December 2023 உபதேசம்

“கர்ம தியாகம்”

 

மனிதனின் நெற்றியும்… நெற்றிப்பொட்டில் அறுகோணக் கருவறை குணங்களும்… சிருஷ்டியையே… சிருஷ்டியைப் பிணைத்திடும் செயலும் காட்டப்பட வேண்டும்.
1.இந்த நிலை உணர்ந்து கொண்டால்
2.இவைகள் குவிப்பு “அகஸ்திய போக இடும்ப சூட்சம இரகசியங்கள்…!”

“மகரிஷிகளின் சர்வோதய சக்தி” வலுக்கூட்டும் கூட்டு தியானத்தின் போது கார்மேக வான் எழுந்த ஓசையுடன் விண் நீர் பெய்திடும் சூழலில்… தியானத்தின் ஈர்ப்பலையாக மின் நுண் காந்த சக்தி எனும் பதிவு படுத்திட்ட நிலை நிறைவின் போது… உபதேச உரையாக உரைத்திட்டதன் செயலில் “கர்ம தியாகம்” என்ற சூட்சமம் உள்ளது.

சூரியனை எண்ணி ஈர்த்திடும்… “ஓர் ஜெப மந்திரம் – கர்ண முறை வழி” என்று இரகசியப்படுத்தப்பட்டு உலகினுக்கு உரைத்திடாத் தன்மையாக வந்தது தான்.
1.ஆசான் சிஷ்யனுக்கு வெளியில் நீ இதை உரைத்திட்டால் உரைப்பவன் நரகம் எய்துவான்
2.ஆனால் இந்த வேத மந்திரம் கேட்பவன் சொர்க்கம் பெறுவான்.

இருந்தாலும் “இதை வெளியில் உரைத்திடாதே…!” என மொழிந்தார் ஆசான் தன் சிஷ்யனிடம்.

ஆனால் அப்பொழுது மௌனமாக அமர்ந்திருந்த அந்த சீடன் காலைப் பொழுதில் உயர்ந்த ஓர் மதில் மீது நின்று அனைவரையும் அழைத்தான்
1.எல்லோரும் நன்நிலை பெற்றிட வாருங்கள் என்று
2.அவன் ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான்…”

ஆசான் கனன்று எழுந்து… அடா… என்ன காரியம் செய்தாய்…! இரகசியப்படுத்தப்பட்ட நிலையை உரைத்தாயே… ஏன்…? என்று கேட்கின்றார்.

சீடனோ… “கேட்டவர் அனைவரும் சொர்க்கம் புகுவர்” என உரைத்த ஆசானே…!
1.இதோ இத்தனை ஆத்மாக்களும் கடைத்தேறட்டும்…
2.நான் ஒருவன் மட்டும் கேட்பதில் “ஸ்ரீமன் நாராயணன் பதம் பெறுவேன்…” என்ற எண்ணத்தை
3.இதோ…! இங்கே குழுமி இருக்கும் சிரத்தை மிக்க ஆத்ம ஜீவன் ஒவ்வொருவரிலும் நான் அந்தப் பரந்தாமனையே காண்கின்றேன்.
4.இந்தக் “கர்ம தியாகம்” உள்ளன்புடன் உவந்த எனக்கு “என் நிலை செய்வதாகிலும் ஆகுக…! என்றே உரைத்திட்டான்.

அப்படி வெளிப்படுத்திய அந்தப் பெரியோர் இன்றும் ஒளி நிலை பெற்றிருக்கின்றனரப்பா.

அதே சமயத்தில்… மறைமுகப்படுத்துவது வளர்ச்சிக்கே…!

நுணுகி ஆய்வு செய்வதிடும் சிந்தனையின் வளர்ச்சி… பக்குவம் கொண்டிட்ட நிலையின் அடுத்த வளர்ச்சிக்கு “மகரிஷிகள் உவந்து வழிகாட்டுகின்றார்கள்…”

நீர் பாய்ச்சித் தானியங்கள் விளைச்சல் எனும் மகசூல் பெற்றிடும் ஓர் உழவன் “கேணியில் நீர் நிறைந்திருக்கின்றதே…!” என்று உட்கொண்டிடும் தேவைக்கு மேல் பாய்ச்சிட்டால்… வளர்ப்பின் பலன் செழிப்பைக் காட்டினாலும்… பெற்ற பயனைப் பெற்றுத் தந்திடும் சூட்சும நிலை காட்டிடாது.

1.பக்குவம் கண்டு உபதேசங்கள் அளிப்பதில் தடை ஒன்றுமில்லை.
2.மாமகரிஷிகள் ஆசிகள் என்றும் உனக்குத் துணை நிற்கும்.

ஞானத்தின் வளர்ச்சி எப்போது வரும்…?

 

நமது உயிரின் தன்மை இயக்கப்படும் போது பிறரின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் (நல்லதோ கெட்டதோ) சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்தாலும்
1.கண்ணின் புலனறிவு நமது ஆன்மாவாக இங்கே மாற்றுகின்றது.
2.இதைத் தான் நாம் நட்சத்திரங்கள் என்று சொல்வது.

எதன் தன்மை வருகின்றதோ ஒன்றுக்கொன்று கலவையாகும் பொழுது அந்தக் கலந்த உணர்வு நாம் சொல்வோம் “எனக்குப் பதட்டாமகிறது என்று…!”

தீமை செய்கின்றான் என்று அவன் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள்… கண் அவனைப் பதிவாக்கி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் இழுக்கப்படும் பொழுது… அதாவது துருவம் எந்தப் பகுதியில் இருக்கின்றதோ அதனின் நேர் வரிசையில் தான் இழுக்கும்… அதே போன்று
1.நமது கண்ணின் பார்வை எதன் பாதையில் இழுக்கின்றதோ நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது
2.அதை இழுக்கும் அந்தப் பகுதி வழியாக அதன்வழி பதிவான பின் அந்த உணர்வுகள் ஆன்மாவாக மாற்றுகின்றது.

எந்த மனிதனை நாம் உற்றுப் பார்க்கின்றோமோ அந்த உணர்வு அந்த உடலில் இருந்து வெளிவருவதை இழுத்து நம் ஆன்மாவாக நம் ஈர்ப்பு வட்டதிற்குக் கொண்டு வந்து சேர்ப்பிக்கின்றது.

அப்படிச் சேர்ப்பிக்கும் போது பல விதமான உணர்வும் உள் அடங்கி உணர்வுகள் எதிர்த்து வந்த பின் கலக்கங்கள் வருகின்றது.
1.நல்ல உணர்வுகளும் அவருடைய தீமையான உணர்வுகளும் இங்கே கலக்கப்படும் பொழுது
2.நுகர்ந்த பின் நமக்குள் பதட்டம் ஆகின்றது.

இது எல்லாம் இயற்கையில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகள் தான்.

அகஸ்தியன் இந்த உண்மைகளை உணர்ந்தவன் அவன் தன்னுடைய வளர்ச்சியின் பருவத்தில் வரப்படும் போது அவனுக்குத் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள்.

திருமணமான பின் தன்னுடைய மனைவிக்குத் தான் பெற்ற உணர்வுகள் அனைத்தையும் செவி வழி ஓதுகின்றான். உண்மையின் இயக்கம் இதுதான்… இதையெல்லாம் நீயும் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றான்.

அதைக் கேட்டறிந்த மனையாளும் அதை ஏற்றுக் கொண்டு அதே வழியில் வழி நடந்து வருகிறது.

கணவனால் கண்ட உண்மைகள் தனக்குள் வளர்ந்து அதையெல்லாம் தன் கணவன் பெற வேண்டும் என்று எண்ணுகிறது.

தான் சொன்ன உணர்வுகள் மனைவி கண்டுணர்ந்ததை அகஸ்தியன் தன் மனைவி மீண்டும் உயர வேண்டும் என்று இரு உணர்வுகளும் ஒன்றாகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
1.இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான்.
2.இவ்வாறு இருவரும் இணையப்படும் பொழுது உயர்ந்த உணர்வாக அங்கே வளருகின்றது.

காரணம் ஆண் பெண் என்ற செடிகள் இருந்தால்தான் அது விளைகின்றது… நல்ல அலனைக் கொடுக்கின்றது.

நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் தான் உண்டு. ரேவதி கார்த்திகை ரோகிணி என்று ஆண் பெண் என்ற நிலையில் வரப்படும் பொழுது… அது மின்னலாக உருவாகி சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிப் பல அணுக்களாக மாறினாலும்… எந்த நட்சத்திரத்தின் துகள்கள் எதனுடன் எது கலக்கின்றதோ… அதற்கொப்ப தான் வளர்ச்சியும் இயக்கங்களும்.

பெண்பாலின் நட்சத்திரம் ஆனால் அது மற்றொன்றைக் கவர்ந்து செடிகளையோ பாறைகளையோ வளர்க்கும் தன்மை வருகிறது. அதன் வழி வளர்ந்த பின் மற்றதுடன் கலந்து இந்த உணர்வு வளர்ச்சி பெறும் தன்மை வருகின்றது.

இதைப் போன்று தான் நமது உயிரும்…!

கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை ஆண் பாலாக இருந்தாலும் ரோகிணி நட்சத்திரம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதன் உணர்வின் துகள்கள் தூசிகள் மோதப்படும் பொழுது இந்த மோதலில் அதனைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும்… வியாழன் கோளிலிருந்து வரக்கூடிய சத்து “குரு” – விஷத்தன்மையான கதிரியக்கங்கள் வரும்பொழுது இதைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும் கார்த்திகை நட்சத்திரத்துடன் மோதும் பொழுது அதற்குத்தக்க மோதி “ஒன்றுக்கொன்று துடிப்பின் நிலைகள் வருகின்றது…”
1.துடிப்பின் நிலை வரும் பொழுது மற்ற கோளிலிருந்து வரும் தூசிகளை இதை ஈர்க்கும் சக்தி வருகின்றது
2.ஈர்க்கும் சக்தி வந்த பின் அது அடைபட்டுவிடுகிறது… அந்தத் துடிபின் நிலையே உயிர்…!

எந்தெந்தக் கோளின் தன்மை அடைபட்டிருக்கின்றதோ துடிப்பால் ஈர்க்கும் நிலை வரும் பொழுது… உராய்ந்து.. அதே உணர்வின் தன்மை தனக்குள் இணைந்து அது அணுவின் தன்மையாக உருவாக்கி… அதன் மலத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வுக்கொப்ப உடலை மாற்றி அமைத்து விடுகிறது.

இதைப் போல் இந்த உணர்வின் தன்மை உருவான இந்த நிலைகளை அன்று அகஸ்தியன் தெளிவாகத் தெரிந்து கொண்டான். இப்படித்தான் உயிர் உருவானது என்று…!

மற்ற துகளின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது எதன் ஈர்ப்புக்குள் வருகின்றதோ சூரியன் ஒளிக்கற்றைகளால் தாக்கப்படுகின்றது.

அந்த உணர்வு பொறியாக மாறி அதன் உணர்வுக்கொப்ப பாறைகள் விளைகின்றது என்பதை அகஸ்தியன் அறிந்த அந்த உண்மைகளை நாமும் அறிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞான அறிவில் எத்தனையோ பாட நிலைகளை புரட்டி பார்த்து அவர்கள் படித்துணர்கின்றார்கள். ஒரு இன்ஜினியரிங் என்றால் நான்கு வருடம் படிக்கிறார்கள் பௌதீகத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்… டாக்டர் என்ற நிலைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு ஐந்து வருடம் என்று படிக்கின்றார்கள்… தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

ஆனால் இப்பொழுது உபதேசிப்பது அனைத்தும்
1.நான் படித்து வரவில்லை… கற்று வரவில்லை…
2.குரு காட்டிய உணர்வின் தன்மையை மோதலில் உணர்வின் உணர்ச்சியாக நான் அறிய முடிகின்றது.

குரு எனக்குப் பதிவாக்கியது போன்று… அதை நான் அதை நுகர்ந்தது போன்று…
1.அந்த இயற்கையின் உணர்வுகள் உங்களுடன் மோதப்படும் பொழுது அதை அறிந்திடும் அறிவாக உங்களுக்குள் வரும்.
2.ஞானம் என்ற நிலையில் உங்களுக்குள் வளர்ச்சியாகும்

விஞ்ஞானத்தால் வரக்கூடிய எத்தகைய விஷத்தன்மையிலிருந்தும் மீட்டிட… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் அதைப் பிளந்து நமக்குள் அறிவின் தன்மைகொண்டு காக்கும் தன்மையாக உங்களை மாற்றி அமைக்கும்.

அத்தகைய நிலை நீங்கள் பெற வேண்டும் என்றும் வளர்ச்சியின் பாதையில் நீங்கள் வரவேண்டும் என்று தான் என்பதற்குத்தான் இதை உங்களுக்கு தெளிவாக ஊட்டிக் கொண்டு வருகின்றேன்.

மனிதனாக உயிர் உருவாக்கிய பின் பிறவி இல்லாத நிலையை நீங்கள் அடைய வேண்டும். அப்படிப்பட்ட நிலை அடைந்தவன் தான் அகஸ்தியன்.

சோமாஸ் ஸ்கந்தன்

 

சிருஷ்டியின் தொடராக மகரிஷிகளால் மறைமுகப்படுத்தப்பட்ட நிலைகள் தெளிவு பெறும். படைப்பாக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொள்ளும் செயலில்
1.சிதாகால மண்டலம் என்றே தன்னுள் கவன ஈர்ப்பு நரம்பு நெற்றி பொட்டினுள் எண்ணங்களும்…
2.எண்ணத்திற்கொப்ப வாசனைகளும் வாசனைக்கொப்ப ஜீவன் கொண்டிடும் அணுக்களின் செயலாக
3.சிருஷ்டிக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பிரம்மனே.

உலகோதய நிலை நாடிடும் மனிதன்… நொடிப்பொழுதினுள் அதற்கும் குறைவாக உயிரணுக்கள் எண்ணத்திற்கொப்ப ஈர்த்து… சிருஷ்டியின் செயல் உலகோதய நாட்டமாக மோகத்தின் குணங்கள் முதன்மையாகக் கொண்டிடும் பொழுது… சரீரத்தின் சகல அணுக்களும் சக்தி கொண்ட சூட்சுமம் “ஓம்” பொருள் என்னும்… ஓங்கார ஒலி கொண்டு ஒளி காட்டும் “தன் ஆத்ம வலுவை உணர்வதில்லை…”

வேல் என்ற அறிவு நற்குணங்கள் என்ற முருகன் கைக்கொள்ளும் செயலில்… அகங்காரம் ஆணவம் மோகவலைப்படுத்தும் “சிருஷ்டி என்றிட்ட குணங்களென்னும் பிரம்மன்…” தன் செயல் ஒழித்து நற்குணங்கள் வசம் சிறைப்படுகின்றான்.

பின் துர்க்குணங்கள் தன் செயல் விடுக்க
1.நற்குணங்கள் சிருஷ்டிப்பதே அதுவும் பிரம்ம தத்துவமாக
2.உலகோதயம் எனும் ஈர்ப்பின் நிலை விடுத்து கை கொண்ட அறிவாகக் காட்டுவதே
3.சிருஷ்டியையே முருகன் சிருஷ்டித்தான்… “பிரம்மாவைச் சிறை பிடித்தான்…!” என்று சொல்வதில் ஓர் சூட்சமப் பொருள் உண்டு.

நெற்றிப்பொட்டு எனும் கவனத்தின் ஈர்ப்பில் உள் நுழைந்திடும் ஈர்ப்பினும் எண்ண நினைவலையாம்… அணுக்கள் அறுகோணக் கருவறை என்ற அறிவின் சூட்சமம் செயல் கொண்டிட… அணுக்களின் எந்த வீரிய குண சக்தியோ அந்தச் சக்தியே செயலாக வேல் தோன்றுவதும் தோன்றாதிருத்தலும் துர்க்குண சம்ஹாரச் செயலுக்கு மனிதன் கொண்டிடும் வைராக்கியம் அந்தச் செயலின் வலுக் கூட்டும்.

1.சப்த கன்னிகள் சாப விமோசனம் என்பதுவும் சூட்சமப் பொருள் தான்
2.ஒளி கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் சப்தத்தின் நாத வாகினி “உலகத்தின் ஈர்ப்பில் செயல்படுவது சாபம்…”

அத்தகைய சிருஷ்டி அன்றி “சக்திவேல் எனும் அறிவு செயல் கொண்டிட…” உலகோதயம் மாற்றிட்ட சப்த நாதங்களைத் தன்னுள் மெய் ஒலி ஒளி சக்தியாகச் சப்தரிஷிகளின் படைப்பே “நேர்முகமாகக் கொள்தல் என்பது ஈர்ப்பின் நிலை விடுத்த சாப விமோசனம்…”

1.எண்ணத்தின் உயர்வே அறுகோணக் கருவறை உயர்த்திட்ட பீடம்…!
2.அதனில் உயிராத்ம சக்தியை அளந்திடச் செய்திட “நீல வண்ணம்” காட்டும் குளிர்விப்பு சக்தியாகத் தோற்றம் காட்டும்.

பர வெளியில் உருக்கொள்ளும் உயிரணுக்கள் அதனின் சுழற்சி அறுகோணத் தன்மையதாய் அமில குண ஈர்ப்பின் எண்ணம் கொண்ட ஜீவன் பெறுகின்றது. சிருஷ்டியின் இரகசியங்களை இப்படி பிண்டத்தில் கண்டனர் மகரிஷிகள்.

சரீரத்தில் கண்ணுற்ற செயல் எண்ண ஜீவித செயல்பாடு “சிரசின் நெற்றிப் பொட்டில் அறுகோணக் கருவறையாக”
1.அதனுள் எண்ண குண வாசனை சுவாச அலை எனும் ஈர்ப்பாகச் செயல் கொண்டிட
2.சிவசக்தி சுழுமுனை நாடிகள் மூலாதாரம் தொடங்கி பிடரிக்கண் பார்வையுடன் இணைந்து கொண்டு
3.அறுகோணக் கருவறையின் உள் நிகழ்வாகச் செயல் கொண்டு எண்ணங்களின் ஜிவித சிருஷ்டியே நடைபெறுகின்றது.

பர வெளியின் உயிரணுக்கள் தன்மையில் உள்நிகழ்வாகச் செயல் கொண்டிடும் சூட்சுமங்களை… சித்தர்கள் மனித சரீரத்தில் செயல் கொண்டிடும் சூட்சுமத்தையே ஒப்பு நோக்கி… உதயம் கொண்டிடும் அணுக்களின் தன்மையை உணர்த்தினர்.

அணுக்களின் செயல்பாட்டைச் சரீர நிகழ்வாகக் கண்ட மாமகான்கள்
1.சிவன் கையில் முத்தலை சூலாயுதம் சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் என்றே
2.”சூல்” என்று அணுக்களின் ஜீவித செயலின் கரு என்றே மறைபொருள் காட்டினர்.

ஏழு பிறவிகள் என்று கூறியவற்றுள் அணுக்களின் உதயம் காட்டிடும் செயலில்… “அறுகோணங்கள்” உலகின் ஜீவித அணுக்கள் கொண்டிடும் “பிறப்பின் இரகசியங்கள்” எனவும்… அந்த உயிரணு தனக்கு ஒத்த அமில குணத்தன்மைகள் ஈர்த்துக் கொண்டிட்டு அறுகோண சூட்சுமத்துள் எந்நிலை வலுக்கொள்கின்றதோ அதுவே அந்த உயிரணுவின் ஜீவித நிலை.
1.அறுகோணத்தின் மையப் பகுதியே
2.தெய்வப்பிறவி எனும் ஏழாம் நிலை.

அறுகோணச் சக்கரம் என்று உரைத்த பின்பு… வாசனையின் குணங்கள் மனிதச் சரீரத்தினுள் கவன ஈர்ப்பெனும் நெற்றிப்பொட்டில்… அறுகோணங்களின் உட்குவிந்த பகுதிகள் நற்குணங்கள் எனவும்… பிறப்பின் சூட்சுமத்தில் தாய்மைப் பேறு குழந்தைக்கு ஊட்டுவது அன்பு பரிவு பாசம் என்ற முத்தொடர்களும்… உயிரணு கருக் கொண்ட நிலைத் தொட்டு ஜீவித சரீரம் பெற்றிடும் எண்ணத்தின் ஈர்ப்பில் தாய்மையால் ஊட்டப்படுகின்றது.

ஞானம் வீரம் சாந்தம் என்றிட்ட குணங்களுக்கே… உள்முகமாக உயிராத்ம சக்தி வலுக் கொண்டிடும் அந்தச் செயலுக்கே
1.அந்த மூன்றின் குணங்களுக்கு வீரிய சக்திகளை
2.ஈர்ப்பினால் ஊட்டப்படல் வேண்டும் “அதுவும் தியானம் கொண்டே…”

சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் “இடப்பக்கம் வளைந்திட்ட நிலை கரு கொண்டிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு… பின்பு அந்த உயிரணுவைப் பேணுகின்ற தன்மை மையப் பகுதியின் கூர்வேல்… முத்தலை சூலாயுதத்தின் வலப்புற வளைவே அந்த ஜீவனை ஈன்றிடும் தாய்மைப் பெறும் என…” – சிருஷ்டியின் இரகசியங்கள் காத்தலாகக் கரங்களில் கொண்ட நிலையும் “சித்தர்களால் காட்டப்பட்டதே…”

ஈஸ்வரரின் கையில் முத்தல சூலாயுதம் உயிரணுக்கள் உதயம் காட்டித் தாய்மைப் பேற்றின் முழுமைக்கு அளித்தலால்… ஈஸ்வரர் கொண்ட முத்தலை சூலாயுதம்
1.சரீர அமைப்பில் சிவசக்தி நாடிகள் சுழுமுனையில் ஒன்றி உயர் ஞானம் வாய்க்கப் பெறின்
2.அங்கு “சோமாஸ் ஸ்கந்தன்” (சிவம்+சக்தி+முருகன்) உதயமாகின்றான்.

சூரிய சந்திர ஒளி பெற்றவன் என்ற பெயர் நாமச் சூட்சுமம் மூலாதாரச் சக்தியாக எழுகின்ற ஊர்த்துவ சக்தி… அருகோணக் கருவறையுள் முத்தலை சூலாயுதம் செயல் கொண்ட நிலை… ஞானவேல் என்ற சக்தியாகக் காட்டுவது…
1.உயர் ஞான நற்குண எண்ணங்கள் நெற்றிப்போட்டில் மோதிடும் செயலாக
2.தெய்வப் பிறவி எனும் மைய நிலையை அறிவால் பொருத்தி… சுடர்தலால் “மனிதனே சிஷ்டிக்கும் பிரம்மன் ஆகின்றான்…”

எலக்ட்ரானிக் கருவிகளை அதிகமாக உற்று நோக்குபவர்களுக்குத் “தலைவலியும் தலை சுற்றலும் வருவதன் காரணம்…”

 

விஞ்ஞான அறிவால் இந்த உலகமே நச்சுத்தன்மை அடைந்து கொண்டுள்ளது. ரேடியோ டிவி ஒலி/ஒளிக் கற்றைகளாக அது பரவிக் கொண்டுள்ளது. மனிதன் உற்றுப் பார்த்துக் கேட்டறியும் போது தனக்குள் பதிவாகி விடுகிறது.

எப்படி…?

1.கெமிக்கல் கலந்த உணர்வுகளை இயந்திரத்துணை கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்று ஒலி/ஒளிக்கற்றைகளாக மாற்றுகின்றனர்..
அதன் மூலம் உருவங்களைப் பார்த்து அந்த உணர்வின் ஒலிக்கற்றைகளை நாம் செவி வழி கேட்டு
3.உணர்வின் தன்மை நுகரும் பொழுது நம் உடலுக்குள்ளும் இது கலந்து விடுகின்றது.

ஒளிக்கற்றைகள் பரவப்படும் பொழுது கண்ணுற்று இந்த உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாகத் தெரிகின்றோம். “எந்தக் கெமிக்கலில் கலந்து” இதைச் சேர்த்தானோ நிச்சயம் இது இயக்கும்.

எதிலே கலக்கின்றதோ விஷத்தின் உணர்ச்சிகளாக அது இயக்கப்படும் பொழுது இரத்த நாளங்களிலே சிறுகச் சிறுக… சிறுகச் சிறுகச் சேருகின்றது.

நம் உடலில் உள்ள அணு செல்களுக்கும் இந்த உணர்வின் விஷத்தன்மைகள் கலந்து விடுகின்றது
1.அதிகமாக டிவி கம்ப்யூட்டரைப் பார்த்தவர்களுக்கு தலைவலி நிச்சயம் வரும்
2.அதே சமயத்தில் கை கால் குடைச்சலும் அதிகமாக இருக்கும்.
3.சில நேரங்களில் அதைப் பார்த்த பின் இந்த உணர்வின் அழுத்தங்கள் ஆகி மோதலாகும்போது
4.நடந்து போகும் போது சில பேருக்கு தலை சுற்றும்… கீழே தள்ளுகின்ற மாதிரிக் கொண்டு போகும்.

ஆனால் டாக்டரிடம் சென்றால் இரத்தக் கொதிப்பு… அது… இது… என்று எதையெதையோ பரிசீலனை செய்து காசை பறிக்கும் நிலைகள் தான் வரும்.

ஏனென்றால் டி.வி. கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளை “நெருங்கி உற்றுப் பார்க்கப்படும் போது” இத்தகைய நிலை வருகிறது.

பார்க்கலாம்… ஆனாலும் பார்த்த பின் மாற்றி அமைக்க துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து அந்த வீரியத்தைத் தணித்துப் பழகுதல் வேண்டும்.

சாதாரணமாக… அசுத்தமான இடங்களை நம் கையை வைத்துத் தான் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். ஆனால் அதற்குப் பின் அந்தக் கையில் இருக்கக்கூடிய அழுக்கைத் துடைக்கின்றோம் அல்லவா.

அதைப் போன்று நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை அதை எல்லாம் மாற்றி அமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

இயற்கையின் இயக்க நிலைகளை ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்தான். நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றான். விஷத்தை ஒடுக்கிடும் சக்தியாக அவன் வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலன் கவர்கின்றது.

அவன் எதை எதை எல்லாம் கண்டுணர்ந்து அந்த அறிவின் உணர்ச்சியாக மாற்றி அமைத்தானோ அதன் உணர்வுகள் இங்கே பரவிக் கொண்டுள்ளது. அதை எல்லாம்
1.நமது குரு துணை கொண்டு அவர் ஊட்டிய அந்த உணர்வின் தன்மையை உற்று நோக்கி
.அதன் உணர்வைக் கவர வேண்டும் என்ற ஏக்கத்தால் அதைப் பெற்றுக் கொண்டதனால்
3.அகஸ்தியன் கற்றுணர்ந்த உணர்வின் அறிவும் எனக்குள்ளும் (ஞானகுரு) வருகின்றது.
4.அதை நீங்களும் பெற வேண்டும்… உங்களுக்குள்ளும் அது வளர வேண்டும்.
5.அவன் நஞ்சை ஒளியாக மாற்றிய ஆற்றலை நீங்களும் பெற வேண்டும்.
6.விஞ்ஞானத்தால் வரும் நஞ்சுகளை எல்லாம் வென்று அதை ஒளியின் சுடராக மாற்ற வேண்டும்.

“குரு அருள்” என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்

 

வேதனை என்ற உணர்வு உட்புகுந்து உடலுக்குள் சென்று தீமைகள் செய்யாது தடுத்தல் வேண்டும். அவ்வாறு தடுக்க வேண்டும் என்பதற்காகத் துருவ நட்சத்திரம் ஒளியின் கற்றையாக இருக்கும் அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவாக்கி உள்ளேன்.

1.அதை எடுக்கும் திறன் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் உபதேசித்து
2.ஒவ்வொரு உணர்வின் மாற்றங்களை நீங்கள் அறிந்திடவும்
3.அறிந்த உணர்வு (ஞானம்) உங்களுக்குள் பதிவாகவும்
4.அதனின் நினைவு கொண்டு தீமைகளை அகற்றிடும் அந்த வலிமை பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

எப்பொழுது தீமை என்ற உணர்வுகள் வருகின்றதோ அப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பதிவாக்கிக் கொண்டால் இந்த உணர்வை எண்ணும் போது உயிர் எலக்ட்ரிக்… எண்ணங்கள் எலக்ட்ரானிக்.

கோபமான உணர்வைப் பதிவாகிவிட்டால் அதை நினைக்கும் பொழுது அது எலக்ட்ரானிக்காக மாறி… கம்ப்யூட்டரில் இயக்குவது போன்று அவன் உணர்ச்சி கொண்டு நமது உணர்வின் குணங்கள் அப்படி இயங்கி விடுகின்றது.

ஆகவே தான் தீமை என்ற உணர்வு நமக்குள் உட்புகாதபடி தடுக்க உயிரான ஈசனை எண்ணி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரவையின் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

பல முறை துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்துள்ளேன் அந்த உணர்வினை மீண்டும் எண்ணி… காற்றுக்குள் மறைந்திருக்கும் உணர்வின் தன்மை நீங்கள் கவர்ந்து இங்கே இடைமறித்தால் இந்த வேதனை உள்ளே புகாதபடி தடுத்து நிறுத்தப்படும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு தனக்குள் பாதுகாப்புக் கொடுத்து…
2.தீமை செய்யும் அணுக்கள் அந்த அருள் ஒளி கண்ட பின் அது அடைபட்டு விடுகிறது.

ஒவ்வொரு அணுவின் தன்மையும் நம் இரத்தத்தில் சுழன்று வரும் போது தீமை செய்யும் உணர்ச்சிகளை உந்தினால் தான் அது தன் உணர்வை அதிகமாகக் கவரும்.

ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரரொளி பெற வேண்டும் என்று உள் செலுத்தினால்
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை எல்லாம் இது மறைத்து விடுகின்றது.

தீமையான உணர்வு உள்புகாதபடி தடுத்து நின்ற பின் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் யார் துன்பப்படுகின்றாரோ வேதனைப்படுகின்றாரோ அவர்கள் உடலில் அது படர்ந்து அவருடைய துன்பங்கள் அகல வேண்டும் என்று நம் உணர்வின் சொல்லால் அவர் செவிகளில் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது அவர் நம்மை உற்றுப் பார்த்தால் நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வு உயிரிலே பட்டு அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக மாறும்.

இதைச் செய்… நீ துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறுவாய்…! என்றால் அந்த நினைவைக் கூட்டினால் அவர்களும் காக்கப்படுவார்கள்.

நடைமுறை வாழ்க்கையில் வேதனைப்படுகிறான் என்று நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவானால்… அந்த உணர்ச்சிகள் உந்தி… கண் வழி ஆன்மாவாக மாற்றி… உயிருடன் இணைக்கச் செய்து… இரத்தத்தில் கலக்கச் செய்து… அதை உணவாக எடுத்து வேதனைப்ப்டும் அணுக்களாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களுக்கு இடமில்லாது போய்விடுகிறது.

அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்ற ஆசையில் இதைச் சொல்கிறேன்.
1.குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
2.அவரால் தான் நாம் இதை அறிய முடிகின்றது.
3.அவரின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்

அதை நீங்கள் ஏங்கிப் பெறும் போது நீங்கள் நுகர்ந்ததை உங்கள் உயிர் அதைக் கருவாக்கி உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கிவிடும்.
1.அதன் துணை கொண்டு உங்களைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக
2.குரு அருள் உங்களில் வளர வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது..

அறுகோணக் கருவறை எழுதி… அதன் மீது முத்தலை சூலாயுதம் எழுது

 

அறுகோணக் கருவறை என்பதும் கர்ப்பவாசம் எனப்படுவதும் ஜீவன் கொள்கின்ற அணுக்களின் செயலாக நடைபெற்றிடும் ஓர் சிருஷ்டி..
1.சகல ஜீவன்களும் இதனுள் அடக்கம்.
2.சிருஷ்டிக்கும் காரண மூலம் அதன் செயலைக் காட்டுவதே முத்தலை சூலாயுதம்.

அறுகோணக் கருவறை சிருஷ்டிக்கும் நிலையில்… எண்ணத்திற்குகந்த பிறப்பிற்கு வந்திடும் உயிரணுக்கள்… ஈர்த்து நிலையாக நின்று உயர்த்திச் செயல்படுகின்ற சுழற்சி.

பஞ்சபூதங்களின் சேர்க்கையாய் உருக் கோலம் கொள்கின்ற அந்த உயிரணுக்கள் உலகின் ஜீவித வாழ்க்கை கொண்டு செயல்படும் ஜீவன்கள் தாவரங்கள் நீர் வாழ்பவை ஊர்வன உலவுகின்ற மிருகங்கள் பறக்கும் பறவைகள் மனிதன் என்பவையே அறுகோண சக்கரத்துள் உயிரணுக்களின் சிருஷ்டியாக ஜீவன் கொள்பவை.

1.முத்தலை சூலத்தின் வளைந்த பகுதி… சரீரத்தினுள் நுழைந்திடும் அணுக்கள்
2.சூலத்தின் கூர்மையான மையப்பகுதி… உயிரணுக்கள் அறிவின் தொடராக கர்ப்பவாசம் காக்கப்படும்
3.மற்றொரு வளைந்த பகுதி… ஜீவன் கொண்டு பிறப்பின் செயலாக வெளி வருவது.

காளிதாசன் உணர்த்திய மெய்ஞானப் பாடம்

 

“சாதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டிட்ட வேதாந்த நாதன்” வார்த்தைகள் ஆடி மௌனமாக அமர்ந்திட்ட விசாலவதி தேவியைப் பேச வைத்திட்ட செயல்… சாகுந்தலம் என்ற விசுவாமித்திர காலபங்கம் வெளிப்பட்டு உண்மை நிலையை உலகத்தவர் உணர்ந்திட வாயுரைத்த பிள்ளையாகக் “காளியின் தாசன்” ஆயினர்.
1.”ஓர் தாயின் இரு குழந்தைகள்” என்ற சூட்சுமமே
2.விசாலவதி தேவியைப் பேசிட வைத்தது.

எங்கும் வியாபகமாய் இந்த பூமியின் சுவாசத்தில் செயல் கொண்டிடும் காற்று… அனைத்து உயர் ஜீவன்களும் சுவாசம் கொண்டே அந்தக் காற்றினை உட்கொள்கின்றன.

மெய்ஞான விழிப்பாக்கும் செயல் கொண்டிடும் ஆத்ம ஞானம் பெற்றிட விளையும் செயல் தன்மை கொள்பவர் யாராயினும்…
1.”சுவாச கதியினால்”
2.இந்த பூமியில் மாத்திரமன்று…! எங்கும் எதிலுமாக வியாபித்தே படர்ந்துள்ள சூட்சும சக்திதனைப் பெற்றே உயர்வு நிலை காணலாம்.

தன் நிலை வளர்ப்பாக்கிடும் செயலின் பக்குவத்திற்கு வரும் போது… ஞானி எண்ணிட்ட அனைத்து செயல்படு காரியங்கள்… தங்கு தடையற்ற வழிப் பாதையாக ஆக்கம் காட்டும்.

வேதாந்த நாதன் செயல் கொண்ட காரியங்கள் பேரருள் சூட்சும இலயமாக விளங்கிதை… அதனை எண்ணி உணர்ந்து செயல்படுகின்ற நிலை பெற்றோர்களுக்கெல்லாம் இன்றளவும் அவை அமுதமான செயலாகத்தான் உள்ளது.

வாக் தேவியின் அம்சம் கொண்டவள் விசாலவதி தேவி வாய் திறந்திட… மௌனம் பூண்டு தனக்குத்தான் ஒரு செயலை வகுத்துக் கொண்டிட்டவள்.

வேதாந்த நாதன் முன் திரை மறைவில் அமர்ந்திட்ட அவளின் அருகே உடன் இருந்த தோழிப் பெண்… கல்வியின் சகல பந்தனங்கள் கொண்ட வினாக்கள் தொகுத்திட… பதிலுரைத்து வந்தான் வேதாந்த நாதன்.

பின் அவன் வினா எழுப்பினான்…
1.அம்மணி…! ஒரு தாயின் இரு குழந்தைகள் தமக்கு விருப்பமுடைய பொருளை வேண்டுகின்றனர்.
2.அவற்றில் ஒன்று… தனியே இருந்து தான் பெற்றுக் கொண்ட “அகப்பொருளைக் காக்கின்றது…”
2.மற்றொரு குழந்தை தான் பெற்றுக் கொண்ட பொருளும்… தன் உணர்வும் கொண்டு… “மற்றொன்றுடன் போராடும் செயல் வன்மம் கொள்கின்றது…”
3.தாயின் நிலை சமநோக்கு எனினும் உட்பொருள் தெளிந்திடும் ஞானம் “இடை புகுவோர் பெறுவது என்ன…?”

திரை மறைவில் “ஆ…!” என்ற குரல் எழுந்தது.

வேதாந்த நாதன்… தோழிப் பெண்ணே…! தலைவிக்காக நீ வினாக்கள் தொகுத்தாய்… ஆனால் உன் குரலின் தோனி திரை மறைவின் புதிர் விடுத்து விட்டது. உன் தலைவியே உனக்காக விடை உரைத்திடல் வேண்டும் என்று கூறினான்.

நிலைமையின் நிகழ்வு… விசாலவதி தேவியைத் தன் மௌனம் விடுக்கச் செய்து… பின் வாக் தேவியாக அவள் விடை பகர்ந்தாள்.

ஒரு பொருள் நிறைந்த அங்காடி… அந்தப் பொருளின் உரிமம் கொண்ட பொறுப்பின் மிக்கவர் இருவர். இருவரில் ஒருவர் மற்றவர் அறிந்திடாமல் பொருளைக் கவர்ந்திடும் வழியாக… அந்த அங்காடியில் விற்பனைப் பொறுப்புள்ள சிறுவனிடம் பொருளைக் கவர்ந்திடும் சூட்சும வழிகள் உரைத்திட்டாலும்… அன்றி அந்தச் சிறுவனே அவ்வழி உரைத்தான் எனினும்… “செயல் ஒன்றே…”

1.அங்காடியே – இந்தச் சரீரம்
2.பொறுப்பின் மிக்கவர் – ஆத்ம நிலை…
3.உணர்வுகளின் வழி – உயிர் சக்தி
4.பொருள் விற்பனை காவலர் – செயல் கொண்டிடும் குணங்கள்.

ஆத்ம நிலையின் நோக்கு நீர் கேட்ட வினாவிற்கும் விடை இதில் அடங்குவதே. ஞானத்தின் ஒப்புமை நீரே காட்டும். பின் விடையை உரைக்கின்றேன்…! என விசாலவதி தேவி வாய் மலர்ந்து அருளிட்டாள்.

வேதாந்த நாதன்…
1.நற்குண காரியங்கள் உயிர் சக்தியின் செயலாக அதுவே ஆத்மன் என்ற வலு
2.குணங்களின் செயல்பாட்டில் மாற்று நிலைத் தன்மைகள் உயிர் கூட்டிக் கொண்டிடும் உயர் நிலையைப் பேதப்படுத்தி
3.அச்செயலினால் “ஆத்மாவும்… உயிரும்” சூட்சுமமாக இரு குழந்தைகளாகக் காட்டப்பட்டது.
4.இங்கு “தாய் என்று கூறுவது – பேரருள் சூட்சமம்” என்றான்.

உடனே விசாலவதி தேவி… மனிதனாகப் பிறப்பிற்கு வந்தாலும் குணங்களின் செயல்பாட்டை எப்பொழுது மனிதன் உணர்கின்றானோ… அப்பொழுதுதான் மனிதன் என்ற பெயர் பெறுகின்றான்.

ஞானம் இடை புகுந்தவர் யார்…? குணங்களின் பேதத்தை உணர்ந்து கொண்டு உயர் ஞான சித்திக்குத் தான் பெற்றார் உயர்வின் உருவாக.

அந்தக் குழந்தைகளின் பேதங்கள் நீங்கி… ஒன்றுடன் ஒன்று உறவாடி மகிழும் பேரின்ப இலயத்தில் உணர்வதும் ஒன்று.
1.ஜீவன் கொள்ளும் உயிரணு – உயிராத்ம வலு எனும் சுழற்சியாக
2.பிறப்பெனும் மாய இருளை விலக்கிடும் சக்திக்கே அன்று பெற்ற உயர்வு.

இவ்வாறு விடை பகர்ந்ததும் இருவரும் ஒரே நேரத்தில் திரைகளை விலக்கினர். “மங்கள நாண்” பூட்டிடும் விழா எழுந்தது.

தன்னை ஆட்கொண்ட சூட்சமத் தொடர்பை வேதாந்த நாதனது உயிர் சக்தி விழிப்பாகப் பெற்றுக் கொண்டிட வேதாள மகரிஷி தவமியற்றும் மாகாளிப்பட்டினத்திற்கே தன் துணைவியுடன் வாழ வந்தான்.

அங்கே குப்த மன்னனும் வேதாந்த நாதனும் சீரிய நட்பு வளர்ப்பாகி… நவநீதியர்கள் குழுவில் தலைமை பீடம் ஏற்று பற்பல சூட்சுமங்களுக்கே “காளிதாசனாக” வழி காட்டினான்.

நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால் தீமை செய்வோரைப் பற்றிய எண்ணமே நமக்கு வரக்கூடாது

 

1.கிராமப்புறங்களில் இன்று படிக்காத மக்களாக இருந்தாலும்… கவனித்து ஒரு நிலை பெற்று…
2.சிலருடைய உண்மைகளைப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளும் தன்மைகள் கொண்டுள்ளார்கள்.

கல்வி கற்றோரைக் காட்டிலும் கிராமத்தில் உள்ளவர் ஒரு சொல்லை கேட்ட பின் இவன் திருடன் இவன் திருடன் அல்லாதவன் என்ற நிலைகளைப். புரிந்து கொள்வார்கள்.

ஆனால் திருடன் என்ற நிலை வரப்படும் பொழுது அவனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உணர்வு வந்து விடுகிறது.
1.அந்தத் திருடும் அறிவை நீக்க வேண்டும்…
2.அவனை நல்லவனாக்க வேண்டும் என்று வந்தால் ஒழித்துக்கட்டும் உணர்வுகள் இங்கே வராது.

ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வரும் பொழுது அவன் அழின்றான். ஆனாலும் அவன் அழிந்த பின் அவன் வேகத்தின் உணர்வுகள் பரவுகின்றது. அதனால் தான் ஒரு அசுரன் இறந்தால் அதிலிருந்து பல அசுரர்கள் வருகிறார்கள் என்று காவியங்கள் காட்டுகின்றது.

ஒரு அசுரச் செயல் வளர்ந்து…
1.அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விளைய வைத்து விட்டால்
2.அந்த அசுர உணர்வின் அணுக்கள் அதை நுகர்வோரையெல்லாம் அதே செயல்களைச் செயல்படுத்த ஆரம்பித்துவிடும்.

மகாபாரதத்தில் இராமாயணத்திலும் இது காட்டப்பட்டுள்ளது.

அந்த அசுரன் இறந்த பின் அவனுடைய உணர்வின் அலைகள் எவ்வாறு பரவுகின்றது…? கேட்டுணர்ந்தோருக்கும் இதே செயல்களை எப்படிச் செயல்படுத்துகின்றது…? இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…? என்று காவியப் படைப்பாக நமது ஞானிகள் கொடுத்துள்ளார்கள்

அதனை நாம் சற்றும் சிந்திக்கவில்லை.

இன்று நான் என்ன செய்தாலும் நாளை என்னவோ…! என்ற நிலையில் நாளைக்காகச் சேமிக்க வேண்டும் என்றால் மற்றவர்களை இம்சித்துத் தன்னைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

நாளை என்னவோ…? சரி நடப்பது நடக்கட்டும்…! என்று இருப்போரும் உண்டு. ஆனால் “நாளைக்குஸ் சேமிக்க வேண்டுமே” என்ற ஏக்கத்தில் உள்ளவர்கள் தன்னிடமிருந்து பறித்துச் சென்றுவிடுவார்களே… என்ற துன்பத்தைக் கொண்டு… அந்த பணத்தைச் சேமிக்கும் நிலை வருகிறது.

அப்படிச் சேமிக்கும் தன்மை வரும் பொழுது… அதை மற்றவன் பறிக்கும் தன்மை வருகிறது. இதைப் போன்ற உணர்வுகள் மனிதனுக்குள் மாறி மாறி… மனிதனுடைய சிந்தனையை அழித்திடும் நிலைகள் பரவி வருகின்றது.

ஆகவே இத்தகைய நேரத்தில் குருநாதருடைய உணர்வுகளைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.
1.அவருடைய உணர்வுகள் தான் செயல்படுத்துகிறது… நான் பேசவில்லை…!
2.குரு அருளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
3.அவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்… அதையே தான் உங்களுக்குள்ளும் உணர்த்துகிறோம்

இன்று நல்லதை எண்ணி ஏங்கும் நிலைகள் அனைவர் உள்ளங்களிலும் தீமையான உணர்வுகள் புகுந்து அவருடைய நல்லதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டுள்ளது… வேதனையில் துடிக்கின்றனர்.

1.நல்லதுக்காக ஏங்கும் அனைவரும் பிறர் செய்யும் தீமைகளை நுகர்ந்து நல்லதை வளர்க்க முடியாதபடி தடுக்கப்பட்டு
2.அதனால் கடும் நோயும் வேதனையும் வெறுப்பும் கொண்டு
3.என்ன வாழ்க்கை…? என்று கடைசி நிமிடத்தில் ஒதுக்கும் தன்மையை வருகின்றது.

அசுர உணர்வு கொண்டவர்களோ… மற்றவரைத் தாக்கித் தான் வாழ வேண்டும் என்று பிறரைத் துன்புறுத்தும் நோக்கிலேயே செயல்படுகின்றனர். மிருகங்கள் தன் பசிக்கு மற்றவைகளைக் கொன்று பூசிப்பது போன்று மனிதன் இரக்கம் இல்லாத மிருகமாக இன்று மாறிக் கொண்டுள்ளான்.

பிறரைத் தாக்கி அவரைக் கொன்று விட்டு அவன் செல்வத்தை அபகரித்து அதைக் கண்டு ரசித்து வாழுகின்றார்கள்… அவர்கள் மகிழ்ந்தே வாழ்கின்றார்கள்… அப்படி இருந்தால் மகிழ முடியும் என்ற நிலை தான் உருவாகி உள்ளது.

இது போன்ற நிலைகள் தான் இன்று அதிகரித்துள்ளது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதிலிருந்து காத்துக் கொள்ளும் சக்தியாகத்தான் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். பதிவான நிலைகளை நீங்கள் எண்ணி ஏங்கி அந்தச் சக்திகளைப் பெற முடியும்.
1.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய கொடிய துன்பங்களையும் அகற்ற முடியும்.

அதற்காகத்தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக உபதேசித்துக் கொண்டு வருவது.

விசாலவதியின் செருக்கு அடங்கிய விதம்

 

வேதாந்த நாதன் வேதாள மகரிஷிடம் கற்றுக் கொண்டது மௌனமாக அமர்ந்திருக்கும் ஓர் நிலை. அஃது அன்றி அறிந்திடாத வேதாந்த நாதன் மடந்தையின் (விசாலவதி தேவி) முன் நின்றிட்ட பொழுது “அவனைச் செயல்படத் தூண்டிய சக்தியாக அகப்பொருள் காத்திட நின்றது வேதாள மகரிஷியின் அருள் சக்தி…”

மடந்தை வேதாந்த நாதனிடம் உரைத்த வினா… ஒரு கை ஓசையும்… ஒரு விரல் அறிவும்… நான் என்பதுடன் கூடி நிலை பெற்றால்… “நீ என்பது என்ன…?”

1.அபரிதமான சிந்தனை உடையவள் அந்த மடந்தை கொண்ட அறிவு…!
2.ஆனால் “அவளின் அகங்காரமின்றேல்” அவள் அம்மன் சக்தியாய் செயல் கொண்டிருக்க முடிந்திடும்.

கூர்ந்த மதி கொண்ட வேதாந்த நாதன் பெற வேண்டிய உயர்வின் தன்மைக்கு… பெறுகின்ற அனுபவ நிலைகள் “கவிகாளிதாசன்” என்றிட்ட சொல் நாமத்திற்கு… வித்தின் நிலை போல் செயல் கொண்ட விதம் வேதாள மகரிஷியினுடையது.

1.ஆலமரத்தின் வித்து சிறியது தான் என்றாலும் அதன் திறத்தை அறிந்து கொண்டிட முடிவது
2.அந்த வித்து முளைத்து கிளைத்து அறியதாகிய வளர்ப்பாக ஈர்த்து வளர்ந்த பின்
3.அந்நிலையில் அதனை நாம் முழுமையாக உணர்கின்றோம்.

தெளிந்த மனம் கொள்கின்ற பாங்கு செயல் உருவாக வளர்ச்சியின் விதம் காண்பிக்கப்படுவதாக… சிறப்பரிய ஆலின் வித்து போல் உயர் ஞானத்தின் வளர்ச்சி… “ஆலின் வித்து தழைப்பதைப் போல் ஞானத்தின் பாங்காக வளர்ச்சி நிலை பெறுதலும் உண்மை…”

1.வேதாந்த நாதன் மடந்தையின் முன் நின்று அவள் வினவிய பொருள் தன்மை உணர்ந்திடாத நிலையிலும்
2.அவன் உள்ளத்தை ஆட்கொண்டது வேதாள மகரிஷி காட்டும் “சின் முத்திரை…”
3.அதுவே மன மண்டலத்தில் வியாபிக்க… அந்த முத்திரை கூட்டித் தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.

மடந்தையின் வினாவிற்கு வேதாந்த நாதனின் இந்நிலை கண்ட அவள்… சொல்லாமல் சொல்வித்த பதில்… அவள் கரம் கூப்பிக் கண்களில் ஆனந்த நீர் சொரிய சிரம் தாழ்த்தித் தொழுதாள்.

கூடி இருந்த புலவர் பெருமக்கள்… அம்மணி…! வேதாந்த நாதன் பதில் உரைத்திடா வண்ணம் தியானத்தில் அமர்ந்து விட்டான். வினா தொடங்கிய நீயே இதற்குரிய பதிலும் அளித்திட சூழ்நிலையை அவரே உருவாக்கி விட்டார். பதில் உரைத்திடல் வேண்டும் என்று கேட்டனர்.

மடந்தையோ… கல்வியின் செருக்கு என் மனக்கண்ணை மூடி அகங்காரம் கொண்டுவிட்டேன்… கல்வியின் சிறப்பை அவமதித்துவிட்டேன். இவர் ஒருவர் பதில் உரைத்து என் அகக்கண் திறந்து… ஆட்கொண்டிட்டார்.

1.ஒரு கை ஓசையே – பிருகிருதியின் நாதக்தம் (இயற்கையின் நெறி)
2.அதனைச் சுட்டிக்காட்டும் மாமகான்கள் – “பரப்பிரம்ம பெருநிலை அறிவு என்பர்…”
3.“நான்” – என்றிட்ட தன்மையைத் தெளிந்து
4.பிருகிருதியின் சூட்சுமத் தன்மைகள் தன்னில் கலந்தே – “தானும் அதுவாகி”
5.சிவமென்று அழைக்கப் பெற்றிட சுட்டும் அறிவும் தன்னுள் தெளிந்த “நான்” என்னும் நிலை தெளிவுபடுத்தவே
6.சுட்டு விரலும் கட்டை விரலும் இணைந்து… அந்தப் பொருளை முத்திரையாக… சிவ ஜீவ ஐக்கியமாக மறைபொருள் காட்டுகின்றனர்.

என் செருக்கு நீங்கிடப் பெற்றேன்…! என்று உரைத்தாள் அந்த மடந்தை (விசாலவதி).

“துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனித்துப் பிரித்தெடுக்கக்கூடிய வல்லமையை” நாம் பெற வேண்டும்

 

விஞ்ஞான அறிவு கொண்டு டிவிக்களில் மனித உருக்களைப் படமாக்கிக் காட்டுகின்றார்கள்… ஒலி/ஒளி அலைகளாகப் பரப்புகின்றார்கள். எந்த அலைவரிசையில் திருப்பி வைக்கின்றோமோ அந்தப் படக் காட்சிகளையும் அதிலிருந்து வரும் சொல்களையும் காண்கின்றோம்.

இதைப் போன்று தான் ஒரு தெய்வத்தை வழிபட்டு வருகிறோம் என்றால்… அதை நமக்குள் பதிவாக்கி விட்டால்
1.பதிவான உணர்வுகள் அங்கு இருப்பது கல் சிலை தான்
2.அதிலே பல நிறங்கள் பல ஆடைகள் பல ஆபரணங்கள் எத்தனையோ விதமான அலங்காரங்கள் எல்லாவற்றையும் கண்களால் உற்றுப் பார்த்து
3.அந்த உணர்வின் அலைகளாக மாற்றித்தான் நாம் நுகர்ந்து அதை அறிகின்றோம்.

அதாவது அதன் மீது சூரியனுடைய ஒளிக் கதிர்கள் படப்பட்டு எத்தகைய கலர்கள் இருந்ததோ அந்த உணர்வலைகள் கவரப்பட்டு அந்த அலைகளாகக் கவர்ந்து வெளி வருகின்றது.

அதன் உணர்வைத் தான் நம் கண்ணின் கருவிழி தனக்குள் இதைப் பதிவாக்குகிறது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ சூரியனால் கவரப்படும் இந்த அலைகளைத் தனக்குள் எடுத்து இந்த பூமியில் பரவுவதைக் கருவிழி இங்கே பதிவாக்கியதனால் இதைக் கவர்ந்து கொள்கிறது.

கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி நம் உயிரிலே இணைக்கச் செய்து இந்த உணர்வின் அலைகளை உடலில் பரப்பச் செய்து அதன் உணர்ச்சிகள் எதுவோ அதன் செயலாக்கங்களை நம்மை அறியச் செய்கிறது.

மனிதனாக இருக்கக்கூடிய நாம் அறிந்து இதை கொள்ள வேண்டும்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! குரு அருளைப் பதிவு செய்து அதன் வழி உணர்ந்து கொண்ட… தெரிந்து கொண்ட நிலையைத் தான் என்று வெளிப்படுத்துகின்றேன்.

சாமி என்னமோ சொல்கின்றார்…! விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.
1.விஞ்ஞான அறிவு கொண்டு எதைச் செய்கின்றார்கள்…? என்று குரு அருளால் இங்கிருந்து அதை நான் காண முடிகின்றது.
2.அந்த அலைகள் பரவி இருப்பதை என்னால் நுகரவும் அறியவும் முடிகின்றது.

காரணம்… விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் தீமைகள் பயக்கின்றது. அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களில் இதைப் பதிவாக்குகின்றேன்.

நீங்கள் நினைவு கொண்டு அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து “விஞ்ஞான விஷத்தன்மையால் வரும் பேரழிவிலிருந்து… உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள வேண்டும்…”

எப்படிப் பல ஸ்டேஷனில் இருந்து அலைகள் வந்தாலும் டிவி.யைத் திருப்பி வைத்தவுடன்… அந்த ஸ்டேஷனுக்குரிய அலைகளை மட்டும் பிரித்து எப்படி எடுக்கின்றதோ… அதைப் போல்
1.துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலைகளைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வருவதை
2.இப்பொழுது பதிவாக்கிப் பதிவு கொண்ட நிலையை நினைவைக் கூட்டி அந்த வலுவினை எடுத்துக் கொண்டால்
3.நாளைக்கு எத்தனை விபரீதங்கள் விஞ்ஞானத்தில் வந்தாலும் அதிலிருந்து பிரித்து
4.நீங்கள் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உங்களைக் காக்க முடியும்
5.உங்கள் சார்புடையோரையும் நஞ்சிலிருந்து மீட்க முடியும்.

அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் குரு இட்ட ஆணையை… அந்த வழிப்படி செய்கின்றேன்

சூரியன் வாழ வேண்டும் என்றாலும் தனக்கு ஒத்த கோள்களின் தன்மை சமப்படுத்தினால் தான் இதுவும் வாழ முடியும். தனக்கொத்த நிலைகளில் வந்தால் தான் சூரியக் குடும்பமே ஜீவனுடன் இருக்க முடியும்.

உதாரணமாக குடும்பத்தில் குழந்தை பிறந்து வளர்ச்சியடைந்து திருமணமான பின் தனிக் குடும்பமாக செல்கின்றார்கள்.

இது போன்றுதான் இந்தச் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று நிலையில் வரப்படும் பொழுது… கார்த்திகை நட்சத்திரம் அதுடன் சேர்ந்து ஏனைய நான்கைந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு குடும்பமாக சூரியக் குடும்பமாக பிரிந்து சென்று விட்டது.
1.அவை எடுத்துச் சமைத்து நம் சூரியனுக்குக் கொடுக்கும் உணர்வுகள்
2.சூரியனுக்குக் கிடைக்காது போய் விட்டது (அதனால் மங்கல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது).

இருப்பினும் நட்சத்திரங்களால் வெளிப்படுத்தப்பட்டு மின்னல்களாக வருவது… அதன் உணர்வுகள் பல நிலைகள் மாறினாலும் நமது பூமிக்குள் அந்த மின்னல்கள் தாக்கப்படும் பொழுது செடி கொடிகள் கருகி விடுகின்றது.

அதே மின்னல்கள் பூமிக்குள் ஊடுருவினால் எதிர் நிலையான நட்சத்திரங்களின் அலைகள் ஒரு இடத்தில் குவியப்படும்போது இங்கு எதிர் நிலைகள் உருவாகின்றது.

சாந்த குணங்களும் நல்ல பண்புகள் கொண்டிருக்கப்படும் பொழுது ஒருவன் பயமுறுத்தும் உணர்வினை வெளிப்படுத்துகிறான் என்றால் அதை நுகர்ந்தால் உடலையே அது எப்படிக் கலக்குகின்றதோ நம்மை அஞ்சச் செய்கின்றதோ… சிலருக்கு பேதி கூட ஆகிவிடும். அவன் தன்னைக் கொன்று விடுவான் என்றால் அந்த உணர்வின் தன்மை வந்தபின் பேதியாகி விடுகிறது.

இதைப் போன்றே நட்சத்திரங்களுடைய மின் கதிர்கள் ஊடுருவி விட்டால்
1.எதிர்நிலை கொண்டு கொதிக்கலனாக மாறுகிறது… பாறைகளை உருக்கி விடுகின்றது.
2.இந்த பாறைகள் உருகி வரும்பொழுது நட்சத்திரங்கள் தாக்கிய ஒளிக்கற்றைகள் அது பலவீனமாகும் வரையிலும் குழம்பாகி
3.ஒரு நொடிக்குள் ஒரு குலுக்கு குலுக்கி விட்டு நின்றுவிடும் (நிலநடுக்கம்).

அதன் பின் பார்த்தால்… சில பாறைகளில் வெடிப்பாக இருக்கும். உருகிக் குழம்பான ஆவியின் கற்றைகள் வெளிச் செல்லும் பொழுது பாறைகளில் பல பல உலோகத் தன்மைகளும் மருந்துத் தன்மையும் பாறைகளின் நிறங்கள் மாற்றம் கைரேகை போன்று இருக்கும்.

எங்கே வெடித்ததோ அந்த ஆவியின் தன்மை சேர்ந்து மறுபடியும் அந்த சந்தை அடைத்துக் கொள்ளும்.

இவைகள் எல்லாம் இயற்கையின் நியதிகள்… ஆதியிலே கண்டவன் அகஸ்தியன்.
1.அவனுடன் சேர்ந்து விஞ்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைத்துப் பார்த்து
2.உலகம் எப்படி இருக்கின்றது…? என்று உங்களை நீங்கள் அறிந்து
3.இனி வரும் விஷத்தன்மைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் அதற்கு உதவும். எந்த சாமியாரும் எந்தக் கடவுளும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.

உலகோதய மோதலிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் வழி

 

காற்றோலம்… வாயோலம்…! என்றால் என்ன…?
1.காற்றின் ஓலம் மிகுந்து விடும் பொழுது அது கடும் மழையைக் காட்டும்.
2.அதே போன்று வாய் ஓலம் மிகுந்தது எனில் அது கோபத்தைக் காட்டும்.

காற்றின் ஓலத்தால் வருவது மழை மாத்திரம் என்று. அந்த மழை நீர் பெருக்கத்தால் ஏற்படுகின்ற பெரும் வெள்ளமானது… அலை கடலெனப் பொங்கி… நீரின் கரைகளை உடைத்து விடுகின்ற வேகம் கொண்டு நீர் கரையை உடைக்கின்றது.

அதே போன்று மனிதனின் வாய் ஓலம் “அவனின் கோப குணத்தை உணர்த்துவதோடு மட்டுமின்றி…” அந்தக் கோப நீர் பெருகி மனிதனின் ஆற்றல் சிந்தனா சக்தி செயற் கொள்ளும் நிலையைத் தகர்த்துவிடும்.

நீரின் கரைகள் உடையாது இருக்க… அந்த நீர்க் கரையைக் காக்கக்கூடிய பயிர்கள் நடப்பட்டு அந்தப் பயிர்கள் வளர்ந்து பூமியில்
1.ஒன்றுடன் ஒன்று வேர் தொகுதியினால் பின்னிப் பிணைந்து
2.எத்தகைய வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும் அந்த நீர்க் கரையைப் பெரு வெள்ளத்தினால் உடைத்திடாமல் காப்பதைப் போன்று
3.தியானத்தின் மூலம் எடுக்கும் ஞான சக்திகள் சாந்தப் பயிர்களாக ஊன்றப்பட்டு
4.”நிறை பேணல்” என்பதன் வழியாகக் காக்கும் பயிராக வளர்ந்து… சிந்தனையின் சக்தியைக் கட்டிக் காத்து
5.”உலகோதய மோதல்” எனப்படும் செயலில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.

மரத்திலே காயும் உண்டு… கனியும் உண்டு… அந்த மரத்தைப் பாதுகாத்திட்டவன் பிறருக்கு அதைத் தந்திடும் செயலும் உண்டு. அக்கனி கொண்ட மரத்தினைக் காத்திட்டவர் நிலையே “வேதாள மகரிஷியின் நிலை…”

1.”ஞானம் என்ற கோல் தந்து எண்ணம் போல் பெற்றிடுக…” என உரைத்ததில்
2.அந்தக் கோல் கொண்டு காயை விடுத்துவிட்டுக் கனியைக் கவர்ந்திட முயற்சித்திடும் செயலில்
3.அந்தக் கனி விழுகின்ற வேகப்பொருளாக… அதையும் ஆடை கொண்டு காத்திட்டு அளிக்கின்ற பக்குவம் “ஞான நிலைக்கன்றோ வாய்த்தது…”

ஒளி நாதம் கூட்டும் சொல் என்ற சொல்லின் வன்மை பெற்றிட… கனி என்பதே பெற்றிடும் பக்குவ நிலை…. இனியவை இன்னாதவை என்று திருவள்ளுவர் உரைத்த முறையின் பொருள் உணர்ந்க்திருக்கின்றாய் அல்லவா.

சொல் நாத வேறுபாடும் உரைத்து வந்திருக்கின்றோம். அத்தனையும் சூட்சம சக்தியாக மாமகரிஷிகள் வழிகாட்டிட்ட தன்மைக்கு… மனது ஒன்றிச் செயல் கொண்டிடும் சூட்சம உபாயங்கள் கொண்டு… பெற்ற பயனைப் பெற்றுத் தருகின்றேன் என்றே பாடுகின்றாய். அவ்வாறு
1.ஊன் உயிர் கலந்து பெறுகின்ற முயற்சிக்குக் காட்டுகின்ற வழியைக் கூர்மதி கொண்டவன் கலப்பாகப் பெற்றாலும்
2.காக்கின்ற பொருளின் மறைபொருளை உணர்ந்து கொள்…!

உலகம் அழியப் போகிறது என்றால்… விஷ உலகம் அழிகின்றது… ஞானிகள் தோன்றுவார்கள்

 

இயற்கையின் உண்மையின் நிலைகளை எல்லாம் குருநாதர் என்னை (ஞானகுரு) அறியும்படியும் செய்தார். பல கஷ்டங்களைக் கொடுத்து வேதனைப்படவும் செய்தார். பல சிரமப்பட்டுக் கஷ்டப்பட்டு அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.வேதனைப்பட்டதைச் சொல்லிக் கொண்டு வந்தால் என்ன ஆகும்…? வேதனை தான் வளரும்.
2.ஆனால் நல்லதாகும் என்று சொன்னால் நல்லதாகும்.

இதே மாதிரித் தான் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் நலம் பெற வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும் என்று உயர்ந்ததாக எண்ண வேண்டும்.

ஆனால் பையன் படிக்கப் போனானே… என்ன ஆச்சோ…? போனானா வந்தானா… என்ன ஆனது என்று தெரியவில்லையே…! என்று எண்ணி அவன் சரியாகப் படிக்கவில்லையே… படிக்கவில்லையே…! என்று இந்த உணர்வை எடுத்தோம் என்றால் “அங்கே அவனால் சரியாகப் படிக்க முடியாது…”

பையன் சுட்டித்தனம் பண்ணுகின்றான்… அவன் செய்யும் குறும்புத்தனம் தாங்க முடியவில்லை…! என்று இப்படியே எண்ணினால்
1.அவனுக்குள் குறும்புத்தனம் செய்யும் உணர்வைத் தான் வளர்க்க முடியும்.
2.அவனைக் காணும் பொழுதெல்லாம் வெறுப்பு தான் வளரும்.

அதற்குப் பதிலாக… அவனுக்கு அருள் கிடைக்க வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் அவனுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். “நாளடைவில் அவன் ஞானமாக வருவான்…”

ஏனென்றால் குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும் இன்றைக்கு இருக்கின்றோம்… நாளை எங்கே செல்கின்றோம்…? என்று யாருக்குத் தெரியும்…! என்ற நிலை தான் இருக்கின்றது.

சேர்த்து வைத்த சொத்துக்களோ சம்பாதித்து வைத்த பணமோ நம்முடன் வருகின்றதா…? இல்லையே.
1.ஆக நமக்கு அழியாச் சொத்து அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தான்…
2.அதை வளர்த்தால் அங்கே போகின்றோம்.

என் பிள்ளை இப்படி இருக்கின்றானே… என் பிள்ளைக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்களே…! என்று
1.இது போன்று உணர்வுகளை யாரை எண்ணி அதிகமாக வளர்த்தோமோ
2.இந்தச் சொத்தை தேடி வைத்த நிலைகள் கொண்டு அவன் உடலுக்குள் தான் செல்ல முடியும்.

அவர்களையும் தரித்திரமாக்கி உணர்வின் தன்மை மாற்றிவிட்டு ஆடாகவோ மாடாகவோ பிறக்கத்தான் நேரும். இல்லையென்றால் அடுத்த உடலுக்குள் பேயாகச் சென்று அந்தக் குடும்பத்தையும் அழித்துவிட்டு நாயாகவோ பாம்பாகவோ தேளாகவோ பிறக்க வேண்டி வரும்… மீள முடியாது.

ஏனென்றால் இதைத்தான் குருநாதர் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று பல நிலைகளைக் காட்டி அந்த உண்மைகளை உணரும்படி செய்தார்.

இன்றைய விஞ்ஞான உலகில் கடுமையான விஷத்தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. எந்தக் காரணத்தை கொண்டும் அந்த விஷம் நம்மை அழித்து விடக்கூடாது. உலகம் அழியப் போகிறது என்கிறார்கள்… விஷ உலகம் தான் அழிகின்றது

எம்மைச் சந்தித்த ஏராளமான குழந்தைகளுக்கு அருள் ஆசி கொடுத்துள்ளேன்… கருவுற்ற தாய்மார்களுக்கு ஆசி கொடுத்துள்ளேன்.

அந்தக் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று அவர்கள் ஆர்வத்தில் வரும் பொழுது இதைக் கொடுத்துள்ளேன். அந்த மாதிரிக் குழந்தைகள் ஞான குழந்தைகளாக வருவார்கள்.

1.அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு எப்படி உலகை அறிந்தானோ உலகைக் காக்கும் சக்தியாக வளர்ந்தானோ
2.அவன் உணர்வை எடுத்து இங்கே கர்ப்பமான பெண்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அந்த அறிவின் ஞானம் வளர்கின்றது
3.விஞ்ஞான உலகில் இருந்து மீட்கக் கூடிய சக்தியாக அவர்கள் வளர்வார்கள்
4.விஷத் தன்மைகள் அழிந்துவிடும்.. அரும் பெரும் ஞானிகள் தோன்றுவார்கள்.

காரணம் தென்னாட்டில் தோன்றியவன் தான் அகஸ்தியன். அதே தெற்கிலிருந்து தான் இந்த உலகை மீட்டிடும் சக்திகளும் வரப்போகின்றது.

விஞ்ஞானத்தால் பல பேரழிவுகள் வந்தாலும்… அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே பரப்பப்பட்டுப் பேரழிவிலிருந்து தப்பும் மனிதர்களாக உருவாக்கும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

இனிமேல் இதை எல்லாம் காணலாம்

இன்றைய உலகம் எங்கோ போவதாகத் தெரிந்தாலும்… நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய துன்பங்கள் வந்தாலும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை மட்டும் கூட்டிக் கொள்ளுங்கள்.

நோயுற்றவர்களைக் காண நேர்ந்தால் அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.அது தான் நாம் சொந்தமாக்க வேண்டியது
2.என்னை இப்படிப் பேசினானே… அவனைச் சும்மா விடுவதா…? என்று இதைச் சொந்தமாக்க வேண்டாம்.

அதைச் சொந்தமாக்கினால் மீண்டும் பிறவிக்குத் தான் அந்த உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்.

ஆகவே அருளை நாம் சொந்தமாக்குவோம். இருளை அகற்றுவோம்… மெய்ப்பொருளைக் காண்போம்… மெய் வழி வாழ்வோம்… அருள் ஞானம் பெறுவோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்.

பகலவர்

 

சேகைத் திறந்த வழி என் நிலை அண்டியதோ…?
பேண் அகத்து என்ற நிலை பெற்று
முன் நிலை தவிர்த்து…
ஒளி கொண்ட தலைமை காண வேண்டும்.

1.அரசின் தலைமை கண்டவன் அகத்தின் தலைமை கண்டான்
2.அத்திரி மகரிஷியின் தொடர்பு அன்று அரவணைத்தது… தொடர்ந்து அமுதம் ஊட்டுகின்றது.

மகா புருஷன் என்போரே பகல் (ஒளி) அறிந்தவர்…! சிருஷ்டிக்கும் பாங்கு செயல்படும் நிலையே விழிப்பும்… அறிவின் ஆற்றலும் இணைந்து… உணர்வென்னும் ஊற்று எண்ணத்தின் வழி ஊட்டப் பெறுகின்ற செயல் அதுவாக உள்ள தன்மைகளை பிரம்மன் படைக்கின்றான் என்று சொல்வது. அது பல யுகங்கள் ஒன்று சேர்ந்த ஒரு பகல் காலம்.

இவை அனைத்தும் உலக மாற்றம் செயல் கொண்டிடும் காலம் வரை அனைத்து ஜீவன்களும் இயக்கம் கொண்ட செயலினையே சகல சிருஷ்டிகளும் ஓர் பகல் என்றும்… இரவு காலத்தில் பொருட்கள் கட்டுப்படாத் தன்மை போல் இருக்கின்ற பொருட்கள் அனைத்தும்… இருள் எனும் போர்வைக்குள் அடங்கி இருத்தல் தன்மையாகச் சிருஷ்டியின் ஒடுக்கம் அதன் அதன் அமிலக் கூறாகக் கலத்தல்…! என்று முந்தைய பாட நிலைகளில் உரைத்திருக்கின்றோம்.

1.சிருஷ்டியின் ஒடுக்கமே இரவென்றும் (இருள்)
2.மீண்டும் “உயிர் அணுக்கள்” ஜீவன் கொண்டு பலவெனப் பெருகத் தொடக்கம் பெறும் யுகம்
3.அதுவே பிரம்மனின் விழிப்புக் காலம் என்றும் மறைபொருளாக மாமகான்கள் உரைத்திட்டது… தத்துவ நோக்கின் படிகள்.

சிருஷ்டியின் பாங்கை அறிந்து கொண்ட… சிருஷ்டிக்கும் செயலின் கர்த்தா தியான ஒடுக்கவெனவும்…
1.அந்நிலை செயல் கொள்வதைத் “தூங்காமல் தூங்கிடும்… அரிதுயில்” என்றெல்லாம் விளக்கம் காட்டி
2.ஆற்றல் என்பது புருஷ குணம் சிருஷ்டியின் பாங்கைத் தன்னுள் தெளிந்து சிருஷ்டியின் ஒடுக்கமற்று
3.வியாபித்த பகலாகச் சிருஷ்டிக்கும் தன்மைகளை உணர்ந்து கொண்டிட்டவர்களே மகா புருஷர்கள் எனும் மாமகான்கள்.
4.அவர்கள் அடைந்த ஒளித்தன்மைக் குறிப்பிடவே அவர்களைப் (மகரிஷிகளை) “பகலவர்” என்று சுட்டிக்காட்டிய நிலை.

அகங்காரம் எனப்பட்டது… புவி ஈர்ப்பின் பிடிப்பில் துர்க்குண நிலைகளைக் காட்டி… மேலாம் அறிவு சித்தித்திடும் தன்மைகளைக் கேடுறுத்தி… கீழாம் அறிவு எனும் மோக நிலையில் வசப்படுத்திடும் நிலை தான் அது.

பிரம்மா விஷ்ணு என்று சிருஷ்டியைச் சித்தர்கள் காட்டியதைப் போல் அகங்கார குணம் மோகத்தின் வசம் நம்மை ஆழ்த்தி… வீர குணம் வீழ்த்தி… இந்திரீய நீக்கம் காட்டிச் செயல்படும்.

இதே குணத்தன்மை “மேலாம் அறிவு சித்திக்கும் செயலில்” மோகவலைப்படுத்தும் நிலையைச் சம்ஹரித்தது
1.சிவத்தின் தன்மை காட்டி விந்து நிலை ஒளித்தன்மையாக ஊர்த்துவ சக்தியாக மேலெழுந்து…
2.”வீணையின் நாயகன் எனும் உயிர்சக்தியை” வலுக்கூட்டும் உணர்வுகளின் கவச முலாம் ஆத்மாவாகச் சிருஷ்டிப்பதே
3.மெய்ஞானச் சுடர் எனும் காரண மூலம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் சேர்க்கச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

 

மனிதனின் வாழ்க்கையில் நம்மை அறியாமல் அடிக்கடி வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த விஷத் தன்மைகள் நம் சிறுநீரகத்தைச் சீராக இயக்க விடுவதில்லை.

இரத்தத்தில் கலந்து வரும் அந்த அசுத்தத்தின் தன்மைகளை… அது நீக்கும் சக்தி இழந்து விடுகிறது. இந்த விஷத்தன்மைகள் இரத்தத்தில் கலந்த பின் இருதயத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
1.காரணம் உப்புச் சத்து என்ற நிலைகள் அதிலே உருவாகிவிடுகின்றது.
2.உப்பை வைத்தால் எப்படி ஒரு பசபசப்பாகக் கசிகின்றதோ அதைப் போல் நுரையீரல் கல்லீரலில் கசிவுகள் அதிகமாகி விடுகின்றது
3.அதனால் அடிக்கடி வாந்தி என்ற நிலையும் வருகின்றது.
4.அதே போல் சர்க்கரையை நீக்கும் உடலிலே அதைச் சமப்படுத்தும் சக்தி இழந்து விட்டால் அதுவும் இணைந்துவிடும்.
5.இத்தகைய நிலைகள் ஏற்பட்டால் “உணர்வின் உந்துவிசை அதிகமாகி விடும்…: இரத்தக் கொதிப்பும் இதனுடன் கலந்துவிடும்.

இதைப் போன்ற உணர்வு நமக்குள் தோன்றி நமக்குப் பல தொல்லைகளைக் கொடுக்கும். பின் வேதனை உணர்வு அதிகமாகி… உடலில் இதே உணர்வு கொண்டு உயிரான்மா வெளியில் சென்றுவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபடுவதற்கு காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெறச் செய்ததைச் சீராகப் பயன்படுத்தி… உங்கள் உடலில் எத்தகைய நோய் இருப்பினும் யாம் சொல்லும் முறைப்படி தியானித்து,,, உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்களை நீக்க முடியும்.
1.உங்கள் எண்ணத்தால் தான் நோய் வந்தது
2.அதே எண்ணத்தால் அதை நீக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் எண்ணி ஏங்கிவிட்டு… கண்களை மூடி அந்த அருள் சக்திகள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

1.சிறுநீரகத்தில் குறை இருந்தால் அந்தப் பாகத்தில் நினைவைச் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்பிலே படரப்பட்டு நஞ்சினை நீக்கி…
3.என உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போன்று உங்கள் உடலில் வாத நோயோ கீழ்வாதமோ முடக்கு வாதமோ சர்க்கரைச் சத்தோ ஆஸ்த்மாவோ அந்தந்த நோய்கள் நீங்கி நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்து உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

உங்கள் எண்ணத்தை இவ்வாறு செலுத்தினால் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் படர்ந்து டிபி.யிலிருந்து கேன்சர் வரையிலும் நீக்கும்.

“கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று சொல்வது போல் உங்கள் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அதை உடலுக்குள் செலுத்தி உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

கண்ணின் நினைவை உடலுக்குள் இவ்வாறு செலுத்தச் சொல்வதன் நோக்கம் என்ன…?

நண்பன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்றால்… இரண்டு பேரும் சண்டையிட்டு அவனை நினைத்து “இப்படிச் செய்தானே பாவி” என்று எண்ணினால்… கண்களால் செலுத்தப்படும் போது உடனே அங்கே புரையோடித் தீமையின் செயலாக இயக்குகிறது.

அதே சமயத்தில்… “தக்க நேரத்தில் எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணினால் உடனே விக்கல் பாய்ந்து அங்கே நல்லதாகிறது.

இதைப் போல்
1.நம் உடலுக்குள் கண்களால் பதிவான துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.கண்ணால் நுகர்ந்தறிந்த அந்த உணர்வுகள் அணுக்களாக விளைந்ததை
3.கண்ணின் நினைவை அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்த உணர்வின் சக்தியை உடலுக்குள் பரப்பி
4.நம் உடலில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று எளிதில் இணைத்து… அதைப் பெறச் செய்ய முடியும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தில் நாம் நுகர்ந்த தீமைகள் கருவாகி அணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சியைத் தூண்டி தன் இனத்தைப் பெருக்கும்.

இவ்வாறு அதன் இனத்தைப் பெருக்கும் அந்தச் சக்தியைக் குறைக்கத் தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உடலுக்குள் செலுத்தி அதை வளர்த்துக் கொண்டே வாருங்கள் என்று சொல்கிறோம்.

1.உங்கள் வாழ்க்கையில் உடல் நலம் பெற்று மன நலம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட
2.எமது அருளும் குரு அருளும் உறுதுணையாக இருந்திடப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

மகரிஷிகள் காட்டும் கற்பு

 

அருந்துகின்ற நன்னீர் உடைய அழகிய ஒரு பொய்கை உள்ளது. அருமருந்து போல் தித்திக்கின்ற சிறப்புடைய அந்தக் குளத்தின் நீரை… அந்நீரின் தூய்மை கெடாத வண்ணம் பாதுகாத்தலே சிறப்பாகும்.

அந்த நன்னீர் பொய்கையைக் கண்டவுடன் அந்த நீரில் நமது ஆடைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறப்புடையது என்ற எண்ணம் கொண்டிட்டால்… ஆடை தூய்மை பெறும்.
1.ஆனால் குளத்தின் நீர் தன்மை மாறு கொண்டுவிடும்.
2.அதன் தூய்மை கெட்டு அருமருந்தை விருந்தாக்கிடும் செயலும் அற்றுப்போகும்.

நீண்ட நெடும் அறிவின் தர்க்கத்திற்கே… “தர்க்கம் என்பது வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்ற நல்ல வாய்ப்பு…” என்றால் மிகையன்று.

சிறப்புடைய ஓர் காலகட்டத்தின் மன அசைவு நிலை… பாடத்தின் தன்மை கருத்தோவியமாக விளங்குதலினால்… காட்சிப்புலன் உலகோதய நடைமுறை ஆத்ம ஞானம் கூட்டிடும் சிறப்பு என்று சுருங்கக் கூறினாலும்… விளங்கிக் கொள்கின்ற தன்மையாக அதன் தொடரை இதில் உரைப்போம்.

நன்னீர் பொய்கை என்று உரைத்திட வந்ததே…
1.உயிராத்மா வலு வேண்டி உயர் ஞான முகிழ்விப்பில்
2.தன் உயிராத்மா சக்தியின் முலாமை வளர்த்துக் கொண்டிட வேண்டும் என்ற உத்வேக உந்துதல் தான்.

அந்த முயற்சியின் வித்து… அஷ்ட பேதங்கள் கூட்டிடும் “சிருஷ்டியின் உதயத்திலும்” அதே செயல் தன்மை “உயர் ஞான வளர்ப்பிலும்” உண்டு.

நெருப்பாகவும் நீராகவும் காற்றாகவும் நிலமாகவும் ஆகாயமாகவும் அமில குணத்தன்மைகளாகப் பால்வெளியில் படர்ந்து விளங்கிட்ட சக்தியின் சக்தியையே பஞ்சபூதங்களாகக் காட்டிட்ட அத்தன்மைகள்…
1.ஒன்று கலந்த உயிரணுவாக பரிணமித்திடச் செய்வது “அகங்காரம்” என்ற பேதம்.
2.இந்நிலையின் கூட்டுச் சுழல் தன்மையால் மனம் “எண்ணம்” என்ற பேதத்தைக் காட்டுகின்றது.
3.இதனினும் சூட்சும பேதமே “அறிவேனும் புத்தி”
4.ஆக ஓர் சிருஷ்டியின் அஷ்ட பேத குணங்களின் சங்கமத்தின் மூலம் தான் ஆத்ம நிலை ஐக்கிய ஜீவன் பெறுகின்றது.

இத்தன்மைகளின் மூலத்தையே பிரகிருதி (இயற்கையின் நியதி) என்பார் வியாச பகவான்.

“எத்தனை பேதங்கள் ஒன்றுபட்டு” அற்புதமான இந்த மனிதச் சரீரம் வாய்க்கப் பெறுகின்றது…? காலத்தின் தன்மையைத் தவறவிட்டால் அது தகுமா…?

இயற்கையின் சிருஷ்டியே பேதங்களாகப் பாகுபடுத்திக் காட்டிட வீரியத் தன்மைகள் கிடைத்தற்கரிய பாக்கியம் பெற்ற இந்த மானிட ஜென்மத்தின் சக்தி பெற்றிடும் வழி அறிந்தும்…
1.பஞ்சபூதங்கள் எனும் பரந்த பேரருள் செல்வத்தை மனிதன் தேடியே அலைந்து
2.அதைக் கூவி அழைத்தாலும் அது பருப்பொருளாகக் (கண்ணுக்குப் புலப்பட்டதாகக் கையில்) கிடைக்குமா…!

பஞ்சபூதங்களை இவனில் ஐக்கியப்படுத்திவிட்டு… ஒன்றில்லாமல் ஒன்று இல்லை என்றே பின்னிப் பிணைந்திட்டு… சுவாசத்தின் தன்மையாகச் சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள சக்தியைத் தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டு வளர்வதில்… “தான் எத்தகைய பேதமும் உரைத்திட முடிந்திடாது…”

மகா ஞானியாக இருந்தாலும் இச்சுவாச அலை ஈர்ப்பில்… தன் ஆத்ம சக்தியைப் “பிறரைப் போற்றி அடிமை கொண்டிடும் பொழுது… பஞ்சபூதங்களே பேதங்கள் காட்டும்…”

இனி உயர்ஞான வளர்ப்பில் சிந்திக்கலுறும் மனித ஜீவன்… அஷ்ட பேதங்களை ஒன்றுபடுத்திடும் உயர்வான ஜெப அலையை ஈர்த்திடும் பொழுது… சரீரம் கொண்டிட்ட உணர்வுகள் பஞ்சேந்திரியங்களாகச் செயல்படும் காலத்தில்… அதி நுட்ப உணர்வுகள் கிளைத்தெழும் தன்மையை வளர்த்துவிடும் “காந்தப்புலம்…”
1.இங்கு தான் மனத்தின் பேதம்
2.புத்தி எனும் அறிவின் பேதத்தை நாடுகின்றதா…?

அன்று பஞ்சேந்திரியங்கள் கட்டவிழ்த்து ஓடும் ஓர் பிடிப்பின் தன்மைக்கு… அறிவின் ஆற்றலையே உண்டுவிடும் ஈர்ப்பில் அது செயல் கொள்கின்றதா…? என்ற வினாவிற்குப் “புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி.

பரிவு எனும் பேதம் கொண்டது நன்னீர் பொய்கை. ஆடை என்பது உலகோதயப் பிடிப்பு எனும் அதி ஆசை நிலை.

அந்த ஜெபநீரைப் பெற்றிடவே… பேரருள் செல்வமாக விளங்கிடும் அந்தப் பேரானந்தப் பெருநிலையை… அறிவு என்னும் தீட்சண்யம் கொண்டு விளங்கிச் சுடர்ந்திடும் அத்தன்மையை… மனிதன் உலகோதயப் பிடிப்பில் செயல் கொண்டு வாழ்ந்திடும் செயலின் நிலையே – நன்னீர் பொய்கையும்… அதிலே ஆடை சுத்தி செயல் தன்மையும்…!

தனக்குள் கட்டுக்குள் அடங்கி நிற்கின்ற பேத குணத்தன்மைகள் அது கட்டவிழ்ந்து ஓடும் செயல் நிகழ்வு புலன்கள் காத்திடாத் தன்மையாக உள்ளதே மௌடீக (மூடத்தனம்) நிலை.

கற்பு என்றிட்டால் சிற்றின்ப நிலை அடக்கும் தன்மையையே இன்றைய மனித மனம் உரைத்திடும். அது அல்ல…!

பஞ்சபூதங்கள் தன்னுள் செயல் கொண்டு… பஞ்சேந்திரியங்களான…
1.மனம் புத்தி அகங்காரம் என்ற சூட்சுமத் தன்மைகளைத் தன்னுள் தெளிவுபடுத்திக் கொண்டு
2.இயற்கையுடன் ஒன்றி வாழ்பவனுக்கு பேரின்ப நாட்டமன்றோ சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கிடும்.

இதையே கற்பு என்பர் மகரிஷிகள்.

அலைபடுபேதம்

 

“காசினி” என்று அழைக்கப்படும் பூமியின் நடு மையத்தில் ஆழ் உறைகின்ற நெருப்பானது… “ஈர்ப்பின் அலைபடுகின்ற பேதத்தினால் எதிர் மோதல் நிலைபெற்றுப் பொங்கிப் பிரவாகித்து (எரிமலை)… காசினியை விட்டு ஆசினி என அழைக்கப்படும் விண்ணை நோக்கி உயர்ந்து எழ.. மலை வாயின் வழி வழிவிட்டு அலைபடுத்தும் பேதத்தை நீக்கித் தன்னுள் சமன்படுகின்றது.

“ஆழ் உறையும் நெருப்பு” மலை வாயின் வழியே சொரிந்து வெளிப்படுத்துகின்ற செயலின் காரணம் “அலைபடுபேதம்…” (எதிர் மோதல் அலைகள்).

மனித மனத்தின் மாண்பு உலகோதய நடைமுறை ஈர்ப்பின் செயல் வசத்தில் வண்ணம் கொண்டு விளங்கிடும் மனக்கடல் அலையை
1.”உலகோதய நாட்டம்” எனும் மிகைப்பட்ட குணங்கள் (TENSION) அலைபடுகின்ற பேதத்தால்… அந்த அலைபடு பேதத்தை நீக்கிடவே…
2.காசினியின் நெருப்பு ஆசினியின் வழி ஓடி மலைவாயின் வழி சொரிதல் போல்
3.தெய்வீக நெறி நின்று வண்ண நிலை கொண்ட மனத்தின் பாங்கையே கேடுறுத்தும்
4.உலகோதயம் என்னும் அலைபடுபேதத்தைப் “பிடர் வழி போக்கிவிடு…”

எப்படி…?

“உந்துவிசை குணங்கள்” (தியானத்தின் மூலம் உந்தி எடுக்கக்கூடிய நல்ல எண்ணங்கள்) எண்ணியது எண்ணி ஆங்கு நிகழ்த்தப் பெறும் செயல்திறத்தால்
1.எடுக்கப்படும் உயர் குணத்தன்மைகள்… கொடுக்கப்பெறும் நற்குணங்களின் பிடர்தல் எனும்… “உந்துவிசையின் வழி”
2.மனதினை அலைக்கழிக்கின்ற அந்தப் பேதங்களைப் போக்கும்… சமன்படுத்தும்.

போகும் என்பது செயல்வழி போக்கும் என்பதே முயற்சி வழி.

ஆனால் சமன்படுத்தாதபடி… அலைபடு பேதத்தின் செயல்வழியாய்ச் சென்றிடுங்கால்… அலை கடலில் துடுப்பற்ற படகு தத்தளிக்கின்ற நிலைக்கு… அந்தந்தக் குணங்களின் ஆவேச உந்துதல் தன் வழியில் பற்றி இழுத்து நல்ல குணங்களைக் கேடுறுத்தும்.

ஆகவே… படகை (வாழ்க்கையை) நீ எங்கு செலுத்திட விரும்புகின்றாயோ அந்த இடத்திற்குச் செலுத்திட
1.“முயற்சி எனும் துடுப்பிட்டு” அலையைத் தணிவாக்கி
2.விரைந்து செலுத்தப்படுகின்ற தன்மையில் நிலை பெற்று நின்று வாழ்ந்திட எமது ஆசிகள்… அத்திரி மாமகரிஷி…!

தீமை வரும் போதெல்லாம் “அலைவரிசையை (FREQUENCY) மாற்றப் பழகிக் கொள்ளுங்கள்”

 

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை ஏங்கிப் பெற்று நமக்குள் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும். பதிவானதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதை அடிக்கடி எடுத்துப் பழக வேண்டும்.

1.மனித வாழ்க்கையில் தீமைகளைக் காண நேர்ந்தால் அந்த இடத்திலே நாம் “விழித்திருத்தல்” வேண்டும்.
2.வேதனைப்படுகிறார்கள் கஷ்டப்படுகிறார்கள் சங்கடப்படுகிறார்கள் வெறுப்படைகிறார்கள் கோபப்படுகிறார்கள் நோயால் அவதிப்படுகிறார்கள் என்றால் அந்த ரெக்கத்தில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்.
3.காரணம் நாம் எடுத்த தியானத்தை உஷார்படுத்தித் தெளிவுபடுத்தி சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

கஷ்டப்படுகிறார் என்று பார்க்க கேட்க நேர்ந்தாலும் நன்மை செய்ய வேண்டும் என்று நிலையில் தான் அவரின் கஷ்டத்தை அறிய விரும்புகின்றோம்.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

கேட்டறிந்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஆன்மாவை உடனடியாகத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து அந்தச் சிரமப்பட்டவர்களுக்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறுவாய். நோயிலிருந்து நீ விடுபடுவாய் நீ உடல் நலம் பெறுவாய் என்று சொல்லிவிட வேண்டும்.
1.அவருடைய கடும் வேதனைகள் நமக்குள் புகாதபடி விழித்திருந்து
2.வேதனையை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் அந்த இடத்தில் வலுவாக்கிக் கொண்டு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு இந்த உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால் அவர்களைக் காக்க முடியும்… நம்மையும் காத்துக் கொள்ள முடியும்.

அவரிடம் சொல்லி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஏங்கி உன் நோய்கள் நீங்கிவிடும் என்று சொல்லுங்கள்.

காரணம் அவரால் வேதனையிலிருந்து மீள முடியாத அந்த நேரத்தில் நாம் அந்த அருள் ஒளியை அவருக்குப் பாய்ச்சினால்… அவரும் எண்ணத் தொடங்கினால்… நம்முடைய சொல் அவர் நோயை நீக்கக் காரணமாகும். ஓரளவுக்கு மன உறுதி பெறவும் உதவும்.

நமது வாழ்க்கையில் எதிர்படும் பல தீமையின் உணர்வுகளைக் கேட்டு அறிந்தால் நம்மைக் காத்து மற்றவர்களையும் காத்திடும் நிலையாக வர வேண்டும்.

ரேடியோ டிவிகளில் ஒலி/ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது அதை எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ அந்த அலைகளை இழுத்துக் கவர்ந்து ஒலி ஒளியாக நமக்குக் காட்டுகின்றது.

அன்றாடம் பலருடைய உணர்வுகளை நாம் நுகர்ந்தாலும்
1.நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ரேடியோ டிவிகளில் எப்படி வேறு அலைவரிசைகளை மாற்றுகின்றோமோ அதைப்போல
2.பிறர் படும் துயரத்தை நுகர்ந்தோம் என்றால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.இந்த அலைவரிசையை நமக்குள் எடுத்து தீமைகள் (அந்த அலைவரிசை) நமக்குள் புகாது தடுத்து நிறுத்த வேண்டும்.

“இப்படிப்பட்ட ஒரு பழக்கத்திற்கு நாம் வந்தால் தான்” வாழ்க்கையில் அறியாது சேரும் தீயவினைகளிலிருந்து நாம் விடுபட இது உதவும்

ஆகவே நாம் ஒவ்வொருவரும் ஞானிகள் காட்டிய மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் பிறவியில்லா நிலை அடைந்த அவர்களின் உணர்வை நாம் பெற்று… இந்த வாழ்க்கையைச் சீராக அமைத்து… உடலுக்குப் பின் நாம் விண் செல்ல வேண்டும்.

பல கோடிச் சரீரங்களிலிருந்து நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிரான ஈசந் தான். நாம் விரும்பியதை உருவாக்குவதும் அவனே.
1.நம் ஆறாவது அறிவால் தெளிந்த மனம் கொண்டு அருள் உணர்வினை நுகர்ந்தால் உயிர் அதை உருவாக்கி
2.அதன் வழியில் நம்மை வழிநடத்தி இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு பெறச் செய்யும்.

கோவிலிலே காசைக் கொடுத்துச் செய்வது போல் அல்ல “யாம் சொல்லும் இந்த ஞானத்தின் வழி”

 

எப்படியும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்
1.உங்கள் நினைவுக்கு அது அடிக்கடி வர வேண்டும்
2.உங்கள் நினைவால் உங்களைக் காக்கும் அந்த அரும்பெரும் சக்தி நீங்கள் பெற வேண்டும்… அந்த எண்ணம் வளர வேண்டும் என்று
3.குருநாதர் சொன்ன முறைப்படி நீங்கள் பெற வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

ஆதே போல் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்களும் ஆசைப்பட்டால் எனக்குள்ளும் அந்த தீமையிலிருந்து விடுபடும் ஆசை பிரம்மம் ஆகிறது.

நான் எண்ணுவது போல் நீங்களும் எண்ணினால் வசிஷ்டர் பிரம்மகுரு. அதாவது ஒரு நோயாளியைப் பார்த்தால் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த உணர்வைக் கவர்ந்து உடலில் எடுத்துக்கொண்டால் தீமை நீக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பிரம்மம் ஆகிறது.

அந்தத் தீமையை நீக்கும் சக்தி உங்களில் வளர்ந்து சொல்லாக வெளி வரும் பொழுது… மற்றவர்களுக்கும் அது தீமை நீக்கும் சக்தியாக வருகின்றது. ஆகவே சாஸ்திரங்கள் நமக்கு காட்டிய அந்த அருள்வழிப்படி தெளிவாக வாழ்வோம்… அந்த அறிவின் தன்மை கொண்டு வாழ்வோம்.

1.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கம் தான் நமது குருநாதர் காட்டியது
2.ஆனால் இந்த உடலின் இச்சைக்காகத் தான் பெரும் பகுதி இதைச் செயல்படுத்துகின்றோமே தவிர உயிர் இச்சை யாருக்கும் வரவில்லை.

உயிரை யார்…? என்று அறிந்து கொள்ளும் மனிதனாக ஆன பிற்பாடு உயிரை மதித்துப் பழகுவதே நல்லது. அவன் தான் நம்மை மனிதனாக உருவாக்கினான் என்ற நிலையில் அவனை மதிக்க வேண்டும்.

வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் இது போன்ற குணங்களை உள்ளே விடாதபடி தடுத்தல் வேண்டும்.
ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அடிக்கடி வரும் தீமைகளை துடைத்துப் பழக வேண்டும்… துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களைப் பெறச் சொல்கிறோம்.

தீமைகள் புகாது தடுத்தால் உங்கள் ஆன்மா சுத்தமாகின்றது. உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள். எளிதில் நீங்கள் இதைச் செயல்படுத்த முடியும்.

காசு கொடுத்து அல்ல… நடந்து சென்று (பாத யாத்திரை) அல்ல…! அப்படி யாரும் விலைக்கு வாங்க முடியாது. விலை கொடுத்து இந்த ஞானத்தை வாங்க முடியுமா…?

1.என் பிள்ளை இப்படிச் செய்கின்றான் என்று தெய்வத்திடம் முறையிட்டு…
2.அதற்காக வேண்டிக் கோவிலிலே காசைக் கொடுத்து அர்ச்சனை செய்தால்
3.அந்தத் தெய்வம் வரம் தரும் என்று சொல்லிப் போகின்ற மாதிரி அல்ல யாம் சொல்லும் நிலை.

நாம் எண்ணியதையெல்லாம் நமது உயிர் ஓ என்று இயக்கி உருவாக்கிக் கொண்டே உள்ளது. நான் எண்ணியதையெல்லாம் ஓ…ம் நமச்சிவாய…! என்று உடலாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆகவே… அந்த உயிரான ஈசனை வேண்டி அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம்… அருளைப் பெறுவோம்… இருளை அகற்றுவோம்… பிறவியில்லா நிலை அடைவோம். ஆனந்த வாழ்க்கை வாழ்வோம்… என்றும் ஏகாந்த வாழ்க்கை என்று பெற தியானிப்போம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்துவோம். காரணம்… நமக்காக அவர்கள் எத்தனையோ துயர் பட்டார்கள்.

சப்தரிஷி மண்டலத்தில் அவர்களை இணையச் செய்து… அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக நம் முன்னோர்கள் வாழத் தொடங்குகின்றனர்.

1.அதை எண்ணும் போதெல்லாம் நாமும் அந்த உயர்ந்த சக்தி பெற முடியும்
2.அதைப் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துள்ளோம்.

தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமையான உணர்வு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால் இருளை அகற்றலாம்… உலகையும் காக்கலாம்… நம்மையும் காக்கலாம்… குடும்பத்தில் வரும் சர்வ தோஷங்களை நீக்க முடியும்.

அந்தச் சக்தி பெறவே உங்களுக்குள் இந்த நிலையை உபதேசித்தது. மன உறுதி கொள்ளுங்கள் அருளைப் பெருக்குங்கள் இருளை அகற்றுங்கள் பேரானந்தம் பெற்று ஏகாந்த வாழ்க்கை வாழ உயிரான ஈசனை வேண்டி அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்போம்.

தெளிந்த மனம் கொண்டு வாழ இந்த வாழ்க்கையை அர்ப்பணிப்போம்…!

ஆத்ம பொக்கிஷத்தை எடுக்கும் வழி

 

உஜ்ஜயினி மாகாளியம்மன் கும்பேஸ்வரி பிரதிஷ்டைக்குப் பின் பிருகு மகரிஷி “கதிரி” (மங்களூர்) சென்று செயல் கொள்ளும் முன்…
1.தன்னுடைய படைப்பின் வித்து செயல் கொள்ளப் போகும் காலத்தின் நியதியை ஞான நோக்கால் அறிந்து கொண்டு…
2.தீர்க்கதரிசன வாக்குகள் என்றே மூன்று குறிப்புகள் பதிப்பித்து அவற்றை ஓரிடத்தில் இட்டு… வாய்ப்பாகம் சிலை செய்து
3.உஜ்ஜயினி மாகாளிப்பட்டினம் உருக் கொள்ளும் எல்லைக்குள் அந்தப் பெட்டகத்தின் காப்பென பூமியினுள் புதைத்து வைத்து
4.நல் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அது பிற்காலத்தில் பயன்பட வேண்டும் மானசீக ஆசி அருளி
5.தெற்கு திசை நோக்கி நிர்விகல்ப சமாதி எனும் செயல் கொண்டிடும் கதிரி எனும் இடத்தில்
6.செவ்வேள் எனும் சூட்சும ஆன்ம நேய வளர்ப்பு என்றே பக்குவம் கொண்டு
7.மண்டல சூட்சும செயலுக்குத் தன்னைத்தான் தெளிவுபடப் பொருந்திக் கொண்ட இடம் மூடுபத்திரி (கர்நாடகா).

பிருகு மகரிஷியின் அருள் சக்தி பெறுவோம்… பெற்று அவர் பதித்த வாக்குகளை அனைவரையும் பெறச் செய்வோம்.

மூவிரண்டு நிலை (ஆறு குணங்கள்) என்னும் நற்குண செயல்பாட்டையே மனமெனும் ஆழ்கிணறு – அதனுள் சுவை நீர் – தண்ணமாய் (ஒரு பக்கம் உள்ள பறை) ஒலிக்கும் அகப்பொருள் தின்மையாகக் (வலிமை) கொண்டிடும் உறுதி என்பார் வேதாள மாமகரிஷி.

மனக்கிணற்றின் நீர்… “எண்ணத்திற்கொப்ப” சுவை மாறு கொண்டிடும் இயல்பு கொண்டிட்டது. ஆழம் கண்டிட முடியாத அந்த மனக்கிணற்றினுள் “வண்ணமாய்… அழகிய ஒரு பொருளும் உண்டு.
1.அதுவே “பால் கடல் அமுது” எனும் நிலையாம் “ஆத்ம பொக்கிஷம்..”
2.அதனைப் பெற்றிடும் உறுதி… மூவிரண்டு முனை கொண்டிட்ட பொருள் பற்றிக் கொண்டிடல் வேண்டும்… அதுவே நற்குணங்கள்.

அதாவது… நற்குணங்கள் கொண்டு தான் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்க முடியும். கிணற்றில் விழுந்துவிட்ட வாளியைப் “பாதாள குறடு (கரண்டி)” கொண்டு எடுக்கின்றோம் அல்லவா.
1.அதுவே தன்மையாக ஒலிக்கின்ற அகப்பொருள்
2.அகப்பொருளைப் பற்றினால் ஒளி நிலை பெறுவது தன்னுள் சாஸ்வதம்.
3.“தனது உடலின் வால் தனைக் கண்டு மிரண்டு ஓடி” இடம் தேடி அலைகின்ற பூனை போல்
4.நம் மனதின் நிலை செயல் கொள்ளல் தகாது
5.அறிந்துணர்தல் என்ற “ஞானத்தைக் கொண்டு” நிலை நிற்றலே விவேகம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனுக்கு மனிதன் இங்கே நாம் நேரடியாகப் பழகி ஒருத்தருக்கொருத்தர் நண்பர்கள் என்று உதவி செய்து கொண்டால் உதவி செய்த உணர்வு இரண்டும் கலந்து வெளி வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கிறது.

இது அலைகளாக மாறும்போது… நீங்கள் அமெரிக்காவில் இருந்தாலும்
1.நண்பன் ஒரு நல்ல காரியம் செய்யும் பொழுது
2.நான் அமெரிக்காவிற்கு வந்ததே அந்த நண்பனின் உதவியால் தான்…! என்று எண்ணும்போது
3.உடனடியாக அங்கே அந்த நண்பனுக்கு விக்கலாகின்றது.

அதே சமயத்தில் ஒரு நண்பருடன் சந்தோஷமாக இருந்து பழகி பின்னாடி.. தொழில் விஷயத்தில் ஒருவருக்கு ஒருவர் பகைமையாகி விட்டால் இருவருமே என்ன நினைக்கின்றோம்…?
1.இவரால் தான் நஷ்டமானது… இவனெல்லாம் உருப்படுவானா…? என்று
2.இருவருக்குள்ளும் இந்த உணர்வுகள் கூடி.. இரு உடலிலிருந்தும் இப்படிப் பரவச் செய்துவிடுகின்றோம்.

அடுத்து இவர் அமெரிக்காவிற்குச் சென்றாலும் இன்னொரு நண்பர் இங்கே வருகின்றார். நான் அமெரிக்காவில் உன் நண்பரைப் பார்த்தேன். அந்த நண்பர் உயர்ந்த நிலை பெற்று நல்ல நிலையில் இருக்கின்றார் என்று சொல்கிறார்.

சொன்னவுடன் பாவிப்பயல்… எனக்கு மோசம் செய்தவன் அங்கே போய் விட்டானா…! அவன் எல்லாம் உருப்படமாட்டான்…! என்று அந்த உணர்வை வெளிப்படுத்தினால்
1.அது அங்கே சென்று அவனுக்குள் ஊடுருவுகிறது.
2.ஏற்கனவே பதிவானதன் துணை கொண்டு இந்த வீரிய உணர்வுகள் அவரின் உடலில் பாயத் தொடங்குகின்றது.

அந்தச் சமயத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால்… இந்த உணர்வுகள் அந்த நேரத்தில் இது பாய்ந்தால்… உறுப்புகள் சீராக இயங்காதபடி புரை ஓடும். புரை ஓடும்போது நுரையீரல் பாகம் ஒரு சோற்றுப் பருக்கை இழுத்து விட்டால் போதும். திக்கு முக்காடச் செய்துவிடும்.

உதாரணமாக வாய்க்காலில் ஒரு பக்கம் தண்ணீர் போகின்றது என்றால் அதில் ஒரு பக்கம் சிறு ஓட்டை விழுந்தால் போதும்…!
1.அதன் வழி தண்ணீர் சென்றால்…
2.தண்ணீர் வரும் நிலைகள் இருந்து காற்றின் நிலைகள் வரும்.
3.ஜிர்ர்..ர்ர்ர்… என்று இழுக்கும்…. இந்த இடத்தில் சுழிக்காற்று வரும்.
4.இனம் புரியாத நிலையில் அந்த பக்கம் ஒரு ஓசையும் வரும்.

அதைப்போலத்தான் இங்கே இந்த உணர்ச்சியின் தன்மை வரப்படும்போது குறுக்காட்டி நுரையீரலில் அந்த உணர்வின் வேகம் கூடிய பின் நாம் உணவாக உட்கொள்ளும் நிலையை இடைமறித்து வேகமாக இழுத்துவிடும்.

நுரையீரலில் உணவுப் பொருள் சென்று விட்டால் நாளடைவில் நாற்றமாகி அதிலே புழுக்கள் உருவாகி நுரையீரல் பின்னமாகிக் கடும் நோயாகி… மரணமடையவும் நேரும்.

அதே போல் ஒரு காரையே ஓட்டிச் சென்று கொண்டிருந்தாலும் கண் கொண்டு முன்னாடி உற்றுப் பார்த்து… உணர்வினை நுகர்ந்தறிந்து இந்த வாகனத்தைச் சீராக ஓட்டினாலும்..
1.ஓட்டிக் கொண்டிருக்கும் போது இங்கே நண்பர் வந்து
2.உன் நண்பர் அமெரிக்காவில் நன்றாக இருக்கின்றான் என்று சொன்னால்
3.அவன் எங்கே சென்றாலும் தொலைந்து போவான்… அடிபட்டுச் சாவான்…! என்று எதாவது உணர்வினைச் சொன்னால் போதும்.

அந்த உணர்வின் தன்மை இங்கே ஊடுருவி… அவன் உணர்வை நுகரக்கூடிய தன்மை வந்து…
1.அதே சமயத்தில் இந்த இரண்டு எண்ணங்கள் கலந்து உயிரிலே பட்ட பின்
2.வேகமான உணர்வுகள் வந்து சிந்திக்கும் தன்மை இழந்து
3.வாகனத்தைச் சீர்படுத்த முடியாத நிலையில் எங்கேயாவது ஆக்சிடெண்டாகும்.

எதிரே ஒரு மனிதர் வந்தாலும் பிரேக்கை அணைக்கும் தன்மை இழந்துவிடும். மோதியபின் தான் தனக்குள் தெரிய வரும். இப்படி எல்லாம் மனிதனை அந்தச் சந்தர்ப்பங்கள் இயக்கிடும் நிலை வருகின்றது.

உதாரணமாக கர்ப்பத்தில் குழந்தை இருக்கின்றது என்று வைத்து கொள்வோம். அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் யாராவது சாபமிட்டு இருந்தால் அதன் வழியில் அந்தக் குடும்பத்தின் சார்புடையோர் வேதனைப்பட்டால் போதும்.

இப்படிச் செய்தார்களே… அவர்கள் குடும்பம் உருப்படுமா…! என்று இந்த உணர்வின் சாப அலைகள் கர்ப்பிணித் தாய் நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய இந்தச் சிசுவிற்கும் பாதிப்பாகிறது.

அந்த நேரத்தில் வீட்டிற்குள்ளும் ஒரு நெடி கலந்த உணர்வுகள் வரும்.

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பியோ சகோதரர்களோ வீட்டிற்குள் பாகம் பிரிப்பதில் தவறான முறையில் பிரிக்கப்பட்டால் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அது வீரியம் கொண்டதாக மாறுகிறது.

கண்ணின் நினைவலைகளை இங்கே ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் போது அந்த எல்லையில் வரும்போது இந்த உணர்வின் தன்மை இங்கே வருகின்றது. அதே எண்ணத்தின் உணர்வுகளை இங்கே பரப்புகின்றது.

இத்தகைய உண்மைகளை எல்லாம் அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்து அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் பெற்றவன் என்பதனையும் உணர்த்தி அகஸ்தியனின் ஆற்றலை நாம் அனைவரும் பருக வேண்டும் என்று தெளிவாக்கினார் குருநாதர்.

எந்தப் பிள்ளையை வளர்க்கச் சொன்னார்கள் ஞானிகள்… எந்தப் பிள்ளையை நாம் வளர்த்துக் கொண்டுள்ளோம்…?

 

சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று நம் சஸ்திரம் கூறுவதன் பொருள் என்ன…?

ஒரு நோயாளி வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம்.
1.அந்த உணர்வுகள் சித்திரம்… நுகரும் போது அதற்கொப்ப எண்ணங்கள் வருகின்றது
2.நம் உடலுக்குள் அது அணுவாக (புத்திரனாக) உருவாகின்றது.

அந்த வேதனை என்ற கணக்குகள் அதிகமாகும் போது உடலில் விஷத்தின் தன்மைகள் அதிகமாகி உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தன்மை கொண்ட பாம்பாக உயிர் மாற்றி விடுகின்றது.

அதாவது நோயாளி வேதனைப்படுகிறார் என்ற எண்ணம் அதிகமாகும் போது சித்திர புத்திரனின் கணக்காகி… அந்த எண்ணம் நமக்குள் எமனாக வருகின்றது.

என்னை இப்படிக் கோபிக்கின்றானே… பாவிப்பயல் இப்படிச் செய்கின்றானே என்ற உணர்வின் தன்மை தனக்குள் எடுத்தால்… சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம்
1.எந்த மனித உடலை உற்றுப் பார்த்து இந்த உணர்வை நுகர்ந்தோமோ அதே வேதனையை நமக்குள் எடுத்து…
2.உடலை விட்டுச் சென்ற பின் அவன் உடலுக்குள் சென்று அங்கேயும் வேதனையை உருவாக்கி விஷத்தினைக் கூட்டி
3.அங்கேயும் நரக வேதனையைத் தான் படும்.

அந்த உடலில் இருக்கும் மகிழ்ச்சிகள் நீங்கி அவன் உடலில் விஷத்தைத் தான் உருவாக்கும். விஷத்தை உருவாக்கிய பின் அந்த உணர்வின் வழிப்பிரகாரம் அந்த எண்ணமே எமனாக மாறி அந்த உணர்வுக்கொப்ப இதைப் போன்று மாற்று உடல்களை உருவாக்கி விடும்.

அதனால் தான் சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது அந்த எமன் யார்…? “நமது எண்ணம்தான்…!”

உதாரணமாக ரோட்டிலே ஒருவன் வேதனைப்படுகின்றான் உற்றுப் பார்க்கின்றோம்… நுகர்கின்றோம். கண்ணிலே பார்க்காமல் செல்ல முடியுமா…?

பார்த்தவுடனே அந்த வேதனைப்படும் உணர்வுகள் “அது சித்திரம்” எனக்குள் வந்து அது புத்திரனாக மாறுகின்றது அதே வேதனையை உருவாக்குகின்றது. நான் அதைப் பிள்ளையாக எடுத்து வளர்க்க ஆரம்பிக்கின்றேன்.

ரோட்டிலே கிடந்தான் வேதனைப்பட்டான் துயரப்பட்டான் என்று
1.அவனுடைய உணர்வை எடுத்துச் சாப்பாடாகக் கொடுத்து இந்த பிள்ளையை
2.அவனால் நுகர்ந்து உடலுக்குள் உருவான அணுக்களுக்கு உணவாக்க கொடுத்து வளர்க்க ஆரம்பிக்கின்றோம்.

இப்படிப்பட்ட உணர்வை வளர்த்தால் இதுவே நமக்குள் “நோய்” என்ற எமனாக வருகின்றது

எந்த வேதனைப்பட்டு அவன் வேதனையால் துடித்தானோ அல்லது மடிந்தானோ அதன் வழிப்படி அதே அளவுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும்…! என்பதைத்தான் சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று கதையாக எழுதி நமக்கு இந்தப் பேருண்மையை ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

எல்லாம் படிக்கிறோம் அல்லவா…! ஆனால் படித்துவிட்டுச் சித்திர புத்திரன் எங்கே இருக்கின்றான்…? என்றால் அவன் எங்கேயோ இருக்கின்றான்… நாம் செய்யும் தவறுகளைக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றான்… எங்கேயோ இருக்கின்றான் என்று எண்ணுகிறோம்
1.ஆனால் “நமக்குள்ளே தான் அவன் இருக்கின்றான்…” என்பதை மறந்து விட்டார்கள்
2.அதைத்தான் ஞானிகள் நமக்கு நினைவுபடுத்துகின்றார்கள்

வேதனைப்படுவோர் உணர்வை நுகர்கின்றோம் உயிரிலே பட்டபின் விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான் உடலுக்குள் செல்வதற்கு….!

உள்ளே சென்ற பின் “ஓ… பிரணவம்” அந்த வேதனைப்பட்ட உணர்வு பிரம்மமாகின்றது. ஏனென்றால் நுகர்ந்த உணர்வு இரத்தத்தில் கருவாகின்றது. பின் அந்த உணர்வே இயக்கச் சக்தியாக மாறும்பொழுது பிரம்மம் ஆகின்றது.

அவன் எத்தனை வேதனைப்பட்டானோ அந்த வேதனை உருவாக்கும் அணுவாக உருவாகிறது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி…!
1.ஐயோ… அம்மா… என்று அவன் கத்துவான்
2.அதை உணர்வு இங்கே ஆன பின் இந்த உடலிலும் ஐயோ… அம்மா… என்ற நாதங்களைச் சொல்லும்படி வைக்கும்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா.

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் பிரம்மம் ஆன பிற்பாடு அந்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் கலந்து உடலுக்குள் சிவமாகின்றது. சிவமாக மாறும்பொழுது உடலில் வேதனை…!

இந்த உடலில் நல்லதை உருவாக்கும் அனைத்துமே அலறத் தொடங்குகிறது. ஐய்யய்யோ இந்திரலோகத்தில் இரணியன் புகுந்து எங்களுக்கு தொல்லை கொடுக்கின்றான் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சொல்வதாக இப்படி ஒரு கதை எழுதி நமக்கு உண்மை உணர்த்துகின்றனர் நாம் புரிந்து அருள் வழி வாழ்வதற்கு.

ஆனால் இதை விளக்கம் கொடுப்பவர்கள் இந்திரலோகமும் தேவர்களும் “எங்கேயோ இருக்கின்றார்கள்…” என்று தான் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

ஆனால் உணர்வின் இயக்கம் இந்த உடலுக்குள் எப்படி நடக்கின்றது…? என்று தான் சாஸ்திரங்கள் நமக்குக் காட்டுகின்றது. அதை நாம் புரியாத நிலையில் எங்கெங்கோ கொண்டு போகின்றோம்..

ஆனால் இத்தனையும் ஞானிகள் காட்டிய வழியிலே குருநாதர் சொன்ன முறைப்படி இதை நான் சொல்லும் பொழுது “நான் சொல்வது புரியவில்லை” என்று சொல்கின்றார்கள்.

மற்றவர்கள் சொன்ன கதையைப் பதிவாக்கி வைத்திருக்கின்றார்கள்… அது அவர்களுக்குள் வலுவாக இருக்கின்றது. இப்பொழுது நான் சொல்லிக் கொண்டு வருவதைக் கேட்டு விட்டு
1.சாமி சொல்வது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிறையப் பேர் இப்படித் தான் சொல்கின்றார்கள்
2.எனக்குப் புரியவில்லை என்று சாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள்.

இந்த தத்துவங்கள் எல்லாம் இயற்கையின் நிலையில் “எண்ணங்கள் எப்படி உருவானது…?” அன்று அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட இராமாயணம்.

1.அகஸ்தியன் கண்ட உண்மைகளை அவன் உணர்த்திய உண்மையைத்தான் வான்மீகி வெளிப்படுத்தினான்
2.அந்தத் தத்துவங்களைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அத்திரி மாமகரிஷி நமக்குக் கொடுக்கும் “மெய்ஞான விழிப்பு”

 

1.உன்னைக் கண்டு திகைப்பின் வசம் ஆழ்த்திடக்கூடாது
2.இது வலைபடு பாசமாக உட்கிடந்த நிலை…! அந்நிலை நீக்கிடவே தவத்தின் கடுமை காட்டினோம் (அத்திரி மாமகரிஷி சொன்னது)

அஞ்சற்க…! யாரும் காண முடிந்திடாத நிலையே உமக்குக் காணும் வாய்ப்பு கிடைத்தது. “அதிபாசம்” கொண்டு செயல்படுகின்ற உலகோதய வாழ்க்கை முறை வலியினைப் போன்றது. அவ்வலை பாசமாக உட்கிடந்த நிலை.

உலகப் பிடிப்பினில் அகப்பட்டே விடுபடாத் தன்மையாக இருந்திட்டாலும்
1.பாசத்தின் வலையையே பாதுகாவல் எனப் போர்த்திக் கொண்டிட்டவன்
2.அவனுள் கிளர்ந்து எழுகின்ற அதி ஆவேச உணர்வுகள் நச்சு அரவம் (நஞ்சு கொண்ட பாம்பு) போல் தோற்றம் காட்டி…
3.தான் எங்கு வளர்ந்து… அந்த வளர்ச்சியின் முதிர்வை அடைந்ததோ…
4.சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவதைப் போல் அந்தக் குண நிலைகள் அவனையே தீண்டிட வருகின்றது.

ஆகவே…
1.வலைக்குள் விழிப்புடன் இருப்பது வேறு…
2.அதுவே (வலை) சாஸ்வதம்…! என எண்ணிப் பாதுகாவல் எனக்கொண்டு கிடந்து உறங்குகின்ற செயல் வேறு.

உலக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கி அகப்பட்ட தன்மையையே உறங்குகின்ற செயல் என்று உரைக்கின்றோம்.

உலோகதய நிலையாக… அதன் பிடிப்பில் அகப்பட்டுவிட்ட மனது என்ன செய்யும்…?
1.தீதெண்ண குணங்கள் என்னும் நச்சரவம் தீண்டிட வருகின்றதே என்று
2.சங்கட உணர்வுகளை மேன்மேலும் வளர்க்கும் நிலை… அந்த நச்சரவத்திற்கே பால் வார்த்திடும் செயலினை ஒத்தது.

அந்தத் தீதெண்ண நச்சரவத்தை வளர்த்த செயலில்… அது மீண்டும் தீண்டிட வருங்கால்… பாசமெனும் பிடிப்பின் நிலையை மனிதன் “உலகோதய நாட்டம்” என்று எங்ஙனம் பலப்படுத்துகின்றான் தெரியுமா…?

அதிபாசம் எனும் உணர்வுகளின் தன்மையை…
1.ஒளியும் காற்றும் உள் சென்றிடாத் தன்மைக்குப் பலப்படுத்திடும் சுவர் எடுத்து…
2.அதையே சுகம் என அதனுள் கடந்து உறங்கிட்டாலும்…
3.நச்சரவம் வாழ்ந்திடும் புற்று… “எது தனக்குப் பாதுகாவல்” என எண்ணி மனிதன் உலகோதய நாட்டத்தில் செயல் கொண்டிட்டானோ…
4.அந்த இடமே புற்றாகக் கிளைத்து… அந்த நச்சுப்புற்றாக வளர்ந்துவிடுகிறது…!

ஆகவே… அதனுள் எழுகின்ற நச்சரவம் உன்னைத் தீண்டிடும் முன் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்.

1.அந்த நிலையை விட்டு வெளிவந்து பார்
2.தெய்வத்தன்மை பெற்றிடும் சிறப்பு ஒன்று கிட்டிடும்.

நல்ல சந்தர்ப்பத்தை இழந்துவிட்டால் மண்ணினுள் வாசம் செய்யும் பிராணியான எலி போன்று (காம விகார குணங்கள்) அதி பாசம் உட் சென்றிடவே வழி அமைக்கும்…. இதனை உணர்ந்து நீ நட…!

துருவ நட்சத்திரத்தின் முழு உண்மைகளை அறிந்த பின்பு தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறேன்

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வதெல்லாம் நம் உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் பார்ப்பது கேட்பது இவை அனைத்தையும் ஜீவ அணுவாகப் பெறும் கருவாக உருவாக்கி விடுகின்றது.

நாம் எண்ணியது அனைத்தும் அணுத்தன்மையாகி நம் உடலாகச் சேர்ப்பதைத் தான் ஓ…ம் ஈஸ்வரா…! என்றும் உடலுக்குள் எத்தகைய குணங்களைச் சேர்த்து மனிதனாக உருவாக்கியதோ அவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எந்தெந்தக் குணங்களை நாம் நுகர்ந்து அறிகின்றோமோ அறிந்த உணர்வுகள் அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலாக உருவாகி விடுகின்றது.

அதே சமயம் நல்லது கெட்டது என்று எத்தனை வகையிலே நாம் நுகர்ந்தறிகின்றோம். ஆனால் அவை அனைத்தையும் நமது உயிர் அந்த குணத்தின் அணுவாக உருவாகும் கருவாக உருவாக்கி விடுகின்றது.

நம் உடலில் நல்ல அணுக்கள் உருவானால் மகிழ்ச்சி என்ற உணர்வு வருகின்றது. வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்துவிட்டால் வேதனை உருவாக்கும் கருவாக உருவாகிவிடுகின்றது.

எந்தெந்த உடலில் இருந்து எத்தகைய குணங்கள் வெளிப்பட்டதோ அதை அனைத்தையும் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஊழ்வினை என்று வித்தாக நமக்குள் அமைந்து விடுகின்றது
1.நாம் நல்ல குணங்கள் கொண்டு பலதைச் செய்தாலும்
2.தீமையான குணங்களைப் பிறர் வெளிப்படுத்தும் போது நாம் அதை நுகர்ந்து விட்டால்
3.அதன் உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிவிட்டால் நாமும் தீமை செய்வோராகவே மாறி விடுகின்றோம்.
4.அதே சமயம் நமக்குள் நோய்களும் வந்து விடுகின்றது.

இது போன்ற நிலைகள் வருவதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. மனித வாழ்க்கையில் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று வடக்கு திசையில் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நமது பூமி கவர்ந்து பரவச் செய்து கொண்டே உள்ளது.

சாதாரண மனிதனுடைய வாழ்க்கையில் அவர்கள் பேசும் பேச்சுக்களை நாம் கேட்டுணர்ந்தால் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாகி விடுகிறது.

ஆனாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவு இல்லை. நமது குருநாதர் அதை எவ்வாறு நம் உடலில் பதிவாக்க வேண்டும்…? என்று கூறியிருந்தார்.

அதன் வழி கொண்டு அவர் காட்டிய நெறிகள் கொண்டு பத்து இருபது வருடமாகக் காடு மேடெல்லாம் அலைந்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்…? என்று
2.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன அந்த முழு உண்மையின் உணர்வுகளை அறியும்படி செய்து
3.அதன் பின் அதனை வரிசைப்படுத்தி எவ்வாறு ஆனது…? என்று உணர்ந்த பின்
4.எனக்குள் அது பதிவாகி அதை நினைவு கொண்டு நுகறும் ஆற்றல் வந்தது (ஞானகுரு). அதனைக் கவர்ந்து கொண்டேன்.

குருநாதர் எனக்கு எப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பதிவு செய்தாரோ… அதே போன்று தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறேன்.

உபதேசிக்கும் போது நீங்கள் கூர்ந்து எந்த அளவிற்குக் கேட்கின்றீர்களோ அந்த அளவுக்கு அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அதன் மூலம்… உங்கள் வாழ்க்கையில் வரும் இருளினை அகற்றி மெய்ப்பொருள் கண்டுணரும் உணர்வின் சக்தி நீங்களும் பெற வேண்டும் என்ற அந்த ஆசையிலே தான் இதை உபதேசித்து வருகின்றேன்.

அந்தச் சக்தியை உங்களுக்குள் பெருக்கும் மார்க்கம் தான் குருநாதர் காட்டிய அருள் வழி தியானம்.

1.உபதேச வாயிலாகப் பதிவான இந்த உணர்வின் தன்மையை அடிக்கடி நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து
2.அதை ஏங்கிப் பெற்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் பெருக்க முடியும்.

இல்லற வாழ்க்கையில் இருளை அகற்ற முடியும் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும் பெற முடியும் இந்த மனித வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வாக வளர இது உதவும்.

மக்களின் கணிப்பும்… மகரிஷிகளின் கணிப்பும்…!

 

வினைக்கு அஞ்சிடுவோர் வலைக்குள் உட்படுவோர் (சிக்கப்படுவோர்) ஆயினர். ஓர் சாதனையின் நிகழ்வே சகாப்தம் காட்டியது எனில்
1.ஆத்ம வலு கூட்டிடும் செயலில்… பெற்றுக் கொண்ட வலு
2.உலகினையே ஆட்டிடும் சித்தனாகச் செயல்படும் காரிய நிகழ்வுக்கு
3.அடிப்படையே “நம்பிக்கை தான்…”

எப்படி என்றால்
1.வெளியில் நிகழ்வுறும் சம்பவங்களால்… “எண்ணத்தின் நிலை கருத்தின் தெளிவை மாறுபடுத்திடும் என்பது” மக்களின் கணிப்பு
2.எண்ணத்தில் விளைந்திடும் செயல்களே… “நம்மைச் சுற்றி நிகழ்ந்திடும் சம்பவங்களாய் நடைபெறுதல் என்பது” மகரிஷிகளின் கணிப்பு.

அரைத்த நெல் மாவை வெளி வாசலில் உலர்த்திடும் பொழுது அந்த மாவைக் கரைக்க மழை வந்துவிட்டால் நம்மை அழைத்து உரைப்பது எது…?

மலை கரைத்திடும் மாவினை எடுப்பாயா…? அன்றே மழை பெய்யும் முன் அதை விரட்டி விடுவாயா…?

வேதாள மகரிஷி அன்று உரைத்த சொல்லில் இன்றைய உலகின் நடைமுறையில் தெளிந்து ஆட்கொண்டவர்கள்… ஆத்ம வலுவின் நம்பிக்கை கொள்பவர்கள்… கொள்ளப்படும் எண்ணங்கள் அரிதாகி வருகின்றது.

சூரசம்ஹார நிலை என்று காட்டியது மனத்தில் எழும் துஷ்ட குண சம்ஹாரம் தானே.

உடலின் தாவு என்றிடும் செருக்கு மிகுந்து விட்ட கால நிகழ்வு… இடருகின்ற சிறு கல் அடலேறு போன்ற நடையை பிரளச் செய்திடில்
1.இடருகின்ற அந்தக் கல்லை நோவதில் பயன் என்ன…?
2.வலிமையான ஆத்ம வலுப்பெற்றவர் முன் மற்ற குணத்தின் செயல்கள் அனைத்தும் காற்றினிலே சருகு.
3.இடர் வராது இருக்கின்ற வழியைக் காண்பதே உயர்வாம்… “குணம் வளர்க்கும் ஞானத்தின் வலுவில் அன்றோ…!”

முள்முனை முள் எடுப்பதற்கே காப்பான் ஜெபம் வேண்டும் என்கிறோம். பட்ட நிலை சிறிது தான் என்றாலும்… அதனால் உண்டான வேதனையின் வலிமை பெரிது என எண்ண வேண்டியதில்லை.

நம் நினைவுகளுக்குண்டான “சரியான சுவிட்ச்… கண்கள் தான்”

 

சந்தர்ப்பத்தினால்… குடும்பத்தில் கஷ்டமும் நஷ்டமும் நமக்கு அதிகமாக வந்து விட்டால் “எதிரி நமக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்…” என்று அந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் கஷ்டம் அதிகமாகிறது. அடுத்து மந்திரவாதிகளிடம் செல்கின்றோம்.

எனக்கு இப்படியெல்லாம் இவன் கெடுதல் செய்தான் என்போம். சரி யாகத்தை வளர்க்க வேண்டும்… இதற்கு 100… அதற்கு 100… என்று இப்படி வரிசையாக நூறு நூறாகச் சொல்லி அவன் பணத்தை வாங்கிக் கொள்வான்.
1.இதைக் கொண்டு இன்ன இடத்தில் புதைத்து வைத்து விடுங்கள்… அவன் கெட்டுப் போவான் என்று சொல்வான்
2.கெட்டுப் போவதற்காக வேண்டிக் காசு கொடுத்து மந்திரத்தைச் சொல்லி செயல்படுத்துகின்றோம்.

கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…? அலுங்காமல் இன்னும் கொஞ்சம் வேதனையைத் தான் உருவாக்கும்…!

நாம் நினைக்கின்றோம்… அவன் கெட்டுப் போக வேண்டும் என்று.
1.அவனும் கெடுவான்… செய்ய நினைத்தவனும் கெடுவான்.
2.செய்வினை செய்தவர்கள் யாராவது தப்பியிருக்கின்றார்களா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!
3.தீமையைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர நன்மையின் உணர்வுகளை நாம் பெற முடிவதில்லை

இது எல்லாம் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

அதனால்தான் குருநாதர் எம்மைச் சாக்கடையில் அமரச் செய்து உபதேசம் கொடுத்தார். அந்தச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பன்றி எப்படி தள்ளுகின்றதோ… அது போல் உனது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.

ஏனென்றால் இந்தக் காற்று மண்டலமே ஒரு சாக்கடையாக இருக்கின்றது. இந்தச் சாக்கடைக்குள் இருந்து நீ நல்ல பொருளை எடுக்க வேண்டும்.
1.அதற்குத் தானப்பா இந்த உபதேசமே கொடுக்கின்றேன்…!
2.அந்த இடத்திலே அவர் சொன்ன முறைப்படி என்னை எண்ணும்படி சொல்கின்றார் குருநாதர்.
3.அவர் சொன்ன முறைப்படி எண்ணும் போது அந்த நாற்றம் மறைகிறது.

சில நேரங்களில் என்னுடன் யாராவது பேசிக் கொண்டிருந்தாலும் அருகில் நாற்றம் இருந்தால் எனக்குத் தெரிவதில்லை. ஞாபகப்படுத்தினால் தான் எனக்குத் தெரிய வரும். சாக்கடையாக இருக்கின்றது… சாமி இங்கே நின்று பேசிக் கொண்டிருக்கின்றார் என்று கூட நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் அதை நான் நினைப்பதில்லை அது என்னைத் தாக்குவதுமில்லை. ஆனால் கண்ணிலே பார்த்து விட்டால் விலகிச் சென்று விடுகின்றேன்.

சில பேர்… வந்த உடனே நுகர்ந்து பார்ப்பார்கள்… சங்கடம் சலிப்பு எல்லாம் வந்த உடனே ஐயோ நாற்றமாகின்றது என்பார்கள்.

இதுகள் எல்லாம்
1.நம்முடைய உணர்வினை எதிலே செலுத்துகின்றோமோ அதன் வழி தான்
2.இந்த உயிரும்… நம் உடலில் உள்ள காந்தப்புலனும்… கண்ணுக்கு நினைவு வரப்படும் பொழுது…
3.அந்த உணர்வு தான் ஆன்மாவில் முன்னணியில் நிற்கும்… சுவாசித்து அதுவே இயக்கும்.

முன்னிலையில் நம் ஆன்மாவில் இருப்பது எதுவோ இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாக இருக்கின்றது. நம் கண்ணுக்குப் பெயரும் பரமாத்மா என்று தான் ஞானிகள் வைத்திருக்கின்றார்கள். அதனுடன் இணைந்தே நாம் வாழுகின்றோம்.

உணர்வுகள் ஒவ்வொன்றாகச் சேர்த்து நம் ஆன்மாவாக அதை மாற்றி உடலாக மாற்றிவிடும். நமது கண் பரமாத்மாவுடன் கலந்து தான் இருக்கின்றது. எதை நினைவுபடுத்துகின்றோமோ உடனே அது வருகின்றது

டி.வி.க்கு ஆண்டன்னா வைத்து இணைப்பு கொடுக்கின்றார்கள். எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ… காற்றிலிருந்து பிரித்து அந்தப் படக் காட்சிகளைக் காட்டுகின்றது.

1.நமக்கு எது ஆண்டன்னா…? நமது கண் தான்…!
2.அதன் உணர்வின் வழிப்படித் தான் நுகர்ந்து உயிர் வழி உணர்த்துகின்றது.
3.இந்த ஆண்டன்னா பழுதாகிவிட்டால் எந்த ரெக்கார்டை நீங்கள் எடுக்க முடியும்…?

அடிக்கடி வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் விஷத்தின் தன்மை கருவிழி ஈர்க்கும் சக்தி குறைகின்றது அதனால் நல்ல அணுக்களுக்கு வலுவான சக்தி கிடைப்பதில்லை.

கண்ணின் தன்மையிலே விஷத்தன்மை அதிகமாக படர்ந்து விட்டால்
1.விஷத்தின் உணர்வையே மீண்டும் இழுத்துக் கவர்ந்து வேதனை என்ற உணர்வுகளை ஊட்டிக் கொண்டே தான் இருக்கும்.
2.ஏனென்றால் கண்ணின் நரம்பு மண்டலம் அவ்வளவு சீக்கிரம் பாதித்துவிடுகிறது.
3.விஷத்தைக் கவரும் சக்தி தான் வருகின்றது.

அதிகமான வேதனைப்பட்டவர்களைப் பார்த்தால் தெரியும். அவர்கள் வாழ்க்கையில் நலிந்த சொல்லும் நலிந்த செயலும் வரும்… நரக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்ட தீமை வரப்படும் பொழுது கண் பலவீனம் ஆகிறது. அந்தச் சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் சாமானை ஒருவன் திருடிக் கொண்டு போவான் என்றால் அவனை எண்ண வைக்காது… யாரோ செல்கின்றார்கள்…! என்று தான் தெரியும்.

பார்வை நன்றாக இருக்கப்படும் பொழுது ஒருவர் வித்தியாசமாகச் சென்றால் கூடத் தெரிய வருகின்றது. நடையைப் பார்த்த உடனே என்ன… ஏது…? என்று திரும்பிப் பார்க்கின்றோம்.

நம் பொருள் தெரிகின்றது… அது அவன் கையில் இருக்கும். ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது பார்க்க முடியாது. மகாபாரதத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

1.கண்ணன் உபதேசிக்கும் உணர்வின் தன்மைகொண்டு தான் அர்ஜுனனுக்கு வலு.
2.அப்போது அர்ஜுனன் எல்லா வகையிலும் தெளிவாக இருக்கின்றான்

ஆனால் கண்ணன் பரலோகத்திற்குச் சென்று விடுகின்றான் அர்ஜுனனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடி… ஓட்டிக்கொண்டு செல்கின்றார்கள்.

இவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை… ஆக அவனால் பார்க்க முடியவில்லை யாரோ எவரோ…! என்ற நிலையில் தான் இருக்கின்றான். எவ்வளவு தெளிவாக ஞானிகள் நமக்கு உண்மையை அறிந்து கொள்ளும்படியாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

மகாபாரதத்தைப் படித்தவர்கள் இதை வேறு விதமாக அர்த்தம் கற்பிக்கின்றார்கள். “கண்ணன் இறந்துவிட்டான்… அதனால் அர்ஜுனனுக்குச் சக்தி இல்லை…” என்று இப்படித்தான் அவர்கள் சொல்கின்றனர்.

நீங்கள் வேதனையுடனும் சோர்வுடனும் இருக்கப்படும் பொழுது கண்ணின் பார்வைகள் குறைகிறது. கண்ணுக்கு முன்னாடி திருடன் சென்றாலும்… வீட்டில் இருக்கும் பொருளை எடுத்துச் சென்றாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறிது தூரம் சென்ற பிற்பாடு தான் யாராவது பார்த்து… என்ன…? உங்கள் வீட்டிலிருந்து பொருளை எடுத்துப் போகின்றான் திருடன்…! என்று சொல்லும் போது தான். ஆ…! என்று அப்பொழுதுதான் நினைவு வரும்.

1.நம்முடைய உணர்வுகள் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைத் தான் தத்துவங்களும் சாஸ்திரங்களும் தெளிவாக நமக்குக் காட்டுகின்றது.
2.அதைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் அவசியம்

நஞ்சை அமுதமாக்கிடும் “நீலி”

 

உணர்வுகள் முன்னறிவிப்பாக அனைத்தும் தெளிவுபட… அறிவில் பொருந்துதல்… அதுவே உயர் ஞான வளர்ப்பின் சித்து.

கனியாகும் முன் காயின் நிலை கண்டு… மனத்தின்கண் நினைப்பது கனிந்து விருந்தாக்கும் என்று நினைப்பதே நன்று.

வாயுள் படும் அந்தப் பொருளை (கனி) அதன் சுவையை முன்னறிதல்… சுவாச செயலாக நின்று…
1.உயிரின் உயர் நிலை கண்டு உண்டு களித்திருத்தல்…
2.ஞானமாகப் பயிர் வளர்த்திடும் வித்தகம் என்று பூரணத்துள் ஞான திருஷ்டி ஏற்பட்டுவிடும் பாங்கு வளர்ப்பின் நிலையின் “ஓர் அனுபவம்…”

இதுவே பிருகு மகரிஷி உண்டு… கண்டே உண்டு… களிப்பு எனும் பேரானந்தப் பெருநிலை அனுபவித்தல் தன்மையாக வேதாள மகரிஷி உரைத்திட்டது.

சரீரத்தின் தன்மைகள் கண்டு காற்றலையில் ஈர்த்திடும் விஷத்தின் குணங்களும் அன்றி… சரீரத்தில் நேரடியாக உட்கொண்டு விடும் விஷ அமிலத்தன்மைகள் எதுவாக இருந்தாலும் “நீலி கொண்டு தான்” சித்தர்கள் சரீர வைத்தியத்தில் அனுபோக முறைகள் கண்டு உரைத்துப் போயினர்.

நீலன் என்று உரைப்பது மனிதன் பெற்ற இந்தச் சரீரத்தையே…!
1.தவசியாய்ச் செயலுறும் பாங்கில்… விஷ அமிலத்தன்மைகளின் ஈர்ப்பில் தாக்குண்டு
2.அதனால் பெற்றிடும் அக்குணத்தன்மைகளை “அமுதமாக்கிடும் சக்தி நிலை கண்டமே நீலி…”

மருத்துவக் குறிப்புகள் நீலியைக் காட்டும் அந்தப் பெயர் படைத்திட்டது ஓர் மூலிகை. விஷத்தின் முறிவு சக்தியாக அதனை கைக்கொள்வோர் மிக அரிது.

மனமாகிய உலகினில் கண்டு தெளிதல்…
1.நாபியின் நாடிக்குள் பச்சை நிற வண்ணம் காட்டிடும் அமைப்பின் உள் நிலையை நீலி என்று புகழ்வது..
2.பிடரிக்கண்… சக்தி கொண்ட மூலாதாரத்தை நோக்கிடுங்கால்…
3.கிளர்ந்து எழுந்திடும் கந்தன் எனும் ஜோதி நீலியின் உட்பகுந்து சென்றிடும் பொழுதே…
4.எண்ணத்தால் உட்கண்டு தெளிதல் என்பது ஆங்கு செலுத்தப்படும் எண்ணமானது
5.தூய நிலை கொண்டு மாற்று நிலைத் தன்மைகளையும் மாற்றி…
6.உயர் நுண் காந்த அலையின் உயர்வாகச் சேர்க்கும் மனித இனத்தை வழி நடத்திட…
7.வழிகாட்டிடும் அவ்வின மாமகரிஷிகள் உரைத்திட்ட வழி நடத்தலே
8.நீலி கொண்டு நீலன் நஞ்சு முறித்திட்ட “ஸ்தூல… சூட்சம…” இரு நிலையின் “ஒரு பொருள்” காட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.ஈசனால் உருவாக்கப்பட்ட நம் உடலில் தீமையான உணர்வுகள் ஊடுருவி
2.தீமையின் உணர்வுகள் உடலிலே வளர்ந்து விட்டா;ல்
3.உயிரால் உருவாக்கப்பட்ட இந்த ஈசனுக்கே நாம் தீங்கு செய்வது போன்று ஆகும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றித் தங்கதைப் பரிசுத்தப்படுத்துவது போன்று உங்களை அறியாது நல்ல உணர்வுடன் இரண்டற இணைந்த தீமையான உணர்வுகளை அகற்ற
1.“இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கும் இந்தச் சக்தியின் துணை கொண்டு…”
2.நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவீர்கள் என்றால்
3.உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகளோ சாப வினைகளோ தீய வினைகளோ
4.இவை அனைத்தும் அகல உங்கள் எண்ணம் உங்களுக்குள் உதவும்.

இப்படி… அறியாது சேர்ந்த தீமைகளை நீக்க… அந்தத் தீமைகளை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தியை… சப்தரிஷி மண்டலத்தில் விளைந்த உணர்வுகள் இங்கே முன்னாடி படர்ந்திருப்பதை நீங்கள் கவருவதற்கே இதை உபதேசிப்பது.

இதைப் பதிவு செய்து கொண்டபின் நீங்கள் “எப்போது எண்ணினாலும்…” அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்.

உதாரணமாக சாதாரண ஆண்டனா மூலம் லோக்கலில் ஒளிபரப்பு செய்வதை டி.வி. அதை ஈர்த்து நமக்கு முன் படமாகக் காட்டுகின்றது… நாம் காணுகின்றோம்.

இதைப் போல சப்தரிஷிகளின் அருளாற்றல்களை… சக்தி வாய்ந்த நிலையாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கிறோம். அப்பொழுது உங்கள் கண் சக்தி வாய்ந்த ஆண்டனாவாக மாறுகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… அன்பான குணமோ கோப குணமோ தீய குணமோ உங்களுக்குள் ஏற்கனவே பதிவானதை மீண்டும் எண்ணினால் அது கண்ணின் நினைவிற்கே வருகின்றது.

அப்பொழுது அந்த நினைவின் ஆற்றலை யாருடன் பகைமை கொண்டோமோ யாருடன் அன்பு கொண்டோமோ யாருடன் பரிவு கொண்டோமோ யாருடன் பண்பு கொண்டோமோ இதைக் கவர்ந்து நாம் அறியவும் முடிகின்றது.

ஆனால் தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை உங்களைப் பெறச் செய்யும்போது…
1.சக்தி வாய்ந்த ஆண்டனாவாக உங்கள் கண் மாறுகின்றது.
2.அதனின் துணை கொண்டு நமக்கு முன் படர்ந்திருக்கும் மகரிஷியின் உணர்வை நுகரப்படும் போது நம் ஆன்மாவாக அது மாற்றுகின்றது
3.பின் அந்தத் தீமையின் உணர்வை அகற்றும் நிலையாக அது நமக்குள் நிலை பெறுகின்றது.

அந்தச் சக்தியைப் பெறுவதற்குத் தான் இப்பொழுது கூட்டுத் தியானத்தில் பலருடைய உணர்வையும் ஒன்றாக இணைத்து… ஒரு நிலை கொண்டதாக உருவாக்கி.. அந்த உணர்வின் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

இது சக்தி வாய்ந்த ஆண்டனாவிற்குப் பொருந்தும்…!

ஆகவே இதனின் துணை கொண்டு உங்கள் மூதாதையரை எளிதில் விண் செலுத்தவும் முடிகின்றது. ஏனென்றால் மூதாதையரின் உணர்வு தான் உங்கள் உடலே…!

அவர்களை விண் செலுத்திய பின் ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தை எண்ணும் போதெல்லாம்… அந்த உணர்வின் ஆற்றல் இங்கே பதிந்திருக்கும்… படர்ந்திருக்கும்… பேரருள் பேரொளி உணர்வின் தன்மையை எளிதில் நுகர முடிகின்றது.

1.ஆகவே நீங்கள் செய்த இந்தச் சக்தியினை விரயமாக்காது
2.ஒவ்வொரு நாளும் இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் சப்தரிஷி மண்டலங்களை எண்ணி எடுத்து
3.தங்கத்தில் திரவகத்தை ஊற்றிச் செம்பையும் வெள்ளியையும் நீக்குவது போல்
4.மேலுக்குக் (உடல்) குளிப்பது போல் உங்கள் உணர்வைச் சுத்தப்படுத்துங்கள்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீர் ஊற்றும் போது அழுக்கு நீர் குறைந்து கொண்டே வரும். செம்பும் தழும்பாது. ஞானியரின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க… அது பெருகப் பெருக அந்தத் தீமைகள் தணியும்.

உதாரணமாக ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அது குடிப்போரை மடியச் செய்கின்றது.
1.இதில் பல ஆயிரம் குடம் பாலை ஊற்றும் போது
2.விஷத்தின் தன்மை சிறுகச் சிறுகக் குறைந்து
3.அந்தப் பாலிற்கே வீரிய சக்தியாக இந்த விஷத் தன்மை அமைகின்றது.

இதைப் போல் நமக்குள் விஷம் கொண்ட உணர்வுகள் நமக்குள் பல இருப்பினும்…
1.நஞ்சினை வென்ற அருள் ஞானியின் உணர்வை நாம் நூறு முறையாவது எடுத்துக் கொள்வோம் என்றால்
2.இந்த உணர்வுகள் நமக்குள் ஒரு தூய்மைப்படுத்தும் சக்தியாக மாறும்.
3.நம் நினைவின் ஆற்றலும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே ஒன்றுகின்றது.

அதைப் பற்றுடன் பற்றும் நிலையும்… அந்த அருள் ஞான சக்தியை நமக்குள் பற்றுடன் பற்றச் செய்வதற்கும் தான் இதைச் சொல்கிறோம்.

எம்முடைய உபதேசங்களை “அடிக்கடி பதிவாக்கினால் தான்” தீமைகளை நீக்கும் வலிமை கிடைக்கும்

 

உங்கள் வாழ்க்கையில் எப்போதெல்லாம் சங்கடத்தைப் பார்க்கின்றீர்களோ… அடுத்த கணமே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் உள்ளுக்கே அடைத்துப் பழக வேண்டும்.

காலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து நமக்கு முன் கொண்டு வருகின்றது.

அதை நாம் நுகரும் பொழுது உடலுக்குள் செல்கின்றது இது வலுப்பெற்று விடுகிறது.

அன்றாட வாழ்க்கையில்… காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ உணர்வுகளை சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் வேதனை இத்தனையும் எடுத்திருக்கின்றோம்… அது நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

1.இந்தப் பதிவுகள் நம் ஆன்மாவில் இருக்கும்
2.ஆன்மாவிலிருந்து நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொன்றாக வரிசையாக நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சுவாசிக்க ஆரம்பித்தால்
3.அந்த உணர்வுகள் உயிரில் மோதினால் அந்த எண்ணங்கள் எல்லாம் நமக்கு வரும்.

சும்மா உட்கார்ந்து இருந்தாலும் கூட… அவன் சண்டை போட்டான் இவன் என்னை ஏமாற்றினான்… சம்பந்தமில்லாமலே ரோட்டிலே ஒருவன் போனான்… கீழே விழுந்தான்…! என்று எல்லா உணர்வும் வரும்.

பதிவான அந்த உணர்வுகள் நமக்குள் மீண்டும் நினவாகி… தனது இனமான உணர்வை உணவாக எடுத்து வளரத் தொடங்கும். அப்படி அதை நுகரும் போது என்ன ஆகிறது…?

உயிரிலே பட்டால் அந்தந்த உணர்ச்சிகளை நாம் அறிய முடிகின்றது உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கின்றது. கலந்த பின் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்கள் சோர்வடைகிறது… சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.
1.இங்கே யார் தவறு செய்தது…? யாரும் தவறு செய்யவில்லையே.
2.ஆனால் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் அதற்குக் காரணம்.

வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம். அந்த வேதனையை நம் உயிர் உடலுக்குள் உருவாக்குகிறது… அது ஒரு சந்தர்ப்பம்.

அதை மாற்றி அமைக்கத் தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெறுதல் வேண்டும். அதை நுகர்வதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அதை வளர்த்தால்… தீமையை நீக்கும் சந்தர்ப்பமாக நமக்குள் வரும்.

சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வு தான் பரப்பிரம்மமாகிறது. மனிதன் அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கி உயிரிலே நுகர நேர்ந்தால்… அதை உருவாக்கினால்… “துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் பிரம்மமாகிறது…”

பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன். கார்த்திகேயா…! இந்த ஆறாவது அறிவால்… தீமை என்று தெரிந்து கொண்ட பின்… அந்தத் தீமையை நீக்க வேண்டும் என்று அறிந்து கொண்ட உணர்வை வைத்துத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நுகர்ந்தால் அருள் ஒளியை உருவாக்கலாம்.

அந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கும் போது தீமையை நீக்கும் சக்தி கிடைக்கும். ஏன் இது நம்மால் முடியாதா…?

அதற்காக வேண்டித் தான்
1.அவ்வப்பொழுது தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்… நினைவூட்டுகின்றோம்.
2.உங்களைக் காக்க இது உதவ வேண்டும் என்பதற்காகத் தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன்.

சிறிது நேரம் சொல்லிவிட்டுச் சென்றால் “நன்றாக இருக்கின்றது…” என்று சென்று விடுவார்கள்… உள்ளே பதிவாகாது. பதிவாகவில்லை என்கிற போது குருநாதர் என்ன சொன்னார்…? என்று கேட்பார்கள்.

அதற்காக அழுத்தமாகக் கொடுக்கப்படும் பொழுது அதைப் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் வருகின்றது அதை வைத்து உங்களைக் காக்கும் எண்ணங்கள் வரும்.

இப்படித் தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்கிறோம்…. அடிக்கடி பதிவாக்குகின்றோம்.
1.இதை நினைவு கொண்டால் அந்த அருள் உங்களுக்குள் வலுப்பெறுகின்றது
2.இருளைப் போக்கும் சக்தியை நீங்கள் பெறுகிறீர்கள்

வேதத்தின் ஒலிகளை ஆளும் “வேதாள மாமகரிஷி”

 

அன்று பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பெற்ற பெருநகரில் செல்வத்தின் அதிபதியாக வாழ்ந்து வந்தவர் திருச்சாடனார்.

வாழ்க்கைத் துணை நலம் நன்கு அமையப் பெற்றும் பன்னெடும் காலமாக மக்கள் செல்வம் அமைந்திடாமல் கணவனும் மனைவியும் குழந்தைப் பாக்கியப் பேறு வேண்டி அன்னதானங்கள் இட்டு… அது மிகப்பெரிய சாமாராதனையாக (இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை) அனுதினமும் நடைபெற்று வந்தது.

ஒரு பெண் மகவை ஈன்ற பின் துணைவியார் இயற்கை நிலை எய்துகின்றார். அந்தக் குழந்தையைப் பேணும் பொறுப்பை திருச்சாடனார் ஒரு தவமாய்ச் செய்து வந்தார்.

குழந்தையின் மங்கைப் பருவத்தில் உபேந்திரன் என்கின்ற தவநெறிச் செல்வனுக்கு மணமுடித்து திருச்சாடனார் முழுமையாகத் தவ வாழ்க்கையில் ஈடுபட்டார்.

பூமியில் சில விசேஷ அலைத்தன்மைகள் பாயப்பெறும் காலகட்டம்… இரு சம்பவங்கள் அப்பொழுது நடந்தேறியது.

செல்வச் சீமான் திருச்சாடனார் உள்ளத்தால் துறவறத்தை மேற்கொண்டார். காட்டு வழிப் பயணம் செல்கின்ற காலத்தில் செல்வ நிலையைக் குறிக்கோளாக வைத்த ஊரின் எல்லையில் வாழ்ந்து வந்த மந்திரவாதி ஒருவன் திருச்சாடனாரை அழித்திடும் நோக்கம் கொண்டு வேதை (தாக்குபவன்) என்பவனை ஏவி விடுகின்றான்.

வேதையும் ஓர் அம்பை ஏவியது.

1.பகலை இரவாக்கிட்ட கடும் மழைக்காலம் ஞானத்தின் சூட்சுமத்தில் “மகரிஷிகளால் ஆட்கொள்ளப்படுகின்ற செயலும் உண்டு…”
2.“நில் என்றால் உடனே நிற்கும்…” ஞானக்காவலுடன் சூட்சும மகரிஷிகள் உடன் இருக்க
3.அச்செயல் தடுக்க… முதலில் எய்த அம்பு திருச்சாடனாரின் மார்பைத் துளைத்தது.
4.பின் மீண்டும் தொடுத்த அம்பு பாயும் முன் திருச்சாடனார் வாயிலிருந்து “நில்…” என்றே ஒலித்த ஒலியின் தொனியினால்
5.வினை… சுவரில் எறியப்பட்ட பந்து போல் எய்த இடமே திரும்பச் சென்றது.

“நில்” என்ற வெளிப்பட்ட தொனியின் அதிர்ச்சியினால் வேதை என்பவன் மயங்கி உயிர் துறந்தான்.

“சூரிய மண்டல தேவன் அங்கே சூட்சமமாக திருச்சாடனார் சரீர நிலையில் செயல் கொண்டு” முன்னிலும் பிரகாசமான தேஜசுடன் சரீர துன்பங்கள் நீக்கம் பெற்று…
1.“வேதம்” என்ற மறைபொருளை ஒலியின் தன்மைகளை ஆளுகின்ற செயலினால்
2.”வேதாள மாமகரிஷியாக” அவர் இன்றும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்.

வேதாள மகரிஷி உரைப்பான்…! மனமாகிய கிணற்றில் குறுக்கே சுவரெடுத்தால் நீர் இறைத்திடும் செயல் தடைப்படுகிறது. ஆனால் மனக்கிணறோ பழுதுராத் தன்மையில் நலம் பெற விழைகின்றது.

ஜெப நீர் (தியானத்தில் எடுக்கும் சக்தி) பெற்றுத் உயிராத்ம சக்தியைக் காத்திட முனைவோர்… மனக்கிணற்றின் ஜெப நீர் பெற்றிட குறுக்கே எழுந்திட்ட தடைகள் அது சூட்சமமாக இருந்தால் “அதைத் தகர்த்து விடவேண்டும்…” என்ற மன எண்ணத்தின் உயர்வைக் கூட்டிடல் வேண்டும்.

பின் ஜெபநீர் அருந்திடத் தடை ஏது…? இந்நிலையின் பொருள்கள் விளக்கி
1.எது தீமை தந்திட விளைந்ததோ அதையே நன்மையாக்கிடும் நல் நிலைகள் காட்டி
2.அஷ்டமாசித்துக்கள் பெற வைத்துக் காத்திட்ட வேதாள மகரிஷியின் செயல்கள் பல உண்டு.

புறக்கண்ணால் நோக்கிடும் செயல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பிற்கே தவிர்க்கப்பட்டாலும்… கொண்ட சேமிப்பைக் குறைவாக்குவது
1.உலகோதய வாழ்க்கையில் வந்திடும் மோதல் காலங்களில்
2.உற்று உறுத்துக் கேட்டல்… அதிசயித்து எச்செயலையும் விழிப்பார்வை கொண்டு பார்த்தல்…
3.இந்த இரண்டு வகையான காரியங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்.

திருச்சாடனார் சூட்சும அவதார நிலையின் நோக்கமே… மனித சரீரத்தின் உயிர்களுக்கு ஊறு விளைவித்திடும் கபாலிகர்கள் வசம் இருந்து அவைகளைக் காத்திடத் தான்.

அதற்காக… தனது உருவை விகார வடிவம் அமைத்து… வேதாளம் என்ற பெயரும் படைத்திட்டுப் புனித பூமியை மாசு படுத்திடும் அவர்களை விரட்டிட வேதாள வடிவம் தாங்கித் தன்னை அச்சுறுத்தும் தோற்றமாகக் காட்டினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு மனிதன் மிகவும் பயந்த நிலைகள் கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனின் உடலில் விளைந்த உணர்வுகள் “ஐயோ… பயமாக இருக்கின்றது… பூதம் வருகின்றது…” என்று நாம் கற்பித்த உணர்வின் தன்மை கொண்டு (விளையாட்டாகப் பேய் பிசாசு ஆவி என்று சொல்கிறோம் அல்லவா…!) அவன் ஏற்றுக் கொண்ட உணர்வுகள் அந்த அலைகளாகப் படர்ந்து அவனுக்குள் விளைந்து விடுகின்றது.

தான் கற்பனையாகச் செய்து கொண்ட “பூதகணங்கள்…” இவ்வாறு இருக்கிறது என்ற அச்சத்தால் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மை இவனுக்குள் விளைந்த பின் அவன் வெளியிட்ட இந்த அலைகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.

அதே சமயத்தில் இவனைப் போலவே இன்னொரு மனிதன் அச்சப்படுவான் என்றால்
1.ஏற்கனவே முதல் மனிதன் பயந்த உணர்வுகள் வெளிப்படுத்தியதை
2.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அந்த அச்ச அலைகளை இவன் நுகர நேருகின்றது.

நுகர்ந்த பின்… “பூதம் வருகின்றது… இதோ பேய் வருகிறது…! என்று சொல்ல ஆரம்பிப்பான். நமக்குத் தெரியாது ஆனால் அவர்களுக்குத் தெரியும்.

என்னென்ன உணர்வு கொண்டு அதைப் பிரித்தார்களோ அந்தந்த உணர்வு கொண்டு பூதம் வருகின்றது… ஐயோ… ஐயோ… என்னை நசுக்க வருகின்றது…” என்னைப் பிடிக்க வருகின்றது…! என்று சொல்வதை நாம் கேட்கலாம்.

1.நல்லது… கெட்டது… என்ற நிலைகளில் சூட்சும நிலைகளில் உலகில் எது… எப்படி இயக்குகின்றது….?
2.நுகர்ந்த அறிவாகத் தனக்குள் வந்தபின் உடலில் அது எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துள்ளார்கள் மகரிஷிகள்.

இயற்கையில் மனிதனாக உருவானதையும் மற்ற உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் எப்படி உருவானது…? என்ற நிலையையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்கள் அந்த “மகரிஷிகள்…”

மகரிஷிகளிலே அகஸ்தியன் தான் முதன்மை பெற்றவன். அவன் கண்டுணர்ந்த உணர்வு தான் மெய் (ஞான) உலகிற்கு இன்றும் வழி காட்டிக் கொண்டுள்ளது.

அவன் வழியினைப் பின்பற்றிய மெய் ஞானிகள் காட்டிய உணர்வுகள் அனைத்தும் மனிதனுக்குள் உணர்வலைகளாகப் படர்ந்து படர்ந்து… அது பரவிக் கிடப்பதைத் தான் எழுத்தறிவு என்று வரப்படும்போது விண்ணுலக ஆற்றலை வான இயல் சாஸ்திரம் என்று கொண்டு வருகின்றார்கள்.

இன்னென்ன இடத்தில் சூரியன் இருக்கின்றது… வியாழனும் மற்ற கோள்களும் இருக்கின்றது… என்ற நிலையும் அதனின் திசைகளையும் அதனின் ஓட்ட நிலைகளையும் அதனின் ஓட்டப் பாதைகளையும் அதனுடைய பாதையின் திசைகளையும் அன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகஸ்தியன் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியுள்ளான்.

அவனில் வெளிப்பட்டதைப் பின் வந்த வியாசகன் தன் உணர்வின் ஆற்றலால் அதைக் கண்டுணர்கின்றான். அகஸ்தியன் கண்டுணர்ந்த கோள்கள் எதுவோ…
1.அவனுக்குள் படமெடுத்த உணர்வுகள் எண்ண அலைகளாகப் பரப்பியதையும்
2.அவனின்று வெளிப்பட்ட உணர்வுகளயும் வியாசகனால் அது சந்தர்ப்பத்தால் கண்டுணர முடிகின்றது.

ஏனென்றால் இதை எல்லாம் நம் தத்துவ ஞானிகள் சந்தர்ப்பத்தால் இதைப் பெறுகின்றனர். ஆகவே வியாசகன் அவனுக்குள் எதை விளைய வைத்தானோ அந்த உணர்வின் அணு செல்கள் வரப்படும்போது அது மற்றொரு உடலுக்குள் வரும்போது அதுவே வரும்.

ஆகவே
1.ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அந்த உணர்வினை நாம் நுகர்ந்தால் நம்மையும் அது ஞானியாக மாற்றும்
2.நீங்கள் எல்லோரும் ஞானியாக மாற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை

 

ஆதி சக்தியின் செயல்:-
1.ஒன்றுடன் ஒன்று மோதிடும் எதிர் மோதல் குணங்கள் தன் குணத்தின் சுவைக்கொப்ப
2.ஆகர்ஷன சக்தியால் வான்வெளியில் பூதி என்று அழைக்கப்படும் பெருவெளியில் கலந்து
3.எதிர் மோதல் தன்மைகளில் “எந்தக் குணம் அமிலம் வீரிய நிலை பெறுகின்றதோ”
4.அவைகளில் கலந்திடும் அணுக்களின் குணங்களுக்கு ஒப்ப வீரிய நிலை பெற்றிடும் அந்த அமிலத்தன்மைகள்
5.தனக்கொத்த நிலைகளை எல்லாம் “உயர் மின் நுண்காந்த சக்தியாக வளர்க்க”
6.எதிர் மோதல் குணத்தன்மையாக “எரிபொருள் சக்தி அக்கினி என்ற வெப்ப சக்தியாக” செயல் உருவாக உருக்கோலம் கொண்டு
7.தன் சக்தியின் பரிமாணத்தை வளர்ச்சி நிலை கொள்ளும் செயலாக மென்மேலும் ஈர்த்துக் கொண்டு
8.சுழற்சியின் வேகத்தால் “ஓங்கார நாதத்தைக் கூட்டி” பால் வெளியில் சுழன்று ஓடிக்கொண்டே அமைவு பெறும் தன்மையாக
9.தனது செயலின் வீரியம் வலுக்கொண்ட சக்தியாக கன பரிமாணம் கொண்ட திடமாய் உருவாகும் முன் தன்னுள்ளே பூதியை உருவாக்கி
10.எப்படி அக்கினியால் எரிக்கப்பட்ட பொருள்கள் காற்றில் கலந்து செயல்படும் தன்மையைப் பெறுகின்றதோ அவைகள் போன்றே
11.தூசு படலங்களும்… படர்வு நிலையில் மறைபொருளாகும் அத்தன்மைகள் ஜீவன் கொண்டிட்டு
12.”தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும்” நிலை பெறுகின்ற செயல் ஒன்று
13.ஜீவ அணுக்களாகப் பின் வளர்ச்சியில் எண்ணிறந்த கோளங்களாக நட்சத்திரங்களாக சூரியன்களாக வளர்ச்சி நிலை பெற்று
14.ஈர்த்துக் கொண்டிடும் ஈர்ப்பு நிலைக்கொப்ப விசேஷ தனித்துவ சக்தியாக வளர்க்க
15.உறை பொருள் சிவமாக… இயங்கும் இயக்கச் செயல் ஈர்ப்பு சக்தியாக இணைந்து கொண்டிடும் “சிவ சக்தியாக”
16.ஆதி சக்தியின் செயல் உருவாய்… ஓடிக்கொண்டே உள்ளது.

நம் பூமியின் சுழற்சியின் வேகத்தில் பௌர்ணமி காலங்களிலும் அம்மாவாசை காலங்களிலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிட்ட கோள்களின் ஈர்ப்பின் தொடர்பினால் நீர் சக்தியின் மாறுதல்களை… இந்நிலையிலும் உயர் நாதத்தை ஈர்த்துக் கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் “மறைபொருளை விளக்குவார்கள்…”

சப்த மாதர்கள் என்று வணங்குகின்றாய். ஒருவர் குரல் போல் மற்றவருக்கு இருப்பதில்லை. கோடான கோடி சப்தஸ்வர நாதங்கள் “கண்டத்தில் (தொண்டையில்) எழும் ஆகாயக் கூறு” காட்டும் நிலை தான் என்ன…?

சப்த நாதங்களில் செயல்படும் சப்தரிஷிகள்
1.ஆதி சக்தியின் அம்சமாக வழி நடத்தும் அரிய உண்மைகளை
2.தியானத்தைக் கூட்டுவதன் மூலம் நீ அறிந்து கொள்ளலாம்.

சப்தரிஷி மண்டலங்கள் இயக்கிடும் நவக் கோள்கள்… வான் இயல் மையக் கோள் என்ற பால் வெளியின் உண்மை நிலைகளை அறிந்து வளர வேண்டுமப்பா.

பஞ்சபூதங்களான… ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் பரவெளியில் ஜீவ மின் நுண்காந்த சக்தியாக அனைத்திலும் பரவிப் படர்ந்துள்ளதை “பராசக்தி… என்றும் பரமார்த்த சக்தி…” என்றும் பெயரிட்டு மகரிஷிகளால் அழைக்கப்படுகின்றது.

பால்வெளியில் உதித்திடும் உயிரணுக்கள் கோடான கோடி நிறம் மணம் குணம் என்ற முத்தொடர் சூட்சுமத்தின்
1.நீரமில சக்தியுடன் கலந்து உதிக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொண்ட சுழற்சியாய்
2.எண்ணம் கொண்ட உயிரணுக்கள் எண்ணம் கொண்ட ஆத்மாவாக ஜீவன் பெற்றே பிறப்பிற்கு வருகின்றது.

மனிதன் கூறுகின்றான் வயதான காலத்தில் அவன் ஞானம் பெற வேண்டும் என்று. எப்படிப்பா இருக்கின்றது இது…? காலம் கடந்து ஞானம் வருவது எங்கே…?

நாம் கூற முற்படுவதில் தேகம் கொண்டே…
1.”தேகம் கடந்த ஞானம் பெற்றிடல் வேண்டும்”
2.பெற்று உயர்ந்து வளர்ந்திடல் வேண்டும்… என்று உணர்த்தியும் வந்துள்ளோம்.

எமது சித்தின் நிலையை வெளிப்படையாக உரைத்து விட்டால் மாத்திரம் நீ சக்தியைப் பெற்றிட முடிந்திடுமா…?
1.தன் நிலையைத் தான் வளர்க்க
2.அந்நிலையில் நன்நிலையாக வளர்த்துக் காட்டிட வேண்டுமப்பா.

உலோதய வாழ்க்கை நடைமுறையில் ஞானத்தின் போர்வையைப் போர்த்திக் கொண்டு… உண்மை நிலையை உரைக்க வந்ததாகப் பாஷாண்டகமிடும் செயலை… உண்மை நிலையை “நான்” என்றிட்ட அகங்கார ஆணவ மாயை என்றிட்ட அனைத்துக் காரியார்த்த செயல்களை “யார் தான் வென்றிடுவார்கள்…?”

1.சகலத்திலும் சகலமாக ஈஸ்வரரின் அருள் நிறைந்திருக்க…
2.தனித்துவ காரண காரியங்களுக்குச் செயல் கொண்டு – சகலத்திலும் ஈஸ்வரரின் அருள் என்ற பேரின்ப சாயுஜ்ய (உயிருடன் ஒன்றும் நிலை) லயத்தைக் கொள்பவனுக்கு
3.எந்த நிலையிலும் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட்டுவிடாது… “சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை உண்டு…”

சாக்கடையில் அமரச் செய்து குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தது

 

கடவுள் யார்…? உன் உயிரே உள் நின்று இயக்குகின்றது… நுகர்ந்த உணர்வே அது உள் நின்று கடவுளாக இயக்கும்… அது கடவுள் தான். உள் நின்று நுகர்ந்ததை எல்லாம் உணர்த்துவது “உயிர் தான் கடவுள்…”

உணர்ந்த பின்… ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை நீக்கத் தெரியவில்லை என்றால் “எது வலுவோ அதன் வழி தான் உன் வாழ்க்கை அமையும்…”

இன்றைய செயல் அடுத்த சரீரம். சாக்கடையில் அமரச் செய்து குருநாதர் இதைச் சொல்லிக் கொடுக்கின்றார்.
1.அவர் சொல்லச் சொல்ல அந்த சாக்கடை நாற்றமே பூராம் போய் விட்டது.
2.அந்தச் சாக்கடை நாற்றத்தைக் காணோம்… எங்கேயோ போகின்றது.

அப்போது தான் வான மண்டல உணர்வுகளை எடுத்து… ஒன்றை ஒன்று வென்று ஒன்றின் உணர்வுகள் ஒன்றுக்குள் ஆகி விஷத்தின் தன்மை தணிந்து ஞானத்தின் உணர்வுகள் ஒளியாகி எப்படி மாறுகின்றது…? என்று உணர்த்துகின்றார்.

வான மண்டலத்தில் உள்ளது எல்லாம் இந்த உடலுக்குள் உண்டு. இந்தப் பிரபஞ்சம் எப்படியோ உயிர் இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி உள்ளது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்தெந்த உறுப்புகளின் வலுப்பெற்று தீமைகளை நீக்கும் சக்தியாகப் பெற்றதோ… அந்த வடிகட்டும் தன்மை நமக்குள் இல்லை என்றால் மீண்டும் கீழான நிலைகளுக்குச் சென்று விடுவோம்.
1.அதற்குத்தான் அந்த குரு பலம் வேண்டும் என்று சொல்வது
2.அருள் உணர்வுகளைச் சேர்த்து. அதன் துணை கொண்டு தான் தீமைகளை வடிகட்டுதல் வேண்டும்.

உயிரின் வலு கொண்டு.. குரு என்ற நிலைகள் கொண்டு அருள் ஒளியைக் குருவாக்கினால் அது குரு என்ற நிலைகள் கொண்டு இருளை நீக்கிப் பொருளைக் காணும் அந்த சக்தியை நீ பெறுவாய்.

அதே சமயத்தில் குருநாதர் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டுவார்…!

ஏன் சாமி தட்டுகிறீர்கள் என்று கேட்டேன்..?

வேறு எவன்டா கேட்டான்…? நீ தான்டா கேட்கின்றாய்…! என்றார். ஏன் தட்டுகின்றேன்…? என்று கேட்கின்றாய்.
1.நான் டெலிஃபோன் செய்கின்றேன்… ஆண்டவனுக்குத் தந்தி கொடுக்கின்றேன்…!
2.இங்கே தட்டுகின்றேன்… காதில் படுகிறது உனக்குள் ஒளியாகின்றது,
3.அந்த உணர்வு இருளை நீக்குகின்றது என்று சொல்வார்.

போஸ்டில் தட்டுவதற்கு இப்படித்தான் விளக்கம் கொடுக்கின்றார்.

நாம் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நஞ்சினை நம் உடல் பிரித்து அதை மலமாக மாற்றுகின்றது. இது எப்படி வந்தது…?

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அத்தகைய சக்தி பெற்ற பன்றியின் உடலை உருவாக்கியது இந்த உயிர். பன்றியாகப் பிறந்தபின் தீமையைச் சுத்தமாகவே நீக்கிவிட்டு தீமை நீக்கக்கூடிய வல்லமை பெற்ற மனித உடலை உருவாக்கியது.

மனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா. அதை நாம் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்…?

ஒருவர் திட்டுகிறார் என்றால்… திட்டியவனை விடுவேனா…? நான் என்ன செய்கிறேன் பார்…! என்று சொன்னால்
1.இந்த உணர்வின் தன்மை நம் ஆன்மாவிலே வலு சேர்ந்துவிடும்
2.வலு சேர்ந்த பின் தீமைகளாக உருவாகிவிடும்.

ஆகவே தீமைகளைப் பிளக்கக்கூடிய ஒரு சக்தி வேண்டுமல்லவா. அதற்குத்தான் குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வை “ஆழமாகப் பதிவு செய்தார்…”
1.இதை நினைவு கொள்… அதிலிருந்து அருள் ஒளிகள் வருகின்றது
2.அதை நீ எப்பொழுதெல்லாம் நினைக்கின்றாயோ அதை வைத்துத் தீமைகளை நீக்கப் பழகிக் கொள் என்றார்.

நான் வந்து துடைக்க முடியாது… நீ தான் துடைக்க வேண்டும் நான் இங்கே வாழ்ந்த நிலையில் தீமைகளை நீக்கி விட்டு நான் சென்று விடுகின்றேன். நாளைக்கு வரக்கூடிய தீமைகளை யார் துடைப்பது…? என்று உடலோடு இருக்கும் பொழுது குருநாதர் கேட்கின்றார்.

இந்த உடலில் நான் சிறிது நாள் வாழுகின்றேன்…. இந்த உடல் எனக்குச் சதம் இல்லையே.
1,உயிரோடு ஒன்றி சதமாக இருப்பதற்கு நான் போகின்றேன்
2.நீ இங்கே இருந்து என்ன செய்யப் போகின்றாய்…?
3.நான் அங்கிருந்து வந்து உன் தீமையைத் துடைப்பேனா…?
4.அந்த உணர்வுகள் விளைந்தது நான் அழிவதில்லை
5.இருளை ஒளியாக்கினேன்… அந்த ஒளியின் உணர்வு இங்கே பரவி உள்ளது… அதை நீ எடுக்கப் பழகிக் கொள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசம் செய்கின்றோம். பெரும்பகுதியான படித்தவர்கள் என்ன நினைக்கின்றார்கள்…? யாம் சொல்வதை சரியா தப்பா…! சரியா தப்பா…? சரியா தப்பா…? என்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

ஆனால் அந்த அளவுக்குப் படிப்பில்லாதவர்கள்
1.யாம் என்ன சொன்னாலும் அதைப் பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.
2.குருநாதர் சொன்னார் அல்லவா… இதை நாம் செய்து பார்ப்போமே…! என்று
3.அந்த உணர்வுகள் தூண்டும்போது அவர்கள் ஞானத்தைப் பெறுகின்றார்கள்.

படித்தவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

நான் மகாபாரதத்தைப் படித்தேன் கந்த புராணத்தை படித்தேன்… பிரம்ம சூத்திரத்தையும் படித்தேன். ஆனால் அதையெல்லாம் இங்கே சாமி (ஞானகுரு) சொல்லவில்லை.

ஆக அவர்கள் படித்ததைப் பதிவு செய்து கொள்வார்கள். ஆனால் இங்கே யாம் சொல்லும் ஞானத்தின் நிலைகள்
1.அந்த அருள் ஞானிகள் பெற்றதைச் சொல்லும்போது இந்தச் சூத்திரத்தை விட்டுவிடுவார்கள்.
2.காலி செய்து கொண்டே இருப்பார்கள்…
3.தான் பதிவும் ஆக்க முடியாது… அதைப் பெறவும் முடியாது.

அவர்கள் படித்த பிரம்ம சூத்திரத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் மனு நீதி சாஸ்திரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1.மனிதனான பின் இந்த தீமைகளை அகற்றுவது எப்படி…?
2.தீமையை அகற்றியவன் யார்…?
3.தீமையை அகற்றிய உணர்வுகளை நாம் எப்படி எடுப்பது…? என்று
4.இந்த மனு நீதி சாஸ்திரத்தில் இது உண்டு.

மனுஷாள்…! என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அந்தச் சாஸ்திரத்தை தெளிவாக்கும் நிலைகள் இல்லை.

மனு நீதி சாஸ்திரத்தை நான் படித்து இருக்கின்றேன்… இவர் சொல்வது எங்கே இருக்கின்றது…? காணவில்லையே…! இந்த நிலைகள் தான் படித்தவர்களுக்கு எண்ணமாக வரும்.

மகாபாரதத்தைப் படிக்கும்போது படித்த நிலைகள்… அந்தப் படித்தது மட்டும் தான் இருக்கும். குருநாதர் சொல்வதை அதிலே காணோமே…! என்பார்கள்.

உதாரணமாக கேரளாவில் மொக்கை அரிசியைச் சாப்பிடுகின்றார்கள். அதனின் ருசி வேறாக இருக்கின்றது. இங்கே நாம் பொன்னி அரிசியைப் போட்டுச் சாப்பிட்டோம் என்றால் அந்த ருசி வேறு இருக்கும்.
1.அந்த ருசியை இதிலே காணோமே… என்பது போன்று
2.அந்தப் படித்த உணர்வுகள் எதுவோ அதே தான் வரும்.

நம்மிடம் மொக்கை அரிசியைச் சாப்பிடச் சொன்னால் பார்த்தவுடனே “பொன்னி அரிசியின் ருசி அதில் வரவில்லையே…” என்று தான் சொல்வோம்.

ஏனென்றால் அந்தந்த உணர்வின் சுவை எதுவோ அதனால் வளர்ந்த அணுக்களும் அதே போல் தான் உணர்வினை இயக்கும். ஆக மதங்கள் ஆனாலும் இனங்கள் ஆனாலும்
1.எதன் மேல் பற்று வைத்து நாம் பதிந்து கொண்டோமோ
2.அதன் சுவை தான் அவர்களுக்கு ரசிப்பாக இருக்கும்.

படித்ததை வைத்து நாம் தெளிவாக்க வேண்டுமென்றால்…
1.படித்தது பாதைகளை அறிவதற்கு உதவும்.
2.ஞானத்தின் நிலைகள் வளர்வதற்கு அருள் ஞானியின் உணர்வைப் பெறுதல் வேண்டும்.
3.ஞானத்தை வைத்துத்தான் படித்த கல்வியின் நிலைகள் ஞானத்தில் கொண்டு செல்ல முடியும்.

கல்வி உடலின் உணர்வுக்குதான் உதவுமே தவிர… உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை வளர்க்கும் ஞானத்திற்கு இது உதவாது.

நமக்கு நற்பாதையை காட்டுவதற்குத்தான் கல்வி. அந்தக் கல்வியை நாம் சீராக எண்ணி
1.அந்த அருள் ஞானியின் உணர்வுடன் ஒன்றிப் பார்த்தால்
2.இன்றைய விஞ்ஞான உணர்வின் தீமையான விளைவுகளை மாற்றியமைக்கலாம்.

பல கோடிச் சரீரங்களில் “தப்புவதற்காக வளர்த்துக் கொண்ட எல்லா நினைவுகளும் நாங்கள் பெற வேண்டும்”

 

நான் இல்லை…! நீ இல்லா இவ்வுலகில் “எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா…!”

உயிர் இல்லையென்றால் இந்த உடலான உலகில் நாம் இருக்க முடியுமா…? முடியாது.

ஆரம்ப நிலைகளில் புழுவிலிருந்து நாம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கின்றோம்

புழுவாக இருக்கும் பொழுது குளவி கொட்டுகின்றது. குளவி கொட்டியபின் புழுவிற்கு வேதனை வருகின்றது.
1.வேதனை வந்தபின் குளவியின் மீதே நினைவு செல்கின்றது.
2.அப்படி நினைவு செல்லும்பொழுது குளவியின் உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?
3.புழு உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் ஊடுருவி புழுவைக் குளவியாக மாற்றுகின்றது.

வேதனைப்பட்டோம்… குளவியை நினைத்தோம் குளவியாக மாறுகிறது. வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று எண்ணினோம். விஷத்தையே பாய்ச்சி விஷத்தை உருவாக்குகிறது குளவி.

குளவி முதலில் தன் உமிழ் நீரால் மண்ணைப் பிசைகின்றது. அதை எடுத்துக் கொண்டு வந்து கூடாகக் கட்டுகின்றது தன் உடலில் இருந்து வரக்கூடிய விஷத்தைப் புழுவின் மீது பாய்ச்சுகின்றது.

இந்த விஷம் புழுவின் உடலுக்குள் செல்கின்றது… மயங்கிவிடுகிறது.. புழுவைக் கூட்டிற்குள் உள்ளே தள்ளி மூடி விடுகின்றது .கூட்டின் மீது அடிக்கடி அந்த குளவினுடைய ஞாபகத்தை ஊட்டுவதற்காக டுர்ர்ர்ர்… என்று ஒரு இரைச்சலிடுகிறது.
1.இந்த அதிர்வின் தன்மை என்ன செய்யும்…?
2.இழுக்கும் (ஈர்க்கும்) நினைவு வரும்.

விஷத்தின் தன்மையால் புழு துடித்த பின் உமிழ் நீரால் கூட்டிய கூட்டின் மீது அந்த ஒலிகள் பட்டபின… அந்த அதிர்வுகள் உள்ளே இயங்கிக் கொண்டே இருக்கின்றது.

இந்த உணர்வுக்கொப்ப புழுவின் அணுத்தன்மைகள் என்ன செய்கின்றது…? குளவியாக ரூபம் மாறுகின்றது.

ஆகவே…
1.எப்படிக் குளவி கொட்டியபின் சுரீர்ர்ர்… என்று குளவியை எண்ணி அந்த உணர்வினை இழுத்துக் குளவியாக நான் ஆனேனோ
2.மற்றதை இதைப்போல உருவாக்கும் சக்தி நான் பெற்றேனோ
3.இந்த நினைவுகள் எல்லாம் எனக்குள் வர வேண்டும்.

பாம்பு எலியைக் கண்ட பின் என்ன செய்கின்றது…? விஷத்தைப் பாய்ச்சுகின்றது… விஷத்தைப் பாய்ச்சியவுடன் எலி மயங்குகின்றது…. வேதனை தாளாது துடிக்கின்றது.

விஷத்தால் தாக்கப்பட்டால் நாம் துடிக்கின்றோம் அல்லவா. அது போல் துடிக்கும் வேகம் ஆன பின் விஷத்தின் தன்மை எலிக்குள் அதிகமாகின்றது. அப்போது அதனுடைய வலு இழக்கப்படுகின்றது.

எலி என்ன செய்கிறது…? எந்த விஷத்தால் தாக்கப்பட்டதோ “அதையே நினைவு கொள்கின்றது…” அந்த உணர்வின் இயக்கமாக எலியின் உயிர் நுகரப்படும் போது அந்த உணர்வின் துடிப்பாகிறது.

அதைத் தாங்காது இந்த உடலை விட்டு உயிர் வெளியே செல்கின்றது. பாம்பு “தன் விஷத்தின் தன்மையை” எலி உடலுக்குள் பாய்ச்சியதால் பாம்பின் உடல் எலியைத் தனக்குள் இழுக்கின்றது.

இழுத்துக் கொண்டபின் எலியின் உயிரான்மா உள்ளே புகுந்து விடுகின்றது. உள்ளே சென்ற பின் பாம்பை உருவாக்கிய உணர்வுகள் அதன் விஷம் எதுவோ அந்த விஷத்தின் தன்மை கொண்டு கருவாகி முட்டையாகிறது.

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி எலியை உணவாக உட்கொண்டது
1.பாம்பின் விஷம் எலியின் உடலுக்குள் இது இரையாகி
2.அந்த அணுக்கள் அந்த உணர்வின் தன்மை பாம்பாக உருவாகும் கருத்தன்மை அடைகின்றது.
3.அதனுடைய வலுப்பெற்ற பின் பாம்பு இழுத்துக் கொள்கிறது.
4.அதற்குள் சென்றவுடன் முட்டையாகின்றது… முட்டையான பின் பாம்பு அதை அடைகாக்கின்றது.
5.அதற்குத்தக்க அமிலங்கள் உற்பத்தியாகின்றது முழுமை அடைந்த பின் முட்டை வெளியே வருகின்றது.
6.முட்டை வெளியே வந்தபின் தன் உணர்வின் தன்மை கொண்டு அடைகாக்கிறது.

இந்தத் துடிப்பின் நிலைகள் எப்படி குளவி மண் கூட்டின் மீது இரைச்சலானதோ அந்த உணர்வின் அதிர்வைக் கொண்டு தனக்குள் இழுக்கச் செய்ததோ இதே உணர்வின் தன்மைகொண்டு அந்த முட்டை மீது பட்ட உடனே இந்த சூடு அதை இயக்கித் துடிப்பு ஆகிறது.

அந்தத் துடிப்பு ஆகும் பொழுது உணர்வின் நினைவு கொண்டு அதே பாம்பாக உருவாகின்றது.

மணத்தால் நுகர்ந்தறிந்து வாழக்கூடிய சக்தி பெற்றது தான் உயிரினங்கள். ஆகையினால் மணத்தால் நுகர்ந்தறிந்த உணர்வு கொண்டு பாம்பு தன்னைத் தாக்கும்போது அந்தப் பாம்பையே நினைக்கின்றது.

அதிலிருந்து தப்ப வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. தப்புவதற்கு என்ன வழி…?
1.வேதனையாகி உடலை விட்டு உயிர் சென்ற பின் அதுவாக ஆன பின்
2.பாம்பின் மணத்தை நுகர்ந்து வலு பெற்ற பின் தப்பும் மார்க்கம் வருகிறது… பாம்பாக மாறுகிறது.

எலி பாம்பாக ஆன பின் அதே பாம்பைப் போன்று மற்றொன்றின் மீது விஷத்தைப் பாய்ச்சி உனவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

இப்படித்தான் பரிணாம வளர்ச்சியில் நாம் ஒவ்வொரு சரீரத்தில் இருக்கும் போதும்…
1.தப்ப வேண்டும் தப்ப வேண்டும் என்று பல கோடிச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எடுத்து மனிதனாக வளர்ந்துள்ளோம் .
2.அப்படி அந்த பல கோடிச் சரீரங்களிலும் எடுத்துக் கொண்ட…
3.தான் தப்புவதற்காக வளர்த்துக் கொண்ட அந்த எல்லா நினைவுகளும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
4.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்களுக்கு தீமையிலிருந்து மீண்டிடும் சக்தியாக அது வரவேண்டும் என்பது தான் இதனுடைய பொருள்

உலகோதய நிலையை மறந்து எடுக்கின்ற நற்சுவாசம் “உன்னத நித்திய பரிபூரண ஆனந்த லயம்”

 

கரிய நிழல் மாயை கால் சதங்கைதான் அசைக்க
அறியப்பெறும் எண்ணம் அசைத்த ஒலியின் கண் நின்றசைய
மாமுதல்வன் ஆர் அறிய வந்திட்ட உயிரணுவே
ஆவெனும் மாயப்பசு இயல் குணத்தின் சுவை மாற்றும்
வாரணன் கோடி வாதிட்ட வன்மை நிலை போலும்

இது ஒரு சிருஷ்டி… உலக நடைமுறையின் இயக்கம், வந்த வினை கண்ட உயிரின் பரிணாம வளர்ச்சியின் “தாத்பரியம்…”

திசை யானைகள் இழுக்கும் சிவமாக (பூமி) நீ அமைந்தாய். சுவை குணம் விளக்க… மாயை தன் நிலையில் எண்ணத்திற்கொப்ப செயலுறுத்தும் நிலையை விளங்கிக் கொள்.

1.வினையால்… பசுக்களாகிய உயிரணுக்கள் (உடலில் உருவான அணுக்கள்) தன் நிலையில் தான் ஏக…
2.அந்த வினையின் தொடர் வலுப்பெற
3.எண்ணம் கதியாகி… கதியுறும் எண்ணம் வினையாகி
4.வினையின் தொடர் நீண்டு விதி செயலுற
5.கொண்டிட்ட எண்ணங்களே சகலத்திலும் வழி நடத்திடும் இயக்கமப்பா.

மறுவினைப் பயன் காட்டும் ஜெபமாம் ஆகுதி (நெருப்பு – வெப்பம்) கொண்ட எண்ணத்தின் உயர்வைக் கூட்டி (தியானத்தில் எடுக்கும் சக்தி)… மனிதன் தெய்வநிலை பெற்றிட சகலத்தையும் தம்முள் உணர்த்தும்… சகலமும் காந்தமாகச் செயல்படும் நிலை அறிவாய்.

தீவினையாகிய உயிரணுக்கள் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டால் தாக்குறும் நிலையே “மாயப்பசு” (தீமை செய்யும் அணுக்கள்). அந்நிலையை மாற்ற வேண்டும் என்றால்
1.ஈஸ்வர தியானமே ஆகுதியாக… நல்ல நிலை உணர்த்தும் யாகமாக
2.தன்னைத்தான் உயர்த்தி… நற்சுவாசத்தால் நல்ல அணுக்களைக் கூட்டி,
3.உயிரான்மாவின் பரிமாணத்தைக் காத்துக் கொண்டு எது நல்நிலையோ அந்நிலைக்கு உயர்த்துவது
4.சகலத்திற்கும் சகலமாய்க் கலந்துள்ள “ஈஸ்வரர் அருள் (வேகா நிலை பெற்ற மகரிஷிகளின் சக்தி) என்ற பேரருள் சூட்சுமம்…”

“கல்ஆல்” என்பதே உலகோதய நிலையைக் குறிக்கின்றதப்பா. அதன் கீழ் வாழும் நாம்
1.அந்த உலகோதய நிலையை மறந்து எடுக்கின்ற நற்சுவாசம்
2.தியானத்தின் வழியாக சதா சர்வ காலமும் நின்று நிலை பெற்றிருக்கும் அது “உன்னத நித்திய பரிபூரண ஆனந்த லயம்…”
3.அதுவே ஊன்றி உயர வேண்டிய நல் நிலைகள்.

மனிதன் என்ற ஜீவிதத்தின் தொடக்கமே பரமார்த்த நிலை (மனிதப் பிறவி தான் முழுமுதல் கடவுள்). அன்றி வேறு எந்தப் பிறவியாலும் மெய்யை அறியப்படுகின்ற செயல் கூறுகள்… எந்த விதத்திலும் சாத்தியமில்லை…! என்பதே மகரிஷிகள் காட்டிய உண்மை நிலை.

கரும்பின் சாறு சிதறி விடாமல் காக்கின்ற “கரும்பின் கணுக்கள் போல்…” நாம் கூட்டிக் கொள்ளும் ஆத்ம பலத்தின் நிறைவுகளைக் காக்கின்றவர்கள் யார்…?
1.அன்பு சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் மாமகரிஷிகள் சப்தரிஷிகள் சூட்சுமமாகச் செயல்பட்டு
2.ஆதி சக்தியின் சூட்சும மூலத்தின் மூலமாக… நம் மீது அருள் ஒளிபாய்ச்சி
3.நம்மைக் காத்திடும் ஔஷதங்களாகச் செயல்படுபவர்கள் அவர்கள் தான்.

மனிதன் பெற வேண்டிய பேறு என்னப்பா…? திசை யானைகளாகக் காட்டிய கல் யானைகள் கரும்பு அருந்தியதாகத் திருவிளையாடல் புராணம் விளக்கம் கேட்கின்றாய்.

கல் யானை… “கரும்பு அருந்தியது” என்பதன் மெய்ப்பொருள் என்னப்பா..? “பேரருள் செல்வம்” தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் பேரானந்த நிலையைச் சித்தரிக்கும் ஆனந்த நிலையப்பா அது.

கரும்பின் இயல்பான குணத்தன்மைகள் தன் சுவையை… சுவையின் குணத்தை ஈர்த்திட்டே வளர்ச்சியின் வளர்ப்பாகப் பலன் என்று உருவாவதைப் போல்… ஞானத்தின் பங்கு அந்த நிலை பெற… காத்திடும் மகரிஷிகள் செயல் கொண்டிட… சூட்சுமமாய் ஜோதியில் கலந்திடவே அந்த நிலைகள் கூறப்பட்டன.

சிவலிங்கம் என்பது இந்த உலகம் தான். பால்வெளி சூட்சுமத்தில் செயல்படும் நிலைகள் பேரண்ட இருளாக அனைத்திலும் காந்தத்தின் புலமாய் எங்கும் பரவிப் படர்ந்ததைப் “பராசக்தி” என்று கூறிய உண்மை நிலை என்ன…/

சகலமும் ஆவி தான்…! ஆவியின் அமில நிலைகள் தான். எரிகின்ற நெருப்பு அதனுள் இருந்து வெளிப்படுத்தும் புகைத்தன்மை போன்ற மெல்லிய படலங்கள் கண பரிமாணம் கொண்டு… தன் குண நிலைகளுக்கொப்ப “திடக்கோளம்” கொள்கின்ற சூட்சுமத்தின் உண்மைகளை உணர்ந்து பார்.

மறைபொருள் எப்படி உறை பொருள் ஆகிறது…?

1.அனைத்திலும் ஆவியான அமில குணத்தன்மைகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி
2.தத்தமக்குரிய குணங்கள், அதனுடன் இணையும் அமில குணங்களுடன் இணைந்து கொண்டிட்டு
3.ஒவ்வொன்றின் குணத்தன்மைகளுக்கொப்ப மேகங்களாக மாறி
4.அந்த அமில மேகங்கள் மூலத்தின் மூலங்களின் தன்மைகளைத் திரவநிலை கொண்டிடும் அமில நிலைகளாகவும்
5.உருவாக்கும் செயல் தன்மைகள் பிறிதொன்றில் மோதி தன் நிலை மாற்றி மற்றொன்றாக உருவாக்கிடும் செயலில் செயல்பட்டு
6.அதன் செயல்பாட்டில் தன் குண நிலைகளை மாற்றிக் கொண்டு செயலுக்குச் செயல்படும் குணங்கள் கொண்டும்
7.அவைகள் உயிரணுக்கள் செயலுக்கு நிறம் மணம் குணம் என்றே கோடான கோடியாகப் பல்கி பெருகி
8.உதிக்கின்ற உயிரணுக்கள் பூதியின் தூசுப்படலம் என்கின்ற தன்மையாக நெருங்கிச் சேர்ந்து
9.ஒவ்வொன்றின் ஈர்ப்பில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாகும் நிலையே உறை பொருள் தன்மை (ஆவியாக இருப்பது நீராகி பொருளாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகி பிரபஞ்சமாகும் நிலை).

கோடான கோடி நிறங்கள் மணங்கள் குணங்கள் என்றே பால்வெளியில் படர்ந்து… காந்தத்தின் புலமாக… உறை பொருளில் உருவாகும் நீரமில சக்தியில் ஒன்றுடன் ஒன்று கலந்து… செயலுறும் தன்மைகள் எத்தனை எத்தனையோ நடைபெற்றுக் கொண்டிருக்கும் “இயற்கையின் சக்தியே பேரானந்தப் பெருநிலை…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் எத்தனையோ சலிப்பு பட்டவர்கள் சங்கடப்பட்டவர்கள் கோபப்பட்டவர்களை எல்லாம் பார்த்திருப்போம்… நுகர்ந்திருப்போம். அந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் தீய வினைகளாக இருக்கும். அதே போல் நாம் தாய் கருவில் இருக்கப்படும்பொழுது பெற்ற பூர்வமும் இருக்கின்றது.

அதாவது தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது நோயாளியைப் பார்த்திருப்பார்கள்… சாபமிட்டவரைப் பார்த்திருப்பார்கள்… எத்தனையோ வேதனைப்பட்டோரையும் பார்த்திருப்பார்கள். அதே சமயத்தில் ஒரு சிலருக்குச் செய்வினை செய்திருக்கின்றார்கள் என்றெல்லாம் கூடக் கேட்டிருப்பார்கள்.

இந்த உணர்வை எல்லாம் தாய் நுகர்ந்த பின் தாய் கருவில் இருக்கும் பொழுது அது “பூர்வ புண்ணியமாக” நமக்குள் விளைகின்றது.
1.இது எல்லாம் அந்தந்தக் காலகட்டங்களில் அந்த வளர்ச்சிகள் வரும் போது
2.நம்மை அறியாது எத்தனையோ நோய்களாகவோ மற்ற தீமை செய்யும் இயக்கங்களாகவோ வருகிறது.
3..நாமும் தவறு செய்யவில்லை… தாயும் தவறு செய்யவில்லை
3.நுகர்ந்த உணர்வோ தாய் தந்தையரால் நுகரப்பட்டது தான்.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது அந்தத் தாய் விஷத் தன்மையில் இருந்து தப்பிப்பதற்காகப் பல பல பச்சிலைகளையும் விஷத்தை முறிக்கும் மூலிகைகளையும் நுகர்ந்தது.

1.அந்த உணர்வுகள் தாய் கருவிலே இருக்கும் அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாகின்றது
2.விஷத்தை முறிக்கும் சக்திகளை அகஸ்தியன் பெறுகின்றான்.
3.அதன் மூலம் அவன் அண்டத்தையே அறியும் அருள் சக்தி பெறுகின்றான்
4.நஞ்சை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் வல்லமையும் பெறுகின்றான்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களைப் பெற்றால் தான் முதலிலே சொன்ன… அறியாமல் வந்த எத்தனையோ தீய வினைகளிலிருந்தும் தாய் கருவிலே பெற்ற பூர்வம் என்ற நிலைகளிலிருந்தும் ஒவ்வொருவரும் தப்ப முடியும்.

அந்தச் சக்திகளைப் பெற நாம் இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து… ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற்று எங்கள் இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி பேரருள் பெற்றுப் பேரொளியாகி… தெளிந்த மனமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வும் பெற்று.. பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று… தொழில் வளம் பெருகி செல்வம் பெற்று… அருள் ஞானம் பெருகி அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
1.கூட்டுத் தியானங்களில் இது போன்று எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்
2.பின் எந்த நேரம் எண்ணினாலும் அந்த ஆற்றலை எளிதில் பெற முடியும்.

கடவுள் காப்பாற்றுவார் என்று தான் நம்புகிறோம்… அந்தக் கடவுள் யார்…?

 

இன்று தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக ஆகிவிட்டார்கள். உலகெங்கிலும் எத்தனையோ வன்முறைகளும் தீவிரவாதங்களும் நாட்டுக்கு நாடு… ஊருக்கு ஊர்.. பெண்களாக இருந்தாலும் குழந்தைகளாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவமதிக்கும் நிலைகள்… துன்புறுத்தும் நிலைகள் பெருகிவிட்டது.

அந்த மாதிரியான உலகத்தில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மற்றவர்கள் அதைச் செயல்படுத்துகின்றார்கள் என்று நாம் பார்க்கின்றோம் அதைக் கண்டு பயப்படவும் செய்கின்றோம்.
1.ஆனால் நமக்கு அதே மாதிரி ஒரு இக்கட்டான நிலை வரப்படும் பொழுது
2.நாமும் பதிலுக்குச் செய்தால் என்ன…? என்ற எண்ணங்கள் வந்து விடுகிறது.

ஆகவே எது வளர்கின்றது…? நேற்று வரை நல்லவர்களாகத் தான் இருந்தார்கள் என்று நினைக்கின்றோம் ஆனால் இப்படிச் செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாதே…! நாங்கள் அப்படி நினைக்கவில்லையே…! என்பார்கள்.

காரணம் இந்த உணர்வின் தன்மை மாற்றி நாம் எதை எண்ணுகின்றோமோ அது தான் அங்கே ஆட்சி புரிகின்றது. அப்படியானால் நம்மை எது ஆட்சி புரிய வேண்டும்…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

எது ஆட்சி புரிய வேண்டும்…?
1.இருளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து
2.தீமை புகாத நிலையில் அதைத் தடுத்து
3.அந்தத் தீமை புகாத நிலையே நமக்குள் ஆட்சி புரியும்படியாக நம் எண்ணங்கள் வர வேண்டும்.

அது தான் நம்மை ஆட்சி புரிய வேண்டும்.

எண்ணிய உணர்வின் தன்மை… எதை நாம் நுகர்ந்தோமோ உயிர் அதைத்தான் செயல்படுத்துகின்றது.

சாமி காப்பாற்றும்… சாமியார் காப்பாற்றுவார்… நடந்து சென்றால் ஐயப்பன் காப்பாற்றுவார்… முருகன் காப்பாற்றுவார்… என்று எண்ணினாலும் அங்கே கோவிலுக்கு செல்வோரையும் கொள்ளையடித்துக் கொண்டு செல்கின்றார்கள். அவர்களைக் காக்கின்றாரா…? இல்லையே.

முருகன் கோயிலுக்குச் செல்கின்றார்கள். அங்கே சென்றுவிட்டு வந்த பின் வீட்டிலே அவர்களிடம் கத்தியைக் காட்டிக் கொள்ளையடிக்கின்றார்கள். அப்போது சாமி அங்கு அவர்களைக் காப்பாற்றுகின்றதா…?

பாத யாத்திரை செல்பவர்கள் முருகா…! என்று சப்தமிட்டுக் கொண்டு அந்த எண்ணத்தில் செல்கின்றார்கள் பின்னாடி முன்னாடி வாகனங்கள் வந்தால் ஹாரன் கொடுத்தாலும் கூட கேட்காமல் இருக்கின்றார்கள்.

முருகா என்று சப்தமிடும் எண்ணத்தில் செல்லும் பொழுது கவனிக்காது பஸ்ஸில் அடிபட்டு இறக்கின்றார்கள். அப்பொழுது அங்கே என்ன நடக்கிறது…? முருகன் அப்பொழுது அந்த இடத்தில் சிந்தித்து போடா அந்தப் பக்கம் என்று இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும் அல்லவா. ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் அல்லவா.

எல்லாக் கோவில்களுக்கும் எத்தனையோ பக்தர்கள் சென்று வருகின்றார்கள். இருந்தாலும் அதிலே எத்தனை விபத்துகள் நடக்கின்றது…? ஏன் அவர்களைக் காப்பாற்றக் கூடாதா…?

காரணம்…
1.நம்முடைய எண்ணங்கள் எதை எடுத்து முன்னணில் வைத்துச் செயல்படுத்துகின்றோமோ
2.அதே ஆவேச உணர்வுடன் உடலை விட்டு பிரிந்து ஆவியாகச் சென்ற உணர்வுகள் இங்கே வருகிறது.

சம்பந்தப்பட்ட நண்பர்களோ குடும்பமோ சொந்தமோ
1.அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுடன் அது (ஆன்மாக்கள்) உள்ளே சென்ற பின்
2.உயிர் அதே உணர்வை இயக்கி அது போன்ற விபத்துகளுக்கு அழைத்துச் சென்று விடுகின்றது

அதனுடைய பின் விளைவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விடுகின்றது.

அப்போது எது நடக்கிறது…!

ஆண்டவன் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் எல்லோரும் எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்துகின்றனர் அந்தக் கடவுள் நம்மை காப்பாற்றுகின்றானா…? யார் அந்தக் கடவுள்…?

உண்மையின் உணர்வின் தன்மையினை எடுப்பதற்குத் தான் ஞானிகள் தெய்வச் சிலைகளை ஆலயத்தில் அமைத்தார்கள் சிலைக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்துவிட்டு “நீ காப்பாற்று…!” என்று சொன்னால் அது எப்படி காப்பாற்றும்…?

1.ஆலயத்தில் காட்டப்பட்ட தெய்வீக குணங்களை நாங்கள் பெற வேண்டும்
2.என் சொல் செயல் அனைவரையும் காக்க வேண்டும்…
3.அருள் உனர்வுகள் பெற வேண்டும்… இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இத்தகைய தெய்வீக உணர்வை எடுத்தால் அது நம்மை காக்கும்.

சிலை காப்பாற்றாது… நாம் எடுக்கும் தெய்வீக எண்ணம் தான் நம்மைக் காப்பாற்றும்.

கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக மாறினாலும் நாம் அதை அறிந்திருக்கின்றோமா…?

 

ஜீவன் பெற்று உடல் கொண்டு வாழும் மனிதன்
1.இயற்கையின் கதி குணங்களுக்கொப்ப எண்ணுகின்ற எண்ணத்தின் காந்தப்புல ஈர்ப்பு நிலைகளில்
2.சுவாசம் எனும் காற்று கொண்டு… பிடர்தல் (உந்துதல்) குண எந்த எண்ணமோ
3.அந்த எண்ணத்தின் வலு வீரிய காந்த ஈர்ப்பில் பிடர்தல் குணத்தன்மைகள் போல்
4.காற்றில் உலாவி ஓடிடும் படர்தல் குண கோடானு கோடி விசேஷத் தன்மைகளில்… “ஒத்த நிலையை ஈர்த்துக் கொண்டு”
5.சுவாசக் காற்றாக ஈர்க்கப்பட்ட ஒத்த குணங்களின் வலு வீரியத்தில்… “எக்குணம் பிடர்தல் கொண்டு வலுவாக்கப்பட்டதோ”
6.அந்த வலுவின் வலுவிற்கே வலு கூட்டிக் கொண்டிடும் ஜீவனாக… “அதே குணங்கள் மென்மேலும் ஈர்க்கப்பட்டு”
7.இரத்தத்தில் கருவுற்று அணுக்களாக உருப்பெற்று… அது தசைகளில் சேர்க்கப்பட்டு
8.எண்ணுகின்ற எண்ணம் தெய்வீக குணங்களற்ற… மாற்று நிலை (மீண்டும் பிறவிக்கு வரும்) கொள்ளப்படும் குணங்களாக இருந்திட்டால்
9.அந்தக் குணங்களுக்கொப்ப சேர்க்கப்படும் அமிலங்கள்… தியானம் கொண்டு நல்ல அணுக்களாக மாற்றம் செய்யப்படவில்லை என்றால்
10.உறைதல் குணம் கொண்டிட்டே (உடல் உறுப்புகளில் மாற்றமாகி) சரீரத்தையே நலிவுறச் செய்திடும் கதியாகி
11.பின் வினையாகி… பின் செயலுறும் வினைப் பயனாகி…
12.பின் விதியாக்கிடும் நிலைபெறும் செயல் கூறுகள் கொள்ளுகின்ற
13.கொள்ளப்படுகின்ற (விதிப்படி எடுக்கப்படும்) எண்ணத்தையே செயல் நடத்திடும் உயிர் கடவுளை இயக்கிடும் உணர்வலைகள்
14.உயிராத்மாவாகப் பதிவு பெற்றிடும் ஆத்ம சூட்சுமத்தில்
15.நாம் கூறிடும் இந்த எளிய தியானத்தின் வழியாகப் பெறப்பட வேண்டியது “ஆத்ம பலம் ஒன்றே…”

இயற்கையின் கதியால் சுவாச நாடிகளில் ஓடிடும் காற்று… பரிசுத்தமாக அமையப் பெற்றிட உன் முயற்சி இருந்திட்டால் மாற்று நிலை அமிலக் கூறுகளின் அணுக்கள் உடலுக்குள் உறையும் நிலை தடுக்கப்படும்.

மேல் நோக்கிய சுவாச நிலைகள் மாறு கொண்டிட்டால்… “கனம் கொண்ட” சுவாச அலைகள் (கோபம் பயம் துன்பம் பொறாமை குரோதம்) சரீர நாடிகளில் ஓடிடும் பொழுது அதனால் தடை ஏற்பட்டு… சரீரத்தின் வெப்ப கதியும்… நீர் அமில சக்தியில் கலந்திட்ட மாற்றமில குணத் தன்மையையும் சுவாச நாடிகளில் “நற்சுவாசத் தடங்கல்கள்” ஏற்பட்டுவிடும்.

அத்தகைய காலத்தில்…
1.வெப்பமும்… நீர் சக்தியுடன் கலந்திட்ட அமில குணங்களும் சுவாச நாடிகளில் நற்சுவாசத் தொடர்பின்றி
2.நற்சுவாசக் காற்றின் தொடர்பும் வெப்ப சக்தியில் கலந்துறும் சூரிய சக்தியும் நீர் அமில சக்தியுடன் கலந்து… தீவினைப் பயனுறும் செயலாக மாறி
3.விசேஷ செயல் உறாமல் (நல்லது ஏற்படாது) காற்றின் சூட்சுமம் தடைப்பட்டே… ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கொண்டிட்ட தன்மையாக
4.காற்றின் மூலத்தைத் தாக்கிடும் செயலாக… தசைகளில் வேதனையாகி சுவாச சமைப்பால் அங்கு (உடலில் ஆங்காங்கு ஏற்படும் வலி) அறிந்து கொள்கின்றோம்.

உறையும் நிலை இங்கு அதிமுக்கியம். நற் சுவாச குணங்கள் எடுக்கப்படும் போது அதனால் காக்கப் பெறுவது சரீரம் மாத்திரம் அன்று… ஆத்மாவும் தான் காக்கப்படுகிறது.

வேதனையைச் சரீர உணர்வுகள் காட்டுகின்றன… அதுவே ஆத்மாவின் பதிவாகச் சேரும் நிலையை உணர்ந்தாயா…?

சரீரம் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டிடும் செயல் கூறுகள் இந்த மனிதனுக்கு மாத்திரம் தான் உண்டு என்று எண்ணிடலாகாது. இயற்கையில் ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் இத்தகைய நிலை உண்டு.

அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் வந்து நீ கண்டிருப்பாய். ஆகாய நீர் உரிக்க அறிந்தவனப்பா நீ. புலர் காலைப் பொழுதில் புல் பூண்டு செடி கொடிகளின் மீது பனித்திவலைகள் முத்து முத்துக்களாக உரு கொண்ட நிலையைப் பார்த்திருக்கின்றாய். அது எவ்வாறு உருப்பெறுகின்றது…?

பருவ காலமான பனிக்காலத்தில் பெய்கின்ற பனி அப்படி உருப்பெறுகின்றது என்று நீ நினைக்கின்றாய். ஞான விழிப்பு தந்தாயிற்றே… சொல் பார்க்கலாம்…!

அறிந்ததைத் தெளிவதே ஞானியருக்கு அழகு.

நண்பகலில் சூரியனின் வெப்ப அலைகளைச் சமைத்திடும் பூமி… தன் சமைப்பில் வெளிப்படுத்திடும் வெப்பத்தின் அலைகள்… உணர்வலைகள் கொண்டு வெப்ப கதியாகப் படரும் செயல் பகல் பொழுதிலும்… அதே வெப்ப அலைகளைப் பெற்றிடும் சகல தாவரங்களும் ஜடப் பொருள்களும் ஏன் மனிதனும் கூட உணர்ந்து கொண்டிடும் அச்செயல் சூரிய அஸ்தமன செயலுக்குப்பின் இரவிலே வெப்பத்தின் நிலை என்ன…?

பூமி சமைத்து வெளித்தள்ளும் சுவாசக்கதியாக
1.அதி வெப்ப நிலைகள் பூமியின் சுவாச உணர்வலைகளால் சமைப்பின் பின் வெளிப்படும் நிலையே
2.மேல் நோக்கித் தள்ளப்படும் வெப்பக் காற்று சென்று…
3.பின் அந்த இடத்தை நோக்கி குவியப் பெறும் பருவ காலத்தின் நீர் அமிலக் காற்று… கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.

தாவரத்தை எடுத்துக் கொள். வெப்பத்தைப் பெற்றிருக்கும் பகல் பொழுதில் பூமியின் சுவாச அதி வெப்பம் தணிவுறும் இரவின் போது… தான் பெற்றுக் கொண்டிட்ட வெப்ப அமில நிலைகளை வெளிப்படுத்திடும் பொழுதே… காற்றில் படர்வு நிலை பெறும் குளிர்வு நிலை நீர் அமில சக்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்திடும் பொழுதே… ஈர்த்திடும் கிரியைகள் மிக மிக நுண் நீர் அமிலக் கூறுகள், ஈர்ப்பில் படர்வு பெற்றே… இரவுக் காலம் முழுவதும் நடைபெறும் அந்தச் செயலால் உருப் பெற்றிடும் திவலையாக… துளிகளாகக் காண முடிகின்றது (VAPORISATION AND CONDENSATION).

இதையே உன் சரீர செயலில் கண்டு கொள்.

ஜடப்பொருளான எத்தனையோ பொருள்கள் மேஜை சுவர்கள் எங்கிலும் நடைபெற்றிடும் செயலில் ஜீவன் கொண்ட தன்மைகளில் அந்த செயல் ஜடப் பொருள்களில் அறியவொண்ணாதது.

உறைபடு செயல்கள்… மறைபடு பொருள்கள்…! அதாவது…
1.கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக உறைந்தாலும்
2.உடலுக்குள் ஆகப்படும் போது அது மறை பொருள் தான்.
3.அதை அறிய வேண்டியது மிகவும் அவசியம் அல்லவா…!

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய “கைம்மாறு”

 

குடும்பத்தில் யாராவது உடலை விட்டுப் பிரிந்தால்… எனக்கு எல்லா உதவியும் செய்தார்… திடீரென்று போய்விட்டாரே…! என்று ரொம்பப் பாசத்துடன் எண்ணுகிறோம்.

என்னைக் காப்பாற்றினார்… எவ்வளவோ பணம் கொடுத்தார்… என்றெல்லாம் சொல்கின்றோம். சாகப் போகும் போது எனக்கு எவ்வளவு உதவி செய்தார்…? அவர் எத்தனையோ நேரத்தில் என்னை பக்குவப்படுத்தினார் இப்படி விட்டு விட்டுப் போய்விட்டாரே…! என்று வேதனையாக எண்ணுகிறோம்.

அந்த வேதனை கலந்த உணர்வுடன் எண்ணும் போது அவர் உடலில் விளைந்தது நமக்குள் உண்டு… உதவி செய்ததும் உண்டு…! வேதனைப்பட்டதும் உண்டு.

எல்லோருக்கும் உதவி செய்தார் என்று சொன்னாலும்…
1.கடைசியில் அவர் பட்ட கஷ்டத்தை எல்லாம் வாங்கி
2.மூட்டையைக் கட்டி நமக்குள்ளும் நோயாக மாற்றுகின்றோம்.

உடலுடன் இருக்கும் போது நன்மை செய்தார். எல்லோருடைய உணர்வையும் கேட்டு அந்த உடலில் நோயாக மாறியது… உடலை விட்டுப் பிரிகின்றார்.

பிரிந்த பின்… எனக்குப் பக்குவம் செய்தாயே இப்படி எல்லாம் விட்டு விட்டுச் செல்கின்றாயே…! பார்த்தால் மண்ணிலே விழுந்து புரள்வார்கள். அத்தகைய வேதனை உணர்வுகள் நுகர்ந்து கொண்ட பின் நமக்கும் அந்த நோய் வருகிறது.

அவர் உதவி செய்தார்…. ஆனால் விட்டு விட்டுப் போய்விட்டார்… என்று பாசமாக எண்ணப்படும் போது
1.அந்த ஆன்மாவைச் சும்மா விடுவதும் இல்லை.
2.அந்த ஆன்மாவை இழுத்து என்னுடனே வந்துவிடு… என் கஷ்டத்தை எல்லாம் நீயும் அனுபவி…! என்ற நிலையாகிவிடும்.

ஏப்படி…? அந்த ஆன்மா இங்கே வந்த பிற்பாடு என்ன செய்யும்…?

சில உடல்களில் ஆவிகள் வந்த பின் படுகின்ற அவஸ்தையைப் பார்க்கலாம். அதனுடைய உணர்வின் தன்மை உணர்த்தி உடலையும் பாழாக்கி… விஷத்தின் தன்மை இந்த உயிருக்குள் இருக்கும் அணுவிற்குள் சேர்ந்த பின்… அந்த ஆவி இந்த உடலை விட்டுச் சென்ற பிற்பாடு என்ன ஆகும்…?

அதாவது
1.நீ உதவி செய்தாய் அப்பா
2.நான் (உடலை விட்டுப் பிரிந்த உன்னை) எடுத்துக் கொண்டேன் அப்பா
3.என்னிடம் நீ வந்துவிடப்பா…
4.நான் செத்த பிற்பாடு (இந்த உடலிலிருந்து) நீ போய் விடப்பா…!

மொத்தமாக நம்முடைய வேதனை எல்லாம் சேர்த்து வெளியிலே போன உடனே அந்த ஆன்மா எந்த நிலை ஆகும்…?

புலி மற்ற மிருகங்களை வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றது நரி நாய் அவைகளும் வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றது பாம்பு விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவை அழுங்காமல் எடுத்துக் கொள்கின்றது இவை எல்லாமே நரக வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றன.

அது போல் இந்த வாழ்க்கையில் எந்த அளவிற்கு நரக வேதனையை எடுத்தோமோ… என்னை இப்படி எல்லாம் விட்டுவிட்டுச் செல்கின்றாயே…! என்று அந்தக் கடுகடுத்த நிலையில் துன்பத்தை எல்லாம் நினைத்து எண்ணினால்… அந்தத் துன்ப உணர்வுகள் எல்லாம் இங்கு வந்து சேரும்.

மொத்தமாகச் சேர்த்து இந்த உடலிலே எடுத்ததை வளர்த்துக் கொண்டு இந்த உடலை வீழ்த்தி விட்டுப் போய்விட்டு வா…! என்று செய்யும்.

எனக்கு நீ எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தாய்… நீ நாயாகப் பிற நரியாகப் பிற… புலியாகப் பிற…! என்று தான் “அவர் உதவி செய்ததற்குக் கைம்மாறாக நாம் செய்ய முடியும்…”.

1.நமக்கு எத்தனை உதவி செய்தார்…?
2.நமக்காக எத்தனை நன்மைகள் செய்தார்…?
3.நம்முடைய கஷ்டங்களை எப்படிக் கேட்டார்…? அந்த உணர்வு அறியாது வந்து எத்தனை வேதனைப்பட்டார்…?
4.நமக்கு உதவி செய்தவர் இனி எந்தக் காலத்திலும் அவர் பிறவி இல்லாத நிலை அடைந்து…
5.”துன்பமே இல்லாத பெரு வாழ்வாக வாழ வேண்டும்” என்று எத்தனை பேர் நீங்கள் எண்ணுகின்றீர்கள்… சொல்லுங்கள் பார்க்கலாம்…!

சாஸ்திரங்கள் அதைத் தான் கூறுகிறது.

ஆகவே உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களுக்கு நாம் எதை எண்ணி எடுக்க வேண்டும்…?

நோயின் தன்மை கொண்டு உடலை விட்டுப் பிரிந்தாலும்
1.அந்த உயிரான்மாவை இங்கிருந்து நாம் உந்தித் தள்ளி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செலுத்தி…
2.உடலில் பெற்ற நஞ்சினைக் கரைத்து பிறவி இல்லா பெரு வாழ்வு வாழ்ந்து
3.என்றும் அங்கே மகரிஷிகளின் அருள் வட்டத்தில் பேரருள் பேரொளியாக வாழ வேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

இங்கே உடலில் வாழும் போது எங்களை எப்படி மகிழச் செய்தாயோ அதே போல்
1.என்றென்றும் எங்களை மகிழச் செய்யும் உணர்வாக “ஒளியாக மாறி”
2.எல்லோருக்கும் பேரன்பைக் கொடுக்க வேண்டுமென்று எண்ண வேண்டும்.

இப்படி எத்தனை பேர் எண்ணுகின்றோம்…? கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்…!

நமக்கு உதவி செய்தார் என்று நல்லதை எண்ணுகிறோம். ஆனால் உதவி செய்தாயே… என்னை விட்டு விட்டுப் போகிறாயே…! என்று தான் சொல்கிறோம்.

எங்கே விட்டு விட்டுப் போவது…!

உன்னிடமே வந்து விடுகின்றேன்…! என்ற அந்த நிலையைத்தான் இங்கே உருவாக்குகின்றார்கள். இதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஞானிகள் காட்டிய வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைத் “தனக்குள் இழுக்காதபடி” விண் செலுத்தப் பழக வேண்டும்.

தேரின் அச்சாணி போல் வழி நடத்த நான் இருக்கின்றேன்

 

கடலில் சதா சர்வ காலமும் கரைதனில் அலை வீசி மீண்டும் அதன் செயல் நடைபெறுதல் போலவே… சூட்சும நுண் அலைகள் நீல வண்ணம் காட்டிடும் அன்பாகக் கருணை என்னும் நிலையில்… நீ அன்பு என்னும் அலைக்கரத்தை நீட்டியே மெய் வழி அறிவாய்…!

யாம் சொல்லும் தியானத்தின் மூலம் எடுக்கும் நுண் மின் காந்த அலைகளால் இருளான இந்த உடலுக்குள் “ஒளி பெற்றிடும் உயிரணுக்கள் தோன்றிடும்…”
1.அப்படி ஒளி மண்டலமாகும் ஆக்கத்தில் திகழும் மூலக்கனல் பெறும் கந்தன்
2.தாய் மூச்சு நாடியின் (குறுதெலும்பு பாகம்) துணையுடன் மேல் எழுந்தே ஆறு ஆதார நிலைகளில்
3.நன்மை என்னும் உறுதி மலை மேல் ஏறி… ஆகாயக் கூறு என்றே அழைக்கப் பெற்றிடும் சிரசின் உச்சியில்
4.ஒளி பொருந்திய வேல் போல் தோற்றம் தந்திடும் அமைப்பினில் கிளர்ந்து எழுகின்ற பொழுது…
5.தாய் மூச்சு நாடியின்… சக்தி ஒளி மண்டல சுவாச அலைகளை
6.கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கரைதனையில் வந்து மோதுவதைப் போல்
7.சிரசினில் மோதிடும் இடைவிடா காந்தப்புலன் மெய் ஒலி/ஒளி காட்டித் தடைப்படாத ஆனந்தத்தை உமக்கு அளித்திட… இனி தடை ஏது…?

ஆகவே… எத்தகைய சங்கட அலைகளையும் எண்ணியே ஈர்த்துக் கொண்டிடுதல் “இனி உன் நிலைக்குத் தகாதப்பா…”

சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு இயற்கையில் பூத்திடும் புஷ்பங்கள் அனைத்துமா விரிந்து மனம் வீசுகின்றது…? பக்குவப்பட்ட மலர்களையே கதிரவனின் கதிர் ஒளி அரவணைத்துப் பூக்கச் செய்கின்ற அன்பினை உணர்ந்து கொண்டாயா…?

1.ஓர் முறை வழி நடந்த என் பயணத்தில் என் தலைச்சுமையை இறக்கி வைத்து… இளைப்பாற்றி…
2.மேல் உத்தரியத்தினால் காற்றினை வீசி அரவணைத்த உனது உள்ளம் தான் இன்னும் உன்னை நாடியே வந்தடையச் செய்கின்றது.
3.சிவத்தின் தன்மை சிவாயத்துள் உன் மனநிலையை அறிந்து கொண்டிடவே தொடங்கிய பயணம் தொடர்கின்றது.

சகடம் போல் சுற்றுகின்ற வாழ்க்கைதான்… எண்ணத் தேர் மனமாம் மனதில்… அசைந்து அசைந்து ஏறுகின்ற செயலிலும் சகடம் சுழல்கின்றது.

தேரின் மையம் எது தெரியுமா…?

“தனித்துவ சக்தி” செயலுறுகின்ற மூகமோ (மௌனம்) அன்றி நிதானமோ…
1.சுழலுகின்ற சகடத்தையும் அந்தச் சுழற்சியின் ஓட்டத்தில் சுழலச் செய்யும் நிலை பெற்ற தேரின் அமைப்பை
2.அந்நிலையில் நிலைக்கச் செய்து… சாஸ்வதக் காட்சியாக வெளித் தோன்றாது.

சிறு பாகமான “அச்சாணி” விசை சேர்த்துக் கொள்கின்ற மையமாம் தனி சக்தி விசையாக்கும்.
1.வாழ்வினுக்கும் வழித் துணை என்றாலும்
2.செலுத்துபவனாய் நாமிருக்க… பஞ்சபூதங்கள் அமைவு பெறும் அனைத்தும் ஆகாயம் என்ற பால் வெளி.

“வேதாள மாமகரிஷி” அன்று உரைத்த “இந்த உரையில்” மறைபொருள் இரகசியங்கள் பல உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வீட்டில் சிறு குழந்தையாக இருப்பது டி.வி.யைப் பார்க்கும் பொழுது அதில் வரும் பாடலோ ஆடலோ அது மனதில் பதிவாகிறது. மற்ற கலக்கம் இல்லாத நிலையில் தான் குழந்தை டி.வி.யைப் பார்க்கின்றது.

இப்படி அந்த ஆடல் பாடல்களை உற்றுப் பார்க்கப்படும் பொழுது மீண்டும் அதே உணர்வுகள எண்ணத்தால் எண்ணும் போது ஆடிக் காட்டுகின்றது… பாடவும் செய்கிறது.

குழந்தை இதை எல்லாம் தெரிந்து செய்யவில்லை. பதிவானது இயக்குகிறது.. இயங்குகிறது.

இதைப் போல் தான் இங்கே யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞானிகளின் அருள் உணர்வுகளை
1.நீங்கள் கற்கவில்லை என்றாலும்… கற்றறியும் திறன் இல்லை என்றாலும்
2.யாம் சொல்வதைக் கூர்ந்து பதிவாக்கப்படும் பொழுது
3.மீண்டும் இதனின் நினைவாற்றல் வந்தால் இந்த ஞானத்தின் உணர்வின் இயக்கமாக மாற்றும்.
4.உங்களில் உள்ள தீமைகளை மாற்றிடும் தன்மையும் வரும்.

நான் கற்காதவனாக இருந்தாலும் கல்வியற்றவனாக இருந்தாலும் குருநாதர் எனக்குள் அதைப் பதிவு செய்தார். அந்த உணர்வை நுகர்ந்தேன். அந்த உணர்வின் அறிவாக எனக்குள் அது இயக்கச் சக்தியாக வளர்ச்சி அடைந்தது.

1.அப்படி வளர்ச்சி அடைந்த ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அதன் செயலாக்கங்களாக… அதே வழியில்… உங்களுக்குள்ளும் உருவாக்கும் நிலைகள் வர வேண்டும் என்பதற்குத் தான் இதனைச் சொல்வது.

ஏனென்றால் நான் வெறும் வார்த்தையாகப் பேசவில்லை…!

1.குரு அருளின் உணர்வுகள்தான் வாக்காக… ஞான வித்தாக… உங்களுக்குள் அது பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
2.அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கிடும் மனிதர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும்…
3.அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

அந்த நிலை பெறாதபடி இங்கே வேதனை என்ற உணர்வு கொண்டால் மனிதனல்லாத ரூபமாக மாற்றி நரக வேதனைப்படும் உணர்வின் அணுக்களாக மாற்றிவிடும். நஞ்சின் தன்மை அடைந்து விட்டால் மனித உடலை இழந்து விடுவோம்.

அப்படியே தப்பித் தவறி மனிதனாகப் பிறந்தாலும் “அசுர சக்திகள்” கொண்டு செயல்படும் உணர்வாகத் தான் அது மாற்றும். ஆகவே இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதாவது… மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றாலும் மனித உடலில் வாழும் போது “யார் உணர்வைக் கவர்ந்தோமோ” அந்த உடலுக்குள் சென்று தான் இந்த உணர்வைக் கருவாக்க முடியும்.

ஆனாலும் இப்பொழுது வாழும் இந்த மனித உடலில்… நஞ்சு கொண்ட உணர்வுகளால் நல்ல அறிவின் ஞானத்தை இங்கே இழந்து விட்டால்… அந்த உணர்வின் அணுக்களாகத் தான் நம் உயிராத்மாவிலே விளையும்.

உடலை விட்டுப் பிரிந்தாலும் மீண்டும் பற்று கொண்ட மனித உடலுக்குள் நாம் செல்லப்படும் பொழுது இங்கே விளைந்த உணர்வுகள் அந்த மனிதனையும் வீழ்த்திடும் உணர்வைத்தான் உருவாக்கும்.

அங்கே சென்று குழந்தையாகப் பிறக்காதபடி நஞ்சினை வளர்த்திடும் நிலை கொண்டு… மனித ரூபத்தையே மாற்றிவிட்டு… மாற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு வெளி வந்த பின்
1.மனிதனல்லாத உணர்வின் வலு கொண்ட உடலுக்குள்ளே ஈர்க்கப்பட்டு அதனின் ரூபமாக நம் உயிர் மாற்றிவிடும்.
2.இன்றைய செயல் நாளைய சரீரமாக ஆகும்.
3.ஆகவே இன்றைய நம் செயல் எதுவாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு நாமும் ஞானியாக வளர்ந்திட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

சதிபதி

 

ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்றால் வாழ்க்கை நடைமுறையில் புறச்செயல்படும் காரியங்கள் குறிக்கின்ற கலைகள் என்றே எண்ணமிடுகின்றாய்.

வீரம் விவேகம் நளினம் முதற்கொண்டு நாம் காரியங்கள் நிகழ்த்தும் கலைகளும் உண்டு. மகரிஷிகள் உணர்த்திச் செயலுற வந்த மெய்ஞ்ஞானச் சுடராக்கும் கலைகள் அறுபத்தி நான்கினையே இங்கே உரைத்திட வந்தோம்.

எண்ணத்தின் தெளிவு…
1.இக்கணம் நீ என்ன “எண்ண நினைவில் இருக்கின்றாய்…?” என்று வினவினால்
2.“நான் இதை நினைத்தேன்…” என்று கூறுமளவிற்கு மனத்தின் தூய்மை வலுப்பெற்றிருத்தல் வேண்டும்.
3.அந்நிலை வலு கொண்டு விட்டால் கலைகள் தொடக்கம் அச்சரம் ஐம்பதில் தொடங்கும்.

ஓங்காரப் பொருள் காட்டும்
1.“பிரணவம்” என்றே அழைக்கப் பெறும் ஓம்…!
2.அதனுள் மூன்று நிலைகளாக கலைகள் (1)ஈர்த்து (2)சமைத்து (3)அமைதல் என்கின்ற விதமாக கலைகள் ஐம்பது.
3.அதாவது உயிரிலே ஈர்க்கபட்டு சமைத்து – ஓ; உடலாக அமைவது – ம்

ஈர்ப்பின் அகரம் பத்தாக… ஈர்த்த பின் செயல் வரும் உகரமாக பதினான்கு செயல் கொண்டு… அமைவு பெறும் மகரம் இருபத்தி ஆறாக ஓம் என்ற பிரணவ கலைகள் ஐம்பது நாற்பூத செயல்பாடலாய் விந்து கலைகள் நான்கு… நாதக்கலைகள் பத்தாக ஆக “அந்த அறுபத்தி நான்கு கலைகளையே சரீரத்தில் கண்டனர் மகரிஷிகள்…!”

இதற்கும் மேல் ஒளியாகும் நிலை ஒன்று சிரசின் உச்சியில் ஈஸ்வர ஜோதி…! ஒளி நிலை பெற மகரிஷியில் காட்டிட்ட அனிமாது சித்துகளை (அஷ்டமாசித்து) அடைந்து விட்டாலும்
1.அடக்கத்தின் திரு உருவாக ஒளி மண்டலத்தில் உறையும் மனமாக காரியமாற்றி… காரணத்துடன் வாழ்வான்
2.அதனின் நிலைக்கு வேறு எந்த நிலையும் நாம் எண்ணிடல் ஆகாது.

இச்சரீர வாழ்க்கையிலும் சிவசக்தி (சதி+பதி) சமேதராகச் சக்தி நிலை பெற்றிடவே உணர்ந்து கொண்டிட வேண்டிய பயன் தரும் நிலை காணுவோம். தாகம் எடுக்கின்றது தாகத்தை தணிக்க நீர் அருந்த வேண்டும் என்று மனம் நாடுகின்றது.

இது “சதியானவள்…” (வேகா நிலை) கொள்கின்ற செயலுறும் எண்ணத்தின் நிலையே கோபுரம் போல் உயர்ந்து விளங்குகின்றது. அதுவும் மலையின் மீது அமைந்த கோபுரம்.

“பதியானவன்…” மோகத்தின் வழிப்பாதை பயணமுற்று… அந்த வழிப் பாதையின் தொடரில் பன்மாடங்கள் இளைப்பாரி… நீக்கமுறாத் துயில் வசம் ஆட்படுகின்றான் (பல பிறவி எடுத்த நிலை).

அறிவின் சுடர்தல் தொடங்கி மெய்ஞான விழிப்பு ஏற்படுத்தும் கருத்தினுள் ஒன்றியவுடன் பதியானவன் விழித்துக் கொள்கின்றான்.

விழிப்பு நிலை பெற்றவுடன் வழித்தடங்கல் நிலையினை எண்ணியே செல்லும்
1.வேகத்திற்கு மேல் வேகமாக எண்ணத்தைச் செலுத்தி
2.கோபுரம் வாழ்கின்ற தன் பாகமாம் “சதியின் துணை நாடி…”
3.சதிபதி சிவசக்தி கூடும் நிலைகாட்டி…
4.இரு புறத்தூய்மையும் அகத்தின் வசம் எழ…
5.ஒளிநிலைப் பிரவாக மெய்ஞானச் சுடராக நிலை பெற்றிருக்கும் சூட்சுமம் செயல் கொள்கிறது.

மோகத்தின் நிலை மாற்றும் “இரகசியக் குறிப்புகளை” இங்கே காட்டி விட்டோம். சித்துக்களைப் பற்றியும் கூறி விட்டோம். கலைகளின் வகை இரு நிலைப்படும் நிலையைக் காட்டி “ஆய்வை” உனக்குள்ளே தூண்டி இருக்கின்றோம்.

செயலில் “வேகம்” வேண்டும்.. வேகத்தின் பிரதானம் “நிதானமும்” வேண்டும். எண்ணத்தில் ஆட்டுகின்ற கருத்தே சொல்லியவன் சுருதி கணபதியாக வரல் வேண்டும்.

சகல நிலைகளையும் உணர்த்தி ஏற்றுக் கொண்டிடும் பக்குவத்திற்காகப் பண்படுத்தி விதைத்திருக்கின்றோம்.

குருநாதர் அவர் வழிக்கு என்னைத் திருப்பிய விதம்

 

இரண்டு பேர் இருக்கின்றார்கள் அங்கே கிழங்கு இருக்கின்றது… இதைச் சாப்பிட்டால் “நன்றாக இருக்கும்…!” என்று ஒருவர் அடுத்தவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அங்கே வருகின்றார். ஐய்யய்யோ…! இந்தக் கிழங்கை அன்றைக்கு ஒருவர் சாப்பிட்டார்… அதனால் அவருக்கு வயிற்று வலியே வந்து விட்டது…! என்று சொல்கின்றார்.

ஆனால் அவர் சாப்பிட்ட நேரம் எது…?

1.கிழங்கு… சத்து அதிகமுள்ளது
2.உடலில் நோய் இருக்கும் போது… ஜீரணிக்க முடியாத அந்த நேரத்தில் கிழங்கைச் சாப்பிடும் பொழுது வயிற்று வலியானது.
3.அன்றைக்கு அவர் பட்ட அவஸ்தை அதிகமாகி விட்டது.
4.அந்த உணர்வை இங்கே ஊட்டியவுடன் என்ன செய்யும்…?

கிழங்கைப் பார்த்தவுடனே இவருக்கும் இங்கே அதே பலவீனமாகிவிடும். சாப்பிட்டால் அடுத்து என்ன செய்யும்…? அதே உணர்வுகள் அந்த உமிழ் நீரைக் கூட்டி இயக்கிவிடும்… வயிற்று வலியாகிவிடும்.

அந்த ஆள் சொன்னார்.. சொன்னது சரியாகப் போய்விட்டது என்று நாம் சொல்ல ஆரம்பிப்போம். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

1.உணர்வின் இயக்கங்கள்… நம் உயிர் எப்படி இயக்குகின்றது…?
2.எதை எண்ணுகின்றோமோ அதுவே… அந்த எண்ணமே நம்மை ஆட்சி புரிகின்றது.
3.நன்றாக யோசனை செய்து பாருங்கள்… சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் இது தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்று தான் இங்கே சாக்கடை உபதேசமாகக் கொடுக்கப்படும் போது அந்தப் பன்றி வந்த பின் சாக்கடைக்குள் இருக்கும் நல்லதை அது எப்படி நுகர்ந்து சாப்பிடுகின்றது பார்த்தாயா…? என்று கேட்கிறார் குருநாதர்

ஆனால் குருநாதருடன் சுற்றிக் கொண்டிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் நான் வேலைக்கும் சரியாகச் செல்வதில்லை. வீட்டில் என் மனைவி அப்போது தான் நோயிலிருந்து மீண்டு எழுந்து வந்திருக்கிறது.

ஏனென்றால் இயற்கையிலேயே ஒவ்வொரு சந்தர்ப்பமும் மனிதனுக்கு எப்படி எல்லாம் வருகின்றது என்று தெரிந்து கொள்வதற்கே இதைச் சொல்கிறேன்.

குருநாதர் என் மனைவியைக் காப்பாற்றினார் என்ற நிலையில்
1.வாக்கு வாங்கியவுடன் நான் அவரிடம் போய்ச் சிக்கிக் கொள்கின்றேன்.
2.சாக்கடை அருகே அமரச் செய்து இத்தனை வேஷத்தையும் அங்கே போடச் சொல்கின்றார் குருநாதர்.

சாக்கடை அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்கின்றார்கள். நையினாவிற்குப் (ஞானகுரு) பைத்தியம் பிடித்து விட்டது என்கிறார்கள்.

காதில் இதை எல்லாம் கேட்டால் என் மனம் எப்படி இருக்கும்…? ஆனால்
1.என் மனதை உறுதியாக்குவதற்காக வேண்டி
2.அந்த இடத்திலே குருநாதர் பரீட்சை வைக்கின்றார்.

மனைவியைக் காப்பாற்றிய உடன் நான் சொல்வதைச் செய்கிறாயா…? என்றார்.

நான் செய்கிறேன் என்று சொன்னேன் (மனைவியை அவர் எழுப்பி விட்டதால்)

காரணம் டி.பி. நோயால் என் மனைவி அவதிப்பட்ட போது டாக்டர்கள் எல்லாம் கைவிட்ட நிலை. குருநாதர் வந்த பின் என் மனைவி பிழைத்து எழுந்து விட்டது. அப்போது என்னிடம் வாக்கு வாங்குகின்றார்.

என்னை நம்புகின்றாய் அல்லவா…! நம்புகிறேன் என்று சொன்னேன் சொல்வதைக் கேட்பாய் அல்லவா…! கேட்கிறேன் என்று சொன்னேன். இதை எல்லாம் கொடுத்த பின் சாக்கடை அருகே உட்கார வைத்து “என்னை வாட்டுகிறார்… வறுத்து எடுக்கின்றார்…”

எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள்… என் மாமியார் காதிற்கும் செய்தி போகிறது.

“தொலைந்து போகிறவன்…” என் பிள்ளையை இங்கே படுக்க வைத்துவிட்டுப் பைத்தியத்தோடு இவன் சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்று என்னைச் சாடிப் பேசுகின்றது.

எப்படி இருக்கும் பாருங்கள்…? இயற்கையின் உணர்வுகள் நம்மை எப்படி எல்லாம் இயக்குகின்றது…? என்று அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்கு கொடுக்கின்றார் குருநாதர்.

அப்போது தான் கேட்கிறார்…. கடவுளின் அவதாரம் யார் தெரியுமாடா…? வராகன் (பன்றி) என்று சொன்னார்.

வராகன் கடவுள்… என்று சொன்னால் அவதாரங்கள் பற்றிய கதைகளை எல்லாம் நான் அதிகமாகப் படித்தவன் இல்லையே… எனக்குத் தெரியாது.

வராகன்… அது தான்டா கடவுள்…! என்றார் குருநாதர்.

என்ன சாமி…? பன்றியைப் பார்த்துக் கடவுள் என்று சொல்கின்றீர்கள் சாக்கடைக்குள் சுற்றுகிறது… கடவுள் இப்படியா இருக்கும்…! என்று குருநாதரிடம் நான் கேட்கின்றேன்.

பன்றி என்ன செய்யும் தெரியுமாடா என்று கேட்டார்…? உன் காபியிலே சாக்கடையை அள்ளிப் போட்டதும் ஓய்… என்று நீ வாந்தி எடுத்தாய். ஆனால் பன்றி சாக்கடைக்குள் உள்ள நாற்றத்தைப் பிளக்கின்றது. நாற்றத்தைப் பிளந்து விட்டு நல்லதையே அது நுகருகின்றது.
1.தீமையை நீக்கி நல்லதை உருவாக்கக்கூடிய நிலைகள் வராகன் என்று
2.பன்றித் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டுகின்றான் ஞானி…!
3.மனிதர்கள் நாம் புரிந்து கொள்வதற்கு.

கண்களிலே பார்க்கிறோம் அல்லவா. குழந்தை வெளிக்குச் சென்றால் பன்றி வேகமாக அங்கே செல்லும் முட்டித் தள்ளிவிட்டு அதற்குள் ஜீரணமாகாத பருப்பு இருந்தால் அதைச் சாப்பிடும்.

ஆனால் நன்றாக ஜீரணித்து மாவாக வெளியில் போயிருந்தால் அதை நுகர்ந்து பார்த்து… விட்டு விட்டு வந்துவிடுகிறது. ஆனால் ஜீரணிக்காத நிலையாகி அதில் பருப்பு இருந்தால் அதைக் கிளைந்து எடுத்துச் சாப்பிடுகின்றது.

இத்தனையும் நான் பார்க்க வேண்டும்.. குருநாதர் கட்டாயப்படுத்தி இதை எல்லாம் பார்க்க வைக்கின்றார். இப்படி எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…? என்னை அப்படித்தான் அந்தந்த இடங்களுக்கு குருநாதர் இழுத்துக் கொண்டு செல்கிறார்.

எல்லாரும் இதைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். ஆனால் இதுதான்டா கடவுள் என்று சொல்கின்றார். அந்தப் பன்றி தான் உன்னை மனிதனாக உருவாக்கியது என்று சொல்கின்றார். அதற்கு என்ன சொல்வது…?

பன்றி தான் உங்களை மனிதனாக உருவாக்கியது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா…!

பன்றி தான்டா உன்னை மனிதனாக உருவாக்கியது… வேறு யாருடா உன்னை உருவாக்கியது…? அவன் தான்டா கடவுளின் அவதாரம்…! என்று சொல்கின்றார்.

குருநாதர் சொல்லச் சொல்ல நான் மறுக்க… அடுத்தாற்படி எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் வந்து விட்டது. கன்னா…பின்னா… என்று என்னைத் திட்டுகின்றார்.

டேய் தெலுங்கு இராஜ்யம்… உன்னைக் கொன்றுவிடுவேன்டா…! என்று சொல்கின்றார். என்னை எதிர்க்கின்றாயா…? அந்த அகத்தை அடக்கி விடுவேன்டா என்றார்.

ஏனென்றால் நாம் இந்த அறியாமையில் இருக்கக்கூடிய அந்த அகத்தை அழித்து விடுவேன் என்று அவர் சொல்கிறார்.

தெலுங்கு இராஜ்யத்தைத் திட்டுவார்… என்னைத் திட்ட மாட்டார். நான் தெலுங்கு பேசுகின்றேன் அல்லவா… அந்தத் தெலுங்கு இராஜ்யத்தை அப்படிச் சொல்கிறார் குருநாதர்.

தெலுங்கு இராஜ்யம் என்றால் வெங்கடாஜலபதி படுத்து இருக்கின்றார் அவருக்குச் செல்வம் தான் தேவை என்று இங்கிருந்து கொண்டு போய்க் கொட்டுகின்றார்கள்.

1.உனக்கு வேண்டியது மரியாதையும் செல்வமும் தான்
2.மரியாதையை வைத்துச் செல்வத்தை நீ தேடுகின்றாய் அதிலே இருக்கின்றதடா தெலுங்கு இராஜ்யம்.
3.பார்… உன் அகந்தையைக் கொன்று விடுவேன் என்று சொல்கின்றார்… “மறைமுகமாகச் சொல்கிறார்…”

கொன்று விடுவேன் என்று அவர் சொன்னவுடன் நான் திருப்பிக் கேட்டேன். ஏன் சாமி…? கொன்று விட்டால் உங்களுடைய வார்த்தையை நான் எப்படிக் கேட்பேன்…? என்றேன்.

உன்னை யாருடா கொல்வேன் என்று சொன்னது…! அந்தத் தெலுங்கு இராஜ்யம் அவனைத் தான் நான் கொல்வேன் என்று சொல்கிறார்.
1.ஒவ்வொன்றுக்கும் அழுத்தங்கள் கொடுத்து என்னை அவர் வழியில் அது கேட்கும்படி செய்து பல அர்த்தங்களைக் காட்டுகின்றார்.
2.அப்படி தெரிந்து வந்து தான் உங்களிடம் இதை எல்லாம் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

இங்கே காட்டப்படும் நெறிகளைக் கடைப்பிடிப்போன் மெய் ஞானியாகின்றான்

 

இங்கே யாம் உபதேசமாக உரைத்திட வந்திட்ட… ஒளி நிலை பெறச் செய்யும் ஒளி மண்டல தியானம்… “உணர்வுடன் கூடியதாகும்…”
1.ஈர்ப்பின் நிலை உணர்வுடன் பெறுதலால் புறக்கண் பார்வையை அகக்கண்ணால் அகழ்ந்து நோக்கின்
2.ஊர்த்துவ (மேலான) சக்தியாக மேல் எழும் கந்தன் தோன்றிடுவான் என்கின்ற சூட்சுமம்
3.ஒவ்வொரு மனித ஆத்மாக்களும் பெற்று உயர்ந்திட வேண்டும்.

அத்தகைய நன்நெறி நன்நோக்கத்தால் உங்களைப் போதினியாக (உலகுக்கு வழிகாட்டிகளாக) உருவாக்கிடவே இதை உரைக்கின்றோம்.

போதனைப் படுத்திடும் உயர் வழி நெறியைக் கற்றே… கற்றதைத் தன் வழி நின்று… கொண்ட கொள்கையை தகமைசால் (தெய்வீகப் பண்பு) நன்றே…! என அறிந்து… பின்பற்ற விரும்புவோர் இதை முயலட்டும்.

போதனை பெற்றிடும் இந்தச் சூட்சும வழியினைக் கடைப்பிடிக்கும் எளிமையும்… உணர்ந்து கொண்டால் அருமையும்… அத்தகைய இனிமை உணர்வு கூட்ட… உன்னுள்ளே கந்தன் (முருகன்) தோன்றுவது எப்படி…?

1.தியானத்தின் மகரிஷிகளின் ஒளியான நுண் மின்காந்த அலைகளை ஈர்க்கின்றாய்
2.ஈர்க்கின்ற செயல் உனது புருவ மத்தியில் கார்த்திகை (வெளிச்சம்) விளங்கிடும் சுடருள் பாய்ச்சி
3.ஈர்க்கப்படுகின்ற நிலை எங்கெல்லாம் செல்கின்றது தெரியுமா…?

சரீரத்தில் ஓடிடும் சகல சுவாச நாடிகளையும் அறிந்து கொண்டவனப்பா நீ. நீ ஈர்த்துக் கொண்டிட்ட ஒளி நுண் மின்காந்த அலைகள் சுவாச கதியின் சமைப்பின் சமைப்பாக சிரசைக் கடந்து கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதார அக்கினியில் அது செலுத்தப்படுகின்றது.

கந்தன் சிவன் நெற்றிக்கண்ணில் தோன்றினார் என்று புராணம் உரைக்கின்றது…!

மூலாதாரத்தில் பாய்ந்த நெற்றிக்கண்ணின் ஒளி சக்தி…
1.ஆங்கே கனல் விளைந்த ஒளியாக சுழுமுனை நாடியில் எழும்பொழுது (உயிர் வழி சுவாசம்)
2.புருவ மத்தியில் ஆறு ஆதார நிலைகள் அதே நிலை கொண்ட ஜோதி ஸ்வரூபமாக எழுந்து
3.மீண்டும் ஆகாயக்கூறு எனும் சிரசின் உச்சியில் சிவசக்தி நாடிகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட சிரசைக் கடந்து
4.எழுந்து நிற்கின்ற அந்த வடிவே கந்தன்,

பேரின்ப நிலை கிடைக்கப்பெறுகின்றது என அனு தினமும் பகர்கின்றாய். அந்தப் பேரின்ப லயத்தை நாடிட்ட மனம் வேறொன்றையும் நாடிடாது.

இத்தகைய பேரின்ப நிலை உனக்கு உரைத்த போதனையை நீயே வளர்ப்பாக்கி நீயே வளர்த்து… கண்டு கொண்டிட்டது தான்…!
1.இங்கே பயிலும் மெய்ஞானச் சுடர் ஆக்கும் தியானத்தின் வழி நின்றிடும் உன் மன உறுதியின் செயலை
2.அனைவரும் பெற்றிட வேண்டும் என்றே எண்ணத்தால் ஆசிர்வதித்து மென்மேலும் வளர்ச்சிப்படுத்திட்டு
3.வளர்நிலையின் ஜொலிப்பை எமக்குக் காட்டு.

வேதிக்கும் நிலையே (மெய்யை அறியும் குணம்) இடைவிடாத உன் மன உறுதி…! வாதிக்கும் நிலையே நம் உணர்வில் உந்துதலால் செயல் கொள்ளும் புறக்காரியங்கள்.

மெய்ஞானச் சுடராக்கும் வழிப் பயணத்தைக் காட்டிவிட்டோம். அறிவின் ஒளி இயல்பாக மஞ்சள் வண்ணம் எனில் தெய்வ வடிவைப் பெற்றிடும் குணம்… அன்பின் வழி வண்ணம் நீலம்…!
1.சாற்றும் வழி போற்றுவான் (மெய்யை உணர்ந்தவன்)
2.கடைப்பிடிப்பவன் மெய்ஞானி ஆகின்றான்

காட்சி:-
மிகப்பெரிய வட்டம் தோன்றுதல் ஒளி நுண் மின் அலைகள் காந்தத்தின் புலனாக அசைதல் சிரசின் உச்சியில் குவிதல்
நெற்றிக்கண் திறந்திடும் சூட்சுமம் மெய்ஞான விழிப்பு
நெற்றிக்கண் திறந்த பின்பு ஜீவன் சிவனாகத் தான் விளங்க
நெற்றிக்கண் ஒலி மூல ஆதாரத்தைத் தான் நோக்க…
கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதாரக் கனல் கிளம்பி முதுகுத்தண்டு வழி ஓடி
சுழுமுனை நாடியுள் அக்கினிப் பிரவாகம் பெருக்கெடுத்து சிரசின் உச்சியில் எழுந்து நிற்றல்…!

சந்திர கலைகள் செயல்படுங்கால்… ஆறு ஆதாரங்களும் ஒரு நிலைப்படுத்தப்பட்ட… “கந்தன் என்ற ஞானவேல் தோன்றுவான்…!”

தீமையை நீக்கும் எண்ணத்தையே… “கண்கள் வழி” நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்

 

வீட்டில் பையன் ரொம்ப சேட்டை செய்கிறான்… அவனுக்குப் புத்தி வரட்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் சொல்லும் பொழுது
1.எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் செய்து கொண்டிருக்கின்றான்.
2.இவன் அடங்கவே மாட்டான் என்று தான் அடுத்தவரிடம் சொல்கின்றோம்

“எப்பொழுது பார்த்தாலும் சேட்டை செய்து கொண்டே இருப்பான்” என்று அவனுடைய உணர்வை எடுத்து அதிகமாக விளைய வைத்துக் கொள்கின்றோம்.

அவனுடைய உணர்வை எடுத்து விளைய வைத்தபின் கண்ணில் பார்க்கின்றோம். அடுத்தாற்போல் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் “சேட்டைக்காரன்…” என்று தான் அவனை மாற்றுகின்றோம்.

அதே உணர்வை நாம் எடுத்துக் கொண்ட பின் “எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தன்ம் செய்வான்” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

அவன் சும்மா இருந்தால் கூட நாம் மிரட்ட ஆரம்பிப்போம் இத்தகைய மிரட்டல் என்ன செய்யும்…? அங்கே இருப்பதைத்தான் நாம் நமக்குள் சமைத்து விளைவிக்கின்றோம்.

அதே சமயத்தில் நம் நினைவு எல்லாம் எப்படி இருக்கும்…?
1.இப்படிக் குறும்புத்தனம் செய்கின்றானே… என்ன செய்வது என்று தெரியவில்லையே
2.அவனுக்கு இப்படி செய்தால் பரவாயில்லையா…! அப்படிச் செய்தால் பரவாயில்லையா…! என்று இந்த கவலை இருக்கும்.

கவலை கலந்த உணர்வுகள் வந்தவுடன் வெறுப்புடன் தான் பையனிடம் பேசுவோம். வெறுப்புடன் சொல்லப்ப்படும் போது
1.இந்த வெறுப்பு அவனுடன் கலந்து அவனுக்குள் உருவான வித்திற்கு உரம் போட்ட மாதிரி ஆகிவிடும்
2.அடுத்து அவன் கெடுதல் தான் அதிகமாகும்…. அதைத் தான் உருவாக்கும்.

அவனுக்கு இந்த உணர்வு தான் அதிகரிக்குமே தவிர நல்லது உருவாகாது. அவனிடம் விளைந்ததை நமக்குள் எடுத்து மீண்டும் நமக்குள்ளும் அதைத்தான் கூட்ட முடியும்.

இவனை பார்த்துப் பார்த்து… பேசிப் பேசி என் கை கால்கள் எல்லாம் ஓய்ந்து விட்டது… எனக்கு இப்படி ஆகிவிட்டது அப்படி ஆகிவிட்டது… என்று இத்தனை உணர்வுகள் வரும்பொழுது அடுத்து சமையலுக்குப் போனால் அங்கே சீராகச் செயல்படுத்த முடியாது.

ஒரு துணியைச் சுத்தம் செய்து துவைக்க வேண்டும் என்றால் கூட கை ஓய்ந்துவிடும். அதில் இருக்கக்கூடிய அழுக்கைப் போக்க முடியாது

ஏனென்றால் இந்த உணர்வுக்குத் தக்கவாறு அந்தச் செயல் வரும். பொழுது ரொம்ப அழுக்காக இருந்ததைப் பார்த்த உடனே ஒரு விதமான சடவு வரும்… அதை நீக்க முடியாது.

அதே போன்று ஒருவர் நல்லது சொல்கின்றார் என்று நாம் அதைக் கேட்கும் பொழுது நம்மை அறியாமலேயே ஒரு சோர்வும் சஞ்சலமும் வரும். என்னுடைய பையன் நன்றாக இருக்கின்றான் என்று அவர் சொன்னவுடனே அதைக் கேட்க விடாது. சோர்வும் சஞ்சலமும் தான் வரும். அப்பொழுது
1.மீண்டும் நமக்கு வேதனை தான் உருவாகின்றது… நல்லதை விடுவதில்லை
2.அந்த உணர்வே ஆட்சி புரியத் தொடங்குகின்றது… நல்லதை விடாதபடி நமக்குள் தடுதலாகின்றது
3.இதைத்தான் மகாபாரத்தில் கௌரவர்கள் என்று சித்தரித்துக் காட்டுகின்றார்கள்.

நல்லதாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் கௌரவப் போராகின்றது. நல்லவர்களைப் பார்க்கும் போதெல்லாம் என்ன செய்கிறது…? நல்லதைச் சொன்னார்கள் என்றால் மீண்டும் வெறுப்பாகி அந்த நல்லதை உள்ள விடாதபடி கௌரவர்கள் போர் செய்கின்றார்கள்.

கண் இழுத்து உண்மையைச் சொல்கிறது. கண்ணுடன் சேர்ந்தவுடனே திரௌபதி உயிர் அந்த உணர்வை எடுத்து உள் உணர்வை ஊட்டுகின்றது ஊட்டிய உடனே நல்லது என்று சொன்னவுடன் அதை அவமதிக்கின்றது.

உடனே கோபமான உணர்வுகளைத் தூண்டி… திரௌபதியை நாம் கேவலப்படுத்தத் தொடங்குகிறோம் நல்ல உணர்வுகள் இல்லாதபடி கேவலமான வார்த்தைகளைப் பேசுகின்றோம்… நல்லதை இயக்க விடுவதில்லை.

அப்பொழுது எது செயல்படுகின்றது…?

நம் பையன் மீது நினைவு வரும் போது
1.இப்படிச் சேட்டை செய்கின்றானே என்று இந்த உணர்வுகள் தான் வருமே தவிர
2.கண்கள் நுகர்ந்து நல்ல உணர்வின் தன்மை ஊட்டினாலும் உள்ளுக்கே விளைந்த உணர்வின் தன்மை (கௌரவர்கள் – பையனைப் பார்த்து நுகர்ந்தது)
3.சிந்தனையற்ற நிலையில் கொண்டு நமக்குள் போர் முறையே வருகின்றது.

இதனுடைய வலு எது…?

நம்முடைய கூர்மையான எண்ணங்கள் அர்ஜுனன். நுகரப்படும் போது நகுலன்… காந்தப்புலன் மாற்றி அமைத்து அதன் தெளிவான நிலைகளை நமக்கு ஊட்டும். நுகர்ந்த உணர்வு உடலுக்குள் இணைந்து விட்டால் சகாதேவன். நுகர்ந்த உணர்வின் சத்து உடலுக்குள் வலுவாகும் போது பீமன் வலுவின் தன்மைகொண்டு இயக்கும் சக்தியாக வருகின்றது.

மகாபாரதத்தில் திரௌபதை கண்ணனுடைய சகோதரி பெண்பால் இது ஆண்பால் ஆனால் கண்…! கண்ணுடன் சேர்ந்த கருவிழிக்குப் போகும் பொழுது தெரிவதில்லை… அந்தச் சக்தி மனைவியாகின்றது ருக்மணி.

கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா தவறு செய்யும் உணர்வை நுகர்ந்து நம் உயிரிலே சேர்த்து உண்மையை உணர்த்துகின்றது தனதாகவே மாற்றுகின்றது. சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கண்ணனுடைய சகோதரி உடலுக்குள் நமக்கு உணர்த்துகின்றது.

பகைமை என்ற நிலையில் பையனைப் பற்றி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கப்படும் பொழுது நல்லவர் வந்து சொல்கின்றார்கள் என்று சொன்னால் அந்த வலிமைமிக்க நிலைகளைச் சொல்லப்படும் பொழுது அதை (அர்ஜுனனை) விடுவதில்லை. அதாவது நல்லதை வலுவாக்கும் அந்த உணர்வுகளை விடுவதில்லை..

நீங்களே ரொம்ப சங்கடமாக இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நேரத்தில் ஈஸ்வரா…! என்று சொல்லி உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கலாம் என்றால்
2.அந்தச் சங்கடம் அதை எடுக்க விடுமா…? என்று பார்க்கலாம்.

அப்போது எது செய்கிறது…? அந்தக் கௌரவர்கள்… “என்னை இப்படிப் பேசினார்களே…” என்ற இந்த உணர்வு முன்னணியில் வரும் பொழுது நல்லதை விடுவதில்லை.

நல்லதை விடுவதில்லை என்கிற பொழுது
1.அதை மாற்றுவதற்குண்டான அந்த வலுவான சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
2.உபதேசத்தினை மீண்டும் மீண்டும் உங்களுக்கு அழுத்தமாகக் கொடுப்பது.

இந்த உணர்வின் தன்மை நீங்கள் ஆழமாகப் பதிவு செய்து அதைத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை எடுத்துக் கலந்த பின் உங்களுக்குள் வலுவாகின்றது. அதை எடுத்துச் சங்கடத்தை நீக்க முடியும்.

அழுத்தமாகப் பதிவாக்கவில்லை என்றால் அடுத்தவர்கள் நல்லதைச் சொன்னால் அதை ஏற்க விடாதபடி மீண்டும் கவலை அதிகமாகும். உயிர் நல்ல உணர்வுகளை விளையச் செய்யப்படும் பொழுது கௌரவர்கள் அவமதிக்கின்றார்கள்.
1.கௌரவர்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டு அதை அவமதிக்கின்றார்கள்
2.திரௌபதியின் துகிலை உறிகின்றார்கள் சபையில் வைத்து.

சூதாட்டம் ஆடி சூதிலே ஜெயித்த பிற்பாடு பாண்டவர்கள் ஐந்து பேரையும் அடிமையாக்கி விடுகின்றார்கள் அவர்களின் மனைவியையும் அடிமையாக்கி விடுகின்றார்கள் இந்த உணர்வின் தன்மை என்ன ஆகிறது…?

எதை இயக்கியதோ அது மற்றதை அடிமையாக்கப்படும் பொழுது இவர்கள் வேலை ஒன்றும் ஆவதில்லை. அவனுக்குக் கீழ் அடிபணிந்து தான் அவர்களால் இருக்க முடிகிறது.

சபையில் வைத்து திரௌபதியின் துகிலை உறிகின்றார்கள். துகிலை உறியும் போது திரௌபதி என்ன செய்கின்றது…?
1.கண்களைத் தான் எண்ணுகின்றது. கண்ணா…! என்று கண்களை எண்ணுகின்றது
2.அவர்கள் செய்யும் அவமதிப்பை எண்ணுவதில்லை.
3.தெளிவாக நமது சாஸ்திரம் காட்டுகின்றது… மகாபாரதத்தில் வியாசகன் கொடுத்த உண்மைகள் இது.

பின்னாடி வந்தவர்கள் அதை எப்படி எப்படி எல்லாம் திருத்தி விட்டார்கள் சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

திரௌபதி சபையில் மற்றவர்கள் யாரையும் எண்ணவில்லை
1.கண்ணனை (கண்களை) மட்டும் தான் எண்ணுகின்றது தன்னுடைய அண்ணனை.
2.அவன் எனக்கு ஆபத்திலிருந்து காப்பாற்றுவான்… எனக்கு அவன் உதவி செய்தான் என்ற உணர்வை எடுக்கின்றது.
3.அப்பொழுது உள்ளுக்கே அவமதிக்கும் தன்மை தடைப்பட்டு ஓய்ந்து விடுகின்றது.

எவ்வளவு அழகாக மகாபாரதத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள். நன்றாக யோசனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்…! வியாசகன் கொடுத்த அந்தப் பேருண்மையைத் திரித்துக் கூறி எப்படி எப்படியோ இன்று மாற்றிவிட்டார்கள்.

குறிப்பு:-
1.தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போதும் நம் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்று சொல்வதன் தத்துவமே இதற்குத் தான்.
2.நம்முடைய கண்களால் மற்றதை எண்ணாது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் தான் உயிரிலே படும் அந்த அவமதிப்பை மாற்ற முடியும்.
3.ஞானகுரு அவர்கள் கண்களைத் திறந்து பின் கண்களை மூடி மீண்டும் கண்களைத் திறந்து மூடி இப்படி மாற்றி மாற்றித் துருவ நட்சத்திரத்தினை எண்ணச் சொல்வதும் இதற்குத் தான்.
4.எந்தக் கண்ணால் நம்மை அறியாதபடி தீமைகள் உள்ளே வந்ததோ அதே கண்களால் தீமைகளை நீக்கிய சக்தியை உள்ளே கொண்டு வர வேண்டும்.
5.நம் எண்ணத்தை இப்படி மாற்றினால் தான் எதையும் மாற்றி அமைக்க முடியும்.
6.எண்ணத்தை மாற்றாதபடி கண்களில் தீமைகளைப் பற்றியே அழுத்தமாக எண்ணிக் கொண்டிருந்தால் அது தான் மீண்டும் வலுவாக இயக்கும்.
7.பின்… என்னால் ஒன்றும் முடியவில்லை என்ற சொல் தன்னாலே வரும்… நாம் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

“ஈஸ்வர ஜோதி” சிரசில் எப்போது தோன்றும்…?

 

பால்வெளி சூட்சுமம் சதா அசைவு பெறும் ஒளி மண்டல சூட்சும அணுக்கள் நிறத்தின் தன்மைக்கொப்ப மணமும்… மணத்தின் வீரிய அடர்வு செயல்பாட்டில் குணமும்… குணத்தின் அமைப்பு எண்ணத்தின் கருவாகும்… கருவின் ஒரு ஆத்ம ஒலி ஒளி விந்து கலைகள் இணைந்து செயல் கொண்டிடும்… ஜீவ பிம்ப சரீர நிலை பெற்றிடும்… ஜீவாத்மாவாகப் பயிர் கொண்ட நிலைகள் வளர்ப்பு ஜீவத் துடிப்பலைகள் வரும்,

அலை வீசாக் கடல் எனும் பால்வெளி சூட்சுமத்தில் உயிர் கொள்ளும் உயிராத்மா…
1.மனிதன் என்ற பிறப்பு எடுத்து மாயத்திரை போர்த்திக் கொண்ட செயலை விலக்கி
2.இச்சரீரம் கொண்ட வினையின் நாயகன் உயிர் சக்தி
3.ஆத்ம நிலை உருவாக்கிடும் செயல் கொள்ளும் அமைவு எப்படி உருவாகின்றது…?

“உன் முயற்சி தான் ஏற்பு… திரை விலக்கிடும் முயற்சியே தியானம்…!” (நல்லதைப் பெற வேண்டும் என்ற முயற்சியுடன்… உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்… அதை வைத்து இருளை விலக்கிட வேண்டும். அதுவே தியானம்)

வேதாள மகரிஷி வலியுறுத்தி உரைத்திட்ட ஒலி நாதங்கள் இன்றும் ஒலி அலைகளாக ஓடிக்கொண்டிருக்கும் கருத்தின் ஆழம் கொண்ட “இந்த உபதேசங்களைப் படிப்பதே மாபெரும் பாக்கியமப்பா…!”

பார்க்காமல் வருகின்றவன் சிந்தனா சக்தியின் துரிதமற்ற நிலையில் ஓர் குளத்தில் வந்து விழுந்து விடுகின்றான். வேரோ அன்றி விழுதோ பிடித்துக்
1.கரையேறுகின்ற முயற்சியையும் நீக்கிவிட்டு
2.குளத்தின் நீர் வற்றிய பிறகு வெளியேறிச் செல்லலாம்…! என்பது என்ன பேதைமை…?

சிந்தனையற்று அந்தக் குளத்தினுள் இறங்கியவன் சிந்திக்கின்றான்… நீர் வற்ற வேண்டும் என்று…! (நீர் வற்றுமா…? மனிதனின் இன்றைய சிந்தனை அப்படித்தான் உள்ளது)

அப்படி இருந்தால்
1.மாமகரிஷிகள் மனிதர்களுக்கு உவட்டாமல் (திகட்டாத சுவையாக) ஊட்ட வந்த
2.ஒளி காந்த நிலைபெறும் ஒளி மார்க்க சிந்தனை செயல்படுவது எங்கே…?

உன் முயற்சி தான் ஏற்பு.

1.உலகோதய நிலை வாழ்க்கை என்பது தான் “குளம்”
2.ஜீவன் கரையேற முயற்சிக்கும் முயற்சி “அறிவின் தூண்டுதலால் ஈஸ்வர அனுபூதி”
3.கரையேறாத நிலையில் உள் உடைந்து கிடத்தல் – “தொடர் பிறப்பின் சூட்சுமத்தில் சுழன்று கொண்டே இருக்கின்ற” மனிதனின் சிந்தனையின் செயல்பாடு
4.வேரும் விழுதுகளும் “வழிகாட்டிடும் மார்க்கங்கள்”
5.அன்றி சுயத்தின் முயற்சியாக நின்று வெளி போதல் சுயசக்தியின் வளர்ப்பாக்கும் “ஒளிகாந்த ஒளி மண்டல சிந்தனாலயம்…”

கரையேறும் நிலையாகத் தன் முயற்சி கொண்டிடும் நிலைக்கே
1.அக்ஷி என்ற நிலைகாட்டி அகக்கண்ணால் உள்நோக்கின்
2.பிடரிக்கண் என்று உரைத்திட்ட பார்வையின் தன்மை “மூலாதார அக்கினியை உற்று நோக்கும்…”
3.அகக்கண்ணின் சிந்தனா சக்தி அங்கு செலுத்தப்பட்டால்
4.சரீர செயல்பாட்டில் உணர்ந்து அறியத்தக்க ஒளி அலைகள் பாய்ந்து
5.ஒளி கலந்த புலமாக்கும் ஈஸ்வர ஜோதி சிரசில் தோன்றுவதே
6.சிவம் என்றிட்ட ஈஸ்வரனும்… சிவாய என்றிட்ட சக்தியின் நிலையும்
7.ஒன்று கலந்த பேரின்பப் புணர்ச்சி… எண்ணத்தால் ஆட்டி உதயத்தில் காட்டும்…!
8.(பிறவி என்ற இன்னலிலிருந்து விடுபட்டு… என்றுமே ஏகாந்தமாக… பேரானந்த நிலை கொண்டு வாழச் செய்யும்).

வேடிக்கை பார்த்தது தீய வினையாக எப்படி மாறுகிறது…?

 

ரோட்டில ஒருவன் செல்கின்றான். அவன் நடையையும் மற்ற நிலையும் பார்க்கிறோம்… அவன் ஒரு தினுசாக நடந்து போவான். நாம் என்ன செய்கின்றோம்…? அவனைப் பார்த்தவுடன் இவன் டான்ஸ் ஆடிக்கொண்டு போகின்றான்… நடக்கிற நடையைப் பார்…! என்ற வகையிலே அந்த நடிப்பு போன்ற செயலைப் பார்த்ததும் “வெறுப்பு” வருகின்றது.

இன்னொருவன் அங்கே பிக்பாக்கெட் அடிக்கும் நோக்கத்துடன் செல்கின்றான். பர்ஸ் வைத்திருப்பவனைப் பார்த்ததும்… அப்படியே அவன் காலைத் தட்டி விட்டு அவனைக் காப்பாற்றுகிற மாதிரி பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றான்.

பார்க்கின்றோம் ஆனால் சொல்ல முடியவில்லை. அடுத்த தடவை அவன் வரும் பொழுது பார்த்தவுடனே நமக்குப் பதட்டம் வருகிறது

இன்னொரு பக்கம் ஒருவன் உதைக்கும் நோக்கத்துடன் செல்கின்றான்… அடுத்தவனை உதைக்கின்றான். அந்த உணர்வை நுகர்கின்றோம். இவன் போக்கிரிப் பயல்… எல்லாரையும் அடிக்கின்றான்… இவனைக் கண்டு எல்லோரும் பயந்து ஓடுகின்றார்கள் என்று நாமும் பார்த்துவிட்டு அந்தப் பக்கம் செல்லாமல் வேறு பக்கம் சென்று விடுகின்றோம்.

ஏனென்றால்
1.கடைவீதியில் நாம் நடந்து செல்லும் போது இப்படி ஒரு தடவை நடந்து விட்டால்
2.அந்த உணர்வு பதிவாகி விட்டால் அந்த உணர்வு நம்மை இனம் புரியாதபடி பயப்பட வைக்கிறது.

இரண்டு பேர் நண்பராகச் சந்தோஷமாக இருக்கிறோம். சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை வந்து விடுகிறது… ஏமாற்றி விட்டார் என்று…!

அடுத்தாற்போல் அவனைப் பார்த்தவுடனே என்ன நினைக்கின்றோம்…? அந்தத் திருட்டுப் பயல் போகின்றான் பார்… ஏமாற்றுகிறவன் போகின்றான் பார்…! என்போம்.

அவன் அங்கே நல்லதைப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால்
1.நாமோ அவன் ஊரை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகின்றான் என்று
2.நம்மை அறியாமலேயே இந்தச் சொல்களைச் சொல்லும்படி வைக்கும்.

அப்பொழுது எது இயக்குகின்றது…?

நாம் பார்வையில் பார்த்து எடுத்துக் கொண்ட பிறிதொருவரின் உணர்வு… அவன் செயல் காற்றிலிருக்கின்றது; அதை நாம் நுகர்கின்றோம்.

அவன் இல்லாத பொழுது… அவன் இந்த மாதிரியான ஆள்…! என்று யாராவது சொன்னால் “ஆமாம்…” அன்று நான் பார்த்தேன் என்று அந்த உணர்வை எடுத்து அவனுடைய செய்கைகளை நம் இரத்தத்திலே கலந்து விடுகின்றோம்.

இந்த உணர்வுகள் எல்லாம் என்ன செய்கின்றது…?

இரத்தத்தில் கலந்த பின் அந்த அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்தண்த உணர்வை எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கின்றது.

நான்கு பேரிடம் இதைச் சொன்னால்… தட்டி விட்டான் பிட்பாக்கெட் அடித்தான் உதைத்தான் என்று இந்த உணர்வுகளை எடுத்து வளர்த்து விட்டால் அடுத்து நம்முடைய நினைவின் எண்ணங்கள் என்ன செய்யும்…?

கண்ணிலே அந்த பர்ஸ் யாரிடமாவது தெரிந்தால் போதும்… பிட்பாக்கெட்டாக அதை எடுக்கலாமா…? மற்றவர் எதாவது நமக்கு இடைஞ்சல் செய்தால் உடனே உதைக்கலாமா…? என்று இந்த மனம் போகும்.

ஏனென்றால்
1.நாம் அந்த தவறு செய்தோரின் உணர்வுகளைப் பார்த்து நுகர்ந்து அதை வளர்த்துக் கொள்கிறோம்.
2.இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்
3.நாம் எதை எண்ணுகின்றோமோ அது நமக்குள் அதிகமாக…
4.அதன் உணர்வே அதன் வழிக்கு நம்மை வளர்த்து விடுகின்றது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

மனிதனான பின் பிறிதொருவர் செயலைப் பார்க்கின்றோம். தவறு என்று பார்த்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.அதைத் தடுப்பதற்காக அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.
2.இப்போது அதைத் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

பிறிதொரு மனிதனின் உணர்வு இயக்கினால் அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவன் அறியாது செய்யும் தவறிலிருந்து விடுபட வேண்டும்…
2.பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்.
3.அவன் பொருள் திருடு போனால் அவன் எப்படிப் பதறுவானோ அதை உணர்ந்து அதற்குத் தக்க சிந்திக்கும் ஆற்றல் வரவேண்டும் என்று
3.நாம் இந்த உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

இப்படிச் செய்தால் நாமும் நம்முடைய நிலைகளில் நல்ல உணர்வுகளைச் சேர்த்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு நல்ல சாப்பாட்டைக் கொடுத்து சிந்திக்கும்படியான செயலுக்கு வருகின்றோம்.

ஆனால் தவறு செய்கிறார்கள்… தவறு செய்கிறார்கள் என்று சொன்னால் அந்தத் தவறு செய்யும் உணர்வே நம்மை இயக்கி விடுகின்றது. நாம் இதிலெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

`

எவ்வளவு நன்றாக இருந்தாலும்… கெட்டது வந்தால் அதைத் தான் பிடித்துக் கொள்கிறோம்… நல்லதை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை

 

பல கோடிச் சரீரங்களில் துன்பங்களை நீக்கி நீக்கி… அந்த வலுப்பெற்றது தான் பன்றியின் உடலை உருவாக்குகிறது. இதே உயிர் தான்.

பன்றியின் உடலாக உருவாக்கிய பின்… பன்றியோ சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து விடுகின்றது… அதில் உள்ள நல்லதை எடுத்து உட்கொள்கிறது.

நல்ல பருப்பைச் சாக்கடைக்குள் போட்டால் நாம் அதை நுகர்ந்தால் அங்கே நல்ல வாசனையா வருகின்றது…? இல்லையே…!

இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் என்னைச் சாக்கடைப் பக்கமாக அழைத்துச் சென்றார்,. அங்கேயே உட்காரச் சொன்னார்.

முறுக்கு நிலக்கடலை பொரிகடலை மூன்றையும் கடையில் வாங்கி வரச் சொன்னார் சாக்கடைக்குள் அதைப் போட்டுவிட்டு அந்த மூன்றையும் சாக்கடையிலிருந்து நுகர்ந்து “பிரித்து எடு…” என்று சொல்கின்றார்.
1.சாமி சாக்கடை நாற்றம் தான் வருகின்றது என்று சொன்னேன்.
2.நுகர்ந்தால் சாக்கடை வாசனை தானே வரும்…! என்று சொன்னேன்.

ஆனால் அதற்கு முன்னாடி குருநாதர் என்ன செய்தார்…? கடைக்குச் சென்று காபி வாங்கிக் கொண்டு வா என்றார். அவருக்கு டீ எனக்குக் காபி. நான் டீ சாப்பிட மாட்டேன்.

சாக்கடையிலிருந்து எடுத்து வெளியிலே குப்பைகளைப் போட்டிருப்பார்கள் அல்லவா. அதை எடுத்து என் காப்பியிலே போட்டு கலக்கிச் சாப்பிடுடா… ஜோராக இருக்கும் என்று சொல்கின்றார்… குருநாதர்.

எனக்கு எப்படி இருக்கும்…?

“ஜோராக இருக்கும்…” என்று அவர் சொல்கின்றார்.

இதைப் பார்த்தாலே எனக்கு வாந்தி வருகின்றது சாமி…! உள்ளுக்குள் எப்படிப் போகும்…? என்று நான் சொல்கின்றேன்.

நான் எப்படிச் சாப்பிடுகிறேன் என்று பாருடா…! போட்டேன் ரசித்தேன்… ஆகா…! என்று சாப்பிடுகின்றார்.

சாக்கடையில் அந்த வரிசையில் கக்கூஸ் எல்லாம் போயிருக்கின்றார்கள்… கழுவியது எல்லாம் தான் வருகின்றது. ஆனால் அவர் சாப்பிடுகிறார்.

அந்த நேரத்திற்குச் சரியாக பன்றியும் வருகின்றது. ஆனால் இவர் வரவழைத்தாரோ… எல்லது என்ன கிரகமோ தெரியாது…! தள்ளிக் கொண்டு முட்டிக்கொண்டு வருகின்றது.

நடந்த நிகழ்ச்சி இது..! சாக்கடை உபதேசமாக குருநாதர் எனக்குக் கொடுத்தது.

அந்தப் பக்கம் போவோர் வருவோர் அனைவரும் என்னைப் பார்த்து… நைனாவிற்கு (ஞானகுரு) நல்ல பைத்தியம் பிடித்து விட்டது…! என்று என் காது படப் பேசுகின்றார்கள்.

இவருக்கு ஏன் இந்த ஆசை…? பைத்தியத்தோடு சேர்ந்து கொண்டு சாக்கடையில் அமர்ந்து… இப்பொழுது அரைப் பைத்தியமாக இருக்கின்றது அடுத்து முக்கால் பைத்தியம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள்.

காரணம்… நான் அவர் சொல்வதை எல்லாம் கேட்டு ஆடுகின்றேன் அல்லவா.. நான் என்ன செய்வது…? எனக்கு வேறு வழி இல்லை.

வருவோர் போவோர் அனைவரும் என்னைக் கேலி பேசுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள். நல்லய்ய நாயக்கர் மருமகனுக்கு ஏன் இப்படி ஒரு புத்தி வந்துவிட்டது…? என்று என் மாமனாரைச் சாடி பேசுகின்றார்கள்… என்னையும் திட்டுகின்றார்கள்.

இப்படித்தான் நிகழ்ச்சி அங்கே நடக்கிறது.

பன்றி வருகிறது. முகர்ந்து கொண்டு வந்தபின் ஓடுடா…! என்று சொல்கின்றார் கடலைப்பருப்பு முறுக்கு பொட்டுக்கடலை மூன்றையும் சாக்கடையிலே போடச் சொல்கின்றார்.

முறுக்கு ஒரு பக்கமும் கடலைப்பருப்பை ஒரு பக்கமும்… பன்றி முன்னாடி வரக்கூடிய பாதையிலே பொரிகடலையைப் போட்டேன். அவர் சொன்னபடி நான் போட்டேன்.

இதை மார்க் செய்து கொள்…! என்று சொன்னார். கோட்டைப் போட்டு வைத்துக் கொண்டேன்.

முதலில் பொரிகடலை இருக்கும் பக்கம் நுகர்ந்த பின் அதை விட்டுவிட்டு இந்தப் பக்கமாக வருகின்றது… நிலக்கடலைப் பருப்பு இருக்கும் இடத்திற்கு வருகின்றது.

வேகத்தில் அந்த வாசனையை நகர்ந்து அதை முதலில் எடுத்துச் சாப்பிடுகிறது… போட்ட பருப்பு அனைத்துமே சாப்பிடுகின்றது.

அடுத்து முறுக்கை எடுக்க வருகிறது. அதில் எண்ணெய் வாசனை இருப்பதால் அதை எடுத்துச் சாப்பிடுகின்றது.

கடைசியிலே திரும்பி வந்து இதை ஏன் விடுவானேன்…! என்று பொரிகடலையையும் சாப்பிடுகின்றது. ஏனென்றால் வறுத்தது… வாசனை இல்லை. அதையும் சாப்பிடுகின்றது.

பார்த்தாயா…?
1.நான் சாக்கடையைச் சாப்பிடேன் என்றால் அதையா சாப்பிட்டேன்…?
2.நல்லது என்று நினைத்தேன்… அதாவது சாக்கடைக்குள் நல்லதை நினைத்தேன்
3.காப்பியில் இருக்கும் நல்லதை நினைத்தேன்
4.சாக்கடை வாசனை எனக்கு வரவில்லை…. அதனால் வாந்தி வரவில்லை.
5.நீ நல்லதை நினைக்கவில்லை… ஆனால் சாக்கடையை நுகருகின்றாய்…
6.அதனால் அந்த வாசனை வருகிறது… உனக்கு வாந்தி வருகிறது…! என்று
6.எனக்கு அந்த இடத்திலே உபதேசமாக்க் கொடுத்து இதைத் தெளிவாக்குகின்றார்.

உன்னுடைய உணர்வுகள் எதைச் செய்கின்றது…? எதை இயக்குகின்றது…? நீ எப்படி வாழ்கின்றாய்…? நீ எப்படி எல்லாம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தாய்…?

நுகர்ந்து பார்த்து தான் உணர்வின் தன்மை கொண்டு இரைக்குத் தேடி வந்தது. முகர்ந்து பார்க்கும் வலுவைப் பெற்று கெட்டதை நீக்கிவிட்டு நல்லதை நுகர்கின்றது பன்றி.

ஏனென்றால் அந்த மாதிரி சேர்த்து ஒவ்வொன்று சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட உறுப்புகள் இப்படி விளைந்த்து… பன்றியிலிருந்து மனிதனாக வந்திருக்கின்றோம்.

இதை எல்லாம் நான் சாக்கடையில் அமர்ந்து தான் கேட்டேன் நீங்கள் நல்ல இடத்திலே நன்றாக அமர்ந்து கேட்கின்றீர்கள்…!

1.நான் அனுபவித்துச் சொல்கின்றேன்.
2.இலேசாக இருக்கிறது என்று அலட்சியப்படுத்திக் கேட்டீர்கள் என்றால் இந்நேரம் வரை கேட்ட உபதேசமும் வீணாகிவிடும்.

இயற்கையின் நியதிகள்… இந்த உயிர் எதைக் கவர்கின்றது…? எதன் உணர்வின் தன்மை கொண்டு வருகிறது என்று தான் எனக்கு அனுபவத்தைக் கொடுத்தார்.

கூர்படு சிந்தை கொள்

 

அன்பு அறிவாக நிலைகொள் என்றால் என்ன…?

“அன்பின் வடிவாக நிலை பெற்றிருப்பாய்…! என்று ஆசி வழங்கிடும் முதியோர் சொல்…” அறிவு மனம் குணம் மூன்றும் எண்ணத்தின் செயல் வழி என்றாலும் தான் எடுத்துக் கொள்ளும் குணங்கள் நிலைக்கொப்பத்தான் வாசனையால் ஆளப்படும்.

வான்மீகி கூறிய நீல வண்ணராமன்… தெய்வீக வடிவு…! என்பதெல்லாம் அறிந்த சொல்… ஆனால் அது மறைக்கப்பட்ட பொருள்.

அன்பு என்ற சொல்லின் கொள்ளப்படும் நிலை குணம் அக்குணங்களின் வாசனையாகிய மணம் அது வெளிக்காட்டும் ஒளியாக (நிறம்).

அன்பின் நிறம் என்ன தெரியுமா…?

அன்பின் அறிவு நீக்கமற நிலை கொள்ளும் செயலுறும் இயக்க சூட்சுமம். அன்பு தான் வான்மீகி மாமகரிஷி காட்டிய “நீல வண்ணம்…”
1.வீரம் விளைவித்த சாந்தமாக கண்ணின் ஒளி நீல வண்ணம் காட்டி
2.ஆத்ம சுடர் பிரகாசித்து… காண்பவரையும் உயர் ஞான வழி வரும் செயலாக ஆக்கும்.

சூரிய கிரகண கால நிகழ்வில்… கதிரவன் ஒளி கிரகணங்கள் பூமியில் பாய்ந்திடாத குறுகிய அந்தக் கால நேரத்தில் நீரில் நிறைந்திடும் நுண்ணிய விஷ அணுக்கள்… சூட்சும செயல் மென்மேலும் பல்கிப் பெருகி… நீர் சம்பந்தமான கடுமையான நோயாக… இந்த உலகம் எதிர் கொள்ளத்தான் போகின்றது.

கடுமையான விஷ மணத்தின் செயலில் உயிரையே உண்டுவிடும் நடைமுறை சாத்தியமும் உண்டு, அதற்காக அஞ்சிட வேண்டாம்…!

சூரியப் பிரகாசத்தினை எண்ணி ஈர்த்திடும் பக்குவ நிலை பெற்றிருக்கும் சரீரத்தில் எலும்பையே ஊடுருவி ஒளி அருளால் உள் செலுத்திப் பாதுகாப்புக் கவசமாக…
1.சகலமான ஒளி மண்டலவாசிகள் எனும் மகரிஷிகள் வழி வழியாக வந்திடும் ஞானச் செல்வங்கள்…
2.இந்த உலகத்தையே இரட்சித்துக் காத்திடும் செயலுக்கு “மாமருந்தாய்” அளித்துள்ளனரப்பா.

“சிவ சக்தியான ஒலி ஒளி” நீக்கமறச் செயல் கொண்டிடும் திறத்தில்… ஒலி கொண்ட சக்தி ஒளியுறும் சிவமாகக் கலந்திடும் கலப்பு… சிவ சக்தியின் இணையான நிலை விளக்க முறை செயல்படுத்திடும் நடைமுறையில் ஒலி கொண்ட சக்தி ஒளியாம் நிலை சிவத்துள் ஐக்கியமாகச் செயல்படும் தொழிலில்… “அறிவு சிவமாக அதனுள் இட்ட ஒளி சக்தியாகப் பரிணமிக்கிறது…”

மெய்ஞானச் சுடர்தல் வேதாள மாமகரிஷி அருளிச் செய்த சுடர் விளக்கமாக…
1.நீரை இறைப்பது ஏற்றம்
2.நீண்ட நெடு வயல்கள் என்பதே உலகம்
3.வயலில் விளைகின்ற பயிர்கள் அவைகளே ஞானம்… ஞானப்பயிர்.

கிணற்றில் நீர் நிறைந்திருக்கின்றது… அதுவே மனத்தின் பாங்கு அருள்.
1.ஜீவன் தந்திடும் ஒளிக் கதிர்கள் “நீர் ஒன்று இல்லாவிடில்…”
2.ஜீவன் என்றாலும் செயல் கொள்ளா நிலையில் உருவாக்கிடும் சக்தியின் பாங்கில்
3.அநித்தியமான சூடு மறைபொருளாக விளங்கி… பிரம்மம் (சிருஷ்டி) என்ற நிலை காட்டாது.

நீர் இறைத்து நெடுவயல் நீர் பாய்ச்சிச் செயல்படுத்திட ஓர் உபகரணம் தேவை. அதுவே “தியானம்” என்ற பெயர் பெறும் ஏற்றம்.

முயற்சி செயல் கொள்ளும் பொழுது ஏற்றத்தில் நீர் இறைக்கின்றாய். அந்தச் செயலின்றி நெற் பயிர் எப்படி விளையும்…?

தென்னை ஊன்றினாய் என்றால் தென்னை தான் விளைவாகும். அது போல் ஞானப் பயிர் வளர்த்திடும் கருவின் வலுவிற்கு வீரிய நல்வித்துக்களை ஊன்றிட வேண்டும்.

அந்தச் செயலுக்கே மாற்று அலை நிலைகள் திசை மாறிச் செலுத்திடத் துடிதுடிக்கும் எண்ணத்தின் பாங்குகள் வந்தாலும்…
1.ஞானியற்கு மேலாம் உயர்வெண்ண செயலில் செயல் கொண்டு
2.திட நிலை சங்கல்பம் பெற வைத்திட்டது எது…?

சிந்தை என்ற சொல் பெரும் பொருள் அறிவுறுத்தும் நிலையன்று… “கூர்படு சிந்தை கொள்” என்றே உரைத்திட்டோம்.

உறை பொருள்… மறைபொருள்… உட்பொருள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடவுள் என்றால் என்ன…? உணர்வு என்றால் என்ன…? என்ற நிலையை
1.தனக்குள் இயங்கும் அணுவின் இயக்கங்களையும்
2.விண்ணின் அணுக்களின் இயக்கமும்
3.மண்ணின் அணுக்களின் இயக்கமும்
4.தாவர அணுக்களின் இயக்கமும்
5.தாவர இனச் சத்தை நுகர்ந்தபின் அணுக்களின் இயக்கமும் என்ற இந்த உட்பிரிவினை எல்லாம் அறிந்துணர்ந்ததனால்
6.அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்த சக்தி தனக்குள் கவர்ந்து வைத்துள்ளது.
1.இன்றும் அது இருக்கின்றது… அது அழியவில்லை அழிந்து போகவுமில்லை.
2.அணுக்களாக உலாவிக் கொண்டுள்ளது நம் பூமியில்…!

சந்தர்ப்பத்தால் நமக்குள் நுகர்ந்து அதை பதிவாக்கி விட்டால் அதே நினைவின் எண்ணங்கள் வருகின்றது.
1.அதைக் கவர்ந்து நமக்குள் வளர்க்கவும் முடியும்…வளரவும் முடியும்.
2.மற்றோரை வளர்த்திடவும் முடியும்…! என்று இந்த நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
3.அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்த அந்தச் செயலாக்க உணர்வுகள்.

நான் சொல்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்…. நீங்கள் புரிந்து கொள்வதற்கு. ஏனென்றால் இன்றைய உலகில் கற்றுணர்ந்த உணர்வின் நிலைகளை எழுத்தறிவாகப் பாட உணர்வுகளைக் கொடுக்கப்பட்டு அதனின் பதிவாக்கங்களாகத் தான் வந்துள்ளது.

ஞானியர்கள் உண்மைகளைக் காட்டியிருந்தாலும் அதன் பின் வந்தவர்கள் தான் நுகர்ந்த உணர்வின் தன்மையை அவர்கள் மதங்களாக உருவாக்கப்பட்டு அவர்களுக்குகந்த சட்டங்களை இயற்றுகின்றனர்.

ஒவ்வொரு மதமும் தனக்குள் எண்ணத்தால் உருவாக்கப்பட்டதை அதைப் படித்து உணர்ந்தால் அவை நமக்குள் கடவுளாக இயங்கத் தொடங்குகின்றது “உள் நின்று அந்த உணர்வுகள்…”

ஆகவே ஒவ்வொரு மதமும் அதற்குள் எத்தனையோ வகையான உணர்வுகளைப் பதிவு செய்தாலும்… “அதற்குள் இனங்கள் பல” தான் எண்ணிய உணர்வுகளைப் பதிவாக்கப்படும்போது அது உள் நினறு கடவுளாக நம்மை உருவாக்குகின்றது.

இப்படி மதங்களால் எண்ணங்களை உருவாக்கப்பட்டு அதன் வழிகளிலே தான் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அவைகளை நமது பூமியில் பரவச் செய்துள்ளது. அதுவும் இன்றுள்ளது…!

இருந்தாலும்…
1.அந்த மெய்யை நம்மில் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால்
2.அகஸ்தியன் வழியில் நாம் சென்றோமென்றால் தான்
3.அந்த அணுவின் இயக்கப்பொறியின் ரூபங்கள் எவ்வாறு…? என்ற நிலையை நாம் அறிந்திட முடியும்.

அதற்குத் தான் இதைத் தெளிவாக்குகின்றோம்.

உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை இருக்கும் “அணைந்திடாத அக்கினிக் குண்டம்”

 

அதீத செயல்பாடுகள் சக்தியின் வளர்ப்பாகக் கண்டுகொண்ட மகரிஷிகள் சரீரத்தினுள் அந்தச் செயல்பாட்டை அறிந்து கொண்டு… (தெய்வ குணங்களை) ஒவ்வொரு நிலையாகச் செயல்பாடுகள் கலைகளாய்… அவைகள் செயலுறும் நாதவிந்துவாக தெய்வீக உருவங்களாகப் பெயர் நாமப்படுத்தி… விநாயகர் சிவன் சக்தி கந்தன் என்று சூட்சுமப்படுத்தி அருளினார்கள்.

நாத விந்துகள் கலைகள் செயல் கொண்டிடும் நிலைகளும் நாவின் அடிப்பாகம் பிரணவம் (உமிழ் நீர் சுரக்கும் இடம்) என்று செப்பிய சூட்சும நிலைகளின் அகழ்வுகள்… நாவின்படி தொடங்கி தொண்டைப் பகுதியினுள் செயல்படும் ஆகாய இருள் மாயை.

1.உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை என்றுமே அணைந்திடாத அக்கினிக் குண்டம் உண்டு (சுவாசம் உள் சென்று வெளி வரும் போது சூடாக இருக்கிறதல்லவா)
2.ஈஸ்வர ஜோதி எனும் சிவத்தை அறிந்து கொண்டிடும் ஜீவன்களுக்கு அந்த நிலை தமக்குள் உணர்த்தும்
3.உயிராத்ம சக்தியின் வலுவாக்கும் செயலுக்கு தெய்வீக வடிவ நீல வண்ணம் காட்டி
4.உயிர் ஆத்மா (உயிரும் அதனுடன் ஒன்றும் ஒளியான உணர்வுகளும்) ஐக்கிய நிலையே “சீதை அக்கினி குண்டத்தில் இறங்கினாள்…” என்று
5.சூட்சும சொல்லால் பொருள் காட்டி உரைத்தாரப்பா வான்மீகி மாமகரிஷி.

தட்டாது ஒதுக்கும் நிலையே நமக்கு வேண்டியது.

வேதாள மாமகரிஷி உலகியல் தன்மையில் “தேகி” எங்ஙனம் செயல் கொள்வார்…? என்றே நயம்பட உரைத்த உரை… கட்புலன்களால் (கண் பார்வை) பௌதீக மாயப் பொருள்கள் அனைத்தையும் ஒளி கொண்டு நோக்கி அறிதலும்… அறிந்ததை அறிந்ததாகப் பொருளின் குறிப்பைத் தெளிவாக உணர்தல் என்றே அறிந்த பின் தெளிந்து உணர்ந்து கொள்கின்றோம்.

அறிந்து கொண்ட செயலை நடைமுறைப்படுத்திடும் வழி வகைக்கே செயல் கொண்டாலும்
1.கட்டுப்படாத தன்மைகளையும் அதே உணர்வின் எண்ணம் உணர்த்தியும் தெளிதல் போல்
2.அந்த நிலையிலும்… ஈர்த்துக் கொண்டிட்ட வாசனைக்கொப்ப அறிந்திடாத் தன்மைகளும் செயல்கொள்ளும் விதத்தை
3.மேலாம் அறிவு உரைத்த நன்மைதனை நாளும் பொருள் விளக்கம் பெறுவது எப்படி…?

கடும் மழைக்காலத்தில் புள்ளினங்கள் (பறவைகள்) மழை நீரால் நனைந்து “குளிர் தன்மையாக விதிர்விதிர்ப்ப” அந்தப் பறவை இனங்கள் சிலிர்த்துச் சிறகினை வீசி அத்தன்மை படாது ஒதுக்கும்.

அதைப் போல்
1.எந்த நிலையாகினும் அந்நிலையின் அலைகள் நம்மைச் சாடிடாத வண்ணம்
2.புள்ளினங்கள் தன் மீது படாது ஒதுக்குவதைப் போல் ஞானச் செல்வங்கள் பிரகாசித்திடும் விழிப்பார்வையின்
3.சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம் மறைபொருளாகக் குளிர்ந்து எழுந்த குளிர்கனல் மேல் நிலை காட்டும்.

அவ்வாறு ஈர்த்துக் கொண்டிடும் உயிர் சக்தி… ஆத்ம நிலைக்கே ஊட்டும்.

உயிரை நாம் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்

 

எத்தனையோ நிலைகளைக் கடந்து வந்த மனிதன் நாம்
1.உயிரை நாம் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
2.உயிரைச் சிக்கனெப் பிடித்து… அது எப்படி ஒளியாக இருக்கின்றதோ
3.அதே அறிவின் தன்மையாக நாம் பெற வேண்டும்.

ஆதியிலே தோன்றிய மனிதன் அகஸ்தியன் தன் உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கோண்டிருக்கும் அந்த உணர்வை எடுத்து
1.நம் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தங்களிலே கலக்கப்பட்டு
2.நம் உடலுக்குள் அதைச் சேர்க்கப் பழக்கப்படுத்த வேண்டும்.

இப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டால் நாளடைவில் இந்த உடலை விட்டுச் செல்லப்படும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தோமோ உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்று விடும்.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை.

காட்டிற்குள் போய்த் தவம் இருந்து தனித்து ஜெபம் இருந்து ஆண்டவனின் அருளைப் பெறப் போகின்றேன் என்று அங்கே சென்றால் என்ன நடக்கும்…?

காட்டுக்குள் அமர்ந்து எந்த ஜெபத்தின் தன்மை எடுக்கின்றானோ… அந்த உணர்வு… நம்மை ஆள்பவன் எவனோ அங்கே தான் சென்றடையும்.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்று அதே உணர்வுகள் எவன் ஒருவன் பிரமை பிடித்து இதே மாதிரி ஆனானோ
1.வாக்கிலே ஒன்றை எடுத்துக் கொண்டு வரும் பொழுது அவன் ஒன்றைப் பார்த்தாலே போதும்.
2.இது வலுவானால் அவருடைய நிலைகள் சாபமாக… நீ தொலைந்து போடா என்று போக வைத்து விடும்.
3.இந்தப் உணர்வுகள் வலுவாகி அவனை இறக்க வைத்துவிடும்.

ஆக “இவர் பெரிய முனி” அப்பா என்று வரும் ஆனால் நல்ல நிலைகளில் வளரப்பா…! என்ற நிலைகளுக்கு வருவதில்லை.

கணவன் மனைவியாக ஒன்றிணைந்து நல்ல உணர்வினை இருவரும் சேர்த்து வளர்த்துப் பழகினால் நல்ல உணர்வுகள் வளரும்.

ஆனால் தெரியாத நிலைகள் கொண்டு தவமிருந்து நான் ஆண்டவனை அடையப் போகின்றேன் என்று… மனைவி இல்லாது இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது “முனி” தான். அந்த முனி என்ற வீரியத் தன்மை மற்றதை அழிக்கச் செய்யும்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வு எதுவோ நம்மை ஆள்வது நம் உயிர் தான். அது தான் ஆண்டவன். அவனிடம் எதைச் சேர்க்கின்றோமோ அதன் வழி தான் செல்கிறது.

ஆனால் கணவன் மனைவியாக ஒன்றி வாழ்ந்த அகஸ்தியன்… உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றினான்… நஞ்சினை வென்றான்… நஞ்சையே ஒளியாக மாற்றினான்.

சூரியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பாதரசமாக உருவானாலும் தன் அருகே வரக்கூடிய விஷத்தன்மையுடன் மோதப்படும் பொழுது அந்த நஞ்சு பிரிந்து சென்று ஒளியின் உணர்வாக வருகின்றது.

ஆக அந்த ஒளியின் உணர்வுக்குள் நஞ்சின் தன்மை கவர்ந்து விட்டால் அதை நுகர்ந்தால் நம்மை இருள் சூழச் செய்து விடும்.

அதாவது ஒளியாக மாற்றுகின்றது…. ஆனாலும் ஒரு விஷத் தன்மையைக் கவர்ந்தால் அதை மனிதன் நுகர்ந்தால் மற்றவருடைய உணர்வின் இயக்கத்தை இருளச் செய்கின்றது. ஏனென்றால் இதே சூரியன் தான்.

ஒரு பக்கம் விஷத் தன்மை பரவுகிறது என்றால் சூரியனுடைய காந்த சக்தி கலந்தால் அதனின் அலைகளாகப் படர்கிறது. அதை நாம் நுகர்ந்தால் நம் உடலில் உள்ள அணுக்களை இருளச் செய்து விடும்.

1.அந்த இருளை மாற்றிய உணர்வின் தன்மை ஒளியாகப் பெற்ற அனைத்திலும் உயர்ந்தது துருவ நட்சத்திரம்
2.அதை அனைவரும் பெற வேண்டும்.

மனிதனான பின் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். ஆகவே ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகி மின்னல்களாகப் பாய்கிறது.

தாய் கருவிலே விஷத்தை வென்றிடும் ஆற்றல் பெற்ற அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது அத்தகைய மின்னலை எல்லாம் உற்றுப் பார்க்கின்றான்.
1.பார்க்கும் பொழுது அதிலுள்ள விஷக் கதிரியக்கங்களை அடக்கி
2.அதை எல்லாம் ஒளிக்கதிர்களாக மாற்றும் தன்மையாக
3.தன் உடலில் ஒளியான அணுக்களாக மாற்றும் தன்மை அவனுக்குள் உருவாக்குகின்றது.

இதைப்போல சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையும் அந்தக் குழந்தை உற்றுப் பார்க்கின்றது.

இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானதோ…? இதற்குள் நட்சத்திரங்கள் எப்படி உருவானதோ…? அகண்ட அண்டங்கள் எப்படி உண்டானதோ..? இந்த உணர்வெல்லாம் சூரியனுக்குள் உண்டு.

இதன் வரிசைப்படுத்தி வந்த உண்மைகளை எல்லாம் அந்த நட்சத்திரங்களின் சக்திகளை இவன் நுகரப்படும்போது அந்த உணர்வின் எண்ணங்கள் (ஞானமாக) வருகின்றது.

ஒரு குளவி மண்ணைப் பிசைந்து கூட்டைக் கட்டி அதற்குள் புழுவை எடுத்து வந்து வைக்கின்றது. புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. எத்தனையோ உணர்வுகள் கலந்து தான் அந்த விஷத்தின் தன்மை குளவிக்குள் வருகின்றது.

குளவி புழுவைத் தன் விஷத்தால் கொட்டிய பின் அந்த விஷம் புழுவின் உடலுக்குள் சென்று…
1.அந்த விஷத்தின் தன்மைகள் கொண்டு துடிப்புகள் அதிகமாகிறது.
2.அதுவே புழு உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இந்திரீகமாக மாறி… இந்திரலோகமாக மாறி
3.அந்தப் புழு குளவியாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் இவன் அறியவில்லை என்றாலும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் வரப்படும் பொழுது நட்சத்திரங்களிலிருந்து வரும் மின்னல்களையும் மற்றவைகளையும் இவன் அடக்குகின்றான்.

உதாரணமாக பல நட்சத்திரங்களின் சக்திகள் வந்தாலும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியைச் சூரியன் கவரும்பொழுது அடுத்த நட்சத்திரத்தின் சக்தி அங்கே வந்தால் இந்த இரண்டும் மோதும் போது எர்த் (EARTH) ஆகின்றது.

அப்பொழுது பளீர்…” என்று மின்னுவதும் அந்த உணர்வுகள் மற்றதோடு ஊடுருவதும் அதன் அலைவரிசையில் ஊடுருவும்போது மரங்களில் விழுந்தால் அதைக் கருக்கி விடுகின்றது.

இந்த மின்னல்கள் அடுத்து பூமியின் ஈர்ப்புக்குள் அதிகமாகச் சேர்த்தால் இது கொதிகலனாக மாறுகின்றது.

அணுவைப் பிளந்து அதன் வீரியத்தன்மை கொண்டு அணு உலைகளில் (ATOMIC POWER STATION) வைக்கும்போது அது எவ்வளவு வேகமாக வெப்பத்தை உண்டாக்குகின்றதோ இதைப்போலத்தான் இந்த மின்னல்கள் ஊடுருவி அந்த பூமியின் அடியில் சென்றபின் கொதிகலனாக மாற்றுகின்றது.

வெப்பத்தின் துரிதத்தால் பாறைகள் உருகுகின்றன. உருகிய பின் அந்தப் பாறைகள் கீழே இறங்கப்படும் போது நிலநடுக்கம் வருகிறது. அந்த ஒரு நொடிக்குள் எல்லாம் கூழான பின் இதில் அடங்கி விடுகின்றது.

அதே மின்னல்கள் கடல்களிலும் பாய்கிறது. கடல்களில் உள்ள ஹைட்ரஜன் அது உப்புச்சத்து கொண்டது. அதிலே மின்னல்கள் பரவினால் இது பூராமே அடக்கி மணலாக மாற்றுகின்றது. கதிரியக்கத் தனிமங்களாக உருவாகிறது.

1.இதைப் போலத்தான் அகஸ்தியனுடைய பார்வையில் மின்னல்கள் பட்டாலும்
2.விஷத்தை ஒடுக்கும் சக்தி இவனுக்குள் இருக்கும்போது
3.அந்த உணர்வின் தன்மை கடல் எப்படி தனக்குள் அடக்கியதோ
4.இதே உணர்வின் அணுவாக இவனுக்குள் இவனுக்குகந்த அணுவாக மாற்றும் திறன் பெறுகின்றான்.
5.அவன் இளமை பருவத்தில் அவனுக்குத் தெரிந்தல்ல.

அவனுடைய சந்தர்ப்பங்கள் அவன் அத்தகைய நிலைகளில் வளர்ச்சி பெறுகின்றான். அப்படி வளர்ச்சி பெற்றவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றோம் என்றால் நாமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்பதற்கே அழுத்தமாகவும்… உங்களுக்குத் தெளிவாக்கவும் சிறிது வேகமாகச் சொல்கிறேன் (ஞானகுரு).

1.யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மைகளை யார் கூர்மையாக எண்ணி எடுக்கின்றார்களோ
2.அவர்கள் உடலிலே இந்த அணுத் தன்மை பெருகும்.
3.தீமைகளை அடக்கும் வல்லமை பெறுகின்றீர்கள்.

புரியவில்லை என்றால் அந்த உணர்வின் தன்மை கலக்கப்படும் போது அதே தான் ஆகும்.

ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக்கை வைத்து எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். ஒரு நாடாவில் முலாம்களைப் பூசி அதை உயர் அழுத்தத்தில் இணைக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒலிகள் அதிலுள்ள அதிர்வுகளை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதன் ஒளி அதிர்வுகளை இந்த எலெக்ட்ரிக் தன்னுடைய ஒளிப் பேழைகளில் மாற்றியமைத்து ரூபமாகவும் எழுத்தாகவும் ஆணைகளாகவும் கூட்டுகின்றது.

இதிலே இடைமறித்து எதையாவது தவறுதலாக ஓசை மாறி விட்டால் உடனே அதனின் அழுத்தங்கள் மாறிவிடுகின்றது.

1.ஏனென்றால் ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்க வேண்டும் என்றால்
2.அல்லது இந்த நேரத்தில் நிறுத்த வேண்டும் என்றால் இடைமறித்து இது தாக்கப்படும் பொழுது
3.குறித்த நேரத்தில் இது தாக்கி அந்த இயந்திரத்தைப் பாதுகாப்பாக நிறுத்திவிடும்.

இப்படி இயந்திரங்களை இயக்குவதும் விமானங்களை ஓட்டுவதும் இராக்கெட்டுகளை இயக்குவதும் விஞ்ஞானத்தில் செயல்படுத்துகின்றனர்.

இதே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற பேழையை அங்கே வைத்து விட்டு அதன் ஒலி அதிர்வுகள் கதிர்களை இயக்கப்படும் பொழுது தொலை தூரத்தில் செல்லும் இராக்கெட்டையே இயக்கச் செய்கின்றது.

இராக்கெட்டுகளில் ஏதாவது குறைகள் இருந்தாலும்…
1.கம்ப்யூட்டர் மூலம் இந்த ஒலி அதிர்வுகளை ஏவி அதன் கட்டளைப்படி
2.அதை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் மீண்டும் சீராக்குகின்றான் மனிதன்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாம் விஞ்ஞானத்தை நம்புகின்றோம். ஞானிகள் கொடுத்த மெய் ஞானத்தை இழந்து விட்டோம்.
1.மெய் ஞானத்தின் உண்மைகளை அறிந்தால் மனிதனுக்கு உதவும்.
2.பிறவியில்லா நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் அடைய உதவும்.

ஆனால் மனித ஆசையின் உணர்வுகள் கொண்டு ஒவ்வொன்றையும் வளர்க்கப்பட்டால் அது இந்த உடலுக்கே உதவும். இந்த உடல் அழிந்து விட்டால் இதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மீண்டும் அடுத்த உடலாக மாற்றிவிடும்.

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டு அகன்ற பின் மெய் ஞானியின் உணர்வுடன் ஒன்றச் செய்யும்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றச் செய்யும்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

கண்களைத் திறந்து பின் கண்களை மூடி… ஆத்ம சுத்தி செய்வது என்பது “மிக மிக வீரியமான சக்தி” – இது ஒரு பயிற்சி

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி… “கண்களைத் திறந்து தியானியுங்கள்…”
1.இப்பொழுது உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “திரும்பத் திரும்ப” எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி உடலில் உள்ள ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது
1.உங்கள் உடலில் புது விதமான உணர்வுகள் படரும்.
2.இரத்தங்களில் மிகச் சக்தி வாய்ந்த அந்த உணர்வுகள் கலக்கும்.
3.உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் உற்சாகம் பெறும்… வலிமையும் பெறும்.

மேலே சொன்ன மாதிரி இப்படி எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும். பழகிக் கொண்டபின்… உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது சலனமும்… சஞ்சலமும்… வெறுப்பும்… வேதனையும்… பகைமையான உணர்வுகளூம் உங்களுக்குள் தோன்றுகின்றதோ
1.அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று கண்களைத் திறந்து ஏங்கித் தியானியுங்கள்.

அடுத்து கண்களை மூடி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.கண்களை மூடி உங்கள் நினைவை உடலுக்குள் தலையிலிருந்து கால் வரை மீண்டும் காலிலிருந்து தலை வரை செலுத்துங்கள்.
2.இப்படி ஒரு ரெண்டு மூன்று தடவை செய்தால் உங்கள் கவலைகள் அனைத்தும் நீங்கும்
3.அருள் உணர்வுகள் பெருகும் அதன் வழி உங்களுக்குள் மன வலிமை கிடைக்கும்
4.சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்… பகைமைகளை அகற்றும்… மகிழ்ச்சி என்ற உணர்வுகளை தோற்றுவிக்கும்

தியானத்தில் எடுத்தவர்கள் இதே மாதிரி அவசியம் செய்து பழக வேண்டும்.

குறிப்பு:-
கண்களைத் திறந்து… அடுத்து கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஞானகுரு எடுக்கச் சொல்வதில் ஒரு முக்கியமான சூட்சமம் உள்ளது.
1.கண்களைத் திறந்து செய்யும் போது கேமராவில் படம் எடுக்கிற மாதிரி புருவ மத்திக்கும் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் நினைவு செல்ல வேண்டும் (அதாவது படம் பிடிக்க வேண்டும்)
2.படம் பிடித்ததை… அந்த நினைவை… அப்படியே கண்களை மூடி… கண்ணால் சுவாசத்தின் வழி கூடி தலையிலிருந்து கால வரை செலுத்த வேண்டும்

மேலே சொன்ன SL NO 1, 2யும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் செய்து உடலுக்குள் செலுத்த செலுத்த… வட துருவத்தின் வழி விண்ணிலிருந்து வரும் ஆற்றல்கள் பனிப் பாறைகளாக உறைவது போல் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடலுக்குள் இருக்கும் சகலத்திற்குள்ளும் உறையத் தொடங்கும்… அதாவது முலாம் பூசுவது போல் படரும்.

படரச் செய்யும் போது மூக்கு வழி செல்லும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சுவாசம்… உடல் முழுவதும் சுழன்று வருவதும்… அது வாயிலே உமிழ் நீராக மாறி… நம் அன்னக் குழாயிலிருந்து… ஜீரண உறுப்புகளிலிருந்து… தோல் மண்டலம் வரை கண்ணைத் திறந்து மூடி இப்படி மாறி மாறிச் செய்ய வேண்டும்.

இப்படி ஒரு பழக்கம் வந்து விட்டால்
1.“எத்தகைய கடுமையான நிலைகள் இருந்தாலும்… அதை நல்லதாக மாற்ற முடியும்…”
2.ஆத்மாவைச் சுத்தம் செய்ய வேண்டிய சரியான முறை இது தான்.
3.ஆத்மா மட்டுமல்ல உடலும் நலம் பெறும்… “மன பலம் மன நலம் அதிகமாகக் கிடைக்கும்…”

உயிர் அணுக்களின் தலைமை ஒளி தானப்பா…!

 

விஸ்வேஸ்வர மாமகரிஷி அன்னபூரணியின் தாய்மை அருள் நெறியில் மகிழ்ந்து… தன் நிலையில் தான் இயங்கி… வானவியல் மண்டல கோள் அமைவு சூட்சமம்
1.“முக்கண் என்றே காட்டிடும் அக்ஷி நிலை கண்டு…” அனுபவித்து… மகிழ்ச்சியுடன் அளிக்க
2.”பிடரிக் கண்” சூட்சும நிலைதனை திருமூலர் மரபு தென்னாட்டிலே உரைக்க வந்தது.

ஒன்றிலிருந்து ஒன்று வளர்ப்பாக்கும் வளர்ச்சி நிலை பெறுவதைப் போல் உபதேசிக மூலகாரண நிலை ஒன்று (ஓவ்வொன்றுக்கும்) முன்பே உண்டு.

மறைபொருள் தன்மைகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலில்… உன்னுள் செயலுறுகின்ற ஆக்கம் ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் படைப்பின் படைப்பு என உத்வேக ஊர்த்துவம்… (மேல் நோக்கிய) உயர்வெண்ணச் செயலில் “சிருஷ்டியின் எதிர்ச்சொல்லான… முக்தி…” என்ற பேரருள் சூட்சும நிலையைப் பெற்றிடலாம்.

யானை உண்டது விளாங்கனி. விளாங்கனியை உண்ணுகின்ற யானை தீனியின் செரிமானம் பிண்டி (எச்சம்) என்னும் கழிவாக வெளிப்படுத்துதலில்… வெளிப்படும் விளாங்கனியின் ஓட்டை உடைத்துப் பார்… அங்கே ஊண் இருப்பதில்லை.

இச்செயல் எப்படி நடந்தது…?

1.ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் சிருஷ்டியின் காரண மூலம்
2.ஈர்த்துக் கொண்டிடும் நல்லணுக்கள் வலுவின் வலு வீரியம் என்பைத் (எலும்பை) துளைக்கும் ஒளி என்ற காரியம் பற்றியே
3.தன்னுள் உட்கொண்ட விளாங்கனியைச் செரிமானப்படுத்தும் தன்மையில்
4.அந்தக் கனியில் ஓர் சிருஷ்டியே யானை ஈர்த்திடும் வீரியத் தொடர்பாக
5.கனிக்குள் அணுக்கள் தோன்றி அந்தக் கனியை உண்டு விளத்தின் ஓட்டுடன் ஐக்கியப்படுத்துகின்றன.

சிருஷ்டியின் ஓர் நிலை அங்கு செயலுற்று வெளிவரும் அக்கனி சூரியனின் வெப்ப சக்தி கொண்டு உருவான உயிரணுக்கள் மண் தன்மையினுள் கலந்து பிருத்வி கண்டு அண்டத்தில் நுழைகின்றன.

ஒளிமார்க்கச் செயலில் நாம் செயல்பட வேண்டியது எப்படி…?

மகரிஷிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒளி மண்டல ஒளி அணுக்களாகச் செயல் கொண்டு
1.மனித வித்துக்களை வளர்ப்பின் பயிர் பலனாக்கும் சிருஷ்டியையே
2.ஊர்த்துவ நிலையால் முக்தி என்ற பெயர் நாமத்தில் அழைத்திடும்
3.அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே வழி நடத்திச் செல்கின்றனர்.

அந்த மகரிஷிகள் நடத்துகின்ற செயலில் தேகம் கண்டு கொண்ட தேகி… “தன்னுள்ளேதான் தலைமை எது…?” என்று அறிதல் வேண்டும்.

உயிர் அணுக்களின் தலைமை ஒளி தானப்பா…!

அந்த நிலையை உணர்ந்து செயல்படுகின்ற ஒவ்வொருவரும் சூட்சுமத்தில் வழி நடத்திடும் ஒளி அன்பர்களின்… குரு பரம்பரை வழி வரும் சீடர்களப்பா. அந்தச் சீடர்களே கனகம் (பொன்னான உரையை) உரைப்பவர்கள்.

கார்காலம் மிகுந்து விடுகின்றது. வீட்டின் முற்றத்தில் பாதுகாப்பு என மனிதன் இட்ட மணல் மேட்டினையே மழை நீர் கரைத்து விடுகின்றது. மணல் கரைத்த விசுப்பதன் (வேகமாக வரும்) நீர்… மனைக்குள் உள்ளே வராது இருக்க வழி காணல் வேண்டும் என்று உரைத்தவரப்பா வேதாள மாமகரிஷி.

“முறைகோலுகின்ற வழியது காண்” என்று ஆணையிட்டே உரைத்த உரை பொருள் அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி… அதைக் கடைபிடித்திடும் நல் பாக்கியத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

எந்த நிலையிலும் இந்த நிலையை அறுதியிட்டு
1.உறுதியாகக் கடைப்பிடிக்கின்ற ஞானச் செல்வங்கள் மனக்கோளம் உருப்பெறும் கோளமாக அமைவுற்று
2.படைப்பின் படைப்பாக்கும் செயல் திறத்தினை வலுக் கொள்ளுங்கள்..

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் முழுவதும் தலையிலிருந்து கால் வரை அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுகின்றீர்கள்.

உங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்கி உடலில் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உருவாகி அந்த அருள் ஞான சக்தி உங்களுக்குள் பெருகும்.

நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களிலே விளையும். நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்போது நீங்கள் உணரலாம். கை கால் குடைச்சலோ சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ மன நோயோ இவை அனைத்தும் அகலும்.

அருள் ஞான ஒளி உங்களிலே பெருகும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வுகள் உங்களில் விளையும். உங்களை மகிழச் செய்யும் அணுக்கள் விளையும்.

அருள் ஒளி வளரும் மெய்ப் பொருள் காணும் திறன் பெறுவீர்கள். உங்கள் பார்வையால் உங்கள் நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

பிறருடைய துன்பங்களைப் போக்கும் வலு பெற்றால் பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடைப்படுத்த முடியும் உங்கள் உணர்வால்…!

தியானமிருக்கும் அனைவரது உடலிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிலே படர்ந்து மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுவீர்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாகப் படரும். சகோதர உணர்வுகள் விளைந்து மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அத்தகைய அருள் சக்திகள் கொண்ட உங்கள் மூச்சலைகள் காற்றிலே படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்திட குருவைப் பிரார்த்திக்கின்றேன்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களில் படர
2.மகிழ்ச்சி பெறும் உணர்வை நீங்கள் வளர்த்திட
3.அந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.அந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக உருவாக்கி
5.உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் சொல்லாக உருவாக்கும் சீதா இராமனாக எண்ணங்களைத் தோற்றுவிக்கவும்
6.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்திடவும்
7.மகரிஷிகள் உணர்வுகள் உங்கள் உடலுக்கு அரணாக அமைந்து
8.இந்தப் பிறவியிலேயே பேரின்பப் பெரு வாழ்வு பெற்றிடவும்
9.எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கிடவும்
10.உங்கள் உடலைச் சொர்க்கலோகமாக்கி… உங்கள் உயிரைச் சொர்க்க வாசலாக அமைத்திடவும்
11.அந்த மாமகரிஷிகளின் அருளாசி படர்ந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடவும்
12.உங்கள் பார்வையிலேயே தீமைகளை அகற்றிடவும் மெய் ஒளியைப் பரப்பிடவும்
13.என்றுமே அழிவில்லா வாழ்க்கையாக வாழ்ந்திடவும்
14.மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடும் அருள் ஒளி உங்களில் படர்ந்திடவும்
15.உங்கள் பேச்சால் மூச்சால் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகள் வளர்ந்திடவும்
16.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்திடவும்
17.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்திட குரு அருள் உங்களுக்குள் எப்பொழுதும் உறுதுணையாக இருந்திடவும்
18.அந்த அருள்.. ஞான குரு வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தியாக விளைந்திடவும்
19.நான் (ஞானகுரு) பிரார்த்திக்கின்றேன்… தியானிக்கின்றேன்…!

இதைக் கேட்டுணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் குறைந்திருப்பதையும் காணலாம்.

இதைப் போன்ற அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ள அதிகாலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலே படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும்… இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… நல்ல இரத்தங்கள் உருவாக வேண்டும்… நல்ல ஞானங்கள் எங்களுக்குள் வளர வேண்டும்… என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கிப் பெறுங்கள்.

இப்போது கொடுக்கும் இந்த அருள் ஞான வித்துக்களை உங்கள் நினைவால் நீங்கள் மீண்டும் மீண்டும் எண்ணும்போது
1.உங்கள் உயிரே அந்த அணுக்களை வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உடலில் வளர்த்து
3.மன பலம் மன நலம் பெறச் செய்து
4.அருள் ஒளி பெறும் அருள் ஞான வழியில் அழைத்துச் சென்று
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் உங்கள் உயிர்…!

ஆகவே
1.எண்ணியதை உருவாக்குவது உயிரான ஈசன்.
2.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே
3.எண்ணியதைக் காத்தருளுவதும் உயிரே
4.ஆண்டவனாக இருப்பதும் உயிரே.
5.உயிரை நாம் வணங்க வேண்டும்… மதிக்க வேண்டும்… எப்போதும் மறக்கக் கூடாது.

நன்றாகத் தியானம் செய்பவர்கள்… அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

 

1.நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அறிவுகளையும் தெளிவாக்கும் நாள் தான் கார்த்திகை தீபம்… கார்த்திகை ஜோதி
2.அதாவது எல்லா அணுக்களுக்கும் தெளிவான (ஒளியான) உணர்ச்சிகளை ஊட்டும் நாள் இது.

கோபப்படுபவரை நாம் எண்ணினால் நம் மனம் இருண்டு விடுகின்றது. நோயோடு வாடுகின்றான் என்று பார்த்து அதை மீண்டும் எண்ணினால் நம் மனம் இருண்டு விடுகின்றது. சிந்தனை இழக்கச் செய்து நம்மைச் சோர்வடையச் செய்கின்றது.

ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது… அத்தகைய இருண்ட நிலைகளை எல்லாம் தெளிவாக்கிச் சிந்தித்துச் செயல்படும் சக்தியை நமக்கு ஊட்டுகின்றது.

நமது சாஸ்திரங்கள் கூறிய தத்துவத்தின்படி விதியை மதி கொண்டு மாற்ற முடியும்.
1.நமது உயிரின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.உடலில் இருக்கும் எல்லாவற்றையும் அருள் ஜோதியாக இருள் சூழாத நிலைகள் கொண்டு
3.ஏகாந்த நிலையாக… என்றும் ஏகாதசி என்ற பத்தாவது நிலையை அடைய முடியும்.

மனிதன் ஒருவன் தான் இதைச் செயல்படுத்த முடியும்…! இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் அழைத்துச் சென்று
2.அது வெளிப்படுத்தும் உணர்வுகளை கவரச் செய்து
3.அதை நீங்கள் நுகரப்படும் போது உங்கள் இரத்தத்திலே அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகள் சேருகின்றது.
4.உங்கள் உடலில் சோர்வோ எங்கேயாவது வேதனையோ இருந்தாலும் அது குறையத் தொடங்குகின்றது.
5.இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அந்த உணர்வுகள் குறையத் தொடங்கும்

அது மீண்டும் குறைய… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கிக் கொண்டால் நமக்குள் இருக்கும் பிணிகளை மாற்றி… சிந்தித்து செயல்படும் வலுவைக் கூட்டி… அருள் உணர்வின் தன்மை கொண்டு இந்த வாழ்க்கையைத் தெளிவாக்கி ஒளியின் சுடராக நாம் மாற முடியும்.

ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டாலும்
1.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அந்த அணுக்கள் நல்லதாக மாறும் பொழுது உடலிலே வலி தெரியும் …!
2.தீய உணர்வுகளை நுகரப்படும் பொழுது… அந்தத் தீயது நல்லதாக மாறும் பொழுது வலிகள் வரும்

நல்லதாக்க வேண்டும் என்ற நிலையில் ஆத்ம சுத்தியோ தியானமோ செய்து… அந்தந்தச் சந்தர்ப்பங்களில் மாற்றும் பொழுது
1.எல்லாம் மாற்றினேன்… ஆனால் வலிக்கிறது என்று கொஞ்சம் சங்கடம் இருக்கும்… வெறுப்பு கூட இருக்கும்.
2.ஆனாலும் ஒளியின் சுடராகும் பொழுது நம்மைத் தெளிவாக்கும்
3.ஓரளவுக்கு மாற்றிக் கொள்ளும் வலுவும் கிடைக்கிறது.

ஆகையினால் எப்படி இருந்தாலும் நம் உணர்வின் அணுக்களை ஒளியாக மாற்றப்படும் பொழுது தீமையின் உணர்வாக வளர்த்த… “இந்த உடலும் கரைகின்றது…”

அதே சமயத்தில் ஒளியின் சுடராக மாறி உயிருடன் ஒன்றி உயிரான்மா வெளி செல்லும் பொழுது பேரருள் பேரொளியாக ஏகாந்த நிலை அடைகின்றது.

ஆனால்… இந்த மனிதனின் வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் கொதிப்பும் அதிகமானால்… அதனதன் உணர்வுகள் கலக்கப்பட்டு அதற்குத் தக்க உடலாக… புலியோ நரியோ நாயோ பாம்போ தேளோ இதைப் போன்ற உடல்களுக்கு அழைத்துச் சென்று “நம்மை உருமாற்றிவிடும் நமது உயிர்…”

இன்றைய செயல் நாளைய சரீரமாக மாற்றிக் கொண்டே உள்ளது உயிர். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்திந் உணர்வுகளைக் கலக்கும்படி செய்தோம்.
1.இந்த உபதேசத்தின் உணர்வுகள் உங்களை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு அமுதாகச் சேர்கிறது…
2.”அருள் வழியில் வளரும்” அத்தகைய அணுக்களாக மாற்றும்.

அந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டும் அதற்கே இதைச் செயல்படுத்துகின்றேன் (ஞானகுரு).

ஒளி நிலை பெற மகான்கள் காட்டிய மூன்றாவது வழியினைப் பின்பற்ற வேண்டும்

 

மகான்கள் இறை (தன்னை) உணரும்படியாக வழி காட்டியதில் மூன்று உண்டு.
1.உருவம் கொண்டு அறியும்… வழிபடுகின்ற நெறி ஒன்று
2.உயிருதய கமலாயத்தில் ஜெபிக்கின்ற தியான வழி இரண்டு

“ஆரம்ப நிலை” தியான வழி ஞானச் செல்வங்கள் அறிந்து கொண்டது இந்த இரண்டு தான்……

உயர் நிலை என்னும் ஒளி நிலை பெற்ற மாமகரிஷிகள்… தம்மை எண்ணிடும் உருவம் கொண்ட ஜீவன்களை சதாக்கியமாக (சதா சர்வ காலத்திலும்) இயங்கி வழி நடத்துவர். (ஜீவன் என்றால் உயிர்)

அந்த ஒளி நிலையை உணர்ந்து கொண்டிடும் வழியாக அனுபவ ஞான லயமாக… சத்தியத்தின் சக்தியாக இங்கே போதனையாகத் தந்ததை,
1.எது பேருண்மை பொருந்திய நாத விந்துக் கலை என்ற முத்தொடரோ…
2.சூரிய சந்திர ஆத்ம ஒளி நிலையோ (காற்று நூல் – சுவாச நாடிகளின் இயக்கமாக)
3.அதனுள் சிவன் நடிக்கும் நடனம் ஜீவனுள் சிவமாக
4.ஈஸ்வர ஜோதியாக வளர வழிகாட்ட வந்த செயலில்… அதைப் பெற்று வழி காண முயல்வோர் முயலட்டும் (மூன்றாவது வழி)

பஞ்ச பூத ஒளிவண்ண ஈர்ப்பில் தேகம் பெறுகின்றவன் அப்படி மனிதன் எனும் குணச் செயலாக வந்துற்ற ஆத்மாக்கள் அனைவரும் “தேகி” (உயிருடன் ஒன்றுதல்) என்ற பெயர் நாமம் பூண்டு விட இயலாது.

சதா ஒலி அணுக்கள் அசைந்திடும் உராய்வின் ஒலி நாதமாக
1.வான இயல் தத்துவம் அறிந்து கொள்ள முயல்வோருக்கு
2.யாம் சுட்டிக் காட்டும் ஒளி மண்டல தியானமாக
3.சிரசின் உச்சியில் எண்ணி (புருவ மத்தி – பிடர் வழி) எடுத்திடும் ஞான திருஷ்டியின் நோக்கால் தன்னுள்ளே சகலத்தையும் காணலாம்.

ஒளி அணுக்கள் அசைந்திடும் ஒளி நுண் மின்காந்த அலைகள் போல்… தனக்குள்ளும் அசைந்திடும் ஒளி அணுக்களின் செயலைச் செயல் கொள்ள…
1.வான் தொடர்பாகக் கொண்டிடும் நினைவோட்ட ஒளி மார்க்க எண்ண அம்பு வீசிடும் செயலாக (கண்ணின் ஆண்டென்னா சக்தி)
2.குவியும் குவிப்பு ஆகாய ஒளி அணுக்களின் உராய்வில் தன் உயர்வு எண்ண அணுக்களும் உராய்ந்து
3.சகலமும் சகலமாகப் படர்ந்துள்ள பால்வெளியில் நிறைந்ததை… நிறைந்த பொருளை…
4.அறிந்ததை அறிவால் அறிந்துணர்ந்து ஈர்த்தலே “ஞானத்தின் திருஷ்டி நோக்கு…”

தேகம் கொண்டவன் தேகி என்று தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் பஞ்சபூதங்கள் அமைப்புப் பெற்ற தேகத்தில்… அந்தத் தேகத்தையே தாங்கிச் செயல் புரிந்திடும் ஜீவன் – தன்னுள் அமைவு கொண்டிட்ட ஒளியே ஆத்மா என்பது.

தேகத்தை உணர்ந்து கொண்டவருக்கு ஜீவனும் ஒளி தான். ஜீவனால் அமைவு கொண்ட ஆத்மா பேரானந்தப் பிரகாசம் தான்.

அதனுள் சிவ நடனம் காட்டிடும் ஜீவன் சிவன் கலந்த ஜீவஜோதியின் அசைவாம் நடனம் காட்டி அனுபவிக்கச் செய்திடும் செயலை எடுத்துரைக்க முடியுமோ…?

அகம் கனன்ற கனல் சிவ நடனம் கண்ட ஜீவன் தன்னை மாற்று நிலைத் தன்மைகள் நெருங்கிட முடிந்திடாது.

ஏன்…? என்ற வினா எழும்பலாம்

ஜீவன் அந்த மனப்பரியை (கட்டுக்கடங்காத எண்ண ஓட்டங்கள்) அடக்குகின்றதே…! கடினமான ஒரு பாட நிலை தான்.

மனம் கீழ் நிலைக்குச் சென்றிடும் பொழுது… விந்து நீக்கம் பெற்றே ஜீவனைச் சூழ்ந்து கொண்டிடும் துர்க்குணங்கள்… எண்ணத்தின் ஈர்ப்பலையாகத் தன்னைத்தான் கேடுறுத்தும் செயலை… “வேதாள மாமகரிஷி” உரைத்ததன் நிலை என்ன…?

யானைக்கு மதம் பிடிக்கின்றது அது தன் அகன்ற காதுகளை அசைத்து விரைந்து ஓடி வருகின்றது… கடுவாய் கொண்ட சிங்கமானது சீறிச் சினந்து ஓடி வருகின்றது.

அவைகள் கொண்டிட்ட வீரியத் தன்மைகள்… குணங்களில் கொடூரமும்… உணர்வையே மறக்கச் செய்திடும் ஆவேசமும்… எந்த நிலையாகினும்…
1.எரிகின்ற நெருப்பினைத் தன் அருகே கண்டு விட்டால்
2.உணர்வையே மறக்கச் செய்த தன் நிலையில்
3.உணர்வின் மாறுதல் கொண்டு அந்த இடத்தை நெருங்கிடாது.

நமக்கும் இதைப் போன்ற தீய குணங்களிலிருந்து மீண்டு பயணம் செய்திட ஒரு வாகனம் உண்டு.
1.அது “ஊர்த்துவம்” (மேல் நோக்கிய… அதாவது கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றி விண்ணிலே செலுத்துவது) என்ற பெயர் நாமத்தில்
2.விந்து ஒளி நிலையாக மேலெழும் செயலாக… சிரசினுள் நாத விந்துவாக விளங்கிட
3.மனப்புரவி (கல்கியின் உருவம்) என்றும் நீக்கமற உண்டு.

தான் தணலாக (நெருப்பாக) ஆகுங்கால் மாற்றொத்த நிலைத் தன்மைகள் (நஞ்சுகள்) நெருங்கிடாத் தன்மையாக… ஜீவன் சிவ நடனம் (பேரானந்தப் பெரு நிலை) காணும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமாயணத்தில் காட்டப்பட்ட ஜனகச் சக்கரவர்த்தி என்பது சூரியன். பூமியிலிருந்து வெளிப்படும் சத்துக்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கிறது.

அதிலே சுவை கொண்ட உணர்வின் எண்ணங்கள் கொண்டே மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலையை உணர்த்துவதற்காக ஜனகச் சக்கரவர்த்தி என்று சூரியனைக் காட்டுகின்றனர்.

ஒரு நிலத்தினைப் பண்படுத்தி நல்ல வித்தினை ஊன்றினால் அதிலே விளைந்த சத்து (வித்துகள்) சீதா என்றும் அதை உணவாகச் சுவைக்கப்படும் பொழுது மகிழ்ச்சியின் நிலைகளை நாம் பெறுகின்றோம் என்று காட்டுகின்றனர்.

1.அதாவது உணர்வின் சத்தைத் தான் சூரியன் கவர்ந்து வைத்திருக்கின்றது
2.ஜனக சக்கரவர்த்தி அதைத் தத்தாக எடுத்து (சீதா என்ற சத்தை) அவன் வளர்க்கின்றான் என்ற பேருண்மையைக் காட்டுகின்றார்கள்.

மனிதனில் எடுத்துக் கொண்ட கோபமோ காரமோ மற்ற உணர்வுகள் எல்லாமே சீதா தான். அதைத்தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.

ஆனால் காடுகளில் விளைந்த விஷத் தன்மைகளை நாம் நுகர்ந்தால் என்னவாகும்..? நம்மைக் கொன்றுவிடும். இதைப் போல உணர்வுகள் அதனதன் விளைவுகளை… அதன் ஒலி அலைகளைப் பாய்ச்சப்படும்போது அதனுடைய திறமைகளைத்தான் காட்டும்…! என்பதனை உணர்த்துகின்றனர்.

அதே சமயத்தில் ஜனக சக்கரவர்த்தி சுயம்வரத்தை வைக்கின்றார். திறமைகளைக் காட்டுபவர்களுக்கே தன் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து தருவேன் என்று…!

ஒரு கொடியவன் மற்றவரை வீழ்த்திடும் திறமையைக் காட்டுகின்றான். வில்லிலே நாண் ஏற்றி அம்பை எய்து மற்றவரை மரணமடையச் செய்கின்றான். மற்றதைத் துன்புறுத்தும் நிலைகளையே அவன் உருவாக்குகின்றான்.

முதலிலே சொன்ன மாதிரி காடுகளின் விளையும் விஷச் செடிகளின் உணர்வினை நாம் நுகர்ந்தால் அது நம்மைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால்
1.மனிதனாக உருவான பின்… மனிதன் வளர வேண்டும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்து
2.அந்த உணர்வினைச் சீதாவாக எடுத்து சூரியன் வளர்க்கப்படும்போது
3.அதனை நாம் அரவணைக்கும் சக்தியாக எப்படிப் பெற வேண்டும்…? என்று தான் இராமயாணத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதனை நாம் சற்றும் சிந்தித்தோமா…? என்றால் இல்லை.

இராமாயணம் என்ற காவியத்தைக் கடவுளாக்கப்பட்டு அந்தக் கடவுளை வேண்டினால்… இராம நாம ஜெபத்தை நாம் ஜெபித்தால் நமக்கு உதவி செய்வான்…! என்று இப்படித்தான் நமக்குள் ஊட்டிவிட்டார்கள்.

அந்த இராம நாமத்தை நாம் சொன்னாலும் நாம் எந்தக் குணத்தை எடுத்தோமோ அது தான் சீதா. உதாரணமாக…
1.நான் வாழ வேண்டுமென்ற உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.ஒருவன் எதிரியாக வரும்போது அவனைப் பழித்துப் பேசும் உணர்வு கொண்டு
3.அவனைத் தாக்கும் நிலைகளே வரும்… ஒதுங்கி நிற்கும் நிலைகளே வரும்…!

இது போன்ற தீமைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்காகத் தான் சீதாவைத் திருமணம் செய்வதற்காக… தன் மகளைத் திருமணம் செய்ய அவரவகள் திறமைகளைக் காட்டும்படி செய்தார் என்ற நிலையைக் காவியமாகப் படைத்து நம்மைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

அவரவர்கள் திறமையைக் காட்டும் போது அங்கே பிறரைத் தாக்கக்கூடிய அம்புகளை வைத்து… மற்றவரைக் குறி வைத்துத் துன்புறுத்தும் இயக்கங்களே வருகின்றது.

ஆனால் பிறரைத் துன்புறுத்தும் அந்த உணர்வின் தன்மையை…
1.இராமன் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்
2.பிறரைத் துன்புறுத்தும் எண்ணத்தை அகற்றி விட்டால் அந்த வேதனை என்ற நிலையே வராது.

சுவை கொண்ட உணர்வினைத் தனக்குள் உணவாக்கும் போதுதான் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக நமக்குள் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

ஆகவே அந்தக் குணத்தை எடுத்து அரவணைக்கும் தன்மையாகப் பெற்றான்… கல்யாணராமா…! இராமயாணக் காவியத்தில் உள்ள மூலங்களை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் பிடிக்க வேண்டிய “பித்து”

 

அன்று குருநாதர் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டி… ஒலிகளை எழுப்பி அது எப்படி வருகிறது…? எதற்காக அதைச் செய்கிறேன்…? என்று எனக்கு உணர்த்தினார்.

போஸ்டில் நான் கல்லைத் தட்டுவதைப் பார்த்து என்னைப் பித்தன் என்று சொல்கின்றார்கள். ஆனால் பித்தன் யார்…? என்று நீ சிந்தித்துப் பார் என்ற நிலையைத் தெளிவாக்கினார்.

ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
1.எண்ணியபடி அந்தக் காரியம் நடக்கவில்லை… அதைத் தடைப்படுத்துகிறார்கள் என்றால் எத்தனாகவே மாறிவிடுகின்றோம்… எதிரிகளாக மாற்றுகின்றோம்.
2.உன்னால் என்ன செய்ய முடியுமோ… செய்து பார்…! என்று வீம்பின் தன்மை பேசுகின்றோம்…!

அப்பொழுது எத்தனாகவே மாறிவிடுகின்றோம்.

அங்கே அப்படி மாற்றியது யார்…? சந்தர்ப்பம் தான் அப்படி மாற்றுகின்றது
1.சிந்திக்கின்றோம்… தவறு செய்யக்கூடாது என்றும் எண்ணுகின்றோம்.
2.ஆனால் சந்தர்ப்பம் நம்மைச் செய்ய வைக்கின்றது… அதிலிருந்து மீள வேண்டும் அல்லவா.

அதற்குத்தான் அதிகாலை துருவ தியானத்தின் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளி… சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

அங்கே இணைத்து இந்த உடலில் பெற்ற நஞ்சுகள் கரைய வேண்டும் என்று செயல்படுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் கரைக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் எல்லோரிடமும் அன்புடன் பண்புடன் தான் நாம் பழகி இருக்கின்றோம்
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களை யார் யார்…? என்று நாம் தனித்து எண்ண வேண்டியதில்லை.
2.அவர்களுடன் ஒரு நாள் பழகி இருந்தாலும் அவருடைய உணர்வு நம்முடன் கலந்து தான் உள்ளது.
3.இதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களையும் நாம் விண் செலுத்த முடியும்.

குருநாதர் இதைத்தான் எனக்குக் காட்டினார்

அறியாது செய்த தவறினால் நோயின் தன்மை ஆகி இறந்தால் அவர்கள் மீண்டும் பிறவிக்கு இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி விண் செலுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுக் கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

அந்த உடலில் உருவான இருள்களை அங்கே கரைக்கப்படும் போது சூரியனின் காந்த சக்தியினால் கவரப்பட்டால்… அதன் உணர்வை மாற்றி… மாற்றுப் பொருளாக உருமாற்றி விடுகின்றது.

இது போன்ற நிலைகளை நாம் செய்து பழகினோம் என்றால் “கூட்டுப் பிரார்த்தனை” என்பது இதுதான்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து “மொத்தமாகவே…” எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள்… சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து… பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியாத ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் விண் செலுத்த வேண்டும்.

உடலுடன் இருக்கக்கூடிய நண்பனும் நாமும் ஒருவருக்கொருவர் அன்புடன் கலந்து உறவாடினால் “எனக்கு நன்மை செய்தான்” என்று எண்ணும் போது விக்கலாகிறது. “தீமை செய்தான் பாவி…!” என்று எண்ணினால் அங்கே புரையோடுகிறது.

இந்த மனித உடலையே இப்படி இயக்கிடும் நிலை வரும் பொழுது மனிதனுடன் பழகி இருக்கும் உணர்வு கொண்டு அந்த உயிரான்மாக்களை அங்கே விண் செலுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளிச் சரீரம் பெறும்.

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து விளைகின்றது… அந்த உணர்வுகளும் இந்தப் பூமியில் பரவுகின்றது

அதன் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினால் அவர் வாழ்ந்த காலத்தில் எத்தனை கஷ்டப்பட்டாரோ அதையெல்லாம் நீக்கி அவரால் நமக்குள் உருவான பரம்பரை நோய்களை… பரம்பரை குணங்களை… மாற்றி நாமும் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

இதைத்தான் நமது குருநாதர் அருள் வழியாகக் காட்டினார்.

நான் தட்டியது வெறும் போஸ்ட் அல்ல…!
1.அங்கே தட்டி “என் உயிரான ஈசனிடம் வேண்டினேன்”
2.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று எண்ணினேன்
3.அந்தப் பித்து பிடித்து அதைச் செய்தேன்.

ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் கடவுளே.. அவன் தான் அந்த உடலை ஆளுகின்றான். உயிர் எப்படி ஒளியாக இருந்து இந்த உலகை அறிவிக்கின்றதோ “அதன் உணர்வு நான் பெற வேண்டும் என்று இந்தப் பித்து தான் என்னிடம் உள்ளது…” என்றார் குருநாதர்.

அதைத் தான் நானும் (ஞானகுரு) இன்று உங்களுக்குச் சொல்வது

எனது குருநாதர் சொன்னது போல நானும் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உணர்வுகள் ஒளியாக மாற வேண்டும்… உங்கள் உடலில் அறியாது சேர்ந்து தீமைகள் அகல வேண்டும்… அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று
1.என் குரு வழியில் “நானும் பித்தனாக இருக்கின்றேன்…”
2.நீங்கள் அந்த அருள் ஒளி பெற வேண்டும் அந்த ஏக்கத்தில் இருந்தாலே போதுமானது

இப்படி நாம் ஒவ்வொருவரும் அந்த அருளைப் பெற்றால் இந்தப் பூமிக்குள் வரும் இருள்களை நீக்க முடியும்.
1.அருள் வழி நாம் வாழ முடியும்
2.மற்றவரை நாம் வாழ வைக்கவும் முடியும்.

ஆஅகையினால் உங்கள் உயிரான ஈசனை மதித்துப் பழகுங்கள் உடலை ஆலயமாக உங்கள் மதியுங்கள். உங்களை உருவாக்கிய தாய் தந்தையைக் கடவுளாக மதியுங்கள். தெய்வமாகக் காத்த தாய் தந்தையரை மதித்து நடங்கள். நம்மைக் காத்த முதல் தெய்வங்களும் அவர்கள் தான்.

நமக்கு நல் வழி காட்டிய அந்த நல் உணர்வுகளைப் பதிவாக்கிக் குருவாக மதியுங்கள். நல்ல உணர்வை எப்போதுமே நம் தாய் நமக்குள் பதிவாக்கியிருக்கின்றது. ஆகவே… எந்த நிமிடத்திலும்
1.அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த நல்ல உணர்வுகளை எளிதில் பெற முடியும்… நமக்குள் அறியாது சேர்ந்த இருளை நீக்க முடியும்
3.அந்தப் பேரருளைப் பெற முடியும்… நாம் பேரொளியாக மாற முடியும்.

அன்னபூரணியின் ஆகாரக் குறிப்பு

 

காரண காரியமாக விளங்கும் இந்த உடல் கொண்ட ஜீவாத்மா… சிருஷ்டி எனப்படும் பிறவிக்குத் தனக்குகந்த தன்மைக்கே… கொண்ட குணங்களின் தன்மைக்கொப்ப பிறப்பினுக்கே வந்தாலும்… சகலமும் மறைக்கப்படுகின்ற சூட்சமம்… ஒளி நிலை பெற்றிட மேலெழும்பும் சக்தியின் தன்மையாக எடுத்துக் கொண்டால் ஆத்மா ஒளி பெற்றே திகழ்கின்றது.
1.”காரணம்” என்பது ஆகாய சூட்சுமமாக சகலமும் மூலத்தின் தன்மையாக விளங்கி
2.சிருஷ்டியின் செயலாக… கொண்ட எண்ணம் செயலுற்று… “காரியமாகின்ற” சரீரத்தைப் பெறுகின்றது.

காரண காரியம்… காரிய காரணமாக மனிதன் செயல்பட்டு… பெற்று… வளர்த்து (தன்னை) உயர்த்திக் கொண்டிட்டால் ஒளிமார்க்க நிலை…!

“அன்னபூரணி காட்டும் ஆகாரக் குறிப்பு” வியாபித்திருக்கின்ற மூலப்பிரகிருதி… (இயற்கையின் படைப்பு) சகலமும் ஈஸ்வர சொரூபம் தான் என்றாலும் மூலத்தின் குணத்திற்கு வண்ணங்கள் உண்டு.
1.பிருதிவி (பூமி – நிலம்) தத்துவத்தில் மண்ணாகக் காண்பதே செந்நிறம்
2.அக்கினியாகக் காண்பது கருமை நிறம்
3.நீரின் தன்மையில் அடங்குவது வெண்ணிறம்
4.காற்றின் புலப்படாத் தன்மையுள் பச்சை நிறம்
5.ஆகாய நிலையின் புகைவண்ணம் வெளிர் நீலம்.

இந்த ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) ஜீவன் புசித்திட ஈஸ்வர சக்தியாக… அன்னபூரணி – விஸ்வேஸ்வரர் மாமகரிஷியின்… தாய் சக்தி எனும் பஞ்ச காரண காரணியாக… ஒளிமார்க்க (ஓளிச்சரீரம் பெறுவது) நிலை உபதேசிக்கப்பட்டதப்பா.

மூல காரணியை… மனிதன் செயல் கொள்ளும் விதத்தில் “வேதாள மாமகரிஷி” உரைத்திட்ட நிலையும் உண்டு.

பெரும் நெருப்பாக இருந்தாலும் அதுவும் நீருக்குள் அடங்குகின்றது. பெரும் நீரானது இழுத்து இயங்கும் செயலாக… காரண சக்தி இயற்கையின் சீற்றம் காட்ட… காரியம் ஏற்படும் நீர் அடங்காது.

சூரியக்கதிர் அம்பு பாய்ந்து… அகநிலையால் புறமும்… காத்திடுகின்ற செயலாக
1.இப்பரு உடலைக் கொண்டு ஆத்ம சக்தியை வளர்த்துக் கொண்டாலும்…
2.இவ்வுடலையே சூழ்ந்து காத்துக் கொள்ளும் வலு வீரிய “காரண மூல சக்தி ஆத்மாவிற்கு உண்டு…”

காட்டையே பற்றி எரித்து உரத்து ஆடும் பெரும் நெருப்பானது நாணல் புல்லைப் பற்றி அதையும் தீய்ப்பினும்… கடும் மழை நீருள் அந்தக் காட்டுத் தீயானது அணைகின்றது.

அது போல் மனித மனத்தின் நிலை அகம் புறம் இரண்டு செயல் தன்மைகளில்
1.உலகோதய நிலை நாட்டத்திலும்… நாம் எடுக்கும் ஜீவ ஆதார சக்தி…
2.காட்டுத் தீயை அடக்கிய நீர் சக்தியானது
3.பூமியின் மேற்பரப்பில் காற்று நெருப்பால் ஒவ்வாத நிலைகளற்று… (கருகிய நிலைகள்)
4.பூமிக்குள் மறைந்திருக்கும் கிளைத்தெழும் ஜீவசக்திகள் அந்த நீரின் சக்தி கொண்டே (கருகியது) தழைத்து எழுவது போல்…
5.மன எண்ணக் கரு அவ்வண்ணமே ஜீவ ஆதார சுருதியாக “அகக் கனலாகக் கனன்று எழும்…”

இதிலே காட்டிட்ட தன்மைகள் பண்டு (பண்டைய – பழைய) வழியாக இருந்தாலும் அதை விண்டு அறிந்திடுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு குருநாதர் எத்தனையோ இம்சைகளை எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்… முழுவதும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப் பட்டேன்.

ஏனென்றால் சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…? அதிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தார் குருநாதர்.

பரிணாம வளர்ச்சியில் உயிர் எத்தனையோ உடல்களைக் கடந்து வந்து மனிதனாக நம்மை உருவாக்கி உள்ளது.
1.ஆனால் அந்த உயிரை மதிக்கமாட்டேன் என்கின்றார்களே…!
2.உடலைத்தான் மதிக்கின்றார்கள்… இந்த உயிரை யாரும் மதிப்பதில்லை.

நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது…? இதையாவது மக்களுக்கு எடுத்துச் சொல்… ஆண்டவனுக்கு இந்தச் சேவையைச் செய்…! என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலை ஆளுகின்றது. அப்பொழுது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார் குருநாதர்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். குருநாதர் எனக்கு உணர்த்திய இந்த வழிப்படி
1.இப்பொழுது இங்கே சொல்லக் கூடிய உபதேசங்களை நீங்கள் நுகரப்படும்போது
2.அந்த ஆண்டவனுக்கு இந்த உணர்ச்சியின் தன்மை இந்த அருள் உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.

எது…?

கோவிலில் பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் அந்த நல்ல குணத்திற்குப் பாலாபிஷேகம்…! அதாவது நம் நல்ல குணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினால் “அந்தப் பாலைப்போல் மனம் பெற வேண்டும்…” என்று நாம் எண்ண வேண்டும்.

ஆனால் வேதனை உணர்வை எடுக்கப்படும் பொழுது பாருங்கள். இந்த வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வார்கள். இந்த உயிரில் அந்த வேதனை தான் அபிஷேகம் ஆகும்.

வேதனை உணர்ச்சிகள் முன்னாடி இருக்கின்றது. அப்பொழுது பாலாபிஷேகம் செய்தால் என்ன செய்யும்…?
1.விஷத்தில் பாலை ஊற்றினால் என்ன செய்யும்…! பாலும் விஷமாக மாறிவிடும்
2.அது போல் தான் யாம் கொடுக்கும் வாக்கும் பயனற்றதாகப் போகும்.

நான் பல முறை சொல்லியிருக்கின்றேன். இதைப் பயனற்றதாக ஆக்காதீர்கள் என்று. சிரமப்பட்டு சம்பாதித்த சொத்து… அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழக வேண்டும்.

1.உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும்
2.அவனை மதித்து அந்த அருளைப் பெற்றீர்கள் என்றால்
3.இந்த உடலுக்குப் பின் நீங்கள் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.

என்ன தான் ஆபரேஷன் செய்து உடலை நலம் பெறச் செய்தாலும் அடுத்தாற்படி மனிதனின் கடைசி முடிவு எங்கே செல்கிறது…! எடுத்துக் கொண்ட விஷமான உணர்வுக்குத் தக்க… இந்த உயிர்… நீ செய்தாய் அல்லவா…! என்று விஷம் கொண்ட உயிரினங்களில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

ஆனால் இதை எல்லாம் நமக்குள் தெரியச் செய்வது கார்த்திகேயா… சேனாதிபதி…! பாதுகாக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது.

1.அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால்..
2.நாம் இன்றைக்கு மனிதன்… நாளைக்கு எடுத்துக் கொண்ட வேதனைக்குத் தக்க வேறு ஒரு உருவம்.

இது போன்ற நிலைக்கு உயிர் மாற்றிவிடும் என்ற நிலைகளில் தான் இத்தனையும் என் உடலில் பாய்ச்சி
1.நீ கெட்டதை நுகரப்படும்போது அது என்ன செய்கின்றது…?
2.எவ்வளவு நேரத்தில் அது உடலில் என்னென்னவெல்லாம் செய்கின்றது…? என்று குருநாதர் காட்டினார்.
3.அவஸ்தைப்பட்டுத்தான் இதை எல்லாம் தெரிந்து கொண்டேன்.

அதற்குப் பின்
1.அதை எப்படித் திருத்துவது…? என்று குருநாதர் சொன்ன நிலைகளைத் திருப்பி எடுத்து எனக்குள் மாற்றி அமைத்துக் கொண்டேன்.
2.அதைத் தான் இப்பொழுது உங்களிடம் சொல்கின்றேன். அதை நீங்களும் எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

உயிரணு தோன்றி உணர்வின் தன்மை முழுமையானது துருவ நட்சத்திரம்…! அதிலிருந்து வரக்கூடிய உணர்வை உங்களுக்குள் செலுத்தி எப்படியாவது அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

காரணம்… இந்த நாடு… உலகம்… காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக உள்ளது. அதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் அல்லவா…!

பிறந்துவிட்டோம்… மனிதராக வளர்ந்துவிட்டோம் மனிதனுக்குபின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் அது தான் கடைசி நிலை…!

நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குபவன் உயிர். அது ஈசனாக இருக்கிறது. உருவாக்கிய உணர்வு உடலாகி சிவமாகின்றது. உடலான இந்தச் சிவத்திற்குள் தீமையை நீக்கிய உணர்வு மணம் அந்தக் குணம் ஆறாவது அறிவாக இருக்கின்றது.

1.ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உயிரான ஈசனிடம் வேண்டி
3.ஒளியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து
4.உங்களைத் தெளிவாக்கி கொள்ளுங்கள் என்று தான் யாம் சொல்கிறோம்.

அந்தத் தீமையை நீக்கிய உணர்வின் தன்மையை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடலிலுள்ள இரத்தத்தில் கலக்கப்படும்போது அந்த ஒளியான அணுக்கள் உங்களுக்குள் பெருகும்.

அன்னபூரணி அஷ்டலட்சுமி வாக்குதேவி

 

காசியம்பதியில் விறகு சுமந்த வேண்மா சந்தர்ப்பத்தில் மயக்கமுற்றுச் சாய்ந்து… அந்தச் சரீரத்திலிருந்து ஜீவன் நீங்கிடும் தருவாயில் ஆங்கு வட்டமிட்ட “விஸ்வேஸ்வர மாமகரிஷி” (காசி விஸ்வநாதன்)… வேண்மாவின் உடலில் சூட்சும செயல் கொண்டு “கல்லால சித்தன்” என்ற நாமம் பூண்டு மௌனித்து எடுத்த சக்தி நிலை பெரிது.

1.மௌனமே சக்தி பெறச் சம்மதம் எனப் பொருள்பட
2.வானியல் தொடர்பாக வாக்கு தேவி அன்னபூரணி… அஷ்டலட்சுமி… என்ற மண்டலங்களாகப் பெயர் நாமப்படுத்தி
3.அதைச் சிரசினுள் காட்ட வந்ததே
4.அன்னபூரணியை வலக்கண்ணும்
5.அஷ்டலட்சுமியை இடக்கண்ணும்
6.வாக்கு தேவியைப் பிடரிக் கண்ணும் என்று காட்டி
7.மனக்கண் குறிப்பாக உள் முகம் நோக்கி… அகப்பார்வை ஒளிமார்க்கம் காட்டும் விதம்… – அதுவே “அக்ஷி…”

இத்தன்மையை அறியும் போது அறிய வேண்டியது ஒன்று உண்டு.

கிணற்றில் நீர் இருக்கின்றது. கிணற்றில் இருக்கின்ற நீரை நீர் இறைக்கின்ற உபாயமாகக் கைக்கொள்ள வேண்டிய முறை உண்டு.

அதாவது யாம் சொல்ல வருவது “அறிவை அறிவால் அறிதல்” என்பது.

சிறு குழந்தைகள் ஓரு மண் கலயத்தைக் கயிற்றினால் கட்டி அதைக் கிணற்றிற்குள் விட்டு நீர் இறைக்கின்ற செயலில் அது பக்குவமற்ற தன்மை என்றாலும்… “கவனத்தின் குறைபாடு தான்…”

சிறு பிள்ளை விளையாட்டு என்றபடி நீர் மொண்ட அந்தச் சிறு மண்பாண்டம் நீர் இறைக்கும் தருவாயில் கிணற்றுச் சுவரில் பட்டு உடைந்து விடுகிறது. அந்தக் குழந்தைகள் தாங்கள் கைக் கொண்ட செயலுக்கு நாணமுறுகின்றனர். அதைப் போல் இல்லாதபடி
1.இந்த ஞான வழியினை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறை என்பது… சிந்தனையில் சிரத்தையோடு
2.சூட்சும மாமகரிஷிகள் காட்டுகின்ற வழித்தன்மையைக் கையாள்வதில் கொள்கின்ற தனித்துவ செயல்பாடு “உறுதியாக” இருத்தல் வேண்டும்.

அந்த உறுதியை எப்படிச் செயல்படுத்துவது…?

கிணற்றில் நீரை இறைக்க வேண்டும் என்றால் உடையாத ஓர் கலம் வேண்டும். நீர் இறைக்கும் தருவாயில் நீர் இறைக்கின்ற கலம் நீர் மொள்கின்ற சத்தத்தைப் புலனறிவால் அறிந்து கொண்டு… கலத்தில் நீர் நிறைந்து விட்ட தன்மையை உணர்ந்தே… பக்குவமாக வெளிக்கொணர்ந்து பயனுறக் கைக்கொள்ளல் வேண்டும்

அது போல்
1.விஸ்வேஸ்வர மாமகரிஷி காட்டிய அந்த உயரிய வழித்தன்மை
2.அவராலும் அவருடைய சீடர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த அந்த முறையை
3.இன்று அறியப்பட வேண்டிய இரகசிய உண்மைகளை நீங்கள் அறிந்து தெளிந்து… ஆக்கச் செயலுக்காக உயர்ந்து
4.பால்வெளியின் பூதியில் ஓர் மண்டலமாக உருக் கொள்கின்ற திறனுக்கே
5.உயர்வெண்ணம் செலுத்தப்படல் வேண்டும்

அரை குறையாக அறிந்ததை… அறிந்து விட்டதாக எண்ணி இரகசிய உண்மைகளைச் செல்வம் சேர்த்திடும் எண்ணத்திற்குச் செயல்படுத்திட எண்ணிய இந்தத் தேசத்தில்… அக்ஷி முறை செயலுறுவாகச் செயல் கொண்டு “இயங்கிடாத நிலையே” இன்று திபெத்தில் இரகசிய முறையாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது.

1.ஆத்மாவும் ஜீவனாடி நாத விந்துவும்
2.மேலது கீழாய் கீழது மேலாய்
3.சிருஷ்டி எனப்படுவது கீழ் இறங்கல்
4.ஞானம் எனப்படுவது மேலுயர்தல்
5.சிருஷ்டி… சிருஷ்டிக்கும் சக்தி… என்று ஆதி சக்தியின் தன்மையையே அவ்வாறு குறிப்பிட்டோம்.

“ஸ்ரீ பாதங்கள்…” என்று உரைப்பதே “நாத விந்து” எனப்படுகின்ற ஒலி ஒளி சக்திகளையே.

மகாபாரதப் போரைக் கண்ணன் ஏன் வழி நடத்துகிறான்…?

மனித உடலில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போர் முறைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. மகாபாரதப் போரைக் கண்ணன் (கண்கள்) வழி நடத்துகின்றான் என்று காட்டுகின்றார்கள். ஏன்…?
1.கண்கள் தான் ஒன்றைப் பார்த்து அதன் வழி நுகர்ந்து
2.உயிரிலே பட்ட பின்… நாம் எண்ணியதை உயிர் இயக்குகின்றது.

எண்ணத்தினால் தான் கண்கள் உருவானது. நாம் எதை நினைக்கின்றோமோ அதைக் கவர்ந்து அந்த எண்ணத்தை ஊட்டுகின்றது கண்கள்.

பரிணாம வளர்ச்சியில் கண் இல்லாத பொழுது. “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…” என்ற எண்ணங்களை எடுத்தது அதன் உணர்வின் தன்மை வளர்ந்து அப்படித் தான் கண்கள் உருவானது.

கண்கள் உருவான பின் ஒன்றைப் பார்க்கப்படும் போது அதைக் கவர்ந்து அந்த உணர்வின் எண்ணங்கள் வருகிறது. நாம் எதை எடுத்து அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றோமோ அதன் நிலையே வருகிறது.
1.ஒருவனை நாம் ஏமாற்ற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அவனைக் கண்டதும் ஏமாற்றுகின்றோம்.
2.அதே சமயத்தில் நண்பனை ஏமாற்றினால் அவன் நம்மை விடமாட்டான் என்றால்
3.அதற்குத் தகுந்த மாதிரித் தான் நாம் நடந்து கொள்வோம்.

இப்படி நம் மனதிற்குள் எத்தனையோ போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஆறாவது அறிவு கார்த்திகேயா பல சூதுகளிலும் பல நிலைகளிலும் மாறி மாறி வளர்ந்து வந்தது.

உதாரணமாக பூனை எலியைப் பிடிக்கத் தந்திரமான வேலை செய்கின்றது. தந்திரமாகப் பிடிக்கும் நிலைகள் அதற்கு வருகின்றது எலியும் பூனையிடமிருந்து தப்பிக்க எத்தனையோ வழிகளைச் செய்கின்றது.

பூனையின் மணத்தை எலி கண்டபின் உற்றுப் பார்க்கின்றது மணத்தால் நுகர்கின்றது…. அங்கே பூனை இருக்கிறது என்றால் தப்பி விலகி ஓடுகின்றது.

ஆனால் பூனை என்ன செய்யும்…?

1.அந்த எலியின் மணத்தை வேகமாக நினைத்து இழுத்து வைத்துக் கொள்ளும்
2.சப்தமில்லாதபடி அந்த வாசனையை அது ஏங்கிப் பெறும் பொழுது பூனையின் பக்கம் அந்த மணங்கள் வருகின்றது… பூனை ஒளிந்து கொள்கிறது.
3.மறைந்திருக்கும் போது எலியின் மணம் அங்கிருந்து (பூனையிடமிருந்து) வருகிறது
4.எலியோ தன் கூட்டாளி அங்கே இருப்பதாக எண்ணி வேகமாக வரும்.
5.வேகமாக வந்த பிற்பாடு லபக் என்று பிடித்துக் கொள்கின்றது.

பூனை இதே மாதிரி தான் அதை உணவாக உட்கொள்கின்றது. இயற்கையின் சில நியதிகளில் அதனதன் உணர்வுக்கு உணவு தேட இப்படி வேலை செய்கிறது.

இது போன்று புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொன்றும் அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு… அணுக்கள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டு அதன் வளர்ச்சியின் தன்மை பெற்றுத் தான் இன்று மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனான பின் இந்த உடலின் இச்சை தான் வருகின்றது உடலைக் காக்க எத்தனையோ உபாயங்களை நாம் கையாளுகின்றோம்.

ஒருவர் நீதிப்படி நல்ல முறையில் ஒன்றை வளர்க்க வேண்டும் என்றால்… சூதின் வழி தான் அவரைக் கவர்ந்து கொள்கின்றோம்.

நல்லவரைப் பார்த்தாலும் நல்லது செய்தார் என்று எண்ணமே நமக்கு வருவதில்லை.
1.நமக்கு நல்லதே அவர் செய்திருந்தாலும் வெறுப்பின் உணர்வுகள் கவர்ந்திருந்தால்
2.அவர் என்ன நல்லது செய்தார்…? என்று தான் கேட்போம்.

காரணம்… அவர் செய்த உண்மையின் இயக்கத்தை நாம் எந்தக் கண்களால் பார்த்து
1.எத்தகைய உணர்வைப் (அன்போ வெறுப்போ பகைமையோ) பதிவாக்கினோமோ அந்த எண்ணங்கள் தான் வருகின்றது.
2.அந்த எண்ணத்தை நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் தான் இயக்குகின்றது.

இந்த உணர்ச்சியின் வழி தான் அந்தந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது என்பதை “மகாபாரதப் போரைக் கண்ணன் வழி நடத்துகின்றான்…” என்று காட்டுகின்றார்கள்.

இத்தகைய போராட்டங்களை மாற்ற வேண்டும் என்றால் நம் கண்ணின் நினைவு எங்கே இருக்க வேண்டும்…?

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் பால் சென்று அதனின்று வரும் பேரருள் பேரோளியைக் கவர்ந்து உயிரிலே அதை மோதச் செய்ய வேண்டும். அந்த உணர்வு நம்மை இயக்கும்படி செய்ய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வுகளை அறிவதற்கும் அந்த ஆற்றலைப் பெறுவதற்கும் 20 வருடம் பல கஷ்டங்களை (ஞானகுரு) அனுபவித்தேன்.

அதை எல்லாம் இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது 10 நிமிடம் கூட உட்கார முடியாமல் எழுந்து செல்பவர்களும் உண்டு. உட்கார்ந்து இருக்கின்றேன்… “கால் வலிக்கின்றது…” என்று சொல்பவர்களும் உண்டு.

சீக்கிரம் சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்று நினைத்தால் இப்படியே என்னத்தையோ அறுத்துக் கொண்டிருக்கின்றார்…! என்று நினைத்தால் நிச்சயம் உங்களுக்குக் கால் வலி வரும்… இடுப்பு வலி வரும்… கொஞ்ச நேரத்தில் எழுந்து போகலாம் என்ற சொல்லும் வரும். ஏனென்றால்
1.இந்த உபதேசத்தின் உணர்வினை நீங்கள் ஈர்க்கவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை இயக்கத்தான் செய்யும்.
2.ஆனால் அதைப்  பெற வேண்டுமென்ற ஏக்கத்துடன் இருந்தால் நிச்சயம் உயர்ந்த சக்திகளைப் பெறலாம்.

சாதாரணமாக கதாகலாட்சேபம் செய்பவர்கள் சிரிக்கப் பேசுவார்கள். கிண்டல் செய்தால் ஆகா…! என்று சிரித்து எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.

நான் அப்படிச் சொல்வதற்கில்லை…!

மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்றால் இருளை அகற்ற முடியும் என்று நிலைக்குத் தான் சொல்கிறேன். பொறுமையுடன் பொறுத்து இருந்து உணர்வின் தன்மை பதிவாகி இதை நுகரப்படும்போது உங்கள் இடுப்பு வலி கால் வலி நெஞ்சு வலி எல்லாம் குறையத் தொடங்கும்.

ஹார்ட் பட…பட.. என்று துடிப்பவர்களும்… உட்கார முடியவில்லை…! என்று சொல்பவர்களும் கூட அமர்ந்து கேட்பார்கள். இதைக் கேட்கக் கேட்க இந்த உணர்வுகள் உள்ளே போகப் போக உங்களை அது அமைதிப்படுத்திவிடும்.

ரொம்ப நேரம் உட்கார முடியாது என்று சிலர் இருப்பார்கள். அரை மணி நேரத்திற்கு மேல் உட்கார மாட்டேன் என்று சொல்லியிருப்பார்.
1.ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருப்பார்.
2.எப்படி உட்கார்ந்திருந்தோம்…! என்று தன்னை மறந்திருப்பார்.
3.ஏனென்றால் எதன் உணர்வைக் கவர்ந்து கொண்டோமோ அந்த ஞானிகளின் உணர்வின் தன்மை நமக்குள் வளரப்படும்போது
4.மற்ற தீமைகள் நமக்குள் நுகர முடியாதபடி தடைப்படுகின்றது.

அருள் உணர்வுகள் வளர்கின்றது தீமையைக் குறைக்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்கில்…” சொல்லி ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

1.உடலைப் பற்றியோ தொழில் நிலைகளைப் பற்றியோ மறந்துவிட்டு
2.சாமி சொல்லும் அந்த அருள் ஒளியை பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
3.எவர் உட்கார்ந்திருக்கின்றனரோ அவருக்கு அந்த அருளுணர்வு பதிவாகின்றது
4.உங்கள் நினைவு தீமையிலிருந்து விடுபடும் சக்தியாக மாறுகின்றது.

ஆனால் நம்முடைய பழக்க வழக்கத்தில் அடுத்தவர்கள் பேசினால் நாம் ஒட்டுக் கேட்போம். நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றான்…! என்ன சொல்கிறான்…? என்ற எண்ணத்தில் ஒட்டுக் கேட்போம்.

ஒட்டுக் கேட்டபின் அந்தத் தீமையின் நிலைகளையே பேச ஆரம்பிப்போம். அவன் செய்யும் தீமையின் உணர்வை ஒட்டுக் கேட்டபின் “அவனை எப்படிக் கெடுப்பது…” என்ற உணர்வுகள் தான் வரும். பதிவான பின் அந்த நினைவே அதிகரிக்கின்றது.

இதைப் போலத்தான் நீங்கள் என்ன செய்ய வேண்டும்…?
1.உடலுக்குள் நினைவைச் செலுத்தி “நீ இருப்பா… கொஞ்ச நேரம்…!”
2.சாமி சொல்லும் துருவ நட்சத்திரத்தின் அருளை கொஞ்சம் ஒட்டுக் கேட்டுக் கொள்கிறேன் என்று
3.இந்த உணர்வின் தன்மையை இப்படி ஒட்டி வைத்தால் தீமையை நீக்கும் அரும் பெரும் சக்தியாக மாற்றுகின்றது.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

நமது குருநாதர் எம்மை இது போன்று தான் அனுபவத்தைப் பெறச் செய்தார். ஒவ்வொரு நொடியிலும் அதை அறிந்துணர்ந்து கொள்வற்கு எனக்குள்ளும் தீமைகளைப் பாய்ச்சினார்.

அந்த உணர்வின் நினைவுகள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையை உணரச் செய்தார். அந்தத் தீமைகளிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…? என்று அத்தனை துன்பங்களையும் அனுபவித்து மீள்வதற்குக் காட்டினார்.

ஆய்வுக் கூடங்களில்…
1.இன்று எப்படி ஒரு பொருளின் தன்மை திரவத்தை ஊற்றிப் பரிசோதித்துப் பார்த்து
2.அதிலிருக்கும் உண்மைகள் ஒவ்வொன்றையும் பெறுகின்றோமோ அதைப் போல்
3.என் உடலிலேயே இந்த உணர்வுகளைப் பாய்ச்சி மெய் உணர்வின் தன்மை அறியும்படி செய்து
4.அத்தகைய நிலையை உருவாக்கினார் நமது குருநாதர்.

ஆகவே இதை (குரு வழியில் தீமையை நீக்கும் அனுபவங்களை) நமது என்ற நிலைகளில் சொந்தம் கொண்டாட முடிகின்றது.

எனது குருநாதர் என்று இருந்தாலும்…
1.அதை நீங்களும் உணர்ந்து நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளும் போது
2.அந்த குரு வழியில் நமக்குள் “நமது…” என்று ஒன்று சேர்த்து வாழும் தன்மை அங்கே வருகின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் கண்டுபிடித்த “பச்சிலை மூலிகைகளின் வீரிய சக்தி”

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் ஒரு மனிதனுக்கு வயிற்று வலி வருகிறது என்றால்
1.சில பச்சிலைகளை எடுத்துக் கையிலே உரசித் தேய்ப்பார்கள்.
2.தேய்க்கும் போது அந்த உணர்வுகள் இரத்தங்களுடன் கலந்துவிடுகிறது
3.அதாவது இன்று இன்ஜெக்ஷன் போடுகிற மாதிரி மேலே அரைத்துத் தேய்ப்பார்கள்.
4.அந்தப் பச்சிலையின் உணர்வுகள் இரத்தத்துடன் கலந்து அவன் வயிற்று வலிக்குக் காரணமானதை நீக்கி விடுகின்றது.
5.அந்த விஷத்தை ஒடுக்குகின்றது… வலி நீங்குகிறது.

அனுபவத்தில் அப்படி அறிந்தவர்கள் தான் அன்றைய மனிதர்கள். புலஸ்தியர் (புலனறிவால் நுகர்ந்தறிபவர்கள்) என்பர்கள்.

அறிந்ததைப் பதிவு செய்யும் போது தான் பதிவு செய்ததை மீண்டும் நினைவாக்கிக் கொள்கின்றான். அந்த நினைவின் தன்மை கொண்டு
1.தனக்கு எப்பொழுது ஆபத்துகளோ விபத்துக்களோ வருகின்றதோ
2.மிருகங்களிலிருந்தும் அறியாது வரும் நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள இம்முறையைக் கையாண்டு வருகின்றனர்.

ஏனென்றால் காட்டு விலங்குகளுடன் இருக்கும் போது அந்த விஷத் தன்மை கொண்ட மிருகங்கள் தன்னைத் தாக்கிடாது பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

இப்படி அந்த விஷத்தை முறித்திடும் சக்திகள் தனக்குள் தெரியப்படும் பொழுது… இரவிலே உறங்கச் செல்லப்படும் பொழுது
1.விஷத்தை முறித்திடும் பல மூலிகைகளை அவர்கள் அரைத்துப் பூசி கொள்வதும்
2.தாங்கள் படுத்து இருக்கும் குகைகளுக்கு முன் அதைப் பரப்பி வைத்துக் கொண்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள்/.

சில காடுகளில் அத்தகைய புலையர்கள் இன்றும் இருக்கின்றார்கள். இவர்களின் மணத்தைக் கண்ட பின் யானைகள் விலகிச் செல்லும்… புலிகள் விலகிச் செல்லும்… விஷ ஜந்துக்களும் விலகிச் சென்று விடும்.

அது போன்றுதான் அக்காலத்தில் இத்தகைய பச்சிலைகளை அவர்கள் பாதுகாப்புக்காக வைத்துக் கொண்ட பின்… கணவன் மனைவியாக வாழ்பவர்கள் கர்ப்பமுற்றால் அந்தக் கருவில் இருக்கும் குழந்தைக்குத் தாய் நுகரும் உணர்வுகள் அனைத்தும் விஷத்தை முறிக்கும் ஆற்றலாகப் பெறுகின்றது.

அதே சமயத்தில் மின்னலை அடக்கிடும் சில பச்சிலைகளும் உண்டு. மின்னலால் தாக்கப்படும் போது அந்த அதை அவர்கள் வைத்திருப்பதினால் அதன் மணத்தால் அதிலிருந்து காக்கப்படுகிறார்கள்.

1.யார் இதை அனுபவத்தால் கண்டுபிடித்தார்களோ
2.மின்னலின் நிலைகளை மாற்றிடும் பச்சிலையை யார் அந்தக் காலங்களில் வைத்தனரோ
3.மின்னலின் தாக்குதலை அடக்கிடும் அந்தப் பச்சிலைகளை
4.அகஸ்தியன் என்று சொல்லும் அவருடைய தாய் தந்தையர்கள் உடலில் அரைத்துப் பூசியதனால்
5.தாய் அந்த மணத்தை நுகரப்படும் போது கருவிலிருக்கும் அகஸ்தியனுக்கு வீரிய சக்தியாக அது கிடைக்கின்றது

இரவிலே படுத்திருக்கும் போது பாதுகாப்பிற்காக அதைப் பரப்பி வைத்திருந்தாலும் மிருகங்களிடமிருந்து மட்டுமல்ல… மின்னல் தாக்கினால் அந்த விஷத்திலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள்.

அப்படிப் பாதுகாக்கப்பட்ட அந்தப் பச்சிலையின் மணத்தை நுகர்ந்ததனால் தான் கர்ப்பமாகும் பொழுது கருவில் இருக்கும் அகஸ்தியனுக்கு அது கிடைக்கின்றது.
1.மின் கதிர்கள் வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து
2.அதன் உணர்வின் அறிவும் கருவிலேயே அவனுக்குள் விளைகின்றது
3.இப்படி விளைந்தது தான் அவனுக்குள் பேராற்றலாக வளர்கின்றது

இந்த மின்னல்கள் கடலில் தாக்கப்பட்டால் அது மணல்களாவதும் அதன் கீழ் ஒரு மீன் இனம் சென்றால் மின்னலின் அழுத்தம் தாக்கப்பட்டு அதற்குள் ஊடுருவி இது ஒரு கருத்தன்மை அடைந்து எலக்ட்ரிக் மீனாக மாறுகிறது.

எலக்ட்ரிக் மீனாக உருவான பின் “அதன் உணர்வின் அறிவாகி” அது பல வகைகளையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற மீனாக எப்படி வளர்ந்ததோ அதைப் போல் தான்
1.அகஸ்தியனும் அறிவின் ஆற்றலாக உருப்பெற்றான்.
2.மிகச் சக்தி வாய்ந்தவனாக மாறுகின்றான்.

இதை இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). இதை நீங்கள் நினைவு கொண்டால்… உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் “சில கடுமையான விஷத் தன்மைகளிலிருந்தும்… நோய்களிலிருந்தும்… உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்…”

அக்ஷி

 

முன்பு ஒரு காலத்தில் காசியம்பதியில் விறகு சுமந்து விற்று ஜீவனம் செய்து வந்தவர் வேண்மா என்ற பெயர் கொண்டவர். காசி நகர் சக்தியாகச் செயல்படும் அன்னபூரணியை மானசீகமாகப் பூஜித்த அன்பன் அவன்.

“விஸ்வேஸ்வரர்” வேண்மாவில் செயல் கொண்டு “அக்ஷி முறை” வகுத்துத் தந்த வழி இன்று “குண்டலினி” யோகப் பயிற்சியாக…
1.அந்த முறையும் இந்த முறையும் ஒன்றெனக் கூறி
2.பொருள் ஈட்டும் செயலாகப் பேராசை வலையில் சிக்கித் திகழ்கின்றனர்.

விஸ்வேஸ்வரர் சூட்சுமமாய் வேண்மாவில் செயல் கொண்டு அன்றைய காலகட்டத்தில் “சம்பூத் தீவாக” வழங்கி வந்த அத்தீபகற்பத்தில் அக்ஷியை உபதேசித்தார்.

அவர் “கல்லால சித்தன்” எனப் பெயர் பூண்டு காட்டிய வழி இன்றும் திபெத்திய பீடபூமியில் சீடர்கள் வழி கூற வந்த “லாமாக்கள்” என்று பெயரிட்டே அவர்கள் தம் வசம் இன்றும் செயல் கொண்டு செயல்படுத்தி… மறைக்கப்பட்டு… பேரின்ப லயத்தை தியானத்தின் வழியாகச் சித்தன் நிலை கைகொள்கின்றனர்.

சரீரத்தில் ஓடிடும் சுவாச நாடிகள் (காற்று நூல்) மகரிஷிகளால் காட்டப்பட்டதை ஏற்கனவே உணர்த்தி உள்ளோம். சுவாசங்கள் ஓடிடும் அந்தந்தக் காலகட்டத்தில் “அந்நாடிகளின் வழி எண்ணிடல் வேண்டும்” என்று எத்தனை பேர்களுக்குச் சொல்கின்றாய்…?

எண்ணல் வேண்டும் என்கிறாயே அது என்ன…?
1.நீ கூறுகின்ற வழியே தான் இன்னும் ஒரு படி மேலாக “அகக் கண்ணால் கண்டு”
2.அந்தந்த இடங்களின் சக்தியை… சக்தியின் செயல்பாட்டையும்
3.சிரசின் உச்சிக்கே அகக்கண் கொண்டு நகர்த்தி
4.மேலெழும்ப வைத்திடும் செயலில் கிடைத்திடும் பேரானந்தம்
5.நீங்காமல் நின்று நிலை பெற்றிருக்க அனுபவித்தலே “அக்ஷி…”

அதற்கும் மேலாக ஆத்ம பலம் கூட்டிடும் தத்துவார்த்த உபதேசமாக
1.“யக்ஞம் வேதாள மாமகரிஷி” அன்று முன் மொழிந்ததை
2.இந்த உலகினுக்கு இக்கலியில் மொழிய வந்திருக்கின்றோம்.

அவைகள் முற்றுப் பெறவில்லை. நீங்கள் அருந்த வேண்டிய ஞானச் சுடர் விளக்கம் எத்தனையோ உண்டு.

1.மூலாதாரம் முதல் கொண்டு உச்சி வரை ஒவ்வொரு இடமாக ஒளித்தன்மையைச் சித்தித்தே
2.விழிப்பார்வை கொண்டு எண்ணிப் பிறக்கும் அக்ஷி ஜோதியை… ஆகாய லிங்கத்தைக் காண்பதே சித்தன் நிலை…!

சரீரம் முழுக்க காந்தத்தின் புலன் உணர்வுகளால் தாக்க (உடல் உறுப்புகள் தியானம்) ஆத்ம பலம் கூட்ட அறிந்து கொள். அறிந்ததைத் தெரிந்ததே மெய்ஞானச் சுடராகும் வழி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எத்தனையோ கோடி உடல்களிலிருந்து இன்னல் பட்டுத் தான் மனிதனாக வந்துள்ளோம். இந்தச் சரீரத்திலும்… வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களிலிருந்து விடுபடும் உணர்வைத் தான் நாம் எடுக்க வேண்டும்.

உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகப் பேசுகின்றார்கள் என்று நாம் பார்க்கின்றோம்.

அதிலே ஒருவன் மற்றவனைச் சாபமிட்டு “அவன் நாசமாகப் போக வேண்டும்…” என்று சொல்கிறான். அதை நாம் கூர்ந்து பதிவாக்கினால் அவன் சொன்ன உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அதே உணர்ச்சியைத் தூண்டுகிறது.

அந்த உணர்வுகள் உமிழ்நீராகும் போது நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து அது இரத்தமாக மாறுகின்றது. உடல் முழுவதற்கும் போகின்றது.

1.அந்தக் கரு முட்டை… (நாசமாக வேண்டும் என்ற வினை – வித்து) எங்கே போய்த் தேங்குகின்றதோ அந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு
2.ஒரு தட்டான் பூச்சி பூக்களில் முட்டையிட்ட பின் பல பல பட்டாம் பூச்சியாக வருவது போல்
3.நம் கல்லீரலிலோ நுரையீரலிலோ இதயத்திலோ அந்த அணுக் கரு போகப்படும் போது
4.இதயம் வடிகட்டினாலும் ஒரு முட்டை போனாலும் போதும்
5.அந்த இடத்தில் வீக்கமாகி இரத்தம் மாசுபடுகின்றது.

அப்பொழுது அந்த அணுவின் மலம் பட்டவுடன் இருதயத்தில் போய் உறைந்து விடுகின்றது. அப்புறம் படக்…படக்… நெஞ்சு வலி வரத் தொடங்குகிறது.

நெஞ்சு வலிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றால் எத்தனையோ இலட்சம் வேண்டும். அப்பொழுதுதான் சரி செய்ய முடியும். ஆனாலும் ஆபரேஷன் செய்து எத்தனை நாள் நன்றாக இருக்கின்றோம்…?

சம்பாதித்த காசைக் கொடுத்துச் செலவழித்துக் கொஞ்ச நாள் வாழச் செய்கின்றோம். அப்புறம் என்ன செய்கின்றோம்…?

1.நான் சம்பாரித்தேனே… இப்படியெல்லாம் செய்தேனே… கடைசியில் காசை எல்லாம் இப்படி டாக்டருக்குக் கொண்டு போயி கொடுத்தேனே…! என்று இப்படி ஒரு வேதனை.
2.அடுத்தாற்படி வீட்டில் இருக்கக்கூடிய சண்டையோ சச்சரவோ குறையுமா என்றால் இல்லை….! பணம் குறைந்தவுடன் இன்னும் கொஞ்சம் வேதனை அதிகமாகும்.
3.அப்பொழுது இந்த வேதனை அதிகமாகும்போது நம் உடலிலே பலவிதமான நோய்கள் வருகின்றது.
4.என்னடா இது…! ஒன்று போனது… பாக்கி எல்லாம் சேர்த்து நம் உடலிலே இப்படி ஆகிவிட்டதே…! என்று
5.இந்த உடலில் வேதனையெல்லாம் எடுத்த பிற்பாடு இந்த உயிர் வெளியில் செல்லும் பொழுது என்ன செய்கின்றது…?

அந்த வேதனை என்ற நஞ்சுக்குத் தக்கவாறு உயிரினங்களின் உடலிலே கொண்டு விட்டு விடுகிறது.

ஆக… எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து தான் இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரை நாம் மதிக்க வேண்டுமா இல்லையா…?

தீமை என்றால் அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி கார்த்திகேயா என்றும் சேனாதிபதி… தீமைகளைத் தடுக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது.

தீமை புகாமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இந்நேரம் வரையிலும் பேசுகின்றேன் என்றால் அதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். தியானப் பயிற்சியாகவும் கொடுக்கின்றேன்.

இதை எல்லாம் பதிவாக்கிய பின் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்தால் அந்த சக்தி எண்ணியவுடன் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் சிலர் என்ன செய்கின்றார்கள்…?

உபதேசம் கேட்கும் வரையிலும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் இங்கே நாம் சொன்ன உணர்வுகளைப் பதிவாக்காது விட்டு விடுகிறார்கள்.

பதிவானால் தான் மீண்டும் நினைவுக்கு வரும். இது மிகவும் முக்கியமானது.

இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்து நாம் பழகிக் கொண்டோமென்றால் பிறர் சாபமிடுகின்றார்கள்… சண்டையிடுகிறார்கள்… என்று பார்க்கும் போது அதை நுகராமல்
1.உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்தச் சக்திகளைக் கவர்ந்து
3.மீண்டும் கண்ணின் நினைவை உயிரிடம் புருவ மத்தியில் கொண்டு வந்து அதன் வழியாக இழுங்கள்.

அப்போது தீமை செய்வோர் உணர்வு நமக்குள் ஈர்க்காது… நம்மை இயக்காது…! இந்த மாதிரித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீய வினைகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி நோயாகாதபடி தடுக்க வேண்டும்.

“உங்கள் தாயின் நல்லாசி இருப்பதால் தான்” எம்முடைய உபதேசங்களை உங்களால் கேட்க முடிகிறது

 

தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்குவோம். அவர்கள் தான் கடவுள் நம்மை மனிதர்களாக உருவாக்கிய தெய்வங்கள் அவர்கள் உடலில் தான் நாம் வளர்ந்தோம்… “குடியிருந்த கோவில் அது…!”

பிறந்த பின் தெய்வமாக இருந்து நம்மைக் காத்ததும் அவர்கள் தான். நம்மைk காத்த முதல் தெய்வங்கள் அவர்கள். எதை எடுத்தாலும் இது நன்றாக இருக்க வேண்டும்… நீ இப்படி இருக்க வேண்டும்… ஒவ்வொரு நிமிடத்திலும் குறிப்பறிந்து நம்மைக் காப்பாற்றி வந்தது நமது தாய் தான்.

தாயிற் சிறந்த கோவிலுமில்லை… தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று அன்று சொல்லி இருக்கின்றார்கள். தாய் தான் நாம் குடியிருந்த கோவில்.

1.தெய்வமாகக் காத்ததும் அதுதான்
2.கடவுளாக இருந்து உருவாக்கியதும் அதுதான்
3.அந்த நல்வழி காட்டும் குருவை நாம் அடைதல் வேண்டும்

ஏனென்றால் நம் தாய் நம்மை எப்பொழுதுமே நீ நல்லவனாக இருக்க வேண்டும்… எல்லோரும் போற்றும்படியாக நீ வளர வேண்டும் நீ நலமாக இருக்க வேண்டும்… என்று எத்தனையோ நல்ல வழிகளைக் காட்டுவது அவர்கள் தான்.

இதை செய்தால் தவறு… ஆபத்து… என நம்மை அறிவுறுத்துவது தாய் தான். நாம் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது தவழ்ந்து செல்லும் பொழுது அறியாது ஒரு நெருப்பைப் பார்த்ததும் அதை ஆனந்தமாக போய்த் தொட முயற்சிப்போம்.

டேய்…டேய்…டேய்… நெருப்புடா…! அது உன்னைச் சுட்டுவிடும்… என்று நம்மை அந்த இடத்தில் காப்பது நமது தாய் தான். நாம் ஆனந்தமாக அதைத் தொடப் போகின்றோம்.

ஆனால் தாயோ பதறிப் போய் குழந்தை நெருப்பிலே பட்டால் என்ன ஆகும்…? என்று வேகத்துடன்… அவ்வளவு தூரம் நம்மை அரவணைத்து உடனடியாகக் காப்பாற்றுகின்றது.

அந்த இடத்தில் நம்மைக் காக்கக்கூடிய தெய்வம் நம் தாய் தான்….! பிறந்து விட்டாலும் வளரப்படும் பொழுது எத்தனையோ வகைகளில் நம்மைக் காக்கின்றது.

அறியாத பருவத்திலே மண்ணை அள்ளித் தின்றால் வயிறு வலிக்க ஆரம்பிக்கும். அப்படி ஆகிவிட்டால் நாம் அதற்குப் பின் நலமுடன் வாழ முடியுமா…?

இது போன்று எத்தனையோ நிலைகளைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி… நம்மை மனிதனாக ஆளாக்கி…
1.இன்று இந்த அருள் உபதேசங்களை கேட்கக்கூடிய அளவிற்கு வைத்தது நம் தாய் தந்தையர் தானே…!
2.அவர்களை நாம் மறக்கலாமா…? நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
3.இப்பொழுது இவ்வளவு தூரம் என்னுடைய இந்த அருள் உபதேசங்களைக் கேட்கின்றீர்கள் அல்லவா…!

உங்களைப் பள்ளியிலே படிக்க வைத்து பல நல்ல வழிகளைக் காட்டி நல்லதைச் சொல்லி நல்ல ஆடைகளைக் கொடுத்து… தான் எல்லா கஷ்டங்களையும் பட்டுச் சம்பாதித்து வளர்த்து நம்மை ஆளாக்கிக் காப்பாற்றியது யார்…? நம் தாய் தந்தை தானே…!

இப்பொழுது இதை எல்லாம் சொல்கிறோம். எத்தனை பேர் நம் தாய் தந்தையரை மதித்துச் சரியான முறையில் வழி நடக்கின்றோம்…?

“இத்தனையும் இப்பொழுது கேட்கின்றீர்கள்…” என்றால் தாய் தந்தையரால் நாம் மனிதர்களாக உருவாக்கப்பட்டுத் தெய்வமாக நம்மைக் காத்து எல்லா வழிகளையும் நமக்கு நல்வழி காட்டிய அதை மறந்து விட்டால் என்ன ஆகும்…? அப்படி இருக்கக் கூடாது
1.எப்பொழுதுமே அந்த ஞானிகள் காட்டிய வழியிலே தாய் தந்தையரை நாம் முதலிலே மதித்துப் பழக வேண்டும்
2.இது மிகவும் அவசியமான ஒன்று

அவர்கள் உயிர் கடவுள். நம்மை உருவாக்கிய முதல் தெய்வங்கள் அவர்கள் தான். தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றியதும் நல் வழி காட்டியதும் அவர்கள் தான்.

ஆகவே அத்தகைய குரு (தாயின்) காட்டும் வழியில் நாம் நடப்போம்… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிப்போம். குருவின் துணையால் அதாவது தாய் தந்தையரின் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்த அருளை நாம் பெறுவோம்.

1.தாயின் துணை கொண்டு அன்று அகஸ்தியன் அவன் எப்படி அந்த உயர்ந்த சக்தியைப் பெற்றானோ
2.அந்த உணர்வை எல்லாம் நாமும் நம் தாய் தந்தை அருளால் பெற வேண்டும் என்று அடிக்கடி நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

அந்தக் குருவின் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை நாம் வேண்டித் தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற்று
1.அவர்கள் என்றென்றும் மன மகிழ்ச்சியுடன் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
2.நம் தாய் தந்தையருக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தியானிப்போம்.

அக்னி அஸ்திரம்

 

1.உள்ளத்தின் கூளமதை உணர்ந்து கொண்டு… அதை தூய்மையாக்கிடும் முயற்சிக்கு (தன் ஆத்மாவைச் சுத்தம் செய்வது)
2.இன்றைய மக்களின் நிலை வேர்விடும் ஒதிய மரமாகக் காணப்படுகின்றன.
3.சூறைக்காட்டில் ஒதிய மரம் (மிகவும் மென்மையான மரம்) நின்று நிலை பெற்றிடாது.

கருமானின் (கொல்லன்) உலைக்களத்தில் சென்று தேவையற்ற இரும்புப் பொருட்கள் அங்கே ஏன் கிடைக்கின்றது…? என்று கேள்வி கேட்க முடியுமா…! அவைகளை அவன் உளைக்களத்தில் தானே வைக்க முடிந்திடும்.

உலக சிருஷ்டியின் கூளத்தைப் பார்…! உலகத்தின் குப்பைகள் ஒவ்வொன்றும் புதிய புதினங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் சிருஷ்டியின் இரகசியங்களை நீ அறிந்து கொண்டிட வேண்டும்.

மனித மனத்தின் கூளங்கள்… மனிதனின் மனக்கருவையை மூடிக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து… ஆத்ம பரிபாலன அரசை இந்த உலகோதயம் சூதிலே வீழ்த்திவிடும்.

உரத்து எழுகின்ற காற்றே குப்பைகளை அகற்றும். அது போல் மகரிஷிகளின் சக்தியை வைத்துத் தான் ஆன்மாவில் பட்ட அசுத்தங்களை அகற்ற முடியும்.

தூய்மைப்படுத்த வேண்டுமென்றால்… சப்தரிஷிகளின் அருள் வழி கடாக்ஷங்கள்… மகரிஷிகளின் அருள் ஒளியாக உரத்து மனத்தூய்மை காட்டும் அந்தச் செயல்பாட்டின் உறுதி நம்மிடம் எப்படி இருக்க வேண்டும்…?

தென்னம்பாளைப் பஞ்சு…
அம்பின் நுனிக் குஞ்சு…
பாறையின் மோதல் வேக நெருப்பு… (SELF IGNITION)
(இராம) காதையின் வழி கண்டுகொள் விருப்பு.

1.தென்னம்பாளைப் பூவின் பஞ்சு போல் அமைத்திட்ட கோலாக அம்பாக அமைந்து…
2.நாண் பூட்டிய வில்லின் மூலம் அதை எறிய…
3.காற்றின் உராய்வு சக்தி கொண்டு கனன்று எரிகின்ற நெருப்பாக…
4.மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்

நீ ஈர்த்துக்கொண்டிடும் “உயர் மின் நுண்காந்த அணுக்கள்” ஆகாயச் சித்தன் (அகஸ்தியன்) கண்ட செயலில்… சரீர உள் நிகழ்வில்…
1.உச்சி முதல் உள்ளங்கால் வரை… உள்ளங்கால் முதல் உச்சி வரை அந்த ஒளி அணுக்கள் ஓடிடும் ஓட்ட கதியில்…
2.மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக ஓட்ட கதி சந்திப்பின் உராய்வில் உண்டாக்கப்படும் ஒலி நாதம்…
3.நம் சரீரத்தைச் சுற்றி ஓடும் அண்ட கோசம் என்ற ஒளிச்சுற்றலாக அமைவு கொண்ட அமைப்பில்
4.உன்னுள்ளே ஓங்கார நாதத்தை இடைவிடாது கேட்டு அனுபவிக்கின்றாய் அல்லவா.

ஞானமாகச் சுடர்கின்ற தன்மைக்கு அதுவே முன் முயற்சி. அனைத்தையும் அறிந்து கொள்ள தெளிந்து கொள்ள முடியும். அத்தகைய மனித மனத்தின் மனோ சக்தியின் ஆற்றலை… இன்றைய மனிதன் இன்னும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

பூட்டி இருக்கின்ற மனக் கதவைத் திறந்து கொள்ள… இங்கே கொடுக்கும் உபதேச வாயிலாகத் “தியானம் என்ற சாவியை” மனமுவந்து அளிக்கின்றோம்.

ஆதை வைத்துத் தன் மனக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன்… உள்ளே இருந்து கொண்டு கதவடைத்துத் தாழ்பாளை இட்டு பூட்டிக் கொண்ட பின்… சாவியைத் தொலைத்து விட்டானப்பா…! (மீண்டும் பிறப்புக்கு வராது மகரிஷிகளுடன் ஒன்றிடும் நிலை).

1.அத்தகைய மெய் ஒலி மெய் ஞானம் சுடராக விளங்க… உண்மை நிலை உணர்ந்து தங்களை உயர்த்திக் கொள்வோர்
2.இங்கே வழிகாட்டும் மாமகரிஷிகள் நிலையின் வழி ஒன்றுவர்.

படைப்பின் படைப்பே சிருஷ்டி… அனைத்தும் பெற என்னுடைய ஆசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனின் உணர்வின் இயக்கங்களைப் பார்த்தோம் என்றால் அவன் அப்படிச் செய்கின்றான்… நான் இப்படிச் செய்கின்றேன்…! என்ற நிலைகளில்
1.நான் தான் செய்தேன்…
2.நான் செய்து கொண்டிருக்கின்றேன்…
3.என்னால் தான் முடியும்…
4.இது அனைத்தையும் நான் செய்தேன்…! என்று பலருக்குப் பல உபகாரம் செய்வார்கள்.

இப்படிப் பல உபகாரம் செய்தவர்களின் உணர்வுகள் “நான்…” என்ற உணர்வு வரப்படும்போது இங்கே கௌரவர்கள் ஆகின்றது.

அதே சமயத்தில் சிறிது குறைவானால் “அன்றைக்குச் செய்தேன்… பார்… இன்று என்னை மதிக்கின்றானா பார்…!” என்று இந்தக் கௌரவப் போர் வருகின்றது

தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் போது அவர்களைப் பார்த்தவுடனே குருக்ஷேத்திரப் போர். அதை மீறி உடலுக்குள் போனவுடன் மகாபாரதப்போர் ஆகிறது.

கௌரவம் என்ற நிலைகள் கொண்டு எடுக்கும் உணர்வின் தன்மை புலனறிவு ஐந்து வழியாக உள்ளுக்குள் செல்லும்பொழுது பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர்.

போர் என்று உடலுக்குள் வரப்படும்போது நமக்குள் இருக்கும் பல அணுக்களுக்குள் மகாபாரதப்போராக மாறுகின்றது. கலக்கமும் பல நிலைகளும் மற்ற நிலைகளும் இரத்தத்திற்குள் நடக்கும் போது மகா போராக இது உடலுக்குள் நடக்கின்றது.

ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களின் உணர்வின் நிலைகளையும் நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பின் உணர்வை சந்தர்ப்பத்தில் எடுத்து வைத்திருக்கின்றோம்.

அப்பொழுது நாம் நல்லது என்று எண்ணப்படும் பொழுது அதனுடைய நிலைகளை கௌரவர்கள் விடுவதில்லை.

ஒவ்வொரு நாளும் இதைப் போல் நமக்குள் கௌரவப் போர் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என்று பார்க்கலாம்.
1.என் பையன் சொல்வதை நான் கேட்பதா…?
2.மனைவி நல்லது சொன்னால்… மனைவி சொல்வதை நான் கேட்பதா…?
3.மனைவி தப்பு செய்து விட்டால் “கணவருக்குத் தெரிந்தால் திருப்பிப் பேசுவார்…” என்று கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.
4.குழந்தை ஒரு தப்பு செய்து விட்டால் “அப்பா திட்டுவார்” என்றால் இல்லவே இல்லை பொய் சொல்லும்.
5.அதே சமயத்தில் நாம் நல்லவன் என்று பெயர் எடுத்திருப்போம். சந்தர்ப்பத்தில் அறியாமல் தப்பு செய்திருப்போம். கேட்டால் “இல்லவே இல்லை…” என்போம்.

ஆக… தவறை மறக்கும்போது இத்தகைய கௌரவப் பிரச்னை வருகிறது. ஏனென்றால் குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை மூடி மறைக்க என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.

ஆனால் இது போன்ற உணர்வின் தன்மை வரும்போது கடைசியில் இந்த வேதனை என்ற உணர்வுகள் வரும். இருளை நீக்கி மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது. வேதனை என்ற போர் முறைகள் வருகின்றது.

கடைசியில் அடிக்கடி வேதனை என்று நம்முடைய எண்ணங்கள் வரும் பொழுது
1.கண்ணும் (கண்கள் – கண்ணன்) பார்வையை இழக்கின்றது.
2.அர்ஜூனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகள் சோர்வடைகின்றது
3.நமக்குள் வலுவான உணர்வுகள் பீமன் என்ற நிலைகள் அழிகின்றது… தாக்க முடியவில்லை.

மகாபாரதப்போர் முடிவில் கண்களை இழந்தபின் அர்ஜூனனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனுக்கு முன்னாடியே திருடிக் கொண்டு போகின்றார்கள். அவனால் தடுக்க முடியவில்லை.

கண் பார்வை (கண்ணன்) இழந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பிரித்து காட்டித் தெளிவாக்குகின்றார்கள்.

அர்ஜூனன் எல்லாவற்றையும் செய்தேன் என்பான். கண்கள் இழந்தபின் என்ன செய்ய முடியும்…? கண் இழந்தபின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நிதர்சனமாகவே காட்டுகின்றார்கள்.

கடைசியில் தர்மன் என்ன செய்கின்றான்….?

இது எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்…
1.மோப்பத்தில் அறிந்து கொண்ட உணர்வுகள்தான் எனக்கு எல்லா வகையிலும் வழி காட்டியது
2.நன்மை தீமை என்று எனக்கு அறியச் செய்தது
3.தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை அதன் வழியில் தான் எடுத்தேன்…! என்று தர்மன் சொல்வதாகக் காட்டுகின்றனர்.

அவன் யாருக்கு மோட்சத்தைக் கேட்டான்…?

1.முதலில் தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு என்று தான் கேட்டான்.
2.நாம் சுவாசித்த (நுகரும் சக்தி – மோப்பம்) உணர்வின் தன்மைதான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
3.தீமை நீக்கும் உணர்வு தான் (சுவாசம்) எனக்கு வழிகாட்டியாக வருகின்றது.
4.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மைக்கு… “அதற்கே அந்த ஒளியாகும் தன்மை வேண்டும்…” என்று
5.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றான்.

யாராவது இதைப் பற்றிச் சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…! எவ்வளவு பெரிய பேருண்மையைக் காட்டியுள்ளார்கள்.

குருக்ஷேத்திரப் போர் நடப்பதும் கௌரவப்போர் உள்ளுக்குள் நடப்பதும் மேல் வலிக்கின்றது தலை வலிக்கின்றது என்று உடலுக்குள் நடப்பதைக் காட்டி வெளியிலே ஒருவருக்கொருவர் கௌரவப் போர் வந்தாலும் எல்லாம் ஒன்றாக உள்ளுக்குள் நடக்கும்போது மகாபாரதப்போர் என்று வருகின்றது.

நமது கண்களால் எடுத்துக் கொண்ட உணர்வு எண்ணங்களாக உருவாகி
1.அந்த எண்ணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள் நமக்குள் போர் முறைகளாக எப்படி வருகின்றது…?
2.உணர்வின் இயக்கம் எந்த நிலையில் இருக்கின்றது…?
3.மகாபாரதப்போர் நம் உடலுக்குள் எப்படி நடக்கின்றது…? என்ற நிலைகளையும்
4.மகாபாரதப் போர் என்று சித்தரித்துக் காட்டுகின்றார்கள் ஞானியர்.

அலை பாய்ந்து கொண்டே இருக்கும் “நம்முடைய மனம்”

 

மனித மனம் சமுத்திரத்திற்கே (கடல்) ஒப்புவமை காட்டப்பட்டது. அமைதியாகத் தோற்றமளிக்கும் அந்தக் கடல் நீர்
1.பரப்பளவிலே உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடிடும் உண்மை நிலையே “நம் மனத்தின் அலைபாயும் எண்ணங்கள்…”
2.இடையறாது சதா வீசிக்கொண்டே இருக்கும் அலைகள் போல் குணங்களின் தன்மைகள்
3.பல பல குணங்களாக ஆர்ப்பரிக்கும் மனத்தின் எழுச்சி எண்ண அலைகளானது…
4.நாம் கொள்ளப்படுகின்ற (முடிவெடுக்கும் நிலைகள்) கருத்தின் வாசனையாக… “பருவ கால மாற்றம் போல்…”
5.அதனால் ஏற்படுகின்ற கடலின் சூறாவளி போல்… கொண்ட குணத்தின் தன்மை காட்டும்.

மனத்தினுள் மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில்… “அன்பே முதன்மையாக” அந்த குணங்களே வீசிடும் அலைகளாகப் பரவி… புறத்தின் பொய்மை நிலைகள் அகன்று… சாஸ்வதமான மெய் ஒலியால் ஒளி காட்டும் மெய் ஞான நிலை கூட்டி… மெய் ஞானச் சுடராக விளங்கும்.

அதீத நோய்வாய்ப்பட்டவன் நறுமலர் தேனின் சுவையை அறிந்து கொண்டிட முடியாத் தன்மை போல் மெளடீகத்தின் (மூடத்தனம்) வலையில் உட்படும் மனிதர்கள் அதிகரிக்க…
1.மெய் ஞான மணம் காட்டி… சுவை கூட்டும் எளிய தியானத்தைக் காட்டினாலும்
2.கடைப்பிடிக்க முன் வருபவர்கள் அரிதிலும் அரிதாகிக் கொண்டே வருகின்றார்கள்.

அதீத சுகவாசம்… சோம்பேறித்தனம்… இவை எல்லாம் அருள் செல்வத்தைப் பேணிக் காத்திடும் கடமையைக் குறைத்துவிடும்.

அருள் செல்வத்தைப் பேணுகின்ற பொறுப்பு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதனுக்கே உரியது…. அந்தப் பொறுப்பும் அதைக் காக்கின்ற கடமையும் அவனையே சார்ந்தது.

வாசல் வழி திறந்திருந்தால் திருடன் புக ஏதுவாகும். தீய குணங்களையே அவ்வாறு கூறுகின்றோம். ஆத்ம பலம் கூட்டிடும் கடமையை ஏற்றுக் கொண்ட மனிதன்
1.திருடனாலும்… அதாவது தீய குணங்கள் அருள் செல்வத்தை அபகரிக்க…
2.”தனக்கு அதிலே எதுவும் பொறுப்பில்லை…” எனத் தட்டிக் கழித்திட முடிந்திடுமோ…?
3.பொருளைக் காக்கின்றவன் காக்கின்ற கடமையைத் தவறிவிட்டால் அதனுடைய முழுப் பொறுப்பும் அவனுக்கே உரியது.

விழுப்பொருளாம் (உயிருடன் ஒன்றி விண் செல்லும் ஆற்றல்) அந்தப் பொருளை முன் நிலை போல் சமன்படுத்த… மனித மனத்தின் செயலுக்கே அது உரியது.

உவப்பு (மகிழ்ச்சி) மனத்தினுள் நிலைபெற்றுப் பேரானந்த லயமாகக் கலந்திடவே… மனத்தின் பாங்கு அன்று மலர்ந்த மலர் போல் மணம் வீசும் செயலை உணர்ந்து கொண்டிடும் மகிழ்வால்… நாதமாக ஈர்த்திட்டு பேரொளி பெற்றிடவே இங்கே உரைப்பதெல்லாம்.

துறவறம் பூண்டு ஒளி நிலை பெற வேண்டும் என்றே கூறுகின்றார்கள். நாம் கூறிடும் நிலையோ “இல்லறத்தின் வழியாக… ஒலி கொண்டு ஒளி பெறுதல் தான்…”

நாதத்தைக் கூட்டி நாத நாதாந்தம் ஆகுதல்… பேரொளியாகுதல்…” என்பதெல்லாம் நல்லறம் ஆக்கிடும் இல்லறத்தில் பயனுறப் “படைப்பின் படைப்பாதல்…” என்பதனையே உணரல் வேண்டும்.

ஔவையின் உரை… வறுமை கொடியது…! பசியை நோய் என்றே பகர்ந்த உரை. பசி நோயானது தொடர்ந்து பீடிக்கப்படுங்கால்… சரீரம் பசி நோய்த் தாக்குதலில்… உணர்வின் உந்துதல் கொண்டு உயர் நிலையை எண்ணிடாது.

புசித்தால் அந்த நோய் அகலும். ஆனால் தொடர்ந்து வருத்தும் அந்தப் பசி நோயிற்கு “வறுமையில் உழல்பவன்… வளமாக வாழ்பவன்…” என்றெல்லாம் பேதங்கள் ஏது…?

ஜீவ பிம்ப சரீரம் பெற்ற அனைத்து உயிர்களையும் தான் பசி நோயானது வருத்துகின்றது. புசிக்க வழி காணும் ஆக்கத்தின் செயல் இன்றி பசி அகன்றிடுமா…?

வாழும் வாழ்க்கையின் செயலில் முயற்சி அன்றோ திருவினை தருகின்ற உசித மனம் வேண்டும். உசித மனம் கொண்டவன் உரப்ப தானேகும் பசி நிலை (கட்டுக்குள் அடக்க முடியும்).

இந்தத் தியானத்தின் வழியில் செயலுறும் வழியாகக் காற்றமில சக்தியை (உயிர் வழி சுவாசம்) ஈர்த்துக் கொண்டிடும் பக்குவத்தில்… மூல அமில சக்தியாக ஆகாரத்தை (பசிக்கு உட்கொள்ளும் உணவு) இந்தச் சரீரத்திற்கே பெற்றுக் கொள்ள முடிந்திடும். அதாவது
1.தொடர்ந்துற்ற பசிக்குத் தொடர்ந்தே உணவு அருந்திடும் தன்மை போல்
2.தொடர்ந்தே காற்றமில சக்தியைச் சரீரத்தினுள் ஈர்த்துக் கொள்ளும் செயலில்
3.”நிலை நிற்கும் பேறு அதுவே…” என மாமகரிஷிகளால் அந்தச் சக்திகளை வளர்த்துக் கொண்டிடலாம்.

நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னால் உங்களுக்கு மனக் கஷ்டம் தான் வரும்.. அருளைப் பெற முடியாது

 

ரோட்டிலே ரெண்டு பேர் சண்டை போடுகின்றார்கள்… அநாகரீகமாகப் பேசவும் செய்கிறார்கள்… நாம் பார்க்கின்றோம்… அந்த உணர்வின் தன்மை அறிகின்றோம் இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அடுத்து வேதனைப்படுகின்றோம்.

அதைத் துடைக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஈஸ்வரா என்று நமக்குள் நம்மை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும்.

பின்… அவர்கள் இருவரும் ஒன்று பட்டு வாழ வேண்டும் நல்ல உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அவர்கள் சண்டையிட்ட தீமையின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை… மாற்றப்படுகிறது..

சந்தர்ப்பத்தில் இதைப் போன்று வரும் நிலைகளை மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

சாமி (ஞானகுரு) சொல்கின்றார்… தியானம் தான் செய்கின்றேன்…! என்று நீங்கள் இருந்தாலும்
1.அந்தந்தச் சந்தர்ப்பத்தில் (இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது) பார்த்து ஏமாந்து விடக்கூடாது.
2.ஏமாந்து விட்டால் அந்தந்த நேரத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் வலுப்பெற்று விடும்
3.அதைத் துடைக்காமல் விட்டு விட்டால் இரத்தத்தில் கருவாகிவிடும்… பின் அணுவாகி அதனின் தீமையை உருவாக்கத் தொடங்கும்.

தனி மிளகாயை உட்கொண்டால் என்ன செய்யும்…? ஆ…! என்று எப்படி அலறுகின்றோம். தனியாக உப்பை வாயில் வைத்தால் ஓ…ய் என்று உமட்டலாகின்றது. ஆனால் அதே மிளகாயையும் உப்பையும் மற்ற பொருள்களுடன் கலக்கப்படும் பொழுது அந்த உணவு சுவையுள்ளதாக மாறுகின்றது.

இது போன்று
1.பிற உணர்வுகளை நாம் பார்த்து நுகர கவர நேர்ந்தால்
2.அதற்குள் நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து கலவையாக்கி ருசியாக மாற்ற வேண்டும்
3.இது தான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…” என்று சொல்வது.

நம்முடைய ஆறாவது அறிவால் இப்படி நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமை என்ற நிலை நமக்குள் வராதபடி தடுக்கும் சேனாதிபதி ஆறாவது அறிவு தான்.

அது நம்மைப் பாதுகாக்கக் கூடிய சேனாதிபதியாக இருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்தினோம் என்றால் நமக்கு எப்பொழுதுமே பாதுகாப்பாக வரும்.

ஆறாவது அறிவு எனக்கு இருக்கின்றது நான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றேன்… தெரிந்து கொண்டேன்…! என்றால்
1.அறிய வேண்டும் என்ற நிலையில் கெட்டதெல்லாம் உள்ளுக்குள் புகுந்து
2.வேதனை வெறுப்பு சஞ்சலம் பயம் எல்லாமே நமக்குள் வந்துவிடும்.

இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் அவசியம் விடுபட வேண்டும்.

இதையெல்லாம் சுருங்கச் சொல்லி உங்களுக்குள் அருளைப் பெருக்கச் செய்து… இருளை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படியும் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நான் கண்ட உண்மைகள் அனைத்தையும் உங்களிடம் மொத்தமாகச் சொல்லி
2.சிறுக்க முடிவுக்கு (கடைசியில்) வருவதற்கு முன்னாடி உங்களுக்குக் கஷ்டம் வந்து விடும்… உட்கார முடியாது.
3.நான் பட்ட கஷ்டங்கள் ஏராளமானது அதை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தால்
4.உங்களுக்கு மனக் கஷ்டம் தான் வருமே தவிர அந்த அருளைப் பெற முடியாது.
5.ஆகையினால் அந்தந்தச் சமயத்திற்கு உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

ஆகவே கார்த்திகேயா… என்ற நிலையில் ஆறாவது அறிவைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் “எந்தத் துயரம் வந்தாலும்” அதை வளர விடாதபடி தடுக்க வேண்டும். அப்படித் தடுப்பதற்குத் தான் இதை எல்லாம் துணுக்குத் துணுக்காக உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

ஈஸ்வரா… என்று புருவ மத்தியில்ல் உங்கள் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

கஷ்டமோ நஷ்டமோ துன்பங்களோ வேதனைகளோ வந்தாலும் அதை மாற்றி மறந்து… சந்தோஷத்தை ஊட்டும் நிலையாக…
1.தனித்த உப்பை… தனித்த மிளகாயை… தனித்த கசப்பை.. மற்ற பொருள்களுடன் சேர்த்து சுவையாக எப்படி மாற்றுகின்றோமோ
2.அது போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் எல்லாவற்றையும் சுவையாக மாற்ற முடியும்.
3.எது வந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து அதற்குள் கலக்க வேண்டும்.

என் குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும் நல்ல பண்புகள் வளர வேண்டும் அவர்கள் நல்லவர்களாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம்மை யாராவது திட்டினால்… அவர் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற வேண்டும்… அவர்களுக்குத் தெளிவான எண்ணங்கள் வர வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி எடுத்து
1.பிறருடைய தனித்த உணர்வு நமக்குள் வராதபடி
2.நம் உடலுக்குள் வளராதபடி இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால் மாற்றி அமைக்காதபடி அந்தந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் இப்படிப் பேசுகின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்ற இந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளுக்குள் கலந்து.. நம் நல்ல குணங்களைச் சுத்தமாகக் கெடுத்துவிடும்.

நல்ல குணங்கள் அப்படி மாறிய பின் பிறரை எண்ணி வேதனைப்படுவோம்… அடுத்து கோபப்படுவோம்.
1.அது எல்லாம் நமக்குள் நோயாக மாறிவிடும் (உடல் நோய்)
2.உடல் உறுப்புகள் கெடும்… நினைவுகள் எண்ணங்கள் மாறும் (மன நோய்).

இதைப் போன்ற நிலையில் இருந்து நீங்கள் விடுபட்டு “வாழ்க்கையே தியானம் ஆக்கக் கற்றுக் கொள்ளுங்கள்…”

பகைமைகளை மாற்றி அருள் உணர்வைப் பெருக்கி அருள் ஞானத்தைப் பெருக்குவதற்குத் தான் உபதேசமாகக் கொடுக்கின்றோம். சுருங்கச் சொல்லி பதிவாக்குகின்றோம்.

இதை நீங்கள் அடிக்கடி நினைவு கொண்டு தியானம் ஆத்ம சக்தி செய்து அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

மின்னலையே ஒடுக்கும் பச்சிலையின் மகத்துவம்… புலஸ்தியர் கண்டது

 

ஒரு சமயம் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று எனக்குத் தெரியாமலே ஒரு பச்சிலையைக் கொடுக்கின்றார்… குருநாதர். மின்னலைப் பாருடா…! என்கிறார். உடனே அவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது.

அவர் கையிலே பச்சிலையை வைத்துக் கொண்டார்… என்னைத் தொடுகின்றார்… தொட்டுக் கொண்டு இப்போது மின்னலைப் பார்…! என்கின்றார்.

சாமி…! நான் பிள்ளை குட்டிக்காரன் நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று உங்களுடன் வந்து விட்டேன். மின்னலைப் பார்த்து என் கண்கள் பறிபோய் விட்டால் நான் என்ன செய்வது…? என்றேன்.

நான் சொல்வதைக் கேட்கின்றேன் என்று தானே என்னுடன் வந்தாய். இறக்கும் தறுவாயில் இருந்த உன் மனைவியை உடல் நலம் பெறச் செய்தேன் அல்லவா..! அந்த நேரத்தில் நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று தானே சொன்னாய்.

அப்படி என்றால் நான் சொல்வதை நீ இப்போது கேட்க வேண்டுமா இல்லையா…? என்று இப்படிக் கேட்கின்றார்.

அப்பொழுது நான் என்ன செய்வது…! வேறு வழி இல்லை.

அப்பொழுது தான் அந்த இடத்திலே என்னைத் தொடுகின்றார் மின்னல் பாய்கின்றது… அதைப் பார்…! என்று சொல்கின்றார்.

உதாரணமாக
1.வான் வீதியிலே விஷங்கள் ஓன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது தான் மோதலாகின்றது
2.விஷம் தாக்கப்பட்ட பின் தான் வெப்பம் ஆகின்றது
3.விஷத்தின் தாக்குதலால் தான் நம் உயிரிலும் வெப்பம் உண்டாகிறது… அதனால் இயக்கமும் ஆகிறது.
4.ஆனால் அதிக விஷம் தாக்கப்படும் பொழுது இருளாகின்றது நம் உடலில் இருக்கும்

நம் உடலில் ஒவ்வொரு அணுக்களுக்கும் அதற்குண்டான விஷங்கள் உண்டு. ஆனால் விஷம் அதிகமாகி விட்டால் நாம் செயலையே மறக்கச் செய்துவிடும்.

நாம் உணவு உட்கொள்வதில் உப்பு சேர்த்தால் நன்றாக இருக்கும். உப்பு அதிகமாகி விட்டாலோ ஓ…ய் என்று வாந்தி வந்துவிடும்… சாப்பிட முடியாது. அளவை அறிந்து அதன் உணர்வு கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

அதைப் போன்று… மனிதன் இந்த வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும்…? என்பதற்காக இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

பின் அவர் சொன்ன முறைப்படி மின்னலைப் பார்க்கும் பொழுது ரொம்ப ஆனந்தமாக இருக்கின்றது.
1.அறிந்து கொள்ளக்கூடிய உணர்வுகள்… அறிவின் தன்மையாக எனக்குள் வருகின்றது
2.அந்த மின் கதிர்கள் எங்கெங்கே ஊடுருவிச் செல்கின்றதோ… வான மண்டலத்தையே பூராம் அறியும்படி செய்கின்றார்.
3.அதையெல்லாம் தெரியப்படுத்துகின்றார்… அறியக்கூடிய சக்தியும் எனக்கு வருகிறது.

ஆனால் முதலில் பச்சிலையைக் காண்பிக்கவில்லை அவரிடம் வைத்துக் கொண்டுதான் என்னைத் தொடுகின்றார். மின்னலைப் பார் என்று சொல்கின்றார்… நான் மாட்டேன்…! என்று சொல்கிறேன்.

1.உனக்குச் சக்தி கொடுப்பதற்காகத்தான் நான் இதைச் செய்கின்றேன்
2.இந்தப் பச்சிலையால் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியனுக்குச் சக்தி கிடைத்தது
3.அதன் துணை கொண்டு தான் அவன் ஒளியாக மாறினான்.
4.அதே பச்சிலையின் உணர்வுகளை நீ எடுக்கப்படும் பொழுது…
5.அவன் பெற்ற உணர்வை நீ பெறும் பொழுது உனக்குள்ளும் தீமைகள் வளராது…
6.அந்த விஷத்தை முறிக்கும் சக்தி உனக்கும் கிடைக்கின்றது…! என்று என்னைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

அதன் பின் நான் மின்னலைப் பார்க்கின்றேன் அவர் சொன்னபடி நான் பார்த்து அந்த மின்னல்கள் இயக்கக் கூடிய உணர்வை நான் நுகரப்படும் பொழுது
1.என் இரத்தங்கள் முழுவதும் அது கலந்து… உடல் முழுவதும் அந்த இரத்தம் சுழலச் தொடங்குகின்றது.
2.என் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறை கொண்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு “டைனோசர்” என்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களை அது புதையுண்ட இடங்களை எப்படிக் கண்டுபிடித்தார்களோ அதைப் போன்று
1.அகண்ட அண்டமும் அதனின் நிலைகளும் எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் அன்று கண்டான்…
2.அதன் உணர்வை நீ அறிய வேண்டாமா…? என்று கேட்கின்றார் குருநாதர்.
3.அதற்காக வேண்டித் தான் உன்னை மின்னலைப் பார்க்கச் சொன்னேன்
4.அதன் வழி நீ நுகர்ந்து கொண்ட பின் அந்த உணர்வு உனக்குள் வருகின்றது என்றார்.

இப்பொழுது என்னுடைய எண்ணங்கள் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது இந்தக் காற்றில் இருப்பதை அறிய முடிகின்றது… அந்த உணர்வை வைத்து நான் இப்போது பேசவும் முடிகின்றது.

பேசிய உணர்வுகளை இப்பொழுது நீங்கள் செவி வழி கேட்டு… படித்துத் தெரிந்து கொள்கின்றீர்கள். இதைச் சொல்லிக் கொண்டு வரும் பொழுது
1.அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால்… வசிஷ்டர்..
2.இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு பிரம்மம் (சிருஷ்டி) ஆகின்றது..

பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்தி தான் நமது உயிர்… இந்த மனித உடலை உருவாக்கி அதை ஆட்சி புரிகின்றது. மனித உடலில் விளைந்த ஆறாவது அறிவை வைத்து எப்படி இயக்க வேண்டும்…? என்று அந்த இடத்திலே விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.

அந்த உயர்ந்த சக்தியை நீ கவரப்படும் பொழுது வசிஷ்டர் பிரம்மகுரு… கவர்ந்து கொண்ட சக்தி… மனைவி அருந்ததி.
1.எந்த உணர்வின் சக்தி உனக்குள் அறிவாக வந்ததோ அந்த அறிவின் உணர்வுகள் உனக்குள் உருவாக்கப்பட்டு
2.அந்த அறிவின் துணை கொண்டு தீமைகளை நீக்கி “உள்பொருளின் உணர்வின் ஞானத்தை நீ அறிய முடியும்…” என்று காட்டுகிறார் குருநாதர்.

குருநாதர் காட்டியதை நீங்களும் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகிறேன். காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் என்னை அலையச் செய்து இந்த உண்மையை அறியும் பழக்கத்தைக் கொண்டு வந்தார். ஒவ்வொன்றாக அனுபவத்தைக் கொடுத்தார்.

எத்தனையோ பேர் குருநாதரிடம் பழகினார்கள். இருந்தாலும் இந்த மாதிரித்தான் எனக்குக் காண்பித்தார். தெரிந்து கொண்டேன்… அதை வளர்த்தேன்… உங்களிடமும் அதை இப்போது பதிவு செய்கின்றேன்.

நான் காட்டிற்குள் அலைந்து திரிந்து பார்த்தேன். குருநாதர் வெளிப்படுத்திக் காட்டினார். துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறுவதற்கு உங்களுக்குள் இதைப் பதிவு செய்கின்றேன்.

பதிவு செய்த பின் மீண்டும் எண்ணும் போது உங்களுக்குள் அந்த அறிவாக வந்து அகஸ்தியன் அக்ண்ட உண்மைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அது மட்டுமல்ல…!
1.அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கே நீங்கள் போக முடியும்.
2.அவன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆனது போன்று நீங்களும் ஆவதற்கு இது உதவும்.
3.அவன் செய்த அறிவுகள் எல்லாமே உங்களுக்கு வரும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ இது உதவும்.

சப்தரிஷிகள் தேர்ந்தெடுக்கும் ஞானத்தின் வித்துக்கள்

 

குணங்களாக உள் அடக்கும் “ஓர் மறை பேறு” என்பதே மனித மனம் வளர்த்துக் கொள்கின்ற குண நலன்கள்… அகத்தின் அருட் சிந்தனையில் பிரகாசிப்பதே “உயர் ஞானம்…”
1.ஞானச் செல்வங்கள் (நீங்கள்) அகத்தின் அருள் செல்வத்தினை
2.உங்கள் சிந்தையில் பற்றுக…! என அன்பு கொண்டே அழைக்கின்றோம்.

காலமாம் வேக கதியில்… அனைத்துமே மறைதல் தத்துவம் பெறுகின்றது.

உயிர் சக்தி வலு கூட்டிக்கொள்ள இந்தச் சரீரமும் காக்கப்பட வேண்டும். நோயுற்ற ஒருவனைப் பிழைத்தெழ வைத்திடும் வைத்திய நூல் கற்று அதனைச் செயல்படுத்திக் காட்டிட்ட எத்தனையோ மருத்துவர்கள் உள்ளார்கள்.

இருந்தாலும் அவர்களும் காலத்தின் பிடியில் தான் சிக்கி உள்ளார்கள். உடலை விட்டு எப்படியும் பிரிந்து தான் ஆக வேண்டும்.

ஆனால்
1.மெய் ஞானத்தின் விழிப்பு கொண்டு உயர் ஆத்ம சக்தியை வலுக் கூட்டிய மாமகான்கள்
2.காலத்தால் இன்றும் அழியாது வாழ்ந்து வருகின்றனர்…

அவர்கள் செயல் கொள்கின்ற நிலை என்ன…?

காலில் அணியும் சலங்கை பார்த்திருக்கின்றாய் அல்லவா. உயர்ந்த உலோகத்தால் உருவாக்கப்படும் கால் சதங்கை ஒலிப்பது எவ்வாறு…?

பொருத்தமான பரல்கள் உள்ளிட்டு அமைக்கப்படும் அந்தச் சதங்கை வாய் ஒலிக்கின்ற ஒலி போல்…
1.இங்கே யாம் காட்டும் பொருளை
2.ஆத்ம பலம் கூட்டிடும் ஞானத்திற்கே காணுதல் வேண்டும்.

பொருந்தாப் பொருள் அமையப் பெற்ற சதங்கை எவ்வாறு ஒளி நாதத்தைக் காட்டாதோ அதைப் போன்றே
1.சரீரத்தின் அனைத்து அணுக்களும் “உயர் மின் நுண்காந்த அலைகளை…” ஈர்த்துக் கொண்டிடும் பக்குவம் இல்லை என்றால்
2.மனிதச் சரீரத்தை ஒளியாக்கிடும் சித்தன் நிலை குறைவுபடுமப்பா.

நாம் ஈர்க்கின்ற உயர் காந்த சக்தியை… சரீரத்தில் உள்ள அனைத்து அணுக்களும் பெற்று… உயிர் ஆத்ம சக்தியின் வலுவால் ஒலிக்கின்ற நாதமே பின் “விந்து கலையாகும்…”

அந்த நிலையின் பக்குவம் பெற்றுவிட்டால் “துடி முழவின்” (இசைக் கருவி) ஒலி கேட்டிருக்கின்றாய் அல்லவா. அத்தகைய முழங்கு நாதம்… சொல் (உன் சொல்) அறப்பெற்றிடலாம். இதையே சரீரத்தின் தொடர்பிற்கும் உணவினை உட்கொள்ளும் குணங்களாகக் காணலாம்.

உடல் பொருந்துகின்ற உணவினையே உட்கொள்ளல் வேண்டும் உணவின் குண மாறுபாட்டால் நம் சரீரத்திற்குள் பிற உயிர்த்தொகைகள் உட்கொள்ளும்… உணவின் குண விசேஷ வாசனையால் ஆட்கொண்டு உடல் வாழ்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

சமைக்கப்படும் உணவில் அதன் வாசனைக்கொத்த உயிரணுக்கள் அசைகின்ற தன்மைகளையும் அதன் செயல்பாட்டையும் காட்டி இருக்கின்றோம். “இலையில் திகழ்கின்ற பிண்டம்…!” என்று உரைத்திருக்கின்றோம்.

அல்லாமே வாசனைகள் ஆகுகின்றன. ஆனாலும்
1.குணங்களின் வேகத்தை அது எத்தகையதாக இருந்தாலும்
2.ஆத்ம பலத்திற்கே அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

தொழில் புரியும் ஓர் தொழிலாளி… கருத்தொன்றி தொழில் நாட்டம் கொண்டிட்டால் பசி தாகத்தை உணர்வதில்லை. சிலர் பொருளைப் பெற்றிடும் வேகத்தால் உத்வேகம் ஊட்டப்பெறும் ஒன்றின் கருத்தால் பசியினை மறந்தும் தொழில் புரிகின்றார்கள்.

இப்படி வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ சம்பவங்களைக் காண்கின்றோம் அதுவும் கருத்தொருமித்த நிலை தான்.

அதே மனநிலையைத்தான் “இந்தத் தியானத்திற்குச் சிறிதளவேனும் செயல் கொள்ளுங்கள்…” என்று உரைப்பதெல்லாம்.

1.ஞானத்தின் வித்துக்களைத் தேர்ந்தெடுக்கும் வேகத்திற்கே சப்தரிஷிகள் செயல் கொள்கின்றனர்…
2.ஆக்கம் அனைத்தையும் காக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

டாக்டருக்குப் படித்தவர்கள் உடல் கூறில் எந்தக் குறைபாடு வந்தாலும் அந்த நோயைக் கண்டுபிடிப்பார்கள். ஸ்கேன் வைத்து அதிர்வுகள் மூலம் பார்ப்பார்கள். அதன் மூலம் உடலிலுள்ள உறுப்புகளையும் பார்க்கின்றார்கள். நாமும் தெரிந்து கொள்கிறோம்.

அதே சமயத்தில் உங்களிடம் நான் (ஞானகுரு) உபதேசம் சொல்லும் போது வைத்திய ரீதியாகத்தான் பேச வேண்டும். அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு உங்களை நீங்கள் அறிய விரும்பினால் உடலின் ஓட்டத்தினை நீங்களும் பார்க்கலாம்.

ஆனால் இது நமக்குத் தேவையற்றது.

என்ன பார்க்கலாம்…? என்றால்
1.என்னவெல்லாம் தெரிகின்றது என்ற நிலையில்
2.சில பேர் எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
3.அப்படிப் பார்க்கும் போது பார்த்த நிலைகள் கொண்டு அங்கிருக்கும் தீமையைத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.

சில பேர் என்ன செய்கின்றார்கள்…?

மந்திரத்தால் பில்லி சூனியங்கள் ஏவப்படுகிறது அதனால் சில விலை உயர்ந்த பொருட்கள் கூட காணாமல் போகின்றது. குடும்பத்திலும் முடக்கங்கள் ஏற்படுகின்றது.

சாமிக்கு (ஞானகுரு) சக்தி இருக்கின்றதல்லவா…! சாமி எங்களுக்கு இதை எல்லாம் சரி செய்து கொடுக்கலாம் அல்லவா…! என்று கேட்கின்றார்கள்.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எல்லாச் சக்திகளையும் எமக்குக் கொடுத்தார் என்று சொன்னோம் என்றால் அதை வைத்து “மந்திர தந்திரம் செய்பவர்களை நான் அடக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.

நான் செய்வேன் என்று சொன்னால் நானா…?
1.குருநாதர் உபதேசித்த உணர்வுகளை நான் எடுத்தேன்
2.அந்த உணர்வின் வழிப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடிய நிலை வந்தது.

குருநாதர் ஞான வித்தை எனக்குள் விதைத்தார்… வளர்த்துக் கொண்டேன்.
1.அதே வழிப்படி உங்களுக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
2.அதற்குண்டான சக்திகள் அனைத்தும் இந்தக் காற்றில் இருக்கின்றது.
3.அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
4.உங்களுக்குள் தீமையைப் போக்கக் கூடிய சக்தியாக அது வரும் என்று தான் சொல்கிறோம்.

நான் செய்தேன் என்றால் இதை நான் செய்யவில்லை…! குருநாதர் காட்டிய வழியில் அருளைப் பெருக்கும் போது அது அந்த வழியை உங்களுக்குள் காட்டும். அதன் வழியில் நீங்கள் செல்லலாம்.

ஏனென்றால் ஆரம்பத்தில் சில பேருக்கு இதைச் செய்யும்போது எனக்கு அந்தக் கடவுள் தெரிகின்றது உடலில் இருப்பது எல்லாம் தெரிகின்றது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
1.காட்சி என்று தெரிந்தாலே “எனக்கு எல்லாம் தெரிகின்றது…” என்று
2.அடுத்தவருக்குக் குறி சொல்வது போல் சொன்னார்கள்.

கடைசியில் வீணாக அடுத்தவர்கள் கஷ்டங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வம்பிலே போய் மாட்டிக் கொள்கிறார்கள். கஷ்டத்தைத் தான் வாங்கிக் கொள்கின்றார்கள்.

தெரிந்ததைச் சொல்லப்படும்போது இதில் வருவதைக் கழிக்கத் தெரிய வேண்டுமல்லவா…? அது மிகவும் முக்கியம்…!

ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின்… அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆனால் அப்படி எடுக்கவில்லை என்றால் அந்த விஷம் இங்கே வந்து விடுகின்றது. அங்கிருக்கும் தீமைகளைத் தான் மீண்டும் தனக்குள் வளர்க்க முடியுமே தவிர நல்லதை வளர்க்க முடியாது.

அருள் சக்திகளைப் பெறும் பொழுது அந்த உணர்வை நாம் நுகர்கின்றோம்…. தெரியச் செய்கிறது. தெரிந்து கொண்டாலும் அந்த தீமைகள் வருவதை அறிகின்றோம்.

அடுத்த கணமே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் நுகர்ந்த பிறர் உணர்வுகளை உடனடியாக நீக்க வேண்டும். அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் புகாது விழிப்புடன் இருக்க வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளால் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
2.அவ்ர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்.
4.அவர்கள் தொழில்கள் நன்றாக இருக்க வேண்டும்
5.அவர்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று
6.நம் உணர்வை இந்த மாதிரி அவர்களுக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு நாம் அவசியம் வர வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply