என்ன தியானம் செய்து… என்ன பலன் என்பார்கள்…!

என்ன தியானம் செய்து… என்ன பலன் என்பார்கள்…!

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானிக்க வேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… நினைவுபடுத்துகிறோம்.

அதை வைத்துத் தீமைகள் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்புதான்…!

ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம் கிடைக்கவில்லை. அதே போல் நமக்கு வேண்டியவர்களுக்கு உடலில் நோயாகி விட்டது. சரியாகவில்லையே…! என்ற நினைவைச் செலுத்தினால் வேதனை உணர்வு தான் வருகிறது. அத்தகைய நேரத்தில் நல்ல உணர்வு பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம்.

எத்தனையோ தியானம் இருந்தாலும் கூட இப்படி எல்லாம் வருகிறது என்று சில பேர் எண்ணுகின்றனர்.

1.அத்தனை தியானம் செய்தேன்… என் பிள்ளைக்கு உடல் நலம் இல்லாது போய்விட்டது…!
2.எவ்வளவு தியானம் செய்தேன்…? என்னிடம் சண்டைக்கு வருகின்றார்களே…! என்று
3.இந்த உணர்வை எடுத்து எடுத்து இப்படி மாற்றிக் கொண்டிருந்தால்
4.உணர்வுகள் அங்கே (தீமையின் பால்) சென்று விடும்… நினைவுகள் தீமையின் பக்கமே சென்றுவிடும்.

ஆகையினால் அது போன்று வராதபடி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்று அதை வலுவாக்க வேண்டும். அருள் உணர்வை நம் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிலைகளைப் பார்த்தாலும் நாம் நுகரப்படும் போது “தவறு செய்கிறார்கள்…” என்று உற்றுப் பார்க்கின்றோம்… அது பதிவாகிறது.

பதிவாகி விட்டால் பின் அது தன் உணவுக்காகக் கிளரும். அதை வைத்து அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிக் கொண்டே இருக்கும். தவறு செய்தவரின் உணர்வை உணவாக எடுத்துத் தான் அந்த அணுக்கள் தன் இனத்தைப் பெருக்கும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எப்போது சங்கடம் சலிப்பு வெறுப்பு என்று வருகின்றதோ… அடுத்த கணமே அதை மாற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை கூட்டிக் கொண்டே வந்தால் அது குறைந்து கொண்டே வரும்.
1.அது குறையத்தான் செய்யும் தவிர முழுமையாக மாற்ற முடியாது
2.இதைப் (அருளை) பெருக்கினால் அது இதற்குள் அடங்கிவிடும்.

நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது தீமை என்ற உணர்வுகள் அதிகமாகி விட்டால் அது நல்ல குணங்களை அடக்கி
வேதனை என்ற உணர்வும்…
வேதனைப்படும் சொல்லும்…
வேதனையான செயல்களும்…
வேதனையான பேச்சுகளும்…
வேதனையான மூச்சுகளையும் தான் செயல்படுத்தும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் அருளைப் பெற்று இதை மாற்றிடுவோம்… மாற்ற முடியும்… அவர்கள் நலம் பெறுவார்கள்…! என்ற எண்ணத்திற்கு நாம் வர வேண்டும்.

ஒரு நோயாளி அவருடைய கஷ்டத்தைச் சொன்னால் மகரிஷிகளின் அருள் சக்தியை அவர்கள் பெறுவார்கள்… நலம் பெறுவார்கள்…! என்று நாம் எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது.

ஆனால் அவர்களை உற்றுப் பார்த்து… சொல்வதைக் கேட்டறிந்து அவருடைய துயரத்தை எண்ணி நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள்ளும் அது விளைந்து அவர் சொன்ன கஷ்டங்கள் எல்லாம் நமக்குள்ளும் வரும்.
1.அவரை மாதிரித் தான் நமக்குள்ளும் இருக்கின்றது
2.அவரை மாதிரித் தான் நமக்கும் நோயாகி விட்டது…! என்று அவரின் உணர்வு வந்து
3.அதையே நாமும் வளர்த்துக் கொள்கிறோம்

உதாரணமாக ஒருவன் நம்மை ஏமாற்றினான் என்றால் “ஏமாற்றினான்… ஏமாற்றினான்…” என்று எண்ணி அதையே எடுத்துக் கொண்டே இருந்தோம் என்றால் நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் நல்ல உணர்வுகள் வளர்வது நிச்சயம் தடைப்படும்.

இதைப் போன்ற தீமையான விளைவுகளிலிருந்து நாம் மாறுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிறரையே எண்ணிக் கொண்டு வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லை – ஈஸ்வரபட்டர்

பிறரையே எண்ணிக் கொண்டு வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லை – ஈஸ்வரபட்டர்

 

ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன…?

பார்த்தல்… சுவைத்தல்… கேட்டல்… நுகர்தல்… எண்ணல்… எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா…!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்…
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்…” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ் ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ் ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்…! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ் ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா…” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள… தன் உணவைத் தேட… ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்…?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி… ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்…
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா…!

நீங்கள் கேட்கலாம்… தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று…! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா…!

நான் சொல்வதெல்லாம்…
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக… அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்… பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல் மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு…! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை…!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா…!

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் மின்கதிர்களின் பேராற்றல்கள்

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் மின்கதிர்களின் பேராற்றல்கள்

 

பூமிக்குள் வெப்பத்தின் தணல் ஆகும் போது ஆவியின் தன்மை அடைந்து ஆவி எடையற்றதாக மாறி மேலே செல்கின்றது.
1.வெப்பத்தினால் எடையற்ற தன்மை மாறினாலும் அதிலே மின்னல்கள் தாக்கப்படும்போது
2.இலகுவாக இருந்த மேகக் கூட்டத்திற்குள் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களின் உணர்வலைகள் பரவுகின்றது.

அந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஒரு பக்கம் மோதி… மற்றொரு பக்கம் மோதும்போது மழையாகப் பெய்கின்றது.

இப்படி அந்த மேகக் கூட்டத்திற்குள்
1.ஆவியின் தன்மையும் ஒளிக்கற்றைகளும் இணைந்து மழையாகப் பெய்யும் பொழுது நீராக வருகின்றது.
2.அதனால் தான் மழை நீர் பெய்யும் பொழுது தாவர இனங்களுக்கு அது உரமூட்டும் உணரவின் சக்தியாகக் கிடைக்கின்றது.

மழை நீர் பெய்தாலே தாவர இனங்கள் அதிகமாகச் செழித்துக் கொழுத்து வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் “அந்த மின் கதிர்கள்… அதனுடைய இயக்கம் துடிப்பின் தன்மையைக் கூட்டுகின்றது…!”

பல கோடி உணர்வுகள் பெற்று நாம் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் அந்த மேகக் கூட்டத்தை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தி அதிலே படர வேண்டும் என்று அந்த உணர்வுகளைச் செலுத்த வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் கலந்த மழை நீராக நம் பூமியில் பெய்யும் பொழுது
1.அது தாவர இனங்களில் உள்ள தீமைகளை அகற்றவும்
2.மக்கள் வாழும் பகுதியில் மழையாகப் பெய்யும் பொழுது அருள் உணர்வின் அறிவாக எல்லோரையும் இயக்க இது உதவும்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் பாய்ச்சும் இந்த அருள் சக்திகள் மழை நீர் வழியாகக் கலக்கப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலை பெறச் செய்யும்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் ஈசன் என்றும்… அவனால் உருவாக்கப்பட்ட அந்த உடல்கள் ஆலயம் என்றும்… மனித உடலை உருவாக்கிய உயர்ந்த சக்திகள் அங்கே தெய்வங்களகக் கொலுவீற்றிருக்கிறது என்றும்… நாம் மேலே சொன்ன நிலைகளைச் செயல்படுத்தினால்
1.இது நம்மை அறியாமலே நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாகிறது…
2.அதே போல் நம்மை அறியாது அனைவருடைய நிலைகளும் நலம் பெறும் சக்தியாக விளைகின்றது.

எந்தப் பூமியில் பிறந்தோமோ அதுவே நமக்குத் தாயாகின்றது. அந்தத் தாயின் மடி மீது தான் நாம் அமர்ந்துள்ளோம். பூமித் தாயின் சக்தியைக் கூட்டி தீமை புகாது தூய்மைப்படுத்தும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்தும் போதுதான் இந்தப் பூமியும் தூய்மையாகிறது.

நம் தாய்க்கு செய்யும் சேவையே இது தான்.
1.ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் பூமியான தாயைக் காக்கவும்
2.உயிரைக் காக்கவும் முயற்சி எடுங்கள்.

தாயால் உருவாக்கப்பட்ட “இந்த உடல்” நம்மை எத்தனையோ வகையில் பேணிக் காத்தது. ஆகவே தாயின் உணர்வே இந்த உடல். இந்த தாயான உடலைக் காக்க வேண்டும்… தாயின் உடலில் பெற்ற உணர்வுகள் தாயான நிலையில் காக்கப்பட வேண்டும் என்று இந்த உண்மையின் உணர்வைப் பெற்றால் மனிதன் தெளிவாகின்றான்.

மனிதன் தெளிவாகும் போதுதான் தெளிந்த உணர்வு கொண்ட உயிராகின்றது. உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது.

அத்தகைய உயர்ந்த நிலையைப் பெற்று குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வு வாழ்வோம். பிறவியில்லா நிலை அடையும் நிலையாக… முழுமை பெறும் உணர்வை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரும் இந்த நிலை பெற தியானிப்போம்… தவமிருப்போம்.

உன்னை நான் பார்த்து… என்னில் உன்னைக் கண்டிட… உன்னையே நான் வணங்குகிறேன் ஈஸ்வரா – ஈஸ்வரபட்டர்

உன்னை நான் பார்த்து… என்னில் உன்னைக் கண்டிட… உன்னையே நான் வணங்குகிறேன் ஈஸ்வரா – ஈஸ்வரபட்டர்

 

சாமியார்கள் என்றாலே வேஷதாரிகள்… ஏமாற்றுக்காரர்கள்… சூனியக்காரர்கள்… என்றும் தான் வாழும் வழிக்குத் சாமியார் என்ற வேடம் பூண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள் என்றும் உருவாக்கி விட்டார்கள்.
1.பல மதங்களைப் பரப்பி
2.பகவானைப் பணிவதற்குப் பல நிலைகளை மக்களுக்கு உணர்த்தி
3.பல கோடி ஜெபங்களை ஜெபித்து
4.ஆண்டவனை வணங்குவதையே மக்களின் மனதில் ஒருவித பயம் கலந்த உணர்வாக உண்டு பண்ணிவிட்டார்கள் இந்தப் பல வழிச் சாமியார்கள்.

இவர்களில் சிலர் பல மந்திரங்களை மக்களுக்குப் புரியாத பாஷையில் ஓதி ஒம குண்டங்களை வளர்த்து அந்த ஓம குண்டத்தில் பொன்.. வஸ்திரம்… பல வகைப் பதார்த்தங்கள்… இன்னும் பலவற்றைப் போட்டு ஓமங்கள் வளர்க்கின்றனர்.

எட்டுத் திக்கிலும் எட்டுப் பூசாரிகளை அமரச் செய்து அவ்வனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஆண்டவனைக் கோடியார்ச்சனை என்ற பேரில் புரியாத மொழியில் ஓதுகிறார்கள்.

இந்த வழியில் யாகக் குண்டத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும் பொழுது தான்
1.அந்த ஆண்டவன் வருவானா அந்நிலைக்கு…?
2.யாருக்காக…? யாரின் நிலைக்காக…?

அத்தகைய சாமியார்கள் மக்களிடமிருந்து பொருள் பெறுவதற்காக யாகம் வளர்த்து மந்திரங்கள் ஜெபிக்கின்றனர். ஆக
1.பொருள் தருபவனுக்கு (மக்கள்) அந்தச் சாமியார்கள் செய்யும் பூஜையில் ஆண்டவன் வந்து அருள் தருவானாம்…!
2.ஆண்டவனுக்கு இவர்கள் (சாமியார்கள், பூசாரிகள்) தூதுவர்களாம்…!

பல ஆயிரம் செலவு செய்து யாக குண்டம் வளர்த்து அந்தப் பூசாரிகளுக்கு அன்னமளித்து பொருள் தந்து அந்த ஆண்டவனை வணங்கினால் இவன் செய்த பாவங்களும்.. இவன் எண்ணமும் மாறி.. அந்த ஆண்டவன் வந்து அருள் புரிவானாம்..!

1.ஊரை ஏமாற்றி
2.உள்ள நிலையைப் புரிந்திடாமல்
3.தன் புகழைப் பரப்பப் பூஜை செய்பவர்கள் தான் பெரும்பாலனவர்களாக உள்ளார்களப்பா…!
4.இவர்களின் நிலைக்கெல்லாம் இந்தப் பல வழிச் சாமியார்கள் பெரும் தூதுவர்களப்பா…!

செய்த பாவத்தைக் கழித்திட பூஜை செய்துவிட்டால் பாவம் தீர்ந்துவிடுமா…? அவர்கள் தான் அதைப் பாவம் என்றே எண்ணுவதில்லையே…!

புகழுக்காகத் தான் சம்பாதித்த செல்வத்தை “அந்த ஆண்டவன் வந்து காப்பாற்றித் தர வேண்டும்…” என்பதற்காக அந்த ஆண்டவன் பெயரைச் சொல்லிப் பல பூஜை செய்கிறார்கள் இந்தப் பாமர மக்கள். “பெரும்பாலான பூஜை முறையே… இப்படித்தானப்பா உலகெங்கிலும் உள்ளது…!”

இந்த மனிதர்களை மாற்றிடவும் நல்வழியில் அழைத்துச் செல்லவும் நல் வழியில் பல சாமியார்கள் (நல் வழிச் சாமியார்கள்) இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்…!

பல ஜெபங்களை ஜெபிக்கச் சொல்லி மக்களின் மனதினிலே நல்ல உணர்வுகளை ஆழமாகப் பதிய வைக்க நல் வழிச் சாமியார்கள் எல்லாம் நாட்டம் கொண்டு நடந்திட்டார்கள்.

இன்னும் சில இடங்களில் சில சாமியார்கள் அந்த ஆண்டவனின் சக்திக்குப் பல வகை நாமங்களைச் சூட்டி புவனேஸ்வரி பூஜை… சௌண்டேஸ்வரி பூஜை… காமாட்சியம்மன் பூஜை…! என்று இன்னும் பல நாமங்களைச் சூட்டி அந்தச் சக்தியின் நிலைக்கே பல யாகங்களை வளர்த்துப் புகை மண்டலங்களை எழுப்பி
1.தான் வாழ தன்னைச் சார்ந்தவர்கள் வாழ தன்னை நம்பி வருபவர்களை வாழ வைக்க
2.இப்படியும் பல நிலைகளைச் செய்கிறார்கள்.

நல்ல மணத்தைக் கொண்ட புகை மண்டலத்தை எழுப்பி அந்த ஆண்டவனை ஜெபிக்கும் பொழுது எந்நிலையில் நாம் ஜெபிக்கின்றோமோ அந்நிலையில் அவர் அவர்கள் ஜெபிக்கும் நிலைக்கு அந்தச் சக்தி நிலை வருகிறதப்பா…!

1.ஆண்டவனை வணங்கிட யாருக்கும் யாரும் தூது வேண்டாமப்பா…!
2.எல்லோருமே அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி அவன் அருளை எப்படியும் பெறலாமப்பா..!
3.அவனவன் எண்ணத்திலும் சுவாசத்திலும் தான் எல்லாமே இருக்கின்றதப்பா…!

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன்னை நான் பார்த்திடவே
என்னில் உன்னைக் கண்டிடவே
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன் வழியில் சத்தியத்தை
உன் வழியில் தர்மத்தை
உன் வழியில் நியாயத்தை
உன்னை எண்ணும் இதயத்தில்
ஊன்றிடுவாய் ஈசனின் சக்தியே

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா

நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”

நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”

 

உதாரணமாக நாம் வசிக்கும் இடத்தில் ஒரு வேப்பமரத்தின் வித்து கீழே விழுந்தால் அது முளைத்து வளர்ந்து மரமாகி விட்டால் பின் அதை வெட்டுவதற்கு அரிவாள் கோடாரி எல்லாமே தேவைப்படுகின்றது.

பந்தோபஸ்தாக அதை அப்புறப்படுத்துவதற்கு எத்தனையோ ஆள்களும் தேவைப்படுகின்றது. நம் வீட்டுப் பக்கம் விழுந்து சேதாரம் ஆகாதபடி அதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அப்போதுதான் அதை வெட்ட முடியும்.

இதைப் போன்றுதான்
1.நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்
2.தீமைகளை நமக்குள் வளரவிடக் கூடாது.
3.அதற்காக வேண்டித் தான் தியானத்தின் மூலம் உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம்.

நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது. அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் உங்களைக் காக்கும் சக்தியாக அது நிச்சயம வரும்.

உதாரணமாக… ஜோசியக்காரன் நம்மிடம் ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறது. அதனால் பணம் விரயமாகும் தொழில் நஷ்டமாகும் எதிரிகள் அதிகமாக வருவார்கள் என்று சொல்வார்கள். அதைப் பதிவு செய்து விட்டால் ஜோசியக்காரன் சொன்னபடி தான் இங்கே உணர்வின் இயக்கம் ஆகின்றது.

அந்த அடிப்படையில் தொழில் செய்தால் அது நஷ்டமாகி விடுகிறது… இடைஞ்சல் தான் வருகின்றது.

ஒரு சிலர் (ஜாதகம் பார்ப்பவர்கள்) இதையே குறிப்பாகப் பார்த்து எடுத்துக் கொள்வார்கள். இந்த உணர்வுகள் வளர்ச்சியாகிச் சொன்னவுடனே அதைக் கேட்டவுடன் நமக்குள் பதிவாகின்றது. இதெல்லாம் வாக்குவன்மை தான்…!

ஜோசியக்காரன் சொன்னதை நுகர்ந்தால் உடலில் பதிவாகிறது.
1.நல்லது சொன்னால் ஓரளவுக்குப் பலிக்கலாம்
2.ஆனால் கெட்டதை அதிகமாகச் சொல்லி விட்டால் அது அதிகமாகிறது.
3.(பெரும் பகுதி ஜோசியக்காரர்கள் நல்லதை அதிகம் சொல்வதில்லை).

கெட்டதை எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் சாங்கியத்தைச் செய்தால் நீக்கி விடலாம் என்று அதையும் சொல்வார்கள். அவன் சொன்னபடி காசைக் கொடுத்துத்தான் நீக்குவதற்குப் பார்க்கின்றோம்.

இருந்தாலும் அப்படி ஜாதகமும் ஜோதிடமும் பார்க்கும்போது
1.ஒரு விபரீத விளைவுகளைச் சொன்னார்கள் என்றால் அதனால் நாம் அதிர்ச்சி அடைந்து விடுகின்றோம்.
2.ஆக மொத்தம் காசு கொடுத்துத் தான் தீமைகளை நீக்க வேண்டும் என்ற நிலை வருகிறது.

ஆனால் நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதை ஏங்கிப் பெற்றால் உயிர் அதனின் கருவை உடலிலே உருவாக்குகின்றது.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து வளர்க்கத் தொடங்கினால் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கலாம். ஞானிகள் காட்டிய வழிகள் இது தான். பல சரக்குகளைப் போட்டு ஒரு குழம்பை எப்படிச் சுவையாக வைக்கின்றோமோ அதைப் போல் நல்லதாக மாற்ற முடியும்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு பல உயிரினங்களின் அணு செல்களை எடுத்துப் புது விதமாக பல பல உயிரினங்களை விஞ்ஞானி மாற்றியமைக்கின்றான். விஞ்ஞானிகள் செய்வதை எல்லாம் இன்று நாமும் பார்க்கின்றோம்.

அதைப் போன்று தான் அந்த அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் பகைமை உணர்வுகளையும் தீமையான உணர்வுகளையும் மாற்றிவிட முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வெறுப்பு வேதனை கோபம் எல்லாம் நம்மை அறியாமலே வருகின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும். நம்மை நாம் அறிதல் வேண்டும்.

1.பிறிதொரு உணர்வு எப்படி இயக்குகின்றது…?
2.அந்தப் பிறிதொரு தீமையான உணர்வு நமக்குள் புகாது எப்படித் தடுக்க வேண்டும்…?
3.அதற்குண்டான உபாயங்களையும் சக்திகளையும் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசமாகக் கொடுக்கின்றோம்
4.அதை நீங்கள் எடுத்தால் நிச்சயம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மெய் ஞான விழிப்புப்படுத்தும் திறவுகோல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மெய் ஞான விழிப்புப்படுத்தும் திறவுகோல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்பப்பட்டுப் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய மகரிஷிகளின் சக்திகளை
5.நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா…” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய்ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவு கோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞான கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை… அவகள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து… வளர்ந்து… விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்
3.விஞ்ஞானத்தால் உருவான நஞ்சினை அகற்றும் வல்லுநராக நீங்கள் மாறுங்கள்…
4.ஒளியான அண்டத்தையே உங்களால் படைக்க முடியும்.

நடப்பதெல்லாம் நம் நன்மைக்குத் தான்..! என்பது வெறும் சொல் அல்ல – ஈஸ்வரபட்டர்

நடப்பதெல்லாம் நம் நன்மைக்குத் தான்..! என்பது வெறும் சொல் அல்ல – ஈஸ்வரபட்டர்

 

வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து
1.சஞ்சலமற்ற… சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்…
2.எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்… எடுக்க வேண்டிய முயற்சி
3.நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெறவேண்டும். மனத் திறன் என்றால் என்ன…?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா…!

அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊன் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்…”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி… “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது…!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைக் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில்… தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா…?

1.சுவாசிக்கும் சுவாசமானது… சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் – செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா…!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே…! என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்…!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

சுபம்… சுபம்… சுபம்…!

உங்கள் பார்வை அனைவரது நோய்களையும் போக்கக்கூடிய சக்தியாக மலரட்டும்

உங்கள் பார்வை அனைவரது நோய்களையும் போக்கக்கூடிய சக்தியாக மலரட்டும்

 

இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கையாக வாழ்ந்து… விஞ்ஞான அறிவால் பூமியில் தீயவினைகள் பரவியிருக்கும் இந்த நேரத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொருவரும் பெற்று… அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்திடவும்
2.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடவும்
3.சர்வ பிணிகளையும் அகற்றும் சக்தி பெற்று சர்வ நஞ்சுகளையும் வென்றிடும் அருள் சக்தி பெற்று
4.உலக மக்கள் அனைவரையும் அருள் சக்தி பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெற
5.எமது அருளும் அகஸ்தியனின் அருளும் உறுதுணை செய்யும்.

உங்கள் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். உங்களைப் பார்ப்போர் அனைவரையும் நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

நீங்கள் பார்ப்போர் அனைவரும் அவர்கள் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றிட… குரு அருளும் எமது அருளும் உறுதுணை செய்யும்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ்வோம் இருளை வென்றிடும் மெய்ப்பொருள் காண்போம். அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெறுவோம். தெளிந்த மனத்துடன் வாழ்வோம். மலரைப் போல மனம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியுடன் வாழ்வோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் நலம் பெற்று விஞ்ஞான அறிவால் விளைந்த சர்வ நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற நாம் தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறும் சக்தியாக ஒன்றுபட்டு வாழ்ந்திடத் தியானிப்போம்.

1.இனி வரும் காலங்களில் மெய் வழி செல்லும் மெய் வழி பெறும் அருள் ஞான வாழ்க்கையாக நாம் வாழ்வோம்.
2.உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திட நாம் தியானிப்போம்… தவம் இருப்போம்

உலக மக்கள் அனைவரும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் அருள் உணர்வு பெற நாம் தவம் இருப்போம். அருள் வழி வாழ்வோம்… அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் அருள் ஞானம் பெற நாம் தவம் இருப்போம்..!

நம் எண்ணங்களை ஒருநிலைப்படுத்துவதற்குத் தான் தியானம்…! – ஈஸ்வரபட்டர்

நம் எண்ணங்களை ஒருநிலைப்படுத்துவதற்குத் தான் தியானம்…! – ஈஸ்வரபட்டர்

 

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்தல்) என்ற
6.இந்த ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்… அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தம் தம் செயலுக்குச் சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்…” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்… உணர்தல்… தெளிதல்… என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால் எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்…?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்…!”

சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று முயற்சித்தவர்களில் “முழுமை அடையாதவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது”

சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று முயற்சித்தவர்களில் “முழுமை அடையாதவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது”

 

இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது என்றும்… பிறப்பு இறப்பு என்ற இயற்கையின் சுழற்சியிலிருந்து மனிதன் எப்படி மீள வேண்டும் என்றும் எண்ணி இந்தப் பூமியில் முயற்சித்தவர்கள் எத்தனையோ பேர்…!

1.ஆனால் எத்தனையோ பேர் முயற்சி செய்தாலும் அதிலே முழுமையடையாது மடிந்தவர்கள் உண்டு
2.முழுமை பெறும் வழிக்குச் சென்று… முழுமை பெற்றவர்கள் “சிலரே” உண்டு.

பலர் முழுமை பெறாது தோல்வி அடைந்து… அந்த முழுமையற்ற நிலைகளாகக் குறை கொண்ட உணர்வுகளை உடலில் விளைய வைத்து அப்படி வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் அணுக்களும் இந்தக் காற்றிலே உண்டு.

அதே சமயத்தில் முழுமை பெற்று அழியாத நிலையில் எண்ணிலடங்காதோர் இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

ஆனால் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆவேச உணர்வுகள் மனிதனுக்குள் உருவாகி
1.அதற்காக “நான் திருமணமே செய்யமாட்டேன்…!” என்ற உணர்வின் வேக அழுத்தம் கொண்டு செயல்பட்டால்
2.திருமணம் ஆகாமலே வெறுக்கும் தன்மையே அந்த உடலிலே வளருகின்றது

அப்படி வெறுக்கும் தன்மை வரப்படும் பொழுது அவன் வளர்ச்சியின் தன்மை குன்றுகின்றது. மற்றொன்றை வளர்க்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
1.ஆண்மை என்ற உணர்வின் தன்மை வலுவாக உருவாக்கி
2.கரு என்ற உணர்வை உருவாக்காதபடி
3.வளர்ச்சி பெறும் உணர்வின் தன்மை தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதற்கு மேல் வளர முடியாத நிலையும் வருகின்றது.

இப்படிப்பட்ட வளர்ச்சி பெற்றவர்கள் சாமியாராகச் சென்றாலும் திருமணமாகிக் கணவன் மனைவி என்று ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் உடலில் விளையும் அணுக்கருத் தன்மை மாறுபட்டு அவரின் செயலாக்கங்களும் மாறுகின்றது.

திருமணமே செய்யமாட்டேன் என்ற இவரின் உணர்வைப் பின்பற்றி வரும் சீடர்களின் உணர்வுகளிலும் இது ஆழமாகப் பதிவாகின்றது. ஏனென்றால் “குரு போதிக்கின்றார்…” என்று அந்தக் குரு சென்ற பாதையில் அவர்களும் செல்லத் தொடங்குகின்றனர்.

இருந்தாலும் குரு என்பவர் கடைசியில் மடிந்தார் என்றால் சீடர்கள் என்று அவர் வளர்த்த நிலைகள் கொண்டு அவரின் உடலுக்குள் தான் குருவின் உயிரான்மா செல்கிறது.

1.குருவின் உணர்வுகளை எந்தச் சீடன் வளர்த்துக் கொண்டு
2.குரு பக்தி என்றும்… தனது குரு…! என்றும் நேசிக்கின்றானோ
3.குரு இறந்த பின் அவன் உடலுக்குள் தான் அவர் செல்ல முடிகிறது.

உடலுக்குள் வந்த பின் குரு கண்டுபிடித்த உணர்வுகள் எல்லாம் சீடனின் உடலுக்குள் இயங்கத் தொடங்குகின்றது. இப்படி அந்தச் சீடனின் உடலுக்குள் தான் இவர்கள் நுழைய முடிகின்றதே தவிர சொர்க்கம் அடையும் நிலை இல்லை.

சீடன் குரு மீது பற்று கொண்ட உணர்வும் குருவினுடைய உணர்வும் ஒன்றுபடும் நிலையில் அந்த உயிரான்மா வெளி வந்தால் அது இயக்கி அந்த உடலுக்குள் “சாகாக்கலை…” என்ற நிலையாகத் தான் மாறுகின்றது.

சீடனின் உடலுக்குள் புகுந்த பின் அவன் எடுக்கும் ஆசையின் உணர்வுகள் கொண்டு வேதனை என்ற உணர்வை அவன் வளர்த்து விட்டால் விஷமான உணர்வின் தன்மையையே உடலுக்குள் வந்த குருவும் வளர்க்க நேர்கின்றது.

ஆனால் வேதனை என்றால் கடும் விஷம். அவன் செய்தான்… இவன் செய்தான்..!. என்ற நிலையில் மாறுபட்டுச் செயல்படும் நிலையே இங்கே வருகின்றது.
1.அவர்களுடைய ஆசையின் நிலைகள் செயல்படும் போது
2.வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல முடியாதபடி தேய்பிறை என்ற நிலையை அடைகின்றனர்.

சொர்க்கம் அடைந்தார் என்று இவர்கள் பட்டத்தைக் கொடுக்கலாம்.
1.ஆனால் அந்த நிலையை இவர்கள் அடைவதில்லை என்பதை
2.குருநாதர் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்று சொர்க்கம் என்பது எது…? என்று தெளிவாகக் காட்டினார்.