ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று உச்சரித்து “சக்தியையும் பலனையும் எப்படிப் பெறுவது…?”

Eswara third eye

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று உச்சரித்து “சக்தியையும் பலனையும் எப்படிப் பெறுவது…?” 

ஈஸ்வரா…! என்பது நமக்குள் ஜீவனாக இருப்பது அதாவது ஓ…” என்று இயக்கி நாம் எணணியதை “ம்…” என்று உடலாக மாற்றி
1.இயக்கும் சக்தியாக இருப்பது… உற்பத்தி ஆக்குவது… அது தான் “ஓ…ம்…” ஈஸ்வரா…
2.பிரம்மாவும் நீயே… உருவாக்குவதும் நீயே… என்று உயிரை எண்ணுவது தான் ஓ…ம் ஈஸ்வரா…!
3.இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளுக்கும் குருவாக இருப்பது நமது உயிரே… ஆகவே ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

ஆகையினால் நம் உயிரை இப்படி எண்ணி இந்த நிலைகளில் ஏங்கிச் சொல்லுங்கள். வெறும் வாயிலே ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா… என்று சொல்ல வேண்டாம். உணர்வுடன் நம் உயிரை எண்ணுதல் வேண்டும் (இது முக்கியம்).

அதே சமயத்தில் நமது குருவின் பெயரும் அந்த ஈஸ்வரா தான். ஏனென்றால்
1.அவர் சர்வ சக்தியும் உருவாக்கக்கூடிய நிலைகள் அந்த உடலிலே பெற்றார்.
2.அவருக்கு “ஈஸ்வரா” என்று பெயரை வைத்தார்கள்.

அவரே குருவாக இருந்து அவர் உடலிலே விளைய வைத்த உணர்வை எனக்குள் (ஞானகுரு) கொடுத்தார். அதையே எண்ணச் சொன்னார்.

1.உன் உயிரைக் குருவாக நீ எண்ணு.
2.அந்த உயிரின் தன்மையை ஈசனாக எண்ணு.
3.அந்த உணர்வின் சக்தி அது உனக்குள் செயலாக்கும்…! என்று சொன்னார்.
4.அதைத்தான் உங்களிடமும் இப்போது நான் சொல்வது.

ஆகையினால் உங்கள் உயிரை மதித்து உங்கள் உயிரை ஈசனாக எண்ணி உங்கள் உயிரைக் குருவாக எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏக்க உணர்வுடன் இந்தச் சொல்லைச் சொல்லுங்கள்.

அப்படிச் சொல்லும் போது உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றி விண்ணிலே துருவச் நட்சத்திரமாகவும் சபதரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை மகரிஷிகளின் அருள் சக்தியும் உங்கள் ஈர்ப்புக்குள் (உயிருக்குள்) வரும்.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்பது மந்திரச் சொல் அல்ல.
1.உயிருடன்… ஈசனுடன்… நம் குருவுடன்..
2.என்றுமே எப்பொழுதுமே ஒன்றி வாழும் நிலை தான் அது.

நம்முடைய முன்னோர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் – ஏன்…! எப்படி…?

big heaven

நம்முடைய முன்னோர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும் – ஏன்…! எப்படி…?

நம் மூதாதையர்களுடைய உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டுத் தியானத்தின் மூலமாக உந்தித் தள்ளும் போது உங்கள் மூதாதையர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வு தான் உங்கள் உடலாக உருவாகி உள்ளது. அதை எண்ணி நீங்கள் செயல்படுத்தப் போகும் போது
1.முன்னோர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில்
2.உங்களை அறியாது அவர்களுக்கு ஒரு நன்மையைச் செய்கின்றீர்கள்.

“சிறு துளி பெரு வெள்ளம்…” போல் நாம் அனைவரும் ஒன்று சேர்த்து மூதாதையருடைய உயிராத்மாக்கள் விண் செல்ல வேண்டும் என்று எண்ணும் போது
1.அவர்கள் சூட்சம நிலைகள் பெற்றவர்கள் – அதாவது எடையற்றவர்கள்
2.அதனால் (எடை இல்லாததால்) நம் உணர்வால் சப்தரிஷி மண்டலத்திற்குள் அவர்களை எளிதில் உந்தித் தள்ள முடியும்.

மழை பெய்து அது வெள்ளமாகப் பாயும் போது எதுவாக இருந்தாலும் செத்தை குப்பை எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு கடலில் சேர்க்கின்றது.

அதைப்போல நம் எல்லோருடைய எண்ணங்களையும் குவித்து ஏக காலத்தில் மூதாதையருடைய உயிராத்மாக்கள் விண் செல்ல வேண்டும் என்று உந்திச் செலுத்தும் போது
1.அலுங்காமல் ஒரு ரிமோட் கண்ட்ரோல் போல்
2.அவர்களை அங்கே விண்ணிலே சேர்த்து விடுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த எந்த மனிதனும் உடனடியாக அடுத்த உடலுக்குள் அதிகமாகப் போவதில்லை. அப்படியே உடலுக்குள் போனாலும் அந்த உடலை வீழ்த்திவிட்டு மீண்டும் வெளியிலே வருகின்றது.

ஏனென்றால் இன்னொரு மனித உடலுக்குள் போய் அங்கே வியாதியை உருவாக்கி அந்த உடலும் இறந்து வெளியிலே வந்தாலும்
1.முதலில் இறந்தவரின் உயிராத்மா இந்த (இரண்டாவது) உடலில் வளர்த்த உணர்விற்குத் தக்கவாறு
2.அடுத்த உடலின் ஈர்ப்புக்குள் போவதற்கு வெகு நாளாகும்.

அப்படி வெளியிலே வந்த பின் அவர்கள் அடுத்த உடலைப் பெறுவதற்குள் அவர்களுடைய தொடர்பு கொண்ட நாம் இதைப் போன்று தியானித்து விட்டு அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளினால் அவர்கள் பிறவியே இல்லாத நிலைகள் பெறுகின்றனர்.

ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்படிப்பவர்கள் உங்கள் குடும்பத்தில் யாராவது மூதாதையர்கள் இறந்து விட்டால் அவர்கள் அடுத்த உடலுக்குள் அவர்கள் போவதற்கு முன்னாடி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே உந்தித் தள்ளி இணைத்து விடுங்கள்.

இது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய புண்ணியமாகின்றது…!

சறுக்…! என்று பயம் வந்தால் “நறுக்…!” என்று மகரிஷிகளின் அருள் சக்தியை எடுங்கள் – பயம் சறுக்… என்று ஓடிவிடும்…!

Image

Courageous wisdom

சறுக்…! என்று பயம் வந்தால் “நறுக்…!” என்று மகரிஷிகளின் அருள் சக்தியை எடுங்கள் – பயம் சறுக்… என்று ஓடிவிடும்…!

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) உபதேசித்த மெய் உணர்வுகளை அவர் காட்டிய அருள் வழியில் எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

வளர்த்துக் கொண்ட நிலையில் அவர் காட்டிய நெறிகளை எல்லாம் நீங்களும் பெற வேண்டும் என்று தான் இயற்கையின் பேருண்மைகளை உங்களுக்குள் பதியச் செய்கிறோம்.

இப்போது டேப் ரிகார்டு (SOUND RECORDER) என்ன செய்கிறது…? நாம் பேசுவதை எல்லாம் அது அப்படியே பதிவு செய்கிறது.

அதே மாதிரி யாராவது திட்டினால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்..? அதைக் கூர்மையாகக் கவனிக்கின்றீர்கள். கவனித்த நிலையில்… “இருக்கட்டும்… அந்த அயோக்கியப் பயல் இங்கே வருவான்…! அவனை உதைக்க வேண்டும்…!” என்று நீங்கள் போகின்றீர்கள். இல்லையா…!

அதே மாதிரித்தான் இப்போது நான் சொன்ன மெய் ஞானிகளின் உணர்வுகளை எல்லாம் கேட்டு விட்டு
1.இருக்கட்டும்… கெட்டது எல்லாம் வரட்டும்…!
2.வந்தால்… மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு நான் அதைச் சுட்டு பொசுக்க வேண்டும்…! என்று எண்ணி விட்டீர்கள் என்றால்
3.அந்தக் கெட்டது எல்லாம் போய்விடும்.
4.இது தான் இதில் உள்ள வித்தியாசம்.
5.இதைத் தான் “நேரடி…!” என்பது.
6.அத்தகையை மெய் ஞானிகளின் சக்தியைத்தான் “நேரடியாக…!” உங்களுக்குள் பதிவு செய்து செய்கின்றோம்.

இதை இன்றைய விஞ்ஞானமும் நிரூபிக்கின்றது. ஒரு கம்ப்யூட்டரில் எதைப் பதிவு செய்கிறோமோ மீண்டும் அதைத் திரும்ப எடுத்தால் அதனுடைய செயலை அப்படியே (சரியாகக்) காட்டுகிறது.

ஜாதகக்காரன் உங்களுக்குக் கெட்ட நேரம் வந்து விட்டது என்று சொன்னால் அதைப் பதிவு செய்து கொள்கின்றீர்கள். நல்ல நேரம் எங்கே வருகிறது…! எல்லாமே என் நேரம் கெட்டதாகவே இருக்கிறது…! என்று அந்தக் கெட்ட நேரத்தையே உங்களிடம் வளர்த்து வைத்துக் கொள்கின்றீர்கள்.

உதாரணமாக ஒரு பாதையில் நடந்து போகின்றீர்கள். ஒருவன் நான் இந்த ரெக்கத்தில் போகும் போது
1.அங்கே பேய் இருந்தது…!
2.அதைப் பார்த்தவன் பயந்து விழுந்து விட்டான் என்று உங்களிடம் சொன்னால்
3,நீங்கள் அதைக் கேட்டு “ஆ..ஆ…!” அப்படியா…! என்று பதிவு செய்து கொள்வீர்கள்.
4.அந்த இடத்திற்கு நீங்கள் போனாலே தன்னாலே அந்தப் பயம் வரும்.

அப்போது அந்தப் பயத்தை நுகர்ந்து விட்டால் அதிலிருந்து என்ன செய்யும்…? பயம் அதிகமாக இருக்கும். நீங்கள் எங்கே சென்றாலும் அல்லது எங்கே இருந்தாலும்
1.சறுக்…! என்று சப்தம் கேட்டாலே அந்தப் பயம் வரும்.
2.தைரியமாகப் போனால் கூட இந்த உணர்வுகள் வந்து இயக்கும்.
3.அந்த அதிர்வு வரும்.

ஏனென்றால் இதெல்லாம் நாம் நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்… நாம் அல்ல…! இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குத்தான் தான் உங்களுக்கு எப்போது “சறுக்…” என்று பயத்தால் வேதனை வருதோ அப்போது நறுக்… என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று சொன்னால் அல்லது புருவ மத்தியில் எண்ணிச் சுவாசித்தால் “சறுக்” என்று இந்தப் பயம் தன்னால் ஓடிப்போய் விடும். ஏனென்றால்
1.இதை உங்களிடம் வாக்காகப் பதிவு செய்கின்றேன்.
2.நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஆர்வத்தில் தான் சொல்கிறேன்.

கூடுமான வரையிலும் உங்களுக்கு வரும் சங்கடமான வேதனையான உணர்வுகளை நீக்கிவிட்டு அந்த மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதியச் செய்வதற்குத் தான் மணிக்கணக்கில் திரும்பத் திரும்பப் பேசுவது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரும் பழக்க வந்துவிட்டால் உங்களுக்கு வரும் தீமைகளை நீங்களே போக்க முடியும். (இது மிகவும் முக்கியம்)

சித்தர்கள் நோயை நீக்கும் பாஷாணத்தை எப்படிக் கையாண்டார்கள்…?

Bhogar siddar herbal

சித்தர்கள் நோயை நீக்கும் பாஷாணத்தை எப்படிக் கையாண்டார்கள்…?

அன்றைய சித்தர்கள் பாஷாணத்துடன் சில பொருட்களைச் சேர்த்து அதை அடக்கி மருந்தாக்கி “ஒரு உரை… இரண்டு உரை…” என்று கொடுத்து அன்றைய மனிதர்கள் உடலில் வந்த கடுமையான நோய்களைப் போக்கினார்கள்.

சித்தன் அந்தப் பாஷாணத்தைக் கையிலே தொடுகின்றான் என்றால் அதை முறிக்கும் ஆற்றல் கொண்ட தாவர இனச் சத்தைத் தன் கைக்குள் தேய்த்துக் கொண்டு அதை நுகர்ந்து அவன் செயல்படும் போது ஒன்றும் செய்யாது.

அதே சமயத்தில் அது அவனுக்குள் சாடி விட்டால் கிட்னியை (சிறுநீரகம் – KIDNEY) ஒன்றும் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக வேண்டி இந்த விஷத்தை முறிக்கும் எருமை மாட்டினுடைய சாணத்தைக் காலிலே போட்டு விறு…விறு… என்று உச்சிக்குச் சேர்க்கப்படும் போது இந்த நீர் குளிரும் போது அதைச் சுத்தப்படுத்தி விடும்.

எருமை மாட்டின் சாணத்தில் விஷத்தை முறிக்கும் ஆற்றல் உள்ளது. இது சித்தன் கண்டு கொண்ட நிலைகள். அதை நாம் தெரியாதபடி அவன் பாஷாணத்தைக் கையில் வைத்திருக்கின்றான் என்று நாமும் தொட்டோம் என்றால் இந்த வாசனை பட்டவுடனே நோயாக வந்து நம்மைச் சீக்கிரம் சுருட்டிவிடும்.

ஏனென்றால்
1.இந்த வாசனை பட்டவுடனே கிட்னியைச் செயல்படுத்தாதபடி
2.நாம் எடுத்துக் கொண்ட உணர்வை மண்ணாக்கி அது தொலைத்து விடும்.
3.ஆகவே அன்று சித்தன் எதை எதை எல்லாம் பக்குவமாகச் செய்தானோ அதைப் போன்று நாம் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு எலக்ட்ரிக்கில் வேலை செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு நெகட்டிவ் பாசிட்டிவ் எது என்று தெரியும். இங்கே தொட்டால் ஒன்றும் செய்யாது என்று அவர்களுக்குத் தெரியும்.
1.ஆனால் அவர்கள் தொட்டார்கள்… “ஒன்றும் செய்யவில்லை…!” என்று நாம் தொட்டால் என்ன செய்யும்?
2.நம்மை அறியாமல் “ஷாக்” அடித்துத் தூக்கி எறிந்துவிடும்.

இதைப் போன்று ஒவ்வொன்றும் அவரவர்கள் அறிந்து கொண்ட உணர்வின் தன்மைக்கொப்பத்தான் அதனுடைய இயக்கங்கள் உண்டு.

நெருப்புக்குள் இருக்கும் ஒரு பொருளை கை கொண்டு நாம் தூக்கினால் நம்மைச் சுட்டு விடும். அது போல மிகக் கடுமையான வேதனையில் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கப்படும் போது “ஐயோ பாவமே…! இப்படி இருக்கின்றானே…!” என்று அவன் படும் வேதனையை நாம் நுகர்ந்து சுவாசித்தால் உயிருக்குள் பட்டு நம் நல்ல உணர்வை வீழ்த்தி விடுகின்றது.

1.நம் நல்ல உடலைக் கொண்டு நாம் அவரைக் காப்பாற்றி விடுகின்றோம்.
2.ஆனால் நாம் சுவாசித்த அவரின் வேதனையான உணர்வோ நம்மைப் பலவீனப்படுத்தி விடுகின்றது.

அடுத்தவர்களைப் பார்த்து ஐயோ பாவமே…! என்று இரக்கப்பட்டு அவர்களுக்குத் “தர்மத்தைச் செய்தால் உனக்கு நல்லது வரும்…!” நீ நல்லதைச் செய் நல்லது கிடைக்கும்…! என்று அன்றைய சித்தர்களும் ஞானிகளும் சொல்லியிருக்கின்றார்கள்…! என்று அவர்கள் கஷ்டத்தை நாம் நுகர்ந்தால் நம்மிடம் இருக்கும் நல்ல குணம் எல்லாம் விஷமாக மாறிப் போகும்.

ஆகவே பாதுகாப்பான நிலைகள் கொண்டு மற்றவர்களுக்கு நன்மையைச் செயல்படுத்தும் முறைகளைத் தான் ஞானிகள் அன்று ஆலயங்களிலே காட்டினார்கள். ஆனால் அரசர் காலங்களில் அதை நாம் பெறுவதற்குண்டான தகுதியை நாம் பெற முடியாத நிலைகளாகவே உணர்த்தி விட்டார்கள்.

ஆகவே மனித வாழ்க்கையில் ஒருவர் துன்பப்படுகின்றார் என்றால் அவரைக் காக்க நாம் எந்த மாதிரியான ஆயுதத்தை எடுக்க வேண்டும்..? அந்த மெய் ஞானிகள் கண்ட அருள் வழிப்படி
1.நம் மனித வாழ்க்கையில் நாம் எதைச் செய்ய வேண்டும்…?
2.எப்படி நாம் செயல்படுத்த வேண்டும்…? என்ற நிலைகளை நாம் அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று முதலில் இந்த உணர்வுகளை நமக்குள் சேர்த்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

பின் மகரிஷிகளின் மூச்சலைகளைக் கண்ணுக்குள் பாய்ச்சி அவர் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அவர் நலம் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தில் அவருக்கு உபகாரத்தைச் செய்தீர்கள் என்றால் உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.

அவர்களுக்குப் பாய்ச்சிய உணர்வுகளை அவர்கள் சுவாசிக்கும் பொழுது அவர்களும் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெறுகின்றார்கள். அவர்கள் துன்பம் அகலும் சந்தர்ப்பமாக அது அமைகின்றது. அவர்களும் காக்கப்படுகின்றார்கள்.

1.கோவிலுடைய தத்துவமே “நல்லதைச் செய்…!” என்பது தான்.
2.ஆனால் நல்லதை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் காலத்தால் மறைந்து விட்டது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மறைந்த அந்த உண்மைகளைத்தான் இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

மகிழ்ச்சியாக இருக்கும்போது செய்வது தியானமா…? அல்லது இன்னல்கள் வரும்போது… அதிலிருந்து “உடனடியாக விடுபடுவதற்காகச் செய்வதற்குப் பெயர் தியானமா…?”

Image

Meditationg time

மகிழ்ச்சியாக இருக்கும்போது செய்வது தியானமா…? அல்லது இன்னல்கள் வரும்போது… அதிலிருந்து “உடனடியாக விடுபடுவதற்காகச் செய்வதற்குப் பெயர் தியானமா…?”

 

நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் நாம் கவலைப்படும்படியாக யாராவது பேசினால் நம்மை அறியாமலே உடனே சோர்வடைவோம்.

அதே மாதிரி நமக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட பிறர் கோபத்துடன் பேசிக் கொண்டிருந்தாலோ அல்லது எரிச்சலாகப் பேசிக் கொண்டிருந்தாலோ அதை நாம் உற்றுக் கேட்க நேர்ந்தால் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

அதே உணர்வுடன் வீட்டிற்கு வந்தால் பையன் ஏதாவது ஒரு சிறு குறும்புத்தனம் செய்தான் என்றால் அதே எரிச்சல் பட்டு கோபமாகி “என்னடா நாயே…? இப்படிச் செய்கிறாய்…!” என்று பேச வைத்துவிடும்.

நாம் அல்ல…! ஆனால் நாம் நுகர்ந்த அந்த உணர்வின் அலைகள் நம்மை இப்படி இயக்குகின்றது. இது தீய வினைகளாக நமக்குள்ளும் சேர்கின்றது. பையன் உடலுக்குள்ளும் சேர்கின்றது. தீய வினைகள் விளையும் பொழுது நமக்குள் தீய விளைவுகளை விளைவித்துவிடும்.

நாம் தவறு செய்யவில்லை என்றாலும் நம்மை அறியாமல நமக்குள் புகும் இந்தத் தீயவினைகளை யார் தூய்மைப்படுத்துவார்கள்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே
1.நாம் எப்பொழுது துன்பங்களைச் சந்திக்கின்றோமோ
2.அப்போது அந்த நேரத்திலேயே மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…!
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களையும் உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஏங்கிச் சுவாசித்து
4.இந்தத் தவக் கோலத்தை அந்த நிமிடமே இப்படி மாற்ற வேண்டும். இது தான் தவம்.
5.ஆகவே தவம் என்பது வரம் இருந்து பெறுவதும் அல்ல. வரம் பெற்றுச் செய்வதும் அல்ல.

அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் வலுவைப் பெற்றுக் கொண்டால் நீங்கள் சுலபத்தில் தியானிக்கலாம்.

அத்தகைய பழக்கம் வந்துவிட்டால் நாம் எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் நம் உணர்வின் அலைகள் கலக்கும். அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் இணைந்து வாழும் பக்குவ நிலைக்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

இதைப் படிப்போர் உள்ளங்களில் எந்த மனக் கவலை இருந்தாலும் நோய்கள் இருந்தாலும் வேதனைகள் இருந்தாலும் அல்லது அறியாது நிலைகள் எந்தத் தீயது இருந்தாலும் அந்த மகரிஷிகளின் பேராற்றல் உங்கள் உடலுக்குள் ஊடுருவி அந்தத் துன்பத்தை எல்லாம் அகற்றிடும் மிகச் சக்தி வாய்ந்த உணர்வாக உங்களுக்குள் பதிவாகும்.

நோயுடன் வாடிக் கொண்டிருந்தாலும் அல்லது சோர்வுடன் இருந்தாலும் இந்த உபதேசத்தின் உணர்வுகள் உங்களுக்குள் அந்த மெய் ஒளியைக் காணும் உணர்ச்சியாகத் தூண்டச் செய்து
1.உங்கள் வேதனைகளை இப்பொழுது குறைத்து இருக்கும்
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் வலுவாக வளர்க்கச் செய்யும்
3.அப்படி வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசம்.

ஏனென்ன்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்மையே செய்து வந்தாலும் உங்களை அறியாது வந்த தீய வினைகளை நீக்க வேண்டும் என்ற இந்த இச்சையில் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதைச் சொல்கிறோம்.

சில குழந்தைகள் பிறந்ததிலிருந்து நச்சு…நச்சு என்று அழுகின்றது – ஏன்…?

Image

Child in mother's womb

சில குழந்தைகள் பிறந்ததிலிருந்து “நச்சு…நச்சு என்று அழுகின்றது…!” – ஏன்…?

 

உதாரணமாக ரோட்டில் யாராவது சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அதை ஒரு கர்ப்பிணி கூர்மையாகக் கவனித்தால் போதும்.

உற்று பார்த்து… அடப் பாவிகளா…! இப்படியே நச்சு…நச்சென்று சதா சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்…! என்று அந்தக் கர்ப்பிணி எண்ணினால் அவர்கள் உடலிலிருந்து வெளி வந்த சண்டை போடும் உணர்வுளை அந்தத் தாய் கவர்ந்து அதைச் சுவாசிக்க நேர்கின்றது.

தாய் நுகர்ந்த அந்தச் சண்டையிட்ட உணர்வுகள் இரத்தத்துடன் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குள்ளும் நுகரப்பட்டுப் பதிவாகி விடுகின்றது.

கர்ப்பிணி அதை வேடிக்கையாகப் பார்த்திருந்தாலும் சரி… அல்லது நியாயத்தைப் பேசுவது போன்ற நிலையாக இருந்தாலும் சரி… கூர்மையாகக் கவனித்த அந்த உணர்வின் சக்திகளைக் கர்ப்பிணியின் கண் கவர்கின்றது.

அவர்கள் சண்டையிட்ட வெறித் தன்மையான விகாரமான சொற்களின் சொற்றொடரின் நிலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி அலைகளாகப் பரப்பப்டும் போது
1.கண் அவர்களைப் படம் எடுத்து
2.அந்த உணர்வலைகள் ஈர்க்கப்பட்டுத் தன் உடலிற்குள் செலுத்தப்படும் போது
3.கருவிற்குள் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இந்த உணர்வு வினையாகச் சேர்க்கப்பட்டு விடுகின்றது,

அந்தக் குழந்தை பிறந்த பின் என்ன செய்கிறது…? பிறந்த சிறிது நாள்களிலேயே நச்சு…நச்சு என்று அழுகத் தொடங்கும். உடனே “சனியன் இப்படியே அழுது தொலைக்கிறதே…!” என்று அந்தத் தாய் வெறுப்பாக எண்ணும்.

அப்போது அதே சமயத்தில் மற்றவர்கள் வந்து “குழந்தை அழுகிறதே… என்னம்மா செய்கிறாய்…? கொஞ்சம் என்ன என்று பார் அம்மா…!” என்று சொன்னால்
1.குழந்தையின் தாய்க்குச் “சுருக்…!” என்று கோபம் வரும்.
2.அவ்வளவு தான்… அங்கே சண்டை வந்து விடும்.
3.ஏனென்றால் கருவிலிருக்கும் பொழுது அந்தக் கர்ப்பிணி கூர்மையாகச் சண்டையைப் பார்த்தது. (சண்டையைப் பார்ப்பது என்றால் டி.வி.யிலோ கம்ப்யூட்டரிலே பத்திரிக்கையிலோ எதிலே பார்த்தாலும் அந்த நிலை தான்)
4.அதே சண்டை இங்கேயும் வந்து விடுகின்றது.

கருவில் இருக்கப்படும் போது இப்படி வேடிக்கை பார்த்த குழந்தையின் நிலைகளில் சில வீடுகளில் நீங்கள் பார்க்கலாம். சனியன்…! இது பிறந்ததிலிருந்து தான்… எனக்குப் பல தொல்லைகள் வந்தது…! என்று சில தாய்மார்கள் சொல்வார்கள்.

ஆனால் தாய்… தான் சண்டையையோ மற்ற அசம்பாவிதங்களையோ வேடிக்கை பார்த்ததாலேதான் கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அது சேர்ந்தது என்று நினைப்பதில்லை.

ஏனென்றால் உற்றுப் பார்த்துச் சுவாசிக்கும் பொழுது உணர்வின் காந்தங்கள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத்தான் “கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குக் கண்ணன் உபதேசித்தான்…!” என்று அன்றைய ஞானிகள் காவியங்களாக வடித்து நாம் அறிந்து கொள்ளும்படி செய்தார்கள்.

ஒவ்வொரு நொடியிலும் கண்களால் பதிவு செய்த உணர்வுகள் உடலுக்குள் சேர்ந்த பின் மீண்டும் அது எப்படி நம்மை இயக்குகின்றது…? அதை நாம் எப்படிப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்…? என்ற நிலைகளை மெய் ஞானிகள் எத்தனையோ காவியங்கள் மூலமாக உணர்த்தியுள்ளார்கள்.

கண்ணின் நினைவாற்றல் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து நம் உடலிற்குள் செயல்படுத்துவோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் புனிதத் தன்மையை நாம் நிச்சயம் பெற முடியும்.

1.கருணைக் கிழங்கில் இருக்கக்கூடிய விஷத்தை நீக்கி எப்படிச் சுவை மிக்கதாக உருவாக்கிச் சாப்பிடுகின்றோமோ
2.உடலில் வரக்கூடிய அழுக்கையும் துணிகளில் உள்ள அழுக்குகளையும் சோப்பைப் போட்டு எப்படிச் சுத்தப்படுத்துகின்றோமோ
3.தங்க நகை செய்தாலும் அதிலுள்ள செம்பையும் பித்தளையும் திரவகத்தை ஊற்றி எப்படி அதைச் சுத்தத் தங்கமாக்குகின்றோமோ
4.மண்ணிற்குள் பல உலோகங்கள் இருந்தாலும் அதை எல்லாம் பிரித்துவிட்டுச் சுத்தமான தங்கத்தை எப்படி எடுக்கின்றோமோ
5.அது போல் இந்த வாழ்க்கையில் பல எண்ணங்களையும் பல உணர்வுகளையும் நுகர்ந்தாலும் (சந்தர்ப்பங்கள் எப்படி இருந்தாலும்)
6.அதற்குள் இருக்கும் தீமைகளை மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு அகற்றுவதே யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த உபதேசத்தின் நோக்கம்.

நடு ரோட்டில் உடைந்த கண்ணாடியைப் பார்த்ததும் நமக்கு ஏன் ஆத்திரம் வருகின்றது…? நாம் அதை அகற்றுகின்றோமா…? அதையே அகற்றவில்லை என்றால் ஆத்திரத்தை எப்படி அகற்றுவோம்…?

Image

Good is blissful

நடு ரோட்டில் உடைந்த கண்ணாடியைப் பார்த்ததும் நமக்கு ஏன் ஆத்திரம் வருகின்றது…? நாம் அதை அகற்றுகின்றோமா…? அதையே அகற்றவில்லை என்றால் ஆத்திரத்தை எப்படி அகற்றுவோம்…?

 

ஒவ்வொரு நொடியிலேயும் நாம் தவறு செய்யாமலேயே நாம் ரோட்டிலே செல்லப்படும் போது நம்மை அறியாமல் எத்தனையோ நிலைகள் ஏற்படுகின்றது.

உதாரணமாக நாம் ரோட்டிலே மகிழ்ச்சியாக நடந்து செல்கின்றோம். நாம் போவதற்கு முன்னாடி ஒரு சிறு பையன் அவன் வீட்டிற்குத் தேவையான எண்ணெயைப் (கண்ணாடி) பாட்டிலில் வாங்கியவன் அவன் எதிர்பாராது கை நழுவிக் கீழே போட்டு உடைத்து விடுகின்றான்.

அப்பொழுது அவனுடைய எண்ணம் என்ன ஆகின்றது…? இந்த பாட்டில் விழுந்து விட்டதே…! பணம் போய் விட்டது… எண்ணெயும் போய்விட்டது… பாட்டிலும் உடைந்து விட்டது…! என்று அவன் மனம் பதறுகின்றது.

வீட்டிற்குப் போனால் அம்மா என்ன சொல்வார்களோ…? என்ற இந்த அச்சத்தின் நிலைகள் ஓங்கி அதனால் வேதனையான எண்ணங்களைச் சுவாசிக்கும் போது இந்த உடைந்த பாட்டிலை அப்படியே விட்டு விட்டுச் செல்கின்றான்.

வீட்டிற்குப் போய் நடந்ததைச் சொன்னதும் அவனுக்கு ஏச்சு… அவனுக்குப் பேச்சு… உதை… அனைத்தும் வருகின்றது. ஆனால் இவனுடைய சந்தர்ப்பம் எதிர்பாராது விழுந்து பாட்டில் உடைந்து விட்டது.

தாய்க்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. சிரமப்பட்டோம்…! ஆனால் இப்படிச் செய்து விட்டானே…! என்று பொருளும் பணமும் போய்விட்டது என்ற வேகத்தின் துடிப்பு வருகின்றது.

இந்த வேகத்தின் துடிப்பு வரும் போது தான் எடுத்துக் கொண்ட காந்தத்தின் புலனின் சக்தி குறைகின்றது.
1.எத்தனையோ கோடி ஆண்டுகள் நாம் ஒவ்வொன்றிலிருந்தும் காத்துக் கொள்வதற்காக
2.நம் உடலின் தன்மை விஷமாக மாற்றி
3.தன் எண்ணத்தை ஓங்கி வளர்க்கச் செய்து மனிதனாக வந்ததுள்ளோம்.
4.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வைச் சுவாசித்து
5.இந்த உணர்வுடன் கலந்து அந்தக் காந்தப்புலனின் ஆற்றலையும் பெருக்கி வந்த நிலையில்
6.அடுத்தவர்கள் செய்யும் தவறான செயல்களைக் கேள்விப்பட்டவுடன் ஆத்திரம் அதிகமாகின்றது.
(ஏனென்றால் நம் எண்ணத்தில் கலந்த விஷத்தின் உணர்வு அவ்வாறு துரிதமாக இயக்குகின்றது)

தன் பையன் மேல் ஆத்திரமும் கோபமும் அதிகமானதும் அதைத் தாங்காத நிலை வரும் போது நற்குணங்களைச் சிந்திக்கும் செயல் இழந்து குழந்தை மேல் பாசமாக இருந்தாலும் அது சமயம் இவன் செய்கையைச் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் இயக்கி ஆத்திரத்துடன் அவனைத் தாக்கும் எண்ணங்களே தோன்றுகின்றது.

குழந்தையோ தாயைக் கண்டவுடனே பயத்தாலே தன்னைத் தாக்க வருகின்றது என்று வெறுப்பின் உணர்வுகள் இங்கேயும் தோன்றுகின்றது இங்கேயும் அதை ஜீரணிக்கும் செயல் இழக்கின்றது. தாயின் உடலிலேயும் அதே நிலை ஆகின்றது.

ஆனால் அதே சமயம் முதலில் சொன்ன மாதிரி நான் என்னுடைய தொழிலின் நிமித்தமாக ரோட்டிலே நடந்து செல்கின்றேன். ஆனால் நடுரோட்டிலே இந்த உடைந்த பாட்டில் கூர்மையாகக் கிடைக்கின்றது.

நான் மகிழ்ச்சியோடு போனாலும் வேகமாகக் கால் வைக்கப்படும் போது அதைப் பார்த்து விடுகின்றேன். எதிர்பாராது உடைந்த பாட்டிலைப் பார்த்தவுடன் எனக்கு ஆத்திரம் வருகின்றது.

“அறிவு கெட்டத்தனமாக… இப்படி ரோட்டிலே பாட்டிலைப் போட்டு உடைத்து விட்டுப் போயிருக்கின்றார்கள் பார்…!” என்ற எண்ணம் தோன்றுகின்றது. ஆனால் அந்த எண்ணத்தின் வேகம் வரும் போது நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நல்ல எண்ணத்துடன் தான் சென்றேன். ஆனால்
1.என் காலில் குத்தி இருந்தால் என்ன ஆகும்…? என்ற இந்தப் பயமும் அந்தப் பயத்தின் உணர்வாலே ஆத்திரம் தூண்டும் போது
2.நம்மை அறியாமலே அந்த வேகத்தின் துடிப்பு அதிகமாகி
3.முன் பின் யார் செய்தது என்று நாம் பார்க்கவில்லை என்றாலும்
4.ஆத்திரத்தின் உணர்வின் வேகங்கள் அதிகமாகக் கூடுகின்றது.

இப்படிக் கூடிய இந்த ஆத்திரம் கோபம் வேதனை என்ற உணர்வின் சத்துக்கள் உடலுக்குள் சேர்ந்த பின் அந்த உணர்வின் வேக நிலைகள் எனக்குள் கலக்கின்றது.

ஆனால் நமது கண் “இது கெட்டது…!” என்று தான் காட்டுகின்றது. ஆனால் அதை நீக்குவதற்கு நாம் என்ன செய்கின்றோம்…?

நாம் தப்பித்துக் கொண்டோம். முதலில் நாம் பார்க்காமல் இருந்தால் அது நம்மைக் குத்தியிருக்கும். குத்தியிருந்தால் மிகவும் வேதனைப்படுவோம்.

நமது கண்ணோ இது குத்திவிடும் என்று காட்டுகின்றது. ஆனால் அந்த உடைந்த கண்ணாடிப் பாட்டிலை அப்புறப்படுத்த நமக்கு மனம் வருகின்றதா…? இல்லை…!
1.உடைந்ததை அப்புறப்படுத்த நமக்கு மனம் வரவில்லை.
2.உடலுக்குள் சேர்ந்ததை (ஆத்திரம் கோபம் வேதனை) நாம் எப்போது அப்புறப்படுத்துவது…?
3.ஆக நம் உடலுக்குள் எதைச் சேர்த்துக் கொள்கின்றோம்…? சிந்தித்துப் பாருங்கள்.

நம் கண் அதைக் காட்டும் போது இந்தப் பாட்டிலை அப்புறப்படுத்த வேண்டும். பிறருக்குக் குத்தக் கூடாது. பிறருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற இந்த எண்ணத்தை ஏற்றுத் தீயதை நீக்கும் நிலைகளுக்கு நாம் வர வேண்டும்.

இதைத்தான் கம்சன் என்ற துஷ்டனை சம்ஹாரம் செய்யக் கண்ணன் சிறையிலே பிறந்தான் என்று வியாசகர் சொன்னது. அதாவது
1.ஒரு தீய பொருளை நம் கண் பார்த்தவுடனே
2.அதை அப்புறப்படுத்த எண்ணினால் அந்தத் தீயது நமக்குள் சேர்வதில்லை.

ஆனால் அப்புறப்படுத்தாதபடி இப்படிப் போட்டு விட்டார்களே…! என்ற எண்ணங்கள் வரப்படும் போது நமக்குள் தீய சக்திகள் கூடி நாம் வெறுக்கும் நிலையும் ஆத்திரப்படும் நிலையும் தான் வருகின்றது… தீமைகளே நமக்குள் வளர்கின்றது.

அந்தத் தீமையான பொருளை அப்புறப்படுத்தாமல் அதற்கு மாறாக மற்றவர்களை ஏசும் நிலையும் தீமையைப் பார்த்து வேதனையான உணர்வுகளையும் தான் நாம் சுவாசித்து நம் நல்ல குணத்திற்குள் அதைக் கலந்து விடுகின்றோம்.

கண் தெரிந்த பின் இந்தக் கண்ணின் செயலாக்கத்தை எவ்வாறு நீ செயல்படுத்த வேண்டும்..? என்று இந்தப் பேருண்மையைத்தான் “கீதா உபதேசமாக…” வியாசக பகவான் அன்று மகாபாரதத்தில் காட்டியுள்ளார்.

காற்றிலே மிதந்து இருக்கும் நல் உணர்வின் சக்தியைப் புலனறிவான கண்களால் ஈர்த்து நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று உணர்த்தினார்.

1.நுண்ணிய அலைகளைத் தனக்குள் உணர்வாகச் சேர்த்து
2.தன் உடலுக்குள் அதை விளைய வைத்து உயிராத்மாவை ஒளியாக மாற்றி
3.பத்தாவது நிலையான ஒளியாக விண்ணிலே சென்றடைந்த அந்த மெய் ஞானிகளின் பால் நம் கண்ணின் நினைவைச் செலுத்க்தி
4.அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசித்து நமக்குள் சேர்த்து
5.நம் உடலுக்குள் வந்த தீய சக்தியினை விலக்கும்படி சொன்னார் வியாசக பகவான்.

ஆகவே வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை நீக்கிய அந்த மெய் ஞானிகளின் சத்து தான் நமக்கு உதவும். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்று நான் நன்மை செய்தேன்… ஆனால் பாவி எனக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று எண்ணினால் கடைசியில் எங்கே போவோம்…?

Image

Almighty destination

அன்று நான் நன்மை செய்தேன்… ஆனால் பாவி எனக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று எண்ணினால் கடைசியில் எங்கே போவோம்…?

 

உதாரணமாக நம் மனித வாழ்க்கையிலே நாம் ஒவ்வொருவரையும் சந்திக்கின்றோம். நண்பராகவும் பழகுகின்றோம். ஆனால் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நல்லது செய்தார்…! என்று அவர் மீது மகிழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

அதே சமயம் வெறுப்பான எண்ணங்கள் தோன்றி விட்டால் நான் அன்று நன்மையைச் செய்தேன். ஆனால் எனக்கு இன்று தீங்கு செய்கின்றான் பார்…1 என்று
1.தான் செய்த நன்மையைத் தான் எண்ணுவார்களே தவிர
2.மற்றவர்கள் அவர்கள் செய்த நன்மையை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை.

ஒருவருக்கு ஒருவர் தான் செய்ததை உயர்வாக எண்ணித் தன் கௌரவத்திற்காக அந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் கடும் சொற்களாலே ஒருவருக்கு ஒருவர் ஏசிக் கொள்கின்றார்கள்.

இந்த உணர்வுகள் இரண்டும் பேர் உடலுக்குள்ளும் பதிந்து விடுகின்றது. பதிந்த பின் என்ன செய்கின்றது…?
1.நான் அன்று நன்மை செய்தேன்… எனக்குத் தீங்கு செய்தான் பாவி…
2.அன்று நன்மை செய்தேன்…. இன்று தீங்கு செய்தான் பாவி…! என்று
3.இதையே தான் தியானிக்க ஆரம்பித்து விடுகின்றோம்.

நாம் கடும் உழைப்பு உழைத்திருப்போம். நாம் சுவைமிக்க ஆகாரங்களைப் புசித்திருப்போம். அந்த ஆகாரம் நம் வயிற்றில் தேங்கி இருக்கும்.

ஆனால் நண்பனிடத்தில் நட்பாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட மகிழ்ச்சி இழந்த பின் அவனை நினைக்கும் போதெல்லாம் தீங்கு செய்தான்… தீங்கு செய்தான்…! என்று வேதனயையும் துன்பத்தையும் ஆத்திரத்தையும் எண்ணித் திரும்பத் திரும்பச் சுவாசிக்கும் பொழுது “மூஷிகவாகனா…!”

நாம் சுவாசித்த அந்த உணர்வின் தன்மை நமக்கு வாகனமாக அமைந்து நம் உடலைச் சோர்வடையச் செய்கின்றது. அந்த உணர்வின் உமிழ் நீர் நம் ஆகாரத்தையும் நஞ்சாக மாற்றுகின்றது.

நாம் பாலிற்குள் விஷத்தைப் போட்டுச் சாப்பிட்டால் நம்மை எப்படி மயக்கம் அடையச் செய்கின்றதோ இதைப் போல
1.ஆகாரத்திற்குள் இருக்கும் நல்ல சத்தையே நஞ்சாக்கும் தன்மையாக
2.அதி வீரியமான தன்மை கொண்டு நம் உடலிற்குள் இருக்கும் “இரத்தத்தையும்…” நஞ்சாக மாற்றுகின்றது.

நம் உடலுக்குள் பல நற்குணங்கள் பலவும் இருந்தாலும் வேதனையான உணர்வும் எரிச்சலான உணர்வும் கோபமான உணர்வும் கலந்து விட்டால் அந்த உணர்வின் சிந்தனையே மீண்டும் மீண்டும் வரும்.

பாலுக்குள் அது சுவைமிக்க பொருள்களைப் போட்டுப் பாதாமையும் போட்டிருந்தாலும் காரத்தைப் போட்டு விட்டாலோ அல்லது விஷத்தைப் போட்டு விட்டாலோ அது முன்னணியில் வந்துவிடுவது போல் நமக்குள் இந்தக் கடுகடுப்பான உணர்வு முன்னணியில் வந்துவிடும்.

அது வளர வளர எப்படி ஒரு விஷச் செடி பூமியிலே பட்டுவிட்டால் அது நீரின் சக்தியைக் காற்றில் இருந்து தனக்குள் எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கிறதோ அதைப் போல நமக்குள் விளையும் ஒவ்வொரு வித்தின் தன்மையும் விஷம் கொண்ட உணர்வாக வளரச் செய்து நம் உடலுக்குள் நோயாக உருவாக்கி விடுகின்றது.

1.ஆனால் நாம் அதைத் தான் தியானிப்போம்….
2.வேறு யார் எதைச் சொன்னாலும் கேட்க மாட்டோம்…!
3.எனக்கு இப்படித் தொல்லையைச் செய்தான்… தொல்லையைச் செய்தான்… எனக்கு இம்சை கொடுத்தான்… என்ற எண்ணத்தையே நாம் சதா சுவாசிக்க நேருகின்றது.

இந்த அளவுக்கு வெறுப்பான எண்ணங்களை எடுத்த பிற்பாடு ஒரு நல்ல பொருளைக் கொடுத்து அதிலே “தரம் பார்க்கச் சொன்னால்… நாம் வெறுப்புடன் பார்த்து ஊ… ம்…! எங்காவது கொண்டு போய்ப் போடு…! என்போம்.

நல்ல பொருளை நாம் காண்பதே கடினமாகும். எதைப் பார்த்தாலும் வெறுக்கும் நிலை தான் வரும். நமக்குள் இந்த விஷத்தின் தன்மை ஓங்கி வளர்ந்த பின் இந்த உடலை விட்டு உயிராத்மா சென்ற பின் நமக்கு குடி இருக்கும் இடம் எதுவாகும்…?

எந்த நண்பன்பால் நாம் இந்த வெறுப்பை எடுத்துக் கொண்டமோ… யாரால் பல தொல்லைகள் வந்தது என்று சிந்தித்துத் திரும்பத் திரும்பத் தியானித்தோமோ… அந்த உடலுக்குள் புகுந்து இதே விஷத்தின் தன்மை கொண்ட தீயதை விளைய வைத்து அங்கேயும் நோயைத்தான் உருவாக்க முடியும்.

ஏனென்றால் பொதுவாக யாராக இருந்தாலும் சரி…! நான் எல்லோருக்கும் நன்மைதான் செய்தேன்… ஆனால் எனக்கு யாரும் நன்மை செய்யவில்லை என்ற இந்தப் பாட்டைத் தான் பாடுவோம்.
1,அப்படிப்பட்ட நிலைகளில் நம் எண்ணம் இருக்குமானால் அதனின் முடிவு கடும் வேதனையாகி
2.நோயைத்தான் தனக்குள்ளும் அடுத்த உடலுக்குள்ளும் உருவாக்க முடியும்.

ஆகவே நம் வாழ்க்கையின் எல்லை எது…? என்றும் இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…! என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்,

“துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்…!”

Image

sages-station

“துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்…!”

கண்ணன் கருவிற்குள் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்று அன்று ஞானிகள் காட்டினார்கள். வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் அந்தத் துன்பத்தை நீக்க
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரை வேண்டி
2.மனித வாழ்க்கையிலே துன்பத்தை வென்று உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற நினைவை
4.நம் கண்ணான ஆன்டெனாவிற்கும் கண்ணனாக உபதேசித்த நம் கண்ணிற்குள்ளும் அதைச் செலுத்தி
5.விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளிலும் படர வேண்டும் என்று ஏங்கிடல் வேண்டும்.

எப்படி…?

சாதாரணமாக ரேடியோவோ டி.வி.யோ பார்க்க வேண்டும் என்றால் ஆன்டெனா என்று ஒரு சாதனத்தை அதனுடன் இணைத்து வெளியிலே வைத்திருப்பார்கள். அந்த ஆன்டெனாவிற்குள் காந்தத்தை பரப்பச் செய்திருப்பார்கள்.

வெளியிலிருந்து வரக்கூடிய காந்த அலைகளை இந்த ஆன்டெனா கவர்ந்து டி.வி.க்குள் மோதியவுடன் அந்தந்த அலை வரிசையின் உணர்வுகளைப் படமாகக் காட்டுகின்றது.

இதைப் போன்று தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் நினைவின் எண்ண அலைகளைக் கண்ணான ஆன்டெனா மூலமாக விண்ணிலே பாய்ச்சச் செய்கின்றோம்.

எதை எண்ணி ஏங்குகின்றமோ அந்த உணர்வின் அலைகளை இந்தக் காற்றிலிருந்து கவர்ந்து நேரடியாக நம் உடலுக்குள் சென்று அந்த உணர்வின் எண்ண அலைகளாகப் பரப்பி அந்த உணர்வின் நிலையை நமக்குள் செயலாக்கும்.

மனித வாழ்க்கையில் வரும் வேதனைகளையும் இன்னல்களையும் தடுக்க அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
1.எல்லோருடைய நினைவையும் கூட்டி
2.கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏக காலத்தில் ஏங்கும் பொழுது
3.உங்கள் அனைவருக்கும் அந்த நேரடித் தொடர்பு கிடைக்கின்றது.

அதாவது தீமையை நீக்கி மெய் ஒளி பெறும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் செலுத்தும் போது
1.நமக்குள் இருக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மைக்கும் அது உபதேசிக்கப்பட்டு
2.மெய் உணர்வின் வழியில் அதன் உணர்வுகள் நமக்குள் செயலாக்கத்திற்கு வரும்.
3.என்றுமே அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் நினைவின் அலைகளை துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்வதற்கே இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

நம் உடலை இயக்கும் காந்த சக்தி குறைந்தால் என்ன ஆகும்…?

Image

Magnetic power of human body

நம் உடலை இயக்கும் காந்த சக்தி குறைந்தால் என்ன ஆகும்…? 

உதாரணமாக பெரும் கொண்ட மிளகாயைப் பார்க்கலாம். ஆனால் “செக்கச்செவேல்…!” என்று இருக்கும். அதற்குள் விஷத்தின் தன்மை கம்மியாக இருக்கும். ஆனால் அந்த மிளகாயில் காரம் இருக்காது.

அதே சமயம் இன்னொரு மிளகாயை எடுத்துக் கொண்டால் வாயில் வைத்தவுடனே “சுரீர்…!” என்று காரம் உடல் முழுவதற்கும் ஊடுருவும். ஆனால் அதில் விஷம் அதிகமாக இருக்கும்.
1.விஷம் அதிகமாக இருப்பதால் அந்த மணத்தை வேகமாகத் தூக்கிச் சென்று
2.அதை இயக்கவல்ல ஆற்றலாகச் செயல்படுத்துகின்றது.

இதைப்போல தான் ஒவ்வொன்றிலேயும் இருக்கும் விஷத்தின் அளவுகோலுக்கொப்ப அதனின் ஆற்றலை நாம் காணலாம்.

சாந்த குணத்தை எண்ணுகின்றோம் என்றால் அதில் விஷம் கம்மி. நாம் கோபமான நிலைகளை எண்ணினால் அதிலே விஷத்தின் ஆற்றல் அதிகம். பயத்தின் நிலைகள் அதிகமாக எடுக்கின்றோம். அதிலும் விஷம் ஜாஸ்தி.

அதை அதிகமாக எண்ணிச் சுவாசிக்கும் போது இந்த விஷத்தின் தன்மை நம் உடலை வேகமாக இயக்கச் செய்து நம்மை ஆபத்தில் இருந்து நம்மை காக்கவும் செய்கின்றது. ஆனால்
1.ஆபத்திலிருந்து காத்தாலும் நம் உடலின் சக்தியை அதிகமாக இயக்கப் போகும் போது
2.நாம் எடுக்கும் இந்தக் குணத்தை ஈர்க்கும் நிலைகள்
3.நம் உடலில் இருக்கக்கூடிய காந்தத்தின் சக்தி அது பலவீனமடைகின்றது.

உதாரணமாக ஒரு மோட்டாரில் மேக்னட் இருக்கின்றது. மோட்டார் சுழன்று ஒரு ரைஸ் மில்லிலே அது இயக்குகின்றது. நெல்லை அரைக்கும் பொழுது அதிலே நெல்லை அதிகமாகக் கொட்டி விட்டால் அரைக்கும் திறன் குறைந்து “மோட்டார் சூடாகிவிடுகின்றது…!”
1.ஆக அது சூடாகும் போது அதில் (WINDING) இருக்கக்கூடிய காந்த சக்தி குறைகின்றது.
2.இப்படி மோட்டாரில் இருக்கும் காந்தம் குறைந்து விட்டால்
3.அடுத்து சிறிதளவு நெல்லைப் போட்டாலும் அதனின் அரைக்கும் திறன் குறைகின்றது.
4.மோட்டார் வலு குறைந்துவிட்டது (WEAK) என்று சொல்கிறோம்.

இதைப்போல தான் விஷத்தை முறியடிக்கும் உணர்வின் சத்து நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக இருந்தாலும் அடிக்கடி நாம் எடுக்கும் கோபமும் வெறுப்பும் பயமும் வேதனையும் ஆத்திரமும் அதிகமாகி விட்டால் நமக்குள் இருக்கக்கூடிய காந்தத்தின் சக்தி குறைந்து விடுகின்றது.

அதனால் நாம் சுவாசிக்கும் உணர்விற்குள் வரும் விஷத்தின் சத்தை வடிக்கும் திறன் இழக்கப்பட்டு நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குள் கோபம் பயம் வேதனை என்ற குணங்களின் “விஷம்” கலந்து விடுகின்றது.

சத்தான பாலாக நாம் குடித்தாலும் சத்தான சுவையான ஆகாரம் என்று சாப்பிட்டாலும் அதற்குள் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் அந்த விஷம் அதிகமாகி அது உட்கொள்பவரை மாய்த்து விடுகின்றது.

அதைப் போன்று தான் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணம் அனைத்தும் காந்தப்புலனின் தன்மை குறைக்கப்படும் போது இந்த விஷத்தை நீக்கும் திறன் இழக்கப்படுகின்றது.

நாம் சுவாசித்த உணர்வுக்குள் வரும் விஷத்தைக் கழிக்க முடியாததால் நம்மை மனிதனாக இயக்கச் செய்யும் அறிந்துணர்ந்து செயல்படும் நற்குணங்களின் ஆற்றல் அனைத்தும் குறைந்து விடுகின்றது.

ஆரம்ப நிலைகளிலே மிருகங்கள் எப்படி விஷத்தின் தன்மையைத் தன் உடலாக மாற்றிக் கொண்டதோ அதைப் போன்றே நல்ல குணங்கள் அனைத்திற்குள்ளும் விஷம் புகுந்து அதிலே ஆக்கிரமித்துக் கொள்ளும்.

இப்படித்தான் நம் நல்ல குணங்கள் பாழாகின்றது. நல்ல குணங்களால் உருவான நல்ல உடலிலும் நோயாகின்றது. பின் குறுகிய காலத்திலேயே மடிந்து பின் மனிதனல்லாத உடலுக்குள் தான் சென்று பிறக்க நேரும்.

இதைப் போன்ற நிலைகளைத் தடுப்பதற்காகத் தான்
1.விஷத்தை வென்றிடும் ஆற்றலைப் பெற்று
2.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிய
3.அந்த மகா ஞானிகளின் உணர்வை உங்களைப் பெறச் செய்கின்றோம்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை இணைத்துக் கொண்டே வந்தால் நம் நல்ல குணங்களுக்கு அது ஊட்டச் சக்தியாகி விஷத்தைக் கழிக்கும் வீரிய சக்தியாகப் பெறுகின்றது.

அதாவது நாம் சுவாசித்த கோபம் பயம் வேதனை ஆத்திரம் போன்ற குணங்களை இயக்கும்
1.விஷத்தின் சக்தியை நாம் அடக்குகின்றோம்.
2.அடக்கி நல்ல குணங்களை இயக்கும் வீரிய சக்தியாக மாற்றுகின்றோம். அவ்வளவு தான்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய விஷம் வந்தாலும் அதை உணவாக எடுத்து ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது. என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலையில் உள்ளது.

அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.