சாதாரண ஆத்மாக்கள் புவிக்குள் சுழல்வதையும் ஒளிச் சரீரம் பெற்ற ஆத்மாக்கள் “சப்தரிஷி மண்டலங்களில்” வாழ்வதையும் காட்டினார் குருநாதர்

Image

Polaris and sabdharisi mandalam

சாதாரண ஆத்மாக்கள் புவிக்குள் சுழல்வதையும் ஒளிச் சரீரம் பெற்ற ஆத்மாக்கள் “சப்தரிஷி மண்டலங்களில்” வாழ்வதையும் காட்டினார் குருநாதர்

உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் தெய்வங்களைப் பற்றிய உண்மைகளைக் காட்டுகின்றன.

அந்தந்த மதங்கள் காட்டிய வழி முறைப்படி வணங்கி வரும் தெய்வ வழிபாட்டில் உபதேசித்த அறநெறிகளையும் பல நற்பண்புகளையும் கடைப்பிடித்து உலக மக்கள் வாழ்கின்றார்கள்,

ஒவ்வொரு மனிதனும் தான் வணங்கி வரும் தெய்வங்கள் தங்களைக் காத்து வரும் என்ற நம்பிக்கையில்
1.எல்லா வழிகளிலும் நல்லதைச் செய்யவே
2.உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் எண்ணுகின்றார்கள்.

ஆனால் நான் உனக்குக் காட்டி உணர்த்திய படி
1.ஒவ்வொரு மனிதருக்குள்ளும் “தீய உணர்வலைகள்”
2.அவர்களை அறியாமல் அவர்கள் உடல்களில் எவ்வாறு சேர்கின்றன? என்பதனை உணர்த்தினேன் என்றார் குருநாதர்.

அதிலே நீயும் ஒருவன்.

தீய உணர்வுகளில் இருந்து உன்னை நீ எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளப் போகின்றாய்…! என்ற கேள்விக் குறியுடன் அவர் சொல்வதை நிறுத்திக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து என்னை விண்ணை நோக்கிப் பார்க்கும்படி சொன்னார்.

1.பல நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும் ஒளி அலைகளைக் காண்பித்தார்
2.அதன் உண்மை நிலைகளையும் உணர்த்தினார்
3.பின்பு சப்தரிஷி மண்டலங்களைக் காண்பித்தார்

அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்புக்குள் சிறு சிறு புள்ளிகளாக வலம் வந்து கொண்டு கோலிக் குண்டுகளைப் போன்று பல வண்ணங்களில் இருந்தன.

“அவை எல்லாம் என்ன…?” என்று என்னைக் கேட்டார்.

“நான் தெரியவில்லை…”என்று சொல்லியதும் மற்றவர்களிடம் பைத்தியம் பேசுவது போன்று பேசுவதைப் போல எனக்குப் புரியாத நிலையில் பேசிக் கொண்டே என்னை ஓங்கி ஒரு அடி கொடுத்தார்.

நான் திகைத்துப் போனேன் பிறகு அதன் நிலையை உணர வைத்தார்.

அதெல்லாம் சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்திய ஒளி சக்தியைப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் அவர்கள் தவத்தின் வலிமையால் புலன்களின் உணர்வால் அந்த ஒளி சக்தியை தங்களின் சுவாசங்களில் ஈர்த்துக் கொண்டனர்.

சுவாசித்த உணர்வுகளை இரத்த நாளங்களில் சேர்த்துக் கொண்டு, அவர்களின் அவர்களின் உடல்களில் சேர்த்துக் கொண்டதினால் மனிதனை மிருகமாக மாற்றவல்ல தீய உணர்வுகளை மாய்த்தனர்.

1.அதனின் வளர்ச்சியில் தங்களையே அறியும் ஞானிகளாக
2.ஞானத்தின் வழித் தொடரில் மெய்ஞானிகளாகி
3.அவர்களின் உயிரில் ஆத்மாவாக இயங்கிய அணு சிசுக்கள் ஒளியாக மாறி உயிருடன் உயிராகச் சேர்ந்து
4.ஒளியின் உணர்வு கொண்ட ஜடமாக மின்னும் நட்சத்திரங்களைத் தான் நீ பார்த்தது என்றார் குருநாதர்.

உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக இருக்கும் அணு சிசுக்கள் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கு ஒப்ப அணு சிசுக்கள் மாறிக் கொண்டே இருக்கும்,

“மாறிய அணு சிசுக்களுக்கு ஒப்பத்தான்” அடுத்த உடலை அந்த உயிர் உருவாக்கும் என்று உணர்த்தினார் குருநாதர்.

சிறிது நேரம் மலைகளையும், காடுகளையும் சமவெளிகளையும் திரும்பிப் பார்க்கச் சொன்னார்.

திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்பொழுது இளம் கருப்பு அடர்த்திக்கொப்ப இலேசான ஒளி பிரகாசமான ஒளி, இவ்வாறு பல வகையான வண்ணங்களில் சிறு புள்ளிகளாகத் தெரிந்தன.

அதன் விவரங்களை விளக்கி உபதேசித்துக் கொண்டிருந்தார் குருநாதர். “மின்னல் பாயும் பொழுது… கண்களை மூடிவிடாதே…!” என்றார்.

எனக்குப் பயம்… வந்துவிட்டது. கண்களை மூடவில்லை என்றால் பார்வை இழந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டேன்?

அவ்வளவுதான்… பைத்தியம் பிடித்தவர் போன்று எனக்குப் புரியாத பாஷையில் பேசிவிட்டுப் பிறகு என் உணர்வுகளில் “புரியும்படி” உணர்த்தினார்

நான் சொன்னதைச் செய்கிறேன் என்றாய் இப்பொழுது ஏன் தயக்கம்? என்று கேட்டுவிட்டு
1.“நீயாகவா பார்க்கிறாய்…!
2.நான் அல்லவா… பார்க்கச் சொல்லுகிறேன்…! என்றார்.

சிறிது நேரம் சமவெளியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த மனிதர்களின் உடல்களிலிருந்து பிரிந்து வந்த உயிராத்மாக்கள்தான் சிறு சிறு புள்ளிகளாகத் தெரிவது என்று காட்டினார்.

அதில் பிரகாசமாகத் தெரிந்த புள்ளிகளைச் சுட்டிக் காட்டி சில கூடு விட்டுக் கூடு பாய்ந்து பல செயல்களைச் செய்து வந்து கடைசியில், கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி இழந்த உயிராத்மாக்கள் கரும் புள்ளிகளாக இருக்கின்றன என்றார்.

பல மந்திர தந்திரங்களைச் செய்து காட்டி வந்த உயிராத்மாக்களும், கரும் புள்ளியாக இருக்கின்றன. இவை அனைத்திலும் உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாக உள்ள அணுசிசுக்கள் தெரிகின்றன.

இன்னும் சிலர் ஒன்றையும் எதிர்பார்ப்பில்லாது பல துன்பங்கள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு நல்ல செயல்களைச் செய்து வந்து தெய்வமே துணை என்ற நிலையிலும் வளர்ந்து வந்த உயிராத்மாக்கள் இளம் சிவப்புப் புள்ளியாகத் தெரிந்தன.

இதையெல்லாம் சொல்லிவிட்டுச் சமவெளியைப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொன்னார்.

அச்சமயம் எதிர்பாராது “பளீர்…பளீர்…ர்ர்” என்று மின்னல் பாய்ந்து கொண்டேயிருந்தது. அந்த மின்னலில் சிக்கிய பல வண்ணம் கொண்ட உயிராத்மாக்களின் அணுசிசுக்கள் செயல் இழந்து விட்டன.

ஆனால் உயிர்கள் அழியவில்லை அவை அழிவதில்லை.

“ஒளியாக இருந்த உயிராத்மாக்கள்” மின்னலின் கதிர்வீச்சில் சிக்கினாலும் எவ்விதப் பாதிப்புமில்லாது மின்னிக் கொண்டேயிருந்தன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்கள் மறு பிறப்பிற்கு வராமல் பூமியின் ஈர்ப்பில் சுழன்று கொண்டே தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவைகளாகின்றன.

காலத்தால் விண்ணைச் சென்றடைந்து விடுகின்றன.

இத்தகைய ஒளியான உயிராத்மாக்களிலிருந்து வெளிப்படும் ஒளி அணுக்கள் சந்தர்ப்பவசத்தால் பிறிதொரு மனிதனின் உணர்வின் ஈர்ப்பில் சேர்ந்தால்
1.அந்த மனிதனின் ஆற்றல் பெருகி
2.ஞானத்தின் வழித்தொடரில் தன்னை அறியக்கூடிய மெய் ஞானியாகின்றான்.

இவ்வாறு நிகழ்வது எங்கோ ஒருவருக்குத்தான் என்று உணர்த்திவிட்டு மின்னலில் செயலிழந்த உயிராத்மாக்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

மின்னலின் தாக்குதலுக்குள்ளான உயிராத்மாவின் அணுசிசுக்களின் செயலிழந்த சத்துக்கள் உயிரில் இணைந்த ஆத்மாவாக இருக்கின்றன. அது மீண்டும் மனிதனாக உடல் பெறத் தகுதியற்றதாகிறது.

இத்தகைய உயிராத்மாக்கள் பூமியில் உள்ள தாவரங்கள் மீது படும் பொழுது உயிரின் துடிப்பினால் செயலிழந்த ஆத்மாக்கள் மீண்டும் அணுக்கருக்களாக உருவாகி “புது விதமான பூச்சிகளாக” உருப்பெறுகின்றது என்பதை உணர்த்தினார்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இன்றைய பக்தி நிலையில் “தெய்வத்தைக் காட்சியாகக் கண்டேன்” என்பவர்களின் கடைசி எல்லை

Lord Venkateshwara

இன்றைய பக்தி நிலையில் “தெய்வத்தைக் காட்சியாகக் கண்டேன்” என்பவர்களின் கடைசி எல்லை

(1).ஆலயங்களில் நாம் “சாமி சிலையைப் பார்க்கும் பொழுது” என்ன நடக்கின்றது?
நாம் கோயிலில் போய் வெங்கடாசலபதியிடம் இந்தக் காணிக்கை போடுகிறேன் என்கிற போது இந்தக் கண் அதைப் படம் எடுக்கிறது. அது சிலைதான்.
1.அந்தச் சிலையிலிருந்து வரக்கூடிய அலைகளும்
2.நாம் எண்ணும் எண்ணங்களும் ஒன்றாகச் சேர்கிறது.
3.அதில் என்ன ரூபங்கள் போட்டு அதை அலங்கரித்து வைத்திருக்கிறார்களோ
4.நம் கண் அப்படியே பதிவாக்குகிறது.

நாம் அதன் மேல் ஆசைப்பட்டு இந்த வெங்கடாசலபதி நமக்குச் செய்வான். சொத்து கொடுப்பான். சுகம் கொடுப்பான் – என் நோயைத் தீர்ப்பான் என்று அவ்வாறு ஒவ்வொன்றுக்கும் காணிக்கை முடிந்து போட்டுவிடுகிறோம்.

“இந்த எண்ணத்தை வளர்க்கிறோம்”.

அந்தப் படத்தை எடுக்கும் பொழுது இந்த சூரியனின் காந்தப்புலன்கள் அதை அலைகளாக எடுக்கிறது. நாம் எந்த நிலைக்கு வந்தோமோ அதை அப்படியே பதிவாக்குகிறது.

சினிமாப் படங்களில் என்ன செய்கிறார்கள்?
1.தனித்தனியாக எடுத்துப்
2.பிறகு ஓடும் பொழுது படமாகத் தெரிகிறது.
3.நடப்பதுபோல் தெரிகிறது.

இதேபோல் நமக்குள் அந்தச் சிலையை அதிகமாக எண்ணிப் பார்த்துப் பதிவு செய்திருக்கின்றோம். நாம் அந்த நிலையை எடுத்திருக்கிறோம்.

அப்புறம் அதில் மந்திரங்களைச் சொல்லி இன்ன இன்ன மந்திரங்கள் சொன்னால் அவன் இரக்கப்பட்டு ஓடிவந்து இதையெல்லாம் செய்வான் என்று நம்மிடம் சொல்வார்கள்.

அதைப் பதிவாக்கிவிடுகிறோம்.

இதைப் பதிவாக்கியபின் இன்ன இன்ன கஷ்டத்திற்கு இதை எல்லாம் செய்தால் “உனக்கு நன்றாக இருக்கும்… அவன் சுகத்தைக் கொடுப்பான்…” என்பார்கள்.

(2).கடவுள் பக்தியாக நாம் வாழும் பொழுது வீட்டில் திருடன் கொள்ளையடித்தால் என்ன ஆகும்?
இந்த உடலில் இருப்பது வரை நீங்கள் என்னதான் செய்தாலும் சொத்து சுகம் வந்தாலும் அது மறைந்துவிடும்.

எல்லா சுகமும் ஆண்டவன் கொடுப்பான் என்றால் இடையில் ஒருவன் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டான் என்றால் என்னாகும்?

“என் சொத்தெல்லாம் போய்விட்டது,. நான் என்ன செய்வேன்?” என்று வேதனை எடுத்துவிட்டால் இது அதிகமாகிவிடுகின்றது. அப்படி வேதனை அதிகமாகி விட்டால் அந்தக் கடவுள் கைவிட்டு இந்தக் கடவுள் வந்து விடுகிறார்.

நாம் வேதனை உணர்வு எடுத்துவிட்டோம் என்றால் என்ன நினைப்போம்? “எப்படி எல்லாம் சம்பாதித்தேன்…, இப்படிக் கொள்ளை அடித்து விட்டானே…” என்று நான் நினைக்கிறேன்.

வெங்கடாசலபதியிடம் செல்கிறேன். “இப்படிக் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டானே என்று…”
1.இதே நிலையில் எண்ணி எண்ணி எனக்கு நோயாகின்றது.
2.நான் இறந்துவிடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
3.இது அலைகளாகப் படர்கிறது.
(அதாவது – இந்த  மனித ரூபத்திலிருந்து அழிந்து மனித உடலில் சேர்ந்தபின் அந்த எண்ணமும் ரூபமும் சேர்ந்து இப்படி வந்து விடுகிறது)

(3).வேதனைப்பட்டு இறந்தபின் திருடன் உடலுக்குள் ஆன்மா போகும்
திருடியவன் யார் என்று தெரிந்தான் என்றால் அவன் ரூபத்தைப் பதிவாக்கி விடுகிறோம்.  “திருடிச் சென்று விட்டானே..” என்று எண்ணுகின்றோம்.

அப்பொழுது  எப்படி “ஆடு…” பயத்தால் புலியையும் நரியையும் எண்ணுகின்றதோ
1.நம் செல்வத்தைத் திருடிப்போய் விட்டான் என்றால் அவனையே எண்ணி
2.என் ஆன்மா திருடனின் உடலுக்குள் போகிறது.

“வெங்கடாசலபதியே.., என்னை இப்படிச் செய்து விட்டானே” என்று அந்தத் திருடனை எண்ணி இணைத்து விட்டால் போதும்
1.இது இரண்டும் அலைகளாக மாறும்.
2.எல்லாம் வெளியில் வரும்,
3.எல்லாம் நமக்குள் பதிவாகிவிடும்.
4.என்ன என்ன கலர் போட்டீர்களோ அதெல்லாம் வரும்.
5.எந்த எண்ணங்களில் எண்ணுகிறீர்களோ அந்தக் கலர் ஓட்டம் ஓடும்.
6.சர்குலேசன் (CIRCULATION) ஆகிக்கொண்டே இருக்கும

அந்தத் திருடனைக் கண்ணால் பார்த்து விட்டோம் என்றால் “அவன் நினைவே…” அதிகமாக வரும். அவன் நினைவு வரப்போகும் போது அவன் உடலுக்குள் தான் அந்த ஆன்மா போகும்.

அவனால் என்ன என்ன வேதனை ஆனதோ அவன் திருடி வந்தால் அதை அவன் எண்ணுகிறான். அவன் திருடிச் சம்பாதித்தாலும் அவன் உடலுக்குள் போகும்.

நாம் பட்ட வேதனை எல்லாம் நோயாக நரக வேதனையாகவே உருவாக்கும். “திருடியவன் என்றும் உருப்பட்டதே இல்லை”. ஆன்மா உள்ளே போய்விடும். அந்த வேதனையை திருடனின் உடலிலே ஊட்டும்.

மீண்டும் என்ன செய்யும்? அவனைக் கொல்லும்.

(4). திருடனுக்கு வெங்கடாசலபதி காட்சி கொடுப்பார்..!
நான் வெங்கடாசலபதியைக் கும்பிட்டேன் அல்லவா. அதே ரூபம் திருடனுக்கு வரும். அவன் திருடனாக இருப்பான்

அதே சமயத்தில் நான் வெங்கடாசலபதியை பக்தியில் எண்ணி இருக்கிறேன். ஆனால் அவன் எண்ணவில்லை.
1.இருந்தாலும் அந்த வெங்கடாசலபதியை எண்ணி அந்த உணர்வின் அலைகள் வருகிறது.
2.பார்த்தவுடன் இந்த வெங்கடசலபதியே வந்து காட்சி கொடுப்பார்.
3.யாருக்கு…?

“திருடனுக்கு” திருடனுக்குக் கூட வெங்கடசலபதி காட்சி கொடுக்கிறார். எப்படிக் கொடுக்கிறார்?

என் உடலில் வெங்கடாசலபதியைப் பார்த்த “பட உணர்வு” விளைகின்றது. இந்த உணர்வு விளைந்த உடன் என்ன செய்கிறது?

அந்த வெங்கடாசலபதியைப் பதிவு செய்து வைத்திருக்கின்றேன். இருந்தாலும் என்னிடம் உள்ளதைத் திருடிக் கொண்டு போய் விட்டான். நான் அவனைப் பார்த்துவிட்டேன் என்றால்…
1.”இப்படித் திருடிவிட்டுப் போய்விட்டானே வெங்கடாசலபதி..,” என்று எண்ணும்பொழுது
2.இரண்டு உணர்வும் இணைகின்றது.

இரவில் பார்த்தால் கனவு வரும். திருடனுக்கு வெங்கடசாலபதியும் தெரிவார்.

1.அந்தத் திருடனின் உணர்வை எண்ணிப் போகிறோம் அல்லவா!
2.நம் ஆன்மா அவனிடம் போனால் வெங்கடாசலபதி அவனுக்குக் காட்சி கொடுப்பார்.

அவன் திருடினாலும் நான் வெங்கடாசலபதி மேல் பக்தியாக இருக்கிறேன்.
1.அதிலிருந்து அந்தத் திருடன் பக்தியாக வருவான்.
2.இந்த ஆன்மா திருடனுடைய உடலுக்குள் போனபின் அவன்  வெங்கடாசலபதி கோவிலுக்குப் போவான்.

அந்த ஆன்மா எங்கெல்லாம் சென்றதோ அங்கே எல்லாம் திருடனும் செல்வான், இழுத்துக்கொண்டு போகும். எது? இந்த ஆன்மா அங்கு இழுத்துக்கொண்டு போகும்.

இருந்தாலும் நேற்றுவரை திருடினான். இன்று கோவிலுக்கெல்லாம் போவான். இந்த ஆவி அங்கெல்லாம் இழுத்துக்கொண்டு போகும்.

இந்த உடலுக்குள் இருந்து “நாம் வளர்க்கும் கடவுள்… இதுதான்”. “நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்”.

இதே மாதிரி நாம் பக்தி கொண்டு முருகனையோ லட்சுமியையோ மற்றும் யாரை எண்ணினாலும் இதனுடன் இணைந்தே வரும். அப்புறம் அந்த ஆன்மா அந்த திருடிச் சென்றவன் மேலேயே வரும்.

அந்தத் திருடன் உடலிலே போனவுடன் அவனைப் பக்திமானாக ஆக்கிவிடும். அவன் ஏற்கனவே திருடனாக இருந்தான்
1.“பார்…, கோவிலுக்குப் போகிறான்”
2.கோவிலுக்கே போகாதவன் கோவிலுக்குப் போகிறான்”.
3.இந்தக் கோவிலில் கும்பிடுகிறான் அந்தக் கோவிலில் கும்பிடுகிறான் அதெல்லாம் பண்ணுகிறான் என்பார்கள்.

அந்த வெங்கடாஜலபதியிடம் போவதற்கும் அடுத்து பக்தி கொண்டு நாமங்களைப் போடுவதற்கும் இவனை அறியாமலேயே போட வைக்கும். உங்கள் சகஜ வாழ்க்கையில் நிறையப் பேர் பார்க்கலாம்.

இந்த மாதிரிக் காட்சிகளில் அந்த ஆவி அங்கு சென்றவுடன் இதெல்லாம் செய்வான். திருட்டுத்தனமும் செய்வான். இந்த உடலின் தன்மையை நோயாக்கிவிடும்.

(5).கடைசியில் பாம்பாகத் தான் உடலை மாற்றிவிடும் உயிர்
பின் கடைசியில் அவன் உணர்வான்.
1.நான் திருட்டுத்தனம் பண்ணினேன்.
2.எனக்கு ஆண்டவன் நோயைக் கொடுத்து விட்டான்.

உடலுக்குள் நோய் வந்தாலும் இவன் புத்தி இந்த உடலை விட்டு இந்த ஆன்மா வெளியே வந்த பிற்பாடு மீண்டும் இந்த நோயைத் தான் உருவாக்கும்.

வெங்கடாஜலபதி வந்து இவரைக் காப்பாற்றுவதற்குப் பதில் திருடனின் உடலுக்குள் போய் இந்த வேதனையை உருவாக்கி உடலுக்குள் இந்த விஷத்தைச் சாப்பிட்டு அந்த விஷத்தை வளரச் செய்து உயிர் வெளியிலே போகும்.

உயிர் இந்த உடலை விட்டுச் செல்லும்போது எங்கே போகும்…! பாம்பு வகைகளில் ஆயிரத்தெட்டு வகையான பாம்பு வகைகள் உண்டு. அந்த விஷம் எந்த அளவுக்கு இருக்கிறதோ நேராக வந்தால் மனித நினைவே வராது. பாம்பின் உடலாக மாற்றிவிடும் உயிர்.

(6).இறக்கும் பொழுது யாரை அதிகமாக நினைக்கின்றோமோ அங்கே தான் உயிர் அழைத்துச் செல்லும்
நீங்கள் பாலில் நல்ல பாதாம் கீரைப் போட்டுக் கொஞ்சம் விஷத்தையும் போட்டுச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்? அதைச் சாப்பிட பிறகு “லட்டைச் சாப்பிடுங்கள். நல்ல துணியைப் போடுங்கள் என்றால் நீங்கள் போடுவீர்களா?”

இதுதான் உங்கள் பேரன் பிள்ளை பேத்தி பிள்ளை உங்கள் அண்ணன், உங்கள் தம்பி”என்றால் நீங்கள் கேட்பீர்களா?

ஹு..ம்…ம்…ம்.. என்றுதான் இழுத்துக் கொண்டு கிடக்கும்.

பேரன் என்று சென்னாலோ “இதோ பாருங்கள் உங்கள் பேரன் வந்திருக்கிறான் உங்கள் பேத்தி வந்திருக்கிறாள் உங்கள் மகன் வந்திருக்கிறான் நீங்கள் சம்பாதித்துக் கொடுத்தவன் வந்திருக்கிறான்-

1.அவன் வந்து உங்களைக் காப்பாற்றுவானா? அது கூட வராது.
2.அதற்குப்பின் சிறிது நேரத்தில் எல்லாம் அடங்கிவிடும்.
3.கண்ணைத் திருப்பிப் பார்க்க வேண்டியதுதான்.
4.காதைத் திருகிப் பார்க்க வேண்டியதுதான்.

அந்த மனிதரின் உணர்வுகள் அனைத்தும் கடைசி நிமிடத்தில் எல்லாம் போகும். இந்த விஷத்தின் தன்மை வெளியில் வந்தபின் அந்த உணர்வு பூராவும் விஷமாக மாறிவிடும்.

பரிணாம வளர்சியில் நாம் வேதனைப் பட்டு இந்த உணர்வின் தன்மை வளர்த்து எந்த உடலுக்குள் போனதோ நான் யாரை நினைத்தேனோ அந்த உடலுக்குள் போகிறது

இது போன உடல்களிலெல்லாம் அந்த வெங்கடாஜலபதியினை நினைத்துக் கொண்டே இருக்கச் செல்லும். காட்சி அபூர்வமாகக் கிடைக்கும் யாருக்கு?  —  அந்தத் திருடனுக்கு வெங்கடாஜலபதியின் காட்சி ரூபம் வரும்.

ஏனென்றால் அந்த உடலுக்குள் சென்றதும்  அந்த அலைகள் அந்த ரூபம் போட்டது,

நினைத்த போதெல்லாம் வெங்கடாசலபதியின் காட்சி கிடைக்கும்… இதோ பார்…! இதோ பார்…! ஹா… உங்களுக்கெல்லாம் தெரியவில்லையா…? என்று அலறுவான்.

அவன் உடலுக்குள் எப்படி அந்தத் திருடனால் அவஸ்தைபட்டதோ அந்த வேதனை எல்லாம் தூண்டிக் கொண்டிருக்கும். அதற்கெல்லாம் அந்த வெங்கடாஜலபதி தெரிந்து கொண்டிருப்பார்.

அது முருக பக்தனாக இருந்தால் முருகனாகக் காட்சி கொடுக்கும். முருகன் காட்சி கொடுக்கிறான் பார்…, பராசக்தி காட்சி கொடுக்கிறார் பார்…, ஐயப்பன் காட்சி கொடுக்கிறான் பார்… என்று எதன் மேல் பக்தி பக்தி கொண்ட நிலையில் உள்ளீர்களோ அதெல்லாம் வேலை செய்யும்.

ஆகவே கடவுள் யார்…?

நாம் எதையெல்லாம் எண்ணிப் பதிவு செய்கிறோமோ அது எல்லாம் வரும். நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கேற்றபடி அந்தக் காட்சியைப் பார்க்க வைக்கிறான். நம் ரூபத்தை மாற்றுகிறான்.

நாம் சிலைகளில் பார்த்தபடி இத்தனை ரூபங்களிலும் இல்லை. நமக்குத் தெளிய வைக்க ஞானிகள் தெய்வச் சிலையை உருவாக்கிக் கோவில்களிலே வடிவமைத்துள்ளார்கள்.

சிலவற்றைப் பார்த்தால்
1.இதைச் செய்தால் தப்பு…, அதைச் செய்தால் தப்பு…
2.இதைச் செய்யவில்லை என்றால் “சாமி கோபித்துக் கொள்ளும்”  என்றெல்லாம் சொல்வார்கள்.
3.அப்பொழுது விரதம் இருந்தேன்…, இப்பொழுது…  “விரதம் இல்லாததால் இப்படி ஆகிவிட்டது” என்றெல்லாம்
4.அந்த ஆன்மாவில் பதிவான உணர்வுகள் இயக்கும/

அது எந்த எந்த விரதம் இருந்ததோ அதேபோல அந்தத் திருடன் உடலுக்குள்ளும் விரதம் இருக்கச் சொல்லும். இந்த எண்ணத்தை எல்லாம் அதிகமாக ஊட்டும். தன்னை அறியாமலேயே எண்ண வைக்கும்

கடைசியில் என்ன செய்கிறான்? அந்த வேதனைகளெல்லாம் உடலில் நோயானபின் இறந்தபின் பாம்பாகப் பிறப்பான்.

பக்தி கொண்டபின் அந்தத் திருடனை நினைத்து விட்டேன் என்றால் அந்த உடலின் தன்மை, அந்த வெங்கடாஜலபதி அவனுக்கு காட்சி கொடுத்து நான் பட்ட வேதனை எல்லாம் அவனுக்கு நோயாகின்றது.

“என் சொத்தெல்லாம் போய்விட்டதே,  போய்விட்டதே,  போய்விட்டதே” என்று இதையே தியானித்தேன். இந்த உணர்வு எனக்குள் என்ன செய்கிறது? இந்த உணர்வின் தன்மை எனக்குள் வளர்கிறது.

நான் அந்தத் திருடனைக் கண்ணால் பார்த்துவிட்டேன் என்றால் என் ஆன்மா திருடனின் உடலுக்குள்ளே போகிறது

நான் செத்தவுடன் அவன் நினைவு இருந்துகொண்டே இருக்கும். என் பொருள் அவனிடம் இருக்கிறது. அவன் (திருடும் பொழுது) எடுத்த அந்த பார்த்த நிலை எல்லாம் எனக்குள் உள்ளது.. அப்புறம் அவனுக்கு நான் வெங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறேன்.

திருடன் – வெங்கடாஜலபதி கோவிலுக்கொல்லாம் போவான். நிறையப் பேர் பார்ப்பார்கள். இந்தக் கோவிலுக்கு அந்தக் கோவிலுக்கெல்லாம் ஆசையில் போகும். இந்தக் கோயில் அந்தக் கோயில் என்று போய்க்கொண்டே இருப்பார்கள். எனக்குக் காட்சி கொடுக்கிறான். அப்படி எல்லாம் செல்லுவார்கள்.

இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மாதிரி இப்படி இறந்து விட்டால் அவர்கள் உடலுக்குள் சென்று இதை அழித்து விடுகிறது. இது திருடனைப் பார்க்கும்போது அந்தத் திருடன் திருடி விட்டுப்போய்விட்டான். நாம் இங்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் எனக்கு வேண்டாதவர்கள் எண்ணிக்கொண்டிருப்பார்கள். அந்த வெங்கடாஜலபதியை இவர்களும் கும்பிட்டுக் கொண்டிருப்பர்கள்.

பாருங்கள்… இவன் செய்த கொடுமைகளுக்கொல்லாம்…, இவன் செய்ததற்கொல்லாம்…, அந்த வெங்கடாஜலபதி தண்டனை கொடுத்து விட்டான் பாருங்கள்” அப்படியென்று காதில் படும்படி தெரியும்படிச் சொல்வார்கள்.

அந்த உணர்வை இவர்களுக்கு “ஆகாதவர்கள்” கேட்பார்கள்.

அது சொல்லிக் கொண்டிருக்கும்போது “அடப் பாவிகளா…! இவர்கள் கண் பட்டுதான் இப்படி எல்லாம் ஆகிவிட்டது”என்று அவர்கள் எண்ணத்தைத் தியானம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்படி தியானம் பண்ண ஆரம்பித்தால் என்ன ஆகிறது?

இப்படி எல்லாம் சொல்லப்போய் தன் வாழ்க்கைக்குச் செய்ய வேண்டியதெல்லாம் மறந்துவிடும். இந்த உணர்வுகள் வளர்ந்துவிடும். தெழிலும் நஷ்டமாகும் உடலிலும் நோயாகும்.

இந்த வெறுப்பின் தன்மை கொண்டு தன் பிள்ளையை “வாடா…” என்று சொல்லுவார்கள். இவன் எல்லோர் கண்ணும் படும்படியாக “இப்படிப் பண்ணுகின்றாயேடா…”என்று பிள்ளையைத் திட்டுவார்கள்.

பெண் பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருப்பார்கள். ஆனால் “நீ எல்லாம் பிறந்து தான்… இப்படி எல்லாம் ஆகிவிட்டது…” என்று சாபமிடுவார்கள். இப்படி வெறுப்பு வரும். இப்படி இந்த உணர்வுகள் அவர்கள் திட்ட இது வாங்கி – இதுதான் மாரியம்மா.

பிறருடைய குறைகளை நீ எடுக்கும் பொழுது அது சக்தியாக உன்னிடம் மாறி (மாரி) அது தாயாகி நோயாக உருவாக்குகிறது. வாழ்க்கையில் “கசப்பு” என்று ஸ்தல விருட்சமாக வேம்பை வைக்கிறார்கள்.

நாம் எல்லாம் தெரிந்து கொள்வதற்கு வைத்திருக்கின்றார்கள், ஞானிகள்.

வாழ்க்கையில் நாம் இதையெல்லாம் கேட்கும் பொழுது  தீமைகளை எல்லாம் சேர்த்து அவர்கள் சொல்வதை நாம் கேட்கிறோம்.

இவர்களும் அதேபோல் யார் மேல் எண்ணம் அதிகமாக வைக்கிறார்களோ இது நோயானபின் செத்த பிறகு “வெங்கடாஜலபதி இவர்கள் செய்ததற்கு நல்ல தண்டணை கொடுத்துவிட்டார்”என்று அந்த ஆன்மா இந்த உடலுக்குள் தான் போகும்.

பிறகு அவர்களும் வெங்கடாஜலபதி எனக்குக் காட்சி கொடுக்கிறான் பார் என்று சொல்லுவார்கள். கடைசியில் இந்த உடலில் வந்த நோய் இந்தக் குடும்பத்தில் வந்த நோய் வெங்கடஜலபதி அவர்களுக்கும் சேர்த்துக் கொடுத்துவிடுவான்.

1.நாம் கும்பிடுகிற சாமி எப்படி எல்லாம் நமக்குள் தெய்வமாகிறது?
2.நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்கி சிருஷ்டிக்கிறது?
3.அந்த உணர்வின் தன்மை பிரம்மமாக்குகின்றது. பிரம்மத்தின் தன்மை நம் உடல் சிவமாக்குகின்றது. சிவத்துக்குள் சக்தி நமக்குள் எப்படி உருவாகிறது? என்று தெளிவாகக் காட்டி இருக்கிறார்கள்.
4.தெளிவாகவே உங்களுக்குச் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

இதை உதாரணத்திற்காகச் சொல்கிறேன். அது எங்கே போகிறது.

அவர்கள் உடலிலே போகிறது. அவர்கள் பெருமையாகத்தான் பேசுகிறார்கள் என்று தங்களை நியாயஸ்தர்களாக எண்ணுகிறார்கள். அந்த உணர்வு என்ன செய்கிறது?

இந்த உடலில் வளர்ந்து அது நோயாகி “என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்களே…, வெங்கடாஜலபதி” என்று இறந்தபின் இவர்கள் இந்த எணண வலுவோடு அங்கே போகிறார்கள்.

யார்?

அங்கே அந்த உடலுக்குள் போய் வெங்கடாஜலபதியாகக் காட்சி கொடுக்கிறார்கள். அதே போல் நீங்கள் முருகனை வணங்கினாலும் அதே தான் ஐயப்பனை வணங்கினாலும் ஐயப்பனே வந்து காட்சி கொடுப்பார்.

ஆகவே நம் எல்லை எங்கே போகிறது…? ஞானிகள் சொன்ன நிலைகள் அரசர் காலங்களில் மாற்றப்பட்டதால் வந்த விளைவுகள் தான் இவைகள். யாரையும் பழித்துப் பேசுவதற்கோ குறையாகச் சொல்வதற்கோ அல்ல.

நீங்கள் எல்லாம் அருள் வழி வாழ்ந்து அந்த மகரிஷிகள் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

அகஸ்தியமாமகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசித்தால் கட்டுப்படுத்த முடியாத பழக்க வழக்கங்களையும் அடக்க முடியும்

Dhuruva maharishi Agastya

அகஸ்தியமாமகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசித்தால் கட்டுப்படுத்த முடியாத பழக்க வழக்கங்களையும் அடக்க முடியும் 

மனிதர்கள் ஆட்டுக்கறியை (மாட்டுக்கறி எல்லாம்தான்) ரசித்து ருசித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆட்டைக் கொன்றால் கொன்றவர் உடலுக்குள் ஆட்டின் உயிர் செல்கின்றது.

ஆட்டுக்கறியைத் தின்றவரின் உடலில் அந்த ருசி வருகின்றது. உடலிலிருந்து அந்த மணமும் வரும்.

1.ஆட்டுக்கறியைச் சாப்பிட்டு ருசி கண்டு
2.அதனால் உடலில் விளைந்த அணுக்களின் இயக்கத்தால்
3.உடலை விட்டுச்சென்ற பின் உயிர் எங்கே போகும்?
4.நேராக ஆட்டின் ஈர்ப்பிற்குள் சென்றுவிடும்.
5.அடுத்த உடல் ஆடு தான்.

இன்று டாக்டர்கள் சிபாரிசு செய்கிறார்கள் “கறி சாப்பிடுங்கள்… உடல் திடமாக இருக்கும்..” என்று.

1.இன்று மனிதனாக உள்ளோம்.
2.ஆனால் விஷத்தின் தன்மை கொண்டு நாளை… “ஆடாகப் பிறக்கத் தயாராக இருக்கிறோம்”.

யாம் (ஞானகுரு) எம்முடைய இளைய வயதில் வேட்டைக்குச் செல்வோம். வேட்டையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் இரண்டு மூன்று நாள் அங்கேயே இருப்போம்.

கோழி புறா போன்றவைகளை கையில் எடுத்துச் சென்றிருப்போம். கொண்டு போனவைகளை வேக வைத்துச் சாப்பிடுவோம்.

இல்லையெனில் பச்சைப் புறாவில் நிறையச் சத்து இருக்கிறது என்று காட்டிற்குச் சென்று பச்சைப் புறாவை அடித்து அங்கேயே வேக வைத்துச் சாப்பிடுவோம். வீட்டிற்குக் கொண்டு வர மாட்டோம்.

பிற்காலத்தில் குருநாதர் இந்தச் சம்பவங்களை எடுத்துக்கூறி நீ இத்தனை பறவைகளைச் சாப்பிட்டிருக்கிறாய். இவைகள் மனிதனாகப் பிறக்கப்போகிறது>

அது எத்தனை இம்சைப்பட்டு வந்துள்ளது…! உன்னிடம் வந்து நீ இறந்தபின் உன் சிநேகிதனிடம் சென்று அவன் ஈர்ப்பிற்குள் போய் அவனின் உணர்வை எடுத்து அதன் வழியில் மனிதனாகப் பிறக்கப்போகின்றது என்று கூறினார்.

“நிறையச் சாப்பிடு…” என்று கூறினார் குருநாதர்.

“சாமி…, சாப்பிட்டால் இப்படி ஆகிவிடும் என்கிறீர்களே..” என்று குருநாதரிடம் யாம் கேட்டோம்.

அதற்கு “உனக்கு விருப்பமில்லை என்றால் கறி சாப்பிடாதே” என்று கூறினார் குருநாதர்.
1.“நீ கறி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்” என்று விரும்பினாலும்
2.உடலில் உருவான அணுக்கள் கேட்கும்
3.அப்பொழுது “அதனின் எண்ணத்தைத் தடுக்க வேண்டும்” என்றும் கூறினார்.

சாதாரண நிலையில் கறி சாப்பிடாமல் இருந்தாலும் கறியைப் பார்த்ததும்…, “சாப்பிட வேண்டும்…” என்று ஏக்கமானால் அது ஒரு கிலோ கறியை சாப்பிட்டதற்குச் சமமாகும் என்று கூறினார்.

இப்படி குருநாதர் சொல்லும் பொழுதெல்லாம்… “ஏன்…தான் இவரிடம் சிக்கினோமோ…?” என்று பயம் அதிகமாகிவிடும். ஆடாக மாடாகப் பிறந்தால் என்ன செய்வது…! என்ற பயம் எமக்குள் அதிகமாகும்.

பிறகு குருநாதர் எம்மைப்பார்த்து
1.நீ விட வேண்டும் என்று விரும்பினாலும்,
2.உனக்குக் கறி சாப்பிட ஆசை தோன்றுகிறது பார்
3.இதனால் நீ பத்துக் கிலோ கறி சாப்பிடுகிறாய் என்று பயமுறுத்துவார்.

உதாரணமாக உடலில் ஒரு நோயாகின்றது. நோயைத் தணிப்பதற்கான மருந்தைத் தயார் செய்வதற்கு, விஷத்தை எடுத்து இதற்குச் சக்தி கொடுத்தவுடன் நமது உடலிலுள்ள நோயின் அணுக்களைக் கொல்கின்றது.

மருந்தின் அணுக்கள் பெருகுகின்றது. நோயின் தன்மை தணிகின்றது. அதைப் போன்று
1.விஷத்தை வென்றவர் அகஸ்தியர்.
2.அகஸ்தியரின் உணர்வை நமக்குள் எடுத்தால்
3.நம்முள் உள்ள விஷங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அடக்குகின்றது.

அப்பொழுது “நீ கறி சாப்பிட நினைத்தாலும்… உடல் ஏற்றுக் கொள்ளாது…” என்று கூறினார் குருநாதர்.

யாம் யாரையும் கறி சாப்பிட வேண்டாம்… என்று சொல்லவில்லை. “சாப்பிட்டால்… இப்படித்தான் ஆகும்”. இதுதான் இயற்கை நியதி.

இதனால் நாம் எப்படி இருக்க வேண்டும்? நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

வீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய “உண்மையான யாகம்”

Yagna - Yaga

வீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய “உண்மையான யாகம்”

ஜோசியம் ஜாதகம் கேட்டு அவைகளால் நன்மை ஏற்படும் என்று யாகங்கள் செய்து பாவங்களில் விழ வேண்டாம். யாகம் செய்தால் அது நம்மைப் பாவ நிலைக்கே அழைத்துச் செல்கின்றது.

“உண்மையான யாகம்” என்பது நமது குடும்பத்தில் உள்ளோர் அனைவரும்
1.துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியின் உணர்வைப் பெறவேண்டும் என்று
2.இதனின் உணர்வைப் புருவ மத்தியிலிருக்கும் நமது உயிரான நெருப்பினுள் “ஓ,,,ம் ஈஸ்வரா…” என்று போட்டு
3.”அந்த உணர்வின் எண்ண அலைகளை” நமது வீட்டினுள் பரப்ப வேண்டும்.

அப்படிப் பரப்பப்படும் பொழுது நமது வீட்டில் எத்தகைய சாப அலைகள் இருந்தாலும் சரி எத்தகைய கொடிய நிலைகள் இருந்தாலும் சரி அவைகள் அனைத்தும் அகன்று “ஓடி விடும்”.

இதைப் போன்று ஒவ்வொரு நாளும் காலையில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து துருவ தியானத்தில் அமரும் பொழுது “பிரதோஷம்…” அதாவது
1.மற்றவர்களுடைய கஷ்டங்களை வேதனைகளைக் கேட்டறியும் பொழுது
2.அவைகள் நம்மிடத்தில் தோஷங்களாக மாறி
3.தீய வினைகளை உண்டாக்குவதைத் தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் இல்லம் முழுவதும் படர வேண்டும் எங்களுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பெறவேண்டும் எங்களிடம் பணிபுரிகின்ற அனைவரும் பெற வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு அரவணைத்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியின் உணர்வுடன் இணைத்து “உங்கள் எண்ணங்களை…” வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதனால் உங்களுக்குள் உள்ள அரும்பெரும் சக்தியை நீங்கள் காண முடியும் உணர முடியும்.

பக்கத்து வீட்டுக்காரர்களோ மற்றவர்களோ உங்களைத் துயரப்படுத்திக் கொண்டிருந்தால் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்.

அவர்கள் அறியாது சேர்ந்த இருள் நீங்கவேண்டும், அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படி எண்ணி அவர்கள் உணர்வுகள் வருவதை “நாம் தடுத்து… நமது உணர்வுகளை அவருக்குள் பரப்பப்படும் பொழுது” அவர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள். பகைமை உணர்வுகளை மாற்றவும் முடியும்.

இதைப்போன்று அகஸ்திய மாமகரிஷிகள் பெற்ற உணர்வின் தன்மையை அருள் ஒளியின் உணர்வினை நாம் பெற்றோம் என்றால்
1.நாம் தெளிந்த மனம் பெறலாம்.
2.உலகை அறியலாம்,
3.உலகைக் காக்கலாம்,
4.நாட்டைக் காக்கலாம்,
5.நமது குடும்பத்தையும் காக்கலாம்.

இன்றைய காலம் விஞ்ஞான யுகமாக இருக்கின்றது. ஆனால் விஞ்ஞான அறிவு மனிதர்களைத் தீமைகளின் நிலைகளுக்கே அழைத்துச் செல்கின்றது. மனிதரின் உணர்வுகளைச் சீர்குலையச் செய்யும் நிலைகளையும் மனிதர்களிடையே சிந்தனையற்ற நிலைகளையும் உருவாக்குகின்றனர்.

இந்த நிலையில் நமது குருநாதர் காண்பித்த அருள்வழியில்
1.“தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…” என்று
2.மீண்டும் இவ்வுலகத்தைக் காக்கும் நிலைகள் அகஸ்தியன் உருவான இந்தத் தென்னாட்டில்தான் தோன்றும்.

தென்னாட்டிலுள்ள ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் அரும் பெரும் சக்தியை உருவாக்கி இந்நாட்டு மக்களும் உலக மக்கள் அனைவரும் உண்மையின் உணர்வுகளைப் பெறும்படி செய்யுங்கள்.

உலகத்தை காக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்த்து நம்மையும் காத்து இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை என்ற நிலையை அடையும் தருணத்தை நாம் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் நமது உடல் எப்போதுமே நமக்குச் சொந்தமில்லை. இந்த உடலால் தேடிய செல்வமும் நமக்குச் சொந்தமில்லை.

1.நமது உயிரில் ஒன்றும் உணர்வாக துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை இணைத்து
2.அதைச் சொந்தமாக்கி உயிருடன் ஒன்றி
3.என்றுமே அழியா ஒளிச்சரீரமாக என்றும் பதினாறு என்ற நிலையாக வாழ்ந்து வளர்ந்திடும் நிலைகள் அனைவரும் பெறவேண்டும்.

உங்களால் முடியும்.

நல்ல நேரம் இருந்தது… “சம்பாரித்தேன்” கெட்ட நேரம் வந்தது… எல்லாமே “நஷ்டமாகிவிட்டது” என்கிறோம் – அந்தக் கெட்ட நேரம் எது? நல்ல நேரத்தை உண்டாக்குவது எப்படி?

Image

Auspicious time

நல்ல நேரம் இருந்தது… “சம்பாரித்தேன்” கெட்ட நேரம் வந்தது… எல்லாமே “நஷ்டமாகிவிட்டது” என்கிறோம் – அந்தக் கெட்ட நேரம் எது? நல்ல நேரத்தை உண்டாக்குவது எப்படி?

 

தொழில் செய்பவர்களுடைய நிலைகளை எடுத்துக் கொண்டால் தொழில் சீராக லாபத்துடன் நடந்து கொண்டிருக்கும் பொழுது சந்தோஷமாக இருப்போம்.

 

தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கும் பொழுது யாராவது கடன் கேட்டால் கொடுத்துவிடுவோம். இது போன்று இரண்டொரு பேருக்குக் கடன் கொடுத்து அவர்கள் பணம் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் சோர்வடைகின்றோம்.

 

சோர்வடைந்து வேதனை என்ற உணர்வுகள் வரும் பொழுது, வியாபாரம் என்னாகும்? வாடிக்கையாளர்கள் யாராவது சரக்கைப் பற்றிக் கேட்டால் தெளிவான பதிலைச் சொல்ல முடியாது.

 

வேதனையான நிலையிலிருக்கும் பொழுது நமது உணர்விற்குத் தக்க

1.நல்ல சரக்கை விட்டுவிட்டு வேதனைக்குரிய சரக்கைத்தான் எடுத்துக் காண்பிப்போம்.

2.இப்படி வியாபார நிமித்தங்களால் சோர்வடைகின்றோம்.

3.சோர்வடைந்தால் விஷத்தின் தன்மை நமக்குள் உள் செல்கின்றது.

4.நம்மிடம் தெளிந்த நிலை இல்லாமல் போகின்றது.

5.ஆக நம் ஆன்மாவில் தூசிபடும் பொழுது நாம் நல்ல பொருளைக் காணமுடிவதில்லை. சிந்திக்கும் தன்மை இல்லை.

 

மேலும் மேலும் சோர்வடையப்படும் பொழுது நம்மையறியாமலே சோர்வைச் சுமந்த வேதனை உணர்வுகள் நம் உடலுக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

 

நாளடைவில் வேதனையின் அணுக்கள் உடலில் பெருக்கமாகின்றது. நமது வியாபாரமும் மந்தமாகின்றது. தேடிய செல்வத்தைப் பாதுகாக்க முடிவதில்லை.

 

உடல் நோயைத் தீர்ப்பதற்குச் செலவழித்து நோயால் அவதிப்படும் போது தேடிய செல்வத்தை மீண்டும் நிலை நிறுத்த முடிவதில்லை.

 

இது சமயம் நாம் என்ன எண்ணுகின்றோம்?

 

1.அன்றைக்கு நல்ல நேரம் இருந்தது நன்றாகச் சம்பாதித்தோம்.

2.இன்றைக்குக் கெட்ட நேரம் வந்துவிட்டது

3.வியாபாரம் போனது நோயும் வந்தது என்று சொல்கின்றோம்.

 

ஆனால் நேரம் எதில் வருகின்றது? நாம் சந்திக்கும் நேரம் தான் கெட்ட நேரமாகின்றது.

1.நமது எண்ணம் நல்லதாக இருந்தால்

2.நமது நேரமும் நல்லதாக மாறிவிடும்.

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்முள் இணைத்து, நமது ஆன்மாவில் சேர்ந்துள்ள சிந்தனையை இழக்கச் செய்யும் உணர்வை நீக்கி நமது ஆன்மாவை தூய்மைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

 

நம்முடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் பொழுது நமக்குள் சிந்திக்கும் தன்மை வருகின்றது. மன வலிமை கிடைக்கின்றது. வியாபாரத்தைச் சீர்ப்படுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

 

வேதனை உணர்வுகள் நமக்குள் ஆனபின் நல்லதை யார் சொன்னாலும் காதில் கேட்கவிடாமல் தடுத்துவிடும். கண்ணாடியில் அழுக்குப் படிந்தால் நமது முகம் தெரியாது. கண்ணாடியில் உள்ள அழுக்கைத் துடைத்தால் நமது முகத்தை நாம் பார்க்கலாம்.

 

1.ஆகவே பிறருடைய உணர்வுகள் நம்மில் இணைந்து நமது சிந்தனையை மறைக்கும் பொழுது,

2.நாம் நம்முடைய ஆன்மாவைத் தூய்மையாக்கும் நிலை பெற்றால்

3.நம்முடைய எண்ணம் கொண்டு நமது செயலாக்கங்களை வலிமையாக்க முடியும்.

 

சாதாரண நிலையில் நமக்கு இடைஞ்சல் தருபவரை உதைத்து வாங்க வேண்டும் என்று நினைக்கின்றோம். இப்படித்தான் நமது எண்ணங்கள் பிறரை அடிக்கவும் உதைக்கவும் எண்ணங்கள் வருகின்றது.

 

எல்லை கடந்த கோபம் வருகின்றது. “அவரை வேதனைப்படுத்த வேண்டும்…” என்ற உணர்ச்சிகள்தான் வருகின்றது.

 

உணர்ச்சிகள் மாறப்படும் பொழுது நாம் தெளிவான செயல்களைச் செயல்படுத்த முடிவதில்லை. வேதனையான உணர்வுகள் நமது இரத்தத்தில் கலக்கின்றது. இதனால் நமது உடலிலுள்ள நல்ல அணுக்கள் தங்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி தவிக்கின்றன.

 

பின் நஞ்சின் உணர்வின் தன்மை அழுத்தமாகும் பொழுது வேறு வழியில்லாது உடலில் நோயாகின்றது இதைப் போன்ற நிலைகளில் நமக்கு நாமே தண்டனை கொடுத்து விடுகின்றோம்.

 

1.நாம் எண்ணிய உணர்வுகள் உயிரில் (புருவ மத்தியில்) பட்டபின்

2.உயிர் நுகர்ந்த உணர்வு எதுவோ அதன் தன்மை கொண்டு உடலாக்குகின்றது.

3.இது சிவதனுசு.

 

நஞ்சான உணர்வுகள் நம்முள் வரும் பொழுது நஞ்சான உணர்வுகளை மாற்ற வேண்டுமானால் அடுத்த கணமே “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சிறிது நேரம் தியானிக்க வேண்டும்.

 

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று

1.உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது

2.இதனின் உணர்வின் தன்மைகள் இங்கே வரப்படும் பொழுது இது “விஷ்ணு தனுசு”.

 

அதாவது அருள் உணர்வுகளை நமக்குள் பெறும் பொழுது அருள் உணர்வுகள் தீய உணர்வுகளைத் தூண்டிவிடும் அணுக்களுக்குத் திரையாகிவிடுகின்றது.

 

தீய உணர்வைத் தூண்டும் அணுக்கள் தன் உணர்வை இழுக்கும் தன்மை குறைந்து அருள் உணர்வுகள் நமக்குள் பெருகி நமது ஆன்மா தூய்மை அடைகின்றது.

 

நம்முடைய எண்ணம் வலிமை அடைகின்றது. தெளிவான சிந்தனை கிடைக்கின்றது.

 

ஆகவே இதற்காகத்தான் இராமேஸ்வரத்தில் இராமன் கால தாமதமாகிவிட்டது என்று கடைசி நேரத்தில் மணலைக் குவித்து சிவலிங்கத்தைப் பூஜித்தார் என்று காண்பிக்கப்பட்டது.

 

அதாவது நாம் ஒவ்வொரு நொடியிலும் அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.

 

அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் சேர்க்கும் நிலைதான் கடைசி நிலை இது “தனுசுகோடி”. அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது நமக்குள் பிறவியில்லா நிலை பெறும் தகுதி உருவாகின்றது.

 

அருள் ஒளியின் உணர்வுகளை நமது உடலில் குவித்து இந்த உடலுக்குப்பின் உணர்வை ஒளியாக மாற்றுதல் வேண்டும் என்பதைத்தான்  “நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன”.

நமக்கு நோய் வர முக்கியமான காரணம் என்ன? நோய் வராது தடுக்கும் வழி எது?

Image

Om saravanabava

நமக்கு நோய் வர முக்கியமான காரணம் என்ன? நோய் வராது தடுக்கும் வழி எது?

 

உதாரணமாக நாம் குழம்பை வைக்கும் பொழுது அதில் எந்தப் பொருளை அதிகமாகக் கூட்டிக் கொள்கிறோமோ அதனின் சுவை கொண்டு அந்தக் குழம்பின் தன்மையை மாற்றிவிடுகின்றது.

 

நாம் எல்லாவற்றையும் சமமாகப் போட்டுச் சுவை கொண்டதாக மாற்றும் பொழுது அது அமிர்தமாக இருக்கின்றது.

 

அதைப் போன்று நாம் சுவை கொண்டு சுவையாகச் சமைக்கும் எண்ணத்தை உருவாக்கிச் சுவை கொண்ட நிலைக்கு உருவாக்கும் உணர்வின் ஆற்றல்மிக்க இந்த மனித சரீரம் பெற்றுள்ளோம்.

 

இருந்தாலும் நம்மையறியாமல் உப்பு காரம் புளிப்பை சம அளவில்லாமல் போட்டுக் குழம்பை வைத்தால் சாப்பிடும் பொழுது “வேண்டாம்…” என்று ஒதுக்கிவிடும் நிலை வந்துவிடுகின்றது.

 

1.அதைப் போன்று மனித வாழக்கையில் தவறு செய்யும் பொழுது

2.ஒவ்வொரு நிமிடமும் நாம் எண்ணிய எண்ணங்களில்

3.எதை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ,

4.அதன் வழி கொண்டு நம் உடலில் “நோய்கள்” வந்துவிடுகின்றது.

 

கைகால் குத்துவது வாத நோய் சர்க்கரைச் சத்து மற்ற இரத்தக் கொதிப்பு, கேன்சர், காதில் செவிடு, கண் பார்வை மங்கல், சிந்தனை குறைவது, இருதய நோய், குடல் நோய், அதைப் போன்று பலவீனமான நோய்கள் நமக்கு வருகின்றது.

 

குஷ்டரோகம் வரும் பொழுது நாம் மனிதனாக வளர்வதற்கு எவையெல்லாம் இருந்ததோ நம் உடலின் உறுப்புகள் அப்படியே தேய்ந்து கரைந்து போய்விடுகின்றது.

 

உறுப்புகள் இருக்கின்றன. அந்த உணர்வின் அலைகள் வந்தவுடன் அந்த உறுப்புகள் எப்படிக் குறைகின்றது? குறை நோய் வரும் பொழுது அந்த நிலை மாறுகின்றது

 

நமது எலும்புக்குள் மற்ற உணர்வுகள் ஊடுருவும் பொழுது எவ்வளவு திடப் பொருளாக இருந்தாலும் குறைகின்றது அது “TB”.

 

வறுமையான நிலைகளில் இருந்தால் தசைகள் அப்படியே குறைந்து அப்படியே உருகச் செய்கின்றது.

 

இதைப் போன்று தான்

1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை,

2.தசைகளை உருக்குவது போன்று

3.நம் உணர்வின் எண்ணங்களை குறையச் செய்து,

4.சிறுகச் சிறுகப் பல நோய்கள் வருகின்றது.

 

நாம் எவ்வளவு பரிபக்குவ நிலைகள் கொண்ட மனித உடலைப் பெற்றாலும் கூடுமான வரை மற்ற மிருக இனங்களுக்கு “இத்தனை வகையான நோய்கள்” அதிகமாகச் சாடுவதில்லை.

 

மற்ற உயிரினங்கள் தான் வாழ்வதற்கு உண்டான நினைவலைகளை அது எடுத்துக் கொள்கின்றது. தன் ஆகாரத்தை தேடிச் செல்கின்றது தேடிச் செல்லும் பொழுது

1.இடர்ப்படும் தடைகளிலிருந்து

2.”தன்னை மீட்டுக் கொள்ளும் உணர்வைத்தான்”

3.மிருகங்கள் சுவாசித்துக் கொள்ளும்.

 

அப்படித் தன்னை மட்டும் மீட்டுக் கொள்வதற்கும் பல உணர்வுகள் எடுத்துத் தனக்குள் வளர்த்துத்தான் அந்த அணுக்கள் விளைந்து அந்த விளைந்த உணர்வுகளுக்கொப்பத்தான் உடலின் மாற்றங்களாகி மனிதனாக நாம் வந்துள்ளோம்.

 

இப்படி நாம் மாறி வந்தாலும் இன்று மனிதனானபின் நாம் எடுததுக் கொண்ட குணங்களுக்கொப்ப இந்த உணர்வுகள் – நோய்கள் கூடிவிடுகின்றது.

 

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நமக்கு நலம் பயக்கும்.

 

மற்ற உயிரினங்களாக வாழும் பொழுது வரும் இடையூறுகளிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ள வேண்டும் தான் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வின் வலு அதிகமாகி அதுவே அங்கே பாதுகாப்பாகின்றது.

 

இன்று மனிதனாக வாழும் நமக்குப் பல வகையில் வசதி இருந்தாலும் தீமைகளோ துன்பங்களோ இடையூறுகளோ வந்தால்

1.அதிலிருந்து தப்பிக்க வேண்டும்

2.அதிலிருந்து மீள வேண்டும்

3.அதிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற வலுவான எண்ணம் வரவில்லை.

 

“எதிர்த்துத் தாக்குவது…” அல்லது “இப்படி ஆகிவிட்டதே…” என்று சோர்வடைந்து வேதனைப்படுவது இதைத்தான் நாம் அதிகம் நேரம் எண்ணுவதற்குப் பழகி வைத்திருக்கின்றோம்.

 

இதை மாற்ற வேண்டுமல்லவா.

 

அதற்குத்தான் “ச ர ஹ ண ப வா” என்று நம் ஆறாவது அறிவின் தன்மையைக் காட்டி எதையும் சரணமடையச் செய்யும் சக்தி உனக்குள் உண்டு தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

 

துன்பமோ துயரமோ வேதனையோ ஆத்திரமோ வரும் நேரங்களிலெல்லாம் அந்த மெய்ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டால்

1.அந்தத் தீய வினைகள் நமக்குள் விளையாது அதைச் சரணமடையச் செய்யலாம்.

2.அதே சமயத்தில் நம் உடலில் நோய் வராது தடுத்துக் கொள்ளவும் முடிகின்றது.

3.மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தி நமக்குள் பெருகுகின்றது.

 

இவ்வாறு இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளிலிருந்து மீட்டிடும் உணர்வின் வலுவாக நமக்குள் விளைய வைத்தால் இந்த உடலுக்குப் பின் அந்த மகா ஞானிகள் வாழும் இடத்திற்கு நாம் செல்ல முடியும்.

விஷத் தன்மைகளைக் கலந்து விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட “வேலிகாத்தான் முள்ளின் தீய விளைவுகள்”

Image

Rain forest

விஷத் தன்மைகளைக் கலந்து விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட “வேலிகாத்தான் முள்ளின் தீய விளைவுகள்”

 

மலை மீது பாறைக்குள் சில நிலைகள் இருந்தாலும் தனக்குள் அந்த பாறையாவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து அது தன்னிச்சையாக நீரைத் தான் பருகி அதன் அருகிலே எந்த மலை இருக்கின்றதோ, அதனை ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது போன்ற நிலைகள் சில பகுதிகளில் உண்டு.

 

அவ்வாறு பெற்ற நிலைகளில் மேகங்கள் படர்ந்து சென்றால்

1.தனது காந்தப்புலனால் அந்த மேகங்களைக் கவர்ந்து,

2.உச்சி மலையாக இருப்பது கவர்ந்து அதற்குள் நீராகச் சுரக்கச்செய்து வடிவதை,

3.சில மலை உச்சிகளில் நாம் பார்க்கலாம்.

4.இவையெல்லாம் பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும்

5.அதனுள் கலந்து கொண்ட உணர்வின் சத்தின் துணை கொண்டுதான்

6.அந்தப் பாறையே அதை வளர்க்கின்றது.

 

அதைப்போன்று அந்த பாறையில் இருந்து வெளிப்படும் ஆவியின் தன்மையும் பாறைக்குள் நீரினில் கலந்து அதனின் தன்மை கொண்டு ஒரு கருவாக உருவாகுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

 

அப்படிக் கருவான அத்தகைய மரங்களின் செடிகளை நாம் எங்கேயாவது ஊன்றி வளர்த்தால் “அந்த மரம்” அதிலிருந்து வரக்கூடிய காந்தப்புலன் நீரை எப்படிக் கவர்கின்றது?

 

1.விண்ணிலே நுண் அணுக்களாக கலந்து கொண்டு இருக்கும் துருவப் பகுதியிலிருந்து வரும் (அல்லது)

2.கடல் நீரிலிருந்து வெளிப்படும் ஆவியின் சத்தை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து இருந்தால்

3.அதனின் சக்தியை இந்த மரத்தின் காந்தப்புலன் தனக்குள் குவித்து

4.மேகங்களாகக் கூடச் செய்து நீராக வடியச்செய்து,

5.அந்த நீரின் சத்தை அது வளர்த்துக் கொள்கின்றது.

 

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட வேலி காத்தான் முள் செடியானது காற்றிலே இருக்கும் நீரின் சத்தினைக் கவர்ந்து அந்த உணர்வின் சத்து செடியாக விளைகின்றது.

 

வேலி முள் மேலே விண்ணை நோக்கி “நீரின் சக்தியைக் கவரும் காந்தப்புலனை”இந்தச் செடி வளர்த்துக் கொண்டாலும் எந்த அளவிற்கு ஈர்க்கின்றதோ அதனின் நிலைகள் கொண்டு “பூமிக்குள் இருக்கும் நீரை” இழுக்கும் தன்மையைப் பெறுகின்றது.

 

அப்பொழுது இந்தச் செடிக்குள் இருக்கும் விழுதின் தன்மை கூர்மையாகப் பாறையையும் பிளந்து விழுதினை ஊடுருவச் செய்து தனக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்துக் கொள்கின்றது.

 

இது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது.

 

அதாவது மழை நீரே இல்லாத காலங்களில் அந்தச் செடி செழித்து ஓங்கி வளர்கின்றது. எரி பொருளாக உபயோகிக்கவும் அதனின் துணை கொண்டு இயந்திரங்களை இயக்குவதற்காக இதனைக் கண்டுபிடித்தனர்.

 

விஞ்ஞான அறிவு கொண்டு உருவானதுதான் இந்த நிலை.

 

ஆனாலும் இந்த வேலி முள்ளில் விஞ்ஞான அறிவால் கலந்த விஷச் சத்தான தன்மைகள் அதனில் ஊடுருவி இருக்கின்றது. அந்த விஷ முள் மனிதரின் உடம்பிலோ, காலிலோ குத்திவிட்டால் அதனின் விஷத்தின் தன்மைகள் மனிதரிடத்தில் நுழைகின்றன.

 

அந்த விஷச் செடி தன்னுடைய விஷத்தின் தன்மையால் துடிப்பின் நிலைகள் அதிகமாகி அதனின் உணர்வின் துணைகொண்டு காற்றிலே இருக்கும் நீரை கவர்ந்து காற்றிலே உள்ள விஷத்தின் துணை கொண்டு தன் இனமான சத்தை அது வளர்த்துக்கொண்டு தன் உணவாக எடுத்துக்கொண்டு மரம் விளைகின்றது.

 

1.அந்த விஷச்செடியில் இருக்கும் முள் நம் உடம்பிலோ காலிலோ குத்திவிட்டால்

2.அதனுடைய விஷத்தன்மை நம் ரத்தத்தில் கலந்து

3.உடலில் கடுகடுப்பான உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டே இருக்கும்.

 

ஒரு தரம் முள் குத்தினாலும் இனம் புரியாமல் “பளீர்”என்று வலி எடுப்பது போன்று அந்த உணர்வின் நிலை தூண்டப்பெற்று இரத்தத்துடன் கலந்து வரப்படும்போது மற்ற நல்ல குணத்துடன் தசைகளிலே மோதப்படும் பொழுது “பளீர்…”என்று குத்துவது போன்று வலிக்கும்.

 

அந்த முள் மிக அழுத்தமாகக் குத்தியிருந்தால் அதனால் கை கால் குடைச்சல் மற்றும் எரிச்சல் என்ற நிலையும் வந்து விடுகின்றது.

 

இங்கு பஞ்சம் ஏற்பட்டு நீர் நிலைகள்  வறண்டு, விறகு விலை ஏற, அடுப்பு எரிப்பதற்கு எளிதாக விறகுகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும், என்று மக்கள் நலன் கருதி விஞ்ஞானத்தில் கண்டறிந்து உருவாக்கப்பட்ட விஷ முள் செடியின் விதைகள் அனைத்துப் பகுதிகளிலும் விமானத்தின் மூலம் தூவப்பட்டது.

 

மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று இந்த விஷ முள் செடிகளை விதைத்தனர் என்றாலும் அந்த முள் செடியினால் எவ்வளவு தீமைகள் இருக்கின்றன? என்பதை விஞ்ஞானிகள் அறியவில்லை.

 

இயற்கையில் உருவாவதை மாற்றி மனிதன் விஷத்தின் தன்மையை அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொழுது மனிதன் சுகமாக வாழும் நிலையையே அது பாழ்படுத்திவிடுகின்றது.

 

இன்று பல இடங்களில் நீருக்காகத் தவிக்கும் நிலை வந்திருக்காது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

 

1.அந்த அகஸ்தியமாமகரிஷிகளை எண்ணி

2.அவருடையை அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வைக் கூட்டி

3.நாம் வாழும் இடங்களில் அந்த அருள் சக்திகளைப் படரச் செய்தால் தான்

4.நல்ல மழை நீர் பெய்யும்.

5.அதே சமயத்தில் விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத்தின் தன்மைகளையும் முறியடிக்க முடியும்.

அகஸ்தியர் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகளை எந்நாட்டவரும் பெறலாம்

Image

Agastya statue

“அகஸ்தியர் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகளை எந்நாட்டவரும் பெறலாம்”

அகஸ்தியர் தம் தாயின் வயிற்றில் சிசுவாக இருந்தபொழுது பெற்ற பூர்வ புண்ணியத்தால் அவர் தம்முள் விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலை கருவிலேயே பெற்றார்.

 

அவர் குழந்தையாகப் பூவுலகில் பிறந்தபின் திறந்தவெளியில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் சூரியனை உற்றுப்பார்க்கின்றார். சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தை நுகர்கின்றார், அது சமயம் அவைகள் அவருக்குள் அடங்குகின்றது.

 

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்க உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்பொழுது மின்னல்களாக மின் கதிர்களாக புவியில் பரவுகின்றது.

 

அதனில் கலந்து வரும் விஷத்தை அகஸ்தியர் நுகர்கின்றார். அதுவும் அவருக்குள் அடங்குகின்றது. இப்படித்  தமது குழந்தைப்பருவத்தில்

1.கண்ணால் பார்த்து நுகர்ந்த உணர்வுகள்

2.அகஸ்தியருக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஒளிக் கதிர்களாக மாறுகின்றது.

3.மின்னல் எப்படிப் பல நிலைகளிலும் ஊடுருவிச் சென்று தாக்குகின்றதோ

4.அதே போன்று அகஸ்தியருடைய நினைவாற்றலும் விண்ணில் பரவும் தன்மையினைப் பெறுகின்றது.

5.ஆகவே அகஸ்தியர் ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கக்கூடிய ஆற்றலைப் பெற்றார்.

 

இதேபோன்று இன்று விஞ்ஞானிகள் சாதாரணக் கண்ணாடிகளில் விஷம் தோய்ந்த இரசாயணங்களை இணைக்கின்றனர்.

 

அதை வைத்து வெகுதூரத்தில் இருக்கக்கூடிய பொருட்களைக் காணக்கூடிய வகையிலும் கதிரியக்கப் பொறிகளைக் கவர்ந்திடும் வகையிலும் “கண்ணாடிகளை” (TELESCOPE) உருவாக்குகின்றனர்.

 

இதனின் துணை கொண்டு வெகு தொலைவில் இருக்கக்கூடிய கோள்களைப் படமாக்குகின்றான். இப்படி எடுக்கப்பட்ட படத்தின் உணர்வின் ஒலி அலைகளை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்காக மாற்றியமைத்துக் கம்ப்யூட்டரில் பதிவாக்குகின்றான்.

 

இதனின் துணை கொண்டு

1.கோள்களில் நடைபெறும் இயக்கங்களையும்,

2.கோள்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும்

3.அது எப்படி எதிர்மறையாக இயங்குகின்றது…? என்பதையும் விஞ்ஞானி அறிகின்றான்.

 

கம்ப்யூட்டரின் துணை கொண்டு கெமிக்கல் கலந்த நாடாக்களில் உணர்வுகளின் அதிர்வுகளைப் பதிவு செய்கின்றனர். பதிவின் நிலை கொண்டு அதன் தொடர்வரிசையின் உண்மைகளை அறிகின்றனர்.

 

நாடாக்களில் கலந்துள்ள இரசாயணம் விஷம் தோய்ந்தது. அதை அரைத்துக் குடித்தாலே தீர்ந்தது. குடிப்போரை மாய்த்துவிடும். ஆனால்  உயர்ந்த சக்திகளைப் பதிவாக்குகின்றது. ஏனெனில் விஷத்தின் ஆற்றலுக்கு “அத்தகைய வலிமை” உண்டு.

 

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்கின்றது. நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலும்போது பால்வெளி மண்டலங்களாகித் தூசிகளாக மாறுகின்றது.

 

தூசிகளாக வருவதை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது.  எதிர்நிலையில் அடுத்தடுத்து வரிசையில் இருக்கும் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்பட்டு வரும் தூசிகளில் மோதும் பொழுது மின் கதிர்களாகச் சிதறுகின்றது. ஒளிக்கற்றைகள் பரவுகின்றது.

 

இருப்பினும் இவைகள் ஒன்றுடன் ஒன்று ஊடுருவிக் கலந்து இயக்கச் சக்தியாக, கதிரியக்கமாக மாறுகின்றது.

 

இப்படிக் கதிரியக்கமாக மாறியதைத்தான் விஞ்ஞானி செயற்கையான காந்தப்புலனில் இணைக்கின்றான். அதன் உணர்வுக்கொப்ப அதன் இனத்தைக் கவர்ந்தறியும் சக்தியாக விஞ்ஞானி மாற்றுகின்றான்.

 

மின்னலின் தன்மை கடல் பகுதியில் பாய்ந்தால் அது மணலாக மாறுகின்றது. அதைப் பிரித்து “யுரேனியமாக…” எடுக்கின்றான் விஞ்ஞானி.

1.அதனுடன் பல பொருட்களை இணைத்துத்

2.தனித்தன்மை கொண்ட கதிரியக்கமாகவும்,

3.லேசர் (LASER) இயக்கம் என்ற உணர்வின் வேகத் துடிப்பாகவும்

4.ஒன்றை ஊடுருவிப் பிளந்து செல்லும் நிலைக்குக் கொண்டு வருகின்றான் விஞ்ஞானி.

 

மின்னல் எப்படிக் கடினமான பொருட்களையும் பிளந்து செல்கின்றதோ அதே போன்று யுரேனியத்தைப் பயன்படுத்தி எதிர்நிலை கொண்ட பொருட்களில் மோதச் செய்து லேசர் ஒளி இயக்கமாக, எதைக் குறி வைத்து எதை இணைத்துச் செலுத்துகின்றானோ அப்பகுதிகளுக்குச் செல்ல வைக்கின்றான் விஞ்ஞானி.

 

1.இப்படி நாம் விஞ்ஞான அறிவால் தெரிந்து கொள்கின்றோம்.

2.விஞ்ஞானத்தை… “நம்புகின்றோம்”,

3.அது புற நிலைக்குப் பயன்படுகின்றது,

4.மனிதனின் “உடல்… வாழ்க்கைக்குத்தான்” பயன்படுகின்றது.

5.ஆனால் இதனின்  விஷத்தன்மைகளோ மனிதனை உருக்குலைக்கச் செய்கின்றது.

 

தாயின் கருவில் சிசுவாக இருந்தபொழுது விஷத்தை வெல்லும் ஆற்றலைப் பெற்ற அகஸ்தியர், உணர்வின் அணுக்களின் உண்மையினைக் காணும் திறன் பெற்றார். இதனின் பேருண்மைகளை அறிந்த அகஸ்தியர் தமக்குள் அதை உருவாக்கினார்.

 

ஏதுமறியாத பாலபருவமாக அகஸ்தியர் இருந்தாலும் இதனின் உணர்வின் இயக்கம் அவருள் ஞானமாக வளரத் தொடங்குகிறது.

 

உதாரணமாக புழு ஒன்றும் அறியாத நிலையில் இருக்கின்றது. ஒரு விஷம் கொண்ட குளவி அதைத் தன் விஷத்தால் கொட்டி மண்கூட்டில் அடைத்து விடுகின்றது.

 

புழு குளவியாக ஆனபின் தாய்க் குளவியைப் போன்றே அந்த உணர்வின் செயலாக்கங்களில் இயங்கத் தொடங்குகின்றது.

 

இது போன்றுதான் அகஸ்தியர் தாயின் கருவில் இருக்கும் பொழுது அவருக்குள் விளைந்த உணர்வுகள்

1.அவருடைய குழந்தைப் பருவத்தில் ஞானத்தைப் பிரதிபலிக்கும் நிலையாகவும்,

2.அறியச் செய்யும் உணர்வின் தன்மை வளரும் நிலையாகவும் அங்கே வருகின்றது.

 

அவர் அறியாத பருவத்தில் இருந்த பொழுது உணர்ந்த உண்மைகளை, சொல்லால் வெளிப்படுத்த முடியவில்லை.

 

ஆகவே, உணர்வின் ஒலிகளுக்கொப்ப “அ…” “உ…” “எ…” “ஏ…” என்று இது போன்ற ஒலியின் ஓசைகளை அறிந்து ஒன்றுடன் ஒன்று அடக்கி அதன் சுருதிகள் மாறுவதை இசையின் தன்மையால் அறிந்தார்.

 

உணர்வின் அலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றினுள் ஒன்று கலக்கும் பொழுது அதனின் செயல்களையும் அதனின் இசைகளையும் அதனின் ரூபங்களையும் அறிந்தார்.

 

அகஸ்தியர் “பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்…” கண்டுணர்ந்தவை இவை.

 

அண்டத்தையும் அதனின் விரிந்த பரப்பையும் நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் மின் கதிரியக்க உணர்வின் நிலைகளையும் அகஸ்தியர் அறிந்துணர்ந்தார்.

 

அதன் தொடர் கொண்டு பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றது? என்ற நிலையையும் கண்டுணர்கின்றார்.

 

அதே சமயம் மின்னல் தாக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதி ஆவிகளாகச் சுழல்கின்றன. சனிக் கோளுக்கு மேல்தான் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

 

அவைகளிலிருந்து வெளிவருவதைக் கவர்ந்து அடுக்கு வரிசையில் வரப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது கலவைகள் மாறுகின்றன. ஆவியின் தன்மை எடையற்றதாக மாறுவதை சனிக்கோள் தனக்குள் கவர்ந்து அதை நீருள்ளதாக மாற்றுகின்றது.

 

விஷத்தன்மை கொண்ட கேது ராகு இவைகளின் இயக்கத்தால் சூரியன் தனக்குள் இரைக்காக எடுத்துக் கொள்ளும் உணவினை மற்ற கோள்கள் இடைமறித்துத் தனது நிலைக்கு மாற்றி தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

 

அப்படிக் கவர்ந்து ஒவ்வொரு கோளின் நிலையும் அமைகின்றது. ஒவ்வொரு கோளிலும் பல உப கோள்கள் வளர்வதையும் அறிந்துணர்ந்தார் அகஸ்தியர். ஆனால் வெளியில் சொல்ல இயலவில்லை.

 

1.அகஸ்தியர் கண்களால் பார்த்து

2.உணர்வால் நுகர்ந்து

3.அவரினுள் பதிவாகி

4.அந்தப் பதிவின் நிலைகொண்டு தம்முள் விளைந்த ஆற்றலை வெளிப்படுத்தினார்.

 

அது இன்றும் உண்டு.

 

யாம் உபதேசித்த உணர்வை மீண்டும் நினைவுபடுத்தினால் அவர் கண்ட பேருண்மைகளையும், அவர் பெற்ற ஒளியான உணர்வுகளையும் “எல்லோரும் பெறலாம்”.

 

எல்லோரும் பெறக்கூடிய நிலையைத்தான் அகஸ்தியரின் உணர்வைப் பெற்ற பின் வந்த ஞானியர்கள்

“தென்னாடுடைய சிவனே போற்றி…

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…”

என்று பாடினார்கள்.

வான்மீகி மாமகரிஷி உரைத்த இராமாயணக் காவியத்தில் “அவர் கண்டுணர்ந்த பேருண்மைகள்”

Image

vanmiki ramayana

வான்மீகி மாமகரிஷி உரைத்த இராமாயணக் காவியத்தில் “அவர் கண்டுணர்ந்த பேருண்மைகள்”

 

அகஸ்திய மாமகரிஷிகள் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய உணர்வின் தன்மைகளை வான்மீகி மகரிஷி தம்முள் பெற்றார்.

 

அவர் வானை நோக்கி ஏகி சூரியனின் இயக்கங்களையும் நாம் எப்படிப் பிறந்தோம்? என்பதையும் அறிந்தார். பல கோடிச் சரீரங்களைக் கடந்து பத்தாவது நிலை பெறும் உயிரையும் பற்றி அறிந்து கொண்டார்.

 

மனிதர் தமக்குள் பலவிதமான நிலைகள் வரும் பொழுது ஆசையின் உணர்வுகளால் கண் கொண்டு உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை தமக்குள் வரும் பொழுது எண்ணங்கள் தோன்றி அது தன் இனங்களாகப் பெருக்கும் பொழுது அதனின் நிலைகள் எத்தகையது? என்பதையும் தமக்குள் அறிந்தார்.

 

வசிஷ்டர் என்ற நிலையில் இந்த உடலான சபைக்குள் நாம் கவர்ந்து கொண்ட சக்திகளின் உண்மையின் தன்மையை உணர்த்தக்கூடிய நிலைகள் பிரம்ம குருவாகக் காட்டினார்.

 

வசிஷ்டர் என்றால்

1.தான் கவர்ந்து கொண்ட உண்மையின் சக்தியை

2.”உயிரான நிலைகளுக்கு உணர்த்தி” வழி காட்டும் நிலை வருகின்றது.

 

அதே போல் விசுவாமித்திரர் அதாவது கோபத்தின் தன்மை கொண்டு எதையும் சாதிக்கும் வல்லமையும் எதனையும் அடக்கிடும் வல்லமை கொண்டவர்.

 

இராமன் தமக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று வேண்டி அவர் வருகின்றார். அதாவது கோபத்தின் உணர்வின் தன்மையின் செயல் இது.

 

இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திரும்பி வாங்கிக் கொள்வான் என்ற நிலைகொண்டு

1.கோபத்தின் உணர்வைக் கடுமையாக எடுத்தால் இதனின் உணர்வின் தன்மை

2.கேட்போரின் உணர்வுகளில் அதே கோபத்தின் உணர்ச்சிகளை ஊட்டி,

3.எதிரி என்ற நிலையை உருவாக்கும்.

 

விசுவாமித்திரர் அவர் தவம் செய்து எதையும் அடக்கி ஆட்சி புரியும் தன்மை கொண்டவர். கோபத்தின் தன்மை ஆட்சி செய்யும் நிலையாக வரும் பொழுது “அவருடைய எண்ணங்களே” அவருக்கு எதிரியாக வருகின்றது.

 

விசுவாமித்திரர் தனக்குள் அந்த அசுர உணர்வு வராதபடி இராமனைத் தமக்குத் துணையாக அழைத்துச் செல்ல விரும்புகிறார்.

 

1.இராமனின் சாந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்பதற்காக

2.சீதாராமனை எனக்கு உதவியாக அனுப்பு என்ற நிலையில்

3.சாந்த குணங்கள் பெறவேண்டும் என்று அதையே தவமிருந்தார்.

 

ஆனால், பிற்காலத்தில் வந்தவர்கள் இதை மாற்றியமைத்துவிட்டனர். அசுரர்கள் என்னைத் தாக்குகின்றனர். ஆனால் தாங்கும் உணர்வு தனக்கில்லை என்று திரித்துவிட்டனர்.

 

இராமனோ சாந்த உணர்வுகளின் தன்மை கொண்டு “தீமைகளை ஒடுக்கி… மகிழச் செய்யும்” தன்மையைத் தனக்குள் சேர்ப்பவன். அந்த எண்ணங்கள் பெறப்படவேண்டும் என்ற நிலையை இங்கே காட்டப்படுகின்றது.

 

இராமாயணத்தைப் பார்த்தால் அதில் தசரதன் ஆயிரம் வருடம் வாழ்ந்தார், ஆனால் புத்திரன் இல்லை. ஆகையால் அசுவமேத யாகம் செய்தார் என்று வான்மீகி காட்டுகின்றார்,

 

அதாவது இந்த உயிரான நெருப்பில் ஒவ்வொரு உணர்வை எடுத்து உணர்வின் சத்தாக மாற்றப்பட்டு பரிணாம வளர்ச்சியாகி இன்று மனிதனாகப் பிறந்தோம்.

 

பல உயிரினங்களை வென்று ஒன்றை ஒன்று கொன்று ஒன்றை ஒன்று விழுங்கி ஒன்றின் உணர்வுகள் மாறி பலவற்றையும் அறிந்திடும் உணர்வை மனித உடலில் பெற்ற இந்த உயிரால் உருவாக்கப்பட்டவன் (தசரதன்) என்று அங்கு வான்மீகி தெளிவாக்கினார்.

 

ஆனால் இந்த உண்மையின் தன்மைகள் வெளிவரவில்லை.

 

தசரதர் ஆயிரம் வருடம் வாழ்ந்தார். தமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதால் தவம் இருந்தார். அசுவமேத யாகம் செய்தார். புத்திர மேஷ்டி யாயம் செய்து விஷ்ணுவை வணங்கினார்.

 

யாகத் தீயிலிருந்து, விஷ்ணுவின் தூதுவர் பாத்திரத்தில் பாயாசம் கொண்டு வருகிறார். பாயாசத்தை முதல் மனைவிக்குக் கொடுத்ததால் மகன் இராமன் பிறக்கிறான். இரண்டாவது மனைவிக்குக் கொடுத்ததால் பரதன் பிறக்கிறான்.

 

மூன்றாவது மனைவிக்குப் பாயாசத்தைக் கொடுத்து எஞ்சியிருப்பதையும் இவளுக்கே கொடுத்ததால் சத்ருக்ணன் இலட்சுமணன் எனும் இரட்டைக் குழந்தைகள் மூன்றாவது மனைவிக்குப் பிறந்ததாகக் கூறுவது வான்மீகி இராமாயணக் காவியத்திற்கு மாறானது.

 

இயற்கையின் நிலைகள் எவ்வாறு என்று வான்மீகி தெளிவாகக் கூறினார். வான்மீகி மகரிஷிகள் தந்தருளிய உண்மைகளை மக்கள் அறிய முடியாதவாறு செய்து விட்டனர்.

 

ஆனால், இன்று வான்மீகி இராமாயணத்தைப் பார்த்தால், எவ்வளவு தூரம் அசுத்தம் என்ற நிலைகள் இருக்கின்றது. “அரச நிலைகளுக்காக” வான்மீகி உரைத்த காவியத்தை பிற்காலத்தவர்கள் மாற்றியமைத்து விட்டார்கள்.

 

“நமது உடலின் இச்சைக்கு” நம்முள் அசுர குணங்கள் ஏற்படுவதை பத்துத் தலையுடைய இராவணன் என்று காண்பிக்கின்றார்கள்.

 

இராவணனுடைய உணர்வுகள் சகோதரனாக வளர்ந்தாலும், நல்லவைகளை அவன் செய்தாலும் உடலில் வரக்கூடிய விஷம் கும்பகர்ணன்.

 

“நல்லது செய்யாது தூங்கினாலும்” இவன் எடுத்துக் கொண்ட அசுர உணர்வு எப்படி ஆட்டிப்படைக்கிறது? என்றும் காண்பிக்கின்றார் வான்மீகி.

 

பல உணர்வின் தன்மைகளையும் பல உடல்களில் கொன்று குவிக்கும் உணர்வின் தன்மைகளைத் தனக்குள் எடுத்து அசுர உணர்வு வரப்படும் பொழுது இவனுள் விளைந்த அந்த உணர்வின் எண்ணங்கள், இந்திரஜித்.

 

அவன் மாயமாகச் செல்வதும் மாயச் செயல்களைச் செய்வதும் இந்த உணர்வின் தன்மை அவன் எவ்வாறு செய்கிறான் என்றும் அவன் யாகத்தீயை வளர்த்து கொன்று புசிக்கும் உணர்வின் தன்மையை கொல்லும் பொழுது கொன்ற உணர்வு இவனுள் வந்து அசுர குணங்களாக இவனுள் எப்படி விளைகின்றது? என்றும் காட்டுகின்றார்.

 

ஒருவனை அழித்திடும் உணர்வின் எண்ணங்களை எப்படி உருவாக்குகிறான் என்றும் மறைந்திருந்து தாக்குவதும் இந்த உணர்வின் தன்மை மாயமாக மறைவதும் எவ்வாறு? என்ற நிலையை “இந்திரஜித்” என்று காண்பித்தார் வான்மீகி.

 

அதே சமயம் இராமாயணத்தில் அஞ்சநேயர் வாயுபுத்திரர் என்றும் நமக்குள் இருக்கும் உணர்வுகள் சொல்லாக வெளிப்படும் பொழுது எந்த உணர்வின் தன்மையோ அந்த உணர்வின் தன்மை வாயுவாகச் செல்கின்றது.

 

1.அதாவது ஒன்றை நுகர்ந்தபின் (சுவாசித்த பின்)

2.அது எந்த குணத்தின் தன்மை எதை நுகர்ந்ததோ

3.தாவிச் சென்று அந்த உணர்விற்குள் உணர்ச்சியை உருவாக்குகின்றது.

4.தாவிச் சென்று மற்றொன்றைச் செயல்படுத்தும் நிலை எனவே இதைக் குரங்கினமாகக் காண்பித்தார்கள்.

 

சுக்ரீவன் தீமையின் உணர்வின் தன்மையை வென்றிடும் வலிமை பெற்றவன், சூரியனின் ஒளியால் கவரப்பட்ட வலிமையின் தன்மை. ஆகவே சூரியனின் புத்திரன் சுக்ரீவன். அவன் எதனின் உணர்வின் தன்மையையும் வெல்லும் வலிமை கொண்டவன்.

 

இது போன்று ஒவ்வொரு குணத்திற்குத்தக்க அதனதன் இயக்கம் எவ்வாறு செயல்படுகின்றது என்று காட்டுகின்றார்.

 

இராமன் எனும் நிலைகொண்டு உணர்வின் எண்ணங்கள் எப்படிச் செயல்படுகின்றது என்றும், இந்த உணர்வுகளை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்ற பொழுது சுக்ரீவன் என்றும் காட்டுகின்றார்.

 

எந்த வலுவின் தன்மை வருகின்றதோ அதன் செயலாக்கம் எப்படி வருகிறதென்றும் வான்மீகி தமது காவியத்தின் மூலம் மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

அபிராமிபட்டராக இருந்தவர்… இப்பொழுது ஈஸ்வரபட்டராக இருக்கிறார்…!

destiny of humanity

அபிராமிபட்டராக இருந்தவர்… இப்பொழுது ஈஸ்வரபட்டராக இருக்கிறார்…! 

(1) தன் ஆன்மாவை ஒளிப்படுத்தும் மார்க்கத்தைக் காட்டினார் ஈஸ்வராய குருதேவர்

அகஸ்தியன் 27 நட்சத்திரங்களின் தன்மை எடுத்டு உயிரை ஒளியாக மாற்றி முதலில் விண் சென்றவன். துருவனாகி துருவ நட்சத்திரமானான் அதன்பின் இன்னொரு உடலுக்குள் போகாதபடி வந்தது.

நம் குருநாதர் ஈஸ்வராய குருதேவர் கூட உடல் விட்டு உடல் தாவி வந்தவர்தான். கூடு விட்டு கூடு பாய்ந்து
1.முதலில் அபிராமி பட்டராக இருந்தார்.
2.இப்பொழுது இங்கே ஈஸ்வரபட்டராக இருக்கிறார்.
3.இதைப்போல ஏனைய இன்னும் ஒரு ஐந்தாறு உடல்கள் எடுத்து வந்தவர்தான்.

இந்த உடலுக்கும் சேர்த்து அதிலேயும் பைத்தியக்காரராகத்தான் இருக்கிறார். இதிலேயும் பைத்தியக்காரர்தான்.

ஆனால் தன்னுடைய காரியம் எதுவோ அதைச் சாதித்து வந்தவர் நமது குருநாதர்.

இந்த உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது…? என்கின்ற வகையில் அதை எண்ணித்தான் இனி இந்த உடலில் கடைசியாகத் தான் சேமித்த பிற்பாடுதான்
1.சில ரகசியங்களைச் சொல்லி
2.எப்படி எடுக்க வேண்டும் என்பதை எமக்குச் சொன்னார்.

அதைச் சொல்லிவிட்டு அவர் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு அந்த ஆன்மாவை எப்படி ஒளியாக வேண்டும் என்று அதற்குண்டான மார்க்கத்தைக் காட்டினார்.

ஏனென்றால் எதுவும் உந்துவிசை வேண்டுமல்லவா. அந்த மார்க்கங்களைக் கொடுத்தார்

(2) ஆயிரம் வருடம் தவமிருந்த ஆன்மாவை விண் செலுத்தச் செய்தார் குருநாதர்

அவர் விண் சென்ற பிற்பாடுதான் இன்று மற்றவர்களை நாம் செலுத்துகின்றோம். அவரை விண் செலுத்துவதற்கு முதலில் ஆயிரம் வருடம்  தவமிருந்த ஆன்மாவை விண் செலுத்தும்படி செய்தார்.

இமயமலைக்குப் போய் ஹரித்வாரில் “ஓ…ம் ஓ…ம்..” என்று ஆயிரம் வருடம் “ஓ…ம் நமச்சிவாய…. ஓ…ம் நமச்சிவாய…” என்று தவமிருந்த ஒரு ஆன்மா இந்தச் சிறைக்குள் (உடலுக்குள்ளே) அடைப்பட்டிருந்தது.

அந்த நிலையில் அதையே ஜெபமாக எடுக்கிறவர்கள் அந்த உணர்வுடன் சேர்த்து அவர்கள் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள்.

இனியும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அப்பொழுது அவர்களுக்கு இந்த விண் செல்லும் மார்க்கத்தைக் காட்டி,
1.என்னை அங்கே ஹரித்வாருக்குச் செல்லச் செய்து
2.வெள்ளத்தை வரவழைக்கச்செய்து அதைக் கடக்கச் செய்து,
2.அந்தச் சப்தத்தை “எதிரொலியாக்கி”
4.மீண்டும் அந்த எண்ணத்தை அவர்களுக்குச் சொல்லப்படும் போது,
5.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய குருநாதர் எம்மைச் செயல்படுத்தினார்.

ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்கின்ற உணர்வு அவர்களுக்குத் தெரியாது.

அன்றைக்கு ஒரு அரசனாக இருந்தவன் இந்த நிலையைப் பெற்றவன் இங்கே அடைபட்டிருக்கின்றான் இதற்கு, நீ ஏதாவது செய்து கலைத்து விட்டாய் என்றால் அவன் உன்னை நினைத்தானென்றால் உன்னைச் சுட்டுப் பொசுக்கக்கூடிய சக்தி இருக்கின்றது.

ஆகவே சப்தரிஷி மண்டல ஒளிகளை எடுத்து அந்த விண்ணுலகை எடுத்துக் காட்டு என்றார் குருநாதர்.

அவ்வாறு செய்தவுடன் அது வந்த பிற்பாடு இந்த ஆன்மா அது கூட்டைவிட்டு வெளியில் வருகின்றது.

1.அப்பொழுது சப்தரிஷி மண்டல ஒளிகளை இணைக்கப்படும்போது
2.அந்த நட்சத்திர அலைகளை நுகரும் ஆற்றல் கொடுத்தவுடனேதான்
3.இந்த ஆன்மா விண்ணுக்குச் செல்கின்றது
4.அந்த முகப்பின் உணர்வு வரப்படும்பொழுது அது சப்தரிஷி மண்டலத்திற்குள் இணைகின்றது.

(3) உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களை எப்படி விண் செலுத்துவது…? என்று பழக்கப்படுத்தினார் குருநாதர்

குருநாதர் முதலில் எமக்கு அந்த பழக்கத்தைக் கொடுத்து அடுத்து மற்ற ஆன்மாக்களை எப்படி விண் செலுத்துவது என்று சொன்னார். பிறகு இப்பொழுது நாம் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அதைச் செய்கிறோம்.

சொல்வது அர்த்தமாகின்றதல்லவா.

இல்லையென்றால் “அந்த வழி…” தெரியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்? சும்மா சொல்லி வறட்டுத்தனமாகச் சப்தம் போட்டுக் கொண்டு இருப்பதில் பிரயோஜனம் இல்லை.

குருநாதர் அதற்கப்புறம் என்ன செய்தார். இப்பொழுது நான் இருக்கின்றேன். இந்த உடலை மாற்றி இதற்குச் சரியான நேரத்திற்குத் தேட முடியவில்லை.

நீ இன்னென்னது செய்ய வேண்டும் இப்படி, இப்படிச் செய்ய வேண்டும் என்று எம்மைப் பக்குவப்படுத்தி அவருடைய ஆன்மா உடலை விட்டுப் போகும் போது, அதற்கு என்ன செய்யவேண்டும்? என்றுதான் சில நிலைகளைச் செய்யச் சொன்னார்.

யாருக்கு…?

அவரை (குருநாதரை) விண் செலுத்துவதற்கு, அதற்கே ஒரு துணை தேவைப்படுகின்றது. நேரடியாக எங்கேயும் போக முடியாது. “உந்து விசை வேண்டும்”.

அந்தச் சப்தரிஷி மண்டல முகப்பை எடுத்து எண்ணத்தை திசை மாறாது கொண்டு போக வேண்டும். ஏதாவது திசை மாறிப் போனது என்றால் வான் வெளியிலே மிதந்துவிடும் அணுவின் தன்மை அடைந்தால் மற்ற கோளின் ஈர்ப்புக்குத்தான் போகும்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணையாது. இப்பொழுது இங்கிருந்து போய்விட்டது என்றால் மற்ற கோள்கள் அதாவது சந்திரன் இருக்கிறதென்றால் அங்கே போகும். ஆனால், அங்கே வளர்ச்சியற்ற அணுவாகத்தான் இருக்கும்.

(4) குரு இல்லாதபடி எந்த நிலையும் இருக்க முடியாது…!

ஏனென்றால் இங்கே எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மையில், மீண்டும் அதைக் கடந்து செல்லக்கூடிய திறன் இருக்காது அதற்குள்ளே அடைபட்டுப்போகும்.

அதில் எத்தனையோ வகைகள் அவர் சொல்லித்தான் இப்பொழுது நாம் இதைச்செய்கின்றோம்.

அதுதான் குரு இல்லாதபடி எந்த நிலையும் இருக்க முடியாது, குரு காட்டிய அந்த நிலைகளை நமக்குள் பதிவாக்கினால்தான் செல்ல முடியும்.

சும்மா அந்த கிணற்றுத்தவளை மாதிரி சுற்றிக் கொண்டு இருந்து எடுப்பதென்றால் இது முடியாது. ஏனென்றால் எமக்கு இருபது வருடம் இந்த அனுபவத்தைக் கொடுத்துத்தான இதைப் பெறச் செய்கிறார்.  அதனால்தான்
1.உங்களுக்கு அடிக்கடி இந்த உணர்வுகளைப் பதியச் செய்து பதியச் செய்து,
2.உங்கள் நினைவுகளை அங்கே கொண்டுபோய்
3.ஒவ்வொன்றாகக் கொண்டு வருகிறோம்.

அதற்குக் கணவன் மனைவி நீங்கள் இருவரும் இணைந்து, தியானத்தை இப்படி எடுத்தே ஆக வேண்டும். எதற்கு? உணர்வு வெளியில் போய்விட்டதென்றால் கருவை உருவாக்க வேண்டும்.

ஆகையினால் காலையில் துருவ தியானத்தை எடுத்து, அந்த மகரிஷியின் அருள்சக்தி நான் பெறவேண்டும் என் உடல் முழுவதும் படரவேண்டும் தன் கணவனுக்கு இந்தச் சக்தி கிடைக்க வேண்டும், என்று மனைவி எண்ணவேண்டும்.

அதே போன்று கணவன் தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.இந்த இரண்டு உணர்வும் ஒன்றாக்க வேண்டும்.
2.அதை நாம் உருவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளைப் பெற்று,
3.சப்தரிஷி மண்டலம் சென்றடையலாம்.

(5) ஒவ்வொரு உயிரான்மாவிலும் “சப்தரிஷி மண்டல முகப்பை” இணைக்க வேண்டும்

இங்கே துருவ நட்சத்திரத்தில் இருக்க முடியாது. அதனுடைய வட்டப்பாதையில் தான் போய்ச் சேரமுடியும். அப்பொழுது அதற்குண்டான முகப்பை எடுத்து இந்த உணர்வை எடுத்த பிற்பாடுதான் அங்கு போய்ச் சேரும்.

1.ராக்கெட்டை இங்கே செய்கிறார்கள்
2.கம்ப்யூட்டரில் அந்தப் படங்களை எடுக்கிறார்கள்.
3.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டபின், “முகப்பில்” வைக்கிறான்.
4.ராக்கெட்டில் விண்ணில் சேர்த்த பிற்பாடு அந்த முகப்பைப் பார்த்து,
5.அந்த ஈர்ப்புக்குத்தான் (செயற்கைக் கோள்) அங்கே கொண்டு போகும்.

அதில் கொஞ்சம் திசைமாறிப் போனதென்றால் எங்கேயாவது இழுத்துக் கொண்டு போய்விடும். எந்தெந்தக் கோள்களை எடுக்கின்றானோ அந்த “முகப்பை” இதில் இணைக்க வேண்டும்.

அதே மாதிரித்தான் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் முகப்பை இணைக்கச் சொல்வது. அப்படி இணைக்காதபடி அந்த இடம் போய்ச்சேர முடியாது.

விலகிப் போனதென்றால் எங்கேயோ போய்விடுவோம். நாம் நினைக்கின்றோம். ஆனால் இதில் “கரணம் தப்பினால் மரணம்” என்கிற மாதிரிப் பல வித்தியாசமான நிலைகள் இருக்கின்றது.

(6) எம்மைப் பழக்கப்படுத்தி… குருநாதரை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்தார்

அதனால்தான் என்ன செய்கின்றோம்? குருநாதர் போகிறார் என்றால் அவரைச் சரியான எல்லை வைத்து அனுப்புவதற்குத்தான் எம்மை இப்படிப் பழக்கப்படுத்தினார்.

ஏனென்றால் மற்றவர்கள் எல்லாம், இந்த உடல் ஆசைக்குத்தான் குருநாதரிடம் வந்தார்கள்.

வந்தவுடனே அதைச் செய்வேன், பூனையைச் செய்வேன், யானையைச் செய்வேன், என்று சொல்லிக் கொண்டு ஆசையில்தான் போனார்கள்.

அப்புறம், இவர்கள் எங்கே? அவர்களால் அவரை விண் செலுத்த முடியாது

ஆனால் எம்மைச் சரியான முறையில் பக்குவப்படுத்தித்தான் தன்னை அதனுடன் இணைப்பதற்கு நீ எதை எதைச் செய்ய வேண்டும்? என்று முதலில் அதை ஏற்றச் சொல்கிறார்.

அது சரியாக வந்த பிற்பாடுதான் உடலை விட்டே குருநாதர் பிரிகின்றார். ஆன்மா போகும் போது இந்த உணர்வை வளர்த்தபின் இது எப்படிச் சரியான முகப்பில் கொண்டுபோய் இணைகின்றது.

இப்படி உதாரணம் தெரிந்து கொண்ட பிற்பாடுதான் அங்கே கொண்டு போகின்றார்.

சொல்வது அர்த்தமாகின்றது அல்லவா? சரியாக இங்கே இருந்து அந்த முகப்பு இல்லையென்றால் கொண்டுபோக முடியாது.

அப்புறம் உந்தி குருநாதருடைய ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்த பிற்பாடுதான் அந்தச் சக்தியை யாம் அதிகமாகப் பெற முடிந்தது

முதலில் என் அம்மா அப்பாவின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு போகச் சொன்னார் குருநாதர். அது கொண்டு போனால் அங்கே இரண்டு பேரும் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றார்கள்.

சப்தரிஷி மண்டலமே மனிதனின் கடைசி எல்லை.