காவடி ஆட்டங்களில் உள்ள சில உண்மையின் நிலைகள்

Image

kaavadi

“காவடி ஆட்டங்களில்…” உள்ள சில உண்மையின் நிலைகள்

 

ஒவ்வொரு ஆலயத்திலும் மக்கள் நலம் பெற வேண்டும் என்று தன்னையே அர்ப்பணித்து மக்களின் நலனுக்காகவே தன் எண்ணத்தை ஒன்றச் செய்து சில தவயோகிகள் ஜீவனை விட்டுள்ளார்கள்.

அவர்கள் செய்த அற்புதம்தான் சிலர் உடல்களிலே அத்தகைய ஆன்மாக்கள் புகுந்து கொண்ட பின்
1.நாக்கை அறுத்து கொண்டார்.
2.என்ன அதிசயம்..! “உடனே ஒட்டிக் கொண்டது…” என்று எல்லாம் சொல்வார்கள்.

அதாவது எந்தத் தவத்தை அவர்கள் செய்தார்களோ அதைப் போல் பக்தி கொண்ட நிலையில் மந்திரங்களைச் சொல்பவர்கள் உடலில் அந்த ஆன்மாக்கள் புகுந்தபின் இப்படி அதிசயம் வருகின்றது.

பழனியில் எடுத்துக் கொண்டால் மச்சக்காவடி எடுப்பார்கள். மச்சக்காவடி எடுத்துக் கொண்டு இங்கே போவார்கள் அங்கே போவார்கள் இதைச் செய்வார்கள்.

ஏனென்றால் முருகன் கந்த சஷ்டியைப் படிக்கும் போது மந்திர ஒலிகளைச் சொல்லித் தனக்குள் அதை உருவாக்கிக் கொள்வார்கள். மணலை எடுப்பார்கள் கல்கண்டாக வரும்.

இதைப் போல பல நிலைகளைச் செய்து முருகன் எனக்குத் திருவருள் கொடுத்தான் என்பார்கள். மாந்ரீகத் தன்மைகள் வரப்போகும் போது தெய்வீகப் பண்பில் இதையும் இவ்வாறு செய்கின்றார்கள்.

மச்சக்காவடி சேவல் காவடி புறாக் காவடி என்று மஞ்சளைக் கலந்து எல்லாம் வைத்துக் கொண்டு வருவார்கள். பின் இந்த உணர்வுகள் எல்லாம் சுற்றி வந்த பின்
1.ஒரு குறிப்பிட்ட மந்திரத்தைச் சொல்லும் போது
2.மீண்டும் இந்தப் புறா வரும்.

இன்றும் சில இடங்களில் பார்க்கலாம். “ஒரு மனிதனைப் பெட்டிக்குள் அடைத்து வைத்து…!” அதற்கு வேண்டிய பாதுகாப்பினைக் கொடுத்து விட்டு
1.அடுத்து நான் இந்த ஊரில் வந்து எழுந்திருக்கின்றேன் என்று
2.தண்ணீருக்குள் மூழ்க வைத்து விடுகின்றார்கள்.

இங்கே எந்த நேரத்தில் தண்ணீருக்குள் மூழ்க வைக்கின்றார்களோ அதே நேரத்தில் இன்னொரு இடத்தில் இத்தனை மணி என்று கடிகாரப்படி சொன்னது போல எழுந்து வருவார். உருவத்தை வைத்து அரசு மூலமாகக் கேரளாவில் காட்டுகின்றனர்.

இதே மாதிரி மேஜிக் வேலை செய்யும் போது ஒரு கட்டிடத்தைக் கட்டுகின்றான்.

கட்டிடத்திற்குள் இருக்கும் அதே மனிதன் அடுத்த நிமிடம் பார்க்கும் போது இவன் வெளியில் ரோட்டிலிருந்து நடந்து வருகின்றான். மனிதன் தான் அவ்வாறு செய்கின்றான்.
1.இந்த உணர்வின் ஒலியைக் கற்றுக் கொண்ட பின்
2.ஆவியின் நிலையாக மாற முடியும்.
3.மீண்டும் அதை இன்னொரு இடத்தில் குவிக்கவும் முடியும்.

இதைப் போன்று மந்திர ஒலிகளைப் பற்றி அறிந்தோ அறியாமலேயோ ஒருவர் கற்று உணர்ந்து இருப்பார்.

நான் முருகனை நினைத்துக் கற்றேன். அவன் எனக்கு திருவருள் கொடுத்தான் என்று இப்படியே வாழ்ந்து கடைசியில் அவர் மடிந்து இருப்பார்.

அவர் சொன்ன அதே மந்திர வாக்கியத்தை அடுத்தவரும் சொல்லி ஜெபித்தார்கள் என்றால் அந்த ஆன்மா இங்கே வரும்.

இவருக்குத் தெரியாமலே அவர் செய்த செயலை எல்லாம் இவரும் செய்ய ஆரம்பிப்பார். ஆஹா…! முருகன் எனக்குள் பல அற்புதங்களைச் செய்கிறான். மணலைக் கற்கண்டாக வர வைத்தான் என்றெல்லாம் சொல்வார்கள்.

இதைத்தான் “அற்புதம்…!” என்று நாம் எண்ணுகின்றோம்.

ஆனால் அந்தக் கற்கண்டு எவ்வளவு சுவையோ அதைப் போல
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்து
2.நம் சொல்லால் மற்றவர்களை மகிழச் செய்ய வேண்டும்
3.அந்தச் சக்தி நாங்கள் பெறவேண்டும் யாரும் நினைப்பது இல்லை.

இந்த மச்சக் காவடிக்காக வேண்டி சுற்றி சுற்றி சுற்றிப் பார்த்தேன் அப்புறம் கடைசியில் ஒரு இடத்தில் மீன் வந்தது. சேவல் காவடி எடுத்து கொண்டு வந்தார்கள், அதுவும் எப்படி என்கின்ற வகையில் ஆர்வத்துடன் பார்க்கப் போவேன்.

ஏனென்றால் ஆரம்பத்தில் நான் முருகனைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசுவேன். ஏனென்றால் நான் (ஞானகுரு) மதுரைக்காரன். பழனியில் சம்பந்தம் செய்து கொண்ட இடம்.

விழா நேரத்தில் எல்லாக் காவடியையும் சுற்றிச் சுற்றிச் சுற்றிப் பார்ப்பேன், அது எத்தனையோ நாள் ஆகும். அதையே நான் சுற்றிக் கொண்டிருப்பேன். (சரியாக வீட்டிற்குச் சென்று சாப்பிடுவதில்லை)

நேர நேரத்திற்குச் சாப்பிட்டுவீட்டு அப்புறம் போய்க் காவடியைப் பார்க்கலாம் அல்லவா என்று வீட்டிலே சண்டை பிடிப்பார்கள். இல்லை… அதை எப்படியும் பார்த்து விட்டுத்தான் வருவேன் என்று நான் சொல்லிக் கொண்டு இருப்பேன்.

ஏனென்றால்
1.தெய்வீகப் போர்வை கொண்டு மனிதனை நம்ப வைப்பதும்
2.அந்த தெய்வீகப் போர்வையில் பிறருடைய ஆசைகளை ஊட்டுவதும்
3.அதை வணங்கினால் “நமக்குப் பொருள் கொடுப்பான்…!” என்ற நிலைகளில் தான் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அந்தக் காவடி எடுக்கும் நிலையில் விளம்பரப்படுத்தி நீ இன்னென்னதைச் செய்தாய் என்றால் முருகன் உன்னைக் காப்பாற்றுவான். செல்வத்தைக் கொடுப்பான் என்று உடல் இச்சைக்குத் தான் மாற்றி வைத்துள்ளார்கள்.

ஆனால் நாம் இச்சைப்பட வேண்டியது எது…?

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று மகிழ்ந்து வாழ முடியும் என்றுதான் ஞானிகள் காவடி ஆட்டத்தைக் காட்டினார்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற நாம் இச்சைப்பட வேண்டும்.
2.அந்த உணர்வின் சக்தியை நமக்குள் கிரியையாக்க வேண்டும்.
3.அந்த ஞானிகள் எந்த மெய் ஒளியைப் பெற்றார்களோ
4.அந்த ஞானத்தின் சக்தியாக நம் உடலை இயக்க வேண்டும்
5.மெய் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்து மகரிஷிகள் வாழும் அந்த “விண்ணுலகை அடைய வேண்டும்…!”

நாராயணனோ விஷ்ணுவோ யாரையும் கொல்வதில்லை – கீதாச்சாரம்

Image

geethacharam

நாராயணனோ விஷ்ணுவோ யாரையும் கொல்வதில்லை – கீதாச்சாரம்

 

அருள் ஒளியின் சுடரை நமக்குள் ஏற்றி மோட்சத்திற்கு வழியைக் காட்டுகின்றார்கள் ஞானிகள். “வருடா வருடம்” நரகாசுரனைக் கொன்ற நாள் என்று தீபாவளியைக் கொண்டாடுகின்றோம்.

ஆனாலும் அந்த விஷத்தின் தன்மை மறுபடியும் இயக்குவதற்குக் கொண்டு வருகின்றான். காவியங்களில் இப்படி எழுதி இருப்பார்கள். அர்த்தம் சொல்ல வேண்டுமே…!

ஏனென்றால் எதிலும் எனக்கு இறப்பு வரக்கூடாது என்று இரண்யன் வரம் வாங்கிக் கொள்கின்றான். அந்த வரத்தைக் கொடுக்கின்றார்கள். கொடுத்த வரப்படி எதுவுமே மடிவதில்லை.

1.நாராயணன் யாரையாவது கொல்கின்றானா…?
2.விஷ்ணு யாரையாவது கொல்கின்றானா…?
3.கடைசியிலே எந்த முடிவுக்கு வருகின்றார்கள்…!

ஒளியாக மாற்றி (நஞ்சை ஒடுக்கி) அதன் உணர்வை எடுத்தோமென்றால்
1.ஒன்றை இயக்கச் செய்கின்றது.
2.இங்கேயும் காக்கச் செய்கின்றது… மற்றொன்றையும் காக்கச் செய்கின்றது.
3.அவனுக்குக் கொடுத்த வரப்படி கொல்வதில்லை.

மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொருவரும் நமக்குள் சேர்த்து வலிமையாக்கினால் தீமை செய்யும் உணர்வுள் நம் ஆன்மாவில் இருந்து அகன்று சென்றுவிடும். அனாதையாகிவிடும்.

தீமைகளை அகலச் செய்து விட்டால் அதைச் சூரியன் தனக்குள் எடுத்துக் கொள்கின்றது. சூனிய மண்டலத்திற்குள் இணைக்கச் செய்து கடலுக்கடியில் உப்பு நீருடன் இணைத்து அதை மாற்றிவிடுகின்றது.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், ஞானிகள் காட்டிய மூலத்தை அறிந்து கொண்டால் போதும்.

ஆகவே எதுவுமே மடிவதில்லை. மலர்கின்றது. மாற்றம் அடைகின்றது. இதைத் தான் கீதையிலே
1.இந்த உடல் மடிகின்றது.
2.உணர்வுகள் வளர்கின்றது.
3.உணர்வுகளுக்கொப்ப உருக்கள் பெறுகின்றது.
4.இன்றைய நிலை நாளை இல்லை என்று தெளிவாக்குகின்றார்கள்.

இன்றைய செயல் நாளைய சரீரம். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதைத் தெளிவாக நமக்குக் கொடுக்கின்றார். இவ்வளவு பெரிய விளக்கத்தை எவ்வளவோ நாள் அலைந்து திரிந்து தான் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டேன்.

தெரிந்து கொண்ட பிற்பாடு நாம் எத்தனை பேர் இந்தத் தியானத்தில் இருப்பவர்கள் கடைப்பிடிக்கின்றோம். ஏனென்றால் தீமை செய்யும் உணர்வுகளை அடிமையாக்குவதற்குத் தான் உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஞானம் பெற நாம் முக்கியமாகச் செய்ய வேண்டியது எது…?

Image

Computer

ஞானம் பெற நாம் முக்கியமாகச் செய்ய வேண்டியது எது…?

ஒரு கம்ப்யூட்டரில் ஒரு மென் பொருளைப் (SOFTWARE) பதிவு செய்து இயக்கச் செய்து விட்டால் அது தனக்குகந்த பணிகளைச் செய்து கொண்டிருக்கும். (இன்று எத்தனையோ எண்ணிலடங்காத SOFTWARE உபயோகப்படுத்துகின்றார்கள்)

அதற்கு மாறுபாடாக எது வந்தாலும் அதைத் தனித்துப் பிரித்துக் காட்டுகின்றது.

ஒரு பொருளையோ, செயலையோ அல்லது அந்தக் கம்ப்யூட்டரையோ “இப்படித்தான் பாதுகாக்க வேண்டும்…” என்று நினைத்து அங்கே கம்ப்யூட்டரில் ஆணையிட்டுப் (COMMAND) பதிவாக்கி வைத்து விட்டால் அப்பொருளை அது பாதுகாத்தே தீரும்.

ஏதாவது மாற்றம் ஆனால் அதைத் தடுத்து நிறுத்தி அதைத் தெளிவாக இயக்குகின்றது. அதுவே சரி செய்கின்றது.
1.கம்ப்யூட்டரில் பதிவு செய்கிற மாதிரி
2.மெய் ஞானத்தின் தன்மைகளை ”அறிய வேண்டும்…” என்று உங்கள் உடலில் நீங்கள் பதிவு செய்த நிலைக்கொப்ப
3.குருநாதரின் உணர்வுகள் உங்களுக்குள் அது இயக்கும்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எத்தனையோ கோடி உணர்வுகளைப் பதிவு செய்து வைத்திருக்கின்றார். கொஞ்ச நஞ்சமில்லை. குருநாதர் பதிய வைத்திருப்பது எண்ணிலடங்காதது.

1.நான் (ஞானகுரு) தனித்து… அதை உங்களுக்குப் பிரித்து
2.எல்லாவற்றையும் ஒன்று போலச் சொல்ல வேண்டும் என்றாலும் கூட ஆயுள் பத்தாது.

அந்தந்தக் கால நிலைக்கொப்ப அது அதைப் பொருத்தி உங்களுக்கு உபதேசிக்க வேண்டும். அந்த உணர்வுக்கொப்பத்தான் என் சொல்லும் வரும். என் பேச்சும் வரும்.

நீங்கள் எதை எண்ணி வருகின்றீர்களோ அதற்கு மேல் எனக்கும்
1.அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்தியை
2.மீண்டும் அந்த உயர்ந்த சக்தியை வளர்த்துக் கொள்வதற்கு உதவும்.

மெய் ஞானிகளைப் பற்றிய உண்மையின் உணர்வுகளை உங்களுக்கு என்று நான் சொல்லும் பொழுது எனக்குள் மீண்டும் நினைவு கொண்டு அதை ஜீவனூட்ட முடிகின்றது.

நான் பேசவில்லை. குரு கொடுத்த அருள் தான் இங்கே பேசுகின்றது. சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா…!

காயத்ரி – முழுமையான ஒளி

gayatri-wallpaper.jpg

 காயத்ரி – முழுமையான ஒளி

நம் ஆள்களில் பெரும் பகுதியான பேர் இருக்கிறார்கள். அதாவது யாராவது ஒன்று சொன்னால் போதும்….!
1.குருநாதர் எவ்வளவு பெரிய சக்தி பெற்றவர்…?
2.பார்… அவர்களுக்கெல்லாம் சக்தி கொடுக்கிறார்..!
3.நம்மை ஒன்றும் கவனிக்கவில்லை… என்பார்கள்.

தியான வழியில் எல்லோரும் சென்று கொண்டிருந்தாலும் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறும் நிலையில் ஒருவருக்கொருவர் பேசும் பொழுது இப்படிக் குறையாகப் பேசுவார்கள்.

நாம் போகும் ஞானப் பாதையில் இப்படிப்பட்ட நிலைகள் வரும். அதை எல்லாம் நீங்கள் விட்டுவிட வேண்டும்.

அவ்வாறு குறையாகப் பேசுபவதை நீங்கள் கேட்க நேர்ந்தால் உடனே நீங்கள் செய்ய வேண்டியது…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும்.
2.மெய்யை அறியும் வாய்ப்பு – “அந்தச் சந்தர்ப்பம்” அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
3.அந்த மெய்ப் பொருள் அவர்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
4.மெய்யை வளர்க்கும் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
5.அப்போது அந்த ஞானிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இது விளைகின்றது.

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் உங்களுக்குள் இவ்வாறு விளைவித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

சமைக்கத் தெரியவில்லை என்றால் ஹோட்டலில் ருசியாகச் சமைக்கின்றார்கள் என்று தெரிந்து தேடிப் போய்ச் சாப்பிடுகின்றோம் அல்லவா…!

அதைப் போல உங்களுக்குள் சமைத்த அந்த அருள் ஞானிகளின் உணர்வை
1.அவர்களுக்குள் சொல்லாகச் சொல்லிப் பதிவு செய்ய வேண்டும்.
2.அப்பொழுது மகரிஷிகளின் உணர்வை அருள் ஞானச் சாப்பாடாக அவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள்.

அதைக் கேட்டுப் பதிவாக்கியவர்கள் அடுத்து உங்களிடம்
1.ஒரு காரியம் அன்றைக்கு ஆகவேண்டும் என்று எண்ணியிருந்தேன்.
2.நீங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்
3.”நல்லதாகும்…!” என்று சொன்னீர்கள்.
4.அதே போல நல்லது நடந்தது என்று உங்களிடம் வந்து சொல்வார்கள்.

அப்போது எதை நீங்கள் சமைக்கின்றீர்கள்…?

சுவை கொண்ட அருள் ஒளியை உங்களுக்குள் சமைக்கின்றீர்கள். அதை எடுத்துச் சொல்லப் போகும் போது மற்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

அப்போது யாருக்குச் செய்கின்றீர்கள்…?

1.அவர்களை ஆண்டு கொண்டு இருக்கும் அந்த ஆண்டவனுக்கு நீங்கள் சேவை செய்கின்றீர்கள்.
2.அங்கே இயக்கிக் கொண்டு இருக்கும் அரும் பெரும் சக்தியான நல்ல குணங்களுக்கு
3.அந்தத் தெய்வங்களுக்கு அமுது கொடுக்கின்றீர்கள். சாப்பாடு கொடுக்கின்றீர்கள்.
4.அவர்கள் அதைக் கேட்டவுடனே அந்த நல்லதைச் சாப்பிட்டவுடனே என்ன செய்கின்றது…? மகிழ்ச்சி பெருகுகின்றது.

அதைத்தான் யாம் உங்களைச் செய்யச் சொல்கிறோம்.

இராமன் எப்போது கல்யாணராமன் ஆகின்றான்…? பகைமை உணர்வை அகற்றப்படும் போது அரவணைக்கும் சக்தி பெறுகின்றது. சீதாவை அரவணைக்கின்றான். (இராமன் என்றால் எண்ணம்; சீதா என்றால் சுவை)

1.உங்கள் உடலோடு ஒட்டி அந்தச் சுவையான உணர்வு மகிழ்ச்சியான வரப்போகும் போது சீதா.
2.அதனுடன் சேர்த்த அந்த மணத்தின் தன்மை ஞானம் சரஸ்வதி.
3.அதன் வலிமை கொண்டு ஒளியின் உணர்வாக “காயத்ரி…!” முழுமை அடைகின்றீர்கள்.