இரத்தத்தைத் தூய்மையாக்கும் சிறுநீரகங்களுக்குத் (KIDNEY) தியானிக்க வேண்டிய முறை

Kidney transplant

இரத்தத்தைத் தூய்மையாக்கும் சிறுநீரகங்களுக்குத் (KIDNEY) தியானிக்க வேண்டிய முறை

இன்று தாவர இனங்களில் பூச்சிக் கொல்லி மருந்தைத் தூவி பூச்சிகளைக் கொன்று அதிலே விளைந்தவைகளைத் தான் உணவாக நாம் இன்று உட்கொள்கின்றோம்.

நாம் தூவிய நஞ்சை ஏற்றுக் கொண்டு அந்தப் பூச்சிகள் இறந்தாலும் நஞ்சுகள் புழுவின் உடலில் விளைந்து மிகவும் நஞ்சு கொண்ட கிருமிகளாகப் புழுக்களாக விளைகின்றது.

நாம் பாய்ச்சிய அந்த பூச்சிக் கொல்லி மருந்து தாவர இனத்திலும் கலந்து அதுவும் நஞ்சாக மாறி அதையே நாம் உணவாக உட்கொள்ளும் போது நமக்குள் நஞ்சின் உணர்வுகள் அதிகமாகச் சேர்ந்துவிடுகின்றது.

இதனால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னி (சிறுநீரகங்கள்) செயலற்றதாகி நல்ல அணுக்களைக் கொன்று (பூச்சிகளைக் கொன்றது போல்) பல நோய்களை உருவாக்கும் நிலைகளாக உருவாக்கி விடுகின்றது.

இப்படி விஞ்ஞான அறிவால் காற்று மண்டலம் முழுவதுமே இன்று நச்சுத் தன்மையாக மாறிவிட்டது. இந்த நச்சுத் தன்மையான காற்றை நாம் சுவாசிக்கும் பொழுது அது மீண்டும் நம் இரத்தங்களில் கலந்து நம் உறுப்புகளைப் பாழாக்கும் நிலை ஆகிவிடுகின்றது.

ஆனால் நமது சிறுநீரகங்களின் வேலை என்ன…?

நாம் சுவாசித்த நிலைகளையும் ஆகாரத்தின் வழி கொண்டு வந்த இந்த விஷத் தன்மைகளை நமது சிறுநீரகங்கள் பிரித்து நல்ல இரத்தமாக மாற்றுகின்றது. அதில் வரும் கசடுகளை நீராக மாற்றுகின்றது.

ஆனால் விஷத்தின் தன்மை அதிகமாகும் பொழுது சிறுநீரகம் செயலிழந்து உடல் முழுவதும் விஷத்தன்மை பரவுகின்றது. அசுத்த இரத்தம் மற்ற உறுப்புகளுக்குள் செல்லும்போது நம் உடலிலுள்ள ஏனைய உறுப்புகளும் பாழாகிவிடுகின்றது.

விஷமான இரத்தம்
1.நமது இருதயத்திற்குச் சென்றால் அங்கே உறையும் தன்மை வருகின்றது.
2.நுரையீரலில் சேர்த்தால் அது வந்து சளித் தன்மை உருவாகின்றது.
3.குடல் பாகத்திற்குள் சென்றால் சளியின் தன்மை உருவாக்கி உள்வாதம் என்ற நிலைகள் உருவாகின்றது.

இதைப்போன்ற நிலைகளெல்லாம் இருந்து உங்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் வழியினைச் சொல்கின்றோம்.

அந்த மகா ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால் விஞ்ஞான அறிவால் நம்மை அறியாமல் நமக்குள் சேர்ந்த நஞ்சைப் பிளக்க முடியும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகம் முழுவதும் படர்ந்து சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி அந்த அரும்பெரும் சக்தியைச் உங்கள் சிறுநீரகத்தில் பாய்ச்சுங்கள்.

சிறுநீரகத்தை உருவாக்கிய அந்த அணுக்கள் அனைத்தும் நஞ்சைப் பிரித்து நல் உணர்வாக மாற்றும் திறன் கொண்ட வலிமையான சிறுநீரகங்களாக மாற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள். இப்போது
1.உங்கள் சிறுநீரகங்களுக்குள் புதுப் புது உணர்ச்சிகள் தோன்றும்.
2.விஷத்தை பிரிக்கும் ஆற்றல் பெறும்.
3,சிறுநீரகத்தை உருவாக்கிய அந்த அணுக்கள் உற்சாகம் அடையும்.
4.உங்கள் இரத்தம் தூய்மை அடைகின்றது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நுகர்ந்து சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது சர்க்கரைச் சத்து உப்புச் சத்து விஷத் தன்மை போன்ற நிலைகளை அது நீக்கிவிடும்.

குப்பையில் பல கழிவுகள் இருப்பினும் அதன் சத்தினை மாற்றி செடி கொடி மரங்கள் நல்ல சக்திகளக மாற்றிக் கொள்வது போல நமக்குள் பல முநதைய தீமைகள் இருப்பினும் இதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப்படும் பொழுது விஷத் தன்மைகளைப் பிரித்துவிடும்.
1.ஒளியின் சுடராக மாற்றிட முடியும்.
2.இனி வரும் எத்தகைய தீமைகளையும் ஒளியின் நிலையாக மாற்றும் அருள் சக்தியும் பெறுகின்றோம்.

நாம் உணவாக உட்கொள்வதை “நல்ல இரத்தமாக மாற்றும் தியானம்”

Image

gastro

நாம் உணவாக உட்கொள்வதை நல்ல இரத்தமாக மாற்றும் தியானம்

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்டு உணர்ச்சிகளாக மாறி வாயிலே அதற்குத் தகுந்த அமிலமாக (உமிழ் நீராக) மாறுகின்றது.

அந்த உமிழ் நீர் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலக்கின்றது. அந்த உணர்வுக்கொப்ப தான் (உமிழ் நீர்) தான் ஜீரணிப்பதும் ஜீரணமற்ற நிலை உருவாவதும்.

சலிப்பும் சஞ்சலமுமாக இருக்கும் பொழுது நல்ல சுவையான உணவை நீங்கள் உட்கொண்டால் ஜீரண சக்தியே குறைகின்றது.

கஷ்டப்பட்டு உழைத்து வரும் நிலையில் உடல் வலு பெற வேண்டும் என்று எண்ணி நல்ல உணவைச் சாப்பிட்டாலும்
1.சலிப்பு சஞ்சலம் என்ற உமிழ் நீர் கலந்து
2.சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கமாகி
3.ஜீரணிக்கும் சக்தியை இழந்து வயிறு உப்புசமாகி
4.வாயுவின் தன்மை நுரையீரல்களில் அதிகமாகி மூச்சுத் திணறல் போன்று வரும்.
5.நமக்கு ஆயாசமாக வரும்.

ஆனால் நாம் தவறு செய்தோமா…? என்றால் இல்லை. சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கப்படாதபடி தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும்…?

எங்கள் சிறுகுடலை உருவாக்கிய அணுக்களும் பெருங்குடலை உருவாக்கிய அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை குடலுக்குள் செலுத்துங்கள்.
1.அந்த ஜீரண உறுப்புகள் பலவீனமடையாதபடி உற்சாகப்படுத்தி
2.சாப்பிடும் ஆகாரத்தை ஜீரணிக்கும் ஆற்றல்கள் பெற வேண்டும்
3.ஆகாரத்தில் உள்ள சத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இப்போது அந்தச் சிறுகுடலிலும் பெருங்குடலிலும் ஒரு விதமான புத்துணர்ச்சிகள் உருவாகும்.
1.சிறு குடலில் புண் இருந்தாலும்
2.ஜீரணிக்கும் சக்தி குறைந்திருந்தாலும்
3.இயக்கச் சக்தி குறைந்து இருந்தாலும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அணுக்களுக்கு ஊட்டப்படும் போது
4.வீரிய உணர்வு பெற்று நல்ல இயக்க சக்தியாக மாறும்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் உள்ள நல்ல சத்தினை நமக்குள் வடித்து நஞ்சினைத் தணித்து நல்ல அணுக்களையும் நல்ல இரத்தங்களையும் உருவாக்கும் சக்தி பெறச் செய்யும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் சிறுகுடல் பெருகுடலை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை ஏக்க உணர்வுடன் பாய்ச்சுங்கள்.

1.உங்கள் குடல் பாகங்களில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் இப்பொழுது நீங்கும்.
2.அருள் உணர்வுகளை உங்கள் உடலில் பெருக்கும்.

எனக்கும் அவர்களுக்கும் (பிறர்) சம்பந்தமே இல்லை என்று சொல்வோம் – ஆனால் யாரும் நாம் பிரிந்து இல்லை…! தெரிந்து கொள்ளுங்கள்…!

Image

networking

எனக்கும் அவர்களுக்கும் (பிறர்) சம்பந்தமே இல்லை என்று சொல்வோம் – ஆனால் யாரும் நாம் பிரிந்து இல்லை…! தெரிந்து கொள்ளுங்கள்…!

செல்ஃபோன்களில் என்ன செய்கிறார்கள்…? எல்லாவற்றையும் ரெகார்டு (பதிவு) செய்து விடுகின்றார்கள். ஒரு நம்பர் போட்டவுடனே
1.அவர் இன்னார் பேசுகிறார் என்று இங்கே தெரிகின்றது.
2.வேண்டாதவராக இருந்தால் செல்லை ஆஃப் (OFF) செய்து விடுகின்றார்கள்.

நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடுகின்றீர்கள். சண்டை போட்டவுடனே துரோகம் செய்தான் பாவி என்று நினைக்கின்றீர்கள். உடனே என்ன செய்யும்…? புரை ஓடும்.

அந்தப் புரை ஓடப்போகும் போது அப்போது அதற்குக் காரணம் இன்னார்.. இன்னார் தான்…! என்று உடனே ஞாபகம் வருகின்றது. “இன்னார் தான் நம்மைப் பேசினார்…!” என்று உடனே அங்கே அது அறிவிப்பு செய்யும். வேண்டுமென்றால் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

அதே சமயத்தில் நண்பருடன் நிறைய நேரம் பழகுகின்றீர்கள். மகராசன் நல்ல முறையில் உதவி செய்தானே..! என்று சொன்னவுடனே விக்கல் ஆகின்றது. அந்த விக்கல் ஆனபின் என்ன செய்கின்றோம்?

சரி்… இன்னார் தான் இப்பொழுது நம்மை நினைத்திருப்பார் என்று எண்ணுகின்றோம். உடனே அந்த விக்கல் நின்று போகும். “இன்னார் தான் நம்மை நினைக்கிறார்…!” என்று அங்கிருந்தே அறிந்து கொள்ளலாம். வேண்டுமென்றால் இதையும் அனுபவத்தில் பார்க்கலாம்.

அதே சமயத்தில் (தாய்) பிள்ளை மேல் ரொம்பவும் பாசமாக இருப்பார்கள். என் பிள்ளை படிக்கப் போனது… என்ன ஆனதோ…? ஏதாச்சோ…? என்று சொல்லி இந்த வேதனையோட எண்ணினால் அந்தப் பிள்ளை நடந்து போகும் போது கவனக்குறைவாகி மேடு பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து அடிபட்டுவிடும்.

செய்தி கேட்டதும் “ஐய்யய்யோ… நான் நினைத்தேனே… இந்த மாதிரி ஆகிப் போனதே…!” என்று அந்தத் தாய் புலம்பும்.

என்ன…..? முன்னக்கூடியே அந்தத் தாய்க்குத் தெரிந்ததாம்…! எதை……?

என் பிள்ளையினுடைய ஞாபகம் வந்தது. அப்பொழுது என்னமோ ஆகப் போகிறது என்கிற வகையில் தெரிந்து கொண்டேன். அதே மாதிரி பிள்ளை கீழே விழுந்து விட்டது என்று அந்தத் தாய் சொல்லும். ஆனால்
1.என்ன ஆகுமோ… என்னமோ ஆகப் போகிறது…! என்று எண்ணிய
2.அந்த எண்ணம் தான் அங்கே பிள்ளையை இயக்கியது என்று
3.அந்தத் தாய்க்குத் தெரியாது.

அதே மாதிரித் தான் அந்தப் பிள்ளைக்கும் எண்ணம் வரும். அம்மா திட்டியது எல்லாம் பாசத்துடன் சேர்த்து அந்த நினைவு வரும். அந்த உணர்வை நினைவாக நினைக்கும் பொழுது பிள்ளை இங்கே பள்ளம் தெரியாமல் கீழே விழுந்துவிடும். ஆகவே
1.நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு தான் இருக்கின்றோம்.
2.நாம் யாரும் பிரிந்து வாழவில்லை.
3.ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் அலைகளாக இயக்கிக் கொண்டேயிருக்கின்றது.

ரோட்டில் ஒரு பிச்சைக்காரன் போகின்றான். கீழே விழுந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றான். நாம் பார்க்கின்றோம். இரக்கத்துடன் சேர்த்து “அடப் பாவமே இப்படி இருக்கின்றான்…” என்று நமக்குள் பதிவு செய்து விடுகின்றோம்.

அந்தப் பதிவு என்ன செய்யும்…?

ஒரு நேரத்தில் உங்களுக்குக் கஷ்டம் வரப்படும் போது அவன் நினைவு வரும். அந்த நினைவு வரப்போகும் போது அவன் பட்ட வேதனை இங்கே நமக்கும் வருகிறது. அந்த வேதனைபட்ட உணர்வுடன் நீங்கள் போய் ஒரு சரக்கை வாங்கினால் சரியாகப் பார்க்க முடியாது.

பிச்சைக்காரன் மேல் பரிதாபப்பட்டு அவனுக்கு உதவி செய்கிறீர்கள். ஏனென்றால் அவன் என்ன செய்வான்..? ஐயா.. ஐயா.. ஐயா…! என்று சொல்லி விட்டு வேதனைப்பட்டு அவன் கேட்டிருப்பான். காசைக் கொடுத்திருப்போம்.

அதற்கப்புறம் வேலைக்குச் சென்று மேலதிகாரியை ஆபிசில் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள். வேதனையான உணர்வுடன் அங்கே போனவுடனே இதே உணர்வு மேலதிகாரி கேட்டவுடனே அதற்குச் சரியான பதில் உங்களிடமிருந்து வராது.

சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…! கையில் அழுக்குப் பட்டு விடுகின்றது. கழுவி விடுகிறோம். அதற்கு அப்புறம் தானே மற்ற பொருளை எடுக்கின்றோம்.

இதே மாதிரி நீங்கள் வீட்டை விட்டு எந்த வேலையாக வெளியில் போனாலும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
4.எங்கள் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்.
5.இங்கே உற்பத்தி செய்யக்கூடிய பொருள்கள் நன்றாக இருக்க வேண்டும்.
6.இங்கே வேலை பார்ப்பவர்கள் அனைவரது சொல் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று இவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணர்வு உங்களிடம் முன்னணியில் இருந்தது என்றால் மற்றவர்கள் தவறாக ஏதாவது சொன்னாலும் கூட அதை இது தடைப்படுத்தும்.

ஆனால் இவ்வாறு எண்ணித் தூய்மைப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்…? நீங்கள் நடந்து வரப்போகும் போது ரோட்டில் ஒருவன் குறும்புத்தனம் செய்து இருப்பான். உற்றுப் பார்த்தவுடன் அந்த உணர்வு உள்ளுக்குள் வந்துவிடும்.

இந்த உணர்வுடன் வேலை செய்தால் தவறாகச் செய்யச் செய்து உங்களைக் குற்றவாளி ஆக்கும். ஒரு இயந்திரத்தை இயக்குவீர்கள். சிந்தனை இல்லாது தவறு வந்து விடும்.

தையல் கடையிலேயே துணிகளைத் தைக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மிஷினில் போய் தைத்துப் பாருங்கள். வெறுப்பான உணர்வு வந்தவுடனே கோணலாகப் போகும். அல்லது நீங்கள் துணிகளை எடுத்துக் கத்திரித்துப் பாருங்கள். கோணல் மானலாகப் போகும்.

ஆனால் நல்ல மனதுடன் சாதாரணமாக இருந்து பாருங்கள். நன்றாகக் கத்தரிக்கலாம். அப்பொழுது எது நம்மை இயக்குகின்றது…?

சந்தர்ப்பவசத்தால் நாம் நுகர்ந்த அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. உயிரிலே பட்டால் உணர்ச்சியாக மாறுகின்றது. அந்த உணர்ச்சிகள் தான் நம்மைச் செயலாக்குகின்றது. இதைப் போன்ற நிலைகளெல்லாம் இருந்து நாம் தப்ப வேண்டுமல்லவா…?

அதிகாலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்தவுடன் அப்படியே உட்கார்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை எடுக்க வேண்டும். எடுத்து நம் உடல் முழுவதும் பரப்ப வேண்டும்.

1.நாம் பார்க்கும் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
2.அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் கஷ்டங்கள் நிவர்த்தி ஆக வேண்டும்.
4.அவர்கள் குடும்பம் ஒன்றுபட்டு வர வேண்டும்.
5.எங்கள் குழந்தைகள் நல்ல குணத்துடன் வளர வேண்டும்.
6.தெளிந்த நிலையில் வர வேண்டும் படிப்பில் உயர வேண்டும் என்று இதையே தியானிக்க வேண்டும்.

நாம் எடுக்கும் இந்த உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருகும் பொழுது பிறர் உணர்வுகள் நம்மை இயக்காது. அதே சமயத்தில் நம் உணர்வுகள் அவர்களுக்குள் சென்று அவரை “நல் வழியில் அழைத்துச் செல்லும்…!”

உருவத்தைப் பார்க்கின்றோம் ஆனால் உணர்ச்சிகளை நாம் பார்க்க முடிவதில்லை… உயிரிலே பட்டால் தான் உணர முடிகிறது…! – “வாயு புத்திரன் ஆஞ்சநேயன்… அனுமார்…”

Image

Hanuman

உருவத்தைப் பார்க்கின்றோம் ஆனால் உணர்ச்சிகளை நாம் பார்க்க முடிவதில்லை… உயிரிலே பட்டால் தான் உணர முடிகிறது…! – “வாயு புத்திரன் ஆஞ்சநேயன்… அனுமார்…”

 

நம் குழந்தை நோயால் வேதனைப்படுகிறான் என்றால் அவனைக் காக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

அவன் நோயுடன் இருக்கும் போது “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற வேதனையை எடுத்தோம் என்றால் அவன் உடலில் சேர்த்த உணர்வுகள் நமக்குள் வேதனையை உருவாக்கும் அந்த அணுவாக மாறி விடுகிறது.

அப்போது அது வராமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று முதலில் இதை எடுத்து அதைத் தடுத்துப் பழக வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலு சேர்க்காமல்
1.பாசத்தால் அவன் உடலில் உள்ள நோயெல்லாம் போக வேண்டும் என்று வெறுமனே எண்ணி
2.அந்த வேதனையைத்தான் நமக்குள் எடுத்துத் தவறாகக் கலந்துவிடுகிறோம்.
3.அதாவது வேதனையான என்ற உணர்வு மோதும் போது இதனுடன் விஷத்தைத் தான் கலக்கிறோம்.
4.இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

முதலில் சொன்ன மாதிரிச் ஆத்ம சுத்தி செய்து விட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.அவன் உடலில் படர வேண்டும்
2.அவன் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும்
3.அவன் உடல் நலம் பெற வேண்டும்
4.அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்
5.தெளிவான மனம் பெற வேண்டும் என்று
6.குழந்தை வேதனைப்படும் உணர்வு நம் உயிரிலே பட்டு உணர்ச்சியைத் தூண்டும் பொழுது
7.நாம் இதை எடுத்து இரண்டையும் இணைத்து உருவாக்க வேண்டும்.
7.அப்போது அந்த வேதனை என்ற உணர்வு நமக்குள் உருவாகாது.
8.இப்படி இணைக்கப்படும் பொழுது “அஞ்சனை…” அதாவது ஆஞ்சநேயன்…!
9.நேயன் என்றால் அது நமக்குள் பக்குவப்படுத்தும் தன்மைகள்.

அந்த உடலில் உள்ள நோயெல்லாம் நீங்க வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை இணைத்துச் சொல்லாக நாம் சொல்லும் போது இந்த உணர்வு “வாயு…”

சொல் காதில் கேட்கிறது. ஆனால் கண்ணிற்குத் தெரிகின்றதோ..? உயிரால் உணர்ந்து தான் அறிகின்றோம்.

இப்போது நான் சொல்வது உங்கள் உயிரிலே பட்டு உணர்ந்து அந்த உணர்ச்சியால் தான் நீங்கள் அறிய முடிகிறது. கண்ணால் பார்த்தால் என் உடலைத் தான் பார்க்க முடிகிறது. அங்கங்கள் அசைவது.. நான் சொல்வதைத் தான் நீங்கள் பார்க்க முடியும்.

ஆனால் அந்த உணர்வு உயிரிலே பட்டால் தான் நீங்கள் அறிய முடியும். உயிரிலே பட்டதும் அதை உணர முடிகின்றது. அந்த உணர்ச்சி உங்கள் உயிரில் இயக்கப்படும் போது தான் அது இயங்குவதை… உணர்ச்சியால் உங்கள் உடலில் நீங்கள் அறிகின்றீர்கள்.
அதாவது
1.கண்ணால் பார்க்கின்றோம்
2.அந்த உணர்வால் உணர்கின்றோம்
3.உணர்ச்சியால் இயக்குகின்றோம்
4.உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

நமக்குக் கோபம் வந்தவுடன் அந்த ஆத்திரம் வந்து நம்மை இயக்குகிறது. கோபம் வந்தால் நம்மை எப்படி இயக்குகிறது என்று நமக்குத் தெரிகிறது, ஆனால் அதை அடக்க வேண்டுமா இல்லையா ?

குழந்தைக்கு உடம்புச் சரி இல்லை என்று எண்ணுகிறோம். அதை உணர்வால் அறிகின்றோம் வேதனையான உணர்ச்சி நமக்குள் வந்து “ஐயோ… குழந்தைக்கு இப்படி வந்து விட்டதே…!” என்று பதறுகின்றோம்.

ஆனால் இந்த உணர்வெல்லாம் நம் ரத்தத்தில் சேர்ந்து நமக்குள் தீமையாக விளைகின்றது. இதை அப்போதைக்கப்போது துடைக்க வேண்டுமா… இல்லையா..?

கண்ணிலே பார்க்கும் போது அவன் வேதனைப்படுகிறான் என்று தெரிந்து கொண்டாலும் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று தடுக்க வேண்டும்.

குழந்தை வேதனைப்படுவதைக் கண்ணால் பார்த்திருக்கிறோம். நம் கண்ணின் கருவிழி ருக்மணி இங்கே விலா எலும்புகளில் பதிவாக்குகிறது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளை அதற்குப் பக்கத்திலேயே அங்கே பதிவாக்க வேண்டும்.

எந்தக் கண்ணால் பார்த்து வேதனையை எடுத்தோமோ அதன் அருகிலேயே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கும் போது இது வலுவாகிறது.

அவனுக்கு உடம்பு நலமாக வேண்டும், அவன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவன் உடல் முழுவதும் படர வேண்டும், அவன் நோய் நீங்க வேண்டும் என்று நமக்குள் இதை உருவாக்கி அதைச் சொல்லாக அவனிடம் சொல்ல வேண்டும்.

1.நாம் சொல்லும் போது அது வாயுவாகப் போகின்றது.
2.காது வழியாகக் கேட்டு குழந்தையை நுகரச் செய்கின்றது.
3.நுகர்ந்த பின் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் அவன் உடலில் எந்த உறுப்பிலே நோய் இருந்ததோ அதற்குள் வாயுவாகச் சென்று
4.அந்த உணர்ச்சியை ஊட்டி
5.நோயைக் குறைக்கும் ஞானத்தை அவனுக்கு ஊட்டுகின்றது.

அதனால் தான் “ஆஞ்சநேயன்” அவன் வாயு புத்திரன்.. என்றும் அந்த வாயு நம் உடலுக்குள் அணுவாக (புத்திரனாக) மாறும் பொழுது “அனுமார்” என்றும் தெளிவாக்குகின்றனர் ஞானிகள்.

அகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி “அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால்” பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்…!

Agastya Sage Rishi

அகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்…!

துருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலைப் பெற்றவர். இருளை நீக்கி நஞ்சை வென்று மகிழ்ச்சி என்ற உணர்வை எடுத்து ஒளியாக மாறியவர். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களைச் சொல்லும் போது இப்பொழுது உங்களிடம் என்ன வாசனை வருகின்றது…? என்று பாருங்கள்.

ஒவ்வொருவருக்கும் உங்களுக்குத் தகுந்த மாதிரி
1.பல பல பச்சிலை வாசனைகள் வரும்…!
2.ரோஜாப்பூ வாசனை வரும்…!
3.தீமையை நீக்குகின்ற உடலுக்குள் விஷக் கிருமிகளை நீக்குகின்ற பல தாவர இன மூலிகைகளின் வாசனை வரும்….!

வருகின்றதா…?.

ஏனென்றால் அந்த அகஸ்தியன் உணர்வுகளைச் சொல்லப்படும் போது இங்கே நமக்கு முன்னாடி காற்றில் இருக்கிறது. அந்த உணர்வலைகள் உங்கள் ஈர்ப்புக்குள் (சுவாசத்திற்குள்) வந்து சேர்கிறது.

ஆனால் உங்களால் அந்த மணத்தை அறிய முடியவில்லை என்றாலும் கூட
1.நுகரும் போது உணர்ச்சிகளால் அறிய முடியும்.
2.புது விதமான உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலப்பதும்
3.அந்த ஆற்றல்கள் உடலில் ஊடுருவுவதும் அது தெரியும்.

சிலர் மணத்தால் அறியலாம்…. சிலர் உணர்வால் அறியலாம்…. சிலர் உணர்ச்சியால் அறியலாம்….! அதாவது உணர்ச்சி என்கிற போது உடலுக்குள் அது இயக்கச் சக்தியாக மாறும்.

அப்போது நாம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் வரும். உங்களுக்குள் அது வந்து சேர்கின்றது. சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா….!

உதாரணமாக நேரம்… காலம்… என்ற நிலையில் ஜாதகக்காரன் ஜோசியக்காரன் சொன்னதை எல்லாம் பதிவு செய்து வைத்துக் கொண்டோம் என்றால் அது நமக்குள் விளைந்து அதுவாகின்றோம்.

தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அகஸ்தியரின் உணர்வை நமக்குள் பெற்றால் நாமும் ஞானியாகின்றோம்.

ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் பார்க்கும் போதெல்லாம் ஞானிகளின் உணர்வை நுகர்வதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும்.

மற்றவர்கள் அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள் என்றால் எல்லாம் சொல்லி கேட்டு முடித்தவுடனே “டக்…” என்று புருவ மத்தியில் ஈஸ்வரா… என்று சொல்லி நிறுத்திப் பழக வேண்டும்.

ஆனால் “என்னிடம் கஷ்டத்தைச் சொல்லாதே…!” என்று நாம் சொன்னால் பதிவான வேகத்தைக் கொண்டு
1.பார்…! ஏதோ இப்படிப் பண்ணிக் கொண்டு இருக்கின்றார் என்று நான்கு பேரிடம் சொல்வார்கள்
2.இவரைப் பாருங்கள்… ஏதாவது சொன்னால் ஒன்றுமே கேட்க மாட்டார் என்பார்கள்.
3.ஏன்….? இவருக்கெல்லாம் ஒரு காலத்தில் எந்தக் கஷ்டமும் வராதா..? என்று கூடிப் பேசுவார்கள்.
4.அப்போது கூடிப் பேசும் போது அந்த உணர்வு நம்மைப் பாதிக்கும்.
5.அந்த நான்கு பேருடைய பகைமையை வாங்கினால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாற்றும்.

ஆகையினால் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் நமக்குள் வராமல் “தடுக்க வேண்டும்….!”

முதலில் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்து நமக்குள் (மனதிற்குள்) வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து அவர்களைப் பார்த்து
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெறுவீர்கள்
2.உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும்.
3.உங்கள் உடம்பு நன்றாக இருக்கும் என்று சொல்ல வேண்டும்.

இப்படி அவர்கள் உணர்வு நமக்குள் வராதபடி இதை மாற்றி அமைத்து நாம் உயர்ந்த சொல்லாகச் சொல்லப்படும் போது நாம் சொல்வது அவர்கள் கஷ்டத்தை நீக்கும் செயலாக இயங்கத் தொடங்கி விடுகின்றது.

இது எல்லாம் நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அருள் நெறிகள். நம்மைக் காக்கின்றோம். மற்றவரையும் காக்கும் சக்தியாக நம் செயல்கள் அமைகின்றது.

ஞானிகள் செயலாக நம் செயல்கள் ஒன்றுபடுகின்றது…!

ராசி எது..? பலன் எது…?

Rasin palan

ராசி எது..? பலன் எது…?

பன்னிரண்டு மாதங்களிலும் நமக்குள் சேரும் தீமைகளை அப்புறப்படுத்தும் நிலைகளை ஞானிகள் ஒவ்வொரு மாதத்திலும் பண்டிகையாக வைத்து நல் உணர்வுகளைச் சேர்த்து அந்தத் தீமைகளைக் கழிக்கக்கூடிய நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் நாம் அதை புரிந்து கொள்வது இல்லை. பன்னிரண்டு மாதமும் பன்னிரண்டு ராசி என்று சொல்வார்கள்.

1.அந்தப் பன்னிரண்டு விதமான உணர்வுகளையும்
2.அந்தப் பன்னிரண்டு மாதத்திலும் வரக்கூடிய தீமைகளை எப்படித் துடைப்பது..?
3.நல்ல சக்திகளை எப்படி நமக்குள் ஒன்று சேர்ப்பது…? என்ற நிலைகளைத் தான்
4.ஆறாவது அறிவாகப் படைத்துக் காட்டினார்கள்.

ஆனால் இன்று ஜாதகப் பிரகாரம் பன்னிரெண்டு ராசிகளையும் பார்ப்பார்கள். அந்த ராசியைப் பார்த்து என்ன செய்வது..?

வயலில் நல்ல வெள்ளாமை வந்தது என்றால் அந்த ராசியாக அதை நிலை எடுத்துக் கொள்கிறோம்.

நல்லவரோடு சேரப்படும் போது அந்த நல்ல உணர்வைச் சேர்த்தால் அந்த ராசி என்ன செய்கிறது…? உங்களை நல்லவராக மாற்றுகின்றது

ஒருவன் பிக்பாக்கெட் அடிக்கிறான். அவனோடு சேர்ந்தோம் என்றால் நம்மையும் பிக்பாக்கெட் அடிக்கச் சொல்லும். அந்த ராசி அப்படித்தான் வரும்.

ஒரு நோயுடன் இருக்கின்றவனைப் பார்த்தோம் என்றால் அவன் உடலில் உள்ள அந்த நோயால் வாடும் ராசி நமக்குள் நல்லதைப் பெற விடாமல் செய்கின்றது.

ஆக இதற்கெல்லாம் வானஇயல் ராசியைப் பார்த்து என்ன செய்வது…?

அங்கே ஒவ்வொரு கோள்களுக்கும் ஒவ்வொரு நிலைகள். கோள்கள் எப்படியோ அதைப்போல நம் உடலும் ஒரு கோளே தான்.

ஒரு உடலில் விளைந்த வேதனை உணர்வை நாம் சந்திக்கும் போது என்ன செய்கின்றது..?
1.அவன் உடலில் விளைந்தது வேதனை.
2.அந்த ராசி அவர்களுக்குள் இருக்கின்றது.
3.அவரோடு சேர்த்து அவர் சொல்கின்ற கஷ்டத்தை எல்லாம் நாம் கேட்டறியும் பொழுது
4.அந்த ராசி இங்கே நமக்குள் வந்துவிடுகிறது.

இங்கு வீட்டில் ஒன்றும் முடியவில்லை என்று சொல்லி விட்டு அடுத்தாற்போல நண்பர்களாகப் பழகுகின்றவர்களிடம் போய் என்ன சொல்கிறார்கள்…?

என் பையன் சொன்னபடியே கேட்காமல் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றான்… குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கின்றது…! தொழிலில் நான் கடன் கொடுத்தேன். அவன் திரும்பத் தராமல் ஏமாற்றுகின்றான்…! இப்படி எல்லாம் ஆனால் நான் என்ன செய்ய முடியும்…? என்று நண்பரிடம் சொல்லப்படும் போது
1.இவர் உடலில் விளைந்த ராசி என்ன செய்யும்…?
2.இதைக் கேட்டவுடனே அதனின் பலனை அந்த நண்பரும் எடுத்து கொள்கின்றார்.

யார்…?

நண்பர் இதை அதிகமாகக் கேட்கக் கேட்க அவருடைய ராசி என்ன செய்கின்றது…? இந்த வேதனைகளை எடுத்து அவருக்குள்ளேயும் வளர்க்கச் செய்கின்றது. இது தான் ராசியும் அதனின் பலனும்…!

ஆனால் இன்று ஜாதகப் பிரகாரம் வான இயலை வைத்துச் சொல்பவர்கள் அதைப் பார்த்துவிட்டு “உனக்கு இந்த நேரம் இப்படி வருகின்றது… அதனால் இந்தக் காரியத்தை நீ செய்யாதே…!” என்கின்றார்கள்.

ஆனால்
1.ஒருவரின் வேதனையை நுகரப்படும் பொழுது
2.அந்த வேதனையைக் கொஞ்சம் விலக்கிவிட்டு
4.அருள் உணர்வுகளைச் சேர்த்து வலுவாக்கிக் கொண்டு
3.அவருக்கு நல்லது நடக்க வேண்டும்… அவர் நல்லவராக வேண்டும்… என்று சொல்லுங்கள்…
4.அவருக்கும் நல்லதாகும்… அவர் வேதனை உங்களுக்குள்ளும் வராது…! என்று
5.இதை எடுத்து அங்கே சொல்கின்றவர்கள் யாராவது இருக்கின்றார்களா என்றால் “இல்லை…”

ஏனென்றால் அவர் உடலில் வேதனை என்ற ராசி விளைந்து இருக்கின்றது. நாம் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அதனால் நமக்கும் அந்த வேதனை வருகின்றது.
1.அப்போது அதை ஒதுக்கிப் பழக வேண்டும்.
2.நமக்குள்ளே வராது அதைத் தடுத்துப் பழக வேண்டும்.
3.அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தில் விளைந்த ராசியை எடுத்து நம் உடலுக்குள் பெருக்கி வலுவாக்கிக் கொண்டு
4.அவருக்கும் அந்த அருளைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

இந்த நிலையைத் தான் நாம் எண்ண வேண்டும். இந்த ராசிப் பிரகாரம் நாம் எப்பொழுதும் நன்மை என்ற பலனை அனுபவிக்கலாம். ஞானிகள் சொன்ன “ராசி” என்பது இது தான்…!

ஏமாற்ற நினைப்போரிடமிருந்து நம்மை எப்படிக் காத்துக் கொள்வது…?

Geetha Upathesh

ஏமாற்ற நினைப்போரிடமிருந்து நம்மை எப்படிக் காத்துக் கொள்வது…? 

விஞ்ஞான அறிவால் உலக ரீதியிலே பல விஷத்தன்மைகள் இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. வெடி குண்டு கலாச்சாரம் என்று முதலில் வந்தது.

இப்பொழுது அதைக் காட்டிலும் மிஞ்சியதாக “விஷக் கலாச்சாரம்” என்ற நிலையில் இரசாயணக் குண்டுகளை வெடித்து வெடித்து காற்றையே முழுமையாக நச்சாக்கிவிட்டார்கள்.

விஷப் பவுடர்களை எடுத்துக் கொண்டு ஒரு டப்பியில் கொண்டு வருகின்றான். “டப்…” என்று வீசி எறிந்தான் என்றால் உடைகின்றது. அந்த இடமோ வீடோ மற்ற எதுவாக இருந்தாலும் எல்லாம் காலியாகின்றது.

இன்று எடுக்கக்கூடிய சினி்மாக்களில் இது போல இரண்டைக் காண்பித்து விட்டான் என்றால் அடுத்து அதே மாதிர்ச் செய்யத் தொடங்கி விடுகின்றார்கள்.

இன்று உலகம் முழுவதிலும் உள்ள எல்லா இடத்திலும் இந்த நிலை தான்.

உதாரணமாக திருடனைப் பற்றி நாம் அதிகமாகக் கேள்விப்படுகின்றோம். நமக்கு முன்னாடி அந்த உணர்வின் எண்ண அலைகள் பரவுகின்றது.

ஒரு கதவோ ஜன்னலோ “டப்…” என்று சத்தம் கேட்டால் போதும். “திடுக்” என்று பய உணர்ச்சிகள் தூண்டப்பட்டுத் “திருடன் வந்து விட்டானோ…!” என்ற இந்த எண்ண அலைகளைப் பரப்புவோம்.

இந்த எண்ண அலைகள் பரப்பினால் அடுத்து என்ன நடக்கும்…?

திருடர்கள் எல்லாம் ஒரு கல்லைப் போட்டு வீசிப் பார்ப்பார்கள். அந்தச் சப்தத்தின் “எதிரொலியை” வைத்துத்தான் அங்கே திருட முற்படுவார்கள்.

நாம் கூர்ந்து கவனித்தாலும்
1.நம் எண்ண அலைகள் அச்சுறுத்தப்பட்டு நாம் பயந்து போய் இருக்கின்றோம் என்றால்
2.அவன் எண்ணம் வரப்போகும் போது நாம் சுத்தமாகவே தூங்கி விடுவோம்.
3.ஆக அவனை வரவேற்கின்றோம். இங்கே வந்து விடுவான்.

எவ்வளவு திடகாத்திரமானவராக இருந்தாலும் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மைக் காக்க வேண்டும் என்றால் அது எப்படி…?

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் அந்தச் சக்தியைச் சேர்த்து ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். பின்
1.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படர வேண்டும்.
2.எங்களைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று
3.இந்த உணர்வைப் பரப்பி வைத்துவிட வேண்டும்.

இப்படி இந்த அலைகளைப் பரப்பி வைத்து விட்டோம் என்றால் திருட வேண்டும் என்ற எண்ணத்தில் வருவோரை இந்த உணர்வு என்ன செய்யும்…?
1.ஒதுக்கிக் கொண்டு போய்விடும்.
2.திருட வேண்டும் என்ற எண்ணத்தையே திசை திருப்பிவிடும்
3.இதை உங்கள் அனுபவத்தில் கூடத் தெரிந்து கொள்ளலாம்.

அப்படியே சில சந்தர்ப்பத்தில் நாம் இல்லாத போது திருடன் உள்ளே வந்து பொருள்களை எடுத்துச் சென்றாலும் நாம் பாய்ச்சும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அவனுக்குள் பாய்ந்து
1.அவன் சீக்கிரம் சிக்கவும் செய்வான்.
2.நம் பொருளைக் காக்க நம் எண்ண உணர்வுகள் நமக்கு உதவும்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நாம் எடுக்கும் அந்த மகரிஷிகள் உணர்வுகளின் வலு கொண்டு சில நேரங்களில் திருடு போன பொருள்கள் மீண்டும் கிடைக்கவும் செய்யும்.

அதே போல எதிரிகள் என்ற நிலைகள் அடிக்கடி நமக்குத் தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருந்தால் “தொல்லை கொடுக்கின்றார்கள்…” என்று எண்ணக்கூடாது.

முதலில் சொன்ன மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு என்னைப் பார்க்கின்றவர்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று இதை நமக்குள் கூட்டிக் கொண்டே போய் விட வேண்டும்.

1.அவன் நம் மேலே குறி வைத்து எண்ணினான் என்றால்
2.நாம் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகள் சிறுகச் சிறுக அவனுக்குள் போய்
3.நம்மைப் பற்றி எண்ணுவதை அவனை மறக்கச் செய்கின்றது.

பின் நம்மை மறக்கச் செய்யும் போது அவன் எண்ணம் அங்கே ஓங்கி வளர்ந்தது என்றால் அவன் தன் நிலை இழந்து அவனே எதிலேயாவது போய் சிக்குவான்.

1.மாற்றிக் கொண்டான் என்றால் நல்லது.
2.இல்லை என்றால் அவனே விபத்துக்களுக்கு ஆளாகிவிடுவான்.
3.அவன் செய்த நிலை அவனுக்கே உதவுகின்றது.

ஆக நாம் செய்த நிலை நமக்கு. அதாவது நாம் எடுத்துப் பாய்ச்சிய மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம்மைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக வரும். நமக்கு நல்லதாகும்….!

இதைப் போன்ற உணர்வுகளால் தான் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். வேறு மார்க்கம் இல்லை.

தற்கொலை செய்து இறந்த ஒரு பெண்ணை எழுப்பியது – நடந்த நிகழ்ச்சி

Divine Master Guru

தற்கொலை செய்து இறந்த ஒரு பெண்ணை எழுப்பியது – நடந்த நிகழ்ச்சி

குருநாதர் காட்டிய வழியில் திருத்தணிக்குப் போய்க் கொண்டிருக்கும் வழியில் ஒரு இடத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

ஒரு புருஷன் பெண்டாட்டி இரண்டு பேருக்குள்ளும் தகராறு ஆகி அதனால் மனைவி தூக்குப் போட்டு இறந்துவிட்டது. அந்த இடத்திற்கு எம்மைக் (ஞானகுரு) கூப்பிட்டுக் கொண்டு போனார்கள்.

அந்த இறந்த பெண்ணை அங்கே தூக்கி வைத்துக் கொண்டு செத்தவர்களை நீங்கள் எழுப்புவீர்கள் அல்லவா…! எழுப்புங்கள்…! என்று என்னிடம் சொல்கிறார்கள்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்ட மாதிரி இருந்தது…! யார் ஐயா.. “இப்படிச் சொன்னது…?” என்று நான் கேட்டேன்.

1.எங்கள் உணர்வில் தெரிந்தது…
2.நீங்கள் அந்த அம்மாவை எழுப்புங்கள் ஐயா…! என்று அங்கிருந்த ஒரு பெரியவர் சொல்கிறார்.
அவருடைய மருமகள் போலிருக்கின்றது.

அப்புறம்… “இது என்னடா விவகாரமாக இருக்கின்றது…?” என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

நம்மை முதலில் அங்கே கூட்டிக் கொண்டு போனவர்கள் “அது எப்படி ஐயா இறந்தவர்களை எழுப்ப முடியும்..?” என்று கேட்கின்றார்கள்.

எங்கள் உணர்வுக்குத் தெளிவாகத் தெரியுதுங்க…! அவர் எழுப்பட்டும். நீங்கள் ஏன் தடையாக இருக்கின்றீர்கள்..? நீங்கள் பேசாமல் இருங்கள்…! என்று அந்தப் பெரியவர் சொல்கின்றார்.

அப்பொழுது அங்கே கூட்டம் கூடிவிட்டது.

சரி என்று சொல்லி விட்டு.. இது என்னடா விவகாரமாக இருக்கிறது….? என்று அப்புறம் குருநாதர் சொன்னபடி சில நிலைகளைச் சொன்னதும் அந்த அம்மா எழுந்தது. சரியாக ஆனது.

 

துரத்தி வரும் நாயைப் பார்த்ததும் பதட்டமும் பயமும் வேகமும் வருகிறது – அந்தப் பயத்தை நாம் எப்படி மாற்றுவது…?

Image

Karthigai murugan

துரத்தி வரும் நாயைப் பார்த்ததும் பதட்டமும் பயமும் வேகமும் வருகிறது – அந்தப் பயத்தை நாம் எப்படி மாற்றுவது…?

 

ரோட்டில் நாம் போகும் போது ஒரு பையனை நாய் துரத்துகிறது என்று பார்க்கின்றோம். அடப் பாவமே…! அந்தப் பையனை நாய் துரத்துகிறது…! என்று சொல்லிப் பதட்டமாகின்றோம்.

அப்பொழுது பயம் கலந்த நிலைகளில் நாம் என்ன செய்கிறோம்…! வேகமான உணர்வைச் செலுத்தி நாயைத் துரத்துகின்றோம். நாயை விரட்டி விடுகின்றோம்.

ஆனால் நாம் எடுத்த அந்த வேகமான உணர்வு நமக்குள் வந்து என்ன செய்கின்றது…?
1.உமிழ் நீராக மாறுகின்றது.
2.இந்த வேக உணர்ச்சிகள் இரத்தத்துடன் கலந்து நம் நல்ல குணங்களுடன் இரண்டறக் கலந்துடுகின்றது.

அந்தப் பையனைக் காப்பாற்றிவிடுகின்றோம். ஆனாலும் அந்த வேக உணர்ச்சிகள் தூண்டி உடலுக்குள் என்ன செய்கின்றது…?
1.உயிரிலே படும் போது குருக்ஷேத்திரப் போராகின்றது
2.அது உடலுக்குள் சென்றபின் மகாபாரதப் போராகின்றது.
3.இரத்தத்தில் கலந்தவுடனே நல்ல அணுக்களுக்கும் அதற்கும் ஒவ்வொன்றுக்கும் போராகிறது.
(சாந்தமான அணுக்களுக்கும் – பயம் பதட்டம் கோபம் ஆத்திரம் போன்ற அணுக்களுக்கும் போராகின்றது)

அதாவது நம்மை அறியாமலே அந்த உணர்ச்சிகள் நம் உடலிலுள்ள நல்ல அணுக்களை இயக்கவிடாது தடைப்படுத்துகின்றது.

நம் உடலிலுள்ள நல்ல அணுக்களைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றும் தீமைகள் புகாது தடுக்கும் சேனாதிபதி என்றும் ஞானிகள் காட்டியிருக்கின்றார்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.அந்த வலுவான உணர்வுகளை எடுத்து நம் புருவ மத்தியில் எண்ணித்
3.தீமைகள் உள்ளுக்குள் போகாமல் தடைபடுத்த வேண்டும்.
4..அதாவது தீமைகள் நம் உடலுக்குள் புகாதபடி நாம் கட்டளையிட்டு விடுகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று உடலுக்குள் அனுப்பியவுடன்
1.அந்த வலு வந்து விடுகின்றது
2.நல்ல அணுக்கள் எல்லாம் அது உஷாராகி நல்ல சக்திகளை ஈர்க்கும் சக்தி பெறுகிறது
3.அப்பொழுது வேதனை போன்ற தீமையான உணர்வு உள்ளுக்குள் வராதபடி தடுத்து விடுகிறோம் அல்லது ஒதுக்கி விடுகிறோம்.

இது தான் சேனாதிபதி. தீமைகள் புகாது தடுக்கும் சக்தியைச் “சேனாதிபதி…!” என்று சுலபமாகத் தான் ஞானிகள் கொடுத்திருக்கிறார்கள்.

சாமி (ஞானகுரு) சொல்கிறார்..! அது அர்த்தம் புரியவில்லை… என்று விட்டு விட்டீர்கள் என்றால் அர்த்தம் புரியாமல் தான் போகும். புரிய வேண்டும் என்று நினைத்தால் அடுத்தாற்போல உங்களுக்கு அந்த ஞானம் வரும்.

உங்கள் வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் இதை எடுத்தீர்கள் என்றால் வரும் தீமைகளை நீக்கி அந்த மன வலிமை கொண்டு உங்களைக் காக்கும் உணர்வு உங்களுக்குள்ளேயே வரும்.

ஆறாவது அறிவால் தீமைகள் புகாது காக்கும் நிலைதான் சேனாதிபதி என்பது.

பல்லி எச்சம் இட்ட உணவை உண்டால் ஏற்படும் தீமைகள்

Image

Polariss

பல்லி எச்சம் இட்ட உணவை உண்டால் ஏற்படும் தீமைகள்

 

வெளியிலே தொழிலுக்குச் செல்கின்றோம். பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம். பிறர் சொல்லும் குறைகளைக் கேட்கின்றோம்.

அதை எல்லாம் நாம் அறிந்து அவர்களுக்கு வேண்டிய பக்குவங்களையும் உபாயங்களையும் சொல்கின்றோம். உதவியும் செய்கின்றோம்.

ஆனால் கேட்டறியும் பொழுது வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்த பின் தான் அதற்கு வேண்டிய உபாயத்தைச் சொல்லுகின்றோம்.

ஆனால் உபாயத்தைச் சொல்லி விட்டு நாம் வந்தாலும் நம் உடலிலே நாம் நுகர்ந்த அந்தத் தீமைகள் வளருகின்றது.

மற்றவர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்று கேட்டவுடனே நான் நியாயத்தைச் சொல்கின்றேன் என்று எல்லாவற்றையும் கேட்பீர்கள்.
1.அவர்கள் கஷ்டங்களையும் குறைகளையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
2.நம்மையும் சோர்வடையச் செய்வார்கள்
3.அதை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவுடனே சரியாகச் சாப்பிட முடியாது.

நாம் குறையாகக் கேட்ட உணர்வுகள் என்ன செய்யும்…? அதே இயக்க அணுவாக இரத்தத்தில் மாறும். இரத்தத்தில் மாறியவுடனே உடல் முழுவதற்கும் பரவுகின்றது. நம் உடலில் கெட்ட அணுக்கள் உருவாக ஆரம்பித்துவிடும்.

நாம் எதை நுகர்கின்றோமோ நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தையும் “ஓம் நமச் சிவாய…! ஓம் நமச் சிவாய…!” என்று நம் உயிர் “ஓ..” என்று பிரணவமாக்கி “ம்…” என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

“ஓ..ம் நமச் சிவாய… சிவாய நம ஓ…ம்” நம் உடலுக்குள் ஆன பின் அவன் இப்படிப் பேசினான். இப்படி இருந்தது. நான் உதவி செய்தேன். இதெல்லாம் நீங்கள் சொல்வீர்கள்.

1.கஷ்டமான நேரத்தில் எல்லாம் நான் ஓடிப் போய் உதவி செய்தேன்
2.கடைசியில் பார்த்தால் எனக்கே இப்பொழுது கஷ்டம் வந்துவிட்டது…! என்பீர்கள்.
3.இது தான் ஓ…ம் நமச் சிவாய… சிவாய நம ஓ…ம்…!

அதாவது நம் உடலில் அந்தக் கஷ்டங்கள் உருவாகி “சிவாய நம ஓம்…!
1.அவன் உடல் நலிந்தது… நம் உடல் நலிகின்றது…!
2.அவன் குணம் குறைந்தது… நம் குணமும் குறைந்தது…!

இந்த உடலில் இருந்து மற்றவர்கள் சொன்ன அதே கஷ்டமான சொல்லைச் சொல்வோம். அதனின் உணர்வு தான் வளர்கின்றது.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் நாம் எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்று வளர்ச்சி பெற்றுத் தீமைகளை நீக்கி இன்று தீமை நீக்கும் சக்திகளை வலுவாகப் பெற்றிருக்கின்றோம்.

சக்தி பெற்ற மனிதன் ஈகை பண்பு பரிவு என்ற நிலைகள் இருப்பினும் பிறருடைய துயரங்களைக் கேட்டு அவர்களுக்கு உதவி செய்தாலும்
1.அந்தத் துயரம் உங்களுக்குள் வராது தடுக்க
2.நீங்கள் என்ன வைத்து இருக்கின்றீர்கள்…?

எல்லாம் நல்லவர்கள் தான். பேரன்பு உடையவர்கள் தான். ஆனால் வந்த தீமைகளைத் துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்..?

நல்ல சரக்குகளைப் போட்டுச் சுவையான பதார்த்தத்தைச் செய்து வைத்திருக்கின்றோம். காற்றிலே அந்தப் பக்கம் ஒரு விஷத்தை தூவிக் கொண்டு உள்ளார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அது வெளியில் வருகின்றது. காற்றலைகள் இழுத்து வருகின்றது. பதார்த்தத்தை மூடவில்லை என்றால் அந்த விஷம் அதற்குள் பட்டு விடுகின்றது.

நான் நன்றாகத்தான் செய்து வைத்தேன் என்று நினைப்பீர்கள். ஆனால் விஷமான காற்று இதற்குள் போகின்றது என்றால் அதைச் சாப்பிட்டால் மயக்கம் வருகின்றது…!

அதற்கு என்ன செய்வது…?

சாதாரணமாக வீட்டில் பல்லிகள் நிறைய இருக்கிறது. இந்தப் பல்லி மனிதன் மேலே எச்சம் விட்டால் பட்ட இடங்களில் பொரிப் பொரியாகின்றது. தோல் வெந்துவிடுகின்றது.

அதே பல்லியின் எச்சம் ஒரு குழம்பிலேயோ மற்ற சாப்பிடும் பொருளில் பட்டால் அதை நாம் சாப்பிட்டவுடன் நம் குடலுக்குள் புண்ணாகும்.

அதே சமயம் அது இரத்தத்தில் கலந்து செல்லப்படும் போது சில உறுப்புகளிலும் இந்தப் பொரிப் பொரியாக நோயாக உருவாக ஆரம்பித்துவிடும்.
1.நான் ஒன்றுமே செய்யவில்லை.
2.நான் நன்றாகத் தான் இருந்தேன்.
3.எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று தெரியவில்லையே என்றால்
4.இந்த நிலையை யார் செய்தது…?
5.இது எல்லாம் சந்தர்ப்பங்கள் தான் காரணம்.

ஆனால் இதைப் போன்ற கொடிய விஷத்தை எல்லாம் வென்றது “துருவ நட்சத்திரம்…!” அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது.

1.உயிரணுவாகத் தோன்றி மனிதனான பின் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாகி
2,இருளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளான்.
3.துருவ நட்சத்திரம் வான் வெளியில் வரும் நஞ்சை ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

அந்தத் துருவ நட்சத்திரத்தைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.

அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நுகரும் வழியைக் காட்டி என் வாழ்க்கையில் வந்த இருளை நீக்கி ஒளியின் உணர்வாக என்னைப் பெறச் செய்தார்.

குருநாதர் காட்டிய வழியில் நீங்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்களுக்குள் அதை இணைத்து சந்தர்ப்பத்தால் வரும் எத்தகைய கொடிய தீமைகளையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியைப் பெறுங்கள்.