வாழ்க்கையின் கடைசி எல்லைக்கு வந்து விட்டோம்…

positive-energy-blog

வாழ்க்கையின் கடைசி எல்லைக்கு வந்து விட்டோம்… 

கிட்னி மாற்று (KIDNEY) ஆபரேஷன் செய்தால் இன்னொரு மனித உடலில் இருக்கக்கூடிய அந்த உறுப்புகளை எடுத்து பழுதான உடலில் இணைக்கின்றார்கள்.

அப்படிப் பொருத்தினாலும் கூட இவர்கள் இரத்தம் வேறு. அவர்கள் இரத்தம் வேறு. இந்த உறுப்பில் இருக்கின்ற அணுக்கள் வேறு. அவர்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் வேறு.

இதை இரண்டையும் இணைக்கச் செய்வதற்கு இதை சமப்படுத்துவதற்காக வேண்டி ஒரு மருந்தைக் கொடுப்பார்கள். கிட்னி ஆபரேஷன் செய்யும் போது இந்த மருந்தைக் கொடுத்தவுடனே இரண்டும் ஒத்துக் கொள்கின்றது.

அப்பொழுது புதிதாக ஒட்ட வைத்த அந்த கிட்னி அது கொஞ்சம் கொஞ்சமாக ஜீவனாகி வேலை செய்யும். ஆனாலும் அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

1.யாராவது காய்ச்சல் உள்ளவர்களைப் பார்த்து விட்டாலும்
2.சாப்பிடும் தட்டைக் கொதிக்கின்ற தண்ணீரில் கழுவாமல் சாப்பிட்டாலும்
3.அந்த எதிர்ப்பு சக்தி இல்லாததால் மறுபடியும் கிட்னி கழன்று கொள்ளும்.
4.அந்த மனக்கட்டுப்பாடு இல்லை என்றால்
5.காசு செலவழித்து ஆபரேஷன் செய்தும் பயன் இல்லாமல் போய்விடும்.

ஏனென்றால் இந்த உடலில் சிறிது நாள் வாழ்வதற்கு இத்தனை முயற்சி எடுக்கின்றோம். இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கின்றோம்.

உடல் சரியில்லை என்றால் உடனே டாக்டரிடம் போகின்றோம். மருந்தைச் சாப்பிடுகின்றோம். ஓரளவிற்குக் குணமானதும் வந்து விடுகின்றோம்.
1.மறுபடியும் நோய் வருகிறது.
2.மறுபடியும் டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிடுகின்றோம்.
3.இப்படி நோய் வந்து கொண்டே தான் இருக்கின்றது.
4.நாம் மருந்தைச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கின்றோம்.
5.கடைசியில் எல்லா மருந்தும் ஒட்டு மொத்தமாகப் போட்டு ஒரே அமுக்கு அமுக்கிவிடுகின்றது.
6.அமுக்கியவுடனே உடலெல்லாம் நலிந்து “உன் விதி அவ்வளவு தான்…!” என்று உயிர் வெளியில் போகின்றது.

இந்த உடலில் நாம் சேர்த்து கொண்ட உணர்வுக்கொப்ப இன்னொரு உடலில் கொண்டு பொருத்தி விடுகிறது. உடலில் சேர்ந்த விஷத்திற்கு தகுந்த மாதிரி அடுத்த உடலை மாற்றி விடுகிறது. இது உயிரின் வேலை.

உதாரணமாக கொடூரமாகத் தாக்கும் புலியை மான் அதிகமாகப் பார்த்த பின் பயத்தினால் புலியின் உணர்வு பூராம் மானின் உடலுக்குள் போகின்றது.

அதைத் தான் கண்ணன் வெண்ணெயைத் திருடுகின்றான் என்று சொல்வது.
1.புலியின் வலுவான உணர்வு மானின் உயிரிலே மோதி
2.உன்னை அது கொல்லப் போகின்றது என்று சொல்கின்றது.
3.அதன் வழி தப்பித்துப் போகின்றது.

இருந்தாலும் மான் புலியை உற்றுப் பார்த்துப் பயந்த உணர்வுகள் அனைத்தும் மானின் இரத்தத்தில் கலக்கின்றது. புலியின் வலுவான உணர்வுகள் மானின் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் சேர்ந்து விடுகின்றது.

அப்போது மானுக்குப் புலியின் நினைவே அதிகமாக இருக்கின்றது. மான் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு எங்கே போகிறது…?

1.செத்தவுடனே மானின் ஈர்ப்பிற்குத் தான் போக வேண்டும்.
2.ஆனால் புலியின் நினைவு அதிகரித்ததால் புலி உடலின் ஈர்ப்புக்குப் போய்ப் புலியாகப் பிறக்கிறது.
3.மான் புலியிடம் சிக்கியவுடனே எத்தனை வேதனைப்படுகிறது..?
4.எலி பூனையிடம் சிக்கியவுடனே அது எத்தனை வேதனையாகிறது…?

இப்படித்தான் நாம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தோம். பல கோடித் தீமைகளை நீக்கி எல்லாவற்றிலும் எத்தனையோ கொடுமைப்பட்டுத்தான் மனிதனாக வந்திருக்கிறோம்.

ஒரு எலி பூனைக்கு இரையாகின்றது. அந்த வேதனையுடன் என்னைக் கொல்கிறானே என்று எண்ணுகின்றது. பூனை உடலுக்குள் போகின்றது.

இத்தனை வேதனைகளையும் பட்டுத்தான் பூனை உடலுக்குள் எலி போகின்றது. ஆனால் அந்த எலி பூனைக் குட்டியாகப் பிறக்கும் போது அந்தப் பூனை எத்தனை வேதனைப்படுகின்றது..?

அதே போன்று தான் மான் வேதனையுடன் தான் புலி உடலுக்குள் போகின்றது. புலிக் குட்டியாக அது பிறக்கும் போது அந்தப் புலிக்கு வரும் வேதனை எத்தனை வேதனை…?

இவைகள் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று ஆகி இந்த வேதனை உணர்வுடனே தான் வளர்ந்து வருகிறது. இதே மாதிரி நாம் எத்தனையோ உடல்கள் பெற்றிருக்கின்றோம்.

பாம்பு நம்மைக் கடிக்கும் என்று அதை அடித்து நரக வேதனைப்படுத்துகின்றோம். பாம்பின் உயிர் நமக்குள் வந்து விடுகிறது. பாம்பின் உயிர் நம் உணர்வை எடுத்து மனிதக் கருவாகின்றது. “மனிதனாகவே பிறக்கின்றது….!”

மனிதனாகப் பிறக்கும் நிலையில்
1.குழந்தை பிறக்கும் முன்னாடி அந்தத் தாய் படும் அவஸ்தை எத்தனை எத்தனை..?
2.பிறந்த பிற்பாடு எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்…?
3.ஆனாலும் பாசத்தால் குழந்தையை ஆதரித்து நல்ல முறையில் வளர்க்கின்றோம்.

எலியைக் கொன்று சாப்பிட்டது பூனை. அந்த எலியின் உயிர் போகும் போது பூனையின் உடலுக்குள் சென்று பூனையாகப் பிறந்தவுடனே தன் குட்டியைக் காக்கும் தன்மை வருகின்றது.

இப்படித் தான் இயற்கையின் தன்மையில் ஒவ்வொன்றும் விளைகின்றது என்பதனை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டினார்.

இத்தனையும் குருநாதர் அனுபவத்தில் தான் கொடுத்தார். பாட நிலைகளில் அல்ல. நான் அனுபவித்தேன். தெரிந்து கொண்டேன்.

இத்தனையும் அனுபவித்துத் தெரிந்து கொண்ட பிற்பாடு…
1.நீங்கள் தீமைகளில் போய்ச் சிக்காதீர்கள் என்று
2.உங்களுக்கு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றேன்.

ஞானிகளின் அருளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் யார் கேட்கின்றார்கள்…? அதைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

இவ்வளவு பேருண்மைகளைக் கொடுக்கின்றோம். ஆனால் அவர்களை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும் எங்கே போகின்றோம் என்ற வகையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நீங்கள் எங்கே சென்றாலும் நோயை நீக்கி எந்த மருந்தைச் சாப்பிட்டாலும் எந்தக் கோயிலுக்குப் போய் ஆண்டவனைத் தரிசிக்கப் போனாலும்
1.யாம் சொல்லும் முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பாருங்கள்.
2.உங்களை உங்கள் எண்ணம் தான் காக்கும். நிச்சயம்…!

அடிக்கடி உணர்ச்சி வசப்படுகின்றோம்… (TENSION) – அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

tension-stress-relief

அடிக்கடி உணர்ச்சி வசப்படுகின்றோம்… (“TENSION”) – அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

என் பிள்ளையை எப்படியெல்லாம் வளர்த்தேன்…. எல்லாம் நல்லது செய்தேன்….! “தொலைந்து போகின்றவன்… இப்படியெல்லாம் செய்கின்றானே…! என்று நாம் திட்டுகின்றோம்.

அப்போது இந்தப் பக்குவம் கெடப்படும் போது நாமும் பக்குவம் கெட்டுவிடுகின்றோம். அவனையும் பக்குவ நிலையிலிருந்து கெட வைத்து விடுகின்றோம்.

வியாபாரம் செய்கின்றோம். ஒருவர் ஒரு தடவை கேட்டவுடனேயே கடனைக் கொடுத்து விடுகின்றோம். ஆனால் சந்தர்ப்பம் கடன் கொடுத்தவரால் திரும்பக் கொடுக்க முடியாமல் போய்விடுகின்றது.

கடன் கொடுத்தவனால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்று சொன்னால் நமக்குள் என்ன ஆகின்றது…? “நான் கொடுத்தேன்… என்னை ஏமாற்றி விட்டான்…!” என்றால் இந்தப் பக்குவம் கெட்டுப் போய்விடுகின்றது.

கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்… கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்… கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்…! என்று இப்படியே சொல்லிக் கொண்டிருக்கும் போது நம் நல்ல குணங்கள் எல்லாம் மாறுகின்றது. பக்குவ நிலைகள் கெடுகின்றது.

1.நான் இதைச் செய்தேன்.., அதைச் செய்தேன்…! என்று சொல்கின்றோம்
2.அந்தப் பாட்டைப் பாடுகின்றோம்
3.ஆனால் (நல்ல) பக்குவத்தைக் கெடுத்து விடுகின்றோம்.
4பல நினைவுக்குச் சென்றுவிடுகின்றோம்

தோசையைச் சுட வேண்டும் என்றால் மாவை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி வைத்து விடுகின்றோம். ஆனால் தீயை நிறைய எரிய விட்டுத் தோசையை ஊற்றினால் என்ன செய்யும்…? கருகிப் போய்விடும்.

குழிப் பணியாரம் சுடும் போது நெருப்பை அதிகமாக வைத்துவிட்டு மாவை ஊற்றினால் என்ன செய்யும்…? கீழே அடியில் பிடித்துவிடும். கருகிவிட்டால் சுவை இருக்காது.

ஆகவே அது அதற்கு என்ன பக்குவம் செய்ய வேண்டுமோ அந்த நிலை இல்லையென்றால் ருசி கெட்டுப் போய்விடுகின்றது.

அதைப் போன்று தான் கோபம் ஆத்திரம் வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் அதிகமான பின் நம் பக்குவம் தவறிப் போய்விடுகின்றது. நம் சொல்லும் நயம் கெடுகின்றது.

1.பக்குவம் தவறுவதால் கார உணர்ச்சிகள் நம் உடலுக்குள் வந்து
2.நம் உடலிலுள்ள உறுப்புகளில் அதே கார உணர்ச்சியைத் தூண்டும் இரத்தமாக மாறுகின்றது.
3.இரத்தத்தில் கார உணர்ச்சிகள் வந்தவுடனே எல்லா அணுக்களும் கெடும். பக்குவம் தவறிப் போகும்.

எல்லோருக்கும் நல்லதைச் செய்கின்றோம்… பின்னாடி நான் இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என்று சொல்கின்றோம்.

செய்த பிற்பாடு நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் பக்குவம் கெட்டுத்
1.திட்ட ஆரம்பித்து விடுகின்றோம்.
2.அல்லது குறை கூற ஆரம்பித்து விடுகின்றோம்
3.இந்தக் குறையைத்தான் வளர்க்கின்றோம்.

அதே சமயத்தில் நோயாளியைக் காப்பாற்ற எண்ணுகின்றோம். அந்த நோயின் தன்மையோ வேகம் அதிகமாக இருக்கின்றது.

அதைக் கேட்டுக் கொண்ட பின் தவறிப் போய் பாசத்தால் “உனக்கு இப்படி ஆகிவிட்டதே…!” என்று நமக்குள் அவரின் நோயின் உணர்வைச் சேர்த்துக் கொண்டோம் என்றால் அந்தப் பக்குவம் தவறிவிடுகின்றது. அதே நோய் நமக்குள்ளும் வந்து விடுகின்றது.

மற்றவரைக் காப்பாற்ற வேண்டும், அப்படியே நம்மையும் காப்பாற்ற வேண்டும். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் படர வேண்டும். எங்கள் உடலிலே உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று பக்குவப்படுத்தி அந்த வலுவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் நோயாளியின் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர் நோயிலிருந்து நீங்கி நன்றாக வேண்டும் என்று அந்த நல்ல வாக்கினை அவரிடம் பதிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவரால் முடியவில்லை. அப்பொழுது நமக்குள் அருள் உணர்வுகளை விளைய வைக்கின்றோம், சொல்லை உணர்வாக்குகின்றோம். அருள் ஒளியாகப் பாய்ச்சுகின்றோம். அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றோம். நோயாளி அதைப் பெறுகின்றார்.

உதாரணமாக நம்முடைய நண்பன் சந்தர்ப்பத்தால் வேதனைப்படுகின்றான். என் பையன் இந்த மாதிரிச் செய்து விட்டான். அந்த மாதிரிச் செய்து விட்டான் என்று சொல்லும் போது அந்தச் சந்தர்ப்பம் நண்பருக்குள் வேதனை உருவாகின்றது.

ஆனால் அந்த நண்பனை நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் நமக்கு என்ன செய்கின்றது..? அவர் வேதனையைக் கேட்டவுடனே அதே சந்தர்ப்பம் நமக்குள்ளும் வேதனையை உருவாக்குகின்றது.

நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் தான் இவ்வாறெல்லாம் நடக்கின்றது. பல பல நன்மைகளை நாம் செய்தாலும் பரிபக்குவ நிலையை நாம் பெறத் தவறினால் இந்த வாழ்க்கையில் தேய் பிறையாகி மீண்டும் கீழே தான் போவோம்.

சர்க்கஸில் வேலை செய்பவர்கள் பல விதமான விளையாட்டுகளைச் செய்வார்கள். பார் (BAR) விளையாட்டில் இத்தனாவது நூலில் வருகின்றார்கள் என்று தெரிந்து அதைத் தாவிப் பிடித்துவிடுகின்றார்கள்.

தன்னுடைய வேகத்தில் என்ன செய்கிறார்கள்..? நிற்பவர்களையும் அந்தச் சமப்படுத்தும் நிலை கொண்டு (BALANCE செய்து) தூக்கி மேலே கொண்டு போய்விடுகின்றார்கள்.
1.அதிலே சிறிது பக்குவம் தவறி விட்டால் கீழே தள்ளி விட்டு விடும்.
2.சர்க்கஸில் விளையாடுகின்ற மாதிரிதான் நம்முடைய வாழ்க்கை.

எதனுடைய உணர்வை எடுத்தாலும் இந்தப் பக்குவம் தவறினால் நம் நல்ல குணங்கள் வீழ்ந்து போகும். வீழ்ந்த பிற்பாடு நாம் நல்லது செய்வது என்பது முடியாது போய் விடுகின்றது.

அடுத்து நல்ல செயலை வளர்க்க முடிவதில்லை. எல்லாம் நல்லது செய்தேனே… எனக்கு இப்படியெல்லாம் வந்து விட்டதே…! என்று இப்படித்தான் சொல்கின்றோம்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் பிறர்படும் துயரங்களையோ அல்லது பிறர் செய்யும் தவறுகளையோ பார்த்தால் “ஈஸ்வரா…!” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுக்க வேண்டும்.

எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அந்த வேகத்தைத் தணித்து விடுகின்றோம். நல்ல சிந்தனை வருகின்றது.

1.கோபமோ வேதனையோ எதனால் நமக்கு வருகின்றது என்று சிந்தித்து
2.அதைத் தடுத்து நிறுத்தியவுடனே
3.நல்ல உணர்வுகள் நமக்குள் வருகின்றது.
4.சாந்தம் வருகிறது, விவேகம் வருகின்றது. அது நல்லதாகின்றது.

ஆக கோபப்படுவோரின் உணர்வுகளையும் வேதனைப்படுவோரின் உணர்வுகளையும் நமக்குள் சேராது விவேகத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் மாற்றும் சக்தியாக வருகின்றது. அப்பொழுது மற்றவர்கள் கஷ்டம் நமக்குள் வராது.

அதற்காகத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் “பரி பக்குவ நிலை பெற எனக்கு அருள்வாய் ஈஸ்வரா…!” என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டும்படிச் சொல்கிறோம்.

இந்தப் பழக்கம் வந்துவிட்டால் நம் மனதில் எப்பொழுதும் அமைதியும் சாந்தமும் குடிகொள்ளும்…!

ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் இரத்தநாளங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள்…!

Light atoms -divine

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உடலான இரத்த நாளங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள்…!

நமக்குச் சம்பந்தமில்லாதபடி ஒருவர் கோபப்படுகின்றார் என்று அதைப் பார்க்கின்றோம். பார்த்ததும் அவர் மேல் வெறுப்பும் கோபமும் ஆத்திரமும் வருகின்றது. “இப்படிச் செய்கின்றாரே…!” என்ற வேதனை நமக்குள் கலந்துவிடுகின்றது.

இதைப் போல கோபம் வேதனை என்ற உணர்வுகள் விளைந்து அது இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இத்தகைய உணர்வின் அணுக்கள் நமக்குள் உருவாகிவிடுகின்றது.

உடல் முழுவதும் பரவப்படும் பொழுது நம் உறுப்புகளை அது வீணாக்குகின்றது. எப்படி..?

கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ சங்கடப்படுவோரையோ ஆத்திரப்படுவோரையோ நுகர்ந்திருந்தால் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
1.இரத்தத்தில் கருவாகி முதலிலே முட்டையாகின்றது.
2.முட்டையான பின்பு தொடர்ந்து அதே உணர்வுகளை மீண்டும் மீண்டும் நுகர்ந்தால்
3.அந்த முட்டையின் இனக் குஞ்சாக அணுவாக மாறுகின்றது
4.அணுவான பின் எதனால் அணுவானதோ அதே உணர்வைக் கவர்ந்து தன் இனத்தைப் பெருக்கத் தொடங்குகின்றது
5.பெருக்கிய பின் பக்கத்திலிருக்கும் நல்ல அணுக்களை வளரவிடாது உடலைப் பலவீனப்படுத்துகின்றது

ஆனால் கருத்தன்மை அடையவில்லை என்றால் நுகர்ந்த உணர்வின் விஷத்தின் தன்மை இதே இரத்தத்துடன் கலந்து மற்ற உறுப்புகளுக்குள் சென்று அதை வீணாக்கும் உணர்வுகளைத் தொடர்ந்து விடுகின்றது. அதாவது
1.இரத்தத்தில் அணுவாக உருவாகாதபடி அந்த முட்டை வெளியே சென்றால்
2.அழுகிய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து
3.உடல் முழுவதும் சென்று எந்த உறுப்பில் கலக்கின்றதோ
4.அந்த உறுப்பை வீணாக்கிவிடுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் உடலுக்குள் சென்று பலவிதமான உறுப்புகளைக் கெடுக்கும் அணுக்களாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான் இந்த உபதேத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
1.உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம்
2.உங்கள் உடல் முழுவதும் படரச் செய்கிறோம்
3.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்கின்றோம்.

அகஸ்தியன் ஒளியின் சுடராகத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வை நினைவூட்டி அந்த அகஸ்தியனின் உணர்வை ஈர்க்கும் சக்தியை அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்தத்தில் பெருகப் பெருக அது கருத் தன்மை அடைந்து ஒளியான அணுக்களாகப் பெருகும். ஒளியான அணுக்கள் பெருகினால் நோயை உருவாக்கும் அணுக்களை ஒடுக்கி உறுப்புகளைச் சீராக இயக்கச் செய்யும்.

மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவோம்…!

இந்தத் தியானத்தின் மூலம் மாந்திரீகமோ தாந்திரீகமோ எதுவும் அருகில் வராது…!

ghost

இந்தத் தியானத்தின் மூலம் மாந்திரீகமோ தாந்திரீகமோ எதுவும் அருகில் வராது…!”

மாந்திரீகம் தாந்திரீகம் என்று செய்பவர்கள் கருவை வைத்து (ஒரு உடலில் விளைந்த உணர்வை) விளையாடுவார்கள். அந்தக் கருவை வாடகைக்கு வாங்கிப் பல வித்தைகளைச் செய்வார்கள்.

அந்தக் கரு வித்தை விளையாடுகிறவர்களோ அல்லது அதைப் போன்ற சாமியார்களையோ நீங்கள் பார்க்கலாம். அவர்கள் அப்படியே இருந்து கொண்டிருப்பார்கள்.
1.திடீரென்று இப்படி ஒரு சுண்டு சுண்டும்.
2.அப்படிச் சுண்டினால் ஏவப்பட்ட ஆவியின் உணர்வு அங்கு இருக்கிறது என்று அர்த்தம்.

சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள். தலையை “வெடுக்…” என்று சுண்டுவார்கள். எதைக் கருவாக உள்ளுக்குள் செலுத்தினானோ அந்த ஆவி உள்ளே இருக்கின்றது என்பதை நீங்கள் அடையாளம் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் பிறரிடத்தில் எடுத்து கொண்ட ஆவியின் தன்மைகள் அதனின் இயக்கம் அப்படிக் காட்டும். அந்த ஆவியின் தன்மை கொண்டவர்களுக்குத் தியானம் சீராக எடுக்கின்றவர்களைப் பார்த்தாலே “மயக்கம்…” வரும்.

கொடுமைப்படுத்தப்பட்ட ஆன்மா அந்த உடலுக்குள் இருந்தது என்றால் இந்த உண்மையை தியானம் செய்பவர்கள் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் கண் என்ன செய்யும்…? நம்மை அப்படியே முறைத்துப் பார்க்கும்.

என்னை அதர்மத்தில் கொன்றார்கள்…! என்ற இந்த உணர்வை இந்த உடலுக்குள் இருந்து தன் “கண்” வழியாகக் காட்டும். தியானம் செய்ப்வர்கள் நீங்கள் அனுபவரீதியில் இதைத் தெரிந்து கொள்வது நல்லது.

1.நாம் என்ன நினைப்போம்…?
2.நான் அவர்களை ஒன்றுமே சொல்லவில்லை…!
3.என்னை “இப்படி முறைத்துப் பார்க்கின்றார்களே…!” என்று எண்ணுவோம்.
4.ஏனென்றால் அந்த உணர்வின் அலைகள் அந்த உடலுக்குள் இருக்கின்றது.

கரு வித்தைகளை வாங்கிக் கொண்டு வந்தவர்கள் நிறையப் பேரிடம் இதைப் பார்க்கலாம். பேசிக் கொண்டு இருந்தவுடனே இப்படி வெடுக்கென்று சுண்டுவது… தலையைச் சுண்டுவது… தெரியாத மாதிரி எல்லாம் அவர்கள் நடித்துப் பார்ப்பார்கள்.

மாந்திரீகம் தாந்திரீகம் செய்பவர்களும் சரி…! யாருக்குள் அதை அவர்கள் பாய்ச்சினார்களோ அவர்களும் சரி…! மீண்டும் இன்னொரு உடலுக்குள் சென்று நரக வேதன்யைத்தான் அனுபவிக்க முடியும். தப்பிக்கும் மார்க்கமில்லை.

ஏனென்றால் இன்னொரு ஆன்மா ஒரு உடலுக்குள் போகும்போது என்னென்ன வேலைகள் செய்கின்றது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக இதைச் சொல்கிறோம்.

பக்தி மார்க்கத்தில் நல்ல ஒழுக்கங்களை நாம் கடைப்பிடிக்கின்றோம். ஆனால் தீமையின் நிலைகளோ மிகவும் வலுபெற்றது.

நல்லதை எண்ணி நாம் செயல்படும் பொழுது அந்தத் தீமையின் நிலைகளை அறிகின்றோம். இருந்தாலும் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வே நமக்குள் வலுபெறுகின்றது.

நாம் வீடு கட்டி விடுகின்றோம். தூசி வருகின்றது. துடைக்காமல் விட்டால் என்ன செய்யும்…? தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா…!

தரையில் எண்ணெய் சிந்திவிடுகின்றது. அதிலே அழுக்குப் பட்டால் பிசு…பிசு.. என்று ஒட்டுகின்றது. அந்த எண்ணெயில் கிரசினைப் (KEROSENE) போட்டுத் தேய்த்தவுடனே பிசு பிசுப்பான எண்ணெய்களை எல்லாம் நீக்கிவிடுகின்றது.

1.அப்போது எண்ணெய் கொட்டி விட்டது நான் கூட்டினேன்.
2.மீண்டும் அழுக்கு அதிலே ஒட்டுகின்றது… என்று
3.அப்படியே விட்டு கொண்டே இருக்கின்றோமா…?
4.அதற்குத் தக்க உபாயத்தைக் கூட்டி நாம் இதைத் துடைக்கின்றோம் அல்லவா…!

இதைப்போல வாழ்க்கையில் எத்தனையோ வகையான நிலைகள் நமக்குள் “ஒட்டிக் கொள்கின்றது….!” அதை நாம் சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்துவதற்குண்டான சக்திகளை நீங்கள் பெறுவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

மகரிஷிகளின் உணர்வை நீங்கள் நினைவு கொண்டு எடுத்துப் பழக வேண்டும். உங்களை அறியாது ஏதாவது வந்தாலும் கூட உங்களைக் காத்துக் கொள்ள உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா ஜெபம் இருக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நான் (ஞானகுரு) பெறுகின்றேன். அதை எனக்குள் வலுவாக்கிக் கொண்ட பின் நீங்கள் எந்த நல்லதையெல்லாம் செய்கின்றீர்களோ அது நல்லபடியாக ஆக வேண்டும் என்று ஜெபம் இருக்கின்றேன். (நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நான் ஜெபம் இருக்கின்றேன்)

ஒரு டி.வி. நிலையத்தில் ஒளிபரப்பு செய்கிறார்கள் என்றால் அதே ஸ்டேசனைத் திருப்பி வைக்கும் போது அதை நாம் வீட்டிலிருந்து பார்க்க முடிகின்றது. அதைப் போன்று தான்
1.“ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை நினைக்கும் போதெல்லாம்
2.உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அலைத் தொடர்பு கிடைத்து
3.அந்தச் சக்தி வாய்ந்த உணர்வலைகள் கிடைக்கும்.

ஆகவே அருள் உணர்வுகளை நீங்கள் வளர்ப்பதற்குச் சந்தர்ப்பம் நிறைய இருக்கின்றது. இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நமது குருநாதர் காட்டிய அருள் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இது ஒன்றும் கஷ்டமில்லை. உங்களால் வளர்க்க முடியும்.

செல்வம் தான் நம்மைத் தேடி வர வேண்டும்…! எப்படி வரும்…?

Treasure hunt

செல்வம் தான் நம்மைத் தேடி வர வேண்டும்…! எப்படி வரும்…?

நமது வாழ்க்கையில் நமக்கு வேண்டியவர் ஒருவர் மிகுந்த வேதனைப்படுகின்றார் என்றால் பார்த்துப் பதிவாக்கி விடுகின்றோம். அப்போது அவரைத் திரும்பத் திரும்ப எண்ணும்போது அதே வேதனை வருகின்றது.

அந்த வேதனை என்ற உணர்வு வந்தபின் நம்மால் சரியாகத் தொழில் செய்ய முடியவில்லை. வேதனையுடன் நடந்து போனால் சாலையில் இருக்கும் மேடு பள்ளம் தெரிவது இல்லை.

இதைப் போல நம் மீது ஒருவர் கோபிக்கின்றார் என்றால் அதைப் பதிவு செய்து கொள்கின்றோம். அந்த உணர்வுகள் வரும் போது நமக்குள் கார உணர்ச்சிகள் தோன்றுகின்றது. நாமும் கோபக்காரனாக மாறுகின்றோம்.
1.வாழ்க்கையில் இப்படி எதுவெல்லாம் நமக்குள் பதிவாகின்றதோ
2.அது மீண்டும் நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

அகஸ்தியன் எவ்வாறு இருளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமானானோ அந்த உணர்வின் அலைகளை இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

பதிவான பிற்பாடு அந்த அகஸ்தியனின் உணர்வை நீங்கள் நினைத்தவுடன் கிடைக்கும்படியாகத் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.

அந்தத் தகுதியை ஏற்படுத்திய பின் எப்போது வாழ்க்கையில் தொழிலில் கஷ்டமோ நஷ்டமோ நோயோ மற்ற எதுவானாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்துங்கள்.

உங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உணர்வை ஏற்றிவிட்டால் அந்த அருள் ஆற்றல் உங்கள் உடலில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும்.

இப்படிப்பட்ட முறையில் நாம் வளர்ச்சியின் தன்மை அடைந்தால் இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம். அதற்குத்தான் யாம் (ஞானகுரு) இப்போது இந்தத் தியானப் பயிற்சியே கொடுக்கின்றோம்.

செல்வங்கள் வர வேண்டும் என்று விரும்பினால் இந்த வாழ்க்கைக்கு உதவும்.
1.ஆனால் அதையே பெற வேண்டும் என்று ஏக்கமாகி
2.செல்வத்தைத் தேடி நீங்கள் சென்றால்
3.அது தவறின் நிலையாக பிழையான உணர்விற்கே அழைத்துச் சென்றுவிடும்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வுகளை உயிர் வழியாகச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மையை வலுவாக்கினால் உங்கள் தொழில் தன்னாலே அது சீராக நடக்கும்… செல்வம் பெருகும். ஆகவே
1.செல்வம் உங்களைத் தேடி வர வேண்டுமே தவிர…
2.செல்வத்தை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை…!
2.அந்த அருள் செல்வம் உங்களைத் தேடி வரும்.

ஆகவே செல்வத்தை நாடாது அருளைப் பெருக்குங்கள். இருளை அகற்றுங்கள். அருள் ஞானச் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆக மொத்தம் நீங்கள் எப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எண்ணினாலும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளும் தன்மை வருகின்றது.

அருள் செல்வம் என்றுமே நமக்குள் இருந்து அகச்செல்வம் அருளாகி இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் உணர்வின் தன்மையாக ஒளியின் உடலாக மாற்றும் தன்மை பெறுங்கள்.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயரை வைப்பது போல மெய் ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு காரணப் பெயர்களை ஞானிகள் எப்படி வைத்துள்ளார்கள்…! சாஸ்திரங்களை நாம் எப்படிப் பயன்படுத்துவது…?

Image

sastram

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயரை வைப்பது போல மெய் ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு காரணப் பெயர்களை ஞானிகள் எப்படி வைத்துள்ளார்கள்…! சாஸ்திரங்களை நாம் எப்படிப் பயன்படுத்துவது…?

 

நம் உயிரின் இயக்கத்தை “ஈசன்” என்றும் அதனின் துடிப்பால் ஏற்படும் வெப்பத்தை “விஷ்ணு” என்றும் ஈர்க்கும் காந்தத்தை “இலட்சுமி” என்றும் காரணப் பெயர் வைத்து அழைக்கின்றனர் ஞானியர்.

ஏனென்றால் இயந்திரத்தைப் பார்க்கின்றோம் என்றால் உதாரணமாக ஒரு காரின் இயக்கத்திற்கு ஸ்டேரிங் என்ஜின் பாடி (STEERING, ENGINE, BODY) என்று இப்படிக் காரணப் பெயர் வைக்கின்றோம். ஒரு மோட்டோருக்கும் காரணப் பெயர்களை (STATOR, ROTOR) வைக்கின்றோம்.

அதை வைத்துத்தான் காரையும் மோட்டாரையும் சீராக இயக்குகின்றோம். அவைகளை வைத்து நமக்கு வேண்டிய பணிகளைச் சீராகச் செயல்படுத்திக் கொள்கின்றோம்.

இதே போலத்தான் ஞானியர்…
1.நம் உயிரின் இயக்கம் எவ்வழியில் எவ்வாறு இயங்குகிறது.. என்று
2.அதனதன் சந்தர்ப்பத்திற்கு ஒப்ப இவ்வாறு காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

விஷ்ணு என்றால் எங்கேயோ இருக்கின்றார்… ஈஸ்வரன் என்றால் எங்கேயோ இருக்கின்றார்… சிவன் என்றால் எங்கேயோ இருக்கின்றார்…! என்ற இந்த எண்ணத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால்
1.நம் உயிர் ஈசனாக இருக்கின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறுகின்றது.
3.அது உயிரிலே பட்ட பின் அந்தச் சப்தங்கள் கிளம்புகிறது.

உதாரணமாக நாம் கோபப்படுகின்றோம் என்றால் அந்த கோபமான உணர்வுகளை நம் உடல் முழுவதும் பரவச் செய்கின்றது.

நம் இரத்த நாளங்களில் அந்தக் கோபமான உணச்சிகள் பரவும் போது சாந்தமும் ஞானமும் கொண்ட நமது உடலை அமைத்த நல்ல அணுக்கள் இந்தக் கார உணர்ச்சிகளை ஏற்க மறுக்கின்றது.

இந்த உணர்ச்சிகள் வந்த பின் அதுவும் அலறத் தொடங்குகின்றது. நமது எண்ணமும் அதே போல தோன்றுகின்றது.

கோபம் வருகிறதென்றால் அதனுடன் சேர்ந்து நமக்கு ஒருவிதமான நடுக்கம் வருகிறது. அந்த அணுக்கள் இந்தக் காரத்தைத் தாங்காது அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம் உடலிலுள்ள அணுக்களின் இயக்கமும் மாறுகிறது.

ஆனால் நாம் தவறு செய்தோமா…? என்றால் இல்லை…! ஏனென்றால் இயற்கையின் நியதிகள்
1.நாம் நுகர்ந்ததை (சுவாசிப்பதை) உணர்த்துகிறது நமது உயிர்.
2.நடப்பு நிகழ்ச்சியைக் கவர்ந்து கொடுக்கிறது நமது கண்.
3.அந்த உணர்வின் தன்மை ஈர்க்கப்பட்டு உடலாகச் சேருகிறது.

இதை நாம் அறிவதற்காகவே விஷ்ணு வரம் கொடுக்கின்றான்… பிரம்மனோ உருவாக்குகிறான்… சிவனோ அரவணைக்கின்றான்…! என்று தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நாம் நுகரும் உணர்வுகள் உயிரான வெப்பத்தில் பட்டதும் இயக்குகின்றது. உடலுக்குள் அந்த உணர்ச்சிகள் பரவுகின்றது. விஷ்ணு வரம் கொடுக்கின்றான்.

விஷ்ணு சங்கு சக்கரதாரி.
1.“சங்கு…” உயிரிலே பட்டதும் தான் நமக்குள் எண்ணங்கள் ஒலிகளாக (சப்தமாக) எழும்புகிறது.
2.“சக்கரம்…!” உயிரில் பட்ட உணர்வுகள் உடல் முழுவதும் அந்த உணர்ச்சிகளாகச் சுழலத் தொடங்குகிறது.

இரத்தத்தின் வழியாகச் சுழலும் அந்த உணர்வுகள் அதிலே கருவாகி முட்டையாகி அணுவாக வெடித்து விட்டால் பிரம்மா உருவாக்குகின்றான். அதாவது கோபத்தைச் சுவாசித்திருந்தால் கோப உணர்வைத் தூண்டும் அணுவாக நமக்குள் உருவாகின்றது.

உயிரிலே பட்ட உணர்வுகள் உடலுக்குள் அணுவாக உருவாகும் பொழுது விஷ்ணுவின் மகன் பிரம்மா. தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரங்கள்.

இப்படி உருவான அணுக்கள் அனைத்தும் உடலுடன் இரண்டறக் கலக்கின்றது. உடலாகின்றது. சிவன் அரவணைக்கின்றான்.

திடப் பொருளாகும் அனைத்தும் சிவம். ஆகவே நம் உடல் நாம் சுவாசித்ததை அனைத்தும் அரவணைத்து ஐக்கியப்படுத்திக் கொள்கின்றது என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

1.நாம் எதை நமக்குள் அரவணைக்க வேண்டும்..?
2.எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…?
3.எதை இயக்கச் சக்தியாக நமக்குள் ஆக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை நம் உடலுக்குள் உருவாகவிடாது மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்திய அருள் உணர்வுகளை நமக்குள் சிருஷ்டிக்க வேண்டும்… அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும்..! என்று தெளிவுபடுத்துகின்றார்கள்.

விஞ்ஞானக் கருவிகளை நாம் அதனதன் செயலுக்குண்டான பெயர்களை வைத்து அவைகளை நமக்குகந்ததாகத் தேவைக்குத் தக்கவாறு உபயோகப்படுத்துகின்றோம்.

அதைப் போன்று தான் இயற்கையின் உண்மையின் இயக்கங்களை அறிந்துணர்ந்த மெய் ஞானிகள் அவர்கள் கண்ட நிலையை நாமெல்லாம் அறிந்து அவர்களைப் போன்று மெய் ஞானிகளாக ஆவதற்காக இத்தகைய சாஸ்திரங்களாகக் கொடுத்துள்ளார்கள்.

அவர்கள் காட்டிய வழியில் நாம் வழி நடந்தால் அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் நாமும் இணைந்து அழியாத வாழ்க்கை வாழ முடியும்.

இராமாயணத்தில் இராவணன் சீதாவிற்குச் சில நாள் அவகாசம் கொடுக்கின்றான் – விளக்கம்

Ravana Sita

இராமாயணத்தில் இராவணன் சீதாவிற்குச் சில நாள் அவகாசம் கொடுக்கின்றான் – விளக்கம்

இராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் இவை எல்லாம் நம்மை நாம் அறிந்து நடப்பதற்குத் தான் ஞானிகள் இந்தக் காவியத்தை அமைத்தார்கள். ஆனால் அந்தக் காவியத்தை நம் சுயநலத்திற்காக மாற்றி வாழ்கின்றோம்.

ஞானிகள் மனிதர்கள் நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்குக் காட்டினார்கள். அதையே தலை கீழாக மாற்றி சீதா காட்டுக்குள் போய்க் கஷ்டப்பட்டது. இராமன் எத்தனையோ வேலைகளைச் செய்தான். இராவணன் பல கெடுதல்களைச் செய்தான் என்று நாம் சொல்கின்றோம்.

வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகர்ந்து உடலுக்குள் போனால் வாலியாகி விடுகின்றது. வேதனைப்படுபவரை நாம் பார்த்தவுடனே அது வாலி. அதனுடைய வலிமை நமக்குள் அதிகமாகிவிடுகின்றது.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்துடன் வேதனைப்படுபவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். அவன் உடலில் பட்ட வேதனையான உணர்வுகளை நாம் நுகர்ந்தவுடனே நம் உயிரிலே படுகின்றது.

1.அந்த வேகமான உணர்வுகள் நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி
2.“ஓ…” என்று உணர்வின் ஒலி அலைகளை எழுப்புகின்றது.
3.“சங்கு..” அந்தச் சப்தம்… உடலுக்குள் பரவுகின்றது.
4.அதாவது அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.

உதாரணமாக மின்சாரத்தைப் பயன்படுத்தி விளக்குகளைப் பொருத்துகின்றோம். அந்த இணைப்பில் எந்த வகைப் பல்பைப் (விளக்கு) போடுகின்றமோ உடனே அதனதன் நிறமான வெளிச்சமாக மாற்றுகின்றது.

அதே மாதிரித்தான் ஒருவன் வேதனைப்படுவதைப் பார்த்தவுடனே நம் உடலிலுள்ள வேதனை அணுக்களுக்கு ஒரு உற்சாகம் வந்து விடுகின்றது. வேகமாக இழுக்கின்றது.

ஏனென்றால் நம் உயிர் எலக்ட்ரிக். மின் ஆற்றல் கொண்டது. அதில் நமக்குள் இழுத்துக் கொண்ட உணர்வுகளை எலக்ட்ரானிக்காக உணர்ச்சிகளாக மாற்றுகின்றது.

அதாவது உயிருக்குள் நாம் எந்த உணர்வை இணைக்கின்றமோ அந்தச் சப்தம் நிச்சயம் அதை இயக்கச் செய்கின்றது.

அதை எல்லாம் வலு சேர்த்து உடலுக்குள் கொண்டு போகின்றது. கொண்டு போனவுடனே இது வாலி. நம் உடலுக்குள் போனவுடனே கெட்ட அணுக்கள் எல்லாம் வலுவாகின்றது.

அதற்குப் பக்கத்தில் இருக்கின்ற நல்ல அணுக்கள் எல்லாம் என்ன செய்யும்…? ரொம்பப் பலவீனம் அடையும். அதனுடைய பலம் குறைந்து விடும்.

கெட்ட அணுக்கள் பலமானவுடனே நல்ல அணுக்களைச் சாப்பிடுகின்றது. வேதனை என்ற உணர்வுகளை எடுத்து அது உடலாகிவிட்டால் அதன் வலுவின் தன்மை கொண்டு உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் கொன்று சாப்பிடும்.

1.இராவணன் என்ன சொல்கின்றான்…?
2.உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தான் சொன்னபடி கேட்கவில்லை என்றால்
3.“கொன்று தின்றுவிடுவேன்…!” என்கின்றான்.

இராவணன் – அதாவது தசப்பிரியன். நம் உடல் என்ன செய்கின்றது…? இந்த அரக்க குணம் வரப்போகும் போது இராவணனாக மாற்றுகின்றது.

ஏனென்றால் விஷத்தின் தன்மை ஆன பிற்பாடு அதையே (வேதனையையே) வளர்ப்பதற்குத் தசப்பிரியனாகின்றது. இதற்கு இராவணன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

அந்த வேதனைப்படும் உணர்வை நம் உடல் முழுவதும் பரவ விட்டால் அது மற்ற குணங்களைக் கொன்று சாப்பிடும் இரண்யனாக மாறி அந்த உணர்வு உடலாக்கப்படும் போது இராவணனாக மாறுகின்றது. அதுதான் தசப்பிரியன். உடலை வளர்க்கும் தன்மை வந்து விடுகின்றது.

எதன் விஷத்தின் தன்மை வருகின்றதோ நல்ல குணங்களை எல்லாம் கொன்றுவிடும். பின் மனிதனல்லாத உருவைத்தான் பெற முடியும்.

இராமாயணத்தில் இராவணன் சீதாவிடம் சொல்வான். உனக்குக் கொஞ்ச நாள் அவகாசம் தருகின்றேன். என் ஆசைக்கு இணங்கிவிடு.

நான் சொன்னபடி கேட்கவில்லை என்றால்… அதாவது விஷத்திற்கு இணங்கவில்லை என்றால் உன்னைக் கொன்று சாப்பிட்டு விடுவேன் என்று சொல்கிறான்.

இதையெல்லாம் நமக்குப் புரிகிற மாதிரித் தான் இராமயாணக் காவியத்தில் கொடுக்கின்றார்கள்.

ஆகவே வேதனைப்படுவோர் உணர்வுகளை நமக்குள் உட்புகாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும். அதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குத் துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேசித்து வருகின்றோம்.

அகண்ட அண்டத்தில் சிறிதளவு விஷம் வந்தாலும் அதைத் துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக மாற்றும் ஆற்றல் கொண்டது.

1.வேதனைப்பட்டோருக்கு நாம் உதவி செய்தாலும்
2.அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து
3.சிறிதளவு உடலுக்குள் சென்ற வேதனை உணர்வு அணுவாக உருவாகாதபடி தடுக்க வேண்டும்.
4.அதை ஒளியாக மாற்ற வேண்டும்.

அதைப் பழக்கப்படுத்தி விட்டால் இந்த உடலுக்குப் பின் இனி பிறவி இல்லை என்ற நிலை அடையலாம்.

உடல் ஒரு குகை – உடலான குகைக்குள் தீமைகள் புகாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

Third eye soul

உடல் ஒரு குகை – உடலான குகைக்குள் தீமைகள் புகாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் “புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!”

பரிணாம வளர்ச்சியில் நாம் எத்தனையோ பல கோடி உடல்கள் பெற்று வந்தாலும் “நம் எண்ணத்தால் தான் காக்கப்பட்டு… இன்று மனிதனாக வந்துள்ளோம்…!”

வாலி என்ற வலிமையான உணர்வுகள் அது இரண்யனாகி
1.அத்தகைய நஞ்சான உணர்வுகளை மாற்றி மாற்றி
2.பல கோடித் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வுகள் இரையாகி
3.அந்தத் தீமைகளை வெல்லும் உடல் அமைப்பாக உயிர் நம்மை உருவாக்கியுள்ளது.
4.அந்த உயிரை நாம் மதிக்க வேண்டும்.

நம் உயிரை மறந்தால் “யாரோ என் உடல்…!” என்ற நிலைகள் கொண்டு இந்த உடலின் இச்சை கொண்டு வளர்க்கும் பொழுது உடலுக்குள் இரண்யனாக மாறி மனிதான பின் மீண்டும் அரக்கனாக மாறுகின்றது.

அதாவது “தசப்பிரியன்” உடலின் மீது பற்று வருகின்றது. உடல் பற்று கொண்டால் இயற்கையின் உண்மையின் இயக்கத்தை அறிய முடியாது

தீமைகளை நீக்கி மகிழ்ச்சி என்ற நிலையில் மனித உடல் பெற்று வந்த நாம்
1.மகிழ்ச்சியை உருவாக்கும் அந்த உணர்வுகளை மறந்துவிட்டால்
2.நமக்குள் அந்தச் சந்தோஷத்தை இழக்கின்றோம்
3.”சீதாவை இராவணன் சிறைப்பிடித்தான்…!” என்று இராமாயணம் இதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

இதை மாற்றுவதற்கு என்ன வழி…?

நாம் சமையல் செய்யும் பொழுது பல சரக்குகளைச் சேர்த்து ஒரு ருசியாக மாற்றுகின்றோம். அதைப் போல பல இன்னல்கள் பல குறைகள் வந்தாலும் அதை நல்லதாக மாற்றிக் கொள்ளும் சக்தி நமக்கு உண்டு.

அப்படி நல்ல உணர்வாக மாற்றும் நிலைக்குத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் சொல்லிப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம். துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

வேதனைப்படும் உணர்வை நாம் சுவாசித்தால் உயிர் வழியாகத்தான் (புருவ மத்தியின் வழியாக) அது உடலுக்குள் செல்ல வேண்டும். உயிர் வழியாகச் செல்லும் அந்தப் பாதையை நாம் அடைத்துப் பழக வேண்டும்.

1.நம் உடல் ஒரு குகை
2.குகை வாசலைப் பாறையைப் போட்டு மூடுவது போல்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் போட்டு மூடி விட்டால்
4.தீமை செய்யும் எந்த உணர்வுகளும் நமக்குள் போகாது
5.எந்தத் தீமையும் நம்மை இயக்காது…!

ஆகவே இவ்வாறு தீமை நமக்குள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும். அதற்குத்தான் உங்களுக்கு இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களுக்குள் பெறக் கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று உடல் பெறும் உணர்வை மாற்றி உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியாக மகிழ்ச்சியாக வாழுங்கள். எமது அருளாசிகள்.

நம் கண்களில் உள்ள கருமணிகள் (CAMERA & AERIAL) பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

Eye antenna

நம் கண்களில் உள்ள கருமணிகள் (CAMERA & AERIAL) பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்

நாம் பார்க்கும் அனைத்தும் கண்களில் உள்ள
1.கருமணி வழி தான் படமாகப் பதிவாகின்றது.
2.கருமணி வழிதான் உணர்வைப் பதிவாக்குகின்றது.
3.கருமணி வழிதான் உணரச்செய்கின்றது.

கண்களில் உள்ள அந்தக் கருமணிகளில் வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் என்ற உணர்வுள் பட்டு அந்த மணிகளில் அழுக்காகச் சேர்ந்தால் அதில் எது முன்னணியில் இருக்கின்றதோ அதன் உணர்வைத் தான் கவரும்.

ஒரு டம்ளரில் ஒரு காரத்தைப் போட்டு உபயோகப்படுத்திவிட்டுக் கொட்டிய பின் அதில் தொக்கியது கொஞ்சம் இருந்தால் அடுத்து அந்த டம்ளரில் எதை ஊற்றினாலும் “காரமாகத்தான்” இருக்கும்.

ஒரு விஷத்தின் தன்மையை அதில் வைத்துச் சுத்தப்படுத்தாதபடி இருந்தால் விஷத்தின் தன்மைதான் அதில் தொக்கி இருக்கும். அதில் எந்தப் பொருளைப் போட்டாலும் அதுவும் “விஷமாகும்….!”

அதைப் போல நம் கருமணிகளில் கோப உணர்வுகள் அதிகமாகப் படர்ந்திருந்தால் அந்த உணர்ச்சியையே அது மீண்டும் ஊட்டும். கண்ணில் பார்க்கும் பொழுதே “ஜிர்…” என்று அந்தக் கோபம் வரும்.

வேதனை வேதனை என்று வேதனைப்படுவதையே பார்த்துக் கொண்டிருந்தால் அடுத்து எந்த நல்லதையும் கிரகித்துப் பார்க்க முடியாது. உண்மைகளை அறிய முடியாது.

நாம் கோபமாக இருந்தாலும் சரி… அல்லது வேதனையாக இருந்தாலும் சரி…! அப்பொழுது யாராவது வந்து மகிழ்ச்சியான செய்திகளைப் பற்றிச் சொன்னால்
1.அதை நம்மால் தாங்க முடியாது.
2.அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
3.அதை அறியக் கால தாமதமாகும்.

ஏனென்றால் கருமணிகளில் படர்ந்த அந்த கோபமான வேதனயான உணர்வின் சத்துக்கள் அவ்வாறு தான் நம்மை இயக்கும். இதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…? அதற்கு எப்படித் தியானிக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

இப்பொழுது அந்தக் கருமணிகளில் உள்ள அழுக்குகள் நீங்கி ஒரு தெளிவான உணர்வை ஊட்டும் அருள் கருமணியாக அந்த உணர்வுகள் பெறும்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கருமணிகளில் படரப்படும் போது
1.ரசம் பூசிய கண்ணாடியில் எப்படி ஒளி அலைகள் பட்டபின் அதிலிருந்து மின் கதிர்கள் எதிர்த்து வருகின்றதோ
2.இதைப் போல உங்கள் கண்ணிற்குள் இருக்கும் கருமணிகளில் பட்டு
3.அந்த உணர்வின் ஒளி அலைகள் உங்கள் உடலுக்குள் பரவும்.

துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள் கருமணியிலிருந்து நரம்பு மண்டலத்தின் வழியாக எல்லா உறுப்புகளுக்கும் பாய்ச்சப்படுகின்றது. உடல் உறுப்புகளில் படர்ந்துள்ள தீமைகளை நீக்கும் ஆற்றல் பெறப்படுகின்றது.

நஞ்சை வென்று ஒளியின் தன்மையாக உருவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி கண்களில் உள்ள கருமணிகளில் உருவாக வேண்டும் என்று எண்ணி உங்கள் கண்ணில் உள்ள கருமணிகளில் அந்த வீரிய உணர்வைச் செலுத்துங்கள்.

இப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எண்ணியவுடன் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வுகளைப் பெறும் தகுதியையும் பெறுகின்றோம்.

வாழ்க்கையில் வரும் இருள்களை நீக்கி பொருள் காணும் சக்தி பெறுகின்றோம். சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் பெறுகின்றோம். சாந்தமும் விவேகமும் ஞானமும் பெறுகின்றோம்…!

மாரடைப்பு வராமல் தடுக்க இதயத்திற்குத் தியானிக்க வேண்டிய முறை

Heart attack

மாரடைப்பு வராமல் தடுக்க இதயத்திற்குத் தியானிக்க வேண்டிய முறை

உங்கள் இதயங்களில் பலவீனம் இருந்தால் துடிப்பின் தன்மை அதாவது PUMP செய்யும் போது (இரத்தம்) கிடைக்கவில்லை என்றால் துடிப்பு வேகமாக இருக்கும். சில இடங்களில் இரத்தத்தைப் PUMP செய்தாலும் அழுத்தமாகும் பொழுது துடிப்பின் தன்மை அதிகமாகும்.

இதயத்தை இயக்கும் நரம்புகள் பலவீனமானால் இரத்தத்தை இழுக்கும் சக்தி குறையும். துடிப்பு குறைந்து அப்போது வலி என்ற உணர்வுகள் தோன்றும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து தப்ப உங்கள் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உங்கள் இதயத்திற்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைப் பாய்ச்சிச் சீரான இயக்கமாக இயக்கச் செய்யுங்கள். உங்களால் முடியும்.

1,கண்ணின் நினைவாற்றல் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை
2.நம் உடல் உறுப்புகளில் “நேரடியாகப் பாய்ச்சி….!”
3.தீமையான அணுக்களை நமக்குச் சாதகமாக மாற்றி
4.நல்ல உணர்வின் உறுப்புகளை உருவாக்கும் அந்தச் சக்தி பெறச் செய்வதே இந்தத் தியானத்தின் நோக்கம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இதயம் முழுவதும் படர்ந்து இதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் இதயத்தில் பாய்ச்சுங்கள்.

உங்கள் இதயத்தில் நல்ல அணுக்கள் உருவாகி உடல் முழுவதற்கும் நல்ல இயக்கச் சக்தியாக மாற்றவும் நல்ல இரத்தங்களை எல்லா உறுப்புகளுக்கும் மூளை முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் மேலே சென்று பாய்ச்சும்படிச் செய்யுங்கள்.

நல்ல உணர்வின் நிலையாக மாற்றும் அந்தத் திறன் பெற்ற இதயமாக உங்கள் இதயம் ஆக வேண்டும் என்று அந்த அணுக்களுக்கு இயக்கத்தை (ஞானகுரு) ஊட்டுகின்றேன்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்
2.நீங்கள் எண்ணி ஏங்கினால் தான் அந்தச் சக்தியைப் பெற முடியும்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் எமது உணர்வும் உங்களுக்குள் இப்பொழுது கலந்து
4.அந்த ஆற்றல்மிக்க சக்திகளை உங்கள் இதயம் நேரடியாகக் கிடைக்கக்கூடிய திறன் பெறுகின்றது.
5.அதைப் பெற்று இதயத்தைச் சீராக்கி கொள்ளுங்கள்.

அருள் உணர்வைப் பெருக்கி எல்லா அணுக்களிலும் ஒளி என்ற உணர்வைப் பாய்ச்சி வலிமையான இதயமாக உங்களுக்குள் உருவாக்குங்கள்.

இவ்வாறு செய்தால் உங்களில் இதயத்தில் வாயுவினால் ஏதாவது வலி இருந்தாலும் அல்லது இதயம் பலவீனம் ஆகி மாரடைப்பு வரக்கூடிய அந்த நிலைகள் இருந்தாலும் அதை மாற்றி ஒரு தெளிவான இதயமாக்க முடியும்.

எங்கள் இதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினைத் இதயத்தில் செலுத்தி வலுபெறச் செய்யுங்கள். திரும்பத் திரும்ப இவ்வாறு எண்ணி அந்த உணர்வை இதயத்தில் பாய்ச்சுங்கள்.

இப்பொழுது இதயத்திலும் இரத்தம் செல்லும் பாதைகளிலும் இரத்தமோ அல்லது மற்ற பொருள்களோ உறைந்திருந்தால் அவைகள் எல்லாம் கரையத் தொடங்கும்.

1.உங்கள் இதயத்தை இயக்கும் நரம்புகள் வலுவாக இயங்கி இதயத் துடிப்பு சீராகின்றது.
2.இதயத்தில் உள்ள வால்வுகளும் சீராக இயங்கி
3.இரத்தத்தை உடலிலுள்ள எல்லாப் பாகங்களுக்கும் செலுத்தும் வலிமை பெறுகின்றது.

நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள். மன பலம் பெறுவீர்கள். மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்.