Archive

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அத்திரி மாமகரிஷி அருளாற்றல்களை இந்தப் பூமியிலே எவ்வாறு பெற்றார்…? அவர் ஆற்றல் பெற்ற நிலைகள் கொண்டு தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி எவ்வாறு விண் சென்றார்…? என்ற இந்தப் பேருண்மையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய வழியில் அந்த ஆற்றலை நுகர்ந்த பின் அந்த ஆற்றலின் சக்தியை ஜெபத்தால் மேலும் பெருக்கி அந்த எண்ண அலைகளை எல்லோருக்கும் பதியச் செய்ய வேண்டும் என்ற ஆசையிலே தான் இதை வெளிப்படுத்துகின்றோம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 93

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அரசாட்சி காலங்களில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்டுணர்ந்து… இதையெல்லாம் வெறுத்து… இனி நாம் ஒவ்வொரு மக்களின் நல் எண்ணங்களை நாம் பெற்றால் தான்… நாம் விண் செல்ல முடியும்  என்ற நிலைக்கு வந்து அரச நிலையைத் துறந்து… காடு வனம் என்ற நிலைகளில் திரிந்து ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெற்று… மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து… அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து… அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கித் தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றிச் சென்றவர் அத்திரி மாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

 

manrdra 92

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

பெரிய அரசனாக இருந்த அத்திரி தன் வாழ்க்கையில் இருக்கக்கூடியதைத் துறந்து அந்த மெய் ஞானியின் அருள் ஒளி பெற வேண்டுமென்று மக்கள் மத்தியிலே வந்தான்.

பின் ஒவ்வொரு உயிரின் தன்மையில் அவர்கள் எடுத்துக் கொண்ட நல்ல எண்ணமும் அந்த நல்ல எண்ணத்தை நாம் பெற்றால் அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மெய் உணர்வின் நிலைகளை நமக்குள் வளர்த்து அந்த மெய்யின் தன்மையான ஒளி நிலையைத் தான் பெற முடியும் என்ற பேருண்மையை அறிந்து உணர்ந்தவர்தான் அத்திரி மாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 91

அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்

அத்தி மரத்தின் நிழலிலே அத்திப் பழங்கள் எப்படி தன் தண்டுகளில் உருப்பெறுகின்றதோ அந்த உணர்வின் எண்ணத்தைக் கொண்டு ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அது தோன்றும் உணர்வின் நிலைகள் கொண்டு ஒவ்வொன்றிலும் உருப்பெறச் செய்ய முடியும் என்று தன் உணர்வின் தன்மை கொண்டு அரசனாக இருந்தவன் அத்திரி.

நாட்டின் நிலையும் தனது குடும்பத்தில் தன் மக்கள் தன்னுடைய அரசுக்குள் போர் முறைகள் கொண்டு தனக்கு இந்தச் சொத்து வேண்டும் அந்தக் சொத்து வேண்டும் என்றும் இந்த அரசுக்குள் போர் முறைகள் கொண்டு இந்த அரசனையே (அத்திரியை) திருப்பித் தாக்கும் நிலை வரும்போது தான் ஆற்றல் மிக்க மெய் நிலைகளை உணர்ந்து அரச சபையைக் கூட்டி அதன் வழிகளிலே அரசை நடத்தி அந்தப் பேரண்டத்தின் பேருண்மையின் நிலைகளைப் பெறமுடியும் என்று இருந்தாலும் அரசனான அவனால் பெற முடியவில்லை.

அவனுடைய குடும்பத்தில் மக்கள் எதிர்நிலைகள் செய்யும்போது, இவனது சிந்தனைகள் குலைந்து நாட்டிற்குள் தன் பிள்ளைகள் என்று வரும்போது மக்கள் மத்தியிலே பல கொடூரத் தன்மைகளை விளைய வைத்து மக்களின் நிலைகளில் எல்லை கடந்த நிலைகளாகி அவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் நிலையும் மழை நீர் பெய்யாத நிலையும், அது தவித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலைகளில்தான் இந்த அரச நிலையே வேண்டியதில்லை என்று உணர்கின்றான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… அத்திரி மாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 90

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

ஞானகுரு அவர்கள் சுமார் 6 வருட காலம் கொல்லூரில் இருந்தேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்குப் பின்பும் பல தடவை அங்கே சென்று வந்துள்ளார்.

அதாவது ஆரம்பத்தில் கோலமாமகரிஷி அவர்கள் கொல்லூரில் கடும் தவமிருக்கும் பொழுது அவர் உடலிலிருந்த வெறுப்புணர்வுகள் உயர்ந்த உணர்வுகளை எடுக்கவிடாது அவருடைய ஜீவான்மாவில் பதிவு செய்த நிலைகள் ஆன்மாவாக முன் நிற்கிறது. சுவாசித்த உணர்வோ தன்னைத் தான் வளர்த்துக் கொள்வதற்கு வேலை செய்கின்றது.

ஒவ்வொரு குணமும் தன்னை வளர்த்துக் கொள்ள முந்துகின்றது. முந்தும் பொழுது ஒரு நஞ்சான உணர்வை எடுத்துக் கொண்டால், நஞ்சின் தன்மை நல்ல குணங்களை அழிக்கும். தீமையை அகற்றும் சக்தியாக எடுத்தால், தீமைகளை அகற்றும் என்ற இந்தப் பேருண்மையை அறிந்து கொள்வதற்குத்தான் கோலமாமகரிஷி எதை எடுத்தார்…? எதை வெறுத்தார்…? எதை அறிந்தார்…? ஞானத்தால் எப்படித் தான் உணர்ந்தார்…? என்று அதை எல்லாம் அறிவதற்குத்தான் கொல்லூரில் பல வருட காலம் தங்கியிருந்து ஜெபமிருந்தோம் என்று ஞானகுரு சொல்கிறார்.

ஆகவே… அன்று கோலமாமகரிஷி எப்படி ஆதிசங்கரருடைய உடலிலிருந்து வெளிப்படுத்தினாரோ அதே உணர்வின் தன்மையை அவர்கள்தான் இங்கே இதை எல்லாம் வெளிப்படுத்துகின்றார்கள். அவ்வாறு அவர்கள் வெளிப்படுத்தும் அந்த உணர்வின் ஆற்றலைப் பெற நாம் தியானிப்போம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 89

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

ஆதிசங்கரர் சொன்னது… உயிர் ஈசன்… எண்ணும் எண்ணங்கள் சுவாசிக்கும் பொழுது உயிரான ஈசனிடத்தில் அந்த சுவாசங்கள் பட்டு அது உறைகின்றது. எந்தெந்தக் குணங்களை எண்ணுகிறோமோ அந்த குணமே நம் உயிரில் பட்டு அபிஷேகமாக நடக்கின்றது

நாம் பாலைப் போல மனம் வேண்டுமென்று எண்ணினால் பால் எவ்வளவு தூய்மையான சத்தாக இருக்கின்றதோ அதைப் போல பிறருடைய எண்ணம் கண்டு கலக்கமில்லாத நிலைகள் ஏற்படுத்தி நல்லது செய்ய வேண்டும் என்று சுவாசிக்கும் போது அது உயிரிலே பட்டு அந்த உணர்வின் அலைகள் உயிரான ஈசனுக்கு அபிஷேகமாகின்றது. அந்த அலைகள் உடல் முழுவதற்கும் சென்றவுடன் நம் உடலிலிருக்கும் நல்ல குணங்களுக்கு அது மகிழ்ச்சியாக இருக்கும். இது தான் உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டிய அபிஷேகம்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 88

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

அத்வைதத்தின் உண்மையினுடைய நிலைகளை அன்று ஆதிசங்கரர் சொல்லும்போது… துவைதவாதிகள் “நீ இந்த வேள்விகள் செய்யா விட்டால் அவஸ்தைப்படுவாய்…” என்று சொன்னார்கள். சொன்னதோடு மட்டுமல்லாது ஏவல் செய்து ஆதிசங்கரருக்கு வயிற்று வலி வரவைத்து விட்டார்கள்.

வயிற்று வலி வந்தபின் இவர் கடும் நிலைகளில் சுவாசித்து அத்வைத நிலைகளில் தன் வயிற்று வலியை நிவர்த்தி செய்தார். நிவர்த்தி செய்து அந்தத் தத்துவத்தை தன் நிலையை அங்கே நிலைநாட்டிக் காட்டுகின்றார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

நாம் சுவாசிக்கும் இந்த உணர்வின் தன்மைகள் எந்த குணத்தைக் கொண்டு சுவாசிக்கின்றோமோ அது உயிருடன் சேர்க்கப்படும்போது “விஸ்வ விநோதினி”,

அன்றைய துவைதவாதிகள் ஆதிசங்கரரை “நீ காசியில் இருக்கும் அந்த விநாயகருக்கு யாகங்கள் செய்து வந்தால்தான் நல்லது” என்கிறார்கள், ஆதிசங்கரர் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றார்.

உடலுக்குள் உணர்வின் எண்ணங்கள் உண்டு. எண்ணத்தாலே எடுத்து அதைச் சுவாசிக்கும்போது உயிரின் துடிப்பைக் கூட்டி மெய் ஞானியின் அருள் உணர்வைச் சுவாசிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார் ஆதிசங்கரர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 86

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

சூட்சம நிலையில் எடுத்துக் கொண்ட உணர்வின் அலையை அது எவ்வாறு செயல்படுகின்றது என்ற நிலையில் ஆதிசங்கரர் தன் தாயின் ஆற்றலைச் செயல்படுத்தும்போது பாடுகின்றார்… “ஐகிரி நந்தினி நந்திதமேதினி விஸ்வ விநோதினி நந்தினிதே”

ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஐந்து அறிவின் புலனறிவு தான் அதாவது வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு. வெப்பத்திற்குள் மறைந்திருக்கக்கூடிய காந்தம் அது ஈர்க்கும் சக்தி (1), ஆனால் அந்த வெப்பத்தை உருவாக்கும் அணுவின் தன்மையை அது பொருளைக் கொடுத்தவுடன் உருவாக்கவும் செய்கின்றது. அது மற்றதை மறைக்கவும் செய்கின்றது.

ஒரு உணர்வின் தன்மையை மறைத்து மாய்த்துவிட்டு ஒன்றைத் தனக்குள் எடுத்து அது வளர்க்கச் செய்யும். ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும்போது ஒரு கருவின் தன்மை மாய்த்துவிட்டு ஒரு சக்தியின் தன்மையை உருவாக்கும் (2,3)

எந்தக் கோளின் தன்மையை எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வின் சக்தி அணுவுக்குள் சேர்க்கப்படும்போது இந்த அணுவின் தன்மை அந்த மணத்தை வெளிப்படுத்தும்(4).  அதே சமயம் அந்த உணர்வின் தன்மை ஒரு பொருளுக்குள் சேர்ந்தவுடன் இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு இயக்கும்(5) – ஆக ஐந்து.

மனிதனுக்குள் இருக்கும் புலனறிவு – ஐந்து. அதுதான், “ஐகிரி நந்தினி, நந்திதமேதினி விஸ்வ விநோதினி, நந்தினிதே” என்று சொல்லும்போது ஐந்து புலனறிவுகள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 85

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம்

கோலமாமகரிஷி ஆதிசங்கரருடைய உடலிலிருந்துதான் மெய் ஒளியைப் பெற்று விண் சென்றார். ஆதிசங்கரருடைய உயிராத்மாவும் விண்வெளி சென்று விட்டது. அவர்களெல்லாம் இன்று விண்வெளியில் நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

கோலமாமகரிஷி தன் தத்துவத்தினுடைய நிலைகளை அத்வைதம் துவைதம் என்ற நிலைகள் கொண்டு அவருடைய ஆற்றல் இந்த உலகம் முழுவதற்கும் ஆதிசங்கரர் மூலம் வெளிப்பட்டது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 84

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம் 

அரச காலங்களில் பேருண்மையினுடைய நிலைகளை கற்றுக் கொண்டதினாலே அதையே பற்றிக் கொண்டு தன் வலிமையினாலே இந்த உடலை விட்டுச் சென்றால் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டிய பின்தான் அவர் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்படிச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் “மூகாம்பிகை” என்று கொல்லூரில் அந்தச் சிலையை வடித்தார்.

கோலமாமகரிஷி என்ற பெயர் வந்ததின் காரணமே கோள்களின் ஆற்றலின் பேருண்மைகளை அறிந்தவர் ஆகையினாலேதான் கோலமாமகரிஷி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 83

கோலமாமகரிஷியின் அருள் சக்தியும் ஆதிசங்கரரின் அருள் சக்தியும் பெறுவோம் 

கோலமாமகரிஷி அரச நிலைகளில் வந்தவர். அவர் அரச நிலை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு மெய் ஒளியைக் காண வேண்டும் என்று வந்தவர்.

அவர் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் என்ற ஊருக்கு அருகில் “குடசாஸ்திரி” இறக்கத்தில் காட்டுக்குள் போய்த் தனித்து ஜெபமிருக்கிறார். ஜெபம் செய்து கொண்டிருந்தாலும் இவர் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு ஆவியின் நிலைகள் எதிர்ப்பணுக்கள் அதிகமாயிற்று. கடும் தவமிருந்து தான் அதிலிருந்து அவர் மீண்டார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… கோலமாமகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… ஆதிசங்கரரின் பால் நினைவைச் செலுத்தி அவர்களுடன் ஒன்றி… அவர்களின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 82

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

வேதங்கள் என்றாலே “நாதங்கள்…” என்று பொருள். ஒலிக்கொப்ப உணர்வும்… உணர்வுக்கொப்ப ஒலியும்… உணர்வுக்கொப்ப ரூபமும்… பெற்ற நாம் அடுத்து எந்த ரூபத்தை அடைய வேண்டும்…? என்பதை வேதங்களின் மூலமாக வியாசகர் காட்டியுள்ளார்

உருவம் திடப் பொருள் ரிக் அதிலிருந்து வரும் மணம் சாம மற்றொரு பொருளுடன் இணைந்து உருமாற்றும்போது இரண்டுமே தன் நிலை இழக்கின்றது அதர்வண. இரண்டும் மாறி ஒன்றாக இணைக்கப்படும்போது “யஜூர்”.

எதை அதிகமாக நுகர்ந்தோமோ அதனின் கணக்கின் பிரகாரம் தான் அடுத்த உடலின் ரூபம் அமைகின்றது என்பதே வியாசர் காட்டிய உண்மை.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 81

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சூரியனிலிருந்து வரும் வெப்பம் காந்தம் விஷம் ஒரு உணர்வின் தன்மையை எடுத்தால் அந்த உணர்ச்சி கொண்டு தாக்கி இயக்கும் போது – அர்ச்சுனன். கவர்ந்து கொண்ட உணர்வுகள் காந்தம் – நகுலன். எடுத்து இணைந்து செயல்படுத்தும் தன்மையாக வருவது வெப்பம் – சகாதேவன். நுகர்ந்தது வலிமையாகி அணுவானால் – பீமன். அந்த உணர்வு தன்னைக் காக்கும் வலிமை பெறுகின்றது

எல்லாம் சேர்த்து உடலாக்கப்படும்போது – தர்மன். எதனின் உணர்வின் தன்மை எதை எடுத்ததோ அதைத்தான் வளர்த்துக் கொள்ளும் தன்மை வருகின்றது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், இந்த உணர்வுகள் நமக்குள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை எப்படி இயக்குகின்றது? என்று மகாபாரத்தில் வியாசகர் சாதாரண மக்களும் புரியும்படி தெளிவாக உணர்த்தியுள்ளார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 80

manrdra 79

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

கண்கள் உபதேசிக்கும் பொழுது நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் வருகின்றாய்.

எதை நினைத்தாலும் என் வழி கொண்டு தான் நீ அறிய முடியும்.

நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலிலே விளைகின்றது.

நீ எதை நினைக்கின்றாயோ அதனின் நிலைகள் யார் எதைச் செய்தாலும் என்னிடமே நீ வந்து சேர்வாய்.

என் நிலையையே நீ அறிவாய் என்று இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு காட்டப்பட்டது.

கண்ணன் என்ற கண்கள் உண்மையை உணர்த்தினாலும் ஒருவன் தவறு செய்கின்றான் என்ற உணர்வை நுகரப்படும்போது உயிரிலே பட்ட பின் நம் உயிர் என்ற உணர்வுகள் கண்ணனின் சகோதரியாகத்  திரௌபதை அது கவர்ந்து சொல்கின்றது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 78

manrdra 77

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சிறு சிறு துளிகளாக அணுக்களாகச் சேர்ந்து ஒரு மலையாகப் பாற்கடலில் தோன்றியது நமது பூமி தன் சுழற்சியால் ஏற்படும் உராய்வின் தன்மை கொண்டு அது இயங்குகின்றது. வாசுகி,

பாற்கடலிலே நமது பூமி சுழலும் பொழுது அதாவது கடையும் பொழுது பாறைகளாகவும், கற்களாகவும், மரம், செடி, கொடிகளாக விளையச் செய்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் சத்தை, விண்ணிலிருந்து வந்த உயிரணு கவரும் போது அந்தச் சத்து அணுத்திசுக்களாகி புழுவிலிருந்து மனிதனாக வருவதை அவரவர்கள் விழுங்கிய நிலைகள் கொண்டு உடல்களாக உருப்பெற்றது என்பதை மகாபாரதம் என்று உணர்த்துகின்றார் வியாசர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 76

manrdra 75

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை எப்படித் தனக்குள் கண்டறிந்தானோ அந்தப் பேருண்மைகள் எல்லாம் வியாசனான ஒன்றுமறியாத அந்த மீனவனுடைய உடலிலே தென்படுகின்றது.

ஆதிசக்தி எவ்வாறு உருபெற்றது…? அது சூரியனாக எவ்வாறு தோன்றியது…? என்பதையும் பிரபஞ்சத்திற்குள் நமது பூமி மேரு என்ற மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் வைத்து பாற்கடலிலே கடைந்தெடுத்தான் என்று மகாபாரதத்திலே வியாசர் அருளினார்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 74

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

அன்று வாழ்ந்த பெரும்பகுதி மக்கள் அனைவருமே சூரியனை வணங்கிப் பழகியவர்கள். அந்தச் சூரியனை எண்ணி ஏங்கி தான் தவறு செய்தேன்… ஆனால் இந்த மீன் இனம் என்னைக் காத்தது என்ற உணர்வை மேல் நோக்கி வானிலே நினைவைச் செலுத்துகின்றான் மீனவனான வியாசகன்.

இது நடந்தது காலை நான்கு மணி. கடல் பகுதியில் செல்பவர்கள் நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்தை நன்றாகப் பார்க்க முடியும். அதே சமயத்தில் சூரியன் அந்த துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வைக் கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வரும் நேரம் அது.

அந்த நேரத்தில் வியாசகன் இவ்வாறு எண்ணுகின்றான். அப்படி எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவன் நுகர நேருகின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் அகண்ட அண்டமும் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இருக்கிறது என்று அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை வியாசகன் நுகர்கின்றான். வியாபித்திருக்கும் உணர்வை வியாசகன் கண்டுண்ர்ந்தான். மெய்ஞானியாக ஆனான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 73

வியாசக பகவானின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் வியாசகன் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலில் கிக்கிப் படகு கவிழ்ந்து கடலிலே விழுந்து விடுகின்றான். அப்படித் தத்தளிக்கும்போது தான் எப்படியும் மீளவேண்டும் என்ற மனப் போராட்டம் அதிகமாகின்றது.

தான் எப்படியும் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வின் ஏக்கம், உடலின் உணர்வுகளை மறந்து தன் உடலைக் காக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஒரே எண்ண ஒலிகளை ஈர்த்து அதனின் இயக்கத்திலிருக்கும் பொழுதுதான் அவன் எந்த மீனைப் பிடித்து வேட்டையாடி அதைப் புசித்து அதன்வழி கொண்டு அவன் வாழ்ந்தானோ அதே மீன் இனம் வியாசரைக் காக்கின்றது இவனைக் காப்பாற்றிக் கரை சேர்க்கின்றது.

நாம் எதைக் கொன்றோமோ அந்த மீன் இனமே தன்னைக் காத்தது என்று திரும்பிப் பார்ர்கும்போது தன் தவறை உணர்ந்து உயரந்த குணங்களை எண்ணி ஏங்குகின்றான்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வியாசக பகவானின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 71

 

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று நுகர்ந்தால் “லவ குசா…!”

நாம் எடுக்கும் மெய் உணர்வுகள் உடலுக்குள் (சீதாவிற்குள்) விளைந்தபின் நம்மைப் பற்றியும் நமக்குள் இயங்கும் அனைத்தையும் அறிந்து அது வெளிப்படுத்திக் காட்டும். தன்னைத் தான் அறியும் நிலையாக நாம் நம்மை அறிய முடியும் என்றும் வான்மீகி காட்டினார்.

ஆகவே இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த நாம் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களைக் காத்திடல் வேண்டும் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து தப்பிட இச்சைப் பட வேண்டும் என்று தெளிவாக உணர்த்துகின்றார் வான்மீகி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 71

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

காவியத்திலே காட்டும் போது கர்ப்பமாக இருக்கும் சீதாவை மக்களின் உணர்ச்சியால் உந்தப்பட்டு உண்மையின் உணர்வை அறியாதபடி சீதா என்ற சுவையைப் புண்படும்படிச் செய்து விட்டனர். ஆனால்… அதிலே வரும் வேதனை என்ற கருவை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காகச் சீதாவின் மனதை மாற்றி அருள் உணர்வைச் செவி வழி ஊட்டி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கூட்டிக் கருவிலே வளரும் குழந்தைக்கு ஞானத்தை ஊட்டுவதாகக் காட்டினார் வான்மீகி.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 70

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

சீதை மானுக்காக வேண்டி ஆசைப்படுகிறாள் என்றால் சீதையினுடைய ஆசையில் அவள் எண்ணிய நிலைகள் தான் அந்த மான். இது பொய் மான். நேரிலே பார்க்கப்படும் நிலைகள் வேறு ஆனால் எண்ணங்களில் ஆசைகளைக் (பொய்யாக) கூட்டப்படும் போது அது எவ்வாறு நம் வாழ்க்கையைத் திசை திருப்புகிறது…? அதிலே எப்ப்டிச் சிக்குகின்றோம் என்று நமக்கு முன் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலைகளைத்தான்… “பொய் மான்…!” என்று அவ்வாறு மிகவும் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.

இப்படி ஒவ்வொரு நாளும் நமது எண்ணத்தால் இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ துயரங்கள் வருகிறது…! இந்த உடல் வாழ்க்கையில் வந்த அந்தத் தீய வினைகள் தீமைகள் துன்பங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்…! அதை விடுத்து விட்டு உயிரான விஷ்ணு என்ற உணர்வை நாம் எடுத்து உயிருடன் ஒன்றி பிறவியில்லா நிலை என்ற சொர்க்க நிலையை நாம் அடைய வேண்டும் என்று உணர்த்துகின்றார்கள்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 69

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

இராமாயணம் நமக்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம். துருவ நட்சத்திரம் எந்த வழிகளிலே அது ஒளியாக மாறியதோ, அந்த உண்மையின் ஆற்றல் பூராவுமே வான்மீகியின் உடலுக்குள் நின்று வெளிப்படுத்தியதுதான் இந்த இராமாயணக் காவியம்.

(உயிர் – விஷ்ணு; உயிரின் காந்தம் –  இலட்சுமி; இராமன் – எண்ணங்கள்; சீதா என்றால் சுவை – மகிழ்ச்சி; உடல் – இலங்கை; ஆஞ்சநேயன் – எண்ணங்கள் வாயுவாகச் செல்வது; வாலி – விஷம் தீமை செய்யும் உணர்வு.. உடலின் இச்சை – இராவணன்; சுக்ரீவன் – துருவ நட்சத்திரம் லவ குசா – மகரிஷிகள் உணர்வு)

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 68

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

வான்மீகி மூடராக இருந்தார் கொலைகாரராக இருந்தார் கொள்ளைக்காரராக இருந்தார். இருந்தாலும், பட்சியின் பாச உணர்வு இவரிடம் வரும் பொழுது, பட்சியின் துடிப்பை உணர்ந்தார். தவறிலிருந்து மீண்டிடும் ஏக்கம் கொண்டு, விண்ணை நோக்கி ஏகுகின்றார்.

அன்று அகஸ்தியன் தான் எந்தப் பாசத்தைச் செலுத்தி தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றானோ அந்த ஆற்றலை இவர் நுகர நேருகின்றது. “வான்மீகி” என்று அப்பொழுதுதான் பெயர் வந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

manrdra 67

வான்மீகி மாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

வான்மீகி மூடராக இருந்தார் கொலைகாரராக இருந்தார் கொள்ளைக்காரராக இருந்தார். இருந்தாலும், பட்சியின் பாச உணர்வு இவரிடம் வரும் பொழுது, பட்சியின் துடிப்பை உணர்ந்தார். தவறிலிருந்து மீண்டிடும் ஏக்கம் கொண்டு, விண்ணை நோக்கி ஏகுகின்றார்.

அன்று அகஸ்தியன் தான் எந்தப் பாசத்தைச் செலுத்தி தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றானோ அந்த ஆற்றலை இவர் நுகர நேருகின்றது. “வான்மீகி” என்று அப்பொழுதுதான் பெயர் வந்தது.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… வான்மீகி மகரிஷியின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

போகர் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்தியைக் கண்களாலே, காதாலே, வாயாலே, உடலாலே, சுவாசத்தாலே எடுத்து நமக்குள் சேர்த்தால் அது பஞ்சாபிஷேகம.

இவ்வாறு புலனறிவில் கவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அனைத்தும் பஞ்ச அமிர்தமாக நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர்கிறது.

அந்தப் பஞ்ச அமிர்தத்தை எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதற்குத்தான் முருகன் சிலையை உருவாக்கினான் போகன்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 65 png

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

மனிதனைப் போன்ற ஒரு உருவச் சிலையாக அமைத்து NEGATIVE POSITIVE அதாவது சத்ரு மித்ரு என்ற நிலைகளில் இயக்கப்படும் போது எப்படி மின் அணுவின் நிலைகளில் விளக்கு எரிகின்றதோ… காந்தக் கட்டைகளைச் சுழற்றும் போது காந்தப் புலனறிவு இயங்குகின்றதோ அதைப் போன்று உயிருள்ள சிலையாக உருவாக்கினான்.

மனிதனைப் போன்ற இந்த உணர்வின் சத்தை அது உருவாக்கி மக்கள் அனைவரும் சிலையிலிருந்து வெளிப்படும் மணத்தை நுகரச் செய்து மனித வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அது உள் நின்றே பொசுக்கி மக்களை இன்னல்களிலிருந்து விடுபடச் செய்யும் தத்துவத்தை உருவாக்கினான் போகன்.

போகர் எதைக் காட்டினாரோ அந்தச் சக்திகள் அனைத்தும் முருகன் சிலைக்குள் உண்டு. முருகன் சிலையிலிருந்து வரக்கூடிய அந்த ஆவியின் தன்மையை நாம் சுவாசித்தால் நமக்குள் இருக்கக்கூடிய பல விஷத் தன்மைகளை அது மாய்த்துவிடும்.. அறியாது சேர்ந்த கடும் பிணிகளும் போகும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 64 png.

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

பாதரசம் நம் உடலிலும் உண்டு. தாவர இனத்திலும் உண்டு. கல்லிலும் உண்டு. எவை எவைகளில் எதனின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றன என்ற நிலைகளை உணர்ந்தவன் போகன்.

கண்ணாடிக் கற்களைக் (QUARTZ – CRYSTAL) கண்டுபிடித்தவன் போகன். ஏனென்றால் ஒளியின் தன்மை கொண்டு தெளிவாக உணர்த்தும் அந்த உணர்வின் தன்மையை அதை உரசி அதையும் சிலை செய்ய இணைத்துக் கொண்டான்.

மனிதனின் எண்ணத்தின் சிந்தனைகள் உருவாகக் காரணமான பல கோடித் தாவர இனங்களைத் தேடி அலைந்து அவைகளையும் முருகன் சிலைக்குள் இணைத்தான்.

சிந்தனைத் திறன் கூடி தீமைகளை அகற்றிடும் உணர்வின் ஞானங்கள் மனிதனுக்குள் எவ்வாறு வளர்ந்தது என்ற நிலையும் அந்த ஆற்றல்கள் எந்தெந்தத் தாவர இனச் சத்திற்குள் இருக்கின்றது என்பதையும் நுகர்ந்தறிந்தான். தன் உயிரின் துணை கொண்டு அதை எல்லாம் அறிந்தான் போகன்.

அத்தகைய பல கோடி உணர்வின் சத்தையும் காந்தப் புலனின் நிலைகள் கொண்ட பாதரசத்தையும் அதற்குள் இணைத்துத் தீமைகளை அகற்றும் ஆற்றல்களையும் நஞ்சினை அகற்றிடும் உணர்வின் சத்துக்களையும் முருகன் சிலையில் சாரணையாக ஏற்றினான் போகன்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 63 png

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

ஒவ்வொரு தாவர சக்தியை நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் ஆற்றலைத் தன் உடலில் ஆற்றல் மிக்கதாகச் சேர்த்து அதற்கொத்த நிலைகள் கொண்டு தன் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி வந்தார்,

போகர். தான் வளர்த்துக் கொண்ட நிலைகளை மற்றவர்களும் பெற எண்ணி ஏங்கினார்.

நட்சத்திரங்களால் விளையப்பட்ட வைரங்களையும் நவபாஷாணத்தையும் சூரியனிலிருந்து வெளிப்படும் பாதரசத்தையும் மூன்றையும் ஒன்றாக இணைத்து முருகன் சிலையைச் செய்தார் போகர்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 62 png.

போகமாமகரிஷியின் அருள் சக்தியைப்  பெறுவோம்

விஷம் தீண்டி தன் தாய் விஷத்தாலே மடிய அதனின் வலுக் கொண்டு அதனில் ஏங்கி இந்த உணர்வின் ஆற்றலை தனக்குள் எண்ணி ஏங்கி விண்ணை நோக்குகின்றார் போகர்.

அவ்வாறு ஏங்கிய நிலைகள் கொண்டு ஏக்கத்தாலே சுவாசிக்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட அந்தப் பேரொளி இவர் சுவாசத்திலே ஈர்க்கப்பட்டது.

ஈர்க்கப்பட்டபின்… அந்த மாமகரிஷிகளின் வானஇயல் தத்துவத்தை எப்படி உணர்ந்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல் போகருக்குள் இது பிரம்மமாகின்றது. உருப்பெறுகின்றது.

அவருடய வ்ளர்ச்சியில் எந்த விஷமான சக்தியும், அவரை ஒன்றும் பாதிக்காத நிலையைச் செயல்படுத்தினார்

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… போகரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 61 png

death

மரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…?

உதாரணமாக ரோட்டிலே நாம் போகும்போது அது கோள்களைப் போன்ற நிலை தான். அங்கே பிறிதொருவர் செய்யும் தவறைப் பார்க்க நேர்கின்றது. கூர்ந்து கவனித்தால் அதை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோம்.
1.எந்தக் குணத்தில் எண்ணிச் சுவாசித்தோமோ அது நம் உடல் முழுவதும் பாய்கின்றது.
2.நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணம் கெட்ட குணம் எல்லாவற்றிலும் அது மோதும்.
3.அந்த உணர்வலைகளை நம் உடலுக்குள் முழுவதிற்கும் செலுத்தும்போது அந்த உணர்வின் துடிப்புகள் அதிகமாகின்றது
4.அப்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல குணங்களைப் பதறச் செய்து விடுகின்றது.

சந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்த அந்த உணர்வுகள் உள்ளே சென்றவுடன் உடலோடு அமைப்பாக இருக்கும் மற்ற அணுக்கள் ஒவ்வொன்றும் அதற்குத்தக்கவாறு நெளிந்து கொடுக்கின்றது.

அதாவது நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் பூமியில் பல சக்திகள் வருகின்றது. இந்த வேப்ப மரத்திலிருந்து கசப்புகள் வருகின்றது. அந்தப் பக்கம் குப்பையைக் கொட்டி வைக்கின்றார்கள். இன்னொரு பக்கம் ஒரு தொழிற்சாலையிலிருந்து விஷமான நிலைகள் வெளி வருகின்றது.

ஒரு காற்றடித்தால் இத்தனை விதமான மணங்களும் நமக்கு அடிக்கின்றது. நம் உடலுக்குள் மற்ற மற்ற அந்த அணுக்களின் தன்மை இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் நாம் சுவாசிப்பது உடல் முழுவதற்கும் எல்லா பாகத்திற்கும் போய்க் கொண்டுதான் வரும்.

நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் உறவாடுகின்றது.

ஆனால் தீமையாக இருக்கும் பட்சத்தில் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களில் அது மோதும் போது அப்பொழுது நமக்குப் பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.

இப்படி நாம் சுவாசிக்கக் கூடிய நிலைகளில் அடிக்கடி நாம் கெட்டதைச் சுவாசித்தால் என்ன ஆகின்றது…? உடலில் நோய் வருகின்றது…!

நாம் சலிப்பான நிலை கொண்டு “அசிங்கம்” என்ற நிலைகள் கொண்டு மனம் சோர்வடைந்து பேசுகின்றோம். ஒரு நெடியான வாசனைக் கண்டவுடனே உடலுக்குள் அந்த நெடியின் தன்மை வருகின்றது. இதைப் போல…
1.நாம் சுவாசிக்கக்கூடிய ஒவ்வொரு நிலையும்
2.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குள் அது இணைந்தவுடனே
3.அது நம் உடலுடன் சேர்த்து இயக்கப்படும்போது சிறுகச் சிறுக மாசுபடும் நிலையாக வருகின்றது.

இவ்வாறு… வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சேர்க்கும் இத்தகைய நிலைகளினால் அசுத்தமாகின்றது.

1.உதாரணமாக ஒரு சண்டை போடும் உணர்வைப் பார்க்கும் போது அடுத்து நாமும் சண்டை போடுவதற்குத் தயாராகி விடுவோம்.
2.அடிக்கடி பயத்தினுடைய நிலைகளில் இருப்பதைப் பார்த்தோம் என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் பய அலைகளைத் தோற்றுவித்துவிடும்.

இதைப் போன்ற உணர்வின் தன்மை அது வளர்ச்சியான பின் அந்த நிலைக்கே நம்மை அது “திசை திருப்பி விடுகின்றது…!” அதை அவ்வப்பொழுது சுத்தப்படுத்தவில்லை என்றால் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களின் தன்மை அனைத்தும் மாறிவிடும்.

ஒரு குழம்பு வைக்கின்றோம் என்றால் அதிலே உப்பை அதிகமாகப் போட்டு விட்டால் அந்தக் குழம்பை நாம் வெறுக்கின்றோம். அதே சமயம் காரம் அதிகமாகி விட்டாலோ நாம் வெறுக்கின்றோம்

அதைப் போல நாம் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் நம் உடலுக்குள் இருந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சஞ்சலமோ கோபமோ ஆத்திரமோ இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே சேர்ந்து விடுகிறது.

ஏனென்றால் பிறர் செய்யும் தவறின் நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. நல்லது… கெட்டது… என்ற நிலைகளில் நாம் பார்த்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடுகின்றது.

1.அன்றைய தினத்தில் நாம் எதை எதையெல்லாம் பார்த்தோமோ அ
2.தற்குத் தகுந்த மாதிரிதான் அன்றைக்கு நமது செயல் எல்லாமே இருக்கும்.

இரண்டு பேர் சண்டை போட்டதைப் பார்த்தால் ஆத்திரமும் பயமும் நாம் எடுத்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப வேகமாக இந்த அலைகள் கொண்டு அன்றைய இரவில் காது சம்பந்தப்பட்ட வலியோ கண்ணிலே வலியோ ஏற்படும்.

ஏனென்றால் அந்த ஒளி… ஒலிகளை இழுத்துப் பேசும் அந்த மேக்னெட் பவரும் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகிவிடும் ஒரு மோட்டாரை இயக்கினாலும் அதிலே லோடு அதிகமாகி விட்டால் சுழன்றால் அது சூடாகிவிடுகின்றது.

அதைப் போல் சமமான அந்த உணர்வுகளை இழுக்கும்… ஒலியை நமக்கு ஊட்டக் கூடிய அந்த காதுகளில் காந்தம் தேய்மானமாகின்றது. சூடாகும்போது அதனுடைய காந்த சக்தி குறையும்.

பயமோ ஆத்திரமோ இவைகளை அதிகமாக எடுத்தால் நமது கண்ணில் இருக்கக்கூடிய கருமணிகள் பலவீனமாகிவிடும். இதைப்போல சோர்வு சஞ்சலம் அதிகமாக எடுத்தாலும் கரு விழியில் இருக்கக்கூடிய நிலைகள் அது இயக்கச்சக்தி என்ற நிலைகள் கம்மியாகும்.

சஞ்சலமும் சோர்வும் மற்ற உணர்வின் தன்மையும் அடிக்கடி எடுத்தால் செவியில் இருக்கக்கூடிய நாதங்களை இயக்கும் நிலைகள் மந்தமாகச் செய்து அதனுடைய நிலைகள் பதிவாகிவிடும்.

இப்படி கண் காது மூக்கு முதற் கொண்டு நம் உடலில் உள்ள எல்லாவ்ற்றிலுமே அது கலந்துவிடும். நாம் அடிக்கடி சுவாசிக்கும் இந்த உணர்வின் நிலைகள் எலும்புக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளிலும் அது படருகின்றது.

அந்த எலும்புகளில் இருக்கும் காந்த சக்தியினால் தான் நம் உயிருக்கே கரண்ட்டை உற்பத்தி செய்ய கூடிய காந்தம் உருவாகி அதன் மூலம் இந்த உடலை இயக்க முடிகின்றது.

1.அதாவது… உயிரின் துடிப்பு வரப்படும்போது காந்த அலைகள் உருவாக
2.அந்தக் காந்தம் இருந்தால்தான் (உடலிலே) உயிரே துடிக்கும்

இல்லை என்றால்… காந்த உற்பத்தி குறைவாகி விட்டால்…
1.உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த துடிப்பு கொண்டு
2.இந்த உடலில் இருக்கும் காந்தத்தை இழுக்காமல்
3.வெளியில் இருக்கக்கூடிய காந்தத்தில் இழுத்துவிடும்… ஈர்க்கப்பட்டு விடும்.

இந்த உடலில் விளைய வைத்ததின் நிலை இது தான் மரணம் என்பது…!

புவியின் ஈர்ப்பிற்குள்… அந்தத் துடிப்பின் நிலை “நம் காந்தம்…” என்றைக்குக் கம்மியாகின்றதோ அந்தச் சமயத்தில் இந்த உயிராத்மா வெளியே வந்துவிடும்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றிய… மகரிஷிகளின் எண்ண ஒளிகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இந்தக் காற்றிலே மிதந்து கொண்டு இருக்கின்றது.
1.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் யாம் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உபதேசமும்
2.அதன் வழி செயல்பட வேண்டிய தியானமும்.

அபிராமிப்பட்டர் சரபோஜியிடம் சொன்னது – மனிதனுக்குத் திதி கிடையாது 

நட்சத்திரத்தை அறிந்த பிருகுவின் மகன்கள் தாய் கருவில் எடுத்த உணர்வின் இயக்கம், அத்திரி  

விவேகானந்தர் கடவுளை இராமகிருஷ்ணரிடம் உணர்ந்த விதம் – சிகாகோ உபதேசம்

soul parameters

ஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இச்சரீரத்தில் நாம் பெற்றுள்ள அமிலத்தின் தன்மைக்கும் இப்பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரக் கோள்களின் அமிலத்தின் தன்மைக்கும் தொடர்புண்டு.

சுவை ஏழு… வண்ணம் ஏழு… நாதம் ஏழு… மணம் ஏழு… என்ற நிலையில் இந்த பூமியின் தொடர்பு நிலை மையத்தின் விகித நிலைகள் பலவாக மாறுபட்டாலும்… ஒன்றின் தொடர்பு கொண்ட வீரியத் தொடர்பில்.. பல மாற்றத்துடன் ஒவ்வொன்றும் ஜீவன் பெறுகின்றது.

ஜீவிதத்தின் தொடர்பில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றப்படும் அமிலக் கலவையின் கூட்டு விகிதத்தில் செயல் தன்மை பலவாக மாறு கொள்கின்றது.

1.நொடிக்கு நொடி மாறுகொள்ளும் உணர்வின் செயல் வட்டத்தில்
2.இச்சரீரத்தின் எண்ணத்தை எப்படிப் பக்குவப்படுத்தல் வேண்டும்…? என்ற ஞானத்தைத்தான்
3.நாம் உயர் ஞானமாக்கும் வழிமுறைக்குச் செயல்படல் வேண்டும்.

நாம் வாழக் கூடிய வீட்டிற்கு முன் கதவு வைத்து நமக்குப் பாதுகாப்பிற்கான செயலுடன் வீடு கட்டிக் கொள்கின்றோம். வெளி உலகத் தொடர்பிற்கு நாம் வீட்டின் முன் கதவைத் திறந்துதான் வெளியே செயலுக்குச் செல்கின்றோம்.

உண்ண உறங்க இச்சரீரத்தின் பாதுகாப்பிற்கு வீட்டை அமைத்துக் கொள்கின்றோம். வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படி முன் கதவு இருக்கின்றதோ அதைப் போன்று
1.சரீரம் என்பது நம் ஆத்மாவிற்கு வீட்டைப் போன்றது.
2.இவ்வீட்டிற்குள்ளே ஆத்மா குடியிருக்கக்கூடிய செயலானது
3.ஆத்மாவினுடைய வளர்ச்சியின் செயலுக்கான எண்ணத்தை வீட்டின் கதவைப் போன்று
4.வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படிக் கதவை வைத்துப் பாதுகாப்பு அமைத்துக் கொண்டுள்ளோமோ
5.இக்கதவு என்ற எண்ணத்தைப் பாதுகாப்பின் செயலுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இச்சரீரத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டுதான்…
1.ஆத்மாவின் ஒளியைப் பிறவா நிலை என்ற
2.ஜோதி நிலைக்குச் செயல்படுத்திடல் முடியும்.

நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்கும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருளையும்… நம் உருவத்தையும் எதிர்படுத்திக் காட்டுகின்றது

அதுவே இரசம் பூசப்படாத கண்ணாடியில் பார்க்கும் பொழுது வெளி உலகைத்தான் பார்க்க முடிகின்றது. நம் உருவமோ நம்மைச் சுற்றியுள்ள நிலையோ எதிர்படுத்தி இரசம் பூசாத கண்ணாடியில் பார்க்க முடிவதில்லை.

1.அதைப் போன்று இச்சரீரமென்பது நம் ஆத்மாவிற்கு இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றது.
2.ஜீவனற்ற ஆத்மாவின் நிலை இரசம் பூசப்படாத கண்ணாடியைப் போன்றது.

தன் பிம்பத்தைத் தானேக் கண்டு… தன்னைச் சுற்றியுள்ள பொருளும் கண்ணாடியில் தெரிவதைப் போன்று… ஆத்மாவின் இயக்கத்தின் செயல் இச்சரீர ஜீவனில் வாழக்கூடிய செயலில்…
1.தன்னைத்தானே உணர்ந்து வளரும் வலுவிற்கு வலுக் கூட்டக் கூடியது
2.இச்சரீரத்தின் இயக்கமுடன் கூடிய ஆத்மாவின் வாழ்க்கை…!

உடலை விட்டு ஆத்மா பிரிந்து விட்டதென்றால் அவ்வாத்மாவிற்கு ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியைப் போன்று எதிர் நிலையைத்தான் உணர முடியுமே தவிர “தன் ஆத்மாவை வளர்த்துக் கொள்ள முடியாது…”

ஆகவே இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு
1.இப்போழுது இருக்கும் இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி…
2.உயர் ஞானத்தை இச்சரீரத்தில் விளைவித்து…
3.ஆத்மாவைப் பேரொளியாக ஆக்கி…
4.மகரிஷிகள் வாழும் இடம் செல்ல வேண்டும்.
5.அழியா ஜோதி நிலை பெற வேண்டும்.

Guru protection

நல்லது செய்பவர்களுக்கு நிறையத் தொல்லைகள் வருகின்றது ஆகவே அந்த நல்லவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி

நீங்கள் நல்லதைச் செய்து கொண்டே வந்தால் என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்?

1954ல் ஒரு சமயம் நான் (வேணுகோபால் சுவாமிகள்) பழனியில் மில்லில் மேஸ்திரியாக வேலை பார்க்கும் போது செல்லையா என்று ஒருவர் வந்தார். மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். அவர் தரித்திரமாக அதாவது ஒன்றும் இல்லாத நிலையில் வந்தார்.

தரித்திரமான நிலையில் வரப்படும் போது நான் என்ன செய்தேன்?

அவரை நன் வேலை பார்க்கும் மில்லிற்கு கூட்டிக் கொண்டு வேலை பழகிக் கொடுத்தேன். அந்த மில்லில் எனக்கு உதவியாக வேலைக்கும் சேர்த்துக் கொண்டேன்.

கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவர் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவர் அவர் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மில்லை விலைக்கு வாங்கினார்.

மில்லை வாங்கிய பின்னர் அவருடன் சேர்ந்த ஒரு குரூப் நெய்க்காரப்பட்டியிலிருந்து அங்கே வேலைக்குச் சேர்ந்தது.

புதிதாக ஆள்கள் எல்லாம் போட்டு வேலை செய்யும் போது நான் வேலை பழகிக் கொடுத்து வேலைக்குச் சேர்த்தவன் உயர்ந்த பிற்பாடு என்ன செய்தான்?

இந்த மில்லை கிருஷ்ணமூர்த்தி வாங்கியவுடனே அவர்கள் ஆட்களாகக் கொண்டு வந்து வேலைக்குச் சேர்த்தவர்களுக்குள் ஒரு மேஸ்திரியும் வந்தார்.

நான் ஒரு மேஸ்திரி. அவர் ஒரு மேஸ்திரி.

நான் எல்லாரையும் தட்டிக் கொடுத்து அனுசரித்து வேலை வாங்கியதால் நான் வேலை பார்க்கும் ஷிப்டில் “உற்பத்தி…” அதிகமானது.

அந்த மேஸ்திரி அடுத்த ஷிப்டில் இருக்கிறார். நான் மற்றொரு ஷிப்டில் இருக்கின்றேன்.

புதிதாக வந்த மேஸ்திரியோ “தான் முதலாளி ஆள்…” என்று வேலை பார்ப்பவர்களை மிரட்டிக் கொண்டே இருந்தார். அதனால் அங்கே புரடக்ஸன் ஆகவில்லை.

நான் மற்றவர்களுடன் சேர்ந்து சந்தோஷத்தை ஊட்டி வேலை செய்வதால் என் ஷிப்டில் புரடக்ஸன் நன்றாக ஆகின்றது.

தினமும் உற்பத்தி சம்பந்தமான ரிபோர்ட் (PRODUCTION REPORT) போகும் போது மேலே விவரம் கேட்கிறார்கள்.

என் ஷிப்டில் உற்பத்தி அதிகமாகின்றது. அவர்கள் கூட்டிக் கொண்டு வந்த ஆட்கள் வேலை செய்யும் ஷிப்டில் புரடக்ஸன் சரியாக வரவில்லயே… “ஏன்…?” என்று கேட்கிறார்கள்.

இதற்காக வேண்டி என்னைக் குற்றவாளியாக ஆக்குவதற்காக அந்த மேஸ்திரி முயற்சிக்கின்றார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது யாரை?

நான் முதலாளியிடம் சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்தேன் அல்லவா. அந்தச் செல்லையாவைக் கைக்குள் போட்டுக் கொள்கின்றார்கள்.

புதிய மேஸ்திரி – நான் சொல்வது போலச் செய்யவேண்டும் என்று சொன்னவுடன் நீங்கள் சொல்வது போலச் செய்கின்றேன் என்று செல்லையாவும் சொல்லிவிட்டான்.

“என்னைக் குற்றவாளியாக்குவதற்காக” – உற்பத்தியைக் கூடக் காண்பிப்பதற்காக வேண்டி ஏற்கனவே உற்பத்தியான நூல்களை மீண்டும் மீண்டும் எடை போடுகின்றார்கள்.

மில்லில் மிஷின் ஓடுகின்ற இடத்தில் அண்டர் கிரவுண்ட்க்குள் (UNDER GROUND) வயர் போகும். அங்கே கொண்டு இந்த நூல்களைக் கூடையில் போட்டு திட்டமிட்டு மறைத்து வைத்து விட்டார்கள்.

மறைத்து வைத்ததும் என்ன ஆனது?

இது எனக்குத் தெரியாது. நான் தான் ஷிப்ட் முடிந்து போய் விடுகிறேன் அல்லவா…!

நான் அதை எடுத்து இவ்வாறு ஒளித்து வைக்கச் சொன்னதாகவும் அதற்குச் சாட்சிக்காக செல்லையாவை வைத்துக் காட்டலாம் என்று அவ்வாறு முடிவு செய்தார்கள்.

எதற்காக எடுத்து வைத்திருக்கிறார்கள்? இரண்டாவது முறையாக நாளைக்கு எடை போட்டுக் “கூடுதலாகக் காட்டுவதற்காக… நான் வைத்துள்ளேன்” என்று இப்படி ஜோடிக்கின்றார்கள்.

இதற்கு மாஸ்டர்கள் எல்லாம் சாட்சி. அடுத்த ஷிப்டில் ஆள்கள் வந்தவுடனே அவர்களிடம் எல்லாம் சொல்லிவிடுகிறார்கள். ஆட்களிடம் சொன்னவுடனே இதைப் பார்த்துக் கொண்டார்கள்.

அடுத்தாற்போல என்ன செய்கிறார்கள்? நான் ஷிப்ட் முடிந்து போனதும் ஓடுகின்ற மிஷினில் உள்ள பினியன் (பல் சக்கரம்) இருக்கிறது. ஓடுகின்ற அதன் (LOCK) லாக்கை “வேண்டும் என்றே..” எடுத்து விடுகின்றார்கள்.

அதை எடுத்து விட்டால் சக்கரம் இறங்கிப் போகும். ஓடாது. இந்த மாதிரி 2-3 மிஷினில் செய்து வைத்து விட்டார்கள்.

அவ்வாறு செய்து அப்பொழுது நான் உற்பத்தியைக் குறைத்துவிட்டேன் என்று காண்பிக்கின்றார்கள்.

பல் சக்கரம் சரியாக இல்லை என்றால் நூல் வெளியில் வந்து தூசியாகப் பறக்கும். இப்படிச் செய்து வைத்துவிட்டுப் போய்விட்டார் (நான் செய்ததாக). அதனால் “நாங்கள் எப்படிப் புரடக்சன் எடுப்பது…?” என்று என்னைப் பற்றித் தவறாகச் சொல்கிறார்கள்.

இதெல்லாம் நான் தான் செய்யச் சொன்னதாகவும் நான் சொன்னதால் அவ்வாறு செய்ததாகவும் அந்தச் செல்லையாவே சொல்கிறான்.
.
நான் தரித்திர நிலையில் வந்தவரை வேலைக்குச் சேர்த்து யாரைப் காப்பாற்ற நினைத்தேனோ அவர் (செல்லையா) இப்படிச் சொல்கிறார், இந்த மாதிரி எல்லாம் பல் சக்கரத்தை என்னை வைக்கச் சொல்லிச் சொன்னார் என்று.

ஏனென்றால் முதலாளி மாறிவிட்டார்.

அவரிடம் சலுகை பெறுவதற்காக அந்த மேஸ்திரி செல்லையாவைக் கைக்குள் போட்டு அவனுக்கும் கொஞ்சம் காசைக் கொடுத்து இந்த மாதிரிச் செய்கின்றார்.

நல்ல மனம் படைத்தவர்களுடைய நிலைகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய அனுபவத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மாதிரி மாதா மாதம் செய்து “பொய்யான ரிக்கார்ட்” உருவாக்குகின்றார்கள்.

இப்போது அவரைக் (என்னை) கேட்க வேண்டாம். அவர் (நான்) செய்கின்ற தவறை எல்லாம் பாருங்கள். எனக்குப் (புதிய மேஸ்திரிக்கு) புரடக்ஸன் ஏன் சரியாக ஆகவில்லை என்று அப்புறம் நீங்கள் நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் என்று முதலாளியிடம் சொல்கிறார்.

ஒவ்வொரு நாளும் நடந்ததை என்னைப் பற்றிய ரிப்போட் எல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதாவது உற்பத்தியைக் கூடுதலாகக் காட்டினார். பல் சக்கரத்தை இறக்கிவிட்டார். அதை உடைத்தார். இதை உடைத்தார் என்று இப்படி ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாகச் செய்தார் என்று ரிப்போர்ட் எழுதி வைத்துள்ளார்கள்.

என்னிடம் விசுவாசமாக வேலை பார்த்தவர்கள் இருக்கிறார்களே அவர்கள் என்னிடம் வந்து உண்மைகளைச் சொல்கிறார்கள். இந்த மாதிரிச் செல்லையா என்பவன் உங்களைப் பற்றித் தவறாகப் பல ரிப்போர்ட் கொடுக்கின்றான் என்று என்னிடம் சொல்கிறார்கள்.

செல்லையா ரிப்போர்ட் செய்து கொண்டு இருக்கிறார் என்று சொன்னவுடன் “சரி… அவரவர் செயலை அவரவர் எடுத்துக் கொள்ளட்டும்…! போகட்டும்…!” என்று நான் சொல்லி விட்டு விட்டேன்.

ஏனென்றால் அப்போது எனக்கு இரண்டு ஷிப்டிலும் நல்ல மரியாதை உண்டு.

கஷ்டப்படுகிறவர்களுக்கு வெளியில் ரேஷன் அரிசி எல்லாம் கொடுத்து உதவி செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் முக்கால் ரூபாய் தான் சம்பளம்.

செல்லையா துண்டு கூட இல்லாமல் வந்தவன். அவனுக்கு நான் வேலையே வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அவன் இப்படிச் செய்கிறான்.

அப்புறம் என்ன ஆனது?

முதலாளி கூப்பிட்டுக் கேட்கிறார். அவருக்கு என் மேல் நம்பிக்கை உண்டு.

இருந்தாலும் இதெல்லாம் உன்னைப் பற்றி இப்படிச் சொல்கிறார்கள். என்று கேட்கிறார். ஏனப்பா இந்த மாதிரி எல்லாம் செய்கிறயாமே…?

என்னங்க…? என்று கேட்டேன்.

செல்லையாவைக் கூப்பிடுகிறார்கள்.

அவன் என்னிடம் கேட்கிறான். ஏனுங்க…! அண்ணா…! நான் உடலில் கட்டிக் கொள்வதற்கு துண்டு இல்லாமல் இங்கே வந்தேன் அல்லவா?

ஆமாம்.

அப்பொழுது கட்டிக் கொள்வதற்கு வேஷ்டி கொடுத்தீர்கள். உங்கள் சட்டையைக் கழற்றிக் கொடுத்து விட்டு பனியனுடன் வீட்டுக்குப் போனீர்கள் அல்லவா?

ஆமாம்.

எனக்குச் சாப்பாடு இல்லை என்கிற பொழுது உங்கள் வீட்டிலிருந்து தினமும் சாப்பாடு கொடுத்தீர்கள் அல்லவா.

ஆமாம். அதற்கெல்லாம் இப்பொழுது என்னப்பா…? என்றேன் நான்.

இப்படி எல்லாம் நீங்கள் பல வகையிலு உதவி செய்திருக்கும் போது “நான் உங்களுக்குத் துரோகம் செய்வேனா…?” என்று என்னிடம் கேட்கிறான்.

இது நடந்த நிகழ்ச்சி.

1.இந்த உதவி செய்ததே…
2.எனக்கு எப்படி எதிரியாக மாறுகிறது… என்று
3.இந்த உலகம் எப்படி என்று பாருங்கள்.

உங்களுக்கு என் (செல்லையா) மீது நம்பிக்கை இருக்கிறது அல்லவா. நான் எப்படிச் செய்வேன் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா…! எனக்கு இத்தனை உதவி செய்தீர்கள்.

1.நீங்கள் தானே இந்தப் பல் சக்கரத்தில் ஆணியை வைக்கச் சொன்னது.
2.நீங்கள் தான இந்த நூலை அங்கே கொண்டு ஒளித்து வைக்கச் சொன்னது என்று கூசாமல் சொல்கிறான்.

எப்படி இருக்கும்…? எனக்கு…! எப்படி இருக்கும் உங்களுக்கு…?

இதை எல்லாம் கேட்டவுடன் மற்ற தொழிலாளிகள் பொரிகிறார்கள். இவனைல் (செல்லையாவை) கொன்று விட வேண்டும் என்ற உணர்வு வருகிறது.

என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை அனுபவித்துச் சொல்கிறேன்.

அப்புறம் மேனேஜரிடம் சொன்னேன்.

நான் அவருக்கு நன்மை தான் செய்திருக்கிறேனே தவிர எந்தத் தீமையும் செய்யவில்லை. மில்லுக்கு நான் நன்மை தான் செய்திருக்கின்றேனே தவிர தீமை செய்யவில்லை.

எல்லாரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று தான் உழைத்தேன். இப்படித் திருட்டுத்தனமாக வாழ வேண்டும் என்று இல்லை.

எனக்கு எல்லாத் தொழிலும் தெரியும். நான் வெளியிலே போனால் பிழைத்துக் கொள்வேன். இந்தக் குற்றத்திற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. நான் வேலையை விட்டே போய்விடுகிறேன் என்றேன். வேலையை விட்டு வந்து விட்டேன்.

இனி இவனை எல்லாம் விட்டோமென்றால் சரி கிடையாது. செல்லையா தவறு செய்யவில்லை. அவன் அந்த மேஸ்திரி தான் எல்லாத் தவறையும் செய்திருக்கின்றான். அந்த மேஸ்திரியைத் தீர்த்துக் கட்டினால் சரியாகப் போகும் என்று சொல்லி அந்த வெறுப்பிலேயே போய்க் கொண்டிருந்தேன்.

பழநி மலையில் போய் பின்னாடி உட்கார்ந்துவிட்டேன். அப்போது முருகன் மேல் பக்தி. முருகனிடம் சொல்வதற்குப் போய்விட்டேன். அங்கே இரவு முழுவதும் இருந்தேன்.

பின்னாடி அழகு நாச்சியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. அடுத்தாற்போல துர்க்கை. வனதுர்க்கைக் கோயில் இருக்கிறது.

வன துர்க்கை…, “அவன் எல்லாம் இப்படிச் செய்தானே… நீ ஏன் என்று கேட்க மாட்டாயா…” என்று சொல்லிவிட்டுச் சுற்றிப் பின்னர் ரணகாளி கோவிலுக்குப் போனேன்.

“நான் தவறு எதுவும் செய்யவில்லையே…! அவன் இந்த மாதிரிச் செய்கிறானே என்று சொல்லிவிட்டு நீயே கேள்….!” என்று அதைத்தான் சொல்லிப் போய்க் கொண்டு இருக்கிறேன்.

இதை நினைக்க நினைக்க இந்த வனதுர்க்கை ரணகாளி மகேஸ்வரி எல்லாம் பார்த்த பின் “அவனைக் கொல்ல வேண்டும்…” என்ற உணர்ச்சி தான் எனக்குள் வருகின்றது அடக்குவதற்க்கு வழி இல்லை.

அவனைக் கொன்று போட்டுவிட்டு வேறு வேலை பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

வீட்டுக்கு வந்தேன்.

நான் ஏற்கனவே சுதந்திரப் போராட்ட காலங்களில் தற்காப்புக்காக வேண்டி மிலிட்டரிக்கார் கொடுத்த ஒரு பிரெஞ்சு துப்பாக்கி அதை மறைத்து வைத்திருந்தேன். ஒரே சமயத்தில் அதில் பன்னிரண்டு குண்டுகள் பாயும்.

சுதந்திரப் போராட்ட காலங்களில் அதைப் பயன்படுத்தவில்லை. ஏதாவது ஆபத்து வந்தால் தப்பித்துக் கொள்வதற்காக மட்டும் வைத்திருந்தேன். அது மட்டும் கடைசி வரை ஒளித்து வைத்துக் கொண்டேன்.

சுதந்திரத்திற்காக காந்திஜி வழியில் போய் அடி வாங்கினேனே தவிர யாரையும் நான் கொலை செய்யவில்லை.

ஏனென்றால் என்னுடைய சரித்திரத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் சிறிது நன்றாக இருக்கும். அதற்காகச் சொல்கிறேன்.

வீட்டுக்கு வந்து பிஸ்டலை எடுத்துக் கொண்டேன். முக்கால் ரூபாய் இருந்தது. முக்கால் ரூபாயையும் என் இரண்டு பையன்களிடம் கொடுத்தேன்.

இரவு பன்னிரண்டு மணிக்கு நான் என்ன செய்தேன்?

நடு இரவில் அந்தச் செல்லையா என்கிறவனைக் கட்டி குழி தோண்டிப் புதைப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதைப் பார்த்ததும் அடப்பாவிகளா…! அவன் தவறு செய்யவில்லை. அந்த மேஸ்திரி தானே தவறு செய்தான் என்று எனக்கு “இன்னும் கொஞ்சம் வீரியம்…” ஜாஸ்தியாகி விட்டது.

அவன் சோற்றுக்கு வந்தவன். கஷ்டப்படுபவன். பிழைப்புக்கு வழி இல்லாமல் அவன் கூடச் சேர்ந்து கொண்டான். இதை விட்டுவிட்டால் மறுபடியும் தரித்திரம் ஆகிவிடுமோ என்ற நிலையில் அறியாத நிலையில் அவனுடைய உணர்வு இப்படி இயக்குகின்றது.

நேராக வந்து வாழைத் தோப்புக்குள் கட்டி வைத்த செல்லையாவைக் கழற்றி விட்டேன்.

“தப்பித்துப் போயிருப்பா…” என்று சொல்லிவிட்டேன். எல்லாரும் சேர்ந்து குழி தோண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இவரைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அவிழ்த்து விட்டு என்கூட வா என்று சொல்லிப் போகச் சொல்லிவிட்டேன். காந்திய வழியில் அவரைத் தப்பித்துப் போகச் சொல்லி விட்டேன்.

அவனைக் கழற்றி விட்டுவிட்டு நான் வேறு பக்கம் போய்விட்டேன். போய்விட்டு பின்னர் காலையில் ஆறு மணி ஏழு மணி ஷிப்டிற்கு அந்த மேஸ்திரி வருவான் அல்லவா…!

6.30 மணிக்கு அந்த நேரத்தில் அவரை கேட் முன்னாடி வைத்துச் சுட்டு விட வேண்டும் என்று நினைத்துப் போகின்றேன். இந்தத் திட்டத்தில் போகின்றேன். துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொண்டு போகின்றேன்.

செல்லையா தவறு செய்யவில்லை. அவன் தவறு செய்கிறான். ஆனால் அவர் இன்னும் எத்தனை பேருக்கு இந்தக் கெடுதல் செய்வாரோ என்ற எண்ணம் ஆத்திரமாகிவிட்டது,

செல்லையா ஏமாந்திருக்கிறார். அவர் வழியில் இவரைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.

அப்புறம் சண்முகநதிப் பாலத்தின் மீது போனேன்.

என் பிள்ளைகளுக்குக் காசு கொடுத்திருந்தேன் அல்லவா…! இந்த உணர்வு என்ன செய்கிறது?
1.“நைனா… நைனா…” என்று என் கையைப் பிடித்து இழுக்கின்ற மாதிரி இருக்கின்றது.
2.அது போல ஒரு பிரமை.
3.அப்புறம் அந்தக் கற்பனைகள் எட்டுகின்றன.

நாம் இப்படிச் செய்தால் அந்தக் குழந்தைகள் எல்லாம் அனாதையாகிவிடும். அனாதையாகி விட்டால் நாம் என்ன செய்வது…? என்ற உணர்வுகள் திரும்புகின்றன.

அப்புறம் சண்முகநதிப் பாலத்தில் இருந்து நேராக ஆற்றிலே போய்க் கொண்டே இருக்கின்றேன். அப்போது இரயில் எஞ்சின் (புகை வண்டி) ஒன்று பழனி இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அதில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
நல்ல தண்ணீர் என்று அங்கே இரயில் நின்று கொண்டு இருந்தது. அந்த இடத்தில் பிஸ்டலைத் தூக்கிப் போட்டுவிட்டேன்.

அவனைக் கொல்ல வேண்டும் என்று நினைத்து வந்தேன். ஆனால் நாம் தவறு செய்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணினேன். அதனால் பிஸ்டலை அங்கே போட்டு விட்டேன்.

அதை போட்டுவிட்டு இரயிலில் ஏறி “ஜம்..” என்று உட்கார்ந்தேன். டிக்கெட்டும் எடுக்கவில்லை.

என்னுடன் பூலாங்கிணறு பிரீமியர் மில்லில் வேலை பார்த்தவர்கள் நிறையப் பேர் உண்டு.

ஏற்கெனவே ஒரு சமயம் மதுரையில் இருக்கும் பொழுது அங்கே ஒருவரை சில ஆபத்தில் இருந்து காப்பாற்றினேன். அவர் பிரிமியர் மில்லில் இருக்கிறார்.

அப்படி என்னிடம் வேலை செய்ததில் கொஞ்சப் பேர் இருந்ததனால் அங்கு போய் இறங்கிவிட்டேன். என் கையில் காசு இல்லை. இறங்கினால் அங்கு டிக்கெட் பரிசோதனைக்கு ஒருவரும் இல்லை. நான் பாட்டுக்கு இறங்கிப் போய்விட்டேன்.

அது லோக்கல் வண்டி. பூலாங்கிணறு வந்தவுடன் இறங்கிவிட்டேன்.

இறங்கி அங்கே போனவுடன் என்னைப் பார்த்தவுடன் எல்லோரும் வாங்க வாங்க என்று வரவேற்பு பலமாக இருந்தது, லட்டு ஜிலேபி என்று என்னென்னமோ பலகாரமெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள்.

ஆனால் என் நிலையோ மோசமாக இருக்கிறது.

இந்த மாதிரி நிலையில் நான் அங்கு போனால் எல்லோரும் ஆதரிக்கிறார்கள். ஆனால் என் மனதிற்குள் இப்படி இருக்கிறது.

அவர்களிடம் பொய் சொன்னேன்.

பழனியிலிருந்து புறப்பட்டு வந்தேன். உடுமலைப் பேட்டை வருவதற்கு முன்னாடி கையில் இருந்த காசை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவர்களிடம் இப்படிப் பொய் கூறினேன்.

இப்பொழுது கையில் காசு இல்லை. மில்லில் இருந்து சாமான்கள் வாங்கி வரச் சொன்னார்கள். வாங்கிக் கொண்டு போகவில்லை என்றால் நாளைக்கு என்னைக் குற்றவாளியாக ஆக்குவார்கள் என்று சொன்னேன்.

அதனால் ஒரு ஐநூறு ரூபாய் வேண்டும் என்றேன்.

ஐநூறு ரூபாய் என்ன…? உனக்கு ஆயிரம் ரூபாய் கூடக் கொடுக்கிறேன் என்றார்கள். அப்புறம் எல்லோருடனும் உட்கார்ந்து சாப்பிட்டேன்.

அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நான் அப்படியே புறப்பட்டுப் போய்விட்டேன். கோயம்புத்தூருக்கு வந்துவிட்டேன்.

கோயம்புத்தூர் போனால் அடுத்து எங்கே போகின்றேன் எனக்கே தெரியவில்லை.

இங்கு சிறிய ரயில். அங்கே பெரிய ரயிலாக இருக்கிறது.

பெங்களூர் போவதற்குத் தெரியாது என்று அங்கு மேஸ்திரி ஒருவர் இருந்தார். அவர் மருமகனிடம் சொல்லி “டிக்கெட் எடுக்க வேண்டும்” என்றேன்.

எங்கே போகவேண்டும்?

அகமதாபாத் போகவேண்டும். சாமான்கள் வாங்க இங்கே கம்பெனியில் அனுப்பினார்கள் என்று அப்படிச் சொன்னேன்.

அவர் வந்து விவரம் கேட்டு என் கையில் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறார்.

கொடுத்தவுடனே முதலில் பெங்களூர் வண்டியில் ஏறி என் தம்பியை (ராதா) இருக்கின்றாரா என்று பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத்து பெங்களூரில் இறங்கித் தம்பியைப் பார்க்கச் சென்றேன்.

என் தம்பி அங்கே இல்லை. ஊட்டி போனபோது வண்டி ஆக்ஸிடண்ட் ஆகி உங்கள் தம்பி தொங்கிக் கொண்டு வந்தார். மிலிட்டரியில் எந்த ரகசியமும் சொல்லக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். தம்பி இங்கே இல்லை என்றார்கள்.

அப்போது கையில் பணம் இருக்கிறது. எனக்கு வெளியில் போய் ரூம் எடுத்துப் பழக்கம் இல்லை.

மிலிட்டரியில் நமக்குத் தெரிந்தவர்கள் சிறிது பேர் இருக்கிறார்கள். இந்த கேம்ப்ல இருக்கார். அந்த கேம்ப்ல இருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்.

கையில் காசு இருக்கிறது. அதனால் ஹோட்டலில் சாப்பிடுவது மற்றும் ரூம் எடுக்கத் தெரியவில்லை. அதனால் திண்ணையில் படுத்து கொள்கிறேன்.

மேலே போர்த்தியுள்ள பெட்சீட்கூட நனைந்து போய்விடுகிறது பெங்களூரில் விறு விறு என்று ஆகின்றது.

அப்புறம் தம்பி வந்தார். வந்தவுடன் கூட்டிக்கொண்டு போகிறார். அப்புறம் கூப்பிட்டுப் போய் என் அண்ணன் இவர் தான் என்று சொன்னார்.

இவர் எப்படி மில்ட்டரிக்கு போனார்….! என்றால் என் அம்மா பெட்டியில் உள்ள செயின் ரூபாய் எல்லாவற்றையும் எடுத்து விற்றுவிட்டு மிலிட்டரிக்குப் போய்விட்டார்.

“வரட்டும் அவனை உதைக்கிறேன்..” என்று அப்பா சொல்கிறார்கள். அப்பொழுது அவன் சிறிய பையன்.

அப்பா என்ன செய்கிறார். வந்தால் அவனைக் கொன்று விடுவேன். ஒரு தடவை விடுமுறை அன்று வந்தபோது கூட வெளியில் தான் நிற்க வைத்தார். அவ்வாறே அனுப்பினார்.

பணத்தை எடுத்துச் சென்றதால் அப்பா என்றால் பயம்.

அப்போது நான் மெலிந்திருக்கின்றேன் என்று ஒரு பத்து நாள் மிலிட்டரியில கொஞ்சம் சாப்பாடு எல்லாம் கொடுத்து என்னைத் தேற்றிவிட்டார்

அப்புறம் நான் தம்பியிடம் சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன், டெக்ஸ்டைல் கம்பெனிக்கு போகிறேன் என்று சொல்லி அவரிடம் கொஞ்சம் 100 – 200 ரூபாய் வாங்கி்க் கொண்டு கிளம்பினேன்.

அடுத்து இன்னொன்று நடந்தது.

அதாவது பம்பாய்க்குப் போகவேண்டும் என்றால் பூனாவில் இருந்து இரயில் மாறிப் போக வேண்டும். மாறிப் போகும்போது அங்கே ஒருவன் நான் டிக்கெட் எடுத்துத் தருகிறேன் என்று அரை குறையாகத் தமிழ் பேசினான்.

“சரி…” என்று சொல்லிவிட்டு டிக்கெட் எடுத்து வருவார் என்று உட்கார்ந்திருக்கின்றேன். அந்தக் காசை வாங்கி அவர் எடுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டார்.

“இவனை என்னடா செய்வது…?” என்று அந்த வண்டியிலே டிக்கெட் இல்லாமலே ஏறிவிட்டேன். வண்டி போகிறது என்று சொல்லிவிட்டு அங்கே போய் அகமதாபாத் போய் இறங்கினேன். அவரும் இறங்கினார்.

பின்னாடியே போனேன். எங்கே போகிறார்? என்று இடைவெளியில் எதுவும் செய்யக்கூடாது என்று பேசாமல் போகிறேன்.

அப்போது என் சித்தப்பா ஒருவர் மில்லில் மேஸ்திரியாக இருக்கிறார். அவரைப் பார்க்கலாம் என்று போகிறேன்.

அப்போது இங்கே போனவுடனே இவர் போனால் கூடவே போகிறேன்.

அப்போது எனக்கு கொஞ்சம் நரம்பு அடி எல்லாம் தெரியும். என்னை ஏமாற்றியவனை அடித்து விட்டேன். என்னை ஏமாற்றிவிட்டாயே என்று சொல்லி அடித்தேன்.

பெண்கள் எல்லாம் உட்கார்ந்து இருக்கிறார்கள். யார் என்ன என்று கேட்டால் எங்களுக்கு என்ன தெரியும்..? என்று சொல்கிறார்கள்.

அப்புறம் போனால் அங்குள்ள ஒருவர் நீங்கள் யார்? யாரைப் பார்க்க வேண்டும் என்றார்.

இந்த மாதிரி மதுரையிலிருந்த ஒருவர் அம்பிகா மில்லில் வேலை செய்கிறார். அவரைப் பார்க்க வேண்டும் என்றேன்.

ஓகோ மதுரை ஆளா?

அம்பிகா மில்லில் வேலை பார்க்கும் அவர் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய்விட்டார். அவரை வைத்து மில்லில் நான் சொன்ன கம்பெனிக்குப் போய் வேலை பார்த்தேன்.

அப்போது வேலை கிடைத்தவுடனே அங்கேயும் போய்ச் சைக்கிள் கடை வைத்தேன். சைக்கிள் கடை வைத்துச் சம்பாதித்துக் காந்திஜி ஆசிரமத்திற்குப் போய் ஞாயிற்றுக் கிழமை அங்கே போய் உட்கார்ந்து விடுவேன்.

அங்கே போனால் அமைதியாக இருக்கிறது.

காந்திஜி ஆசிரமத்தில் சபர்மதி ஆசிரமத்தில் போய் உட்கார்ந்துவிட்டு அப்படியே வருவது. மறுபடியும் வேலை செய்வது. அந்த ஆசிரமத்திற்குப் பணம் கொஞ்சம் கொடுக்கிறது. இப்படியே இருந்து கொண்டிருந்தேன்.

“ஐயா… பசிக்கிறது…!” என்று வருவார்கள்.

அப்போது அவர்களுக்குச் சில வேலை எல்லாம் பார்த்து ஒரு இடத்தில் மூன்றாவது ஷிப்டுக்கு ஆள்களைச் சேர்த்து ஒவ்வொரு இடத்திலும் சம்பாதித்து அங்கே பாபுசிங் என்பவரிடம் பணத்தைக் கொடுத்து விடுவேன்.

வருகின்றவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடுவது. உதவிகள் செய்வது. 1954ல் ரேஷன் கடைகளும் மளிகைச் சாமான்களும் விலை ஏறி ரொம்பத் தரித்திரமாக இருந்தது. அங்கே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொல்கின்றேன்.

ஏனென்றால் நான் பல அவஸ்தைகள் பட்டவன்.
1.ஒவ்வொரு மக்களும் எந்தெந்த வகையில் சந்தர்ப்பத்தில் இயங்குகிறார்கள்?
2.அவர்களுக்கெல்லாம் ஒரு ஞானம் கிடைக்கவேண்டும்.
3.வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்.
4.இதற்காக வேண்டித்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை நான் சொல்கி்றேன்.
5.அனுபவித்துச் சொல்கிறேன்.

மூன்றாவது சிப்ட் வேலைக்கு வருகிறவர்களுக்கெல்லாம் சாப்பாடு வாங்கிக் கொடுக்கிறது. எங்கே இருந்தாலும் போய் வேலை வாங்கிக் கொடுக்கின்றது. இந்த மாதிரி எல்லாம் செய்தேன்.

அந்தப் பாபுசிங் என்கிறவர் கொஞ்சம் போக்கிரியும் கூட.

நான் உதவி செய்வதைப் பார்த்து என் மேல் இரக்கப்பட்டுச் உனக்கு வேலை தெரியும் என்றால் சைக்கிள் கடை வைத்துக் கொடுக்கிறேன் என்றார்.

மில்லில் வேலையும் செய்துவிட்டு சைக்கிள் கடையும் வைத்துக் கொண்டதால் கொஞ்சம் காசு நிறைய வந்தது.

அந்த இடத்தில் சைக்கிளுக்குக் காற்று அடிக்க வேண்டும் என்றால் ஒரு அனா.

நான் காசே வாங்காமல் காற்று அடிக்கிறேன் என்றவுடன் கூட்டம் கூடியது. அங்கு பஞ்சர் பார்த்த வகையில் அதிகமான பணம் வருகின்றது.

பிரியம் இருந்தால் காசு போடுங்கள் என்று சொன்னவுடன் ஒரு அனா போடுவதற்குப் பதிலாக நாலனா போட்டுவிட்டுப் போகின்றார்கள்.

சாயங்காலம் பார்த்தால் 200, 300 ரூபாய் இருக்கும். இருக்கும் பணத்தை வைத்து எல்லாருக்கும் சாப்பாடு போட்டுவிட்டு மீதியைப் பாபுசிங்கிடம் கொடுத்துவிடுவது.

சைக்கிள் வேலை தெரிந்தது என்பதால் ஸ்பிரே பெயிண்ட் அந்தப் பெயிண்ட் எல்லாம் அடித்தவுடன் கூட்டத்தைப் பார்த்துவிட்டு அந்தச் சைக்கிள் கம்பெனிக்காரர் என்ன செய்துவிட்டார்.

நன்றாக வியாபாரம் ஆகிறதென்று சைக்கிளுக்கு வேண்டிய சாமான்கள் கொடுத்தார்கள். ஒரு கோன் வந்து அரை அனா. இவர்கள் ஜோடி ஒரு ரூபாய் என்று விற்கிறார்கள்.

அரை அனா கிரையம் போக ஒரு அனா லாபம் கிடைக்கும் என்று சொல்லிப் போட்டவுடனே எல்லாம் வந்து மொய்க்கின்றார்கள்.

சம்பாதித்த பணத்தை அங்கே காந்திஜி ஆசிரமத்தில் கொடுப்பது. அங்கே போய் அமைதியாக இருந்து கொள்வது.

மசால் தூள் அப்பொழுது அங்கே பிரசித்தம். ஒரு பாக்கெட் ஒன்னேகால் ரூபாய்.

நான் என்ன செய்தேன். மிளகாயே அரை ரூபாய் தான். ஒன்னேகால் ரூபாய்க்கு ஒன்னேகால் ரூபாய் சரிக்கு சரி லாபம் கிடைக்கிறது. தனியா கம்மி மசாலா சேர்த்துப் போட்டவுடனே இந்த பாக்கெட்டை வாங்குகிறார்கள்.

அடுத்த ஊருக்குக் கொண்டு போய் இதை அங்கே அரைப்பது. அரைத்த தூளை இங்கே கொண்டு வந்து விற்கிறது. இது மெட்ராஸ்லிருந்து, வருகிறது என்று சொல்லி அங்கிருக்கும் ஊரிலே அரைத்து அங்கேயே விற்கிறது.

இப்படியும் ஏமாற்றினேன்,

இந்த வேலையைச் செய்து வேறு ஒருவனுக்குக் கொடுத்தேன். நான் மில்லுக்குப் பிட்டர் வேலைக்குப் போய்விடுவேன். சம்பாதித்து வந்து “ஐயா…” என்று கேட்டு வருபவர்களுக்குச் சாப்பாடு போடுவது.

இப்படி இருந்த நேரத்தில் அங்கு ஒருவனுக்கு இந்த மசால் அரைத்து விற்குகம் வேலையைக் கொடுதேன்

அவன் ஊர் வேலூர் என்று சொன்னார்கள். நீயே இந்தத் தொழிலைப் பார்த்துக் கொள். சம்பளம் எடுத்துக் கொள். வீட்டுக்கும் கொடு. மீதம் வந்தால் மற்றவர்களுக்குச் சாப்பாடு போட்டுவிடு என்றேன்.

அவர் என்ன செய்தான்?

அந்த இடத்திற்குப் பக்கத்தில் சாராயம் வியாபாரம் செய்கிறார்கள். நான் அவனிடம் மசால் தூள் தொழிலைக் கொடுத்துவிட்டு வந்தால் அவன் சாராய வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

திடீர் என்று பார்த்தால் அவனைக் கைது செய்துவிட்டார்கள் என்று செய்தி வருகிறது.

நான் வேலைக்கு போய்விட்டு அப்பொழுது தான் வருகிறேன். பாபுசிங் அங்கே தான் இருந்தார். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே அவனைக் போய்க் கொல்லுடா என்கிறார். ஏனென்றால் அவர் ரவுடி.

இங்கே வந்து சாராயமா விற்கின்றான்? அப்படியே அவரைக் தூக்கிக் கொண்டு வந்து அவருக்கு முன்னாடியே உதைக்கிறார்கள்.

நாம் இல்லாதவனான அவனுக்கு உதவி செய்து உன் சம்பளத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கும் கொடு என்று சொன்னால் அவன் இந்த மாதிரிச் சாராயம் விற்றுக் கொண்டிருக்கின்றான் (நான் சாராய வியாபாரம் செய்தேன் என்று). இந்த மாதிரி
1.எல்லாம் நல்லது செய்யப் போக
2.”எத்தனையோ தொல்லைகள் அனுபவித்தேன்”
3.நல்லது செய்பவர்களுக்கெல்லாம் எத்தனை தொல்லைகள் வருகின்றது?
4.எவ்வளவு வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரியுமா?
5.உதவி செய்யப் போகும் பொழுது நல்லவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகின்றார்கள்?
6.அதற்காக வேண்டி நல்லவர்கள் காப்பாற்றப்படவேண்டும்.
7.நல்லதைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கென்று ஒரு ஞானம் வேண்டும்.
8.அதற்குண்டான சக்தி வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த சக்தியை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

சில உண்மையின் இயக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்று சொல்கிறேன். நன்மைகள் செய்யப் போகும் போது நாம் எப்படி இருக்கவேண்டும்?
1.அதற்குண்டான மன வலு வேண்டும்.
2.அது இல்லை என்றால் அந்த நன்மைகள் பலன் தராது.
3.ஆகையினால் அதற்கு வேண்டிய சக்தி நல்லவர்களுக்கு வேண்டுமா… வேண்டாமா…?
4.அதனால் தான் உங்களிடம் துருவ நட்சத்திரத்தைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்வது.

நான் அகமதாபாத் போயிருக்கும் போது கூட ஒரு நாள் குருநாதர் அங்கே வந்தார்.

டேய்… சாயா சாப்பிட வாடா…! என்கிறார்.

ஏன் சாமி…! நீங்கள் அங்கே பழனியில் இருந்தீர்கள், இப்போது இங்கே எப்படி வந்தீர்கள் என்றேன்.

“நான் சும்மாங்காச்சியும் (சும்மாதான்) வந்தேன்டா…!” என்கிறார். அப்புறம் டீ வாங்கி என்னைக் கொடுக்கச் சொல்கிறார். நான் எங்கே சென்றாலும் என்னைத் துரத்திக் கொண்டே தான் குருநாதர் வந்திருக்கின்றார்.

அப்புறம் என்னென்னமோ சொல்லிவிட்டு போயிட்டார்.

இந்த மாதிரி குருநாதர் என்னுடைய குணத்திற்கோ என்னமோ அல்லது பூர்வ புண்ணியத்திற்காகவோ தெரியாது. ஆனால்
1.என்னைத் தேடி வந்து தான் இந்தச் சக்தி கொடுத்தார்.
2.நான் உங்களை தேடி வந்து இதைச் சொல்கிறேன். “சொல்வது அர்த்தமாகின்றதா…!”

உங்களை தேடி வந்து அந்த நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறேன். என்னைத் தேடி வந்து குருநாதர் கொடுத்த அந்த அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்.
1.நீங்கள் தீமைகளிடமிருந்து விலக வேண்டும்.
2.அந்தத் தீமைகளிடம் இருந்து நீங்கள் விடுபடவேண்டும்.
3.அந்தப் பேரருள் பேரொளி நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் இவ்வளவு நேரம் சொல்கிறேன்.

அதனால் தான் நன்மைகள் பல செய்ய துணிவோம் என்று சொல்வது.

அருளைத் தேடினால் பொருள் தானே வரும் அம்மா.

1.நல்லது வேண்டும்
2.எனக்கு நல்லது நடக்க வேண்டும்
3.எனக்கு நல்லது மட்டும் வேண்டும் என்று வலுவாக எண்ணுங்கள்

விடை (நீங்கள் தேடும் நல்லது) உங்களைத் தேடி வரும்

முடிந்தால் இந்தச் சக்கரத்தை ஒரு கலர் PRINT எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பார்த்து வலுவான ஏக்கத்துடன் தியானித்து விட்டு எந்தக் காரியாமாக இருந்தாலும் ஆரம்பியுங்கள்.

உறுதியாக நடக்கும்.

குருநாதர் தவமிருந்து கொடுத்த அருள் ஞானச் சக்கரம் இது.

வெளியில் எங்கே செல்ல வேண்டும் என்றாலும் இதைப் பார்த்து ஆத்ம சுத்தி செய்து விட்டுச் செல்லுங்கள். உங்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அருள் வட்டமாக வரும்.

வியாபாரத்தில் நஷ்டம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 

மனித வாழ்க்கையில் நாம் பெற வேண்டியதும் பெறக் கூடாததும் 

பேரரசர்கள் சம்பாரித்த சொத்து இன்று இருக்கின்றதா…?

Divine world

உடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்

என்னை (ஈஸ்வரபட்டர்) அணுகியோர் பலர் உண்டு. பல அற்புதங்களைச் செய்து காட்டினேன். அந்த அற்புதத்தில் மயங்கி இருந்தோர் பலர் உண்டு.
1.அவர்கள் எல்லாம் என்னிடத்தில் எப்படி எல்லாம் வந்தார்கள்…!
2.எதை நாடி வந்தார்கள்… எதைச் சொன்னார்கள்… கேட்டார்கள்…?

தனக்குச் சொத்து வேண்டும்…. சுகம் வேண்டும்… உடல் நலம் வேண்டும் என்றும் தன் காரியத்திற்காக வேண்டி அந்த அருள் வேண்டும்… இந்த அருள் வேண்டும்… என்று தான் கேட்டார்கள்.

1.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
2.உலகம் நலமாக இருக்க வேண்டும்…. உலக மக்கள் நலமாக இருக்க வேண்டும்.
3.பிறருடைய குடும்பங்கள் நலமாக இருக்கக்கூடிய சக்தி நான் பெற வேண்டும்
4.என் பேச்சால் மூச்சால் நான் பார்ப்போருடைய குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

ஆனால்… இதைப்பற்றி என்னிடம் யாரும் கேட்பார் இல்லை.

ஆகவே தனக்குத் தான் கேட்டார்களே தவிர… “எல்லோரும் நலம் பெற வேண்டும்…!” என்ற கேள்வி அங்கே எழவில்லை.

எல்லோரும் அந்த அருள் ஞான சக்தி பெற வேண்டுமென்று நான் (ஈஸ்வரபட்டர்) எண்ணினேன்… அதைப் பெற்றேன். அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலைவிட்டு நான் வெளி செல்லப் போகின்றேன்…!

ஆனால் நீ எதை எண்ணப் போகின்றாய்..? எதை நீ பெறப் போகின்றாய்…? என்ற இந்த வினாக்களை எழுப்பினார்.

வைகுண்ட ஏகாதசி வருவதற்கு முன்னாடி இப்படி ஒரு மாதமாக என்னை (ஞானகுரு) பல கேள்விகளைக் கேட்டு பல உணர்வின் தன்மையை தெளிவாக்கினார்.
1.நீ பெற வேண்டிய தகுதிகள் எது…?
2.நீ பெறுவது எப்படி என்ற இந்த உணர்வைத் தெளிவாக்கிக் காட்டினார்.

மேலும்… இந்த உடலை விட்டுச் சென்ற பின்…
1.என்னுடன் நீ இணைந்து நீ வர வேண்டுமென்றால்
2.நீ எதை எண்ண வேண்டும் என்று கேட்கின்றார்…?

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி என் குரு பெற வேண்டும். அவர் என்றுமே ஒளி சரீரம் பெற வேண்டும். அவர் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும். அழியாத ஒளிச் சரீரம் பெற வேண்டும் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.
1.அந்த அருள் வழி “என் குரு பெற வேண்டும்…” என்று நீ எண்ணினால்
2.அந்தக் குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்.

உங்களுக்குச் சொல்வது அர்த்தமாகிறதா…? இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்…!

ஆகவே அவ்வாறு எண்ணும் போதுதான்… என்று நீ இப்படி எண்ணுகின்றாயோ அப்பொழுது நீ அதுவாகின்றாய்…! என்று இந்த நிலையை அன்று தன் உடலை விட்டுப் பிரிவதற்கு முன் ஈஸ்வரபட்டர் அதற்குச் சில உபாயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையும் சப்தரிஷிகளின் அருள் ஒளியும் பெறும் தகுதியும் பெற்று இதன் வழி கொண்டு அந்தக் குருவை நீ எப்படிச் செலுத்த வேண்டும்…? எதை நீ உருவாக்க வேண்டும்…? என்ற பேருண்மையை உணர்த்திவிட்டுத்தான் அந்த வைகுண்ட ஏகாதசி அன்று அந்த உடலைவிட்டு அவர் ஆன்மா பிரிகின்றது.

உடலைவிட்டுச் சென்ற பின்…
1.அந்தக் குருவின் நினைவும் அதன் உணர்வு இங்கே விளையவும்
2.மனித உடலுக்குள் இருந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தையும்
3.மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு வரப்படும்போது
4.அதன் தொடர் கொண்ட அந்த அருள் மகரிஷி அதன் வழிகளிலே சென்று ஒளியின் சரீரமாகப் பெறுகின்றார்

ஏனென்றால் அந்த வரிசை… ஒன்றை வைத்துத் தான் ஒன்று விண் செல்ல முடியும்…!

இந்த மெய் வழியை நீ பெறு… மற்றவருக்கும் இந்த நிலையைக் காட்டி அவர்களையும் பெறச் செய். அவர்கள் பெற வேண்டுமென்று நீ ஏங்கு… அதன் வழி பெறும் தகுதியை அவர்களைப் பெறச் செய்…!

அடுத்தவருடைய நிலைகளும் இதைப் போன்று எண்ணும் போது
1.நீயும் அங்கே எளிதில் செல்கின்றாய்.
2.பிறரும் அந்த நிலைகளைப் பெறுகின்றனர்.
3.ஆகவே இதனை நீ வழிப்படுத்து…! என்று சொன்னார் குருநாதர்.

Magnetic power of human body

கோபம் ஆத்திரம் வேதனை பயம் போன்ற உணர்வுகள் உடலின் இயக்கத்தை நலியச் செய்து நோய் உருவாக எப்படிக் காரணமாகிறது…?

உதாரணமாக ஒரு பல்பிற்கு (ELECTRICAL BULB) அது எரிதற்குத் தகுந்தவாறு கரண்ட் இருந்தால்தான் அந்த பல்ப் சுடராக… வெளிச்சமாக இருக்கும்.

அது போல் சாதாரண மனிதனின் எண்ண அலைகளை எடுத்துக் கொள்வதற்கு நாம் இப்பொழுது எடுக்கும் மூச்சலைகளே போதுமானது.

அது போதுமானதாக இருந்தாலும் ஒரு மனிதனுக்குக் கோபமோ அல்லது பயமோ வந்து விட்டால் நம் உடலிலே காந்த சக்தி (POWER) குறையத் தொடங்கும்.

காந்த சக்தி கம்மியாக இருக்கும்போது…
1.ஒருவர் தவறு செய்கிறார்… என்ற அந்த வேகமான உணர்வுகளை நாம் இழுக்கப்படும் பொழுது
2.அதைச் சரியான முறையில் இயக்க முடியாத நிலைகளில் நம் உடல் அனைத்துமே நடுங்கும்.

ஒரு மோட்டாருக்குக் காந்த சக்தி (HORSE POWER) கம்மியாக இருக்கும் போது லோட் (LOAD) அதிகமாகி விட்டால் அதற்கு மேல் அந்த மோட்டார் சூடாகிவிடும்.

இதைப் போலத்தான் மனிதர்கள் நமக்குள் இருக்கக்கூடிய நிலைகளும்.

நம் உடலில் அடிக்கடி கோபம் சலிப்பு பயம் போன்ற உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்தால் நம் உடலில் காந்தத்தை உற்பத்தி செய்யும் சக்திகள் குறைகின்றது.

அப்படிக் குறையப்படும் போது…
1.முன் பகுதி ஏதோ கோபமாக பேசி இருப்போம் ஆத்திரமாகப் பேசி இருப்போம்.
2.அதைப் போன்ற உணர்வின் சத்துகளை அதிகமாகச் சுவாசித்து
3.நம் உடல்களில் சேர்க்கப்படும்போது பல வியாதிகளுக்கும் அது காரணம் ஆகின்றது.
4.அதே சமயம் நம் உடலில் இருக்கக்கூடிய காந்த சக்தியும் தேய்வாகின்றது.
5.அவ்வாறு தேய்ந்து விட்டால் நாம் எடுக்கும் எந்த ஒரு எண்ணத்தையும் அது சீராக இயக்கவிடாது.

ஒரு சங்கடமான நிலைகள் ஒருவர் சொல்கின்றார் என்றால் அதை நாம் காதுக் கொடுத்துக் கவனித்துக் கொண்டிருந்தால் போதும்

அந்த உணர்வை இழுத்து அதைக் கிரகிக்க கூடிய தன்மை இல்லாதபடி வெறுப்பு ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகள் தான் நமக்குள் தோன்றும்.

ஆக அதைத் தாங்கும் நிலை நம் உடலில் இல்லாது போகின்றது. காரணம்… நம் உடலில் காந்தப்பவர் உற்பத்தி செய்யும் திறன் கம்மியாவதால் தான்.

ஆனால் உயிரின் துடிப்போ அது எப்போதும் ஒரே சீராகத்தான் துடித்துக் கொண்டிருக்கும்.

பூமி நிலைகள் விண்ணிலே ஓடும் போது அது சூரியனுடைய எந்த ஈர்ப்பில் இருக்கின்றதோ ஒரே சீராக… ஒரே ஓட்டமாகத் தான் ஓடிக் கொண்டிருக்கும்.

அப்படி ஓடினாலும் நமது பூமிக்குள் எந்த அளவுக்குக் காந்த சக்திகள் இருக்கின்றதோ
1.அதற்குத் தகுந்தவாறுதான் விண்ணிலே ஓடும் போது இதனுடைய சுழற்ச்சியின் தன்மை இருக்கும்…
2.அதற்குத் தகுந்தவாறு தான் காந்தத்தை உற்பத்தி செய்யும்.

சந்திரனிலே காந்தப் பவர் கம்மியாக இருப்பதனாலே பூமியின் ஈர்ப்பு ஓட்டத்திற்குள் இதனுடைய சம பங்கு கொண்டு பூமியைச் சுழன்று வருகிறது.

ஆனால் சந்திரனுக்குக் காந்தப் பவர் அதிகமாகி விட்டால் அந்தக் காந்தத்தின் சக்தி கொண்டு வந்தால் பூமியின் ஈர்ப்பை விட்டு விலகி சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றுவிடும். (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!)

சூரியனுடைய காந்தப் பவர் அதிகம். அந்த சூரியனுடைய காந்தம் அதிகமாக ஈர்க்கப்படும்போது சந்திரன் அதனுடைய சுழல் வட்டத்திற்குத் தனித்துப் பிரிந்து சென்றுவிடும்.

சந்திரனில் அந்தக் காந்தப் புலன் குறைவாக இருப்பதால் தான் பூமியின் காந்த வட்டத்திற்குள் அது எடுத்து இதிலிருந்து பிரியாது இதற்குள் பகிர்ந்த நிலைகள் கொண்டு நம் பூமியைச் சுழன்று கொண்டு வருகின்றது.

இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலைகள் கொண்டு
1.வாழ்க்கையில் பயமோ ஆத்திரமோ சங்கடமோ கோபமோ வந்தால்
2.அது வளர்ந்து விடாதபடி தடுக்கும் எண்ணம் கொண்டு
3.மகரிஷிகள் அருள் சக்தியை நமக்குள் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும்.
4.இதனால் நம் எண்ணங்களும் தூய்மை அடைகிறது
5.நோய் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளவும் முடிகின்றது

கவலை எல்லாம் மறந்து… நான் மகிழ்ச்சியாக இருப்பதற்காகக் குடிக்கின்றேன்…! என்றாலும் உடலுக்குப் பின் நரகம் தான்…!

இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் உங்களால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்…! 

போகரை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர்

Astral powers of human soul

தெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்கே உறுதுணையாக இருக்கின்றது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.சிவனான ஆண் குண வலுவைக் கொண்டு
2.சக்தியான பெண் உணர்வின் எண்ண அமில ஈர்ப்பின் ஜீவித தொடர்பால்
3.இரண்டு ஆத்மாக்களின் ஈர்ப்பு வட்டம் ஒன்றின் தொடர்பு கொண்டு எடுக்கப்படும் தியான அலையின் வலுவைக் கூட்டக் கூட்ட
4.அவ்வலுவின் வளர்ச்சியால் ஆத்ம ஐக்கிய உணர்வு சரீர வாழ்க்கை பந்தத் தொடர்பில்
5.ஒரே எண்ண குண தொடர்பின் சுழற்சியில் வளர வேண்டும்.

ஏனென்றால் அப்படிப்பட்ட உயர் நிலையில் வளர்ச்சிக்கு வரும் இந்த மனித சக்திகளால் தான் ஒவ்வொரு கோள்களாகவும்.. ஒளி சக்தி கொண்டு ஒளிரும் சக்தியாகவும்… நம் பூமியில் சூரியனின் ஒளி அலைகள் வீசத்தக்க ஈர்ப்பின் தொடர் கொண்டு வளர்ந்துள்ள இயற்கை வள கனி வளங்களும் தாவர இனங்களும் உருவக அமைப்பின் தன்மையும் எல்லாமே உருப்பெற்று உள்ளன.

இன்று ஓர் பலூனை ஊதும் பொழுது… எந்த வடிவ அமைப்பில் அது உள்ளதோ… எந்த அளவுக்குக் காற்றின் அழுத்தத்தைச் சேமித்து உப்பக்கூடிய நிலை அதற்குள் இருக்கின்றதோ… அதனுடைய வடிவை அது பெறுகிறது. அதிகப்படும் பொழுது பலூன் வெடித்து விடுகின்றது.

அதைப் போன்று தான் உயிரணுவின் தோற்றத்தின் உருவ நிலைகள் யாவுமே…! மரம் செடி கொடிகள் மற்ற இன வர்க்கங்கள் ஒவ்வொன்றுமே
1.அதனதன் ஆத்ம அமிலச் சேர்க்கையின் நிலைக்கொப்ப
2.உயிர் பெறும் உருவக அமைப்பில் இப்பூமியின் காற்றழுத்த ஈர்ப்பின் வளர்ச்சி கொண்டு வளரும் தன்மை பெறுகிறது.
3.ஆனால் இது பிற கோள்களின் நிலையில் மாறுபடுகின்றது.

மனித உயிர் ஆத்மாவின் அமிலக் கூறின் உயிர் பெற்று ஜீவ வளர்ச்சியின் பருவக்காலம் வரை சேமிப்பின் அமில உருவக நிலை வளர்ந்தாலும் உருவ வளரச்சி நிலை பருவ காலத்திற்குப் பின் உயரும் நிலை தடைப்பட்டு விடுகின்றது.

இப்பூமியின் எந்தெந்த இடங்களில்… எக்காற்றின் அலைத் தொடர்பில் ஜீவன் பெறுகின்றதோ… அதற்கொப்பத்தான் அங்கங்குள்ள மனித இனங்களும்… மற்ற தாவரங்களும்… பிராணிகளும் உருவகம் பெறுகின்றது.

ஏறக்குறைய இப்பூமியின் அமைப்பின் சுழற்சியிலேயே சிறிது சிறிது மாற்றங்களுடன் உருவக வளர்ச்சி நிலைகள் யாவையும் வளர்கின்றன.

சில அபூர்வமாக உயரமாக வளரக்கூடிய தன்மைகள் மட்டும் அமிலத்தின் சேர்க்கை விகித நிலைக்கொப்பக் கூடியும் குறைந்தும் வளர்கின்றது.

இன்று நம் பூமியின் தன்மைக்கும் மற்றக் கோள்களின் தன்மையும் மாறுபாடான நிலை தான் உண்டு. உதாரணமாக சனி கிரகத்தில் மனித ஜீவனின் உணர்வின் எண்ணம் கொண்டு வாழக்கூடிய தன்மைக்கு சனிக் கோளின் அமைப்பு நிலை மாறுபட்ட தன்மையாக உள்ளது.

ஜீவனுள்ள உயிர் அணுக்கள் அங்கு வளர்ந்தாலும் இங்கு எப்படி கல் மண் மேல் படிந்துள்ள பாசி போன்று அங்கங்கு உள்ள ஜீவ வளர்ச்சி நிலையில் உள்ளது போல் தான் உண்டு. நம் பூமியில் உள்ளது போல் அவைகள் நகரும் தன்மையோ நடந்து பறக்கும் நிலை போன்று அங்கில்லை.

ஓர் ஜீவ உயிர் சனியில் பிறந்ததென்றால் அப்பூமியின் பிடிப்பில் ஒன்றியே பிறப்பெடுத்து இறுகிய நத்தைக்கும் மற்றச் சில பிராணிகளுக்கும் இருப்பதைப் போன்று கெட்டியான ஓடுகளுடன் பிறப்பெடுத்து அப்பிறப்பின் இறப்பிலேயே மாறும் தன்மையும் உள்ளது.

சனிக்கோள் அதி குளிரின் ஈர்ப்புப் பிடிப்பிற்கொப்ப சுழல்வதால் பிற கோள்களின் சந்திப்புச் செயல்நிலை இருந்தாலும் உஷ்ண அலையின் சமைப்பு நிலைக்கு நம் பூமியின் தன்மை போன்ற நிலை இல்லாததினால் மனிதர்கள் யாரும் அக்கோளில் பிறப்பெடுக்க முடியாது.

நம் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் பௌர்ணமி நிலவு தெரிவதைப் போன்று தான்… சனியைச் சுற்றியுள்ள பன்னிரண்டு கோள்களின் நிலையிலும்… சனிக்கோளின் சுழற்சி சந்திப்பிற்கொப்ப இங்கெப்படி அமாவாசை பௌர்ணமி என்று ஒரு சந்திரனின் தொடர்பில் அறிவது போன்ற நிலை உண்டு.

சனிக் கோளின் தொடர்பு கொண்ட பன்னிரண்டு கோள்களும் அவை எடுத்து வெளிக் கக்கும் அலை அமில நிலைக்கொப்ப சனியின் சுழற்சி ஓட்டமும் பூமியைக் காட்டிலும் குறைவான நிலையிலும்
1.இரவில் சந்திர ஒளியின் வெளிச்ச அலையை எப்படி நாம் இங்கு காண்கின்றோமோ அதற்கொப்ப
2.குளிர்ச்சியில்… சனிக்கோளும் சனிக்கோளின் உப கோள்களும் மிகவும் ரம்மியமாய் செயல்படக் கூடிய நிலையில்
3.நம் சூரியக் குடும்பத்தில் ஜீவனைத் தரக்கூடிய மையமாக உள்ளது
4.சனியின் தொடர்பு நமக்குக் கிட்டும் வலுவில்தான் நம்முடைய ஜீவ நாடியே உள்ளது

சனிக் கோள் நம் சூரியக் குடும்பத்தின் ஜீவனான நீர் சக்திக்கே மிகவும் முதன்மையானது.

இரத்தக் கொதிப்பு, கோபம், இராவணன் மூன்று உலகை அடக்கும் நிலை

இராமன் வீரன் என்றால் வாலியை ஏன் மறைந்திருந்து தாக்கினான் 

இராமாயணம் – விரிவாக்கம்

Konganar -tirupathi

நம் மனதை மங்கச் செய்யாதபடி… தங்கமாக்கச் செய்யும் அருள் சக்தி

அன்று மகரிஷிகள் எந்த அருள் வழியைக் காட்டினார்களோ அதன் வழியில் நம் உள்ளத்தைத் தங்கமாக்க வேண்டும்.

தங்கம் என்ன செய்கின்றது…? தங்கத்திற்கு என்ன குணம் இருக்கின்றது..?
1.தங்கம் எதிலையும் அது மாசுபடுவதில்லை.
2.அதாவது வெள்ளி செம்பு போன்று அதனுடைய நிறம் கருப்பதே இல்லை.

அதைப் போன்று தான் அந்தத் தங்கத்தைப் போன்று ஒவ்வொரு எண்ணத்தையும் உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டால்
1.ஒருவர் நம்மைத் திட்டினாலும் நம்மை
2.நல்ல எண்ணத்திலிருந்து மாசுப்பட்டு நம்மை அழிக்காது.

இதைத் தான் மனதைத் தங்கமாக்குவது என்று சொல்வது…! ஏனென்றால் தங்கத்தில் உள்ள அழுக்கு நிற்குமோ…? நிற்காது… அதனுடைய நிறத்தை மாற்றாது.

நம்முடைய உணர்வின் நிலைகளை பிறர் நம்மைச் சங்கடப்படுத்துகின்றார்கள்… நம்மைப் பழித்துப் பேசிவிட்டார்கள்..! என்ற இத்தகைய உணர்வுள் வந்து விட்டால் செம்பிலேயோ வெள்ளியிலேயோ அழுக்குப்பட்ட மாதிரி உள்ளே மறைந்து விடுகிறது.

அது பக்கு பக்காக நீங்கள் தேய்க்க தேய்க்கத் தேய்ந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்தத் தங்கத்தினுடைய நிலைகள் மாசில்லாத நிலைகளாக இருக்கப்படும் போது பளிச்… என்று பளபளப்பாக… இருக்கும்.

நம் நல்ல எண்ணத்திற்குள் பிறர் சொல்லும் துன்பமான எண்ணங்கள்… இருள் சூழும் நிலைகள் வந்து விட்டால் உடனே இங்கே இந்த ஞானத்தை ஊட்டும் நிலைகள் மறையும். நாம் அறிந்து இந்த அந்த இருளை எப்படி மாற்றுவது…? என்ற அந்த எண்ணத்தை அகற்றிவிடும்.

அப்படி ஆகாமல் மாற்றுவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிக்கும் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு
1.மனதைச் சுத்தப்படுத்துவோருக்கு ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு
2.ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சுத்தப்படுத்தி
3.மாசுபடும் நிலைகளை மாற்றி நமக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் எண்ணத்தையும் தங்கமாக மாற்ற வேண்டும்.

இது தான் கொங்கணவர் தன் மனதைத் தங்கமாக்கிய நிலைகள்.

ஆகையினால் அதே மாதிரி நீங்களும் செயல்படுத்துங்கள்.
1.உங்கள் வாழ்க்கையில் செல்வம் வரும்
2.உங்கள் மனதில் மகிழ்ச்சி வரும்
3.உங்கள் சொல்லிலும் செயலிலும் தெளிவும் வரும்.

soul eswaran

ஒவ்வொருவரும் ஈசனாகும் மகத்துவம்…!

அகண்ட அண்டம் இருண்டதாக இருப்பினும் அண்டத்தின் நிலை கோளாகும்போது இருண்ட நிலை தான். ஆனால் அந்தக் கோளின் தன்மை
1.நட்சத்திரமாகும் போது ஒளியின் நிலை அடைகின்றது.
2.நட்சத்திரமாகும் போது உணர்வை வளர்க்கும் நிலைக்கு வருகின்றது.

இருண்ட நிலையில் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் கோள்களில் புழு பூச்சிகளாக உருவானால் அதுவும் இருண்ட நிலை தான். அதே சமயத்தில் அதிலே பரிணாம வளர்ச்சிகள் அடைந்து… அடைந்து…
1.உணர்வின் தன்மை கொண்டு அறிவின் தன்மை கொண்டு உடலாகும் போது நட்சத்திரம்
2.அதாவது நாம் மனிதனாகும் போது நட்சத்திரம்
3.மனித நிலையில் அனைத்தையும் பக்குவப்படுத்தி உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற்றால் நாம் இவ்வுலகின் சூரியன் ஆகின்றோம்.

ஆகவே உணர்வின் தன்மை உயிராக உருவாக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான நாம் ஒவ்வொருவரும் ஈசனாக மாற வேண்டும். நம் உணர்வு ஒவ்வொன்றையும் ஈசனாக மாற்றிடல் வேண்டும்.

உயிர் ஈசனாக இருந்து உணர்வின் அறிவை ஊட்டுகின்றது. ஆறாவது அறிவின் தன்மை இருளை அகற்றும் உணர்வாக வருகின்றது.
1.அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு இந்த உயிர் என்றும் அழியா நிலைகள் கொண்டு வந்தது.
2.உயிரின் துணை கொண்டு அருள் ஒளியின் உணர்வாக
3.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும். ஆக

நாம் எண்ணியதை நமக்குள் உருவாக்குவது நமது உயிரே. எண்ணிய வழிப்படித் தான் இந்த உடலை உயிர் இயக்குகின்றது.

ஆகவே நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குவோம். அருள் ஒளியின் சுடராக மாறுவோம். பிறவியில்லா நிலைகளை அடைவோம். அண்டத்தில் அகண்ட அண்டத்தில் என்றும் பெரு வீடு என்ற நிலையை அடைவோம்.

1.இதைப் படித்துப் பதிவாக்குவோர் அனைவரும் மகானாக வேண்டும்… மகரிஷிகள் ஆக வேண்டும்.
2.உயிரின் தன்மை ஈசனாக மாற்ற வேண்டும்
3.ஒவ்வொரு அணுக்களையும் ஈசனாக மாற்ற வேண்டும்.

அருள் வழியில் அருள் ஞானத்தின் தன்மை உங்களுக்குள் வளர்த்தால் அந்த ஈசன் என்ற நிலை வரும்போது இதே உணர்வுகள் நோயுற்றவருக்குள் சென்றாலும் அங்கே ஈசனாக… அருள் ஒளி சுடரின் தன்மையாக அவர் நோயை நீக்கி… ஒளியின் உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.

1.நம் உயிர் ஈசனாக இருக்கின்றது
2.நமது உணர்வுகள் அனைத்தும் ஈசனாக வேண்டும்.
3.நம்முடைய சொல் ஒவ்வொரு உடலிலும் பாய்ந்து ஈசனாக மாற வேண்டும்.

ஆகவே அருள் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும் என்று நிலை கொள்ளுங்கள். யாரோ செய்வோர்…! எவரோ செய்வார்…! என்று எண்ண வேண்டாம். யாருக்கோ காசு கொடுத்து இதைச் செய்ய வேண்டாம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உணர்வின் வலுவைக் கூட்டினால் அதுவே உங்களில் உருவாக்கும். உங்கள் வலுவின் தன்மை பிறரின் தீமையைப் போக்கும்.

பொருளுக்காக பல மனித உணர்வுகளை வைத்து மாயாஜாலங்களைச் செய்கின்றனர். அதனால் பொருள் அவனுக்கு வருகின்றது.

அனைவருக்கும் சொல்கின்றான். இருந்தாலும் அவன் அழிகின்றான். ஏனென்றால் அவன் வளர்த்த சொத்தை அவன் பிள்ளையே அழிக்கின்றான். இலட்சம் இலட்சமாகச் சம்பாரித்தார்… எல்லாம் போய் விட்டது என்று நம் கண் முன்னாடியே பார்க்கலாம்.

1.ஏனென்றால் தவறான வழிகளில் செல்வத்தைச் செலவழித்தால் தவறான மகனே பிறக்கின்றான்.
2.தந்தையின் உணர்வை பிள்ளை தனக்குள் அங்கே கலக்கின்றான்.
3.அந்த உணர்வின் தன்மையில் சொத்தை இவன் அழிக்கின்றான் என்ற இந்த நிலைகள் தான் வருகிறது.

யாருக்காக நீங்கள் போராடுகின்றீர்கள்…? என்று சற்று சிந்தியுங்கள்.

1.உங்கள் உயிரின் தன்மைக்காகப் போர் செய்யுங்கள்
2.அருள் வழியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்
3.இருளை அகற்றும் ஆற்றலைப் பெறுங்கள்.
4.அருள் ஞானியின் உணர்வை உருவாக்கும் அதையே ஈசனாக மாற்றுங்கள்

உங்கள் உணர்வின் தன்மை மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து அவருக்குள்ளும் அந்த ஈசனின் உணர்வை அது உருவாக்கும்.

இதன் வழி உணர்வின் ஆற்றலைப் பெருக்குவோம்… குரு வழியில் செல்வோம்…. அருள் ஆனந்தம் பெறுவோம்…. அருள் வாழ்க்கையை நடத்துவோம்… இருளை அகற்றுவோம்…. மெய் உணர்வுடன் ஒன்றுவோம்… மெய் ஞானத்துடன் வாழ்வோம்…. மெய் உணர்வுடன் வாழ்வோம்…. மெய் உலகாக மாற்றுவோம்…. ஒவ்வொரு மனித உடலிலும் மெய்யை அறிந்திடும் உணர்வின் தன்மை பெற தியானிப்போம்… தவமிருப்போம்…!

நிறைந்த மனம் கொண்டு இதைச் செய்யுங்கள். அனைவரையும் நிறைவுபடுத்தும் மனமாக உயர்ந்த பண்புடன் சொல்லுங்கள். பண்பு கொண்ட உணர்வை வளர்த்திடுங்கள்.

இத்தகைய உயர்ந்த பண்புடன் அரவணைக்கும் நிலை கொண்டு நமக்கு மதம் அல்ல… இனம் அல்ல… என்று செயல்படுத்துங்கள். இனமும் மதமும் நம்மைப் பிரிக்கும்.

ஆனால் அருள் ஒளி நம்மை என்றும் ஒளியாக சுடராகப் போற்றும் என்ற இந்த நினைவு கொண்டு இந்த வாழ்க்கைப் பயணத்தை குரு வழியில் வழிபடுத்துவோம்.

நம் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை அகற்றுவோம். அனைவரும் ஒன்றென்ற நிலைகளில் உருப்பெறச் செய்வோம்.
1.அனைவரையும் மகிழ்சி பெறச் செய்யும் உணர்வினை உருவாக்கும் ஈசனாக
2.நம் உணர்வின் தன்மை ஒவ்வொரு உடலிலும் ஈசனாக உருவாக வேண்டும்.

அருள் ஒளிச் சுடராக நாம் உருவாக்க வேண்டும். அவ்வாறு நாம் எண்ணுவதே நமக்குள் ஈசனாகின்றது. அந்த அருள் வழியின் நிலைகள் வளர வேண்டுமென்ற நிலைகள் கொண்டு இதை மனதில் வைத்துக் குரு அருளின் துணை கொண்டு நாம் இதைச் செயலுக்குக் கொண்டு வருவோம் என்ற உறுதி எடுத்துக் கொள்வோம்.

இராவணனிடமிருந்து சீதாவை மீட்டு வந்தாலும் மக்கள் ஏற்காத போது இராமனின் செயல்கள் என்ன ஆனது

இலங்கையில் சீதாவை அடைத்தான் இராவணன்

குகனைப் பற்றி இராமாயணத்திலும் கந்த புராணதிலும் காட்டியுள்ளார்கள்

husband-and-wife-unity

இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து கொண்டே உயர் ஞான நிலையில் வளர்ச்சியைப் பெற முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சகலத்தின் சக்தியையும் சகலமாக்கித் தன்னைத்தானே தான் உணரும் உயர் ஞான ஒளி சக்தியாய் உயரும் வழித் தொடருக்கு… எண்ணத்தின் உணர்வு பக்குவ முறை கொள்தல் வேண்டும்.

இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சியில் இருந்து விடுபட எண்ணத்தின் வலுவை முதலில் பக்குவ நிலைக்கு நாம் செயல் படுத்துதல் வேண்டும்.

வாழ்க்கையில் இருந்தே நம் தியான முறையை வழிப்படுத்தும் சமமான நற்குண செயல் வழியை எண்ணத்தின் உணர்வு செயல்படும் முறை பக்குவத்தில்
1.உடல் உணர்வில் உந்தப்படும் இல்லற உணர்வின் வழித் தொடர் உகந்ததா…?
2.அந்த உடல் உணர்வின் உந்தலைச் சமப்படுத்தும் பக்குவத்தில் அடக்கும் பக்குவம் உகந்தந்தா…?
3.உடல் இச்சையின் உணர்வின் உந்தலில் எப்படிச் செயல்படுவது…? என்ற வினா ஒவ்வொருவருக்கும் எழும்பலாம்.

அதாவது தாம்பத்ய வாழ்க்கை உகந்த நிலையா…? பிரம்மச்சர்ய நிலையில் உயர்வு நிலை பெற முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

ஆரம்ப மனித உணர்வின் வழித்தொடரே தாவர நிலைக்கடுத்த வளர்ச்சி நிலை யாவையும் நீரிலிருந்து உயிர் ஆத்ம ஜீவன்கள் பிறப்பெடுத்து வந்தது.

அதன் பின் (கடல் வாழ்) தாவர இனங்களில் இருந்து வளரும் புழு பூச்சிகள் உடல் உணர்வின் ஆண் பெண் இனச் சேர்க்கையில் வளரும் நிலை இல்லாமல் தாவரங்களின் உஷ்ண அலை வெளிக் கக்கும் அமிலத்தின் பிசின் போன்ற வழுவழுப்பான அமிலத்தின் கெட்டித் தன்மையில் உயிர் அணுக்கள் சிறு புழு பூச்சிகள் உற்பத்தியாகும் நிலை இனச் சேர்க்கையின்றி வளரும் நிலை தான் உண்டு.

நீரிலிருந்து உயிரணு தோன்றும் வளர்ச்சியில் இனச் சேர்க்கையில் ஆண் பெண் என்ற நிலை அபூர்வமாகச் சில இனங்களுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் ஜீவப் பிராணிகள் பெரும்பகுதி இனச் சேர்க்கையின் தொடர்பு கொண்டுதான் இனப் பெருக்கம் செயல் கொள்கின்றது.

இவற்றின் தொடர்பில் மனித உணர்வில் பகுத்தறியும் ஞான வித்தின் முதல் நிலையில்
1.அன்பான உணர்வின் குணம் தான்
2.உந்தப் பெறும் மனித நிலையின் குணத்தின் “முதல் நிலை…”

தன் உணர்வில் உந்தும் இச்சையின் ஆசையில்… உதிரத்தில் பிறக்கும் உயிர் ஜீவனே அந்த அன்பின் உணர்வுத் தொடரில் பிறக்கும். அன்பின் ஆசை நிலை அதற்கடுத்த நிலை.

உதிரத்தில் அன்பின் உணர்வு கொண்டு பிறக்கும் சிசுத் தொடரில்
1.ஆசையும் பாசமும் தன் உணர்வின் இச்சையிலேயே பிறக்கா விட்டால்
2.எஜ்ஜீவ சக்தியையும் எந்த ரிஷிகளாலும்… ஆதிசக்தியாலுமே… வளர்க்க முடியாது.
3.அன்பின் எண்ண உணர்வில் ஆசையின் பாசமில்லை என்றால் மனிதன் என்ற நிலையே உருவாகாது.

உயர் ஞான நிலைக்கு மனித உணர்வின் எண்ணத்தைச் சம குணப்படுத்தக் கூடிய வழி முறைக்கு வயது முதிர்ந்தவர்கள் தான் செயல்படுத்த முடியுமா…? சிறுவர்களும் புதிதாக மணமான தம்பதியர்களும் எப்படி அந்நிலை பெற முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வின் ஆரம்ப உணர்வே… அன்பென்னும் ஆசையில்… பாசம் கொண்டு வளர வேண்டிய வழித் தொடரில் தான்… சத்திய நிலையின் ஜீவனை வளர்க்க முடியும்,

1.தம்பதியர்களின் உணர்வுகளில் உடல் உணர்வில் அன்பின் ஆசை கொண்டு பிறக்கும் சிசுவின் பாசம் எப்படி வளர்கின்றதோ
2.வாழ்க்கையில் உண்ண உறங்க உடுக்க எப்படி சம நிலை குணங்களைப் பக்குவப்படுத்தச் சொல்லிப் போதனைப்படுத்தினோமோ
3.மணமான சிறு வயது தம்பதியர்கள் அவர்களின் வம்சத்தின் கொழுந்து பிறக்கக்கூடிய காலத்திலேயே
4.எப்படி உடல் உணர்வில் சிசு பிறக்கின்றதோ அதைப் போல் ஆத்ம ஐக்கிய உணர்வு கொண்டு இரு எண்ணங்களும் ஒன்றுபோல் ஆகி
5.உயர்ந்த ஞானத்தின் உணர்வுடன் ரிஷிகளின் தொடர்பால் எடுக்கும் தியானத்தின் மூலம்
6.ஆத்ம ஐக்கிய உணர்வில் இரண்டு ஆத்மாக்களும் இணையக் கூடிய பக்குவ நிலை பெற்று
7.சாதாரண வாழ்க்கை நிலையில் ஆத்ம உயிருக்கு நம் அன்பின் ஆசையின் ஜீவன் தந்து பிறக்கும் குழந்தையைக் காட்டிலும்
8.ஆத்ம ஐக்கியம் கொண்டு ரிஷிகளின் தொடர்பில் எடுக்கும் ஜெபத் தொடர்பின் அலை ஈர்ப்பினால்
9.புது மணம் கொண்ட தம்பதியரின் ஈர்ப்பில் உயர்ந்த ஞான வித்தின் ஆத்ம உயிர்களுக்கு ஜீவன் தரும் பாக்கியத்தைப் பெற முடியும்.

இப்பூமியில் பிறப்பெடுத்து ஞானத்தின் வழியில் சித்து நிலையால் உயர்ந்த ரிஷிகளுக்குப் போக முடியாத பல நல்ல ஆத்மாக்கள் இன்றும் உள்ளன. அந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் ஜீவன் கிடைக்கச் செய்யலாம்.

நாமெடுக்கக்கூடிய (தாய் தந்தை) ஆத்ம ஐக்கியத்தால் எடுக்கும் உயர் குணத்தைக் கொண்டு அத்தகைய ஆத்மாக்களுக்கு… தான் பெற முடியாத ரிஷி சக்தியின் செயலைச் செயலாக்கி வழிதரக் கூடிய நிலையை…
1.ஒவ்வொரு தம்பதியரும் ஆத்ம ஐக்கியத்தில் நல்ல உணர்வின் செயல் வாழ்க்கையால்
2.இப்பூமியைப் பக்குவப்படுத்தக் கூடிய இல்லற உணர்வின் இச்சையின் ஆசைக்கு
3.உடல் உணர்வின் உந்தலைப் பக்குவப்படுத்தும் நிலை செயல்படுத்தலாம்.

வாழ்க்கை வழிமுறையில் துறவறம் என்ற பிரமச்சரிய முறையால் ஆண்டவனை அடைய முடியுமா…? உயர்ஞான வாழ்க்கைக்கு எம்முறை உகந்தது…? என்ற வினா எழும்பலாம்.

உணர்வின் எண்ண குணத்தைச் சமப்படுத்தும் பக்குவத்தால்… ஒவ்வொரு நாளும் இப்பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து ரிஷிகளின் எண்ணத்துடனும்… விண்ணின் ஆற்றலைப் பெறும் எண்ணத்துடனும்
1.எண்ணத்தின் உணர்வைத் தினசரி எடுக்கக்கூடிய தியான முறையில்
2.உணவின் இன்பம் அனைத்தும் ஏகாந்தத்தின் இன்பத்தை உணரும் பக்குவ இன்பத்தில்
3.இனிமை சுரக்கும் அன்பின் ஆசை உணர்வு கொண்டு பெறப்படும் பக்குவத்தில் ஆத்ம ஒளியே ஒளிரும் நிலை பெற்றுவிட்டால்
4.உடல் உணர்வின் இச்சை எச்சுவையையும் தனித்து எடுக்கக்கூடிய ஏக்கத்தின் உணவிற்கு
5.நம் எண்ணத்தின் உணர்வே செல்லாது (இதை அனுபவத்தில் பார்க்கலாம்).

ஏகாந்தத்தின் இன்பத்தை நுகரும் பக்குவத்தை… ஆத்ம ஐக்கியத் தொடர்பு கொண்டு… இரண்டு ஆத்மாக்களுக்கும் ஒரே எண்ணத்தின் வழிப்படுத்தும் வழி முறையில் கிடைக்கும் ஆத்ம ஐக்கிய ஒளியால்… எச்சிருஷ்டியையும் சிருஷ்டிக்கவல்ல தன்மையைப் பெறலாம்.

ஆனால் இரண்டு எண்ணங்களின் குண நிலை மாற்றப்பட்டு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ரிஷி சக்தியின் தொடர்பில் அதைச் சீர்படுத்தும் பக்குவ நிலையாக ஜெப ஈர்ப்பில்
1.ஒருவர் மேல் ஒருவர் எண்ணத்தைச் செலுத்தி
2.ஆத்ம ஐக்கிய உயர் ஞானம் பெற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டே
3.இரு நிலையையும் ஒரு நிலையாகக்கூடிய தன்மைக்கு
4.நிச்சயம் செயல்படுத்திட முடியும்.

லவ குசா சீதா இராமன் – வான்மீகி கூறும் உடலுக்குப் பின் நிலை விளக்கம்

இராமன், சீதா, பரதன், இராவணன் – விளக்கம்

இராமன், சீதா, பரதன், இராவணன், சூர்ப்பணகை – விளக்கம்

greatest

“உயிர்…” ஞான வழியை… அறியக்கூடிய நிலை மனிதனுக்கு மட்டும் தான் உண்டு என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.ஆதியின்… படைப்பின் கடவுள்… இறைவன்… தெய்வம் என்ற தொடரில்…
2.மனித ஒளி சரீரத்தின் ஒளித் தன்மை கொண்டு…
3.அவ்வொளியின் நாத உயர்வில் இறை நிலை பெற்ற மனிதன் “தெய்வத் தன்மை பெறுகின்றான்…”

பூமிக்கும்… பூமியில் வளரும் சகல ஜீவராசிகளும் ஒளித் தன்மையின் நிலை பெற்றிருந்தாலும்… ஒவ்வொன்றின் தொடர்பலையில் வலுக் கொண்ட ஒளி நிலை பெற்று… ஒளி சக்தியை வளர்க்கும்
1.உயிர் ஞான வழியை அறியக்கூடிய நிலை
2.மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

குயில் அழகாக… இனிமையாக… அதனுடைய குரல் ஒலியை எழுப்பினாலும்… மனிதனின் எண்ணத்தின் உணர்வு ஞானம் அதற்கு இல்லை.

மனித உணர்வுடன் ஒட்டி… ஒன்றின் தொடரில் வளர்ச்சியின் நிலை பெருக்கத் தொடருக்கு… ஞானத்தை உயர்த்தித் தன் பகுத்தறிவைக் கொண்டு “பல நிலைகளை மாற்றியமைக்கும்” செயல் மனிதனுக்குத் தான் உண்டு.

ஒலியின் நாதத்தை உணர்வின் எண்ண ஊட்டத்தில் பகுத்தறியும் ஞானத்தால் மனிதன் இச்சரீர உயர்வை எண்ணி… இவ்வுணர்வால் இறை சக்தியின் உன்னத நிலையான இவ்வுயிர் ஆத்மாவை… இறை குணத்தை… உணர்வின் எண்ண ஞானத்தால் பகுத்தறியும் செயலைக் கொண்டு இவ்வுடலையே இறையாக்கி… இறைவன் படைப்பில் இறை சக்தியை எடுக்கக்கூடிய ஒலி நாதத்தைத் தன் ஆத்ம உயிருக்காக இறை உணர்வு பெற்றுத் “தெய்வ நிலை பெறும் சத்திய நிலையை…” மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதன் இன்று எடுத்துள்ள உடல் பிம்ப வாழ்க்கைக்குகந்த பேராசைப் பிடிப்பையே தெய்வ நிலை பெறக்கூடிய பேராசையாய் உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.

ஒளியின் ஒளிப் பெருக்கை பெருக்கவல்ல தொடரைப் பூமியில் படைத்த
1.ரிஷிகளின் சக்திக்கு ஒளி கூட்டும் ஒளி நிலை பெற
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஒலி கொண்டு
3.நம்முள் உள்ள இருளகற்றி ஒளி நிலையை நாம் பெற்றோமானால்
4.ஒளி கொண்டு மற்ற இருளையும் அகற்றும் சித்தை
5.நம் சித்தத்தின் உணர்வால் ஒவ்வொருவரும் பெறலாம்.

இச்சரீர அமைப்பைச் சிருஷ்டிக்கவல்ல சித்து சக்தியையே… இக்காற்றலையில் கலந்துள்ள சகல சத்திலிருந்து உருவை உருவாக்கும் சக்தியைப் பிரித்தெடுத்துச் செயலாக்கும் முறையை உயர் ஞானி அன்றைய தன் ஞானத்தால் செயல்படுத்திக் காட்டினான்.

ஆனால் இன்றைய விஞ்ஞானி தன்னைத்தான் தான் நம்பாமல் “இயந்திரங்களின் இயக்க ஒலி சக்தி கொண்டு தான்” விஞ்ஞானத்தில் சாதிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளான்.

பல முன்னேற்றங்கள் விஞ்ஞானத்தால் இன்று வளர்ந்திருந்தாலும் தன் ஆத்ம உயிருக்குக் கூட்டக் கூடிய ஒளியின் உயர்வைக் கூட்டாததால் அழிக்கும் நிலைக்குத் தன் உயிர் ஆத்மாவை மங்கச் செய்யும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

அன்று ஞானிகள் காட்டிய உண்மைகளை எல்லாம்… ஞானிகள் தொடர்பால் இன்றும் எல்லோராலும் பெற முடியும்.

எண்ணத்தின் உணர்வை மனிதனுக்கு மனிதன்… தான்… எவ் ஒலி இறை உணர்வைப் பெற்று இச்சரீர உணர்வால் செயல்படுகின்றானோ அதே தொடர்தான் தன்னை ஒத்த மனித உணர்விலும் உள்ளதை அறிந்து கொண்டால்
1.தன் ஆத்ம பலத்தின் உயர்வைக் கூட்டிக் கொள்ளக் கூடிய உரம்
2.மனித உணர்வுடன் ஒட்டிய தொடர்பால்
3.பிறரிடம் இருந்து எதிர்படும் மூச்சலைகள்
4.நல் அலையின் உணர்வு கொண்டு பெறப்படும் தொடர்பால்
5.மனித உணர்வின் ஆத்ம உயிர் ஒலித் தன்மையின் வலு நிலையை
6.சம குணத்தின் அறுகுண ஈர்ப்பால் உயர்ந்த ஒளி ஞானியாகலாம்.

அதாவது… மனித உணர்வின் எண்ண வேட்கையின் சமைப்பின் ஒளி நிலை கொண்டு
1.ஒருவரின் மேல் உயர்ந்த குணத்தைப் பலரும் செலுத்தச் செலுத்த
2.அவ்வுரத்தின் உணர்வால் மனிதன் தெய்வமாகும் நிலையை
3.அன்றைய ஞானி உணர்ந்ததால் தான் அன்பையே தெய்வமாகக் காட்டினான்.

உணர்வுகள் உந்தப்பட்டாலும் அதைச் சமமாக்கும் பக்குவத்தை எவனொருவன் செயல்படுத்தி.. செயல் வழியில் உரத்தைப் பெறுகின்றானோ… அன்றே தெய்வ நிலை கொண்ட ஒளித் தன்மையில் செயல் கொள்ள முடியும்.

இக்காற்றலையின் சுழற்சியில்… மனித உணர்வில் பல உணர்வின் வேட்கை அலைக்கு மத்தியில்… “தன் ஞானத்தை உயர்வாக்க… உயர்ந்த ரிஷி சக்திகளின் எண்ண ஜெபத்தால்… உயர் காந்த மின் ஒளியின் தியானத்தைக் கொண்டு… மனிதன் தன்னைத் தானே தான் உணர்ந்து… தெய்வ நிலை பெறும் வழி நிலையை… அமைத்துக் கொள்ளல் வேண்டும்…”

இராமாயணத்தில் இராவணன் சீதாவிற்கு நாள் அவகாசம் கொடுக்கின்றான் – விளக்கம்

உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்று இராமாயணம் காட்டுகின்றது

உயிருடன் ஒன்றும் உணர்ச்சி நம்மை மகிழ்ச்சி பெறச் செய்யும் – இராமாயணம்

telepathy-meditations

உயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…’ என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் அவரவர்கள் உயிரை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும்.

நமது குருநாதர் பெயரும் ஈஸ்வரன் தான்…! நம் உயிருக்குப் பெயரும் ஈஸ்வரன் தான்…!

நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் அணுக்கருக்களாக உருவாக்குகின்றது. கருவான பின் உருப் பெறுகின்றது. உருப் பெறச் செய்கின்றது.

1.நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ
2.அவை அனைத்தையும் கருவாக்கி நம் இரத்த நாளங்களிலே மிதக்க விடுகின்றது. (1)
3.அதே சமயத்தில் நாம் எண்ணும் உணர்வுகளை ஊழ் வினை என்ற வித்தாக எலும்பினுள் அது பதிவாக்கி விடுகின்றது. (2)

இது எல்லாம் நம் உயிரின் வேலைகள்.

இப்போது மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றி இங்கே பேசும்போது நீங்கள் கூர்மையாகப் பார்த்து இந்தப் பேச்சின் உணர்வை நுகர்ந்தறியும் போது… அந்த உணர்வின் செயலாக உணர முடிகின்றது. உணரும் தன்மையை கருவாக உருவாக்கி… இரத்தத்தில் அது மிதக்க விடுகின்றது.

1.நாம் எக்குணத்தின் தன்மை பெற்றோமோ
2.அக்கருவின் தன்மை அக்குணத்தை உருவாக்கும் அணுவாகத்தான் அது வெளிப்படுகின்றது.

அதே சமயத்தில் கூர்மையாகப் பார்த்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்பினுள் பதிவாகி விடுகின்றது.

ஏனென்றால் முதலில் வித்தை ஊன்றினால் தான் வித்து தனது சத்தைக் கவர்ந்து… அது இலையையும் தனது மலரையும் தன் விதையையும் அது உருவாக்கும்.

இதைப் போன்று நாம் எதைக் கூர்மையாக உற்று நோக்கி அந்த உணர்வினைப் பெற வேண்டுமென்று ஏங்குகின்றோமோ அவை நம் எலும்பினுள் உள்ள ஊன்களில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்படுகின்றது. (மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்)

நாம் எக்குணத்தின் தன்மையை நுகருகின்றோமோ… அந்த உணர்வுகள் நுகரப்பட்டு
1.நம்மை அறியச் செய்கின்றன… உணரச் செய்கின்றன… உணர்த்துகின்றன….
2.இந்த மூன்று வேலையும் செய்கின்றன.

உணர்த்தினாலும் இரத்தத்தில் அது கருவாக மாற்றி விடுகின்றது… ஒரு முட்டையாக…! அவ்வாறு கருவாக உருவாகி விட்டால் நம் இரத்த நாளங்களிலே மிதக்கச் செய்கிறது.

நாம் எண்ணக்கூடியதை ஓ…! என்று பிரணவமாக்கி (ஜீவன் பெறச் செய்து) நாம் எண்ணிய உணர்வை ஓ… ம்… என்று ஜீவ அணுவாக நம் உடலாக இணைத்து விடுகின்றது உயிர். இது தான் ஓ…ம் ஈஸ்வரா.

நாம் எண்ணுவது அனைத்தையும் நம் உடலுக்குள் உருவாகி விட்டால் அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று எண்ணும் போதெல்லாம் அல்லது சொல்லும் போதெல்லாம் அவரவர் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும்.

அவரவர்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் இந்த உயிரே குருவாக இருக்கின்றது.

உயர்ந்த ஞானத்தின் வழிகளில் இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.நமது குருநாதர் “ஈஸ்வரர்…” அவர் அவருக்குள் உருவாக்கிய உணர்வை
2.எமக்குள் (ஞானகுரு) ஓதப்பட்டு அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
3.அதே உணர்வை மீண்டும் உங்களில் ஓதப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் உங்களுக்குள் அந்த உங்கள் உயிரான ஈசனிலே பட்டு ஜீவன் பெற்று
5.நம் குரு ஈஸ்வரரால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வும் இரண்டும் கலந்து ஒன்றாகி
6.அவர் உருவாக்கிய அருள் ஞானத்தை இங்கே ஈசனாக உருவாக்கும் செயலாக உருப்பெறுகின்றது.

ஆகையினால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரையும்… உயர்ந்த ஞானத்தை ஊட்டும் அந்த உணர்வின் கருவாக உருவாகும் அச்சக்தியை ஈசனாகவும்… மதித்தல் வேண்டும்.

அப்படி மதித்து நமது குரு காட்டிய அவருள் விளைய வைத்த உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வை நமக்குள் உருவாக்கும். குரு பெற்ற சக்தியை குரு அடைந்த ஒளி நிலையை நாமும் பெறலாம்.

great bliss

நீங்கள் ஒவ்வொருவரும் ஞானியாக வளரக்கூடிய சந்தர்ப்பம் எது…?

மெய் ஞானியின் அருள் உணர்வை செவி வழியாக உங்களுக்குள் ஈர்க்கச் செய்து அந்த மெய் ஒளி பெறும் சந்தர்ப்பத்தை இந்த உபதேச வாயிலாக உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்திக் கொண்டு
1.நாம் மெய் ஒளி பெறுவேன்…
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவேன்…
3.நான் அழியா ஒளி நிலை பெறுவேன்…
4.என் மூச்சும் பேச்சும் இருளை மாய்த்து ஒளியாகக் கூட்டும் அலைகளாகப் பெறுவேன்…! என்ற நிலைக்கு வளர வேண்டும்

தன்னம்பிக்கையுடன் நீங்கள் வளர வேண்டுமென்ற அந்த ஆசையில் தான் இதை உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு). ஒவ்வொரு நிமிடமும் நமது குருநாதர் அருள் ஒளி கொண்டு அவர் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று அதை நீங்கள் பெறுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் சொல்வது போல “என்னத்த…!” என்று சோர்வை ஊட்டி கொடுக்கும் நல்ல உணர்வை அழித்துவிடாதீர்கள்.

இந்த மனித வாழ்க்கையில் வந்த இருளை அகற்றிவிட்டு நிச்சயம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களைச் சந்திந்தாலும்…
1.அந்தத் துன்பம் வரும் நேரம் தான்
2.மெய் ஒளியின் உணர்வைக் கூட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.

எப்பொழுது துன்பம் உங்களைத் தாக்குகின்றதோ அப்பொழுது ஈஸ்வரா……..! என்று உயிருடன் தொடர்பு கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெற வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
3.இந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்தும் போது
4.நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டவுடனே அதில் உள்ள விஷத்தை மாய்ப்பது போல்
5.துன்பத்தை ஊட்டும் உணர்வுகளை அது ஒடுக்கி விடுகின்றது.

பாலுக்குள் விஷத்தைப் போட்டால் அதைக் குடிப்போரை மயங்கச் செய்கின்றது. மகிழ்ச்சியான நிலைகளில் நாம் இருக்கும்போது வேதனைப்படும் நிகழ்ச்சிகள் நடந்தால் அது நம்மைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது… நல்லதைச் சிந்திக்கும் செயலை இழந்துவிடுகின்றோம்.

ஆனால் நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டவுடன் விஷத்தின் தன்மை மாய்ந்து… நெருப்பின் சுடர் பெருகி… ஏகமாக அங்கே ஒளியாகக் காண முடிகின்றது.

அதைப் போன்று தான் எத்தகைய துன்பம் வந்தாலும் அந்த விஷத்தின் தன்மையை அந்த மெய் ஞானியின் அருள் ஒளி கொண்டு… அந்த நெருப்பான சக்தியை நமக்குள் கூட்டும்போது…
1.அந்த விஷத்தின் தன்மை மாய்ந்து
2.நம் எண்ணங்கள் தெளிவாகி சிந்திக்கும் நிலை பெருகி
3.மறைந்த பொருளை அறிந்துணர்ந்திடும் உணர்வின் ஆற்றலைப் பெருக்கவும் இது உதவும்.

ஆகவே வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை மறந்து அந்த மெய் ஞானியின் அருளைப் பெறுவோம். அந்த அருள் ஒளியாலே நம் சொல்லும் செயலும் நம் பேச்சும் மூச்சும் உலகிற்கு ஒளிச் சுடராக்கும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்படிப்பட்ட உறுதியான நிலைகளை நீங்கள் பெறுவதற்கு
1.எந்த மகரிஷிகள் அந்த ஆற்றலை அவர்களுக்குள் விளைய வைத்தார்களோ
2.அந்த உணர்வின் சக்திகளை எல்லாம் உங்களுக்குள் அந்த சிலிகன்களாகப் பதிவு செய்திருக்கின்றோம்.
3.அதை உங்களுக்குள் கூட்டிப் பெருக்குவது இனி உங்கள் கையில் தான் இருக்கின்றது.

நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது. அதை நான் (ஞானகுரு) பதிவு செய்கின்றேன். என் மூச்சும் பேச்சும் உலக நன்மை பெற வேண்டுமென்று எண்ணத்தைச் செலுத்தி அதையே உங்களிடம் பரப்புகின்றேன்.

அதே போல் நீங்களும் எடுத்து உங்கள் உடலுக்குள் பெருக்கும்போது உங்கள் மூச்சின் நிலைகள் பிறரை நன்மை பெறச் செய்யும் சக்தியாக மலரத் தொடங்குகின்றது.

குருநாதர் காட்டிய அருள்வழிப்படி இதைப் பெறுவோம்…! விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்…! என்று உறுதி கொள்ளுங்கள்.
1.உடலை விட்டு எப்போது சென்றாலும் அந்த மகரிஷிகளின் ஒளி அலைகளுடன் கலந்து
2.ஒளியுடன் ஒளியாக நாம் பேரொளியாகக் கலப்போம்.

கல்யாணராமா, குகன், இராவணனின் தங்கை, உடலுக்குள் தோன்றும் எண்ணங்கள்

காண்டீபத்தை ஒடித்தவன் இராமன் – சக்தி வாய்ந்தவன்

சுக்ரீவன் துணை கொண்டு இராமன் சீதாவை மீட்டினான்

லவா குசா – இராமாயனணத்தில் காட்டப்பட்டுள்ள உண்மை நிலை

virus

உலகையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் உருவான விதம்

1.அணு குண்டும் ஹைட்ரஜன் குண்டும் போய்…
2.மனிதனுக்கு மனிதன் தீவிரவாதம் என்ற நிலைகளும் போய்
3.அவைகளிலிருந்து வந்த விஷத் தன்மைகள் கலந்து மற்ற விஷப் பூச்சிகளில் பட்டு அது இறந்து
4.விஷக் கிருமிகளாக மாறி மனிதனைக் கொல்லும் தன்மைக்கு இன்று வந்து விட்டது.

அதே சமயத்தில் நாம் சுவாசித்த இந்த உணர்வுகளோ நம் உடலுக்குள் போய் நல்ல அணுக்களை எல்லாம் மாற்றி
1.விஷ அணுக்களாக உருவாக்கி நமக்குள் நோயும்
2.நம் உடலிலிருந்து வரக்கூடியது நம்மைச் சார்புடையோர்களுக்கும் பாய்ந்து
3.அவர்களுக்கும் இந்த நோய்கள் வந்துவிடுகின்றது.

உலகம் முழுவதும் இப்படிப் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று நம் உடலுக்குள் நாம் இதைப் பெருக்கி கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பத்திரிக்கை வாயிலாகவோ டி.வியின் நிலைகளாகவோ உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை பதிவாகிக் கொண்டே உள்ளது.

அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த விஷத்தின் தன்மையை உடலில் வளர்த்து நமக்குள் விஷக் கிருமிகளைத் தான் உருவாக்குகின்றோம். அதனா நமக்குள் கடும் நோய்களே வந்து விடுகின்றது.

புதுப் புது நோய்கள் வரக் காரணமே…. இதைப் போன்று கேட்ட உணர்வை நுகர்ந்து… பதிவாக்கி… மீண்டும் அதையே நுகரும் நிலை ஆகி… அது நம் இரத்த நாளங்களிலே விஷக் கிருமிகளாக மாறுகின்றது.

இதன் உணர்வைச் சொல்லாகவோ… செயலாகவோ… நம் பார்வையில் பார்க்கப்படும்போது நமக்குள்ளும்… நம்மை சார்புடையோர் உடல்களிலும்… பாய்ச்ச முடிகின்றது.

இப்படி விஷத்தின் தன்மை கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரான ஈசனைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.

அவன் தான் (உயிர்) நம்மை இந்த உடலை உருவாக்கியவன் என்றும் இந்த மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைக் காக்க
1.ஞானியர் கண்ட உண்மையின் உணர்வை இங்கே உபதேச வாயிலாகப் பதிவு செய்வதை
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்தி
3.விஷக் கிருமிகளை ஒடுக்கி உங்கள் உடலுக்குள் அறியாத சேர்ந்த தீமைகளைத் தூய்மையாக்கிப் பழக வேண்டும்.

தங்கத்திற்குள் செம்பும் வெள்ளியும் வைத்து ஆபரணங்கள் செய்தாலும் அவைகளும் அதிலே இரண்டறக் கலந்து விடுகின்றது. மீண்டும் நகை செய்ய வேண்டும் என்றால் அவைகளைப் பிரிக்க நாம் திரவத்தை ஊற்றித் தங்கத்தைச் சுத்தமாக்குகின்றோம்.

இதைப் போலத்தான் எல்லாவற்றையும் ஒளியாக மாற்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால்… உடலிலுள்ள உறுப்புகளில் அதை அடிக்கடி செலுத்தப்படும்போது
1.விஷக் கிருமிகள் காற்றுடன் வந்து நம்முடன் கலந்திருந்தாலும்
2.அது பலவீனமாகி நல்ல உணர்வின் தன்மையாக மாற்றிவிடும்.

ஆனால் நோய்களையும் கிருமிகளையும் அகற்ற விஞ்ஞான அறிவு கொண்டு உடலில் உள்ள இரத்தங்களில் மருந்துகளைச் செலுத்தப்படுபோது உடல் முழுவதும் பரவி தீமையின் உணர்வை மாற்றுவது போல மாற்றினாலும்
1,கடுமையான மருந்துகளைக் கொடுக்கப்படும் போது
2.உடலில் உள்ள கிட்னிக்கு வரப்படும்போது அதைப் பலவீனப்படுத்தி
3.மறுபடியும் வேறொரு நோய் வருகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முறைப்படி நீங்கள் செயல்படுத்தும் போது உங்களுக்குள் வந்த தீமைகளையும் நோய்களையும் நீக்கும்… நம் கிட்னியையும் வலுவாக்கும்.

வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும்…? எப்படிச் சீர்படுத்த வேண்டும் என்ற நிலைகளையும் நாம் பெற முடியும்.

ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான். இருந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வால் வேதனைப்படுவதும் கவலைப்படுவதும் வெறுப்படைவதும் கோபப்படுவதும் தற்கொலை பண்ணுவதும் இந்த மாதிரி நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

ஆக மனிதனின் ஆசைகள் நிறைவேறவில்லை என்றால்…
1.நல்லது செய்து நல்லதைப் பழக்கப்பட்ட மனிதன்…
2.நல்லது செய்தே நொந்து போன மனிதன்
3.இது என்ன வாழ்க்கை…? என்று பேய் மனமாகி
4.இன்னொரு உடலுக்குள் சென்று அதே ஆசையின் உணர்வுகளாகி அவனையும் வீழ்த்தி
5.அதிக வேதனையை உருவாக்கிக் கொண்டு அடுத்து மனிதனல்லாத பிறவிக்கே போய் விடுகின்றது.

இது போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு அருள் உணர்வு பெற்று அருள் வாழ்க்கையில் நீங்கள் வாழ எமது ஆசிகள் (ஞானகுரு) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

குரு அருள் பெற்று… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… சந்தர்ப்பத்தால் அறியாது சேரும் தீய வினைகளை நீக்கி… அருள் உணர்வைப் பெருக்கி… உடல் நலம் பெற்று மன பலம் பெற்று… இந்த வாழ்க்கையில் அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்து… பிறவியில்லா நிலை அடையும் அந்த அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும்.

குடும்பத்தில் பண்பும் பாசமும் பரிவும் வளர்ந்து… தொழிலில் அரவணைத்து அன்புடன் வாழும் அருள் சக்தி பெற்று… தெளிந்த மனமும் மகிழ்ந்த உணர்வும் பெற்று… அருள்வாழ்க்கை வாழ்ந்து பேரின்ப பெருவாழ்வு பெற
1.இங்கே உபதேசித்த உணர்வுகள் உள் நின்று உங்களுக்கு நல்வழி காட்டி
2.அருள்வழி வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழ்ந்திடும் அருள்சக்தி பெற
3.எமது அருளும் குரு அருளும் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்.

Maharishis worlds

சாதாரண வாழ்க்கையிலிருந்தே மெய் ஞானத்தைப் பெற்ற ஞான ரிஷிகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

1.இச்சரீர உணர்வில் பெறும் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும்
2.அதிலே வரும் அந்தத் துன்ப உணர்விலிருந்து மீளும் நிலை எப்படி…? என்று அறிந்து
3.தன் வாழ்க்கையில் மோதப்பட்ட அத்தகைய சம்பவங்களினால் தான் சகல ஞானிகளும் மகரிஷிகளும் உருவானார்கள்.

வால்மீகியார் வேட்டையாடிப் புசிக்கும் வேடுவ குலத்தில் பிறந்து வேட்டை ஆடச் சென்ற காலத்தில் ஜோடியாக இருந்த இரண்டு புறாக்களில் ஒன்றை அம்பெய்து வீழ்த்துகின்றார்.

வீழ்ந்த புறா வேதனையில் துடிப்பதையும் வேதனையில் துடிக்கும் புறாவின் நிலையை அதனுடைய ஜோடிப் புறா பார்த்துத் துடிதுடிக்கின்றது.

பாச உணர்வால் துடிதுடிக்கும் புறாவின் வேதனையை தன் எண்ணத்தின் உணர்வில் உற்றுப் பார்த்த வேடனான வால்மீகியார்…
1.தாக்கும் நிலையை விடுத்துத் தன் ஞானத்தின் உயர்வை
2.வானை நோக்கி ஏகும் போது உண்மையை உணர்கின்றார்.

அந்த எண்ண அலைத் தொடரைக் கொண்டு அன்று அவருக்குப் பிறந்த ஞானம்தான் இராமாயணக் காவியமாக உருவாகியது.

அதற்குப் பிந்திய காலத்தில் மீனவனாய்ப் பிறந்த வியாசர்… மீன் பிடித்துத் தன் வாழ்க்கையை நடத்திச் சென்ற வழித்தொடரில்… கடலில் மீன் பிடிக்கச் சென்ற பொழுது கடலில் விழுந்து தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு மீன் (டால்பின்) அவரைக் கரை சேர்க்கின்றது.

1.எந்த மீன் இனத்தைத் தான் இம்சித்தோமோ அதே இன ஜீவன்
2.தன்னைக் காத்ததை எண்ணி அப்பொழுது ஏங்குகின்றார்.

அந்த நேரத்தில் உதித்த ஞானத்தின் உணர்வுதான் அவரின் உயர் ஞான சித்தில் மனித வாழ்க்கைக்கு உயரும் பக்குவமான “கீதையின் உபதேசமாகத் தன் தத்துவத்தை” வடித்து வெளிப்படுத்தினார்.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்… இந்த மனித வாழ்க்கையில் மனிதன் எந்த நிலைக்குச் செல்ல முடியும்…? எதை எதைப் பெற முடியும்…? என்ற ஞான உணர்வில் அகஸ்தியர் காடுகளில் ஜெபமிருந்தார்.

அப்பொழுது ஓரிடத்தில் பிரசவ வேதனையுடன் ஓர் பெண்ணின் அழு குரல் கேட்டு அருகில் சென்று பார்க்கும் பொழுது… குழந்தையைப் பிரசவித்த நிலையில் நீருக்காக அத்தாய் அழுவதைப் பார்க்கின்றார்.

அது படும் வேதனையைப் பார்த்து அப்பெண்ணைக் கூட்டி வந்த பெண்ணும் தாகம் தீர்க்கத் தண்ணீருக்கு ஓடிய நிலையைக் கேட்டு அறிகின்றார்.

அப்பெண் தாகத்திற்காகத் துடிக்கும் நிலையறிந்து தண்ணீர் கொண்டு வருவதற்குள் தாகத்தால் அந்தத் தாய் உயிர் நீத்துவிடுகின்றது.

இதைக் கண்ட அகஸ்தியர் இத்தனை காலங்களாக தன்னால் சாதிக்க முடியாத ஜெப சக்தியை நாம் பெற்றுள்ளோம். இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பெண்ணின் தாகத்திற்கு
1.நீரைக் கொடுக்கக் கூடிய சக்தி இருந்திருந்ததென்றால்…
2.தாகத்தால் உயிர் நீத்த அத்தாய்க்கு
3.தன்னால் நீர் தர முடிந்திருக்கும் என்ற உணர்வின் ஏக்கம் கொள்கின்றார்.

அந்த எண்ணத்தைக் கொண்டு வீரிய ஜெபம் இருக்கின்றார். அதன் வழி வந்த ஞானத்தால்
1.தான் பெற்ற அகத்தின் உணர்வின் ஸ்திரத்தால் அகஸ்தியர் என்ற நாமம் பெற்று
2.அவரின் சித்தின் உயர்வின் ரிஷி சக்தியால்…
3.அவர் அமர்ந்திருந்த இடங்களில் எல்லாம்
4.ஜீவ நதிகள் உற்பத்தியாகும் வழித்தொடர் உருப் பெறுகின்றது

மனித உணர்வுக்கு ஒத்த ஜீவ நீர் அலைத் தொடரில் “தன் சக்தியை” இன்றும் செயலாக்கிக் கொண்டுள்ளார்.

இப்பூமியில் குறுகிய காலத்தொடரில் கொங்கணவர் பெற்ற வழித்தொடரும் இதே முறையில் தான்.
காட்சி:
குன்றுகள் போன்று சிறு சிறு மலைகள் தெரிகின்றன. மேடான ஒரு மலையில் ஓலை வேயப்பட்டுச் சிறு சிறு குடிசைகளும் அதற்குப் பக்கத்தில் சாணியைக் கொண்டு மெழுகிய தரை விசாலமாகவும் தெரிகின்றன.

அதற்குச் சிறிது தூரத்தில் சிறு சிறு பையன்கள் குதித்து விளையாடுவதைப் போன்றும், விளையாடும் பையன்களைப் பார்த்து அந்த வழியாகச் சிறு மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு வந்த பையன் மற்றச் சிறுவர்களுடன் தானும் விளையாடப் போகின்றான்.

எதிர்பாராது ஓர் கூர்மையான கல்லில் இடிபட்டுப் பலத்த காயமுடன் விழுந்து அலறுகின்றான். குடிசையிலிருந்த ஓர் தாய் அச்சிறுவனை அக்குடிசைக்குள் படுக்க வைத்து அச்சிறுவனுக்கு உண்டான காயங்களுக்கு மருந்திட்டுப் பாதுகாக்கின்றது.

பின் அதே சிறுவன் அத்தாயுடன் சிறிது வளர்ந்த நிலையில் அத்தாய்க்கு உதவியாக மருந்து அரைத்துத் தருகின்றான்.

அதன் பிறகு ஓர் கல்லறையும் அக்கலறையில் மண் மேட்டில் அதே சிறுவன் மீண்டும் வளர்ந்த நிலையில் அக்கல்லறையின் கால்மாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அக்கல்லறையிலிருந்து அச்சிறுவனுக்கு உதவிய தாயே வெளிச்சமுடன் கூடிய உருவமாய் அச்சிறுவனின் உருவமுடன் ஒன்றியதைப் போன்றும்… மேடான ஓரிடத்தில் ஓர் மரத்தை வெட்டி அம்மரம் ஐந்து ஆறு அடி உயரத்தில் உயர்ந்த மேடை போன்று இருப்பதைப் போன்றும்… அந்த இடத்தில் சிறுவனாய் இருந்து பெரியவனான அப்பையன் அமர்ந்திருப்பதைப் போன்றும்… அதே பையனின் உருவம் வயது முதிர்ந்த நிலையில் தெரிகின்றது.

மற்ற ரிஷிகள் தெரியும் பொழுது அடர்ந்த முடி தெரியும். ஆனால் இவரின் நிலை சிறு சிறு முடியுடன் சன்னமான தேகமுடன் அமர்ந்திருப்பதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

அவரை வணங்கி யாரோ ஆசீர்வாதம் கேட்கும் பொழுது… என்னிடம் ஒன்றுமில்லை… அத்தாய் சக்திதான்…! என்று அத்தாயை எண்ணி அவர் வணங்குகின்றார்.

அவருக்கு முன் ஒளியாக அத்தாயின் உருவம் தெரிந்து அத்தாயிடம் தான் ஆசீர்வாதம் பெற்றுத் தன்னிடம் ஆசீர்வாதம் வேண்டி நின்றவர்களுக்கு இவர் அருள் புரிகின்றார்.

இதனுடைய உண்மைத் தத்துவம் அனாதையான சிறுவன் பட்ட துன்பத்தை நிவர்த்தித்து ஆதரவு தந்து அத்தாயின் சக்தியால் உயர்ந்த கொங்கணவர்…
1.அத்தாயின் உணர்வுடனே தன்னையும் ஐக்கியப்படுத்தி
2.தனக்கு ஆதரவு தந்து தன்னை உருவாக்கிய அத்தாய் சக்திக்குத்தான் தன் சக்தி சொந்தமென்று தவிர்த்து
3.தன்னை உயர்த்திக் கொள்ளாமல் தாயின் ஜெபத்துடனே தன் உயர்வைக் கொண்டு
4.தாயின் உயர்வுடனே சகல சித்துத் தன்மையையும் பெற்ற பக்குவ நிலை கொண்டு செயல்பட்டார்.

ரிஷி சக்திகளின் உண்மைத் தொடர்பு ஆரம்ப வாழ்க்கை நிலைகள் எல்லாமே சகல மனிதர்களை ஒத்த நிலைதான்…!

ஆனால்… தங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய
1.எண்ணத்தின் உணர்வில் எதிர்ப்படும் மோதல் காலங்களில்
2.ஞானத்தின் உயர் ஞானத்தைக் கொண்டு உயர்ந்தவர்கள் தான் சகல மாமகரிஷிகளும்.

வாலி – விஷம், சுக்ரீவன் – துருவ நட்சத்திரம் இருவரும் சகோதரர்கள்

விநாயகனை ஏன் முழு முதல் கடவுள் என்று சொல்கிறோம்…?

நாத விந்துகள் ஆதி நமோ… நமோ… அருணகிரிநாதர் சொன்னது…

சாஸ்திரங்கள் நமக்குக் கூறும் தெளிவான நிலைகள்

greatest in life

ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய இன்னல்கள் வந்தாலும்…
1.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள் நமக்குள் “அது பெரிது… இது பெரிது” என்ற நிலையை உதறித் தள்ளிவிட்டு
2.நாம் பெறும் மெய் வழியே பெரிது…! என்றும்
3.நாம் செயல்படுத்தும் செயல்களினால் பிறர் மகிழ…
3.அவர்களின் மகிழ்ச்சியை நாம் பார்ப்பதே நமக்குப் பெரிது…! என்றும்
4.அந்த மகிழ்வான உணர்வால் நமக்குள் விளையும் அந்த ஒளியின் தன்மையே நமக்குப் பெரிது…! என்றும்
5.இந்த மகிழ்ச்சியின் ஓட்டத்தையே நாம் ஒவ்வொரு நிமிடமும் பெற வேண்டுமென்றும்
6.இந்த எண்ணத்துடனேயே நம் வாழ்க்கையை வழி நடத்திட வேண்டும்,

ஏனென்றால் இப்படி எந்த உயர்ந்த நோக்குடன் இந்தக் கருத்துக்களை உற்று நோக்குகின்றீர்களோ அந்த மெய் ஞானிகள் சென்ற மெய் வழியை நீங்கள் எளிதில் பெற முடியும்.

இங்கே உபதேசிக்கும் மெய் ஞானிகளின் எண்ண ஒளிகள் உங்களுக்குள் பதிய வேண்டுமென்றால் அதைப் பெற வேண்டும் என்று எந்த அளவுக்கு நீங்கள் ஏங்கிச் சுவாசிக்கின்றீர்களோ அது எல்லாம் உங்களுக்குள் அருள் ஞான வித்துக்களாகின்றது.
1.உங்கள் உயிருக்குள் இது பட்டு…
2.அந்த மெய் ஞானியின் உணர்வின் அலைகளை உங்களுக்குள் ஓங்கச் செய்யும்.

ஆகவே இங்கே கொடுக்கும் உபதேசங்களை நீங்கள் வரிசைப்படுத்தி எண்ணிப் பாருங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள்… எளிதில் நீங்கள் அதைப் பெற முடியும். உங்களுக்குள் ஒளியான உணர்வை வளர்க்க முடியும் ஏனென்றால் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள் தான் நாம்.

ஒரு பலகாரம் செய்யும்போது அதைப் பக்குவப்படுத்திச் சுவை கொண்டதாக ஆக்குவது போன்று
1.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் மெய் ஞானியின் அருள் சக்திகளை
2.தியானத்தால் எடுத்து அதைச் சுவாசித்து அதை வலுவாக்கிக் கொண்டால்
3.நம் சொல்லுக்குள் இனிமையும் செயலில் புனிதமும் பெறும்
4.அந்த ஆற்றலின் தன்மை நாம் பெற்று. நாம் மகிழலாம்
5.நம் மூச்சு பிறரை மகிழச் செய்யும்… நலம் பெறச் செய்யும்… இன்புறச் செய்யும்.

இதைப் போல நாம் ஒவ்வொன்றும் பெறுவோம்…! என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கனிக்குள் மறைந்த வித்தினைப் பெறும் நிலை -சித்திரைக் கனி விளக்கம்

சித்திரை – சிறு திரையை நீக்கும் முறைகள்

ஒரு நெல் தன் வாய் திறந்து காந்தப் புலனறிவைக் கவர்ந்து தனக்குள் சத்தைக் கவர்ந்து எப்படி மூடிக் கொள்கின்றது

பிறர் உணர்வுகள் அவர்களுக்குள் கனியானது நமக்குள் வித்தாக எப்படி இணைகின்றது

scince addiction

ஆதிசங்கரர் காலத்திற்குப் பின் மெய் வழி செல்லும் பாதையே மாறி விட்டது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும் ஆத்ம வலுக் கொண்டு ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு உயர் காந்த மின் ஒளியை ஜெபத்தால் எடுக்கும் நிலைக்கு வளர வேண்டும்.
1.இப்படிப்பட்ட வாழ்க்கை தொடரில் வளர்த்துக் கொள்ளும் உயிராத்மா இணைப்பில்
2.கணவன் மனைவியின் கூட்டு ஜெபத்தால் மனிதன் தெய்வ நிலை பெற முடியும்.

அண்டத்தின் அகிலமாய்… ஆதி சக்தியின் அனைத்துப் படைப்பிலும்…
1.ஆண்டவன் என்ற உயர்ந்த நிலையில்
2.அதன் தொடர் பெற்று வளரும் தன்மையை இறை நிலையாக்கி
3.இறை சக்தி கொண்டு… இறை உணர்வு பெற்று…!
4.தெய்வத் தன்மை கொள்ளும் தொடர்பு நிலை தான் “இயற்கையின் உண்மை நீதி நிலை…!”

மனிதனின் எண்ணத்தின் உணர்வில் பகுத்தறியும் உயர் ஞானத்தின் வழித் தன்மை கொண்டு இறை நிலை பெற்று… இறை சக்தியாய்… இறை உணர்வு குணத்தை… இச்சரீர வாழ்க்கையில் வலுப்பெறும் வளர்ச்சிக்கொப்ப… மனிதன் தெய்வமாகும் நிலை உண்டு.

மனித வாழ்க்கைக்குத் தேவையானதை… நாளை செயல் கொள்ள இன்றே சேமிக்கும் செயலை… அந்தத் திறமை கொண்டு வழி அமைக்கும் பக்குவம் “மனிதனுக்குதான் உண்டு…!”

வாழ்க்கையின் நடைமுறைக்கு உழுது பயிரிட்டுப் பலன் பெற்றுத் தான் இன்றைய மனிதன் சமைத்து உண்ணுகின்றான்.

உடலின் சுக நிலைக்கு ஏற்ற பல வழி முறைகளைத் தன் ஞானத்தால் மனித வாழ்க்கை நடைமுறையில் செயல்படுத்தும் நாம்…
1.நம் ஞானத்தின் உயர்வால் உயிராத்மாவைத் தெய்வத் தன்மை கொள்ளும் பக்குவத் தொடர் தான்
2.இங்கே இந்த உபதேச வாயிலாக விளக்கப்படும் இயற்கையின் உண்மையின் நியதிகள்.

மிருகங்கள் தனக்குக் கிடைத்ததை உண்டு உறங்கும் வாழ்க்கையாக அதனின் உணர்வின் எண்ணத்தின் நிலை இருந்தாலும் உயர் ஞானத்தால் செயல்பட முடியாத உண்மை நிலையை அன்றே ஞானிகள் தன் உணர்வின் எண்ணத்தால் கண்டுணர்ந்தனர்.

ஆனால் காலப் போக்கில் ஞானத்தின் வழி செல்வது என்பது பல நிலைகளில் மாற்றப்பட்டு… உண்மைத் தத்துவங்கள் மறைக்கப்பட்டு விட்டது.

தன்னுள் உள்ள இறை சக்தியை இறை உணர்வாக்கும் நிலையை மனிதன் அறிய முடியாமல்
1.இறைவன் என்பதையே யாரென்று அறிய முடியாமல்
2.பூஜித்துப் பலன் காணும் வேத விற்பனர்களிடம் அடிமைப்பட்டு
3.சிதறுண்ட நிலையாகத் தான் இன்றைய நிலை உள்ளது.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே உணர்வின் எண்ணத்தில் தன் எண்ணத்தாலே சக்தி பெற்று… உயர்வை வளர்க்கும் உயர்ந்த தத்துவத்தை ஆதிசங்கரர் அத்வைத முறைப்படுத்திக் காட்டினார்.

அதற்கடுத்து வந்தவர்கள் நான்கு வகை வேதங்களாக்கி… மனித உருவங்களை அமைத்து… மந்திர ஒலி எழுப்பி… அறியக்கூடிய நிலைக்கும் பக்தி மார்க்க நிலைக்கும்… வானசாஸ்திரத்தின் தொடரை அறியவும் கொண்டு சென்றனர்.

அந்த நான்கு வேதங்களின் தொடரில் இது தான் பெரிது… இல்லை அது தான் பெரிது… என்று பல வேதங்களைப் பிரித்து மனிதனின் எண்ண உணர்வால் தெய்வத் தன்மை பெறக்கூடிய வழியை மாற்றி விட்டனர்.

அரசு நிலைக்கும்… குடிமகன் நிலைக்கும்.. நாட்டியக்கலை மற்ற இசைக்கலைகளுக்கும்… வேதத்தின் விற்பன்னர்களுக்கும்… என்று நான்கு மறையாக்கி வகுக்கப்பட்ட நிலையில் அந்தந்தத் தொடருக்குப் பல நிலைகளைப் பிரித்தனர்.

அது மட்டுமல்லாமல் காலப்போக்கில் ஒலி அலையின் தொடர் பெற்று உருவகங்கள் மாறி மாறி
1.அன்று கண்ட ஞானியின் உண்மைத் தத்துவத்தை
2.இன்றைய நிலையில் உணரும் தன் ஞானமும் அற்றுப் போய்
3.விஞ்ஞானப் பிடிப்பிலேயே வாழுகின்ற நிலை எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால்… ஞானத்தின் வழித் தொடரில் உயர் ஞானமாக்கும் ஆத்ம தியானத்தால்… தன்னைத்தான் தான் உணரும் பக்குவம் பெற்று மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான “தெய்வ நிலை” பெற முடியும்

 தீய உணர்வுகள் கனியாவதற்கு முன் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டும்

சித்திரை – சிறு திரை விளக்கம்

கார்த்திகையன்று மெய்ஞானச் சுடரை உயிருடன் ஒன்று ஏற்றிடல் வேண்டும்

12 மாதங்களிலும் அருள் சக்திகளைப் பெறச் செய்யும் நம் சாஸ்திரங்கள்

WORLD PROTECTION

அன்றைய ஞானி எப்படித் தன் உயர் ஞானத்தால் ரிஷி சக்தி பெற்றான்..? இன்று நம் நிலை என்ன…?

 

அன்று பேராசையின் நிலைகள் கொண்டு… பொருளுக்காக ஏங்கி அரசனாக இருந்து ஆட்சி செய்தவன் தான் அத்திரி. தன் குடிமக்களினுடைய ஆசையை நிறைவேற்றித் தன் புகழுக்காக ஏங்கியவன் தான் அத்திரி

இருந்தாலும் தன்னுடைய மக்களின் ஆசை தன்னுடைய பிள்ளை என்ற நிலைகளை மறந்து தன்னுடைய ஆசையென்ற நிலையையே வளர்த்துக் கொண்டான்.

அவன் செய்யும் தவறின் நிலைகள் தாங்காது அங்கே குடிமக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கப்படும்போது பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளை உணரத் தொடங்குகின்றான்.

மனிதன் இறந்தபின் என்ன ஆகின்றான்…? என்ற நிலைகள் சிந்திக்கின்றான்… உணர்கின்றான். அரசைத் துறந்து காட்டுக்குள் சென்று கடுந்தவங்கள் செய்து அகஸ்தியரின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெறுகின்றான்.

1.ஒவ்வொரு மனிதனையும் மகிழச் செய்வதற்கு என்ன வழி…? என்று அறிந்து
2.மீண்டும் மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து
3.தன் உணர்வின் நல் எண்ணத்தைப் பாய்ச்சி ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து
4.அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து
5.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி
6.தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றி விண் சென்றார் அத்திரி மாமகரிஷி.

அன்று அரசனாக இருந்த நிலையில் எல்லை கடந்த நிலைகள் சென்ற பின் தான் தன்னை உணர்ந்து… அரசைத் துறந்து… உயர்ந்த ஆற்றலைப் பெற்று விண்ணுலகம் சென்றார் அத்திரி.

அது போன்று தான் இன்று மிகவும் விஷத் தன்மையான ஆற்றல்மிக்க நிலைகள் பரவிக் கொண்டுள்ளது. ரேடியோ டி.வி. இவைகளை எந்த அளவுக்குக் கவனிக்கின்றோமோ அந்த அலை வரிசைகள் எல்லாம் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

விஞ்ஞானிகள் பூமிக்கு வெளியிலே பல செயற்கைக் கோள்களை அமைத்துள்ளனர். அதன் மூலமாகத்தான் இன்று டி.வியும் ரேடியோவும் மற்றதும் நாம் பார்க்க கேட்க முடிகின்றது.

இருந்தாலும் அந்தச் செயற்கைக் கோள்களை அமைத்த நிலைகள் கொண்டு அதன் மூலம் மற்ற விண்ணிலிருக்கும் விஷத் தன்மையான நிலைகளும் அதிலே கலக்கப்பட்டு ஒலி/ஒளி பரப்படும்போது சிறுகச் சிறுகச் சேர்க்கின்றனர்.

செயற்கைக் கோளின் வழியாக வரும் அலைகளை வீட்டிலே அமர்ந்த இடத்திலிருந்து ரேடியோவும் டி.வி.யும் வைத்து ரசித்துக் கொண்டிருக்கின்றோம்.

உணர்வைத் தூண்டும் நிலைகளில் நாம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சில எதிர்நிலையான கதிர்வீச்சுகளை அவைகளில் கலந்து விட்டவுடனே கேட்டுக் கொண்டிருப்போரின் புத்திகள் சிதறிவிடும்.

என் பிள்ளை எது…? என் வீடு எது…? என்ற நிலையில் எல்லாவற்றையும் நொறுக்கி விட்டுத் தன் பிள்ளைகளையும் கொன்று விட்டு… இது என்ன உலகம்…? என்ற இருண்ட நிலைகளுக்குப் போகும் காலம் நெருங்கிவிட்டது.
1.கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
2.இது கூடிய சீக்கிரம் நம் விஞ்ஞானத்தில் நடக்கும்.

விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் கண்டு கொண்டார்கள்… பேரண்டத்தின் நிலைகளையும் கூடக் கண்டு கொண்டார்கள். இவர் (ஞானகுரு) என்ன பைத்தியக்காரர் மாதிரி எதையோ சொல்கிறார்…! என்று நினைக்க வேண்டாம்.

ஆனால் அந்த மாதிரியான அழிவின் நிலைகள் நெருங்கிவிட்டது…! இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த மெய் ஒளியைப் பெற்றால் தான் முடியும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காப்பதற்காக வேண்டி நமது குருநாதர் காட்டிய முறை கொண்டு சில உணர்வுகளினுடைய நிலைகளில் தொடர்பு கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.

குருநாதர் எமக்குத் தெரியாமல் எமக்குள் பல சக்திகளைக் கூட்டினாரோ அதே மாதிரித் தான் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத் தெரியாமலே பல சக்திகளை உங்களுக்குள் ஊட்டிக் கொண்டே இருக்கின்றேன்.

1.ஆகவே விஞ்ஞானத்தால் விளைந்த அந்த அலைகள்
2.உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது அதை மாற்றும் நிலைக்கு நாம் வர வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஒரு பத்து நிமிடமாவது தினசரி எடுத்துக் கொள்ளுங்கள்
4.நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டியபின் மகரிஷிகளின் ஒளியை நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் பெறுங்கள்.
5.அந்த அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியை நீங்கள் பெறுவதற்கு எமது அருளாசிகள்.

இலட்சுமி இலட்சுமணா – விளக்கம்

முருகா அழகா…!

விநாயகர் வள்ளியை முருகனுக்கு மணம் முடிக்க உதவினார்

cosmic relativity

உயர்ந்த சக்தி பெற்ற மகரிஷிகள் மனிதரைத் தேடி வருவதன் காரணம் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காட்சி: பிரகாசமாக சூரிய வட்டம் தெரிந்து பல ரிஷிகளின் உருவமும் அவர்களின் செயல் முறையும் தெரிகின்றது. உருவம் தெரிந்து அவ்வுருவம் அப்படியே பிரிந்து… ஒளியாக ஒரு உருவம் பிரிந்த பிறகு… மீண்டும் பல உருவங்களாகவும் தெரிகின்றது.

பல கோடி ரிஷிகள் உள்ள பொழுது இப்பூமியில் இன்று தன்னைத் தானே உணர முடியாமல் வாழ்கின்ற மனிதனின் மேல்
1.அவர்கள் வளரத் தன் சக்தியை ஏன் உபயோகித்துச் செயல்பட வேண்டும்…?
2.சிருஷ்டியின் தன்மையையே சிருஷ்டிக்கும் ரிஷிகள்
3.மனிதனின் உணர்வுடன் ஒட்டிச் செயல்படும் நிலைகள் எதற்கு…? என்ற வினா எழும்பலாம்.

சூரியனும் பூமியும் ஒன்றின் ஈர்ப்புத் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் தொடர்ந்து ஓடிக் கொண்டே செயல்படுகின்றது. ஈர்ப்பின் பிடிப்பில் இருந்து எந்த மண்டலமும் தனித்த ஒன்றாகச் சுழன்று செயல்பட முடியாது.

1.ஒன்றின் தொடர்பு பெற்று…
2.ஒன்று ஓடும் ஜீவ வளர்ச்சி ஏற்படும் தொடரில் தான்
3.எல்லா மண்டலங்களின் சுழற்சியும் உள்ளது.

இச்சுழற்சியின் மையக் கருவாக ஈர்க்கப்படும் சக்தியின் தொடர் வளர்ச்சியுற்றுக் கொண்டே… அத்தொடரின் வலுக்கொண்டு வளரும் தொடரில் தான்… மண்டலங்களும் அதில் வளரும் தொடரும் செயல் கொள்கின்றது.

அதைப் போன்று தான் சகல சித்து நிலையின் படைப்பின் படைப்பையே படைக்கவல்ல “ரிஷிகளின் தொடர்பிற்கு…” உணர்வின் எண்ணம் கொண்ட ஜீவ காந்த ஒலி சரீரத் தொடர்பின் எண்ணம் கொண்டுதான் அந்த ரிஷி சக்திகளின் மூலக்கருவே செயல் கொள்கின்றது.

1.தன்னுடைய வலுவின் தொடர் வலுவில் வளர்ப்பை வளர்க்கவல்ல நிலைக்கு…
2.ஜீவ காந்த உணர்வு எண்ண செயல் சக்தியைக் கொண்டு…
3.ரிஷிகளின் தொடர்புடன் மனித எண்ணத்தின் தொடர்பு சுழற்சி வலுப் பெறப் பெற…
4.ரிஷிகளைக் காட்டிலும் மனித உணர்வால் ஜீவ செயலில் உபதேசிக்கும் உண்மை உயர் ஞானத் தத்துவ ஈர்ப்பினால்…
5.மனித உணர்வின் அன்பைப் பெற்றானானால்…
6.மனிதச் சரீரத்தில் இருந்தே பலரின் அன்பான அலையின் வலுவைக் கொண்டு…
7.இச்சரீர ஆத்மாவிற்கு உயர்ந்த முலாமை வளர்த்துக் கொண்டு…
8.இச்சரீரத்தில் இருந்தே அஷ்டமாசித்தின் ஒளி சக்தி பெற்று உயர்வு நிலை பெற…
9.இச்சரீரத்தின் எண்ணத்தின் உயர்வில் வலு நிலை கூடுகின்றது.

முருகன் சூரனை அடக்கிய நிலை 

கண்ணன் துகிலை உறிந்தான்

பீஷ்மரைப் பற்றியும் வாலியைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

ஞானிகள் கொடுத்த ஆலயப் பண்புகள்

lightning

குருநாதர் என்னை மின்னலைப் பார்க்கச் சொன்னதன் உட்பொருள்

ஒரு சமயம் குருநாதர் என்னை (ஞானகுரு) “மின்னலைப் பார்…!” என்றார்.

மின்னலைப் பார்த்தால்… “என் கண்கள் குருடாகிவிடும் சாமி…!” என்று சொன்னேன்.

நான் சொல்கின்றேன்… நீ மின்னலைப் பார்…! என்று மீண்டும் குருநாதர் சொன்ன பின் மின்னலைப் பார்த்தேன்.

ஒவ்வொரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அணுக் கதிரின் புலன் இயக்கங்கள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து எதிர்மறையாக மோதப்படும்போது
1.அது எப்படி மின்னல்களாக உருப் பெறுகின்றது…?
2.மற்றதை எப்படி மாய்க்கின்றது…?
3.மற்றொன்றோடு எப்படி இணைகின்றது…?
4.அணுக்களோடு எப்படி இணைகின்றது…?
5.இணைந்த பின் அந்த இசைந்த ஓசைகள் எவ்வாறு மாறுபடுகின்றது…? என்று
6.இதை எல்லாம் தெளிவாக்குவதற்குத் தான் மின்னலைக் காட்டுகின்றார் குருநாதர்.

உயிரே கடவுள் என்ற புத்தகத்தில் மின்னலைக் கண்ட அனுபவத்தை முதலில் எழுதியுள்ளேன். ஆனால் அன்று விளக்கவுரையை முழுவதும் கொடுக்கவில்லை. இன்று அந்த விளக்கவுரைக் கொடுக்கின்றேன்.

உண்மையின் நிலைகளை ஒரு முறை காட்டும் சில விதிமுறைகளைத் தான் அதிலே அங்கே வெளிப்படுத்தியது. ஏனென்றால் அதை ஒவ்வொரு தருணத்திற்குத் தக்கவாறுதான் வெளிப்படுத்த முடியும்.

1.ஒரு உணர்வில் ஒன்றுடன் ஒன்று கலந்து
2.உணர்வின் இயக்க இசைகள் மாறுவதும்
3.மணங்கள் மாறுவதும்
4.உணர்ச்சிகள் தூண்டுவதும்
5.உணர்ச்சிகள் ஒதுங்குவதும் என்ற நிலைகள் எல்லாம்
6.வேதங்களில் உள்ள உபநிஷத்துக்களில் தெளிவாக்கப்பட்டுளது.

எதை எதனுடன் சேர்த்து… எதனின் உணர்வு கொண்டு அது உருப்பெறுகின்றதோ… அதை ரிக் என்றும் அதனின்று வெளிப்படும் உணர்வின் சத்தை சாம என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

உதாரணமாக ஒரு பூனை தன் கடுமையான உணர்வின் நிலைகள் கொண்டு ஒன்றைத் தனக்குள் இரையாக்கி தனக்குள் இரையாக்கிய உணர்வின் இசையாக அதிலிருந்து வெளி வருகின்றது.

அதே சமயத்தில் அந்தப் பூனையை உற்றுப் பார்க்கும் ஒரு எலியோ…
1.நுண்ணிய அலைகள் கொண்டு தன் செவிகளை ஒவ்வொரு திசையிலும் திருப்புகின்றது.
2.அந்தத் திசை திருப்பும் நிலைகள் வரும்போதுதான்
3.தன் செவிகளைக் கொண்டு இசைகள் ஒலிப்பதை நுகர்கின்றது.

அப்பொழுது சுருதிகள் (பூனையின் ஒலி ஓசைகள்) அதிகமாகும் போது எலிக்குள் இருக்கும் அதனின் உணர்வின் தன்மையை அது அடக்குகின்றது.

இந்த ஓசையின் உணர்வுகள் எலி உடலை உருவாக்கிய அணுக்களில் இணைந்தபின் அது ஒடுங்கி விடுகின்றது. இப்படி அது அடக்கும் நிலைகள் பெறுவதைத்தான் “அதர்வண” என்று பிருகு அன்று இதைச் சொல்லுகின்றார்.

ஏனென்றால் நட்சத்திர இனங்கள்…. ஒளி அலைகளை ஒளி பரப்பும் அந்த உணர்வின் அணுக்கள்… மற்றொன்றோடு சேர்த்து அதனை இணைத்து… இணையும் உணர்வாக மாற்றும் உணர்வு கொண்டது.

இப்போது லேசாக உங்களிடம் பதிய வைத்து விடுகின்றேன். இதனின் உணர்வின் நிலைகளை நீங்கள்
1.உங்களுக்குள் ஞானத்தால் பெருக்கிக் கொள்ளவும்
2.தீமைகளை அடக்கிடவும் அந்த மெய் ஞானியின் உணர்வை நீங்கள் பெறவும் இது உதவும்.

மனிதனாகப் பிறந்த நாம் நமக்குள் ஏற்படும் தீமைகளை அடக்கி… உணர்வினை அறிவின் ஒளியாக மாற்றி… ஒளியுடன் ஒன்றி “ஒளியின் சரீரமாக…” நிலை கொள்ள இது உதவும்.

Moogambika

மூகாம்பிகை என்ற மூன்று சக்தியின் இயக்கத்தைப் பற்றி கோலமாமகரிஷி உணர்த்திய உண்மைகள்

மூகாம்பிகை என்றால் மூன்று சக்தியின் தொடர்பு கொண்ட இயக்கம். ஒரு உயிரணுவிலும் அதே இயக்கமாகத் தான் இயக்குகின்றது. பூமியிலும் அதே நிலைகள் கொண்டு தான் இயங்குகின்றது.

1.பூமி சுழலும் போது வெப்பம் (1) ஆகின்றது
2.சுழற்சியால் ஏற்படும் வெப்பத்தால் ஈர்ப்பு சக்தி (2) வருகிறது.
3.அந்த ஈர்க்கும் சக்தியால் தான் எதைக் கவர்ந்து கொள்கின்றதோ (3) அதன் செயலாக
4.இந்த மூன்று நிலைகள் கொண்டு பூமி இயங்குகின்றது என்ற நிலை தான் “மூகாம்பிகை” என்பது.

ஆக… தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுவே மணம் ஞானம்.

அதே பொல் உயிரின் துடிப்பின் நிலைகள் கொண்டு அந்த இயக்கத்தால் வெப்பமாவதும்… அந்த இயக்கத்தினால் ஈர்ப்பு சக்தியாவதும்… ஈர்ப்பால் தனக்குள் கவர்ந்து எத்தகைய நிலையைத் தன்னுடன் இணைத்து அது இயங்குகின்றதோ அந்த இயக்கமே மூன்று சக்தி… “மூகாம்பிகை” என்று பெயர் வைத்தார்கள்.

அதனுடன் இணைக்கும் பொருள் எதுவோ… அப்பொருளின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது…? என்பதனையே கோலமாமகரிஷி மக்களுக்குத் தெரியப்படுத்தியது. ஆகவே அதற்குப் பெயர் மூகாம்பிகை என்று வைத்தார்.

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பத்திற்குப் பெயர் பராசக்தி அதனுடன் இணைத்து இயங்கும் சக்தியின் பெயர் லட்சுமி. என்றும் இவை அனைத்தும் சூரியனைக் கடந்து வெளி வரப்போகும்போது விஷம் இயக்கச் சக்தி… இந்த மூன்றும் சேர்த்து அது ஒரு சக்தியாகின்றது.

இயக்கத்தின் நிலைகள் கொண்டு சூரியன் சுழற்சியாகும் போது உருவாகும் வெப்பம் பராசக்தி என்றும் அதனுடன் இணைந்த காந்தத்திற்குப் பெயர் லட்சுமி என்றும் அதைக் கடந்து அந்த விஷத்தின் நிலையைத் தனக்குள் அது கவர்ந்து வரப்படும்போது ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

மூன்று சக்திகள் கொண்டு இயங்குவதால் அதையும் மூகாம்பிகை என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் நம் உயிரின் இயக்கம்…
1.தான் கவர்ந்து கொண்ட மணம்… ஞானம் என்ற நிலையில்
2.எதன் நிலைகள் கொண்டு அது கவர்கின்றதோ
3.அதன் இயக்கமாகத் தான் இயங்குகின்றது என்ற இந்த நிலையை நாம் உணர்வதற்குத்தான்
4.மூகாம்பிகை ஆலயமாக வைத்தார் கோலமாமகரிஷி.

இந்த கோலமாமகரிஷி. கடும் தவத்தால் கண்டுணர்ந்து தனக்குள் விளைய வைத்த சக்தியால் மண்ணாகி அணுக்களின் இயக்கம் எவ்வாறு இயங்குகின்றது என்றும் தனக்குள் கவர்ந்துணர்ந்த நிலை. இருப்பினும் அது எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனால் கண்டுணர்ந்து உணர்த்தப்பட்ட உணர்வுகள் தான்…!

1.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வலைகள் அனைத்தும் இன்று நம் பூமியில் படர்ந்துள்ளது.
2.அதை நுகர்ந்தவர்கள் அனைவருமே மகரிஷிகள் ஆகின்றனர்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று தனக்குள் அனைத்து சக்தியையும் அடக்கி ஆட்சி புரியும் நிலை பெறுபவர் எவரோ அவர்கள் அனைவரும் “மகரிஷி ஆகின்றார்கள்…!”

அதனால் தான் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமென்று திரும்பத் திரும்பச் சொல்வது…! அர்த்தமாகிறதல்லவா…!

மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே இருந்தாலும் பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும் போது
1.அதை உணரத்தான் பயன்படுத்த வேண்டும்
2.உணர்ந்தபின் அதை நீக்குதல் வேண்டும்.
3.அதாவது இன்று தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
4.ஆனால் தெரிந்த உணர்வுகள் நம் உடலிலே இணைந்திடக் கூடாது அதை நீக்கிடல் வேண்டும்.
5.தீமைகள் எதுவோ அதனை நீக்கி… நன்மையின் பயன் எதுவோ.. அதை ஆக்கப்பூர்வமாக மாற்றிடல் வேண்டும்.

காரத்தைத் தனித்து நாம் உணவாக உட்கொண்டால் காரத்தின் வேக உணர்வுகள் நமக்குள் சுவையற்றதாக மாற்றுகின்றது. ஆனால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவையோடு இணைக்கும் பொழுது சுவை மிக்கதாக மாற்றுகின்றது.

இதைப் போன்றுதான் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும்… பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள் படும் வேதனையைப் பார்த்து சொல்லால் கேட்டுணர்ந்தாலும்… உணர்ந்த அச்சக்திகளை எல்லாம் நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம்… ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீவினையாகச் செயல்படும் நிலைகளை மாற்றிடல் வேண்டும்.

பிறர் தீமையைக் கேட்டுணர்ந்து தீமையிலிருந்து விடுபட நாம் உதவி செய்கின்றோம் ஆனாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நாம் கேட்டுணர்ந்தபின் அடுத்த கணம்…
1.நம் முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை நாம் கவர்ந்து
2.நமக்குள் அடுத்து தீமை விளைவிக்கும் நிலையை
3.அந்தத் தீமை விளைவிக்காது சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.

அதைத்தான்… அகஸ்திய மாமகரிஷி தன்னுள் கற்றுணர்ந்த உணர்வுகளை கோல மாமகரிஷி கவர்ந்து அன்றைய மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

அவர் எவ்வாறு எடுத்துரைத்தாரோ அதனை நாம் கவர்ந்து கொண்டால் நம்மில் இருக்கும் தீமைகளை அகற்ற இது உதவும்.

வசிஷ்டாத்வைதம் – விளக்கம்

நம் நாட்டு ஞானிகள் காட்டிய ஆலயப் பண்புகள்

மகாமகம்

தமிழர் திருநாள் வீர விளையாட்டு எது..?

soul protecting importance

“பல நாள் பெற்ற ஆத்ம சக்தியைக் காக்கும் நிலையில்தான்” நம் ஜெப நிலை இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சாதாரணமாக ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டோமானால சில நாட்களில் அந்நீர் வழுவழுப்புத் தன்மை கூடி பாசி பிடிக்கின்றது.

“அவ்வழுவழுப்பு நிலை” ஏற்பட்ட பிறகுதான் அடுத்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே வளருகின்றது. “பிசின்” போன்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் அதன் ஜீவத்தன்மை முதிர்வு நிலை கொள்கின்றது.

அதுவே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி காய்ச்சும் பொழுது அப்பாத்திரத்திற்கு அடியில் மண் போன்று படிவங்கள் வெள்ளையாகப் படிந்து விடுகின்றது.

இதைப் போன்று…
1.மனித உணர்வில் எடுக்கப்படும் அலைத் தொடர்பின் உணர்வு
2.சரீரம் சமைக்கும் நிலை கொண்டு ஆத்ம அலையின் “படிவமாகி விடுகின்றது…”

ஆத்மாவின் வண்ணத் தன்மை கொண்டு பிரகாச நிலை ஒளி சக்திகளை இச்சரீர சமைப்பினால் மனிதன் பெற்றானானால் மனித சக்தியில் சித்து நிலை பெற முடியும்.

மகரிஷிகளின் உயர் காந்த அலையை… உணர்வின் எண்ணம் கொண்டு “விழி கொண்டு ஒளி பார்த்து இச்சரீரத்தின் உணர்வில் எடுக்கும் ஜெப முறையினால்…” மனித உணர்வின் சஞ்சலமற்ற சம உணர்வு வளர்ச்சியின் தியானத்தின் முறை அறிந்து… தன்னைத்தான் தான் உணரக்கூடிய வழி அறிந்தானானால்… தன் வாழ்க்கை செயலில் அமைதியையும் தன் ஆத்மாவின் உயர்வின் வழியையும் ஒவ்வொருவரும் பெறலாம்.

நம் தேவைக்குகந்த நெல்லைப் பயிரிடுகின்றோம். நிலத்தை உழுது பருவம் பார்த்துப் பயிரிட்டு அதற்குகந்த பாதுகாப்பு எல்லாம் செய்கின்றோம். பின் அதனுடைய பலனை நாம் கண்டு நெல்லை அறுத்து பக்குவமாய் சேமிக்கவும் முற்படுகின்றோம்.

ஆனால் அதை நாம் எடுத்துச் சேர்ப்பதற்குள் பெரிய மழை வந்தால் எல்லாம் அழிகின்றது. அதைப் போன்று…
1.தியானத்தின் மூலம் பல பக்குவமான முறைகளை இச்சரீரத்தில் வளர்த்துப் பலன் பெறும் பக்குவத்தில்
2.உணர்வில் மோதும் பலமான மாற்றத்தினால் பல நாள் செயலின் பலனை இழந்துவிடும் நிலை போன்று
3.சரீர உணர்வால் எண்ணத்தில் பலமாக மோதும் எதிர்ப்பைத் தாங்காமல்
4.தவறிவிடும் நிலை உணர்வின் எண்ணத்தில் மோதுவது உண்டு.

ஆகவே… நெல்லை அறுக்கின்றோம் என்றால் அந்த நேரத்தில் மழை வருகிறது என்றால் அதற்குண்டான வேகத்தைச் செலுத்திப் பெற்ற பலனைப் பாதுகாக்கத் துரிதம் கொள்கின்றோம் அல்லவா…!

அது போன்று… நம் வழிமுறையில் நல்லொழுக்கத் தொடரில் வளர்த்த வலுவை…
1.எதிர்ப்படும் மோதலிலிருந்து பாதுகாக்கும் துரிதமாக
2.எண்ணத்தின் துரிதத்தைத் தீயவைகளுடன் மோதாமல்
3.நல்லதைப் பாதுகாக்கும் உணர்வு ஜெபமாகத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்…! தன்னைத்தான் தான் உணரும் பக்குவத்திற்கு…!

peace and silence

“உரமேறிய கட்டையாக” நம்மை ஞான வழியில் உயர்த்திக் கொள்ளும் பக்குவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனுக்குத்தான் உணர்வின் எண்ணங்கள் பல நிலைகளில் பல வளர்ச்சியை வளர்க்கத்தக்க ஒளி நிலை கொண்ட உயிர் ஆண்டவனின் பிம்ப நிலை உண்டு.
1.உணர்வுகளை எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்ற
2.அந்த வழித் தொடரில்தான் ஞானமே பிறக்கும்.

உணர்வில் கார அலைகள் (கோப அலை) உந்தா விட்டால் வீரம் பிறக்காது. ஆனால் அந்தக் கோப உணர்வு ஏற்படும் காலத்தில் அதன் வளர்ச்சியை சரீரம் அதே தொடர்பில் வளர்த்துக் கொண்டதென்றால் விளைவு வேறாகிவிடும்.

காரமான மிளகாய் விதையை மண்ணிலே ஊன்றியவுடன் அது வளர்ந்து மூன்று மாதத்திற்குபின் அதன் வளர்ச்சியின் பலனை அம்மிளகாய் விதை வளர்த்த மிளகாயை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்று
1.இக்கார உணர்வான கோப நெடியை நாமெடுக்க
2.அதே உணர்வைச் சரீரம் வளர்க்க இதன் தொடர் அன்றே தெரியாது.
3.கோப குணத்தின் அணுக்கள் சரீரம் முழுவதும் வளர்ந்து அதனுடைய பலனாக
4.மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குப் பிறகு
5.வாதமோ இரத்தக் கொதிப்போ இதய வலியோ மனிதன் நிச்சயம் பெறுகின்றான்.

ஆகவே கோப உணர்வு உந்தும் நிலையிலேயே அதைத் தன் ஞானத்தால் வீரமாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி அந்த வீர உணர்வை நாம் பெறும் பொழுது
1.எண்ணத்தின் வலுக் கொண்டு உயர் ஞானம் பிறந்து
2.மீண்டும் அக்கோபமான உணர்வில் நாம் சிக்காமல் இருக்கும் நிலையாக
3.பாதுகாப்பு வேலியான சாந்த குணத்தை நாம் நமக்குள் அவசியம் வளர்க்க வேண்டும்.

கோப குணத்தின் காரமான உணர்வால் எப்படி உடலில் நலிவை ஏற்படுத்திக் கொள்கின்றோமோ அதைப் போன்று
1.அதே கோபத்தை வீரமாக்கும் ஞானத்தின் சாந்தத்தால்
2.ஆத்ம வலு சரீரத்தையே உறுதியான தன்மைக்கு
3.எதற்கும் அஞ்சாத “உரமேறிய கட்டை அவன்…” என்ற ஞானத்தின் வழித் தொடரைப் பெற முடியும்.

ஆக… உறுதியான எண்ணத்தின் செயலுக்கு இச்சரீரத்தை இக்கோப உணர்வு உந்தினால்தான் அதைச் செலுத்தும் நிலைக்கொப்ப “உறுதி நிலையோ… அல்லது நலிவு நிலையோ…” ஏற்படும் தன்மை கொள்கின்றது.

இதைப் போன்று தான் மனித உணர்வின் எண்ணத்தில் உந்தப்படும் குணத் தன்மை ஒவ்வொன்றையுமே “தன் ஞானத்தால்” பக்குவ குணத்தை நாம் பெறல் வேண்டும்.

இதன் தொடரில் தான் பய உணர்வு ஏற்படும் பொழுது பயத்தின் தொடர்பில் “மரண பயம்” என்ற கோழை உணர்விற்குச் செலுத்தாமல்
1.தைரியம் என்ற பல உணர்வைச் சாந்தமுடன் நாம் செலுத்தும் பொழுது மன பலம் கூடி
2.ஞானத்தால் சிந்திக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

குழந்தைகள் வளரும் நிலையிலேயே பயமுடன் கூடிய தைரியத்தில் மன பலம் கூடும் பக்குவத்தை வளர்க்கும் செயல் தான் “தந்தை சொல் மிக்க மந்திரமல்லை” என்று சொன்னதன் பொருள்…!

வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உபதேச உணர்வுகளை ஊட்டி குழந்தைகள் உயர் ஞானத்தை சிந்திக்கவல்ல மன பலம் கொண்ட தைரியத்தை ஊட்டி நாம் அவசியம் வளர்க்க வேண்டும்.

ஆனால் வெறுமணே பயத்தை ஊட்டி மரண பயம் என்ற உணர்வில் அச்சத்தை ஊட்டும் குழந்தை கோழையாகிவிடும்.

மேலும் அந்தப் பய உணர்வின் எதிர் அலையால் அக்குழந்தையே விபத்தில் சிக்கும் சந்தர்ப்பம் உண்டாகின்றது. விபத்துகள் நடப்பதெல்லாம் அச்சத்தின் உணர்வு வளரும் இத்தகைய பய அலையினால்தான்.

ஆக மொத்தம்…
1.மனித உணர்வின் எண்ணம் எதை எடுக்கின்றதோ
2.அதில் ஜீவன் பெறுவதைத்தான் மனைவியாக அன்று ஞானிகள்
3.தத்துவ நூல்களில் மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்கள்.

இப்படி… எந்தெந்த எண்ணத்தை எக்குணத்தில் இச்சரீரம் வளர்த்துக் கொள்கின்றதோ… அஜ்ஜீவ வளர்ச்சியின் பலனை சாந்தமான நற்குணத்தைக் கொண்டு… இருபாலரும் இல்லற இணைப்பின் இறை சக்தியின் உண்மையை உணர்ந்து…
1.உயர் காந்த மின் சக்தியை
2.உணர்வின் எண்ணத்தால் வளர்க்கும்
3.ஆத்ம ஐக்கிய இணைப்பினால் ரிஷித் தன்மை பெறலாம்.

நம பார்வதி பஜே… நமச்சிவாயா…! அரோகரா…! இப்படிப் பாடுவதன் உட்பொருள் என்ன…?

நமக்குள் நல்லதை உருவாக்க வேண்டும் என்றால் சிருஷ்டியைச் (பிரம்மாவை) சிறைப்பிடிக்க வேண்டும் 

நாரதனைக் “கலகப்பிரியன்…” என்று ஏன் சொல்ல வேண்டும்…?

அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்..?

thavasi

“பிரம்மச்சரியத்தால்” எந்தத் தவசியும் ரிஷியும் உருவாக முடியாது… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மெய் ஞானி அன்று தன் ஞானத்தின் உண்மை நிலையில் உணர்த்திய தத்துவ வழி முறையில்
1.தெய்வத்தின் செயல் நிலையில் சுட்டிக் காட்டிய விக்கிரக வழிபாட்டு முறையிலேயே
2.ஒரு உயிர் அணு மூல முதலாக வளர்ச்சியுற்ற வழித் தொடருக்கு
3.விநாயகன்…! என்ற யானையின் தோற்றமுடன்…
4.மனித உரு முருகா…! என்ற அறு குண அழகனைக் காட்டினார்கள்.

உருவத்தில் பெரியது யானை…. எண்ணத்தில் உயர்ந்தவன் மனிதன். அவ்வுயிரணுவைத் தெய்வமாகத் தொடர்புபடுத்திச் சுட்டிக் காட்டிய வழித் தொடரில்… உருவ அமைப்புகளில் ஆதியில் மெய் ஞானிகள் வழிகாட்டிய தத்துவத்தில் “பல உண்மைகள் உண்டு…”

சில தெய்வங்களுக்குக் கிருஷ்ணாவதார கீதையின் தத்துவத்தில் ஒருவனுக்குப் பல ஆயிரம் மனைவிகளைச் சுட்டிக் காட்டினார்கள். அதன் உண்மைத் தத்துவத்தை நம் ஞானத்தால் எடுத்தால் அவ்வுண்மை நமக்குப் புரியும்.

மனிதன் பெற்ற ஒளி சக்தியில்… மனித எண்ண ஞானம்.. தான் பகுத்தறிவில் உயர் தன்மை கொண்டு மனித உடல் ஜீவனுடன் உள்ள பொழுது
1.உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எடுக்கப்படும் குணங்களின் வளர்ப்பு ஒவ்வொன்றையுமே ஜீவிதம் கொண்ட மனைவியாய்
2.பெண் சக்தி மனிதனுக்குள் வளரும் நிலை பெண் தன்மை கொள்ளும் குணங்களை எல்லாம் மனைவியாகச் சுட்டிக் காட்டி
3.கீதையின் தன்மையை நமக்கு அன்றே மெய் ஞானிகள் புகட்டினார்கள் பாடநிலையாக…!

இராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் எந்த அவதாரமாக இருந்தாலும்…
1.மனிதன் பிரம்மச்சரியம் கொண்டு எச்சக்தியையும் பெறமுடியாது என்ற நிலையைத்தான்
2.மெய் ஞானிகளும் ரிஷிகளும் சுட்டிக் காட்டினர்
3.தானும் அவ்வழியில்தான் தன் ஞானத்தை வளர்த்தனர்.

இல்லற உணர்வில் எண்ணத்தில் வளர்க்கும் குணத்தில் இரு நிலை வளர்ச்சியின் அன்பால் பெறும் நிலையின் மகவுகளின் பரிவு பாசம் வளருமேயன்றி உணர்வின் எண்ணத்திலேயே
1.அன்பின் ஜீவிதத் தொடர்பின் உணர்வு பிணைப்பு வளரா விட்டால்
2.எத்தவசிகளும் ஞானிகளும் “சரீரம்” பெற்றிருக்க முடியாது.

ஜீவ உணர்வின் எண்ணத்தில் வளரும் குணத்தின் பிடிப்பு நிலை கொண்டு… தொடரும் இல்லறப் பிணைப்பின் உடல் தொடர்பின்… “ஆத்ம தொடர்பு கூடும் இரு எண்ணங்களும்…” ஒன்றாய் வலுக் கூடத் தொடங்கும்.

அப்படிக் கூடப்பெறும் எண்ணத்தின் உயர் ஞான தியானத்தால்… ரிஷி பத்தினி சக்தியின் வளர்ச்சி ஈர்ப்பில்… இரு நிலை கொண்டு ஒரு நிலை வளர்க்கும் செயல் வழி சரீரப் பிணைப்பில் மக்கள் தொடரும்.. ஆத்மப் பிணைப்பின் உயர் ரிஷி சக்தி பெறக்கூடிய படைப்பின் படைப்பிற்கு… இவ்விரு ஆத்மாவின் ஐக்கிய தொடர்பில் பிணைக்கப்பட்டு மூலக்கரு வளர்ச்சியுறும்.

தைப் பொங்கல் அன்று சுவைமிக்க உணவை உருவாக்குவதன் காரணம் என்ன…?

மகாபாரதத்தில் திரௌபதியை அவமதிப்பதாகக் காட்டுகின்றார்கள் – விளக்கம்

விநாயகர் தத்துவம்

உடலை விட்டுப் பிரிந்தவர்கள் 48 நாள்களுக்குள் எங்கே செல்கிறது…?

mosquito bite

நசுக்கினாலே உருவம் தெரியாது போகும் கொசுவிடம் இருக்கும் “வலுவான ஆற்றல்”

கொசுத் தொல்லையாக இருக்கின்றது..! என்று கொசுக்களை எல்லாம் கொல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அது எத்தகைய வேதனைப்படுகின்றதோ அந்த வேதனை உணர்வுகள் கொசுவின் உயிரான்மாவுடன் கலக்கின்றது.

“கொன்று விட்டோம்…!” என்று நாம் எண்ணும் போது எந்த எண்ணம் கொண்டு கொன்றோமோ கொசுவின் உயிர்கள் நம் உடலுக்குள் வருகின்றது.

உதாரணமாக ஒரு கொசு நம் மீது அமர்ந்து அது இரத்தத்தை குடிக்கும் போது உற்றுப் பார்த்து “அதை நசுக்க வேண்டும்…” என்று மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

நம் கை கொண்டு அடிப்பதற்கு முன்னாடி அந்தக் கொசு பறந்துவிடும். மனிதனை ஒத்த அறிவு அதற்கு இல்லை என்றாலும்
1.மனிதனின் அறிவின் ஞானத்தைப் பெற்ற “இரத்தத்தை” (மனித உணர்வுகள் கலந்த) அது புசிக்கும் போது
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதற்குள் அந்த உயிர் அதை இயக்கிக் காட்டும்
3.ஆகவே அது தப்பித்துக் கொள்ளும்… இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

கொசு நம்மைக் கடிக்கும்போது அதில் உள்ள விஷத்தால் நமக்குள் அரிப்பும் தடிப்பும் ஏற்படுகின்றது. ஆயிரம் கொசுக்களை நாம் நசுக்குகின்றோம் அல்லது கொல்கிறோம் என்றால் அந்தத் தடிப்புகள் உடல் முழுவதும் நிச்சயம் வரும்.

சில பேர் அமாவாசை அன்று உடலெல்லாம் தடிப்பு வருகின்றது… மேல் எல்லாம் அரிப்பு வருகின்றது என்று கூடச் சொல்வார்கள். இது எல்லாம் இறந்த அந்தக் கொசுக்களின் நஞ்சு கலந்த நிலைகள் உடலுக்குள் சென்ற நிலையில் இயற்கையின் செயலாக அப்படி உருப்பெறும்.

யானையின் தோல் மிகவும் முரடானது. ஈட்டியால் குத்தினாலும் உடம்புக்குள் இறங்குவது கொஞ்சம் கடினம். ஊசியால் குத்தினாலும் ஊசி வளையுமே தவிர ஊசிக்கு வலு இல்லை என்று கூடச் சொல்லலாம். யானையின் தோலுக்கு அவ்வளவு சக்தி உண்டு.

ஆனால் கொசுவைக் கையால் நசுக்கி விட்டால் அதனுடைய உருவத்தையே நாம் காண முடியாது. அப்படி நசுக்கப்படும் நிலை பெற்றாலும் “தனது மூக்கால்…” ஊசி போல யானையின் தோலுக்குள் ஊடுருவி அதனின் இரத்தத்தைக் குடித்துவிடும்.

கொசுவிற்கு அவ்வளவு பெரிய வலு உண்டு…!

கொசுவின் முகத் துவாரத்தில் இருக்கும் நஞ்சின் தன்மையை அது பாய்ச்சியபின் அந்த யானையின் தோல் விலகுகின்றது. கொசு தன் முகவாயை உள் செலுத்துகின்றது.

உள் செலுத்தி அது தன் மணத்தால் இரத்த நாளங்கள் ஓடும் பாகத்தை நுகர்ந்தறிந்து அந்த இரத்தத்தைக் குடிக்கின்றது.

நாம் நினைக்கின்றோம் யானைக்குத் தான் வலு என்று. யானையைக் காட்டிலும் கொசு மிகச் சிறிதாக இருப்பினும் அதனுடைய வலுவைக் காட்டிலும் அதைப் பிளந்து அது உணவாக உட்கொள்ளும் திறன் அதற்கு உண்டு. கொசுவை எளிதில் மதிக்க வேண்டாம்…!

ஒரு சமயம் காட்டிற்குள் கொசு தாக்காமல் இருப்பதற்காக சில உணர்வலைகளைப் பரப்பச் செய்தார் குருநாதர். அப்பொழுது என் அருகில் கொசுக்கள் வரவில்லை.

காட்டுக் கொசுவிற்கு வலிமை ஜாஸ்தி. மற்ற மிருகங்களின் இரத்தத்தைக் குடித்துப் பழகி இருப்பதனால் மனிதனக் கடித்தால் மிகக் கடுமையான வேதனைகள் வரும்.

குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். முதலிலே அவர் சில் அலைகளைப் பாய்ச்சி விட்டார். அதனால் நான் படுத்து உறங்கும்போது அந்தக் கொசுக்கள் கடிக்காதபடி ஆனந்தமாகத் தூங்கினேன்.

சிறிது நேரத்தில் குருநாதர் என்ன செய்தார்…? அவர் செயலைக் காட்டி விட்டார்…!
1.கொசுக்கள் வராதபடி செய்த அலைகளை எடுத்து விட்டார்.
2.எல்லாக் கொசுக்களும் ஏகக் காலத்தில் என்னைக் கடிக்கத் தொடங்குகின்றது.

என் இரத்தத்தைப் பூராமே அது குடிக்கின்றது. என் உடல் முழுவதும் அரிப்பு எடுத்து விட்டது. என்னால் வேதனை தாங்க முடியவில்லை. கல்லை வைத்துத் தேய்க்கின்றேன்.

இரத்தம் ஒழுகினாலும் தேய்க்கத் தேய்க்க அதன் மேல் ஆனந்தம் வருகின்றது. அரிப்பின் தன்மை தாங்காது நகத்தால் சுரண்டினாலும் அதற்கு அவ்வளவு ஆனந்தம் வருகின்றது.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கிறார்…! நீ வலு பெற்றவனாக இருக்கின்றாய்.. இருந்தாலும் அந்தக் கொசுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது என்று பார்…!

அதே சமயம் அதை எல்லாம் நீ தேய்த்துக் கொல்லும்போது அதனுடன் கலந்த விஷத்தின் உணர்வின் தன்மை உன் உடலுக்குள் எவ்வாறு புகுகின்றது…?

உடலில் உள்ள இரத்தத்துடன் கலந்தபின் அதுவும் (கொசுவின் உயிர்) கலந்து அது குடி கொண்டு இருக்கும் காலத்தில் இன் இரத்தத்தைத் தனதாக மாற்றி… அது எப்படி ஜீவ அணுவாக மாறுகின்றது…? என்று காட்டுகின்றார்.

ஒரு தட்டாம்பூச்சி தன் உடலில் விளையும் கருவின் தன்மையை அது மற்ற தாவர இனங்களில் இட்டுவிட்டால் அதனின் சத்தை இது நுகர்ந்து அதனின் உணர்வின் செயலாகப் பட்டாம் பூச்சியாக அது விளையும்.

1.தாவர இனத்தின் சத்தை எடுத்து அந்தப் பூச்சி உருவாவது போல…
2.நம் உடலுக்குள் வந்த இந்தக் கொசுவின் உயிரான்மா
3.அது எத்தகைய நிலையைச் செயல்படுத்தி தன் உணர்வின் நிலைகளை பரப்பி
3.இரத்தத்தையே மாற்றி அது அதன் உணவாக எப்படி எடுத்துக் கொள்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்த உணர்வின் தன்மை மாற்றம் அடையும் போது கொசு மனிதனுக்குள் மனிதனாக உருப்பெறும் அணுவாக மாறுகின்றது.

முதலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றது. தன் உணவைத் தேடுகின்றது. நம் உடலில் உள்ள உணர்வின் தன்மை அதனின் உணர்வுகள் மாற்றமடைந்து மனிதனில் உருவாகும் கருவாக மாறுகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்…!

kannappar

கண்களின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்

கண்ணப்பநாயனார் வேட்டையாடிப் பிழைத்தாலும் பக்தி நிலைகள் கொண்டு ஆண்டவனுக்காக வேண்டி தான் வேட்டையாடியதைக் கொடுத்தார்.

ஆனால் கொடுத்து வந்தாலும்… ஒரு நாள் ஈசன் கண்ணிலிருந்து இரத்தம் ஒழுகப் போகும்போது விரலை வைத்துத் தன் கண்ணை நோண்டி எடுத்துக் கொடுத்தார். பக்திப் பெருக்கத்தில் இப்படிக் கொடுத்தார்.

கண்ணப்பநாயனார் ஈசனுக்குக் கண் கொடுத்தார் என்றால் எதை அவர் கொடுத்தார்…?

தன்னுடைய நிலைகள் கொண்டு இதை அடைத்து (இரத்தம் ஒழுகுவதை) அதைக் கொடுத்தார். எதை…?

தான் கொன்று புசித்த உணர்வின் தன்மை எவ்வாறு…? என்ற நிலைகளைத் தான்.. தன் வாழ்க்கையில் வந்த ஒவ்வொரு நிலைகள் வேதனைப்படுவதை எல்லாம் அடைத்தார்…! என்பதே கண்ணப்பநாயனாருடைய கதை.

1.தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகளை… அதை அழுத்தி
2.அந்தக் கண் ஒளியின் தன்மை எதை இறையாகத் தேடுகின்றது…? (தேட வேண்டும்…!) என்ற
3.சூட்சமத்தை உணர்த்துவதற்காகத் தான் இப்படிப்பட்ட காவியங்கள் எல்லாம் படைக்கப்பட்டது.

ஆனால் பக்தி மார்க்கங்களில் இவர்களுக்குத் தகுந்த மாதிரி தான் அதை ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்களுடைய உணர்வு எதுவோ அதற்குத் தகுந்தவாறு எண்ணுகின்றார்கள்

கண் என்றால் இப்பொழுது “ஆயிரம் கண்ணுடையாள்” என்று சொல்வார்கள்.
1.நமக்குள் எந்தெந்தக் குணங்கள் இருக்கின்றதோ
2.அதனதன் நினைவு வரப்படும்போது (கோபம் பயம் ஆத்திரம் வேதனை அன்பு பரிவு பாசம் மகிழ்ச்சி போன்ற எத்தனையோ குணங்கள்)
3.அதன் உணர்வின் அலையையே தனக்குள் அறிந்து தனக்குள் அதைக் கவர்ந்து கொள்ளும்.
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு தான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நமக்குள் சக்தியாக இருக்கும் நிலைகள் எந்தெந்தக் குணமோ இவை எல்லாம் அதன் வழி தான் காட்டும்… உணர்த்தும்… இயக்கும்.

உதாரணமாக… என் நண்பனைப் பார்க்கின்றேன்.. அவனைப் பதிவு செய்து கொள்கின்றேன். இருந்தாலும் அந்த நண்பனைப் பற்றி நான் நினைக்கப்படும் போதெல்லாம்
1.இந்தக் கண்கள் தான்…
2.நண்பனைப் படமாக மீண்டும் காட்டுகின்றது

ஏனென்றால்… நண்பனைப் பார்த்துப் பதிவான உணர்வுகள் விளைந்து அணுக்களாக இங்கே இருக்கின்ற்து. இதே கண் தான் அங்கே படம் எடுத்தது. அதே உணர்வு தான் எனக்குள் பதிவானது.

அதை அறிந்தாலும் அந்த உணர்வின் சத்தை அதை மீண்டும் கவர்ந்து வளர்க்கச் செய்கிறது.

1.ஒரு செடி தாய் மரத்தின் சத்தைத் தனக்குள் எடுக்கின்றது என்றால்
2.அந்த மணத்தை நுகரப்படும் போது அது கண்..
3.தன் இனமான சத்தை அதனுடைய நிலைகளைத் தெரிந்துதான் எடுக்கின்றது.

இதைப்போல தான் கண்ணப்பநாயனார் காவியத்திலும் காட்டப்பட்டுள்ளது.

அதாவது
1.உடலான சிவத்திற்குள் அந்தத் தீமை என்பதை நீக்கிட
2.அந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை
3.கண்ணின் நினைவு கொண்டு (கண்ணை எடுத்து உயிரிலே.. அந்த ஈசனுக்குப் பொருத்துவதாக) இதை அழுத்திக் காண்பித்தார் என்று
4.சாதாரண மக்களுக்கும் இந்தத் தத்துவத்தை உணர்த்த இந்த காவியங்களைக் கொண்டு வருகின்றார்கள்.

உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் உயிருடன் ஒன்றி ஒளியான நிலை பெற வேண்டும் என்பதற்குத்தான் “தன் கண்களைப் பிடுங்கி ஈசனுக்கு அவர் கொடுத்தார்…” என்று தெளிவாக்குகின்றார்கள்.

கடவுள் எங்கே எப்படி இருக்கின்றான்…?

ஒரு தெய்வத்தை வணங்குபவர் அடுத்த தெய்வத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார்…?

கடவுள் ஒருவனே என்றால் அது எப்படிச் சரியாகும்…?

பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்ற கைகேயியின் உணர்வுகள்

realization-of-gods

வழி தெரியாதபடி செல்லும் இன்றைய நிலையிலிருந்து மீள… ரிஷிகள் காட்டும் வழியில் மனிதன் செல்ல வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தன்னைத்தான்… தான்… தான் உணர்ந்து…
தன்னைத்தான்… தான் நம்பி

தன்னைத்தானே… தான் வளர்த்து…
தன் வழியின்… வழியறிந்து

தன் வழியை… தான் அமைத்து…
தன் உயர்வை… தான் வளர்க்க

தன்னில் தான்… இறை உணர்ந்து…
தன்னையே தான்… இறையாக்கி

தனதான இறை உயிரை…
தன்னில் தானே… இருள் அகற்றி
தன்னில் தானே… ஒளியாகலாம்…!

மனிதன் தன்னைத்தான் தான் உணர்ந்து… தன் வழியில் தன்னை நம்பி…
1.உண்மை நிலையை அறிந்து
2.தன் உயர்வை வளர்த்துக் கொள்ள
3.இப்பூமியில் மனித உணர்வு எண்ணம் செயல்பட்ட காலத்திலேயே
4.சித்தர்களும் சப்தரிஷிகளும் பல உண்மையை உணர்த்தியும் செயல்படுத்தியும் காட்டினர்.

ஆதிசங்கரின் காலத்தில் அத்வைதத் தத்துவப்படி… மனிதன் உணர்வின் எண்ணத்தை உயர் ஞானமாக்கி… உயரும் மார்க்கத்தை அணுவுக்குள் அணுவாக உணரும் பக்குவத்தை மனிதனுக்கு உணர்த்தினார்.

அதன் தொடரில் மனிதன் தன்னைத்தான் தான் நம்பி உயரும் பக்குவத்தை அவருக்கு அடுத்த நிலை நான்கு வகை வேதங்களாக்கி தன் வாழ்க்கை நிலைக்கு ஒத்த சௌகரியப்படி காலப்போக்கில் மாற்றி விட்டனர்.

1.வேத மந்திர உச்சரிப்புகளும் பலி பீட மந்திரங்களும் பல வழியில் பிரிக்கப்பட்டு
2.மகரிஷிகளினால் வழிப்படுத்தப்பட்ட தன்மைகள் எல்லாம்
3.மத வழிகளிலும் அரசாட்சியின் பிடிப்புக்கொப்ப மாற்றப்பட்ட தன்மையினால்
4.இன்று தெய்வத் தன்மையின் உண்மை நிலையையே அறிய முடியாமல் போய்விட்டது.

இன்றைய காலப்போக்கில் “பூஜையும்… பக்தியும்…” வழி தெரியாத முறையில் மனிதனின் நாட்டங்கள் சென்று கொண்டிருக்கும் சிதறுண்ட இத்தன்மையை மாற்றி
1.மனிதன் முதலில் தன்னைத்தானே தான் உணர்ந்து
2.தன்னை நம்பி… தன் வழியை மெய் அறிந்து…
3.உயர வேண்டிய ஒளித் தன்மையின் சத்தியத்தின் உண்மை நிலை அறிந்து செயல்பட வேண்டும்.

முன்னோர்களின் ஆன்மாக்களுக்கு இன்றும் நாம் செய்யும் சாங்கியத்தின் விளைவுகள்

வாசல்படிக்குப் போடும் கல்லை வைத்துத்தான் சாமி சிலை செய்கிறார்கள்

யாகம் என்றால் என்ன எப்படிச் செய்ய வேண்டும்..?

சுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…?

சிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…?

முருகன் காட்சி கொடுப்பானா… எந்த வழியில் கொடுப்பான்…?

ஒரு தெய்வத்தை வணங்குவோர்… அடுத்த தெய்வத்தை வணங்க நான் மாட்டேன் என்று சொல்வதில் என்ன உண்மை உள்ளது…?

FIRST STEP IN DHIYANAM

நம் காரியங்கள் சித்தியாக வேண்டும் என்றால் செய்ய வேண்டிய “முதல் பிரார்த்தனை”

மீண்டும் மீண்டும் யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது “ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…! என்றால் நம் உயிர் உடலுக்குள் நின்று ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது.

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அனைத்தையும்…
1.சுவாசிக்கும் அந்த உணர்வின் சத்தை
2.அந்த உணர்வின் அணுவாக
3.ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது.

இது தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

காலையிலிருந்து இரவு வரைக்கும் நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அனைத்தும்… நம் உடலுக்குள் நம் வாழ்க்கையில் இவ்வாறு சதாசிவமாக (உடலாக) ஆகிக் கொண்டே உள்ளது.

அதே சமயத்தில் நம் உடலான சிவனுக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களுக்கும் “நம் உயிரே குருவாக” இருக்கின்றது.

ஆகவே…
1.நாம் ஒவ்வொரு முறையிலும்
2.ஒவ்வொரு தியான நேரத்திலும்
3.எந்தக் காரியங்களுக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணினாலும்
4.அம்மா அப்பாவை எண்ணி அவர்கள் உயிரைக் கடவுளாக மதித்து
5.அவர்கள் நம்மைக் காத்தருளிய குணங்களைத் தெய்வமாக மதித்து
6.ஒவ்வொரு நொடியும் நமக்கு நல் உணர்வுகளை ஊட்டி நல் வழி காட்டிய அவர்களைக் குருவாக மதித்து
7.ஈஸ்வரா என்று அவரவர்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
8.எங்கள் காரியங்கள் வெற்றி பெறவேண்டும்
9.என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
10.என் செயல் அனைத்தும் எல்லோருக்கும் நன்மை பயக்கும் செயலாக இருக்க வேண்டும்
11.என் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்ற உணர்வினை முதலிலே செலுத்த வேண்டும்.

இந்த முறைப்படி நாம் எண்ணும் போது அத்தகைய குணங்களை உயிர் நமக்குள் ஓ… என்ற ஜீவ அணுவாக மாற்றிவிடுகின்றது.

அதன் பின் அந்த எண்ணங்களே… அந்தக் குணங்களே… “குருவாக நின்று” நாம் சொல்லால் சொல்லப்படும் பொழுது செயலுக்கும் அந்தக் குணங்களே குருவாக நின்று கேட்போர் உணர்வுகளிலும் நல்ல உணர்வுகளாகப் பாய்ந்துவிடும்.

அந்த நல் உணர்வுகள் பாய்ந்த பின்..
1.அவர்களும் நமக்கு நன்மை செய்யும் பயன்களை உருவாக்க இது உதவும்.
2.அதே போல் நம் சொல்லிலே இனிமையும்… நல் செயலை ஊட்டும் குணங்களாக நமக்கும் இது அமைகின்றது.

ஆகவே ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தக் காரியங்கள் செய்தாலும் அல்லது செய்ய எண்ணினாலும் நம் உயிரை ஈஸ்வரா.. என்று எண்ணிவிட்டு அடுத்த காரியங்கள் எது நன்மையோ அவைகளை மேலே சொன்ன முறைப்படி எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது அத்தகைய நல்ல அணுக்களாக உடலுக்குள் உருவாகி அந்த உணர்வின் செயலாக
1.அந்தக் குணங்களே நமக்குக் குருவாக நின்று
2.நல்வழிப்படுத்தும் நற்செயலாக நம் வாழ்க்கையில் அமைவதும்
3.நாம் எண்ணிய நல்ல உணர்வுகள் நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்கி
4.நம் உடலைப் பாதுகாக்கும் நல்ல குருவாகவும் அது அமையும்.

நாம் ஒவ்வொருவரும் இரவிலே தூங்கச் செல்லும் போதும் சரி… காலையில் எழுந்தாலும் சரி… அவசியம் இதைப் போன்று நாம் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் நாம் வெளியிலே செல்லும் போதும் சரி இதைப் போன்ற நல்ல எண்ணங்களை நாம் எண்ணி
1.அந்தச் செயல்களை செவ்வனே செய்ய வேண்டும் என்று எண்ணினால்
2.செவ்வனே செய்யும் அணுக்களாக நமக்குள் உருவாகும்
3.உருவான அந்த அணுக்கள் தன் உணவுக்காக ஏங்கும் போது
4.மீண்டும் அதே உணர்வுகளைச் சுவாசிக்கும் போது அந்த உணர்ச்சிகள் நம்மை நல்வழியில் செயல்படுத்தும் நிலை உருவாகும்.

இதுவே நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் நல்ல உணர்வாகப் பதிந்து நம்முடன் இணக்கமாகச் செயல்படும் அந்த உணர்ச்சிகளை ஊட்டும்…! பகைமையை அகற்றி மகிழ்ந்து வாழச் செய்யும்.

பூமிக்குள் நடக்கும் செயல்களை அறிந்து கொள்ளுங்கள்

கறிவேப்பிலைச் செடி எப்படி உருவாகின்றது

வேதங்களும் உபநிஷத்துக்களும்

Saptarishis

சஞ்சலமில்லாத எண்ணத்துடன் மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒவ்வொரு ஞானியும் தன் வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வால் பெற்ற சஞ்சல அலையின் உண்மைகளைப் புரிந்து உணர்ந்து பெற்ற உயர் ஞானத்தால் தான் அந்த ரிஷி சக்தியைப் பெற்றார்கள்.

அதே போல் மனிதன் தன் உணர்வின் சஞ்சலத்தைப் போக்கி…
1.தன்னைத்தான் தான் உணர்ந்து
2.தன்னிடமுள்ள திரையை விலக்கி
3.உயர் ஞானத்தின் உண்மையின் ஒளி சக்தி பெற
4.உணர்வின் குணத்தைச் சமப்படுத்தி அறியும் பக்குவத்தைப் பெற
5.ரிஷிகளாய் அன்றும் இன்றும் தன்னுடைய உயர் தத்துவத்தை
6.மனித எண்ணத்தின் உணர்வின் வலுவிற்கு வழி காட்டுகின்றனர்.

தன்னைத்தான் உணரக்கூடிய வழி முறையில் தன் ஞானத்தைப் பெறும் பொழுது…
1.கோபம் வேதனை பயம் சலிப்பு போன்ற குணங்கள் உந்தப் பெறும் பொழுது
2.அந்த உந்தல்களைச் சமப்படுத்திட…
3.தைரியத்தின் உயர் ஞானம் கொண்டு உயரக் கூடிய வளர்ச்சிக்கு
4.இச்சரீர உயிர் அணு… உயிராத்மாவின் வலுவைக் கொண்டு…
5.உயர்ந்த ஒளி சக்தியை மனித ஞானம் வளர்த்துக் கொள்ளும் நிலைக்கு
6.மெய் வழி காட்டும் தொடரில் ரிஷிகள் படைத்த காவியங்களில் பல உன்னதத் தத்துவங்கள் உண்டு.

ஒன்றை ஒத்து ஒன்று… ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறத்தக்கதே இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தின் நியதி.

பூமியின் ஆரம்ப உயிர் அணுத் தோன்றி மனித உணர்வின் எண்ண குணங்கள் வளர்ந்தமைக்கும்… இன்றைய கலியில் மனிதப் பெருக்கத்தின் எண்ணத்தின் ஈர்ப்பலையும்… மின் காந்த வானொலி அலைத் தொடரும்… செயற்கையின் விஞ்ஞான அமிலத்தின் செயலும்… இக்காற்றலையில் அதிகமாக இன்று படர்ந்துள்ளது.

அன்று ரிஷிகள் காட்டிய தத்துவ முறைக்கும் இன்றைய கலியின் நடைமுறைக்கும் பல கோடி மாற்றங்கள் ஆகி விட்டது. நம் உணர்வின் ஞானத்தைச் சஞ்சலமில்லா சாந்தத் தொடரில் ரிஷிகளின் எண்ணமுடன் கலந்து… நாம் எடுக்கும் நேரடி சுவாச மின் காந்த உயர் சக்தியின் வலுவை.. இச்சரீரம் பெறப் பெற… இச்சரீரமே “ஒளித் தன்மை கொள்ளும்…!”

பக்தி மார்க்க வழித்தொடரில் மனதை அந்தந்தத் தருணங்களில் இனிமை கலந்ததாகப் பக்குவப்படுத்தலாமே தவிர தன் ஞானத்தை உயர் ஞானமாக்கும் நிலை இல்லை.

உணர்வின் எண்ணத்தைச் சஞ்சலமில்லா ஒளி சக்தியின் ரிஷி சக்தியின் தொடர்பால் அவர்கள் பெற்ற சக்திகளை நம் உடலுக்குள் பெருக்கி அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் நம் எண்ணத்தின் உணர்வு வீரியம் கொள்ள வேண்டும். அவர்கள் வேறல்ல… நாம் வேறல்ல…! என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இக்கர்ம காரிய வாழ்க்கையில் பலவாக பல கோடி ஆண்டுகளாய் பல கோடி மனிதர்கள் எடுத்து வளர்த்த உணர்வலையின் சுழற்சியின் மத்தியில் வாழும் நம் உணர்வின் எண்ணத்தை இவ்வுலக ஈர்ப்பில் செலுத்தும் பொழுது தன்னைத்தான் உணர முடியாத நிலைக்கு இன்றைய உலக நிலை வந்துவிட்டது.

மேலும் இக்காற்றலையில் உள்ள உணர்வுகளின் வலுவையும் நம் ஆத்மாவில் ஏற்றிக் கொண்டு அதன் குறைவு நிறைவில்…
1.நம் சரீரத்தில் வளரும் உயிரணுக்களையும் உயிர் ஆத்மாவையும்
2.குறை உணர்வின் மத்தியில்
3.குறைவான எண்ணத்தில்
4.குறை கொண்ட வாழ்க்கையாக அமைந்து விட்டது.

இதிலிருந்து மீள ஒளி சக்தியின் வீரியம் கொண்ட மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு… ஞானத்தால் உணரக்கூடிய “உயர் ஞான திருஷ்டி” என்ற சில உண்மைகளை உணர்த்தி வரும் அவர்கள் தொடர்பில் நாமும் வளர்ந்திடல் வேண்டும்.

அவர்கள் மூலம் பெற்ற நல் உணர்வின் சுவாசம் கொண்டு… நாம் வளரும் பூமியில்… நம் உணர்வின் சேவை… “பிறரையும் வளர்க்க…” சஞ்சலமில்லா உணர்வைச் சாந்தமுடன் நாம் பெற வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வை உரமாக ஏற்றி ஆத்ம சுத்தி செய்யுங்கள் 

தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வை நாம் பற்றிட வேண்டும் 

எத்தகைய தீமையும் பகைமையாகக் கருதாது தனக்குள் அடங்கி தன்னுடன் இணைந்து இயக்கும் நிலை – கல்யாணராமன் 

trust-yourself

இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் உங்களால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்…!

“ஞானிகளைப் பற்றிய முழு உண்மைகளையும் நீங்கள் கேட்க வேண்டுமென்றால்” வருடக்கணக்கில் அமர்ந்திருக்க வேண்டும் உங்களுக்குப் பொறுமை பத்தாது.

உணவு உட்கொள்ளாமல் உங்களால் இருக்க முடியாது. இருந்தாலும் அதை உங்களால் ஜீரணிக்க முடியாது.
1.ஆனால் எப்படியும் சுருங்கச் சொல்லி அதை எல்லாம் பதிவு செய்ய வேண்டும்
2.மகரிஷிகள் நினைவுகள் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்கே தான் இதையெல்லாம் தொடர்ந்து சொல்கின்றேன் (ஞானகுரு)

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குள் விண்ணின் ஆற்றலை எவ்வாறு பதிவு செய்தாரோ இது போல் உங்களிடமும் பதிவு செய்கின்றேன். அந்தப் பதிவை நீங்கள் எண்ணி மீண்டும் வளர்த்து வந்தால்
1.மனிதன் என்ற நிலைகள் முழுமை அடைந்து
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

ஏனென்றால்…
1.அறிவு இல்லை என்ற நிலைகளை எண்ண வேண்டாம்.
2.கற்கவில்லை என்று எண்ணவும் வேண்டாம்.
3.ஞானகுரு சொல்வதை எல்லாம் நாம் எப்பொழுது பெறப் போகின்றோம்…! என்ற ஏக்க நிலையும் வேண்டாம்.
4.பெற முடியும்…! என்ற ஏக்கத்தின் நிலைகள் வரும்போது
5.நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் இதைப் பெற முடியும்.

அதற்கேதான் இதை உங்களிடம் மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்வது.

ஏனென்றால் “பௌர்ணமி போன்று” பூரண நிலைகள் நாம் பெற முடியும். இருள் சூழ்ந்த சந்திரன் இன்று ஒளி கொண்டு பௌர்ணமியாக ஒளியின் சுடராக வீசுவது போல
1.ஒரு உயிர் கொண்ட உணர்வின் தன்மை
2.புழுவாக இருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வரும்போது
3.உலகை அறிந்திடும் உணர்வு பெற்ற… பூர்ண பௌர்ணமியாக
4.ஒளியின் உடலாகப் பூரண நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

இருளை மாய்த்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் ஒளியாக நிலை கொண்டிருக்கும் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை பெற்றதுதான் “எண்ணிலடங்காத சப்தரிஷிகள்…” சப்தரிஷி மண்டலமாக இன்றும் இருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நமக்குள் வலுக் கொண்டு எடுத்து உடலை விட்டு அகன்ற நமது குலதெய்வங்களான உயிராத்மாக்களை அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைத்து விண் செலுத்த வேண்டும்.

அவர்கள் எப்படி உடலைக் கருக்கினரோ அதைப் போன்று உடல் பெறும் உணர்வை மாய்த்துவிட்டு ஒளியின் தன்மையாக அடையச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் சப்தரிஷிகள்தான்.

உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு செயல்படுத்தும் நிலைகளில் முதலில் அவர்கள் ஆனார்கள் என்றால் அவர்களைத் தோடர்ந்து நாமும் இதைப்போல் அங்கே நிலை கொள்ள முடியும்.

ஆறாவது நிலையிலிருந்து ஏழாவது நிலையாக ஒளியாகப் பெற்றதுதான் சப்தரிஷி.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா… பன்றியிலிருந்து மனிதன் பிறந்தானா…?

 

பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கி அதனுள் உள்ள நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் நுகர்ந்து, சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக அடுத்து மனிதனாக, “பரசுராம்” அவதாரமாக உருப்பெறும் நிலை பெறுகின்றது.

 

மனிதனானபின் நமது உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள நஞ்சினை மாற்றிவிட்டு “நல்ல உணர்வைச் சமப்படுத்துகின்றது” என்ற நிலையே பரசுராம் அவதாரம்.

 

கடவுளின் அவதாரத்தில் ஒரு பொருளைத் தன்னுள் இணைத்து.., “நன்மை என்றும்.., தீமை என்றும்.., அறிந்து சமப்படுத்தும் நிலைக்குப் பரசுராம்” என்று காரணப் பெயர் சூட்டினார்கள் ஞானிகள்.

 

தீமைகளை ஒடுக்கிடும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கணவன் மனைவி இரண்டு பேரும் கவர்ந்து தமக்குள் உருப்பெறச் செய்யப்படும் பொழுதுதான் சமப்படுத்த முடியும். இது பரசுராம்.

மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்கவே இந்த உபதேசம்

ஜீரண சக்தியைப் பாதிக்கும் உமிழ் நீர் பற்றிய உண்மைகள் 

நாடித் துடிப்பு, scan பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் 

EVERLASTING life of sage

மகரிஷிகளும் ஞானிகளும் ஏன்… எதற்காக… ஒளி நிலை பெற்றார்கள்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தன் ஞானத்தின் வலுவை வலுப்படுத்தி… உயர் தியானத்தால் ஒளி சக்தியின் சக்தியை வலுப்படுத்தியதின் உண்மைத் தன்மை யாது…? (எதற்கு) என்பதை அறிதல் வேண்டும்.

ஒவ்வொரு செயலிலும் ஒன்று வளர்ந்து… அது மாறிப் பிறிதொன்றாய் வளர்ந்து தொடர் நிலை கொள்கின்ற வளர்ச்சி பெறும் உருவக அமிலத்தன்மையில்… பொருள் நிலை மாறினாலும் மூல ஒளி நிலை பெற்ற உயிர் அணு எவையுமே மடிவதில்லை…!

உயிர்களுக்கு என்றுமே அழிவில்லை…! ஆகையினால்..
1.ஒளி நிலை பெற்ற அந்த உயிரணுக்களின் கூட்டுச் செயல் நிலை வளர்ந்தால் தான்
2.அத்தொடரின் வலுவில் வலுவாகக் கூடிய மண்டல வளர்ச்சி உருப் பெற உரம் தர முடியும்.

அமிலமாய்… உருவாய்… ஆவியாய்… உருவாகும் உருத்தொடரின் உயிரணுக்களில்… வீரிய நிலை பெற்ற வளர்ச்சி உரு முதிர்வு நிலை என்பது “மனித உணர்வின் எண்ண ஓட்டச் செயல் நிலைதான்…!”

இச்செயல் நிலையையும் ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் வளர்ப்பு கொண்டுதான் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

அத்தொடரின் அழியா நிலை பெற… அன்று மாமகரிஷியாக உயர்ந்த மனிதன் தன் வலுவைக் கூட்டிக் கொள்ள மனித அறிவில் தன் உணர்வைச் செலுத்தி வளர்ச்சியுறத்தக்க நடைமுறை செயலுக்கு அன்று உள்ள மனித ஜனத்தொகை மிக மிக சொற்பம்… மிருக உணர்வின் தொடர்பில் உயர் ஞான எண்ணச் செயல் குறைவு,

அதன் தொடரில் தன் உயிராத்மாவிற்கு உயர் நிலை பெற தாவர இனத் தொடர்பில் தன் சரீரத்தைப் பல பக்குவங்களுக்கு உட்படுத்திக் “காயகல்ப சித்தி” பெற்றார்கள்.

ஆனால் இக்கலியில் நாம் இன்று வாழக்கூடிய வாழ்க்கைத் தொடரிலேயே….
1.எச்சக்தியையும் பெறக்கூடிய வலுவிற்கு
2.அன்று பெற்ற ரிஷி சக்திகளின் எண்ணமுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையை நம் ஜீவகாந்த சரீரத்திற்குச் செலுத்தச் செலுத்த
4.உயிரின் பரிமாணமும் உயிரணுக்களின் பரிமாணமும் கூடக் கூட
5.இவ்வாத்மாவின் ஒளி வட்டம் தன் இயக்கச் செயலினால்
6.தனித்து இயங்கும் ஒளி சக்தியின் வலுவைச் சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொள்ள முடியும்.

பாம்பாகப் போ… பேயாகப் போ… சாபத்தின் விளக்கம்

ஞானிகள். “நீ பாம்பாகப் போ…!” என்று ஒரு ரிஷி சாபம் கொடுத்தார் என்று கதையைச் சொல்வார்கள்.

 

ஏனென்றால் வீட்டில் வேதனைப்படுவார்கள். “என் வீட்டில் அப்படி இருக்கின்றது… இப்படி இருக்கின்றதே… அது இருக்கின்றதே… இது இருக்கின்றதே…! என்று வேதனைப்படுகின்றார்கள். இதெல்லாம் விஷத்தை வளர்த்துக் கொள்வது தான்

 

நம் உயிர் எத்தனையோ கோடிச் சரீரங்களில் நஞ்சினை வென்று நம்மை மனிதனாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது. நஞ்சினை வென்றிடும் சக்தியாக வளர்த்து வந்தது. ஆனால் நம் ஆசையை வைத்துக் கொண்டு “அவன் அப்படிச் செய்கின்றானே… இவன் இப்படிச் செய்கின்றானே… இதைச் செய்கின்றானே…!” என்று வேதனையை அதிகமாக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் தன்மை எல்லாம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

 

அதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” என்று சொல்லப்பட்டது. அந்த வேதனை உணர்வுகள் உடலிலே விளைந்து உயிராத்மாவில் விஷம் அதிகமான பின் உடலை விட்டுச் சென்ற பின் பாம்பாகப் பிறக்கின்றது. பாம்பு விஷத்தை உமிழ்த்தி அதை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றது.

 

உயிர் எத்தனையோ தரம் காப்பாற்றியது. இப்படி வேதனையை வளர்த்த பின் “நீ பாம்பாகப் போ…!” என்று உயிர் அந்த அளவுக்கு வளர்த்து விடுகின்றது… அந்த ரிஷி சாபமிடுகின்றான்…! என்று காட்டுகின்றார்கள்.

 

உயிர் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது. அதனால் உயிரை ரிஷி என்றார்கள் ஞானிகள். (நீ பாம்பாய் போ என்று உயிர் சொல்வதாகத் தெளிவாகக் காட்டுகின்றனர்) அப்பொழுது “ஐயனே என்னை அறியாத இந்தப் பிழையிலிருந்து நான் விடுபடும் உபாயத்தை நீங்கள் காட்ட வேண்டும்.” ”நான் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும்” என்று கேட்கின்றார்.

 

நமக்குத் தெளிவாக்குவதற்கு இந்தக் குட்டிக் கதையைப் போடுகின்றார்கள். சரி… “நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய்… அவன் கை படும்… நீ மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்….!

 

பாம்பு கடிக்க வந்தவுடனே நாம் என்ன செய்வோம்..? அடிப்போம். அப்போது அந்த மனித உடலுக்குள் பாம்பின் உயிர் போகின்றது. பாம்பு மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.

gnana pokisham 2

செடிக்குத் தினமும் நீர் ஊற்றுவது போல் தான் எம்முடைய உபதேசம்…!

உபதேசங்களைத் திருப்பிச் திருப்பிச் சொல்லுகின்றேன் (ஞானகுரு) என்று சிலர் நினைக்கலாம்…! ஆனால்
1.அடுத்தாற்போல் கேட்டால் மட்டும் சொல்லத் தெரியாது
2.அதை நினைக்கவும் தெரியாது… அதை பார்க்கவும் முடியாது.

சாமி போன தடவை சொன்னார்… இப்பொழுதும் சொல்கின்றார்… திருப்பியும் சொல்கின்றார்…. என்பார்கள்.

சாமி என்ன சொன்னார் என்று திருப்பிக் கேட்டால் அது தெரியாது.
1.என்ன சொன்னார்..?
2.எந்த வழியில் நடக்க வேண்டும்…? என்று தெரியாது.
3.தனக்குள் பதிய வைக்கத் தெரியாது… அதன் வழி நடக்கவும் தெரியாது.

ஒரு வார்த்தை திரும்ப வந்து விட்டால் போதும்… சாமி…! இதை நேற்றே சொன்னார். போன வாரம் சொன்னர். இந்த வாரமும் சொல்கின்றார் என்று
1.தனக்குள் பதிவு செய்யும் நிலையை
2.தனக்குத் தானே தண்டனை அனுபவித்து கொள்கிற மாதிரி தடைப்படுத்திக் கொள்வார்கள்.

ஆக இது மட்டும் தெரியும்.

ஏனென்றால் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையைத் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். “தெளிந்த நிலைகள் பெறும்” அந்த உணர்வின் சக்தியை வளர்ப்பதற்குத் தான்
1.மாதம் தோறும் இந்த உணர்வை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்துவதும்
2.அந்த உணர்வின் ஆற்றலை – மகரிஷிகள் காட்டிய நெறிகளை உங்களுக்குள் வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் செல்லவில்லை. உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். நிறையச் சொல்லிவிட்டால் முந்தி ஏன் சொல்லவில்லை… இப்பொழுது மட்டும் ஏன் சொல்கிறார்…? என்பார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாகத் தான் சொல்லிக் கொண்டு வரவேண்டி இருக்கிறது. நிறையச் சொன்னாலும் ஜீரணிக்க முடியாதல்லவா…!

இருந்தாலும் இப்பொழுது சொல்வதை நாளைக்குக் காலையில் கேட்டால் தெரியாது. காலையில் என்ன…? இப்பொழுது கொஞ்ச நேரம் கழித்துக் கேட்டாலும் தெரியாது…!

நாளைக்கு நான் இதைத் திருப்பிச் சொன்னால்… உடனே சாமி நேற்று சொல்வதைத் தான் சொல்கின்றார்…!
1.இது நேற்றுச் சொன்னது தானே…
2.சரி சொல்லட்டும்… பார்த்துக் கொள்ளலாம்…. என்று சொல்லிக் கொண்டு
3.காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

அதைத் தான் நேற்று சாமி சொல்லிக் கேட்டோம் அல்லவா.. அதிலே இன்று என்ன பொருள் வருகின்றது என்று பார்த்தால் அது நல்லது.

உதாரணமாக ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் தான் முளைக்கும். தண்ணீர் ஊற்றவில்லை என்றால் எப்படி வளரும்…?

தன் உணர்வை உந்தி எடுத்தால் தான் அந்தச் செடி வளரும். ஆக அந்த உணர்வை எடுக்க மறந்து விட்டால் என்ன செய்யும்…? அது தன் இனத்தை வளர்க்குமா…?

அன்றைய இராமயாணத்தை இன்றைக்கும் சொல்கின்றார்கள் என்றால் அதே இராமயாணத்தை விடிய விடிய சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனால் இராமயாணம் என்ன என்றே தெரியாத வகையில் கதையைக் கேட்டு அதைப் பதிவு செய்து கொண்டு பாடத்தை ஒப்பிக்கின்றோம்.

ஆக… இராமாயணத்தின் சொன்னதை வாழ்க்கையில் ஒழுங்காகக் கடைப்பிடிக்கின்றோமா என்றால் இல்லை.

மகாபாரதத்தை பற்றியும் பேசுகின்றோம் அதிலே என்ன சொல்கின்றார்கள்..! என்றால் கதையைப் படிக்கின்றோம். ஆகா என்று…!

இராமயாணத்தையும் கேட்டேன்… மகாபாரதத்தையும் கேட்டேன்… கீதையில் கண்ணன் கூறியதையும் கேட்டேன்… எல்லாம் பார்த்தேன்…! என்ற உணர்வுதான் இருக்கும்.

அந்த உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொண்டோமா என்று பார்ப்பதில்லை. ஆனால் அதை மட்டும் திருப்பித் திருப்பிச் சொல்வார்கள்.

இப்பொழுது சொன்ன உபதேசத்தைத் திருப்பி ஒரு மாதம் கழித்து மீண்டும் சொல்லும் போது… மீண்டும் அது நினைவில் இருக்கின்றதா இல்லையா என்று பார்த்து அந்த உணர்வை வலுவாக எடுத்து வளர்க்க வேண்டும் என்பதற்குத் தான் யாம் திரும்பத் திரும்பச் சொல்வது.

ஆனால் அப்படி இல்லாதபடி… நேற்றே சாமி சொன்னார்…. சரி விடு… போ…! என்று இருப்பார்கள்.

யாம் உபதேசம் செய்யும்போது பக்கத்திலே அடுத்தவர்களைக் கண்டால் அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் நாம் இரண்டு பேரும் எதாவது பேசிக் கொண்டிருப்போம்.
1.”கேட்காதவர்கள் கேட்கட்டும்…!” என்று இப்படியும் இருப்பார்கள்.
2.இது தான் சிலருடைய நிலைகள்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

நட்சத்திரங்களுக்குள் இருக்கும் அற்புத சக்திகள்…!

எது வந்தாலும்… உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் பழக்கம் வர வேண்டும் 

துருவ நட்சத்திரத்தின் ஆயுள்கால மெம்பராகச் சேர்ந்தவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும்…? 

cosmic power of gurudevar

கோழியை (கோடி) அறுத்துக் சாப்பிடுடா…! என்பார் குருநாதர் (கோழி என்று உச்சரித்தால் தெலுங்கில் “கோடி” என்று பொருள்)

 

கோடி… கோடி… கோடி.. என்கின்றபோது எங்கேயோ தோன்றிய நிலைகள் பேரண்டத்தில் இருந்த உணர்வுகளும் “கோடிக் கோடியாக…” மாறுகின்றது.

பல கோடிக்குள் மற்றதின் அணுக்கள் சேர்த்து
1.இன்று நாம் மனிதனாக வருவதற்குக் கோடியில்… கோடி
2.எத்தனையோ கோடியில் கோடி… கோடியில் கோடி… கோடியில் கோடி…!

இப்பொழுது எண்ணம் கொண்டு பேசுகிறோம் என்றால் இதைப் போல் வான் வீதியில் இருக்கக்கூடிய உணர்வுகள் தான் இங்கே (அந்தப் பேச்சாக) வருகின்றது.

இப்படி மனிதனுக்குள் அது பட்டபின் இதனின் நிலை தனக்குள் மாறுகின்றது என்பதனை உணர்வதற்குத்தான்
1.எனக்கு (ஞானகுரு) அடியைக் கொடுத்து
2.அடித்த அடியில் என்னைப் பிரமைப் பிடித்த மாதிரி ஆக்கி
3.அந்த வேகத்தில் விண்ணை நோக்கி ஏகச் சொன்னார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்)

அவர் என்னை நேரடியாக அடித்தார். உங்களுக்கு நான் சொல் அடி கொடுக்கின்றேன். இந்த உபதேசத்தின் உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிந்தபின் இது சீதாராமா ஆக… அம்புகளாகப் பாய்கின்றது. இந்தச் சொல் உங்கள் உணர்வுகளைத் தூண்டுகின்றது.

கோடியில் கோடி… என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வை ஒளியாக மாற்றிய குருநாதர்…
1.அவர் கண்டுணர்ந்த உணர்வை “அடி” (உதைத்து) மூலம் எனக்குக் கொடுத்து
2.உணர்வின் தன்மை என்னை அங்கே ஒன்றச் செய்து
3.விண்ணுலக உணர்வின் அளவுகோலை அறியும்படிச் செய்தார்.

அவர் அடிக்கும் அடி மூலம் எப்படி அவருடைய சக்தி உறைகின்றதோ இதைப் போன்றுதான் அந்த உணர்வின் தன்மை விண்ணின் ஆற்றலும்… அது உருவாகும் மாற்றமும்… மண்ணுலகில் வரப்படும்போது கோடிக் கோடிக் கோடி… என்ற நிலையில் வருவதைக் காட்டுகின்றார்.

இங்கே நீ இந்த கோழியை அறுத்துச் சாப்பிடுகிறாய். கோழியைச் சாப்பிட்டவுடன் நீயும் கோழியாகப் பிறப்பாய். ஆகவே… அந்தக் கோடியை நீ சாப்பிட்டால்… இந்தக் கோடியினுடைய நிலைகளை நீ வெல்வாய்…! என்பார்.

(ஞானகுரு தெலுங்கு பேசுபவர். தமிழில் கோழி என்று சொன்னால் அது தெலுங்கில் கோடி…! தமிழில் கோடி என்று சொன்னால் அது தெலுங்கில் கோழி..! இதை வைத்தே ஞானகுருவும் ஈஸ்வரபட்டரும் சொல் தொடரில் சூட்சமமாக இயற்கை உண்மைகளைப் பேசுகிறார்கள்)

நான் (ஞானகுரு) கோழி என்று சொல்லும்போது நீ இந்தக் கோழியை நீ அறுத்தாய் என்றால் நீ அடுத்தாற்படி கோழியாகப் பிறப்பாய். அப்படியென்று சொல்லிவிட்டு அந்தக் கோழி… “அந்தக் கோடிடா…!” என்பார்.

“அந்தக் கோடி…!” என்றால்…
1.சப்தரிஷி மண்டலங்களில் உள்ள பல கோடி உணர்வுகள்
2.கோடிக் கோடிக் கோடி… என்ற நிலைகளில் தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு
3.உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்தக் கோழிடா..
4.அதை அறுத்துச் சாப்பிடுடா…! என்கின்றார்.

குருநாதர் சும்மா சாதாரணமாகப் புரிய வைக்கவில்லை… இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்.

சாதாரண நிலைகள் உணவாக உட்கொள்ளும் நிலைகள் இருந்தாலும் அதை நீ… எதை… எப்படி உருவாக்க வேண்டும்…? என்ற நிலைகளை
1.நான் தெரிந்தோ தெரியாமலோ கேள்வி கேட்டாலும்
2.அந்த கேள்விக்குள்ளேயே கேள்வியைக் கேட்டு
3.கேள்வியின் உணர்வைக் கொண்டே பதிலையும் கொடுப்பார்.

அது எவ்வாறு இயக்குகின்றது…? நீயா…? அல்லது நானா…? ஆக நீ பேசுவது நீயா…? நான் பேசுவது நானா…? ஆக நான் என்பதற்கு எதுவாகின்றது…? என்பார் ஈஸ்வரபட்டர்.

எடுத்துக் கொண்ட உணர்வு உயிருடன் இயக்கத்தைக் கொண்டு வரும்போதுதான் “நான்…” இங்கே மைக்கிலே (MIC) பேசிய உணர்வின் தன்மை கொண்டு கரண்ட்டில் இயக்கப்படும்போது அந்தச் சொல்லின் தன்மையை அது இயக்கும்.

நம் உயிரின் ஓட்ட நிலைகளும் இதே போன்று தான். உணர்வுகள் எதுவோ அதைத் தான் உயிர் இயக்கும் என்ற இந்த நிலைகளையும்… மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை அது எவ்வாறு…? என்ற நிலைகளையும்… பூமிக்குள் மண்ணாவதற்கும்… கல்லாவதற்கும்… வைரம் ஆவதற்கும்… “மூலம்” பல கோடி நிலைகளை இது விழுங்கியதுதான்…!

அந்த உணர்வின் தன்மை விளைந்து அதிலே தாவர இனங்களாக விளைந்து மனிதனுக்குள் எண்ணமாக வருவது என்றால் அது கோடி தான்… கோடி என்று இல்லாதபடி வேறு எதுவும் இல்லை.

இந்தக் கோழிக்கும் கோடிக்கும் வித்தியாசம் சொல்லின் தொடர்கள் எதுவாக இருப்பினும் அது பாஷையின் முறை கொண்டு அது வேறாக மாறினாலும் நான் கோடி என்கின்றேன் நீ கோழி என்கின்றாய் என்பார் குருநாதர்.

இதைப் போல விண்ணின் ஆற்றலை என்னை நேரடியாகவே நுகரும்படி செய்கிறார் குருநாதர்.
1.என் உடல் இங்கே இருக்கும்
2.குரு என்னை உதைத்ததும் அந்த உதைத்தத்ன் உணர்வுகள் அவரோடு ஒன்றும்
3.ஒன்றிய உணர்வுகளை அங்கே விண்வெளியில் பரப்பச் செய்வார்.
4.அந்தப் பரவிய உணர்வுகள் அங்கே அடையும்.
5.அடைந்த உணர்வுகள் என்னை அடித்த உணர்வுகள் கொண்டு இங்கே இழுக்கும்.
6.அப்படி இழுத்த உணர்வு கொண்டு தான் எனக்குள் விண்ணுலகை அறிவித்தார் ஈஸ்வரபட்டர்.

நீ யார்…? எப்படி வந்தாய்…? எந்தெந்த வழியில் எல்லாம் வந்தாய்…? என்று குருநாதர் கேட்டுவிட்டு கனவு காணுவது போல் காட்டுகின்றார்.

அணுவாகத் தோன்றி உயிரணுவாக (நீ) உன் உயிரே உண்டானது என்ற நிலைகளையும்… விண்ணிலே உயிர்கள் உண்டாகுவதற்கும் இதிலேயும்… பல கோடிக் கோடிக் கோடி… என்ற நிலைகளைப் பார்த்தால் “உயிரின் துடிப்பு” ஒன்றாக இருக்கும்.

எத்தனை கோடி உணர்வுகள் கலந்து.. உயிரின் துடிப்பிற்குள் இணைந்து… அது இயக்கமாக உருவாகின்றது…? என்ற நிலைகளும் ஒரு அணுவின் தன்மை மற்ற கோள்களின் நிலைகள் கலந்து வரப்படும்போது இந்த உணர்வின் தன்மை கோடி… கோடி… கோடி… கோடி… கோடி…

அந்தக் காரத்தின் உணர்வின் தன்மை எவ்வாறு ஆனது…? எத்தனை கோடி சேர்ந்து கசப்பாக மாறுகின்றது….? இதைப்போல சுவையின் உணர்வும் மணத்தின் நிலைகள் எது இணைந்ததோ அது மணமாக எப்படி மாற்றுகின்றது…? இவையெல்லாம் சேர்த்துத் தான் கோடி…கோடி…கோடி..! என்பது.

கொடூரமான ஒரு புலி பாம்பின் வாயில் சிக்கி இறந்த பின் பாம்பாகப் பிறக்கின்றது

ஒரு சமயம் காட்டுக்குள் செல்லும் போது கொடூரமாகத் தாக்கும் சக்தி கொண்ட புலி என்னை அடிக்க முற்பட்டு வந்தாலும் அதனின் பாதைய்ல் சந்தர்ப்பத்தால் ஒரு பாம்பின் வாயில் சிக்கிக் கொண்டது.

 

அவவளவு பெரிய புலி பாம்பின் வாயில் மாட்டிக் கொண்டு தவிப்பதைப் பார்க்கும்படி செய்தார். அதை அப்படியே முழுவதும் பாம்பு விழுங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து உடலுக்குள் செல்கிற்து. பின் அந்தப் புலி பாம்பின் நினைவு கொண்டு பாம்பாக அடுத்துப் பிறக்கிறது என்று குருநாதர் உணர்த்துகின்றார். 

Artificial intelligence

இன்றைய மனிதன் இயந்திர மனிதனாகவே (ROBOT) மாறி விட்டான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அலை வரிசைகளின் மூலம் இன்று நாம் பார்த்து.. கேட்டுக் கொண்டிருக்கும் ரேடியோ… டி.வி. இண்டெர்னெட்… எல்லாமே எவ்வமிலத்தில் உலோகத்தைப் பூசி ஒலி பரப்பப்பட்டதோ.. அது காற்று மண்டலத்தில் பரவி… எத்தொடரில் ஒலிபரப்பானதோ… அவ்வொலியின் பலவாகப் பரவும் செயல் ஜீவன் கொண்டு… ஒரு இடத்தில் ஒலிப்பரப்பப்பட்ட நிலை இக்காற்று மண்டலம் முழுமைக்கும் பல மைல்களுக்கப்பால்… அதன் தன்மை கொண்ட அமில மோதல் தொடர்பில் ஜீவன் பெற்று விடுகிறது.

அந்த இணைப்பு பெறும் தொடர்பிலெல்லாம் ஒலிப்பரப்பாகும் ஒலியை நாம் அவ் ஈர்ப்பில் கேட்கும் பொழுது
1.எவ்விஷ அலையின் முலாம் பூசப்பட்ட அமில ஈர்ப்பின் ஒலிப்பதிவு
2.இந்தக் காற்று மண்டலத்தில் ஜீவன் பெற்றதோ
3.மீண்டும் அதே அலையின் உணர்வை நம் எண்ண உணர்வு எடுக்க எடுக்க
4.இவ்வுடலும் அவ்விஷ அலையின் ஈர்ப்பிற்குத்தான் செல்ல முடியும்.

எப்படி இயந்திரங்களை ஒன்றின் இணைப்பு கொண்டு பிறிதொன்றை இணைத்து ஓட்டும் பொழுது… அதன் தொடர்பில் இதுவும் ஓடுகின்றதோ அதைப் போன்று… உணர்வின் எண்ண அலையின் தொடர்பு அலையில் எத்தொடர்பில் ஒலி அலை.. ஒளி அலை பதிவு பெற்றனவோ… அவற்றின் ஈர்ப்பிற்கு மனிதர்கள் தம் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது… அவ் ஓட்டத்தின் சுழற்சியில் தன் உணர்வும் சிக்கி… அவ்விஷ அலையில்தான் இம்மனித ஆத்மாவும் செயல் கொள்ளத் தொடங்கி விட்டது.

இந்தக் குறுகிய நூற்றாண்டில் வளர்ச்சி கொண்ட இவ் அலையின் தொடர்பினால்… “பல கோடி ஆண்டுகளாக” வளர்ச்சியுற்ற வலுக் கொண்ட இவ்வுயிர் ஆத்மாவை நல் உணர்வின் ஞானமுடன் செயல்படுத்த முடியாத நிலை ஆகி விட்டது.

இன்றைய செயற்கை மின் காந்த ஒலி… ஒளிக் காட்சிகளின் தொடர்பினால்…
1.ஆத்மாவானது உயரும் நிலை பெறாமல்
2.உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன்
3.உயிருடன் வலுக் கொண்டு… உயிருடன் ஆத்மா வலுப் பெறாமல்
4.ஆத்மா சிதறுண்ட நிலையில் இக்காற்று மண்டல சுழற்சியில்
5.மனித உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அந்தந்த மோதல் நிலை பெற்று
6.தன் வலு நிலையை இழந்து விடுகின்றது.

ஆகவே.. ஆத்மாவுடன் கூடிய உயிரும்… ஆத்மா பிரிந்த அவ்வுயிரும் வலுவிழந்த நிலையில்… பிறப்பின் தொடருக்கு மீண்டும் மிகவும் கீழ் நிலையான உயிரின நிலைக்குத்தான் செல்ல முடிகின்றது.

இன்று இக்காற்று மண்டலமே மிகவும் நஞ்சாக உள்ளது. மனித உணர்வின் எண்ண ஆத்மாவிற்கு வேண்டிய உயர் காந்த மின் அலையை எடுக்கும் உயர் ஞானத்தின் சக்தி நிலை பெறத்தக்க சூழ் நிலையை
1.இன்றைய விஞ்ஞானம் காற்று மண்டலத்தில் கலக்க விட்டுள்ள பல அலையின் செயலினால்
2.அந்த மனித சக்தியையே வலுவிழக்கச் செய்துவிட்டது.

விஞ்ஞானத்தில் செயல்படும் நிலையே தன் ஞானம் செயல்படக்கூடிய வழி வளர்ந்த தொடரில் வளர்ந்திருந்தது என்றால்
1.இன்று இப்பூமியில் கலியின் கடைசியை அழிவு நிலை இல்லாமல்
2.மனிதனின் உயர்வு வளர்ச்சியான அடுத்த கல்கி அவதாரத்தை மனிதர்கள் பெற்றிருக்கலாம்.

சில நிலைகள் வெளிப்படுத்திய நிலையும் யூதர்களினால் அன்று மனித உணர்வின் ஆத்மா வலுப்பெற்ற நிலையும் அழிவு நிலைக்குச் சென்று விட்டது.

 

அன்றைய ஞானிகள் மனித ஆத்மா உயர்வு பெற மனிதன் எச்சக்தியையெல்லாம் பெற முடியுமென்ற தத்துவத்தை விளக்கிக் காட்டினர்.

1.அதை வளர்க்கும் நிலையைக் காட்டிலும் எதிர்க்கும் நிலையும்
2.தன் தேவைக்குத் தந்திரமான முறையில் செயல்படுத்தப்பட்டதினால்
3.இன்று அவை எல்லாம் வேறு ரூபமெடுத்துவிட்டன.

Power of Eswarapattar

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “கோடி… கோடி… கோடி…” என்று அடிக்கடி சொல்வதன் உட்பொருள்

 

அதாவது இந்த விண்வெளியில் எத்தனையோ வகையான நட்சத்திரங்கள் இருக்கின்றது. அந்த நட்சத்திரத்திற்குள் இந்தத் தூசி (துகள்கள்) வருவதற்கு… ஒளிகள்… நிறங்கள் கவர்வதற்கு எத்தனை கோடி அண்டங்களிலிருந்து சக்தி கிடைக்கிறது தெரியுமா…? என்பார்.

ஒரு நட்சத்திரம் ஒளியைக் கொடுப்பதற்கு எத்தனையோ கோடி நட்சத்திரங்களின் அந்தச் சக்தி சேர்த்துத் தான் வருகின்றது.
1.இந்த நட்சத்திரம்… இது கோடி…!
2.அது கோடி… கோடி… கோடி…

அதிலிருந்து கோடியாக வரப்படப்போகும் போது இந்தத் தாவர இனங்களில் அது ஒவ்வொன்றும் காரமாக வருவதற்கு எத்தனை காரம்…? தெரியுமா..?

உடனே “மிளகாய் கோடி… கோடி… கோடி…” என்பார்.

இந்தக் காரம்… கோடிக்குள் கோடியாக எப்படி உண்டானது…? அந்தக் கோடியின் உணர்வுகள் காரத்தின் ருசியாக வருவது போல்..
1.நமக்குள் இதே மாதிரியான எண்ணங்கள் பல சேர்த்து
2.அது கோபத்தின் உணர்ச்சிகளாக உருவாகும்.

கோபத்தின் உணர்ச்சிகள் உடலுக்குள் வளரப்படும்போது இந்த உணர்வின் பொறிகள் எப்படி நோயாக மாறுகின்றது…? என்று இப்படிக் கேள்வி எழுப்புகின்றார் குருநாதர்.

இப்படிக் கோடி… கோடி… கோடி… என்று அன்று பூராம் எனக்குச் சோறு அந்த அடி தான்…! (குருநாதர் கோடி கோடி என்று சொல்லி அடிப்பார்)

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் சொல்கிறோம். என்னமோ… சாமி லேசாக உங்களிடம் வந்து சொல்கின்றேன் என்று இல்லாதபடி உங்களுக்குள் குருநாதர் காட்டிய உணர்வலைகளை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே நம்மை கோபக்காரனாக ஆக்கி விடுகிறது…. வேதனைப்படுவோனாக ஆக்கி விடுகிறது… தாய் தந்தையை மறக்கச் செய்து விடுகின்றது….!

1.தாய் தந்தை நம்மை நன்றாக வளர்க்க வேண்டுமென்று எண்ணினாலும் இடைப்பட்ட உணர்வுகள் தடுக்கின்றது.
2.தன் தாய்க்கும் தன் மனைவிக்கும் ஆகாது. என்கிற நிலை வரும்போது இந்த உணர்வை இழுக்கின்றது
3.இதைப் பிளந்து தள்ள வேண்டுமென்றாலும் முடிவதில்லை.

சில குடும்பங்களில் இப்படி எல்லாம் இருக்கிறது. அதே சமயத்தில் தாய்க்கும் மகனுக்கும் ஆகவில்லை. தாய் தான் கடவுள் என்கின்றோம் தாய் தான் தெய்வம் என்கின்றோம் தாய் தான் குரு என்கிறோம்.

ஆனால் யாம் சொன்னதற்கும் இதற்கும் புறம்பாகப் போகின்றது. காரணம்… ஒரு உடலில் ஒரு உணர்வின் தன்மையை அந்தக் குணத்தின் வித்தினை விளைய வைத்தால் அது பல கோடி ஆகின்றது.

ஒரு உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு மற்ற உணர்வோடு அதைச் சேர்க்கப்படும்போது இங்கே மனிதன் என்ற தன்மையே பிரிக்கப்படும். இந்தப் பிரிவிலிருந்து மீள்வதற்கு முடியவில்லை.

மிளகாயை இணைத்துவிட்டால் காரம்… காரம் தான்…! என்று சொல்லும். அதற்குப் பக்கத்தில் இஞ்சியை எடுத்துக் கொண்டால் அதையும் காரம்… காரம்… என்று தான் சொல்லும்.

ஏனென்றால் இந்த உணர்வு அதைத் தான் சொல்லும். காரத்திற்குள் இஞ்சி மிளகு எல்லாம் ஒன்றாகுவதுபோல் இந்தக் கோப குணங்களிலே நியாயங்களையும் பேசும்.

ஆனால் அந்தக் கோபங்கள் என்ன செய்யும் என்றால் தன் இருப்பிடத்தை வலுப்படுத்திக் கொண்டே இருக்கும். அதைப் போக்க வேண்டும் என்பதற்குத் தான் இப்பொழுது சொல்வது.

காரணம் இதையெல்லாம் குருநாதர் என்னிடம் இருக்கக்கூடிய வெறுப்புகளை எல்லாம் வெளியே கொண்டு வந்து குருநாதர் என்னை அடித்து அந்த விண்ணுலக ஆற்றலைக் காட்டினார்.

அப்பொழுது தெரியவில்லை என்று நான் சொன்னால் அதற்கு ஒரு அடி விழும் திடீரென்று…!

உன்னை பேய் பிடித்து ஆட்டுகின்றது என்பார்.

பேய் என்றால் என்ன….?

1.ஒரு மனிதனின் உடலின் விளைந்த உணர்வுகள்
2.அவனை ஆட்டிப்படைத்த அதே செயல்
3.அவன் எந்த உடலை அழிக்க எண்ணினானோ
4.தன் உடலையோ அல்லது மற்றவர் உடலையோ அழிக்க வேண்டும் என்ற ஆணவம் கொண்ட உணர்வுகள் அங்கே விளைந்தது.
5.அந்தக் கார உணர்ச்சிகளுடைய உணர்வுகளை நீ வேடிக்கையாகப் பார்க்கின்றாய்
6.தர்மத்தை நீ கடைபிடிக்கின்றாய்… ஆனாலும் அவனைப் பார்த்த அந்தப் பேய் குணம்
7.உன்னில் வந்து உனக்குள்ளும் அதைப் படைத்துவிடுகின்றது.

உனக்குள் அதைப் படைத்தபின் உன்னுடைய நியாயம் இந்தக் கோபத்தைக் கொண்டே அதை நீக்க வேண்டும் என்று சொல்கின்றது.

உதாரணமாக நாம் சொல்லிப் பார்க்கின்றோம்… கேட்கவில்லை… தப்பாகச் சொன்னால் இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் வருகின்றது.

நம் நல்ல குணத்தை மாற்றிவிட்டு இரு நான் பார்த்துவிடுகின்றேன் என்று வருகிறது. இதுதான் ஓம் நமச் சிவாய சிவாய நம ஓம். நம் உணர்வின் செயல்கள் இப்படி எல்லாம் வந்து சேர்ந்து விடுகின்றது

இதைப் போன்ற நிலை எல்லாம் மாற்றிட வேண்டும் என்பதற்குத்தான் உங்களைத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

கூர்மை அவதாரம்

கண்ணன் காட்டிய உபதேசம் என்பது, “ஒன்றைக் கூர்ந்து.., கவனித்து.., கூர்ம அவதாரமாக..அதுவாக நீ மாறு”. ஒன்றின் வலுவை உனக்குள் சேர்த்தால், இப்பொழுதுள்ள உடல் இழக்கப்பட்டால் எதனின் உணர்வை வலுவாகச் சேர்த்தாயோ அதனின் உடலை நீ பெறமுடியும்” என்று கீதையிலே ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு போர் முறையின் மூலம், உணர்வின் செயல்களைப் பற்றி எடுத்துக் காட்டப்பட்டன.

 

உணர்வுகள் மறைகின்றது.

உணர்வுகள் வளர்கின்றது.

உடல்கள் மடிகின்றன.

உணர்வுகள் கலக்கின்றன. பின் விளைகின்றன.

 

 

உணர்வின் வலுகொண்டு எதனை நுகர்ந்ததோ, அதனின் உணர்வின் துணைகொண்டு, “இன்னொரு உடலுக்குள் போகின்றது..,” என்ற நிலைகள் நமக்கு ஞானிகள் காண்பித்த பேருண்மைகள்.

சாந்தம் கொண்டு செயல்படுவதன் ஆற்றல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 

பிறர் சொல் நம்மை இயக்காதபடி தடுக்கும் ஒரு பயிற்சி 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அணுக்களாக விளையை வைக்கும் முறை

drink addictin

கவலை எல்லாம் மறந்து… நான் மகிழ்ச்சியாக இருப்பதற்காகக் குடிக்கின்றேன்…! என்றாலும் உடலுக்குப் பின் நரகம் தான்…!

குடிப் பழக்கம் உள்ளவரை நீங்கள் அணுகி அவரிடம் இரண்டு மூன்று தடவை பேசிப் பாருங்கள். அந்த உணர்வின் அணுக்கள் ஆகிவிடும். அப்புறம் அந்த நினைவு நமக்குள் வரும்.

அந்த நினைவு வந்தபின் கொஞ்சம் குடித்துப் பாரப்பா…! என்று அவர் சொன்னால் அந்தப் பழக்கம் நமக்கும் வந்துவிடும்.
1.அப்புறம் ஒரு தரம் குடித்து விட்டால் அந்த அணுக்களுக்கு அது குடித்துத் தான் ஆக வேண்டும்.
2.குடிக்கவில்லை என்றால் இது விடாது…. அங்கே இழுத்துக் கொண்டே போகும்.

அப்புறம் என்ன செய்யும்…?

அந்த உணர்வின் தன்மை ஆனபின் நாம் சிந்திக்கும் நிலையே மறக்கும். இதனின் உணர்வு பட்டபின் இதைப் போல குடித்துக் கொண்டிருந்தால்
1.கடைசியில் நாம் இறந்துவிட்டால்
2.ஆன்மா அந்தக் குடியின் மணத்துடன் இருப்போர் உடலுக்குள் தான் போகும்.

குடிப்போர் உடலுக்குள் புகுந்து விட்டால்… குடிக்காமல் இருக்க வேண்டும் என்று அவர் எவ்வளவு தான் எண்ணினாலும் இது விடாது. அது குடிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
1.ஏனென்றால் அதற்கு உணவு தேவை
2.அப்புறம் குடித்துக் கொண்டே இருக்கச் சொல்லும்.

அதர்வண வேதத்தில் இந்தப் போதை மருந்தைக் கொடுத்துதான் மாமிசத்தையும் கொடுத்து… இந்த உணர்வின் தன்மை நினைவிழக்கச் செய்வார்கள். பின் தீயில் இட்டுப் பொசுக்கி அதிலே எடுக்கும் மந்திரத்தைச் சொல்லி இந்த உணர்வினைக் கவர்ந்து இழுப்பார்கள்.

அதாவது அந்த அதர்வண வேதப்படி… மனிதன் உணர்வுக்குள் மந்திரங்களை ஓதி அதனின் தன்மை கொண்டு உருவாக்கி அவனின் நினைவை இழக்கச் செய்து இந்த மதுவை அவருக்குள் கொடுத்து இது சிறுகச் சிறுக இந்த எண்ணத்தை அங்கே அது பதியச் செய்வார்கள்.

மது குடித்தவர்களைப் பாருங்கள்… அது எதாவது யார் மேலயாவது கோபம் வந்தால் சரி. அதிலேயே தான் நிற்கும்.
1.யாரை நினைத்துக் குடித்தார்களோ…
2.இன்றைக்கு அவரை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்த இரண்டில் ஒன்று பார்க்கச் சொல்லும்.

அப்புறம் அந்தச் சண்டையில் சமரசத்திற்கு ஆயிரம் பேர் சொன்னாலும் கேட்காது.

இதைப்போல அன்று மந்திரத்தில் இந்த மதுவினைச் செருகி மந்திரத்தை ஏற்று… இந்த உணர்வின் தன்மை செருகாக்கிய பின் அது கேட்டுணர்ந்தபின்
1.இந்த மனிதன் இறந்தான் என்றால்
2அதே மந்திரத்தைச் சொல்லி மதுவையும் வைத்தால் அந்த ஆன்மா இவர் கைவல்யம் ஆகும்.

இப்படி அந்த மது அருந்ததுவோரின் உணர்வுகள் எல்லாம் மந்திரக்காரன் கையில் சிக்கி அது என்னென்ன எண்ணங்களுக்குப் பயன்படுத்துகின்றாரோ அதற்குப் பயன்படும்.

நாம் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் இந்த மதுவின் வேலைகள்… அந்த அதர்வண வேதத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தியது.

ஏனென்றால் அதர்வண என்ற நிலைகளில்
1.தீமையை விளைவிக்கும் விஷத்தின் தன்மை கொண்டு
2.ஒரு மனிதனுக்குள் இருந்து எடுத்து
3.அந்த நல்ல குணத்தை அழித்துவிட்டுத் தன் எண்ணத்தைப் புகுத்தி
4.அதனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த மனிதன் இறந்தபின்
5.இந்த மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அங்கே கைவல்யம்.

மதுவின் தன்மை வைத்து அந்த உணர்வின் தன்மை கவரப்படும்போது தன் இச்சைக்கு அது வரும்.

அந்த அதர்வண வேதத்தில் இந்த மந்திரம் ஓதுவோர் அனைவரும் மதுவை வைத்திருப்பார்கள்… மாமிசத்தை வைத்திருப்பார்கள்.

அதை வைத்துத்தான் இந்த மந்திரங்கள் ஓதி மற்ற ஆவிகளை அவர்கள் கைப்பிடிப்பார்கள். இத்தகைய நிலையை மனிதனைக் கைவல்யப்படுத்தி விட்டால் அவன் ஆட்டிப் படைக்கும் படைப்பாகப் போய்விடும்.

ஆகவே உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்…! என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

இந்த வாழ்க்கையில் எங்கே போகப் போகின்றோம்…? என்ற எண்ணத்தில்
1.இருக்கும்வரை… “தன்னை மறந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு…”
2.அவர்கள் செய்தார்கள்… இவர்கள் தப்பு செய்தார்கள்…! என்று எண்ணத்தில் குடித்தால்
3.இந்த உடலை விட்டுச் சென்றபின் அடுத்த கணம் மந்திரவாதி கையில் நேரடியாகப் போய்ச் சேரும்.

இல்லையென்றால் இன்னொரு உடலுக்குள் சென்று அந்தக் குடிப் பழக்கம் உள்ளவர் உடலில் சென்று இன்னும் கொஞ்சம் குடிக்கச் செய்யும். அந்த இரண்டும் ஒன்றாகி விட்டால் இந்த உடலைவிட்டுச் சென்றபின் மீண்டும் அதே மந்திரவாதி கையில் சிக்கும்.

ஒன்றை ஆயிரமாகப் பெருக்கி அந்த உணர்வின் எண்ணத்தைப் பெருக்கிவிட்டால் அது அதர்வண என்று பொருள்

ஆகவே எதனின் மதுவை வைத்து இதை செய்கின்றார்களோ இன்னொரு ஆன்மாவைக் கைவல்யப்படுத்துகின்றான்.

ஆகவே இது போன்ற நிலைகளில் சிக்குண்டு தவிப்பதிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.

பண்டிகைகள் மூலம் நாம் பெற வேண்டிய உயர்ந்த சக்தி

மனிதனுக்கு மத்தியில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்குவதற்காக பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நிலைகளைக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

 

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்தப் பன்னிரண்டு மாதங்களுக்கும் முப்பது நாளைக்கு ஒரு தரம் தீமைகளைக் கழித்துச் சுத்தப்படுத்தும் முறைகளைக் காட்டுகின்றார்கள்.

 

பொங்கல்… சிவன் இராத்திரி… சித்திரைக்கனி… ஆடிப் பெருக்கு.. விநாயகர் சதுர்த்தி.. விஜய தசமி… தீபாவளி.., கார்த்திகை தீபம்… வைகுண்ட ஏகாதசி… என்று ஒவ்வொரு மாதத்திலும் விழாவை வைத்து ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக்கிக் கொள்ளும் முறைகளைக் கொடுக்கின்றார்கள்.

 

விஜயதசமி – நம் உயிர் விண்ணிலிருந்து இங்கே பூமிக்குள் வந்த பின் பத்தாவது நிலை அடையக்கூடிய முறையைக் கொடுக்கின்றார்கள்.

 

கார்த்திகை ஜோதி. என்றால் ஆறாவது அறிவு கார்த்திகேயா. விளக்கை நம் வீட்டு வாசற்படியில் வைத்து வீட்டுக்குள் வருகின்ற இருளை நீக்குகின்றோம். ஆகவே கார்த்திகை தீபம் ஏற்றி இருளை நீக்குவது போல் எல்லாக் குடும்பமும் ஒளியாக வேண்டும் என்று எண்ணும்படி செய்கிறார்கள்.

 

மிக மிகச் சக்திவாய்ந்த உணர்வுகளை பௌர்ணமி தோறும் பதியச் செய்கின்றோம்

சாமியிடம் விபூதி வாங்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள் சொல்வதைச் செய்வதில்லை

சாமி சொல்வது மிகவும் அற்புதம் என்று போற்றிவிட்டு சொன்னதைச் செய்யவில்லை என்றால் பலன் இல்லை

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நாம் உயர்ந்த நிலையில் நினைப்பவர்களை… மற்றவர் குறையாகச் சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா…?

மெய்ப் பொருள் எது – விளக்கம் 

 

1. “கீதா உபதேசம்” செய்வது யார்? நமது கண்களே

நமது கண் தான், நாம் எண்ணிய நிலைகளை அது கவர்ந்து அலைகளை எடுத்து “கீதா உபதேசம்” என்ற நிலைகளில் உபதேசிக்கின்றது.

 

 

 

பிறர் தவறு செய்கின்றார் என்றால், அந்தத் தவறான உணர்வைக் கண் கவர்ந்து, இழுக்கப்பட்டு, உயிரில் பட்டு அவன் தவறு செய்கின்றான் என்று உபதேசிக்கின்றது கண்.

 

ஆனால், தவறு செய்கிறான் என்று காட்டினாலும், அந்த உணர்வின் நிலைகள் நமக்குள் அது பதிவாகின்றது.

தவறு செய்கின்றான் என்று உணர்த்துகின்றது.

தவறில் இருந்து விடுபடவும் வழி செய்கின்றது.

தவறு செய்பவனைத் தண்டிக்க வேண்டும்

என்ற உணர்வும் தோன்றுகின்றது.

 

நாம் தவறிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணும் பொழுது, அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைவது இல்லை.

 

தவறு செய்பவனைத் தண்டிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது, இந்த உணர்வு நம் கண்ணின் நிலைகளுக்கு வந்து,

நாம் எப்படியெல்லாம் வளைத்துப் பார்க்க வேண்டும்?

எந்த நிலைகளில் மறைமுகமாக இருக்க வேண்டும்? என்று

நாம் எடுத்துக் கொண்ட கண்ணின் உணர்வலைகள், ஞானத்தின் நிலைகொண்டு அவனைத் தாக்கும் நிலையே உருவாக்கும்.

 

அல்லது அவனை ஏசும் உணர்வு கொண்டு, அவன் யாரிடம் எதைச் சொன்னான்? அது என்னவாகும்? என்று எண்ணும் பொழுது, அவனுடன் பழகிய நிலைகள் கொண்டு,

அதை நினைவிற்குக் கொண்டு வரச் சொல்லி,

அவன் சொன்னதை, அவனிடம் சொல்லி

எப்படியும் மடக்க வேண்டும் என்ற நிலையில்

ஞானத்தை ஊட்டுவது கண்.

2. கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான் – விளக்கம்

 

எந்தெந்த நிலைகளில் நாம் எண்ணங்களை எண்ணுகின்றோமோ, அவற்றை இயக்கிக் காட்டுவது கண். கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் சென்றான் என்று காவியமும் உண்டு.

அர்ச்சுனன் என்பது,

நாம் புழுவிலிருந்து மனிதனாக உருப்பெரும் நிலைகளில் விளைந்த

ஒவ்வொரு எண்ணமும் வலுப்பெற்று,

பரிணாம வளர்ச்சியில் வளரச் செய்தது.

அர்ச்சுனனுக்குக் கண்ணன் சகலகலா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தான் என்று காவியங்கள் உண்டு.

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், இந்தக் கண்ணே அந்தந்த நிலைகளில்

எதிரியைக் காணும் பொழுது,

அதிலிருந்து தப்பிக்கும் நிலையும்,

எதிரி நெருங்கிவிட்டால் எப்படித் தாக்க வேண்டும் என்ற நிலையும்

எதிரி தன்னை நெருங்கித் தாக்க வரும் பொழுது,

அந்தத் தாக்கும் உணர்வின் உணர்ச்சியைக் கவர்ந்து, இழுத்து,

ஓடும் உபாயத்தைக் காட்டி,

தப்பித்து ஓடும் வேகத்தைக் கொடுக்கின்றது, கண்கள்.

 

இருப்பினும், எதிரி வலு கொண்டு தாக்கும் நிலை வந்துவிட்டால், எதிர்த்து நீ தாக்கு என்ற இந்த உணர்வை ஊட்டி, அந்த எதிரியைத் தாக்கச் செய்கின்றது.

ஆக, எதிரியைக் கூர்ந்து கவனித்து,

அதைத் தாக்க வேண்டும் என்ற

எண்ணத்தின் வேகத் துடிப்பைத் துடிக்கச் செய்து,

எதிரியைத் தாக்கச் செய்கின்றது கண்.

 

ஆனால், எதிர் நிலை அதிகமாகும் பொழுது, எதிரி தன் வலு கொண்டு

இதை அழித்துவிட்டால்,

இதன் உடலில் இருந்த உயிரான்மா எதிரியின் உணர்வைக் கவர்ந்து,

அதனின் வலு பெற்று, வியூகத்தைத் தகர்த்து,

அதன் உடலுக்குள் சென்று,

வலிமை இழந்த இந்த உயிர் உட்புகுந்து,

அதனின் உணர்வை அது கவர்ந்து,

அதனின் நிலை பெறும் என்று

கீதையிலே கண்ணான கண்ணனின் செயல்களை, கீதா உபதேசம் என்று (கீதாச்சாரம்) இதையெல்லாம் அன்று மெய்ஞானிகள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

கடவுளின் அவதாரம்

உயிரணுவின் தோற்றத்தையும் அதன் பரிணாம வளர்ச்சியையும், மனித சரீரத்தையும் மனிதர் தம் உயிராத்மா பெறவேண்டிய நிலை எது? என்பதையும் நமக்கு உணர்த்துவதற்காக ஒரு உயிரணுவின் உள் நின்று இயக்கும் வெப்பத்தைக் கடவுள் என்று பெயரிட்டார்கள்.

உயிரணு தம்முள் உள்ள வெப்பத்தின் தன்மை கொண்டு, உணர்வினைக் கவர்ந்து தன்னுள் இணைத்துக் கொண்ட உணர்வுக்கேற்ப எவ்வாறு தன் வளர்ச்சி பெறுகின்றது என்பதை ஞானிகள் நமக்குத் தெளிவாக்கினர்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம்மைக் காக்க வேண்டும்

துருவ தியானத்தில் எடுக்க வேண்டிய சக்தி எது…?

ஆயுள் மெம்பர் கணவன் மனைவி தியானம்

Spiritual circle of sages

அழிவை நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து மீண்டு “மகரிஷிகள் காட்டும் வழியில்” செல்ல வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனின் உணர்வின் எண்ணம்… தன் ஞானத்தின் உயர் ஞானத்தால் படைப்பின் பல பொருள்களை எல்லாம் இவ்வுடல் தேவைக்குச் செயலாக்கித் தன் சரீர ஜீவிதத்தை இன்று பக்குவப்படுத்திக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இவ்ஈர்ப்புப் பிடிப்பில் பூமியின் சுழற்சியுடன் சிக்குண்ட இஜ்ஜீவ உடலின் “உயிரையும்… உயிரணுக்களையும்…” இந்த உடலில் உள்ள பொழுதே இது வரை யாம் சொன்ன வழித் தொடர்பினால் உயர் காந்த மின் அலைகளை எடுத்துச் சேமிக்கும் பக்குவம் பெறல் வேண்டும்.

1.இஜ்ஜீவ காந்த சரீரம் இப்பூமிப் பிடிப்பின் சுவாசத்தை எடுத்து
2.சாதாரண வாழ்க்கையில் வளரும் நிலையிலிருந்து
3.உயர் தன்மைக்கு வீரியத்தைச் செலுத்திடல் வேண்டும்.
4.இப்படி மேல் நோக்கி ஈர்க்கப்படும் தொடர் சுழற்சியினால் இக்காற்று மண்டலப் பிடிப்பில் சிக்காமல் தப்ப முடியும்.

(உடலை விட்டுச் சாதாரண நிலையில் பிரியக்கூடிய உயிராத்மா இந்தப் புவியின் காற்று மண்டலப் பிடிப்பில் தான் சுற்ற முடியும்)

ஆக… வீரியத் தன்மை கொண்ட இவ்வுயிராத்மா மேல் நோக்கிப் பெற்ற உயிர் காந்த மின் அலையின் வளர்ச்சியினால்….
1.உயிருடன் உயிர் அணுக்களும் சேர்ந்த ஈர்ப்பின் உந்தலை
2.எண்ணத்தின் உந்தல் கொண்டு ஒளி கொண்ட ரிஷியின் ஈர்ப்பில் செலுத்தும் நிலையால்
3.ஒளியின் ஒளியாகப் பிரகாச நிலை அடைந்து
4.இந்த மனித உடலிலிருந்தே மனிதன் “பறக்கும் நிலை” பெற்றிருக்கலாம்.

ஆனால் உணர்வின் எண்ணம் இந்த உடல் வாழ்க்கையில் பூமிப் பிடிப்பில் தொடர் நிலையுடன் ஓடும் தன்மையால் சரீரம் அழுகிய நிலையில் உடலின் ஆத்மா பிரிந்ததென்றால்… உடலின் உயிரணுக்களும் வலுவிழந்த தன்மையால் பெற்ற உயிர் சரீர நிலையைக் காட்டிலும்… மீண்டும் பிறப்பு நிலையில் மனிதப் பிறப்புக்கே வந்தாலும் ஞானமும் அங்க அவயங்களின் தன்மையும் “குறுகிய நிலை தான்” பெற முடியும்.

விவசாயத்தில் இன்றெப்படி அதற்குகந்த வீரிய இரசாயண உரங்களைச் செலுத்தி மகசூலில் அதிக நிலையும் காய்கறிகளின் தன்மையை வீரியப்படுத்தி விவசாயம் வளர்ந்துள்ளது. அதைப் போன்று….
1.இச் சரீர உடலின் உயிராத்மாவிற்கு வீரியத் தன்மை தரும்
2.உயர் ஞானத்தின் செயலை மனிதன் செயலுக்குக் கொண்டு வராமல்
3.உடலின் ஆரோக்கியத்திற்கும்… உணவின் சுவைக்கும்தான்… தன் ஞானத்தைச் செலுத்தி விட்டான்.

உயிருக்கும் உயிரணுவிற்கும் தரப்படும் வீரியத் தன்மையில் உணர்வின் எண்ணத்தில் “பிற நிலையின் ஈர்ப்பு நிலையற்று… தன் செயலை வீரியப்படுத்தும் நிலையினால் தான்…” உயர்வு நிலைக்குச் செல்ல முடியும்.

உணர்வுகள் மாற்றப்பட்டு எண்ணத்தின் செயல் பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிற்குச் செலுத்தும் பொழுது மகான்களினால் அன்று வெளிப்படுத்திய சில உண்மை நிலைகளில் மருத்துவ நிலையும் இன்று விஞ்ஞானத்தின் விஸ்வரூபம் எடுத்து விட்டதைப் போன்று
1.அழிவு நிலைக்குச் சென்றுவிடும் பக்குவத்தின் பலனை அறிந்து
2.அதிலிருந்து மீண்டிட மகரிஷிகள் காட்டும் வழியில் செயல்படல் வேண்டும்.

பழனி முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் மணங்கள்

 

போகரால் உருவாக்கிய நவபாஷாண முருகன் சிலைக்குள் பார்க்கலாம். அந்தச் சிலையின் மேல் நீரை விட்டவுடன் அந்த இருட்டறைக்குள் வைக்கப்படும் பொழுது ஏற்படும் பூமியின் வெப்பத்தால் மலையின் வெப்பத்தை அது எடுக்கும் பொழுது ஒரு சொட்டு நீர் பட்டால் அதற்குள்ளிருந்து வரும் மூச்சலைகள் நாம் எந்த ஏக்கத்துடன் செல்கின்றோமோ நாம் அதைச் சுவாசித்தவுடன் நமக்குள் இருக்கக்கூடிய பல விஷத் தன்மைகளை மாய்க்கக் கூடிய சக்தியை அது பெறுகின்றது. 

Good and bad segregation

ஆன்மீகப் பாதையில்… மற்ற வழிகளைப் பின்பற்றுவோரிடம் வாதம் செய்யத் தேவையில்லை…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எவ்வாறு பெறவேண்டும்…? என்று யாம் (ஞானகுரு) தொடர்ந்து உணர்த்தினாலும்… பக்தி கொண்டவர்கள் சிலர்… முனித் தன்மை கொண்ட பாடல்களைப் பாடிப் பழகிக் கொண்டால் அந்தப் பாடலின் உணர்வுகளே அவர்களுக்கு முன்னாடி வரும்.

1.அது முன் வரப்படும் பொழுது
2.இங்கே கொடுக்கப்படும் அருள் ஞான இணைப்பை அது இணைக்க விடாது தடுக்கும்.

முனித் தன்மை கொண்ட பக்தி மார்க்கங்களிலும்… மதத்தின் அடிப்படையால் அவர்கள் கவிப் புலமையால் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளையும் மற்ற பாடலுடன் பதிவு செய்து கொண்டால் அந்தப் புலமைகள் கொண்ட புலவர்கள் பால் எடுத்துக் கொண்ட உணர்வே முன் நிற்கும்.

இங்கே உபதேசிக்கும் பொழுது அது முன் எழுந்து நின்று விடும்.

இந்தப் புவியின் பற்றை அற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைக்கத் தொடங்கினாலும் அவர்களுக்கெல்லாம் இணைப்பது மிகவும் கடினம்.

அந்த வகையில்… பக்தியின் புலமையில் அதிகமாக எடுத்துக் கொண்டோரின் நிலைகளிலும் ஒரு சிலரே மீள்வர். நூற்றுக்கு ஒரு பத்துப் பேர் தேறுவதே மிகக் கடினம்.

காரணம்… அவர்கள் மதத்தின் நிலைகள் கொண்டு ஞானிகள் என்ற நிலைகளும் புலமைகள் பாடியும்… பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த உயிரினங்களின் உணர்ச்சியைப் பற்றிப் புலமைகள் பேசினாலும் “அந்தப் புலமைகளே முன் வந்து எழும்…”

ஆனால் மூலத்தை இவர்கள் அறியார். மூலமற்ற நிலைகள் கொண்டு வாதிக்கும் நிலையே தான் அவர்களுக்குள் அதிகமாக விளையும்.
1.வாதிடும் திறமைகள் உண்டு.
2.ஆனால் மெய் ஒளி பெறும் உணர்வினை ஏற்றுக் கொள்ளும் மனப் பண்பு வராது.

வாதிடும் திறமைகள் ஆகப் படும் பொழுது அந்த முனித் தன்மை என்ற நிலையே இங்கே அடையும். இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும்.

ஏனென்றால் இந்த முனித் தன்மை கொண்டோரிடம் வாக்குவாதத் தன்மை அதிகமாகி விட்டால்… “சாமி நமக்குன் இவ்வளவு சொல்லி இருக்கின்றாரே…!” என்ற நிலைகளைக் கலந்து…
1.எதிர் மறையான பொறிகள் – ஒரு கல்லுடன் உராயப்படும் பொழுது பொறிகள் எழும்புவது போல்
2.நமக்குள் வெறுப்பும் வேதனையும் அதிகமாகத் தொடர்ந்து விடும்.

இதனால் நமக்குள் உறைந்திடும் உணர்வு கொண்டு கலவைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்துவது போல் நம் உயர்ந்த குணத்திலேயும் மாற்றம் ஏற்படும் நிலையே வந்துவிடுகின்றது.

ஏனென்றால் பல நிறங்கள் தனித் தன்மையாக அவை இருப்பினும் அதனுடன் மற்ற நிறத்தை இணைக்கப்படும் பொழுது… நீங்கள் என்ன தான் வாயிலே சொன்னாலும்… சொல்லச் சொல்ல… அவர்கள் வெறுக்க வெறுக்க… அந்த மாற்றுப் பொருளாகச் சொல்வார்கள்.

அப்பொழுது உங்கள் உணர்வுகளும் அதைப் போல மாறுபட்டு நாம் போகும் பாதைக்கே ஒரு தடை விதிக்கும் நிலையாக வந்துவிடும்.

“இதிலே மிகவும் கவனம் தேவை…!”

காரணம் அதைப் போன்ற நிலைகள் வந்தாலும் உங்களுக்குக் காட்டிய அருள் வழி கொண்டு யாம் கொடுத்த…
1.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும்…! என்று எண்ணத்தால் எண்ணி
2.அதைப் பல முறை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.அவர்கள் மெய்ப் பொருள் காணும் நிலைகள் பெறுதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

அவர்கள் உண்மையை உணர வேண்டும்.. நிச்சயம் உணர்வார்கள்…! என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும்.

அமெரிக்கா மற்ற நாடுகளை அடிமைப்படுத்தும் விதம்

ஏமாற்றும் உணர்வுகள் கொண்டவர்களின் செயல்களும் விளைவுகளும்

இந்தக் காலத்தின் கடைசிக் கட்டத்திலிருக்கிறோம்

ஆலயப் பண்புகளை நாம் கடைப்பிடிக்கின்றோமா…

கோயிலைச் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் நம்முடைய ஒழுக்கப் பண்பாடுகளை வளர்ப்பதற்கு எவ்வளவு தெளிவாகச் செய்துள்ளார்கள் ஞானிகள்.

“சாதாரண மனிதர்களும் பிறவியில்லா நிலை பெறவேண்டும்…!” அகஸ்தியர்  கண்டுணர்ந்த உண்மையின் உணர்வைப் பெறவேண்டும் என்ற நிலைக்காக வேண்டி ஞானிகள் காவியங்களையும் ஆலயங்களையும் படைத்தார்கள்.

full moon power

மிக மிகச் சக்திவாய்ந்த உணர்வுகளை பௌர்ணமி தோறும் பதியச் செய்கின்றோம்

இன்று மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ வகையில் நம் உடலை அழகுபடுத்துகின்றோம். அடுத்து ஒரு சிறிய மாற்றமான சொல் வந்தால் போதும்…!

என்னை இப்படிப் பேசி விட்டார்களே..!. என்ற தாங்க முடியாத உணர்வு கொண்டு… விஷத்தையே உட்கொள்ளச் செய்யும். ஒரு நொடிக்குள் இந்த உடலையே அழிக்கும் உணர்வு கூட வந்து விடுகின்றது.

இப்படி மற்றவர்களுடன் கலந்து உறவாடப்படும் பொழுது அவருடைய கஷ்டங்களும் மற்றவைகளும் கேட்டுணர்ந்தோர் உங்கள் உணர்வுகளில் படுகின்றது.

உயர்ந்த குணத்துடன் நஞ்சு கொண்ட உணர்வுகள் கலந்த பின் நம் நல்ல குணங்கள் செயலற்றதாக மாறிவிடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் இதே எண்ணம் தான் அங்கே உயர்த்தவும் சொல்கிறது.

1.ஒவ்வொரு நொடியிலேயும் நம்மைத் தாக்கிடும் அதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட…
2.நம் கண்ணின் நினைவை விண்ணை நோக்கிக் கூர்மையாகச் செலுத்தி
3.நஞ்சை வென்ற அந்த மகரிஷியின் உணர்வை அதைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
4.உங்களுக்கு மன பலம் கிடைக்கும்.. அதிலிருந்து விடுபடும் ஞான்மும் கிடைக்கும்.

இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் அவரவர் கஷ்டங்களை என்னிடம் சொன்னால் அதை நான் கேட்டுணரும் போது அவை யாவும் என்னிடம் கலக்கின்றது.

இருப்பினும் குருநாதர் காட்டிய அருள் வழியில் எனக்குள் வரும் அந்தத் தீமைகளை எல்லாம் நீக்கிக் கொள்கின்றேன்.

அதே சமயம் இந்த உபதேசங்களைக் கேட்டு அதன் வழியில் தியானிக்கும் நீங்களும்… பிறருடைய கஷ்ட நஷ்டங்களைக் கேட்டுணரும் போது
1.அந்த உணர்வுகளை நீக்க
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு உறுதுணையாக இருந்து
3.அந்த வழியில் தீமைகள் சேராவண்ணம் பாதுகாப்பாக இருந்து செயல்படுத்துகின்றேன்.

இருப்பினும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. போன்ற வகைகளிலும் உலகில் நடக்கும் தீமைகளையும் அசம்பாவிதங்களையும் கேட்டுணர்ந்த பின் உடனே உங்களுக்குக் கொடுத்த தியான சக்தியின் துணை கொண்டு “ஆத்ம சுத்தி செய்து கொள்வதே நலம்…”

அதைப் பெறச் செய்வதற்குத்தான் அடிக்கடி உபதேசிப்பது…!

1.மிகவும் சக்திவாய்ந்த மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அந்த அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறவும்
2.பௌர்ணமி நாள்களில் உங்களுடைய எண்ணம் விண்ணை நோக்கிச் செல்லவும்
3.விண்ணிலே உங்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை அங்கே சப்தரிஷி மண்டலத்தில் சேர்பித்தலும்
4.மூதாதையர்களின் உடலில் உள்ள மற்ற உடல் பெறும் உணர்வை அங்கே கரைப்பதும்
5.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அந்த உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்டு
6.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதும் தான் எமது வேலை (ஞானகுரு).

பௌர்ணமி அன்று மிக மிக சக்திவாய்ந்த உணர்வுகளை உங்களில் பதியச் செய்கின்றோம். தியானித்து அதைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

Maharishikaludan Pesungal - gnana

உடலைக் காக்க முற்படும் இன்றைய மனிதனின் ஞானத்தால் தன் உயிராத்மாவைக் காக்க முடியாதா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்று விஞ்ஞானத்தில் மருத்துவத்துறையிலும் மற்ற தொழிலும் அணுக் கதிர்கள் செயல்படுத்தக் கூடிய நிலைக்கும் ஜீவ காந்த சரீரத்தின் வ:ளர்ச்சியில் இச்சரீர செயலுக்கும் உயிர் அணுக்களின் செயல் எப்படிச் செயல் கொள்கிறது…?

மருத்துவ விஞ்ஞானத்தின் மூலமாக… மனித உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு… அதாவது நோயின் தன்மை அறிய உடலிலிருந்து வெளிப்படும் சிறு நீர் மலம் கபம் இவற்றையும் உதிரத்தையும் எடுத்துப் பரிசோதனைக்கு உட்படுத்த சில கால கட்டத்தில் அதிலுள்ள உயிரணுக்கள் பிரியா நிலையில் ஆராய்ந்து அதனுடைய தன்மையை அறிகின்றார்கள்.

உடலிலிருந்து வெளிப்பட்டு… “சில மணி நேரங்களுக்குள் அதைப் பரிசோதனைப்படுத்தினால் தான்…” அதிலுள்ள உயிரணுக்களின் தன்மையைக் காண முடிகின்றது.

செயலுடன் கூடிய ஜீவ ஓட்டத்தில் உயிர் கொண்ட உயிரணுக்கள்…
1.ஜீவ ஓட்டம் அற்றுப் பிரியும் பொழுது… ஈர்ப்பின் ஓட்ட நிலை இல்லாமல்
2.அந்த உயிரணு பிரிந்து காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றதல்லவா…?
3.அதைப் போன்று தான் இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தாலும்
4.இஜ்ஜீவ ஓட்டப் பிடிப்பு மாறியவுடன் காற்று மண்டலத்தில்
5.உயிரும் இந்த உடல் அணுக்கள் யாவையும் சுழலும் நிலை ஏற்படுகின்றது.

இதனுடைய தொடரிலிருந்து… உடலில் ஏற்படக்கூடிய சில வகை வியாதிகளுக்கு விஞ்ஞான மருத்துவ முறையில் மின் கதிரியங்களைச் செலுத்தி…
1.வளர முடியாத சில அணுக்களை வளர்க்க…
2.அதற்குகந்த மருந்தைச் செலுத்தி… அதற்குகந்த வீரியத்தைத் தர (உயிரணு வளர)
3.கதிரியக்க முறை விஞ்ஞான மருத்துவத்தில் மனிதன் முன்னேறி இருக்கின்றான்.

தன் ஞானத்தால் இந்த உடலில் வளரும் உயிரணுக்களுக்கு அடுத்த நிலை பெறக்கூடிய நிலையை… “வீரிய மருத்துவத்திலும்… மற்ற பல செயலிலும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞானம்…
1.தன் ஞானத்தைக் கொண்டு மனிதன் இன்று பறக்கும் நிலைக்கும்
2.எண்ணியதைச் செயலாக்கும் உயர் தெய்வ நிலைக்குச் செயலாக்கி இருக்கலாம்.

கம்ப்யூட்டர் மூலம் ஏற்படப் போகும் தீமைகள் 

கம்ப்யூட்டர் மூலம் வைத்துள்ள control செயலிழந்தால் நாமெல்லாம் என்ன ஆவோம் என்று சொல்ல முடியாது…!

காய்கறி விற்பவர்கள் சிலர் பூச்சி மருந்தைத் தூவித்தான் விற்கிறார்கள் 

Gnanaguru Blessings

தியானத்தின் மூலம் நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகள் அருள் சக்தியின் வலு எப்படிப்பட்டது…? நடந்த நிகழ்ச்சி

வட இந்தியாவில் ஒரு சமயம் நானும் (ஞானகுரு) குருநாதரும் (ஈஸ்வரபட்டரும்) போய்க் கொண்டிருக்கின்றோம். அப்பொழுது குருநாதர் என்னிடம் காண்பிக்கின்றார்.

ஒரு கூனி இப்படி நடந்து போகின்றான் பார். அவன் கூனியாக (முதுகு வளைந்து) இருக்கின்றான். அவனுடைய சந்தர்ப்பத்தை இப்பொழுது பார்..! என்கின்றார்.

வெகு காலமாக இவன் இப்படிக் கூனிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றான். சிறு பிள்ளையிலேயே இவனுக்கு இப்படி ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து வளர்ச்சியாகி… வளர்ச்சியாகி… அது அவனை வளர விடாமல்… நிமிர முடியாமல்.. இந்த நிலையில் இருக்கின்றது

அவன் குனிந்து கொண்டே போகின்றான். அவனுடைய சந்தர்ப்பம் நீயும் நானும் அவனைப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுக்கு ஒரு அதிர்ஷ்டம் வந்திருக்கின்றது.. இப்பொழுது பார்…! என்று சொல்கிறார் குருநாதர்.

என்ன சாமி அதிர்ஷ்டம்…? அவன் வேதனைப்பட்டுக் கொண்டல்லவா போகின்றான்…! என்றேன் நான்.

அவன் முதுகுத் தண்டிலே இங்கே உன் கண்ணிலிருந்து நீ அலைகளைப் பாய்ச்சுடா…! என்கின்றார். குருநாதரும் அவனப் பார்க்கின்றார்

உடனே அவனுக்கு அங்கே முதுகிலே அரிப்பு ஆகின்றது. அரிப்பு ஆனவுடனே அவன் என்ன செய்கின்றான்…?

அங்கே ஒரு தூணிலே போய்ச் சாய்ந்து கொண்டு முதுகை வைத்துத் தேய்.. தேய்… என்று தேய்க்கின்றான். தேய்த்ததும் நெடு…நெடு.. என்று நிமிர்ந்து விட்டான்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் அங்கே பரிட்சைக்குப் பார்க்கப்படும்போது அவன் முதுகுத் தண்டில் பார்த்தவுடனே அவனுக்கு அரிக்கின்றது. அப்பொழுது அதைத் தாங்க முடியவில்லை என்று தூணிலே போய்த் தேய்க்கின்றான்.

அதைப் பார்த்ததும் அங்கே இருக்கின்றவர்கள் ஏனப்பா இப்படி…? என்று கேட்கிறார்கள்.

இல்லைங்க… என்னால் அரிப்பு தாங்க முடியவில்லை… என்று சொல்லிவிட்டுத் தூணிலே சொறிந்து கொள்கிறான். நெடு…நெடு.. என்று நிமிர்ந்து விடுகின்றான். இது நடந்த நிகழ்ச்சி…. அவனுடைய சந்தர்ப்பம்…!

1.ஏனென்றால்… அவனை உற்றுப் பார்த்து
2.இந்த உணர்வின் தன்மையை அவன் பெற வேண்டுமென்ற உணர்வைப் பார்க்கப்படும்போது…
3.முதுகு தண்டில் அரிப்புக் கொடுக்கும்போது…
4.இந்தச் சந்தர்ப்பம் அது புற நிலைகளில் இருந்து தாக்கப்படுகின்றது.

உன் பார்வை அவன் மீது பட்டதும் அரிப்பு ஆகி உடனே தேய்க்க ஆரம்பித்து விடுகிறான்… அப்படியே அந்தப் பிடிப்பு விடுகின்றது…! என்று என்னிடம் உணர்த்துகின்றார் குருநாதர்

அவன் சிறு குழந்தையாக இருக்கும் போது “அச்…ச்..” என்று தும்முகின்றான் இரண்டு நரம்பு பிடித்துக் கொள்கின்றது. முதுகை வளைய விடாதபடி செய்கிறது. நிமிர்ந்தால் வலிக்கின்றது.

இப்படியே அந்தக் குழந்தையிலிருந்து வளர்த்து வளர்த்து யாரும் ஒன்றும் செய்யாததனால் அவன் முதுகுத் தண்டு அப்படியே இறுகிப் போய் விட்டது.

அவன் சந்தர்ப்பம் இப்பொழுது அரிக்கப்படும்போது…
1.உணர்வுகள் வேகம் அந்த வாடிய உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.அந்தப் பிடிப்பு அகன்றது. அவன் முதுகு நேராகி விட்டது.

ஆனால் இதை எல்லாம் அவனிடம் சொல்லாமல் நானும் குருநாதரும் அப்படியே சென்று விட்டோம். குருநாதருடன் யாம் இப்படிச் சுற்றி வரப்படும் பொழுது சந்தர்ப்பம்… சில பேருக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு இப்படி நல்லதாகின்றது.

ஆகவே… ஒவ்வொரு நிமிடமும் நாம் வலுவைக் ஊட்டிக் கொள்ள வேண்டும். நாம் எண்ணியது எதுவோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகின்றது.

குழந்தைகளுக்கு இது மாதிரியான குறைகள் வந்தால் உடனே நாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

அதாவது சில குழந்தைகளுக்கு ஊனக் குறைவோ… சிந்தனை இல்லாதோ.. மூளை வளர்ச்சி இல்லாமலோ… இருக்கும். மேலே சொன்ன மாதிரி எண்ணி அந்த மகரிஷிகளின் சக்தியை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் அதை அவர்களுக்குப் பாச்சுதல் வேண்டும்.

நம்மில் கரு உண்டானதுதான் அந்தக் குழந்தைகள். இதைப்போல அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்ற உணர்வினைக் கூட்டி
1.எங்கள் குழந்தை மகரிஷிகள் உணர்வுகள் பெற வேண்டும்.
2.அது சிந்தனையை வளர்ச்சி பெற வேண்டும்.
3.ஞானத்தின் தன்மை குழந்தையிடம் வளர வேண்டும் என்ற இந்த எண்ணத்தை வலுவாக்கிவிட வேண்டும்.

வலுவாக்கிய சக்திகளை குழந்தைகளுக்கு ஒவ்வொரு நொடியும் உணவு கொடுக்கும் போது இது மாதிரிச் செய்யலாம். அதை தலை வாறும்போது இதைப் போலச் செய்யலாம். அதை பார்க்கும் போதெல்லாம் இந்த நிலை வளர வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சிப் பாருங்கள்.

இதைப் போன்று எண்ணும்போது இந்த உணர்வுகள் நம் குழந்தையைப் பற்றி நமக்குள் மன வலுப் பெறச் செய்வதும் நாம் பாய்ச்சும் அலைகள் குழந்தையின் மேல் படரப் போகும்போது நலமாகும் சந்தர்ப்பத்தை அது உருவாக்கும்.

ஏனென்றால் இவ்வாறு எண்ணிய உணர்வுகள் செயல்படும்போது இது கடவுளாகின்றது. செய்து பாருங்கள்…!

தீமையைப் பிளக்கும் உயிர் வழி சுவாசம்

 

ஏற்கனவே சுவாசித்த பாதையை விட்டுவிட்டு நம் உயிர் நம்மை இயக்கும் இந்த வழி கொண்டு… நம் உயிரை ஈசனாக மதித்து அந்த வாசலின் வழியாகச் சென்று… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்… எங்கள் உடலில் உ:ள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தப் பழக வேண்டும்.

view-of-jupiter

அழிப்பதற்காகப் பயன்படுத்தும் சக்தியை… மனிதன் ஆக்கபூர்வமான செயலுக்காகப் பயன்படுத்துவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“பல நூறு டன் எடையுள்ள மணலிலிருந்து” விஞ்ஞானத்தின் செயலில் ஒரு அவுன்ஸ்க்கும் குறைவான சில ரசாயன சக்தியை (URANIUM) மனிதன் பிரித்தெடுத்து இவ்வுலகத்தையே அழிக்கவல்ல வெடி குண்டுகளைச் செய்விக்கின்றான்.

மனிதனின் எண்ணமும் செயலும் எப்படித் தன் ஞானத்தைச் செயல்படுத்திச் சில சக்தி வாய்ந்த அழிவு நிலைக்கு உட்படுத்தும் குண்டுகளை உருவாக்குவது போல்
1.எண்ணத்தின் உணர்வை மாற்றியமைக்கும் உயர் ஞானத்தைக் கொண்டு
2.இவ் உடலின் ஒவ்வொரு அணுவையுமே வீரியத் தன்மைக்கு
3.சம உணர்வு கொண்டு பரிமளிக்கும் செயலினால்
4.மனிதன் தெய்வ நிலை கொண்டு வளர் சக்திகளை உருவாக்க முடியும்.

விஞ்ஞானத்தில் மனிதக் கருவையே உருவாக்கக் கூடிய ஞானமும் செல்கின்றது. தாய் தந்தை இல்லாமல் அமிலச் சேர்க்கையின் உயிரணு வளர்ச்சி கொண்டு, ஜெட பிம்ப வளர்ப்பிற்கு விஞ்ஞானம் செல்கின்றது.

ஆனால் செயலின் பலன் எதிர் நிலையான உணர்விற்குச் சென்று விடும். அப்படி உருவாகும் சிசுக்கள் மனிதனைக் காட்டிலும் வீரிய விஷச் சக்தி கொண்ட பிம்பமாய்த்தான் செயல்படுத்த முடியும்.

இந்தப் பூமியில்… விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை இக்கலி கடைசியில் இன்றெப்படி மனிதன் செயல்படுத்துகின்றானோ அதற்கு மேல் வீரிய சக்தி கொண்டு வியாழனில் இருந்த மனிதர்கள் அன்று செய்தார்கள்,

1.நம் பூமியில் இப்பொழுது வளர்ந்துள்ள விஞ்ஞானத்தைக் காட்டிலும்
2.பல மடங்கு வீரியத் தன்மை கொண்ட விஞ்ஞானச் செயல்
3.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டதுண்டு.
4.அந்தச் செயலின் தொடர் இன்றளவும் சில நிலைகளில் தொடர் கொண்டுதான் உள்ளது.

தன் ஞானத்தின் உயர் ரிஷி சக்தியை… மனித உணர்வு வளரும் செயலுக்கு
1.தியானத்தில் சம உணர்வு கொண்டு எடுக்கப்படும் உயர் காந்த மின் சக்தியைக் கொண்டு
2.இஜ்ஜீவகாந்த சரீரத்தின் உயிர் ஆத்மா பெறும் உயர்வுதான்
3.ஒளியின் ஒளியாய் எதையும் வளர்க்கும் பிம்பச் செயலுக்குச் செயல்படுத்த முடியும்.

பரப்பிரம்மமாய்.. பிம்பமாய்… பரப்பிரம்மமாகச் செயல் தொடர் பெற.. எண்ணத்தின் உணர்வைக் கொண்டு இஜ்ஜீவகாந்தம் உயர் காந்த மின் ஒளியாய் ஒளி பெறும் தன்மை கொண்டுதான் ரிஷி சக்திக்குச் செல்ல முடியும்.

எண்ணத்தின் உணர்வை இச்சரீர கர்ம காரியத்தில் பொருளீட்டி… உண்டு… உறங்கி… கழித்து… வாழும் வாழ்க்கையில் இச்சரீர ஆசையை வைக்காமல்… எண்ணத்தின் உணர்வை உயர் ஞானத்தில் உய்யும் வழியை உணர்ந்தே… ஒளி பெறல் வேண்டும்.

வாழ்க்கையில் எவ் அலை சுவையை இவ்வெண்ண உணர்வு பெற்றதோ அதன் உந்தலுக்குகந்த இச்சையில்தான் நாம் வாழுகின்றோம்… வாழவும் முடியும்.

ஆனால் மனிதனின் உயர்ந்த தத்துவ சக்தியைக் கொண்டு ஞான ஒளி பெறும் வளர்ச்சிதானப்பா உயர்ந்த வளர்ச்சி…!

 

1.எல்லா உயிரனங்களிலும் உயர்ந்த நிலை கொண்ட இம்மனிதக் கரு வளர
2.சமமான எண்ணம் கொண்ட சாந்த உணர்வுடன் கூடிய ஜெபத்தால் பெறும்
3.உயர் காந்த மின் சக்தியின் அணுக்களைக் கொண்டு
4.இவ்வுயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே உயர்வு நிலை பெறச் செய்ய முடியும்.

 

கணவன் மனைவிக்குள் எதிர்நிலையான உணர்வுகளின் இயக்கத்தால் வரும் விளைவுகள் 

மனைவி கணவன் மேல் வேதனை உணர்வைப் பாய்ச்சினால் தீங்கு விளையும்

ஜாதகம் பார்த்து நாம் கல்யாணம் செய்வதும், அகஸ்தியனும் மனைவியும் ஒன்றி வாழ்வதும்

Lord shiva and arjuna

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த காவியங்களில் உள்ள மூலப் பொருள்களை (இரகசியங்களை) அறிந்து கொண்டால் நல்லது

நம் கண்ணில் உள்ள கரு விழியில் அந்த மகரிஷிகளின் நினைவாற்றலைக் கொண்டு வந்து தனக்குள் பதிவு செய்யும்போது அந்தக் கரு விழி… ருக்மணியாக மாறுகின்றது – கண்மணி.

அதாவது… கண்ணுக்குள் இருக்கும் மணி நமக்குள் பதிவு செய்யும் நிலைகளாக மாறுகின்றது. அது தான் ருக்மணி….!
1.கண்மணி ருக்மணியாக மாறுகின்றது.
2.பின் அந்த உணர்வின் தன்மையைக் கவரப்படும்போது உண்மையைச் சொல்லும் சத்தியபாமாவாக மாறுகின்றது.

உதாரணமாக ஒரு தீமை செய்பவனை உற்றுப் பார்க்கும்போது “தீமை செய்கின்றான்…” என்ற உண்மையை உணர்த்துகின்றது சத்தியபாமா.

ஆனால் அந்தச் சமயத்தில் தீமையை அகற்றிய உணர்வின் தன்மையை கண்மணியில் பதிவு செய்து புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டப்படும்போது
1.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி தனக்குள் வலுப் பெறும் நிலையாக உணர்த்தி
2.சத்தியபாமாவாக தீமையை அகற்றும் உண்மையின் நிலைகள் நமக்குள் வளருகின்றது.

அந்த மூலப் பொருளை நாம் அறிகின்றோம்.

மகாபாரதப் போரை குருக்ஷேத்திரப் போரை நடத்தியது யார்…? இந்தக் கண் தான்.

இந்தப் பாரதமான நிலைகள் படர்ந்திருப்பதை… நம் உடலுக்குள் அணுக்களாகப் பதிந்திருப்பதை வழி நடத்திக் கொண்டே இருக்கின்றான் கண்ணன். ஆனால் உயிரான ஈசனோ அதை உருவாக்கிக் கொண்டுள்ளான்.

இதைப் போன்றுதான் நமக்குள் அர்ஜுனன் இருக்கின்றான் நகுலன் இருக்கின்றான் சகாதேவன் இருக்கின்றான். சகாயம் செய்பவனும் இருக்கின்றான். வலிமை பெற்ற குணமும் நமக்குள் இருக்கின்றது.

அது தான் மகாபாரதப் போரில் ஒவ்வொரு குணங்களின் இயக்கங்களை அதனதன் தன்மை கொண்டு ஒருக்கிணைந்து தன் நிலைகளில் வலுப் பெறச் செய்வது. எப்படி..?

1.மிகச் சக்தி வாய்ந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்தோமென்றால்
2.இது அனைத்தையும் அது ஒன்று சேர்த்து
3.நமக்குள் ஒவ்வொரு நிலையும் சகாயமாக
4.வலுவின் தன்மையாக அரவணைத்துச் செல்லும்…!

தர்மர் தன் நிலைகளை இரக்கத்துடன் செய்தாலும் சூழ்ச்சியால் அங்கே அடக்கப்படுகின்றது. அதாவது நல்ல குணங்கள் கொண்டு இருப்பினும் ஏமாற்றுவோர் கையில் தான் நாம் சிக்க முடிகின்றது…! என்று காட்டுகின்றார்கள்.

அவன் சூழ்ச்சிக்குள் சிக்கப்பட்டுத் தன் குடும்பத்தையே அடமானம் வைத்து சூதாடுகின்றான் என்றால்… தன் நிலைகள் அறியாது செயல்படுகின்றது நம் உணர்வலைகள்…!

இது போன்ற நிலைகளில் கோடிக்கணக்கான உணர்வுகள் நமக்குள் உண்டு. அந்த உணர்வுகளில் வலுப் பெற்ற நிலைகளை
1.நூறு பேர் சகோதரர்களாக இருப்பதன் வலிமையும்
2.ஐந்து பேர் சகோதரர்களாக இருப்பதன் வலிமையையும்
3.ஒரு தந்தைக்குப் பின் ஒரு தாய்க்கு வளர்ந்த நிலைகள் இவ்வாறு என்று பிரித்துக் காட்டுகின்றான்.

அதன் வழியில் ஒவ்வொரு நிலைகளிலும் இந்தப் பூமியில் உருவான உணர்வின் தன்மை நமக்குள் எப்படிப் போராக நடக்கின்றது…? என்ற நிலையை அது தெளிவாக்கப்படுகின்றது மகாபாரதப்போராக…!

ஆனாலும் இது அனைத்தையும் வழி நடத்திச் செல்வதே கண்ணன்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்து அதை வைத்துக் குருக்ஷேத்திரப் போராக நடத்தி அந்த தீமைகளை அடக்க வேண்டும். அருள் ஞானியின் உணர்வினை நமக்குள் முன்னணியில் கொண்டு வர வேண்டும்.

1.ஆக… அந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வினைக்கு நாயகனாக்க வேண்டும்.
2.இந்த உடலில் உள்ள அனைத்தையும் அடக்கிடும் அரசனாகக் கணங்களுக்கு அதிபதியாக மாற்றிடல் வேண்டும்.
3.அப்படி மாற்றினால் தான் தீமையின் உணர்வு தனக்குள் வராது
4.எத்தகைய தீமையையும் நீக்க முடியும்…! என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

நாம் அந்த விநாயகரை நாம் எண்ணும்போது துவைதம். அங்கே பார்க்கும் போது ஞானிகள் காட்டிய அருள் சக்தியை நாம் நினைவில் கொண்டு இந்த உணர்வின் தன்மை விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் வலுவை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.

சேர்த்து… நம் உடலுக்குள் உள் புகுந்து எதிரியாக இருக்கும் வலிமை மிக்க வாலியை வீழ்த்திட வேண்டும். மகரிஷிகளின் பால் நம் எண்ணம் செல்லும் போது அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து வாலி என்ற எதிரியை… (தீமை செய்யும் உணர்வை) வீழ்த்துகின்றது.

நமது காவியத் தொகுப்புகள் எதுவும் தப்பில்லை. ஆனால் தனித்துப் பிரித்து பார்த்தால் உண்மையைப் பார்க்க முடியாது…!

ஒரு இயந்திரத்தைக் காண்பித்த பின் இது இன்ன வேலை செய்யும் என்று அதை வைத்து விட்டால்… அது தான் முக்கியம்…! என்று அதனை மட்டும் பார்த்தால் என்ன ஆகும்..?

அதனுடன் இணை சேர்க்கும் நிலைகளைக் கவனிக்காமல் இருந்தால் அந்த இயந்திரம் சரியாக இயங்காது.
1.இதிலேதான் தப்பு… இல்லை இல்லை… அதிலே தான் தப்பு…! இருக்க வேண்டும் என்று
2.சரியாகக் கவனிக்காமல் அதை விட்டால் அந்த இயந்திரம் அப்படியே தான் இருக்கும்
3.அதனுடைய முழுப் பலன் கிடைக்காது…!

இதைப் போன்ற போர் முறைகள் வருவது போல் நமக்குள் வரும் தீமையின் செயல்கள் எவ்வாறு இயக்குகிறது..? என்ற நிலையில் அந்த இயந்திரத்தை எப்படி நாம் கண் கொண்டு பார்க்கின்றோமோ… இந்த உணர்வின் இயக்கங்களே நம்மை இயக்குகின்றது… என்ற நிலையில் நம்மை இயக்கும் உணர்வின் இயக்கங்களை அறிய வேண்டும்.

1.ஏனென்றால் ஒவ்வொரு உணர்வுமே வலிமை பெற்றது தான்…
2.இருந்தாலும் அந்த அருள் ஞானியின் உணர்வுகள் அதைக் காட்டிலும் வலிமை பெற்றது.

ஆகவே அத்தகைய சக்தியை மகரிஷிகள் காட்டிய அருள் வழியை நாம் பெறுதல் வேண்டும். அந்தச் சக்தியை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

சண்டை போடுபவர்களை எல்லாம் பார்க்கின்றீர்கள்.. சண்டை போடுகின்ற சக்திகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. சண்டை போடுபவர்களை எல்லாம் உங்களிடம் பதிவு செய்து வைத்துள்ளீர்கள். எண்ணினால் மீண்டும் அந்தச் சக்திகள் அந்து உங்களையும் சண்டை போட வைக்கும்.

இதைப் போல் தான் தீமைகளை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளை உங்களிடம் சொல்கின்றேன்… இது காற்றிலே படர்கின்றது… அதே சமயத்தில் உங்களிடமும் பதிவாகின்றது.

1.உங்கள் எண்ணங்களைக் கிளரச் செய்து ஞானியின் உணர்வை இணைக்கின்றோம்
2.ஒவ்வொரு நிமிடத்திலும் இப்பொழுது நீங்கள் சுவாசிக்கும்போது
3.அந்த ஞானியின் உணர்வை நுகரச் செய்து தீமைகளை அடக்கும் சக்தியை
4.உங்களுக்குக் கிடைக்கப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசம்.

நினைவு கொண்டு இதை நீங்கள் பருகுவீர்கள் என்றால் இந்த உணர்வின் வலிமை கூடி உங்களுக்குள் தீமை வராது அதை அடக்கும். சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…?

சொர்க்கவாசல் – புருவ மத்தி வழி… உயிர் வழி

பரமபதம் என்று ஒரு விளையாட்டை ஞானிகள் உருவாக்கி மனிதன் விண்ணுலகம் செல்லும் மார்க்கத்தைத் தான் அதிலே காட்டினார்கள். சொர்க்க வாசல் என்பது அது நம் புருவ மத்தி வழி தான்.

 

ஒவ்வொரு ஆலயங்களுக்குச் செல்லும் பொழுதும், நேர் வாசல் மூலம்தான் செல்கின்றோம். ஆனால்,  வைகுண்ட ஏகாதசி அன்று, “சொர்க்கவாசல்” என்று மற்றொரு வாசல் மூலம், உள்ளே வரும்படிச் செய்கின்றார்கள்.

 

அதாவது நாம் ஏற்கனவே சுவாசித்த பாதையை விட்டுவிட்டு, நம்மை இயக்கும் உயிரான ஈசனை மதிக்கும் நிலையாக, இந்த ஆலயங்களில் செல்லும்படிச் செய்கின்றார்கள்.

 

அந்த வாசல் வழியாகச் சென்று, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை, நாம் பெறவேண்டும்.  

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நம் உடல் முழுவதும் படர்ந்து, நம் உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும், என்று இதனின் உணர்வை நமக்குள் செலுத்தி, இந்த ஆலயம் வருவோர் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து, அவர்களது உடலில் உள்ள ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று ஆலயம் வருவோர் அனைவரையும் எண்ணும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

 

அவர்கள் உணர்த்திய உணர்வின்படி ஆலயங்களை அமைத்து,  “மூக்குவழி சுவாசிப்பதைக் காட்டிலும்,  புருவ மத்தியில் நல்லுணர்வை ஈர்த்துப் பருகும் நிலையை நாம் பெறவேண்டும்” என ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

 

இப்படி நாம் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று நமக்குள் உயிர் வழி சேர்த்து, வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது, இந்த “ஆலயம் வருவோர் அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், தெய்வ குணங்கள் பெறவேண்டும், தெய்வ நிலைகள் பெறவேண்டும், அவர்கள் குடும்பங்களில் அமைதி பெறவேண்டும், அருள் ஒளி படரவேண்டும்” என்று நாமும், மற்றும் அனைவரும் எண்ணும்பொழுது, நம்முள்ளும், மற்றும் ஆலயம் வருவோர் அனைவரிடத்திலும், நல்ல உணர்வுகள் விளைகின்றன.

 

நமது உணர்வின் தன்மை நம்முள் விளைந்து,  ஒளியின் சரீரம் பெறும் தகுதி, நாம் அனைவரும் பெறுகின்றோம். ஞானிகள், மகரிஷிகள் சென்ற எல்லையை நாம் அனைவரும் அடைகின்றோம். இதுதான் வைகுண்ட ஏகாதசி.

Polariss

பூமியின் பருவ கால மோதலினால் ஏற்படும் மாற்றங்கள் போல் தான் மனிதனுக்கும் ஏற்படுகிறது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எப்படி ஒவ்வொரு கோளத்தின் சந்திப்பினால் கால மாற்றங்கள் இப்பூமியின் பருவ காலம் பெறுகின்றதோ அதைப் போன்று இச்சரீரமும் பெறுகின்றது.

பூமியின் பருவ காலத்தில் சில அதிர்வு நிலைகளால் கடல் பொங்குவது… சூறாவளி… காற்று வீசுவது… எரிமலை வெடிப்பது… பூகம்பம் வருவது…! இத்தன்மை போன்று மனித உடலின் தன்மைக்கும் ஏற்படுகின்றது.

கால மாற்றத்தில் பிற மண்டலங்களின் சந்திப்பில் பூமி ஈர்க்கும் அலையின் தன்மையில் அதிர்வு ஏற்படுகின்றது. அதைப் போன்றே….
1.இம்மனித ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஏற்காத் தன்மை மோதும் பொழுது
2.அதிர்வு நிலைகளை இச்சரீர இயக்கமும் பெறுகின்றது.

இந்தப் பூமியில் எந்த நிலை கொண்டெல்லாம் கால மாற்ற சீதொஷ்ண நிலை மாறுபடுகின்றதோ அதற்கொப்ப இந்த உடல் பிம்பச் செயல்களில் “உணர்வுகள் மாறும் போது..”
1.இச்சரீர ஆரோக்கியத் தன்மையிலும்
2.எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞான வழியிலும்… பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உடனே மனிதன் நான் எண்ணியது ஓன்று… நடப்பது ஒன்றாக உள்ளது… “எல்லாம் விதியின் செயல்…!” என்று எண்ணி விடுகின்றான்.

எண்ணத்தின் வாழ்க்கைத் தொடரில் செயல் கொள்ளும் ஞானம்… ஓர் மாற்று நிலைக்குச் செயல்படும் பொழுது… உணர்வின் உந்தலால் உடலையே பாதிக்காத தன்மைக்குத் தன் ஞானத்தைக் கூட்டி… மதியைக் கூட்டி வென்று
1.சம உணர்வின் சாந்த குணமுடன்
2.இச்சரீர இயக்கத்தின் அணு சக்திகளை வீரியமாக்கி
3.உயிராத்மாவை ஒளிரச் செய்தல் வேண்டும்

மணலை அதி உஷ்ணமாக்கிக் கண்ணாடி செய்து தன் பிம்பத்தையும் எதிர் படும் எதனையும் அக்கண்ணாடியில நாம் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று இந்த உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் சம உணர்வுபடுத்தும் செயலில் விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒளி அலையை எடுத்து உணர்வின் எண்ணத்தால் வீரிய சக்தியாக உடலிலே வளர்த்திட வேண்டும்.

 

1.அத்தகைய உயிராத்மாவின் சமைப்பினால்…
2.மனிதன் “ஞான திருஷ்டி” என்ற சகல சித்து நிலையையும் பெற முடியும்.

திருடும் நோக்கத்துடன் வருபவர்களிடமிருந்து தப்பும் வழி 

தீமை செய்வோரின் உணர்வும், வேதனைப்பட்டோரின் உணர்வும் நமக்குள் வந்தால் என்ன ஆகும்…?

பணத்திற்காகவும், பொருளுக்காகவும் வேதனைப்படுத்தும் மாமியாரின் நிலை என்ன ஆகின்றது…!

self realizations

“நம்மை நாம் அறிந்தால் தான்…” நம்மைக் காக்கும் திறனைப் பெற முடியும்

உயிரணுவை வளர்ப்பதும்… “உயிரின் நிலைகள் கொண்டு உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளுக்கும்” மனிதனான பின் தான் இது முடிகின்றது.

இதெல்லாம் கொஞ்சம் கடினமாக இருக்கும்…! ஆனால் இதை உங்களுக்குள் பதிவு (ஞானகுரு) செய்கின்றேன்… உங்களைக் காக்க இந்த எண்ணம் உதவும்.

ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் நமக்குள் எவ்வாறு இருக்கின்றது…? என்ற நிலையை நாம் உணர்ந்து கொண்டால் போதும். “தன்னை அறிதல்…!” என்ற நிலைக்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.

ஈஸ்வரபட்டர் இதைப் போன்று தான் எனக்குக் கொடுத்தார்…
1.விண்ணின் ஆற்றல் உன்னில் எவ்வாறு அது இயங்குகின்றது…? என்ற நிலையை உன்னை நீ அறி
2.உனக்குள் இயக்கத்தை நீ பார்
3.காலத்தால் இயக்கும் உணர்வுகள் மாறுபடுவதும்
4.அதனின் இயக்கத்தால் ஏற்பட்ட உன்னுடைய மாற்றங்களையும்
5.நீ உருவான நிலைகள் கொண்டு உன்னை அறிந்தால் உன்னைக் காக்கலாம்.
6,உன்னை அறியவில்லை என்றால் உன்னைக் காக்கும் திறனே இழக்கப்படுகின்றது
7.உன்னைக் காக்கும் திறன் வந்தால் உன்னைச் சார்ந்தோரையும் காக்க முடியும்.
8.அவரைக் காக்கும் எண்ணம் வளர்த்தால்… அவர் வளர… உனக்கும் காக்கும் உணர்வுகள் வளரும் என்ற
9.இந்தப் பேருண்மையைத்தான் தன்னில் தன்னை அறிந்துடும் எண்ணங்களை எனக்குள் பதிவு செய்தார்.

ஆகவே அதைத்தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன். இதன் மூலம் சந்தர்ப்பத்தில் இது நினைவுக்கு வந்து உங்களைக் காத்திடும் உணர்வுகள்… எண்ணங்கள்… தோன்றும். அந்த எண்ணத்தைக் கொண்டு உங்களைக் காத்திடவும் இது உதவும்…!

ஏனென்றால் யாம் உபதேசிக்கும் போது “புரியவில்லையே…!” என்று உங்களுக்குள் மடக்கி விட்டால் இது புரியாது போகும்.

1.புரியும் நிலைகள் எனக்குள் வர வேண்டும் என்ற எண்ணத்துடன் நுகர்ந்தால்
2.உணர்வின் தன்மை பதிவாகி…
3.அதன் உணர்வின் அலை மீண்டும் தொடரப்படப் போகும்போது
4.அதனுடைய நினைவே உங்களுக்குள் அது புரிந்திடும் நிலையும்… அறிந்திடும் ஆற்றலும்…
5.அறிந்து நுகர்ந்திடும் நிலையும் உங்களுக்குள் உருவாகும்.

ஏதோ சாமி சொல்கின்றார்… எனக்குப் புரியவில்லையே…! என்று இடைமறித்துத் தடைப்படுத்தினால் அது புரியாத நிலைகளாக உங்களை மறைத்துக் கொண்டு இருக்கும்.

ஒரு ஒளியின் தன்மை வரும்போது அதற்கு முன்னாடி ஒன்றை வைத்து அடைத்து விட்டால் வெளிச்சத்தால் இங்கு எதையும் அறியும் தன்மை வராது.

இதைப் போலத்தான் “நமக்குப் புரியவில்லையே…” என்ற உணர்வினை நீங்கள் இடைமறித்து விட்டால் அது புரியாத தன்மையே ஆகிவிடும்.

உதாரணமாக… ஒருவர் சண்டையிடுகின்றார் என்ற நிலைகளில்
1.அந்த சண்டையின் அர்த்தத்தைக் கேட்காமல் இருந்தால்
2.நமக்கு எதுக்கு ஊர் வம்பு என்று எண்ணிவிட்டால்
3.மீண்டும் அவர் தவறு செய்த எண்ணங்கள் நமக்குள் வராது.

ஆனால் என்ன செய்தார்…? ஏன் சண்டையிட்டார்…? என்ன பேசினார்…? என்று கூர்மையாகப் பார்த்தால் அவர் சண்டை செய்த நிலையயும்… அவர் இப்படி இப்படியெல்லாம் செய்தார்… என்றும் அடுத்தவர்களிடம் சொல்ல முடியும்.

அப்படிச் சொல்லும்போது..
1.அவரின் உணர்வை நுகர்ந்து அவனிட்ட சண்டையை நமக்குள் வளர்க்க முடியும்.
2.அந்தச் சண்டையிடும் உணர்வுகள் நமக்குள்ளும் விளையும்.

நமது உயிரின் வேலை இவ்வாறெல்லாம் செயல்படுகின்றது…! ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஆகவே “தன்னைத்தான் அறிதல் வேண்டும்…” என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் தெரியப்படுத்துவது.

சண்டையிடுவோரின் உணர்வைப் பதிவாக்குவது போல் இங்கே உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கினால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கண்ட அனைத்தையும் உங்களால் புரிய முடியும்… அறிய முடியும்… உணர முடியும்… காண முடியும்…!

எனது தியானமும் தவமும் (ஞானகுரு)

 

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்றும் எம்மை எண்ணுவோருக்குக் குருவின் அருளைப் பெறச் செய்வதும் தான். நீங்கள் மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும் இருளை நீக்கி ஒளியின் தனமை பெற வேண்டும். இதே தவத்தை நீங்களும் மேற்கொள்ளுங்கள். குரு அருள் உறு துணையாக இருக்கும்.

SIDDHAS WORLD

பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலையை” மனிதன் பெறவேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தாவரங்களில் எப்படி அதனுடைய முதிர்வுத் தன்மையில் அத்தாவரத்தின் பலன் வெளிப்பட பூவும் பிஞ்சும் பிடிக்கும் தருணத்தில் பால்பிடித்து அதனுடைய முதிர்வின் பலனை அந்தந்த இன வளர்ச்சிக்கொப்ப பலனைத் தருகிறது…?

இதில் தாவரத்திற்குத் தாவரம் மாறுபடுகிறது. இதில் சில மரங்கள் தன் வளர்ப்பின் பலனானக் காய் கனிகளை வெளிப்படுத்துவதில்லை.

ஆனால் தன்னுடைய முதிர்வின் ஈர்ப்பில் விழுதுகளையும் ரோமம் போன்ற முதிர்வின் செயல் வெளிப்பட்டு அதனுடைய வளர்ச்சித் தன்மையின் தொடர் கொண்ட சில மரங்கள்… பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மரமே மலையாகும் ஈர்ப்பு வளர்ச்சி முதிர்வு செயல் கொள்கின்றது.

பலன் தரத்தக்க மா… பலா… இப்படி உள்ள மரங்கள் சில நூறு ஆண்டுகளுக்குப் பலனைத் தந்த பிறகு மரமே பட்டுவிடுகின்றது. ஜீவத்தன்மையில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை பெற்று உடல் மாறும் வரை தன் பிறப்பின் பிறப்புத் தொடரைச் செயல்படுத்தி மடிகின்றது.

இத்தொடரில் இருந்தெல்லாம் சில மிருகங்களின் நிலையும் மனிதனின் நிலையும் மாறு கொள்கின்றன.

ஆனால் பிறப்பிலிருந்து வளர்ச்சி பெற்றுப் பிறப்பு நிலை வளர்க்கும் காலங்களுக்கு எல்லாத் தன்மையிலுமே… எப்படி பூ பிஞ்சில் பால் பிடித்து பலன் தருகின்றதோ… அதைப் போன்று மனித மிருக நிலையிலும் பருவ முற்றலில் பால் உணர்வு கொண்டு இரு நிலை கொண்ட சேர்க்கையில் பிறப்பின் தொடரை (கரு) வளர்க்கும் வழி நிலை பெறுகின்றதல்லவா…!

மனித உணர்வில் பருவம் பெற்று பெண் தன்மையில் கரு வளர்க்கும் வயது வரம்பு காலத்திற்குப் பிறகு இயற்கையின் கர்ப்ப கால தன்மை மாறி மாதவிடாய் நின்று மீண்டும் குழந்தைப் பருவ நிலைக்கொப்ப உடல் நிலை பெறுகின்றது.

இடைப்பட்ட தருணத்தில் கரு வளர்க்கும் காலம் ஆரம்ப வளர்ச்சி வளரும் நிலையும் முதிர்வு நிலைக்கு மீண்டும் எந்த் நிலையுமற்ற தன்மை கொண்டு சரீர இயக்கமே தான் பெற்ற அமிலக் கூறின் வளர்ச்சிக்கொப்ப முதிர்வு நிலை என்ற ஓர் நிலை பெற்ற பிறகு கரு வளர்க்கும் நிலையற்றதாக ஆகிவிடுகின்றது.

இச்செயல் நிலைக்கும் ஓர் அடுத்த நிலை உள்ளதல்லவா…?

மனிதப் பிறப்பு இறப்பில் வயது நிலையற்றுச் சரீர உணர்வில் எடுக்கும் அலை நிலைக்கொப்ப பிறப்பு இறப்பு நிகழ்கின்றன. ஆனாலும்… பிறந்த சிசுவிலிருந்து வயது முதிர்ந்த நிலை வரையிலும் எத்தருணத்திலும் இறப்பு நிலை ஏற்படுகின்றது.

இத்தன்மையின் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா
1.வயது வரம்பு கொண்டு முதிர்வு நிலை பெறுகின்றதா…?
2.ஆத்மாவிற்கு முதிர்வுத் தன்மை எப்படிக் கூடுகின்றது?

மாமரத்தில் பூ பிடிக்கும் தருணத்தில் இம்மரத்தின் இலைகளே தெரியாத அளவிற்கு அதிகமாகப் பூக்கள் பிடிக்கின்றன. ஆனால்… நல்ல கனியாகி பலன் வெளிப்படுத்தும் விகித நிலை “நூற்றில் ஒரு பாகம் கூட… முதிர்வு நிலைக்கு வருவதில்லை…!”

ஆனால் முதிர்வு நிலை பெற்ற கொட்டைகளைப் பதித்தால் தான் மீண்டும் மாங்கன்று வளருகின்றது. கனியில் சொத்தை விழுந்த கொட்டைகள் வளர்ச்சிக்கு வருவதில்லை.

இதைப் போன்று ஒவ்வொரு விதைத் தன்மையிலுமே உள்ளதல்லவா…?

இம்மனித உயிர் ஆத்மாவானது தன் பிறப்பின் கருவைப் பருவ வளர்ச்சிக் காலத்தில் கருவின் தொடரை வளர்க்கின்றது. சில தாவரங்களைப் போன்று தன் வளர்ப்பின் பலன் தந்த பிறகு மரத்தின் நிலை பட்டுப் போவதைப் போன்று கருத்தரித்த பிறப்பு நிலை வளர்க்கும் கால நிலை மாறினாலும் மனித வாழ்க்கையின் செயல் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட… மீண்டும் பல வருடங்களுக்கு வாழ முடிகின்றது.

1.இம்மனித அமிலம் தான் எல்லாத் தன்மையிலும் முதிர்வு பெற்ற உயிராத்மா கொண்டது.
2.இதிலும் அடுத்த நிலை பெறுவதென்பதுதான் ஞானத்தால் ஒளி நிலை பெறும்
3.பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை…”

சிறு வயதில் தான் எடுத்த உணர்வின் இச்சையை மாற்றாமல்
1.தன் குண வளர்ப்பில் ஆத்ம பலம் பெறாத சிசுக்களோ சிறுவர்களோ
2.அல்லது வாழும் பருவத்தில் பாதி நிலையில் உணர்வின் இச்சையினால் தற்கொலையும் விபத்துக்களும் ஆளானவர்களோ
3,தன்னைத் தான் மறக்கும் குடி வெறிகளிள் சிக்கியவர்களோ
4.கொலை செய்யப்பட்டோ வாழும் பருவத்தில் அதிவேதனையால் உடல் அழுகிய நிலையில் பிரியும் உயிராத்மாக்களோ
5.இவை எவையும் மீண்டும் பிறப்பிற்கு வருவது என்பது…
6.எப்படி சொத்தை விழுந்த மாங்கொட்டையை விதைத்தாலும் அதன் வளர்ச்சி நிலை வளர்வதில்லையோ
7.அதைப் போன்று இம்மனித உணர்வின் எண்ண ஞானத்தின் செயல் உருவ அங்க அவயங்களின்
8.அழகின் பொலிவு கொண்டு பிறப்பு நிலை பெற முடியாது (இது முக்கியம்)

பிறப்பு நிலைக்கு வந்தாலும்.. எத்தொடர்பில் ஆத்மா பிரிந்ததோ அதே நிலையில் அங்ககீனமுள்ள நிலையில் தான் பிறக்க நேரும். ஞானமுடன் கூடிய அறிவு வளர்ச்சியற்ற குழந்தைகளாகத்தான் சாதாரண வழித் தொடரிலேயே பிறப்பு இறப்பு செயல் கொள்கின்றது.

(இன்று அங்ககீனமுள்ள குழந்தைகளும்… மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் அதிகமாகப் பிறப்பதன் காரணம் புரிந்ததா…!)

 

எண்ணத்தின் வலுக் கொண்ட… “ஆத்ம பலம் பெற்ற ஆத்மாக்கள் தான்..” மீண்டும் தன் இனத் தொடர்பில் பிறப்பு பெற்று… முதிர்ந்த கொட்டைகள் பக்குவமான வளர்ச்சிக்கு வருவதைப் போன்று… மனிதப் பிறப்பு பெற்று வருகின்றது.
1.இதில் அடுத்த நிலை பெறுவது என்பதுதான்
2.இங்கே உணர்த்தப்படுகின்ற மனிதன்… “தெய்வ நிலையாகும்” தன்மை.

FM ரேடியோவில் ஞானகுருவின் உபதேசங்கள்

உயிரைக் காப்போம்….!
 
தினசரி மாலை 6 மணிக்கு சாமிகள் (ஞானகுரு) உபதேசம் ஒலி பரப்பாகிக் கொண்டுள்ளது.
 
இன்றைய காலகட்டத்தில் உயிரைக் காக்க… உயிரின் துடிப்பைச் சீராக்க… சுவாச நிலையைச் சீராக்க… சுவாசிக்கும் காற்றைச் சீராக்க… இந்தக் காற்று மண்டலத்தைப் பரிசுத்தப்படுத்த நமக்கு ஒரு சக்தி தேவைப்படுகின்றது.
 
தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அந்தத் துருவ நட்சத்திரத்தை எந்த அளவுக்குப் புருவ மத்தியில் எண்ணி நினைவுக்கு மீண்டும் மீண்டும் நாம் அழுத்தமாகக் கொண்டு வருகின்றோமோ அந்த அளவுக்கு உயிருக்கு அது ஒரு கவசமாக (MASK) அமைகின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரின் இயக்கத்திற்குள் முழுமையாக இணைந்து விட்டால் நம்மிடமிருந்து வெளிப்படும் சக்தி இந்தக் காற்று மண்டலத்தைத் தூய்மைப்படுத்தும் சக்தியாக மலரும்.
 
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாக மனிதர்கள் கவர்ந்தால் தான் இது சாத்தியமாகும். அத்தகைய நிலை சீக்கிரமே உருவாக வேண்டும்…!
 
ஞானகுரு உபதேசக் கருத்துக்களை மனதில் ஊன்றிப் பதிவாக்குவோம். துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை ஒவ்வொரு உயிராத்மாவும் பெற தியானிப்போம்.. தவமிருப்போம்…!
 
கீழே கொடுக்கப்பட்ட லிங்கை உபயோகித்துக் கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்.
 
உபதேசத் தொகுப்பு :- https://wp.me/p3UBkg-4BE

super-computers

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் செயற்கையாக உருவாக்கப்படும் நோய்களிலிருந்து விடுபட வேண்டும்

 

இன்றைய உலகில் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகள் நமக்குள் புகாது தடுக்க வேண்டும்…!

காரணம்… விஞ்ஞான அறிவால் டி.வி. கம்ப்யூட்டர் (எலெக்ட்ரானிக்) மூலமாகவோ அல்லது உணவுப் பயிர்களுக்குள் தூவப்படும் பூச்சி மருந்துகளினாலோ பல வகையில் நஞ்சின் தன்மை தாவர இனங்களில் படர்ந்து கொண்டுள்ளது.

அது உணவுடன் கலந்து உடலுக்குள் கலக்கப்படும் பொழுது
1.நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து
2.விஷத் தன்மையை அதுவும் ஈர்க்கும் நிலை பெற்றுவிடுகின்றது.

விஷத் தன்மையை ஈர்க்கும் சக்தி பெறப்படும் பொழுது கை கால் குடைச்சல் சோர்வு விஷக் காய்ச்சல் இதைப் போன்ற பல நோய்கள் வரக் காரணமாகின்றது.

விஷத் தன்மைகள் அதிகமான அளவில் உணவுடன் கலந்து வருவதால் கேன்சர் நோயும் அதிகமாகப் பரவுகின்றது. அதே போல் எய்ட்ஸ் என்ற நோயும் விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்டது தான்.

ஒவ்வொரு நாட்டில் உள்ள மூட்டைப் பூச்சிகளையும் கொசுக்களையும் பரீட்சித்துப் பார்க்கின்றேன் என்று கொண்டு சென்று அதை அவர்கள் மற்ற கெமிக்கலில் கலக்கச் செய்து விஷமான அணுக்களை மீண்டும் உருவாக்கி அதிகரித்து விட்டனர்.

அதையே புதிதாக ஒரு பொருளாக உருவாக்கி… மனிதனுக்குள் கலக்கச் செய்து… விஷத் தன்மைகளைப் படரச் செய்து… (எயிட்ஸ் நோய்)
1.மக்களின் உடலைச் சிறுகச் சிறுக நலியச் செய்து
2.அந்த நாட்டையே சூனியமாக்கும் நிலைக்கு அமெரிக்காவில் அதைச் செய்தார்கள்.

ஆனால் அவன் நாட்டிலேயே முதலில் பரவியது. அங்கே பரவிய அதனுடைய தொடர்கள் மனிதனுக்கு மனிதன் பேசும் பொழுதே பரவு தன்மை வந்தது.

ஏனென்றால் அந்த எயிட்ஸ் நோய் அணுக்கள் மிகவும் விஷம் கொண்டது… அது வீரியமாகப் பரவும் தன்மை பெற்றது.

“எயிட்ஸ் நோய் உள்ளவர்கள்” அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று அதிகமான அளவில் எடுத்துக் கொண்டால் அந்த நோய் மாறிவிடும்.

இதைப் போல் கேன்சரில் இருந்தும் மற்ற நோயிலிருந்தும் விடுபட வேண்டும். சர்வ நோய்களையும் நீக்கும் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று
1.இந்தத் தியானத்தின் மூலமாக அந்த அணுக்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அனுதினமும் அதிகாலையில் துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

  • குரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தி… குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ… அவர் நினைக்கும் பொழுதெல்லாம்… குரு… தான் நுகர்ந்த அந்த உணர்வின் சக்தி எளிதில் கிடைக்கும்.
  • எளிதில் செயல்படுத்த முடியும். தீமை என்ற நிலைகள் தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 60 png

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

  • பல கோடி ஆண்டுகளுக்கு முன் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இணைந்தவர் நம் குருநாதர்.
  • அதன்வழி நமது பூமியிலே அந்த உணர்வின் வித்துக்கள் பட்டு  மற்ற உயிர்களிலே அது விளைந்து பலவாறு பல உணர்வின் தன்மையை இங்கே பரப்பிய நிலைகள் கொண்டு அந்தந்த உணர்வுகள் பட்டு… அந்தந்த உடல்கள்… அந்த உயிராத்மாக்கள் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி உள்ளனர்.
  • அவருடன் விண்ணிலே பெரும் மண்டலங்களாக இதைப் போன்று எத்தனையோ ரிஷிகள் சேர்ந்து விண் சென்றுள்ளார்கள்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 59 png

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

  • பேரண்டத்தின் உண்மைகளைக் கண்டுணர்ந்த இயக்கம் அவருக்குள் இருந்தாலும்… அதன் வழிகொண்டு எதை எதை… எவ்வாறு பெறவேண்டும்…? என்று உபதேசித்து அருளினார்.
  • அவருக்குள் விளைந்த ஆற்றல்மிக்க சக்திகள்… அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வின் அலைகள் இங்கே படர்ந்து கொண்டுள்ளது… எல்லோருக்கும் கிடைக்கும்.

புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி… ஈஸ்வரபட்டரின் பால் நம் நினைவைச் செலுத்தி… அவருடன் ஒன்றி… அவரின் அருளாற்றலைப் பெற்று… நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…! 

mantra 58

ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்திகளைப்  பெறுவோம்

  • பித்தரைப் போன்றுதான் அவர் இந்த உலகிலே உலாவிக் கொண்டிருந்தார். ஏனென்றால் இந்தப் பித்தனான உலகிலிருந்து மக்கள் பித்தைப் போன்று வாழ்க்கை வாழ்ந்திடும் “ஒவ்வொரு பித்து நிலைகளிலிருந்து அவர்கள் மீளவேண்டும்…” என்ற ச