இறந்தபின் உடல் அழுகி நாற்றமாகின்றது…! நாம் யார்…! அந்த உடலா அல்லது உயிரா..?

Kalyana Teertham Papanasam

இறந்தபின் உடல் அழுகி நாற்றமாகின்றது…! நாம் யார்…! அந்த உடலா அல்லது உயிரா..?

நமது உடல்…! என் உடல்…! என்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் நமது உடலுக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளின் அணுக்கள் நமக்குள் உண்டு. அதனின் மலமே நமது உடல்.

இந்த உயிரான ஈசன் உடலை விட்டுப் போய் விட்டால் இந்த உடலான சிவம் “சவமாகி விடுகின்றது…!”

நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் ஓ…ம் நமச் சிவாய… ஓ…ம் நமச் சிவாய…! என்று நமது உடலாக சிவமாக மாற்றிக் கொண்டே உள்ளது.
1.உயிரின் இயக்கத்தால் தான் நாம் இயங்குகின்றோம்
2.அந்த உயிரின் இயக்கம் இல்லை என்றால் நம் உடலில் உள்ள அணுக்களிலும் இயக்கம் இல்லை.

நாம் எத்தகைய குணங்கள் கொண்ட உணர்வின் தன்மைகளை இந்த உடலில் வளர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்கள் எல்லாம் இந்த உடலை விட்டு உயிர் சென்று விட்டால் இந்த உடலையே தின்னும் அணுக்களாக மாறிவிடுகின்றது.

முதலிலே உயிரின் இயக்கத்தில் நாம் நுகர்ந்த உணர்வின் மணம் அந்த உணர்ச்சிக்கொப்ப உடலாகின்றது.
1.உயிரின் துடிப்பால் இயக்கும் அணு “ஜீவ அணு”
2.அது நுகர்ந்த உணர்வின் மலம் உடலாகும் போது சிவமாகின்றது.
3.ஆனாலும் இந்த உயிர் உடலை விட்டுச் சென்றபின் இந்த ஜீவ அணு உயிரணுவாக மாறுகின்றது.

அதாவது உடலை உருவாக்கிய அணுக்கள் நம் உடலையே உணவாக உட்கொள்ளும் உயிரணுவாக மாறி விடுகின்றது. இப்படி அணுவான பின் அந்த அணுவின் மலம் வெளிப்படும் போதுதான் “நாற்றமாகின்றது…!”

நாம் எந்தெந்தக் குணத்தை எடுத்தோமோ அதற்குத்தக்க நம் உடலில் நல்ல மணங்களாக இருக்கின்றது. ஆனால் (உயிர் போன பின்) அதே உடலை இந்த உயிரணு நுகர்ந்து அது உணவாக உட்கொண்டால் நாற்றம் சகிக்க முடியாது.

எத்தனை வகைச் செடிகளை இது கவர்ந்து அந்த அணுக்கள் அதன் உணர்வின் தன்மை நம் உயிர் நுகர்ந்து ஜீவ அணுக்களாக மாற்றியதோ இந்த உயிர் சென்றபின் ஜீவணுக்கள் உயிரணுவாக மாறி உடல் பெற்றுப் புழுக்களாகி விடுகின்றது.

இறந்த சரீரம் அழுகிப் போய்விட்டது என்றும் நாற்றமாகின்றது என்றும் சொல்கின்றோம் அல்லவா…!

1.மனிதனுக்குள் எத்தனை விதமான வேதனைகளைப்பட்டோமோ
2.எத்தனை வேதனைப்படுத்தினோமோ… எத்தனை துயர்படுத்தினோமோ…
3.இந்த உணர்வின் மலம் நம் உடலாக ஆனாலும்
4.உயிர் வெளியேறிய பின் அந்த அணுக்கள் புழுவாகி அதனின் மலத்தை வெளிப்படுத்தும் பொழுது நாற்றமாக வெளிப்படுகின்றது.

மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகத்தான் நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம். பலவிதமான ஆசைகளையும் வளர்க்கின்றோம்.

கடைசியில் ஆசைகள் அனைத்தும் நிராசையாகி வேதனையுடனே உடலை விட்டுப் பிரிகின்றோம்.

ஆனால் ஞானிகளோ மகரிஷிகளோ “தான் யார்…?” என்ற நிலையில் தன்னை அறிந்து உயிரின் இயக்கதையும்… உயிரால் உருவாக்கப்பட்ட உடலின் நிலைகளையும்… அறிந்து கொண்டவர்கள்.

அவர்கள் இந்த உடல் பற்றை வளர்க்காது உயிர் பற்றை வளர்த்தவர்கள். உயிருடன் ஒன்றி நிலைத்ததாக… ஒளியின் சரீரமாக… மரணமில்லாப் பெரு வாழ்க்கையாக… “விண்ணிலே வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்…!”
1.அந்த உயிர் பற்றை நாம் வளர்த்தால்
2.அவர்களைப் போன்று நாமும் அழியாத வாழ்க்கை வாழலாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய உண்மைகளைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். இதில் அவரவர்களுக்கு “எது பிரியமோ” அதை எடுத்துக் கொள்ளலாம்.

தசப்பிரியன் – நரகாசுரன் – விளக்கம்

Image

Narakasura vadam

தசப்பிரியன் – நரகாசுரன் – விளக்கம்

 

இராமயாணத்தில் மனிதனின் உயிரின் இயக்கத்தைத் தசரதச் சக்கரவர்த்தி என்று காட்டுகின்றார்கள்.

பத்தாவது நிலையை அடையக்கூடிய இந்த உயிர் சந்தர்ப்பத்தால் மனித வாழ்க்கையில் பிறர் படும் துயரங்களையும் கோபங்களையும் எண்ணி நாம் எடுக்கப்படும் போது அந்த அசுர உணர்வுகளை உருவாக்கும் அணுக்கள் உடலுக்குள் விளைகின்றது.

உதாரணமாக ஆடு மாடுகளை மற்ற வீரிய உணர்வு கொண்ட புலி மற்ற கொடூர மிருகங்கள் உணவாக எடுத்துக் கொள்கின்றது.

அதைப் போல விஷத்தின் தன்மைகளை நீக்கி நல்ல உணர்வை ஊட்டும் நல்ல அணுக்களை நாம் உடலாகப் பெற்றிருந்தாலும்
1.வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் நமக்குள் வரப்போகும் போது
2.அவைகள் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசித்து
3.விஷம் கொண்ட உடலாக (தசைகளாக) மாற்றுகின்றது.

விஷம் கொண்ட உடலாக மாற்றினாலும் நல்ல உணர்வை உருவாக்கிய நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைக் கொன்று விட்டால்… நமக்கும் இந்தத் “தசையின் எண்ணமே” வருகிறது. அதாவது…
1.நல்ல அணுக்களால் உருவான தசைகளை
2.தீய அணுக்கள் கொன்று புசித்து
3.விஷம் கொண்ட தசையாக மாற்றும் பொழுது
4.அந்த எண்ணம் தான் வருகின்றது.

சாகக்கூடிய தருவாயில் இருப்பவர்களைப் பாருங்கள்,,! வேதனை வந்தது என்றால் அய்யோ…! வேதனையாக இருக்கிறதே… வேதனையாக இருக்கிறதே…! நாம் இப்போதே (உடலை விட்டு) போய்விடுவோமோ என்ற இந்த எண்ணத்தைத் தான் உந்துகின்றது.

அப்போது இந்த உடலின் மீது தான் பற்று வருகின்றது. “உடலை விட்டுப் போகக் கூடாது…!” என்ற நிலையில் அப்போது இது “தசப்பிரியனாகின்றது…!”

அந்த உணர்வின் தன்மை வரப்படும் போது… தான் எதிர்பார்த்த ஒரு ஆகாரத்தையோ அல்லது மற்றதைச் சுவையாகச் சாப்பிட வேண்டும் என்று விரும்பினாலும் செல்வங்கள் ஏராளமாக வைத்திருந்தாலும் நமக்குள் அசுர உணர்வுகளைத் தான் உட்கொள்ள வேண்டி வருகின்றது.

ஏற்கனவே சாப்பிட்ட நல்ல உணவை நாம் சாப்பிட முடியாதபடி அது கழித்து விடுகின்றது. உடலில் நோயானபின் சுவையாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வருகின்றதா…? தூக்கி ஏறி…! என்போம்.

ஆடு புல்லை மேய்கின்றது. ஆனால் அந்தப் புல்லை புலிக்குப் போட்டால் எப்படி இருக்கும்…? மேயுமோ…? மேயாது…!”

ஆடு புல்லை மேய்ந்து அந்தப் புல்லில் உள்ள சாறை எடுத்து அணுக்களின் தன்மையாகி ஆட்டின் உடலாக மாற்றுகின்றது.

அதைப் போன்று தான் மனிதன் நாமும் பல சத்துள்ள ஆகாரத்தைச் சுவை கொண்ட நிலையில் உட் கொண்டு மனிதனாக நல்ல நிலையில் வாழ்கின்றோம்.

ஆனால் நாம் வேதனை… வேதனை.. என்ற உணர்வுகளை எடுக்கப்படும் போது நமக்குள் இருக்கக்கூடிய அணுக்கள் விஷத்தின் தன்மையாக மாறி விடுகின்றது.

விஷத்தின் தன்மையானால் இந்த உடலை உருவாக்கிய அந்த அணுக்களை அது கொன்று தின்ற பின் உடலை நலியச் செய்கின்றது. உடலை மாற்றமடையச் செய்கின்றது.

இதனால் தான் நரகாசுரன் என்று சொல்வது…!
1.நரன் என்றால் மனிதன்.
2.நல்ல மனித உணர்வுக்குள் அசுர உணர்வுகள் இணையும் பொழுது
3.அதை நரகாசுரன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள் ஞானிகள்.

அசுர குணங்கள் நமக்குள் இருந்து கொண்டு நம் நல்ல குணங்களை… நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட இந்த உடலை.. நம் நல்ல செயல்களை அது கொன்று சாப்பிடுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ கோடி உடல்களிலிருந்து தப்பித்து வந்து
1.நம்மை மனிதனாக உருவாக்கிய அந்த நல்ல அணுக்களை எல்லாம்
2.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமையான உணர்வுகள் கொன்று விழுங்குகின்றது என்பதைத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

அதிலிருந்து நாம் மீண்டிட என்ன செய்ய வேண்டும்…?

1.கண்ணின் நினைவு கொண்டு நம் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தி
2.கண்ணுடன் சேர்ந்த காந்தபுலனின் ஆற்றலால் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து
3.கவர்ந்த அந்தச் சக்திகளை அதே கண்ணின் நினைவு கொண்டு
4.உடல் உறுப்புகளை உருவாக்கிய அந்த நல்ல அணுக்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது தீபத்தின் ஒளியால் இருள் விலகுவது போல் நம் உடலுக்குள் ஆட்டிப்படைக்கும் அந்த அசுர உணர்வுகள் “ஒடுங்கும்…!” என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அக நிலைகளுக்கு ஞானிகள் கொடுத்த நிலைகளை நாம் புற நிலைகளில் தான் (தீபாவளி என்று நரகாசுரனை எரிக்கின்றோம்) செய்து கொண்டிருக்கின்றோம்.

நம்மை அறியாது இயக்கும் இதைப் போன்ற அசுர உணர்வுகளிலிருந்து விடுபட ஞானிகள் காட்டிய வழியில் செயல்படுகின்றோமா..? என்று சிந்தித்துப் பாருங்கள்.

சுட்டித்தனமான குழந்தைகளை நம் வழிக்கு எப்படிக் கொண்டு வருவது…?

Image

mother-and-child-care

சுட்டித்தனமான குழந்தைகளை நம் வழிக்கு எப்படிக் கொண்டு வருவது…?

ஒன்றிலிருந்து தொண்ணூறு நாளுக்குள் சண்டை போடுவது வேதனைப்படுவது போன்ற உணர்வுகளை ஒரு கர்ப்பிணியான தாய் உற்றுப் பார்த்து அதைக் கேட்டறிந்து நுகர்ந்தால்
1.கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு அதே உணர்வுகள் விளைகின்றது
2.அவன் பிறந்ததிலிருந்து தாய் தந்தையை எதிர்க்கக்கூடிய நிலைதான் இருக்கும்.
3.ஆயிரம் பேர் புத்திமதி சொன்னாலும் கேட்க மாட்டான்.

ஆனால் கர்ப்பமுற்ற தாயோ சண்டை போட்டவர்களை வேடிக்கையாகத்தான் பார்த்தது.

அதாவது அந்தக் குடும்பத்தில் தவறு செய்பவனைப் பார்த்து நல்லவர்களுக்கு இப்படிக் கெடுதல் செய்கின்றானே என்று எண்ணும்போது அந்தக் கெடுதல் செய்த உணர்வைத் தாய் நுகரப்படும் போது கருவிலிருக்கும் குழந்தைக்கு அது பூர்வ புண்ணியமாகின்றது.

இதைப் பூர்வத்திலே குழந்தை வளர்த்துக் கொண்ட பின் பிறந்து வளர்ந்த பின் அதைத் தான் செய்வான்.

அவனை மாற்ற வேண்டும் என்றால் எந்தச் சாமியாரிடம் போனாலும் ஒன்றும் நடக்காது. எந்தச் சாமியும் எந்த மநதிரமும் ஒன்றும் அவனை மாற்ற முடியாது.

எந்தத் தாய் எதை எடுத்து நீங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கொடுத்தீர்களோ அதே தாய் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று கொஞ்ச நேரம் எடுத்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அப்புறம் பையனை நினைக்கும் போதெல்லாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவன் உடல் முழுவதும் படர வேண்டும்
2.அவன் பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்.
3.அவன் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற வேண்டும் என்று
4.இந்த உணர்வுகளை அவனுக்குப் பாய்ச்சிக் கொண்டேயிருக்க வேண்டும்.
5.அப்பொழுது அவன் உணர்வு உங்களிடம் விளையாது.

அவனுக்குச் சாப்பாடு போடும் போதெல்லாம் இதே மாதிரி துருவ நட்சத்திரத்தை எண்ணிப் பரிமாற வேண்டும். அதே உணர்வுடன் அவனிடம் ஒரு அன்பான வார்த்தையைச் சொல்லி
1.படிப்பில் இந்த மாதிரிச் செய்யப்பா…
2.உன் காரியங்களை எல்லாம் இப்படிப் பக்குவமாகச் செய்யப்பா..!
3.உனக்கு எல்லாம் நல்லதாக வரும் என்று
4.அவன் கண்களைப் பார்த்துச் சொல்லிச் சந்தோஷமாகப் பதிவாக்கிப் பாருங்கள்.
5.இந்த உணர்வுகள் பதிவாகி அவனைச் சரியாக்கும்

டாக்டராகப் படித்து விட்டு வருகின்றவர்கள் ஒரு பைத்தியக்காரன் சரியான நிலைகளில் பேசவில்லை என்றால் என்ன செய்கின்றார்கள்…?

அவன் உணர்வுடன் சேர்த்து அவன் மனதிற்குத் தகுந்த மாதிரிச் சொல்லி மனோதத்துவ ரீதியில் அவனை மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

ரொம்பவும் சுட்டித்தனமாக இருக்கக்கூடிய குழந்தைகளை நீங்கள் மாற்ற இந்த மாதிரி முறைகளைக் கையாண்டு அவர்களை நம் வழிக்குக் கொண்டு வரலாம்.

ஆனால் இதை விட்டு விட்டு பையன் செய்யும் தவறுகளைப் பார்த்து
1.நீ எப்பொழுது பார்த்தாலும் இப்படியே செய்து கொண்டிருக்கின்றாய்
2.தினமும் நான் சாமியைக் கும்பிட்டுக் கொண்டு தான் இருக்கின்றேன்.
3.தினமும் தியானம் செய்து கொண்டு தான் இருக்கின்றேன் என்று இதை எடுத்தால் எப்படி இருக்கும்…?

பற்றாக் குறைக்குக் காசு வைத்திருப்பவர்கள் சம்பாரித்த பணத்தைக் கொண்டு போய் மந்திரக்காரனிடமோ ஜோசியக்காரனிடமோ கொடுத்து விட்டு் கஷ்டத்தையெல்லாம் அவன் போக்குவான் என்றால் அவன் எப்படிப் போக்குவான்.
1.அவன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வான்…!
2.நம்மிடம் இருக்கும் காசை எல்லாம் வாங்கிக் கொண்டு போவான்…! இது தான் நடக்கும்..!

ஆகவே “கஷ்டம்…!” என்ற வார்த்தையை நீங்கள் விட்டுவிட்டு மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெருக்கி பையன் நன்றாக வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்.
1.உங்கள் உடலும் நிம்மதியாகின்றது.
2.உங்கள் சொல் அவனைத் திருத்தவும் செய்யும்.

ஏனென்றால் நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் “நன்மை செய்தோம்…!” என்று எண்ணினால் விக்கலாகின்றது. அதே நண்பனுக்குள் பகைமையானால் “துரோகம் செய்தான் பார்..!” என்று சொன்னால் புரை ஓடுகின்றது.

இது எல்லாருக்கும் தெரிந்தது தான்…!

அதே மாதிரிப் பையன் மேல ரொம்பப் பாசமாக இருக்கின்றோம். அவன் சொன்னபடி கேட்கவே மாட்டேன் என்கிறான் என்ற நிலையில் அந்த வேதனையோடு “ஏன்டா இப்படிச் செய்தாய்…?” என்று தான் பதிவு செய்கிறோம்.

இது அவனை இயக்கி இன்னும் தவறு செய்பவனாகவே ஆக்கும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே பையனைப் பார்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய்
1.நீ நல்லவனாக ஆக வேண்டும்.. நல்லவனாக வருவாய்..!
2.உன் எதிர் காலம் நன்றாக இருக்கும்
3.எல்லோரும் போற்றும் தன்மைக்கு வருவாய் என்று
4.அவன் காதில் படும்படியாக ஒரு நான்கு நாளைக்குச் சொல்லுங்கள்.

பையன் மேல் சங்கடம் வரும் நேரத்தில் எல்லாம் இந்த மாதிரி எண்ணுங்கள். நிச்சயம் அவனை மாற்றும். செய்து பாருங்கள்…!

நல்லதைச் செய்தாலும் எனக்கு நல்லது நடக்கவில்லையே என்று சஞ்சலப்படாதீர்கள்…!

Serene divine lights

நல்லதைச் செய்தாலும் எனக்கு நல்லது நடக்கவில்லையே என்று சஞ்சலப்படாதீர்கள்…! 

தீமைகளை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிய ஞானிகளின் ஆற்றல்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காகப் பல தடவை யாம் உபதேசித்தாலும் மீண்டும் குறைகளைச் சொல்லி உடலின் இச்சைக்குத்தான் கேட்கின்றனர்.

1.மகரிஷிகளின் அருள் ஒளி பெற நாங்கள் வேண்டும்.
2.எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
4.எங்கள் பார்வையில் மற்றவர்கள் இருளை அகற்றும் திறன் நாங்கள் பெற வேண்டும்.
5.எங்களை இருள் சூழாத நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள் பல முறை சொல்லியும் பார்த்து விட்டேன்.

தேடி வருகின்றனர். ஆனால் ஆசை இந்த உடலின் இச்சைக்கே வருகின்றனர். இந்த உடலில் நமக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்றால் அருள் ஒளியைப் பெற்றால் தான் மகிழ்ச்சி பெறும் தன்மையே வருகின்றது.

மகிழ்ந்திடும் உணர்வுகள் உடலுக்குள் வளர வளர ஒளிச் சுடராக ஒளியின் சரீரமாக மாற்றிடும் வல்லமையும் பெறுகின்றது.

இதை நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ முறைகளைச் சொல்கின்றேன். வருவோர் எல்லாம்
1.அவர்களுடைய குறைகளின் வலிமையைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே தவிர
2.அதிலிருந்து விடுபடும் வலிமையான சக்தியைப் பெறவேண்டும்…!
3.எங்கள் காரியங்கள் வெற்றியாக வேண்டும்…! என்று கேட்போர் இல்லை.

ஏனென்றால் நீங்கள் எல்லோரும் வாழ்க்கையில் அறியாது வரும் இருளிலிருந்து மீள வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றோம். அந்த மகா ஞானிகளின் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று அருள் ஒளியைப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெற்றாலும் தனக்குள் இருளை வைத்து அதை மறைத்து விட்டு அதை வளரவிடாது செய்யும் நினைவாற்றலே உங்களுக்குள் பெருகுகின்றது.

அதைப் பிரித்துக் கொண்டே தான் இருக்கின்றேன். ஆகவே ஆறாவது அறிவின் திறனைப் பயன்படுத்தி அருள் ஒளிச் சுடரை உங்களுக்குள் உருவாக்கும்.

எதற்காக இதைச் சொல்கிறோம் என்றால்
1.ஒரு அழுக்கு நீரில் நந்நீரை விட்டால் முதலில் அதுவும் அழுக்காகத் தான் செய்யும்…
2.நல்லதை விட்டாலும் அழுக்காகத்தான் போகும் என்ற மனக் குழப்பத்தையும் உண்டாக்கும்…! பலவீனமும் ஆகும்…!
2.ஆனால் நந்நீர் அதற்குள் “சேர…சேர…சேர…” அழுக்குகள் மறையத்தான் செய்யும்.

உங்களை நம்பி இதைச் செய்து பாருங்கள். உங்களுக்குள் அற்புதத்தை நிகழ்த்த முடியும்.

நம் உடலிலுள்ள ஜீவான்மா சுத்தமானால்தான் “நம் உயிரான்மா ஒளியாகும்…!”

Image

Venkateswara, Lakshmi devi

நம் உடலிலுள்ள ஜீவான்மா சுத்தமானால்தான் “நம் உயிரான்மா ஒளியாகும்…!”

 

நீங்கள் ஒரு சமயம் பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள். கஷ்டம் என்று சொல்கின்றீர்கள். அது என்னிடம் பதிவாகிவிடுகின்றது. அதே போல நீங்கள் அடுத்தவர்களுடைய கஷ்டங்களைக் கேட்கின்றீர்கள். அது உங்களிடம் பதிவாகிவிடுகின்றது.

இப்படி அந்தக் கஷ்டம் என்ற உணர்வின் வலிமை தான் ஒவ்வொருவருக்குள்ளும் சேர்கின்றது. இதைக் காட்டிலும் வலிமையான நல்ல உணர்வைச் சேர்க்கின்றோமா…? என்றால் இல்லை.

அதற்குத் தான் அந்த இருளை வென்ற
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.மகரிஷிகளின் உணர்வுகளை எல்லோரும் பெற்று அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்.

அதிகாலையில் படுக்கையில் எழுந்தவுடன் ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று நம் கண்களின் நினைவாற்றலை அங்கே கொண்டு போக வேண்டும்.

துருவ தியானத்தில் அங்கே நம் பூமியின் வட துருவப் பகுதியில் விண்ணிலே உள்ள அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் ஒன்ற வேண்டும். அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் இணைகின்றது. தீமைகள் புகாது தடுக்கின்றோம்.

மற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிகின்றது. நம் கண் தான் காட்டுகின்றது. நீங்கள் போய் உதவி செய்கின்றீர்கள். ஆனால் அவனுக்குள் அந்தக் கஷ்டம் இருக்கத்தான் செய்கின்றது.

பாலில் நஞ்சு விழுந்து விட்டது என்றால் என்ன செய்யும்..? அந்த நஞ்சு பாலுக்குள் இறங்கி விடுகின்றது. அதை யார் குடித்தாலும் இறந்துவிடுவார்கள்.

கஷ்டம் என்று யார் கேட்டாலும் அடுத்த நிமிடம் தப்புவிக்கின்றதற்குக் கண்ணன் தான் வழி காட்டுகின்றான். ஒருவன் கெடுதல் செய்தாலும் அதிலிருந்து தப்பிப்பதற்கு இந்தக் கண் தான் வழி காட்டுகின்றது.

1.உடலைத் தான் காக்க முடிகின்றது
2ஆனால் நாம் நுகர்ந்த அந்தக் கஷ்டமான உனர்வையோ கெடுதல் செய்யும் உணர்வையோ
3.அதில் சிக்காமல் காப்பாற்ற வேண்டுமா…? இல்லையா…?

அதைப் பழக்கப்படுத்துவதற்குத்தான் “ஈஸ்வரா “என்று சொல்லி உயிரை எண்ணி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
4.பிறர் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் மகரிஷியின் அருள் சக்தியால் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
5.வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ அந்த வைரத்தைப் போல வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்.
6.எங்கள் செயல் அனைத்தும் வைரத்தை போல ஜொலிக்க வேண்டும் என்று
இப்படி நாம் எண்ணிப் பழக வேண்டும்.

எல்லாரும் இப்படி எண்ணும் போது என்ன நடக்கின்றது…? காலையில் ஆறு மணிக்கு மேல் சூரியன் வந்தவுடனே நாம் இழுக்க மறுத்த தீமையான உணர்வலைகளைக் கவர்ந்து சூனியப் பிரதேசத்திற்குக் கொண்டு போய் விடுகின்றது.

அப்போது
1.நம் பரமான இந்தப் பூமி பரமாத்மா சுத்தமாகின்றது.
2.நம் ஆன்மாவும் சுத்தமாகின்றது.
3.நம் ஜீவ ஆன்மாவும் சுத்தமாகின்றது.

துருவ நட்சத்திரத்தை நினைவுபடுத்தி ஒவ்வொரு நிமிடமும் அதை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

1.நமக்கு முன்னாடி இருக்கும் இந்தக் காற்று மண்டலத்தைச் (பரமாத்மா) சுத்தப்படுத்தினால் நம் ஆன்மாவிற்குள் நல்ல உணர்வுகள் படர்கின்றது.
2.நம் ஆன்மாவில் நல்ல உணர்வுகள் படர்வதால் அதைச் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள் உள்ள ஜீவான்மா சுத்தமாகின்றது
3.ஜீவான்மா சுத்தமாகும் பொழுது “நம் உயிரான்மா ஒளியாகின்றது…!

வள்ளி திருமணம் – இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி

Image

star-light-spiral

வள்ளி திருமணம் – இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி

 

உயிரினங்களில் தன்னைப் பாதுகாக்கும் உணர்வுகள் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி அதிலே விளைந்த உணர்வுகள் தான் ஒட்டு மொத்தமாக நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கின்றது நமது உயிர்.

மனிதனான பின் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை அகற்றிடும் நிலையாக அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் எடுக்கும் போது “கார்த்திகேயா…!” என்று சாஸ்திரங்கள் உணர்த்துகின்றன.

இதைத் தெளிவாக்குவதற்காக “வள்ளி திருமணம்”என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்,

வள்ளி திணைக் காட்டிலே காவல் காத்துக் கொண்டு இருக்கின்றாள். தான் விளைய வைத்த பொருளை மற்றது கொத்தித் தின்று விடாதபடி அங்கே காவல் புரிகின்றாள்.

வெகு தூரத்தில் இருந்து வருவதைத் தன் பாதுகாப்புக்காக வேண்டி கவண் கொண்டு வீசுகின்றது. அவள் யார்…? வேடுவனின் மகள்.

சாதாரண மக்களும் புரியும் தன்மையாக வேடுவன் என்றால்
1.நாம் பல கோடிச் சரீரத்தில் வேட்டையாடி வேட்டையாடி
2.அதிலே விளைந்த சக்தி தான் இந்த உடலில் ஆறாவது அறிவு.
3.இது தான் வள்ளி.

பாதுகாக்கும் சக்தி – வலிமை – வல்லவன் – வல்லவி = “வள்ளி”

வல்லவன் “வல்லவி…” வள்ளி என்று பெண்பாலைக் காட்டி எதைத் தன்னுடன் இணைத்துச் செயல்பட வேண்டும் என்பதை “வள்ளி திருமணம்” என்ற காவியமாகப் படைத்துத் தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
1.அந்த வள்ளியை “முருகன் காதலிக்கின்றான்….!”
2.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
3.இந்த வலிமை மிக்க சக்தியைத் தனக்குள் நேசிக்க வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டு உடல் பெற்றவன் முருகா… “முருகு….” முருகு என்றால் மாற்றி அமைக்கும் சக்தி.

தீமையை மாற்றியமைக்கும் உடல் பெற்றவர்கள் மனிதர்கள் என்றும் தன்னைப் பாதுகாக்கும் இந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்று காவியப் படைப்பு வருகின்றது.

நம்மை ஏசுவோரையும் நமக்குத் தீமை செய்வோரையும் நாம் எண்ணிக் கொண்டிருந்தால் என்றால் அது நம்முடைய நல்ல உணர்வைத் தின்றுவிடும்.

வேதனைப்படுவதை ஒருவர் சொல்லி விட்டால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தின்றுவிடும்.

அதாவது வேதனை வேதனை என்று அதை நாம் நுகர்ந்தால் டி.பி. நோய் வருகின்றது. நம் நல்ல குணங்களை உடலை அது தின்று விடுகின்றது.

அதைத் தான் திணைக் காட்டில் குருவியை உட்கார விட்டோம் என்றால் அதில் விளைய வைத்ததைத் தின்று விட்டுப் போய்விடும். வள்ளி அவ்வாறு ஆகாதபடி அதைக் காவல் காக்கின்றாள் என்று காட்டினார்கள் ஞானிகள்.

1.நம்மைப் பாதுகாக்கும் உணர்வை நாம் நேசித்தால்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தால்
3.நம் உடலுக்குள் சென்றபின் “தெய்வ ஆணை…!”
4.இந்த உடலில் காத்திடும் செயலாக உயிர் இயக்குகின்றது.

உயிர் = தெய்வம்; இயக்கம் = ஆணை – “தெய்வ ஆணை”

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த வலிமை மிக்க சக்தியை (வள்ளி) நேசித்தால் அது நம் உயிரிலே பட்டுத் தெய்வமாக – தெய்வ ஆணையாக இயக்கும்.
1.தெய்வச் செயலாக நம்மைச் செய்ய வைக்கும்.
2.தெய்வீக நிலையைப் பெறச் செய்யும்.
3.அதைத் “திருமணம் செய்து கொள்…!” என்று தான் வள்ளி திருமணத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.

சாஸ்திரப்படி முருகனுக்கு முதல் மனைவி யார் என்று கேட்டால் வள்ளி என்று சொல்ல மாட்டார்கள். தெய்வானை அப்புறம் ஆசைக்காக வேண்டி வைத்துக் கொண்டது தான் மனைவி வள்ளி.

அன்பினால் இருப்பது தெய்வானை என்றும் ஆசைக்காக வேண்டி வள்ளி என்றும் இப்படி ஞானிகள் கொடுத்த உண்மையைத் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள்.

இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…! அதாவது தன்னைப் பாதுகாக்கும் நிலைகளின் மீது இச்சைப்படும் போது நம் உடலுக்குள் செல்லும் போது கிரியை.

எதன் எண்ணத்தால் நாம் இச்சைப் படுகின்றோமோ அதன் ஞானமாக நம் உடலில் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று இதைத் தெளிவாகச் சாஸ்திரம் காட்டுகின்றது.

1.என்னை இப்படிப் பேசி விட்டானே…!
2.என்னை இப்படிக் கேவலப்படுத்துகின்றானே…! என்று
நாம் பிறர் செய்யும் நிலைகளை உற்றுப் பார்க்கின்றோம்.

என்னை இப்படிப் பேசிவிட்டானே.. “அவனைச் சும்மா விடுவதா..?” என்ற எண்ணங்கள் கொண்டு அதை இச்சைப்படும் போது நம் உடலுக்குள் அது தெய்வ ஆணையாக இயக்குகின்றது.

அவன் எந்தெந்தக் கெடுதலை எல்லாம் செய்தானோ அவை எல்லாம் நமக்குள் இயக்குகின்றது.
1.அதன் ஞானமாக நம் செயலும்
2.நம் உறுப்பும் உணர்வும் அணுக்களும் விளைகின்றது.
3.நோயாகி இந்த உடலையே நலியச் செய்கின்றது

வள்ளி திருமணத்தைக் காட்டியவுடனே அதைப் பார்த்துச் சிரிப்பதும் கை தட்டுவதிலும் தான் நாம் இருக்கின்றமே தவிர சாதாரண மக்களும் புரிந்து உன் வாழ்க்கையை எவ்வாறு நீ வாழ வேண்டும் என்பதைத்தான் அதிலே காட்டினார்கள்.

ஆகையினால் நாம் எதை இச்சைப்பட வேண்டும்…?

இந்த வலிமை மிக்க ஆறாவது சக்தியின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சை அதன் மீது பட வேண்டும்.

அந்த உணர்வின் சக்தி நமக்குள் இருக்கும் போது தெய்வ ஆணையாக நமக்குள் செயல்படும் சக்தியாக வர வேண்டும். அதன் ஞானமாக இந்த உணர்வுகள் நம் உடலில் இயக்கப்பட்டு அதனின் பண்பு கொண்டு நம்மை மெய் வழியில் அழைத்துச் செல்லும்.

இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி சொல் மூன்று தான்.

எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அதன் இச்சையின் செயலாகக் கிரியையாகி அதன் ஞானமாக நம்மை வளர்க்கும் என்ற பொதுச் சொல்லை அங்கே இட்டார்கள் ஞானிகள்.

எதிலேயும் எப்படி நாம் எதை இச்சைப்பட வேண்டும்…? என்று தத்துவம் தான் அதிலே கொடுக்கப்பட்டு உள்ளது.

முருகன் கோயிலுக்குப் போகின்றோம் என்றால் இன்று நாம் எதை இச்சைப்படுகின்றோம்…?

முருகா… நான் இந்த மாதிரி தொழில் எல்லாம் செய்து கொண்டு இருந்தேன். நான் கொடுத்தவன் எல்லாம் எனக்குக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டான்.

நான் யாருக்குமே துரோகம் செய்யவில்லை. நான் கொடுத்துக் கொண்டு இருக்கின்றேன். ஆனால் எனக்கு இப்படித் தொல்லையைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றானே என்று
1.வேதனையையும் ஆத்திரத்தையும் கோபத்தையும் இங்கு வளர்க்கப்படும் போது
2.இந்த இச்சை நமக்குள் கிரியையாக வளர்கின்றது.
3.நாம் எதை இச்சைப்பட்டால் நுகர்ந்த உணர்வின் இயக்கமாக உடல் இச்சை தான் வருகின்றது

ஆனால் தன்னைக் காக்கும் வழி முறை எது என்று அன்று ஞானிகள் சொன்னார்கள். அந்த ஆறாவது அறிவு கொண்டு நாம் எதை எண்ண வேண்டும்?
1.இந்த ஆலயம் வருவோர் எல்லாம் இந்த அறுகுணத்தின் சக்தி பெற வேண்டும்.
2.இந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று இவ்வாறு நாம் எண்ண வேண்டும்.

இவ்வாறு எண்ணினால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் ஞான சக்தியாகப் பெருகி அழியா ஒளிச் சரீரம் பெற முடியும். மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.

புத்தாடையை நாம் அணிந்திருந்தாலும் “சுருக்…” என்று யாராவது சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா…? – எதைப் புத்தாடையாக அணிய வேண்டும்…?

Image

Bliss light soul

புத்தாடையை நாம் அணிந்திருந்தாலும் “சுருக்…” என்று யாராவது சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா…? – எதைப் புத்தாடையாக அணிய வேண்டும்…?

 

வேதனைப்படுத்துகின்றார்கள் என்று தெரிகின்றது. அவர்களால் மற்றவர்கள் வேதனைப்படுகின்றார்கள் என்றும் தெரிகின்றது. இரண்டையும் தான் நாம் நுகர்கின்றோம்.

வேதனைப்படுபவர்கள் மீது நாம் பிரியமாக இருந்தால்… “இப்படிச் செய்கிறான் பார்…!” என்று நாமும் அந்த வேதனையை நுகர்கின்றோம்.

வேதனைபடுத்துவனைப் பார்த்து இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றான் என்று ஆத்திரத்தை நுகர்கின்றோம்.

வேதனையையும் ஆத்திரத்தையும் இந்த இரண்டையுமே நாம் வளர்க்கின்றோம். இது இரண்டையும் நம் எண்ணத்துடன் சேர்த்தவுடனே வேதனை ஒரு பகுதி வளரும். ஆத்திரம் ஒரு பகுதி வளரும்.

அவர்கள் எப்படிப் பகைமையை வளர்த்தார்களோ அந்தப் பகைமையான அணுக்களே நமக்குள் விளைகின்றது. எதிரியை உள்ளே விட்டுவிடுகின்றோம்

இரண்டு பேரும் சண்டை போட்டு விட்டுப் போய் விடுவார்கள். நாம் இதைப் பார்த்து விட்டு வீட்டிற்குள் வருகின்றோம். பார்த்துவிட்டு வந்த பின்
1.நிம்மதியாகச் சோறு சாப்பிட முடியுமா…?
2.சமையலைச் சரியாகச் செய்வீர்களா…? வேலையைச் சீராகச் செய்வீர்களா…?
3.அப்போது நம் ஆன்மாவில் பட்ட அந்த அழுக்கை நீக்க வேண்டும் அல்லவா…!

அதற்குத்தான் மகரிஷிகளின் அருள் ஒளியை நம் ஆன்மாவில் புத்தாடையாக அணிவதற்காகத் தீபாவளி என்று காட்டுகின்றார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் சண்டை போட்ட இருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை நம் ஆன்மாவில் பெருக்க வேண்டும்.

அந்த உணர்வை நமக்குள் வளர்த்துப் பழக வேண்டும். அந்த வேதனையான உணர்வை அது அடக்கிவிடும்.

நீங்கள் வெறுமனே புது சட்டையைப் போட்டுவிட்டு அன்றைக்கு “சுருக்…!” என்று ஒருவர் சொல்லி விட்டால் என்ன ஆகும்…? மகிழ்ச்சியாக இருக்குமா…?

நல்ல வெள்ளை சட்டையைப் போட்டிருக்கின்றோம். ஒருவன் கல்லைக் கொண்டு எறிகின்றான். சாக்கடையில் விழுந்து தெறித்து நம் வெள்ளைச் சட்டையில் பட்டுவிட்டது.

அப்பொழுது என்ன சொல்கிறோம்…? நாம் போகும் போது கல்லைக் கொண்டு எறிகின்றான் பார்…! அயோக்கியப்பயல்…! என்று
1.அவன் மீது வெறுப்படைகின்றோம்
2.சட்டை அழுக்காகிப் போகின்றது
3.மனதும் அழுக்காகிப் போய் விடுகின்றது.

அதை நாம் மாற்ற வேண்டுமா இல்லையா…! நம் மனதைத் தூய்மைப்படுத்த வேண்டுமல்லவா…!

சந்தர்ப்பத்தால் நம் வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளிலிருந்து விடுபடும் நிலையைத்தான் ஞானிகள் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தியவன் மகரிஷி. அந்த அருள் ஒளியை நமக்குள் பெற்று நம் ஆன்மாவில் அழுக்கு சேராமல் உடனுக்குடன் துடைக்க வேண்டும்.

இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்,

தெய்வத்தை வணங்கச் செல்லும் ஆலயங்களுக்குள்ளும் தீவிரவாதம் வந்து விட்டது…!

Image

kali-purush

தெய்வத்தை வணங்கச் செல்லும் ஆலயங்களுக்குள்ளும் தீவிரவாதம் வந்து விட்டது…!

 

மனிதனுக்கு மனிதன் ஒரு மதத்தின் அடிப்படையிலோ அல்லது மொழியின் அடிப்படையிலோ இனத்தின் அடிப்படையிலோ அந்த இனத்தின் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை என்று அறிந்து கொண்டால்
1.அந்த மத குருக்கள் காட்டிய நெறிப்படி அதைத் தவறு என்று சொன்னால்
2.அந்த இனத்தைச் சேர்ந்தவனே தீவிரவாதம் கொண்டு அவனைக் கொல்கின்றான்.

ஆண்டவன் என்ற நிலையில் பக்தி கொண்டு இருப்பினும் ஆண்டவனை வணங்கும் அத்தகைய ஆலயங்களிலும்
1.அங்கு வருவோருக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்
2.அவர்கள் பொருளை அபகரிக்கின்றார்கள்
3.அந்தத் தெய்வத்தின் பொருளையும் அபகரிக்கின்றார்கள்.

அவன் உணர்வுகள் அதுவாகின்றது. அது போல ஆலயங்களில் தவறு செய்யக் கூடாது என்றாலும் சில கொலையாளிகளுக்கு அங்கு தான் சந்தர்ப்பம்… இடம்.. எல்லாமே…!

தெய்வத்தை வணங்கிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் தாக்கி கொன்று விட்டுச் சென்றால் “யார்..? எவர்…? என்று பார்க்க முடியாது என்று ஆலயங்களுக்குள்ளேயே இத்தகைய செயல்களைச் செய்கின்றார்கள்.

இதை எல்லாம் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள்.

1.நாம் வழிபடும் தெய்வங்கள் நம்மைக் காக்கும் என்ற நோக்கத்தில் தான் ஆலயங்களுக்குச் செல்கின்றோம்…!
2..ஆனால் அந்தத் தெய்வம் எப்படி காக்கும்…?

ஞானிகளால் உருவாக்க்கப்பட்ட ஆலயங்களில்
1.அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்து வளர்த்து
2.நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த உணர்வுகளை ஒரு மனிதனுக்குள் பாய்ச்சப்படும் போது
3.நம்முடைய சொல் அவனுடைய உடலில் பாய்ந்து அது தெய்வமாக இயக்கும் தன்மை வருகிறது
4.நம் செயல் தெய்வச் செயலாகின்றது.

தவறு செய்யும் நிலைகளிலிருந்து மீட்டிட அவன் அதை எடுக்கவில்லை என்றால் அவனுடைய குற்றமே ஆகும். ஆனால் நமக்குள் தீமை வராது பாதுகாத்துக் கொள்ளும் தன்மை வரவேண்டும்.

இன்று ஒவ்வொரு மதங்களிலும் எடுத்துக் கொண்டால் ஆலயங்களில் தீவிரவாதம் என்ற நிலைகள் கொண்டு
1.நான் வணங்கும் முறைகள் வேறு
2.நீ வணங்கும் முறைகள் வேறு என்று
3.ஆலயத்தில் தொழுது கொண்டு இருப்பவனையே சுட்டுக் கொல்கின்றனர்.

எல்லா மதங்களிலும் இத்தகைய தீவிரவாதங்கள் வந்து ஆண்டவனின் பெயரைச் சொல்லித் தான் கொலை களங்களை ஏற்படுத்துகின்றனர். மதங்களுக்குள் உள்ள இனங்களிலும் தன் இனத்தை அவமதிக்கிறான்.

ஆண்டவனோ கடவுளோ தெய்வமோ என்ற நிலை இருப்பினும் நல்லதைச் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களும்
1.அந்த தெய்வத்திற்கு மாறுபட்ட நிலைகளில் சிலர் செல்கிறார்கள் என்று அறிந்த பின்
2.தெய்வத்தின் உண்மை நிலையை உணர்த்திட
3.அந்த தெய்வத்தின் சக்தியை அவனுக்குள் பாய்ச்சி
4.அவனைத் தவறிலிருந்து திருத்தச் செல்லும் நிலைகளுக்கு மாறாக
5.அவனைக் கொன்று குவிப்பது என்ற நிலைக்கே செயல்படுத்துகின்றனர்.

மதங்கள் இவ்வாறு இயக்கப்பட்டு அரசியலிலும் தீவிரவாதம் என்ற நிலைகள் புகுத்தப்பட்டுவிட்டது.

அரசியல் பண்புகளைக் கெடுக்கின்றான் இவனை எப்படி வாழ விடுவது…? நமது அரசியலுக்கு இவன் இழுக்காக இருக்கின்றான். ஆகவே இவனைக் கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வு தான் வருகிறது.

நாட்டின் அரசியல் மாண்பைக் காக்க வேண்டும். தவறின் வழியில் செயல்படுபவனையும் நல்லவனாக ஆக்க வேண்டும் என்ற உணர்வுகள் எங்குமே தோன்றுவதில்லை.

இதைப் போல ஒவ்வொரு நொடியிலும் தீவிரவாதம் என்ற விஷத் தன்மைகள் அனைத்து மனித உடல்களிலும் புகுந்து விட்டது. குடும்பத்திலும் சரி… தொழிலும் சரி… பொது வாழ்க்கையிலும் சரி…! எல்லா இடங்களிலும் இந்த நிலை ஆகிவிட்டது.

குடும்பத்திற்குள் எடுத்துக் கொண்டால் ஒருவன் பிடிவாதமாக இருக்கும் போது
1.அவன் இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்…
2.”அவனைத் தொலைத்தால் தான் சரியாக இருக்கும்..!” என்ற உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்கின்றனர்.
3.உடல் பற்றுடன் இத்தகைய உணர்வுகளை எடுத்தோம் என்றால் இது நமக்குள் தீவிரவாதமாகி விடுகிறது.

தீவிரவாதமாக்கப்படும்போது சிவ தனுசாக மாறுகிறது. மீண்டும் பிறவிக்கு வரும் தன்மையே வருகிறது. இதைப் போன்ற நிலைகள் அது நமக்குள் இயக்காதபடி அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நமது வாழ்க்கையில் அவ்வப்பொழுது வரும் தீமைகளை அகற்றுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நாம் பருகி நம் ரத்த நாளங்களிலே கலந்து அந்த உணர்வின் தன்மையை வலிமையாக்கி விட்டால் மற்றவர்கள் சொல்லும் எந்த உணர்வுகளும் நம்மை இயக்காது.

நாம் வெளிப்படுத்தும் நல் உணர்வின் சொற்கள் நம்மைக் காக்கும். நம் உணர்வின் தன்மையை வலிமை ஆக்கும்.

1.குறுகிய காலமே வளர்ந்து வரும் நாம் பேரருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவது தான்
3.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி.

நாம் பார்ப்பது அனைத்தும் நமக்குள் ஊனாகி உடலானாலும் அதை நாம் ஆலயமாக்குகின்றோமா…? ஞானிகள் சொல்லும் அந்தத் தெய்வீக நிலைகளைப் பெறுகின்றோமா…?

Image

Thirumoolar

நாம் பார்ப்பது அனைத்தும் நமக்குள் ஊனாகி உடலானாலும் அதை நாம் ஆலயமாக்குகின்றோமா…? ஞானிகள் சொல்லும் அந்தத் தெய்வீக நிலைகளைப் பெறுகின்றோமா…?

 

பிறருடைய துன்பத்தை நாம் நுகர்ந்த பின் அவரின்று நாம் விலகிச் செல்லவில்லை. ஏனென்றால் நமது கண்களில் உள்ள கரு விழி படமாக்கி நம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

சூரியனின் வெப்ப காந்தங்கள் தாவர இனங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவர்ந்து வைத்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது.

மீண்டும் அந்தத் தாவர இனத்தில் விளைந்த வித்திற்கு கவர்ந்து வைத்த அலைகளை அந்தந்தத் தாவரத்திற்கு உணவாகக் கொடுத்து அந்த இனத்தை வளர்க்கச் செய்கின்றது.

தாவர இன சத்தைக் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்வது போல ஒவ்வொரு உயிரினங்களில் (மனிதருக்குள்) விளைந்த உணர்வுகளையும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அந்தந்தக் குணத்தின் அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது.

எவரொருவர் உற்றுப் பார்க்கின்றனரோ எந்தக் குணத்தை நுகர்கின்றார்களோ அது அவர் உடலுக்குள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிந்து அந்த உண்மையின் உணர்வை உணர்த்துகின்றது.

பிறதொருவர் உடலில் விளைந்த உணர்வின் தன்மை நமக்குள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாகும் பொழுது அந்த வினை நமக்குள் வளரத் தொடங்குகின்றது.

நம் உயிரோட வேலை எது…?
1.தான் நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது.
2.அணுவின் மலம் நம் உடலாகின்றது.

உதாரணமாக உடலிலிருந்து இயற்கையாக நாம் கழிக்கின்றோம். அதற்குள் ஜீவ அணுக்கள் உருவாகின்றது. அப்படி உருவாகும் ஜீவ அணு மலத்தில் இருந்து கவரும் உணர்வை அந்த மலத்தையே உணவாக்கிப் புழுவாகி விடுகின்றது.

புழு மலத்திலிருந்து தவறி வெளியில் போனது என்றால் மடிந்து விடுகின்றது.

இதைப்போல அதனின் மலம் தான் நாம்

இது எனது…! நமது…! நாம்…! “எனது சரீரம்…!” என்பது எல்லாமே அணுக்களின் மலம் தான் நம் சரீரம். அதனின்று ஜீவ அணுக்கள் குடிகொண்டு நமக்குள் ஒன்றென்ற நிலைகள் இணைத்துச் செயல்படுகின்றது.

எனது என்று சொன்னாலும் உயிருடன் ஒன்றிய இயக்கமாக உடலாக வரும் போது மகிழ்ச்சியின் தன்மை வரும் போது… “எனதாகின்றது….!”

ஆனால் அதே சமயத்தில்
1.ஒரு வெறுக்கும் உணர்ச்சியைத் தனக்குள் எடுத்து
2.அந்த வேதனை என்ற உணர்வு வரப்போகும் போது
3.எனது என்ற நிலைகள் வந்தாலும்
4.எனக்குள் எப்போதும் அந்தத் துன்பத்தின் உணர்வின் தன்மையே உருவாக்குகின்றது.

அந்த வேதனையின் உணர்வுகள் அதிகரித்து விட்டால் அந்த வேதனையான அணுக்களைப் பெருக்கும் தன்மையை இங்கே உடலுக்குள் வளர்க்கின்றது அந்த உயிர்.
இந்த உணர்வைத் தாங்காது உயி எப்போது இந்த உடலை விட்டு வெளியேறலாம் என்ற உணர்வின் வலுவைப் பெறுகின்றது.

ஆனால் இந்த உடலை விட்டுச் சென்றபின் அந்த வேதனையைத் தாங்கும் சக்தி கொண்ட உணர்வின் உடலாக மாற்றுகின்றது உயிர். ஏனென்றால்
1.அது நுகர்ந்த உணர்வைக் (வேதனை) காத்திடும் உணர்வுகள் அணுக்களாக உருவானதால்
2.அந்த அணுவின் மலமாகி அந்த உடலாகின்றது.

மகிழ்ச்சி தரும் உணர்வு வரப்போகும் போது உடலின் தன்மை மகிழ்ச்சி அடைகின்றது.

வெறுப்படைந்த வேதனையான உணர்வுகள் எல்லை கடந்து வரப்போகும் போது இந்த உடலை விட்டுப் பிரித்திடும் நிலை வருகின்றது.

அதாவது மகிழ்ச்சியான உடலுக்குள் வேதனையான அணுக்களின் மலம் இணைக்கப்படும் பொழுது அது ஒவ்வாது
1.இரத்தத்தை உருவாக்கும் அணுக்கள்
2.இரத்தத்தை நீராக மாற்றும் அணுக்களாக வந்து விட்டால்
3.நமக்குள் இயக்கச் சக்தி சோர்வடைகின்றது
4.உடல் உறுப்புகள் கரையத் தொடங்கி விடுகின்றது.

ஒன்று நம்மை வளர்க்கின்றது. மற்றொன்று கொல்கின்றது என்ற நிலைகளை நாம் அறிகின்றோம்.

ஆறாவது அறிவு கொண்ட நாம் கார்த்திகேயா. கார்த்திகேயா என்றால் வெளிச்சம். அறியும் சக்தி வருகின்றது.

வாழ்க்கையில் துன்பங்கள் வரும் பொழுதெல்லாம் நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் விளைய வைத்தால் ஒளியின் அணுக்களாக உடலுக்குள் உரு பெறும்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகள் ஒளியின் சுடராகப் பேரொளியாக மாறும் பொழுது உயிராத்மா ஒளியாகின்றது. அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.

ஞானிகள் இப்படித்தான் ஒளிச் சரீரம் பெற்றார்கள். விண்ணுலகில் இன்றும் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

இதைத்தான் திருமூலர் ஊன்… உடம்பு… “ஆலயம்…!” என்றார்.

கோகர்ணத்தில் கடலில் நெருப்பைக் கண்ட நேரடி அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

Image

FIRE IN OCEAN

கோகர்ணத்தில் கடலில் நெருப்பைக் கண்ட நேரடி அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

 

இடி மின்னல் வந்தாலும் கடலுக்குள் தாக்கியவுடனே என்ன செய்கின்றது…? இது இழுத்து வைத்துக் கொள்கின்றது. ஹைட்ரஜனாக (HARD WATER) மாற்றுகின்றது.

அதனால் கடல் நீருக்குள் அணு இயக்கச் சக்தி அதிகமாக வருகின்றது. பாருங்கள்…! கடலுக்குள் தண்ணீர் மோதினால் “பளீர்…!” என்று நெருப்பே தெரியும்.

ஹைட்ரஜன் அந்த அணு இந்த வினைகள் ஒன்றோடொன்று மோதும் போது தான் இது வருகின்றது. புயல் வரும் போது பார்த்தால் கடலில் இருந்து பெரிய தீயே பறக்கும்.

அதைப் பார்க்கத்தான் குருநாதர் என்னைக் (ஞானகுரு) கோகர்ணத்திற்குப் போகச் சொன்னார். அங்கே போயிருக்கும் போது பெரிய மழை வருகிறது.

அதைப் பார்த்ததும் அங்கே இருக்கின்றவர்கள் எல்லாம் எழுந்து ஓடினார்கள். என்னடா ஓடுகின்றார்கள் என்று பார்த்தால் அவர்களுக்கு அனுபவம் இருக்கின்றது. எனக்கு அனுபவம் இல்லை.

இங்கே ஓரத்தில் மணல் மேடு இருக்கிறது. தண்ணீர் எங்கேயோ இருந்து வருகிறது. வந்தவுடனே அடித்து என்னைத் தூக்கி இந்தப் பக்கம் கொண்டு வந்து போட்டுவிட்டது.

மழை பெய்கிறது என்று கையில் குடையை விரித்து வைத்திருந்தேன். அடுத்து பார்த்தால் குடையைக் காணோம். வெறும் கம்பி மட்டும் தான் இருக்கிறது.

கோகர்ணம் கோயிலுக்குப் பக்கத்தில் அழுக்குத் தண்ணீர் எல்லாம் போகின்றது. அதைத் தாண்டி அந்தச் சுவற்றில் மேலே அந்தப் பக்கத்தில் கொண்டு போட்டு விட்டது.

இந்தப் பக்கம் விழுந்தாலும் தண்ணீர் கடலுக்கடியில் பின்னாடி இழுத்துக் கொண்டு ஓடிவிடும். எல்லாரும் எழுந்து ஓடிப் போய்விட்டார்கள்.

ஆனால் நான் ஆனந்தமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் கடலுக்குள் அங்கே “படீர்….ர்ர்ர் படீர்…ர்ர்ர்…!” என்று நெருப்பு வருவதை எல்லாம் காட்டுகின்றார்.

ஏனென்றால் குருநாதர் அங்கே இருக்கச் சொல்கின்றார். நான் என்ன செய்யட்டும்…? அவர் சொல்வதைத்தானே நான் செய்ய முடியும்.

பாறை மேல் நின்று ஆனந்தமாக பார்த்த்க் கொண்டிருந்தேன். கொஞ்ச கொஞ்சமாக அலைகள் வந்து கடைசியில் என்னைத் தூக்கிக் கொண்டு மல்லாந்து போட்டுவிட்டது.

ஒவ்வொரு இடத்திலேயும் இந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கின்றது…? என்று காட்டுகிறார்.

இந்தப் பக்கம் மலை மேல் கோகர்ணத்திற்குப் போக வேண்டும். இடது புறத்தில் ராமர் கோவில் இருக்கின்றது அந்த ராமர் கோயில் போகின்ற இடத்தை ஒட்டி கொண்டு வீடுகளெல்லாம் இருக்கின்றது.

ராமர் கோயிலுக்குப் போனோம் என்றால் அங்கே ஒரு விதமான அலைகள் இழுக்கின்றது. இதை விட்டு விட்டு நேராக மேலே போனால் காளி கோயில். அங்கே போக முடியாது கம்பி போட்டு வைத்து இருக்கின்றார்கள்.

கடல் தண்ணீர் கீழே இருக்கின்றது. அலைகள் வருவதைப் பார்த்தோம் என்றால் அதிலிருக்கும் காந்தப் புலன் “கிர்…!” என்று இழுக்கின்றது.

இழுக்கின்றது என்றால் அந்தக் காற்று அப்படியே அடித்து ஆளையே உள்ளே இழுக்கின்றது. அதனால் தான் கம்பியைப் போட்டு வைத்துள்ளார்கள்.

அங்கே அர்ச்சனை எல்லாம் செய்து கொண்டு இருப்பார்கள். கீழே குகை இருக்கின்றது. அங்கே செல்ல வேண்டும் என்றால் நடந்து தான் போக வேண்டும்.

அதற்கப்புறம் பரசுராம் குகை என்று ஒன்று இருக்கின்றது. அங்கே பார்த்தால் கல் குகையாக இருக்கும். மேலே ஓட்டை போட்டு இருப்பார்கள்.

உள்ளுக்குள் போனால் அறை அறையாக இருக்கும். அந்தக் குகையில் ஒவ்வொன்றிலிருக்கும் சுவிட்சைத் (பொறி) தட்டினோம் என்றால் இந்தக் கல் விலகுகின்றது. அதில் எவ்வளவு நுட்பமாக வைத்து இருக்கின்றார்கள்.

உள்ளே இறங்கிப் போக வேண்டும் குகை அப்படியே இருட்டாக இருக்கும். அப்புறம் அதற்குள் போனவுடனே ஐந்தாறு பாதை போகும். ஒரு பாதை ஒரு பக்கமும் வேறொரு பக்கம் போவதும் இப்படி இருக்கிறது.

இது எல்லாம் முடிந்தவுடனே கடைசியில் காளி கோவிலுக்குப் போகின்ற பாதை தான் இருக்கும். மேலே போனவுடனே லபக்கென இழுத்து கொள்ளும்.

இன்றைக்குக் கம்பி போட்டுப் பாதுகாப்பாக வைத்திருக்கின்றார்கள். அன்றைக்குக் கம்பி கிடையாது. அங்கே எட்டிப் பார்ப்பார்கள். லபக் என்று இழுத்துக் கடலுக்குள் விட்டு விடும்.

ஆனால் அதற்குள்ளேயும் குகைகளும் பாதையும் நிறைய போகின்றது. எத்தனை பாதை போகின்றது என்று சொல்ல முடியாது. அந்தக் குகைக்குள் எல்லாம் போய் உட்காந்து பார்த்து வந்தேன்.

கோகர்ணம் என்றால் என்ன என்கிற வகையில் முதலில் அப்போது தான் தெரிந்து கொண்டேன்.

அதற்குப் பின்னாடி நான் கொண்டு போன மற்ற பொருள் பணம் எல்லாம் எல்லாருக்கும் கொடுத்து விட்டு ஒரு வேஷ்டி ஒரு துண்டுடன் புறப்பட்டேன்.

பண்டரிபுரம் போய் மறுபடியும் பூனா வந்து பம்பாய் வந்து அங்கிருந்து காசிக்குப் போய் எல்லாம் சுற்றிப் பார்த்தது. சிரமப்பட்டுத்தான் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டோம்.