கடலின் உப்புத் தன்மையும் மனித உடலின் உப்புத் தன்மையும் ஒன்று தான் – ஈஸ்வரபட்டர்

empowering nature

கடலின் உப்புத் தன்மையும் மனித உடலின் உப்புத் தன்மையும் ஒன்று தான் – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமியின் நிலை இரண்டும் பாகம் நீரும் ஒரு பாகம் நிலமும் உள்ளது. அவற்றிலும் ஒரு பாகத்தில் ஏரி குளம் கிணறு ஆறு இப்படி நீர் நிலைகள் உள்ளன.

இன்று நில அதிர்வு ஏற்படுவது நிலத்தில் மட்டுமல்ல. பூகம்பமும் எரிமலையும் இப்பூமியின் நீர் நிலை இல்லாத இடங்களில் மட்டும் ஏற்படுவது அல்ல. பூமியுடன் கலந்த கடலிலும் இப்பூகம்ப நிலை அதிகமாக ஏற்பட்டுக் கொண்டேதான் உள்ளது.

கடலில் சில நிலைகளில் இப்பூகம்ப நிலை ஏற்பட்டு அதனால் அக்கடலுக்குள் திடீர் திடீரென்று மலைகள் வளர்கின்றன என்கின்றனர். கடலுக்கடியில் வளர்ந்திடும் மலையின் நிலையென்ன…?

இப்பூமித்தாய் வெளியிடும் உஷ்ண அலைகள் வெளிப்படும் தன்மையினால் பூமியில் ஏற்படுவதைப் போன்ற நில அதிர்வு இக்கடலிலும் ஏற்படுவதினால் அந்நிலையில் பொங்கும் நிலையில் வளர்வது தான் இப்படி திடீர் திடீரென்று தோன்றிடும் மலைகளின் நிலையெல்லாம்.

கடல் நீரிற்கும் இம்மனித ஜீவ ஆத்மாவின் உடல் தன்மைக்கும் அநேக ஒற்றுமை நிலைகள் உண்டு.
1.இம் மனித உடலின் சுவாசத் தன்மை உப்புக் கலந்த அமிலத்தைத் தான் அதிகமாக ஈர்த்து சுவாசிக்கின்றது.
2.கடல் நீரின் உப்புத் தன்மையும் இம் மனித ஜீவாத்மாவின் உடல் தன்மையும் ஒன்றுபட்டதே
3.இம்மனித உடலைப் புதைத்தால் அவ்வுடலின் மேல் மற்றத் தாவர இன வர்க்கங்கள் வளர்ந்திடாது.

இன்று தாவரங்களுக்குப் பல இரசாயன உரங்களைச் செய்வித்து வளரச் செய்கின்றனர். அவற்றினுள் இம் மனிதனின் உடல் தன்மையை ஓர் இரசாயனத்திற்கும் பயன்படுத்திட முடியாது.

இன்று சில இடங்களில் சில தாவர வர்க்கங்களுக்கு நாய் நரி இவற்றின் உடல்களை அத்தாவரங்களின் வேர்களுக்கு உரமாக இட்டால் அத்தாவரம் செழித்து வளர்ந்திடும் என்ற நிலையில் பயிர் செய்கிறார்கள்.

1.ஆனால் மனித உடல் உப்புக் கலந்த அமிலத் தன்மை பெற்றதினால் எத்தாவரமும் இவ்வுடலில் இருந்து வளராது
2.இவற்றைப் போன்றே தாவரங்களுக்கு இப்பூமியில் மூன்றில் இரண்டு பாகமாக உள்ள கடல் நீரைப் பயன்படுத்திட முடிவதில்லை.

கடலிலேயே அச் சுவாசமுடனேயே வளர்ந்திடும் சில தாவர வர்க்கங்கள் உண்டு. ஆனால் அதே இனம் கொண்ட இத்தரையுடன் உள்ள நீர் நிலையில் வளர்ந்திடாது. இயற்கையிலேயே இப்படிப் பல பல மாற்றங்கள் கலந்தே உள்ளன.

இயற்கையின் சக்திக்குட்பட்ட… இயற்கை எய்தும் ஜீவ ஆத்மா பெற்ற நாம்… நம் சக்தியை இயற்கையுடன் கலக்கவிடும் நிலை பெற வேண்டும்…!

தலையெழுத்து நிர்ணயமாகும் நாள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Divine realization - treaure

தலையெழுத்து நிர்ணயமாகும் நாள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலத் தன்மையான பல நிலை கொண்ட உயிரணுக்கள் இப்பூமி தன்னுள் ஈர்த்து அவ்வுஷ்ண அலைகளை வெளிப்படுத்திக் கொண்டே தான் உள்ளது.

ஆக… பல மாறுபட்ட நிலைகள் கொண்ட அமில சக்திகள் இப்படர்ந்த காற்றினில் உள்ளதினால் அவ்வமிலத்தின் மேல் இச்சூரிய ஒளி பட்டவுடன்
1.மென்மேலும் பல நிலை கொண்ட அமிலத்தன்மையும் வளர்ந்து
2.உயிரணுக்களும் வளர்ந்து கொண்டேதான் உள்ளன.

இப்பூமியின் வளரும் நிலை கொண்ட அனைத்து சக்திகளுமே ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தான்.

ஒவ்வோர் உயிரணுக்களும் எச்சக்தியில் உயிரணுவாய் எவ்வமில சக்தியைப் பெற்று உதித்தனவோ அவ்வமிலத் தன்மை உடைய காந்த சக்தியை உடைய உயிரணு அச்சக்தி நிலை கொண்ட அமிலத்தைக் காந்த நிலையுடனே மென்மேலும் ஈர்த்து வளர்கிறது.

அவ்வாறு வளரும் நிலையில் அது அது ஈர்த்த நிலை கொண்டு தாவரங்கள் கல் மண் நீர் மற்ற பூமிக்கு அடியில் உள்ள திரவப் பொருள்கள் உலோகங்கள் (கனி வளங்கள்) இப்படி வளரும் உயிரணுக்கள் சில. இன்னும் சில நிலை கொண்ட உயிரணுக்கள் ஜீவ உடல் பெற வருகின்றன.

இப்பூமியில் இருந்து வளரும் இப்பொழுது சொல்லிய உயிரணுக்கள் எல்லாம் இப்பூமியின் மேல் படர்ந்து பூமியுடனே ஐக்கியப்பட்டு பூமிக்குள்ளே இருந்து வளர்ந்த நிலை பெற்ற இயற்கை வளம் கொண்ட உயிரணுக்களின் நிலை தான் இவையெல்லாம்.

ஆனால் இஜ்ஜீவ உடலை ஏற்கும் உயிரணுவானது இக்காற்றில் படர்ந்து கொண்டே இக்காற்றில் உள்ள அமில சக்தியை மென்மேலும் தன்னுள் ஈர்த்துச் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் வளர்ச்சி கொண்ட நிலையில் உள்ள பொழுது அடுத்து… கருவாக அதாவது உடல் பெறுவதற்கு வருகிறது.

தாய் தந்தை என்ற இரண்டு ஜீவ உடல் நிலை கொண்ட இனங்கள் ஒன்றுபடும் பொழுது இவ்விரண்டு ஜீவ உடல்களின் அமில சக்தி ஒன்றுபட்டவுடன் காற்றில் கலந்துள்ள அந்த உயிரணு தன் நிலைக்கு ஒப்ப அமில நிலை கொண்ட காந்த சக்தியுடைய உயிரணுவின் சக்தி இவ்வொன்றுபட்ட சக்தியுடன் வந்து உயிர் கொள்கின்றது.

இவ்விரண்டு ஜீவ உடல்களின் அமில சக்தி ஒன்றுபட்டவுடன் அவ்வுயிரணுவின் சக்திக்குகந்த பிறப்பிடமாக இவற்றை ஏற்றுத்தான் அவ்வுயிரணு கருவாகின்றது.

கரு உருவாகி வளரும் போது அத்தாயின் கருவிலே… தான் ஈர்த்துப் பழக்கப்பட்ட அமில சக்தியைத்தான் எடுக்கிறது. அத்தாய் சுவாசிக்கும்போது தன் நிலைக்கு ஒப்ப… தனக்கு வேண்டிய அமிலத்தை மட்டுமே ஈர்த்து வளர்ச்சி பெற்று வளர்கின்றது.

1.சூலுண்ட நிலையில் உள்ள ஜீவ உடல் கொண்ட தாயின் ஜீவ ஆத்மாவிற்கும்
2.தனித்த நிலையிலுள்ள ஜீவ உடல் கொண்டவரின் துடிப்பு நிலைக்கும்
3.சூலுண்ட நிலையிலுள்ள ஜீவ உடல் கொண்ட ஜீவன்களின் துடிப்பு நிலைக்கும் மாறு கொண்ட நிலை இருந்திடும்.

தாவர வர்க்கங்களின் நிலையை ஜீவ அணுவாய் வளர்ந்த நிலை என்று உணர்த்தினேன். ஜீவன் கொண்ட ஜீவ அணுக்கள்தான்… துடிப்பு நிலையில்லா வர்க்கங்கள்… இவை…!

1.ஆனால் ஜீவ ஆத்மாக்கள்தான் ஜீவ உடல் கொண்ட ஆத்மாக்களாய்
2.உதிர ஓட்டமுடன் துடிப்பு நிலை கொண்ட அங்கங்களை உருவாக்கி வளர்ந்திடும் ஜீவ ஆத்மாக்கள்.

அனைத்துமே உயிரணுவாய் இயற்கையுடன் இவ்வுலகில் உயிர் பெற்றாலும் ஒவ்வொன்றிற்கும் அவையவை ஈர்த்த காந்த அமில சக்தி கொண்ட இப்பூமியில் படர்ந்து பூமியுடன் ஐக்கியப்பட்டு பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகளை ஈர்த்தே வாழ்கிறது.

அதாவது இயற்கை வளங்களாகவும்… காற்றுடனே ஆவியாகப் படர்ந்த நிலையில் தன் சக்திகளை ஈர்த்தும்…
1.வளர்ந்திடும் உயிரணுக்கள்தான் ஜீவ உடல் கொண்ட ஆத்மாவாக
2.ஊர்வன பறப்பன நீரில் வாழ்ந்திடும் நீரினங்கள் மிருக வர்க்கங்கள் இம் மனித உடல்கள் எல்லாமே.
3.உயிரணுவாய்த் தோன்றிய நாளிலேயே அது ஈர்க்கும் அமில சக்தியைக் கொண்டு தன் தன் பிறப்பு நிலை எய்துகிறது.
4.உயிரணுவாய் உதித்த நாளிலேயே தன் தலை எழுத்தைத் தானாகவே எழுதிக் கொள்கின்றது.

இக்காற்றில் படர்ந்துள்ள உயிரணுக்கள்தான் ஜீவாத்மாவாகி என்றும் அழியாமல் மீண்டும் மீண்டும் ஜென்மம் பெறுவதற்கு வருகிறது என்பதல்ல. இப்பூமியுடன் ஐக்கியப்பட்டு வளர்ந்த அனைத்துமே இந்நிலையில்தான் தத்தம் இனத்துடன் அவையவை சேருகின்றன.

நாம் தெய்வமாக வேண்டும்

eswarapattar wishes

நாம் தெய்வமாக வேண்டும்

 

இன்று கம்ப்யூட்டரில் விஞ்ஞான அறிவு கொண்டு எல்லாவற்றையுமே ரெக்கார்ட் (RECORD) செய்து கொள்கின்றார்கள். பதிவானதை மீண்டும் தட்டி விட்டவுடனே அதன் இயல்பைத் தெரிந்து கொள்கின்றார்கள்.

அதே போல் தான் மனிதர்கள் நாம் என்ன செய்கிறோம்…?

இரண்டு பேர் சண்டை போட்டால் அதை உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொள்கிறோம். மீண்டும் அவனை எண்ணியவுடன் உடனே நமக்கும் கோபம் வருகிறது. நம் நல்ல காரியத்தைக் கெடுத்து விடுகிறது.

கோயிலுக்குச் சென்று வணங்குகின்றோம். நாம் எண்ணியபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் அதையும் ரெக்கார்டு செய்கின்றோம்.

எப்படி…?

1.என்னத்தைச் சாமி கும்பிட்டு என்ன செய்ய..?
2.இந்த ரெக்கார்டைத் தட்டியதும் சோர்வடைந்து அடுத்து நல்லதை எடுக்க முடியாமல் போய்விடும்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகளை எல்லாம் உடலில் உள்ள எலும்பிலே ரெக்கார்ட் செய்து வைத்து விடுகிறது. எண்ணிலடங்காத நிலைகள் நமக்குள் இருக்கிறது. இப்பொழுது விஞ்ஞானி எலெக்ட்ரானிக் என்ற நிலையில் அதை நிரூபிக்கின்றான்.

உதாரணமாக சண்டை போடுவதையும் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள்… குடும்பத்தில் வரும் கஷ்டப்படுவதையும் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள்.

வேறு ஒன்றும் தேவையில்லை… துணி எடுக்க நீங்கள் ஜவுளிக் கடைக்குப் போகின்றீர்கள். போகும்போது குழந்தைகளைச் சும்மாவது அடம்பிடிக்கச் சொல்லுங்கள்.

அப்போது ஏண்டா இப்படிப் போகும்போது..? என்று மனது சங்கடமாகும்…. அந்த வெறுப்புணர்வு வரும். அந்த உணர்வு வந்த பின் அவர்களை நல்ல புடவை எடுத்து வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்…!

கடைக்குப் போனவுடனே அதே சங்கடமாக இருக்கும்…
1.இந்த வெறுப்பு உணர்வு தான் கண்ணில் வரும்
2.நல்ல புடவையாக எடுத்துப் போடப் போட இது வேண்டாம்… இது வேண்டாம்…! என்பார்கள்.
3.கடைசியில் வெறுப்புணர்வு கொண்டு சடைச்சுப் போய்… “சரி இதையாவது கொடுங்கள்…” என்று எடுத்து வருவார்கள்.

எடுத்து அப்புறம் வீட்டுக்கு வந்தபின் அடுத்தவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். துணியைப் பார்த்து “என்னங்க… போயும் போய் இந்தப் புடவையைத் தானா எடுத்தீர்கள்…!” என்று கேட்பார்கள்.

இல்லைங்க இது தான் நல்லது…! என்பார்கள்.

நன்றாகப் பாருங்கள்…! என்று மீண்டும் அடுத்தவர்கள் சொன்னாலும் அன்றைக்குத் தெரியாது. மறு நாள் காலையில் பாருங்கள்.

சனியன்…! போகும் போதே குறுக்கே வந்து பையன் நமக்கு இத்தனை தொல்லை கொடுத்து விட்டான். மீண்டும் “சனியன்: என்றுதான் சொல்வோம். யாரை..?

இந்த உணர்வுகள் அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெறுப்பு வரும். இப்படி அவனை எண்ணிவிட்டு அன்று காய்கறிகளை எடுத்து சமைக்க வேண்டும் என்றாலும் “காயை அறுக்கப் போனால்..” அந்த உணர்வின் தன்மை என்ன செய்யும்…?

காயை இப்படிப் பிடித்து இப்படிக் கொண்டு போவார்கள். இது தெரியாதபடி சாய்த்துவிடும். கையில் அறுத்துவிடும்…! அடக் கிரகமே…! இதைப் பார்க்கலாம்.

கீதையில் சொன்னது போல்… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! இந்த உணர்வின் இயக்கமாக நம்மை எப்படி இயக்குகின்றது என்று பார்க்கலாம். இது எல்லாம் இந்த மனித வாழ்க்கையில் இயக்கப்படும் நிலைகள்.

பையனின் நிலைகள் இப்படித் தான் என்று ரெக்கார்ட் செய்கின்றீர்கள்… எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் தான் செய்கின்றான். யாரிடம் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான் என்று சொல்கிறீர்கள்.

மனைவி மேல் கணவனுக்குக் கொஞ்சம் வெறுப்பு வந்துவிட்டால் அதை ரெக்காட் செய்து கொள்கின்றார்கள். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா…! என்பார்கள்.

அவர்கள் அடுப்பில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். சரியாகக் காதில் விழுந்திருக்காது.

பார்… எப்பொழுது பார்த்தாலும் நான் எதாவது சொன்னால் சரியாகவே கவனிக்க மாட்டேன் என்கின்றாய்…! என்று சொல்லிக் கோபமாகப் பேசுவார்கள்.

பேசியதும் அவரைப் பார்த்தவுடன் மனைவி என்ன செய்கின்றார்கள்…?

எதாவது ஒன்று.. என்றால் கொஞ்சம் பொறுத்துச் சொல்லாதபடி “எப்பொழுது பார்த்தாலும் என்னைக் குற்றவாளி ஆக்குவது தான் உங்களுக்கு வேலை…” என்பார்கள்

இந்த உணர்வுகள் தான் குடும்பத்தில் வளரும். இதை எது செய்கின்றது…? இந்தச் சந்தர்ப்பங்கள் செய்கின்றது.

ஏனென்றால் இந்த உடலில் எத்தனை காலம் வாழுகின்றோம்…? எதை எடுத்தாலும் இன்றைய செயல் தான் நாளைய சரீரம்.

1.நம்மை அறியாமல் நமக்குள் வரும் இத்தகைய தீமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்றால்
2.அந்த அருள் ஞானிகள் உணர்வை எடுக்க வேண்டும்
3.அந்த அருள் ஞானிகள் காட்டிய உணர்வினை நீங்கள் பெறுவதற்குதான் இப்பொழுது ரெக்காட் செய்கின்றேன் (ஞானகுரு).
4.நீங்கள் எந்த அளவுக்கு பதிவு செய்கின்றீர்களோ… அந்த அளவுக்குத் திருப்பி எண்ணும் போது…
5.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

சாமி… சக்தி வாய்ந்தவர் எனக்குச் செய்வார் என்று சொன்னால் அந்த உணர்வின் வழியைப் பெற்றேன்…. வளர்த்தேன்… அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவின் நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தப் பதிவு நிலையை மீண்டும் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்ற உணர்வை எடுத்தால் அருள் பெருகுகின்றது… சிந்திக்கும் ஆற்றல் கொடுக்கின்றது… நம் சிரமங்களை மீட்டுத் தருகின்றது… ஞான சக்தியாக உருவாகின்றோம்.

இதைத் தான் மனிதனின் ஆறாவது அறிவை ஞானிகள் எப்படிக் காட்டியுள்ளார்கள்…?

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அது கிரியை ஆகி அதன் ஞானமாகத்தான் நம் உடலுக்குள் விளையும்.

தெய்வீக பண்புகளை நாம் பெறுவதற்குத்தான் ஆலயங்களைக் கட்டினார்கள் ஞானிகள். ஆலயத்தில் காட்டப்பட்ட அந்த அருள் உணர்வை நுகர்ந்தால் அது நம் உடலுக்குள் விளைந்து நாம் தெய்வமாகின்றோம்.

1.நம்மை எல்லாம் தெய்வமாக்கத்தான் அங்கே சிலையை உருவாக்கி
2.அந்தச் சிலை வடிவில் அருள் ஞானத்தை ஊட்டினார்கள் ஞானிகள்.

நாம் இயக்குகின்றோமா…? அல்லது நாம் சுவாசிப்பது நம்மை இயக்குகிறதா…?

Breathing states

நாம் இயக்குகின்றோமா…? அல்லது நாம் சுவாசிப்பது நம்மை இயக்குகிறதா…?

ஒரு செடியிலிருந்து அதன் (மணம்) சத்தை வெளிப்படுத்தினால் சூரியன் கவர்ந்து அலைகளாக இந்தப் பூமியில் பரவச் செய்கின்றது. அதே செடியை நாம் கண் கொண்டு பார்த்து அது பற்றித் தெரிய வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தால் அந்த மணம் நம் உயிரிலே படுகிறது.

தெரியவில்லை என்றாலும் அதை நுகர்ந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம்.
1.இதனுடைய குணம் என்ன…?
2.இதனுடைய மணம் என்ன…? இது என்ன செய்யும்…?
3.நம்மை வேதனைப்படுத்துமா…? உடம்புக்கு நல்லதாகுமா…? என்று சிந்திக்கின்றோம்.

செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்திருந்தாலும் அந்தச் செடியின் வாசனையை நுகர வேண்டுமென்றால் நமது கருவிழி ருக்மணி அந்தச் செடியை நமக்குள் பதிவாக்க வேண்டும்.

ஏனென்றால்
1.நாம் இயங்குகின்றோமா…? நம்மை மற்றது இயக்குகின்றதா…?
2.அல்லது நாம் ஒன்றைத் தவறு செய்கின்றோமா…?
3.அல்லது நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா?
4.அப்படி தவறு செய்ய வைக்கின்றது நமது உயிரா…? நாம் நுகர்ந்த உணர்வா…? நமது உடலா…? என்பதனை எல்லாம்
5.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகள்.

உதாரணமாக வேப்ப இலை என்று வைத்துக் கொள்வோம். அந்தச் செடியின் சத்தை நுகர்ந்த பின் ஒரு கசப்பென்ற நிலைகள் வருகின்றது

அந்த உணர்வின் மணங்கள் நம் உயிரிலே பட்டுக் கசப்பின் உணர்ச்சிகளாக நம் உடலிலே படரும். அப்பொழுது என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகள் பட்டதும் அந்த உணர்ச்சிகளாக நம்மைத் தூண்டும்
2.ஓய்ய்…ய்ய்ய்…! கசப்பை நுகர்ந்தால் ஓ…ய் என்று உமட்டலாக வரும்
3.அப்போது இயக்குவது யார்..? நாம் நுகர்ந்த உணர்வு இயக்குகின்றது
4.ஆனால் அந்த உணர்வை இயக்கிக் காட்டுவது யார்..? உயிர்
5.அந்த உணர்ச்சிகள் நம் உடலுடன் சேர்த்தவுடனே அதுதான் நம்மை இயக்குகின்றது… ஆண்டாள்…! (காரணப் பெயர்)

வேப்ப மரத்தைக் கூர்ந்து கண் கொண்டு பார்த்தால் அதைப் பதிவாக்குகின்றது நம் கண்ணின் கருவிழி.

அந்த மரத்திலிருந்து வரக்கூடிய உணர்வு என்ன…? என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றோம். அந்த ஆசையால் அது கவரும் சக்தி பெறுகின்றது.

அப்பொழுது அந்த உணர்வு உயிரிலே படுகின்றது. அது என்ன செடி…? நல்லது செய்யுமா… கெட்டது செய்யுமா…? என்று நாம் ஆராய்ச்சி செய்வோம்.

வாந்தி வரும்… என்று சொன்னால் அதை நீக்கி விடுகின்றோம்.

ஒருவருக்கு அம்மை வார்த்திருந்தது என்றால் இது விஷத் தாக்குதல். அதற்கு இந்த வேப்பிலையை முழுதாகப் போட்டு இரண்டு மஞ்சளைப் போட்டுக் கலக்கித் தெளித்தால் உடலில் அம்மை என்ற அந்த விஷக் கிருமிகளை மாற்றுகின்றது.

ஆனால் அதே வேப்பிலையை நாம் உணவாக உட்கொள்ளும்போது உமட்டல் வருகின்றது… வாந்தியாகி வெளியே தள்ளுகின்றது.

இருந்தாலும் அந்த வேப்பிலையை அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலில் உஷ்ணம் வருகின்றது அதை அளவுடன் சாப்பிட்டால் அந்த வேப்பிலை நமக்குள் இருக்கும் பல கசப்பின் உணர்வுகளை நீக்குகின்றது.

1.அதனதன் சந்தர்ப்பத்திற்கு அது வேலை செய்கின்றது
2.இவை எல்லாம் இயற்கையின் நியதிகள்…!

மனித உணர்விற்கு எட்டாத பல கோடி நிலைகள் இயற்கையில் உள்ளது – ஈஸ்வரபட்டர்

realization of nature

மனித உணர்விற்கு எட்டாத பல கோடி நிலைகள் இயற்கையில் உள்ளது – ஈஸ்வரபட்டர்

 

எறும்பிற்கும் உணர்வுண்டு… சிறு மண் புழுவிற்கும் உணர்வுண்டு…! இஜ் ஜீவத் துடிப்பு நிலையுள்ள அனைத்து ஜீவராசிகளுக்குமே இவ்வுணர்வு நிலையுண்டு.

ஆனால் தாவர வர்க்கங்களுக்கு இஜ் ஜீவத் துடிப்பு நிலை இல்லாததினால் தாவரங்களுக்கு உணரும் தன்மை இல்லை.

சில வகைத் தாவரங்கள் மனிதனின் உடல் உறுப்புகள் பட்டவுடனே சுருங்கும் தன்மை பெறுகின்றன. உணர்வில்லாமல் அவை எப்படிச் சுருங்குகின்றன என்று எண்ணுவீர்…?

இவ்வுணரும் சக்தி பெற்ற ஜீவஜெந்துக்கள் அதற்குகந்த அவை ஈர்த்து வளர்ந்த அமிலத் தன்மைக்குகந்த காந்த சக்தி நிலையுண்டு.

இச்சக்தியினால் அத்தாவரங்களின் மேல் இச்ஜீவஜெந்துவின் சக்தி நிலை பட்டவுடன்… அந்தத் தாவரம் எந்த நிலைகொண்ட சக்தி பெற்று எந்த அமிலத்தை ஈர்த்து வளர்ந்ததோ… அந்நிலைக்கும் இந்நிலைக்கும் எதிருண்ட நிலை அடைவதினால்… “மற்ற ஜீவ ஜெந்துவின் உறுப்புகள் பட்டவுடன் அது சுருங்கும் நிலைக்கு வருகின்றது…”

அஜ் ஜீவ ஜெந்துவின் வெப்ப நிலையும் அத்தாவரத்தின் வெப்ப நிலையும் மாறுபட்ட நிலையில் உள்ளதினாலும் இந்நிலை பெறுகிறது.

சில வகைத் தாவரங்கள் சில நிலை கொண்ட மனிதரின் தீய எண்ணத்தையே ஈர்த்து நச்சு நிலையில் வாழ்பவரின் உஷ்ண நிலை அவர் அந்நிலையில் எடுக்கும் சுவாச நிலை அந்தத் தாவரங்களின் மேல் பட்டாலே அத்தாவரம் கருகும் நிலை பெறுகிறது.

இன்னும் சிலரின் நிலையில் அவர்கள் விதை விதைத்தால் அவ்விதை வளர்ந்திடாது. அவ்விதையே இவர் கையில் ஏந்தி வைத்துள்ள நிலையிலேயே அவர் எடுக்கும் சுவாச நிலை கொண்டு அவர்களின் அங்க சக்தியைக் கொண்டு அவ்விதைக்கு வளரும் சக்தியற்றுப் போகிறது. அந்நிலையில் அவர் விதைக்கும் விதையும் வளர்வதில்லை.

1.சிலரின் சுவாசத்தினால் இவ்வுலக சக்தியையே சக்தியாகக் காணும் நல் நிலை உள்ளது
2.சிலரின் சுவாசத்தினால் அவர்களின் எண்ணத்தின் நிலையினாலேயே
3.எந்த நிலைக்குச் சென்றிட்டாலும் சோர்ந்த நிலை பெறுகின்றனர்.

சக்தி நிலை பொதுவானதே…! இவ்வெண்ண நிலையினால்தான் மாறுபட்ட நிலைகளெல்லாம்…!

தாவரங்களின் நிலைக்கு இவ்வுணரும் நிலையும் எண்ண நிலையுமில்லை. உயிரணுவாய் ஒரே நிலையில் சக்தியை ஈர்த்து எந்நிலை கொண்ட அமில சக்தியை ஈர்த்து வளர்த்தனவோ அந்நிலைக்கொப்பத்தான் அவற்றில் விளையும் பூவும் காயும் கனியும் தானிய வகைகளும் இருக்கும்.

தாவர வர்க்கங்களை நாம் அதில் வளரும் பூவையும் காய்கனியையும் சில கீரைகளின் மேல் நிலையில் உள்ள கொழுந்துகளையும் நாம் பறித்து எடுக்கும் பொழுது அதன் நிலை மென்மேலும் வளரத்தான் செய்கிறது.

அவற்றுக்கு ஜீவத் துடிப்பும் உணரும் தன்மையும் இல்லாமல் ஒரு நிலை கொண்ட சக்தியை ஈர்த்து வளரப் பெற்றதினால் ஒவ்வொன்றும் அதனதன் குறிப்பிட்ட கால நிலைப்படி அதன் பயன் நிலை கொண்டு சக்தியளித்து நமக்குப் பயன் தருகின்றது.

1.இந்த இயற்கையின் சக்தியில் பல நிலை கொண்ட ஒவ்வொன்றிற்கும் மாறுபட்ட நிலையில்
2.நம் எண்ணத்திற்கும் நம் உணர்விற்கும் எட்டாத பல கோடி நிலைகள் உள்ளன.

சில தாவரங்கள் பல நாட்கள் வளர்ந்தாலும் பலன் தராததை வைத்தும் இன்னும் சில வகைத் தாவரங்களுக்கு ஒன்றுக்கெதிரில் அதே நிலைகொண்ட (ஜாதி) அதன் நிலை பெற்ற தாவரம் இருந்திட்டால்தான் இவை இரண்டுமே பலனளிக்கும்.

தாவரங்களில் சில பலன் தராத நிலை பெற்றதை ஆண் தாவரம் என்கின்றனர். தாவரங்களுக்கு இவ் ஆண் பெண் என்ற நிலையில்லை. உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிடும் எவ்வுயிரணுக்களுக்குமே இவ் ஆண் பெண் நிலையில்லை.

உயிரணுவாய் இருந்து ஜீவ ஆத்மாவிற்கு வந்த பிறகுதான் இவ் ஆண் பெண் நிலையெல்லாம். ஆவி உலகத்திலும் இவ் ஆண் பெண் நிலையில்லை.

இவ்வாவி உலகிலிருந்து ஜெனனத்திற்கு வருபவர்களின் ஆவி ஆத்மாவின் எண்ணப்படிதான் இஜ்ஜீவ ஆத்மாவிற்கு ஆணாகவும் பெண்ணாகவும் வந்து பிறப்பது எல்லாம்.

1.அவரவர்கள் எண்ண நிலைக்கும் உணர்வு நிலைக்கும் தக்கப்படிதான்
2.அவ்வாவி உலக ஆத்மா இஜ் ஜீவ உடலுக்கு வருகின்றது.

ஒரே நிலை கொண்ட சுவாசத்தைப் பெற வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Breathing third eye

ஒரே நிலை கொண்ட சுவாசத்தைப் பெற வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாம் எடுக்கும் சுவாசம் ஒரே நிலை கொண்டதாக இருந்திடல் வேண்டும். பல எண்ணங்களின் நிலையுடன் எடுக்கும் சுவாசத்தில் நம் நிலைக்கு நாம் பெறும் சக்தி நிலை தடைப்படுகின்றது.

1.வாழ்க்கையில் பல நிலைகள் மோதுண்டாலும்…
2.நம் எண்ண சக்தி அவ்வீசனின் ஜெபம் கொண்டதாக
3.நம்முள்ளே உள்ள ஈசனை வணங்கிய நல் சக்திக்கு வர வேண்டும்.

காட்சி:
இல்லத்தில் தூசி அண்டிக் கொண்டே இருந்திட்டாலும் அதனை நாம் பெருக்கி தூய்மைப்படுத்திக் கொண்டே உள்ளோம்.

அதே போல் ஒரு தீபத்தை ஏற்றும் பொழுது அத்தீபத்தில் உள்ள எண்ணெய் குறையக் குறைய மீண்டும் அவ்வெண்ணையை ஊற்றித் தீபத்தின் திரியைத் தூண்டுகின்றோம்.

அப்படித் தூண்டினால்தான் அத்தீபம் ஒளி அளித்துக் கொண்டே இருக்கும்.

1.அதே போல்… நம் எண்ணத்தை எண்ணெயாக்கி
2.நம் ஆத்மாவின் ஜோதி என்னும் ஒளிரும் சக்தியில்
3.இவ் எண்ணமான எண்ணெயை குறையக் குறைய ஊற்றினால்
4.தீபம் சுடர் விட்டுப் பிரகாசிப்பது போல் நம் சக்தியை நாம் உணர்ந்து உணர்வுகள் ஒளியாகும் நல் சக்தி பெற வேண்டும்.

தாவர வர்க்கங்கள் ஒரே நிலை கொண்ட சக்தியை மட்டும் ஈர்த்து எப்படி அச்சக்தியின் நிலை கொண்ட செயலில் வளர்கின்றனவோ அந்த நிலை போல் நம் நிலையும் இருந்திடல் வேண்டும்.

தாவரங்கள் அதன் இயற்கையின் சக்தியில் ஒரே நிலை கொண்டு அவ்வணு வளர்வதினால் ஒரே சக்தியில் ஈர்த்து வளர்கின்றன.

ஆனால் ஜீவ ஆத்மாக்கள் (நாம்) பல நிலைகளை எண்ணும் நிலையில் உள்ளத்தினால் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்ந்தந்த நிலைக்குகந்த சக்தி நிலையும் நம் உடலுக்குள் செல்லுகின்றது.

அதிகோப நிலையும் சலிப்பு நிலையும் பயந்த நிலையும் இப்படி ஒவ்வொரு நிலை கொண்ட எண்ணமுடன் நாம் உள்ள நிலையில்
1.நாம் எடுக்கும் சுவாசத்தினால் இக்காற்றில் உள்ள அமிலத்தில் இருந்து அவைகள் நம் உடலில் வந்து குவிந்து
3.நம் உடலின் நிலையை மாறுபடச் செய்கின்றது.

ஆக… நாமாக ஏற்பதுதான் நம் வாழ்க்கை நிலையும் ஆயுள் நிலையும்.

எண்ண சக்தி கொண்டு உயிராத்மாவாய்ப் பிறந்து இவ்வெண்ணமுடனே வளர்ந்து இவ்வெண்ணத்துடனே உடலை விட்டு ஆத்மா பிரிந்தும் இவ்வெண்ணத்துடனே ஆவி உலகில் சஞ்சரித்தும் பிறகு இவ்வெண்ண நிலைகொண்டு தான் இப்பூமிக்கு மறு பிறப்பிற்கும் வருகின்றோம்.

உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே அந்த நிலைகொண்டு வளர்ச்சியுற்று எல்லா நிலைகளுமே இந்த ண்ணத்துடன்தான் செயல்படுகின்றன.

எண்ண சக்தியை நாம் பெற்ற மானிடனாக இப்பூமியில் வாழ்ந்திடும் காலத்திலேயே
1.நாம் பிறந்ததின் பயனை உணர்ந்து
2.நம் ஆத்மாதான் நமது தெய்வம்
3.அவ்வாத்மாவிற்கு நாம் ஈர்க்கும் சுவாசம் கொண்டும்… நாம் சேமிக்கும் சக்தி நிலையைக் கொண்டும்…
4.நம் நிலையை நல் நிலை ஆக்கிடும் நிலைக்கு நம்மை நாம் பக்குவப்படுத்தி வாழ்ந்திடும் எண்ணத்தை வழிப்படுத்துதல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள தாவரங்களின் நிலையுடன் இயற்கை அன்னை அளித்துள்ள நல்ல கனிகளையும் உண்டிட்டே நம் நிலையில் அவற்றின் சக்தியைக் கொண்டே வளர்த்திடல் வேண்டும்.

உயிரணுவாய் உள்ள இத் தாவரங்களுக்கு மட்டும் ஜீவனில்லையா..? இவ் இயற்கையுடன் பூமியில் உள்ள அனைத்துமே ஜீவனுடன் உள்ள பொழுது மிருகங்கள் பறவைகள் இவற்றின் மாமிசத்தைப் புசித்திடலாகாது. இத்தாவரங்களை நசித்து உண்ணலாமா…? என்றுரைப்பீர்.

தாவரங்கள் இப்பூமியைப் போன்ற நிலை பெற்றவை. உயிர் அணுவாய் ஒரே நிலை கொண்ட சக்தியை ஈர்த்து அச்சக்தியின் நிலையின் தொடர்பு கொண்டு நம்மை வளரச் செய்பவை.
1.இத்தாவரங்கள் உயிரணுவாய் வளரப் பெற்றவைதான்
2.ஆனால் இச்சரீர நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஜீவத்துடிப்பு இல்லாதவை.

இஜ்ஜீவனுடன் ஜீவன் பெற்ற அனைத்து ஆத்மாக்களுக்குமே அது ஈர்க்கும் சக்தி கொண்ட உஷ்ண அலைகளின் வெக்கை நிலையும் அதன் உடல் ஆரோக்கிய நிலையைப் பொறுத்துக் கூடிக் குறையும் நிலை அஜ் ஜீவனுடனே அஜ் ஜீவனே ஏற்படுத்திக் கொள்கிறது.

தாவரங்களின் நிலையில் நம் பூமி வெளியிடும் உஷ்ண சக்தியின் நிலைதான் அந்நிலையில் வளர்ந்திடும் தாவரங்களுக்கும் இருந்திடும்.
1.ஜீவத் துடிப்பும் ஜீவ எண்ணமும் தாவரங்களுக்கில்லை
2.தாவரங்களின் சக்தியெல்லாம் ஒரே நிலைகொண்ட சக்தியை ஈர்த்து வளர்ந்திடும் நிலைதான்…!

நல்லதைச் செய்தாலும் அதைக் காக்கும் சக்தி மிகவும் அவசியம்…!

Fire maharishi

நல்லதைச் செய்தாலும் அதைக் காக்கும் சக்தி மிகவும் அவசியம்…!

 

ஒருவர் ரொம்பப் பிரியப்படுவார் நல்லது பெற வேண்டுமென்று…! மிகவும் கஷ்டப்பட்டவருக்கு ஒரு வேதனைப்பட்டுக் கொண்டிருப்போருக்கு இவர் ரொம்ப உதவி செய்கின்றார்.

உதவி செய்யும் இவரோ தெய்வ பக்தி கொண்ட ஆன்மாவாக இருப்பார்…! இருப்பினும் உதவி பெற்றவரோ…
1.நான் தெய்வத்தை எல்லாம் வேண்டினேன்
2.எல்லாத் தெய்வமும் என்னைக் கைவிட்டுவிட்டது என்று
3.தெய்வத்தின் மேல்… நல்லொழுக்கத்தின் மேல்… வெறுப்புணர்வு இருக்கும்.

ஆனால் இவருக்கு உதவி செய்த நல்லவர் எல்லாருக்கும் உதவி செய்திருப்பார். அந்த உதவியின் தன்மை கொண்டு பிறரிடம் நல்ல பெயரும் புகழும் வாங்கியிருப்பார்.

கோயில்களுக்கு ஓடி ஓடியும் பல நல்லவைகளைச் செய்திருப்பார். கோயிலில் காட்டிய பக்தி கொண்டு கஷ்டப்பட்ட அந்த மனிதனுக்கு ஓடிப் போய் அடடா முருகா…! அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும்…! என்ற எண்ணத்திலே உதவி செய்திருப்பார்.

இருந்தாலும் உதவி பெற்றவரோ… இவர் உதவியை மட்டும் தான் எண்ணுவார். முருகன் என்று சொல்லப்படும்போது எல்லாம் வெறுப்பார்.
1.அந்த முருகன் என்னைக் கைவிட்டார்…
2.நீதானப்பா என்னைக் காப்பாற்றுகிறாய்…! என்று சொல்வார்.

அப்பொழுது இந்த உணர்வுகள் அதிகமாக விளைந்து எல்லா உதவியும் வாங்கிக் கொண்டவரின் உயிரான்மா இவர் மேல் எண்ணமாகி இறந்த பின் செய்த நன்றிக்கு இவரை எண்ணி அந்த ஆன்மா இவர் உடலில் வந்து சேர்ந்துவிடும்.

அது வரை எல்லாக் கோவில்களுக்கும் பக்தியாகப் போய் செய்து கொண்டிருந்தவர் அதற்கு அப்புறம் என்ன செய்வார் தெரியுமோ…?

கோயிலைக் கண்டாலே வெறுப்பு வரும்.

ஏனென்றால் அந்த நோய்வாய்ப்பட்டு இறந்த ஆன்மா இவர் உடலுக்குள்ளே வந்து விட்டதல்லவா. அதனால் அது அவருக்குள் இருந்து வெறுக்கச் செய்யும்.

நல்லது என்று சொல்லி இங்கே உட்கார வைத்தாலும் எழுப்பி வெளியே இழுத்துக் கொண்டு போய் விட்டுவிடும்.

பக்தி மார்க்கங்களில் இப்படித்தான் நாம் உதவி செய்த நன்றியை நாம் பெற முடியாத நிலையில் அதிலே அந்த எண்ண வலு எது பெற்றதோ அது உணர்வின் துணை கொண்டு நமக்குள் வந்து விட்டால் சந்தர்ப்பம் இப்படி ஆகின்றது.

நாம் ஒருவருக்கு நன்மை செய்தோம். ஆனால் அவருக்கு யார் மேலேயோ வெறுப்புப்பட்டது. அந்த வெறுப்பின் உணர்வு நமக்குள் வரும் போது நம் நல்லொழுக்கத்தை இதுவே தடைப்படுத்தும்.

கடைசியில் என்ன சொல்வோம்…?

என்ன நல்லது செய்து என்ன ஆனது…? எனக்கு இப்படி நோய் வந்துவிட்டது…! என்ற வேதனை தான் வரும்.

ஏனென்றால் அந்த உணர்வு கொண்ட ஆன்மா உடலுக்குள் வந்து விட்டால் இந்த வேலையைத்தான் செய்யும்.

சொல்வார்கள்…! நேற்றெல்லாம் இவர் கோயில்களுக்கு ஓடி ஓடிப் போய் என்னென்னமோ நல்லது செய்தார். இன்று நல்லது என்று சொன்னாலே நிற்க மாட்டேன் என்கின்றார். இப்பொழுது சதா வேதனையே சொல்லிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்வார்கள்.

காரணம்… அவர் நல்லவர்தான்…!
1.அவரை அறியாது வந்த தீமைகளிலிருந்து தான் துடைக்கும் மார்க்கத்தைத் தவறியதனால்
2.அதன் உணர்வுகள் தனக்குள் வந்து அந்த ஆன்மா குடி கொள்கின்றது.

புலியிடம் சிக்கும் மான் என்ன ஆகிறது…?

புலி தன்னை இம்சிக்கும் உணர்வு கொண்டு அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்ற எண்ணத்திலே புலியையேக் கண்டு கண்டு அது நிலைகள் கொண்டு மானின் ஆன்மா வெளியே சென்றபின் புலியின் உணர்வை நுகர்ந்து புலியின் ஈர்ப்பிற்குள் சென்று புலியின் உணர்வைக் கொண்டு “அந்த மான் புலியாகவே மாறுகின்றது…!”

இதைப் போன்றுதான் இவர்கள் நல்ல உணர்வு கொண்டாலும்… இந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் உடலுக்குள் வந்தபின் பாலுக்குள் நஞ்சைப் போட்டால்… பாதாமிற்குள் நஞ்சைப் போட்டால்… குடிப்போரைக் கொன்று விடுவதைப்போல இவர் பட்ட வேதனை இவர் உடலுக்குள் சென்று அந்த நல்லதைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றவன் மகரிஷி. அந்த அருள் சக்தியின் வலுக் கொண்டு தீமைகளை அடக்க வேண்டும். ஏனென்றால். அவர்கள் தீமையைப் பொசுக்கியவர்கள்.

அந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணி எடுக்கும்போது நமக்குள்ளும் தீமைகளைப் பொசுக்கும். அருள் உணர்வுகளை வளர்த்து நாம் வெளி சென்ற பின்
1.அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று இந்த உடல் பெறும் உணர்வைக் கருக்கும்.
2.கருக்கிய உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் நாம் நிலைத்திருப்போம்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களின் (ஆவி) நிலைகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Markandaeyan

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களின் (ஆவி) நிலைகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கால நிலை எப்பொழுதும் ஒன்று போல் இருப்பதில்லை. காலை பகல் இரவு ஒவ்வொரு தன்மைக்கு உகந்த உஷ்ண நிலையும் காற்று மழை இடி இவற்றைப் போன்ற சில நிலைகளும் மாறி மாறித்தான் இப்பூமிக்கும் அதன் சக்தி நிலை கிடைக்கின்றது.

இப்பூமியில் வாழும் நாமும் மற்ற ஜீவராசிகளும் இக்கால நிலையின் மாற்றத்திலிருந்து நம்மைக் காப்பதற்கு அவரவர்களின் நிலைக்குகந்த காப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஜீவ உடல் பெற்ற ஜீவ பிம்பம் கொண்ட ஆத்மாக்கள் வெயில் மழை காற்று பனி குளிர் இவற்றில் இருந்து ஜீவ உடலைக் காப்பதற்காக இருப்பிடம் அமைத்துக் கொள்கின்றோம்.

ஆனால் ஜீவனுடன் வாழ்ந்து ஜீவன் விட்டுப் பிரிந்த ஆவி நிலையில் வாழ்ந்திடும் ஆத்மாக்களின் நிலைக்கு… அவ்வாவியுடன் ஆவியாகத் தன் சக்தியைத் தனியாக தன் ஆத்மாவுடனே கலந்து படர்ந்து வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள இவ்வாத்மாக்களுக்கு அவற்றின் சக்தியுடன் கலந்து விட்டதினால் இந்நிலை தாக்கப்படுவதில்லை.

இவற்றில் சில ஆவி உலக ஆத்மாக்கள் வான மண்டலத்தில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.அவ்வாத்மாவுடன் கூடிய ஆவி சக்தியுடன்..
2.இக்காற்றில் கலந்துள்ள அவற்றின் சக்திக்கு ஒத்த சக்தி அவற்றுடன் சேரும் பொழுது அதன் கனம் அதிகரிப்பதனால்
3.அதி மழை வரும் பொழுது இம்மழையின் தன்மையினால் கனமான ஆவி நிலை கொண்ட சக்தியை ஈர்த்த ஆத்மா
4இப்பூமியின் மேல் மழை வரும் காலங்களில் வந்து படர்கின்றது.
5.அந்த நிலையில் அச்சக்தி நிலை கொண்ட ஆத்மாவே சில புதிய தாவரவர்க்கமாக
6.நச்சுத் தன்மை வாய்ந்த தாவர இனமாக வளர்கின்றன.

இவ்வுடலை விட்டு எந்த எந்த எண்ணம் கொண்ட நிலையில் ஆவி பிரிந்ததோ… அந்த அந்த நிலை கொண்ட எண்ணமுடன்தான் அனைத்து ஆவிகளுமே சுற்றிக் கொண்டுள்ளன.

தன் எண்ண நிலை கொண்டே சுற்றிக் கொண்டுள்ள ஆவிகளின் நிலை… அவரவர்கள் உடலில் வாழ்ந்த நாட்களில் ஈர்த்து வெளியிட்ட சுவாச நிலைப்படி ஆவி உலகிற்குச் சென்றிட்டாலும்… வாழ்ந்த நாட்களில் அவர்களின் குண நிலைப்படி உள்ள எண்ணத்தைக் கொண்டே ஆவி உலகினிலும் அவர்களின் எண்ணம் செயல்படுவதினால்… இந்நிலையை வைத்தே
1.அவர் முதல் பாதத்தில் உள்ளார் இரண்டாம் பாதத்தில் உள்ளார் என்று
2.இப்படிப் பல பாத நிலைகளை வரிசைப்படுத்தி… ஒவ்வொரு பாதமாக மேல் நிலைக்கு சென்று
3.அச் சிவனிடம் ஐக்கியப்படுவதாகச் சொல்கின்றனர்.

இப்பாதம் என்னும் நிலையென்ன…?

வெறியுணர்வுடன் செல்லும் ஆத்மாக்கள் அவ்வெறி உணர்வுடனேதான் ஆவி உலகில் இருந்தும் மற்ற உடல்களில் ஏறியோ மற்ற எண்ணங்களுடன் கலந்தோ இன்று நாம் பேய் பிசாசு என்று செப்பிடும் நிலையில் மிகவும் கீழ் நிலையான எண்ணத்துடனே தான் பெற்ற சக்தியைச் செயலாக்கியும் சுற்றிக் கொண்டுள்ளன.

சலிப்புடன் செல்லும் ஆத்மாக்கள்… அச்சலிப்பு நிலை கொண்டே பெரும் சோர்வுடனே ஆவி உலகிலும் சஞ்சரித்துக் கொண்டுள்ளன சில ஆத்மாக்கள்.

குடும்பப் பற்றுக் கொண்ட குடும்ப ஆசையுடன் செல்லும் ஆத்மாக்கள்… அக்குடும்பத்துடனே அக்குடும்பத்தை காக்கும் நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளன.

தெய்வ பக்தியுடன் தன் எண்ணம் அனைத்தையும் பக்தி கொண்ட நிலையிலேயே செல்லும் ஆத்மாக்கள்… கோவில்கள் உள்ள இடத்திற்குச் செல்வோரின் எண்ணத்திற்கெல்லாம் ஆவி நிலையில் இருந்து கொண்டு… அப்பூஜை நிலைக்கே செல்பவரின் எண்ணத்தையும் செயலாக்கித் தானும் பூஜித்தே தன் எண்ணத்தை கலக்கவிட்டு வாழ்கின்றன சில ஆத்மாக்கள்.

இந்நிலையைத்தான் எந்தெந்த எண்ணம் கொண்டு ஆவி பிரிந்து ஆத்மா செல்கின்றதோ அந்தந்த நிலையை முதல் பாதம் இரண்டாம் பாதம் என்று சூட்சுமமாக நம் முன்னோர் வெளியிட்டதை… இன்று பல நிலைப்படுத்திக் காண்கின்றோம்.

ஆனால் இவ்வெண்ணமுடன் எல்லாம் செல்லும் ஆத்மாக்கள் எவ்வளவு காலங்கள் ஆவி உலகில் சுற்றிக் கொண்டிருந்தாலும்… இப்பூமிக்கு எதாவது ஒரு பிறப்பிற்கு மீண்டும் மீண்டும் வரத்தான் செய்கின்றது.

“ஏழு ஜென்மம் எடுக்கின்றன…” என்று உணர்த்தினேன் முன் பாடங்களில். இவ் ஏழு ஜென்மத்தை மட்டிலும் எவ்வாண்டவன் செயல்படுத்தி அனுப்பினான் என்றுரைப்பீர்.

எவ்வாண்டவனும் செயல்படுத்திடவில்லை…!

இப்பூமியில் உயிர் அணுக்களாய் வந்து மோதும் அனைத்து உயிரணுக்களுமே மனிதப் பிறவியாய் வருவதில்லை.

அப்படியும் இம்மனிதப் பிறவியாய் முதல் பிறவிக்கு வருவதற்கு முன்னே பல நிலைகள் பெற்றுப் பல உயிராத்மாக்கள் மாறி மாறி… உயிரணுவாய் இப்பூமியில் தோன்றிய நாள் தொட்டு அவ்வுயிரணு ஈர்த்துச் சேமித்து கொண்ட சக்தியின் நிலை பெற்றுதான்… பல நிலைகள் மாறி மனிதக் கர்ப்பத்திற்கு இம்மனிதன் வருகின்றான்.

மனிதனாய் உருவம் பெற்று வரும் நிலையிலேயே இவ் ஏழு நிலைகளுக்குகந்த சக்திகளை ஈர்த்துதான் மனித நிலைக்கு வருகின்றான்.

தான் ஈர்த்த சக்தியினை என்றும் அழியாச் சக்தியாக்கி “ஒரே பிறவியிலேயே…” ஆண்டவன் நிலைக்குச் சென்ற அரும்பெரும் ஜோதிகள் பல உள்ளனர்.

தான் பெற்ற சக்தியே “இவ் ஏழு ஜென்மத்திலும் தவறவிட்டு” பல ஈன நிலைகளுக்குச் செல்லும் எண்ணத்தையும் பல ஆத்மாக்கள் ஏற்படுத்திக் கொள்கின்றன.

இன்று வாழும் வாழ்க்கை மட்டும் “எண்ணம் போல் வாழ்வு…” என்பதல்ல.

உயிரணுவாய் இவ்வுலகில் தோன்றிய நாள் தொட்டே இவ்வெண்ண சக்தியின் நிலை கொண்ட ஒவ்வொரு உயிரணுவின் சக்தி நிலையும் ஒவ்வொன்றுக்கும் கிட்டுகின்றது.

1.உயிரணுவாக நிலை பெற்ற நாள் கொண்டே… அதன் தொடராக
2.நாம் நம் நிலையைதனைச் செயல் கொண்ட வாழ்க்கையாக வாழ்வதுவே
3.இன்றைய நம் வாழ்க்கை நிலையும்…!

மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன…?

Arul Gnanigal

மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன…?

 

ஆரஞ்சுப் பழம் நன்றாக இருக்கின்றது. நன்றாக இருப்பது கொஞ்சம் கெட்டுப் போய்விட்டால் என்ன ஆகிறது…? அதிலே புழு வருகின்றது. எங்கிருந்து அந்தப் புழு வந்தது…?

கெட்டுப் போகப் போகும்போது காற்றில் இருக்கக்கூடிய கெட்ட அலைகளை இழுத்து அது புழுவாக மாறுகின்றது. நன்றாகக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதே போல் நன்றாக இருக்கின்ற ஆரஞ்சுப் பழம் ஒரு பக்கத்தில் அடிபட்டு அழுகினால் போதும். உடனடியாக புழு வந்துவிடும்.

அதே மாதிரி “வேதனை வேதனை…” என்று நீங்கள் சுவாசித்த உணர்வுகள் உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தவுடன் என்ன செய்கின்றது…?

இந்த உணர்வு மாறி இரத்தமாகப் போகும் போது அந்த வேதனைப்படக்கூடிய அணுவாக மாறும். அது தான் இந்திரலோகம். அணுவான பிற்பாடு என்ன செய்கின்றது…?

பழத்தில் அழுகிய உணர்வை எப்படி அந்த அணு சாப்பிட்டவுடனே புழுவாக எப்படி மாறுகிறதோ அதே போல் உங்கள் உடலில் வேதனையான அணுவாக மாறுகிறது. கெட்டதைச் சாப்பிடுகின்றது.

நல்ல பழமாக இருக்கும் பொழுது அதில் புழுக்கள் வருமா…? வராது.

இதே மாதிரி அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் உடலில் வந்து இரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக மாறுகின்றது. அப்பொழுது உங்கள் உடலில் என்ன செய்யும்…?
1.அந்த வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டும்
2.அந்த அழுகிய உணர்வை எடுத்துத் தான் உங்கள் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்குப் போகும் இந்த இரத்தம்.

மற்ற உறுப்புக்குள் போனவுடன் எங்கெங்கே நல்ல அணுக்கள் இருக்கின்றதோ அந்த உறுப்புகள் கெட்டு அதிலே போய் இந்த அணு தங்க ஆரம்பித்துவிடும்.

நமக்குள் கெட்டது எப்படி உருவாகிறது என்று இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இன்னும் சாமியையும் சாமியாரையும் நம்பிப் போய்க் கொண்டிருப்பதைத் தான் விரும்புகின்றோம். ஆனால் அந்த நல்ல சக்திகள் உங்களுக்குள் இருக்கின்றது… உங்களை நீங்கள் நம்பிப் பழகுங்கள் என்பதைத் தான் அடிக்கடி உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு).

ஆகவே எந்தப் பழமாக இருந்தாலும் கொஞ்சம் அடிபட்டு விட்டால் புழு வந்துவிடும்.

இதே மாதிரி நீங்கள் நல்ல நிலையில் இருக்கப்படும்போது
1.ஒருவன் கஷ்டப்பட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.
2.ஒருவன் சாபமிட்டான் என்றால் அந்த உணர்வைக் கேட்கின்றீர்கள்.

அப்பொழுது அந்த உமிழ் நீர் அங்கே இரத்தமாக மாறினால் அவன் எதையெல்லாம் கேட்டுப் போக வேண்டும் என்று சொன்னானோ… நீ நாசமாகப் போவாய்… உனக்குக் கை கால் முடமாகிப் போகும்… நீ நோயால் சாவாய்…! என்று சொன்னால்…
1.இதே உணர்வுகள் அது இரத்தத்துடன் கலந்து உடல் முழுவதும் படர்கிறது.
2.கலந்த பின் அங்கே போய் என்ன செய்கின்றது…?
3.பதிவானது கருவாகி முட்டை ஆகிவிடுகின்றது… ஒவ்வொரு உறுப்புகளிலும் கூடுகிறது.

உதாரணமாக தேனீ என்ன செய்கிறது…? தேன் எடுக்கச் செல்கிறது. பூக்களில் அமர்கிறது. சில நேரங்களில் அதிலே முட்டையும் இடுகின்றது.

அதே போல் தட்டான் பூச்சி இருக்கின்றது. அது பூவில் இருக்கும் அமுதைச் சாப்பிடுகின்றது. அந்தப் பூ மேலே முட்டையிடுகின்றது.. கொஞ்ச நாள் கழித்து இதனுடைய முட்டை வெடித்துப் பட்டாம் பூச்சியாக மாறுகின்றது. அந்தப் பூ எந்த நிறத்தில் இருக்கின்றதோ அதே மாதிரி வரும்.

அதே மாதிரி அடுத்தவர் உடலிலே எப்படி நோயானதோ அதே போல் ஒரு மனிதன் எப்படிச் சாபமிட்டானோ அதே உணர்வுகள் நம் இரத்தத்திலே கலந்து உடலில் சுற்ற ஆரம்பிக்கின்றது.

1.அது நம்முடைய எல்லா உறுப்புகளுக்கும் போய் வரும்
2.போகின்ற நேரத்தில் இந்த முட்டை ஒன்று ஒதுங்கினால் போதும்.
3.அந்த உறுப்பில் உள்ளதை எடுத்து வளர்ந்து அங்கே அணுவாக விளைகின்றது.
4.அந்த உறுப்பினுடைய நிலைகளையே சாப்பிடக்கூடிய நிலைகள் வந்து விடுகிறது
5.தன் இனத்தை அங்கே பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

நுரையீரலில் அந்த மாதிரித் தங்கி விட்டால் நுரையீரல் ரிப்பேர் கல்லீரலில் தங்கி விட்டால் கல்லீரலில் ரிப்பேர் மண்ணீரலில் தங்கி விட்டால் மண்ணீரலில் ரிப்பேர்.

இது எல்லாம் வந்த பிற்பாடு டாக்டர்கள் இந்த உறுப்பு கெட்டுவிட்டது… இன்ன நோய் இருக்கிறது…! என்று சொல்வார்கள்.

அகஸ்தியன் இதைப் போன்ற பல உண்மைகளை அன்றே கண்டுணர்ந்தான்…தான் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கினான்… துருவ நட்சத்திரமாகப் போனான்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நாமும் தீமைகளை நீக்க முடியும்.
2.அவனைப் போன்றே அழியா ஒளி உடல் பெறலாம்

அதைத் தான்… அந்த அகஸ்தியன் உணர்வை முழுமையாகக் கண்டுணர்ந்த நமது குருநாதர் “நம் டாக்டர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்” என்னிடம் (ஞானகுரு) என்ன சொன்னார்…?

டேய்…! சாபமிட்டவனை நீ பார்த்தால்…
1.அந்த உணர்வுகள் உன் ஆகாரத்தின் வழியாக உடலுக்குள் போகும்.
2.அந்தக் கருவாகும் அது அணுவாகும்… அது இரத்தத்தில் சுற்றும். தெல்லாம் உனக்குள் நோயாகும்…
3.எப்படி அந்தத் தட்டான் பூச்சி பூவிலே முட்டையிட்டவுடனே அதற்குத் தகுந்த மாதிரி பூச்சிகள் வளர்கின்றதோ
4.அதே மாதிரி இந்த உறுப்பை உட்கொள்ளும் அணுவாக மாறிவிடும்…! என்று சொல்லி
5.இதையெல்லாம் நேரடியாக எனக்குக் காண்பித்தார்… மக்களுக்கு இதை எடுத்துச் சொல்…! என்றார்.

நீங்கள் யாருமே தவறு செய்யவில்லை. அந்தச் சாபமிட்டதை உற்றுப் பார்க்க அந்த உணர்வை நுகர்ந்த பிற்பாடு இங்கே வந்துவிடுகிறது.

உதாரணமாக நாம் ஒரு விஷமான பொருளை எடுத்து வேலை செய்கின்றோம் என்றால் அடுத்து நம் கை கழுவாமல் சாப்பிடுவோமா…?

ஒரு நாற்றமான பொருள் நம் மீது பட்டால் அந்த நாற்றத்தோடு நாம் சாப்பிடுவோமா…? துணியிலும் பட்டது என்றால் துடைக்காமல் உட்கார்ந்தால் என்ன செய்யும்…? இந்த நாற்றம் முன்னாடி இருக்கும். நல்ல சாப்பாடு ருசி இருக்குமா…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

ஆத்மீக குருவிற்கு நாம் கொடுக்க வேண்டிய காணிக்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ESWARAPATTAYA GURU

ஆத்மீக குருவிற்கு நாம் கொடுக்க வேண்டிய காணிக்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

புள்ளிகளோ கோடோ மையமாக வைத்துத்தான் கோலம் போடுகின்றோம். அவற்றை அழகு பெறவும் செய்கின்றோம்.

அதே போல் நம் ஆத்மாவை நாம் உணர்ந்து… மையமாக அதை வைத்து நம் எண்ணச் சிதறல்களுக்கு அடிமையாக்கிடாமல் வாழ்ந்திட வேண்டும்.

இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகளெல்லாம் உள்ளனவோ அதைப் போலவே நம் உயிர் ஆத்மாவிற்கும் அனைத்து சக்திகளும் உள்ளன என்ற உண்மைகளை உணர்ந்திட வேண்டும்.

1.இப்பூமிக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு…
2.பூமிக்கு மேலே எந்த ஒரு பொருளைத் தூக்கிப் போட்டாலும் அதை எந்தக் கால அளவில் பூமி தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றதோ
3.அந்த நிலை போலவே நம் உயிராத்மாவும் ஈர்க்கும் காந்த சக்தி கொண்டதாகத்தான் உள்ளது.

இன்று நாம் நம் செயற்கையில் ஓடவிடும் அனைத்து இயந்திர நிலை கொண்ட சாதனங்களுக்கும்… அதற்குகந்த சக்தி நிலையை வைத்து மற்ற சக்தியை அதனுடன் மோதலிடும் பொழுதுதான்… நாம் அமைக்கும் இயந்திர நிலைகள் செயல்படுகின்றன. அச்சக்தியே செயல்படுகின்றது.

இந்த நிலை போலவே நம்முள் உள்ள இக்காந்த சக்தி கொண்ட அனைத்து சக்தி நிலையையும் ஈர்க்கும் இவ்வாத்மாவைப் பெற்ற நாமும் பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… என்று தானாக இயங்கும் இயந்திரமாக இவ்வுடலை எண்ணிடலாகாது.

இவ்வுலகம் எந்தெந்த அமிலங்களை எல்லாம் ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றதோ அவற்றின் நிலைப்படுத்திய சக்தியனைத்தும் இவ்வுடலுக்கும் உண்டென்பதை உணர்ந்து
1.நம் ஆத்மாவின் உன்னத சக்தியை விரயம் செய்திடாமல்
2.நம் அறிவாற்றலை மென்மேலும் வளர்த்து
3.நம் உடலில் அண்டவிடும் பிணிகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய நிலையில் வாழ்ந்திடவும்
5.கோபம் குரோதம் சலிப்பு இவற்றிலிருந்து விடுபட்டு சாந்தம் அன்பு ஆசை என்ற ஆத்மிக நெறியை அனைவரும் ஈர்த்து
6.நமக்கு வழி காட்டும் ஆண்டவன் நிலைபெற்ற சப்தரிஷிகளின் அருளாசியைப் பெற்றிடல் வேண்டும்.

இந்த வளர்ச்சியில் இவ்வுலக உண்மைகளை மட்டுமல்ல… இவ்வுலகைப் போலுள்ள எல்லா மண்டலங்களின் நிலையையும் அதனதன் ஈர்ப்பு சக்தியையும் அறிந்திடலாம்.

ஒவ்வொரு மண்டலங்களுக்கும் அதற்குகந்த தனித்தன்மை உண்டு ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லை.

இன்றைய நம் வாழ்க்கை வழி முறைகள் அனைத்துமே பிறர் எழுதிய… பிறர் சொல்லும் நிலையைக் கேட்டு… வாழ்ந்திடும் நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆத்மீக நெறிக்கே பிற ஏடுகளையும் பழங்காலக் கல்வெட்டுகளையும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். வாழ்க்கையின் கால நிலையை அதிலே விரயமாக்கி பிறர் நிலை அறிந்து வாழும் எண்ண வேட்கை கொண்டதாகவே உள்ளது.

1.சக்தியின் சக்தி ஆத்மா தான் நாமும் என்றுணர்ந்து
2.நம்முள்ளேயே நம் சக்தியை வளர்த்து
3.அனைத்து நிலையையும் நாமே அறிந்திடும் ஆற்றலையும்… உணரும் சக்தி நிலையையும் நாம் பெற வேண்டும்.

வழி அறிந்திட குரு வேண்டும்… அக்குருவின் சக்திக்கு மேல் சக்தி பெறும் சக்திவானாகச் செல்வதுதான் குருவாக நாம் ஏற்பவருக்கு நாம் அளிக்கும் காணிக்கை…!

ஒவ்வொருவரும் தனக்குகந்த ஈர்ப்பு சக்தியை உணர்ந்து ஒரு நிலை பெற்று… “உயிரோட்டம் கொண்ட சக்தி ஜெபம் பெற்றிடுங்கள்…!”