மதங்களும் மதத்திற்குள் பல இனங்களும் இனத்திற்குள் பல குலங்களும் உருவானதன் காரணம் என்ன…? தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரு இனம் எப்படி வந்தது…?

Image

mantra (2)

மதங்களும் மதத்திற்குள் பல இனங்களும் இனத்திற்குள் பல குலங்களும் உருவானதன் காரணம் என்ன…? தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரு இனம் எப்படி வந்தது…?

 

மதத்தின் அடிப்படையிலேயும் மொழியின் அடிப்படையிலேயும் இனத்தின் அடிப்படையிலேயும் தான் பண்டைய கால அரசர்கள் ஆட்சி புரிந்தார்கள். மதத்தின் அடிப்படையில் தான் ஒழுக்கங்களையும் கற்பித்தார்கள்.

எங்கள் மதம் ஒழுக்கமானது… எங்கள் மதம் ஒழுக்கமானது…! என்ற நிலைகளில் அன்று மத போதனைகளை ஊட்டி அந்த மதத்திற்கு கீழ் இருக்கும் மக்களை ஒன்றிணைத்து மற்ற மதத்தினர் தன் மீது படையெடுக்காது வலு கொண்ட நிலைகளில் இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு அரசனும் ஆட்சி செய்தான்.

இந்தியாவில் எடுத்து கொண்டாலும் கிருஷ்ண பக்தர் விஷ்ணு பக்தர் முருக பக்தர் சிவ பக்தர் காளி பக்தர் என்ற நிலைகளில் தெய்வங்களை ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு குலதெய்வங்களை எடுத்து வைத்துக் கொண்டார்கள்.

ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆயிரத்தெட்டு குணங்களைப் பிரித்து இந்தெந்த குணங்கள் இன்னது செய்யும் என்று தெய்வங்களாக உருவாக்கப்பட்டு அது காவியமாக எழுதி அந்த காவியத்தின் அடிப்படையில் நம் நாட்டு அரசர்கள் இயங்கினார்கள்.

ஆனால் முகமதியர் படையெடுத்து வரும் போது நம் (இந்திய) நாட்டு மக்களை அவர்கள் மதத்தில் இணைத்து விட்டால் ஆட்சியைச் சுலபத்தில் நடத்திட முடியும் என்று அவர்கள் முயற்சித்தார்கள்.

கிறிஸ்தவர்களும் நம் நாட்டிற்குள் வந்து அவர்கள் மதத்தைப் பரப்பி விட்டால் நாம் கொடுக்கும் கட்டுப்பாடுடன் இந்திய நாட்டை ஆட்சி புரிந்திட முடியும். இங்கே வரும் எதிர்ப்புகளை மாற்றிடலாம் என்று அவர்களும் அந்த மதத்தைப் போதித்தார்கள். புத்த மதமும் இப்படித்தான்…!

இதைப்போன்று தான் ஒவ்வொரு நாட்டிலும் அவரவர்கள் தான் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு “எங்கள் இறைவனின் கட்டளை இது தான்…!” என்று மதத்திற்கொரு கடவுளை நியமித்துக் கொண்டார்கள்.

அதன் விதிகளைத் தெய்வங்களாக மாற்றி அதன் வழியில் குணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும்…? என்று ஒழுக்க நெறிகளைக் கொடுத்துத் தன் மதத்தைக் காத்திட அவ்வாறு ஏற்படுத்தினார்கள்.
1.இன்றளவும் அது தான் நடந்து கொண்டிருக்கின்றது.
2.மதப்போர்களும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது…!

ஓர் மதம் இன்னொரு மதத்தைத் தாக்க வரப்படும் போது அதனுடைய வலுவைக் கண்டு
1.தான் எப்படியும் ஒதுங்கி வாழ வேண்டும் என்று வந்தாலும்
2.அவர்களைத் தன்னுடன் இணைத்து அந்த மதத்துடன் ஒன்றிப் போகலாம் என்று இருந்தாலும் அல்லது
3.வேறொரு மதத்திலிருந்து இந்த மதத்துடன் இணைக்கச் செய்தாலும்
4.அதை மதத்திற்குள் ஓர் இனம்…! என்றும்
5.இழிவான இனம் (தாழ்த்தப்பட்டவர்கள்…!) என்றும் பிரித்தார்கள்.

காரணம் அடுத்த போர் வரும் போது இவன் நம்மைக் காட்டிக் கொடுத்து விடுவான் என்று இனம் கண்டு கொள்வதற்காக அவ்வாறு செய்தார்கள்.

அதாவது மதத்தின் அடிப்படையில் ஒரு நாடு இன்னொரு நாட்டைக் கைப்பற்றினால் அடுத்த மதத்திலிருந்து தன் மதத்தில் இணைந்தால் அவன் “இழிவான இனத்தைச் சேர்ந்தவன்…!” என்று மதத்திற்குள் ஒரு இனத்தை இவ்வாறு பிரித்தனர்.

இவ்வாறு தான் அந்த இனத்தைப் பிரித்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்கள். அதே சமயத்தில்
1.அந்த இனத்திற்கு இன்ன வரி (TAX) என்றும் இந்த இனத்திற்கு இன்ன வரி என்றும்
2.போர் செய்யும் பொழுது தன்னுடன் இணைந்து வலு கொண்டு செயல்படுபவர்களுக்கு இன்ன வரி என்றும்
3.இப்படிப் பிரித்துப் பிரித்துப் பிரித்து ஒவ்வொன்றையும் இனம் கண்டு கொள்ள இவ்வாறு செய்தார்கள்.
4.இப்படி வந்தது தான் மதங்கள் – ஒரு மதத்திற்குள் பல இனங்கள் – ஒரு இனத்திற்குள் பல குலங்கள்…!
மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் மதங்களும் இனங்களும் குலங்களும்…! எந்த ஞானியிம் அவைகளை உருவாக்கவில்லை.

மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் அமெரிக்காவின் ராஜ தந்திரச் செயல்கள்

Image

remote-control-switch

மற்ற நாட்டை அடிமைப்படுத்தும் அமெரிக்காவின் ராஜ தந்திரச் செயல்கள்

 

விஞ்ஞான உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அமெரிக்கா “நான்…!” என்று அகந்தை கொண்டு நமது நாட்டையே பழித்திடும் நிலையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

உலக அரங்கிலே இருக்கும் அந்தந்த நாட்டில் உள்ளோர் நன்மைகள் பல செய்ய வேண்டும் என்று எத்தனித்தாலும் அவர்களை எல்லாம் இழி நிலைப்படுத்தி “ஏமாற்றுபவர்கள்…!” என்று பறை சாற்றும் நிலையாக உள்ளது.

1.ஒரு திருடன் பொருளைத் திருடிச் செல்கிறான்,
2.ஆனால் “அதோ திருடன் ஓடுகிறான்…!” என்று
3.திருடாதவனைப் பார்த்து “திருடன்…! என்று சுட்டிக் காட்டும் நிலையே வருகின்றது.

அதாவது திருடாத நிலைகள் கொண்டு
1.திருடனைப் பிடிக்கச் செல்பவனைத் திருடன் என்று சொல்வது போன்றே
2.இன்றைய அரசியல் அரங்கில் உலக அரசுகள் அனைத்தும் இருக்கின்றது.

அதிலே அமெரிக்கா தன்னுடைய விஞ்ஞான அறிவிலே அதிகமாக வளர்ந்திருப்பதால் அவன் செய்யும் தவறை மறைக்க மற்ற நாட்டில் உள்ள அரசியலுக்குள் புகுந்து போலீஸ்காரனைப் போன்று மிரட்டி வருகின்றான்.

நாட்டை ஆள்பவர்களையும் மற்றவர்களையும் அந்நாட்டு மக்களை இரக்கமற்றுக் கொல்வதாகப் பறை சாற்றிக்கொண்டு வருகின்றான்.

மனிதர்கள் ஒருக்கிணைந்து ஞானத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்று நமது நாடு இயங்கத் தொடங்கினாலும்
1.தவறு செய்வோரைத் தண்டிக்க முற்பட்டால்
2.தவறு செய்பவர்களுக்கு நல்ல அறிவினை ஊட்ட எண்ணினாலும்
3.இரக்கமற்ற நிலைகள் கொண்டு அரக்கத்தனமாக மனிதனுடைய உரிமைகளை அழிக்கிறான் என்று
4.நம் நாட்டையும் குறை கூறும் நிலைக்கே வந்துவிட்டார்கள்.

ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை இங்கே இருப்பினும் மதத்திற்குள் போராக்கி மதத்திற்குள் இருக்கும் இனத்திற்குள்ளும் போராக ஆக்கி அவன் மதத்தை ஊடுருவச் செய்து நமக்குள் இருக்கும் நல் வினைகளை நல்ல உணர்வுகளை அழித்திடும் நிலையாக இன்று உருகொடுத்துக் கொண்டிருக்கின்றான் அமெரிக்கா…!

விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் அசுர உணர்வு கொண்டு பிஞ்சு உள்ளங்களிலும் மிகக் கடுமையான விஷத்தைக் கொண்டு உலகையே அழித்துக் கொண்டுள்ளார்கள்.

மனிதனைக் காக்கும் நிலை என்பது அறவே இல்லை. இது தான் இன்றைய உலக நிலை…!

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு எல்லை கடந்த துன்பம் ஏற்படும் பொழுது தான் ஒவ்வொருவரும் ஞானியாகின்றார்கள்… எப்படி…?

mentors

வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு எல்லை கடந்த துன்பம் ஏற்படும் பொழுது தான் ஒவ்வொருவரும் ஞானியாகின்றார்கள்… எப்படி…? 

உடலில் வலியோ அல்லது வயிற்று வலியோ இருந்தால் உடனே ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

எங்கே வலி எடுக்கிறதோ மகரிஷிகளின் அருள் ஒளியாலே அந்த வலி நீங்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். போகிறதா இல்லையா…? என்று பார்க்கலாம். இதெல்லாம் வாக்குகள். உங்களுக்குள் அதைப் பதியச் செய்கின்றோம்.

யாம் (ஞானகுரு) காட்டுக்குள் சென்றோம். குருநாதர் பல கஷ்டங்களைக் கொடுத்தார். எப்படியெல்லாம் கஷ்டம் உண்டாகின்றது…? அதை எப்படி நீக்குவது…? கஷ்டத்தை நீக்க எந்த மாதிரிச் சக்தியை எடுக்க வேண்டும்…? அதே மாதிரி
1.எல்லோருடைய சந்தர்ப்பம் எப்படி…? என்பதையும்
2.மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பெறும் சந்தர்ப்பத்தை “மற்றவர்களுக்கு எப்படி ஊட்டுவது…?” என்பதையும்
3.அனுபவப்பூர்வமாக யாம் உணர்வதற்காக எமக்குப் பல கஷ்டத்தைக் கொடுத்து
4.அதை நீக்கும் முறைகளை குருநாதர் எமக்கு உணர்த்திக் காட்டினார்.

ஆகவே இப்பொழுது என்ன செய்கிறோம்…? நீங்கள் கஷ்டம் என்று வருகின்றீர்கள். அந்தக் கஷ்டமான நேரத்திலே என்ன செய்கிறோம்…? தீமைகளை நீக்கிய அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை உபதேசிக்கின்றோம்.

உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்காக நீங்கள் இதை எண்ணி ஏங்கி எடுத்துக் கொண்டீர்கள் என்றால் மிக வேகமாக உங்களுடைய கஷ்டம் நீங்குகிறது…!

உதாரணமாக அன்று அருணகிரிநாதருக்குச் சொத்து சுகம் எல்லாம் இருந்தது. கடைசியிலே அவருக்கு கஷ்டம் வரப்படும் பொழுது உடல் முழுவதும் நோயாகி வேதனைப்பட்டார்.

1.என்ன வாழ்க்கை…? என்று நினைத்தார்
2.இனி என்ன…? சாகப் போகிறோம் இன்றைக்கு
3.இது வரை செய்த… “கெட்டது அனைத்தும் போகட்டும்..!”
4.இனிமேல் அடுத்து நல்ல சரீரம் பெறவேண்டும்…! என்று கோபுரத்தின் மேல் ஏறி விழப்போனார்.
5.அந்த ஏக்கத்திலே இருக்கும் பொழுது அந்த சந்தர்ப்பம் என்ன செய்கின்றது…?
6,ஒரு நிமிடத்திற்குள் உயர்ந்த சக்தி உள்ளே வந்துவிடுகின்றது.
7.கீழே விழுகாமல் காப்பாற்றி உண்மையை உணரும் ஞானியாக ஆனார்.

இதே மாதிரித்தான் இப்பொழுது உடலில் கஷ்டம்… குடும்பத்தில் கஷ்டம்… என்று இப்படி எத்தனையோ கஷ்டத்தில் நீங்கள் வருகிறீர்கள்.

உங்கள் கஷ்டம் நீங்கவேண்டும் என்று யாம் சொல்கிறோம். கஷ்டம் நீங்குவதற்காக வேண்டி நீங்கள் இப்பொழுது வருவது இது ஒரு சந்தர்ப்பம். அந்தக் கஷ்டம் இல்லாமலிருந்தால் இந்த உபதேசத்தைக் கேட்கவே மாட்டீர்கள்.

இராமலிங்க அடிகளுக்குத் தன் அண்ணியை அண்ணன் உதைக்கிறார் என்று
1.தன்னால் தான் அண்ணிக்கு அடி விழுகிறது… ஐயோ இப்படி ஆகிவிட்டதே…! என்று
2.அங்கே ஒரு மூலையில் (பூஜை ரூமில்) உட்கார்ந்து நல்லதுக்காக ஏங்கும் பொழுது
3.ஒரு ஞானியின் அருள் அவருக்குள் வந்து எத்தனையோ ஞானத்தின் சக்திகளைச் சொன்னார்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன செய்தார்…? மந்திரக்காரர்கள் காளி கோவிலுக்கு வந்து அடுத்தவர்களுக்கு ஏவல் செய்யும் போது “அடப்பாவிகளா…! காளி கோவிலில் வந்து ஆட்டையும் மாட்டையும் கொல்கிறீர்களே…!” என்று எண்ணுகின்றார்.

1.தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு இப்படியும் செய்கிறார்களே…! என்று
2.நல்லதை எண்ணி ஏக்கத்திலே இருக்கும்போது
3.ஒரு நல்ல உணர்வான “ஆத்மா…” இவர் உடலிலே சேர்ந்து
4.அத்தனை பெரிய ஞானத்தைப் பேசினார் – இராமகிருஷ்ண பரமஹம்சருக்குத் தெரியாது.

விவேகானந்தர் இறைவனைப் பார்க்க வேண்டும் என்று பிடியாகப் பிடித்தார். அவர் தான் படித்த நிலைகள் கொண்டு அரசியல் பண்பைத் தெரிந்தார். உலகத்தையே அறிந்தார்.

தான் அறிய வேண்டும் என்ற வேட்கையிலே படிப்பறிவு இல்லாத இராமகிருஷ்ண பரமஹம்சரிடத்திலே வந்தவுடன் என்னவாயிற்று…?
1.வந்தவுடனே அவர் தொட்டவுடனே ஒரு கரண்ட் ஷாக்…! போன்று அவருக்குள் பாய்கின்றது
2.ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்ற நிலைகள் உண்மையை உணர்கின்றார்.

இவருடைய படித்த அறிவின் தன்மையை மற்றவர்களுடன் இணைக்கும் தன்மை வருகின்றது. ஆனால் இணைக்கும் தன்மை வந்தாலும் சக்தியின் தன்மையை அவர் காட்டிய அந்தப் படித்த வர்க்கத்தின் நிலைகள் கொண்டு பிராணாயமத்தினுடைய தத்துவத்தை அரசர்கள் காட்டிய நெறியில் உட்புகுந்துதான பாட நிலைகளில்தான் வந்தார்.

இராமகிருஷ்ண பரமஹம்சரோ கோவில் பூசாரியாக இருந்தாலும் பாட நிலையற்ற நிலைகள் கொண்டு
1.பூஜை என்பது மெய் ஒளியைத் தனக்குள் சுவாசித்து
2.நம் உயிரான ஈசனிடத்திலே நாம் பாய்ச்சும் இந்த ஆராதனைதான்…! என்று
3.இராமகிருஷ்ண பரமஹம்சர் பலமுறை சொல்லியிருக்கிறார்.

அதே போன்று ஆதிசங்கர் வெளிப்படுத்தியது, காற்றிலிருக்கக்கூடிய சக்தியை நீ சுவாசிக்கும் பொழுது உனக்குள் இருக்கக்கூடிய ஈசனுக்கு இந்தச் சுவாசமே அபிஷேகமாகின்றது.

நீ எந்த குணத்தை எண்ணுகின்றாயோ அந்த குணத்தின் தன்மை உயிரான நிலைகளில் அபிஷேகம் ஆகின்றது.
1.பாலைப் போன்ற மணம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும் பொழுது உன் உடலுக்குள் மகிழ்ச்சியாகின்றது.
2.தேனைப் போன்ற சுவையான நிலைகள் பெற வேண்டும் என்று சுவாசிக்கும்போது உன் உடலிலுள்ள அணுக்கள் இனிமை நிறைந்ததாக மலர்கின்றது என்ற தத்துவத்தைத்தான் ஆதிசங்கரர் சொன்னார்.

ஒரு ரோஜா மலர் என்றால் அதன் மணத்தின் தன்மையை எடுத்துத்தான் மலரின் தன்மை வருகின்றது. அந்த ரோஜா மலரை நாம் பார்த்து அந்த மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசித்தால் அந்த மணம் நமக்குள் இருக்கக்கூடிய ஈசனுக்கு செருகேருகின்றது.

ஆகவே துவைதம் என்பது அந்தப் பொருளை எண்ணி எடுப்பதே தவிர யாகங்களைச் செய்து வேள்விகளைச் செய்து மந்திரத்தினாலே எடுப்பது அல்ல…! அன்று அரசன் காட்டிய அந்த நிலைகள் கொண்டு அதிலிருந்து விடுபடும் நிலையே இல்லாது இன்றும் நாம் இருக்கின்றோம்.

வேள்விகள் செய்தால்தான் நம் பாவம் போகும் என்றும் வேள்விகள் செய்தால்தான் அம்மா அப்பா மோட்சம் போக முடியும் என்ற நிலைகளில்தான் இருக்கின்றோம்.

ஆனால் அதைச் செய்யவில்லை என்றால் பிழை வந்துவிடுமோ என்று எண்ணுகின்றோம். ஏனென்றால் அந்த அளவுக்கு விஷத்தை நமக்குள் ஊட்டிவிட்டார்கள்.

இவையெல்லாம் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் நெறிகள். இங்கே இதை உபதேசிப்பது நான் அல்ல….! மெய்யை உணர்ந்த பல மகரிஷிகளின் உணர்வலைகள் அவர்களுடன் நான் தொடர்பு கொள்ளப்படும் பொழுது அவர்களின் உணர்வலைகள்தான் உணர்த்தியது.

1.நீங்கள் இப்பொழுது கேட்பது சுவாசித்தது அனைத்துமே அந்த மகரிஷிகளின் உணர்வலைகளைத்தான்.
2.அந்த உணர்வலைகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.
3.அந்தப் பதிவின் நினைவு கொண்டு ஆதிசங்கரர் சொன்னது போல்
4.காற்றிலிருக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்திகளை எங்கிருந்தும் நீங்கள் பெறமுடியும்.
5.அதே சமயத்தில் விண்ணின் ஆற்றலையும், இந்தப் புவிக்குள் இருக்கும் சக்தியையும் நீங்கள் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

தீமைகளைப் பஸ்பமாக்கும் சித்தர்களின் (அகஸ்தியரின்) ஆற்றலை நாமும் பெறவேண்டும்…!

Agastyar ultimate power

தீமைகளைப் பஸ்பமாக்கும் சித்தர்களின் (அகஸ்தியரின்) ஆற்றலை நாமும் பெறவேண்டும்…!

நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் மின் அணுக்களின் நிலைகளில் அதில் வளர்ச்சி பெற்ற கதிரியக்கச் சக்தி கொண்ட அணுக்களை விஞ்ஞானி கண்டுணர்ந்து அதைப் பிளக்கின்றான்.

அதே போல மிகக் கடினமான உலோகங்களையும் அதீத வெப்பத்தின் தன்மை கொண்டு உருக்குகின்றார்கள். உருக்கித் தனக்குத் தேவையான கருவிகளாகவும் இயந்திரங்களாகவும் மாற்றி மற்ற எத்தனையோ முரட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள்.

எடை கூடிய பொருளை நகர்த்த முடியவில்லை என்றால் கடப்பாரையை (POCLAIN MACIHINE) உபயோகித்து அதை உந்தி அந்தக் கல்லைப் பெயர்த்து எடுக்கின்றார்கள்.

அதைப்போல துளை (ஓட்டை) போட முடியாத கடினமான ஒரு பொருளாக இருந்தால் அதைக் காட்டிலும் வலு கொண்ட உலோகக் கருவியைக் கொண்டு துளையிட்டு பின் அதை வெடிக்கச் செய்து அந்தப் பாறையையே அப்புறப்படுத்துகின்றார்கள்.

ஆனால் அன்றைய மெய் ஞானிகளோ பல தாவர இனச் சத்தைக் கொண்டு தான் உலோகங்களின் வீரியத் தன்மையை இழக்கச் செய்தார்கள்.

உதாரணமாக இரும்புடன் தாவர இனச் சத்தைக் கலக்கச் செய்து இரும்பின் வீரியத் தன்மையை (விஷத்தை) இழக்கச் செய்தார்கள்.

ஆனாலும் அந்த இரும்பின் கண சத்தை இழக்காத வண்ணம் அது எவ்வளவு வீரிய வலு கொண்டதோ
1.அந்த வலுவின் தன்மை இழக்காதபடி
2.மற்ற தாவர இனங்கள் கொண்டு அதைப் புடமிடப்பட்டு
3.அதைப் பஸ்பமாக்கி வீரிய சக்தியாக வைத்துக் கொள்கின்றார்கள் சித்தர்கள்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

நம்முடைய வாழ்க்கையில் பிறர் செய்யும் கொடிய தவறான உணர்வுகளைப் பார்க்கும் போது அந்த உணர்வுகள் மோதியவுடன் வீரிய உணர்வுகள் கொண்டு முரட்டுத்தனமாக அவனை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் நமக்குள் வருகின்றது.

ஏனென்றால் நம்முடைய பல காரியங்களுக்குக் கடப்பாரை அதைப் போல எத்தனையோ கருவிகள் அந்த இரும்பைக் கொண்டு செயல்படுத்துவது போல
1.மனித உணர்விற்குள் இந்த இரும்பின் சக்தி அதிகமாகி விட்டால்
2.நம் நல்ல குணங்கள் அனைத்தையும் செயலற்றதாக்கி
3.வீரிய முறுக்கு கொண்டு சிந்தனையற்ற நிலைகள் கொண்டு நம்மை முரட்டுத்தனமாக்கிவிடும்.
4.அதாவது நம்முடைய குணமே இரும்பு போன்று கடினமாகிவிட்டால்
5.நாம் சொல்வதை ஒருவர் கேட்கவில்லை என்றால்
6.அவரை அழித்து விட வேண்டும்…! என்ற எண்ணத்தைத்தான் ஊட்டும்.

இதைப் போன்ற வேக உணர்வின் தன்மையாகும் போது நல்ல உணர்வுகள் செயலிழந்து பல கடுமையான நோய்கள் வரக் காரணமாகின்றது.

இதைப்போன்ற உணர்வின் சக்தியை நீக்குவதற்கு அன்றைய மெய் ஞானி (சித்தன்) அந்த இரும்பைப் பஸ்பமாக்கி நயமான நிலைகள் உருவாக்கும் மருந்தாக மாற்றித் தன் கைக்குள் அடக்கினான் சித்தன்.

ஒரு மனிதனுக்குள் உருபெற்ற அந்தக் கடுமையான நோயை நீக்க அந்தப் பஸ்பத்தைக் கொடுத்தான். கொடுத்த பின்
1.அவன் உடலிலே சேர்த்துக் கொண்ட இரும்பான உணர்வின் சத்தை இது பஸ்பமாக்கி
2.அவன் உடலை ஆரோக்கியமாக்கும் தன்மைக்கு அவ்வாறு செய்தான்.

இரும்பை உருக்கும் உணர்வின் சத்தை அந்தச் சித்தன் தனக்குள் நுகர்ந்தான். அந்த உணர்வின் தன்மையை வளர்த்து இரும்பைப் பஸ்பமாக்கினான். அதை வைத்து மனித உடலில் இருக்கக்கூடிய தீய உணர்வைப் பஸ்பமாக்கினான். அதைக் கண்டு அவன் மகிழ்ந்தான்.

1.ஆகவே பஸ்பமாக்கும் உணர்வை அந்தச் சித்தன் தனக்குள் வளர்த்தான்.
2.வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை அவனுக்குள் வீரியத் தன்மை பெற்றது.

அந்த வீரியத் தன்மை கொண்டு விண்ணிலிருந்து வரும் மற்ற விஷமான எத்தகைய ஆற்றலாக இருந்தாலும் அதை அந்தச் சித்தன் நுகர்ந்து தனக்குள் பாதிப்பில்லாதபடி அதையும் பஸ்பமாக்கும் உணர்வின் ஆற்றலாகப் பெற்றான்.
1.அது வளர வளர தீய உணர்வுகள் அனைத்தையும் பஸ்பமாக்கும் திறன்
2.இந்தச் சித்தனின் உடலில் பாய்கிறது.

இன்று விஞ்ஞானிகள் லேசரை (LASER) இயக்கச் செய்து அதை வைத்து மற்றதைப் பிளந்து தன் காரியத்தை விஞ்ஞான ரூபத்தில் சாதிக்கின்றார்கள்.

இதைப்போல அன்றைய சித்தன் தன் நினைவலைகளை விண்ணிலே பாய்ச்சப்படும் போது விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை நுகர்ந்து தன் லேசர் கதிர் இயக்கத்தால் (தன் உணர்வின் நினைவலைகளால்) அதை மாற்றி உடலுக்குள் அதைச் சமப்படுத்தி ஆற்றல் மிக்க நிலைகளாக மாற்றிக் கொண்டான்.

இவ்வாறு தன் உணர்வின் தன்மைகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியவன் இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான் அந்த மெய் ஞானியான அகஸ்தியன்.

1.அத்தகைய மெய் ஞானிகளின் உணர்வலைகளை மனிதனான நாம் நுகர்ந்தால்
2.அவர்களைப் போன்றே தீமைகளைப் புடமிட்டு விண்ணின் ஆற்றலைப் பஸ்பமாக்கி
3.என்றுமே அழியாத நிலையாக வேகா நிலை நாம் ஒவ்வொருவரும் பெறலாம்.

நம் உயிராத்மா வைரம் போன்று ஜொலிக்கும் தன்மை பெற வேண்டும்…!

Image

Diamond soul sparkling

நம் உயிராத்மா வைரம் போன்று ஜொலிக்கும் தன்மை பெற வேண்டும்…!

 

மெய் ஞானிகளைப் பற்றிய உண்மைகளைத் திரும்பத் திரும்ப உங்களிடம் சொல்கிறேன் என்று நீங்கள் எண்ணிட வேண்டாம். உங்களுக்குள் எத்தனையோ அருள் மணங்கள் உண்டு. அதே சமயத்தில் பகைமை உணர்வுகளும் உண்டு.

யாம் (ஞானகுரு) உபதேசித்துக் கொண்டே வந்தாலும் சில நேரங்களில் உங்கள் உணர்ச்சியின் தன்மை மாறும். அதாவது யாம் உபதேசிப்பதைத் தாங்காத நிலையாகப் பொறுமை இழந்து
1.சீக்கிரம் முடித்து விட்டார்…! என்றால் நாம் வீட்டுக்குப் போகலாம்.
2.போய் நம் வேலையைப் பார்க்கலாம் என்று இப்படி எண்ணுபவர்களும் உண்டு.
3.இப்படி உணர்ச்சி ஆகும் போது யாம் சொல்வதைக் கவனித்துப் பதிவாக்கும் நிலை இழக்கப்படுகின்றது.

ஆகவே அத்தகைய நிலையை மாற்றி அவர்களுக்கும் மீண்டும் அந்தப் பேரருளின் உணர்வை நுகரும் தகுதிக்கே மெய் ஞானிகளின் உணர்வை வளர்க்கச் செய்வதற்கே தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.

சமையலில் ஒரு குழம்பை நாம் வைக்கிறோம் என்றால் அது வேகும் போது ஆரம்பத்தில் பார்த்தால் ஒன்றும் ருசி இருக்காது… மணமும் இருக்காது.

ஆனால் அது வேக…வேக…வேக… அந்தக் கலவையின் தன்மை மாறும் போது தான் அதில் போடப்பட்ட எல்லாப் பொருள்களும் இரண்டறக் கலக்கின்றது. அதன் பின் குழம்பைப் பார்த்தால் மணமும் இருக்கும் நல்ல ருசியும் இருக்கும்.

அதைப்போன்று தான் உங்களுக்குள் மெய் உணர்வுகளைத் திரும்பத் திரும்பச் சொல்லும் போது நீங்கள் நுகரும் உணர்வுகள் உங்களுக்குள் ஐக்கியமாகி அந்த மெய் ஞானத்தின் முதிர்வின் தன்மையை நீங்கள் அடைய முடியும்.

அந்த மெய் ஞானிகள் எப்படி அருள் மணம் கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்று அருள் ஞானத்தை வளர்த்தார்களோ அவர்களைப் போன்று நாமும் வளர முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வேகா நிலை பெற்றுத் துருவ நட்சத்திரமாக ஆனான்.
1.இங்கே உள்ள அகண்ட அண்டத்திலும் சரி
2.அங்கே உள்ள பேரண்டத்திலும் சரி
3.எத்தகைய நிலையும் இவனை மாற்றிடாது வேகா நிலையைப் பெற்றான்.

அந்த அகஸ்தியனைப் போன்று நமக்குள் இருக்கும் எல்லா அணுக்களையும் வேகா நிலை என்று உருவாக்கி என்றுமே அழியாத நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை பெற்று
1.பேரொளி என்ற உணர்வை ஊட்டும் நிலையாக
2.வைரம் போன்று ஜொலிக்கும் தன்மையாக நம் உயிராத்மா அடைதல் வேண்டும்.

அதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்வது…!

உயிரான ஈசனிடம் நாம் எதை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்…?

Image

third eye prayer

உயிரான ஈசனிடம் நாம் எதை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டும்…?

 

தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் எல்லா நினைவும் எங்களுக்கு அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

“எல்லா நினைவும்” என்றால் அது எது…?

நமது உயிர் புழுவாக உடல் பெற்ற நிலையிலிருந்து மனிதனாக வருகிற வரையிலும்
1.தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வில் இருந்து தப்பிக்கும் உணர்வை வளர்த்தது.
2.தனது வாழ் நாள் முழுவதும் தீமை என்று உணர்ந்தாலே “அதிலிருந்து மீண்டிட வேண்டும்…” என்ற உணர்வை நுகர்ந்தது.

இப்படித்தான் நாம் ஒவ்வொரு சரீரத்திலும் ஒன்றுக்கொன்று கொன்று தின்று இரையாகி அதிலிருந்தெல்லாம் மீள வேண்டும் என்று எடுத்துக் கொண்ட எண்ணத்திற்கொப்ப அடுத்த உடலை வலுவாக உருவாக்கியது.

1.எதனின் வலுவைத் தனக்குள் நுகர்ந்ததோ
2.தீமையிலிருந்து நீக்கிடும் உணர்வை விளைய வைத்து… விளைய வைத்து… விளைய வைத்து… விளைய வைத்து…!
3.தீமைகளை எல்லாம் அகற்றிடும் உடலின் தன்மையாக நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிர் தான்.

இன்று நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு அனைத்தையும் அறிந்துணர்ந்து தீமையை அகற்றிடும் அருள் மணம் கமழும் ஆறாவது அறிவை நமக்குள் ஊட்டியதும் இதே உயிர் தான்.

ஆகவே எனது வாழ்க்கையில் இனி வரும் இருளினை வராது பாதுகாத்திடும் சக்தியாக
1.தீமைகளை நீக்கினேன்… என்ற உணர்வும்
2.தீமையிலிருந்து மீண்டேன்… என்றும்
3.தீமையிலிருந்து விடுபடும் அந்த உணர்வினை எனக்குள் நீயே (உயிர்) உருவாக்கினாய் என்றும்
4.தீமையிலிருந்து விடுபடும்… “இந்த எல்லா நினைவையும் நான் பெற அருள்வாய் ஈஸ்வரா…!”
5.தீமையற்ற உணர்வின் தன்மையை உருவாக்க – அனைத்தையும் அறிந்திடும் அறிவாக
6.தீமையென்ற நிலைகள் புகாது தடுக்கும் சேனாதிபதியாக நீயே இருக்க வேண்டும் ஈஸ்வரா…!

அகஸ்தியனும் அவர் மனைவியும் தங்கள் வாழ் நாளில் தீமையெல்லாம் அகற்றி தீமைகளை அகற்றிடும் உணர்வின் ஒளியாகப் பெற்று வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி பேரருள் என்ற உணர்வின் தன்மை பெற்றுப் பேரொளியாகத் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

1.அகஸ்தியரும் அவர் மனைவியும் பெற்ற அந்தப் பேரருள் உணர்வின் தன்மை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…!
2.இருளில் இருந்து மீட்டிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…!
3.இனி வரும் எல்லாத் தீமைகளையும் அகற்றிடும் அருள் மணத்தை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இவ்வாறு வேண்டி நம் உயிரிடம் பிரார்த்திக்கும் பொழுது நாம் புழுவிலிருந்து மனிதனாக உருவான நிலையில் ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட பல கோடித் தீமைகளிலிருந்து விடுபட்ட பேராற்றல் நமக்குக் கிடைக்கின்றது.

அதன் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து உடலுக்குப் பின் என்றுமே அழியாத ஒளி உடலாக ஒளிச் சரீரம் பெறலாம்.

சண்டையிடுபவர்களைச் சும்மா வேடிக்கை தான் பார்க்கிறோம்… என்றாலும் அது நல்ல குணங்களை எப்படி மாற்றுகிறது…?

Image

Spiritual protection area

சண்டையிடுபவர்களைச் சும்மா வேடிக்கை தான் பார்க்கிறோம்… என்றாலும் அது நல்ல குணங்களை எப்படி மாற்றுகிறது…?

 

ஓர் கர்ப்பிணிப் பெண் வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதே சமயத்தில் வெளியிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதைக் கவனிக்காதபடி வேலையின் நிமித்தம் இருந்தால் இவரை அங்கே அழைத்துச் செல்லாது.

ஆனால் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஓ…! என்ற கூக்குரலின் சப்தங்களைக் கேட்ட உடனே “என்ன…? ஏது…? என்று வேடிக்கை பார்க்கச் சென்றால் போதும்.

வெளியிலே சென்று கண் கொண்டு அதைக் கூர்மையாகக் கவனிக்கும் போது அங்கு நடக்கும் செயலின் தன்மையை உடலுக்குள் இழுத்து கண்ணுக்குள் கருவிழி காட்டுகிறது.

அதே சமயத்தில் சண்டை போட்டவர் உடலிலிருந்து ஆவேச உணர்வுகள் வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுவதைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் கவர்ந்து சுவாசிக்கப்படும் போது அந்த உணர்வு உயிரிலே பட்டுப் பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.

இப்படி நடக்கிறதே…! என்று அந்தக் கர்ப்பிணி வேடிக்கை தான் பார்க்கின்றது. பார்த்த உணர்வுகள் அந்தப் பதட்டமும் பயமும் இவர்கள் குணத்திற்கும் அதற்கும் மாறாக வரும் போது நல்லதுடன் கலக்கச் செய்து ஆவேச உணர்வுகளை ஓங்கச் செய்கின்றது.

அந்த உணர்வின் உமிழ் நீர் உடலிலே சேரும்போது பதட்டத்தையும் பயத்தையும் ஊட்டும் உணர்வுகளாக உடலுக்குள் புதிதாக உருப்பெறுகின்றது.

அதே சமயத்தில் கர்ப்பிணியின் கருவிலே இருக்கக் கூடிய குழந்தைக்கும் குழந்தையின் ஊனிலும் இது பதிவாகி விடுகின்றது. ஆனால் குழந்தை தவறு செய்யவில்லை.

அதே சமயம் தாயின் உடலிலும் அந்த உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.
1.அதை அடிக்கடி எண்ணும் போது
2.அதே உணர்ச்சிகளை உந்தி அதையே சுவாசிக்கும் போது
3.திரும்பத் திரும்ப ஆத்திரத்தையும் பதட்டத்தையும் பய உணர்வுகளையும் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும்.

அந்த உணர்வுகள் உடலிலே விளைய விளைய கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கும் ஆழமாகப் பதிவாகி குழந்தை பிறந்த பின் சுவாசிக்கப்படும் போது இந்த உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் கிளர்ந்து எழுந்திருக்கும்.

ஒன்றுக்குள் ஒன்று போர் செய்வது போன்று இந்த உணர்வுகள் அந்தக் குழந்தைக்குள் கிளர்ந்து எழும் போது சண்டையிட்டவர்கள் உணர்வை ஆரம்பத்தில் அந்தத் தாய் கேட்டுணர்ந்த நிலைகளில் எரிச்சலும் பதட்டமும் பய உணர்வும் பட்டது போல
1.குழந்தை திடீர்… திடீர்.. என்று பயப்படுவதும்
2.எதிர்பாராத நிலைகளில் அதன் உடலில் எரிச்சல் வரும் போது
3.அதைச் சுவாசிக்கும் போதெல்லாம் அந்தக் குழந்தை எரிந்து எரிந்து விழும்.

தாய் தன் அருகில் வந்தாலும் ஒன்றும் விவரம் தெரியவில்லை என்றாலும் தாயை அந்தக் குழந்தை பிறாண்டும். அவர்கள் சண்டையிடும் போது எந்த உணர்ச்சிகளைத் தூண்டியதோ இது ஒன்றும் அறியாத குழந்தையாக இருந்தாலும் அப்படிச் செய்வதை நீங்கள் பார்க்கலாம்.

நீங்கள் உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தால் கருவிலே இருக்கும் போது எந்த நிலைகளைத் தாய் பார்த்ததோ அது குழந்தையின் உடலிலே ஊழ்வினையாக வினையாக இவ்வாறு விளைகின்றது.

ஒரு வித்தை ஊன்றி விட்டால் எப்படி அது செடியாகச் சிறுக சிறுக விளைந்து அதனுடைய வித்துக்களாக எப்படி விளைகின்றதோ இதைப்போல குழந்தை வளர வளர அதனுடைய குணங்களும் அதற்குத் தக்கவாறே வளரும். அதற்கு மாறாக எது இருந்தாலும் அதை வெறுக்கும்.

இவர்கள் சண்டையிடும் போது அவர்களிடத்தில் நியாயமாகச் சொல்லப் போனால் இவர்கள் இரண்டு பேரும் அவரவர்கள் பேசியதைத் தான் பேசுவார்கள். அவர்கள் பேசியதில் அடுத்து நியாயத்தைக் கேட்கப் போனால் இவர்களை அறியாமலேயே அடுத்துச் சரியான பதில் சொல்லாதபடி அழுகையும் ஆத்திரத்துடன் தான் பதில் சொல்வார்கள்.

இப்படி எதிர் நிலையாகும் போது குழந்தை எதிர்பாராது அழுது கொண்டே இருக்கும். அதே நிலைகள் கொண்டு எதிர்க்கும் சக்தியாக வெறுப்பை உண்டாக்கும் சக்தியாக வளர்ந்து விடுகின்றது.

இவையெல்லாம் குழந்தை கருவிலே வளரும் போது செயல்பட்ட நிலைகள். சண்டை போடுபவர்களை அந்தக் கர்ப்பிணி உற்றுப் பார்த்துக் கவனித்தால் இந்த நிலை ஆகின்றது.

அதே சமயத்தில் அந்தச் சண்டையை மற்ற ஆண்களோ அல்லது கர்ப்பம் அற்றவர்களோ பார்த்தால் அந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக அவர்களுக்குள் பதிவாகி விடுகின்றது.
1.பதிவான பின் அடுத்தடுத்து யாராவது சண்டை போட்டார்களென்றால் அதைப் போய் வேடிக்கை பார்க்க வைக்கும்.
2.அந்தச் சண்டையிட்ட உணர்வைப் பேசவும் வைக்கும்.
3.அடுத்தவர்களிடம் சொல்லப் போகும் போதெல்லாம் மற்றவர்களைக் குறைகளாகப் பேசிக் கொண்டே இருக்கச் சொல்லும்.

ஏனென்றால் அடுத்தவர்களின் குறைகளைக் கூர்ந்து கவனித்து அதையே அடுத்தடுத்து பேசும்போது நியாயத்தைப் பேசுவது போல எண்ணிக் கொள்வார்கள்.

ஆனால் அந்த பேச்சின் நிலைகள் கொண்டு எந்த உணர்வைப் பதிவு செய்து கொண்டோமோ அந்த உணர்வுகள் கிளர்ந்தெழுந்து வளர்க்கச் செய்து உடலில் கைகால் குடைச்சல் அஜீரணம் போன்ற நிலைகள் வரும்.
1.நான் எல்லோரிடம் நியாயத்தைத் தான் பேசுகிறேன்.
2.ஆண்டவன் என்னை இப்படிச் சோதிக்கிறான். என் கைகால் எல்லாம் குடைகிறது என்று சொல்வார்கள்.

நாம் பார்ப்பது வேடிக்கை பார்த்தாலும் நுகர்ந்த உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவாகி நோயாகத் தனக்குள் விளைகின்றது. இதை எல்லாம் வாழ்க்கையில் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் பிரபஞ்சத்தில் சூரியனுக்கே இல்லாத ஒரு சிறப்பு வியாழன் கோளுக்கு இருக்கின்றது – அதனால் தான் அதைக் “குரு…!” என்று சொன்னார்கள் ஞானிகள்

Image

Jupiter-GURU

நம் பிரபஞ்சத்தில் சூரியனுக்கே இல்லாத ஒரு சிறப்பு வியாழன் கோளுக்கு இருக்கின்றது – அதனால் தான் அதைக் “குரு…!” என்று சொன்னார்கள் ஞானிகள்

 

அருள் மணம் கமழும் அருள் ஒளி என்ற பெரும் சக்தி பெற்று அருள் ஞானம் பெற்று மெய் ஞானி என்ற நிலையை அடைந்தவன் தான் அகஸ்தியன். அருள் ஞானத்தின் வளர்ச்சியிலே விண்ணில் நடக்கும் அதிசயங்களை உற்றுப் பார்க்கின்றான். இது பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

நட்சத்திரங்களின் இயக்கத்தையும் அதிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு துகள்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் போது மின் ஒளியின் உணர்வாக அது மின்னலாக எப்படி மாறுகின்றது என்று காண்கின்றான்.

அந்த இருபத்தேழு நட்சத்திரங்களும் தூசியாக மாற்றும்போது அதன் துகள்களைச் சூரியன் கவரும் பாதையில் மற்ற கோள்கள் அது அது தன் பங்காக எப்படி எடுத்துக் கொளிறது என்பதையும் காணுகின்றான்.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயும் போது அதில் கலந்த விஷத் தன்மையை நீக்கி விட்டு அதிலே உள்ள ஜீவ சக்தியை சனிக்கோள் எப்படிக் கவர்கிறது…?

நட்சத்திரங்களின் துகள்கள் மோதும் பொழுது அதிலே வெளிப்படும் விஷத் தன்மைகளையும் கருகிய புகைகளையும் கேது ராகு என்ற இரண்டு கோள்களும் எப்படிக் கவர்கிறது…?

அதே சமயத்தில் உராயும் பொழுது ஏற்படும் மின்னலின் மின் கதிரின் ஒளியை நாம் விடிவெள்ளி என்று சொல்கின்றோமே அந்த வெள்ளிக் கோள் எப்படிக் கவர்ந்து கொள்கிறது…?

அதாவது மின்னல்களாகும் பொழுது அதிலே வெளிப்படும் ஒளிக்கற்றைகளை வெள்ளிக் கோள் கவர்வதை அகஸ்தியன் அதை எல்லாம் காணுகின்றான்.

அதாவது மனிதர்களுக்குள் ஒரு சொல்லின் தன்மை கவரப்படும் போது அதற்குள் மறைந்த உணர்வினை அறிவின் தன்மை கொண்டு அறிந்திடும் சக்தியாக வருவது போல் ஒளியான சக்தியை விடிவெள்ளி என்ற கோள் அது கவர்கின்றது.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் இவ்வாறு உருவாகினாலும் அதில் வெளி வரும் ஆவியின் (VAPOUR) சத்தைச் சனிக் கோள் தனக்குள் எடுத்து நீர் நிலையை உருவாக்கும் அருள் சக்தியை அது கவர்கின்றது.

அது கவர்ந்து வெளிப்படும் துகள்களைச் சூரியன் தனக்குள் கவரும் பாதையில் வியாழன் கோள் கவர்ந்து தனக்குள் உணர்வின் தன்மை ஒன்றென இணைந்து மிக ஒளியான தன்மையாக இணைத்துச் சமப்படுத்தும் உணர்வு பெற்றது.

வியாழன் கோளுக்கு இருபத்தியேழு உபகோள்கள் உண்டு. அதே சமயத்தில் அதிலே இரண்டு உபகோள்கள் மாறுபட்ட நிலையில் வியாழனைச் சுற்றி வருகின்றது. ஆகையினால்
1.இந்தப் பிரபஞ்சத்தையே நல் வழியில் இயக்கும் தன்மை பெற்றது வியாழன் கோள்.
2.தாவர இனங்களையும் உயிரணுக்களையும் இந்தப் பிரபஞ்சத்தில் இணைந்து வாழச் செய்யும் சக்தியினைப் பெற்றது வியாழன் கோள்
3.ஆக இவை அனைத்தையும் நல்லதாக ஒரு இயக்கத் தன்மை கொண்டு செயல்படுத்துகிறது.
4.அதனால் தான் வியாழன் கோளைக் குரு என்று சொன்னார்கள் ஞானிகள்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள் வரும் மாசுகளை நமது கிட்னி (சிறுநீர்கங்கள் – KIDNEYS) என்ற உறுப்பு பாகம் கழிவாக்கி அதைச் சுத்திகரித்து இரத்தங்களை வடிகட்டி நம் உடலுக்குள் நல் இயக்கச் சக்தியாக மாற்றி அமைக்கின்றது. நாம் நுகரும் உணர்வுக்குள்ளும் விஷத் தன்மை கவரப்பட்டால் நமது கிட்னி அதை நீக்குகின்றது.

1.அதாவது நாம் நுகரும் அல்லது உணவாக உட்கொள்ளும் அதற்குள் கலந்து வரும் நஞ்சினை
2.நமது கிட்னி என்ற உறுப்பு மாற்றித் தெளிந்த மனம் பெறும் மகிழ்ந்திடும் உணர்வு பெறும்
3.அந்த உணர்ச்சியினை நம் உடலுக்குள் ஊட்டுகின்றது.

இதைப்போலத் தான் இந்தப் பிரபஞ்சத்திற்கு வியாழன் கோள் ஒரு கிட்னியாக இருக்கின்றது. விஷத்தின் தன்மையைத் தனக்குள் பிரித்து அதன் உணர்வின் தன்மையைச் சமப்படுத்தும் நிலையும் அதன் உணர்வின் இயக்கமாக இயக்கும் சக்தி பெற்றது தான் வியாழன் கோள்.

இதெல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்ட மெய் உணர்வுகள். “அண்டத்தின் இயக்கம் இந்தப் பிணடத்திற்குள் எப்படி இருக்கிறது…!” என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறோம்.

“உயர்ந்த சக்தியை நீங்கள் பெறவேண்டும்…” என்பதற்காக அதை எடுத்துக் கொட்டு… கொட்டு… என்று உங்களைக் கொட்டுகின்றோம்…!

Image

Gnanaguru - papanasam

“உயர்ந்த சக்தியை நீங்கள் பெறவேண்டும்…” என்பதற்காக அதை எடுத்துக் கொட்டு… கொட்டு… என்று உங்களைக் கொட்டுகின்றோம்…!

 

மெய் ஞானத்தைப் பற்றியோ மெய் ஞானிகளைப் பற்றியோ ஆரம்பத்தில் எனக்கும் (ஞானகுரு) ஒன்றும் தெரியாது. நானும் உங்களை மாதிரித் தான் பக்தியிலே தீவிரமாக இருந்தேன். கோயிலில் சாமி இருக்கும் இடத்தில் ஏதாவது தவறாகச் செய்தார்கள் என்றால் உடனே சண்டைக்குப் போவேன்.

கோயிலுக்குப் போய் விழுந்து விழுந்து கும்பிட்டுக் கொண்டே இருப்பேன். பக்தி உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டதால் அந்தத் தெய்வத்திடம் நின்று நின்று சாதிப்பேன்.

அப்போதெல்லாம் அதிலே ஒன்றும் தெரியவில்லை. உணரவும் முடியவில்லை. குருநாதர் இதை எல்லாம் காட்டிய பின் தான் ஞானிகளைப் பற்றிய உண்மையை உணர முடிந்தது. கோவிலின் தத்துவத்தையும் அறிய முடிந்தது.

ஆகையினாலே கோயிலுக்குள் விளக்கை ஏன் காட்டுகின்றார்கள்…? என்று தெரிந்து கொள்ளுங்கள். விளக்கைக் காட்டப்படும் போது தான் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது.

அதைப் பார்த்ததும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்க வேண்டும்.

அங்கிருக்கும் தெய்வ குணத்தைக் காவியமாகக் காட்டியிருப்பார்கள். தெய்வத்தைப் பார்த்த உடனே இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். இதை உணர்த்திய அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்க வேண்டும்.

தெய்வத்தின் மேல் போட்டிருக்கின்ற மலரைப் போன்ற மணம் எங்கள் உடல் முழுவதும் மணக்க வேண்டும். எங்களைப் பார்ப்போர் அனைவரது உள்ளங்களிலும் இந்த மலரைப் போல மணமும் மன மகிழ்ச்சியும் தோன்ற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்க வேண்டும்.

இப்படித் தான் ஞானிகள் கோயிலில் கும்பிடச் சொன்னார்கள்.

அடிக்கடி இதை நான் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றேன். என்ன…! சாமி (ஞானகுரு) நேற்றுச் சொன்னார். மறுபடி இன்றைக்கும் அதையே கேட்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

மீண்டும் மீண்டும் நான் சொல்லிக் கொண்டு வந்தாலும் அதை மறந்து விட்டு விநாயகரைப் பார்த்தால் உடனே உங்கள் தலையில் தான் கொட்டுகிறீர்கள். பழக்கத்தில் வந்த அந்த உணர்வுதான் உங்களை இயக்குகின்றது. அதனால் தான் திரும்பத் திரும்ப நான் சொல்வது.

ஒருவனைத் திருடன்… திருடன்… என்று திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருங்கள். நம்முடைய சந்தர்ப்பம் அடுத்து “நாமும் கொஞ்சம் எடுத்துப் பார்க்கலாம்… என்று எடுத்துப் பாக்கெட்டில் போட வைக்கும்…!” ஏனென்றால்
1.“அவனைத் திருட்டுப் பையன்… ரொம்ப மோசமானவன்…!” என்று சொல்லிக் கொண்டே இருப்போம்.
2.அந்த உணர்வை ஏற்றுக் கொண்ட பின்
3.நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் நம்மை எடுக்க வைக்கும்.
5.நாம் அல்ல. அந்த உணர்வுகள் இந்த வேலையைச் செய்யும்.

இதைப்போலத் தான் அடிக்கடி உங்களுக்கு அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் எப்படியும் வளர வேண்டும் என்று உணர்த்த… உணர்த்த… உணர்த்த… அந்த மெய் ஒளியின் தன்மையை நீங்கள் பெறுவீர்கள்.

குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள் என்னைச் சும்மா “அடிப்பார்…!” அடித்தவுடனே அவரைத் திரும்பி பார்ப்பேன். என்ன சாமி…? பிள்ளை குட்டிக்காரனை ரோட்டிலேயும் காட்டிலேயும் இழுத்து அடித்துக் கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கின்றீர்கள்…! என்று கேட்பேன்.

கஷ்டப்படும் போது அந்த உணர்வு எப்படி இயங்குகின்றது…? உன்னை எப்படிக் கஷ்டப்படுத்துகிறது..? அந்த நேரத்தில் உன்னுடைய நல்ல குணங்கள் எப்படிச் செயலற்றதாகிறது..? இதை நீ உணர்ந்து கொள்…! அதற்காகத்தான் நான் உன்னை இங்கே கூட்டிக் கொண்டு வந்தேன் என்று குருநாதர் சொல்வார்.

ஏனென்றால் அடிபட்டுக் கஷ்டப்பட்டு உணர்ந்தேன். அந்த உணர்வை எனக்குள் வளர்த்தேன். மெய் ஒளியைப் பெறும் மார்க்கத்தைக் குருநாதர் காட்டினார். அதை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் உங்கள் கஷ்டத்தை நிவர்த்திக்க இப்பொழுது “கொட்டு… கொட்டு…!” என்று கொட்டுகிறேன்.
1.அதாவது குருநாதர் என்னைக் காட்டுக்குள் அலையச் செய்து கொடுத்தார்.
2.உங்கள் வேலை வெட்டி எல்லாம் நிறுத்திவிட்டு இதிலே கொட்ட வைக்கிறேன்.

ஆகவே யாம் உபதேசித்த அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை நீங்கள் கூட்டும் போது உங்கள் துன்பத்தைப் போக்க உங்கள் எண்ணம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

என்னுடைய இச்சை எது…? கிரியையாக்கியது எதை…? ஞானமாகப் பேசச் செய்வது யார்…?

spiritual need

என்னுடைய இச்சை எது…? கிரியையாக்கியது எதை…? ஞானமாகப் பேசச் செய்வது யார்…?

ஜாதகம் பார்த்து…
1.நல்ல நேரம் கெட்ட நேரம் என்று படைத்து
2.நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் நிலைகளைத் தான் சிருஷ்டித்துக் கொள்கின்றோமே தவிர
3.தீமைகளை அகற்றிடும் ஞானத்தைப் பெறவேண்டும் என்று நாம் இச்சைப்படவில்லை.

மெய் ஞானிகளின் உணர்வைப் படைத்து அருள் உணர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை இணைத்து அறியாது வந்த இருளை நீக்கிட அன்று ஞானிகள் காட்டிய அருள் நெறியை அந்த விநாயகர் தத்துவத்தை யாரும் நுகர்ந்து பார்க்கக் கூட இல்லை.

1.நான் (ஞானகுரு) ஏதோ விளையாட்டிற்குச் சொல்கின்றேன் என்றோ
2.உங்களிடத்தில் நான் பெருமையைத் தேடிக் கொள்வதற்காக இதைச் சொல்கிறேன் என்றோ
3.யாரும் தயவு செய்து அப்படி எண்ண வேண்டாம்.

மெய் ஞானிகள் காட்டிய உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக வேண்டும். அவர்கள் சென்ற வழியில் நீங்கள் செல்ல வேண்டும். “நீங்கள் நினைத்த மாத்திரத்தில்…!” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைத்து அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்ற இந்த ஆசையை மனதில் வைத்துத்தான் உங்களிடம் (ஞானகுரு) பேசுகின்றேன்.
1.நான் அதை ஆசைப்படுகின்றேன் “இச்சா சக்தி”
2.எனக்குள் சேர்ந்த பின் அது “கிரியா சக்தி”
3.அது ஒளியாகச் சொல்லாக வெளி வரப்போகும் போது “ஞான சக்தி”

நான் எதை எண்ணுகின்றனோ அந்த ஆசை எனக்குள் கிரியையாகி அந்தச் சொல்லின் உருவமாக ஞானமாகின்றது. இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட்டால் உங்களுக்குள் அது கிரியையாகி அந்த ஞானத்தின் செயலாக உங்களுக்குள் அது வடிக்கும்… அதன் வழியில் செயல்படுத்தும்.

நாம் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று அந்தப் பாடலைப் பாடுகின்றோமே தவிர அந்த இச்சை என்ற நிலைகள் எதிலே தோன்றியது…? கிரியை என்ற நிலைகள் எதை வளர்க்கின்றது…? அந்த ஞானம் என்ற நிலைகள் எதை எதை இயக்குகின்றது…? என்று அறிய முயற்சிக்கவில்லை.

எந்த மெய்ப் பொருளைக் காண்பதற்கு அன்று மெய் ஞானிகள் இயற்கையின் ஆற்றலைத் தெளிவுற உணர்த்தி உள்ளார்களோ அதை நிச்சயம் நாம் பெற வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு அதைத்தான் காட்டினார். அவர் சென்ற வழியில் நானும் செல்ல வேண்டும் என்று இச்சைப்பட்டேன். அவர் உபதேசித்த உணர்வுகளை எனக்குள் கிரியை ஆக்கினேன். கிரியையின் உணர்வை நினைவாக்கும் போது அந்த ஞானத்தின் செயலாக
1.என் உடலை இயக்குகின்றது குருவின் உணர்வுகள் ஆக நானல்ல.
2.இப்பொழுது பேசுவதும் நானல்ல.

மாமாகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த துன்பத்தை அகற்றிடும் உணர்வுகள் மீது இச்சைப்பட்டேன். அது எனக்குள் கிரியை ஆகி நஞ்சை முறியடிக்கும் ஞானமாக வெளிப்படுகின்றது. அந்தக் குருவின் சொல்லே உங்களுக்குள் இப்பொழுது ஊடுருவிச் சொல்கின்றது.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் தவறு செய்யாது நன்மையை எண்ணியே நீங்கள் செய்தாலும் அறியாது வந்த இருள்களை நீக்கி
1.மெய்ப் பொருளை நீங்கள் காண வேண்டும் என்று குரு காட்டிய வழியில் “நான் இச்சைப்படுகின்றேன்…!”
2.அதனால் தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன்.