பிறர் செய்யும் தீமைகள் நமக்குள் அதிகமாகிவிட்டால் நல்லதை எண்ணாதபடி அதை இறுகப் பிடித்துக் கொள்கின்றோம் – அத்தகைய “பிடிவாதமான தீமைகளை” நாம் அகற்றிப் பழக வேண்டும்

Image

narada sage

பிறர் செய்யும் தீமைகள் நமக்குள் அதிகமாகிவிட்டால் நல்லதை எண்ணாதபடி அதை இறுகப் பிடித்துக் கொள்கின்றோம் – அத்தகைய “பிடிவாதமான தீமைகளை” நாம் அகற்றிப் பழக வேண்டும்

 

இந்த வாழ்க்கையில் யாருக்கு வேண்டுமென்றாலும் உதவி செய்யலாம். எந்த வகையிலும் நுகர்ந்தறியலாம்.

 

1.கஷ்டப்படுகின்றார்கள் வேதனைப்படுகின்றார்கள் தவறுகள் செய்கின்றார்கள் என்று

2.புறநிலைகளில் நாம் அறிந்து கொண்டாலும் அறிந்த பின்

3.மீண்டும் அது நமக்குள் அணுத் தன்மையாக கருவாகாதபடி

4.நாம் கேட்டறிந்த அந்தத் தீமைகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்தல் வேண்டும்.

 

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் பிறருடைய தீமைகளையும் அவர்கள் கஷ்டப்படுவதையும் பார்த்து கேட்டு நுகர்ந்து நமக்குள் வளர்த்து அதையெல்லாம் நாம் “பிடிவாதமாகப் பிடித்துக் கொள்கின்றோம்”.

 

அதைத் தடுக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

 

சூரியன் உலகுக்கே ஒளியாக வழி காட்டுகின்றது.

 

அதைப் போல அகஸ்தியர் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ரிஷி என்ற நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிருஷ்டித்துக் கொண்ட நிலைகளில் இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

அவர்கள் கணவன் உயர வேண்டும் என்று மனைவியும் மனைவி உயர வேண்டும் என்ற உணர்வை ஒன்றாகச் சேர்த்து இணைத்து அந்த ஒளியின் சரீரமாக ஆனவர்கள்.

 

இருவருமே அந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்து தனக்குள் எந்தத் தீமையும் புகாதபடி தீமைகளை அழித்தனர்.

 

அதனின் உணர்வு கொண்டு எந்தத் துருவத்தைக் கூர்மையாக எண்ணினார்களோ கூர்மை அவதாரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

 

பூமிக்குள் வருவதனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

 

அதைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்,

 

நவராத்திரி கொலு முடிந்தபின் பத்தாவது நிலையாக விஜய தசமி என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

 

தசமி – நாம் எப்படிப் பத்தாவது நிலை அடைவது?

 

விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்யும் உயிர் பல கோடிச் சரீரங்களில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றி விண் செல்லும் நிலையைத்தான் விஜய தசமி என்று காட்டினார்கள். அதை அறிவிக்கும் நாள் தான் விஜய தசமி.

 

அப்படி ஆனது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆனது. ஆக கல்கி என்று ஒளியின் நிலையாக அவர்கள் எப்படிப் பெற்றார்களோ அதன் வழி கொணடு நாமும் பெறவேண்டும்.

 

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து காலை 4 மணிக்கெல்லாம் அலைகள் வெளி வருகின்றது. சூரியனின் காந்தசக்தி கவர்ந்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தோம் என்றால் நம் சிந்தனையைக் குறைக்கும் நஞ்சான உணர்வுகளை வெல்லும் ஆற்றல் பெறுகின்றோம்.

 

அதனின் வலிமை கொண்டு நமக்குள் பிடிவாதமாக இயக்கும் அத்தனை உணர்வுகளையும் அடக்க முடியும்.

 

1.இப்படிச் செய்தானே

2.அப்படிச் செய்கின்றானே

3.இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வது…! என்ற நிலையில்

4.”பிடிவாதம் பிடிக்காதபடி” நமக்குள் அந்த உணர்வின் உண்மையை உணர்த்தும்.

 

இதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது.

 

அங்கே எடுத்தவுடன் எங்கே செல்கின்றான் நாரதன்…?

 

உயிரான விஷ்ணுவிடம் தான் செல்கின்றான். விஷ்ணுவிடம் சென்றபின் கண்ணாக கண்ணனிடம் செல்கின்றான் நாரதன். “கண்ணா.., எல்லா உபாயமும் உனக்குத் தெரியும்”

 

1.கண்களின் செயலாக்கமும்

2.எண்ணிய உணர்வுகள் நமக்குள் எப்படி உருவாகின்றது என்ற நிலையையும்

3.அதிலிருந்து மீட்டிடும் உபாயங்களையும்

4.ஒரு காவியத் தொகுப்பாக கீதாச்சாரம் என்று எழுதி அமைத்துள்ளார் வியாசகர்.

 

ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்துதல் வேண்டும்.

 

இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இருளிலிருந்து தான் வெளிச்சம் வருகிறது என்றால் அது எப்படி…?

Divine light Bliss

இருளிலிருந்து தான் வெளிச்சம் வருகிறது என்றால் அது எப்படி…?

இன்று நாம் பல வகையான உணர்வுகளையும் இந்த மனித உடலுக்குள் நின்றே அறிய முடிகின்றது. இது தான் மகா சிவன் இராத்திரி

நம் உடலுக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை நம் உயிருடன் நினைவு கொண்டு வரப்படும் பொழுது அந்த நினைவின் ஆற்றலாக நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் துணையாக நம்மை அறியச் செய்கின்றது. தெளியச் செய்கின்றது.

ஆனாலும் நம் உடலுக்குள்… “இருளாக” இருக்கின்றது.

ஒரு விளக்கில் எண்ணையை ஊற்றும் பொழுது
1.எண்ணெய் இருண்ட நிலையாகத்தான் இருக்கின்றது.
2.அந்த எண்ணெயில் நாம் நெருப்பை வைத்து எரிக்கும்போது
3.அது ஒளியாக மாறுகின்றது.

இதைப் போலத் தான் நம் உடலுக்குள் எத்தனையோ வகையான குணங்கள் பதிவாகியிருக்கின்றது.

அந்த நினைவுகளை எண்ணும் பொழுது
1.அந்த மணம் (உணர்வுகள்) உயிருடன் ஒன்றி
2.உயிரிலே உராய்வாகும் பொழுது
3.அதனின் அறிவாக நம்மை இயக்கி அது அறியச் செய்கின்றது.

இது இயற்கையின் சில நியதிகள்.

இதைப் போன்ற இயற்கையின் தன்மைகளைத்தான் வேதங்கள் கூறுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் இணை சேர்க்கும் உணர்வுகளில் மாறுபடும் நிலையை “உபநிஷத்து” என்று உட்பிரிவுகளை உணர்த்திக் காட்டினர்கள் ஞானிகள்.

பல கோடிச் சரீரங்களில் நாம் கடந்து இந்த மனித உடல் பெற்ற பின் இந்த இருளுக்குள் மறைந்து
1.மறைத்து வைத்திருக்கக்கூடிய நிலைகளில் நாம் எதை நினைவு கொள்கின்றோமோ
2.அதனின் நினைவின் ஆற்றலாக நமக்குள் தெரியப்படுத்துகின்றது. அதை அறிகின்றோம்.
3.அதன் வழிகளில் வளர்கின்றோம். அதனின் வழிகளில் நாம் இயங்குகின்றோம்.

இவ்வாறு வருவதை நமக்கு உணர்த்துவதற்குத்தான் மகா சிவன் இராத்திரி என்றும் நம்மை நாம் அறிந்திடும் நிலையாக வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“நாம் யார்…?” என்று தன்னைத் தான் யார் என்று அறிந்து கொள்ளும் நிலைக்காக அன்றைய காலங்களில் அந்த மகரிஷிகள் காட்டிய உண்மையின் உணர்வுகள் வேதங்களில் உண்டு,

இன்று யாம் உபதேசிப்பது போன்று நமது குருநாதர் இதைப் போன்ற பல பேருண்மையின் நிலைகளை எமக்கு எடுத்து ஓதினார். அந்த உணர்வினைப் பதிவு செய்து “தான் யார்” என்ற நிலையில் என்னைச் சிந்திக்கச் செய்தார்.

இதில் வரும் எதிர்கொள்ளும் தீமைகளிலிருந்து விடுபடும் முறைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார். அவர் காட்டிய வழியில் தான் உங்களுக்குள்ளும் சூட்சமத்தில் மறைந்த நிலைகளை அறியும் வண்ணமாக உபதேசிக்கின்றோம்.

ஆகவே, அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து இருளைப் போக்கிடும் நிலையாக “விழித்திரு” என்ற நிலையில் என்றுமே பேரொளியாக மாறுவோம்.

“இரு… நான் பார்க்கின்றேன்” என்று சொல்கிறோம்…! நல்லதா… கெட்டதா…?

Divine power, energy

“இரு… நான் பார்க்கின்றேன்” என்று சொல்கிறோம்…! நல்லதா… கெட்டதா…?

நாராயணன் பூலோகத்திற்கு வந்து சீதா ராமனாகப் பிறக்கிறான் என்று காவியங்களில் தெளிவாக எடுத்துரைத்தனர் ஞானிகள்.

இராமனோ தான் எய்த அம்பைத் திரும்ப வாங்கிக் கொள்வான். இதையெல்லாம் கதையாகப் படிக்கின்றோம் பார்கின்றோமே தவிர அதில் உள்ள மூலங்களை நாம் அறியவில்லை.

நான் ஒருவரைக் கெடுதல் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றேன், இது சீதா – சுவை. அது சொல்லாக எனக்குள் வரும் பொழுது உங்கள் மேல் பாய்ச்சுகின்றது.

1.கெடுக்க வேண்டும் என்ற அந்த உணர்வு அம்பாகப் பாய்ந்தவுடனே
2.“இரு உன்னை நான் பார்க்கிறேன்” என்று திரும்பி
3.அந்த அம்பு எனக்குள் வரும் என்று காவியங்களில் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்..

அதே சமயம் வாலி இன்று மிகவும் வலிமை பெற்றவன். ஆனால், பிறர் எவ்வளவு வலிமை கொண்டிருந்தாலும், வாலி தன் கண் கொண்டு பார்ப்பானேயானால் அவனுடைய வலுவில் சரி பகுதி வலு பெற்று விடுவான் என்பார்கள்.

ஒரு போக்கிரியை நாம் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய வலு அதிமாக இருக்கும் பொழுது,
1.நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும்
2.எத்தனை ஆயிரம் பேரை சமாளிக்கக் கூடிய திறன் இருந்தாலும்
3.அவன் மேல் பார்வை பட்டவுடனே…,
4.என்ன பலம் இருந்தாலும் அனைத்தையும் இழக்கச் செய்து நமது வலு பூராவும் அங்கே சென்றுவிடுகின்றது.

“ஒரு கராத்தே மாஸ்டர்…,” அவர் பல அடுக்கு ஓடுகளை ஒரே சமயத்தில் வெட்டிவிடுவார்.

ஆனால் அவர் வீட்டிலே வெறும் தடியைக் கொண்டு கதவை உடைத்து அவரை அடித்து எல்லாப் பொருளையும் எடுத்துக் கொண்டு போகும் நிலை உள்ளது. (பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள்)

1.ஆகவே நாம் எத்தகைய வலுகொண்டு
2.அசுர உணர்வு கொண்டு அதை வளர்த்துக் கொண்டோமோ,
3.அதற்குத் தகுந்த முரட்டுப் புத்தி வரும்.
4.எதைச் சொன்னாலும அலட்சிய புத்தி வரும்.

இதே மாதிரி எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை யாராவது எதையாவது சொன்னால்…, “இரு… உன்னைப் பார்க்கின்றேன்” என்ற இந்த உணர்வுதான் வளரும்.

இதைப் போன்று நாம் எண்ணினால் நமக்குள் வரும் அந்த நிலையையே
1.முரடனின் நிலையை
2.வாலியாகச் சித்தரித்தார்கள் ஞானிகள்.

எண்ணங்கள் பிறருடைய நிலைகளைக் கவரும் சக்தி கொண்டது.

அதனால் தான் நஞ்சு கொண்ட உணர்வு கொண்டு அவனை (வாலியை) வெல்வது முடியாது என்று இராமாயணத்தில்…, “மிகத் தெளிவாக” எடுத்துக் கூறியுள்ளார்கள்.

ஒருவர் தீமையாகப் பேசினால் நேரிடையாகப் பார்க்கும் பொழுது நம் நல்ல குணங்கள் அனைத்தும் அழிந்துவிடுகின்றது.

“நான் ஒன்றுமே செய்யவில்லை.., இப்படிப் பேசுகின்றான் பாவி”, என்று அவர்களுடைய உணர்வை எடுத்துக் கொள்வோம்.

அவன் உணர்வை எடுத்துக் கொண்டபின் நஞ்சின் தன்மை கொண்டு “பதட்டத்தில்… நான் ஒன்றுமே செய்யவில்லை பாவிப்பயல்…, இப்படிச் செய்கின்றான்” என்றவுடன்
1.அவன் அடக்கிக் கொண்டு இருப்பான்
2.இந்த வலுவின் தன்மை அங்கே சென்று
3.“இப்படிப் பேசினால், நான் சும்மா இருப்பேனா?” என்று கூறும் நிலையும் அங்கே வருகின்றது.

இவையெல்லாம் நம் வாழ்க்கையில் எவ்வாறு வருகின்றது? என்பதை இராமாயணம், கந்தபுராணம், கீதை, இவைகளில் தெளிவாகக் கூறியிருந்தாலும் நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம்…!

அவைகளைக் குப்பையில் போட்டுவிட்டு
1.நம்மை ஏமாற்றும் நிலையிலும், யாகங்கள் செய்தால் வேள்விகள் செய்தால்
2.கடவுள் நமக்கு நேரிடையாகக் கொடுப்பான் என்ற இந்தத் தன்மை கொண்டு,
3.உண்மையை நாம் அறியாது மெய் உணர்வை நாம் அழித்துக் கொள்ளும் நிலைகளில் உள்ளோம்.

விஞ்ஞான அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். விஞ்ஞான நிலைகள் நமக்குப் பயன்பட்டாலும்.., “அது உடலுக்கே”. (உடலுக்குப் பின் என்ன என்ற நிலை விஞ்ஞானத்தில் இல்லை…!)

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு என்றும் அழியாத சரீரம் பெறுவதே வேகாக்கலை என்று மெய்ஞானிகள் காட்டியது.

அதை நாம் அனைவரும் பெறுவோம்

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்கள் அனைவருக்கும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும். அருளாசிகள்.

நம் உடலில் உருவாகும் அணுக்கள் உணர்ச்சிகளைத் தூண்டி ஐம்புலன்கள் வழியாகத் தன் உணவை இந்தக் காற்றிலிருந்து எடுத்து வாழ்கின்றது – விளக்கம்

Image

Life atoms in blood

நம் உடலில் உருவாகும் அணுக்கள் உணர்ச்சிகளைத் தூண்டி… “ஐம்புலன்கள் வழியாகத் தன் உணவை இந்தக் காற்றிலிருந்து எடுத்து வாழ்கின்றது” – விளக்கம்

 

உதாரணமாக ஒரு கோழி ஒரு சேவலிடம் இணைந்திருந்தால் அடுத்த கணம் அந்தக் கோழி அந்தச் சேவலை எண்ணியே “கேரும்”.

 

அந்தக் கேருதல் ஆனால் அந்த முட்டையில்

1.அந்தச் சேவலின் நிறங்கள் எதுவோ

2.அதனுடைய குணங்கள் எதுவோ

3.அதன்வழி அந்த முட்டைக்குள் அந்த ரூபமான சேவல் உருவாகும் அல்லது கோழி உருவாகும்.

 

இப்படி இதைப்போல ஒரு வேதனையான உணர்வை நாம் நுகரப்படும்போது என்ன ஆகின்றது என்று பார்ப்போம்.

 

நம்முடைய நண்பன் வேதனைப் படுகின்றான், வேதனைப் படுகின்றான் என்ற உணர்வை நாம் திரும்பத் திரும்ப நுகர்வோம் என்றால்

1.வேதனைக்குண்டான உணர்வின் அணுவாக

2.(வேதனையைத் தோற்றுவிக்கும்) கரு முட்டையாக மாறுகின்றது.

 

நாம் எந்த வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றோமோ அந்த வேதனையான கரு முட்டை நமக்குள் உருவாகி நம் இரத்த நாளங்களில் உடல் முழுவதும் சுழன்று வரும்.

 

நம் இரத்தநாளங்கள் வழியாக உடல் முழுவதும் பரவப்படும்போது சுழன்று வரும் வேலையில்

1.எதன் அருகில் இணைந்து உறுப்புகளில் அது ஒட்டிக்கொள்கின்றதோ

2.அங்கே அந்தக் குஞ்சு பொரிக்கப்படுகின்றது.

3.அணுவாக மாறுகின்றது.

 

கோழி முட்டையிட்டு அடைகாக்கின்றது. அடைகாத்தபின் பொரிந்து குஞ்சுகள் வெளி வருகின்றது. வெளிவந்தபின் அந்தக் குஞ்சுகள் கத்தும்போது அதற்குப் பதிலாக அதுவும் எதிர் பதில் கொடுத்து மண்ணைப் பிரண்டி உணவுக்காக அழைக்கும்.

 

இதைப்போல பறவை இனங்களிலும் எடுத்துக் கொண்டால் இதைப்போல் கருவுற்றுக் குஞ்சானபின் தாயைப் பற்றி அந்தக் குஞ்சுகள் ஏங்கும்.

 

தாய் வெளியிலே சென்று உணவு எடுத்து வந்து குஞ்சுகளுக்கு வாயிலே ஊட்டும். இதைப் போன்றுதான்

1.நம் உடலில் கருக்கள் உருவாகிவிட்டால்

2.அணுவாக உருவான பின் அது அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.

3.அப்பொழுது இரத்த நாளங்களில் அதன் உணர்ச்சிகள் பரவி சிறுமூளை பாகம் வரும்.

4.சிறு மூளை பாகம் வரும்போது உடனே அந்தந்த உணர்வுகள்

5.கண் காது மூக்கு வாய் உடம்பு இந்த ஐந்து புலன்களிலும் இந்த உணர்ச்சிகளை ஊட்டு

6.அதனதன் வழி கூடிக் கவர்ந்து கொள்ளும் சக்தி பெறுகின்றது.

 

வேதனையான அந்த உணர்வு தூண்டும்போது உங்கள் உடலைப் பார்க்கலாம். சோர்ந்து போய் இருக்கும்.

 

அதே சமயத்தில் “யார் இந்தக் கஷ்டத்தைச் சொன்னாரோ… வேதனையைச் சொன்னாரோ… நஷ்டம் என்று சொன்னாரோ…”

1.அந்த உணர்வலைகளை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து

2.அலைகளாக மாற்றி வைத்திருக்கும்.

 

முதலில் சொன்ன மாதிரி… உடலில் உருவான அணுக்கள் இந்த உணர்ச்சிகளை ஊட்டியபின்

1.கண்ணின் காந்தப் புலனறிவு

2.எந்த நண்பனிடம் பேசினோமோ அந்த நண்பனின் உணர்வலைகளை ஊட்டும்.

3.அதிலிருந்து வந்த அலைகளை இழுக்கும்.

4.தனது உடலுடன் ஆன்மாவாக மாற்றும்.

5.நம் உயிரில் இயக்கும் ஈர்க்கும் காந்தம் இதை நுகர்ந்து உயிரிலே மோதச் செய்யும்.

6.இந்த உணர்வுகள் அந்த ஒலிகளை எழுப்பி உடல் முழுவதும் சுழலும்.

7.அப்பொழுது அந்த உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்தபின் அந்த அணுக்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்.

 

எப்படிக் கோழி முட்டையிட்டு குஞ்சு வந்தபின் அது கத்தும்போது தாய் கூப்பிட்டு ஆகாரம் கொடுக்கின்றதோ அதைப்போல தான் நம் உடலுக்குள்ளும் நடக்கின்றது.

 

ஆகவே அதை உருவாக்கியது யார்…? நம் உயிர் தான். அது தாயாகின்றது. தந்தையுமாகின்றது.

 

இப்படித்தான் நம் உடலிலுள்ள பல கோடி அணுக்களும் இயங்கிக் கொண்டுள்ளது. அவைகளுக்கெல்லாம் சாப்பாடு கொடுப்பது நம் உயிரின் வேலை.

 

உடலில் உருவான அணுக்கள் தன் பசிக்கு உணர்ச்சிகளை ஊட்டி கிளர்ந்தெழச் செய்து புலனறிவுகளை இயக்கிக் காற்றிலிருந்து அதனதன் உணர்வலைகளை எடுத்து சுவாசிக்கச் செய்கின்றது.

1.இந்தச் சுவாச நிலையை மாற்றாதபடி

2.நாம் நம் உடலுக்குள் எத்தகைய மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

 

அதை மாற்றுவதற்காக வேண்டித்தான் உங்களுக்குள் அருள் ஞானிகளின் சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

 

பதிவாக்கியதை மீண்டும் நினைவுபடுத்தினால் அது தன் உணவுக்கு அருள் ஞானிகளின் உணர்வலைகளை ஆகாரமாக எடுக்கும். அருள் ஞானிகளின் அருள் சக்திகள் நம் சுவாசத்திற்குள் வரும்.

 

இது நமக்குள் வளர்ந்தால் நம் உடலிலுள்ள எத்தகையை தீமைகளையும் மாற்றியமைக்கும். இனி வரும் தீமைகளிலிருந்தும் விடுபடும் ஆற்றலும் நமக்குக் கிடைக்கும்.

நம் உடலுக்குள் வேதனைப்பட்ட ஆன்மா இருந்தால் தியானம் செய்யவிடாது – அதை மாற்றும் வழி

Concentration - Meditate

நம் உடலுக்குள் வேதனைப்பட்ட ஆன்மா இருந்தால் தியானம் செய்யவிடாது – அதை மாற்றி “தியானத்தின் மூலம் ஆற்றலைக் கூட்டும் வழி”

 

நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவு கொண்டுதான் நாம் வாழுகின்றோம். அதே சமயத்தில் சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும்போது அவர்களை நாம் பண்புடன் அணுகி அதைக் கேட்டறிகின்றோம்.

 

அப்பொழுது அந்த உணர்வுகள் நாம் நுகர்ந்தறிந்தாலும் அது நம் உடலுக்குள் அணுக்கருக்களாக மாறிவிடுகின்றது.

 

அவர்கள் உடலில் வேதனையால் நோயானபின் தன் குடும்பத்திற்காகச் செல்வமோ சொத்தோ இதைச் சேர்த்து வைத்து இந்த உடலைவிட்டு பிரியப் போகின்றோமே என்ற ஏக்கத்துடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று மரணமடைகின்றார்.

 

1.அப்பொழுது அவரைப்பற்றி நாம் கேட்டறிந்த உணர்வுகள்

2.நமக்குள் அந்த அணுவின் தன்மை அதிகமாக வளர்ந்திருந்தால்

3.அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.

 

அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி நமக்குள் மன வேதனை கொடுக்கும் நிலையாக முதலில் மாறும்.

 

அதே சமயத்தில் அந்த வேதனையுடன் வெளிப்பட்ட அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்தால்

1.அது இந்த வேதனை உணர்வை உணவாக எடுத்து

2.அதனுடைய இனங்களை நம் உடலுக்குள் பெருக்கிவிடும்.

 

அப்படி இருந்தால் இப்பொழுது யாம் சொல்லும் இந்த உபதேசத்தின் உணர்வுகளை நுகரவிடாது தடுக்கும்.

 

இதைத் தடைப்படுத்தும் நிலைகள் வரப்படும்போது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.

 

1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்ற நிலையில்

2.இப்பொழுது தியானத்தில் உட்கார்ந்திருந்தாலும்

3.எழுந்து ஓட வைக்கும்.

4.ஏனென்றால் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதனால் அதன் வழி அதை வழிப்படுத்தும்.

 

ஆகவே, இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் அதை அடக்கப் பழகிக் கொள்வதற்கே இதைச் சொல்கின்றோம்.

 

ஆனால் பழகவில்லை என்றால் உடலுக்குள் இருக்கும் ஆன்மா அதன் வழியில் நம்மை அழைத்து சென்றுவிடும். மீண்டும் உடல் பெறும் உணர்வைத் தான் நாம் பெற முடியும்.

 

உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் இந்த மன வேதனை வரப்படும் பொழுது மன நோயாக வருகின்றது. உடல் நோயாக மாறி பின் இந்த உடலையே மாற்றியமைக்கும் சக்தியாக மனிதனல்லாத உருவாக மாற்றிவிடுகின்றது.

 

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

 

எத்தகைய நிலையாக இருந்தாலும் சரி தியானத்தில் உட்கார முடியவில்லை.., எண்ணங்கள் எங்கெங்கோ ஓடுகின்றது.., ஒரு நிலைப்படுத்த முடியவில்லை.., இப்படியெல்லாம் சொல்லி “உங்களை எண்ணவிடவில்லை” என்றால்

1.உடனே கண்களைத் திறங்கள்.

2..உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.

3.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும். எனக்குள் இருக்கும் இருள் மறைய வேண்டும்.

4.மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும்

5.என் உடலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று

6.இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

7.என் உடலிலுள்ள ஆன்மா அந்த மெய்ஞானிகளைப் போன்ற உயர்ந்த நிலை

8.என்னுள் இருந்தே பெற வேண்டும் என்று ஏங்கினால் அது நமக்குள் அடங்கும்.

 

ஆக இவ்வாறு எண்ணும்போது அந்த ஆன்மாக்களுக்கும் நற்பயன் கிடைக்கும். அதே சமயத்தில் நம் உடலில் உள்ள அணுக்கள் அந்த ஒளியின் அணுவாக மாற்றிவிடலாம்.

 

இதை மறவாது செய்து பழகுங்கள்.

 

நிறையப் பேருக்கு இன்னும் நான் தியானத்தில் உட்கார்ந்தால் எனக்கு மனம் ஒரு நிலைப்படவில்லை என்றும் எனக்கு வெறுப்பு வருகின்றது… என் நினைவுகள் எங்கெங்கோ போகிறது என்ற நிலைகளில் சொல்வார்கள்.

 

கண்ணை மூடித் தியானிக்கும் பொழுது இவ்வாறு பல நிலைகள் வந்தால் கண்ணைத் திறந்து நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தி ஏங்குங்கள்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டுமென்று ஏங்கும்போது

1.மறுபடியும் கண்ணை அது தன்னிச்சையாக மூட வைக்கும்.

2.நினைவினை துருவ நட்சத்திரத்திடம் அழைத்துச் செல்லும்.

 

அப்பொழுது அந்தத் துருவ துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் துருவப் பகுதியின் வழியாக பூமிக்குள் வருவதை அங்கிருந்து நமக்குள் நுகரும் பருவத்தைப் பெறுகின்றோம்.

 

இதைத் தொடர்ந்து வழிப்படுத்தி வாருங்கள். இது நல்லதாக அமையும். “தியானத்தின் மூலம் உங்கள் சக்தியைக் கூட்டிக் கொள்ள முடியும்”.

 

நமக்குள் மகரிஷிகளின் அருள் சக்தியை வலுவாக்கி “நம் எண்ணப் பார்வையில்” பிறருடைய தீமைகளைப் பிளந்திட வேண்டும்

Image

Divine spiritual light

நமக்குள் மகரிஷிகளின் அருள் சக்தியை வலுவாக்கி “நம் எண்ணப் பார்வையில்” பிறருடைய தீமைகளைப் பிளந்திட வேண்டும்

 

நீங்கள் அனைவரும் அந்த மெய் ஒளியைப் பெற வேண்டுமே தவிர உடலில் விளைந்த உணர்வுகளைத் தேடாதீர்கள். அதை நாடாதீர்கள்.

 

நம் குரு காட்டிய நிலைகள் கொண்டு மெய் ஒளியை எடுத்து வளர வேண்டுமேயொழிய இந்த உடலில் பெற்ற உணர்வுகளை நாடக் கூடாது.

 

இந்த உடல் மடிவது. மெய் ஞானிகள் பெற்ற உணர்வை  வலுக் கொண்டு எடுக்க வேண்டும்.

 

இந்த உடலை எண்ணினால் அதில் என்னென்ன உணர்வு விளைந்ததோ அதுதான் வரும்.

 

தியானிக்கும்போது காட்சிகள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்  என்று மெய் ஒளியுடன் இணைத்து வலுப் பெறவேண்டும்.

 

குருநாதர் வந்தார். காட்சி கொடுத்தார். எனக்கு நல்லதாகிவிட்டது என்பதெல்லாம் உடல் இச்சைக்குத்தான் மாறும். இந்த நிலையில் இருந்து மாறுபட வேண்டும்.

 

1.நாம் அந்த மெய் ஒளியைப் பெற வேண்டும்.

2.நம் பார்வையால் பிறருடைய தீமைகள் நீங்க வேண்டும்.

3.சாமி (ஞானகுரு) செய்கின்றார் என்பதற்கு பதில்

4.சாமி பார்வை எப்படிப் பிறரின் தீமையைப் போக்குகின்றதோ அதே உணர்வை

5.பிறரின் தீமையை நீக்கும் சக்தியாக நீங்கள் பெற வேண்டும்.

6.அதை நீங்கள் பெற்றால் தான் “குருநாதர் பெற்ற சக்தியை”,  நீங்கள் பெற்றதாக அர்த்தம்.

7.இல்லாவிடில் அதில் அர்த்தம் இல்லை.

8.அத்தகைய வளர்ச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

 

அந்த மெய் ஒளியை நீங்கள் பெறும் பொழுது தீமையை இது அகற்றுகின்றது. உங்கள் பார்வையும் சொல்லும் பிறருக்குள் நுழையும் பொழுது பிறருக்குள் இருக்கும் தீமைகள் அகற்றப்படுகின்றது.

 

நமது வாழ்க்கையில் பிறருடைய துயரத்தைக் கேட்கும் பொழுது நம்முள் நின்று துயரத்தை உருவாக்குகின்றது. சாதாரண வாழ்க்கையில் இதுதான் உருவாகின்றது.

 

நாம் எதை நமக்குள் உருவாக்க வேண்டுமென்றால்…,

1.பிறருடைய தீமைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டும்.

2.வளர்த்துக் கொண்ட உணர்வுகள் வித்தாக அவர்களுக்குள் பதிய வேண்டும்.

 

யாராவது தீமையின் நிலைகளைச் செய்தார்களென்றால் அந்த உணர்வை நாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம்.

 

உடனே, “ஈஸ்வரா”  என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று அதனுடன் இணைத்துவிட வேண்டும்.

 

என் பார்வை அவர்களைத் தீமைகளில் இருந்து மீட்டவேண்டும். அவர்களும் மெய்ப்பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

 

இந்த உணர்வை நமக்குள் படைத்து அனுப்பிவிட வேண்டும். மெய் ஒளி கொண்டு இதை எண்ணிவிட வேண்டும்.

 

அவ்வாறு எண்ணிவிட்டால் எத்தீமையாக இருந்தாலும் நமக்குள் வேலை செய்யாது.

 

1.அருள் உணர்வை நம் பார்வையால் செலுத்தும் பொழுது நம்மால் அவர்கள் பயனடைகின்றார்கள்.

2.அவர்களுடைய உணர்வுகள் நமக்குள் வராது நாம் பாதுகாத்துக் கொள்கின்றோம்.

3.இந்த இரண்டு நிலையும் வேண்டும்.

 

நாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வலுப் பெறச் செய்து “நம் எண்ணப் பார்வையில்” அவர்களுடைய தீமைகளைப் பிளந்திடல் வேண்டும்.

 

அவர்களைக் காக்கும் உணர்வுகள்தான் நமக்குள் விளைய வேண்டும்.  மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது. நம்மைக் காக்கும் உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

 

இதை ஒவ்வொரு நொடியிலும் நாம் செய்தாக வேண்டும்.

 

கடலில் பயணம் செய்யும்பொழுது அலைகள் வந்து கொண்டே இருக்கின்றது. நாம் எந்தத் தீவிற்கு போகவேண்டும் என்று அதை எல்லையாக வைக்கின்றோமோ வரும் அலைகளைப் பிளந்து அங்கே சென்றடைகின்றோம். அதைப் போன்றுதான்,

1.நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான நிலைகள்

2.அது பேரானந்தப் பெரு நிலையான எல்லை

 

அந்த எல்லையை நாம் அனைவரும் அடைவோம்.

நமக்குத் தீங்கு செய்பவர்களை நாம் எப்படி எண்ணுகின்றோம்? எப்படி எண்ண வேண்டும்?

Image

Good and bad - courage to do good

நமக்குத் தீங்கு செய்பவர்களை நாம் எப்படி எண்ணுகின்றோம்? எப்படி எண்ண வேண்டும்?

 

அன்றாட வாழ்க்கையில் மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாம் பார்க்கின்றோம். அறிந்து கொள்கின்றோம்.

 

அதே சமயத்தில் அவர் “தீங்கு செய்கிறார்… தீங்கு செய்கின்றார்…” என்று எண்ணி அவர் தவறு செய்யும் உணர்வினை நுகர்ந்தால் என்ன ஆகும்?

 

1.நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் தான் வரும்

2.அடுத்து நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர

3.நன்மை செய்ய முடியுமா? என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

 

ஒருவர் “வேதனைப்படுகின்றார்…” என்று நுகரும் பொழுது அந்த வேதனை நமக்குள் வந்து நாமும் வேதனையைத்தான் படுகின்றோம்.

 

இதைப் போன்று தான் ஒருவர் தீங்கு செய்கின்றார் என்றால் அந்தத் தீங்கின் நிலையே நமக்குள் விளைகின்றது.

 

நமக்குத் தீங்கு செய்கின்றவர்களை நாம் எப்படி எண்ண வேண்டும்? அவர்கள் தீமைகள் நமக்குள் வராமல் எப்படித் தடுக்க வேண்டும்? நன்மைகள் எப்படிச் செய்ய வேண்டும் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் வினா எழுப்பினார்.

 

தீங்கு செய்கின்றவர்களை எண்ணும் பொழுது

1.அவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்று

2.நான் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு அவரைத் தீமையிலிருந்து மீட்ட வேண்டும் என்று

3.ஒவ்வொரு நொடியிலும் அனுபவ ஞானத்தை ஊட்டினார் குருநாதர்.

 

தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் யாம் குருநாதர் காண்பித்த அருள் வழியில் தெளிவுபடுத்துகின்றோம்.

 

ஒருவர் நமக்குத் தீமைகள் செய்கிறார் என எண்ணும் பொழுது அவர் “தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்… ஈஸ்வரா” என்று எண்ணி உங்களுடைய உயிரான ஈஸ்வரனிடம் வேண்டுங்கள்.

 

உங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். இந்த உணர்வின் தன்மை உங்களுடைய உடலையும் உணர்வுகளையும் தூய்மையாக்கிவிடும்

 

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தீமை செய்வோர் உடல்களில் படர்ந்து அவர்கள் அறியாது செய்யும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்.

 

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் அடுத்து செய்வது எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமைய வேண்டும்  ஈஸ்வரா என்ற இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள். இவ்வாறு

1.அவர்களைக் காக்கும் உணர்வுடன் செயல்படுத்துங்கள்.

2.அப்பொழுது நமக்குப் பாதுகாப்பாகின்றது.

3.அவர்களுடைய தீமைகள் நம்மைச் சிறிதளவும் இயக்காது.

 

மாறாக நாம் “நன்மை செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக” வளர்கின்றோம். இதெல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். செய்து பாருங்கள்.

படித்தவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள்… படிக்காதவர்கள் பதிவாக்குகிறார்கள்…!

Saamigal upadesam

படித்தவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள்… படிக்காதவர்கள் பதிவாக்குகிறார்கள்…! 

யாம் அருள் ஞானிகள் கண்ட உண்மைகளை உபதேசிக்கின்றோம். அதையெல்லாம் புரியவில்லை என்று எண்ணினீர்கள் என்றால் அது புரியாத அணுவாகத் தான் உங்களுக்குள் மாறும்.

புரிய வேண்டும்… என்று “ஏங்கிப் பெற்றால்” அது கருவாகி உங்களுக்குள் அணுவாக உருவாகும்.

அந்த அண்டமும் அகண்ட அண்டமும் எப்படி உருவானது என்ற நிலையை அந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்த அறிய முடியும்.

அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்து துருவனாகி துருவத்தின் ஆற்றலை அறிந்ததனால் அந்த அறிவின் தன்மையை விளையச் செய்து அவன் உடலை உருவாக்கிய உயிர் ஒளியின் சரீரமாக இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.

அதனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

1.ஆனால் இடைமறித்து
2.சாமி என்ன சொல்கிறார்…!
3.நமக்கு என்ன அர்த்தமாகின்றது?
4.அவர் “என்னென்னமோ” சொல்கிறார் என்றால் என்ன ஆகும்?

“நான் படிக்காதவன் தான்..,” ஆனால் பேசுகின்றேன்.

படித்தவர்கள் சிந்திக்கும் பொழுது படித்ததை வைத்து இது என்னமோ சொல்கின்றார் என்ற நிலைகளில் “விட்டுவிடுவார்கள்”

1.மிகவும் படிக்காதவர்கள்
2.யாம் சொல்வதை “என்ன சொல்கிறார்…” என்று கூர்ந்து கவனித்தால்
3.அந்த உணர்வின் கருவாகிவிட்டால்
4.தன்னையும் அறிகின்றார் அண்டத்தையும் அறிகின்றார் அகண்ட அண்டத்தையும் அறிகின்றார்.
5.துருவ நட்சத்திரம் தனக்குள் எப்படி ஒளியாக மாற்றுகின்றதோ அந்த நிலையை அடைய முடியும்.

ஆக, நான் சொல்கிறேன் என்றால் எதை வைத்துச் சொல்கின்றேன்? நான் எந்தப் பாட நூல்களையும் படிக்கவில்லை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் கண்டுணர்ந்தார். அந்த உணர்வின் அணுக்களை எனக்குள் பதிவு செய்தார். இந்த உணர்வின் நினைவைப் பாய்ச்சினேன். அறிந்து கொண்டேன்.

இந்த அண்டங்கள் எப்படி உருவானது என்ற நிலையை அகஸ்தியன் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டான். அவனுக்குள் கண்ட உணர்வுகள் அந்த உணர்ச்சியின் தன்மைகள் இந்தப் பூமியில் உண்டு.

1.அதை நுகரும் ஆற்றல் வரும் பொழுது இந்த உணர்வின் தன்மை
2.உணர்த்தும் தன்மையும்
3.உணரும் தன்மையும் வருகின்றது.

இதையெல்லாம் நீங்களும் பெறவேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன்.

“நாங்கள் ஒன்றும் படிக்கவில்லையே” இதை என்றைக்குத் தெரிந்து கொள்ளப் போகின்றோம்…! என்று எண்ணினால் அதைத் தடைப்படுத்துகின்றீர்கள் என்று அர்த்தம்.

ஆனால் இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால் அகஸ்தியன் எப்படி இன்றும் விண்ணிலே என்றும் பதினாறு என்ற நிலையில் மரணமில்லாப் பெரு வாழ்வாக பிறவியில்லா நிலையாக வாழும் நிலைகள் போன்று
1.மனிதான நாம் அவன் வழிகளிலே சென்றால்
2.நிச்சயம் அங்கே செல்ல முடியும்.

தியானத்தின் மூலம் நாம் விடும் மூச்சலைகள் பத்து மைல் சுற்றளவிற்குப் பரவி நம் ஊரையே காக்கும் அரும் பெரும் சக்தியாகப் பரவும்…

Group Meditation 1

தியானத்தின் மூலம் நாம் விடும் மூச்சலைகள் “பத்து மைல் சுற்றளவிற்குப் பரவி” நம் ஊரையே காக்கும் அரும் பெரும் சக்தியாகப் பரவும்…

விஷத்தன்மைகள் பரவி புவியின் காற்று மண்டலத்தில் கலக்கப்படும் பொழுது அது நமது சுவாசத்தில் கலந்து உடலுக்குள் செல்வதால் உயிரின் இயக்கத்தால் நமது சுவாசம் பலவீனமடைகின்றது.

ஒரு விஷத்தை நாம் உட்கொண்டால் நமது உடல் எப்படிப் பலவீனமடைகின்றதோ அதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் தோற்றுவிக்கின்றது.

இது இயற்கையின் செயல்களில் ஒன்று.

விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் துருவ மகரிஷி சப்தரிஷி மண்டலங்களாக உள்ளவர்கள் இத்தகைய நஞ்சுகளை அடக்கி ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே உள்ளார்கள்.

1.தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவரும்
2.அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவருவதனால்
3.அவர்களை இந்த விஷத் தன்மைகள் பாதிப்பதில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அனைவரும் ஒருங்கிணைந்து துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்குவது நல்லது.

ஏனென்றால் ஏற்கனவே நமக்குள் பதிவாகி இருக்கும் இருண்ட உணர்வுகளைக் கரைப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

விடும் மூச்சலைகளால் இந்த பூமியில் படர்ந்துள்ள விஷத்தன்மைகள் முறியடிக்கப்படுகின்றன.

இந்த பூமியில் சங்கடத்தாலும் வேதனனையாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள உணர்வின் அலைகள் பரவிப் படர்ந்துள்ளன.

நாம் கூட்டமைப்பாக இருந்து நல்லுணர்வின் அலைகளை வலுவாக வெளிப்படுத்தினோம் என்றால்  நமது மூச்சலைகள் காற்று மண்டலத்தில் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.

ஒரு முறை செய்துவிட்டு அடுத்த முறை தொடராமல் விட்டு விட்டால் கடலில் பெருங்காயத்தைக் கரைத்தது போல் ஆகிவிடும்.

கடலில் கரைத்த பெருங்காயத்தின் மணம் சிறிது நேரம் கரைத்த இடத்தில் இருக்கும். பிறகு அதனின் மணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.

இதைப் போன்று அல்லாது நமது மூச்சலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெருகச் செய்வதன் மூலம் இதனின் வலு அதிகமாகின்றது.

இதனால் புறத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சின் வலுவினை இழக்கச் செய்கின்றோம்.

1.நாம் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து நமது மூச்சலைகளை வெளிப்படுத்தும் பொழுது
2.அந்த அலைகள் நமது காற்று மண்டலத்தில்
3.குறைந்த பட்சம் “10  மைல்” சுற்றளவிற்கு மேலேயும் அகலமாகவும் பரவுகின்றது.
4.நாம் விடும் மூச்சலைகள் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மையினைக் குறைப்பதற்கு உதவும்.

ஏனென்றால் ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடியாது. பல நூலை ஒன்றாகச் சேர்த்து கயிறாகத் திரித்தால் ஒரு கனமான பொருளைத் தூக்க முடியும்.

அதைப் போன்று நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அதனின் உணர்வினை நமக்குள் சுவாசித்து மூச்சலைகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது அது இந்தக் காற்று மண்டலத்தில் வலிமைமிக்கதாகப் பரவும்.

உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

1.சூரியனுடைய கதிரியக்கங்களில் அதிகமாக நச்சுத் தன்மை தா
2.நாம் வெளியிடும் மூச்சலைகள் அந்த நச்சுத் தன்மையை முறியடிக்கும் உணர்வலைகளாக
3.“10 மைல்” அளவுக்காவது இது பரவும்.

அப்போது  இந்த “10 மைல்” சுற்றளவில் உள்ளவர்களுக்கு தீங்குகள் இல்லாத நிலைகளும் அவர்கள் சுவாசத்தில் நல்ல தன்மையினைப் பெறும் நிலையும் ஏற்படுகின்றன.

நம்மிடத்திலும் இந்த நிலையைப் பெறுகின்றோம்.

ஆகவே நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து உடலுக்குள் பரவச் செய்து நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உணவாகக் கொடுப்போம்.

அவ்வாறு அந்த சக்தி வாய்ந்த உணர்வின் ஒளி அலைகளை மூச்சலைகளை “நாம் வாழும் ஊர் முழுவதும் படரச் செய்வோம்”.

நம் ஊர் மக்கள் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற்று இனி வரும் எல்லாத் தீமைகளில் இருந்து விடுபடச் செய்து மகிழ்ந்து வாழச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அனைவரும் இணைந்து வாழச் செய்வோம்.

எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி நம் அனைவருக்கும் துணையாக இருக்கும். ஓம் ஈஸ்வரா குருதேவா.

இறந்தவர்களின் உணர்வுகள் (சாபம்) குடும்பங்களை எப்படிப் பாதிக்கின்றது…?

Acts of souls

இறந்தவர்களின் உணர்வுகள் (சாபம்) குடும்பங்களை எப்படிப் பாதிக்கின்றது…? 

“மனிதன் இறந்தபின் மனிதனுடைய உயிராத்மா எந்நிலை பெறுகின்றது” என்று குருநாதர் எமக்கு உபதேசித்தருளினார்.

நடு இரவில் பழனியிலுள்ள ஒரு குளத்திற்கு எம்மை அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கிணற்றைக் காண்பித்தார். அந்தக் கிணற்றைப் பற்றி ஏற்கனவே யாம் அறிவோம்.

ஏனெனில் அதில் ஒரு பெண்மணி தனது ஏழு குழந்தைகளுடன் விழுந்து இறந்துவிட்டது.

ஊரில் உள்ளவர்கள் அதை “நல்ல தங்காள் கிணறு” என்று அழைப்பர். மற்றும் அதற்கு அருகிலே செல்ல வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் அஞ்சுவோர்.

அத்தகைய கிணற்றைச் சுட்டிக் காட்டி அந்த இடத்தில் எமக்கு உபதேசிக்கின்றார்.

குழந்தைகள் அலறித் துடித்து இறந்த அந்த இடத்தில் அந்த நினைவலைகள் வருகின்ற பொழுது குழந்தைகளின் சரீரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

1.அந்த இடத்திற்குச் செல்கின்றவர்களிடம்
2.அங்கே துடித்து இறந்தவர்களைப் பற்றிய நினைவுகள் உதிக்கின்ற பொழுது
3.சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்ட உணர்வலைகள்
4.ஒலி அலைகளாக மாறி
5.குழந்தைகள் துடிப்பது போன்று தாய் அவர்களை அடக்குவது போன்ற குரல்களைக் கேட்க நேர்கின்றது.

இவ்வாறு ஒரு மனித சரீரத்தில் விளைய வைத்த உணர்வலைகளை சூரியனின் காந்தசக்தி கவருமேயானால் அவ்வாறு கவரப்பட்ட உணர்வுகள் எவ்வாறு அலைகளாகப் படர்கின்றன?

ஒரு ஒலி நாடாவில் நமது உரையாடலைப் பதிவு செய்ததை டேப்பில் போட்டு மீண்டும் அப்படியே கேட்கின்றோம்.

அது போன்று ஒருவர் இறக்கின்ற பொழுது வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அலைகளைப் படரச் செய்கின்றது.

பிறகு நாம் அந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வருகின்ற பொழுது அந்த அலைகளை நாம் நுகர நேருகின்றது. இன்னும் அதிகமாக நினைவலைகளைக் கூட்ட அங்கே இறந்தவர்களுடைய உருவங்களைப் பார்க்கவே முடிகின்றது, என்று குருநாதர் எமக்கு உபதேசித்தருளினார்.

1.இரவிலும் என்னால் தூங்க முடியவில்லை பகலிலும் என்னால் தூங்க முடியவில்லை
2.யாரோ என்னை அழைப்பது போன்றிருக்கின்றது என்றும்
3.என் ஊரிலிருந்து இங்கே தபோவனம் வருகின்ற வரையிலும் யாரோ என்னை அழைத்துக் கொண்டு பின் தொடர்வது போன்று இருக்கின்றது என்றும்
4.தபோவனம் நுழைந்தபின் அது போன்று இல்லை என்றும் கூறிக் கொண்டு
5.இந்நிலைகளால் துன்பப்படுபவர்கள் தபோவனம் வந்து தங்கள் குறையை போக்கிக் கொண்டவர்களும் உள்ளனர்.

“மனிதனாக வளர்ந்தபின் இந்தச் சரீரத்தினுள் விளைந்த உணர்வலைகள் எவ்வாறு இருக்கின்றது?” அதே சமயம் இந்தச் சரீரத்தை விட்டுச் செல்லும்போது அந்த உயிராத்மா எத்தகைய வேதனையைக் கொண்டிருந்ததோ அதே வேதனைத் துடிப்புடன் அந்த உயிராத்மா துடித்துக் கொண்டேயிருக்கின்றது  என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அறிந்துணர முடிந்தது.

தொடர்ந்து சற்குருதேவர் எம்மை அந்த இரவு முழுவதும் பல இடங்களைச் சுற்றிக் காண்பித்தார். அப்பொழுது சில வீடுகளைச் சுட்டிக் காட்டி அங்கு நிலவும் சூழல்களை எடுத்துரைக்க ஆரம்பித்தார்.

அந்தக் குடும்பங்களில் வாழ்கின்ற அங்கத்தினர்களில் ஓரிருவர் பிறிதொருவரை ஏமாற்றுகின்ற பொழுது
1.ஏமாற்றப்பட்டவர் மரணமடைகின்ற பொழுது வெளியிடும் சாப உணர்வுகளை
2.வீட்டிலுள்ள காந்தப் புலன்கள் கவர்ந்து
3.அவர்களுடைய ஒலி அலைகளைத் தன்னிடத்தில் பதிவு செய்கின்றன.

மனித சரீரத்தில் ஒருவன் “பிறிதொருவன் எனக்குத் தீமையை விளைய வைத்தான்… பாவி…” என்ற உணர்வை ஓங்கி வளர்த்து அதனின் பேரில் “எண்ணிய எண்ணங்கள்…, வெளிப்படுத்திய உணர்வுகள்…” ஆகியவைகள் ஏமாற்றியவரின் சரீரத்தில் பதிவாகிவிட்டால் அவ்வாறு பதிவான உணர்வுகள் அவரிடத்தில் பெருகி அதன் வழிகளில் அவர் குடும்பங்களில் படர்கின்றது.

மற்றும் அக்குடும்பத்திலுள்ள இளம் தம்பதிகளிடம் பிறிதொருவரை ஏமாற்றிய சம்பவங்களைப் பற்றிய பேச்சுக்கள் எழுகின்ற பொழுது அவர்களுடைய கருவிலே இருக்கக்கூடிய குழந்தையிடமும் இவ்வுணர்வுகள் பதிவாகின்றது.

இவ்வாறு அவர் இட்ட சாப அலைகள் இரண்டு மூன்று தலைமுறைக்குத் தொடர்கின்றது.

இவைகளை யாம் இங்கு எடுத்துரைப்பதற்குக் காரணம்…,
1.சமூகத்தில் பெரும்பாலானோர்
2.யார் போனால் என்ன…?
3.யார் திட்டினால் என்ன…? என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் நல்லதே செய்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அது பிறருக்குத் தீமையை விளைவிக்கின்ற பட்சத்தில் அவர் நம்மைக் கடுமையாக ஏசுகின்றபொழுது “இவன் இப்படித் திட்டுகிறானே பாவி…” என்று நாம் எண்ணுகிற பொழுது அவ்வுணர்வுகள் நமக்குள் பதிவாகிவிடுகின்றன.

ஒருவர் சாபமிடும் நிலைகளில் பேசிக் கொண்டிருந்தாலும் “இப்படிப் பேசுகிறானே பாவி” என்றால்
1.நமக்குள் அந்த சாப உணர்வுகள் விளைந்து
2.நாமும் சாபமிடும் நிலைகளுக்கே சென்று விடுகின்றோம்.

இந்நிலைகள் சிறுகச் சிறுக நம்மிடம் விளைந்து நம் குடும்பத்தில் பிறக்கின்ற சந்ததிகளுக்கு காக்கா வலிப்பு சம்பந்தப்பட்ட நோய்களும் கை, கால் முடக்கங்களும் உண்டாகின்றன.

பெண் குழந்தைகள் என்றால் மாறு கண் நோய்கள் உண்டாகின்றன. ஆஸ்துமா போன்றவைகளும் இவ்வழியாக வருவதே ஆகும்.

இவ்வாறு குருநாதர் ஒவ்வொரு உணர்வின் இயக்கத் தன்மையையும் சாப அலைகளின் தொடர் பாதிப்புகளையும் எமக்கு மேலும் அறிவுறுத்தும் பொருட்டு மறுநாள் பகலில் மீண்டும் அதே இல்லங்களுக்குமுன் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்.

அந்த இல்லத்தில் உள்ள அங்கத்தினர்களின் சரீரத்தில்
1.அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளின் இயக்கத்தையும்
2.அவர்களிடத்தில் செயலாகின்ற சாப உணர்வுகளின் இயக்கத்தையும்,
3.எக்ஸ்ரே படம் போன்று அவர்களின் சரீரத்தை ஊடுருவிப் பார்க்கும் தன்மையை எமக்களித்தார்.

இவ்வாறு ஒவ்வொரு இல்லத்திலும் நோய் வருவதும் சாபங்கள் இடுவதும் அந்தச் சாப நிலைகளால் குடும்பம் நசிந்து கொண்டிருப்பதும் நம் முன்னோர் காலத்தின் சாப நிலைகளால் பின் வரும் சந்ததியினர் அனுபவிக்க நேருவதும் போன்ற நிலைகளை எமக்கு உணர்த்தியருளினார்.

மேலும் இந்தச் சாப அலைகளால் தாக்கப்படுபவர்களிடம், அவ்வுணர்வுகள் விளைந்து உடலில் நோயாகி அச்சாப உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு “அந்த ஆன்மா… எவ்வாறு துடிக்கின்றது…?” என்கிற நிலையை குருநாதர் எமக்குக் காண்பித்தருளினார்.

மேலும்  மனிதனாக இருந்து பிறிதொருவர் அழிய வேண்டும் என்று கோபம் கொண்டு சாபமிடும் நிலைகளில் அவர் இறந்தபின் அவருடைய உயிராத்மா எந்த உடலுக்குள் சென்றாலும் அவர் இட்ட சாபம் போலவே இயக்குகிறது.

அங்கே மனிதனைக் கருவாக்க விடாதபடித் தடுத்து அந்த உடலில் தீய விளைவுகளை விளையச் செய்து அந்த உணர்வின் தன்மையை இதனுடைய உணர்வுகளுக்கு உணவாகச் சேர்க்கின்றது.

இவ்வாறு உணவாகச் சேர்த்தபின் அந்த உடலைவிட்டு வெளியேறும் அந்த உயிரான்மா மீண்டும் மனிதனாகப் பிறப்பதில்லை.

பிறிதொருவர் அழிய வேண்டும் நாசமாக வேண்டும் என்று எவரொருவர் எண்ணுகின்றாரோ அவருடைய உயிராத்மா சரீரத்தை விட்டு வெளியே வந்த பின்னும் வேதனையடைகின்றது.

இந்த உயிராத்மா பிறிதொரு மனிதனின் சரீரத்திற்குள் புகுந்தாலும், அவரிடத்திலும் மனிதப் பிறவியை மீண்டும் பெறமுடியாத நிலையை உண்டாக்கி விடுகின்றது.

ஆகவே இதைப் போன்று நாம் நம் உடலை விட்டுப் பிரியும் பொழுது நமது உயிராத்மவில் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கு ஒப்பத்தான் அந்த இடத்திற்கு நம் உயிர் நம்மை அழைத்துச் செல்கின்றது என்றும், அங்கே எவ்வாறு அது வேதனைப்படுகிறது…? வேதனையடையச் செய்கிறது? என்றும் குரு காட்டிய வழிகளில் நாம் தெரிந்து கொண்டோம்.

1.இனி ஒவ்வொரு நொடிப்பொழுதும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறுவோம்.
2.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடுவோம்,
3.பிறவியில்லா நிலை அடைந்த சப்தரிஷிகளுடன் ஒன்றி வாழ்வோம்.
4.எந்த நேரம் இந்த உடலை விட்டு நம் உயிராத்மா பிரிந்தாலும்
5.சப்தரிஷி மண்டலங்களுடன் இணந்து அழியா ஒளிச்சரீரம் அனைவரும் பெறுவோம் என்று
6.நாம் உறுதி கொள்வோம்.