தாய் உணர்வு கைக்குழந்தையை எப்படியெல்லாம் இயக்குகின்றது…?

தாய் உணர்வு கைக்குழந்தையை எப்படியெல்லாம் இயக்குகின்றது…?

உதாரணமாக தாய் ஒருவர் சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வந்திருப்பார்கள். இங்கே வீட்டிற்கு வந்து தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுக்கும். கொஞ்ச நேரத்தில் குழந்தை “வீல்… வீல்…” என்று கதறும்.

உடனே அந்தத் தாய் யார் கண் பட்டு விட்டதோ…? “சில்… சில்…” என்று குழந்தை அழுகின்றது என்பார்.
1.தாய்க்குத் “தன் பார்வை பட்டது தான்…!” என்று தெரியாது.
2.ஏனென்றால் சண்டை போடுபவர்களைப் பார்த்த அந்த உணர்வுகள் தாய் உடலில் பதிவாகி விடுகிறது.
3.அந்த நினைவுடன்… பாசத்தால் குழந்தையைத் தாய் அரவணைக்கிறது.
4.ஆனால் குழந்தைக்கு ஒன்றுமே தெரியாது…. அதைத் தாங்கக்கூடிய சக்தி குழந்தைக்கு இல்லை.
5.இப்பொழுது குழந்தைக்குச் சீக்காகிவிட்டது என்பார்கள்.

அப்படி வேதனையினுடைய நிலைகள் அதிகமானவுடன் மிகக் கஷ்டமாக இருக்கின்றது என்று பிறர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இதைக் கேட்டுக் கொண்டு வந்த உணர்வுகள் அந்தக் குழந்தைக்குத் தாங்காதபடி வயிற்றுப் போக்கு போய்க் கொண்டே இருக்கும். அந்தச் சங்கடமான உணர்வையே மேலும் மேலும் நினைத்துப் பாய்ச்சிக் கொண்டே இருப்பார்கள்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்…?

ஓ…ம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நன்றாக ஆத்ம சுத்தி செய்யுங்கள்.
1.பின் உங்கள் பார்வையால் உங்கள் எண்ணத்தைக் குழந்தை மேல் செலுத்துங்கள்.
2.“இனி உனக்கு வயிற்றால் போகாது… நன்றாகிவிடும்…!” என்று குழந்தையின் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
3.உங்கள் எண்ணத்தால் பார்வையால் குழந்தைக்கு நன்றாகிவிடும்.

இதை நீங்கள் அனுபவத்தில் கொண்டு வாருங்கள்.

உங்கள் மனதை வலுப்படுத்துங்கள். உங்களுக்கு வரக்கூடிய துன்பத்தைப் போக்கக் கூடிய சக்தி உங்களுக்குள் வரும். இதை நீங்கள் அனுபவபூர்வமாக பார்க்கலாம்.

அடுத்தடுத்து இவ்வாறு நீங்கள் பெறும் அனுபவத்தால் உங்கள் வாக்கினைச் சொல்லும் பொழுது
1.அடுத்தவர்கள் எண்ணங்களில் இது பதிய வேண்டும்.
2.அவர்கள் நோய் “நான் போகிறேன்…” என்று ஓட வேண்டும்.

நான் இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து தீமைகளை நீக்கினேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது பிறர் காது கொடுத்துக் கேட்டவுடன்
1.எங்கள் கஷ்டமெல்லாம் சுலபமாக இனிமேல் விலகிவிடும்
2.எங்களுக்கு நன்றாக இருக்கும்…! என்ற எண்ணங்கள் அங்கே அவர்களுக்குத் தோன்ற வேண்டும்.

பிராணாயாமத்தில் உள்ள தத்துவம்

பிராணாயாமத்தில் உள்ள தத்துவம்

 

நான் சொல்லக்கூடிய உணர்வுகள் அனைத்தும் உங்கள் உயிரிலே மோதப்பட்டு உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நான் பேசிய உணர்வை அந்த இயக்க அணு உங்கள் உயிரிலே மோதிய பின் உமிழ் நீராக மாறுகின்றது.

அது தான் ஓ…ம் இந்த உணர்வுகள் அனைத்தும் இயக்கப்பட்டு ம்… என்று உமிழ் நீராக மாறுகின்றது. அந்த உமிழ் நீர் சிறுகுடலுக்கு வருகின்றது. ஒரு உயர்ந்த உணர்வுகளைச் சொல்லும் பொழுது சிறுகுடலில் உள்ள அணுக்கள் உற்சாகமடைகின்றது.

சாப்பிட்ட ஆகாரத்தை அப்பொழுது துரிதமாக நல்ல நிலைகளில் ஜீரணிக்கும் சக்தி கிடைக்கின்றது. அடுத்து பெருங்குடலுக்கு வரும் பொழுது பாம்பைப் போன்று உள்ளுக்குள் இழுத்து இழுத்து நசுக்கி அது ஜீரணிக்கும்… அதனின் இயக்கம்.

1.ஆகாரத்தை எடுத்து இவ்வாறு நசுக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சத்துக்களை (ஆவி) ஃபில்டர் பண்ணும்.
2.ஒரு துணியை வைத்து பிழிந்தால் எப்படியோ… வேக வைத்தால் எப்படி ஆவி வருகின்றதோ
3.பெருங்குடலுக்கு வந்தபின் ஆவியாகிப் பிரித்துச் சத்தை எடுத்துக் கொள்கின்றது.
4.குடலுடன் சேர்த்த நரம்பு மண்டலங்கள் அதில் புனல் போன்று உண்டு… அது அந்த ஆவிகளை வடிகட்டிப் பிரிக்கின்றது.

கரும்புச்சாற்றை எடுத்த பின் பல கெமிக்கல்களைப் போட்டு எத்தனையோ வகைகளில் செயல் முறைப்படுத்தி அதைச் சர்க்கரையாகப் பிரித்து எடுக்கின்றார்கள் அல்லவா…!

இதைப் போன்று புனல் போன்று உள்ள கணையத்தில் மொத்தமாக வருவதை மூன்று விதமாகப் பிரித்து ரத்தத்திற்கு கொழுப்பிற்கு உடல் சத்திற்கு என்று எடுக்கின்றது.

பிரித்ததை மற்ற பாகங்களுக்கு அனுப்பித் தசைகளுக்குள் இருக்கும் அணுக்களுக்குச் சாப்பாடு ஆகிறது
1.ஆவியாக மாறுகின்றது… அதை எடுக்கின்றது… சாப்பிடுகின்றது
2.அது மலமாகிறது… அந்த உறுப்புகள் ஆகின்றது.

ஞானிகள் காட்டிய நிலையில்… நம் உயிரின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? நுகர்ந்த உணர்வுகள் உடலாக எப்படி மாறுகின்றது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

அடுத்து கல்லீரலுக்கு வரப்படும் பொழுது அதுவும் வடிகட்டுகிறது.

தண்ணீரில் அதிகமான அழுக்குகள் இருந்தால் விஞ்ஞான முறைப்படி பெரிய கல் சிறிய கற்கள் மணலைப் போட்டு வடிகட்டி அதை நல்ல தண்ணீராக மாற்றுகின்றார்கள்.

இதைப் போன்று தான் நாம் உணவாக உட்கொண்ட ஆகாரத்தில் உள்ள கசடுகளை எல்லாம் கல்லீரல் மாற்றி வடிகட்டி ரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றது
1.தசைகளில் இருக்கும் திசுக்களுக்கு உணவாகப் போய்ச் சேருகின்றது.
2.அந்தத் திசுக்கள் தேனீக்கள் கூடு கட்டுவது போன்று உறுப்புகளாக உருவாகின்றது.

மண்ணீரலுக்கு வந்த பின் ரத்தங்கள் வடிகட்டப்படுகிறது. அடுத்து நுரையீரல் பாகம் வருகின்றது. அது பம்ப் பண்ணி எடுக்கின்றது.

இதில் எந்தெந்த உணர்வுகள் கலக்கின்றதோ மூக்கு வழி காற்றிலிருந்து எடுத்து அதைச் சேர்க்கின்றது. நல்லதாக இருந்தால் அதே உணர்வாக ஆனபின் அதன் வழி இழுக்கின்றது.

இது இரண்டும் சேர்த்துப் பிராணவாயுவாக நாம் எதை எடுத்தோமோ இந்த உணர்வின் தன்மை இயக்கத்திற்கு ஆகின்றது. ஆனால் வேதனை என்ற உணர்வானால் வேதனையின் மூச்சாகி நாமும் சோர்வடைகின்றோம்.

ஓம் உயிரிலே பட்டுப் பிரணவமானாலும் அதற்குத்தக்க இது எப்படி இயக்குகின்றது…? என்பதை நாம் தெரிந்து கொள்வது நல்லது.

1.வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகள் நுரையீரலுக்கு வரும் பொழுது ஆவியாகி நீராக மாறி விடுகின்றது… அங்கே நீராகும் பொழுது சளி கட்டுகின்றது.
2.அடிக்கடி வேதனைகளை எடுத்து அது அங்கே தேங்கி விட்டால் விஷக்கிருமிகள் உண்டாகின்றது…
3.அப்புறம் அரிக்க ஆரம்பிக்கின்றது… சளி உண்டாகிக் கொண்டே இருக்கும்.
4.சளி கட்டிய பின் சுவாசம் சீராக இல்லாதபடி அடைப்பாகித் தடையாகிறது.
5.நாளடைவில் விஷக்கிருமிகள் தேங்கி விட்டால் டிபி நோயாகவும் மாறுகின்றது.

வேதனையான உணர்வுகள் எல்லை கடந்து வெளிப்படுத்துவோரைப் பார்க்கிறோம். கேன்சர் நோயினால் அவதிப்படுவரைப் பார்க்கின்றோம். அது போன்ற நிலைகளை நுகர்ந்து விட்டால் இங்கே சேர்ந்து அதுவே கிருமி ஏற்படவும் காரணம் ஆகிறது.

இந்த வாழ்க்கையில் இது போன்ற நிலைகளைக் காணாமல் இருக்க முடியாது. விஷத்தின் வலிமையாகும் பொழுது அந்த விஷத்தை ஒன்று சேர்த்து உணவாக உட்கொள்ளும் அணுவின் தன்மை ஆகின்றது.

கேன்சர் என்று சொல்லும் பொழுது அது விஷத்தை உட்கொள்கின்றது பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றதோ அதைப் போல் விஷத் தன்மைகள் ஆனால் ஒரு நோயாளியின் உடலில் அந்த விஷமானால் அங்கே அத்தகைய அணுவாகிறது.

அந்த மூச்சின் தன்மை படர்ந்து அத்தகைய இயக்க அணுக்களாக உருவாகி விட்டால் நம் உடலுக்குள் வந்து இத்தகைய நிலையைச் செய்கின்றது. ஆனால் தவறு செய்யவில்லை. இயற்கையின் மாற்றங்கள்.

கல்லீரல் மண்ணீரலுக்கு வந்து அடுத்து நுரையீரலுக்கு வருகின்றது. ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு எல்லாம் சுத்தப்படுத்தி அனுப்புகின்றது. ரத்தத்தில் உள்ள கழிவை நீராக மாற்றுகின்றது.

உப்புச் சத்து சர்க்கரைச் சத்து வாத நீர் என்ற விஷத்தன்மைகளை கிட்னி சுத்திகரித்து வடிகட்டி நீராக மாற்றி வெளியேற்றுகின்றது. வடிகட்டப்பட்ட சுத்த ரத்தம் இருதயத்திற்கு வருகின்றது.

இருதயத்திலிருந்து ரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்பட்டு உற்சாகப்படுத்தி நல்ல அணுக்களாக மாற்றுகின்றது. ஆனால் வேதனையான உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதைச் சிறுநீரகம் சரியாக இயக்கவில்லை என்றால் உப்புச் சத்து வந்துவிடும்… சர்க்கரைச் சத்தும் வந்துவிடும்.

1.ரத்தத்தில் அந்தக் கசடுகள் கலந்து இருதயத்திற்கு வரும் பொழுது அது பலவீனமாகின்றது.
2.சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்று வடிகட்ட முடியாதபடி வரும் பொழுது இருதயத்திலே அடைப்பாகின்றது…
3.உப்புச் சத்தினால் ரத்தம் உறைகின்றது… நெஞ்சு வலி வருகிறது.

வேதனையும் உற்சாகமும் வரும் போது நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் அந்த இரண்டுக்கும் எர்த் ஆகும் போது ஒரு விதமான மயக்கம் வருகின்றது.

மயக்கமாகி நீரானால் நுரையீரலில் உப்புசமாகி எப்படி வேர்க்கின்றதோ இதை போன்று நம் மூளை பாகத்தில் வெப்பமாகி அது ஆவியாக மாறுகின்றது. தலை சிரசிலே இரண்டு மூன்று தோல் பகுதிகள் உண்டு மூளையைப் பாதுகாக்க.
1.அதைக் கடந்து இரண்டாவது பாகத்தில் வந்த பின் நீராக வடிகின்றது.
2.ஒரு சிலருக்குச் சிலந்தி பூச்சியாக அங்கே எடுப்பார்கள்… தலைவலி இருக்கும்.
3.அந்த நிலை ஆகிவிட்டால் நச்சு நச்சு என்று தும்மிக் கொண்டிருப்பார்கள்.
4.சில நேரங்களில் எதிர்பாராதபடி மூச்சுத் திணறலாகக் கூட வந்து விடும்.

ஆனால் தவறு செய்யவில்லை. வேடிக்கையாகப் பார்த்த நிலைகள் இப்படி எல்லாம் உறுப்புகளில் மாற்றம் ஆகின்றது. இதையெல்லாம் இயக்குவது யார்…? நமது உயிர். நுகர்ந்ததை இயக்குவதும் உடல் ஆக்குவதும் எல்லாவற்றையும் செயலாக்குவது உயிர்தான். அவன் இன்றி அணுவும் அசையாது.

அதனால் தீராத தலைவலியும் வந்து விடுகின்றது முதல் பாகத்திலே அழுத்தமாகி இவ்வாறு தேக்கமாகி விட்டால் கல்லீரலிலும் வேர்த்து நீராக மாறி குடம் குடமாக நீரை வெளியேற்றுவார்கள்.

வாயு மண்டலங்கள் அதிகமாகி அதிகமான விஷத்தன்மையாகி வெப்பமானால் மூட்டுகளில் முழங்காலில் நீர் கோர்க்க ஆரம்பிக்கும். அங்கே வலி வரும். இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய உணர்வுகள்.

இப்படி உடலில் மாறிக் கொண்டே வருகின்றது. ஆனால் யாரும் தவறு செய்யவில்லை. தவறு செய்பவர்களைப் பார்க்காமல் வேதனைப்படுவோரைப் பார்க்காமல் நாம் இருக்க முடியாது.

ஆனாலும்
1.இதனுடைய இயக்க நிலைகளை நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொண்டால்
2.நாம் சுவாசிக்கும் உணர்வுகளால் என்னென்ன விளைவுகள் வருகிறது…?
3.அதிலிருந்து தடுக்கும் உபாயத்தை நீங்கள் பெற வேண்டும்
4.அதைப் பயன்படுத்தும் பக்குவ நிலை பெற வேண்டும் என்பதற்குத் தான் இதையெல்லாம் உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

உடலுக்குள் வரக்கூடிய கெடுதலை குரு அருளால் நீக்க முடியும்

உடலுக்குள் வரக்கூடிய கெடுதலை குரு அருளால் நீக்க முடியும்

 

ஒரு நாள் இரவு மழையுடன் பக்கத்துக் கிராமத்திலிருந்து, பெண் குழந்தை ஒன்றை இளம்பிள்ளை வாதத்துடன், (இரண்டு காலும் ஆடிக்கொண்டிருக்கிறது) தபோவனத்திற்கு எடுத்துக் கொண்டு வந்தார்கள். காலை 05.30 முதல் 6 மணிக்குள் இருக்கும்.

அழுது கொண்டு வருகிறார்கள். இளம் பிள்ளை வாதம் வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. பெண் குழந்தையாக இருக்கிறது. ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்று பொலபொலவென்று அழுது கொண்டே இருந்தார்கள்.

ஆரம்பக் காலங்களில் இது நடந்தது. அப்பொழுது கொஞ்சம் ரூம்கள்தான் இருந்தது. குழந்தைக்குச் சரி செய்து விட்டோம். எழுந்து நடந்தது. அதன்பின் சாமி எப்படி இருக்கிறார்…? என்று எட்டிக்கூட பார்க்கவில்லை. வைத்தியம் பார்த்தது அவர்களுக்குச் சௌகரியமாக போய்விட்டது.

நாளைக்கு நீங்கள் கஷ்டப்படாதபடி இந்த மூச்சை எடுத்துக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று இதையும் கொடுத்துள்ளோம்.
1.உடல் நலமாக வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தத் தியானம் செய்வதாலே உடம்பு நல்லதாகி விடும்…
2.வரக்கூடிய கெடுதலை உங்களாலேயே மாற்றிக் கொள்ள முடியும்.

பெரும் பகுதியானோர் இன்னும் சாமியாரைத் தேடிப் போக வேண்டும் ஜோசியம் பார்க்க வேண்டும் என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர தனக்குள் தீமை வராமல் தடுத்துக் கொள்ள இப்படிச் செய்யுங்கள் என்கிறோம்…! இதைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள்.

உடம்புக்கே சௌகரியம் இல்லாமல் போய் விட்டாலும் கூட
1.அப்பொழுது இந்தத் தியானத்தைச் செய்யலாம் என்றாலும் கூட அதற்கும் நேரமில்லை என்றுதான் சொல்கிறார்கள்.
2.காசைக் கொடுத்துத் தான் உடம்பை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.

ஆனால் மனிதனாகப் பிறப்பது ரொம்ப அபூர்வம். நாம் துன்பத்தைச் சுவாசித்தவுடன் நம் உடலில் புண் வருகிறது சிரங்கு வருகிறது அது வருகிறது இது வருகிறது என்றால் இந்த உணர்வின் அணுக்களாகச் சேர்த்து உயிராத்மாவில் சேர்ந்து விடுகின்றது.

1.ஆகவே ஒவ்வொருத்தரும் உங்களை முழுமையாக நம்புங்கள்.
2.உங்கள் அம்மா அப்பாவைத் தெய்வமாக எண்ணுங்கள்.
3.உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உங்கள் உடலை அவன் அமைத்துக் கொண்ட கோயில் என்று நினையுங்கள்.
4.நல்ல குணத்தை வளர்ப்பதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள்.

ஞானிகளின் உடலில் விளைந்த நல்ல சக்தியை எடுப்பதற்கு உபதேசத்தின் வாயிலாகச் சக்தி கொடுக்கிறோம். உடனடியாக அதைப் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற வாக்கையும் கொடுக்கிறோம்.

இதைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டத்தை, நிவர்த்தி பண்ணுங்கள். சுலபமாகக் கொடுக்கின்றோம்… உங்களால் நிச்சயம் தீமைகளை நீக்க முடியும்.

நம் ஜீரண உறுப்புகளுக்குள் நடக்கும் சில அதிசயங்கள்

நம் ஜீரண உறுப்புகளுக்குள் நடக்கும் சில அதிசயங்கள்

 

சங்கடமான வார்த்தைகளை நாம் கேட்டு விட்டு வீட்டிலே வந்து அமர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்…? எவ்வளவு தூரம் அவர்கள் வேதனைப்பட்டார்களோ அந்த உணர்வுகள் சாப்பாட்டுடன் கலந்து இரைப்பைக்குச் செல்கின்றது.

1.வேடிக்கையாகத்தான் நாம் கேட்டிருப்போம்… பார்த்திருப்போம்.
2.கேட்டு விட்டு வந்து நாம் சாப்பிடும் போது இந்த உணர்வு உள்ளே சென்று விடுகின்றது.

இரைப்பையிலே சென்று அந்த வேதனையான உமிழ் நீரும் நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் உள்ள சத்தும் இரண்டும் அங்கே இருக்கும்.

கோழி குருவி இவைகள் எல்லாம் தன் உணவை எடுக்கின்றது. கோழி கொத்தித் தின்னும்… கூப்பிட்டு குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.

குருவி மற்ற பறவைகள் எங்கேயோ சென்று அந்த இரையை எடுத்துத் தன் கூட்டிற்கு வருகின்றது. குஞ்சுகள் “ஆ…” என்று வாயைத் திறக்கும். எடுத்து வந்த இரையைப் போடும்… போட்ட பின் குஞ்சுகள் வாயை மூடிக்கொள்ளும். அந்த உணவால் வயிறு நிரம்பி விடுகின்றது.

இதைப் போன்று தான் சிறுகுடல் அதனுடைய பசியின் நிலையில் உந்தப்படும் பொழுது இரைப்பையில் இருந்து வாயைத் திறக்கும். அந்த நேரத்திற்குத் தகுந்தாற் போல் இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குள் “சொத்…” என்று விழும்… டபக் என்று மூடிக்கொள்ளும்.

அது மூடி ஜீரணித்து ரசத்தை வடிக்கும். கீழே இருப்பதற்குப் பசிக்கும்போது இதைத் தள்ளி விடும். அதிலே வடித்து எடுத்துக் கொள்ளும். இப்படி வடித்துக் கொண்டே இருக்கும்.

சத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு விஷத்தை வடித்து வெளியே அனுப்பும். விஷத்தை வடிக்கும் அந்தத் திறன் இருந்தாலும் நல்ல சத்துள்ள ஆகாரத்தை உட்கொண்டோம்
1.சாப்பாட்டில் கலந்துள்ள விஷத்தைத் தான் அதற்குப் பிரிக்கத் தெரியும்.
2.ஆனால் சாப்பாட்டுடன் சேர்த்து நாம் நுகர்ந்த வேதனையான அந்த உணர்வை… (விஷம்)
3.நாம் கேட்டறிந்து நுகர்ந்த இந்த உணர்வு இரைப்பையுடன் சேர்ந்து விட்டால் அந்த உணர்வான சத்தை சிறுகுடல் கீழே இழுக்கும் திறக்கும்.
3.ஆனால் கோபமாகப் பேசியதைப் பார்த்து இருந்தால் ஆ…! என்று வாயைத் திறந்து விடும்.

மிளகாயை வாயிலே போட்ட பின் நம் வாயை மூட முடியுமா…? காரத்தை நீங்கள் வாயிலே போட்டு வாயை மூடிப் பாருங்கள். மூட முடியுமா…? ஸ்… ஆ… என்று வாயைத் திறந்து அலறிக் கொண்டுதான் இருப்போம்… மூட மாட்டோம் முடியாது.

அதே மாதிரி அந்த எரிச்சலான உணர்ச்சிகள் சிறு குடலை விரித்து விடும்.

அப்படி ஆ…! என்று அலறும் போது “கட புடா…” என்று உடலுக்குள் ஒரு விதமான உணர்ச்சிகள் தோன்றும். சத்தைப் பிரிக்காதபடி அப்படியே விட்டுவிடும். சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வந்த பின் இந்த நிலை ஆகும்.

ஒருவர் கோபமாகப் பேசுவார்… இன்னொருவர் வேதனைப்படுவார்… இரண்டும் இருக்கும். ஆனால் அந்த உணர்வை நுகர்ந்த பின் நம் குடலுக்குள் இந்த உணர்ச்சிகள் தோன்றுவதை நிச்சயம் பார்க்கலாம்… தெரிய முடியும்…!

நான் சொல்வது அனைத்தையுமே நீங்கள் காண முடியும்.

இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கின்றேன்.
1.புறத்தில் நாம் எப்படிச் செயல்படுகின்றோமோ அதைப் போன்று தான்
2.அகத்திற்குள்… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளின் இயக்கமும்… அணுக்களின் இயக்கமும்.

கை கால் வலி வயதின் முதிர்வினால் வருவதில்லை… தீய உணர்வுகள் விளைந்ததன் முதிர்வால் வருவது

கை கால் வலி வயதின் முதிர்வினால் வருவதில்லை… தீய உணர்வுகள் விளைந்ததன் முதிர்வால் வருவது

 

தபோவனத்தில் சவுண்டால் மரத்தை அதிகமாக வைத்தோம். அதற்குப் பக்கத்தில் வேப்ப மரத்தை வைத்தோம். சவுண்டாலின் சத்து அதிகமான பின் வேப்ப மரம் வளரவே இல்லை
1.அந்தச் சவுண்டால் மரத்தை வெட்டியவுடன்
2.இதற்கு ஜீவன் கிடைக்கின்றது… வேப்பமரம் நன்றாக வளர்கின்றது.

இதைப் போல நமக்குள் தீய உணர்வின் விளைவுகள் அது ஓங்கி வளரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர விடாதபடி தடுத்து இது அதிகமாகப் படரும் நிலை வந்து விடுகின்றது. அப்பொழுது நல்ல குணங்கள் அனைத்தும் வளர்ச்சி குன்றுகிறது.

இந்தப் பூமியில் மரம் செடி, கொடிகள் வளர்வது போன்று
1.நாம் எண்ணிய உணர்வின் வித்துகள் எதுவானாலும் அந்த உணர்வின் சக்தி உந்தப்பட்டு
2.நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் இந்தப் பூமிக்குள் படர்வது போல இரத்தத்துடன் கலந்து
3.அந்த அணு செல்களாக வளர்ந்து நம் உடலின் தன்மை ஆவியாக மாறி அதனதன் உணர்வுக்கொப்ப அது கூடி…
4.உடலுடன் உறைந்து தசைகளாக மாற்றி அதில் விளைந்த உணர்வின் சத்து “வித்தாக வெளிப்படும்…”

ஒரு வித்தின் தன்மை உருவான பின் செடியாக மாறுகின்றது. அப்போது “அந்த வித்தைக் காண முடிவதில்லை…”

ஆனால் வித்தின் சத்து செடியாக ஆவது போல அதனின் முதிர்வுக்குத் தக்கவாறு பூ பூத்துப் பிஞ்சாகிக் காயாகி முதுமையாகும் பொழுது அந்த வித்தின் தன்மையை மீண்டும் நாம் கண்களிலே பார்க்கின்றோம்.

அந்த வித்தின் தன்மை போல் எந்த வேதனையை நாம் கண்ணுற்றுப் பார்த்து அதைக் கேட்டுணர்ந்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அது விளைந்து விடுகிறது.

அந்த வேதனையை அடிக்கடி நாம் எண்ணும் பொழுது அதை நுகர்ந்து உடலுக்குள் வரும் பொழுது அந்தச் செயலும்… ரத்தத்தில் இருந்து ஆவியாக மாறி அதன் முத்துக்களை விளைய வைத்து
1.நமக்குள் முழுமையாகும் போது தான் கேன்சர் ஆஸ்த்மா ரத்தக் கொதிப்பு கை கால்களில் புண் இருதயத்திலே வீக்கம் என்று
2.அந்த உணர்வுகள் எங்கே அதிகமாகப் படர்கிறதோ
3.எந்தெந்த குணத்தின் தன்மை இயங்கும் பொழுது அந்தந்த உறுப்பில் தேங்கி விடுகின்றதோ அவை அங்கே ஓங்கி வளர்க்கப்படும் பொழுது
4.உந்திக் கோபத்துடன் ஒரு பொருளைத் தூக்கினோம் என்றால்
5.ஆத்திரமும் வேதனையும் கொண்டு “இரு நான் பார்க்கிறேன்…” என்ற வேகத்துடன் குனிந்து நிமிர்ந்தால்
6.இந்த வேதனையான உணர்ச்சிகள் உடலில் அழுத்தமாகி… முழங்காலிலும் மூட்டுகளிலும் விஷத் தன்மை கூடிவிடும்.

ஆனால் முதலில் ஒன்றும் தெரியாது…! கடைசியில் அங்கே மடக்கி இயங்கும் இடங்களில் விஷம் பட்டுவிடும். காலைத் தூக்கினால் மடக்கினால் கால் வலிக்கின்றது மேல் வலிக்கின்றது என்று வரும்.

காரணம்…
1.மடக்கும் போது நல்ல ரத்தங்கள் பிரிந்து விடுகின்றது.
2.அந்த உணர்ச்சியின் தன்மை நீரை இழுத்து வளர்த்துக் கொள்ளும் இரத்தம் தங்குவதற்கு வழி இல்லை.
3.மூட்டு வலி கை கால் வலி என்று வந்துவிடும்.

வேதனையான உணர்வை எண்ணி இந்த உணர்வின் சக்தி வரப்படும் பொழுது அங்கே எதை வளர்த்ததோ இந்த உணர்வின் சக்தி தன்னாலே வரும். நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் நம் உயிரின் இயக்கங்கள் இந்த உணர்வுக்குத் தக்க இந்தப் பூமியில் எப்படி நடக்கின்றதோ அதைப்போல நம் உடலில் சேர்த்து விடுகின்றது.

இதை நீக்குவது யார்…?
1.அதை நீக்கச் செய்வதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்தி
2.ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு வருகிறேன்.

பச்சிலைகளின் மகிமை

பச்சிலைகளின் மகிமை

 

டேய் இந்தப் பச்சிலை பேசுமாடா…? என்றார் குருநாதர்.

என்ன சாமி…? பச்சிலைக்கு வாய் இல்லையே…! அது எப்படிப் பேசும்…? என்றேன். ஒன்றல்ல… இரண்டல்ல… எத்தனையோ பச்சிலைகளைக் காண்பித்துப் பேசுமாடா…? என்று அவர் கேட்பார். எப்படி சாமி பேசும்…? என்று நான் கேட்பேன்.

முதலில் ஒரு நல்ல பச்சிலையைக் கொடுத்து என்னை நுகரும்படி செய்தார். எப்படி இருக்கிறது…? என்றார்.

1.சாமி…! “கம…கம…” என்று இருக்கிறது. உடல் “ஜம்” என்று இருக்கின்றது என்று சொன்னேன்.
2.இப்போது யாருடா பேசியது…? என்கிறார்.
2.இந்த வாசனை உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை உன்னைப் பேச வைக்கிறதா இல்லையா…? என்றார்.

இப்படியே சொல்லிக் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு செல்கிறார்.

அடுத்து… வேறு ஒரு பச்சிலையை நுகரச் சொன்னார். நுகர்ந்தேன்… தலை சுற்ற ஆரம்பித்தது. சாமி…! தலை சுற்றுகிறது… எங்கேயோ என்னைக் கொண்டு செல்கின்றது என்றேன்.

1.இப்போது யாருடா அதைச் செய்வது…?
2.அந்தப் பச்சிலை தானே…! என்று கேட்டார்.

உயிரினங்களில் பச்சிலைகளைச் சாப்பிடுகின்ற வெள்ளாட்டைப் பாருங்கள். எருக்கலையைச் சாப்பிட்டால் வயிறு வெந்துவிடும். அதே சமயத்தில் விஷ முள் பச்சிலையை எடுத்து அரைத்து மேலே தேய்த்தால் கை கால் எல்லாம் சரியாக வராது செயலிழந்து விடும். தலையில் தேய்த்தால் பித்துப் பிடித்தது போல் ஆகிவிடும்.

என் தலையிலே அதைத் தேய்த்தார்…! பாருடா என்ன செய்கிறது…? என்றார். தலை சுற்றிக் கொண்டே இருக்கின்றது புத்தி பேதமாவாது போன்று ஆனது.

1.மீண்டும் உனக்கு நல்ல நினைவு வருவதற்கு நினைவூட்டச் செய்வது யார்…?
2.அந்தப் பச்சிலை தானே…! என்றார் குருநாதர்.

பரிணாம வளர்ச்சியில் புழுவில் இருந்து மனிதனாக வரும் நிலையில் ஒன்றை ஒன்று கொன்று தின்று கொன்று தின்று ஒன்றுக்கு இரையாகி இப்படித் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்.

உதாரணமாக பல்லியினுடைய மூத்திரம் நம் மீது பட்டால் மேலெல்லாம் பொறிகளாகிக் கொப்புளமாகிவிடும். உணவுப் பொருளில் பல்லி விழுந்து விட்டால் அதை நாம் சாப்பிட்டால் நம்மைக் கொன்று விடும்.

ஆனால் அந்த விஷத்தன்மை உருவாகி அந்தப் பல்லிக்கு அது பாதுகாப்பு ஆகிறது. இருந்தாலும் அந்தப் பல்லியைக் கோழி உட்கொள்கின்றது… மற்ற சில பறவைகளும் சாப்பிடுகின்றது. அதனின் உறுப்புகள் இந்த விஷத்தை அடக்கக் கூடிய சக்தி இருப்பதால் அதை ஒன்றும் செய்வதில்லை.

நீ சாப்பிடுடா பார்க்கலாம்…! என்று என்னைச் சாப்பிடச் சொல்கின்றார்.

சாமி…… என்றேன்.

நான் சொல்வதை எல்லாம் கேட்கிறேன் என்று சொன்னாய் அல்லவா கேளு…! என்கிறார்.

நான் பிள்ளை குட்டிக்காரன்… என் உயிர் போய்விடும். என்று சொன்னேன். ஆனால் அவர் விடவில்லை. அதைச் சாப்பிடும் படிச் செய்து அந்த உணர்வு என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார்.

1.அதற்குப் பாதுகாப்புக்காகப் பச்சிலை ஒன்றை உனக்குக் கொடுக்கிறேன்
2.கையில் கொடுத்து… இந்த பச்சிலையைச் சாப்பிட்டால் உன்னை அந்த விஷம் எதுவும் செய்யாது என்றார்.

இப்படி அந்தப் பச்சிலைகளுக்கு உண்டான மகிமையைக் காட்டுகிறார். அந்தப் பச்சிலையை நுகர்ந்து பார்த்த பின் விஷங்களை அது முறிக்கின்றது.

ஆக… அந்தப் பச்சிலைகளின் சக்திகளை எல்லாம் நான் சுவாசிப்பதற்காக வேண்டி
1.ஒரு கட்டுக் கணேஷ் பீடியை வாங்கிக் கொடுத்துப் பற்ற வைத்து ஊதுடா…! என்கிறார்.
2.கணேஷ் பீடி என்றால் கணேசன்…! கணங்களுக்கு எல்லாம் ஈசன் என்று அவன் உணர்வுகளை நீ நுகர்ந்தால்
3.கணங்களுக்கு ஈசனாக உற்பத்தி செய்வான்டா…! என்று சொல்லி… ஒரு கட்டுப் பீடியைக் குடிடா என்று சொல்கின்றார்.

நீ அப்படிச் செய்தால் கணங்களுக்கு ஈசனாக மாறும் என்கிறார். ஏனென்றால் பைத்தியக்காரத்தனமாகத் தான் சொல்வார்.

அந்த உணர்வுகளை எடுத்து நுகர்ந்தவுடன்…
1.யாரெல்லாம் உடல் நலமில்லாதபடி நோய்வாய்ப்பட்டுள்ளார்களோ
2.அவர்களுடைய நோயெல்லாம் போக வேண்டும்…! “ஊதுடா…” என்று சொல்கின்றார்.

அவர்களை நினைத்து இதைச் செய்த பின் அவர்கள் வீட்டிலே இந்த பீடி வாசனை வருகிறது. அந்தச் சமயத்தில் நான் சுற்றுப்பயணம் செல்லும் பொழுது சாமி வந்து விட்டார் என்று சிறிய குழந்தைகள் எல்லாம் சொல்வார்கள்.

1.அங்குள்ளவர்களுக்கு நோய் இருந்தால் அது உடனே நீங்குகிறது.
2.இப்படித் தான் பச்சிலைகளின் ஆற்றலை எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுக்கின்றார் குருநாதர்.

வெள்ளாட்டுப் புழுக்கையின் மருத்துவ குணம்

வெள்ளாட்டுப் புழுக்கையின் மருத்துவ குணம்

 

வெள்ளாடு பல விஷச் செடிகளை உணவாக உட்கொள்கின்றது… அந்த விஷத்தன்மைகளைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றது.

கருவுற்றிருக்கும் ஒரு வெள்ளாடு
1.அந்தச் சமயத்தில் எந்தெந்தத் தாவர இனங்களை உட்கொண்டதோ அந்தக் குட்டி பிறந்த பின் என்ன செய்யும்,…?
2.தாய் கருவுற்ற சந்தர்ப்பத்தில் எத்தகைய செடிகளை உணவாக உட்கொண்டதோ அதையே அந்தக் குட்டியும் உணவாக எடுத்துக் கொள்ளும்.

உதாரணமாக இன்ன இடத்தில் இருக்கக்கூடிய விஷச் செடியை அந்தத் தாய் உட்கொண்டிருந்தது என்றால் அதிலே கருவுற்று வளர்ந்த இந்தக் குட்டியும்
1.இந்த ஆட்டுக்குட்டியை வேறு இடங்களுக்கு விலைக்கு வாங்கிச் சென்றாலும் கூட
2.அதே விஷச் செடியைத் தேடித்தான் செல்லும்… அது இல்லை என்றால் வாடும்.

காரணம் கருவிலே இருக்கும் போது அது நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனுடைய உணர்ச்சிகள் அவ்வாறு இயங்குகின்றது.

இத்தகைய விஷச் செடியை உணவாக உட்கொள்ளும் அந்த ஆடு அதில் உள்ள விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது. ஆனால் அதனுடைய மலம் நல்லதாக வெளி வருகின்றது. அந்த வெள்ளாட்டுப் புழுக்கையை நாம் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

மூட்டு வலி மூட்டு வாதம் சரவாங்கி நோய் என்றெல்லாம் சிலருக்கு இருக்கும். காரணம்
1.பிறருடைய துன்பங்களையும் துயரங்களையும் கேட்டு நுகர்ந்த நிலையில்…
2.வேதனைப்பட்ட மனிதர்களின் உணர்வுகளையும் நுகர்ந்திருந்தால்
3.அதனால் வேதனையை உருவாக்கும் அணுக்கள் உடல் உருவாகி மூட்டுவாதம் முழங்கால் வாதம் போன்ற உபாதைகளும்
3.ஈரக்குலையில் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது வேதனைப்படும் நிலைகளும் உருவாகின்றது.

இதை மாற்றி அமைக்க அந்த வெள்ளாட்டுப் புழுக்கையைச் சிறிதளவு எடுத்து அதை லேசாகச் சூடாக்கி “அதிலிருந்து வெளி வரும் மணத்தை நுகர்ந்தால்…”
1.உடலுக்குள் இருக்கும் விஷத்தன்மையை முறித்து விடுகின்றது.
2.மூட்டு வீக்கத்திற்கு உண்டான அணுக்கள் மடிகின்றது விஷ நீர்களை அகற்றுகின்றது வாத நோய்கள் குறைகிறது.

இப்படி அந்த வெள்ளாட்டுப் புழுக்கையின் மணம் மருந்தாக மனிதனுக்குப் பயன்படுகிறது.

உடல் உபாதைகளை அகற்ற உங்களுக்கெல்லாம் சில நிலைகளை உணர்த்துகின்றேன்

உடல் உபாதைகளை அகற்ற உங்களுக்கெல்லாம் சில நிலைகளை உணர்த்துகின்றேன்

 

1.வெள்ளாடு நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்றது.
2.விஷத்தைத் தன் உடலாக்கி நல்ல நிலையை அது வெளிப்படுத்துகின்றது.

அதன் புழுக்கையை எடுத்து நன்றாகக் காய வைத்து ரொம்பக் கொதிகலனாகாதபடி சிறு வெப்பத்தின் நிலைகள் கொடுத்து அந்த ஆவிகள் வெளிவரும் பொழுது அதை நுகர்ந்து பாருங்கள். அதைச் சுவாசித்து உடலுக்குள் அந்த மணம் செல்லும் பொழுது மருந்து சாப்பிடுவது போன்று விஷத்தை ஒடுக்கும் வல்லமை பெறுகின்றது.

டி.பி. ஆனாலும் கேன்சர் ஆனாலும் கடும் நோயாக இருந்தாலும் இருதய வாயில்களில் அடைப்பானாலும் சிறிது நேரம் அதிகமாகச் சுவாசித்துப் பழகுங்கள். இரத்த நாளங்களில் இது கலக்கும்.

அதனுடன் சேர்த்து உங்கள் உயிரான ஈசனிடம் ஈஸ்வரா என்று வேண்டி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் ரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்.
3.எங்கள் உடலுக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் அகன்று அந்த அருள் சக்திகள் வளர வேண்டும்.
4.எங்களை அறியாமல் இயக்கும் இந்த உடல் உபாதைகள் நீங்க வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்.

ஆஸ்மா போன்ற நோய்கள் எல்லாம் பரம்பரையாக வருவது. சர்க்கரைச் சத்தும் இது போன்று பரம்பரையாக வந்து கொண்டிருக்கின்றது.. பிறந்த குழந்தைக்கும் சர்க்கரைச் சத்து இருக்கிறது என்று சொல்கின்றார்கள்.

நான்கு வயது மூன்று வயது குழந்தைகளுக்குக் கூட இன்சுலின் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் தாய் வழியில் பரம்பரையாக. வருவதனால். காசு பண வசதி இருக்கும் வரை போடுகின்றோம். காசு இல்லை என்றால் விட்டு விடுகின்றோம்.

அதற்குப்பின் இந்த மாதிரி ஆகிவிட்டதே என்று இறந்து விடுகின்றார்கள். இதே உணர்வை மீண்டும் எண்ணி எடுக்கப்படும் பொழுது அடுத்தவர் உடலிலும் இப்படி வளர்ந்து கொண்டே இருக்கின்றது. இதைக் குறைக்கும் வழி இல்லை.

கோவிலுக்குச் சென்றேன் சாங்கியங்களைச் செய்தேன். பாவத்தை போக்கக் காசைக் கொடுத்துவிட்டு செய்யும் நிலைகள் தான் இருக்கின்றது. இது எல்லாம் நம் வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

வளர்ச்சி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

மற்ற உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுவானதை நுகர்ந்து நுகர்ந்து… அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அதனின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டதோ
1.அந்த உணர்ச்சிகள் வளர்ச்சியான பின் அந்த வலுவான உடலில் அது புகுந்து அந்த ரூபமாக மாறுபட்டு எப்படி வருகின்றதோ
2.இதே போல் மனிதனின் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற ஞானிகள் அருள் உணர்வுகளை எடுத்து நாம் வளர்த்துக் கொண்டால்
3.இதன் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் சென்று உணர்வை ஒளியாக மாற்றிவிட்டு பத்தாவது நிலையான முழுமை அடைகின்றோம்.

இரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்

இரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்

 

சிறுநீர் கழிக்கின்றோம் என்றால் இந்த உடலில் மோதலால் ஏற்படும் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து சுண்ணாம்புக்கல் மாதிரி ஆகிறது. சிறுநீரகம் கழித்த இடங்களில் பார்த்தால் இது தெரியும்.

இதே போன்று நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மையும் ரத்த நாளங்களில் இது கலக்கும்.. இதைத்தான் கிட்னி என்ன செய்கிறது…?
1.விஷங்கள் வந்தால் அந்த ரத்தங்களைச் சுத்திகரிக்கின்றது.
2.அதிகமான வேதனை உணர்வுகள் வடிகட்டப்படும் பொழுது விஷங்கள் அதிகமாகத் தாக்கித் தாக்கிச் சிறுநீரகம் பலவீனமடைகிறது.
3.அப்படிப் பலவீனமடையப்படும் பொழுது ரத்த நாளங்களில் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றது.
4.அதன் வழி கெட்ட அணுக்களுக்கு ரத்தத்தின் வழி கொண்டு சேர்க்கின்றது.

வேதனையை மீண்டும் சுவாசிக்கப்படும் பொழுது அது ரத்தத்திலே கலக்கின்றது. வடிகட்டி அனுப்பினாலும் இந்த வேதனை உணர்ச்சிகள் அதிகமாகும் போது அந்த உணர்ச்சிகள் தாங்காது விரிவடைந்து “வடிகட்டும் தன்மை இழக்கப்படுகிறது…”

ஒரு சல்லடையில் ஓட்டை விழுந்து விட்டால் தொப்… தொப்… என்று அதன் வழியில் எல்லாம் இறங்கி விடும். அதைப் போல்
1.இயக்கச் சக்தியைப் பிழியும் தன்மை இழக்கப்படுகின்றது.
2.வடிகட்டாத உணர்வுகள் உடல் முழுவதும் செல்லப்படும் பொழுது நல்ல உணர்ச்சியைத் தூண்டும் நல்ல அணுக்களுக்கும்
3.மனித உடலை உருவாக்கிய அணுக்களுக்கும் நல்ல சத்து கிடைப்பதில்லை.

நாம் ஆகாரம் உட்கொண்டாலும் அதிலும் சில விஷத்தன்மைகள் வரும். அதையும் கிட்னி வடிகட்டும். நுகர்ந்த உணர்வுகள் ரத்தத்தில் கலக்கப்படும் போது சிறுநீரகம் அதையும் வடிகட்டும்.

ஆனால் வடிகட்டும் தன்மை இழக்கப்படும் பொழுது எல்லாம் தாராளமாகச் சென்று விடும்.

அப்பொழுது இருதய வால்வுகள் உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்பப்படும் (PUMP) நிலையில் என்ன ஆகிறது…?
1.கிட்னி கழிவுகளைக் கழிக்க தவறப்படும் பொழுது
2.அந்த இடத்திலே அவைகள் சிறுக சிறுக உறையத் தொடங்கும்.

அந்த உறையின் தன்மை ரத்தம் போகும் பாதையில் அதிகமாகி ஒன்றுக்கொன்று வடிகட்டிச் செல்லப்படும் பொழுது இருதயத்திலே தொல்லைகள் வரும். அங்கே உணர்வின் அழுத்தம் ஆகி இதயத்தில் லேசாக வலிக்கிற மாதிரி இருக்கும்.

அழுத்தம் அதிகமாகும் பொழுது இரத்தத்தை ஈர்க்கும் சக்தியும் குறைகின்றது. பம்பில் சிறு ஓட்டை இருந்தால் எப்படியோ அது போல் உறுப்புகளில் இருதய வாயிலை மிகவும் பலவீனப்படுத்தும்.

அடிக்கடி மூச்சுத் திணறலும் நடந்து சென்றாலும் கூட எத்தனையோ தொல்லைகள் வரும்.

வேதனை உணர்வு வரப்படும் போதெல்லாம் சிறுநீரகத்தால் வடிகட்டத் தவறும் போது அதை மாற்ற முடியாது இப்படி ஆகிவிடுகிறது. வைத்திய ரீதியாக உங்களுக்குத் தெளிவாக்குகின்றேன்.

இதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால்
1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.நம்முடைய எல்லா குணங்களிலும் எல்லா எண்ணங்களிலும் எல்லா உணர்வுகளிலும் அதை இணைக்க வேண்டும்.

அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஆத்ம சுத்தி செய்து கொண்டால் உடல் உறுப்புகளைச் சீராக இயக்கி நல்ல வடிகட்டும் திறன் பெற்றுத் “தீமைகளை அகற்றிடும் சக்தி வாய்ந்த உறுப்புகளாக அமையும்…”

நாம் என்றுமே அந்த அருள் வழியில் வாழ இது ஏதுவாக இருக்கும்.

உடலில் நோய் இருந்தாலும் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

உடலில் நோய் இருந்தாலும் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு… ஒருவருக்குக் கண் இல்லையென்றால் மாற்றுக் கண்ணைப் பொருத்திக் கண் பார்வை கொடுக்கின்றனர்.

செவித் தன்மைக்கு இப்படி ஒரு மாற்று ஏற்பாடு இல்லை என்றாலும் அவர்களுக்கு உணர்வின் உணர்ச்சிகளை (சைகை மூலம்) தெரியும்படிக் கொண்டு வருகின்றார்கள்.

இருதயம் பழுதாகி விட்டால் பழுதான இருதயத்தை அகற்றிவிட்டுச் செயற்கை இருதயம் பொருத்துகின்றனர்.

நோயாளியின் உடலிலும் மற்றவர் உடலிலும் உள்ள சில செல்களைக் கழித்துப் பழுதான உறுப்பு போன்றே “மோல்டு…” செய்யப்பட்டு அந்த உணர்விற்குள் சேர்க்கப்பட்டு அதே போன்ற புது உறுப்புகளை உருவாக்குகின்றனர்.

இந்த உடலுக்கும் மற்ற உடலுக்கும் என்ன இருக்கிறதென்று ஆய்ந்து உணர்வின் செல்களை உருவாக்கி உறுப்புகளை எடுத்து இணைக்கின்றனர்.

இப்படி இணைத்தபின் இரத்தத்தில் வருவதைச் சமப்படுத்த வேண்டும். எதிர் நிலையானால் கழன்று கொள்ளுகின்றது. மாற்று இருதயம் பொருத்தினாலும் அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினாலும் இதே தான்…! இரத்தம் சீராக இருக்க வேண்டும்.

1.இரத்தத்தை வடிகட்டிச் சுத்தப்படுத்துவதற்காகச் சில மருந்துகளை டாக்டர்கள் கொடுப்பார்கள்.
2.கொடுக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டால் தான் இரத்தத்திற்கும் பொருத்தப்பட்ட உறுப்பிற்கும் பொருந்தி வரும்.
3.ஒரு நாளைக்கு மருந்து சாப்பிடவில்லை என்றால் பொருத்தப்பட்ட உறுப்பின் இயக்கம் தோற்றுவிடும்.

ஆகையால் இரண்டையும் சமப்படுத்திச் சீராக இருந்தாலும் ஒருவர் காய்ச்சலுடன் வருகின்றார். அவருடைய காய்ச்சலின் வீரியம் கண்டு அதன் உணர்வை நுகர்ந்து விட்டால் உடலில் கிருமிகளாகின்றது.

அன்றைக்கு இவர்களுக்கு ஆபத்து…! ஆபத்து என்று வந்துவிட்டால் அதற்கென்று மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

அது சமயம் சாதாரண டாக்டரிடம் சென்றால் பொருத்தப்பட்ட உறுப்பு கழன்றுவிடும். இப்படியெல்லாம் விஞ்ஞானிகள் அதற்கென்று பருவத்தைச் பார்த்து செயல்படுத்துகின்றனர்.

ஆனால் இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தும் நாம் எத்தனை நாள் வாழுகின்றோம்…? சிறிது நாள் தான் வாழுகின்றோம்.

1.நமக்கு இப்படி ஆகிவிட்டதே…!
2.மருந்தையும் சுவையில்லா உணவையும் தான் சாப்பிட்டு வாழ்கின்றோம்…” என்ற வேதனை அதிகமாகின்றது.
3.மக்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கின்றார்கள்… நம் காலம் இப்படியாகி விட்டதே…!” என்று
4.நாம் நல்லவர்களாக இருந்தாலும் வேதனையின் உணர்வைத்தான் அதிகமாக்க முடிகின்றதே தவிர… மாற முடிகின்றதா…?

ஆகவே நாம் நமது உடலில் இருக்கும் காலத்தில் எதைச் சேர்க்க வேண்டும்…?

1.உடல் நலக் குறைவாக இருந்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும்.
2.ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று “நம் உணர்வுகளை மாற்றினால்…” நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

இவையெல்லாம் குருநாதர் எமக்குக் காண்பித்த உண்மைகள்.