“பிடிக்காதவர்கள்… எப்படா இறப்பார்கள்…?” என்று நினைக்கலாமா…!

Astral life

“பிடிக்காதவர்கள்… எப்படா இறப்பார்கள்” என்று நினைக்கலாமா…! 

குருநாதர் இட்ட கட்டளைப்படி யாம் திருத்தணியில் மலைக்குச் செல்லும் பொழுது ஒருவர் எம்மைச் சந்தித்தார்.

நான் ஒரு விவசாயி, இங்கிருந்து பத்தாவது மைலில் எங்கள் கிராமம் இருக்கிறது. என் மனைவிக்கு ஒன்றரை வருட காலமாக எழுந்து உட்காரவோ நடக்கவோ முடியவில்லை.

என்ன நோய் என்று தெரியவில்லை? எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை என்று கூறினார்.

சாமி.., நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து “என் மனைவியின் நோயைப் போக்கி நடக்க வைக்க வேண்டும்” என்று கண்களில் நீர் ததும்ப எம்மை ஊருக்குக் கூப்பிட்டார்.

யாம் இங்கு தியானத்திலிருந்துவிட்டு அதன் பிறகுதான் எங்கும் வர முடியும் என்றோம்.

தாங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ அதுவரைக்கும் இங்கேயே இருந்து தங்களை அழைத்துக் கொண்டு போகிறோம் என்றார் அவர்.

விவசாயியைக் கூட்டிக்கொண்டு திருத்தணி மலைமீது ஏறிச் சென்றேன். குருதேவர் கூறிய இடத்தை அடைந்தவுடன் அவரை நான்கு நாள் கழித்து வரும்படிச் சொல்லிவிட்டு குருதேவர் குறிப்பிட்ட இடத்தில் தியானத்தில் அமர்ந்து கொண்டேன்.

யாம் இங்கிருக்கிறோம் என்று ஊரில் யாரிடமும் தெரியப்படுத்தக்கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டோம்.

யாம் தியானத்தில் இருந்த 4 நாள்களிலும், பல நிலைகள் காட்சிகளாகத் தெரிந்து கொண்டிருந்தன. யாம் காட்சிகளாகப் பார்த்த பல நிலைகளுக்கும், குருதேவர் விளக்கி உபதேசித்து அருளிவிட்டு நாளை வரும் விவசாயியின் ஊருக்குச் செல்லும்படிக் கூறிவிட்டு மறைந்து விட்டார்.

நான்காம் நாள் யாம் இருக்கும் இடத்திற்கு விவசாயி வந்து என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

விவசாயின் மனைவி வாத நோயால் கை கால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.

அன்று இரவு தியானத்தில் அமர்ந்தேன். அது சமயம் காட்சியாக விவசாயியின் “தாயார்..,” வாத நோயுடன் கை கால் வராமல் படுக்கையிலிருந்து கொண்டு வேதனையுடன் பல முறை மருமகளைக் (விவசாயின் “மனைவியை”) கூப்பிட்டார்கள்.

அப்பொழுது மருமகள்.., “சனியன் தொலைய மாட்டேனென்கிறதே”, என்று முனங்கிக் கொண்டே மாமியாரைப் பார்க்க அருகில் வந்தார்.

“ஒரு பக்கமாக எனக்குக் கைகால்கள் வலிக்கின்றது, என்னை அந்தப் பக்கம் கொஞ்சம் புரட்டிவிடு” என்றார்கள்.

மருமகளோ “நீ செத்தால்தான்… எனக்கு விடிவு காலம் வரும்” என்று சொல்லிக் கொண்டே வேண்டா வெறுப்புடன் மாமியாரை ஒரு பக்கமாகப் புரட்டிவிட்டார்.

இதைக் கண்டு மாமியார் வேதனையுடன் இப்படியெல்லாம் ஏசுகிறாயே.., “முருகா…!” என்று சொல்லி வேதனையுடன் பெருமூச்சு விட்டார்கள்.

மருமகளுக்குக் கோபம் வந்து என்ன…! இப்படியெல்லாம் பேசுகிறாய்…! என்று ஏச மாமியாரும் வேதனையுடன் பேசினார்கள்.

1.மருமகள் கோபத்துடன் ஏசிய உணர்வலைகள்
2.மாமியாரின் இரத்தத்தில் கலப்பது காட்சியாகத் தெரிந்தது.
3.இதைப் போன்று மாமியார் சாபமிட்டு ஏசிய உணர்வலைகள் மருமகளின் உணர்வுகளில் உந்தப்பட்டு
4.மருமகளின் இரத்தத்தில் கலப்பதும் காட்சியாகத் தெரிந்தது.

மேற்கூறியவாறு ஒருவருக்கொருவர் பல மாதங்களாக நினைத்தும் ஏசியும் பேசிக் கொண்ட உணர்வலைகள் ஒருவருக்கொருவர் படர்கின்றது.

அதாவது
1.மருமகள் மாமியாரை நினைத்து ஏசிய உணர்வலைகள்
2.மாமியாரின் உடலில் வினைகளாக விளைகின்றன.
3.மாமியார் மருமகளை நினைத்துச் சாபமிட்டுப் பேசிய உணர்வலைகள்
4.மருமகளின் உடலில் வினைகளாக விளைகின்றன.

வேதனை உணர்வுடன் “மருமகளை எண்ணியவாறே…” மாமியாரின் உயிராத்மா உடலைவிட்டுப் பிரிந்து சென்றது.

மாமியார் “எப்பொழுது… இறக்குமோ…?” என்ற வேதனையுடன் ஏங்கி இருக்கும் நிலையில் மாமியார் இறந்ததைப் பார்த்தவுடன் மாமியாரின் உயிராத்மா “மருமகளின் சுவாசத்தின் ஈர்ப்புக்குச் சென்று” இரத்தத்தில் கலந்துவிடுகின்றது.

1.சில நாட்களில் மருமகளின் உடலில் மாமியாரின் உயிராத்மா இயங்கத் தொடங்கி
2.மாமியார் எந்த நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ,
3.அதே வேதனையை மருமகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலைகள்
4.இவை எனக்குக் காட்சியாகத் தெரிந்து கொண்டிருந்தது.

அது சமயம் குருதேவர் காட்சி கொடுத்து இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டுவிட்டு அதற்குச் சில வழிமுறைகளை உணர்த்தி உபதேசித்தார்கள். பிறகு தியானத்தைக் கலைத்துவிட்டேன்.

விவசாயின் மனைவியிடம் நீங்களும் உங்கள் மாமியாரும் அடிக்கடிக் கோபித்துக் கொள்வீர்களா? என்று கேட்டேன்.

“ஆம்..,” என்று ஒப்புக் கொண்டார்கள்.

யாம் சொல்கிறபடி செய்தால் நோய் தீரும் என்றேன்.

தாங்கள் எப்படிச் செய்யச் சொல்கின்றீர்களோ அதன்படி நாங்கள் செய்கிறோம் என்றார்கள்.

விவசாயின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தியானத்தில் அமரச் செய்தேன்.

தியானமிருந்து கண்களைத் திறந்தவுடன்
1.விவசாயின் தாயாரின் பெயரைச் சொல்லி
2.அவர் உயிராத்மா மகரிஷிகளின் அருள் ஒளியால் புனிதம் பெற வேண்டும் என்று
3.குடும்பத்தில் உள்ள அனைவரையும் குருதேவர் உணர்த்திய வழியில், சொல்ல வைத்தோம்.

இவ்வாறு பத்து நாள்கள் தியானமிருந்து சொல்ல வைத்ததனால், விவசாயின் மனைவி 10 நாள்களில் மெள்ள மெள்ள எழுந்து நடக்கலானார்.

விவசாயின் குடும்பத்தில் அனைவரும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். விவசாயின் மனைவி இனி நான் “யாரையும் மனம் நோகும்படிப் பேச மாட்டேன்…” என்று வேண்டிக் கொண்டார்.

தொடர்ந்து நீங்கள் தியானம் செய்தால் உங்களை அறியாது வரும், கோபம் குரோதம் பயம் நீங்கி உங்கள் குடும்பத்தில் நலமும் வளமும் பெற்று வாழ்வீர்கள் என்று யாம் ஆசீர்வதித்தோம்.

இது நடந்த நிகழ்ச்சி.

 

கருவாய்… உருவாய்… வருவாய்… முருகா… “குருவாய்…”

Lord Kumarakuru

கருவாய்… உருவாய்… வருவாய்… முருகா… “குருவாய்…” 

இந்த உபதேசத்தை அடிக்கடி படிப்பவர்களுக்கு இந்த உபதேசத்தின் வாயிலாக உருவான அந்த அணுக்களுக்கு அருள் ஞானிகளின் உணர்வுகள் உணவாகக் கிடைக்கும்.

பல நிலைகளில் பல கோணங்களிலும் அந்த உணர்வின் சத்தை உங்கள் உடலிலே விளைந்த அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுப்பதற்குத்தான் உபதேசத்தை வழங்குகின்றோம்.

அதே சமயத்தில் புதிதாகப் படிப்பவர்களுக்கு அருள் ஞான வித்தாகப் ஊன்றப்படுகின்றது.

வித்தாக ஊன்றிய பின் இதை மீண்டும் நீங்கள் தொடர்ந்து நினைவுக்குக் கொண்டு வந்தால் அது கருவாகி உருவாகி அந்த அருள் ஞானத்தைப் பெறும் தகுதியைப் பெறுகின்றது.

சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் “ஒன்றும் புரியவில்லை…, அர்த்தமாகவில்லை…” என்று.

உங்களுக்கு அர்த்தமாகாது.
1.ஆனால் படிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் கருவாகும்
2.பின் அது உருவாகும்.
3.பின்பு இதனின் உணர்வுகள் உங்களுக்குள் தெளிவாகும்.

அது தான் “கருவாய்… உருவாய்… வருவாய்… முருகா – குருவாய்”.

நாம் எதனை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை
1.கருவாகி
2.உருவாகி
3.குருவாக வரும்.

இந்த ஆறாவது அறிவின் தன்மை (முருகா) கொண்டு நமக்குள் அது “தெளிவாக உருவாக்கும்… என்பது.

எப்படி ஒரு (ஒலி/ஓளி) நாடாவில் பதிவு செய்துவிட்டால் திருப்பி அதை மீண்டும் போட்டுப் பார்க்கும் பொழுது பதிவானதைக் கேட்கின்றோம்.

இதைப் போன்று தான் உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகிவிடும். அணுவாக உருவாகிவிடும்.

அந்த அணுக்களுக்குச் சிறிது காலம் உணவைக் கொடுத்தால் அது மீண்டும் வளர்ச்சியாகித் “தன்னிச்சையாக” அதனின் உணவை எடுத்துக் கொண்டு வளர்ச்சி பெறும்.

முந்தைய நிலைகளில் உபதேசம் கேட்டவர்களுக்கு அதனால் விளைந்த அணுக்களுக்கு உயர்ந்த ஞான உணர்வாகக் கொடுக்கப்பட்டது. அதனின் வளர்ச்சி பெருக இது உதவும்.

அதே சமயத்தில் புதிதாகப் படிப்போர் உணர்வுகளில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்பட்டுள்ள நிலைகளில் அது கருவானதை உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.
1.உங்கள் நினைவினைக் கூட்டினால் அது உருவாகி
2.வளர்ச்சியின் தன்மை அடையும் பொழுது குருவாக வந்து
3.உங்களுக்கு நல் வழியும் காட்டும்.

அதை உணவாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும். அப்பொழுது அந்த அருள் ஞானம் உங்களுக்குள் தன்னிச்சையாக வரும்.

யாம் சொல்வது புரியவில்லை என்று எண்ண வேண்டம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் எவ்வாறு ஆழப்பதிவு செய்து அந்த உணர்வின் அணுக்களைப் பெருக்கச் செய்து இந்தக் காற்று மண்டலத்திலுள்ள அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நுகரச் செய்தாரோ அதை அப்படியே உங்களுக்குள்ளும் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

உங்களை அறியாது வந்த தீமைகளிலிருந்து விடுபடும் நிலைக்கே இது உருவாக்கப்படுகின்றது. அந்த அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் எடுத்து வலுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

விண்ணும் மண்ணும் போற்றக்கூடிய மெய்ஞானிகளாக வருவீர்கள். எமது அருளாசிகள்.

மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்யும் தியானம் 

Sages network connection

மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்யும் தியானம் 

உங்கள் ஆசை எதில் இருக்க வேண்டும்…?

அந்த சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் அந்த சக்தி எங்களுக்குள் வளர வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.

1.யாரவது கஷ்டப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டால்
2.அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
3.அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வை நீங்கள் எடுத்து உங்களுக்குள் சமைத்து
4.அதில் நீங்கள் மகிழ்ச்சியைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்
5.இதை நீங்கள் பெருக்க வேண்டும்

ஒருவர் உடலில் ஆவி செயல்படுகிறது என்றால் 4 பேர் சேர்ந்து கூட்டுத் தியானம் இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இந்த சக்தியைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள்சக்தியைக் கூட்டிக்கொண்டபின் அவர் உடலில் உள்ள ஆன்மா மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். அந்த ஆன்மா அவருக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று சொல்லவேண்டும்.

அவர்களையும் நீ இந்த மாதிரி ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி நீ சீக்கிரம் நன்றாகிப்போ என்று சொல்லவேண்டும் இதைப் போல் எடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு லாபம். இதைப் பெருக்கிப்பழக வேண்டும்

ஏனென்றால் நீங்கள் அந்தப் பேருண்மையைப் பார்க்கப் பார்க்க உங்களை அறியாமலேயே அந்த உணர்வலைகளுக்குள் சென்றவுடனே  சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வுகள் சுழல்வதைப்பார்க்கலாம்.

இந்தத் தொடர்புக்குள் அந்த உணர்வுகள் தன்னிச்சையாகவே அதை எடுக்கும்.

1.ஒரு அரசமரத்தின் வித்து பாழடைந்த இடத்தில் பட்டாலும்
2.நீர் இல்லையென்றாலும் காற்றில் இருப்பதை எடுத்து
3.விழுதுகளைப் பாய்ச்சி தன் சத்தை எடுத்து வளர்ந்துவிடும்.

அதைப் போல உங்கள் நினைவின் ஆற்றல் எல்லாம் விண்ணுக்குச் சென்று பழக வேண்டும். அப்படிப் போனால் பல அற்புதங்கள் தெரியும். பல அதிசயங்கள் தெரியும்.

ஆரம்பத்தில் (30 வருடங்களுக்கு முன்) உங்களுக்கு என்ன காட்சி கிடைத்தது? உங்களுக்கு என்ன தெரிந்தது? என்று நான் கேட்பேன்.

அப்பொழுது எல்லாருக்கும் காட்சிகள் தெரியும். எல்லோரும் “அதைப் பார்த்தேன்… இதைப் பார்த்தேன்…” என்று சொல்வார்கள்

அப்படிச் சொன்னவர்களுக்கெல்லாம் என்ன ஆகியது? அந்த ஆசையில்தான் மூழ்கிவிட்டார்கள். அதிலிருந்து மீள்வதற்கு வழி இல்லாமல் போய்விட்டது

1அகண்ட பேரண்டக் காட்சியை நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளோடு பார்க்கவேண்டும்
2.அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற ஆசையை நாம் அங்கே வைக்கவேண்டும்
3.அதை நாம் வளர்க்கப் பழகவேண்டும்

ஏனென்றால் அதை நாம் எதில் பார்க்கவேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று இதை நம் உடலுக்குள் ஏற்ற வேண்டும்.

இதன்வழி கொண்டு ஏற்றியபின் உங்கள் பார்வையால் யார் கஷ்டப்பட்டாலும் மகரிஷிகளின் அருள்சக்தி அவர்கள் பெறவேண்டும் அவர்கள் உடலில் உள்ள தீமைகள் எல்லாம் நீங்கவேண்டும் என்று “இந்தச் சக்தியை வைத்து… அந்த உண்மையான சக்தியை” நீங்கள்  பார்க்கலாம்.

இதைப் பார்க்கப்படும்போது அந்த தீமைகள் விலகி மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களுக்குள் வரும். அந்த உணர்வின் எண்ணம் வேகமாகக் கொண்டு போகின்றது.

இதன் ரூபத்தில்தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர எனக்குச் சப்தரிஷி மண்டலம் தெரியவில்லையே அது எப்படி வருகிறது? அது எப்படி இருக்குமோ…! என்று இந்த சந்தேகம் கூடாது.

படிப்படியாகத்தான் நாம் போக வேண்டும்.

ஒரு சினிமா காட்டுகின்றார்கள் என்றால்
1.அங்கே இருக்கும் போது ஒளியாகத்தான் படுகின்றது
2.அதைத் தடுத்து நிறுத்தும் போதுதான் உருவம் தெரிகின்றது
3.நாம் குறுக்கே பார்க்கும் போது தெரிவதில்லை (ஒளி தான் தெரியும்)
4.அதிலே தடுத்து நிற்கும் போதுதான் (திரையில்) அந்த உணர்வு தெரிகின்றது

அதே மாதிரிதான் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் நமக்கு முதலில் தெரியாது. “ஒளியின் அணுக்களாகத்தான் தெரியும்”.

உணர்வின் தன்மை தனக்குள் அதை நிறுத்தி அதை வைக்கப்படும் போது உருவத்தின் தன்மை “யார்…யார்…!” என்ற உணர்வுகள் நமக்குத் தெரிகின்றது

இவையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு நேரடியாகக் காட்டிய நிலைகள்.
1.நீங்களும் அந்த மகரிஷிகளைப் பார்க்கலாம்.
2.அவர்களுடன் தொடர்பும் கொள்ள முடியும்.

இன்றைய வாழ்க்கையில் பல (தீமைகள்) அலைகள் வந்தாலும் “நமது எல்லை மகரிஷிகளின் அருள்வட்டம் தான்” என்று உறுதிப்படுத்துவோம்

Image

 

self-confidence

இன்றைய வாழ்க்கையில் பல (தீமைகள்) அலைகள் வந்தாலும் “நமது எல்லை மகரிஷிகளின் அருள்வட்டம் தான்” என்று உறுதிப்படுத்துவோம்

 

இப்பொழுது நாம் மலைக்குப் போகப் போகிறோம் என்றால் என்ன செய்கிறோம்? இந்தப் பக்கம் போனால் முட்கள் இருக்கின்றது இந்தப் பக்கம் போனால் மிருகங்கள் இருக்கின்றது என்று அறிந்து கொள்கிறோம்.

 

மிருகங்கள் இருக்கும் பக்கம் எவ்வாறு செல்ல வேண்டும்? இந்தப் பக்கம் நீர் அதிகமாகப் போகும்போது அதைக் கடந்து எப்படிச் செல்ல வேண்டும்? என்றும் வழிகாட்டுவது போல நமக்குள் எத்தனையோ உணர்வுகள் உண்டு.

 

அதனைப் போல இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான தீமைகளை நாம் சந்திக்கின்றோம். சந்திக்கப்படும்போது அந்தத் தீமையின் உணர்வுகளில் நாம் சிக்காது அதிலிருந்து நாம் கடந்து செல்லுதல் வேண்டும்.

 

அதே போல நாம் கடலிலே செல்கின்றோம். பல அலைகள் வருகின்றது.

1.படகோட்டி தான் எந்த எல்லையைக் குறிக்கோளாக வைத்து

2.அந்தப் படகினைத் திசைத் திருப்பித் தன் எல்லையை அடைகின்றான்.

 

இதைப்போல இந்த வாழ்க்கையில் பல அலைகள் நம்மை மோதுகின்றது.

 

கோப அலைகள் மோதுகின்றது. பாச அலைகள் மோதுகின்றது. வேதனை அலைகள் மோதுகின்றது. இதைப் போல எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது.

 

நம்மை வேதனைப்படும்படி ஒரு மனிதன் செய்தால் அந்த எண்ணத்தில் நாம் சிக்கிவிட்டால் அந்த அலைகளில் சிக்கி வேதனைப்படும் உணர்வுக்கே நம்மை அழைத்து சென்றுவிடும்.

 

ஒருவர் கோபப்படும் அலைகள் மோதிவிட்டால் அதிலே இந்தப் படகு மூழ்கி அதன் வழிகளிலே அழைத்துச் செல்லும். நாம் எல்லையை அடைய முடியாது.

 

ஆகவே தான் இந்த வாழ்க்கையில் எத்தனையோ வகையான அலைகள் நம்மை மோதினாலும் அந்த ஒவ்வொரு நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தியான வலுகொண்ட நிலைகள் கொண்டு திசை திருப்ப வேண்டும்.

 

நாம் அந்த அலைகளுக்குள் மூழ்கிடாது நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான் என்ற நிலைகளில் நாம் செல்ல வேண்டும்.

 

மகரிஷிகளின் அருள் வட்டத்தின் பாதுகாப்புடன் நாம் இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து நாம் என்றும் பிறவியில்லாப் பெரு நிலையை அடைய முடியும்.

 

ஒவ்வொரு நிலையிலும் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து “விழித்திரு…” என்று சொல்வது போல நாம் இந்த வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும்.

 

1.ஏனென்றால் எத்தனையோ வகையான அலைகள் மோதுகின்றது.

2.நாம் விழித்திருந்து அந்த அலைகளில் இருந்து நாம் மீளுதல் வேண்டும்.

3.தீமையிலிருந்து விடுபடுதல் வேண்டும்.

4.நமது எல்லை அந்த மகரிஷிகளின் அருள் வட்டம் தான்.

 

நாம் அடிக்கடி இவ்வாறு எண்ணினோம் என்றால் வரும் அலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து அருள் ஞானிகளின் வட்டத்தில் இங்கே வளர்த்து என்றும் பிறவியில்லா நிலை என்ற பெருநிலை அடையலாம்.

 

நமது எல்லை அது தான். இல்லையென்றால் இங்கே கீழே (கீழான உடல்களுக்குள்) அழைத்துச் சென்றுவிடுகின்றது.

 

இதிலிருந்து நாம் தப்புவோம் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம் என்று தியானிப்போம். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தவமிருப்போம்.

நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Business Tricks

நீங்கள் செய்யும் தொழிலில் “நஷ்டம் வராமல் தடுக்க” என்ன செய்ய வேண்டும்?

சில வீடுகளில் “இப்படிப் பேசுகிறானே…, உருப்படுவானா..” என்று சொல்லிச் சொல்லி.., இவர்களே உருப்படாமால் பண்ணிக் கொள்வதைப் பார்க்கலாம்.

இந்த மாதிரிப் பேசுகிறவர்கள் உடல்களிலே நிறையச் சங்கடங்கள் வரும். குடும்பத்தில் சண்டை வரும். குழந்தைகளிடம் வெறுப்படைவார்கள். இவர்கள் எண்ணமே உதவி செய்வதற்கு மாறாகப் பிரித்துவிட்டுவிடும்.

நண்பர்களிடமும் இதே போன்ற உணர்வுகளைத் தோன்றச் செய்து, பிரித்துவிடும். எப்பொழுது பார்த்தாலும் இதேபோல “உருப்படுவானா?” என்று சொல்வதைக் கேட்டு,நண்பர்களுக்கும் இவன் உருப்படுவானா? என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும்.

ஆக அவர் இவ்வாறு காரம் என்ற நிலைகளை எடுத்தால் நோய் என்ற நிலைகள் விளைகின்றது. அதனை நாம் எடுத்தால் நமக்குள்ளும் அதே நிலையாக மாற்றும். ஆகையினால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால்,நமக்குப் பாதுகாப்பு தேவை.

ஒவ்வொரு நொடியிலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை எடுத்து வளர்த்துக் கொண்டால் இதன் வழி நமக்கு இந்த உண்மையின் நிலைகள் வரும்.

நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.நம்மிடம் வேலை செய்பவர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்.
3.தொழிலில் நல்ல நாட்டம் வரவேண்டும்,
4.தெளிவான மனம் பெறவேண்டும்,
5.தெளிவாகத் தொழில் செய்யும் அந்த எண்ணம் வரவேண்டும், என்று
6.உங்கள் இடத்திலே உட்கார்ந்து “ஒரு பார்வை…” பார்க்க வேண்டும்.

நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ அதே போன்று நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

யாராவது தவறு செய்கிறார்கள் என்றால் இயற்கையில் அவர்களது குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும். பொருளாதாரத்தில் குறை இருக்கலாம். சொந்தத்திற்குள் யாராவது குறையாகப் பேசியிருக்கலாம்.

இந்த மாதிரி குறைகளைப் பேசி அவர்களுக்குள் வெறுப்பான நிலைகள் இருந்தால் நம்மிடம் வேலை பார்க்கும் பொழுது சிந்தனையிழந்து வேலை செய்யும் நிலை வரும்.

அப்பொழுது நம் பொருள்களுக்கு நஷ்டம் வரும்.

அவ்வாறு வராதபடி செய்ய வேண்டுமென்றால்… நாம் அவருக்கு அருள் உணர்வுகளைப் பாய்ச்சி, மகரிஷிகளின் அருள் சக்தியால் “நீ நன்றாக வேலை செய்ய வேண்டும்”, மகரிஷிகளின் அருள் சக்தியால், “நல்ல முறையில் உடல் ஆரோக்கியத்துடனும் சிந்திக்கும் சக்தியும் பெற்று நலமாக இருப்பாய்” என்று சொல்லி அனுப்ப வேண்டும்.

இதைப் போல, நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தினம்  தினம் அவருக்குச் சொல்ல சொல்ல அவர் காதிலே கேட்கக் கேட்க – தினமும் வேலைக்கு வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட வேண்டும் – நாம் பதிவாக்கும் நல்ல உணர்வுகள் அங்கே இயங்கத் தொடங்கும்.

“மகரிஷிகள் அருள் சக்தியால் நீ நன்றாக இருப்பாய். தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்” என்று வாக்குகள் கொடுத்து இதே போன்று செய்யச் சொல்லிவிடுங்கள்.

சில வெறுப்பான நிலைகளோ சிந்தனையிழக்கும் நிலைகளோ அதிகம் இருந்தால் விபூதியையோ அல்லது ஒரு பொருளை எடுத்துக் கையில் கொடுத்து இதே போல சொல்லச் சொல்லி வேலை செய்யச் சொல்லுங்கள்.

இவ்வாறு செய்யச் சொன்னீர்கள் என்றால் தொழில் நன்றாக இருக்கும்.

மேலும் “எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால், நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

1.சில சமயம் இதெல்லாம் மீறி
2.நமது தொழிலில் சில குறைபாடுகளைக் கண்டால்
3.அந்தக் குறை நம்மை இயக்கிவிடக்கூடாது.

அந்தக் குறை உணர்வு வந்தவுடன் நமக்குக் கோபம் வரும் அல்லது வேதனைப்படுகின்றோம். நாம் இதை நுகர்ந்தவுடனே நமது உயிர் இந்த உணர்வை உணர்ச்சியால் உடல் முழுவதும் பரப்புகின்றது. நமது இரத்தநாளங்களில் கலக்கின்றது.

அப்பொழுது என்ன செய்கின்றது?

நமது உடலில் உள்ள நல்ல அணுக்களில் விஷத்தன்மை போன உடனே
1.அதை ஏற்க மறுக்கும்.
2.நாம் தைரியமாகச் செய்யக் கூடிய எண்ணங்களும் பலவீனமடையும்.

ஆகையினால் அவ்வாறு விடாதபடி அடுத்த நிமிடம் “ஈஸ்வரா..” என்று சொல்லி புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் படரவேண்டும் என்று இரண்டு நிமிடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் (தவறாக வேலை செய்பவர்) அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். அவர் தெளிவான மனம் பெறவேண்டும். தொழிலில் சிந்தித்துச் செயல்படும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று
1.நாம் இங்கே உருவாக்கிவிட வேண்டும்.
2.அப்பொழுது அவரின் உணர்வு நமக்குள் சிறுத்துவிடுகின்றது.

பின் அவரைக் கூப்பிட்டு…, இனிமேல் “பார்த்துச் செய்வீர்கள்… சிந்தனையுடன் செய்வீர்கள்… நன்றாக நீங்கள் செயல்படுவீர்கள்…” என்று சொல்லிவிடுங்கள்.

இதனை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

ஏனென்றால் அவர் குடும்பத்தில் இருக்கும் சிக்கலால் அவர் அறியாமல் செயல்படும் பொழுது அவர் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நமது உடலிலும் கலக்கின்றது.

சேற்றில் விழுந்து வருபவர்களைக் கட்டித் தழுவினால் எப்படி இருக்கும்…!

நம் உடலிலும் சேறாகிவிடும்.

ஆகையினால் அந்தச் சேற்றை நீக்கக் கூடிய அளவிற்கு நம் உடலில் ஒட்டிவிடாதபடி அதனைச் செயல்படுத்த வேண்டும். தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுது ஒவ்வொரு கெட்ட குணத்திலேயும் அதை அடக்கக்கூடிய சக்தியாக…, “நமது எண்ணம்…” வருகிறது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உயிரில் பட்டவுடன், இது கலந்து
1.அவர் நல்ல குணம் வளரவேண்டும் என்கின்ற பொழுது
2.இதையே நமது உயிர் நல்ல அணுக்களாக “நமது உடலில்” மாற்றுகின்றது.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமையின் நிலை வந்தாலும் நமது உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்திலுமே அந்த உணர்வு அனைத்தையும் சேர்த்து நல்லதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்திற்கு வர வேண்டும்.

மிளகாய் தனியாகக் காரமாக இருந்தாலும் குழம்பில் போட்டவுடன் ருசியாகிவிடுகின்றது. உப்பு தனியாகக் கரித்தாலும் குழம்புடன் சேர்க்கப்படும் பொழுது தணிந்து விடுகின்றது.

இதே போல நாம் தொழில் செய்யும் இடங்களில் பலவிதமான நிலைகள் இருந்தாலும் நாம் இது போன்று செய்து பழக வேண்டும். தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நிகழ்காலத்தில் வளர்த்தால் எதிர்காலத்தில் நீங்கள் அரும்பெரும் ஞானி ஆகலாம்

Image

healing hands

மகரிஷிகளின் அருள் சக்திகளை நிகழ்காலத்தில் வளர்த்தால் எதிர்காலத்தில் நீங்கள் “அரும்பெரும் ஞானி ஆகலாம்”

 

நிகழ்காலத்தில் ஒரு பாம்பு தன் இரைக்காக தவளையின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி அதை உணவாக எடுத்துக்கொள்கின்றது.

 

1.ஆனால் தவளையினுடைய நிகழ்காலம் – பாம்பிடமிருந்து தப்பிக்கக் கூடிய எண்ணம்

2.அந்தச் சந்தர்ப்பம் பாம்பின் விஷம் இதற்குள் அதிகமான பின்

3.எதிர்காலம் பாம்பின் நிலைகளாக உருபெறுகின்றது

4.பாம்பின் உடலுக்குள் சென்று தவளை பாம்பாகப் பிறக்கின்றது.

5.ஆக தவளையின் இந்த நிகழ் காலம் அதனுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது.

 

இப்பொழுது மனிதனாக இருக்கும் நாம் வேதனைப்படுவோருடைய உணர்வை நாம் கேட்கின்றோம். அந்த வேதனை உணர்வுகள் நமக்குள் ஆகிவிட்டால் அந்த வேதனை வளர்ச்சி ஆகிவிட்டால்…, “வேதனை என்ற உணர்வுக்கு” – நம் எதிர்காலத்தை அமைத்து விடுகின்றது.

 

இதைப் போன்று கடும் தீமைகளில் இருந்து நாம் தப்புதல் வேண்டும்.

 

ஏனென்றால் இன்றைய மனிதனின் வாழ்க்கையில் எத்தனை துயரங்களை எண்ணுகின்றோமோ அவை எல்லாம் எதிர்காலத்தை நிர்ணயித்துவிடும்.

 

நாம் நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டுமென்றால் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெறுதல் வேண்டும்.

 

1.நமக்குத் துன்பம் வரும்பொழுதெல்லாம் அதை மறக்க

2.மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் – இந்த நிகழ்காலம்

3.எதிர் காலத்தில் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.

 

இதை நீங்கள் பெறும் தகுதிக்கு சிவன்ராத்திரி என்றும் நீங்கள் விழித்திருக்க வேண்டும் என்றும் சொல்வது இதுதான்.

 

1.ஏனென்றால் எத்தகைய தீமையை நாம் கேட்டுணர்ந்தாலும்

2.”அது நமக்குள் உட்புகுந்து” அது நம் எதிர் காலத்தை நிர்ணயித்துவிடக்கூடாது.

3.நிகழ்காலத்தில் அதை வளர்த்திடக் கூடாது.

 

நிகழ்காலத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் எதிர்காலம் நாம் ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.

 

இதைக் காட்டி உணர்த்துவதற்குத்தான் யானையின் சிரசை மனித உடலில் பொருதி விநாயகரைக் காட்டினார்கள் ஞானிகள்.

 

மிருக நிலையில் சேர்த்துக் கொண்ட நிலைகளில் அதனுடைய நிகழ்காலத்தில் ஒவ்வொரு சரீரத்திலும் காத்துக் கொண்ட உணர்வுகளை வளர்த்து வளர்த்து அதனின் எதிர்காலமாக – இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.

 

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கும் துருவ மகரிஷியும் அவரைப் பின்பற்றி சென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர வேண்டும்.

 

1.இந்த நிகழ்காலத்தில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும்

2.அந்தத் தீமையை நீக்க அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால்

3.நம் நிகழ்காலம் எதிர்காலத்தில் ஞானிகள் அடைந்த எல்லையை அடைய முடியும்.

 

ஏனென்றால் பண்பால் அன்பால் பரிவால் எனக்கு இப்படிச் செய்தார்களே எனக்குத் துரோகம் செய்தார்களே என்று இந்த நிகழ்காலத்தில் நாம் அதிகமாக மற்றவருடைய எண்ணத்தை அதிகரித்து விட்டால் என்ன ஆவோம்?

 

நாம் யார் மேல் பகைமை கொண்டோமோ அந்த உணர்வுகள் நமக்குள் வளரப்பட்டு

1.இதை நிகழ்காலத்தில் வளர்ந்தபின்

2.எதிர்காலம் அந்தப் பகைமை உணர்வுகள் நமக்குள் வந்து

3.அவர் உடலில் புகுந்து

4.இந்தப் பகைமையை தீர்க்கும் உணர்ச்சிகளின் வேதனையை உருவாக்கி அந்த உடலைத்தான் வீழ்த்தும்.

 

பின் அந்த வேதனையை உருவாக்கிய பின் எத்தகைய வேதனையின் உணர்வுகள் அணுக்கள் ஆனதோ அடுத்து தேய்பிறையாக மற்ற மனிதனல்லாத உடலைத்தான் உருவாக்கும்.

 

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வதற்குத்தான் இந்த சிவன்ராத்திரி – நீ விழித்திரு.

1.பல கோடிச் சரீரங்களில் இருந்து நீ தப்பினாய்

2.எக்காரணத்தைக் கொண்டும் தீமைகள் வளராதபடி அருள் உணர்வைச் சேர்க்கும் நிலையில்

3.இனி எப்பொழுதும் நீ விழித்திருத்தல் வேண்டும்.

 

அருள் ஞானியின் உணர்வை ஒவ்வொரு நொடியிலும் நீ நுகர்ந்து இந்த வாழ்க்கையில் வரும் மாசினை நீ துடைக்க வேண்டும் என்பதே ஞானிகள் உரைத்தது.

 

அருள் மகரிஷிகளின் உணர்வை நிகழ்காலத்தில் வளர்த்து எதிர்காலத்தில் நமக்குள் அது உருவாக்கிடல் வேண்டும் என்பதனை நினைவுபடுத்தும் நாள் தான் “சிவன் இராத்திரி”.

உலகெங்கிலும் நடக்கும் பல அசம்பாவிதங்களைப் பத்திரிக்கை டி.வி SOCIAL MEDIA மூலமாகப் பார்த்த பின் நம் உடலுக்குள் அணுக்கள் உருவாகி அது உணவுக்காக ஏங்கும் நிலைகள் – அதனின் விளைவுகள்

Image

Social Media -communication

உலகெங்கிலும் நடக்கும் பல அசம்பாவிதங்களைப் பத்திரிக்கை டி.வி SOCIAL MEDIA மூலமாகப் பார்த்த பின் நம் உடலுக்குள் அணுக்கள் உருவாகி அது உணவுக்காக ஏங்கும் நிலைகள் – அதனின் விளைவுகள்

 

விஞ்ஞான அறிவால் உலகெங்கும் நடக்கும் நிகழ்ச்சிகளை நடந்த ஒரு 15 நிமிடத்திற்குள் பத்திரிக்கையிலோ டி.வி.யிலோ கம்ப்யூட்டர் மூலமாகவோ (SOCIAL MEDIA) இன்று நாம் பார்க்கின்றோம்.

 

பல அசம்பாவிதங்களையும் விபத்துக்களையும் ஏனைய எத்தனையோ வகையானவற்றை நாம் காண நேர்கின்றது.

 

1.இப்படியெல்லாம் நடந்தது… நடக்கின்றது.., என்று

2.உடனுக்குடன் நாம் அறிவாக்கப்படும்போது அந்த அறிவின் தன்மை பதிவாகி

3.அங்கே உருவான உணர்வின் ஒலியை நாம் நுகர்ந்து

4.அதே அணுவாக நம் உடலுக்குள் உருவாகிவிடுகின்றது.

 

முதலில் படிக்கும்போது ஒன்றும் தெரியாது. அந்த அணுக்கள் விளைந்தபின் என்ன சொல்வோம்?

 

பத்திரிக்கையிலும் டி.வி.யிலும் மற்றதிலும் தினமும் அதைப் பார்த்தேன் இதைப் பார்த்தேன் என்று நாம் பேசுகின்றோம் அல்லவா?

 

1.இப்படி நடந்தது… அங்கே நடந்தது… இங்கே நடந்தது…, என்று சொல்லும்போது

2.இந்த உணர்வுகள் அந்த அணுக்களுக்குச் சாப்பாடாகப் போகின்றது.

3.அது தன் இனத்தைப் பெருக்க ஆரம்பித்துவிடுகின்றது.

 

நம் நல்ல உணர்வு கொண்டு நல்ல வழியில் எதாவது கொஞ்ச நேரம் பேசுகின்றோமா என்றால் இல்லை. பேசுவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.

 

என்னதான் நல்லது செய்தாலும்…, “இப்படி ஆகிவிட்டதே…” என்ற நிலைகளைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

 

இதைத்தான் “நீ விழித்திரு…!” என்ற நிலைகளில் நாம் அந்தத் தீமையின் நிலைகள் நமக்குள் வரப்படும்பொழுதெல்லாம் இதை இடைமறித்தல் வேண்டும் விழித்தல் வேண்டும்.

 

அப்பொழுது அந்தத் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும். சப்தரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்.  எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் சேர்க்க வேண்டும்.

 

பின் எந்தக் காரியம் நடைபெற வேண்டுமோ..,

1.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்.

2.என்னை நினைக்கும் பொழுதெல்லாம் அவர்கள் நல்லவராகும் நிலைகள் ஆக வேண்டும்.

3.இந்த உணர்வினைக் கலந்து வெளிப்படுத்த வேண்டும்.

4.இத்தகைய நிலைகள் இந்த வாழ்க்கையில் நாம் அதை விழித்திருத்தல் வேண்டும்.

 

தொழிலில் முதலில் லாபம் வரும்போது சந்தோஷமாகத்தான் இருப்போம். கொஞ்சம் நஷ்டம் ஆகிவிட்டால் என்ன செய்வோம்?

 

அங்கே கொடுத்தேன் காசு வரவில்லை.., இங்கே கொடுத்தேன் காசு வரவில்லை.., “இப்படி ஏமாந்து போய்விட்டேன்…” என்று இந்த எண்ணங்கள் தான் வரும்.

 

அப்போது அந்த எண்ணங்கள் உருவாகியது என்றால் அதனால் உருவான இந்த அணுக்கள் அதே நினைவுகளைச் சுவாசிக்கும்போது அந்த எண்ணங்களை அது உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.

 

இப்பொழுது அதே அணுக்கள் இதற்கு உணவாகப்படும்போது இந்த நல்ல உடலில் அந்த தீமையின் செயலால் சோர்வடையச் செய்துவிடும்.

 

சோர்வான எண்ணங்கள் அதற்கு உணவானபின் நாம் எவ்வளவுதான் தைரியசாலியாக இருந்தால் கூட

1.இந்த உடம்பு வலுவாகத்தான் இருக்கும்

2.ஆனால் சோர்வின் தன்மை வரப்படும்பொழுது எந்த வேலையும் செய்ய முடியாது.

3.சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது.

 

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் “நீ விழித்திரு” என்ற நிலையில் துருவ மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று மாற்றிப் பழகுதல் வேண்டும்.

 

எதன் அடிப்படைக் காரணமாக வருகின்றதோ உடனடியாக விழித்து அதைத் தனக்குள் அடக்குதல் வேண்டும்.

 

பத்திரிக்கை மூலமாகவோ, டி.வி மூலமாகவோ, இன்டெர்னெட் மூலமாகவோ

1.தீமையின் உணர்ச்சிகள் உருவாகப்படும்போதெல்லாம்

2.அருள் ஞானியின் உணர்வை நாம் எடுத்து இதை இணைத்து

3.அந்தத் தீமைகளை உடனுக்குடன் அடக்குதல் வேண்டும்.

நாம் ஒளியின் சரீரம் பெற்றால் சூரியனே அழிந்தாலும்  “நமக்கு அழிவில்லை”

Image

New solar family

நாம் ஒளியின் சரீரம் பெற்றால் சூரியனே அழிந்தாலும்  “நமக்கு அழிவில்லை”

 

இன்று சூரியன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.  கார்த்திகை நட்சத்திரம் சூரியனைப் போன்று தனக்கென்று உபகோள்களை அமைத்து ஒரு பிரபஞ்சமாக மாறி வருகின்றது.

 

1.ரேவதி நட்சத்திரமும் விசாக நட்சத்திரமும் இப்படி ஐந்தாறு நட்சத்திரங்கள்

2.பெண்பால் கொண்ட நட்சத்திரங்களும் ஆண்பால் கொண்ட நட்சத்திரங்களும்,

3.தங்களுக்கென்று உபகோள்களை உருவாக்கி ஒரு பிரபஞ்சமாக தன் வளர்ச்சிக்குச் செல்கின்றன.

4.அதனால் நம் பிரபஞ்சத்திற்கு உணவு கிடைக்காது.

 

நமது பிரபஞ்சம் நாளடைவில் பலவீனமடையும். 27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறிவிட்டால் நமது சூரியனுக்கு உணவில்லாது போய்விடும்.

 

ஏற்கனவே இந்த நிலையாகி விட்டது. குறுகிய காலமே வாழும் சூரியனும் செயலிழந்து விடும். பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் கோள்களும் செயலிழந்து விடும்.

 

ஈர்ப்பு வட்டத்தைக் கடந்தால் 2000 சூரியக் குடும்பத்தில் அவைகள் தன் வளர்ச்சிக்கு ஈர்க்கப்பட்டு அதில் சுக்குநூறாகி மற்ற கோள்களுடன் மோதி அல்லது அடுத்த பிரபஞ்சத்தில் நுழையும் போதே ஆவியாக மாறி அதற்கு உணவாகச் சேரும் தன்மைதான் பிறக்கின்றது.

 

நமது பிரபஞ்சத்தில் உருவான உயிரணுக்கள் மீண்டும் பிரபஞ்சத்தில் பரவப்பட்டு மற்ற பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்று மற்ற கோள்களில் சென்று சேர்கின்றது.

 

அந்தக் கோள்களானது நமது பூமியைப் போன்றே தாவர இனங்களையும் மற்ற நிலைகளையும் பெற்றிருந்தால் அங்கு ஈர்க்கப்பட்டு உணர்வுக்கொப்ப உடல் அமைந்து மனிதராக உருப்பெறும் தன்மை உண்டு.

 

அப்படி இல்லையென்றால் கிருமிகளாக விஷத்தின் தன்மையைக் கொண்ட உணர்வின் தன்மை வளர்ச்சியற்ற நிலையில் தான் இருக்கும். நட்சத்திரத்தில் கிருமிகள் இல்லை. கோள்களில் இருக்கும்.

 

இது போன்று கால சூழ்நிலைகள் மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், நாம் இந்த மனித உடலில் இருக்கும் போதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நம்முள் பெற்றிட வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை நம்முள் பெறுவது எளிதான காரியம்.  கடினமான காரியமில்லை. வருடம் முழுவதும் நாம் தவம் இருக்க வேண்டியதில்லை.

 

தினமும் காலை 4.00 மணியில் இருந்து 6.00 மணிக்குள் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று இந்த உணர்வுகளில் ஏங்கியிருங்கள்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளைக் கவர்ந்து உங்களுடைய இரத்த நாளங்களில் கலக்கச் செய்து உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு வீரியச் சத்தைக் கொடுங்கள்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை ஏங்கிப் பெற்றோம் என்றால்

1.நமது உடலில் உள்ள தீய அணுக்களை மாற்றி நல்ல உணர்வுடன் வாழ்ந்திடவும்

2.நோய்களில் இருந்து நாம் தப்பவும்

3.மனபலம் கொண்டு நல்வாழ்க்கை வாழவும் இது உதவும்.

 

நாம் எந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொள்கின்றோமோ அதன் கலவைக்கொப்ப நமது உணர்வுகளையும் உடலையும் மாற்றிக் கொண்டே இருக்கும் நமது உயிர்.

 

அகஸ்தியர் இருண்ட உலகத்தை வென்று ஒளியின் சரீரமாக உணர்வை ஒன்றச் செய்து இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் இணைத்து நம்மிடத்தில் பெருக்கும் பொழுது நாம் பிறவி இல்லா நிலையை அடைகின்றோம்.

 

நந்தீஸ்வரன் சிவனுக்கு கணக்குப் பிள்ளை என்று ஞானிகள் உணர்த்தி உள்ளார்கள். இருளை அகற்றிய அருள்ஞானிகளின் உணர்வை நமக்குள் அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க,

1.அந்தக் கணக்கின் பிரகாரம் நாம் புவியின் ஈர்ப்பைக் கடந்து

2.அருள் ஒளியை நமக்குள் பெருக்கி

3.நமது உடலை விட்டுச் செல்லும் உயிர் எதன் வலு பெற்றதோ அங்கே அழைத்துச் செல்லும்.

 

அங்கே (சப்தரரிஷி மண்டலம்) அழைத்துச் சென்று தொக்கியுள்ள இருளை உடல் பெறும் உணர்வினைக் கரைக்கின்றது.

 

அங்கே கரைத்தால்தான் இந்த பிரபஞ்சத்தில் பரவப்பட்டு பிரபஞ்சத்தில் வரும் இருளை ஒளியாக மாற்றுகின்றது.

 

அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இந்த பிரபஞ்சத்திலிருந்து விஷத்தின் தன்மையை தம்முள் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர வேண்டும்.

 

அதை நுகர்ந்து அந்த ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் நமது ஆறாவது அறிவு ஏழாவது நிலை பெறுகின்றது. நாமும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்ந்து விண்ணில் ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ முடியும்.

 

சூரியனே ஒரு காலம் அழிந்தாலும் நமது ஒளியின் சரீரம் மாறாது.

 

அகஸ்தியருக்கு முன் நஞ்சுகள் வலுவை இழந்தது போன்று நம்முள் சேர்ந்த நஞ்சுகளும் வலு இழக்கின்றன.

 

பேரருள் பேரொளியின் தன்மை நம்முள் பெருகி பிறவியில்லா நிலையினை பெருவீடு பெரு நிலையினைப் பெறும் தகுதியினை நாம் அனைவரும் பெறுகின்றோம்.

துரத்தி வரும் நாயைக் கண்டு பயப்படுகின்றோம்…! – மன வலிமை கொண்டு அதைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை

Protected Zone _ divine

துரத்தி வரும் நாயைக் கண்டு பயப்படுகின்றோம்…! – மன வலிமை கொண்டு அதைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை 

குருநாதர் எம்மைக் காட்டுப் பகுதியில் அழைத்துச் சென்றார்.

நாம் சும்மா இருந்தாலும் மிருகங்கள் நம்மைத் தாக்க வரும். தாக்க வரப்படும்போது அதனின் வலிமையைக் கண்டு நீ அஞ்சிவிட்டால் அஞ்சிடும் உணர்வின் வலிமை உனக்குள் வந்துவிடுகின்றது என்றார் குருநாதர்.

ஆனால் அச்ச உணர்வுகள் வந்தபின் உன் நல்ல குணங்களும் உன்னைப் பாதுகாக்கும் குணங்களும் எங்கேங்கேயோ போய் விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அச்ச உணர்வுகள் உனக்குள் வலிமையாகி விடுகின்றது. அந்த வலிமையுடன் நீ எதைச் சேர்க்க வேண்டும்?

மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1.அந்த மகரிஷிகளின் உணர்வு கொண்டு
2.இதே நிலைகள் கொண்டு சாந்த உணர்வாக
3.அந்த நட்பின் தன்மையாக நீ எண்ணி – அதைப் பார்.
4.அப்பொழுது அந்த உணர்வுகள் உடனே தணியும்.

அஞ்சிடும் உணர்வை நீ எடுத்துக் கொண்டால் நம்மை எதாவது செய்வான் என்று அந்த மிருகங்கள் நிச்சயம் உன்னைத் தாக்கும்.

உதாரணமாக, ஒரு நாய் துரத்துகிறது என்று வைத்துகொள்வோம்.

1.நீங்கள் அஞ்சிப் பாருங்கள்…, உடனே துரத்தி வரும்.
2.ஆனால் அந்த வலிமைமிக்க நிலைகளை எண்ணிக் கொஞ்சம் நிமிர்ந்து பாருங்கள்.
3.குரைத்துப் பக்கத்தில் வராது… அப்படியே நிற்கும். இதைப் பார்க்கலாம்.

நினைவின் ஆற்றல் நீங்கள் பயந்து போகும்போது பாருங்கள். நீங்கள் நாயைப் பார்த்தால் கண்களின் ஒரு விதமான ஒளி வரும்.

கண்களைப் பார்க்கும்போது தாக்கும் உணர்வு வரப்படும்போது நீங்கள் பயந்தால் போதும்.
1.அதன் உணர்வை வலிமையாக்கி “உர்ர்ர்…” என்று நிற்கும்.
2.அதனுடைய பார்வையே நம்மைப் பயமாக்கும்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து அதற்குச் சாந்த உணர்வு வர வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள். அது கண்கள் மங்கும்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஏனென்றால் நாயாகவும் மற்ற உயிரினங்களாகவும் இருந்துதான் நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம். இதைத்தான் இந்த நிலையில் நீ விழித்திரு என்ற நிலைகளில் எந்த அச்சுறுத்தும் உணர்வுகள் வருகின்றதோ அந்தத் தருணங்களிலெல்லாம் இதை நீ பாய்ச்சிப் பழகு.

அதனால்தான் ஒவ்வொரு நொடிகளிலும் நீ விழித்திரு என்றும் பல கோடிச் சரீரங்களிலும் தீமையைக் கண்டுணர்ந்து தீமையிலிருந்து விடுபடும் உணர்வை வளர்த்து வளர்த்து மனிதன் ஆனோம்.

ஆகவே தீமையைக் கண்டு கொள்ளும் அந்த உணர்வின் சக்தி மனிதனுக்கு உண்டு. ஆகையினால் கார்த்திகேயா.

ஆனால் அதே சமயத்தில் தெரிந்து கொண்டபின் தீமையை அடக்கும் சக்தி மனிதனுக்கு உண்டு என்ற நிலையை உருவாக்குகின்றார் குருநாதர்.

இதையெல்லாம் அனுபவ ரீதியில் தெரிந்து கொள்வதற்காகத்தான் காட்டுப் பகுதியில் என்னை அழைத்துச் சென்று அதிலிருந்து நீ எப்படித் தப்புவது? நீ எப்படித் தப்ப வேண்டும்? அந்த உணர்வின் இயக்கங்கள் உன் உடலுக்குள் என்ன செய்கின்றது? என்று அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

குருநாதர் உணர்த்திய வழியில் தான் உங்களுக்குள் “தீமையை நீக்கும் ஆற்றலை” உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

அகண்ட பேரண்டத்தின் இயக்கம் – UNIVERSE

Image

Universe - Cosmos

அகண்ட பேரண்டத்தின் இயக்கம் – UNIVERSE

 

நாம் இன்று ஒரு 2000 சூரியக் குடும்பத்தில் இருக்கின்றோம். ஈஸ்வர ஆண்டில் ஆரம்பித்து 60 ஆண்டுகள் முடிந்தால் 2000 சூரியக் குடும்பமும் ஒரு சுற்று சுழன்று முடிந்துவிடும்.

 

2000 சூரியக் குடும்பங்களும் தன்னைத் தானே ஒரு சுழற்சி சுழல்வதை 60 ஆண்டுகளாகக் கணக்கிட்டார்கள் நம் ஞானிகள்.

 

இது ஒருங்கிணைந்து இயக்கச் செய்து பெரும் குடும்பமாக 2000 சூரியக் குடும்பங்கள் இருப்பதைப் போல எத்தனையோ 1000-க்கணக்கான சூரியக் குடும்பங்கள் இந்த அகண்ட பேரண்டத்தில் உண்டு.

 

ஒரு பிரபஞ்சம் என்பதே பல கோடி மைல்களில் எண்ணிலடங்காத தூரத்தில் உள்ளது.

 

அதை எட்டிப்பிடிப்பதற்கு இன்று விஞ்ஞானிகள் ஒரு நொடிக்குள் பல இலட்சம் மைல்கள் சென்றாலும் அதை “ஒளி ஆண்டு” (LIGHT YEAR) என்று பல ஆண்டுகளைச் சொல்கின்றார்கள்.

 

இவ்வாறு விரிவடைந்த இந்த உணர்வின் தன்மை ஒரு பிரபஞ்சத்திற்குள் பேரண்ட குடும்பத்தின் கலவைகள் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த நிலைகள் கொண்டு

1.அது திரண்டு உருண்டு

2.ஒவ்வொரு பிரபஞ்சமும் இணைந்த நிலைகள் கொண்டு

3.ஒன்றின் துணை கொண்டு ஒன்று

4.ஒரு வட்டமாக சுழற்சியின் நிலை பெறுகின்றது.

 

ஒரு சூரியக் குடும்பம் அது எவ்வாறு ஒரு பிரபஞ்சமாக இயங்கி ஒரு சீரான நிலையில் அது இயக்கப்படுகின்றதோ இதைப் போல பேரண்டக் குடும்பமும் ஒரு சீராக இயங்கி பல சூரியன்கள் அதிலே உருவாகின்றது.

 

இதைப் போன்று பேரண்டத்தின் பெரும் குடும்பத்திலே ஒரு சூரியக் குடும்பத்தில் வியாழன் கோளுக்கு ஒரு ஆற்றல் இருந்தாலும் செவ்வாய்க் கோளுக்கு ஒரு ஆற்றல் உண்டு.

 

இதைப் போல, பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரபஞ்சத்திற்கும் கோள்களில் சில வித்தியாசங்களும் சில உணர்வின் மாற்றங்களும் இருக்கும்.

 

அதே போன்று அதிலே தோன்றிய பூமியின் தன்மையிலும் அங்குள்ள மனிதனுடைய வளர்ச்சிகளிலேயும் ஒவ்வொரு பூமிக்கும் ஒவ்வொரு மனித வளர்ச்சி உண்டு.

 

அதாவது ஒரு பிரபஞ்சம் தோன்றினால் அங்கே ஒரு பூமி உண்டு. அந்த பூமிக்குள்தான் உயிரணுக்களின் தோற்றம் உண்டு. அது தன் வளர்ச்சியில் எடுக்கும் பொழுது மனிதனாகின்றது.

 

ஆக ஒவ்வொரு சூரியக் குடும்பத்திற்குள்ளும் மனிதன் உண்டு. நம்மைப் போலவே பேரண்டத்தில் எத்தனையோ பூமிகளில் மனிதர்கள் உண்டு.

 

மனிதனான பின் அதில் வளர்ச்சி அடைந்து ஒளியின் சுடராகி அப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் அகண்ட பேரண்டத்தில் உண்டு.

 

இதையெல்லாம் யாம் படித்துத் தெரிந்து கொள்ளவில்லை.

 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அருள் வழியில் யாம் உணர்ந்த உண்மைகளைத்தான் சொல்லுகின்றோம்.

 

அதை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். பதிவாக்கிய அந்த ஆற்றல்களை நீங்கள் நுகர்ந்தால் நீங்களும் உணர முடியும்.

 

அதையெல்லாம் பார்க்க முடியுமா…! ஆயுள் நமக்குப் போதுமா…! என்று நீங்கள் எண்ண வேண்டியதில்லை. உங்களால் நிச்சயம் முடியும்.

 

நான் மூன்றாம் வகுப்பு தான் படித்தேன். அது கூட முழுமை கிடையாது. குரு பதிவாக்கிய உணர்வின் துணை கொண்டு என்னால் அறிந்துணர முடிந்தது.

 

படித்த உங்களால் முடியாதா…?

 

மனிதனுடைய எண்ணத்தின் ஆற்றல் மிகவும் வீரிய சக்தி கொண்டது.

1.அந்த மெய் ஞானிகள் உணர்வின் துணை கொண்டு

2.அந்த அலை வரிசையில் நாம் நுகர்ந்தால் அறிந்துணர முடியும்

3.அந்த ஞானிகளுடன் ஐக்கியமாகி நாமும் வேகா நிலை அடையலாம்.

4.என்றும் பதினாறாக ஏகாந்த நிலை எய்தலாம்.

 

இது மனிதனாகப் பிறந்த எல்லோராலும்… “சாத்தியமானதே”.