தீய உணர்வுகள் விளைந்து கனியானால் “கலி” தீமை வரும்பொழுதெல்லாம் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் கனியாக்கினால் “கல்கி”

Image

Kali kalki

தீய உணர்வுகள் விளைந்து கனியானால் “கலி” தீமை வரும்பொழுதெல்லாம் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் கனியாக்கினால் “கல்கி”

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தீமை என்று கண்ட பின் நாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.

இப்படித் தியானித்து நம் உடலுக்குள் எடுத்துக் கொள்ளும் பொழுது தன்னிச்சையாக (AUTOMATIC) என்ன செய்கின்றது? தீமைகளைப் பிளந்துவிட்டு அந்தத் தீமை செய்யும் உணர்வுகளைச் சூரியன் (காந்தப் புலனறிவுகள்) எடுத்துக் கொண்டு போகின்றது.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கவலையோ சங்கடமோ வெறுப்போ வேதனையோ

1.நம் உடலில் இப்படி எத்தனையோ வரும்.

2.அதுவெல்லாம் தன் சாப்பாட்டிற்காக ஏங்கும்.

3.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் உயிர் வழியாக கண்கள் கொண்டு இழுக்கும்.

4.அப்புறம் நமக்குள் ஆன்மாவிற்குள் வந்து சுவாசத்தின் வழியாக உடலுக்குள் போய்

5.அது தன் இனத்தை வளர்க்க முயற்சிக்கும்.

ஏனென்றால் கோபம் வெறுப்பு சலிப்பு ஆத்திரம் வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வரும்போது “கலி…” ஆகிவிடுகின்றது. அப்பொழுது நல்ல சிந்தனை குறைக்கப்படுகின்றது.

வேதனை என்று வரும் போது நோயாகின்றது. நல்லதை நமக்குள் வலிமையாக்க முடியவில்லை. அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

நமக்குள் மனக்கவலையோ மற்ற சங்கடமோ வந்தால் அந்த மாதிரி நேரத்தில் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று சொல்லிக் கொஞ்ச நேரம் ஏங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

“கண்களை மூடி” அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று உள்முகமாக உணர்வினைச் செலுத்தி உடலுக்குள் இணைக்க வேண்டும்.

இந்த மாதிரி எடுத்து நம் உடலில் சேர்த்துக் “கல்கி…” ஆக மாற்ற வேண்டும்.

ஆகவே கார்த்திகேயா.., தீமை என்ற நிலைகள் புகாதபடி சேனாதிபதி…, பாதுகாக்கக் கூடிய வலிமை இருக்கின்றது. அந்த  வலிமையின் துணை கொண்டு நாம் எதை இச்சைப்பட வேண்டும்?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இது இச்சை. அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது கிரியை.

சேர்க்கச் சேர்க்க அதனின் ஞானமாக நமக்குள் இயங்கத் தொடங்கும். இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. இந்த ஆறாவது அறிவு என்பது வலிமைமிக்க சக்தி “வள்ளி”.

இந்த வலிமை கொண்டு நாம் என்ன செய்கின்றோம்? தீமைகளை நீக்கக்கூடிய தகுதி பெறுகின்றோம். அப்போது அருள் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று உணர்வை எடுத்து அது உயிரிலே பட்டால் அந்த உணர்ச்சிகள் “தெய்வானை”.

1.அதாவது அந்த ஆணைப்படி நமக்குள் அருள் சக்திகள் சேரும்.

2.அந்தத் தெய்வமாக நாம் ஆணையிட்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இதைத்தான் கந்த புராணத்தில் ஞானிகள் தெளிவாக கூறியிருக்கின்றார்கள்.

நாம் இந்த உடலில் எத்தனை காலம் வாழ்கின்றோம்? வாழப் போகின்றோம்? நன்றாகச் சிந்தித்து பாருங்கள்.

“நான் நல்லது செய்தேனே…, எனக்குத் தீமை வருகின்றதே..,” என்று தான் எண்ணுகின்றோமே தவிர நல்லதை எண்ண முடியவில்லை.

ஏனென்றால் நாம் சுவாசித்த தீமையின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகி வளரும் பொழுது அந்தந்த நேரத்தில் “அதனுடைய பசிக்கு” அது எடுக்கின்றது.

அது வளர்ந்து தீமையைக் “கனியாக” ஆக்க முயற்சிக்கும். கனியாகிவிட்டால் மீண்டும் பல வித்துக்களாக தீமையின் விளைச்சலாக நமக்குள் ஆகிவிடும்.

அது கனியாவதற்கு முன் நாம் தடுத்துவிட்டால்…? அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது. தீமையின் விளைவுகள் தடைப்படுத்தப்படுகின்றது.

1.தீய உணர்வின் தன்மை நமக்குள் கனியாவதற்கு முன்

2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஒவ்வொன்றாக எடுத்து

3.நம் உடலுக்குள் வளர்த்து இதன் வழி கனியாகி

4.உயிர் என்ற உணர்வை முழுமையான கனியாக்க வேண்டும்

5.அது தான் கல்கி.

 

அனுமான் இலங்கையைத் தீ வைத்தான் – விளக்கம்

Image

Lanka dahan.jpg

அனுமான் இலங்கையைத் தீ வைத்தான் – விளக்கம்

இப்போது நமக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள் நல்லதாக வேண்டும் என்று எண்ணினாலும் பிறருடைய கஷ்டங்கள் பிறருடைய நஷ்டங்கள் பிறருடைய தொல்லைகள் எல்லாம் சேர்க்கப்படும்போது நம் உடலுக்குள் என்ன செய்கின்றது?

 

அரக்க உணர்வுகள் அதிகமாகின்றது.

 

அப்போது நமக்குள் சந்தோஷம் என்ற சீதாவைச் செயலற்றதாக மாற்றுகின்றது. நமக்குள் என்ன செய்கின்றோம்?

 

(உயிர் – விஷ்ணு; உயிரின் காந்தம் –  இலட்சுமி; இராமன் – எண்ணங்கள்; சீதா என்றால் சுவை – மகிழ்ச்சி; உடல் – இலங்கை; உடலின் இச்சை – இராவணன்)

 

1.ஒவ்வொரு நாளும் நாம் தேடிக்கொண்ட உணர்வுகள் பலவானாலும்

2.இலங்கேஸ்வரன் (இராவணன்) இந்த உடலின் இச்சைகள் தனக்குள் ஆகி நல்லதை உருவாக்காதபடி

3.நமக்குள் நல்லதைச் சிறைப்பிடித்துக் கொள்கிறோம்.

4.சீதா என்ற அந்த நல்ல குணத்தைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

 

அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்? இராமன் என்ன செய்கின்றான்? இராமன் சீதாவை எண்ணிச் செயல்படுத்தும்போது சீதா என்ன செய்கின்றது.

 

1.தன் கணவனின் உணர்வின் தன்மையை எண்ணி

2.அதை அதே உணர்ச்சியின் தன்மை கொண்டு

3.உயிரான விஷ்ணுவிடம் ஏங்குகின்றது.

 

இந்த அரக்கனோ தீமையின் உணர்வு கொண்டு நான் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணி அவனும் (உயிரான) விஷ்ணுவை நோக்கித் தவம் செய்கின்றான்.

 

அவன் உணர்வு அதிகமாக்கப்படும் போது அவன் உடலுக்குள் நல்ல குணங்களைக் கொல்கின்றான். இந்திரலோகத்தில் (உடலுக்குள் அணுக்கள் உருவாகும் இடத்தில்) இவன் எடுத்துக் கொண்ட உணர்வு எதிர்மறையாக மனிதனின் ஆறாவது அறிவை இழக்கச் செய்துவிடுகின்றான்.

 

அப்பொழுது சீதா எண்ணிய அந்த உணர்வின் தன்மை வரப்படும்போது

1.அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் கணவருக்குத் தூண்டப்பட்டு

2.அதைக் காக்கும் படைகலன்களாக வருகின்றது.

3.ஆகவே இதையெல்லாம் சேர்த்து “வானரப்படை”.

 

தான் எண்ணிய உணர்வுகள் வலுவாகி அந்த உணர்வின் தன்மை அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் தனக்குள் “பாதுகாப்பு” என்ற உணர்வு வருகின்றது.

 

தீமைகளை நீக்குவதற்காக நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை வலுவான நிலைகள் கொண்டு எடுக்கும்போது நம் உணர்வின் தன்மை எப்படி ஆகின்றது?

 

நமக்குள் அந்த நல்ல குணத்தைச் சேர்க்கச் சேர்க்க நம் ஆன்மாவில் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் வானரப்படைகளாகச் சேர்க்கின்றது.

 

தீமைகளை நீக்கும் நிலையாக தனக்குள் அந்தப் பாதுகாக்கும் நிலைகள் கொண்டு அது போர் செய்து சீதாவை மீட்டும் தன்மை வருகின்றது.

 

நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க

1.தீமைகளை நீக்கும் உணர்வுகள் அசுர உணர்வுடன் இங்கே மனதிலேயே போர் நடக்கின்றது.

2.உடலுக்குள் சென்றபின் அரக்க உணர்வுக்கும் அதற்கும் போர் நடக்கின்றது.

  1. சீதா இருக்கும் அந்த நிலையில் இலங்கைக்குள் (உடலுக்குள்) பல உணர்வுகளின் தன்மை கொண்டு நெருப்பு வைத்து ஆஞ்சநேயர் கொளுத்துகின்றார்.

 

அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் சேர்கின்றது. தீமைகள் அகற்றப்படுகின்றது.

 

ஆகவே நம் உடலுக்குள் அந்தத் தீமையை நீக்கும் உணர்வைச் செலுத்தப்படும்போது அந்த சீதாவை – சந்தோஷத்தை நாம் மீட்ட முடியும்.

 

சொல்வது அர்த்தமாகின்றதல்லவா?

 

குழந்தைகள் மேல் உள்ள பாசத்தால் நாம் எண்ணி வெளிப்படுத்தும் உணர்வுகள் நம் குழந்தைகளை எப்படி இயக்குகின்றது என்று நாம் அறிந்திருக்கின்றோமா…!

Image

Radio waves - Telepathy

குழந்தைகள் மேல் உள்ள பாசத்தால் நாம் எண்ணி வெளிப்படுத்தும் உணர்வுகள் நம் குழந்தைகளை எப்படி இயக்குகின்றது என்று நாம் அறிந்திருக்கின்றோமா…!

இப்போது நாம் வாழ்க்கையில் எதை எதை எண்ணுகின்றோம்? என் பிள்ளைக்குக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

அது நடக்கவில்லை கால தாமதம் ஆகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்? வேதனைப்படுகின்றோம். வேதனை அதிகமாகி நமக்குள் அந்த வேதனையை உருவாக்கிக் கொள்கின்றோம்.

கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். வேதனையாகும்போது அடுத்து அந்தக் குழந்தை திருமணமாகி அது நல்ல நிலையில் வாழ வேண்டும் என்பதை விட்டு விட்டுகின்றோம். (வேதனையையே எண்ணிக் கொண்டுள்ளோம்).

1.ஏனென்றால் நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனையை உருவாக்கி

2.அந்தப் பிள்ளையைப் பார்க்கும் பொழுதெல்லாம் “வயதாகிவிட்டது.., வயது ஆகிக் கொண்டே போகிறது.., என்ன செய்வது…?

3.“வயதாகிவிட்டது வயதாகிவிட்டது” என்று இங்கே நமக்குள் சமைத்து

4.அந்த உணர்வுகளைத்தான் குழந்தைக்குக் கொடுத்து

5.அது உடலிலும் வளர்க்கச் செய்கின்றோம்.

குழந்தையைப் பார்க்கும் பொழுதெல்லாம் “கல்யாணம் ஆகவில்லை ஆகவில்லை..,” என்று இந்த ராகத்தையே பாடிக் கொண்டிருப்போம்.

யாராவது மாப்பிள்ளை வருகிறார்கள் என்றால் எதை எண்ணினோமோ இந்த உணர்வலைகள் “கம்ப்யூட்டர் ரிமோட் செய்வது போல் செய்து” அங்கே இணங்கி வரும் நிலைகளை மாற்றிவிடும். பார்த்துவிட்டு வேண்டாம் என்று சென்றுவிடுவார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அதே மாதிரி குழந்தைகளைப் படிக்க வைக்கின்றோம். சரியாகப் படிக்கவில்லை என்றால் என்ன ஆகின்றது? நாம் என்ன நினைக்கின்றோம்?

எப்படியோ நல்ல முறையில் படிக்க வைத்து உயர்ந்த நிலைக்கு அனுப்பலாம் என்று நினைத்தேன். ஆனால் சரியாக வரவில்லை என்று கவலைப்படுகின்றோம்.

“இப்படி ஆகி விட்டதே…” என்று பல கவலைகளை எடுத்துக் குழந்தைகளிடம் பேசப்படும்போது அதன் மனதில் கவலையான உணர்வுகள் நினைவுக்கு வருகின்றது.

அப்பொழுது நாம் அந்தக் குழந்தைக்கு எதைச் சமைத்துக் கொடுக்கின்றோம். நல்ல உணர்வுகளைக் கொடுக்கின்றோமா..?

ஏனென்றால் நாம் நண்பனுக்குள் ஒருவருக்கொருவர் நன்மை செய்தால் “விக்கலாகின்றது”. காரியங்கள் நல்லதாகின்றது. துரோகம் செய்தான் பாவி என்றால் புரையோடுகின்றது. காரியங்கள் எல்லாமே தடையாகிவிடுகின்றது.

அப்பொழுது பாசத்தால் தன் குழந்தை படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டாலும் படிக்கவில்லை என்கிற பொழுது “இப்படிச் செய்கின்றானே.., அப்படிச் செய்கின்றானே…! இவன் எங்கே உருப்படப் போகின்றான்…,?” என்ற கோபப்பட்டு அந்த உணர்வுடன் சொல்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் நமக்குள் இதை எண்ணி இப்படிப்பட்ட உணர்வுகளைச் சமைத்து என்ன செய்கின்றோம்?

மீண்டும் அவனை எண்ணும்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் சொல்வோம்.

எல்லோரும் நன்றாகப் படிக்கிறார்கள். ஆனால் இவனைப் பார்த்தால் இப்பொழுது சுட்டித்தனம் ஜாஸ்தி ஆகிவிட்டது. வெளியிலே சுற்றப் போகிறான் என்று சொல்வார்கள்.

1.இப்படி நினைத்து

2.மற்றவர்களிடம் தான் சொல்கிறோம் என்று நினைக்கிறோம்.

3.ஆனால், அவனை நினைத்து நாம் சொல்லும் உணர்வுதான்

4.அங்கு குழந்தைக்குள் சென்று பாய்கின்றது என்பதை யாரும் நினைப்பதில்லை.

5.அந்த உணர்ச்சிகள் அவனைத் தூண்டி இன்னும் கொஞ்சம் விளையாட்டுக்கு தான் போகச் சொல்லும்.

6.அப்போது நம்முடைய உணர்வுகள் தான் அவனை இயக்குகின்றது.

எப்படித் தீமை செய்த உணர்வுகளை எண்ணும்போது “எனக்குத் துரோகம் செய்தான் பாவி..,” என்றால் நமக்கு வெகு தொலைவில்… இருந்தாலும் அந்த உடலை இயக்குகின்றது.

அதே சமயத்தில் நன்மை செய்தார்கள் என்று எண்ணினால் வெகு தொலைவில் இருந்தாலும் விக்கலாக வருகின்றது. இப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு இருக்கின்றது.

தொடர்பு இல்லாது எவரும் இல்லை.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?

1.குழந்தை அவன் அறியாமல் இயக்கும் அந்த இருளைப் போக்கும் நிலையை

2.நாம் இங்கு நமக்குள் சமைத்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சி

3.அதை இணைத்துச் சொல்லாக அவனிடம் சொன்னால்

4.குழந்தை உடலில் நல்ல உணர்வுகளாகப் படர்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடல்களில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.

எங்கள் குழந்தை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவனுக்குக் கல்வில்யில் நாட்டம் வர வேண்டும். கல்வியில் உயர்ந்த ஞானம் பெற வேண்டும். அவன் தெளிவான நிலையில் வாழ வேண்டும். என்று

“இப்படி யாராவது நாம் சொல்கின்றோமா?”

தெய்வ பக்தி கொண்டு சொல்பவர்கள் கூட என்ன செய்கிறார்கள்? வேதனையைத்தான் சொல்கிறார்கள்.

சாமியைக் கும்பிடுகின்றோம். அந்தத் தெய்வத்தை நினைத்து அவன் இப்படி இருக்கின்றானே… நீ பார்க்கக் கூடாதா…,? அந்த வேதனையை நினைத்துத் தான் சொல்கின்றோம்.

நாம் அந்த தெய்வத்தை நினைத்துச் சொன்னால் எப்படிச் சொல்ல வேண்டும்?

அந்த அருளை என் குழந்தை பெற்று இருளை நீக்க வேண்டும். அந்த அருளால் அவனை அறியாத இருள்கள் அனைத்தும் நீங்க வேண்டும். அவன் பேரருள் பெற்று எல்லாவற்றிலும் தெளிந்த மனம் பெற வேண்டும்.

சந்தோஷத்தோடு நாம் இந்த நிலைகளை அடிக்கடி அவனிடம் சொல்ல வேண்டும்.

1.நாம் செலுத்தும் உணர்வுகள் அவனுக்குள் ஊடுருவி

2.அவன் சுவாசத்தில் கலந்து

3.அவனுக்குள் இயக்கங்கள் நல்லதாகும்.

“உங்கள் உணர்வு” அவனைத் திருத்துகின்றதா இல்லையா என்று அப்புறம் உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.