!

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட்டு அவர்களுக்கு வரவு வரும்… அவர்கள் கொடுப்பார்கள்…! என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குள் இது ஒவ்வொரு நொடியிலும் உயர்ந்ததாக வரும்.

ஆகவே நாம் பிறருடைய நிலைகளில் குறைகளை எண்ணாது அவர்கள் நிறைவு பெறுவர். நமக்கும் அது வரும் என்றும் நிறைவான உணர்வை எடுத்தால் நிறைவான உணர்வுகள் வெளிப்படுகின்றது. நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் நிறைவான மனங்கள் வருகின்றது.

அவர்கள் வாழ்க்கையில் மகிழும் உணர்வுகளை அது இயக்கத் தொடங்குகின்றது.

1.ஆகவே நாம் அருள் வாழ்க்கை வாழ்வோம்
2.பேரானந்த நிலை பெற்று நமக்குள் ஏகாந்த நிலையாக
3.என்றும் ஏகாதசி என்ற பத்தாவது நிலைகள் அடைவோம்
4.அனைவரும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தி உங்களிடம் பெருகும்.

உங்கள் பார்வையில் அனைவரும் நலம் பெறுவர். அனைவரும் ஆனந்தப்படும் அந்த நிலையை நீங்களும் கண்டு நீங்கள் உங்கள் உடலில் ஆனந்தம் என்ற பேரானந்த நிலையைப் பெறுங்கள்.

ஏனென்றால் பலர் என்ற நிலைகளில் நாம் ஆனந்தப்படும்போது பேரானந்தம் வருகின்றது. ஒருவர் என்ற நிலையில் ஆனந்தம் என்ற நிலை வருகின்றது. அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றால் பேரானந்தம் ஆகின்றது.

1.ஆகவே எல்லாம் பேரானந்தம் என்ற நிலைகளில் உங்கள் பார்வையில் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.அதைக் கண்டு நீங்கள் பேரானந்தப்படும் நிலை பெற வேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

இவ்வுலக மாற்றத்திலிருந்து அதை மீட்டிடும் வழி உள்ளதா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Kali kalki

இவ்வுலக மாற்றத்திலிருந்து அதை மீட்டிடும் வழி உள்ளதா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தாவர வர்க்கங்களை நாம் இன்று அழித்தும்… அதிலிருந்து நாம் பெறும் உன்னத நிலைகளைச் சிதற விட்டும் வாழ்கின்றோம்.

1.இம் மனித வர்க்கத்தின் பெருக்கத்தினாலும்
2.மற்ற ஜெந்துக்களின் பெருக்கத்தினாலும்
3.நம் செயற்கைக்குகந்த நிலைகளைப் பிரித்ததினால் மட்டும் அல்லாமல்
4.இன்று ஆவி உலகத்தின் பெருக்கத்திலுள்ள ஆவிகளும் அச்சத்தை ஈர்த்து வாழ்வதினாலும்
5.இன்று இவ்வனைத்து இனப் பெருக்கத்தினால் அச்சக்தியெல்லாம் இந்நிலையில் ஈர்க்கப்படுவதினால்
6.தாவர வர்க்கங்களுக்குக் கிடைக்கும் சத்து நிலை குறைந்துவிட்டது.

எத்தாவரமும் சூரியனின் சக்தி பட்டு மட்டும் வளரவில்லை. இப்பூமித்தாய் சக்தியை ஈர்த்து ஊட்டம் தரும் நிலையிலிருந்தும் தான் அத்தாவரங்களின் செழிப்பு நிலை உள்ளது.

சில தாவரங்களினால் இப்பூமியில் உற்பத்தியாகும் பல அணுக்களை ஈர்த்து வளரும் தன்மை உள்ளது.

உயிரணுக்களையே ஊட்டமாக ஈர்த்து வளரும் தன்மையில் பல தாவரங்கள் உள்ளன. உயிரணுக்களையே என்பது இன்று பல ஜீவன்கள் ஆத்மா பிரிந்த பிறகு நாய் நரி பன்றி இப்படிப் பல ஜீவன்களைத் தாவரங்களின் வேருக்கு அடிப்பாகத்தில் இஜ்ஜீவன்களின் உடலை உரமாக இட்டு… அதையே உரமாக்கித் தன் சக்தியில் ஈர்த்து நற்கனிகளைப் பல தாவரங்கள் நமக்கு அளிக்கின்றன.

அத் தாவரங்களின் சக்திக்கு உரமாக வைத்த அவ்வுடலில் உள்ள தன்மையெல்லாம் அத்தாவரமே சத்தாக ஈர்த்ததினால் அதிலிருந்து பல உயிரணுக்கள் ஜீவன் பெறும் நிலையில்லாமல் அதிலிருந்து சென்ற ஓர் ஆத்மா மட்டும்தான் சுற்றிக் கொண்டிருக்கும்.

மனிதனிலிருந்து மாறுபட்ட மிருக ஜெந்துக்கள் மற்றப் பிராணிகள் யாவையுமே
1.அதை எருவாக வைக்கும் பொழுது
2.தாவர வர்க்கங்கள் உரமாக ஈர்த்துச் செழித்து வளர்ந்திடும்.

ஆனால்… இம்மனித உடலைப் புதைத்தால் இம்மனித உடலைப் புதைத்த இடத்தில் அதன் சக்தி அங்கிருந்தால் இம்மனித உடலில் இருந்து “ஒரு புல் பூண்டும் வளர்ந்திடாது…!”

இம்மனித உடல் தாவர வர்க்கத்திற்கு எருவாக சக்தி தரும் பாக்கியமும் இம்மனித உடலுக்கில்லை…!

மற்ற ஜெந்துக்களும் இம்மனித உடலுக்கும் உள்ள வேறுபாடு இம்மனித உடல் “கடும் உப்பு நிலை” பெற்றது. இம்மனித உடலை உப்புக் கலந்த இரசாயன நிலைப்படுத்தி பல நாட்கள் ஆவி பிரிந்த உடலைப் பாதுகாப்பான நிலையில் வைத்திருக்கலாம்.

ஒன்றை அழித்து ஒன்று சக்தி பெறுகிறது. எதுவுமே அழிவதில்லை… வளரத்தான் செய்கிறது. இச்சூரியனின் சக்தியில் வந்த எவற்றையும் யாராலும் அழித்திட முடியாது.

வளர்ந்து கொண்டே உள்ள இவ்வுலகினில் இன்று நாம் ஆரம்பத்தில் உள்ள நிலையை… ஒரு சக்தியை அழித்ததினால் மற்ற சக்தி வளர்ந்து விட்டது. அந்நிலையை மாற்றி அச்சக்தியை அழித்துத்தான் முன் இருந்த சக்தியை வளரச் செய்ய வேண்டும்.

தாவர வர்க்கங்களை வளர்த்து மற்ற இனப்பெருக்கத்தை நாம் மாற்றி மாற்றி என்னும் பொழுது அழித்து மற்ற மிருக வர்க்கத்தை நாமே அதை உண்டு பல அணுக்களை வளரவிடாமல் மற்றப் பிராணிகள் இறந்த பிறகு அதன் உடலைத் தாவரங்களுக்கு எருவாக்கி தாவர நிலையை வளரச் செய்ய வேண்டும்.

மனித வர்க்கத்தின் பெருக்கத்திற்கும் எவ்வுடலையும் நாம் புதைக்காமல் மனிதன் இறந்த பிறகு அவ்வுடலை எரிக்கும் நிலைப்படுத்திட வேண்டும்.

செயற்கையின் ஆசையை மாற்றி வாழும் நிலையில்லை இன்று மனிதனுக்கு…! ஆகவே இவ்வுலக நிலையையே காத்து அதன் அழிவான மாற்றத்தைத் தாங்கும் சக்தி சித்தர்களாலும் ரிஷிகளாலும் முடியாத நிலையில் இன்றுள்ளது.

1.இச் செயற்கையை மனிதனின் நிலையிலிருந்து மாற்றிடவும் முடியாது…
2.இவ்வுலகத்தின் மாறும் தன்மையிலிருந்து
3.இவ்வுலக நிலையை மீட்டிடவும் முடியாத நிலையில் உள்ளது…!

கணவன் மனைவியாகச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் ஒன்றி வாழ வேண்டிய வழி முறை

alcor-mizars

கணவன் மனைவியாகச் சப்தரிஷி மண்டலத்தில் நாம் ஒன்றி வாழ வேண்டிய வழி முறை

 

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் பூமியில் பரவச் செய்து கொண்டே உள்ளது.

குருநாதர் எனக்குக் (ஞானகுரு) காட்டிய அந்த உணர்வின் தன்மைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டபின் அந்த உணர்வின் வலுவான எண்ணம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேச வாயிலாக வெளிப்படுத்தும்போது அந்த அலைகள் “பரமாத்மாவாக” (காற்று மண்டலத்தில்) மாறுகின்றது.

1.இந்த அருள் உபதேசங்கள் உங்கள் செவிகளில் படும்போது அதனின் உணர்ச்சிகளாக உங்களுக்குள் தூண்டப்படுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் வழி அதனின் நினைவாற்றல் உங்கள் கண்களுக்கு வந்து
3.அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இருந்தால்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர நேருகின்றது.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்குள் வருகின்றது. அந்த எண்ணத்தின் தன்மை உங்கள் “ஆன்மாவாக” மாறுகின்றது. அப்போது நீங்கள் அதை நுகர்ந்தால் அது உடலுக்குள் “ஜீவான்மாவாக” மாற்றும் தன்மை வருகின்றது.

இப்படி உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளும் உங்களுக்குள் அணுத் தன்மையாக மாறுகின்றது.

1.பின் அந்த அணுக்கள் வாழ அதன் உணர்வுகளை… உணர்ச்சிகளை… உந்தும்.
2.அப்படி உந்தும் போது அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அதிகரிக்கும் தன்மை வரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் கணவனும் மனைவியும் இரு உணர்வும் இரண்டறக் கலக்கப்படும்போது
1.இன்று தன் தன் இனத்தை நாம் எப்படி உருவாக்குகின்றோமோ அது போல
2.கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இரு உடலிலும் இணைந்து வாழச் செய்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து இந்த உணர்வை ஒளியாக மாற்றி… இந்த உடலை விட்டு யார் முந்திச் சென்றாலும் அதன்பின் அடுத்தவரையும் அந்த ஆன்மாவையும் தன்னுடன் இணைத்தே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் “இணை பிரியாத நிலைகள் கொண்டு…” அந்த ஒளியின் உணர்வை உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.

1.இங்கே எப்படிக் கணவனும் மனைவியாக மகிழ்ந்து வாழ்கின்றோமோ
2.அதே மகிழ்ச்சியின் தன்மை அங்கேயும் இருக்கும்.

ஒவ்வொரு விஷத்தின் தன்மையும் தன்னுடன் மோதும்போதும் அந்த விஷத்தின் தன்மையைத் துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

அத்தகைய உணர்வைக் கவரும் போது இன்று நாம் எப்படி இயற்கையில் விளைந்த உணவைச் சமைத்து உட்கொண்டு… அதில் மகிழ்ச்சி பெறுகின்றோமோ… அதைப்போல எத்தகைய தன்மையின் நிலையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

என்றுமே ஏகாந்த நிலையாக… எதிர்ப்பே இல்லாத நிலைகொண்டு இன்று நாம் எப்படி இங்கே வாழ்கின்றோமோ இந்த நினைவாற்றல் எல்லாம் அதற்குள்ளும் உண்டு.
1.இரு உயிரும் ஒன்றென இணைந்து
2.ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றது.

கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் ஆண் பெண் என்ற நிலைகளில் மோதுண்டு தான் ஒரு உயிரின் தன்மையை உருவாக்குகின்றது. அந்த உயிர் மற்றொன்றைக் கவர்ந்து அந்த உணர்வின் தன்மையை உருவாக்கும் தன்மையாக உடல் பெறுகின்றது.

இதைப் போலத்தான்… கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து விட்டால் இந்த உணர்வுகள் அனைத்தும் “பிறவியில்லா நிலை..” என்ற நிலைகளை அடைய உதவுகின்றது.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

பூமி வலு இழந்ததற்கும் காற்று மண்டலம் நஞ்சாக மாறியதற்கும் காரணம் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

chinese food

பூமி வலு இழந்ததற்கும் காற்று மண்டலம் நஞ்சாக மாறியதற்கும் காரணம் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

செயற்கையின் பாவத்தினால் வந்த வினையான தாவரங்களின் நிலையின் குறைவினால் இன்று இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வந்துள்ளது.

தாவரங்களின் நற்பயனை அறிந்து சுவையுள்ள காய் கனி வர்க்கங்களும் தானிய வர்க்கங்களும் நாம் பெற்று இயற்கையின் அமுதைப் புசித்திட்ட உன்னத கால நிலை மாறி இன்றைய மனிதனின் உணவில் தன் இனத்திலிருந்து மாறுபட்ட ஜென்மம் சென்ற மற்ற ஜெந்து வர்க்கங்களைச் சமைத்து உண்ணும் நாகரிக நிலைக்குத் தன்னையே அடிமைப்படுத்தி வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

இவ்வுலகம் ஒன்றின்ன் சக்தியிலிருந்து ஒன்று சக்தி பெற்றுத்தான் வாழ்கிறது. ஒன்றை ஒன்று அழித்து ஒன்றின் சக்தியை ஒன்று பெற்றுத்தான் வாழும் சக்தியையே சக்தி நிலை நமக்கு அளித்துள்ளது.

அந்நிலையில் இதன் நிலையில் மட்டும் என்ன பாவம்…? என்பீர்.

மற்ற ஜெந்து வர்க்கங்கள் எப்படி உருவாகி வந்தன…? என்பதைத்தான் பாட நிலையில் உணர்த்தியுள்ளோம்.

இன்று இருக்கும் இவ்வுலக நிலையில்…
1.இவ்வுலகிலுள்ள பூமியிலுள்ள கனி வர்க்கங்களையும் தாவர வர்க்கங்களையும் நாம் சிதறவிட்டதனால்
2.(நாம் சிதறவிடவில்லை அதை எடுத்துப் பயன்படுத்தித்தான் கொண்டோம் என்பீர்)
3.நம் செயற்கையின் ஆசையினால் இவ்வுலகின் பொக்கிஷங்கள் குறைந்ததின் நிலையில்
4.மற்ற ஜெந்துக்கள் மனித வர்க்கம் முதற்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளும் மிகத் துரிதமாகப் பெருகியதன் நிலையில்
5.இம்மனிதனும் மற்ற ஜெந்துக்களும் இப்பூமியின் சக்தியை ஈர்த்து வாழ்வதினால்
6.இப்பூமியிலிருந்து மற்ற கனிவர்க்கங்கள் வளரும் நிலை குறைந்துவிட்டது.

இஜ்ஜீவ ஜெந்துக்கள் பெருகப் பெருக இன்னும் இவ்வுலக நிலையிலுள்ள சத்துத் தன்மை குறையும் நிலையில்தான் உள்ளது.

ஒரு ஜீவனை அழிப்பதினால் பல ஜீவன்கள் உற்பத்தியாகின்றன.

உங்கள் நினைவில் மண்ணில் புதைத்தால்தான் அவ்வுடலிலிருந்து பல உயிரணுக்கள் தோன்றுவதாக எண்ணுவீர். அப்படி அல்ல..!

1.மற்ற ஜீவ ஜெந்துக்களை நாம் சமைத்து உண்டு அதன் சக்தியைப் பெற்று
2.அதைக் கழிவாக வெளிப்படுத்தும் அக்கழிவில் இருந்தும்
3.எந்நிலைகொண்ட ஜீவ ஜெந்துவை உண்டு கழித்தோமோ அதன் நிலையிலிருந்து
4.அந்நரகமான அவ்வாடையிலிருந்து பல ஜீவ ஜெந்துக்கள் உயிர் பெறுகின்றன.

ஒன்றை அழித்துத்தான் ஒன்று சக்தி பெறுகின்றது. இஜ்ஜீவ ஜெந்துவின் பெருக்கத்திற்குக் காரணம்… ஆறறிவு படைத்த இம்மனிதனாலேதான் அனைத்துப் பெருக்கங்களும் வந்துள்ளன.

இன்று இவ்வுலகில் மனித இனத்தைக் (மக்கள் தொகையை) குறைக்கப் பார்க்கின்றான். ஒரு மனிதன் வாழும் காலத்தில் அவன் வாழ்க்கையில் அவன் எத்தனை குழந்தை பெறுகின்றானோ அவைதாம் அவனது பெருக்கம்.

ஆனால் இவ்வுடலை விட்டு அவனது ஆத்மா சென்ற பிறகு அவன் வாழ்ந்ததில் ஆசை வைத்து அவன் வாழ்ந்த காலத்தில் “அவன் பெற்ற இரத்தபந்தத்துடன் உள்ள குழந்தை வாழும் நாள் வரை…” அவனது ஆத்மா மறு ஜென்மத்திற்குச் செல்வதில்லை.

ஆனால் அவனின் உடலை அடக்கம் செய்த இடத்தில் அவன் உடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று ஜென்மத்திற்கு வருகின்றன.
1.இம் மனிதனே மனித வர்க்கத்திற்கும் மிருக வர்க்கத்திற்கும்
2.மிருகத்திலிருந்து பல ஜெந்து வர்க்கங்களுக்கும் அடிகோலியாகின்றான்.

தாவர வர்க்கங்களின் உன்னத பொக்கிஷத்தைச் சிதற விட்டவனும் இவ்வாறறிவு என்னும் அறிவைப் பெற்ற ஆண்டவனின் அடிகோலிகள் என்று செப்பிடும் இம்மனிதனேதான்…!

நம் பையன் சீராகப் படிக்கவில்லை என்றால்… உடல் நலம் சரியில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

blssings of mother

நம் பையன் சீராகப் படிக்கவில்லை என்றால்… உடல் நலம் சரியில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெறவேண்டும் என்று நமக்குள் முதலில் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.

1.என் பையன் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்
2.அவன் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வுகள் அவன் பெறவேண்டும்.
4.அறிந்துணர்ந்து செயல்படும் சக்தி அவன் பெறவேண்டும் என்று
5.இப்படி இந்த உணர்வைத் தாய் தனக்குள் சமைத்து அந்த உணர்வுடன் பையனை உற்று நோக்கி
6.ஒரு உணவுப் பொருளைக் கையிலே கொடுத்து… இதை நீ சாப்பிடப்பா…
7.உனக்கு நல்ல ஞாபக சக்தியும் ஞான சக்தியும் வரும் என்று சொல்லுங்கள்.

அதைப் போல சந்தர்ப்பத்தில் குழந்தைகளுக்கு உடல் நலம் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டுமென்று தாய் தனக்குள் எண்ணி வலுவாக்கிய பின்
1.தன் பையன் இந்த உடல் நோய் நீங்க வேண்டும் என்ற உணர்வை இந்தத் தாய் எடுத்து
2.சிறு விபூதியோ ஏதோ ஒன்றை எடுத்துக் கொடுத்தாலும்
3.இந்த உணர்வு கலந்து அந்த உடல் ஆரோக்கியம் பெறும் சக்தி கிடைக்கும்
4.கடினமான மருந்தும் தேவையில்லை.

அகஸ்தியன் பல தாவர இனங்களின் தன்மையை விஷத்தின் தன்மையை ஒடுக்கியவர். அந்த உணர்வின் தன்மை பெற்று விஷம் கொண்ட மிருகங்களையும் அடக்கியவர்.

இப்படி அந்த அகஸ்தியன் பல தீமைகளை வென்று தீமைகளை வென்றிடும் உணர்வை வளர்த்துத் துருவனாகி திருமணமான பின் தன் மனைவியின் உடலில் அதை எல்லாம் பாய்ச்சிக் கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றியவர்கள். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து
1.உங்கள் குழந்தைக்கு அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தில்
2.அவனைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து
3.அவன் கண்ணின் நினைவிற்குள் அவன் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று
4.எதாவது ஒரு ஆகாரத்தை எடுத்து ஜெபித்துக் கொடுங்கள்.

அந்தக் குழந்தை உடல் நலமாகும் பார்க்கலாம்.

மருந்துகளை டாக்டர் கொடுத்தாலும் நாம் அடிக்கடி இந்த முறைப்படி செய்தோமென்றால் கடும் நோயாக உருவாகாதபடி அவனைக் காத்திடலாம்… நோயை தடுத்திடலாம்.

இதெல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஒரு பையன் சீராக வரவில்லை என்றால் இதைப் போல அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அந்த பையனுக்கு நல்லொழுக்கமும் நல்ல ஞானமும் உலகை அறிந்திடும் அருள் ஞானமும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப் போல எண்ணி அவனுக்கு எதாவது பிரசாதத்தைக் கொடுத்து இதை உட்கொள்ளச் சொல்லுங்கள்.
1.நீ ஞானி ஆவாய்… உலகை அறிவாய்… உலக ஞானம் பெறுவாய்…!
2.நல்லொழுக்கம் பெறுவாய் பிறர் போற்றும் நிலையில் உன் வாழ்க்கை அமையும் என்று
3.இதைப் போன்ற உயர்ந்த வாக்கினை நீங்கள் கொடுத்துப் பாருங்கள்.

இந்த உணர்வின் தன்மை அவனுக்குள் பதிவாகி… நீங்கள் சொன்னது அவனுக்குள் மீண்டும் நினைவாகி… நீங்கள் எண்ணிய உணர்வு அங்கே இயக்கப்பட்டு… அவன் தீமையில் இருந்து விடுபடும் நிலை பெறுகின்றான்… நோயிலிருந்தும் விடுபடுகின்றான்.

இயற்கையின் சக்தியை எல்லாம் செயற்கையின் பேய்க்குப் பலியிட்டதின் பாவத்தை மனிதன் உணரும் தன்மைக்கு வந்து விட்டான் – ஈஸ்வரபட்டர்

novel virus

இயற்கையின் சக்தியை எல்லாம் செயற்கையின் பேய்க்குப் பலியிட்டதின் பாவத்தை மனிதன் உணரும் தன்மைக்கு வந்து விட்டான் – ஈஸ்வரபட்டர்

 

நம் முன்னோர்கள்… ஆத்மா பிரிந்த உடலில் அவ் உடலிலிருந்து உற்பத்தியாகும் உயிரணுக்கள் தோன்றாத நிலைப்படுத்தி அவ்வுடலுடன் அவ்வுடல் கெடாத பக்குவ நிலைப்படுத்தி அடக்கம் செய்து வைத்தார்கள்.

இன்று இக்கலியில் மக்களின் தொகை பெருகுவதினால் அனைத்து ஆக்க சக்திகளும் அதிகரிக்கும் நிலைக்காக மக்களின் தொகையையே குறைக்கும் நிலையில் பல வழிகளைச் செய்கிறார்கள்.

மனிதனே மனிதனின் இன வர்க்கத்தை நிறுத்தப் பார்க்கின்றான் இன்று வாழும் மனிதன்.

ஆவி உலகில் பல மனித இன ஆவிகள் தன் எண்ணத்தை ஈடேற்றச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில்தான்
1.இன்று பல இடங்களில் ஒரு தாய் ஒரு மகவு பெறும் நிலை மட்டும் இல்லாமல்
2.ஒரு தாய் ஒரே சூலில் பல மகவுகளை ஈனும் நிலையில்
3.மிருக வர்க்கத்தின் நிலைக்கு ஒப்ப வந்து பிறக்கின்றன.

பிறக்கும் மகவுகளைக் குறைக்க வழி காண்கின்றான் இக்கலியின் மனிதன். ஆனால் இறக்கும் உடலை எந்நிலையில் சிதற விடுகின்றான்…? இந்த நிலையைப் புரிந்து கொண்டால் பல நிலைகளில் இந்நிலையை மாற்றிடலாம்.

ஆவி உலகிலுள்ள ஆத்மாக்கள் மட்டும் பிறவி எடுத்தால் இன்றுள்ள மக்கள் தொகையுடன் கூடி வராதா…? என்பீர்.

ஆவி உலகிலுள்ள மனித ஆத்மாக்கள் எவையுமே உடனே பிறவி எடுக்கும் ஜென்ம ஆசையில் வந்து பிறப்பதில்லை. ஆவி உலகில் உள்ள ஆத்மாக்களுக்குத்தான் இவ்வுலகில் உடலுடன் வாழும் மனிதர்களின் நிலை புரிகின்றதே.

இப்புதிய புதிய உயிரணுக்கள் தோன்றும் நிலையை இம் மனிதன் மாற்றும் வழியை ஏற்படுத்தி வாழ்ந்தாலே…
1.மனிதனிலிருந்து மிருகம் மிருகத்திலிருந்து மற்ற ஜெந்துக்கள் இவற்றின் நிலையும் மாறி
2.சூரியனிலிருந்து வரும் சக்தியினால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் உன்னத நிலை பெறலாம்.

சூரியனிலிருந்து வரும் சக்தியில் குறைந்தோ அதிகப்பட்டோ வருவதில்லை. என்றும் ஒரே நிலைப்படித்தான் வந்து குவிகிறது.

இவ்வுலகினில் தோன்றிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு சக்தியின் துரிதத்தினால் (ஜீவன் பெற்ற உயிரணுக்களின் பெருக்கத்தினால்) தாவர வர்க்கங்களின் நிலை குறைந்துவிட்டன.

இன்று தாவரங்களுக்குப் பல செயற்கை நிலை கொண்ட பக்குவம் (உரங்கள்) ஏற்றினாலும் முன் காலத்தில் உள்ளதின் சுவையும் மணமும் இன்றில்லை.

பூமியிலிருந்து வெளிப்படும் சக்தியையே மற்ற ஜீவன் பெற்ற உயிரணுக்கள் ஈர்த்து வாழ்கின்றன. இனப் பெருக்கம் ஆக ஆக இப்பெருக்கத்திலுள்ள ஜீவன்களுக்குத்தான் இப்பூமித்தாயும் நம் சூரியனும் தரும் சக்திகள் சரிப்படுகின்றன.

தாவர வர்க்கங்களின் நிலைக்கு அதன் ஈர்ப்புத் தன்மைக்கு உகந்த சத்துத் தன்மை குறைந்தே வருகிறது.

ஜீவன் பெற்ற உயிரணுக்களின் பெருக்கத்தின் சுவாசத்தினாலும் இன்று செயற்கையினால் வந்த வினை கொண்டு இக்காற்று மண்டலத்திலுள்ள சக்தியின் தன்மை குறைந்ததினாலும் இக்காற்றே கடும் விஷத்துடன் சுற்றிக் கொண்டுள்ளது. அதனால் தாவர வர்க்கங்கள் செழித்து வளரும் நிலையில்லை.

1.கலியான இம்மனிதன் தன் சக்தியின் சக்தியெல்லாம்
2.செயற்கையின் பேய்க்குப் பலியிட்டதின் பாவத்தை
3.உணரும் தன்மைக்கு வந்து விடுவான்… வந்து விட்டான்…!

நச்சு… நச்சு… என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன…?

Child care

நச்சு… நச்சு… என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன…?

 

உதாரணமாக ஒரு கருவுற்ற தாய் இருக்கிறது என்று வைத்துக் கொல்வோம். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குள் சண்டை போட்டார்கள் என்றால் அவர்கள் மேல் இந்தக் கருவுற்ற தாய் அன்பாக இருந்தால் அதைப் போய்ப் பார்ப்பார்கள்.

யார் மேல் பற்றுடன் இருக்கின்றதோ இன்னொருத்தர் அவரைக் கோபமாகப் பேசினனால் கருவுற்ற தாய் அந்தப் பாசமாக உள்ளவர்களை உற்றுப் பார்த்து அடப் பாவி…. அவர் சும்மா இருக்கிறார் இப்படி பேசிக் கொண்டே இருக்கின்றார்களே…! என்று அந்த உணர்வை எண்ணுகிறது.

1.இப்படிப் பேசுகின்றார்களே என்று வேதனையான உணர்வுகளை சுவாசித்து விட்டால்
2.தாய் நுகர்ந்த உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இது பூர்வ புண்ணியமாக அமைந்துவிடுகின்றது.

இதைக் கேட்டறிந்த பின் தாய் என்ன செய்யும்…? வருபவர்களிடம் எல்லாம் சொல்லும். இந்த அம்மா சும்மா இருக்கின்றது… கோபமாகப் பேசுகிறார்கள் திட்டுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.

ஆனால் கருவுற்றிற்கும் பொழுது சாதாரணமாகவே தாய் உடலில் அந்த சோர்வின் தன்மை இருக்கும். சண்டை இடும் போது எந்தக் கடினமான வார்த்தையைத் தாய் கேட்டதோ மீண்டும் அந்த உணர்வே இயக்கிக் கொண்டிருக்கும்.

பலவீனம் அடையப்படும் போது அவர் கேட்டறிந்த உணர்வுகள் இந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உணர்வாகும்போது பார்க்கலாம்… அந்த குழந்தைகள் துடித்துக் கொண்டே தான் இருக்கும்.

இந்த உணர்வின் நிலைகளை தாங்காது அப்பொழுது அந்த உணர்ச்சிகளை தூண்டும்போது தாயின் உடல் மேலும் சோர்வடையும் அதே சமயத்தில் பதிந்த உணர்வை நுகர அங்கே சண்டையிட்டோர் நினைவுகள் இது அதிகமாகக் கூடும்.

நாம் எல்லாப் பொருள்களையும் போட்டு அதிலே காரத்தை அதிகமாக இணைத்து விட்டால் நல்ல சுவையை இழக்கச் செய்து காரத்தின் தன்மையே முன்னணியில் இருக்கும்.

அதைப் போன்று தான் நாம் கேட்டறிந்த உணர்வுகள் நாம் சதா திரும்ப எண்ணும் போது கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் பதிந்து விடுகின்றது.

பின் அந்தக் குழந்தை பிறந்த பின் எப்படி அவர்கள் சண்டையிட்டு வேதனைப்பட்டாரோ இந்த வேதனையான உணர்வு கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குள் விளைந்து பிறந்தபின் நச்சு… நச்சு…! என்று அழுகும்.

நச்சு… நச்சு…! என்று அழுகப்படும்போது ஐயோ பாவமே…! இந்தக் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது…? என்ற நிலைகள் இதை அடிக்கடி எண்ணி அதே வேதனையின் உணர்வை நமக்குள் மீண்டும் வளர்த்திடும் சந்தர்ப்பமாகி விடுகின்றது. நம் நல்ல குணங்களைப் பலவீனமடையச் செய்கின்றது.

சண்டையிட்டதை நினைத்து தாயின் கருவிலே வளரும்போது அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தாலும்… தாய் அவனைக் காத்திடும் நிலைகள் இன்னும் அதிகமாகக் கூடக் கூடக் கூட… இந்த உணர்வின் தன்மை தாயின் உடலுக்குள் உருவாகி… அல்லும் பகலும் முழித்திருந்து வேதனையின் வினையாக தனக்குள் வித்தாகி அடிக்கடி இந்த வேதனையை நுகர வேண்டி வரும்.

தாய் ஆரம்பத்தில் எதை உற்றுப் பார்த்ததோ அது தாய் உடலில் வினையாகச் சேர்கின்றது. கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது. பின் அந்தக் குழந்தை வளர்ந்தபின் அந்த உணர்வுகள் இயக்கும்போது ஏன் அழுகின்றது…? அது என்ன…? என்று தெரியாது.

சில குழந்தைகளைப் பார்க்கலாம். இந்த மாதிரி சண்டையிட்டோரைப் பார்த்திருந்தால் இனம் புரியாமல் நச்சு… நச்சு என்று அழுகும். சமாதானப்படுத்த நீங்கள் என்ன தான் கொடுத்தாலும் அதற்கு அந்த உணர்வுகள் தணியாது.

காலத்தால் தன் அறிவு என்று சிந்திக்கும் திறன் வந்து… மற்றவரை உற்றுப் பார்த்து அதை காணும் நிலை வரும்போது தான்… இது சிறுகச் சிறுக இது வந்து ஒடுங்கி இந்த உணர்வின் நிலைகள் மாறும்.

அது வரை எதுவும் அறியாத குழந்தையாக மூன்று மாதம் வரை அந்தக் குழந்தை இனம் புரியாமல் அழுது கொண்டே இருக்கும்.

ஆனால் சாதாரணமாக உள்ள குழந்தைகள் எல்லாம் ஒரு மாதம் ஒன்றரை மாதம் ஆனவுடன் தாயை உற்றுப் பார்க்கும். அதனின் செயல்கள் சீராக இருக்கும்.

கருவிலே இருக்கப்படும்போது பிறருடைய சங்கடங்களை எண்ணியிருந்தால் இது பூர்வ புண்ணியமாக அமைந்து பிறந்த பின்
1.குழந்தை தாயைக் கூட பார்க்காது
2.எங்கோ பார்த்து அது விக்கி விக்கி அழுகும். பயத்தின் நிலைகள் துடிக்கும் ஏங்கி அழுகும்.
3.இது போன்ற நிலைகளில் குழந்தைகளைக் காணலாம்

குழந்தை சில்லு… சில்லு என்று அழுகப்படும்போது நமக்குள் வெறுப்பின் தன்மைகள் கூடி… குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று இந்தப் பாசத்தால் இந்த உணர்வுகள் அதிகமாக இதுவே வினையாகி நோயாக மாறுகின்றது.

குழ்ந்தை மேல் பாசம் கொண்ட நிலையில் இந்த உணர்வுகள் பதிவானபின் அவனில் இந்த நோய்கள் வளரப்படும்போது காத்திடும் தெய்வமாகத் தாய் இருப்பினும் அவனில் விளைந்த நோயினை தாய் அடிக்கடி எடுக்கும்போது இங்கேயும் அது வளர்கிறது.

இது வளர வளர பின் விளைவு அதிகமான வேதனையாக உருவானால் அந்த வேதனையின் தன்மை திரண்டு கேன்சராக மாறும்.

இதைப்போல ஒவ்வொரு நொடியிலும் அதனுடைய உணர்வு விளைந்து விட்டால் இதனுடைய பருவம் விளைந்தபின் தான் கேன்சரின் தன்மையே நமக்குள் தெரியவரும்.

1.ஆக நாம் தவறு செய்யவில்லை
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது அந்த உணர்வின் தன்மை வந்துவிடுகின்றது.

ஒரு செடியிலே விளைந்த வித்தை மண்ணிலே ஊன்றினால் தன் உணர்வுக்குள் இருக்கும் சத்தை அதுவே ஏங்கித் தன் உணர்வால் கவர்ந்து கொண்டே இருக்கும்.

காற்றிலே மிதந்து வரும் உணர்வுகளை… அந்தத் தன் தாய் இனத்தில் இருந்து வெளி வருவதை அது உணவாக எடுத்து இந்தச் செடி வளர்கின்றது.

அந்தச் செடி மற்ற தாவர இனச் சத்தைத் தன் அருகிலே வராது தடுத்துக் கொண்டதோ இதைப் போன்றுதான்…
1.நமக்குள் எந்த குணத்தின் தன்மை வந்ததோ
2.மற்ற நல்ல குணங்கள் நம்மை அணுகாது
3.அந்த வேதனை என்ற உணர்வை தனக்குள் எடுத்து இங்கே விளைந்து விடுகின்றது.

தன் குழந்தைகளை எண்ணி அடிக்கடி இப்படி ஆகின்றதே என்று வேதனையை எடுக்க… அது நாளாக நாளாக இந்த தாய்க்கு கை கால் குடைச்சல்… ஒரு தலை வலி… முதுகு வலி… இடுப்பு வலி… இதைப்போன்ற நிலைகள் எல்லாம் வரக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் பார்த்தது வேடிக்கை என்றாலும் நுகர்ந்த உணர்வுகள் இத்தனை வேலையைச் செய்கிறது.

இறந்த உடலைத் தகனம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் வழிப்படுத்தியதன் காரணம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

cremation

இறந்த உடலைத் தகனம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் வழிப்படுத்தியதன் காரணம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒவ்வொரு பிறவியிலும் பல உயிரணுக்களின் நிலையுடன் வாழ்ந்த நாம் அவ்வுடலை விட்டு நம் ஆத்மா பிரிந்து செல்லும் பொழுது நம் ஆத்மாவுடன் கூடிய “சப்த அலையும்… சத்து நிலையும் தான்…” நம் உயிராத்மாவுடன் இஜ்ஜென்மத்திற்கு வரும் பொழுதும் வருகிறது

இக்காற்றினில் பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டேதான் உள்ளன.

1.பிறவி எடுக்கும் ஆசையிலும்
2.தன் எண்ணத்தைச் செயலாக்கும் ஆசையிலும்
3.குடும்பத்தைக் காக்கும் பற்றுக் கொண்ட ஆசையிலும்
4.பழிவாங்கும் வெறி நிலை கொண்ட குரோதத் தன்மையிலும்
5.வாழும் காலத்தில் அகால மரணமடைந்து அவதியுறும் நிலையிலும்
6.பல நிலைகொண்ட ஆவியான உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

இவ்வுலகில் வாழ்ந்திடும் மனிதர்களைக் காட்டிலும் மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் அதிக நிலையில் படர்ந்த நிலையில் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளன.

புதிய புதிய மனிதன் பிறக்கிறானா…? அப்படி என்றால் போன ஜென்மம் என்பதின் நிலையென்ன…? ஆதியில் வந்த உயிரணுக்கள்தான் நாம் எல்லாம் என்றால் ஆதி காலத்தில் மனிதர்களின் ஜனத்தொகை குறைவு…! இப்பொழுது அதிகமல்லவா…?

ஆவி உலகிலும் பல உயிரணுக்கள் சுற்றிக் கொண்டே உள்ளனவல்லவா என்று எண்ணுவீர்.

இவ்வுலகம் கல்கியில் தோன்றிக் கலியில் முடியும் காலத்தில் வந்த உயிரணுக்கள் மட்டும் அல்ல… இன்றுள்ள உயிரணுக்கள் மட்டும் இன்றுள்ள உயிரணுக்கள் எல்லாம்.

இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே வந்த உயிரணுக்கள்தான் எல்லாமே. படர்ந்துள்ள உயிரணுக்கள் எல்லாம் உலகம் மாறுபடும் நிலையிலும் இவ்வுலகுடனே சுற்றிக் கொண்டேதான் வருகின்றன.

புதிய புதிய உயிரணுக்கள் வளர்ந்து கொண்டேதான் உள்ளன. இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலைகளைக் கொண்டு பல கோடி உயிரணுக்கள் அன்றன்று வளர்ந்து கொண்டேதான் உள்ளன.

இம்மனித உயிரணுவில் இருந்து பல உயிரணுக்கள் உதித்து வெளிப்படுத்துகின்றன. ஒவ்வோர் உடலிலிருந்தும் அவ்வுடல் அழிந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் பல உயிரணுக்கள் அவ்வுடலில் இருந்தே வளர்ச்சி பெற்று பல உயிரணுக்கள் உதிக்கின்றன.

ஆதியில் வாழ்ந்த மனித இனம் குறைவாயிருந்தாலும் அம்மனித இனத்தில் ஒவ்வோர் உடலும் அதன் ஆத்மா பிரிந்து சென்ற பிறகு அவ்வாத்மாவுக்குச் சொந்தமான ஆவி நிலையான சத்து நிலையும் சப்த அலையும் அதனுடன் சென்ற பிறகு இவ்வுடலை நாம் அடக்கம் செய்யும் நிலையில் இவ் உடலில் இருந்து பூமியில் இருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் ஈர்ப்பினால் அவ்வுடலில் இருந்து பல உயிரணுக்கள் உயிர் பெற்று புழுவான நிலையில் படர்ந்துள்ளன.

மனித உடலில் இருந்து உயிர் பெற்ற உயிரணுக்கள் அந்நிலைகொண்ட சக்தியையே தன்னுள் ஈர்த்து அதே நிலை கொண்ட சுவாசங்களைப் பெற்று மனித கர்ப்பத்திற்கு வந்து மனிதனுடன் வந்து விடுகிறது.

ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவ் ஒரே மனிதன் மட்டும் பிறவி எடுத்து வந்த நிலையல்ல இப்பொழுது உள்ள நிலை.

1.ஒவ்வொரு மனிதனும் அவன் இறந்த பிறகு
2.அவனிலிருந்து பல உயிரணுக்கள் மனிதனாகப் பிறவி எடுத்து
3.மனித இனமும் வளர்ந்து கொண்டே வருகிறது.

அதைப்போலத்தான் மற்ற ஜெந்துக்களின் உயிரணுவின் நிலையும்.

நம் முன்னோர்கள் இதன் நிலை அறிந்து தான் உடலை அடக்கம் செய்யும் நிலையிலிருந்து எரிக்கும் நிலையை ஏற்படுத்தினார்கள்.
1.உடலை எரிக்கும் பொழுது அவ்வுடலில் உள்ள ஆத்மா மட்டும்தான்
2.அதன் ஆவி நிலையான சத்து நிலையைத் தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது
3.உடலில் உள்ள நீர்ச் சத்துக்கள் அதை எரிக்கும் நிலையில் ஆவியாகி நீருடன் நீர் கலந்து விடுகிறது
4.தகனம் செய்த உடலிலிருந்து புதிதாக உயிரணுக்கள் தோன்றுவதில்லை.

இதன் உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் அவ்வுடலைப் பல நிலையில் பக்குவப்படுத்தும் வழி காட்டினார்கள்.

உயிரணுக்கள் பெருகும் நிலை புரிந்ததா…?

நம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்

streaming-blood

நம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு உடலும் மாறுபட்டாலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறப்பிலும் குழந்தை பருவம் முதல் தன்னைத்தானே உணர்ந்து வாழும் காலம் வரை நம்மை ஒருவர் வழிநடத்தித்தான் நாம் வாழும் காலம் வருகிறது.

1.அன்னை அன்னத்தை ஊட்டத்தான் செய்வாள்… அதை ஏற்று உண்ணுவது நாம் தான்
2.பள்ளியில் பாடத்தை உபாத்தியாயர் போதித்தாலும் அதை ஏற்று மதிப்பெண் பெறுவதும் நாம் தான்
3.நம்மை நாமே உணரும் காலம் வரும்வரை வழியைத்தான் நமக்குணர்த்துவர் பெரியோர்
4.ஏற்றுச் செயல்படுவது நம் செயலில்தான் உள்ளது.

ஒவ்வொரு ஜென்மத்திலும் மாறி நாம் வந்தாலும் முன் ஜென்மத்தின் நினைவு இஜ்ஜென்மத்தில் இருப்பதில்லை. முன் ஜென்மத்தின் தொடரின் அறிவுடன் தான் இஜ்ஜென்மத்தில் பிறக்கின்றோம்.

அவ்வறிவுடன் இஜ்ஜென்மத்தில் நாம் பிறந்ததின் பயனைக்கூட்டி வாழும் பக்குவத்தில் தன்னைத்தானே உணர்ந்து செயல்படும் நிலைக்கு நம்முள் உள்ள சக்தியை நாமேதான் செயல்படுத்தி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வாண்டவனும் வந்து நமக்கு அனைத்தையும் அருள்வதல்ல…!

தீய வழிக்குச் செல்பவனுக்கும் அவன் செல்லும் வழியிலேயே அவன் சக்தியை வளர்ப்பதனால் அத்தீய சக்தியே அவன் வழியில் கூடி மென்மேலும் அந்நிலையிலேயே செல்கின்றான்.

நல் உணர்வை வளரச் செய்தால் அந்நிலைதான் வளரும். ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலை அமைவதுவும் அவரவர்கள் அமைத்துக் கொண்ட நிலைதான்.

எவ்வெண்ணத்தில் நாம் உள்ளோமோ அவ்வெண்ணத்தின் வழித் தொடர்தான் நம்முடன் வளரும். வியாதியில் உள்ளவன் அவ்வெண்ணத்தையே வளர விட்டால் அவ்வெண்ணத்திற்கேப வளரும் நிலைதான் தொடர்ந்து வரும்.

ஒவ்வொரு வழி நிலையும் இதைப் போல்தான் வருகின்றது.

விஞ்ஞானத்தில் பல நிலைகளை அறிபவனும் அவன் எண்ணத்தின் வளர்ச்சிப்படிதான் அவன் வழி நடக்கிறது. ஆக எந்த ஒரு நிலையிலும் அவரவர்களின் எண்ண நிலையை வளரும் நிலைப்படுத்தி வளர விடுகின்றோமோ அந்நிலையில்தான் வாழ்க்கை நிலை அமைகிறது.

நம் எண்ணமுடன் இக்காற்றினில் கலந்துள்ள பல உயிரணுக்கள் நம் உயிரணுக்களுடனும் கலந்து விடுகின்றன. நாம் ஏற்ற ஒரே வழியில் செல்லும் பொழுது நம்முள் கலந்துள்ள அவ்வுயிரணுவும் நம்முடன் செயல்பட வருகிறது.

1.நம் எண்ண நிலையில் மாற்றம் வரும் பொழுது
2.நம் எண்ணத்தை மாற்றிக் கொள்ளாத வழியில்
3.நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணுவின் எண்ணத்தை
4.நாம் வேறு எண்ணத்திற்குச் சென்றாலும்
5.நம்மைத் தடைப்படுத்துகிறது நம்முள் வந்து குடி கொண்டுள்ள மற்ற உயிரணு.

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பல உயிரணுக்கள் ஏறித்தான் உள்ளன. நம் ஆத்மாவை நாமே ஆண்டு… நம்மை நாம் உணர்வது என்பதன் பொருள்…
1.நம்முள் உள்ள பல உயிரணுக்களின் எண்ணத்திற்கு நம்மை அடிமை ஆக்காமல்
2.நம் ஆத்மாவின் வழியில் நமக்குகந்த சக்தி நிலையில் நாம் வாழும் நிலைப்படுத்தி
3.சீராக வாழும் பக்குவத்தை நாம் பெற வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய முறை

guru arul Eswarapattar

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய முறை

 

ஒவ்வொரு நிலையிலும்…. ஒவ்வொரு ரூபத்திலும்…
1.குருநாதர் காட்டிய அருள் வழியை அவர் பதிய வைத்த ஏட்டை (பதிவுகளை) நினைவு கொள்ளும் போது
2.எனக்குள் (ஞானகுரு) உணர்த்தி உணர்வின் தன்மையை அவரே இந்த உடலை வழி நடத்துகின்றார்.

ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!

அவர் பதிவு செய்த நாடாக்களை (RECORD) நான் எண்ணும் போது… “அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு…”
1.நீங்கள் பெற வேண்டும் என்று
2.அவர் செய்த உண்ர்வைத்தான் நானும் (ஞானகுரு) செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னைச் செய்விக்கின்றது.

ஆகவே குரு அருளை நாம் அனைவரும் பெறுவோம். குரு காட்டிய வழியில் நாம் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுவோம். மகிழ்ச்சி பெறும் நிலையை இந்த உடலிலே பெறச் செய்வோம்.

நாம் பார்க்கும் அனைவரின் உடலையும் மகிழச் செய்வோம். மகரிஷிகளின் அருள் உணர்வுடனே இந்த வாழ்க்கையை ஒன்றி வாழ்வோம்.

என்றும் பேரானந்த நிலைகள் பெற்ற பெரும் நிலையுடன் ஒன்றியே வாழ்ந்திடும் நிலையை நாம் உருவாக்குவோம். குருவுடன் ஒன்றி வாழும் நிலையைப் பெறுவோம்.

உங்களுக்குள் குரு உணர்த்திய பேருண்மைகளைப் படிப்படியாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் காலமும் இல்லை… நேரமும் இல்லை.

குருநாதர் எமக்குக் கொடுத்துப் பதிவு செய்த நிலைகள் எண்ணிலடங்காதது. இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.
1.அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வைப் பதிவு செய்த இந்த நிலையை
2.எல்லோரும் பெற வேண்டும் என்பதற்கு
3.அவ்வப்போது அந்தத் துணுக்குகளை எடுத்து அந்த நினைவைக் கூட்டும் போது
4.உணர்வு ஒளியாகி… உணர்வின் தன்மைகள் எண்ணமாகி… அதனின் நிலைகளில் தான் செயல்படுகின்றேன்.