“தன்னைத் தான் அறிதல்” இந்தப் பிள்ளை யார்…? உயிருடைய பிள்ளை தான் நாம்… அந்த உணர்வு தான் நாம்

Image

Self realization - Trust your self.jpg

“தன்னைத் தான் அறிதல்” இந்தப் பிள்ளை யார்…? உயிருடைய பிள்ளை தான் நாம்… அந்த உணர்வு தான் நாம்

நாம் எத்தனையோ உடல்களைக் கடந்து கொண்ட பின் மனிதனை உருவாக்கியதனால் “இந்தப் பிள்ளை யார்…?” என்று கேள்விக்குறி வைத்துச் சிந்திக்கச் செய்கின்றார்கள்.

எதற்காக வேண்டி இப்படிச் சிந்தனை செய்யும்படி வைத்துள்ளார்கள்?

1.எனது உடல்

2.எனது பிள்ளை

3.என்னுடையது என்று தான் நாம் நினைக்கின்றோம்.

4.அப்பொழுது இந்தப் பிள்ளை யார்?

உயிரால் உருவாக்கப்பட்ட அந்தப் பிள்ளை. ஏனென்றால் அந்த உயிர் தான் நம்மை உருவாக்கியது.

“இந்தப் பிள்ளை யார்…!” என்றால் நாம் யாரால் அதை அறிகின்றோம்? ஆறாவது அறிவு கொண்ட கார்த்திகேயனால் அறிகின்றோம்.

இந்தப் பிள்ளை யார் என்ற வகையில் கேள்விக்குறியைப் போட்டுச் சிந்திக்கப்படும்போது நம் வாழ்க்கையில் எப்படி சிந்தித்துச் செயல்பட வேண்டும். எதன் வழிகளிலே நாம் வளர வேண்டும்? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஏனென்றால் இந்த உயிர்தான் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது.

1.ஆகவே அந்த உயிரோட பிள்ளை தான்.

2.அந்த உணர்வு தான் நாம்.

இப்பொழுது கோபம் என்ற உணர்வு வந்துவிட்டால் அது நானாகி விடும். நாம் கோபக்காரனாகி விடுவோம்.

அடிக்கடி நான் வேதனை என்ற உணர்வை எடுத்தேன் என்றால் அந்த நான் ஆகின்றது. அப்போது நானாகப்போகும்போது வளர்ச்சியில் கனியாகிவிடுகின்றது.

கனியான பின் அந்த வேதனைப்படும் உணர்வைத்தான் நான் சொல்வேன். அதை மீண்டும் நான் சொல்லப்படும்போது என்ன ஆகின்றது?

கனியாகிவிட்டால் அந்த வித்து நமக்குள் முளைத்தே தான் ஆகும். முளைத்து அந்த வேதனைப்படும் நிலையை உருவாக்கிவிடும். அப்பொழுது இதை மாற்ற வேண்டுமல்லவா?

1.ஒரு பருப்பை (தானியம்) வேக வைக்கவில்லை என்றால்

2.அது மண்ணிலே போட்டால் முளைத்து விடுகின்றது.

3.ஆனால் வேகவைத்த பின் அதை மண்ணிலே போட்டால் முளைக்குமோ?

4.முளைக்காது.

இதே மாதிரித் தான் வேதனைகளையோ கஷ்டங்களையோ எதைப் பார்த்தாலும் அதையெல்லாம் வேக வைக்க வேண்டும்.

உங்களுக்குள் யாம் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று சொல்லி உங்கள் உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அது எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உடலில் செலுத்தும்போது

1.விஷத்தின் தன்மையான வேதனைகளையும் கஷ்டங்களையும் வேக வைத்து

2.அதனுடைய சக்தியை இழக்கச் செய்துவிடும்.

3.அந்த உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டு வரும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள்ளே சேர்த்தோம் என்றால் தீமை செய்யும் எண்ணங்களை அழித்துவிடும்.

தீமையான உணர்வுகளை இப்படி எண்ணி வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைத்தோம் என்றால் பிறர் தீமைகள் நமக்குள் விளையாமல் தடுக்க முடியும்.

இந்த உணர்வுகள் வளர வளர உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக முடியும். அப்படிச் சென்றவர்கள் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்.

அந்த எல்லையை நாம் அடைய முடியும்.

ஒன்றுமறியாத பச்சிளம் குழந்தைகளுக்கும் ஏன் கொடுமையான நோய்கள் வருகின்றது?

Image

Child care.jpg

ஒன்றுமறியாத பச்சிளம் குழந்தைகளுக்கும் ஏன் கொடுமையான நோய்கள் வருகின்றது?

“சந்தர்ப்பவசத்தால்” தாய் தந்தையர்கள் வேதனைப்பட்டுக் கடுமையாக ஏசிப் பேசுவதைக் குழந்தைகள் கூர்ந்து கவனித்தால் அந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.

பதிந்த உணர்வுகள் இரத்தத்திலே கலந்து அணுக்களாக விளைந்து அந்த உணர்வுகள் பின்பு வேகமாகி சில குழந்தைகளுக்கு ரத்தக் கேன்சர் வருவதைப் பார்க்கலாம்.

அதே சமயத்தில் கருவாகி குழந்தை கருவுக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது இதே போன்று வேதனைப்படும் சொற்களைக் கேட்டு உணர்வின் தன்மை வேகமாக வளர்த்துக் கொண்டால், குழந்தைக்குள் நஞ்சாக விளைகின்றது.

அந்தக் குழந்தை பிறந்த பிற்பாடும் வேதனையின் நிலைகள் குழந்தையின் உடலில் உருவாகி அது அடிக்கடி அழுவதும் கடைசியில் இளம்பருவம் வரும் பொழுது ரத்தக் கேன்சராகி விடுகின்றது.

இதைப் போன்று நமது வாழ்க்கையின் நிலைகள் நாம் எதை எண்ணினோமோ விஷம் எதிலே பட்டாலும் அதனில் செயலாக்குவது போல் மனிதருடைய வாழ்க்கையில் இத்தகைய நிலைகள் வளர்ந்து அறியாத குழந்தைகளின் உடலிலும் விளைந்து விடுகின்றது.

இந்த உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவு செய்யப்பட்டு அது சிறுகச் சிறுக விளைந்து காலத்தால் இந்த வினைகள் கேன்சரை உருவாக்கும்.

எரிச்சலான பேச்சுக்களைக் குழந்தைப் பருவத்தில் பேசியிருந்தால், அல்லது கருவுக்குள் இருக்கும் பொழுதே இத்தகைய உணர்வுகளால் தாக்கப்பட்டு இருந்தால் அது உடலில் பதிந்து கொண்டு

1.சில குழந்தைகளுக்கு நீர் வடியும்.

2.ஒரு பக்கம் புன்னகை வந்து கொண்டிருக்கும்.

3.இதற்கு எந்த மருந்து கொடுத்தாலும் குணமாவதில்லை,

ஆனால் இது கிரந்தி அல்ல. “தாய் எடுத்துக் கொண்ட உணர்வுகள்” கருவிற்குள் ஏற்பட்ட உணர்வுகள் ஒன்றுடன் ஒன்றுபடும் பொழுது உணர்வின் தன்மை உடலைக் கரைக்கின்றது.

தாயின் கருவிற்குள் எடுத்துக் கொண்ட உணர்வு விளைந்து விளைந்த கருவின் தன்மையோடு குழந்தை பிறக்கின்றது.

குழந்தையின் உடலில் பதிந்த உணர்வின் நிலைகளை அந்த வீட்டில் உள்ளவர்கள் பின்பற்றும் பொழுது குழந்தைக்குத் தோல் வியாதியாக மாறுகின்றது.

எண்ணத்தால் நஞ்சு கொண்ட நிலைகள் தொடர்ந்தால், அந்த அணுவின் தன்மை விளைந்து பின் வரும் நாள்களில் குன்ம நோயாக விளைகின்றது.

தாய் கருவுற்றிருக்கும் வீட்டில் தொடர்ந்து கொடூரமான நிலைகளில் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதை அந்தத் தாய் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் பிறக்கும் குழந்தை “அங்கஹீனமாகவோ.., மூளை வளர்ச்சி குன்றியோ.., அல்லது குறைப்பிரசவமோ” ஆகும்.

இதைப் போன்ற நிலைகள்

1.நாம் தவறு செய்யாமலேயே நமக்குள் தீங்கு விளைவிக்கும் தன்மையாகி,

2.மனித உணர்வுக்குள் விளைந்த சிந்தித்துச் செயலாற்றும் திறன் பெற்ற

3.ஆறாவது அறிவை மழுங்கச் செய்து

4.ஐந்து அறிவு கொண்ட மிருக நிலைக்கு நம்மை மாற்றுகின்றது.

இதிலிருந்து எல்லோரும் மீளவேண்டும் என்பதற்குத்தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட கட்டளைப்படி அனைவருக்கும்

1.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த ஆறாவது அறிவுக்குள் பட்ட நஞ்சினை நீக்கி,

2.மெய் உணர்வைக் காட்டிடும் உணர்வின் அலைகளாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் விளையவேண்டும் என்று

3.யாம் சதா தவமிருந்து கொண்டிருக்கின்றோம்.

நமக்கு “JUDGE” யார்…?

Om eswara Gurudev - jUDGE.JPG

நமக்கு “JUDGE” யார்…?

கோர்ட்டில் ஏறிப்போய் பொய் சாட்சி சொல்லலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உயிரிடம் மட்டும் யாரும் தப்ப முடியாது என்பதை மறந்துவிடக்கூடாது.
1..உயிருடன் எதை நாம் இணைக்கின்றோமோ
2.அதற்குரிய “தீர்ப்பை (JUDGEMENT)” உயிர் கொடுத்தேவிடும்.

சிவ தத்துவத்தில் இதற்குத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரனை வைத்தது. நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று வைத்தது.

1.நந்தீஸ்வரன் என்றால்
2.சுவாசித்ததை உயிர் என்ற ஈசன் உருவாக்கும்.
3.நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

கோபப்படுவோரைப் பார்த்தோம் என்றால் உயிர் அதை அணுவாக உருவாக்குகின்றது. திரும்பத் திரும்ப வளர்க்கப்படும் பொழுது கோபமான உணர்வு அதிகமாகி அந்தக் கணக்கின்படி நமக்கு இரத்தக் கொதிப்பு வருகின்றது.

அந்த இரத்தக் கொதிப்பு வந்துவிட்டால், சாப்பாடு அவர்களுக்கு யாராவது கொண்டு வந்தார்கள் என்றால் “வள்…” என்று கத்தச் சொல்லும். உதவி செய்தார்கள் என்று எண்ணச் செய்யாது. புலி எப்படி உறுமித் தாக்குகின்றதோ அது போல நம்மை இயக்கும்.

தீயில் குதித்தால் உடல் கருகுகின்றது, ஆனால் உயிர் வேகாது. உடலில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சாகாக்கலை. இதிலே எந்த அளவிற்கு உணர்வு இருக்கிறதோ அந்தக் கலை பிரகாரம் உயிர் உடலை மாற்றும்.

விஷத்தை அதிகமாகச் சேர்த்தால் பாம்பாக உடலை உயிர் மாற்றும். இரக்கமற்றுத் தாக்கும் உணர்வை வளர்த்தால்,அந்தக் கலை பிரகாரம் புலியாக உடலை உயிர் மாற்றும்.

பிறரை ஏமாற்றி வாழ்ந்து வந்தால் நரியாகப் பிறக்க வைக்கும்.

நாம் ஒவ்வொரு உடல்களிலும், சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் மனிதனாக உருவாக்கியது உயிர் தான்.

இந்த உயிரான ஈசனால் வளர்க்கப்பட்ட நிலைதான் நாம் இன்று மனிதனாக உள்ளோம்.

தீமையை நீக்கும் சக்தி பெற்ற இந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வு ஆனாலோ அந்தக் கணக்கு கூடினால் உயிர் என்ற ஈசன் இந்த உடலை விட்டுச் சென்றபின்
1.சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப தீர்ப்பு
2.நீ வேதனையை எடுத்ததனால் அங்கு சென்று பிறந்து பழகு,
3.கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தாய் கஷ்டத்தை நீ அனுபவி என்று அதற்குத்தக்க
4.அடுத்த உடலை நமது உயிர் உருவாக்கிவிடும்.

அதனால்தான் சிவதத்துவத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

சாஸ்திரங்களில் ஞானிகள் சொன்ன பேருண்மைகளை அறிந்து நாம் வாழ்வது நல்லது.

தீமைகளைப் பிரிக்கும் வழி

 

Pure blood.JPG

தீமைகளைப் பிரிக்கும் வழி 

நம் வாழ்க்கையில் நாம் எந்தத் தொழில் செய்தாலும் எந்த வேலை பார்த்தாலும் எந்த நிலையிலிருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் தியானப் பயிற்சியையும் ஆத்ம சுத்தியையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதைச் செய்யவில்லையென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற முடியாத தகுதியற்றவராக மாற்றிவிடும்.

துருவ நட்சத்திரத்தின் அலைகள் நமக்கு முன் இருக்கும். அதை நாம் எடுக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

தங்க நகை செய்கின்றோம். அதைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் தான் தங்கம் சுத்தமாகின்றது.

அதிலே அந்தத் திரவகத்தை ஊற்றினால் தானே அவ்வாறு ஆகும்.

1.ஆனால், தங்கத்தில் திரவகத்தை ஊற்றாமலே
2.அதிலுள்ள செம்பு பித்தளை, வெள்ளி எல்லாம் கரைந்து போய்விடும் என்று சொல்லிக் கொண்டு
3.நான் நிறையச் சக்தி பெற்றிருக்கின்றேன் என்றால் எப்படி முடியும்?
4.அது முடியாது.

அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் அன்றாடம் நமக்குள் வரும் கோபம் சலிப்பு வேதனை வெறுப்பு ஆத்திரம் பயம் இதைப் போன்ற எத்தனையோ உணர்வுகளை நுகர நேர்கின்றது. அறிய நேர்கின்றது.

1.நம் சுவாசத்தின் வழி நம் உடலுக்குள் போய் இரத்தத்தில் கலந்து
2.அணுவாக உருவாகும் கருவாக ஆகிவிடுகின்றது.
3.பின் இரத்தத்தில் சுழன்று முட்டை வெடித்து எந்த உறுப்பில் ஒட்டிக் கொள்கின்றதோ
4.அங்கே அது தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கும்.

அது பெருகிய பின் நல்ல குணங்களால் நல்ல அணுக்களால் உருவான நம் உறுப்புகள் செயலாக்கங்கள் குறையும். பின் உடல் நோயாகி மன நோயாகும்.

அத்தகையை தீமையான அணு உருவாகாமல் தடுக்க வேண்டும் அல்லவா. அப்படி உருவானாலும் அதைக் கரைத்துப் பிரிக்க வேண்டுமா வேண்டாமா…?

சாமி செய்யுமா…! சாமியார் செய்வாரா…! ஜாதகம் காப்பாற்றுமா…! சிந்தித்துப் பாருங்கள்.

நாம் எதை எண்ணிச் சுவாசித்தோமோ அதை அணுவாக உருவாக்குவது நம் உயிரின் வேலை. “அவனன்றி அணுவும் அசையாது”.

ஆகவே, நாம் எது எப்படி இருந்தாலும் அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி நாம் உள் புறமாகக் கொண்டுபோய் சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.

இல்லையென்றால் நமக்குள் அந்தத் தீமையின் விளைவை அதிகமாகிவிடும்.

1.தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் அணுவாக மாறுவதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்க்கும் பழக்கத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு செய்தால் நம் இரத்தங்கள் தூய்மை பெறும். உறுப்புகள் சீராக இயங்கும். மன பலம் கிடைக்கும். சிந்திக்கும் ஆற்றல் பெருகும். மகிழ்ந்து வாழ முடியும்.

அழியாச் செல்வம் வேண்டுமா? அழியும் செல்வம் வேண்டுமா? முடிவு செய்துகொள்ளுங்கள்

Image

Divine wealth.jpg

அழியாச் செல்வம் வேண்டுமா? அழியும் செல்வம் வேண்டுமா? முடிவு செய்துகொள்ளுங்கள்

சாமி செய்யும் சாமியார் செய்வார் மந்திரம் செய்யும் யந்திரம் செய்யும் ஜோசியம் செய்யும் என்று இந்த எண்ணத்தில் செயல்படுவார்கள். பின் ஜோசியக்காரர்களிடத்தில் செல்வார்கள்.

அதன் பிறகு வாஸ்து சாஸ்திரம் இருக்கிறது. ஆகையினால் வாஸ்து சாஸ்திரக்காரர்களிடம் செல்வார்கள்.

அவர்களிடம் சென்றவுடன் உங்கள் வீட்டை இப்படி இடித்துக் கதவை இப்படி மாற்றி வைத்துவிடுங்கள் என்று கூறுவார்கள்.

1.வீட்டு உரிமையாளரோ ஆரம்பக் காலத்தில் நன்றாகத்தான் இருந்திருப்பார்.

2.ஆனால் தற் சமயத்தில்தான் இந்தக் கஷ்டம் வந்திருக்கும்.

3.வாஸ்து சாஸ்திரக்காரர் வீட்டை வந்து பார்த்தவுடனே

4.இந்தச் சுவரை இடித்து அறையை மாற்றி வைத்தீர்கள் என்றால் சரியாகும் என்று கூறுவார்கள்.

அதை விட்டால் “நியூமராலஜி” – உங்களுடைய பெயரின் எழுத்தை மாற்றி வைத்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்குப் “புதிய சக்தி” வரும் என்று கூறுவார்கள்.

1.ஜோதிடம் பார்ப்பவர்கள் வாடிக்கையாளரின் எண்ணத்திற்கேற்ப சொன்னவுடனே

2.கேட்பவர்கள் அதையும் செய்வார்கள்.

3.அப்பா அம்மா அவர்களுக்கு முதலில் வைத்த பெயர் நன்றாக இருக்கும்.

4.ஆனால் அவர்கள் சொல்லைக் கேட்டு பெயரில் உள்ள எழுத்துக்களை மாற்றிக் கொள்வார்கள்.

ஆக ஜோதிடம் வாஸ்து, நியூமராலஜி என்று ஒவ்வொருவரையும் சந்திப்பார்கள். இப்படி நமது மனித வாழ்க்கையில் மனித உடலுக்காகத்தான் பெற முயற்சிக்கின்றோம்

இந்த மனித வாழ்க்கையில் இருளை அகற்றி உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடையவேண்டும் என்ற எண்ணம் பெரும்பகுதி யாருக்கும் வருவதில்லை.

ஞானிகளோ, மகரிஷிகளோ “யாரும்” உடலோடு இல்லை.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இவ்வளவு பெரிய சக்தி பெற்றாரே.., அவர் உடலோடு இருக்கின்றாரா? இல்லை.

ஆனால் ஒளியின் உடலாக சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகி வாழுகின்றார். “மனித உடலில்” இல்லை.

1.நாம் இந்த மனித வாழ்க்கையில் (உடலில்) பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

2.ஞானிகளும், மகரிஷிகளும் துன்பம் என்ற விஷத்தை ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

3.இன்றும் குடும்பமாக விண்ணிலே மகிழ்ந்து வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அப்படிப்பட்ட அழியாச் செல்வம் வேண்டுமா? அல்லது அழிந்து போகும் இந்தச் செல்வம் (உடல் வாழ்க்கை) வேண்டுமா?

நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

1.அழிந்து போகும் செல்வம் – சாகாக்கலை

2.அழியாச் செல்வம் – வேகாநிலை

இன்றைக்கு நம்முடைய ஆசையின் நிமித்தம் ஒன்று கிடைக்கவில்லை என்றால் நமக்குள் வேதனை வருகின்றது. வேதனை அதிகமாகிவிட்டால் நம் ஆசைகள் அனைத்தும் அழிந்து நாசமாகிப் போகிறது.

மரணம் அடையும் தருவாயில், “ஐயோ..அம்மா.. அம்மா…அம்மா..,” என்ற வேதனைகளை எடுத்துத்தான் மரணமடைகிறோம்.

1.நம் உடலில் நோய் வந்துவிட்டால்

2.நல்ல துணிமணிகளைக் கொடுத்து அணியச் சொன்னால் அணிகின்றோமா?

3.”தூக்கி…, எறி..!” என்று சொல்கிறோம்.

ஆனாலும் இதன் மீது தான் மீண்டும் பற்று வருகிறதே தவிர பேரின்பத்தின் மீதான பற்று யாருக்கும் வருவதே இல்லை.

இன்றைய மனிதர்களிடத்தில் வாழ்வா..? சாவா..? என்ற நிலைதான் உள்ளது. ஒன்று வாழ்வோம். இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம்  என்ற எண்ணம் பெரும்பகுதியானவர்களிடம் உள்ளது.

தான் எண்ணியவற்றைப் “பிடிவாதமாகச் செயல்படுத்தவேண்டும்” என்ற நிலைதான் வருகிறது.

1.நம்மை எது ஆட்டிப்படைக்கின்றது?

2.தீய உணர்வுகளிலிருந்து நாம் எவ்வாறு விடுபடவேண்டும்? என்று சிந்தித்துச் செயல்படவேண்டும்.

3.தீய உணர்வுகளுக்கு நாம் அடிமையாகிவிடக்கூடாது.

நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு தீய உணர்வுகளிலிருந்து விடுபட்டு தீய உணர்வுகளை ஒடுக்கி அருள் ஞானத்தை வெளிப்படச் செய்யவேண்டும் என்ற எண்ணங்களை நமக்குள் வளர்க்கவேண்டும்.

அதையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தான் “அருள் ஞானத்தை” உங்களுக்கு யாம் கொடுக்கின்றோம்.

பிறரை உயர்த்திட வாழும் மகரிஷிகளின் நிலை – “ரிஷி ரிஷிபத்தினி”

Image

Agastiyar

பிறரை உயர்த்திட வாழும் மகரிஷிகளின் நிலை – “ரிஷி ரிஷிபத்தினி”

“நான் எல்லோருக்கும் நல்லது செய்து ஆண்டவனை வணங்கினேன்.., எனக்கு இப்படித் துரோகம் செய்துவிட்டார்களே” என்ற உணர்வு அதிகரிக்கப்படும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றபின், ஆவேச உணர்வுதான் இருக்கும்.

யாரை எண்ணி இந்த ஆவேச உணர்வை வளர்த்துக் கொள்கின்றார்களோ அந்த உடலுக்குள் பேயாகத்தான் ஆட்டும்.

இந்த உணர்வை அங்கே அதிகமாக விளையச் செய்து அந்த விளைந்த உணர்வே இந்த உடலைப் பிளந்து மீண்டும் எல்லோரையும் பழி தீர்க்க வேண்டும் என்ற நிலையாக வந்துவிடுகின்றது.

1.“தன்னை மதிக்க வேண்டும்” என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது,

2.அந்த மதிப்பு கொடுக்கவில்லை என்றால் பகைமை உணர்வுகளை ஊட்டச் செய்து,

3.அவர்களை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்ற உணர்வுகள் வருகின்றது.

மற்ற உயிரினங்களை எடுத்துக் கொண்டால் அதில் ஆண் இனங்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் தன் கௌரவத்தைக் காக்க சண்டை போட்டுக் கொள்ளும்.

பெண் இனங்கள் சண்டை போடுவதில்லை. சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கும்.

ஆண் இனங்கள்தான் ஒன்றுக்கொன்று தன் வலிமையின் நிலைகளைக் காட்டும். இதைப் போலத்தான் அரச காலங்களில் போர் முறைகள் வந்தது.

ஆரம்பத்திலிருந்து உயிரினங்களிலிருந்து இந்த வளர்ச்சியில்தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.

இதைப் போன்று வளர்ந்து வந்த கலாச்சாரத்தில் இன்றைக்கும் மதங்கள் உருவாக்கப்பட்ட கலாச்சாரத்தில்

1.ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து

2.ஆண்களையே உயர்த்திக் காட்டப்பட்டு

3.அதன்வழிகளில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு

4.அடிமையின் உணர்வுதான் இன்று நம்மை இயக்கிக் கொண்டு வருகின்றது.

ஆனால், மகரிஷிகளும், ஞானிகளும், ஆண்பால் பெண்பால் என்று இருந்தாலும் அவர்கள் இரண்டற இணைந்து உணர்வினை ஒளியாக மாற்றி இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் பிளந்தவர்கள்.

இதுதான் “ரிஷிபத்தினி” என்பது.

அதாவது மகரிஷிகள் காட்டிய நெறியை தனது மனைவி ஏற்றுக் கொண்டு உணர்வின் செயலாக இயக்குவது. இரண்டும் கலந்த உண்ர்வுகள் வரப்படும் பொழுது கணவருடன் ஒன்றிய நிலைகள்.

இதைத்தான்

1.கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ

2.உணர்வின் இயக்கங்கள் எவ்வாறோ அதன் வழியில்

3.இந்த வாழ்க்கையில் தன்னை உயர்த்த வேண்டும் என்ற நிலையை இழந்து

4.“பிறர் உயர்த்தப்பட வேண்டும்” என்ற உணர்வுகள்

5.அவர்கள் உயரக் காரணமாகின்றது.

ரிஷிப்பத்தினியாக இவர்கள் இரண்டு பேருமே

1.அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்

2.அவர்கள் பார்ப்போரெல்லாம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று

3.உயர்வின் ஒளியைக் கூட்டி மற்றவர்களை உயர்த்த நினைத்தவர்கள்.

அந்த உயர்த்த வேண்டுமென்ற உணர்வுகள் இவர்களுக்குள் விளைந்து அதுவே அவர்கள் உயரக் காரணமாகின்றது.

இதுவே மகரிஷிகளில் கணவன் மனைவியாக இணைந்த நிலையில் “ரிஷிபத்தினி” என்பவர்களின்  செயலாகும்.

வராகன் – மிகவும் சக்தி வாய்ந்தது – நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகரும் ஆற்றல்

Image

varaha avatar

வராகன் – மிகவும் சக்தி வாய்ந்தது – நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகரும் ஆற்றல்

 

வராகன் தான் எவ்வாறு கெட்டதை நீக்கி நீக்கி நாற்றத்தை நீக்கி, நல்ல உணர்வினைத் தனக்குள் எடுத்தது? என்று ஞானியர்கள் சொல்லியுள்ளார்கள்.

 

அதைப்போல  இப்பொழுது உங்கள் எண்ணங்களை மகரிஷிகள் காட்டிய மெய் உணர்வுகளைக்  கூர்மையாகக் கவரச் செய்ய உங்களின் நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கிச் செலுத்துவதற்கே இந்த உபதேசம்.

 

வராக அவதாரம் என்பது நாற்றத்தைப் பிளந்துவிட்டு, சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருளைப்  பன்றி  நுகர்ந்து எடுக்கின்றது. மண்ணைப் பிளந்துவிட்டு தன் உணவின் தன்மையைத் தன் நுகரும் ஆற்றலால் அது எடுத்து உணவாக உட்கொள்கின்றது.

 

அப்படித் தீமையை நீக்கி நல்லதை உட்கொண்ட உணர்வின் சத்து அதே ஞானமாக அதை எண்ணிய நிலைகள் கொண்டு எதை எண்ணியதோ அது  காந்தம்  இதைக் கவருகின்றது.

 

தன் உடலிலிருந்து கெட்டதை நீக்கிவிட்டு நல்லதைப் பெற வேண்டுமென்ற ஞானத்தின் எண்ணங்கள் அங்கே அது கவருகின்றது.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்து உபதேசித்தார். இப்பொழுது நீங்கள் சாக்கடையில் உட்காரவில்லை.

 

நல்ல இடத்தில் மகிழ்ச்சியான இடத்தில் உட்கார்ந்து இருக்கின்றீர்கள். எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்துத்தான் உபதேசம் கொடுத்தார்.

 

அந்த மகிழ்ச்சியான எண்ணங்களில் இந்த உணர்வை எண்ணி நீங்கள் பெற வேண்டும் என்பதற்காக யாம் சொல்லுகின்றோம்.  அன்று பைத்தியத்திடம் சேர்ந்து சாக்கடையில் உட்கார்ந்து இருக்கின்றேன் என்று எம்மைக் கிண்டல் கேலி செய்தார்கள்

 

அப்பொழுது எம்மை டீ, காபி வாங்கிவரச் சொல்லி சாக்கடையில் இருந்த கழிவைப் போட்டுக் “குடி” என்கிறார் குருநாதர்.

 

“அய்யய்ய…” என்று யாம் மறுக்கின்றோம்.

 

இந்தக் கூர்மை அவதாரம் வராக அவதாரம் எவ்வாறு இருக்கும்?

1.நீ கூர்மையாக நாற்றத்தை எண்ணுகின்றாய்.

2.அந்த உணர்வின் சத்து உனக்கு நாற்றமாகின்றது.

3.அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்? என்று எண்ணுகின்றாய்,

4.அந்த உணர்வின் சத்து உனக்குள் வருகின்றது.

 

பன்றி என்ன செய்கின்றது? நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது.

1.அது நாற்றத்தை எண்ணவில்லை.

2.நீ நாற்றத்தை எண்ணுகின்றாய்.

3.அடுத்தவன் என்ன சொல்லுகின்றான்? என்று எண்ணுகின்றாய்.

 

இப்போது இதைச் சேர்த்துக் கொள்கிறாயா? அல்லது அதைச் சேர்த்துக் கொள்கிறாயா? நீ உயர்ந்த நிலையைச் சேர்த்துக் கொள்கின்றாயா…? அல்லது நாற்றத்தை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயா…?

 

நாற்றத்தை எண்ணியவுடனே.., நீ எதை எண்ணுகின்றாயோ  அதை உன் உயிர் படைக்கின்றது…, அதுவாகின்றாய். கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” என்று உணர்த்தப்பட்டுள்ளது.

 

“ஐய்யய்ய…” என்று கண்ணில் பார்க்கின்றேன். நாற்றம் என்று எண்ணுகின்றேன். அப்பொழுது எந்த எண்ணம் வரப்படும் பொழுது, கண்ணன் என்ன சொல்கிறான்?

 

நாற்றம் என்கிற பொழுது நாற்றத்தை ஈர்த்துப் பார்க்கச் செய்கின்றது.  அதை (என் கண்கள்) இழுத்தவுடனே, நாற்றம் என்றவுடனே அதிகமாகி விடுகின்றது. அந்த நாற்றம் உடலினுள்ளே சென்றவுடன் விளைந்து விடுகின்றது.

 

“நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்”

1.இந்த நாற்றத்தை நீக்கி

2.நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று எண்ணினால்

3.நீ அதுவாகின்றாய். இதைத்தான் கண்ணன் கீதையிலே சொன்னது.

 

என்னைக் கேவலமாகப் பேசுவார்களோ? என்று அவர்களைப் பார்க்கின்றேன்,  நாற்றத்தில் எவ்வாறு இருக்கும்…! என்று எம்மைச் சாக்கடையில் வைத்துத்தான் குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

 

சாக்கடை அருகில் உட்கார்ந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? “பாரு…, எல்லாம் காசு ஆசை பிடித்துப் போய்.., சாமியாரிடம் வித்தையைக் கற்றுக் கொள்வதற்காக வேண்டி இப்படிச் செல்கின்றார்கள்” என்பீர்கள்

 

ஏனென்றால் அந்தச் சித்து இந்தச் சித்து தங்கம் செய்வது வெள்ளி செய்வது, என்றுதான் சாமியார் பின்னால் போகின்றார்கள்.

 

மனிதனுடைய வாழ்க்கையில் இப்பொழுது, கூர்மை என்ன செய்கின்றது? அவர்கள் என்ன நினைப்பார்கள்? இவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று அதை வலுவாக எடுக்கும் பொழுது, வராக அவதாரமாக மாறிவிடுகின்றது. இந்த நாற்றத்தை எனக்குள் சேர்த்து விடுகின்றது.

 

வராகன் என்ன செய்கின்றது? என்று இவ்வாறு பல நிலைகளில் என்னை அல்லல்பட வைத்தார்.

 

அந்த எண்ணங்கள் உருவாகி உன் உடலுக்குள் உணர்வுகள் எதைக் காட்டுகின்றது? அந்த உணர்வை எடுத்தவுடன் உனது ஆன்மாவாக எவ்வாறு மாறுகின்றது?

 

ஆன்மாவிலிருந்து சுவாசித்தவுடன் உயிரில் எவ்வாறு படுகின்றது? அந்த உயிர் நீ சுவாசித்ததை இயக்கி “ஐய்யய்ய… நாற்றம்” என்று இந்த உடலை அழைத்துச் செல்கின்றது. இது கூர்ம அவதாரம்.

 

அதே சமயத்தில் கூர்மையாக நாற்றத்தைப் பார்க்கின்றோம். அதனின் உணர்வு வலுவாகச் சுவாசித்தால் வராக அவதாரம். அதனுடைய வலிமை கொண்டு “நாற்றம் நாற்றம்” என்று நீ போகின்றாய்.

 

அவ்வாறு சென்று கூர்மை அவதாரத்திற்கும் வராக அவதாரத்திற்கும் இரண்டுக்கும் இணை சேர்த்து உணர்த்துகின்றார்.

 

இதிலே நீ எதைக் கூர்மையாக எண்ணுகின்றாயோ அதனின் உணர்வு உனக்குள் சென்றவுடன் ஈசனான உயிர் அதை வலுவாக்கின்றது.

 

வலுவான அதனின் நிலைகள் கொண்டு அதே எண்ணத்தை எண்ணும் பொழுது இந்தக் கண் என்ன செய்கின்றது? இதையே எடுத்து நுகர்ந்து “ஐய்யய்ய…” என்கிற பொழுது, விலக்கிச் செல்லும்.

 

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.

 

இந்தச் சாக்கடையை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றாய். ஆனால், எடுத்துக் கொண்ட உணர்வே இங்கே சாக்கடையாக உள்ளே நுகர்கின்றது.

 

இந்த நிலையை அங்கே எனக்கு உணர்த்தி என்னைப் பக்குவப்படுத்துவதற்காக அந்தச் சாக்கடைப் பக்கமே  இவ்வளவு உபதேசம் கொடுக்கின்றார் குருதேவர்.

 

எனக்குக் காபி அவருக்கு டீ, இரண்டையும் சாக்கடைக்குப் பக்கத்தில் வைத்து அதிலே சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட குப்பை இரண்டைப் போட்டு என்னைக் “குடி…” என்கின்றார் குருதேவர்.

 

அப்பொழுது, என்னுடைய பார்வை என்ன செய்கின்றது? இந்தச் சாக்கடையையும் பார்க்கின்றேன், ஆள்களையும் நினைக்கின்றேன். “இவரிடம் சிக்கிக் கொண்டேன்…” என்று நினைக்கின்றேன். இந்தக் காபியை எவ்வாறு குடிப்பது? என்றும் என்ணுகின்றேன்.

 

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய் என்றது. அவர் சாக்கடையைக் குடி என்கிறார். அதை எண்ணியவுடனே எவ்வாறு குடிப்பது என்று விலக்கிச் செல்கின்றது.

 

அந்த எண்ணத்தால், அவ்வாறே திகைத்துக் கொண்டு இருக்கின்றேன். காபியில் இதை அள்ளிப் போட்டார். குடிக்க முடியவில்லை.

 

எல்லோரும் நைனாவிற்குப் (சாமிகளுக்கு) பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்கின்றார்கள். ரோட்டில் போகின்றவர்கள், பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். “இதையும்” கேட்கின்றேன்.

 

அப்பொழுது நான் நகர்ந்து செல்கின்றேன். போகப் போக.., இந்தப் பக்கம் போகலாமா? அந்தப் பக்கம் போகலாமா? இந்த மனம் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அப்பொழுதுதான்

1.உணர்வின் இயக்கங்கள் நாம் எதை எண்ணுகின்றோமோ,

2.அதை உயிர் இயக்கி உடல் முழுவதும் பரவச் செய்து,

3.தன் இனத்தை எவ்வாறு எண்ணுகின்றோமோ அதே இனம் நமக்குள் நின்று,

4.அதே இயக்கமாக எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருதேவர்.

 

அப்பொழுது அந்த நிலையிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? என்று பார்த்தேன்…! முடியவில்லை.

 

“சரி.., நீ போய் டபாரா செட்டைக் கொடுத்துவிட்டு வா” என்றார் குருதேவர்.

 

கடையில் கொண்டு போய்க் கொடுத்தால் வாங்கவா செய்வார்கள்? நீ உன் வீட்டிலேயே வைத்துக் கொள் என்றார்கள்.

 

டபரா செட்டிற்குக் காசு கொடுத்தேன். வாங்க மாட்டேன் என்றார்கள். இவ்வாறாகி விட்டது.

 

நீ வரும் பொழுது, கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை வாங்கிவா, என்றார் குருநாதர்.

 

மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன்.

 

சாக்கடை அருகில், ஏழெட்டுக் கோடு போடச் சொன்னார்.

 

முதலில், பொட்டுக் கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார். இரண்டாவதாக, முறுக்கைச் சாக்கடையில் போடச் சொன்னார். மூன்றாவதாக நிலக்கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார்.

 

அங்கிருந்து பன்றி வருகின்றது வந்தவுடனே, ஒவ்வொன்றாக மோந்து பார்க்கின்றது. அப்பொழுது, பொட்டுக் கடலை முன்னால் இருக்கின்றது. அதை விட்டுவிடுகின்றது.

 

அடுத்து முருக்கு வேகமாக எணணெய் வாசனை வருகின்றது.  நாற்றத்திற்குள் இதைக் கண்டுபிடித்துப் அந்த முறுக்கை எடுக்கின்றது.

 

அடுத்து எண்ணெய் வாசனை இருக்கின்றது. கடலைப் பருப்பைச் சாப்பிடுகின்றது. அடுத்துப் பொட்டுக்கடலை இருக்கின்றது. அதை விட்டுவிட்டது. மாற்றி அந்த வாசனையைத்தான் நுகர்ந்து எடுக்கின்றது.

 

சாக்கடைக்குள் பார்த்தாயா? என்றார் குருநாதர்.

 

அது நாற்றத்தை எடுக்கவில்லை. நீ எதை எடுக்கின்றாய்?  என்றார். காபி இருக்கின்றது நீ பிரித்துப் பார்க்க முடியவில்லை,

 

உன் உடல் ஆகாரம் சாப்பிட்டவுடனே சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நாற்றத்தை உன் உடல் பிரித்துவிடுகின்றது.

 

உன் உடலிலிருந்து வரக்கூடிய ஆறாவது அறிவு இதைப் பிரிக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது. நீ ஏன் இதைப் பிரிக்க முடியவில்லை? என்று கேட்கின்றார் குருநாதர்.

 

நான் என்ன பதில் சொல்வது?

 

நமது குருநாதர் சாக்கடைக்குள் அமர்ந்து உண்மை நிலையை எமக்கு எடுத்துக் காட்டினார்.

 

சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருள்களை பன்றி எப்படி நுகர்ந்து எடுத்து நல்ல உணர்வைத் தனக்குள் எடுத்து நாற்றமான உடலில் கலந்து நாற்றத்தை நீக்கிடும் உணர்வுகளை வளர்த்ததோ அதே போல பல சரீரங்களைத் தனக்குள் எடுத்து “இதே உயிர்தான்” நம்மை மனிதனாக ஆக்கியிருக்கின்றது.

 

மனிதனாக ஆனபின் சந்தர்ப்பத்தால் ஏற்படும் உணர்வின் நஞ்சு கொண்ட நிலைகளும் உணர்வின் எண்ணத்தால் ஈர்க்கும் செயல்களையும், இதை நீ எவ்வாறு மாற்றுவது? என்றும் மாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலைகளையும் தெளிவாக எடுத்துக் கூறினார் குருநாதர்.

 

எப்படிப் பன்றி, சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ அதே மாதிரி

1.நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து,

2.”நல்லவற்றை எடுக்கக் கற்றுக் கொடுத்தார்” குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

தீமை, தவறு, குற்றம், கெட்டவர்கள் என்றே சொல்லிக் கொண்டிருந்தால் அதுதான் வளரும் – தீமையை நீக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் பார்த்தால் அந்தக் கெட்டதை நிறுத்த முடியும்

Image

Protected zone - divine.png

தீமை, தவறு, குற்றம், கெட்டவர்கள் என்றே சொல்லிக் கொண்டிருந்தால் அதுதான் வளரும் – தீமையை நீக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் பார்த்தால் அந்தக் கெட்டதை நிறுத்த முடியும்

உதாரணமாக இன்று கழிவுப் பொருட்களை எடுப்பவர்கள் கழிவுப் பொருள்களின் நிலைகளில் அவர்கள் இருந்தாலும் கழிவுப் பொருள்களை நுகர்வதில்லை.

1.கழிவுப்பொருள்களை எடுக்கிறார்கள்

2.ஆனால் அதை அவர்கள் நுகர்வதில்லை.

3.”அதை நீக்க வேண்டும்” என்று எண்ணத்தில் வரும் பொழுது

4.கழிவுப் பொருட்களின் மணம் அவர்களுக்கு வருவதில்லை.

5.அவர்களுக்கு நோயும் வருவதில்லை.

ஆனால் அதே சமயம் கழிவுப்பொருள்களை எடுப்பவர்களைப் பார்த்தோர் “ஐய்யய்ய.., நாற்றமாக இருக்கின்றது…,” என்று சொன்னால்

1.இந்த நாற்றத்தை உள்ளே வைத்து

2.கழிவுப் பொருளின் சத்தையெல்லாம் நமக்குள் சேர்த்துக் கொள்கின்றோம்.

எதனின் உணர்வினை நாம் சேர்க்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்ந்து நமக்குள் நாற்றமாகும் நிலையும் நாற்றத்தைக் கண்டால் வெறுக்கும் நிலையும் வந்துவிடுகின்றது.

அப்படி வெறுப்பின் நிலைகள் எண்ணங்கள் வந்தபின் யாரைப் பார்த்தாலும் “ஐய்யய்ய.., இவர்களைப் பார்த்தாலே அசிங்கமாக இருக்கின்றது..,” இந்தச் சொல்லே வரும்.

இது சுத்தமில்லை.., அது சுத்தமில்லை..,  இது சுத்தமில்லை.., என்று சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் மற்றவர்களைச் சொல்லி அவர்கள் எடுப்பது அவர்கள் உடலில் அந்த நாற்றம் வந்து கொண்டே இருக்கும்.

யாரொருவர் “இது சுத்தமில்லை…, அது சுத்தமில்லை..,”  என்று சொல்கின்றனரோ முதலில் அவர்கள் உடலிலே அந்த நாற்றம் வரும்.

வேண்டுமென்றால் சட்டைத் துணியை நீங்கள் நுகர்ந்து பாருங்கள். ஏனென்றால்

1.அந்த நாற்றத்தை இவர் பிடிக்கவில்லை என்று சொல்லி

2.அந்தக் கெட்டதைத்தான் இவர் நுகர்கின்றார்.

அப்படி நுகர்ந்த நிலைகள் அவர் சட்டையை முகர்ந்து பார்த்தால் அவர்கள் பக்கத்தில் நீங்களே போக முடியாது. இதைப் பார்க்கலாம்.

இவையெல்லாம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் சந்தர்ப்பத்தால் இது உருவாகின்றது. இதையெல்லாம் நீங்க்ள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் மனிதனுடைய கொடூரச் செயல்களால் வெளியிடப்படும் மூச்சலைகளும் மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட (ஆயுதங்கள்) மற்றவைகளை அழித்திடும் உணர்வின் ஆற்றலும் அதே அழித்திடும் உணர்வின் எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொண்டு வெளிவிடும் மூச்சலைகளும் இந்தப் பூமியில் பரமாத்வில் (காற்று மண்டலத்தில்) படர்ந்து கொண்டிருக்கின்றது.

பழி தீர்க்கும் உணர்வுகளும் ஒன்றை அழித்திடும் தீவிரவாதத்தின் நிலைகளும் இரக்கமற்றுக் கொன்றிடும் செயல்களின் உணர்வுகளும் நாமும் இதைப் போன்ற உணர்வுகளை நுகர நேர்ந்து நமக்குள் விளையச் செய்து வெளிப்படும் அந்த உணர்வுகளையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இன்று பரமாத்விலே கலந்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் மனிதன் தூய்மையாக்கும் நிலைகள் கொண்டாலும், தூய்மையாக்கும் நிலைகளே மறைந்து உலமே தூய்மையற்றதாக மாறிக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது சாக்கடையான காற்று மண்டலத்திற்குள் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

காற்று மண்டலம் நஞ்சின் தன்மையாக இருக்கும் இந்த நிலையில் நமது குருநாதர் சாக்கடைக்குள் அமர்ந்து எனக்கு சாக்கடை உபதேசம் கொடுத்தார்.

சாக்கடைக்குள் மறைந்திருக்கும் நல்ல (உணவு) பொருட்களை பன்றி நுகர்ந்தெடுத்து நல்ல உணர்வுகளைத் தனக்குள் எடுத்து நாற்றத்தை நீக்கிடும் உணர்வின் எண்ணங்களைத் தன் வாழ்நாள் முழுவதும் வளர்த்துக் கொள்கிறது.

1.நாற்றத்தைப் பிளந்திடும் வலிமையான இத்தகைய நிலைகள்

2.அந்த நாற்றமான பன்றியின் உடலைப் பிளந்து

3.அதைப் போல பல சரீரங்களைத் தனக்குள் எடுத்த இதே உயிர் தான்

4.நம்மைமனிதனாக உருவாக்கி இருக்கின்றது.

ஆனால் மனிதனான பின் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இந்த உணர்வின் நஞ்சு கொண்ட நிலைகளும் உணர்வின் எண்ணத்தால் இயக்கும் செயல்களையும்

1.இன்று நாம் எவ்வாறு மாற்றவேண்டும்?

2.அதனை எவ்வாறு மாற்றிக் கொள்ள முடியும்? என்ற நிலையைத் தெளிவாக எடுத்து உபதேசித்தார் குருநாதர்.

எப்படிப் பன்றி சாக்கடைக்குள் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ இதனின் உணர்வின் ஆற்றலை எண்ணத்தால் நம் நினைவின் ஆற்றலை விண்ணிலே வீசி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் மிக்க உணர்வலைகளை நாம் நுகர (சுவாசிக்க) வேண்டும்.

கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு சென்று உயிரான ஈசனிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படரவேண்டும் என்று உள் முகமாக உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நாம் பழகிக் கொண்டால், நாம் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து வரும் எத்தகைய தீமையான உணர்வையும் நம் ஈர்ப்புக்குள் வராதபடி தடுக்க முடியும்.

“தீமைகளைப் பிளக்க முடியும்”.

இதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைச் சாக்கடையில் அமரச் செய்து தெளிவாக உணர்த்தினார்.

ஒவ்வொரு நொடியிலும் உயிருடன் ஒன்றிடும் உணர்வை நாம் ஒளியாக மாற்றும் பொழுது நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறமுடியும்.

மூச்சுப் பயிற்சி செய்பவர்களின் நிலைகள்

Image

Pranayama

மூச்சுப் பயிற்சி செய்பவர்களின் நிலைகள்

நீங்கள் ஆயிரம் ஜெபம் இருந்து மணிக்கணக்காக உட்கார்ந்து தவம் செய்து நான் ஈஸ்வரனைப் பார்க்கப் போகின்றேன். நான் துருவ நட்சத்திரத்தைப் பெறப்போகின்றேன் என்றாலும் பலன் இல்லை.

1.தியானத்தில் நம் உணர்வு முழுமையானாலும்

2.அவ்வப்போது வரும் தீமையான உணர்வை

3.”உள்ளே விடக் கூடாது”.

தியானத்தில் முழுமை அடைந்தாலும் நீங்கள் துருவ நட்சத்திரத்தை எண்ணும்போது உங்கள் ஆன்மாவில் என்ன செய்கின்றது?

நீங்கள் “நான் சும்மாதான்.., உட்கார்ந்திருக்கின்றேன்” என்று நினைப்பீர்கள்.

ஆனாலும் பிள்ளை படிக்கவில்லை என்றாலோ சுட்டித்தனச் செய்தாலோ அல்லது கடுமையான தவறுகளைச் செய்தாலோ பிள்ளை மேல் பாசம் அந்த நினைவு அதிகம் இருந்தால் “கஷ்டமாக” இருக்கும்.

அதே மாதிரி மற்றவருக்குப் பணம் கொடுத்திருப்போம். அப்படிக் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் அவன் நினைவு கண்டிப்பாக வரும்.

1.சும்மா இருக்கின்றான் பார் என்று அவனுக்கு இத்தனை உதவி செய்தேன்

2.என்னைப்பற்றி எப்படியெல்லாம் கேவலமாகப் பேசுகின்றான் பார் என்ற

3.இந்த உணர்ச்சிகள் தான் வரும்.

அப்பொழுது நீங்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து செய்த ஜெபமோ தியானமோ என்ன ஆகின்றது? தியானத்தில் உட்கார்ந்தாலே இந்த நினைவுகள் நம்மை அலைக்கழிக்கும்.

இப்படிப்பட்ட நினைவுகள் வரும்போது உடனே நாம் என்ன செய்யவேண்டும்?

கண்களைத் திறந்து அந்த மாதிரி நினைவலைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்து எங்கள் அது உடலில் படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அப்பொழுது யாருடைய நினைவுகளெல்லாம் வருகின்றதோ அவர்கள் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று அதனுடன் இதைக் கலக்க வேண்டும்.

பிள்ளை நினைவு வரும்போது

1.அது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்.

2.நல்ல ஞானசக்தியும் ஞாபகசக்தியும் பெறவேண்டும்.

3.படிப்பு மேல் நல்ல நாட்டம் வேண்டும்.

4.சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் வேண்டும் என்று இதை எடுத்து இப்படித் தியானித்து விடுங்கள்.

எது?

உங்களுக்குள் பல கலக்கங்கள் வரும்போது அதை மாற்றக்கூடிய திறன் இதை இப்படித்தான் எடுத்து வர வேண்டும்

நீங்கள் சும்மா உட்கார்ந்து இருந்தால் சில நேரம் இந்த மாதிரி உணர்வுகள் “கிர்…ரென்று” இழுக்கும் அது தன் உணர்ச்சியைத் தூண்டி அவ்வாறு எடுக்கும்.

மீண்டும் நாம் ஆத்ம சுத்தி என்ற நிலையில் அருள் சக்திகளை நமக்குள் செலுத்தி எந்த உணர்வின் சக்தியோ அதைச் சேர்த்து நாம் இணைத்தல் வேண்டும். இதைக் கலந்து இப்படி மாற்ற வேண்டும்.

இல்லையென்றால் கலி என்ற உணர்வுகள் வரும். உட்கார்ந்து தியானத்தில் உட்கார்ந்து மீட்டிய உடனே கொஞ்ச நேரம் அடங்கும். மறுபடியும் கிளர்ந்தெழும்.

பிராணவாயு என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி சில பேர் மூச்சுப்பயிற்சி எடுத்து இதை அடக்கிவிடலாம் என்று நினைப்பார்கள்.

ஒரு நாளும் அடக்க முடியாது.

தூக்கத்திற்குத் தூக்க மருந்து கொடுப்பார்கள் அல்லவா? அந்த மாதிரித் தான் மூச்சுப்பயிற்சி கொடுத்து வட கிளை தென் கிளையைச் சேர் என்பார்கள்.

இந்த உணர்வின் தன்மை போதை மருந்து ஏற்றியதுபோல் கொஞ்ச நேரம் இருக்கும். எப்படி? ஒருவர் சொல்லியிருப்பார் அல்லது புத்தக வடிவில் கொடுத்திருப்பார்கள்.

அதைப் படித்துவிட்டு “நீ இந்த மாதிரிச் செய்தால் நன்றாக இருப்பாய்” என்று அந்த உணர்வு எடுத்தவுடனே அவன் வெளியிட்ட உணர்வு எடுத்தவுடனே கொஞ்ச நேரத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

“ஆகா.., எனக்கு வேறு நினைப்பே வரவில்லை.., மிகவும் ஆனந்தமாக உள்ளது.., எதுவுமே வராது” என்று நினைப்பார்கள்.

பயிற்சியை முடித்துவிட்டு முழித்துப் பார்த்தபின் இவன் நினைவுதான் வரும். “அவன் அயோக்கியப் பயல்.., அந்த மாதிரிச் செய்தான் இந்த மாதிரிச் செய்தான்..,” என்று அவனைப் பார்த்தவுடனே வரும்.

இப்படி நம் வாழ்க்கையில் எத்தகைய கஷ்டமும் வராமல் இருக்க முடியாது. எப்படித்தான் நீங்கள் வீட்டைத் தூய்மைப்படுத்தி வைத்திருந்தாலும் தூசிகள் வரத் தான் செய்யும்.

எங்கேயோ அந்தப் பக்கம் மிளகாயை அரைக்கின்றார்கள். அது காற்றில் பறந்து வந்தவுடன் நமக்குள் போய் எரிச்சலாகின்றது. அப்பொழுது நாம் இருக்கும் வீட்டை மாற்ற முடியுமா?

இன்று மாற்றினால் நாளைக்கு இன்னொரு பக்கம் வந்தால் அப்புறம் எந்தப் பக்கம் மாற்றுவது?

1.வரும் தூசிகளை உள்ளே வராது நாம் குறைத்து

2.பாதுகாப்பாக நாம் இருப்பதற்கு அடைப்புகளை வைக்க வேண்டும்.

3.அதனை வெளியிலேயே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

4.இந்த மாதிரி முறைகளை நாம் கையாண்டு பழகுதல் வேண்டும்.

இதைப் போன்றுதான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவில் வரும் அழுக்கினைப் போக்குவதற்காக குருநாதர் காட்டிய வழியில் “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்தது.

ஒவ்வொரு நிமிடமும் எந்தெந்த வகையில் நமக்குள் தீமைகள் வருகின்றதோ அதைப் பயன்படுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம் பிள்ளையைப் படிக்க வைக்கின்றோம், அது சரியான நிலையில் படிக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.

“இப்படி இருந்தால் என்ன செய்வது…?” என்று எண்ணுகின்றோம்.

அப்போது அந்த வேதனை உணர்வு நமக்குள் வரும்போது அவன் மேல் இருக்கக்கூடிய பாசத்தை மாற்றுகின்றது. அப்புறம் வெறுப்பு தான் வருகின்றது.

அப்போது நாம் பாசத்தை வளர்க்க வேண்டும் என்றால் நமக்குள் என்ன செய்ய வேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முடுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நமக்குள் அந்த அருள் சக்திகளைச் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு செய்து

1.அந்த வேதனைகளை நிறுத்திவிட்டு

2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குழந்தை உடலில் படர வேண்டும்.

3.அது சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும்.

4.அது படிப்பில் ஆர்வம் வர வேண்டும்.

5.மூலத்தின் தன்மை அறியும் அந்த ஆற்றல் வேண்டும் என்று

6.இப்படி நாம் மனதில் எண்ணி  இதைச் செய்ய வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து சுவாசித்து எடுத்து நீங்கள் சொல்லப்படும் பொழுது

1.கண்களாலும் பாய்கின்றது

2.சொல்லாலும் பாய்கின்றது சொல்லின் தன்மை செவியிலே படுகின்றது.

3.உணர்ச்சியின் தன்மை நீங்கள் பரப்பியது காற்றில் உள்ளது.

4.அப்பொழுது இதைக் கவரும் சக்தி வருகின்றது.

இப்போது நிலத்தில் நாம் ஒரு வித்தினை ஊன்றப்படும்போது பலவிதமான செடிகளை உருவாக்குகின்றது.

அதில் எதை எதை விஞ்ஞான அறிவோடு கலந்து கொண்டார்களோ எல்லாமே இந்தக் காற்றில் தூசிகளாக இருக்கின்றது. அதை எடுத்து அதே செடியாக வளருகின்றது.

அதைப்போல நாம் அந்த அருள் ஞானத்தை நமக்குள் வளர்க்க வேண்டும். அதே சமயத்தில் நம் குழந்தைகளுக்குள்ளும் இதை வளர்த்துப் பழக வேண்டும்.

மனித வாழ்க்கையில் இதைப் போன்று ஆத்ம சுத்தி என்பதைச் தெளிவாகச் செய்ய வேண்டும். எத்தகைய நிலை வந்தாலும் உடனுக்குடன் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“ஆத்ம சுத்தி” என்பது மிகவும் முக்கியமானது.

இன்றைய உலகில் நல்லவரைப் போல் நடிப்பவர்களிடமிருந்து அவசியம் தப்பியே ஆக வேண்டும்

addiction.jpg

இன்றைய உலகில் நல்லவரைப் போல் நடிப்பவர்களிடமிருந்து அவசியம் தப்பியே ஆக வேண்டும் 

1.குழந்தைகளைத் திருடிச் சென்று அதன் உடலுக்குள் இருக்கும் மூளையைக் கவர்ந்து
2.விஞ்ஞான அறிவு கொண்டு அதை ஆசிடாக (ACID) மாற்றி
3.முதுமையானவர்களை இளமையாக்குகின்றது இன்றைய விஞ்ஞானம்.

இளம் பிஞ்சு உள்ளத்தில் வளர்ச்சி பெறும் அந்த மூளையின் உணர்வை இவன் எடுத்து மனிதனுக்கு இன்ஜெக்சன் கொடுத்து கிழவனை இளமையாக்குகின்றனர். இது விஞ்ஞான அறிவு.

வளர்ந்து வாழ்ந்து எதிர்காலத்தில் சிறந்து இருக்கும் பிஞ்சு உள்ளங்களை அழிக்கின்றான். முதுமையடைந்து இறக்கப் போகும் ஒருவனுக்கு இளமையின் பருவத்தை ஊட்டுகின்றான்.

1.இன்றைய நிலைகளில் மனிதனுக்கு மனிதன் இரக்கமற்ற செயல்களைச் செய்து கொண்டிருக்கும்
2.இப்படி விஞ்ஞான அறிவு வளர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் தான்
3.நாம் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றோம்.

திருடன் இன்று பணத்தை மட்டும் திருடவில்லை.

பெரியவர்களாக இருந்தாலும் பொருள் இல்லையென்றால் அவருக்குக் கண்ணும் மற்ற உறுப்புகள் சரியாக இயங்குகின்றது என்று தெரிந்துவிட்டால் தனித்துச் சென்றால் கர்ச்சீப்பை முகத்தில் போட்டு மூடி அப்படியே “அபேஸ்” செய்து விடுகிறார்கள்.

காணாமல் போகும் பெரியவர்கள் இப்பொழுது அதிகமாக உள்ளனர். அவர்களைக் கப்பலிலே கடத்துகின்றான். அங்கே உறுப்புக்களை அறுத்து அகற்றுகின்றான்.

தனித்த இடங்களில் உறுப்புகளை எடுத்துக் கொண்டு அந்த உடலைக் கடலில் போட்டுவிடுகின்றனர்.

அந்த உறுப்புகளை சேமிப்புக் கிடங்குகளில் வைத்து விஞ்ஞான அறிவு கொண்டு ஒருவரைக் காப்பாற்றும் நிலைகளுக்குச் செயல்படுத்துகின்றனர். அது ஒரு பக்கம் இருந்தாலும்
1.தசைகளை அது பல பொருள்களை இட்டு
2.மனிதனுக்குச் சக்திவாய்ந்த சத்து என்று இதை டப்பாக்களில் மணங்களை மாற்றி
3.மனிதனுடைய மாமிசமே இன்று மாமிசமாக சத்துள்ளதாகவும்
4.அதை இப்படி மாற்றிக் கொண்டு வருகின்றது இன்றைய விஞ்ஞான உலகம்.

விஞ்ஞான உலகம் இன்று இவ்வளவு வளர்ச்சியான நிலையில் அமெரிக்காவில் இன்றும் பெரும்பகுதியான இடங்களில் “கையில் சிக்கினால் போதும்…” அவனிடத்தில் இருக்கக்கூடிய பொருளும் அவன் தசைகளை உணவாக உட்கொள்வது போன்ற வகையில் நடப்பதெல்லாம் இப்பொழுது வெளிவருகின்றது.

விஞ்ஞான உலகத்தின் முன்னேற்றத்தால் இன்று உலகப் போர் துரித நிலைகளில் வரும் நிலை வந்துவிட்டது. அமைதி கொண்டு இருக்கின்றது என்று எண்ணுகின்றோம்.

எதிரியே இல்லாது வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா மற்ற நாட்டின் நிலைகளை வளரவிடாது தடுத்துக் கொண்டும் அவனுக்குள் அடிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றது.

மற்ற நாடுகளை அடக்க எலக்ட்ரானிக் என்ற முறையில் லேசர் (LASER) போன்ற நுட்பமான ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அங்கே அது மட்டுமல்ல கொடூர விளைவுகளை உண்டாக்கும் ஆயுதங்களையும் கொண்டுள்ளார்கள்.

எத்திசையில் எதுவானாலும் விஷக்கிருமிகள் உருவாகும் நிலையில் அவன் அடுத்தவன் கண்டுகொள்ளாதபடி எந்த நாடாக இருந்தாலும் அதனை பலவீனப்படுத்துவதற்கும் விவசாயம் வளர்ச்சி பெறாத நிலைகளையும் செய்கின்றனர்.

1.இதையெல்லாம் சோதனை முறையாக
2.நீக்ரோக்கள் வாழும் அப்பகுதிகளில் விவசாயத்தைக் குன்றச் செய்து
3.பசி பட்டினியையும் அங்கே உருவாக்கி
4.“உதவி செய்வது போல” உணவும் அனுப்புகிறார்கள்.

இதைப் போல, உலகம் சுருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் முன்பு மெய்ஞானிகள் மனிதனின் உணர்வலைகள் முழுமையாக அழிகின்றது.

2000க்கு மேல் மனிதனின் எண்ணங்கள் இருள் சூழ்ந்து மனிதனுக்கு மனிதன் உணவாக உட்கொள்ளும் நிலையும் சிந்தனையற்றுப் பித்தனைப் போல் திரியும் காலங்கள் வந்துவிடும் என்று மகரிஷிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவுற உணர்த்தியுள்ளார்கள்.

ஆகவே இன்று நாம் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து உணர்ந்து கொண்டால் போதும்.