மனிதனுடைய கடைசி எல்லை

Polaris, North star, Big dipper.png

மனிதனுடைய கடைசி எல்லை – உத்தராயணம்

தீமைகளை வென்று இன்றும் ஒளியின் சுடராக நிலையாக வாழ்ந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதனைப் பின்பற்றித் தொடர்ந்து சென்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

சப்தரிஷி மண்டலம் பூமியின் துருவப் பகுதியில் நின்று அந்தத் துருவப் பகுதியிலேயே இந்தச் சுழற்சியின் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலத்தை எடுத்துக் கொண்டால் துருவத்தினை மையமாகக் கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் தான் சுழன்று வரும்.

அது ஒரு வட்டமாக அமைந்திருக்கும்.

நம் பூமியில் மனிதனாக வாழ்ந்தவர்கள் ஒளியின் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து அதனின் உணர்வின் சத்தை இங்கே பரப்பிக் கொண்டுள்ளார்கள்.

அதை எடுத்துப் பழகியவர்கள் வெளிப்படுத்திய நிலைகள் பல உண்டு. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற்றவர்.

1.அதிலே கருவாகி உருவாக்கிய
2.அணுவின் வித்தாக உருவான அந்த நிலையைத்தான்
3.எமக்குள் பதிவு செய்து அதை நுகரும்படி செய்தார்.

நுகர்ந்த அந்த உணர்வின் சத்தைத்தான் இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய்ஞானிகள் உணர்வை நீங்கள் வளர்த்து அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால் உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம்.

ஏனென்றால்,
1.இந்த உடல் பற்றை அகற்றி
2.உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
3.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழவேண்டும்.

அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

தியானமே நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும். பிறவியில்லா நிலை பெறுவதே நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதே நம்முடைய  வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

1.இந்த உலகில் நாம் எந்தப் பொருளைத் தேடிப் பெற்றாலும்
2.அந்தப் பொருள் நமக்குச் சொந்தமாகப் போவதில்லை.
3.நாம் நம்மிடத்தில் சொந்தமாக்க வேண்டியது அழியா ஒளிச் சரீரம் பெறும் உணர்வைத்தான்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் சேர்த்து என்றைக்குமே ஒளியின் உடலாகவும் நாம் எந்தத் துயரம் இல்லாத நிலையை அடைவதும் தான் “நமது கடைசி எல்லை”.

ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து செய்பவரின் நல்ல குணங்கள் ஏன் மாறுகின்றது…?

Charector

ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து செய்பவரின் நல்ல குணங்கள் ஏன் மாறுகின்றது…?

இந்த பிரபஞ்சத்தில் உள்ள  27 நட்சத்திரங்களின் உணர்வுகள் எதில் கலக்கின்றதோ ஒரு செடியில் கலந்தாலும் அந்த நட்சத்திரத்தின் நிலை கலக்கப்படும் பொழுதுதான் அதற்குத் தக்கவாறு அந்தத் தாவர இனச் சத்தை உருவாக்கும்.

இந்த பூமியில் செடிகள் எப்படி முளைக்கின்றதோ அதே மாதிரிதான் நமது உடலில் நாம் சுவாசிக்கும் உணர்வுக்குத் தக்கவாறு அணுக்கள் விளையும்.

மலைப் பகுயில் விளைவது கீழே தரைப் பகுதியில் விளைவதில்லை.

இதைப்போன்று நமது உடலில் அந்தந்தக் காலப்பருவமும் அதனுடைய நிலைகள் வரும்பொழுது அணுக்கள் விளைகின்றது. அதனதற்குத் தக்கவாறுதான் இது கவரப்படும் பொழுது சுவாசத்தை எடுத்து அது விளைகின்றது.

அந்த அணுக்கள் அது இருந்த இடத்திலிருந்து விளைகின்றது. இத்தனைக்கும் சாப்பாடு கொடுப்பது நமது உயிர்தான். அதை உருவாக்குவதும் நமது உயிர்தான்.

சூரியனோ சந்தர்ப்பத்தில் ஒன்றோடு ஒன்றை இணைக்கச் செய்கின்றது. ஒரு வித்தை உருவாக்குகின்றது.

அது விளைந்த பின் எதை எடுத்து வித்தை உருவாக்கியதோ புவி ஈர்ப்பின் துணை கொண்டு அதற்கு அதைக் கொடுத்துச் செடியாக வளர்க்கின்றது.

இதே மாதிரித் தான்
1.நாம் நல்ல குணங்களோடு இருக்கின்றோம்.
2.பிறருக்கு உதவி செய்கின்றோம்.
3.அவர்களது உடலில் இருந்து வரும் உணர்வுகள் நம் எண்ணங்களோடு கலந்து
4.உயிரணுவாக மாறும் பொழுது புதுப் புது குணங்களாக மாறுகின்றது.

நேற்று நன்றாகப் பேசினார் ஆனால் இன்று மோசமாகப் பேசுகின்றார் என்று சொல்கின்றோம். ஏனென்றால் அவர் யாரிடம் அதிகமாகப் பேசுகின்றாரோ அந்த உணர்வுகள் இங்கே வளர்ச்சி பெறும்.

இவர் சுவாசிக்கும் அணுக்களின் தன்மை வளரப்படும் பொழுது இதற்கு முன் மோசமாகப் பேசினாலும் நல்ல மணங்கள் வந்தபின் நல்ல எண்ணங்களைப் பேசுவார்.

சிலர் உயர்ந்த எண்ணங்களில் இருப்பார்கள். பிறர் சொல்லும் கஷ்டங்களைக் கேட்டிருப்பார்கள். அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் கேட்டிருப்பார்கள். இந்த உணர்வுகள் அணுக்களாகப் பெருகி இருக்கும். அப்பொழுது
1.நல்லவராக இருந்து நான்கு பேருக்கு பஞ்சாயத்து செய்தவர்
2.பிறருடைய குறைகளை எல்லாம் கேட்டு
3.அது அணுக்களாக விளைந்த பின்
4.தப்புள்ளவருக்கு நியாயத்தைப் பேசுவார்.

பஞ்சாயத்துகளில் பார்த்தால் இதுதான் வரும்.

1.முதலில் நியாயஸ்தர் என்று நினைப்போம்,
2.பிறருடைய உணர்வுகள் அணுக்களாக விளைந்த பின் நியாயங்கள் மாறிவிடும்.
3.இந்தத் தப்பிற்குத் தக்கவாறுதான் அவருடைய தீர்ப்பும் வரும்.

இந்த உணர்வுகள் ஏன் இந்த மாதிரி மாற்றமடைகின்றது என்றால் இது எல்லாம் இயற்கையின் சில நிலைகள்தான்.

அதைப் போன்றுதான் குரு காட்டிய உணர்வை உபதேசிக்கின்றோம். அவர் எனக்குள் உபதேசித்தார். அவர் உபதேசித்ததை உங்களிடம் சொல்கின்றோம். இது உங்களுக்குள் பதிவாகின்றது. இது உங்களுக்குள் வளர்ச்சியாகிக் கொண்டே இருக்கும்.

எனக்கு எப்படியெல்லாம் நல்வழி காட்டினாரோ அந்த நினைவு சிறுகச் சிறுக விளைந்து,
1.”நான் பெற்ற சக்தி மாதிரி…
2.அதை அறியக் கூடிய சக்தி” நீங்களும் பெறுகின்றீர்கள்.

குரு உடலில் வளர்த்து வந்த எண்ணம் எனக்குள் இருக்கின்றது. அதை யாம் பெற்று எமக்குள் வளர்த்து வந்த உணர்வைத் திரும்பச் சொல்லும் பொழுது அது வருகின்றது.

குருவால் பெற்ற நிலைகள் எனக்குள் வளர்வதும் அது உங்களுக்குள்ளும் விளைகின்றது.

1.ஒரு செடி எந்த ஊரில் விளைந்ததோ
2.இந்த ஊரில் போய் வித்தை வாங்கி வந்தேன் என்று சொல்கின்றீர்கள்.
3.அதே மாதிரி குருவினுடைய அருளை வைத்து எனக்குள் விளைகின்றது.
4.குருநாதருடைய நிலைகளை என்னிடமிருந்து (ஞானகுரு) பெற்று வந்தேன் என்றுதான் நீங்கள் சொல்வீர்கள்.

குருநாதர் என்னிடம் சொன்னது பற்றி நான் உங்களிடம் சொல்கின்றேன். நான் சொன்னதை நீங்கள் சொல்கின்றீர்கள். ஒன்றின் தன்மை ஒன்று நாம் தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு வருகின்றது.

குருநாதர் அவர் கண்டுணர்ந்த உணர்வுகள் எத்தனையோ கஷ்டப்பட்டு அதைப் பெற்றார். ஆனால், அதைத் தெரியப்படுத்துவதற்கு எத்தனையோ ரூபங்களில் உணர்த்தி அதைப் பெறச் செய்தார்.

1.எல்லோரும் அந்த மாதிரிக் கஷ்டப்பட முடியாது.
2.ஆனால் அவர் கொடுத்த நிலைகளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும்.
3.உலகைக் காத்திடும் அருள்ஞானிகளாக மெய்ஞானிகளாக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து மெய்ஞானிகளை உருவாக்கும் தன்மைக்கு வளர வேண்டும்

Image

Gnani - Sage

heaven

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து மெய்ஞானிகளை உருவாக்கும் தன்மைக்கு வளர வேண்டும்

 

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறப்படும்போது இந்த உடலும் நலியத்தான் செய்யும்.

 

அசுர உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட இந்த உடலில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வரப்படும்போது அசுர உணர்வால் வளர்க்கப்பட்ட அணுக்கள் மாறத்தான் செய்யும்.

 

அதே சமயத்தில்

1.நம் உயிரின் அணுக்கள் ஒளியாக்கப்படும்போது

2.இதுவும் (உடலிலுள்ள அணுக்கள்) குறுகப்பட்டு அந்தச் சத்தினை வடிக்கப்பட்டு

3.உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது

4.இந்த உடல் கட்டாயம் மடிந்தே தீரும்.

 

இந்த உணர்வின் தன்மை ஒளியாக்கப்பட்டு உயிருடன் ஒன்றப்படும் பொழுது ஒளியின் உடலாக மாற்றிச் செல்லும்.

 

எப்படி ஒரு புழு எதன் உணர்வை எடுத்ததோ அதற்குள் தான் சிக்கப்பட்டு அது தட்டாண் பூச்சியாக மாறுகின்றது. அதனுடைய முட்டைகளை எதன் எதனில் இடுகின்றதோ அந்த உணர்வுக்கொப்ப மாறுகின்றது.

 

பல வகையான பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது. இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

 

இதைப்போலத் தான் நமது மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும். இந்த நாட்டில் விஞ்ஞானத்தால் வந்த பேரழிவை அவர்களால்தான் மாற்றமுடியும்.

 

நாம் இந்த உடலில் குறுகிய காலமே வாழ முடியும். அகஸ்தியரைப் போன்ற உலகைக் காத்திடும் மெய்ஞானிகளை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

ஒளியின் உணர்வாகவே தோன்றிடும் ஒரு “புதிய” பிரபஞ்சம்

Image

spirit world - Polaris

ஒளியின் உணர்வாகவே தோன்றிடும் ஒரு “புதிய” பிரபஞ்சம் நம் துருவத்தின் வழியாகத் தான் இன்று உருவாகின்றது (வேறு எங்கும் இது இல்லை)

இந்தப் பிரஞ்சம் அழிந்தாலும் இதில் ஒளியான உணர்வுகள் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அதீதமாகின்றது.

ஒளியின் உடலாக அது ஒரு பிரபஞ்சமாக மாறுகின்றது. நம் சூரிய குடும்பம் எப்படியோ இதைப்போல உயிரணு தோன்றி… ஒளியின் உடலாக்கும் “அது ஒரு பிரபஞ்சம்”.

இன்னும் எங்கேயும் உருவாக்கவில்லை. இப்பொழுது இது உருவாகும்.

அப்படி உருவாக்கும் தன்மை வரப்படும்போது நாளடைவில் இதனுடைய வளர்ச்சியில் ஒளியான பிரபஞ்சமாகும்.

1.எத்தனையோ கோடி சூரியன்கள் உருவானாலும் பிரபஞ்சங்கள் உருவானாலும்

2.உயிரணு தோன்றி பிரபஞ்சத்தின் தன்மை அடையும்

3.ஒரு ஒளியின் உணர்வின் பிரபஞ்சமாக அமையும் தன்மை

4.நமது பிரபஞ்சத்தின் நிலைகளில் இருந்துதான் உருவாகும்.

நமது எல்லையில் அந்தத் துருவ எல்லையில் தான் இந்தப் பிரபஞ்சங்கள் அமைந்து இருக்கின்றது.

எது?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்.

இது வளர்ச்சி அடையப்படும்போது அடுத்து…, இதனுடன் சேர்ந்த 2000 சூரியக் குடும்பங்கள் அதுவும் வளர்ச்சி அடையப்படும்போது அதுவும் இணைந்து ஒளியின் சிகரமாக மாறும்.

அந்த நிலை உருப்பெற எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகிவிடும்.

1.இருப்பினும் நம் உயிரின் தன்மை வரப்படும் பொழுது என்றுமே ஏகாந்த நிலையாக

2.இந்த  உடலுக்குள் சிக்கி உடலை வளர்க்கும் உணர்வுகளாக இல்லாதபடி

3.உயிரைப் போன்று ஒளியின் உணர்வாக நஞ்சை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.

ஏனென்றால் சிறிது காலம் தான் நாம் வாழ்கின்றோம். இராமேஸ்வரத்தில் அதைத்தான் காட்டுகின்றனர்.

சிறிது காலமே வாழும் இந்த மனித உடலில் வாழும்போதே நமக்குள் மனதைக் குவித்து ஒன்றாக்கும் தன்மை வர வேண்டும்.

இந்த உடலுக்குள் பகைமை என்ற தன்மை விடாதபடி குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் என்ற உணர்வைத் தனக்குள் சேர்த்து உயிரென்ற உணர்வின் தன்மை நமக்குள் ஒன்றாக்குதல் வேண்டும்.

சாதாரண மனிதனும் இதைத் தெரிந்து வாழ்வதற்காகப் புராணங்களை வைத்து ஒவ்வொரு நிலையும் கொண்டு வருகின்றனர் மெய் ஞானிகள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து மெய்ஞானிகளை உருவாக்கும் தன்மைக்கு வளர வேண்டும்

Image

தீமைகள் நம் உடலுக்குள் சுழன்று வருவதற்குள் அதைச் சுத்தப்படுத்தும் வழி

Divine cleaning.JPG

தீமைகள் நம் உடலுக்குள் சுழன்று வருவதற்குள் அதைச் சுத்தப்படுத்தும் வழி

வாழ்க்கையில் வரும் துன்பங்களை நீக்க அன்று மெய்ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை மக்களுக்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அந்த வழியைத்தான் யாம் உபதேசிக்கின்றோம்.

தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் எப்படி செம்பும், பித்தளையும் வெள்ளியும் ஆவியாகச் செல்கின்றதோ அதைப் போன்று நாம் ஆத்ம சுத்தி செய்து நமக்குள் வரும் தீமைகளை நீக்க முடியும்.

ஓம் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி விண்ணை நோக்கி நாம் உணர்வைச் செலுத்த வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும். அப்படி விண்ணிலிருந்து சுவாசித்து அதை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் நல்லதை எண்ணி வாழும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் சந்தர்ப்ப வசத்தால் நமக்குள் சங்கடமோ துன்பமோ பயமோ அவசரமோ ஆத்திரமோ இதைப் போன்ற உணர்ச்சிகளை நாம் நுகர நேருகின்றது.

இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் உமிழ்நீராகச் சேர்ந்து அந்த உணர்வின் அலைகள் நம் உடலுக்குள் அது சுழன்று வருவதற்குள் நாம் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்யும் பொழுது அதைப் பரிசுத்தப்படுத்தி நல்ல உணர்வுகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருணைக்கிழங்கை நாம் வேகவைத்தவுடன் அதில் உள்ள விஷத்தின் தன்மைகள் மாறுகின்றது. இதைப் போன்று
1.கடினமான சொற்கள் நம்மை இயக்கவும் அறியவும் உதவினாலும்
2.அது நம் உடலுக்குள் போய்த் தீங்கு செய்யாதபடி
3.அதை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் நல்லதைக் காக்க வேண்டும் என்றுதான் அந்த உணர்வுகளை நுகர்ந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நல்ல உணர்வின் தன்மையைக் காக்க முடிந்தது. நல்ல செயல்களை அறியவும் செய்யவும் முடிந்தது.

ஆனால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே மோதியபின் அது இயக்கி அந்த உணர்ச்சிகளை ஊட்டி நம் உடலை இயக்கியபின் தான் தெரிகின்றது.

இந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் கலப்பதை அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த அசுத்தமே நம் உடலில் சேர்ந்துவிடுகின்றது.

அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற முறை.

வாரத்தில் ஒரு நாள் நாம் கூட்டுக் குடும்ப தியானம் செய்து, நம் மூதாதையர்களை விண் செலுத்தினால்தான் இந்தச் சுலப நிலைகள் பெறமுடியும்.

இன்று விஞ்ஞானிகள் எப்படித் தமக்குள் எதனதன் நிலைகள் கொண்டு பொருத்தி இணைத்துச் செய்கின்றனரோ அதே போன்றுதான்
1.மெய்ஞானிகள் தன் உடலின் தன்மையில்
2.இயற்கையின் சக்தியைத் தனக்குள் தொடர்பு கொள்வதற்கு
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி
4.உணர்வின் எண்ணத்தைப் புலனறிவான தன் கண்ணுக்குள் செலுத்தி
5.கண்ணின் நினைவை விண்ணை நோக்கி ஏகி
6.அதன் வழியிலே தனக்குள் சக்தியைப் பெருக்கிக் கொண்டார்கள்.

இப்படி அவர்கள் பெற்ற அந்த சக்திகளை நீங்கள் பெறுவற்காக வேண்டித்தான் அவர்கள் எம்மார்க்கங்களிலே சென்றார்களோ அவ்வழிகளிலே உங்களைச் செல்லச் செய்வது.

இதில் ஒன்றும் கஷ்டமில்லை.

வாரத்தில் ஒரு நாள் வீட்டில் எல்லோரும் சேர்ந்து தியானம் செய்து உங்களுக்குச் சக்தியைக் கிடைக்கச் செய்து கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கக்கூடிய ஆற்றலை இந்த முறைப்படி செய்து கொண்டால் விண்ணுலகையும் அண்டத்தையும் நீங்கள் காணலாம்.

அந்த அண்டத்திற்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையை நமக்குள் இழுத்துத் துன்பப்படுத்தும் நிலைகளைக் குறைக்கலாம்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

நமக்கு வலு கொடுப்பது நம் எண்ணங்களே

Image

Thought power - Mindful.jpg

நமக்கு வலு கொடுப்பது “நம் எண்ணங்களே”

ஒரு ஏழைத் தொழிலாளி வெறும் சோற்றுக் கஞ்சியும் வெங்காயமும் சாப்பிட்டுவிட்டுக் காலை முதல் மாலை வரை கடப்பாரை மண் வெட்டி சகிதமாகக் கடுமையாக உழைக்கின்றார்.

பாதாமும் பிஸ்தாவும் சாப்பிட்டு உடலை வளர்த்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவரிடம் கடப்பாரையைக் கொடுத்து வேலை செய் என்று கூறினால் என்ன செய்வார்?

அவரால் ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியாது. வேர்த்து விறுவிறுத்துப் போய்விடுவார்.

ஏழைத் தொழிலாளிக்கு அன்று வேலை பார்த்தால் தான் சம்பளம். சாப்பாடு எனும் பொழுது “வேலை பார்த்தே ஆகவேண்டும்” எனும் கட்டாயம்.

பணக்காரருக்கு அப்படிக் கஷ்டப்பட வேண்டும் என்று அவசியமே இல்லை. அதனால் அவரால் சிறிது நேரத்திற்கு மேல் கடின வேலை செய்ய முடிவதில்லை.

1.“உடலுக்கு வலு கொடுப்பது நமது எண்ணங்களே” என்று நாம் உணர வேண்டும்.

2.எண்ணத்தின் வலு கொண்டுதான் அன்று மெய்ஞானி விண்ணின் ஆற்றலைப் பெற்றான்.

3.விண்ணிலே இன்று ஒளியின் சரீரமாக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளான்.

4.எண்ணத்தின் வலு கொண்டு நாமும் அவர்களைப் போன்று விண்ணின் ஆற்றலைப் பெற்று

5.அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

ஒருவர் முரட்டுத்தனமாக அதட்டித் திட்டிக் கொண்டிருந்தால் அதைத் தடுக்கும் வழி

Soul protection.jpg

ஒருவர் முரட்டுத்தனமாக அதட்டித் திட்டிக் கொண்டிருந்தால் அதைத் தடுக்கும் வழி 

உயிரினங்களில் எப்படி உடல் மாற்றமடைகிறது? உடல்கள் மாறி மாறி நாம் எப்படி மனிதனாக வந்தோம்? என்பதனை அறியச் செய்வதற்காக குருநாதர் எம்மை மிக மிகக் கஷ்டத்தில் ஆழ்த்தினார்.

கஷ்டங்கள் நேரும் பொழுதெல்லாம் எப்பொழுது இவரைவிட்டுத் தப்பித்து ஓடிவிடுவோம் என்ற நினைவு வரும். அந்த நேரத்தில் மேஜிக் மாதிரி சில அற்புதங்களைச் செய்து என் மனதைத் திருப்பிவிடுவார்.

இது போன்று என்னயறியாமலேயே பல நிலைகளை நம் குருநாதர் செய்தார். உங்களை அது போன்று காட்டில் கஷ்டபடச் செய்யவில்லை.

கரடிகளும் புலிகளும் நாட்டுக்குள்ளேயே இருக்கின்றது. மனிதன் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் தன்மை அதிகமாகி மனிதன் வாழ முடியாத நிலைகளில் தாக்குகிறது.

அப்பொழுது அந்த உணர்வுக்கு இரையாகி விடுகின்றோம். அதன் நிலைக்குச் சென்றுவிடாமல் இந்த உணர்விலிருந்து நாம் மீள வேண்டும்.

ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. நரி ராஜதந்திரமாக இருக்கும். புலி தன் வீரியத்தன்மை கொண்டு செயல்படும்.

ஆடு மாடுகள் காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் போது சிறிது நேரம் நாம் உற்றுப்பார்த்தோம் என்றால் “இவன் ஏதோ செய்கிறான்” என்று ஓடி விடும் அல்லது நம்மைத் துரத்திக்கொண்டு வரும்.

ஒரு சமயம் குருநாதர் காட்டெருமை கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கச் செய்தார்.

1.அது முட்டிவிடுமோ.., முட்டிவிடுமோ.. என்று எண்ணி
2.உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது
3.எம்மைத் துரத்தி வந்துவிட்டது.

அப்பொழுது குருநாதர் நீ தப்ப வேண்டும் என்றால் அந்த மரத்தின் பின்னால் போய்விடு என்று சொல்லிவிட்டார்.

மரத்தின் அருகில் யாம் நின்று கொண்டிருந்த சமயம் காட்டெருமை வேகமாக வருவதைப் பார்த்து மரத்தின் பின் ஒதுங்கிக்கொண்டேன். வேகமாக வந்து முட்டியதில் அந்த மரமே கதிகலங்கியது.

மரத்திலிருந்து பிஞ்சு காய்கள் எல்லாம் உதிர்கின்ற அளவுக்கு அழுத்தமாகத் தாக்கியது. அதனுடைய உணர்வுகள் வலுவான நிலையில் முட்டிth தன்னைக் காத்துக்கொள்ள இது மாதிரித் தாக்க வருகிறது.

இது போன்று யாராவது கோபமாக முரட்டுத்தனமாக அதட்டித் திட்டினார்கள் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

1.நீங்கள் சொல்வதை நீங்களே “முழுவதும் அனுபவித்து”
2.தெளிவாகத் தெரிந்து “அதை உணர்ந்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட வேண்டும்.

ஈஸ்வரா.., என்று நம் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும் என்று அவர்கள் உணர்வை நமக்குள் வராதபடி தடுத்துவிட வேண்டும்.

அவ்வாறு தடுத்துவிட்டு,1.சரி., அவர்கள் செய்தார்கள்2.அவர்களாகவே உணர்வார்கள் என்று விட்டுவிட்டால்3.இந்த உணர்வு அவர்களுக்குள் சென்று4.நிச்சயம் தீயதை மாற்றி நல்லதாக அவர்களுக்குள் விளையும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஏனென்றால் இந்த உயிர் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உருவாக்கிவிடுகிறது.

1.இந்த உடல் நமது அல்ல அவனுடையது.
2.உணர்வால் அறியக்கூடிய உணர்ச்சி நமக்கு உண்டு
3.எண்ணியதை உருவாக்கிக் கொடுப்பது அவன் (உயிரின்) வேலை.

ஆகவே ஒவ்வொன்றிலும் நாம் நல்லதைச் சேர்த்து எண்ணும்போது அதே உணர்வு நமக்குள் நல்லதாக மாற்றுகின்றது. தீமைகள் அகன்று செல்கின்றது.

நாம் எண்ணும் உணர்வுகள் நமக்குப் பாதுகாப்பாக அமையும். இதைத்தான்

“நாம் எண்ணும் நல்ல குணங்களையே

நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிப்போம்”

என்று சொல்வது,

நஞ்சு குறைந்த தேவாங்கின் இயக்கம் – நஞ்சை வென்று ஒளியாக மாற்றிடும் வேகா நிலை

Image

Eternity.jpg

நஞ்சு குறைந்த தேவாங்கின் இயக்கம் – நஞ்சை வென்று ஒளியாக மாற்றிடும் வேகா நிலை

நாம் நல்லவைகள் ஆயிரம் செய்தாலும் அதற்குள் நஞ்சு கலந்துவிட்டால் அந்த நல்லது அனைத்தையுமே அது அடிமையாக்கி விடுகின்றது.

ஆனால், நஞ்சினை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் அந்த நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக்க முடியும்.

1.நாம் உயிருக்குள் இருக்கும் நஞ்சின் துடிப்பே – உயிரின் இயக்கம்.

2.நஞ்சு அதிகரித்துவிட்டால் துடிப்பின் இயக்கம் குறைவாகிவிடும்.

தேவாங்கு என்ற உயிரினத்தை நீங்கள் பார்க்கலாம். அதிலே நஞ்சின் இயக்கத் துடிப்பு குறைவு. உணர்ச்சியின் தன்மை வேகத்தைக் குறைத்த நிலைகள் வரப்படும் போது அதனுடைய “இயக்கச் சக்தி” குறைவாகின்றது.

உடலில் நல்ல தசைகளாக இருப்பினும் எவருக்கும் தீங்கு செய்யாத நிலையில் உடல் அமைப்பு கொண்டுள்ளது. உயிரின் துடிப்பு குறைவாக உள்ளதால் தன்னைத்தானே தான் காத்திடும் நிலை இழந்த நிலைகள் கொண்டுள்ளது.

1.உயிர் மற்றொன்றைத் தாக்கி அதன் உணர்வின் தன்மை கொண்டு

2.கடுமை கொண்ட உணர்வின் தன்மை எடுக்கப்படும்போதுதான்

3.இதன் உணர்வின் இயக்கமாக அது வளர்ந்து

4.அதற்குள் மற்றது அந்த உயிரின் வலுவையே பெற முடியும்.

ஒவ்வொரு உயிரனத்திற்கு அதற்கென்ற (உடல் அமைப்பு) தசைகள் கொண்டுள்ளது. பல்வேறு விதமான தசைகள் கொண்ட அத்தகைய உயிரினங்களின் உயிரில் உள்ள விஷத்தன்மை குறைந்துவிட்டால் என்ன ஆகின்றது?

1.விஷத் தன்மை குறைந்தால்

2.உயிரின் துடிப்பு வேகம் குறைந்து

3,எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மை சீராக இயக்காது அந்த உணர்வின் தன்மை மறைந்துவிடும்.

4.அதனின் வலுவை இழந்து விடும்.

இதைப்போன்ற இயக்கத்தின் தன்மை கொண்டு அத்தகைய உயிர்கள் வாழ்ந்தாலும் விஷத்தன்மை குறைந்ததாக இருப்பினும்… “எந்த நெருப்பிலும் இந்த உயிர் வேகாது”.

ஆனால் நஞ்சின் அறிவுடன் இருந்தால் நஞ்சினைத் தான் விளைய வைக்கும். அதாவது இன்று பூச்சிகளைக் கொல்லப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தூவுகின்றோம்.

பூச்சிகள் இந்த விஷத் தன்மை கொண்ட அந்தப் பூச்சிக்கொல்லி மருந்தைச் சுவாசிக்கும்போது அந்த உயிரிலே பட்டபின் அந்த உடலை மடியச் செய்கின்றது.

1.ஆனால் அதே சமயம் மடிந்து கொண்ட பின் இந்த நஞ்சின் உணர்வு அதனுடன் இணைந்து கொள்ளுகின்றது.

2.மீண்டும் அதே உயிரணு மற்ற நஞ்சு கொண்ட உயிரணுவாக மாறி

3.இந்த நஞ்சிற்கே அதைக் கொல்லும் சக்தி அதிகமாகி விடுகின்றது.

இதைப்போல நஞ்சைப் பாய்ச்சிப் பயிரைக் காக்க இவர்கள் தூவும் மருந்து அந்த சமயம் பூச்சிகளின் உடல்கள் மடிந்தாலும்

1.இந்த நஞ்சின் தன்மை உணர்வாக இணைந்து

2.அந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு

3.நஞ்சினை வீழ்த்திவிடும் நிலைகள் வருகின்றது.

4.அதை எதிர்த்துத் தாக்கும் நிலை வருகின்றது.

இதைப்போன்ற தீமையின் நிலைகள் கொண்டால் தீமையின் உணர்வைத்தான் நமக்குள் அதிகரிக்கச் செய்யும். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து இந்த நஞ்சினை ஒடுக்கிடல் வேண்டும். அதை அடக்கிடல் வேண்டும்.

உயிர் எவ்வாறு எந்த நெருப்பிலும் வேகுவதில்லையோ எந்த நஞ்சிலும் மடிவதில்லையோ அதைப் போன்று நாமும் அழியாத நிலையாக வேகா நிலை என்ற நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

வேகா நிலையாக நமக்குள் உணர்வின் இயக்கம் மற்றொன்றை மடிந்திடாது உயிருடன் ஒன்றிய ஒளியின் சிகரமாக இருளைப் பிளந்து ஒளி காணும் உணர்வை இந்த உடலிலே விளைய வைக்க வேண்டும்.

1.இதை விட்டு அகன்றால் என்றும் பதினாறு என்ற நிலையும்

2.அழியா ஒளிச் சரீரம் என்ற நிலையும்

3.பிறவியில்லா நிலை என்ற நிலையும் அடைய முடியும்.

ஞானிகள் காட்டிய அத்தகைய மார்க்கத்தில் நாம் செல்லுவோம். இந்த உடல் சதமல்ல. எந்த நிமிடத்திலும் இந்த உடலை விட்டு இந்த ஆன்மா செல்லலாம்.

இந்த உடலில் எந்த உணர்வை அதிக அளவில் நாம் எடுத்து விளைய வைத்தோமோ இந்த அளவு கோல்படிதான் அடுத்த உடலை உருவாக்கும் நிலையும் அந்த உணர்வின் செயலாக்கமும் வரும்.

நாம் எந்த நிமிடம் இந்த உடலை விட்டு அகன்றாலும் மெய்ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் செல்ல வேண்டும்.

1.அதனின் வழித்தொடரில் தொடர்ந்து அந்த வரிசையில் சென்றால்

2.நாம் அதனின் அரவணைப்பில் நாம் என்றும் ஒளிச் சரீரம் பெற முடியும்.

நீங்கள் மந்திரங்களைச் சொல்லி மீண்டும் மனித உடலுக்குள் தாவி அவனின் அடிமையாகி அவன் காட்டும் நஞ்சினை உணவை உட்கொண்டு மீண்டும் இழி நிலையான சரீரம் பெறவும் முடியும்.

உங்களுக்கு எது எது தேவையோ அதை எடுத்து கொள்ளலாம்.

நஞ்சு கொண்ட நிலைகளை நீக்கிய அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து நஞ்சை அகற்றிடும் உணர்வைப் பெற்று இன்று உயிருடன் ஒன்றிய ஒளியான சரீரம் பெறவேண்டும் என்று எவர் ஒருவர் எண்ணுகின்றாரோ அதை நிச்சயம பெற முடியும்.

தியானத்தின் மூலம் மெய் ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்)

Spiritual contact.jpg

தியானத்தின் மூலம் மெய் ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்) 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளியது போன்று அவர் அருளை நீங்களும் பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஏங்கிப் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான  அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிப் பெறுங்கள்.

கண்களைத் திறந்தே தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கவும்.

இப்பொழுது நமது குரு அருளும் அவர் கண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள். அந்த உணர்வுகள் உங்களுக்குக் காட்சியாகவும் கிடைக்கலாம்.

கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து ஏங்கும் பொழுது குரு அருளால் பெறப்பட்ட அந்த ஆன்மாவை நீங்கள் உணர முடியும். காட்சியாகவும் பார்க்க முடியும்.

நமது குரு அருளும் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இப்போது உங்கள் சுவாசித்திற்குள் வரும். உங்கள் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் நல்ல உணர்ச்சிகள்  உருவாகும்.

உங்கள் இரத்த நாளங்களில் அந்த அரும்பெரும் சக்தி உடல் முழுவதும் அது சுழன்று வரும் அந்த உணர்ச்சிகள் உங்களில் தோன்றும்.

உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியான அந்த அரும்பெரும் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தி
2.இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் குரு அருளும் உங்கள் உடலுக்குள்
1.இயங்கிக் கொண்டிருப்பதை
2.இயக்கிக் கொண்டிருப்பதை உணர முடியும்.

உங்கள் ஆன்மாவில் இப்போது அவருடைய உணர்வுகள் காட்சியாகவும் வரலாம். சொல்லாகவும் வரலாம்.

1.ஒலி ஒளி என்ற நிலையில் காற்றிலிருந்து வரும் அலைகளை
2.டிவி யில் எப்படிக் கவர்ந்து படமாகப் பார்க்கின்றோமோ
3.ஒலியாகக் கேட்கின்றோமோ இதைப்போல
4.உங்கள் ஆன்மாவில் படர்ந்திருப்பதை நீங்கள் நுகரப்படும்போது
5.அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு
6.காட்சியாகவும் உணர்வாகவும் அறிய முடியும்.

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைப் பதிவாக்கி அந்த நினைவுடன் இவ்வாறு ஏங்கித் தியானித்து வரும் பொழுது உங்கள் ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் ஒளிகள் பெருகத் தொடங்கும்.

ஒளி அலைகள் பெருகும்பொழுது உங்கள் சுவாசத்தில் கலந்து உயிரிலே படும்பொழுது அந்த உணர்ச்சிகள் தோன்றும். அதன் துணை கொண்டு அந்த ஞானிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.

விண்ணிலிருந்து கணப்பொழுதில் அவர்களின் அருள் சக்திகளைப் பெற முடியும். (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்)