உவர் மண் (வெடி உப்பு), கந்தகம் – “சத்ரு மித்ரு” இயற்கையின் இயக்கம்

Image

Explosion

உவர் மண் (வெடி உப்பு), கந்தகம் – “சத்ரு மித்ரு” இயற்கையின் இயக்கம்

 

உவர் மண்ணை எடுத்துக் கொண்டோம் என்றால் காலையில் பார்த்தோம் என்றால் அது ஈரமாக இருக்கும். அதைத் தோண்டி தண்ணீரில் வேக வைத்தோம் என்றால் அது தான் வெடி உப்பு.

வெடி உப்பு இதிலிருந்து தான் தயார் செய்கின்றார்கள்.

இந்த வெடி உப்பு என்ன செய்கின்றது…? இந்தப் பனியில் இது அமிழ்கின்றது. வேக வைத்துப் பிரித்து எடுத்துக் கொள்கின்றார்கள்.

அதே சமயத்தில் விஷத் தன்மைகள் பாறைகள் வழி வருவதை எடுத்துக் கொண்டால் கந்தகம்.

கந்தகம் என்ன செய்கின்றது…? கொதிகலனாக மாற்றுகின்றது. அதையும் கடல் பகுதிகளிலிருந்து தான் எடுக்கின்றார்கள்.

கந்தகத்தையும் வெடி உப்பையும் இது இரண்டையும் இணைத்தால் (TOUCH) உடனே வெடிக்கும்…!

கந்தகத்தையும் வெடி உப்பையும் எடுத்துத் தனித் தனியாகத்தான் வைத்து இருப்பார்கள். இது இரண்டும் மோதி விட்டால் உடனே தீ பிடிக்கின்றது. இயற்கையின் சிலை நியதிகள் இவை.

நாம் எடுக்கும் உணர்வுகள்… நாம் சுவாசிப்பது கந்தகம்.. அதாவது வெப்பமாகின்றது. சந்தர்ப்பவசத்தால்
1.வேறு சிலருடைய உணர்வை எடுத்துக் கொண்டால்
2.“சில்ல்ல்ல்…..” என்று உடனே நமக்கு வேர்க்கின்றது.
3.அந்த உப்புத் தன்மை ஏற்படும்.
4.யாருடைய குணங்களை எடுத்து வளர்க்கின்றீர்களோ “படீர்….” என்று வெடித்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது
5.உணர்ச்சியைத் தூண்டும் நிலைகள் என்பது இது தான்…!

கந்தகம் ஒரு எரி பொருளாக மாறுகின்றது. வெடிக்கும் தன்மை கொண்ட உப்பை இதனுடன் சேர்த்தவுடனே “சத்ரு.. மித்ரு..” என்ற நிலைகள் வருகின்றது.

அதாவது… “இயற்கையில்”
1.ஒரு பொருள் உருவாக்குவதற்கும்
2.ஒரு பொருளை இயக்குவதற்கும் இந்த நிலைகள் தான் காரணம்
(இதைப் பார்க்கலாம்)

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவேர் இது இரண்டையுமே எனக்கு நேரடியாகக் காட்டுகின்றார். அவர் உணர்த்திய இயற்கையின் இயக்கத்தின் பேருண்மைகளைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.

நம்மை எது இயக்குகின்றது என்பதை “நம்மை நாம் அறிய…!” இது உதவியாக இருக்கும். அதற்குத்தான் சொல்வது.

அகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்கள் – “கருமாரி உருமாரி திருமாரி”

Image

Athi Karumaro

அகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்கள் – “கருமாரி உருமாரி திருமாரி”

 

அகஸ்தியன் ஐந்து வயது இருக்கப்படும் பொழுது அவன் தாய் தந்தையர் இருவருமே சந்தர்ப்பத்தால் இறந்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் அவர்கள் தங்கள் உடல்களில் பூசிக் கொண்ட தாவர இனச் சத்துகளின் விஷங்கள் உடலுக்குள் ஊடுருவி உயிரான்மாவில் பெருகி அதனால் உயிர்கள் வெளியேறி விடுகின்றது.

ஆனாலும் தன் குழந்தை என்ற பாசத்தால் குழந்தையின் உடலுக்குள் இரு உயிரான்மாக்களும் சென்று விடுகிறது.

அந்தக் குழந்தையோ (அகஸ்தியன்) தாய் தந்தையின் ஏக்கத்தில் சூரியனைப் பார்த்து ஏங்குகின்றது…! கதறுகிறது…! (சூரியனைத்தான் அன்றைய மக்கள் கடவுளாக வணங்கி வந்தனர்)

அகஸ்தியன் அவ்வாறு விண்ணை நோக்கி ஏங்கும் போது சூரியனின் உணர்வின் ஆற்றலால்
1.அன்னை தந்தையர் தனக்குள் ஈர்ப்பாக எவ்வாறு வந்தார்கள் என்று (தனக்குள்ளே) அவனால் உணர முடிகிறது.
2.தன்னுள்ளே நின்று… “என் தாய் தந்தை என்னைக் காக்கின்றார்கள்…!” என்று அறிகின்றான்.

அவர்களின் ஆற்றல்களின் துணை கொண்டு சூரியனைப் பார்க்கப்படும் போது சூரியனுக்குள் எதிர் மறையாக மோதிக் கொண்டிருக்கும் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சு பிரிவதைப் பார்க்கின்றான்.

அதே சமயத்தில் தான் கவர்ந்து கொண்ட உணர்வுகளைச் சூரியன் அமிலமாக… “பாதரசமாக மாற்றி” அதைப் பரவெளியில் உமிழ்த்திக் கொண்டிருப்பதையும் காணுகின்றான்.

1.அந்தப் பாதரசம் மற்றொன்றோடு மோதும் போது (வெப்ப காந்த அலைகள் – வெயில்)
2.அந்தந்த உணர்வுகளை மாற்றி அதைத் தனதாகக் கவர்ந்து
3.அதனதன் உணர்வலைகளாக எவ்வாறு செல்கிறது…? என்ற நிலையும் அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.

இன்று விஞ்ஞான அறிவால் ஒரு அணுவின் தன்மையைக் கூர்மையாக அறிந்து அறிந்து இத்தனை ஆண்டுகளாக வளர்ந்த பாறை என்று காணுகின்றார்கள்.

அதைப் போல இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை அந்த இளம் பிஞ்சு உள்ளத்திலேயே எளிமையில் கண்டுணர்ந்தான் அகஸ்தியன்.

சூரியன் எவ்வாறு உருவானது என்ற நிலையும் கடவுள் எவ்வாறு உருவானது என்ற நிலையும் அவன் சிந்தனைக்குள் கிளரச் செய்து விண்ணின் நிலையை அவன் நுகருகின்றான்.

ஒவ்வொரு அணுவின் தன்மையைப் பிளந்து பிளந்து ஆரம்பத்தில் அணுக்கள் எவ்வாறு உருவானது என்ற நிலையையும் உணர்ந்து வெளிப்படுத்துகிறான்.

ஆதியிலே பேரண்டம் எவ்வாறு இருண்ட சூழ்நிலைகள் இருந்தது..? அதிலே அணுக்கள் எப்படி உருவானது…? என்று விண்ணுலகின் தோற்றத்தை அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.

பேரண்டம் இருண்ட நிலையில் இருந்த அக்காலத்தில் நஞ்சு கொண்ட ஓர் அடர்த்தியான ஆவி நஞ்சற்ற நிலைகளில் மோதும் போது (BIG BANG என்பார்கள் விஞ்ஞானிகள்)
1.நஞ்சின் தன்மை கொண்டு அதன் தாக்குதல் தாங்காது வெப்பமாகி
2.அது சுக்கு நூறாகத் தெறித்து சிதறுண்டு ஓடுகின்றது.
3.அவ்வாறு ஓடும் பொழுது அதனின் ஓடும் பாதையில் ஈர்க்கும் சக்தியான காந்தம் உற்பத்தியாகின்றது.
4.விஷம் காந்தம் வெப்பம் இது மூன்றும் சேர்த்து ஒரு அணுவின் தன்மையாக அடைகின்றது
5.முதன் முதலில் ஒரு இயக்க சக்தியாக இது எவ்வாறு உருவானது என்ற நிலையை
6.இந்த ஐந்து வயதுக் குழந்தை அகஸ்தியன் கண்டுணருகின்றான் .

அங்கு நடக்கும் அதிசயங்களையும் அற்புதங்களையும் பார்த்து உணர்கின்றான். அவன் உணர்ந்த நிலைகள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

இந்தச் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது…?

1.ஆரம்பத்தில் தாயின் கருவில் பெற்ற நஞ்சினை வென்றிடும் சக்தியும்
2.ஐந்து வயதில் அவனுக்குள் இணைந்த அன்னை தந்தையின் இரு உயிராத்மாக்களின் சக்தியும்
3.அந்த நஞ்சின் சக்திகளும் அகஸ்தியனுக்குள் வலு கூடப்பட்டு
4.பேரண்டத்தில் ஒரு அணுவின் தன்மை எவ்வாறு நஞ்சால் இயக்குகிறது என்ற நிலையை அவன் கண்டுணர்ந்தான்.

அவன் கண்டுணர்ந்த உணர்வுகள் அவன் உடலுக்குள் விளைந்து “அவனின் மூச்சலைகளாக…” அது விண்ணுலகிலும் படர்ந்துள்ளது. இந்த மண்ணுலகிலும் (நம் பூமியிலும்) படர்ந்துள்ளது.

அகஸ்தியன் தான் உணர்ந்த பின் எல்லாவற்றுக்கும் பெயரிடுகின்றான்.
1.நெருப்பைப் பராசக்தி என்றும்
2.காந்தத்தை லட்சுமி என்றும்
3.விஷத்தை ஆதிகருமாரி என்றும் பெயரிடுகின்றான்.

ஆதி கருமாரி என்றால் இருண்ட நிலைகள் இருக்கும் போது அதற்குள் நஞ்சு கொண்டது நஞ்சற்றதைத் தாக்கப்படும் போது
1.இருண்டது வெப்பமாகி ஒளியாக மாறுவதும்
2.தாகுதலால் நகர்ந்து போவது ஈர்ப்பின் சக்தி அடைவதும்
3.ஒரு இயக்கச் சக்தியாக எவ்வாறு மாறுகிறது என்று அவன் உணர்ந்தான்.

அதாவது கருமாரி… உருமாரி… திருமாரி.. என்று இருண்ட நிலைகளிருந்து எப்படி “இயக்கச் சக்தியாக – கடவுளாக…!” உருவாகின்றது என்று காரணப் பெயரிடுகின்றான் அகஸ்தியன்.

அவன் எதையெல்லாம் வெளிப்படுத்தினானோ அந்த நினைவலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கு படரச் செய்துள்ளது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அலைகளை நுகரும் பொழுது என்னாலும் அதை அறிய முடிந்தது. உணர முடிந்தது. உங்களாலும் அறிய முடியும்… உணர முடியும்…!

உதாரணமாக இன்று விஞ்ஞான அறிவால் விண்ணுலகில் நக்கும் நிலைகளை இயந்திரத்தின் துணை கொண்டு புகைப்படமாக எடுக்கிறான். அந்த ஒளி அலைகளை இங்கே பதிவாக்கிப் பிரித்துத் தரையிலிருந்து படமாகவும் எடுக்கிறான்.

அந்த உணர்வின் ஒளி அலைகளையும் நாதத்தின் தன்மையும் அதனுடைய அடர்த்தியையும் இன்று விஞ்ஞானி கண்டுணருகின்றான்.

விஞ்ஞானிகள் எத்தனையோ இப்படிக் கண்டறிந்து வெளிப்படுத்தினாலும் மெய் ஞானிகள் கண்டுணர்ந்ததை இன்னும் துரும்பளவு கூடச் சொல்லவில்லை. ஏனென்றால்
1.நான் (ஞானகுரு) படிப்பறிவு அற்றவன்.
2.மூன்றாவது வகுப்பு கூட முழுமையாகப் படிக்கவில்லை.
3.எனக்கு விஞ்ஞான அறிவும் இல்லை.
4.புத்தகங்களையும் படித்ததில்லை.

ஆனால் விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்றால் அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை எனக்குள் பதிவானது. பதிவானதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வளர்த்துக் கொண்டேன்.

அப்படி வளர்த்த நிலைகள் கொண்டு தான் என்னால் அறிந்துணர முடிந்தது. அதை உங்களுக்கும் எடுத்துரைக்க முடிகின்றது. இது உங்களுக்குள் பதிவான பின் அண்டத்தின் நிலைகளை நீங்களும் கண்டுணரவும் முடியும்.

அண்டத்தில் உருவானது தான் இந்தப் பிண்டத்திலும் இருக்கின்றது. அதை அறியும் உணர்வுகள் வரப்படும் போது உங்களுக்குள் இது ஒளியாக மாறி அந்த மெய் ஞானிகளின் உணர்வுடன் உங்கள் உயிரான்மாவும் ஒன்றுபடும்.

1.பிறவியில்லாப் பெரு நிலையை நீங்கள் அடைய முடியும்.
2.அதற்காகத் தான் இதை உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.

அகஸ்தியன் பெற்ற அதிசய ஆற்றல்களை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறோம்.

அகஸ்தியன் – துருவன் ஆற்றல்கள் எப்படிக் காலத்தால் மறைந்தது…?

அகஸ்தியன் - துருவன் துருவ நட்சத்திரம்

அகஸ்தியன் துருவன் ஆற்றல்கள் எப்படிக் காலத்தால் மறைந்தது…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனைப் பற்றிப் பல தடவை சொல்லியுள்ளோம்.

காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் காட்டு விலங்குகளில் இருந்து தப்பிக்கப் பல விதமான பச்சிலைகளையும் மூலிகைகளையும் அரைத்துத் தங்கள் உடலில் பூசிக் கொள்கிறார்கள்.

பாம்பினங்களோ மற்ற மிருகங்களோ இவர்கள் உடலில் பூசிய மணத்தை நுகர்ந்தபின் விஷத்தன்மை ஒடுங்கி விலகிச் செல்கிறது. யானைகளும் மூர்க்கத்தனமாகத் தாக்கி உணவாக எடுக்கும் நிலைகளில் இந்தப் பச்சிலையின் மணம் பட்ட பின் அந்த விஷத்தின் தன்மை ஒடுங்குகின்றது.

இரவிலே குகைகளில் படுத்திருக்கும் போதும் பச்சிலைகளையும் மூலிகைகளையும் பரப்பி வைத்துக் கொள்கிறார்கள். மற்ற உயிரினங்கள் இரை தேடி வந்தாலும் இதை நுகர்ந்த பின் இது மயக்கமடைந்து இவர்கள் பக்கம் வராது வேறு பக்கம் சென்று விடுகிறது. அவர்கள் பயமின்றித் தூங்குகின்றார்கள்.

சந்தர்ப்பத்தால் கருவுறும் சமயம் இவர்கள் பூசிய முலாம்களைக் கருவிலே உருவாகும் அந்த குழந்தைக்கும் போய்ச் சேர்கின்றது. நுகர்ந்த உணர்வுகள் கருவிலே இணைந்து நஞ்சை நீக்கிடும் அணுக்களாகப் பெறுகின்றது.

இப்படி உருவான குழந்தை (அகஸ்தியன்) பிறந்த பின் சூரியனை உற்றுப் பார்க்கின்றான்.

சூரியனை நம்மால் காண முடியவில்லை… கண் கூசுகின்றது. ஆனால் அகஸ்தியனோ சூரியனுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காணுகின்றான். மோதலில் ஒளிப் பிளம்புகள் வருவதை இவன் உற்றுப் பார்த்து அந்தப் பிஞ்சு உள்ளத்திலே சிரிக்கின்றான். மகிழ்கின்றான்.

பிரபஞ்சத்தின் உணர்வுகள் அதன் தொடர் அலை வரிசையில் எங்கு செல்கின்றதோ பிரபஞ்சத்தைப் பற்றியும் இளம் பருவத்திலேயே அவன் உணர்கின்றான்.

அவன் மகிழ்கின்றான். ஆனால் சொல்லால் வெளிப்படுத்தும் நிலை இல்லை.

1.நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து கவர்வதும்
2.அதனின் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் போது மத்தாப்பு போல ஒளி அலைகளாக மாறுவதையும்
3.ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வுகள் மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதையும்
4.வான வீதியில் நடக்கும் இந்த அதிசயங்களை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் அகஸ்தியன்.
5.விஷத்தை அடக்கிடும் உணர்வின் ஆற்றலை அவன் பெறும் போது
6.நுகரும் உணர்வுகளை அவன் உயிர் ஞானத்தின் வழித் தொடரிலே இயக்கி
7.ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அவனுக்குள் விளைகின்றது.
8.நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அகஸ்தியனைத் தூக்கிக் காடுகளுக்குள் சென்றால் மற்ற மிருகங்களோ யானையோ புலியோ பாம்போ மற்ற விஷ வண்டுகளோ இவர்கள் அருகிலே வருவதில்லை.

தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதுங்கி வருவதும் இவனுக்குப் பின் வருவதும் போன்ற நிலையாகின்றது. இவன் ஓர் அரசன் ஆகின்றான்.

தன் ஐந்தாவது வயதில் நம் பூமி கவரும் துருவத்தின் ஆற்றலை அறிகின்றான். அகஸ்தியன் துருவனாகின்றான்.

ஆனால் காவியங்களில் காட்டும் பொழுது அந்தத் துருவனை ஒரு அரசனாகப் பிற்காலங்களில் காட்டிவிட்டார்கள். அதற்குப் பின் அவனின் சரித்திரம் இருக்காது.

அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்று அவனை அரசன் என்ற நிலைகள் கொண்டு தான் காட்டினார்களே தவிர அந்தத் துருவன் துருவ மகரிஷியாகி எவ்வழியில் விண்ணுலகம் சென்றான் என்ற நிலைகள் இல்லை.

ஆனால் இந்தக் காவியங்களை எல்லாம் (புலையர்…) “புலஸ்தியர்..” தான் வெளி உலகிற்குச் சொன்னார் என்று சொல்வார்கள்.

ஓர் அரசனுக்கு இரண்டு மனைவி. இரண்டு பேருக்கும் அவரவர்களுக்கு குழந்தை உண்டு.

ஒரு அரசி தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் பொழுது அதே சமயத்தில் இன்னொரு தாயின் மகன் தன் தந்தையிடம் வந்து அது அமர்ந்து அது கொஞ்ச வேண்டும் என்று உணர்வுகள் வரப்படும் போது இந்தத் தாய் அவனைக் கொஞ்ச விடாது தடுக்கின்றது.

ஆகையினால் வெறுத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான். அங்கே தனித்துத் தவம் இருந்தான் என்று உண்மையின் இயக்கங்களை நாம் அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டிவிட்டார்கள்.

துருவனின் (அகஸ்தியனின்) இயக்கத்தை நாம் அறிந்திடாது அரசருக்குகந்த நிலைகளாகப் பல நிலைகளைச் சொல்லி அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்ற நிலைகளில் காவியங்களைப் படைத்து மகாபாரதம் இராமயாணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

கந்த புராணம் சிவ புராணம் என்று வந்தாலும் அதில் அகஸ்தியன் கணபதியை வணங்கினார். அதனால் அவருக்கு அதீத சக்தி ஏற்பட்டது. வாதாபி கணபதியை அகஸ்தியன் வணங்கியதால் அவரை யாரும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று இப்படித்தான் பறைசாற்றி விட்டார்கள்.

அகஸ்தியர் பெற்ற ஆற்றல்களை முழுமையும் காட்டாதபடி காவியத் தொகுப்புகளில் ஒவ்வொருவரும் அவரவருக்கு தக்கவாறு வெளிப்படுத்தி விட்டனர்.

1.பல பல நூல்களைப் படித்தவர்கள் உண்மையின் நிலைகள் உணராது
2.தான் படித்ததே… தனக்குத் தெரிந்ததே “பெரிது” என்று வாதிட்டுக் கொண்டு
3.அவர்கள் முன் மொழிவதைச் சட்டமாக்கப்பட்டு மந்திரங்களாகச் செயல்படுத்தி விட்டார்கள்

அகஸ்தியர் அந்த மந்திரத்தை ஜெபித்தார் அந்த ரிஷி இந்த மந்திரத்தை ஜெபித்தார் என்று மனித உடலில் உருவான உணர்வை எடுத்து அந்த உணர்வுகள் பதிவான பின் அவன் இறந்தால்
1.இதே மந்திரத்தை இன்னொருவர் ஜெபித்தால்
2.அந்த ஆன்மாவைத் தனக்குள் கைவல்யப்படுத்தும் நிலையாகச்
3.சாகாக்கலையாக உருவாக்கி விட்டார்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஒளியின் சரீரமாகப் பெற்ற அந்த “வேகா நிலைக்கு” ஒவ்வொருவரையும் அழைத்துச் செல்லும் மார்க்கத்தையே மாற்றி விட்டார்கள்.

மனிதனுக்குள் அழிக்கும் எண்ணம் இன்று இந்த அளவிற்கு வளர்வதற்குக் காரணம் என்ன…?

Good will

மனிதனுக்குள் அழிக்கும் எண்ணம் இன்று இந்த அளவிற்கு வளர்வதற்குக் காரணம் என்ன…?

“நாம் எல்லோரும் நல்லவர்களே….!” நாம் யாரும் தவறு செய்யவில்லை. நம் வாழ்க்கையில் சந்தர்ப்பம் உலகை அறிந்து கொள்ள நாம் பத்திரிக்கைகளைப் படிக்கின்றோம். டி.வி. மூலம் பார்க்கின்றோம்.

நடக்கும் சம்பவங்களை எல்லாவற்றையும் அறிந்து கொண்டாலும் அதில் தவறான செயல்கள் எதைச் செய்தனரோ அதை அப்படியே நுகரப்படும் போது அதனின் தீய விளைவுகள் நமக்குள் வந்து நோய்க்குக் காரணமாகின்றது.

இங்கே திருடினான்…! அங்கே அடித்துக் கொன்றான்…! என்ற நிலைகள் வரப்படும் போது “தன்னைக் காத்திட இந்தச் செயல்களைச் செய்தார்கள்…! என்ற உணர்வின் நினைவலைகள் நமக்குள் பதிவாகின்றது. பதிவான பின்
1.இதையே தினசரி திரும்பத் திரும்பப் படிக்க (அல்லது பார்க்க)
2.நம் உடலுக்குள் அதுவே விளைந்து
3.”எந்தத் தவறைச் செய்யக் கூடாது…” என்று நினைக்கின்றோமோ
4.அதே தவறைச் செய்யத் தொடங்குவோம்.

உதாரணமாக நாட்டின் அரசியல் சட்டப்படி இப்படித்தான் செய்ய வேண்டும் என்று இருந்தாலும் அதிகாரமும் வலிமையும் செல்வாக்கும் உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிலை வந்துவிட்டது.

ஏழ்மையில் உள்ளவர்கள் கஷ்டப்பட்டுச் சம்பாரித்தது என்று தெரிந்தாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் கேட்டால் உடனே கொடுத்துவிட வேண்டும்.

எல்லாம் எனக்கே சொந்தம் என்ற நிலைகள் தட்டிப் பறிக்கும் நிலை வந்துவிட்டது. மற்றவருடைய சிரமத்தை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அரசியல் வாழ்க்கையில் இவ்வாறு செய்யும் இந்த உணர்வுகள் மனிதன் என்ற பண்பை இழக்கச் செய்து பிறருடைய துன்பத்தை அறியாத நிலைகள் கொண்டு செயல்படுகிறார்கள்.

மற்றவர்கள் சம்பாதித்து அமைதியாக வாழும் நிலையில் நாம் குறுக்கிடக் கூடாது என்ற எண்ணம் வருவதில்லை.

ஒருவர் அனாதையாக இருப்பார். சிறிதளவே சொத்து இருக்கும். ஆனால் அவருக்கு வலு இருக்காது. வலு கொண்ட மனிதன் தாட்டியமாகச் செயல்படும் பொழுது அனாதையாக இருப்பவர் அடங்கித்தான் வாழ வேண்டும்.

இல்லை என்றால் வாழும் நிலைகளில் பல விதமான இடையூறுகளைக் கொடுப்பார்கள். கடைசியில் அழித்து விடுவார்கள்.

இப்படிப்பட்ட வலுவான அசுரத்தனமான உணர்வுகளைச் செயல்படுத்தும் போது வலுவற்ற மனிதருக்குள் கடுமையான வேதனைகள் வருகின்றது.

எல்லை கடந்த வேதனைகளை அனுபவிக்கும் பொழுது துன்பங்களைக் கொடுத்தவர்களை எண்ணிச் சாபமிடும் உணர்வுகளாக வந்துவிடுகின்றது.

இப்படி அவதிப்பட்டு வாழ்ந்து இறந்த பின் இவரின் உயிரான்மா யாரை எண்ணிச் சாபமிட்டார்களோ அவர்கள் உடல்களில் புகுந்து
1.பழி தீர்க்கும் உணர்வாக இயங்கத் தொடங்கிவிடுகிறது.
2.கடைசியில் இரண்டு உயிரான்மாவும் நஞ்சான உணர்வாக மாறிவிடுகின்றது.

இதைப் போன்று தான் இன்று மனிதனின் உணர்வுக்குள் நஞ்சு கொண்ட உணர்வுகளாக இன்று அரசியல் நெறிகளுக்குள் கலந்து கலந்து மக்களுக்கு நல்லது செய்யும் நிலைகளே முழுவதும் தடையாகி விட்டது.

இத்தகைய நிலைகள் வரக் காரணம் என்ன…? அதாவது அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி.

அன்று சோழ மன்னன் ஆண்டான். தன் எதிரிகளை எல்லாம் வீழ்த்தி பல பல வெற்றிகளைப் பெற்றான் என்று சொல்வார்கள்.
1.எதிரிகளைக் கொன்று சோழன் வெற்றி பெற்றான் என்பதைத்தான் பெருமையாகச் சொன்னார்களே தவிர
2.தர்மத்திற்காக வென்றான்… “மக்களை எல்லாம் காத்தான்” என்ற நிலைகள் அறவே இல்லை.
3.தனக்குக் கட்டுப்படவில்லை என்றால் யாராக இருந்தாலும் அந்த அரசை வீழ்த்திவிட வேண்டும்
4.அவர்களை அடிமைப்படுத்திவிட்டால் அதைத்தான் வீர தீரம் என்று பறைசாற்றி விட்டார்கள்.

இன்று இருக்கும் உலக அரசியல் அமைப்புகளும் இந்த அடிப்படையில் தான் இயங்கிக் கொண்டுள்ளது.

மக்களாட்சி என்பார்கள். மக்களைக் காப்பதாகச் சொல்வார்கள். ஆனால் அதன் மறைவிலே எல்லோரையும் தான் அடிமைப்படுத்தும் நிலைகள் கொண்டு தான் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

அமெரிக்காவை எடுத்துக் கொண்டாலும் வலு கொண்ட நிலைகள் வரப்படும் போது இன்று இந்தியாவை எத்தனை பாடுபடுத்துகிறான். அதைப் போல மற்ற நாடுகளிலும் எத்தனை அடக்கு முறைகளைச் செயல்படுத்துகின்றான்…?

அவனுடைய அடக்கு முறைகளை நாம் எண்ணும் போது நம்முடைய உணர்வுகள் எவ்வாறு படைக்கப்படுகிறது…? அந்த உணர்வின் தன்மையால் “அழித்திட வேண்டும்” என்ற எண்ணங்கள் தான் நமக்குள் தோன்றுகிறது.

ஒவ்வொரு நிமிடமும் இதை போல அழித்திடும் உணர்வின் தன்மையை மனிதர்கள் ஒவ்வொருவருமே விளைய வைத்து
1.நாம் எடுத்துக்கொண்ட உணர்வுகள் அனைத்தும்
2.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாகக் காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி விட்டது.

ஆதியிலே பேரண்டத்தில் உருவான அணுவின் வளர்ச்சியில் மனிதன் ஆகி இன்று வளர்ந்து வந்தாலும் இப்படி மற்றொருவரை அழித்திடும் உணர்வின் தன்மையாக மனித உடலுக்குள் விளைந்து விட்டது.

அவ்வாறு வெளியிடப்பட்ட இந்த உணர்வலைகள் மீண்டும் படர்ந்து மனிதனுக்குள் நின்றே “மனிதனுக்கு மனிதன் சுட்டு பொசுக்கும் நிலையாக” வளர்ந்துவிட்டது

மனிதனின் ஆறாவது அறிவு நல்ல உணர்வினை எடுத்து நஞ்சினை நீக்கும் உணர்வின் தன்மையைப் பெற்றாலும் அதனின் நிலைகள் மாறுபட்டு
1.ஆறாவது அறிவிற்குள் நஞ்சினைச் சேர்க்கும் நிலைகள் கொண்டு
2.நஞ்சாக விளைந்து உலகம் அழிந்திடும் நிலைகள் வருகின்றது.
3.மனிதர்களின் நல்ல உணர்வுகள் அனைத்தும் அழிந்திடும் காலம் நெருங்கி விட்டது.

“நல்லதை எண்ணி ஏங்கும்… உயிராத்மாக்களைச் சிறிதேனும் காக்க வேண்டும் என்ற ஆசையில் தான்” மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

மெய் ஞானிகள் உணர்வை வளர்த்துக் கொண்டால் உயிராத்மாவில் சூழ்ந்த நஞ்சான உணர்வுகள் அகன்று பேரருள் உணர்வாகப் பேரொளியாக மாறும்.

மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் ஐக்கியமாகலாம். பேரின்பப் பெருவாழ்வு வாழலாம்.

கற்பூரத்தை வைத்துத் தீபாராதனை காட்டுவதன் உண்மை நிலைகள் என்ன…?

Image

karpoora aarti

கற்பூரத்தை வைத்துத் தீபாராதனை காட்டுவதன் உண்மை நிலைகள் என்ன…?

 

கோயிலுக்குள் போனவுடனே என்ன செய்கின்றோம்…?

கோவிலுக்குள் மனித உடலில் இருக்கக்கூடிய குணங்களைப் பிரித்துக் காட்டுகின்றார்கள். தீபத்தைக் காட்டுகின்றார்கள். அந்த வெளிச்சத்தில் அங்கிருக்கும் பொருள்கள் எல்லாம் தெரிகின்றது.

1.கற்பூரத்தை வைத்துத் தீபாராதனை காட்டும் பொழுது வெளிச்சமும் வருகின்றது
2.மனித உடலுக்குள் சில அசுர குணங்களை அழிக்கக்கூடிய சக்தியும் அதில் இருக்கின்றது என்பது
3.மெய் ஞானிகளால் கண்டுணர்ந்த நிலை.

எண்ணெயை ஊற்றி விளக்கைக் காட்டுவதற்கும் இந்த கற்பூரத்தை வைத்துக் காட்டுவதற்கும் உண்டான வித்தியாசம் கற்பூரம் உடலிலுள்ள சில கிருமிகளைக் கொல்லக் கூடிய ஆற்றல் பெற்றது.

கற்பூரத்தை ஆராதனையாகக் காட்டும் பொழுது அந்த மணத்தை நுகர்ந்தால் உடலில் புழு இருந்தால் அது செத்துப் போகும். அன்றைக்குத் தத்துவ ஞானிகள் இதைப் பழக்கமாகச் செய்யச் சொன்னார்கள்.

விஞ்ஞான ரீதியாக உருவாக்கும் கற்பூரத்தை வாங்கி அதைக் காட்டினால் மனிதனுக்கு நிச்சயம் நோய் வரும்.
1.அன்றைக்கு உருவாக்கிய கற்பூரம் வேறு…!
2.இன்றைக்கு உருவாக்ககும் கற்பூரம் வேறு…!

தீபாராதனை காட்டும் பொழுது அந்த தீப ஒளிச் சுடரை உற்றுப் பார்த்து அதிலிருந்து வெளிப்படும் மணங்களை நாம் நுகர்கின்றோம். கண்ணால் பார்க்கின்றோம். புலன்களால் நுகரும் ஆற்றலும் வருகின்றது.
1.நம்மை அறியாமலே இந்த உணர்ச்சிகள் உள்ளே போகின்றது
2.உடலிலுள்ள விஷக் கிருமிகளை அடக்குகின்றது
3.இதெல்லாம் அன்று தத்துவ ஞானிகள் செய்த நிலைகள்.

மற்றவர்கள் செய்ய மாட்டார்கள்.

மனித வாழ்க்கையில் நாம் கண்ணில் பார்ப்பது துவைதம். மறைமுகமாகக் கண்ணுக்குப் புலப்படாதது அத்வைதம். ஆனால் அதை நுகரப்படும் போது நமக்குள் உணர்ச்சிகள் தூண்டுகின்றது அது விசிஷ்டாத்வைதம்.

கற்பூரத்தை எரித்தவுடனே அந்த வாசனை தெரிகின்றது. அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்றவுடனே தீமைகளை அடக்கும் சக்தியாக வருகின்றது “துவைதம்..” நமக்குள் இந்த உணர்வுகள் இயக்கும் போது விசிஷ்டாத்வைதம்.

ஆலயங்களில் கற்பூர ஆராதனை எதற்காகக் கொடுக்கின்றார்கள் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விளக்கத்தைக் கொடுக்கின்றோம். ஏனென்றால்
1.ஞானிகள் நமக்குக் கொடுத்த சாஸ்திரங்கள் பொய்யல்ல.
2.அவர்கள் கண்டுணர்ந்த உண்மைப்படிச் செய்தோம் என்றால் அது மெய்….!

மெய் வழி கண்ட அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பெறுவோம். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப் பொருள் காண்போம். அழியா ஜோதிச் சுடராகப் பெறுவோம்.

“நேரலை மூலமாக (LIVE)” டி.வி.யை ரசித்துப் பார்க்கும் போது நடந்த நிகழ்ச்சி

Sage

“நேரலை மூலமாக (LIVE” டி.வி.யை ரசித்துப் பார்க்கும் போது  நடந்த நிகழ்ச்சி

இப்போது விஞ்ஞான அறிவால் இன்று இயந்திரத்தின் மூலமாகப் பதிவு செய்த படங்களை (LIVE) ஒலி ஒளி என்ற நிலைகளில் செயற்கைக் கோள் உதவியுடன் டி.வி. ஸ்டேசன் மூலமாக நேரடியாக ஒலி பரப்புகின்றார்கள்.

அதைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதே இயக்கச் சக்தியுடன் தொடர் கொண்ட அதே அலை வரிசையில் நம் வீட்டில் டி.வி.யையோ இன்டெர்னெட் மூலமாகவோத் திருப்பினால் எந்த அலை வரிசையில் வெளிப்படுத்துகின்றனரோ அதனைக் கவர்ந்து அங்கே நடக்கும் காட்சிகளைப் பார்க்கின்றோம்.

விளையாட்டுத் திடல்களில் (STADIUM) விளையாடுகின்றனர். அந்தத் திடல்களில் விளையாடும் போது அதற்குகந்த இயந்திரத்தைக் கொண்டு அதை நேரலை ஒலி ஒளிபரப்பு என்று செய்கின்றார்கள்.

இன்ன நேரத்தில் இன்ன அலை வரிசையில் ஒளிபரப்பாகின்றது என்றால் அதன் வழி நாம் நேரடியாகக் காண முடிகின்றது.

அங்கே விளையாடுபவன் உணர்வுபூர்வமாக விளையாடுகிறான் என்றால்
1.ஒரு ஆட்டக்காரன் மேல் நாம் மனதைச் செலுத்தினால்
2.அவன் ஜெயிக்க ஜெயிக்க நமக்கும் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.
3.அவன் ஜெயித்து வரும் நினைப்பில் ஒரு தரம் வீழ்ந்து விட்டால்
4.அடடா…! என்று உடனே வேதனை உணர்வு வரும்.

தன்னை அறியாமலே ஆட்டம் விளையாடுபவன் மீது பற்று கொண்ட உணர்வுகளால் தோல்வி அடைந்தால் வேதனைப்படும் உணர்ச்சிகளை ஊட்டி விளையாட்டு அரங்கைப் பார்க்கப்படும் போது அங்கே அமரவிடாது துடித்து எழுந்து வருவான்.

அப்பொழுது பகைமை கொண்ட உணர்வுகள் அங்கே வருகின்றது. எந்த விளையாட்டு வீரனின் மேல் பற்று அதிகமானதோ நாளடைவில் “இப்படி விளையாண்டு விட்டானே…!” என்று எண்ணும் பொழுது அவன் மேல் வெறுப்பாகின்றது.

நம் தினசரி வாழ்க்கையில் டிவியிலும் சரி இன்டெர்னெட் மூலமாகவும் சரி இவ்வாறு ஒளிபரப்புகளைப் பார்க்கும் பொழுது சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அறியாமலே எப்படி நம்மை இயக்குகின்றது…? என்று ஒவ்வொருவரும் பார்க்கலாம்.

இது லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒருவர் டி.வி. மூலமாக அரங்கத்தில் விளையாடும் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு உள்ளார்.

உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அவரின் மகன் இடைமறித்து ஏதோ சொல்கின்றான். சொன்னவுடனே தன் மகனைத் துப்பாக்கியால் சுட்டு விட்டான்.

1.விளையாட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாலும்
2.மகன் மேல் பற்று கொண்டிருந்தாலும்
3.தன் மகன் பண்பால் அவன் எதையோ சொல்ல முயற்சிக்கின்றான் என்றாலும்
4.விளையாட்டைத் தான் டி.வி.யில் பார்ப்பதைத் தடுக்கின்றான் என்ற அசுர உணர்வு கொண்டு
5.தன் மகனையே துப்பாக்கியால் சுடுகின்றான்.

விஞ்ஞான உலகில் வாழும் மனிதன் விஞ்ஞான அறிவு கொண்டு வாழப்படும் போது “அஞ்ஞான வாழ்க்கையே” அவன் வாழுகின்றான். மெய் ஞான வாழ்க்கைக்கு அவனால் வர முடியவில்லை.

அஞ்ஞான வாழ்க்கை வரப்படும் போது எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது அதன் மேல் அவன் பற்று கொண்டு விளையாடும் போது அவனுடைய செயல்களை ஆர்வமாகக் கவனிக்கின்றான்.

ஆனால் அந்த நேரங்களில் தன்னுடைய பிள்ளை அருகிலே வரப்படும் போது
1.”இவனால் நமக்குத் தடையாகின்றது…!” என்று இந்த வெறி கொண்டு அவனைச் சுடுகின்றான்
2.அவன் பிள்ளை தவறு செய்தானா…? இல்லயே…!

அவன் நுகர்ந்த சந்தர்ப்பம் இது உருவாகி உணர்ச்சிகளை இயக்கி அவனைத் தாக்கச் செய்கின்றது. ஆகவே விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை தான் வாழுகின்றான்.

தன் மகன் கூறும் உணர்வை தந்தையால் கேட்க முடியவில்லை. எதனால் இவன் கூறினான் என்ற நிலையை அறிய முடியவில்லை.

பையனும் தான் தாக்கப்படும் போது அவனிடம் இருக்கும் துப்பாக்கியை வாங்கித் தந்தையின் மண்டையிலே அடித்து உடைத்து விடுகின்றான்.

இவ்வாறு பற்றுடன் டி.வி..யைப் பார்க்கும் நிலையில் அதற்குத் தடையானால் சிந்தனைகள் குறைந்து அசுர உணர்வின் இயக்கமாகத்தான் மாற முடிகின்றது.

விஞ்ஞான அறிவு மனிதனுடைய உடல் இச்சைக்குத்தான் கொண்டு செல்கிறது. அஞ்ஞான வாழ்க்கை வாழ்வதற்குத்தான் அடிகோலுகிறது. மனிதனின் சிந்தனைகளை அழித்துக் கொண்டிருக்கின்றது.

இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் தன்னை அறிந்து… இந்த மண்ணை அறிந்து… “விண்ணை அறிந்தவர்கள்” இன்று மெய் ஞானிகளாக அழியா ஒளிச் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்தில் பேரானந்தப் பெரு நிலை பெற்று வாழ்கின்றார்கள்.

அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை நாம் பெற்றால் மனிதன் என்ற முழுமை அடைந்து இந்தப் பிறவியின் பலனை அடைந்து பிறவா நிலையை அடையலாம்.

ELECTRONIC CONTROL போல் தீமைகளை நிறுத்திட முடியும்…!

meditation-results

ELECTRONIC CONTROL போல் தீமைகளை நிறுத்திட முடியும்…! 

வெளியிலே பார்த்தீர்கள் என்றால் எத்தனையோ பேர் தவறு செய்கின்றார்கள். உங்களுக்கு யாரும் தீங்கு செய்ய வேண்டாம்.

ஒருத்தன் ஒருவன் உதைக்கின்றான் என்று பார்த்தீர்கள் என்றால் என்ன ஆகின்றது…? அந்த உணர்வுகள் நம் நல்ல குணத்துடன் சேர்த்து கெட்டதாகி விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை என்றாலும் தவறு நடப்பதைப் பார்த்ததும் “ஜிர்ர்ர்…” என்று நமக்குக் கோபம் வருகின்றது. அதை எப்படிச் சமப்படடுத்ததுவது அல்லது மாற்றுவது…?

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் பதிவாக்கி ஆணையிட்டு (PROGRAMMING) வைத்து விடுகின்றார்கள். எதன் வலு இருக்கின்றதோ அதற்குக் கீழே மாற்றமானால் அந்தத் தணிந்ததை அதை அடக்குகின்றது.

அதாவது அடக்கக்கூடிய ஒலியின் அறிவைக் கொடுத்தோம் (ELECTRONIC CONTROL) என்றால் அது இதை அடக்குகின்றது. இயந்திரத்தையோ அல்லது அதனின் செயல்பாடுகளைச் சீராக்கி இயக்குகின்றது.

மழை காலமோ குளிர் காலமோ வருகிறதென்று சொன்னால் அந்தந்தப் பருவ காலத்தில் வெப்ப நிலை மாற்றமாகின்றது.

தன்னிச்சையாக (AUTOMATIC) கம்ப்யூட்டரில் போட்டுப் பதிவு செய்து ஆணையிட்டு வைத்திருக்கின்றார்கள். வெப்பம் குறைகிறது என்று சொன்னால் அது அந்தக் குளிர்ச்சி ஆனவுடனே “டக்…” என்று மாற்றி சமமான வெப்பத்தைக் கொடுக்கின்றது. (AIR CONDITIONER, FRIDGE)

வெப்பம் அதிகமானால் இதை நிறுத்துகின்றது. மீண்டும் குளிர்ச்சியைக் கொடுக்கின்றது. வெப்பத்தைச் சமப்படுத்துகின்றது.

இயந்திரம் இந்த வேலையைச் செய்கின்றது. ஆனால் அந்த இயந்திரத்தை உருவாக்கியதே மனிதன் தான். இது இந்த வேலை தான் செய்ய வேண்டும் என்று கட்டளை இடுகின்றான். அந்த ஆணைப்படி அது இயக்கிச் சீராக்குகின்றது.

புற நிலைகளுக்கு இதை விஞ்ஞானிகள் செய்தாலும் அக நிலைக்கு நம்முடைய மெய் ஞானிகள் காட்டிய முறைப்படி ஆறாவது அறிவு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும். அப்படிப் பழகிக் கொண்டால்
1.தீமைகள் வரும் சமயம் உடனடியாக அதை அறிந்துணர்ந்து அடக்க முடியும்.
2.எந்தெந்த உணர்வுகளை எப்படி எப்படிச் சமப்படுத்த வேண்டும் என்ற
3.அறிவின் ஞானம் நமக்குக் கிடைக்கும்.

ஒரு சப்… என்று இருக்கின்ற மாவில் காரத்தைப் போட்டால் காரம் ஒடுங்குகின்றது. சுவை வருகின்றது.

இதே மாதிரித் தான் நம் வாழ்க்கையில் தீமைகள் வரும் சமயம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை அதனுடன் இணைத்து அதை அடக்கிப் பழகுதல் வேண்டும்.

ஒரு தீபத்தைக் காட்டியவுடனே வழி (பாதை) தெரிகின்றது. இது தான் தீப வழி. அதாவது
1.வெளிச்சத்தில் நாம் வாழ வேண்டும்
2.தெளிவாக வாழ வேண்டும்…. தெளிந்து வாழ வேண்டும்
3.நாம் எதிலும் “தெளிவாக இருக்க வேண்டும்” என்பது தான் அதனுடைய பொருள்.

தீபம் என்றால் வெளிச்சம். தீபம் இருந்தால் தானே வெளிச்சமாகின்றது. அதன் வழியில் நாம் நடக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துக் கொண்டே வந்தால் நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.

 

பக்தி கொண்ட ஆத்மா இறந்த பின் எங்கே செல்கின்றது…?

healing hands

பக்தி கொண்ட ஆத்மா இறந்த பின் எங்கே செல்கின்றது…? 

குருநாதர் ஒரு கிராமத்துப் பக்கம் என்னைப் போகச் சொன்னார். போனேன். அங்கே ஒரு கிழவி அதற்கு வாரிசு இல்லை.

அந்த அம்மாவிற்கு நிறையச் சொத்துக்கள். முருக பக்தி மிகவும் அதிகம்.

எல்லாக் கோயிலுக்கும் போய் தர்மத்தையும் எல்லாவற்றையும் செய்து நமக்கு எதற்கு…? எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும்…! என்ற எண்ணத்தில் இப்படியே செய்தது.

ஆனால் கடைசியில் என்ன செய்து விட்டார்கள்….!

அந்த அம்மாவை ஏமாற்றிச் சொத்தையெல்லாம் எழுதி வாங்கிவிட்டார்கள். இதைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை.

அனாதையாக்கிவிட்டார்கள். அது ஒரு சிறிய குடிசையில் இருக்கின்றது. அந்தக் குடிசை அருகில் போய் உட்காரச் சொன்னார் குருநாதர்.

உள்ளே அம்மா அங்கே புலம்பிக் கொண்டிருக்கின்றது.

முருகா…! நான் நன்றாக இருக்கிற நேரத்தில் என் மடி மீது அமர்ந்து என்னிடம் கொஞ்சினாயே…! எதை நினைத்தாலும் நீ நல்ல வழியைக் காட்டினாயே..!

என் சொத்தையெல்லாம் பறித்துக் கொண்ட பிற்பாடு உன்னைக் கூட இங்கே வரக் காணோமே… நீ கூட எனக்கு எதிரியாகி விட்டாயா…?” என்று சப்தம் போடுகின்றது.

உடல் சரியில்லாமல் வயிற்றோட்டமாகப் போய் அந்த வீடே நாற்றமாக இருக்கின்றது. உள்ளுக்குள் இருக்க முடியவில்லை.

இதைப் பார்த்தவுடனே எல்லோருமே விலகிப் போய் விடுகிறார்கள். யாருமே கவனிப்பதில்லை.

சொத்தை வாங்கியவர்களோ சீக்கிரம் இது தொலையட்டும்…! எப்படா தொலையும்…? என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னாலும் நாற்றம் தாங்க முடியவில்லை.

குருநாதர் சில உணர்வுகளை எடுத்து “இந்த மாதிரிச் செய்…!” என்று சொல்லிவிட்டு உள்ளே போகச் சொல்கிறார். நாற்றம் அடங்குகின்றது. நல்ல வாசனை வருகின்றது.

அந்த அம்மாவிற்குக் கண்ணும் சரியாகத் தெரியவில்லை. அரைப் பார்வையாக இருக்கின்றது. என் காலடிச் சப்தம் கேட்டவுடனே அப்பா… “முருகா… நீ வந்து விட்டாயாடா…!” என்று கேட்கிறது. என்னை முருகன் என்று நினைக்கின்றது.

நான் வந்து விட்டேன் என்று சொல்கின்றேன்.

“முருகா என்னை நீ காப்பாற்று…!” என்று சொன்னவுடனே அந்த ஆன்மா பிரிகின்றது. முருகன் மேல் எண்ணத்திற்குப் போகின்றது.

யார் யாரை எல்லாம் இது காப்பாற்றியதோ அவர்கள் எண்ணம் அதிகமாகி அவர்கள் எண்ணத்திற்குப் போகின்றது.

உயிர் பிரிந்து போனவுடனே அதற்குப் பின்னாடியே என்னைச் சுற்ற விடுகிறார் குருநாதர்.

யார் யாரையெல்லாம் அந்த அம்மா பதிவு செய்து கொண்டார்களோ தன்னுடைய சொத்தை அபகரித்தார்களோ அவர்கள் பேரைச் சொல்லி அங்கே புலம்புகின்றது.

அதைத் தேடி “இன்னார்” என்று சொல்கின்றது. நானும் அந்த இடத்திற்குப் போனேன்.. பார்க்கின்றேன்…!

அந்த அம்மா அவர்களைச் சாபமிடுகின்றது. சாப அலைகள் பட்டபின் அந்த வீட்டில் என்னென்ன அவஸ்தைப்படுகின்றார்கள் என்று அதையெல்லாம் அங்கே வட்டமிட்டுப் பார்க்கின்றேன்.

ஏனென்றால் தொடர்ந்து ஐந்தாறு மாதம் அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கச் சொன்னார் குருநாதர்.

1.இயற்கை எப்படி ஒரு மனிதனுக்குள் விளைந்தது உடலை விட்டுப் பிரிந்து போன பிற்பாடு
2.உயிராத்மா அடுத்து எந்த நிலை ஆகிறது…?
3.ஒன்றுடன் ஒன்று எப்படிச் சேர்கின்றது..?
4.தெய்வமாகக் காட்சி கொடுப்பது…. சாமியாராகக் காட்சி கொடுக்கிறது… “இது எல்லாமே இப்படித்தான்…” என்று இதைத் தெளிவாகக் காட்டுகிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

எதை நமக்குள் அதிகமாகப் பதிவு செய்தமோ அந்த உணர்வுகள் விளைந்து வெளிவந்த பிற்பாடு
1.அந்த உயிரான்மா எப்படிப் போகின்றது…
2.அடுத்த உடல்களுக்குள் சென்று மீண்டும் வேதனைப்படுத்தும் நிலையாக எப்படிச் செயல்படுகிறது…?
3,நஞ்சின் தன்மை அதிகமான பின் விஷம் கொண்ட உயிரினங்களாக எப்படி மனிதன் மாறுகிறான் என்று
4.நேரடியாக இப்படி அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

அதையெல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடு பக்தி என்பது எப்படி இருக்க வேண்டும்..? என்று இதைச் சொல்கின்றார் குருநாதர்.

இந்த மனித வாழ்க்கையில் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளைச் சேர்த்து எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருளால் நலமும் வளமும் பெறவேண்டும் என்ற இந்தப் பக்தி இருந்தால் இது நமக்கு அழியாச் சொத்தாகின்றது.

உயிராத்மா உடலை விட்டுச் செல்லும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும் என்று உணர்த்துகின்றார் குருநாதர்.

தீமைகளை அடக்கி அதன் மீது சவாரி செய்ய வேண்டும்…!

blissful-lights

தீமைகளை அடக்கி அதன் மீது சவாரி செய்ய வேண்டும்…! 

விநாயகனை வணங்காமல் கோயிலுக்குள் போனால் பலன் ஏதும் இல்லை என்று சொல்கிறோம். அந்த நல்ல வினை எது…? நல்ல வினையை எப்படி நமக்குள் சேர்க்க வேண்டும்…? நல்ல பலனை எப்படிப் பெறவேண்டும்…?

1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.அதாவது தீமைகளை வென்ற வினைகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

நாம் யார் யாரை எல்லாம் பார்க்கின்றோமோ அவர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும்.

ஏனென்றால் நாம் பார்த்தவர்கள் எல்லாம் நம்மிடம் இருக்கின்றார்கள். அதாவது அவர்களின் உணர்வுகள் எல்லாம் நம் உடலுக்குள் இருக்கின்றது என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

எத்தனையோ பேரைப் பார்த்த அந்த உணர்வுககள் அனைத்தும் பல பல வினைகளாக நமக்குள் விளைந்திருக்கின்றது. அதற்குள் அந்த மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்து நல்ல வினைகளாக மாற்ற வேண்டும்.

குருநாதரைச் சந்தித்த ஆரம்பத்தில் இதை எனக்கு உணர்த்துவதற்காக என்ன செய்தார்….?
1.விநாயகர் மேலே சவாரி ஏறி உட்கார்ந்து
2.”நான் தான்டா விநாயகன்…” என்று சங்..சங்…சங்… என்று குதிக்கின்றார்,

வருகின்றவர்கள் போகின்றவர்கள் எல்லாம் இதைப் பார்த்து என்ன சொல்கிறார்கள்.

ஏனய்யா…! பைத்தியத்தைக் கொண்டு இப்படி விநாயகர் மேலே ஏற விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றாய்…? ஏன் இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாய்…? என்று கேட்டார்கள்.

அவர்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்குக் கஷ்டமாகத் தான் இருந்தது.

ஆனால் குருநாதர் விளக்கம் கொடுக்கும்போது தான் அதனின் உட்பொருள் என்ன என்று அறிய முடிந்தது.

எது….?

நமக்குள் எதை அடக்க (சவாரி) வேண்டும்…? என்று உணர்த்துகின்றார்.

1.அருள் ஒளி கொண்டு உடலுக்குள் வந்த தீய வினைகளை அடக்க வேண்டும்.
2.அருள் ஒளியை நமக்குள் வினையாக்க வேண்டும்.
3.அந்தச் சவாரி செய்ய வேண்டுமடா…! என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குருநாதர் முதலிலே இந்த மாதிரி வேலைகளைச் செய்வார். ஆனால் பின்னாடி தான் உண்மைகளை எல்லாம் விளக்கிக் காட்டுவார்.

1.நான் பார்க்கின்றவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
2.நான் பார்த்தவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
3.எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வுடன்
4.அந்த மகரிஷியின் அருள் சக்தியை நீ பெறுவதற்கு உன் எண்ணம் முயற்சியாக இருக்க வேண்டும் என்றார்.

 

அகஸ்தியன் பெற்ற “அதிசயமான ஆற்றல்கள்”

Image

agastyamala idol

அகஸ்தியன் பெற்ற “அதிசயமான ஆற்றல்கள்”

 

இன்று நாம் போற்றித் துதித்துக் கொண்டிருக்கும் அகஸ்தியன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் தோன்றியவன். அவனுடைய தாய் தந்தையர்கள் காட்டுவாசியாக வாழ்ந்து வந்தவர்கள்.

மலைப் பகுதிகளில் வாழ்பவரைப் “புலையர்” என்று நாம் சொல்கின்றோம்.

அவ்வாறு காட்டுவாசியாக வாழ்ந்து வந்த அவர்கள் காட்டு மிருகங்களிடமிருந்து தான் தப்பித்துக் கொள்ளவும் காட்டில் வாழும் சில விஷ வண்டுகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் தாவர இனங்களின் முலாம்களைப் பூசிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு முலாமும் ஒவ்வொரு மணத்தை உடையது. ஒரு தாவர இனத்தின் மணம் சில வண்டுகளுக்கு உதவாது. சில தாவர இனத்தின் மணத்தைப் பூசிய பின் அந்த வாடையைக் கண்டால் கொசுக்கள் வருவதில்லை.

உதாரணமாக ஒரு ஆரஞ்சுப் பழத் தோலைப் பொடியாக்கி அதை நெருப்பில் போட்டால் அந்த மணம் பட்ட பின் கொசுக்கள் இங்கே வராது. அந்த மணத்தைக் கண்டு அஞ்சிச் செல்லும்.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் இதைப் போலத் தான் பல பல தாவர இனங்களை தனக்குள் முலாமாகப் பூசிக் கொண்டார்கள்.

இவர் உடலில் முலாம்களாகப் பூசிய பின் இந்த மணங்கள் உடலின் வெப்பத்தால் வெளிப்படும் பொழுது நஞ்சு கொண்ட உயிரினங்கள் எதுவாக இருப்பினும் இதை நுகர்ந்தபின் அஞ்சி ஓடுகின்றது.

கொடூரமான மிக விஷத் தன்மை கொண்ட பாம்புகள் விஷ ஜெந்துக்கள் அவைகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளப் பல பல தாவர இனங்களை முலாமாக பூசிக் கொள்கிறார்கள்.

எந்தெந்த உயிரினங்களுக்கு எந்தெந்த வாடை ஆகாதோ இரவிலே அவர்கள் தூங்கும் போது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான முலாமாகப் பூசிய பின் அந்த உயிரினங்கள் இவர்களை அணுகி வருவதில்லை.
அன்றைய காலங்களில் இருள் சூழ்ந்த நிலைகள் வரும் போது (இரவிலே) தான் காட்டு விலங்குகள் தன் ஆகாரத்தைத் தேடி வருகிறது.

மனிதனோ இரவிலே உறக்க நிலைகள் பெற்றவன். உறங்கும் சமயம் அந்த காட்டு விலங்குகள் இவர்களைக் கொன்று புசித்து விடும். இதைப் போன்ற நிலைகளுலிருந்து மீளுவதற்காக உறங்கும் சந்தர்ப்பத்தில் மற்ற தாவர இனங்களை முலாமாகப் பூசிக் கொள்வார்கள்.

இன்றும் சில சாதுக்கள் வெளியிலே சென்றால் இதே மாதிரி முலாம்களை பூசிக் கொள்வார்கள். சிலர் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்வார்கள்.

அதன் மூலம் கொசு விஷ ஈக்கள் போன்ற மற்ற விஷமான உயிரினங்கள் தன்னைத் தாக்கிடாதபடி காத்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. இன்றும் காட்டுப் பகுதியில் வாழ்பவர்கள் இதை போல முலாம்களைப் பூசி வருகிறார்கள்.

பண்டைய காலங்களில் பல பல தாவர இனங்களைத் தனக்குள் முலாமாக பூசினாலும் அதைச் சுவாசிக்கும் பொழுது அது அவர்கள் உடலுக்குள்ளும் பரவுகிறது.

சந்தர்ப்பத்தால் கருவுறுகிறார்கள். இவர்கள் பூசிய முலாம் அனைத்தும் இவர்கள் நுகர்ந்து நுகர்ந்து தாயின் கருவிலே வளரும் இந்த சிசுவிற்கும் (குழந்தைக்கும்) போய்ச் சேர்கிறது. குழந்தைக்குள்ளும் நஞ்சினை வென்றிடும் சக்தியாக இது வளர்ச்சி பெற்று வருகின்றது.

அக்கால மக்கள் சூரியனைக் கடவுளாக வணங்கியவர்கள் தெரிந்தோ தெரியாமலோ…! அகஸ்தியனுடைய தாய் தந்தையரும் சூரியனைக் கடவுளாக வணங்கி வந்தார்கள். ஏனென்றால்
1.இருளை நீக்கி ஒளியைக் கொண்டு வரும் போது
2.“இது தான்” (சூரியன்) மிருகங்களிடமிருந்து காத்திடும் நிலையாக
3.“கடவுள் நம்மைக் காக்க வருகின்றான்…!” என்று சூரியனை வணங்கிப் பழகியவர்கள்.

மேலை நாடுகளில் சூரியனைக் கடவுளாக வைத்து வணங்கும் நாடுகளும் உண்டு. நம் நாட்டிலும் சூரியனைத் தான் பெரும் பகுதியாக வழிபட்டு வருகின்றோம்.

1.இதைப் போல அவர்கள் சூரியனை வழிபட்டு வரும் போது
2.இவர்கள் விஷத் தன்மை கொண்ட தாவர இனங்களின் முலாமைப் பூசியிருப்பினும்
3.சூரியனை பார்க்கும் போது சூரியனின் கதிர் வேகங்கள் தணிந்து நிற்கின்றது.
4.ஏனென்றால் அது உமிழ்த்தும் நஞ்சும் இவர்கள் பூசியிருக்கும் நஞ்சும் சமப்படும் போது
5.இவர்கள் சூரியனைத் தாராளமாகப் பார்க்க முடிகின்றது – கண்கள் கூசுவதில்லை.

சூரியனின் கதிரியக்கங்களைச் சமப்படுத்தும் நிலையாக வரும் பொழுது அகஸ்தியன் தாய் தந்தையருக்கும் இது கிடைக்கிறது. கருவிலே விளையும் குழந்தைக்கோ அதி பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

பிறந்த அந்தக் குழந்தை (அகஸ்தியன்) தனிமையில் கிடந்தாலும் நஞ்சு கொண்ட பாம்பினங்களோ மற்ற உயிரினங்களோ அந்தக் குழந்தை அருகில் செல்வதில்லை.

சூரியனை வணங்கி வந்த அக்காலத்தில் “இது கடவுளின் பிள்ளை… இது கடவுளால் கொடுக்கப்பட்ட பிள்ளை…!” என்று என்று அகஸ்தியனின் தாய் தந்தையரே அவரைக் கடவுளாக வணங்கத் தொடங்கி விட்டார்கள்.

இதைப் போன்ற அற்புத நிகழ்ச்சிகளும் பல காட்டு விலங்குகள் இவனிடம் அணுகாத நிலைகளும் வளர்ந்து கொண்டே வந்தது.

இவர்களோ உடலிலே முலாமைப் பூசினார்கள். அந்த முலாமின் உணர்வுகள் கருவிலே வளர்ந்த குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது.

சூரியனின் உணர்வின் ஆற்றல் அகஸ்தியனுக்குள் பெருகிப் பெருகி சூரியனை இவன் நேரடியாகப் பார்த்து அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறான்.
1.டெலெஸ்கோப்பை வைத்து இன்று நாம் எதைப் பார்கின்றோமோ அது போல
2.உணர்வின் செல்களுக்குள் மற்றததை ஒளி கொண்டு வெகு தூரம் பாய்ச்சி
3.அணுவின் தன்மையை அறியும் ஆற்றல்
4.தாய் தந்தை மூலமாகக் கருவிலேயே விளைகின்றது.

இது அகஸ்தியனுடைய சந்தர்ப்பம்

அவன் பிறந்து ஐந்து வயது ஆகும் போதே விண்ணை நோக்கிப் பார்ப்பதும் பிற துஷ்ட மிருகங்கள் இவனைக் கண்டு அஞ்சுவதும் இதைப் போன்ற பல அற்புத நிகழ்ச்சிகளும் நிகழ்கின்றன.

கண் கொண்டு நேரடியாகவே ஒரு அணுவின் சிதைவும்… அணுவின் கூட்டமைப்பும்… அணுவின் தன்மையையும்… அணுவின் ஆற்றலையும் அகஸ்தியன் காண்கின்றான்.

சாதாரணமாக உயிரினம் முட்டை இடுகின்றதென்றால் அது “இன்ன முட்டை” என்றும் அதில் எப்படி அணுவின் தன்மை உருவானது என்றும் அவன் கண்டுணர்கின்றான்.

நமது பூமியில் உருவான தாவர இனத்தின் மணங்களைக் காணும் போது “இன்ன செடியிலிருந்து வந்த மணம்” என்று அதைப் பிரித்து சொல்லும் தன்மை ஐந்து வயதிலேயே அகஸ்தியனுக்கு வருகிறது.

இதையெல்லாம் காணும் பொழுது தாய்க்கோ பேரானந்த நிலை வருகிறது. குழந்தை தன்னிச்சையாக எங்கே சென்றாலும் அச்சமின்றிச் செல்லுகின்றான். இவனைப் பார்க்கும் மற்றவைகள் தான் அஞ்சுகின்றது.

ஆனால் இவன் தாய் தந்தையரோ மற்றவர்களோ முலாம் பூசாமல் போனால் மற்ற விலங்குகள் அவர்களைக் கொன்றுவிடும்.

இருந்தாலும் இவர்கள் உடலிலே பூசிய முலாம்களின் நஞ்சு சிறுகச் சிறுகச் சேர்ந்து நஞ்சின் தன்மை அதிகரித்து உடல்கள் மடிந்து விடுகிறது. அகஸ்தியன் ஐந்து வயது வருவதற்குள் இந்த இரண்டு பேரும் மடியும் தருணம் வந்து விடுகிறது.

மடியும் போது ஐந்தே வயதான இந்த இளம் பிஞ்சு உள்ளத்தை இந்த காட்டுக்குள் விட்டுச் செல்லுகின்றோமே என்ற ஏக்க உணர்வு அதிகமாகின்றது.

செயலற்ற நிலைகள் வரும் போது தாய் தந்தை இருவரும் ஒருமித்த நிலையில் குழந்தையை எண்ணி ஏங்கியே அந்த உயிரான்மாக்கள் பிரிகின்றது.

வெளி வந்த பின் எந்தக் குழந்தை மேல் பற்று வைத்தனரோ அகஸ்தியனுக்குள் இந்த இரண்டு ஆன்மாக்களும் புகுந்து விடுகிறது.

அவர்களுடைய வாழ்க்கையில் எதையெல்லாம் வளர்த்தார்களோ அந்த உணர்வின் ஆற்றலைத் தன் குழந்தையைக் காத்திடும் உணர்வாக அந்த உடலுக்குள் புகுந்த பின் இயக்கத் தொடங்கினார்கள்.

தன் தாய் தந்தை மடிந்ததை எண்ணி அகஸ்தியனும் ஏங்குகின்றான். தன் அன்னை தந்தை தன்னைப் பேணிக் காத்ததை எண்ணி “தன் அன்னையைப் பார்க்க வேண்டும்…!” என்ற ஏக்கத்தில் சூரியனை உற்றுப் பார்க்கின்றான்.

கடவுள் என்று தாய் தந்தையர் உற்றுக் காண்பித்த அந்த உணர்வு கொண்டு சூரியனை உற்று நோக்கும் போது அங்கு நடக்கும் அதிசயங்களைக் கண்டுணர்கின்றான் அகஸ்தியன்.

அதை அவன் உடலிலே விளைய வைத்து ஒவ்வொன்றும் அறிவின் தன்மையாக
1.விண்ணின் ஆற்றலை அறியும் ஆற்றலாக
2.அவனின்று வெளி வந்த உணர்வுகளச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து வைத்துள்ளது
3.இதிலிருந்து அலைகளாக இன்றும் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது.

நான் (ஞானகுரு) இப்போது பேசுகின்றேன் என்றால் குருநாதர் அந்த அகஸ்தியன் வெளிபடுத்திய உணர்வை எடுக்கும் வழியை உணர்த்தினார்.

அதனின் உணர்வின் துணை கொண்டு அதை அறியும் ஆற்றல் பெற்றேன். அறிந்த பின் உங்களுக்குள்ளும் இதை உணர்த்திக் கொண்டிருக்கின்றோம்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனால் வெளிப்பட்டதாக இருந்தாலும் நாம் ஒவ்வொருவருமே இன்று காண முடியும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எப்படிக் காண்பித்தாரோ அதைப் போல
2.அகஸ்தியன் கண்டுணர்ந்த விண்ணுலக ஆற்றலை எல்லோரும் கண்டுணர்ந்து
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாம் முழுமை பெற முடியும்.