தண்டாயுதபாணி – நிராயுதம்

Image

https://omeswara.blogspot.in/2013/06/blog-post_18.html

அவன் ஆண்டி நீ பார்க்காதே, கோவணத்தோடு பார்த்தால் உனக்குச் சோறு கிடைக்காது ஆகையினாலே ஆண்டி வேஷம் போட்டிருக்கும் பொழுது போய்ப் பார்த்தால், இங்கு தொழில் போய்விடும்.
ஆண்டி வேஷம் போட்டிருந்ததைப் பார்த்தால் இங்கு தொழில் போய்விடுமாம். அதற்காக வேண்டி, இராஜவேஷம் எப்பொழுதோ அப்பொழுது மலைக்குப் போவார்கள். இது மாதிரியெல்லாம், நம்மை அறியாமலே நமக்குள் ஆசையை வளர்த்துள்ளார்கள்.
தண்டபாணி என்கிறபோது இந்த உடலின் வாழ்க்கையின் நிலைகளை தண்டாயுதபாணி என்று, சிலையில் கோவணாண்டியாகக் காட்டினார்கள்.
அதாவது, ஆசை, கோபம், வெறுப்பு இத்தகைய உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து, இந்த உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை கொடுக்கப்படும் பொழுது, “இரு நான் உன்னைப் பார்க்கிறேன்” என்ற நிலை ஏற்படுகின்றது.
இந்த மாதிரி, இன்னொரு உடலுக்குள் முற்றிடும் உணர்வை
நம் உடலுக்குள் சுவாசிக்கக் கூடாது. அதாவது,
நமக்குள் எடுக்க வேண்டிய ஆயுதம் – “நிராயுதம்”.
நிராயுதமாக, இந்த “உடலுக்குள் உண்டான எண்ணங்களை” எடுக்கக்கூடாது என்பதற்குத்தான் தண்டாயுதபாணியாக வைத்துள்ளார்கள்.
ஆக, அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை எடுத்து,அதைச் சுவாசித்து நமக்குள் “ஊன்றுகோலாக” வைக்க வேண்டும்.
அதன் வழியில், நமக்குள் வரும் தீமைகளை
தடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்
அப்படிக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

சிலையிலிருந்து ஆவியாக வரும் சத்தை நம்மைச் சுவாசிக்கச் செய்யவே முருகன் சிலை வைத்தார் போகர்

Image

https://omeswara.blogspot.in/2015/03/blog-post_10.html

நமக்குள் சேரும் விஷத்தினைப் போக்க பழனி மலை மீது சிலையைவைத்துள்ளார் போகர்.

பழனி மலைமீது ஏறும் பொழுது உடல் உறுப்புகள் அனைத்திற்கும் வேலைகளைக் கொடுத்துவிட்டு நம் எண்ணம் அனைத்தையும் வானை நோக்கி எண்ணி மகரிஷிகள் காட்டிய அற்புதமான தெய்வ நிலைகள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு நம் கண்ணான புலனறிவில் ஊட்ட வேண்டும்.

அப்பொழுது கதிரவனுடைய நிலைகள் பூமி சுழலும் பொழுது கிழக்காகின்றது. நாம் கிழக்காகப் பார்த்து வணங்கும் பொழுது அந்த சூரியனுடைய காந்த அலைகள் நமக்குள் ஈர்க்கப்படுகின்றது. விண்ணிலே இருக்கக்கூடிய மெய்ஞ்ஞானியின் நிலைகளை ஈர்க்கக்கூடிய நிலைகள் வருகின்றது.

அவ்வாறு மெய்ஞானிகளுடைய நிலைகள் நமக்குள் வரும்பொழுது சூரியனுடைய ஆற்றல் மிக்க நிலைகள், அந்த காந்தசக்தி பெருக காரணமாகின்றது.

அந்த மெய்ஞானிகளுடைய சக்தியைக் கொண்டுதான்

நமது வாழ்க்கையில் நம்மை அறியாது சேரும்

அசுர குணங்களைப் போக்கமுடிகின்றது.

உதாரணமாக நாம் சாலையில் செல்லுகின்றோம் என்றால் ஒரு மாடு மிரண்டு வருகின்றது. அதனுடைய பயத்தை நம் கண் கவருகின்றது.

அந்தப் பயம் நமக்குள் வந்தபின்தான் உணர்வின் நடுக்கமாகி தற்காத்துக் கொள்ளும் உணர்வு வருகின்றது. நமக்குள் வந்து நம் நல்ல குணத்தை செயல் இழக்கச் செய்கின்றது.

நமக்குள் அது நல்ல குணங்களைத் துடிக்கச் செய்யும் பொழுது இந்த அலைகள் நமக்குள் அதிகமாகச் சேர்ந்து விடுகின்றது. நாம் சுவாசித்த உணர்வு நம் உயிரிலே பட்டு அந்த அலைகளைப் பிரம்மமாகச் சிருஷ்டித்து அந்த அலைகள் நமக்குள் அதிமாகப் பெருகிவிடுகின்றது.

ஒரு அணுவின் தன்மை மற்ற கசப்பான நிலைகள் கொண்டு இனிப்பின் நிலைகள் சிறுத்து இருக்கும் பொழுது கசப்பின் அலைகளுக்குள் சிக்கியவுடன் கசப்பின் துணை கொண்டுதான் இனிப்பின் செயல் இருக்கும்.

இதைப் போன்று மனிதருக்குள் நல்ல குணங்களுக்குள் அசுர குணம் சேர்ந்து விடுகின்றது.

இதை மாற்றுவதற்குத்தான் பழனி மலையில் இடையில் இடும்பன் என்ற நிலையை வைத்து இந்த அசுர குணம் வேண்டாம் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கி மலையில்கிரிவலம் வருவது.

மனிதனாகப் பிறந்த நாம் இந்த அறுகுணமான தெய்வ நிலைகள் பெறவேண்டும் என்று அவர்கள் உணர்த்திய எண்ணத்தின் தன்மை கொண்டு கிரிவலம் வந்து தூப ஸ்தூபியைப் பார்த்து, அதன் அருகில் நின்றபின்

அங்கிருந்து சன்னதி தெரிகின்றது என்றால்

இந்த தெய்வ குணத்தைப் பெற வேண்டும்,

இதை அருளிய மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்

என்று விண்ணை நோக்கி ஏங்க வேண்டும்.

யார் நமக்கு உணர்த்தினாரோ எந்த உணர்வு கொண்டு நாம் வந்தோமோ அந்த உணர்வு கொண்டு சுழன்று வந்து அந்த சிலையைப் பார்த்தவுடன் சன்னதிக்கு முன் நின்று இதை அருளிய மகரிஷிகளின் அருள்சக்தி நான் பெற வேண்டுமென்று ஏங்கும் பொழுதுதான் நமக்குள் அந்த மெய்ஞ்ஞானிகளின் அருள் ஒளி கிடைக்கின்றது.

பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள் மனித உடலுக்குள்ளும் உண்டு என்ற நிலைகளில்பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளைச் சிலையாக்கி அதை பழனி மலைமேல் வைத்தார் போகமாமகரிஷி.

அதில் சொட்டு நீரை விழ வைத்து

அந்தச் சிலையின் சத்தை ஆவியாக்கி,

நம்மைச் சுவாசிக்க வைத்து,

நம்மை அறியாது நமக்குள் சேரும் விஷத்தினைப் போக்கினார்.

மலை மீது ஏறிச் செல்லும் பொழுது மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டுமென்று ஏங்கிச் செல்லும்போது கருவறைக்குள் அந்தச் சிலையை வைத்து, அதன் சத்தை நீர் சொட்ட வைத்து ஆவியாக்கி அதை நமக்குள் சுவாசிக்கச் செய்தார்.

ஆகவே பழனி மலைக்குச் சென்றால் அந்த போக மாமகரிஷி காட்டிய அறுகுணமான நிலைகள் பெறவேண்டும், எங்கள் பேச்சும் மூச்சும் பிறரின் துன்பத்தைப் போக்கும் நிலையாக அமைய வேண்டும் என்று எண்ணி வணங்க வேண்டும்.

நீ முருகனாகு என்று ஒவ்வொருவரையும் எண்ண வைத்தார்.

சக்திவேல் என்றால் கூர்மையான எண்ணம்.

ஞானவேல் நமது ஆறாவது அறிவு. எதனையும் அறிந்திடும் அறிவு.

 

நமக்குள் ஆறாவது அறிவின் கொண்டு பிறரின் தீமைகளை அறியும் பொழுது விஷத்தின் தன்மை பெறுகின்றது. இதைப் போக்குவதற்கு போகர் செய்த நிலைதான்பழனி.

எல்லோரும் வாழ வேண்டும் என்று நல் உணர்வை ஊட்டியவர்கள் எங்கே இருக்கின்றார்கள்…?

“கோவில்” – இது காளி கோவில், இது முருகன் கோவில், இது மாரியம்மன் கோவில் என்று நாம் சொல்கின்றோம்.

கிறிஸ்தவ மதத்தில் ஏசு என்ற நிலைகளில் பொதுவாக இருப்பினும் ஒரு தத்துவ ஞானியின் பெயரை வைத்து இது இந்தச் “சர்ச்” என்ற நிலைகளில் அந்தக் குணங்களைச் சொல்லி பெயரை வைக்கின்றார்கள்.

முருகன் கோவில் என்று இங்கே வைக்கும்பொழுது சர்ச்சுக்கு ஒரு நல்ல மனிதனின் பெயரை அவர்கள் வைப்பார்கள். நல்லொழுக்கத்தின் குணத்திற்கு அவர்கள் ஒரு பெயரை அந்த ஆலயத்திற்குச் சூட்டியிருப்பார்கள்.

நாம் கோவில் என்கிறோம். அவர்கள் இன்ன சர்ச் என்று என்று சொல்லும் பொழுது அந்தக் குணத்தின் தத்துவத்தை அங்கே போதிக்கின்றார்கள்.

இதைப் போலத்தான் முகமதியர்களும் “பள்ளிவாசல்” என்று இன்ன பள்ளிவாசல் என்று சொல்கின்றார்கள். ஏனென்றால் பள்ளி என்றால் கற்றுக் கொடுக்கும் நிலைகள்.

நாம் கோவில் என்கிறோம். அறிவை ஊட்டும் நமக்குள் அந்த எண்ணங்கள் நமக்குள் தெய்வமாக இருந்து செயல்படும் என்ற நிலைகள்.

ஆகவே, இன்ன பள்ளிவாசலில் இன்னார் என்ற நிலைகளில் அவர் நல்லதைச் செய்தார் என்று அந்தத் தத்துவ ஞானியினுடைய நிலைகளில் பெயரை வைத்துக் கொள்கின்றனர்.

அவர்கள் காட்டிய நிலைகளில் இந்தப் பள்ளிவாசலில் யார் அந்த நற்குணங்களை எடுத்தார்களோ  அவரின் உணர்வின் தன்மை கொண்டு அந்த மெய் ஒளியைப் பெற முடியும், நல்லவைகளைச் செய்ய முடியும் என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

ஆகவே, எல்லா மதங்களில் எடுத்துக் கொண்டாலும் இதே நிலைகள் தான்.

சீக்கியர்களை எடுத்துக் கொண்டாலும் “குருத்வார்” என்று சொல்வார்கள். சீக்கிய மதத்திற்குக் குருவாக இருப்பினும் அதிலே அவர்களின் தத்துவத்தை எடுத்துக் கொண்ட நிலைகளில் இன்ன குருத்வார் என்ற நிலைகளில் அங்கே காட்டப்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு மதங்களிலும் காட்டிய நல் ஒழுக்கங்களில் தப்பில்லை.

இதைப் போல் அன்று அரசர்கள் தனக்கென்று மதங்களை உருவாக்கிக் கொண்டு அவர்கள் சட்டங்களை இயற்றி அந்தச் சட்டத்தின் வழிகளில் வேள்விகளை இப்படிச் செய்தால் “இந்தக் கடவுள் நமக்குச் செய்யும்” என்று சாஸ்திரங்களை எழுதுகின்றார்கள்.

இங்கே எப்படிச் சாங்கிய சாஸ்திரங்கள் உண்டோ அதே போல் ஒவ்வொரு நல்லவரையும் மகான் என்று அழைக்கப்பட்டு அந்த ஞானிகளின் பெயரை வைத்து சர்ச்சுகளையும், பள்ளிவாசல்களையும், குருத்வார்களையும் உருவாக்கி அவர்கள் சொன்ன நல் ஒழுக்கங்களை நாம் எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தான் தத்துவங்கள் கூறப்பட்டுள்ளது.

அதன் வழிகளில் நடந்தால் நமது வாழ்க்கை இவ்வாறெல்லாம் இருக்கும் என்று அங்கே காட்டப்பட்டது.

இவையெல்லாம் இதற்கு முந்தி எமக்குத் (ஞானகுரு) தெரியாது. குருநாதர் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) இதனை விளக்கியபின் தான் தெரிந்து கொள்ள முடிந்தது.

கடவுளைக் காக்க மதத்தின் கீழ் இன்று எப்படிச் செயல்படுகிறார்கள்…?

எல்லா மதங்களும் நல்ல ஒழுக்கங்களைத் தான் கற்பித்துள்ளது.

எந்த எந்த மதத்தின் தன்மையில் இங்கே வந்தாலும் அவர்கள் வகுத்துக் கொண்ட சட்டத்தில் சிறிது பிழைகள் ஏற்பட்டால் உடனே “துரோகி” என்ற நிலைகளை எடுத்து வெறுப்பின் உணர்வுகளை வளர்த்து அந்த உணர்வின் தன்மையே காலத்தால் மாறுபடும் நிலைகள் வருகின்றது.

அன்றைய அரச காலங்களில் ஓர் அரசனுக்கு ஒரு மனைவி என்றால் பல மனைவிகளையும் சில மதத்தில் கட்டிக் கொள்ளலாம் என்ற தத்துவம் உண்டு.

இருந்தாலும் பிறக்கும் குழந்தைகள் மூன்று குழந்தைகள் ஆகிவிட்டால் தலை மகனுக்கே அரசுப் பட்டம் என்று வகுத்து வைத்தனர்.

அரச நிலையாக இருந்தாலும் அந்தச் சட்டத்தை இயற்றி அவர்கள் வகுத்துக் கொண்ட உணர்வுகள் குலதெய்வம் என்ற நிலைகளில் வைத்து “நம்மை ஆண்டு கொள்ளும் அந்தச் சக்தி”என்ற நிலைகளில் மதத்தின் அடிப்படையில் அரசர்கள் இத்தகைய நிலைகளை வகுத்துக் கொடுத்தனர்.

அரசன் வழியில் குடிமக்களுக்கும் அவர்களின் இணக்கத்துடன் வளர குலதெய்வம் என்ற நிலைகளும் அல்லது தெய்வம் என்ற நிலைகளில் இதையே பதிவு செய்து வைத்துவிட்டால் இதை (இவ்வாறு எண்ணியதை) நமது உயிர் ‘ஓ’ என்று ஜீவனாக்கி ‘ம்’ என்றாகும்போது நமக்குள் அது “கடவுளாக..,” அதை மீண்டும் எண்ணும்போது (கடவுளாக உள் நின்று) நமக்குள் இயக்கமாகின்றது.

எந்தச் சட்டத்தை எந்த அரசன் இயக்கினானோ அந்தச் சட்டத்திற்குப் புறம்பாக யாராவது போய்விட்டால் அவன் அந்தக் கடவுளுக்கு விரோதமானவன், இந்த நீதிக்கு விரோதமானவன் என்றும் இயற்றியுள்ளார்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு மதங்களும் தனக்குள் இயற்றப்பட்ட அதுவே சட்டமாக்கப்பட்டு “அது தான் நீதி” என்ற நிலைகளில் வகுக்கப்பட்டு மனிதன் அந்த அரசுக்குக் கீழ் ஒழுக்க நெறிகள் கொண்டு வருவதற்கே இதனைச் செய்தார்கள்.

இத்தகைய நிலை இருந்தாலும் கடவுளின் நிலைகள் இப்படி உருவாக்கப்பட்டு எல்லா மதங்களிலும் இதைப் போன்று பல நிலைகள் உருவாகிவிட்டது.

அதிலே ஒவ்வொரு அரசனும் தன்னுடைய முதுமையின் நிலைகள் வரப்படும்போது அவருக்குப் பிறந்த குழந்தைகள் – ஒரு மனைவி இருந்தாலும் மூன்று மக்களாகிவிட்டால் இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆட்சி பிடிக்கும் நிலைகளில் போர் முறைகள் வந்து அவர்களுக்குள் குலதெய்வங்களின் பெயர்களையும் மாற்றி வைத்து “எங்கள் குலதெய்வம் இது வேறு.., அவர்கள் குலதெய்வம் அது வேறு..,” என்ற நிலைகளில் இனங்கள் பிரிக்கப்பட்டு இப்படித்தான் உலகெங்கிலும் “மதங்களுக்குள் இனங்கள்” பிரிக்கப்பட்டது.

இன்றும் பார்க்கலாம். முகமதியர் மதமாயிருந்தாலும் அதற்குள் இனம் பிரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் போர் செய்கின்றனர்.

இந்து மதமாக இருப்பினும் இதற்குள் இனங்கள் பிரிக்கப்பட்டு இந்த மதத்துக்குள்ளே ஒருவருக்கொருவர் “நீயா.., நானா..,” என்று போர் செய்து கொண்டு இருக்கின்றோம்.

சீக்கிய மதத்தில் எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இயற்றிய நிலைகள் கொண்டு கடவுளுக்குத் துரோகம் செய்கிறார் என்ற நிலைகள் கொண்டு குரு துரோகம் செய்கிறார் என்று இந்த இனத்துக்குள் ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலைகள் இருக்கின்றது.

ஆக, அந்த இனத்தையும் காப்பதில்லை. இவர்கள் காட்டிய நல்லொழுக்கத்தை யாரும் காப்பதில்லை.

இதே போல் புத்த மதத்தில் எடுத்துக் கொண்டாலும் அவருடைய பிற்காலங்களில் இவர் வகுத்துக்கொண்ட நிலைகளுக்கு மாறாக வருகிறார் என்றும் அதற்குள் உள் பிரிவுகள் வந்து ஒருவருக்கொருவர் போர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஜைன மதத்தை எடுத்துக் கொண்டாலும் கடவுளைப் பற்றி எங்கள் தத்துவ ஞானிகள் இதைத்தான் கூறினார்கள் என்று கடைப்பிடித்தாலும் அதற்குள்ளும் தவறு செய்தார் என்று அதிலேயும் ஒவ்வொரு அரசனும் கடைப்பிடித்த நிலைகள் இந்த முனிவருடைய நிலைகள் வேறு அந்த முனிவருடைய நிலைகள் வேறு,  எங்களுடைய கடவுள் என்று அதற்குள்ளும் இனங்கள் பிரிக்கப்பட்டது.

அன்றைய காலங்களில் ஜைனர்கள் யாசித்தே வருவார்கள். ஒவ்வொரு உயிரிலும் கடவுள் என்ற நிலைகளில் ஏங்கி “பிச்சாந்தேகி” என்று உணவுக்காக வீடு வீடாகச் சென்று நிர்வாண நிலைகள் கொண்டு உலகம் உய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்தாலும் காட்டுக்குள் மறைந்திருந்து வாழ்வார்கள்.

உணவை யாசித்துப் பெற்ற பின் அவர்கள் வாழ்த்திவிட்டுச் செல்வார்கள். நான் கடவுளை அடையச் செல்கிறேன், எனக்கு அன்னமிட்ட அந்த மக்களைக் காத்திட வேண்டும் என்று வாழ்த்திவிட்டுச் செல்வார்கள்.

ஒருவருக்கொருவர் நேசிக்கும் பண்புடைய நிலைகள் கொண்டு அனைவரையும் வளர்க்க வேண்டும் என்று இவ்வாறு இருப்பினும் அதிலேயும் வாழ்க்கையில் வரப்படும் பொழுது மதத்திற்குள் மதம் இனமாகப் பிரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் போர் முறை.

புத்த மதங்களிலும் இதே தான். சீனாவில் புத்த மதத்தின் தத்துவம் வேறு. இலங்கையில் தத்துவம் வேறு. ஜப்பானில் புத்த மதத்தின் தத்துவங்கள் வேறு.

ஆகவே, நாட்டுக்கு நாடு அந்த ஞானிகளுடைய தத்துவங்களை எடுத்துக் கொண்டாலும் தன் ஆட்சி பீடத்திற்காகவே அவர்கள் அமைக்கப்பட்டு அதன் வழிகளில் மக்களைத் தனக்குள் ஒன்று சேர்த்து வரவேண்டும் என்று எண்ணினாலும் அதற்குக் கீழ் காலத்தால் அது பேதங்கள் உருவாக்கப்பட்டு இன்று உலகெங்கிலும் மத பேதம் இன பேதம் என்று மதத்திற்குள் இன பேதங்கள் பிரிக்கப்பட்டு மனிதனுக்கு மனிதன் நியாயம் பேசிக் கொண்டுள்ளோம்.

ஆக, நல்லதைப் பேசுகின்றோம். ஆனால்,  அடுத்த மனிதனை அழித்திட வேண்டும் என்ற உணர்வின் ஏக்கமே நமக்குள் அதிகமாகப் பரவிவிட்டது.

மதங்களால் இயக்கப்பட்ட சாஸ்திர நிலைகளிலும் சாங்கிய நிலைகளிலும்தான் சிக்குண்டு உண்மையினுடைய நிலைகளை நாம் அறிய முடியாது இன்றும் தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

எத்தகைய வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டோமோ அந்த மதத்திற்குக் கீழ் நல்ல ஒழுக்கத்தைக் காட்டினாலும் நல்ல ஒழுக்கத்தைக் கொண்டு அவன் இந்த மதத்திற்கு விரோதமாகச் செய்கின்றான் என்று எதிர்மறையானதைப் பதிவு செய்யும் பொழுது அந்த மதத்திற்குள்ளேயே வெறுப்பின் தன்மை வளர்க்கப்பட்டுவிடுகின்றது.

வெறுப்பின் தன்மை கொண்டு “இவன் துரோகி” என்று பறைசாற்றும் பொழுது அவன் மீண்டும் “இவனை துரோகி” என்ற நிலைகளில் மதங்களில் இது உருவாக்கப்பட்டு அதனின் நிலைகளில் தான் இன்று உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டுள்ளது.

இன்றைய உலக நிலை

இந்த நிலைகளில் எதை எதை நமக்குள் வளர்த்துக் கொண்டோமோ மனிதனுக்குள் விளைந்த இத்தகைய உணர்வுகள் அனைத்தும் இந்தப் பூமியில் படர்ந்து கொண்டேயுள்ளது.

அன்றைய காலங்களில் மந்திரம் எந்திரம் என்ற நிலைகளில் போர் முறைகள் வந்தாலும் இன்று இயந்திரத் துப்பாக்கிகளும் அணு விசைகளும் வந்துவிட்டது.

எலெக்ட்ரானிக், லேசர் முறை கொண்டு போர் முறை உருவாகி யுத்தங்கள் வரும் நிலை ஆகிவிட்டது. மனிதன் மனிதனையை இரக்கமற்றுக் கொன்றிடும் நிலை ஆகிவிட்டது.

இது தான் இன்றைய நிலை. எந்த மதத்திற்குள் ஏற்படுத்தப்பட்ட கடவுளாக இருந்தாலும் அந்த மதத்தையே காக்க முடியாத நிலைகள் உள் பூசல்கள் அதிகமாகிவிட்டது.

மனிதன் மனிதன் என்ற நல் அறிவை இழக்கும் போர் முறைகள் வந்து மனிதனுக்குள் மனிதன் அழித்துக்கொண்டு இருக்கும் நிலைகள் தான் உலகெங்கிலும் பரவியுள்ளது.

மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் ஆட்சியும், தன் கொள்கையைக் காப்பதற்காகப் போர் முறைகள் செய்து, தனக்கு எதிர்நிலையாக இருப்பதை அழிக்க வேண்டும் என்ற உணர்வுதான் தோன்றியதே தவிர இவர்களுக்குள் வணங்கிய கடவுள் மக்களைக் காக்க வந்ததா..,? கடவுள் இவரைக் காப்பாற்றியதா…,? கடவுளைக் காக்க மனிதர்கள் தன் மதத்தின் கீழ் எப்படிச் செயல்படுகிறார்களா..,? என்று சற்றுச் சிந்தித்து பாருங்கள்.

இதைத்தான் எமது குருநாதர் காட்டினார்.

மனிதனாக இருக்கும் நமக்குள் கடவுளாக இருக்கும்போது நாம் எண்ணியதை இயக்கி ‘ஓ’ என்று ஜீவனாக்கி கடவுளாக அந்த உணர்வின் செயலாக எவ்வாறு இயக்குகிறது? என்று காட்டினார்.

எல்லோரும் மெய்ன்ஞானிகளாக வேண்டும் என்ற நிலையில் விண்ணுலகில் வாழ்பவர்கள்

எல்லா மதங்களிலும் “எல்லோரும் வாழ வேண்டும்” என்ற நல் உணர்வை ஊட்டியவர்கள் அனைவருமே விண்ணுலகில் இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் “மதமற்ற நிலைகளில்” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

உலக மக்கள் எல்லோரும் அருள்ஞானிகளாக வேண்டும், மெய்ஞானிகளாக உயர்ந்திட வேண்டும் என்ற உணர்வின் தொடர் கொண்டு வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளனர்.

அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியினை நாம் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையை, நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிராத்மாவும் சப்தரிஷி மண்டலம் அடைவதே கடைசி எல்லை. இதுதான்  மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய நிலைகள்.

எல்லோரும் நல்லவரே

உயிரே கடவுள்

உடல் ஆலயம்

“தொழிலில் நஷ்டம்” என்ற வார்த்தையே கூடாது

 

நாம் தியானம் எடுத்து வரும்போது தொழிலில் நஷ்டம் என்ற வார்த்தையே வரக்கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி தியானித்து விட்டு கொஞ்ச நேரம் சிந்திக்க வேண்டும்.

அப்படி தியானித்துச் சிந்தித்தீர்கள் என்றால் “நஷ்டம் எதனால் ஏற்பட்டது” என்ற ஞானம் வரும். தொடர்ந்து தவறுகளை மாற்றியமைக்கக்கூடிய ஞானமும் தொழிலில் வளர்ச்சி பெற்ச்செய்ய்க்கூடிய ஞானமும் வரும்.

ஆனால், தொழிலில் நஷ்டமாகிவிட்டது, நாளை என்ன செய்வது? என்று என்ணிவேதனை உணர்ச்சிகளுக்குப் பலத்தைக் கொடுத்தால் நமது சிந்தைனையின் தன்மையைக் குறைத்துவிடும்.

தொழிலின் வகையில் நாம் வளர்ச்சியடைந்தாலும் கூட தொழிலில் சிறிது நஷ்டம் ஏற்பட்டாலும் இதனின் உணர்வுகள் நம்மிடத்தில் வலுவாக இயக்கிவிடும். ஆக, இதை மாற்றுவதற்கு ஒரே வழி ஆத்ம சுத்தி.

இருளான உணர்வுகளைத் தூக்கி எறிந்து விடவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண் வழி எண்ணத்தை செலுத்துகின்றோம்.

அது சமயம் நமது கண் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியின் உணர்வுகளை இழுத்து வருகின்ற நிலையில் அவ்வுணர்வுகளை

நமது மூக்கு நுகர்ந்து

நமது உயிரில் மோதச் செய்கின்றது.

இப்படிக் கண்களால் கவரப்பட்ட துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகள் நமது உயிரில் இணைக்கப்பட்டவுடன் நம்முள் நல் உணர்வுகள் வலிமை பெற்று தீய உணர்வுகள் வராமல் தடை செய்யப்படுகின்றது.

முதலில் நம்மிடத்தில் தீமைகள் வராது நிறுத்திப் பழகவேண்டும். தீய உணர்வுகள் நம்மை இயக்கிவிடக்கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி தினமும் தியானித்து வருதல் வேண்டும்.

தியானத்தின் மூலம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைப் பெறவேண்டும் என்ற தன்மையை ஒரு பழக்கமாகப் பழக்கி வைத்துவிடுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் தன்மை நம்முள் வலிமையான பிற்பாடு தீமைகள் நம்முள் வருவதில்லை.

வேதனை வெறுப்பு போன்ற தீய உணர்வுகள் என்பது வாலி. அவைகள் மிகவும் சக்தி வாய்ந்தவைகள். ஆனால், இத்தகைய தீய உணர்வுகள் அனைத்தையும் வென்றது துருவ நட்சத்திரம்.

ஆக, தீமைகளை வென்ற துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி

நமது கண் வழி கவர்ந்து

உயிரில் மோதச் செய்யும் பொழுது இச்சா சக்தி.

உயிரில் மோதிய பின் நம்முள் உள்ள

தீமைகளை நீக்கும் இயக்கமாகின்றது கிரியா சக்தி.

அகஸ்தியர் தமது வாழ்க்கையில் தீமைகளை எப்படி நீக்கினாரோ

அகஸ்தியரைப் போன்றே நம்மை இயக்கும் ஞான சக்தி.

இதன் வழியில் செயல்பட்டு நம்மிடத்தில் தீமைகள் வராது தடுக்க வேண்டும். இதை நம்முடைய பழக்கத்திற்குக் கொண்டுவந்துவிட்டால் நம்முடைய வாழ்க்கை சீராக இருக்கும்.

உடல் வலி… நோய்கள்.. இவைகளெல்லாம் நமக்கு ஏன் வருகின்றது…?

health bliss (2)

1.பயம்

நாம் அனைவருமே ஒவ்வொரு வகையில் சிரமத்தில் ஆழ்ந்துள்ளவர்கள். பல இன்னல்கள், சங்கடம், சலிப்பு, வேதனை, இதைப் போன்று எத்தனையோ வேதனைகள்படுகின்றோம்.

பண வசதி இருந்தாலும், பணமற்று இருந்தாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒருவர் செய்யக்கூடிய தவறுகளை, அந்த உணர்வை நாம் சுவாசிக்கும் பொழுது, அந்த ஆற்றல்மிக்க உணர்வுகள் நமக்குள் இயக்கிவிடுகின்றது. இந்த ஆற்றல்மிக்க நிலைகள் இருப்பதனாலே, பயம் என்று நாம் நினைத்தவுடன் ஆற்றல் அதிகமாகின்றது.

வேகமாக வரக்கூடிய பஸ், நம் மீது மோதிவிடுமோ” என்ற உயிரின் துடிப்பின் நிலைகள் நம் உணர்வின் உச்ச நிலைகளில் தூண்டுவதனால் தான், நாம் வேகத் துடிப்புடன் நாம் நம் உடலை இயக்கி, நாம் உடனடியாக நகர்ந்து செல்ல முடிகின்றது.

2. கோபம் – பிறர் செய்யும் தவறைப் பார்க்கும் நிலை

அதைப் போல ஒரு குற்றம் ஏற்படுகின்றதென்றால், அந்தக் காரமான உணர்வுகள் நமக்குள் தூண்டப்படும் பொழுதுதான், அந்தக் குற்றத்தின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, உடனே தவறு செய்வதை நிறுத்தக் கூடிய நிலைகளும் ஏற்படுகின்றது. ஏனென்றால், இது உணர்த்தும் ஆற்றல்.

ஆகையினாலே, நாம் சாந்தமான நிலையில் இருந்தாலும், நல்லதைச் செய்தாலும் “இந்த நல்லதைக் காப்பதற்கு” கோபம், அவசரம், ஆத்திரம் இவையெல்லாம் தேவையுள்ளவை தான்.

ஆனால், நாம் எப்படி ஒரு மிளகாயை ஒரு குழம்பிற்குள் பக்குவப்படுத்துகின்றோமோ, அதைப் போன்று நாம் சந்தர்ப்பத்தால் அதிகமான நிலைகளை நாம் சுவாசித்து விட்டாலும் நம் உடலுக்குள் சென்றபின், அந்தக் காரத்தின் அளவைக் குறைக்கச் செய்வதுதான், நாம் செய்யும் இந்த தியானம்.

அந்தக் காரத்தைக் குறைக்கவில்லை என்றால், நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்குள் கலந்து, அதுவும் கலந்து தீமையான அணுக்கள் விளையும் தன்மை பெற்றுவிடும்.

நாம் இன்று எப்படி மரங்களுக்கு, சத்தான பல உணர்வை ஏற்றியவுடன், அந்தச் சத்தின் தன்மை பெற்றவுடன், கனியினுடைய வர்க்கங்கள் மாறுகின்றது, மரத்தின் வித்தின் தன்மைகளும் மாறுகின்றது.

அதைப் போன்று, நாம் நல்ல குணங்கள் கொண்டு நம் உடலை வளர்த்திருந்தாலும், நல்ல குணங்கள் சீரிய பண்புகள், நம் உடலில் வளர்த்திருந்தாலும், சந்தர்ப்பவசத்தால் நாம் வாழ்வதற்கு ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்ட பயம், அவசரம், ஆத்திரம், கோபம், குரோதம், இவை அனைத்துமே நமக்கு அவசியம்.

3. குரோதம்

கோபம் என்பது ஒரு தவறின் உணர்வை நமக்குள் சுட்டிக் காட்டுகின்றது. அந்தக் கோபத்தை அதிகமான நிலைகள வளர்த்துக் கொண்டால், இங்கு குரோதமாக அதையே திரும்ப, திரும்ப, இந்தக் கோப உணர்ச்சிகளைத் தூண்டி நாம் எந்த உணர்வின் தன்மை வளர்ந்ததோ, அந்தக் குற்றத்தையேதான் நாம் பேசிக் கொண்டிருப்போம்.

குரோதம் என்பது, நமக்குள் வளர்ந்த பருவமான நிலைகள். தன் முதிர்ந்த நிலைகள் பெறுவதனால், குரோதம். நாம் திரும்பத் திரும்ப எண்ணுகின்றோம். இதைப் போன்ற நிலைகள்தான் நமக்குள் வளர்ந்து வருகின்றது.

4. வெறுப்பு

மரம் செடி கொடிகளுக்குச் சத்தான நிலைகளை நாம் விஞ்ஞான அறிவு கொண்டு நாம் சேர்த்தவுடன், அதனுடைய நிலைகள் சேர்த்துக் கொண்டு, அந்த மரத்தின் தன்மை வருகின்றது.

நமக்குள் நல்ல குணங்கள் எவ்வளவு இருந்தாலும், சந்தர்ப்பவசத்தாலே நாம் ஒரு சமயம் அதீதக் கோபப்பட்டுவிட்டால், அல்லது ஒருவர் மேலே வெறுப்புப் பட்டுவிட்டால்,

வெறுப்பின் உணர்வுகளை அவர் மேலே பதித்தபின், அவரைப் பார்த்தவுடன் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும். நமக்குக் கோபம் வரும். அவர் எவ்வளவுதான் நல்லது செய்திருந்தாலும் அந்த நல்லதைப் பற்றி நாம் சிந்திக்கக் கூட முடியாது.

ஆக, நல்லது செய்தாலும், குற்றத்துடன் அவர் செய்வது நல்லதல்ல என்றும், அந்தக் குற்றத்தைச் சுட்டிக் காட்டக்கூடிய நிலை சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றது. அதையேதான் ஏற்படுத்தும்.

இதையேதான், நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை நம் புலனறிவிலே நாம் ஒரு முறை ஒன்றைப் பார்த்து பயந்துவிட்ட்டாலோ, அதைக் கண்டவுடன் நமக்குப் பயம் வரும்.

ஏனென்றால், நாம் எந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ, அந்த உணர்வின் தன்மை அதில் பட்டவுடன், அந்த நினைவலைகள் தூண்டப்பட்டு, அந்த உணர்ச்சிகளை நாம் சுவாசிக்கப்பட்டு, அதன் நிலைகளில் நாம் செயல்படுகின்றோம்.

இது இயற்கையின் நியதிகள். இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திலும், நமக்குள் பல நிலைகள் ஓடிக் கொண்டே, மாறிக் கொண்டே இருக்கின்றது. நாம் இவற்றையெல்லாம் அறிந்துகொள்வது மிகவும் நல்லது.

5. வேதனை

வேதனை என்பது அதிக விஷம். நாம் எவ்வளவோ பந்த பாசத்துடன் இருந்தாலும், குழந்தை படிப்பிலே கொஞ்சம் குறை ஏற்பட்டால், அதிகம் வேதனைப்படுகின்றோம். நாம் வியாபாரத்தில் மந்தம் ஏற்பட்டால், வேதனைப்படுகின்றோம்.

ஒருவரின் நிலைகளில் நாம் நல்லது செய்திருந்தாலும், அவர்கள் சிறிது குறைகள் செய்துவிட்டால், எனக்கு இப்படிச் செய்கிறார்களே என்று வேதனப்படுகின்றோம். இந்த வேதனை என்பது அனைத்துமே விஷம். விஷம் கலந்தது.

இதைப் போன்று நாம் ஒவ்வொரு நிமிடமும், நம்மையறியாமேலே நல்லதை எண்ணிவிட்டு, அதனால் சில குறைகள் ஏற்பட்டால் அந்தக் குறையின் உணர்வுகள் தென்பட்டவுடன், அவர்களை எண்ணி நம் காரியங்கள் தடைப்பட்டால், நாம் வேதனைப்பட்டு, வேதனையான உணர்வுகளை நம் உடலுக்குள் நல்ல குணங்களுக்குள், இந்த விஷமான சத்தை ஏற்றிவிடுகின்றோம்.

நீங்கள் நல்லதை எண்ணினாலும், அந்த வேதனையுடன்தான் பேச முடியும். ஏதாவது ஒரு கோவிலுக்குப் போனாலும், நல்லதைச் சொன்னாலும், நல்லதைப் பெறவேண்டும் என்றாலும், ஒரு பொருளை வாங்கப் போகவேண்டும் என்றாலும் கூட, அந்த வேதனை கலந்த பலவீனமான குரலில்தான் பேச முடியும். காரணம், இந்த நல்ல குணங்களைத் தூண்டினாலும், அதற்குள் விஷம் கலந்திருக்கும்.

6. மனித நிலைகளை நாம் எப்படிப் பெற்றோம்?

பாலுக்குள் விஷத்தைக் கலந்து, நாம் குடித்தால் சோர்வடையச் செய்கின்றது. அதைப் போலத்தான், உயிர் முதலில் புழுவாகத் தோன்றி, பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வரும் வரையிலும், ஒவ்வொன்றிலும் உடல்கள் தன் விஷமாக மாற்றிக் கொண்டிருந்தாலும், ஒவ்வொன்றிலும் தன்னைத் தற்காத்துக் கொள்ள, தனக்குள் எடுத்துக் கொண்ட விஷத்தின் நிலைகள் நற்குணங்களாக, “தன்னைப் பாதுகாக்கும் உணர்வின் சத்துக்களாக” அதிகமாகக் கூட்டி, மனித நிலைகளுக்கு வந்திருக்கின்றோம்.

மனிதனாக உருவாவதற்கு, நமக்குள் விஷத்தைக் கழிவாக்கி, நல்லதை உடலாக்கும் தன்மை பெற்று, இன்று மனிதனாக நாம் வந்துள்ளோம்.

மிருகங்கள் அனைத்துமே, விஷத்தைத் தன் உடலாக மாற்றி, தான் உட்கொள்ளும் உணர்வின் சத்துகள் அனைத்திலும் கலந்துள்ள விஷத்தை, தன் உடலாக மாற்றிக்கொள்ளும். அதற்குள் மலத்தை நல்லதாக மாற்றிவிடும்.

ஆனால், அதே சமயம் அதனுடைய எண்ணத்திலேயே, அந்த விஷத்தின் தன்மையை தனக்குள் தாங்கக்கூடிய சக்தி இருந்தாலும், தனக்கு ஒரு விபத்து ஏற்படும் பொழுது, அதற்கு வேதனைப்படக்கூடிய, துன்பப்படக்கூடிய நிலைகளில் இம்சைகள் கொடுத்தாலும் அது இம்சையைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால், அதே சமயம்,

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்ச்சியின் வேதத்தை, மிருகங்கள் அதிகமாகக் கூட்டுகின்றது.

நமக்கு பயம் வந்து, அது அதிகமான துடிப்புகளை ஏற்படுத்தியவுடன், தனக்குள் தப்பிக்கும் உணர்வுகளைச் சிலர் எண்ணுவார்கள். இல்லையென்றால், “இறந்துவிடுவோமோ” என்ற எண்ணத்தைத்தான், இந்த மனித நிலைகளிலே அதிகமாகக் கூட்டும். தன்னைப் பலவீனப்படுத்திக் கொள்ளும்.

ஆனால், உயிரினங்களோ, தனக்குள் எவ்வளவு வேதனை வந்தாலும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்ச்சியின் வேகத்தை உந்தி, அதற்குள் சேர்த்துக் கொண்ட உணர்வின் அலைகள் தான், பல கோடிச் சரீரங்களை உருமாற்றி, இன்று நம்மை, மனிதனாகப் பிறக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது.

7. உடல்வலி, நோய்கள், இவைகளெல்லாம் மனிதனுக்கு ஏன் வருகின்றது?

ஆக, நாம் இவ்வளவு நல்ல அணுக்களை உடலுக்குள் சேர்த்து, மனிதனாக உருப்பெறச் செய்தபின், ஒவ்வொரு நிமிடமும், வாழ்க்கையிலே பல சந்தர்ப்பங்களில் நாம் இம்சைகள் பட்டு, அதன்வழியில் எடுத்துக் கொண்ட விஷத்தை, நல்ல குணங்களுக்குள் படரச் செய்து கொண்டே இருக்கின்றோம்.

இதனால்தான், நம் உடலுக்குள் கை, கால் குடைச்சல், வேதனை, தலைவலி, மேல்வலி, இதைப் போன்ற நிலைகள் நமக்குள் அடிக்கடி வருகின்றது. அதைப் போன்று, உடலில் நோவும், நரம்புகளிலே நோவும், தசைகளிலே நோயும் வருகின்றது.

இவையெல்லாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அணுக்களின் தன்மை கொண்டு, விஷங்களாக விளைந்தாலும், தசைகளில் அந்த அணுக்கள் கலந்தவுடன் தசை நோவு வரும்.

அது அமில சக்தியாக மாறி, நரம்புகளில் அது சேர்க்கப்பட்டால், அது உடம்பு வலிகள் ஏற்படும். அதனுடைய நிலைகள் எலும்புடன் ஒட்டிய உணர்வின் அலைகள் அதீதமான நிலைகள் சேர்ந்துவிட்டால், எலும்புக்குள் இந்த வேதனை தோன்றிவிடும்.

எலும்புக்குள்ளும் இந்த வேதனைகள் கலந்து, சதா மேல்வலிக்கும். இவையெல்லாம் எலும்புக்குள் தோன்றும் நிலையை இன்று டாக்டர்களால் கண்டு கொள்ள இயலாது.

எலும்புக்குள் கலந்த காந்த அலைகள், அது வீசிக் கொண்டே இருக்கும் பொழுது, அது தசைகளிலே படும் பொழுது, வேதனைகள் தெரியும்.

ஆனால், தசைகளிலே இருக்கக் கூடிய வேதனையை நிவர்த்திப்பதற்குத்தான் டாக்டர்களால் முடியும்.

எலும்புக்குள் இருக்கக் கூடிய நிலைகளை விஞ்ஞானம் இதுவரையில் கண்டுகொள்ளவில்லை. எலும்பினுள் அந்த அலைவரிசைகள் பாய்வது அவர்களுக்குத் தெரியாது. இது மெய்ஞானிகளுக்குத் தான் தெரியும்.

8. உங்களை நீங்களே காத்துக்கொள்ள, யாம் கொடுக்கும் வலிமையான ஆயுதம்

ஆகவே, அத்தகையை கடுமையான நிலைகளிலிருந்தெல்லாம் விடுபடுவதற்குத்தான், வலிமையான ஆயுதமாக, யாரும் செய்யாததை, “ஆத்ம சுத்தி” என்ற அந்த ஆயுதத்தை, யாம் உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

அதைக் கொண்டு, வரும் விஷமான நிலைகளை அடக்கி, உங்களுக்குள் புனிதம் பெறமுடியும். பேரொளியாக மாற்ற முடியும். அதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

9. ஆத்ம சுத்தி

“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று, புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும்.

பின், தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

அடுத்து, இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், ஞானகுரு,  சற்குரு,  சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.

பின், ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி ஏங்கி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி,  நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.

இவ்வாறு, வலுக்கூட்டிய  இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவி செலுத்தி,  நமது கண்களின் காந்தப் புலனறிவால்,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து
1.உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து
2.“உயிர் வழி நுகர வேண்டும்”.

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா,  ஜீவ அணுக்கள்,  என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று  எண்ணி,

நம் உடலுக்குள், அலை அலையாகப் படரச் செய்யவேண்டும். இதுவே ஆத்ம சுத்தி.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு “ஆழமாக” பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெறமுடியும்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் படரவிடும் பொழுது, நம் உடலுக்குள் எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளிச் சுடராக மாற்றிடும் திறன் பெற்றது.

நலம் பெறுக, வளம் பெறுக, மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுக.

“தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!”

Image

 

eac21-agasthiyan2b-2bcopy

1. “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

தென்னாட்டிலே தோன்றிய அகஸ்திய மகரிஷி, பேரண்டத்தின் உண்மை நிலைகளை, அதாவது, ஆதிசக்தியின் ஆற்றல்கள் கோளாகி, நட்சத்திரமாகி, சூரியனாகி, சூரிய குடும்பத்திற்குள் கோள்களாகி, கோள்கள் நட்சத்திரமாகி, பிரபஞ்சமாகி, அந்த பிரபஞ்சத்திற்குள் தோன்றிய கோள்களுக்கு, தாவர இனச் சத்தாகி, நம் பூமிக்குள் தாவர இன சத்தை, ஒரு உயிரணு, அந்த உணர்வின் சத்தை தனக்குள் எடுத்து, புழுவின் தன்மை அடைந்து, புழுவிலிருந்து மனிதன் வரை தோன்றியது.

இவ்வாறு தோன்றியது அனைத்தும்  ஆரம்பக் காலங்களிலிருந்து,  சந்தர்ப்பத்தின் நிலைகள் கொண்டுதான், ஒவ்வொன்றும் உருபெறுகின்றது. 

ஒன்றுக்கு ஒன்று சந்தர்ப்பத்தால் மோதும் நிகழ்ச்சிகளில்தான், ஒன்றுக்குள் ஒன்று விழுங்கி, ஒன்றின் சக்தி ஒன்றுக்குள் பெருகி, ஒன்றின் நிலைகள் வளர்ந்தது.

அவ்வாறு வளர்ந்து வந்த அந்த சக்தி, பூமிக்குள் வந்த உயிரணு, புழுவிலிருந்து மனிதனாக பல உயிரினங்களின் தோற்றமாக ஆனாலும், அதிலே, முன்னனியிலே மனிதனாக உருவாக்கிய அவருடைய சந்தர்ப்பம், விண்ணின் ஆற்றலைத் தனக்குள் அறிந்துணர்ந்து எடுக்கும் ஆற்றல்மிக்க சக்தியாகப் பெற்றார், அகஸ்திய மாமகரிஷி.

தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் சக்தியை, மனித உடலான பின், மனித உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்துமே ஒளியாக மாற்றினான்.

அதாவது, விண்ணின் ஆற்றல் எவ்வாறு தனக்குள் பெற்றதோ சூரியன் எவ்வாறு விண்ணின் ஆற்றலை தனக்குள் ஒளியாகப் பெற்றதோ ஒளி சரீரமாக மனிதனாகி, ஒரு உயிரணு, அந்த உணர்வின் ஆற்றலை அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாகப் பெற்றபின், தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றினான் அகஸ்தியன்.

தனக்குள் வளர்த்துக் கொண்ட ஆற்றல் மிக்க சக்திகளை இந்த உலகம்… இந்தப் பூமி… இந்தப் பேரண்டம் எவ்வாறு உருவானதுஎவ்வாறு ஒளியானது…?, வெளியானது…என்று வெளிப்படுத்திய ஒலி அலைகள், நம் பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதும், அதே சமயம் அந்த உயிரின் ஆத்மா, ஒளி சரீரமாக நின்று, துருவ நட்சத்திரமாக நின்று, வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வின் அலைகளைத்தான், தென்னாடுடைய சிவனே போற்றி என்று உணர்த்தப்பட்டது.

தென்னாட்டுக்குள் இந்த மனித உடலான சிவத்துக்குள் பேரண்டத்தின் ஆற்றல்மிக்க சக்தியைத் தனக்குள் வளர்த்து, அந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி வெளிப்படுத்திய, அந்த உணர்வின் தன்மையை,

1.அகஸ்திய மாமகரிஷி காட்டிய வழிப்படி,

2.அவர் அருள் நெறிப்படி, அவர் வழிகளிலே சென்று,

3.அவர்கள் வெளிப்படுத்தி உபதேசித்து உணர்த்திய

4.அந்த அருள் சக்தியை எந்நாட்டவரும் நுகர முடியும்.

அப்படி அதை நுகர்ந்து, தாம் சுவாசிக்கும் போது, அந்த சுவாசித்த உணர்வின் சக்தி, அவர்களுக்குள் இறையாகி, இந்த இறையின் சக்தியின் உணர்வின் ஆற்றலை, பேரண்டத்தின் உண்மையைப் பெறும் பாக்கியமாக, அது பெறமுடியும் என்ற தத்துவத்தைக் காட்டுவது தான் தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடினார்கள், அதன் உட்பொருளே இதுதான்.

2.  சிவன் ஏன் அகஸ்தியனை தெற்கே அனுப்பினான்?

தென்னாட்டிலே தோன்றிய காரணம் தென்னாட்டிலே வெப்பம் அதிகம்.  அந்த உணர்வின் தன்மையிலே தான் வளர்ந்து, இந்த பூமிக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் உணர்வின் ஆற்றல், தென்னாட்டிலே தோன்றியது,  என்று காட்டுவதற்குத் தான் அதை உணர்த்தினார்கள்.

எந்நாட்டவரும் அவர்கள் எடுக்கப்படும் பொழுது, அது இறையாக அமைந்து, உணர்வின் சக்தியாக வளர்க்கப்படுகிறது. அந்த நிலைகளுக்கு அனைவரும் செல்லலாம். அந்த உணர்வை, தென்னாட்டிலே உள்ள நாம் அனைவரும் பெறத் தகுதி பெற்றவர்கள்தான்.

ஆக, தென்னாடான இந்நாட்டில் அகஸ்திய மாமகரிஷியின் அருள் ஆற்றல் படர்ந்து கொண்டிருப்பதும், அவர் வாழ்ந்த காலத்தில்,  இந்நாட்டில் அவருடைய பாத அலைகள், அவர் உடலின் உணர்வலைகள் படர்ந்துள்ளது.

ஆங்காங்கு எங்கெங்கெல்லாம் அவர் சென்று தங்கி, மெய்யுணர்வின் தன்மையை தான் பெறவேண்டுமென்று இந்த பூமி முழுவதற்கும் சென்றவர்தான். இந்த பூமிக்குள் அனைத்து இடங்களிலும் தென் துருவம் வட துருவம் அனைத்தும் சென்று வந்தவர்தான்.

அதிலே தென்னாட்டிலே தோன்றிய இந்த மனிதன் தான் தனக்குள் உணரும் ஆற்றலைப் பெருக்கி அவர் எங்கு வேண்டுமானாலும் சென்று அவர் உணர்வின் ஆற்றலை பரப்பினார்.

 

ஆரம்பத்தில், இந்த பூமியின் தன்மை,  பிரபஞ்சத்திலிருந்து தான் ஈர்க்கும் அனைத்து சக்திகளும், வடதுருவத்தில் குவியப்படும்போது, அது குவிந்து, பூமியின் தன்மை சிவ சக்தியாக, பார்வதி பரமேஸ்வரன் கல்யாணம் என்று

1.இரண்டும் இணைந்து சக்தியாக

2.பல உணர்வின் சக்தி, ஒன்று சேர்த்து

3.ஒரு சிவமாக இருக்கக் கூடிய அந்த நிலையைத் தான்

4.கல்யாணமாகும் போது, தெற்கே அகஸ்தியரை சிவன் அனுப்பினான் என்று

5.தெற்கே தோன்றிய, அந்த அணுவின்  வெப்ப அணுக்கள் தான் இந்த பூமிக்குள் வெப்பமாகி  வடதுருவத்துக்குள் பூமிக்குள்  வெப்பத்தை அதிகமாகக் கூட்டி வளர்ந்து, அந்த அணுவின் தன்மை, அந்த வடதுருவத்தின் தன்மையை நீராக மாற்றியது.

அதே போன்று, அந்த தென் பகுதியிலே தோன்றிய அந்த அணுவான அந்த சக்தி, அது உயிரணுவாகத் தோன்றி, அது வளர்ச்சி பெறும் தகுதியைப் பெற்றபின், நீர் சக்தி இந்த பூமிக்கு முக்கியமாக அமைந்தது.

அதைப் போன்று, அகஸ்திய மாமகரிஷி பேரண்டத்தின் உணர்வின் சக்தியைத் தமக்குள் வளர்த்து இந்த பூமியின் அனைத்து இடங்களிலும் மனிதன் என்ற உணர்வின் ஆற்றலை, அதாவது, மெய் ஒளியாகப் பெறும் ஞானத்தின் ஒளிச் சுடராக, இந்த பூமி முழுவதற்கும் படரச் செய்துள்ளார்.

இந்த பூமிக்குள் மனித உருவின் நிலையும், மனிதனுக்குள் ஆற்றல் மிக்க சக்தியைப் பெருக்கும் தன்மையை, அது வெளிப்படுத்தி, அந்த உணர்வின் அலைகள் இருப்பதனால்தான், இன்று பூமிக்குள் மற்ற மனிதர்கள் சிந்தித்து, அதனதன் வழிகளில் செல்லப்படும் நிலைகள்  ஏற்படுகின்றது..

3. கஸ்தியனுடைய உருவத்தை ஏன் சிறிதாகக் காட்டினார்கள் ஞானிகள்?

அகஸ்தியமாமகரிஷி

1.ஆதிமுதல், ஆதி மனிதனாக,

2.ஆற்றல்மிக்க மனிதனாக,

3.ஆதிசக்தியாக,… ஆதிசக்தியின் உணர்வாக வளர்ந்தவர்.

ஒரு அணுவுக்குள் இயக்கும், உணர்வின் ஆற்றலின் தன்மையை வெளிபடுத்திய, அந்த உணர்வின் ஆற்றலைத்தான்   அகஸ்தியன்  என்றது.

அதனால்தான்,  அகஸ்திய மாமகரிஷியின் உருவத்தை மிகக் குறுகிய உடலாகப் போட்டு, 

1.உடல் குறுகி இருந்தாலும், 

2.உணர்வின் ஆற்றல்,

3.பேரண்டத்தில் எட்டித் தாவும் நிலைகள். 

ஒரு அணுவின் தன்மை சிறியதாக இருந்தாலும், யானை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது சுவாசிக்கும் உணர்வின் அணு சிறியது தான்.  ஆனால், சுவாசித்த உணர்வின் அணுவின் தன்மை, பெரிய யானையின் உடலையும், அது இயக்குகின்றது.

இதை  போலத்தான், அகஸ்தியருடைய ஆற்றல், அவருடைய எண்ணத்தின் அலைகள். அவருடைய உடலின் தன்மைகள் குறுகியிருந்தாலும், பேரண்டத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் பெருக்கி, ஒளியின் சரீரமாக, அதைப் பெருக்கிய நிலைகள் கொண்டுதான், அன்று அந்த அகஸ்திய மாமகரிஷியின் உருவத்தை அமைத்து, பின்னால் வந்த ஞானியர்கள் அதை உணர்த்திச் சென்றார்கள்.

நாம் அனைவரும், அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் ஒளியைப் பெறுவோம்…!

கண்ணுக்குப் புலப்படாமல்) இயங்கும் நிலைகளைக் காணச் செய்யும் “ஞானக்கண்”

கண்ணுக்குப் புலப்படாமல்) இயங்கும் நிலைகளைக் காணச் செய்யும் “ஞானக்கண்”

கர்ப்பமாக இருக்கும் ஒரு தாயை எடுத்துக் கொண்டால் கருவுற்ற தொண்ணூறு நாட்களுக்குள் அந்தத் தாய் எடுக்கும் உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.

பொதுவாக பெண்கள் இரக்கமும் பண்பும் கொண்டவர்கள்.

பிறர்படும் நோயினை எண்ணி “இப்படி ஆகிவிட்டதே..,” என்ற எண்ணத்தில் சிலர் (கர்ப்பமான தாய்) நுகர்ந்துவிட்டால் அதைத் தன் உடலுக்குள் பரப்பி கருவிலிருக்ககூடிய சிசுவிற்கும் இத்தகைய உணர்வுகள் கலந்துவிடுகின்றது.

இன்று பல அணுக்களின் கருக்களை விஞ்ஞான அறிவுப்படி இணை சேர்த்து புதுப் புது செடிகளை எப்படி உருவாக்குகின்றனரோ இதைப் போல (தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள்) அது தாயின் கருவிற்குள் உருப்பெற்றுவிடுகின்றது.

ஒரு வீரியம் குறைந்த செடியில் வீரியமுள்ள செடியின் அணுக்களை நாம் எடுத்து அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது வீரியம் குறைந்த செடியும் வீரியமான செடியாக உருவாகின்றது.

இது மனிதனால் இணைக்கச் செய்யப்பட்ட நிலைகள், அது வீரியமான செடியாக உருவாகின்றது

இதைப் போன்றுதான் தாய் கருவிலே சிசு வளரப்படும் பொழுது பல கொடிய நோய்களையோ, அல்லது துன்புறுத்தும் நிலைகளையோ, சண்டை போடும் நிலைகளையோ எதையெல்லாம் தாய் நுகர்கின்றதோ அந்த உணர்வின் அணுக்கள் கருவிலிருக்கக்கூடிய அந்தத் தொண்ணூறு நாட்களுக்குள் சிசுவில் அது பதிந்துவிடுகின்றது.

இப்படிப் பதிந்து கொண்டபின் அதனுடைய வளர்ச்சியில் வரப்படும் பொழுது, தாயிற்குத் தான் பார்த்தது “ஊழ்வினை ஆகின்றது”. குழந்தைக்கோ அது “பூர்வ புண்ணியம் ஆகின்றது”.

இவ்வாறு கருவிலே விளைந்துவிட்டால் கருவில் உருவான குழந்தையும் அந்த உணர்வின் தன்மை இயங்கப்படும் பொழுது அந்த உணர்ச்சியை அதிகமாகக் கூட்டிவிடுகின்றது.

தாய் உற்று பார்த்தவர்கள் எந்தெந்த நோய்வாய்ப்பட்டனரோ அதைப் போல இவர்கள் சுணங்கிவிடுவதும் சண்டையிட்டவரைப் பார்த்திருந்தால் அதே உணர்வுகள் இனம் புரியாதபடி தான் வெறுப்படைவதும் சண்டை போடுவதும் இந்தக் கர்ப்பத்தில் இருக்கப்படும் பொழுது அந்தத் தாயிற்கு இனம் புரியாத இன்னலும் இனம் புரியாத சங்கடமும், இனம் புரியாத வருத்தமும் வரும்.

சில குழந்தைகளில் இப்படி ஆகும்.

ஏனென்றால், சில உணர்வுகள் பதிந்து கொண்டபின் அதன் உணர்வின் அணுக்கள் அந்த வளர்ச்சியைப் பெறும் பொழுது இந்த உணர்ச்சிகள் உந்தி தாய் வழி அது பெறும் தகுதி பெறுகின்றது.

முதலிலே பதிந்தது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகின்றது. தாய் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாகின்றது. ஒரு உணர்வின் தன்மை வித்தாகி வித்தின் தன்மை கொண்டு அது வளர்கின்றது.

இதைப் போன்று “சூட்சம நிலைகளில்” பல நிலைகள் மாறிக் கொண்டேயுள்ளது. எவ்வாறெல்லாம் இது நடக்கின்றது என்ற நிலையை நம் குருநாதர் காட்டினார்.

பல உண்மையின் உணர்வுகளை அலைகளாக எப்படிப் படர்கின்றது? அது நுகரும் தன்மைகள் உடலுக்குள் எப்படி ஊடுருவுகின்றது? என்ற நிலையையும் காட்டினார்.

இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு கேமராவை வைத்து நம் உடல் உறுப்புகளையும் உடலின் இயக்கங்களையும் இன்று காணுகின்றனர்.

இதைப் போல குருவின் உணர்வின் துணை கொண்டு இந்த உணர்வுகள் எனக்குள் அதைப் பாய்ச்சி குருநாதருக்குள் அதைப் பாய்ச்சி என்னை நீ பார் எனக்குள் அது எப்படி இயங்குகின்றது? உணர்வின் செயலாக்கங்கள் அணுக்கள் எப்படி மாறுகின்றது? என்ற நிலையைக் காட்டினார்.

அதைப் போல் எனக்குள் பாய்ச்சி இந்த உணர்வுகள் உனக்குள் எப்படி மாறுகின்றது? இந்த எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றது என்ற நிலையும் முறைப்படுத்திக் காட்டினார்.

இயற்கையின் நியதிகளை குருநாதர் எமக்குக் காட்டியதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இதைச் சொல்கிறோம். உங்களாலும் இதைக் காண முடியும் உணர முடியும். 

அண்டத்த்தின் ஆற்றல் இந்தப் பிண்டத்திற்குள்ளும் உண்டு. உங்களை நீங்கள் நம்புங்கள். 

இமயமலையில் தவமிருக்க வேண்டும்… நம்மால் அது எப்படி முடியும்..?

power of dhiyaanam

இமயமலையில் தவமிருக்க வேண்டும்… நம்மால் அது எப்படி முடியும்..?

இமயமலையிலே தபசு இருந்தார் என்றால்… “இமய…” என்றால் என்ன…?

இமை என்பது இரண்டு கண்களின் மையம் – “உயிர்”

உடல் உயர்த்தியான நிலைகள் மலை.

இமயம்…! என்று அவர்கள் பாடியிருந்தால் இமயமலையிலே போய் நான் தபசு இருக்கவேண்டும் என்றால் என்ன அர்த்தம்…?

உட்பொருளின் தத்துவத்தை அவர்கள் கொடுக்கப்படும்போது இமயமலையிலே போய் தவம் இருக்கச் சொன்னார். தவம் இருந்தார் என்றால் தவம் என்றால் என்ன…?

இந்த இமய மலையிலே புருவ மத்தியிலே நாம் எதையெல்லாம் உயர்த்தி எண்ணுகின்றோமோ இந்தத் தவத்தை நீ கூட்டி இங்கே சேர்க்க வேண்டும்.

இதுதான் பொருள்.

அந்தக் காவியத்திற்குள் இருக்கக்கூடிய பொருள். இமயமலையிலே போய் தவம் இருந்தார்கள். பெரிய பெரிய தவயோகிகள் என்று வர்ணித்துக் கொண்டேயிருக்கின்றோம்.

ஆனால் ஓவியங்களில் அவர்கள் நெற்றியைக் காட்டப்படும்போது, இது தெரியாமல் தான் எங்கெங்கோ சுற்றித் திரிகின்றோம்.
1.ஒளியாக இருக்கும் நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி
2.அவனோடு ஒன்றி அவனாக மாறும்
3.(ஒளியாக மாறும்) பக்குவத்தைத்தான் மெய்ஞானிகள் அன்று காட்டினார்கள்.

Image

யாம் குருநாதர் உரைத்த வண்ணம் ஒரு கிராமத்துப் பக்கம் வந்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில், ஒரு நான்கு முனை சந்திப்புள்ள இடத்தில் உள்ள கடையில், என்னை அமரும்படிச் செய்தார் குருநாதர்.

அப்பொழுது அந்த இடத்திற்கு, ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரில், ஆறேழு பேர் சாமியார் வேடம் பூண்டு, மிகவும் அற்புதமாக இருந்தனர்.

அவர்கள் காரை நிறுத்திவிட்டு, யாம் இருந்த கடைக்கு வந்து கடையில் இருப்பவரிடம், “டீ கொடுங்கள்” என்றனர்.

ஆனால் டீ போடும் ஆளுக்கு, காது கேட்கவில்லை. அவர்கள், “அட.. தம்பி….  இங்கு… வா…” என்றனர். இப்படி இரண்டு முறை கூப்பிட்டும் கேட்காததால், ஜாடையில் காண்பித்து வரச் சொல்லி “உனக்கு காது கேட்கவில்லையா?” என்று கேட்டனர்.

டீ கடைக்காரர், “எனக்கு சுத்தமாகக் கேட்காது” என்றார்.

அதற்குப்பின் சாமியார் வேடம் பூண்டவர்கள், “முருகா!, ஏன் உன் பிள்ளையை இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய், உன் பிள்ளைக்குக் காது கேட்கவை, முருகா”, என்றனர்.

உடனே அவருக்கு, காது கேட்க ஆரம்பித்துவிட்டது. அதன்பின், “எனக்கு முதுகுவலி, தலைவலி, இடுப்புவலி”, என்று ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்லிக் கேட்டு, குணமாகத் தொடங்கியதும், எங்கிருந்து அவ்வளவு கூட்டம்   வந்ததென்று தெரியவில்லை, அப்படி ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது.

அந்த கூட்டத்தில் முடக்குவாதம் வந்த ஒருவரைக் கொண்டுவந்து, “ஐயா, நீங்கள் எத்தனையோ பேருக்கு நல்லது செய்கிறீர்கள். ஐந்தாறு வருடங்களாகக் கட்டிலிலேயே படுத்திருக்கிறார். மல ஜலம் எல்லாம், கட்டிலில் துவாரம் போட்டு எடுக்கின்றோம். இப்படியேதான் படுத்திருக்கின்றார். அவரைக் குணப்படுத்துங்கள்” என்று கேட்டனர்.

சாமியார்களாக வந்தவர்கள் விபரங்களைக் கேட்டுவிட்டு, “முருகா!.. உனக்கு இந்தப் பிள்ளை மேல் கருணை இல்லையா?… இவ்வளவு காலம் வேடிக்கை பார்க்கின்றாயே… முருகா!…, அவர் உன்னை நினைக்கவில்லையா?…, அய்யா, நீங்கள் முருகனை நினையுங்கள்” என்கின்றனர்.

முடமானவரும் முருகனை வேண்டுகின்றார். மீண்டும் அவர்கள் “முருகா… உன் பிள்ளையை எழுப்பிவிடப்பா… கொஞ்சம் இவர் மேல், கருணை வை” என்று சொல்கின்றனர்.

இப்படிச் சொன்னவுடனே, முடமானவரும் சடாரென எழுந்திருக்கின்றார்.

“முருகா…, இவரை இந்த கல்லைத் தூக்கச் செய்யேன்” என்றனர்.

அவரும் உடனே எழுந்து போய், நான்கு பேர் தூக்க முடியாத கல்லைத் தூக்கினார். அங்கே இருந்த அனைவருக்கும் ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது. முருகனே…, அங்கு வந்ததாக, அந்தக் கூட்டம் நம்பியது.

கடைசியில் சாமியார் வேடம் தரித்தவர்கள், “நாங்கள் முருகன் கோயில் கட்டவேண்டும் என்று எங்களுக்கு, முருகன் உத்தரவிட்டு இருக்கின்றார்”. நீங்களெல்லாம் முருகன் கோயில் கட்டுவதற்கு உதவி செய்யவேண்டும். எல்லா மக்களையும், முருகன் பெருமையை உணரும்படி செய்யவேண்டும்.

ஆகவே, உங்களால் இயன்ற பணம் கொடுங்கள் என்று சொன்னவுடனே, அங்கிருக்கும் கூட்டத்தினர், தாங்கள் போட்டிருக்கும் நகை மற்றும் பணம் ஏராளமாகக் கொடுத்தனர்.

சாமியார் வேடம் பூண்டவர்களும், அனைத்தையும் சுருட்டி கட்டிக் கொண்டனர். “முருகன் கோயில் கட்டி முடிந்ததும், உங்கள் அனைவருக்கும் அழைப்பு வைக்கின்றோம், அனைவரும் வாருங்கள்”.

அங்கு வரும் பொழுது, உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் முருகனிடம் சொல்லித் தீர்த்து வைக்கின்றோம் என்று சொல்லிவிட்டு, காரில் ஏறிப் போய்விட்டனர்.

இதையெல்லாம் குருநாதர் பார்க்குமாறு சொல்லியதால், பார்த்துக் கொண்டிருந்தோம்.  உலகில், எத்தனை விதமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? என்பதைக் கண்டுணரும்படி செய்தார் குருநாதர்.

நகைகளையும், பணத்தையும், அள்ளிக் கொண்டு சாமியார் வேடம் பூண்டவர்கள் காரில் ஏறிப்போன பின்,  2  அல்லது  3  மணி நேரம் இருக்கும். முடமாகியிருந்தவர் குணமானதாக நம்பிய நிலையில், கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“எனக்கு முருகனே நேரில் வந்தார், காட்சி கொடுத்தார், குணமாக்கினார்” என்று பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று “ஐயோ, அம்மா என்று கத்தி, கட்டிலிலே சுருண்டு படுத்துக் கொண்டார்.

காது கேட்காமலிருந்த டீ கடைக்காரருக்கு, மறுபடியும் காது கேட்கவில்லை.

இது எப்படியென்றால், இவையனைத்தும் ஆவி வேலைகள். இத்தகைய ஆவிகளை ஏவினால், குறிப்பிட்ட நேரம் வரை செயல்படுத்தும்.

இதைப் போன்ற நிலைகளில், உலகில் உள்ள மக்களை எத்தனையோ வகைகளில் கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை, நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென் பகுதியில் வாழ்ந்த அகஸ்தியனின் பாதச் சுவடுகளில் பதிவான உணர்வின் ஆற்றல்கள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் விண்னை நோக்கி ஏகுவதும் இந்தச் சூரியனைப் பார்ப்பதும் அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் அதன் தொடர் வரிசையாக மற்ற நட்சத்திரங்கள் உமிழ்த்துவதையும் இந்தப் பிரபஞ்சத்திற்குள் பரவும் நிலையும் அவன் சக்தி வாய்ந்த நிலைகளில் உற்றுப் பார்க்கும் நிலைகள் அவனுக்குள் வருகின்றது.

அகஸ்தியன் இதைப் போன்ற உணர்வுகளை அவன் நுகர்ந்து நுகர்ந்து அந்த உணர்வின் தன்மைகளை அவனுக்குள் வளர்க்கும் தன்மை பெறுகின்றான்.

பிற மண்டலங்களிலிருந்து (பேரண்டத்திலிருந்து) 27 நட்சத்திரங்கள் எப்படி இதைக் கவர்கின்றது? அது தனது உணர்வின் ஒளிக் கதிர்களை எப்படிப் பரப்புகின்றது?

சூரியன் அதை எவ்வாறு கவர்கின்றது?

அது வரும் பாதையில் மற்ற கோள்கள் எப்படி அதை இடைமறித்துத் தான் சுழலும் நிலைகளில் துருவப் பகுதியில் நுகர்கிறது? தன் சுழற்சியால் வெப்பமாவதும் அது நுகர்ந்த உணர்வுகள் கொண்டு கோள்கள் எப்படி விளைகின்றது? என்ற பேருண்மைகளை அகஸ்தியன் தனக்குள் கவர்கின்றான். அவனுக்குள் அது விளைகின்றது.

தனக்குள் அப்படி விளைந்த உணர்வின் எண்ணங்களைப் பரப்புகின்றான். அவன் பரப்பிய எண்ணங்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொண்டேயுள்ளது.

அகஸ்தியனின் தாய் தந்தையர் கண்ட உணர்வுகளும், இவனில் விளைந்து வெளிப்பட்ட உணர்வுகளும் இவை அனைத்தையும் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து வைத்து அலைகளாக இன்றும் பெருகிக் கொண்டுள்ளது.

அவன் வாழ்க்கையில் கண்டுணர்ந்த நிலைகளை அந்த அகஸ்தியன் இளமைப் பருவத்தில் பெற்றது அனைத்தும் நீங்கள் அனைவரும் பெற முடியும். அதைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேசமே.

ஏனென்றால், அகஸ்தியன் சில பகுதிகளில் அவன் நடந்து சென்ற பாதச் சுவடுகளும் அவர் உடலிலே விளைந்த உணர்வுகளும் தரையில் இங்கே பதிந்துள்ளது.

பதிந்திருந்தாலும் எங்கே அவரின் பதிவுகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சுழன்று கொண்டுதான் இருக்கின்றது.

அந்த இடத்தில் தான் உங்களுக்கும் இந்த உபதேசத்தை உணர்த்தி உணர்வின் நினைவாற்றலை அந்த அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்குச் (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்) செலுத்தச் செய்கின்றோம்.

இந்த உணர்வுகள் பதிவாக்கிவிட்டால் அந்த அகஸ்தியன் இளம் பருவத்தில் பெற்ற அந்த ஞானத்தை நீங்கள் பெற முடியும். அந்த ஆற்றலையும் பெறமுடியும் என்பதைத்தான் யாம் உணர்த்திக் கொண்டுள்ளோம்.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்தக் காட்டு பகுதியெல்லாம் வரச்சொல்லி நடக்கச் செய்து அகஸ்தியன் உணர்வுகள் எவ்வாறெல்லாம் பதிந்திருக்கின்றது என்றும் மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு குருநாதர் காட்டிய உபாயத்தின் துணை கொண்டு அதையே அந்த உணர்வை நினைவு கொண்டு இப்பகுதிகளில் (பாபநாசம்) முதல் காலங்களில் யாம் சுற்றுப்பயணம் வந்தது தான்.

சூனியமாக இருந்த ஆதியிலிருந்து இந்தப் பேரண்டம் எவ்வாறு உருவாகி வந்தது என்று அகஸ்தியன் கண்ட நிலைகளை நம் குருநாதர் எம்மிடம் காட்டினார்.

ஆரம்பத்தில் தென் பகுதியில் தோன்றிய அந்த அகஸ்தியன் தன் இளம் வயதிலேயே பேரண்டத்தின் பேருண்மைகளை உணரும் பருவம் வந்தது.

இந்தப் பேரண்டம் இருண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷத்தின் தன்மை எப்படி உருவாகின்றது? அந்த விஷத்தின் தன்மை அணுக்களாக எப்படிப் பெருகுகின்றது? என்பதையெல்லாம் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

இன்று சூரியன் இருக்கின்றது. அதிலிருந்து அணுக்களாக வெளி வருகின்றது.

ஆனால், ஆதியில் சூரியனே இல்லாத பொழுது அது ஆவிகளாக மாறுகின்றது. ஆவிகளாக இருக்கப்படும் பொழுது அது அடர்த்தியாகி மேகங்கள் எப்படி இருக்கின்றதோ இதைப் போல அக்காலங்களில் மேகங்களாக எப்படித் தொடர்ந்துள்ளது என்ற நிலையையும் உணர்ந்தான் அகஸ்தியன்.

இது அகஸ்தியர் தன் வாழ்க்கையில் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அது “முன்னோக்கிச் சென்று” இன்று அண்டத்தின் ஆற்றல் எப்படி என்ற நிலையை அவனால் அந்த விஷத் தன்மையின் ஆற்றல் கொண்டு இந்த வலிமை பெற்றதனால் காண முடிந்தது.

அந்த வலிமையான எண்ண அலைகளால் இந்த உலகம் எப்படி உருவானது? இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது? சூரியன் எப்படி உருவானது? என்று கண்டறியும் ஆற்றலும் அவனுக்குள் வருகின்றது.

இந்த ஆற்றல் அவனுக்குள் எப்படி வந்தது என்ற நிலையை இங்கே குருநாதர் அதை உபதேசித்தருளினார். இந்த உணர்வின் நிலையைப் பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கி அந்த அலையின் ஆற்றலை நீ எப்படிப் பருக வேண்டும் என்பதையும் உபதேசித்தார்.

அதன் வழி கொண்டுதான் உங்களுக்கு இப்பொழுது சொல்வது.

பேரண்டத்தில் சூரியனோ, நட்சத்திரங்களோ, கோள்களோ இல்லாத பொழுது இருண்ட நிலைகள் ஒரு அடர்த்தியான நிலை வரும் பொழுது ஒரு சிறு வெப்பமாகின்றது.

வெப்பத்தால் ஒரு ஆவி மாதிரித் தோன்றுகின்றது. ஆவிகளாக உருவான பின் அடர்த்தியின் தன்மை நாளாகும் பொழுது அது நஞ்சாக எப்படி மாறுகின்றது? என்று அகஸ்தியன் கண்டான்.

இதை இன்று விஞ்ஞான அறிவில் எப்படி திரவகத்தை ஊற்றிய பின் அதனுடன் சேர்ந்த பின் எப்படி எப்படியெல்லாம் மாறுகின்றது என்று காணுகின்றார்களோ அதே போன்று குருநாதர் பேச வைத்து உணர்வினை இயக்கச் செய்து அந்த அகஸ்தியன் உணர்வைத் தனக்குள் கவர்ந்து அவன் கண்டுணர்ந்த தொடர்பை நீ எப்படிப் பெறவேண்டும் என்ற நிலையை குருநாதர் உணர்த்தினார்.

அதன் தொடர் வரிசை கொண்டு பார்த்தேன்.

அவ்வாறு நான் பார்த்த, கண்டுணர்ந்த, எனக்குள் விளைய வைத்த அந்த உண்மையின் உணர்வுகள் அனைவரும் எளிதில் பெற முடியும் என்பதற்குத்தான் இங்கே பாபநாசத்தில் வருடம் தோறும் கூட்டமைப்பாக அமைத்து அந்த அகஸ்தியனின் ஆற்றல்களைப் பெறச் செய்கிறோம்.