Headache – disease

Headache – disease

The growth of our body, mind and our health, depend upon the kind of the breath that we take. All the ailments that we get are not hereditory; they do not come only by our contact with others.

They say many of them are hereditory only. Of course there are a few that are connected to the blood. But we can avoid some of these by cherishing good thoughts in us, doing good deeds, taking good food.

1.If we do meditation and take the spiritual path it is possible to avoid getting any ailment.
2.Man gets all diseases only from the quality of his thoughts.

How does one get headache…?

When our mind is normal or balanced, our body is in a sound state.
1.When one thought strikes the other the flow of saliva from our mouth is reduced.
2.Then the capacity to digest the food that we take is reduced.
3.This is the cause for the headache and other ailments.

The pain in the head is the first symptom; then will follow vomitiing, unconsciousness, fever and other things. A man who gets these troubles often loses the functioning capacity of some of the organs.

When any of the organs loses its working capacity it becomes very difficult to cure it. All the diseases that we get are brought about by us.

A person who is steady in his mind is always free from any disease and has peace of mind. When we take a different kind of food we say that our health is affected by that food.

1.When we think of the different place and the different food our thoughts also change.
2.That agitated state of mind changes our breath and the condition of the saliva changes and the capacity to digest the food decreases.

We put the blame on the food. The food that we take for our body, we should relish and take as a good one.

In the various books that our elders have written about the state in which we have to take our food and the state that our bodies get by taking the food, they have pointed out several things.

1.The food that we take should be considered as ambrosia given to us by God.
2.They have said “‘you eat when you are hungry”.

The food that we eat when we are hungry will be relished by us and will be in a state in which it can be easily absorbed by our body.

Our elders have told us the ways to prepare various kinds of food. If we take the food that we like, no disease will come to the body or the mind.
1.While taking food if our thoughts are shattered or we get extremely glad or sorrowful
2.the food that we take in that state will not be absorbed by our body.

This people should realise and avoid getting several diseases by not remaining in those states while taking food.

We say when we go and see any sick person, the sick atoms will attack us and we are likely to get that disease.
1.If the person who goes to see the sick person is steady in his own state
2.and does not feel that he will be affected by any sick atom from the diseased, the sick atoms cannot attack him.

But blood relations of the sick person and persons who have the same type of thoughts, the very breath of the sick person will have effect on them.

With some type of fever the atoms will come out with the breath and will be circulating round the patient. To those who are not in good health and those who are not steady in their thoughts, when the very breath of the sick person strikes on them, the sick atoms will get lodged in them.

1.All these atoms are in this vast world.
2.The atoms that bring sickness and the atoms of the medicines that cure the sickness are all in this air.

Our state depends upon the breath that we take. It is by our thoughts that we get all diseases. In what state do we get new diseases now-days…?

New medicines have also been found out. The reason for these new disease is that the whole atmosphere has been made poisonous by the increase in the number of living beings, the smoke from the chimnies of the various industries, our taking out the treasures from inside the earth and the depreciated state of the vegetation that exists now.

In the present state of the world unless the rapid increase in the population is controlled, the vegetation will not improve even after the expected change that is to take place in this world shortly.

1.The growth of the vegetation is the real growth of the world.
2.The advancement in science is not the real growth of the world.

Know how to balance the growth of the living beings with that of the vegetation. Tomorrow I will tell you as to how some children are born with some disease or get the disease in their young ages.

வீடுகளில் மாட்டுச் சாணத்தைத் தெளிப்பது ஏன்…? கோலமிடுவதன் தத்துவம் என்ன…?

வீடுகளில் மாட்டுச் சாணத்தைத் தெளிப்பது ஏன்…? கோலமிடுவதன் தத்துவம் என்ன…?

 

நாம் நமது வீடுகளில் மாட்டின் சாணத்தைத் தெளித்து மெழுகுகிறோம். இது ஞானிகள் நமக்கு வழிப்படுத்திக் கொடுத்தது.

நாம் வீட்டில் மாடுகளை ஒரு ஒதுக்குப் புறமாகப் பார்த்துத் தள்ளிக் கட்டி வைக்கிறோம். ஆனால் அதனுடைய சாணத்தை வீட்டில் தெளிக்கிறோம். எதற்காகத் தெளிக்கின்றோம் என்று, நமக்குத் தெரிய வேண்டுமல்லவா…?

1.தூசுகளை அடக்குவதற்காகச் சாணத்தைத் தெளிக்கின்றோம் என்று நினைக்கின்றோம்… தூசிகளை அல்ல.
2.வேதனைப்பட்ட உணர்வுகளை அடக்குவதற்காக வீடுகளில் மாட்டுச் சாணத்தைத் தெளிக்கின்றோம்.
3.மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால் வெளியிலிருந்து வரும் தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.

நாம் வெளியே எங்கே சென்றாலும் அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன் நமது உடலில் சேர்கின்றது. அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால் நமக்குள் அது வலிமை பெறுகின்றது.

விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும் வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின் நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

ஏனென்றால்
1.மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கிய பின் விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக அதன் சாணம் வெளிப்படுகின்றது.
2.ஆகவே விஷத்தை ஒடுக்கும் வல்லமை அந்த மாட்டின் சாணத்திற்கு உண்டு.
3.ஆகையால் ஞானிகள் “மாட்டின் சாணத்தை, வீட்டில் தெளி” என்றார்கள்.

மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால் நம்மால் வெளியிடப்பட்டு வீட்டில் பதிந்துள்ள சங்கடம் சலிப்பு வேதனை போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.

வீடுகளில் கோலமிடுவதும் சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை தான்.

வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். மாமியார் மீது வெறுப்பு மாமனார் மீது வெறுப்பு கணவர் மீது வெறுப்பு என்று இந்த வெறுப்பின் உணர்வுடன் கோலப் பொடியைக் கையில் எடுத்தால் அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.

இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால் என்னாகும்…? அது ஒழுங்காக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள் ஒரு புள்ளியை வைத்தால் தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.

கோலம் எதற்காகப் போடுகிறார்கள்…? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.
1.கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்களாலானது.
2.காந்தப் புலன்கள் கொண்ட கோலப் பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது
3.நாம் எண்ணுகின்ற உணர்வுகள் கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
4.குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று எண்ணி
5,அந்த உணர்வுடன் கோலப் பொடியை எடுத்துப் புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது அங்கே ஒன்றுபடும் தன்மை வருகின்றது.

வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு அனைவரையும் அரவணைக்கும் தன்மை வரவேண்டும்… நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும்… இணைந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித் தான் கோலமிட வேண்டும்.

சாஸ்திரங்கள் காண்பித்த தத்துவங்கள் பொய்யல்ல.

தன் குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் கொள்ளும் பொழுது மகிழ்ச்சியான உணர்வின் தன்மை வீட்டிலே உருவாகின்றது. செய்து பாருங்கள்…!

துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு தீமைகளை அடக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு தீமைகளை அடக்க வேண்டும்

 

சந்தர்ப்பத்தினால் வீட்டிற்குள் சிறு குறைகள் வந்துவிடும். அது ஏன்…? என்று சிந்திக்க முடியவில்லை. அதனுடைய பொருளை அறிய விரும்பினால்
1.நமது ஆறாவது அறிவு கொண்டு சிந்தித்து “சரி ஏதோ சந்தர்ப்பம்…!” என்று விட்டுவிட்டு
2.அடுத்த சந்தர்ப்பம் வரும் பொழுது சொல்லித் திருத்த முடியும்.

பையன் படிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம். மற்ற பையன்களோடு சேர்ந்து விளையாடுகின்றான்… இருள் சூழ்ந்து விடுகின்றது. அவன் எங்கோ சுற்றிக் கொண்டேயுள்ளான் என்ற உணர்வைச் செலுத்தி வேதனைப்படுத்தும் உணர்வையே நமக்குள் எடுத்துப் பேசிக் கொண்டேயுள்ளோம்.

நாம் நினைத்த நேரத்திற்கு வீட்டிற்கு வராமல் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தால் நாம் எண்ணும் வேதனை உணர்வுகள் அங்கு சென்று அவனைச் சிந்திக்க விடாது செய்து கீழே விழுந்து அடிபடும் நிலையை உருவாக்கி விடுகின்றது.

சாமி சொன்னார் உபதேசம் நன்றாக இருக்கின்றது. ஆனால் அடுத்தபடியாகப் பையனைப் பார்க்கும் பொழுது “இவ்வாறு செய்து கொண்டிருக்கின்றானே…!” என்ற உணர்வுகள் தூண்டுகின்றது. பத்தாவது நிலை அடையக்கூடிய இந்த உயிர் நாம் எண்ணுவதை உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை அறிவதற்காக
1.“நாங்கள் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும்” என்று எண்ண வேண்டும்.
2.என் பையன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

இது போன்ற சுவையான உணர்வுகளை உங்களுக்குள் நுகர வேண்டும். நுகர்ந்தால் வசிஷ்டர் பிரம்மகுரு… பிரம்மகுருவின் மனைவி அருந்ததி. நாம் நுகர்ந்ததுதான் வசிஷ்டர். அந்தச் சக்தி அவருடன் இணைந்து இயக்குகின்றது என்ற இந்தத் தத்துவம் தெளிவாகக் கூறப்படுகின்றது.

தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! ஒருவர் ஒரு குறையைச் சொன்னாலும் நம் மனம் மங்காதபடி “ஏன்” என்று சிந்திக்க வேண்டும். வைரத்தைப் போல எங்கள் சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் எத்தனையோ நிலைகள். மாமியார் ஒன்று சொல்லி விட்டால், நாம் கோபித்துக் கொள்கிறோம். நாம் கோபித்தால்… நாம் எதைச் சொன்னாலும் அவர்கள் நம் மேல் கோபித்துக் கொள்வார்கள். இதைத் துடைக்கின்றோமா…?

இரண்டு பேரும் ஒருவர் மேல் மற்றொருவர் குறை சொல்லிக் கணவனும் இருவர் கூறுவதையும் கேட்டுக் கேட்டு அவரும் கோபப்படுகிறார். என் அம்மா இப்படி… என் மனைவி இப்படி…! என்று கோபப்படுகிறார்.

1.இதே கோபத்துடன் போய்த் தொழில் செய்யும் பொழுது அங்கே தொழிலும் நஷ்டம் அடைகின்றது.
2.கடைசியில் என்ன ஆகின்றது…? தொழில் செய்யும் இடங்களில் பகைமையாகின்றது.

அதனாலே நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் பார்க்கின்றோம். ஜாதகம் ஜோசியம் பார்த்து சனி உட்கார்ந்திருக்கிறான் என்ற நிலையில் நாம் சனீஸ்வரனின் கோவிலில் போய் இன்னும் கொஞ்சம் காசைச் செலவு செய்து விட்டு அதை வளர்த்துக் கொண்டுதான் வருகிறோம்.

எங்கே செல்கிறோம்…? நாம் சனீஸ்வரனின் கோவிலில் போய் யாருக்கோ காசைக் கொடுத்து அவர்கள் சொல்லும் முறைப்படி செய்தால் எல்லாத் தோஷமும் போய்விடும். அங்கிருக்கும் குளத்திலே குளித்துவிட்டு வந்தால் தோஷம் போய்விடும் என்று நம்புகிறோம்.

ஆனால் அங்கே குளித்துவிட்டு, மேலும் கொஞ்சம் அழுக்கைச் சேர்த்துக் கொண்டுதான் வருவார்கள். இது போன்ற தவறான வழிகளில்தான் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். ஆக… நாம் செய்ய வேண்டியது என்ன…?

1.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரது வாழ்வும் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும்.
2.என் வாழ்வு ஜொலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அடுத்து மலரைப் போன்ற மணம் நாங்கள் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும், எங்கள் குடும்பத்தில் உள்ள அனவரும் அந்த நிலை பெற வேண்டும்.

ஏனென்றால் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்ந்த உணர்வுகள் இங்கே இருக்கின்றது. அதை எளிதாக எடுத்து நமக்குள் வளர்த்துத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி எண்ணுதல் வேண்டும்.

இதைத்தான் ஆதிமூலம் என்ற உயிர்… மிருக நிலையிலிருந்து இன்று மனிதனாக உருவாக்கியது, அதாவது முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது… கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா என்று நம் உயிரை வணங்கச் சொன்னார்கள் ஞானியர்கள்.

நாம் தீமையிலிருந்து நீங்க வேண்டும் என்பதற்காகக் கணங்களுக்கு அதிபதியாகி உடலில் உள்ள நஞ்சை மலமாக மாற்றுகின்றது… அங்குசபாசவா, யானை பெரியது ஆனாலும் அதை அங்குசத்தால் அடக்கிவிடலாம்.

1.அதே போன்று விஷம் அனைத்திலும் வலிமையானது.
2.அந்த விஷத்தைத் துருவ நட்சத்திரத்தின் துணை கொண்டு அடக்குதல் வேண்டும்.
3.அங்குசபாசவா… தீமைகளை அடக்கும் நிலை.

All the energy lies in the air

All the energy lies in the air

People say that a man’s life depends upon his status. By status man means his financial position. A man is judged by the wealth that he has got now.

But there is another status for the soul after it leaves the body. The status given to a man during his life-time is given by man.

1.If a man during his life-time in this world leads a life with his thoughts and deeds devoted to spiritualism and love
2.then after his soul leaves the body it will get a state of spotless divine light.
3.A soul of this type when it gets the previlege of living like a deity, no other bad atom can come and attack it.
4.Before he comes to this state all the other types of atoms in him lose their power.

If a man takes to spiritual way of life and is charitably minded the duration of his life as man becomes much less.

The long life that we live with our soul is in the astral world, the thoughts that we have and the deeds that we do while we are in this physical world will come with us to the astral world in the form of thought and sound waves.

The money and other properties that we acquire in this world will not come with us. The thought and sound waves that we have created during our lifetime, from our birth till our soul leaves the body follow our soul to the other world.

1.So cherish good thoughts and good deeds and know that
2.these are the wealth that we can acquire for our soul.

From the thought and sound waves that come from the spirit world we should learn to absorb only the good ones and save ourselves from the bad ones.

All the energy lies in the air. Food, air, water, medicines for our body, many minerals and liquids all that are inside the earth remain mixed with the air.

We should train ourselves to absorb what we want from the air.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்ற ஒலிக்குள் இருக்கும் உட்பொருள்

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்ற ஒலிக்குள் இருக்கும் உட்பொருள்

 

ஒருவர் திட்டுகின்றார்… அதைக் கூர்மையாகக் கேட்டால் அவர் திட்டக்கூடிய எண்ணம் நமக்குள் பட்ட உடனே வேதனையான உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

வேதனையைத் தூண்டும் போது அதன் வழி தான் நாம் நடக்கின்றோம். இதைப் போன்ற நிலையில் இருந்து அடுத்து அந்த வேதனைப்படும் உணர்ச்சிகள் நம் உடலில் மற்ற உணர்வுடன் அது பரவும் பொழுது நமது நல்ல எண்ணங்கள் சரியாக இயக்க முடியாதபடி தடைப்படுத்துகின்றது.

1.நல்லதை இயக்கவிடாமல் தடுக்கும் அந்தச் சக்தியைத் தடைப்படுத்த வேண்டுமல்லவா…!
2.அதற்கு என்ன வழி…?

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் அடிக்கடி சொல்கின்றோம். நாம் அனைவரும் அப்படி ஏகமாகச் சொல்லும் பொழுது சிலருடைய குரல்கள் வித்தியாசப்பட்டாலும் மற்றவர்களுடன் அது இணைந்து… தனித்துப் பிரித்துக் காட்டாது.

ஒருவருக்கு சப்தம் அதிகமாக இருந்தது… ஒருவருடைய குரல் வீச்சாக இருந்தது என்றாலும் தொனியைக் குறைத்து விட்டால் ஒன்று போல் இனிமையாக இருக்கும்.

உதாரணமாக வாத்தியங்கள் வாசிக்கப்படும் பொழுது அதிலே ஒருவர் பாடுகின்றார். அதிலே பல விதமான நாதங்கள் உண்டு. அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து இனிமையாகக் கேட்க வைக்கின்றார்கள்.

அதைப் போல பல விதமான எண்ணங்கள் கொண்டு நாம் வந்திருந்தாலும் ஒருமித்த எண்ணங்கள் கொண்டு ஒன்று போல ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது நாம் எழுப்பும் குரல் எல்லோருடைய குரலும் ஒன்றி இருக்க வேண்டும்.

1.ஓ…ம் என்பது நமக்குள் ஜீவனாக இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்.
2.நாம் எண்ணியதை ஜீவனாக்கச் செய்வது உயிர்.
3.ஜீவன் ஆனபின் உடலாக இணையச் செய்வதும் உயிர். அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா…!
4.ஈஸ்வரா என்றால் இயக்கச் சக்தி.
5.குருதேவா…! நம் உடலில் உள்ள அனைத்து உணர்வுகளுக்கும் உயிர் குருவாக இருக்கின்றது.

எல்லோரும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஒவ்வொரு சமயமும் இதைத் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம். இதைக் கேட்டாலும் கூட ஓ…ம் என்ற பிரணவத்திற்கு என்ன பொருள்…? என்று திரும்பியும் கேட்பார்கள்.

ஓ…ம் என்றால் எங்கேயோ பிரணவம் இருக்கிறது என்று எண்ணியே பழக்கப்பட்டு விட்டோம். ஆகவே தெளிவாகத் தெரிந்து மனதில் பதிய வைக்கத் தான் திரும்பவும் ஞாபகப்படுத்துகின்றோம்.

உபதேசம் ஆரம்பிப்பதற்கு முன் இந்த மைக்கை எப்படிச் சரி செய்து கொள்கின்றோமோ இதைப் போன்று
1.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போது
2.நம் உயிரின் இயக்கம் மற்ற இந்த உலகத் தொடர்பு கொண்ட உணர்வுகள் நம் ஆன்மாவாக இருக்கப்படும் பொழுது
3.அந்த நிலைகள் நமக்குள் இயங்காத வண்ணம் அதைத் தடுத்து நிறுத்தவும்
4.நம்முடைய எண்ண ஏக்க அலைகள் இப்போது உபதேசிப்பதை அது ஊழ்வினையாகப் பதிவு செய்வதற்கும் உதவியாக இருக்கும்.

“எண்ணிலடங்காத உணர்வின் சுழற்சிகள்” நம் ஆன்மாவில் உண்டு. அதையெல்லாம் நம் சுவாசத்திற்குள் வராதபடி தடுத்துவிட்டு மெய் ஞானிகளின் உணர்வை உள் புகுத்துவதற்காகத்தான் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரே உணர்வாக ஓ..ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று சொல்கிறோம்.

விண்ணுலகில் உள்ள ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் உயிரிலே… புருவ மத்தியிலே எண்ணும் போது
1.அவர்கள் ஈர்ப்புக்குள் நாம் செல்கிறோம்… அதைக் கவரும் ஆற்றலும் பெறுகின்றோம்.
2.புருவ மத்தியில் அடிக்கடி எண்ண எண்ண நம் இயக்கம் உயிர் வழி சுவாசமாக அமையும்.

இயற்கையில் உருவாகும் சுழிக் காற்றும்… அதனின் விளைவுகளும்

இயற்கையில் உருவாகும் சுழிக் காற்றும்… அதனின் விளைவுகளும்

 

வாழ்க்கையில் ஓரளவுக்கு நான் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றார் குருநாதர்.

அங்கே பல பல தாவர இனங்களின் சத்துக்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தாலும் கவர்ந்த உணர்வலைகள் அலைகளாகத் தொடரப்படும் பொழுது அந்த ஒவ்வொரு உணர்வுகளும் எப்படித் தனக்குள் எடுத்து வளர்த்து தனது சக்தியாக… பல பல செடிகள் உருவாகி அது எப்படி வந்தது…?

ஒவ்வொரு செடியாக உருவாகி அதனின் மணங்கள் உணர்வலைகளாக வெளிப்பட்டதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்திருந்தாலும்
1.எந்தச் செடியாக உருவானதோ அந்தச் செடியில் இருந்து வெளிப்பட்ட இந்த உணர்வின் வித்து இன்னொரு பக்கம் பட்ட பின்
2.தன் தாய்ச் செடியில் இருந்து வந்ததைத் தன் இனமாகக் கவர்ந்து செடிகள் எவ்வாறு உருவாகிறது…? என்று நீ பார் என்று காட்டினார்.

அந்தச் செடிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அப்படி இணையப்படும் பொழுது சுழிக்காற்று உருவாகின்றது… நாம் பார்க்கலாம்.

மற்ற செடிகளின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது சுழிக் காற்றுகளாக உருவாகி அதிலே எந்த உணர்வின் சத்து அதிகமாகின்றதோ அது மற்றதைக் கவர்ந்து அதற்குள் சேர்த்து… ஒரு உணர்வின் கருவாக உருவாகிப் புவியின் ஈர்ப்புக்குள் சென்று… “ஒரு புதுச் செடியாக உருவாகின்றது…”

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தாலும்
1.பிறரிடமிருந்து வரும் எண்ணத்தின் உணர்வுகளை நாம் சுவாசித்து
2.நம் உயிருக்குள் பட்ட உடனே சுழிக் காற்று போல நமக்குள் அந்த சுழலும் தன்மை அடைகிறது.

நாம் ஒன்றைப் பார்த்த உணர்வினைப் பொறுமையாகக் கண் எடுத்துப் பதிவு செய்தாலும்…
1.அதனால் சுழலின் தன்மை ஆகி இரண்டும் ஒன்றாகி இது விளையும் கருவாக வித்தாக
2.தான் ஈர்க்கும் சக்தியாக உருவாவதை நீ பார் என்று உணர்த்தினார்.

இவ்வாறு உணர்த்தியபின் வாழ்க்கையில் மனிதர்கள் தவறு செய்யாமலேயே… தன்னை அறியாமலே பல வேதனைகளை எவ்வாறு படுகின்றனர்…? என்ற நிலையினைக் காட்டுகிறார்.

பிறருடைய எண்ணங்களை நமக்குள் எண்ணிய பின் இந்த உணர்வின் ஆற்றல் மறைந்து உடலில் புதுப்புது கருவித்துகளாக ஊன்றி இந்தக் காற்றிலே படர்ந்து வெளிப்பட்ட உணர்வுகளை அது தன்னிச்சையாகக் கவர்ந்து எப்படி வளர்கிறது…?
1.மனிதனுடைய நிலைகளே சீர்கெடும் நிலைகளுக்கு எப்படி உருவாகிறது…? என்று காட்டுக்குள்ளும் ஊரிலும் சுற்றிக் காண்பித்து
2.இதிலிருந்து மீளும் வழி என்ன…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் தனக்குள் தீமையை வென்றிட தன் எண்ணத்தால் மேகத்தை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த மேகங்களைத் தனக்குள் கவர்ந்து தன் உடலுக்குள் வரும் பொழுது நீராகச் சுரந்து தன் ஜீவித நிலைகளை உருவாக்குகின்றான்.

அதே போல் மற்ற தாவர இனச் சத்தை அவன் நுகர்ந்தறிந்து தன் உடலிலே பதிந்து கொள்கின்றான்.
1.எங்கே நின்று இதையெல்லாம் அவன் கவர்ந்தானோ அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்றார்.
2.அந்தப் பகுதிகளில் அவனின் உணர்வலைகள் பூமியிலே படரப்பட்டு இன்றும் பல பல நீர் சத்துக்களை அது கவர்ந்து
3.அந்தப் பாறைகள் உணவாக எடுத்துத் தன் சத்தின் தன்மையாக அதை எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றது…? என்று நீ பார் என்றார்.

பல பல தாவர இனங்களின் சத்தை உணவாக எடுத்து வளர்ச்சிக்கு வந்தாலும் அவனுக்குள் வளர்ந்த உணர்வின் சத்து எண்ணங்கள் ஆக மாறி அந்த எண்ணத்தின் வலு தொடர் கொண்டு விண்ணின் ஆற்றலை நுகர்ந்து தனக்குள் பெறுகின்றான் அகஸ்தியன்.

ஒவ்வொரு செடியும் நஞ்சின் தன்மை கொண்டு இயங்கினாலும் அந்தச் செடிக்குள் கலந்த நஞ்சின் சத்தை அகஸ்தியர் முறியடிக்கின்றார்.

அதாவது…
1.ஒரு நஞ்சு கொண்ட பாம்பு தனக்குள் இருக்கும் சத்தை…
2.மற்ற உயிரின்ங்களில் நஞ்சைப் பாய்ச்சி அதனைக் கரையச் செய்து தனக்குள் உணவாக எப்படி எடுத்ததோ
3.இதைப் போல மனிதனின் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினை உணர்ந்து அதனைக் கரைக்கச் செய்து
4.அதைத் தனக்குள் செயலற்றதாக ஆக்கித் தன் உடலில் உள்ள அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றினார்.

உயிரின் துடிப்பைக் கூட்டித் தீமைகளை நீக்க வேண்டும்

உயிரின் துடிப்பைக் கூட்டித் தீமைகளை நீக்க வேண்டும்

 

நமக்குக் கஷ்டகாலமாக இருந்தால் கோவிலுக்குப் போய் காசைக் கொடுத்து அர்ச்சனை செய்து விட்டால் கஷ்டம் தீர்ந்து போகும் என்று சந்தோசப்படுகிறோம்.

பணம் கொடுத்தால் அர்ச்சகர் முதலில் கூப்பிட்டு விபூதி கொடுப்பார். கொடுக்கவில்லை என்றால் தட்டே இந்தப் பக்கம் திரும்பாது. ஆக ஆண்டவனுக்குக் காசு கொடுத்தால்தான் அவனுடைய வாக்கு இங்கே வரும். அந்த நிமிடத்தில் உங்களை ஆள்பவன் யார்…? நம் உயிர்.

இப்பொழுது உதாரணமாக குழந்தை என்ன செய்கிறது…? கீழே விழுந்து அவஸ்தைப் பட்டுத் துன்பப்படுகின்றது. நீங்கள் காக்கின்றீர்கள். அடுத்த நிமிடம் நீங்கள் என்ன செய்ய வேண்டும்…?

ஓ…ம் ஈஸ்வரா என்று உங்கள் உயிரை நினையுங்கள். உங்களை ஆள்பவன் அவனாக இருக்கிறான்.
1.அப்பொழுது “ஓ…ம்” என்று சுவாசிக்கும்போது காந்தம் அதிகமாகின்றது. அப்போது உயிரின் துடிப்பு அதிகமாகின்றது.
2.ஈஸ்வரா என்று எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி அந்தச் சுவாசத்தைக் கொண்டு வாருங்கள்.

அவன் கீழே விழுந்தான்… வேதனையான எண்ணம் வந்துவிட்டது. ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று சுவாசிக்கிறீர்கள்.
1.உயிரான ஈசன் என்ன செய்கின்றது…?
2.அந்த மகரிஷிகள் எப்படி மகிழ்ந்து உறவாடி அந்த உணர்வை எடுத்தார்களோ அங்கு பட்டவுடன் ஈசனுக்கு அப்படியே மகிழ்ச்சியாகின்றது.

நீங்கள் இந்தக் குழந்தை மேல் பாசம் கொண்டு இப்படி விழுந்துவிட்டானே என்ற வேதனையை உணரச் செய்து அந்த வேதனை உணரக்கூடிய நிலை இருந்தாலும் ஈசனுக்கு வேதனையாகிறது.

இந்த உணர்வின் தன்மை அங்கு பட்டவுடன் உடலுக்குள் இருக்கும் சக்திகளெல்லாம் சிவமாகி விடுகின்றது. உடலான சிவம் என்ன செய்கின்றது…? உடல் பயத்தால் நடுங்க ஆரம்பித்து விடுகின்றது.

நீங்கள் ஆடவில்லை என்றாலும் சிவன் நர்த்தனமாட ஆரம்பித்து விடுகின்றான். கை கால் எல்லாம் ஆடும். உடல் சிவம்… சிவ நடனத்தைப் பற்றிக் காட்டியிருக்கிறார்கள்.

வாசுகி நீ சுவாசித்த உணர்வின் சக்தியே அது உனக்குள் சக்தியாக இருந்து ஆட்டிப் படைக்கின்றது என்ற தத்துவத்தைத் தெளிவாக எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். யார் படித்திருக்கின்றோம்…? அதை யாரும் படிப்பதில்லை தெரிந்து கொள்வதுமில்லை.

ஆகையினால் நாம் ஒவ்வொருவரும் இந்த நிலையை எடுத்து
1.எப்பொழுதெல்லாம் நமக்கு அந்தக் கஷ்டமான நிலைகள் வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிர் வழி கவர்ந்து
3.உள்முகமாக நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்த சக்தியைப் பாய்ச்சி சர்வ தீமைகளிலிருந்தும் விடுபட வேண்டும்.

இன்றைய நிலையில் சாதாரண மக்களினுடைய நிலைகள் வியாபரத்திலேயோ மற்ற நிலைகளிலோ பல உணர்வுடன் கஷ்டப்பட்டுக் கொண்டும் அவர்கள் எடுத்த சுவாசத்தாலோ எத்தனையோ இன்னல்கள் பட்டுக் கொண்டு இருப்பார்கள்.

அவர்களைச் சந்தித்தால் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன…?

அவர்கள் மேல் இரக்கப்பட்டு அந்த இரக்க உணர்வுடன் மட்டும் இருந்துவிடக் கூடாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் தியானித்துவிட்டு “இனி உங்களுக்குத் துன்பங்கள் இல்லை… நன்றாக இருப்பீர்கள்…!” என்று சொல்லுங்கள்.

1.ஆனால் இதை வெளியிலே இருப்பவர்களுக்குச் சொல்லிவிடுவார்கள்.
2.குடும்பத்திற்குள் இந்தச் சிக்கல் வந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் ஆத்திரம்தான் ஜாஸ்தி வரும்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் பழகியிருக்கிறோம். பார்த்தவுடன் ஆத்திரம்தான் சீறி எழும். சந்தோசமாக இருந்திருப்போம். ஏதாவது எண்ணியிருப்போம். ஏதாவது சந்தர்ப்பங்களில் இதே மாதிரி நிகழ்ச்சிகள் நிகழ்ந்து விட்டால் நாம் நம்மையறியாமலேயே இந்த நிலைகளைப் பேசி குடும்பத்திற்குள்ளே ஒவ்வொரு உடலிலும் வெறுப்புணர்வுகளை வளர்த்து விடுகின்றோம்.

அப்படி அந்த வெறுப்பாலே நாம் சுவாசிக்கும் இந்த உணர்வுகள் நோயாக மாறி நம்மையே நாம் வெறுக்கும் நிலையையும் இந்த உணர்வலைகள் ஏற்படுத்தி விடுகின்றன.

இதைப் போன்ற சந்தர்ப்பங்களிலிருந்து தியானமெடுக்கும் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் சிறிதளவு பிழைகள் ஏற்பட்டாலும் உடனே நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
2.தீமை செய்பவர்கள் நாளை செய்வது எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பாய்ச்சிப் பழகுங்கள்.

Forefathers

Forefathers

By training ourselves to get into that state during our meditation several Sages come to us and shower their grace on us. We will also get the blessings of our forefathers and other blood relations.

The members of our family who have died earlier do not take a rebirth immediately but stay in the spirit world doing good to the members who have blood relations with them.

1.They live as family deities and do much more good to their blood relations than what they were doing when they were alive in this world.
2.They continue to do so till all their blood relations die or leave this physical world.

In the birth and death there are several states. We worship our forefathers by offering them food and that food we offer to the birds. When the birds come and eat the food we feel satisfied that our elders have taken.

How do the elders come in the state of the birds…?

It does not mean that their souls enter the body of those birds. Just as Sages and Rishis do our forefathers merge their thoughts into the thoughts of those birds, make them go there and as the birds take the food they absorb the smell of the food offered by us.

To know that our forefathers have come and taken the food we make the birds a tool. It is easy for them to act through the birds that are flying. It is possible for any of those spirits to enter into anybody and make them act as per its wishes.

Those spirits will enter the bodies that have the same character as theirs. You might have noticed some birds coming at a particular time every day and taking the food offered to them.

One of the souls that lived in this world recently in the name of Arunagiri Nathar is coming and taking the food offered to it through a bird.

1.There is a life in the astral world also.
2.In this human life we eat, work and sleep. In this life the life of those who are in the astral world is also combined.
3.Those who are in the astral world are also moving with us.

Just as we take photos of persons and things in this physical world it is possible to take pictures of those in the astral world also.

If man develops the power that lies dormant in him he can see all that happens in the astral world. Those who live there do so with their thoughts and deeds.

Their souls have the power to smell and absorb the food required by them and maintain their bodies.

When we are in our physical bodies we prepare our food from the physical matter. The souls that do not have a physical body but remain in the astral world with their astral bodies get their food from astral matter.

Those who have died from some families come to those houses even today and absorb the smell from the food offered to them and also from the food prepared in those houses.

You might have heard of some people who, while in their sleeping state, get up, do domestic work, prepare food and eat. They do all these in their sleeping state and when they wake up, they do not remember any of these things.

1.There are several people who do so many things in their sleeping state.
2.All these are done by some spirits who have not satisfied their desires.

These are done by the spirits that enter into the bodies of the persons, merge their desires with that of the person, make them forget their real state and execute their wishes through this body.

These are done by those spirits that are not able to subdue the thoughts of the persons while they are awake and so get their wishes executed by the body while it is in a sleeping state.

All the things that are being done by those in their sleeping state are by the spirits that are roaming about in the spirit world around us with the idea of fulfilling their desires, through some person’s body when the body is sleeping.

1.The meditation that we do will help us in not getting influenced by other spirits
2.but remain in our own state.

“பூமியைச் சமப்படுத்திய அகஸ்தியனைப் போன்று” உலகைக் காக்கும் வல்லவர்களாக நாம் ஆக வேண்டும்

“பூமியைச் சமப்படுத்திய அகஸ்தியனைப் போன்று” உலகைக் காக்கும் வல்லவர்களாக நாம் ஆக வேண்டும்

 

விஞ்ஞான அறிவினால் இன்று தன் நாட்டைக் காக்க எண்ணினாலும் அதனால் விளைந்த நஞ்சு நாட்டையும் மக்களையும் அழித்து விடும். விஞ்ஞான அறிவு இதைத்தான் இன்று பெருக்கிக் கொண்டுள்ளது.

அகஸ்தியன் மூடனாக இருப்பினும் சந்தர்ப்பத்தால் தாய் தந்தையின் அருளால் விண்ணின் ஆற்றலைப் பருகி
1.தீமைகளை அகற்றிடும் வல்லமையான நிலைகள் அவனுக்குள் பெருக்கிக் கொண்டது.
2.இருளான நஞ்சினை அகற்ற இவனுக்குள் ஒளியின் தன்மை பெருக்கும் நிலைகளை வளர்த்துக் கொண்டது.
3.பூமியின் இயல்பான நிலைகளையும் இதை உருவாக்கும்… மாற்றம் செய்யக் கூடியதும்… அத்தகைய வல்லமை இவனுக்கே உண்டு.

இவன் தான் உலகின் தன்மையை அன்று சமப்படுத்தினான்.

பூமி சுழலும் பொழுது துருவப் பகுதி பார்வதி…! விண்வெளியில் இருந்து வரக்கூடிய சக்திகளைக் கவர்கின்றது. துருவப் பகுதியில் வரப்படும் பொழுது அந்தச் சக்தி சிவம் ஆகின்றது.

1.பூமி சுழலும் சக்தி பார்வதி… தன் பார்வையில் பட்ட உணர்வைக் கவர்ந்த இந்த சக்தி உறைவிடமாக வருகின்றது.
2.அது தான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்.

சிவன் என்பது பூமி…! அதன் சுழற்சியின் சக்தியால் தனக்குள் கவர்ந்து சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்… கவர்ந்தது சிவத்துடன் இரண்டறக் கலக்கின்றது.

பூமியுடன் சேர்த்து அது ஒன்றாகக் கலக்கின்றது என்ற நிலை வந்தாலும் இதனின் நிலைகளைப் பார்க்க வெகு கோடி ஜனங்கள் இங்கே வருவார்கள்.

கவர்ந்த உணர்வின் தன்மை அணுக்களாகப் பெருகி சக்தியின் தன்மை பெருகப்படும் பொழுது பூமியின் தன்மை கவிழும் தன்மை வரும். திசை மாறி இந்த எடைக்கொப்ப எடையற்ற நிலைகளை மீண்டும் கவர்ந்து அதனின் உறைத்தன்மையாகி இது கரைய அது வளரும்.

இப்படி… பூமியின் சுழற்சியின் மாற்றங்கள் வருவதிலிருந்து அன்று அகஸ்தியன் இதைக் காத்தான்.

திருமணம் ஆகும் காலங்களில் இங்கே கூட்டங்கள் அதிகரித்து விடும்… பூமி நிலை தடுமாறும். ஆகையினால் சிவன் அகஸ்தியனை நீ தெற்கில் செல்… நீ தெற்கே சென்று இந்தப் பூமியைச் சமப்படுத்து என்ற எண்ணத்தை இவன் உருவாக்கினான்.

1.அதன் படி அகஸ்தியன் தெற்கே சென்று சமமான பகுதியில் நின்று
2.பூமி கவரும் சக்திகள் குளிர்ச்சியான நிலைகள் கொண்டு வடக்கிலே உறைந்தாலும்
3.தெற்கிலே நின்று நேர்முகமாக நின்று சூரியனின் காந்தப் புலனை எடுத்து இந்தப் பூமிக்குள் பரவச் செய்கின்றான்.
4.அப்பொழுதுதான் பனிப்பாறைகள் உருகிக் கடலாகக் கரைந்து இந்த பூமியின் தன்மையைச் சமப்படுத்தியது.

சிவன் அகஸ்தியனைத் தெற்கிலே செல்லும்படி சொல்லி இந்த உணர்வின் தன்மை தனக்குள் உற்றுப் பார்த்து இந்தப் பூமியைச் சமப்படுத்து என்று சொன்னது.

மனிதனான இவனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த வெப்ப அலைகளைத் தனக்குள் பரப்பப்படும் பொழுது கவர்ந்து பனிப்பாறைகள் கடலாக மாற்றியது.

1.அதனால் தான் அகஸ்தியனுக்குக் கமண்டம் கொடுத்திருப்பார்கள்.. நீர் சக்தி.
2.அந்தக் காலத்தில் முதல் மனிதன் அகஸ்தியன் பூமியை இவ்வாறு தான் திருப்பிச் சீராக இயங்கும்படிச் செய்தான்.

நம்மைத் திட்டிக் கொண்டே இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது…?

நம்மைத் திட்டிக் கொண்டே இருப்பவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது…?

 

நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் நினைவைச் செலுத்திவிட்டு உங்களைத் திட்டியவர்கள் அவர்கள் எங்களைப் பார்க்கும் பொழுது நல்ல சொல்லாகச் சொல்லும் ஆற்றல் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர்கள் எதையெல்லாம் பேசி எதையெல்லாம் உங்களுக்குச் சங்கடமாக எண்ணுகின்றனரோ அதே சமயம் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனரோ அது அவர்களுக்கு நடந்து
2.அவர்கள் உணரும் ஆற்றல் பெறட்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

இப்பொழுது உங்களை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னால் நாம் சுத்தமாக அதைக் கேட்டுக் கொண்டேயிருந்த பின்
1.திட்டியது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
2.எனக்கு அது வேண்டாம்…! என்று நாம் அவரிடம் சொல்லி விட்டால் அது நம்மைப் பாதிக்காது.

நீங்கள் ஆத்ம சுத்தி செய்து விட்டுத் திட்டியவரிடம் நீங்கள் எப்படி எப்படியெல்லாம் திட்டினீர்களோ அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம் என்று சிரித்த முகத்துடன் சொல்லுங்கள்.

அந்த உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காது.

நாம் ஆத்ம சுத்தி செய்து இவ்வாறு சொன்னவுடன் “ஆ…” என்று அவர்கள் இழுத்தால் போதும்.
1.அவர்கள் அறியாமல் செய்த தவறை
2.நாம் விட்ட மூச்சலைகள் அவருக்குள் ஊடுருவிச் சென்று அவர்கள் செய்த தவறை உணர்த்தும்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இதைப் போன்று குடும்பத்திலோ மற்ற நிலைகளிலோ ஒவ்வொருவரும் தம்மையறியாத நிலைகளில் இப்படி அடிக்கடி பேசுகின்றனர். அவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துக்கள் அவர்கள் உடலில் வேலை செய்து விடுகின்றது. அதை அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றாலும் முடியவில்லை.

ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் பார்க்கலாம். பையன் மேல் நாம் வெறுப்பாக இருப்போம். அவன் நல்லது செய்துவிட்டு வந்தாலும் கூட லேட்டாகி விட்டது என்கிற போது அவனை நினைத்தவுடன் “அவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கிறான்…” என்போம்.

பையன் ஒரு காரியத்திற்குப் போனால் லேட்டாகி அந்தக் காரியத்தை முடித்து விட்டு வருவான். ஜெயித்துவிட்டு வந்தால் கூட நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
1.அவன் சென்று வந்த காரியம் என்ன…? என்று கேட்டறியாதபடி
2.“அவன் இப்படித்தான் எப்பொழுது சென்றாலும் லேட்டாக வருவான்…!” என்று அவனைத் திட்டவும் பேசவும் ஏசவும் செய்வோம்.

அவன் உண்மையைச் சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மாட்டோம். “பொய் சொல்கின்றான்” என்ற எண்ணம் தான் தோன்றும். அதைக் கேட்டறிவதற்குத் தாமதமாகும்.

1.நாம் நல்லது நினைத்தாலும் கூட நம்மையறியாமல் அந்த உணர்வுகளை நிற்கச் செய்யும்.
2.அந்த உணர்வின் தன்மை அவனைக் கெட்டவனாக மாற்றச் செய்யும்.

இதைப் போன்று ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவர்பால் கெடுதலான எண்ணங்களை வைத்து விட்டால் அந்த உணர்வின் பார்வையிலே பேசும் பொழுது நாம் எத்தனை நல்லது செய்தாலும் அந்த எண்ணங்களுக்குத் தப்பாகத்தான் தெரியும்.

ஆகையினால இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.

நாம் ஆத்ம சுத்தி செய்து முடித்தவுடன் நம்மைத் திட்டியவர்கள் பேசிய முறைகள் செய்த முறைகள் அனைத்தையும் அவர்கள் உணர்ந்து அவர்களே அதை அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெறட்டும் என்ற இந்த உணர்வின் நிலைகளை நீங்கள் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்.

வாயிலே சொல்லிவிடாதீர்கள்… சொன்னால் வம்பு வந்துவிடும். உங்கள் எண்ணத்தால் வளர்க்கச் செய்யும் பொழுது அந்த உண்மையின் தன்மையை அவர்களும் அறியும் தன்மை வந்துவிடும்.

ஏனென்றால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சோர்வோ மனச் சஞ்சலமோ வெறுப்போ அடைந்தால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதிக்காது. நாம் எடுக்கும் இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள் அறியாமையிலிருந்து மீட்க நமக்கு அந்தச் சக்தி உதவும்.

குடும்பத்திற்குள் இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.
1.மாமியாருக்கும் மருமகளுக்கும் பிடிக்காது.
2.மகனுக்கு அப்பாவைக் கூடப் பிடிக்காது.
3.அந்த அளவுக்கு இன்று பெரும் பகுதி ஆகிவிட்டது.
4.இன்றைக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த நிலைதான்.

நம் உணர்வலைகள் மாறாமல் இருப்பதற்கு, ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

யாம் “வெறும் வார்த்தையிலே சொல்கிறோம்…” என்று எண்ணி விடாதீர்கள்.
1.உங்களுக்குள் வரக்கூடிய எத்தகைய துன்பத்தையும் போக்குவதற்கு
2.ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகக் கொடுத்து உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.