துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர வேண்டும்

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர வேண்டும்

 

நம் உயிர் எப்போது உருவானதோ என்றுமே இருள் சூழாது ஒளி என்ற நிலையாக மாற்றிக் கொண்டே இருக்கும். இந்த உணர்வை மனித உடலில் தான் சேர்க்க முடியும். அதைத்தான் குரு எனக்குக் கொடுத்தார்.

துருவ நட்சத்திரத்துடன் என்னை ஆயுள் மெம்பராகச் சேர்த்தார். அதன்வழி உங்களையும் சேர்த்து விடுகின்றோம்.
1.அந்த மெம்பர் பதவியை நீங்கள் கூடுமான வரையிலும் ஊக்குவித்து
2.உங்கள் உணர்வுகள் இங்கே படரப்படும் பொழுது “விஞ்ஞான அறிவால் வரும் விஷத் தன்மைகளை அடக்க முடியும்…”

நியூட்ரான் என்ற நிலையில் ஒரு பக்கம் வந்தாலும் அணுக்கதிரியக்கங்கள் என்று இந்த இரண்டும் கசிவாகி இருக்கின்றது. இரண்டும் மோதலாகும் இடங்களில் தான் புயலாக… சூறாவளியாக மாறுகின்றது.

கதிரியக்கப் பொறி அதற்குள் இருக்கக்கூடிய நிலைகளில் மோதுகின்றது.
1.நியூட்ரான் என்ற காற்றின் அழுத்தத்தைக் கொடுத்த பின் சுழற்சியின் தன்மை அடைந்து
2.அலாக்காகக் கட்டிடங்களை எல்லாம் தூக்கி எறிகின்றது. எவ்வளவு பெரிய காங்கிரீட் கட்டிடமாக இருந்தாலும் தூசியாக மாற்றித் தூக்கி எறிகின்றது.

ஏனென்றால் விஞ்ஞானிகள் செய்த கொடுமை இது…!

அவனை அறியாமலே மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற நிலையில் அவனே அழிந்து போகும் நிலைகளுக்குச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்கே உருவாக்கினானோ இன்று அங்கெல்லாம் இது நடக்கின்றது.

தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற அகஸ்தியன்… அவன் தாய் கருவிலே பெற்ற உணர்வுகள் தன் வளர்ச்சியிலே தீமைகளை நீக்கி… திருமணமான பின் கணவன் மனைவி இருவருக்குள்ளும் அருள் உணர்வைக் கருவாக்கி… உணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருவரும் இருக்கின்றார்கள்.

உடலை விட்டு என் கணவர் பிரிந்து விட்டார் என்று ஒரு சிலர் இருந்தாலும் “அவருடைய உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு…” என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.

இந்த உணர்வின் தன்மை எப்பொழுதுமே இணைந்து வாழும் தன்மை. நாம் எதன் பருவத்தைக் கொள்கின்றோமோ அவர் ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஒளியாகின்றது.
1.அந்த உயிரின் தன்மை ஒளியாகும் நிலையில் எங்கே சென்றாலும் கவர்ந்து இழுத்துக் கொள்ளும்… ஒளியாக மாறும்…
2.இரு உணர்வும் என்றுமே அந்த அருளைப் பெருக்கும் நிலையாக மாறும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இது யாம் அனுபவ ரீதியிலே தெரிந்து கொண்ட நிலை.

ஆகவே உயிரை நாம் சொந்தமாக வேண்டும். அவனுடன் ஒன்றி வாழ வேண்டும் என்றால் உயிரோடு இணைந்து ஒளியின் சரீரம் பெறலாம்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர் நீங்கள் ஒவ்வொருவரும் உலகிற்கு எடுத்துக்காட்டாக வர வேண்டும். நமது கடமைகளில் தவறக் கூடாது.

அருள் ஒளியின் உணர்வைக் கொடுத்து
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குரு வழியில் பாய்ச்சி
2.அது கடமையாக அமைந்து அந்த அருள் ஒளியாக மாற்றும் இந்த உணர்வைப் பெற வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிர் தான் சொந்தம்…! அவன் உணர்வை எடுத்து எல்லாவற்றையுமே ஒளியாக மாற்றினோம் என்றால் தனுசுக் கோடி. கோடி என்று ஆகும் பொழுது அனைத்தும் ஒன்றாகின்றது.

லட்சம் அந்த லட்சம் இந்த லட்சம் என்று சொன்னால் மாறுகின்றது. ஒன்று இரண்டு மூன்று என்று நிலைகள் வருகின்றது… பல லட்சம் என்ற நிலையில் “எல்லாம் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது கோடி…!”

எவ்வளவு அழகாக இராமாயணத்தில் கொடுத்துள்ளார்கள்…?

நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து
1.அதனுடன் சேர்த்து… உணர்வின் தன்மை ஒன்றாக இணைந்து நீங்கள் விடும் மூச்சலைகளால்
2.விஞ்ஞான அறிவில் வரும் விஷ உணர்வுகளிலிருந்து காக்கப்பட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் இயல்பு

துருவ நட்சத்திரத்தின் இயல்பு

 

மனிதனாகப் பிறந்து வளர்ச்சி பெற்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் பிறிதொரு தீமைகளையோ பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளையோ வேதனை உணர்வுகளையோ எடுத்துக் கொண்டால் உடலில் அது விளைந்து “விஷமான அணுக்களாகப் பெருகுகின்றது…”

அதனால் இந்த உடலை விட்டு உயிர் வெளியே சென்று விடுகின்றது.

ஆக இந்த உயிர் எத்தகைய விஷத்தின் தன்மையைச் சேமித்து வைத்ததோ இதைப் போல விஷத்தைக் கொண்டு ஜீரணித்து வாழக்கூடிய உயிரினங்களுக்கு அழைத்துச் சென்று விடும்.

1.மாடு ஆடு யானை எல்லா உயிரினங்களிலும் பார்க்கலாம்… நாமும் சரி பித்தப்பை என்பது கடுமையான விஷம்.
2.பழுவிலிருந்து எல்லா வகையிலும் எடுத்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில்
3.அந்தப் பித்தம் சிறிதளவு மனித உடலில் இல்லை என்றால் “ஜீரணிக்கும் சக்தி குறையும்…”

ஒரு சிலர் பித்தப்பையை எடுத்தே வாழ்வார்கள். சேமிக்கும் தன்மை கொண்டு வடிகட்டும் நிலை… அதாவது இரத்தத்திலிருந்து மீண்டும் பித்த சுரப்பிகள் சேமிக்கும் நிலை இல்லை என்றால் அது நம் உடலிலேயே கவர்ந்து கொள்ளும்.
1.ஆனால் பித்தப் பையில் கல் உருவாவதால் தான் அதை நீக்குகிறார்கள்.
2.காரணம் அந்த நஞ்சு உறைந்து கல்லாகிறது.

ஆனால் விஷத்தை அதிகமாக எடுக்கும் பாம்பினங்களுக்கோ அதிலே உறைந்து நாகரத்தினமாக மாறுகிறது. இதே போல் பித்தப்பை உள்ள மற்ற உயிரினங்களிலும் இது போல் விஷத்தின் சேமிப்பு அதிகமானால் அந்தக் கற்கள் வைரக் கல்லாக மாறும்.

பித்தம் அதிகரிக்கும் போது அந்த உணர்வுகளைச் சேமிக்க என்று ஒரு தனிப் பை இருக்கும்.
1.பாம்பினங்களுக்கு வைரக்கல்லாக மாறுகின்றது.
2.அந்த விஷம் ஒடுங்கி ஒளியாக மாறுகின்றது

ஏனென்றால் விஷம் தாக்கித் தான் வெப்பத்தின் தன்மை கொண்டு ஒளியாகின்றது. இது இயற்கையின் நியதிகள். இதைப் போன்று… “விஷத்தின் ஆற்றல்…” மிகச் சக்தி வாய்ந்தது.

இதையெல்லாம் ஏன் சொல்லிக் கொண்டு வருகிறோம் என்றால் புழுவில் இருந்து மனிதனாக நாம் வளர்ச்சி பெற்று வந்த நிலையை இந்த சரித்திரத்தை சிறிதளவாவது இந்த மனித உடலில் ஏற்றுக் கொண்டு அதை நீக்குவதற்குத் தான்…!

ஆக இதையெல்லாம் நீக்கியவன் யார்…?

அகஸ்தியன் என்று பின் கூறும் அந்த ஞானி இந்த நஞ்சை எல்லாம் மாற்றி அமைத்து
1.கணவன் மனைவி இருவரும் ஒன்றாகி அந்த விஷத்தை அடக்கி
2.ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
3.உங்களை அதனுடன் இணைத்துக் கொண்டு வரப்படும் பொழுது
4.“உங்கள் உடலில் உள்ள அணுக்களும்…” நஞ்சினை ஒளியாக மாற்றிடும் உணர்ச்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொள்ளும்.

குருநாதர் இப்படித்தான் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் சொல்லிக்
1.கடைசியில் துருவ நட்சத்திரத்தின் இயல்புகளைக் கொண்டு வருவார்.
2.அதைத்தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

காற்றிலே எத்தகைய விஷமான உணர்வு வந்தாலும் அது நமக்குள் புகாது தடுக்கும் ஒரு பயிற்சி வேண்டும்

காற்றிலே எத்தகைய விஷமான உணர்வு வந்தாலும் அது நமக்குள் புகாது தடுக்கும் ஒரு பயிற்சி வேண்டும்

 

பூச்சி புழுக்களைக் கொல்லத் தாவரங்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்கிறோம். பூச்சிகள் சாகின்றது. அந்த விஷங்களை எல்லாம் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது.

எந்தச் செடிகளிலும் சேராது அந்த விஷங்கள் ஒதுங்கி நிற்கும். செடியிலே இணைந்தது வித்திற்குள் சிறிதளவு உருவாக்குகின்றது.
1.ஆனால் எதிலும் ஈர்ப்பு இல்லாது ஒதுங்கி நிற்பதை நாம் அந்தப் பாதையில் சென்று அந்த வாசனையை நுகர்ந்தோம் என்றால்
2.நம் உடலில் உள்ள அணுக்களில் சிறிதளவு சேர்ந்து விடுகிறது.
3.அந்த விஷத்தை உணவாக உட்கொள்ளும் அணுவாக உடலுக்குள் உருவாகின்றது.

ஒரு தரம் அந்த விஷத்தை நுகர்ந்து விட்டால் அணுக்களில் அது இணைந்த பின் அதற்கு அந்த ருசி தேவை. அது விஷத்தை உணவாக எடுத்துக் கொள்கின்றது.

இன்று எத்தனையோ புதுவிதமான விதைகளை விஞ்ஞானிகள் உருவாக்குகின்றார்கள். இதே போன்று நாம் எத்தனையோ கெமிக்கல் கலந்த ரசாயணங்களை உபயோகப்படுத்துகின்றோம். ஆடைகளிலே நிறங்களுக்காகச் சாயம் பூசுகின்றார்கள்.

இந்த விஷத்தன்மைகளை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது… நீரிலும் கலக்கின்றது… ஆவியாக மாறி மேலே படர்கிறது… காற்றிலும் படர்கின்றது.

மனிதனால் இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்த விஷங்களை
1.மனிதர்கள் மீண்டும் சுவாசிக்கப்படும் பொழுது தீமையான அணுக்களாகவே உடலுக்குள் உருவாகின்றது.
2.ஆசையின் நிமித்தம் செய்தாலும் இது நமக்குள் மாறிவிடுகின்றது.
3.இப்படி எல்லாம் நம்மை அறியாதபடியே தீமைகள் வருகிறது. உறுப்புகள் கெடுகிறது…!

அப்படி ஆகாமல் தடுக்க வேண்டும் அல்லவா…!

இராமாயணத்தில் உணர்வுகள் உணர்ச்சிகள் என்று காட்டியிருப்பார்கள். கிரேதா யுகம்…! கோள்கள் செடி கொடிகள் இவையெல்லாம் கிரேதா.

திரேதா…! சுவாசித்த உணர்வு அதாவது மனிதர்கள் நாம் அதை நுகர்ந்த பின் உடலுக்குள் சேர்த்த பின் திரேதா யுகத்தில் சீதா ராமனாகத் தோன்றுகின்றார். “எந்தச் சுவையோ அதன் எண்ணமாக…” நமக்குள் வருகின்றது.

வேதனைப்பட்டு விட்டால் “அம்மா…!” என்று சொல்கிறோம். மயக்கமாக வருகிறது என்று சொல்கின்றோம். எதனால் வருகிறது…? மயக்கப்படச் செய்யும் உணர்வை நாம் நுகர்ந்ததால்…!

1.ஆனால் “மயக்கமாக இருக்கிறது…” என்ற அந்தச் சொல்லை இன்னொருவர் காதில் கேட்டால்
2.அவர்கள் தைரியமானவர்களாக இருந்தாலும் சிறிது நேரத்தில் அங்கேயும் ஒரு மயக்கம் வருகிறது.

தவறு செய்யவில்லை… இப்படி எல்லாம் வருகின்றது. ஆக தவறு செய்யாமலேயே நம்முடைய உணர்வுகள் இப்படி மாறிக் கொண்டே வருகிறது.

நம்மை அறியாமலே எத்தனையோ தீமைகள் சுவாசத்தின் வழி வருகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று அதைச் சுவாசிக்க வேண்டும். ஆயுள் கால மெம்பர்களுக்கு அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

ரோட்டிலே செல்கின்றோம்…
1.ஒரு கெட்ட வாசனை வருகிறது என்றால் அது நமக்குள் அணுவாக உருவாகாதபடி தடுக்க
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நமக்குள் வலுக் கூட்டி விட்டோம் என்றால்… நம் ஈர்க்க மறுத்த அந்தக் கெட்ட வாசனையைக் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து (ஆன்மாவிலிருந்து) அகலச் செய்து அப்புறப்படுத்திவிடும்.
1.ஏனென்றால் அதைக் காட்டிலும் இந்தத் துருவ நட்சத்திரம் சக்தி வாய்ந்தது… நம்முடைய ஆன்மா சுத்தமாகிறது.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்முடைய ஆன்மாவிலே சக்தி வாய்ந்ததாக நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் தியானத்திலே உங்கள் நினைவுகளை எல்லாம் “துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு செல்கின்றோம்….” அதை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆயுள் கால மெம்பர் இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆயுள் கால மெம்பர் இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் ஒவ்வொரு குணங்களிலும் சொல்லி வரும் போது அந்தந்த உடலில் ஏற்பட்ட உணர்வெல்லாம் சேர்த்துச் சேர்த்துக் கலந்து விடுகிறோம்.

இது தான் “தொட்டுக் காட்டுதல்…” என்பது.

உங்கள் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விட்டு… அடுத்து உங்கள் கண்ணின் நினைவை என் புருவ மத்தியிலே “ஈஸ்வரா…” என்று உற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி “அனைவரும் பெற வேண்டுமென்று ஏங்குங்கள்…”
1.இவ்வாறு ஏங்கிப் பெறும் பொழுது உங்கள் எல்லோருடைய செவிகளிலும் படுகின்றது…
2.எல்லோரும் சொன்ன உணர்வைக் கண் கவர்கின்றது… மூக்கு நுகர்கின்றது… உயிருக்குள் படர்கின்றது…
3.உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் ரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது.

“வியாழன் கோள்…” 27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துப் புதுவிதமான கருக்களை உருவாக்கக்கூடிய குருவாக இருக்கின்றது. இதே மாதிரி
1.”நம் குருவின்…” அருள் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
2.எல்லோரையும் ஒன்று போல் இணைக்கும் பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் படர்கின்றது.
3.தீமையான உணர்வுகளை மாற்றி விட்டுத் “துருவ நட்சத்திரத்துடன் ஒன்று சேர்த்து இணையும் சக்தியாக” மாறுகின்றது.

கூட்டுத் தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய சக்திகள்… உங்கள் உடலுக்குள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கும் நிலையாச் சந்தர்ப்பம் உருவாகின்றது.

1.என் நெற்றியிலிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளி வரும்.
2.அந்த ஒளியான உணர்வுகள் உங்கள் உடலிலும் பாயும்.
3.கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் உங்கள் உடலுக்குள் ஊடுருவி உள்ளுக்குள் செல்வதும்… அந்த உணர்வு தெரியும்.
4.இந்த அடிப்படையில் நீங்கள் கொண்டு சென்றால் “அருள் ஞானச் சக்கரத்திலும் ஒளி வரும்…”

எப்பொழுது எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் ஆந்தச் சக்கரத்திற்கு முன்பு நின்று அதை உற்றுப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எடுத்து வலுவாக்கிக் கொண்டு செல்லுங்கள். உங்கள் காரியங்கள் நல்ல முறையில் செயலாகும்.

உபதேச வாயிலாக உங்களுக்குத் தொடர்ந்து துருவ நட்சத்திரத்தைப் பற்றிப் பதிவு செய்து கொண்டே வருகின்றேன்.

அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணி ஏங்கித் தியானிக்கின்றேன். அதே போல் நீங்களும் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி என் புருவ மத்தியைப் பாருங்கள். அப்படிப் பார்க்கும் போது
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய ஒளி அங்கிருந்து இங்கே வந்து என்னிடமிருந்து உங்களுக்குள் பாயும்.
2.என்னால் பதிவு செய்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நேரடியாக உங்களுக்குப் பெறச் செய்வதற்காக இது மாதிரிச் செய்கின்றேன்.

இந்த உணர்வு பாய்ந்த பின் அதை எடுத்து நீங்கள் வலு கூட்டிக் கொண்டால் இது விஷ்ணு தனுசாக மாறுகின்றது. கடைசி நிலையாக
1.உடலை விட்டு உயிர் போவதற்கு முன் இந்த உணர்வை எடுத்தோம் என்றால் தனுசு கோடியாக
2.உயிரும் இந்த உடலில் இருக்கும் அனைத்தும் ஒன்றாகின்றது.

அந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் பயிற்சியாக இவ்வாறு கொடுக்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் “உணர்வு “- அழுத்தம்

துருவ நட்சத்திரத்தின் “உணர்வு “- அழுத்தம்

 

தையல் கடையில் துணி தைப்பவர் லேசாகத் தைக்கிறார் என்றால் நாமும் அவ்வாறு தைக்க முடியுமா…? அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டே மற்றவரிடம் பேசிக் கொண்டே சீராகத் தைத்து விடுவார். அந்த உணர்வின் இயக்கம் சீராக வேலை செய்கின்றது.

ஆனால் நாம் கூர்மையாகப் பார்த்துச் செய்தாலும் கூட தையல் கோணல் மாணலாக நெளிந்து கொண்டே போகும்.

1.அது போல் தான் இந்தத் தியானத்தினை நாம் சீராகப் பழகிக் கொண்டால்
2.வாழ்க்கையில் எதிர்நிலை வந்தால் “டக்…” என்று அதை மாற்றி விட முடியும்.

கம்ப்யூட்டர் மூலமாக இன்று எத்தனையோ வேலைகளைச் செய்கின்றார்கள். ஒரு வேலை செய்கிறார் என்றால் அதிலே தவறுகள் வந்து விட்டால் “ஏன் அவ்வாறு வந்தது…?” என்று அதைச் சரி செய்வதற்கு “மாற்று அழுத்தத்தைக் கொடுத்து விடுகிறார்கள்…”

1.அந்த மாற்று அழுத்தம் வந்தபின் தவறுகளை மாற்றி மறுபடியும் அதைச் சீராக்குகின்றது.
2.தவறு என்று வந்தாலே அதைக் காட்டிலும் அழுத்தமான உணர்வு கொண்டு அதை அழித்து விட்டு நல்ல உணர்வுகளைப் பதிவு செய்கின்றான்.

நாம் காகிதத்தில் தவறாக எழுதினால் அழித்து அதைத் திருத்துகின்றோம்.

ஆனால் உணர்வின் இயக்கம் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக். ஒரு பொருளின் ரூபத்தைக் கொண்டு வரும் பொழுது அழுத்தத்தின் தன்மை கொண்டு அது சீராகவில்லை என்றால் அழுத்தத்தை மாற்றி அந்த உணர்வுக்கொப்ப கொண்டு வருகின்றார்கள். கெமிக்கல் கலந்த உணர்வுகளில் உணர்வின் தன்மை அழுத்தம் எதுவோ அதன்படி அது கொண்டு வரும்.

1.விளக்குகள் சிறிதாகவோ பெரிதாகவோ எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் எந்த உணர்வுக்கொப்ப எப்படி அது எரிகின்றதோ
2.இது போன்று அந்த உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றி இந்த ஒலியின் நிலையை உருவாக்குகின்றார்கள்.

அப்போது எழுத்தின் வடிவம் வருகின்றது. விஞ்ஞானிகள் இதைச் செய்கின்றார்கள்.

இதைப் போன்று தான் நாம் கண் கொண்டு பார்க்கும் போது ஒருவன் வேதனைப்படுகிறான் என்று பார்த்தால் நல்ல உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றி அதை அழித்து அந்த (வேதனை) உணர்வைக் கொண்டு வருகின்றது.

ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் செலுத்தி “அந்த உணர்வின் அழுத்தத்தை நாம் கொண்டு வந்தால்”
2.அது அந்த வேதனையை மாற்றி தெளிந்த உணர்வின் தன்மையை நமக்குள் கொண்டு வரும்.

ஏனென்றால் நமது உயிரும் எலக்ட்ரிக் தான். நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்.

விஞ்ஞானி காட்டுகின்றான் இன்று அகண்ட அண்டத்தையும். அன்று மெய்ஞானியோ தன் உணர்வின் தன்மையைப் பாய்ச்சினான்… உணர்வுகளை அறிந்தான்.உணர்வுக்கொப்ப எண்ணத்தை வளர்த்தான். அந்த உணர்வின் ஆற்றல் அது செயல்படும் நிலைகளை அகண்ட அண்டத்தையும் அகஸ்தியன் அறிந்தான்.

1.அகஸ்தியன் உடலில் விளைந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் கலந்துள்ளது.
2.குருநாதர் கண்டார்… அதைப் பெற்றார் அந்த உணர்வை எனக்குள் பதிவாக்கினார்… அதை நினைவு கொள் என்றார்… அதன்படி நடக்க வேண்டும் என்று சொன்னார்.
3.அதை அறிந்து தான் நான் பேசுகின்றேன். கல்வியால் கற்றுணரவில்லை… எழுத்து வடிவில் நான் பார்க்கவில்லை.
4.குரு காட்டிய உணர்வைப் பதிவாக்கினேன்… நினைவு கொண்டேன்… அதை அறிய முடிகின்றது. அதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன்.

அதை நீங்கள் பதிவாக்கிவிட்டால் நினைவு கொண்டால்… அருள் ஞானி பெற்ற உணர்வை நீங்களும் பெறலாம். உங்களுக்குள் அறியாது வந்த இருளை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

துருவ நட்சத்திரத்திற்குச் சென்று பழகும் நிலை

துருவ நட்சத்திரத்திற்குச் சென்று பழகும் நிலை

 

பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக இன்று நாம் வந்திருக்கிறோம். இனி நாம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதை அறிதல் வேண்டும்.

1.அகஸ்தியனும் பரிணாம வளர்ச்சியில் வந்தவன் தான்.
2.அகஸ்தியன் கதிரியக்கங்களை தனக்குள் நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றி உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி
3.ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டிருப்பவன்.
4.மனிதனில் அவன் வளர்ச்சி பெற்றவன்.

அவ்வாறு ஆன அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நேரத்திலும்… அதாவது வெறுப்போ வேதனையோ சலிப்போ பகைமையோ இதைப் போன்ற உணர்வுகள் வரும் போதெல்லாம் அந்தத் தவறின் உணர்வுகள் இயங்குவதைத் தடுத்து அதனை அடக்க வேண்டும்.

காரம் புளிப்பு உப்பு என்று தனித்தனித் தன்மையாக இருக்கும்போது அந்தந்த உணர்ச்சிகளை அது ஊட்டுகின்றது, அதனதன் வழியில் செயலாக்குகிறது. இவை அனைத்தையும் மனிதனின் ஆறாவது அறிவு ஒன்றாகச் சேர்த்து கலவையாக்கிச் சுவையான உணவாக்கி அதை உட்கொள்கின்றோம்.

அப்படிப்பட்ட அந்தச் சுவையாக மாற்றும் தன்மையை நம் வாழ்க்கையில் நாம் பெறுதல் வேண்டும்.

நாம் நமது வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பகைமை உணர்வு வருகின்றதோ அதை அடக்க உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பதிவு செய்கின்றோம்.

1.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை யாம் பதிவு செய்ததை அதன் நினைவு கொண்டு நீங்கள் எடுக்க வேண்டும்.
2.நினைவு கொண்டு எடுத்தால் உங்களைக் காக்க… அந்த உங்கள் எண்ணம் உதவும்.

திட்டியவனின் உணர்வை நுகர்ந்தபின் அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகின்றது. அதன் வழி எண்ணும் பொழுது அவனை வெறுக்கும் தன்மை, வருகின்றது.

அந்த வெறுக்கும் தன்மை உங்களுக்குள் வரும் பொழுது ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாதபடி அது தடையாக வருகிறது.

இத்தகைய தடைகள் வருவதைத் தடுப்பதற்கும் அந்த உணர்வின் தன்மையை அடக்குவதற்கும் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வது.

அப்பொழுது இந்த உணர்வை எடுத்தால் அந்தத் தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.

என்னுடைய ஜெபமே என்னுடைய தியானமே யார் யார் இதைக் கேட்டறிந்தனரோ
1.அவர்கள் எண்ணும் பொழுதெல்லாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள்
2.அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உணர்வின் வலுவை ஊட்டிக் கொண்டிருக்கின்றேன்.
3.இதை நீங்கள் எடுத்து வளர்ந்தால் தான் நாட்டுக்கும் நல்லது… நம் அனைவருக்கும் நல்லது.

ஏனென்றால் நாளை வரும் எதிர்காலம் மிகவும் விஷத்தன்மையாக மாறும் பொழுது அதைக் கழித்து வடித்து… நாம் இந்த உடலில் வளர்ச்சியான நிலைகள் கொண்டு… எந்த நிமிடம் அது நடந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் சென்று விடலாம்.

இல்லையென்றால் இந்தப் பூமியில் மாற்றங்கள் துரித நிலைகள் ஆகிப் பூமி கொஞ்சம் நகர்ந்தால் ஐஸ் பாறையாக மாறிவிடும். அந்த ஐஸ் பாறையாக மாறியபின் விஞ்ஞான அறிவில் உள்ளவர்களும் சிலர் தப்பலாம்.

ஆனாலும் இங்கே அசுத்தமான நிலைகள் பனிப்பாறைகள் மூடி உள்ளுக்குள் சென்று விட்டால் யார் காப்பாற்றுவது…? அந்த நிலைகள் சீக்கிரம் வரத்தான் செய்யும்.

அதற்குள் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.பூமியை விட்டுத் தப்பிச் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.நாமும் உடலை விட்டுச் செல்லும் பொழுது (துருவ நட்சத்திரம் சென்று பழகும் தன்மை வர வேண்டும்.

இன்றைய உலக சூழ்நிலையில் எந்த நிலையானாலு சரி இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றும் தன்மை பெற வேண்டும்,

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

நான் சொத்தைச் சம்பாரிக்க வேண்டும்… இதைச் செய்தேன் என் பிள்ளை இப்படி இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தால் அந்தப் பிள்ளையின் தவறின் உணர்வை நாம் வளர்த்தால் தவறின் உணர்வுகள்தான் நமக்குள் விளைகின்றது.

அவன் செய்யும் தவறின் தன்மை வீரியத்தன்மை பெற்றது, இப்படிச் செய்கிறான் என்று, பாசத்தால் நுகரப்படும்போது இங்கே நல்ல குணங்கள் அனைத்தையும் வீழ்த்தி விடுகின்றது.

நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து “அவன் உணர்வு நம்மை இயக்கிடாது…”
1.அவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்
2.அவனுக்குள் நல்ல உணர்வுகள் வர வேண்டும்; அவன் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்று
3.அவன் உடலிலே இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அவனை மாற்றி அமைக்க வேண்டும்.

சிந்தித்துப் பாருங்கள்… பிற தீமைகளின் உணர்வுகள் நம்மை இயக்கிவிடக் கூடாது. ஏனென்றால் உங்களைப் பக்குவப்படுத்துவதற்காகத் தான் யாம் இதைச் சொல்வது.

ஆகவே
1.நமக்குள் இதைப் பேணிக்காக்கும் திறன் வர வேண்டும்.
2.அந்தப் பேணிக் காக்கும் திறன் இருக்கும் போது தான் ஞானிகள் மற்றவர்களுக்கு இதைக் கொடுப்பார்கள்.

அவ்வாறு இந்த அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் வளர்த்து… அதைப் பேணிக் காக்கும் திறன் பெற்றிட எமது அருளும் குரு அருளும் உறுதுணையாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் முறை

துருவ நட்சத்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் முறை

 

வேதனைப்படுபவரை நாம் சந்தித்தால்… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுவாக்கி அந்த வேதனைப்படும் உணர்வைத் தள்ளிவிட்டு
1.அந்த வேதனைப்படுபவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்ற உணர்வைக் கலந்து எடுத்துச் சொன்னால் இந்த உணர்வு வீரியமடைந்து
2.அவருடைய செவிகளில் பட்டு காது வழி உணர்ச்சிகளைத் தூண்டி மூக்கு வழி நுகர்ந்து
3.இந்த உணர்வு உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி அவருடைய நோயைக் குறைக்க உதவும்.

இதை அவர்கள் பின்பற்றினால் வளர முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் யாம் உங்களை ஆசிர்வதிக்கும் பொழுது உடனடியாக நோய் இறங்குகின்றது. அந்த அருள் சக்திகளை நீங்கள் கவர்ந்து உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டால் தீமை வராது தடுத்துக் கொள்ள முடியும். நமக்கு அந்தச் சக்தி உண்டு.

1.ஆகவே வேதனப்படுவோரிடம் துருவ நட்சத்திரத்தினைப் பற்றிச் சொல்லி…
2.அந்தச் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்சப்படும் போது அதைப் பெற்றுத் தீமைகளை அவரும் போக்க முடியும்.

அதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம்.

ஒருவருக்கு மன நோயோ அல்லது கடுமையான உடல் நோயோ இருந்தால் கூட்டுத் தியானங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் ரத்த நாளங்களில் கலந்து… உடல் முழுவதும் பரவி… உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற
1.இந்த உணர்வின் ஒலியை எழுப்பி செவி வழி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்யும் போது
2.அதைப் பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டால் அதை நுகர்ந்து உயிரிலே பட்டு
3.உணர்வுகள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து நல்ல அமிலங்களாக மாற்றப்பட்டு
4.அவர் உடலில் இருக்கக்கூடிய நோயை நீக்க இது உதவும்.

அவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்…! நாம் வெறுமனே சொன்னால் பொருள் இல்லை.

யாம் மற்றவருக்கு ஆசீர்வாதம் கொடுக்கும் போது பாருங்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் வேறு எண்ணத்தில் இருப்பார்கள்.
1.இப்போது உடலில் மின்சாரம் பாய்வது போல் இருக்கின்றதா…? என்று கேட்டால்
2.இல்லை…! என்று சொல்லிவிடுவார்… ஒன்றுமே தெரியவில்லை தெரியவில்லை என்று சொல்வார்கள்.

காரணம்… ஆசையின் நோக்கம் வேறு…! அதைக் கேட்கும் நிலை வேறு…!

ஆகவே இது போன்ற நிலைகளை விடுத்து விட்டு… சொல்லும் போது (காதிலே கேட்கும் போது) அந்த அருள் சக்திகளை எடுக்கப் பழகும் “ஒரு பயிற்சிக்கு வர வேண்டும்….”

1.நோயால் வேதனைப்பட்டு அவர் சொல்லும் போது நாம் அதைக் கேட்டால்
2.அவருடைய வேதனை நம் உடலுக்குள் வருகின்றது… அதனின் வலிமை நமக்குள் செயல்படுகிறது,

இதைப் போன்று தான் வேதனைகளை நீக்கிய ஞானிகள் உணர்வை நாம் பெற்று… அதைச் சொல்லாக சொல்லி அவரைக் கேட்க வைத்தால் அந்த நோயை நம்மால் போக்க முடியும்.

தியானத்தைக் கடைபிடிப்போர்கள் இதைச் சீராகக் கடைப்பிடித்துச் செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.

விஞ்ஞான உலகிலிருந்து தப்புவதற்காகவாவது இந்தச் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்

விஞ்ஞான உலகிலிருந்து தப்புவதற்காகவாவது இந்தச் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்

 

விஞ்ஞான உலகில்… அவர்கள் கண்டுணர்ந்த விஷக் கதிரியக்கங்கள் வான்வீதியில் பரவி சூரியனின் ஈர்ப்புக்குள்ளும் சென்று விட்டது.

அதனால்… ஒரு நொடிக்குள் நிலநடுக்கம் வருவது போல விஷத்தின் தன்மை கொண்டு இரு மடங்கு மின் உற்பத்தி அதிகமானால்… நம் உயிரின் துடிப்பின் நிலைகள் கூடி காந்த உற்பத்தி இரு மடங்காகிவிடும். நம் எண்ணங்கள் அனைத்தும் செயலிழந்து விடும்.

1.இத்தகைய தீமைகளிலிருந்து தப்புவதற்காகவாவது அதிகாலையில் எழுந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.என் கணவருக்குக் கிடைக்க வேண்டும்… மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
3.என் தாய் தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும்
4.அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும்… எல்லோரும் அந்த அருள் வழி வாழ வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்கு அது சீரான வழியைக் காட்டும். தீமைகள் புகாது தடுத்துக் காட்டும். சாந்த உணர்வைக் கொடுக்கும். வாழ்க்கையைச் சீராக வாழவும் வழிகாட்டும். மகிழ்ந்த நிலைகள் வரும். வாழ்க்கையில் நிறைவு கிடைக்கும். போதும் என்ற மனம் வரும்.

1.போதும் என்ற நிலை வரும் போது அருள் வழியில் வந்து கொண்டே இருக்கும்.
2.வேண்டாம் என்று சொன்னாலும் அந்த அருள் செல்வங்கள் வந்து கொண்டேயிருக்கும்.

உதாரணமாக ஒரு இடத்திலே பிரசாதம் கொடுக்கிறார்கள் என்றால் “இன்னும் கொஞ்சம் வேண்டும்…” என்று கேட்டால் “இல்லை போ” என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் கேட்காமல் இருப்பவருக்கு அதிகமாகக் கொடுக்கும் நிலை வரும்.

இதைப் போன்றுதான் உணர்வின் இயக்கங்கள் செயல்படும் தன்மைகள்.

ஆகவே நாம் எப்படி வாழ வேண்டும்…? என்பதை குரு வழியில் உணர்ந்து கொள்ளுங்கள். காரணம் இதை எல்லாம் நான் படிக்காதவன் தான் உபதேசிக்கின்றேன். நீங்கள் அனைவரும் படித்தவர்கள்.

வான்மீகி படிக்காதவன்… அண்டத்தில் உள்ளதை அறிந்தான். வியாசகரும் படிக்காதவர் தான் அவரும் அண்டத்தை அறிகின்றார். அகஸ்தியன் ஒன்றும் அறியாதவன். தாய் கருவிலே அவன் பெற்ற நஞ்சை வென்றிடும் உணர்வுகள் தான் அவனை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றது. திருமூலரும் அதைப் போன்று பெற்றவர் தான்.

1.ஞானிகள் பெரும்பகுதி ஆனவர்கள் எல்லோருமே இப்படிச் சக்தி பெற்றவர்கள் தான்.
2.ஆகவே அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வை உங்களுக்கு உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. எந்த குணத்தின் தன்மையை நமக்குள் அதிகரிக்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் தான் நம்முடைய வாழ்க்கை… அடுத்த சரீரம்…!
1.அதை உருவாக்குவது உயிர்
2.உணர்வுக்கொப்ப உடலை அமைப்பதும் உணர்வுக்கொப்ப வாழ்க்கை அமைப்பதும் அனைத்துமே உயிர் தான்.
3.ஈசனாக இருந்து அவனே இயக்குகின்றான்.
4.உயிரை ஈசனாக மதிக்க வேண்டும்.
5.அவனால் மனிதனாக உருவாக்கியதைப் பாதுகாக்க வேண்டும்
6.அவனை நேசிக்க வேண்டும்… அருள் உணர்வுகளை அவனுக்கு அபிஷேக்க வேண்டும் ஆராதனை செய்ய வேண்டும்.
7.உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல்ல அமுதைக் கொடுக்க வேண்டும்.

உயிரான ஈசனுக்கு மகரிஷிகளின் உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது மகிழ்ச்சியைக் கூட்டுகின்றது. அந்த உணர்வை இயக்கப்படும் பொழுது அரும்பெரும் சக்தியாக… தெய்வமாக நம்மை இயக்குகின்றது.

இதுதான் நமது காவியங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் அதைப் பெறுவோம் அருள் ஞானம் பெறுவோம். விஞ்ஞான உலகில் வாழும் அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபடுவோம். மெய்ஞான வாழ்க்கை வாழ்வோம் பிறவியில்லா நிலை அடைவோம்.

அதுவே நமது எல்லை என்று சப்தரிஷி மண்டலத்தை அடைவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்

 

பூமிக்குள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது… கொதிக்கும் தருணத்தில் இருப்பதால் கடல்கள் பெருகுகின்றது. நிலங்கள் குறையப் போகின்றது.

மனிதனுடைய உணர்வுகள் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக… நஞ்சு கொண்ட பிராணிகள் மற்றொன்றைக் கொன்று புசிப்பது போன்று
1.இரக்கமற்ற உணர்வுகள் நஞ்சின் தன்மையாக மனித உணர்வுக்குள் கலந்து
2.மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய நஞ்சினை நாம் பிளக்க வேண்டும்.

ஞானிகள் உணர்வை நுகர்ந்து விண் செல்லும் மார்க்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அழியாச் சக்தியான அந்த ஞானிகள் உணர்வைச் சேர்த்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளை இந்த வாழ்க்கையிலே பெற வேண்டும்… பெற முடியும்.

அகஸ்தியன் எல்லாவற்றையும் தெரிந்து சக்தி பெறவில்லை வியாசகன் அறிந்து பெறவில்லை. எல்லாமே சந்தர்ப்பம் தான்…!
1.இதைப்போன்று தான் சந்தர்ப்பத்தால் நீங்கள் இந்த உபதேசத்தைக் கேட்டறிகின்றீர்கள்.
2.உங்களுக்குள் பதிவாந பின் அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.அந்த ஞானிகள் உணர்வை நிச்சயம் பெற முடியும்.

உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்.

ஏனென்றால் எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றான்… உணர்வினை ஜீவனாக்குகின்றான்… அணுவாக மாற்றுகின்றான்… அணுவின் மலமாக உடல் ஆக்குகின்றான்.

அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெறும் பொழுது அதையே அணுவாக மாற்றுகின்றான். அணுவின் தன்மை ஒளியாக உருப்பெறுகின்றது. ஆகவே நாம் ஒளியாக வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்து நாம் இணைத்துக் கொண்டே வந்தால் தீமைகளை அகற்றும் உணர்வாக விஞ்ஞானத்தினால் வரக்கூடிய எத்தகைய நஞ்சுகளை மாற்ற முடியும்.

சூரியன் தான் சுழலும் பொழுது தன் மீது மோதும் நஞ்சினைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிச் சுடராக ஆக்குவது போன்று உலகையே காத்து இரட்சிப்பது போன்று… இனி வரக்கூடிய எத்தகைய நஞ்சினைப் பிளந்திடல் வேண்டும்.

ஞானிகள் உணர்வை உள் புகுத்தி அதைப் பிளக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
1.ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று
3.திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது உடலுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகள் சென்று
4.கேட்டறிந்த பார்த்துணர்ந்த காற்றுக்குள் மறைந்து வரும் தீய உணர்வுகளை “நம்முடன் இரண்டறக் கலக்காது…” அதைப் பிரித்து விடுகின்றது.

அது ஓங்கி வளரும் பொழுது பிறிதொரு உணர்வு ஆன்மாவாக இருப்பதைப் பிளந்து விடுகின்றது. இதைத்தான் மடி மீது வைத்து நாராயணன் வாசல்படி மீது அமர்ந்து இரண்யனைப் பிளந்தான் என்று நரசிம்ம அவதாரமாகக் காட்டியுள்ளார்கள்.

அத்தகைய நரசிம்ம அவதாரமாக ஒவ்வொருவரும் மாறினால் தான் இனி வரும் இருளான நிலைகளிலிருந்து நம்மை மீட்க முடியும்… மற்றவர்களையும் மீட்கும் சக்தியாக நாம் வளர முடியும்.

ஆகவே
1.உயிருடன் ஒன்றி ஒளியாக என்றுமே நிலைத்திருப்போம்
2.அந்த ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம்… அனைவரும் செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றேன்.

துருவ நட்சத்திரமாக… அந்த ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்

துருவ நட்சத்திரமாக… அந்த ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்

 

எல்லாவற்றையும் உருவாக்கிய.. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளினால் தான் இயற்கையின் உண்மைகளை எல்லாம் நான் அறிந்து கொண்டேன்.

ஆகவே…
1.நாம் எல்லோரும் துருவ நட்சத்திரமாக மாற வேண்டும்… அந்த ஒளியின் உணர்வாக மாற வேண்டும்.
2.இந்தச் சொல் பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும். அந்த அருள் உணர்வுகளை நாம் பெறுவோம்.
3.குருதேவரை நினைத்து துருவ நட்சத்திரத்தை நினைத்து நாம் இந்த வாழ்க்கையைக் கொண்டு சென்றோம் என்றால்
4.என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்கிறோம்… இருளை அகற்றும் சக்தி பெறுகின்றோம்.
5.நாம் இருக்கும் இடங்களில் நல்ல மழையைப் பெய்யச் செய்யலாம்.
6.கொடிய நோய்களையும் நாம் வாழும் இடங்களில் வராது தடுக்க முடியும்.
7.எத்தனையோ வகையான மற்ற தீமைகளை அகற்றும் சக்தி நாம் பெறுகின்றோம்.

பகைமை வந்தால் அதை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும். ஊரில் இருப்பவர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். பகைமையற்ற நிலைகள் வரவேண்டும்.

1.எல்லா உயிரும் கடவுள்
2.எல்லா உடலும் கோவில்
3.எல்லா உடலும் சிவம்
4.எல்லோருடைய கண்களும் கண்ணன்
5.எண்ணும் எண்ணம் இராமன்.
6.அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் நமக்குள் தோன்ற வேண்டும்.

எண்ணங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் உணர்வாக வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம் வளர்வோம். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைவோம் என்ற “இந்த உறுதியை எடுத்துக் கொள்வோம்…”

அந்த அருள் பெற வேண்டும் என்று வாழ்வோம். அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம் குரு வழி வாழ்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பெறுவோம்.

அதன் வழி எல்லாம் ஒளி என்ற உணர்வுடன் ஒன்றுவோம். துருவ நட்சத்திரமாக ஆவோம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலங்களாக வளர்வோம். ஒன்றுடன் ஒன்று… ஒன்று துணையாகித்தான் ஒன்றின் நிலை வளர்கின்றது.

விஜயதசமி…! விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்த உயிர் பத்தாம் நிலை அடையக்கூடிய ஒளியின் சரீரமாகும். ஆகவே அருள் ஒளியைப் பெற்று என்றுமே நாம் பிறவில்லா நிலை அடைய பிரார்த்திப்போம். பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளியை நாம் அடைவோம்

1.உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்திற்கே இப்பொழுது அழைத்துச் சென்றது.
2.இந்த உணர்வை நீங்கள் அனைவரும் பெருக்கிக் கொள்ளுங்கள்.