குழந்தைகளைப் பக்குவப்படுத்தி ஞான வழியில் எப்படி வளரக்க வேண்டும் என்று தெரிந்து கொளுங்கள்…!

Image


குழந்தைகளுக்குச் செய்யவேண்டியதுகுழந்தைகளைப் பக்குவப்படுத்தி ஞான வழியில் எப்படி வளரக்க வேண்டும் என்று தெரிந்து கொளுங்கள்…!

 

உங்கள் குழந்தைகளை முதலில் அன்னை தந்தையரை வணங்கப் பழக்கிக் கொடுங்கள். வணங்கவில்லை என்றால் குழந்தையை அழைத்து அம்மாவையும் அப்பாவையும் ஏன் வணங்கவில்லை…? என்று கேளுங்கள்.

அந்த ஒழுக்கத்தின் நிலைகளைக் கற்றுக் கொடுத்து வீடு குடும்பம் என்ற நிலைகளில் ஒற்றுமையாக வளரவேண்டும் என்ற நல் போதனைகள் கொடுத்து அன்புடன் அரவணைத்துப் பழகுங்கள்

1.வீட்டையும் மற்றவர்களையும் மதிக்கச் செய்யும் நிலைகளைக் குழந்தை உள்ளங்களில் உருவாக்கச் செய்து
2.உலகிற்கே எடுத்துக்காட்டாக உலகையே காத்திடும் நிலையாக வர வேண்டும் என்று
3,குழந்தைகளுக்கு நீங்கள் அருளாசி வழங்குங்கள்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க நிலைகளைப் பிறருக்கு எடுத்துக் கூறும் நிலையும் இந்த உலகைக் காத்திடும் நிலைகளும் அந்தக் குழந்தைகள் வளரும் காலத்தில் தான் உண்டு.

ஆகவே இனி வரும் காலத்தில் விஞ்ஞான அறிவால் பேரழிவு கொண்டு வரும் நிலையிலிருந்து தன்னைக் காத்திடும் சக்தியை அவர்கள் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் அந்தச் சக்தியைப் பெறும் நிலையாகப் பிரார்த்திக்கச் செய்து அவர்கள் எண்ணத்தால் சக்தி பெறும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

அதைப் போல அந்தக் குழந்தைகளுக்கு நம்முடைய வீடு… நம்முடைய சகோதரர்கள்… நம் விவசாயம் என்ன…? நம் அருகில் உள்ள நண்பர்களிடம் எப்படிப் பண்புடன் பழக வேண்டும்…? என்று நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் குழந்தைகளிடம் சில சில குறைகள் ஏற்பட்டாலும் அதைக் கோபித்துச் சொல்லாத நிலைகள் கொண்டு அரவணைத்து பக்குவமாகச் சுட்டிக் காட்டும் நிலை வர வேண்டும்.

1.எத்தகைய பாட நிலைகளை நாம் போதித்தாலும் உணர்வின் தன்மை வெளிப்படுத்தினாலும்
2.குழந்தைகள் உள்ளங்களில் மற்றவர்கள் படும் இச்சைகள் இணைக்கப்படும் பொழுது சில நேரங்கள் குழந்தைகள் மாறினாலும்
3.ஏன்… இவ்வாறு செய்கிறாய்…? என்று நாம் கோபித்துச் சொல்லாதபடி
4,அதைச் சுட்டிக் காட்டி… “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்று சிறிது காலம் நாம் போதிப்போம் என்றால்
5,அந்தக் குழந்தைகளின் உள்ளங்களில் அது ஆழமாகப் பதிந்து
6.அதன் வழிகளில் நமக்கே நல் வழி காட்டும் நிலையாக நிச்சயம் வளரும்.

ஏனென்றால் நாம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அடுத்து நாம் எண்ணியபடி படிப்பில் குழந்தைகள் முன்னேறி வரவில்லை என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.

வேதனை உணர்வுடன் நாம் பார்க்கப்படும் பொழுது நமக்குள் விளைந்த வேதனை உணர்வுகள் நம் குழந்தைகளிடத்தில் கடும் சொல்லாக ஊடுருவி அது வித்தாக ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.
1.நம்மைக் காணும் பொழுதெல்லாம் அஞ்சும் நிலை வருகின்றது. வெறுக்கும் நிலை வருகின்றது.
2.உயர்ந்த நிலைகளைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றாலும்
3.நாம் முதலிலே பாய்ச்சிய கோப உணர்வுகளால் அங்கே மறைக்கப்படுகின்றது
4.நமக்குள்ளும் அதே உணர்வை எடுக்கப்படும் பொழுது கோபிக்கும் நிலைகளே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் குழந்தைகளை மகரிஷிகள் காட்டிய மெய் வழியில் வளர்க்க வேண்டும்.
1.ஞானக் குழந்தைகளாக உருவாக்கி
2.உலகையே காத்திடும் “உத்தம ஞானிகளாக…” வளர்த்துப் பழக வேண்டும்.

சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமானது…

Patriots souls

சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமானது…

நாமெல்லாம் மகிழ்ந்திட வேண்டும் என்றும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தன்னைத்தானே அர்ப்பணித்த தியாகிகள் நம் நாட்டில் நிறையப் பேர் உண்டு.

தன் குடும்பத்தையும் எண்ணாது தன் சகோதரர்கள் குடும்பத்தைக் காத்துக் கொள்வார்கள்… அவர்கள் இருக்க நமக்கு ஏன் பயம்…? என்ற நினைவு கொண்டு தான் அவர்கள் செயல்பட்டார்கள்.

1.நம் நாட்டு மக்கள் அனைவரும் தெளிந்திட வேண்டும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.தன் உடலையே அர்ப்பணித்து அதனின் நிலைகள் கொண்டு உயிர் நீத்துச் சென்ற
3.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் இங்கே காற்றிலே தான் சுழன்று கொண்டு இருக்கின்றது.

இன்றைய நிலையில் சுதந்திர வேட்கையான உணர்வுகள் நம் நாட்டிலே அற்றுப் போயிருப்பதால் நமது நாடு… நமது மக்கள்… நமது சகோதரர்கள்…! என்று எண்ணிச் செயல்பட்ட அந்த உயிரான்மாக்கள்
1.மறு பிறவி எடுக்க முடியாத நிலைகளிலும்
2.இன்னொரு உடலுக்குள் புகுந்து
3.அவர்கள் கண்டுணர்ந்த நல் உணர்வுகளை வழி நடத்திடும் நிலையும் இல்லாதே போய் விட்டது.

அதே போன்று ஒருவருக்கொருவர் பிரித்தாளும் நிலைகளில் இருந்து மக்களைக் காத்திட வேண்டும் என்ற எண்ணங்களை ஓங்கி வளர்த்துக் கொண்ட மகாத்மா காந்திஜியின் எண்ணத்தையும் எடுக்க நாம் யாரும் துணியவில்லை.

“நாம் எல்லாம் ஓர் இனம்…! நம் நாட்டைக் காத்திட வேண்டும் என்ற நிலையில் உயிர் நீத்த பகத்சிங் போன்ற ஏனைய எத்தனையோ பேர் இருந்தாலும் அவர்களைப் போல எண்ணங்கள் கொண்டுள்ளோரும் இன்று யாரும் இல்லை.

அவர்களை ஒத்த எண்ணங்கள் இருந்திருந்தால் அந்த உயிர் நீத்தோரின் ஆன்மாக்கள் அவர்களை ஒத்த எண்ணத்தைக் கொண்ட உடலுக்குள் புகுந்து
1.அவர்கள் செய்த வீரிய உணர்வின் நிலைகளில்
2.நம் நாட்டைக் காத்திடும் உணர்வின் எண்ணங்கள் இன்று ஓங்கி வளர்ந்து இருக்கும்.
3.காலத்தால் அத்தகைய நிலைகள் வழித் தொடராதபடி ஆகிவிட்டது.

நாமெல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று நாட்டுப் பற்றுடன் உயிர் நீத்த அந்த உயிரான்மாக்கள் இன்றும் பூமியில் பிறவியற்ற நிலைகள் சுழன்று கொண்டு இருக்கின்றது.

இருப்பினும் இன்று விஞ்ஞான உலகில் அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலை வளர்த்துக் கொண்ட நிலையில் கதிரியக்கச் சக்திகளைப் பாய்ச்சப்படும் போது அந்தக் கதிரியக்கங்கள் நம்மைக் காத்திட்ட அந்த உயிராத்மாக்களின் உணர்வின் தன்மையை அழித்து விடுகின்றது.

ஆனால் அந்த உயிராத்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் புகுந்திருந்தால் மக்களைக் காத்திடும் வலு கொண்டு நல் வழி காட்டி இருக்கும். நம்மைச் சகோதர உணர்வுடன் வாழச் செய்து கொண்டிருக்கும்.

அப்படி இல்லாதபடி விஞ்ஞான அறிவால் அணுவைப் பிளந்து கதிரியக்கச் சக்தி கொண்டு
1.அதை வெடித்தவுடனே ஒரு நொடிக்குள் உடலை அழிப்பது போன்று
2.உயிராத்மாவுடன் சேர்த்துக் கொண்ட சிந்தித்துச் செயல்படும் நல்ல மனித உணர்வுகளையும் அழித்து விடுகின்றது.

அதனால் நம்மைக் காத்தருளிய அந்த உயிரான்மாக்கள் குறுகிய உணர்வு கொண்டு புழுவாகவும் பூச்சியாகவும் அடுத்துப் பிறக்கும் நிலை ஏற்படுகின்றது.

நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு அவ்வாறு உயிர் நீத்த உயர்ந்த எண்ணம் கொண்ட அந்த உயிராத்மாக்கள் விஞ்ஞான அறிவின் அடிப்படையிலே அணு விசையால் தாக்கப்பட்டு விஷம் தோய்ந்து விட்டது.

ஏனென்றால் மெய் ஞானிகள் காட்டிய நெறிகளை நாம் கடைபிடிக்காததனால் இந்திய மண்ணில் தோன்றிய அத்தகைய உயர்ந்த ஆன்மாக்கள் புழுவாகவும் பூச்சியாகவும் பிறக்கும் நிலை உருவாகி விட்டது.

விஞ்ஞான அறிவால் தீமைகள் வந்தாலும் அதிலிருந்து நம்மை மீட்டிடும் உணர்வாக மெய் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி உலக மக்கள் அனைவரும் மொழியால் மதத்தால் பிரித்தாளாதபடி “நாம் அனைவரும் சகோதரர்கள் என்றும்… ஆண்டவனின் பிள்ளைகள் என்றும்…!” ஒன்றி வாழ்தல் வேண்டும்.

நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலையில்
1.மதமல்ல நமக்குச் சொந்தம்
2.இனமல்ல நமக்குச் சொந்தம்
3.மொழியல்ல நமக்குச் சொந்தம்
4.அனைத்து மக்களின் “நட்பு கொண்ட உணர்வே நமக்குச் சொந்தம்…! என்ற நிலைகள் கொண்டு
5.நாம் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும்.

உலகில் உள்ள ஏனைய மக்கள் உடல்களிலும் தீமைகளை உருவாக்கும் உணர்வுகள் விளையாது தீமைகளை அகற்றிடும் மெய் ஞானிகளின் உணர்வுகள் உட்புகுந்து மனிதன் என்ற நிலையில் சிந்தித்துச் செயல்படும் அந்த உணர்வின் ஆற்றல்கள் வளர்ந்திட வேண்டும் என்ற நினைவினை ஒவ்வொருவரும் நமக்குள் ஆழமாகப் பதியச் செய்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் தீமைகள் அணுகாதபடி நம்மைக் காத்திட்ட நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட
1.அந்தத் தியாகிகளின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அனைத்து உயிரான்மாக்களையும்
2.நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்
3.அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

தீமையான உணர்வுகள் நம் யாரையும் அடிமைப்படுத்தாதபடி நல்ல உணர்வுகள் என்றுமே சீராக இயங்குபடியான சுதந்திரத்தை நாம் அனைவரும் பெறுவோம்.

இந்தச் சதமற்ற உடலுக்காக வேதனைப்பட்டு “நாம் பெற வேண்டிய நல்லதை இழந்து விடக் கூடாது…”

immortal-bliss

இந்தச் சதமற்ற உடலுக்காக வேதனைப்பட்டு “நாம் பெற வேண்டிய நல்லதை இழந்து விடக் கூடாது…”

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே…!

பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

“நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமா… …?”
என்று இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் கடுமையான குளிரில் வைத்து எம்மை (ஞானகுரு) இப்படிக் கேட்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால் அவர் எமக்குப் பல அரும் பெரும் சக்திகளைக் கொடுத்தாலும் நான் வீட்டிலுள்ள என் பெண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு அவர் சொன்ன வழிகளில் போகப்படும் பொழுது ஒவ்வொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் என் எண்ணங்கள் மாறுகின்றது.

நம் குடும்பம் பிள்ளை குட்டிகள் எல்லாம் எப்படி இருக்கின்றதோ…? நாம் இங்கே இந்தப் பனிப்பாறையில் இறந்து விட்டால் அவர்களை யார் காப்பாற்றுவது…? என்று வேதனைப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றேன்.

அப்பொழுது அவர்களுக்கு அதைச் செய்ய வேண்டுமே இதைச் செய்ய வேண்டுமே என்ற எண்ணங்களில் இந்த ஆசை தான் எனக்குள் வருகிறதே தவிர… குருநாதர் சொன்னதை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

1.உனக்குள் பெற வேண்டியதை மறந்து…
2.நீ பெற வேண்டியதை இழந்து இப்படித் தவிக்கின்றாய்…!
3.ஆகவே எது உனக்குச் சதம்..?
4.உன் உயிர் உன்னை விட்டுச் சென்று விட்டால் சதமற்ற இந்த உடலுக்காகச் சதம் என்று நீ ஏன் வாதம் செய்து கொண்டிருக்கின்றாய்…? என்ற பொருள்படப் பேசினார் குருநாதர்

அன்று அகஸ்தியன் காட்டிய மெய் வழிப்படி என்றுமே சதமாக இருக்கும் உயிரான ஈசனுடன் நீ அவனிடம் ஒன்றி அவனின் நிலைகளாகப் போகும் போது அவனின் உணர்வாக நீ சதமாக ஒளியாக இருக்க முடியும்…!

இதை உணர்த்துவதற்காகத்தான் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார். அவர் சொன்னதை மனதில் வைத்து நம் உயிரான ஈசனுடன் என்றுமே ஒன்றி வாழ வேண்டிய நிலையே அது.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமாமோ…?
ஆகவே இந்த மாய வாழ்வில் மண்ணுடன் மண்ணாய் மறைவதைப் பாராய்….! என்று தெளிவுற எடுத்துரைத்தார் குருநாதர்.

மனித உணர்வின் இச்சை கொண்ட நிலையில்
1,அந்தச் சதமற்ற உணர்வுக்கு
2.இந்தச் சதமற்ற உன் உடலுக்கு
3,நீ ஏன் இத்தனை வாதிடுகின்றாய்…? என்று சொல்லி விட்டு
4,உயிருடன் ஒன்றி ஒளியாக வாழும் நிலையைக் குருநாதர் எனக்குள் தெளிவாக எடுத்துரைத்தார்.

நீங்களும் அதை அறிந்து கொள்ள வேண்டும்..! உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியாக ஏகாந்தமாக வாழ வேண்டும்…! என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

“தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை எல்லோரையும் பெறச் செய்ய முடியும்…!” என்ற அனுபவப் பாடம்…!

Meditation methods

“தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை எல்லோரையும் பெறச் செய்ய முடியும்…!” என்ற அனுபவப் பாடம்…!

குருநாதர் எம்மை அழைத்துச் சென்ற நிலையில் நான் (ஞானகுரு) இங்கே என் குடும்பத்தை விட்டு விட்டுப் போய்விட்டேன். என் மனைவிக்கு நோய் வந்து அதிலிருந்து மீண்டு அப்பொழுதுதான் எழுந்திருந்தார்கள்.

அப்பொழுது அவரின் தாயாருக்கு உடலுக்கு முடியாமல் இருக்கிறது. எமக்கு ஐந்து குழந்தைகள். ஆனால் கையில் இருக்கக்கூடிய பணத்தையெல்லாம் என் மூத்த பையன் கொண்டு போய் இறைத்துவிட்டான்.

1.அப்படி இருந்த அந்த சந்தர்ப்பத்திலும் தன் வலுவின் தன்மையை விடாதபடி
2.ஒரே நிலைகளிலே எப்படியும் நாளைக்கு ஜீவிக்க முடியும்…! நாளைக்கு நன்றாக இருப்போம்…! என்ற
3.அந்த எண்ணத்திலேயே என் மனைவி (சாமி அம்மா) இருந்து வந்ததினால்தான் தாக்குப் பிடிக்க முடிந்தது.

ஏனென்றால் அந்த வலுவான எண்ணத்தை இங்கே அதிகமாகக் கூட்டியதால்தான் மெய் ஞானத்தின் சக்தியை யாம் பெற முடிந்தது. என் மனைவி சோர்வையும் சஞ்சலத்தையும் எடுத்து அதை நான் பார்த்துக் கொண்டிருந்தால் மெய் ஞானத்தைப் பெற்றிருக்க முடியாது.

குருநாதர் எமக்குப் பல சக்திகளைக் கொடுத்தாலும் கூட என்னைச் சார்ந்தவர்கள் குடும்பங்கள் வேதனையிலும் சங்கடத்திலேயும் எத்தனையோ அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
1.நான் வெளியிலே போகப்போகும் போது எனக்குக் கஷ்டம்.
2.அதே சமயத்தில் வீட்டிலே கஷ்டம்.

கையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் என் பையன் வாரி இறைத்துவிட்டான். அதனால் பல நிலைகளிலும் தொல்லை வருகிறது. இங்கே வீட்டிலேயும் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் நன்றாக நீட்டாக (NEAT) இருந்து கொண்டு போனாலும் போகிற பக்கமெல்லாம் எம்மைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். யாம் உதவி செய்தாலும் கூட அந்த உதவி பெற்றவர்களும் என்னைக் கேலி பண்ணுகிறார்கள். இத்தனை அவஸ்தைகள்…!

வீட்டிற்குள் நுழைந்தாலோ உணவு இல்லை.. உடுத்த உடை இல்லை…! என்று பிள்ளைகள் எம்மிடம் கேட்கிறது. அந்த அளவுக்கு இம்சை. அப்போது அந்த நேரத்திலே இதைத்தான் குருநாதர் கொடுக்கிறார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் இப்படி வரக்கூடிய ஒவ்வொரு இம்சைகளிலிருந்தும் எதை எதையெல்லாம் எப்படிப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்கு இப்படித்தான் அனுபவபூர்வமாகக் கொடுத்தார் குருநாதர்.

அந்தச் சமயத்தில் வீட்டில் தியானம் எல்லாம் இருக்கவில்லை. அப்பொழுது எந்தத் தியானமும் செய்யவும் இல்லை. பொதுவாகக் குருநாதருடைய நிலைகளைத்தான் எண்ணத் தெரியும்.

எல்லோரும் அந்தத் தியானத்தைச் செய்வதற்குண்டான வழியை முதலில் அறிவதற்காக அந்தத் தியானம் என்றால் என்ன…? தியானம் எப்படிச் செய்வது…? தியானத்தின் மூலம் மகரிஷிகளின் ஆற்றலை எப்படிப் பெறுவது…? என்ற இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு பதினாறு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்து அதை உணர்த்தினார்.

அதாவது…
1.ஒரு எண்ணத்தின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து எப்படிச் சுவாசிப்பது…?
2,காற்றிலிருந்து நமக்கு வேண்டியதை மட்டும் எப்படிப் பிரித்து எடுத்துக் கொள்வது…?
3.அதைச் சுவாசித்து நம் உடலில் எப்படிச் சேர்ப்பது…?
4.உடலில் உள்ள எல்லா அணுக்களையும் எப்படி ஒளியாக மாற்றுவது…? என்ற
5.இந்த நிலைகளையெல்லாம் அறிந்து கொண்ட பின்புதான் உங்களுக்கு உபதேச வாயிலாக இப்பொழுது அதைப் பதிவு செய்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பதினாறு வருட காலத்தில் எமக்கு உணர்த்திய மெய் உணர்வுகளை யாம் கண்டுணர்ந்து எமக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி வாய்ந்த அருள் ஞான வித்துகளைத் தான் உங்களுக்குள்ளும் ஊன்றச் செய்து அதை நீங்களும் வளர்த்துக் கொள்வதற்கு அவர் உணர்த்திய அதே வழிப்படி உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

நீங்கள் அதை எல்லாம் பெறவேண்டும் என்ற ஆசையில் இருந்தால் போதும். உங்களுக்குள் அது ஆழமாகப் பதிவாகும். நினைவு கொண்டு மீண்டும் அதை எண்ணி ஏங்கி எடுத்தால் அந்தச் சக்திகள் உங்களுக்குள் வளரத் தொடங்கும்.

உலகில் உள்ள எல்லா மொழிகளுக்குள்ளும் தமிழ் சொல்லின் சுருதி கண்டிப்பாக இருக்கும்…! ஏன்…? எதனால்…?

Image

Agastyar tamil

உலகில் உள்ள எல்லா மொழிகளுக்குள்ளும் தமிழ் சொல்லின் சுருதி கண்டிப்பாக இருக்கும்…! ஏன்…? எதனால்…?

 

ஆதியிலே காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் மிருக இனங்களிலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள நஞ்சை வென்றிடும் மூலிகைகளையும் தாவரங்களையும் அரைத்துப் பூசிக் கொண்டார்கள்.

அப்படிப் பூசிய மணத்தை நுகரும் மிருக இனங்கள் மற்ற விஷமான உயிரினங்கள் இவர்களிடமிருந்து விலகி அப்பால் செல்கின்றது. அதே சமயத்தில் தங்கள் உடலில் பூசிய மணங்களை அவர்களும் நுகர நேர்கின்றது.

ஆக கருவுற்ற அந்தத் தாய் தன்னை அறியாமலே அந்த மணங்களை நுகரப்படும் பொழுது கருவில் உருவான சிசுவிற்குள்ளும் நஞ்சை வென்றிடும் அந்த ஆற்றல் மிக்க சக்தி அணுக்களாக விளைகின்றது. அப்படிப் பிறந்தவன் தான் அகஸ்தியன்.

அவனுடைய வளர்ச்சியில் நஞ்சை வென்றிடும் ஆற்றலை வளர்த்து உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றி நம் பூமியின் துருவப் பகுதியை எல்லையாக வைத்து இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

1.நம் சூரியனோ ஒன்பதாவது நிலை – அதாவது ஒரு காலத்தில் அழியும்
2.ஆனால் துருவ நட்சத்திரமோ பத்தாவது நிலை – என்றும் அழிவதில்லை
3.அந்த அகஸ்தியனின் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிர் அவன் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாகச் செல்லும்.
4.நாமும் அவனைப் போன்றே அழியாத நிலைகள் பெறலாம்.

இந்தப் பிரபஞ்சமே முழுமையாக நஞ்சு கலந்த நிலைகள் கொண்டு சிதறுண்டாலும் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் என்றுமே ஏகாந்த நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும்.

“ஏகாதசி…! என்று சொல்கின்றோம் அல்லவா…!” ஏகாதசி என்றால் பத்தாவது நிலைகள் கொண்டு நாம் ஏகாந்த வாழ்க்கை வாழலாம்…! என்று
1.ஒரு சொல்லுக்குள் அந்தச் சுருதியை அடக்கி (தமிழ்)
2.மனிதனின் வாழ்க்கையில் எதை… எப்படி.. நுகர வேண்டும்…? என்று ஞானிகளால் விரிவாக்கப்பட்டது.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று இங்கே தோன்றிய அந்த உணர்வின் அந்த அலைகளைத்தான் “தமிழ்…!” அதாவது
1.நீங்கள் எந்த மொழியின் பிறப்பில் பார்த்தாலும் சரி
2.தமிழ் இலக்கணத்தின் நிலைகள் அதற்குள் உண்டு.

வேதங்களிலும் சரி… அல்லது அதை இன்று ஆங்கிலத்தில் படித்தாலும் சரி… இந்த உணர்வுகள் அதற்குள் இருக்கும். தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட அந்த உணர்வின் தன்மை
1.அதன் அறிவாகத் தோன்றிய வித்துகளை (ஒலிகளை)
2.எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் இந்தத் தமிழ் இலக்கண மொழிகளே (நாதங்கள்) அங்கு வரும்.
3..நான் தமிழ் நாட்டிலே பிறந்தேன்…! என்ற நிலைக்காக இதைச் சொல்ல வரவில்லை.

அன்று முதல் மெய் ஞானியான அந்த அகஸ்தியன் அகண்ட அண்டத்தையும் அலசிய உணர்வுகள் இந்த உலகம் முழுவதற்கும் படர்ந்தததனால்
1.மனிதன் என்ற நல்ல உணர்வு வரும் போது “தன் இனமாக வளர்த்தது அது…!”
2.அதனால் தான் எல்லா மொழிகளிலும் அவன் உணர்வுகள் இணைந்தே இன்றும் வருகின்றது
3.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அகஸ்தியரைச் சொல்வதும் இதை வைத்துத் தான்…!

அவன் கற்றுணர்ந்த மெய் உணர்வுகளை நமக்குள் இறையாக்கப்படும் போது அந்த உணர்வின் செயலாக்கங்களாக அவனைப் போன்றே ஒளியின் சரீரமாக நாமும் பெற முடியும்…! என்பதைக் காட்டுவதற்காகத் தான்
1.தென்னாட்டுடைய சிவனே… போற்றி… … …!
2.எந்நாட்டுக்கும் இறைவா… போற்றி… … …! என்று
3.ஒவ்வொரு செயல் செய்யப்படும் பொழுதெல்லாம் அந்தப் பாடலைச் சொல்லிக் கொண்டே போகின்றோம்.
4.ஆனால் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்…? என்ற மூலக் கருத்தை அறியாதபடி அதை இராகமாகப் பாடுகின்றோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் அவன். இங்கே கதைகளில் இப்பொழுது சொல்லும் அகஸ்தியர் அல்ல அவர்.

அன்று அகஸ்தியன் எங்கெல்லாம் அமர்ந்தானோ அங்கெல்லாம் ஜீவ சக்தி உண்டு. ஜீவ நீர்களும் உற்பத்தியாகும்.

ஏனென்றால் நம் பிரபஞ்சத்தில் சனிக்கோள் முக்கியமானது. பிரபஞ்சத்தில் வரும் ஆவிகளை எல்லாம் அது நீராக மாற்றும் திறன் பெற்றது. அதன் உணர்வு எதனில் கலக்கின்றதோ அந்த அணுவின் தன்மை ஒரு ஜீவ அணுவாக உருப் பெறுவதற்கு அது தான் மூலமாகும்.

அந்தச் சனிக்கோளின் உணர்வைப் பெறவில்லை என்றால் எதுவாக இருந்தாலும் அது அதனின் ஜீவ அணுக்களை அதாவது ஜீவனை இழந்துவிடும். உதாரணமாக
1.வான் வீதியில் உருவாகும் பல கற்கள் (ASTEROIDS) சனிக் கோளின் சத்தைக் கவரவில்லை என்றால்
2.அந்தப் பாறைகள் எல்லாம் கரைந்துவிடும்.
3.வளர்ச்சி பெறும் தன்மை அதற்கு இல்லை.

ஆகவே இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒரு முக்கியமான நிலைகள் பெற்றது சனிக் கோள். அது செயலிழந்தால் இன்று நம் பிரபஞ்சம் இருக்காது.

இது எல்லாம் அன்று அகஸ்தியரால் கண்டுணர்ந்து வெளிப்படுத்தப்பட்ட பேருண்மைகள்.

உயிர் தான் உங்கள் கஷ்டத்தைப் போக்குகின்றது…! எப்படி…?

Soul and body

உயிர் தான் உங்கள் கஷ்டத்தைப் போக்குகின்றது…! எப்படி…?

எத்தனையோ நிலைகளிலிருந்து வரும் தீமைகளை நீக்குவதற்கு உங்களுக்கு உபாயமும் சக்தியும் கொடுக்கிறோம். அதை நீங்கள் தான் தியானத்தின் வழியாகச் சுவாசித்து எடுத்து உங்களுக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பதிலாக என்னை நினைத்துக் கொண்டு “சாமி தான் (ஞானகுரு) செய்து கொடுப்பார்…! என்று என்னிடம் கஷ்டத்தைச் சொல்வதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

ஏனென்றால் நீங்கள் எண்ணியது எதுவோ உங்கள் உயிர் அதையே தான் உருவாக்கும். கஷ்டம் போக வேண்டும்… கஷ்டத்தைப் போக்க வேண்டும்…! என்று எண்ணினீர்கள் என்றால் உங்கள் உயிர் அந்தச் சக்தியை உருவாக்கித் தரும் என்று பல முறை சொல்கிறேன்.

1.இந்தக் காற்றில் எல்லாச் சக்திகளும் இருக்கிறது.
2.உங்களால் அதிலிருந்து பிரித்து எடுக்க முடியும்.
3.தீமையை உங்களால் போக்க முடியும்.
4.அந்த அருளைப் பெருக்கக்கூடிய தகுதி உங்கள் ஆறாவது அறிவுக்கு உண்டு.

இதைத் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி உங்கள் ஆறாவது அறிவின் சக்தியைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் நாம் எதை இச்சைப்பட வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைபட்டால் அது உடலுக்குள் செல்லும் போது கிரியையாகி அது ஞானத்தின் வழி கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சரியான வழியில் நடத்தும்.

தீமையை நுகர்ந்த அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் புருவ மத்தியில் எண்ணி விட்டால் தீமைகள் உள்ளுக்குள் போகாமல் தடுத்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால் நமக்கு முன்னாடி இருக்கும் ஆன்மாவில் வலுவாகச் சேர்கிறது.

1.தீமைகளையோ துன்பங்களையோ வேதனைகளையோ நாம் சந்திக்கும் பொழுதெல்லாம்
2.இப்படி எச்சரிக்கை பண்ணி விட்டால் தீமைகளை இழுக்கும் திறன் குறைகின்றது.
3.நம் சுவாசத்தின் வழி உடலுக்குள் தீமைகள் போவதில்லை.

உங்கள் ஆன்மா தூய்மை அடைகின்றது. அருள் சக்திகள் உங்களுக்குள் பெருகுகின்றது. தீமையை நீக்கும் இந்தப் பேராற்றலை உங்கள் உயிர் ஜீவ அணுக்களாக உடலுக்குள் உருவாக்குகின்றது.

உடல் நலம் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெறுவீர்கள். மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுவீர்கள்.

இதைத் தான் மடி மீது வைத்து வாசற்படி மீது அமர்ந்து நர நாராயணன் இரண்யனைப் பிளந்தான் என்று சொல்வது.

மடாதிபதிகள் வழி நடத்தும் “கபால மோட்சம்”

light-world

மடாதிபதிகள் வழி நடத்தும் “கபால மோட்சம்”

கடவுளுக்காக வேண்டி ஹோமம் செய்தால் நமக்கு நல்லது. யாகங்களும் பூஜைகளும் செய்தால் கடவுள் நமக்குச் செய்வான் என்று சொன்னால் உடலின் தன்மைக்காகச் சில இதுகளை நாம் செய்யலாம்.

அதைப் போல யோகாசனங்கள் செய்கிறோம் வாசி யோகம் செய்கிறோம் குண்டலினியைத் தட்டி எழுப்புகிறோம் என்று திரும்பத் திரும்ப எண்ணத்தின் வலு கூட்டுவதற்காகச் சில நிலைகளைச் செய்யலாம்.

ஆனால் உண்மையான நிலைகளில்
1.விண்ணின் ஆற்றலை அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்கி
3.உயிராத்மாவை உந்தி விண்ணிலே தள்ளவில்லை என்றால்
4.யாராக இருந்தாலும் மீண்டும் இங்கே புவிக்குள் தான் வர வேண்டும்.

அது இல்லாத படி 85 வயது மடாதிபதியாக இருந்தவர் “நான் வாசலைத் திறந்து.. மேலே போகிறேன்…!” என்று சொன்னால் எங்கே போவது…?

லோக குரு என்று பேரை வைத்து இருப்பார்கள். ஆனால் அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு ஐதீகத்தை பின்பற்றி நடந்தவர்கள் அவர் உடலை விட்டுப் பிரிந்த பின் என்ன செய்தார்கள்…?

ஐதீகப்படி மோட்சம் அடைய வேண்டும் என்று சொல்லிக் கொண்டு தேங்காயை எடுத்து மண்டையில போட்டு “கபால மோட்சம்…!” அடைய வேண்டும் என்று செய்தார்கள். இதுகளெல்லாம் பிழைகள் கொண்டது.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதை ஆட்சி புரியும் நிலையாக மடாதிபதிகளாக இருக்கின்றனர். மந்திரம் சொல்லிக் கொடுக்கக்கூடிய நிலையில் யாக வேள்விகள் எப்படிச் செய்வது…? கோயிலிலே பூஜை எப்படிச் செய்வது..? கோயிலிலே எப்படி யாகங்கள் வளர்க்கிறது..? என்று கற்பித்துக் கொடுப்பவர்கள் தான் அவர்கள்.

எந்த மடாதிபதி இருக்கின்றாரோ அவர் சொல்கிறபடி தான் எல்லாம் நடக்க வேண்டும்.

எது…?

ஒரு அரசன் ஆட்சி புரிந்தான் என்றால் இவருடைய நிலைகளுக்கு மற்ற மடாதிபதிகள் வர வேண்டும். அந்த மடாதிபதிகள் சொல்வது எதுவோ அவர் இட்ட கட்டளைப்படி அவரின் சீடர்கள் போய்ச் செய்ய வேண்டும். அத்தகைய மடாதிபதி ஆட்சியினுடைய நிலைகளில் தான் இன்றும் நாம் ஐதீகங்களாக வைத்திருக்கின்றோம்.

1.மெய் ஞானிகள் அன்று பேருண்மைகளைக் காட்டியிருந்தாலும்
2.சாங்கிய சாஸ்திரத்திலும் ஐதீகத்திலும் தான் மூழ்கி விட்டோமே தவிர
3.அந்தச் சாஸ்திரம் எது…? என்ற மூலத்தை அறியாதபடி நாம் சென்று கொண்டுள்ளோம்.

யாம் யாரையும் குறை கூறவில்லை. ஞானிகள் சாஸ்திரங்களில் கூறியது உண்மை என்றாலும் அதை ஐதீகம் என்ற நிலையில் திருத்தி உண்மையின் உணர்வைப் பெற முடியாத நிலைகள் மூலத்தை மறைத்து விட்டார்கள்.

ஆகையினால் இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு ஆலயங்களுக்குச் சென்றால் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று தியானியுங்கள்.

அந்தத் தெய்வ குணத்தை உருவாக்கிக் கொடுத்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… இந்த ஆலயம் வரும் அனைத்து மக்களும் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று இப்படி எண்ணுங்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை வலுவாக்கிக் கொண்ட பின்
2.உங்கள் மூதாதையர்களுடைய உயிராத்மாக்களை உந்தித் தள்ளி
3.விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள்.
4.உங்கள் முன்னோர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டியது இத்தகைய விண் செல்லும்… விண் செலுத்தும் மார்க்கம் தான்…!

தாய் தந்தையை வணங்கச் சொல்கிறீர்கள்…! ஆனால் அது எப்படி அவர்களை முதல் தெய்வங்கள் என்று சொல்ல முடியும்…? என்று வாதம் செய்கிறார்கள்…!

Image

human destruction

தாய் தந்தையை வணங்கச் சொல்கிறீர்கள்…! ஆனால் அது எப்படி அவர்களை முதல் தெய்வங்கள் என்று சொல்ல முடியும்…? என்று வாதம் செய்கிறார்கள்…!

 

கார்த்திகை நட்சத்திரம் அதனுடைய வளர்ச்சியின் தன்மை கொண்டு தனிக் குடும்பமாக ஒரு சூரியக் குடும்பமாகப் பிரிந்து செல்கின்றது.

அதாவது நவக் கோள்களும் இருபத்தேழு நட்சத்திரம் ஆவது போல் இருபத்தியேழு நட்சத்திரங்களும் இருபத்தியேழு சூரியக் குடும்பங்களாக வளர்ச்சி அடையும். ஏனென்றால் உணர்வின் பெருக்கமாக இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

குடும்பத்திலுள்ள பிள்ளைகள் வளர்ந்த பின் மூத்த பையன் திருமணமாகிப் பிரிந்து போகிற மாதிரி நம் பிரபஞ்சத்தில் வளர்ச்சி அடைந்த கார்த்திகை நட்சத்திரம் தனக்கென்று ஒரு குடும்பமாகப் பிரிந்து செல்கிறது. (ஏற்கனவே 1998-2000த்திலிருந்து சிறுகச் சிறுக அந்த நிலை ஆகிவிட்டது)

தந்தை முதுமை அடைந்த பின் வீட்டில் உள்ள மூத்த பையன் குடும்பத்தைக் காக்கும் நிலை இருந்தாலும் அவன் குடும்பத்தை விட்டுப் பிரிந்தால் எந்த நிலை ஆகுமோ அது போல் தான் நம் பிரபஞ்சத்தில் கார்த்திகை நட்சத்திரம் பிரிந்து போய்க் கொண்டு இருக்கிறது.

நம் பிரபஞ்சத்திற்கு அருகில் பல பல புதிய கோள்கள் உருவாகிக் கொண்டுள்ளது…! என்று விஞ்ஞானிகள் அதைப் பார்த்துத் தான் இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வரும் அறிவு இங்கே நம் பிரபஞ்சத்திற்கு கிடைக்காமல் போய்க் கொண்டிருப்பதால்
1.இங்கே பூமியில் வாழ்ந்த மனிதர்களான நாம் முந்தி கொஞ்சம் தெளிவாக இருந்தோம்.
2.இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அறிவு மங்கிக் கொண்டு இருக்கிறது.
3.இன்று உலகெங்கிலும் நஞ்சின் உணர்வாகத்தான் இயக்கிக் கொண்டிருக்கின்றது.

யாராவது தனக்குப் பிடிக்காத நிலைகள் செயல்பட்டால் உடனே அவனைத் தொலைக்க வேண்டும்…! அடுத்த நாட்டுக்காரனை அழிக்க வேண்டும்…! அரசாட்சி செய்வதைத் தடுத்து அவனை வீழ்த்திவிட்டுத் தான் நாட்டை ஆளவேண்டும் என்ற இத்தகைய உணர்வுகள் எல்லோருக்குள்ளும் வளர்ந்து விட்டது.

ஒரு குடும்பத்திற்குள் பார்த்தால் “ரொம்பவும் எனக்கு மீறிப் போய்விட்டார்…!” என்ற நிலையில் அப்பாவையே உதைக்க ஆரம்பிக்கிறோம். அம்மாவையும் உதைக்கின்றோம்.

அப்பாவையும் அம்மாவையும் கொல்கிறவர்களும் இருக்கிறார்கள். நம்மைப் பெற்று வளர்த்தார்களே… நம் தாய் தந்தையர் தான் தெய்வம் என்று யாராவது நினைக்கின்றோமா…?

அம்மாவைக் கடவுள் என்று கும்பிடச் சொல்கிறீர்கள். ஆனால் என் எம்மா ராட்சஷியாக இருக்கின்றாள் அவளை எப்படி நான் கும்பிடுவது…? என்று என்னிடமே (ஞானகுரு) சொல்கிறார்கள்…! கேட்கிறார்கள்…?

அதே சமயத்தில் அப்பாவையும் கடவுள் என்று சொல்லச் சொல்கிறீர்கள். அவர் ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்துப் பார்ப்பது போல் வஞ்சகமாகச் செயல்படுகிறார். ராட்சஷன் போன்று நடந்து கொள்கிறார்.
1.இப்படி இருக்கும் அப்பாவையும் அம்மாவையும் நீங்கள் கும்பிடச் சொல்கின்றீர்கள்…!
2.அவர்களை எப்படி நான் கடவுளாக எண்ணுவது…! தெய்வமாக எப்படி எண்ணுவது…? என்று எம்மிடம் வாதிக்க வருகின்றனர்.

ஆனால் இப்படிக் கேட்பவர்கள் சிறிய குழந்தையாக இருக்கும் போது சேட்டை செய்தால் உடனே அந்தத் தாய் தகப்பன் தலையைக் கிள்ளி எறிந்திருந்தால் பேசுவார்களா…! குழந்தைகள் தவறு செய்யும் பொழுதே ஆரம்பத்தில் தலையை கிள்ளி எறிந்து விட்டால் அப்புறம் என்ன செய்யப் போகிறார்கள்..?

தவறு செய்த குழந்தைக்குச் சோறு கொடுக்காமல் ரோட்டில் போய் பிழைத்துப் விட்டுப் போடா என்றால் அப்பொழுது என்ன செய்வார்கள்…! அப்பாவை மதிப்பார்கள் அல்லவா…! அப்புறம் சோற்றுக்கு “அப்பா…!” என்று கெஞ்சித் தானே வர முடியும்.

ஏனென்றால் “தன் பிள்ளை…!” என்ற பாசத்தால் அவன் செய்கின்ற இடர்பாடுகளுக்கெல்லாம் அனுசரித்து அதைச் சகித்துக் கொண்டு தன் பிள்ளைகள் கெட்டுவிடக் கூடாது… நல்லவர்களாக வளர வேண்டும்…! என்ற ஆசையில் பிள்ளை மீது உள்ள பாசத்தால் வளர்க்கின்றார்கள்.

ஆனால் பிள்ளைகள் வளர்ந்த பிற்பாடு “நீ அறிவு கெட்டவன்…!” என்ற நிலைகளில் அப்பாவைப் பேசுகின்றவர்களும் அம்மாவைப் பேசுபவர்களும் நிறையப் பேர் இன்று இருக்கிறார்கள்.

ஏனென்றால்
1.நாமெல்லாம் கடவுள் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள்.
2.எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை கொண்டவர்க்ள்
3.அந்த நல்ல எண்ணத்தில் கோவிலில் இருக்கும் சாமிக்கு அபிஷேகம் செய்வோம். ஆராதனை செய்வோம். யாகத்தையும் செய்வோம்.
4.ஆனால் தன்னைப் பெற்ற தாய் தந்தையை அவமதித்து அனாதையாக்கித் தெருவில் விடும் இந்த நிலையில் தான் கடைசியில் இருக்கிறோம்.

அன்றைய மெய் ஞானிகள் காட்டிய உண்மைகளைத் தன் சுயநலன்களுக்காக என்று எந்த அரசன் மாற்றினானோ அதனின் தீமையின் விளைவே வளர்ந்து வளர்ந்து மனிதன் தன் இனத்தையே தான் அறியாத நிலைகள் கொண்டு (தன் இனத்தையே) கொன்று புசிக்கும் நிலை இன்று வந்து விட்டது.

1.பிள்ளைகள் தன் தாய் தந்தையரைக் கொல்வதும்…
2.பின் அதனின் வளர்ச்சியில் அதே பிள்ளைகள் தாய் தந்தையாக மாறும் பொழுது
3.தன் பிள்ளைகளைக் கொன்றிடும் நிலையாக இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

விநாயகர் கோவிலில் “மோட்ச தீபம்…” ஏற்றச் சொல்கிறார்கள்… ஆனால் அதனுடைய மூலக் கருத்தை அறிந்திருக்கின்றோமா…?

Image

Motcha deepam

விநாயகர் கோவிலில் “மோட்ச தீபம்…” ஏற்றச் சொல்கிறார்கள்… ஆனால் அதனுடைய மூலக் கருத்தை அறிந்திருக்கின்றோமா…?

 

ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்றால் அதை இரக்கத்துடன் பார்த்து அவனுக்கு நாம் உதவி செய்கிறோம். அப்படி உதவி செய்தாலும் அவன் கஷ்டப்படும் அதே வேதனையான நஞ்சை நாம் நுகரும் பொழுது…
1.இங்கே நம் மீது மடி மீது (நெஞ்சுக்கு முன்னாடி – ஆன்மாவில்) வந்து அமர்ந்து கொள்கின்றான்.
2.அடுத்து நமக்குள் நல்ல உணர்வுகள் வர விடாது தடுத்து நிறுத்துகின்றான்.
3.நல்லவைகள் அனைத்தையும் வதம் செய்கின்றான்.
4.உடலுக்குள் சென்ற பின் நல்லதைப் பெற முடியாத நிலையில் தடுக்கின்றான்.
5.உடலுக்குள் சென்ற பின் தீமைகளையே உருவாக்குகின்றான். நன்மை செய்யும் உணர்வுகளைத் தணிக்கின்றான்.
6.ஆகவே தான் அவனை “இரண்யன்…” என்று காரணப் பெயரை வைத்துக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு இத்தகைய தீமைகளை வென்றவர்கள் மகரிஷிகள், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று விண்ணை நோக்கி நாம் ஏகிடல் வேண்டும்.

நாம் எதை நுகர்ந்து கொடுக்கின்றமோ அதை உருவாக்கிக் கொடுக்கும் திறன் நம் உயிரான ஈசனுக்கு உண்டு. ஆகவே கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் என் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஓடையில் தண்ணீர் போகின்றது. அணையாக இருக்கும் கரை சிறிதளவு கரைந்து விட்டால் தண்ணீர் எல்லாப் பக்கமும் போய் மற்றதை அழித்து விடுகிறது. கரையைச் சீராக்கினால் தான் அழிவைத் தடுக்க முடியும்.

அதைப்போல
1.நாம் சுவாசிக்கும் மூக்கு என்ற வாசல்படியைத் தாண்டித் தீமைகள் புகாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உள்முகமாக உடலுக்குள் செலுத்தும் போது
3.உள் நின்று வெளி வரும் அந்த மெய் உணர்வுகள் நம் ஆன்மாவில் இருக்கும் வேதனைகளைப் பிளக்கும்.
4.இது தான் நரசிம்ம அவதாரம்…!

நமக்குள் வரும் தீமைகளை நாம் துடைக்கவில்லை என்றால் “எவ்வளவு பெரிய ஞானியிடம் பேரன்பு கொண்டவராக நாம் இருப்பினும்…!” அந்தத் தீமையான நஞ்சின் பிடியில் அடிமையாகி விடுவோம்.

ஏனென்றால் நஞ்சு தான் உலகை இயகுகின்றது. நஞ்சு தான் உலகை அடக்குகின்றது. அந்த நஞ்சின் தன்மை நமக்குள் கூடி விட்டால் நம் நல் உணர்வின் தன்மையை ஒடுக்கிவிடும்.

நஞ்சின் தாக்குதலால் தான் உயிருக்குள் நெருப்பாகின்றது… உயிர் இயக்குகின்றது…! ஆனால்
1.அந்த நஞ்சினையே அடக்கித் தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள்.
2.உணர்வை ஒளியாக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் சுவாசித்தால் நமக்குள் புகும் நஞ்சினை அது வீழ்த்திவிடும்.
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத்தான் நம் ஆன்மாவில் பாதுகாப்புக் கவசமாகப் பெருக்கிடல் வேண்டும்.
4.தீமைகள் நமக்குள் வராது அதைக் கருக்கிட வேண்டும்.

ஆனாலும் அத்தகைய சக்தி வாய்ந்த மகரிஷிகளின் சக்தியை நாம் பெற வேண்டும் என்றால் நம் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

நம்முடைய மூதாதையர்களுடைய உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கத் தவறினால் அந்தச் சக்தியைப் பெறும் தகுதியே நமக்கு இல்லை.

நஞ்சு கொண்ட நிலைகளில் சிக்கியிருக்கும் நாம் அதிலிருந்து மீண்டிட வேண்டும் என்பதற்கே தான் இதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்.

ஆகவே எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் அழியாத வாழ்க்கை வாழ வேண்டும்… பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.. அந்த அருள் ஒளி பெற வேண்டும்… என்று நாம் அனைவரும் ஒருக்கிணைந்து அந்த ஆன்மாக்களை விண் செலுத்துதல் வேண்டும்.

இதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்குத்தான் விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானியர்கள். நம் பூமியில் அத்தகைய மெய் உணர்வுகளை ஆதியிலே கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
1.அந்த அகஸ்தியன் காட்டிய அருள் நெறிதான் விநாயகர் தத்துவம்.
2.விநாயகர் தத்துவத்தின் மூலமே நம்மை உருவாக்கிய சக்தியை (வினையை) முழுமை அடையச் செய்வது தான்…!

ஆனால் முன்னோர்களுக்காக வேண்டி விநாயகருக்கு மோட்ச தீபத்தை மாவிளக்கில் ஏற்றி வைத்து விட்டால் போதும் என்ற நிலையில் தான் நாம் இருக்கின்றோம். ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் தப்பல்ல…! ஆனால் உண்மைகளை அறிந்து அதன்படி நடக்கின்றோமா..? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் படித்துப் பேசவில்லை…! அனுபவத்தினால் தான் பேசுகின்றேன்…!

Image

astral-path-and-way

நான் படித்துப் பேசவில்லை…! அனுபவத்தினால் தான் பேசுகின்றேன்…!

 

உதாரணமாக அன்று அருணகிரிநாதரின் சகோதரி தனக்குள் உயர்ந்த ஒளியின் தன்மையை வளர்த்துக் கொண்டது. காரணம் அருணகிரி பல தவறுகள் செய்தாலும் அதிலிருந்து அவர் எப்படியும் விடுபட வேண்டும் விடுபடச் செய்ய வேண்டும் என்ற அந்த உணர்வின் தன்மையையே எண்ணித் தனக்குள் வளர்த்துக் கொண்டது.

பின் எல்லை கடந்த தவறின் விளைவு வரும் பொழுது உடலை விட்டுப் பிரியும் அருணகிரியின் சகோதரி சகோதரன் மேல் உள்ள பாசத்தால் அவர் உடலுக்குள் சென்று தான் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வை அங்கே இயக்கியது.
1.மெய் ஞானிகளின் உணர்வுகள் அருணகிரிநாதரின் உடலில் உள்ள இரத்தங்களில் சுழன்று வரும்போது
2.தவறின் இயல்புகளிலிருந்து அவரை மீளச் செய்து
3.அவர் உடலில் இருந்து ரோகத்தையும் நீக்கிடும் சக்தியாக இயக்கியது.
4.பின் உயர்ந்த தத்துவங்களையும் பாடல்களாகப் பாடும் படிச் செய்தது

பல தவறுகள் செய்த அருணகிரிக்கு அப்படிப்பட்ட ஞானம் வந்ததற்குக் காரணமே அவருடைய சகோதரி எடுத்துக் கொண்ட அந்த மெய் உணர்வுகள் தான். அந்த உணர்வுகள் தான் அவர் உடலுக்குள் இயக்கப்பட்டது.

அதைப் போன்று தான் நானும் (ஞானகுரு) ஒரு படிக்காத மூடன் தான். மெய் ஞானத்தைப் பற்றிப் பேசுகின்றேன் என்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் உடலுடன் இருக்கப்படும் போது அவருக்குள் கற்றுணர்ந்த உயர்ந்த உணர்வை எனக்குள் பதியச் செய்தார்.

அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து எடுக்கும்படி சொன்னார். அதனின் துணை கொண்டு அதை எடுத்தேன். மெய் உணர்வின் வளர்ச்சியில் அந்த நன்மைகளைப் பெற்றேன்.

எனக்குள் இருக்கும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு என்று குருநாதர் உணர்த்தினார்.
1.ஒவ்வொரு உணர்வும் உன்னை எவ்வாறு இயக்குகிறது…? என்று நீ அறிந்து பார் என்று
2.தனித்துத் தனித்துத் தனித்துத் தனித்துப் பிரித்துக் காட்டினார்.

நீ சுவாசிக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மையும் நுகரும் ஆற்றலாக உனக்குள் எப்படி வருகின்றது…? நுகர்ந்தபின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீ எடுத்துக் கொண்ட அந்தந்த உணர்வின் குணங்கள் உனக்குள் எவ்வாறு ஜீவன் பெறுகின்றது…?

அதனின் உணர்வாக உன்னை எப்படி இயக்குகின்றது..? என்ற இந்தத் தெளிந்த மனதை குருநாதர் “அவர் உணர்வின் வலு கொண்டு…” எனக்குள் அனுபவமாகக் கொடுத்தார்.

இவ்வாறு இயற்கையின் உணர்வின் அளவை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய உணர்வு கொண்டு அதை அறியும் ஆற்றலைப் பெற்றேன்… ஆகவே
1.நான் படித்துப் பேசவில்லை.
2.அனுபவப்பட்டுப் பேசுகின்றேன்…!

இதைப் போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் இன்னல்கள் வரும் சமயங்களில் எல்லாம் அந்த மெய் ஞானிகளின் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால் உங்களுக்குள் அருள் ஞானம் பெருகும். மெய் ஞானம் வளரும். “தீமையற்ற உலகமாக உங்களுக்குள் சிருஷ்டிக்க முடியும்…!

செய்து பாருங்கள்…! உங்கள் அனுபவம் ஞான சக்தியாக வரும்…!