கண்ணுக்குப் புலப்படாமல்) இயங்கும் நிலைகளைக் காணச் செய்யும் “ஞானக்கண்”

கண்ணுக்குப் புலப்படாமல்) இயங்கும் நிலைகளைக் காணச் செய்யும் “ஞானக்கண்”

கர்ப்பமாக இருக்கும் ஒரு தாயை எடுத்துக் கொண்டால் கருவுற்ற தொண்ணூறு நாட்களுக்குள் அந்தத் தாய் எடுக்கும் உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.

பொதுவாக பெண்கள் இரக்கமும் பண்பும் கொண்டவர்கள்.

பிறர்படும் நோயினை எண்ணி “இப்படி ஆகிவிட்டதே..,” என்ற எண்ணத்தில் சிலர் (கர்ப்பமான தாய்) நுகர்ந்துவிட்டால் அதைத் தன் உடலுக்குள் பரப்பி கருவிலிருக்ககூடிய சிசுவிற்கும் இத்தகைய உணர்வுகள் கலந்துவிடுகின்றது.

இன்று பல அணுக்களின் கருக்களை விஞ்ஞான அறிவுப்படி இணை சேர்த்து புதுப் புது செடிகளை எப்படி உருவாக்குகின்றனரோ இதைப் போல (தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள்) அது தாயின் கருவிற்குள் உருப்பெற்றுவிடுகின்றது.

ஒரு வீரியம் குறைந்த செடியில் வீரியமுள்ள செடியின் அணுக்களை நாம் எடுத்து அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது வீரியம் குறைந்த செடியும் வீரியமான செடியாக உருவாகின்றது.

இது மனிதனால் இணைக்கச் செய்யப்பட்ட நிலைகள், அது வீரியமான செடியாக உருவாகின்றது

இதைப் போன்றுதான் தாய் கருவிலே சிசு வளரப்படும் பொழுது பல கொடிய நோய்களையோ, அல்லது துன்புறுத்தும் நிலைகளையோ, சண்டை போடும் நிலைகளையோ எதையெல்லாம் தாய் நுகர்கின்றதோ அந்த உணர்வின் அணுக்கள் கருவிலிருக்கக்கூடிய அந்தத் தொண்ணூறு நாட்களுக்குள் சிசுவில் அது பதிந்துவிடுகின்றது.

இப்படிப் பதிந்து கொண்டபின் அதனுடைய வளர்ச்சியில் வரப்படும் பொழுது, தாயிற்குத் தான் பார்த்தது “ஊழ்வினை ஆகின்றது”. குழந்தைக்கோ அது “பூர்வ புண்ணியம் ஆகின்றது”.

இவ்வாறு கருவிலே விளைந்துவிட்டால் கருவில் உருவான குழந்தையும் அந்த உணர்வின் தன்மை இயங்கப்படும் பொழுது அந்த உணர்ச்சியை அதிகமாகக் கூட்டிவிடுகின்றது.

தாய் உற்று பார்த்தவர்கள் எந்தெந்த நோய்வாய்ப்பட்டனரோ அதைப் போல இவர்கள் சுணங்கிவிடுவதும் சண்டையிட்டவரைப் பார்த்திருந்தால் அதே உணர்வுகள் இனம் புரியாதபடி தான் வெறுப்படைவதும் சண்டை போடுவதும் இந்தக் கர்ப்பத்தில் இருக்கப்படும் பொழுது அந்தத் தாயிற்கு இனம் புரியாத இன்னலும் இனம் புரியாத சங்கடமும், இனம் புரியாத வருத்தமும் வரும்.

சில குழந்தைகளில் இப்படி ஆகும்.

ஏனென்றால், சில உணர்வுகள் பதிந்து கொண்டபின் அதன் உணர்வின் அணுக்கள் அந்த வளர்ச்சியைப் பெறும் பொழுது இந்த உணர்ச்சிகள் உந்தி தாய் வழி அது பெறும் தகுதி பெறுகின்றது.

முதலிலே பதிந்தது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகின்றது. தாய் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாகின்றது. ஒரு உணர்வின் தன்மை வித்தாகி வித்தின் தன்மை கொண்டு அது வளர்கின்றது.

இதைப் போன்று “சூட்சம நிலைகளில்” பல நிலைகள் மாறிக் கொண்டேயுள்ளது. எவ்வாறெல்லாம் இது நடக்கின்றது என்ற நிலையை நம் குருநாதர் காட்டினார்.

பல உண்மையின் உணர்வுகளை அலைகளாக எப்படிப் படர்கின்றது? அது நுகரும் தன்மைகள் உடலுக்குள் எப்படி ஊடுருவுகின்றது? என்ற நிலையையும் காட்டினார்.

இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு கேமராவை வைத்து நம் உடல் உறுப்புகளையும் உடலின் இயக்கங்களையும் இன்று காணுகின்றனர்.

இதைப் போல குருவின் உணர்வின் துணை கொண்டு இந்த உணர்வுகள் எனக்குள் அதைப் பாய்ச்சி குருநாதருக்குள் அதைப் பாய்ச்சி என்னை நீ பார் எனக்குள் அது எப்படி இயங்குகின்றது? உணர்வின் செயலாக்கங்கள் அணுக்கள் எப்படி மாறுகின்றது? என்ற நிலையைக் காட்டினார்.

அதைப் போல் எனக்குள் பாய்ச்சி இந்த உணர்வுகள் உனக்குள் எப்படி மாறுகின்றது? இந்த எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றது என்ற நிலையும் முறைப்படுத்திக் காட்டினார்.

இயற்கையின் நியதிகளை குருநாதர் எமக்குக் காட்டியதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இதைச் சொல்கிறோம். உங்களாலும் இதைக் காண முடியும் உணர முடியும். 

அண்டத்த்தின் ஆற்றல் இந்தப் பிண்டத்திற்குள்ளும் உண்டு. உங்களை நீங்கள் நம்புங்கள். 

Leave a Reply