May – 2026 உபதேசம்

நாம் உருவாக்க வேண்டிய கூட்டமைப்பு

விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்களைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து வைத்திருக்கின்றது. எந்தெந்த நாடுகளில் இதைச் செய்து கொண்டார்களோ
1.இந்த உணர்வு “நியூட்ரான் என்ற விஷத்தன்மைகளின் அழுத்தம்” கதிரியக்க உணர்வினைக் கண்ட பின் அது அஞ்சி ஓடுவதும்
2.மற்றொன்றுடன் மோதிச் சுழல் காற்று போலப் புயலாக மாறுகின்றது அல்லது சூறாவளியாக மாறுகின்றது.

அணுகுண்டை வெடித்தால் கட்டிடங்களுக்குள் ஊடுருவித் தன் இனமாக மாற்றி அது புகை மண்டலங்களாக மாறுகின்றது. ஆனால் அதே சமயத்தில் இந்த நியூட்ரான் என்ற உணர்வுகள் பூமியிலே கலந்தால் விஷத் தன்மை கொண்டு மடியச் செய்யும்.

ஆனாலும் விஷத்தின் தன்மை கொண்டு கதிரியக்கப் பொறிகள் அஞ்சி ஓடும் பொழுது மற்றொன்றுடன் மோதியவுடன் சூறாவளியாக மாறி கடலிலே பட்டால் அதையும் அள்ளி எடுத்துக் கொண்டு புயல் போல் மாறும்.

இது கட்டிடங்களிலே படர்ந்தால் பலவீனப்படுத்தித் தரைமட்டமாக்கிவிடும்… மனிதனாக இருந்தாலும் தூக்கிச் சென்று விடும்.

கடலில் பட்டால் அலைகளாக மாறுகிறது. சனிக் கோளின் உணர்வு படடால் நீரை ஆவியாக மாற்றி மேகங்களாகக் கூடி மழை பெய்ய வைக்கின்றது.

ஆனால் விஷத்தன்மையான உணர்வுகள் மாறி கடலோரம் உள்ள நகரம் எல்லாம் அழியும் தன்மை வருகின்றது விஞ்ஞான அறிவால். இதைப் போன்ற பாதிப்புகளில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

1.கூட்டு ஐக்கியமாகத் தியானங்களைச் செய்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் வாழும் இடங்களிலே பரவச் செய்து
2.அந்த உணர்வலைகளை மோதும்படிச் செய்து அதைப் பெருக்கச் செய்யப்படும் பொழுது நம்மையும் காக்கலாம்… நாம் வாழும் ஊரையும் காக்கலாம்.

துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வு அழுத்தமாகும் பொழுது அந்தத் தீமைகளை விலக்கிவிடும். நம் நாட்டிலே அத்தகைய சூறாவளியோ புயலோ வராதபடி காக்கலாம்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்த அகஸ்தியன் வெளிப்படுத்திய உணர்வுகளை… காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்.

தியானத்தைக் கடைபிடிக்கும் குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் அந்த அருள் சக்தியைப் பெற்று
1,தியானமிருக்கும் அனைத்துக் குடும்பங்களில் இது படர வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும்
3.மகிழ்ச்சியான நிலைகள் பெற வேண்டும் மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்
4.நாம் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடத்திலும் இதைப் படரச் செய்ய வேண்டும்.

அது தான் கோடிக்கரை… இராமன் என்ன செய்தான்…? மணலைக் குவித்துச் சிவலிங்கத்தைப் பூஜித்தான் என்று காட்டியிருப்பார்கள். காரணம்… மனிதனின் கடைசி எல்லையில் இருக்கின்றோம்.

மனதைக் குவித்து ஒன்றுபட்டு வாழும் நிலையில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை ஒன்றாகக் கூட்டி
2.ஒருங்கிணைந்த நிலையில் கூட்டமைப்பாக வலுவான நிலைகள் கொண்டு
3.விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளை விலக்கித் தள்ளி ஊரையும் நாட்டையும் காக்கும் நிலைக்கு வர வேண்டும்.

எங்கிருந்தாலும் சரி…! விஞ்ஞானப் பேரழிவுகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள
1.கூட்டமைப்பாகத் துருவ தியானத்தை மேற்கொண்டு அருள் உணர்வுகளைக் கவர்ந்து நாம் வாழும் இடங்களில் இந்த உணர்வுகளைப் பரவச் செய்வோம்.
2.ஒவ்வொரு நாளும் நாம் இதை வலுப்படுத்திக் கொண்டே வருவோம்.
3.உலகைக் காக்கும் சத்தியாக நாம் செயல்படுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் உருவாக்கி ஞானிகள் அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகிறோம்.

கூர்ந்து கவனித்துப் பதிவானால் அடுத்து அதை வளர்த்துக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் பொழுது உங்கள் நினைவைக் கூட்டினால் நிச்சயம் அதைப் பெறுகின்றீர்கள்.

திட்டியவனை எண்ணியவுடன் என்ன செய்கிறது…? இருக்கட்டும்… அவனைப் பார்த்துக் கொள்கிறேன்…! என்று நினைத்தால் அவனும் கெடுகின்றான் நாமும் கெடுகின்றோம்… பகைமை உணர்வு தான் வளர்கின்றது.

இதைப் போன்ற உணர்வுகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

உங்கள் உணர்வின் குணங்களுக்கெல்லாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரருளையும் ஞானிகள் பெற்ற நிலைகளையும் கலந்து சொல்லாக யாம் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொழுது
1.உங்கள் செவி அதைக் கவர்கின்றது
2.உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது
3.சுவாசித்த பின் உயிரில் படுகின்றது.
4.உயிரின் இயக்கம்… கண் அதைக் கவர்ந்து இந்த உணர்ச்சிகளை உடலுக்குள் சேர்க்கின்றது
5.கருவிழி பதிவாக்குகின்றது… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்கிறது… அந்த உணர்ச்சிகளை இரத்தங்களிலே அது பரப்புகின்றது.
6.மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் அணுவின் தன்மை கருத்தன்மை அடைகின்றது.
7.இதை வளர்த்துக் கொண்டே வந்தால் பிரம்மமாகின்றது
8.பிரம்மானது கருவாகி உருவாகும்போது துருவ நட்சத்திரத்தின் இனமாக (அணுவாக) உங்கள் இரத்தத்தில் பெருக்கிக் கொள்ள உதவும்

மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் என்ன செய்கின்றார்கள்…? 1500 ஆண்டு காலம் மனிதனை வாழ வைக்கலாம் கண்டுபிடித்துள்ளார்கள். ஒவ்வொரு மருந்தினையும் உடலுக்குள் செலுத்தி இரத்தங்களில் அதைக் கலக்கச் செய்து மாற்றிக் கொண்டே வந்தால் 1500 வருடம் மனிதனை வாழ வைக்கலாம் என்று செய்கிறார்கள்.
1.1500 ஆண்டுகள் வாழ்ந்தால் மனிதனுடைய நிலைகள் என்ன ஆகின்றது…?
2.உறவினர்களோ சொந்த பந்தங்களோ யாருமே அறிந்து (அடையாளம்) கொள்ள முடியாதபடி இந்த ஊரே பிடிக்காது போய்விடும்.

காரணம் 50 கோடி மக்கள் தொகை இருந்தது இன்றைக்கு 700-800 கோடியாக மாறிவிட்டது 100 வருடத்தில் இதே மாதிரி மக்கள் தொகை கூடக் கூட உணவுக்கு எங்கே செல்வது…?

வளர்ச்சி அடைந்த நாடுகளாக இருந்தாலும் சரி வளர்ச்சியே இல்லாத நீக்ரோ நாடுகளாக இருந்தாலும் சரி… கையில் பணம் இல்லை… உணவுக்கு இல்லை என்கிற பொழுது மனிதனை அழித்து அந்த மாமிசத்தை உட்கொள்ளலாம் என்று “விஞ்ஞான உலகத்திலே இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது…!”

அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.புலஸ்தியர் வம்சத்தில் வந்த அகஸ்தியன் அருளைப் பெறுவோம் இருளை அகற்றுவோம்
2.கல்கி என்ற முழுமை அடைவோம்… பிறவியில்லா நிலை அடைவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நோயாளியின் உணர்வை நாம் நுகர்ந்து
1.”அவருக்கு நோய்” என்று அறிந்த அடுத்த கணம் நமக்குள் அது வராதபடி மாற்றுவதற்கு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நம் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து அங்கே அடைத்த பின் அந்த நோயின் உணர்வு அனாதையாகி விடுகிறது.

கூடக் கொஞ்ச நேரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்க்க நோயாளியை உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே கொண்டு சென்று விடுகிறது.

அதாவது… செடி கொடிகளில் (வெயில் தாக்கப்படும் பொழுது) அதில் விளையும் சத்தின் மணங்களை ஆவியாக மாற்றிச் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்வது போன்று இதையும் எடுத்துக் கொள்கின்றது.

நம் வீட்டிலே சமையல் செய்கின்றோம். எல்லாப் பொருளையும் சேர்த்துக் கலந்து வேக வைத்த பின் ஆவியாகப் போவது எங்கே செல்கின்றது…?
1.நீரை எடுத்தவுடன் கனமான சத்தைச் சூரியன் எடுத்துக் கொள்கின்றது
2.மேலே கொண்டு சென்று மேக மண்டலத்துடன் ஆவியாக நின்று விடுகின்றது.
3.உப்புச் சத்துக்கள் அதிலே கலந்தால் மழையாகப் பெய்கின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இது போன்றுதான் நோயாளியைப் பார்த்த பின் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் ஆத்ம சுத்தி செய்யும் போது நம் உடலில் இருந்து வெளிப்படக்கூடிய வேதனையான (நோயாளியின்) அந்த உணர்வின் ஆவியை சூரியன் எடுத்துக் கொள்கிறது… நமது ஆன்மா பரிசுத்தம் ஆகின்றது.

புருவ மத்தியிலே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி நிலை நிறுத்தப்படும் போது உடலுக்குள் போகாது தடைப்படுகின்றது. ஆனால் அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளிக்குக் கிடைக்க வேண்டும்
2.நோய் நீக்கும் சக்தி அவர் பெற வேண்டும்.. அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
3.இந்த உணர்வை எடுத்து அவருக்குள் இணைக்கப்படும் பொழுது “அஞ்சனை” (பெண்பால்)

சீதா என்ற சுவையை அங்கே உருவாக்குகின்றோம். நோயை எண்ணாதபடி அந்த நோயுற்றவர் நன்றாக வேண்டும்… அவர் நோய் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் சொல்லும் பொழுது சீதாராமா.

துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும்… என் நோய் நீங்க வேண்டும் என்று அந்த நோயாளியால் எண்ண முடியவில்லை.
1.நாம் எண்ணி இவ்வாறு சொல்லப்படும் பொழுது அது இராமனின் பக்தன் “ஆஞ்சநேயன்” என்று ஆகிறது.
2.அருள் உணர்வுகளை “அவருக்குள் நேயமாக இணைத்து” தீமைகளை நீக்கி நல்லவைகளாக உருவாக்கும் தன்மை.

அது தான் ஆஞ்சநேயன். அவன் வாயு புத்திரன்…! உயிரிலே பட்டபின் வாயுவாக மாறுகின்றது அவர் (நோயுற்றவர்) உடல் முழுவதும் சுழன்று வருகின்றது. உடலில் எந்த இடத்தில் நோய் இருக்கின்றதோ அந்த உணர்ச்சிகள் அங்கே போய்த் தாக்குகிறது.

சுக்ரீவனின் மந்திரி ஆஞ்சநேயன்…! துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்து நாம் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவன் உடலில் தீமையை நீக்கும் இந்த உணர்வுகளை ஊட்டுகின்றது; வேதனை என்ற நினைவை மாற்றுகின்றது; தீமையான நிலைகளுக்குள் இந்த வலுவின் தன்மை சென்று நோயை நீக்குகின்றது…!

இது எல்லாம் சூட்சுமத்தில் நடப்பதை உருவம் அமைத்து இராமாயணம் (எண்ணம்) எதன் சுவை சீதாராமனாக எண்ணங்களாக வருகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.

வேதனைப்படும் உணர்வுகள் அதுவும் சீதா… வேதனைப்படுத்தும் சுவை. அதை நாம் நுகரும் போது எண்ணமாக வருகின்றது அதுவும் சீதாராமன் தான். அந்தச் சுவையின் நிலைகள் நுகரப்படும் போது நாம் வேதனைப்படுகின்றோம்.

ஆனால் வேதனையை நீக்கி சந்தோஷத்தை ஊட்டுவது “துருவ நட்சத்திரத்தின் சக்தி… அந்த சீதா…!” நோயை நீக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது இராமனின் பக்தன் ஆஞ்சநேயன். அவன் வாயு புத்திரன்… சுக்ரீவனின் மந்திரி.

இராமனுக்கு சுக்ரீவன் துணை செய்கின்றான் என்று காவியம் காட்டுகின்றது. துருவ நட்சத்திரம் தான் இங்கே சுக்ரீவன். அந்த சுக்ரீவன் என்ற உணர்வைச் செயல்படுத்தும் போது எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை நீக்கும் வல்லமை பெறுகின்றோம்.
1.எல்லா இடங்களுக்கும் ஊடுருவி – இலங்கைக்குள் (நம் உடலுக்குள்) வேதனை என்று சீதா அடைபட்டு இருப்பதை மீட்டு
2.சந்தோஷத்தை ஊட்டும் நிலையாக மாற்றுவதற்காக அவ்வாறு காட்டுகின்றார்கள்.

ஏனென்றால் நோயாளியின் உணர்வை இந்த உடலுக்குள் (இலங்கைக்குள்) நுகர்ந்தால் சந்தோஷம் தீவுக்குள் (சிறு இடத்திலே) அடைபட்டு விடுகிறது. தீமை என்ற உணர்வுகள் சந்தோஷத்தை அடைய விடாதபடி இலங்கேஸ்வரன் (அரக்க உணர்வுகள்) அடைத்து வைத்திருக்கின்றான் என்று காட்டுகிறார்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று சொல்லும் போது…
1.இராமன் சுக்ரீவன் துணை கொண்டு படைக்களத்துடன் சென்று இந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் போது
2.வாயுவாகப் பல நிலைகளுக்குத் தாவிச் சென்று அவன் சுவாசிக்கும் உடலுக்குள் சென்று
2.சீதாவுக்கு ஊக்கம் ஊட்டி… இராமனின் உணர்வுகளை ஊட்டி… அதே உணர்ச்சியின் உணர்வுகளை
3.சுக்ரீவன் (துருவ நட்சத்திரம்) எதைச் செய்தானோ அதன் உணர்வின் தன்மை இங்கு ஊட்டப்படும் பொழுது
4.வாயு புத்திரனாக உள்ளே சென்று வலுவான உணர்வுகளை ஊட்டி மகிழ்ச்சி உருவாக்குவதாகக் காட்டுகின்றார்கள்.

மெய் ஞானம் பெறும் ஆற்றல்

ஒருவருக்கொருவர் துணை இல்லாது யாரும் வாழ முடியாது. துணையில்லாத உயிரினங்கள் சுத்தமாகவே அழிந்து விடுகின்றது… அது மடிய மடிய அந்த இனத்தின் ரூபங்களே முழுவதுமாக மடிந்து விடுகின்றது.

கடந்த காலங்களில் மனிதர்கள் உருவாவதற்கு முன் வலிமைமிக்க மிருகங்கள் வாழ்ந்திருந்தாலும்…
1.அந்தந்த இனத்தின் வலிமை அதிகமாகும் பொழுது அதற்குள்ளேயே ஒன்றை ஒன்று கொன்று புசிக்கும் நிலை விளைந்து
2.இறந்த அலைகள் வந்த பின் அதை நுகர்ந்த… பற்றுடன் வாழ்ந்த அந்த இனம் பூராமே அழிந்துவிட்டது.

பல இனப் பெருக்கங்களும் தடைப்பட்டு கடந்த கால ரூபங்கள் எல்லாம் எப்படி மறைந்தது…? என்பதை குருநாதர் இமயமலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது சில பகுதிகளிலும் சூட்சும நிலைகள் கொண்டு சில பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்றும்
1.அன்று வாழ்ந்த மிருகங்கள் அதன் இனமே இல்லாது எப்படி அழிந்தது…?
2.அது வாழ்ந்த நிலைகள் அங்கே எப்படிப் பதிவாகியுள்ளது…?
3.அந்த அலைகள் எப்படி உள்ளது…? அதனுடைய ரூபங்கள் எப்படி இருக்கிறது…? என்பதை குருநாதர் காண்பித்தார்.

இதை நீ வெளியிலே மற்றவர்களிடம் சொன்னாய் என்றால் போற்றலுக்கு உண்டான நிலை வரும். அந்த ரூபத்தை வரைந்து கொடுத்தால் பணமும் கிடைக்கும்.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உணர்வை வைத்து அந்த அலைகளை கம்ப்யூட்டர் மூலம் பிரித்து எடுப்பார்கள். அதனுடைய எண்ண அலைகள் தொடர்பு கொண்டதைக் காற்றில் இருப்பதையும் பிரிப்பான்.

உனக்குள் விளைந்த உணர்வின் தன்மையைக் கம்ப்யூட்டரில் இணைக்கப்படும் பொழுது அந்த அலைகளின் தொடரை வைத்து அந்த ரூபத்தை அறிவான். அதைக் காணும் நிலையும் வரும்.

ஆனால் அது ஜீவனுள்ளதாக வராது.

கம்ப்யூட்டர் மூலமாக உருவத்தைக் கொண்டு வந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் மீண்டும் அந்தக் கடந்த கால நிலைகள் எதுவோ இந்த உணர்வுகள் வளர்க்கப்பட்டு விஞ்ஞான அறிவு கொண்டு கண்டறிந்தாலும் அவன் கொண்ட நினைவாற்றல் மனித ரூபத்தை விட்டு
1.அந்த அகோரமான உணர்வுகள் இணைக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை வெளிவந்த பின்
2.இன்றைய சூழ்நிலைக்குமில்லாது கடந்த காலச் சூழ்நிலைக்கும் இல்லாது இந்த உயிர் இதற்கு இணையான ரூபத்தை மாற்றிக் கொடூர மிருகமாக மாறும்.

விஞ்ஞான அறிவால் அந்த நிலை தான் வரும். அந்த ரூபங்களைப் பார்க்கும் பொழுது உடல் இச்சைக்காக அதைச் செய்தாலும் அதனுடைய பின் விளைவுகள் இப்படி இருக்கும் என்று அதையும் குருநாதர் காட்டுகின்றார்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பூமிக்கடியில் மண்ணைத் தோண்டுகின்றார்கள். அந்த மணலை எடுத்து
1.நுண்ணிய அலைகள் கொண்டு அதிலே திரவகத்தை இணைக்கப்படும் பொழுது மேல் எழுந்தவாறு ஆவிகளாக மாறி
2.அதிலே வலிமை பெற்றதும்… ஒவ்வொரு நிலையாகப் படிப்படியாக அந்த திரவகத்தின் அடர்த்தியைக் கூட்டக் கூட்ட
3.இன்னென்ன காலங்களில் இவ்வளவு வலிமை பெற்றது… அந்த வலிமையை இவ்வளவு காலத்தில் பெற்றது என்று
4.அந்த திரவகத்தை ஊற்ற ஊற்ற அந்த வலிமை கொண்டு கரைந்து கரைந்து செல்வதை
5.அதனுடைய காலகட்டத்தை விஞ்ஞான அறிவால் அறிகின்றார்கள்… இந்தப் பாறை இத்தனை காலத்திற்கு முந்தையது…! என்று.

இதைப் போன்றுதான் குருநாதர் விண்ணுலக ஆற்றலின் உணர்வுகளை இன்னென்ன காலங்களில் விளைந்தது என்பதை நீ நுகர்ந்து பார். அந்த உணர்வின் ஒலி அலைகள் எப்படி வருகிறது…? என்று அதனை நீ அறிந்து கொள்.

ஆனால் அதற்காக வேண்டி காலத்தைச் செலவழிக்காதே. நீ அறிந்து கொள்ளவே இதை உனக்குக் கொடுக்கின்றேன்.

இந்த அறிவின் தெளிவை மற்றவர்களுக்கு நீ ஊட்டினால் விஞ்ஞான அறிவிக்கே அடிமையாகி மனித உடலில் இச்சைகள் உருவாக்கப்பட்டு அதன் வழியில் அழியும் பருவத்தைப் பெறுவாயே தவிர… என்றும் உயிருடன் ஒன்றி நிலை கொண்டு ஒளியின் சரீரமான அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் நீ இணைய முடியாது என்று தெளிவாகக் காட்டினார்.

ஆகவே அதன் வழிப்படி நான் அந்த வழிக்குச் செல்லவில்லை.
1.மெய்ஞான உணர்வுடன் வளர்ந்து கொண்டிருக்கும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வுடன் உங்களை ஒன்றச் செய்து
2.அந்த உணர்வுகளை உங்களுக்குள் விளையச் செய்து இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை அகற்றச் செய்ய வேண்டும்.

என் ஒருவனால் அது முடியாது. நீங்கள் அனைவரும் அந்த அருள் உணர்வுகளை எடுத்து உங்களுக்குள் நினைவு கொண்டு அந்த மகரிஷியின் ஆற்றலைப் பெற வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் பெற வேண்டும்… என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற உணர்வினை உங்கள் எண்ணத்தால் பரப்பினால்
1.இது சிறுகச் சிறுக வளர்ந்து ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விளைந்து உணர்வலைகளைப் பெருக்கி
2.அதன் வலு கொண்டு இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் வரும் நச்சுத்தன்மைகளை மாற்ற முடியும்.

சாஸ்திரங்கள் கூறியுள்ள உண்மை நிலை

விஷத் தன்மைகள் பரவினால் பூண்டோடு அழியும் நிலை வருகின்றது. காரணம் தீமைகள் விளையும் சந்தர்ப்பங்களே இன்று உருவாகிக் கொண்டுள்ளது அதிலே சிக்காது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

1.எல்லாச் சாஸ்திரங்களும் இதைத்தான் கூறுகின்றது… தென்னாட்டில் உள்ளவர்கள் கொஞ்சப் பேர் தப்பிப்பார்கள் என்று…!
2.மற்றவர்கள் அசுர உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொல்லும் நிலையே வருகின்றது.

மனிதனாக இருப்பான்… விஷத்தன்மை மோதும் பொழுது அழிந்திடும் நிலையே வருகின்றது. மனிதனுக்குள் ஆசை அதிகமாகும் பொழுது இரக்கமற்றுத் தட்டிப் பறித்துச் செல்கின்றான்.

இதிலிருந்து நாம் மீண்டு பழகுதல் வேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள்.
1.உங்கள் உயிரான ஈசனைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
2.அந்தப் பேரருள் என்ற உணர்வைச் சேர்த்து ஒளியாக ஆக வேண்டும்.
3.அவனுடன் அவனாக அவனாகவே ஆகும் நிலையை நாம் பின்பற்றுதல் வேண்டும்.

அதைப் பெறும் வழியைக் குருநாதர் சொன்னார். அவர் காட்டிய வழியில் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… ஈசனாக மதிக்கின்றேன்… ஆண்டவனாக மதிக்கின்றேன்… இறைவனாக மதிக்கின்றேன்.

அவனால் உருவாக்கப்பட்ட உடலைக் கோவில் என்று மதிக்கின்றேன்… சிவம் என்று மதிக்கின்றேன்… சிவசக்தி என்று மதிக்கின்றேன். பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனான அரும்பெரும் சக்திகள் உங்கள் உடலில் உண்டு என்று மதிக்கின்றேன்.

மனிதனின் நிலைகள் தீமைகளை அகற்றிடும் கார்த்திகேயா… எதனையுமே அறிந்திடும் அறிவு உடலுக்குள் கிடைத்துள்ளது. அறிவின் தன்மை அறிந்திடும் உணர்வை உயிரின் தன்மை எனக்குள் உருவாக்கினார் குருநாதர்.

நீங்கள் ஒவ்வொருவரும் அந்த நிலை பெற வேண்டும் என்று நான் எண்ணினால் உங்கள் பகைமைகள் எனக்குள் வராது. இதையெல்லாம் நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் சில தவறு செய்வோரும் உண்டு. நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணுவோரும் உண்டு. அத்தகைய நிலை பெறுவோர் உணர்வுகளை அவர்கள் உயிரே அதை மாற்றிவிடும்.

1.அவர்கள் எதை நுகர்ந்தார்களோ அதையே உயிர் உருவாக்கிவிடும்.
2.அதன் விளைவை அவர்கள் பின்னாடி தெரிந்து கொள்வார்கள்.
3.அது தான் தெய்வம் நின்று கேட்கும்… அரசு அன்று கேட்கும் என்று சொல்வது.

பிறரைக் கெடுக்க வேண்டும் என்ற உணர்வை வளர்த்தால் அந்தக் கெடுக்கும் உணர்வே தெய்வமாகின்றது. இந்த உணர்வைப் பெருக்கப்படும் பொழுது எந்த அளவிற்குப் பிறரைத் துன்பப்படுத்த வேண்டும் என்று எண்ணினார்களோ அந்தத் துன்பப்படுத்திடும் உணர்வுகள் அங்கே விளைந்தே தீரும். அதிலிருந்து எவரும் தப்ப முடியாது.
1.அதிலிருந்தெல்லாம் நாம் மீள்தல் வேண்டும்
2.பேரருளைப் பெறுதல் வேண்டும்… அந்த அருள் சக்திகளை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) சொல்லக்கூடிய உபதேசங்களை… புரியவில்லை என்று விட்டு விடாதீர்கள். ஏனென்றால்
1.நான் படித்து வந்ததவன் அல்ல
2.குரு சொன்னதைப் பதித்து வந்தவன்
3.பதிந்த நிலைகளை எடுத்தவன்
4.எடுத்த உண்மைகளை உணர்ந்தறிந்து அதை நீங்களும் பெற வேண்டும் என்பதற்கே உபதேசிக்கின்றேன்.

இது உங்களுக்குள் பதிவானால்… உங்கள் நினைவு மகரிஷிகள் பால் சென்று… இருளை நீக்கி ஒளியான உணர்வைப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்

உங்கள் பார்வை பிறருடைய தீமைகளை… நோய்களை நீக்கக்கூடிய சக்தியாகத் தான் வர வேண்டும். ஆனால்
1.கோவிலுக்குச் சென்று தெய்வத்தைப் பார்த்து “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…” என்று எண்ணுவது போல்
2.என்னையும் நீங்கள் அப்படி எண்ணி… “சாமி என்னைச் சோதிக்கிறார்…” என்று எண்ணுவதற்கு அல்ல
3.அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் “சக்திமானாக” நீங்கள் மாற வேண்டும்
4.இந்தப் பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகளை உங்கள் மூச்சலைகளால் துரத்த வேண்டும் அல்லது அதை அடக்க வேண்டும்
3.உங்கள் உடலில் மட்டுமல்ல…! (எல்லாம் சேர்த்துத் தான்…!

அதைப் பெறச் செய்வதற்கு தான் எல்லோருக்கும் இந்தச் சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் நீங்கள் எல்லாம் தீமைகளை நீக்கும் வல்லுனர்களாக ஆகிவிட்டால்… இந்தப் பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் தீமைகளையும்… நாட்டுக்கு நாடு போர் என்று பரவி வரும் அசுர உணர்வுகளையும்… நிச்சயம் உங்கள் மூச்சலைகள் அடக்கும்… நல்ல உணர்வுகளை உருவாக்கும்.

அதே சமயத்தில் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு அருள் உணர்வின் தன்மையைப் பிறப்பிலிருந்தே பெறச் செய்ய வேண்டும்.
1.அகஸ்தியன் பெற்ற பேரருளை எல்லாம் கருவிலே வளரும் சிசுக்கள் பெற வேண்டும்.
2.அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்த துருவனின் ஆற்றலை குழந்தை பெற வேண்டும்
3.அணுவின் இயக்கத்தை உணர்ந்த அகஸ்தியனின் உணர்வு கருவில் வளரும் சிசுக்கள் பெற வேண்டும் என்று
4.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஏங்கிப் பெற்றால் குழந்தையின் கருவிலேயே அந்த சக்தி உருவாகின்றது.

இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் அந்தப் பதிவு உண்டு. இந்த நினைவு கொண்டு கர்ப்பமுற்ற தாய் இதை எண்ணி எடுக்க வேண்டும். காற்றிலே அந்தச் சக்திகள் உண்டு… அதை எடுக்கும் போது துருவ நட்சத்திரத்திற்கே உங்களை எட்டும்படிச் செய்யும்.

அகஸ்தியன் எப்படி உயர்ந்த சக்திகளைப் பெற்றானோ அதைப் போன்று கருவில் வளரும் குழந்தைகளை ரிஷிகளாக நாம் உருவாக்க வேண்டும். இனி வரக்கூடிய தீமைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக உங்கள் மூச்சு கருவில் வளரும் குழந்தைகளுக்கு இதைப் பெறக்கூடிய தகுதியாக வருகிறது.

விஞ்ஞான அறிவால் காற்று மண்டலமே விஷத்தன்மையாக மாறியதை அந்த ஞானிகள் வளர்ந்த பின் “இதே உணர்வுகள் தாவர இனங்களுக்குப் போய்ச் சேரும்…”

நறுமணம் வீசும் ரோஜாப்பூவின் உணர்வுகள் பட்டபின் நாம் நுகர்ந்தால் நறுமணங்களாக மாறுகின்றது. இதைப் போன்று மனித உணர்வுகள் விளைந்து வெளிப்படும் பொழுது மற்ற தாவர இனங்களுடன் சேர்க்கப்பட்டு பழையது மறைந்து மீண்டும் புது விதமான நல்ல தாவர இனங்களாக உருவாகும்.

அப்படி உருவான பின் பல உணர்வுகள் இன்று காற்றிலே படர்ந்து இருப்பினும் புதிதாக நம்மால் உருவாக்கப்படக்கூடிய இந்த தாவர இனங்கள் அந்தக் கசடுகளைக் கவர்ந்து இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தும்.

பின் ஞானிகள் என்று நாம் சொல்லும் கருவில் வளரக்கூடிய சிசுக்கள் ஞானக் குழந்தைகளாக உருவானபின் உலகைக் காக்கும் சக்தியாக வருகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் மாசுபட்ட காற்று மண்டலத்தை நல்லதாக மாற்றும் உணர்வுகள் பெற்ற பின்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ
2.அதன் உணர்வின் அருள் வழியில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலைபெற்ற உணர்வுகளுக்கு
3.இங்கிருந்து சென்று ஒளியின் உணர்வாக அங்கே மீண்டும் பெருகும் (சப்தரிஷி மண்டலம்).

இதை எல்லாம் உங்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்வது சிறிது காலமே… அதற்குள் நாம் எடுப்பது எத்தனையோ அகண்ட அண்டங்கள் வாழும் அந்தச் சக்திவாய்ந்த உணர்வுகள். அத்தகைய ஆற்றலைத் தான் பதிவு செய்கிறேன்.

இந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் பெருக்கும் பேரின்ப நிலையை… ஏகாந்த நிலை அடையும் பருவத்தைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிப்பது.

வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம்

மனிதனாக இருக்கும் பொழுது ஒன்று சேர்த்த உணர்வுகள் நமக்குள் இல்லை. பலவிதமான உணர்வுகள் மோதும் பொழுது தான் மேல் வலி தலைவலி காய்ச்சல் இடுப்பு வலி தசைவலி வருகின்றது. ஒன்றிணைந்த உணர்வுகள் இல்லாததால் தான் கடும் நோய்கள் வருகின்றது.

1.அந்த ஒன்று சேர்த்த உணர்வின் தன்மையை வளர்க்க உணர்வுகளை ஒன்றென இணைக்க
2.ஒவ்வொருவர் உயிரையும் ஈசனாக நாம் மதித்தல் வேண்டும்… உடலை ஆலயமாக மதித்தல் வேண்டும்.
3.மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் குணங்களை மிக மிக சக்தி வாய்ந்த நிலையாக மதித்தல் வேண்டும்.

உங்களை நான் துதிக்கிறேன் என்றால் என்னை நான் மதிக்கின்றேன் என்று பொருள். அதற்குத் தான் ஆலயத்திலே தெய்வ குணங்களைப் பெற வேண்டும் தெய்வ நிலையாக இருக்க வேண்டும் ஆலயம் வருவோர் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணும்படி ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

தீப ஆராதனை காட்டுகின்றார்கள் என்றால் அப்போது அந்த வெளிச்சத்தால் அங்கிருக்கும் பொருள்கள் தெரிகின்றது. “பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெற வேண்டும்…” என்று அப்போது நாம் எண்ண வேண்டும்.

1.பொருளறிய வேண்டிய நிலைகள் இந்த வாழ்க்கையில் ஏராளம் இருக்கின்றது.
2.ஆனால் “அறிந்து விட்டோம்…” என்ற நிலையில் தான் நாம் இருப்போம்.

நம் குழந்தை மீது அன்பும் பண்பும் பாசத்தையும் செலுத்தி இருப்போம். அவனை எங்கேயாவது ஒரு வேலைக்கு அனுப்பி… அவன் வரத் தாமதம் ஆனால் ஏன்டா இப்படி நேரமாகிவிட்டது…? என்று கேட்கின்றோம். அந்த இடத்திலே “அழுத்தம்” அதிகமாகக் கொடுக்கின்றோம்.

ஆனால் வாங்கி வருவதற்கு முன் இப்படிச் சத்தம் போடுகின்றார்கள் என்று அவனுடைய உணர்வு மாறுகின்றது. அப்படி மாறினால் இருவருக்குமே நிச்சயம் பொருளறியக்கூடிய நிலை இல்லாது போகின்றது.

ஆகவே நாம் சொல்லக்கூடிய சொல்லில் பொருளறியும் நிலைக்கு வர வேண்டும். நமது சொல் அவனைத் தெளிவாக்கும் நிலைக்கு வர வேண்டும்.

1.சிறிது நேரத்திற்கு முன்பாக நீ வந்திருந்தாய்…! என்றால் நன்றாக இருந்திருக்கும்.
2.ஏனென்றால் வந்த விருந்தளிகள் ஊருக்குப் புறப்பட்டார்கள்… என்று சொன்னால் இந்த உணர்வுகள் தெளிவாகும்.

அதற்குப் பதிலாக… கடைக்குப் போய் எவ்வளவு நேரம் ஆனது… ஏன்டா இப்படிச் செய்கிறாய்…? என்று விருந்தாளிகளுக்கு முன் சொல்லும் பொழுது அவனுக்கு அவமரியாதை ஆகி விடுகிறது.

இப்பொழுது அப்படிச் சொல்லிவிட்டாலும் அடுத்து… நாம் எதையாவது சொல்லி விடுவோமோ…! இது எதற்கு வம்பு…? வரவில்லை என்றால் திட்டுவார்கள்…! என்று அவனுக்குள் இந்த மனநிலை வந்து விடும்.

அதனால் தான் கோவில்களில் தீபத்தை வைத்து ஆராதனையாகக் காட்டுகின்றார்கள். எந்த நிலையாக இருந்தாலும் “பையன் வெளியிலே சென்றான்… சரி நேரம் ஆகிவிட்டது…” என்று அந்தப் பொருளை அறிய முடியும்.

விருந்தாளிகள் வந்துள்ளார்கள் என்ற அன்பு மிகுதியால் அவர்களைக் கவனிக்க வேண்டும் என்று பொருளை வாங்கச் சொல்லிப் பையனை அனுப்புகின்றோம். சீக்கிரம் வாங்கிக் கொண்டு வா…! என்று தான் சொல்லி அனுப்புகின்றோம்.

ஆனால் நேரமாகி விடுகிறது.

நேரம் ஆகிவிட்டது நாங்கள் ஊருக்குப் போகிறோம்…! என்று விருந்தாளிகள் சொல்கின்றார்கள். அப்படிச் சொல்லும் போது நமக்கு உணர்வு மாறுகின்றது. அந்த நேரம் வெறுப்பு வருகின்றது… நம் பையன் மீது கடுகடுப்பாகிறது.

எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் செய்கின்றான் என்று இந்த உணர்வு வருகின்றது.
1.வந்தவர்களைப் பார்க்கும் பொழுது பாசம் வருகின்றது.
2.ஆனால் பையன் மீது வெறுப்பு வருகின்றது.

அவன் தாமதமாக வந்த பின் ஏண்டா இந்த மாதிரி நேரமாக்குகின்றாய்…? என்று இவர்களை நாம் மெச்சப் பார்க்கிறோம்.

நான் வேகமாகத் தான் வாங்கி வரச் சென்றேன். கடைக்காரன் தாமதப்படுத்தி விட்டான்… ஆனால் என்னை வீட்டிலே இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அவனுக்கு நம் மீது வெறுப்பு வருகிறது.

அந்த இடத்தில் நாம் பொருளை அறிய முடியாது போய் விடுகின்றது… வெறுப்பு வளர்கின்றது. அதற்குத்தான் கோயிலில் விளக்கைக் காட்டுகின்றார்கள்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய நிலை வந்தாலும் பொருளறிந்து செயல்படும் அந்த உயர்ந்த ஞான சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும். அப்படி எண்ணினால் அந்த விளக்கின் வெளிசத்தால் பொருள் தெரிவது போன்று நல்ல உணர்வு கொண்டு நாமும் செயல்பட முடியும்.

1.பையன் போன இடத்திலே என்னமோ தெரியவில்லை… ஏதோ நேரமாகிவிட்டது… சரி பரவாயில்லை…! என்று சொல்லிவிட்டு
2.விருந்தாளிகளிடம் “நேரம் ஆகிவிட்டால் நீங்கள் போய் வரலாம்…” என்று சொன்னால் அது உசிதமாக இருக்கும்.

ஆனால்… பையன் வரட்டும்… வரட்டும்…! என்றே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் விருந்தாளிகளைத் தடைப்படுத்துவது போன்று ஆகிவிடும். ஏனென்றால் இப்படி ஆக்கிவிட்டால்… அடுத்தாற்போல் “இந்த வீட்டிற்குச் சென்றாலே நம்மைத் தாமதப்படுத்துவார்கள்…” என்ற எண்ணம் தான் அவர்களுக்கு வரும்.

ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்களில் வெறுப்பாகாதபடி
1.அந்த உயர்ந்த பண்பினை வளர்க்க வேண்டும்.
2.அன்பினைப் பேணிக் காக்க வேண்டும்.
3.பரிவான உபகாரத்தைப் பன்புடன் செயல்படுத்த வேண்டும்

ஆகவே வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில்… நாம் எப்படித் தெரிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு செயல்பட வேண்டும்…? என்பதை “ஞானிகள் காட்டிய அந்த அருள் வழிப்படி நாம் செயல்படுவதே மிகவும் நல்லது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உலக ரீதியிலே இன்று விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு விஷக் கதிரியக்கங்களால் உருவாக்கப்பட்ட எத்தனையோ ஆயுதங்களையும் குண்டுகளையும் ஒவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கின்றார்கள்.

எதிரிகள் போர் தொடுக்க வருகின்றார்கள் என்றால் இதை வெடிக்கச் செய்து அவனை அழித்து விடுகின்றான். என்னை அழித்தான் என்றால் அவனும் அழிந்து விடுவான் என்று ஒவ்வொரு நாட்டிலும் முகப்புகளில் இப்படி வைத்துள்ளார்கள். நம் நாட்டிலும் கூட உண்டு.

காரணம்…
1.விஷமான குண்டுகளை வெடிக்கச் செய்துவிட்டால் இங்கே வந்து அவனும் ஆட்சி புரிய முடியாது என்று (எல்லாம் சூனியமாகும்)
2.இதே மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் மனிதன் கடைசி முதிர்ந்த நிலைகள் கொண்டு பிரபஞ்சத்தையே அழித்திடும் நிலைக்கு வந்து விட்டனர்.
3.நிச்சயம் இந்த உலகம் அசுர உணர்வுகளுக்குள் சிக்கும்… மனிதன் அசுரனாக மாறுகின்றான்… அரக்கனாக மாறுகின்றான்…!

பாம்பினங்கள் தன் இனத்தையே உணவாக எப்படி உட்கொள்கிறதோ அதே போல் மனிதனுக்கு மனிதன் விஷம் கொண்ட உணர்வுகளாக தன் இனத்தையே உட்கொள்ளும் நிலை வந்துவிட்ட்து.

ஆடு மாடுகளைக் கொன்று தின்றான். இப்பொழுது மனிதனையே கொன்று தின்றால் நல்லது என்று நிலைக்கு வந்து விட்டார்கள். நீக்ரோ நாடுகள் அனைத்திலுமே மனிதப் பிரேதத்தை புதைத்தால் அது நல்ல சரீரமாக இருந்தால் தோண்டி எடுத்து சமைத்து உணவாக உட்கொண்டு கொண்டிருக்கின்றார்கள்.

மண்ணுக்குத் தான் போகின்றது நான் சாப்பிட்டால் என்ன…? என்று இப்படி நியாயத்தை கற்பித்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

நம் பூமியின் ஆரம்ப நிலை வளர்ச்சியில் அதனுடைய உருவம் நீள வடிவில் பாறைகளாக கூடி வளரப்படும் பொழுது கவிழ்ந்து விடும் சூழ்நிலை வந்தது…!

ஒரு பக்கம் எடை கூடினால் திசை மாறும். அப்படிப்பட்ட திசை மாற்றங்கள் நம் பூமியில் ஏராளம் நடந்துள்ளது. பண்டைய கால நிலைகளில் கடல்களிலும் திசை மாறிய நிலைகள் உண்டு.

அப்படிக் கடல் மாற்றமடையும் போதுதான்… அங்கே வாழ்ந்த உயிரினங்கள் தரை வாழ் நிலைகளுக்கு வந்தது. பல பல உயிரினங்களாக மிருகங்களாக இங்கே உருப்பெற்றது.

அதே சமயத்தில் கடலுக்குள் மறைந்த நிலைகள் அங்கே பல நிலங்களும் உண்டு. பூமியில் பல காலங்களில் திசை மாறியது உண்டு.
1.இப்போது. இன்னொரு திசை மாறும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.
2.சர்வத்தையும் கூழாக மாற்றும் தன்மை வந்து கொண்டுள்ளது.
3.இந்தப் பிரபஞ்சம் பூராவுமே சிதைந்து போகும் நிலை வருகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் பிற மண்டலத்தின் விஷத்தின் தன்மைகளை எடுத்துக் கொடுத்ததால் தான் நம் பிரபஞ்சமே உருவாகும் நிலைக்கு முதலில் வந்தது.

இருந்தாலும் இப்போது அவைகள் அனைத்தும் நம் சூரியனைப் போன்று தனித் தனிப் பிரபஞ்சமாக உருவாக்கும் நிலையாக உருமாறிக் கொண்டுள்ளது.

அப்போது சூரியனுக்கு உணவில்லை என்கிற போது சூரியனும் பூமியும் கூழாகி விட்டால் சிதைந்துவிடும்..!

இதற்கு முன்… ஒரு சமயம் வேறொரு பிரபஞ்சத்தைச் சேர்ந்த ஒரு சிதைந்த கோள் நம் பிரபஞ்சத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றது என்று சொல்லியிருந்தேன் (ஞானகுரு).

ஆனால் பிரபஞ்சத்திற்குள் சுழன்ற நிலைகளில் இருக்கும் போது முட்டை வடிவில் இருக்கும்… சிதைவதில்லை. ஆனால் இன்னொரு மண்டலத்திற்குள் வரப்படும் பொழுது அமிலமாக வருகின்றது.

நாலைந்து துணுக்குகளாக வருகின்றது. நம் பூமி மீது நேரடியாக வந்து தாக்கி இருந்தால் பூமியே சிதைந்து இருக்கும்.

40 வருடத்திற்கு முன்பு வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னோம் பின்னாடி விஞ்ஞானிகளும் அதைத் தெரியப்படுத்தினார்கள்.
1.அந்த உடைந்த பாகங்கள் வியாழன் கோளில் விழுந்து அமிழ்ந்து விட்டது.
2.அது போல் நம் பிரபஞ்சமும் மாறும் நேரம் வந்துவிட்டது.

பூமியோ மற்ற மண்டலங்களாக எதுவாக இருந்தாலும் எல்லாமே ஆவியால் உருவானது தான். ஆனால் கடைசியில் கரைந்து கூழாக மாறும் பொழுது சூரியனின் சுழற்சி வேகம் கூடி… அதை ஆவியாக மாற்றுகின்றது.

தன் ஈர்ப்பில் உள்ள அனைத்தையும் ஆவியாக மாற்றச் செய்த பின்… 27 நட்சத்திரங்கள் தனித் தனி பிரபஞ்சமாக மாறுகிறது அல்லவா… அதற்கு இதை எல்லாம் உணவாகக் கொடுத்துவிடும்.

சூரியனும் பிரபஞ்சத்தின் நிலைகள் அந்தச் சுழலில் சிக்கி ஆவியாக மாறிவிடும். விஞ்ஞானிகள் ஒரு காலம் இதை நிச்சயம் சொல்வார்கள்.

1.இது எல்லாம் இயற்கையின் நிலைகள் எப்படி மாறுகின்றது…? மாறப் போகின்றது…? என்று குருநாதர் தெளிவாக எனக்குக் கூறியிருந்தார்
2.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் யாம் இதைச் சொல்வதுண்டு… கேட்போர் யாரும் இல்லை…!
3.ஆக கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் நஞ்சை வென்றான்… உணர்வை ஒளியாக மாற்றினான்…!

கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்தார்கள்… இரு உயிரும் ஒன்றாகி ஒளியின் உணர்வாக உருவாக்கினார்கள்.

துருவத்தின் எல்லையை நோக்கி அதன் வழி வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றினார்கள்… அந்த எல்லையிலேயே துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

அந்த அகஸ்தியன் உணர்வை எந்நாட்டவரும் பெறலாம் என்று அக்காலங்களில் இதைச் சொல்லி உள்ளார்கள்.
1.காரணம் திசை மாறிய நம் பூமியை அன்று சமப்படுத்தியவன் அகஸ்தியன் தான்.
2.அவன் வழி சென்றால் வரும் மாற்றத்திலிருந்து நாம் தப்பலாம்…!

மின்னலுக்குள் இருக்கும் வீரிய சக்தியும்… நம் உயிரின் இயக்கச் சக்தியும்

எதிர்நிலையான நட்சத்திரங்கள் மோதலாகும் பொழுது மின்னலாகிறது. அந்த மின்னல் மரத்திலே பட்டால் அதற்குள் ஊடுருவித் தன் இனத்தை எடுத்துக் கருக்கி விடுகின்றது.

நிலத்தில் பட்டால் பூமியின் நடுமையம் சென்று அடைகின்றது. இப்படி அதீதமான நிலைகளில் உள் சென்று எதிர்மறையான நிலைகள் கொண்டு பூமியின் நடு மையத்திற்குள் சென்றால் எந்தப் பகுதியில் ஆகின்றதோ அங்கே கொதிகலாகி அங்கே பாறைகள் உருகுகின்றது.

மேல் பகுதி உருகி ஆவியாக மாறும் போது பூமி வெடிக்கின்றது. மேல் பாறைகள் கீழே வருகின்றது. நிலநடுக்கம் என்று அடிப்பாகத்தில் செல்கின்றது. இதற்குள் அடக்கி விடுகின்றது.

1.இந்த மின் அணுக்களின் கதிர்கள் கடலிலே பதியப் படும் பொழுது மணலாக மாறுகின்றது.
2.கடல் நீருக்குள் இருக்கும் ஹைட்ரஜன்… உப்பின் சத்து அதனுடைய வீரியத்தைத் தணிக்கிறது.
3.கடல்களில் பாயும் நிலைகள் மணலாக மாறி வருவது… மின் அணுக்களின் துகள்கள் வரப்படும் பொழுது யுரேனியம் என்று எடுக்கிறர்கள்.
4.எந்தெந்த நட்சத்திரத்தின் கலவையாகி எதிர்நிலையாக ஆனதோ அந்த மணலில் உருவாக்கப்படுகின்றது.

அந்த மணலை எடுத்து அணுவைப் பிளக்கின்றான் விஞ்ஞானி. அது மற்றொன்றை அடக்கப்படும் பொழுது அதிலே வருவதைப் பிளந்து எடுக்கின்றான். அதிலே சிதைந்த உணர்வின் தன்மையைத்தான்
1.கம்ப்யூட்டரில் இந்த உணர்வைப் பாய்ச்சி ஒலி அதிர்வுகளைக் கண்டு உணர்வின் செயலாக்கங்களுக்கு
2.அந்த நுண்ணிய கதிரியக்கப் பொறிகளை மாற்றும் போது தான் கம்ப்யூட்டர் என்று வருகின்றது.

அது அவரவர்கள் கண்டறிந்த உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் எப்படி வருகிறது…? என்பதை
1.மின் அணுவின் கதிரியக்கங்களின் நிலைகளை ஒரு காந்தப் புலன் அறிவால் கவரப்பட்டு
2.அதையே கம்ப்யூட்டர் காந்தத்தால் கவரும் உணர்வின் தன்மையைப் பதியச் செய்து உணர்வின் அறிவான பின் எதிரொலி
3.மின் அணுவைப் போன்று தோன்றும்… அந்த உணர்வுக்கு ஒப்ப எது ஆகின்றதோ அந்த ஒவ்வொரு உணர்வுக்கொப்ப உருவத்தையும் காட்ட முடியும்.

100 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் இங்கே வாழ்ந்தார்கள் என்றால் அந்த வம்ச வழிகளிலே இருந்தால் “அந்த உருவங்கள் எப்படி இருக்கின்றது…?” என்பதைக் காணலாம்.

இந்த உணர்வின் தன்மை பதிவாக்கிக் கம்ப்யுட்டரில் எதிர் அலைகளை எடுத்துக் கொண்டால் ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.

மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது அவர்கள் வாழ்ந்த உணர்வுகள் அங்கே பதிந்ததை எடுத்து மனித ரூபத்தையே கொடுக்கின்றது… விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.

இதைப்போன்று அன்றைய மெய் ஞானிகள் உணர்வையும் நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்த உணர்வைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை இங்கே வந்து
3.அவன் ஒளியான உணர்வைப் பெற்று நீங்களும் ஒளியாக முடியும்.

விஞ்ஞான அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது… சாமி எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்…! என்று சிலர் நினைப்பார்கள்.

விஞ்ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? மெய்ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? குருநாதர் இந்த இயற்கையின் நிலைகளை அதனுடைய இயக்கத்தை எப்படி…? என்று எமக்கு உணர்த்தியதைத் தான் உபதேசிக்கின்றோம்.

1.காலம் வரும்போதெல்லாம் உங்கள் உணர்வுக்கொப்ப… காலத்தின் மாற்றத்திற்கொப்ப அதை நுகர்ந்து வரும் போது
2.அந்தந்தக் காலத்தின் உணர்ச்சிகள் அதைக் கவர்ந்து உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

முந்திச் சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும். இந்த உணர்வின் வளர்ச்சி வரப்படும் பொழுது இயற்கையின் நிலைகள் உங்களை நீங்கள் அறியும் நிலைக்கு வர வேண்டும் என்பதற்குத்தான் இப்போது இதை உணர்த்துகின்றோம்.

என்றைக்கும் நிலையானது இந்த உயிர்.
1.அந்த உயிருடன் ஒன்றிய ஒளியான உணர்வின் தன்மை ஆக்கப்பட வேண்டும்.
2.பிறவியில்லா நிலை அடைந்த அருள் ஞானிகள் உணர்வைச் சேர்ப்பிக்கத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம்…! எத்தனையோ வேதனைகள்; எத்தனையோ வெறுப்புகள்; எத்தனையோ சங்கடங்கள்; இதைப் போன்ற உணர்வுகளை அறியாமலே நமக்குள் நாம் பதியச் செய்து விடுகின்றோம்.

இது இரத்தத்தில் கலந்து அணுக்களாக விளைகிறது. விளைந்த அணுக்கள் அதனதன் உணர்வுகளைக் காற்றிலிருந்து பிரித்து உணவாக எடுத்து உடலிலே வளரத் தொடங்குகின்றது.

சூரியன் கவர்ந்து வைத்திருக்கக்கூடிய செடி கொடிகளின் சத்துக்கள் பூமியின் காற்று மண்டலத்தில் படரப்படும் போது அதே இனமான அந்த உணர்வைக் கவரக்கூடிய செடி கொடிகளின் வித்துகள் அதனதன் சத்தைக் கவர்ந்து கொள்வது போன்று
1.எந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுத்து வினையாக (அணுக்களாக) உருவானதோ
2.அதனதன் உணர்வை எடுத்து நம்மை அதன் வழிக்கு இயக்கி விடுகின்றது.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்பாகும் உணர்வலைகளை நாம் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதே அலைவரிசையில் டிவியை இயக்கினால் அதைக் கவர்ந்து காட்சியாகவும் இசையாகவும் காட்டுகின்றது.

அதைப் போன்று தான்
1.திட்டியவனை எண்ணிய உடனே நமக்குள் அந்த வேகமும் துடிப்பும் கொண்டு கோபம் வருகின்றது
2.வீட்டிலே குழந்தைகளாக இருந்தாலும் கோபமாகப் பேசி விடுகின்றோம்.
3.அந்தக் கோபத்தினால் நம் வியாபாரத்தையும் சீராகச் செயல்படுத்த முடியாதபடி போகின்றது.

ஆக… பதிவான உணர்வுகள் நம்மை மீண்டும் இவ்வாறு இயக்குகின்றது… நம்மை அறியாமலே பல தீங்குகளைச் செய்யச் செய்கின்றது.

“சந்தர்ப்பம் தான் இது எல்லாம்…!”

எதன் வலு அதிகமாகின்றதோ நாம் சோர்வடையப்படும் பொழுது நம் சிந்தனைகள் மாறுகின்றது. விஷம் என்ற நிலை வரும் போது நல்லதுக்காக ஏங்கும் பொழுது நமக்கு இன்னும் கோபம் வருகிறது.

அந்தக் கோபத்தால் சிந்தனை இழந்து… தன்னையோ அல்லது மற்றதையோ அழித்திடும் உணர்வே வருகின்றது. ஏனென்றால் அதிக வேதனையாகும் பொழுது முழுமையாக நினைவிழந்து விடுகின்றோம்

நாம் தவறு செய்தோமா…? எல்லாமே சந்தர்ப்பம் தான்… சந்தர்ப்பத்தால் தான் இன்று இயக்கப்பட்டு வருகின்றோம்…!.

ஆனால் நல்ல சந்தர்ப்பத்தை மனிதனால் (நம்மால்) ஏற்படுத்த முடியும்… எப்படி…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாக இருக்கும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நமக்குள் நாம் உருவாக்க முடியும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க முடியும்

சூரியனின் இயக்கங்கள் அது எதை எதைக் கவர்கின்றதோ சந்தர்ப்பத்தால் மோதும் பொழுது மரம் செடி கொடிகள் (இனங்கள்) மாறுகின்றது.

காட்டிலே ஒரு முயல் நரியைச் சந்திக்க நேர்ந்தால் அதனின் சந்தர்ப்பம் அது அதற்கு இரையாகிறது. ஆனாலும் முயல் தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நரியின் வலுவான உணர்வை எடுக்கின்றது.

இருந்தாலும் நரி முயலை அடித்துக் கொல்கிறது உடலை விட்டுப் பிரிந்த பின் முயலின் ஆன்மா நரியின் ஈர்ப்புக்குள் சென்று நரியின் உருவமாக மாறுகின்றது.

முயலாக இருப்பது அடுத்து நரியாக மாறுவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…!”

இன்று நாம் ஒரு தீமையைச் சந்திக்க நேரும்போது அதை நுகர்ந்து விடுகிறோம். நமக்குள் தீய வினையாக அது உருவாகி விடுகின்றது… ஆக தீய வினைகளாக உருவாவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…”

சந்தர்ப்பத்தால் நாம் பல நல்லதுகளைச் செய்தாலும் தீமையின் வலுவைச் சுவாசிக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்லவைகள் மறைகின்றது… உடலில் நோய்கள் வருகின்றது.
1.இப்படி மாறக்கூடிய “இந்தச் சந்தர்ப்பத்தை” நாம் மாற்ற வேண்டுமா இல்லையா…?
2.நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

காலையில் நம் உடல் அழுக்கைப் போக்கித் துணியில் உள்ள அழுக்கைப் போக்கினாலும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வுகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி… நம் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க வேண்டும்..

பல கோடிச் சரீரங்களில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து மனிதனாக உருவாக்கியது ஆதிமூலம் என்ற நம் உயிர்தான்…! இந்தப் பிள்ளை யார் நீ சிந்தித்துப் பார் என்று நம்மைச் சிந்திக்கும்படி செய்வதற்குத் தான் ஆற்றங்கரையோரம் எல்லாம் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

காரணம்… இயற்கையின் பேருண்மைகளை அறிந்தவன் அன்றைய அகஸ்தியன். அகண்ட அண்டத்தையும் அவன் அறிந்தான்… நம் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்றான்.. நஞ்சினை ஒளியாக மாற்றிக் கொண்டான்…
1.தான் பெற்ற சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுத்தான்.
2.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்தான்
3.இரு உயிரும் ஒன்றாக ஆனது… இரு உணர்வும் ஒன்றாக ஆனது
4.துருவத்தை எல்லையாக வைத்து அதில் வரக்கூடிய நஞ்சினைக் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

இப்படி ஆதியிலே தோன்றிய (நம்மைப் போன்ற மனிதனான) அந்த அகஸ்தியன் விண் சென்றபின் அதே (தன்) மனித இனத்திற்கு அவன் பெற்ற வழியைப் பெறுவதற்காக… விநாயகர் தத்துவம் என்ற நிலையில் யானைத் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டி
1.இந்த வாழ்க்கையில் நாம் எதைப் பெற வேண்டும்… எந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்…? என்று
2.விநாயகரைப் பார்க்கும் போதெல்லாம் அதை எண்ணி எடுக்கும்படி செய்தான்.

சந்தர்ப்பத்தால் தான் அகஸ்தியன் உயர்ந்த சக்திகளை எடுத்தான்.. ஒளி உடலைப் பெற்றான். அதைப் போன்று தான்
1.இப்பொழுது உங்களுடைய சந்தர்ப்பம் உயர்ந்த கருத்துக்களைக் கேட்கின்றீர்கள்.
2.இந்த உபதேசத்தைப் படிப்பது “இதுவும் சந்தர்ப்பம்தான்…!”

இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திப்பது… குடும்பமாக இருந்தாலும் சரி வியாபாரமாக இருந்தாலும் சரி உறவினர்களாக இருந்தாலும் சரி மத இனங்களாக இருந்தாலும் சரி அரசியல் அமைப்புகளாக இருந்தாலும் சரி… அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நம்மை அறியாமலே எத்தனையோ வழிகளில் பகைமை வந்து சேர்கின்றது.

ஆனால் நம்முடைய இந்தச் சந்தர்ப்பம்…
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை நுகர்ந்து நம்மை அறியாமல் இயக்கக்கூடிய இருளை அகற்றுவது தான்
2.இது சிறுகச் சிறுக நமக்குள் முழுமையாகப்படும் பொழுது மகரிஷிகள் உணர்வினை நமக்குள் உருவாக்கும் சந்தர்ப்பமாக மாறுகிறது.
3.இப்படி உருவாக்கி விட்டால் தீமையை நீக்கும் சக்தியை நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் நாம் பெறப்படும் பொழுது… எந்த நேரத்தில் எத்தகைய தீமை வந்தாலும் வலிமை கொண்டு அதை மாற்றிப் பிறவி இல்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம்.

நாம் உருவாக்கும் நல்ல சந்தர்ப்பங்கள்… அகஸ்தியன் எங்கே சென்றானோ… நிச்சயம் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

ஆனால் எனக்குத் துரோகம் செய்தான்… தொல்லை கொடுத்தான்… அவன் உருப்படுவானா…! என்ற பகைமையான உணர்வை எடுத்தால் அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல வேண்டி வரும்.

எந்தப் பக்தியால் தெய்வத்தை வணங்கினோமோ உடலை விட்டுச் சென்ற பின் மந்திரங்களைச் சொல்லப்படும் பொழுது அவனுக்கு அடிமையாகி விடுகின்றோம்.

காலத்தால் ஞானிகள் கொடுத்த உண்மை நிலைகள் இப்படித் தான் மாறிவிட்டது. ஆகையினால்
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைக்குத் தான் இதை உபதேசிப்பதும் அருள் உணர்வைப் பதிவாக்குவதும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிர் வழி சுவாசித்து… எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று… கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வந்து அதன் வழி ஈர்த்து உடலுக்குள் செலுத்தி இரத்தங்களில் அதை கலக்கச் செய்யப்படும் பொழுது எல்லா அணுக்களிலும் இந்த வலுப்பெறுகின்றது.

காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்த எத்தனையோ விதமான தீமையான உணர்வுகளை உடலுக்குள் விளையாதபடி தடுத்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் நிலைநிறுத்தி
2.வரும் தீமைகளை அனாதையாக்க முடியும்.

“சாமி சொல்லும் வழியில் நடந்தால்” நம்மை நாம் காக்க முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும்

மற்றவர்களைக் காக்க நாம் உதவி செய்தாலும்… அவருடைய துயரத்தை வேதனையை நுகர்ந்த நிலையில் அது விஷமான உணர்வாக நம் உடலுக்குள் சென்று… நம்மை ஆபத்தான நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

ஏனென்றால் நன்மை செய்தாலும் அதைத் தடுக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குத் தான்
1.உங்கள் வாழ்க்கையில் எந்த நிமிடமும் எந்த நேரத்திலும் நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம்…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும்படி தகுதியை ஏற்படுத்துகின்றோம்… அடிக்கடி நினைவு படுத்துகின்றோம்.
3.அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
4.24 மணி நேரமும் நான் சதா தியானத்தின் மூலம் எடுத்துப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றேன்.

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாலே உங்கள் தலை வலி மேல் வலி குறையும்… இடுப்பு வலி இருந்தால் அதுவும் குறையும். ஏனென்றால் இதைக் கேட்கப்படும் பொழுது அந்த நஞ்சுகள் அகல்கின்றது.

ஆனாலும்… சாமி உபதேசிக்கின்றார்…! அதைக் கேட்க விடாது “மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்களே…” என்று அதன் பால் நினைவச் செலுத்தி விட்டால் அடுத்த நிமிடம் மேல் வலி தலை வலி… வெறுப்பு எரிச்சல் கை கால் குடைச்சல் நிச்சயம் வரும்.

காரணம்… “நாம் நுகர்வதைத் தான் நமது உயிர் இயக்குகிறது…” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்தாலும் அதை மாற்றும் வழி வேண்டும்.

அதை மாற்றுவதற்குண்டான சக்தி உங்களுக்குக் கிடைப்பதற்குத் தான் இதை உபதேசிப்பதும் அருள் உணர்வுகளைப் பதிவு செய்வதும்.

உபதேசக் கருத்துக்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தால் உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும் சக்தியாக அது வரும். ஆனால் அதற்குப் பதில் சாமி தான் செய்து கொடுப்பார் என்று நம்பினால்… “அது மிகவும் பிழையானது…”

1.சாமி சொன்ன உணர்வைப் பதிவாக்கி கொள்ள வேண்டும்.
2.”அதன் வழி நடந்தால் நம்மை நாம் காக்க முடியும்… ” என்ற அந்த நம்பிக்கை வர வேண்டும்.

ஏனென்றால் சாமியார் செய்வார் கோவிலில் இருக்கும் தெய்வம் செய்யும் என்ற இந்த நம்பிக்கையில் தான் வாழ்கின்றோம்.

அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். அந்தத் தெய்வ நிலை பெற வேண்டும்… அந்தத் தெய்வச் செயலாக நாம் செயல்பட வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
1.அந்த உணர்வு நமக்குள் அத்தகைய செயலாக உருவாக்குகின்றது.
2.ஆக நாம் எண்ணியதைத் தெய்வமாக்குகின்றது.

அனைவரும் நல்லவராக வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் தெய்வீகப் பண்புகள் பெற வேண்டும் என்று எண்ணினால் நாம் அதுவாக ஆகின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இயற்கையின் பேருண்மைகளை எல்லாம் சொல்லி வருகின்றோம். ஆனாலும் நான் படிக்காதவன் தான்.

1.அனைத்துச் சக்திகளும் காற்றில் இருக்கின்றது… குரு காட்டிய வழியில் அதை நான் நுகர முடிகின்றது.
2.வியாசகன் எப்படி அகஸ்தியன் உணர்வை நுகர்ந்து உண்மைகளைக் கண்டறிந்தானோ அதைப் போன்று தான் குருநாதர் எம்மை நுகரும்படி செய்தார்.
3.அதைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

நீங்கள் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும் என்று எண்ணினால் எந்தத் தீமையும் உங்களை சாடாது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

உங்களை நீங்கள் நம்புங்கள.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குரு வழியில் வாயை மூடி மௌனம் சாதித்து… வலுக் கொண்ட உணர்வுகளைச் சுவாசித்து வேதத்தின் தன்மை கொண்டு அவர்கள் எடுத்துக் கொண்ட சில முறைகள் “ஜைன மதத்தில்” உண்டு.

ஜைன மதங்களுக்கும் புத்த மதங்களுக்கும்
1.குரு வழியில் சுட்டிக் காட்டப்படுவது மலைப்பகுதியில் பாங்காகும் துருவ நட்சத்திரம்.
2.குளிர் பிரதேசமாக இருந்தாலும் காலையில் அந்தப் பகுதியை உற்று நோக்கும்படி செய்து
3.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைத் தனக்குள் பெறச் செய்தனர்.
4.அந்த அகஸ்தியன் துருவன் ஆகித் துருவ நட்சத்திரம் ஆன உணர்வின் தன்மைகளை நுகரப்படும் பொழுது அவன் வழியைப் பின்பற்றுகின்றனர்.

அகஸ்தியனைப் பின்பற்றினாலும்… மதத்தின் அடிப்படையில் குருக்களாக வருகின்றனர். அதை எடுத்துக் கொண்டாலும் உடலின் இச்சைக்கு அதைச் செயல்படுத்தி… தலை கீழாக மாற்றி அதர்வண வேதம் என்று கொண்டு சென்று விட்டார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக ஆகும் நிலை ஜைன மதத்திலும் புத்த மதத்திலும் கொண்டு வந்தாலும் அதிலே சில கட்டுப்பாடுகள் உண்டு.

அந்த மதத்தின் தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தலையை மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிக்க வேண்டுமென்றாலும் தலை முடிகளை வேதனைப்படுத்தித் தான் நீக்குவார்கள். கையிலே தான் பிடுங்குவார்கள்… பல இம்சைகள் வரும். அவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புத்த துறவிகள் “உலக பந்தம் எனக்கு வேண்டாம்…” என்று சென்றாலும் தலை முடியைப் பிடுங்குவார்கள்…. ஒன்றல்ல… பத்து இருபதைச் சேர்த்துப் பிடுங்குவார்கள். பிட்சுவாக வருவதற்கு அத்தனை வேதனையையும் பொறுத்துக் கொள்வார்கள்.

சில நேரங்களில் உடலில் ஆயுதப் பரிசோதனையும் உண்டு.

உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட பின் ஊசியால் நகத்தில் குத்துவார்கள். ஆ…! என்று சப்தமிட்டால் உன்னால் இதைச் செயல்படுத்த முடியாது என்று விலக்கி விடுவார்கள். ஆ…! என்று சப்தமிடாதபடி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதத்தின் அடிப்படையில் சிசுக்களில் இருந்து இவ்வாறு வளர்த்து இந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டி வளர்க்கின்றனர். வளர்த்து அதன் வழி வந்தாலும் அவர் சொன்ன வேதங்கள் இங்கே இயக்கப்பட்டு இந்த வலு எடுத்துக் கொண்டு வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் இறந்த பின் “இறப்பிற்கு ஒரு மந்திரத்தைச் சொல்வார்கள்…”

மந்திரத்தைச் சொல்லப்படும் பொழுது அதன் வழி பிரியும் அந்த ஆன்மாவை இவர்கள் பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். அதாவது பல வகையிலும் கட்டுப்படுத்தப்பட்டு… மந்திர ஒலிகளைக் கூறி “இறைவனை அடையக்கூடிய நிலை” என்று கொண்டு செல்கிறார்கள்.

அவர்கள் எண்ணிய உணர்வுகள் தான் இங்கே இறைவனாகிறது. எதன் உணர்வின் தன்மை உனக்குள் வலுவோ அதையே நீ அடைகின்றாய் என்று கீதையிலே கூறப்படுகிறது.

காரணம் யாராக இருந்தாலும் எப்படியும் கடைசியில் இறந்து தான் ஆக வேண்டும். உடலில் விளைந்தது எதுவோ அது சாகாக்கலையாகிறது. ஆகவே இறைவனை அடையும் தன்மை இங்கே இல்லை. மீண்டும் உடல் பெறும் நிலை தான் வருகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இவர்கள் எடுத்துக் கொண்டாலும்
2.இறந்த பின் மனித உடல்களுக்குள் பகிரச் செய்து அதன் வழியில் தான் கொண்டு வந்து விட்டார்கள்.

மனிதனுக்கு மதத்தின் தன்மை முக்கியம். அந்த மதத்தின் அடிப்படையில் நாட்டை ஆட்சி புரிவது உண்மை என்று மடாதிபதிகளாக மாற்றப்பட்ட நிலையிலேயே சென்றனர்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாலும்
2.”ஆட்சி… நிர்வாகம்…” என்ற நிலையில் செல்லும் போது விண் செல்லும் நிலை தடையாகின்றது.

கூட்டமைப்பின் மூலம் நாம் உருவாக்க வேண்டிய பேரருள் பேரோளி

கூட்டுத் தியானத்தின் மூலம் “அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்ற உணர்வினைக் கூட்டமைப்பாக நாம் வெளிப்படுத்தும் போது
1.அனைவரது செவிகளிலும் அது பட்டு இந்த உணர்வுகள் உயிருக்கு எட்டிக் கண்ணுக்குப் பாய்ச்சப்பட்டு
2.கண்ணின் துணை கொண்டு இந்தப் பூமியில் பரவி இருப்பதையும்… சொல்லும் உணர்வையும் கவர்ந்து
3.அத்தகைய வலுக் கொண்ட அணுவாக உடலுக்குள் உருவாக்குவது தான் கூட்டுத் தியானத்தின் அமைப்பு.

பல பொருள்களைப் போட்டுச் சுவைமிக்க குழம்பாக உருவாக்குவது போன்று பலரும் ஒன்றாகச் சேர்த்து அனைவரும் நலம் பெற வேண்டும்… இருளில் இருந்து மீள வேண்டும்… நஞ்சில் இருந்து விடுபட வேண்டும்… பேரருள் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வைச் சொல்லப்படும் பொழுது இந்தக் கூட்டமைப்பின் உணர்வின் சக்தி நமக்குள் “பேரருள் சக்தியாக மாறுகின்றது…”

இப்படி…
1.ஒவ்வொரு மனித உடலிலும் விளையும் அந்த அருள் உணர்வுகளை ஒன்றாக இணைத்துக் கூட்டுத் தியானத்தினை வளர்ப்போம் என்றால்
2.கடும் தீமைகளை வெல்லும் ஆற்றலை நாம் அனைவருமே பெறுகின்றோம்.

ஆகவே இந்தக் கூட்டமைப்பை நாம் ஒழுங்குப்படுத்தி அதைப் பற்றுடன் செயல்படுத்தி பேரருளை நமக்குள் கூட்டுதல் வேண்டும்.

அந்தப் பேரருள் என்ற உணர்வே துருவ நட்சத்திரத்திலிருந்து பெற்றது தான். அதன் உணர்வை நமக்குள் கவர்ந்து பேரருள் என்ற இயக்கச் சக்தியை… தீமைகளை அகற்றும் வல்லமை பெற வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

ஒவ்வொரு உயிரும் ஈசனாக இருந்து… ஒவ்வொரு உடலும் கோயிலாக இருந்து… அந்தக் கோவிலுக்குள் மனிதனாக இருக்கும் நற்பண்புகளையும் நற்செயல்களையும் நல்ல உணர்வுகளையும் தீமையை அகற்றும் உணர்வாக விளையச் செய்துள்ளது.

ஆகவே…
1.நஞ்சினை வென்று உணர்வைப் பேரருளாக மாற்றும் இந்த மனித உடலுக்குள் இருக்கும் பேருண்மைகளை நாம் உணர்ந்து
2.பகைமை உருவாகாது அருள் ஒளியைப் புகுத்தி… அருள் ஞானத்தைப் பெருக்கிப் பேரருளாக மாற்றி
3.நமது சொல்லும் செயலும் கேட்போர் உணர்வுகளில் மகிழ்ச்சி பெறச் செய்வதும்
4.அவர்கள் பேரானந்த நிலைகளில் வாழும் பொழுது அதை நுகர்ந்து அரும்பெரும் சக்தியாக நமக்குள் மாற்றி அமைப்பது தான் கூட்டுத் தியானத்தின் நோக்கம்.

இதை எல்லாம் அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும். பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். பேரானந்த நிலை பெற வேண்டும்.1.
1.அந்தப் பேரருளைப் பெற்று அனைவரும் பேரொளியாக வாழ வேண்டும்
2.அனைவரும் பேரருளைப் பெற்று பேரொளியின் இயக்கமாக இருக்க வேண்டும் என்ற
3.இந்த உயர்ந்த நோக்கத்துடனே நாம் அனைவரும் செயல்படுவோம்… கூட்டமைப்பின் மூலமாக நாம் இதை உருவாக்குவோம்.

அவரவர்கள் பெற்ற உண்மைகளைத் தெளிவாக்கி அனைவரையும் தெளிவாக்குவோம்… மற்றவர்கள் இருளைப் போக்கிடும் சக்தியாக இது வளரட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நூறு சதவீதம் வேம்பின் சத்தும் பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்தும் மூன்று சதவீதம் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பத்தால் இரண்டறக் கலந்தால் எடை கூடி புவியில் படிந்து விடுகிறது.

அப்படிக் கலந்த சத்தில்
1.விண்ணிலிருந்து வரக்கூடிய மின்னல் தாக்கப்படும் பொழுது துடிப்படைந்து அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுக்கத் தொடங்குகிறது.
2.துடிப்பின் நிலை ஆனபின் அந்தந்தச் செடிகளில்… அந்தப் பங்கின் (100/10/3) விகிதாச்சாரப்படி அதைப் பிரித்து எடுக்கின்றது
3.கருவேப்பிலையாக மாறுகிறது

விஞ்ஞான ரீதியாகவும் இதைப் போன்று தான் அணு உலைகளில் கடலில் இருந்து எடுத்த வந்த மணலை வேக வைத்துப் பிரிக்கப்படும் பொழுது யுரேனியமாகவோ அல்லது மற்ற எத்தனையோ விதமான தனிமங்களாகவோ எடுக்கின்றார்கள்.

அதே சமயத்தில் பூமிக்குள் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய்… குரூடு ஆயிலை (CRUDE OIL) அதைக் கொதிக்க வைத்துப் பிரிக்கின்றார்கள்.
1.முதலில் எடையற்று வேகமாகப் பிரிந்து செல்வது கேசலின் (GASOLINE) விமானங்களுக்கு அது எரிபொருளாகவும்
2.அடுத்து பெட்ரோல்; கெரசின்; டீசல் என்று இப்படி வரிசையாக எடுத்து
3.கடைசியில் எடை கூடியதாக கல் மண் மற்றவர்களுடன் கலந்து இருப்பதைத் தாராகப் பிரித்து எடுக்கின்றார்கள்.

விஞ்ஞானிகள் இயற்கையில் உருவானதைத் தனித்துத் தனித்துப் பிரிப்பதற்காக வேண்டி இப்படிப் பல வேலைகளைக் கையாளுகிறார்கள்.

இந்த வேலைகள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் நான் (ஞானகுரு) சென்றதும் இல்லை… அதைப் பார்த்ததும் இல்லை. ஆனால் சினிமா படம் காட்டுவது போன்று இதையெல்லாம் குருநாதர் எனக்குக் காண்பிக்கின்றார்

அதைப் பார்த்துப் பழகுவதற்காக வேண்டி சினிமா தியேட்டருக்கு என்னை அழைத்துச் செல்கிறார் குருநாதர்.

தியேட்டரில் படம் நடந்து கொண்டிருக்கும்… கதவுகள் எல்லாம் மூடி இருக்கும். வெளியில் இருந்து கொண்டே சினிமா எப்படி நடக்கிறது…? பாருடா…! என்பார் குருநாதர்.

எப்படி சாமி அதைப் பார்க்க முடியும்…? என்று கேட்டேன்.

நீ பாருடா…! என்று மீண்டும் சொல்கிறார். அப்போது அங்கே நடக்கின்ற காட்சிகள் தெரிய ஆரம்பிக்கின்றது… நான் பார்க்கிறேன்.

அவரும் கூட வந்து “பாருடா பாருடா…” என்பார். அதையெல்லாம் அப்போது பார்க்கிறேன். இதைப் பார்த்த பின்னாடி என்னுடைய குறும்புத்தனம் சும்மா விட்டதா…?

குழந்தைகளை எல்லாம் அமர வைத்து எந்தெந்தச் சினிமாக் கொட்டகையில் எந்தெந்தப் படம் நடக்கிறது…? என்று கேட்டு “அதைப் பாருங்கள்” என்று அங்கேயே காண்பிக்க ஆரம்பித்தேன்.

அங்கே நடப்பது இங்கே அவர்களுக்குத் தெரிய வருகின்றது… வீட்டில் உட்கார்ந்து கொண்டே சினிமாவைப் பார்க்கின்றார்கள்

1.இயற்கையின் உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்தப் பதிவின் அலைகளை… அதை எப்படிக் கவர முடிகின்றது…?
3.இதைத் தெளிவாக்குவதற்காக குருநாதர் பல பயிற்சிகளை எனக்கு இப்படிக் கொடுத்தார்.

இதை எல்லாம் சாதாரணமாக யாரும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் தெரிந்ததை உங்களுக்குள் பதிவாக்கப்படும்பொழுது
1.சந்தர்ப்பத்தில் அந்த மகரிஷியின் அருள் சக்தி எடுத்து “நல்லதாக வேண்டும்” என்று சொன்னால் இந்த சக்திகள் உங்கள் உடலில் ஊடுருவும்.
2.உடல் நலமடைந்த பின் “நான் சொன்னேன்… நன்றாக ஆனது…!” என்று ஒரு சந்தோஷம் வரும்

ஏனென்றால்
1.நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கித் தீமையை நீக்கும் உணர்வின் ஆற்றலைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்
2.தீமைகள் புகாது தடுக்கும் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதையெல்லாம் சொல்கின்றேன்.

உதாரணமாக மனித உடலில் ஏற்படும் உணர்வுகள் ஒருவனைச் சாடிப் பேசிப் பதிவாக்கி விட்டால்… “எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணினால் அமெரிக்காவில் இருப்பவனைக் கூட அது இயக்குகின்றது… புரையோடச் செய்கின்றது வாகனம் ஓட்டிச் சென்றால் குறுக்காட்டித் தாக்கி அவனைச் செயலிழக்கும்படியும் செய்கிறது.

இதெல்லாம் சந்தர்ப்பம் தான்..!

அவனைப் பற்றி எண்ணும் போது இவன் நிலையும் அதே ஆகி இவனும் தவறி விழுகின்றான்… மேடு பள்ளம் தெரியாது கீழே விழுவான். அவனும் கெடுவான்… இவனும் கெடுவான். அவன் மேல் மீது இருக்கக்கூடிய உணர்வுகள் அந்தத் தவறு என்ற உணர்வு இங்கே வந்துவிடும்

அந்த உணர்வு இயக்க வருவது போல் தான்
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகின்றேன்.
2.இது வெறும் சொல் அல்ல…! பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

“உங்களுடைய வாக்கு” எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

1.தியானத்தில் வந்தால் மட்டும் பத்தாது.
2.உங்கள் அனுபவத்தை எடுத்துத் தைரியமாக மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியினைக் கடைப்பிடித்து எந்த நோயிலிருந்து விடுபட்டு நீங்கள் நன்றாக ஆகின்றீர்களோ உங்களுடைய வாக்கால் “நோய் இல்லை” என்று அடுத்தவர்களுக்குச் சொன்னால் அவர்கள் நோய் நீங்கும்.

1.சாமி மட்டும் தான் என்று அல்ல.
2.நீங்கள் நலமான பின் மற்றவர்களுக்கும் இந்த வாக்கினைக் கொடுக்க முடியும்.

உதாரணமாக மற்றவர்கள் அவர்கள் கஷ்டத்தை நம்மிடம் சொன்னால் அதை நாம் கேட்டுணர முடிகின்றது. இரக்கத்துடனும் ஈகையுடனும் கேட்கப்படும் பொழுது அந்தக் கஷ்டம் நம்மையும் இயக்கி நமக்குள்ளும் விளைகிறது.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று உடல் நலமான பிற்பாடு… நீங்கள் யாருக்குச் சொன்னாலும் அங்கே நோய் நீங்கி நலமாகும்.

விபூதியைக் கொடுத்தாலோ… வெறும் பச்சைத் தண்ணீரைக் கொடுத்தாலோ… அல்லது ஒன்றுமே இல்லை என்றாலும் அங்கிருக்கக்கூடிய மண்ணை எடுத்து அவர்கள் மேல் தூவினாலும் அவர்கள் நோய் நீங்கும்.

1.இவ்வாறு நீங்கள் சொல்லி மற்றவர்களுக்கு அது நல்லதனால்
2.”உங்களுக்குள் எந்தத் தீமையும் வராது…”

இந்தக் காற்று மண்டலமே விஷத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இதிலிருந்து எல்லாம் நம்மைக் காக்க வேண்டும்.

டி.வி. ரேடியோ இவை எல்லாம் அலைவரிசையில் தான் இயக்குகின்றது. இதே காற்றிலிருந்து தான் கவர்ந்து படமாகக் காட்டுகிறது.

இதே போல நம் வாழ்க்கையில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் அந்தச் சிக்கல்களை நீக்கக் கூடிய சக்தியை நாம் எடுக்க முடியும்… அந்தச் நமக்கு உண்டு.

“அதைப் பயன்படுத்தும் முறை கொண்டு செயல்படுத்தினால்” நல்லதாக இருக்கும்.

உதாரணமாக நெருப்பை எடுத்துக் கொண்டால் அதை வெளிச்சமாகவும் பயன்படுத்துகின்றோம்… பொருள்களை வேக வைக்கின்றோம்… பதார்த்தங்களை ருசியாகச் சமைக்கின்றோம். இரும்பைக் கூட அந்த நெருப்பை வைத்து உருக்குகின்றோம்.

இதைப் போன்று தான்
1.நமது உயிர் ஒரு நெருப்புக்குச் சமம்.
2.அதிலே உயர்ந்த உணர்வின் தன்மையை இணைத்துக் கொண்டால் நமக்குள் அறிவு என்ற “ஒளியான அணுக்களை” உருவாக்குகின்றது.

கோப குணத்தை எடுத்தால் மற்றவரைச் சொல்லால் சாபமிடச் செய்து பொசுக்கவும் செய்கின்றது. வேதனையைக் கவர்ந்தாலும் அதே போல் இயக்குகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…? என்ற நிலையில்
1.ஆத்ம சுத்தியைக் கடைப்பிடித்து அருள் ஞானத்தைப் பெறக்கூடிய சக்தியாக
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நினைவு கொண்டு எடுத்து நல்லதாக்கிக் கொள்ள முடியும்.

அந்த நம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்.

இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம்… இது பெரிதாக வளரும்

இன்று பார்க்கலாம்… அரசியல் பேதத்தால் எத்தனையோ பேரழிவுகள் வந்து கொண்டிருக்கின்றது இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் அழிவுகள் வந்து கொண்டுள்ளது. இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
1.மக்களைக் காக்க வேண்டும். உலக மக்கள் அமைதி கொண்டு வாழ்ந்திட வேண்டும்
2.ஒவ்வொருவரும் கடவுளின் தன்மை அடைய வேண்டும்.
3.மனிதனுக்குள் அறியாத புகுந்த தீமைகளை அகற்றிட வேண்டும்.
4.இத்தகைய உணர்வுகளை நமக்குள் ஓங்கி வளர்த்திடல் வேண்டும்.

அதுவே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம்… இது பெரிதாக வளரும். கர்ப்பமான தாயின் கருவிலே வளரும் சிசுக்களுக்கு மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஊட்டினால் உலகை காத்திடும் மகரிஷிகளை “உங்களால் சிருஷ்டிக்க முடியும்…”

1.இந்த நாட்டிலே வரும் தீமைகளைப் போக்க முடியும்… நல்ல அரசியலையும் கொண்டு வர முடியும்.
2.நம் எண்ணத்திற்குள் அத்தகைய உயர்ந்த மாற்றங்கள் வேண்டும்.

ஏனென்றால் இன்று உலகெங்கிலும் ஒருவருக்கொருவர் குறை கூறும் நிலைகளே வளர்ந்து கொண்டுள்ளது. அதைக் கேட்டுப் பதிவாக்கி அதன் வழி சென்றால் நாமும் குறையைத் தான் வளர்க்க முடியும்… தீமையைத் தான் பெருக்க முடியும் பகைமைகளைத் தான் உருவாக்க முடியும். பகைமையற்ற உலகை நாம் சிருஷ்டிக்க முடியாது.

ஆகவே தயவு செய்து இதைக் கேட்டுணர்ந்தோர்… “சாமி ஏதோ அரசியல் பேசுகிறார்…” என்று எண்ண வேண்டாம்.

மனிதனில் விளைய வைக்கும் உணர்வுகள் எதுவயே அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாகப் பெருக்குகின்றது. மனிதனின் உணர்வுக்குள் எது பெருகுகின்றதோ அந்த அலைகள் படரப்படும் பொழுது
1.எதை எதை மனிதனுடைய ஆசையால் பெருக்குகின்றானோ… எதை எதையெல்லாம் எண்ணத்தால் அழிக்க எண்ணுகின்றானோ
2.அந்த உணர்வுகள் வெளியிலிருந்து வருவது அதுவே பதிவாகின்றது… கேட்போர் உணர்வுகளிலும் பதிவாகின்றது… அதுவே விளைகின்றது.
3.காற்றலைகளும் அதனால் மாறுகின்றது… மனிதனை அழித்திடும் உணர்வுகள் மனிதனுக்குள்ளேயே விளைகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும்… இதை நீ செய்வாய்… செய்யக் கடவாய் என்றார் குருநாதர். உனக்குள் இதை விளையச் செய்… காத்திடும் உணர்வுகள் அனைவருக்குள்ளும் விளையட்டும். தீமைகள் அகலட்டும்… “மகிழ்ந்திடும் நிலைகளில் அருள் உலகம் மலரட்டும்…!” என்று தான் குரு சொன்னார்.

அதைத்தான் உங்களிடமும் உணர்த்துகின்றோம். ஆகவே பேதங்கள் அனைத்தையும் அகற்றுங்கள்… நாடு நலம் பெற வேண்டும் என்ற உணர்வை உயர்த்துங்கள்.

இங்கே தோன்றும் மெய் ஞானிகளின் ஆற்றல்கள் அது உலகெங்கிலும் எல்லோருக்குள்ளும் தோன்றும்… நிச்சயம் இது பரவும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது போன்று
1.ஞானிகள் உணர்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படுத்துங்கள்.
2.அந்த நல்ல நிலைகளை நிச்சயம் நாம் பெற முடியும்… அதை நாம் உருவாக்க முடியும்.
3.அதையெல்லாம் உங்கள் வாழ்க்கையிலே பார்க்கலாம்… உங்கள் அனுபவத்திலும் பார்க்கலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆபீசில் உட்கார்ந்து பணி செய்பவர்கள்… வேலைக்குச் செல்லாமல் இருப்பவர்கள்… சிறிது நேரம் மண்வெட்டியை எடுத்து வெட்டினால் உடனே சோர்வடைந்து விடுகின்றார்கள்… களைப்பு வந்து விடுகின்றது.

ஆனால் விவசாய வேலை செய்பவர்கள் அவர்கள் உணவுக்காக வேண்டிக் கஷ்டப்பட்டுக் கடுமையான வேலைகளைச் செய்கின்றார்கள்.
1.எப்படியும் சம்பாரிக்க வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்கும் உணர்வுகள்
2.அவர்கள் உடலில் உள்ள எல்லா நரம்புகளுக்கும் வலிமை ஊட்டும் உணர்வாக வருகின்றது.
3.அது உமிழ் நீராக மாறி அவருடைய உணவுக்குள் வீரிய உணர்வு உருவாக்கப்பட்டு
4.இரத்தங்களில் கலக்கப்படும் போது நல்ல அணுக்களுக்கு வீரிய சத்து கிடைக்கின்றது.

அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் விடாது கடின உழைப்புகளைச் செய்கின்றனர்… அவர்களுக்கு மூச்சு வாங்குவதில்லை.

ஆனால் சாதாரண மனிதராக இருக்கக்கூடிய நமக்கோ ரெண்டு நிமிடம் அல்லது ஐந்து நிமிடம் தொடர்ந்து வேலை செய்தால் மூச்சு வாங்குகின்றது… உடல் பலவீனம் அடைகின்றது.

ஆனால் கடுமையாக வேலை செய்பவரும் இந்தக் காற்று மண்டலத்தில் வரும் உணர்வுகளைச் சுவாசித்துத் தான் வாழ்கின்றனர் வளர்கின்றனர்.

அவருடைய எண்ணமோ… இந்த வேலையை நாம் செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் வலிமையாகச் செயல்படுத்தப்படும் பொழுது… அந்த எண்ணத்தின் வலிமை அவர்கள் சுவாசித்து அவருடைய ஆகாரத்திற்குள் வலிமை கிடைக்கின்றது.

சில வசதி உள்ளவர்கள் சந்தர்ப்பத்தினால் வசதி குறைந்த பின் அந்த வயிற்றுப் பிழைப்புக்காக எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்று “மண்ணைத் தூக்கிச் சுமக்கலாம்…” என்று அத்தகைய வேலைக்குச் செல்வார்கள்.

1.வசதி இருந்து வசதி குறைந்த பின் இந்த வேலையைச் செய்யும் பொழுது வலுவான எண்ணங்கள் வருவதில்லை
2.வலுவிழந்த உணர்வுகளைச் சுவாசிக்கும்போது நான்கு நாளைக்கு அவர்கள் இப்படி வேலை செய்தார்கள் என்றால் அவர்களுக்கு கடுமையான நோய் வந்துவிடுகிறது.

வசதி இருந்து செல்வம் குறைந்த நிலையில் இந்த மாதிரி ஆகின்றது. ஆனால் எப்படியும் வேலை செய்து வாழ வேண்டும் என்று எண்ணுவோருக்கு இந்த நோய் வருவதில்லை.

ஆகவே “நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ… அதற்குத் தக்க அந்த வலிமை கிடைக்கின்றது…!”

கடினமாக வேலை செய்பவரிடம் சென்று யாராவது கவலையாகச் சொன்னால் ”
1.ஹும்…! உங்கள் விதி எப்படியோ அப்படித் தான் நடக்கும் என்று அதை அவர்கள் கவலையை நுகர்வதில்லை.
2.கஷ்டத்தையும் வேதனையும் எடுத்துக் கொள்வதில்லை… அதாவது மற்றவர்கள் கஷ்டங்களை அவர் எடுத்துக் கொள்வதில்லை

இப்படி இயற்கையின் சந்தர்ப்பங்கள் அவரவர்
நுகர்ந்த உணர்வை வைத்துத் தான் செயலாக்கங்கள் நடக்கின்றது.

அதே சமயத்தில் தொழிலின் நிமித்தம் வசதியைப் பெருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நாம் பிறரை ஏவித்தான் வேலை வாங்க வேண்டி இருக்கின்றது.

வேலை ஏவி அவர்கள் அதைச் செயல்படுத்தும் போது பொருளைக் கொடுக்கிறோம் என்று எண்ணினாலும்… தான் நினைத்த அளவுக்கு அவர்கள் வேலை செய்யவில்லை என்றால் “பணம் கொடுத்தோம்… சரியாக வேலை செய்யவில்லையே…” என்று மனதில் வேதனை வருகின்றது.

தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றனர். அந்த வேதனையை அதிகமாக எடுத்து.. அதே வேதனையோடு வேலையைச் சொல்லப்படும் பொழுது அவரிடம் வேலை செய்பவர்களையும் சோர்வடையச் செய்து விடுகிறது. அப்போது இன்னும் கொஞ்சம் வேதனை அதிகமாகின்றது.

செல்வத்தைச் சேமிக்க வேண்டும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று செயல் பட்டாலும்… பின்னணியில் பணம் இருக்கின்றது மற்றவர்கள் வேலையைச் செய்கின்றார்கள் என்றாலும்…
1.எண்ணியபடி நடக்கவில்லை என்கிற பொழுது வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்து உடல் பலவீனம் அடைகின்றது
2.வெறுப்பு அதிகரிக்கும் போது சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டுக் கோபம் வருகிறது.
3.கோபம் அதிகமாகிக் கார உணர்ச்சிகள் ஆனால் இரத்தக் கொதிப்பாகிவிடுகிறது
4.வேதனை வித்தாக உருவானால் பின் எப்படிப் பேசுவது என்ற சலிப்படையும் போது உடலில் சளித்தொல்லை வருகின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் தான்… யாரும் தவறு செய்யவில்லை.

அவரவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் உடலில் அது முதிர்வடையப்படும் பொழுது “விதி…” என்ற நிலையாக மாறி விடுகின்றது.

இந்த விதியை மதி கொண்டு மாற்ற முடியும்…!

அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைச் சுவாசமாக அடிக்கடி எடுத்தால் நம் எண்ணங்கள் வலிமையாகும்.

1.துருவ நட்சத்திரத்தின் எண்ணம் வலுவாக வலுவாக… நரம்புகளில் அதற்குத் தக்க ஆசிட் உருவாகும்…
2.உடல் உறுப்புகளைச் சீராக இயக்க முடியும்.

எத்தகைய கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கும்.

நல்லது கெட்டது என்ற நிலை உயிருக்கு இல்லை… அது யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை

 

நாம் ரத்தப் பரிசோதனைக்குச் செல்கிறோம். பார்த்த நிலையில் ரத்தங்கள் அனைத்தும் சீராக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

தொழிலின் நிமித்தம் செயல்படும் போது அதில் மிகவும் நஷ்டமாகின்றது. கடன் வாங்கியிருக்கின்றோம்… அதைத் திரும்பக் கொடுக்க வேண்டி வருகிறது. குடும்பத்திலோ பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை… வருமானமும் வருவதில்லை.

இப்படி எல்லாம் எதிர்மறையாக நடக்கப்படும் பொழுது
1.அந்த அதிர்ச்சி தரும் உணர்வுகளைச் சுவாசித்து எடுத்துக் கொண்ட பின் அடுத்த ரத்தப் பரிசோதனைக்குச் சென்றால்
2.சிவப்பு அணுக்கள் குறைந்திருக்கும்… வெள்ளை அணுக்கள் அதிகமாக உருவாகி இருக்கும்.
3.ரத்தம் காணாமல் போகின்றது… சிவப்பு அணுக்களை உருவாக்கும் சக்தி குறைந்து விடுகின்றது…
4.அந்த அணுக்கள் மடிந்து விடுகின்றது… ரத்த சோகை வருகின்றது… பலவீனம் அடைகின்றது… ரத்தக் கொதிப்பு ஆகிறது.

தீமையான உணர்வுகள் அதிகமாகும் பொழுது ரத்தக் கொதிப்பாகி உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அதற்குரிய உணவு இல்லாது போய் விடுகின்றது. சரியான உணவு கொடுக்கவில்லை என்றால் சுருங்கத் தொடங்கும். கை கால்களைச் சுருங்க வைத்துவிடும்.

நேற்று வரை நன்றாக இருந்தோம்…! என்றாலும் இப்படி எல்லாம் உடலுக்குள் ஆவதைப் பார்க்கலாம்.

வேறு ஒன்றும் வேண்டாம். சப்… என்று இருக்கக்கூடிய பொருளைச் சாப்பிட்டாலும் சர்க்கரைச் சத்து உள்ளவருக்கு திடீரென்று கவலையோ சோர்வையோ நுகர்ந்து விட்டால் இந்த உணர்வுகள் அதிகரித்து சர்க்கரைச் சத்து கூடி விடும். சர்க்கரையை உருவாக்கும் அணுக்கள் அதிகமாகின்றது.

அதே சமயத்தில் அதிகமாகச் சந்தோஷப்பட்டாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடி விடுகின்றது.

இப்படி… சோர்வு சஞ்சலம் சலிப்பு என்று நாம் எண்ணும் போதெல்லாம் அது அணுக்கருக்களாக ரத்தத்திலே உருப்பெற்றுச் சுழலத் தொடங்குகிறது.

உதாரணமாக… நாம் பூமியில் காற்று மண்டலததில் கலந்து வரும் சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவருமே என்றால் அது அலைகளாக மாறும். அலைகளாக வரப்படும் பொழுது தாவர இனங்கள் அதனதன் இனமான சக்தியை அதிலிருந்து கவர்ந்து தன் இனமாக வளர்கின்றது.

இதைப் போன்று
1.நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட வேதனை சஞ்சலம் சலிப்பு என்ற உணர்வுகள் அணுக்களாக உடலில் வளர்ந்து விடடால்
2.தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது உயிர் அந்தந்த உணர்வைக் கவர்ந்து உணவாகக் கொடுக்கின்றது.

சூரியன் தாவரங்களின் சத்தினை எடுத்துக் கொண்டால்… தாவர இனத்தில் விளைந்த வித்தைப் பூமியிலே ஊன்றி விட்டால் பூமியின் துணை கொண்டு அதை ஈர்க்கும் போது அதனாதான் இனமாக வளர்ந்து விளைகின்றது. அது அது தன் இன வித்தை மீண்டும் வளர்க்கின்றது.

இது இயற்கையின் நிலைகள்.

இதைப் போல
1.வேதனைப்பட்ட மனிதரின் உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் நமது உயிர் உடலில் அணுக்களாக மாற்றுகின்றது.
2.அணுக்கள் ஆன பின் அதனுடைய பசிக்கு… எந்த குணத்தால் அது உருவானதோ அந்த உணர்வுகள் கிளர்ச்சிகளை உண்டாக்கும்.

அதே உணர்வின் தன்மையை உயிர்
1.நம் முன் பாகம் கண்கள் வழியாகவோ தசைகள் வழியாகவோ செவிப் புலன் வழியாகவோ எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி
2.உயிர் வழி நுகரப்பட்டு உடலுக்குள் பரப்பச் செய்கின்றது.
3.எந்த வழியிலும் அதற்கு உணவைக் கொடுத்து அதைக் காக்கும்.

சூரியன் தாவரங்களுக்கு உதவுவது போன்று நமது உயிர் உடலில் விளையும் அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுத்தே தீரும்.
1.அது யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை.
2.நல்லது கெட்டது என்ற நிலை உயிருக்கு இல்லை.

உணர்வுக்கொப்ப உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. சுவாசத்திற்கொப்ப நம் எண்ணங்கள் இயங்குகிறது. அந்தச் சத்து ஈர்க்கப்பட்டு அணுக்கள் விளைகின்றது… இயக்குகின்றது. ஆக இந்த வாழ்க்கையில் எந்தக் குணததை அதிகரிக்கின்றோமோ அதன் வழி ரத்தத்தில் கருக்களாக உருவாக்கிக் கொண்டே உள்ளது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்… உயிரை ஈசனாக மதிக்க வேண்டும். உடலை அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று மதிக்க வேண்டும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
1.தீமைகள் புகாது… தீமையான அணுக்களாக உருவாகாது
2.அருள் ஒளியின் அணுக்களாக நாம் நமக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல் இராமேஸ்வரம்… பரம்… ஒரு எல்லை…! அதை இராமேஸ்வரம் என்று ஸ்தல புராணமாக ஞானிகளால் காட்டப்பட்டது.

கோடிக்கரை…!
1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பெற்றுப் பெற்று…
2.அந்த எண்ணத்தால் மனிதனான உடலை… ஈஸ்வரலோகத்தை உருவாக்கியது.

உயிர் எப்படி இதை உருவாக்குகின்றதோ இதைப் போன்று அணுவின் தன்மையும் உயிரைப் போல உணர்வைப் பெறும் தகுதி பெற்றது. ஆகவே நாம் பல கோடி உடல்களைக் கடந்து… கடைசிக் கரையில் இந்த மனித உடலில் கோடிக்கரையாக இருக்கின்றோம்.

தனுசுகோடி…!
1.மனித வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றோமோ
2.அப்பொழுதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து
3.அந்த விஷத்தை நிறுத்திக் கொண்டே வர வேண்டும்… நமக்குள் வளராது தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மனிதனின் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ விதமான கோப உணர்வுகளையும் வெறுப்புணர்வுளையும் எடுக்கின்றோம். இதைப் போன்று வரும் உணர்வுகளை எல்லாம் தனுசுகோடி…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத் தாக்கி
2.அத்தகைய கோடிக்கணக்கான உனர்வுகளையும் உயிரைப் போன்று ஒளியின் பிளம்பாக… ஒளியின் கதிராக நாம் மாற்ற வேண்டும்.

எண்ணத்தால் தான் இது உருவானது… இது இராமலிங்கம் உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது இது சீவலிங்கம்… ஜீவனூட்டும் லிங்கம் ஜீவிக்கும் லிங்கம்.

எண்ணத்தால் உருவாக்கும் உணர்வுகள் உயிர் என்று “இராமலிங்கம்” என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

1.(இராமேஸ்வரத்தில்) உடலில் நேரம் ஆகிவிட்டது…!
2.எண்ணத்தால் நாம் ஒளியை உருவாக்க வேண்டும்
3.காரணம்… உடலில் கொஞ்ச நாள் தான் நாம் வாழுகின்றோம் அதற்குள் “மனதை ஒன்றாக்க வேண்டும்…!”

அதாவது மனதில் எல்லாவற்றையும் ஒன்றாக்கிப் பகைமையற்ற உணர்வுகளாக நமக்குள் வளர்க்க வேண்டும். எத்தனை நிலைகள் வந்தாலும் பகைமையாக உருவாகாதபடி அருள் உணர்வினை இணைத்து ஒளியாக்கிட வேண்டும்.

ஆனால் ஞானிகள் நமக்குக் கொடுத்ததை
1.பூஜை செய்ய நேரமாகி விட்டது…
2.ஆகையினால் இராமன் மணலைக் குவித்துப் பூஜித்தான் என்று இப்படிப் பிரித்து மாற்றி விட்டார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்குவோர் குடும்பத்தில் அதிகமான கஷ்டங்கள் வந்தால் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே… உனக்காக நான் அக்கினிகுண்டம் இறங்குகின்றேன்…” என்று செல்கின்றார்கள்.

1.ஆனால் அதற்கெல்லாம் சில மந்திர ஒலிகள் உண்டு…!
2.அதாவது “மாரியம்மன்…” என்று அதர்வண வேதத்தில் காட்டிய மந்திர ஒலிகளை ஒரு மனித உடலில் சேர்த்த பின்
3.அவன் இறந்து விட்டால் அந்த அக்கினியைத் தாங்கும் உணர்வின் தன்மை வருகின்றது.
4.அதை எண்ணி எடுத்துக் கொண்டு மந்திரத்தை ஜெபித்து அக்கினியில் இறங்கினால் அந்தத் தீ ஒன்றும் செய்யாது

அதர்வண வேதத்தில் இந்த உணர்வின் தன்மை குவிக்கப்படும் பொழுது “அக்கினிக்கட்டு” என்று சொல்வார்கள்.

மனித உடலில் ஜீவ அணுக்களுக்குள் சேர்த்துப் பரம்பரையாக இந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வார்கள். அதைச் செயல்படுத்தும் கால கட்டத்தில் அந்தக் கோவில் பூசாரி இந்த மந்திரத்தையே ஜெபித்துக் கொண்டிருப்பார்… அவர் சாவகாசமாக அக்னியில் இறங்கி வருவார்.

ஆனால் மற்றவர்கள் வீரிய எண்ணத்தோடு போனாலும் உஷ்…தஷ்…புஷ்.. என்று இறங்கி வேகமாக ஓடி விடுவார்கள்.

பூசாரியை மாரியம்மன் காப்பாற்றுவதால் அவர் தாராளமாகப் போகின்றார். எந்த மாரியம்மன்…?

மாரியம்மனை எண்ணி மந்திரத்தை ஜெபித்து இந்த உடலை விட்டு சென்றவர்களின் ஆன்மாக்கள் அதே மந்திரத்தை ஜெபிக்கப்படும் பொழுது இங்கே வந்துவிடும்.
1.ஜெபித்தவர் உடலில் அந்த ஆன்மாக்கள் குடிகொள்ளும்
2.ஆவிகள் தான் அங்கே செயல்படுகின்றது

உதாரணமாக… தெய்வத்தையே வணங்கி வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் (தெய்வத்தை எண்ணி வேதனைப்பட்டு) “மருந்தைக் குடித்து இறந்து விடுகிறார்…” எனறு வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த மந்திரத்தை இந்த ஆன்மா ஜெபித்ததோ அதே மந்திரத்தை இன்னொருவர் ஜெபிக்கப்படும் பொழுது இங்கே இவரின் ஈர்ப்புக்குள் வந்துவிடும்.

அல்லது அதே எண்ணத்தை கொண்டு இறந்தபின் ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகி திடீரென்று எதிர்பாராத நிலைகள் இறந்து விட்டால் பழகிய அந்த நண்பர் உடலுக்குள் சென்று விடும்.

நேற்றெல்லாம் என்னிடம் பழகினாரே… இப்போது இறந்து விட்டாரே…! என்று எண்ணும் போது இந்த ஆவி இங்கு வந்துவிடும். அது வந்த உடனே அது அதனுடைய நிலைகளை எல்லாம் இங்கே காட்டும்.
1.எத்தனை வேதனை இருந்தாலும் அந்த ஆன்மா தாங்கிக் கொள்ளும்
2.எத்தனை இம்சை செய்தாலும் இவர்களுக்குத் தெரியாது.

சில பேய் பிடித்தவர்களைப் பாருங்கள். “என்ன தான் அடியுங்கள்… அது அடி வாங்கிக் கொண்டே இருக்கும்…!” அது நோகுமா என்றால் நோகாது…! அடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்கின்றது. ஆவி விலகிய பிற்பாடு தசைகளில் அடிபட்டதல்லவா… இரண்டு நாளைக்கு அது எழுந்திருக்காது.

இது எல்லாம் ஆவியின் செயல்கள் தான்…!

காளியம்மன் மாரியம்மன் என்று ஜெபத்தால் எடுத்துக் கொண்ட ஆன்மாக்கள்… இன்ன மந்திரத்தைச் சொன்னால் காளி உன்னைக் காப்பாற்றுவாள் என்று சொல்லும்போது அதன் உணர்வை விளைய வைத்த வழி தான் வந்துள்ளார்களே தவிர “இறந்தபின் இன்னொரு ஆவி நிலைக்குத்தான் செல்கின்றோம்.

1.இது சாகாக்கலைக்குத் தான் கொண்டு செல்லும்… மீண்டும் பிறவிக்குத் தான் வரவேண்டும்
2.அடுத்த உடலுக்குள் சென்று அதையும் காயப்படுத்தி அந்த உடலை விட்டு வந்தபின்
3.விஷம் கொண்ட உடல்களுக்குள் தான் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்… குரு அருள் உறுதுணையாக இருக்கும்

 

உலகில் நடக்கும் எத்தனையோ நிகழ்ச்சிகளை… நடப்புகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். டி.வி. மூலம் அந்தந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கும்போது அந்த அலைவரிசையில் இருந்து அதை நாம் காண முடிகின்றது.

இதைப் போல
1.மனித வாழ்க்கையில் தீமை நன்மை என்ற நிலையில் நாம் பதிவு செய்துள்ளோம்.
2.தீமை செய்வோரை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது… தீமையின் செயலாக ஆக்குகின்றது
3.தீமையின் உணர்வே நமக்குள் உருவாகின்றது… நோயாகவும் மாறுகின்றது.

அவ்வாறு ஆகாதப்படி தடுக்க தீமை அகற்றிய அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அதை நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெறுவோம்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த வாழ்க்கையைத் தொடருங்கள்.

1.துன்பமோ நஷ்டமோ கஷ்டமோ வந்தாலும் அதை மனதில் பதிவு செய்யாதீர்கள்.
2.மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…
3.உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று அதை வலுவாக்குங்கள்.

நோயாளியைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்றும் அந்த நோய் நீங்க வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்றும் எண்ணுங்கள். பின் மகரிஷிகள் சக்தியால் அவர் நோய்கள் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று சொல்லுங்கள்.

அவர்களையும் இதைப் போன்று மகரிஷிகள் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணும்படி சொல்லுங்கள். அவ்வாறு அவர்களைப் பெறச் செய்தால்
1.முதலில் அவர்களை உற்றுப் பார்த்து நாம் பரிவுடன் நுகர்ந்து அவருக்கு உதவி செய்திருந்தாலும் அந்த உணர்வு நமக்குள் வராது தடுத்து
2.அருள் ஒளியை அவருக்குள் பாய்ச்ச முடியும்… இருளை அகற்ற முடியும்.

இந்த முறைப்படி செயல்பட்டு வாருங்கள்… எந்தத் தீமையும் நமக்குள் வளராது தடுக்க முடியும். தொழிலில் நஷ்டம் வந்தாலும் நஷ்டத்தைப் பற்றி எண்ணாதீர்கள்.

ஒரு வீட்டைப் புதிதாகக் கட்ட வேண்டும் என்றால் எத்தனையோ நிலைகளை அதற்குத் தயார் செய்கின்றோம். அதிலே குறைபாடுகள் வந்தால் திருத்திக் கொள்கின்றோம்.

இது போன்று புறநிலையில் குறைகள் வரும் போது அவைகளை நாம் திருத்திக் கொள்கின்றோம்.

1.எத்தகைய சூழ்நிலையிலும்… வாழ்க்கையில் நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் வேதனைப்பட வேண்டியது இல்லை.
2.நாளை இதைச் சீர்படுத்துவோம்… உயர் ஞானத்தால் அதை மாற்றியமைப்போம்… தொழில் வளம் பெறுவோம்
3.எல்லா நலமும் வளமும் பெறுவோம் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.
4.உங்கள் எண்ணம் அதை ஈடேற்றும்… செயலாக்கும்.
5.மகரிஷிகள் உணர்வுகளுடன் ஒன்றியே நீங்கள் இதைச் செயல்படுத்துங்கள்.

எம்முடைய உபதேசங்களை எல்லாம் நீங்கள் கேட்கின்றீர்கள். விடிய விடிய அதைக் கேட்டுவிட்டுக் காலையில் எழுந்த பின் இராமனுடைய சகோதரி சீதையா…? என்பது போன்று மீண்டும் கேட்டு விடாதீர்கள்.

உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருளை நீங்கள் ஒவ்வொருவரும் பரப்புங்கள். அறியாது வரும் இருளைப் போக்குங்கள். உங்கள் அருகில் உள்ளோருக்கும் உங்கள் பார்வையால் அவர்கள் தீமையைப் போக்கும் சக்தியாக நீங்கள் வளருங்கள்.

அந்தச் சக்தியை நீங்கள் பெறவே அடிக்கடி உபதேசிக்கின்றோம். அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.

டி.வி.யில் நாம் குறிப்பிட்ட ஸ்டேஷனைத் திருப்பி வைத்த பின் அதன் மூலம் கவர்ந்து படங்களை நாம் காணுவது போன்று அருள் ஞானிகள் உணர்வுகளைக் காற்றில் இருந்து எளிதில் பெற முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கினால் அந்த அருளை உங்களுக்குள் பெற ஏதுவாகும். உங்கள் சொல் பிறர் தீமைகளை அகற்றும். உங்கள் எண்ணம் உங்கள் தொழிலை உயர்வாக்கும்… வாடிக்கையாளர்களை உயர்வாக்க உதவும்.

ஆகவே… தியானத்தின் மூலம் உங்களுக்குள் அருள் சக்திகளைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
1.இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க யாம் உதவி செய்கின்றோம்.
2.அருள் வழியில் வாழுங்கள்… அருளானந்தம் பெறுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக வீட்டில் கணவன் மனைவிக்குள் சிறு சண்டை ஆகிவிட்டது என்றால் என்ன நடக்கிறது…?

நான் ஒன்றுமே செய்யவில்லை… “எதைச் செய்தாலும் கணவர் கோபப்படுகிறாரே…” நான் சும்மா தான் இருக்கின்றேன் என்று மனைவி சொல்கிறது

எதற்கெடுத்தாலும் நான் கோபப்படுகிறேன் என்று இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் நான் என்ன தான் செய்வது…? என்று கணவர் சொல்வார். இப்படிச் சுவாசிப்பார்.

ஆலயத்தில் காளிக்கு முன்னாடி புலியை போட்டுக் காண்பித்து இருக்கின்றார்கள். எதற்காக…?

கோபமான உணர்வை மனைவி முதலில் சுவாசிக்கப்படும் பொழுது கோபம் வந்துவிடுகிறது. அப்போது சும்மா இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே…! என்று திருப்பிச் சொன்னவுடன் கோபம் வருகிறது… கணவருக்கு…!

அப்போது என்ன நடக்கிறது…?

1.நமக்கு முன் எது இருக்கின்றதோ அது தான் இயக்குகின்றது… காளியாகி விடுகின்றோம்.
2.உடலான சிவம் ருத்ர தாண்டவம் ஆகிறது
3.இரு நான் உன்னை என்ன செய்கிறேன் பார்… உன்னை அடித்தால் தான் சரியாக இருக்கும் என்று வருகின்றது.

அவரவர்கள் உணர்வுக்குத் தகுந்த மாதிரி இப்பபடிப்பட்ட இயக்கங்கள் வருகின்றது. அதற்குத்தான் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் ஒரு போக்கிரியைப் பார்த்தால் நமக்கு உடனே பயம் வருகின்றது அவன் எத்தனை திட்டினாலும் என்ன செய்தாலும் பேசினாலும் நம்மை ஏதாவது செய்து விடுவான் என்று பயப்படுகின்றோம்.

போக்கிரி… அவன் அடித்து விடுவான் என்று தெரிந்த பின் நாம் அவனிடம் திருப்பி ஏதாவது சொல்கிறோமா… இல்லை. பயந்து ஒடுங்கி விடுகின்றோம்… கூடுமான வரை விலகிச் சென்று விடுகின்றோம்…! அவன் போக்கிரிப்பயல் நம்மை அடித்து விடுவான் என்று.

இங்கே வீட்டில்
1.நாம் கோபமாகப் பேசுகின்றோமே… வீட்டுக்காரர் பதிலுக்கு நம்மைத் திட்டுவார் என்ற எண்ணம் மனைவிக்கு இல்லை.
2.கோபித்துப் பேசுகின்றோமே… மனைவி பயந்து எதையாவது செய்து விடுமோ… எங்கேயாவது போய்விட்டால் என்ன செய்வது…? என்று
3அதற்கு உண்டான வழியைக் கணவனும் சொல்வதில்லை.

இது எல்லாம் நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் குணங்கள் உடலுக்குள் மறைந்து எப்படிச் செயல்படுகிறது…? என்று இதையெல்லாம் காட்டுவதற்குத் தான் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் கோபம் அதிகமாக ஆன பின் கணவனுக்கு இரத்தக் கொதிப்பாகி விடுகின்றது. வீட்டிலே கணவன் மனைவி சண்டையாகி இரத்தக் கொதிப்பான பின் அதைப் போக்குவதற்காகக் காளிக்கு நான் பூக்குழி இறங்கி “நேர்த்திக் கடன் செலுத்தப் போகிறேன்…” என்று வேண்டிக் கொள்கின்றார்கள்.

ஆனால் அக்கினி குண்டம் இறங்கினாலும் அது நிவர்த்தி ஆகின்றதா…? அதுவும் இல்லை. பற்றாக்குறைக்குச் சாந்தமாக இருக்கக்கூடிய ஒரு ஆட்டையும் அதற்குப் பலி கொடுத்து… அதைச் சமைத்துப் படையல் செய்து நாமும் சாப்பிடுகின்றோம்.

இது எல்லாம் என்ன செய்கிறது…? கோபம் என்ற உணர்வுகள் வளர்ந்த பின்பு அது நம் நல்ல குணங்களை எல்லாம் கொல்கின்றது.

கோபமான உணர்வைச் சுவாசித்தவுடனே உயிரிலே அபிஷேகம் ஆகி இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் சென்று இரத்தக் கொதிப்பாகிறது… கை கால் அங்கங்களை எல்லாம் சுருக்கி விடுகின்றது.

சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். “அப்பாவுக்கு உணவு கொடுத்து வா…” என்று குழந்தையிடம் கொடுத்து அனுப்பும் போது சிறிது நேரம் ஆகி விட்டால் போதும்.

நான் இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்… எனக்குச் சாப்பாட்டை நேரத்தில் கொண்டு வருவதற்கு முடியவில்லையா…? என்று கோபம் அதிகமாக வரும். உணவை உட்கொள்வதற்கு முன் பயங்கரமான கோபம் வரும்.

புலி ஆட்டை அடித்து உட்கொண்டாலும் உர்ர்ர்…உர்ர்ர்… என்று உறுமிக் கொண்டு தான் சாப்பிடும். அதைப் போல் புலிக்கு உண்டான குணங்கள் எல்லாம் இங்கே வந்துவிடும்.
1.கோபத்தின் உணர்வு உச்சகட்டம் அடைந்த பின் இப்படித்தான் இயக்கம் ஆகின்றது
2.இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ அவருடைய உணர்வை நுகர்ந்தால் உயிரான ஈசனிடம் பட்டு இங்கே அது அபிஷேகமாகி அந்த உணர்ச்சிகள் இயக்கப்படும் பொழுது நமக்கும் கோபம் வருகிறது.

நம் உடல் ஒரு அரங்கம்… சுவாசித்தது உயிரிலே பட்டபின் அரங்கநாதன்… அந்த நாதம் வருகின்றது அந்த உணர்ச்சிகள் உடலை ஆளுகின்றது ஆண்டாள்.
1.அத்தகைய கோப உணர்ச்சி அடுத்தவரை உதைக்கத் தான் சொல்லும்
2.அது தான் ஆட்சி புரியும்.

சூட்சமத்தில் நடக்கும் இயக்கங்களை உருவமாக்கி… மனித வாழ்க்கையில் “நாம் எப்படித் தெளிந்து நடக்க வேண்டும்…?” என்பதைக் காட்டுவதற்குத் தான் ஆலயத்தில் பல உருவ அமைப்புகளைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

அடிக்கடி நாம் கோபித்தால் நம்முடைய நல்ல குணங்களை அது கொன்றுவிடும் என்பதற்காகக் கோபம் வரும் பொழுதெல்லாம் அதை மாற்றி அமைக்க… அக்கினி குண்டம் இறங்கச் சொல்கின்றார்கள்.

ஏன்…? அக்கினி குண்டம் எது…?

இதையெல்லாம் வென்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்.
1.அதிகாலையில் 4:00 மணிக்கு எழுந்து குளித்த பின்
2.அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும்படி சொல்கின்றார்கள்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணச் செய்து பகைமைகளை அகற்றும்படி செய்கிறார்கள்

ஆனால் காலத்தால் அது எல்லாம் மாறிவிட்டது யாரும் அதை எடுப்பதில்லை.

1.காலையில் குளித்த பின் உன் இஷ்ட தெய்வத்தைக் கும்பிட்டுப் பூஜை செய்து கொள்… போ…
2.நெய்வேத்தியங்கள் வைத்து மந்திரத்தைச் சொல் போ…!
3.காலையில் இப்படிச் செய்தால் உனக்கு அந்தத் தெய்வம் சக்தி கொடுக்கும் என்று இப்படித்தான் சொல்லி மாற்றிவிட்டார்கள்.

பூஜையில் மந்திரத்தைச் சொல்லும் பழக்கம் தான் வளர்ந்திருக்கிறது. அந்த நேரத்தில் யாராவது தொல்லைப்படுத்துபவனோ தவறு செய்தவனோ வந்தால்
1.நான் உனக்காக வேண்டி இவ்வளவு செய்கின்றேன் தாயே
2.நீ இதைப் பார்க்கின்றாயா… இல்லையா…! உனக்குக் கண் தெரிகிறதா…? என்று அந்த நேரத்தில் இதைத்தான் வளர்க்கின்றோம்
3.தவறைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்… ஆலயத்தின் பண்புகளை நாம் மதிக்கின்றோமா…?

துருவ நட்சத்திரத்தின் “உணர்வு “- அழுத்தம்

தையல் கடையில் துணி தைப்பவர் லேசாகத் தைக்கிறார் என்றால் நாமும் அவ்வாறு தைக்க முடியுமா…? அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டே மற்றவரிடம் பேசிக் கொண்டே சீராகத் தைத்து விடுவார். அந்த உணர்வின் இயக்கம் சீராக வேலை செய்கின்றது.

ஆனால் நாம் கூர்மையாகப் பார்த்துச் செய்தாலும் கூட தையல் கோணல் மாணலாக நெளிந்து கொண்டே போகும்.

1.அது போல் தான் இந்தத் தியானத்தினை நாம் சீராகப் பழகிக் கொண்டால்
2.வாழ்க்கையில் எதிர்நிலை வந்தால் “டக்…” என்று அதை மாற்றி விட முடியும்.

கம்ப்யூட்டர் மூலமாக இன்று எத்தனையோ வேலைகளைச் செய்கின்றார்கள். ஒரு வேலை செய்கிறார் என்றால் அதிலே தவறுகள் வந்து விட்டால் “ஏன் அவ்வாறு வந்தது…?” என்று அதைச் சரி செய்வதற்கு “மாற்று அழுத்தத்தைக் கொடுத்து விடுகிறார்கள்…”

1.அந்த மாற்று அழுத்தம் வந்தபின் தவறுகளை மாற்றி மறுபடியும் அதைச் சீராக்குகின்றது.
2.தவறு என்று வந்தாலே அதைக் காட்டிலும் அழுத்தமான உணர்வு கொண்டு அதை அழித்து விட்டு நல்ல உணர்வுகளைப் பதிவு செய்கின்றான்.

நாம் காகிதத்தில் தவறாக எழுதினால் அழித்து அதைத் திருத்துகின்றோம்.

ஆனால் உணர்வின் இயக்கம் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக். ஒரு பொருளின் ரூபத்தைக் கொண்டு வரும் பொழுது அழுத்தத்தின் தன்மை கொண்டு அது சீராகவில்லை என்றால் அழுத்தத்தை மாற்றி அந்த உணர்வுக்கொப்ப கொண்டு வருகின்றார்கள். கெமிக்கல் கலந்த உணர்வுகளில் உணர்வின் தன்மை அழுத்தம் எதுவோ அதன்படி அது கொண்டு வரும்.

1.விளக்குகள் சிறிதாகவோ பெரிதாகவோ எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் எந்த உணர்வுக்கொப்ப எப்படி அது எரிகின்றதோ
2.இது போன்று அந்த உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றி இந்த ஒலியின் நிலையை உருவாக்குகின்றார்கள்.

அப்போது எழுத்தின் வடிவம் வருகின்றது. விஞ்ஞானிகள் இதைச் செய்கின்றார்கள்.

இதைப் போன்று தான் நாம் கண் கொண்டு பார்க்கும் போது ஒருவன் வேதனைப்படுகிறான் என்று பார்த்தால் நல்ல உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றி அதை அழித்து அந்த (வேதனை) உணர்வைக் கொண்டு வருகின்றது.

ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் செலுத்தி “அந்த உணர்வின் அழுத்தத்தை நாம் கொண்டு வந்தால்”
2.அது அந்த வேதனையை மாற்றி தெளிந்த உணர்வின் தன்மையை நமக்குள் கொண்டு வரும்.

ஏனென்றால் நமது உயிரும் எலக்ட்ரிக் தான். நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்.

விஞ்ஞானி காட்டுகின்றான் இன்று அகண்ட அண்டத்தையும். அன்று மெய்ஞானியோ தன் உணர்வின் தன்மையைப் பாய்ச்சினான்… உணர்வுகளை அறிந்தான்.உணர்வுக்கொப்ப எண்ணத்தை வளர்த்தான். அந்த உணர்வின் ஆற்றல் அது செயல்படும் நிலைகளை அகண்ட அண்டத்தையும் அகஸ்தியன் அறிந்தான்.

1.அகஸ்தியன் உடலில் விளைந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் கலந்துள்ளது.
2.குருநாதர் கண்டார்… அதைப் பெற்றார் அந்த உணர்வை எனக்குள் பதிவாக்கினார்… அதை நினைவு கொள் என்றார்… அதன்படி நடக்க வேண்டும் என்று சொன்னார்.
3.அதை அறிந்து தான் நான் பேசுகின்றேன். கல்வியால் கற்றுணரவில்லை… எழுத்து வடிவில் நான் பார்க்கவில்லை.
4.குரு காட்டிய உணர்வைப் பதிவாக்கினேன்… நினைவு கொண்டேன்… அதை அறிய முடிகின்றது. அதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன்.

அதை நீங்கள் பதிவாக்கிவிட்டால் நினைவு கொண்டால்… அருள் ஞானி பெற்ற உணர்வை நீங்களும் பெறலாம். உங்களுக்குள் அறியாது வந்த இருளை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆலயத்தில் குறைகளை எல்லாம் சொல்லிவிட்டால் “எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்…!” என்ற எண்ணத்தில் தான் பெரும்பகுதியானோர் ஆலயத்திற்குச் செல்கின்றோம்.

அதற்காக வேண்டி அர்ச்சனையும் அபிஷேகமும் செய்கிறோம். அப்படிச் செய்துவிட்டால் “அந்தத் தெய்வம் நமக்கு எல்லாம் செய்யும்…!” என்று சொல்கின்றனர். பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் சந்தன அபிஷேகம் எல்லாம் செய்கின்றோம்.

சாமிக்கு இதை எல்லாம் செய்கின்றோம்…
1.ஆனால் அபிஷேகம் நடக்கும் பொழுது என்ன எண்ணுகிறோம்…? வீட்டில் என்ன நடக்கிறது…?
2.என் வீட்டுக்காரர் நோயுடன் வேதனைப்படுகின்றாரே…! என்று தான் எண்ணுகிறோம்
3.அங்கே தெய்வத்திற்கு பால் அபிஷேகம் செய்கிறோம்… இங்கே தன் உயிரில் வேதனையான உணர்வுகள் அபிஷேகம் நடக்கிறது.

என் வீட்டுக்காரருக்கு “உடல் நலம் சரியில்லையே…!” என்று வேதனையை எண்ணி எடுக்கும் நிலை தான் வருகின்றது. கோயிலுக்குச் சென்று மனைவி இப்படி வேதனையுடன் எண்ணினால் “இந்த எண்ணம்…”
1.வீட்டுக்காரர் ஓரளவுக்கு எழுந்து நடமாடக்கூடிய நிலையில் இருப்பவரை
2.வீட்டிற்குள் பாத்ரூமுக்கு அப்போது நடந்து சென்று கொண்டிருக்கின்றார் என்று வைத்துக் கொண்டால்
3.அந்த நேரத்தில் வீட்டுக்காரருக்கு உடனே நடுக்கமாகிக் கீழே விழுந்து விடுவார்.

அதே போல் ஒரு திடமான குழந்தையாக இருக்கட்டும். நாம் அமெரிக்காவிற்குப் படிக்க அனுப்பி இருக்கின்றோம். ஒரு மாதம் அல்லது பத்து நாட்கள் குழந்தையிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என்றால் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ…? ஏது ஆயிற்றோ…? என்று உடனே வேதனைப்பட ஆரம்பிக்கின்றோம்.

ஏனென்றால் குழந்தையின் உணர்வு நம் உடலில் இருக்கின்றது. இங்கே தாய் இப்படி வேதனையாக எண்ணும் போது அங்கே பிள்ளை படித்துக் கொண்டிருந்தால் .”இந்த எண்ணம்”
1.அங்கே குறுக்காட்டி… குழந்தைக்குப் படித்தது நினைவுக்கு வராது… தலையைப் பிய்த்துக் கொள்ளும்
2.சரி… கொஞ்சம் நடந்து கொடுத்து வரலாம்… என்று வெளியே செல்லும்
3.அப்போது சிந்தனை குறைந்து… மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து கையிலோ காலிலோ அடிபட்டுக் காயம் ஆகி விடுகின்றது.
4.படித்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படி ஆகிவிட்டதே… தாயிடம் எப்படிச் சொல்வது…? என்று குழந்தையும் வேதனைப்படும்.

பத்து நாட்கள் கழித்து ஓரளவுக்குச் சரியான பிற்பாடு… இந்த மாதிரி அன்று கீழே விழுந்ததால் தான் தபால் எழுத முடியவில்லை என்று தபால் வரும்.

தாய் இதைப் படித்ததும் “நான் நினைத்தேன்… நினைத்த மாதிரியே தான் நடந்திருக்கிறது…!” என்று சொல்லும். ஆனால்
1.தாய் தன் குழந்தையை வேதனையாக எண்ணிய “அந்த எண்ணம் தான்” இயக்கி
2.”கீழே விழக் காரணமாக இருந்தது” என்று தெரிவதில்லை.

காரணம்… இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய சக்திகள்.

ஆலயத்திலே உயர்ந்த அபிஷேகங்கள் நடந்தாலும் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது “கணவருக்கு இப்படி இருக்கின்றது… குழந்தைக்கு இப்படி இருக்கின்றது…” என்று எண்ணும் பொழுது உயிரிலே வேதனை தான் அபிஷேகம் ஆகின்றது.

ஆக அப்போது அங்கே தெய்வத்தின் மீது பாலை ஊற்றினாலும் தேனை ஊற்றினாலும் சந்தனத்தை ஊற்றினாலும் அதை எல்லாம் எண்ணுவதில்லை.

இப்போது இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கின்றோம்… உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த நேரத்தில் உங்கள் குழந்தை எண்ணி அவன் படிக்கச் சென்றானே… அங்கே என்ன ஆனதோ…? சாப்பாட்டுக்கு என்ன செய்வானோ…? என்று இங்கே இதைக் கவனிக்காது அங்கே நினைவைச் செலுத்தினால் “இந்த எண்ணம்” அவனை குறுக்காட்டி அவனுடைய சிந்தனையைக் குறைத்துக் கீழே விழும்படி செய்யும்.

அப்போது நான் தியானத்திற்கு வந்தேன்… என் பையனுக்கு இந்த மாதிரி ஆகிவிட்டது என்று எண்ணுவார்கள் ஏனென்றால் நம்முடைய நினைவு… இந்தப் பழக்க வழக்கம் வளர்ந்தது… இப்படித்தான் வருகின்றது.

ஆனால் அதையெல்லாம் விடுத்து விட்டு…
1.யாம் உபதேசிக்கும் போது இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கினால் இது உயர்ந்த சத்தாக உங்களுக்குள் சேர்கின்றது.
2.நுகர்ந்தபின் இது உங்கள் உயிரிலே நல்ல உணர்வாக… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக… உயர்ந்த அபிஷேகமாக அமைகிறது.
3.இந்த உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலக்கின்றது… அறியும் ஞானத்தையே ஊட்டுகின்றது
4.இரத்தத்தின் வழி உடல் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த சக்திகள் கூடுகின்றது.

சிறிது காலம் இப்படிப் பழக்கப்படுத்தி விட்டால் உயர்ந்த நிலை பெற முடியும்.

மனைவி கணவனை எண்ணி வேதனைப்படும் பொழுது அந்த எண்ணம் அவரைக் கெடுதலாக இயக்குகின்றது. அவருக்குக் கஷ்டம் அதிகமான பின் இங்கேயும் சேர்த்து இயக்க ஆரம்பிக்கிறது.

காரணம்… நம்முடைய வழக்கத்தில் ஆலயத்திற்குச் சென்று
1.கஷ்டத்தை எல்லாம் சொன்னால் “அவன் பார்த்துக் கொள்வான்…” என்று இப்படித்தான் வழியைக் காட்டி விட்டார்கள்
2.எவன் பார்ப்பான்…?
3.எதை நுகர்கின்றோமோ அதைத்தான் நம் உயிர் பார்க்கும்… அந்த உணர்வைத் தான் ஊட்டும்.. அதையே இயக்கிக் காட்டும்.

அங்கே பால் அபிஷேகம் செய்யும் போது பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்… அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று அதை எண்ணி எடுக்கச் சொன்னால்… “கஷ்டத்தைச் சொன்னால் அவன் பார்ப்பான்…” என்று ஞானிகள் கொடுத்த வழி முறைகளை மாற்றித் தீமைகளைத் தான் நமக்குள் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆலயத்திற்கு சென்று கஷ்டத்தை எல்லாம் வேதனையுடன் சொல்லி முறையிட்டு வந்தபின் “நடந்து சென்றேன்… கீழே விழுந்து விட்டேன்…!” என்று ஆன பின்
1.”அட தெய்வமே…” இப்பொழுது தானே உனக்கு நான் பாலாபிஷேகம் செய்தேன்
2.எத்தனை தான் நீ என்னைச் சோதிப்பாய்…? என்று சாமியைத் திட்டும் நிலையில் தான் இருக்கின்றோம்.

எத்தகைய குறைபாடாக இருந்தாலும் தெய்வத்தைத் தான் நினைக்கின்றோம்…! ஆனால் வேதனையுடன் எண்ணுகின்றோம்… கோவிலுக்குள் போனாலும் வேதனையுடன் தான் போகிறோம்.

ஞானிகள் காட்டிய நிலைகளோ… அங்கே காட்டிய தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்… தெரிந்து தெளிவான நிலைகள் நாங்கள் பெற வேண்டும். என் கணவருக்கு பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்; பன்னீரைப் போன்ற தெளிந்த எண்ணங்கள் வர வேண்டும்; சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இந்த நல்ல மணங்களை எண்ணி எடுத்து அதை உயிருக்கு அபிஷேகம் செய்து… அனைவருக்கும் அது கிடைக்கும்படி… அந்த உயர்ந்த உணர்ச்சிகளை ஊட்டும்படி தான் அங்கே ஆலயத்தில் காட்டினார்கள்.

ஏனென்றால் உடலில் வலி வந்து விட்டால் எப்பா… எம்மா…! என்று சொல்லி வேதனைப்படுகின்றோம். இதை அடுத்தவர்கள் சுவாசித்தால் என்ன நடக்கின்றது…? அவருக்கும் அந்த வேதனை வருகிறது.

அதை எல்லாம் மாற்றி அமைக்கத் தான் நோயுற்றவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் உடலிலே தெய்வீக குணங்கள் வளர வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த உயர்ந்த உணர்வுகளைக் கிடைக்கச் செய்வதற்கு அபிஷேகங்களையும் ஆராதனைகளையும் ஆலயத்தில் காட்டினார்கள்.

காரணம் நாம் நுகர்வது தான் நம் உயிரிலே அபிஷேகம் ஆகின்றது
1.சூட்சமத்தில் நடப்பதை ஞானிகள் நமக்கு இப்படித் தெரியப்படுத்துகின்றார்கள்… நாம் தெரிந்து கொண்டோமா…?
2.இனியாவது தெரிந்து… ஞானிகள் காட்டிய வழியில் நாம் நடந்து பழக வேண்டும்…!

நல்லதைக் காக்கும் சக்தி அவசியம் நமக்குத் தேவை

1.சக்தி இருக்கின்றது என்ற நிலையில் “நான்…” என்ற திமிர் வந்தால் அது முதலில் உன்னை அடக்கிவிடும்…
2.உன் நல்ல குணங்களை அது கொன்று விடும் என்று குரு சொல்கின்றார்.

இதே போன்று எம்மைப் பார்ப்போரும் ஒரு சிலர் சாமி நம்மை ஒன்றும் செய்ய மாட்டார் என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அது தான் உங்களுக்குள் விளையும்.

ஆனால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று நான் எண்ணும்போது எனக்குள் அது நல்லதாக விளைகின்றது.

சில பேர் நினைப்பார்கள் சாமியிடம் நிறையச் சக்தி இருக்கின்றது… எல்லோருக்கும் நல்லது தான் செய்கின்றார். ஆனால் சாமியை இத்தனை தூரம் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பார்த்துக் கொண்டு அவர் சும்மா இருக்கின்றார் என்று நினைத்தால் கெடுதலுக்கு அல்ல.
1.அவர்கள் உணர்வு நம்மைப் பாதித்து விடக்கூடாது.
2.அவர்களுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.
3.அவரவர் எடுக்கும் உணர்வுகளுக்கு அவரவர் உயிரே தண்டனை கொடுக்கின்றது. நாம் ஏன் தண்டனை கொடுப்பானேன்…?

நாம் விலகிச் சென்று விட்டால் பாதகம் இல்லை.

வெள்ளம் வருகின்றது… வீட்டை அடித்துச் சென்று விடும் என்றால் வீட்டுப் பக்கம் வராமல் மறித்து வேறு பக்கம் திசை திருப்பி விடலாம். கரையைப் போட்டுக்கொள்ள வேண்டும். விட்டு விட்டால் கட்டிடத்தைச் சாய்த்து விடும்.

1.இது போன்று ஒரு உணர்வின் தன்மை நம்மைப் பாதிக்கிறது என்றால் அது நம் மீது மோதாதபடி திசை திருப்ப வேண்டும்.
2.இத்தனை பழக்கமும் வேண்டி இருக்கின்றது.

குளத்திலே தண்ணீர் முழுவதும் நிறைந்துவிட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு என்ன செய்கின்றார்கள்…? அந்த இடத்திலே மணலை மூடடைகளாகக் கட்டி மொத்தமாகப் போட்டால் அந்தத் தண்ணீரை ஓரளவுக்கு நாம் தடுக்க முடியும். அடுக்கடுக்காக மேலே போடப் போட வலுவாகி விடுகிறது. தண்ணீர் மேலே ஏறி வருவதில்லை.

இந்தத் தந்திரம் இல்லை என்றால் வேறு எந்தப் பொருளைப் போட்டாலும் தண்ணீர் அரித்துக் கொண்டு சென்று விடும். கற்றுக் கொண்டவர்கள் இந்த நிலையைச் செயல்படுத்துகின்றார்.

இதைத்தான் மெய்ஞானியான நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஒருவன் வேதனைப்படுகிறான் என்று காணுகின்றோம் சக்தி இருந்தாலும் அதைக் கொண்டு தாக்கினோம் என்றால் நம்முடைய நல்ல நிலைகள் சிதைந்து விடும்

ஏனென்றால் நல்லது கெட்டது எப்படி நடக்கிறது…? என்று இயற்கையில் அனுபவபூர்வமாக எல்லாவற்றையும் தெரியும்படி செய்தார்.
1.சக்தி கொடுப்பார்.
2.ஆனால் அதைப் பயன்படுத்தக்கூடிய முறைகள் இப்படி இருக்கிறது.

தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒருவர் மீது நாம் கோபப்பட்டு “அவரைத் தொலைந்து போக வேண்டும்…” என்று சொல்லலாம். சந்தோஷமும் படலாம். ஆனால் அந்தச் சந்தோஷம் உங்கள் உடலில் உள்ள நல்ல குணங்களைத் தொலைத்து விடும்.

சந்தோஷத்தை ஊட்ட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகள் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து இருளை நாடாதபடி தடுத்துப் பழகினால் என்றும் பேரருள் பேரோளியைப் பெறலாம்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.எல்லாமே சந்தர்ப்பத்தால் நாம் நுகரக்கூடிய நிலைகளுக்குத் தக்கவாறு தான் இயங்குகின்றது.
2.யாரும் தவறு செய்யவில்லை
3.அவரவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் படும் பொழுது அது முதிர்வடையப்படும் பொழுது “விதி” என்ற நிலை அடைகின்றது.

ஒருவருக்குக் கேன்சர் என்ற நோய் வந்தால் விதிப்படி அது கடுமையான விஷம். மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்கள் அது இலகுவான விஷத்தால் இயங்கும் தன்மை பெற்றது. ஆனால் இந்தக் கேன்சர் நோய் உடலில் வந்த பின் நல்ல அணுக்கள் இயங்குவதற்குண்டான விஷத்தை எல்லாம் அது எடுத்து வளரும்… தன் இனத்தை அது பெருக்கும்.

நல்ல அணுக்களை எல்லாம் மடியச் செய்துவிடும். மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் கேன்சரால் பாதிப்படைந்து… உடலை விட்டுப் பிரியும் நிலை வருகின்றது.

இப்படிப் பிரியும் அந்த ஆன்மா நிச்சயம் பாம்பாகவோ விஷத்தை உணவாக உட்கொள்ளும் ஜெந்துக்களாகவோ தான் அடுத்து பிறக்க நேரும். ஆக விதிப்படி இன்று மனிதனாக இருந்தாலும்
1.உயிரில் விஷத்தின் தன்மை அதிகமான சேமிப்பாகும் பொழுது
2.அத்தகைய உயிரினங்களுக்குத் தான் அடுத்து செல்ல வேண்டி வரும்.

கேன்சர் வந்தவர்களைப் பாருங்கள். அவர்களுக்கு எல்லாமே இருக்கும் ஆனால் அந்தக் கடைசி முடிவு எண்ணங்கள் அனைத்தும் விஷம் தோய்ந்து உடலை விட்டுச் செல்லும் பொழுது பாம்பின் ஈர்ப்புக்குச் சென்று விஷத்தை உணவாக உட்கொள்ளும் அதை ஏற்றுக் கொள்ளும் உடலாக அமைத்து விடுகிறது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக வந்தாலும் இப்படி மாற்றங்கள் ஆகி விடுகிறது அது மட்டுமல்ல…
1.மனிதனால் உருவாக்கப்பட்ட கேன்சர்
2.இன்று ஏராளமானவர்களைத் தாக்குகிறது

ஏனென்றால் விஞ்ஞானக் கதிரியக்கப் பொறிகள் மற்றதுடன் தாக்கப்பட்டு அது உடலுக்குள் சென்ற பின்… எந்த உறுப்பில் இந்த அணுவின் தன்மை அதிகமாக உருவாக்கப்பட்டதோ அந்த அணு பெருக்கிய பின் அந்த உடல் உறுப்பு கெடுகின்றது.

அதன் வழி கிளைகளைப் பெருக்கி விஷத்தின் தன்மை கூடுகின்றது அது விளைந்து விடுகின்றது.

இதைப் போல் நம் பூமியிலும் கதிரியக்கப் பொறிகள் பரவித் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது தாவர இனத்தை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களில் இத்தகைய விஷத்தன்மைகள் அதிகமாகின்றது.

அதாவது தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் அந்த உயிரினங்களும் விஷம் தோய்ந்து மடிகிறது.
1.அது எடுத்து வெளிவிடும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனால் கவரப்படுகின்றது
2.மீண்டும் விஷத் தன்மைகளை இங்கே பரவச் செய்கின்றது.

இருப்பினும் இந்த விஷத்தின் தாக்குதல் அதிகமாகி நம் பூமியில் பரவப்படும் பொழுது சூரியனால் கவரப்பட்டு… காந்த அலைகள் தொடர்பு கொண்டு பூமிக்குள் பரவப்படும் பொழுது பூமி சுழற்சி அடையப்படும் பொழுது “நடு மையம் ஈர்ப்பு அதிகமாகி விடுகின்றது…!”

அந்த ஈர்ப்பின் தன்மை அதிகரித்து இதே கதிரியக்கப் பொறிகளைத் தனக்குள் சேர்க்கின்றது. உள்ளே சேர்ந்த பின் கொதிகலனாக உருவாகின்றது.
1.கொதிகலனாக உருவாக்கப்படும் போது கல் போல் இருக்கக்கூடிய பாறைகள் எல்லாம் உருகும் தன்மை வருகின்றது…
2.கரையும் தன்மை வருகின்றது… சேறைப் போல் ஆகிறது.

இரும்பு கெட்டியாக இருப்பினும் நெருப்பை அதிகமாகக் கூட்டும் பொழுது அது கூழாக எப்படிக் கரைகின்றதோ… நம் பூமிக்குள்ளும் கரையும் தன்மை அதிகரித்து… நல்ல பொருள்களைப் பாழாக்கி… “விஷத்தின் தன்மை தோய்ந்ததாகிறது…”

பூமிக்குள் வெடிப்பாகும் போது அந்த விஷத்தின் தன்மையை மீண்டும் வெளிப்படுத்தி
1.தாவர இனங்கள் ஏற்கனவே மண்ணில் உருவான சத்தை எடுத்தாலும்
2.பூமிக்குள் கலவையாகி வெளிப்பட்ட அந்தக் கதிரியக்கங்கள் தாவர இனங்களில் சரியான கரு உருவாகாதபடி…
3.அந்த வெள்ளாமை வராதபடி தடுத்து நிறுத்துகின்றது.

இப்படி விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத் தன்மைகள் எல்லா வகையிலும் பெருகிக் கொண்டே செல்கிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது மனிதர்களில் அவரின் உடல் நன்றாக இருக்கும். சந்தர்ப்பத்தில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை அவர்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால்
1.அதனால் அவர்கள் அடிக்கடி சோர்வடைவதும் சஞ்சலமான நிலைகளிலே இருப்பதும்
2.அவர்கள் பேசும் பொழுது ஒரு விதமான வாசனையும் வரும் அவர் உடலில் இருந்து ஒருவிதமான நாற்றமும் வரும்.

காரணம் அடிக்கடி சலிப்பையும் சஞ்சலத்தையும் அவர்கள் சந்திக்கப்படும் பொழுது சலிப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது சிலருக்கு அந்த உடலில் “ஈர்” போன்று தோன்றி மேலெல்லாம் அரிப்பாகின்றது.

ஒரு சிலருக்கு அது தலையிலே ஈரும் பேனுமாக உருவாகி விடுன்றது. அப்படிப் பேன்கள் உருவாகி விட்டால் அதை இவர்கள் எவ்வளவுதான் சீவி எடுத்தாலும் மறுபடியும் அது வந்து கொண்டே இருக்கும்.

1.என்னதான் மருந்தைப் போட்டு அதைப் போக்கினாலும் இரண்டு நாட்களுக்கு இருக்காது
2.மீண்டும் உடலில் வரக்கூடிய மணத்தால் கரு முட்டையாகிப் பேன்கள் வரத் தொடங்கும்.

ஆனால் யாரும் தவறு செய்யவில்லை…!

இதே மாதிரித் தான் மரங்களில் அதன் அருகில் இதைக் காட்டிலும் வீரிய மரங்களின் மணங்கள் அடித்தால்… உதாரணமாக அது வேப்ப மரமாக இருந்தால் அடுத்த மரத்தின் மணத்தினை அது எதிர்கொள்ளும் பொழுது அதனால் வாடி அதிலே பார்த்தால் “பிசின்கள்” அதிகமாக வரும் அல்லது “வாடல் நோய்” வந்து கருகிவிடும்.

பார்க்கலாம்… சில மரங்களிலே…!
1.வெயில் அதிகமாகும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின்
2.மனிதனுக்கு நோய் வருவது போன்று சில கிளைகள் அப்படியே அது வாடி காய்ந்து மரத்திலிருந்து கீழே விழுவதை நாம் காணலாம்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இது போன்று தான் நாம் அடிக்கடி கோபப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால்… இனம் புரியாத நிலைகளில் நமக்கும் கோபம் அதிகமாக வரும். சில மனிதர்களைப் பார்த்தால் நமக்குத் தீய சிந்தனைகளும் வரும்

மனித உடலில் இருந்து வரக்கூடிய மணமும் அவர் எந்தெந்த அளவிலே உடலில் குணங்களைச் சேர்த்து நல்ல குணங்களை அது செயலற்றதாக மாற்றுகின்றதோ அந்த உடலில் உறுப்புகளில் நோயாகவும் காரணமாகின்றது

அதே சமயத்தில் அவர் சொல்லாக வெளியில் சொல்லப்படும் பொழுது கேட்பவர் உணர்வுகளிலும் பட்டு அவர்களுக்கும் நோய் வரத் தொடங்கும்.

இதெல்லாம்
1.சந்தர்ப்பத்தால் நுகரும் இந்த சக்திகள் மனிதனுக்கு மனிதன் உபகாரமும் நல்ல பண்புகளும் பரிவுடன் உதவி செய்யக்கூடிய மனிதனாக இருப்பினும்…
2.பிறர் படும் கஷ்டங்களைக் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது… அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது நுகர நேர்கின்றது.
3.சுவாசித்த உணர்வுகள் இரத்தங்களிலே கலந்து உடலிலே நோயாக வந்து விடுகிறது.

எப்படி மரம் செடி கொடிகளில் எதிர் நிலையான மணங்கள் தாக்கிய உடனே கிருமிகளோ பூச்சிகளோ வண்டுகளோ வந்து விடுகிறதோ… வாடல் நோய் வந்து விடுகின்றதோ இதைப் போன்று மனிதனுக்கு வந்துவிடுகிறது

ஆனால் செடி கொடிகளுக்கு மற்றதை நுகரும் சக்தி இல்லை தன்னுடைய வலுவின் தன்மை கொண்டு மற்றது அருகில் வராதபடி தள்ளிவிடுகின்றது.

உதாரணமாக பருத்திச் செடி அடர்த்தியாக இருந்தது என்றால் அடுத்த பக்கத்தில் இருக்கும் புகையிலைச் செடியில் புழுக்களைக் கொல்ல மருந்துகளை தூவப்படும் பொழுது அங்கே என்ன நடக்கிறது…?

புகையிலைச் சத்தை எடுத்து அதில் அணுவாகிப் புழுவாகி அதை உணவாக உட்கொண்டாலும் மருந்தைத் தூவிய நிலையில் அந்த விஷங்கள் தாக்கப்படும் பொழுது புழுக்கள் இறந்து விடுகிறது… ஆவியாகக் கரைகின்றது… சூரியனும் அந்த ஆவியைக் கவர்ந்து கொள்கின்றது.

ஆவியாகக் கரைந்த பின் காற்று எந்தப் பக்கமாக வீசுகின்றதோ அதற்குத் தக்கவாறு… அதனுடைய உணர்வுகள் பட்டபின் மற்ற சாதாரண தாவர இனச் சத்தைக் கவர்ந்த அலைகள் அஞ்சி ஓடும்.

அப்படி ஓடும் பொழுது
1.பருத்திச் செடிகள் இருக்கும் பக்கம் இது சென்றால் அது தன்னுடைய உணர்வை எடுக்கக்கூடிய சக்தி இழந்து விடுகிறது
2.தன் சத்தைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்தி குறையப்படும் பொழுது அந்தச் செடி வாடுகிறது…. அதிகமான மோதல்கள் ஏற்பட்டால்…!

ஆனால் புகையிலையில் அடித்த விஷத்தின் தன்மை அதில் இருக்கக்கூடிய விஷக் கிருமிகளைக் கொன்றாலும்… கிருமிகள் செத்த உணர்வு வெளிவரப்படும் பொழுது அது உடல் பெற்ற நிலைகள் அந்த முட்டையில் படுகின்றது.

ஆனால் முட்டை சாவதில்லை. விஷத்தின் தன்மை அதை ஏற்றுக் கொண்டு அடுத்து மருந்துகளை அடித்தாலும் அது சாவதில்லை.

முதலில் பூச்சிகள் செத்தால் ஆவியாக வருகின்றது சூரியனால் கவரப்படுகின்றது. விஷத் தன்மை பூச்சியின் உடலில் பட்டபின் ஆவியாக மாறுகின்றது… அது வீரியமடைகின்றது.

பூச்சியின் விஷத் தன்மைகள் சூரியனால் கவரப்பட்டுக் காற்றலைகளில் அது போகும் பக்கத்தில் பருத்திச் செடியில் மோதப்பட்டுத் தேங்கி விடுகின்றது.
1.தேங்கிவிட்டால் அந்த இலையை உணவாக எடுக்கக்கூடிய நிலையில் எதிர் நிலையாகி
2.பருத்திச் செடியின் இலையின் நுனிகள் கருகி விடுகின்றது
3.நுனியில் இவ்வாறு ஆன பின் வளர்ச்சி குறைந்து பருத்திச் செடி கருக நெரும்.
4.அதனுடைய காய்களில் பார்த்தோம் என்றால் பூச்சிகளும் விழுந்து விடுகின்றது.

இயற்கை நியதிகள் இப்படி மாறிக் கொண்டே உள்ளது. இவை எல்லாம் எதனால் வருகிறது…?

1.மனிதன் விஞ்ஞானத்தால் எடுத்து விரிய விஷ வித்துக்களை உருவாக்கப்பட்டு
2.அந்த விஷத்தன்மைகளைப் பவுடராகவும் நீருடன் கலந்து தூவப்படும் பொழுது காற்றிலும் வருகின்றது… செடிகளிலும் சேர்ந்து விடுகின்றது.

இப்படி மனிதன் இயற்கையில் விளைவதைக் கடினமான விஷ உணர்வுகளை உருவாக்கப்படும் பொழுது பலவாறு மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவுப் பயிர்களில் சேர்ந்து விடுகிறது.

நெல் செடி என்றால் அதிலே பால் பிடித்துத் தான் அரிசி உருவாகும். சோளமானாலும் பால் பிடித்துத் தான் சோளம் உருவாகும்.
1.ஆனால் விஞ்ஞானத்தால் தூவிய விஷங்கள் காற்றலைகளில் இது கலந்த பின்
2.அந்தப் பாலுக்குள்ளும் விஷத்தின் தன்மை புகுந்து விடுகின்றது.
3.மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் நஞ்சின் தன்மை பாய்ந்து விடுகிறது.

அதை மனிதன் உணவாக உட்கொள்ளும் போது சிந்தித்துச் செயல்படும் இரத்த நாளங்களில் விஷத்தன்மை கலந்து உடல் முழுவதும் சுழல்கிறது. காற்றில் எப்படிப் பரவிப் படர்கின்றதோ
1.மனித உடலுக்குள் இந்த விஷங்கள் சுழன்று நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் செயலிழந்து விடுகின்றது
2.உறுப்புகள் சுருங்குகின்றது… அதனால் இருதய வலி நுரையீரல் வலி கல்லீரல் வலி சிறுநீரகம் செயலிழத்தல் போன்ற நோய் வருகிறது.

“இறந்து விடுவோம்…!” என்ற பய உணர்ச்சி நமக்கு வரக் காரணம் என்ன…?

 

பாசத்தால் பண்பால் குடும்பத்திலோ நண்பர்களிடமோ உறவினர்களிடமோ நாம் மற்றவருடன் பிரியமாகப் பழகி இருக்கப்படும் பொழுது… உடலை விட்டு அவர்கள் திடீரென்று பிரிய நேர்ந்தால் அதைக் கேள்விப்பட்ட பின் “போய்விட்டார்களே என்று ஏங்கினால்” நமக்குள் அந்த ஆன்மா வந்து நம்மை அறியாமலே எத்தனையோ பாடுபடுத்துகின்றது (முதலில் எதுவும் தெரியாது).

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்…
1.எனக்குள் இருந்து அந்த ஆன்மா பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற
2.இந்த உணர்வை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் அந்த ஆன்மாவினால் முடியாததை நாம் அந்த உயர்ந்த சக்தியை எடுத்து ஊட்டும் பொழுது நம் இரத்தத்திலே கலந்து
1.அந்த ஆன்மாக்களும் நமக்கு ஒத்த நிலையாகி தொல்லை கொடுப்பதை மறந்து
2.உடலை விட்டுப் பிரியும் போது அதுவும் நம்மிலிருந்தே புனித நிலை (பெறும் தகுதி) பெறுகின்றது.

இது நம்முடைய சாஸ்திரங்கள் காட்டிய பேருண்மைகள்.

இதை விடுத்து விட்டு உடலிலே புகுந்த ஆன்மாக்களை உடுக்கை அடித்தோ கோடாங்கி அடித்தோ மந்திரங்களைச் சொல்லியோ “நான் பேய் ஓட்டுகிறேன்…!” என்று அப்படி யாராலும் ஓட்ட முடியாது.

உடலில் இருக்கக்கூடிய அந்த ஆன்மாக்களுக்கு அருள் உணர்வின் சத்தைக் கொடுத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தால் “அது நமக்குள் இருந்து நன்மை செய்யும்…”

இல்லையென்றால்… இரத்தத்தில் அது சுற்றி வரும் போது
1.உயிரிலே (புருவ மத்தியில்) வந்து மோதப்படும் பொழுது அது பட்ட வேதனை உணர்ச்சிகள் நமக்குள்ளும் வரும்.
2.ட்ரான்சாக்ஷன் என்ற உயிர் அருகிலே சென்றபின் அதே உணர்ச்சிகளைத் தான் ஊட்டும்.

கிராமஃபோன் பெட்டியில் ஒரு இசைத் தட்டைச் சுழலச் செய்து ஊசியை உராயச் செய்தால் அந்தப் பாகம் வந்த பின் அதனதன் இசைகளை வரிசயாக எப்படிக் கொண்டு வருகின்றதோ… அதைப் போன்று நமது உயிர்
1.இரத்தத்தில் கலந்த அனைத்து நிலைகளுக்கும் (ஆன்மாக்கள்) இவ்வாறு செயல்படுத்தப்படும் பொழுது
2.அந்தப் பாகம் சென்ற உடனே அந்த ஆன்மா என்னவெல்லாம் சங்கடப்பட்டதோ அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
3.கை கால் குடைச்சல் மற்றும் எத்தனையோ உடல் உபாதைகளைக் (தொல்லைகளை) கொடுக்கும்.

அதைக் கடந்து உடலுக்குள் அந்த ஆன்மாக்கள் போகிற பக்கம் எல்லாம்… இரத்தத்தின் வழி எங்கெல்லாம் செல்கின்றதோ
1.இருதயத்திலே சென்றால் இருதய வலி
2.கல்லீரலுக்குள் சென்றால் கல்லீரல் வலி
3.நுரையீரலுக்குள் சென்றால் நுரையீரல் வலி
4.அந்த ஆவியின் நிலைகளால் நம் உடலுக்குள் பல விதமான வலிகளைத் தோற்றுவிக்கின்றது.

இதையெல்லாம் வைத்தியம் செய்து ஒன்றும் சீர்படுத்த முடியாது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து உடலில் இரத்தத்தில் வலுப்பெறச் செய்தால் அதனுடைய வீரியம் தணியும்.

அறியாது வரும் இப்படிப்பட்ட தீமைகளை நீக்க அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் செருகேற்றினால் தீமைகள் புகாது ஞானத்தின் தன்மை பெறலாம்.

அதற்காக வேண்டித் தான்
1.இந்த உபதேச வாயிலாக அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவு செய்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

தியானித்து அதை வலுப்பெறச் செய்து கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்த நம் முன்னோர்களின் ஆன்மாக்களை நாம் விண் செலுத்த வேண்டும்.

எத்தனை பேரை விண் செலுத்துகின்றோமோ அத்தனை பேரின் ஆற்றலும் நமக்குக் கிடைக்கின்றது. அவர்கள் முன் செல்ல பின்னாடி நாமும் அந்த நிலையை அடைய முடியும்.

ஏனென்றால் மீண்டும் இந்த உடல் பெற்றால் அது நரகலோகம் தான். அது போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுவோம். பேயாகவோ நோயாகவோ நாம் உருவா(க்)க வேண்டாம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நியூட்ரான் ஆயுதம் என்று கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள் கம்ப்யூட்டர் சாதனத்தின் மூலம் சில அதிர்வுகளைக் கொடுத்து அதை அடுத்த நாட்டிலே பரப்பினார்கள் என்றால் எந்தெந்த இயந்திரங்களைச் சேமித்து வைத்திருக்கின்றார்களோ அதை எல்லாம் அது செயலற்றதாக ஆக்கிவிடும்

இராக்கெட்டின் மூலமாக அடுத்த நாட்டில் ஒரு ஊரைத் (ஒரு இலக்கை) தாக்கும்படி வைக்கிறார்கள் (எதிரி நாட்டின் முகப்பு). ஆனால் அது தவறான பாதைகள் போகிறது என்றால் திசைகளை மாற்றி எவன் அனுப்பினானோ அவன் ஊரிலேயே வந்து விழுகும்படி செய்வார்கள். அதாவது
1.எவன் செய்தானோ அவன் ஊரிலேயே விழுந்து அவனை அழிக்கும்படி செய்வான்
2.செய்து வைத்த அனைத்து ஆயுதங்களுமே வெடிக்கும் நிலை ஏற்படலாம்.
3.அப்போது இந்த உலகமே விஷத்தன்மையாக மாற கூடிய வாய்ப்புகள் உண்டு
4.பத்து உலகத்தை அழிக்கக்கூடிய அளவிற்கு இந்த ஆயுதங்களைச் சேமித்து வைத்திருக்கின்றனர்
5.எப்படியும் இது வெடிக்கத்தான் செய்யும்… வெளியிலே வந்துவிடும்.

மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கடலிலே மணலாக மாறுகின்றது அதைப் பிரித்து யுரேனியமாக எடுக்கின்றார்கள். அணுகுண்டாகத் தயார் செய்து அதை வெடிக்கச் செய்யப்படும் பொழுது பல கட்டடங்களையும் மற்ற இடங்களையும் நொறுக்கித் தள்ளுகின்றது.

ஆனால் நியூட்ரான் என்ற ஆயுதம் என்ன செய்கிறது…?

“வைரஸ் உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது…” என்று அடிக்கடி சொல்கிறோம் அல்லவா. அதைப் போன்று காற்றிலே அதைக் கலக்கி வைத்து விட்டால் மனிதனுடைய சிந்தனைகள் அனைத்துமே இழந்துவிடும்.

என் பிள்ளை எது…? என் வீடு எது…? என்று தெரியாமல் போய்விடும். அந்த அளவிற்கு அதைப் பரப்பி வைத்து இருக்கின்றார்கள்.

இந்த விஷத்தன்மை (நியூட்ரான்) கடலோரத்தில் போனது என்றால்…
1.நட்சத்திரத்தினுடைய கதிரியக்கப் பொறிகள் கடலிலே மணலாக இருப்பதுடன்…
2.மின் கதிர்களுடன் மோதிய உடனே வெப்பமாகி… சூறாவளியாக சுழல் காற்றாக மாறுகின்றது.
3.வெகு வேகமாகச் சுற்றி அடர்த்தியாக மாறும்…! கடலோரப் பகுதியில் தான் முதலிலே உற்பத்தியாகும்.

இப்படி உருவான இந்தச் சூறாவளி நகருக்குள் புகுந்து பெரிய பெரிய கட்டிடங்களை எல்லாம் துவம்சம் செய்து கொண்டு போகின்றது

உலகில் எங்கெல்லாம் விஞ்ஞான ஆராய்ச்சி செய்து கதிரியக்கங்களையும் நியூட்ரானின் வெடிப்புகளையும் செயல்படுத்தினார்களோ அங்கெல்லாம் இப்பொழுது இது நடந்து கொண்டே வருகின்றது.

இந்த உடல் நமக்கு என்றுமே சொந்தமில்லை…! இனி நாம் சொந்தமாக்க வேண்டிய அழியாத செல்வம் எது…? என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி தான்.
1.இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் அதை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்
2.அது தான் நமக்குப் பெரிய சொத்து.

மனிதனாக மீண்டும் பிறவிக்கு வந்தால் அவஸ்தைகளைத் தான் பட வேண்டி இருக்கும் அத்தகைய நிலை இல்லாதபடி அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் சந்தர்ப்பமாக நாம் உருவாக்க வேண்டும்.

சூரியனே அழியும் காலம் உண்டு.
1.அதற்கு முன் அழியாத அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று இணைய வேண்டும்.
2.பெரும் பெரும் ஞானிகள் எல்லாம் அதனுடன் இணைந்து சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் இன்று பெரும்பகுதி மகான் (சாமியார்) என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் ஊரை ஏமாற்றுவதற்கும் உடலைக் காப்பதற்கும் உடலில் சுகங்களை அனுபவிப்பதற்கும் தான் ஞானிகள் ஆகின்றனர்.

தெய்வத்தின் பெயரைச் சொல்லியும் ஆன்மீகத்தைச் சொல்லியும் சொத்து சுகத்தைத் தேடுவதற்கும் தான் பார்க்கின்றனர். அத்தகைய நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

எல்லோரையும் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்… முடியவில்லை… அந்த ஆசையிலே போகிறது

 

ஆரம்பத்தில் குருநாதர் என் மனைவி உயிரைக் காப்பாற்றினாலும்… என் (ஞானகுரு) மனைவிக்கு நோய் இல்லை என்று தான் நினைக்கின்றேன். சந்தர்ப்பத்திலே அனுபவத்திற்குத் தான் கடைசி நேரத்திலே குருநாதர் ஏதோ உண்டு பண்ணி… “எப்படியோ அவர் வழியில் என்னை இழுத்திருக்கின்றார்…” என்று நினைக்கின்றேன்.

1.என் மனைவியின் சந்தர்ப்பம்… எனக்கு ஞானம் பெறும் ஒரு சந்தர்ப்பமாகக் கிடைத்தது.
2.இந்த உபதேச வாயிலாக இப்பொழுது சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.
3.இப்படி “எல்லாமே சந்தர்ப்பம் தான் காரணம்” என்கிற வகையிலே குருநாதர் விபரத்தைச் சொல்கிறார்.

ஏனென்றால் பல அவஸ்தைகள் பட்டுத் தான் யாம் மீண்டு வந்தோம். வந்த பிற்பாடு எல்லோரையும் தேடி வந்து நான் இதைச் சொல்லப்படும் போது எத்தனை பேர் இதைப் பின்பற்றுகின்றார்கள்…?

எத்தனையோ பேர்களுக்கு நோய்களையும் துன்பங்களையும் நீக்கிக் கொடுத்தோம். அதை எத்தனை பேர் திரும்பிப் பார்த்திருக்கின்றார்கள்…!

கடுமையான நோய்களைக் கூட நிவர்த்தி செய்ய முடிந்தது. அது எல்லாம் நடந்த பிற்பாடு… நன்றிக்கடனாக…
1.கடைசியில் ஆண்டவனுக்குக் கொண்டு போய்க் காணிக்கை செலுத்தக்கூடிய நிலையில் தான் இருக்கிறார்கள்
2.நம்முடைய பழக்க வழக்கங்கள் அப்படித் தான் இருக்கிறது.

ஆனால் யாம் சொல்வது… நீங்கள் இந்தத் தியானத்தைக் கடைப்பிடித்து அதன் வழி மற்றவர்களுக்கு நன்றாகி விடும் என்று சொன்னாலே போதும். அவர்கள் இதை எடுத்தால் அவர்கள் நோய் விலகுகின்றது… துன்பம் விலகுகிறது.
1.விலகிய பின் அதிலே விளைந்த அந்த நல்ல வாக்கை அவர்கள் அடுத்தவர்களுக்குச் சொன்னால்
2.அவருடைய கஷ்டமும் போகின்றது… இப்படி நாம் கொண்டு வருகின்றோம்.

அதற்காக வேண்டித் தான் ஆரம்பத்தில் யாம் எல்லாவற்றையும் நேரடியாகச் செய்தோம். ஆனால் அது எல்லாம் “தோல்வி அடைந்தது…” காரணம்… அவரவர்கள் இஷ்டத்திற்கு அதை எடுத்து விளையாடுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள்.

எதை…?

கொஞ்சம் விஷயம் தெரிந்த பின்… தனது வசதிக்குத் தான் கொண்டு செல்கின்றார்களே தவிர மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

1.ஏதோ பெரிய அபூர்வ சக்தி…! நான் தான் கடவுள்…! எனக்குள் எல்லாமே இருக்கின்றது… இதை நான் தான் செய்கின்றேன்
2.ஏதாவது ஒன்றைச் செய்தால் “நான் செய்தேன்…!” என்று நீ போய்ச் சொல்
3.”என்னால் நல்லது ஆனது…” என்று சொல் என்று இப்படி விளம்பரப்படுத்த விரும்புகின்றார்கள்.

பெரும்பகுதி இப்படித்தான் ஆகின்றார்கள்

தனித்தன்மை வைத்து உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் மனமார அதைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அப்படி வந்ததெல்லாம் “தோல்வி அடைந்த பிற்பாடு” இனி காலம் இல்லை என்ற நிலையில் இப்பொழுது
1.எல்லாமே வெட்ட வெளிச்சமாகக் கொடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏற்றிக் கொடுக்கின்றோம்…
2.எல்லோரும் வளரட்டும்…! என்ற இந்த ஆசையிலே நான் இதைச் சொல்கிறேன்.

ஆக… தியானத்தைச் செய்தால் நல்லதாகும் என்ற இந்த முடிவுக்கு யாம் வந்தது. தியானம் செய்யாதபடி நல்லதாகாது. அப்போது அந்த ஆசையிலாவது வரட்டும்…!

யாம் சொன்ன முறைப்படி ஒருவர் தயாரானால்… தொழிலில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றீர்கள் என்றால் உங்கள் பார்வையால் அந்த 100 பேருக்கும் நன்மையாகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நீங்கள் ஒரு ஆள் நல்லவராக இருக்கின்றீர்கள். 100 பேர் கஷ்டம் என்று உங்களிடம் சொல்கின்றார்கள். அந்த நூறு பேரின் கஷ்டம் என்ன செய்யும்…?

நீங்கள் நல்லவராக இருந்தாலும் உங்களுடைய நல்லதை அது மாற்றி விடுகின்றது. இந்த மாதிரிச் சில சூழ்நிலைகளிலிருந்து மாற்றுவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
1.அதைக் கடைப்பிடித்து எந்த வகையில் அவர் நல்லவராகிறாரோ
2.அவர் மற்றவருக்கு அதைச் சொன்னால் அவர்கள் தீமைகளும் போகிறது.

சாதாரண நிலையில்
1.பிறரைப் பார்க்கும் பொழுது இங்கே நமக்கு நோய் ஆகிறது.
2.ஆனால் அருள் வழியினை எடுத்து நாம் செயல்படுத்தும் பொழுது நம் பார்வையில் மற்றவர்களுக்கு நோய் போகின்றது.

அந்த அளவுக்கு நீங்கள் வளர வேண்டும். உங்களைப் பார்த்தாலே மற்றவர்கள் நோய் போக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் உங்கள் நோய் அகலும்… துன்பங்கள் அகலும்… உங்கள் தொழில் சீராகும்… என்று
1.இப்படி ஆர்வமாகச் சொல்லி விட்டால் அதை எடுக்கும் போது
2.எல்லோருமே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்கு வருகின்றார்கள்.

தனியாக யாரையும் போற்றுவதில்லை. குரு அருள் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோரும் எடுத்து வளர்க்கும் நிலை வருகின்றது நான் எடுத்த பங்கிற்கு அந்த நல்ல நிலையைப் பெறுகின்றேன்… அதே போல் அவரவர்கள் எடுத்த பங்கிற்கு அந்தப் பலனை அடைய முடியும்.

1.எல்லோரையும் அந்த உயர்ந்த நிலைக்குத் தயார் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்
2.ஆனால் அது முடியவில்லை… அந்த ஆசையிலே போகின்றேன்.

எத்தனையோ வருடங்கள் சிரமப்பட்டு அதிலிருந்தெல்லாம் மீட்டி “எல்லோருக்கும் அந்த உயர்ந்த நிலை கிடைக்க வேண்டும்…” என்ற அந்த ஆசையில் தான் உங்களிடம் வருகின்றேன்.

1.குரு உணர்வு தான் இங்கே இயக்குகின்றது… அவரால் தான் நாம் வளர்கின்றோம்…
2.அத்தனை பேருக்கும் அந்த சந்தர்ப்பம் தான்… நான் செய்தேன் என்று சொல்வதற்கு இல்லை.

அருளைத்தான் நான் தேடி வைத்திருக்கின்றேன். அந்த அருளால் உங்களுக்கு நன்மை செய்ய முடிகின்றது. எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற அந்த ஆசை உங்களிடம் இருந்து தான் நான் பெறுகின்றேன். அந்த வழியைத்தான் உங்களுக்கும் காட்டுகின்றோம்.

உங்களுடைய ஊக்கம் தான் இதை வலுப் பெறச் செய்கின்றது. நீங்கள் அந்த குரு அருளைப் பெறும் பொழுது அந்த ஊக்கத்தால் நானும் அதை வலு கொண்டு செயல்படுத்த முடிகின்றது.

நீங்களும் அந்த நிலையை வளர்க்க முடியும்.. அந்தப் பக்குவத்திற்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும். இந்த உலகை அருள் வழியில் அழைத்துச் செல்லலாம்.
1.நான் சொல்வது லேசாகத் தெரியலாம்
2.ஆனால் மிக மிகச் சக்தி வாய்ந்த அந்த ஆற்றல்களை நீங்கள் வளர்க்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் ஆன்மாவில் எது அதிகமாக இருக்கிறதோ… “அதுவே நம்மை இயக்கக்கூடிய சக்தியாக இருக்கும்”

வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். ஆனால் ஆண்கள் வெளியிலே வேலைக்குச் சென்று விட்டு வந்து வீட்டில் வெறுப்புடன் இருக்கின்றார்கள். அப்போது பெண்கள் ஏதாவது கேட்டால் உடனே வெறுப்பாகப் பதில் சொல்வார்கள்.

எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்வது…! கொஞ்சம் அன்பாகச் சாந்தமாகச் சொல்லலாம் அல்லவா… என்பார்கள் பெண்கள்.

நானா கோபமாகப் பேசுகின்றேன்… நீ தான் எனக்குக் கோபத்தை உண்டாக்குகின்றாய்…! என்று மீண்டும் சண்டையைத்தான் ஆண்கள் போடுவார்கள்.

சண்டை போட்டவுடன்… சரி… கோபமாக இருக்கிறார்…! கொஞ்சம் பார்த்துச் செய்யலாம் என்று பெண்கள் வேலையைச் செய்தால் அடுத்து என்ன நடக்கும்…?

கணவர்… அவர் எண்ணிய வேகத்தில் அங்கே வேலை நடக்கவில்லை என்றால் “நான் சொல்வதை விட்டு “விட்டு ஏறுக்கு மாறாகச் செய்கின்றாய்…!” என்று பழையபடி சண்டை வரும்.

இதெல்லாம் உணர்வின் இயக்கங்கள்…! நம்மை அறியாமலே இயக்குவது.

இப்படிக் கணவர் கோபமாகப் பேசிய உணர்வுகள் என்ன செய்யும்…? அடுத்து அவர் சம்பாதிக்கப் போகும் இடங்களிலும் இதே உணர்வுகள் அங்கே தடையாக வந்து சேரும். அப்போது சம்பாதிக்கக்கூடிய நிலையைச் சரியாக வைத்துக் கொள்கிறோமா…?

காரணம்… இதெல்லாம் சந்தர்ப்பம் தான். “மோதலினால் உராய்வாகி” இப்படி வரப்படும்போது “இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் நம்மை மாற்றி அமைக்கின்றது…?” என்று நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இப்படி ஆனபின்…
1.எனக்கு எல்லாமே மீண்டும் மீண்டும் கஷ்டமாக வருகிறது
2.என் மனதில் நிம்மதியே இல்லை என்ற எண்ணத்தில் தொழிலை விட்டு விடுவார்கள்.
3.சிந்தித்துச் செயல்படவில்லை என்கிற போது வேலையிலும் எதிர்ப்பு… வீட்டிற்கு வந்தாலும் எதிர்ப்பு…!

இது எல்லாம் எதனால் வருகின்றது…?

கோபத்தையும் வெறுப்பையும் விளைய வைக்கின்றேன்
1.வீட்டிற்குள் வந்து பொறுமை இல்லாதபடி சொன்ன பின்… அங்கேயும் வருகின்றது
2.அதே சமயத்தில் பொறுப்பு இழந்து தொழிலே சொல்லப்படும் போது அங்கே நாம் பார்க்கும் வேலையை மட்டமாக்குகின்றது
3.மேலதிகாரியோ அல்லது நம்மிடம் வேலை பார்ப்பவர்களோ நம்மிடம் எதிர்மறையாகச் செயல்படும் நிலை வந்து விடுகின்றது

இது எல்லாம் எங்கிருந்து… எப்படி.. வருகிறது…?

குடும்பப் பற்றில் ஒருவர் இப்படி ஆகிவிட்டால் இந்த உணர்வுகள் குடும்பம் முழுவதும் பரவுகிறது. இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

அப்பொழுது அந்த இடத்திலே சுதாரித்து… நமக்குக் கோபம் வருகின்றது… அது எதனால் வருகின்றது…? என்று அறிதல் வேண்டும். தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்து வந்தால் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முடியும்.

1.நம்முடைய உணர்ச்சிகள் ஏன் மாறுகின்றது…? என்று அதை மடக்கித் திருப்பி
2.அடுத்த கணமே அதை மாற்றி அமைக்க… ஆத்ம சுத்தியும் செய்யச் சொல்லும்.

இதையெல்லாம் உங்கள் அனுபவத்திலே தெரிந்து கொள்ளலாம்

ஆனால் அந்தப் பழக்கம் இல்லை என்றால் மீண்டும் சண்டைக்குத் தான் செல்வோம். அதற்குப் பின்
1.வீட்டில் சண்டை வருகின்றது…
2.எங்கே போனாலும் ஒரே பிரச்சினையாக இருக்கின்றது…
3.நான் சொன்னால் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்…! என்று அப்படித்தான் போகும்

அதே சமயத்தில் முழுமையாகத் தெரியாதபடி “இந்தத் தியானத்தைத் தான் கடைபிடிக்கிறேன்” என்று ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் எனக்குத் தொல்லையே வருகிறது… தொல்லை விடமாட்டேன் என்கிறது…! என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

காரணம்… இது எல்லாம் தாய் கருவிலே பூர்வ புண்ணியத்தால் வருவது. அப்படிப் பூர்வ புண்ணியத்தில் வந்தாலும் கூட துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இந்த உணர்வைக் கூட்டி நாம் அதையும் மாற்ற முடியும்

நம்மை அறியாமல் இயக்கக்கூடிய அத்தகைய நிலைகளை அடக்குவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியே கொடுக்கப்படுகின்றது. செய்து பார்த்தேன் முடியவில்லை என்று விட்டுவிடக்கூடாது.

அடுப்பில் சமையல் செய்கின்றோம் என்று “அவசரத்துக்கு வேக வைத்தால்” எப்படி ஆகும்…?

1.நெருப்பைக் கூட்டியவுடன் அடியில் உள்ளது கருகிவிடும்.
2.நடுப்பகுதியில் உள்ளது ஒரு மாதிரி இருக்கும்
3.மேலிருப்பது வேகாமலே போய்விடும்.

இப்படி மூன்று நிலை ஆகிவிடும். நெருப்பை வைப்பதில் இத்தனை நிலைகளும் இருக்கிறது.

அதாவது கனமாக இருக்க கூடிய பொருள்கள் கீழே சென்று விடுகின்றது.. கருகிவிடுகிறது. அதற்கு மேல் இருப்பது குழைந்து விடுகின்றது அதற்கு மேல் அப்படியே அரிசியாக இருக்கின்றது. சூட்டினுடைய இயக்கங்கள் இப்படி மூன்று விதமாக வருகின்றது. சமையலில் பக்குவம் இல்லை என்கிற பொழுது சாப்பிட முடியாது போய்விடுகின்றது.

கோபமாக இருக்கும் பொழுது பாருங்கள்… அடுப்பிலே சூட்டை அதிகமாக்கிக் கொண்டே செல்வார்கள். அப்போது (வேகமாக) கொதித்து வரும் பொழுது கோபத்துடனே மூடியை “வெடுக்…” என்று எடுப்பார்கள்.
1.துணியை வைத்து எடுப்பதற்கு மாறாக அப்படியே கையில் எடுப்பார்கள்
2.சூடு கையில் தாக்கியவுடன் சனியன்…! எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தேன்
3.கடைசியில் என் கையில் சுட்டு விட்டது…! என்று யாரால் இவர்கள் கோபமானார்களோ அவர்களைத்தான் குற்றமாகச் சொல்வார்கள்.

காரணம்… இது எதைச் செய்கிறது என்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான். இயக்கச் சக்தியாக மாறி நம்மை அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா

இந்த மாதிரி உணர்வுகள் வந்தாலும் நம்மை அது ஆட்சி புரியக்கூடாது. ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
1.எதனால் அந்தக் கோபம் வந்ததோ அந்த நிலையை மாற்ற
2.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
3.என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
4.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… சிந்திக்கும் ஆற்றல் வர வேண்டும் என்று
5.இதை நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

நம் சொல் அடங்கி அடுத்து மற்றவர்களுக்கு நாம் தெளிவான ஆலோசனைகளைச் சொல்லக்கூடிய… பக்குவமான நிலையாக அது வெளிப்படும்.

ஆண்கள் கோபமாகப் பேசினாலும் பெண்கள் இந்த முறைப்படி செய்து தன்னையும் சாந்தப்படுத்தி… கணவரையும் சாந்தப்படுத்த முடியும்

இல்லையென்றால் ஓம் நமச்சிவாய… சிவாயநம ஓம்… அதாவது அவர்கள் உணர்வு இங்கே இயக்கி “என் கணவர் என்னைப் பார்த்துக் கோபமாகவே பேசுகின்றார்… என்னை பார்த்தாலே அவருக்கு ஆக மாட்டேன் என்கிறது…! என்று இப்படி வந்துவிடும்

அதற்குப்பின் கணவரிடம் என்னதான் திருப்பிச் சொன்னாலும் அந்தச் சொல் அங்கு எடுபடாது. சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். ஒவ்வொரு நொடிப்பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுத்து… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று இந்த உணர்வை வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்
1.என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
2.இதை நாம் ஒரு கவசமாக ஆக்கி… நம் ஆன்மாவிலே அதை அதிகமாக்கி… முன் பகுதிக்குக் கொண்டு வர வேண்டும்.

கிரகணம்

இந்த வாழ்க்கையில் பிறிதொரு தீமையான உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு நம் ரத்தங்களிலே கலந்து விடுகின்றது.
1.அப்படிக் கலந்த உணர்வுகள் நம் நல்ல அணுக்களின் செயலை… அது நல்லதை நுகர விடாது தடுத்து விடுகின்றது.
2.அந்தத் தீமை பெறுகப் பெறுக நல்ல அணுக்களும் கெட்டதாக மாறத் தொடங்குகிறது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சிறுகச் சிறுகத் தெரிந்திடும் நிலையாக அனைத்தையும் தெரிந்திடும் நிலையாக மனிதனாக இப்பொழுது வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

அப்படி வந்தாலும் மனிதன் தன்னுடைய அன்பால் பண்பால் பரிவால் பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தால்… அந்தத் துயர உணர்வுகள் அனைத்துமே நம் ரத்த நாளங்களிலே கலந்து விஷத்தின் தன்மையாகி உடலில் உள்ள நல்ல அணுவின் செயலை மறைத்து விடுகின்றது.

சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டு வெளிச்சமாகத் தெரிந்தாலும் மற்ற மற்ற கோள்கள் அதை மறைக்கத் தொடங்குகிறது. பூரண நிலவாக இருப்பது பூமி மறைக்கத் தொடங்கியபின் சிறுக சிறு இருளாகின்றது. அதே சமயத்தில்
1.இன்னொரு கோளின் தன்மை மறைத்து சந்திரனின் ஒளி பூமிக்குக் கிடைக்காது இருக்கும் பொழுது அதைக் “கிரகணம்” என்று சொல்கின்றோம்.
2.இப்படி ஒரு கோளின் தன்மை இடைமறித்தால் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பெறாதபடி விஷத்தின் தன்மை கலந்து விடுகின்றது.

அத்தகைய கிரகண காலங்களில் அதை நாம் நேரடியாக உற்றுப் பார்த்தால் கண் கருவிழிகளில் விஷம் பாய்ந்து விடுகின்றது. அது பதிந்து விட்டால் கண்களில் கோளாறும் வருகின்றது.

அந்த விஷம் நுகரப்பாட்டு நம் ரத்தங்களிலே கலந்து அணுக்களிலும் சேர்ந்து கொள்கிறது. கிரகணம் அன்று அவ்வாறு சாப்பிட்டால் ஜீரணிக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

1.காரணம் இன்னொரு விஷமான கோளின் தன்மை மறைக்கப்படும் பொழுது
2.சந்திரனின் குளிர்ச்சி ஊட்டும் சக்தி அது நமக்குக் கிடைக்காதபடி தடுக்கப்படுகின்றது.

அது அந்த விஷமான கோள் மறைவாகும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை சந்திரனுடன் கலந்து நாம் பார்க்கப்படும் பொழுது சுவாசித்து உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது. நம்மை அறியாமல் விஷத்தன்மைகள் பாய்ந்து விடுகின்றது.

இது போன்று நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ கிரகணங்கள்… அதாவது மற்ற மனிதர்களின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது. அந்த உணர்வுகள் நம் ரத்தங்களிலே கலக்கக் கலக்க அது மாசுபடுகின்றது.

இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் ஞானிகள் எத்தனையோ வழிகளைக் காட்டி உள்ளார்கள்.

அகஸ்தியன்… அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு “நஞ்சினை வென்று விஷத்தை முறிக்கும் ஆற்றலாக வளர்ந்து” அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக உள்ளான்.

1.அதனின்று வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்து நம் இரத்தங்களில் அடிக்கடி கலக்கக்கச் செய்தோம் என்றால்
2.நம்மை அறியாது இப்படி உள் புகும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!

 

சமையல் கூடத்தில் பல காய்கறிகளையும் பல வகையான பொருட்களையும் இணைத்துக் கூடடமைப்பாகச் (சமையல் மாஸ்டர்) சமைக்கின்றார்கள். அவர்கள் செய்கின்றார்கள் என்று அதே மாதிரி நாமும் செய்தால் என்ன ஆகும்…?

அவர்கள் அதையெல்லாம் பக்குவப்படுத்தி
1.வேக வைக்கும் நேரம் பார்த்து எதனுடன் எதைச் சேர்க்க வேண்டும்…? எப்பொழுது சேர்க்க வேண்டும்…? என்று செயல்படுத்துவார்கள்
2.ஒரு பகுதி வெந்த பின் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள்.

அதாவது கடினமான காயாக இருக்கும். அதைத் தனியாக வேக வைத்துத் தாளித்து எடுத்து வைத்துக் கொள்வார்கள். சீக்கிரம் வேகுவதைத் தனியாகப் போட்டு எடுத்து வைத்துக் கொள்வார்கள் அதற்குப்பின் இதை இரண்டையும் சமமாகக் கலக்கும் பொழுது ஒன்று போல இருக்கும்.

ஆனால் நாமும் செய்கிறோம் என்று இரண்டு காயையும் ஒன்றாக வைத்து வேக வைத்தால் என்ன ஆகும்…? நேரம் கழித்து வேகுவதும் சீக்கிரம் வேகுவதும் ஒன்றாகச் சமைக்கப்படும் பொழுது ருசி இல்லாமல் போய் விடும்.

அவர்கள் செய்தார்கள் ருசியாக இருக்கின்றது. நாம் செய்தோம் ருசி வரவில்லை என்பர்கள்.

அதே போல அந்த கொதித்து வரும் பருவத்தைப் பார்த்து உப்பைச் சேர்ப்பார்கள்… அது மேல் பருவமாக இருக்கும்.
1.ஆனால் ஒரு சிலர் குழம்பில் முதலிலேயே உப்பைப் போட்டு விடுவார்கள் காய்கறி அந்த உப்பை எல்லாம் எடுத்துக்கொள்ளும்.
2.குழம்பில் உப்பு இல்லை என்று மீண்டும் சேர்ப்பார்கள்… எல்லாமே மாறி விடும்.

சில பெண்கள் அந்தந்த சமயம் பார்த்து குழம்பைக் கிளறி விடுவார்கள். அந்தக் காலப்பருவங்களைப் பார்த்து அது கொதிக்கும் நிலையினைக் கண்டு அந்த நெருப்பை அவர்கள் கூட்டிக் குறைத்து வைப்பார்கள்.

1.குழம்பு வைக்கும் போது நெருப்பைக் கூட்டுவதிலும் குறைப்பதிலும் அத்தனை வித்தியாசம் இருக்கின்றது. அந்தக் குழம்பின் மணமும் நன்றாக இருக்கும் சுவையும் நன்றாக இருக்கும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள் என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக… ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கின்றார். “அ” என்று சொல்கின்றார். ஆனால் ஆ என்று குழந்தை திருப்பிச் சொன்னால் அப்படிக் கிடையாது அ என்று சொல்ல வேண்டும் என்று திருப்பிக் கற்றுக் கொடுப்பார்.

1.குழந்தை “ஆ…” என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
2.இவனுக்குப் படிப்பு வராது என்று சொல்லி பள்ளியை விட்டு ஆசிரியர் அவனைப் போகச் சொல்ல முடியுமா…?
3.பள்ளியிலே கற்றுக் கொடுப்பவர்கள் அந்த நெறிப்படித் தான் சொல்லி வழி நடத்துகின்றார்கள்.

அது போலத் தான் நம் குழந்தையாக இருந்தாலும் அவன் சுட்டித்தனம் செய்யும் போது அவர்களை நெறிப்படுத்தும் நிலையாக தாய் தந்தையர் ஞானத்தைக் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். “என்ன சொன்னாலும் இப்படியே செய்கிறான்… இவன் உருப்பட மாடடான்…!” என்று சொல்லி விடக்கூடாது.

1.என் குழந்தை அருள் ஞானியாக வரவேண்டும் உலகைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக வளர வேண்டும் என்று கருவிலேயே இந்த உணர்வுகளை ஊட்டினால்
2.தெய்வக் குழந்தைகளாக நிச்சயம் உருவாக்க முடியும்… அந்தச் சக்திகளைத் தாயும் பெறுகின்றது குழந்தையும் பெறுகின்றது.

கடப்பாரையைக் கொடுத்துள்ளார்கள். அதை வைத்துப் பூமிக்கடியில் செல்லும் எலெக்ட்ரிக் வயரை எடுக்க வேண்டும் என்றால் சூதானமாகத் தோண்ட வேண்டும். வேகமாகத் தோண்டி விடலாம் என்று கடைப்பாரையால் குத்தினால் வயரிலே பட்டால் உடனே எர்த் ஆகும். அதுவும் பழுதாகி விடும்… நம்மையும் தூக்கி எறிந்து விடும்.

இதை எல்லாம் ஏன் சொன்கிறோம் என்றால்
1.குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!
2.நன்மை செய்வதற்குத்தான் குருநாதர் சக்தி கொடுக்கின்றார்.

அதை நாம் சீராகக் கையாள வேண்டும். அதற்குத்தான் தான் இத்தனை பக்குவங்களையும் சொல்லிக் கொடுக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உடல் ஆசையை (முதன்மையாக) வைத்து “ரெக்ரியேசன் கிளப்” (RECREATION CLUB) என்று அதில் ஆயுள் மெம்பராகச் சேர்வார்கள். தண்ணீ குடிப்பது (மது) போன்று எத்தனையோ பல தீய பழக்க வழக்கங்களை வைத்து அதிலே நாங்கள் ஒவ்வொருவரும் மெம்பராக இருக்கிறோம் என்கிறார்கள்.

வியாபாரமும் மற்றதுகளையும் அங்கே பேசுவார்கள். ஆனால் அதிலே ஏதாவது நஷ்டமாகிவிட்டால் என்ன ஆகும்…?

தவறான வழியில் சென்று… “எனக்குக் கெடுதல் செய்தான்… எனக்குத் துரோகம் செய்தான்…” என்று ஒருவருக்கொருவர் பகைமைகளை உருவாக்கி வெறுப்பையும் வேதனையையும் (அந்த ஆயுள் மெம்பர்கள்) வளர்த்துக் கொள்வார்கள்.

வேதனையை வளர்த்துக் கடைசியில் உடலை விட்டுப் பிரிந்த பின் ஆவியாக யார் கெடுதல் செய்தானோ அந்த உடலுக்குள் சென்று அவனையும் வீழ்த்தும்.. அதற்குப் பின் நாயோ நரியோ பாம்போ தேளோ அத்தகைய உடலைத் தான் பெற முடியும்.

இத்தகைய ஆயுள் மெம்பர் நமக்குத் தேவையில்லை…!

1.எப்பொழுதும் குருவுடன் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) நாம் இணைந்தே வாழ வேண்டும் என்ற நிலையில்
2.குரு காட்டிய அந்த அருள் வழியைப் பின்பற்றி
3.இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் உடலுக்குள் உட்புகுந்த தீமைகள் இயக்காது தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆயுள் கால மெம்பர்கள் இதை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும்.

1.குருவுடன் ஆயுள் கால மெம்பராக நான் (ஞானகுரு) இருக்கின்றேன்
2.அவர் எதையெல்லாம் பெற்றாரோ அவர் வழியினைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
3.குரு எனக்கு எதையெல்லாம் போதித்தாரோ… எவ்வாறு எனக்குள் அதைப் பதிவு செய்தாரோ.. அதைக் கடைப்பிடித்து வருகின்றேன்.

குருவுடன் இணைந்து ஆயுள் மெம்பராக இருக்கின்றேன் நீங்களும் என்னைப் போல் அவருடன் இணைந்து ஆயுள் மெம்பராக இணைதல் வேண்டும்.

குடும்பத்துடன் தான் நாங்கள் குருவுடன் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தோம். நீங்களும் குடும்பத்துடன் குருவுடன் இணைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழிகளை குறைந்த காலமாவது உபதேசங்களைக் கேட்டிருப்பீர்கள். குருவின் அருள் வழியைக் கடைப்பிடிப்பதை நீங்கள் ஒரு கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மெய் ஞானத் திருச்சபையின் அங்கத்தினர்களாக நாம் இருக்கின்றோம்.
1.நம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை நீக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாக வேண்டும்
2.அதற்குத் தான் அருள் ஞானச் சக்கரத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

மாமாகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு… பேரருள் பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் அதில் ஆயுள் மெம்பராக நாம் சேர வேண்டும்.

அருள் ஞானச் சக்கரத்தைப் பார்க்கும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதன் பின் உங்களுக்கு எதுவெல்லாம் நல்லதாக வேண்டுமோ…
1.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்; நண்பர்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.நோய்கள் நீங்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்;
3.தொழில் செய்யும் இடத்தில் குற்றம் குறைகள் நீங்க வேண்டும்;
4.துருவ நட்சத்திரத்தின் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்;
5.பொருளறிந்து செயல்படும் திறன் எல்லோரும் பெற வேண்டும்
6.உண்மையை உணர்ந்து… தெளிந்த நிலை எல்லோரும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
7.புருவ மத்தியில் உயிரை வேண்டி சக்கரத்திற்கு முன் இப்படி எண்ணும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தி என் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று தியானித்தால் நோய் நீங்கும்.

நோய் நீக்கும் சக்தியை எடுத்து நமக்குள் விளைய வைத்து அதன் வழி செயல்பட்டால் எல்லாம் நல்லதாகும். உங்களால் அடுத்தவருடைய நோய் போகும்… ஆனால் அவருடைய நோய் உங்களுக்கு வராது.

1.ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக “அருள் ஞானச் சக்கரம்” கொடுக்கின்றோம்.
2.உலகில் படர்ந்து கொண்டிருக்கக்கூடிய நச்சுத்தன்மையிலிருந்து உங்களை மீட்டிடும் சக்தியாக வரும்.

ஆகவே துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக என்றுமே நாம் இணைந்து இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதை ஒரு தலையாகக் கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து அதிலே நாம் ஆயுள் மெம்பராகச் சேரும் போது “நம்முடைய ஆயுள்” (வாழ்க்கை) அங்கே செல்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரைக் கடவுளாக வணங்கி உடலை ஆலயமாக நாம் மதித்துப் பழக வேண்டும். மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வமாக மதிக்க வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்… உடல் சிவமாக இருக்கின்றது நம் கண்கள் கண்ணனாக இருக்கின்றது.

இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் வேதனை கோபம் போன்ற குணங்கள் அதிகமானால் இரத்தக் கொதிப்பாகி விடுகிறது.

அந்தக் கோபத்துடன் ஒரு கணக்கைப் பார்த்தால் அது சரியாக வராது. சரியாக வரவில்லை என்றால் “எவன் எழுதி வைத்தானோ…?” என்று அடுத்தவன் மேல் தான் இந்தக் கோபம் செல்லும்.

நாளாக நாளாக இந்தக் கோபம் பெருகி….
1.சிறு மூளையில் இருக்கும் ட்ரான்சாக்சன் செய்யக்கூடிய அந்த நரம்புகள் வெடித்தால் மூக்கு வாய் வழியாக இரத்தம் வரும்.
2.அதே சமயத்தில் இருதயத்தை இயக்கக்கூடிய நுண்ணிய நரம்புகள் செயலிழந்து இருதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்) வரும்.

வேதனை வேதனை என்று எண்ணினால் கண்ணுக்குள் விஷத்தன்மை பாய்ந்து அது ஈர்க்கும் தன்மை இழந்து இருள் சூழும். கருவிழி நன்றாக இருந்தாலும் பார்வை மங்கிவிடும்…. மருத்துவரிடம் சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள்.

1.அப்படிப் பண்ணிவிட்டான்… இப்படிப் பண்ணி விட்டான் என்று அடிக்கடி வேதனைப்படும் பொழுதெல்லாம்
2.அந்த (வேதனை) நஞ்சு கண்ணிலே படர்ந்து அதை இருளாக்கிவிடுகிறது
3.இப்படி எல்லாம் கண்ணுக்கும் நாம் கெடுதல் செய்கின்றோம்.

ஆரம்பத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் புழு உடலாக இருக்கும் போதே துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக… “பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும்…” என்று எடுத்துக் கொண்ட உணர்வு தான் வளர்ச்சியாகிக் கண்களாக உருப்பெற்றது.

கண்கள் உருப்பெற்ற பின் பார்த்து
1.தீமை என்ற உணர்வை எடுத்து… உணர்ச்சியைக் கூட்டி எண்ணங்கள் வருகிறது
2.அந்த எண்ணத்தின் உணர்ச்சி கொண்டு “தன்னைக் காக்கும் நிலை…” வருகிறது.
3.இது எல்லாம் நாம் நுகர்ந்த உணர்வு எண்ணங்களாக வந்து…
4.இந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி அதன்வழி நம் உடலாகி…
5.அதன்வழி நம்மை (உரு)மாற்றிக் கொண்டே வருகின்றது.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் குரு காட்டிய அருள் வழியில் செயல்பட வேண்டும். காரணம் குறுகிய காலமே இந்த மனித உடலில் வாழ்கின்றோம்.

கோடிக் கோடி சொத்துகளைச் சேர்த்து வைத்தாலும் அதைப் பார்த்த பின் மற்றவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டு விடுகிறது. பொறாமைகள் வந்த பின் என்ன நினிக்கின்றோம்…?
1.இவன் எனக்குத் தொல்லை கொடுக்கின்றான்… திரும்பத் திரும்ப இடைஞ்சல் செய்கின்றான்
2.என் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் இப்படிச் செய்கின்றான் என்று
3.செல்வம் குவிந்திருந்தாலும் அதன் வழி விரோதிகளைத் தான் வளர்க்க முடிகிறது… பகைமைகளைத் தான் உருவாக்குகின்றோம்.
4.பகைமைகளை உடலில் சேர்த்து அந்த உணர்ச்சியோடு தான் ஒவ்வொரு நாளும் வேதனைப்பட்டு ஆத்திரப்பட்டு வாழுகிறோம்
5.அதனால் உடலில் பல தொல்லைகள் தான் வளர்கின்றது

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு நீங்கள் முயற்சி எடுங்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும்
1.யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து… துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழகுங்கள்.
2.“எங்கே வெளியே சென்றாலும் அதை உற்று நோக்கிப் பார்த்து ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள்…”

பிறரின் துன்பங்களைக் கேட்டறிய நேர்ந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இதன் வழி அதை அடக்கி… அறியாது வந்த தீமைகளிலிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்; பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எடுத்து மாற்றிக் கொண்டே வேண்டும்

அது தான் தனுசுகோடி…! கோடிக்கரை என்ற மனித உடலில் இருக்கின்றோம்…. உடலை விட்டுச் சென்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி நாம் விண் செல்கின்றோம்… கல்கி.
1.இந்த உடலைக் கழட்டிவிட்டு
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றோம்

ஏனென்றால் விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷ அணுக்களாகப் பரவி “வைரஸ் என்ற கிருமிகள்” பல விதமான காய்ச்சல்களாகப் பரவிக் கொண்டிருக்கிறது சில உடலில் சில குடும்பங்களில் சில நாடுகளில் இது அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

ஒருவருக்கொருவர் சண்டையிடுதலும் வேதனைப்படுதலும் மந்திர ஜாலங்கள் செய்வதும் போன்ற செயல்கள் நடந்து கொண்டுள்ளது. மாயாஜாலங்களைச் செய்து அது நடக்கவில்லை… ஒன்றும் முடியவில்லை என்றால் சாப அலைகளை விட்டு உடலை விட்டுப் பிரிந்துவிடுகிறது.

இப்படி வெளிச் செல்லும் ஆன்மாக்கள் குடும்பத்தில் தெருக்களில் ஊர்களில் பல தொல்லைகள் கொடுக்கக்கூடியதாக மக்களுக்குத் துன்பம் விளைவிப்பதாக வந்து கொண்டிருக்கிறது.
1.அதிலிருந்து மீண்டிட நம் வீட்டிலும் சரி தெருவிலும் சரி ஊரிலும் சரி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை “அடர்த்தியாகப் பரவச் செய்ய வேண்டும்…”
3.மக்களை மீட்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்
4.ஒவ்வொரு உயிரும் கடவுள் என்றும் ஆண்டவன் என்றும் ஈசன் என்றும் நம் குருநாதர் உணர்த்திய வழியில் செயல்படுத்த வேண்டும்

இவ்வாறு செய்தால் உயிர் வீற்றிருக்கும் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிலையாக வருகிறது. மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களுக்கு நல்ல அமுதாகக் கிடைக்கிறது.

எல்லா உயிரையும் கடவுளாக மதிக்கும் பொழுது… ஈசனாக மதிக்கும் பொழுது… அவர்கள் குறைகள் நீங்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நமக்குள்ளும் அது பெருகுகிறது. இந்த வழியில் வளர்த்து நாம் ஆனந்தப்பட வேண்டும்.

கோடிக்கரையிலிருக்கும் நாம் தனுசுகோடியாக ஒளியாக…
1.எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்.
2.எதிலுமே இருள் என்ற நிலை வராதபடி பேரருள் பேரொளியாகப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.


எம்மிடம் ஆசி பெற்றாலும் யாம் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம்

 

சாமியாரிடம் ஆசி வாங்கினால் போதும் என்ற நிலையில் என்னிடம் ஆசி வாங்கினால் அன்றைய தினத்திற்கு நன்றாக இருக்கும்.
1.அடுத்து நீங்கள் யாம் சொன்ன வழியைக் கடைப்பிடித்தால்
2.நிலையாக உங்களுக்குச் சரியாகும்.

அப்படி இல்லாது “சாமியிடம் ஆசி வாங்கினேன்… நன்றாக இருந்தது..!” என்று ஒரு சொல்லில் சென்று விட்டால் அடுத்து என்ன ஆகின்றது…?

சண்டை போடுபவன் வேதனைப்படுபவன் சங்கடப்படுபவன் இவர்களை எல்லாம் இரக்கத்துடன் உற்றுப் பார்த்தால்… அடப் பாவமே நல்ல மனிதன் இப்படி ஆகிவிட்டார் என்று வேதனையான உணர்வை உணர்ந்தால் அந்த உணர்ச்சிகள் உங்கள் ரத்தத்தில் தான் கலக்கின்றது.

1.கலந்த பின் நல்ல அணுக்கள் பிடிக்காது அதை விட்டு விடுகிறது.
2.நல்ல
3. அணுக்கள் ஏற்கவில்லை என்றால் சிந்திக்கும் தன்மை குறைகிறது… வியாபாரம் செய்தால் மன வலிமை இல்லாது போய் விடுகின்றது.

மன வலிமை இல்லை என்றால் நல்ல சரக்கைத் தேர்ந்தெடுக்க முடியாது. நல்ல சரக்கை எடுத்தாலும் கூட நம் சொல் வெளிப்படும் பொழுது அதனுடன் வேதனை கலந்து வருகின்றது.

1.நம் கடையில் துணியை எடுக்க வருபவர்கள் இந்தச் சரக்கைப் பார்த்த பின் அவர்களுக்கு அதிலே வெறுப்பு வருகின்றது.
2.ஏனென்றால் நம் உணர்வுகள்… அந்த மணம் அதில் பட்டபின் அவர்கள் அதை நுகரும் பொழுது துணியை வாங்குவதில்லை.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி வருகின்றது. இதை எல்லாம் துடைக்க வேண்டும் அல்லவா. இது போன்று நம்மை மறைக்கும் “சிறு திரைகளை” அவ்வப்போது தூய்மைpபடுத்த வேண்டும்.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்தியை உடலுக்குள் சேர்த்து ரத்தத்தில் கலந்து இருளை மாற்றிப் பழக வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இதைச் செய்து பழக வேண்டும்.

ரோட்டில செல்கின்றோம்… உடையில் தூசி படுகின்றது. துணியை அடுத்து துவைத்து விடுகின்றோம். நாம் ஒரு வேலை செய்கின்றோம்… கையிலே அழுக்குப் படுகின்றது. உணவை உட்கொள்ளும் முன் கையைத் தூய்மைப்படுத்துகின்றோம்.

இதே போன்று தான் ரோட்டில செல்கின்றோம்… ஒருவர் வேதனைப்படுபவதைப் பார்க்கின்றோம்.
1.அது அழுக்காக நம் ஆன்மாவிலே படுகின்றது… ரத்தத்தில் கலக்கின்றது.
2.ரத்தத்தில் அசுத்தமாவதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.

நல்ல உணர்வுகள் இருந்தாலும் பிறருடைய வேதனை உணர்வுகள் அந்த நல்ல குணத்திலே சித்திரை சிறு திரையாக மறைத்து விடுகின்றது… மூடி விடுகின்றது. இந்த வேதனை தான் முன்னணியில் வருகின்றதே தவிர நீக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

இதைப் போன்ற தீமையெல்லாம் நீக்கி ஒளியாக இருப்பது துருவ நட்சத்திரம்.
1.அதை நாம் நுகர்ந்து எடுத்து நம் ரத்தத்திலே கலந்து தூய்மைப்படுத்த வேண்டும்.
2.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தீமையை நீக்கிய அனுபவங்கள் இல்லையென்றால் தியானத்தைச் செய்து பலனில்லை

படித்ததை மட்டும் வைத்துக் கொண்டு இன்ஜினியர் வேலை பார்த்தால் அவர் காரியத்திற்கு ஆகாது. அனுபவ சித்தி அவசியம் வேண்டும்.

அதைப் போன்று தான் யாம் சொன்னதை எல்லாம் வெறும் பாடமாக வைத்துக் கொண்டு “சாமி சொன்னார்…!” என்று மட்டும் எண்ணக் கூடாது.

உபதேசிப்பதை எல்லாம் முதலில் ஆழமாகப் பதிவு செய்து ஞாபகத்தில் வைத்து… அதை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்திலே குறைபாடுகள் எப்படி வருகின்றது…? என்று அறிந்திடும் அந்த அனுபவம் வேண்டும்.
2.யாம் சொன்னதை எடுத்துப் பயன்படுத்தி அந்தக் குறைகளை மாற்றி அமைக்கக்கூடிய அனுபவம் பெற வேண்டும்.
3.”எது வந்தாலும்” அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து… நல்லதாக வேண்டும் என்று அதைத் தூய்மைப்படுத்தி…
4.அப்படித் தூய்மையாக்கிய அனுபவங்கள் கட்டாயம் வேண்டும்.

படித்துப் பட்டம் பெற்ற இன்ஜினியர் என்றாலும் அனுபவம் இல்லை என்றால் படித்த பாடத்தால் பலன் இல்லை. மருத்துவர்களாக வருபவர்கள் முதலிலே மருத்துவம் பற்றியதை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்கின்றார்கள்.

படித்த படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு “நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது…” அவர்களுக்கு அனுபவத்திற்கு என்று தனியாகப் பயிற்சி கொடுப்பார்கள்.

ஏனென்றால் ஒருவருக்கு ஒரு நோய் இருக்கிறது என்றால் படித்ததன் பிரகாரம் மட்டும் மருந்து கொடுக்க முடியாது. காரணம்…
1.அவர் உடலில் மற்றொரு உபாதை இருக்கும்…
2.அதற்கு இந்த மருந்து எதிர்ப்பதம் ஆகிவிடும்.

அதாவது ஒருவருக்கு ஆஸ்த்மாவும் இருக்கும்… இரத்தக் கொதிப்பும் இருக்கும். ஆஸ்துமாவுக்கு மருந்து கொடுத்தால் இரத்தக் கொதிப்புக்கு ஆகாது. இரத்தக் கொதிப்புக்கு மருந்து கொடுத்தால் ஆஸ்துமாவுக்கு ஒத்துக் கொள்ளாது.

மீண்டும் அவருக்கு நோய் அதிகமாகும்… வேதனையாகி பாதிப்புகள் அதிகமாகும்.

ஆனால் இது இரண்டையும் சமப்படுத்தும் நிலையாக
1.அதற்கு எப்படிப்பட்ட மருந்து கொடுக்க வேண்டும்…? என்று அந்த மருத்துவர் சிந்தனை செய்து
2.தன்னுடைய அனுபவத்தால் செயல்படுத்தி இரண்டையும் சீராக்கினால் தான் அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆனால் “இன்ன நோய்க்கு… இன்ன மருந்து தான்” கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அந்த ஆஸ்துமாவிற்கு என்று அவர் தனித்து மருந்து கொடுத்தால் சீராக வராது இரத்தக் கொதிப்புக்குக் குளிர்ச்சியான நிலை உருவாக்கும்படி செய்தால் ஆஸ்துமாவுக்கு அதிகமாகிவிடும். கர்…புர்… என்று இழுத்துக் கொண்டிருக்கும்.

அப்பொழுது எந்த நோயை நீக்குவது…?

ஆகவே அனுபவரீதியிலே இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தித்து
1.ஆஸ்துமாவுக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த உஷ்ணத்தை மேலே ஏற்றி
2.அதனுடன் இரத்தக் கொதிப்பிற்கு குளிர்ச்சிக்குண்டானதைக் கொடுத்துச் சமப்படுத்திக் கொண்டு வந்தால் இரண்டும் சமமாகும்.
3.ஆஸ்துமாவையும் குறைக்கும்… இரத்தக் கொதிப்பையும் குறைக்கும்.

ஆனால் சமப்படுத்த முடியாத மருந்தைக் கொடுத்தால் அது வேலையாகாது. குளிர்ச்சியைக் கொடுத்துத்தான் கொதிப்பை அடக்க முடியும். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான செயலாக்கங்கள் வரும். அதனுடைய செயலாக்கங்களை அறிந்து அனுபவரீதியிலே கொண்டு வர வேண்டும்.

அதற்குத்தான்…
1.எம்முடைய (ஞானகுரு) அனுபவத்தை உபதேச வாயிலாக உங்களிடம் சொல்கின்றேன்.
2.அனுபவத்தைச் சொல்லி எந்த நிமிடத்தில்… அந்தக் குறைகள் எப்படி உங்களை இயக்குகின்றது…? என்றும்
3.அதை மாற்றி அமைக்க ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை எண்ணி அருள் சக்திகளை அங்கே நிலை நிறுத்தி
4.உங்கள் உடலுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்று வாக்கினால் அதைப் பதிவு செய்கிறேன்.

அந்தப் பதிவை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி நான் சொன்னதை எல்லாம் நீங்கள் கடைப்பிடித்து…
1.நான் செய்தேன் என்று செயல்படுத்தி அனுபவபூர்வமாக ஒவ்வொன்றாக்க் கொண்டு வந்தால்
2.அதன் வழி தான் இதை மாற்றியமைக்கக்கூடிய நிலையைக் கொண்டு வர முடியும்.

தொழிற்சாலையிலும் சரி… ஒரு இயந்திரத்தைச் சீராக்குவதிலும் சரி… அதைப் பற்றி அனுபவரீதியாகத் தெரிந்த பிட்டர்கள் (FITTER) இருப்பார்கள். படித்தவர்களைக் காட்டிலும் அவர்கள் அனுபவ அறிவு கொண்டவர்கள்.

ஆனால் இன்ஜினியரோ நான் சொன்னபடி செய்ய வேண்டும் என்று சொல்லலாம். அதன்படி செய்தும் விடலாம் ஆனால் அந்த இயந்திரம் வேலை செய்யும் போது அங்கே தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.

தேய்மானம் ஆகும் போது அங்கிருக்கும் பிட்டருக்கு அதை பற்றி அனுபவம் இருக்கிறது. இந்த இடத்தில் சாய்வாக இருக்கின்றது… சமமாக்கி நேராக்கினால் தேய்மானம் ஆகாது… சரியாகிவிடும் என்று அவன் சொல்கிறான்.

ஆனால் படித்தவன் நான் சொல்கின்றேன்..! பிட்டர் நீ இந்த மாதிரிச் சொல்கிறாயே என்று இஞ்சினியர் சொன்னால் சரியாக வருமா…?

சில பேர் இப்படித்தான் நான் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கின்றேன்… தியானம் எல்லாம் கற்றுக் கொண்டிருக்கின்றேன். குண்டலினி யோகா செய்திருக்கின்றேன் என்றெல்லாம் சொல்வார்கள்.

1.ஆனால் “அந்த நுணுக்கம்…” எதிலிருந்து வருகின்றது…? என்று இல்லாதபடி சொன்ன பாடத்தை ஒப்படைக்கின்றார்கள்.
2.எப்படி மாற்றிக் கொண்டு வருவது…? என்பதை ஒதுக்கி அதை விட்டு விடுகிறார்கள்.

படித்தவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். படிக்காதவர்கள் தியானத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது நான் எத்தனையோ படித்திருக்கின்றேன் எனக்கு எல்லாம் தெரியும் என்னிடம் வந்து நீ சொல்கின்றாயா…? என்று சொல்வார்கள்.

இப்படிச் சொன்னால்
1.படிக்காதவர் கண்டுபிடித்துச் சொன்னதை
2.படித்தவர் அறிய முடியாது போய்விடும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

(அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகள் கொண்டு செய்தோம் என்றால் அது பக்குவமாகும்).

வீட்டில் வடை சுடுவார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு நாமும் சொல்லலாம். அட.. அடுப்பில் சட்டியை வைத்து எண்ணை காய்ச்சுகிறார்கள்… மாவைத் தட்டிப் போடுகிறார்கள்… அவ்வளவு தான்…! என்றும் நினைக்கலாம்.

தண்ணீரைத் தெளித்து அவர்கள் எண்ணையின் சூட்டைக் கணிப்பார்கள் அது சுய்… என்று சப்தமிடும். ஓ… இவ்வளவுதானா…! என்று இவர்களும் அதே போன்று செய்து பார்க்கும் போது சுய்… என்று சப்தமிடும்.

1.ஆனால் அந்தச் சப்தத்தின் வித்தியாசங்கள் அவர்களுக்குத் தெரியும்
2.எந்த அளவிற்கு எண்ணெய் காய்ந்திருக்கிறது என்று…!

அதற்குத் தகுந்தது போன்று அவர்கள் மாவை பிசைந்து கொண்டே இருப்பார்கள். அல்லது மற்ற வேலை செய்வார்கள். அதற்குப்பின் இந்த வடையைப் போடுவார்கள். சமமாக அவர்கள் 10 வடையைப் போட்டர்கள் என்றால் அந்தப் பத்திற்கும் சூடு சரியாக இருக்கும். வெந்து சீராக வரும்… ருசியாகவும் இருக்கும்.

ஆனால் புதிதாக வடை சுடுபவர்கள் தட்டிப் போட்டால் ரெண்டு அல்லது மூன்று வடையைப் போட்டதும் எண்ணையிலிருக்கும் சூட்டை எல்லாம் அது எடுத்துக் கொள்ளும். அடுத்து வடையைத் தட்டிப் போட்டால் சரியாக வேகாது. எண்ணை எல்லாம் மாவிற்குள் புகுந்து விடும்… எண்ணெய் காணாது போய்விடும்.

ஆனால் அனுபவம் பெற்றவர்கள் சுட்டுப் போட்டால் வடையில் எண்ணெய் இல்லை… வடை மொறு… மொறு… என்று ருசியாக இருக்கிறது.

ஆனால் அவர்கள் சுட்டதில் எண்ணை இருக்கிறது. மாவாக இருக்கிறது என்று சூட்டைக் கூட்டினால் மேலே கருகிவிடும். ஐய்யய்யோ கருகிவிட்டதே…! என்று எடுத்தால் இந்தப் பக்குவம் தவறும் போது என்ன ஆகிறது…? சாப்பிட்டால் ருசி இல்லை.

காரணம் அந்தப் பக்குவம் தெரிய வேண்டும்…!

ஆக எதுவுமே… ஒரு சிறியதாக இருந்தாலும் எல்லாவற்றிலும் அந்தப் பக்குவம் வேண்டும்
1.ஆன்மீகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் “பக்குவ நிலை பெறுவதற்குத் தான்” உணர்வுகளை அனுபவித்துச் சொல்கின்றோம்.
2.எம்மைப் போன்று நீங்களும் அனுபவரீதியில் தியானத்தை எடுத்து வளர்ந்தால் “உங்களைக் காப்பதற்கு உங்கள் எண்ணம் உதவும்…”


உடல் உறுப்புகள் சீராக இயங்க அடிக்கடி ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி சஞ்சலம் சலிப்பு சங்கடம் என்ற உணர்வுகளை நுகர நேர்ந்தால் ரத்தங்களில் அத்தகைய தீமைகள் அதிகரித்து விடுகின்றது. சலிப்பு சஞ்சலம் என்று வரும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

1.சிறிது நேரத்தில் புளிப்படைந்து உடல் வலு குறைந்து எண்ணங்கள் குறைந்து நமது செயலும் சீராகச் செயல்படுத்த முடியாது போய் விடுகின்றது.
2.புளிப்பின் தன்மை அதிகரிக்கும் பொழுது வாயுவின் தன்மை உருவாகி சோர்வடைகின்றோம்… சிந்திக்கும் தன்மையும் குறைகின்றது
3.தொழில் செய்ய வேண்டும் என்றாலோ மற்ற வேலை செய்ய வேண்டும் என்றாலோ ஒரு கணக்கைப் பார்க்க வேண்டும் என்றாலோ நம்மால் முடியாது போய் விடுகின்றது.

இப்படி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாதபடி உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினைப் பிரித்துப் பரிசுத்தமாக்கும் நிலையை ரத்தம் சுத்தமாவது இழந்து விடுகின்றது.

பாலில் சிறிதளவு உப்புப் பட்டால் எப்படிப் பிருத்து விடுகின்றதோ கெட்டுப் போய் விடுகின்றதோ இதைப் போல ரத்தங்களில் தீமையின் நிலைகள் அதிகரிக்க சுத்திகரிக்கும் சிறுநீரகங்கள் பாழடைந்து விடுகிறது.

அதே சமயத்தில் உணவுக்குள் கலந்து வரும் பித்த சுரபி விஷத்தின் தன்மையை அதிகரித்து விட்டால் வாந்தி மயக்கம் தலை சுற்றல் போன்று அதிகரித்து விடுகின்றது.

காரணம் விஷத்தைப் பிரிக்கும் நிலை இழந்து பித்தம் அதிகமாகி ரத்தத்துடன் அதிகமாகக் கலந்து விட்டால் மயக்கம் வருகின்றது.
1.பித்தத்தை உறிஞ்சும் அந்த உறுப்புகளுக்கு கவலை சோர்வு என்ற நிலை அதிகரிக்கப்படும் பொழுது
2.பித்த சுரப்பி சரியாக இயங்கும் நிலை குறைந்து விடுகின்றது. ரத்தங்கள் மாசுபடத் தொடங்குகிறது.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் வேதனை கோபம் வெறுப்பு ஆத்திரம் போன்ற உணர்வுகளை அடிக்கடி நுகர நேர்ந்தால் கல்லீரல் வீக்கம் அடைகின்றது. பல உணர்வுகளை வடித்துத் தெளிவாக்கும் விரிவாக்கம் தன்மை இழக்கப்படுகிறது.

இதே போன்று உடலில் உள்ள உறுப்புகளில் விஷத்தின் தன்மை அதிகரிக்கும் போது உடல் உறுப்புகள் சீராக இயங்காத நிலை ஆகிறது. நஞ்சினைப் பிரிக்கும் செயலை இழந்து விடுகின்றது.

அப்பொழுது நல்ல ஆகாரங்களை உட்கொண்டாலும் உயர்ந்த சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும்
1.அந்தச் சத்தை நஞ்சாகத்தான் மாற்றுகின்றதே தவிர அந்த சத்தினை உடலுக்குள் நல்லதாக மாற்றுவதில்லை.
2.காரணம் அதை ஜீரணிக்கும் திறன் கொண்ட நல்ல அமிலங்கள் இயங்கது போவதால் ஜீரணிக்கும் இயல்புகளை மாறி விடுகின்றது.
3.உடல் உறுப்புகள் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.

இதைப் போன்ற நிலைகள் வராது தடுக்க உடனுக்குடன் நாம ஆத்ம சுத்தி செய்ய வேன்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நிறுத்த வேண்டும். அடுத்து கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று “இப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட வேண்டும்…”

நம் உடல் உறுப்புகளை இப்படி வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் உடனே ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி
2.துருவ நட்சத்திர்த்தின் வலுவை ஏற்றித் தீமை உள்ளே போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு தாய் கர்ப்பமுற்றிருக்கும் பொழுது… சர்க்கரைச் சத்து நோய் உள்ளவரை ஒன்றில் இருந்து தொண்ணூறு நாட்களுக்குள் உற்றுப் பார்த்தாலே போதும். இந்த உணர்வு தாயின் இரத்தத்தில் கலந்து கருவில் இருக்கும் குழந்தைக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

இது தாய்க்கு அதிகமாகச் சேர்வதில்லை. ஆனால் இந்த உணர்வு கருவுக்குள் சென்ற பின் குழந்தைக்கு இணைத்து விடுகின்றது. குழந்தையாக இருக்கும் போதே அதற்கு சர்க்கரைச் சத்து நோய் வந்து விடுகிறது.

அந்தக் குழந்தை தவறு செய்ததா…? இல்லை.

எங்கள் குழந்தைக்குச் சர்க்கரைச் சத்து நோய் இருக்கிறது.. சரி செய்ய வேண்டும் என்று சொல்லி என்னிடம் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள்.

1.தாய் உற்றுப் பார்த்து எடுத்துக் கொண்ட உணர்வினால் தான் குழந்தைக்கு அது வந்தது
2.ஆகையினால் தாய் தான் எண்ணி அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொன்னேன்
3.மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் குழந்தை உடல் முழுவதும் படர்ந்து சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் என்று
5.”குழந்தையின் கண்களைப் பார்த்து” அந்த உணர்வுகளைப் பாய்ச்சும்படி சொன்னேன்.

அப்படித்தான் அதைக் குறைக்க முடியும்… மருந்து கொடுத்து அல்ல. சிறிய வயதிலேயே இன்சுலின் இன்ஜெக்க்ஷன் போட்டுச் சர்க்கரை சத்தை மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்றால் முடியாது

காசு இருக்கிற வரைக்கும் செய்வார்கள். இன்சுலின் போட்டுக் குழந்தையைக் காக்க வேண்டும் என்று செய்தாலும் ஒரு நாளைக்கு இல்லை என்றால் மயக்கப்பட்டு அது கீழே விழுந்துவிடும்.

தாயின் கருவில் உருவாகக்கூடிய குழந்தைகளின் நிலை இன்று இப்படித்தான் இருக்கின்றது.

ஏனென்றால் வீட்டில் டிவி மற்ற எல்லாமே இருக்கின்றது. விளையாட்டுகளையும் கேளிக்கை நிகழ்ச்சிகளையும் எத்தனையோ அதிலே காட்டுகின்றார்கள்.

தாய் இதை எல்லாம் உற்றுப் பார்க்கும் போது பதிவாகி விடுகின்றது கருவிலே இது இணைந்து… குழந்தை பிறந்த பின் டிவி மற்ற சாதனங்களை சிறு வயதிலேயே அதைச் சீராக இயக்குவதும்… விளையாட்டுகளை ஆனந்தமாக விளையாண்டு ரசிப்பதும்… இதையெல்லாம் இன்று நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
1.ஆனால் படிப்பையோ மற்ற நல்ல பழக்க வழக்கங்களையோ எளிதாகக் கொண்டு வர முடியவில்லை.
2.பெரும்பகுதி குழந்தைகள் டிவி மற்றும் அதைப் போன்ற சாதனங்களிலேயே இன்று நாட்டமாக இருப்பார்கள்.

காரணம்… தாய் கருவில் பதிவானது இப்படி வந்து விடுகின்றது. ஆனால் பார்த்தது வேடிக்கைதான்… குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அது அமைந்து அதன் வழியே அந்தக் குழந்தையை வழி நடத்துகின்றது

அதே போல் தான் காக்காய் வலிப்பு வந்த ஒரு குழந்தையை கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் அதே நோய் வருகின்றது.
1.வாழ்க்கையில் இது போன்று சுவாசிக்கும் உணர்வுகள் நம்மையும் பாதிக்கின்றது
2.எதிர்காலக் குழந்தைகளையும் பாதிக்கின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனோ தாய் கருவிலே நஞ்சை முறிக்கும் ஆற்றல் பெற்றான். அகண்ட அண்டத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகளை அறியும் ஆற்றலும்… அதில் இருக்கக்கூடிய நஞ்சுகளை வெல்லக்கூடிய சக்தியும் அவனுக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கிறது.
1.இது அவனுடைய சந்தர்ப்பம்… நஞ்சை வெல்லக்கூடிய சக்தி அவனுக்குக் கிடைக்கின்றது
2.மற்ற மனிதர்களைக் காட்டிலும் இவன் அறிவில் வளர்ச்சி கொண்டவனாக வருகின்றான்.

வான் வீதியை உற்று நோக்குகின்றான். 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின்னலாக மாறுகின்றது… அந்த ஒளிக்கற்றைகளை அவன் தனக்குள் நுகர்கின்றான்.

நம் பிரபஞ்சத்தைக் காட்டிலும் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய சக்திகள் இந்தப் பூமிக்குள் வந்தால் அது கடுமையான விஷத்தன்மையாக இருப்பதால் பல தீங்குகளைச் செய்கின்றது என்பதனை அறிகின்றான்.

ஆனால் அவன் உடலிலே அந்தத் தீங்கை மாற்றும் சக்தி இருப்பதால் அதை எல்லாம் நுகர்ந்து… தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இரத்தத்தின் வழி அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்குகின்றான்.
1.மின் கதிர்களை ஜீரணிக்கக் கூடிய சக்தி அவனுக்கு வருகின்றது… அது வளர்ச்சி அடைகிறது
2.உயிரைப் போன்றே உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிடும் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் வளர்ச்சி அடையத் தொடங்குகிறது.

27 நட்சத்திரங்கள் 27 விதமான நிலைகள் மோதும் போது அந்த மின் கதிர்கள் வெளிப்படுவதை அகஸ்தியன் சுவாசிக்கின்றான்… அது அவனுக்குள் அடங்குகிறது.

புறத்திலிருந்து வருவதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதிலுள்ள விஷத்தை ஒடுக்கிப் பாதரசமாக மாற்றி உமிழ்த்தப்படும் போது… “இந்த உலகிற்கே ஒளி தருவது போல…” 27 நட்சத்திரங்களின் ஆற்றலை அகஸ்தியன் நுகரப்படும் போது… இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் அறிவாக… அண்டத்தை அறியும் சக்தியாக அவனுக்குள் வந்து சேர்கின்றது

துருவத்தின் வழி இதையெல்லாம் அவன் உற்றுப் பார்த்துத் தனக்குள் அடக்கியதால் துருவன் என்ற காரணப் பெயரையும் வைக்கின்றார்கள். அந்த ஆற்றல்களை அவன் பெருக்கி வளர்ச்சியாகும் போது பதினாறாவது வயதில் அவனுக்குத் திருமணம் ஆகிறது..

செடி கொடியாக இருந்தாலும் கல் மண்ணாக இருந்தாலும் உயிராக இருந்தாலும் எல்லாமே “ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரம் என்ற இயக்கத் தொடர்கள் கொண்டது தான்” என்பதை உணர்கின்றான்.

தான் பெற்ற சக்திகளையும்… கண்ட பேருண்மைகளையும் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான்… உணரும்படி செய்கிறான். அதன் வழி அவன் மனைவியும் நுகர்ந்தறிகிறது.

கணவன் மனைவியாக இருவருமே விண்ணின் ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து இரு உயிரும் ஒன்றாகி ஒளி உடலாகப் பெற்று துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்.

1.அந்த அகஸ்தியனைப் போன்று எல்லோரும் பேராற்றல்கள் பெற வேண்டும்…
2.அத்தகைய ஞானியாக நாம் உருவாக வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றோம் (ஞானகுரு).


மனிதனின் எண்ண வலு

நாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்…? தீமையை நீக்கும் உணர்வை நாம் இச்சைபட்டால் உயிரிலே பட்டு அது கிரியை ஆகித் தீமையை நீக்கும் ஞானங்கள் வந்து அதுவாக நாம் ஆவோம்.

அதனால் தான் வலிமை மிக்க சக்தி வள்ளி. எத்தனையோ கோடி உடல்களில் பெற்ற தீமையை நீக்கும் அந்த வலிமையான சக்தி நம் ஆறாவது அறிவிற்கு உண்டு. தெரிந்து தீமையை நீக்கும் வலிமையான நிலை பெற்றது.

ஒரு விஞ்ஞானி ஆறாவது அறிவை வைத்துத் தான் எத்தனையோ வேலைகளைச் செய்கின்றான். ஒரு கல்லை நம்மால் தூக்க முடியவில்லை
1.ஆயிரம் டன் 2000 டன் எடையுள்ள பொருளைத் தூக்கிச் செல்லும் அளவிற்கு ராக்கெட்டைச் செய்து மேலே பறக்க விடுகின்றான்.
2.அது அவனின் எண்ண வலு தானே.

தன் எண்ண வலுவைச் செலுத்தி அதனால் தூக்கக் கூடிய சக்தியை கண்டுபிடித்து இருக்கின்றான். அப்போத்து அந்த எண்ண வாலு தானே காரணம் ஆகிறது.

1.நமக்குள் அந்த எண்ண வலுவைக் கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அந்த வலுவைக் கூட்டப்படும் பொழுது
2.எத்தகைய நிலையையும் நாம் சமாளிக்க முடியும்.
3.அதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி பழக்கப்படுத்துவதற்கு ஆத்ம சுத்தியைக் கொடுக்கின்றோம்.
4.எந்த நிமிடம் எது வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த உடலுடன் யார் இருக்கின்றார்கள்…? நம் குருநாதர் இருக்கின்றாரா…? திருமூலர் இருக்கின்றாரா…? ஆதிசங்கரர் இருக்கின்றாரா…? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ராமலிங்க அடிகள் இருக்கின்றாரா…? உலகுக்கெல்லாம் போதித்தாரே விவேகானந்தர் அவர் இருக்கின்றாரா…? அவருடைய குரு எல்லாத் தத்துவத்தையும் தெரிந்தாரே ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர் இருக்கின்றாரா…?

யாரும் உடலுடன் இல்லை. இன்றைய செயல் நாளைய சரீரம் இன்றைய நிலையில் ஒளியின் உணர்வாக நாம் பெறப்படும் பொழுது நாளை ஒளி உடல் பெறலாம்.

அதை விடுத்து விட்டு
1.நாளைக்கு என்ன செய்யப் போகின்றோம்…?
2.இத்தனை ஆசை வைத்திருக்கிறேன்… உடலை விட்டுச் சென்று விட்டால் என்ன ஆவது…? என்று எண்ணினால் மீண்டும் இங்கேதான் சுழல வேண்டி வரும்.

இந்த உயிர் என்றுமே அழிவதில்லை வேகாநிலை பெற்றது இந்த உடல் மாறி மாறி வரும். உணர்வுக்குத் தக்க உயிர் உடலை மாற்றிக் கொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு ரூபத்திலும் தான் எடுக்கும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உடலை தான் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது.

உயிருக்கு வேறு வேலை இல்லை ஆக இந்த ஆறாவது அறிவு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றினால் என்றைக்கும் நிரந்தரமான நிலையாக விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி கிடைக்கும்.

1.ஆறாவது அறிவு ஏழாவது ஒளி என்ற நிலை அடைவதை விஜயதசமி
2.வான் வீதியிலே தோன்றிய உயிர் மனிதரான பின் பத்தாவது நிலை பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் அன்று சூரியனைப் பார்க்கும்படி சொல்லியிருந்தார். அதைத் தான் நானும் சொல்லியிருந்தேன். காரணம் அன்று கதிரியக்கங்கள் ஜாஸ்தியாக வெளிப்படவில்லை.

ஆனால் மனிதன் செயற்கைக்காக வேண்டி அதை அதிகமாகப் பயன்படுத்தி அதனின் கசிவுகள் வெளிப்பட்ட பின்
1.அது எல்லாமே சூரியன் ஈர்ப்புக்குள் சென்றுவிட்டது… அதனால் அது கரும்புகைகளைக் கக்க (SUN SPOTS – SUN FLARES) ஆரம்பித்தது.
2.அப்படிக் கக்கும் நேரத்தில் அதைப் பார்த்தோம் என்றால் நம் உடலில் அதனின் விஷத் தன்மைகள் புகுந்துவிடும்
3.அதனால் தான் யாரும் சூரியனைப் பார்க்கக்கூடாது என்று யாம் பின்னாடி சொன்னது.

அதே சமயத்தில் அன்று ஆரம்பத்தில் 27 நட்சத்திரங்களையும் பார்க்கும்படி சொல்லி இருந்தேன்.
1.முதலில் நான் (ஞானகுரு) நேரடியாக அதை எடுத்துக் கொள்வது… அதற்குப் பின் உங்களுக்குள் அதைப் பாய்ச்சுவது
2.நான் எடுத்து அலைகளாக அனுப்பியதை… நீங்கள் எண்ணி எடுக்கப்படும் பொழுது உங்களுக்கு ஒரு தொந்தரவும் செய்யாது.

ஆனால் விட்டுவிட்டு… நேரடியாக நட்சத்திரங்களின் சக்தியை நாங்கள் எடுக்கிறோம் என்றால் உடம்பெல்லாம் அரிப்பு ஆகிவிடும்… எதிர் நிலையாகிவிடும்.

ஆரம்பத்தில் நட்சத்திரங்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னவுடனே “எம்மை விட்டுவிட்டு…” பவானியில் சில பேர் அதை எடுக்கப்படும் பொழுது அவர்களுக்கு உடல் எல்லாம் அரிப்பு ஆகிவிட்டது.

பவானியிலிருந்து நான் வெளியே சென்றவுடன் நிறையப் பேருக்கு அது உண்டானது. ஏனென்றால் “நாம் சொன்னோம்” என்று சொல்லிக்கொண்டு எடுக்க ஆரம்பிக்கின்றார்கள்.

1.ஆனால் நட்சத்திரங்களின் சக்தியை நான் எடுத்து அதனுடைய வீரியத்தைத் தணித்து
2.உங்களிடம் அதை வாக்காகச் சொல்லிப் பதிவு செய்து… அந்த உணர்வை எடுக்கும்படிதான் சொல்லிக் கொடுக்கின்றோம்.
3.அதாவது என்னிடம் விளைந்ததை நீங்கள் எடுத்தால் அது உங்களைப் பாதிக்காது
4.அந்தச் சக்தியைப் பெருக்க ஏதுவாக இருக்கும்… தொல்லை கொடுக்காது.

இப்படி எல்லா வகைகளிலும் உங்களுக்கு ஒத்தாசையாக அந்த உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தொடர்ந்து இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

நோயினால் அவதிப்படுபவர்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த சமயத்தில் நோய்களை மாற்றிடும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து… முறைப்படி சொல்லுங்கள்… உங்கள் நோய் நீங்கிவிடும்..! என்று இதன் வழி செயல்படுத்தினால் உங்களை அந்த நோய் பாதிக்காது.

சாமி தான் சொல்லிவிட்டார் அல்லவா…! ஈஸ்வரா குருதேவா என்று எண்ணிவிட்டு
1.அடுத்தவர் உடலில் இருக்கக்கூடிய நோயெல்லாம் போக வேண்டும் என்று சொன்னால் அல்லது பிரார்த்தனை செய்தால்
2.அவர்களின் நோய் உங்களுக்கு வந்துவிடும்… தெரியாமல் அதிலே போய் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது
3.அதற்குத்தான் ஆயிரம் தடவை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.

எதைக் கேட்டாலும் அடுத்த கணம் “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்…” என்று யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சக்தி செய்து தூய்மையாக்க வேண்டும்.

அதற்குப் பின் நோயாளியைப் பார்த்து துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி நீ பெறுவாய்…! அந்தச் சக்தியால் உனக்குள் இருக்கக்கூடிய நோயை உன்னால் நீக்க முடியும்…! என்று இப்படித்தான் அவர்களுக்குத் தெளிவாக்க வேண்டும்.

ஆனால்
1.வேதனைப்படுகின்றார் மிகவும் சிரமப்படுகின்றார் ஈஸ்வரா…! என்று நீங்கள் எண்ணி
2.அவர் நோயெல்லாம் குறைய வேண்டும் என்று “ஏங்கினால்” அவர் நோய் உடனடியாக உங்களைத் தாக்கும்.

இப்படிச் செய்யக்கூடாது…!

சில பேர் இது போன்று தெரியாமல் உள்ளே சென்று சிக்கிக் கொள்கின்றார்… அவசரத்தில் இப்படிச் செய்து விடுகின்றனர். இப்படி வரக்கூடாது என்பதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

பாசமாக இருக்கும் நண்பரோ உறவினரோ குழந்தைகளோ திடீரென்று அவர்களுக்கு எதிர்பாராது ஒரு விபத்தாகி விட்டது என்றால் உடனே
1.“நேற்றெல்லாம் நன்றாக இருந்தாரே… நல்ல மனிதருக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று தான் எண்ணுகிறார்கள்.
2.ஆத்ம சுத்தி செய்வதை மறந்து விடுகின்றார்கள்;
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுவதை மறந்து விடுகின்றார்கள்.
4.அவர் அடிபட்டு விட்டாரே என்று எண்ணி அந்த உணர்வைத் தான் “நேரடியாக” எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் அது நமக்குள் வராதபடி முதலில் தடுத்து நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அது படர வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்தில் அடிபட்டவரின் உணர்வு முதலில் நம்மை இயக்கி விடாதபடி இப்படித் தடைப்படுத்தியே ஆக வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அடிபட்டவர் உடல் முழுவதும் படர வேண்டும். வேதனையிலிருந்து அவர் மீண்டு நல்ல உணர்வு பெறக்கூடிய தகுதி பெற வேண்டும். அவருக்குப் பூரண குணம் கிடைக்க வேண்டும் என்று நம்மைத் தூய்மைப்படுத்திய பின் இப்படிச் சொல்ல வேண்டும்.

1.இது சாதாரணமானது இல்லை…
2.உயர்ந்த சக்தியாக அவர் நுகர ஆரம்பிக்கும் பொழுது இது அவருக்குள் இயக்கச் சக்தியாக மாறும்.
3.அடிபட்டதிலிருந்து சீக்கிரமே விடுபடக்கூடிய சக்தியும் அந்த நம்பிக்கையும் அவருக்கு வரும்.

இதை நீங்கள் செய்து பார்க்க வேண்டும்.

கடினமானதாக இருந்தால்… கூட இரண்டு தடவை செய்தால் அவருடைய நோய்களையோ குறைகளையோ வேதனைகளையோ நீக்குவதற்கு நிச்சயம் இது உதவும்.

“உங்களுக்கு இந்தச் சக்தி உண்டு” என்று சொல்கின்றோம்…!

ஆனால் தவறிப் போய் அவருடைய வேதனையையும் துன்பத்தையும் நீங்கள் எண்ணி எடுத்து விடக்கூடாது. ஆத்ம சக்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்; இந்தச் சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி விட்டு
1.இதே மாதிரி நீங்கள் செய்யுங்கள்
2.உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கும்… உடல் நலமாகும் என்று
3.இப்படித்தான் நாம் நோயுற்றவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இது போன்ற ஒரு பழக்கத்திற்குக் கட்டாயம் நாம் வந்தே ஆக வேண்டும்.

ஏனென்றால் இந்த மனித வாழ்க்கையில் பிறரின் கஷ்டங்களை எல்லாம் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டி இருக்கின்றது. அப்போது உடனே சோர்வடைந்து விடுகின்றோம்.

ஆனால் இதை மாற்றி உங்களுக்குள் திருத்தி அந்தச் சோர்வை நீக்க வேண்டும். “அந்தச் சக்தியைத் தான் யாம் இப்போது கொடுக்கின்றோம்…”

நல்லதாகக் கூடிய சக்தியை நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதற்குத் தான் இவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி அதைப் பெறக்கூடிய தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

இந்தப் பழக்கத்தை நீங்கள் சீர்படுத்திக் கொண்டு வருதல் வேண்டும்.


அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்

விஷத்தன்மைகள் பூமியில் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது. சாயப்பட்டறைகள் மூலமாகக் கெமிக்கல்கள் பரவிக் கொண்டுள்ளது. அதே போல கரும்பு ஆலைகளிலும் கரும்புச் சாற்றில் உள்ள அழுக்குகளை நீக்க அதிலும் கெமிக்கலைப் போடுகின்றார்கள். அந்தக் கெமிக்கலை நம் துணியில் போட்டால் துணி வெந்து ஓட்டையாகிவிடும். ஆனால் அந்த கெமிக்கலை உபயோகித்து அதிலே உருவான சர்க்கரையைத் தான் நாம் உட்கொள்கிறோம்.

1.பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது… ருசியாக உள்ளது. ஆனால் விஷத்தன்மைகள் கலந்து வருகின்றது
2.இப்படி விஞ்ஞான அறிவு கொண்டு பொருள்களை தெளிவாக்கினாலும் இந்த நிலை ஆகிறது.

குடி தண்ணீரிலும் இதைச் செயல்படுத்தினார்கள். நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய்களையும் தூய்மைப்படுத்த இது போன்றே செயல்படுத்துகின்றார்கள். எண்ணையில் இருக்கும் கொழுப்புச்சத்தை எடுக்கின்றோம் என்று சொல்கின்றார்கள்.

அதை எடுக்கின்றது… ஆனால் அந்த எண்ணெயை நாம் உபயோகப்படுத்தும் பொழுது இந்தக் கெமிக்கல் நம் உடலுக்குள் இணைந்து விடுகின்றது… அணுக்களிலும் சேர்கின்றது.

இதிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்த்து மேலே சொன்ன தீமையான விளைவுகள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும்.

விஞ்ஞான அறிவால் பல வகைகளிலும் நச்சுத்தன்மைகளைப் பரவ விட்டுள்ளார்கள். அதனால் அஞஞான வாழ்க்கையாகச் சிந்தித்து செயல்படும் திறனை பெரும்பகுதியானவர் இழந்து விட்டோம்.

1.அதனால் திடீரென்று உணர்ச்சிவசப்படக் கூடிய நிலைகளும் தவறு செய்யக்கூடிய உணர்ச்சிகளைத் தூண்டுவதும் சிந்தனை இல்லாது செயல்படுத்தும் நிலைகளும் வருகின்றது.
2.இதைப்போல் வரும் பொழுது தான் போக்குவரத்திலும் விபரீத விபத்துகள் ஏற்படுகின்றது.
3.மனிதனுக்கு மனிதன் என்ற நிலை இல்லாதபடி பல விபரீத செயல்களும் இரக்கம் ஈகையற்ற நிலைகளும்
4.ஒருவரை ஒருவர் தாக்கிக் கொன்றிடும் நிலைகள் வந்து விடுகின்றது.

காரணம் ஒரு பொருளிலே விஷம் பட்டு விடடால் அதை நாம் உட்கொள்ளும் பொழுது நம்முடைய சிந்தனைகள் இழக்கப்படுகின்றது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அதே போலத்தான் நம்மை அறியாமலே விஷத்தன்மைகள் சிறுகச் சிறுக உடலில் உள்ள அணுக்களில் சேர்க்கப்படும் பொழுது தவறு செய்யும் இயல்புகளாக மாறி விடுகின்றது. கடும் நோய்களும் வருகிறது.

இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

1.காலையில் கண் விழித்த உடனே துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலு சேர்த்துக் கொண்டு
2.அந்தச் சக்தி கணவன் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்றும்
3.குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அந்த குழந்தைகளும்
4.இதைப் போன்று எண்ணக் கூடிய ஒரு பழக்கத்திற்கு நாம் கொண்டு வர வேண்டும்.

அந்தக் குழந்தைகளுக்கு ஒரு இரண்டு நாள் மூன்று நாள் சொல்லிப் பதிவாக்கி அவர்களையும் பழக்கிக் கொண்டு வந்தால் சீராகும். அவர்களுக்கும் நல்ல படிப்பு வரும் ஞானங்கள் வரும் என்று சொல்லிப் பழக்கப்படுத்திக் கொண்டு வர வேண்டும்.

அதிகாலை ஒரு ஐந்து ஐந்தரைக்குள் ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
1.நம் உடலை உருவாக்கிய எல்லா அணுகளுக்கும் வலு சேர்த்துப் பழக வேண்டும்.
2.அந்தச் சக்திகளை நாம் அவசியம் பெருக்கிப் பழக வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனின் வாழ்க்கையில் தொழிலில் முன்னேற்றம் அடைந்தால் “அது சந்தர்ப்பம் தான்…”

ஆனால் வளர்ச்சி அடையும் பொழுது நான்கு பேர் வந்து ஏதாவது ஆசையைக் காட்டியோ அல்லது நம் மீது வெறுப்பாகிக் கேவலமாகப் பேசும் நிலையோ வந்தால் அந்தச் சந்தர்ப்பம் நம் நினைவுகள் அனைத்தும் அவன் மீது சென்றுவிடுகிறது.

அந்தச் சந்தர்ப்பம் என்ன செய்கிறது…?
1.அவன் மீது கோபம் வெறுப்பு உண்டாகிறது.
2.நம் தொழிலைச் சீராகப் பார்க்க முடியாது போய் விடுகிறது
3.நல்ல குணங்களையும் பாதுகாக்க முடியாது போய் விடுகிறது.

வேதனை என்ற உணர்வுகளை உடலில் அதிகமாகச் சேர்த்த பின் நல்ல அணுக்கள் மயக்கப்பட்டு விடுகின்றது… சிந்திக்கும் வலிமை இழந்து விடுகின்றது

இந்த உணர்வுகள் அதிகமாகி இருதயம் பலவீனம் ஆகிறது. இருதயம் பலவீனமான பின் அடுத்து எதையுமே வலுவாக எண்ண முடியாது போய் விடுகிறது.

இப்படி வரக்கூடிய நிலைகளை மாற்றுவதற்குத் தான் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றும்படி சொல்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.முதலில் கண்ணின் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்த வேண்டும்.
2.உயிரான ஈசனிடம் வேண்டி… துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதன் வழி ஈர்க்கும் தன்மையாகக் கொண்டு வர வேண்டும்.

பின் கண்ணின் நினைவை உடலில் உள்ள இரத்தங்களிலே செலுத்தி இரத்தம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்.

அதற்குப் பின் சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கொஞ்சம் கொஞ்சமாக உறுப்புகளுக்கு அந்தச் சக்தியை வலு சேர்க்கும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.
2.ஏனென்றால் எல்லா உறுப்புகளுக்கும் உடனடியாக அதை எடுக்கக்கூடிய பவர் கொடுக்கின்றோம்.

உணவாக உட்கொள்ளும் சாப்பாட்டுடன் சேர்த்த கொழுப்புச் சத்து சர்க்கரைச் சத்து உப்புச் சேர்த்து அதை பிரிக்கும் சக்தி பெற்றது நம் கணையங்கள்.

ஆனால் அது சரியாகப் பிரிக்கவில்லை என்றால் கொழுப்புச் சத்து இரத்தத்துடன் கலந்து… இரத்தக் குழாய்கள் எல்லாம் அடைத்து விடுகின்றது.

சர்க்கரையும் உப்பையும் சீராகப் பிரிக்கவில்லை என்றால் உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகிறது… வலுவான அணுக்களாக இருந்தால் அதையெல்லாம் சீராகப் பிரிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணையங்கள் முழுவதும் படர்ந்து அது சீராகப் பிரிக்கும் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

குளத்தில் இருந்து எடுக்கக்கூடிய தண்ணீரை… பெரிய கற்கள் அப்புறம் சிறிய கற்கள் அப்புறம் குறு மணலைப் போட்டு வடிகட்டிச் சுத்தமான நீராகக் கொண்டு வருவது போல் தான் நம் கல்லீரலின் இயக்கமும்.

நாம் சாப்பிடும் ஆகாரம் கணையங்களில் இருந்து வடிகட்டி வரும் ரசத்தைக் கல்லீரல் மண்ணீரல் பிழிந்து வடிகட்டி நல்ல இரத்தமாக மாற்றுகின்றது. அது சீராக வடிகட்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

1.சுவாசித்தது… நுரையீரலில் எது படுகின்றதோ
2.”அந்த மூச்சு” அதற்குத் தகுந்த மாதிரித் தான் வெளியில் இருந்து இழுக்கும்.

வேதனை வெறுப்பு எல்லாம் சுவாசத்தின் வழி வந்தது என்றால் கல்லீரல் மண்ணீரலைத் தாண்டி நுரையீரலுக்கு வந்தால் “படக்..படக்…” என்று அடிக்கும்.

அப்பொழுது மூச்சுத் திணறலாகும்…! காரணம் நாம் “சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம்…”

ஒரு நண்பர் வந்து… என் பையன் சொன்னபடி கேட்காமல் சேட்டை செய்கின்றான்… தொழிலில் என்னை ஏமாற்றுகிறார்கள்… உடம்பு சரியில்லை… என்று அவர்கள் கஷ்டத்தை எல்லாம் சொல்லட்டும்.

அதை எல்லாம் உ..ம் கொடுத்துக் கேளுங்கள். அடுத்த உங்கள் மனதில் என்னென்னவெல்லாம் ஓடுகிறது…? என்று பாருங்கள்.
1.தியானத்திற்கு முன்னாடி இதெல்லாம் தெரியாது
2.தியானத்தில் இப்பொழுது உணர முடியும்… நம்மை எது இயக்குகின்றது…? என்று அறிந்து கொள்ளலாம்.

நண்பர் தன் கஷ்டத்தைச் சொல்கிறார்கள் என்றால் உடனே சுதாரித்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

இந்தப் பழக்கம் அவசியம் நமக்கு வரவேண்டும்.

1.மேலே அழுக்குப் பட்டபின் குளித்துச் சுத்தமாக்குவது போன்று…
2.துணியில் உள்ள அழுக்கைச் சோப்பை போட்டு நீக்குவது போன்று
3.ஆன்மாவில் உள்ள அழுக்கை நாம் தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் வலு ஏற்றி நம்மை அறியாது உட்புகும் அசுத்தங்களை வடிகட்ட வேண்டும்.

நம் எண்ணம் சொல் செயல் தூய்மை பெறும்… வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடைய முடியும்.


நாம் செய்யும் தியானத்தைச் சீர்படுத்ததும் முறை

மனித வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளை நாம் பதிவாக்கி வைத்துள்ளோம். கோபப்பட்டவரை வேதனைப்பட்டவரை நோய்வாய்ப்பட்டவரை இது போன்று எத்தனை வகையான மனிதர்களை நாம் பார்க்கின்றோமோ அவையெல்லாம் நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாறிவிடுகின்றது.

இருந்தாலும் அவரிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அனைத்தும் அலைகளாக நம் புமியிலே பரவுகின்றது.
1.அவ்வாறு பரவி இருப்பது நம் உடலில் அணுக்களாக மாறிவிட்டால் அது உணவுக்காக நம் உடலில் உணர்ச்சிகளை உந்தும்.
2.அப்படி உணர்ச்சிகளை உந்தினால் நம் முன் இருப்பதை அது கவரும்.

அதாவது செடி கொடிகள் தன் சத்தினை எப்படிக் கவர்ந்து கொள்கின்றதோ இதைப் போல நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்ந்தால் நாம் சுவாசிக்க நேர்கின்றது.
1.சுவாசித்தால் அவர்கள் என்னென்ன சங்கடப்பட்டார்களோ அது எந்தெந்த நிலையோ நம்மை அறியாதபடியே சோர்வடையும் நிலைகள் வரும்.
2.அத்தகைய சோர்வடையும் நிலைகள் வந்தால் இரத்த நாளங்களில் கலந்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்.
3.இப்படி நம்மை அறியாமலே சில நேரங்களில் சிந்தனை இல்லாதபடியே இது போன்ற சிந்தனைகள் வரும்… தியானம் செய்யும் பொழுது.

சிலரிடம் அதிகப் பற்றுடன் பழகி இருப்போம். சந்தர்ப்பத்தில் அவர்கள் கஷ்டப்பட்டு இருப்பார்கள். அதை நாம் நுகர்ந்து விட்டால் அந்த அணுக்கள் நமக்குள் விளைந்து விட்டால் நாம் தியானிக்கும் நேரத்திலே நம்மை அறியாமலே அவருடைய எண்ணங்கள் நமக்குள் வரும்.

வியாபாரத்தில் ஏமாற்றி இருந்தால் கொடுக்கல் வாங்கலில் அவருடைய உணர்வுகளை நாம் பதிவு செய்திருப்போம். அப்படிப் பதிவு செய்திருந்தால் நமக்குள் ஏமாற்றம் அடைந்த உணர்வுகள் இருப்பினும் இந்த உணர்வுகளுக்கு எல்லாம் வலு அதிகம்.

தியானத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலும்… இந்த விஷம் கொண்ட உணர்வுகள் இந்த உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் உணவுக்காக உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது “நம் ஆன்மாவில் அதிகமாகச் சேர்கின்றது…”

அதைச் சுவாசித்தோம் என்றால் நம்மை அறியாமலே இயக்கும். நாம் நினைப்பது துருவ மகரிஷி என்று…! ஆனால் அவருடைய உணர்வுகள் தான் அதிகமாக வரும்.
1.அந்த மாதிரி நினைவு வந்தாலும் கண்களை மூடித் தியானித்துக் கொண்டிருக்கிருக்கும் பொழுது உடனடியாக கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவை இணைக்க வேண்டும்.
2.கண்களைத் திறந்து சிறிது நேரம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று அப்படியே கண்களை மூட வேண்டும்.

இப்படி அந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துவிட்டால் மற்றவருடைய உணர்வுகளை இழுப்பது குறையும். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் நாம் தியானிக்கும் போது இத்தகைய நிலை வந்தால் இதைப் போன்று நாம் சமாளித்துப் பழக வேண்டும்.

தீமை விளைவிக்கும் உணர்வுகளுக்கு நாம் நுகர்ந்த உணர்வு ரத்த நாளங்களிலே கலக்கப்படும் பொழுது இது அதிகரித்து… அதாவது
1.நம் உடலில் உள்ள வெறுப்பான உணர்வுகளைச் சுவாசிக்கும் அந்த அணுக்களுக்கு
2.இரத்த நாளங்களில் துருவங்கள் நட்சத்திரத்தின் பேரருள் பேரோளியைக் கலக்கப்படும் பொழுது அந்த அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும்.

நல்ல குணங்களுக்கொ மற்ற நிலைகளுக்கோ பிற உணர்வு நம்மைத் தடைப்படுத்துவது போல நாம் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை கண்ணைத் திறந்து ஏங்கி சிறிது நேரம் உள்ளே செலுத்தினோம் என்றால்… ரத்தங்களிலே கலந்த பின் அந்த அணுக்களின் செயலை இந்த வலுவான நிலைகள் அதைத் தடைப்படுத்தும்.

இப்படி நாம் மாற்றிப் பழக வேண்டும்.

பலருடைய உணர்வுகள் இருக்கும் பொழுது இந்த உணர்வுகளைக் கவர்ந்த பின் அந்த அலைகளை எடுத்து நமக்குள் ஆன்மாவாக ஆனபின் இதுதான் முன்னணியில் வருகின்றது. நாம் தியானிக்கும் நிலையை மாற்றிவிடும்.

நாம் தியானித்துக் கொண்டே இருப்போம். திடீரென்று திசை மாறிச் சென்றுவிடும்.

இதே போலத் தான் நம் ரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தினோம் என்றால் அதனுடைய உணர்வுக்கு உணவு கிடைக்கவில்லை என்கிற பொழுது அது ஒடுங்கிவிடும்.
1.இப்படி நாம் அதை ஒடுக்கி ஒடுக்கி அருள் உணர்வுகளை பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
2.தியானம் செய்யும் பொழுது நாம் பழக வேண்டியது முக்கியமான பயிற்சி இது.
3.தீமை செய்யும் அணுக்கள் அனைத்தும் நல்லதாக மாறத் தொடங்குகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும்… எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை மாற்றுவதற்கு முதலில் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அந்தத் தீமைகளை நாம் தூக்கி எறிந்து விட வேண்டும்.

காரணம்… நாம் (எதையுமே) கண்களிலே பார்க்கின்றோம்… நினைக்கின்றோம்… இழுத்து மூக்கின் வழி சுவாசிக்கப்பட்டு உயிரிலே படுகின்றது… அதனின் உணர்வாக நம்மை இயக்குகிறது.

ஆகவே…
1.அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்கின்றோம்.
2.இழுத்தவுடனே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே இணைகின்றது
3.இணைத்தவுடன் துருவ நட்சத்திரத்தின் சக்தி அங்கே வலுப்பெறுகின்றது.

நாம் சங்கடப்பட்டது வெறுப்புபட்டது அது எல்லாம் ஏற்கனவே உடலுக்குள் பதிவாகி இருந்தாலும்… அதற்கு உணவு கிடைக்காதபடி இங்கே தடையாகிறது.

இப்படித் தான் தீமைகளை நிறுத்திப் பழக வேண்டும். ஏனென்றால் பிறிதொரு தீமை நம்மை இயக்கி விடக்கூடாது… சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நிறுத்த வேண்டும். அடுத்து கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று “இப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட வேண்டும்…”

நம் உடல் உறுப்புகளை இப்படி வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் உடனே எச்சரிக்கை செய்து ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி
2.துருவ நட்சத்திர்த்தின் வலுவை ஏற்றித் தீமை உள்ளே போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளையும் வென்றது அதை வைத்து நாம் தூய்மைப்படுத்துகிறோம். உடல் உறுப்புகள் இரத்தத்திலிருந்து தோல் மண்டலம் வரை இப்படி வலு ஏற்றும் பொழுது “காற்றிலிருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பிரித்து இழுத்து” நமது ஆன்மாவாக மாற்றி விடுகின்றது.

இது பழக்கத்திற்கு வந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்…!
1.சிரமப்பட்டு (அர்த்தம் புரியாத) மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
2.ஆயிரம் தடவை இரண்டாயிரம் தடவை இலட்சம் தடவை என்று சொல்ல வேண்டும்
3.மந்திரத்தை மறந்து விட்டாலோ… தப்பாகச் சொல்லி விட்டாலோ… எல்லாமே போய்விடும் என்ற நிலை இல்லை.

உடனுக்குடன் நம்முடைய நினைவைச் செலுத்தி
1.“எது நல்லதாக வேண்டுமோ அதை எண்ணி” அந்த ரெக்கார்டை (பதிவை)
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

“துருவ நட்சத்திரத்தின் கணக்குகளை” இப்படி கூட்டிக் கொண்டே வர வேண்டும். உடலில் இருக்கும் அணு செல்களிலும் இந்தப் பதிவுகள் கூடிக் கொண்டே வருகின்றது… எல்லா அணுக்களிலும் இந்தச் சக்தி கூடி கூடுகின்றது.

இப்படிக் கூடும் பொழுது உயிரைப் போன்றே உடலில் இருக்கும் ஜீவ அணுக்களை ஒளியாக மாறிக் கொண்டே வருகிறது.

வயலிலே விதைக்கின்றோம் என்றால் முளைத்த பின் அந்தந்தக் காலகட்டத்திற்கு உரத்தையோ மற்ற மருந்துகளையோ இட்டோம் என்றால் நல்ல தரமான மகசூல் கொடுக்கும்.

இது போன்று நம் உடலில் இருக்கக்கூடிய உணர்வுகளுக்கு துருவ நட்சத்திரத்தின் சக்தியை உரமாக… சத்தாக… நாம் ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

இப்போது… சொல்லாக யாம் சொல்லப்படும் பொழுது இது சாதாரணமாகத் தெரியலாம் ஆனால் இந்த உண்மைகளை நான் அனுபவித்து உங்களிடம் சொல்கிறேன்..

சொல்கிறேன் என்றால் என்னிலே அது விளைந்தது… சொல்லும் போது நீங்கள் அதைக் கேட்கின்றீர்கள்… உங்களுக்குள் பதிவாகிறது. நினைவு மீண்டும் அதை இழுக்கும் சக்தியாக வருகின்றது
1.இவ்வளவு தான்… இதில் வேறு சிரமம் ஒன்றுமில்லை
2.பெரிய அதிசயமும் இல்லை.

திட்டியவனைப் பதிவு செய்தால்… அவனை நினைக்கும் போதெல்லாம் குழப்பம் வருகிறது. வியாபாரத்தில் ஒருவன் நம்மை ஏமாற்றி விட்டான் என்றால் உடனே நமக்கு ஆத்திரமும் கோபமும் வருகிறது.

இது போன்று தான்… எல்லாமே அந்தப் பதிவின் தொடர் வைத்துத் தான் நினைவாகி இயங்குகிறது.

ஆகையினால்…
1.மிக மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்… இதை எண்ணி நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தாலே போதுமானது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
1.ஒரு கஷ்டமான நிலைகளைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.உடனே இதைத்தான் நான் தியானிக்க வேண்டும்.

நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இரண்டு பேர் ஒருவருக்கொருவர் கோபத்துடன் சண்டையிடுவதைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… அவர்கள் சண்டையிடும் உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருள் சக்தியை உள்ளே செலுத்தி வலுவாக்க வேண்டும்.

சண்டை போட்டார்கள் அல்லவா… அவர்கள் இருவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் அந்தத் திறன் பெற வேண்டும்; என்று அவருடைய உணர்வுகளை நாம் நமக்குள் மாற்றி விட வேண்டும்.

அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று “நாம் எண்ணுகின்றோம்…” அவர்கள் அப்படி எண்ணினால் அவருக்கும் நல்லதாகும். ஆனால்
1.அவர்களிடம் போய்ப் புத்தி சொன்னால் கேட்பார்களா…? இல்லை
2.இரண்டு பேர் சண்டையிடுகின்றார்கள் என்றாலும் ஒருவரைப் பார்த்து “நீ கொஞ்சம் பொறுத்துப் போ…!” என்று நாம் சொன்னால்
3.நீ அவனுக்குச் சாதகமாகப் பேசுகின்றாய்… எனக்கு நீ உதவியாக இல்லை…! என்று சண்டைக்கு வருவார்கள்
4.இருவரில் யாரிடம் சொன்னாலும் இருவருமே இப்படித்தான் சொல்வார்கள்… சமாதானப்படுத்த முடியுமா…!
5.அவர்கள் உணர்வுக்குத் தக்க நாம் வரவில்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக்கி விடுவார்கள்.

ஆகையினால் அதை நாம் நுகர வேண்டியதில்லை. யாம் சொல்லிக் கொடுத்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அதைச் செய்து… சண்டையிட்ட அந்த இருவருமே மகரிஷிகளின் அருள் சக்தியால் சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்; ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் நமக்குள் அது தீமையைத் தடுக்கும் சக்தியாக மாறுகின்றது.

அடுத்து சாந்தமான பிற்பாடு நாம் என்ன செய்ய வேண்டும்…? அவர்களிடமிருந்து சமைத்த உணர்வு நம்மிடம் இருக்கிறது
1.நீங்கள் இந்த மாதிரிச் செய்தீர்கள் அதனால் தான் உங்களுக்குக் கஷ்டம் வந்தது
2.அதற்குப் பதிலாக மகரிஷிகளின் அருள் சக்திகளை இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள் நன்றாகிவிடும்…! என்று சொல்லலாம்.

அவர்கள் அமைதியாக இருக்கும் போது நாம் சொல்வதைக் கேட்க வைத்து உண்மைகளைச் சொன்னால் அவர்கள் நல்லதை எடுப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றது.

அட என்ன…? நீதானப்பா முதலில் அவனிடம் சண்டை போட்டாய்…! என்று சொல்லக் கூடாது. சந்தர்ப்பத்தினால் உணர்ச்சி வசப்பட்டீர்கள்… சண்டையிட்டுக் கொண்டீர்கள்.. அதனால் அன்பை இப்படிக் கெடுத்துக் கொண்டீர்கள்…! சற்று சிந்தியுங்கள் என்று இந்த ஞானத்தோடு சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வருகின்றது.

ஈர்க்கும் சக்தி அங்கு இல்லை என்றால்…
1.என்னப்பா இப்படி எல்லாம் செய்கின்றாய் என்று புத்திமதி சொல்வது போல் சொன்னால்
2.எல்லாம் தெரிந்த மாதிரி… இவர் பெரிதாகச் சொல்ல வந்து விட்டார் என்பார்கள்.
3.சொன்னாலும் கேட்க மாட்டார்கள்… நமக்கு எதிர்ப்பதமாக வரும்.

ஆகவே அருள் உணர்வுகளை நாம் வளர்த்து அந்தப் பண்போடு சொல்லிப் பழகுதல் வேண்டும். எப்படி…? இருவரும் சண்டை இட்டீர்கள். அதனால் உடலில் நோயாக மாறியது… சிந்திக்கும் தன்மையும் இழக்கிறது. அதனால் இது போன்ற சந்தர்ப்பங்களில் பொறுப்பாக இருந்து இரண்டு பேரும் ஒன்று சேர்த்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இருவருமே பெறுங்கள் உங்கள் உடலில் அதை வளர்த்துக் கொள்ளுங்கள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் அந்த தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இப்படிச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

இது அவர்களுக்குள் ஏற்றுக் கொள்ளும் பருவமாக மாறுகின்றது… கொஞ்சமாவது கேட்பார்கள்… “கேட்டால் தானே உள்ளே செல்லும்…” சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

இப்படிப்பட்ட உணர்வை நாம் சேர்த்துக் கொண்டால் அவர் சண்டையிட்ட உணர்வோ வெறுப்படைந்த உணர்வோ நமக்குள் வருவதில்லை. அவர்களும் ஒன்றுபட்டு வாழும் நிலைக்கு வருகின்றார்கள்… பகைமைகளை அகற்ற முடிகிறது.

இப்படித்தான் நாம் மாற்றிக் கொண்டு வர வேண்டும்… இதைச் செயல்படுத்த வேண்டும்

தியானம் என்பது…
1.அந்த ஞானிகளின் அருள் சக்தியை எடுத்துச் சமைத்து ஞானத்தின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
2.தீமை நமக்குள் வராதபடி எல்லாம் தெளிந்த மனமாக வளர்கின்றது
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.

கோடிக்கரையில் (கடைசி மனித உடல்) இருக்கும் நாம் இதையே செய்து கொண்டு வந்தால் தனுசு கோடி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒளியாக மாறுகின்றோம். இது தான் இராமேஸ்வரத்தின் தத்துவம்

இராமன் என்றால் எண்ணம்… நாம் நுகர்ந்தது எண்ணத்தால் உருவா(க்கு)கின்றது. எதை உருவாக்கினோமோ அதுவே ஈசனாக இயக்குகிறது. அது தான் இராமேஸ்வரம்.
1.எண்ணத்தால் உருவாக்கப்பட்டது இராமலிங்கம்…
2.உயிருடன் ஒன்றி ஒவ்வொருவரும் நாம் ஒளியாக மாற வேண்டும்…!

அருள் பற்று… குடும்பப் பற்று

அருள் உணர்வுகளை நாம் பற்றுடன் பற்ற வேண்டும். அதன் வழி சென்றால் அருள் வழி வாழ முடியும். இருந்தாலும் குடும்பப் பற்றினை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றினைக் குறைக்கப்படும் பொழுது சிந்தனையை இழக்கும்படி ஆகிவிடுகின்றது.

1.என் குழந்தைக்கு இப்படியாக வேண்டும் மற்றவர்களுக்கு இப்படியாக வேண்டும் என்ற உணர்வு வந்து விட்டாலே
2.நமக்குள் பதிந்திருந்த பழைய உணர்வுகள் அனைத்தும் முன்னுக்கு வந்துவிடும்.
3.அது முன்னுக்கு வந்துவிட்டால் அதைக் காப்பது என்பதே மிகவும் சிரமம்.

ஆகவே நாம் ஒவ்வொரு நொடியிலும் ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று “அதை வலுவாக்கித் தெளிந்த நிலை பெற வேண்டும்…” என்ற இந்த உணர்வை அடிக்கடி கூட்டி வந்தால் சரியாக இருக்கும்.

அதற்குக் கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணி வாழ்க்கையில் எது குறையாகத் தென்படுகின்றதோ அது நிறைவேற வேண்டும். குழந்தைக்குத் திருமணம் சீக்கிரம் நடக்க வேண்டும் அது எதிர்காலம் சிறந்த நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆனால் பெண்ணுக்கு வயதாகிவிட்டது… திருமணமாகவில்லையே…! என்ற ஏக்கம் வருகின்றது. ஆனால் அந்த ஏக்கம் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிலையாக இருந்தால் அதில் வேதனை வராது.

சில குடும்பங்களில் வேலையில் இருந்து அவர்கள் பணி ஓய்வு பெற்று இருப்பார்கள்.
1.அந்த வயதான காலகட்டத்தில் சம்பாத்தியம் இல்லாததால் உணர்வுகள் மாறி விஷத்தின் தன்மையாகிப் புவியின் பற்று அதிகரித்து விடுகின்றது.
2.உடலின் பற்று அதிகரித்து அருள் ஞானிகள் பற்று தணிக்கிறது.

ஆனால் ஞானிகள் பற்றினைக் கூட்டினால் இந்த வாழ்க்கையில் வரும் பற்றுகள் எதையும் வெல்ல முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வுகள்… அது ஆர்வமாக வேகமாக இருக்கும் பொழுது நலமாகிறது. ஆனால் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மை கூடி விடுகின்றது ஆனால் இத்தகைய உணர்வுகள் கூடிவிட்டால் அருள் ஞானத்தை இழக்கும் சந்தர்ப்பம் ஆகி விடுகிறது.

ஒரு சிலருக்குத் தாய் கருவில் இருக்கும் பொழுது ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள்
1.ஒருவருக்குத் திருமணம் ஆகவில்லை என்ற இத்தகைய குறைவான உணர்வுகளைக் கேட்டு நுகர்ந்துதிருந்தால்
2.அந்த அதிர்ச்சியின் உணர்வு கருவிலே பதிவாகி விளைந்து விடுகின்றது.
3.இது பூர்வ புண்ணியமாக அமைந்து அதனால் சில தடைகள் வருகின்றது.

ஆனால் இத்தகைய தடைகள் வந்தாலும் நாம் அந்த அருள் உணர்வுகளைப் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும். திருமணம் ஆகி அது செல்லும் குடும்பத்தில் செல்வம் செல்வாக்கு பெற வேண்டும் என்று நாம் இத்தகைய உணர்வைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

மாறாக “வயதாகி விட்டதே…” என்று சோர்வை எடுத்தால் அதனால் வேதனையும் வருகிறது. பாலிலே பாதாமைப் போட்டு விஷத்தைப் போட்டது போன்று சக்தி இழந்து விடுகின்றது.

பக்தி மார்க்கத்தில் வந்த நிலையில் நல்லது நடக்கும் பொழுது மகிழ்ச்சி வருகின்றது. அதிலே சிறிது தடை ஆகிவிட்டால் அந்தக் குறையைத் தாங்கும் நிலை அற்றுப் போய் விடுகின்றது. அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்குத் தான் இந்த தியானமே உங்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்

வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது போன்று
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளான உணர்வுகளை மாற்றிட அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அந்த உணர்வுகளை வலுவாக்கி
2.நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலைகள் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

நம் காரியங்களை அதன் வழி கொண்டு சித்தியாக்க முடியும்.

காற்று மண்டலத்தில் நாம் அனைவரும் பரப்ப வேண்டிய அருள் சக்திகள்

 

இன்றைய உலகில் ஆசையில் செல்கின்றார்கள். எந்த ஆசையை எடுத்துக் கொண்டார்களோ அதன் தன்மையில் தான் செல்கின்றார்கள்.

1.ஆனால் நாம் அருள் ஞானிகள் காட்டிய உணர்வினை… காவியத் தொகுப்பினை மக்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
2.நாம் ஒவ்வொருவரும் அருள் ஞானிகள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணி எடுக்கப்படும் பொழுது அது நமக்குள் வளர்கின்றது.

குறைகளைக் காணும் பொழுது குறை வளர்கின்றது.

அதே போன்று அந்த அருள் உணர்வுகள் எல்லோருக்குள்ளும் வளர வேண்டும் என்றால் துருவ தியானத்தில் நாம் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களையும் அதைக் கேட்க வைக்க வேண்டும்.

1.அந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ளவும்
2.சொல்லாக வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொள்ளவும்
3.கேட்போர் உணர்வுகளில் பதிவாகவும்
4.அதை அவர்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அவர்களை அதை நுகரும்படி செய்ய வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் உருவான அருள் ஞானிகள் உணர்வின் தன்மையை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்.

எம்மைச் சந்திக்க இரண்டு பேர் வந்தாலும் மூன்று பேர் இருந்தாலும் நான் இந்த அருள் உணர்வுகளைச் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

இருவருக்குப் பதிவு செய்தாலும் அவர்களுக்குள் அந்த அருள் உணர்வுகளை வளர்த்து
1.அவர்கள் அடுத்து அதைச் சொல்லால் சொல்லும் பொழுது காற்றில் பெருகி
2.அந்த அருள் சக்திகளை மற்றவர்கள் எடுக்க ஏதுவாக இருக்கும்… அவர்களையும் காக்க உதவும்.

அதற்காக வேண்டித் தான் அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை எனக்குள் இந்த உடல் வாழ்க்கையில் வளர்த்துக் கொண்டே உள்ளேன். எல்லோரும் அந்த அருள் ஞான உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன். இதே வழியினை ஒவ்வொருவரும் செயல்படுத்தும் படி வேண்டிக் கொள்கின்றேன்.

அருள் ஞானத்தை ஒவ்வொருவரும் வளர்த்து வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கி நோய்களைப் போக்கி அந்த அருள் உணர்வுகளை வளர்த்திடும் சந்தர்ப்பமாக அமைக்க வேண்டும்.

ஆகவே
1.அருள் ஞானத்தை நாம் அழியாச் சொத்தாகச் சேமிப்போம்.
2.இருளை வென்று ஒளியினை உருவாக்கும் தன்மையை நாம் அனைவரும் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ கெட்டதைப் பார்க்கிறோம் சங்கடப்பபடுவோரைப் பார்க்கின்றோம்… அது பற்றிச் சொல்வதையும் கேட்கிறோம்.
1.இது எல்லாம் கண்ணில் உள்ள கருமணியில் பட்டுத் தான் உடலுக்குள் போகும்.
2.வேதனைப்பட்ட உணர்வுகள் கருமணிகளிலே பட்டு இழுத்து அதில் உள்ள வயர் (WIRE) எல்லாவற்றுக்கும் அனுப்புகிறது
3.கருமணிகளில் பட்டுத் தான் அந்த வீரியத் தன்மை போகிறது.

வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இது போன்ற உணர்வைக் கேட்டோம் என்றால் கூடக் கொஞ்ச நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… அது எங்கள் கருமணிகளிலே படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இப்படி எண்ணியவுடன் அங்கேயும் ரெக்கார்ட் ஆகின்றது கருமணிகளும் சுத்தம் ஆகின்றது கண்ணிலே ஒரு ஒளி அலைகள் வந்து அது தூய்மைப்படுத்துவதைக் காணலாம்.

ஆனால் தூய்மைப்படுத்தாதபடி வேதனை அதிகமாகச் சேரப்படும் போது சிறுநீர் கழிக்கும் போது எப்படி உறைகின்றதோ (உப்பு) இது போன்று அந்த மேக நீர்கள் கூடப்பட்டுக் கருமணியின் மேல் தோலில் படர்ந்து விடுகின்றது.

மேல் தோலில் இருந்தாலும் பரவாயில்லை…
1.அதற்குள் கருமணிக்குள் ஒரு சிறிய நிலை இருக்கின்றது
2.அதற்குள் அழுக்கு படிந்து விட்டது என்றால் அதை நோண்டிக் கழுவித்தான் இப்பொழுது வைக்கின்றார்கள்.
3.மேல் படலம் வேறு… கருமணி உள்ளே இருப்பது வேறு…! அதை எடுத்துத் தூய்மைப்படுத்திவிட்டு தான் இப்பொழுது வைக்கின்றார்கள்.

அதாவது கண்களை இரவல் கொடுக்கின்றார்கள் என்றால் ஐஸ் பெட்டியில் வைத்து… கருமணி பழுது இல்லாமல் இருந்தால் அதைத்தான் எடுத்து அடுத்தவர்களுக்கு வைக்கின்றார்கள்.

கண்ணை எடுத்து அப்படியே பொருத்துவதில்லை. சரியாக இருந்தால் கருமணியைத் தான் எடுத்துப் பொருத்துகின்றார்கள் (பேங்கில் இருந்து).

காரணம்… கண்ணின் கருமணியில் விஷத்தின் தன்மை அதிகமாக அங்கே தோய்ந்து விட்டால் அது எதுவும் இழுக்க முடியாதபடி… கிரகிக்க முடியாதபடி… மக்காகி விடுகின்றது…! பார்வை குறைந்து விடுகின்றது… திருத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.

அப்பேர்ப்பட்ட கண்களுக்கு இந்த கருமணிகளைப் பொருத்தி பார்வை உண்டாக்குகின்றனர்… “அது தனித்தன்மை வாய்ந்தது…”

காரணம் புழுவாக இருக்கும் போது தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து கண்கள் உருவாகி
1.அதற்குப் பின் ஒவ்வொன்றாகக் கவர்ந்து கவர்ந்து வந்து
2.மனிதனாகும்போது இந்தக் கண்ணின் கருமணிகளிலே வலுவான நிலை வருகிறது.

மனிதர்களால் இருட்டிலே மற்ற பொருளைக் காண முடிவதில்லை. ஆனால் மிருகங்களுக்கோ விஷம் அதிகம்… அதிலே எக்கோ உருவாகி இருளிலே பார்க்கும் சக்தி பெற்றது. காரணம்…
1.ஆதியிலே விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி ஒளியாக மாறியது
2.அதே மாதிரி இதில் உள்ள விஷமும் எதிரிலே மற்றதுடன் மோதிய பின் வெளிச்சம் ஆகின்றது.
3.மிருகங்களுக்கு இரவிலே கண் பார்வை தெளிகாகத் தெரிகிறது.

ஆனால் இன்று விஞ்ஞான அறிவு கொண்டு இரவிலே படம் எடுப்பதற்காக “கேமராக்களில் மெர்க்குரியை வைத்த பின் இதற்குள் வெளிச்சமாகி அந்தப் படத்தை எடுக்கின்றது…”

விஞ்ஞானிகள் செய்வது எனக்கென்ன தெரியும்…? குருநாதர் அதையெல்லாம் காண்பிக்கின்றார். இருந்தாலும் விஞ்ஞான அறிவிலே மிகவும் வளர்ச்சியானதை நான் (ஞானகுரு) அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.

ஏனென்றால் விஷக் கதிரியக்கங்கள் அது மிகவும் கடினமானது..! அதிலே ஆபத்துகள் வருவதை “எப்படி…?” என்கிற வகையில் கேட்டுத் தெரிந்து ஆபத்தை நீக்குவதற்ண்டான வழியை மட்டும் செய்கிறேன்.

குருநாதர் இட்ட கட்டளைப்படி ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து; ஒவ்வொரு உடலையும் கோயிலாக மதித்து; மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வங்களாக மதித்து
1.எத்தனை கோடி மக்கள் இதிலே தெளிந்து திருந்தி வாழ்கின்றார்களோ
2.அவர்களுக்கெல்லாம் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று ஈசனுக்குச் சேவை செய்கிறேன்.

இராமலிங்க அடிகள் சொன்னது போன்று “அருட்பெருஞ்ஜோதி நீ தனிப்பெரும் கருணை…” எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதையெல்லாம் உயிர் நமக்கு அறிவிக்கின்றது.

கோபப்படுவனை உற்றுப் பார்த்தால் நம்மையும் கோபப்படச் செய்கின்றது. தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்தால் அந்தத் தவறை நமக்குள் தெரியப்படுத்துகிறது.
1.நான் தீயதைப் பார்க்கக் கூடாது… தீயதை நுகரக்கூடாது
2.தீய செயல்களுக்குப் போகக்கூடாது… அதைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பே வரக்கூடாது
3.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! என்று இராமலிங்க அடிகள் பாடுகிறார்.

அதாவது கூர்மையாக உணர்வின் தன்மை பிளந்து… எனக்குள் அறிவென்ற உணர்வை ஊட்டுகின்றாய்…! என்று அவருடைய பாடலுக்குள் மூலக்கூறுகள் எத்தனையோ உண்டு. சொல்லுக்குள் எத்தனையோ அர்த்தங்கள் உண்டு.

குருநாதர் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்து என்னைத் தெளிவாக்கினார். ஒரு பைத்தியக்காரன் போலத் தான் இருந்தார். ஆனால் பேருண்மைகளை எமக்குத் தெளிவாக்கினார்

அதைத்தான் உங்களிடம் இப்பொழுது யாம் சொல்லிக் கொண்டு வருவது…!

உடல் உபாதைகளை அகற்ற உங்களுக்கெல்லாம் சில நிலைகளை உணர்த்துகின்றேன்

 

1.வெள்ளாடு நஞ்சினை அடக்கிடும் சக்தி பெற்றது.
2.விஷத்தைத் தன் உடலாக்கி நல்ல நிலையை அது வெளிப்படுத்துகின்றது.

அதன் புழுக்கையை எடுத்து நன்றாகக் காய வைத்து ரொம்பக் கொதிகலனாகாதபடி சிறு வெப்பத்தின் நிலைகள் கொடுத்து அந்த ஆவிகள் வெளிவரும் பொழுது அதை நுகர்ந்து பாருங்கள். அதைச் சுவாசித்து உடலுக்குள் அந்த மணம் செல்லும் பொழுது மருந்து சாப்பிடுவது போன்று விஷத்தை ஒடுக்கும் வல்லமை பெறுகின்றது.

டி.பி. ஆனாலும் கேன்சர் ஆனாலும் கடும் நோயாக இருந்தாலும் இருதய வாயில்களில் அடைப்பானாலும் சிறிது நேரம் அதிகமாகச் சுவாசித்துப் பழகுங்கள். இரத்த நாளங்களில் இது கலக்கும்.

அதனுடன் சேர்த்து உங்கள் உயிரான ஈசனிடம் ஈஸ்வரா என்று வேண்டி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் ரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்.
3.எங்கள் உடலுக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் அகன்று அந்த அருள் சக்திகள் வளர வேண்டும்.
4.எங்களை அறியாமல் இயக்கும் இந்த உடல் உபாதைகள் நீங்க வேண்டும் என்று எண்ணிச் சுவாசியுங்கள்.

ஆஸ்மா போன்ற நோய்கள் எல்லாம் பரம்பரையாக வருவது. சர்க்கரைச் சத்தும் இது போன்று பரம்பரையாக வந்து கொண்டிருக்கின்றது.. பிறந்த குழந்தைக்கும் சர்க்கரைச் சத்து இருக்கிறது என்று சொல்கின்றார்கள்.

நான்கு வயது மூன்று வயது குழந்தைகளுக்குக் கூட இன்சுலின் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் தாய் வழியில் பரம்பரையாக. வருவதனால். காசு பண வசதி இருக்கும் வரை போடுகின்றோம். காசு இல்லை என்றால் விட்டு விடுகின்றோம்.

அதற்குப்பின் இந்த மாதிரி ஆகிவிட்டதே என்று இறந்து விடுகின்றார்கள். இதே உணர்வை மீண்டும் எண்ணி எடுக்கப்படும் பொழுது அடுத்தவர் உடலிலும் இப்படி வளர்ந்து கொண்டே இருக்கின்றது. இதைக் குறைக்கும் வழி இல்லை.

கோவிலுக்குச் சென்றேன் சாங்கியங்களைச் செய்தேன். பாவத்தை போக்கக் காசைக் கொடுத்துவிட்டு செய்யும் நிலைகள் தான் இருக்கின்றது. இது எல்லாம் நம் வளர்ச்சிக்கு உகந்ததல்ல.

வளர்ச்சி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

மற்ற உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுவானதை நுகர்ந்து நுகர்ந்து… அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அதனின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டதோ
1.அந்த உணர்ச்சிகள் வளர்ச்சியான பின் அந்த வலுவான உடலில் அது புகுந்து அந்த ரூபமாக மாறுபட்டு எப்படி வருகின்றதோ
2.இதே போல் மனிதனின் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற ஞானிகள் அருள் உணர்வுகளை எடுத்து நாம் வளர்த்துக் கொண்டால்
3.இதன் வழி கொண்டு அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் சென்று உணர்வை ஒளியாக மாற்றிவிட்டு பத்தாவது நிலையான முழுமை அடைகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உடலுக்கு நம் கண் ஆண்டென்னாவாக இருக்கிறது எப்படி…?

ஒருவர் ஒன்றைச் சொல்லும் பொழுது நாம் அவரை உற்று நோக்குகிறோம்… அவரைப் படமாக்குகின்றோம்… பதிவாக்குகின்றோம்.

அதே சமயம் அவர் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து இழுக்கின்றது. சுவாசித்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகிறது.

அது எங்கே…? எப்படிப் பதிவாகின்றது…?

1.உடலில் இருப்பது – காந்தம் “எலும்பு”
2.நாம் எண்ணிய சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் வடித்து எதையும் கிரகிக்கக் கூடிய சக்தியாக
3.”ஊழ்வினை” – நம் எலும்புக்குள் ஊனாக இருக்கிறது… உடல் அனைத்திலுமே இந்த ஊன் இருக்கும்.

காந்தம்… உடலில் இப்படி இருக்கும் போது “எதையாவது நாம் உற்றுப் பார்க்கிறோம் என்றால்… அந்த உணர்வை எடுத்து ரெக்கார்ட் செய்து விடுகின்றது….!”
1.மற்றவர்கள் சொல்வது போன்று மூளையில் பதிவாக்குவதில்லை
2.உடலில் தான் பதிவாக்குகின்றது…!

ஒரு மைக்கை வைத்து நாம் பேசுகிறோம் என்றால் ஒரு டேப் (TAPE) அதைப் பதிவாக்குகிறது. அந்த நாடாவிலே தான் அது பதிவாகின்றது.

மைக்கில் பேசுகிறோம்… இருந்தாலும் அதற்கு முன்னாடி ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய வயர் வழியாகப் பிரித்து (AMPLIFIER)… ஒலி பெருக்கிக்குக் கொண்டு செல்கின்றது. அப்பொழுது பேச்சை நாம் கேட்க முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் என்னைத் திட்டுகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால்… “உடனே” நான் உங்களைக் கூர்ந்து கவனிக்கின்றேன்.

அப்பொழுது உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் அந்த எண்ணங்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ருக்மணி… உங்களுடைய உருவத்தை எனக்குள் படமாக்குகின்றது.

உங்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ண அலைகளைச் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொள்கின்றது. அப்பொழுது பார்க்கப்படும் பொழுது எதைக் கண் படம் எடுத்ததோ அதை இழுக்கப்படும் போது சத்தியபாமா…! என்னைத் திட்டுகின்றீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.

இப்படிப் படம் எடுக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய செல்கள் அதைப் பதிவாக்குகின்றது. அதாவது ஒரு நாடாவிலே பதிவாக்குவது போல்
1.ஊழ்வினை என்று உடலில் உள்ள எலும்புக்குள் பதிவாக்கி விடுகிறது.
2.இப்படி ஆயிரக்கணக்கானவரை நாம் பார்த்துப் பதிவாக்குகின்றோம்.

இதிலே ஒருவர் திட்டுகிறார் என்றால் கூர்மையாக அதை உற்று நோக்கிய பின் “இரு நான் பார்க்கிறேன்…!” என்றால் அதை மறக்க முடியாது.

ஆனால் சாதாரணமாக சந்தர்ப்பத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது “நாளைக்கு இந்த இடத்திற்கு வாருங்கள்… இன்னதைத் தருகிறேன்…” என்று சொன்னால்
1.அது நமக்குத் தேவைப்பட்ட முக்கியமான பொருளாக இருந்தால்
2.”அவரிடம் போய் வாங்க வேண்டும்” என்ற எண்ணம் இருக்கும்.

அப்படி இல்லாது இருந்தால்… நாளைக்குப் பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னாலும் அது நமக்குள் சரியாகப் பதிவாகாது… நினைவும் சரியாக வராது. இரண்டு நாட்கள் கழித்து “நான் வரச் சொன்னேன்… வரவில்லையே…” என்று அவர்கள் கேட்பார்கள்.

ஆனால் இந்தப் பக்கம் வந்தால் உன்னை உதைத்து விடுவேன்…! என்று சொன்னால்
1.அது “சுருக்…” என்று பட்டு விடுகின்றது… ஆழமாகவும் பதிவாகி விடுகிறது
2.இப்படிப் பதிவான பிற்பாடு அவரை நினைத்தவுடனேயே அந்த ஆத்திரம் வருகிறது

இந்த இடத்திற்கு வா பார்க்கலாம்… என்று சொன்ன பிற்பாடு
1.அங்கே போன பின் உணர்ச்சி வேகம் திக்..திக்.. என்று அடிக்கும்.
2.ஆனால் போக்கிரியாக இருக்கிறான் என்றால் நம் மனது பட..பட..பட.. என்று அடிக்கும்.

போக்கிரி இல்லாதபடி நம்மைப் போன்று சமமானவர்களாக இருந்தால் அவர் பேசிய பேச்சுக்கு (அவரின் உணர்வு தாக்கியவுடன்) நம்முடைய வலு கொண்டு “என்ன செய்வான் அவன் பார்க்கலாம்…!” என்ற நினைவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்… மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

1.அவர்களை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நினைத்த உடனே அதைக் குவிக்கும்
2.டிவி.க்களிலே படம் எப்படித் தெரிகின்றதோ அதே மாதிரி அந்த நினைவலைகளை இழுத்து உருவமாகக் காட்டும்… உடனே அது தெரியும்
3.பரவலாக இருக்கக்கூடிய அலைகளை இழுத்துக் கண்ணுக்கு முன்னாடி புலனறிவுக்குள் “அதைக் காட்டிக் கொண்டே இருக்கும்…”

அதே உணர்வின் செயல் உயிருக்குள் பட்டு அதனுடன் தொடர் கொண்ட சிறு மூளைக்குள் சென்றவுடன்
1.ட்ரான்சாக்ஷன் ஆகி… எந்த உணர்வோ… நமக்குள் பதிவானது அந்த செல்களில் எடுத்து… அது இயங்க ஆரம்பிக்கும்.
2.அதே அலைகளை எடுத்து எடுத்து… நாம் பேசும் பொழுது தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

நாம் சுவாசத்தின் வழி எடுக்கக்கூடிய உணர்வுகள் உயிரிலே பட்டு
1.எடுக்கக்கூடிய காற்றை… காந்தத்தைப் பிரித்து… உணர்வின் சத்தைப் பிரித்து
2.அந்த அலைகளை ட்ரான்சாக்சன் செய்து சிறுமூளை உடலுக்குள் உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை உமிழ் நீராக மாற்றி விடுகின்றது… சாப்பிட்ட ஆகாரத்துடன் அது கலந்து விடுகிறது.
1.நம் கண்ணுக்கு “நாம் எண்ணுவது தெரிவதில்லை…!”
2.நினைவுகள் எடுக்கும் பொழுது அது உமிழ் நீராக அது மாறுகின்றது.

எப்படி…?

வெயில் காலத்தில் மாங்காயையும் உப்பையும் தொட்டுச் சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்தப் புளிப்பு அவர்களுக்கு மிகவும் ரசிப்பாக இருக்கின்றது. மாங்காய் புளிப்பு தான்… ஆனாலும் அதை ரசிக்கின்றார்கள்.

அதைப் பற்றிச் சொன்னாலும்… மாங்காயை இப்பொழுது நீங்கள் பார்க்கவில்லை… ஆனால் உமிழ் நீர் உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…?

மாங்காய் என்று சொன்னவுடனே கப..கப.. என்று உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…! அந்தப் புளிப்பின் நிலைகள் கொண்டு உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… நினைவலைகளைத் தூண்டுகின்றது.

மாங்காயைப் பார்க்கவில்லை ஆனால் அந்த சுவையின் தன்மை கொண்டு உமிழ் நீரைக் குவிக்கின்றது.

இதற்கு முன்னாடி உமிழ் நீர் ஊறவில்லை..! ஆனால் சொன்னவுடனே எப்படி உமிழ் நீர் ஊறுகின்றதோ இதே மாதிரித் தான் எரிச்சலாக ஒருவர் பேசுகிறார் என்றால் அதைப் பார்த்து நுகர்ந்ததும் அதே உணர்வு நமக்குள் வருகிறது. சொல்கிறது அர்த்தமாகிறதல்லவா…!

எரிச்சலான உணர்வு கொண்டு பேசுகிறார்… நாம் உற்றுப் பார்க்கின்றோம் அந்த எரிச்சலான உணர்வு நமக்குள் வருகின்றது
1.”சுழி முனை” என்பதற்கு விளக்கம் சொல்கின்றேன்
2.சுவாசித்த உடனே அதை ட்ரான்சாக்ஷன் செய்கின்றது
3.கண்ணினுடைய நினைவுகள் வரப்படும் பொழுது “மேக்னெட்… அந்த சுவிட்சைக் கிளைத்து விடுகின்றது…”
4.நம் உடல் மொத்தமாக அதை இழுக்க ஆரம்பிக்கும்
5.எந்த குணத்தி(ன்)ல் சுவிட்சைப் போடுகின்றமோ அதை இழுக்கின்றது

ரேடியோ டிவி பெட்டிக்குள் பல ஸ்டேஷன்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசயைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலையைக் காற்றிலிருந்து பிரித்து இங்கே எடுத்துக் கொண்டு வருகிறது.

இதே மாதிரி நம் உடலில் ஆயிரக்கணக்கான அலைவரிசை உண்டு. எந்த அலையை இழுத்துப் பேசுகிறோமோ… அந்த அலைவரிசை “தன்னாலே பேசும்…”

எண்ணும்போது அந்த அலைகளை எடுத்து நம்மால் உணர முடிகின்றது… நுகர முடிகின்றது… செயல்படுத்த முடிகின்றது.
1.அந்த உணர்வின் அலைகளைச் சுழி முனை சுழற்றி
2.சிறு மூளை ட்ரான்சாக்ஷன் செய்து பிரித்து அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சுற்ற வைக்கின்றது.

அப்போது அதே உணர்வு தான் நமக்குள் வேலை செய்யும்…!

எனது வேலை ஞான வித்தை உங்களுக்குள் வளர்ப்பது தான் 

மீனுக்கு இரையைப் போடுகின்றோம். அது வந்து சாப்பிடுகின்றது. உடனே தூக்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொள்கின்றோம்.

இதே மாதிரித் தான் உங்களுக்குள் இருக்கக்கூடிய ஆசையின் உணர்வுகளுக்கு அந்த இரைகளைப் போட வேண்டும் என்று வருகின்றேன்.
1.தொழிலில் லாபம் வேண்டும் என்று வருகிறீர்கள்.
2.அப்படி வந்த பின் அந்த வழிகளில் எடுத்து அந்த அருள் ஞான வித்தை உள்ளுக்குள் செலுத்தி விடுகின்றேன்.
3.அந்த அருள் வழியை அடுத்து நீங்கள் பின்பற்றினால் இந்த ஆசையின் நிலைகள் எதுவோ
4.அடுத்து நீங்கள் தேடாமலே செல்வங்கள் தேடி வரும். தேடாமலே உங்களுக்குள் மகிழ்ச்சி வரும்.

அந்த மகிழ்ச்சி என்று உருவாக்கப்படும் பொழுது அந்தச் செல்வம் வந்தாலும் தாராளமாக அதைச் செலவழிக்க வேண்டி வரும்.

செல்வம் இருந்தாலும் பொதுவாக அதைப் பாதுகாக்கும் ஞானம் இருக்காது. சிக்கனம் செய்வோம்… சாப்பிடாமல் கூட செய்வோம்… ஒருவரை வெறுத்துப் பேசுவோம்… சண்டைக்குப் போவோம். அதற்குச் செலவழிப்போம்.

அதே சமயத்தில் அன்புடன் இருப்போம் பரிவுடன் இருப்போம்… இருந்தாலும் அதைத் துடைக்க முடிவதில்லை.

1.வேதனைப்பட்டவரை நுகர்ந்தால் நோயாகி விடுகின்றது.
2.இந்தப் பணத்தைச் செலவழித்தாலும் அது போய் விடுகின்றது.
3.இது எல்லாம் போன பிற்பாடு அந்த நோயை நீக்க முடியுமா என்றால் முடியாது.

காசை வைத்து ஆன்மாவை விலைக்கு வாங்க முடியாது…!

அருள் ஞானிகள் உணர்வை அழியாச் செல்வமாக துருவ நட்சத்திரம் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வினை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும். வாழ்க்கையே தியானம் ஆக்க வேண்டும்.

உட்கார்ந்து தியானம் செய்து கொண்டேயிருந்தால் சக்தி கிடைக்கும் என்றால்… அடுத்து சாப்பாட்டுக்கு எங்கே செல்வது…? உட்கார்ந்து கொண்டே இருந்தபின் சாப்பாடு இல்லை என்றால்… அதை யாரும் கொடுக்கவில்லை என்றால் அந்த நேரத்தில் நாம் ஏங்கிக் கொண்டிருக்க வேண்டி வரும்.

ஆகவே
1.நமக்குள் அந்த மன வலு கொண்டு தொழிலையும் பார்க்க வேண்டும் உடலையும் காக்க வேண்டும் அதற்குப் பொருளும் வேண்டும்.
2.அதற்குத் தான் ஞாபகப்படுத்துவதற்கு உங்களுக்குப் பிரசாதம் கொடுக்கும் பொழுது அதில் காசைச் சேர்த்துக் கொடுக்கின்றோம்.
3.அந்தச் செல்வம் உங்களுக்கு வரும்… மகிழ்ச்சி கிடைக்கும்.

அதையாவது எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் செல்வம் தன்னாலே வரும் என்று சொல்கிறோம்.

ஆனால் அதை விடுத்துவிட்டு… நான் தொழில் செய்கின்றேன். கஷ்டம் என்ன விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது. வாங்கியவன் பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறான். அதனால் நான் வாங்கியவனுக்குக் கொடுக்க முடியவில்லை என்று இந்த ராகத்தைத் தான் பாடுகின்றோம்.

ஆகவே… அந்த அருள் ஞானத்தை வளர்க்க வேண்டும். அந்த அருளொளியைக் கூட்டி வளர்த்தால் காலத்தால் அந்த மகிழ்ச்சியை ஊட்டும். அருள் செல்வம் வளரும்.

அருள் செல்வம் வளர வளர யார் நம்முடன் பகைமையாக இருப்பினும் இந்த உணர்வுகள் சேரச் சேர உண்மைகளை அங்கே உணர்த்தும். தவறு என்ற உணர்வுகளை அவர் உணர்வார்.

உணரவில்லை என்றாலும் இந்த உணர்வின் தன்மை அவர் வலுவை இழக்கச் செய்யும். அவர் செய்யும் தவறுகளால் மற்ற இடங்களில் சிக்க வைக்கும்.

ஆக…
1.நம்மைப் பாதிக்கும் நிலை வராது.
2.நம்மைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது நல்லதைக் காக்கும் நிலை உருபெறுகின்றது

இதையெல்லாம் நாம் வழிப்படுத்துதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நமக்கு முன் பரவிக் கிடப்பது பரமாத்மா.
2.எண்ணி எடுப்பது ஆத்மா.
3.இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் விளைந்தால் ஜீவாத்மா.

விளைந்த உணர்வுகள் எதன் எதனுடன் இணைத்து எதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வினுடைய ஆற்றலின் நிலைகள்
1.உயிருடன் சேர்த்து நினைவுடன் சேர்ந்து இயக்கக்கூடிய ஆற்றலாக
2.ஒரே இயக்கமாக வருவது நான்காவது – காயத்ரி.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அது சிருஷ்டிக்கப்படுகின்றது. ஆனால் உயிரின் ஓட்டத்திற்குள் தான் இது நிலைத்திருக்கின்றது என்ற நிலையை காயத்ரி – சூரியன் என்று சொல்வது. சூரியன் என்றால் நம் உடலுக்கு “உயிர்” சூரியனாகின்றது.

குருக்ஷேத்திரம் என்பது நம் உடலுக்குண்டான நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் இந்தக் குருவான (உயிர்) நிலைகள் கொண்டு அது வளர்த்துக் கொண்ட நிலைகள் தான்.

நாம் எதை எடுக்கின்றோமோ அந்த நிலைக்கொப்ப ஞானத்தை உருவாக்கி அது உபதேசிக்கும் உணர்வின் நிலைகளில் தான் குருவுடன் அணுகி
1.நமக்கு எப்பொழுது துன்பம் வருகின்றதோ
2.அவனை நினைக்கும் பொழுது
3.அந்த ஆற்றல்மிக்க சக்திகள் நமக்கு உறு துணை செய்கின்றது.
4.இதைத் தான் அன்று கீதா உபதேசத்தின் நிலைகள் கொண்டு கண்ணன் சொன்னது.

நாம் கண்ணிலே பார்க்கப்படும் பொழுது “பிறர் செய்யும் தவறின் தன்மை தெரிகின்றது…, உணர முடிகின்றது”, அது உணர்த்திய நிலைகள் கொண்டு தவறு செய்தவரை எண்ணியே என்னை இயக்குகின்றது.

என்னுடைய நல்லதைக் காக்க வேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகள் என் உடலுக்குள் சென்று தீய விளைவுகள் உருவாக்காதபடி அதைத் தடைப்படுத்த வேண்டும்.

அதைத் தடைப்படுத்தும் நிலைகளுக்குத்தான் கீதா உபதேசம் காட்டப்பட்டது.

1.”ஒ…ம்” என்ற உணர்வின் உணர்ச்சி “ஒங்கார” .நாதம் கொண்டு வானை ஏகுகின்றான்.
2.இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய பல எண்ண அலைகளை அடக்கி
3.அந்த “ஓ…ம்” என்ற நாதத்தை உயிருடன் சுருதியை ஏற்றி இந்த உணர்வை
4.வலு கொண்டு சுவாசிக்க (இழுக்க) வேண்டும்.

ஏனென்றால் கண்ணன் (கண்களால்) இங்கே தவறு செய்பவர்களைப் பார்க்கும் பொழுது இந்த நிலை ஆகின்றது.

இந்த உடலுக்குக் குருவான உணர்வின் தன்மை கொண்டு அங்கே விண்ணை நோக்கி ஏகி “ஓ…ம்” என்ற ஓங்கார உணர்ச்சியைச் செலுத்தி மனித உடலுக்குள்ளிருந்து வரும் சிற்றலைகளை அடக்கிடல் வேண்டும்.

பின் இந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி மெய் உணர்வை ஊட்டிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு
1.எங்கே எண்ணித் தாக்க வேண்டும் (எனக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும்) என்று எண்ணினார்களோ
2.அந்த எண்ணத்தை “அங்கேயே” நிறுத்த வேண்டும்.
3.அம்பைக் கொண்டு அல்ல.
4.புறத்தால் காட்டிய இந்த அம்பை எய்து அந்த உடலைத் தவறு செய்பவர்களை வீழ்த்துவது அல்ல.

உடலை வீழ்த்த வேண்டும் என்ற அந்த உடலுக்குள் நின்று அந்தத் தீமையான உணர்வை இயக்கியதை அந்த ஆற்றல்களை அங்கே நிறுத்தி “அவனை நல்லவனாக்க வேண்டும்”.

(மகாபாரதத்தில்) குருவே எதிரியின் பக்கம் இருந்து அந்த விஷத்தின் தன்மை சிக்கியபின் குருவாகக் காட்டப்பட்ட அந்த மெய் உணர்வின் சக்திகளை எப்படி மீட்டுவது?

குருவிற்குள் தன்னை அறியாது வந்தாலும் அந்தக் குருவின் நிலையை அவரை அறியாது ஏனென்றால் அந்தப் பாசத்தின் வலைகளில் சிக்கும் பொழுது
1.குரு என்ற நிலையில் மரியாதை
2.இங்கே சகோதரர் என்ற மரியாதை
3.ஆனால் அவர்கள் செய்வதோ தவறு.

எனக்குள் இருக்கக்கூடிய வலிமை கொண்டு “அவரை வீழ்த்தி விட்டால்…” நான் யாருக்காக வேண்டி வாழ்கிறேன் என்ற இந்த உணர்வின் சோகங்கள் இங்கே தூண்டும் பொழுது அப்பொழுது தீமையை வளரவிடும் நிலையாகி “நல்லதைக் காக்கும் திறன் இழக்கின்றது”.

மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இந்தப் பாசத்தின் நிலைகள் எல்லை கடந்து செல்லும் பொழுது நம்மால் அதை மீட்டும் நிலை அது பலம் இழந்து நம்மையே வீழ்த்தி விடுகின்றது.

இத்தகைய நிலையைத்தான் அர்ச்சுனனுக்கு (அர்ச்சுனன் என்பது சகல வலிமையும் கொண்ட உணர்வின் நிலைகள்) தன் உயிரான நிலைகள் கீதா உபதேசத்தின் தன்மை உபதேசிக்கும் பொழுது
1.நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் வருகின்றாய்.
2.எதை நினைத்தாலும் அந்தக் கண்ணின் வழி கொண்டு தான் அறிய முடியும்.
3.நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலிலே விளைகின்றது.
4.நீ எதை நினைக்கின்றாயோ அதனின் நிலைகள் யார் எதைச் செய்தாலும் என்னிடமே நீ வந்து சேர்வாய்.
5.என் நிலையையே நீ அறிவாய் என்று
6.இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு காட்டப்பட்டது.

ஆனால் கண்ணின் நினைவுகள் என்னாகின்றது? கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்கிறபோது அவர் அறியாத நிலைகள் அங்கே வருகின்றது.

அவர் எடுக்கும் உணர்ச்சிகள் இந்த உடலை ஆட்டிப்படைக்காதபடி இந்தக் கண்ணின் நிலையை அவருடன் ஒன்றி கண்ணா…! என்று நாம் எண்ணும் பொழுது
1.இந்தக் கண்ணின் நிலைகள் உயிருடன் எண்ணி
2.நினைவை நாம் இங்கே புருவ மத்தியில் செலுத்தி
3.நமக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் குருவான – உயிருடன் அங்கே ஏங்குவது.

அதைத் தான் குருக்ஷேத்திரப்போர் என்பது.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைப்பது என்றால் அதனின் உப்பொருள் என்ன…?

 

கூட்டுத் தியானங்களில் அருளுணர்வைப் பெற்று அதன் வழியில் சார்புடாயோர் நிலைகள் கொண்டு நாம் முன்னோர்களை விண் செலுத்துகின்றோம்.

ஏனென்றால் இதற்கு முன் நம்மிடம் இந்தப் பழக்கங்கள் இல்லாததால் இப்போது நம் குரு காட்டிய அருள் வழியில் அந்தந்தக் குடும்பத்தார் உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை காலை துருவ தியான நேரங்களில் அந்த வலுவை ஏற்றுக் கொண்டு எளிதில் விண்ணுக்கு அனுப்ப முடியும்.

உடல் பெறும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த பின் இந்த உணர்வுகள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது.
1.காரணம் உடல் பெறும் உணர்வுகளைSAP அவர்கள் கரைத்தவர்கள்.
2.அங்கே கரைத்து வெளிவருவது என்றால் அடுத்து காலை சூரிய உதயம் வருகின்றது
3.அடுத்து வரப்படும் பொழுது இந்த உடலில் இருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை விஷத்தை அது கவர்ந்து செல்கின்றது
4.ஏனென்றால் அது பிரித்தது

உதாரணமாக கருணைக்கிழங்கை நாம் வேக வைக்கின்றோம். இந்த விஷத்தின் தன்மை பிரிந்து சென்ற பின் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இயற்கையில் விளைந்த உணர்வு தான்.

ஆனால் நாம் வேகவைத்து நீக்கினாலும் எதன் கலவையுடன் கலந்து இந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றோமோ இந்த உணர்வலைகள் வெளிப்படுத்தி நாம் அதை உணவாக உட்கொண்டால் அந்த உணர்வின் தன்மை எடுத்து வைத்திருப்பதை உணவின் அணுக்கள் ஆக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து அதை நமக்குள் வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது இந்த உணர்வின் தன்மை கொண்டு அணுக்களாக்கப்படும் பொழுது அதை நமக்குள் உருவாக்கி
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தை பதிவு செய்கின்றோமா அந்த பதிவின் நிலை கொண்டு அந்த அணுக்கள் மாற்றம் அடைகின்றது.
2.இதை நாம் செயல்படுத்த வேண்டும்.

இதைப் போல ஒவ்வொன்றும் நாம் எடுத்த உணர்வைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது

ஆனால் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியே செலுத்தப்படும் பொழுது காலை சூரிய உதயம் வரப்படும் பொழுது மேலே கொண்டு செல்கிறது. அங்கே ஓசோன் திரை என்பது விஷத்தின் அடர்த்தியாகி தன்னுடன் விஷத்தை இணைத்துக் கொள்ளும் நிலை பெற்றது.

அதாவது சூரியானிலிருந்து மற்ற பிரபஞ்சங்களுலிருந்து வரக்கூடியதை நம் பூமியின் சுழற்சி வட்டத்திற்குள் இந்த அடர்த்தியான ஒசான் தான் விஷத்தை உள்ளே போகாது தடுக்கின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடியது அல்ட்ரா வயலட். விஷத்தின் தன்மை கொண்டது அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக் கதிர்கள் வெகு தூரத்தில் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது. நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத்தன்மைகள் பிரிகின்றது.

ஆனால் இந்த மோதலில் வெப்ப மின் அணு போன்று ஆகும் பொழுது ஈர்த்துத் தனக்குள் அந்த விஷத்த்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மை அடைகின்றது

ஆகவே இந்த இயற்கை நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வருவது பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியான பின் (ஒசான்) பூமிக்குள் ஜீவணுக்கள் மற்ற உயிரினங்கள் வாழும் தகுதி பெறுகின்றது. நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையில் நமக்குள் அடக்கச் சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்று தான்
1.நாம் உயிரான்மாக்களை விண் செலுத்தும் போது பிரபஞ்சத்தை விட்டு வெளியே சென்ற பின்
2.அந்த விஷத்தின் உணர்வுகள் ஓசான் திரையுடன் அதன்  அடர்த்தியில் கலந்து விடுகின்றது.
3.மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் மீண்டும் இந்த உயிரின் தன்மை இதன் உணர்வின் தொடர் கொண்ட உடலைத்தான் உருவாக்கும்.
4.இந்த உடலில் எத்தகைய உணர்வு எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வுக்கொப்பத் தான் உடலைத் தேடிச் சென்று இந்த உணர்வின் தன்மை உடல் ஆக்கும்.

ஆகவே உயிருடன் ஒன்றி ஒளியாக்கும் நிலைகளை ஆக்க அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க “காலை துருவ தியானத்தில் எவர் ஒருவர் அந்த அரும்பெரும் சக்தி எடுத்துச் செயல்படுத்துகின்றார்களோ… அவருடைய சார்புடையவரை எளிதில் விண் செலுத்த முடியும்…”

அகஸ்தியனின் புலன்

 

ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான். சந்தர்ப்பத்திலே அதைப் பார்க்கின்றோம். அந்த வேதனையை நாமும் நுகர நேர்கின்றது… நம்மையும் அது இயக்குகிறது.

அதே போன்றுதான் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற சந்தர்ப்பம் அகஸ்தியனின் தாய் தந்தையருக்குக் கிடைத்தது. எப்படி…?

1.மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகப் பச்சிலை மூலிகைகளைப் பயன்படுத்தினார்கள்.
2.அந்த மணங்களைச் சுவாசித்த பின் அந்தச் சந்தர்ப்பம் பல விஷத் தன்மை முறிக்கும் நிலை வந்தது.
3.அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்… ஏனென்றால் மிருகங்கள் தங்களைக் கொன்று விடும்… தன்னைக் காக்க வேண்டும் என்று.
4.அந்தச் சந்தர்ப்பத்தால் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றார்கள்.

நுகரும் உணர்வுகள் புலனறிவாக எப்படி இயக்குகிறது…? என்று “புலஸ்தியர்…” என்று அக்கால மக்களைச் சொல்வார்கள்.

இன்று விஞ்ஞானிகள் மெய் ஞானிகள் என்று சொல்கிறோம் அல்லவா. அது போல
1.புலனின் உணர்வுகளைத் தெரிந்து கொண்டவர்கள்… புலஸ்தியர்… பூமியின் முதல் மனிதர்கள்.
2.ஒரு தாவர இனத்தைத் தனக்குள் சேர்த்துக் கொண்டால் அதனின் அறிவு என்ன செய்கிறது…? என்ற உண்மையின் இயக்கத்தை அறிந்தவர்கள்.

அந்த ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் காலை துருவ தியான நேரத்திலே அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்தச் சக்தியைத் தொடர்ந்து எடுக்கும்படி சொல்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து “உங்கள் உடலுக்குள் அது அணுவாகும் தத்துவத்தைத் தான்…” குரு வழியில் உபதேசிக்கின்றோம்.

எல்லா நேரமும் நாம் தியானம் செய்யலாம். இருந்தாலும் இந்த அதிகாலை நேரத்தில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த உணர்வுகளைக் கலந்து உங்களுக்குள் அந்த உண்மையின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ள ஏற்படுத்துகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது…? நாம் ஏன் கோபப்படுகின்றோம்…? நாம் ஏன் வேதனைப்படுகின்றோம்…? நாம் ஏன் தீமை செய்கின்றோம்…? என்று சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்.

ஒருவன் தவறு செய்கிறேன் என்றால் அவனை நாம் குற்றவாளியாக ஆக்குவதற்கு மாறாக அவன் உணர்வை நாம் எடுத்தால் பல தடவை அதைக் கேட்டறிந்தால் சந்தர்ப்பம் நம்மையும் குற்றம் இழைக்கக்கூடிய நிலையாக… குற்றம் செய்பவனாக வளர்த்து விடுகின்றது.

நான் தவறே செய்ய மாட்டேன் என்பார்கள். ஆனால் தவறு செய்தவர்களை அடிக்கடி உற்று நோக்கினார்கள் என்றால் இவர்களும் அதைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.

1.எல்லாமே சந்தர்ப்பம் தான்.
2.ஆகவே நல்ல சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.

பகைமையோ வெறுப்பையோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ வரும் பொழுது துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தித் தீமையை வலுவிழக்கச் செய்து அந்த உணர்வினை நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

தெளிந்து தெளிவான நிலைகள் கொண்டு வாழ்ந்து தீமைகளை அகற்றி வாழ்வதற்குத் தான் குருநாதர் சொன்ன வழியினைப் போதிக்கின்றோம்.

1.அகஸ்தியன் அருளை… அவன் எப்படிப் புலனின் நிலையை அறிந்தானோ
2.அந்த புலனின் தன்மையை நுகரச் செய்து உங்கள் நல்ல புலனாக அறிந்திடும் அறிவின் புலனாக
3.அகஸ்தியனின் புலனை… அவன் ஒளியான உணர்வின் புலனை உங்களுக்குள் செவி வழி கேட்கும் படிச் செய்து
4.உங்களை நுகரச் செய்து உங்கள் ஆகாரத்தின் வழி ரத்தத்தில் கலக்கச் செய்து கொண்டிருக்கின்றேன்.

இதை நீங்கள் தொடர்ந்து வளர்த்துக் கொண்டால் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து கல்கி என்ர நிலையை அடைய முடியும்.

ராமேஸ்வரம் – எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இந்த உடல்…! தனுசு கோடி – ஒவ்வொரு நிமிடமும் தீமை என்ற உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

1.கோடிக்கணக்கான உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.
2.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து கொண்டே வந்தால் தனுசு கோடி.

எத்தனை கோடி உணர்வுகள் வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொள்ளும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம்.
1.அந்த ஆற்றலை நாமும் நிச்சயம் பெற முடியும்
2.அகஸ்தியனின் புலன் கொண்டு அந்த முழுமையை அடைய முடியும்.

பிறருக்கு உதவி செய்தாலும்… அவரிடமிருந்து வரும் இருளான உணர்வுகள் நம்மை இயக்கி விடக் கூடாது

 

பெரும்பகுதியான மக்கள்… மகான்களை நேரடியாகச் சந்திக்கும் பொழுது தங்களுக்குப் பொருள் வேண்டும் செல்வம் வேண்டும் என்று தான் அணுகுகிறார்கள். மகான்கள் கூறும் உண்மையின் உணர்வைப் பெறுவதில்லை… அதைக் கடைப்பிடிப்பதில்லை.

தன் வாழ்க்கைத் தேவைக்குத் தான் மகான்களைச் சந்தித்தார்கள். தன் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்குமா…? என்று பார்க்கிறார்கள்.

இன்று வரையிலும் அப்படித்தான் உள்ளது.

பிழைப்புக்குக் கிடைக்க வேண்டும் என்றாலும் ஞானம் இல்லை என்றால் அப்படி வந்த பணத்தைச் சீராகப் பாதுகாக்க முடியாது.
1.செல்வங்கள் வந்தாலும் அந்த ஞானம் இல்லை என்கிற பொழுது ஆசையினால் “கடைசியில் இப்படி ஆகிவிட்டதே…” என்று வந்துவிடும்.
2.காரணம் ஒன்று கிடைத்தாலும் கூட அந்த ஆசை அதோடு திருப்தி அடைவதில்லை.
3.இதைப் பெற்றால் பரவாயில்லை என்று முதலில் நினைப்போம்.
4.நன்றாக வந்தது என்று அதை வைத்து இன்னொன்றைப் பெருக்கலாம் என்று ஆசை வரும்.
5.அதில் நஷ்டமாகி விட்டால் வேதனை…!
6.வேதனை வந்தபின் முதலில் வந்து கொண்டிருந்ததும் போய் விடுகின்றது… அடுத்து வளர்வதும் போய் விடுகின்றது.
7.இரண்டும் சேர்த்து வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்து உடலில் நோயாக உருவாக்கத்தான் தயாராகின்றது.
8.நோயான பின்… “நான் இப்படி எல்லாம் செய்தேனே… நன்றாக முயற்சி செய்தேனே…” என்று சொல்வார்கள்.

பணம் அதிகமாக இருந்தால் தாராளமாகச் செலவழிப்பார்கள். பிறருக்கு உதவியும் செய்வார்கள். ஆனால் அந்தக் கஷ்டப்பட்டவர்கள் வேதனை எல்லாம் நுகர்ந்து விடுவார்கள். அதைத் துடைக்கத் தெரிவதில்லை.

நான் எல்லாம் செய்தேன்… ஆண்டவன் கடைசியில் என்னை இப்படி ஆக்கிவிட்டான்…! என்று புலம்புவார்கள்.

ஆலயங்களுக்குச் சென்றால் “தர்மம் செய்ய வேண்டும்… ஆண்டவன் அப்போது தான் மெச்சுவான்” என்று எல்லா மதங்களுமே சொல்லுகின்றது. அதன் வழி நாமும் தர்மம் செய்கின்றோம்.

ஆனால் அப்படிச் செய்யும் பொழுது என்ன நடக்கிறது…?

அவனோ பாவத்தின் எல்லையில் இருக்கின்றான்… தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
1.ஆனால் நம்மிடம் உதவி பெற்ற பின் ஆ…! “ஆஹா…!” இன்று அந்த ஆசையிலே அவன் உணர்ச்சிகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றான்.
2.அவனை உற்று நோக்கி அவன் ஏங்கிப் பெறும் உணர்வுகளை நாமும் நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.

நல்லது தான் செய்கின்றோம்… ஆனால் அவருடைய உணர்வுகள் இங்கே வந்து “அவனுடைய தரித்திரத்தை” இங்கே கொண்டு வந்து விடுகிறது. அதை நீக்கத் தெரிவதில்லை.

இதைப் போன்று பிறரது இருள் சூழும் உணர்வுகள் நமக்குள் வருவதைத் தூய்மைப்படுத்தாதபடி “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்” என்று தான் எண்ணுகின்றோம்.

ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன்…? நமது உயிர் தான்.

1.ஈகை பண்புடன் தான் உதவி செய்தோம்
2.ஆனால் அவருடைய இருள் சூழ்ந்த உணர்வுகள் இங்கே நமக்குள் விடுகின்றது.
3.அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.

உதாரணமாக எத்தனையோ உணவுப் பொருள்களைச் செய்கின்றோம் அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி மற்ற அசுத்தங்கள் படத்தான் செய்யும்.

அப்போது அதை மூடி வைக்க வேண்டும் அல்லவா.

மூடி வைக்காதபடி நான் நன்றாகத் தான் செய்தேன். அதிலே மண் தூசி எல்லாம் வந்து விட்டதே…! என்று சொன்னால் எப்படிச் சரியாகும்…?

இதைப் போன்று தான்
1.அந்தப் பாதுகாப்பு நிலை இல்லை என்றால் நம் ஆன்மாவில் மற்றவருடைய இருளான உணர்வுகள் புகுந்து
2.உடலுக்குள் அணுக்களாக விளைந்து கடும் விளைவுகளை உண்டாக்கி விடும்.

அதனால் தான் அடிக்கடி ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து ஞாபகப்படுத்துகின்றோம்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும் காரியத்தைச் செய்வதற்கு முன்பும் பின்பும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று இதை உடலுக்குள் வலுவாக மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

1.நம் பார்வை சொல் செயல் அனைத்தும் அந்த மகரிஷிகள் உணர்வின் தன்மையாகவே நாம் மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.எத்தகைய நிலையிலும் பிறரின் உணர்வு நம்மை இயக்கி விடக்கூடாது… அது உடலுக்குள் அணுக்களாக விளைந்து விடக்கூடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனித வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமைகளை நாம் பார்க்க நேர்கிறது. அவருடைய குறைகளை நினைக்கும் போதெல்லாம் அந்தக் குறை தான் நம்மை இயக்குகின்றது.
1.பிறருடைய தவறு தான் நம்மை இயக்குகின்றது என்பதும் அப்போது நமக்குத் தெரிகின்றது
2.அதாவது அவர் மீது நாம் கொள்ளும் கோபமோ ஆத்திரமோ அது வெளியில் இருந்து வந்து தான் நம்மை இயக்குகிறது.

அத்தகைய நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதைத் தடுக்க வேண்டும்.

பின் அந்தக் குறை எங்கிருந்து யாரால் வந்ததோ அவர்களை எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்; அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் பக்குவமும் அந்த நல்ல உணர்வுகளும் வளர வேண்டும்; நல்லது செய்யும் அந்த உணர்வுகள் வளர வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்து “நமக்குள் அதை விளைய வைக்க வேண்டும்…”

இத்தகைய உணர்வுகளுடன் கலந்து நம் சொல் மூச்சலைகள் வெளிப்படும் போது அவரையும் அது மாற்றுகிறது. இப்படி ஒவ்வொருவரும் பழகிக் கொண்டால்
1.பிறருடைய தீமைகள் நம் வீட்டுக்குள் வருவதில்லை
2.நம் தெருவிற்குள் தீமை செய்யும் உணர்வலைகள் படர்வதில்லை
3.பகைமைகளை மாற்றி நல்ல உணர்வாக இங்கே படரச் செய்கின்றது… ஊருக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.

ஆகவே நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் கிளைகளாக வளர்வோம். அனைவரையும் பொருளறியச் செய்வோம். இருளைப் போக்கும் அருள் சக்தியைப் பெறுவோம்.

கணவன் மனைவி குழந்தைகள் குடும்பம் என்று… அருள் வழியில் ஒன்றுபட்டு வாழ்ந்து மக்களுக்கு எடுத்துக்காட்டாக நாம் வளருவோம் குறைகளை எண்ணாதபடி குடும்பத்தை உயர்த்திடும் நிலையாக நாம் செயல்படுவோம்.

யாம் உங்களுக்குக் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன்னாடி நின்று… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் இதை எடுத்து வளர்த்துக் கொண்டே வாருங்கள்.

அதற்குத்தான் அருள் ஞானச் சக்கரத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்
1.அது உங்களைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துக் கொண்டே வரும்
2.ஆறாவது அறிவை “ஏழாவது நிலை ஒளியாக…” உருவாக்கிக் கொண்டே வரும்.

அதை வெறும் சக்கரமாக எண்ண வேண்டாம். துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுப்பதற்கு “உங்களுக்கு ஏதாவது வேண்டும்” என்பதற்குத் தான் அருள் உணர்வைப் பதிவு செய்து அதைக் கொடுத்தது.

அருள் செல்வம் உங்களுக்குள் வளரும்… அருள் ஞானம் பெருகும்; இருளை அகற்றும்; மெய்ப்பொருளை காணச் செய்யும். அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக அமையும்.
1.நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரமாக மாற வேண்டும்
2.அந்த ஒளியின் உணர்வாக மாற வேண்டும்
3.நம் பார்வையால் பேச்சால் மூச்சால் பிறருடைய தீமைகள் அகல வேண்டும்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… எல்லாவற்றையும் உருவாக்கிய அவருடைய அருளால் இதை நான் (ஞானகுரு) அறிந்து கொண்டேன்.

குருதேவரை நினைத்து துருவ நட்சத்திரத்தை நினைத்து அந்த அடிப்படையில் இந்த வாழ்க்கையை நாம் கொண்டு சென்றால் என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்கின்றோம். இருளை அகற்றும் சக்தி பெறுகின்றோம்.

நாம் இருக்கும் இடங்களில் நல்ல மழை பெய்யச் செய்ய முடியும். விஷத்தன்மைகளால் உருவாகும் நோய்க் கிருமிகளால் புதிய நோய்கள் நம்மைத் தாக்காது காத்துக் கொள்ள முடியும்.

எல்லா உயிரும் கடவுள்;
எல்லா உடலும் கோவில்
எல்லா உடலும் சிவம்;
எல்லோருடைய கண்களும் கண்ணன்;
எண்ணும் எண்ணங்கள் இராமன்;
கல்யாணராமா – மகிழ்ச்சி என்ற உணர்வு நமக்குள் தோன்ற வேண்டும்.

எண்ணங்கள் எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தும் உணர்வுகளாக நமக்குள் வளர்ப்போம். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவோம் என்ற இந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்.

குரு காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்தி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கி
2.எல்லாமே ஒளி என்ற உணர்வுடன் ஒன்றி வாழ்வோம்… மற்றவர்களையும் அதிலே ஒன்றச் செய்வோம்.
3.துருவ நட்சத்திரமாக நாம் ஆவோம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்கள் இணைந்து ஒன்றுடன் ஒன்று துணையாக வாழ்ந்து வளர்வது போன்று அந்த அருள் வழியை நாமும் பெற்று பேரானந்த நிலை பெறுவோம்.

”நான் உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை

 

நாம் ஒரு பாம்பைக் கொன்றால் பாம்பின் உயிரான்மா நமக்குள் வந்து விடுகின்றது. ஆனால் ஒரு பாம்பு நம்மைத் தீண்டி விட்டால் அந்த விஷம் உடல் முழுவதும் பரவும் பொழுது பாம்பின் நினைவே நமக்குள் வருகின்றது. அந்த விஷம் அதன் நினைவுக்கே அழைத்துச் செல்லும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நாம் மனிதனாக வந்தாலும் அதன் உணர்வு… நம் நினைவாற்றல் அனைத்தையும் மறையச் செய்து விடுகின்றது.
1.உடலை விட்டுச் சென்றால் அதனின் ஈர்ப்புக்குள் சென்று
2.நாம் பாம்பாகத்தான் பிறக்க நேரும்.

எத்தனையோ காலம் பல உடல்களைக் கடந்து மனிதனாக உருப்பெற்று வந்திருந்தாலும்
1.இத்தகைய விஷத்தை வென்ற… விஷத்தை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அந்த நிலைகளை நாம் நுகர்ந்தோமென்றால்
3.பாம்பின் நினைவு மறந்து நஞ்சை வென்ற நினைவு வரும்.

அந்தப் பாம்பினத்திற்குள் செல்லாது தடைப்படுத்த நம் உணர்வின் நினைவலைகளும்
1.கண் எதைக் கடைசியில் நினைவு கொண்டதோ
2.அங்கே இந்த உணர்வின் துணை கொண்டு நாம் விண்ணுக்குச் செல்ல முடியும்.

அதனால் தான் கண்ணன் முதலில் பார்த்தசாரதி. பின்… எதன் வலுவைப் பெற்றதோ அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது பாம்பின் உணர்வு வலுவாகிவிட்டால்… நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கும் பொழுது இந்தக் கண் எது தன்னைத் தீண்டியதோ அந்த உணர்வும் அந்த விஷத்தின் தன்மை பட்டபின் அதன் வலுவின் தன்மை கொண்ட பின்… இதே கண்கள் பாம்பின் உடலுக்குள் அழைத்துச் சென்று விடுகின்றது.

அது தான் கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாகச் சென்றான். கண்களின் நினைவு… அதாவது அந்தப் பாம்பின் உணர்வுகள் நம் உடலுக்குள் வலிமை ஆகிவிட்டால் அர்ஜுனன்.

அந்தப் பாம்பிடமிருந்து தப்பிக்க நம் கண் எத்தனை உபாயங்களைச் சொல்கின்றது. இருப்பினும் இந்தக் கண் அந்தப் பாம்பின் உணர்வை வலுவாக்கி விட்டால் அர்ஜுனன் ஆகின்றது.

அர்ஜுனன் ஆனபின் எந்த உடலின் தன்மை கொண்டதோ இது தீண்டினாலும் அதன் உடலுக்குள் சென்ற பின் அது பாதுகாப்பு தருகின்றது.
1.ஆகவே கண்கள் எதனின் உணர்வை நுகர்ந்ததோ
2.அதன் வழியிலேயே நம்மை அழைத்துச் சென்று அதன் வழியிலே நம்மைப் பாதுகாக்கின்றது.

மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைந்தது துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும். இதைப் போன்று ஒன்று தீண்டி விட்டால் அந்த வலுக்கொண்ட எண்ணத்துடன் நாம் அதை எண்ணும் பொழுது
1.இந்த உடலில் நஞ்சுகள் பாய்ந்தாலும் நஞ்சின் உணர்வு இதற்குள் கலந்தாலும்
2.நாம் பாதுகாப்பான இடங்களை (துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும்) எண்ணும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை வலுப் பெற்று உடலை விட்டு வருகின்றோம்.

உடலை விட்டு வந்தாலும் இது அர்ஜுனன் ஆகி அந்த உணர்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும். இங்கே நஞ்சினை ஒடுக்குகின்றது.
1.ஆனால் உடலை விட்டுச் செல்லும் பொழுது
2.அதன் அருகிலே (ஈர்ப்பு வட்டத்திற்குச்) செல்கின்றோம்.

நஞ்சின் உணர்வுகள் கரைகின்றது மனிதன் என்ற உணர்வின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகின்றது. அது தான் “பிறவி இல்லாத நிலை…”

எந்தச் சந்தர்ப்பத்தில் இந்த உடலை விட்டு உயிரான்மா சென்றாலும்
1.எது நம்மைத் தாக்கியதோ அந்த உணர்வின் வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.இந்த வலுவை இழக்கச் செய்து “அருள் ஒளியின் உணர்வை” நாம் பெறும் தகுதியைப் பெற வேண்டும்.

அந்தத் தகுதியை நாம் காலையில் துருவ தியானத்தில் நாம் வலுப்பெறச் செய்ய வேண்டும்.

நாம் எப்படி எந்த நிலையில் ஒளியின் உணர்வை எடுத்தாலும் ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அந்த ஒளி பட்டு “இந்த உடலும்” கரையத்தான் செய்யும்.

1.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்.
2.”நான் இந்த உடலிலேயே இருப்பேன்…” என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை.
3.அவன் எதனின் உணர்வு கொண்டு உடலை விட்டுச் சென்றானோ ஒளியின் சரீரமாக மாறுகின்றான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முந்தி எல்லாம் தியானத்தில் சூரியனைப் பார்க்கும்படி சொல்லி இருந்தேன். ஆனால் இப்பொழுது சூரியனுக்குள் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. அதைப் பார்த்தோம் என்றால் நம் கண்களுக்கும் மனதுக்கும் விஷத் தன்மைகள் தான் பரவும்…!

விஷத்தன்மையான நிலைகள் அதிலிருந்து நம் பூமிக்குள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது. அதனால் சிந்தனையற்ற நிலைகளும் புதிய நோய்களும்… ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் உணர்வுகளும் வளர்ந்து கொண்டுள்ளது.

1.மற்றவரைக் கொல்ல வேண்டும் என்ற உணர்வு தான் மனிதர்களுக்கு வருகின்றதே தவிர “காக்க வேண்டும்…” என்ற உணர்வு உலகெங்கிலும் இல்லை
2.எந்தக் கோவிலுக்கு யார் சென்றாலும் இவன் உருப்படுவானா…? என்று சாபம் விடும் நிலை தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது

எந்த மதமானாலும் அவர்கள் ஆலயங்களுக்குள் சென்று தெய்வத்தை வணங்கினாலும் தன் குடும்பங்களைப் பற்றிய சிந்தனைகள் வரப்படும் பொழுது ஒருவருக்கு ஒருவர் சாபம் விட்டு… அவர் கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வுகளைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் வெளியிலே சொல்லும் பொழுது… “நான் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள் அவர்கள் உருப்படுவார்களா…?” என்று குறைகளை வளர்த்துக் கொள்ளும் நிலை தான் வருகிறது.

அப்படி எல்லாம் இல்லாதபடி
1.எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.எங்கள் பார்வையில் தீமைகள் அகல வேண்டும்
3.எங்கள் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக வளர வேண்டும்
4.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
5.நாங்கள் பார்க்கும் அனைவருக்கும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

காரணம் விஞ்ஞான அறிவில் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது. பல வகையான வெடி குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள்.

கடலிலிருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து அணுவைப் பிளந்து மற்றொன்றுடன் அதாவது நியூட்ரான் புரோட்டான் என்ற நிலைகள் சில இதுகளைக் கலந்து வைத்துள்ளார்கள்.

சாதாரணமாக… நட்சத்திரத்தின் துகள்கள் வெளி வரப்படும் பொழுது சூரியன் இழுத்து அதைக் கவர்ந்து விட்டால் “நியூட்ரான்…” அது அழுத்தமாகச் செல்லும் பொழுது இந்த விஷத்தன்மையைக் கண்டபின் மற்ற அனைத்துமே பயந்து ஓடுகின்றது.
1.அப்போது ஒன்றோடு ஒன்று மோதி பல கலவைகளாக மாறிச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
2.அதை எடுத்து இராக்கெட்டில் இணைத்து விண்ணிலே செலுத்துகின்றான் விஞ்ஞானி.
3.அதை வைத்து நியுட்ரான் குண்டு என்று தயார் செய்துள்ளார்கள்.

அந்த நியூட்ரான் குண்டுகளை வெடிக்கச் செய்தால்… மனிதன் இருக்கும் பக்கம் பட்டால் சிந்தனை இழந்து பைத்தியம் பிடித்த மாதிரி மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

கட்டடங்கள் மற்றும் எல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் இங்கு மனிதர்கள் வாழ முடியாது. அத்தகைய புத்தி பேதமாக்கும் உணர்வலைகள் காற்றிலே பரவுகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் கதிரியக்கச் சக்திகள் தான் பூமிக்குள் உருவான கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மூல காரணம். அனைத்திலுமே அந்தச் சக்தி உண்டு.

அதே சமயத்தில் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள்… அணு மின் நிலையம் மற்றும் அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் போது அந்தக் கதிரியக்கங்களின் கசிவுகள் அனைத்தையுமே சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

இது காற்றலையில் பரவிப் போகும் போது ஆரம்ப நிலையில் “நியூட்ரான்” என்று அழுத்தம் ஆன பின் தன் அருகிலிருப்பதை எப்படி அது விரட்டிச் சென்றதோ அதே மாதிரி
1.அதுவும் இதுவும் (இயற்கையில் உருவானதும் செயற்கையின் கசிவுகளும்) மோதிய பின் பெரும் சுழிக்காற்றாக மாறுகின்றது
2.கல்லுக்குள் மண்ணுக்குள் கட்டடத்திற்குள் இது பாய்ந்து அதனுடைய அழுத்தம் வீரியமடைந்து
3.பெரிய காற்றாடி போல போகும் பாதையில் உள்ள அனைத்தையும் பிய்த்து எறிந்து கொண்டு செல்கிறது.

அமெரிக்காவில் இது அதிகமாக நடக்கிறது… பத்திரிகையில் நீங்கள் படித்திருப்பீர்கள்… மற்ற நாடுகளிலும் நம் நாட்டிலும் இப்பொழுது சிறுகச் சிறுக வந்து கொண்டிருக்கின்றது.

எங்கெங்கே செயற்கையில் அணுக்கதிரியக்கங்களை உற்பத்தி செய்து பரவச் செய்துள்ளார்களோ அந்த நாடுகளில் எல்லாம் இது சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. பெரிய பெரிய கட்டிடங்களும் சுக்கு நூறாகித் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கின்றது.

அதே சமயத்தில் அத்தகைய சுழிக் காற்று
1.கடல் பக்கம் செல்லும் போது அங்கிருக்கும் நீரைக் கவர்ந்து பெரும் பெரும் மேகங்களாகக் குவித்து
2.நகரத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்து பெரும் மழை நீராக… ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை
3.சில மணி நேரங்களிலேயே கொட்டு கொட்டு என்று கொட்டி ஊர்களையே நாசம் பண்ணுகின்றது.

எதிர்பாராதபடி அழிக்கக்கூடிய சக்தியாக உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது. நீங்கள் டிவியிலும் பத்திரிகைகளிலும் பார்த்திருப்பீர்கள்.

இன்று…
எந்த நிமிடம்…
எந்த இடத்தில்…
என்ன நடக்கும்…? என்று தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

இது போன்ற சூழ்நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி இருந்தால்
1.நாம் இருக்கும் பக்கம் அத்தகைய சுழிக் காற்றுகள் வராது தடுக்கும்
2.அல்லது நம்மை ஒதுக்குப் புறமான இடத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

April – 2026 உபதேசம்

நீங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே தான் உபதேசிக்கின்றேன்

 

நம் உடலில் நல்ல அணுக்களை எப்படி வளர்க்க வேண்டும்…? தீய அணுக்கள் வராதபடி தடுக்கும் சக்தியாக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம் உடலில் உள்ள ஜீவணுக்களை எப்படிப் பெருக்க வேண்டும்…? என்று தான் உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றேன்.

பயிற்சி கொடுத்தும் உடல் ஆசை வந்தால் ராவணனாக மாறி விடுகின்றது. ராவணனாக மாறிவிட்டால் நல்ல குணங்களை அது சாப்பிட்டு விடும். அசுர குணங்கள் கொண்ட அடுத்த உடலாக உயிர் மாற்றிவிடும்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால்
2.உயிரைப் போன்றே ஜீவணுக்களை மாற்றி உடலுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.

இன்று நடக்கும் யுத்தங்களால் எத்தனையோ கடுமையான விஷங்கள் வந்தாலும் உலகமே அழிந்தாலும் இந்த உயிர் அழியாது நெருப்பிலே பட்டாலும் “உயிர் அழிவதில்லை…” உடல் கருகுகிறது. கருகிய உணர்வுகளாக மாறுகின்றது.

பிறிதொரு உடலுக்குள் சென்றால் கருகிடும் உணர்வின் இயக்கத்தை அங்கே செயல்படுத்துகின்றது. அடுத்து வேதனைப்படும் உடலாக ஈர்த்து அந்த உடலைப் பெறுகின்றது.

உடல் பெறும் சந்தர்ப்பம் பெரும்பகுதி புழுவாகவும் பூச்சியாகவும் பாம்பாகவும் வாழக்கூடிய நிலைதான் வருகின்றது. விஷ அணுக்கள் பரவும் பொழுது மனித உடலிலே இது படர்ந்து விட்டால் இந்த உடலுக்குப் பின் கிருமிகள்தான் அதிகமாகும்… பூச்சிகளாகத்தான் உருவாகும். மனித நிலைப் பெறுவது கடினமாகிவிடும்.

ஆகவே
1.இன்று கவலையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் துரத்தி விடுங்கள்.
2.கவலையும் சஞ்சலமும் சோர்வும் பெரும் பிசாசாக மாறி நல்ல குணங்களை அழித்திடும் அத்தகைய நிலைகளை அப்புறப்படுத்துங்கள்.

கவலையும் சோர்வும் வரும் பொழுது தாங்க முடியவில்லை என்றால் கோபமும் பழி தீர்க்கும் உணர்வுகளையும் கூட்டி வெறுப்புணர்வாகி இந்த உடலையே வெறுக்கும் நிலை வருகிறது. வெறுத்து மற்றவர்களைத் தாக்கும் உணர்ச்சிகளையும் கொண்டு வருகின்றது.

இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.
1.குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.
2.வீட்டுக் கவலையும் சலிப்பையும் சங்கடத்தையும் விட்டு விடுங்கள்.
3.குருநாதர் காட்டிய வழியில் தியானிப்போம் என்ற நிலைக்கு வாருங்கள்.
4.எல்லோருக்கும் என் மீது நல்ல அன்பு வளரட்டும்.
5.குடும்பத்தில் அனைவரும் நல்லவராக வளரட்டும்… ஒன்றுபட்டு வாழும் நிலை பெற வேண்டும்
6.உலக மக்கள் அனைவரும் நல்ல உணர்வு பெற வேண்டும் என்று எண்ணித் தியானித்துப் பாருங்கள்.

யாம் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே இருக்கின்றது அந்தப் பதிவு உங்களிடம் இருக்கின்றது… உபதேசித்த உணர்வுகள் அலைகளாகக் காற்றிலே பரவி உள்ளது… உலகம் முழுவதும் உள்ளது.

1.அதை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்… அதற்குண்டான சந்தர்ப்பத்தைத் தான் உருவாக்குகின்றோம்.
2.நீங்கள் அனைவரும் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கிலே நான் குரு வழியில் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் “எதிரியிடமிருந்து தப்ப வேண்டும்…” என்ற நிலையில் தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து மான் புலியைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; எலி பாம்பைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; பாம்பு கருடனைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; பரிணாம வளர்ச்சியாக அணுக்களில் மாற்றமாகி இப்படித்தான் நாம் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனாக வந்த பின் இந்த வாழ்க்கையில் தீமையான செயல்களைப் பார்த்த பின் அதை நுகர்ந்து உடலுக்குள் தீமையின் அணுக்களாக உருவாகாதபடி தப்பித்துக் கொள்ள “ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுதல் வேண்டும்…”

அதற்குத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்தி அதைப் பெறச் செய்து கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு).

அவ்வாறு
1.அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி… துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைக் கொடுத்தும்
2.அதை நீங்கள் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் இந்தத் திருச்சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தும் பயன் இல்லை

ஒவ்வொரு நொடியிலும் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். எத்தகைய நிலைகள் வந்தாலும் புருவ மத்தியிலே “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று “முதலில் அங்கே நிலை நிறுத்தப் பழக வேண்டும்…”

1.எப்படி… எவ்வளவு பெரிய நிலை இருந்தாலும்… அல்லது வந்தாலும் சரி…
2.அது வந்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணிவிட்டு
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஒரு நிமிடமாவது எண்ணி அதை அங்கே தடைபடுத்திப் பழகுதல் வேண்டும்

ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் தாராளமாக வரும். இது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து… அடுத்து எந்த நல்லது நடக்க வேண்டுமோ அதை எண்ண வேண்டும்.

கோபப்பட்டவரைப் பார்த்திருந்தோம் என்றால் அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சேர்க்க வேண்டும்.

ஆக… அவன் வெளிப்படுத்திய கோப உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இணைத்து நல்ல உணர்வாக மாற்ற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்து அது இரத்த நாளங்களில் பரவப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இது நல்ல உணர்ச்சிகளை ஊட்டி நல்ல அணுக்களாக மாற்ற உதவும்.

இதைப் போன்ற பழக்கத்திற்கு நாம் அவசியம் வந்தாக வேண்டும்.

1.நம் குடும்பத்திலும் எந்தக் குறை வந்தாலும்… குறையாக நாம் எடுத்துக் கொள்ளாதபடி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலில் இதை எடுத்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

குடும்பத்தில் கணவன் மனைவியோ… குழந்தைகளோ… நம்முடன் பிறந்தவர்களோ… அல்லது யாராக இருந்தாலும் குறையாக எண்ணாதபடி… அந்த உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எல்லோரும் போற்றும் நிலைக்கு அவர்கள் வளர வேண்டும் என்று இப்படி நாம் எடுத்துக் கொண்டே வந்தால் இந்த உணர்வு எல்லோருக்கும் கிடைக்கின்றது.

இப்படி நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு குணத்திலும் ஒவ்வொரு உணர்விலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வந்தால் இந்த அருள் வழி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களிலே சேர்க்கப்படுகின்றது.

இப்படிப் பெருக்கினால் இது தனுசுக்கோடி…! கடைசி நிலைகள்…! யாருடைய பகைமையும் இல்லாதபடி அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து “எல்லோருக்கும் நல்லதாக வேண்டும்” என்ற இந்த மூச்சுகளை நாம் வெளியிடுகின்றோம்.

யாருடைய தீமையும் நமக்குள் வராதபடி தடுத்து நம்மை நாம் காத்துக் கொள்கின்றோம். ஆகவே திருச்சபை அங்கத்தினர்கள் தலையாயக் கடமையாக இதைச் செயல்படுத்த வேண்டும்

1.எந்த நிமிடத்தில் எந்த நேரத்தில் எவ்வளவு பெரிய நிலை வந்தாலும்
2.குடும்பத்தில் எதிர்பாராத கோபமோ வேதனையோ வந்தாலும்
3.எத்தகைய கடுமையான சிக்கல்கள் வந்தாலும்… அந்த மாதிரி நேரங்களில் எல்லாம்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பயன்படுத்தி அந்தத் தீமை நமக்குள் வ(ள)ராதபடி தடுத்து
5.நம் குடும்பத்திலும் சரி அல்லது புறநிலைகளிலும் சரி ஒன்று சேர்ந்து வாழும் நிலையாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் நுகரப்படும் போது அது நமக்குள் வளர்ந்து கொண்டே வரும்.

அதனின் பெருக்கம் எல்லா அணுக்களிலும் சேர்ந்து கொண்டே வரும். “பேரொளியாக” நாம் மாறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானத்தில் எடுக்கக்கூடிய சக்தியின் துணை கொண்டு ஒளியான உணர்வுகளைக் காணுவதற்குத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.
1.அதை எடுக்க எடுக்க இந்த வாழ்க்கையில் பொருள் காணும் நிலைகள் வரும்… சிந்திக்கும் ஆற்றல் வரும்
2.நமக்குள் சுதாரித்து… ஒவ்வொன்றையும் எவ்வாறு செய்ய வேண்டும்…? என்ற அதற்குண்டான ஞானங்கள் வரும்
3.அந்த உணர்வு உண்டு எதையுமே சீர்படுத்திக் கொள்ளலாம்.

விஞஞான அறிவுப்படி… எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு தான் இன்று ஏவுகணைகளை இராக்கெட்டின் மூலம் இயக்குகின்றார்கள்.

அதாவது ஆள் இல்லாதபடி கம்ப்யூட்டர் என்ற இயந்திரத்தின் துணை கொண்டு தன்னிச்சையாக இங்கிருந்து (தரையிலிருந்து) இயங்கும்படி செய்து வைத்திருக்கின்றார்கள்.

உதாரணமாக எதிரி விமானங்களில் இருந்து குண்டு வீசினால்
1.அந்த நுண்ணிய ஒலி அலைகளை ஈர்த்து… முகப்பிலேயே காணும் நிலைகளாக வைத்து இது விலகிச் செல்லும்படியாக வைத்திருக்கின்றார்கள்.
2.வெகு தூரத்திலிருந்தாலும் இது தன்னுடைய மோப்பத்தால் வானிலே இவ்வளவு மைல் வேகத்தில் இத்தனை டிகிரியில் வருகிறது என்று உணர்ந்து
3.அதை எதிர்த்துத் தாக்கும் நிலைகளை இது செயல்படுத்துகின்றது.

இப்படி எத்தனையோ நுண்ணிய நிலைகளை இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள்.

இதே மாதிரித் தான் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கப் பெருக்க
1.தீமை நம்மைத் தாக்குவதற்கு முன் அதை நாம் விலக்கித் தள்ளும் நிலையாக
2.அது நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

அத்தகைய சக்திகளை நீங்கள் பெற வேண்டும்.

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறுவதற்கு… நமது குரு அருளும்; அவரின் துணை கொண்டு அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்; அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வுகளையும் பதிவு செய்கின்றோம்.

நீங்கள் குறைகளை நினைக்கவே கூடாது…! நிறைவு பெற வேண்டும்… நல்லது நடக்க வேண்டும்… நல்லபடியாக இருக்க வேண்டும் என்றே எண்ணிப் பழக வேண்டும்.

எங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் குடும்பத்தினர் அனைவரும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் சிந்தித்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்

இதைக் குழந்தைகளுக்கும் ஞாபகப்படுத்தி அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும்படி கற்றுக் கொடுக்க வேண்டும்.

யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து இதை எல்லாம் எண்ணும் ஒரு பழக்கமாக நீங்கள் வளர்த்துக் கொண்டே வந்தால்
1.அதிலிருந்து ஒளிக் கற்றைகள் வரும்.
2.இரவில் படுத்திருக்கும் போது உங்கள் உடலிலிருந்து வெளிச்சத்தையும் காண முடியும் – அது தீமைகளை நீக்கும்.

ஆனால் காண முடியும் என்று சொன்னதைக் கேட்டு “எனக்கு வெளிச்சம் வரவில்லையே… வரவில்லையே…!” என்று எண்ண வேண்டியதில்லை.

ஏனென்றால் இப்படிச் சில பேர் தவறான நிலைகளில் கொண்டு சென்று விடுகின்றனர். ஐயோ… எனக்கு அந்தச் சக்தி இல்லை போலிருக்கிறது…! என்று எண்ணி விடுகிறார்கள்.

ஆனால் அத்தகைய எண்ணமே வரக்கூடாது.

உங்கள் உடலில் “அந்தச் சக்திகள் பாய்ந்து கொண்டிருக்கின்றது…” அதை வளர்ப்பதற்குத் தான் இப்பொழுது வாக்காகக் கொடுத்துப் யாம் பதிவு செய்கின்றோம்.

வளர்ந்தால் தானே தெரியும். ஆகவே
1.காணாத உணர்வுகளை நாம் வளர்க்கக் கூடாது
2.காண வேண்டும் என்ற உணர்வைத் தான் வளர்க்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் இணையும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

குருநாதர் கொடுத்த இன்னல்களைத் தாங்க முடியாதபடி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்

 

எனது குருநாதர் அடிக்கடி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தி துயரப் படும்படியாக வாழச் செய்தார்… அதிலேயே உழலச் செய்தார். பல இன்னல்களைக் கொடுத்தார்.
1.அந்த இன்னல்களைச் சந்தித்த பின் குருநாதரிடமே வெறுப்பு கொண்டேன்.
2.என்னை இப்படி எல்லாம் தொல்லைப்படுத்துகின்றாயே… கஷ்டப்படுத்துகின்றாயே…!
3.இது எதுவும் எனக்கு வேண்டாம்… நான் பேசாமல் போகின்றேன்…! என்றேன்.
4.இன்னல்களைத் தாங்க முடியாது தற்கொலை செய்யவும் கூட முயற்சி எடுத்தேன்… ஒரு முறை அல்ல பல முறை…!

அவர் கொடுக்கும் இம்சைகளிலிருந்து மீள முடியாத நிலைகள் கொண்டு என்ன வாழ்க்கை…? என்று எண்ணினேன்.

மனைவியைக் காப்பாற்றினார்… சில மகிழ்ச்சியான செயல்களும் நடந்தது. ஆனால் அதற்குப்பின் ஒவ்வொரு நொடியிலும் பல பல இன்னல்கள் வருகின்றதே…! என்ன வாழ்க்கை…? என்று எண்ணிய பின் பல முறை தற்கொலை செய்யும் உணர்வுக்கே அது என்னை அழைத்துச் சென்றது.

அப்பொழுது தான் குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.

உன்னுடைய உணர்வு கொண்டு பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றாய். ஆனாலும் அந்தத் தீமையின் உணர்வுகளை உனக்குள் நீ நுகரும் பொழுது
1.உன் நன்மையின் நிலைகளை அது எவ்வாறு செயலற்றதாக மாற்றுகின்றது…?
2.உன் உடலை அழித்திட வேண்டும் என்று இந்த உணர்ச்சிகள் உன்னை எப்படித் தூண்டுகின்றது.

எத்தனையோ உடல்களில் “உன்னைக் காத்திட வேண்டும்…” என்ற உணர்வை நினைவு கொண்டாய் பரிணாம வளர்ச்சியில் இன்று மனிதனாக ஆனாய்.

ஆனால் மனிதரான பின் சிறு குறைகளை உன்னால் தாங்க முடியாது இந்த உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இதே எண்ணம் இந்த உடலை அழிக்கச் செய்கின்றது.

இந்த உடலை அழித்து விட்டால்
1.உடலை அழித்திடும் உணர்வு கொண்டு இன்னொரு உடலை அந்த உடலையும் அழித்துவிடும் நிலைகளுக்குச் சென்று
2.இது போன்று உடலை அழித்துப் புசித்திடும் உணர்வின் தன்மை கொண்ட மிருகமாக நீ பிறப்பாய் போ…! என்று சாபமிடும் நிலையாக உணர்த்தினார்.

அதைச் சிந்தித்துப் பார் என்றார். அந்த உணர்வின் அலைகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது…? எதனை நீ அறிய வேண்டும்…? என்ற நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

ஆகவே நாம் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்…? எதனை நமக்குள் பருக வேண்டும்…? என்ற பேருண்மையை குருநாதர் அருளினார். அந்த உணர்வின் தன்மையை இன்று பாட நூல்களில் காட்டுவது போல அனுபவ ரீதியிலே எனக்குக் கொடுத்தார்.

1.நீங்கள் அனைவரும் அதைப் பெற முடியும்
2.உங்களால் தீமைகளை அகற்றும் சக்தி பெற முடியும்
3.தீமையற்ற உடலாக மாற்ற முடியும்
4.தீமையற்ற நிலைகளை உங்களுக்குள் விளைய வைத்துப் பிறவா நிலை என்ற பெருநிலை அடைய முடியும்.
5.உங்கள் பார்வையால் பேச்சால் பிறருடைய தீமைகளைப் போக்க முடியும்
6.உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை அகற்ற முடியும்
7.உங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி பெற முடியும் என்று
8.குருநாதர் எனக்கு உணர்த்தியதை உங்களுக்குத் தெளிவாகக் காட்டுகின்றோம்… அதைப் போதிக்கின்றோம்.

ஆகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அருள் சக்திகளை அனைவரும் எளிதில் பெற முடியும்… குடும்பத்தில் வரும் சிக்கல்களை நீங்கள் மாற்ற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்திலிருந்து பூமி அதிகமான சக்திகளைக் கவரக்கூடிய நேரம் தான் அதிகாலை நேரம்.
1.அந்த நேரத்திலே… அது பெற்ற… அந்த உணர்வு வழிப்படி யாம் உபதேசிக்கப்படும் பொழுது
2.எதைச் சொல்கிறோமோ அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் ஒவ்வொன்றிலும் கலக்கின்றது.
3.அப்படிக் கலந்தது என்றால் எல்லாக் குணங்களிலும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கும் ஒரு வித்தாக இப்போது உருப்பெறுகின்றது.

விவசாயப் பண்ணைகளில் வீரிய வித்துகளை உருவாக்குவது போன்று உங்களுக்குள் “ஞான வித்தாக” இணைத்துக் கொண்டு வருகின்றோம்.

அதே சமயத்தில் அந்த விவசாயப் பண்ணையில் வீரிய வித்துக்களை உருவாக்கிய பின் அதை வைத்து எவ்வாறு நல்ல மகசூலாக எடுக்க வேண்டும்…? என்று அதற்குண்டான பக்குவ முறைகளையும் சொல்லிக் கொடுப்பார்கள்.

அதைப் போன்றுதான் உங்களுக்கு ஞான வித்தை வளர்க்கும் விதமாக ஆத்ம சுத்தி என்ற பயிற்சியும் கொடுக்கின்றோம். அந்த ஆத்ம சுத்தியை ஒவ்வொரு நொடிப்பொழுதும் செய்து வந்தால் உங்களுக்குள் பேரருளை உருவாக்க முடியும்.

1.துருவ நட்சத்திரம் அழியாத நிலையாக… ஒளியின் சுடராக எப்படி இயங்கிக் கொண்டுள்ளதோ…?
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரக்கூடிய எத்தகைய விஷத்தையும் ஒளியாக எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றதோ…?
3.அதை நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்த்து “ஞான வித்துக்களாக” உருவாக்கிக் கொண்டு வர வேண்டும்.

அப்படி உருவாக்கி விட்டால்
1.இந்த வாழ்க்கையில் வரக்கூடியதை “நீங்களே மாற்றக்கூடிய பக்குவமும்…”
2.வரும் தீமைகளை விலக்கக்கூடிய நிலையும் சமப்படுத்தக் கூடிய நிலையும்
3.சர்வத்தையும் ஒளியாக ஆக்கக்கூடிய நிலையும் நீங்கள் எளிதில் பெற முடியும்.

அதைத்தான் உபதேச வாயிலாக அருள் ஞான வித்துக்களாக உங்களுக்குத் தினமும் கொடுத்துக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

ஏனென்றால் தனுசுக்கோடி என்று சொல்வார்கள் ஒவ்வொன்றாக உபதேச வாயிலாக யாம் சொன்ன சொல்கள் உணர்ச்சிகளாகும் போது “தனுசு…”

ஒரு வில்லிலே அம்பை ஏற்றிப் பாய்ச்சினால் அது இலக்கைத் தாக்கி… அங்கே எப்படி ஊடுருவிக் காயத்தை ஏற்படுத்துகின்றதோ அது போன்று
1.உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் இது ஊடுருவிப் பாயும்.
2.உபதேசத்தைக் கேட்போர் உணர்வுகளிலே இது தைத்து அந்த ஞானிகளின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது
3.உங்களுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது வளருகின்றது.

இதுதான் விஷ்ணு தனுசு…!

சக்தியை எல்லா நேரமும் நான் விரயம் செய்ய முடியாது

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்று லட்சம் பேரைச் சந்தித்து அனுபவபூர்வமாகப் பெற்ற ஞானத்தைத் தான் உங்களிடம் உபதேசித்து வருகின்றேன்.

அன்றைக்கு என் காலிலே ஆணி. குருநாதர் செருப்பு கூடப் போடக்கூடாது என்று சொல்லிவிட்டார். இரண்டு காலிலும் 28 ஆணி இருந்தது. நடக்கும் போது ஒரு சிறிய கல்லிலே மிதித்து விட்டால் போதும். அ…ஆ…! என்று உணர்ச்சிகள் தூண்டப்பட்டு தலையில் உச்சி முடி நட்டமாக நிற்கும்.

வெளியிலே சேர்ந்தாற் போல் அதிக நேரம் உட்கார முடியாது… எரிச்சலாகும். கால் ஆணி உள்ளவர்களிடம் கேட்டால் தெரியும்… இது எப்படி என்று…!

அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு…
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்
2.ஒவ்வொரு குடும்பத்திலும் என்ன நடக்கின்றது…?
3.அதில் உள்ளவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் குடும்பத்தில் என்ன நடக்கின்றது…?
4.இறந்த பின் அந்த ஆன்மாக்கள் என்ன செய்கின்றது…? என்று இதை எல்லாம் அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.

கஷ்டப்பட்டு அதை எல்லாம் தெரிந்து கொண்டு வந்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது அதிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்கு… உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வதற்கு உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

கொடுத்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்வதற்கு ஆள் இல்லை.

எத்தனையே பேர் எம்மைச் சந்திக்க வருகின்றார்கள். உங்களுக்குள் வரும் தீமைகளை மாற்றக்கூடிய சக்தி “உங்களுக்கு உண்டு” என்று கொடுக்கின்றோம்.
1.அதை யாரும் எடுப்பதில்லை.
2.சாமி எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார் என்ற இந்த உணர்வு தான் பெரும்பகுதியானவருக்கு உள்ளது.
3.சாமி சொன்ன வழியில் தியானத்தைச் செய்து என்ன கிடைத்தது…? என்கிறார்கள்.

ஏனென்றால் யாம் சொல்வதைக் கடைப்பிடித்து வழி நடந்தால் தான் நடக்கும். கடைப்பிடிக்கவில்லை என்றால் எப்படி நடக்கும்…?

பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. ஆசை இருக்கின்றது… ஆனால் அதைச் சாப்பிடுவதற்குப் பதில் வேதனையை எடுத்தால் என்ன ஆகும்…?

ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.

ஆனால் ஒரு சமயம் நல்லதானாலும் மீண்டும் அதை வைத்துத் தனக்குகந்த உணர்வை வளர்த்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியை வளர்ப்பதற்கு ஆள் இல்லை.

1.எத்தனையோ பேருக்கு அவருடைய துயரங்களிலிருந்து அவர்களை மீட்டி விடுகின்றோம்.
2.அதை வைத்து மீண்டும் அவர்கள் தெளிந்து தெரிந்து வருவார்கள் என்று தான் அதைச் செயல்படுத்துகின்றோம்.

ஆனால் அப்படிச் செய்கின்றார்களா…?

1.காரணம்… சக்தியை நான் எல்லா நேரமும் விரயம் செய்ய முடியாது.
2.உங்களுக்குண்டான அந்த வழிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கின்றோம்.
3.அதை நீங்கள் எடுத்துக் கரையேறி மீண்டு வரும் “தன் பலம்” வேண்டுமல்லவா.

எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார் என்றால் சாமி எதைப் பார்ப்பார்…? உங்கள் கஷ்டத்தை எல்லாம் நான் கேட்டுக் கொண்டேயிருந்தால் அதிலிருந்து நான் என்னைத் தப்புவித்துக் கொள்வதற்குத் தான் பார்க்க முடியுமே தவிர உங்களை எப்படி நான் காப்பது…?

1.ஒவ்வொருவரும் யாம் கொடுக்கக்கூடிய சக்திகளை வைத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
2.வாழ்க்கையைச் சீர்படுத்தி வழி நடத்திடவும்… வாழ்க்கைக்குப் பின் அடையக்கூடிய நிலையாக
3.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை… சிறிது காலம் செய்து பழகி விட்டால் தன்னாலே வந்துவிடும்.

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்

 

விஞ்ஞான உலகில் இருக்கின்றோம்… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையை உருவாக்குகின்றனர்.

உதாரணமாக நாம் ரோட்டில செல்லப்படும் போது… அந்தப் பக்கம் அழுத்தமாக மிளகாய் நெடி வந்தால் நுகர்ந்தவுடனே அந்த உணர்ச்சிகள் (அதுதான் எலக்ட்ரானிக்)
1.நாம் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நம் நல்ல குணங்களை மாற்றி அந்த நெடி நம்மைத் தும்ம வைக்கின்றது.
2.சிந்திக்கும் தன்மையைக் கூட அந்த இடத்தில் இழக்கச் செய்து விடுகின்றது.

அது எலக்ட்ரானிக்காக மாறுகின்றது. எதன் உணர்வை இந்தச் சூரியனின் “இயக்க அணுக்கள்” கவர்கிறதோ அதை நுகரப்படும் போது அதன் உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்குகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு தான் அவ்வாறு இயக்குகின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். அந்த உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.

1.சில சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனைப் பார்த்தால் இனம் புரியாது அவர் மேல் வெறுப்பு வரும்… அல்லது சோர்வு வரும்
2.ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது இனம் தெரியாத சிந்தனைகள் வரும்.
3.ஏன்… எதற்கு அவ்வாறு நம் மனம் மாறுகிறது…? என்ற நிலை கூட வந்துவிடும்.

காரணம் மனித உடலிலிருந்து வரக்கூடிய அந்த உணர்வினை நாம் சுவாசிக்கப்படும் பொழுது… “நம்மை அறியாமலே இயக்குவதை நாம் அறியவில்லை…” ஆனால் அது நம்மை இயக்கத் தான் செய்கிறது.

விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்குகின்றார்கள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பேழையில் உருவாக்கி
1.அதிலே காந்தப்புலனும் கெமிக்கலும் கலந்த பின்
2.மோதலின்… அதிர்வு ஒலி அலைகள் எப்படி வருகின்றதோ…? அதற்குத் தக்கவாறு அந்த இயந்திரத்தை இயக்கி
3.அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எதிர் நிலை வரும் பொழுது எலக்ட்ரானிக்காக மாற்றி
4.மற்ற அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்களை எல்லாம் இயக்கத் தொடங்குகிறது.

இதைப் போன்று தான் இந்த உடலான இயந்திரத்தை… பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நாம் நுகரும் பொழுது அதே உணர்வு இயக்கப்பட்டு இனம் புரியாதபடி சோர்வடைகின்றோம்… காண முடியவில்லை.

ஜோதிடம் ஜாதகம் பார்ப்போர் மனிதனைப் பார்த்துப் பார்த்து ஒரு வார்த்தையை வெளிவிட்டு… அடுத்து நம்மிடமிருந்து என்ன வருகிறது…? என்று தெரிந்து கொண்டு அதை வைத்துக் கொண்டு “ஒஹோ… நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்…” என்று சொல்வார்கள்.

அதையே குறிக்கோளாக இருப்பதால் அவ்வாறு அறிய முடிகின்றது. பிறருடைய உணர்வின் அதிர்வுகளை வைத்துச் சொல்லலாம்.

ஆனால் கஷ்டங்களையும் குறைகளையும் நுகர்ந்து சொல்லப்படும் போது அவர்கள் வாழ்க்கையும் பாழாகும். மந்திரங்களை வைத்துச் சொல்வோரும் இதே நிலையாகி அவர்களும் பாழாகும் நிலைக்கே செல்வார்கள்.

இருந்தாலும்… இந்த மனித உடலில் குறுகிய காலமே வாழ்கிறோம். நேரம் ஆகிவிட்டது என்று இராமன் மணலைக் குவித்துப் பூஜிக்கத் தொடங்கினான் என்று இராமாயணத்தில் அதைக் காட்டுகின்றார்கள்.

1.நாம் வளர வளர ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது… உடலின் தரமும் குறைகிறது.
2.அதற்குள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்..

உலக இருளை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக என்றுமே ஏகாந்த நிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.அதற்கு நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்
2.பகைமைகள் வந்தாலும் அது நம்மை இயக்காது (முதலில் சொன்னது போல்) நமக்குள் பகைமையாகாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வுகளை மாற்றி
3.நம் பார்வையால் மற்றவருடைய தீமைகள் அகன்று செல்லும் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

மற்றவரை நல்வழியில் இயக்கும் அந்த எலக்ட்ரானிக்காக நமக்குள் வலிமை பெற்று இந்த உணர்வு அவர்கள் உடலுக்குள் சென்று அவருடைய தீமையை அகற்றி நல் உணர்வாக மாற்றிடும் அந்த உயர்ந்த சக்தியாக நாம் பெறுதல் வேண்டும்.

அதாவது நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி நம் ஈர்ப்பு வட்டத்தில் இந்த உணர்வுகளை வலுவாக்கி அதைப் “பாதுகாப்புக் கவசமாக” நாம் அமைத்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானத்தில் சக்தி பெற்றாலும் அடிக்கடி மகரிஷிகளை நினைவுபடுத்தி அருள் ஞான சக்திகளை நாம் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஞானம் பெருகினால்
1.வாழ்க்கையில் ஓரளவுக்கு நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தீமையான உணர்வு நமக்குள் வளராதபடி தடுக்கவும்…
2.மீண்டும் இன்னொரு பிறவிக்கு வராதபடி தடைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்திற்கே நேரடியாக உயிர் நம்மை அழைத்துச் சென்றுவிடும்… இதை பார்க்கலாம்.

ஏன் இதைச் சொல்கிறோம் என்றால் இறந்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது…? என்று எண்ணுவார்கள்…! ஆனால் வாழ்ந்த காலத்தில் யார் மீது அதிகப் பற்று கொண்டார்களோ இறந்த பின் அவர் உடலுக்குள் இந்த ஆன்மா சென்றுவிடும்.

அங்கே சென்று அவர்களை ஆட்டிப் படைத்து தன் உடலில் பெற்ற அவஸ்தைகளை எல்லாம் அங்கே புகுந்த உடலில் வளர்த்து அதைப் பெருக்கிக் கொண்டே வரும்.

வேதனை என்ற விஷத்தை அதிகமாகச் சேர்த்ததால் அந்த உடல் மடிந்து வெளியே வந்த பின் அடுத்து பாம்பாகத்தான் உயிர் உருவாக்கும்.

அதே போல் தொழிலிலோ குடும்பத்திலோ கோபமாகப் பேசி வெறித்தனமாகச் செயல்பட்டிருந்தால் உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இதே உணர்ச்சிகளைத் தூண்டி அதை அங்கே முழுமையாக்கி வெளி வந்த பின் புலி உடலுக்குள் சென்று புலியாகத் தான் அடுத்து பிறக்க நேரும்..

ஆகவே இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நாம் எடுக்கக்கூடிய உணர்வுகள் கெட்டது என்று பார்த்தாலும்… அறிய நேர்ந்தாலும் அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமது ஆறாவது அறிவுக்கு உண்டு.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஒவ்வொரு நொடிப்பொழுதும்
2.நல்லதாக மாற்றி அமைத்துக் கொண்டே வரவேண்டும்.

குடும்பங்களில் பார்த்தால் பெண் குழந்தைகளை வளர்த்திருப்பவர்கள் என் பிள்ளைக்குக் கல்யாணமாகவில்லை… கல்யாணமாகவில்லை… என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்
1.“அந்த மாதிரி வார்த்தையே நமக்கு வரக்கூடாது…!”
2.பெண்ணைப் பார்க்க வந்தார்கள்… சென்று விட்டார்கள்… ஒன்றும் சொல்லவில்லை… அடுத்து என்ன ஆகுமோ…?
3.வந்து எல்லாம் பார்க்கிறார்கள்… ஆனால் போய் விடுகிறார்கள் என்ற இந்த எண்ணமே வரக்கூடாது.

என் பிள்ளைக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… பிள்ளை உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். திருமணம் ஆகி எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்.

அவர்களை நலம் பெறச் செய்யக்கூடிய சக்தி பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும் என்று இப்படி எண்ணினாலே போதுமானது.
1.இந்த உணர்வுகள் பிள்ளையின் உடலிலே பதியும்.
2.குழந்தையை எண்ணி நாம் இப்படித்தான் செயல்படுத்த வேண்டும்.

மாறாக… பெண்ணைப் பார்க்க வருபவர்கள் வருகின்றார்கள் போகின்றார்கள்… ஒன்றும் முடியவில்லை…! என்று வேதனைப்பட்டு… அடிக்கடி குழந்தையை எண்ணி இதே வேதனையை அங்கே பாய்ச்சினால் என்ன ஆகும்…?

ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்…! அதாவது “திருமணம் ஆகவில்லையே…” என்ற உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து… இதே உணர்வுகளைக் குழந்தைக்குப் பாய்ச்சும் பொழுது சலிப்படைந்த உணர்வுகள் தான் அங்கேயும் வளரத் தொடங்குகிறது.

1.அடுத்து நம் பெண்ணைப் பார்க்க யார் வந்தாலும்
2.இந்தச் சலிப்புக்குத் தக்கவாறு அவர்கள் குடும்பத்திலும் இதே உணர்வாக
3.பெண் கிடைக்கவில்லை… கல்யாணம் ஆகவில்லையே… என்ற சலித்த உணர்வுடன் வரக்கூடியவர்கள் இங்கே வந்து இணைந்து
4.இந்த இரு மனமும் ஒரு மனமாகித் திருமணம் ஆன பின் வருத்தமே மேலோங்கி
5. குடும்பத்தில் கணவன் மனைவி சந்தோஷத்தை இழக்கத்தான் நேரும்
6.இரண்டு பேரும் வெறுக்கும் உணர்வைத் தான் வளர்க்க முடியுமே தவிர ஒன்று சேர்ந்து வாழும் தன்மை இருக்காது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே எந்த நிலையாக இருந்தாலும் நம் பிள்ளைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; திருமணம் ஆகிச் செல்லும் பொழுது அங்கே மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்; செழித்த உணர்வுடன் வாழ வேண்டும்; வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்; அந்தச் சக்தி என் பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும் இப்படி எண்ணித்தான் நாம் திருமணம் நடத்த வேண்டும்.

நாம் எண்ணி எடுக்கும் இந்த உணர்வு… மூச்சலைகளாக வெளிப்படுத்துவது… சொல்லக்கூடிய வாக்குகள்… இவை அனைத்தும் நம் பிள்ளை உடலில் பதிந்து வளர்ந்து… திருமணமாகிச் செல்லும் போது “அங்கே ஒன்று சேர்ந்து வாழும் உணர்வாக… மகிழ்ந்து வாழும் சக்தியாக அமையும்…”

இதே போன்று… திருமணமாகக் கூடிய தம்பதிகளும் தங்கள் தாய் தந்தையரை எண்ணி
1.எங்களுடைய தாய் தந்தையின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.திருமணம் ஆகிச் செல்லும் இந்தக் குடும்பம் மகிழ்ந்து வாழ வேண்டும் நலமாக இருக்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்
4.என் பார்வை அந்தக் குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
5.அந்த சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் சஞ்சலமோ சலிப்போ சோர்வோ உடலிலே விளையாது…!

இதே மாதிரி… குழந்தைகள் பிறந்த பின் கல்வியிலே சிறிது குறைபாடுகள் இருந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்து அந்த உணர்வைக் குழந்தைக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

குழந்தை கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும்; அவனுக்கு நல்ல ஞாபக சக்தி கிடைக்க வேண்டும்… நன்றாகப் படிக்க வேண்டும்… என்று இதைத் திரும்பத் திரும்ப எண்ணிச் செயல்படுத்த வேண்டும்.

குழந்தை சரியாகப் படிக்கவில்லையே என்று
1.அவனுடைய சிந்தனையற்ற உணர்வை நாம் எண்ணாதபடி குழந்தை சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று எண்ணி எடுத்து
2.அவனிடம் – நீ நன்றாகப் படிப்பாய்… நீ சிந்தித்துச் செயல்படுவாய்… ஞாபக சக்தி உனக்குக் கிடைக்கும் என்று
3.இப்படித் தான் குழந்தையிடம் சொல்லிப் பழக வேண்டும்.

அதே சமயத்தில் கல்வியில் தேர்ச்சி இல்லை என்கிற போது “எப்போது பார்த்தாலும் நீ தோற்றுக் கொண்டே போகின்றாய்… இப்படியே சென்றால் எல்லாவற்றிலும் நீ தோற்றுத்தான் போவாய்…!” என்று இதைச் சொல்லிச் சொல்லி நாம் பேசிக் கொண்டிருந்தால்
1.இந்த உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்து நம்முடைய எண்ணங்களைப் பலவீனப்படுத்தி
2.நாம் எண்ணியபடி குழந்தையையும் செயலற்றதாகத் தான் அது மாற்றும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம் குடும்பமே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழச் செய்யும் அந்தப் பக்குவ நிலைக்கு வளர வேண்டும்.

நம்மால் அது முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பிறவி இல்லாத நிலை அடைந்தார்… ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நாம் நமக்குள் சேர்த்து இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கிக் கொள்ளலாம். இது நம் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக உள்ளவர்களுக்கு அருள் ஞானச் சக்கரம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி… அந்தச் சக்கரத்தை உற்றுப் பாருங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிகள் அந்தச் சக்கரத்திலிருந்து வரும்
2.நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… அது வளர ஆரம்பிக்கும்… உங்களுக்கு ஒரு தெளிவான மனது கிடைக்கும்.
3.இதனுடைய வரிசையில்… வளர்ச்சியாகி வரும் பொழுது நம் பிரபஞ்சமும் தெரியலாம்…
4.நமக்கு வழிகாட்டக்கூடிய மகரிஷிகள் யார்… யார்…? என்றும் நிச்சயமாகத் தெரிய வரும்.

தெரிய வரும் என்று இப்போது சொன்ன பின்… “எனக்குத் தெரியவில்லையே…!” என்று எண்ணத்திற்கு நீங்கள் போகக்கூடாது.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி “துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்…” என்ற உணர்வை மட்டும் நீங்கள் செலுத்தி அதை நுகர்ந்து கொண்டு வந்தாலே போதுமானது.
1.இது உங்களுக்குள் வளர்ச்சியாக…
2.தன்னாலே அந்த உண்மைகளை… நீங்களே அறிய முடியும்

ஒரு விதையை மண்ணிலே ஊன்றி.. அது முளைத்து வளர்ச்சியாகி வருவதற்கு முன்னாடியே அதிலே பூவைக் காணோம்… காயைக் காணோம்… கனியைக் காணோம்… வித்தைக் காணோம்…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் சரியாக வருமா…!

காரணம்… எத்தனையோ கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி அடைந்த பின் தான் மனிதனாக இப்போது வந்திருக்கின்றோம். மனிதனாக வாழும் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு உணர்வுகளுக்குள்ளும் இணை சேர்க்க வேண்டும்.

1.எல்லா உணர்வுகளிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான்
2.அதை ஈர்க்கும் ஆற்றலும்… அந்த நினைவின் ஈர்ப்பும் வருவதற்காக
3.ஒரு மூன்று வருட காலம் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி அருள் ஞானச் சக்கரமாக உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை உங்கள் பூஜை அறையிலோ அல்லது உங்களுக்கு வசதியாகப் பார்க்கக்கூடிய இடங்களிலே அதை அமைத்துக் கொண்டு எங்கே வெளியே சென்றாலும் சரி… அதற்கு முன் நின்று பிரார்த்தனை செய்து.. அடுத்து உங்கள் காரியங்களைச் செயல்படுத்திப் பாருங்கள்.

குழந்தைகளுக்குக் கல்வியாக இருந்தாலும் சரி… வியாபாரமோ தொழிலாக இருந்தாலும் சரி… அல்லது குடும்ப சம்பந்தமாக இருந்தாலும் சரி… எல்லாமே நலமும் வளமும் பெற வேண்டும்… எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்துங்கள்.

எந்தக் காரியமாக (நல்லது) இருந்தாலும் சரி… “அது ஜெயமாக வேண்டும்” என்ற உணர்வை மீண்டும் மீண்டும் வலுப்பெறச் செய்யுங்கள்… மன உறுதி கிடைக்கும். உங்கள் சொல் கேட்பவர்களுக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியூட்டும்.

1.எப்படியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான்
2.அருள் ஞானச் சக்கரம் (நினைவுச் சின்னமாக) கொடுக்கின்றோம்.

நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… குரு அருள் அவர்கள் பெற வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.அவரவர்கள் தனித்து நீங்கள் எண்ணினாலும் எல்லோருமே இப்படி எண்ணும் பொழுது
2.இது ஒரு பெரும் கூட்டமைப்பாக… ஏகமாக அமைகின்றது.

நண்பனுக்கு நண்பன் உதவி செய்தான் என்று எண்ணினால் விக்கல் ஆகிறது… துரோகம் செய்கின்றான் தொல்லை கொடுக்கின்றான் பாவி என்றால் புரையேறுகின்றது.

இதைப் போன்று இந்த அருள் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று சக்கரத்தைப் பார்த்து இந்த நினைவை இந்த உணர்வைச் செலுத்தினால் அனைவருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்கக்கூடிய தகுதி உருவாகின்றது.

குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் அது கிடைக்கின்றது குடும்பத்தில் ஒன்று சேர்ந்து வாழவும் மகிழ்ச்சியான உணர்வுகளை வளர்க்கவும் எதுவாகிறது.

நாம் குடியிருக்கும் தெரு மக்கள் நன்றாக இருக்க வேண்டும்… நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் வேலை செய்வோர்… எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்… அவர் குடும்பம் நலம் பெற வேண்டும்.

அதே போன்று இந்த ஊரும்… உலக மக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இப்படி வரிசைப்படுத்தி எண்ண வேண்டும்.

ஏனென்றால் எல்லோருடைய உணர்வுகளும் ஏதோ ஒரு வகையில் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
1.அவர்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும்… அவர் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று
2.இந்த உணர்வைச் சேர்க்கச் சேர்க்க… நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொன்றையும் அரவணைக்கும் சக்தியாக வளர்கின்றது
3.வெறுப்பின் தன்மை மாறுகின்றது… பேரானந்த நிலை கிடைக்கிறது.

கூட்டாகத் தியானம் செய்யும் போது இதை எல்லாம் எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

அதே சமயத்தில் நம் வீட்டிலும் சரி அல்லது வேறு எங்கு தியானம் செய்தாலும் அந்த ஒளி அலைகள் அங்கிருக்கக்கூடிய வீட்டின் சுவரிலே பதிகின்றது. நம் வீட்டிற்குள் மகிழ்ச்சி பெருகுகின்றது.

உதாரணமாக வேலை நிமித்தம் நாம் வெளியிலே சென்றாலும் சந்தர்ப்பவசத்தில் சண்டையிடுவோரையோ வேதனைப்படுவோரையோ பார்த்துவிட்டுத் தான் வீட்டுக்குள் வருகின்றோம்.
1.களைப்பாக வந்தவுடனே “உஸ்ஸ்… அப்பா…” என்று சோர்வடையப்படும் போது
2.அடுத்து அந்த சண்டையிட்ட வேதனைப்பட்ட உணர்வுகள் பிறிதொரு மூச்சலைகள் இங்கே நமக்குள் இயக்கமாகின்றது.

ஏனென்றால்…
1.திறந்த வெளியில் இருப்பது வேறு… அந்த சொல் வேறு விதமாக இருக்கும்
2.ஒரு வீட்டிற்குள் அடைப்பட்ட இடத்திலே வெளிப்படுத்தும் போது… இந்த சொல் அதனுடைய ஒலி (ECHO) வித்தியாசமாக வரும்.

அதாவது வீட்டின் சுவர்களில் கட்டிடங்களிலே பாய்ந்து தான் இந்த உணர்வு (சொல்லின் ஒலி) வெளி வருகின்றது. சோர்வடைந்தது… வேதனைப்பட்டது… அது போன்ற தீமை செய்யும் உணர்வுகள் வீட்டின் சுவரில் இருந்தால் அது நம்மை அதன் வழிக்கே இழுத்துச் சென்றுவிடும்.

அதை மாற்ற வேண்டுமல்லவா…!

ஆகவே ஏற்கனவே பதிவான அந்தத் தீமையோ வேதனையோ கோபமோ அதை மாற்றி அமைக்க
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த வீடு முழுவதும் படர வேண்டும் என்று நாம் பரப்பியே ஆக வேண்டும்
2.இவ்வாறு செய்யச் செய்ய பேரானந்தப் பெரு நிலையாக வாழக்கூடிய
3.அந்த உன்னதமான நிலையை உணர முடியும்…!

செய்து பாருங்கள்.

விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி

 

விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமா…!
1.உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்தச் சுவைக்கொப்ப ஜீவ அணுவாக மாறி
2.அதனதன் எண்ணங்களை இயக்குகின்றது என்பது காவியத்தின் முக்கியத் தொகுப்பு.
3.அதாவது எந்தச் சுவையோ “அதைப் போல் ஜீவ அணுக்களாக” உயிர் உருவாக்குகின்றது என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.

நட்சத்திரங்களுடைய சக்திகள் பூமியில் மண்ணுடன் கலந்து புவியின் ஈர்ப்பால் சிறுகச் சிறுக விளைந்து வைரமான பின் வெடித்துத் தனித்தன்மையாக வெளிவந்து விடுகிறது.

அதைப் போல் நம் உயிரால் உருவாக்கப்பட்ட ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது
1.அறிவின் வளர்ச்சி அறிந்திடும் வளர்ச்சி இங்கே வருகின்றது.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அதற்குள் பொருள் தெரிவது போல நமது ஜீவணுக்களின் துணை கொண்டு
3.நம் கண்ணின் வளர்ச்சி கொண்டு அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்களுடைய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக மாறி பூமியிலே பட்டபின் சிறுகச் சிறுக வைரமாக விளைகிறது. அது ஜீவ அணு அல்ல… ஒளியின் உடலாகப் பெறுகின்றது… நட்சத்திரம் எப்படி மின்னுகின்றதோ அதைப் போல.

நமது உயிரோ “மின்னணு” போன்று அது இயங்கிக் கொண்டே இருக்கின்றது அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின்னணுவின் துணை கொண்டு இயங்குகின்றது.

எப்படி மின் நிலையத்திலிருந்து வரும் மின்சாரத்தை நம் வீட்டிற்குள் எந்தெந்த இணைப்புகளுடன் சேர்க்கின்றோமோ அந்த மின் அணுக்கள் அதை இயக்கி அதன்வழி நாம் பயன்படுத்துகின்றோமோ இதைப் போல
1.சூரியன் இயக்கத் தொடரில் நாம் வளர்ந்தாலும் நம் உயிரே சூரியனின் தொடர்பு கொண்டு தான் அதுவும் இயங்குகின்றது.
2.நாம் எப்படி ஊருக்கு ஒரு சப்ஸ்டேசனை வைத்திருக்கின்றோமோ அதைப் போன்று நமது உயிரும் அந்த நிலை பெறுகின்றது.
3.சூரியன் துணை கொண்டு அந்த மின் கதிர்கள் உடலில் உள்ள அணுக்களை அது இயக்குகின்றது.

இருப்பினும் பல உணர்வின் தன்மையை அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டு மனித உடலில் வந்த விஷத்தை வென்றவன் அகஸ்தியன்.

அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனதாகி அருள் மணம் பெற்று… உயிரைப் போன்றே உயிரணுக்களை வளர்த்து “விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று” ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது, அதனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்டு அந்த விஷங்கள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.

அந்த வைரத்தை நாம் உட்கொண்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும்… அவ்வளவு கடுமையான விஷம்.
1.ஆனால் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாகக் காண முடிகிறது… வெளிச்சமாகத் தெரிகின்றது.
2.இதைப் போன்று தான் விஷத்தை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக துருவ நட்சத்திரம் இருக்கின்றது.

விஷமே உலகை இயக்குகின்றது. சூரியன் இயங்குகிறது என்றால் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பத்தின் தன்மை கொண்டு அது இயக்குகின்றது.

நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால் தான் துடிப்பின் தன்மை ஏற்பட்டுக் கொண்டுள்ளது. இதைப் போல் ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

1.ஆறாவது அறிவால் ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அந்தப் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டால் நாமும் இந்த விஷத்தை ஒளியாக மாற்ற முடியும்.

இருந்தாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் பெறுவது என்றால் மிகவும் கடினம். “குருவின் துணை…” இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.

1.நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடிந்தது.
2.நமது குரு அந்த விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
3.ஆகவே தான் உங்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படிச் செய்து…
4.விஷத்தை ஒளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்..

நாம் ஒவ்வொரு நாளும் ”உயிரின் முகப்பில்” ஈர்க்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பில்… உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது… அதாவது
1.என் குரு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது
2.நாம் அனைவரும் “ஒளியின் சரீரம்” பெறும் தகுதி பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கணவர் பெற வேண்டும்… என் மனைவி பெற வேண்டும்… அவர் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும்; எங்கள் இரு மனம் ஒன்றாக வேண்டும்; இரு உயிரும் ஒன்ற வேண்டும்; இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; அருள் ஞான சக்தி எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் என்று இருவருமே “தினமும் ஒரு பத்து நிமிடமாவது” ஒருவருக்கொருவர் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.இரவு முழிப்பு வரும் பொழுதெல்லாம் இதைப் போன்று செய்ய வேண்டும்
2அதே சமயத்தில் இரவு படுக்கும் போது எண்ணிவிட்டு உறங்கச் சென்றிருந்தால் காலையில் நான்கு மணிக்குத் தன்னாலே விழிப்பு வரும்.
3.நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் நிச்சயமாகத் தட்டி எழுப்பும்… உங்களை அறியாமலே அந்த முழிப்பு வரும்.

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

ஆண்கள் தங்கள் மனைவிக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும் பெண்கள் தங்கள் கணவருக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும் “அவசியம்” எண்ண வேண்டும்.

அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் குரு அருள் அவர் பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் அவர் பார்வையில் மற்றவர்கள் இருளைப் போக்கும் சக்தியாக அந்த உயர்ந்த சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும்.

1.அவர் பார்ப்பவர் எல்லாம்… அவரைப் பார்ப்போர் எல்லாம்… நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று
2.இப்படிக் கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் இந்த உணர்வைப் பாய்ச்சி பழகுதல் வேண்டும்.

மற்றதை அதிகமாக எண்ண முடியவில்லை என்றாலும் இப்படி எண்ணினாலே போதுமானது.

அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும்… செயலிலே புனிதம் பெற வேண்டும்… அவரைப் பார்ப்போர் எல்லாம் அந்தப் புனித நிலை பெற வேண்டும் என்று கணவன் மனைவிக்கு எண்ணுவதும்… மனைவி கணவனுக்கு எண்ணுவதையும்… இரண்டு பேருமே ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்

1.காலையில் எழுந்து அடுத்த வேலைகளைச் செய்யும்போது ஒரு ஆனந்தமான நிலை ஏற்படும்.
2.உங்கள் வீட்டில் இந்த உணர்வுகள் பாய்ந்து பளீர்… பளீர்..ர்ர்… என்று வெளிச்சங்கள் வரும்… வீட்டுக்குள்ளே ஒரு விதமான வெளிச்சம் வரும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் பொழுது
1.அந்த அலைகள் வீட்டிற்குள் பட்ட உடனே மோதி இருளை நீக்கி
2.பளீர்..ர்ர்… என்று வெளிச்சமாகத் தெரிய வரும் பார்க்கலாம்…!
3.உங்கள் மூச்சலைகள் பட்டு அத்தகைய நிலை ஏற்படுகின்றது.

சூரியன் தான் வெளிப்படுத்தக்கூடிய பாதரசத்தால் மற்ற நிலைகள் அருகில் வரும் போது அதிலே மோதி விஷத்தைப் பிரித்து விட்டுப் பளீர்… என்று இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக ஆக்குகின்றது.

இதே மாதிரித் தான்
1.கணவன் மனைவி இருவருமே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து ஒருவருக்கொருவர் பாய்ச்ச…
2.அந்தச் சக்தி தீமைகளில் மோதியவுடன் விலகிப் போகும்.
3.உங்களுக்குள் வெளிச்சங்கள் தோன்றும்… புது விதமான மகிழ்ச்சி இருவருக்குமே ஏற்படும்.

அனுபவத்தில் நீங்கள் இதைத் தெரிந்து கொள்ளலாம்…!

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும் பொழுதும் சரி… இரவு படுக்கைக்குச் செல்லும் போதும் சரி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இருவருமே எடுத்து ஒருவருக்கொருவர் பாய்ச்ச வேண்டும்.

இப்படி இருவருமே செய்து வந்தால்
1.உங்களுக்கு உபதேச வாயிலாக யாம் பதிவு செய்யும் ஞான வித்திற்கு
2.சக்தியை (சத்தை) ஊட்டிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

இந்த அருள் ஞானப் பயிர் உங்களுக்குள் வளர வளரப் பேரருள் பேரொளியாக நீங்கள் இருவருமே மாறுவீர்கள்.

குறைகளையும் துன்பங்களையும் பற்றி எத்தனை முறை எண்ணினாலும் நமக்கு அதனால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை

 

ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள்…! அதாவது
1.தன்னிச்சையாகவே… நாம் பார்க்கும் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று
2.நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணத்தை எடுத்துக் கொண்டால் “செய்யும் தொழிலே தெய்வமாகின்றது…”

நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் “பிறர் நலம் பெற வேண்டும்” என்ற அக்கறையே நமக்குள் வளர்கின்றது. இதிலே சுயநலமும் வருகின்றது… அதிலே பொது நலமும் கலக்கின்றது. இரண்டு உணர்வும் சேர்க்கின்றது.

உதாரணமாக நாம் சமையல் செய்யும் பொழுது அரிசியை எடுத்துத் தூய்மைப்படுத்தித் தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்தாலும் அதிலே “ஒரு கல்” வந்து விடுகிறது.

இதைப் போல வாழ்க்கையில் சில நேரங்களில் குறைபாடுகள் வந்துவிடும்.
1.அத்தகைய நிலை வந்தாலும் “அந்த உணர்வு நம்மை இயக்கி விடாதபடி” உடனே ஆத்ம சுத்தி செய்து
2.அத்தகைய உணர்வுகளைச் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் உங்கள் வாழ்க்கைப் பயணம் பகைமை வராதபடி அருள் உணர்வைப் பெருக்கிடும் அருள் வாழ்க்கையாக அமையும். இந்த உடலுக்குப் பின் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே அழைத்துச் செல்லும்.

ஆனால் வாழ்க்கையில் வரும் குறைபாடுகளையே அதிகமாக எண்ணி வளர்த்துக் கொண்டால் எவர் உணர்வு நமக்குள் அதிகமாகின்றதோ இந்த உடலுக்குப் பின்… உயிர் அந்த உடலுக்கு அழைத்துச் செல்லும்.

அங்கே சென்று பேயாக மாற்றும்… நோயாக மாறும். பின் அந்த உடலை விட்டு வெளிவந்த பின் விஷத்தின் அளவுகோலுக்கொப்ப மனிதரல்லாத உடலை உருவாக்கி விடும்… இதே உயிர் தான்.

ஆகவே உயிரை நாம் மதித்துப் பழக வேண்டும்.
1.ஆனால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது…
2.அதைத்தான் உடலாக்குகின்றது… அதைத்தான் ஆளுகின்றது.
3.எண்ணும் பொழுது அதன் வழியாகவே வருகின்றது.

அதாவது… உடலான மணமே நமக்குள் எண்ணமாகி அந்த எண்ணத்தின் உணர்ச்சியே வாழ்க்கையின் செயலாகவும் மாறிக்கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிய அருள் உணர்வை நமக்குள் ஏங்கிப் பெற்று அதை வளர்த்துக் கொண்டால் இன்றைய உலகில் பரவி வரும் விஷத்தன்மை நமக்குள் கவராது மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்கு ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

பத்திரிகையைப் படித்தாலும் சரி… மற்றவைகள் மூலம் உலக நடப்புகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டாலும் சரி…! அறிந்து கொண்ட தீமை நமக்குள் வளராதபடி “மனத்தூய்மையை” நாம் செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.

அப்படிச் செய்தோம் என்றால்
1,நம் வாழ்க்கையில் அந்தக் கணக்குப்படி நமது உயிர் ஜட்ஜ்மெண்டாக தீர்ப்பாக
2.நம்மைப் பிறவி இல்லாத நிலை அடையச் செய்யத் தீர்ப்பளிக்கும்.

அதிலே நாம் தவறினால் விஷத்தன்மை சூழ்ந்துவிடும்… ஏனென்றால் அது வலிமையானது. அந்த உணர்வின் அடிப்படை வளர்ந்து விட்டால் அதனின் தீர்ப்பாக உயிர் மீண்டும் பிறவிக்குக் கொண்டு வந்துவிடும்.

ஆனாலும் இன்றைய விஞ்ஞான உலகம் விஷத் தன்மை வாய்ந்ததாக இருப்பதால் மீண்டும் “மனிதனாக வருவதற்குப் பல காலமாகும்…”
1,நல்ல நினைவு இருக்கும் போதே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
2.அந்த அருள் உணர்வை இப்பொழுதே வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் கண்ட பேருண்மைகளை உங்களுக்கு எத்தனையோ உபதேசங்கள் வாயிலாகக் கொடுத்து (சுமார் 30 வருடங்கள்) அதைத் தெளிவாகவே உணர்த்திக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இருக்கக்கூடியவர்களுக்கு… ஒவ்வொரு இடத்திலிருந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எம்மைச் சந்திக்க வருபவர்களுக்கு… உபதேசங்களைக் கொடுத்துள்ளோம்.

இதையெல்லாம் ஒலிப் பதிவு செய்து வைத்துள்ளார்கள்
1.அது எல்லாவற்றையும் நீங்கள் சேகரித்து ஒவ்வொன்றாகக் கேட்டு…
2.உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் அந்த முழுமை கிடைக்கும்.

எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மொத்தமாகச் சொல்ல முடியுமோ…?

ஆகையினால் அந்தந்தப் பகுதிகளிலே உபதேசமாக யாம் கொடுத்ததை நீங்கள் எடுத்து… ஒவ்வொருத்தருக்கும் யாம் சொன்னதை நீங்கள் திரும்பக் கேட்டால் முழுமை கிடைக்கும்.

ஏனென்றால் எம்மைச் சந்திக்க வருபவர்களுக்கு
1.அந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் சிறு சிறு மாற்றங்கள் இருக்கும்
2.இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கும் பொழுது சில வித்தியாசங்கள் இருக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் இணைந்து அங்கே மாறும். எதெனதன் தொடரில் எது எது மாறுகின்றது…? என்பதைத் தான் நினைவுபடுத்தி அந்த ஞானிகள் உணர்வை எப்படி அதிலே இணை சேர்த்துக் கொண்டு வர வேண்டும்…? என்று இப்போது தெளிவாகவே சொல்லி வருகின்றோம்.

இதையெல்லாம் கேட்டு…
1.சாமி அவருக்கு ஒரு விதமாகச் சொல்லி இருக்கின்றார்…
2.நமக்கு வேறு விதமாகச் சொல்லி இருக்கின்றாரே…! என்று நீங்கள் எண்ண வேண்டியது இல்லை.

ஆனால் அதற்காக வேண்டி எல்லோரையும் கூப்பிட்டு ஒரே இடத்தில் எத்தனை பேரை… எவ்வளவு நேரம் உட்கார வைத்து… எத்தனை நாள் இதைச் சொல்வது…?

அது சாத்தியமல்ல…!

அந்தந்தச் சந்தர்ப்பத்தில் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்து உணர்வுகள் ஒலி அலைகளாக மாற்றி அலைகளாகப் பரவச் செய்கிறோம்.

உங்களுக்குள் பதிவானதன் மூலமாக மெய் ஞானிகள் உணர்வுகளைப் பருக வேண்டிய பக்குவ முறைகளையும் தெளிவாகக் கொடுக்கின்றோம்
1.அப்பொழுதுதான் அதை உங்களுக்குள் ஏற்கும் பருவமும்
2.அதனை வழி நடத்திச் செல்லும் பக்குவ முறைகளும் வளரும்.

எனக்கு குருநாதர் இப்படித்தான் ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டு வந்தார். காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று செடியைக் காண்பித்து “இந்தப் பச்சிலை பேசுமாடா…?’ என்று கேட்பார்…!

“பேசும்…” என்று நான் சொன்னால் அது எப்படிடா பேசும்…? என்று என்னை திரும்பப் பிடிப்பார். வினாக்களை எழுப்பி எழுப்பி… எல்லாவற்றிலும் எல்லா வகைகளிலும் உண்மையை நான் அறியும்படி செய்வார்.

ஒரு இடத்தில் புலி செத்துக் கிடக்கின்றது. அதைப் பார்த்து “இது என்னடா செய்யும்…?” என்று கேட்பார்.

இந்தப் புலி எதைக் கொன்று தின்றதோ அங்கே போய்ப் பிறக்கும் என்று சொல்வேன்.

அது எப்படி…? நீ சொல்…! என்பார். புலி செத்து விட்டது… இந்த உடலில் சேர்த்த சத்தெல்லாம் எங்கே போனது…? என்பார்.

காற்றிலே சென்று விட்டது என்று சொல்வேன்.

காற்றிலே போன பிற்பாடு என்ன ஆகின்றது…? என்று விளக்கம் கேட்பார்.

இரண்டு பேருக்குமே இந்தப் பேச்சு வார்த்தை இப்படியே வளர்ந்து கொண்டே போகும். முழுமையாக அறியும் வரை விடமாட்டார்.

குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றாலும் அங்கே சரியான உணவு இல்லை… குடிப்பதற்கு நீர் இல்லை… சில நேரம் நடந்து செல்லக் கூட முடியாது.

இப்படி…
1.எத்தனையோ எதிர்மறையான சிக்கல்களில் குருநாதர் என்னைக் கொண்டு மாட்ட வைத்து
2.அதிலிருந்து மீண்டு வருவதற்கு உண்டான உபாயங்களைக் காட்டி
3.அவர் சொன்ன வழியில் நான் அதைப் பின்பற்றி நடந்து
4.அதிலே அனுபவ வாயிலாகப் பெற்ற பேருண்மைகளைத் தான்
5.அந்தந்தச் சந்தர்ப்பத்தில் எம்மைச் சந்திக்க வருபவர்களுக்கு உபதேசமாக வெளிப்படுத்தியது.

ஆகையினால் அவ்வப்பொழுது வெளிப்பட்ட அந்த உபதேசக் கருத்துக்களை – எல்லாவற்றையும் நீங்கள் முழுமையாகக் கேட்க வேண்டும். குருநாதர் எனக்குள் முழுமையாகக் கொடுத்தது போன்று நீங்களும் அந்த முழுமை பெற வேண்டும்.

எல்லா உபதேசங்களையும் நீங்கள் கேட்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

இன்று உலகில் நடப்பதெற்கெல்லாம் மனிதனின் எண்ணமே மூலமாக இருக்கின்றது

 

இன்று உலகில் போர்கள் நடந்து கொண்டுள்ளது. சிந்திக்கும் ஆற்றல் மறைந்து கொண்டுள்ளது.
1.நல்ல செய்திகளைக் கேட்க முடியவில்லை.
2.அன்பும் பண்பும் அரவணைப்பும் மறைந்து வருகிறது.

பண்டைய கால மனிதர்கள் விலங்குகளைப் போல் வாழ்ந்தது போன்று இன்று நாம் நகரில் வாழ்ந்தாலும் “காட்டில் வாழ்வது போல் தான் இருக்கிறது…”

ஒருவருக்கொருவர் கொல்லும் உணர்வே வளர்ந்து கொண்டிருக்கின்றது. அத்தகைய தீமையான நிலைகளை அகற்றிடும் சக்தி எங்குமில்லை.
1.எந்த மதக் கடவுளும் அதைக் காக்கவில்லை.
2.இன்றைய உலகில் கடவுளாக வணங்கி வரும் எந்தக் கடவுளும் தீமை செய்பவர்களுக்கு நல்ல போதனையைக் கொடுக்கவில்லை.

நாம் எண்ணிய உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயலே தான் நமக்குள் நடக்கின்றதே தவிர “மனிதனுடைய எண்ணம் தான் இதற்கு மூலமாகிறது…”

எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது. அந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது… அதன் வழியே செயலும் நடந்து கொண்டிருக்கிறது.

தனித்து ஒரு கடவுள் இல்லை…!

1.நாம் எண்ணும் உணர்வுகளில் எத்தகைய தீமைகளை நாம் செய்கிறோம் என்று நம் உயிர் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கும்.
2.அதே சமயத்தில் எந்த வகையில் எந்தெந்தத் தீமைகளை நீக்கினோம் என்று அந்தக் கணக்கையும் உயிர் வைத்துக் கொண்டே இருக்கும்.

ஆக மொத்தம் முடிவில் நமக்கு ஜட்ஜ்மெண்ட் – தீர்ப்பு கூறுவது நம் உயிர் தான். எதன் கணக்காகின்றதோ…
1.நீ இவ்வளவு செய்தாய்… அதற்குண்டான உடலை நீ பெறுவாய்… அதனை நீ அனுபவித்துப் பார்…! என்று தீர்ப்புக் கூறி
2.அதன் வழி அடுத்த வாழ்க்கை தொடர்கின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தின் மூலம் தீமையை அகற்றிடும் அருள் சக்திகளைப் பெற்றுப் பழகி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறருடைய கஷ்டமோ துன்பமோ துயரமோ அதை உற்றுப் பார்த்து அவர்கள் சொல்வதைக் கேட்டு நுகர்ந்திருந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் இயக்கிடாது தடைப்படுத்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி இப் பிறவியில் வரும் இருளை அகற்றி… “உயிருடன் ஒன்றி ஒளி என்ற உடலைத் தான் பெறுவோம்…” என்று உறுதிப்படுத்துங்கள்.

1.எந்த நிலையிலும் இந்த உடலை விட்டுத் தான் உயிர் செல்கிறது.
2.செல்லும் பொழுது இந்த உடலில் எதைச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க மாற்று உடலை உருவாக்குகின்றது உயிர்.
3.உணர்வுக்கொப்ப உடலை உயிர் மாற்றுகின்றது என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் ஏற்கனவே பல முறை உபதேசித்துள்ளேன்.

ஆகவே குரு வழியில் நமக்குள் அருள் சக்தியினைக் கூட்டித் தீமை புகாது தடுத்து… நாம் பார்ப்போருக்குத் தீமை என்று உணர்ந்தால் அது வராது தடுத்து வேதனைப்படும் உணர்வுகளிலிருந்து அவரை நாம் மீட்டு… அவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞானத்தை நாம் பெறவே இந்தத் தியானத்தை அமைத்துள்ளோம்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கும் பொழுது “நீங்களும் அதன் வழியில் அதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்…”

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தியைப் பெற்று அதன் வழியில் உங்கள் உடலில் தீமை அகற்றிடும் சக்தியாக அத்தகைய உறுப்புகளாக மாற்றி ஓர் தெளிந்த மனம் பெறும் சக்தி பெறுவீர்கள்.

1.வரும் இருளை அகற்றி… இந்த வாழ்க்கையை ஒரு புனிதப் பயணமாக வைத்து
2.இந்த வாழ்க்கைக்குப் பின் என்றும் ஏகாந்த நிலையாகப் பகைமையற்ற நிலையில்
3.பிறிதொன்று நம்மைக் கவர்ந்திடாத நிலையை அடையச் செய்யும் மார்க்கம் தான் “நமது குருநாதர் காட்டிய அருள் வழி…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குழந்தைகளை மட்டும் “வாடா…” என்று கொஞ்சம் நீங்கள் அதட்டிக் கூப்பிட்டுப் பாருங்கள். அவன் முறைத்துக் கொண்டு நிற்பான். ஆனால் “வாடா கண்ணு…!” என்று அன்புடன் அழைத்துப் பாருங்கள்… இணங்கி உங்களிடம் வருவான்.

இந்த இரண்டு உணர்வுகளுக்கும் உண்டான வித்தியாசம்… சந்தர்ப்பங்கள் அதனுடைய அழுத்த உணர்வுகள் ஆகப்படும் பொழுது… எந்த நிலையில் இயக்குகிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது…
1.ஒன்றுடன் ஒன்று மோதும் போது (+/-) லைட் எரிகின்றது.
2.மாற்று உணர்வுகள் இணையும் போது சப்தம் (கர்ர்ர்…”) வருகின்றது.

மின்சாரம் ஒரே சீராக வந்து கொண்டிருந்தாலும் திடீரென்று அதிலே எதிர்மறையான “எர்த்” வந்தால் அத்தகைய சப்தங்கள் வருகிறது. (இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்).

இந்த இயக்கத்தின் நிலைகள் இது எல்லாம் இயற்கை.

ஆனாலும் இயற்கையில் வருவதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு. அது தான் முருகு…! மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன்… பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…!

1.ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக மாற்றி அமைக்கக்கூடிய…
2.அதை உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவன் மனிதன் என்று காட்டுகின்றார்கள்
3.அதனால் தான் ஆறாவது அறிவு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று காட்டுகின்றார்கள்.

விமானம் மேலே பறக்கிறது என்றால் காற்றழுத்தத்தின் தன்மை கொண்டுதான் அது இயங்குகின்றது. இருந்தாலும் அதிலே சுழலக் கூடிய இயந்திரத்தில் ஒரு பின்னை (PIN) எடுத்து விட்டால் போதும்… எல்லாமே தீர்ந்துவிடும்.

1.ஒவ்வொரு பொருளிலும் சில நுண்ணிய அலைகளை வைத்துத் தான் அதனுடைய இயக்கங்களே சீராக இருக்கின்றது.
2.அதே மாதிரி அந்த நுண்ணிய அலைகளை வைத்து நமக்குள் மாறி வரும் உணர்வின் அழுத்தங்களைச் சீராக்க முடியும்.

இதை எல்லாம் நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்வது.

ஏனென்றால் நாம் எல்லோரும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் விஷ்ணு தனுசு. இந்த வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ஒவ்வொன்றையும் அதை வைத்து மாற்றி அமைக்க முடியும்.

1.சந்தர்ப்பங்கள் தான் நம்மைக் குற்றவாளியாக ஆக்குகின்றது
2.சந்தர்ப்பங்கள் தான் நம்மைக் கோபக்காரனாகவும் ஆக்குகின்றது
3.சந்தர்ப்பங்கள் தான் நம்மை வேதனைக்கும் உள்ளாக்குகின்றது.

ஆக இப்போது நாம் எந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்…?

தீமைகளை எல்லாம் அடக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் விஷ்ணு தனுசு. ஆனால் என்னை இப்படிப் பேசுகின்றான்… திட்டுகின்றான்… வேதனைப்படுத்துகின்றான்…! என்ற அந்த உணர்வு தாக்கி அதை நாம் எடுத்தால் சிவ தனுசு. மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டும்.

உதாரணமாக… உதவி செய்கின்றார்கள். ஆனால் சந்தர்ப்பம் பணத்தை வாங்கியவரால் அதைத் திரும்பக் கொடுக்க முடியவில்லை. அதனால் சண்டையிடுகின்றார்கள்.
1.ஆனால் நம்மிடமோ தவறு இருக்கின்றது
2.பணத்தைக் கொடுத்தோம்.. உதவி செய்தோம் என்று உண்மையைச் சொல்ல வருகின்றார்கள்.

பார்…! அன்று பணம் இருக்கும் போது எல்லோருமே என்னிடம் வாங்கிச் சாப்பிட்டார்கள். ஆனால் இன்று அடுத்தவருடன் சேர்ந்து கொண்டு என்னை மிகவும் கேவலமாகப் பேசுகிறார்கள்… என்று சொல்கிறார்.

உணர்வு அந்த இடத்தில் அழுத்தமாக வரும் போது இங்கேயும் தூண்டுகிறது. அவர்களும் வேண்டியவர்கள் தான்… இவர்களும் வேண்டியவர்கள் தான்… அவர்களும் உதவி செய்தவர்கள் தான்… இவர்களும் உதவி செய்தவர்கள் தான்

ஆனால் குற்றம் இங்கே இருக்கப்படும் பொழுது அதை வெளிப்படுத்த முடியாதபடி இந்த உணர்வு செல்லும் போது அங்கே எதிர்மறையாகிறது
1.இருவர் மத்தியிலும் சிக்கிக் கொண்ட பின்… அந்தச் சந்தர்ப்பம்
2.ஒருவரை ஆதரிக்கும் பொழுது ஒருவரிடம் நாம் குற்றவாளியாக மாறி விடுகின்றோம்.

இதைப் போன்று இந்த உணர்வுகள் வாழ்க்கையினுடைய சந்தர்ப்பங்கள் பெரிய குற்றவாளியாக அந்த இடத்தில் நம்மை உருவாக்கி விடுகின்றது.

அன்று உதவி செய்தேன்.. ஆனால் இப்போது இப்படிச் செய்கின்றானே…! என்று “ஆவேசம்” வரும். நாம் இட்ட உணர்வுகள் நேருக்கு நேர் ஆனவுடன் இந்த ஆவேச உணர்வு நமக்குள் வந்து அடுத்தடுத்து வரப்படும் பொழுதெல்லாம்
1.நம்முடைய நல்ல செயல்களை மாற்றிக் கொண்டே வரும்
2.நல்லவைகளைப் பற்றிச் சிந்திக்கும் உணர்வு வராது
3.குற்ற இயல்புகளுக்கே கடைசியில் அழைத்துச் சென்று விடுகின்றது.

இந்த ஆவேசம் ஒவ்வொன்றையும் தடைப்படுத்துகின்றது. எதையாவது ஒரு பொருளை எடுத்துப் பக்குவமாகச் செயல்படுத்த வேண்டும் என்றாலும் உடனடியாக இந்த ஆவேசம் தான் வரும்.

ஆனால் என்ன சொல்கின்றார்…? ஏது சொல்கின்றார்…? என்று சிந்திக்கும் தன்மையை அங்கே இழக்கச் செய்யும். இது எல்லாமே சிவ தனுசு.. ஒவ்வொருவர் மேலும் வெறுப்பு தான் வரும்.
1.யார் மீது இந்த வெறுப்புகள் அதிகமாக (முழுமையாக) ஆனதோ
2.புவியின் ஈர்ப்புக்கே (பற்று) வருகின்றோம்

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான்… வாழ்க்கையே தியானமாக்க வேண்டும் என்று சொல்வது.

வாழ்க்கையில் எந்த நிலை… எப்படி வந்தாலும்… ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஒரு நொடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எடுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால்
1.எத்தனையோ உணர்வுகள் “இப்படி மாறி வரும்…”
2.அடுத்த கணம் இதை எடுத்துப் பழக வேண்டும்…
3.அப்போது தீமைகளைத் தடைப்படுத்தும்
4.உடனே கொஞ்சம் மன வலிமை கிடைக்கும்.

இப்படி நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து மாற்றமான நிலைகளில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப் பழகிக் கொண்டால்
1.“பற்று” துருவ நட்சத்திரத்தின் மீது வருகின்றது.
2.மனிதனுடைய ஈர்ப்பு வட்டத்திலிருந்து பற்றற்றதாக ஆகிறது
3.நம்மை விண்ணுக்கு அழைத்துச் செல்கின்றது.

பற்று…! பற்றற்று இரு…! என்று சொல்வார்கள்.
1.பற்ற வேண்டியது துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.பற்றற்று இருக்க வேண்டியது தீமைகளை…!
(இதுதான் பற்று…! பற்றற்று இரு…! என்பதனுடைய அர்த்தம்)

துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இருப்பவர்கள் இதையெல்லாம் சற்று சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையை அருள் வழியிலே சீராக்கிக் கொள்ளுங்கள்.

அருள் வழியில் நீங்கள் முழுமையாக யாராவது தயாரானால் தான் நல்லது

 

முந்தைய காலங்களில் யாம் கொடுக்கும் உபதேசத்தையெல்லாம் யாரும் எட்டிப் பிடிப்பது என்றால் கஷ்டம். எக்ஸ்பிரஸ் மாதிரி ஓடிக் கொண்டேயிருக்கும்…. யாரும் அர்த்தம் காண முடியாது.

ஆனால் இப்பொழுது எல்லோருக்கும் அர்த்தம் புரியும் அளவிற்குத் தான் உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.

காரணம் ஆரம்பத்தில் சில ரகசியங்களை எல்லாம் சொல்வேன்.

மந்திரவாதிகள் அதை எல்லாம் திருடி எடுத்துக் கொள்வார்கள் என்பதற்காகப் பட்டும் படாதபடி அவர்களுக்குப் புரியாமல் இருப்பதற்காகக் கட…கட… என்று உருட்டிக் கொண்டு செல்வேன்.
1.இப்பொழுது அது எல்லாம் இல்லை.
2.உலகம் மிகவும் மோசமான நிலையில் இருள் சூழும் நிலைகளாகச் சென்று கொண்டிருப்பதால்
3.எல்லோருக்கும் இதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் பவரைக் கொடுக்கின்றேன்.

இதைச் சிதற விட்டு விடாதீர்கள்.

1.இந்த உபதேசத்தைக் கேட்டவர்கள் நீங்கள் தயாரானால் போதும்.
2.உலகையும் காக்கலாம் ஊரையும் காக்கலாம் வீட்டையும் காக்கலாம்.

முறைப்படுத்திப் பக்குவப்படுத்திக் கொண்டால் போதும். சிரமப்பட வேண்டியதில்லை… சிரமமான நிலையில் இருந்து விடுபடுவதற்குத் தான் உணர்த்துகின்றேன்.

நான் சிரமப்பட்டேன்… தெளிந்தேன்…! நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன்.
1.இதிலே நீங்கள் முழுமையாக யாராவது தயாரானால் தான் நல்லது.
2.அரையும் குறையுமாக விட்டு விட்டுச் செல்லக்கூடாது.

விஷ உலகமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் காற்று மண்டலமும் நச்சுத்தன்மை ஆகிக் கொண்டுள்ளது. கடவுளின் அவதாரத்தில் வராகன் சாக்கடையில் உள்ள நாற்றத்தை எப்படிப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்ததோ இதைப் போல அந்த நச்சுத்தன்மைகளை எல்லாம் நீக்கிவிட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கி உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

இந்தச் சூரியன் அப்படியே இருக்கப் போவதில்லை. அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய இந்தப் பூமியும் எந்த நிமிடத்திலும் தலைகீழாக மாறிவிடும்.

அணுகுண்டுகள் வெடித்தாலே போதும். எந்தப் பகுதியில் இதைச் செயல்படுத்துகின்றார்களோ சரமாரியாக அவைகள் வெடித்தால் சூரியனை ஒளிக் கதிர்கள் அங்கே தடுக்கப்படுகின்றது. வெயில் படவில்லை என்றால் பனிப்பாறைகளாகி அந்த இடத்தில் பூமி உறைந்து விடும்… தலை குப்புறக் கவிழ்ந்து விடும்.

ஆரம்பத்திலே துருவத்தின் வழி பூமி சக்திகளைக் கவரப்படும் பொழுது முட்டை வடிவில் வளர்ந்தது. அப்போது அது திரும்பும் நிலை வந்தது.
1.அந்தச் சந்தர்ப்பத்தில் தான் அகஸ்தியன் இந்தப் பூமியை லேசாகத் திருப்பி வைத்தான்… பூமி சமமானது.
2.இதுவரையிலும் இந்த வண்டி ஓடிக் கொண்டுள்ளது.

ஆனால் விஞ்ஞான அறிவு இன்று சென்று கொண்டிருக்கும் நிலையில் பூமி எங்கே போகும்…? எப்படி ஆகும்…? என்று சொல்ல முடியாது. அத்தகைய நிலை இருக்கின்றது… குறுகிய காலமே இருக்கின்றது.

எங்கே பார்த்தாலும் தீவிரவாதம்…! இந்த உணர்வு நமக்குள் பதிவானால் காற்றலைகளில் அது இருக்கிறது. நாம் மீண்டும் எண்ணினால் நம் உடலுக்குள்ளும் அது தீவிரவாதமாக வருகிறது… அறியாமலே பகைமை…! உடலுக்குள் தீமையாக வருகின்றது.

இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.
1.எப்படியும் கொஞ்சம் பேராவது முந்திக் கொண்டீர்கள் என்றால் மற்றவர்களுக்கும் நன்மை செய்ய முடியும்.
2.நான் ஒருவன் பெற்றால் போதுமா…? நீங்கள் எல்லோரும் தயாராக வேண்டும் அல்லவா…!

ஆனால் இன்னும் ஒன்றாம் வகுப்பிலே இருந்தது போன்று… அருள் வழியில் பெற்ற அனுபவங்களை ஒவ்வொருவரையும் சொல்லச் சொன்னால் எதை எதையோ சொல்கின்றார்கள். தான் பெற்ற அனுபவங்களைச் சரியாகச் சொல்ல முடியவில்லை.

உங்கள் அனுபவங்களை ஏன் கேட்கிறோம்…? என்றால்
1.நீங்கள் கற்றுக் கொண்ட உணர்வு மற்றவர்களும் அதன் வழி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.
2.அதைத் தெளிவாகச் சொன்னால் போதும்.
3.100 பேர் இது போன்று 100 விதமான கருத்துக்களை அனுபவங்களைச் சொன்னால் 100 விதமான உணர்வுகள் அங்கே வருகின்றது.
4.மற்றவர்கள் அதைத் தெரிந்து கொள்ள உபயோகமாக இருக்கும் என்று சொல்கின்றோம்.

யாம் சிரமப்பட்டுத் தெரிந்து கொண்டு வந்தோம். அதை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு முன் விரயம் ஆகி விடுகின்றது. ஒரு சிலர் அனுபவங்களுக்குப் பதில் கதையைச் சொல்கின்றார்கள்.

ஆகவே எந்தெந்த நேரங்களில் எதை எதைச் செய்ய வேண்டும்…? எப்போது அதைக் கேட்க வேண்டும்…? என்ற பொறுப்புணர்ந்து
1.குருவிடம் எப்படிப் பேச வேண்டும்…?
2.குரு வழியில் நாம் எப்படிச் செல்ல வேண்டும்…?
3.குரு வழியினை எப்படிப் பின்பற்ற வேண்டும்…? என்று நீங்கள் பக்குவப்பட வேண்டும்.

உங்களுக்குச் சக்தி கொடுக்கிறோம் என்றால் அதைப் பயன்படுத்திய நிலையில் அடுத்து அதை வளர்ச்சியின் பாதைக்கு எப்படிக் கொண்டு செல்ல வேண்டும்…? என்று எம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாமியிடம் எப்படிக் கேட்பது…? என்று எண்ண வேண்டியதில்லை. “அதையெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியை நீங்கள் பெற வேண்டும்…”

அதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் வளர்த்துக் கொண்டால் ஆயிரம் பேருடைய தீமைகளை நீங்கள் போக்க முடியும்.
2.உங்கள் அரவணைப்பில் ஆயிரம் பேரைக் காக்க முடியும்.

ஆகவே பழமையை எண்ணாதபடி எதிர்காலத்தில் இதைப் போன்ற ஆக்கபூர்வமான செயல்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தைக் காட்டுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உலகமே துரித நிலைகள் கொண்டு… மனிதன் மிருகமாக மாறும் நிலை வருகின்றது… இல்லையென்றால் பூமியே நிலை தடுமாறும் நிலை வருகின்றது.

நிலை தடுமாறி விட்டால் அதை உணரப் போவதில்லை…!

ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.இந்தத் தியானத்தில் வலுப்பெற்றால் அதையும் நாம் உணர முடியும்
2.அதிலிருந்து விடுபடும் ஞானமும் நமக்கு கிடைக்கும்.

ஆகவே இப்பொழுதிருந்தே அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அணுகுண்டுகளோ மற்ற ஆயுதங்களோ வெடித்தாலும் நம்மைப் பாதிக்காதபடி காத்துக் கொள்ள முடியும்.

எத்தனையோ விஷமான குண்டுகளை பூமிக்கு அடியிலே பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்… ஆனால் பெரும் பகுதி அது வெடிக்கும்…!

அப்படி வெடிக்கும் போது அதனால் ஏற்படும் அணுக் கதிரியக்கங்கள் மேக மண்டலங்களாக மாறி சூரியனுடைய ஒளிக் கதிர்கள் நம் பூமியிலே படாது தடைப்படுத்திவிடும்.
1.அத்தகைய சூழ்நிலை உருவாகி விட்டால் பூமி பனிப்பாறைகளாக மாறிவிடும்
2.பூமி இப்போது இருக்கும் திசை மாறி தலை குப்புறக் கவிழ்ந்துவிடும்.
3.நாமெல்லாம் கடலுக்குள் தான் போக நேரும்.

ஆனால் கடலுக்குள் சென்றபின் இந்த மனித உடலை இழந்து கடல் வாழ் நிலைகளாக… மீன் இனங்களாக உயிர் நம்மை மாற்றிவிடும்.

அதே சமயத்தில் பூமி பனிப்பாறையாக ஆனபின் எடை கூடி சூரியனை விட்டு நகர்ந்து சென்று சிதைவுண்டு… மற்ற ஏதாவது சூரிய குடும்பங்களுக்குள் ஈர்க்கப்படலாம்.

பல வருடங்களுக்கு முன்பே இன்னொரு சூரியக் குடும்பத்தில் இருந்து சிதைவுண்ட (பிரளயத்தில் சிக்கிய) ஒரு பூமி… தப்பித்து நம் சூரிய குடும்பத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது… என்று நான் சொன்னேன்.

நம் பிரபஞ்சத்தில் பனிப்பாறை அதிகமாக உள்ள வியாழன் கோளிலே அது விழுந்து சேதம் இல்லாது அங்கே அடங்கியது. நம் பூமியைப் போல உள்ள அதே உருவம் கொண்டது அது.

நம் பூமியிலே அது விழுந்திருந்தால் நாமெல்லாம் இன்று இருந்திருக்க முடியாது. விஞ்ஞானிகள் இதைக் கண்டு சொல்வதற்கு முன்னாடியே “நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது” என்று சொன்னேன்.

அப்போது அதை யாரும் லட்சியப்படுத்தவில்லை…!

நம் பிரபஞ்சத்தின் ஈர்ப்பிற்குள் வந்து சிதைந்து வியாழன் கோளிலே மோதியது என்று விஞ்ஞானிகளும் பின்னாடி சொன்னார்கள். இது போன்று
1.உலக நிலைகள் மாறிக் கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
2.இந்த மனித உடலில் எவ்வளவு காலம் நாம் வாழப் போகின்றோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

காரணம்… எத்தனையோ கோடி இன்னல்களில் இருந்து தப்பித்தான் இந்த மனித உடலைப் பெற்றிருக்கின்றோம். நம் உயிர் இந்த உடலை உருவாக்கி உள்ளது.

ஆகவே… குறுகிய காலம் வாழும் நாம் அருள் உணர்வுகளை இப்போது வளர்த்துக் கொண்டால் இன்னொரு உடலின் ஈர்ப்புக்குள் செல்லாதபடி… உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக… வேகா நிலை பெற்றுத் துருவ நட்சத்திரத்தில் ஈர்ப்பு வட்டத்தில் “ஏகாந்த நிலையாக வாழ முடியும்…”

பகைமை என்பதே இல்லாது மகிழ்ச்சி என்ற நிலையில் என்றுமே அந்த அருள் வழியில் நாம் வாழ முடியும். இப்பொழுதிருந்தே இதைத் தயார் செய்து கொண்டால் தான் அந்த நிலை பெற முடியும்.

இறந்த பின் என்னவோ…? அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்…! என்று எண்ணினால் எந்த உணர்வுடன் கடைசியில் இறக்கின்றோமோ இன்னொரு உடலுக்குள் சென்று அங்கேயும் தீயதைத் தான் உருவாக்க முடியும்… மீண்டும் நரக வேதனையைத் தான் பட முடியும்.

இது போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

யாம் சொல்லிக் கொடுக்கும் இந்தத் தியானத்தின் மூலம் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுவிலும் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை வலு ஏற்றப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்பதே என்னுடைய முழுமையான பிரார்த்தனை…!

நீங்களும் அதையே எண்ணி ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம். வளர்க்கும் முறைப்படி இப்படி வளர்த்து விட்டால் பிறவி இல்லா நிலை அடைவது உறுதி…!

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்

 

நாம் எத்தனையோ பேருக்கு உதவி செய்கின்றோம். ஒரு சந்தர்ப்பத்தில் ரோட்டில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். நம்மிடம் நல்ல உதவிகளைப் பெற்றவர் அங்கே செல்கின்றார்… பார்க்கின்றோம். அதே சமயத்தில் அவர் அவசரமாகப் போகின்றார்.

நாம் அவர் பெயரைச் சொல்லி “இங்கே வாப்பா…” என்று கூப்பிடுகின்றோம். இருங்கள்… கொஞ்சம் நான் வந்து விடுகிறேன்…! என்று அவர் சொல்கின்றார்.

1.பார்…! அன்று காசு வாங்குவதற்கு நம்மைத் துரத்தி துரத்தி வந்து வாங்கிச் சென்றான்.
2.இன்று நாம் கூப்பிடுகின்றோம் வரமாட்டேன் என்கிறான்.
3.காசு வாங்குவதற்காக அன்றைக்கு என்னை மதித்தான்.
4.இப்பொழுது கூப்பிடுகிறேன்… அவன் ஓடுகின்றான்…! என்று நாம் சொல்வோம்.

ஆனால் அவருடைய சூழ்நிலை எது…? ஒரு முக்கியமான காரியத்திற்கு இரயிலுக்குச் செல்பவர்கள் அதற்குண்டான டிக்கெட்டை மறந்து வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அந்த நேரத்திற்குள் கொண்டு போய்க் கொடுத்தால் தான் செல்ல முடியும்.

வண்டியில் ஏறிய பின் அங்கே அந்த டிக்கெட் இல்லை என்றால் அவர்கள் முழிப்பார்கள். ஆகையினால் வண்டி கிளம்புவதற்கு முன் அதைக் கொடுக்க வேண்டும் என்று அவசரமாகச் செல்கிறார்.

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்…? கூப்பிட்டதற்கு மரியாதை செலுத்தாமல் செல்கின்றான் பார்…! என்ற இந்த உணர்வு தான் மனிதனுடைய வாழ்க்கையில் தூண்டுகிறது.

ஒரு தடவை நாம் உதவி செய்தால்…
1.இரண்டாவது அவரை நாம் கூப்பிடும் பொழுது வரவில்லை என்றால் உடனே அவர் மேல் பகைமை ஆக்கிக் கொள்கின்றோம்.
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இது மாதிரி நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
3.எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் உடனடியாக அங்கே பகைமை ஆக்கி விடுகின்றோம்.

இதற்குக் காரனம் என்ன…?

நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை அப்படி இயக்குகிறதே தவிர “நம் ஆறாவது அறிவை அங்கே சரியாகப் பயன்படுத்தவில்லை…” என்று தான் பொருள்.

அதை எப்படிச் சீராகப் பயன்படுத்த வேண்டும்…? என்பதற்குத்தான் ஞானிகள் எத்தனையோ காவியப் படைப்புகளைக் கொடுத்துள்ளார்கள்.

இச்சா சக்தி… கிரியா சக்தி… ஞான சக்தி…!
1.தீமையை நீக்கிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால்
2.உயிரிலே பட்டுக் கிரியை ஆகி
3.அந்த ஞானத்தின் வழி நம் உடலை அது இயக்கும்.

சிவனுக்கே ஓதினான் ஓம் என்ற பிரணவத்தை…! இந்த உடலிலே பிறந்தது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா… சிவத்திற்குள் விளைந்தது தான். ஆனால் வேதனை என்ற உணர்வை நுகர்ந்த பின் அந்த உணர்ச்சிகள் பிரணவமாகி அதுவே நம்மை இயக்குகின்றது.

ஆறாவது அறிவு படைத்தவன்…
1.“இது நமக்குத் தீங்காகும் இருள் சூழ்ந்த நிலையாகும் வேதன என்ற நிலையாகும்” என்று தெரியக்கூடிய நிலையான கார்த்திகேயா
2.இந்த உடலில் விளைந்த அந்த உணர்வுகள்… இந்த உடலுக்குத் தீங்கு வராது பாதுகாக்கச் செயல்படுகின்றது.

தீமையை நீக்கிய அருள் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால் அதை நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டுக் கிரியை ஆகின்றது. அதன் வழி நம் எண்ணம் சொல் செயலாகி தீமையை நீக்கி வாழ்க்கை ஒழுங்குபடுத்த இது உதவும்.

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நாம் இச்சைப்பட வேண்டும். இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் உயிரிலே பட்டுக் கிரியை ஆகி
1.நாம் சிந்தனை இழந்து இருந்தாலும் சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்து அதன் வழி செயல்படும் சக்தி கிடைக்கும்.
2.குறைகள் கூறுவதை விட்டுவிடலாம்… மன நிறைவு என்றுமே நமக்குள் வளரத் தொடங்கும்.

உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்… கொடுக்கின்றேன்.
1.யாருமே செய்யாததை உங்களுக்குச் செய்து கொடுத்துள்ளோம்.
2.எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்தச் சக்தியை நீங்கள் எண்ணி எடுக்கலாம்… தீமைகளைப் போக்கலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இது நடந்த நிகழ்ச்சி…! தியான வழியில் சாமியை (ஞானகுரு) வைத்துத் திருமணம் நடத்த வேண்டும் என்று இவர்கள் (பெண் வீட்டார்) கட்டாயப்படுத்துகின்றார்கள்.

ஆனால் அவர்கள் (ஆண் வீட்டார்)… எங்களிடம் பலர் பழகி இருக்கிறார்கள். நான்கு பக்கத்திலும் நாங்கள் பழக வேண்டும். எங்கள் முறைப்படித் தான் நாங்கள் திருமணம் நடத்த வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

“சரி… உங்கள் வழியில் நீங்கள் செய்து கொள்ளுங்கள்…” என்று சொல்லி விடுங்கள்…! என்று பெண் வீட்டாரிடம் சொன்னேன். அதே மாதிரிச் செய்தார்கள்.

பின் திருமணத்திற்கு வேண்டிய பத்திரிகை எல்லாம் அடிக்கப்படும் பொழுது என்னிடம் யோசனை கேட்க வந்தார்கள்.

அப்போது பையனின் தகப்பனாருக்கு ஒரு நெஞ்சு வலி இருந்தது. “எனக்கு நெஞ்சு வலி இருப்பதால் தான்” சீக்கிரம் திருமணத்தை முடித்து விடவேண்டும் என்று விரும்பினேன் என்றார்.

இங்கே வந்து என்னை அவர் சந்தித்தபின் நெஞ்சு வலி நின்றது. பின் அவருடைய மனம் மாறிவிட்டது. ஊருக்குச் சென்ற பின் மனது கலங்கிவிட்டது.

1.இவர்களும் விடாப்பிடியாகத் தியான முறைப்படி கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொன்னதால் அந்த இரண்டு மனதும் ஒன்றாகி விட்டது.
2.“குருவை வைத்தே திருமணம் செய்யலாம்…” என்று முடிவு செய்கின்றனர்.

இன்று அவர் இதை ஒத்துக் கொள்ளலாம்…! ஆனால் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சொல்லும் பொழுது என்ன ஆகும்…? அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நாம் உபதேசிக்கும் உணர்வுகளை இணைத்துக் கொண்டு வந்து தான் மாற்ற முடியும்.

காரணம்… சம்பந்தம் செய்வதை நம்முடைய முறைப்படி ஐயரை வைத்துச் செய்யாதபடி “ஏதோ தியானம் செய்கிறார்கள்…” என்ற உணர்வுகள் அவர்களுக்குத் தோன்றத்தான் செய்யும்.

ஆனால் யாம் உபதேசிக்கும்போது மற்றவர்கள் அதைக் கேட்கப்படும் போது தான் அவர்கள் தெரிந்து தெளிந்து வாழக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
1.என்ன தான் தெரிந்து தெளிந்து வாழக்கூடிய நிலைகள் பெற்றாலும்
2.அந்த அனுபவம் பெற்றவர்களுக்கு அவர்கள் முறைகளைச் செயல்படுத்தவில்லை என்றால்
3.மனதிலே ஒரு அழுக்கு இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் அந்த அழுத்தம் மாறி நம்முடன் ஒத்துழைத்தார்கள் என்றால் அது இப்படிச் செய்யலாம். இல்லை என்றால்…
1.அவர்கள் இஷ்டத்திற்குப் போய் நம்முடைய மனம் எப்படியோ
2.அது அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நாம் இப்படித்தான் எண்ண வேண்டும்.

எந்த இடத்திலும் இது போன்று பொதுவான திருமணம் நடக்கிறது என்றால் அவர்கள் இந்த முறைப்படி நாங்கள் செய்ய வேண்டும் என்று விரும்பினால் “சரி உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்…” என்று சொல்லிவிட வேண்டும்.
1.நாம் அதற்கு முன்னாடி தியானம் இருந்து அவர்களுக்கு என்னென்ன பிரார்த்தனை செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
2.அவர்கள் முறைப்படி செய்யட்டும்…! என்று நாம் எண்ண வேண்டும்.

அப்படி இல்லாதபடி ஆரம்பமே மாப்பிள்ளை வீட்டாரைப் பெண் வீட்டார்… நாங்கள் சொன்னபடி தான் கேட்க வேண்டும் என்று சொன்னால் நடக்குமா…? அதனால் விபரீதங்கள் தான் ஏற்படும்.

ஆகையினால் மனது ஒத்து வருவதற்கு…
1.தெரிந்தும் நாம் தவறு செய்யக்கூடாது
2.அவர்களுடன் ஒத்துழைத்து நம்முடைய தத்துவத்தை இணைந்து அவரிடத்திலே சொல்லும் பொழுது தான் ஏற்றுக்கொள்ளும் பக்குவமே வரும்.

இல்லை…இல்லை…! நாங்கள் இந்தத் தியான வழியில் பெரிய சக்திகள் பெற்றிருக்கின்றோம்… அதனால் இப்படித்தான் செய்ய வேண்டும்… அப்பொழுதுதான் நல்லது…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் “நம்முடைய காரியங்கள் அத்தனைக்குமே தடங்கல்கள் வரும்….”

அடுத்து நீங்கள் நல்லதை யாருக்கும் சொல்ல முடியாது… அதை வளர்க்கவும் முடியாது நாம் எந்த வழக்கத்தில் இருக்கின்றோமோ அந்தப் பழக்க உணர்வு தான் ஒவ்வொருவருக்குமே வரும்.

அவர்களைத் தெரிய வைக்க வேண்டியது நம்முடைய கடமைகளாக இருக்க வேண்டும்.
1.நம்முடைய பாதை தான் உயர்ந்தது என்று நாம் சொன்னால்
2.”அவர்கள் அவருடைய பாதை தான் உயர்ந்தது…” என்று சொல்ல முற்படுவார்கள்.

ஆகவே தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் “நம்மிடம் இந்தப் பிடிவாதம் இருக்கக் கூடாது…”

நம்முடைய தத்துவங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை ஏற்படுத்தி அதை உருவாக்க வேண்டுமே தவிர “நாம் பிடிவாதமாக இருந்து… வெறுக்கும் தன்மைக்குக் கொண்டு வந்து விடக் கூடாது…”

என்ன…? எப்போது பார்த்தாலும் சாமியாம்…! தியானமாம்…! என்று அவர்கள் எண்ணுவதற்கு விடாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதே மாதிரிச் சில சடங்குகள் செய்யும் பொழுதும் உடலை விட்டு வீட்டில் யாராவது பிரிந்து சென்றாலும் “காக்கைக்கு சோறு வைக்கின்றோம்…” என்று சொன்னாலும் அவர் இஷ்டத்திற்கு நாம் விட்டுவிட வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாவைக் கூட்டு தியானமிருந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும்… பிறவி இல்லா நிலை அடைய வேண்டுமென்று நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

அவர்களிடம் “இந்த ஆன்மா எப்படி விண்ணுக்குச் செல்கிறது…? என்று பாருங்கள்…!” என்று நாம் தூண்டிவிட்டு அந்த முறைப்படி செய்தோம் என்றால் அவர்கள் ஆர்வத்துடன் கேட்பார்கள்.

1.ஒரு பழக்கத்தில் இருக்கிறோம் என்றால் அதை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டு வர வேண்டுமென்றால்
2.”எவ்வளவு நல்லதாக இருந்தாலும்” அதை உடனடியாகக் கொண்டு வர முடியாது.

கேரளாவிலே மொக்கை அரிசி தான் சாப்பிடுகிறார்கள். அதை நம்மைச் சாப்பிடச் சொன்னால் “யாருடா இந்த அரிசியைச் சாப்பிடுவது…?” என்று நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நாம் இங்கே பொடியாக இருக்கும் பொன்னி அரிசியைச் சாப்பிடுகின்றோம். ஆனால் இந்த அரிசியை யார் சாப்பிடுவார்கள்…? என்று அங்கே கேரளாவில் உள்ளவர்கள் சொல்கின்றார்கள்.

காரணம்… அவரவர்கள் ருசி தான் எல்லோருக்கும் முக்கியம்…!

ஆகவே நாம் மற்றவர்களை மதித்துப் பழக வேண்டும். நமது குருநாதர் காட்டிய வழியில் மற்றவர்களை உயர்த்தினால் தான் நம்முடைய சொல்கள் அங்கே ஏற்கும் பருவம் கிடைக்கும்.

இல்லை… என்னுடையது தான் உயர்ந்தது என்று சொன்னால் நம்முடைய உணர்வை அவர்கள் தாழ்த்தித் தான் பார்ப்பார்கள்.

ஆகவே
1.நாம் நம்முடைய தத்துவங்களை அவர்களை அணுகிப் போய்த் தான் சொல்ல முடியுமே தவிர
2.கட்டாயப்படுத்தி யாருக்குமே திணிக்க முடியாது.

கட்டாயப்படுத்திச் சொல்வதோ “நம்முடையது தான் நல்லது…” என்று வலியுறுத்தினால் நம் மீது அவர்களுக்கு வெறுப்பு தான் வரும்.

அந்த வெறுப்பு ஏற்படாதபடி பக்குவப்படுத்தி… நம்முடைய நிலைகளைப் படிப்படியாகச் சொல்லி… அவர்களை உணரும்படி செய்வது நம்முடைய கடமையாக இருத்தல் வேண்டும்.

ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! அதாவது அந்த எதிர்மறையான உணர்வின் அழுத்தங்கள்… எவ்வளவு தான் உண்மைகளைச் சொன்னாலும் வெறுக்கும் நிலை தான் வரும்.

இதையெல்லாம் மாற்றி
1.நமது வழிகளை உலக மக்கள் ஏற்றுக் கொள்ளும் பருவ நிலைக்கு…
2.அந்தப் பக்குவ நிலைக்கு நாம் எல்லோரும் வளர்தல் வேண்டும்.

மற்றவர்களை நல் வழியில் வழி நடக்க “நம் சொல்” உதவ வேண்டும்

 

நம்முடைய குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம். பற்றுடன் நாம் சொன்னாலும் அவனால் ஏற்க முடியாது சந்தர்ப்பத்தால் படிப்பில் மந்தமாகின்றான்.

அப்போது நம் உணர்வு என்ன செய்கிறது…?

1.எண்ணியபடி அவன் படிக்கவில்லை என்கிற போது வேதனை உருவாகின்றது.
2.இவ்வளவு தூரம் படிக்க வைத்து இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்ற வேதனையை எடுத்துக் கொள்கிறோம்.

பாலிலே பாதாமை போட்டு பல சத்துக்களைப் போட்டாலும் விஷத்தைப் போட்ட பின் அதற்குச் சத்து இருக்கின்றதா…? இல்லை.

இதைப் போன்று தான் குழந்தை நல்ல முறையில் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று விரும்பினாலும் அப்படி நடக்கவில்லை என்கிற பொழுது வேதனையாகி அது வளர்ந்த பின்…
1அடுத்து நல்ல முறையில் அவனை வளர்க்க முடியும் என்ற சிந்தனை வருகின்றதா…?
2.உங்கள் நல்ல எண்ணங்கள் வீணாகத் தொடங்குகிறது.
3.நம்மை அறியாமலே குழந்தையைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பு.
4.குழந்தையைப் பற்றி யாராவது பேசினால் அவர்கள் மீதும் வெறுப்பு.
5.வேறொரு குழந்தை நம் குழந்தையுடன் விளையாண்டாலும் அந்தக் குழந்தை மீதும் வெறுப்பு வருகின்றது.

ஏனென்றால் இப்படிப்பட்ட உணர்வுகள் பதிவாகி வளர்ந்த பின் வெறுப்பான உணர்வு தான் அலைகளாக மாறுகின்றது. அப்பொழுது அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்…?

வேதனை என்று வரும் பொழுதெல்லாம்… “யாம் உங்களுக்குள் பதிவு செய்த ஞான வித்தினை எடுத்து” ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஏங்க வேண்டும்.

நாம் எடுக்கும் உணர்வுகள் உயிர் வழி சென்று தான் உடலுக்குள் செல்ல வேண்டும். அங்கே தடைப்படுத்தி விட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.என் குழந்தை கல்வியில் சிறந்த ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும்
2.பொருளறிந்து செயல்படும் அந்த ஞான சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உருவாக்கி
3.”அந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது” அவருடைய செவிகளிலே படுகின்றது.
4.அப்பொழுது நம் சொல்லை ஈர்க்கும் தன்மை அவன் கண்ணுக்கு வருகின்றது.
5.அவன் உடலுக்கு அருகில் அந்த உணர்வலைகள் வந்த பின் மூக்கால் நுகரும் தன்மை பெறுகின்றான்
6.சுவாசித்த பின் அந்தக் குழந்தைக்கு உயிர் வழி உணர்ச்சிகளை ஊட்டும் அந்தப் பருவம் பெறுகின்றது.

இப்படித்தான் அதைத் திருத்த வேண்டும்.

இல்லை என்றால் வேதனை என்ற உணர்வாகி அவன் மீது இருக்கும் நல்ல அன்பு நம்மிடம் முதலில் மறைகின்றது. பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பு தான் வரும்.

ஆகவே இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற ஆயதத்தைக் கொடுத்துள்ளோம்.

எப்பொழுது எந்த நிமிடம் எதை எடுத்தாலும் ரேடியோ டிவி அலைவரிசைகளில் வேலை செய்து காற்றிலிருந்து எடுப்பது போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்தக் காற்றில் கலந்திருப்பதை உடனடியாக எடுத்து உடல் முழுவதும் படரச் செய்தால்
2.அதைப் பிரித்து உங்கள் ஆன்மாவாக மாற்றி இந்த உணர்வின் வலு கொண்டு “அந்த உணர்வின் சொல்லாக”
3.குழந்தை இப்படித்தான் வரவேண்டும் என்று எண்ணினால் உங்கள் வழிப்படி நல்ல உணர்வு பெறுவான்,

ஆனால் இப்படி ஒரு தரம் சொல்லி அவன் கேட்கவில்லை என்றால் மறுபடியும் வேதனையை எடுத்து “என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான்…” என்று எண்ணி விட்டால் மீண்டும் பழைய நிலைக்கு ஆகிவிடும்.

திரும்பத் திரும்ப இந்த அருள் வழியில் நாம் செயல்பட்டு இந்தக் குழந்தை இப்படித்தான் வளர வேண்டும் என்று நிர்ணயித்து அதன் உணர்வை நாம் எடுத்துக் கொண்டு
1.நீ இப்படிச் செய்தால் உனக்கு நலமாகும் என்று உணர்த்திப்
2.பல முறை அவனுக்குச் சொல்லித் திருத்தும் நிலைக்கு வர வேண்டும்.

நீங்கள் மட்டும் அல்ல உங்கள் மனைவியாக இருந்தாலும் அல்லது உங்கள் கணவனாக இருந்தாலும் இதைப் போன்று அவர்களுக்கும் இதைச் சொல்லி ஒன்று சேர்ந்த நிலையில் இந்த முறைப்படி செய்தால் கூடுமான வரையிலும்
1.முதலில் சரியாகவில்லை என்றாலும் கணவன் மனைவி இருவருமே ஒருங்கிணைந்த நிலையில் ஞானத்துடன் செயல்பட்டு
2.உங்கள் வழியில் அந்தக் குழந்தைக்கு அருள் ஞானத்தை ஊட்ட முடியும்.

நமக்கும் நல்லதாகிறது… குழந்தைக்கும் நல்லதாகிறது. குடும்பத்தைச் சீராக்கவும் இது உதவும். அருள் ஞானத்தை ஊட்டி அனைவரும் நல் வாழ்க்கையாக வாழ முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கேள்வி:-
தியானத்தின் மூலம் என் தந்தையை விண் செலுத்தினேன். அதனுடைய பலன் என் சகோதரர்களுக்குக் கிடைக்குமா…? ஆனால் அவர்கள் என்னைப் போன்று இந்தத் தியானத்தைச் செய்யவில்லை… அதிலே ஈடுபடவும் இல்லை

பதில்:-
இந்தத் தியான வழியினை நீங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் அந்தச் சக்தி உங்களுக்குள் கூடிக் கொண்டிருக்கிறது
1.உங்கள் தந்தையின் உணர்வுகள் தான் உங்கள் உடல்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற தந்தையின் உயிரான்மாவை தியானத்தின் மூலம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றீர்கள்.
3.அவர் உடல் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைக்கப்படுகின்றது
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக தந்தையின் உயிரான்மா சுற்றிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தாய் இங்கே உடலுடன் இருக்கின்றார்கள். அவர்கள் பிரியும் போது இதே முறை கொண்டு தாயின் உயிரான்மாவையும் விண் செலுத்தினால் இரண்டு பேரும் ஒன்று சேர்த்து ஒரு உணர்வின் கருவாக உருவாகி என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பார்கள்.

அதே சமயத்தில் அவர் வாழ்ந்த காலங்களில் வெளிப்படுத்திய சில இருளான தன்மைகள் இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறப்படும் பொழுது அந்தச் சக்தி எளிதில் கிடைக்கின்றது.

அதாவது…
1.தீமைகளை நீக்கக்கூடிய சக்தியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.
2.எனக்குக் கிடைக்கின்றது… குடும்பத்தில் என்னுடன் பிறந்த சகோதரர்களுக்கு அது ஏன் கிடைக்காமல் போகும்…? என்று நீங்கள் கேட்கலாம்.

அவர்களுடைய உணர்வு இதன் மேல் பற்று இல்லை.

உதாரணமாக… ரேடியோ டிவி அலைகளை ஒலி… ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ… அதைத்தான் அது இழுத்துக் கொண்டு வரும். அதைத்தான் நாம் பார்க்க அல்லது கேட்க முடியும் ஏனென்றால் இந்தக் காற்றிலே எல்லாமே இருக்கின்றது.

அது போல் தந்தையை நீங்கள் தியானத்தின் வழியில் விண் செலுத்தும் போது… “விண் செலுத்திய வலுவான உணர்வு” உங்களுக்குள் இருக்கின்றது அப்பொழுது எளிதில் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று உங்களுக்குள் வரக்கூடிய சிரமங்களைப் போக்கிக் கொள்ள முடிகிறது.

போக்கிக் கொண்ட பிற்பாடு உங்களுடன் பிறந்த சகோதரர்கள்… அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் அந்த திறன் பெற வேண்டும்… என்று “பிரார்த்திக்க வேண்டியது உங்களுடைய கடமை…!”

ஆனால்…
1.தியானிக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறோம்… சகோதரர்கள் கேட்கவில்லை என்று வேதனைப்பட்டால்
2.நீங்கள் இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சக்தியையும் இழக்க நேரும்.

ஏனென்றால் விஷத்தின் தன்மை வரப்படும் போது சிந்திக்கும் தன்மை இங்கே இழக்கப்படுகின்றது. உங்களை அறியாமல் அவர்கள் நிலைக்குத் தான் செல்கிறீர்கள்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…!

அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… இந்த அருள் வழியில் வாழ வேண்டும் என்ற ஆசையை ஊட்டலாம் சகோதரர்களுக்கு…!
1.ஆனால் அவர்கள் பெறவில்லை… கடைப்பிடிக்கவில்லையே… என்று வருத்தப்பட வேண்டியதில்லை
2.”அவர்கள் அதை பெற்று வளர வேண்டும்…” என்று நமக்குள் ஆசையைக் கூட்டுவதால் தவறில்லை.

இதைச் செய்யவில்லை என்கிற போது உங்கள் தந்தைக்கு எந்த நோய் வந்ததோ அது அவர்களுக்கு வரும். அது மட்டுமல்ல… அவர்கள் குழந்தைகளுக்கும் வரும்… பரம்பரை நோய் என்று…!

ஆனால் “நீங்கள் செய்யக்கூடிய தியானம்…” உங்களுக்கும் சரி… உங்கள் சார்புடையவர்களுக்கும் சரி… அந்தப் பரம்பரை நோய் வராதபடி தடுக்கும்.

முறைப்படி உங்கள் தாய் தந்தையரை விண் செலுத்தும் போது சப்தரிஷி மண்டலங்களின் சக்தி எளிதில் கிடைத்து அதன் மூலம்
1.சிந்திக்கக் கூடிய சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
2.தீமை என்றால் அதை முன் கூட்டியே உணர முடியும்.
3.தீமைகள் வராது தடுத்துக் கொள்ளக்கூடிய அந்த ஞானமும் உங்களுக்குள் வளரும்.

தாய் தந்தையரை விண் செலுத்தி அதன் தொடர்பு கொண்ட உணர்வுகள் உங்களுக்குள் வளரப்படும் பொழுது நாளடைவில்
1.உங்கள் குலதெய்வங்கள்… உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் இருந்தாலும்
2.தொடர்ந்து விண் செலுத்தும் உணர்வுடன் நீங்கள் செயல்படும் போது
3.அதனுடன் ஈர்க்கப்பட்டு… “என்னையும் நீ விண் செலுத்து…” என்று கேட்கும் உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்… பார்க்கலாம்.
4.அவர்கள் விண் சென்றதையும் நீங்கள் உணரலாம்… அதைக் காட்சியாகவும் கூடக் காண முடியும்.

சென்று விட்டார்களா…! இல்லையா…? என்று நீங்கள் தனித்துப் பார்க்க வேண்டியது இல்லை. தொடர்ந்து இந்த உணர்வுகளைச் செயல்படுத்தி வந்தால் “நான் விண்ணிலே இருக்கின்றேன்…!” என்று உங்களுக்கு உணர்த்துவார்கள்.

ஆகவே இத்தகைய விண் செலுத்தும் மார்க்கம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது உங்களுடைய கடமை…! அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். மற்றவர்கள் செய்யவில்லை என்ற எண்ணம் உங்களுக்குத் தேவையில்லை.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் முறை

 

வேதனைப்படுபவரை நாம் சந்தித்தால்… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுவாக்கி அந்த வேதனைப்படும் உணர்வைத் தள்ளிவிட்டு
1.அந்த வேதனைப்படுபவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்ற உணர்வைக் கலந்து எடுத்துச் சொன்னால் இந்த உணர்வு வீரியமடைந்து
2.அவருடைய செவிகளில் பட்டு காது வழி உணர்ச்சிகளைத் தூண்டி மூக்கு வழி நுகர்ந்து
3.இந்த உணர்வு உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி அவருடைய நோயைக் குறைக்க உதவும்.

இதை அவர்கள் பின்பற்றினால் வளர முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் யாம் உங்களை ஆசிர்வதிக்கும் பொழுது உடனடியாக நோய் இறங்குகின்றது. அந்த அருள் சக்திகளை நீங்கள் கவர்ந்து உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டால் தீமை வராது தடுத்துக் கொள்ள முடியும். நமக்கு அந்தச் சக்தி உண்டு.

1.ஆகவே வேதனப்படுவோரிடம் துருவ நட்சத்திரத்தினைப் பற்றிச் சொல்லி…
2.அந்தச் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்சப்படும் போது அதைப் பெற்றுத் தீமைகளை அவரும் போக்க முடியும்.

அதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துக் கொடுத்துள்ளோம்.

ஒருவருக்கு மன நோயோ அல்லது கடுமையான உடல் நோயோ இருந்தால் கூட்டுத் தியானங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் ரத்த நாளங்களில் கலந்து… உடல் முழுவதும் பரவி… உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற
1.இந்த உணர்வின் ஒலியை எழுப்பி செவி வழி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்யும் போது
2.அதைப் பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டால் அதை நுகர்ந்து உயிரிலே பட்டு
3.உணர்வுகள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து நல்ல அமிலங்களாக மாற்றப்பட்டு
4.அவர் உடலில் இருக்கக்கூடிய நோயை நீக்க இது உதவும்.

அவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்…! நாம் வெறுமனே சொன்னால் பொருள் இல்லை.

யாம் மற்றவருக்கு ஆசீர்வாதம் கொடுக்கும் போது பாருங்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் வேறு எண்ணத்தில் இருப்பார்கள்.
1.இப்போது உடலில் மின்சாரம் பாய்வது போல் இருக்கின்றதா…? என்று கேட்டால்
2.இல்லை…! என்று சொல்லிவிடுவார்… ஒன்றுமே தெரியவில்லை தெரியவில்லை என்று சொல்வார்கள்.

காரணம்… ஆசையின் நோக்கம் வேறு…! அதைக் கேட்கும் நிலை வேறு…!

ஆகவே இது போன்ற நிலைகளை விடுத்து விட்டு… சொல்லும் போது (காதிலே கேட்கும் போது) அந்த அருள் சக்திகளை எடுக்கப் பழகும் “ஒரு பயிற்சிக்கு வர வேண்டும்….”

1.நோயால் வேதனைப்பட்டு அவர் சொல்லும் போது நாம் அதைக் கேட்டால்
2.அவருடைய வேதனை நம் உடலுக்குள் வருகின்றது… அதனின் வலிமை நமக்குள் செயல்படுகிறது,

இதைப் போன்று தான் வேதனைகளை நீக்கிய ஞானிகள் உணர்வை நாம் பெற்று… அதைச் சொல்லாக சொல்லி அவரைக் கேட்க வைத்தால் அந்த நோயை நம்மால் போக்க முடியும்.

தியானத்தைக் கடைப்பிடிப்போர்கள் இதைச் சீராகக் கடைப்பிடித்துச் செயலாக்கத்திற்குக் கொண்டு வர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக பேரொளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் பேரருளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்தாலும் நமது பூமி துருவத்தின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன் படரச் செய்து கொண்டிருக்கிறது.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

ஏற்கனவே பல முறை இந்த உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றோம்.
1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அதன் வலிமை பெற்றதனால்
2.அதன் துணை உண்டு உங்கள் கண்ணின் நினைவினை விண்ணிலே செலுத்தி
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உயிரின் இயக்கத்துடன் தொடர் கொண்டு நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி கண்களைத் திறந்து ஏங்கித் தியானியுங்கள்.

இவ்வாறு ஏங்கித் தியானிக்கும் போது
1.கருவிழியின் வழி… கண்ணின் நரம்பு மண்டலத் தொடர்புடன்…
2.உங்கள் உடலில் உறுப்புகளில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இயக்கும் வலிமை பெறுகின்றது.

புருவ மத்தியில் வீற்றிருந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே மீண்டும் மீண்டும் செலுத்தி உயிருடன் இணைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வோடு கண்களை மூடுங்கள்.

இப்பொழுது உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இவ்வாறு உயிருடன் அந்தப் புருவ மத்தியிலே இணைத்து இயக்கப்படும் பொழுது…
1.உணர்ச்சிகள்… அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதை (உயிர் வழி) உயிரிலே ஈர்க்கப்படும் பொழுது
2.உடலிலே உருவாகிக் கொண்டிருக்கும் அந்தத் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் புகாது இப்போது நாம் தடைப்படுத்துகின்றோம்.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் நிலை வரும் பொழுது புருவ மத்தியில் சிறிது கனமாக இருக்கும்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே மோதும் பொழுது
2.வெளிச்சங்கள் புருவ மத்தியில் வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய தீமையான அணுக்களுக்கு ஆகாரம் உள் புகாது இப்பொழுது தடுத்து நிறுத்தப்படுகின்றது “நம்முடைய ஆறாவது அறிவின் துணை கொண்டு…”

கண்ணின் நினைவை இப்போது உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களிலே செலுத்துங்கள். அதில் உள்ள ஜீவணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

சந்தர்ப்பத்தில் நாம் வெறுப்போ வேதனையோ சலிப்போ கோபமோ ஆத்திரமோ கொள்ளும் போது… எவர் உடலில் இருந்து இந்த உணர்வுகள் நமக்குள் வந்ததோ அதை நினைவாக்கி மீண்டும் எண்ணும் பொழுது உணவு உட்கொள்ளும் பொழுது இங்கே தடையாகிறது.

ஆனால்… வெறுப்பு வரும் போது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அது ஒடுங்குகின்றது.

அல்லது அந்த இரத்தத்தில் உருவான அத்தகைய அணுக்களுக்குக்
1,கண்ணின் உணர்ச்சி கொண்டு வீரிய சக்தியான நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்கின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இரத்தத்தில் கலப்பதை இப்பொழுது நீங்கள் உணரலாம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து… உடல் முழுவதும் கடந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் செலுத்துங்கள்.

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியைப் பெறும் பொழுது அந்த உறுப்புகள் அனைத்தும் வலிமை பெறுகிறது.

உங்கள் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் (ஆன்மாவில்)
1.முன்னாடி இருக்கக்கூடிய தீமைகள் உங்கள் சுவாசத்திற்கு மூக்கின் வழி உள்ளே செல்லாதபடி அதைத் தள்ளிவிடும்
2.அதற்குத்தான் பயிற்சியாக இந்தத் தியானத்தைச் செய்கின்றோம்.

தீமை செய்யும் நிலைகள் எதுவாக இருந்தாலும்… அதனுடன் நேரடியாக நாம் மோதக் கூடாது

 

இந்த உலகில் யாரையெல்லாம் நாம் சந்தித்திருந்தாலும்… அவர்கள் உணர்வை எதன் வழி நுகர்ந்திருந்தாலும்… நுகர்ந்த உணர்வை நமது உயிர் அணுவாக மாற்றி உடலுக்குள் இணைத்து விடுகின்றது.

அனைவரது உணர்வுகளும் நமக்குள் இப்படி வரப்படும் பொழுது
1.அதிலே இருக்கும் தீமைகளிலிருந்து விடுபட…
2.நமக்குள் அறியாது விளையும் அத்தகைய அணுக்களை வலு இழக்கச் செய்ய…
3.அருள் மகரிஷிகள் உணர்வு கொண்டு இருளை அகற்றிடும் சக்தியாக… அந்த வாலியை வென்றிட வேண்டும்.

ஒரு நோயாளியின் உணர்வை நாம் அடிக்கடி பதிவாக்கிக் கொண்டால் அல்லது ஒருவன் நமக்குத் தீங்கு செய்கின்றான் என்று அவனை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் அது வாலியாகிறது.

இராமன் வாலியை மறைந்திருந்து தான் தாக்குகின்றான் என்று காட்டியுள்ளார்கள்.
1.பிறருடைய எண்ணங்களை நாம் நேரடியாக எண்ணப்படும் பொழுது அந்த உணர்வுகள் வருகின்றது.
2.அவ்வாறு வரும் போதெல்லாம்… கஷ்டமோ… தொழிலிலே நஷ்டமோ வந்தால் அல்லது உடலிலே நோயோ வந்தால்
3.அது நமக்குள் வராது மாற்றி அமைக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இருளை அகற்றிய அந்த அருள் ஒளியின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரணம் இராமன் வாலியை நேரடியாகப் பார்க்கவில்லை. மறைந்திருந்தே தாக்கினான். இந்த வழியினை நமக்குள் எடுத்து அருள் உணர்வினை நமக்குள் சேர்த்து அதாவது
1.தீமை செய்யும் உணர்வுகளுடன் நாம் மோதிக் கொண்டே இருக்காமல்
2.நஞ்சான வாலியைச் செயலிழக்கச் செய்ய வேண்டும்.

நாம் எடுக்கும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உயிரிலே பட்டபின் உணர்வின் ஒளியாக எண்ணங்கள் நமக்குள் வருவதும் இந்த உணர்ச்சிகள் உடலை இயக்குவதும் என்ற நிலைகள் கொண்டு… மகரிஷிகளின் உணர்வை எதனுடன் கலக்கச் செய்கின்றோமோ அதுவாக மாற்றுகின்றது.

உதாரணமாக… சாயங்களை எடுத்துக் கொண்டாலும் பல கலவைகள் உருவாக்கப்படும் பொழுது அதனதன் சக்தியை இழக்கின்றது. எதனின் உணர்வு மாறுகின்றதோ அதற்குத் தக்க நிறங்கள் மாறுகின்றது.

இதைப் போன்று தான்
1.நமக்குள் பலருடைய எண்ணங்களும் குவிந்திருப்பினும்
2.அந்த எண்ணங்களை உருவாக்கும் அணுக்கள் அத்தகைய இயக்கங்களை உடலில் செய்து கொண்டிருந்தாலும்
3.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்து அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினைக் கலந்து விட்டால்
4.நமக்குள் இருக்கும் தீமை செய்யும் அணுக்கள் பலவீனம் அடைகின்றது… வாலி என்ற நிலை வலு இழக்கப்படுகின்றது.

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து விழ்த்தினான் என்று காட்டினார்கள். இராமாயணக் காவியத்திலே இராமனைக் கடவுள் என்று சித்தரித்தாலும் “அவன் ஏன் மறைந்திருந்து தாக்க வேண்டும்…?” என்று இப்படியும் வாதம் செய்வார்கள்.

ஏனென்றால்
1.தீமையான உணர்வை நேரடியாகக் காணும் பொழுது அந்த உணர்ச்சிகள் நம்மைத் தூண்டுகின்றது.
2.ஆனால் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அதை மறைத்துவிடுகிறது…
3.அதனின் செயலாக்கங்களைக் குறைத்து விடுகின்றது.

காவியத் தொகுப்பின் மூலம் மனித வாழ்க்கையில் எண்ணங்கள் எப்படி உருவாகிறது…? எது வலிமை பெறுகின்றது…? எதன் வலிமையில் மனிதன் இயங்குகின்றான்…? மனிதன் என்ற நிலையில் அது எந்த வலிமை கொண்டு அவனை மாற்றுகின்றது…? என்று தான் நமக்குக் காட்டினார்கள்.

இத்தகைய பேருண்மையை உணர்த்தப்படும் நிலை தான் கார்த்திகை தீபம்… அண்ணாமலையார் தீபம்…!

1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் உடலின் உச்சியிலே… நம் உயிரிலே…
2.அருள் உணர்வினை ஏற்றி வைக்க வேண்டும்… அதை இயக்கச் சக்தியாக மாற்ற வேண்டும்.

இன்றைய உலகம் போகும் போக்கில் நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும்

 

யாம் சொன்ன ஆத்ம சுத்தியை உங்கள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி எடுத்து உங்களுக்குள் வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகள்) மாற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றிட முடியும்.
2.குறைபாடுகள் வந்தால் அது இயக்காதபடி சிந்தித்துச் செயல்படும் மன வலிமையும் வரும்.

உங்கள் அனுபவத்தில் பெறலாம்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால் உலக நடப்புகளை இன்று டி.வி. வாயிலாகவோ மற்ற வேறு வகைகளிலோ பார்த்தாலும் அல்லது காதிலே கேட்க நேர்ந்தாலும் அது அனைத்தும் “நம் கண்களுக்குத் தான் வருகின்றது…”

காற்றிலிருக்கக்கூடிய அலைகளை ஆண்டனாக்கள் எப்படிக் கவர்கின்றதோ அதைப் போன்று தான்
1.இன்றைய உலக நடப்புகளையும் நமது கண் ஆண்டனா போன்று கவர்ந்து நம் ஆன்மாவாக்கிச் சுவாசிக்கச் செய்கின்றது.
2.அது உயிரின் காந்தத்தால் கவரப்பட்டு உயிரிலே பட்டு உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

ஆண்டனா கவரும் அலைகளை டி.வி. கவர்ந்து டி.வி.க்குள் நுழைந்த பின் அதற்குள் இருக்கக்கூடிய உறுப்புகள் (PARTS) இயக்கி எப்படிப் படமாகச் சப்தமாகக் காட்டுகின்றதோ அதே போல நம் உடல் உறுப்புகளிலும் அத்தகைய உணர்ச்சிகள் ஊட்டப்பட்டு நாம் பார்த்ததைச் செய்ல்படுத்தத் தொடங்கி விடுகிறது.

இதை உடனுக்குடன் நாம் மாற்ற வேண்டும். அதை எப்படியும் நீங்கள் மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் நினைவுபடுத்தித் தியான பயிற்சியாக உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

1.என் குரு அந்தச் சக்தியைப் பெறச் செய்தார்.
2.காரணம் நல்லவர்களுக்குத் தான் எல்லாத் தொல்லைகளும் வருகின்றது.
3.நல்லவர்களைக் காக்க வேண்டுமல்லவா…!

ஆகவே உலக நடப்புகளைக் கேட்க நேர்ந்தால் நமக்குள் எத்தனையோ பதட்டமும் பயமும் வருகின்றது. “தியானம் இருந்தேன்…” என்று சொன்னாலும் அந்தந்தச் சந்தர்ப்பத்தில் வருவதை உடனுக்குடன் சுத்தப்படுத்தவில்லை என்றால்
1.அது உமிழ் நீராக மாறி உடலுக்குள்ளும் சேருகின்றது. எலும்புக்குள் பதிவும் அதிகமாகி விடுகிறது.
2.அதற்குப் பின் உடல் நோயாகவோ மன நோயாகவோ மாறுகிறது.

ஆகவே உலக நடப்புகளைக் கேட்டாலும் அதனை உடனே நமக்குள் மாற்றிப் பழக வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றிய “குறிப்புகளை…” அதிகமாக நாம் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

மற்ற உணர்வுகள் பதிவாகாதபடி… அது உமிழ் நீராக உடலுக்குள் செல்லாதபடி மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

ஆத்ம சுத்தியின் முக்கியமான மூலக்கூறு இது தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பாம்பினங்கள் விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவுக்காக மற்ற உயிரினங்களை எடுத்தாலும் மற்ற உடலில் உள்ள விஷங்கள் எல்லாம் தன் உடலில் கலந்து கலந்து
1.பல விதமான வர்ணங்களாக… நாகரத்தினமாக விளைகின்றது…. “கல் மயமாகின்றது…!”
2.ஆனால் மனிதனான பின் உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றப்படும் போது இது “மின் மயமாகின்றது…”

அதாவது… இயக்கம் உயிர் துடிப்பு எப்படி ஆகின்றதோ நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து… ஒளியின் சேர்க்கை ஆகிறது.

தேனீக்கள் ஒன்றாகச் சேர்ந்து தேனை உருவாக்கி ஒரு கூடாகக் கட்டி அதிலே எப்படி அமைத்துக் கொள்கின்றதோ இதைப் போன்று நமது உயிரும் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகளை… தேனீயைப் போன்று ஒன்றாக இணைந்து ஒளியாக மாற்றுகிறது.

துருவ நட்சத்திரம் திடப்பொருள் அல்ல…!
1.உயிரின் இயக்கத்தைப் போல ஈர்க்கும் ஒன்றுடன் இணைந்து அது வாழும் தன்மையும் பெற்றது
2.திடப்பொருள் ஆகிவிட்டால் வைரமாக… கல்லாக… கோள்களைப் போன்று பாறை ஆகிவிடும்.

மின் இயக்கத்துடிப்பாக அதன் உணர்வின் இயக்கம் வரும் பொழுது கோள்கள் தன் சுழற்சியின் மையத்தில் வெப்பமாகி அதன் உணர்வைக் கவர்ந்து கொண்டு வருகின்றது

ஆனால் உயிரணு தோன்றி நட்சத்திரமாக வளர்ச்சி ஆக்கப்படும் பொழுது தேனீயைப் போன்று தன் உணர்வின் தன்மை ஒளியின் உணர்வுகளை ஒன்றாக எடுத்து “ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளது….”

தேனீக்கள் சேகரித்து வைத்திருக்கும் தேனை நாம் உட்கொள்ளும் பொழுது அது எப்படிச் சுவையாக இருக்கின்றதோ அதைப்போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு ஆகாரமாகச் செலுத்தி அதனை வளர்ச்சியாக்கும் போது
3.விஷத்தை மாற்றி இனிமை என்ற உணர்வை ஊட்டி அதை வளர்த்துக் கொள்வதே ஆறாவது அறிவின் சிறப்பு.

எல்லாமே… சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகள் தான் பரிணாம வளர்ச்சிக்கே காரணமானது.

மனிதனாகி ஆறாவது அறிவு பெற்றபின்…
1.தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி
2.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவ அணுக்களை உயிரணுக்களாக மாற்றி
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு அனைத்து உலகிலும் வரும் இருளை நீக்கி
4.ஒளி என்ற உணர்வின் அறிவாக ஒருக்கிணைந்த இயக்கமாகப் பெறச் செய்வது தான் நம்முடைய நோக்கமாக இருத்தல் வேண்டும்.

உயிர் உடலான இருளுக்குள் இருந்து தான் உணர்வின் அறிவாக இயக்குகின்றது. ஆனால் மகரிஷிகள் என்பவர்கள்… உயிரைப் போல ஒளியின் உடலாக மாற்றி இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் “சூரியனே அழிந்தாலும்” அதிலிருந்து வெளிப்படும் விஷத்தின் தன்மையைக் கூட ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவர்கள்.

அத்தகைய ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இதைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது
1.நுகர்ந்த உணர்வு உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள ஜீவ அணுக்களின் முகப்பில் இணைந்து
2.ஒவ்வொரு நோடியிலும் சுவாசிப்பது… புருவ மத்தியில் உயிரிலே மோதுவது போன்று
3.அந்த ஜீவ அணுக்களும் இந்த உணர்வைப் பெறும் தகுதி பெறுகின்றது.

உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அத்தகைய தகுதி பெறச் செய்வது தான் எம்முடைய (ஞானகுரு) இந்த உபதேசத்தின் நோக்கம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னுடைய நினைவை துருவ நட்சத்திரத்திற்கு எப்படி அழைத்துச் சென்றாரோ அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வுகளைத் தொடர்பு கொள்ளச் செய்து
2.உங்கள் உடல் உறுப்புகள் உருவாக்கிய அணுக்களின் முகப்பில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும்படி செய்கின்றேன்.

விஷத்தை ஒளியாக மாற்றும் அந்த அரும் பெரும் சக்தியை நீங்கள் பெறுவதற்கு… அதற்குண்டான சரியான காலப்பருவங்களை இப்பொழுது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

குருநாதர் எந்தெந்தப் பருவங்களில் எதனெதன் சந்தர்ப்பத்தில் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதே போல்
1.உங்களுக்குள் அந்த மனப்பக்குவம் வளர்ச்சி பெறுவதற்குத் தக்க
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

அப்படி மனப்பக்குவமாகி விளைந்த பின் உங்களில் விளைந்த உணர்வுகள்… உங்களுடன் பழகும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.

ஆகவே “பிந்தி வருபவருக்கு…” உங்கள் மூலமாக உயர்ந்த சக்திகளைக் கிடைக்கப் பெறச் செய்ய முடிகின்றது ஏனென்றால் வளர்ச்சி பெற்ற பருவம் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு அது விளைகின்றது என்பதை நீங்கள் உணர்தல் வேண்டும்.

1.குருவுடன் தொடர்பு கொண்ட உங்களில் விளைந்த அந்த உணர்வுகள் தான்
2.இனி வருவோருக்கு அந்த மகரிஷிகளின் உரமான சத்தும் கிடைக்கப் பெறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும்.

“தினம் தினம்” நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வதை “ஒரு தலையாயக் கடமையாக” நாம் வைத்துக் கொள்ள வேண்டும்.

1.உடலுக்கு வேண்டிய உணவை எப்படி அவ்வப்போது உட்கொள்கின்றோமோ
2.அதைப் போன்று நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்களுக்கு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறச் செய்ய வேண்டும்.

27 நட்சத்திரங்களும் புவியின் ஈர்ப்பிற்குள் அதனதன் அலைகள் கவரப்படும் போது மின்னலாகப் பாய்கின்றது. சில நட்சத்திரங்களின் அலைகள் எந்தப் பகுதியில் அதிகமாகப் படர்கின்றதோ மண்ணுடன் கலந்து அந்தந்த நட்சத்திரங்களின் குணங்களுக்கொப்ப வைரங்களாக விளைகின்றது.

காற்றில் இருப்பதைப் புவி ஈர்ப்பின் தன்மை கொண்டு கவர்ந்து வைரங்களாக அது விளைகின்றது.

அது போன்றே துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுகச் சேர்க்க
2.உயிரைப் போன்றே ஜீவணுவாகி… (ஒளியான) உயிரணுவாக மாறிவிடும்.

கோடிக்கணக்கான ஜீவணுக்கள் நம் உடலில் இருப்பதை உயிரைப் போன்ற உயிரணுக்களாக…
1.ஒளியான அணுக்களாக மாற்றும்போது ஓர் ஒளியின் உடலாகவும்
2.எத்தகைய விஷத்தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் நம் உயிர் பெறுகின்றது.

இதை நாம் அறிந்து கொள்தல் வேண்டும்.

நட்சத்திரங்களுடைய அலைகள் பூமிக்குள் கவரப்பட்டு அது மண்ணுக்குள் கருவுற்று வைரங்களாக விளைந்த பின் அது வெடித்துத் தனித் தன்மையாக வெளி வந்துவிடும்.

இதைப் போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்கு உணவாகக் கொடுத்தபின்… நாளுக்கு நாள் அது விளைந்து வெளிப்படும் பொழுது… அறிவின் வளர்ச்சி… அறிந்திடும் வளர்ச்சியாக இங்கே வருகின்றது. அதாவது…
1.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவது போன்று
2.நமது ஜீவணுக்களின் துணை கொண்டு கண்ணின் வளர்ச்சி கொண்டு
3.அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்களின் துகள்கள் மின்னலாக மாறி பூமிக்குள் பட்ட பின் சிறுகச் சிறுக வைரமாக விளையப்படும் பொழுது ஒளியின் உடலாக அது பெறுகின்றது… நட்சத்திரங்கள் மின்னுவது போன்று…!

நமது உயிரும் மின்னணு போன்று தான் இயங்கிக் கொண்டே உள்ளது. அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு உடலில் உள்ள ஜீவணுக்களும் இயங்குகின்றது.

மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி ஆவதை அதற்குண்டான இணைப்புகளைக் கொடுத்து நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறோம். நமக்கு வேண்டிய உபகரணங்களை அந்த மின்சாரத்தால் (மின் அணுக்களால்) இயக்கி அதன் வழி அனைத்துப் பயன்பாடுகளையும் பெறுகின்றோம்.

அது போல் நம் உயிரும் சூரியனின் தொடர்பு கொண்டு தான் இயங்குகின்றது. ஒவ்வொரு ஊரிலும் சப்ஸ்டேஷனை (EB SUB-STATION) எப்படி நாம் வைத்திருக்கிறோமோ அதைப் போன்று நம் உயிரும் அந்த நிலை பெறுகின்றது.

அதாவது…
1.சூரியனின் துணை கொண்டு அந்த மின் கதிர்கள்
2.உயிர் வழி நம் உடல் அணுக்களை எல்லாம் இயக்குகின்றது.

இருப்பினும்… இது அனைத்தையும் அறிந்திடும் தன்மை கொண்டு வாழ்க்கையில் வரும் விஷத்தை எல்லாம் மனித உடலில் இருந்து வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவன் “அகஸ்தியன்…”

அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி கணவன் மனைவி இருவரும் ஒரு மனமும் ஒரு மனமாகி… அருள் மணம் பெற்று… உயிரைப் போன்றே உயிர் அணுக்களை வளர்த்து… ஒளியின் உடலாக இருக்கும் அந்தத் “துருவ நட்சத்திரம்…” விஷத்தை ஒளியாக மாற்றிடும் தன்மை பெற்றது.

27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது. அதனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்ட விஷங்கள் தனக்குள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.

அந்த வைரத்தைத் தட்டி நாம் சாப்பிட்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும்… அவ்வளவு கடுமையான விஷம்…! ஆனாலும் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாக நாம் காண முடிகின்றது… வெளிச்சமாகத் தெரிகின்றது.

1.இன்றைக்கும்… விஷம் தான் உலகை இயக்குகின்றது
2.சூரியனும் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பமாகி இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது
3.நமது உயிருக்குள்ளும் விஷத்தின் தாக்குதலாகி அதனால் துடிப்பின் தன்மை ஏற்பட்டு இயங்கிக் கொண்டுள்ளது
4.ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது

இதை எல்லாம் நாம் அறிதல் வேண்டும்.

உதாரணமாக
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் யாரும் கவர முடியாது
2.குரு துணை இல்லாது அதை எடுப்பது மிகவும் கடினம்,

ஆனால்
1.அத்தகைய கடும் விஷத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடிய குருவை (ஈஸ்வரபட்டர்) நாம் பெற்றுள்ளோம்
2.விஷத்தை ஒளியாக மாற்றிக் கொள்ளும் பருவத்தை நமது குருநாதர் ஏற்படுத்தி உள்ளார்.
3.அதைத்தான்… அந்தக் கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றும் திறன் உங்களுக்கும் பெறச் செய்து கொண்டிருக்கிறோம் (ஞானகுரு)

ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் உயிரின் முகப்பில் ஈர்க்கப்பட்டு உடல் முழுவதும் எப்படிப் படர்கிறதோ இதே போல்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய (அணுக்கள்) அந்த ஜீவணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
அதன் துணை கொண்டு இந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கத்தை ஈர்க்கச் செய்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படி அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாரோ அதே போல் உங்களில் இயக்கச் செய்யும் போது “நமது குருநாதராக” ஆகின்றார்.

ஏனென்றால் அவர் வழியில் நாம் தொடரப்படும் பொழுது “அதனுடைய தொடர்வரிசை” வருகின்றது குரு வழியில் இதைப் பெற்றால் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தொழிலில் நஷ்டமானால் “நஷ்டம் ஆகிவிட்டது…” என்று எண்ணத்தை விடுத்துவிட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஈரத்த நாளங்களிலே அது கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சிறிது நேரம் வலுவாக்க வேண்டும்.

அந்த நஷ்டத்தால் ஏற்பட்ட வேதனையை துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அப்புறப்படுத்திய பின்
1.நமக்குச் சிந்திக்கும் திறன் வருகின்றது
2.அடுத்து எப்படி அதைச் சமாளிக்க வேண்டும்…? என்ற ஞானமும் வருகின்றது
3.அந்த ஞானத்தின் வழி கஷ்டத்தை நிவர்த்திக்கும் சக்தி நமக்குள் வருகின்றது.

இவ்வாறு செய்யாதபடி… நஷ்டம் வருகிறது என்றால் நம் நண்பர்களிடத்தில் சொன்னாலோ அவரும் திரும்ப வேதனைப்படும்படி தான் சொல்வார். அந்த வேதனையை மீண்டும் சொன்ன பிற்பாடு
1.அடுத்து அவர் ஏதாவது நமக்கு உதவி செய்ய வேண்டும் என்றாலும்

2.பணம் கொடுத்தால் திரும்ப வருமா…! என்று சந்தேகப்பட்டு “என்னிடம் இப்பொழுது பணம் இல்லை…” என்று சொல்லிவிடுவார்

காரணம்… அவரைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் அவ்வாறு செய்வார். அந்தச் சமயத்தில் நம்முடைய சிந்தனைகள் (கஷ்டம் என்று சொன்னது) நமக்கு நாமே தண்டனை கொடுத்த மாதிரி ஆகிவிடும்.

இதைப் போன்ற பழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் நம்முடைய சொல்…
1.கஷ்டங்களைச் சொல்லாதபடி இந்தக் காரியங்கள் இப்படி நடக்க வேண்டும் என்று கேட்டுப் பழக வேண்டும்
2.அப்பொழுது நமக்கு உதவி செய்யும் பண்புகளை அங்கே உருவாக்கும்

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்

சில பேர் “தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் எண்ணி… இந்த மாதிரி ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு… எனக்குப் பணம் கொடுங்கள்…!” என்று கேட்டபின் அவருக்குக் கொடுத்தால் அடுத்து அவரிடம் திரும்ப வாங்க முடியாத நிலை ஆகிவிடும்.

நம் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்த இந்த உணர்வுகள் தான்
1.அந்த (நமது) உணர்வே நம் உடலுக்குள் எதிரியாக மாறி எதிரிகளை உருவாக்கிக் கொண்டு
2.நமக்கு ஏற்படும் நன்மைகளை வரவிடாதபடி தடுக்கும்

இதைப் போன்ற உணர்வுகளிலிருந்தெல்லாம் தப்புவதற்கு ஆத்ம சுத்தியை நீங்கள் அவசியம் கடைப்பிடித்துப் பழக வேண்டும். காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ அவரவர்கள் வசதியைப் பொறுத்து எடுத்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

தொழில் நஷ்டம்…! என்று சொல்வதைக் காட்டிலும் அந்த அருள் சக்தியைப் பெற்று வளர்த்துக் கொண்ட பின் அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற ஞானமும் சிந்திக்கும் ஆற்றலும் வரும்.

நம்மிடம் பொருள் வாங்கியவர் அதற்குண்டான பணம் வர வேண்டும் என்றாலும்
1.அவர்களுக்கும் அந்த வருமானம் வர வேண்டும் என்று நாம் எண்ணினால்
2.நமக்குள்ளும் அந்தத் தொந்தரவு வருவதில்லை… நாம் எண்ணும்போது அவர்களுக்கும் நல்ல நிலை ஏற்படும்.

ஆனால் கொடுத்தேனே… சமயத்தில் திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று வேதனைப்பட்டால் இந்த வேதனை அவருக்குள்ளும் பாய்ந்து அவருடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து… அவருடைய வரவும் குறையும்… அதனால் நமக்கு வர வேண்டிய பணமும் தடைப்படும்.

இதை எல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்

ஆகவே வாடிக்கையாளர்கள் எல்லோரும் நல்ல நிலைகள் பெற வேண்டும்… பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடிய திறன் பெற வேண்டும் என்று நாம் தியானித்தால் அவர்கள் வளர்ச்சி பெறுகின்றனர்… “நம் பணம் தேடி வரும்…”

உதாரணமாக கடன் கொடுத்தவர்களில் கொஞ்சம் “போக்கிரித்தனம்” செய்பவர்களாக இருந்தால்
1.அவன் கேட்டால் கொடுக்கவில்லை என்றால் உதைப்பான் என்று தெரிந்தால் பணம் அவர்களுக்கு முதலில் தேடிப் போகும்
2.ஆனால் நீங்கள் இரக்கம் ஈகை என்று இருந்தால் உங்களிடம் “சொல்லிக் கொள்ளலாம்” என்று வரும்.

அவர்களுக்குப் பணம் போகும்… உங்களுக்குச் சங்கடம் தான் வரும். பார் இவ்வளவு தூரம் செய்தேன் கேட்டவுடனே அவனுக்குக் கொடுக்கின்றான் நமக்குக் கொடுக்கவில்லையே…! என்று மீண்டும் வேதனை தான் வரும்.

ஆகவே பணம் தராதவரைப் பற்றி அந்த வேதனையை நாம் அதிகமாக எடுக்க எடுக்க அவருக்குத் தப்பி வந்தாலும் கூட மீண்டும் கடன் கொடுக்க முடியாத நிலை ஆகிவிடும். அவரும் இருப்பதைத் தட்டி பறித்துச் சென்று விடுவார். அடுத்து நம் காசைக் கூடப் பெற முடியாத நிலை ஆகிவிடும்.

இதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டீர்கள் அல்லவா…!

ஆகவே ஆத்ம சுத்தி செய்து அவர்களுக்கும் பணம் (வருமானம்) வர வேண்டும்… எல்லோருக்கும் பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இப்படிச் செய்யச் செய்ய…
1.உங்களுக்கு மன உறுதி கிடைக்கின்றது
2.தொழிலும் மன சங்கடம் இல்லாதபடி நடத்த முடிகின்றது
3.அதற்கு வேண்டிய வரவு வரும்
4.மனம் வலிமை பெறும்போது உங்களைத் தேடி அந்தக் காசு வரக்கூடிய சந்தர்ப்பமும் வரும்.

போகர் பல சிலைகளை உருவாக்கினார்… ஒன்றல்ல…!

 

போகர் முருகன் சிலையைச் செய்திருக்கின்றார்.
1.மற்ற தாவர இனச் சத்துக்களை எடுத்துக் காயகல்பமாக உருவாக்கி… தான் அந்தக் கூட்டிலேயே இருந்து…
2.தான் சக்தி பெறும் வரையிலும் வேறு ஒரு உடலுக்குள் மாறவில்லை.
3.வெளியில் செல்வது மீண்டும் இந்தக் கூட்டிற்குள் வருவது மீண்டும் தான் சக்தியைப் பெருக்குவது.

இப்படித்தான் விண்ணினுடைய ஆற்றலை 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோள்களின் சக்தியையும் எல்லாவற்றையும் இணைத்துத் தான் முருகன் சிலையை வடித்தது. அதிலே பாதரசங்களைச் சேர்க்கப்பட்டு முருகன் சிலையை வடித்து முழுமையாக்கப்பட்டது.

உணர்வின் தன்மையை ஒளியாக எப்படி மாற்றுவது…? என்பதற்குத் தான் சிலையை உருவாக்கி
1.அதே ஆவியை அவர் சுவாசித்து பகைமை உணர்வுகளை மாற்றி அதே ஒளியை எடுத்து அவர் சுவாசித்தார்.
2.குகைகள் இருக்கப்படும் பொழுது இந்தச் சிலையை வைத்திருக்கின்றார்.
3.அதன் மேல் சொட்டு சொட்டாக தண்ணீர் விழும்படி செய்து அந்த உணர்வின் சத்தை நுகர்வதும்
4.தனக்குள் அந்த அணுக்களின் தன்மை மாற்றுவதும் “இப்படிப் பல சிலைகள் உண்டு…”

அதே போல் சிலையை மக்களுக்குச் செய்யப்பட்டு மனிதனுடைய உணர்வுகளை மாற்றுவதற்கும் அவன் நினைவு வருவதற்கும் செய்தார் போகர். அவர் உருவாக்கிய முருகன் சிலை மீது அன்று பாத்திரத்தை வைத்திருப்பார்கள்… தண்ணீர் அது மேலே விழும்.

இப்பொழுது அது எல்லாம் இல்லை. கோயிலாகக் கட்டிய பின் அது எல்லாம் இல்லை. கோவில் கட்டுவதற்கு முன் வெறும் சிலை தான் இருந்தது.

பாத்திரத்திலிருந்து சிலை மீது தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டே இருக்கும்.
1.நெகட்டிவ் பாசிட்டிவ் அதிலிருந்து வரக்கூடிய சத்து ஆவியாக மாறும்.
2.அதை நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் விஷத்தன்மைகளைப் போக்கும்.

இப்படித்தான் காயகல்பமாக அவர் உருவாக்கப்பட்டு அந்த உணர்வின் சக்திகளைத் தனக்குள் சேர்த்து நட்சத்திர மண்டலங்களை எண்ணி ஒளியின் சரீரமாகப் பெற்றது.

இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி அந்த உடலில் இருந்து சமாளிக்க வேண்டும் என்று செயல்படுத்தியவன் போகன். அகஸ்தியன் தன் உணர்வை எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக முதன் முதலில் விண் சென்றவன் துருவன் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.

நம் குருநாதரும் பல உடல் தாவி வந்தவர்தான்… கூடு விட்டு கூடு பாய்ந்தவர். அபிராமிபட்டர் ஈஸ்வரபட்டர் என்று இப்படி ஒரு ஐந்து ஆறு உடல்களை எடுத்து வந்தவர் தான்.

அதிலேயும் பைத்தியக்காரராகத்தான் இதிலேயும் அப்படித்தான் இருந்தார். ஆனால் “தன்னுடைய காரியம் எதுவோ…” அதை சாதித்துக் கொண்டே வந்தார்.

தன் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது…? என்று உணர்ந்து கடைசி உடலாகச் சக்திகளை சேமித்த பிற்பாடுதான் ரகசியங்களை சொல்லி அதை எப்படி எடுக்க வேண்டும்…? என்று எம்மிடம் சொன்னார்.

தான் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு அது எப்படி ஒளிச் சரீரம் ஆக வேண்டும்…? என்று
1.அதற்குண்டான மார்க்கத்தைக் காட்டி
2.அந்த உந்து விசை கொண்டு விண் செலுத்தும் படிச் செய்தார்.

உணர்வின் “சில மாறுபட்ட இயக்கங்களை” அறிந்து கொள்வது நல்லது

 

உயிரின் இயக்கத்தை அறிந்து அதை எப்படி மதிக்க வேண்டும்…? என்பதற்காகத்தான் குருநாதர் எம்மை காடு மேடலாம் அலையச் செய்து எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்து அறியும் படி செய்தார்.

அதே சமயத்தில் நகருக்குள் வந்த பின் இங்கே எத்தனையோ வேதனை வருகிறது.

ஒருவனுக்கு உடல் எல்லாம் ரணமாக இருக்கின்றது ஆனால் உணவுக்காக வேண்டி “ஐயா பசிக்கிறது…” என்று உடலை வளர்க்கப் பிச்சை கேட்கின்றான்
1.ஆனால் வேதனை தெரிவதில்லை.
2.வசதி உள்ளவர்கள் நமக்கு உடலில் வேதனையானால் நம்மால் ஒரு இஞ்ச் கூட நம்மால் நகர முடியவில்லை.

ஆனால் வேதனையானாலும் கூட பசிக்குச் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தில் வேதனையை தாங்கிக் கொண்டு அவன் எப்படிப் பிச்சை எடுக்கச் செல்கிறான்…?

1.ஆகாரத்தின் மீது எண்ணம் இருக்கப்படும் பொழுது வேதனை குறைகின்றது.
2.ஆனால் ஆகாரம் கிடைத்த பின்பு வேதனையை ஜாஸ்தியாக உணர்கின்றான்.

முதலில் உணவு வேண்டும் என்பதற்காகத் தேடிச் செல்கின்றான். அதை தேடிச் சென்று “உணவைப் பெறும் வரையிலும் ஆர்வம் இருக்கின்றது..” உட்கொண்டு பசி தீர்ந்தபின் எவ்வளவு வேதனைப்படுகின்றான்…?

உடலை வளர்க்க விரும்புகின்றான். அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்றபின் இந்த உணர்ச்சிகள் எப்படி அறியச் செய்கின்றது…?

இதை அறியும் உணர்வுகள் உனக்குள் நுகர்ந்து கொண்ட பின் என்ன ஆகிறது…? என்பதையும் காட்டுகின்றார். இதெல்லாம் எதற்காக அனுபவம் கொடுக்கிறார்…?

என்னிடம் பழகி இருக்கிறீர்கள்.
1.உங்களுக்குக் கோபம் எப்படி வருகின்றது…? வெறுப்பு எப்படி வருகின்றது…?
2.வெறுப்படைந்த பின் வீட்டில் உள்ளவர்கள் மீது வெறுப்படையச் செய்வது எது…?
3.அதே சமயத்தில் அதை எல்லாம் எப்படி நீக்குவது…? என்பதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிப்பது.

இத்தனையும் நான் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டு வந்தேன்.

உயர்ந்த சக்தியை உங்களிடம் சொல்லி அதை ஏங்கிப் பெறும்படி செய்து வளர்த்து அந்தத் தீமையை நீக்கும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.

நான் வந்து உங்களுக்கு அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்ல வரவில்லை.

திட்டியவனைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அந்த உணர்வு பதிவாகின்றது. அது எப்படி மீண்டும் மீண்டும் இயக்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் “எல்லாமே சந்தர்ப்பம்…” என்பதை நீங்கள் உணர முடியும்.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்ததும் சந்தர்ப்பம்தான். தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வைச் சுவாசித்த பின்
1.அது அணுக்களாக மாறி உடலில் மாற்றமாகி உணர்வுகள் மாறி குணங்கள் மாறி செயல்கள் மாறி
2.இது எல்லாம் எப்படி மாறி வந்தது…? என்பதைத் தெரிந்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
3.நாம் போகும் வழியினைச் சீராக்கி அதன் வழி வளர்ச்சி பெற ஏதுவாகும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பல உண்மைகளை உங்களுக்கு உபதேசத்தின் வாயிலாக உணர்த்தி உள்ளோம்

ஆக… எந்த நிலையிலும் உயிர் உடலை விட்டுத் தான் வெளியே செல்கின்றது. ஆனால் உடலை விட்டுச் செல்லும் பொழுது
1.வாழும் காலத்தில் நாம் எதைச் சேர்த்துக் கொண்டமோ அதற்குத் தக்க தான்
2.அடுத்து மாற்று உடலை உயிர் உருவாக்குகின்றது… உணர்வுக்கொப்ப உடலை மாற்றுகின்றது.

கோடிச் செல்வங்கள் வைத்திருப்பவரும் யாரும் நிம்மதியாக இருப்பதில்லை. அவர்களும் வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் சங்கடம் இவைகளை எடுக்கத் தான் செய்கிறார்கள்.

அவர்கள் உடலில் கடுமையான நோய்களாக அது விளைந்து விடுகிறது. செல்வத்தால் அவர்கள் வாங்கிய பொருள்களை அனுபவிக்க முடியாத நிலை தான் வருகின்றது… அதைப் பயன்படுத்த முடியாத நிலையும் வருகின்றது.

ஆகவே எப்படி இருந்தாலும்
1.இந்த உடலில் சிறிது காலம் தான் வாழ முடியும்.
2.வாழும் காலத்தில் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் யாம் சொல்லும் தியானத்தை அதிலே நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ விரோதமோ அவைகளை நுகர நேர்ந்தால் அது இயங்கிடாது தடைப்படுத்திக் கொள்ளுங்கள் அதற்குத்தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யும்படி உங்களிடம் சொல்கின்றோம் (ஞானகுரு).

ஆத்ம சுத்தி உங்களைச் செய்யும்படி சொல்லி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும் பரவும்படி செய்து
2.அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று நான் தியானித்து
3.உங்கள் உடலில் உள்ள அந்த அணுக்கள்… நீங்கள் எண்ணியதை ஈர்த்து அது வளரும் பருவம் பெறுவதற்கு
4.வளர்ச்சி பெறும் பருவத்தைச் செயல்படுத்துவதுதான் என்னுடைய (குருவின்) வேலை.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும்… பரிசுத்தப்பட வேண்டும்… அசுத்தங்கள் அகற்றப்பட வேண்டும்… அருள் பெருக வேண்டும்… இருள் புகாத நிலைகள் வேண்டும்… என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உடலைக் கோவிலாக மதித்து உயிரை ஈசனாக மதித்து அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று யாம் தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.

உங்கள் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும். உயிர் எல்லாவற்றையும் உணர்த்தினாலும் எல்லாவற்றையும் உணர்த்தும் அறிவு இந்த ஆறாவாது அறிவுக்கு உண்டு.

உயிரைப் போன்றே உணர்வை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடையச் செய்வது தான் நமது குரு காட்டிய அருள் வழி.

நாம் எண்ணிய உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயல்தான் நம்மை வழி நடத்துகிறது.
1.“மனிதனுடைய எண்ணம் தான் இதற்கு மூலமாகின்றது…”
2.எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது… அந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது
3.அதன் வழியே செயலும் நடந்து கொண்டிருக்கின்றது.

தனித்து… கடவுள் என்று ஒருவன் இல்லை…!

ஆகவே நாம் எண்ணும் உணர்வுகளில்
1.எந்தெந்தத் தீமைகளைச் செய்கிறோம் என்று அந்தக் கணக்கை உயிர் போட்டுக் கொண்டே இருக்கும்
2.அதே சமயத்தில் தீமைகள் எதையெல்லாம் நீக்கினோம்…? என்று அந்தக் கணக்கையும் உயிர் போட்டுக் கொண்டே இருக்கும்.

நமக்கு ஜட்ஜ்மெண்ட்…! தீர்ப்பு கூறுவது நமது உயிர்தான்

எதன் கணக்காக வருகின்றதோ…
1.நீ இவ்வளவு செய்தாய்… அதற்குண்டான உடலை இனி நீ பெறுவாய்
2.அதை நீ அனுபவித்துப் பார்…! என்று உயிர் தீர்ப்பு கூறி அதன் வழி அடுத்த வாழ்க்கை (நம் வாழ்க்கை) தொடர்கின்றது.

ஆகவே உயிரை நாம் மதித்து பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் இயக்குகின்றது அதைத்தான் உடலாக்குகின்றது அதைத்தான் ஆளுகின்றது அதை எண்ணும் பொழுது அதன் வழி வருகிறது

உடலான மணமே நமக்குள் எண்ணமாகி… அந்த எண்ணத்தின் உணர்ச்சியே வாழ்க்கையின் செயலாக மாறிக் கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிடும் அருள் உணர்வை ஏங்கிப் பெற்று அதை வளர்த்துக் கொண்டால் இன்றைய உலகில் படர்ந்து கொண்டிருக்கும் விஷத்தன்மைகள் நமக்குள் கவராது தடுக்க முடியும்.

எந்தச் செயலைப் பார்த்தாலும் கேட்டாலும் நுகர்ந்தாலும் பிறரின் குறைகளை அறிய நேர்ந்தாலும் அந்தத் தீமைகள் தனக்குள் வளராதபடி மனத்தூய்மையாக்க ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆத்ம சக்தி செய்து கொண்டே வர வேண்டும்.

வாழ்க்கையில் இந்தக் கணக்கு நமக்குள் கூடினால் நம் உயிர் அதற்குண்டான தீர்ப்பாக… நம்மைப் பிறவியில்லா நிலை அடையும்படி செய்யும்.

அதிலே சிறிது தவறினால் எந்த விஷத்தின் தன்மை கூடி… எதன் அடிப்படையாக நமக்குள் அது வளர்ந்ததோ… அதன் தீர்ப்பாக உயிர் மீண்டும் நம்மைப் பிறவிக்குக் கொண்டு வந்துவிடும்.

ஆனால் இன்றைய விஞ்ஞான உலகில் நாம் மீண்டும் மனிதனாக வருவதற்குப் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் ஆகும். இதையெல்லாம் சிந்தனையில் வைத்துக் கொள்ள வேண்டும்

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறச் செய்து
2.இந்தப் பிறவியில் வரக்கூடிய இருளை அகற்றி உயிருடன் ஒன்றி ஒளி உடலைப் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

கேள்வி:-
சாப அலைகள் பாவ அலைகளின் இயக்கம் என்பது முற்பிறவியில் நாம் செய்ததா…? எத்தனையோ கோடிப் பிறவிகளில் நாம் எடுத்தது நம் ஆன்மாவிலேயே கலந்திருப்பதால் அதன் இயக்கமாக எதிர்பாராது விபத்துகள் ஏற்படுகின்றதா…? அல்லது விபத்து நடக்கும் இடத்தில் அங்கே பதிவான உணர்வின் செயலா…? ஒரே இடத்தில் எனக்கு ஏன் இரண்டு முறை விபத்து ஏற்பட்டது…? அந்த இடத்திலே சாப அலைகள் இருக்கிறதா…? விபத்து ஏற்பட்ட அதே பாதை வழியாக மீண்டும் செல்லலாமா…? அல்லது வேறு பாதையில் மாற்றிச் செல்ல வேண்டுமா…?

குரு இதற்குண்டான விளக்கத்தைக் கொடுத்து உணர்த்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

பதில்:-
அதாவது “இன்ன இடத்தில் விபத்து ஏற்படும்…!” என்று மற்றவர்கள் சொன்ன உணர்வு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி இருக்கிறது.
1.”அந்தக் குறிப்பிட்ட இடம்” வந்தவுடன் அது உங்களுக்குள் நினைவுக்கு வருகின்றது
2.அது தான் அந்த இடத்தில் இயங்கியது (விபத்தாகிறது)
3.அந்த அலைகள் உங்களுக்குள் இருக்கின்றது… அதை இழுத்துக் கொண்டு வருகின்றது.

மற்றவர்கள் “இங்கே விபத்தாகும்…” என்று சொன்னாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து அதை மறைத்து விட்டால் இத்தகைய சம்பவங்கள் நடக்காது.

ஏனென்றால்… பிறர் சொல்லும் உணர்வுகள் ஆழமாக நமக்குள் பதிவாகி விட்டால் அந்த இடத்திற்கு வந்தவுடன் “டக்…” என்று நினைவுக்கு வரும். அந்த சமயத்தில்
1.நீங்கள் வாகனத்தில் சென்றால்….பிரேக் இடாதபடி உங்களை அந்த வண்டிப் பக்கமே அழைத்துச் செல்லும்.
2.மற்றவர்கள் வந்து உங்களை இடிப்பது அல்ல
3.இதிலே தான் இந்த விஷயம் இருக்கின்றது… அதாவது நீங்கள் தான் அதிலே போய் விழுகின்றீர்கள்
4.காரணம் சந்தர்ப்பங்கள் நம்முடைய நினைவாற்றல்கள் அந்த மாதிரி இயக்குகின்றது
(5.ஒரு மனிதனுடைய உணர்வுகள்… சந்தர்ப்பம் இப்படியெல்லாம் இயக்கிவிடும்)

உதாரணமாக வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் கஷ்டங்கள் இருக்கின்றது என்று சொல்வார்கள். சொன்னதற்குப் பிற்பாடு என்னதான் வீட்டின் சுவரை இடித்து அதை நீங்கள் மாற்றி வைத்தாலும் “அவன் சொன்ன இடி தான் இங்கே வரும்… குடும்பத்தில் குறைகளும் சங்கடங்களும் தான் வரும்…!”

இது எல்லாம் நாம் பதிவு செய்த உணர்வுகள் அதே இடம் வந்தவுடன் மீண்டும் அந்த ஞாபகத்திற்கு வரும்.

ஒரு பனை மரத்தில் அருகிலே நாங்கள் சென்றோம்… அதைப் பார்த்தோம்… அதில் ஒரு பூதம் பார்த்தேன்…! என்று வெறுமனே சொன்னால் கூட போதும்

எங்கெங்கே…? என்று கேட்பார்கள்.

அங்கே… அந்த ஒற்றைப் பனை மரம் இருக்கிறது அல்லவா என்று சொன்னால் போதும்…! ஆ… அப்படியா… என்பார்கள்…!
1.அங்கே பேயும் இல்லை பூதமும் இல்லை…!
2.ஆனால் அந்தப் பக்கம் நாம் செல்லும் பொழுது அன்றைக்கு அவர் சொன்னாரே…! பூதம் இருக்கிறது என்று.
3.இந்த ஒற்றைப் பனை மரத்தில் தானே… என்று எண்ணினால் போதும்.
4.உடனே அந்த இடத்திலே பேயாக அது காட்சி கொடுக்கும்.

இதெல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்

ஏனென்றால் அத்தகைய மனிதனுடைய உணர்வலைகள் இங்கே பரவி இருக்கப்படும் போது “நம்முடைய எண்ணம்… அது இழுத்துக் குவித்துக் கொடுக்கும்…”

ரேடியோ டிவி அலைகள் இயங்குவது போன்று தான் மனிதனுடைய எண்ண உணர்வின் இயக்கங்களும்.

அதற்குத்தான் மீண்டும் மீண்டும் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அதை வலுவாக்கி
1.நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்று
2.நாம் கட்டாயப்படுத்தி இந்த எண்ணத்தை எடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜோதிடம் ஜாதகம் பார்த்தாலும் அதிலே கஷ்ட நஷ்டங்களைத் தான் முதலிலே சொல்கிறார்கள். நல்லதை ஏதாவது முதலில் சொல்கிறார்களா…?
1.அந்த கஷ்டத்தைத் தான் நாம் பதிவு செய்கின்றோம்… ஏற்றுக் கொள்கிறோம்.
2.அப்புறம் அதிலே மீளக்கூடிய உணர்வு எங்கிருந்து வரும்…?

காசுக்காக வேண்டி சாங்கியத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்வான். காசைச் செலவழித்துத்தான் போக்க வேண்டும் என்று சொல்வான்.

இது எல்லாமே மனிதனின் பதிவின் இயக்கம் தான். நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).

மனிதனுடைய எண்ணங்கள் உணர்வுகளின் இயக்கங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து… குருநாதர் காட்டிய வழியில் அதை மாற்றி அமைக்கக்கூடிய வழி முறையைத் தான் மீண்டும் மீண்டும் உணர்வுபூர்வமாகச் சொல்லி “உங்களுக்குள் ஆழமாக இதைப் பதிவாக்குகின்றோம்…”

1.தீமையை நீக்கும் அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தால்
2.வாழ்க்கையில் அறியாமல் வரும் எத்தனையோ கொடுமைகளிலிருந்து
2.எதிர்பாராத விபத்துகளிலிருந்து தப்ப முடியும்..!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள் 

குடும்பங்களில் சிக்கல் வரும்…? எப்படி…? சில நேரங்களில் சிலர் பிடிவாதமாக இருப்பார்கள். அது அதிகமானால் நாம் அதை நுகர்ந்தால் நமக்குள்ளும் வந்துவிடும்
1.அதனால் பகைமை தான் வரும்
2.வெறுப்பு தான் வளரும்…!

அதை மாற்றுவதற்கு என்ன வழி…?

வெறுப்பு உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும்.

பிடிவாதமாக இருப்பவருக்கெல்லாம் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஆற்றல்கள் பெற வேண்டும் என்று
1.நம் மனதில் வலிமை பெற வேண்டும்
2.இப்படி வலிமை பெற்றால் “அவர்கள் உணர்வு நம்மை இயக்காது..” (இது முக்கியமானது)

அதாவது நாம் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை…! அவர்கள் உணர்வு அதைக் கேட்க விடாது தடுக்கின்றது என்றால் “அந்த உணர்வு” நமக்குள் வந்து நம்மை இயக்காது தடைப்படுத்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால்… அவருடைய உணர்வுகள் “எல்லை கடந்து செல்லப்படும் பொழுது…” சிந்திக்கும் ஆற்றல் அங்கே வரும்.

அவர்கள் திருந்த வேண்டும்… அவர்கள் தெளிந்து வாழ வேண்டும்…! என்ற உணர்வை நாம் வளர்த்துக் கொண்டு அந்த உணர்வின் வலுவை நாம் ஏற்றுக் கொண்டால்
1.நாம் சொன்னதை அவர் கேட்காத நிலை சென்றாலும் கூட அங்கே அவர்களைச் சிந்திக்கும்படி செய்யும்
2.அப்பொழுது நாம் எடுத்த உணர்வு அவரை திருத்தி வாழ வழி வகுக்கும்.

இல்லை என்றால் பெரிய நியாயஸ்தர் மாதிரி அவர்களுக்கு அடிக்கடி நாம் புத்திமதி சொன்னால் விஷத்திலே பாலைப் போட்டது போன்று தான் ஆகும். அந்த விஷம் என்ற நிலையில் என்னதான் நாம் சொன்னாலும். நல்ல உணர்வுகளை எடுக்காது
1.எதிர் உணர்வு…
2.அவர் உடலுக்குள்ளும் “எதிர் நிலை” வரப்படும் பொழுது அதை உணர்வார்கள்.

இல்லையென்றால் அந்த விஷத்தின் தன்மை குடும்பமே பரவும் எல்லோருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் இதைப் பேசப் பேச விஷத்தன்மைகள் எல்லோருக்குள்ளும் பரவி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தையும் அந்த விஷம் மாற்றிவிடும்.

இதைப் போன்ற நிலைகள் வரும் போதெல்லாம் நாம் ஆத்ம சுத்தி செய்து அவர்கள் வெறுப்பான செயல்களைச் செய்தாலும் கூட அவர்கள் திருந்தி வாழ வேண்டும்… தெரிந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் செலுத்த வேண்டும்.

இப்படி…
1.தூரத்தில் இருந்து செலுத்தப்படும் பொழுது தான் அது வரும்
2.சமாதானப்படுத்திப் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொண்டு சொன்னால் அந்த விஷம் தான் வேலை செய்யும்
3.நாம் சொல்லும் இந்த சமாதானம் அவர்களுக்குள் ஏறாது.

அந்த உணர்வுகள் தன்னாலே அந்த உணர்வின் இயக்கத்தை மாற்றவில்லை என்றால் கோடி பேர் வந்தாலும் திருத்த முடியாது.
1.அவர்கள் தெரிந்திட வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
2.ஆனால் பகைமையாக மாற்றக் கூடாது.

ஒவ்வொரு குடும்பத்திலும் இது நடந்து கொண்டேதான் இருக்கின்றது..!

தியானம் செய்ய வேண்டும் என்று பெண்கள் வெளியில் சென்றால் ஆண்கள் நீங்கள் ஏன் தியானம் செய்கிறீர்கள்…? என்பார்கள். அதே சமயத்தில் ஆண்கள் தியானத்திற்குச் சென்றால் பெண்கள் அதைச் செய்யக்கூடாது என்பார்கள்.

இதைப் போன்று அவரவர்கள் உணர்வுக்கொப்ப மனங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்… நல்ல நிலைகள் செல்லாது தடை வந்து கொண்டே தான் இருக்கும்.

இது போன்ற காலங்களில் எல்லாம் “மன உறுதி கொண்டு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று
1.எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனுப்பித் தீமைகள் புகாது தடுத்து
2.எந்தத் தீமையையும் ஈர்க்காதபடி நாம் தடைப்படுத்த வேண்டும்

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்…!

இனி வரும் சந்ததியினரை நாம் ஞானிகளாக உருவாக்குவோம்

 

திருஞானசம்பந்தர் குழந்தையாகப் பிறந்த பின் தாய் அவரை ஆலயத்திற்கு எடுத்து வரும் பொழுது
1.கருவில் இருக்கும் போது தாய் எதையெல்லாம் உற்றுப் பார்த்ததோ அதைப் பார்த்து அங்கே தவழ்ந்து செல்கின்றது.
2.நஞ்சை ஈசன் எப்படி நீக்கினானோ அதே போல என் கருவில் வளரும் குழந்தை பிணிகளைப் போக்கும் சக்தி பெற வேண்டும் என்று தாய் எண்ணியது.
3.அதைப் போல் அந்தக் குழந்தையின் பார்வையில் மற்றவர்கள் பிணி போகின்றது.

அதைப் போல கருவுற்ற தாய்மார்களும் அகஸ்தியன் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்… அப்படி வளர்ந்த குழந்தை பிறந்த பின் உற்றுப் பார்த்து கையை மேலே வைத்தால் அந்த உணர்வுகள் தோன்றும். அவர்கள் நோய் நீங்கும்.

கேன்சர் நோயாக இருந்தாலும் அது நீங்க வேண்டும்… என்று குழந்தையிடம் இந்த ஆசியை வாங்கினால் அந்த நோய் போகும்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகள்…
1.அன்று அகஸ்தியனுக்கு எப்படித் தாய் கருவிலே நஞ்சை வென்றிடும் சக்தி பூர்வ புண்ணியமாக விளைந்ததோ
2.அதைப் போன்று கருவுற்ற தாய்மார்களும் எண்ணி அந்த சக்திகளை வளர்த்து அகஸ்தியனைப் போன்ற ஆற்றலைப் பெறச் செய்ய முடியும்.

ஆனால் இன்று கருவுற்ற தாய்மார்களோ மாமியாரோ நாத்தனாரோ இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று “ஒருவருக்கொருவர் சண்டையிட்ட உணர்வுகளைக் கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஊட்டினால்…” அதில் உருப்பெற்ற குழந்தை “வம்புச் சண்டைக்கு” செல்லக்கூடிய குழந்தையாகத் தான் வருவான்.

அதைப் போன்ற நிலைகளை மாற்றி ஒழுக்கமான நிலைகள் வரவேண்டும் என்பதற்குத் தான் அருள் ஞானிகள் “படமாக உருவாக்கி”
1.அதன் மூலம் ஞானத்தின் தன்மை பெறுவதற்காக லட்சுமி சரஸ்வதி விநாயகர் என்ற காவியங்களைப் படைத்து
2.பின் அந்த அருள் ஒளியின் சுடர் என் கருவிலே வளரும் குழந்தைக்குப் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்கும்படி சொன்னார்கள்.

ஆனால் காலத்தால் இது எல்லாம் மறைந்து விட்டது. ஞானிகள் காட்டிய வழியில் நாம் யாரும் செல்லவில்லை.

திருமூலர் எப்படிச் சக்தி பெற்றார்…? திருஞானசம்பந்தர் எப்படி அந்த உயர்ந்த சக்தி பெற்றார்…? என்று எண்ணி அதையெல்லாம் கர்ப்பமாக இருப்பவர் உணர்வுகளில் பதிவாக்கிக் கொண்டால்
1.அந்தக் குழந்தை உங்களைக் காக்கும்… குடும்பத்தைக் காக்கும் அருள் ஞானியாக அவன் வளர்கின்றான்.
2.அவன் மூச்சு பட்டால் விஞ்ஞான அறிவினால் இனி வரக்கூடிய விஷத்தன்மையிலிருந்து உங்களைக் காப்பான்.
3.அந்தக் குழந்தையால் அது முடியும்.

ஆகையினால் கர்ப்பமுற்ற தாய்மார்கள் அனைவரும் அந்த அருளைப் பெற்றுக் குழந்தைக்கு அந்தச் சக்தியைப் பூர்வ புண்ணியமாக உருவாக்கி வளர்த்திடுங்கள்.

எது பதிவாகின்றதோ அதுவே நினைவாகின்றது. டி.வி அலைகளை ஒளிபரப்பு செய்தால் அது எந்த ஸ்டேஷனில் வருகின்றதோ அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்த பின் இங்கு வருகின்றது.

அதே சமயத்தில் கோபம் வெறுப்பு என்று நண்பர்களுக்குள் வரப்படும் பொழுது “இப்படி ஆகிவிட்டதே… நாளை என்ன ஆகுமோ…?” என்று அவனுடைய நிலைகள் எண்ணி இணைக்கப்படும் பொழுது நோயாக இங்கே வந்து உருவாகி நம்மையும் வாட்டுகின்றது.

அன்று செய்யக்கூடிய நம்முடைய காரியங்களும் பலவீனம் அடைகின்றது செயலற்றதாகின்றது. குழந்தைகள் பாடம் படிக்கவும் முடியாது போகிறது.

ஆகவே எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அது இப்படி வருகின்றது. அதே உணர்வு நம்மையும் இயக்குகின்றது மற்றவரையும் இயக்குகிறது.

ஆனால் எண்ணும் பொழுதே
1.அருள் ஒளி பெற வேண்டும்… வரும் இருளை மாற்ற வேண்டும் என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்வதற்குத் தான்
2.இந்த ஸ்டேஷனை (ஞானிகள்) உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
3.இந்தப் பதிவை எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் அறிவாக இயக்கப்பட்டு அந்த ஞானமாக உங்களைப் பேச வைக்கும்.
4.பழமையில் உருவான தீமைகளை நீக்கும் அருள் சக்தி உங்களில் விளையும்.

விஞ்ஞான அறிவினால் மனிதன் சிந்தனை இழந்து செல்லும் நிலைகள் வந்து கொண்டுள்ளது. அதிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும்.

ஓசோன் திரை கிழிந்ததால் அதன் வழியாக பல விஷத்தன்மைகள் பூமிக்குள் வருகின்றது. வெப்பத்தின் தணல் கூடுகின்றது,,, துருவப் பகுதியில் பரவி பனிகள் உருகிக் கடல்கள் பெருகுகின்றது. நிலங்கள் குறைகின்றது.

நாடு முழுவதும் விஷத்தன்மை பரவுகின்றது மனிதனின் சிந்தனைகள் குறைந்து கொண்டு வருகின்றது. மனிதன் கடந்த காலக் காட்டு விலங்குகள் போல் செல்லப் போகின்றான்.

ஆகவே விஞ்ஞான அறிவின் வளர்ச்சியின் பின் விளைவுகளாக அழிவின் நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.
1.தன் நாட்டைக் காக்க என்று செய்த இந்த அறிவு
2.மனிதனுடைய சிந்தனையைச் சிதறச் செய்யும் சந்தர்ப்பமாக வந்துவிட்டது.

இதிலிருந்து மீட்ட அருள் ஞானி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் பெற்று ஆறாம் அறிவை… ஏழாவது நிலையாக “சப்தரிஷி” என்ற நிலைக்கு நாம் செல்ல வேண்டும்.

குரு பீடம்

 

துன்பத்தைக் கேட்டறிந்தால் அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “துன்பத்தை மாற்றி அமைத்த உணர்வினை” உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் அதை மாற்றலாம்.

1.முன் செய்த வினையின் தன்மைதான் இன்று நமக்குள் வினையாக விளைந்து
2.இந்த வாழ்க்கையைச் சீர்கெடச் செய்கின்றது… இது விதி ஆகிறது.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு குணத்தை எடுத்து வளர்த்திருப்போம். வேதனைப்படுவோரைப் பார்த்திருப்போம்… நண்பன் என்ற நிலையில் இதையெல்லாம் கேட்டறிந்து இருப்போம்… அல்லது சொன்னதைக் கேட்டிருப்போம்.

இதையெல்லாம் நாம் நுகர்ந்த பின்
1.அதை உயிர் உடலுக்குள் அணுவாக மாற்றி… நண்பன் சொன்ன சொல்லையே உணவாக எடுத்து வளரும்.
2.இவ்வாறு மனித உடலில் விளைந்து விட்டால் அது விதி ஆகிறது.

உதாரணமாக ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது செடியாகிறது. வளர்ச்சியில் வித்துக்களாக விளைந்த பின் செடி பட்டு விடுகின்றது.

இருந்தாலும் அதனுடைய இனங்களாக வந்த பின் அதனுடைய வித்திற்கே மீண்டும் அந்தச் செடியின் சத்து உணவாகின்றது… செடியாக வளர்கின்றது,

இதைப் போன்று தான் நாம் மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ கோபமோ வேதனையோ உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் வித்தாகின்றது. இதுவே விதியாகவும் வளர்ந்து விடுகின்றது.
1.ஒவ்வொரு குணமும் விதியாக வளர்ந்து அந்தந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது
2.கடும் நோயாகவும் நாம் அவஸ்தைப்பட நேருகின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் நம்முடைய மதியைச் செலுத்துதல் வேண்டும். அதற்கு அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் உடல் நலம் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்… அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.

1.தபோவன குரு பீடத்தில் உள்ள சூரியனைப் உற்றுப் பார்த்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்.
3.இதற்கு முன் அறியாது சேர்ந்த தீவினைகள் அனைத்தும் அகன்று உடல் நலம் பெற வேண்டும் என்று உற்றுப் பாருங்கள்.

அந்த மகரிஷிகள் உணர்வுகள் உங்களுக்குள் பாய்ந்து முன் சேர்த்துக் கொண்ட வினைகளை அகற்றும் சக்தியாக அருள் ஒளி படர்ந்து எந்த வலி வேதனை இருந்தாலும் மற்ற குறைகள் இருந்தாலும்… அனைத்தும் குறைந்து மன பலத்தையும் மன வளத்தையும் பெருக்கும்.

மனக் கவலையோ சோர்வோ இருந்தால் மன பலம் பெறுவீர்கள் அந்தத் திறன் கிடைக்கும். ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்… மெய் ஞானிகள் உணர்வு எனக்குள் வளர வேண்டும்… என் பார்வையால் நான் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி இருங்கள்.

1.இப்பொழுது உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் ஊடுருவுவதையும் உடலில் ஆற்றல் பெருகுவதையும் உணர முடியும்.
2.அன்று வாழ்ந்த அந்த மகரிஷிகள் உருவங்களும் சிலருக்குக் காட்சியாகத் தெரிய வரலாம்.
3.சப்தரிஷி மண்டலங்களை நீங்கள் காணலாம்.

விஞ்ஞான உலகிலிருந்து தப்புவதற்காகவாவது இந்தச் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்

 

விஞ்ஞான உலகில்… அவர்கள் கண்டுணர்ந்த விஷக் கதிரியக்கங்கள் வான்வீதியில் பரவி சூரியனின் ஈர்ப்புக்குள்ளும் சென்று விட்டது.

அதனால்… ஒரு நொடிக்குள் நிலநடுக்கம் வருவது போல விஷத்தின் தன்மை கொண்டு இரு மடங்கு மின் உற்பத்தி அதிகமானால்… நம் உயிரின் துடிப்பின் நிலைகள் கூடி காந்த உற்பத்தி இரு மடங்காகிவிடும். நம் எண்ணங்கள் அனைத்தும் செயலிழந்து விடும்.

1.இத்தகைய தீமைகளிலிருந்து தப்புவதற்காகவாவது அதிகாலையில் எழுந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.என் கணவருக்குக் கிடைக்க வேண்டும்… மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
3.என் தாய் தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும்
4.அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும்… எல்லோரும் அந்த அருள் வழி வாழ வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்கு அது சீரான வழியைக் காட்டும். தீமைகள் புகாது தடுத்துக் காட்டும். சாந்த உணர்வைக் கொடுக்கும். வாழ்க்கையைச் சீராக வாழவும் வழிகாட்டும். மகிழ்ந்த நிலைகள் வரும். வாழ்க்கையில் நிறைவு கிடைக்கும். போதும் என்ற மனம் வரும்.

1.போதும் என்ற நிலை வரும் போது அருள் வழியில் வந்து கொண்டே இருக்கும்.
2.வேண்டாம் என்று சொன்னாலும் அந்த அருள் செல்வங்கள் வந்து கொண்டேயிருக்கும்.

உதாரணமாக ஒரு இடத்திலே பிரசாதம் கொடுக்கிறார்கள் என்றால் “இன்னும் கொஞ்சம் வேண்டும்…” என்று கேட்டால் “இல்லை போ” என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் கேட்காமல் இருப்பவருக்கு அதிகமாகக் கொடுக்கும் நிலை வரும்.

இதைப் போன்றுதான் உணர்வின் இயக்கங்கள் செயல்படும் தன்மைகள்.

ஆகவே நாம் எப்படி வாழ வேண்டும்…? என்பதை குரு வழியில் உணர்ந்து கொள்ளுங்கள். காரணம் இதை எல்லாம் நான் படிக்காதவன் தான் உபதேசிக்கின்றேன். நீங்கள் அனைவரும் படித்தவர்கள்.

வான்மீகி படிக்காதவன்… அண்டத்தில் உள்ளதை அறிந்தான். வியாசகரும் படிக்காதவர் தான் அவரும் அண்டத்தை அறிகின்றார். அகஸ்தியன் ஒன்றும் அறியாதவன். தாய் கருவிலே அவன் பெற்ற நஞ்சை வென்றிடும் உணர்வுகள் தான் அவனை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றது. திருமூலரும் அதைப் போன்று பெற்றவர் தான்.

1.ஞானிகள் பெரும்பகுதி ஆனவர்கள் எல்லோருமே இப்படிச் சக்தி பெற்றவர்கள் தான்.
2.ஆகவே அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வை உங்களுக்கு உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.

சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை. எந்த குணத்தின் தன்மையை நமக்குள் அதிகரிக்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் தான் நம்முடைய வாழ்க்கை… அடுத்த சரீரம்…!
1.அதை உருவாக்குவது உயிர்
2.உணர்வுக்கொப்ப உடலை அமைப்பதும் உணர்வுக்கொப்ப வாழ்க்கை அமைப்பதும் அனைத்துமே உயிர் தான்.
3.ஈசனாக இருந்து அவனே இயக்குகின்றான்.
4.உயிரை ஈசனாக மதிக்க வேண்டும்.
5.அவனால் மனிதனாக உருவாக்கியதைப் பாதுகாக்க வேண்டும்
6.அவனை நேசிக்க வேண்டும்… அருள் உணர்வுகளை அவனுக்கு அபிஷேக்க வேண்டும் ஆராதனை செய்ய வேண்டும்.
7.உடலை உருவாக்கிய அணுக்களுக்கு நல்ல அமுதைக் கொடுக்க வேண்டும்.

உயிரான ஈசனுக்கு மகரிஷிகளின் உணர்வலைகளைப் பரப்பப்படும் பொழுது மகிழ்ச்சியைக் கூட்டுகின்றது. அந்த உணர்வை இயக்கப்படும் பொழுது அரும்பெரும் சக்தியாக… தெய்வமாக நம்மை இயக்குகின்றது.

இதுதான் நமது காவியங்களிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் அதைப் பெறுவோம் அருள் ஞானம் பெறுவோம். விஞ்ஞான உலகில் வாழும் அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபடுவோம். மெய்ஞான வாழ்க்கை வாழ்வோம் பிறவியில்லா நிலை அடைவோம்.

அதுவே நமது எல்லை என்று சப்தரிஷி மண்டலத்தை அடைவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சர்க்கஸில் விளையாடுபவர்கள் உடம்பை எத்தனையோ வகைகளில் வளைக்கின்றார்கள்…! நம்மால் அவர்களைப் போல் வளைக்க முடிகிறதா…? முடியாது.

ஆனால் அப்படி வளைத்துப் பழகியவர்கள் ஒரு மாதத்திற்கு அதைச் செய்யாமல் “சும்மா இருக்கட்டும்…!” அடுத்து அந்த உடலை வளைக்க முடியாது.

பல ஆட்டங்கள் ஆடலாம்… ஆனால் ஒரு மாதம் சும்மா இருக்கட்டும். அதைத் திரும்ப பழைய மாதிரிக் கொண்டு வர வேண்டும் என்றால் அவ்வளவு எளிதானதல்ல.

அதே போன்றுதான் ஆசனப் பயிற்சி செய்து பழகியவர்கள்… நான் அந்த ஆசனம் போடுவேன்… இந்த ஆசனம் போடுவேன்…! என்றெல்லாம் சொல்வார்கள். கொஞ்சம் சோர்வடைந்து இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் போதும். அடுத்து அந்தப் பயிற்சிக்கே போக விடாது.

அந்தச் சோர்வு “இப்பொழுது செய்யலாம்… சரி அப்புறம் செய்யலாம்…! என்று அப்படியே ஒரு ஐந்து நாள் சென்றால் அப்புறம் அவ்வளவு தான்… செய்ய முடியாது.

ஆசனப் பயிற்சி தொடர்ந்து செய்து வருபவர்களும் மனச் சலிப்போ… சஞ்சலமோ… மற்றவர்கள் உணர்வுகளைக் கேட்டால் அவர்களையும் இந்த உணர்வுகள் அது தடைப்படுத்தி விடும்.

ஆசனத்தால் நான் உடலைத் திருத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து விடுவேன் என்று சொல்வார்கள் ஆனால்
1.வேதனையான உணர்வை எடுத்தார்கள் என்றால்
2.அந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆசனப் பயிற்சி செய்யப்படும் பொழுது
3.நரம்பு மண்டலங்கள் முறுக்கப்படும் பொழுது சிலருக்குப் புத்தி பேதமே ஆகிவிடும்.
4.அல்லது வெறுப்பின் காழ்ப்புணர்ச்சி வரும் அல்லது பிரஷர்…!
5.அந்த அழுத்தத்தின் தன்மை வந்து… நரம்பு மண்டலங்கள் செயலிழந்து விடும் தளர்ச்சி அடைந்து விடும்.

ஆசனத்தைச் செய்து இரத்தக் கொதிப்பை மாற்றலாம் உடல் உபாதைகளைப் போக்கலாம் என்று சொல்வார்கள். மருத்துவர்கள் ஆலோசனைப்படி உறுப்புகளின் படங்களையும் போட்டுக் காட்டுவார்கள் இன்னென்ன பயிற்சியால் இப்படி நன்மைகள் பெறலாம் என்றும் சொல்வார்கள். [ஆரம்பத்தில் நானும் (ஞானகுரு) எனக்கு ஒரு குருவை வைத்து இந்த ஆசனப் பயிற்சிகளை செய்து கொண்டிருந்தேன்}.

ஆக… ஆசனம் நமக்கு உதவி செய்கின்றது. ஆனாலும் ஒவ்வொரு நாளும்
1.கவலையோ வெறுப்போ கோபமோ அன்றன்றைக்குச் சந்திக்கும் சந்தர்ப்பம்
2.எதன் உணர்ச்சியின் வேகமோ… அதற்குத் தக்க (அந்த எண்ணங்களுடன்) பயிற்சிகளைச் செய்யப்படும் பொழுது
3.உணர்ச்சியின் வேகத்தால் மூளையைக் கூடப் பாதிக்கக்கூடிய நிலை வந்து விடுகிறது.
4.அதாவது சிரசாசனம் சர்வங்காசனம் இதைப் போன்ற நிலைகள் நம்மை ரொம்பவும் பாதிக்கின்றது

காரணம்… மக்கள் மத்தியில் பல பல உணர்ச்சிப் போராட்டங்களில் வாழும் பொழுது குடும்பத்தில் வெறுப்பின் தன்மை ஏற்பட்டால் அதனுடைய அழுத்தம்
1.நம் உடலில் அழுத்தங்கள் அதிகமாகப்படும் பொழுது
2.சிறு மூளையில் உள்ள நுண்ணிய நரம்புகள் வெடித்து விடும்… ஆள் அவுட்…!

இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் சலிப்பு சஞ்சலம் கோபம் கவலை வேதனை இது போன்ற உணர்வுகளை மாற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
1.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அதை உணவாகக் கொடுத்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இரத்த ஓட்டமாகப் பெருக்கிக் கொண்டால்
3.தீமையான உணர்வின் இயக்கங்களை நாம் சமப்படுத்திக் கொள்ள முடியும்
4.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒன்றுக்கொன்று பகைமையாகாதபடி எதிர்ப்பாகாதபடி
5.எதிர்மறையான இயக்கங்களுக்குக் கொண்டு செல்லாதபடி இணைந்து செயல்பட்டு
6.மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

திடீரென்று ஒருவர் உடல் நலக் குறைவால் அவதிப்படுகிறார் என்றால் அவரைச் சீராக்க
1.இந்தத் தியான வழியில் உள்ளோர் ஆத்ம சுத்தி செய்து குருவினுடைய உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால்
2.நோயாளியின் உணர்வுக்கும் நமக்கும் “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்ற அழுத்தத்தை உணர்த்தும்… அந்த அறிவாக இயக்கும்
3.குரு வழியில் இதை முறைப்படி செய்தால் “நம்முடைய எண்ணத்தில் அதற்கு என்ன செய்ய வேண்டும்…?” என்று காட்டும்.

வைத்தியத்திற்கு என்று அந்த நோயாளியை டாக்டரிடம் அனுப்பினாலும்
1.அந்த நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது டாக்டருக்கு உண்மையான நிலைகள் தெரிய வர வேண்டும் என்று
2.நாம் இங்கிருந்து பிரார்த்தனை செய்து இந்த உணர்வைப் பாய்ச்சினோம் என்றால்
3.இதே அலைகள் அங்கே (டாக்டருக்கு) உண்மையை உணர்த்தி
4.நோய்க்குண்டான மருந்தை உடனடியாகக் கொடுத்து அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

அதாவது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த டாக்டர் கொடுக்கக்கூடிய மருந்துடன் ஊடுருவிய பின் அந்த இயக்கத்தைச் சீராக்குகின்றது. உங்கள் எண்ண வலு கொண்டு சமாளிக்க முடியும்… நோயாளியைக் காக்க முடியும்.

அதற்குப் பதில்
1.இப்படி ஆகிவிட்டதே… அவருக்கு என்ன ஆகுமோ…? என்று பதறி இருந்தால் இந்த நிலை வராது
2.மருத்துவரைத்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டு வர வேண்டும்
3.டாக்டரைக் காட்டிலும் குருவினுடைய அருள் உணர்வுகள் ஊடுருவி அந்த நோயாளியை நாம் சரியான முறையில் காக்க முடியும்.

ஆகவே… சந்தர்ப்பத்தில் சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் நலக்குறைவோ இது போன்ற நிலை ஏற்பட்டால் சரியான முறையில் தியானம் எடுத்திருந்தால் “அதற்குண்டான ஞானமும்… அது எப்படி வழி நடத்த வேண்டும்…?” என்ற சிந்தனையும் வரும்.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி விட்டால் “சஞ்சலம்… சலனம்…” இதையெல்லாம் நீக்கிவிடும்.

எது உண்மையின் உணர்வோ அதை உணர்ந்து அதற்குத்தக்க நம்முடைய எண்ணங்கள் சீராகும்… அதற்குத்தக்க நல்ல செயல்களைச் செயல்படுத்த முடியும்.

1.ஒரு சிலருக்கு தன் உடலுக்குள் நடப்பதை… என்ன ஏது…? என்று சொல்ல முடியாது
2.அப்படி இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது
2.எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! என்ற உணர்வின் தன்மையாக அந்த நோயாளிக்குள் ஊடுருவி இயக்கச் சக்தியாக மாற்றும்
3.துடிப்பு நின்றாலும் கூட இருதயத்திற்கு மேலே கையை வைத்துத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சினால்
4.மீண்டும் துடிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறு மூளை நரம்புகளில் அது பழுதானால் அதை ஒன்றும் செய்ய முடியாது.

திடீரென்று எதிர்பாராத நிலையாக இருந்தால் அதை இயக்க வைக்க முடியும். துடிப்புகளில் ஏதாவது பிசகானால் கையை வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சினோம் என்றால் அது சீராக இயங்கும்.

ஆக ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனால் எதுவாக இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று வலுவான நிலைகளில் எண்ணி
2.நமது பார்வையைச் செலுத்தி இந்த உணர்வுடன் கையை அங்கே வைத்தால் உடனடியாக வேலை செய்யும்
3.நோயாளியால் பேச முடியாது என்று இருந்தாலும் இவ்வாறு செய்ய முடியும்.

இவ்வாறு தியானத்தில் நாம் வலிமை பெற்று எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்த வேண்டும்.

யார் உடல் நலக் குறைவாக இருக்கின்றார்களோ இந்த உணர்வலைகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களையும் சீராக்க முடியும். அருள் உணர்வுகளை அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆகவே நம்முடைய மன உறுதி… நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் நோயிலிருந்து விடுபடச் செய்ய முடியும்… அதை நிரூபிக்க முடியும் எல்லோருக்குமே இந்த சந்தர்ப்பங்கள் உண்டு…!

தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் இது போன்ற நோய்களை மாற்றி அமைக்க முடியும். அது போல் ஒவ்வொரு காரியத்திற்கும் இதைச் செயல்படுத்தலாம்.

உதாரணமாக நாம் வேலை பார்க்கும் ஆபீசில் குறை இருந்தாலும்
1.அந்தக் குறையை நமக்குள் விடாதபடி ஆத்ம சுத்தி செய்துவிட்டு
2.மேலதிகாரிக்குச் சிந்திக்கும் ஆற்றலும் நம் மீது நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வுகள் அங்கே ஊடுருவும்.

ஆனால் நாம் தவறு செய்துவிட்டு மேலதிகாரி நம் வழிக்கு வர வேண்டும் என்றால் அது நடக்காத காரியம்…! நமக்குள் தப்பில்லாத நிலைகள் கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உண்மை என்று தெரிந்து கொண்ட பின் ஆத்ம சுத்தி செய்து
1.மேலதிகாரி என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப “எனக்கு உதவி செய்ய வேண்டும்…” என்று எண்ணினால் நிச்சயம் நடக்கும்.

தவறு செய்துவிட்டுத் “தவறுக்கு ரைட் மார்க் கொடுக்க வேண்டும்” என்றால் அது தவறான நிலை.

உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன்

 

கம்ப்யூட்டரில் அழுத்தத்தின் தன்மை கொண்டு பதிவு செய்கின்றார்கள். பதிவான பின் அதற்குண்டான வேலைகளை எல்லாம் அது செய்கின்றது.

உதாரணமாக கோபமான உணர்வுகளை நீங்கள் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால்
1.அவனை நினைக்கும் போதெல்லாம் கோப உணர்ச்சிகள் தான் வருகின்றது.
2.யாரால் அது உருவானதோ அவனை எப்படி அடிப்பது…? எப்படி அவனை மிரட்டுவது…? எப்படித் துரத்துவது..? என்ற உணர்வெல்லாம் வரும்.

இல்லை என்றால் அவன் கோப்ப்பட்டு நமக்கு ஏதாவது அடுத்து தொல்லை கொடுப்பானா…? அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தனைகள் வரும்.

இவை எல்லாம்…
1.அவனைப் பார்த்துப் பதிவான அந்த ரெக்கார்ட் நல்ல குணத்துடன் இணையும் பொழுது
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் பல சிந்தனைகள் பல செயல்கள் உணர்வுகள்
3.”உணர்ச்சிகளாக ஊட்டி…” அதன் வழி தான் நாம் செயல்படுகின்றோம்.

அதே போன்று தான் உபதேசங்கள் வாயிலாக உங்களிடம் “ரிக்கார்ட்” செய்கின்றேன். கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று “வரிசைப்படுத்தி… ஒழுங்குப்படுத்தி…” அந்த மூலக்கூறுகளை உங்களிடம் ரிக்கார்ட் செய்கின்றேன்.

நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழியை நீங்கள் எடுக்கும் போது… ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும்.

அதற்கு அடுத்து…
1.அருள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப ரிக்கார்ட் செய்கின்றோம்.
2.அதற்குத் தக்கவாறு உங்களுக்குள் ஞானங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இதை எடுத்துப் பழகிக் கொண்டால் ஒரு தொழிலுக்குச் சென்றாலும் “அதை எப்படி வழி நடத்த வேண்டும்…?” என்ற நல்ல சிந்தனை வரும். மற்றவரிடம் யோசனை கேட்டால் கலக்கி விட்டு விடுவார்கள். அவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு சொல்வார்கள்.

நீங்களே சிந்தித்து… “இதை இப்படித்தான் செயல்பட முடியும்” என்று எண்ணம் வரும். ஆகவே அருள் ஞானச் சக்கரத்தைப் பார்த்துத் தியானிக்கும் போது இத்தகைய சிந்தனை… ஞானமாக வரும்.

இதே போன்று கணவன் மனைவியும் ஒன்று சேர்ந்து தியானித்துவிட்டு
1.உன் சக்தி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்… என் செயல் நல்லதாக இருக்க வேண்டும்.
2.இரு மனமும் ஒன்றாக வேண்டும் இரு உயிரும் ஒன்ற வேண்டும்
3.எங்களுடைய செயல்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி விட்டுக் காரியத்திற்குச் செல்லுங்கள்.

இந்த உணர்வுகள் அவ்வப்போது “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்று எதிர் நிலைகள் வரும் பொழுது… உங்களைச் சரியான பாதையில் நெறிப்படுத்திக் கொண்டே செல்லும். எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!

இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது
1.தவறான நிலைகள் வந்தால் உடனே உணர்த்தி அந்த இடத்திற்கு உங்களை அது செல்லவிடாது தடுக்கும்.
2.நல்ல இடங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று சீராக வாழ வைக்கும்.
3.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் இதையெல்லாம் கடைப்பிடித்து
4.இந்த அனுபவங்களைப் பெற்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வரவேண்டும்.

உணர்வின் இயக்கங்களைப் பற்றி இன்றைய விஞ்ஞானம் நிரூபிக்கின்றது…! ஆனால் மெய் ஞானிகள் கூறிய வழிப்படி நம்மை எது இயக்குகின்றது…? என்பதை
1.நாம் நுகர்ந்தது தான் நம்மை இயக்குகின்றது… அதற்குத் தான் நாம் அடிமையாகின்றோம்.
2.நல்ல குணத்தின் தரங்களைக் குறைக்கின்றது என்பதை உணர வேண்டும்.

ஆகவே அருள் உணர்வை நாம் பெருக்க வேண்டும். தீமைகளை மாற்றி அமைக்க வேண்டும். அதன் வழி அருள் வாழ்க்கை வாழ்வோம் அருளானந்தம் பெறுவோம்.

“மெய் ஞானத்தின் மூலங்களை எல்லாம்” படிக்காதவன் வெளிப்படுத்துகின்றேன்

 

நமது காவியங்களில் பேருண்மைகளைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். அதனின் மூலக்கூறுகளை நாம் சற்று சிந்தித்துப் பார்த்து இருக்கின்றோமா…?

1.ஆனால் நான் படிக்காதவன் தான்…! அந்தக் காவியங்களையும் நான் படிக்கவில்லை.
2.இருந்தாலும் அதனின் விளக்கங்களை உங்களிடம் சொல்கிறேன்.
3.காரணம் குருநாதர் காட்டிய அருள் வழியில் என்னால் அதை அறிய முடிந்தது.
4.அந்த இயற்கையின் உண்மைகள் மறைந்து விடவில்லை.

இன்றைய விஞ்ஞான அறிவு… பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே பூமிக்குள் எந்தெந்த நிலைகள் பதிவாகியுள்ளதோ “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்ற முறைப்படி அதனின் உணர்வின் அதிர்வுகளை எடுக்கின்றான்.

அந்த அதிர்வுகளை வைத்து அந்தக் காலத்தில் வாழ்ந்த உயிரினங்களோ மனிதர்களோ அவருடைய எண்ண அலைகளை வைத்து “உருவத்தையும் காட்டுகின்றான்…”

இதைப் போன்று தான்
1.மெய் ஞானிகள் கண்ட உண்மை உணர்வை “மெய் ஞானத்தைக் கண்ட நமது குருநாதர் எனக்குள் பதிவு செய்து…”
2.அதை எப்படி அறிய வேண்டும்…? என்று உணர்வுகளை ஊட்டினார்.

அதன் வழியில் நான் செல்லப்படும் பொழுது அதை எல்லாம் காண முடிந்தது.
1.அந்த உண்மையின் சக்திகளைப் பெறும் தகுதியைப் பெற்றேன்.
2.நீங்களும் அந்தத் தகுதியைப் பெற வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

ஒரு கம்ப்யூட்டரில் பதிவானால்தான் அது இயக்கும். ரேடியோ டி.வி. ஸ்டேசன்கள் எங்கேயோ இருந்து கொண்டு ஒலி/ஒளிபரப்பு செய்கின்றார்கள். அந்த அலைவரிசையில் இங்கே நாம் திருப்பி வைத்தால் தான் காற்றிலிருந்து வருவதை எடுக்க முடியும்.

இதே போன்றுதான் பகைமை உணர்வு வெறுப்பு கொண்ட உணர்வு கோப உணர்வு இப்படி எண்ணிலடங்காத உணர்வுகள் உங்கள் ஒவ்வொருவர் உடலிலும் பதிவாகியுள்ளது.

அதை நினைக்கும் போதெல்லாம் அதற்குத் தக்கவாறு அதனுடன் தொடர்பு கொண்டு… கவர்ந்து சுவாசிக்கப்பட்டு இயக்குகின்றது.

ஆனால் குரு கொடுத்த தீமைகளை அகற்றிடும் அருள் ஞான சக்திகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
1.எப்பொழுதெல்லாம் இதை எண்ணுகின்றீர்களோ
2.அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் மாற்றி விட்டு
3.வாழ்க்கையைச் சீராக்க நிச்சயம் இது உதவும்.
4.”உதவ வேண்டும் என்பதற்குத்தான்” உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள்… இதைச் செய்யக்கூடாது… அதைச் செய்யக்கூடாது… என்று நினைப்பார்கள் ஆனால் இரண்டு பேர் சேர்ந்து சிகரெட் பிடிப்பதைப் பார்த்த பின் “எப்படியோ அதைக் குடிக்க வேண்டும்…” என்ற ஆர்வம் வந்துவிடும்.

கொஞ்ச நேரம் மனதைக் கட்டுப்படுத்திப் பார்ப்பார்கள்… அப்புறம் என்ன ஆகும்…?
1.எப்படியோ கொஞ்சம் அதைச் செய்து பார்க்கலாமா…?
2.அந்த வழியில் போகலாமா…! என்று இந்த உணர்வு வரும்.

அதே மாதிரித் தான் லாகிரி வஸ்துகளைப் (போதை உண்டககுவது) பயன்படுத்துபவர்கள். நான் அதைக் கட்டுப்படுத்தி விடுவேன் என்று சொல்வார்கள். ஆனால் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பழகிய பின் இந்த உணர்ச்சிகளை உந்தும்.

தன்னை அறியாமலே அங்கு செல்லும். யாராவது அதைப் பற்றிப் பேசினாலோ அல்லது ஆடிக் கொண்டே அங்கே முன்னாடி போனால் போதும். உடனே அதைச் சாப்பிட வேண்டும் என்று இழுத்துச் சென்று விடும்.

ஏனென்றால் அந்தத் தீயதுக்கு அவ்வளவு சக்தி இருக்கின்றது.

1.உங்கள் மனது இவ்வாறு மாறினாலும் அடுத்த கணமே எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.அது நமக்குள் வராதபடி… வளராதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இந்த வலுவை ஒவ்வொரு நிமிடத்திலும் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

ஆகவே… இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுபட அதிகாலையில் ஒரு 15 நிமிடம் ஆவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்… உடலுக்குள் அதை வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எலக்ட்ரானிக்காக மாற்றிக் கொண்டால்
2.குறைபாடுகள் வந்தால் அது நம்மை இயக்காதபடி சிந்தித்துச் செயல்படும் வலிமை வரும்..
3.இதை உங்கள் அனுபவத்தில் பெறலாம்

உலக நடப்புகளைப் பத்திரிகை டி.வி. மூலம் அறிந்து கொள்கிறோம். அதைக் காதிலே கேட்டாலும் அடுத்த கணம் கண்ணுக்கே நினைவு வருகிறது. (எங்கே… என்ன… ஏது…? என்று அந்த இடத்திற்கே நம் நினைவுகள் செல்கிறது)

காற்றில் இருப்பதை டி.வி. ஆண்டெனா எப்படிக் கவர்கின்றதோ அது போன்று நம் கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகின்றது. ஆன்மாவாக மாற்றியதை உயிரின் காந்தம் இழுத்துச் சுவாசிக்கும்படி செய்கிறது.

சுவாசித்தது உயிரிலே மோதச் செய்து அந்த உணர்வலைகளை உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

உலகெங்கிலும் நடக்கக் கூடிய கொடுமைகள் கொலை கொள்ளை போன்ற
1.எத்தனையோ பதிவுகள் டி.வி பத்திரிக்கை மூலம் இதற்கு முன்னாடி நாம் கவர்ந்தது நமக்குள் அந்த அணுக்கள் உண்டு.
2.அதே அணுக்கள் மீண்டும் தன் உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை அறியாமலே அதனதன் செயலுக்கு அழைத்துச் செல்லும்… அது நாம் அல்ல…!

அதாவது… ஆண்டனா கவர்ந்த அலைகள் டிவி.க்குள் நுழைந்த பின் அதனதன் பாகங்கள் அந்தந்த வேலையைச் செய்வது போன்று நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் அதனதன் இயக்கங்களாகச் செயல்படத் தொடங்கி விடுகின்றது

ஆகவே உலக நிலைகள் எதைக் கேள்விப்பட்டாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு “உலகம் நலமாக இருக்க வேண்டும்…” என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு பழக்கத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத்தான் நினைவுபடுத்தித் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
1.குரு உயர்ந்த உணர்வுகளை எனக்குக் கொடுத்தார்
2.அதன் வழி உங்களையும் பெறச் செய்கிறோம்.

தலை வலிக்கின்றது… மேல் வலிக்கின்றது என்று என்னிடம் எத்தனையோ குறைகளைச் சொல்கின்றார்கள்… அழுது என்னிடம் கொட்டுகின்றார்கள். அதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால் எத்தனை ஆத்ம சக்தி செய்ய வேண்டும்…?

சாதாரணமாக ஒருவர் வேனைப்படுவதைக் கேட்ட உடனே நம் உடலில் அது தீமையாகப் பரவுகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொன்றாக இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால் வந்து கொண்டே தான் இருக்கும்.

ஆக… நல்லவருக்குத் தான் எல்லாத் தொல்லைகளும் வருகிறது.

“நான் தியானம் செய்தேன்…” என்று சொல்லிவிட்டு பிறருடைய துன்பங்கள் எல்லாவற்றையும் கேட்டு அதை உடனடியாகச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த உணர்வுகள் வலிமை பெற்று உமிழ் நீராக ஆன பிற்பாடு உடலில் அதிகமாகிவிடும்.

1.உடனுக்குடன் அதை மாற்றிப் பழக வேண்டும்
2.ரெக்கார்டை (RECORD) மாற்றிப் பழகிக் கொள்ள வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்தக் குறிப்பை உடலுக்குள் அதிகமாக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

மூதாதையர்களுக்கு இதற்கு முன் நாம் செய்ய மறந்த காரியத்தைச் செயல்படுத்த வேண்டும்

 

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அருள் உணர்வைத் தூண்டி…
1.உங்கள் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தச் செய்து
2.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி உணர்வுகளை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெற்று அதனின் வலுக் கொண்டு “அவரவர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை” சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க முடியும்.

ஏனென்றால் நாம் அனைவரும் சேர்ந்து வலுக் கொண்டு “உந்தித் தள்ளப்படும் பொழுது…” சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்புக்குள் முன்னோரின் ஆன்மாக்கள் செல்கின்றது.
1.உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைக்கின்றது
3.சப்தரிஷி மண்டலத்துடன் அது சுழலத் தொடங்குகிறது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ராக்கெட் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணிலே செலுத்துகின்றார்கள். பூமியின் ஓடு பாதையில் சுழலச் செய்யும் பொழுது அதன் வரிசையில் சுழல்கின்றது.

அதே சமயத்தில் தெற்கு வடக்காகச் சுழலும் பொழுது அந்தச் சூழலின் தன்மைக்கு இதனின் ஈர்ப்பு வேகத்தைக் கூட்டும் பொழுது அது சுழல்கின்றது. அதனுடைய வேகத்தைக் குறைத்து பூமியின் சுழல் வட்டத்தில் சமமான நிலைகள் இருக்கும் பொழுது… “அது எந்த ஊரின் எல்லையோ…” அங்கேயே நிலைகொண்டு அதனைச் செயல்படுத்துகின்றது.

இதைப் போன்று தான் எந்த மனித உடலில் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றனரோ அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் செலுத்தி… அதனின் வலுக் கொண்டு மூதாதையரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் முறைப்படி விண் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றது. பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலேயே சுழலத் தொடங்குகிறது.

அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்
1.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அதைப் பெற்று
2.வாழ்க்கையில் வரும் கடும் தீமைகளையும் மாற்றி அந்த மகரிஷிகளின் உணர்வை வளர்த்துக் கொள்ளலாம்.

பௌர்ணமி தோறும் அனைவரும் ஒன்று சேர்ந்து இதைப் போன்று செயல்படுத்த வேண்டும்.

இதற்கு முன்பு நாம் செய்யாத்தால் நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்று இருந்தாலும் நாம் எடுக்கும் வலுவின் துணை கொண்டு
1.அந்த உடலிலிருந்து எப்பொழுது வெளி வந்தாலும் நம்முடைய நினைவின் ஆற்றலை அங்கே பெருக்கப்படும் போது
2.அந்த உடலில் பெற்ற நஞ்சினைக் கரைத்து விட்டு விண் செல்லும் தகுதியை நாம் ஏற்படுத்த முடியும்.

ஆகவே நாம் தளராது இதைச் செய்ய வேண்டும். மனிதனாக நம்மை உருவாக்கிச் சீராட்டித் தாலாட்டி வளர்த்த நம்முடைய முன்னோர்கள் மீண்டும் பிறவிக்கு வராதபடி செய்வதே நம்முடைய “தலையாயக் கடமையாக” வைக்க வேண்டும்.

ஆங்காங்கு உள்ளோர் கூட்டுத் தியானங்களின் மூலம் முதலில் இதை வலுப்படுத்திச் செயல்படுத்த வேண்டும். உடலை விட்டு வந்த ஆன்மாக்களைத் துரிதமாக நாம் விண் செலுத்த முடியும். காரணம் அவருடைய உணர்வுகள் தான் நம் உடலாக இருக்கின்றது. எளிதில் அனுப்ப முடியும்.

ஆனால் இப்பொழுது சாங்கியத்தைத் தான் நாம் கடைப்பிடித்து வருகின்றோம். சுட்ட சாம்பலைக் கொண்டு போய் ஓடும் தண்ணீரில் கரைத்தால் பாவம் போய் மோட்சம் போவார்கள். மோட்ச தீபம் ஏற்றினால் சொர்க்கம் செல்வார்கள் என்று தான் செய்து கொண்டுள்ளோம்.

ஆகவே காலத்தால் மறைந்த அந்த உண்மைகளை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் செயல்படுத்தி நம் முன்னோர்களின் ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பிறவியில்லா நிலை பெறச் செய்வோம்.

அவர்கள் ஒளி நிலை பெற்றால் அவருடைய துணை உண்டு இந்தப் பூமியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு வாழ்க்கையில் நாம் மகிழ்ந்து வாழவும்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவும் முடியும்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… உயிரே நமக்குச் சொந்தம். ஆனால் வழக்கத்தில் நாம் உயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலையில் இருக்கின்றோம்.

உயிரை நாம் சொந்தமாக்க வேண்டும் என்றால் குரு காட்டிய அருள் வழியில் நாம் இதைச் செயல்படுத்துவோம்.

1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது… உடலாக்குகிறது
2.அப்படிப்பட்ட உயிரைச் சொந்தம் என்று யாரும் எண்ணவே இல்லை.
3.அவனால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல்.
4.அவனை வேண்டி அந்த அருள் உணர்வுகளை நாம் வலுவாக்கிக் கொண்டால்
5.உயிருடன் ஒன்றி என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறர் நம்மைக் குறை கூறுவதோ குற்றம் சொல்வதோ அவரவர் உணர்வுக்குத் தக்க பேசுவார்கள். உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களில் ஏங்கித் தியானிக்க வேண்டும்
1.ஏனென்றால் குறை உணர்வுகளைக் கண்ணின் கருமணி தான் அதைக் கவர்கிறது.
2.அதன் வழியாகத்தான் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களுக்குச் (செய்தியாக) செல்கின்றது… உடல் உறுப்புகளுக்கெல்லாம் இணைக்கிறது
3.குறை உணர்வை இழுத்து நம் முன்னாடி பரப்பப்படும் பொழுது அந்த உணர்வுகளே வலுப்பெறுகின்றது
4.அதன் இயக்கத்திற்கு நம்முடைய நிலைகள் சென்று விடுகின்றது… அது நம்மை இயக்க ஆரம்பிக்கின்றது.
5.அவர் செய்யும் தவறை நமக்குள் ஏற்று அவர் வழியிலேயே நடக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால் வாலி அது வலிமையானது.. அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது நம் நல்ல குணங்களை இயக்க முடியாது தடைபடுத்தி விடுகின்றது.

ஆகவே ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அவர் உணர்வு நம்மை இயக்கக் கூடாது. அடுத்த நிமிடமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.கண்ணின் கருமணியில் இணைக்கப்படும் போது
2.நம்மை அவர் குறை கூறிய உணர்வு அதிலே இல்லாதபடி துடைக்கின்றது… சுத்தப்படுத்துகிறது.

ஏனென்றால் கண்களால் தான் அவருடைய செயலை நாம் பார்த்தோம். கருமணிகளில் அது பட்டு அந்த உணர்ச்சிகளை உள்ளே அனுப்புகிறது. அப்போது கருமணியில் அந்த அழுக்கின் தன்மை படுகிறது.

அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கருமணிகளைச் சுத்தப்படுத்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இந்த வலுவைச் சேர்த்து விட்டால்
1.கண்களால் பார்த்த இந்த உணர்வுகள் உடல் உறுப்புகளை இயக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்துக் குறையை இழுக்காதபடி முதலில் தடைப்படுத்துகின்றோம்

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

இத்தகைய வலுவான உணர்வுகள் வரப்படும் பொழுது நமக்குள் அவர் முதலிலே பேசிய அந்தக் குறையான உணர்வுகளை இது தள்ளி விட்டு விடுகின்றது. நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

பின்… அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் அவரிடத்தில் தோன்ற வேண்டும்; பண்பும் பரிவும் பெறக்கூடிய அந்த அருள் உணர்வு அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணி விட்டால் இதன் உணர்வு நமக்குள் நல்லதை இயக்கும் சக்தியாக மாறுகின்றது.

எப்படித் தான் இருந்தாலும் பிறர் குறை கூறாமல் இருக்க மாட்டார்கள். எவ்வளவு நல்லது செய்தாலும் காசை வாங்கிக் கொண்டு செய்கின்றார்…! சும்மாவா கொடுப்பார்…?
1.தர்மம் செய்தால் அவர் அதைச் சும்மாவா கொடுக்கின்றார்…
2.ஏமாற்றுவதற்காகக் கொடுக்கின்றார்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

இதைப் போன்ற மற்றவரின் உனர்வை நாம் எடுத்தால்
1.அவர்கள் மீது நமக்கு வெறுப்பும்
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் மீது வெறுப்பும் ஏற்பட்டு விடுகின்றது… “நமக்குள்ளேயே…!”

இதைப் போன்ற நிலைகளை நாம் ஒவ்வொரு நொடியிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் பல கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலுவைச் சேர்த்துத் தான் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.

இருந்தாலும் மனிதன் ஆன பின் இதைப் போன்ற குறைகளை நுகர்ந்தால் அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் கொடுமைப்படும் நிலையை வருகின்றது.

அந்த நல்ல அணுக்கள் பலவீனம் அடையாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து வலிமை பெறச் செய்து உயிருடன் ஒன்றி என்றும் அழியாத… பேரின்ப நிலையான… அருள் பெற வேண்டும்.

அதைத்தான் ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

1.கண் விழித்தவுடனே காலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எந்தப் பகைமையும் நமக்குள் வளராதபடி அருள் உணர்வுகளை எடுத்து
3.பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்.

இந்த உபதேசத்தின் நோக்கமே அதற்குத் தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் செய்யும்போது எப்போதுமே புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரைத் தான் எண்ணி தியானிக்க வேண்டும். “என் (ஞானகுரு) உயிரை எண்ணுவதனால் பயனில்லை…”

சாமி (ஞானகுரு) உயிரால் உருவாக்கப்பட்ட அருள் உணர்வலைகள் இங்கே பரவி இருக்கப்படும் பொழுது உங்கள் உடலிலே அது பதிவாகின்றது.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைத் தான்
2.குரு வழியில் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏகமாக எண்ணி
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பிக் கொண்டே உள்ளோம்.
4.மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்

குரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது எல்லோரும் சேர்ந்து… தியானத்தின் மூலம் தவமிருந்து வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே உண்டு… அது உங்களுக்குக் கிடைக்கின்றது.

அது மிகவும் வலிமைமிக்க சக்தி…!

யாம் சொன்ன முறைப்படி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம்.

எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் இந்த முறைப்படித் தான் எண்ணி அதைச் செயல்படுத்த வேண்டும். ஆனால்
1.நமது ஆசை நல்ல உணர்வின் தன்மை கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்.
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய இச்சையில் நாம் செயல்பட வேண்டும்
3.அதன் வழி ஏங்கித் தியானித்தால் உங்களுக்கு அது கிடைக்கும்.

ஆகவே எந்தத் திசையில் எங்கிருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் மிகவும் எளிதாக கிடைக்கும்.
1.அது வலிமைமிக்க சக்தியாக உங்களுக்குள் வரும்
2.உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய ஆசைகள் எல்லாம் குரு வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதாக இருக்க வேண்டும். குரு துணை கொண்டு அதைத் தான் பரப்புகின்றோம்.

எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது நம் பூமி முழுவதும் அது படர்கின்றது

உலகின் எந்த மூலையிலிருந்து நீங்கள் எண்ணினாலும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைப் பெற முடியும் (வாக்காகக் கொடுக்கின்றேன் – ஞானகுரு)
2.ஏனென்றால் அவர் உணர்வுகளைப் பெற்று தான் நான் வளர்ந்தது
3.அவர் உணர்வை எடுத்துத் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்…
4.அவர் இன்று ஒளியின் உடலாக இருக்கின்றார்… அவருடைய உணர்வை எளிதில் பெற முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வை எனக்குள் விளைய வைத்து அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்கும் கொடுக்கின்றேன்.

ஆகவே…
1.ஞானகுரு கூறிய வழிப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்றால்
3.இது தான் முறை… முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றோம்.

குரு காட்டிய உணர்வுகள் எனக்குள் விளைந்தாலும் ஒளியின் உடலாக இருக்கும் அந்தக் குருவின் அருளை எளிதில் பெற முடியும். ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தில் அவர் உள்ளார்.

அவர் உடலுடன் இங்கே இருந்த காலத்தில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் ஆழமாகப் பதிவானது. அதை உங்கள் எல்லோருக்குள்ளும் பதிவு செய்து… ஒருக்கிணைந்து அந்த உணர்வின் தன்மை அலைகளாகப் பரப்பி வைத்திருப்பதனால் அதனை நீங்கள் எளிதில் பெற முடியும்.

“சாமி செய்து கொடுப்பார்…” என்றால்
1.குருவின் வழியை நமக்குக் காட்டினார்
2.அந்த ஞானத்தின் வழியினைப் பதிவாக்கப்படும் பொழுது இதுவே குருவாக அமைந்து
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் அருள் வழியாகக் கிடைக்கும்
4.குரு ஒளியான உணர்வைப் பெறக்கூடிய தகுதியும் நீங்கள் பெறுவீர்கள்.

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் தீமைகளைக் காணும் பொழுதெல்லாம் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நுகர்ந்து
1.ஒவ்வொரு நொடியிலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் ஆன்மாவை இணையச் செய்யும்
2.அந்த வலுவான நிலைகளை உங்கள் உடலில் உருவாக்குதல் வேண்டும்.

இவ்வாறு உருவாக்கினால் இந்த வாழ்க்கைக்குப் பின் இதே உடலில் உருவான உயிருடன் ஒன்றி கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து அதனுடன் இணைய முடியும்.

கணவன் மனைவியாக இணைந்து குழந்தையை எப்படி உருவாக்குகின்றோமோ… அது போல் இருவரும் துருவ தியானத்தில் கணவனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று மனைவியும் மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவனும் இவ்வாறு உணர்வால் ஒன்றிய பின் “இரு உயிரும் ஒன்றாக இணைந்து விடுகின்றது…”

இரு உயிரும் ஒன்றான பின் அருள் ஒளியின் உணர்வை உருவாக்கி ஒளியின் சரீரமாக இயங்கத் தொடங்கும்.
1.உயிருக்குள் வெப்பம் என்ற நிலை இருக்கும் பொழுது அது விஷ்ணு என்றும்
2.அதிலே ஈர்க்கும் காந்தத்தை லட்சுமி என்றும்
3.ஆண் பெண் என்ற நிலை இல்லை என்றால் இதை உருவாக்க முடியாது.

ஆண் என்ற நிலையில் இயங்கினாலும் பெண் என்ற நிலையில் இணைக்கும் போது எண்ணத்தால் உருவாக்கும் அருள் சக்தியை… “தன்னுடன் இணைத்துப் பெருக்கும் சக்தி பெறுகின்றது…”

காரணம் – அமிலத்தின் தன்மை கொண்டு ஒன்றைத் தனக்குள் வளர்த்திடும்… அதை உருவாக்கும்… உணவாகக் கொடுத்து வளர்த்திடும் திறன் பெற்ற அமிலங்கள் பெண்கள் உடலில் உண்டு.

ஆண்களில் திடப்பொருளின் தன்மையை இறுகச் செய்யும் நிலையில் இருப்பினும் பெண் உணர்வுடன் கலந்து உயிருடன் ஒன்றி உருவாக்கினால்
1.உடலை விட்டு அகன்றால் இரு உயிரும் இணைந்து
2.ஒருவர் பின் ஒருவர் சென்றாலும்… அல்லது
3.இந்தத் தியானத்தில் இணைந்து வாழ்ந்தால் ஒன்று முன் சென்றாலும்
4.பின் வரும் தன் கணவனோ தன் மனைவியோ அவர் உணர்வையும் அரவணைத்து ஒன்றியே அதை அழைத்துச் செல்லும்.
5.எந்த விண்ணை நோக்கி ஏங்கி எடுத்தோமோ அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
6.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிலே வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணைய முடியும்.

இந்தப் பிரபஞ்சம் அகண்ட அண்டத்தில் வரும் சக்திகளை நுகர்ந்தாலும் நமது பூமி நுகரும் தருவாயில் பூமியில் உருப் பெற்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக அமைந்திருப்பதனால் பூமிக்கு வரும் உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியான உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலங்கள் அதுவும் ஒளியின் சுடராக வளர்கின்றது.

சூரியன் எப்படிக் கோள்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கிப் பிற மண்டலத்திலிருந்து வருவதைச் சூரியன் கவர்ந்து அனைத்தையும் அரவணைத்து எப்படி வளரச் செய்கின்றதோ இதைப் போல் தான் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் நிலை கொள்ளுதல் வேண்டும்.

இந்த வளர்ச்சிக்கு நாம் செல்ல வாழ்க்கையில் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

மனிதனாகப் பிறந்தோம்… உடல் மடிகிறது…! என்றால் மனித வாழ்க்கையிலே விஷத்தின் தன்மை அளவுகோல் கூடும் பொழுது தான் உடலில் நல்ல அணுக்கள் மடிகின்றது.

மடிந்து உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா எந்த ஆசையை வளர்த்து வாழ்ந்ததோ பேயாசையாக மாறி… எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஒன்றை பெறப் வேண்டும் என்ற ஆசையின் உணர்வுகள் அதிகரிக்கும் பொழுது இன்னொரு மனித உடலுக்குள் புகுந்து அந்தப் பேயாசையை அங்கே ஊட்டி அந்த விஷத்தன்மையை அந்த உடலிலும் அதிகமாகச் சேர்த்து அந்த உடலை வீழ்த்தி விட்டு வெளிவந்த பின்… மனிதன் அல்லாத நிலைகளைத் தான் பெறச் செய்கின்றது.

1.ஆனால் நம்முடைய ஆசை அருள் மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றி
2.அந்த உணர்வினை நமக்குள் எடுத்தால் எந்த மனிதனுடைய ஈர்ப்புக்குள்ளும் செல்லாது
3.அருள் ஒளியின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

இந்த வலுவைச் சேர்த்தால் நாம் அங்கே செல்கின்றோம். “மனிதனின் கடைசி எல்லை சப்தரிஷி மண்டலத்தை அடைவது தான்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எத்தனையோ பல சிக்கல்கள் வருகிறது. இதைத் தடுப்பதற்கு நாம் எந்த ஆயுதம் வைத்திருக்கின்றோம்…?

உதாரணமாக நாம் வயல்களில் பயிரிடுகின்றோம் என்றால் ஒரு வேலியைப் போட்டு மறைத்து மற்ற உயிரினங்கள் வராதபடி பாதுகாத்துக் கொள்கின்றோம். இதே போல் தான்
1.நம் உடலில் கார்த்திகேயா…!
2.இந்த ஆறாவது அறிவு நாம் தெரிந்து கொள்ளும் அறிவாக வருகின்றது,
3.சேனாதிபதி இந்த ஆறாவது அறிவு தீமைகள் வராது பாதுகாக்கின்றது.

அதே சமயத்தில் மனிதனின் ஆறாவது அறிவு என்கிற பொழுது தன் எண்ணத்தால் உருவாக்கும் சக்தி பெற்றது. அதாவது ஒன்றை ஒன்றுடன் இணைத்தால் ஒன்று உருவாகும் என்று அறிந்து செயல்படும் அறிவைப் பெற்றவன்.

அருள் ஒளி பெற்றவன்… உணர்வின் தன்மை ஒளியின் தன்மையாக உருவாக்கியவன்… ஒளியின் சரீரமாகப் பெற்றவன்… யார்…? அந்த அகஸ்தியன்…! அந்த ஒளியான உணர்வை நமக்குள் நுகர்ப்படும் பொழுது இருளை அகற்றும் ஒளியின் உணர்வாக நமக்குள் உருவாக்க முடியும்.

நஞ்சை ஒடுக்கிய அந்த ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது இருள் என்ற நிலைகள் இங்கே அகற்றப்படுகின்றது.

பாம்புகள் தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குகின்றது, அந்த விஷங்கள் பாம்பின் உடலில் பல வர்ணங்களாக நாகரத்தினமாக ஆகிறது. ஆனால்
1.அந்தத் துருவ மகரிஷியோ (அகஸ்தியன்) விஷத்தை வென்று ஒளியின் உணர்வாகப் பெற்றவன்
2.அது நீல நிறமாக இருக்கும்… இளம் நீலம்…!

நெருப்பு எரியும் பொழுது அதில் நீல நிற ஜுவாலை வந்தால் அது வீரியமான நெருப்பாக வரும். இதே போலத் தான் துருவ நட்சத்திரத்தின் ஒளியும் தெரியும்.
1.வானத்தில் மற்ற நட்சத்திரங்களைக் காட்டிலும்
2.துருவ நட்சத்திரத்தைப் பார்த்தோம் என்றால் இளம் நீலமாகப் பள…பள..பள.. என்று மின்னும்.
3.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நமக்குள் நுகர்ந்து பழக வேண்டும்.
4.இந்த உணர்வை நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்க வேண்டும்.

உதாரணமாக வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் என்ற உணர்வுகளை நாம் நுகரும் பொழுது ஓ…ம் நமச்சிவாய.. என்று அந்தந்தக் குணத்திண் அணுக்களாக உருவாக்கி அவைகள் எல்லாம் நம் உடலாக மாறுகின்றது.

ஆனால் அத்தகைய உணர்வுகள் நம் உடலாக ஆவதற்கு முன்னாடியே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதற்கு ஜீவன் கொடுக்காதபடி தடுத்து விட வேண்டும்.

அகஸ்தியனைப் போன்று நாம் நம் உணர்வுகளை ஒளியாக மாற்றிடல் வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறோம் (ஞானகுரு).

இந்தப் பிள்ளை யார்…?

 

ஒளியின் சிகரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எவ்வாறு பெற வேண்டும்…? என்பதை உணர வேண்டும்.

1.அவர்கள் விண்ணுலகம் சென்ற உணர்வை நாமும் நுகர்ந்து
2.வாழ்க்கையில் வரும் தீமைகளைச் செயலற்றதாக மாற்றி
3.அருள் மகரிஷிகள் உணர்வுகளை அரும்பெரும் சக்தியாக மாற்றச் செய்வது தான் விநாயகர் தத்துவம்.

இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறியிட்டு அங்கே காட்டியிருப்பார்கள்.

புழுவிலிருந்து மனிதனாக வந்த நிலையில் மனிதனாக ஆனபின் மற்ற தீமைகளை அடக்கி விட்டு உயர்ந்த ஒளியின் உணர்வாக தனக்குள் அரசாட்சி பரிந்து அதையே ஒளியாக மாற்றி
1.விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.அவனுடன் ஒன்றிய அவனாக நாம் மாறுகின்றோம்.

நாம் எண்ணிய உணர்வு அனைத்தும் “நான்” என்றாலும் உயிரின் தன்மை கொண்டு தனித்த நிலையில் உயிரே இயக்குகின்றது. அதிலே நாம் எண்ணிய உணர்வு எதுவோ அதனுடன் இணைந்து செயல்படும் போது “தான்” ஆகின்றது.

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும் பொழுது அனைத்தும் நானாகின்றது… அதாவது நான் தானாகி… தான் நானாகின்றது.

உயிரின் தன்மை தனக்குள் ஒளியின் சிகரமாக மாறினாலும்… உணர்வுகள் தனக்குள் அடர்த்தியாகி இது மறைத்தாலும்
1.தான் என்ற இரு நிலைகள் கொண்டு இயங்குவதை
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாறிய பின்… ஒளிச் சரீரமாக மாறிய பின் “நான் ஆகின்றது…”

நான் தானாகி… தான் நானாகிறது என்பதைத் தான் இந்தப் பிள்ளை யார்…? என்ற நிலையை நிலைப்படுத்தி அதை அறிந்திடும் நிலையாக இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் தன்மையைக் கார்த்திகேயா என்று அழைக்கின்றார்கள்.

அந்த ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தி “மகரிஷிகளுடன் என்றும் ஒன்றியே வாழ்வோம்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று எடுத்துக் கொண்டால் மதத்திற்கு என்று குருக்கள் உண்டு. உயர்ந்த தத்துவத்தை எல்லாம் பேசுவார்கள்.
1.ஆனால் அந்தத் தத்துவங்கள் மற்றவருக்குத் தானே தவிர
2.அந்தத் தத்துவம் தனக்கில்லை என்று நிலைகளில் தான் நடந்து கொள்வார்கள்.

அந்தத் தத்துவத்தின் கீழ் நடக்காதிருந்தாலும் அந்தத் தத்துவத்தை வளர்க்கப்படும் போது மற்ற மதங்களைப் பழித்துப் பேசுவதும் பகைமை ஊட்டுவதும் போன்ற நிலைகள் தான் இன்றும் உண்டு. எல்லோரையும் இணைத்துச் சேர்க்கும் நல்ல பண்புகள் இல்லை.

ஆனால் அந்த உயர்ந்த பண்பு நம் நாட்டில் நம் காலத்தில் வளர்ந்த தவறு செய்த ஒரு மகானுக்கு எப்படி வருகிறது…? தன் சுகபோகங்களுக்கும் சிற்றின்பங்களுக்கும் மது வகைகளுக்கு அடிமையான அந்த மனிதன் காந்திஜி தான்…!

காந்திஜி அரசியல் சட்டங்களை உணர்ந்தவர். BHARAT LAW மேல் நாட்டிலே படித்துணர்ந்தார். மேல் நாட்டின் அறிவையும் அவர் உணர்ந்தார். மேல் நாட்டில் செய்யும் அநாகரிகத் தன்மையெல்லாம் இங்கேயும் வந்து செய்தார்.

இவர் தனக்குள் இன்பத்தையும் சுகபோகத்தையும் குடிப்பதையும் தன் தாய் தந்தையையும் மீறியும் செயல்பட்டவர். மேலை நாட்டினர் நாகரீகத்தையும் மேலை நாட்டார் செய்யும் செயல்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டவர்.

ஏனென்றால் செல்வத்தின் செழிப்பில் ஜமீன்தார் என்ற முறையில் அவர் வளர்ந்து வந்ததனால் பல சுக போகங்களையும் அனுபவித்து வந்தவர் அவர்.

ஆனால் இவருக்கு எப்படி இந்த ஞானம் கிடைத்தது…?

ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலுக்காகச் செல்லும் பொழுது அவர் தன் கண் முன் பல தவறுகள் நடப்பதைக் கண்டுணர்ந்தார். அங்கே நீக்ரோக்கள் வேதனைப்படும் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உணர்கின்றார்.

மதத்தை அடிப்படையாகப் படிப்பதும் மற்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற சட்டத்தைப் படித்த அவர் தீமையில் இருந்து இந்த மக்களை எப்படி விடுவிக்க வேண்டும் என்ற நிலையைத் தனக்குள் நாளுக்கு நாள் வலு பெறச் செய்கின்றார்.

காந்திஜி தனது வாழ்க்கையில் தவறுகள் பல செய்து இருப்பினும் அந்த தவறுகளில் இருந்து தான் எவ்வாறு மீள வேண்டும் என்ற உணர்வுகள் படிப்படியாக அவருக்குள் மேலோங்குகின்றது.

பிரிட்டனிடம் இருந்து ஒரு மதத்தின் அடிப்படையில் சிக்கி அவனுக்குக் கீழ்
1.தர்மத்தை அழித்துக் கொண்டு இருக்கும் அதிலிருந்து நீதி வேண்டும்.
2.உலக மக்கள் மற்றோர் அடிமையில் இருந்து மீள வேண்டும்.
3.அருள் ஞானிகள் காட்டிய அருள் செயல்கள் தனக்குள் வளர வேண்டும் என்ற பேருண்மையைத் தனக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றார் காந்திஜி.

அதே சமயத்தில் தான் படித்த படிப்பின் நிலைகள் கொண்டு உலக நிலைகளை அறிவதற்கு தன் எண்ணங்களைப் பரவவிட்டு உலக நூல்களை அனைத்தும் படிக்கின்றார்… படிக்கின்றார்…!

படிப்பின் நிலைகள் கொண்டு
1.நாட்டில் நடக்கும் அரசியல் வாழ்க்கையும்
2.மதங்கள் சேர்ந்து மத வாழ்க்கையும் மக்களை எப்படித் திசை திருப்புகின்றது..?
3.மக்களுடைய மன நிலைகள் எப்படி மாறுகின்றது…?

மதத்திற்கு மதம் போர் செய்வதும் மதத்திற்குள் இனங்கள் ஒன்றொன்று போர் செய்தும் உண்மையில் மகான்கள் கொடுத்த ஞானிகள் கொடுத்த மனித வாழ்க்கைக்கு உண்டான நிலைகள் சிதறுண்டு உண்மையைப் பெற முடியாது எவ்வாறு போகின்றது இந்த நாடு…? என்ற நிலையைத் தெளிவாகக் கற்றுணர்கின்றார் மகாத்மாஜி.

வான்மீகி இயற்றிய இராமாயணத்தைக் காந்திஜி தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் அந்த வான்மீகி மகரிஷியைத் தான் தன் எண்ணத்தில் எடுத்துக் கொண்டார்.

அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் பெற்று விட்டால் நம்மை அறியாமல் இயக்கும் தீமை உணர்வுகளை அடக்கித் தீமை செய்வோர் உணர்வுகளிலிருந்தும் நாம் விடுபட முடியும் என்று அதை முழுமையாக உணர்கின்றார்.

சுதந்திரம் என்றால்… “நம்மை ஒருவர் ஆட்சி புரியக்கூடாது…” அதற்காக காந்திஜி
1.ஆங்கிலேயர்களை… “அந்நியர்கள்…” என்று சொல்லவும் இல்லை.
2.கொடூர உணர்வு கொண்டு நம்மை ஆட்சி புரிவதை விடுத்து விட்டு
3.”சகோதரத்துவத்தைத் தான்…” நாம் வளர்க்க வேண்டும்
4.அதைத் தான் நமக்குள் ஆட்சி புரியச் செய்ய வேண்டும் என்று தான் காந்திஜி சொன்னார்.

“மகிழ்ச்சி…” என்ற உணர்வுகளை என்றுமே நமக்குள் சுதந்திரமாக இயங்கச் செய்வதே (கல்யாணராமா…!). வான்மீகி மாமகரிஷி காட்டிய இராமாயணக் காவியத்தின் மூலக் கரு அது தான்.

அந்த உணர்வை அவர் வைராக்கியமாகக் கடைப்பிடித்ததால்… அவருடைய எண்ண வலுவால்… நம் நாட்டுக்குச் சுதந்திரத்தையும் பெற்றுத் தர முடிந்தது. உலக மக்கள் மனதிலும் அவர் இடம் பிடித்தார்.

நாம் அனைவரும் சகோதரர்களே…! என்றார் காந்திஜி. அவர் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க உணர்வுகள் நமக்கு முன் பரவியுள்ளது. அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அவர் உணர்த்திய சகோதரத்துவத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் பகைமைகளிலிருந்து விடுபடலாம். மன பலமும் மன வளமும் பெறலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்லுங்கள்

 

பூமிக்குள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது… கொதிக்கும் தருணத்தில் இருப்பதால் கடல்கள் பெருகுகின்றது. நிலங்கள் குறையப் போகின்றது.

மனிதனுடைய உணர்வுகள் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக… நஞ்சு கொண்ட பிராணிகள் மற்றொன்றைக் கொன்று புசிப்பது போன்று
1.இரக்கமற்ற உணர்வுகள் நஞ்சின் தன்மையாக மனித உணர்வுக்குள் கலந்து
2.மனிதனைக் கொன்று புசிக்கும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய நஞ்சினை நாம் பிளக்க வேண்டும்.

ஞானிகள் உணர்வை நுகர்ந்து விண் செல்லும் மார்க்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அழியாச் சக்தியான அந்த ஞானிகள் உணர்வைச் சேர்த்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளை இந்த வாழ்க்கையிலே பெற வேண்டும்… பெற முடியும்.

அகஸ்தியன் எல்லாவற்றையும் தெரிந்து சக்தி பெறவில்லை வியாசகன் அறிந்து பெறவில்லை. எல்லாமே சந்தர்ப்பம் தான்…!
1.இதைப்போன்று தான் சந்தர்ப்பத்தால் நீங்கள் இந்த உபதேசத்தைக் கேட்டறிகின்றீர்கள்.
2.உங்களுக்குள் பதிவாந பின் அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.அந்த ஞானிகள் உணர்வை நிச்சயம் பெற முடியும்.

உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்.

ஏனென்றால் எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றான்… உணர்வினை ஜீவனாக்குகின்றான்… அணுவாக மாற்றுகின்றான்… அணுவின் மலமாக உடல் ஆக்குகின்றான்.

அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் ஏங்கிப் பெறும் பொழுது அதையே அணுவாக மாற்றுகின்றான். அணுவின் தன்மை ஒளியாக உருப்பெறுகின்றது. ஆகவே நாம் ஒளியாக வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்து நாம் இணைத்துக் கொண்டே வந்தால் தீமைகளை அகற்றும் உணர்வாக விஞ்ஞானத்தினால் வரக்கூடிய எத்தகைய நஞ்சுகளை மாற்ற முடியும்.

சூரியன் தான் சுழலும் பொழுது தன் மீது மோதும் நஞ்சினைப் பிரித்து இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிச் சுடராக ஆக்குவது போன்று உலகையே காத்து இரட்சிப்பது போன்று… இனி வரக்கூடிய எத்தகைய நஞ்சினைப் பிளந்திடல் வேண்டும்.

ஞானிகள் உணர்வை உள் புகுத்தி அதைப் பிளக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
1.ஒரு நாளைக்கு நூறு முறையாவது சொல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று
3.திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது உடலுக்குள் அந்த ஆற்றல்மிக்க சக்திகள் சென்று
4.கேட்டறிந்த பார்த்துணர்ந்த காற்றுக்குள் மறைந்து வரும் தீய உணர்வுகளை “நம்முடன் இரண்டறக் கலக்காது…” அதைப் பிரித்து விடுகின்றது.

அது ஓங்கி வளரும் பொழுது பிறிதொரு உணர்வு ஆன்மாவாக இருப்பதைப் பிளந்து விடுகின்றது. இதைத்தான் மடி மீது வைத்து நாராயணன் வாசல்படி மீது அமர்ந்து இரண்யனைப் பிளந்தான் என்று நரசிம்ம அவதாரமாகக் காட்டியுள்ளார்கள்.

அத்தகைய நரசிம்ம அவதாரமாக ஒவ்வொருவரும் மாறினால் தான் இனி வரும் இருளான நிலைகளிலிருந்து நம்மை மீட்க முடியும்… மற்றவர்களையும் மீட்கும் சக்தியாக நாம் வளர முடியும்.

ஆகவே
1.உயிருடன் ஒன்றி ஒளியாக என்றுமே நிலைத்திருப்போம்
2.அந்த ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்வோம்… அனைவரும் செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தொழில் செய்யும் பொழுது அடிக்கடி நீங்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணத்துடன் வியாபாரத்தில் அமர்கின்றீர்கள். அந்த நேரத்தில் “வேதனைப்படுத்தக் கூடியவர்கள் தான்…” கடைக்கு வந்து நம்மை அணுகுவார்கள்.

வியாபாரத்திற்குத் தான் வந்தார்கள் என்ற நிலையில் நியாயமான உணர்வுகளைப் பற்றி நாமும் பேசுவோம்… அவர்களும் அதையே பேசுவார்கள். அப்படிப் பேசப்படும் பொழுது அவருக்குள் நாம் இணைந்து விடுவோம்.
1.ஆனால் அவர் ஏமாற்றுபவராக இருப்பார்…
2.நம்மை ஏமாற்றத் தெரிந்து கொண்டவர். அதனால் அவருக்குப் பயனாகின்றது.
3.பார்… நான் எல்லாம் செய்தேன்… நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவனே… என்னை மோசம் செய்துவிட்டான்…! என்போம்.

வேதனை உணர்வுகளால் நம் சிந்திக்கும் தன்மை இழந்து எப்படி இந்தக் கஷ்டத்திலிருந்து மீளலாம்…? என்ற உணர்வு தான் முதலில் நமக்குள் தூண்டப்பட்டிருக்கும்.

இருந்தாலும்… நாம் வேதனையுடன் இருக்கும் இந்தச் சமயத்தில் ஏமாற்றுபவர்கள் இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
1.அத்தகைய ஆள்கள் தான் அந்த நேரத்தில் நம்மிடம் வருவார்கள்.
2.நல்லவர்கள் வருவதோ… நமக்கு நல்ல யோசனை சொல்வதோ வராது.
3.நல்லவர்கள் அப்படி வந்து யோசனை சொன்னாலும் “இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்…” என்ற எண்ணம் தான் நமக்கு வரும்.
4.நம்முடைய வேதனை நல்லவரை நம்பாதபடி செய்துவிடும்.

ஆனால் வேதனையான குணத்திற்குத் தக்கவாறு நினைக்கும் பொழுது நம்மை ஏமாற்றும் நோக்கத்தில் வந்தவர்… நல்லவராகவே தோன்றும். ஏமாற்றிய பின் தான் நாம் உணர்வோம்.

இதைப் போல் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே பல சூழ்நிலைகள் உருவாகி நம்மை இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அதிகாலையில் கண் விழித்தவுடன் துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கும் சக்தியின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் எத்தகைய நிலை ஆனாலும் சரி
2.தொழில் செய்யும் பொழுதும் சரி
3.உறங்கும் பொழுதானாலும் சரி
4.உணவை உட்கொள்ளும் பொழுதும் சரி
5.வெளியிலே போகும் பொழுதும் சரி
6.வியாபாரத்தில் ஒரு பொருளைக் கையில் எடுத்துக் கொடுக்கும் பொழுதும் சரி…!
7.”ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
8.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இணைத்தே வாழ வேண்டும்.

நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாடிக்கையாளரும் அவர் குடும்பத்தாரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் உங்கள் வேதனைகள் அகலும். மனமும் அமைதி ஆகும்… மகிழ்ச்சி தேடி வரும். அதனால் தொழிலும் நன்றாக இருக்கும்.

அதே மாதிரி நம் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று மிகுந்த வேதனைப்படுகின்றோம். அதற்குக் காரணம் என்ன…?

உதாரணமாக ஒரு சந்தர்ப்பத்தில் தேள் வருகிறது என்று அதை அடித்துக் கொன்று விடுகின்றோம். அந்த உயிர் நம் உடலுக்குள் உறைவிடமாக வந்து விடுகின்றது.

வந்த பின் அந்த அணுவின் தன்மை கருவிலே விளையப்படும் பொழுது கருவுக்குள் வரப்படும் பொழுது தான் அந்தச் சந்தர்ப்பத்தையே உருவாக்கும்.

தேளைக் கொன்ற அந்த உணர்வின் தன்மை நமக்குள் வரப்படும் பொழுது அந்த வேதனையின் அணுவின் கருவாக இங்கே நமக்குள் “மனிதனாக உருவானாலும்…!”
1.இது கருப்பையில் தங்கப்படும் பொழுது
2.அந்த வேதனை உணர்ச்சிகள் தோன்றும்… அந்த அலைகளை இழுக்கும்…!
3.வேதனையின் உணர்வின் தன்மை நம் உடலில் இருக்கும்.
(ஏனென்றால் அந்த அணுக்களின் தன்மை)

அப்பொழுது அந்த அணுவிற்குண்டான நிலைகள் “வேதனைப்படுத்தியே பிழைக்க வேண்டும்…!” என்ற உணர்வு அதற்குள் வந்து அப்படிப் பிறந்த பின் அடுத்தவர்களை வேதனைப்படுத்திக் கொண்டே இருப்பான்.

அவனைத் திருத்த வேண்டும் என்றால் எப்படிச் செய்வது…?

நாம் சமையல் செய்யும் பொழுது எவ்வளவு காரலாக காரமாக கசப்பாக இருந்தாலும் அதை எல்லாம் வேக வைத்துச் சுவையாக மாற்றுகின்றோம். சுவையாகச் சமைத்துத் தானே உட்கொள்கின்றோம்….!

அதைப் போல “நம் குழந்தை அப்படி இருந்தாலும்…” அவனைப் பற்றி வேதனையாக எண்ணி
1.நமக்குள் நம் எண்ணத்தை எமனாக்கிவிடக் கூடாது (இது முக்கியம்)
2.மாறாக நம் எண்ணத்தை நாம் கடவுளாக்க வேண்டும்.
3.அதாவது அருள் ஒளி கொண்டு இருளை அகற்றும் கடவுளாக… நம் எண்ணத்தை மாற்றுதல் வேண்டும்.

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்டே வர வேண்டும். பின் குழந்தையை எண்ணி
1.அவன் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்.
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவன் அருள் ஞானம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகின்றது, அந்த எண்ணத்தின் தன்மை நம் உடலில் இணைந்து
1.உள் நின்று இயக்கும் பொழுது உயிர் கடவுளாகின்றது.
2.அதை மீண்டும் செயலாக்கும் பொழுது அதுவே தெய்வமாகக் காக்கின்றது.
3.அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதுவே குருவாகின்றது.

ஆகவே அத்தகைய குருவின் செயலாக நன்மையின் நிலையையே நாம் மனதில் கொள்ள வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறுவோம்.

எம்முடைய உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டால் உங்களுக்கு நல்ல நேரம்

 

டாக்டருக்குப் படிக்கச் செல்கிறார்கள் என்றால் “படிக்க வேண்டும்…” என்ற அக்கறை உள்ளவர்கள் படித்து முன்னுக்கு வந்து விடுகின்றார்கள். ஏதோ நான் படித்துக் கொண்டேன் என்று போகிறவர்களுக்குப் படிப்பு ஏறுவதில்லை… சரியான நிலையில் மருத்துவமும் பார்க்க முடிவதில்லை.

அதே மாதிரித் தான் உங்கள் குடும்பத்தில் எத்தனையோ நடக்கின்றது. நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பார்த்து அதற்குத் தக்க காலங்களை நிர்ணயித்துக் காரியங்களைச் செயல்படுத்துகின்றீர்கள்.

1.உங்கள் உடலுக்குள் எதை வலுவாக எடுத்துக் காரியத்தைச் செய்ய முயற்சிக்கின்றீர்களோ அது நல்ல நேரம்.
2.ஜோதிடம் பார்ப்பவர்களோ அல்லது மற்றவர்களோ… “என்ன இந்த நேரத்தில் போய் உன் காரியத்தைச் செய்யப் போகின்றாயா…?” என்று
3.அவர்கள் உணர்வை உள்ளே விட்டு விட்டால் அவர்கள் எண்ணிய உணர்வுப்படி அது கெட்ட நேரமாகி விடுகின்றது.

நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாமே நம் எண்ணத்திற்குள் தான் இருக்கின்றதே தவிர வேறு எதுவும் இல்லை.

ரோட்டில செல்லும்போது ரெண்டு பேர் கோபமாகப் பேசித் தாக்கிக் கொள்கிறார்கள். அதைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது… பார்த்து விடுகின்றோம். அந்த உணர்வினை நுகர்ந்தால் வெறுப்பான உணர்வு நமக்குள் வருகின்றது. அது கெட்ட நேரம்.

ஆனால் அடுத்த கணமே யாம் உங்களிடம் கொடுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி என்று நினைவை அங்கே செலுத்த வேண்டும்.
1.ஏனென்றால் இந்த கண் கருவிழி கருமணி துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்குகின்றது…
2.சண்டை போட்ட உணர்வைத் தள்ளிவிட்டு விடுகிறது… இதைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சண்டை போடுபவர்களையும் வேதனைப்படுபவர்களையும் பார்த்து அதைப் பதிவாக்குகின்றோம். அது நம்மை இயக்கத் தொடங்குகிறது.

செல்ஃபோனில் முந்திரி பருப்பு அளவு தான் உள்ளே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான பதிவுகளை ஏற்றும்படி வைக்கின்றார்கள்.

அந்தப் பதிவுகளை வைத்து எத்தனையோ வேலைகளை இன்று மிகவும் எளிதாகச் செய்யும்படி வைத்துள்ளார்கள். யார் பேசுகின்றார்கள்…? என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது… அவர்களுக்கும் காட்டுகிறது.

பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டுள்ளோம். விஞ்ஞான அறிவில் இதைச் செய்கிறார்கள்.

1.இதே போன்றுதான் நம் கண்ணின் கருவிழி விலா எலும்புகளுக்குள் உள்ள ஊனுக்குள் பதிவாக்கி விடுகின்றது.
2.அதை வைத்துத் தான் நாம் பேசுவதும் எண்ணுவதும் இயக்குவதும் எல்லாமே நடக்கிறது.
3.இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டால் அவ்வப்போது வரும் தீமைகளை நீங்கள் உடனுக்குடன் நீக்க முடியும்.

அதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

ஆனால் மற்ற ஸ்தாபன்ங்களில் இதை எல்லாம் எப்படிச் சொல்லிக் கொடுப்பார்கள் தெரியுமா…?

தன்னுடன் சீடர்களாக வந்து… தான் சொன்னதை எல்லாம் கேட்பவர்களுக்கு… ஒழுக்கமாக வருகின்றார்களா…? இல்லையா…! என்று பார்த்து அதற்கு அப்புறம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இப்படி எல்லாம் வரம்புகளை விதித்து… கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து அந்தக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றார்களா…? இல்லையா…! என்பதை எல்லாம் பார்த்துச் சரியானபடி நடப்பார்களா மாட்டார்களா…? என்று பல தடவை இழுத்தடித்து
1.அதற்குப் பின் மெம்பர் ஆக்கி சத்தியம் வாங்கி…
2.இனிமேல் இதிலிருந்து மாற மாட்டேன் என்று சொல்லிக் கடைப்பிடித்து வருபவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஒரு ஸ்தாபனத்திற்குள் சென்றால் அவர் சொல்வதெல்லாம் கேட்டுப் பதிவாக்கி சத்தியம் செய்ய வேண்டும்… முதலில் இதைத் தான் வாங்குவார்கள். அதற்குப் பின் சொல்லிக் கொடுப்பார்கள்.

1.உங்களிடம் இது எதையுமே நான் வாங்கவில்லை.
2.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உடலை ஆலயமாக மதிக்கின்றேன்.
3.ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் புனிதமாக வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறேன்.

இயற்கையின் இயக்கத்தின் உண்மையை அறிந்து கொண்டேன். குருநாதர் கொடுத்தார். அதை அப்படியே உங்களுக்கும் கொடுக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை ஒருவன் துன்பப்படுத்துகின்றான். அப்பொழுது “இப்படிச் செய்கின்றானே…!” என்று எண்ணுகிறோம். திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது
1.அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.
2.கருவாகி 48 நாள் ஆனபின் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது
3.அது வேதனையை உருவாக்கும் அணுவாக அது உருவாகின்றது.
4.அணுவாகி உடல் உறுப்புகளில் ஒட்டி விட்டால் நம் இரத்தங்களிலிருந்து தான் ஆகாரம் எடுக்கும்.

சூரியன் மற்ற தாவர இனச் சத்துக்களை எல்லாம் தனக்குள் எடுத்துக் காற்றுகளாக மாற்றியமைத்து வைத்துக் கொள்கிறது. ஒரு செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றும் பொழுது
1.காற்றுடன் காற்றாகக் கலந்து வரும்
2.தன் இனமான சத்தின் உணர்வைப் பிரித்தெடுத்து அந்தச் செடி விளையும்.

டி.வி ரேடியோ இவைகளில் ஒலி ஒளி அலைகளாக ஒலி பரப்பு செய்கிறார்கள், எத்தனையோ இடங்களிலிருந்து பரப்புகின்றார்கள். இருந்தாலும் நாம் எந்த அலை வரிசையில் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ இந்தக் காற்றிலிருந்து அந்த ஸ்டேசனிலிருந்து வருவதை மட்டும் பிரித்து நமக்குக் காட்டுகின்றது.

இதைப் போல நாம் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மை நமக்குள் எடுக்கும். நமக்குள் அதை இழுத்தே கவர்கின்றது.
1.வேதனைப்பட்டோம் என்றால் வேதனையைக் கவரும்.
2.கோபத்தை எண்ணினால் கோபமான உணர்வைக் கவரும்.

இப்படி எந்தெந்த எண்ணத்தின் உணர்வை கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மை நமக்குள் கரு முட்டையாக மாறும். இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகங்களில் இது இணைகின்றதோ அந்தக் காலப் பருவமாகும் பொழுது அது அணுவாக மாறுகின்றது. கூட்டை விட்டு வெளி வருகின்றது.

நத்தைகளைப் பார்த்தால் அந்த ஓட்டுடன் ஒட்டி இருக்கும். அந்த ஓடு அதற்குப் பாதுகாப்பு. அதே போல் நாம் கவர்ந்த உணர்வுகள் அனைத்தும் அணுக்களாகப் பாதுகாப்பாக நம் உடலின் உறுப்புடன் ஒட்டி உருவாகின்றது.

அது எந்த உணர்வு கொண்டு உருவானதோ அதனின் சத்தை இரத்தத்தின் மூலம் வருவதை உறிஞ்சி உணவாக எடுத்து அதன் மலத்தை இட்டு உறுப்புகளாகச் சேர்க்கின்றது.
1.ஏனென்றால் அணுவை நாம் பார்க்க முடியாது.
2.ஆனால் அந்த அணுவின் மலம் தசையாக உடலாக மாறும் பொழுது காண முடிகின்றது.

உறுப்புகளில் சேர்க்கும் பொழுது என்ன ஆகின்றது…?

ஏற்கனவே நல்ல அணுக்களால் ஆன உறுப்புகள் உடல் நன்றாக அழகாக இருக்கும். ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிலே சேர்த்து இணைந்து விட்டால்
1.உதாரணமாக நுரையீரலிலோ கல்லீரலிலோ அந்த மாதிரி அணுக்கள் தேங்கி விட்டால்
2.விஷத்தின் தன்மை பாய்ந்த பின் அந்தந்த உறுப்புகள் நலிகிறது.

அடுத்து நம் இரத்தங்களைப் பிரிக்கும் இருதயத்தில் உட்புகுந்து அங்கிருந்து பல உட்பிரிவுகளாகச் செல்கின்றது. இருதயத்தில் இயற்கையாகவே மூன்று வால்வுகள் இருக்கின்றது.

அதிலே இiந்த வேதனைப்படும் அணுக்கள் உருவாகினால்
1.மூன்றில் ஒன்று அடைபட்டாலும் இரண்டு எடுக்கும்
2.இரண்டில் அடைபட்டாலும் ஒன்று எடுக்கும்.
3.ஆனால் ஒன்றில் எடுக்கப்போனால் திணறல் அதிகமாகும்.
4.கடைசி அந்த ஒன்றிலும் அடைபட்டால் அவ்வளவு தான்.

விஞ்ஞான அறிவில் இதை எல்லாம் எத்தனையோ காட்டுகின்றார்கள். வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் நாம் எடுக்கும் எண்ணத்திற்குத் தக்கவாறு தான் இந்த உறுப்புகள் உருவாகின்றது, மற்ற மிருக இனங்களில் இத்தகைய நோய்கள் வருவதில்லை.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் (ஞானகுரு) என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு உணர்வுகளை எடுக்கப்படும் பொழுதும்
1.நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது…?
2.உறுப்புகளுக்குள் என்ன மாற்றங்கள் நடக்கின்றது…?
3.அணுக்களுக்குள் என்ன நடக்கின்றது…? என்று குருநாதர் ஒவ்வொன்றாகக் காட்டினார்.
4.அதை நேரடியாகப் பார்த்ததால் தான் உங்களிடம் சொல்கிறோம்.

சாமிக்கு ஈஸ்வரபட்டர் எல்லாச் சக்திகளும் கொடுத்தார். நாம் இதையெல்லாம் பார்க்க முடியுமா…? என்று எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நிலைகளை நீங்களே தடைப்படுத்திக் கொள்கின்றீர்கள் என்று தான் பொருள்.

யாம் உபதேசம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே
1.நாம் இதை எல்லாம் என்றைக்குப் பெறப் போகின்றோம்…? என்று
2.உங்கள் எண்ணத்தை இப்படிக் கொண்டு போனால்
3.நான் சொல்வது உங்களுக்குள் பதிவே ஆகாது – அந்த ஆற்றல்களை எடுக்கவும் முடியாது.

ஏனென்றால் நம் எண்ணத்தால் எப்படி நமக்கு நோய் வருகின்றதோ… அதே எண்ணத்தால் அந்த நோய் நமக்கு வராமலும் தடுக்க முடியும். ஆகவே தீமைகள் தாக்கும் பொழுது நீங்கள் அதிலிருந்து விடுபட வேண்டும்.

அதற்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் கொடுத்த சக்திகளை பல கோணங்களில் உங்களுக்கும் சொல்லி அந்த ஆற்றல்களை ஆழமாகப் பதிவாக்குகின்றோம். எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆவது தான் “சைவ சித்தாந்தத்தின் மூலம்…”

 

சூரியனின் காந்த சக்தி எதனைத் தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொண்டதோ அதனின் உணர்வின் இயக்கமாக இயங்குவது காயத்ரி. அன்று ஏழு ரிஷிகள் இந்த உணர்வின் இயக்கங்களைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

அதற்குப் பின் வந்த வேதாந்தத்தின் நிலைகள் கொண்டு வேதத்தின் தன்மைகள் தாவர இனத்தின் உணர்வுகள் இயங்குவதை ரிக் வேதம் சாம வேதம் யஜுர் வேதம் அதர்வண வேதம் என்று பிரித்தார்கள்.

அதிலே ஒரு தாவர இனம் மற்றொன்றைப் புசிக்கும் பொழுது இந்த உணர்வின் மாற்றங்கள் ஆகும்பொழுது அது அதர்வண வேதம்.

அதையே உயிரினம் மற்றொன்றைக் கொன்று பூசிக்குமே என்றால் உதாரணமாக மானின் உணர்வுக்குள் புலியின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது… புலி கொன்று அதைச் செயலற்றதாக ஆக்குகின்றது. இது அதர்வண வேதம்.

வியாசகருக்கு அன்று எழுத்தறிவு இல்லை என்றாலும் வெளிப்படுத்திய உணர்வுகள் அது விரிவாக இல்லை.

1.வேதங்கள் என்பது சுருதியின் இயக்கங்களைக் கண்டுணர்ந்து எழுத்து வடிவில் கொண்டு வந்து
2.மீண்டும் அந்த உணர்வின் ஆற்றலாக இயக்கச் செய்வது தான் அது.

இப்படிப் பிரித்துக் கொடுத்த உணர்வின் இயக்கங்கள் தான் வேதங்கள். ஆக “சைவ சித்தாந்தம்…!” தாவர இனங்கள் எவ்வாறு வளர்ந்தது…? என்றும் உணர்வின் ஆற்றலால் எவ்வாறு நிலை கொண்டது…? என்பதை அகஸ்தியன் அன்று காட்டினான்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவன் காட்டிய உணர்வை எல்லோரும் அறிந்திடும் அறிவானாலும்
1.தன்னுடன் இணைந்திடும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மகிழ்ந்திடும் உணர்ச்சியைக் கூட்டி
2.அந்த உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும் நிலைகள் தான் சைவ சித்தாந்தம்.
3.தீமைகள் வரும் பொழுது அதிலிருந்து அகன்றிடும் முறைகளைத் தெளிந்த நிலைகள் கொண்டு சைவ சித்தாந்தம் காட்டியது.

ஆனால் இதையெல்லாம் அன்றைய அரசர்கள் தான் ஆட்சி புரியும் காலத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு… இந்த சித்தாந்தத்தில் உண்மை நிலைகளை வேதங்களாக மாற்றப்பட்டு… சுருதியின் தன்மைகளை எழுத்தின் நாதங்களை மாற்றப்பட்டு மாற்றிய நிலைகளைத் தான் இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம்.

அன்றைய அரசர்கள் ராமன் என்றும் கண்ணன் என்றும் சிவன் என்றும் ஈசன் என்றும் காளி என்றும் மாரி என்றும் மாற்றி
1.அதைத் தனது குலதெய்வங்கள் என்று சித்தாந்தங்கள் பிரிக்கப்பட்டு
2.அரசன் தன்னுடைய ஆட்சிக்காக குலதெய்வங்களாக உருவாக்கப்பட்டு அதனின் நிலையில் தான் ஆட்சி பீடங்கள் வழி நடத்தி வந்தது.

அரசனுக்குக் கீழ் குடிமக்கள் அவன் காட்டியதைப் பதிவு செய்து அந்த உணர்வின் இயக்கங்கள் தான் மதங்களாக அதற்குப் பின் இனங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்படிப் பிரித்த நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் கொன்றும் ரசிக்கும் உணர்வின் தன்மை வந்து விட்டது

அதாவது…
1.அதர்வண வேதத்தின் அடிப்படையில் எது பரவப்பட்டதோ எவ்வாறெல்லாம் அதைப் பெற முடியும்…?
2.தீமைகளை எவ்வாறு உருவாக்க முடியும்…? என்ற அடிப்படையில்
3.நாட்டு மக்களை எல்லாம் அழிவின் வழிக்குக் கொண்டு சென்றது தான்.

வேதங்கள் உலகம் முழுவதற்கும் உண்டு. அது இல்லாத மதம் இல்லை. மதத்தால் உருவாக்கப்பட்ட உணர்வின் நாதங்களும் அந்த சுருதிகளும் எவ்வாறு நமக்குள் இயக்குகின்றதோ…? அதன் செயலாக்கங்கள் தான் இன்றும் வழி தொடர்ந்து கொண்டுள்ளது.

இதையெல்லாம் உங்களுக்குத் தொட்டுக் காட்டியுள்ளேன். “சிலவற்றைச் சொல்லக்கூடாது…” என்பதற்குத் தான் அதை மறைத்து வெளிப்படுத்துகின்றேன்.

ஆனால்
1.உண்மைகளை உணர்ந்திட வேண்டும்… தெளிந்த நிலையில் மெய் வழியினைப் பெற வேண்டும் என்று எவர் எண்ணுகின்றார்களோ
2.அவர்களுக்கு இது கிடைக்கப் பெற்று… இருளைப் போக்கிப் பொருள் காணும் சக்தியாக விளையும்.

காரணம்… அதர்வண வேதத்தைப் பற்றிய உண்மைகளைச் சுட்டிக் காட்டி விட்டால் மற்றொன்றை அழித்துச் சுகபோகத்தின் அடிப்படைக்கே கொண்டு செல்லும்.

அன்று அரசர்கள் செய்த நிலைகள் தான் “இன்றும் உலகில் போர் முறையாக நடக்கின்றது…!” அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
1.அகஸ்தியன் காட்டிய பேருண்மையின் நிலைகளை
2.அந்த மூலத்தின் இயக்கங்கள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை அறிந்து கொண்டால் “அதுவே போதுமானது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விண்ணிலே தோன்றிய ஒரு உயிரணு நம் பூமிக்குள் வந்தது என்றால் அது தாவர இனத்தில் விழுந்து புழுவாக உடல் பெறுகிறது. அப்படி உடலாகத் தோன்றியவுடனே முதலில் அதற்குக் கண் இருக்காது. கண் இல்லாத புழுவாகத்தான் இருக்கும்.

கண் இல்லை என்கிற பொழுது “பார்க்க வேண்டும்…!” என்ற உணர்வுகள் புதிதாகத் தோன்றித் தான் அதற்குக் கண் வர வேண்டும். ஆனால் இப்படிக் கண்ணில்லாத புழுவாகப் பிறந்தாலும்
1.கண்ணுள்ள மற்ற உயிரினங்கள் அதை உணவாகக் கொத்தித் தின்றால்
2.இந்த உணர்வின் தன்மை (கண்களின்) கலந்து
2.கண்ணுள்ள உயிரினமாக அது மிகவும் சீக்கிரம் வந்துவிடும்.

ஆனால் ஆரம்பத்திலே இந்த உயிரணுக்கள் வளர்ச்சி இல்லாத பொழுது “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…!” என்ற உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து உடலில் எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி ஒளியின் கதிராக வருகின்றது,

இப்படிப்பட்ட உணர்வுகளை ஒளியின் கதிரைப் பல சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தான்…” கண்ணாக உருவாகின்றது. (ஆரம்பத்தில்)

ஆனால்
1.மனிதனின் மலத்தில் வெளிப்படும் உணர்வும் மற்ற உணர்வுகளும் சேர்ந்து உருவாகும் கொசுவிற்குக் கண் வந்துவிடுகின்றது.
2.சாக்கடையில் உருவாகும் புழுக்களுக்குக் கண் இருப்பதில்லை.
3.ஆனால் ஒரு குருவி அதைக் கொத்தித் தின்றால் அதற்குக் கண் வந்துவிடும்.
4.ஒரு எறும்பு அதைக் கடித்தது என்றால் இறந்த பின் எறும்பின் உடலுக்குள் அந்த உயிர் வந்து அதற்குக் கண் வந்துவிடும். மிகவும் சீக்கிரம் கண் வந்துவிடும்.

இறந்த மனித உடலைப் புதைத்து விட்டால் அதிலிருந்து பல விதமான குணங்களுக்கொப்ப பல விதமான அணுக்களும் வளரும். அது வெளியில் வந்த பிற்பாடு என்ன செய்கிறது…? அது கண் உள்ளதாகத் தான் உருவாகின்றது.

ஆனால் நம் மலத்திலேயே கண் இல்லாத புழுவைப் பார்க்கலாம். வெளியில் வந்த அந்தப் புழுவை மற்ற பட்சிகள் கொத்திச் சாப்பிட்டால் அதனுடைய உணர்வை எடுத்துக் கண்ணுள்ளதாக அடுத்துப் பிறக்கும். இப்பொழுது இருக்கக்கூடிய மாற்றங்கள் இது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்பதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

இன்று இந்தப் பூமி முழுவதும் மனிதனாக உருவாக்கிய பின்
1.மனிதனுக்குள் உருவாக்கிய உணர்வின் தன்மைகள் அனைத்தையும்
2.கருவாக உருவாகும் அணுவின் தன்மையாக
3.இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.
(ஒரு சேமிப்புக் கிடங்கு போல்)

மனிதன் வேதனைப்படும் உணர்வுகளைப் பரப்பி வைத்திருந்தால் இன்னொரு மனிதன் வேதனைப்பட்டால் இந்த வேதனை அணுக்களை அங்கே இரையாக்கி சீக்கிரம் அந்த உணர்வின் தன்மை அவனையும் வேதனைப்பட வைக்கும்.

அதே போல மனிதனுக்குள் எத்தகைய நோய்கள் உருவானதோ இவனின்று வெளிப்பட்டது காற்று மண்டலத்தில் இந்த விஷத் தன்மை கொண்டதாகத் தான் இருக்கும். அந்த உணர்வுகளை இன்னொரு மனிதன் நுகர்ந்தான் என்றால் அவனையும் நோயாக்கும்,

1.இதைப் போன்ற நிலைகளை நீங்கள் அனைவரும் தெளிந்து கொள்ளுங்கள்..
2.தெரிந்து கொள்ளுங்கள்.

இதே காற்றிலே மெய் ஞானிகள் தீமையை நீக்கிய உணர்வுகளும் உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற உணர்வுகளும் அலைகளாகப் பரவி உள்ளது. சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துள்ளது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) அதைப் பதிவு செய்து… எப்படி அதைக் கவர வேண்டும்…? என்பதையும் உணர்த்தினார். அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை மக்களை எப்படிப் பெறச் செய்ய வேண்டும்…? என்பதையும் காட்டினார்.

அவர் காட்டிய அந்த அருள் வழிப்படித்தான் உங்களுக்குள்ளும் உணர்த்துகின்றோம். அந்த மெய் ஞானியான… “அகஸ்தியனின் ஸ்டேசனைப் பதிவாக்குகின்றோம்…!”
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் என்று அடிக்கடி எடுத்துப் பழகிக் கொண்டாலே போதுமானது,

உங்களுக்குள் அது வளர்ச்சியாகும் பொழுது அந்த ஞானிகள் எதன் வழியில் தீமைகளை அகற்றினார்களோ… மகிழ்ந்து எப்படி வாழ்ந்தார்களோ… அதை நீங்களும் பெற முடியும்.

கண் இல்லாத புழு கண் உள்ள உயிரினத்தின் உணர்வுகளை நுகர்ந்து கண் உள்ள உயிரினமாக மாறுவது போல்
1.நாமும் மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து
2.மெய் ஞானியாக நிச்சயம் ஆக முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்

 

தியானம் என்றாலே சாமியாராகப் போய்விடுவோம்… சாமி கும்பிடுவோர் நாங்கள் எப்படித் தியானம் செய்வது…? என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள்.

தியானம் என்பதே உயர்ந்த எண்ணங்களைப் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுவது தான்.

நம்மிடம் யாராவது சண்டையிடுகிறார்கள் அல்லது திட்டுகின்றார்கள்… என்றால்
1.அப்பொழுது என்ன நினைக்கின்றோம்…?
2.என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்று எண்ணுவது இது தியானம் தான்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் இது தியானம்தான்.

காரணம்…
1.நாம் எண்ணியது நமக்குள் உடலாகின்றது
2.எண்ணியதை உயிர் இயக்குகின்றது
3.எண்ணியதை உடலாக்குகின்றது உயிர்.
4.எண்ணியதை உடலுக்குள் விளைய வைக்கின்றது
5.விளைந்ததைத் தான் உடலை விட்டுப் பிரியும் சமயம் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது
6.நமக்குள் இருக்கும் எண்ணங்களை… உயிரே அதைப் படைக்கின்றது
7.நம்மை ஆளும் ஆண்டவனும் உயிரே
8.ஆண்டவனாக இருப்பதும் உயிரே
9.எண்ணியதை இயக்கி இறை ஆக்குவதும் இறைவன் ஆக்குவதும் உயிரே
10.எண்ணியதை ஓ என்று ஜீவன் ஆக்குவதும் உயிரே
11.எண்ணி உடலுக்குள் பதிவு செய்தாலும்… அது அனைத்திற்கும் குருவாக இருப்பதும் உயிரே.

நாம் எந்தெந்த உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அதைத் திரும்ப எண்ணி அதற்குக் குருவாக நின்று நல்வழி காட்டுவதும் உயிரே.

1.ஞானிகளின் உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும் பொழுது
2.மீண்டும் அதை எண்ணுவீர்கள் என்றால் குருவாக நின்று உங்களுக்கு அது நல்வழி காட்டும்.

தீமை செய்த உணர்வுகளை எண்ணினால் அது “ஓ” என்று ஜீவனாக்கி உடலுக்குள் “ம்” என்று பதிவு செய்தால்… திரும்ப எண்ணினால் தீமை செய்யும் எண்ணமாகக் குருவாக நின்று தீமையை விளைவிக்கும் நிலைக்கே அது உங்களை அழைத்துச் செல்கின்றது.

நோய் என்ற நிலைகள் பதிவானால் அந்த நோயைப் பற்றிப் பேசினாலும் அந்த நோயே ஜீவனாகி அதுவே குருவாகி நோயாக உடலுக்குள் உருவாக்கி விடும்.

ஆனால் நோயை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதனை உங்கள் உயிர் ஜீவனாக்கி இந்த உணர்வின் தன்மை நோயற்றவனாக ஆக்கி
2.ஞானத்தின் தன்மை கொண்டு பொருளறிந்து செயல்படும் திறனாக நமக்குள் அதை வளர்க்க
3.அந்த உணர்வின் எண்ணம் குருவாக நின்று இந்த வாழ்க்கையை தீமை அற்றவனாக்கி
4.தீமைகளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் அது விளையும்.
5.அப்படி விளையச் செய்யும் சக்தி இதைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் பெற முடியும்.

உங்களுக்குள் ஊழ்வினையாக அந்த மெய் ஞானிகள் உணர்வுகள் ஆழமாகப் பதிய வேண்டும். உங்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும். நீங்கள் நன்மை செய்த நிலைகள் அந்தத் தெய்வ குணங்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.

மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்திட வேண்டும்… உங்கள் மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக மலர்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை யாம் உபதேசித்தது.

கேட்டுணர்ந்தோர் அனைவருக்கும் இது பதிவாகி இதன் வழி கொண்டு உங்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும். அந்தச் சிறந்த எண்ணங்கள் உங்களுக்குள் பதிவாகி ஞானத்தின் வழித்தொடராக வளர வேண்டும்.

1.எதிர்காலத்தில் நீங்கள் மெய் ஞானிகளாக வருவீர்கள்.
2.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து மக்களை மீட்டிடும் சக்தியாக விளைந்து
3.உங்கள் மூச்சும் பேச்சும் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனுக்கு மனிதன் கொன்று ரசிக்க வேண்டும் என்ற சிந்தனையை எடுத்துப் பல கருவிகளை உருவாக்குகின்றார்கள்.
1.கொல்லும் பொழுது கொல்பவனோ அதை ரசிக்கின்றான்.
2.கொல்லப்பட்டவனோ துடிக்கின்றான்… பதறுகின்றான்.

இந்த இரண்டு உணர்வும் இங்கே உருவாக்குகின்றது.

பதட்டமடைவனின் உடலில் பதட்டத்தை உருவாக்கும் அணுக்களாக உருவாகின்றது, அவன் வெளி விடும் மூச்சலைகள் பதட்டமான உணர்வலைகளாகக் காற்றிலே பரவுகிறது.

அதே சமயத்தில் கொல்லும் உணர்வுகளை நுகரப்படுவனின் உடலில் மற்றவர்களைக் கொன்று போட்டு மனதில் மகிழ்ச்சி பெறும் நிலையாகி அத்தகைய மூச்சலைகள் காற்றிலே பரவுகிறது.

1.இத்தகைய அலைகள் தான் இன்று காற்று மண்டலத்தில் அதிகமாகப் படர்ந்துள்ளது.
2.இந்த உணர்வுகளை நுகரும் மற்ற மனிதனுக்குள்ளும் அத்தகைய அணுக்கள் விளையத் தொடங்குகின்றது.

ஏனென்றால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டுத் தன் இரையைத் தேடி நுகரும் பொழுது அதே காரியத்தையே செய்யும். நாளடைவில் இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாகி விட்டது.

1.இப்படிப்பட்ட நஞ்சின் தன்மைகள் உருவாகாதபடி தடுப்பதற்குத்தான்
2.அன்று விநாயகர் சதுர்த்தியை ஏற்படுத்தினார்கள் ஞானிகள்.
3.அதாவது “தீமையான உணர்வுகளை வளராது தடுக்கும் நாள்…!” என்று வைத்தார்கள்,

மனிதனுக்கு மனிதன் நாம் பேசுகின்றோம். பேசித் தொடர்பு கொள்ளும் பொழுது உதாரணமாக நான் வேதனைப்பட்டால் அதைக் கேட்டு நீங்களும் வேதனை உனர்வுகளை எடுத்துக் கொள்கின்றீர்கள்.

ஏனென்றால் வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு அதே உணர்ச்சியாக இயக்கப்பட்டு நமக்குள் வந்துவிடுகின்றது.

மனிதனுக்கு மனிதன் யாரும் பிரிவில்லாதபடி அதை வளர்த்து வைத்திருக்கின்றோம். இப்படி இரண்டு பேர் பேசிய உணர்வையும் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கிறது.

இப்பொழுது நல்ல மனிதனாக இருக்கின்றான் என்று ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்கிறீர்கள். அவரிடம் நெருங்கிப் பழகுகின்றீர்கள் அடுத்து அந்த மனிதனுக்கு நோயாகிவிட்டது…! என்று சொல்கிறார்கள்… நீங்கள் அதைக் கேள்விப்படுகின்றீர்கள்.

கேள்விப்பட்ட உடனே
1.அந்த நல்ல மனிதனின் உணர்வு நமக்குள் இருந்தாலும்
2.அடடா… நல்ல மனிதனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று நாமும் வேதனையைச் சுவாசிக்கின்றோம்.
3.அவர் மேல் உள்ள பாசத்தால் நாம் எண்ணும் பொழுது
4.அவர் உடலில் உருவான அதே நோயின் உணர்வுகளை நாமும் எண்ணி இழுத்துக் கவர்ந்து விடுகின்றோம்.
5.அதே நோயின் தன்மை இங்கே நமக்குள்ளும் உருவாகின்றது.
6.நாம் தவறு செய்யவில்லை… ஆனால் நமக்கும் நோயாகின்றது.

சந்தர்ப்பவசத்தில் அவர் இறந்தால் அவரின் பற்று எவ்வளவு நமக்கு இருந்ததோ அந்த உடலை விட்டு இறந்த ஆன்மா நம் எண்னத்தின் வலு கொண்டு நம் உடலுக்குள் வந்துவிடும்.

பார்க்கலாம்… நீங்கள்…! நேற்று வரையிலும் நன்றாக இருந்தார்… திடீரென்று எபப்டியோ மனமாற்றம் ஆனார்..! என்று பார்க்கின்றோம். இது எல்லாம்
1.மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட உணர்வுகள்
2.வரிசையாக இப்படித்தான் இயக்குகிறது…! நாம் தவறு செய்யவில்லை…!

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாவதை நாம் எப்படித் தடுக்க வேண்டும்…? தடுக்க ஒரு சக்தி வேண்டுமல்லவா…!

நண்பரோ உறவினரோ யாராக இருந்தாலும் வேதனைப்படுகின்றார்கள் அல்லது நோயால் வாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டால்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று
2.நாம் இந்த உணர்வைப் பல முறை எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நல்ல நிலை பெற வேண்டும்… அவர் அருள் ஒளி பெற வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணி நமக்குள் மாற்றிவிட வேண்டும்.

இது தான் சதுர்த்தி என்பது. தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக உருவாகாமல் தடுப்பது தான்.. “விநாயகர் சதுர்த்தி…!”

இப்படி ஒவ்வொரு மனிதனும் எண்ணி எடுத்தால் இந்தக் காற்று மண்டலமே தூய்மையாகின்றது. தீய வினைகள் நமக்குள் சேர்வதில்லை. தீமை செய்யும் உணர்வுகள் அனைத்தும் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு இந்தப் பரமாத்மாவும் தூய்மையாகின்றது.

தீமை செய்யும் உணர்வுகளை இங்கே உள்ள மனிதர்கள் யாரும் நுகரவில்லை என்கிற பொழுது பிடிப்பில்லாத அந்த அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கடலுக்குள் அமிழ்த்தச் செய்கின்றது.

அதை உணர்த்தும் விதமாகத் தான் விநாயகரைக் களிமண்ணில் செய்து அதைக் கடலிக் கரைக்கச் சொன்னது. தீய வினைகளை நமக்குள் சேர்க்காமல் எல்லோரும் சேர்ந்து அந்தக் கடலில் கரைக்க வேண்டும்.

ஞானிகள் சொன்னதில் எதுவும் தவறில்லை… அந்தக் கருத்தினை நாம் அறிந்து வழி நடக்க வேண்டும். அதற்காகத்தான் சொல்கிறோம் (ஞானகுரு).

நாம் தெய்வமாக ஆவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்

 

முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடல் பெறும் பொழுது
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதை ஜீவனாக்கும் திறன் பெற்றது.
2.ஒவ்வொரு பொருளையும் தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றது.
3.அதனால் தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா என்று சொல்வது.

மனிதனின் ஆறாவது அறிவு சரஹணபவா…! நாம் சாப்பிடும் ஆகாரத்தில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு ஆறாவது அறிவாக நம் உடலில் அந்த மணம் வருகின்றது.

இந்த ஆறாவது அறிவின் மணம் கொண்டு சரஹணபவா குகா கந்தா பல பொருள்களை எண்ணினாலும் கடம்பா அதை உருவாக்கி கார்த்திகேயா என்று சொல்லும் பொழுது தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றவன்.

அருள் ஞானிகள் உணர்வை எண்ணி அதை நமக்குள் ஜீவன் செய்யப்படும் பொழுது ஓ… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் ஜீவனாக்கி அதை ம்… என்று நம் உடலாக ஆக்கும்போது அது ஓம் நமச்சிவாய…!
1.எல்லாவற்றையும் அடக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் கணங்களுக்கு அதிபதியாக்கி
2.நமக்குள் சிறுமை ஊட்டும் உணர்வின் தன்மையை அடிமைப்படுத்தி மெய் ஞானிகள் உணர்வை நமக்குள் அதிபதியாக்கி
3.இந்த வாழ்க்கையில் தீமை அகற்றிடும் உணர்வாக விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொன்னார்கள் ஞானிகள்.

குடும்பத்தில் அறியாது சலசலப்பு சஞ்சலமும் வெறுப்பு வேதனைகள் வந்தாலும் இதை அகற்றிட ஆலயத்தை அருள் ஞானிகள் காட்டினார்கள். அங்கே விண்ணை நோக்கி ஏங்கிவிட்டுக் கோவிலுக்குள் சென்ற பின் தீப ஆராதனை காட்டப்படும் பொழுது பொருள்கள் தெரிகின்றது.

பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற வேண்டும் இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும். இந்த உண்மையை உணர்த்திய அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் மலரின் மணம் பெற வேண்டும். இவை அனைத்தும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னைப் பார்ப்போருக்கு அந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அங்கே வைத்திருக்கும் கனியைப் பார்க்கும் பொழுது கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என் சொல்லைக் கேட்போர் வாழ்விலே இனிமை பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

1.ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இந்தத் தெய்வ குணம் பெற வேண்டும்
2.அவர் குடும்பம் நலம் பெற வேண்டும்… அந்தக் குடும்பங்கள் அனைத்தும் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழில் நடத்தினால் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். தெய்வ குணங்களைப் பெற வேண்டும் வாடிக்கையாளர் குடும்பங்களில் எல்லா நலங்களும் பெற வேண்டும். எங்கள் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும். என்னைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி எண்ணி… நம் உயிரான ஈசனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை இந்த ஆலயத்தில் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து நடக்கும்படி தான் அன்று ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

நம்மையறியாது நமக்குள் வரும் வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் என்ற தீமையான உணர்வுகள் அழுக்காக உடலுக்குள் சென்று நல்ல குணங்களை மாசுபடச் செய்யும் நிலையில் இருந்து நம்மைத் தூய்மைப்படுத்த விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள்.

நற்குணங்களின் தன்மையை… நறுமணத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து நம்மைப் பிறர் பார்க்கும் பொழுது இந்த நறுமணங்கள் அங்கே வர வேண்டும். என் சொல்லைக் கேட்கும் பொழுது அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற இந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும் இடம் தான் ஆலயம்.

அபிஷேகம் ஆராதனைகளை இன்று செய்கிறோம். செய்துவிட்டு நமக்குள் கொதிப்பையும் வேதனையையும் தான் எண்ணுகிறோம்.

நல்லதைச் செய்தேன் ஆனால் தீமையே செய்கின்றான்…! என் குழந்தை நன்றாக வர வேண்டும் என்று விரும்பி உன்னைத்தான் வணங்கினேன். ஆனால் அவன் தவறு செய்கின்றானே எதிர்த்து பேசுகின்றானே…! என்று வேதனைப்பட்டு
1.அந்தத் தெய்வம் தான் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்.
2.ஆனால் அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்தால் அந்த எண்ணம்
3.நம் செயலின் தன்மை அந்தத் தெய்வத்தின் தன்மையாகச் சொல்லால் இயக்கும்.
4.நாம் எண்ணிய தெய்வ குணத்தின் உணர்வுகள் நமக்குள் அந்தச் சக்தியாக மலரும்.
5.நாம் அந்தத் தெய்வமாக ஆவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தார்களே தவிர
6.அந்தத் தெய்வம் செய்யும் என்று யாரும் சொல்லவில்லை.

ஆனால் தெய்வம் செய்யும் என்ற நம்பிக்கையில் தான் செல்கின்றோமே தவிர
1.அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்தால்
2.அந்தத் தெய்வ சக்தி நமக்குள் இருந்து நம் சொல்லையும் செயலையும் அது இயக்கும் என்ற நிலை காலத்தால் மறைந்து விட்டது.

நம்மை நாம் அறியாமலே நமக்கு நாமே நல்ல குணங்களுக்கு அடிக்கடி தீங்கு விளைவிக்கின்றோம்.

மனிதனை உருவாக்கிய… அனைத்தையும் அறிந்திடும் சக்தியாக இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனுக்கு வேதனையும் சோர்வையும் எண்ணி எண்ணி
1.அந்த ஈசனுக்குச் சரியான நிலைகள் பணிவில்லாதபடி அவனுக்குண்டான சேவைகள் செய்யாதபடி
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு அடிக்கடி வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் என்ற
3.தீமையின் உணர்வின் சக்தியைத் தான் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஈசனை வணங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஞானிகள் காட்டிய விநாயகத் தத்துவப் பிரகாரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை வினைக்கு நாயகனாக இந்த உடலுக்குள் ஆக்கிட வேண்டும்.

அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி நமக்குள் தீமை விளைய வைக்கும் அந்த உணர்வினை அடக்கி ஞானிகள் உணர்வின் தன்மையை “ஒளியின் சுடராக…” நாம் உருவாக்க வேண்டும்.

வைரம் எப்படி நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை… நஞ்சினை மகரிஷிகள் சக்தி கொண்டு ஒடுக்கினால்
2.நமக்குள் அறிந்திடும் ஆற்றலும்… உணர்வுகள் ஒளியாக மாறும் நிலையும் வருகின்றது.

இதைத்தான் ஞானிகள் நமக்கு ஆலயத்தில் தெளிவாக வழிகாட்டி உள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது உயிர் ஒளியின் தன்மை பெற்ற நட்சத்திரங்களின் சக்தி கொண்டது தான். கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆண்பால். ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால்.

இது இரண்டுமே மோதலில் வரப்போகும் போது பெண்பால் என்ற நிலைகள் அந்த உயிருடன் மோதிய துடிப்பின் தன்மை ஏற்பட்டால் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் ஆண்பாலாகத் தான் உருவாகும்.

அதிலே ரேவதி நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாகி விட்டால் பெண்பாலின் உணர்வுகள்… அதாவது ஒன்றைக் கவர்ந்து அது வளர்க்கும் தன்மை பெறும் கருவாக வருகிறது.

ஆகையால் தான் இந்த உயிரின் துடிப்பின் நிலையை கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர். ரேவதி நட்சத்திரம் என்று கொண்டவர் என்று ஒரு உயிரினுடைய நிலைகளுக்குப் பெயர் வைத்தாலும் இங்கே ரேவதி நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக வளரப்படும் போது பெண்பாலுக்கு அந்த மற்றதைக் கவரும் சக்தி வருகிறது.

ஆண்பால் பெண்பால் என்ற நிலைகள் பெற்றாலும் இரண்டு எண்ணங்கள் கலக்கப்படும் போது தான் ஒன்றைத் தனக்குள் கலந்து உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

ஆண் செடி பெண் செடிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காற்றிலே இதன் அலைகள் படர்ந்தாலும்
1.ஆண் செடியின் உணர்வுகள் பெண் செடியின் மீது பட்ட பின் அந்த உணர்வுகள் கருவுற்று
2.தன் இனத்தை உருவாக்கும் சக்தி பெறுகிறது… ராசி ஜாஸ்தி வரும்.
3.ஆண் செடிகள் இல்லை என்றால் பெண்பால் செடியின் ராசி குறைவாகவே இருக்கும்.
4.ஆண் செடியின் தன்மை கம்மியாகி விட்டாலே போதும்… பயிர் இனங்கள் வளர்ச்சி குன்றிவிடும்.

இதைப் போன்று தான் இந்த மனிதன் வாழ்க்கையில் எடுத்துக் கொண்டாலும் கணவன் மனைவி என்ற நிலையில் வாழ்கிறோம். சில வீடுகளில் பார்த்தால் என்ன செய்வார்கள்…?

மனைவி தன்னுடைய கணவனை “எப்போது பார்த்தாலும் அவர் இப்படித் தான் செய்வார்…!” என்று குறையாகவே நினைத்து அதையே சொல்லிக் கொண்டிருப்பார்.

அதே போல் கணவனும் தன் மனைவியை “நான் எதைச் சொன்னாலும் மனைவி கேட்க மாட்டேன் என்கின்றது…! என்று குறையாகச் சொல்லிக் கொண்டிருப்பார்.

இப்படி இந்த வெறுக்கும் உணர்வின் அணுக்கள் இருவருக்குள்ளும் முனித் தன்மையாக அடைகின்றது.
1.முனி என்றால் ஒன்றைத் தனக்குள் எடுத்து மற்றொன்றைத் தாக்கும் நிலைகள்.
2.ஆகவே இரண்டு பக்கமும் என்ன செய்யும்…?
3.இந்தப் பகைமை உணர்வுகள் தான் இருக்கும்.
4.இருவர் உடலிலும் இரண்டறக் கலந்து நல்ல குணங்களைப் பேணிக் காக்கும் சக்தியும் இழக்கச் செய்துவிடும்.

இந்த முனித் தன்மை என்பது விஷத்தின் தன்மை கொண்டது. அது ஒன்றை ஊடுருவிக் கொல்லும் சக்தி பெற்றது. தனித் தன்மையாக அந்த ஊடுருவும் தன்மை பெற்றாலும் பெண்பால் என்ற நிலைகள் இணைந்து விட்டால் ஒடுங்கி விடும்.

விஷத்தின் தன்மையை ஒடுக்கி உணர்வின் துடிப்பின் நிலையாக அணுவின் சக்தியாகப் பெறக்கூடிய தகுதி பெறுகிறது. இதை எல்லாம் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.

கணவன் மனைவி இரண்டு பேரும் அன்பாகப் பேசி நல்ல நிலை பெற வேண்டும் என்று இரண்டு பேரும் ஏகோபித்து எண்ணினால் அந்த எண்ணங்கள் கை கூடி காரியங்கள் எல்லாம் சித்தியாகும்.

ஆனால் சிலர் ஆலோசனை சொல்கிறேன் என்ற நிலையில் “உன் கணவன் நன்றாக இருக்கும் போது நீ செய்தால் பரவாயில்லை…! அப்படி இல்லாமல் இருக்கும் பொழுது நீ எதற்குப் போய் உதவி செய்து கொண்டே இருக்கின்றாய்…? என்று மனைவியிடம் சொன்னால் போதும். இது ஊடே கலந்து விடும்.

அடுத்து நீங்கள் எந்த நிலைகள் செய்தாலும் கூட இந்தக் குறை உள்ள உணர்வுகளே கணவன் மனைவிக்குள் அதிகமாக வளரும். சில குடும்பத்தில் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாகச் சொல்லைப் பயன்படுத்தல் வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பெண்பால் என்ற உணர்வுகள் எதிலே கலந்ததோ அந்த உணர்வின் கலவை கொண்டு உணர்வின் அணுத் தன்மை பெறும் தகுதி பெற்று விடுகின்றது. ஆகவே ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இதைப் போன்ற நிலையில் இந்த வாழ்க்கையில் நாம் அறிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் ஏராளம் உண்டு. ஏனென்றால்
1.பல கோடி உணர்வுகள்
2.பல குடும்பங்களில் பல நிலைகள்
3.பல வித்தியாசமான நிலைகள் உண்டு.

கணவன் நல்லவராக இருக்கலாம். அதே சமயத்தில் மனைவி தன் அறியாமையினால் வேதனைப்படும் செயல்களைச் செய்து விட்டால் வேதனையும் வெறுப்பையும் கணவனுக்குள் உருவாக்குகின்றது

அந்த வேதனை என்ற விஷத் தன்மை கூடப்படும் போது மனைவியை நினைக்கும் போதெல்லாம் வெறுக்கும் தன்மையும் வேதனைப்படும் தன்மையும் கணவனுக்கு வருகின்றது.
1.அப்பறம் மனைவி தன் நிலைகளில் நல்லதைச் சொன்னாலும்
2.கணவனுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு வருவதில்லை.

அதே சமயத்தில் மனைவிக்கும் இந்த விஷத்தின் தன்மை கூடி கணவனில் விளைந்த வெறுப்பின் உணர்வு இங்கே சாடிய பின் இவர் செய்யும் அந்தத் தவறின் உணர்வே அங்கே விளைகின்றது.

இருவரும் இந்த உணர்வின் தன்மைகளை வளர்க்கப்படும் போது
1.இருவருக்குமே நோய் வருகின்றது.
2.இரண்டு பேருக்குமே கை கால் குடைச்சல் மேல் வலி தலை வலி எல்லாம் வரும்.

வேதனையை வளர்த்துக் கொண்ட நிலையில் இருவருமே ஒன்று சேர்த்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சரி…! இதை வாங்கலாம்…! என்று எண்ணி ஒரு பொருளை வாங்குவார்கள்,
1.ஆனால் வாங்கியபின் இரண்டு பேருக்கும் அந்த வேதனையாகிப் பகைமை தான் வரும்
2.பொருளைப் பாதுகாக்கும் சக்தியும் இழந்து விடுகின்றது.
3.இது எல்லாம் இந்த இயற்கையின் நியதிகளில் உணர்வுகளின் இயக்கம் தான் இது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் கணவனும் மனைவியும் ஒன்றி வாழும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தியை ஒருவருக்கொருவர் பாய்ச்சி இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றாகி ஒளியின் உணர்வாக மாற்றுங்கள்…!

கணவன் மனைவி ஒன்றி வாழ்ந்தால் அதுவே சொர்க்கலோகமாகின்றது…!

ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு விண்ணுலகம் சென்றானோ அந்த வழியில் நாமும் செல்ல வேண்டும்

 

அன்னை தந்தையர் அருளாசி பெற வேண்டும் என்று அனு தினமும் நாம் எண்ணி அவர்களிடம் அதைப் பெற வேண்டும்.

1.பேரண்டமும் பேருலகமும் உன் அன்னை தந்தையர் தான் என்ற உணர்வு கொண்டு
2.இந்த இணைப்பின் பிணைப்பின் நிலைகள் வரப்படும் பொழுது தான் முழுமை அடைய முடியும் என்று
3.அதை முதலில் வினையாகச் சேர்க்கச் சொல்லி… நமக்குள் ஊழ்வினையாக
4.”அந்த வினைக்கு நாயகனாக நீ ஆக வேண்டும்…” என்று நாரதன் ஞானக் கனியைக் கொடுக்கின்றான் என்று ஞானிகள் அன்று காட்டினார்கள்.

நம் அன்னை தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் விநாயகரைப் பார்க்கப்படும் பொழுது எவ்வாறு எண்ண வேண்டும்…? என்ற நிலையையும் அன்று ஞானிகள் உணர்த்தி உள்ளார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற என் அன்னை தந்தையரின் உயிரான்மாக்கள் எங்கள் குலதெய்மான உயிரான்மாக்கள்
1.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் வட்டத்திலே இணைந்து
2.என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை அங்கே உந்தி
3.இன்னோரு உடல் பெறும் நிலைகளை மாற்றிப் பிறவாநிலை பெறச் செய்வதற்கு
4.அந்த இணைப்பின் தன்மையைக் கொண்டு வரச் சொன்னார்கள்.

இதை உணர்த்திய ஞானி விண்ணிலே இருக்கின்றான். அவன் உணர்வை நமக்குள் கூட்டி இந்த உணர்வினை நினைவுபடுத்தி இணைத்துக் கொண்டபின் இந்த உயிரான்மா பிறவா நிலை பெற வேண்டும் என்று முதலில் செயல்படுத்தும் முறையைச் சொன்னான்.
1.ஆகவே அந்த வினையை வினைக்கு நாயகனாக ஆக்கி அதனின் உணர்வு கொண்டு
2.”ஒளியின் சரீரமாக வினைக்கு நாயகனாக நீ ஆகு…” என்ற நிலையை உணர்த்தினார்கள்.

உடலை விட்டுச் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும். என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும். குழந்தையாக வாழும் காலத்தில் எங்களுக்கு வழி காட்டியது போன்று
1.பொருளறிந்து செயல்படும் உணர்வின் சுடராக எங்கள் உணர்வுக்குள் நின்று
2.”எங்களுக்கு என்றென்றும் வழி காட்ட வேண்டும்…” என்று இப்படித்தான்… இந்த வினையை வினைக்கு நாயகனாக்க வேண்டும்.

மனித வாழ்வில் விண் சென்ற மெய் ஞானி எங்கே அடைந்தானோ எங்கள் அன்னை தந்தையர் அந்த எல்லையை முதலில் அடைய வேண்டும் என்று காட்டி… “அதற்குப் பின் தான் நாம் அங்கே செல்ல முடியும்…” என்பதையும் உணர்த்தினார்கள்.

அன்னை தந்தையர் முதலிலே மனிதனாக ஆனார்கள். அடுத்து நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். மனிதனான பின்
1.மனித நிலையிலிருந்து உணர்வினை ஒளியாக மாற்றித் தான் முதல் மனிதன் அகஸ்தியன் விண் சென்றான்.
2.அணுவின் ஆற்றலை அறிந்தான்… உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான்.

அதே வினையைத் தன் அன்னை தந்தையருக்கு அது வினைக்கு நாயகனாக ஆக்க வேண்டும் என்று அவர்களையும் இணைத்தே விண் சென்றான்… ஒருக்கிணைந்து செயல்படும் தன்மையை அங்கே உருவாக்கினான்.

விநாயகரைக் காட்டப்படும் பொழுது அருகிலே அரச மரத்தையும் வைத்திருப்பார்கள். அந்த அரச மரம் விண்வெளியில் தன்னிச்சையாகத் தன் சத்தை எடுத்து வளர்கின்றது. அதே போல்…
1.மனிதன் நீ அரசைப் போல் என்றும் நிலையான நிலையில் நீ ஒங்கி வளர வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் ஒளி வட்டத்தில் நீ இணைய வேண்டும் என்று உணர்த்துவதற்கு
3.சூட்சும நிலையில் நடப்பதை உருவத்தைக் காட்டிச் சொல்லின் உணர்வு கொண்டு வினையாகப் பதிவு செய்து
4.வினைக்கு நாயகனாகச் சுவாசித்து அதை உடலாக உனக்குள் சேர்த்துக் கொள் என்று காட்டினான்.

ஓ…ம் நமச்சிவாய சிவாய நம ஓ…ம் என்று மனிதன் எண்ணிய உணர்வுகள் இங்கே இயங்கினாலும் அதைச் சிவமாக்கி சிவத்தின் தன்மை ஒளியின் சுடராக என்றும் நிலையாக ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

அன்னை தந்தையரை நினைத்து நீ இதைச் செயல்படுத்த வேண்டும் என்று காட்டுகின்றார்கள். கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

1.அன்னை தந்தையர் அங்கே ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணினால் தான் அது சரியாக இருக்கும்.
2.அவர்கள் முன் செல்கிறார்கள்… அவர்கள் வழியில் அடுத்து நாமும் ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு வேப்ப மரம் இருக்கின்றதென்றால் அது கசப்பின் உணர்வு கொண்டது. ஆனால் ரோஜாப்பூவோ துவர்ப்பு உணர்வு கொண்டு நறுமணங்களைக் கூட்டும் உணர்வு கொண்டது. ஆனால் இதைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அதனதன் அலைகளாகப் படரச் செய்கின்றது.

ஏனென்றால் சூரியனிலிருந்து வெப்பமும் காந்தமும் விஷம் என்ற மூன்று நிலைகள் தான் வருகிறது. காரணம் பிற மண்டலங்களில் இருந்து கவர்வதை நட்சத்திரங்கள் கவர்ந்து அந்த விஷத் தன்மையைத் தூசிகளாக மாற்றுகின்றது.

அப்படித் தூசிகளாக மாறி வருவதை இந்தச் சூரியன் தனக்குள் இழுக்கும் போது தன் உணர்வில் பெற்றதைப் பாய்ச்சுகிறது.

ஒரு நூலாம்படைப் பூச்சி நூலாம்படையால் தன் கூட்டினைக் கட்டித் தனக்குள் எவ்வாறு இருக்கின்றதோ இதைப் போலத் தான் பிற மண்டலங்களின் சக்தியை நட்சத்திரங்கள் கவர்ந்தாலும் இதனில் உருவான அந்த உணர்வின் மலம் தான் அது – பால்வெளி மண்டலம்.

பால்வெளி மண்டலமாக மாற்றினாலும் அதிலே சிக்குண்டு வருவதை நட்சத்திரங்கள் அது சுழலும் போது தூசியாக மாற்றிப் நம் பிரபஞ்சத்திலே பரவச் செய்கின்றது. தூசியாக வருவதைச் சூரியனுடைய காந்தப்புலன் அறிவு அதைக் கவர்கின்றது.

ஏனென்றால் இதிலிருந்து வெளிப்படும் உணர்வை வெப்பம் காந்தம் என்ற நிலைகள் மோதலின் தன்மை ஆகும் பொழுது அது வெப்பமாக மாறுகிறது. வெப்பமாக மாறும் போது நகர்ந்து ஓடும் சக்தியும் ஈர்க்கும் காந்தத்தின் செயல் அதிகமாகின்றது.

மோதலில் சூரியன் விஷத்தின் தன்மைகளைப் பிரிந்தாலும் பிரிந்து செல்லும் விஷத்தின் தன்மையை இந்தக் காந்தம் இழுத்து வைத்துக் கொள்கின்றது.

இதை எல்லாம் நாம் சாதாரணமாக எளிதில் புரிந்து கொள்வதற்காக
1.சூரியனை நாராயணன் என்றும்
2.மறு அவதாரமாக உயிரின் துடிப்பிற்குள் வெப்பமாக வருவதை விஷ்ணு என்றும்
3.வெப்பத்தினால் ஈர்க்கும் தன்மை வருவதை அந்தக் காந்தத்தை லெட்சுமி என்றும்
4.பிரிந்து சென்ற விஷத்தை அந்தக் காந்தம் தனக்குள் இணைத்து கொளளும் பொழுது அதை லட்சுமணா என்றும் காட்டுகிறார்கள் ஞானிகள்,

இராமயாணத்தில் பார்த்தோம் என்றால் ராமனும் லட்சுமணனும் சீதையும் இருக்கும். இதெல்லாம் நமக்கு தெளிவாகவே தெரியச் செய்கிறார்கள். இந்தக் காந்தம் ஒரு மணத்தின் தன்மையை நுகர்ந்த பின் எப்பொருளை இந்தக் காந்தம் இழுக்கின்றதோ அந்த மணத்தை…
1.உணரச் செய்யும்
2.உணர்த்தச் செய்யும்
3.உணர்வை வளர்க்கச் செய்யும் சக்தி பெற்றது இந்த விஷம்
4.அது தான் “லட்சுமி… லட்சுமணா…” (எல்லாமே காரணப் பெயர் தான்)

ஒரு செடியின் சத்தை இந்தக் காந்தம் இழுத்துத் தன்னுடன் மோதலாகும் பொழுது வெப்பமாகின்றது. இரண்டறக் கலந்து விடுகிறது. மோதலில் ஏற்படும் இதனுடன் இணைந்த விஷத்தின் தாக்குதலால் வெப்பத்தின் தன்மை கூடும் தன்மை வருகிறது.

ஆனால் இணைந்து கொண்ட பின் அதற்குள் இருக்கும் விஷம் இந்த மணத்தை வெளிப்படுத்துகின்றது. அதாவது ஒரு செடியின் சத்தை இவ்வாறு நுகர்ந்து விட்டால் சீதா… “சீதா லட்சுமி” என்று சொல்வார்கள்.

ஆனால் அதே சமயம் அதே செடியின் சத்தை மனிதனான நாம் நுகர்ந்தால் நம் உயிருக்குள் பட்ட பின் “சீதா ராமா” எண்ணங்களாகத் தோன்றுகிறது. அந்த உணர்ச்சிகள் நமக்குள் இந்த உயிர் என்ற விஷ்ணு மோதலில் ஆனபின் ஒலி அலைகளை உடலிலே பரப்புகின்றது.

அந்த உணர்வின் சக்தியை நம் உடலிலே சுழலச் செய்கிறது. அந்த உணர்ச்சியின் தன்மை ஒவ்வொன்றிலும் தாக்குகிறது. எதன் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உண்ரச்சியின் தன்மை நம் உடலிலே உருவாக்குகின்றது.

நமது ஞானிகள் இதை எல்லாம் இணைத்துக் காவியமாக நமக்கு எவ்வாறு கொடுத்தார்கள்…? என்ற நிலையைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் “மனிதனான பின்”
1.நாம் எதை நுகர வேண்டும்…?
2.நாம் எதை வளர்க்க வேண்டும்…?
3.நாம் எவ்வழி செல்ல வேண்டும்…?
4.நாம் எதனை நமக்குள் பெருக்க வேண்டும்…? என்ற சிந்தனை வந்து விடும்.

ஆகவே சுழலப்படும் போது இந்த உணர்வின் சத்து… “சீதா” என்பது உடலாகி விடுகிறது. அதில் உள்ள மணம் ஞானமாகின்றது. எந்த மணத்தின் தன்மை இதில் உணர்ச்சிகளாகின்றதோ அந்த ஞானத்தின் தன்மை கொண்டு
1.இந்த உடல் இயக்கும்.
2.அந்தச் சொல் வரும்.
3.அந்தச் செயல் இருக்கும்.

சீதா என்ற நிலையின் அந்தச் சுவையின் சொல்லாக வரப்போகும் போது அந்த உணர்வின் மணமாக அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நம் எண்ணம் செயல்படும்.

ஆகவே இந்த விஷம் எதனுடன் கலக்கின்றதோ அதனின் உணர்ச்சியைத் தூண்டும் செயல் பெற்றது. ஆகையினாலே உணர்ச்சி என்பது மனிதனுக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்வது. உணர்வு என்பது ஒன்றுடன் இணைந்து அணுவின் தன்மை பெற்றது.

ஒரு மனிதனுக்குள் விளைந்து வெளிப்பட்ட உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் “உணர்வு…” என்ற நிலைக்கு மாறுகிறது. அந்த உணர்வின் தன்மையை மனிதர்கள் நுகர்ந்தால் “உணர்ச்சி…” என்ற உணர்வுகளே அது இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
1.ஒரு திடப்பொருளாகும் போது உணர்வு.
2.ஆனால் நாம் நுகரப்படும் போது உணர்ச்சி.

உதாரணமாக மிளகாயை எங்கேயோ வறுக்கிறார்கள். சூரியனின் காந்த சக்தி அந்த மணங்களை எடுத்துக் கொள்கிறது. சுவாசித்தவுடன் நாம் என்ன செய்கிறோம்..?

அந்த நெடி கலந்த உணர்வால் “நச்சு…நச்சு…” என்று தும்முகின்றோம். அப்போது அந்த உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்கின்றது. அது தும்மலாக வருகிறது.

உணர்வு இயக்கி உணர்ச்சியாக ஆன பின் அதைச் சொல்லாகச் சொல்லும் பொழுது “இந்த நேரத்திலே போய் மிளகாயை வறுக்கிறார்கள் பார்…!” என்ற சொல்லைத் தான் சொல்ல வைக்கின்றது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா..!

இயற்கையின் நிலைகளில் “நாம் இயங்குகிறோமா…?” என்றால் இல்லை. நாம் நுகரும் உணர்வு எதுவோ அது தான் இந்த உடலை இயக்குகின்றது. இதைத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

அப்பொழுது நாம் நுகரும் உணர்வுகள் எதுவாக இருக்க வேண்டும்…?

நம் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்று காட்டி அந்த மெய் ஞானிகள் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளைச் சுவாசித்து அதனின் இயக்கமாக நாம் வளர வேண்டும்… வாழ வேண்டும்…!

மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என்றும் வாழ்ந்திட வேண்டும் என்பதே நம் குருநாதர் காட்டிய அருள் வழி.

March – 2026 உபதேசம்

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களின் ஆசீர்வாதம்

 

யாகத்தைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். உண்மையான யாகம் என்பது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1.ஒவ்வொரு உயிரும் சிறு துளி… சிறு நெருப்பு.
2.சிறு துளி சிறு நெருப்பாக இருந்து… நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து “பெரும் நெருப்பாக…”
3.யாம் உபதேசிக்கும் அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை எல்லோரும் சுவாசித்து
4.சுவாசித்த உணர்வலைகள் இந்தக் கூட்டுத் தியானத்தின் மூலம் உங்கள் உடல் முழுவதற்கும் படர்ந்தது.
5.அப்படிப் படரும் நிலை தான் யாகம்… “யாக வேள்வி…” என்பது.

யாகத் தீயில் எந்தப் பொருளைப் போடுகின்றமோ அதனின் மணம் வருகின்றது. இதைப்போல நம் உயிருக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் படரச் செய்து உடலுக்குள் அந்த யாகக் குண்டத்திற்குள் படரும்படி செய்கிறோம்.

அவ்வாறு படர்ந்து… நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தையும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
1.அவ்வாறு வெளிப்படும் இந்த யாக உணர்வுகள் எல்லோருடைய உணர்வுக்குள்ளும் ஊடுருவிப் படர்ந்து
2.நாம் இருக்கக்கூடிய இடம் கல் மண் தாவர இனங்கள் அதில் இருக்கக்கூடிய காந்தப் புலன்கள் இதைக் கவர்ந்து
3.அதிலே மெய்ஞானிகள் உணர்வுகளை படரச் செய்வதுதான் யாக வேள்வி என்பது.

இது உண்மையான யாக வேள்வி.

யாகத் தீயில் நெய்யை விடுகின்றோம். அதனின் உட்பொருள் என்ன…?

இந்த மனித வாழ்க்கையில் உயர்ந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்ற மகரிஷிகள்…
1.சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் அவர்களின் உணர்வின் எண்ணங்களை இயக்கி
2.நம் அனைவரது உயிருக்குள்ளும் யாகக் குண்டத்திற்குள் (உடலுக்குள்)
3.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உள் செலுத்துவது தான் நெய் ஊற்றுவது என்பது.

இந்த உணர்வலைகள் நம் உடல் முழுவதும் படர்ந்து பேச்சால் மூச்சால் பார்வையால் சொல்லால் செயலால் இது அனைத்தும் வெளியிலே படர்ந்து “கேட்போர் உணர்வுகளை மகிழ்ச்சியைத் தூண்டும் உணர்வாக அமைகின்றது…!”

யாகக் குண்டமான உடலில் நம் உயிரான நெருப்பில் போடப்பட்ட
1.அந்த மகரிஷிகள் உணர்வு தான் எல்லோருக்குள்ளும் படர்ந்து
2.நாம் இட்ட மூச்சலைகள் அனைத்தும் நம் வீட்டில் தெருவிலும் ஊரிலும் நாட்டிலும் படர்ந்து உலகம் முழுவதும் “ஊடுருவிப் படர்கின்றது…”

இதைத்தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் கூடி நின்று ஆசீர்வாதம் செய்தார்கள்…” என்று காட்டப்பட்டது.

ஆகவே நாம் அனைவரும் ஒன்று சேர்த்து உணர்வின் எண்ணங்களைக் கூட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பதிவு செய்யும் பொழுது
1.இந்தப் பதிவே ஊக்கச் சக்தியாக இருந்து
2.மெய்ஞானத்தின் தொடராக எல்லா இடங்களிலும் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.

அதற்குத் தான் கூட்டுத் தியானத்தை அமைத்துள்ளோம்… எல்லோரும் அதிலே கலந்து கொள்ளுங்கள்…. அருள் ஞானக் கூட்டமைப்பை உருவாக்குங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு எலி தன்னிச்சையாகச் சென்றாலும் அதன் மீது பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றது. பாம்பின் உடலில் அந்த விஷத்தைச் சேமித்து நாகரத்தினமாக மாற்றுகின்றது.

அதே போல் ஒடக்கான் பல்லி இவைகளிலும் விஷம் இருக்கும். பல்லி தன் இரையை விழுங்கிய பின் விஷத்தின் தன்மை கொண்டு அதை ஒடுக்குகின்றது. விஷத்தின் உணர்ச்சியின் தன்மையாக தனக்குள் கூட்டுகின்றது.

ஒடக்கானை எடுத்துக் கொண்டால் அதற்குள் சேமிக்கும் உணர்வின் அணுக்களை வலு கொண்டதாகச் சிந்திக்கச் செய்யும் நிலையாக உருவாக்குகின்றது அணுக் கருவாக.

விஷத்தின் சேமிப்பாகும் பொழுது பாம்பின் உடலில் நாகரத்தினமாக மாறுகிறது. ஆனால் ஒடக்கான் போன்ற மற்ற நிலைகளோ தன் உடலை விஷத் தன்மையாக மாற்றி கொள்கின்றது.

விஷம் கொண்ட உயிரினங்கள் தன் உடலில் விஷத் தன்மையாக மாற்றிக் கொள்வதனுடைய நோக்கம்
1.ஒரு இரையைத் தனக்குள் முழுமையாக விழுங்கப்படும் போது
2.இந்த விஷமும் இதற்குள் ஏற்படும் அமிலமும் சேர்த்து நீராகக் கரைத்துவிடும்.

கரைத்த உணர்வுகள் அதன் உடலுக்குள் சென்ற பின் அதனுடைய உணர்வின் தன்மையாக இரத்தத்தில் கலந்து உடலை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரமாகக் கொடுக்கும். இது எல்லாம் ஒரு உணர்வின் சத்தைக் கொண்டது.

அதே போல் தான் நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் நம் உடலில் அது முதலில் அமிலமாகத் தான் மாறும். விஷத் தன்மை கொண்ட நம் பித்த சுரப்பியின் சுரப்புக்குத் தக்கவாறு நாம் சாப்பிட்ட உணவுகளைக் கரைத்த பின் அமில சக்தி குளுக்கோஸாக மாறுகின்றது.

1.குளுக்கோஸாக மாற்றி வரப்போகும் போது
2.இரத்தங்களில் இருக்கக்கூடிய செல்களில் இதன் உணர்வின் தன்மை சுழலச் செய்து சுழலச் செய்து
3.அது செவ்வணுக்களாக மாற்றுகின்றது.

அவ்வாறு மாற்றும் தன்மை அங்கு இல்லை என்றால் இந்த விஷத்தின் தன்மையால் குளுக்கோஸாகவும் சர்க்கரையாகவும் மாற்றி விடுகிறது. குளுக்கோஸ் அதிகமானால் நமக்குச் சர்க்கரைச் சத்து தான் அதிகம் ஆகும். ஆகவே அதை மாற்றும் வல்லமை அங்கு பெற வேண்டும்.

1.அடிக்கடி வேதனை என்ற உணர்வின் தன்மை நாம் சுவாசிக்கும் போதும்
2.வேதனைப்படுவோரைப் பார்க்கும் போதும்
3.ஒருவர் செயலைப் பார்த்து நம்மால் தாங்க முடியவில்லை என்ற நிலையில் சோர்வு என்ற உணர்வைக் கவரப்படும் போதும்
4.இந்த உணர்வுகளை எல்லாம் நுகரப்போகும் போது கோபமான உணர்வுகளையும் கலந்து நாம் சுவாசிக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை நமக்குள் கலந்த பின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டுக் குளுக்கோஸ் என்ற நிலையை மாற்றுவதற்கு மாறாக இதனுடைய உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பாக ஒரு பக்கம் மாறும்.
1.சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கு
2.ரொம்பச் சீக்கிரம் இந்த இரத்தக் கொதிப்பு வரும்.

இவைகளுக்கு எல்லாம் காரணம் என்ன…? என்றால் நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப அந்த அணுக்களின் தன்மை எப்படி வீரியமோ அதற்குத்தக்க இயக்கமாகின்றது.

வைத்தியரீதியில் இரத்தங்களைப் பரிசோதித்து அந்த அணுத் தன்மைகளைச் சோதிக்கும் போது இரத்த கொதிப்பு இருக்கிறது… சர்க்கரைச் சத்து இருக்கிறது…! என்று சொல்வார்கள்.

சர்க்கரையும் கொதிப்பும் இந்த இரண்டு உணர்வின் மோதலின் தன்மை ஆகிக் கடைசியில் சலிப்பின் தன்மையாகப் பிரிக்கப்படும் பொழுது ஆஸ்துமா நோயாகி சளித்தன்மை அதிகமாகும்.

சர்க்கரை அதிகமான நிலையில் சளி உருவாகி எல்லா இடங்களிலும் அந்த உறையும் தன்மையாக அந்த அமிலங்கள் மாறிவிடும். இப்படியெல்லாம் நம் உடலுக்குள் மாற்றங்கள் ஆகின்றது.

எத்தனையோ உடல்களில் தீமைகளை நீக்கி நீக்கி மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகளால் உடலுக்குள் அணுத் தன்மைகளை மாற்றி மனித உடலின் ரூபத்தையே மாற்றும் தன்மையாக வந்து விடும்.

கடைசியில் வேதனை வேதனை என்று மனிதனாக இருக்கும் உருவை மாற்றும் சக்தியாக வந்து விடுகிறது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால்
1.வேதனையை உருவாக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம்
2.வேதனையை நீக்கும் சந்தர்ப்பமாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்பொழுது தீமை என்று காணுகின்றோமோ அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது வலுவாக எண்ணி உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தும் அகல வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் தியானிக்க வேண்டும்.

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களுக்கு நல்ல உணர்வாகப் படர வேண்டும் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நாம் சமப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

1.இவ்வாறு எண்ணி எடுத்துக் கொண்டால் நாம் சுவாசித்ததை நோயாக மாற்றாது…
2.நாம் உடல் நலத்துடன் வாழ முடியும்.

மா… “பிரம்மா” – அம்மா…!

 

“ஓம் ஈஸ்வரா குருதேவா…” என்று அடிக்கடி சொல்கின்றோம். ஓம் என்று சொல்லப்படும் பொழுது சாஸ்திர விதிகளில் “ஓ…ம் – பிரணவம்” என்று சொல்வார்கள்.

அதனுடைய இயற்கையான உண்மையான நிலைகளைப் புரிந்து கொள்வதற்காக மெய் ஞானிகள் நமக்குக் காட்டியது…
1.உயிர் ஜீவனுள்ளதாக இருக்கின்றது
2.நம் உடலுக்குள் அனைத்து அணுக்களையும் அது இயக்கச் செய்கின்றது. அதற்குப் பெயர் “ஓ…!”
3.“ம்…!” என்கிற பொழுது நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ ம் என்று உடலுக்குள் அது இணையச் செய்து அதையும் ஜீவன் பெறச் செய்கின்றது.

அதாவது…
1.ஓ என்பது பிரணவம்
2.ம் என்பது பிரம்மம்.
3.ஓம்… ம் என்று ஆனாலும் நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ பிரம்மா… “மா…” தாயாகின்றது…!

நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தை உயிர் இயக்கச் செய்து ம் என்று உடலுக்குள் ஆகப்படும் பொழுது அது எந்தக் குணமோ அந்த அடிப்படையில் தான் மற்றதெல்லாம் இயங்கும்.
1.ஆகையினால் அது அம்மா… பிரம்மா…!
2.தாயின் நிலையை வைத்துத் தான் பிரம்மா என்று பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

நமது உயிரின் இயக்கத்தை “ஈசன்” என்றும்… நாம் எண்ணும் எண்ணத்தை ஜீவன் பெறச் செய்வதை “ஓ” என்றும்… நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் சத்து உடலுடன் ஐக்கியமாகும் பொழுது “ம்” என்றும் தெளிவாக்குகிறார்கள்.

அது தான் ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்…! என்று பெயரை வைத்து அழைக்கின்றார்கள் நாம் புரிந்து கொள்வதற்கு.

ஆகவே… ஓம் ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது நாம் எதை எண்ண வேண்டும்…?

ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி… குருதேவா என்று சொல்லும் பொழுது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்கள் அனைத்திற்கும் நம் உயிரே குருவாகின்றது என்று எண்ண வேண்டும்.

கோபமாகப் பேசினாலும் சலிப்பாகப் பேசினாலும் சங்கடமாகப் பேசினாலும் சாந்தமாகப் பேசினாலும் உயர்ந்த நிலையில் பேசினாலும் வேதனையாகப் பேசினாலும்
1.இவை அனைத்தும் நாம் எண்ணியதை உயிர் ஜீவனாக்கி ம் என்று நம் உடலாக்கி
2.உடலில் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உயிரே.

இதைச் சொல்வதற்குத் தான் குருதேவா… குரு என்று காட்டுகின்றார்கள்.

பிரபஞ்சத்திற்குக் கோள்கள் உருவாவதற்கும் பிரபஞ்சத்திற்குள் இயக்குவதற்கும் இந்தப் பிரபஞ்சத்திற்குச் சூரியன் குருவாகின்றது. அதைப் போல நம் உடலுக்குள் உயிர் குருவாக இருக்கின்றது.

1.இதையெல்லாம் சாதாரண மக்களும் உணர்ந்து அறிந்து செயல்படுவதற்கும்
2.மனிதனாக ஆனபின் அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்பதற்கும் தான்
3.காவியங்களாக மெய் ஞானிகளால் படைக்கப்பட்டது.

இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்பதற்குத்தான் ஞானிகள் இதையெல்லாம் காட்டினார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் ஒரு வேம்பின் சத்தைக் கவர்ந்து கொண்டால் அது கசப்பின் உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக மாறும்.

சூரியனின் வெப்ப காந்தங்கள் ரோஜாப்பூவின் சத்தைக் கவர்ந்தால் அந்த நறுமணத்தையும் அதனின் துவர்ககும் சக்தியை உணர்த்தும் உணர்வாக… அலைகளாக மாறுகிறது.

அதே போல சூரியனில் இருந்து வரும்போது ஒரு விஷச் செடியின் சத்தைக் கவர்ந்தால் விஷத்தின் உணர்ச்சிகளைத் தூண்டும் அணுவாக மாறுகிறது.
(வேம்பு ரோஜா விஷம் – அந்தந்தக் காற்றலைகளாக மாறுகின்றது)

வேப்ப மரம் மரமாக இருக்கும் போது அடர்த்தியின் தன்மையால் மற்றதைத் தன் மணத்தைக் கொண்டு தாக்கி வெளியே அனுப்பிவிடும். தன்னுடன் இணைத்துக் கொள்வதில்லை.

ஆனால் ரோஜாப்பூ தன் அடர்த்தியின் தன்மை கொண்டு நுண்ணிய அலைகளாக வெளி வரும் பொழுது அந்த வேம்பின் கசப்பைத் தன் அருகில் விடாது பாதுகாக்கும்.

வேம்பின் அருகில் ரோஜாச் செடி இருந்தால் அதனின் வளர்ச்சி கம்மியாக இருக்கும். ஏனென்றால்
1.வேப்ப மரத்திற்கு மாறாக இருந்து விட்டால் அந்தச் செடிகளின் பலனைக் குறைத்து விடும்..
2.அதற்கு ஒத்த நிலைகள் இருந்தால் தான் மற்ற செடிகளும் வளரும்.

உதாரணமாக வேப்ப மரத்தின் அருகில் கருவேப்பிலையை வைக்கலாம். ஏனென்றால் இந்த வேப்ப மரத்தின் கசப்பின் தன்மையை நுகர்ந்து தான் கருவேப்பிலையாக உருவாகிறது.

அதே சமயத்தில் இந்த ரோஜாப்பூ தன்மையும் இதனுடன் கலந்து கருவேப்பிலைச் செடியாகின்றது. அதனால் ரோஜாப்பூச் செடியையும் கருவேப்பிலையையும் அருகருகே வைத்தோம் என்றால் இரண்டிற்கும் நல்லது… செழிப்பாக வளரும்.

அனால் ஒரு விஷச் செடிக்குப் பக்கத்தில் ரோஜாவை வைத்தால் அந்த விஷத்தின் தன்மை ரோஜாப்பூவின் நிலையை உருவாக விடுவதில்லை.

இது எல்லாம் ஏன் என்றால்
1.ஒன்றை ஒத்து ஒன்றின் நிலைகள் கலந்து தான் தாவர இனங்கள் அனைத்தும் உருவாகியுள்ளது,
2.அது அது கலந்து கலந்து புதுப் புதுச் செடிகளாக உருவாகின்றது.

எப்படி…?

வேப்ப மரத்திலிருந்து வேம்பின் சத்து வெளிப்பட்டது என்றால் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாறும். அதே போல ரோஜாப்பூவின் சத்தை எடுத்துக் கொண்டால் அதுவும் அலைகளாக மாறும். விஷச் செடியின் சத்தை எடுத்துக் கொண்டால் அதுவும் அலைகளாக மாறும்.

இதைத்தான் வேதங்கள் இயல் இசை நாடகம் என்ற நிலைகளில் கூறுகின்றது. ரிக் சாம அதர்வண யஜூர். இதிலே சாம என்பது இசை.
1.ரோஜாப்பூவின் நறுமணத்தை நாம் நுகர்ந்தால் “ஆஹா…ஹா…!” (இசை – சப்தம்) என்று சொல்கிறோம்.
2.வேப்ப மரத்தின் மணத்தை அந்தக் கசப்பை நுகர்ந்தால் “ஓய்…!” என்கிறோம். ஏனென்றால் கசப்பின் தன்மை அதிகரிக்கின்றது.
3.ஒரு விஷத்தின் தன்மையை நுகர்ந்தால் நச்…நச்…! என்று தும்மல் வருகின்றது. இது அரிப்பின் தன்மை கொண்டது. சில நேரம் நுகர்ந்த பின் நீராகக் கூட வடிகின்றது.

தனித் தனியாக இந்த மணங்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகச் செல்லப்படும் பொழுது சந்தர்ப்பவசத்தால் வேம்பின் அலைகளைக் கண்ட ரோஜாப்பூவின் உணர்வலைகள் இதற்கும் அதற்கும் ஒத்துக் கொள்ளாத நிலையில் நகர்ந்து ஓடுகின்றது.

நகர்ந்து ஓடும் பொழுது ஒரு விஷச் செடியிலிருந்து நுகர்ந்த உணர்வலைகள் அங்கே இருந்தால் வேம்பின் மணம் துரத்தி வந்த நிலையில்
1.விஷச் செடியின் அழுத்தத்தைக் கண்டு
2.ரோஜாவின் மணம் அதைத் தடுத்து நிறுத்தத் (தனக்குள் “பிரேக் போட”) தெரியாது. (இந்த இயல்பு முக்கியமானது)
3.அழுத்தம் அதிகமான பின் அந்த விஷ உணர்வுகளில் மோதிச் சுழலத் தொடங்கிவிடும்.

அப்பொழுது சுழலும் தன்மை வரும் பொழுது வேம்பின் உணர்வையும் உள்ளே இழுக்கின்றது. ஏனென்றால் சுழற்சியில் ஈர்க்கும் தன்மை வருகின்றது.

இந்த மூன்றும் இபப்டி ஒன்றுடன் ஒன்று மோதி இந்த மோதலில் வேம்பின் உணர்வும் மற்ற நிலைகளும் எந்த அளவுக்குக் கலந்ததோ அதற்குத் தக்கவாறு “ஒன்றாகின்றது…!”

உதாரணமாக பத்து சதவீதம் வேம்பின் உணர்வும் ரோஜாப்பூ மூன்று சதவீதமும் விஷத்தின் தன்மை ஒரு சதவீதமும் இந்த மூன்றும் கலந்து ஒரு அணுவின் தன்மை ஆகிவிட்டால் பார்க்கலாம்… சுழிக் காற்றாக வரும். அப்பொழுது மேலே ஆவியாகச் செல்லும்.

ஆனால் கனமான பின் அந்தப் பொருள் அப்படியே கீழே பூமியில் ஒடுங்கும். இப்படி ஒடுங்கி இழுத்தாலும் பூமிக்குள் ஆழமாகப் பதிந்து விட்டால் அது கருவேப்பிலையின் வித்தாகப் பதிந்து விடுகின்றது.

மின்னல் தாக்கபப்டும் பொழுது அதனின் உணர்ச்சிகள் உந்தி அந்தப் பத்து சதவீதம் வேம்பின் சத்தையும் முன்று சதவீதம் ரோஜாப்பூவின் சத்தையும் ஒரு சதவீதம் விஷச் செடியின் சத்தையும் கலந்து அது விளையும் தன்மைக்கு வருகின்றது.

1.ஆக வேம்பின் பக்கம் ரோஜாப்பூவை வைத்தால் இதற்கும் அதற்கும் தொடர்பில்லை – வளர்ச்சி இருக்காது
2.ஆனால் இதனுடன் இணைந்து கருவேப்பிலைச் செடியாக ஆன பின் அதற்கு அருகில் ரோஜாப்பூச் செடியை வைத்தால் நன்றாக வளரும்.
3.இதற்கு அது உணவு கொடுக்கின்றது. அதற்கு இது உணவு கொடுக்கின்றது… ரோஜாப்பூவிற்கு உரமாகின்றது.
4.கருவேப்பிலைப் பக்கம் ரோஜாப்பூவை வைத்துப் பாருங்கள் நல்ல விரிவடைந்து ஜோராக வரும்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதை எல்லாம் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்று
1.எப்படி அதனதன் உணர்வுகள் உந்துகின்றது..?
2.அந்த உணர்வின் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் வருகிறது…? என்று இதை எல்லாம் காட்டினார்.

ஆனால் விஷச் செடிக்கு அருகில் வைத்தால் அந்த அதிகரித்த விஷத்தின் தன்மையை இது நுகரப்படும் பொழுது ரோஜாப்பூ வாடிவிடுகின்றது. இதெல்லாம் தனக்குள் கவர்ந்து கொண்ட… நுகரும் சக்தியால் மாறுகின்றது.

ஆக அந்தத் தாவர இனத்தின் மணங்கள் தான் நாம் சுவாசிக்கும் பொழுது எண்ணங்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்லாகவும் பல வித குணங்களாகவும் இயக்குகின்றது.
1.ஒன்றை ஏற்றுக் கொண்ட நிலைகளும்
2.ஏற்றுக் கொள்ளாத நிலைகளும் எல்லாம் இப்படித்தான் நமக்குள் வருகிறது.

அணுவின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் வான இயல் புவி இயல் உயிரியல் தாவரவியல் என்று இதை எல்லாம் தெளிவாக அறிந்து தன் வாழ்க்கையில் வந்த நஞ்சுகளை எல்லாம் அடக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால்
1.நமக்குள் இயக்கும் எதிர்மறையான இயக்கங்களைச் சமப்படுத்தி
2.நாமும் அந்த அகஸ்தியனைப் போன்றே நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றலாம்.

பிறவி இல்லா நிலை அடையலாம்.

நாம் அனவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை உலகமெங்கும் பரவச் செய்வோம்

 

அருள் ஞானச் சக்கரத்தை தினமும் உற்றுப் பாருங்கள். அதிலிருந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வரும்.

என்னென்ன காரியங்கள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை எல்லாம் எண்ணுங்கள்.
1.குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.விவசாயம் செழிக்க வேண்டும்
3.தொழில் பெருக வேண்டும் வாடிக்கையாளர்கள் நலமாக வாழ வேண்டும்.
4.நோயுற்றவர்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைத்து
5.அவர் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சக்கரத்தை வைத்துப் பயபக்தியுடன் செயல்படுங்கள். பாலோ பழமா பதார்த்தத்தையோ வைத்துத் தியானம் இருந்துவிட்டு நீங்களும் உட்கொள்ளுங்கள்… குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த வழியைக் கடைப்பிடித்து வாருங்கள்.

எங்கள் ஊர் நன்றாக இருக்க வேண்டும் தெரு நன்றாக இருக்க வேண்டும் வீடு நன்றாக இருக்க வேண்டும் அடிக்கடி இந்த உணர்வுகள் இங்கே படர வேண்டும் என்று சக்கரத்தை உற்றுப் பார்த்து இந்த உணர்வுகளைப் பரப்புங்கள்.

1.ஊரில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.ஊரிலே விவசாயம் செழிக்க வேண்டும்
3.மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று
4.”சக்கரத்திற்கு முன்…” இதை எல்லாம் சொல்லிக் கொண்டே வாருங்கள்.

அதன் வழி ஓரளவுக்கு அனைவருக்கும் இந்த உணர்வுகள் படரும்… பரவும். ஊரில் உள்ள குடும்பங்களும் நலமாகும் சக்தி பெறும். இந்த உணர்வுகள் பரவப் பரவ எல்லோரும் அதைப் பெறும் தகுதி ஏற்படும்.

டிவி ஸ்டேஷனில் எந்த ஒளிபரப்பு செய்கின்றார்களோ அந்த அலைவரிசையைத் திருப்பினால் அது தான் வரும். அதே போல
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த அல்லைவரிசையை எடுத்துப் பரப்பப்படும் பொழுது
2.மற்ற யாரிடமும் பேசினாலும் கூட அவர்களுக்குள்ளும் இது பதிவாகின்றது.

அவர்களுக்கு இந்த எண்ணம் வந்தால் அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் அவர்களும் அவர்களை அறிய முடிகின்றது. அறியாது வந்த கஷ்ட நஷ்டங்களைப் போக்க முடிகின்றது.

உலகம் நலம் பெற்று வாழ நாம் இந்த முறைப்படி தியானத்தைச் செயல்படுத்த வேண்டும். எல்லோரும் நன்றாக ஆகும்பொழுது நமக்குள் அருள் மகரிஷியின் உணர்வுகளை எளிதில் பெற முடியும்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் கூட்டுத் தியானமிருங்கள். அந்தக் குடும்பம் நன்றாக வேண்டும்… குடும்பத்தில் குழந்தைகளும் மற்றவர்களும் தொழிலும் சீராக வேண்டும் என்று தியானமிருங்கள்.

நோயற்றவர்களுக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவர்கள் நலம் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தில் முயற்சி எடுங்கள்… நலமாக வேண்டும் என்று ஒன்று சேர்ந்து சொல்லுங்கள். கூடுமானவரை சீக்கிரம் அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்.

என்ன தான் நோய் நீங்கினாலும் கூட நாம் வாழக்கூடிய காலம் குறுகியதுதான். எப்படியும் இந்த உடலை விட்டு நாம் பிரியத் தான் வேண்டும்… இந்த உடல் நமக்குச் சொந்தம் இல்லை.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?

1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அருள் ஒளியை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குச் சொந்தமாகின்றது.

உடல் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்யும்… அருள் உணர்வுகள் பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையப்படும் பொழுது உடல் சுருங்கத் தான் செய்யும். ஆனால்
1.பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே பட்டு… ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து அதைக் கவர்ந்து
3.அந்த உணர்வை உணவாக எடுத்து “ஒளியின் பிளம்பாக…” மாறும்.

எப்போதுமே பிறவியில்லா நிலை அடையும் அந்தச் சக்தி பெறுகின்றோம். அதைத்தான் இராமாயணத்தில் இராமன் நேரமாகிவிட்டது என்று மனதைக் குவித்துப் பூஜித்தான் என்று காட்டியிருப்பார்கள்.

நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து… பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உடலில் இருக்கும் பொழுது ஒளியின் உணர்வைச் சேர்த்து… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். கடைசி நிலை அது தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேதனைப்படுவோருக்கு நல்ல மனம் கொண்டு உதவி செய்தாலும் அவன் தவறு செய்யும் போது “இவனுக்குப் போய் நாம் உதவி செய்தோம் பார்..!” என்று நாம் வேதனைப்படுகின்றோம்

ஏனென்றால் நாம் நல்லது செய்த உணர்வுகள் அங்கே இருக்கிறது. தவறான அவன் செயலைப் பார்க்கும் போது அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர நேர்கின்றது.
1.அந்தத் தவறான உணர்வுகளை நுகர்ந்து நாம் வேதனைப்படும் நிலை வரும்.
2.அது நம் நல்ல குணத்தின் தன்மை அடக்குகின்றது.

அதன் உணர்வின் தன்மை நமக்குள் விளையப்படும் பொழுது என்ன சொல்கிறோம்…? நான் நல்லதைச் செய்தனே… அவன் இப்படிச் செய்கின்றானே..! நல்லதைச் செய்தேனே… இப்படிச் செய்கின்றானே…! என்று தான் சொல்வோம்.

அதே போல நம் பிள்ளைகளுக்கும் ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். நம் சொன்னபடி கேட்காமல் அவன் செயலற்றவனாக மாறும்போது அவனை எண்ணும் போதெல்லாம் வேதனையின் தன்மையாக நமக்குள் உருமாற்றும்.

1.நமக்குப் பிறந்த குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலும்
2.அவர்கள் செய்யும் தவறு வலிமையாகப் போகும் போது அதை நுகர்ந்து விடுகின்றோம்.

ஏனென்றால் முதலில் ஒன்றும் தெரியாது. அது சிறுகச் சிறுகக் கலந்து அணுவின் தன்மையாக நம் உடலுக்குள் மாற்றப்படும் போது அவனை நினைத்தாலே அந்த வேதனை உணர்வுகள் அதிகமாகி விடும். அதனால் உடலுக்குள் உருவாகும் நோயிலிருந்து யாரும் தப்ப முடியாது.

பின் அவனுடைய உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்த பின் இந்த உடலை விட்டு நாம் செல்லப்படும் போது அவனுடைய ஈர்ப்புக்குத் தான் போவோம்.

அவனை எண்ணி அவன் உடலுக்குள் செல்கிறோம். அவனில் விளைந்த விஷத்தை நமக்குள் உருவாக்கி அங்கே போன பின் அவனைத் திருத்தும் வழி இல்லை.

1.அவனுக்குள் விளைந்ததை எடுத்து
2.நாம் தான் நம் நல்ல குணத்தை இழக்கின்றோம்…
3.இந்த உடலையும் இழக்கச் செய்கின்றது… நல்ல உணர்வையும் மாற்றச் செய்கிறது.

இப்படிச் செய்கிறானே…! இப்படிச் செய்கிறானே…! இப்படிச் செய்கிறானே…! என்ற நிலைகளில் பேய் மனம் ஆகிவிடுகிறது. இதைப் போன்ற நிலைகள் ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு.

“வீட்டுக்கு வீடு வாசற்படி…” என்பது போன்று ஒவ்வொரு குடும்பத்திலேயும் இத்தகைய குணங்கள் கொண்ட குழந்தைகள் இருக்கும். அவர்கள் தவறு செய்யும் நிலைகள் நமக்குள் வரப்போகும் போது பேய் மனம் ஆகின்றது.

அவனை எப்படியும் வளர்க்க வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றுகிறது. அந்த எண்ணம் பாசக் கயிறாக மாறுகிறது.
1.அவனைத் திருத்துவதற்கு மாறாக
2.நம்முடைய எண்ணம் நம் உடலுக்குள் அது எமனாக… நோயாக மாறுகின்றது.

இதைத் தான் சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான்…! என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

நாம் பார்ப்பது நம் பையனை…! அது “சித்திரம்…” அவன் இப்படிச் செய்கிறான் என்ற உணர்வை நுகரப்படும் போது நமக்குள் குழந்தையாக இருந்தாலும் அவன் செய்யும் தீமையின் உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக உருவாகி விடுகின்றது. அதாவது “புத்திரனாக” உருவாகிவிடும்.

அப்போது “அவன் இப்படி இருக்கின்றானே… அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…?” என்று அடிக்கடி எண்ணி அதாவது பாசக் கயிறால் தொடரப்படும் போது
1.அவனை எண்ணி எந்த வேதனைகள் பட்டமோ அது நமக்குள் நோயாக விளையும்.
2.அப்போது இந்த வாழ்க்கையில் நல்லது செய்ய வேண்டும் என்பதையே சுத்தமாக மறந்து விடுறோம்.

ஒரு எருமை மாடு என்ன செய்யும்…? அதற்குச் சிந்தனை இல்லை. சுமக்கத் தெரியும். அடித்தால் “ஆ…” என்று கத்தும். அந்த வலுவின் தன்மை தான் அதற்கு உண்டு.

ஆக அதைப் போன்ற உணர்வின் தன்மை நமக்குள் வரப் போகும் போது தான் எருமையை வாகனமாக வைத்து “எருமை மேலே எமன்…” வருவதாகக் காட்டுகின்றார்கள்.

பையன் மேல் உள்ள பாசத்தால் சிந்தனை அல்லாது செயல்பட்ட உணர்வுகள் அது தொடர்ந்து “பாசக் கயிறாக”நம்மை வழிப்படுத்துகின்றது.

சூட்சம நிலையில் நடப்பதை மனிதன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் சித்திர புத்திரன் கணக்குப் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று தெளிவாக்கிக் கொண்டு வருகிறார்கள் ஞானிகள்.

நாம் பார்த்த உணர்வின் தன்மை அது எந்தக் கணக்கோ அதன் வழி கொண்டு நாம் எண்ணிய எண்ணங்கள் பாசக் கயிறாக மாறி “நம்முடைய எண்ணமே எமனாக மாறுகிறது…”

வேதனையான ஆன பிற்பாடு பேய் மனம் கொண்டு யாரைக் காக்க வேண்டும் என்று எண்ணினோமோ அவன் உடலுக்குள் சென்று இந்த விஷத்தைத் தான் வளர்க்கும்.
1.அவனையும் வாழ விடுவதில்லை.
2.அவனையும் வீழ்த்திய பின் அடுத்து வெளி வந்து மனிதனல்லாத உயிரினமாகத்தான் பிறக்க முடியும்.

இதை எமன் தண்டனை கொடுக்கின்றான் என்ற நிலையில் எண்ணெயில் போட்டு வாட்டுகின்றான். தலை கீழாகக் கட்டித் தொங்க விடுகிறான் என்று உணர்த்துகின்றார்கள்.

நாம் நுகரும் செயலாக்கங்கள் நமக்குள் மறைமுகமாக எப்படி இயக்குகிறது…? என்று ஞானிகளால் காட்டப்படுகிறது. இதை நாம் யாருமே புரிந்து கொள்வதில்லை.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் காலையில் அந்தத் துருவ தியானம் எடுக்கப்படும் போது அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று எடுத்து வலுவாக்கி அந்த வேதனையின் உணர்வுகளை மாற்றப் பழக வேண்டும்.

ஏனென்றால் விஷத்தை ஒடுக்கியவன் அந்தத் துருவ மகரிஷி. குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே துருவ மகரிஷியின் உணர்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தை தவறு செய்தால் அந்தத் துருவ மகரிஷியின் அருள் உணர்வு அவன் பெற வேண்டும். அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று தியானித்து அந்த உணர்வுகளை அவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.

இப்படி அருள் உணர்வை நமக்குள் படைத்து நல்ல அணுவின் தன்மையாக அடையச் செய்ய வேண்டும்.
1.எண்ணத்தால் இங்கே எப்படிக் கரு உருவானதோ இதைப் போல
2.அவனை வளர்க்கும் அருள் ஞான்த்தின் உணர்வை நமக்குள் எடுத்துக் கருவாக உருவாக்குதல் வேண்டும்.

கணவனும் மனைவியும் இருவருமே வேதனை என்ற உணர்வுகள் வராதபடி மகரிஷிகளின் ஒளி அலையாகச் சமைத்து அந்த எண்ணத்தைப் பாய்ச்சப்படும் போது அறியாத இருளை நீக்கும் சக்தியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

இருளை நீக்கும் உணர்வுகள் அவனுக்குள் பாயும் பொழுது அவன் தெளிவாகின்றான். தெளிந்த நிலைகள் அடைகின்றான்.

தாய் கருவிலே வளரப்படும் போது சந்தர்ப்பத்தால் தீமையின் உணர்வுகளைத் தாய் உற்று நோக்க நேர்ந்தால் அந்தத் தீமையான உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைகள் கருவிலே விளைந்து.. குழந்தை பிறந்த பின்.. “நாம் என்னதான் சொன்னாலும் விளைந்த உணர்வின் சக்தி அவனை அப்படித் தான் இயக்கும்…!”

அதை மாற்ற வேண்டும் என்றால் இந்த வழிப்படி நாம் அவனை நிச்சயம் மாற்ற முடியும்.

1.களைகள் முளைத்து விட்டால் வயல்களில் அந்தக் களையை எப்படி உடனே நீக்குகின்றோமோ அதைப் போல
2.குறைகளைக் கண்டால் இந்த முறையைக் கடைபிடித்தே ஆக வேண்டும்.
3.சொல்லால் சொல்லி யாரையும் மாற்ற முடியாது.

இதைத் தெளிவாக எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள்.

குருவினுடைய உதவி அவசியம் தேவை

 

27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துச் சூரியன் ஒளியாக மாற்றித் தன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் நட்சத்திரங்களும் வாழ்கின்றது. பிற மண்டலத்திலிருந்து எடுத்துத்தான் இந்தப் பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்கள் கொடுக்கிறது.

அது போல்…
1.நாம் இந்த உடலில் எந்தெந்த உணர்வுகளை எடுக்கின்றோமோ இதில் எது வலுவோ (நாம் எடுக்கும் அருள் சக்திகள்)
2.இரத்தத்திலிருந்து தசை மண்டலத்தில் இருந்து எலும்பு மண்டலத்தில் இருந்து எல்லாவற்றையும் கொண்டு வருகின்றோம்.
3.எல்லாவற்றிலும் அந்த வலுவைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது
4.இந்த வலுவின் தன்மை காற்றிலிருந்து உயர்ந்த உணர்வுகளை எடுத்துக் கொடுக்கின்றது… பிரித்தெடுக்கின்றது.

அதே சமயத்தில் வேதனைப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வந்து விட்டால் எல்லாவற்றிலும் விஷம் கலந்து விடுகிறது. காற்றிலிருக்கக்கூடிய விஷத்தை எடுத்து அடிக்கடி கவலைப்படும்படி செய்வதும் நோயாக்குவதும் வெறுப்படையச் செய்வதும் எல்லாம் செய்கின்றது. மற்ற உயிரினங்களுக்கு இது எல்லாம் தெரியாது.

குருநாதர் இதை எல்லாம் எனக்குள் பதிவு செய்தார்… உணர்த்தினார். அதைத்தான் உங்களிடமும் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.
1.நீங்கள் இதையெல்லாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.அதை வலுப்படுத்திச் செயல்படக்கூடிய சக்திகளாக வளர வேண்டும்.

மற்றவர்கள் என்னிடம் கஷ்டம் கவலை துயரம் நஷ்டம் எல்லாவற்றையும் சொல்கிறார்கள். இதை நான் எதிர்த்துப் போராடிச் சமாளிக்க வேண்டி இருக்கின்றது.

ஏனென்றால் பக்தியில் நாம் வழி வழியாக அதைத் தான் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

உங்களிடம் இதைப் போன்று கஷ்ட நஷ்டங்களைச் சொன்னால் உங்களுக்கும் அந்தக் கவலை வருகிறது அல்லவா. ஆனால் உங்களை அந்தக் கவலை தாக்காமல் நான் பாதுகாக்க வேண்டும்.
1.குருநாதர் எனக்கு எப்படிப் பாதுகாப்பு கொடுத்தாரோ உங்கள் ஒவ்வொருவரையும் நான் பாதுகாக்க வேண்டி இருக்கின்றது.
2.எத்தனை ஆயிரம் பேர் கூடி இருக்கின்றார்களோ அத்தனை பேருக்கும் நான் பாதுகாப்பு கொடுத்தாக வேண்டும்.

நீங்கள் இதை மாதிரிச் செய்யுங்கள் நன்றாக விடும் என்று மற்ரவர்களுக்குச் சொன்னாலும் அவருடைய கஷ்டம்… “அங்கே எப்படி இருக்கின்றது… இங்கே இப்படி நடக்கின்றது… எல்லாம் நஷ்டமாகி விட்டது” என்று சொல்லும் போது கேட்டால் அது உங்களுக்குள் தீமையாக விளைந்து விடாது பாதுகாக்க வேண்டும் அல்லவா.

அவர்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி நாம் நல்வழி காட்ட வேண்டும்.
1.காரணம் பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கின்றது.
2.ஆகவே அந்த அருள் உணர்வுகளை வலுவாக்கி விட்டால் உங்களிடம் எதுவும் வராது.

தங்கத்தில் திரவத்தை ஊற்றிய பின் மற்ற கசடுகள் எல்லாம் ஆவியாக எப்படி மாறுகின்றதோ அதே போல உங்களுக்குள் அந்தச் சக்தி அதிகமான பின் மற்ற தீமைகளை மாற்றிவிடும்.

அது வரையிலும் குருவினுடைய உதவி அவசியம் தேவை.
1.எனக்கு குருநாதர் எவ்வளவு நாள் உதவியாக இருந்து வழி காட்டினாரோ அதே போல
2.அந்தக் குருவின் தன்மையை வளர்க்க வளர்க்க உங்களை அது பாதுகாக்கும்.

மற்றவர்கள் அனைவரும் உடலுக்குத் தான் சொல்கிறார்கள். உடலுக்குப் பின் என்ன…? என்பதை யாரும் சொல்லவில்லை. நாம் இந்த வாழ்க்கையில் நம் எண்ணங்களைப் பரிசுத்தப்படுத்தி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்… கடைசி நிலை,

அது தான் விஜயதசமி… உயிர் விண்ணுலகம் செல்ல வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை உபதேசங்களும் கொடுக்கின்றோம். எல்லோருக்கும் அந்த உற்சாகத்தை ஊட்டிக் கொண்டு செல்கின்றோம்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் ஒவ்வொரு உடலும் கோவில். மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் சக்திகள் காக்கப்பட வேண்டும்.

1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் அதைச் சொல்லும் பொழுது
2.அது உங்களில் வளர்ந்தால் எனக்கும் கிடைக்கின்றது… மற்றவர்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நாளும் அதிகாலை துருவ தியானம் இருந்து முடிந்த பின் நம் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்களை அவசியம் விண் செலுத்த வேண்டும்.

இதற்கு முன்னாடி நாம் செய்யவில்லை. ஆனால் அவர்கள் விண் செல்ல வேண்டும் என்ற உணர்வை இணைத்து நமக்குள் வளர்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வழியில் வந்தவர்கள் நாம். அவர்கள் உணர்வுகள் நம் உடலாக இருக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து நமக்குள் வலுவைச் சேர்த்துக் கொண்டபின் முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் உயிரான்மா இணைய வேண்டும் என்று
1.அவர்களுடன் உறவாடிய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அதன் துணை கொண்டு
2.அவர்கள் முகப்பிலே (உயிரிலே) சப்தரிஷி மண்டல உணர்வை இணைத்து எளிதில் விண்ணுக்குச் செலுத்தலாம்.

விஞ்ஞானிகள் இன்று கம்ப்யூட்டர் அலை வரிசையில் வைத்து ஒவ்வொரு கோளின் செயலாக்கங்களையும் உணர்கிறார்கள்… கவர்கிறார்கள்.

முதலில் படம் எடுக்கும் கருவியை ராக்கெட் மூலமாக அனுப்புகிறார்கள். அதன் மூலம் ஒவ்வொரு கோளின் திசையையும் எடுத்து அருகில் இருந்து அவைகளின் செயலாக்கங்களை உணர்கின்றார்கள்.

அதைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றார்கள். பதிவு செய்த பின் இந்த உணர்வின் துணை கொண்டு ஒரு செயற்கைக் கோளை அங்கே அனுப்புகிறார்கள்.

முதலில் அந்தக் கோளின் உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். மாற்றிய அந்த உணர்வை இணைத்துச் செயற்கைக் கோளை அங்கே கொண்டு போகின்றார்கள்.

1.கம்ப்யூட்டரில் பதிவு செய்த நிலை கொண்டு
2.அங்கே மோதலில் தன் இனமான உணர்வுகள் வந்தவுடனே
3.செயற்கைக் கோளைத் திசை திருப்பி அந்த கோளுக்கு அழைத்துச் செல்கின்றது.

கோளுக்கு அழைத்துச் செல்லும் போது அந்த வட்டப் பாதையை நிர்ணயிக்கின்றார்கள். கோளுக்குள் விழுந்து விடாதபடி அந்த சுழற்சியின் வட்டப் பாதையில் ஈர்க்கும் தன்மை வரும் போது இதைச் சுழலும்படி செய்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதை எல்லாம் இங்கே தரையில் இருந்து விஞ்ஞான அறிவால் செயல்படுத்துகிறார்கள்.

அதே போல் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் உந்திச் செலுத்தும் பொழுது நேராகச் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றது.
2.அங்கே இணைந்த பின் உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகிறது.. பொசுக்கி விடுகிறது.
3.ஏனென்றால் சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கியவர்கள்.
4.அப்பொழுது உயிருடன் ஒன்றிய நிலைத்த அறிவாக நம் முன்னோர்கள் அந்தச் சப்தரிஷி ஒளி வட்டத்தில் சுழல ஆரம்பித்து விடுகிறார்கள்.

உதாரணமாக… கணவனைப் பிரிந்த மனைவியின் உயிரான்மாவைக் கூட்டுத் தியானத்தின் மூலமாக எல்லோரும் சேர்ந்து அங்கே விண் செலுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

கணவனும் தன் மனைவியின் உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணுதல் வேண்டும். அப்பொழுது மனைவியின் ஆன்மா அங்கே செல்கிறது.

மனைவி சப்தரிஷி மண்டலத்துடன் முதலில் இணையும் போது அடுத்து கணவனும் உடலை விட்டுப் பிரியும் சமயம் சப்தரிஷி மண்டலத்தை எண்ணினால்… தன்னிச்சையாக (AUTOMATIC) அங்கே இழுத்துக் கொண்டு போய்விடும்.

இந்த உணர்வை எல்லாம் பெருக்குவதற்கு… அந்தப் பதிவு இல்லை என்றால் யாரையும் நாம் அங்கே அனுப்பவும் முடியாது. நாம் விண் செல்லவும் முடியாது.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி செய்தால் உடலை விட்டுப் பிரிந்தால் தன்னிச்சையாக (AUTOMATIC) அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் போய் இணையும்.

(ஏனென்றால் ஒரு நண்பனிடத்தில் மிகுந்த பாசமாக இருக்கிறோம். எனக்கு இப்படி நன்மை செய்தான். அவனை விட்டு விட்டுப் போகிறோமே என்று எண்ணினால் வேறு எங்கேயும் அந்த ஆன்மா போகாது. நேராக நம் உடலுக்குள் தான் வரும். இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்)

முந்தி நாம் யாரையும் விண் செலுத்தவில்லை. அந்தப் பழக்கத்தை விட்டு விட்டோம். இப்போது குருநாதர் காட்டிய வழியில் அந்த ஞானிகள் கண்ட வழியை உங்களிடம் தொடரச் செய்கிறோம்.

மனிதனான பின் பிறவியில்லா நிலை அடைந்தவர்கள் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று பொருள். சப்தரிஷி மண்டலத்தில் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் எத்தனையோ கோடி உண்டு.
1.ஏனென்றால் அவர்கள் ஒளியின் சரீரமாகி
2.என்றும் பதினாறு என்ற நிலை அடைந்து பல நூறாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது,

இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற மண்டலங்களுடன் இணைந்து அதில் வரும் உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றதால் “என்றுமே… எங்கேயுமே… அழியாத நிலைகள் கொண்டு வாழ்கிறார்கள்…!

அவர்கள் வாழும் எல்லைக்கு நாம் இப்போது பலரை அனுப்புகிறோம். அடுத்து நாம் இந்த உடலை விட்டுப் போனவுடனே யாருடைய தயவும் தேவையில்லை. அங்கே போய்விடுகிறது.

ஆகவே தினசரி காலை துருவ தியானத்தில் நம் முன்னோர்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்

 

திருச்சபையின் ஆயுள் மெம்பராக நாம் சேர்ந்திருக்கின்றோம்.
1.குருதேவர் துருவ நட்சத்திரத்துடன் ஈர்ப்பு வட்ட்த்தில் அவர் ஆயுள் மெம்பராக இருக்கின்றார்.
2.அதன் வழி வளர்ச்சி பெற்று இன்றும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
3.அவர் காட்டிய அருள் வழியில் நான் அவருடன் ஆயுள் மெம்பராக இணைந்து இருக்கின்றேன்.
4.அது போல் நாம் அனைவரும் குரு வழியில் அங்கே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைந்திருக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் என்பதே பல மனிதர்களுடன் ஒன்றி… உணர்வின் தன்மை தெளிவாக்கித் தெளிந்த உணர்வுடன் ஒன்றி… ஒன்றிய நிலைகள் கொண்டு “எல்லோருடைய உணர்வும் பகைமையற்ற உணர்வு கொண்டு…” ஒளிச் சரீரம் பெற்றது.

பலவிதமான பல கோடிக்கணக்கான நச்சுத்தன்மைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம் வாழ்ந்து வருகின்றது.

மனிதரான பின் பிறவி இல்லாத நிலை அடைவதே கடைசி நிலை.

அதாவது இந்த உடலில் கோடிக் கரையில் இருக்கின்றோம். தனுசுக்கோடி… இராமேஸ்வரத்தில் இராமன் நேரமாகி விட்டது என்று எண்ணி மனதைக் குவித்து அவர் பூஜிக்கத் தொடங்குகின்றார்.

1.ஏனென்றால் இந்த மனித உடலில் ரொம்ப நாள் நாம் நீடித்து இருப்பதில்லை.
2.அதற்குள் எல்லோருடைய எண்ணங்களையும் ஒன்றாக்கி புவியின் ஈர்ப்பிற்குள் மற்றவர்கள் நம்மை இழுத்து விடாது
3.பேரருள் என்ற உணர்வின் தன்மை எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நமக்குள் அதை ஒன்றாக்க வேண்டும்.

அருள் உணர்வுகள் மற்றவர்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அந்த உணர்வு தான் அங்கே கிடைக்கின்றது.
2.நம் மீது அவருக்குப் பற்று வருவதில்லை.

இப்படி ஒவ்வொரு மனிதனும் நாம் செயல்படுத்தும் போது கடைசி நிலையில்… நாம் துருவ நட்சத்திரத்துடன் ஐக்கியமாகின்றோம்.

ஆனால் என் குடும்பம் இப்படி இருக்கின்றது… பிள்ளைகளுக்கு நாளை என்ன செய்வேன்…? என்ற எண்ணம் வந்தால் புவியின் பற்று வந்து விடுகின்றது. இங்கே யார் மீது பற்று கொண்டுள்ளோமோ அவர் உடலுக்குள் தான் செல்ல நேரும்.

அவர் உடலுக்குள் சேர்ந்து தன் உடலில் ஏற்கனவே சேர்த்துக் கொண்ட உணர்வுகளை அங்கே பாய்ச்சி அந்த உடலையும் வீழ்த்திவிட்டு மனிதனல்லாத உடலுக்குள் தான் அடுத்து செல்ல முடியும்.

ஆனால் இந்த உயிர் என்றுமே நிலையானது. தீயிலே மனிதன் குதித்தால் உயிர் வேகாது. உடல் கருகும். அந்த நெருப்பின் தன்மை கொண்டு கருகிய உணர்வு தான் எல்லா அணுக்களிலும் பெருகும்.

1.உடல் கருகி இந்த உயிரான்மா வெளியே சென்றால் அடுத்து ஏரி பூச்சியாகத் தான் பிறக்கும்.
2.ஏனென்றால் எல்லா சிந்தனைகளும் எரிந்தது… கருகிய உணர்வுக்கொப்ப அத்தகைய பூச்சியாக மாறுகின்றது.

மனித உடல் மீது இந்தப் பூச்சி பட்டால் சூடு போட்டது மாதிரி ஆகிவிடும். தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாம் இப்படித்தான் ஏரி பூச்சியாக மாறுகின்றார்கள்.

இதிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் செல்ல வேண்டும்.
1.அவர் பேரருளைப் பெற்றார்… நமக்கு அந்த பேரருள் பெறும் முறையைக் கொடுத்தார்.
2.என்னை எப்பொழுதுமே அந்த துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராகச் சேர்ந்து விடு என்றார்.
3.அதே வழியில் தான் உங்களையும் அங்கே இணைத்து நாம் அதன் வழியில் “துருவ நட்சத்திரத்தின் கிளைகளாக இருக்கின்றோம்…”

பற்றும் பாசமும் கொண்டு அது வரும் பொழுது அவர்களுக்கு இதை உபதேசிப்பதும்… அதை ஏற்றுக் கொள்ளச் செய்வதும்… ஏற்றுக் கொண்டவருக்கு அந்த அருள் உணர்வுகளைக் கொடுப்பதும் என்று செயல்படுத்தி வருகிறோம்..

பேருக்கு ஆயுள் மெம்பர் என்று சொல்லிக் கொள்வதில் பிரயோஜனம் இல்லை.
1.ஆயுள் மெம்பராக இருப்பவர்கள் அனைவருமே குடும்பத்தில் ஒவ்வொரு நொடியிலும் ஒன்றுபட்டு வாழும் உணர்வைச் சேர்த்து பழக வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நொடியிலும் நாம் ஒவ்வொருவரும் எண்ணிய எண்ணங்களையும் பேசிய உணர்வலைகளையும் வெளிப்படுத்தும் மூச்சலைகளும் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து (மின் காந்த அலைகள்) வைத்திருக்கின்றது. இங்கே நமக்கு முன்னாடி அலைகளாகப் பரவி உள்ளது.

அதே போல செடி கொடிகளிலிலிருந்து வெளிப்படும் சத்துக்களையும் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துள்ளது. அந்தந்தச் செடியில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் தன்மை கொண்டு மீண்டும் தன் சத்தை எடுத்துத் தன்னிச்சையாக அந்தச் செடிகள் வளரும்.

இதே மாதிரி நம் உடல்களிலும் எல்லாக் குணங்களின் சக்திகளும் இருக்கின்றது. சூரியனின் காந்த சக்தியும் அதைக் கவர்ந்து வைத்திருக்கின்றது,

உதாரணமாக ஒரு வேதனைப்படும் உணர்வு நமக்குள் வந்து வித்தாகி விட்டால்
1.உடனே அந்த உணர்ச்சியைத் தூண்டும்.
2.அது (வித்து) எல்லாம் நம் இரத்த நாளங்களில் தான் குடி கொண்டு இருக்கும்.
3.எப்படி இந்தக் காற்று மண்டலத்திலிருந்து செடி கொடிகள் அதனதன் சத்தை எடுக்கின்றதோ
4.அதே போல நம் உடலிலிருந்து நுகரும் பொழுது அந்த உணர்வின் அலைகள் நமக்குள் வருகின்றது.
5.உடலுக்குள் வந்த பின் 48 நாளுக்குள் கருவாகி முட்டையாகி வெடித்து… “அணுவாக” முழுமை அடைந்து விடுகின்றது.

நம் உடல் முழுவதும் அந்த அணு சுற்றப்படும் பொழுது அந்தந்த உறுப்புகளில் போய் ஒட்டிக் கொள்கின்றது. அணுவான பின் தன் உணர்ச்சியைத் தூண்டுகிறது.
1.இரத்தத்தின் வழி கூடி நம் சிறு மூளைக்கு அந்த உணர்ச்சிகள் எட்டுகின்றது.
2.தன் பசிக்குச் சாப்பாடு கேட்கின்றது….!

அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் நம் உயிர் என்ன செய்யும்…? சும்மாவா இருக்கும்…!
1.நம் கண் காது மூக்குக்கு ஆணையிடும்.
2.எந்த மனித உடலிலிருந்து விளைந்து வந்ததோ அதை இங்கே இழுக்கும்.

சுவாசித்து நம் உயிரிலே பட்ட பின் அந்த மனிதனின் எண்ணங்கள் நமக்குள் வரும்.
1.பாவிப் பயல்.. எனக்கு இப்படிச் செய்கின்றானே…! என்று நாம் எண்ணுவோம்.
2.இப்படிச் செய்கின்றானே..! என்று எண்ணும் பொழுது அதே உணர்வு நமக்குள் வந்து அதையே நாம் வளர்க்கின்றோம்.

அதாவது அவர்கள் நமக்கு என்னென்ன சொன்னார்களோ… உதாரணமாக “வியாபாரம் கெடும்…!” என்று சொல்லியிருந்தால் அது அப்படியே வரும்.

நம் பையனையே வைத்துக் கொள்ளுங்கள். அவன் தவறு செய்யும் நிலையில் “இப்படிச் செய்கின்றானே…!” என்று எண்ணி வேதனைபபடுகின்றோம்.

நம் உடலில் வேதனையின் உணர்வின் அணுக்களாகின்றது. அந்த வேதனை உணர்வுகள் நம் உடலாக மாறுகின்றது.

இதை நினைத்துவிட்டு ஒரு நல்ல காரியத்திற்குப் போனால் என்ன ஆகும்…? எந்த வேலையாக இருந்தாலும் எதிரியாகிவிடும். வேதனை உணர்வை நுகர்ந்து விட்டால் சரியாக இயங்காது.

அதனால் நாம் தொழில் செய்யும் இடத்தில் பகைமை வந்துவிடுகின்றது. வியாபாரம் செய்தாலும் இந்த வேதனை வரும். நாம் சொல்வதைக் கேட்டால் உடனே “சரக்கை வேண்டாம்…!” என்று சொல்லி விடுவார்கள்.

இதெல்லாம் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிலைகள். இதை மாற்ற வேண்டும் அல்லவா…! அதற்காகத்தான்
1.காலையில் கண் விழித்தவுடன்…
2.இந்தத் துருவ தியானத்தைச் செய்யுங்கள் என்று முக்கியமாகச் சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா..! என்று ஒரு ஐந்து அல்லது ஆறு தடவை சர்க்குலேசன் போன்று தலையிலிருந்து கால் வரை உடலுக்குள் செலுத்தி நம் ஆத்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். பெற்று எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதே போல் இருவரும் சேர்ந்து அந்தச் சக்தி எங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்று அவசியம் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் நம்முடைய முன்னோர்களையும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இபப்டிச் செய்து வந்தால்
1.வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம் நினைவுகள் மகரிஷிகளின் பால் அங்கே செல்கிறது.
2.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே இணைந்து வாழ்கின்றோம்.
3.மெய் ஞானிகளின் உணர்வுகள் அதீதமாக நமக்குள் வளர்கின்றது.
4.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுகின்றோம்…!

துருவ நட்சத்திரமாக… அந்த ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்

 

எல்லாவற்றையும் உருவாக்கிய.. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளினால் தான் இயற்கையின் உண்மைகளை எல்லாம் நான் அறிந்து கொண்டேன்.

ஆகவே…
1.நாம் எல்லோரும் துருவ நட்சத்திரமாக மாற வேண்டும்… அந்த ஒளியின் உணர்வாக மாற வேண்டும்.
2.இந்தச் சொல் பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும். அந்த அருள் உணர்வுகளை நாம் பெறுவோம்.
3.குருதேவரை நினைத்து துருவ நட்சத்திரத்தை நினைத்து நாம் இந்த வாழ்க்கையைக் கொண்டு சென்றோம் என்றால்
4.என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்கிறோம்… இருளை அகற்றும் சக்தி பெறுகின்றோம்.
5.நாம் இருக்கும் இடங்களில் நல்ல மழையைப் பெய்யச் செய்யலாம்.
6.கொடிய நோய்களையும் நாம் வாழும் இடங்களில் வராது தடுக்க முடியும்.
7.எத்தனையோ வகையான மற்ற தீமைகளை அகற்றும் சக்தி நாம் பெறுகின்றோம்.

பகைமை வந்தால் அதை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும். ஊரில் இருப்பவர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். பகைமையற்ற நிலைகள் வரவேண்டும்.

1.எல்லா உயிரும் கடவுள்
2.எல்லா உடலும் கோவில்
3.எல்லா உடலும் சிவம்
4.எல்லோருடைய கண்களும் கண்ணன்
5.எண்ணும் எண்ணம் இராமன்.
6.அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் நமக்குள் தோன்ற வேண்டும்.

எண்ணங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் உணர்வாக வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம் வளர்வோம். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைவோம் என்ற “இந்த உறுதியை எடுத்துக் கொள்வோம்…”

அந்த அருள் பெற வேண்டும் என்று வாழ்வோம். அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம் குரு வழி வாழ்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பெறுவோம்.

அதன் வழி எல்லாம் ஒளி என்ற உணர்வுடன் ஒன்றுவோம். துருவ நட்சத்திரமாக ஆவோம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலங்களாக வளர்வோம். ஒன்றுடன் ஒன்று… ஒன்று துணையாகித்தான் ஒன்றின் நிலை வளர்கின்றது.

விஜயதசமி…! விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்த உயிர் பத்தாம் நிலை அடையக்கூடிய ஒளியின் சரீரமாகும். ஆகவே அருள் ஒளியைப் பெற்று என்றுமே நாம் பிறவில்லா நிலை அடைய பிரார்த்திப்போம். பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளியை நாம் அடைவோம்

1.உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்திற்கே இப்பொழுது அழைத்துச் சென்றது.
2.இந்த உணர்வை நீங்கள் அனைவரும் பெருக்கிக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் சூரியக் குடும்பத்தில் ஞானத்தில் பகுத்தறிவைப் பண்படுத்தும் மனிதத் தன்மை எப்படிச் செயல் கொள்கின்றதோ அதைப் போன்ற நிலை ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் உண்டு.

நம் பூமியில் ஞானமும் விஞ்ஞானமும் வளர்ந்துள்ளதைப் போன்று மற்ற சூரியக் குடும்பத்தில் நமக்கு மேல் வளர்த்த ஞானத்தின் அலை நிலையின் தொடர்பை நம் பூமியிலும் “ரிஷிச் சக்திகள்” தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளார்கள்.

1.சூட்சமத்தின் இயக்கத்தின் கதி….!
2.அனைத்துக் கோள்களின் தொடர்பிலும் சுழன்று கொண்டேயுள்ள நிலையில்
3.“நான் என்பது யார்…?” என்ற உண்மையை உணர்ந்தோமானால்
4.நம் உயிரையும் ஆன்மாவையும் இணையத் தக்க ஒளித் தன்மையின் தொடர்பை நாம் பெறலாம்.

உடல் என்ற ஜீவ காந்த சரீர இயக்கத்தின் துணை கொண்டு… ரிஷிகளின் தன்மை வளர்ந்ததைப் போன்று…
1.சரீர இயக்கத்தின் வாழ்க்கையை
2.ஆத்மாவின் இயக்க வாழ்க்கையாக உணரும் தன்மையால்
3.ஆத்மாவும் உயிரும்… இந்த உடலை இயக்கக்கூடிய… நம் எண்ணத்தை ஆளக்கூடிய ஆட்சியாக
4.தன்னைத் தான் உணரல் வேண்டும்.

தன்னைத் தான் உணரும் சக்தியால் தன் சக்தியைக் கொண்டு ரிஷிகளின் சக்தியுடன் நம் ஆத்மாவின் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

ரிஷிகளின் சக்திக்கும் நம் சக்திக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் முறைதான் இந்தத் தியான முறை. ரிஷிகளின் சக்தி அனைத்தும் பால்வெளி மண்டலத்தில் (பரம்பொருளாக) படர்ந்துள்ள செயலில் எல்லோருக்கும் கிடைக்கும்படியாகத்தான் படரவிட்டுள்ளார்ககள்.

அத்தகைய மாமகரிஷிகள் தன் தன் இயக்கத்திற்கொப்ப… தன் வளர்ச்சிக்கொப்ப வலுவை வலுக் கூட்டிக் கொள்வதற்காக… தன் குணத்தை… மணத்தை… ஒளித் தன்மையில் நட்சத்திர ஒளியாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் எண்ணிலடங்காத நிலையில் இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சியில் சுழன்று கொண்டே உள்ளனர்.

அந்தச் சுழற்சியின் கதியின் இயக்கத்தைச் செயல்படுத்தக்கூடிய வளர்ச்சிக்கு அறிவின் ஞானத்தை எடுக்கவல்ல எண்ணம் கொண்ட மனிதர்களை எல்லாம் தன் வலுவின் தொடரில் ஈர்க்கின்றார்கள்.

1.அத்தகைய மெய் ஞான வித்து ஓங்கி வளரத்தான்
2.தெய்வ குணங்களும் தெய்வ சக்தியும் இன்றும் சூட்சம கதியில் செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.
3.மலர் விரிந்து மணம் பரப்பி எப்படிக் காற்று மண்டலத்தை இனிமையாக்குகின்றதோ
4.அதைப் போன்று இன்றும் ரிஷி சக்திகளின் செயல் செயல்பட்டுக் கொண்டே தான் உள்ளது. (அருள் மணங்களாக)

தெய்வ குணத்தையும் தெய்வ சக்தியையும் வளர்க்கக்கூடிய மெய் ஞானிகளின் சிந்தனையால் தன் அறிவின் வளர்ச்சியைச் சூட்சமத்தின் துணை கொண்டு மேலோங்கி வளர்த்ததின் தொடரில் தான் இன்றைய உலகில் இருக்கும் மருத்துவம் விஞ்ஞானம் எல்லாமே வளர்ந்தது.

இருந்தாலும் இன்று மக்கள் தொகையின் பெருக்கத்தைப் போன்றே மனித அறிவின் பெருக்கமும் “ரிஷிகளின் சிந்தனை சக்தியுடன் தொடர்பு கொண்டு…!” தன்னை உணர்ந்து ஆத்ம பலம் பெற்றிருந்தார்கள் என்றால் இந்தப் பூமியில் உள்ள மனிதனின் சிந்தனைகள் வேதனை பயம் கோபம் குரோதம் அச்சம் என்ற விபரீத வினையினால் வரக்கூடிய பல கொடிய வியாதிகளினாலும் கொடிய விபத்துக்களினால் வேதனைப்பட்டு இறக்கும் நிலையிலிருந்து தப்பியிருக்கலாம்.

1.ஏனென்றால் இன்று ரிஷிகளின் அலையைக் காட்டிலும்
2.வேதனை ஒலி கொண்ட ஆவி உலக ஆத்மாக்களின் அலைத் தொடர் அதிகமாக மனிதனைச் சாடிக் கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து விடுபடும் நிலையாக யாம் சொல்லக்கூடிய தியான முறையின் தொடர்பில் ரிஷிகள் வழி காட்டிய துருவ மகரிஷியையும் சப்தரிஷி மண்டலத்தை இயக்கும் துருவ நட்சத்திரத்தினையும் எண்ணி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தைப் புருவ மத்தியின் வழியாக எண்ணித் தியானம் எடுக்கும் பொழுது
1.நம் எண்ணத்தின் ஒலி செலுத்தக்கூடிய தொடரில்
2.அந்தத் தொடரின் அமில ஒலியின் உயிர் ஒளித் தொடர்பு ஜீவ உயிர் காந்த சுழற்சியில்
3.நம் ஆத்மாவில் ரிஷிகளின் தொடர்பலைகள் ஈர்க்கப்பட்டு
4.அவ்வாறு அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் தியானத்தின் சிந்தனை சக்தியால் (அதனால் தான் மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று சொல்கிறோம்)
5.இந்தப் பூமியின் பிடிப்பலையிலிருந்து நம் ஆத்மாவை ரிஷிகளின் சக்தியுடன் இணைத்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட தியானத்தின் மூலம் ரிஷிகளின் தொடர்பில் நம் ஆத்மாவும் கலக்கும் பொழுது
1.அந்த இறைத் தன்மை கொண்டோரின் இறைக்கு நாம் உட்படுத்தப்பட்டு
2.நம் ஆத்மாவும் தெய்வ நிலை பெறும்.
3.பிறப்பின் பலனை ஒவ்வொரு உயிராத்மாவும் பெறும்.

தியானிக்கும் பொழுது என் நெற்றியைப் பார்க்கச் சொன்னதன் நோக்கம்

 

குரு காட்டிய அருள் வழியில் என் உயிரான ஈசனிடம் வேண்டி என் குரு காட்டிய அருள் உணர்வை நான் ஏங்கிப் பெறுகின்றேன்.
1.அந்த அருள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நீங்கள் உங்கள் உயிரை வேண்டும் பொழுது
2.கண்ணின் வழி குரு காட்டிய அருள் வழியில் “அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைக்கச் செய்கின்றேன்…”

குரு எனக்கு அதன் வழி தான் காட்டிக் கொண்டு வந்தார். அதன் வழியே உங்களுக்கும் குரு வழியைக் காட்டி அந்த உணர்வினை எடுக்கும்படி செய்வதற்காக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இப்பொழுது என்னுடைய நெற்றியில் புருவ மத்தியைப் பாருங்கள்…! அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அப்படியே உற்றுப் பாருங்கள்.

குரு காட்டிய அருள் வழியில் அவர் அருள் வழி காட்டிய அகஸ்தியனுடைய அருளும் அவன் துருவனான அந்த அருள் உணர்வும் துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும்
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று என் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கின்றேன்.
2.அதன் வழி நீங்கள் ஏங்கும்போது அந்த உணர்வுகள் அந்த அலைகள் இங்கே வந்து
3.உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவி பேரருளைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

நாம் அதிலே ஆயுள் கால மெம்பராக இணைகின்றோம். இதிலிருந்து உறுதி பூண்டு யாம் உபதேசித்த உணர்வின் வழிப்படி வாழ்க்கையில் வழி நடத்துகின்றேன். அந்த வழி நடத்தும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அதே உணர்வு கொண்டு கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் எண்ணி உற்றுப் பாருங்கள்… அதை ஏங்கிப் பெறுங்கள்.

உங்களுக்கு… உங்கள் உயிரான ஈசனிடம் நான் வேண்டி…
1.ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அந்த அருள் உணர்வுகள் படர வேண்டும்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் படர வேண்டும்
3.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
4.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
5.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
6.உங்கள் உடலில் அந்த அருள் சக்தி படர வேண்டும் என்று உங்களைத் தியானிக்கின்றேன்.

நீங்களும் அதன் வழி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அந்த அருள் உணர்வுகள் நீங்கள் பெறுவதை உணர முடியும் உங்கள் உடலில் அது ஒளியலைகளாகப் பரவுவதையும் உணரலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் ஞானத்தைப் பெறக்கூடியதைத்தான் “அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை..! என்று
1.நான் யாரிடமும் யாசிக்கவில்லை…
2.நான் யாருக்கும் இல்லை என்று சொல்லக்கூடாது…! என்று இராமலிங்க அடிகள் இந்தப் பாடலைப் பாடுகின்றார்கள்.

அருள் ஒளியின் உணர்வைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது நமக்குள் ஒளியாக மாறுகின்றது. மற்றவர்கள் கேட்கும் பொழுது… “இல்லை” என்ற நிலை வராதபடி அந்த அருள் ஒளி அவர்களுக்குள்ளும் படர்கின்றது.

1.நீ அன்பையே சிவமாக்கு…! என்று அவர் சொன்னார்.
2.அந்த அரவணைக்கும் உணர்வுகள் அன்பாகி இந்த உடலாகச் சிவமாக்கு.
3.எல்லாவற்றையும் நீ அரவணைத்துக் கொள்…!
4.இந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை உனக்குள் மகிழ்ச்சியூட்டும் ஒளியாகும் என்ற
5.இந்த உணர்வின் தன்மையைத் தான் அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை என்றார்.

மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சந்தோஷத்தை உருவாக்கி விட்டால் எனக்குள் இருள் வருமோ…? வராது…! “இருண்ட நிலைகளிலிருந்து மீள வேண்டும்…” என்ற உணர்வுகளுக்காக இராமலிங்க அடிகள் அதைச் சொல்கிறார்.

அப்பொழுது அந்த மகிழ்ச்சி என்ற உணர்வுகள் அருள் பெரும் ஜோதியாகி தனிப் பெரும் கருணையாகின்றது.
1.நான் எண்ணியதை நீ உருவாக்குகின்றாய்… கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேலே…! (கந்தவேல் யார்…?)
2.நம் உயிர் தான் அந்தக் கந்தவேல்.

கந்த… அதாவது பலவிதமான உணர்வுகள் கொண்ட கோட்டை இது. நம் உடல் என்ற கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அதாவது வேல் என்றால் கூர்மையானது.
1.பலவிதமான உணர்வுகள் சேர்த்து நம் உடல் கந்தக் கோட்டம்.
2.உயிருடன் ஒன்றி நாம் எண்ணப்படும் பொழுது
3.அந்தக் கூர்மையின் நிலைகளில் இயக்குகிறது என்பதைத்தான்
4.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே.. அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை…! என்றார் இராமலிங்க அடிகள்.

அங்கே கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்து கூர்மையாக… உணர்வின் ஜொலிப்பாக… உணர்வின் கூர்மையாக… உணர்வின் தன்மையை அறியச் செய்கின்றாய்…! நீ ஒவ்வொன்றையும் எனக்குள் ஒளியாக நின்று உணர்த்துகின்றாய்… அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய்…! என்று தன் உயிரிடம் தான் ஏங்குகின்றார்.

கந்தக் கோட்டம் என்று இந்த உடலுக்குள் இயங்கும் உயிரைப் பற்றித் தான் இராமலிங்க அடிகள் சொன்னார்.
1.இருளை அகற்ற வேண்டும்
2.ஜோதியாகப் பேரொளியாக ஆக வேண்டும் என்ற பொருள்படும்படியாகச் சொன்னார்.


நம்மை வேகா நிலை பெறச் செய்யும் “சமைக்கும் பக்குவம்”

 

விறகுக் கட்டை இருக்கின்றது… அதை எரித்தால் வெளிச்சமாக ஒளியாகத் தான் மாறுகின்றது… அது நன்மை செய்கின்றது.

அதைப் போல் தீமை என்ற உணர்வுகள் வந்தாலும் அருள் ஒளியை நாம் எடுத்து அதனுடன் இணைக்க வேண்டும்.
1.ஏனென்றால் ஒளியாகத் தொக்கி உள்ளதுதான்… அதை இயக்குகின்றது.
2.அருள் ஒளியைச் சேர்க்கப்படும் பொழுது ஒளி என்ற நிலையில் மாறுகின்றது.

கட்டையை எரித்தால் கருகுகிறது… ஆனால் வெளிச்சம் கொடுக்கின்றது… ஒன்றைச் சமைக்க உதவுகின்றது. இதை போலத் தான்
1.வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் கதிரியக்கப் பொறியின் உணர்வால் தான் இயக்குகின்றது.
2.அருள் ஒளியின் உணர்வை அதற்குள் சேர்த்து நல்ல முறையில் இயக்கப்படும் பொழுது கருகிய உணர்வை நீக்கிவிடும்.
3.நமக்குச் சமைக்கும் பக்குவமும் அந்த வெப்பமும் அந்த வலிமையும் கிடைக்கும்.

இதையெல்லாம் உங்களிடம் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதைச் செய்து பழக வேண்டும்.

யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்தை உற்று பார்த்துத் தியானித்தால் அதிலிருந்து ஒளிகள் வரும்… நல்ல சிந்தனைகளைத் தூண்டும்… உங்களுக்கு வழி காட்டும்.

ஆனால் அதிலே உங்கள் ஆசையைக் கூட்டி விடாதீர்கள். உடல் ஆசையைக் கூட்ட வேண்டாம். துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஆசையை மட்டும் கூட்டுங்கள்.

அருள் உணர்வுகள் பெற வேண்டும் என் செயல் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாழ்க்கை நல்லதாக இருக்க வேண்டும் என் சொல் எல்லோரையும் நல்லதாக்க வேண்டும் என்று இதை மட்டும் கூட்டுங்கள். நல்ல உணர்வைக் கொண்டு வரும்.

வேதனையை எண்ணாதீர்கள்.
1.என் குடும்பத்தில் உள்ள அனைவரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் எந்த எண்ணுங்கள்.
2.என் மனைவி அருள் உணர்வுகள் பெற்றுத் தெளிந்த நிலை பெற வேண்டும்.
3.அதன் பார்வை என்னைத் தெளிவாக்க வேண்டும் என்று இப்படி இணைத்து வாருங்கள்.
4.உங்களைப் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும்.
5.ஆகவே உயிருடன் ஒன்றுகின்றோம் இருளை அகற்றுகின்றோம் ஒளியான உணர்வாக வளர்கின்றோம்.
6.நம்முடைய ஆயுள் காலம் என்றுமே அழியாத துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் நிலை வருகின்றது.

நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்க்கப்படும் போது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்… அந்த அருளைப் பெறுகின்றீர்கள் எல்லோருக்கும் பாய்ச்சுகின்றீர்கள். அதே போல் நான் உங்களுக்குப் பாய்ச்சுகின்றேன்.

இந்த உணர்வு ஒன்றாகும் பொழுது ஒளியின் வலு கூடுகிறது. இருளை அகற்றும் வலிமை பெறும். என்றும் அழியா ஒளி சக்தியை நாம் பெறுகின்றோம். அந்த நிலையை நாம் அனைவரும் அடைதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல கோடிச் சரீரங்களில் தீமையை உணர்ந்து உணர்ந்து அதிலே பரிணாம வளர்ச்சி ஆகி
1.தீமையிலிருந்து விடுபட்ட உணர்வுகள்
2.தீமையிலிருந்து விடுபடும் அனைத்தையும் அறிந்திடும் அறிவாக தனக்குள் தீமை வராது சேனாதிபதியாக
3.ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று இந்த மனித உடலில் இருக்கின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்த நஞ்சுகளை மலமாக மாற்றும் நிலையைச் சரவணபவா… தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக கந்தா… பலவற்றையும் அறிந்து கடம்பா… உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா என்று ஆறாவது அறிவின் இயல்பைக் காட்டுகின்றார்கள்.

கோபப்படுபவரை சலிப்புப்படுபவரை என்று பலவிதமான உணர்வுகளை ஒவ்வொரு நாம் நுகர்கின்றோம். வருவதை எல்லாம் அரவணைத்துக் கொள்கிறோம் அல்லவா…!

கந்தா.. கடம்பா…! நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குகின்றான் கார்த்திகேயா. ஏனென்றால் நமக்குள் இதெல்லாம் எப்படி உருவாகிறது…? என்று தெரிந்து கொள்கின்றான்.

தீமைகளை வெல்லும் சக்தியான ஆறாவது அறிவு கார்த்திகேயா… சேனாதிபதி…! தீமை வந்தால் அதை நீக்கிடும் நிலையைக் கொண்டு வருகின்றது.

ஆனால் ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் அவனை அழிக்க வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தோம் என்றால் ஓ…ம் நமச்சிவாய…! நம் உடலை அழிக்கும் “அணுவாக” இங்கே நுழைந்து விடுகின்றது.
1.அவனை அழிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அழித்திடும் உணர்வின் தன்மை இங்கே வருகின்றது.
3.அவனைக் கொல்ல வேண்டும் என்று எண்ணினோம். நம் நல்ல எண்ணத்தை அது கொல்லும்.
4.கொல்ல வேண்டும் என்ற உணர்ச்சியைத் தூண்டும்.. அடுத்து அவனைக் கொல்லும்.
5.அவனைக் கொன்று ரசிக்கும்…. ரசிக்கும் உணர்வுகள் இங்கே வந்த பிற்பாடு
6.உடலுக்குள் கிருமிகளாக உருவாகி டி.பி நோயாக உருவாகும்… நம்மையும் கொல்லும்…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

இவனிடம் இருப்பது வேதனை. இதை முதலில் அடக்க வேண்டும். வேதனை என்ற நஞ்சை அடக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்த்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க அந்த நஞ்சுகள் ஒடுங்கும். ஏனென்றால் இதைப் போன்ற நஞ்சினை வென்றவர்கள் அந்த மகரிஷிகள். இதை எண்ணி நமக்குள் எடுத்துக் கொண்டால் நாம் எண்ணியதை உருவாக்குவது உயிர்.

இதைத்தான் ஒவ்வொருவரையும் ஆலயங்களில் எண்ணி எடுக்கும்படி சொல்கிறார்கள் ஞானிகள்.
1. ஆலயத்திற்குச் செல்வோர் அவர் அருளைப் பெற்று
2.மற்றவர்கள் எல்லாம் நலமாக வேண்டும் என்ற எண்ணம் இங்கே தோன்றுகிறதா என்றால் இல்லை…!

நான் தவறு செய்தேன்… கொலை செய்தேன்… கொள்ளை அடிக்கிறேன்…! என்பவனும் ஆடு கோழி மாட்டை அறுப்பவனும் கோவிலுக்குள் போகின்றான். உண்டியலில் காணிக்கையைப் போட்டு விட்டு என்னைக் காப்பாற்றுடா…! என்று வேண்டுகின்றான்.

நான் தவறு செய்கின்றேன். நான் செய்யும் தவறுக்கு அவன் உதவி செய்யவில்லை. அதனால் அவனுக்கு இடைஞ்சல் செய்தேன்… எனக்கு ஒத்து வரவில்லை அதனால் அவனைக் கொன்றேன்.

இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு செய்த பாவத்திற்காக வேண்டிக் கோவிலில் அபிஷேகம் செய்து ஆராதனை செய்து என்னைக் காப்பாற்றுடா..! என்று சொன்னால் யாரும் காக்க முடியாது. அவன் எப்படிக் காப்பான்…?

“கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேலே…! அருள் பெரும் ஜோதி நீ… தனிப் பெரும் கருணை…!” எதனையுமே நீ அருள் பெரும் ஜோதியாக இயக்குகின்றாய். தனிப் பெரும் கருணையாக எனக்குள் உருவாக்குகின்றாய் என்று இராமலிங்க அடிகள் பாடினார்.

நாம் எண்ணியதைத்தான் உயிர் இங்கே கொடுக்கின்றது. நான் யாரிடமும் யாசிக்கக் கூடாது… யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது. அந்த அருள் தாகத்துடன் வருபவருக்கு அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று வேண்டினார் அடிகளார்.

யாரிடமும் யாசகம் வாங்க மாட்டேன் என்று சொன்னவுடனே “சாப்பாடு போடுவதற்கு வந்து விட்டோம்…” சாப்பாடு போடுகிறோம் என்றால் எல்லோரும் தான் வருகின்றார்கள்.
1.ஆனால் அவர்கள் மனதைத் திருத்த முடிகின்றதா..?
2.உடல் பசியைப் போக்க முடிகின்றது… அருள் ஞானப் பசிக்கு உணவு கிடைக்கிறதா…? இல்லை…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) அந்த அருள் ஞானத்தைக் கொடுக்கின்றோம். ஏங்கி இருக்கக் கூடிய அணுக்களுக்கு அதைக் கொடுக்கின்றோம்.
1.மெய் ஞானத்தைப் பெறவேண்டும் என்பவர்கள் தான் இங்கே வருவார்கள்.
2.அந்தப் பசியைப் போக்கும் பொழுது அருள் ஒளியின் உணர்வு உங்களுக்குள் வளர்கின்றது.
3.அதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுகிறோம்…!

அப்பொழுது நான் யார்…? தான் யார்…? என்று நிச்சயமாக உணரலாம்…!

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் செயல்படுத்த வேண்டியது

 

எலக்ட்ரானிக் என்ற நிலைகளை வைத்திருக்கின்றார்கள்… நாம் அருகிலே சென்றவுடன் கதவு திறக்கின்றது. மனிதன் இவ்வாறு கொண்டு வருகின்றான்.

அதே போன்றுதான் வேதனை என்ற உணர்வு ஆன பிற்பாடு உடலுக்குள் சிக்கலை ஊட்டி விடுகின்றது. காரணம் நாம் நுகரும் உணர்வு தான் நம்மை இயக்குகின்றது… அந்த உணர்வுகள் அதிகமாகின்றது.

இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று விஞ்ஞானம் தெளிவாகக் கொடுக்கின்றது… நிரூபிக்கின்றது. ஆனால் மெய் ஞானிகள் காட்டியது…
1.பிறருடைய உணர்வுகளை வேகமாக எடுக்கப்படும் பொழுது
2.நம் நல்ல உணர்வுகளை உடைத்து விட்டு உள்ளே செல்வது போல் ஆகிவிடுகின்றது.

ஆகையினால் நாம் எங்கிருந்தாலும் இந்த உணர்வின் அழுத்தம்… “அந்தக் கோபம் நமக்குள் வராது தடுக்க என்ன செய்ய வேண்டும்…?”

மகரிஷிகளின் அருள் சக்திகளை அடிக்கடி நம் உடலுக்குள் சேர்த்து இணைக்கப் பழக வேண்டும். அப்போது மகரிஷிகள் உணர்வு சார்ஜ் அதிகமாகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. என் கணவருக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர் வேலை செய்யும் இடங்களிலே பேரும் புகழும் பெற வேண்டும்… நல்ல முறையில் அவர் வேலை செய்ய வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து வளர்க்க வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்தச் சார்ஜை அடிக்கடி ஏற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.இது பாதுகாக்கும் சக்தியாக வரும்.

ஏனென்றால் தியானம் என்பது ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான். துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்படிச் சேர்க்கும் பொழுது வாழ் நாளில் எல்லா அணுக்களுக்கும் சேர்க்கின்றோம்.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் போது தீமையிலிருந்து விடுபட்டுத் தான் வந்திருக்கின்றோம். மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில் தீமையெல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அந்தச் சக்தி காற்றில் இருக்கின்றது… அதை எடுத்து பயன்படுத்தி அந்த உணர்வை வளர்த்துக் கொண்டு வந்தோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைகின்றோம்.
2.மெம்பர்கள் வாழ்க்கையில் தன் குடும்பத்தில் இதைக் கடைப்பிடித்தாக வேண்டும்.

எத்தகைய தீமை வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கொண்டு அதை அடக்கி பையனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழிலிலே நஷ்டம் என்ற வார்த்தையை விடுத்துவிட வேண்டும். துருவ நட்சத்திரத்தை எண்ணினால் நல்ல சிந்தனை வரும்… எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற ஞானங்கள் வரும். அதற்குத் தக்க எண்ணங்கள் வரும்.

ஆனால் அடுத்தவரிடம் போய் என் தொழில் நஷ்டமாக இருக்கிறது…! என்று சொன்னால் அவர் ஒரு விதமாகச் சொல்வார் இன்னொருவர் இன்னொரு விதமாகச் சொல்வார்.

எல்லாவற்றையும் சேர்த்துக் குழப்பிவிட்டு “ஒன்றுமே தொழில் செய்ய முடியாது போல் இருக்கின்றது…” என்ற அந்த உணர்வு வந்து சோர்வடைந்து விடுவீர்கள். ஆக நம்மையே நாம் தாழ்த்திக் கொள்கின்றோம்.

1.கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
2.உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும்… சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்
3.தொழிலில் வீரிய சக்தி கிடைக்கும் அந்த ஞானம் கிடைக்க வேண்டும் என்று
4.காலை துருவ தியானத்தில் எடுத்து இதைப் பாய்ச்சிப் பாருங்கள்.

கணவர் மன வலிமை பெற வேண்டும்… அவருடைய எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும்… அனைவரும் போற்றும் நிலை பெற வேண்டும்… தொழில் செய்யும் இடங்களில் வாடிக்கையாளர்களும் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும்… உயர்ந்த பண்புகள் வளர வேண்டும் என்று மனைவி எண்ணிவிட்டால் “வேறு யாரிடம் யோசனை கேட்க வேண்டியதில்லை…”

நீங்கள் தொழிலுக்குச் செல்லுங்கள் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்… நல்ல சரக்கைத் தேர்ந்தெடுக்கும் சக்தி கிடைக்கும் வியாபாரம் பெருகும் என்று என்று மனைவி சொல்லி அனுப்ப வேண்டும்.

1.இத்தகைய நல்ல உணர்வுகளைக் கணவன் மனைவிக்குள் உருவாக்க வேண்டும்.
2.அதைச் செயலாக்கிப் பார்க்க வேண்டும்… நாம் வாழ்ந்து காட்ட வேண்டும்… மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இதையே மற்றவர்களிடம் இதன் வழி செயல்படுத்துங்கள் என்று சொல்ல வேண்டும்.
1.இந்த நல்ல உணர்வுகள் அங்கே விளைய வேண்டும்… அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.
2.அவர்கள் உடலில் விளையும் அந்த நல்ல மூச்சலைகள் இங்கே படர வேண்டும்.
3.நம் வீட்டில் மட்டுமல்ல… நாம் சொல்லும் உணர்வுகளை நுகர்வோர் குடும்பத்திலும் இது பரவி கஷ்டங்கள் அகல வேண்டும்.
4.நாம் வசிக்கும் தெருவிலும் நல்ல உணர்வுகள் படர வேண்டும்… ஒன்றுபட்டு வாழும் நிலை வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இதைச் சீராக செயல்படுத்துங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணில் செய்த விநாயகரை வைத்துத்தான் கும்பிடுகின்றோம். அதைப் பார்த்தால் அன்றைக்கு நல்லா கிராக்கியாக இருக்கும்.

மாலையைப் போடுகிறோம். ஆடம்பரப்படுத்துகின்றோம். வாழை மரத்தை வைக்கின்றோம். மஞ்சள் கும்பம் வைக்கின்றோம் இனிப்பை வைக்கின்றோம். கரும்பை வைக்கின்றோம்.

எல்லாவற்றையும் வைத்துச் சமைக்கின்றோம். பூஜை செய்கிறோம். ஆடுகிறோம் பாடுகிறோம். கடைசியில் அந்த விநாயகரைக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைக்கின்றோம்.

1.ஞானிகள் சொன்ன தத்துவம் வேறு… நாம் சொல்வது வேறு.
2.எல்லாம் கும்பிட்ட பின் களிமண்ணில் செய்த அந்த விநாயகரைக் கடலில் கொண்டு போய் கரைத்து விடுகிறோம்.
3.ஏன்.. எதற்கு… என்று சிந்திக்கின்றோமா…?

விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு அதிகாலையில் நாம் என்ன செய்ய வேண்டும்..?

துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய பேரருள் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக நம் பூமிக்குள் பரவச் செய்கின்றது.

காலையில் விழித்தவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். மனைவியும் தன் கணவருக்குப் பெற வேண்டும் என்று இந்த உணர்வை வலுப் பெறச் செய்ய வேண்டும்.

1.மகரிஷியின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்.
2.நாங்கள் யாரை எல்லாம் சந்தித்தோமோ பேசினோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும்.
3.அங்கே அருள் ஒளி படர வேண்டும்… அவர்கள் குடும்பத்தில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
4.மெய்ப் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணி
5.பகைமை உணர்வை நமக்குள் நுழையாத படி முதலில் இதைச் செய்ய வேண்டும்.

நம் பிள்ளைகளை நினைத்து அந்த மகரிஷியின் அருள் சக்தி அவர்கள் பெற்று அருள் ஞானம் பெற வேண்டும் என்று அன்றைக்கு எண்ண வேண்டும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு விநாயகர் சதுர்த்தி தினத்திலேயும் “இப்படி இருக்கிறார்களே… உன்னை நான் வணங்கினேனே…!” என்று எண்ணினால் நமக்குள் அந்த வேதனை தான் வளரும்.

ஆகையினாலே பிள்ளைகள் அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சொல்ல வேண்டும்.

அன்றைக்குத் தினத்தில் பிள்ளைகளும் என்ன நினைக்க வேண்டும்…?

எங்கள் தாய் தந்தையரின் அருளால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்ற எண்ண வேண்டும்.

1.குடும்பத்தில் சந்தர்ப்பத்தில் பகைமைகள் உண்டானாலும்
2.விழாக்கள் போன்ற காலத்திலேயாவது எல்லோரையும் ஒன்றாக இணைத்து
3.உணர்வின் தன்மையைப் பக்குவப்படும் நிலைக்கு ஞானிகள் வைத்தார்கள்.

பொதுவாகச் சொன்னால் பிள்ளைகள் கேட்க மாட்டார்கள். அன்றைக்கு அந்த விழாக் காலத்தில் சாமி கும்பிடும் போதாவது இந்த மாதிரி எண்ணி அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த அருள் உணர்வு வளர்கிறது.

அருள் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அறியாத இருள்கள் நீங்குகிறது. அம்மா அப்பா மேலிருக்கும் வெறுப்பின் தன்மை மறைகின்றது. தாய் தந்தையரின் நல்லாசிகளைக் கவரும் சக்தி வருகிறது.

1.நமக்குள் இருக்கும் பகைமை வெறுப்பு போன்ற உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைந்தவுடனே
2.யாரும் இங்கே இழுக்கும் சக்தி இல்லை என்றால் “அது ஒதுங்கி நிற்கும்…”

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் சூரிய ஒளி வருகிறது. வந்தவுடனே இழுத்துக் கொண்டு மேலே சூனிய மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. நம் பூமியில் அந்தச் சக்தி இருப்பதில்லை.
1.அப்போது நாம் எண்ணினாலும் புதிதாக உருவாவதில்லை.
2.இது கிடைக்காது… இது மயங்கிப் போகும்.
3.ஆக தீமையான வினைகளுக்குச் சாப்பாடு கொடுக்காமல் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தொடர்ந்து இந்த எண்ணங்களை எடுக்கப்படும் போது நமக்கு முன்னாடி இருக்கும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலிலுள்ள ஜீவான்மாக்களும் தீமைகளை நுகர்வதில்லை. அதுவும் சுத்தமாகின்றது. நம் உயிராத்மா ஒளியாக மாறுகின்றது.

1.ஞானிகள் விநாயகரைத் தண்ணீரில் (கடலில்) கரைக்கச் சொன்னதன் உட்பொருளே
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பதற்குத்தான்…!
3.நாம் வாழும் இடங்களில் அது மீண்டும் வராதபடி தடுப்பதற்குத் தான்…!

யுத்த காலங்களில் நாம் இணைக்க வேண்டிய உயர்ந்த சக்தி

 

தாவர இனங்களில் விளைந்தவற்றைத்தான் மனிதர்கள் நாம் உணவாக உட்கொண்டு வளர்ந்து வந்துள்ளோம்.
1.அதில் உருவானது தான் நம் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எண்ணங்களும் அணுக்களும் எல்லாமே
2.ஆகவே தாவர இனத்தின் உணர்வுகள் நம்மிடம் உண்டு…!

பல பிறவிகள் கடந்து வந்த பின் தாவர இனங்கள் அனைத்தும் செழித்து வளர வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்தினால் இந்த உணர்வு அங்கு இணைக்கப்படுகின்றது.

நல்ல உணர்வின் தன்மையாக நாம் பாய்ச்சப்படும் பொழுது தீமை என்ற உணர்ச்சிகளை மாற்றி நல்ல நிலைகள் கொண்டு தாவரங்கள் வளரும்.

1.ஆனால் நீங்கள் சங்கடமாக சலிப்பாக இருந்து உங்கள் வயலுக்குச் சென்று உற்றுப் பாருங்கள்.
2.பயிர்களின் வளர்ச்சி எப்படிக் குறைகிறது…? என்று பாருங்கள்.

வீட்டில் நல்ல செடியை வளருங்கள். அடுத்தவரிடம் சண்டை போட்டுவிட்டு அந்த உணர்வுடன் நீரை அதற்கு ஊற்றிப் பாருங்கள்… செடி கருகிப்போகும்.

ஏனென்றால் புழுவாக பூச்சியாக இருக்கும் பொழுது நாம் அதை உட்கொண்டு தான் வந்துள்ளோம்… இந்த உணர்வின் தன்மை வரும். மனிதனாக இப்போது முழுமை அடைந்திருக்கின்றோம் இந்த உணர்வுகளை அங்கே பாய்ச்சப்படும் பொழுது அது கருகும்.

அதே சமயத்தில் தியானத்திலே உயர்ந்த உணர்வுகளை உங்களுக்குள் வலுக் கூட்டி இந்த செடி நன்றாக வளர வேண்டும் நல்ல பலன் தர வேண்டும் என்று உங்கள் பார்வையில் பாருங்கள்.

1.எந்த அளவுக்கு நீங்கள் சக்தி வளர்த்துக் கொண்டீர்களோ நீரை ஊற்றியோ அல்லது கண்களிலே பார்த்தால் கூட இந்த உணர்வுகள் அங்கே பாயும்.
2.இப்படி அங்கே பரவச் செய்யும் போது செடிகளில் தீமையின் அணுக்கள் குறையத் தொடங்கும்.

இதையெல்லாம் உங்கள் மனதில் உருவான உணர்வின் தன்மை எதை நினைவுக்குக் கொண்டு வருகின்றீர்களா அதன் வழி அங்கே நடக்கும்.

அதனால்தான் தியானத்தில் உங்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்கப்படும் பொழுது… மகரிஷிகள் உணர்வுகள் மேகங்களிலே படர வேண்டும்… மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும்…! என்று இந்த உணர்வைச் செலுத்தச சொல்கின்றோம்.

அந்த மேகக் கூட்டத்திற்குள் இந்த உணர்வுகள் கலக்கின்றது. அந்த மழை நீர் பட்டுத் தான் நாம் அனைவருமே வளர்ந்து வந்திருக்கின்றோம். இந்த உணர்வின் எண்ணத்தால் அங்கே பாய்ச்சப்படும் பொழுது செடிகளும் நன்றாகச் செழித்து வளர்கின்றது.

1.காரணம் எல்லாவற்றிலுமே காந்தப்புலன் உண்டு… எல்லாவற்றிலுமே அது கலந்து கொள்கின்றது.
2.நாம் உயர்ந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது கலந்து மழை நீராக நன்னீராக வரும் பொழுது தீமைகளை அகற்றும் சக்தி பெறுகின்றது.
3.மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் மேகக் கூட்டத்துடன் கலந்து “நல்ல மழையாகப் பெய்யும்…”

ஆனால் மனிதன் விஞ்ஞானத்தினால் வெளிப்படுத்தப்படும் புகை மண்டலங்களும் பல விஷ உணர்வுகளும் மேகக் கூட்டத்திலே கலக்கின்றது. அமிலம் கலந்த நீராகத் தாவர இனங்களுக்குத் தொல்லை கொடுக்கும் சக்தியாக கலந்து விடுகின்றது.

அது மட்டுமல்ல…!
1.யுத்த காலங்களில் பார்த்தோம் என்றால் மழை பெய்தாலே செடி கொடிகள் கருகும்.
2.காரணம்… பகைமை கொண்டு ஒருவனுக்கு ஒருவன் கொன்றிடும் உணர்வுகள் அங்கே படரப் படும் பொழுது அவ்வாறு ஆகிறது.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் அனைவரும் காக்கும் சக்தியாக துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் வலுவாகப் பெருக்கி இந்த உணர்வினை மேகக் கூட்டங்களிலே படரச் செய்யும் போது நல்ல மழை நீராகப் பெய்யும்.

நாம் பார்ப்போர் அனைவரையும் நம் ஊர் மக்களையும் நாட்டு மக்களையும் தூய்மைப்படுத்த இது உதவும். “ஒவ்வொருவரும் நாம் இதைச் செய்ய வேண்டும்…”

1.யுத்த காலங்களில் நம்மைப் பாதுகாக்கவும் உற்றார் உறவினர் நண்பர்களைப் பாதுகாக்கவும் இந்தச் சக்தி நமக்கு உதவியாக இருக்கும்.
2.எந்த நிலையில் நாம் உடலை விட்டுச் சென்றாலும் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக மூன்று விதமான ஆடுகளில் உள்ள கருவை விஞ்ஞானிகள் எடுத்து ஒன்றாகச் சேர்த்துக் கருவுறச் செய்து புது விதமான ஆடாக உருவாக்குகின்றார்கள்.

அதே போல் மனித உடலில் உள்ள கருக்களை எடுக்கிறான். குரங்கிலுள்ள செல்களைக் கொஞ்சம் எடுக்கிறான். இப்படி ஒவ்வொரு செல்களையும் எடுத்து மனிதனுக்குண்டான அறிவின் தன்மை வளர்வதற்காகக் வேண்டி அத்தகைய கருக்களை இணைத்து ஒரு நாயை உருவாக்குகின்றான் (மனிதனுக்கு ஒத்த நிலைகளில்).

மனித உணர்வு கொண்ட செல்களை எடுத்துக் கொரில்லாக்களுக்குள் அதனுடைய கருவிலே சேர்த்து மனிதனை ஒத்த ஞானத்தை வளர்க்கக்கூடிய நிலையில் இவன் சொன்ன வேலைகளை எல்லாம் செய்கிற மாதிரி உருவாக்குகிறார்கள்.

இது எல்லாம்
1.மனிதனுடைய ஆறாவது அறிவு பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற நிலையில்
2.”உருவாக்கக்கூடிய சக்தியாக நம் எண்ணத்துக்குள் உண்டு…” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஆனால் நம் ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி அருள் ஒளியை நமக்குள் உருவாக்கப்படும் போது “ஒளியின் சரீரமாக… அழியாத நிலைகளாக… நாம் உருவாக்க முடியும்…!”

இதைக் காட்டுவதற்குத் தான் முருகனுக்கு மயிலைப் போட்டு அந்த மயிலின் காலடியில் பாம்பையும் போட்டு வைத்துள்ளார்கள். அதற்கு ஒரு குட்டிக் கதையும் எழுதி வைத்திருக்கின்றார்கள்.

அதாவது முருகனுக்கும் அசுரனுக்கும் போர் நடந்தது. போர் நடந்தவுடனே அசுரன் வீழ்ச்சி அடைந்து விட்டான். வீழ்ச்சி அடைந்ததும் என்ன செய்கின்றான்…?

ஐயனே…! இனி நான் உன் காலடியிலே இருப்பேன். எனக்கு அந்த வரத்தைக் கொடு…! என்று அந்த அசுரன் முருகனிடம் கேட்கிறான். உடனே அந்த அசுரனைப் பாம்பாகச் சபித்து “என்னுடனே இரு…!” என்று முருகன் சொல்கிறான்.

சொல்வது அர்த்தம் ஆகின்றதல்லவா…! அதிலேயும் அர்த்தம் உண்டு.

ஏனென்றால் ஒரு அணு இயங்க வேண்டும் என்றால் அதற்குள் இருக்கும் விஷம் தான் காரணம். அந்த விஷம் இல்லை என்றால் அணுக்கள் இயங்காது.

ஆகவே சபிக்கப்படும் போது “எனக்குள் அடங்கி நட…!” என்பதற்காக அவ்வாறு காட்டுகின்றார்கள் ஞானிகள்.
1.அணுவிற்குள் விஷம் இருந்தாலும் அது அதிகரித்து விட்டால் அந்த உணர்வு “அசுர சக்தியாக” மாறுகிறது.
2.ஆனால் அந்த விஷத்தின் தன்மை ஒடுங்கி விட்டால் நமக்கு “நன்மை தரும் சக்தியாக” இருக்கும்.

விஷத்தை நாம் வேக வைத்து அடக்குவது போன்று அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து அறியாது வரும் நஞ்சான உணர்வுகளை அடக்குதல் வேண்டும்.
1.நஞ்சை அடக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் சுவாசிக்க வேண்டும்.
2.நஞ்சை அடக்கிய மெய் ஞானி தான் இதைச் சொன்னான்.

அந்தக் காவியத்திற்குள் இவ்வளவு பொருள் இருக்கிறது…!

ஞானிகள் உணர்வை மிக வீரியமான வித்தாக உங்களுக்குள் உருவாக்குகின்றோம்

 

உதாரணமாக… பால் மாடு அது பால் குறையாகக் கறப்பினும் விஞ்ஞான அறிவு கொண்டு மற்ற மாடுகளின் அணு செல்களை எடுத்து…
1.பாலை அதிகமாக உற்பத்தி செய்யும் அந்த ஜீன்களை அதிகமாக அதனுடன் சேர்த்து அந்தக் கருவுடன் இணைக்கப்படும் பொழுது…
2.ஒரு லிட்டர் கறப்பதை 20 லிட்டர் கறக்கும் சக்தியாக அந்த அணுக்களை உருவாக்கி விடுகின்றார்கள்.

இதைப் போன்று தான் நோயின் தன்மையை மாற்றுவதற்காக இதைப் போல சில அணுக்களை உருவாக்கி நோயை மாற்றிடும் சக்தியையும் விஞ்ஞான அறிவு கொண்டு செயல்படுத்துகின்றார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் ஒரு நோயாளியைப் பற்றி நாம் கேட்டறிந்தால் அதை உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றும் திறன் பெறுகின்றது. அணுவாக மாறும் இந்திரீயமாக கருவாக உருவாகின்றது.

அதே சமயத்தில் அது அணுவாக உருவாவதற்கு முன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் இதனுடன் இணைத்து விட்டால் அந்த நோயை உருவாக்கும் தன்மை குறைத்துவிடும்.
1.ஆக நோயை அடக்கிடும் அருள் ஞானிகள் உணர்வை உடலில் விளைவிக்கும் பொழுது
2.நமக்குள் நோயின் தன்மை உருவாகாது அறியும் தன்மை வரும்.
3.நம் பார்வையில் அடுத்தவருக்கு நோய் நீங்க வேண்டும் என்று சொன்னால்
4.கேட்டறிந்த உணர்வுகள் அவருக்குள்ளும் சென்று “நோயை நீக்கிடும் உணர்வின் அணுக்கள்…” அங்கே உருவாகின்றது.
5.திரும்பத் திரும்ப அவர்கள் அதை எண்ணினால் நோயை நீக்கும் அருள் சக்தி அவர்கள் பெறுகின்றார்கள்.

இந்த உணர்வை நாமும் அடிக்கடி எண்ணி வளர்த்துக் கொண்டால் நோய் வராது தடுப்பதும் அருள் ஞானத்தின் உணர்வைப் பெருக்கவும் இந்த வாழ்க்கையில் வரும் துன்பங்களை மாற்றி அமைக்கும் திறனும் நாம் பெறுகின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் பெறுகின்றோம். இந்த வாழ்க்கையில் சிரமமில்லாத வாழவும் சிரமங்கள் வரும் பொழுது சிந்திக்கும் ஆற்றலும் நமக்குள் அது உருவாகின்றது.

ஆகவே கோபப்படுவார்களையோ வெறுப்படைவோரையோ வெறுப்புடன் பார்ப்பவர்களையோ பார்த்தால் கேட்டறிந்தால் அந்த உணர்வு நமக்குள் இந்திரீகமாக மாறிவிடுகிறது.

ஆனால் அடுத்த கணம் அதனுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால் அதனுடைய வீரியத்தைத் தணித்து நமக்குகந்த நிலையில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

இது ஒரு பழக்கத்திற்கு நாம் வரவேண்டும்.
1.அதற்குத் தான் மகரிஷிகள் உணர்வை இந்த உபதேசத்தின் வாயிலாக அடிக்கடி பதிவு செய்கின்றோம்… பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
2.தீமைகள் வராது பாதுகாத்துக் கொள்ள இது உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு குழந்தை பிறந்து விட்டது என்ற உடனேயே நாம் ஜாதகக்காரனிடம் ஓடுகின்றோம்.

அவன் பார்த்து விட்டுக் குழந்தை பிறந்த நேரம் சரியாக இல்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் மிருக குணம் அதிகமாக இருக்கும். அவன் அசுர செயல்கள் கொண்டு செயல்படுவான் என்று கணக்குப் போட்டுச் சொல்கிறான்.
1.இந்தக் குழந்தை ஏழரை நாட்டுச் சனி பிடித்தவன்.
2.உங்கள் குடும்பத்திற்கே ஆகாது என்று சொல்கிறான்.

மிருகங்கள் எப்படித் தன்னைக் கட்டுபடுத்தாத நிலைகள் கொண்டு செயல்படுமோ அதே உணர்ச்சிப்படியே இவன் போவான். “அவனால் உங்கள் குடும்பத்திற்கே சனியன் பிடிக்கும்…!” என்று விளக்குகிறான் ஜாதகக்காரன்.

ஆனால் அந்தக் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லை.

குழந்தை பிறந்த ஜாதகத்தை அவன் கட்டத்தைப் போட்டு எழுதுகிறான். நாம் நம்பிக்கையுடன் போனவுடனே இதை எடுத்து நமக்குள் உருவாக்கி வைத்துக் கொள்கிறோம்.

அடுத்தாற்போல என்ன செய்கிறோம்…?

“குடும்பத்திற்குச் சனியன் பிடித்துவிட்டதே…!” என்ற இதே உணர்வை எடுத்துக் கொண்டவுடன் தொழில் ரீதியாக ஒருவரிடம் வியாபாரம் செய்தாலும் நம் பணத்தை இவன் கொடுப்பானா.. கொடுக்க மாட்டானா…! என்று நினைத்துக் கொண்டே பொருளைக் கொடுக்கிறோம்.

நம்முடைய இந்தச் சோக உணர்வு அவனுக்குள் போன பின் அவன் நம் பணத்தைக் கொடுக்கவே மாட்டான். நம் எண்ணமே அதை மாற்றி விடுகிறது.

ஏனென்றால் ஜாதகக்காரன் சொன்ன அந்த உணர்வைப் பதிவு செய்யும் போது அது நமக்குள் கடவுளாக மாறுகிறது. “அவன் தான் நம்முள் சிருஷ்டிக்கிறான்…!” என்ற நிலைகள் கொண்டு எண்ணத்தால் எடுத்து நமக்குள் இப்படி அறியாத நிலைகள் கொண்டு உருவாக்கி விடுகிறோம்.

அதே சமயத்தில்
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை வேண்டி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்
3.அந்தக் குழந்தை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கருவிலிருந்து வளர்த்துப் பாருங்கள்.
4.குடும்பத்தில் தரித்திரம் இருந்தாலும் அதை எல்லாம் நீக்கிடும் வல்லமை பெற்றவனாக அந்தக் குழந்தை பிறந்து வருவான்.

சில வீட்டில் கர்ப்பமாக இருக்கும் போது பாருங்கள். ஆயிரம் சண்டை போடுவார்கள். பிறந்த பிற்பாடு அந்தக் குழந்தை என்ன செய்வான்…?
1.அந்தச் சண்டை போடும் வழக்கத்திற்கே போவான்.
2.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் வீட்டிற்குள் இழுத்துக் கொண்டு வருவான்.

ஏனென்றால் சண்டையை உற்றுப் பார்த்த உணர்வுகள் தாய் உடலில் ஊழ்வினையாகின்றது. கருவில் வளரும் குழந்தைக்கோ அது பூர்வ புண்ணியமாகின்றது.

ஆகவே இதை எல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அன்றைய அரசன் தன்னுடைய குழந்தை மிகவும் வலிமையாக இருப்பதற்காக என்ன செய்தான்…? அரசனின் மனைவி கர்ப்பம் ஆகி விட்டது என்றாலே ஒரு முடியில் விஷத்தைத் தொட்டு அதை உணவுடன் கலந்து அந்தத் தாய்க்குக் கொடுப்பார்கள்.

இப்படிப் பிறக்கும் குழந்தை வீரியமான வலு கொண்டதாகவும் மற்றவர்கள் விஷத்தைக் கொடுத்தாலும் கொன்று விடமுடியாத அளவிற்கு இதைச் செய்தார்கள். மக்கள் யாரும் அதைச் செய்யவில்லை.

ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தாலே ஒவ்வொரு நிமிடத்திலேயும் கருவில் இருக்கும் குழந்தை மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும். உலகில் வரும் தீமைகளை எல்லாம் அகற்றக்கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும். நஞ்சை வென்றிடும் உணர்வு பெற வேண்டும் என்று குடும்பத்தில் இருக்கிறவர்களெல்லாம் சொல்லுங்கள்.

கர்ப்பமான தாயும் இந்த முறைப்படி எண்ணி அந்த மெய் ஞானிகளுடைய உணர்வை எடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தை அபூர்வ சக்தியாக ஞானக் குழந்தையாக வளர்வான்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். நீங்கள் ஜாதகக்காரனைத் தேட வேண்டியதில்லை…!

தியானப் பயிற்சி

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
1.கண்ணின் நினைவை அங்கே கொண்டு செல்லுங்கள்… கண்ணால் ஈர்க்கும் சக்தி வரும்.
2.இந்த உணர்வுகள் நெஞ்சின் எலும்புக்குள் ஊழ் ஊழ்வினை என்ற வித்தாக இப்பொழுது பதிவாகின்றது.
3.உங்கள் நெஞ்சில் பதிவாகும் உணர்வுகள் தெரிய வரும்.

கண்களால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும் சக்தி வருகின்றது. கருமணிகளில் ஈர்க்கும் சக்தி கிடைக்கும். கண் கனமாக இருக்கும். கருமணியில் கவரப்படும் பொழுது நெஞ்சிலே ஊழ் வினை என்ற ஞானவித்து பதிவாகும்.

கண்களை மூடுங்கள். புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் இணையுங்கள்.

இப்பொழுது உயிரால் கவரப்படும் சக்தியாக மாறுகின்றது.

முதலில் கண்களிலே கவர்ந்தோம். கவர்ந்த உணர்வு நுகரப்படும் போது உயிரில் பட்டுத் தான் அது இயங்கும்.

ஆனால் கண்ணில் கவர்ந்த நிலைகள் ஈர்க்கும் சக்தி பெறச் செய்து ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

1.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் சக்தி பெறுகின்றீர்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் கனமாக அந்த ஈர்ப்பு நிலைகள் தெரிய வரும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி உயிரில் மோதும் பொழுது சில வெளிச்சங்களும் தெரிய வரும்.

இப்பொழுது உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் ரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

இரத்த நாளங்களில் எத்தனையோ கோடி உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகளை இயக்கும் கருத்தன்மை உண்டு. ஜீவணுக்கள் உண்டு.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

எறும்பை நசுக்கினாலும் அந்த ஆன்மா ரத்தத்தில் தான் இருக்கும் மனிதன் மேல் பண்பு கொண்டு வாழ்ந்திருந்தாலும் அந்த ஆன்மா நமக்குள் வந்தால் அதனுடைய இயக்கத்தை உண்டாக்கும்.

எறும்பின் உயிரான்மா மனிதனாக உருப் பெறும் கருத்தன்மை அடைகின்றது.
1.ஆனால் மனிதனுடைய ஆள்மா வந்தால் அவனுக்குள் ஈர்க்கப்பட்ட துயரம் எதுவோ அந்த உணர்வை நமக்குள் இயக்கும்.
2.அத்த இயக்கம் நமக்குள் வராதபடி தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ரத்த நாளங்களில் கலந்து
3.அதில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணின் நினைவை ரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது இரத்த நாளங்களிலே புது உணர்ச்சிகள் தோன்றும். உடலிலேயே உற்சாகம் ஊட்டும் உணர்வு வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

எல்லா உறுப்புகளிலும் நினைவைச் செலுத்துங்கள். இவ்வாறு செய்வதனால் உயிர் வழி உடலுக்குள் செல்லும் தீய உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றோம்.

அதே சமயத்தில் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்க்கின்றோம்.
1.நமது ஈர்ப்பு வட்டத்தில் உள்ள தீய அணுக்களுக்குண்டான உணர்வுகளை
2.உடலில் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நகர்த்திச் சென்று விலக்கி விடுகின்றது… அல்லது ஒதுக்கி விடுகின்றது.
3.இப்பொழுது நல்ல அமைதி கிடைக்கும். தீய உணர்வுகள் அனைத்தும் நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து அகன்று சென்று விடுகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

முதல் முகப்பில் உள்ள அந்தச் சிறுகுடலில் தான் முதலில் ஆகாரங்கள் செல்கின்றது. அந்த ஆகாரத்தை ஜீரணிக்கும் சக்தி அந்த அணுக்களுக்குத் தான் உண்டு.

துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை அந்த அணுக்களுக்குப் பெறச் செய்யுங்கள். அதன் கீழ் உள்ள பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படித் தியானித்து வந்தால் அந்த உறுப்புகள் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். இதை எடுக்க எடுக்க அதை உணர முடியும் அறிய முடியும் உங்கள் உடல் உறுப்புகளில் என்ன நடக்கிறது…? என்று.

1.சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்கள் வீரியமடையும் பொழுது குடலில் உள்ள குறைபாடுகள் நீங்கும்.
2.வயிற்று வலியோ மற்ற கோளாறுகளோ அது எல்லாம் நீங்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கணையங்கள் முழுவதும் படர்ந்து கணையங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா.

சிறுகுடல் பெருங்குடல் ஆகாரத்தின் சத்துகளை அது உருவாக்கி அமிலமாக மாற்றி வெளி வருவதை உங்கள் உடலில் உள்ள கணையங்கள் மூன்று விதமாகப் பிரிக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து வரக்கூடிய விஷத்தன்மைகளை மாற்றி நல்ல உணர்வை உருவாக்கும் தன்மை கணையங்களுக்கு ஏற்படுகின்றது.
1.உடலை ஒட்டி இருக்கக்கூடிய கணையங்களின் உணர்ச்சிகளை…
2.அந்த உறுப்பின் இயக்கத்தை உணர முடியும்… அறிய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

கல்லீரலை மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறும் பொழுது உற்சாகமடையும். அங்கிருக்கும் குறைகளை நீக்கும் அரும்பெரும் சக்தியாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்துங்கள்.

நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் உற்சாகம் அடையும். இந்த வீரிய சக்தியை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகங்கள் முழுவதும் படர்ந்து சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா. கண்ணின் நினைவைக் கிட்னியில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இவ்வாறு செலுத்தினோம் என்றால் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து வாதநீர் போன்ற நிலைகளைச் சுத்திகரித்து நல்ல ரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து அதை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா. இப்போது அந்த இருதயம் சுறுசுறுப்படைவதை உங்களால் உணர முடியும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.கண்களிலே துருவ நட்சத்திரத்தின் சக்தி ஈர்க்கப்படும் பொழுது கருமணியில் வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்.
2.நெஞ்சிலே உள்ள எலும்புக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வு பதிவாகிக் கொண்டே இருக்கும்.

குறைகளையோ வேதனைகளையோ மற்றவைகளைப் பார்த்தவுடனே அடுத்த நிமிடமே ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருமணிகளில் படர வேண்டும் என்று ஏங்கித் தியானித்தால் கருமணிகளில் படும் விஷத்தன்மைகளைச் சுத்தப்படுத்தும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து நரமபினை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை நரம்பு மண்டலம் முழுவதும் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நரம்பு மண்டலத்தில் உள்ள வாதநீர் பித்த நீர் விஷ நீர் முடக்குவாதம் போன்ற நிலைகள் வராதபடி அந்த அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது நரம்பு மண்டலம் சீராகும். வாத சம்பந்தப்பட்ட பல நோய்களைத் தவிர்க்க இது உதவும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் படர்ந்து அங்கிருக்கும் ஊன் முழுவதும் படர்ந்து ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

1.இவ்வாறு செய்யும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.
2.நாம் எண்ணும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக் கூடிய சக்தியைப் பெறுகின்றோம்.
3.அந்த சக்தி அங்கே நெஞ்சின் ஊனுக்குள் படர்வதை இப்போது உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து தசைகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரழகும் எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து தோலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தப்படும் பொழுது உடலிலே பெரிய வெளிச்சமே தோன்றும். உடலில் இருந்து வெளிச்சங்கள் வரும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை இவ்வாறு எடுத்து ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக அமைத்துக் கொண்டால்
2.விஞ்ஞானத்தினால் வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கு உதவும்.

இந்தத் தியானத்தை அனுதினமும் காலையில் ஐந்தரை மணியிலிருந்து ஆறரை மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது எடுக்க முடிந்தால் எடுங்கள். முக்கியமான நேரம் அது… அந்த நேரத்திலே அருள் சக்திகளைச் சேர்த்துத் தீமைகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனுக்கு மத்தியில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்குவதற்காக பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நிலைகளைக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.இந்தப் பன்னிரண்டு மாதங்களுக்கும் முப்பது நாளைக்கு ஒரு தரம்
3.தீமைகளைக் கழித்துச் சுத்தப்படுத்தும் முறைகளைக் காட்டுகின்றார்கள்.

பொங்கல்… சிவன் இராத்திரி… சித்திரைக்கனி… ஆடிப் பெருக்கு.. விநாயகர் சதுர்த்தி.. விஜய தசமி… தீபாவளி.., கார்த்திகை தீபம்… வைகுண்ட ஏகாதசி… என்று ஒவ்வொரு மாதத்திலும் விழாவை வைத்து ஞானிகளின் உணர்வை நமக்குள் வலுவாக்கிக் கொள்ளும் முறைகளைக் கொடுக்கின்றார்கள்.

விஜயதசமி – நம் உயிர் விண்ணிலிருந்து இங்கே பூமிக்குள் வந்த பின் பத்தாவது நிலை அடையக்கூடிய முறையைக் கொடுக்கின்றார்கள்.

கார்த்திகை ஜோதி. என்றால் ஆறாவது அறிவு கார்த்திகேயா. விளக்கை நம் வீட்டு வாசற்படியில் வைத்து வீட்டுக்குள் வருகின்ற இருளை நீக்குகின்றோம். ஆகவே கார்த்திகை தீபம் ஏற்றி இருளை நீக்குவது போல் எல்லாக் குடும்பமும் ஒளியாக வேண்டும் என்று எண்ணும்படி செய்கிறார்கள்.

உதாரணமாக நாம் நுகரும் உணர்வுகள் தீமையின் உணர்வுகளானால் வினையாகி உடலுக்குள் ஒரு வித்தாகின்றது. தீமையான அந்த வித்தை உடலுக்குள் வளர விடாது தடுக்க வேண்டும் அல்லவா…! அதற்காக விநாயகர் சதுர்த்தி என்று கொடுக்கின்றார்கள்.

நல்ல குணங்கள் கொண்டு நல்ல உணர்வுகளை உடலில் விளைய வைத்திருந்தாலும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது வினைக்கு நாயகனாகி விடுகின்றது.

நம் உடலில் உள்ள நல்லதைக் காப்பதற்காக வேண்டி தீமையான உணர்வுகளைக் களையை நீக்குவது போல் நீக்க வேண்டும். அந்த அருள் ஞானிகள் பெற்ற அருள் உணர்வின் தன்மை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் போது நல்ல வித்திற்கு உரம் கிடைக்கின்றது. அப்பொழுது தீமைகளைக் கரைத்து விடுகின்றோம்.

நாம் நீக்கிய தீமையான உணர்வுகளைக் காலையில் சூரியன் எடுத்து சூனிய மண்டலத்திற்குக் கொண்டு போகிறது. அப்புறம் கடல் அலைகளிலிலே கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து அங்கே கரைத்துவிடும். உள்ளே இழுத்துக் கொள்கின்றது.

அதாவது பூமியில் முக்கால்வாசி நீர் இருக்கின்றது. பாக்கி கால் வாசி நிலப் பகுதியில் தான் நாம் இருக்கிறோம். தீமைகளை அங்கே நீரிலே கரைத்த பின் இங்கே நிலப் பகுதியில் வராது அது நிறுத்தி விடும். நாம் வாழும் இந்த உலகமும் தூய்மை ஆகின்றது.

தீபாவளி அன்றைக்கும் இதேதான். தீபாவளி என்றால் கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாள்.

இப்போது நீங்கள் என்ன செய்கின்றீர்கள். கண்கள் கொண்டு வேதனைப்படுவோரைப் பார்க்கின்றீர்கள். அடடா… இவனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று பாசத்தால் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த வேதனையான உணர்வின் தன்மை வந்தவுடனே நமக்குள் அது நோயாக மாறுகிறது. அசுர குணங்கள் விளைகின்றது. அசுர அணுக்கள் விளைகின்றது. நல்ல குணங்களைக் கொல்கின்றது. நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே இப்படி வருகிறது.

கண்ணன் நரகாசுரனைக் கொன்றான் என்ற நிலையில்
1.நம் கண்களின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று பல முறை
3.கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்த வேண்டும்.

கணவனும் மனைவியும் இரண்டு பேரும் இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும். அவர்கள் மலரைப் போல மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். மகரிஷியின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்

நம் வாடிக்கையாளர்கள் அவர்கள் கஷ்டத்தை நம்மிடம் சொல்லி இருப்பார்கள். “உ..ம்” கொடுத்து அதைக் கேட்டிருப்போம். நமக்குள் அது பதிவாகிவிடும்.

அதை மாற்ற நாங்கள் தொழில் செய்யும் இடங்களெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலம் பெற வேண்டும். எல்லாக் குடும்பங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஏகோபித்த நிலையில் நாம் எண்ணிப் பழக வேண்டும்.

ஆக மற்றவர்களுடைய துயரங்களை நாம் எண்ணுவதே இல்லை. அதிகாலையில் நான்கு மணிக்கு இப்படித் தியானித்தால் காலையில் ஆறு மணிக்கு சூரியனின் ஒளிக் கதிர்கள் வருகிறது.
1.நாம் இழுக்காத அந்தத் தீய வினைகளை எல்லாம்
2.அது இழுத்து மேலே சூனிய மண்டலத்திற்கே கொண்டு போய் விடுகிறது.

சிலர் தியானம் இருக்கிறோம் என்ற நிலையில் சூனிய மண்டலத்திற்கே போய் விடுகிறார்கள். எங்கே…? சிவன் இருண்ட உலகத்தில் இருக்கின்றான். அங்கே போய்ப் பார்க்க வேண்டும் என்ற நிலையில் சிவன் ராத்திரி என்று அறியாதபடி சொல்கிறார்கள்.

ஒருவருகொருவர் பகைமையான உணர்வு வந்தாலும் தீபாவளி அன்று நல்ல பதார்த்தங்களைக் கொண்டு போய்க் கொடுத்து அவர்கள் வீட்டில் உள்ள எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். மலரைப் போல் மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழ வேண்டும் என்று ஒற்றுமை ஏற்படுத்தும் நாளே தீப ஒளித் திருநாள்.

சிவன் ராத்திரி அன்றைக்கு “விழித்திரு…!” என்கிறார்கள். மகா சிவன் ராத்திரி அன்று சிவன் கோயிலில் போய் விடிய விடிய விழித்து இருக்கிறோம்.

தாயக்கட்டையையும் மற்றதையும் போட்டு விளையாடுகிறோம். விழித்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு “நான் ஜெயித்தேன்… நீ இல்லை நான் தான் ஜெயித்தேன்…!” என்று இதில் தான் நாட்டத்தைச் செலுத்துகின்றோமே தவிர “எதற்காக விழித்திருக்க வேண்டும்…?” என்பதை அறியவில்லை.

விழித்து இருக்கிறது என்றால் சும்மா விழித்திருப்பதல்ல…! அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர என்று எண்ண வேண்டும்.

யார் யாரிடம் எல்லாம் நான் பழகினேனோ அந்தக் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் தொழில் வளம் பெருக வேண்டும். பார்ப்போர் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று சொல்லி “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…!” என்று இதை எண்ண வேண்டும்.

அதாவது தீமைகளையும் அந்தப் பகைமை ஊட்டக்கூடிய எண்ணங்களும் நமக்குள் வராதபடி விழித்திருக்க வேண்டும்.

பகைமை வந்தால் எனக்கு இப்படிச் செய்தான்… அவன் உருப்படுவானா…? அவன் குடும்பம் கெட்டு போகவேண்டும்…! என்று சொல்கிறோம்,

அந்த உணர்வு நமக்குள் புகாதபடி தீமையை விளைவிக்கும் அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்காதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

நாம் பார்க்கும் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று அந்தப் பகைமை உணர்வுகளை அகற்றுவதற்காக நாம் விடிய விடிய விழித்துக் கொண்டு இருப்பது.

ஏனென்றால் மனிதனுக்குள் சந்தர்ப்பத்தால் விளைய வைத்த வெறுப்பின் உணர்வுகள் அவர்கள் எண்ணும் போது இந்த சூரியனின் காந்த சக்தி எடுத்துக் காற்றிலே அலைகளாகப் பரப்ப் வைத்து விடுகிறது.

அப்போது நமக்குள் அணுவாகி விட்டால் சும்மா இருந்தாலும் போதும். அந்த உணர்ச்சிகள் தூண்டி சிறு மூளைக்கு அனுப்பும். உயிர் என்ன செய்யும்…? அது எடுத்து நமக்குள் உணர்த்தும். தீமை செய்யும் உணர்வுகளை நுகரச் செய்யும். உயிரில் பட்டவுடனே அந்த எண்ணம் வரும்.

1.“அவனைச் சும்மா விடுவதா…?” என்ற எண்ணம் வந்தால் அந்த அணு அதனுடைய உணர்வை இழுத்துவிடும்.
2.இது இழுத்தவுடனே நம் உடல் உறுப்புகளைக் கெடுக்கும்.
3.நாம் நினைக்கிறோம்… அவனை விடுவதா என்று…!
4.ஆனால் அந்த உணர்வு இரு நான் பார்க்கிறேன்…! என்று நம் நல்ல குணங்களை இங்கே கொல்லும். இதை மாற்ற வேண்டும்
5.அதற்காகத்தான் சிவன் ராத்திரி அன்று விழித்திரு என்று சொல்கிறார்கள்

அதாவது தீமைகள் நமக்குள் புகாதவண்ணம் நம் உடலுக்குள் விளையாத வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும்.

விஷத்தை ஒடுக்கும் பச்சிலைகள்

 

குருநாதர் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றார். கொசுக்கள் கடிக்கும் பொழுது அதிலிருந்து மீட்டிக் கொள்வதற்காக ஒரு பச்சிலையை என் மேல் பூசினார். அது எனக்குத் தெரியாது.
1.பூசியபின் அந்த மணத்தைக் கண்டால் கொசுக்கள் மயங்கி விடுகின்றது… அல்லது மடிந்து விடுகின்றது.
2.இதனின் வேகத் துடிப்பு அதன் மேல் மோதப்படும் பொழுது அது மடிந்து விடுகின்றது.
3.இந்த மணத்தைக் கண்டால் அஞ்சி ஓடுகிறது. இந்த மூன்று நிலையில் அதன் நகர்ந்து செல்கின்றது.

அதே போல விஷப் பூச்சிகளும் எத்தனையோ வகைகளில் அங்கே உண்டு. உடல் மீது ஊர்ந்து சென்றால் சூடு போட்டது போன்று ஆகிவிடும்.

அத்தகைய விஷத்தை ஒடுக்கும் பச்சிலைகளை உடலில் பூசி அக்காலத்தில் வாழ்ந்த அகஸ்தியனுடைய தாய் தந்தைகள் தங்களை எப்படித் தற்காத்துக் கொண்டார்கள்…? என்பதை என்னிடம் உணர்த்துகின்றார்.

விஷத்தினை ஒடுக்கும் பச்சிலைகளை உன் மீது பூசுகின்றேன். இதை நுகரப்படும் பொழுது
1.மனித உடலை உருவாக்கிய அணுக்கள் விஷத்தின் தன்மை பெருகப்படும் பொழுது
2.விஷம் அதிகமாகி உனக்குள் இது நோயாகி உன்னை மடியச் செய்யுமே தவிர உன்னைக் காக்காது.
3.கொசுக்களிடமிருந்து பூச்சிகளிடமிருந்து உன்னைக் காக்க இது உதவும்.

அதே சமயத்தில் நீயும் உன் மனைவியும் இதைப் பூசிக்கொண்டு கருத்தன்மை அடைந்து விட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது அணுக்களில் சிறுகச் சிறுக இணைந்து “விஷத்தை ஒடுக்கும் அணுவாக…” வளர்ச்சி பெறுகின்றது.

நீ பூசிக் கொண்டால் சிறிது காலத்திற்கு அதைப் பழக்கமாகக் கொண்டு வரப்படும் பொழுது
1.உன் உடலில் உள்ள அணுக்கள் விஷத்தன்மை வாய்ந்ததாக மாறி நல்ல அணுக்களைக் கொன்றிடும் நிலை வந்துவிடும்…
2.துடிப்பின் இயக்கத்தை மாற்றிவிடும் என்று தெளிவாக்குகின்றார்.

பல பச்சிலைகளை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது சில சில எதிர் நிலையான உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றார். அப்பொழுது மயக்கமே வருகின்றது.

இத்தகைய மணங்களை நுகரப்படும் பொழுது பூச்சிகளும் மயங்கி விழுகின்றது. அனுபவரீதியாக இயற்கையினுடைய நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காக எமக்கு இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

வேதனையைக் குறைக்கும் வழி

 

உடலிலே வலி வந்து விட்டால் “அம்மம்மா… மேல் வலிக்கிறதே…!” என்று அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கின்றோம். ஏதாவது தொல்லைகள் வந்து விட்டால் அதை எண்ணும் பொழுது அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.

1.சந்தோஷமான வார்த்தையைச் சொல்லி அதை நிவர்த்தி செய்யலாமா…? என்றால் முடியாது… சந்தோஷமான வார்த்தை அங்கே எதிரி ஆகிறது.
2.வேதனைப்படும் நேரத்தில் யாராவது சந்தோஷமாகப் பேசுவதைப் பார்த்தால் அது உடனே எதிரியாக மாறுகின்றது.

ஆனால்… இந்த எதிரிகளை வென்றவர் யார்…? சந்தோஷத்தை ஊட்டியது யார்…? அந்த மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளை நாம் எண்ணும் பொழுது அதற்கு ஆகாரத்தைக் கொடுத்த பின் வலுவாகின்றது. அப்பொழுது உயிரான ஈசனிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்…?

1.யாம் பதிவு செய்த மகரிஷிகள் உணர்களை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

மற்றவருடைய குறைகளையோ வேதனைகளையோ கண்ணுற்றுத் தான் நாம் பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கும் பொழுது ஆன்மாவாகிச் சுவாசத்தின் வழி இழுத்து “அகக் கண்ணாக இருந்து…” உயிர் உணர்த்துகின்றது. அகக் கண்ணாக இருந்து பதிவு செய்து மீண்டும் நினைவு கொடுக்கின்றது.

அதே சமயம் நமது புறக்கண் படம் எடுத்து ஆத்மாவாகி உயிருடன் ஒன்றும் போது தான் அந்த உணர்வை அகக் கண்ணாகக் காட்டுகின்றது.
1.ஆனால் மகரிஷிகள் உணர்வைப் பதிவு செய்து மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
2.உயிரான அகக் கண்ணுடன் இணைக்கப்படும் பொழுது இந்த ஆன்மாவிலிருந்து வருவதைத் தடைப்படுத்துகின்றது.

வேதனை அதிகமாக இருக்கிறது என்றால் ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவினை உயிர் வழி சிறிது நேரம் செலுத்தினால் மூச்சு திணறலோ உடலில் வலியினால் ஏற்படக்கூடிய வேதனையோ உபாதைகளோ அது குறையும்.

முதலில் எடுக்கவே விடாது.

இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று
1.அந்த உயர்ந்த சக்திகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது
2.சிறுகச் சிறுக வலிகள் தணியும்… செய்து பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் தீமை செய்கிறார் என்ற உணர்வை நுகர்ந்தால் போதும். அவருடைய சிரமங்களை நாம் அறியலாம். ஆனால் சிரமங்களை அறிந்த பின்
1.“நான் கண்டுபிடித்துவிட்டேன்…!” என்று
2.எப்படி எல்லாம் சிரமம் வருகிறது…? என்று ஜோசியத்தைப் பார்த்து விடாதீர்கள்…!

மற்றவர்களுடைய குறைகளோ துன்பங்களோ தெரிந்தது என்றாலும் மகரிஷியின் அருள் சக்தி அவர் பெற வேண்டும். அவர் சிரமத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை மாற்றி எடுத்துக் கொண்டு “மகரிஷியின் அருள் சக்தி பெற்று நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்…” என்று இந்த வாக்கை மட்டும் கொடுங்கள்.

கஷ்டத்தைச் சொல்லி விடாதீர்கள்…!

ஏனென்றால் இந்தத் தியான வழியில் உள்ளவர்களுக்கு மற்றவர்களைப் பார்க்கும் பொழுது அது தெரிய வரும். சொல்லவும் முடியும். ஆனால் அதை நல்லதாக்குவதற்குச் சொல்ல வேண்டும்.

ஆனால் ஒரு சில பேர் அடுத்தவர்களுடைய குறையை இலேசாகத் தெரிந்து கொள்வார்கள். தெரிந்த பின்…
1.சாமி (ஞானகுரு) உபதேசம் சொல்கிறார்.
2.எல்லாமே இவரும் கேட்கிறார்…!
3.கேட்ட பின்பும் இப்படித் தப்பு செய்து கொண்டே இருக்கிறார்… என்று எண்ணி அதையே சொல்லிச் சொல்லி
4.அந்தக் குறையை எடுத்து வளர்த்துக் கொள்கிறவர்கள் தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் செய்யும் தவறைப் பற்றி அறிய முடிகிறது. ஆனால் அதை அறிந்த பின் அந்தத் தீமையை நீக்கத் தெரியவில்லை.

ஏனென்றால் மற்றவரைப் பற்றி அறியும் ஆற்றல் வரப்போகும் போது “குறைகளைக் கேட்கிறோம்…” என்று அதற்குள் போய்விடுகின்றார்கள்.

பின் இப்படிச் செய்கிறார்கள்… இப்படி இருக்கிறார்கள்…! என்று அவர்களைப் பற்றிக் குறையாகப் பேசி அவர்களுடைய நினைவு வரும் போது இது தான் வளரும்.

யாம் அறியும் சக்தியைக் கொடுத்தாலும் “அதை நீக்கும் சக்தியையும் உடனடியாகக் கொடுக்கிறோம்…” மீட்கும் வல்லமை கொடுத்ததைப் பயன்படுத்தவில்லை என்றால் குறை உணர்வே வளரும். அதை நாம் மாற்றுதல் வேண்டும்.

1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவருக்குள் அறியாது புகுந்த அந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அந்தத் திறன் அவர் பெற வேண்டும்.
4.மகரிஷியின் அருள் வட்டத்தில் அவர் வாழ வேண்டும்.
5.ஒளியின் உணர்வாக வளர வேண்டும் என்று உணர்வை எடுத்தால்
6.நாம் பார்த்து அறிந்து கொண்ட அந்தக் குறையான உணர்வு நமக்குள் மாறும்.

மகரிஷியின் அருள் சக்தியால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நீங்கள் பொருள் காணும் சக்தி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை நீக்குவீர்கள். இப்படி எல்லாம் நாம் எண்ணினால் அவருடைய குறைகள் நமக்குள் வராது தடுக்கின்றோம்.

அவரும் இதே போல் எண்ணினால் அவருடைய குறையான செயல்களும் நிச்சயம் மாறும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமன் வாலியை எப்படிக் கொல்கிறான்…? இராமன் வாலியை மறைந்து இருந்து தான் தாக்குகின்றான்.

ஒருவரைப் பார்த்த பின் அவர் வேகமான நிலைகளில் நம்மைத் தாக்கி விடுவார் என்ற உணர்வை நாம் எடுக்கின்றோம். அவனை உற்றுப் பார்த்தால் என்ன செய்கின்றது…?

அவர் கோபமான உணர்வுகளை நம்மிடம் சொல்லப்படும் போது அதை நாம் நுகர்ந்தவுடனே அந்த உணர்வு நம்மை வீழ்த்துகிறது.

அவன் எண்ணத்தை நுகர்ந்து பதிலுக்கு நாமும் கோபமாகச் சொல்வதை விடுத்து விட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.புருவ மத்தியில் வலுவாக எண்ணிச் சுவாசித்து விட்டு – அந்த மறைந்த நிலைகளில்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனை அறியாது இயக்கும் இருள் நீங்க வேண்டும் என்ற உணர்வைத் திருப்பினால்
4.அவன் உணர்வை நாம் அடக்குகின்றோம்.

வாலி என்ற நிலைகளில் போர் முறைகள் செய்யும் போது அதனின் வலுவின் செயலாக்கங்களுக்கு… நம்முடைய வலிமையை நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று தான் வான்மீகி தெளிவாகக் காட்டுகின்றார்.

ஏனென்றால் கண்கள் கொண்டு அவர் கோபமாகப் பேசுவதை உற்று நோக்கிக் கூர்ந்து பதிவாக்கி விட்டால் அவன் உணர்வே நம்மை இயக்கும். அதை இயக்கவிடாது அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தடுக்க வேண்டும்.

இருந்தாலும் இதைப் போன்ற உணர்வின் தன்மை நம்மை இயக்கும் நிலைகளைக் காட்டுவதற்குத்தான் மகாபாரதத்தில் அதே சமயத்திலே பீஷ்மரைக் காட்டியிருப்பார் வியாசகர்.

கடைசியில் பீஷ்மர் அம்புப் படுக்கையின் மீது தான் படுத்து இருப்பார்.
1.தான் செய்த பாவம் எல்லாம் தன் உடலில் எப்படி இருக்கிறது…? என்று உணர்த்தி
2.அதைத் தாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும் என்ற நிலையில்
3.மக்களுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பார் வியாசகர்.

கொலையோ மற்ற இம்சைகளையோ செய்தாலும் இந்த உணர்வு நமக்குள் இருக்கத்தான் செய்கிறது. அதனின் செயலாக்கங்கள் எப்படி வரும்…? என்பதையும் அதை மாற்றும் வல்லமை எப்படிப் பெற வேண்டும் என்பதையும் குருநாதர் அன்றைக்கு எமக்குக் (ஞானகுரு) காட்டுகிறார்.

சரித்திரத்தைக் காட்டி நம் கண்களின் வேலை என்ன..? நம் எண்ணங்கள் எப்படி இயங்குகிறது…? நம் உயிர் எப்படி இயங்குகிறது…? என்று ஒவ்வொன்றையும் அனுபவபூர்வமாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஞான சக்தி

 

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன். தியானம் எடுத்தவர்கள் “தொழிலில் நஷ்டம்…” என்ற வார்த்தையே இங்கே வரக்கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
1.சிறிது நேரம் இப்படி எடுத்துச் சிந்தித்தீர்கள் என்றால் “நஷ்டம் எதனால்…?” என்ற அந்த ஞானம் வரும்.
2.அதிலே எந்தக் குறைபாடு இருக்கின்றதோ அதைத் திருத்தி அமைக்கக்கூடிய சக்தி வரும்.

ஐயோ… நஷ்டமாகி விட்டது நாளை என்ன செய்யப் போகின்றோம்…! என்று பதட்டத்தை அங்கே கொடுத்து விட்டால் நல்ல சிந்தனை வராது.

தொழில் வகையில் நாம் வளர்கின்றோம் என்றாலும் கூட சிறிது நஷ்டம் ஆனால் தியானத்தில் வளர்ந்து வரும் பொழுது நஷ்டத்திற்காக நாம் இந்த தியானத்தைச் சீராகப் பயன்படுத்தினோம் என்றால் அந்த உயர்ந்த உணர்வு வலுவாகும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்கிற பொழுது அது வலுவாகின்றது. அந்த உணர்வு நம்மை இயக்கி அனைத்தையும் சீர்படுத்தும்.

1.எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.
2.தீமைகளைத் தூக்கி எறிந்து விட வேண்டும்.

கண்ணிலே தான் பார்க்கின்றோம்… நினைக்கின்றோம்… இழுத்து மூக்கு வழி சுவாசித்து உயிரிலே படுகின்றது. இதே கண்ணின் நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும்படிச் சொல்கின்றோம்.

அதே கண்ணின் நினைவு கொண்டு கவர்ந்த சக்தியை உயிரிலே இணைக்கின்றோம். இணைத்தவுடனே அங்கே வலுப்பெறுகின்றது.

1.மற்றவர்கள் சங்கடமான வெறுப்பான இந்த உணர்வுகள் பதிவாகி இருந்தாலும் உள்ளே செல்லாதபடி தடைப்படுத்தப்படுகின்றது.
2.இப்படி அதை முதலில் நிறுத்திப் பழக வேண்டும்… அது நம்மை இயக்கிவிடக் கூடாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே நிலை நிறுத்திப் பழக வேண்டும். கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளே கொண்டு போக வேண்டும்.

தியானத்தில் உடலில் உள்ள எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி நாம் நாம் பழக்கத்தைச் செய்து வைத்திருக்க வேண்டும்.

சந்தர்ப்பங்களில் அதை எடுத்து வரிசைப்படுத்தி நம் உடலில் எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று வலு கொடுக்க வேண்டும்.
1.அதாவது அந்த நேரத்திலே எச்சரிக்கை செய்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே வலுவை ஏற்றும் பொழுது
3.நமக்குள் எந்தத் தீமையும் உள்ளே புகாது தடுக்கப்படுகின்றது.

ஏனென்றால் வேதனையோ வெறுப்போ நஷ்டமோ கஷ்டமோ இது எல்லாம் வாலி… சக்தி வாய்ந்தது…! ஆனால் இதையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்.

தீமை வருகிறது என்று அதன் மேல் இச்சைப் பட்டால் அது வலிமை கூடி விடுகின்றது. ஆனால் அதற்குப் பதிலாக வேதனையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற இச்சைப்பட்டால் உயிரில் இணைகின்றது. அந்த உணர்வு கிரியை.

உயிரிலே பட்டவுடன் உடல் முழுவதும் சென்று அந்தச் சக்தி கிரியை ஆகிறது.
1.அகஸ்தியன் எப்படித் தீமையை நீக்கித் துருவ நட்சத்திரமாக ஆனானோ அந்த உணர்வின் ஞானமாக நம்மை இயக்கத் தொடங்கும்.
2.அது தான் ஞான சக்தி… ஆகவே தீமை புகாது தடுத்துக் கொள்கிறோம்.

ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் சர்வ சாதாரணமாகச் செயல்படுத்தலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்றைக்கு அரசர்கள் செய்த முறைப்படி மீனாட்சி என்று மீன் கொடியை வைத்து ஆட்சி செய்து மீனாட்சி என்று காட்டுகின்றார்கள். தனது வலிமை கொண்டு மற்ற ஆட்சிகளை அடக்க முடியும் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

மீன் என்ன செய்கிறது…? ஒன்றை ஒன்று விழுங்குகிறது. அது விழுங்கும் சக்தி பெற்றது. மற்ற அரசனை வீழ்த்தும் நிலை அது. அதற்காக மீனாட்சி என்று அன்றைய அரசர்கள் காரணப் பெயரை வைத்தனர்.

அன்று ஆண்ட அரசன் அதற்கு வேண்டிய சாஸ்திரத்தை எடுத்து மக்களுக்குக் காட்டி அதை எடுத்துக் கடவுளாக வளர்த்தார்கள். அரசர்கள் சொன்ன நிலைகள் தான் இது.

அதே போல் ஆண்டாள் என்று இங்கே வைத்திருக்கின்றார்கள். நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் தான் நம்மை ஆளுகின்றது. அன்றைய அரசன் காரணப் பெயரை வைத்து அந்த உணர்விற்கெல்லாம் ஸ்தல புராணங்களை வடிக்கின்றான்.

அதை யாரும் சிந்தித்துப் பார்க்கிறோமா என்றால் இல்லை. அரசர் வகுத்த வழியில் தான் நாம் இன்றும் செல்கின்றோம். அரசன் ஆடம்பர நிலைகள் கொண்டு சுகபோகத்திலேயே வாழ்ந்தான்.

அவன் காட்டிய சாஸ்திரங்களை சாதாரண மக்கள் கடைப்பிடிக்கத் தவறினால் மரண தண்டனை கொடுக்கின்றான்… கழுவேற்றச் செய்கின்றான்…!

ஒரு அரசன் அடுத்த அரசனுடன் உறவு கொண்டால் ஐந்தாம் படை என்று அவனைத் தீர்த்துக் கட்டுகின்றான். அவனுக்குக் கீழ் செல்பரையும் அழித்து விடுகிறான்.

நம் தெய்வத்தைக் காட்டிக் கொடுக்கும் நிலைகளுக்குச் செல்கின்றான் என்றும் அதனால் தெய்வத்தின் சாட்சியாக அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லி அதை நிறைவேற்றுகின்றான். இது அரசன் செய்த தெய்வ குணம்.

ஒவ்வொரு அரசனையும் புகழ் பாடிய கவிஞர்கள் தான் பல உண்டு. எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும்
1.ஸ்தல புராணங்களைப் பாடும் போது
2.”இந்த ஸ்தலம் தான் எல்லாவற்றிலும் உயர்ந்தது…” என்று அப்படித்தான் பாடியிருப்பார்கள்.

இந்தப் பாடலில் கூறியபடி உயர்ந்த ஸ்தலம் என்ற எண்ணத்தில் அரசனின் ஆசையின் நிலைகளைத் தான் இன்றைக்கு நாம் வளர்க்க முடிகிறது.
1.அரசர் வழியில் தான் நாம் செல்கின்றோமே தவிர
2.மெய் ஞானிகள் சொல்ல வழியினை நாம் கடைபிடிக்கும் முறையே அற்றுப் போய் விட்டது.

மகரிஷிகள் சொன்ன உணர்வை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே மனித குலத்தைப் புனிதப்படுத்தும் நிலைகள் கொண்டது. மக்கள் அனைவரையும் ஒன்றி வாழச் செய்யும் ஞானக் கருவூலங்கள் தான் நம்முடைய ஆலயங்கள்.

1.உயிரே கடவுள்
2.நாம் எண்ணும் எண்ணமே உள் நின்று இயக்கும் கடவுளாகின்றது.
3.நாம் எண்ணும் உணர்வுகளே உடலாகச் சிவமாகின்றது.
4.நாம் எண்ணிய உணர்வே வித்தாக ஊழ்வினையாக விநாயகர் என்று பதிவாகிறது.

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்படுதல் வேண்டும், விநாயகருக்கு அங்குசத்தைக் கையில் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக மனிதனாக உருவான பின் அந்தக் கடும் அங்குசத்தை வைத்துத் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்ற இந்த நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

நம்முடைய தத்துவங்கள் சாதாரணமானதல்ல. அதை உணர்த்தும் ஆலயங்களும் சாதாரணமானதல்ல.

1.“சாமியிடம் சக்தி இருக்கின்றது…!” என்ற இந்த நம்பிக்கையைத் தான் ஊட்டியுள்ளார்கள்.
2.எண்ணத்தால் அதை நமக்குள் எடுத்தால் “நம் உயிர்…” அந்தச் சக்திகளைக் கொடுக்கின்றது என்ற நிலையை நாம் மறந்து விட்டோம்.

கோவிலுக்குச் சென்றால் நமக்குள் அந்த உயர்ந்த தெய்வீகக் குணத்தை எடுத்து நம்மைச் சார்ந்தோருக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். அது தான் உண்மையான பக்தி.

இயற்கையின் மாற்றங்கள்… “வளர்ச்சிக்கு எப்படிச் செயல்படுகிறது…?”

 

நம் பூமியில் ஒவ்வொரு மரமும் செடியும் எதை எடுத்து உருவானதோ அதைத்தான் காற்றிலிருந்து எடுத்து வளர்கின்றது.

வேப்பமரம் அதன் சத்தை எடுக்கின்றது. அதிலிருந்து வரக்கூடிய மணத்தைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அலைகளாகப் படர்கின்றது. இதே போன்று ரோஜாப்பூவின் மணமும் விஷச் செடியிலிருந்து வெளிப்படும் மணமும் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாகப் படர்கின்றது.

ஆனால் இவைகள் ஒன்றுடன் ஒன்று சந்தித்து மோதும் பொழுது அந்த அளவுகோலுக்குத் தக்கப் புது வித்தாகிறது.

வேப்பமரம் 100% ரோஜாப்பூ 10% விஷச் செடியின் சத்து 1% எல்லாம் சேர்ந்து இரண்டு கலவைகளாகும் போது கருவேப்பிலையாகிறது.
1.அதற்கு நாதங்களைப் பற்றிக் குருநாதர் காட்டுகின்றார்.
2.மரம் ரிக். வேப்பமரத்தின் மணம் சாம இசை. வேப்ப மரத்தின் மணத்தை நாம் நுகர்ந்தால் “ஓய்…” என்று சப்தம் வருகின்றது… வாந்தி வருகின்றது.
3.ரோஜாப் பூவின் மணத்தை நுகர்ந்தால் ஆகா..ஹா… என்று சொல்லி ஆனந்தப்படுகின்றோம்.
4.விஷச் செடியின் மணத்தை நுகர்ந்தால் உச்..உச்..உச்..உச்… என்று சொல்கின்றோம்.
5.அந்த இசைக்குத் தக்க உச்..உச்… என்பது “இழுக்கக்கூடிய சக்தி” அதிகமாகின்றது.
6.ஆனால் வேப்பமரம் “உந்தித் தள்ளும் சக்தி” அதிகமாக இருக்கின்றது.
7.ரோஜாவின் மணம் ஆகா… என்று சொன்னாலும் அதுவும் “இழுக்கும் சக்தி” பெறுகின்றது.

இது இரண்டும் விஷச் செடியின் மணத்தை எடுத்த பின் உச்..உச்… என்கிற பொழுது இந்த மணங்களைச் சேர்த்துச் “சுழலின் தன்மைக்கு” வருகின்றது.

சுழலின் தன்மை வந்த பின் வேம்பின் சத்தைச் சேர்க்கின்றது. மூன்றும் ஒன்றாக இணைகிறது. இணைந்து கொண்ட பின் கருவேப்பிலையாக மாறுகின்றது.

செடி கொடிகளில் இப்படி மாற்றங்கள் ஆகி வளர்ச்சிக்கு வருகின்றது.

அதே போல் உயிரணு தோன்றிய நிலையில் மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ விதமான உணர்வை எடுத்து உயிருக்கு தக்க உனர்வுகள் எடுத்து ரூபங்கள் மாறி வந்தது.

முதலில் சொன்ன மாதிரி கருவேப்பிலையாக எப்படி மாறியது…?
1.கசப்பு… நல்ல மணம்… அந்த அரிப்பு… மூன்றும் சேர்ந்து அது உருவாகின்றது.
2.கருவேப்பிலையைத் தேய்த்தால் அரிப்பு வரும்.
3.ஆனால் மற்றொன்றுடன் சேர்த்தபின் ருசி வருகின்றது என்பதை உணர்த்துகின்றார் குருநாதர்.

இதே போல் தான் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவரும் சத்தினைக் கோள்களும் சூரியனும் கவர்ந்து அதனுடைய கலவைகள் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதை “நேரடியாகக் காட்டினார் குருநாதர்…”

மலை உச்சிக்கு அழைத்துச் சென்று எத்தகைய மறைப்பில்லாத இடத்தில் வைத்து அதைக் காட்டுகின்றார். யாம் கண்டது அனைத்தும் நீங்களும் காண முடியும்… அறிய முடியும்…! வரிசைப்படுத்தி எடுத்து வளர்த்துக் கொண்டால்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் சொன்னது:-
நீ மனிதனான பின் முழு முதல் கடவுளாகின்றாய். நான் போதித்தபடி உனக்குள் அருள் ஞானத்தை உருவாக்குகின்றாய். ஆகவே அனைவருக்குள்ளும் அருள் ஞானத்தை உருவாக்கும் உயர்ந்த பண்பைப் பெறு.
1.இந்த உலகம் உனக்குச் சொந்தமல்ல.
2.இந்த உடலான உலகமும் உனக்குச் சொந்தமல்ல.
3.அருள் ஞான உணர்வையே உனக்குச் சொந்தமாக்கு.
4,அந்த அருள் ஒளியின் உணர்வையே உனக்குச் சொந்தமாக்க முற்படு.
5.”அனைவரும் அதைப் பெற வேண்டும்…! என்று எண்ணினால் தான் நீ இதைப் பெறுகின்றாய்…!

நான் எல்லாவற்றையும் பெற்றுவிட்டேன் என்று அகம் கொண்டால் அந்த உணர்வின் விஷம் உனக்குள் புகுந்து விடும். உன்னையே அது அழித்து விடும். அப்பொழுது நீ போவது எங்கே…? இருளுக்குள் தான் நீ புக முடியுமே தவிர ஒளிக்குள் நீ வர முடியாது.

இத்தனை விவரங்களையும் சொன்ன பிற்பாடு அப்புறம் நான் (ஞானகுரு) என்ன செய்வேன்…? தவறு செய்யும் எண்ணம் எனக்கு வருமா…! எப்படி வரும்..?
1.எனக்குப் பல பேர் தொல்லையைச் செய்தாலும் நான் அதைப் பற்றி நினைப்பதே இல்லை
2.தொல்லை செய்தார்கள்… என்று நினைத்தால் தானே தொல்லை…!

ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய சாமியார்கள் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் தவறு செய்தே வாழுகின்றார்கள். ஆண்டவனைக் கைக்குள் வைத்துக் கொள்வது… மக்களை ஏமாற்றப் பழகுவது. ஏனென்றால் அவனுடைய உணர்வு அது.

அவன் எங்கே போகிறான்…? என்று அவனுக்கே தெரியாது. அந்த உணர்வை வைத்துக் கொண்டு எம்மை உற்றுப் பார்க்கும் போது மற்றவர்கள் என்னையும் தவறாகத் தான் எண்ணுவார்கள்.

அப்பொழுது என்னைப் பார்க்கும் பொழுது “அவர்களுக்குத் தெளிவான உணர்வு வர வேண்டும்…!” என்று தான் நான் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேனே தவிர “யாரையும் குற்றவாளியாக ஆக்குவதற்கு இல்லை…!”

குற்றம் புரிந்த உணர்வு அங்கே இருக்கிறது. குற்றத்தின் உணர்வு கொண்டு பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை இங்கே என்ன செய்கிறது…? கீதையிலே சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

1.அந்த அருள் ஒளியைப் பெறுகிறோம்
2.எல்லோரும் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அது நம்மை ஒளியாக மாற்றும்.

இல்லை தவறு செய்தான்… தவறு செய்தான்… என்ற உணர்வை எடுத்துக் கொண்டால்
1.நான் எதைச் செய்தாலும் “என்னை ஏமாற்றுகிறான்… ஏமாற்றுகிறான்…!” என்று தான் அந்தச் சொல் வரும்.
2.ஆனால் அது அவன் குற்றம் அல்ல.
3,அதற்காக வேண்டித் தவறு செய்கிறான் என்ற நிலையில்
4.என்னிடம் இருக்கும் கடுமையான ஆயுதத்தை வைத்து அவனை வீழ்த்த எண்ணினால் அந்த உடலைத்தான் வீழ்த்த முடியும்.
5.ஆனால் இந்த உணர்வின் தன்மை கடும் விஷத் தன்மையாக எனக்குள் வளர்ந்து விடும்.

என்னிடம் சக்தி இருக்கின்றது என்ற நிலையில் மற்றவர்கள் தப்பாகப் பேசுவதைக் கேட்டு “ரோசப்பட்டு…!” அவர்களை உருட்டினால் உருட்டி விட்டுப் போகலாம். அப்படிச் செய்தால் இங்கே என்னுடைய வளர்ச்சியே போய்விடும்.

இந்த உடலில் நாம் எத்தனை நாள் இருக்கிறோம்? இந்தப் புகழ் எத்தனை நாளைக்கு இருக்கும்…?

மற்றவர்களை வீழ்த்திடும் உணர்வு வரப்போகும் மற்றவர்கள் என்னைப் போற்றுவார்கள். ஆஹா…! இவர் பெரிய சாமியார்…! என்று பயப்படுவார்கள். ஆனால் எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாமே அஞ்சி ஒடுங்கி விடுமே…!

இத்தகைய உணர்வின் தன்மை வந்தால் நான் எங்கே போவேன்..?

1.ஆகையினால் என்னை ஒருவர் போற்றுவதற்காக நான் வரவில்லை.
2.மற்றவர்கள் என்னைப் போற்ற வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய வில்லை.
3,உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து உங்கள் உணர்வின் தன்மை ஒளியாக வேண்டும் என்று
4.அந்த அருள் ஒளியைப் பெறச் செய்வது தான் “என்னுடைய வேலை…!”

நீங்களும் அதே உணர்வு கொண்டு மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் இருளை அகற்றலாம். ஒளியாக மாறலாம்.

ஆகவே நாம் பார்க்கும் எல்லோரும் அந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற இந்தப் பக்குவத்திற்கு வாருங்கள்.

நம்முடைய எதிர்பார்ப்பு எதுவாக இருக்க வேண்டும்…?

 

பிறரிடமிருந்து வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்று கேட்டறிந்தாலும் இதை மாற்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குள் அதை உருவாக்க வேண்டும்.

நம் உடலில் எத்தனை வகையான குணங்கள் உண்டு. அந்தந்த குணங்கள் வரப்படும் பொழுது அதனால் ஏற்பட்ட அணுக்கள் உண்டு.

நாம் ஒன்றுமே சங்கடப்பட வேண்டாம். ஆனால் சங்கடப்படுபவர் உணர்வைக் கேட்டறிந்து
1.அது அணுவாக உடலிலே விளைந்திருந்தால் அடுத்தாற் போல சந்தோஷப்படுவதைக் கேட்டாலும் அது இயங்காது.
2.மற்றவர்கள் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால் அதைப் பார்த்த பின்
3.அவர் உடலிலிருந்து வந்ததை உணவாக எடுத்து இங்கே நமக்குள் கொண்டு வந்து விடும்.
4.நம்மை அறியாமலே சங்கடமாகத் தான் அடுத்து பேசுவோம்.
5.குடும்பத்தில் ஏதாவது நடந்தால் வம்பு வந்துவிடும்… சங்கட உணர்ச்சிகள் தூண்டப்பட்டு விடுகின்றது.

இது போன்ற நிலைகளைத் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று பல முறை எண்ண வேண்டும்.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி அந்தச் சங்கடப்படுபவர்கள் பெற வேண்டும். அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். அவர் வாழ்க்கையில் நலம் பெறும் சக்தி உருவாக வேண்டும் என்று எண்ணி விட்டால் இங்கே நம் உடலுக்குள் இது உருவாகின்றது.

அவர்கள் எண்ணினால் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் எண்ணவில்லை என்றாலும்
1.அவர்கள் உணர்வு நமக்குள் இருப்பதால் நாம் இதை இந்த முறைப்படி மாற்றிக் கொள்கின்றோம்.
2.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

காரணம் நம் எண்ணியது எதுவோ அதைத்தான் உயிர் உருவாக்கும். ஆகவே இந்த வாழ்க்கையில் “பிரதிபலனை எதிர்பார்த்து எதுவும் செய்யக்கூடாது…”

ஆனால் பிரதிபலன் எதுவாக இருக்க வேண்டும்…?

நாங்கள் பார்த்த குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் அவர் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்
1.அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும்… அவர்கள் பேரானந்தப்பட வேண்டும் என்று அதை நாம் பற்றி
2.அவர்கள் வாழ்வில் நல்லது வருவதை எண்ணி நாம் மகிழ வேண்டும்.
3.இது தான் நம்முடைய எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்.

அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்… நல்ல சொல் சொல்ல வேண்டும்… குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டால் அது எதிர்பார்ப்பாக வளரும். அந்த எதிர்பார்ப்பு நமக்குள் நல்ல உணர்வுகளாகப் பெருகும்… அத்தகைய அணுக்கள் விளையும். தீமைகள் வராது தடுக்கும்.

ஒருவர் மீது நாம் அதிகப் பற்று கொண்டால்
1.அவர் என்ன தப்பு செய்தாலும்
2.நாம் அதை ஏற்றுக் கொள்வோம்…!

ஆனால் நமக்குப் பிடிக்காதவர்கள் என்று தெரிந்தால்
1.என்னதான் அவர்கள் நல்லது செய்தாலும்
2.அவர்களைக் குறை கூறும் நிலைகள் தான் வரும்… அவர்களைப் பார்த்த உடனே இந்த உணர்வுகள் தான் தோன்றும்.

இதைப் போன்ற நிலைகளிலிந்து நாம் விடுபட வேண்டும்.
1.விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலை ஒவ்வொரு நொடியிலும் நாம் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நமக்குள் எந்தத் தீமையும் வளராது தடுக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்முடைய சூரியக் குடும்பத்திலிருந்து கார்த்திகை நட்சத்திரம் விலகிப் போய்விட்டது. அதனால் நம் பிரபஞ்சத்தில் அறிவின் ஞானம் சூனியமாகிப் போய்விட்டது. ஏனென்றால்
1.ஒன்றுடன் ஒன்று மோதி… அந்த உணர்வின் தன்மை
2.”அறிவு ஒளியாக..” வருவதெல்லாம் குறைந்து விட்டது.

கார்த்திகை நட்சத்திரம் போல ஏனைய சில நட்சத்திரங்களும் விலகும் பருவத்தில் இருக்கிறது. இப்படி விலகி விட்டால் நம் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்பட்டுவிடும்.

சில ஆயிரம் ஆண்டுகள் செல்லப்படும் போது நம் சூரியன் தனித்துப் பிரிந்து விடும். நம் பூமிக்குள் நீர் வளம் அதிகமாகிவிடும். இந்த எடையின் தன்மை கூடும் போது ஈர்க்கும் தன்மையாகி சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

சூரியனை விட்டு விலகினால் அப்பொழுது பூமி முழுவதும் பனிப்பாறைகளாக (வியாழன் கோள் போல்) மாறும். அதற்குள் இங்கே இருக்கக்கூடிய உயிரினங்கள் தாவர இனங்கள் அனைத்தும் பூமிக்குள் (பனிகளுக்குள்) ஒடுங்கி விடும்.

ஐஸ் (பெட்டிக்குள்) பாறைகளுக்குள் வைத்து மறுபடியும் சுழலும்போது சிதறுண்டு போகும் போது உயிரணுக்கள் எல்லாம் அடுத்த பிரபஞ்சத்திற்குள் பரவும்.

நம் உயிரான அணுக்கள் அப்படிப் பரவப்போகும் போது அது எடுத்துக் கொண்ட… நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப… வேறு எங்கேயோ போய் உருவாக்கும். இதைத் தான் நாம் பெற முடியும்.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் இந்த உடலில் நாம் இப்பொழுது நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே குறுகிய காலத்திற்குள் நாம் ஒளி நிலை பெற வேண்டும்.

1.ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் நாம் வாழுகின்றோம் என்று தெரிகிறது. (அறுபதே எழுபதோ அவ்வளவு தான்…!)
2.நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக வாழ வேண்டும்…! என்று தான் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றோம்.
3.அதைச் செலவழிக்கவும் செய்கிறோம். ஆடம்பர பொருளுக்காகவும் செலவழிக்கின்றோம்.

ஆனால் இது எல்லாம் நமக்கு உதவியாக இருக்கிறதா…?

சம்பாதித்து வீடு சொத்து பணம் பொருள்கள் மனைவி மக்கள் எல்லாமே அழகாக வைத்திருந்தாலும் கூட
1.நமக்கு நோய் என்ற உணர்வு வந்தால் என்ன செய்கிறோம்…?
2.அதை எல்லாம் தள்ளி விட்டுத் தூக்கித் தூக்கி எறிகிறோம்.
(உடல் சரியில்லை என்றால் நல்ல உணவை உட்கொள்ளும் எண்ணமோ சொத்தையும் சுகத்தையும் உடைகளையும் நகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறதா…? இல்லையே…!)
3.அப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர “நல்லா இருக்க வேண்டும்…!” என்று அது நமக்கு உதவுகிறதா…?

அதே போல் நாம் நன்றாகத் தான் இருக்கிறோம். அடுத்தாற்போல யாராவது வந்து நம்மை ஏளனமாகச் சிரித்து கேவலப்படுத்தினால் என்ன நினைக்கின்றோம்…?

பார்…! என்னை எப்படிக் கேவலப்படுத்துகின்றான்… இப்படிக் கேவலப்படுத்துகின்றானே…! என்ற இந்த உணர்வைத் தான் எண்ணுகின்றோம்.

அந்த உணர்வை எடுத்தவுடனே நாம் நன்றாக இருந்ததை மறந்து விட்டு அவர் மேல் கோபமும் வெறுப்பும் வேதனையும் ஆகி அவர்கள் எதை எதை எல்லாம் சொல்கிறார்களோ… அதை நமக்குள் விளைய வைக்கின்றோம். அதைத் தான் பழகி வைத்திருக்கின்றோம்.

அதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்குகின்றார்கள்…!

1.அவர்கள் என்னமோ சொல்லி விட்டுப் போகிறார்கள்…
2.அவர்களுக்கு நல்ல புத்தி வரட்டும்…
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து
4.அவர்கள் சொல்லும் தீமை நமக்குள் வராது தடுக்கப் பழக வேண்டும்.

அதனால் தான் ஆறாவது அறிவைச் “சேனாதிபதி…” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள். அந்த அருள் ஞானத்தை நாம் பெருக்கப்படும் போது அது நமக்குப் பாதுகாப்பாக வரும்.

அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? நாம் எந்த மகரிஷிகளை எண்ணுகின்றோமோ அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் நினைக்கப்படும் போது உயிர் அதை உருவாக்குகிறது.

அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. அறிந்துணர்ந்து செயல்படும் அந்தச் சக்தியைக் “கார்த்திகேயா…!” என்று காட்டுகின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் தீமையின் உணர்வின் தன்மையாக நம்மை மாற்றும். அதைத் தடுக்க அருள் ஒளியை உருவாக்கும் அணுவை நமக்குள் பெருக்கினால் அது நம்மைக் காக்கும்…!

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் நின்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டியது

 

யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன்பு நின்று அதை உற்றுப் பார்த்து…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்…
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.பகைமைகள் வராது… இந்த உணர்வு அனைவரையும் அருள் வழியில் இயக்கும்
4.உயர்ந்த பண்புகள் வளரும்… அருள் உணர்வுகள் பெருகும்… இருள் புகாது தடைப்படுத்தும்

அந்தச் சக்திகள் நமக்கு நிச்சயம் கிடைக்கும். ஆகவே அந்த அருள் வழி நாம் செயல்படுவோம்.

சக்கரத்திற்கு முன் அமர்ந்து தியானித்தால்
1.அபூர்வமான நிலைகளில் உங்களை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் செல்லும்.
2.நம் பிரபஞ்சம் மட்டுமல்ல… 2000 சூரியக் குடும்பத்தையும் வட்டமிடும்.
3.2000 சூரிய குடும்பம் எடுத்த உணர்வுடன் அங்கேயே உங்களை அழைத்துச் செல்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி அது…!

ஏனென்றால் அவர் எனக்கு எப்படி இதையெல்லாம் காட்டினாரோ அதே வழிப்படித் தான் உங்கள் உயிரிலே சேர்க்கப்பட்டது. அந்த உயர்ந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன்.

ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடியுங்கள்.

குடும்பத்தில் நண்பர்களோ அல்லது யாராக இருந்தாலும் சரி “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணிவிட்டு… அவர்கள் நலம் பெற வேண்டும் என்று சக்கரத்திற்கு முன் சொல்லுங்கள்.

அதிலிருந்து ஒளிகள் வரும்… இந்த உணர்வுகள் அவர்களுக்குள் படரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொல்லுங்கள்.

1.இத்தகைய நல் உணர்வுகளாக மாற்றி அமைக்கப்படும் போது
2.நல் சக்திகளாக அவர்களுக்கும் கிடைக்கும்… உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும் உடலை விட்டு நாம் செல்லத்தான் வேண்டும். அதற்குள் அருள் ஒளியை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் நிலையாக அவருடைய இருளைப் போக்க வேண்டும் என்று எண்ணினால்… நமக்குள் வரும் இருளைப் போக்கிடும் அந்த வலுவை நாம் பெறுகின்றோம்.

ஆகவே யார் உடல் நலக் குறைவானாலும் சக்கரத்திற்கு முன் நின்று ஈஸ்வரா என்று உயிரை வேண்டித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று சொல்லிப் பழகுங்கள்.

இது போன்று தியானித்து விட்டு அவர்களுக்கு ஏதாவது ஒரு பொருளைத் தொட்டுக் கொடுங்கள்… நன்றாகிவிடும் என்று சொல்லுங்கள்.

குடும்பத்திற்கோ தொழிலுக்கோ விவசாயத்திற்கோ நண்பர்களுக்கோ யாரையெல்லாம் நாம் பார்க்கின்றோமோ அவர்களுக்கெல்லாம் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் குடும்பமெல்லாம் நலம் பெற வேண்டும் என்று
1.சக்கரத்துக்கு முன்னாடி அமர்ந்து சொல்லுங்கள்… அதிலிருந்து ஒளிகள் வந்து கொண்டே இருக்கும்
2.காலை துருவ தியானத்தில் அந்தச் சக்கரம் உங்களுக்குப் பயன்படும்.
3.சக்கரத்தை எண்ணித் துருவ தியானத்தில் அமர்ந்தீர்கள் என்றால் அற்புத நிகழ்ச்சிகள் நடக்கும்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கற்றைகள் ஈர்க்கப்பட்டு அதை எல்லாம் நீங்கள் காணலாம்.

ஆயுள் மெம்பராக நாம் அனைவரும் அங்கே தான் இணைந்திருக்கின்றோம். ஏனென்றால் நான் ஒருவன் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு நெல் பசிக்கு உதவாது… அதைப் பல நெல்களாகக் குவித்தால் அனைவரும் பசியாற முடியும்.

நாமெல்லாம் அந்த அருள் ஒளி பெறும் பொழுது அது பேரொளியாக மாறும். இருளை அகற்றும் வலிமை பெறும் உலகையே காத்திடும் நிலை வரும்.
1.இந்த உணர்வின் சுழற்சி வரப்படும் பொழுது விஞ்ஞான அறிவால் வரும் சூறாவளியோ மற்ற விஷத்தன்மைகளோ
2.நாம் வாழும் பக்கங்களில் வராதபடி நிச்சயம் தடுக்க முடியும்.

விஷக்கிருமிகளால் கொடிய நோய் வந்தாலும் கூட கூட்டுத் தியானங்கள் எடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தி ஊர் முழுவதும் படர வேண்டும்… ஊர் மக்கள் அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சக்கரத்திற்கு முன் சொல்லுங்கள்.

வெளியிலே சொல்வதற்குக் கூச்சமாக இருந்தாலும் சக்கரத்திற்கு முன் நீங்கள் நின்று தாராளமாகச் சொல்ல முடியும்.
1.வீடு நன்றாக இருக்க வேண்டும் தெரு நன்றாக இருக்க வேண்டும் ஊர் நன்றாக இருக்க வேண்டும்
2.அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் சக்கரத்திற்கு முன்னாடி சொல்லுங்கள்.
3.அந்த உணர்வுகள் அலை அலையாகப் படரும். உடலுக்குள் இருளை மாய்க்கும்… பேரொளியாக உருவாக்கும்
3.மகிழ்ந்து வாழும் சக்திகள் பரவும்.

அதற்குத்தான் சக்கரத்தைக் கொடுத்தது.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான் ஒளியாகித் துருவ நட்சத்திரமானான்.

இந்த உணர்வை எவர் பெற்றாலும் இருளை அகற்றி ஒளித்தன்மை பெறுகின்றது. தென்னாட்டில் தோன்றிய நாமும் அவன் வழியைப் பின்பற்றி நம் உணர்வுகள் உலக இருளை ஒளியாக மாற்றிடும் அறிவின் தன்மையும் “மக்களைக் காத்திடும் நிலையையும் நாம் செயல்படுத்த முடியும்…” ஏனென்றால் உலக உணர்வுகள் அனைத்து நமக்குள் உண்டு.

உயிருடன் ஒன்றி… உடலை விட்டு அகன்றால் பேரொளியாக மாறி
1.எல்லோரையும் காக்கும் உணர்வாக முழு முதல் கடவுளாக ஆவோம்.
2.நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால் தான் அது செயலாகும்.

எத்தனையோ அணுக்களின் மலம் தான் நம் உடலாகின்றது. அதே போன்று அருள் ஒளி என்ற உணர்வின் அணுக்களாக விளைந்தால்… உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரம் பெற முடியும். அது தான் முழுமை.

நாம் அனைவரும் அதைப் பெறுவோம். அருள் ஞானத்தைப் பெறுவோம். நாம் எதைக் கொண்டு செல்லப் போகின்றோம்…? நாம் எதையும் கொண்டு போவதில்லை… இந்த உடலையும் நாம் கொண்டு செல்ல முடியாது.

அழகான வீட்டைக் கட்டினாலும் அழகான ஆடைகளை அணிந்தாலும் உடலில் நோயாகி விட்டால் உடல் சுருங்குகின்றது… அதை அனுபவிக்க முடிவதில்லை.

ஆகவே… “நம்முடைய எல்லை பிறவி இல்லா நிலை அடைவது தான்…” என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் ஞானிகள் தவம் இருந்த இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

சில மந்திர ஒலிகள் கொண்டவர்களும் சரி… அல்லது தவத்தின் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தாலும் சரி… எந்தெந்த இடங்களில் அவர்கள் அமர்ந்து தியானம் செய்தார்களோ அங்கெல்லாம் உதாரணமாக ஒரு பாறை மீது என்றால் அங்கே அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.
1.அந்தப் பாறைகளில் நீரோட்டம் வரப்போகும் போது அதைச் சுவை கொண்டதாக மாற்றும்.
2.இது தான் இந்தப் பாறையினுடைய தன்மை.

திருச்செந்தூர் தூத்துக்குடி போன்ற இடங்களில் எல்லாம் அந்தக் காலத்தில் (ஆதியிலே) ஞானிகள் வாழ்நத காலம். பூமியின் மணல் திட்டுகள் மாற்றமாகி அல்லது நீராக (கடலாக) அந்தப் பிரதேசம் மாறப்படும் பொழுது அந்த ஞானிகள் விட்ட அலைகளால் அந்த நீரையே சுத்தப்படுத்தும் தன்மையாக வருகிறது.

இராமேஸ்வரம் திருச்செந்தூர் இந்த பகுதிகளில் எல்லாம் அத்தகைய பாறைகள் கடலில் மூழ்கி இருக்கிறது. கடந்த கால நிலையில் மெய் ஞான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்த மனிதர்கள் உண்டு. மனிதனுக்கு ஒத்த இந்த உணர்வின் தன்மை வரப்போகும் போது இந்த அலைகளை நல்ல நீராக மாற்றும் தன்மையும் உண்டு.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவனது உணர்வுகள் இங்கே அலைகளாகப் படரப்படும் போது
1.அகஸ்தியன் நடந்து சென்ற… அவன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் நீர் சக்தியைக் கவரும் ஆற்றல் பெற்று
2.மேகங்களைக் குவித்து நல்ல நீராக வடியச் செய்கிறது,

கீழே பூமியில் தண்ணீர் இருக்காது…! அங்கே மழையும் பெய்திருக்காது…! ஆனால் அகஸ்தியன் அமர்ந்த அந்த மலை உச்சியில் மேகத்தை இழுத்து நீராக வடிந்து கொண்டே இருக்கும்.
1.எத்தகைய கடுமையான வறட்சியான காலமாக இருந்தாலும்
2.நீர் அங்கே வந்து கொண்டே இருக்கும்.

இதைப் போல அந்தக் காலங்களில் மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் அவர்கள் தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்திருந்தால் அங்கிருக்கும் நீரும் வற்றாது. சுவையாகவும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட அந்த எல்லையைத் தாண்டினால் நீரே இருக்காது. ஏனென்றால்
1.இதெல்லாம் மனிதனுக்குள் விளைந்த வீரிய உணர்வுகள் அலைகளாக
2.அங்கங்கே பதியும் பொழுது அதற்கொப்ப நீர் நிலைகள் வருகின்றது.
3.இதே மாதிரி கடல் நீருக்குள்ளும் பல ரகசியங்கள் உண்டு.

ஆரம்பத்தில் உயிரினங்கள் முதலில் தோன்றியது கடலில் தான். மீன் இனத்தில் இருந்து வந்தவன் தான் மனிதன்.

புயல்கள் வீசும் பொழுது கடல் நீரைக் கவர்ந்த மேகங்கள் அதனுடன் மீன் முட்டைகளையும் கருக்களையும் நிலப் பகுதியிலே மழையுடன் சேர்ந்து பெய்யும் பொழுது தரை வாழ் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் ஆகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.அன்று எந்த ரிஷிகளை எடுத்துக் கொண்டாலும் கையில் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.
2.ஏனென்றால் அந்த நீர் என்பது ஜீவ சக்தி… அதாவது உருவாக்கும் சக்தி…!

உருவாக்கும் சக்தியின் மகத்துவத்தை நாமும் அறிந்து “அந்த ஞானிகளும் ரிஷிகளும் எந்த ஜீவ சக்தியை நுகர்ந்தார்களோ அதைப் பெற்று வளர்த்தால்” இந்தப் பூமியைச் சொர்க்க பூமியாக மாற்றலாம்…! நமக்குள் அந்த ஆற்றல் உண்டு…!

நாம் எடுக்க வேண்டிய பிரமாணம்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வை
1.உலக மக்கள் அனைவரும் பெற்று…
2.இருளை அகற்றிப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுடன் நாம் வாழ்வோம்.

அவர் உணர்வை ஏற்றுக் கொண்டோர் அனைவரும் அதன் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழுகின்றார்கள். துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றி அருள் உணர்வைப் பெற்று ஒளி உணர்வாக வருவதை நுகர்ந்தோர் அனைவரும் “சப்தரிஷி மண்டலங்களாக…” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களைப் போன்று நாமும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெபராக இணைந்துள்ளோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெற்று
1.அதன் உணர்வின் தொடர்பு கொண்டோர் அனைவருக்கும் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று
2.நமக்குள் ஒன்றுபட்ட உணர்வின் வலுவைச் சேர்த்து அனைவரும் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
3.அனைத்து குடும்பங்களும் ஒன்றுபட்டு வாழத் தவமிருப்போம்.

கணவன் மனைவி இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற்று பேரரருள் உணர்வுகளைத் தனக்குள் கூட்டி அவர்கள் பார்வையில் இருளை அகற்றிடும் அருள் ஞானக் குடும்பமாக வளர்ந்திடத் தியானிப்போம்.

யாம் உபதேச வாயிலாக ஒளி உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது உங்கள் செவிகளில் இந்த உணர்ச்சிகளை ஊட்டி… யாம் இட்ட உணர்வுகள் அனைத்தையும் கண் வழி கவர்ந்து… மூக்கு வழி சுவாசித்து… உயிர் வழி நுகர்ந்து… அந்த அருள் உணர்வுகள் அனைத்தையும் உங்கள் ரத்த நாளங்களில் இப்போது கலக்கச் செய்கிறோம்.

எல்லா உணர்வுகளையும் எடுத்துத் தான் துருவ நட்சத்திரம் ஒளியானது. அதாவது
1.மனித வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி மகிழச் செய்து மகிழ்ந்திடும் உணர்வுகளை விளைய வைத்து
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்யும் அந்த ஒளியின் சரீரமாகப் பெற்றது துருவ நட்சத்திரம்.
3.அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறு என்ற நிலை பிறவி இல்லாத நிலை அடைந்தது துருவ நட்சத்திரம்.

அனைத்துக் குடும்பங்களிலும் பேரின்பப் பெரு வாழ்வு வாழச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் ஆயுள் கால மெம்பராக இணைவோம். அனைவரையும் நாம் வாழ்த்துவோம். அனைத்துக் குடும்பங்களும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் எண்ணுவோம்..

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அனைவரும் பெற்று இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி அனைத்துக் குடும்பங்களும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நாம் பிரார்த்திப்போம்.

1.அருள் வழி வாழ்வோம்… ஒன்றுபட்டு வாழ்வோம்
2.ஒன்றுபட்டு வாழ்ந்திடும் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று இதை ஒரு பிரமாணமாக எடுத்துக் கொள்வோம்

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி நம்முடைய மூச்சும் பேச்சும் உலக உலக மக்களை இருளில் இருந்து அகற்றச் செய்யும் அருள் உணர்வாக நாம் படரச் செய்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.தீமையான உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் அது வாலியாகி விடுகின்றது.
2.நல்ல குணத்தின் தன்மை எண்ணும் போது ஆஞ்சநேயனாகி விடுகின்றது.

நல்ல குணத்தை எண்ணி எடுக்கும் போது சீதாவிற்கும் இராமனுக்கும் இலட்சுமணனுக்கும் மத்தியிலே இந்த உணர்வின் தன்மை அணுவான பின் இராமன் இட்ட கட்டளைப்படி ஆஞ்சநேயர் வாழ்கிறார்.

நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் எல்லாம் சீதாலட்சுமி ஆகின்றது. அந்தச் சீதாவைப் பாதுகாப்பது யார்…? இந்த உணர்வுகள்… உணர்ச்சிகள்…! அப்போது உடலிலே என்ன செய்கிறது…?

இராமன் ஊடுருவிச் சொல்கின்றான் என்ற நிலைகளில் தீமைகளை அகற்றும் உணர்வாக வருகிறது. (இராமன் என்றால் எண்ணங்கள், சீதா என்றால் சுவை – மணம், மகிழ்ச்சி).

இராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் நிறைவேற்றுகின்றான். ஆஞ்சநேயன் என்றால் வாயு (காற்று) அதாவது அந்த எண்ணத்தின் உணர்வலைகள்

சீதாவைச் சிறை பிடித்துக் கொள்கிறான் இராவணன்…! ஏன்…?

1.நல்ல குணத்தின் தன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்
2.அசுர குணங்கள் கொண்ட நிலையில் அதன் மீது இச்சைப்படுகின்றான்.
3.ஆக இராவணனின் சகோதரி இராமன் மேல் இச்சைப்படுகின்றாள்.

(அதாவது நாம் நல்ல எண்ணங்கள் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் வேதனையான அல்லது கோபமான உணர்வை நுகர்ந்த பின் அடுத்து நல்ல எண்ணங்கள் வருகின்றதா..? இல்லை…! நம்முடைய மகிழ்ச்சி காணாது சிறைப்படுகின்றது, தீமையான குணம் நல்ல குணத்தை அடக்கப் பார்க்கின்றது)

அப்போது இவன் என்ன செய்கிறான்…! இவளை அவமதித்து விடுகின்றான். என்னை அவமதித்து விட்டான் என்ற கோபத்தில் சூர்ப்பணகை இராமனின் மனைவி அழகாக இருக்கிறது என்று இராவணனிடம் சொல்கிறாள்…!

ஆஹா… என் சகோதரியை இப்படியா சொன்னான் இராமன்…? என்று இவன் அகம் கொள்ளுகின்றான். அகம் கொண்ட பின் என்ன செய்கின்றான்..?

அவள் அழகை வர்ணிக்கும் போது அந்த உணர்வை நுகர்ந்து தனக்குள் அதை அடைய வேண்டும் என்ற உணர்வு இங்கே தோன்றுகிறது. பொறாமையில் வரக்கூடிய நிலை இது.

சகோதரி வார்த்தையைக் கேட்டான். அதனால் அகம் கொண்டு செயல்படும் போது கடைசியில் அவனுக்கு அழிவே வந்து விடுகிறது.

இராவணன் கூடப் பிறந்த சகோதரன் கும்பகர்ணனோ அவன் தூங்கிக் கொண்டே இருக்கிறான்… நல்லவன் அவன்…! (நம் உடலில் தீமையான உணர்வுகள் ஆட்சிக்கு வந்து விட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகிறது அல்லவா..!)

இராவணனின் மகன் இந்திரஜித் என்ன செய்தான்…?

தன் தந்தையினுடைய நிலையில் மகனான அவன் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது… உருவாக மாட்டேன் என்கிறது…! அதாவது
1.இராவணன் அவன் ஆசையின் இச்சைக்குச் செயல்படும் போது
2.தீமைகளை அகற்றும் வல்லமை உருவாவதில்லை. (தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி)

அதே சமயத்தில் தசரதச் சக்கரவர்த்தி தினம் ஒரு மனைவியைக் கல்யாணம் செய்து கொள்கிறான். கங்கணமே கழட்டவில்லை. தசரதன் என்றால் பத்தாவது நிலை அடையக் கூடிய பருவம் பெற்ற நம் உயிர் தான்.

ஒருவர் வேதனைப்படுகின்றார்…!
1.அவரை உற்று நோக்கிய பின் அந்த வேதனைப்படும் சக்தியாக
2.என்னுடன் இணைந்து செயல்படுகிறது… அப்போது அது மனைவியாகின்றது.
3.மனைவியாகப்படும் போது அதிலே உருப் பெறும் கரு அந்த வேதனைகளை உருவாக்கும் தன்மைக்கே வருகிறது.

இராமன் நல்லவன் என்ற நிலையில் தசரதன் தன் மகன் மேல் பிரியப்படுகின்றான். ஒரு நல்லவன் இந்தச் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும். எதிர் காலம் நன்றாக இருக்கும் என்பதற்காக வேண்டி இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று தசரதர் எண்ணுகின்றார்.

ஆனால் கைகேயி கேட்ட வரப்படி நல்லவனுக்கு ஆட்சி இல்லை என்று ஆனபின் தனக்குள் அந்த உணர்ச்சிக்குள் அடிமையாகும் போது இந்த உடலை விட்டுப் பிரிகின்றார்.

யார்…? இந்த உயிர் வெளியிலே போய்விடுகிறது. பரதனோ தன்னுடைய சகோதரன் இராமன் நல்லவன் என்று உணர்கின்றான்.
1.அவன் பாதத்தை வைத்துத் தான் நான் ஆட்சி புரிவேன்
2.நல்ல குணங்களை வைத்து ஆட்சி புரிவேன் என்று செயல்படுத்துகின்றான்.

இராமன் காட்டிற்குள் செல்லப்படும் போது முதலில் குகனைத்தான் சந்திக்கின்றான். குகன் ஒரு படகோட்டி. அந்தக் குகனைச் சந்தித்த பின் அவன் இராமனை வரவேற்கின்றான். நல்ல உணர்வுகள் வருகிறது.

குகன் என்பது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய இரத்தம். அதற்குள் நம் எண்ணங்கள் அனைத்தும் படகாகச் செல்கின்றது. உயர்ந்த ஞானங்களை நாம் எடுக்கும் போது உடல் முழுவதும் அது படர்கின்றது. தீமைகள் உருவாகும் உணர்வுகளுக்கு அது இடம் கொடுக்காது அருள் ஞானத்தை அன்புக் கட்டளையாக இடுகின்றது. இது அடிபணிகின்றது.

இரத்தத்தில் அருள் ஞானத்தைப் பரப்பப்படும் போது இது ஊடுருவி உடல் அனைத்திற்குமே போகின்றது. பகைமை உணர்வை அடக்குகின்றது. நட்பு கொண்டு இணைகின்றது. அது தான் கல்யாணராமா.
1.அருள் ஒளியின் உணர்வுகளைத் தனக்குள் பெருக்க வேண்டும் என்று எண்ணும் போது
2.மற்ற தீமைகளை ஒடுக்கி நல்ல அணுக்கள் அனைத்திற்கும் உற்சாகம் ஊட்டுகிறது.
3.இப்படி ஒன்றுக்கொன்று போர் செய்யாத நிலைகள் வரும் போது நம்முடைய உணர்வுகள் அனைத்தும் ஒளியாகின்றது.

அப்படிப்பட்ட நிலையில் ஒளியின் கதிராக இருப்பது தான் துருவ நட்சத்திரம். வருவது அனைத்தையும் அரவணைத்துத் தன்னுடன் இயங்கச் செய்யும் தன்மைகளாக ஒளியின் உணர்வாக மகிழ்ந்திடும் உணர்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக
1,துருவ நட்சத்திரத்தின் சக்தியின் பேரருள் பேரொளியை எடுத்து
2.உடலிலுள்ள இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
3.உடல் முழுவதும் படரச் செய்ய வேண்டும் என்று தியானிக்கச் சொல்கிறோம்.

இரத்தத்தைச் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்

 

சிறுநீர் கழிக்கின்றோம் என்றால் இந்த உடலில் மோதலால் ஏற்படும் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து சுண்ணாம்புக்கல் மாதிரி ஆகிறது. சிறுநீரகம் கழித்த இடங்களில் பார்த்தால் இது தெரியும்.

இதே போன்று நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மையும் ரத்த நாளங்களில் இது கலக்கும்.. இதைத்தான் கிட்னி என்ன செய்கிறது…?
1.விஷங்கள் வந்தால் அந்த ரத்தங்களைச் சுத்திகரிக்கின்றது.
2.அதிகமான வேதனை உணர்வுகள் வடிகட்டப்படும் பொழுது விஷங்கள் அதிகமாகத் தாக்கித் தாக்கிச் சிறுநீரகம் பலவீனமடைகிறது.
3.அப்படிப் பலவீனமடையப்படும் பொழுது ரத்த நாளங்களில் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றது.
4.அதன் வழி கெட்ட அணுக்களுக்கு ரத்தத்தின் வழி கொண்டு சேர்க்கின்றது.

வேதனையை மீண்டும் சுவாசிக்கப்படும் பொழுது அது ரத்தத்திலே கலக்கின்றது. வடிகட்டி அனுப்பினாலும் இந்த வேதனை உணர்ச்சிகள் அதிகமாகும் போது அந்த உணர்ச்சிகள் தாங்காது விரிவடைந்து “வடிகட்டும் தன்மை இழக்கப்படுகிறது…”

ஒரு சல்லடையில் ஓட்டை விழுந்து விட்டால் தொப்… தொப்… என்று அதன் வழியில் எல்லாம் இறங்கி விடும். அதைப் போல்
1.இயக்கச் சக்தியைப் பிழியும் தன்மை இழக்கப்படுகின்றது.
2.வடிகட்டாத உணர்வுகள் உடல் முழுவதும் செல்லப்படும் பொழுது நல்ல உணர்ச்சியைத் தூண்டும் நல்ல அணுக்களுக்கும்
3.மனித உடலை உருவாக்கிய அணுக்களுக்கும் நல்ல சத்து கிடைப்பதில்லை.

நாம் ஆகாரம் உட்கொண்டாலும் அதிலும் சில விஷத்தன்மைகள் வரும். அதையும் கிட்னி வடிகட்டும். நுகர்ந்த உணர்வுகள் ரத்தத்தில் கலக்கப்படும் போது சிறுநீரகம் அதையும் வடிகட்டும்.

ஆனால் வடிகட்டும் தன்மை இழக்கப்படும் பொழுது எல்லாம் தாராளமாகச் சென்று விடும்.

அப்பொழுது இருதய வால்வுகள் உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்பப்படும் (PUMP) நிலையில் என்ன ஆகிறது…?
1.கிட்னி கழிவுகளைக் கழிக்க தவறப்படும் பொழுது
2.அந்த இடத்திலே அவைகள் சிறுக சிறுக உறையத் தொடங்கும்.

அந்த உறையின் தன்மை ரத்தம் போகும் பாதையில் அதிகமாகி ஒன்றுக்கொன்று வடிகட்டிச் செல்லப்படும் பொழுது இருதயத்திலே தொல்லைகள் வரும். அங்கே உணர்வின் அழுத்தம் ஆகி இதயத்தில் லேசாக வலிக்கிற மாதிரி இருக்கும்.

அழுத்தம் அதிகமாகும் பொழுது இரத்தத்தை ஈர்க்கும் சக்தியும் குறைகின்றது. பம்பில் சிறு ஓட்டை இருந்தால் எப்படியோ அது போல் உறுப்புகளில் இருதய வாயிலை மிகவும் பலவீனப்படுத்தும்.

அடிக்கடி மூச்சுத் திணறலும் நடந்து சென்றாலும் கூட எத்தனையோ தொல்லைகள் வரும்.

வேதனை உணர்வு வரப்படும் போதெல்லாம் சிறுநீரகத்தால் வடிகட்டத் தவறும் போது அதை மாற்ற முடியாது இப்படி ஆகிவிடுகிறது. வைத்திய ரீதியாக உங்களுக்குத் தெளிவாக்குகின்றேன்.

இதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால்
1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.நம்முடைய எல்லா குணங்களிலும் எல்லா எண்ணங்களிலும் எல்லா உணர்வுகளிலும் அதை இணைக்க வேண்டும்.

அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஆத்ம சுத்தி செய்து கொண்டால் உடல் உறுப்புகளைச் சீராக இயக்கி நல்ல வடிகட்டும் திறன் பெற்றுத் “தீமைகளை அகற்றிடும் சக்தி வாய்ந்த உறுப்புகளாக அமையும்…”

நாம் என்றுமே அந்த அருள் வழியில் வாழ இது ஏதுவாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பத்திரிக்கையை எடுத்துப் பார்த்து அன்றாடம் நடக்கும் சம்பவங்களைப் படிக்க நேர்ந்தால் நம்மை அறியாமலே அச்ச உணர்வுகள் நம்மை வாட்டிக் கொண்டு இருக்கும்.

அதே சமயத்தில் அரசியல்வாதிகளைப் பற்றிய கருத்துக்களைப் படிக்கும் பொழுதும் வன்முறை… தீவிரவாதம் சம்பந்தமாகப் படிக்கும் பொழுதும் சிலருக்குப் பகைமையின் உணர்ச்சிகளையே தூண்டிக் கொண்டு இருக்கும்.

அதைப் பதிவாக்கிய பின் வீட்டிலோ அல்லது நண்பர்களிடமோ சிறிது குறைகள் பட்டாலும் பகைமை உணர்வுகள் தூண்டிக் கொண்டு இருக்கும் இந்த நிலையில்
1.நாம் எந்தத் தொழில் செய்தாலும்
2.ஒவ்வொரு தொழிலும் பகைமை உணர்வுகளை ஊட்டிக் கொண்டு இருக்கும்.

இப்படி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்திலும் பகைமை உணர்வைச் சேர்த்துக் கொண்டு இருந்தால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் இயங்காது போய்விடும்.

பகைமை உணர்ச்சிகள் அனைத்தும் நம் உடலுக்குள் விளைந்து மிகவும் கடினமான நிலைகள் வளர்ந்து நஞ்சின் தன்மையாக அடைந்து விடுகிறது். பின் நம் சிந்தனைகள் அனைத்தும் செயலற்றதாகி நம்முடைய நல்ல செயலையே மாற்றி விடுகிறது.

நல்ல உணர்வுகள் மறைந்த பின் வாழ்க்கையில் இருண்ட நிலைகள் கொண்டு உடலை விட்டு நாம் சென்றால்
1.பொருள் அறிந்து செயல்படும் நிலைகள் இல்லாது
2.அன்றன்று தன் வாழ்க்கைக்கு உணவுக்கு மட்டும் தேடிச் சென்று உடலைக் காத்துக் கொள்ளும் உடலுக்குள் அழைத்துச் சென்று
3.நம் மனித உடலையே மாற்றி அமைத்திடும் சக்தியாக உருவாக்கி வேறோரு ரூபமாக நம்மை மாற்றி விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள வேண்டும். ஏனென்றால் விஞ்ஞான உலகம் ரொம்பவும் விஷத் தன்மை கொண்டதாக வந்து விட்டது. நாளை நாம் இப்படி இருப்போமா…? என்ற நிலை இருக்கிறது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் நிலைக்காக நம்முடைய உணர்வின் தன்மை
1.இப்போது இருந்தே நாம் தயார் செய்து
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை நம்முடைய ஆன்மாவில் பெருக்கி
3.நம் ஆன்மாவை வலுக் கொண்டதாக ஆக்கிடல் வேண்டும்.

இந்த உடலிலிருந்து எந்தத் தருணத்தில் வெளியே சென்றாலும் நமது ஆன்மா இன்னொரு உடலில் புகும் நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாகப் பெற்று நாம் மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் இணைந்திடல் வேண்டும்.

ஏனென்றால் பூமியின் கடைசி நிலையாக அமைந்திருக்கும் இத்தருணத்தில் நம்முடைய அடுத்த நிலை ஒளியின் சரீரமாகத் தான் இருக்க வேண்டும்.
1.சப்தரிஷி மண்டல எல்லையை அடைவதையே
2.நம் வாழ்க்கையின் அடிப்படையாக வைத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நாளும் உலகில் நடக்கும் அசம்பாவிதங்களும் அச்சுறுத்தும் நிலையில் வெறி உணர்வுகளைத் தூண்டிக் கொண்டு இருக்கும் இந்த அலைகளும் பூமி முழுவதும் அனுதினமும் படர்ந்து கொண்டிருக்கின்றது.

1.பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்தவுடன் பூச்சிகள் எப்படி இறந்து விடுகின்றதோ இதைப்போல
2.மனிதனுடைய உணர்வின் செல்கள் அனைத்தும் இழந்திடும் நிலையாக
3.எண்ணிலடங்கா அணு ஆயுதங்களையும் இரசாயணங்களையும் ஒவ்வொரு நாட்டிலும் தயார் செய்து வைத்துள்ளார்கள்.

வல்லரசுகளுக்கு மத்தியில் சிறிதளவு போர் ஏற்பட்டாலுமே உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை படர்ந்து மனித உணர்வுகள் அனைத்தும் நஞ்சின் தன்மையே அடைந்து மனித உருவே சரியான உருவாக இல்லாதபடி நம் பூமியின் தன்மை செயலற்றதாக மாறப் போகிறது.

இதைப் போன்ற காலமாக இருக்கும் இந்த நிலையில் நம்முடைய குழந்தையினுடைய எதிர் காலம் – பின்னாடி நிலையும் இதுவாகவே இருக்கிறது.

ஆகவே இந்த உலகில் சிறிதளவேனும் மக்களைக் காக்க வேண்டும் என்றால் நம்முடைய குழந்தைகளையும் கூட்டுத் தியானங்களில் அமரச் செய்து அவர்களைப் பக்குவப்படுத்தி அந்த மெய் ஞானிகளின் அருளாற்றலைப் பெறச் செய்தல் வேண்டும்.

குடும்பத்திற்குள்ளும் சரி ஊருக்குள்ளும் சரி ஒற்றுமையாகும் இந்த உணர்வின் தன்மையை நாம் வலு பெறச் செய்யும் நிலையாக கூட்டுத் தியானங்களைக் கண்டிப்பாக அமைத்தே ஆக வேண்டும்.

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது…! பல நூல்களை ஒன்றாகச் சேர்த்தால் வலு கொண்ட கயிறாக மாறுவது போல்
1.நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அருள் உணர்வுகளைக் கவர்ந்து
2.நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் மூலம்
3.நாம் வாழும் பகுதியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் காக்க வேண்டும்.

அதற்குத்தான் உங்களுக்குள் பல பல கோணங்களில் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றோம் (ஞானகுரு).

நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்

 

இரண்டு நண்பர்கள் சேர்ந்திருக்கும் நிலையில் அதிலே ஒரு நண்பன் தவறு செய்தாலும் அதைப் பற்றி நாம் சொல்லப்படும் பொழுது… “கூட இருக்கும் அந்த நண்பன்” அதை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

காரணம்…
1.அவருடைய உணர்வு அவனுக்குள் அது முன் பகுதியில் வலுவாகச் சேர்ந்திருக்கப்படும் பொழுது
2.நம் உணர்வை நுகர்ந்தவுடனே குற்றப் பெருக்குகளைக் கூட்டி நம்மைத் தான் குற்றவாளியாகச் சொல்லச் செய்யும்.

அப்போது நாம் நுகர்ந்த உணர்வு… அவன் உணர்வை வலு சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வுகள் அதை ஏற்பதில்லை. இருந்தாலும் நம் ரத்தங்களில் இதைப் போன்ற உணர்வுகள் இணைந்து விடுகின்றது.

இதனால் நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுக்களுக்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து ஒடுங்குகின்றது.
1.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தி இழக்கின்றது.
2.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் பொழுது ஒடுங்குகிறது… அதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஏற்கவில்லை என்றாலும் உணர்வின் அழுத்தம் அதிகமாகும் பொழுது… கூட கொஞ்ச நேரம் நிலைநிறுத்தி விட்டால் அதற்குச் சாப்பாடு தேவை.

நாம் எப்படிச் சுவாசத்தின் மூலம் “மூச்சு விடுகின்றோமோ…” அதே மாதிரி
1.அந்த இயக்கத் தொடருக்கு பிரணவம்… அந்த இயக்கம் வேண்டும் என்றால்
2.உடலில் ஏற்படும் உஷ்ணத்தினால் வாயு உண்டாகின்றது… அதனுடைய அழுத்தம் உண்டாகிறது.

சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனைகள் வருகிறது…? எந்தெந்தப் பொருளை அதிகமாகப் போடுகின்றோமோ அந்த மாதிரி வாசனைகள் அதிலிருந்து வருகின்றது.

அது போலத் தான்
1.உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் நெளிகிறது… உடலில் மாறுபட்ட உணர்ச்சிகள் தோன்றும்… இதையெல்லாம் எது இயக்குகின்றது…?
2.நம் உயிர் எலெக்ட்ரிக்காக இருக்கிறது. நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்காக எதிர்நிலையான அந்த உணர்ச்சியை ஊட்டுகின்றது.

இப்படி எதன் உணர்வை நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் ஆகின்றதோ… ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் நம் ரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பல விதமான அணுக்களின் மாற்றங்கள் ஆவதும் நிகழ்கிறது.

நல்லவரிடம் பேசப்படும் பொழுது அதற்குத்த நிலையில் அமைதியாகிறது. ஆனால் அடுத்து ஒரு சண்டை போடுபவர்… வெறுப்பாகத் தாக்குபவர்… திட்டிப் பேசியவர்களின் உணர்வை நுகர்ந்தால்
1.மிகவும் இக்கட்டான நிலைகள் ஆகி இந்த உடலுக்குள் ஒன்றுக்கொன்று போர் முறையாகின்றது.
2.நம் உடலிலே சலனங்களும் சஞ்சலங்களும் ஏற்படுகிரது.

ஆக… நல்ல அணுக்கள் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படும் பொழுது உடல் சோர்வடைகின்றது… உணர்ச்சிகள் மாறுவதையும் பார்க்கலாம்.

எந்த உணர்ச்சியின் தன்மையைக் கூட்டுகின்றோமோ… கண் வழி எந்த உணர்வை அதிகமாக்குகின்றமோ… கண்கள் நுகர்ந்து உயிரிலே மீண்டும் அநத உணர்ச்சிகள் அதிகமாக ரத்த நாளங்களில் சேர்க்கப்படுகின்றது.
1.அதனால் பதட்டமும் பயமும் வருகின்றது… அவர்கள் இருவருக்குள்ளும் எப்படிச் சண்டை போட்டுக் கொள்ளப் போகின்றார்களோ என்று…!
2.சண்டையை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இந்தப் பதட்டம் வரும்.

நல்லதைச் சொல்லத் துணிவு வந்தாலும் அவர்களைச் சிந்திக்கும்படிச் செய்யும் பதிலைச் சொல்லத் தெரியாது. அப்போது நம்மை அறியாதபடி பகைமை உணர்ச்சிகள் உடலிலே வந்து விடுகின்றது.

இது அனைத்துமே இரத்தங்களில் தான் முதலில் கலக்கின்றது.

நாம் நுகரும் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவி அதன் வழியே நம்மை வாழச் செய்து… அந்த உணர்வுகளே நம்மை ஆளுகின்றது என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு என்ன செய்ய வேண்டும்…?
1.நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும்.
2.நம் உடல் முழுவதும் இந்த உணர்ச்சிகளைப் பரவச் செய்யப்படும் பொழுது
3.நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு நிம்மதியும் சாந்தமும் இயக்க முடிகின்றது.

அந்த உணர்வுகள் உணர்ச்சிகளை உயிர் உடலுக்குள் பரவச் செய்து தீமையான உணர்வுகளை அமைதிப்படச் செய்கின்றது.

ஆனால் “சாதாரண மனிதனின் உணர்வை வைத்து…” அதை அமைதிப்படுத்த முடியாது.

உங்களுக்குள் பதிவு செய்த அந்த மகரிஷிகள் உணர்வை எண்ணி எடுத்து ஈஸ்வரா என்று உயிரிடம் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் கண்ணின் நினைவு உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அப்பொழுது…
1.ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை என்ற அந்த வித்திலே (தீமையான வித்தில்) இணைக்கப்படும் பொழுது
2.கொஞ்சம் கொஞ்சமாக இதனுடைய வலு கூடும் பொழுது அதை அடக்கக் கூடிய சக்தியாக அது மாறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது பூமி சுழலும் போது அந்தச் சுழற்சியால் காந்தப்புலன்கள் ஏற்பட்டு அதன் மூலம் தான் கவரும் சக்திகள் அனைத்தும் துருவப் பகுதியில் பனிப் பாறைகளாக உறைகின்றது.

1.அப்படி அந்த உணர்வின் தன்மை நுகரும் போது பார்வதி பஜே… நமச்சிவாய…!
2.இந்த உடலாக (பூமியாக) மாறுகின்றது… பார்வதிக்கும் சிவனுக்கும் கல்யாணம் என்ற நிலைகள்.

அதாவது பூமியின் ஓடு பாதையில் தன் பார்வையில் பட்ட (விண்ணிலிருந்து வரும்) சக்திகளை நுகரப்படும் பொழுது இந்த உடலான சிவனுடன் சேர்த்து இரண்டற இயங்குகிறது என்று வியாசகர் காட்டுகிறார்.

உலகமே இங்கு திரளும்… அதனால் பூமியில் மாற்றங்கள் வந்து விடும் என்பதற்காக வேண்டி நீ தெற்கே போ…! என்று சிவன் சொன்னான். ஏனென்றால் தெற்கே தோன்றியது தான் பூமியைச் சமப்படுத்தும் உணர்வு…!

பூமியைச் சமப்படுத்த அகஸ்தியனைத் தெற்கே போ…! என்று சொல்லும் பொழுது தெற்கிலே (தென்னாட்டிலே) தோன்றியவன் தான் அந்த அகஸ்தியன்.

அந்த அகஸ்தியன் உணர்வுகளை ஒவ்வொருவரும் எடுத்தால் தனக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும் என்ற “அந்தக் காரணத்துடன் தான்…” வியாசகர் சொல்லியிருக்கிறார். அதை நாம் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

1.மனித உடலுக்குள் வருவதை மாற்றி அமைக்கும் திறன் பெற்றவர்…
2.தன் உணர்வின் வலிமை கொண்டு இந்தப் பூமியின் திசையைத் திருப்பியதும் அவர் தான்
3.நம் பூமியைச் சமப்படுத்தியவரும் அந்த அகஸ்தியன் தான்.

அது ஒரு காலம் துருவப் பகுதியில் வளர வளர இது வளர்ந்து கொண்டே இருக்கும். இது எடை கூடி விட்டால் மாறிவிடும். அப்பொழுது கடல் அலைகள் மாறும்.

தென் துருவம் வட துருவம் எல்லாம் மாறி அதிலே மாற்றங்கள் வரப்போகும் போது நீக்ரோக்கள் வாழும் பகுதி எல்லாம் கடல் அலைகளுக்குள் திருப்பிவிடும்.

கருப்பர்கள் என்ற நிலைகள் வரப்போகும் போது வளர்ந்த நிலைகள் கொண்டு காட்டு விலங்குகளாக மாற்றி விடும். இன்றைக்குச் சக்திவாய்ந்த செயற்கைக் கோள்கள் மூலமாகவும் விமானங்கள் மூலமும் பறந்து
1.கடலுக்கடியில் புதையுண்டிருக்கும் ஊர்களை எல்லாம்
2.விஞ்ஞானம் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றது.

ஆதியிலே பூமி கவிழும் நிலை வரும் பொழுது அதை மாற்றிப் பூமியைச் சமப்படுத்தியவர்… அணுவின் ஆற்றலைப் பெற்றவர் விண்ணின் ஆற்றலைப் பெற்ற அந்த அகஸ்தியர் அவர் அன்றைக்குச் செய்ததால் தான் இப்போதும் இந்நேர வரையிலும் பூமி ஒரு சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் அபரிதமான விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.விஞ்ஞானிகளோ அல்லது அரசை நடத்துபவர்களோ இதைச் திசை திருப்பப் போகிறார்கள்.
2.நாம் எங்கெங்கே போகப் போகிறோம் என்று தெரியவில்லை.
3.இதற்குள் எத்தனையோ ஆசை வைத்திருக்கின்றோம்.
4.பூமிக்குள் பதுக்கி வைத்திருக்கும் சில விஷத் தன்மைகள் (குண்டுகள் ஆயுதங்கள்) வெடிக்கப் போகிறது.
5.அதனால் ஏற்படும் புகை மண்டலம் அடர்த்தியின் தன்மை அடையப் போகிறது.
6.அத்தகைய புகை மண்டலத்தால் சூரியனின் ஒளிக் கதிர்கள் மங்கி நம் பூமியே ஒரு பக்கம் பனியாக உறையப் போகிறது.
7.அப்படி உறைந்தால் பூமி தலைகீழாகப் போகும்

இரண்டு மூன்று வகையில் விபத்து வரப்போகிறது. அதில் எந்த விபத்து என்று… எதிலே வந்து தாக்கப் போகிறது…! என்று யாரும் சொல்ல முடியாது.

மனிதனால் உருவாக்கப்பட்ட நஞ்சின் தன்மை பரவுகிறது. அந்த நஞ்சின் தன்மை வரப்போகும் போது மனிதன் செய்து வைத்தது வெடிக்கத்தான் போகிறது. வெடித்த பின் அதை நுகரத்தான் போகின்றோம். மனித உருவையே மாற்றும் தன்மையாக வந்து கொண்டிருக்கிறது.

ஞானிகள் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அவர்கள் பெற்ற அருள் ஆற்றல்களை எடுத்து நமக்குள் அருள் ஒளிச் சுடராக வரப்படும் போது “இதை எல்லாம் நாம் பார்க்கலாம்…”
1.அப்படி நாம் வளரவில்லை என்றால் அந்தச் சுழற்சிக்குள் சிக்கி
2.காணாத நிலைகளில் போய்த் திரும்பவும் முதலிலிருந்து வளர்ச்சிக்கு வர வேண்டும்…!

நாட்டுக்கு நாடு போர் செய்யும் இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டியது

 

இன்றைய நிலையில் பூமியில் வாழும் நாம் மிகவும் சிரமமான காலகட்ட்த்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.

அதே சமயம் மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதிலிருந்து நாம் மீள வேண்டும்.

நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்று அவர்கள் அருள் வட்டத்தில் இணைந்து நம்மையறியாது சேர்ந்த தீமைகளை நீக்கி நம்முடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக உருவாக வேண்டும்.
1.நாம் எண்ணும் அந்த உயர்ந்த உணர்வுகள் தீமையை அடக்கும் சக்தியாகவும்
2.நம்முடைய உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தும் உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும் சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும்
3.உலக மக்களுக்கு நன்மை பயக்கும் சொல்லாகவும் செயலாகவும் அது வளர்ந்திட வேண்டும்.

1.அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு பேரன்பு கொண்டு ஒருவருக்கொருவர் கலந்து உறவாடினார்களோ
2.அதே போன்று நாம் வெளியிடும் அனைத்து உணர்வுகளும் பேரன்பு கொண்ட உணர்வாகப் படர வேண்டும்.

நமக்குள் ஆகாத உணர்வுகள் வந்தாலும் சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டுச் சேர்த்து அதைப் பகைமையற்றதாக ஆக்க வேண்டும்.

நாம் தனித்த சரீரங்களாக இருந்தாலும் சகோதர உணர்வுகளுடன் வாழ்ந்திடும் உணர்வாக
1.நாம் இடும் அத்தகைய மூச்சலைகள் இங்கே படர்ந்து
2.அதன் வழிகளில் நம் பூமியான பரமாத்மாவும் பரிசுத்தப்படும் நிலை ஏற்படும்.
3.இந்தப் பரமாத்மாவில் இருந்து நுகர்ந்து எடுக்கும் அனைத்து மக்களும் “மெய் வழி பெறும் நிலைகள் ஏற்படும்…”

நாம் எந்தத் தாவர இனச்சத்தை நுகர்ந்து உணவாக உட்கொண்டு உடலாக ஆனோமோ… இந்த மனித உடலுக்குள் எண்ணிய அருள் மகரிஷிகளின் உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து…
1.நாம் செல்லும் இடங்களில் பரவியுள்ள நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தாக்கி
2.நஞ்சு கொண்ட தாவர இனமே வளராது… மனிதனை வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.
3.நீங்கள் இடும் அந்த மூச்சலைகள் மூலம் தாவரங்களும் சத்தான நிலைகளில் வளரட்டும்
4.அதை உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும் மெய் உணர்வைப் பெறும் தகுதியாக உங்களுடைய மூச்சுகள் அமையட்டும்.
5.கேட்டுணர்ந்த உணர்வுகள் இங்கே படர்ந்து மெய் உலகைப் படைக்கும் உணர்வாக உங்களுக்குள் விளையட்டும்
6.நீங்கள் இடும் மூச்சலைகள் உலகில் உள்ள பகைமைகளை நீக்கி மெய் உணர்வைப் பெறும் சக்தியாக மலரட்டும்.
7.எல்லாம் வல்ல குருநாதர் அருள் வழியில் அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்திற்குள் உங்கள் அனைவரின் எண்ணங்களும் செல்லட்டும்…!

அதன் வழிகளிலே தீமையை நீக்கி நல்வினைகளைச் சேர்த்து… நல் வினைக்கு நாயகனாக மெய்ப்பொருள் கண்டுணர்ந்த அந்த மெய் ஞானியின் அருள் வட்டத்தில் உலக மக்கள் அனைவரும் இணைவோம்.

என்றும் நிலையான பெரு வீடு பெரு நிலை என்ற நிலையடைந்து… என்றும் மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அந்த அருள் வழியை, நீங்களும் பெற வேண்டுமென்ற ஆசையினால்தான் இதை உபதேசிக்கின்றோம்.

நம் குருநாதர் காண்பித்த உணர்வுகளை உங்களுக்குள்ளும் விளையச் செய்து
1.அதை நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற்று
2.உங்களை அறியாது புகுந்த தீமைகளை நீக்கி நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும்

அத்தகைய நிலை அனவரும் பெற வேண்டும் என்று பிரார்த்தித்து… அதனின் சத்தை “ஒருங்கிணைந்து விளையும் சத்தாகச் செயல்படுவோம்…” என்று வேண்டிக் கொள்கிறேன்.

மகரிஷிகளின் சக்தியை எடுத்து வளர்த்தால் தான் எத்தகைய நல்ல மாற்றத்தையும் நாம் கொண்டு வர முடியும்

 

இன்று “மதப்போர்…” என்ற நிலைகள் உலகம் முழுவதற்குமே இயக்கிக் கொண்டுள்ளது.

ஒரு நாடு தன்னிடம் இருக்கக்கூடிய விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் “லேசர் கதிரியக்கத்தால்” அடுத்த நாட்டின் ஆழத்தை அறிந்து கொண்டு அவனைத் தொலைக்க முடியும் என்று எண்ணுகின்றான். ஆனால் அந்த நாடோ
1.நீ கண்டுபிடித்து வைத்திருக்கும் நிலையைக் காட்டிலும் வலிமையானது எண்னிடம் உண்டு..
2.நான் சாகும் போது நீயும் சாவாய் என்ற நிலைகள் கொண்டு இறப்பைப் பற்றி சிந்திக்கவில்லை.
3.தன் கௌரவத்தைக் காக்க நான் இறந்தாலும் உன்னைக் கொல்வேன் உன்னை மடியச் செய்வேன்
4.உன்னை மடியச் செய்த பின்பு தான் நான் இறப்பேன் என்ற மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்று உலகெங்கிலும் பரவி
5.மனிதன் என்ற சிந்தனை இழந்து மனிதன் அடைய வேண்டிய உயர்ந்த மார்க்கங்களைத் தடைப்படுத்தி
6.மனிதனுக்கு மனிதன் கொன்று அதை ரசிக்கும் உணர்வே இன்று வந்துவிட்டது.

இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

ஆனால் நான் இதைப் பேசுகிறேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். இது எனக்குத் தெரியவே தெரியாது…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்… அந்த மகரிஷிகள் கண்டறிந்த மெய் உணர்வுகள் மக்கள் அனைவருக்கும் அது எட்ட வேண்டும் என்று சொன்னார்.

உலகில் ஏற்படும் அந்தத் தீமைகளிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற நிலைகள் கொண்டு இந்த ஸ்தாபனத்தை (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்) யாம் அமைத்த்து அவரின் உணர்வின் செயலே…! என்னால் அது முடியாது.

அவர்களின் இயக்கத்தால் தான் இது அனைத்துமே உருபெற்றது பொருள்கள் எப்படி வந்தது…? என்று நமக்கும் தெரியாது. ஒருக்கிணைந்த உணர்வின் செயலாக்கங்கள் கொண்டுதான் இதை அமைக்கவும் முடிந்தது.

குரு அருள் அதன் வழி தான் வழிபடுகின்றது.

1.நாம் அனைவரும் நம் குருவின் அருள் துணை கொண்டு எந்த மதத்திலும் சிக்காது
2.இன பேதமோ மொழி பேதமோ அரசியல் பேதமோ இல்லாது உலகைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்த்து
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவதே தலையாயக் கடமை ஆகும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்றால் நம்முடைய மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.

தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சான நிலைகளைச் சேர்த்துக் கொண்ட அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அந்த நஞ்சுகளை அந்த ஒளிக் கடலிலே கரைத்து உயிருடன் ஒன்றிய ஒளிச்சரீரமாக அவர்களை நாம் நிலை பெறச் செய்ய வேண்டும்.

1.அவர்கள் முன் சென்றால் அவர்களின் துணை கொண்டு அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற முடியும்.
2.நமது குரு அருள் இதைத்தான் திரு அருளாக உபதேசித்தது.

உலகில் உள்ள ஒவ்வொருவரையும் காத்திட வேண்டுமென்றால் “அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை…” நாம் முதலில் பெற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கேட்டறிந்தாலும் அந்தத் தீமை தனக்குள் பதியாது தடுக்க வேண்டும்.

அப்படித் தடுக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னை அறியாது சேர்ந்த தீமைகள் மறைய வேண்டும்… மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும்… என் சொல்லால் கேட்பவர்கள் இருள்கள் நீங்க வேண்டும்… அவர்களும் பொருள் காணும் நிலை பெற வேண்டும்… அவர் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இதை எல்லாம் எண்ண வேண்டும் என்றாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி பெற வேண்டும்.
2.இல்லை என்றால் இது வெறும் சொல்லாகத்தான் அமையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சோமாலியா நாட்டில் பார்த்தோம் என்றால் அங்கே வாழும் மக்களுக்குக் கிடைக்கும் உணவைக் கொள்ளையடித்துச் சாப்பிடுவோர் திடமாக நன்றாக இருக்கின்றனர்.

அங்கே இருக்கும் ஆணும் பெண்ணும் அனாதையாக நடந்து சென்று தங்களுக்குச் சொந்தமான உணவை எடுத்து உட்கொள்ளும் நிலை கூட இல்லாதபடி மிருகத்திலும் மிருகமாகக் கேடான நிலைகளில் அங்கே செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

மனிதர்களாக இருந்தும் பல விஞ்ஞான அறிவுகள் இருந்தாலும் அங்கே அப்படித்தான் இன்று உள்ளது. அங்கே எவ்வளவு மோசமான நிலைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று டி.வி. யில் பார்த்தால் தெரியும்.

அந்தச் சோமாலியா நாட்டில் “அமெரிக்கா…” தான் கண்டுபிடித்தவற்றைப் பரீட்சாந்திரமாகச் செயல்படுத்தி
1.தாவர இனங்கள் வளராத நிலைகளை உண்டாக்கியும்
2.அங்கிருக்கக்கூடிய மனிதனுடைய சிந்தனைகளைச் சீர்கெடச் செய்தும்
3.விஷமான உணர்வுகள் உட்புகுந்து அந்த நாட்டையே காக்க முடியாத நிலைகளாக ஆக்கி
4.அங்கே உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு கடுமையான பஞ்சமாகத் தாண்டவமாடிக் கொண்டுள்ளது.

மற்ற உலக நாடுகள் எத்தகைய உதவிகளைக் கொடுத்தாலும் அவர்கள் பஞ்சத்தை நிவர்த்திக்க முடியாத நிலைகள் கொண்டு மிருகத்தை ஒத்த நிலைகளாக வாழ்ந்து மடிந்து கொண்டிருக்கின்றனர்.

இதை எல்லாம் நான் (ஞானகுரு) கண்ணிலே பார்த்து இதைச் சொல்கிறேன். அமெரிக்கா சோமாலியாவில் செய்தது போல் நம் நாட்டிலேயும் சில வேலைகளைச் செய்துள்ளார்கள்.

நெல்லைப் பயிரிட்டு வளர்க்கும் பொழுது சிறு பூச்சி வகைகளை அதற்குள் உண்டாக்கி உள்ளார்கள். கடைசியில் நெல்லை அறுப்போருக்கு உடலிலே அரிப்புகள் தோன்றி அதனால் பல தீமையான விளைவுகள் வருகின்றது.

வாழைத் தோட்டத்திலும் சும்மா உள்ளே புகுந்து வந்தாலே போதும். உடலின் மேலே தோலில் கருப்பான நிலைகள் ஆகி அரிப்புகள் அதிகமாகின்றது. மேலே போட்டிருக்கும் இந்தத் துணியை மற்றவர்கள் தொட்டாலும் அதே அரிப்பு அவர்களுக்கும் வருகின்றது.

சோமாலியா நாட்டில் உருவாக்கப்பட்ட அந்த விஷத் தன்மைகள் படர்ந்து அதனின் காற்று மண்டலமாக மாறுகிறது.
1.புயல்கள் அங்கே திசை மாறும் நிலையில் அந்த விஷங்களைக் கவர்ந்து சுழன்று மழை நீருடன் கலந்து
2.அந்த விஷமே இன்று உலகம் முழுவதும் படரும் நிலைக்கு வந்துவிட்டது.

புயல் வரப்படும் பொழுது அதிலே கலந்த இந்தத் தீமையின் நிலைகள்
1.எந்த நாட்டில் இந்த விஷத் தன்மைகளைச் செய்தனரோ அதிலே சிக்கப்பட்டு மேகங்களில் கலந்து
2.எங்கெங்கெல்லாம் இந்த மேகங்கள் கலைந்து சென்று அது நீராக வடிகின்றதோ
3.அந்த நாட்டில் எல்லாம் விஷத் தன்மையாக வளர்கின்றது.
4.இன்று உலகெங்கிலும் புது விதமான பெயர்களுடன் வைரஸ் நோய் பரவுவதன் காரணமும் இது தான்.

அந்த விஷத் தன்மைகள் மனித உடலுக்குள்ளும் ஊடுருவி மனிதன் இறந்தாலும் அவனுடன் பழகிய உணர்வுகள் கொண்ட அடுத்த மனிதனுக்குள்ளும் இறந்த உயிராத்மா சென்று அந்த உடலுக்குள்ளும் விஷமான உணர்வுகளை உந்தச் செய்கின்றது.

விஷ உணர்வுகள் உந்தி அந்த உணர்வின் சக்தியாக இயக்கி விஷத்தைக் கவரும் நிலையாக உடலிலுள்ள அணுக்களை எல்லாம் மாற்றி விடுகின்றது. உடலெல்லாம் அரிப்பாகித் தீமைகளை விளைவிக்கும் நிலைகளை உருவாக்கி விடுகின்றது.
1.இவ்வாறு இது மனிதனுக்குள் கலந்து கலந்து
2.தீய விளைவுகளாக வளர்ந்து கொண்டே வருகின்றது.

அன்றைய அரசனுடைய ஆட்சி போல் இல்லாமல் இன்று மக்கள் ஆட்சி என்றாலும் “மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும்” காலமாக மாறும் நிலை வந்து விட்டது.

ஒரு நல்ல பொருளுக்குள் விஷத்தை ஊட்டினால் அந்த நல்ல பொருளின் சத்தின் தன்மை எப்படி இழக்கப்படுகின்றதோ இதைப் போல
1.மனிதனுடைய உணர்வுகள் அனைத்தும் முழுமையாக நஞ்சாகிக் கொண்டுள்ளது.
2.சிந்திக்கும் தன்மையே அற்றுப் போய் விட்டது.

விஷத்தைப் பாய்ச்சி மற்ற நாட்டினரை எளிதாக வீழ்த்தலாம் என்ற எண்ணத்தில் செயல்படுத்தப்பட்ட செயல்களின் விளைவால் மனிதர்கள் இனி இங்கே வாழ முடியாத நிலைக்குச் சென்று கொண்டுள்ளது.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அக்காலங்களில் எல்லாம்… அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம் சிவ புராணம் விநாயக புராணம் போன்றவைகளைக் கற்றுணர்ந்தவர்கள்.

ஒரு மனிதன் எப்படி ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்…? என்ற நிலைகள் கொண்டு அன்று செயல்படுத்தி வந்தார்கள்.

மார்கழி மாதம் வந்து விட்டதென்றால் அது குளிர் காலமாக இருந்தாலும் அந்தக் காலங்களில் தெய்வீகப் பண்புகளை அந்த மாதம் முழுவதும் எண்ணும் வண்ணம் கதைகளாகச் சொல்வார்கள்.

மற்றவர்கள் அதை அமர்ந்து கேட்டுணர்ந்து
1.தங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும்
2.தன்னுடைய எண்ணங்களைச் சரிபடுத்திக் கொள்ளவும்
3.இந்த மார்கழி மாதத்தைப் பயன்படுத்தினார்கள்.

தை மாதத்தை எடுத்துக் கொண்டால் அந்த அறுவடை காலத்திற்கு ஒப்ப அந்த நாம் விளைய வைத்த மணிகள் வெளி வருவதைக் கண்டு அதை எண்ணி மகிழ்ந்து… அதைப் போல நமக்குள் உயர்ந்த எண்ணங்களை எவ்வாறு எடுக்க வேண்டும்…? என்ற அந்த மகிழ்ச்சியைப் பெருக்கினார்கள்.

இதே போல் ஒவ்வொரு மாதத்திலேயும் அதற்குத் தகுந்த காவியங்களைச் சொல்லி அமர்ந்து கேட்கும்படி செய்து ஓரளவுக்குச் சீராக மக்களுடைய மனதைப் பண்படுத்தும் நிலையாகச் செயல்படுத்தினார்கள்.

அக்காலங்களில் ஒவ்வொரு கிராமங்களும் தோறும் சரி… இந்தக் காவியங்களைக் கதைகளாகச் சொல்லி ஒவ்வொரு மாதத்தையும் தேர்ந்தெடுத்து அந்த ஒவ்வொரு மாதத்திலும் அருள் ஞான உணர்வுகளை முழுமையாக அந்த மக்களுக்குப் பெறும் நிலைகளாகச் செய்தார்கள்.

இன்று அது எல்லாம் அறவே இல்லை…!

ஒரு கல்யாணம் நடந்தது என்றால் டி.வி. பெட்டியை வாங்கி விட்டு தையா…தக்கா…! என்று ஆட்டம் போடுவதும்… சண்டை போடும் நிலைகளையும் வேடிக்கையாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதே போல் மக்கள் வாழும் ஊர்களில் இருக்கும் தெய்வங்களை வணங்க வேண்டும் என்ற நிலையில் திருவிழா காலங்கள் வநநால்
1.நான்கு மூலைக்குப் டி.வி.யைப் போட்டு எந்தெந்த அதர்மங்கள் இருக்கிறதோ
2.அதை எல்லாம் பார்த்து ரசித்து வெறுப்புணர்வுகளைத் தோற்றுவிக்கும் நிலையாக எல்லாமே மாறி விட்டது.
1.ஒவ்வொரு மாதங்களிலேயும் தெய்வீகப் பண்புகளை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று
2.தெளிவாக எடுத்துக் காட்டிய காலங்கள் அனைத்தும்
3.இன்று நம் இந்தியா முழுவதற்கும் மறைந்து விட்டது.

அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் மறைந்து கொண்டே போய் மனிதனுக்குள் உயர்ந்த ஞானத்தைப் பெறும் தகுதிகள் இழந்து விட்டு இன்று நாம் “எங்கேயோ தேடிக் கொண்டிருக்கின்றோம்…!”

ஆக யாரோ செய்வார்..! என்ற நிலைகளில் ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் தூண்டிக் கொண்டு
1.ஆலயங்களுக்கு ஒரு சுற்றுலா (PICNIC) செல்வது போல
2.வெறி உணர்வைத் தூண்டிக் கொண்டு தான் ஆலயங்களுக்குச் செல்கின்றோம்.

ஆலயங்களில் காட்டிய நெறிகளின் அடிப்படையில் நமக்குள் அந்தத் தெய்வம் எந்த நல்லதைச் செய்கின்றதோ
1.அந்தத் தெய்வ நிலைகள் நாங்கள் பெற வேண்டும்…
2.எங்களுக்குள் சகோதர உணர்வுகள வளர வேண்டும் என்ற
3.அந்த ஞானிகள் காட்டிய உணர்வை அங்கே வழிபடுவதில்லை.

ஆலயத்திற்குச் சென்றாலும்… நான் என்னுடைய புகழைத் தேடினாலும்… என் அருகிலே இருப்போரை நான் நிந்திக்கும் நிலையும்… தொல்லை கொடுக்கும் நிலைகளாகத் தான் நாம் செய்து கொண்டு வருகிறோம்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாவற்றையும் விடுத்துப் பழக வேண்டும்.

நம் அருகிலே உள்ளவரை நாம் சாந்தப்படுத்தி நமக்குள் உயர்ந்த நிலைகளாக மாற்றும் நிலையாக வர வேண்டும். அந்த நிலைகள் ஏற்படுத்துவதற்குத் தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்தனர்.

கார்த்திகை மாதத்தை எடுத்துக் கொண்டால் கந்த புராணம் என்ற நிலையில்
1.ஆறாவது அறிவு கொண்டு உணர்வின் எண்ண ஒலிகள் எப்படி உருவானது…? என்ற நிலையும்
2.அந்த முருகன் எப்படிப் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான்…? என்பதையும்
3.மற்ற தீயதை வளராது (பிரம்மாவைச் சிறைப் பிடித்து) நல்லது விளைய வைக்கும் நிலையை முருகன் எப்படிச் செய்தான்..? என்று காட்டினார்கள்.

ஆறாவது அறிவு கொண்டு நாம் ஒவ்வொன்றையும் இந்த எண்ணங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்பதற்காக வேண்டித் தான் கார்த்திகை மாதங்களில் முருகனைப் பற்றித் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்கள்.

சிவனைப் பற்றிச் சொல்லும் பொழுது ஜோதியை (திரு அண்ணாமலை) ஏற்றும் நிலைகளைக் காட்டினார்கள்.

நம் உடல் சிவம்.
1,உடலான சிவத்திற்குள் நம்முடைய எண்ணங்கள் ஒவ்வொன்றையும்
2.பளிச்சிடும் எண்ணங்களாக எவ்வாறு உருவாக்க வேண்டும்…? என்று தான்
3.பண்டைய கால காவியங்கள் அனைத்தும் உண்டு.

ஆனால் அதைப் பூராமே திசை திருப்பி அந்த உண்மையினுடைய நிலை அறியாது நமது உடலில் இயக்கும் தன்மையை உணர்த்துவதற்காகக் காட்டப்பட்ட “உண்மைத் தத்துவங்கள்…” காலத்தால் மறைந்து விட்டது.

மறைந்த அந்த உண்மைகளைத் தான் சிறுகச் சிறுக உங்களுக்குள் உணர்த்தி அந்த மெய் ஞானிகள் சென்ற அருள் வழியில் பேரின்பப் பெரு நிலை அடைய வேண்டும் என்று வேண்டி யாம் (ஞானகுரு) விரும்புகின்றோம்.

விஷத்தை ஒளியாக மாற்றும் “நுண்ணிய உணர்வுகளை” உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்

 

விஷத்தால் தாக்கப்படும் பொழுது தான் “நகர்ந்து ஓடும் நிலை” பெறுகின்றது… வெப்பமும் காந்தமும் உருவாகின்றது. மூன்று சக்தியாக இயங்குகின்றது…
1.வெப்பம் காந்தம் விஷம் மூன்று தான் ஆதியிலே உருவானது.
2.இயக்கத்திற்கு மூலம்… வெப்பம் உருவாவதற்கு மூலம்… விஷம் தான்.

அதே சமயத்தில் விஷம் வெப்பமாகி… வெப்பமாகும் போது உணர்வின் சுழற்சியாகும் போது சூரியனாகி விஷத்தைப் பிரிக்கின்றது. அது மற்றதுடன் கலந்து ஓர் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான் “விஷத்தின் தாக்குதலால்…” ஏற்பட்டது தான் உயிர்.

நாம் நுகரும் உணர்வுகள் அதனின் இயக்கத்திற்கு ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷம் உண்டு.
1.விஷத்தின் இயக்கம் தான் என்றாலும் உணர்வின் சத்து அதிகரித்து
2.அதன் உணர்வின் உணர்ச்சியின் எண்ணங்களைத் தூண்டச் செய்யும் நிலைதான் இது.

சூரியனால் கவரப்பட்ட வெப்பம் காந்தம் விஷம் என்று இருந்தாலும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைக் கவர்ந்து கொண்டால்
1.இந்த விஷ இயக்கத்தை அடக்கிய உணர்வுகள் அடக்கும் உணர்ச்சியை நமக்குள் கூட்டுகின்றது.
2.கவர்ந்து கொண்ட காந்தம் லட்சுமி அதனுடன் இணைக்கப்படும் பொழுது அதைப் பிரிக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஏனென்றால் முக்கியமாக உங்களுக்குள் நுண்ணிய உணர்வுகளைப் பதிவாக்குகின்றேன்.

“சிந்தனை கொண்டு…” உங்கள் வாழ்க்கையில் உங்களைக் காக்கும் உணர்ச்சிகள் வர வேண்டும் என்பதற்குத் தான் உங்களுக்குள் இதை இணையச் செய்து அதைப் பதிவாக்குகின்றேன்.

சந்திக்கும் சந்தர்ப்பங்கள்
1.அதிலே இக்கட்டான நிலை வரும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அதிலிருந்து விடுபடுவதற்கு இது உதவியாக இருக்கும்.

ஆகவே ஒளியின் சரீரம் பெறக்கூடிய நிலையில் ஆயுள் மெம்பராக நாம் இருக்கப்படும் பொழுது அதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

நம்மைச் சங்கடப்படுத்தியவர்கள் வேதனைப்படுத்தியவர்கள் சலிப்புப் படுத்தியவர்கள் நம்மிடம் சண்டையிட்டவர்கள் இவர்களைப் பற்றித் தான் அதிகமாக எண்ணம் வருகின்றது.

ஏனென்றால் அதனுடைய “அழுத்தம்…” அதிகம்…!

இதையெல்லாம் மாற்றும் சக்தி கொண்டது தான் துருவ நட்சத்திரம். அதை உங்களுக்குள் இணைக்கின்றேன். அப்படி இணைக்கப்படும் பொழுது ஒவ்வொரு உணர்விலும் சேர்ந்து கொள்கின்றது.

பல சரக்குகளைப் போடுகின்றோம் அதிலே காரத்தை இணைத்த பின் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் சுவைமிக்கதாக அந்த உணர்ச்சியை எப்படிக் கூட்டிக் கொண்டு வருகின்றதோ இதைப் போன்று
1.விஷத்தை அடக்கிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைக்க வேண்டும்
2.எப்போது தீமையைப் பார்த்தாலும் கேட்டாலும் நுகர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் காலை துருவ தியானத்தில் அதை மீண்டும் மீண்டும் உங்களை எண்ணி எடுக்கும்படி சொல்கின்றோம்.

“மெய் ஞானம் பெற வேண்டும்” என்று விரும்புபவர்கள் தான் இங்கே இருப்பார்கள்

 

யாம் எல்லா இடங்களுக்கும் சுற்றி அனுபவங்கள் பெற்ற பிற்பாடு தான்
1.இந்தச் சக்தியை உங்கள் அனைவருக்கும் எப்படிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொண்டேன்.
2.குரு வழியில் இப்பொழுது அதைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆனால் எம்மைப் போற்ற வேண்டும் என்று யாம் விரும்பினால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அடேயப்பா… எங்கள் சாமி பெரியவர்…! என்று சொல்ல வைக்கலாம்… இங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் எதற்கு வரும்…?

இப்பொழுதும் கூட்டங்கள் வருகின்றது… ஆனால் அதை நான் கழித்து விட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன். உண்மையான நிலைகள் பெற வேண்டும் என்று விரும்புவர் இதிலே தங்கி இருப்பார்கள்.

உடல் இச்சைக்கு என்று கேட்டு வருபவர்கள் குறைத்தே தான் இருக்கும்.

1.அருள் வழியில் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று விரும்புவர்களுக்கு
2.அந்தச் சத்தை ஏற்றிக் கொடுத்து கொண்டே இருப்பேன்.

முழுமையாக இந்த உடலுக்கு வேண்டும்… தன் வாழ்க்கைக்குக் தான் வேண்டும் என்று எண்ணி வருபவர்களை நான் “சிறிது சிறிதாகக் கழித்து விட்டு விடுவேன்…”

இந்த உடலை வைத்துத் தான் நாம் உயர்ந்த சக்தி பெற வேண்டும்… அருள் ஞானத்தைப் பெற வேண்டும். நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவரையும் பெறச் செய்யலாம். நீங்கள் வளர்ந்தால் தானே…!

நான் ஒருவன் என்ன செய்ய முடியும். என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது. நான் நினைக்கலாம் யானையைப் பண்ணலாம் பூனையைச் செய்யலாம் என்று. அப்படிச் சொன்னால் “அது வெறும் திமிர்தான்…! அப்படி ஒன்றும் செய்ய முடியாது…”

ஒரு நெல்லை எடுத்துப் பல நெல்களாக அதை விளைய வைத்து எல்லோரையும் பெறச் செய்யலாம்.
1.இந்த அடிப்படையில் வலுவைக் கொடுத்துத்தான் எல்லோருக்கும் உயர்ந்த சக்தியைக் கொடுக்க முடியும்.
2.குரு எனக்குக் கொடுத்தது அது தான்… அதைத் தான் உங்களையும் செய்யச் சொல்கிறேன்.

நான் அதைச் செய்கிறேன் என்று “அந்த நான்” வந்து விட்டால் அதற்குப்பின் வளர்ச்சி இல்லை… தீர்ந்துவிடும்…!

நீங்கள் வளர வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் உங்கள் பார்வை அனைவரையும் நல்லவராக்க வேண்டும்… என்ற இந்த எண்ணத்தை நான் எப்பொழுது கொண்டு வருகின்றேனோ
1.நீங்களும் வளர்கின்றீர்கள் நானும் வளர்கின்றேன்.
2.உலகத்தையும் வளர்க்க முடிகின்றது… நானும் அந்த வளர்ச்சி பெற முடியும்.

சூரியன் எதனின் துணை இல்லாதபடி தான் மட்டும் சக்தி பெற வேண்டும் என்றால் முடியாது. 27 நட்சத்திரங்கள் பிற மண்டலத்திலிருந்து வருவதை எடுத்து இங்கே கொடுக்கவில்லை என்றால் சூரியன் இயங்க முடியாது.

பிற மண்டலங்களின் சக்தி வரவில்லை என்றால் இந்தப் பிரபஞ்சத்திற்கும் சக்தி இல்லை. அண்டத்தில் இருப்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் சேர்க்கப்பட்டுப் பிண்டத்திற்குள்ளும் இருக்கின்றது.

1.உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றி விட்டால் அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம்…
2.என்றும் பதினாறு என்று வளர்ச்சி அடையும்… அது வேகாநிலை… எதிலுமே வேகாது.
3.2000 சூரியக் குடும்பத்தை முதலில் வட்டமிடும். பின் அதைக் கடந்து அகண்ட அண்டத்திற்கும் செல்லும்.
4.அப்படி அடைந்த ஒரு கூட்டமைப்பாகச் செல்லும்.

இருண்ட உலகமாக இருப்பது ஒளியின் சிகரமாக அகண்ட அண்டம் விளையும். அது எத்தனையோ கோடி வருடங்கள் ஆகும்.

அனைத்தும் ஒளியாக மாறிவிட்டது என்றால் அதற்குப் பின் மனித இனங்களைச் சீக்கிரமாக மாற்றும் நிலை வரும். ஒளியின் சுடராக ஒளிக்குள் எல்லாமே ஒளியாகும்.

இப்படி எத்தனையோ ஆண்டுகள் நாம் வளர்ச்சி பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உலக மக்கள் அனைவரும் அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நாம் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் தவமிருப்போம்.

1.எந்தத் தென்னாட்டிலிருந்து உலகம் முழுவதற்கும் மெய் ஞானத்தின் தத்துவங்கள் பரவியதோ
2.அதே தென்னாட்டிலிருந்து மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருளால் உலக மக்களை எல்லாம் ஒன்று சேர்த்திடும்…
3.மனித இனத்தைக் காத்திடும் சக்தியாக வெளிப்பட வேண்டும் என்று
4.குருநாதரின் அருளாற்றலை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம் (ஞானகுரு).

உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உலகைக் காப்பீர்… உங்களையும் காப்பீர்… உங்கள் ஊரைக் காப்பீர்… உலக மக்களைக் காப்பீர்கள்..! என்று வேண்டுகின்றேன்.

நிறைந்த மனதுடன் வாழ்வோம். எல்லோரையும் நிறைவான நிலைகள் பெறச் செய்வோம். அந்த நிறைவின் நிலைகள் கண்டு மகிழ்வோம்.

அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு எல்லோரும் பேரானந்தப் பெரு நிலையை இந்த வாழ்க்கையிலே அடைவோம். பேரின்பப் பெரு மகிழ்ச்சியை இந்த உடலிலிருந்தே வளர்ப்போம்.

பிறவி இல்லா நிலைகள் என்ற பெரு வாழ்வு வாழ்வோம். என்றும் அழியாத நிலையான ஒளிச் சரீரம் பெறச் செய்யும் வாழ்க்கை வாழ்வோம்.

உலக மக்கள் அனைவரும் மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி அரசியல் பேதமின்றி வாழ்வோம். சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்வோம்.

1.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை நாட்டு அரசுடன் இணைந்து நாம் எடுத்துக் காட்டினோம் என்றால்
2.அந்த நிலையே நம் அரசும் ஆகின்றது.
3.நாமே அரசாகின்றோம். அரசே நாம் ஆகின்றோம்.

இந்த உயர்ந்த நிலைகள் கொண்டு நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் இந்த அரசும் நலமானதே. அரசே நாம் – ஆக நலமாகின்றோம்.

1.நாம் தான் அரசு
2.அரசு தான் நாம் என்ற நிலைகளில்
3.தீமைகளை வென்று ஞானத்தின் நிலையை வளர்த்த நம் பாரத நாட்டில் அரசியல் பேதமின்றி வளர்ப்போம்.
4.பேதமற்ற வாழ்க்கை நாம் வாழ்வோம்.

நாம் அனைவரும் ஒருக்கிணைந்து நம் தமிழ்நாடு உலகிற்கே எடுத்துக் காட்டாக வரவேண்டும் என்ற நிலையில் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வருவோம்.

உலக மக்கள் அனைவரும் பேதமற்ற நிலைகளில் வாழ வேண்டும் என்று “தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…!” என்று போற்றப்படும் இங்கே தெற்கிலே வளர்ந்த அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வுகளை இந்த உலகிலே பரப்புவோம்.

அந்த மெய் ஞானியின் உணர்வை நாம் ஒருக்கிணைந்து நமக்குள் வளர்ப்போம். உலகம் அனைத்தும் நலம் பெற வேண்டும் என்ற நமது மூச்சலைகளைப் பரப்புவோம்.

நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்வோம். பகைமையற்ற உணர்வுகளுடன் வாழ்வோம்… வளர்வோம். எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று அந்த அகஸ்திய மாமகரிஷிகளை வேண்டிப் பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக வணங்கச் சொன்னார். அந்தக் கடவுளால் அவன் அமைத்துக் கொண்ட கோட்டை தான் உடல் என்று அந்த உடல்களை “ஈசன் வீற்றிருக்கும் கோவில்…” என்று மதிக்கச் சொன்னார்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த உடலான ஆலயத்திற்குள் அரும் பெரும் சக்தியாக உலகைப் படைத்திடும் சக்தியாக அதாவது தெய்வங்களாக ஒவ்வொரு உணர்வுகளும் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்று சொன்னார்.

அங்கே நீ வரம் பெறும் நிலையாக
1.ஒவ்வொரு மனிதனுக்குள் அறியாது விளைந்த தீயதுகளை மறந்து விட்டு
2.அந்த உடலை வளர்த்த உயர்ந்த உணர்வின் எண்ணங்களை நீ எண்ணி
3.அது உயர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை நீ எண்ணுவாய் என்றால்
4.அந்த உயர்ந்த நிலையின் சக்தியை நீ பெறுகின்றாய் என்று குருநாதர் தெளிவாக எனக்குக் (ஞானகுரு) காட்டினார்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஒவ்வொரு கோயிலும் (உடல்கள்) பரிசுத்தமாக வேண்டும். அங்கே இயக்கிக் கொண்டு இருக்கும் ஈசன் நல்ல உணர்வுகளை அங்கே படைக்கச் செய்ய வேண்டும் என்ற இந்த உணர்வில் தான் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் தியானித்து வருகின்றேன்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தியான மண்டபத்தை அமைத்திருக்கிறோம். அங்கே அமர்ந்து எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல்களை உலகம் முழுவதற்கும் படரச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உலகத்தையே அழித்துக் கொண்டு இருக்கும் விஷத் தன்மை ஒரு பக்கம் படர்ந்து மனிதனுடைய எண்ணத்தையும் அது அழித்துக் கொண்டு இருந்தாலும்
1.அந்த விஷத் தன்மையிலிருந்து எல்லோரையும் மீட்ட வேண்டும் என்ற நிலையில்
2.அந்த மெய் ஞானிகள் கற்பித்த நிலைகள் நான்கு திசைகளிலும் பரவி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உலக மக்கள் அனைவரும் பெறும் தகுதியாக இப்போது அதுவும் வளர்ச்சியாகிக் கொண்டே வருகிறது.

தியானத்தை நாம் மட்டும் செய்யவில்லை…! உலகில் எல்லாப் பாகங்களிலும் இதைப் போன்ற தியானத்தின் உண்மைகளை உணர்ந்து “உலகைக் காக்கும் சக்தியாகத் திசை திரும்புகிறது…!”

அந்த மாமகரிஷிகள் ஒவ்வொரு பாகங்களிலேயுமே இதைப்போல அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

நமது மனதை வலு பெறச் செய்யும் சக்தியாக நமது எல்லையில் நம்மை அணுகி உள்ளவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் செயல்படுத்தியது.

ஆகையினாலே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்திற்குள் வந்தாலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற்று
1.நீங்கள் இடும் மூச்சுகள் அனைத்தும் உலக நன்மை பயக்கும் அருள் சக்தியாகவும்
2.மற்றவர்களின் தீமையை அகற்றி அவர்களுக்குள் நல் உணர்வின் சக்தி விளையும் தன்மையாகவும்
3.அதைச் செயல்படுத்தும் நிலையாகத் தான் இங்கே அமைத்திருக்கின்றோம்.

இந்தத் தபோவனத்திற்குள் உள்ளே நுழைந்து விட்டாலே
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து விட்டு
3.அடுத்து உங்களுக்கு எது எல்லாம் நல்லதாக வேண்டுமோ அதை எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
4.உங்களுக்கு அந்தச் சக்தி கிடைத்து நல்லதே நடக்கும்.

சில சந்தர்ப்பங்களில் உங்கள் வீட்டிலிருந்து அதைச் செயல்படுத்த முடியவில்லை என்றாலும் இங்கே வந்து அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்டால் அதன் பின் உங்கள் வீட்டிலிருந்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பழக்கம் வந்து விடும்.

அந்தப் பழக்கம் வந்து விட்டால் “நம்மை நாமே காத்திடும் சக்தியாக…” அது வரும். அதனின் வளர்ச்சியில் எத்தகைய நஞ்சு கொண்ட உணர்வுகள் இங்கே பூமியிலே படர்ந்தாலும் அது நம்மைத் தாக்காத வண்ணம் நம்மைக் காத்துக் கொள்ளும் ஆற்றலை நிச்சயம் எல்லோரும் பெற முடியும்.

ஆகையால் சாமியார் காப்பாற்றுவார் ஜோதிடம் காப்பாற்றும் ஜாதகம் காப்பாற்றும் மந்திரம் காப்பாற்றும் என்ற நிலையை விடுத்து உங்களுக்குள் இருக்கும் உயிரான ஈசனின் துணை கொண்டு மெய் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பேரொளியாக மாற்றச் செய்யவே இந்தத் தியான மண்டபம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியை நாம் பெற்று அவரின் துணையால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.இந்த மனித உடலிலே வந்த தீயதை நீக்கி
2.மெய் ஒளியின் உணர்வுகளை நமக்குள் வளர்த்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலையை அடையும் ஆற்றலை இந்தச் சரீரத்தில் வளர்த்து
4.என்றும் அழியாத ஒளிச் சரீரமாக நாம் நமக்குள் வளர்ப்போம். நலம் பெறுவோம்… வளம் பெறுவோம்…!

சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் நாம் ஒன்ற வேண்டும்

 

நான் படிக்காதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். இயற்கையின் பேருண்மைகளை அறியும் தகுதியை குருநாதர் எமக்குக் கொடுத்தார்.

நீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உணர்வினைப் பதிவாக்கிக் கொண்ட பின் உங்கள் நினைவாற்றல் கொண்டு
2.அண்டத்தையும் அளந்தறிந்த அகஸ்தியனின் உணர்வினை உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்.
3.இருளை அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியையும் நீங்கள் பெற முடியும்

அந்த நம்பிக்கையில் தான் இதைப் போதிக்கின்றேன். கேட்டறிந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… திரிந்தேன்… அறிந்தேன்… துன்புறுத்தப்பட்டேன்… துன்பத்திலிருந்து மீண்டிடும் உணர்வை குருநாதர் உணர்த்தினார்… அதைக் கவர்ந்தேன்.

துன்பத்தை அகற்றும் உணர்வுகளை வளர்க்கும் படி செய்தார். அதில் வளர்த்த உணர்வின் ஞானத்தைத் தான் உங்களுக்குப் போதிக்கின்றேன்.
1.நீங்கள் இதை நினைவு கொண்டு வந்து வளர்த்தால்
2.உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்க முடியும்.

இந்த உடல் நீடித்த நாள் நம்முடன் இருக்கப் போவதில்லை. ஆகவே உடலில் இருக்கும் பொழுதே அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். நாம் பார்ப்போர் நம் சொல்லைக் கேட்டோர் அனைவரையும் நலம் பெறச் செய்ய முடியும்.

நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களும் அதைப் பெறுவார்கள். எடுத்துக் கொள்ளவில்லை என்றால் வளர்ச்சிக்கு வர முடியாது.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்று அருள் ஞானத்தைப் போதியுங்கள். அருள் ஒளியை நுகருங்கள். அருள் ஞான அணுக்களை உருவாக்குங்கள். பிறவி இல்லா நிலையை அடைய முற்படுங்கள். நம் எல்லை எது…? என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதை மையமாக வைத்து வாழுங்கள்.

மையம் எது…?

1.இந்த உடலுக்குப் பின் நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… மனிதனின் கடைசி எல்லை அது தான்.
2.அங்கே ஒளியாக மாறிவிட்டால் அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் சுழலாம்… என்றும் 16 என்று நிலை அடையலாம்.

மனித உடல் பெற்ற நிலையில் அறியும் ஆற்றல் ஆறாவது அறிவாக உள்ளது கார்த்திகேயா…! உயிர் தான் இதையெல்லாம் உருவாக்குகின்றது. அவனுடன் நாம் ஒன்றிட வேண்டும்.

உயிர் எப்படி நம்மைத் தெளிவாக்குகின்றதோ இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவுக்கு உண்டு. அதன் துணை கொண்டு அருள் சக்திகளை வளர்த்துக் கொண்டால் அடுத்துப் பிறவி இல்லை.

சொர்க்க பூமி சொர்க்கவாசல் என்று நாம் எண்ணும் உணர்வின் தன்மை அருள் ஒளி கொண்டு இங்கே வளர்த்தால் அங்கே விண் செல்ல முடியும்… சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

1.சொர்க்க பூமியாக இருக்கும் இந்த நிலையை சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.
2.சொர்க்க வாசலை நாம் நாட வேண்டும்.
3.சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் ஒன்ற வேண்டும்
4.அருள் ஒளிச் சுடரை நாம் வளர்க்க வேண்டும்… அதன் வழி அது நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக யாரும் தவறு செய்யவில்லை என்றாலும் சந்தர்ப்பத்தால் ஒவ்வொரு மனிதனும் எதிர்நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கின்றது. ஏன்…?

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நிலைகள் பெற்றது. இரண்டு நட்சத்திரத்தின் சக்திகள் எதிர் நிலையாகி அதனால் துடிக்கும் இயக்கமாக ஒரு உயிராக உண்டாகின்றது.

அந்தத் துடிப்பின் இயக்கத்திற்குள் அது கவர்ந்து கொண்ட உணர்வினை உடலுக்குள் ஜீவ அணுக்களாக மாற்றும் நிலைகள் பெற்றது தான் ஒவ்வொரு உயிரும்.

கார்த்திகை நட்சத்திரம்… அறிந்திடும் அறிவாற்றல் மிக்க நிலைகளில் ஒளி கண்டு உணர்ந்திடும் உணர்வின் அறிவாகப் பெற்றது.
1.ஆக 27 நட்சத்திரங்களிலும் 27 விதமான வைரக் கற்கள் உண்டு.
2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதமான வலுவின் தன்மை பெற்றது.
3.ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாத நிலைகள் கொண்டது

27 நட்சத்திரத்தின் உணர்வின் இயக்கங்கள் இவவாறாக இருக்கும் இந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் இயக்கமும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டது.

இருப்பினும் ஒரு கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டவர்கள் அவர்கள் உடலிலே எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு அவருக்கு ஒத்ததாக விளைந்த எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர்.

அவர்கள் நல்லவராகத் தோன்றினாலும் அதே சமயத்தில் எதிர் மறையான நட்சத்திரத்தின் சக்தி கொண்ட நாம் அவருடன் நட்புடன் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

27 நட்சத்திரத்திங்களுக்குள் ஒன்றுக்கொன்று எதிர் நிலை மறைகள் உருவாகி அதனின் இயக்கத்தால் தான் தாவர இனங்களே விளைகின்றது.

அந்தத் தாவர இனத்தில் விளைந்ததை உணவாக உட்கொள்ளும் போது ஒரு சிலது கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒத்து வரும். அவருக்கு அதனால் அங்கே மகிழ்ச்சியின் தன்மை வரும். வலுக் கொண்ட நிலைகளும் அவருக்குள் வரும். (ஆனால் மற்ற நட்சத்திரத்தின் சக்தி கொண்டவருக்கு எதிர் நிலைகளாக வரும்)

அப்பொழுது அவர் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் சொல்லால் நமக்குள் வரப்படும் போது நம்மை அறியாமலேயே தீமை விளைவிக்கும் நிலையாக இங்கே வரும்.

இருப்பினும்
1.நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாது அதனின் உணர்வு எதிர்மறையாகி
2.ஒன்றுடன் ஒன்று எதிர்நிலை ஆகும்போது தான்
3.விண்ணுலகிலே ஆற்றல் மிக்க இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதே போல ஒன்றுடன் ஒன்று ஒன்றும் நிலைகள் வரப்படும் போது எதிர் மறையான உணர்வுகள் வரும்போது தான் அதனுடைய இயக்கமும் வருகின்றது.

ஒரு “எலக்ட்ரானிக்” என்ற நிலை வரப்படும் போது அதை இயக்க வேண்டும் என்றால் அதற்கு எதிர்மறையான நிலைகள் இருந்தால் தான் அது இயக்கமாகும்.

அந்த எலெக்ட்ரானிக் போல் தான் நம்முடைய உணர்வுகளும் எண்ணங்களும்…!

ஒரு உணர்வின் சக்தி நம் உடலுக்குள் அது ஒத்துக் கொண்ட உணர்வாக இருந்தாலும் எதிர் மறையான நிலைகள் இருக்கும் போதுதான் நமக்குள் “உந்தி இயக்கும் நிலைகளாக…” நாம் செயல்படுகின்றோம்.

மின்சாரத்தை எடுத்துக் கொண்டாலும் POSITIVE NEGATIVE என்ற எதிர் மறையான நிலைகள் வரும்போது தான் மின் அணுவின் நிலைகளும் இயங்கி மின் அணுவின் அழுத்தத்தைக் கொண்டு மோட்டார்களையும் மற்ற எல்லா மின் சாதனங்களையும் அது இயக்கச் செய்கின்றது.

இதைப் போல்தான் மனிதனின் உணர்வுக்குள்ளும் நாம் நண்பராகப் பழகினாலும் அந்த நட்சத்திரத்தின் இயக்கத்தால் எதிர்மறையான இயக்கங்கள் உண்டு,

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடப்படும் பொழுது இரண்டு குழந்தைகள் ஒத்து வரலாம், ஒரு குழந்தை ஒத்து வராத நிலைகள் வரும். இப்படி எதிர்மறையான நிலைகள் வரும்போது எதிர்ப்பின் நிலைகளே வருகின்றது.

நாம் பலருடன் பழகினாலும் எண்ணத்தால் கவர்ந்து நட்பு கொண்டு மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுணர்ந்தாலும் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் எதிர்மறையை உண்டாக்கி நோயாக உருவாக்கும்.

சந்தேகம் இருந்தால் பார்க்கலாம்…!
1.நண்பர்கள் பலருடன் சந்தித்துப் பேசும் போது
2.இன்னொரு நண்பருடன் நாம் பேசினாலே தன்னை அறியாமலேயே ஒரு கலக்கம் ஏற்படும்
3.வியாபார ரீதியாக நீங்கள் சென்றாலும் அத்தகையவர்கள் உறவாடிவிட்டுச் சென்றாலே நமக்குள் இனம் புரியாத கலக்கங்கள் ஏற்படுவதைக் காணலாம்.
4.இவை எல்லாம் நம்மை அறியாது இயக்கக்கூடிய நட்சத்திரங்களில் எதிர்மறையான இயக்கங்களே.

நமது உயிர் கார்த்திகை நட்சத்திரமாக இருப்பினும் மற்றவருடைய நட்சத்திரம் எதிர்மறையாக இருந்தால் அதனால் எதிர் நிலையான உணர்வுகளாக இயக்குகின்றது.

இதை எப்படி மாற்றிச் சமப்படுத்துவது…? அதற்கு வழி வேண்டுமல்லவா…!

அன்று வாழ்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோளின் சக்தியையும் தனக்குள் அடக்கி அதை எல்லாம் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அழியாத நிலைகள் கொண்டு ஏகாந்தமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அந்த உணர்வின் சத்தைக் கவரும் திறனாகத்தான் வசிஷ்டாத்வதைம்…! என்ற நிலைகளில் தியானத்தை அமைத்துக் கொடுக்கின்றோம். (வசிஷ்டர் – அருந்ததி)
1.எதனையுமே தனக்குள் கவரச் செய்து அருந்ததியாக
2.இணைந்தே வாழும் நிலைகளும்
3.இணைத்து அறிந்திடும் நிலைகளும்,
4.இணைந்தே தெரிந்திடும் நிலைகளும்,
5.இந்த வலுவினில் இணைந்திடும் நிலைகள் நாம் என்று கொள்கின்றோமோ
6.இதனை இணைத்திடும் நிலைகள் ஆக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அது பருக வேண்டும்.
7.அதைப் பருகினால் எதிர்நிலைகளைச் சீராக்கிச் சமப்படுத்தி நன்மை பயக்கும் சக்தியாக உருவாக்க முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பருகும் நிலையைக் உருவாக்குவதற்குத் தான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த உபதேசத்தின் நோக்கம்.

விண்ணுக்குப் போகும் உந்து விசை

 

விண் வெளியில் உள்ள கதிரியக்கப் பொறிகள் மற்ற மண்ணுடன் கலந்திருப்பதைப் பிரித்து அணுக்கதிரியக்கமாக மாற்றி அதன் உணர்வின் வலிமை கொண்டு அதன் சேர்க்கையில் பல கலவை கொண்டு “உந்து விசையாக மாற்றி” விண்ணிலே ராக்கெட்டை ஏவுகின்றார்கள்.

அதனின் தொடர் கொண்டு… பூமியின் ஈர்ப்பின் அழுத்தத்தைப் பிளந்து பூமியைக் கடந்து சென்று… ஈர்ப்பற்ற நிலைகளில் சுழன்று கொண்டிருக்கின்றது ராக்கெட்டின் செயலாக்கங்கள் விஞ்ஞான அறிவால்.

இதைப் போன்று தான்
1.விண்ணுலகில் எவ்வாறு உயிரின் தன்மை உருப்பெற்றதோ மண்ணுலகில் அது ஈர்க்கப்பட்டு
2.பல நட்சத்திரங்களில் இயக்கப்படும் பொறிகள் கோள்களாக மாறி அந்த உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைத் துருவத்தின் வழி பூமி நுகர்ந்து
3.அதன் வழி தாவர இனங்களாக வளர்ச்சி பெற்று அதன் உந்து விசையாக அதனின் உணர்வு இயக்கப்பட்டு
4.அதன் தொடர் வரிசையில் அதனதன் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ரூபங்கள் மாறி மனிதனான பின் மனிதன் தன்னிலை அடைகின்றான்.
5.துருவத்தை நுகர்கின்றான்… நுகர்ந்ததைத் தனக்குள் ஒளிசுடராக மாற்றுகின்றான்.

அகஸ்தியன் இதையெல்லாம் பெற்ற பின் தன் மனைவிக்கும் இதை ஓதுகின்றான்… மனைவி பெற வேண்டும் என்று விரும்புகின்றான்.

மனைவியோ தன் கணவனுக்குப் பெற வேண்டும் என்று அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி… அது கருவாகி ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றார்கள் அகஸ்தியனும் அவன் மனைவியும்.

அதன் வழி விண் சென்ற அவர்கள் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள். ஆகவே கடவுள் எப்படி இருக்கின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதனை நாம் நுகர்ந்தால் அதன் வழியில் நாமும் அங்கே செல்ல முடியும்.

அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லாம் உங்களுக்குள்ளும் இப்பொழுது பதிவாக்கும் நிலை வருகின்றது.
1.பேரண்டத்தைக் கண்டுணர்ந்த அகஸ்தியன் உணர்வை நமது குரு தனக்குள் கவர்ந்தார்.
2.ஒளியின் சுடராக விண்ணின் ஆற்றலை அவன் கண்டான்… பூவுலகின் நிலையையும் அறிந்தான்… உயிரியலின் தத்துவத்தை அறிந்தான்.
3.பேரண்டத்திலிருந்து எவ்வாறு நுகர்ந்தது என்று மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அகஸ்தியன் தொடர்வரிசையை அறிந்தான்.
4.அதைத் தனக்குள் உருவாக்கினான்… கருவின் வித்தாக உருவாக்கினான்.
5.அந்த வித்தினைத் தான் எனக்குள்ளும் பதிவு செய்தான்
6.அவன் உணர்வின் துணை கொண்டு அந்த எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது விண்ணின் ஆற்றலை நான் நுகர முடிகின்றது.

அதில் விளைந்த உணர்வின் எண்ணங்களை வித்தாக ஊழ்வினையாகப் பதிவு செய்ய முடிகின்றது.

இதை நீங்கள் நினைவு கொள்வீர்கள் என்றால் அந்த உணர்வின் துணை கொண்டு மண்ணுலகை வென்று வானுலகின் உணர்வை நீங்கள் நுகர்ந்து கணவன் மனைவியாக இதை வளர்த்துக் கொண்டால்
1.உடலை விட்டுச் சென்ற பின் அதே விண்ணுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
2.இது நிச்சயம்…!

இன்று நல்ல நினைவு இருக்கும் போதே அருள் உணர்வை வளர்க்கும் பருவத்திற்கு நாம் வர வேண்டும்

 

இந்த மனித உடலில் நாம் வாழும் இந்தச் சிறிது காலத்திற்குள்ளேயே நாம் ஒளியான நிலைகள் பெற வேண்டும். ஏனென்றால் இந்த உடலில் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது தெரிகின்றது.

அதற்குள் எத்தனையோ நிலைகளில் நாம் ஆசை வைக்கிறோம். எல்லாவற்றையும் செலவழிக்கின்றோம்… ஆடம்பரத்திற்கும் செலவழிக்கின்றோம்.
1.ஆனால் எதுவும் நிற்கின்றதா…?
2.செல்வத்தைச் சம்பாரித்து அழகாக வீட்டைக் கட்டி உடலையும் அழகு படுத்தினாலும்
3.நோய் என்ற நிலை வந்து விட்டால் அது எல்லாவற்றையும் தூக்கி எறி…! என்று சொல்கின்றோம்.
4.அந்த நேரத்தில் நல்லதை எல்லாம் வேண்டாம் என்று சொல்கிறோம் அல்லவா.

இன்று நன்றாக மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். யாராவது ஒரு சொல் தவறாகக் கேவலமாக சொல்லிவிட்டால் உடனே மனது சோர்வடைந்து விடுகின்றது.

என்னைக் கேவலமாகப் பேசினார்கள்… கேவலமாகப் பேசினார்கள்…! என்று வேதனை வருகின்றது. இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் அவர் மீது வெறுப்பும்… அவர் என்னென்ன சொன்னார்களோ அதை எல்லாம் எடுத்து இந்த உடலில் விளைய வைக்கத் தொடங்குகின்றோம்.

அதாவது… கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்பது போல் அவர்கள் உணர்வு இங்கே உருவாகிறது.

1.அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகின்றார்கள்
2.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று சொன்னால் அந்த உணர்வு நம்மை இயக்காது.

இப்படிப்பட்ட உணர்வை எடுத்து நாம் அதைத் தடுத்துப் பழக வேண்டும். அதனால்தான் ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்று சொல்கின்றோம்.

அதைத் தடுக்கக்கூடிய வல்லமை எப்படிப் பெற வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்திகளை… அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கப்படும் பொழுது அது பாதுகாப்பாக வரும்.
1.அந்த மகரிஷியின் உணர்வுகளைப் புருவ மத்தியில் நம் உயிருடன் இணைக்கப் பழக வேண்டும்.
2.அங்கே உருவாக்கும் திறனாக அது அமையும்… அது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்.
3.அருள் ஒளியின் உணர்வை அணுக்களாக நமக்குள் பெருக்கினால் அது நம்மைக் காக்கின்றது.

வேதனையான உணர்வை நுகர்ந்து விட்டாலோ தீமையின் விளைவாகவே நம்மை மாற்றிவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு அருள் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிப் பெருக்கிக் கொண்டு பெரிய தத்துவ ஞானியாக வளர வேண்டும். எல்லோரையும் காத்திடும் சக்திகளாக நாம் வரவேண்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குள் இந்த உணர்வைப் பதிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால் நான் படிக்காதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். படித்துக் கொண்டிருப்பவர்கள் ஆழமாகப் பதிவாக்கி இந்த ஆற்றலை நீங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் பார்வை இருளை அகற்றும் உயர்ந்த சக்தியாக வளரட்டும்.
1.அருள் ஞானத்தைப் பெறும் கருவின் தன்மை உருவாக்க வேண்டும்.
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அரசாங்க நிர்வாகத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் பெற வேண்டும். அவர்கள் மன பலம் பெற வேண்டும்.
1.மக்களுக்கு நல் உணர்வு காட்டும் அந்தச் சக்தி
2.அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
3.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி இந்த அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.

அப்பொழுது நம்முடைய எண்ணம் அவர்களுக்கு நல் வழி காட்டவும் சகோதர உணர்வுடன் வளரவும் இது உதவும். இதைப் போல மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் “ஓர் குடும்பம்…!” என்று நாம் செயல்படுத்த வேண்டும்.

மனித உடலுக்குள் நல்ல குணங்களும் உண்டு கெட்ட குணங்களும் உண்டு. இருந்தாலும் உயர்ந்த உணர்வு கொண்டு தியானிக்கும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்த்திட இது உதவும்.

ஆகவே அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற அந்த ஒருக்கிணைந்த நிலைகளில் இணைந்திடும் போது
1.நமது அரசே உலகிற்கு எடுத்து காட்டும் அரசாகவும்
2.அதன் கீழ் வாழும் மக்கள் நாம் உயர்ந்தவர்களாகவும் இருக்க முடியும்.

ஏனென்றால் விஞ்ஞான முறையால் மத பேதத்தாலும் இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் இன்று உலகம் அழிந்திடும்… மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் இத்தருணத்தில்
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி
2.நாம் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் இந்த முறைப்படி நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலையும்
3.ஆட்சி புரிந்து கொண்டு இருக்கும் நமது அரசும் வளமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணுங்கள்.
4.இப்படி ஒருக்கிணைந்தால் கட்சி பேதமும் வராது… இன பேதங்களும் வராது… மத பேதங்களும் வராது…!

ஏனென்றால் நாம் அனைவரும் ஆட்சி சீரானதாக அமைக்க வேண்டும் என்று எண்ணி அந்த ஆட்சி சீராக அமைந்தால் “யாருக்கும் தொல்லை இல்லை…!”

அப்படி எண்ணாது என்னுடைய வழியில்… “நான் உயர்ந்து இருக்க வேண்டும்…!” என்று எண்ணி விட்டால் அடுத்து தொல்லைகளே வருகிறது. ஆகவே இந்த எண்ணங்கள் நமக்குள் வளராதபடி ஞானிகள் காட்டிய அருள் உணர்வு கொண்டு அரசை ஒத்தே நாம் வாழ வேண்டும்.

நமது சக்தி எல்லாம் ஒருக்கிணைந்து ஒன்றாகச் சேர்ந்து நம்முடைய ஓட்டைப் பெற்றுத்தான் ஆட்சிக்குச் செல்கிறார்கள். ஓட்டு அதிகமாக வாங்கி வென்று அங்கே சென்றாலும் அவர்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னால் “நம்மைக் காக்கும் உணர்வுகள் அவர்களுக்குள் வளர்கின்றது…!” பின் நாம் இந்த எண்ணங்கள் பகைமை இல்லாத நிலைகள் வளர்கின்றது.

இது போன்ற நிலைகளை நாம் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்து…
1.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும்.
2.நமது நாட்டு மக்கள் அனைவரும் மத பேதம் இன்றி இன பேதம் இன்றி ஒருக்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தியால் வாழ வேண்டும்.
3.ஆட்சி புரியும் அந்த ஆட்சி நிர்வாகிகள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.தலையாயக் கடமையாக இது ஒவ்வொரு நாளும் நாம் எண்ண வேண்டும்.

மனித உடலுக்குள் எப்படி நல்ல குணமும் கெட்ட குணமும் இருப்பது போன்றே நம் நாட்டுக்குள்ளும் இருக்கும் அனைவரும் (நல்லவராக இருந்தாலும் சரி கெட்டவராக இருந்தாலும் சரி) ஒருக்கிணைந்தால் தான் இந்த நாடும் நலம் பெறும். மக்களும் ஒருக்கிணைந்து வாழ்வோம்.

ஆகவே தீமையை விளைவிக்கும் சக்திகளிலிருந்தும் மக்களைக் கலக்கமுறச் செய்யும் தவறான செயல் கொண்ட இந்த உணர்வுகளிலிருந்தும் அனைவரையும் காத்திடும் சக்தியாக
1.நாட்டில் பிறந்த அனைத்து மக்களும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்களை அறியாது தவறு செய்யும் நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
3.மக்கள் பேரானந்த பெருநிலைகள் பெற வேண்டும்
4.மனிதனாகப் பிறந்த முழுமையின் உணர்வுகள் பெற வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள்.

கட்சி பேதம் இல்லாத மத பேதம் இல்லாத இன பேதமில்லாத மொழி பேதமில்லாத அரசியல் பேதமில்லாத உலகைச் சிருஷ்டிக்க “நாம் எண்ணும் எண்ணமே தான்…” அத்தகைய உலகைச் சிருஷ்டிக்கின்றது.

மத பேதத்தால் போர்கள் நடக்கின்றது. கட்சி பேதத்தால் உண்மையினுடைய நிலைகள் அறியாது சீராக செயல்படும் தன்மைகள் காலத்தால் உலக நிலைகளில் இருந்து இன்று மறைந்து கொண்டு வருகிறது.

இதைப் போன்ற நிலைகளை நாம் வாழும் நாட்டிலே விளையாது
1.கட்சி என்ற பேரை அகற்றி விட்டு
2.இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சியின் நிலைகள் சீராக வர வேண்டும் என்று ஒருக்கிணைந்தால் “எல்லோரும் நல்லவரே…!”
4.எல்லோரும் நல்ல ஆட்சியை நிச்சயம் பெற முடியும்…!

ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தின் மேல் நாம் குறைகளை எண்ணி வளர்த்துக் கொண்டேயிருந்தால்
1.அவர்கள் எதைச் செய்தாலும் நாம் குறைகளைக் கூறி கொண்டே தான் இருப்போமே தவிர
2.குறையை நிவர்த்திக்கும் எண்ணமே நமக்குள் வராது.
3.நாம் குறையைச் சொல்லி விட்டு நாமும் குறையைச் செய்து கொண்டு இருப்போம்.

ஆகையால் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற சொன்ன நிலைகளில் நமது நாட்டில் ஆட்சி புரியும் அந்த நிலைகளுக்கு
1.மகரிஷியின் அருள் சக்தி படர்ந்து
2.நாடு சீராக வளர்ச்சி பெற வேண்டும் என்று நாம் அனைவரும் ஒருக்கிணைவோம்.
3.யார் ஆட்சிக்கு வந்தாலும் அது நல்ல ஆட்சியாக அமைய வேண்டும் என்று பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்…!

அகண்ட பேரண்டத்தின் உண்மை நிலைகள்

 

மற்ற சூரியக் குடும்பத்திலும் நம்மைப் போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்கள்.
1.நம்மைக் காட்டிலும் வளர்ச்சி இல்லாத மனிதர்களும் உண்டு… வளர்ச்சி அடைந்தவர்களும் உண்டு.
2.இங்கே நமக்கு முடி உண்டு… முடி இல்லாது மொட்டைத் தலையாக உள்ளவர்களும் சூரியக் குடும்பங்களில் உண்டு.

நம் சூரியக் குடும்பத்தில் ஒரு பூமி இருக்கிறது என்றால் இரண்டு பூமி இருக்கக்கூடிய குடும்பங்களும் உண்டு. ஒன்று வளர்ச்சி உள்ளதாகவும் உண்டு… சிலது வளர்ச்சி இல்லாததும் உண்டு. இரட்டைக் குழந்தை என்று சொல்கிறோம் அல்லவா அது போல…!

இதையெல்லாம் விரிவாக்கமாக குருநாதர் ஒரு நாள் காட்டுகின்றார்.

சூரியக் குடும்பத்திற்குள் எல்லா இடத்திற்கும் பயணம் செய்வது வருடக் கணக்காகும் என்று சொல்கின்றார்கள். அகண்ட நிலையில் 2000 சூரியக் குடும்பத்திற்கும் போக வேண்டுமென்றால் எப்படி இருக்கும்…?

2000 சூரியக் குடும்பம் என்பது அகண்ட அண்டமாக இருக்கிறது, இதைக் காட்டிலும் எத்தனையோ அண்டங்கள் இருக்கின்றது.

அதனுடைய விரிவடைந்த நிலைகளை நீங்கள் பார்க்கப் போனால் மனிதனுக்கு ஆயுள் பத்தாது. ஆயுள் பத்தாது என்று மட்டுமல்ல… போகவும் முடியாது.
1.ஆனால் போக வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய வழியில்
2.இந்த அருள் உணர்வுகளைப் பெற்றால் அதுபாட்டுக்குப் போய்க் கொண்டே இருக்கும்.

வான்வெளியில் நட்சத்திரங்களாக நம் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் 2000 சூரியக் குடும்பத்தின் ஈர்ப்பில் உள்ளது தான்.

நம் சூரியனைக் காட்டிலும் வலுவடைந்த பெரிய அளவில் உள்ள சூரியனும் சில பிரபஞ்சத்தில் இருக்கின்றது. ஒரே அளவாக இல்லை.

நீங்கள் ஒரு சமயம் இதையெல்லாம் பார்க்க நேர்ந்தால்
1.இரவிலே படுத்திருக்கும் பொழுது உங்களை மேலே அழைத்துச் செல்லும்.
2.எந்த உணர்வு பதிவானதோ ஆன்மாவிலே கலக்கும். பறப்பது போல் இருக்கும்.

ஒரு சிலர் பயந்து போய் எங்கேயோ போய் விடுவோமோ என்று எண்ணிப் பிடித்துக் கொண்டவர்களும் உண்டு. இதெல்லாம் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் இயக்கப்படும் போது
1.உங்கள் ஆன்மா அதனுடன் தொடர்பு கொண்டு வட்டமிடும்.
2.அதனுடைய உணர்வுகள் அறிவாக இங்கே உங்களுக்குள் வளரும்.
3.ஒரு விழுது பாய்ந்து தான் தாவர இனங்களுக்குள் வளர்ச்சி அடைகிறது…
4.அது போல் அகண்ட அண்ட்த்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்

நீங்கள் இரவிலே கனவு காண்கிறீர்கள் என்றாலும் மற்ற மனிதர்கள் உடலிலிருந்து வரக்கூடியது… மற்றவர் சொல்லும் பொழுது அதைக் கேட்டிருந்தால் இரவில் உயிரிலே படும்.

இந்த உணர்வு அங்கே அழைத்துச் செல்லும். எங்கேயோ இருக்கின்ற மாதிரி இருக்கும்… பள்ளத்திலேயோ மேட்டிலேயோ மலை மீதோ எங்கெங்கோ செல்வதாகத் தெரியும்.

அந்தந்த பகுதியில் எந்தெந்த மனிதனுடைய உணர்வு விளைந்து அந்த நினைவாற்றல் இருந்ததோ அப்படி இயக்கப்பட்டு கனவுகளாக வருவதும் உண்டு.

இது எப்படியோ அப்படித்தான்…
1.அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையப்படும் போது
2.அது உங்களை அங்கே அவர்கள் வாழும் எல்லைகளுக்கு அழைத்துச் செல்லும்…!

அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான் உபதேசிக்கின்றோம்

 

“அருட்பெரும் ஜோதி நீ… தனிப்பெரும் கருணை நீ…” என்று உயிருடன் ஒன்றினார் இராமலிங்க அடிகள். அருள் ஞானம் பெற வேண்டும் என்று விரும்பிய ஆன்மா பல அற்புதங்களைச் செய்கிறது… அவருக்கே தெரியாமல் தான் இயங்குகிறது. அருள் ஒளியைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது ஒளியாகின்றது.

1.”அன்பே சிவம்…” என்ற அரவணைக்கும் உணர்வுகள் எனக்குள் அன்பாகி உடலில் சிவமாக வேண்டும்.
2.எல்லாவற்றையும் அரவணைத்துக் கொண்டால் அந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை
3.தனக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வின் தன்மை ஒளியாக மாறும்.

அது தான் அருட்பெருஞ்ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ.

பிறர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சந்தோஷத்தை எனக்குள் உருவாக்கி விட்டால் இருள் இங்கே வருமோ…? ஆக… இருண்ட நிலைகளில் இருந்து மீள வேண்டும் என்ற நிலையைத் தான் அவர் உணர்த்துகின்றார்.

அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அருட்பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ. எண்ணியதைத் தான் உருவாக்குகின்றாய் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! யார்…? நம் உயிர் தான்.

பல விதமான உணர்வு அமைந்துள்ள கோட்டை இது. வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்துத் தான் இந்த உடல் உருவானது… கந்தக்கோட்டம்.
2.உயிருடன் எண்ணப்படும் பொழுது கூர்மையின் நிலைகளில் அதை உணர்த்துகின்றது.
3.அருட்பெரும் ஜோதி நீ தனி பெரும் கருணை அங்கே அமர்ந்து துடிப்பாகி உயிரின் துடிப்பாகி
4.கூர்மையாக உணர்வின் தன்மை அறியச் செய்து ஒவ்வொன்றையும் ஒளியாக எனக்குள் உணர்த்துகின்றாய்
5.அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய் என்றார்.

உயிர் தான் அங்கே இருந்து இவ்வாறு செயலாக்குகின்றது.

இராமலிங்க அடிகள் உயிருடன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒளியாக ஜோதியாக… விண்ணிலே இருக்கின்றார். உடல் பற்றை அவர் வைக்கவில்லை. இந்த உடலுடன் வந்தது உடலுடனே போகட்டும் என்ற நிலையில் உயிருடன் ஒன்றி அவர் விண் சென்று விட்டார்.

தனக்குள் தீமை வராது தடுக்கும் சேனாதிபதி… ஆறாவது அறிவு கார்த்திகேயா. பல கோடிச் சரீரங்களில் தீமைகளை உணர்ந்து உணர்ந்து பரிணாம வளர்ச்சி அடைந்து…
1.தீமையிலிருந்து விடுபடச் செய்து அனைத்தையும் அறிந்திடும் அறிவாக மனித உடலில் உள்ளது.
2.அது தான் கந்தகோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அருட்பெரும் ஜோதி நீ தனிப்பெரும் கருணை நீ…! எப்பொழுதுமே ஜோதியாக இருக்கின்றாய் தனிப்பெரும் கருணையாக இருந்து என்னை இயக்குகின்றாய். ஆக எண்ணியதைத் தான் அது உருவாக்குகின்றது.

1.யாரிடமும் நான் யாசிக்கக் கூடாது… யாருக்கும் இல்லை என்றும் சொல்லக்கூடாது,
2.அருள் தாகத்துடன் வருபவருக்கு அந்த அருள் ஞானத்தைப் போதிக்க வேண்டும்
3.இருளை அகற்ற வேண்டும் என்பது தான் அவருடைய தத்துவம்…!

யாம் இப்பொழுது உங்களுக்குக் கொடுப்பதெல்லாம் அந்த அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் நிலைக்குத் தான்…! ஏங்கி வரக்கூடியவர்களுக்கு அந்த அணுக்களுக்கு அந்த ஞானத்தை ஊட்டுகின்றோம். ஏங்கி வருவோர் தான் இங்கே வருவார்கள்.

பசியைத் தீர்க்கும் போது அருள் ஒளியாக அங்கே வளர்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்காக…” இந்த உணர்வுகளை உங்களுக்குப் போதிப்பது.
1.மற்ற எண்ணங்களைத் திருப்பாதபடி மற்ற உணர்வுகளை எல்லாம் ஒடுங்கச் செய்து சொர்க்கலோகத்திற்கே அழைத்துச் செல்வது.
2.மற்ற உணர்வை மறக்கச் செய்வதற்குத் தான் அப்படிப் பேசுவது.

எனக்குள்ளும் அந்த அருள் வளர்கின்றது… இந்த உணர்வை நீங்கள் கேட்கப்படும் பொழுது அருளானந்தம் உங்களுக்குக் கிடைக்கிறது. தீமையிலிருந்து நீங்கள் நிச்சயம் விடுபடுகின்றீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாராவது இருவர் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் மற்றொருவரைக் கோபமாக ஆத்திரமாகத் தாக்குகிறார்… தாக்கிப் பேசுகின்றார்…! என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது நாம் கண் கொண்டு அந்த இருவரையுமே பார்க்கின்றோம். தாக்கிப் பேசும் அந்தக் கோப உணர்வுகளும் அந்தத் தாக்கிப் பேசும் பேச்சைக் கேட்டுணந்தோர் வேதனைப்படும் இந்த இரண்டு உணர்வலைகளும் வெளிப்படுகின்றது.

அவர்கள் இருவரையும் நாம் பார்க்கப்படும் போது
1.வேதனை கலந்த உணர்வும்
2.கோபம் கலந்த அந்த உணர்வும் இந்த இரண்டையும் நாம் சுவாசிக்க நேர்கின்றது.

அவ்வாறு சுவாசித்த இந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டதும்
1.கோபப்படுவோர் யார்…? என்று தெரிய முடிகின்றது.
2.வேதனைப்படுவோரையும் யார்…? என்று அறிந்து கொள்ளச் செய்கின்றது நமது உயிர்.

கண் கொண்டு பார்த்தாலும் “உயிருடன் ஒன்றிய உணர்வுகள்… அது இயக்கிக் காட்டும் போது தான்…!” நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒரு உடலிலே விளைந்த இந்தக் காரமான உணர்வு அது யார் வேகமாகக் கோபத்துடன் பேசுகின்றாரோ இந்த உணர்வுகள் அடுத்தவர் உடலிலே பட்டு அவர் உடலிலே வேதனையாக மாறுகின்றது.

இந்த இரண்டையும் நாம் சுவாசித்தோம் என்றால் அந்த இரண்டு உணர்வுகளும் நமக்குள் உமிழ் நீராக மாறி விடுகின்றது. அது நம் ஆகாரத்துடன் கலந்து கோபப்படும்… வேதனைப்படும் அந்த உணர்வின் சத்தாக இரத்தங்களில் மாறுகின்றது.

அதே சமயம் நாம் கண் கொண்டு பார்த்த இந்த உணர்வுகள் நம் எலும்புக்குள் அமைந்திருக்கும் ஊனிலே பதிவாகின்றது. நாம் கண் கொண்டு பார்க்கும் உணர்வுகளை எல்லாம் எலும்புக்குள் இருக்கும் ஊன் தான் பதிவு செய்து கொள்கின்றது.

யாரை நாம் உற்றுப் பார்த்தோமோ அவர் உடலிலே இருந்து வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து அலைகளாகப் பரவி வருவதை கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
1.அந்த எண்ண அலைகள் நம் ஆன்மாவில் வரும்போது தான் அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
2.சுவாசிக்கும் பொழுதெல்லாம் அந்த நினைவலைகள் நமக்குள் மீண்டும் மீண்டும் வருகின்றது.

ஆக இவ்வாறு எலும்புக்குள் ஊன்றிய பின் நாம் வேடிக்கை பார்த்த உணர்வுகள் நம் சுவாசித்தன் ஈர்ப்புக்குள் வந்து நம் உடலிலே அது விளையத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக நாம் ஒரு பருத்தி விதையை நிலத்தில் ஊன்றினோம் என்றால் அந்த வித்துக்குள் எந்தச் சத்து இருக்கின்றதோ அதைக் காற்றிலிருந்து கவர்ந்து செடியாக விளைந்து மீண்டும் பருத்தியின் வித்தை வித்தாகவும் பருத்தியாகவும் அது உருவாக்குகின்றது.

இதைப் போல ஒரு சோள வித்தை விதைத்தால் சோளத்தின் தன்மை கொண்டு அது சோளத் தட்டையாக விளைந்து மீண்டும் சோள வித்தாகவும் சோளமாகவும் விளைகின்றது.

இதைப் போன்று தான் ஒருவர் கோபமாகப் பேசுகிறார் என்றால் அது காரம். தனிக் காரத்தைச் சாப்பிட்டால் எரிச்சலடைவது போல் கோபமாகப் பேசினால் நமக்கு அது எரிச்சலாகின்றது.

வேதனைப்படுகிறார் என்றால் அது நஞ்சு கொண்டது. ஒரு நஞ்சான பொருளை உட்கொண்டால் எப்படி மயக்கமாகின்றதோ அது போல் வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தாலே நமக்கு மயக்கம் ஆகி சிந்தனைகள் குறைகின்றது.

ஒரு நிலத்தில் – நிலம் முழுவதற்கும் பல விதமான வித்துக்களைப் போட்டால் அதனதன் வித்தின் சத்தைக் கவர்ந்து அது அது முளைப்பது போல
1.நமது உடலுக்குள் நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் பதிவாகி
2.வித்துக்களாக ஆன பின் அந்தந்தக் குணமாக (வினையாக) முளைத்து
3.தன் இனமான உணர்வுகளைக் காற்றிலிருந்து கவர்ந்து வளரத் தொடங்குகிறது.

வேடிக்கையாக நாம் பார்த்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறி அதை நாம் சுவாசிக்கும் போது உயிரிலே இணைக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக “ஓ…!” என்று அது ஜீவன் பெறுகின்றது.

சுவாசித்த அந்த உணர்வின் சத்து நம் இரத்தத்துடன் கலந்து ஒரு செடி வளர்வது போல இந்த உணர்வுகள் அனைத்தும் ஜீவ அணுக்களாக விளைகின்றது.

அப்படி அந்த உணர்வுகள் இரத்தத்தில் விளைந்த பின் கை கால் குடைச்சல்… எரிச்சல்… அசேர்க்கை போன்ற நிலைகள் ஆகி நோயாக உருவாகின்றது.

நோயாக ஆனது எந்த உறுப்புகளின் பாகத் தொடர்புகளில் இது இணைந்ததோ அங்கே அந்தக் கார உணர்ச்சியை தூண்டும் நிலைகளில் குடல் புண்ணோ… இருதயங்களில் வலியோ… அல்லது இரத்த நாளங்களில் குடைச்சலோ இவ்வாறு பெருக்கத் தொடங்கும்.

1.அப்பொழுது இந்தக் கார உணர்ச்சிகள் தாங்காது நமது சிறு மூளையின் பாகங்கள் அது புடைத்து நிற்கும்.
2.கை கால் அங்கங்களைச் சுருக்கும்.
3,இதனால் அடிக்கடி நமக்குள் கோபங்களும் எரிச்சலும் வரத் தொடங்குகின்றது.

இந்த எரிச்சல் தாங்காதபடி வேதனை அதிகமாகி மேல் வலியாகி நரம்புகளிலும் இணைந்து புண்ணாகவோ இரணங்களாகவோ மாறி விடுகின்றது.

அப்படி நரம்புகளிலே ஆன பின் அதனின் தொடர் கொண்ட நிலையில் அந்த நுண்ணிய உணர்வலைகள் சிறு மூளையிலே தாக்கப்படுகின்றது.

விஷத்தால் தாக்கப்பட்டால் நாம் எப்படிச் செயலிழந்து விடுகின்றோமோ வேதனை என்ற விஷத்தின் தன்மை மூளையில் உள்ள நுண்ணிய பாகங்களில் பட்ட பின் நம் நரம்பியல்கள் உணர்ச்சியற்ற நிலை ஆகி உடலைச் சீராக இயக்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

உடல்களிலே உணர்ச்சி அற்ற நிலையும் நாம் உணர்வு இழந்ந நிலையில் அதாவது நரம்புகளில் உள்ள அனைத்தும் சுருங்கப்பட்டு முடக்கு வாதங்கள் போன்று வந்துவிடுகின்றது. பிரசர் (PRESSURE) வந்தவர்களை எல்லாம் பார்த்தால் கை கால் அங்கங்களை எல்லாம் சரியாக இயக்கவிடாதபடி அப்படியே குறுக்கிவிடும்.

ஏனென்றால் சிறு மூலையில் தாக்கபட்டால் அதனின் செயலற்ற நிலைகள் வரும்போது கை கால் அங்கங்கள் அனைத்தும் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. அடுத்து
1.அதே உணர்வுகள் பித்த சுரபிக்குள் வந்த பின்
2.பித்தம் அதிகமாகி விட்டால் தலை சுற்றி எப்படிக் கீழே விழுகின்றோமோ இதைப் போல
3.ஒவ்வொரு உணர்வும் செயல் அற்றதாகி நம் உடலே வீழ்ச்சி அடைந்தது போல் ஆகின்றது.

அதே சமயத்தில் சுவாச உறுப்புகளுக்குள் இத்தகைய கோபமும் வேதனையும் சென்று விட்டால் அந்த உறுப்பைப் பலவீனம் ஆக்கி விடுகிறது. அதனால் சரியாகச் சுவாசம் எடுக்க முடியாத நிலைகளும் ஆகின்றது.

வேதனையான உணர்வுகளை நாம் சுவாசிக்கச் சுவாசிக்க நம்முடைய சுவாச நாளங்களில் உள்ள அனைத்தும் பலவீனமாகி அதனில் ஏற்படும் உராய்வின் தன்மை சரியாக இயங்காதபடி ஆஸ்மா மூச்சுத் திணறல் போன்ற நோய்களும் உருவாகி விடுகின்றது.

இவ்வாறு ஆன நிலையில் நாம் எண்ணும் எண்ணங்கள் அதாவது கூர்ந்து சிந்திக்கும் நிலையில் கண்களிலே கொதிப்படைந்த உணர்வும் வேதனையான உணர்வும் கலக்கப்படும் போது
1.ஒரு பொருளை நாம் காண்பது என்பது
2.அந்தப் பொருளின் தெளிவான நிலைகளை அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைத்து விடுகின்றது.

இருந்தாலும் அந்தப் பொருளை நாம் சிறிது நேரம் காண்போம் என்று முயற்சித்தாலும் முடியாத நிலையில் சோர்வடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால் கண்ணில் உள்ள கரு விழியால் அந்த உணர்வுகளை நாம் கவர்ந்திருந்தாலும்
1.அதிலே எடுத்த அமில சக்தி உடல் முழுவதும் ஊடுருவச் செய்து
2.அறியச் செய்யும் நரம்புகளையும் இரதத நாளங்களையும் மங்கச் செய்து விடுகின்றது… செயலற்றதாக்கி விடுகின்றது.

ஆக கரு விழிகளிலே படும் பட உணர்வுகளை அது தெளியாக எடுத்துக் காட்டாதபடி மங்கும் நிலை அடைந்து விடுகிறது. நம் பார்வையில் படும் பொருளின் ரூபத்தைக் கவர்ந்து கரு விழிகளில் உள்ளே உள்ள விழித் திரையைப் பலவீனம் அடையச் செய்கின்றது.

நாம் பிறரைப் பார்த்தாலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாத நிலையும் உருவாகி விடுகின்றது. இது சிறுகச் சிறுக விளைந்து இதனின் பலனாக
1.நமக்குள் கோபமும் வேதனையும் வந்து
2.குடும்பத்தில் அவசர உணர்வுகள் உந்தப்படும் நிலைகளும்
3.குடும்பத்தை உற்று நோக்கினாலே நம்மை அறியாது கோபமும் வேதனையும் படச்செய்யும்.

இதைப் போன்ற உணர்வுகள் நம் ஆன்மாவாக வரும்போது
1.நமக்குள் இனம் புரியாத மனக் கலக்கங்களும்
2.கோபமும் வெறி கொண்ட உணர்வுகளும் செயல்படுத்திக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் அவ்வப்பொழுது சந்திக்கும் நிலைகள் கொண்டு நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் மாறுபட்ட நிலைகள் ஆகி அதனால் உடலிலே பல பிணிகளை ஏற்படுத்தும் நிலையே உருவாகி விடுகின்றது.

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு எதிர்நிலை ஆகும் போது கிட்னிக்கோ கண்ணுக்கோ கல்லீரலோ நுரையீரலோ இதைப் போன்ற நிலைகள் மாசுபடும் நிலைகள் வரும்போது அந்தந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகின்றது.

நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் தவறே செய்யவில்லை என்றாலும் இப்படி ஆகிவிடுகின்றது. இதை எல்லாம் மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்..?

எந்தத் தீமையைக் கண்டாலும் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உடனே கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று உயிருடன் ஒன்றி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
3.ஒரு ஐந்து நிமிடம் அருள் உணர்வுகளை உயிர் வழி சுவாசித்தால் நம் ஆன்மாவில் புகுந்த தீமைகள் அகற்றப்படுகின்றது.

அதற்குப் பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி சண்டையிட்டவர்கள் பெற வேண்டும் அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணினால்
1.அவர்களைப் பற்றிய நினைவலைகள் நமக்கு அடுத்து வராது.
2.அவர்களை நினைத்தாலும் நாம் தியானித்தது தான் நினைவுக்கு வரும்.
3.நோயாக நமக்குள் மாற்றாது… மாறாது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் வருடா வருடம் நினைவு நாள் வைத்து வணங்குகிறோம். ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் அதைச் செய்கின்றோமா…?

நினைவு நாள் அன்றைக்கு அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தோ மற்ற அவர்களுக்கு விருப்பமானவற்றைப் படைத்து வைத்தோ அவர்களைக் கூப்பிடுகின்றோம்.

அப்படிக் கூப்பிட்டுக் கவர்ந்தோம் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்கள் நம் உடலில் தான் வந்து சேரும்.
2.அவர்கள் கடைசிக் காலத்தில் அவர்கள் உடலில் அனுபவித்த நோய்களும் நமக்குள் வந்து சேரும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அவர் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று ஏகோபித்த நிலையில் விண்ணிலே உந்தித் தள்ள வேண்டும்.

இப்படி எல்லோரும் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் உந்தித் தள்ளினால் அவர் உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கு கரைக்கப்படுகின்றது. அவர் அங்கே ஒளி உடல் பெறுகின்றார். இது தான் ஞானிகள் காட்டிய வழி.

1.அவர் ஆன்மா ஒளி உடல் பெற்று சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து வந்தாலும்
2.வருடா வருடம் நாம் நினைவு நாள் கொண்டாடினாலும் இதே முறைப்படித்தான் செய்ய வேண்டும்.

ஏன்…?

அவருடன் நாம் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ வகையான வேதனைகள் வெறுப்புகள் இருக்கும். அதே சமயத்தில் கடைசி நிமிடத்தில் அவர் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நேரத்திலும் கடும் விஷத் தன்மையாகி மடிந்தபின்தான் அந்த ஆன்மா வெளியேருகின்றது.
1.இதை எல்லாம் நமக்குள் அவர் உணர்வாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம் அல்லவா…!
2.அவருடைய நினைவு நாள் என்று அவரை எண்ணி ஏங்கும் பொழுது
3.அவரின் உணர்வுகள் நம் உடலுக்குள் இருப்பதற்கு மீண்டும் ஜீவன் கிடைத்து
4.அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கும்.

பின் அவர் எப்படிச் சிரமப்பட்டு நோய்வாய்ப்பட்டு உடலை விட்டு வேதனையுடன் பிரிந்தாரோ அதே நிலை தான் நமக்கும் ஏற்படும்

மாறாக நாம் நினைவு நாள் அன்று கூட்டுத் தியானங்களை அமைத்து
1.அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த அந்த உணர்வை ஏங்கிப் பெறும் போது
2.அது நம் இரத்த நாளங்களில் கலந்து
3.நம் உடலில் அவர் உடலில் சேர்த்த தீய வினைகள் நமக்குள் வளராது தடுக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள அவர்கள் உணர்வுடன் பழகிய அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் இருந்தால்
1அந்தப் பேரருள் என்ற அந்த ஒளியான உணர்வினை
2.நம் உடலுக்குள் இருக்கும் அவரின் உணர்வு அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றோம்.

திரும்பச் சொல்கிறோம் என்று எண்ண வேண்டாம்…!

முதலிலே… அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் அவர்கள் ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இந்த நஞ்சின் உணர்வைக் கரைத்து விட்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக உருவாக்கி விடுகின்றோம். நாம் தியானித்த உணர்வின் வழிப்படி சப்தரிஷி மண்டலத்துடன் சப்தரிஷி மண்டலங்களாக ஆகிவிடுகின்றனர்.

பின் அவர்களும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வருவதை உணவாக உட்கொண்டு அந்த உணர்வினை அவர்களுக்குள் வளர்த்து அழியாத ஒளி உடலாக அவர்கள் வாழ்ந்து வரத் தொடங்குகின்றர்கள்.

அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வினை நாம் குரு காட்டிய வழியில் நாம் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கும் போது அவர் ஒளியின் உடல் பெற்ற அந்த உணர்வுகளை நுகர்கின்றோம்.

அவருடன் வாழ்ந்த காலங்களில் வெறுப்போ வேதனையோ சலிப்போ நோயோ இதைப் போன்ற உணர்வுகள் அவருடைய உணர்வு நமக்குள் இருப்பதனால் அந்தப் பேரருள் என்ற ஒளிச் சரீரம் பெற்ற அவருடைய உணர்வை நம் உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது தீமைகளை நீக்கிடும் உணர்வின் உணர்வாக நாம் பெறுகின்றோம்.
1.அது தான் நினைவு நாள் என்பது.
2.நினைவு நாள் அவருக்காக அல்ல.
3.நமக்குள் இருக்கும் அவர் உணர்வின் அணுக்கள் ஒளியாக மாற வேண்டும்
4.சப்தரிஷி மண்டலங்களில் அவர் ஒளியாக வாழ்வது போல் நாமும் பேரொளியாக வேண்டும்
5.இந்த உடலுக்குப் பின் நாமும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய வேண்டும் என்பதற்குத்தான்.

ஆகவே உடல் பெறும் உணர்வுகளை அது உணவாகக் கொடுக்கும் போது நோய்களாக வருகின்றது. ஒளியாக மாற்றிய உணர்வுகளை உணவாகக் கொடுக்கும் பொழுது பேரொளியாகின்றது. அழியாத நிலைகள் அவர்களும் பெறுகின்றார்கள். நாமும் பெறுகின்றோம்.

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

 

தியானத்தின் சக்தி கொண்டு இந்த உடலை நலமாக்கி நலமாக்கி நாம் வாழ்ந்து வந்தாலும் “எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

உடல் நலத்திற்காக நாம் எண்ணினாலும்
1.என்றும் நீடித்த ஆயுளாக இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.உடல் வேதனைகளை நீக்கிவிட்டு சிறிது காலமாவது மகிழ்ந்து வாழ முடியும்.
3.அந்தக் குறுகிய காலத்திலே உயர்ந்த சக்தியினைப் பெற்று வெளிவரும் பொழுது
4.எதைப் பற்றுடன் பற்றி நாம் அந்தச் சக்தியை எடுத்து வளர்த்தோமோ அங்கே செல்ல முடியும்.

அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால்… தன் வாழ்க்கைக்கு இந்த உடலுக்கு யார் உதவி செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தினால் அந்த உடலுக்குள் தான் ஆன்மா செல்லும்.

சொத்தைச் சம்பாதித்து வைத்தேன்… என் பிள்ளை எப்படிச் சமாளிக்க போகின்றானோ…? என்று தன் பையன் மீது குறை கூறி எண்ணத்தைச் செலுத்தினால் அங்கே தான் செல்லும்.

இப்படிப் பல நிலைகள் கொண்டு மனிதனின் ஈர்ப்புக்குள் சிக்கி விடுகிறது. அங்கே சென்றாலும் நோயைத்தான் உருவாக்குவோம்… அடுத்து மனிதனல்லாத உருவை உயிர் உருவாக்கும்.

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.

விஷத்தின் தன்மை எதிலே ஊடுருகின்றதோ அதன் நிலையாகத் தான் அது மாற்றும். ஆனால்
1.விஷத்தை வென்றவன் அருள் ஞானி.
2.அந்த உணர்வினை எடுத்து உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் பாய்ச்சப்படும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.

பாம்பினங்கள் தனக்குள் இருக்கும் விஷத்தினை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதில் உள்ள விஷத்தினையும் தனக்குள் எடுத்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ… இதைப் போலத் தான் எத்தகைய நஞ்சையும் அடக்க வல்லமை பெற்றவன்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவன் சப்தரிஷி.

“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று நம் எண்ணத்தைக் கூட்ட வேண்டும்.

எத்தகைய துயரைக் கேட்டறிந்தாலும் சலிப்படைந்தாலும் சங்கடப்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் அங்கிருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று நாம் சொல்லி விட வேண்டும்.

நாம் சொல்வதை யார் எண்ணி எடுக்கின்றார்களோ அவர்களுடைய கஷ்டங்களும் நிச்சயம் நீங்குகின்றது. அப்போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க முடியும்.
1.உங்களுடைய வாக்கு அங்கே செயலாகும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ முடியும்… உணர்வுகள் ஒளியாக மாறுகிறது.

ஆனால் நாம் சொல்லியும் கேட்கவில்லையே என்று அவர்கள் உணர்வை நுகர்ந்து மனதை இருளச் செய்து விடக்கூடாது.
1.எப்படியும் அந்த அருள் உணர்வைப் பெறுவார்கள்…
2.வாழ்க்கையில் தெளிந்து செயல்படுவார்கள் என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆறாவது அறிவின் தன்மையில் மனிதன் என்ற நிலைகளில்
1.நமக்குள் தீமையின் நிலைகள் பொங்கிடாது
2.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பொங்கச் செய்து மகாமகமாக…
3.எல்லா இடத்திலும் பிணிகளை நீக்கும் அருள் ஞானியின் உணர்வைப் பொங்கச் செய்வதே “மகாமகம்…!” என்பது.

மாசி மாதம் தான் மகாமகத்தின் ஆற்றல் மிக்க சக்தியினைச் சாதாரண மக்களும் பெறும் வண்ணம் அருள் ஞானிகள் இதைக் கூட்டினார்.

மாசியில் தான் “உத்தராயணம்…” என்ற நிலைகளும் வருகின்றது. அதாவது
1.இந்த மனித வாழ்க்கையில் உடல் பெறும் நிலையை மாற்றிவிட்டு – திசையை மாற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று
3.அடிக்கடி நாம் தியானிப்பது தான் உண்மையான தியானம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று உங்களால் எத்தனை தடவை எண்ண முடியுமோ எண்ணுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துக் கொண்ட பின்
1.எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்,
2.எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும்,
3.எங்கள் பார்வை எல்லோரையும் நல்லவராக்க வேண்டும்,
3.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும்,
4.எங்கள் தொழில்கள் அனைத்தும் சீராக வேண்டும்,
5.எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்,
6.எங்களுக்குள் ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும்,
7.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் அமைதி பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள்.

இப்படி ஒவ்வொரு நாளும் செய்தால் மகிழ்ச்சி பெறும் நிலையாக “உத்தராணயம்…!” உங்கள் திசை மாறி அந்த மெய் ஞானி உணர்வுடன் செல்லத் தொடங்கும்.

நாம் இது வரையில் அறியாத நிலைகள் கொண்டு வளர்ந்து வந்திருந்தாலும்
1.இனிமேல் நமக்குள் தீமைகள் வளராது
2.மீண்டும் உடலுடன் உடல் பற்று கொண்டு புவியின் ஈர்ப்புக்குள் வராது
3.புவியைக் கடந்து சென்று உத்தராயணம் – ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக
4.நாம் அந்த மகரிஷியுடன் ஒன்றி வாழும் நிலையாக
5.என்றும் பதினாறு என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

முழுமையின் நிலையாக உத்தராணயம் என்ற நிலையை நாம் பெறுவோம் என்று இதை எல்லோரும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வயலைப் பன்படுத்தி நல்ல வித்தினை விதைத்து நீர் ஊற்றி அதற்கு வேண்டிய உரத்தை இட்டு வந்தால் அதனுடைய ராசிகளை நாம் பார்க்க முடிகின்றது.

மனிதனின் வாழ்கையில் நாம் கேட்டறிந்த சலிப்பு சஞ்சலம் சங்கடம் பொறாமை கோபம் வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் தீய வினைகளாக நம்மை அறியாமலே வந்து சேர்ந்து விடுகிறது.

அந்தத் தீயவினைகளை (களைகளை) அகற்றிட ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பல முறை செலுத்துங்கள்.

அதிகாலையில் கண விழித்ததும் (சூரிய உதயம் ஆவதற்கு முன்) உங்களால் முடிந்த மட்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி வாருங்கள்.

இது உங்களுக்குள் கூடக் கூட உங்கள் வாழ்கையில் வந்த தீமைகளை அது அகற்றி விட்டுத் திசை மாறி ஞானியின் உணர்வு கொண்டு உத்தராயணம் என்ற நிலையில் செல்லும்.

இவ்வாறு நீங்கள் ஜெபித்து வந்தீர்கள் என்றால்
1.உங்களை அறியாது சேர்ந்த நோய்கள் போகும்,
2.உங்கள் அறியாது வந்த தீயவினைகள் மறையும்
3.உங்களை அறியாது உட்புகுந்த சாப வினைகள் நீங்கும்
4.உங்கள் அறியாது வந்த பூர்வ புண்ணியத்தால் அமைந்த தீமைகளும் அகலும்.

மெய் ஞானியின் உணர்வின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக என்றுமே நாம் முழுமையின் நிலை அடைய முடியும்.

February – 2026 உபதேசம்

சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகும் “கூட்டமைப்பு…”

 

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி நாம் எடுத்து வளர்க்கின்றோம். அதே சமயத்தில் குல வழிகளில் தான் (முன்னோர்கள்) நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

கூட்டுத் தியானங்களின் மூலமாக எல்லோருடைய எண்ணங்களும் பதிந்து இருப்பதால் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்கின்றோம்.

1.இந்த வலுவைச் சேர்த்துக் கொண்ட பின் முன்னோர்கள் ஆன்மாக்களின் முகப்பில் இந்தச் சக்தியை இணைக்கின்றோம்.
2.காரணம் அவருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றது… அவரின் எண்ணங்கள் கலந்தே உறவாடுகின்றோம்.
3.அதன் துணை கொண்டு அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம்.

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டர் அலைவரிசையை வைத்து ஒவ்வொரு கோளின் செயலாக்கங்களையும் இன்று கண்டுணர்கின்றார்கள்… அதைக் கவர்கின்றார்கள்.

வெறும் ராக்கெட்டை முதலிலே விண்ணுக்கு அனுப்பி ஒவ்வொரு கோளுடைய சுழற்சிகளையும் அதனுடைய திசைகளையும் எடுத்துக் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றார்கள்.

அப்படிப் பதிவு செய்து கொண்ட பின் அதை வைத்துக் கொண்டு அடுத்து அந்தக் கோளுக்கு ராக்கெட்டை அனுப்புகின்றார்கள். கோளின் உணர்வை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.
1.ராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின்… கம்ப்யூட்டர் பதிவு செய்த உணர்வின் மோதலில் திசை திருப்பி அந்தக் கோளுக்கே அழைத்துச் செல்கிறது.

அங்கே சென்றாலும் உள்ளே விழுந்து விடாதபடி அந்தக் கோளின் வட்டப்பாதையை நிர்ணயிக்கின்றார்கள். அந்த ஈர்ப்பின் தன்மை கொண்டு வட்டப் பாதையில் சுழலும்படிச் செய்கின்றார்கள்… தரையில் இருந்து கொண்டே…!

அதே போல்…
1.மெய் ஞானிகள் உணர்வை எடுத்து நமக்குள் அதைப் பெருக்கி
2.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களில் அதை இணைத்து
3.அங்கே செல்ல வேண்டும் என்று உந்தித் தள்ளும் பொழுது அந்த இடம் போய்ச் சேருகின்றது.

உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றது… சுட்டுப் பொசுக்குகின்றது. ஏனென்றால் அவர்கள் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி அமைத்தவர்கள்.

உயிருடன் ஒன்றியிருக்கும் உடல் பெறும் உணர்வுகள் கறுக்கப்படுகிறது. நமக்குள் அறிவு என்ற ஒளி இருக்கின்றது. அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் சுழலத் தொடங்குகின்றனர்.

கணவனோ மனைவியோ முதலிலே யார் பிரிந்தாலும் அங்கே அனுப்புகின்றோம். உதாரணமாக மனைவி அங்கே செல்கிறது. உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மா அங்கே அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று கணவன் அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.

அங்கே மனைவி இணைந்து கொண்ட நிலையில்
1.இவர் அடிக்கடி இதை எண்ண எண்ண உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் சென்றடைவார்கள்.
2.இந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக அங்கே இழுத்துச் செல்லும்.

அதைப் பெருக்குவதற்காகத் தான் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அந்தப் பதிவு இல்லை என்றால் யாரையும் அங்கே அனுப்ப முடியாது… விண் செல்ல முடியாது.

மனைவி முன் சென்ற நிலையில் கணவன் அதை எண்ண எண்ண எப்பொழுது பிரிந்தாலும் அங்கே சென்று இணைந்து விடுகின்றார்கள்.

முதலில் அவர்களை அனுப்பி விடுகின்றோம்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கின்றது. அங்கே இணைந்த பின் அவர் உணர்வு இங்கே இருக்கின்றது…
1.அந்த ஒளியின் உணர்வை இங்கே பெருக்குகின்றோம்.
2.அடுத்து வேறு ஒன்றும் தேவையில்லை…. உடலை விட்டுப் பிரிந்தால் அங்கே தான் கணவன் ஆன்மா சென்றடையும்.

நண்பன் மீது பாசமாக இருக்கின்றோம். நன்மை செய்தேன்… இப்பொழுது விட்டு விட்டுச் செல்கின்றேனே…! என்று எண்ணினால் உடலுடன் இருக்கும் நண்பர் உடலுக்குள் தான் ஈந்த ஆன்மா புகும்.

முந்தி நாம் யாரையும் விண் செலுத்தப் பழகவில்லை. இப்பொழுது அந்த ஞானிகள் காட்டிய வழியிலே உடலை விட்டுப் பிரிந்தவர்களை அங்கே இணைக்கச் சொல்கிறோம்.

சப்தரிஷிகள் என்பவர்கள் பிறவா நிலை அடைந்தவர்கள். ஆக அந்தக் காலத்தில் விண் சென்றவர்கள் தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது.
1.சப்தரிஷி மண்டலத்தில் கண்ணுக்குப் புலப்படாது கோடிக்கணக்கானோர் அங்கே மின்னிக் கொண்டுள்ளார்கள்.
2.அவர்கள் எத்தனையோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கே சென்று அடைந்தவர்கள்… என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்கின்றார்கள்.

இந்தச் சூரிய குடும்பம் அழிந்தாலும் பிற மண்டலங்களிலிருந்து அவர்கள் சக்தி பெற்றதால்… எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்ற நிலையில்… என்றும் பதினாறு என்று அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் செல்லக்கூடியவர்கள்.

இந்த எல்லையில் இருந்து அந்த ஆற்றலை வளர்த்தவர்கள். இப்பொழுது எப்படி இங்கே இந்தச் சூரிய குடும்பத்தில் அவர்கள் வட திசையில் சுழன்று கொண்டு வருகின்றார்களோ அந்த வட்டத்தில் இருந்தே அதையெல்லாம் வளர்த்துக் கொள்கின்றார்கள்.

ஆக மனிதனாக பிறந்து தனித்தன்மை வாய்ந்ததாக அந்த நிலை அடைகின்றார்கள்.

அகண்ட பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது தான். பல கோடி ஆண்டுகளாகச் சுழல்வது தான். முதலில் அணுவாகிக் கோளாகி நட்சத்திரமாகி சூரியன் ஆகின்றது. பின் நட்சத்திரமாகி கோளாக வளர்ந்த நிலைகள் பல.

1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும்…
2.அந்தச் சப்தரிஷிகள் வேறு சூரியக் குடும்பங்களுக்குச் சென்று அழியாத நிலைகள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

ஒரு சூரியக் குடும்பமே எத்தனையோ கோடி மையில் பரப்பளவு கொண்டது. இது போல 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. ஒன்றுடன் ஒன்று இணைந்தே துணை கொண்டே அவை வாழ்கின்றது.

இந்த 2000 சூரியக் குடும்பங்களும் வேறு 2000 சூரியக் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு வாழ்கின்றது. இப்படி ஒவ்வொன்றிலும் மனிதனாக உருவானவன் ஒளியாக மாற்றிய பின் தனித்தன்மையாகப் பிரிகின்றது. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் போகின்றது.

ஆனால் இந்த எல்லையில் இருக்கின்றார்கள். என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அனைவரும் அடைய வேண்டும். அப்படி அடையவில்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.

1.நம் முன்னோர்கள் பலரை இப்பொழுது அங்கே அனுப்பியிருக்கின்றோம்.
2.அந்த நிலையில் நாம் உடலை விட்டு பிரிந்து சென்றால் யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை… நாமும் அங்கே சென்றடைய முடியும்.

அடிக்கடி காலை துருவ தியானத்தில் அந்தச் சக்தியை ஏற்றிக் கொண்டு மூதாதையரின் ஆன்மாக்கள் அங்கே அழியா ஒளிச்சரீரரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

அந்த உணர்வுகள் நமக்குள் பெருகப் பெருக அங்கே தான் நம்மையும் அழைத்துச் செல்லுமே தவிர இங்கே இருக்க விடாது.

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்…! ஆக முதலில் அந்தத் தொடர்பு வேண்டும். அதற்குத்தான் கூட்டுத் தியானங்களில் ஒன்று சேர்ந்து அந்த ஆன்மாக்களை அங்கே விண்ணுக்குச் செலுத்தச் சொல்கின்றோம்.
1.இங்கே எப்படி ஐக்கியமாகச் செயல்படுகின்றோமோ
2.அதே போல் அங்கே சப்தரிஷி மண்டலத்திலும் ஐக்கியமாகின்றது.

நகையைத் திருட வந்தவனுக்கு ஏற்பட்ட கதி

 

பெண்கள் நகையைப் போட்டுக் கொண்டு செல்கின்றார்கள். திருடன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அபகரிக்கும் நோக்கத்தில் அங்கே வரும் சந்தர்ப்பமாக உருவாகிறது.

இது நடந்த நிகழ்ச்சி…! என் காலோ ஆணிக்கால். ஆனால் திருச்சியில் கால்நடையாக நான் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தேன்.

ரோட்டிலே ஒருவன் ஒரு பெண்ணை “அடி…அடி…” என்று அடித்துக் கொண்டிருக்கின்றான்… போக்கிரி அவன்…!

என்ன…? ஏன் இந்தப் பெண்ணை அடிக்கிறாய்…? என்று கேட்டேன்.

அந்தப் பெண் சப்தம் போடுகிறது.
1.நான் பித்தளை நகையைப் போட்டிருக்கின்றேன்.
2.ஏன் தங்க நகையை போட்டுக் கொண்டு வரவில்லை…? என்று இவன் அடிக்கின்றான் என்று சொல்கிறது.

தங்க நகையைப் போடாது நீ எப்படி ரோட்டில் வரலாம் என்று சொல்லி அவன் உதைக்கின்றான்.

நான் என்ன நினைத்தேன்…? என்றால் வீட்டிலே நகைகளப் போட்டு இருக்கின்றார்கள். செலவுக்காக அடகு வைத்து விட்டது… அதனால் உதைக்கின்றான் என்று.

அப்போது திருடன் சொல்கின்றான் நாங்கள் திருட வந்தால் பித்தளை நகையைப் போட்டு ஏமாற்றுகிறாயா…? என்று சொல்லி உதைக்கின்றான்.

நான் போய் அவன் கையைப் பிடித்தேன். ஆளைப் பார்…! உன்னைக் கத்தியால் குத்தி விடுவேன்…! என்றான். ஆமாம் குத்தி விடுவாய் என்றேன் நான்.

பின்… இழுத்து சொத்… என்று கீழே விழுந்தான். கத்தியை எடுக்க முயற்சி செய்தான். கையும் வரவில்லை… காலும் வரவில்லை… கீழே விழுந்து கிடக்கின்றான்.

அங்கிருப்பவர்கள் எல்லாம் அவன் பெரிய ரவுடி. ரோட்டில் போய்க் கொண்டிருக்கும் நீ அவனை என்ன செய்ய முடியும்…? அவன் உன்னைத் தீர்த்து விடுவான் என்று சொல்கின்றார்கள்.

1.அவன் தீர்க்கட்டும்…! அவன் எண்ணம் தீர்ந்து போகும் என்று சொன்னேன்.
2.தவறான எண்ணம் கொண்டால் அவனுக்கு இது தான் கதி.
3.அவன் என்றைக்குத் திருந்துகின்றானோ அன்று அவன் கை வரும் என்று சொன்னேன்.

அந்தப் பெண் சொல்கிறது. ஐயா நீங்கள் இன்று இவனை அடித்து விட்டீர்கள்…! நாளைக்கு என் வீட்டிற்கே வந்து அவன் உதைப்பான் போல் தெரிகிறது. எழுந்து வந்து அடிப்பான்.

ஐயா அந்தக் கூட்டமே பெரிய கூட்டம் பல தடவை இப்படி வந்து திருடுகின்றார்கள். ஒன்றும் கொடுக்கவில்லை என்றால் உதைக்கின்றார்கள் என்று அந்தப் பெண் சொன்னது.

அவன் உன்னை அடிக்க மாட்டான்… கையும் வராது காலும் வராது கெட்டது இத்துடன் போய் விட்டது. நல்லதை நினைத்தால் தான் எழுந்து வருவான். உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான்… உன்னை உதைக்க மாட்டான் என்று சொன்னேன்.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று “இந்த மாதிரி இருக்கின்றதே… நீங்கள் என்ன செய்கிறீர்கள்…? என்று கேட்டேன். நாங்கள் என்ன செய்வது…? புகார் அளித்தால் தானே நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்கள்.

ஆக மொத்தம்
1.நகையைப் போட்டுக் கொண்டு ரோட்டிலே சென்றால் திருடனுக்கு வழி காட்டியது போல் ஆகிவிடுகிறது
2.உலக நடப்பு இவ்வாறு இருக்கின்றது.

நடந்த நிகழ்ச்சி இது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் (SWIPE CARD) கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதற்குரிய சாவியைப் (PASSWORD) போடச் சொல்கிறார்கள்.

அந்த அட்டையில் என்ன இருக்கின்றதோ அந்தச் சாவியை (PASSWORD) அதிலே போட்டால் தான் அது திறக்கின்றது. இல்லை என்றால் திறக்கவே திறக்காது.

இதைப் போல பலவிதமான உணர்வின் தன்மைகளை அந்தப் பிளாஸ்டிக் அட்டையிலே (SWIPE CARD) கொடுத்து இந்தத் மாதிரி திறக்கும்படிச் செய்கின்றனர்.
1.இன்று அதை வைத்து எத்தனையோ விதமான பரிவர்த்தனைகளை நாம் செய்கின்றோம்.
2.அந்த அட்டையை வைத்து இருந்த இடத்திலிருந்து “உலகம் முழுவதற்கும்…!” நாம் செயல்படுத்துகின்றோம்.

உதாரணமாக நமக்குள் நண்பர்களாகப் பழகிய அல்லது அந்தக் குடும்பத்தில் உள்ளோருடன் பழகியவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அதை என்ன…? ஏது…? என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.

அவர்கள் உணர்வு நமக்குள் பதிவு இருப்பதனால் அதே நினைவு கொண்டு நாம் எண்ணுவோம் என்றால்
1.அப்போது இந்தக் கதவு திறக்கப்படுகின்றது.
2.அவர் உடலில் இருந்த உணர்வுகள் நோய்கள் நினைத்தவர் உடலில் உருவாகின்றது.
3.அப்போது அந்த இருள் சூழ்ந்த நிலையே நமக்குள்ளும் வருகின்றது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா..!

அதற்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் தீமைகளை எல்லாம் நீக்கி நஞ்சினை வென்று பேரொளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றி உபதேச வாயிலாக இப்பொழுது இங்கே பதிவு செய்கின்றோம்.

நமது உடல்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பதிவு செய்து கொண்டால் (SWIPE CARD)
1.நமது எண்ணத்தின் திறவுகோலை (PASSWORD) “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியின் வழியாக அந்தத் துருவ நட்சதிரத்தின் பால் பாய்ச்சப்படும் போது
2.அந்த அருள் பெரும் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு
3.இருளை நீக்கி நல் வழி நடத்தச் செய்யும் நிலை வருகின்றது.

இந்த உணர்வின் தன்மை நமக்குள் ஆழமாகப் பதிவான பின் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலே நம் உடலுக்குள் அதனின்று வரும் பேரருள் பேரொளி உட்புகுந்து
1.நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் வரும் தீமைகளை எல்லாம் நீக்கி
2.நல் உணர்வுகளையும் நல்ல உணர்ச்சிகளையும் தோற்றுவித்து
3.நல்ல குணங்களுக்கு நம் மனம் இடம் கொடுக்கின்றது.
4.நம்மை மகிழ்ந்து வாழச் செய்கிறது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோயுற்றவர்கள் பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அவர்களும் நோயிலிருந்து விடுபடுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு விஷச் செடியின் அருகிலே இருக்கும் ரோஜாப்பூ தன் மணத்தின் வலிமை கொண்டு அந்த விஷச் செடியின் மணத்தைத் தனக்குள் அணுகாது தடுத்து நிறுத்தி விடுகிறது.

இதைப் போலத் தான் அருள் ஞானிகள் தீமையைத் தனக்குள் அணுக விடாது நறுமணத்தின் மகிழ்ச்சியின் நிலைகள் உணர்வாக ஒளிகளாக ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் அடிக்கடி கவர்ந்து உங்கள் உடலுக்குள் சக்தி வாய்ந்த மணங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது அந்த மணத்தின் உணர்வின் செயலாக நல்ல எண்ணங்கள் நம்மை இயக்கி நம் சொல்லின் தன்மை கேட்போருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும். நாம் எடுத்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படச் செய்யும்.

இத்தகைய நிலைகளை நாம் உருவாக்க உருவாக்க தீமைகளைக் கண்ணுற்றுப் பார்த்தாலும் ரிமோட் கண்ட்ரோல் (REMOTE CONTROL) போல
1.அந்தத் தீமைகள் நம்மை அணுகாது
2.அது அறிந்திடும் ஆற்றலாகத் தான் பயன்படும்
3.ஆக தீமைகள் நமக்குள் சேராது தடுக்கும் ஆற்றலைப் பெருகச் செய்யும்… உங்களை நம்புங்கள்…!

அந்த நல்ல சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன். இந்த உபதேச உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து அருள் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.

அதனின் வலுவின் துணை கொண்டு உங்களுக்கு முன் படர்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் உணர்வின் ஆற்றலை நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அதைப் பருக முடியும். ஆற்றல் மிக்க சக்தியாக வளர்த்துத் தீமைகள் அகற்றும் நிலையைப் பெற முடியும்.

ஒரு வித்தினை ஊன்றி விட்டால் அது தனது உணர்வின் வலுக் கொண்டு அந்தச் செடியின் சக்தி வளர்கின்றது. அதைப் போல ஒருவர் உங்களை ஏசிவிட்டால் அவர்களைத் திரும்பத் திரும்ப எண்ணும் போது கொதிப்பும் கோபமும் உங்களுக்குள் எழுகின்றது,

பின் உங்கள் நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாது அந்தக் கொதிப்பின் தன்மை கொண்டு உங்களுக்குள் நோயாகவும் விளைகின்றது. ஆகையினால் அந்த நோயை நீக்க அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

உங்களுக்கு எத்தகைய துன்பங்கள் ஏற்பட்டாலும்… நோய்கள் வந்தாலும்… உங்கள் எண்ணத்தால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்களை அறியாது சேர்ந்த தீமைகள் நீங்க வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
6.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற்று மன பலம் மன வளம் பெற வேண்டும்.
7.எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் வசிஷ்டரும் அருந்ததி போல ஒற்றுமையாக வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
8.எங்கள் தொழில் வளம் பெருக வேண்டும்.
9.எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்.
10.எங்கள் விவசாய நிலங்களில் பயிர்கள் நல்ல நிலைகள் விளைந்திட வேண்டும்.
11.எங்கள் விவசாய நிலங்களில் வேலை செய்வோர் அனைவரும் மன பலத்துடன் இருக்க வேண்டும்.
12.அவர்கள் பயிரிடும் பயிர்கள் வலுவான நிலைகள் கொண்டு வளர வேண்டும்.
13.அதிலே விளைந்ததை உணவாக உட்கொள்பவர்ளும் அதைப் பயன்படுத்தும் அனைவரும் மன பலத்துடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்ற
14.இந்த உணர்வுகளை எல்லாம் எப்பொழுது நீங்கள் எடுக்கின்றீர்களோ
15.ஒவ்வொரு நொடியிலேயும் அந்த அருள் ஆற்றல் மிக்க மகரிஷியின் அருள் சக்தியை உங்களுக்குள் பற்றுடன் பற்றி வாழ்கின்றீர்கள்.

இந்தப் புவியில் ஏற்படும் தீமைகளை எல்லாம் பற்றற்றதாக மாற்றி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட இது உதவுகிறது.

ஆகவே தீமையையே எண்ணாது,,, எந்தத் தீமையும் நமக்குள் வராது
1.மீண்டும் மீண்டும் உயர்ந்த நிலைகளை நாம் எண்ணி
2.இந்த உணர்வலையைப் பரப்பப்படும் போது தான்
3.நமக்குள் உயர்ந்த சக்தியைப் பெற முடியும்.

சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான முகப்பு வேண்டும்

 

குருநாதரை விண் செலுத்துவதற்கு அவருக்கு ஒரு துணை தேவைப்படுகின்றது.
1.நேரடியாக எங்கும் போக முடியாது… உந்து விசை வேண்டும்.
2.முகப்பை எடுத்து எண்ணத்தைத் திசை மாறாது கொண்டு போக வேண்டும்.

திசை மாறிவிட்டது என்றால் வான வெளியில் மிதந்து விடும். அணுவின் தன்மை அடைந்தால் மற்ற கோள்களின் ஈர்ப்பிற்குள் சென்று விடும். சப்தரிஷி மண்டலத்துடன் இணையாது.

சந்திரன் இருக்கிறது என்றால் அங்கே செல்லும். அங்கே வளர்ச்சியற்ற அணுவாக இருக்கும். மீண்டும் அங்கிருந்து கடந்து செல்லும் திறன் இருக்காது. அங்கே அடைபட்டுப் போகும்.

இவ்வாறு எத்தனையோ வகைகளை குருநாதர் சொல்லித்தான் இப்பொழுது அதைச் செயல்படுத்துகின்றோம்.
1.குரு இல்லாதபடி எந்த நிலையும் இருக்க முடியாது.
2.குரு காட்டிய வழியினைப் பதிவு செய்தால் தான் விண்ணுக்குச் செலுத்த முடியும்.

கிணற்றுத் தவளை போன்று சுற்றிக் கொண்டு எடுப்பதென்றால் முடியாது.

20 வருட அனுபவத்தைக் கொடுத்துத் தான் அதைப் பெறச் செய்கின்றார். ஆகையினால் தான் உங்களுக்குள் அடிக்கடி இதைப் பதிவு செய்து நினைவுகளை ஒவ்வொன்றாகக் கொண்டு வருகின்றோம்.

அதற்குக் கணவன் மனைவி நீங்கள் இந்த முறைப்படி தியானம் எடுக்க வேண்டும். ஆன்மா வெளியே சென்று விட்டால் ஒளியின் கருவை உருவாக்க வேண்டும்.

காலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் மனைவிக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று இரு உணர்வையும் ஒன்றாக்க வேண்டும்.
1.அதை உருவாக்கித் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வைப் பெற்றுச் சப்தரிஷி மண்டல ஈர்ப்புக்குச் செல்ல வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்திற்குச் செல்ல முடியாது. அங்கே இருக்க முடியாது
3.அந்த வட்டப்பாதையான சப்தரிஷி மண்டலத்தில் தான் சேர முடியும்.
4.அதற்குண்டான முகப்பை எடுத்து இணைத்துச் செலுத்திய பிற்பாடு தான் அங்கே சேரும்.

இராக்கெட்டைச் செய்கின்றார்கள் கம்ப்யூட்டரில் படங்களை எடுக்கின்றார்கள். அதைச் சேர்த்துக் கொண்டு முகப்பில் வைக்கின்றார்கள்.

விண்ணிலே செலுத்தப்படும் பொழுது அந்த முகப்பைப் பார்த்து அதனின் ஈர்ப்புக்குத் தான் கொண்டு போகும். கொஞ்சம் திசை மாறியது என்றால் வேறு எங்கே போகும்…! என்று சொல்ல முடியாது.

எந்த எந்தக் கோள்களைப் படமாக எடுத்துப் பதிவு செய்தார்களோ அதை இந்த முகப்பில் இணைக்க வேண்டும். அந்த உணர்வின் துனை கொண்டு அங்கே செல்லும்.

இதைப் போன்று தான்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் சப்தரிஷி மண்டல உணர்வை முகப்பாக இணைக்கின்றோம்.
2.அப்படி இணைக்காதபடி அந்த இடம் போய்ச் சேர முடியாது.

விலகிப் போய்விட்டால் வேறு பக்கங்களுக்குச் சென்று விடும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல பல வித்தியாசமான நிலைகள் இருக்கின்றது.

குரு செல்கிறார் என்றால் அது சரியான எல்லையை வைத்து அனுப்புவதற்கு எனக்குப் பயிற்சி கொடுத்தார். அங்கே செலுத்தும்படிச் செய்தார்.

1.அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று வரிசைப்படுத்தி எனக்குச் சொன்னார்.
2.அது எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பிற்பாடு தான் உடலை விட்டுப் பிரிகின்றார்.
3.சப்தரிஷி மண்டல உணர்வை முகப்பில் எப்படி இணைக்க வேண்டும்…?
4.எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்று எல்லாம் தெரிந்த பிற்பாடு தான் அவர் உடலை விட்டுப் பிரிந்து அங்கே சேர்கின்றார்.

குருவை விண் செலுத்திய பிற்பாடு தான் அங்கிருந்து அதிக அளவில் நான் சக்தியைப் பெற முடிந்தது. உங்களுக்கும் இப்பொழுது வழிகாட்ட முடிகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குடும்பத்திலோ உறவினர்களின் குடும்பத்திலோ அல்லது நண்பர்களின் குடும்பத்திலோ யாராவது உடலை விட்டுப் பிரிந்தர்கள் என்றால் அதற்குப் பின் வருடா வருடம் அவர்களை நினைத்து “நினைவு நாள்…!” என்று வைத்துக் கும்பிடுகின்றோம்.

நினைவு நாள் அன்று எதை எல்லாம் நினைக்கின்றோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

யாருடைய நினைவு நாளோ அவரின் நினைவு வரப்படும் போதெல்லாம்
1.நல்ல மனிதர்… இப்படி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாரே..! என்று எண்ணும் போது
2.அவர் உடலிலே இருந்த நோயின் உணர்வுகள் நமக்குள் அது பெருகத் தொடங்கும்.
3.அவருக்கு ஆகாரம் வைத்து நினைவு நாளில் கும்பிட்டால்
4.அவர் உணர்வுடன் பங்கு கொண்ட அந்த ஆன்மா நமக்குள் வந்து விடுகின்றது.

இது போன்ற நிலைகளை நாம் தடைப்படுத்த நினைவு நாளில் எப்படி எண்ண வேண்டும்..?

கூட்டுத் தியானங்கள் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளி உடல் பெறச் செய்து விடுகின்றோம்.

அந்த ஒளியின் உடல் பெற்ற அவரின் உணர்வுகள் நமக்குள் இருக்கும் பொழுது
1.அந்தப் பேரருள் நம் உடலுக்குள்ளும் பரவி
2.நஞ்சினை நீக்கிடும் அருள் சக்தியை நாம் பெற்று
3.நம் உடலில் மகிழ்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.
4.இது தான் நினைவு நாள் என்பது.

ஆகவே ஒளியின் உடல் பெற்ற உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் போது அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நம் உடலிலே படர வேண்டும் என்று எண்ணினாலே போதும்.

நினைவு நாள் அன்று இவ்வாறு எண்ணினால் அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்ததனால் அவரின் உணர்வுகள் நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து இருப்பினும் நம் உடல்களிலும் இருளை நீக்குகிறது. அதாவது
1.அவருடன் வாழ்ந்த காலத்தில் நம் உடலில் இருந்த உணர்வுகளுக்கு
2.அருள் உணர்வைக் கொடுத்து இருளை நீக்கும் நிலை பெறுகின்றது.

ஏனென்றால் அவர் ஒளியின் உடல் பெற்று விட்டார்…!
1.நமக்குள் இருக்கும் அவரைப் பற்றிய அணுவின் தன்மையும்
2.இருளை அகற்றிடும் அருள் ஒளி பெறும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்பது தான் இதன் உட்பொருள்.

இப்படிச் செய்யாமல் இன்று சாதாரண வழக்கத்தில் உள்ளது போல இறந்தவரின் நினைவு நாளில்… “அமாவாசை அன்று அந்த இருள் சூழ்ந்த நாளில்…” அவர் உணவாக உட்கொள்ளும் உணவினைப் படைத்து விட்டு அவரைப் பற்றி எண்ணி…
1.என்னுடன் எப்படி எல்லாம் வாழ்ந்தார்…! என்று
2.அதையெல்லாம் நாம் நினைவு படுத்தும் போது
3.அவர் வாழ்ந்த காலத்தில் அவர் உடலில் பட்ட அந்தக் கஷ்ட நஷ்டம் எல்லாமே
4.நம் உடல்களில் அதிகமாகப் புகுந்து பரம்பரை நோய் என்றோ பரம்பரை குணங்கள் என்றோ
5.அவர் அடைந்த வெறுப்பின் தன்மை அனைத்தும் இங்கே நமக்குள் விளைந்தே தான் தீரும். (யாரும் இதிலிருந்து தப்ப முடியாது)

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குத் தான் நமது தியானத்தின் வலிமையால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை ஒவ்வொரு நாளுமே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் சொல்கிறோம்.

அவ்வாறு செய்யும் போது இந்த உடல் பெற்ற விஷத்தின் தன்மைகள் அனைத்தும் அங்கே கரைந்து விடுகின்றது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை அவர்கள் உணவாக உட்கொள்கின்றனர்.
2.ஒளியின் உடலாக இருக்கின்றனர்.
3.ஆகவே இதற்கு அப்புறம் அவர்களுக்குப் பிறவி இல்லை.

நினைவு நாள் கொண்டாடும் பொழுதெல்லாம் இப்படி எண்ணினோம் என்றால் நமது உணர்வுகளும் வலுப் பெற்று இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மை நம் உயிர் எளிதில் அழைத்துச் செல்லும்.

“நினைவு நாளை…” நாம் இப்படித்தான் நினைவுபடுத்தும்படி ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

நாம் தெரிய வேண்டியதும்… தெரிந்து கொண்ட நிலையில் “நடந்து கொள்ள வேண்டிய முறையும்…”

 

நம் குருநாதர் பித்தரைப் போன்று இருந்து தான் எல்லா உலகத்தையும் அறிந்தார். அதே போல அவர் காட்டிய அருள் வழியில் “ஒன்றும் தெரியாதவனைப் போன்று…” எல்லாவற்றையும் நான் தெரிந்து கொள்கின்றேன்.

ஆனால் உங்கள் உணர்வைத் தெரிந்து அதற்குத் தக்க
1.இங்கே வந்தோருக்கு குரு காட்டிய அருள் வழியினை உபதேசிக்கும் பொழுது
2.நீங்கள் எந்த நிலையில் வந்தாலும் உங்களுக்கு நல்ல சிந்தனையைத் தூண்டி
3.தன் தன் தவறுகளை உணர்ந்து… தீமைகளை நீக்கும் அருள் உணர்வுகளைப் பெறச் செய்கின்றேன்.

குருநாதர் பித்தரைப் போல் இருந்துதான் எனக்கு வழி காட்டினார். ஆக நானும் தெரியாதவனைப் போல் தான் இருக்கின்றேன்… தெரிந்து கொண்டவனாக நான் நடப்பதில்லை.

ஆனால் நான் தெரிந்து கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் பெற வேண்டும். பொருளறியும் சக்தி பெற வேண்டும்… அருள் உணர்வுகள் நீங்கள் பெற வேண்டும்…! என்ற உணர்வைத் தான் எடுத்துக் கொள்கின்றேன்.

ஆனால் நீங்கள் சொல்வதை எல்லாம் நான் உம்… கொடுத்துக் கேட்டால்… வீட்டில் இப்படி இருக்கின்றது தொழில் இப்படி இருக்கின்றது பையன் இப்படி இருக்கின்றான் என்ற குறைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

1.ஆக நான் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எனக்குள் நான் மாற்றிக் கொள்கின்றேன்.
3.அதன் வழி உங்களுக்குள் அந்த அருள் சக்திகளைப் பாய்ச்சுகிறேன்.
4.அதே போல் நீங்கள் ஒவ்வொருவரும் தீமை புகாது தடுக்கும் நிலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உலகில் விஷத்தன்மைகள் உருவாகிக் கொண்டுள்ளது. எங்கே பார்த்தாலும் இனம் மதம் என்ற நிலையில் வெறி கொண்டு தாக்கிடும் நிலையாக தன் இனத்தையே அழித்திடும் நிலையாகச் செயல்படுகின்றார்கள்.

தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று அப்படிப்பட்ட வீரிய உணர்வு தான் வருகின்றதே தவிர இருளை நீக்கி ஒளியான நிலை பெற வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் வருவதில்லை.

அசுர உணர்வுகள் பாயும் போது நல்ல உணர்வுகள் செயல்பட முடியாது போகின்றது. இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும்.

1.இந்தத் தியானத்தைத் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவரும் அருள் உணர்வைப் பெற்று அதையே வளர்த்து
2.மற்றவர்களுக்கும் அருள் ஞானத்தைப் போதியுங்கள்… அதை எடுத்துச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள்.

கேட்டுணர்ந்தோர் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் உங்களுக்குள் இந்த வளர்ச்சி வருகின்றது. அவரும் அதைப் பெருக்கத் தொடங்கினால் அவரும் நல் வழி பெறுகின்றார். அவருக்கும் வாழ்வதற்கு நல்ல வழி கிடைக்கின்றது.

இதைப் போன்று தொடர்ந்து நம் வாழ்க்கையையே தியானமாக்குதல் வேண்டும். தீமைகள் புகாது தடுத்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பக்கம் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே படமாக்கிப் பதிவாக்குகின்றார்கள். அதை அலை வரிசையில் அலைகளாக மாற்றி அனுப்புகிறார்கள்.
1.அதை இருக்கும் இடத்திலிருந்தே பதிவாக்கி
2.அதனின் உணர்வின் நிலையை உலகம் முழுதும் பரப்பச் செய்கின்றான் (RELAY) மற்றொருவன்.

உலகம் முழுதும் பரவச் செய்யும் போது அதே அலை வரிசையில் டி.வி. வழியாகவோ கம்ப்யூட்டர் மூலமாகவோ மற்றவர்கள் இருப்பிடத்திலிருந்து உற்றுப் பார்க்கும் நிலை வருகின்றது. இது புறத்தில் விஞ்ஞானக் கருவிகளால் நடக்கக்கூடிய சம்பவம்.

ஒருவருடன் நண்பன் என்ற நிலையில் நன்றாகப் பழகுகின்றோம். அவனை நமக்குள் பதிவாக்கி விட்டால் நண்பனின் நினைவு கொண்டாலே போதும். அவன் உருவ நிலை நம் முன் நிற்பதை காணலாம்.

1.ஆக மனித உடலுக்குள் ஒன்றைப் பதிவாக்கி விட்டால்
2.அவனின்று வெளிப்படும் உணர்வின் அலைகள் அங்கே பதிவாகின்றது.. அலைகளாக மாறுகின்றது…!
3.பதிவான உணர்வினை நினைவு கொள்ளும் போது “குவித்து” அந்த உணர்வின் தன்மையை அறிகின்றோம்.

அவனுடன் எந்த உணர்வுடன் உறவாடினோமோ அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் போது நமக்குள் உணர்ச்சியின் தன்மையாக உடலை இயக்குகின்றது.

பண்பு கொண்டு… பரிவு கொண்டு… நண்பன் எனக்கு உதவி செய்தான்… உபகாரம் செய்தான்…! என்ற உணர்வை நுகரப்படும் போது நமக்குள் மகிழ்ச்சியின் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது. நண்பனை நினைத்தாலே நமக்குள் மகிழச் செய்யும் நிலையாக வருகின்றது.

ஆனால் பண்புடன் வாழ்ந்து வந்த நிலையில் சந்தர்ப்பத்தில் பகைமையாகி வெறுப்பின் உணர்வாக ஆகி தீமைகள் விளைந்தது என்ற உணர்வுகளை இருவரும் பதிவாக்கிக் கொண்ட பின் என்ன நடக்கிறது…?

தன் வாழ்கையில் சிரமம் என்ற உணர்வுகள் உந்தப்படும் போது எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்ற உணர்வின் வேகத்தைக் கூட்டும் போது
1.அவனில் உருவான இந்த உணர்வுகள்
2.இவனின் உணர்வு அங்கே பதிவானதனால்
3.அந்த உணர்வுகள் இரண்டும் மோதிப் பகைமை உணர்ச்சிகளைத் தூண்டி
4.உணவை உட்கொள்ளும் நேரமாக இருந்தால் சாப்பிடும் உணவை உள் இழுக்கும் செயலை இழந்து விடுகின்றது… புரை ஓடுகின்றது…!
5.ஒரு பருக்கை நுரையீரலுக்குப் போனால் மடிந்து விடுவான்.

ஆனால் ஒரு வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுற்றுப் பார்த்துக் கவர்ந்த உணர்வின் தன்மையை வைத்து வாகனத்தைச் சீராக இயக்கிச் சென்றாலும் நண்பர்களுக்குள் துரோகம் செய்தான் என்ற உணர்ச்சிகள் உந்தி எதிர்மறையான எண்ணங்கள் கொண்டு தாக்கப்படும் போது ஒரு நொடி அவன் சிந்திக்கும் தன்மை இழந்தால் உடனே விபத்தாகின்றது. (ACCIDENT)

மனிதனுக்கு மனிதன் வாழும் போது பகைமை உணர்வு கொண்டால் ஒரு தொழிலில் வேலை செய்யும் போது இத்தகைய நிலையானால் புரையாகி அந்தச் சந்தர்ப்பத்தால் மரணம் அடையும் நிலை கூட வருகின்றது.

ஒரு எலக்டிரிகல் டிபார்ட்மெண்டில் வேலை செய்கிறான் என்றால் இதைப் போல நண்பர்களுக்குள் தன்னுடைய வேகத்தின் உணர்வைக் கூட்டினால் சிந்திக்கும் செயல் இழந்து மின்சாரம் செல்லும் வயரில் கையை வைத்தான் என்றால் இவன் மடிகின்றான்.

இதைப் போன்று ஒரு நொடி தவறினால் மனிதனை அது வீழ்த்தி விடுகின்றது. ஆகவே மனிதனுக்கு மனிதன் தொடர்பு இல்லாது எவரும் இல்லை.
1.பகைமை கொண்டாலும் உணர்வுகள் தொடர்பு உண்டு.
2.மகிழ்ந்தாலும் உணர்வுகள் நமக்குள் தொடர்பு உண்டு.
3.மனிதர்கள் யாரும் பிரிந்து வாழ்ந்ததில்லை.

நாம் பிரிந்து வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம். ஆனால் பிரிவினையான எண்ணங்களை நுகரப்படும் போது நம் உடலுக்குள் அந்தப் பகைமையான உணர்வின் அணுக்களும் பண்புடன் வளர்ந்த அணுக்களும் போர் முறையாக மாறிவிடுகின்றது.

அது ஒன்றை ஒன்று உணர்ச்சிகளால் தாக்கப்படும் போது நம் உடலில் மேல் வலியும் கை கால் குடைச்சலும் வரும். சில பேருக்குப் “பளீர்…!” என்று ஊசி குத்துவது போல இருக்கும்.

ஏனென்றால் அந்தப் பகைமை உணர்ச்சி கொண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது அது நம் உடலுக்குள் வேதனையைக் கொடுக்கும் நிலையாக வருகின்றது.

நாம் எப்பொழுதோ சண்டையிட்டோம். அதனால் பகைமை ஆனது. இப்பொழுது அவனிடமிருந்து விடுபட்டிருக்கிறோம்…! என்று எண்ணுகின்றோம். ஆனால்
1.அவனின்று நுகர்ந்த உணர்வு நம்முள் நின்றே அதன் வீரியத்தை ஊட்டும் போது
2.நல் உணர்வை ஊட்டிய அணுக்கள் இங்கே அஞ்சி நடுங்குகின்றது.
3.அதனால் சிந்திக்கும் தன்மை இழந்து ஒரு செயலின் தன்மை குறைகின்றது… வேதனைப்படுகின்றோம்.

வேதனையை நுகரப்படும் போது மேலும் சிந்திக்கும் தனமை குறைந்து…
1.நினைத்த காரியம் நடக்கவில்லை என்றால் உணர்வுகள் உந்தப்பட்டு
2.கோபத்தின் உணர்ச்சி உச்சகட்டம் ஏறுகின்றது.
3..தன்னையே அழித்திடும் தன்மை வருகின்றது அல்லது
4.தன்னுடைய சார்புடையோரால் அந்தக் காரியம் நடக்கவில்லை என்றால் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்ற உணர்ச்சிகளே தோன்றுகின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வின் இயக்கங்களிலிருந்தெல்லாம் நாம் தப்புதல் வேண்டும். அதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.
1.ஈஸ்வரா…! என்று நம்முடைய உயிரைப் புருவ மத்தியில்
2.உடனுக்குடன் எண்ணும் பழக்கம் வந்து விட்டால் தீமைகளைத் தடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அது உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி விட்டால் தீமைகள் நமக்குள் உருவாகாது… நன்மை செய்யும் சக்தியாக அதை மாற்றிக் கொள்ள முடியும்.

“யாம் மறைத்துச் சொன்ன உண்மைகளை…” நீங்கள் அறிய முற்பட வேண்டும்

 

திருமூலருக்குப் பிற்பாடு சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக யாரும் இணைந்ததில்லை.
1.வெகு காலம் இடைவெளி ஆகிவிட்டது.
2.இப்போது யாம் குருவைச் சந்தித்த பிற்பாடு தான் தொடர்வரிசையாக “ஒவ்வொருவராக நாம் விண்ணுக்குச் செலுத்துகின்றோம்…”

இனம் இனத்தைச் சேர்க்கும். எதை எடுத்தாலும் அந்தக் கூட்டமைப்பிலே சேர்த்து வளர்த்துத் தான் வளர்ச்சியைப் பெற முடியும். ஒன்று தனித்து எந்த மண்டலமும் வளராது.

ஒரு பிரபஞ்சம் இருக்கும் போது பிற மண்டலங்களிலிருந்து வருவதை எடுத்து அனைத்திற்கும் இரையாகக் கொடுக்கின்றது. இதே போன்றுதான் மனிதன் தன் உணர்வின் தன்மை எடுத்து வளர்க்கப்படும் போது அடர்த்தி… மற்றதை இழுத்துத் தனக்குள் உணவாகப் பெருக்கும் நிலை வருகின்றது.

1.தனித்து ஒன்று எங்கும் எதுவும் வேலை செய்யாது.
2.இந்த உண்மையை நாம் தெரிந்து கொண்டால் விலகி நிற்க மாட்டோம்.
3.நீயா… நானா…? என்று போர் செய்து கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

இயற்கையின் உண்மை நிலை இதுதான்.

1.ஏனென்றால் இதில் ஆயிரம் மறைத்திருக்கின்றேன்
2.இந்த உணர்வுகளை ஒவ்வொன்றாக நீங்கள் இணைத்து… உங்களுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தால்
3.குருநாதர் கண்ட அனைத்தையுமே நீங்கள் பார்க்க முடியும்.

சொல்வதை… “வெறுமனே கேட்டுக் கொண்டு மட்டும் இருந்தால்…” பலன் இல்லை.
1.அதைப் பெறக்கூடிய தகுதியைத்தான் உங்களிடம் உருவாக்குகின்றேன்.
2.தொடர்ந்து நீங்கள் செயல்பட்டு வந்தால் அது கிடைக்கும்… அது வளர்ச்சி அடையும்.

செடியில் உரத்தைச் சேர்க்கிறோம் என்றால் ஆவியாகச் சேருகின்றது. செடியில் இணைத்துக் கொண்டபின் அந்த ஆவி அதனுடன் இணைந்து உறையப்படும் பொழுது தன் இனமான சக்தியை எடுத்து நல்ல முறையில் வளர்க்க வழி செய்கின்றது.

செடியில் இந்த உரத்தின் சக்தி இணைந்தால் தான் வீரிய சக்தி வரும். இல்லை என்றால் பெற முடியாது. இது போன்று தான்
1.சில உண்மைகளைத் தெரியப்படுத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்…? என்பதற்காக
2.அந்த உரமான உணர்வுகளை இணைத்து உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

ஒவ்வொரு அணுக்களிலும் அதை இணையச் செய்யப் பழக்க வேண்டும். வெறும் வாயிலேயே சொல்லிக் கொண்டு போவது அல்ல…!
1.விண்ணுலக ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்றால் குரு அருளைப் பெற்றிருக்க வேண்டும்.
2.அதை உங்களிடம் கொடுத்துப் பழக வேண்டும்… அந்தப் பாதை தெரியாதது நாம் போக முடியாது.
3.குரு வகுத்துக் கொடுத்த அந்தப் பாதையைத்தான் உங்களிடம் இணைத்துக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

திருமணக் காலங்களில் அக்கினியை வளர்ப்பார்கள். அதிலே பல பூக்களை இட்டுப் பல பொருள்களை இட்டு யாகங்களைச் செய்வார்கள். யாகத்தைச் செய்பவர் சொல்லும் (மந்திரங்களை) உணர்வுகளை மற்றவர்கள் சொல்லி அக்கினியில் அந்தப் பொருள்களை இடுகின்றனர்.
1.இது எல்லாம் புறத்தின் உணர்வின் இயக்கம் தானே தவிர
2.அகத்தின் இயக்கம் இல்லை.

ஒரு மனிதன் சாந்தமாக இருக்கின்றான் என்று கண்ணுற்றுப் பார்த்தால் அவனுடைய உருவத்தைக் கண்ட பின் “அவர் சாந்தமானவர்…!” என்ற உணர்வுகளை நமக்குள் ஊட்டுகின்றது.

எதன் வழியில்…?

1.நம் உயிர் ஒரு நெருப்பு.
2.அதிலே சாந்த உணர்ச்சிகள் படும் பொழுது அந்தச் சாந்தமான உணர்ச்சிகளை நமக்குள் ஊட்டி
3.சாந்தமான செயலைச் செய்யும்படிச் செய்கிறது.

அதே போல் ஒருவன் கோபப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் கண் கொண்டு உற்றுப் பார்த்து அதைத் தெரிந்து கொள்ள விரும்பும் பொழுது அவர் உணர்வை நாம் நுகர நேர்கின்றது,

உயிரிலே பட்டபின் இந்த உணர்ச்சிகள் காரமான செயலாக… அதாவது கோபமான உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
1.நம் கண்களும் சிவந்து விடுகின்றது,
2.நரம்புகளும் விடைத்து விடுகின்றது.
3.நாம் சொல்லக்கூடிய சொல் கேட்போர் உணர்வுகளிலும் அதே கார உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இதைப் போல நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நம் உயிரில் படும் உணர்வுகள் அனைத்தும்
1.எப்படி ஒரு நெருப்பில் ஒரு பொருளைப் போடும் பொழுது அந்த மணத்தை வெளிப்படுத்துகின்றதோ
2.இதைப் போல் தான் நம் உயிரில் இந்த உணர்வுகள் படப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளை இயக்குகின்றது. (உணர்ச்சிகள் எழும்புகிறது)

ஆனால் புறத்திலே இருக்கும் நெருப்பில் ஒரு பொருளைப் போடும் பொழுது அந்தப் பொருளின் சத்து “கருகுகின்றது…!” போட்ட பொருளின் மணமும் வெளிப்படுகின்றது. ஆனாலும் “கருகிய உணர்வின் தன்மை தான்…!” அங்கே வருகின்றது.

1.ஒரு பொருளைக் கருக்கி…
2.அதனின் உணர்வை நுகர்வது என்பது உணவுக்குச் செயல்படுத்தலாம். (அதாவது உணவாக உட்கொள்ளப் பயன்படுத்தலாம்)
3.ஆனால் நாம் சுவாசிக்கும் உணர்வுக்கு அத்தகைய கருகிய நிலைகளைச் சுவாசிப்பதை
4.ஞானிகளும் மகரிஷிகளும் வெறுத்துள்ளார்கள்.

ஆகவே நாம் உயர்ந்த குணங்களையும் நாம் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்றும் அவர்கள் வாழ்க்கை உயர வேண்டும் என்றும் அதன் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் “நம் உயிரில் இந்த உணர்ச்சிகள் பட்டு…” அதனின் இயக்கமாக நம்மை நலமுடன் வாழச் செய்யும் சக்தியாகவும் உயர்ந்த வாழ்க்கை வாழச் செய்யும் சக்தியாகவும் இயக்கும்.

அதனால் தான் உயிரைச் “சங்கு சக்கரதாரி…” என்று ஞானிகள் காட்டினார்கள்.
1.உயிரிலே பட்ட பின் எழும் அந்தச் சப்தத்திற்கொப்ப உணர்ச்சிகளாகி
2.இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் சக்கரம் போல் சுழன்று
3.நம் எண்ணமாகவும் சொல்லாகவும் செயலாகவும் வருகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பார்த்துக் கேட்டு நுகர்ந்த அந்தச் சுவாசத்திற்கொப்பத்தான் நம்முடைய எண்ணமும் நம்முடைய சொல்லும் நம்முடைய செயலும் அமையும்…!

அருள் ஞானிகள் வெளிப்படுத்திய மெய் உணர்வுகளைச் சுவாசித்தால் நம் செயல் அனைத்தும் ஞானத்தின் வழியாகவே இருக்கும்.

அகஸ்தியனைப் போன்றே இந்தப் பூமியை மீண்டும் நாம் சமப்படுத்த வேண்டும்

 

சிவன் ஏனோ ஆலகால விஷத்தைக் கழுத்தில் நிறுத்திக் கொண்டான் என்று சொல்வார்கள். நம் பூமி தான் சிவம்… இதற்குள் உருவானது தான் அனைத்தும்.

சிவம் இல்லையேல் சக்தி இல்லை.
1.துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றலைப் பூமி நுகர்கின்றது
2.விஷத்தின் தன்மை பூராம் அங்கே அடக்குகின்றது.

வெப்பத்தின் தன்மை கொண்டு ஆவியாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மை மற்றொன்றுடன் சேர்க்கின்றது. சேர்த்து அங்கே திரளுகின்றது… வெண்ணை ஆகின்றது.

இப்படி விளைந்தது பூராம் எப்படி உருவங்களாக உருவானது என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

அதாவது…
1.மேரு என்ற மலையை மத்தாக வைத்து அப்படி என்றால் பூமி சுற்றுகின்றது.
2.வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து என்றால் விஷத்தின் தாக்குதல்… அது தொடர்ந்து தாக்கும் போது தான் பூமியைச் சுழற்றுகின்றது.

துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றல்களை நுகரப்படும் பொழுது அது சிவம்… பார்வதி. அதன் வழி உள்ள வந்து அங்கே இணையும் பொழுது சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் (பனிப்பாறையாக உறையும் இடம்).

அந்த இடத்திலே சக்திகள் சேமிக்கப்படும் பொழுது நீளமாக வளர்ந்து கொண்டே வருகின்றது. இது வளர்ச்சியாகி அப்படியே சென்று விட்டால் தலை குப்புறக் கவிழ்ந்து விடும்.
1.அகஸ்தியனால் ஆரம்பத்தில் இது தடுக்கப்பட்டு மாற்றப்பட்டது
2.ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்திலே பல அகஸ்தியர்கள் தோன்றினால் தான் மீண்டும் உலக மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியும்.

அணுக்கதிரியக்கத்தைப் ஒரு பக்கத்திலே வெடிக்கச் செய்தால் பூமியின் ஈர்ப்பு வழி கூடி மேகங்கள் வரப்படும் போது காந்த ஈர்ப்பின் தன்மை தடுக்கப்பட்டால் பூமியை மாற்றலாம்.

ஆனால் இவர்கள் எடுத்த அணு விஷக் கதிரியக்கம் இங்கே பரவும். இதிலேயும் லாயக்கில்லை அதிலேயும் லாயக்கில்லை. கதிரியக்கங்களால் அடர்த்தியாக முடியும். சூரியனுடைய ஒளிக்கதிர்கள் மாற்றப்படும் பொழுது பூமியைத் திசை மாற்றலாம்.

ஆனால் அணுக்கதிரியக்கங்கள் இங்கே பரவினால் யார் வாழ முடியும்…? திசை திருப்பலாம்… விஷத் தன்மைகள் தான் பரவும்.

1.சூரியனின் தொடர் கொண்டு தன் எண்ணத்தால் அதை குறுக்காட்டப்படும் பொழுது அகஸ்தியன் அன்று திசை திருப்புகின்றான்.
2.அப்படித் திருப்பிய நிலைகள் தான் அங்கே ஒரு அண்டம் வருகின்றது… இது கரைகிறது.

இப்படி அவன் வளர்த்துக் கொண்டான்.

இன்னொரு காலம் இந்தப் பூமிக்குள் அது போல் வரும். அதிலே நாம் தப்பித்தால் நல்லது. தப்புவிக்க யாம் சொல்வது என்ன…?

அகஸ்தியன் அவன் தாய் கருவிலே எவ்வாறு வளர்ச்சி பெற்றானோ அதைப் போல் கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கும் அதே சக்தியை ஊட்ட வேண்டும்.

அந்தக் கருவிலே உருவான சிசுக்களுக்குள்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி விளைய வேண்டும்
2.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.சப்தரிஷி மண்டலங்களின் சக்தி விளைய வேண்டும்
4.உலக ஞானம் பெற வேண்டும் என்று கருவுற்ற தாய் ஊட்டினால்
5.அந்த சக்தி மீண்டும் வந்து அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெறும் தகுதியாக வருகிறது.

அவர்களுக்கு இந்த உபதேசத்தை கொடுத்துக் கருவிலேயே பூர்வ புண்ணியமாகக் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறோம்.

ஆக அகஸ்தியநின் ஆற்றலைப் பெறும்படி செய்து பூமியின் மாற்றங்களை நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்கு எதிரியாக இருப்பவர்களை எண்ணி “எனக்குத் துரோகம் செய்தான் பாவி…!” என்ற எண்ணத்துடன் ரோட்டிலே நாம் நடந்து சென்றால் நிலை தடுமாறி மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து விபத்தாகும்.

ஒரு பஸ் வந்தால் கூட நமக்குத் தெரியாதபடி அங்கு புரை ஒடுவது போல் சிந்தனை இழந்து இனம் தெரியாதபடி விபத்தாகும். இவைகள் எல்லாம் இயற்கையில் நடக்கும் சில சாதாரண நிலைகள்.

இதைத் தடுப்பதற்கு எந்தச் சக்தியை வைத்திருக்கின்றோம்…?

கணவன் மனைவியாக வாழ்பவர்கள்.. கணவன் தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும்… மனைவியின் அருள் எனக்கு உறுதுணையாக இருந்து என்றுமே அந்த நல்லாசி கொடுக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு வெளியிலே செல்ல வேண்டும். (தொழிலுக்கோ ஒரு வேலைக்கோ அல்லது எதுவாக இருந்தாலும்)

அதே சமயத்தில் மனைவியும் வெளியிலே செல்லும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் கணவர் பெற வேண்டும், அவர் அருள் என்றுமே எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.வெளியிலே செல்லும் பொழுதெல்லாம்
2.இப்படி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் எண்ணிய பின் தான் செல்ல வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர் உடல் முழுவதும் படர வேண்டும். அவர் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.அவர் எந்தக் காரியம் செய்தாலும் அது நல்லவையாக அமைய வேண்டும்.
2.அந்த அருள் மணம் என் கணவர் பெற வேண்டும். அவர் தொழிலில் நல்ல செழிப்பு ஏற்பட வேண்டும்.
3.அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று மனைவி எப்போதுமே வாழ்த்துதல் வேண்டும்.
4.அந்த எண்ணத்துடன் “வழி அனுப்புதல் வேண்டும்…!”

இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்,

ஒருவர் நமக்குத் தீங்கு செய்கிறார். அவர் அமெரிக்காவிலே இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்,

1.எனக்கு இப்படித் தீங்கு செய்தான்… அவன் உருப்படுவானா…? என்று எண்ணும் போது
2.அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது எண்ணினால் புரை ஓடுகின்றது.
3.வாகனம் ஓட்டும் போது இதைப் போல எண்ணினால் விபத்தாகின்றது.
4.தொழிலிலிருக்கும் பொழுது இதை மாதிரி எண்ணும் போது சிந்தனை குறைகின்றது. ஓடும் எந்திரங்களில் சிக்குகின்றனர்.
5.ஒரு கணக்கையோ பொருளையோ நல்ல முறையில் பார்க்க வேண்டும் என்று எண்ணினாலும் சிந்தனை குறைந்து அது முடியாத நிலை ஏற்படுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் வெளியிலே செல்லும் போதெல்லாம் கணவனும்/ மனைவியும் மேலே சொன்ன முறைப்படி செய்து மாற்றிப் பழகுதல் வேண்டும்.

என் அன்னை தந்தை அருளும் என் மனைவினுடைய அருளும் என்றும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற இந்த எண்ணத்துடன் வெளியிலே செல்லுதல் வேண்டும்.

கணவனும் மனைவியும் இதைப் போல எண்ணி வாழ்ந்து வந்தால் “வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்கிறோம்…!” என்று அர்த்தம். அதாவது இணைந்து வாழ்கிறோம் என்று பொருள்.

ஒரு தாய் எப்போதுமே என் மகன் அவன் வாழ்க்கை உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று ஆசி கொடுத்துக் கொண்டு இருக்கும். அதே சமயத்தில் மனைவினுடைய எண்ணங்களும் அந்த அன்பான எண்ணங்கள் கொண்டு மகிழ்ச்சியான உணர்வு கூடவே (கணவனுடன்) இருக்கும்.

ஆகவே நாம் ரோட்டிலே போகும் பொழுது எதிர்பாராமல் ஒரு பஸ் எப்படியோ தறி கெட்டு வருகிறது என்றலும் கூட
1.மனைவியின் உணர்வுகள் அந்த சமயம் அந்தப் பக்கம் போகாது நம்மைத் தடுக்கும்.
2.அந்தப் பஸ்சிலேயே ஏறப் போகிறோம் என்றாலும் அந்த பஸ்சில் ஏறவிடாதபடி மனைவியின் உணர்வுகளும் தாயின் உணர்வுகளும் அங்கே தடுக்கும்.
3.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே
1.தீமைகள் என்று வரப்படும் போது அந்த எண்ணமே எமன் ஆகின்றது.
2.எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!
3.ஞானிகள் காட்டிய அருள் வழியில் இணைந்து வாழ்வதே சாவித்திரி.
4.அருள் உணர்வு கொண்டு மனைவியை எண்ணப்படும் போது நமக்குள் அந்தச் சக்தி என்றுமே உறுதுணையாக இருக்கும்.

கணவன் மேல் பிரியமாக இருக்கிறோம். அப்பொழுது வீட்டிற்குச் சொந்தமோ மற்றவர்களோ வந்து கொஞ்சம் வேதனைப்படும்படி சொல்கின்றனர்.

கணவர் வீட்டில் இல்லாத போது… “பாவிகள் இந்த மாதிரிச் செய்கிறார்களே…!” என்று வேதனையான உணர்வுகளைச் சேர்த்துக் கணவனை எண்ணினால் இந்த உணர்வுகள் கணவன் எந்தக் காரியத்துக்குப் போனாலும் அங்கே தடைப்படுத்தும்.

வாகனம் ஓட்டும் போது மனைவி இப்படி எண்ணினால் கணவனுக்குச் சிந்தனை இழக்கப்பட்டு விபத்தாகும்.
1.மனிதனுக்கு மனிதன் சாதாரணமாக எண்ணும் போது அந்த உணர்வு எப்படி இயக்குகிறதோ இதைப் போலத் தான்
2.கணவன் மனைவிக்குள் மற்றவர்கள் செய்யும் உணர்வை எடுத்துத் தன் கணவனை எண்ணினால் இதே உணர்வு அங்கே தடைப்படுத்தும்.

மற்ற உணர்வுகள் வந்து இப்படித் தடைபடுத்தும்படியாகப் பேசினாலும் நீங்கள் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்.
2.அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று எண்ணி
3,அந்தக் குறை கூறுபவர்களை இப்படி மாற்றிவிட வேண்டும்.

கணவர் தொழிலுக்குச் சென்றாலும் சரி… பொருள்களை உற்பத்தி செய்தாலும் சரி.. அதைப் பயன்படுத்துவோர் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனைவி எப்போதுமே தன் கணவனை வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இதே மாதிரி கணவனும் தன் மனைவி எங்கே சென்றாலும் அந்த அருள் உணர்வுகளை எடுத்து மனைவியை வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

கணவன் மனைவி இப்படிச் செயல்படுத்திக் கொண்டு வந்தால் அன்று அகஸ்தியனும் அவரின் மனைவியும் எப்படி வாழ்ந்தார்களோ அதே போல நாமும் வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்கிப் பேரொளியாக்க முடியும்.

ஒரு பையன் நல்லவனாக இருந்தான். ஆனால் திடீரென்று கடுமையான நோயாகி விட்டது. என்ன.. ஏது…? என்று விசாரிப்பதற்காக அவனைப் பார்த்தாலும் அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வந்து விடுகின்றது.

ஆகவே மனைவி எப்போதுமே அதிகாலையில் விழித்தவுடன் என் கணவருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது அவர் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். அவர் ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும். அந்த அருள் மணங்களைக் கவரக்கூடிய அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மனைவிக்கும் அதே நிலை பெற வேண்டும் என்று கணவரும் எண்ணி இரண்டு பேரும் இப்படி எண்ணி வந்தால் பிறருடைய தீமைகளைபோ மற்றவையோ நமக்குள் வளராது தூய்மையாக்கி விடுகின்றது. ஏனென்றால்
1.இருவருடைய சக்தியும் ஒன்றாகச் செயல்படும் பொழுது
2.அது சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
3.பிறர் சாபமிட்டிருந்தாலோ அல்லது முந்தைய முன்னோரின் சாப நிலைகளோ இருந்தாலும் அதையெல்லாம் அடக்கும் சக்தியாக இது அமைகிறது.

இதைப் போல நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் ஜோதிடமோ ஜாதகமோ பார்க்க வேண்டாம். யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை.
1.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்
2.அருள் வழியில் என்றுமே மகிழ்ந்து வாழச் செய்யும். (இதை நிச்சயம் தெரிந்து கொள்ளலாம்…!)

கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதன் அவசியம்

 

என்னிடம் நினைவைச் செலுத்தி… வினாக்களை எழுப்பும் பொழுது விடைகளைப் பெற்று அனைவரும் அதன் மூலம் அதற்குண்டான விளக்கங்களைப் பகிர்ந்து கொள்ள எதுவாக இருக்கும்.

யாம் பல முறைகளிலும் வகைகளிலும் உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
1.எந்த அளவிற்கு அது உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து இருக்கின்றது…?
2.உங்களுடைய மனோ நிலை என்ன…?
3.எதை அறிந்திருக்கின்றீர்கள்…? அறிய விரும்புகின்றீர்கள்…? என்பதற்குத் தான் “கேள்வி பதில்…” வைப்பது.

உபதேசம் பொதுவாகச் சொல்கின்றோம்… கேட்கின்றீர்கள். சாமி சொல்வது நன்றாக இருக்கிறது என்று ஒரே வரியில் சொல்லி விட்டுச் செல்வோரும் உண்டு.

சிலர் என்ன நினைக்கிறார்கள்…! சாமி சொல்கின்றார் ஆனால் சொன்னதையே திரும்பச் சொல்கின்றார் என்று திருப்பிச் சொல்லி விடுகின்றார்கள்.

ஆனால் நேற்று என்ன சொன்னார்…? அதற்கு முந்தி என்ன சொன்னார்…? இன்று என்ன சொல்கின்றார்…? என்று கேட்டால் முழிக்கின்றார்கள்.

ஆகவே… உபதேசம் என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல…!

குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேசம் கொடுக்கப்படும் பொழுது நான் எதையும் முதலில் நினைத்துக் கொண்டு ஆரம்பிப்பது அல்ல.
1.யார் யார் இங்கே முன்னாடி வந்து இதை விரும்புகின்றார்களோ… எதை அறிய வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ…
2.அதன் அடிப்படை ஆதாரமாக வைத்துத் தான் அன்றைய உபதேசமே அமையும்.

ஒரு பத்து பேர் நினைக்கின்றார்கள் என்றால் அவர்கள் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய அளவிற்கு இந்த உபதேசம் வரும். “நான் நினைத்துக் கொண்டு வந்தேன் சாமி சொல்லிவிட்டார்…! நான் நினைத்துக் கொண்டு வந்தேன் சாமி சொல்லிவிட்டார்…! என்று எல்லோரும் சொல்வார்கள்.

அத்தகைய நினைவு வந்தாலும் கூட நாம் பதிந்து கொண்ட நிலையும்… இந்த வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்த வேண்டும்…? என்பதையும் அறிய வேண்டும்.

இந்தக் காற்று மண்டலத்தில் “மகரிஷிகளின் அருள் சக்தி எவ்வளவு கலந்துள்ளது…” என்று பல ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன்.
1.அதை எண்ணும் போது நமக்குள் அந்தச் சக்தி எப்படிக் கவரப்படுகிறது…?
2.அதை எப்படி நமக்குள் சேர்த்து வலுப்படுத்துவது…?
3.அதற்கு நாம் எதை நினைவுபடுத்த வேண்டும்…? என்று இதையெல்லாம் அறிந்து கொள்வது மிகவும் நல்லது.

ஆகவே உபதேசத்தைக் கேட்டுணர்ந்த நீங்கள் எந்த அளவுக்கு மீண்டும் அதை உயர்த்திக் கொள்ள வேண்டும்…? எப்படி வலுப்பெறச் செய்ய வேண்டும்…? அருள் ஞானத்தை எப்படி வளர்க்க பெற வேண்டும்…? என்பதற்குத்தான் கேள்விகளை எழுப்பும்படிச் சொல்வது.

எல்லோருக்கும் இது பயனுள்ளதாக அமையும்.

எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!

 

ஒரு சொல்லாக வெளி வர வேண்டும் என்றால் “எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்ந்துதான்…” அந்தச் சொல் வரும்… தனித்து வராது… அதனுடைய சுருதிகள் அப்படி…!

ஒரு சிலர் மிகவும் எளிமையாகப் பேசுவார்கள். அவர்களிடம் சாந்த குணம் இருக்கும்
1.சாந்த குணம் இருக்கிறது என்றால் மனதிலே உணர்வுகள் ஜாஸ்தி இருக்கும்.
2.எண்ணத்தால் பாய்ச்சவர்கள்… இது அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வு.

உதாரணமாக… சில பொருள்களை வெளியிலே பார்த்தால் ஒன்றும் தெரிவதில்லை… செய்வதில்லை. ஆனால் அதைச் சாப்பிட்டு விட்டோம் என்றால் குடலுக்குள் சென்று அரிப்பைக் கொடுத்துவிடும்… எதிர்மறையாகும்.

இதே மாதிரித் தான் ஒருவர் மிகவும் சாந்தமாக இருப்பார் அவர் சாந்தமாக இருக்கின்றார் (சாதாரண வாழ்க்கையில்) என்று நாம் நினைப்போம்
1.ஆனால் எண்ணங்கள் பல விதமாக அங்கே ஓடும்.
2.அவர்கள் நினைவுகள் வெளிப்படும் அவர்களுக்குள் மற்றது சேராது.
3.மற்ற கெடுதலை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவருடைய நினைவுகள் அதை அடக்கும்.

இயற்கையிலே சிலருக்கு இப்படி விளைகின்றது.

ஆனால் அந்த மகரிஷிகளோ…
1.”கோடி கோடி…” என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள்.
2.அந்த உணர்வை நாம் எடுத்து நமக்குள் புகுத்த வேண்டும்.
3.அப்படிப் புகுத்தினோம் என்றால் தீமைகள் நீங்கும்.

புகுத்த வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் வலுப்பெறும். இந்த அலைகள் இங்கே படரும்… நினைவுகள் அங்கே விண்ணுக்குச் செல்லும். ஆகவே “எதை எடுத்தாலும்… அந்த விண்ணின் பற்றுக்கே நாம் வர வேண்டும்…!”

வாழ்க்கையில் இப்படிச் செய்கின்றார்களே என்று எண்ணி விட்டால் இந்த நிலைதான் இங்கே வரும். இதை மாற்ற வேண்டும்.

விண்ணின் பற்றைக் கொண்டு நாம் அந்த எண்ணத்தால் ஒவ்வொரு நிமிடத்திலும் ஆத்ம சுத்தி செய்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவினை எடுத்து வலுப்படுத்த வேண்டும்.

மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் வேறு வேலை செய்து கொண்டிருந்தாலும்
1.நினைவை மேலே கொண்டு செல்ல வேண்டும்… கண்ணின் நினைவைச் சிந்தனையை மேல் நோக்கிச் செலுத்திப் பாருங்கள்.
2.அடுத்தவரிடம் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கும்… செவிகளில் படும்
3.நினைவோ விண்ணிலே இருக்கும்… இரண்டும் கலவையாகும்… அவருடைய உணர்வு நம்மை இயக்காது…!

சரி.. என்று எதிர் பதிலைத்தான் சொல்லச் சொல்லும்.

நேராக அவர்களைக் கண்ணுற்றுப் பார்க்காதீர்கள். கோபமாகப் பேசுபவர்களைக் கண்ணுற்றுப் பார்க்கக் கூடாது.

சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருப்போம். அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்து வலுவாக்கிக் கொண்டால் உங்களை அது இயக்காதபடி தடுக்க முடியும்.
1.உங்கள் சொல் அங்கே பாய்ந்து அங்கே அவருடைய இயக்கத்தை மாற்றும்.
2.இந்தப் பதிவுகள் நமக்கு அதிகமாகத் தேவைப்படுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) உபதேசித்து உணர்த்திய ஆற்றல் மிக்க அச்சக்தியை அவர் காட்டிய அருள் வழியில் அதனைக் கண்டுணர்ந்தேன்.

அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க அருள் சக்தியை எமக்குள் வித்தாக விளைய வைத்ததைச் சொல்லாக உங்களுக்குள் உபதேசிப்பதே இந்த நிலை.

யாம் உபதேசிக்கும் அருள் ஞானிகளின் அருள் ஞான வித்துக்களை உங்களுக்குள் பதிவு செய்து கொண்ட பின் அந்த ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரப்படும் போது அறியாது வந்த தீயவினைகள் அனைத்தையும் உங்களால் அகற்ற முடியும். நல்ல பலன் கிடைக்கும்.

காரணம்… நாம் யாருமே தவறு செய்யவில்லை…!

ஏனென்றால் தாய் கருவிலே நாம் சிசுவாக வளரப்படும் போது
1.நம் தாய் பாசத்தால்… அன்பால்.. பரிவால்… தனது வாழ்க்கைத் தொடரில்
2.பிறர் செய்யும் தீமைகளை அது கண்டுணர்ந்து இருந்தால் அந்த உணர்வின் ஆற்றல்
3.தாய் கருவுக்குள் வளர்ந்து வரும் சிசுக்களில் இந்த உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.
4.அவ்வாறு பதிவான நிலைகளைத்தான் “பூர்வ புண்ணியம்…!” என்பது.

தாயிற்கோ தான் கேட்டுணர்ந்த பார்த்த உணர்வுகள் அனைத்தும் “ஊழ்வினை” என்ற வித்தாக அது உடலுக்குள் அமைந்து விடுகின்றது.

ஆக தாய் தான் உலகை அறிந்திடும் நிலைகளில் தீமைகளைத் தீமைகள் என்று உணரப்படும் போது
1.அந்தத் தீமையின் உணர்வே
1.கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்குப் பூர்வ பூண்ணியமாக அமைந்து விடுகின்றது.

உதாரணமாக கர்ப்பமுற்றிருக்கும் தாய் ஒரு ஊனமுற்ற குழந்தையை அட பாவமே…! என்று மிகுந்த இரக்கத்துடன் உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால்
1.அந்த ஊனமுற்ற குழந்தையின் உணர்வுகள்
2.தாயின் கருவிலிருக்கும் குழந்தைக்குள் சேர்ந்து
3.அதையும் ஊனமான குழந்தையாக மாற்றி விடுகின்றது.

பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி மூலமாகவோ ஊனமுற்ற குழந்தைகளைப் பற்றியோ அல்லது இரண்டு குழந்தைகள் அப்படியே ஒன்றாக ஒட்டிக் கொண்டு பிறந்தது என்று விசித்திரமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்,

அது சமயம் வீட்டிலிருக்கும் கர்ப்பமான தாய் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை உன்னிப்பாகக் கேட்டு கூர்மையாக நினைவைச் செலுத்தினாலே போதுமானது.

கருவுக்குள் இருக்கும் சில நிலைகள் உருமாரி் அதுவே ஒட்டுக் குழந்தைகளாக பிறந்து விடுகின்றது.
1.ஆக எப்படிப் பார்த்தாலும்
2.தாய் கருவிலே விளையும் நிலைகள் தான் எல்லாமே…!

இதைப் போன்ற சில சில நிலைகள் கர்ப்பமாக இருக்கும் போது கேட்டுணர்ந்த நிலைகள் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து “அப்படி வந்தவர்கள் தான் நாம் அனைவருமே…!”

ஆனால் கர்ப்பமான தாய் ஞானிகளை உற்று நோக்கி அவர்கள் உணர்வுகளை எண்ணி ஏங்கி எடுத்திருந்தால் அந்த உணர்வுகள் தாயின் கருவிலே இருக்கும் குழந்தைக்குள் ஞானமாக விளைந்து அது “மெய் ஞானியாக…” வளர்கின்றது.

அகஸ்தியர் திருஞானசம்பந்தர் போன்ற ஏனைய ஞானிகள் எத்தனையோ பேர் குழந்தைப் பருவத்திலேயே ஞானிகளாகச் செயல்பட்ட நிலைகள் உண்டு. இவை எல்லாம் தாய் கருவிலே வளர்ந்த சக்தியின் ஆற்றல் தான்…!

அந்த ஞானிகள் வளர்ந்தது போல் நீங்களும் வளர வேண்டும் என்ற ஆசையில் தான் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கண்ணுக்குப் புலப்படாத சூட்சம நிலைகள் கொண்டு காற்றிலிருந்து நாம் நுகர்ந்து (சுவாசித்து) அறிந்தாலும் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நம் உடலிலே அந்தக் குணத்தின் தன்மை
1.இரத்தங்களில் கலக்கப்படும் போது “இந்திரலோகம்…”
2.உயிர் இருக்கும் பாகம் “ஈஸ்வரலோகம்…”

உதாரணமாக ஒரு கோழியோ பறவையோ கருத்தன்மை அடைந்தபின் அது முட்டை இடுகின்றது. அதை அடைகாத்து முழுமை அடைந்த பின் குஞ்சு வருகின்றது. குஞ்சு வளர்ச்சி அடைந்து மீண்டும் தன் இனத்தைப் பெருக்க எண்ணுகின்றது.

இதைப் போன்று தான் நாம் சுவாசிக்கும் உணர்வின் உணர்ச்சிகள் அனைத்தும் உயிரிலே பட்டு நம்மை இயக்கி நம் இரத்தத்தில் கலந்து அது வளர்ச்சி அடைந்து “பிரம்மலோகமாக…” மாறுகின்றது.

ஒரு கோபப்படுவோரை அடிக்கடி பார்த்து நுகர்ந்தால் நமக்குள்ளும் அந்தக் கோப உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
1.அவன் கோபக்காரன் என்ற நிலைகளில்
2.தவறு செய்பவன் என்றும் குற்றவாளி என்றும்
3.நமக்குள் அந்த உணர்வுகள் உணர்த்துகின்றது.

அப்படி உணர்த்தினாலும் அந்தக் கோபமான உணர்வையே உட்கொள்ளும் உணர்வின் கருத்தன்மை அடைந்து நாம் “திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப…” எண்ணும் போது நம் உடலுக்குள் அணுத்தன்மை அடைகின்றது.

கருவுற்ற கோழி முட்டை இட்டபின் கேறி… அடைகாத்து… தன் இனக் குஞ்சை எப்படி வெளிப்படுகின்றதோ இதைப் போல சுவாசிக்கும் உணர்வுகள் உயிரின் வழியாகச் செல்லப்படும் போது
1.அந்தக் கோபமான உணர்வின் தன்மையை நம் உயிரே அடைகாத்து
2.அதன் உணர்வின் தன்மை எதுவோ அதை உடலுக்குள் உருவாக்குகின்றது.
3.ஏனென்றால் உயிரின் வேலை இதுதான்.

அப்பொழுது கோப உணர்வு கொண்ட அது அணுவாக மாறினால் “பிரம்மலோகம்” எந்தக் காரத்தின் உணர்வு கொண்டு அந்த அணு உருவானதோ பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

அந்தக் கோபத்தின் ஞானத்தின் வழி கொண்டு இந்த உணர்ச்சி இயக்கி நமது கண்களுக்கு வருகின்றது.

நம்முடைய கண்களால் எந்த மனிதனைக் கோபமாகப் பார்த்தோமோ அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி.. இயக்கி.. இரத்தத்தில் கலந்து வந்த பின் அணுவாகி விட்டால் அந்த உணர்ச்சி கண்ணுக்குள் வந்து கோபித்த மனிதனின் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வினைக் கவரும்படி செய்கிறது.

கோபமாகப் பேசியவனின் உடலில் இருந்து வெளி வரும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து வைத்து அலைகளாக மாற்றுகின்றது.
1.அந்த அலைகளைத்தான் நம் கண்கள் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.நமது உயிரின் காந்தம் கவர்ந்து அதை ஓர் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
3.அந்த உணர்ச்சியின் தன்மை இயக்கி இதை நம் இரத்தத்துடன் கலந்து
4.இரத்தத்தின் வழியாக உருவான அணுக்களுக்கெல்லாம் உணவாகக் கொடுக்கத் தொடங்கி விடுகின்றது.

இப்படி நம் உடலில் எத்தனையோ விதமான உணர்வுகள் உண்டு.

காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் நல்லவர்களைப் பார்க்கின்றோம். கேட்டவர்களைப் பார்க்கின்றோம், தவறு செய்வோரைப் பார்க்கின்றோம், வேதனைப்படுவோரைப் பார்க்கின்றோம்

இவ்வாறு காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று நமது உயிர் இயக்கமாகி எந்தக் குணமோ அக்குணத்தின் தன்மையைப் பிரணவமாக்கி “ம்…” என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆகவே காலையில் இருந்து இரவு வரையிலும் நாம் எடுக்கும் உணர்வுகள்… உணர்ச்சிகள்… அவை அனைத்தும் உடலுக்குள் அணுத் தன்மை அடையும் அந்தச் சக்தியாக மாறுகின்றது. உடலாகச் சதா சிவமாக்கிக் கொண்டே உள்ளது நமது உயிர்.

இதிலே எந்தக் குணத்தை அதிகமாக நாம் வளர்க்க எண்ணுகின்றோமோ அந்த உணர்வெல்லாம் அது நம் உடலிலே வலுக் கொண்டதாக உருவாகி அதே உணர்வாக விளைகின்றது.

ஆகவே
1.மனிதன் எப்படி வாழ வேண்டும்…?
2.இந்த உடலுக்குப் பின் மனிதனுடைய கடைசி நிலை என்ன..?
3.சூரியன் எப்படி உருவானது…?
4.பிரபஞ்சம் எப்படி உருவானது…?
5.பிரபஞ்சத்தில் உயிரணு எப்படித் தோன்றியது…?
6.உயிரணு தோன்றிய பின் அது நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல்கள் எப்படிப் பெற்றது….?
7.பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று மனிதனாக எப்படி உருப் பெறச் செய்தது…?
8.மனிதனான பின் நமக்குள் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து எது…? என்று
9.இவை எல்லாவற்றையும் நாம் அறிய வேண்டும்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அந்த அகஸ்தியன் அணுவின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் முழுமையாக அறிந்து தனக்குள் அந்தப் பேராற்றல்களை வளர்த்துக் கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அவன் அருளைப் பெற்று அவன் கண்ட பேருண்மைகளை அறிந்தால் நாமும் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியின் தன்மை பெறலாம். என்றுமே அழியாத நிலைகள் பெறலாம்.

சூரியனின் செயலாக்கம்

 

பிரபஞ்சம் என்பது நமது சூரியக் குடும்பம். நூலாம்படைப் பூச்சி போன்று தான் நட்சத்திரங்கள் அமிலச் சக்தி கொண்டது. அதனின் சுழற்சியில் வெளி வருவது நூலாம்படை போன்று விரிவடையும்.
1.பிரபஞ்சம் சுழன்று வரும் பொழுது நட்சத்திரங்கள் அகண்ட அண்டத்தில் இருந்து வரக்கூடிய துகள்களைச் சேமித்து வைக்கின்றது…
2.தன்னுடைய பால்வெளி மண்டலங்களாக மாறுகின்றது.

கார்த்திகை நட்சத்திரம் முன்னாடி இருக்கின்றது… மீதி நட்சத்திரங்கள் அனைத்தும் அதற்கடுத்து வரிசையில் இருக்கும். எத்தனையோ தூரத்திலே ஒவ்வொன்றும் கீழே இருக்கும்.

சூரியனின் சுழற்சி வேகத்தில் வரும் பொழுது அது மிகவும் பின் தங்கி வரும். இரண்டாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வரும். மூன்றாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வரும்.

சூரியனை ஒட்டி இருக்கப்படும் பொழுது கோள்களும் இதே போன்றுதான் ஒவ்வொன்றும் தன் தன் வித்தியாச நிலைகள் சுழன்று கொண்டிருக்கும்.

பிற மண்டலத்திலிருந்து வரக்கூடிய துகள்கள் நட்சத்திரங்களின் பால்வெளி மண்டலங்களில் ஒட்டிக் கொள்கின்றது. சுழற்சி ஆகும் பொழுது அது எல்லாம் தூசியாகின்றது.
1.அதற்கடுத்து இன்னொரு நட்சத்திரம் அதை இழுக்கும்.
2.இடைமறித்து வரும் பொழுது இதற்கும் அதற்கும் இரண்டு கலவைகள்.
3.இப்படி இந்த 27 நட்சத்திரக் கலவைகள் தூசிகளாக வருவதைத் தான் இடைமறித்து
4.முதலில் வருவதை கேது விஷத்தன்மையை எடுத்துக் கொள்கின்றது.
5.ராகு கருகிய புகைகளை எடுக்கின்றது… கலவையாகி மாற்றங்களை அனுப்புகிறது.

இப்படி ஒவ்வொரு கோளும் இழுத்துத் தன் கலவையாக மாற்றி அமைத்து உள்ளே அனுப்புகின்றது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை உணர்வுகள் கலவை ஆகி… எந்த அணுக்களிலும் எதையும் உருவாக்கக்கூடிய தன்மை பெறுகின்றது.

இந்தக் கலவைகள் வரப்படும் பொழுது மற்ற கோள்களுடன் கலக்கப்படும் பொழுது ஒவ்வொன்றும் மாற்றங்கள் ஏற்படும்.
1.அப்படி மாற்றங்கள் ஏற்பட்டுச் சூரியனுக்கு வரும் பொழுது
2.விஷத்தை எல்லாம் பிரித்துத் தூக்கி எறிந்து விடுகின்றது… ஒளியாகப் பாதரசமாக மாற்றுகின்றது.

நட்சத்திரங்கள் அனைத்தும் முதலில் அமிலமாக இருந்தது தான். இந்த உணர்வு மாற்றங்கள் ஆகி மாற்றம் ஆகிப் பாதரசமாக மாற்றும் நிலை வருகின்றது…
1.ஆக “முழுமையான விந்து… இந்த உலகை உருவாக்குவதற்கு அதுவே மூலமாகிறது…”
2.அதில் எடை கூடிய நிலை வரப்படும் பொழுது தள்ளுகின்றது… பால்வெளி மண்டலத்தில் இது எடை கூடியது…. பாதரசமாகிறது.

சூரியனிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு அணுவின் தன்மை ஒவ்வொன்றுக்குத் தகுந்த மாதிரி இருக்கும்.

உமிழ்த்தி வெளியே வரப்படும் பொழுது… பிற மண்டலங்களிலிருந்து இழுக்கக்கூடியதை எதிர் நிலையில் மோதப்படும் பொழுது சூரியனுக்கு வெளிப்புறத்திலே ஏற்படும் வெப்பம் தான் “நாம் காணக்கூடிய வெயில்…”
1.ஆனால் சூரியன் குளிர்ச்சியான பூமி.
2.சூரியனுக்குப் பல ஆயிரம் மைல்களுக்கு அந்தப் பக்கம் தான் இந்த மோதல்கள் நடக்கின்றது.
3.வெப்பமாகிக் கெட்டது அனைத்தையும் தூக்கி எறிந்து விடுகின்றது.

பெட்ரோமாக்ஸ் விளக்கில் பார்த்தோமென்றால் உள்ளே ஒரு துணி தான் இருக்கும். பெட்ரோல் அதிலே ரோலிங் ஆக ஆக நெருப்பாகி வெளிச்சமாகத் தெரிகின்றது. பெட்ரோல் அதிலே வரவில்லை என்றால் உடனே அது கருகிவிடும்.

இதே போல் தான் சுழற்சியின் தன்மையில் அடித்து வீசப்படும் பொழுது மற்றதுகளை எடுத்து விஷத்தைப் பிரிக்கிறது. அந்த மோதல் ஏற்படும் போது ஒரு ஈர்ப்பின் தன்மை வருகின்றது… “அது தான் காந்தம்…!”

இழுத்துக் கொண்டபின் விஷத்தின் தன்மை அதிலே கலந்து விடுகின்றது. கலந்து வெளியே வரப்படும் பொழுது “எலக்ட்ரிக்…” அது இயக்கச் சக்தியாக இயக்க அணுவாக மாறுகின்றது.

இது மெய் ஞானப் பாடம். குருநாதர் இதை எடுத்துக் காட்டி
1.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது எப்படி திடப்பொருளாகின்றது…?
2.இன்னொரு பொருளைச் சேர்த்த பின் இது ஆவியாக எப்படிப் போகின்றது…?
3.ஆவி வெளியே போன பின் பொருள்கள் எப்படி இணைகின்றது…? என்று காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிரை ஈசனாக மதிக்கும்படி வணங்கும்படி ஞானிகள் காட்டுகின்றார்கள். உயிரிலே ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் ஈர்க்கும் காந்தத்தை லெட்சுமி என்றும் காட்டுகின்றார்கள்.

நாம் எத்தகைய குணத்தை நுகர்கின்றோமோ (சுவாசிக்கின்றோமோ) அந்தக் குணம் நம் உயிரிலே மோதும் போது அந்தக் குணத்தின் சப்தங்கள் வெளிப்படுகின்றது. அதன் உணர்ச்சிகள் உடல் முழுவதும் சுழன்று நம் உடலையே இயக்குகிறது.

இவ்வாறு அருவ நிலைகளில் நடப்பதைத்தான் உருவம் அமைத்து “சங்கு சக்கரதாரி விஷ்ணு” என்றும் நாம் சுவாசித்தது எத்தகைய குணமோ அந்த உணர்ச்சிகள்
1.நம் உடலை எவ்வாறு இயக்குகின்றது…?
2.சுவாசித்தது எப்படி உடலாகின்றது…? என்பதனை
3.சாதாரண பாமரனுக்கும் புரியும்படியாகக் காட்டினார்கள் ஞானிகள்.

கண்ணுக்குத் தெரியாமல் சூட்சமமாக நடப்பது அத்வைதம் என்று இருந்தாலும் அதை உருவமாக்கி
1.அதாவது சூட்சம நிலையில் நடப்பதைத் துவைதமாக்கி (கண்ணுக்குத் தெரியும்படியாக உருவமாக்கி)
2.அதற்குக் காரணப் பெயர்களை வைத்து
3.உயிரின் இயக்கத்தை நாம் எல்லோரும் அறிந்து கொள்வதற்காக இவ்வாறு ஞானிகள் வெளிப்படுத்திக் காட்டினார்கள்.
4.ஏனென்றால் எல்லோரும் அத்வைதத்தின் உணர்வுகளை அறிய முடியாது.
5.ஆகவே உருவம் அமைத்து நினைவுபடுத்தி அதற்குண்டான காவியம் படைத்து
6.அந்தக் காவியத்தின் வழியில் அதனின் கருத்தினை நுகரச் செய்து
7.நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளை நம் உடல் முழுதும் சேர்க்கச் செய்து
8.நல்ல குணங்களை நம் இரத்தத்தில் கலக்கச் செய்வதுதான் துவைதத்தின் அமைப்பு.

நாம் காணும் தெய்வச் சிலைகள் எல்லாமே இந்த நிலை தான்.

சிலையை உற்றுப் பார்த்த பின் நாம் எந்தக் குணத்தின் தன்மையை நுகர்கின்றோமோ நுகர்ந்து உயிரிலே படும்போது விசிஷ்டாத்வைதம் என்று காரணப் பெயர் வைக்கின்றனர்.

அதாவது சிலையைப் பார்க்கும்போது காவியப் படைப்பின் வழி இது துவைதம். அந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது கருத்தினை எண்ணி ஏங்கும்போது
1.ஞானிகளால் உணர்த்தப்பட்ட அந்தத் தெய்வ குணம் நம் உயிரிலே பட்டபின்
2.அந்த உணர்ச்சிகளாக வெளிப்படுகின்றது… நாமும் அறிய முடிகின்றது… இந்த உடலையும் நல் வழியில் இயக்குகின்றது…!

அதனால்தான் விசிஷ்டாத்வைதம்…!

நம் உடலுக்குள் ஒவ்வொரு உணர்வும் அது எப்படி இயக்குகின்றது… இயங்குகின்றது…? என்பதை அறிந்திட சாதாரண மக்களும் கல்வி கற்கவில்லை என்றாலும் கருத்தினைக் கவர்ந்து உணர்வின் செயலை நாம் அறிந்து அதன்வழி செயல்படும்படி செய்தனர் ஞானியர்கள்.

அதன் வழியில் தான் ஆலயங்களை எல்லாம் அமைத்தார்கள் ஞானிகள். அந்த ஞானிகள் உணர்த்திய வழியில் நாம் ஆலயத்தில் காட்டப்பட்ட தெய்வ குணத்தைச் சுவாசித்து நம் உடலுக்குள் வளர்த்தால்தான் “எந்தப் பலனையும் பெற முடியும்…!”

நரக வேதனைப்பட்டு… அது என்னை எப்படித் துன்புறுத்துகிறது…? என்று கண்டுணர்ந்து தான் இதைச் சொல்கிறேன்

 

உதாரணமாக வேதனைப்படுவர் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் மீண்டும் அவனைப் பற்றியே நம்மை எண்ண வைக்கின்றது. அந்த வேதனையான அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது. பின் வேதனைப்படும் உடலாகவே உயிர் மாற்றி விடுகின்றது.

வேதனைப்பட்டவன் எத்தன்மை கொண்டு அவ்வாறு ஆனானோ அவன் வேதனையாக இருப்பினும்
1.அவனின் எண்ணம் நமது வாழ்க்கையில் தொடர்ந்து வரப்படும் பொழுது… தன் குடும்பத்தினை எண்ணி
2.என் பிள்ளை இப்படி இருக்கின்றான்… அவனுக்கு அப்படி நோயாகி விட்டது…!
3.நோயினால் பொருள் போய்விடுமே…! என்ற இத்தகைய எண்ணங்கள் வருகின்றது.

அதாவது வேதனைப்பட்டவரின் உணர்வுகள் இங்கே கலந்து புது வித்தாக உடலில் உருவாகின்றது.

நோயால் இறந்தாலும்… அந்த நோயைப் பற்றி விசாரித்துக் கேட்டறிந்த மனிதன் இவருடைய உணர்வுக்குத் தக்க விஷத்தின் உணர்வுகள் மாறி இவரும் அந்த ரூபத்திற்குப் போவார்.

இதை எல்லாம் “நேரடியாக…” எம்மைக் காணும்படிச் செய்தார் குருநாதர். ஒவ்வொரு இடங்களுக்கும் எம்மைப் போகச் சொல்லி “20 வருடம் பார்த்துவிட்டுத் தான்…” உங்களிடம் சொல்கின்றேன்.

வேதனை இங்கே மாறும் போது அதற்குப் பெயர். அதர்வண வேதத்தின் மூலங்களை புரிந்து கொள்.
1.வேதத்தை எப்படித் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள் என்பதை நீ உற்றுப் பார்…!
2.அந்தத் தவறின் நிலைகளுக்கு நீ சென்று விடாதே…! என்றார் குருநாதர்.
3.காரணம்… இன்று உடலில் இச்சைக்குத் தான் அதர்வண வேதத்தைக் கொண்டு சென்று விட்டார்கள்.
4.ஆனால் அருள் ஒளியாக யஜூர்…! பேரின்ப நிலைகளுக்கு அதைக் கொண்டு செல்லவில்லை.

இறந்த பின்… யாருக்கு என்ன தெரியப் போகிறது…? என்று விட்டு விடுகின்றார்கள்.

அதர்வண யஜூர் மீண்டும் சாம அவருடைய வேதனையை எண்ணும் பொழுது உடலில் நோயாகின்றது… மனித உருவத்தையே மாற்றி விடுகின்றது.

தினமும் தியானமிருக்கின்றோம். இருந்தாலும் பிறிதொரு வேதனை உணர்வை நுகர நேர்கிறது. தான் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்றால் வேதனையான உணர்வுகளைச் சேர்த்து இணைத்து விடுகின்றோம். அதர்வண… நம் நல்ல குணத்தை அப்போது அது அடக்குகிறது.

நல்லவர்களுக்கு நல்ல காரியத்தைத் தான் செய்தோம். மேலே சொன்ன அதர்வண என்று ஆகும் பொழுது
1.மீண்டும் நாம் நல்லதைச் சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.
2.முதலிலே நாம் சொன்னதைக் கேட்டிருப்பார்கள்.
3.அன்று என்னிடம் எல்லாம் இருந்தது…! கேட்டார்கள்…! இன்று என்னைத் தூற்றுகின்றார்கள் என்போம்.
4.நம்மைக் கண்டாலே வெறுப்பு வருகின்றது… என்ற இந்த நினைவாற்றல் தான் இங்கே கடைசியில் வருகின்றது.

இத்தகைய நிலை உருவாகி விட்டால் மாற்ற வேண்டும் அல்லவா…!

காலை துருவ தியானத்தில் அரும்பெரும் சக்தியைக் கொடுத்து உங்களைப் பெறும்படி செய்கின்றேன். எண்ணும் பொழுது கிடைக்கும்படியும் செய்கின்றேன்.
1.இதை விடுத்து விட்டு உடலின் இச்சைக்கு நீங்கள் இணைத்து விட்டால்
2.அதைத்தான் உங்கள் உயிர் உருவாக்குமே தவிர வேறு நல்லது கிடைக்காது.

குருநாதர் எனக்குப் பல சிரமங்களை உண்டாக்கி அது எப்படி உருவாகின்றது…? அதிலிருந்து நீ எப்படி விடுபட வேண்டும் மாற்றி அமைக்க வேண்டும்…? என்று அரும் பெரும் சக்தியைக் கொடுத்தார்.

நீங்கள் என்னைப் போன்று காட்டிற்குள் சென்று என்று தெரிந்து கொள்வது…? அப்படி முடியாது.
1.நரக வேதனைப்பட்டுத் தான்…
2.ஒவ்வொரு வேதனையும் எப்படி என்னைத் துன்புறுத்துகிறது என்பதைப் பார்த்துவிட்டுத் உங்களிடம் வந்து சொல்கிறேன்.

தான் எண்ணிய காரியம் தோல்வி அடைந்தால் சோர்வு வருகின்றது. அப்பொழுது சிந்திக்கும் வலிமை இழக்கப்படுகிறது.. மாற்றமாகிறது. எண்ணியபடி நடக்கவில்லை என்றால் விஷமாகின்றது.

வேதனை என்ற மூன்றும் சேர்த்துக் கருவாகி இந்த உயிர் அந்த அணுவாக உருவாக்கி விடுகின்றது.
1.மீண்டும் நான் நினைத்தேன்… தியானித்தேன் வரவில்லையே…! என்று எண்ணுவதும்
2.சாமி சொன்னார்… “எனக்குக் கிடைக்கவில்லையே கிடைக்கவில்லையே…” என்ற உணர்வைச் சேர்த்துத் தான் அதை வளர்க்க முடியும்.
3.அப்போது வலுக்கொண்ட நிலையில் சாமியை எண்ணுவீர்கள்… ஆனால் சாமி சொன்னதை விட்டு விடுவீர்கள்.

உதாரணமாக வயலில் விதைத்திருக்கின்றோம்… பயிர் வளர்ந்திருக்கின்றது. அதிலே களைகளை எடுங்கள் சொன்ன பின் களையை எடுப்பதற்கு மாறாக செடி முளைத்திருப்பதைத் தட்டி விட்டால் என்ன ஆகும்…?

நல்ல வித்தினைத் தான் கொடுத்துள்ளார்கள். நல்ல பயிரைப் பிடுங்கி விட்டால் என்ன ஆகும்…? இதுவும் போய்விட்டது.

அது போல்
1.யாம் கொடுத்த அருள் ஞான வித்தை வளர்க்கும் போது
2.சந்தர்ப்பத்தில் வரும் களையை நீக்குவதற்குப் பதில் ஞான வித்தையே வீழ்த்தி விடுகின்றோம்.

நல்ல குணத்தை உயர்ந்த நிலைக்குச் செல்லப்படும் போது இந்த உணர்வுகள் அதர்வண. இதை அடக்கி இதனுடன் இணைந்து யஜூர் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

அதன் பின் மீண்டும் உங்கள் நினைவு எதிலே வரும்…? அந்தக் காரியத்தை எண்ணும் போதெல்லாம் தன்னைச் சோர்வடையச் செய்யும். வேதனை என்ற நிலைகள் உருவாக்கிக் கொண்டே வரும்.

புழுவில் இருந்து எப்படி மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்தோம்…? தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உடல்களிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து இந்த உணர்வின் தன்மை உடல் மாற்றத்திற்கு அதன் வலிமையைச் சேர்த்து அதர்வண யஜுர் அதன் நிலையை எடுத்துப் பரிணாம வளர்ச்சியாகி அதன் தொடர் கொண்டு தான் மனிதனாக வந்தோம்.

இத்தனையும் கடந்து வந்த மனிதன் மீண்டும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட இச்சையின் உணர்வு கொண்டு… எண்ணியது நிறைவேறவில்லை என்றால் சோர்வும் வேதனையும் உருவாகிறது. அத்தகைய அணுவின் தன்மை வளரப்படும் பொழுது நல்ல குணங்களை அது அடக்கி விடும்… அதர்வண.

அடக்கி அதனின் செயலாக்கங்களாக அதிலே உருவாகும் கருவின் தன்மையாக அணுவின் தன்மையாக உயிர் உருவாக்கி விட்டால் யஜுர் மீண்டும் சாம… வேதனைப்படும் நிலைக்கே அது கொண்டு செல்லும்.

1.இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் உடனே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்.
2.அரும் பெரும் சக்தியை உங்களிடம் கொடுத்திருக்கின்றேன். அதை ஒரு நிமிடம் எண்ணி எடுப்பதற்கு என்ன…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஜீவான்மா பெற வேண்டும் என்று இணைத்துக் கொண்டே வாருங்கள்.

வேதனை என்ற உணர்வை அடக்கி அதர்வண…!
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்த அணுக்களைச் சேர்க்கப்படும் பொழுது அடுத்து என்ன செய்யும்…?
2.அந்தத் துருவ நட்சத்திரத்தையே அது எண்ணும்படிச் செய்யும்… அப்பொழுது யஜூர் ஆக மாறுகின்றது.

அந்த ஒளியான வித்தினைத் தான் நமக்குள் வளர்க்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மதங்கள் குலங்கள் என்ற நிலையில் இருந்தாலும் அதற்குள் அனுஷ்டானம் ஆச்சாரம் என்ற நிலைகளில் தான் நாம் இன்று வாழ்ந்து வளர்கின்றோம்.

இன்று உதாரணமாக எடுத்துக் கொண்டால் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தாலும் கணவர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால்
1.உன் கணவனே போய்விட்டார்…
2.உனக்கு எதற்கு மாங்கல்யம்…? என்று அதைக் கழட்டிவிடும்படிச் சொல்கின்றனர்.

ஆனால் கணவனுடன் வாழ்ந்த காலத்தில் அவருடைய உணர்வுகள் அனைத்தும் மனைவியின் உடலிலே உண்டு.
1.மாங்கல்யத்தைக் கழட்டினால் பார்க்கும் பொழுதெல்லாம் “கணவரை இழந்தவர்…! என்று தான்
2.அடுத்தவர்கள் எண்ணுகிறார்களே தவிர அங்கே பரிதாபப்படும் நிலை இல்லை…!

ஆகவே கணவர் இறந்த பின் அவர் இட்ட அந்த மாங்கல்யத்தைக் கழட்டவே கூடாது.
1.அவர் என்னுடன் வாழ்கின்றார்… என்னுடனே இருக்கின்றார்…
2.அவர் உணர்வுகள் என்னுடனே வலு பெற்று உள்ளது…! என்று தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்

கணவன் உடலை விட்டுச் சென்றால் உடனே மனைவி என்ன செய்ய வேண்டும்..?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி அந்த வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

கணவனின் உணர்வு மனைவிக்குள் இருப்பதனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்ற வலுவின் துணை கொண்டு கணவனின் அந்தச் சூட்சம சரீரத்தைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அங்கே அனுப்பிடல் வேண்டும். ஆகவே அங்கே அனுப்பி விட்டால்
1.கணவன் உடலில் பெற்ற நோயின் தன்மைகள் அனைத்தையும் அங்கே கரைத்து விடுகின்றது.
2.சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்த கணவரின் உயிரான்மா
3.ஒளி உடலாக அங்கே வாழத் தொடங்கும்.

மனைவி இங்கே இருக்கப்படும் போது எப்போதுமே கணவரின் ஆன்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியாச் ஒளி சரீரம் பெற்றுப் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்ற நினைவினை ஒவ்வொரு நாளும் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

கணவர் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பேரொளி என்ற நிலை அடைந்த நிலையில்
1.எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை நீக்கி
2.மெய் வழியில் அழைத்துச் செல்லும் அருள் உணர்வுகள் எங்களுக்குள் படர்ந்து
3.சாபவினைகளோ தீயவினைகளோ வராது எங்களைக் காத்தருள வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.
4.இவ்வாறு எண்ணினோம் என்றால் அந்த அருள் என்றுமே நமக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆனால் இங்கே சாதாரண வாழ்க்கையின் நிலையில் இருப்பது என்ன…? என்றால் கணவர் பட்ட துயரத்தை எல்லாம் மனைவி தனக்குள் எடுத்து வைத்துள்ளது.

அதே சமயத்தில் குடும்பத்தில் உள்ள குழந்தைகளும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் நிலைகளிளும் இது பதிவாகி உள்ளது. நுகர்ந்தது இவர்கள் உடலிலே அணுவாகவும் உள்ளது.

இறந்த கணவர் அவர் வாழ்ந்த காலத்தில் உடலிலே விளைந்த உணர்வுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

அப்பொழுது மனைவியோ குடும்பத்திலுள்ளவர்களோ அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ அவருடைய நினைவுகளை மீண்டும் மீண்டும் எண்ணி எடுத்துக் கொண்டால்
1.அவர் உடலிலே விளைந்த நோய்க்குக் காரணம் எதுவோ
2.அதெல்லாம் நமக்குள் அதே நோயை உருவாக்கும் தன்மையாக இங்கே உருவாகி
3.நம்மை அறியாது சஞ்சலப்படும் நிலையை உருவாக்கி அடிக்கடி வேதனைப்படும் நிலையே வரும்.
4.அவ்வாறு வேதனைப்பட்டால் பிறிதொரு ஆன்மா நம் உடலுக்குள் வந்து சேரும்.
5.அந்த உடலில் வந்த தீமைகளே இங்கே வளரும்.

அத்தகைய தீமைகள் வராதபடி நாம் செயல்படுத்த வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்தவுடன் உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவரைச் சப்தரிஷியாக ஆக்க வேண்டும்.

அவர் அந்தப் பேரருள் பேரொளி பெற்றுச் சப்தரிஷியாக ஆனது போல் நாங்களும் இருளை நீக்கிப் பேரொளியாக மாறும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும். எங்கள் வீடு முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். இருளை நீக்கும் அந்த அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குதல் வேண்டும்.

இப்படி முறைபடுத்திக் கொண்டால் நமக்குள் தீமைகள் வராது தடுக்கவும் முடிகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் வளர்க்கவும் முடிகின்றது.

நாம் சேர்த்துக் கொண்ட இந்த வலுவுக்கொப்ப நம் உயிர் நம்மை அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்லும்…!

யாரையும்… எதையும்… எப்பொழுதும் துன்புறுத்தக் கூடாது… நாம் கல்யாணராமனாக வேண்டும்

 

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பேரை நாம் பார்க்கின்றோம். வேதனைப்படுபவர்களையும் சங்கடப்படுபவர்களையும் கோபப்படுபவர்களையும் ஏமாற்றுபவர்களையும் பார்க்கின்றோம்.

இத்தனை உணர்வுகளையும் சுவாசித்து உயிரிலே பட்டபின் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று சதாசிவம் ஆகிக்கொண்டே இருக்கிறது.. அதாவது உயிர் நம் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

ஆனால் நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…?

1.காலையிலிருந்து இரவு வரை சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்தத் தீமையான உணர்வுகளை மறந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைச் சேர்த்துச் சிவமாக்கி
3.எல்லோருக்கும் நல்ல நிலைகள் கிடைக்க வேண்டும் என்ற உணர்வை நம் உடலாக்க வேண்டும்.
4.அப்படி ஒன்று சேர்த்தால் ஒன்று சேர்த்து வாழும் அதுதான் கல்யாணராமா…!
5.நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்படும் பொழுது ஏன்றைக்குமே சந்தோசமாக இருக்கும்.

ஜனகச் சக்கரவர்த்தி சீதாவிற்குத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். கலந்து கொண்டோர் அனைவரும் அவரவர்கள் திறமையைக் காட்டுகின்றார்கள். திறமையைக் காட்டிச் சீதாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று விரும்புகின்றார்கள்.

ஆனால் இராமன் என்ன செய்கின்றான்…?

தீமை செய்யும் அந்தக் காண்டீபத்தையே ஒடித்து விடுகின்றான்.
1.காண்டீபம் என்பது உடலில் விளைந்த தீமையான உணர்வுகள் தான்.
2.அதை ஒடிப்பது என்பது சாமானியமானது அல்ல… இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அந்தத் தீமை செய்யும் காண்டீபத்தை இராமன் ஒடிக்கின்றான். அப்பொழுது சீதாவை அரவணைத்துக் கொள்கின்றான். அரவணைக்கப்படும் பொழுது கல்யாணராமன் ஆகின்றான்.
1.உங்கள் மீதுள்ள வெறுப்பான குணத்தை நான் நீக்கி விட்டால் இரண்டு பேருடைய எண்ணங்களும் ஒன்றாகின்றது…
2.அப்பொழுது மகிழ்ச்சி வருகின்றது கல்யாணராமா…!

என் உடலில் இருக்கும் தீமைகளை நீக்கிவிட்டு உங்கள் மீது இருக்கும் வெறுப்பை நீக்கி பின் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லும் பொழுது அந்த உணர்வுகள் உடலில் ஒன்று சேர்ந்து வாழ்கின்றது.

இந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் கோவிலை அமைத்துள்ளார்கள் ஞானிகள்.
1.எண்ணங்களை எப்படி நுகர வேண்டும்…?
2.அந்த எண்ணங்கள் அனைத்தையும் எவ்வாறு ஒன்று சேர்க்க வேண்டும்…?
3.பகைமை வளராதபடி எவ்வாறு தடுக்க வேண்டும் என்று உருவம் அமைத்து அருவ நிலைகளை நமக்குக் காட்டியுள்ளார்கள்.

கோவிலுக்குச் சென்று நாம் இப்படி நினைக்கின்றோமா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்கள்… சாபமிடுதல்… வேதனைப்படுதல்.. இதை எல்லாம் பரிவுடன் கேட்டால் அது எல்லாம் நமக்குள் வலிமையாகி விடுகின்றது.

அப்போது அதையேல்லாம் நாம் நுகரப்படும் போது அவர்கள் உடலிலே விளைந்த தோஷங்கள் எல்லாம் நமக்குள்ளும் வந்து விளைந்து விடுகின்றது. இதைத்தான் “பிரதோஷம்…!” என்று சொல்வார்கள்.

அந்தப் பிரதோஷத்தை நீக்க நாம் என்ன செய்கின்றோம்…?

சிவனுக்கு முன்னாடி இருக்கிற நந்தீஸ்வரனுக்கு மாலையைப் போட்டு அபிஷேகமும் செய்து அதற்கு வேண்டிய பதார்த்தத்தை எல்லாம் கொடுத்து அந்த நந்தீஸ்வரன் செவியில் போய்ச் சொல்கிறோம்.
1.என் குடும்பத்தில் இப்படிக் கஷ்டமாக இருக்கிறது.
2.என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
3.நான் கொடுத்த கடனைத் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
4.என் வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் நோய் வந்து விட்டது.
5.எங்கள் கஷ்டத்தை எல்லாம் நீ ஈசனிடம் சொல்லு… அவன் பார்த்து ஏதாவது செய்வான்…!
6.இப்படி ஒரு நிலையில் தான் நாம் அபிஷேகம் ஆராதனை செய்து கொண்டு கோவில்களுக்குப் போகிறோம்.

ஆனால் இவைகள் எல்லாம் எவ்வாறு இருக்க வேண்டும்…?

நாம் நல்ல பண்புடன் தான் எல்லோரையும் பார்த்தோம்… கேட்டோம்…! ஆனால் அந்தத் தோஷங்கள் நமக்குள் விளைந்து விட்டது. அதை நாம் நீக்க வேண்டும் அல்லவா…!

எல்லா வகையான பிரதோஷங்களையும் நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவன் மனைவி இணைந்து துருவ நட்சத்திரமாகப் பேரொளியாக இன்றும் நம் பூமியின் வட துருவப் பகுதியில் விண்ணிலே வாழ்கிறார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. அதிகாலை நான்கு மணியில் இருந்து துருவப் பகுதியின் வழியாக இழுத்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

அப்படிக் கொண்டு வரப்போகும் போது நாம் அந்த நான்கு மணியில் இருந்து ஆறு மணிக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ ஆன்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை சொல்லி நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

நான் எனது வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் பார்த்து அவருடைய கஷ்டங்களையும் துன்பங்களையும், துயரங்களையும் கேட்டுணர்ந்தேனோ… அவர்கள் குடும்பங்களில் எல்லாம் அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி படர்ந்து அவர்கள் குடும்பத்தில் அவர்கள் அறியாது சேர்ந்த சகல தோஷங்களும் நீங்க வேண்டும்.

நாங்கள் பார்த்தவர்கள் அனைவரும் தோஷங்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் குடும்பங்கள் அனைத்திலும் படர்ந்து அவர்கள் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் சொன்னோம் என்றால் அப்போது என்ன ஆகின்றது…? (இதை எதற்காக நினைக்க வேண்டும்…?)

மற்றவர்களின் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறைகளையும் நாம் கேட்டோம் அல்லவா…! அப்பொழுது அவருடைய தோஷ உணர்வுகள் நமக்குள் வந்து பதிவாகின்றது.

அந்த உணர்வுகள் நமக்குள் வராதபடி நாம் (மேலே சொன்ன மாதிரி) எண்ணும் போது
1.“அவர்கள் எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணும் போது”
2.நமக்குள் வந்த அந்தத் தோஷங்களை நீக்கி விடுகின்றோம்
3.அந்தப் பேரொளி என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்கின்றது.
4.நமக்குள் பிறருடைய தோஷங்களைத் துடைக்கும் சந்தர்ப்பத்தை அப்பொழுது உருவாக்குகின்றோம்.
5.காரணம் அன்று நாம் பகைமை உணர்வை எல்லாம் மறக்கின்றோம்
6.அதே சமயத்தில் மகிழ்ச்சியான உணர்வை உணவாக்குகின்றோம்
7.பிரதோஷத்தை முடித்த பின் சுவை மிக்க உணவை உணவாக்கி மகிழ்ச்சி என்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றோம்.

இப்படி எல்லோரும் இதைப் போல மகிழ்ந்து வாழ வேண்டும். அவர்கள் வாழ்க்கையின் சுவையும் மகிழ்ச்சியும் பெற வேண்டும் என்று பிரதோஷம் அன்றைக்கு இப்படி எண்ண வேண்டும்.

இப்படி யாராவது எண்ணுகிறார்களா என்றால் இல்லை…! “சாயங்காலம் 4 ல் இருந்து 6 க்குள்” காசைக் கொண்டு செலவு செய்து சாங்கியப்படி அதைச் செய்கிறார்கள்.

ஆனால் ஞானிகள் காட்டியது “அதிகாலை 4 ல் இருந்து 6 க்குள்” நாம் இதை எண்ணச் சொன்னார்கள். காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியன் உதயம் ஆகின்றது. அப்பொழுது பூமியிலிருப்பதை இழுக்கும் சக்தி வருகிறது.

பிரதோஷம் என்ற நிலையில் மேலே சொன்ன மாதிரி நாம் அந்தத் தீமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று எண்ணினால் நாம் அதை (தீமைகளை) இழுக்கும் சக்தி குறைகிறது.
1.நமது ஆன்மா முன்னால் இருக்கும் அந்தத் தீமைகளை நாம் இழுக்க மறுக்கும் பொழுது
2.”அந்தச் சூரியன் அது இழுத்துக் கொண்டு போய்விடும்…”
3.சூரியன் தனது அருகிலே கொண்டு போனால் அதற்குள் அருகிலே போகும் போது நெருப்பாக மாறுகின்றது. விஷத்தைக் கருக்கி நீக்கி விடுகின்றது.

இப்படித் தான் தோஷங்களை அன்று நீக்கும்படிச் சொன்னார்கள்.

ஆனால் நந்தீஸ்வரன் காதில் ஓதி… “இந்தப்பா…! நான் லட்டு ஜிலேபி வாழைப்பழம் ஆப்பிள் பழம் எல்லாம் கொடுத்திருக்கிறேன். என் கஷ்டத்தை எல்லாம் நீ ஈசனிடம் போய்ச் சொல்லப்பா…!” என்று ஞானிகள் சொல்லச் சொல்லவில்லை.

ஏனென்றால் நந்தீஸ்வரன் என்றால் “நாம் எதைச் சுவாசிக்கிறோமோ… அது தான் நமக்குள் உருவாகிறது. அப்பொழுது நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்..?

அந்தப் பேரருள் பெற்ற அந்த ஞானிகள் உணர்வின் தன்மையை நுகர்ந்தால் நமக்குள் அது உருவாகி நமக்குள் பிறருடைய தீமைகளை நீக்கிவிடும். தோஷங்கள் வராது தடுக்க இது உதவும். இப்படித் தான் நாம் பழக்கப்படுத்த வேண்டும்.

காசைக் கொடுத்து விட்டுப் பிரதோஷம் அன்றும் சிவன்ராத்திரி அன்றும் விடிய விடிய முழித்துக் கொண்டு நாம் தவறுகளைத் தான் செய்கின்றோமே தவிர
1.தவறை நீக்கும் மார்கங்களை ஞானிகள் காட்டி இருந்தாலும்
2.யாரும் இதைச் செயல்படுத்தவில்லை…!

தான் பெற்ற சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று “அவ்வப்போது எண்ண வேண்டியது மிக மிக அவசியம்…”

 

சிவ சக்தியாகக் கணவன் மனைவியாக எம்மைச் (ஞானகுரு) சந்திக்க வருகின்றீர்கள்… உபதேசத்தையும் கேட்கின்றீர்கள்… தியானமும் இருக்கின்றீர்கள்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால்… தனித்த நிலைகள் வருவோர் சிலர் எம்முடைய நுண்ணிய உபதேசங்களைக் கேட்கப்படும் பொழுது
1.மனைவி தன் அருகில் இல்லை என்றாலும்
2.இந்த உபதேசக் கருத்துக்கள் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணினீர்களா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!

ஆனால் யாம் உங்களிடம் இதை முதலில் சொல்லாமல் விட்டதன் நோக்கம் என்ன…?

மெய் ஞானிகளைப் பற்றிய உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். இந்தச் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் தன் தாய் தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தன் மனைவி பெற வேண்டும்… தன் தாய் தந்தையர் அது பெற வேண்டும்… அவர்கள் அருள் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று யாராவது இப்படி நினைக்கின்றீர்களா…? யாரும் நினைத்திருக்க மாட்டீர்கள்…!

மற்ற நேரங்களில் எல்லாம் எண்ணுகின்றோம். இருந்தாலும் சாமி இங்கே வந்திருக்கின்றார் அவருடைய உபதேசத்தை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்திலே சாமியை எண்ணும் பொழுது அதை மறந்து விடுகின்றீர்கள்.
1.சாமி மேலே ஞாபகம் இருக்கின்றது.
2.ஆனால் தன் மனைவி தாய் தந்தையர் பற்றி எண்ணம் இல்லாது போய் விடுகின்றது.

சாதாரணமாகத் தியானிக்கும் போது எல்லோரையும் எண்ணுவீர்கள். ஆனால் “சாமி இங்கே உபதேசிக்கின்றார்…” என்று அதை மட்டும் தான் எண்ணுகின்றீர்கள்.
1.ஆனால் இந்த மாதிரி நேரங்களில் இதை மாற்றிப் பழக வேண்டும்.
2.நீங்கள் தனியாகக் கேட்டாலும் உபதேசத்தைக் கேட்டுத் தியானிக்கும் பொழுது
3.தன் மனைவிக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று அவசியம் என்ன வேண்டும்.
4.அந்த அருள் ஒளி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்…
5.அந்த அருள் ஞானத்தை எனக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக எண்ண வேண்டும்.

இதே போல மனைவி மட்டும் எமது உபதேசத்தைக் கேட்டுத் தியானித்தால் அவர்களும் இதே போன்று கணவனுக்கு எண்ண வேண்டும். அவர்களும் இதைப் போன்ற பழக்கத்திற்கு வந்தால் “எங்கிருந்தாலும் இந்த சக்தி உங்களுக்கு உறுதுணையாக அமையும்…”

சாமி என்ற நிலை வரும் போது சாமியை மட்டும் தானே நினைவு கொண்டு எண்ணுகின்றீர்கள்… அதை உங்களுக்குள் பதிவு செய்கிறீர்கள்.

இப்பொழுது சொல்லி உங்கள் நினைவாற்றலைத் தூண்டி அதைப் பதிவு செய்கின்றோம்.
1.ஆகவே எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று இச்சைப்பட்டு அவசியம் அதை இணைத்துப் பழக வேண்டும்.
2.இச்சா சக்தி கிரியா சக்தி என்ற நிலைகளுக்கு வளர்ச்சிக்குக் கொண்டு வர வேண்டும்.

மனைவி பெற வேண்டும் என்றும் கணவன் பெற வேண்டும் என்றும் இப்படி ஒருவருக்கொருவர் “உயர்ந்த உணர்வுகள் கிடைக்கும் போதெல்லாம் இச்சைப்பட்டு வர வேண்டும்…”

ஆக இணைந்த நிலைகளிலேயே கிரியை ஆக்கிச் செயல்பட்டு கொண்டு வர வேண்டும். இந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும் என்பதற்குத் தான் இதை இப்பொழுது ஞாபகப்படுத்தி உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்று ஆண்ட அரசர்களின் செயல்களால் தான் இன்று இந்த உலக நிலைகளிலேயே “ஒருவனை ஒருவன் அடக்கி ஆளும் நிலைகள் ஏற்பட்டு விட்டது…!”

மனிதனாக வளர்ந்து வந்த நிலையில் அரவணைக்கும் உணர்வை மறந்து அடக்கி ஆளும் தன்மையே வருகின்றது.

1.எப்படியும் ஒரு வகையில் மற்றவர்களை மிரட்டி வாழ்வது.
2.இல்லை எனறால் பொருளைக் கொடுத்துத் தனக்குக் கீழ் அவர்களை அடிமையாக்குவது.
3.அடிமையாக்கிய நிலைகள் கொண்டு அவர்களிடமிருந்து தான் பெற வேண்டிதைப் பெற்றுத் தன்னுடைய சுகத்திற்கு வருவது.

ஆனால் அப்படிக் கொடுத்துப் பதிலுக்கு உதவவில்லை என்றால்… தான் எண்ணியபடி வரவில்லை என்றால்… உடனே நான் இன்னதைச் செய்தேன்.. நீ எனக்கு எதையும் செய்யவில்லை…! என்று அவருக்குத் தீங்கிழைக்கும் நிலையே இங்கு வருகின்றது.

ஒருவருக்கு உதவி செய்யப்படும் போது தனக்கு இணைந்தவனாக வரவேண்டும். தனக்கு இணைந்து வரவில்லை என்றால் அவனைக் குற்றவாளியாக ஆக்கும் நிலையே வருகின்றது.

இன்று வாழும் மனிதர்கள் அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி உதவிகள் செய்வதும் உதவி செய்த பிறகு தன் வழிக்கு வரவில்லை என்றால்
1.நான் அவனுக்கு எல்லா உதவியும் செய்தேன்
2.ஆனால் அவன் எனக்குத் தக்க நேரத்தில் உதவி செய்யவில்லை.
3.ஆகவே அவன் தீங்கு உள்ளவன் ஆகிறான் என்று
4.பகைமை உணர்வுகளைத்தான் நாம் வளர்க்கின்றோம்

ஆக மொத்தம் பகைமை கொண்டு ஒரு பக்கம் பகையை வளர்க்கின்றோம். அல்லது அன்பு கொண்டு தனக்குள் அடிமை ஆக்க வேண்டும் என்ற உணர்வு தான் வருகின்றது.
1.உண்மையிலேயே நல் உணர்வின் தன்மை கொண்டு அவருடன் ஒன்றி வாழ வேண்டும்,
2.இணைந்து வாழ வேண்டும்… துயரங்கள் நீங்க வேண்டும்… பேரருளைப் பெற வேண்டும்… என்ற
3.இந்த உண்மையின் நோக்குடன் பிறருக்கு உதவி செய்தால் அங்கு எதிர்பார்க்கும் தன்மை இருக்காது.
4.(ஏனென்றால் உதவி செய்தேன் என்றால் பதிலுக்கு அவரிடம் எதையாவது ஒன்றை எதிர்பார்க்கும் தன்மையே வருகின்றது)

இன்று பல இடங்களில் பார்க்கலாம்…! சில உபகாரங்களைச் செய்வது போல செய்வார்கள். ஆனால் அவர் செய்யும் தவறுக்கெல்லாம் இவர்கள் அடிமை ஆக வேண்டும்.

அப்படி அடிமை ஆகவில்லை என்றால் இவர்களுக்குத் தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். தனக்கு வேண்டியதை எதிர்பார்த்துச் செயல்படும் இந்தத் தன்மைகள் தான் இங்கே வருகின்றது.

ஒன்று அடக்கி ஆள்வது… இரண்டாவது அரவணைத்துப் பார்ப்பது… தன் வழிக்கு வரவில்லை என்றால் அவனைக் குற்றவாளியாக ஆக்குவது…!
1.மக்கள் மத்தியில் இது தான் அதிகமாக வருகின்றது.
2.இது எல்லாம் சுயநலத்தைக் கூட்டுகின்றது… பொது நலம் ஆகாது…!

ஆனால் பொது நலத்தின் தன்மையாக அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து விட்டால் குற்ற இயல்புகள் இருவர் இடத்திலும் வராது.

1.பண்பினைக் காக்கப் பரிவினை ஊட்ட
2.அன்பினைக் கூட்ட அரவணைக்கும் உணர்வாக வந்தால்
3.நாம் செய்த பண்பின் அரவனைப்பு நமக்குள் என்றுமே நிலைத்து இருக்கும்.

ஆகவே அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் இருளை அகற்றிடும் நிலை அனைவரும் பெற வேண்டும். வாழ்வில் எல்லோரும் தெளிந்த நிலைகள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

“புலனறிவால்…” மெய்ப் பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி

 

ஒரு பயிற்சி:-
ஆறாவது அறிவின் உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட “முருகனின் காட்சியைக் காண வேண்டும்…” என்று வானை நோக்கி உற்றுப் பார்த்து உங்கள் நினைவினைச் செலுத்துங்கள். சிறிது நேரம் மேல் நோக்கிப் பாருங்கள்

அந்த அலைகள் குவிந்து உங்களுக்கு முருகனாகக் காட்சி தெரியும்..

பூமியில் வாழ்ந்த மனிதர்களுக்குள்
1.எந்தெந்த முருகன் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாகப் பரவப்பட்டதோ
2.அதை மீண்டும் நாம் குவிக்கப்படும் பொழுது இந்த உருவத்தை நாம் காண முடியும்.

அதாவது… டிவிக்களில் எப்படிப் படக்காட்சிகளைக் காணுகின்றோமோ… அதே போல்… மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது அலைகள் குவிந்து முருகனாகக் காட்டும்.

எதற்காக இதைச் சொல்கிறோம்…?

அன்று வாழ்ந்த அகஸ்தியரும் வியாசகரும் வானுலக ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து உடலில் அதைப் பெருக்கப்பட்டு அந்த உண்மையின் உணர்வுகள் அருள் ஞான ஒளியாகப் படர்ந்திருப்பதை
1அதை எண்ணி நுகரப்படும் பொழுது வியாசகர் கண்டதை நாம் காண முடியும்.
2.விஷத் தன்மையால் நம் பூமி சுழல்வதும்
3.துருவப் பகுதி வழி விண்ணுலக ஆற்றலைக் கவர்வதும் அதனால் தனக்குள் மாற்றம் அடைவதையும்
4.தாவர இனங்களாக உருப்பெற்றதையும் அதை எடுத்து உயிரினங்கள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதையும் நீங்கள் காண முடியும்.
5.மேரு என்ற மலையை மத்தாக வைக்கப்பட்டு என்று சொல்லும் பொழுது
6.மேலே சொன்ன பூமியின் இயக்கத்தைக் காட்சியாகத் தியானம் செய்யும் பொழுது பார்த்திருக்கலாம்.

இவையெல்லாம் அன்று வியாசகரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள்.

காரணம்… அகஸ்தியன் கண்டறிந்த உணர்வுகளை வியாசகர் கவர்ந்து பூமியின் செயலாக்கங்களை உணர்ந்ததை
1.அக்கால மொழி கொண்டு அதனை வெளிப்படுத்திய உணர்வுகள்
2.அவனில் விளைந்த உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.

ஆகவே நாம் காண வேண்டியது எது…?

அகஸ்தியன் துருவ மகரிஷியாகி உணர்வினை ஒளிச் சரீரமாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளி அலைகளாகப் பரவிக் கொண்டிருப்பதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.

துருவ மகரிஷியாகும் பொழுது அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் பாய்ச்சி இருவரும் அதைப் பரிமாறிக் கொண்ட நிலையை அவர்கள் உடலில் விளைந்த அலைகள் இங்கே பாய்ந்து கொண்டிருப்பதை நாம் காண்போம்.

மீண்டும் வானை நோக்கி உற்றுப் பாருங்கள்..!

அகஸ்தியன் துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில்
1.கணவனும் மனைவியும் துருவத்தின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
2.ஒருவருக்கொருவர் என்று ஏங்கிய உணர்வுகள் அது பரவி வரும் பொழுது
3.அந்தக் காலத்தில் வாழ்ந்த “அவர்கள் இருவரின் உடல் அமைப்பு…” அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.

துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக இருவருக்குள்ளும் இணைந்து இந்த உணர்வின் தன்மை ஒளிச் சரீரமாகி எந்த எல்லையில் நிலை கொண்டார்களோ
1.அங்கே சென்று துருவ நட்சத்திரமாக உருப்பெற்ற உணர்வை நீங்கள் காணலாம்.
2.அகஸ்தியனும் அவர் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி ஒளி சரீரமாக இணைந்து துருவப் பகுதிக்குச் சென்றதை நீங்கள் காணலாம்
3.துருவ நட்சத்திரமாக ஒளியாக இருப்பதையும் காணலாம்.

இப்பொழுது இதைக் கண்டவர்களும் சரி… மற்றவர்களுக்குள் பதிவானதும் சரி… அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற நினைவுடன் இரவிலே நீங்கள் படுத்து உறங்கினால்
1.அந்த உணர்வுகள் கிளர்ந்து உயிருடன் ஒன்றி உங்களுக்குள் பெருகி
2.அதனின் ஆற்றலை உங்கள் புலனறிவிலே காண முடியும்.

ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி என்ற நிலையில் அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு அதைக் கவர்ந்து வீட்டிலேயே அதைக் காணும்படிச் செய்கின்றார்கள்.

அதைப் போலத் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த உடலிலிருந்து வெளி வந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கலந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வினை எமக்குள் பதிவாக்கி அந்த நினைவினை எடுக்கும்படிச் சொல்லி
2.அதனின் அருள் ஞான வித்தாக இதைக் கேட்போர் உணர்வுகளில் ஊழ் வினையாகப் பதிவு செய்து
3.வினைக்கு நாயகனாக வளர்ந்ததை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
4.காற்றில் படர்ந்திருப்பதை அதன் வளர்ச்சியாகக் கவர்ந்து அந்த உணர்வினை கண் புலனறிவிலே காண முடியும்.

இருந்தாலும்… சில உண்மைகள் படக்காட்சிகளாக உங்களுக்குத் தெரிய ஆரம்பித்தால்
1.திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது
2.அந்த உருவங்கள் தெரிந்தால் அதைக் கண்டு அஞ்சி ஓடுபவர்களும் பலர் உண்டு… பயந்து விடுவார்கள்.

ஆகையினால்… அந்த உணர்வின் தன்மை “அப்படிக் காட்சியாகக் கிடைக்கக் கூடாது…” என்பதற்கும் ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின் உணர்வை “ஒளியின் உணர்வாக…” உங்களுக்குள் வளர்ப்பதற்குத் தான் இதைச் செயல்படுத்துவது.

சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று நீங்கள் எண்ணவே வேண்டியதில்லை. “நாம் காண வேண்டியது அந்த ஒளியான உணர்வுகள் தான்…”

அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் திறன் பெறுவது தான் நம்முடைய கடைசிக் கடமை. இதை எல்லாம் நீங்கள் அனைவரும் பெறுவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.

முந்தி எல்லோருக்கும் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தேன் சில உண்மைகளை அறியும்படியும் செய்தேன் புவியின் ஈர்ப்புக்குள்.
1.ஆனால் அதனுடைய பலன் மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டது.
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.

அவ்வாறு ஆகாதபடி உங்களுக்குள் மெய் ஒளியைப் பெறும் ஆற்றலாகத் தான் அதை இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்.

விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலம் கடும் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது… அதை மனிதன் நுகர்ந்து சிந்தனையற்றவனாக ஆக்கும் நிலைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்… அதிலிருந்து நம்மை மீட்டி நம் சிந்தனையை விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது நம் அருகிலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் வரும் போது மனிதன் தீமைகளிலிருந்து விடுபட
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் தன்னைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப் பெருக்கவும்
2.இந்த உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய இது உதவும்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுத்தது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடலுக்குள் ஒடங்களில் செல்லப்படும் போது எதை எல்லையாக வைக்கின்றனரோ எத்தனையோ அலைகள் வந்தாலும் அதிலிருந்து மீட்டு அந்த எல்லையைப் போய் அடைகின்றனர்.

அதைப் போல தான் மனித வாழ்க்கையில் எத்தனையோ விதமான கோபம் சலிப்பு வேதம் குரோதம் வேதனை போன்ற அலைகள் மோதிக் கொண்டே இருக்கிறது.

அப்பொழுது எந்தக் குணத்தைக் கவர்ந்து கொள்கிறோமோ அந்தக் கவர்ந்து கொண்ட சக்தி தான் “வசிஷ்டர்…” என்பது. அது நம் உடலாக ஆகப்போகும் போது “அது நம்முடன் இணைந்து வாழ்கின்றது…!” என்று பொருள்.

1.வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை நாம் நுகர்ந்தால் “வசிஷ்டர்…!”
2.அதாவது வேதனையான சக்தியை நாம் அருந்தப்படும் பொழுது
3.நம்முடன் இணைந்து (அருந்ததியாக) வேதனை என்ற உணர்வைத்தான் உருவாக்கும்.

அதே போல ஒரு குடும்பத்தில் தாயோ தந்தையோ உடலை விட்டுச் சென்றால் விட்டால் நாளை என்ன செய்யப் போகிறோம்..? என்று வேதனையைத் தான் நாம் படுகிறோம்.

இதைப் போன்ற துன்பங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற அருள் ஒளி கொண்டு அதைப் பிளக்க வேண்டும்.

கணவனும் மனைவியும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தீமைகள் தமக்குள் உருவாகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என்ற உணர்வைப் பெற்று வசிஷ்டர் அருந்ததி போல வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நளாயினி போன்று கணவன் மனைவியை மதித்து நடப்பதும் மனைவி கணவனை மதித்தும் நடத்தல் வேண்டும். இவ்வாறு நடந்தால் இரு மனமும் ஒன்றுகின்றது.

சாவித்திரி என்ன செய்கின்றாள்…? எமனிடம் இருந்து தன் கணவனை மீட்டினாள். ஆக இன்னொரு பிறவிக்குப் போகாதபடி இரு உயிரும் ஒன்றென இணைந்தவர்கள் தான் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

1.இரு மனமும் ஒன்றி…
2.இரு உணர்வும் ஒன்றி…
3.இரு உயிரும் ஒன்றி…
4.அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து
5.இல்லற வாழ்கையில் இருள் என்ற நிலையை அகற்றி
6.நஞ்சு என்ற நிலைகளை அகற்றி நஞ்சை அகற்றிடும் பெரும் சக்தி பெற்று
7.இனிப் பிறவி இல்லா நிலைகள் அடையும் அருள் மார்க்கத்தைத்தான் அன்று ஞானிகள் நமக்குக் காட்டினர்.

எங்கள் குடும்பத்தில் மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது தீமைகள் அகல வேண்டும். எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும். கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். உலக ஞானம் பெற வேண்டும். உலகைக் காத்திடும் அருள் ஞான குழந்தைகளாக வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அந்த அருள் ஒளி கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகள் எல்லாவற்றையும் விலக்கி அருள் உணர்வை வளர்த்து பிறவி இல்லா நிலை என்ற நிலையை அடைய நாம் பிராத்திப்போம்… தியானிப்போம்…!

ஓம் ஓம் ஓம் ஓம் – சிவ சக்தி என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக இயக்கக்கூடிய நிலை

 

ஒவ்வொருவரும் சிவ சக்தியாகத் தான் இயங்குகின்றார்கள்.
1.உடல் சிவமாகின்றது
2.உடலுக்குள் இயங்குவது சக்தியாக இருக்கின்றது… இப்படித் தான் சிவ சக்தி.

உருவம் சிவம் தனக்குள் இயங்குவது சக்தி. இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிச் சக்தியாக இயக்க முடியும். உணர்வின் தன்மை எந்தச் சக்தியாக இயக்குகின்றோமோ மறு உருவைக் கொடுக்கும்.

1.உருவமல்லாது சக்தியை நாம் சேர்ப்போம் என்றால் உயிருடன் ஒன்றி என்றும் சிவ சக்தியாக ஒளியின் சரீரமாகும்.
2.அது தான் எண்ணத்தால் வருவது… எண்ணத்தால் உருமாற்றிய நிலைகள் இராமலிங்கம்… உயிருடன் ஒன்றிய நிலைகள்…!

சீவலிங்கம்… உறைந்த உடல் கொண்டு தான் நாம் இப்பொழுது இயக்குகின்றோம். எண்ணத்தால் இருளைப் போக்கி ஒளியாக உயிருடன் ஒன்றினால் இராமலிங்கம்.

எங்கே சென்றாலும் சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை. பெருக்கும் சக்தியின் நிலைகள் கொண்டுதான்… அந்தச் சக்தியின் துணை கொண்டு தான் எண்ணத்தால் சீவலிங்கமாக இந்த உடல் ஆகிறது.

எண்ணத்தால் இராமலிங்கமாக உருவாக்க வேண்டும். ஒளியின் சரீரம்…! இது தான் சிவசக்தி என்பது. கணவன் மனைவி அல்ல.

நாம் கவர்ந்து கொண்ட சக்தி வசிஷ்டர். கவர்ந்தது எதுவோ அதனுடன் இணைந்தே வேலை செய்யும். எண்ணிய எண்ணங்கள் எதிர்நிலை ஆகிவிட்டால் என்ன செய்யும்…? அதனால் தான் சிவ சக்தி என்பது. சக்தி தான் சிவம் ஆகிறது. சிவம் தான் சக்தியாகிறது.
1.சக்தியான நிலைகள் மறைமுகமானது.
2.உறைந்துவிட்டால் சிவம் ஆகின்றது… சிவசக்தி என்று பொருள்

ஒன்றுக்குள் ஒன்று ஜீவன் பெற்று ஒன்றின் அணைப்பில தான் இயங்குகின்றது. முதலில் ஓ… என்று பிரணவம் ஆகின்றது… மற்றொன்று அதற்குள் இருந்து ஒவ்வொரு உணர்வும் தன் தன் நிலைகளை இயக்கும்.

ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம். இதைப் போன்று பல கோடி உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஓ …என்று பிரணவமாகி ம்… என்ற உடல் ஆகிறது.

உயிரணுவின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது எத்தனையோ கோடி உணர்வு கொண்டுதான் எண்ணத்தின் தன்மை வருகின்றது.

உயிர் ஓ என்று இயக்கினாலும் நாம் எண்ணிய உணர்வுகள் ஓமுக்குள் ஓம்… அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்கும். எதிலேயும் ஓ என்ற பிரணவம் இயக்கம் இல்லை என்றால் உடல் உருவாகாது.

1.ஜீவன் ஆனால் தான் மலம் உடலாகின்றது. உறைந்திடும் நிலைகள் உடல்.
2.அதாவது திரேதா யுகம்… உடலுக்குள் உயிரணுவின் தோற்றமான பின்
3.எண்ணத்தின் உணர்வு கொண்டு ஓ… என்று இயக்குகின்றது. உணர்வின் தன்மை ம்… என்று மலமாகிறது.

அதே போல செடிகளில் ஒன்று இணைந்த பின் ஓ என்று குவித்த நிலையில் இயக்குகின்றது ம்… என்று உணர்வின் சத்து உறைகின்றது… சிவமாகிறது.

சக்தியாக இருப்பது செடியாக்கப்படும் பொழுது துவைதம். அதனின் மணம் வெளி வரப்படும் போது சக்தி ஆகின்றது. அதற்குள்ளும் எந்தெந்த உணர்வுகள் உள்ளதோ அதனின் ஜீவன் இயக்கவில்லை என்றால் வளர்ச்சி ஆகாது.

ஒரு கசப்பின் தன்மை வரவேண்டும் என்றால் பல உணர்வுகள் சேர்த்துத் தான் அது உருவாகின்றது. அந்தப் பல உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்றாகி ஒன்றின் உணர்வு கொண்டு இணைந்து அது ஓ என்று ஜீவனாகி ம் என்று உடலாகிறது.

இதைத்தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம். ஒன்றுடன் இணைந்து இயக்கவில்லை என்றால் அது இல்லை என்றே பொருள்.
1.ஆக மொத்தம் எதிலுமே ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு அது இயக்கச்சக்தியாக மாறினால் தான் “ஓம் ஓம் ஓம் ஓம்…”
2.நாம் எதை எண்ணி “ஓம்…” என்று இப்பொழுது தனக்குள் சேர்க்க வேண்டும்…?
3.மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து அதை ஜீவன் பெறச் செய்து ஒளியாக மாற்ற வேண்டும்.

அதைத் தான் இந்த உபதேச வாயிலாக உணர்த்துகின்றோம்.

கண் பார்வை… உணர்ச்சி… ரூபம்… இயக்கம்…!

 

குருநாதர் ஒரு சமயம் ஒரு வேடிக்கையைக் காட்டுடா…! என்று சொன்னார். ஒரு வாழை மட்டை குப்பைத் தொட்டி அருகே நல்ல பாம்பு படம் எடுத்தது போன்று இருந்தது.

ஐயோ… நல்ல பாம்பு…! என்று நீ சொல் என்றார். சொன்னேன்…! எல்லோரும் பார்த்து ஆமாம் என்கிறார்கள். இது நடந்த நிகழ்ச்சி.

1.மனிதனின் உணர்வுக்குள் எதை ஏற்றுகின்றோமோ அந்த உணர்ச்சியின் இயக்கங்கள் எப்படி ரூபமாகக் காட்டுகிறது…?
2.வாழை மட்டை தான்…! நாகப்பாம்பு போன்று தெரிகின்றது.

இதை ஏற்றுக் கொண்ட பின் மனிதனுக்குள் இந்த உணர்வு எப்படி இயக்குகின்றது…? பாம்பின் ரூபமாக எப்படிக் காட்டுகிறது…? என்று காட்டுகின்றார்.

ஐயோ பாம்பு…! என்று சொன்னேன் எல்லோரும் ஆமாம் என்கிறார்கள். அது அந்தி நேரம். வாழை மட்டையிலே லேசாக மினு மினு என்று மின்னிய பின் அந்த நேரத்திலே அப்படித் தெரிகின்றது. சுருக்கம் சுருக்கமாக இருப்பதால் நிஜமாகவே அது நாகப் பாம்பு போலவே தெரிகின்றது.

எல்லாம் விழுந்து அடித்து ஓடுகின்றார்கள். பாம்பை அடிக்க வேண்டும் கட்டையை எடு… கம்பை எடு…! என்கிறார்கள். ஒருவன் பெரிய கம்பால் அதை அடிக்கின்றான். கம்பிலே அடித்தவுடன் சுற்றி எங்கேயோ சென்று விட்டது… தெரியவில்லை.

காலுக்குள் சென்றது… இல்லை அங்கே போய்விட்டது என்று அலறிக் கொண்டுள்ளார்கள். ஆனால் அடித்தவுடன் சுற்றி மேலே சென்று தூரத்தில் விழுந்து விட்டது.

ஆனால் அந்தப் பக்கம் போனால் அது வாழை மட்டையாகத் தான் இருக்கின்றது. அவன் அதை அடிக்கவில்லை. எங்கேயோ போய்விட்டது… இல்லை இந்தப் பக்கம் போய்விட்டது…! என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த உணர்வுகள்… “நாம் சமைத்த உணர்வுகள் கண்ணிலே எதைக் காட்டுகின்றது…?” என்று இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

வேறு ஒன்றும் வேண்டியதில்லை. ஒரு பொருளை உங்களுக்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
1.கண்ணிலே சிறிது நேரம் அப்படியே உற்றுப் பாருங்கள்.
2.பார்த்துவிட்டுத் திரும்பி வேறு பக்கம் பாருங்கள்.
3.அந்தப் பொருள் சுவரிலே தெரியவரும்.

புள்ளிப் புள்ளியாக ஓட்டையிட்டு ஒரு பொருளை வைத்துக் கொள்ளுங்கள்… அடையாளம் தெரிந்து கொள்வதற்கு…! சிறிது நேரம் அதை உற்றுப் பாருங்கள்

பார்த்துவிட்டு அந்தப் பக்கம் பாருங்கள் அதே ஓட்டை அந்தப் பொருள் எல்லாம் தெரிய வரும்.
1.அதே பொருளைப் பார்த்து விட்டு நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
2.சுவரிலே பார்த்தால் அப்படியே தெரியும்.

இந்த உணர்வுகள் நம் கண்ணிலே அதனுடைய பிரதி பிம்பமாக அப்படித் தெரிய வருகிறது.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வார்கள்.
1.அந்த உணர்வின் தன்மை தனக்குள் வரும் போது
2.குவித்து… உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

பல கோடிச் சரீரங்கள் கடந்து மனிதனான பின்
1.உணர்வின் நோக்கங்கள் கவர்ந்து கொண்டது எதுவோ…
2.அந்த உணர்ச்சிகளைத் தனக்குள் நுகரச் செய்து
3.இந்த உணர்வுக்கொப்பவே “ரூபத்தைக் காட்டுகின்றது…”

இதையெல்லாம் அனுபவித்துச் சொல்லுகின்றேன். குருநாதர் கொடுத்த சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்பதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பூமியில் உள்ள நீர் எங்கோ ஆழத்திற்குப் போய்க் கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் பூமியின் நீர் வளங்கள் ரொம்ப மோசமாகப் போவதால் நம்முடைய நினைவுகளை எல்லாம் மேகங்களில் படரச் செய்து கரும் மேகங்களைக் கூடச் செய்து மழைகளை பெய்ய வைத்தே ஆக வேண்டும். அது நம்மால் முடியும்…!

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் இந்த உணர்வை ஊட்டி உங்கள் நினைவினை மேகங்களில் செலுத்தச் செய்து அதன் உணர்வின் துணை கொண்டு மழை பெய்யத் தியானிக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.

நீங்கள் எல்லோரும் தியானத்தில் இருந்து… தியானித்த அந்த உணர்வுகளை மேகங்களில் கலக்கச் செய்து
1.நல்ல மழை பெய்ய வேண்டும்
2.இந்த நாடு செழிக்க வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

நாம் தியானிக்கும் இந்த உணர்வின் வழி இங்கே மழை பெய்தாலும்
1.இங்கே நாம் வாழும் பகுதிகளில் கடும் தீமைகளை விளைவிக்கும் தீய அணுக்கள் வளராது அதைத் தடைபடுத்தவும் உதவும்.
2.இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளையும் குறைக்கச் செய்யும்.
3.ஏனென்றால் உங்களுக்குண்டான திறமைகளை நீங்கள் இதிலே பார்க்கலாம்.

மனிதனான நாம் “எதை அழுத்தமாக எண்ணுகின்றோமோ…” அந்த வலிமையின் தன்மை கூடி இந்த எண்ண அலைகளை நாம் எங்கே நினைவைச் செலுத்துகிறோமோ அங்கே இது பாய்கின்றது. அந்த உணர்வுகள் படர்கின்றது. மழை பெய்ய வைக்கின்றது.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் விண்ணிலே நினைவைச் செலுத்தி அவர்களின் அருள் வட்டத்தில் இருந்து நம் உடலைக் காக்கவும் நம் நாட்டைக் காக்கவும் முடியும். ஏனென்றால் ஆதியிலே……
1.வானவியல் தத்துவம் பூவியியலாக மாறினாலும்
2.புவியியலின் உணர்வு கொண்டு தான் மனிதன் உயிரியலாக மாற்றிக் கொண்டது.
3.ஆகவே வானவியல் உணர்வு நமக்குள் வரும் போது அதை வைத்து
4.இந்தப் புவியியல் நிலைகளை மனிதர்கள் நம்மால் சீராக வைக்க முடியும்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அக்காலத்தில் வாழ்ந்த அகஸ்தியன் இந்த பூமியினைத் திருப்பிth தனக்குகந்த நிலைகள் வைத்தது தான் இன்று வரையிலும் இந்தப் பூமி சீராக ஓடிக்கொண்டு இருக்கின்றது.

இருந்தாலும் விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் பூமியின் மையப் பகுதியில் விஷக் கதிரியக்கங்கள் அதிகமாக ஊடுருவிச் சென்று விட்டது. அதனால் சிறிது காலத்தில் பூமியிலே திசை மாற்றம் வரப் போகிறது…!
1.ஒரு டிகிரி மாறி விட்டாலே போதும்….
2.கடல் நீரும் மாறும்.
3.நிலப் பகுதிகளில் நீர்கள் அரிக்கும்.
4.மனித உணர்வுகள் மாறும்.
5.இந்த மனிதனின் நிலைகளில் பெரும் பகுதி மாற்றங்கள் வரும்.
6.அதற்குள் நீங்கள் தியானித்து பூமியின் திசை மாறாது சீராக வைக்க முடியும்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியை நீங்கள் கவர்ந்து மழை பெய்யக்கூடிய ஆற்றல் பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வின் ஆற்றல்களை ஒன்று சேர்த்துக் கலக்கப்படும் போது வரும் அதே ஆவியின் நிலைகள்
1.உங்கள் உணர்வின் அலைகளாக மேகங்களாகக் கூட்டப்பட்டு
2.அது பெரும் மழையாகப் பொழியும்.

அதே வழி கொண்டு
1.இந்த பூமியின் (டிகிரி) திசை மாற்றத்தையும் மாற்றலாம்.
2.அன்று அகஸ்தியன் செய்தது போன்று மீண்டும் இந்தப் பூமியில் வாழும் மக்களை நீங்கள் சீராகவும் வைக்க முடியும்.

உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது

 

ஒரு ஆடு புலியைப் பார்க்கின்றது… புலியோ அதைக் கொன்று தின்னும் நிலை பெற்றது. அதனிடமிருந்து தப்பிக்கும் சிந்தனை ஆட்டிற்கு வருகிறது.

புலியின் உணர்வே நினைவாகின்றது. நினைவின் உணர்வே உடலாகின்றது… ஆட்டின் உடலில் அது வலுப்பெறுகின்றது. அந்தச் சிந்தனை கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க அதனின் வலுப்பெறுகின்றது… அதுவாகின்றது.

மனிதர்களான நாம் இந்த உடலிலிருக்கும் போது
1.எனக்கு இப்படிச் செய்தானே… துன்பம் கொடுத்தானே என்ற இந்த சிந்தனை இந்த உணர்வின் தன்மை வருகிறது.
2.இந்த இடத்தை நாம் வலுவாக்குகின்றோம்… அந்த உடலுக்குள் சென்று விடுகின்றோம்.

ஆனால் உடலிலே வந்த தீமைகளை அகற்ற “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று
1.அந்த உணர்வின் தன்மை… நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
2.அதனின் உணர்வாகி அதனின் நிலைகள் கொண்டு மனித உடலில் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த உடலிலிருந்து தான் ஒளியாக மாற்றி அமைக்க முடியும். இன்னொரு உடலுக்குள் இழுக்கப்பட்டு விட்டால் மீண்டும் வேறு ஒரு உருவாக உயிர் நம்மை மாற்றிவிடும்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை பெறுகின்றோம்.
1.அங்கே… உடல்கள் உருவங்கள் மாறுகின்றது.
2.இங்கே… ஒளியின் தன்மை பெறுகின்றோம்.

உயிர் ஒளியானது… மனிதனான பின் அறிவாக அறிந்து கொள்கிறோம். அறிந்திடும் ஒளியின் உணர்வாக விளைகின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலில் “சிந்தனை வந்த பின்பு தான்…” இதிலே உறைந்த உணர்வுகள் அதனின் இயக்கத்திற்கு வருகின்றது.

நான் கோபமாக இருக்கின்றேன் என்று வைத்துக் கொண்டால் எனக்கு அது சாதகமாக இருந்தால் நல்லது. நான் தவறு செய்கின்றேன்… நண்பன் என்னுடைய தவறுக்கு ஒத்துழைத்தால் இது நல்லதாகின்றது.

ஆனால் மாறாக… என் தவறைச் சுட்டிக் காட்டும் நிலை வந்தால் எனக்கு எதிரியாகின்றது. ஆக நல்லது நல்லதாக எண்ண முடியாது… கெட்டது கெட்டதாக எண்ண முடியாது.
1.தனக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்…
2.ஒத்து வரவில்லை என்றால் எதிரியாக்குகிறோம்.

மிளகாய் காரமானது தான். அதை அளவுடன் இணைத்தால் நல்லதாகிறது அதிகமாகப் போட்டுவிட்டால் ஏற்றுக் கொள்வதில்லை… குறைத்துப் போட்டு விட்டால் சப்… என்று ஆகிவிடுகிறது.

நல்லது நல்லதும் அல்ல… கெட்டது கெட்டதும் அல்ல.

1.ஒளியின் சரீரம் பெற்ற… என்றுமே நிலையாக இருக்கும் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.
2.உயிர் ஒளியாக நின்று எதையெல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ “உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது…”

புறநிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள்… விண் செல்லும் மார்க்கத்தை அறிய முற்படுங்கள்

 

அன்று… ஆதிசங்கரரும் கோலமாமகரிஷியும் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு தங்களுக்குள் விளைய வைத்ததைத் தன் சீடர்களுக்குள் பதிவு செய்தார்கள்.

அவர் மீது பற்று கொண்ட சீடர்கள்…
1.அவர்கள் எதை உணர்த்தினார்களோ அதைக் கொண்டு அந்த ஆன்மாவை உந்தித் தள்ளுகின்றார்கள்…
2.இருவரும் சப்தரிஷி மண்டலம் அடைந்தார்கள்.

நமது குருநாதர் எத்தனையோ கோடி நிலைகள் பெற்றிருந்தாலும்… “எனக்கு அந்தக் குருவின் ஆசி இருந்தால்…” மாட மாளிகைகளை… கூட கோபுரங்களைக் கட்டி விடுவேன்
1.”அவருடைய நாமத்தை உலகமெல்லாம் பரப்புவேன்…!” என்ற பக்தர்கள் தான் சிஷ்யர்கள் தான் இன்று பெரும்பகுதி உண்டு.
2.அதனால் பலன் இல்லை…!

அறிந்து கொள்ளும் ஆற்றல்கள்…. இந்த வாழ்க்கையில் அவர் எப்படி மந்திரம் செய்கிறார்…? இவர் என்ன செய்கிறார்…? அவர் என்ன செய்கிறார்…? என்ற நிலைகளை அறிய உங்கள் நாட்டத்தைச் செலுத்த வேண்டாம்.

காரணம்… எம்மை நாடி வருவோரின் ஏக்கம் எதுவோ அதன் வழி தான் அவருக்குள் உணர்வுகள் பதிவாகின்றது.

மந்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால் அதிலே தான் நோக்கம் இருக்கும்… மந்திரத்தின் செயலைக் கேட்க வேண்டும் என்றால் அது ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று தான் பொருள்.

அதன் மேல் எண்ணம் கொண்டு விவரங்களைத் தெரிந்து கொண்டால் அது தான் வளரும். இதிலிருந்து விடுபடும் வழிமுறைகள் எப்படி…? என்று கேட்டால் விடுபடும் உணர்வுகள் வளரும்.

அதாவது…
1.என்னிடம் கேட்ட உணர்வு கொண்டு தான் உங்களுக்குள் அது பதிவாகும்.
2.“கஷ்டமாக இருக்கிறது…” என்று சொல்லிக் கேட்டால் அந்தக் கஷ்டத்தையே வளர்க்க உதவும்.
3.கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டறிந்தால் “கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் விளையும்…”

கேட்டறிவோர் உணர்வின் தன்மை அது எதுவோ அதுதான் வளரும். அதனால் தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய் என்று சொன்னது.

என் கஷ்டம் என்ன விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…! என்றால்… அது வந்து விடும்.
1.இந்த மனித வாழ்க்கையில் இருந்து “நான் நல்ல நிலை பெற முடியுமா… மீள முடியுமா…? சந்தேகம்…!
2.மீள முடியாது என்ற நிலைகளில் “வலு இழந்து விட்டால்…” மீள முடியும் என்ற நிலை வராது.

ஆனால் மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்பெற்றுக் கொண்டால் அந்த எண்ணம்… கொடுக்கும் வாக்கின் தன்மையைப் பதிவு செய்தால் அதன் வளர்ச்சிக்கு நிச்சயம் வரும்.

பெரும்பகுதியானவர்கள் இன்று கஷ்டத்தைப் பற்றித் தான் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது எப்படி ஆனது…? என்ன ஆனது…? என்று கேட்கிறார்கள்.

உணர்வின் தன்மை இயக்கம் எப்படி ஆகிறது…! என்பதைப் பற்றி பல விளக்கவுரைகளை… பல முறைகளில் கொடுத்துள்ளேன். இது அவர்களுக்குள் பதிவாகவில்லை என்று தான் பொருள்.

1.இதிலிருந்து விடுபட்டு… நாம் மேற்கொண்டு விண் செல்லும் மார்க்கங்களை எண்ணி ஏங்கி… அதைப் பெற்று
2.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் அது பதிவாகும்.
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் உடலுக்குள் அந்த நற்சக்திகள் விளையும் தன்மை வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மின்னல் ஒரு மனிதனைத் தாக்கினால் அந்த உடல் கருகி விடுகின்றது. ஆனால் உயிர் கருகுவதில்லை. அது துடித்துக் கொண்டே தான் இருக்கும். (உயிருக்கு அழிவே இல்லை…!)

பின் உடலை விட்டுச் சென்ற பின் இந்தக் கருகிய உணர்வு கொண்டு மீண்டும் புழுவாகப் பூச்சியாகத் தான் அது பிறக்கும். மனித உருவுக்கு வர முடியாது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் வலு ஏற்றிக் கொண்டால்
1.அந்த மின்னலையும் நமக்குள் மின் கதிராக மாற்றி
2.மின்னலில் வரும் எதிர் நிலையை மாற்றி நமக்குள் தீமைகளை வென்றிடும் சக்தியாகப் பெற முடியும்.

அதாவது மின்னல் பட்ட பின்… உடலையோ மரத்தையோ மற்றதைக் கருகச் செய்கிறது. மின்னல் பூமியின் நடு மையம் ஊடுருவிச் சென்றால் அங்கே கொதிகலன்களாக மாறிப் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

அத்தகைய மின்னலின் தன்மையும் தனக்குள் கவர்ந்து எதனையுமே வென்றிடும் அருள் சக்தியாகப் பெற முடியும். அத்தகைய பேரருள் உணர்வைத்தான் ஞானத்தின் உணர்வாக உங்களுக்குள் பதியச் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

பேரருள் என்றால் “அனைத்தையும் இயக்கக்கூடிய.. அறிந்து கொள்ளக்கூடிய சக்தி…!” என்று பொருள். அப்படி ஆனது தான் துருவ நட்சத்திரமும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் வளரும் சப்தரிஷி மண்டலமும்.

சூரியன் எப்படி மற்ற கோள்களையும் நட்சத்திரங்களையும் தன்னுடன் இணைந்து வாழச் செய்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வினை எடுத்து நமக்குள் வளர்த்துக் கொண்டால் அதன் அரவணைப்பில் சென்று நாமும் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
1.இனம் இனத்தைத் தான் சேரும்.
2.இனம் இனத்தைத்தான் வளர்க்கும்.

வேதனை என்ற உணர்வை விளைய வைத்தால் அந்த வேதனைப்படுத்தும் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த இனத்தின் ரூபத்தைப் பெற உயிர் அங்கே அழைத்துச் சென்று அந்த உடலைப் பெறச் செய்கிறது.

அதைப் போல துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும்
1.பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டால்… அதன் வலுவைப் பெற்றால்
2.அந்த இனத்தோடு நாம் சேர்க்கப்பட்டு
3.நம் உடலில் வரும் இருளை அகற்றி மெய் வாழ்க்கை வாழ முடியும்.

உங்களை நம்புங்கள். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ உயிர் உங்களை அதுவாகவே உருவாக்குகின்றது அதன் வழியே உங்களை வழி நடத்துகின்றது. பேரருள் பெற்றுப் பேரொளியாக மாறுங்கள்…!

பெண்கள் துணை இல்லையென்றால் சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்

 

தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதைப்போல உயிருடன் ஒன்றி இணைந்து வாழ்வதே வசிஷ்டரும் அருந்ததியும் என்பது.

உடலில் இருக்கும் பொழுது தான் ஆண்பால் பெண்பால். உடலை விட்டுச் சென்று விட்டால் உறைந்தது ஆண்பால் தான்.

1.பெண்பால் என்பது உணர்வின் உணர்வுகள் இங்கே வருவது தான்.
2.அது இரண்டற இணைந்து விட்டால் ஆண்பால் பெண்பால் சேர்ந்து கலந்தே செயல்படும்… “சிவசக்தி…” என்பார்கள்.

ஆகவே பெண்கள் தான் ஆண்களைக் காட்டிலும் பெரும்பகுதி தனக்குள் சக்தி வாய்ந்த நிலையை உருவாக்கி ஏழாவது நிலை பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.

ஆண்களைப் பற்றித் தான் பெரும்பகுதி சொல்கின்றார்கள்… பெண்கள் ரிஷித் தன்மை பெற்றது பற்றிச் சொல்லவில்லையே…! என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம்… சாஸ்திர விதிகள் அனைத்துமே பெண்களைப் பற்றி இழுக்குப்படுத்தித் தான் வெளிப்படுத்தி இருப்பார்களே தவிர உயர்ந்த நிலைகளைச் சொல்வதில்லை.

பதிவிரதையாக இருக்க வேண்டும் உத்தமியாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்குத் தான் கட்டுப்பாடு… ஆண்களுக்கு அப்படி இல்லை. எல்லா மதத்திலும் அப்படித்தான்… பெண்களைத்தான் பழித்து பேசியிருப்பார்கள்.

இன்று ஆணாக இருக்கலாம்…
1.ஆனால் உருவம் ஆகப்படும் போது பெண்கள் மீது மோகம் கொண்டால் அடுத்து இவர் பெண்ணாகத்தான் பிறப்பார்.
2.இன்று ஆண் பெண்ணாகப் பிறக்கின்றான்.

இதைப் போல சக்தி என்பது பெண்பால் தான். எது கவர்ந்து கொண்ட சக்தியோ வசிஷ்டரும் அருந்ததி போல கவர்ந்து கொண்ட சக்தியாகத்தான் இந்த உணர்வுகள் ஈர்க்கும்.
1.பெண்கள் தான் ஏராளமானோர் சப்தரிஷி மண்டலத்தில் (ஆண்பால் பெண்பால்) சிவசக்தியாக உணர்வின் இயக்கமாக இயக்கி வருகின்றனர்.
2.தன் கணவனின் எண்ணம் கொண்டு இணைந்திட்ட உணர்வுகள் சிவ சக்தியாக இயங்கிக் கொண்டுள்ளார்கள்.
3.தான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக சிவசக்தியாக இன்றும் இருக்கின்றார்கள்.

ஆண்கள் அங்கே குறைவுதான்… பெண்கள் தான் அங்கே அதிகமாக இணைந்துள்ளார்கள். ஆண்கள் ஒளி நட்சத்திரமாக ஆன நிலைகள் குறைவுதான். பெண்களுடைய சக்தி உறுதி கொண்டு தான் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தங்கள் உடலிலே ஒரு கஷ்டம் வந்தாலும் பெண்கள் அதை எண்ணுவதில்லை. விட்டுக் கஷ்டத்தைப் போக்க மில்லில் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் காலையில் எழுந்து குடும்பத்திற்கு வேண்டிய அனைத்தையும் சமைத்து எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அவர்களும் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு முதலிலே வந்து உற்பத்தியையும் அதிகமாக எடுத்து விடுகின்றனர்.

பெண்களுக்கு வலிமை அதிகம் ஆண்களுக்குக் குறைவுதான். நான் தவறாகச் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை…! இயற்கையின் உணர்வின் சக்தி அதுதான்.

அவர்கள் உடலில் முடியவில்லை என்றாலும் வலுவான எண்ணங்கள் கொண்டு சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறக்கூடிய தகுதி அவர்களுக்குத் தான் உண்டு.
1.எந்த அளவுக்குப் பெண்கள் தனக்குள் அதை வளர்க்கின்றார்களோ இந்த எண்ணம் உலகைக் காக்கும் நிலைக்கே வரும்.
2.சக்தி இல்லை என்றால் சிவம் இல்லை.

மற்றதை வளர்த்திடும் நிலையாக தன் இனத்தை வளர்த்திடும் காத்திடும் நிலைகள் பெற்றவர்கள் தான் பெண்கள். எதனின் உணர்வு கொண்டு கருத்தன்மையாகிக் குழந்தையை உருவாக்குகின்றார்களோ அந்த மெய் உணர்வை வளர்க்கும் ஆற்றல் அவர்களுக்குத்தான் அதிகமாக உண்டு.

எதனின் பற்று அதிகமாகின்றதோ அதனின் தன்மை கொண்டு வளர்த்திடும் சக்தியும் சக்தி அதிகமாகின்றது. பெண்கள் தான் அதிக அளவில் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்துள்ளார்கள்.

வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இந்த உடல் தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுதான் விசிஷ்டாத்வைதம் என்று சொல்வது. எந்த உணர்வின் தன்மையை உடலாக ஆக்கியிருக்கின்றதோ… சக்தியாக எடுக்கின்றோமா… இது இணைந்தே அங்கே செயல்படும்.

ஆக பெண்களுக்கு தான் அதிகச் சக்தி உண்டு…! ஆனால் இதனின் விளக்கம் மதங்களிலே காண முடியாது… தரம் குறைத்துத் தான் காட்டி இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடிமையாக்கித் தான் காட்டியிருப்பார்கள். ஆனால்
1.அவர்கள் துணை இல்லை என்றால்
2.சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித உடல் வாழ்க்கையில் சிறிதளவு நாம் பிசகினாலும் இன்னொரு உடலைத்தான் பெற முடியுமே தவிர மீண்டும் வேறு ஒரு உடல் பெற்றாலும் மனிதனாக அடுத்து வர முடியாது.

ஏனென்றால்… “இன்று விஞ்ஞான உலகில் காற்று மண்டலமே நச்சுத் தன்மை அடைந்திருக்கப்படும் பொழுது…” நாம் சப்தரிஷி மண்டலத்தை அடையத் தவறினால் நாம் இந்தப் பூமியில் மீண்டும் விஷத் தன்மைகள் பரவி இருக்கும் இந்த நேரத்தில் வேதனை என்ற உணர்வு அதிகரித்து மனிதனுக்குப் பின் பாம்பினங்களாகப் பிறக்கும் தன்மையே வருகின்றது.

ஆனால் மனிதனாக உருவான நிலையில் இந்த உயிர் எத்தனையோ கோடி உடல்களிலிருந்து
1.“தீமைகளை நீக்க வேண்டும்… தீமைகளை நீக்க வேண்டும்…!” என்று
2.அந்தந்த உடல்களிலிருந்து எண்ணி ஏங்கிய உணர்வுக்கொப்ப
3.தீமையிலிருந்து விடுபடும் மனித உடலாக உருவாக்கியுள்ளது.
4.ஆகவே இந்த உடலில் நம்மை அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பது நமது கடமைகளாக இருக்க வேண்டும்.

இந்த உயிரின் இயக்கம் தான் நமது உடல். வாழ்க்கையில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கொப்ப எந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தோமோ இந்த உயிர் அந்தந்த உணர்வுக்கொப்பப் பரிணாம வளர்ச்சி அடையச் செய்தது.

ஆகவே மனிதனான பின் நமது பரிணாம வளர்ச்சி எதுவாக இருக்க வேண்டும்…?

உயிர் ஒளியானது. நம் உணர்வுகளை ஒளியாக்கி என்றுமே ஒளியின் உடலைப் பெறுவது தான் நமது பரிணாம வளர்ச்சியின் கடைசி எல்லை. ஆனால் அந்த ஒளி உடலை நாம் பெற முயற்சிக்கின்றோமா…?

மனிதனை உருவாக்கிய இந்த உயிருக்கு வேதனை என்ற உணர்வை ஊட்டினால் வேதனைப்படும் உணர்ச்சிகளாக வளர்த்து வேதனைப்படச் செய்யும் அந்த உயிருடன் ஒன்றித் தான் நாம் வாழ்கின்றோம்.
1.வேதனை உணர்வுகளை முழுமையாக்கிய பின்
2.இந்த உடலை விட்டு உயிர் வெளிவரப்படும் பொழுது
3.வேதனையை அனுபவிக்கும் உடலாகத்தான் அடுத்து மாற்றுகின்றது.

ஆகவே
1.வேதனையற்ற உணர்வு கொண்டு அவனுடன் அவனாக நாம் சேர்வதே நமக்கு நல்லது… அது தான் கல்கி.
2.ஏனென்றால் உயிர் ஒளியாக இருக்கின்றது.
3.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
4.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை வேதனையாகவோ பகைமையாகவோ வெறுப்பாகவோ மாற்றக் கூடாது.

ஒளியாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

இந்தப் பிறவிக்கடனை நீங்கி நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே பேரொளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு நிமிடமும் நுகர்ந்து பழக வேண்டும். அப்பொழுது நம் உடலில் வரும் அந்த இருளை நீக்கும் வலிமையைப் பெறுகின்றோம்.

இதைப் போல் நாம் தியானத்தின் மூலம் அடுக்கடுக்காக எடுத்துக் கொண்ட வலிமை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து
2.அந்த நஞ்சுகளைக் கரைக்கும் தன்மைகள் வளர வேண்டும்.
3.அவர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலம் அடைந்தால் அங்கிருந்து வரும் பேரருள் உணர்வை நாம் எளிதில் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றோம்.

உயிர் எப்படி ஒவ்வொரு உணர்வையும் தெளிவாக்குகின்றதோ அதே போல அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையை நம் உடலிலே வளர்க்கப்படும் பொழுது அந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் உடலாகவே நிலை பெறுகின்றது.

ஆக
1.என்றுமே ஏகாந்த நிலையாக
2.எதிர்ப்போ விருப்போ இல்லாத உணர்வை இந்த உடலில் வளர்த்து
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சேர வேண்டும்.

அது தான் கடைசி நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகள் அருள் சக்தியைப் பெற்று இந்த உடலுக்குப் பின் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும் என்று என்னுடைய சகோதரன் அதிகமாகப் பற்று வைக்கவில்லை.

அப்படி இருக்க வேண்டும்… இப்படி இருக்க வேண்டும்…! என்று இந்தக் கணக்கை தான் அவர் போட்டுக் கொண்டு இருந்தார்.

ஏனென்றால் நம்முடன் பழகிய அந்த உணர்வு வந்த பின் இந்த தியான வழி அன்பர்களின் உணர்வு துணை கொண்டு தான் அந்த ஆன்மாவை விண் செலுத்தி இந்த உணர்வின் தன்மை கரைத்தல் வேண்டும்.

ஏனென்றால் எனது சகோதரர் எனக்கு மூத்தவர் இங்கே தபோவனத்திலிருந்து பிரிந்தாலும் அவருக்கு இந்த எண்ணமில்லை.

என்னிடம் அவர் கேட்பார். எனக்கு அது இல்லை… இது இல்லை…! பையன் இப்படி இருக்கிறான்… அப்படி இருக்கிறான்… என்று சொல்லிக் கொண்டு இந்த உணர்வைத் தான் அதிகமாக வளர்த்தார். ஆனால் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும் என்ற பற்று அவருடன் இல்லை.

கடைசியில் “எனக்கு நெஞ்சு வலிக்கிறது…! என்று என்னிடம் சொன்ன போது நான் (ஞானகுரு) சொன்னேன்.
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
2.அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்…! என்று சொன்னேன்.
3.எனக்கு வலி இல்லை….! அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று எண்ணி
4.உடலுக்குள் அதைச் செலுத்துங்கள்..! என்று சொன்னேன்.

அவர் எங்கே…? நான் நெஞ்சு வலிக்கிறது என்று சொல்கிறேன்… நீ இப்படிச் சொல்கிறாயே என்கிறார்…!

யார்…? என்னுடன் கூடப் பிறந்தவர். நான் சொல்வதை இதை அவரால் எண்ண முடியவில்லை. காரணம் இந்த “உடல் பற்று தான்…” அவருக்குள் அதிகமாகியது.

80 வயது ஆகிவிட்டது…! நான் போகிறேன்… என்று
1.இனி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அங்கே போங்கள்…! என்று சொன்னேன்.
2.அந்த உணர்வு அவர்களுக்குள் கொஞ்சம் கூட எட்டவில்லை.

காரணம்… அவர் என் தாய் தந்தைக்கு ரொம்பத் தொல்லை கொடுத்து விட்டார். அதன் உணர்வு வரப்போகும் போது அந்த எண்ணங்கள் அந்த உறுதியான நிலைகள் மீண்டும் அவரைப் பிறவிக்கு இழுக்கும் தன்மை வந்தது.

இருந்தாலும் நம்முடன் அவர் வாழ்ந்த அந்த பழக்கத்தில் இருந்ததனால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் அவரை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விண் செலுத்த முடிந்தது. ஒளிச் சரீரம் பெறச் செய்ய முடிந்தது.

இதைப் போலத் தான் குடும்பங்களில் பற்று இல்லாமல் போனாலும் ஆன்மீக வழியில் அதாவது இந்தத் தியான வழி பற்றிலேயே இல்லாமல் இருந்தாலும் கூட உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்களை
1.அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் யாம் சொல்லும் (ஞானகுரு) இந்தத் தியானத்தை வழிப்படுத்தி
2.அந்த உயிரான்மாக்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
3.அவர் எப்படி இருந்தாலும் அந்த ஆன்மாக்களை… அந்தச் சூட்சம சரீரத்தை விண் செலுத்தி
4.இந்த உடலில் உள்ள நஞ்சுகளை அங்கே சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்திலே கரைத்து விடவேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நாம் அவசியம் விண் செலுத்தியே ஆக வேண்டும்.

போற்றுதல் என்பது புறத்திலே தள்ளுவது… “ஏங்குவது என்பது தன் அகத்திற்குள் விளையச் செய்வது…”

 

பல செடிகளின் உணர்வுகள் காற்றிலே படர்ந்து வரப்படும் பொழுது… சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது எதன் அளவுகோல் அதிகமாக ஏற்கின்றதோ அது கருவாகி ஒரு வித்தாகிறது.

மனிதனுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் கொண்டு மற்றவர்கள் தீமை விளைவிக்கும் செயல்களை உற்றுப் பார்க்கப்படும் போது
1.அது நம் நல்ல குணத்துடன் இணைந்து விட்டால் அடுத்து இந்த உணர்வின் இயக்கம்
2.எங்கே சண்டை போடுகின்றார்களோ அதை எல்லாம் பார்க்கும்படி செய்யும்.
3.அடிக்கடி அதனை எண்ணினால் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அது விளையும்.

ஒருவன் கொடூரமான செயல்களைச் செய்கின்றான் என்று பார்த்து அவனை வெறுக்கின்றோம். நல்லதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நாம் இருந்தாலும் அந்தக் கொடூர உணர்வுகள் அந்த நல்லதுடன் இணைந்த பின் “நல்ல உணர்வைக் காக்கக் கொடூரச் செயலைச் செயல்படும் உணர்வுகள்” நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஆன்மாவிலே இது அதிகமாகப் பரவப்படும் பொழுது இந்த உணர்வின் செயலாக்கமாக இது உருவாக்கப்பட்டு அதனின் உணர்வின் குணங்கள் நமக்குள் விளைகின்றது.

இதைப் போலத் தான்
1.தினந்தோறும் அடிக்கடி… மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்களைக் காத்திடும் உணர்வுகளில் இணைத்துக் கொண்டே வருகின்றோம்.
2.உங்கள் வாழ்க்கையில் இடர்படும் உணர்வுடன் எமது உபதேச உணர்வுகள் இடைமறித்து இணைக்கப்பட்டு
3.அந்த உணர்வின் நினைவாற்றல் கொண்டு அதிலே துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைத்து இணைத்து
4.தாவர இனங்களுக்கு உரமிடுவது போல உங்கள் நல்ல எண்ணங்களைக் காத்திட… அதை இணைத்து இணைத்துப் பதிவு செய்கின்றேன்.

அப்படிப் பதிவு செய்த நிலைகள் கொண்டு உங்களுக்குள் அது வளர்ச்சியாகும்.

ஒரு செடி தழைத்து வளர்ந்தாலும் அது குறுகிய காலத்தில் இறந்து விடுகின்றது. ஆனால் அதற்குள் விளைந்த வித்துக்கள் அந்தச் செடி மடிந்தாலும் விளைந்த வித்து காற்றிலே கலந்திருக்கும் தன் இனமான சத்தைக் கவர்ந்து இனத்தை மீண்டும் பெருக்குகின்றது. அது மடிவதில்லை…!

ஆனால் வித்து முழுமையாக மடிந்து விட்டால் செடியை மீண்டும் நாம் கொண்டுவர முடியாது.

இதைப்போல நமக்குள் இருக்கும் தீமையான உணர்வின் சத்தை முழுமையாக மடியச் செய்ய முடியும். அருள் ஞானிகள் உணர்வை இணைத்து விட்டால் தீமைகள் மறைகின்றது. முளைக்காத நிலைகள் தடைப்படுத்த முடியும்.
1.தடைப்படுத்தும் அந்த அருள் ஞானிகள் உணர்வைத் தான் உங்களுக்குள் இணைத்துக் கொண்டே வருகின்றேன்.
2.அவ்வாறு இணைத்திடும் நிலைகள் கொண்டு தீமைகளுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுத்திக் கொண்டிருந்தால் அது விளையாது.

ஒரு மனிதன் நம் மீது கோபப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். இரு நான் உன்னை என்ன செய்கின்றேன்…? என்ற நிலையில் அந்த உணர்வினை எனக்குள் இணைத்து விட்டால் என்னை இப்படிச் சொன்னான்… சொன்னான்…! என்று அதுவும் சேர்ந்து வளர்கின்றது.

அவனை அழித்திடும் உணர்வே செல்கிறது. நம்மைக் காத்திடும் நினைவுகள் நமக்குள் வளர்வதில்லை. அவ்வாறு காத்திடும் நிலைகளை இழந்து அழித்திடும் நிலையாகச் சென்று விட்டால் தனக்குள் இருக்கும் நல்ல குணத்திற்கு ஊட்டம் கொடுக்காது அதைத் தடைப்படுத்தி விடும்.

அழித்திடும் உணர்வுகளே மேலோங்கி மற்றொன்றை அழித்து உணவாக உட்கொள்ளும் மிருக உணர்வுகள் இங்கே விளைந்து விடும். உடலை விட்டுச் சென்றால் அடுத்து மனிதனல்லாத உடலாகத்தான் பிறக்க நேரும்.

அதே சமயம் மகரிஷிகள் மனித உடலிலேயே இருளைப் போக்கி ஒளியின் தன்மையாகச் சேர்த்து வளர்த்துக் கொண்டவர்கள். அதை இப்பொழுது உங்களுக்குள் இணைக்கின்றோம்.

சிறிது காலத்திற்கு உங்களுடைய நினைவை
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி
2.பதிவான உணர்வின் சக்திக்கு ஊட்டம் கொடுத்து அதனை நாம் கூட்டிப் பழகுதல் வேண்டும்.
3.அவ்வாறு சேர்த்தால் சிறிது காலத்தில் கவரும் சக்தியை அது பெற்றுவிடும்.
4.அவ்வாறு பெற்று விட்டால் நமது ஞானம் அதன் வழியிலேயே செயல்படுத்தும்.

செடிக்கு… அதற்குண்டான சத்தான நிலைகள் கொடுத்து உரமிட்டு அந்த வித்தினைத் திறன்பட உருவாக்கி விட்டால் அதை ஊன்றினால் மீண்டும் அதனுடைய இனமாக அது வளரத் தொடங்குகிறது.

இதைப் போலத்தான் அருள் ஞானிகளுடைய வித்தினை உரமாக உங்களுக்குள் இடப்பட்டு… உயர்ந்த சக்தியினை அவர்கள் பெற்ற நிலையினை உங்களுக்குள் இணைக்கச் செய்து வளர்க்கின்றோம்.

அதிலே உங்கள் நினைவு கூர்மையாக இருந்தால் தான் அது நன்றாக முளைத்து வளரும்.

மேலெழுந்த வாரியாகப் போட்டுவிட்டால் எறும்புகளோ மற்ற பறவைகளோ தின்றுவிடும்.
1.கேட்ட உபதேசங்களை மேல் மட்டத்தில் மட்டும் ஆகா…! என்று போற்றி விட்டால் அது முளைக்காது.
2.போற்றுதலை விடுத்து விட்டு அதைப் பெற வேண்டும் என்று ஏக்கத்தினைக் கொண்டு வந்தால் அது நன்கு வளர்ச்சி பெறும்.

போற்றுதல் என்பது புறத்திலே தள்ளுவது. ஏங்குவது என்பது தன் அகத்திற்குள் விளையச் செய்வது.

இதைக் கேட்டுணர்ந்தோர் எந்த அளவுகோல் கொண்டு நீங்கள் இதை ஏற்றுக் கொள்கின்றீர்களோ அந்த அருள் ஞானிகளின் வித்துக்கள் உங்களுக்குள் இணைந்து அதன் சத்தைக் கவரும் நிலையாக வளர்ச்சி பெற்று… உங்களுக்குள் நல்ல முறையில் இது பலன் தரும்.

சாமியைப் பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் புகழ்ந்த நிலைகள் கொண்டு ஏற்றுக் கொள்ளும்… கவர்ந்திடும் நிலையற்றுப் போய்விடும்.

1.தனக்குள் கவர்ந்திடும் அந்த நிலை இருந்தால்தான் அது ஆழப் பதியும்
2.அந்த உணர்வின் துணை கொண்டு புவியின் ஈர்ப்பால் அந்த ஞானிகள் உணர்வினைக் கவர முடியும்.

இந்த உடலின் ஈர்ப்புக்குள் நாம் பதிந்து கொண்ட உணர்வு எதுவோ அதைக் கவர்ந்து அதன் நிலைகளில் இது விளையச் செய்யும். அதன் வழி செல்வது தான் சிறந்த நிலைகள்.

மகரிஷிகள் உணர்வை இணைத்து இணைத்துச் சிறிது காலம் செயல்படுத்தினால் தன்னிச்சையாக வளரும் தன்மையும் உடலை விட்டு அகன்ற பின் அந்த உணர்வின் வித்துக்கள் தீமை அகற்றி மெய் ஒளியின் உணர்வாக நம்மை அடையச் செய்யும்.

இந்த உடலில் இருந்து தான் நாம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

யாம் உபதேசித்ததை
1.நாள் முழுவதற்கும் உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.சந்தர்ப்பத்தால் கேட்டறிந்த தீமைகள் விலக வேண்டும்
3.தூய்மையான நிலைகள் நமக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

வேலை செய்யும் போது அழுக்குப்பட்டால் எப்படி உடனுக்குடன் அதைக் கழுவுகின்றோமோ அதைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி கொண்டு எண்ணத்தால் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தச் சத்தைக் கூட்டினால் தான் இது விளையும்.

ஒரு தரம் எண்ணினேன் பதிவாக்கிக் கொண்டேன் என்று தன்னிச்சையாக விளைவது வேறு. அதற்குப் பதில் எண்ணத்தால் நாம் கவர்ந்து அதை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

உணர்வின் இயக்கமாக செடியில் கலந்த பின் (உரங்கள் இணைந்த பின்) அது எப்படி வளர்ச்சிக்கு வருகின்றதோ அதைப்போல
1.நம் உடலில் அது முழுமையாக விளையும் பருவம் எட்டும் வரையிலும்
2.எண்ணத்தால் நாம் மகரிஷிகளின் சக்திகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.
3.அதற்கு உணவை ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு தன் இனமாக அது பெருக்கி விட்டால் அதற்குப் பின் உங்கள் எண்ணம் தேவையில்லை… தன்னிச்சையாக வளரத் தொடங்கும். தூய்மையான ஒளியின் உணர்வாக நமக்குள் அது விளைந்து விடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞானி என்ன செய்கிறான்…?

மனிதனை 1500 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழ வைக்கலாம்…! என்று சொல்கிறான். மற்ற உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களைச் சேர்த்துக் கவர்ந்து மனித உடலில் நீடித்த நாள் வாழும் வழிக்கு அந்த அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வருகிறான்.

இந்த அணுக்களின் பெருக்கத்தை இப்படிக் கொண்டு வரப்போகும் போது 1500 ஆண்டுகள் நாம் வாழலாம் என்று சொல்கிறான்.

அதர்வண வேதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டவன் என்ன செய்கிறான்…?

இன்னொரு மனித உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை மந்திரங்களாகப் பிரித்து எடுத்து அந்த உணர்வை வலிமையாக்கி எந்த உடலுக்குள்ளும் போய் இருந்து அது சாகாக் கலையாக அடுத்த அடுத்த உடலுக்குள் சென்று “ரொம்ப நாள் நீடித்து வாழலாம்…” என்று சொல்கிறான்,

மானை ஒரு புலி அடித்துச் சாப்பிட்டால் அந்த மானின் உயிரான்மா புலியின் உடலுக்குள் போகின்றது. அதைப் போல அன்றைய ஒவ்வொரு அரசனும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை கற்றுக் கொண்டவர்கள்.

ஒரு உடலுக்குள் இந்த உணர்வு வலுவாகி விட்டது என்றால் அந்த உடலுக்குள் சென்று அதை அடக்கி அங்கே ஆட்சி புரிவது.

அப்படிப் போனாலும் அந்த உடல் ரொம்ப பின்னமாகித் தாங்கவில்லை என்றால் அதிலே சேர்த்துச் கொண்ட உணர்வு போய் அடுத்து இன்னொரு உடலுக்குள் போகும். சாகாக் கலையாக சுகத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.

மனித உடலில் இருந்தே சர்வத்தையும் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்கிற நிலைகளில் போனவர்கள் தான் அந்த அரசர்கள்.

இப்படி வந்தது தான் எகிப்தில் எடுத்துக் கொண்டால் இறந்தவர்களின் உடல்கள் அழிந்து போகாதபடி பத்திரப்படுத்தி வைக்கின்றார்கள்.

அதாவது இந்த உடலில் இருந்து போய் விட்டோம் என்றாலும் மறுபடியும் இந்த உடலிலே புகுந்து நாம் வர வேண்டும் என்ற நிலைகளுக்குப் பத்திரமாக வைக்கின்றார்கள்.

உதாரணமாக… குருமார்கள் என்று சொல்லக் கூடியவர்களை எடுத்துக் கொண்டாலும் மந்திரங்களைச் சொல்லி முழுமையாக்கிக் கொள்வார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட மந்திரத்திற்குப்பின் அதே கூடுவிட்டு கூடு பாயும் நிலைகளுக்கு அதற்கென்று தன் சீடர்களை நியமித்து அவர்களை மந்திரம் சொல்லச் சொல்வார்கள்.

தனக்கு வயதாகிப் போய் விட்டது என்றால் அந்த மந்திரத்தைச் சொல்லச் சொல்லி அதற்கு என்று மயக்க மருந்து கொடுத்துச் சிறுகச் சிறுக குறைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிக் குறைத்த பின் உச்சி வழியாக உயிர் வெளியே போக வேண்டும் என்ற நிலையில் மண்டையில் தேங்காயை உடைக்கச் சொல்வார்கள். தேங்காயை உடைத்தால் அது “கபால வழி மோட்சம்…!’ என்பார்கள்.

யார் அடிக்கிறாரோ இறக்கிற பொழுது அந்த எண்ணம் இங்கே வந்ததும் அந்தச் சீடன் உடலுக்குள்ளே வந்து விடும். வந்த பின்னாடி அவர் உடலிலிருக்கும் பொழுது அவர் நடத்திய வழியை எல்லாம் இந்த உடலிலிருந்து மீண்டும் நடத்தும்.

1.இறந்த உடலைச் சமாதியாக வைத்துக் குரு பூஜை செய்வார்கள்.
2.அந்தக் குருவையே வணங்கி அவருடைய அணுக்களைப் பெருக்கிக் கொண்ட பின் அந்த அணுக்கள் பூராம் சீடனின் உடலுக்குள் சேர்ந்து கொள்ளும்.
3.விஞ்ஞானி அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வந்து எப்படி 1500 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று கொண்டு வருகின்றானோ
4.அதே மாதிரித் தன் அணுக்களின் பெருக்கத்தைக் கொண்டு வந்து இங்கே இந்தச் சீடனின் உடலுடன் சேர்த்து இரண்டும் ஐக்கியமாகின்றது.

இவன் போன பின் அடுத்து ஒரு சீடன் வந்தான் என்றால் இதற்கு அடுத்து அதைச் சேர்த்து அந்த உடலையும் ஆட்சி புரியும். இதைத்தான் “குரு ஐக்கியம்…!” என்று சொல்வார்கள்.

இப்படிச் சாகாக்கலையாகப் போய்ச் சுகத்தை எப்படி அனுபவிக்கின்றார்கள் என்றும் பல உடல்களில் விஷத்தின் சேமிப்பு அதிகமான பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன மாதிரி மலைப் பாம்பின் உடலாகவும் சில விஷ ஜெந்துக்களாகவும் எப்படி ஆகிறார்கள்…? என்றும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் தெளிவாகக் காட்டுகிறார்.

ஆகையினால் இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.

1.முதலில் உயிரின் இயக்கம் ஆவது கல்கி ஒளி.
2.அதிலிருந்து பல உடல்களை எடுத்துத் தீமைகளை நீக்கி நீக்கி
3.அந்த அந்த உடல்களில் அந்த அறிவின் தெளிவாகி அந்த உடலைக் காக்கும் உணர்வுகள் வளர்ந்து
4.இப்படிக் கோடிக்கணக்கான உடல்களை எடுத்து எடுத்து மனிதனாக வரப்படும் போது எல்லாவற்றையும் அறிந்திடும் கார்த்திகேயா

நமது பிரபஞ்சத்தின் முழுமையும் நம் உடலிலே இருக்கிறது. அதில் எதை முன்னணியில் கொண்டு வருகிறோமோ அது நமக்குள் அறியும் சக்தியாகப் பெறுகின்றது.

இந்தப் பிரபஞ்சம் பிற மண்டங்களிலிருந்து மற்ற சக்திகளை எடுக்கிறது. பிற மண்டலங்களில் இருந்து வருவதை 27 நட்சத்திரங்களும் கவருகிறது.

அந்த 27 நட்சத்திரங்களும் வெளிப்படுத்துவதைச் சூரியன் கவருகிறது. அந்த அணுக்களின் தன்மை வரும் போது உயிரணுக்கள் தாவர இனங்களின் சத்தை எடுத்து நம் உடலாக மாற்றுகின்றது.
1.இதே உணர்வின் இயக்கம் நம் உடலிலும் பெருகுகிறது.
2.ஆகவே இந்தப் பிரபஞ்சம் எப்படியோ இந்த உயிர் இந்த உடல் ஒரு பிரபஞ்சம் என்ற நிலையிலே இயக்குகிறது.

இவை எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் கண்ட பேருண்மைகள். அவன் அகண்ட அண்டத்தின் ஆற்றல்களைப் பெற்று உயிரைப் போலவே தன் உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

1.சூரியக் குடும்பமே அழிந்தாலும் மற்ற எது அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலமும் அழியாது.
3.அது தான் வேகா நிலை – கல்கி் என்பது.

ஆகவே நாம் அந்த அகஸ்தியனைப் போல வேகா நிலை அடைய வேண்டுமே தவிர சாகாக்கலை அடையக் கூடாது. ஞானிகளும் மகரிஷிகளும் எப்படி ஒளியாக வாழ்கின்றார்களோ அதைப் போல நாமும் உயிருடன் ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.

இன்னொரு உடலுக்குள் சென்று மீண்டும் உடல் பெறும் நிலைக்கு வரக் கூடாது. இது முக்கியம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் எல்லாவற்றிற்கும் பொதுவானதே…! எது எது பூமியில் உருவாகியுள்ளதோ அதிலிருந்து வெளிப்படும் அனைத்தையும் அலைகளாக மாற்றி (பூமியில் உள்ள காற்று மண்டலத்தில்) எடுத்து வைத்துக் கொள்கிறது.

பின் பூமியிலே வளரும் வித்துக்களுக்கு… தான் கவர்ந்து வைத்திருக்கும் அலைகளை உணவாகக் கொடுத்து… அதனின் இனத்தை வளர்த்துக் கொடுக்கும் திறன் பெற்றது சூரியன்.

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்தும் கோள்களிலிருந்தும் வரும் உணர்வுகளில் கலந்துள்ள நஞ்சினை மாற்றி அவைகளை ஒளியாக மாற்றும் போது
1.எல்லாவற்றையும் அறிவுடன் வளர்த்திடும்
2.அதாவது அதனதன் உணர்வு கொண்டு அறிவுடன் வளர்த்திடும் நிலையைச் செய்கின்றது சூரியன்.

இதைப் போலத் தான் மனிதன் சுவாசிக்கும் உணர்வுகள் எவையோ அவை எல்லாம் அந்தந்த உணர்வின் வித்தாக மாறுகின்றது. ஒரு மனிதன் கோபமாகப் பேசுகின்றான் என்றால் அதை உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அதுவே உடலுக்குள் “கோபம் என்ற ஒரு வித்தாகின்றது…!”

ஒரு மனிதன் தன் உடலில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்றால் அவன் வெளிப்படுத்தும் அந்த வேதனையான சொல்லை நாம் கேட்கும் போது அது “வேதனை என்ற வித்தாக நமக்குள் பதிவாகின்றது…!”

முதலில் சொன்ன மாதிரி சூரியன் எப்படி ஒன்றைக் கலவையாகி வித்தின் தன்மை அடைந்து பூமியில் செடியாக முளைத்த பின்
1.அந்தச் செடியிலிருந்து வெளி வரக்கூடிய உணர்வினைத் தனக்குள் அலைகளாக எடுத்து
2.மீண்டும் அதே செடியில் விளைந்த வித்துக்கு அதை உணவாக எப்படிக் கொடுக்கின்றதோ
3.இதை போலத் தான் நம் உயிரும் மற்ற மனிதன் உடலில் விளைந்த உணர்வின் அலைகளை நமக்குள் வித்தாக மாற்றிய பின்
4.அதற்கு – அந்தந்த உணர்வுகள் உந்தப்படும் போது (கோபம் வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் அன்பு பரிவு பாசம் மகிழ்ச்சி)
5.நம் உயிர் காற்றிலிருந்து அதே இனமான அலைகளைச் சுவாசிக்கச் செய்து
6.நம் இரத்த நாளங்களில் வழியே உடலுக்குள் இருக்கும் அந்த வித்துக்களை (அணுக்களை) வளர்க்கச் செய்கின்றது.

உதாரணமாக கோபமான உணர்ச்சிகளையோ வேதனைப்படும் உணர்வுகளையோ நாம் நுகரப்படும் போது அந்தந்த உணர்ச்சிகள் கொண்டு தான் நாம் சொல்லும் வருகிறது… செயலையும் செயல்படுத்தச் செய்கின்றது.

அப்போது வேதனைப்படும் உணர்வுகள் அதிகரித்து அந்த அணுக்களைப் பெருக்கப்படும் போது நமது உடலுக்குள் இருக்கும் நல்ல உறுப்புகளை மாற்றி விடுகின்றது… நோயாக உருவாகின்றது.

இதனால் மனிதன் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் சுவையாக உருவாகும் உணர்வும் மறைந்து விடுகின்றது. பின் மனிதன் அல்லாத நிலையையே உருவாக்கி விடுகின்றது.

சூரியன் எப்படித் தனக்குள் மோதும் விஷத்தை நீக்குகின்றதோ… அதனதன் கவர்ந்து கொண்ட உணர்வு கொண்டு அது இயங்குகின்றதோ… அதைப் போல நம் உடல் இயங்கினாலும் மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடல் வேண்டும்.

1.மனிதனின் வாழ்கையில் தீமை என்று அறிந்து கொண்டால்
2.உடனே மெய் ஞானிகளின் உணர்வினை நாம் நுகர்ந்து அதனுடன் கலந்து
3.தீமைகளை அடக்கி தீமையற்ற நிலையாக மாற்றி மகிழ்ச்சி என்ற உணர்வினைக் கூட்டிக் கொள்ளும் பொழுது
4.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் அது நன்மையாகின்றது
5.நம்மிடமிருந்து வெளிப்படும் சொல்லைக் கேட்போர் உணர்விலும் அந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.

நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு இவ்வாறு நமக்குள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வு பெறும் சக்தியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

ஆகவே மனிதனாக இருக்கும் நாம் பிறருடைய துயரங்களையோ மற்ற சங்கடங்களையோ வெறுப்பையோ வேதனைகளையோ கேட்டு அறிந்தாலும் நமக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக நல்ல அணுக்களாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்… மகிழ்ந்து வாழ முடியும்.

மனிதன் அன்று காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தது போன்றே தீமைகள் இப்பொழுது வளர்கின்றது

 

பிற மண்டலங்களில் இருந்து வால் நட்சத்திரமாக நகர்ந்து வரப்படும் பொழுது விஞ்ஞான அறிவால் அதைக் கணக்கிட்ட முறை கொண்டு அதனின் ஓடு பாதையில் நம் வியாழன் கோள் வருகின்றது. அதனுடைய ஈர்ப்பின் சுழற்சிக்குள் சிக்கி இணைந்து விட்டது என்று விஞ்ஞானிகள் காட்டினார்கள்.

இதே போன்று தான்
1.விஞ்ஞான அறிவு உலகில் பரவினாலும் அது அனைத்தும் மனிதனின் உணர்வுக்குள் பரவி…
2.மனிதனுடைய சிந்தனைகள் சீர்குலையும் நிலையாக வந்துவிட்டது.

சில நாடுகளில் பார்க்கலாம்… அங்கே மனிதருக்குள் பல பல இனங்களாகப் பெருகி வெறி கொண்ட உணர்வு கொண்டு அழித்திடும் உணர்வாக மற்றவர்களை அழித்துக் கொண்டுள்ளார்கள். உகண்டாவில் இதெல்லாம் அன்று நடந்தது.

இங்கே நம் நாட்டிலும் இனத்திற்கு இனம் மோதிக் கொண்டார்கள். ஒரு நொடிக்குள் மனிதனை அழித்திடும் உணர்வே வெளி வருகின்றது. இந்த உணர்வுகள் அதிகமாகப் பெருகி விட்டால்
1.மனிதனுக்கு மனிதன் அழிக்கும் உணர்வே பெறுகின்றது.
2.மனிதனாக வாழும் நிலைகள் அறுத்து விடுகின்றது.

இன பேதங்கள் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிடும் நிலைகள் வரும் பொழுது… அதை நேரடியாகக் கண்டுணர்ந்து நுகர்ந்தால் நம்முடைய நிலைகளும் “அஞ்சிடும் உணர்வாக…” விளைந்து விடுகின்றது.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவன் எந்தச் செயல்களைச் செய்தானோ அதே செயல்கள் கொண்டு “அவனைக் கொன்றால்தான் நாம் மீள முடியும்…” என்ற உணர்வுகள் வளர்ந்து விடுகின்றது.

இந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் மனிதன் எங்கே வாழ்வது…? மனிதனுக்கு மனிதன் அன்று காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தது போன்றே தீமைகள் இப்பொழுது வளர்கின்றது.

அப்படிப்பட்ட தீமைகள் வரப்படும் பொழுது மனிதன் என்ற உலகத்திற்குள் தீமை அகற்றிடும் நிலைகள் அழிந்து விட்டால் என்ன ஆகும்…? இது போன்ற நிலைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் புகுத்தி எந்தத் தீமையும் நம்மை அழித்திடாது
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலைகளில் இந்த உலகை விட்டு எப்பொழுது அகன்றாலும்
3.மெய் ஒளியாக வீசிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய வேண்டும்.

இது இல்லை என்றால் மீண்டும் இங்கே வந்தால் பாம்பாகவோ தேளாகவோ பிறக்க நேரும். இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதனின் உணர்வுகள் அழிந்திடாத நிலைகளில் நம்மைக் காத்திடல் வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியினை உபதேசிக்கின்றோம்.

இனிமேல் இந்த உலகில் தீமைகள் அதிகமாக ஊடுருவும். அதனால் நமக்குள் அஞ்சிடும் நிலையையே உருவாக்கும்.

பாலிலே பாதாமைப் போட்டாலும் நஞ்சு கலந்தால் எவ்வாறு நஞ்சின் செயலாக்கமாக அது மாறுவது போன்று
1.எவ்வளவு திடகாத்திரமாக இருப்பினும்
2.எவ்வளவு உயர்ந்த குணங்கள் இருப்பினும்
3.எவ்வளவு திறமையாக இருப்பினும்
5.தீமை செய்வோரின் உணர்வுகள் நமக்குள் புகுந்தால்… மனிதனின் சிந்தனைகளை அழித்திடும் நிலையே வருகின்றது.

ரஷ்யா எவ்வளவோ கட்டுப்பாட்டுடன் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் அங்கேயும் மனிதனுக்கு மனிதன் கொன்று தின்னும் நிலை வருகின்றது.

உணவு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் மனிதன் இறந்தாலும் அந்த உடலை அறுத்து உணவாக உட்கொள்ளும் நிலை வந்து விடுகின்றது.

இவ்வாறு மாறும் பொழுது இங்கே மனிதர்கள் மிஞ்சுவது எப்படி…?

உலகிலேயே உயிரினங்கள் பெருகிப் பெருகி ஒன்றை ஒன்று கொன்று புசிக்கும் உணர்வு வரப்படும் பொழுதுதான் உலகில் தன் இனத்தையே தான் புசிக்கும் நிலைகள் வளர்ந்து அந்த இனங்களே (அன்று வாழ்ந்த மிகப் பெரிய மிருகங்கள்) முழுமையாக அழிந்துவிட்டது.

தன் இனத்தையே கொன்றிடும் நிலை வரும் பொழுது அதே அசர உணர்வுகள்… மனித இனத்தைக் கொன்று புசிக்கும் உணர்வுகள் வளர்ந்து விட்டால் யாரும் மிஞ்ச முடியாது.

ஆகவே சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதையெல்லாம் நம்முடைய காலத்திற்குள்ளேயே உலகில் இன்று பார்க்கலாம்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும் உடலை விட்டு உயிர் வெளியே செல்கின்றது. எப்பொழுது வெளியேறினாலும் நஞ்சு கொண்டோர் உணர்வுகளால் நமக்குள் அஞ்சிடும் நிலை வந்தாலும் இந்த உணர்வே வெளிப்படும்.
1.எவர் மேல் வெறுப்பு கொண்டோமோ அங்கே தான் நாம் சென்று இணைய முடியும். இந்தக் கணக்கு தான் கூடும்.
2.ஆனால் சப்தரிஷிகளின் கணக்கை நமக்குள் கூட்டினால் அது பெருகும்… இது சிறுத்துவிடும்.

விண்ணின் ஆற்றலைப் பெருக்கி உயிர் ஒளியாக உருப் பெற்றது. எதைக் கவர்ந்ததோ அதன் அறிவால் அதைக் காத்திட்டது. காத்திட்ட அறிவின் தன்மை விளைந்தது. விளைந்திட்ட உணர்வின் தன்மை கொண்டுதான் மனிதனானது.
1.மனிதனான பின் உயிருடன் ஒன்றிடும் ஒளியின் தன்மையாக ஒளியின் சிகரமாக மாற்றிவிட்டால்
2.என்றுமே ஒளியின் நிலையாக நிலை கொண்டு வாழ்ந்திட முடியும்.

அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் சென்றால் அவன் நிலை கொண்டு வாழ்வது போல… இனம் இனத்தைத் தான் காத்திடும். எத்தகைய நிலையில் இருந்தாலும் தன் இனத்துடன் இணைந்தே தீரும்.

ஆகவே… எந்த இனத்துடன் நாம் இணைய வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த இனத்துடன் நாம் இணைகின்றோம்.

எந்தக் கோபத்தின் நிலைகள் எண்ணினானோ அதன் உணர்வு கொண்டு மற்றொன்றைக் கொன்று புசிக்கின்றதோ அதிலே இணைந்தால்… அதன் இனத்துடன் இணைந்து அதன் ரூபமாக மாற்றிவிடும். அந்த ஈர்ப்புக்குள் சென்று அத்தகைய உடலாக நம்மை உயிர் மாற்றிவிடும்.

ஆகவே நாம் ஒளியின் சரீரமாக வாழ்ந்திடும் அந்த அருள் மகரிஷிகளுடன் இணைந்து கொண்டால் நாம் அருள் வாழ்க்கை வாழ்ந்திட முடியும். இன்றைய உலகின் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து அதைப் பிளந்திட வேண்டும்.

மனிதர்கள் இருப்போம்… இருந்தாலும் இந்த உலகில் தினசரி எத்தனை மாற்றங்கள் ஏற்படுகின்றது…? மாற்றங்கள் ஆகிக் கொண்டே இருக்கும் நிலையில் தன் இனம் என்று கொண்டு சென்றாலும் இருண்ட நிலையில் வாழும் நிலை தான் வருகிறது.

மனித உலகில் அந்த மகிழ்ச்சி இருக்காது.

இருண்ட உலகில் வாழ்ந்து கொன்று பசித்திடும் உணர்வாக வளரப்படும்போது மனித இனமே தன் இனத்தைக் கொன்று புசிக்கும் நிலையாகச் சிறுகச் சிறுக உருமாறிக் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
1.நாம் உடலுடன் வாழும் இந்த நல்ல நேரத்திலேயே மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து இருளைப் போக்கி
2.என்றும் உயிருடன் ஒன்றி ஒளி சுடராக பேரருள் பேரொளியாக அடைவது தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழி.
3.அதை நாம் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சுவாசித்தது நம்மை இயக்கினாலும் நாம் எதை இயக்க வேண்டும்…?

நம்முடைய மனித வாழ்கையில் எத்தனையோ விதமான உணர்வுகளை ஒவ்வொரு நாளும் சந்திக்க நேருகின்றது.

உதாரணமாக… நம்மை யாரும் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை…! ஒருவர் மற்றொருவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஏசிப் பேசுவார். நாம் அதைப் பார்த்துக் கேட்டுக் கொண்டு நுகர்ந்து கொண்டிருப்போம். அதன் உணர்வை நாம் நுகர்ந்த பின் நமக்குள் என்ன நடக்கிறது…?

1.அவர்களுக்குள் ஏசிப் பேசிய உணர்வே நம்மை ஆட்சி புரியத் தொடங்குகிறது.
2.அதனின் உணர்வின் தன்மை நாம் வளர்க்க நேர்கின்றது.
3.“இப்படிப் பேசுகின்றான்… இப்படிப் பேசுகிறானே..!” என்று நாமும் உணர்ச்சி வசப்படுகின்றோம்.

பிறர் கெட வேண்டும் என்ற உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் ஏசிகின்றார்கள்.
1.நாம் காது கொண்டு கேட்கின்றோம்.
2.மூக்கின் வழி சுவாசிக்கின்றோம்.
3.நுகர்ந்த உணர்வு உயிரிலே படுகின்றது.
4.உயிரிலே படும் அந்த உணர்ச்சிகள்தான் அப்பொழுது நம்மை ஆளுகின்றது.

எப்படிப் பேசுகிறான் பார்…! இவனை எல்லாம் நாம என்ன செய்ய வேண்டும் தெரியுமா…? என்கிற அந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே அவர்களின் உணர்வுகள் நம்மை இயக்கச் செய்கின்றது… நம்மை ஆளுகின்றது… நம் உடலாக்குகின்றது.

ஆகவே இத்தகைய தீய உணர்வுகளை அடிக்கடி நாம் எண்ணினோம் என்றால்… அது நம் உடலிலே பெருகி விட்டால் என்ன செய்யும்..?

அதே தீமையின் செயலாகத் தான் நம் சொல்லும் வெளிப்படத் தொடங்கும்.
1.அடுத்து நம் சொல்லைக் கேட்போரிடத்திலும் நம்மை எதிரியாக்கும்.
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள்ளேயே எதிரி ஆகும்.
3.நம்முடைய நல்ல அணுக்களை இது கொல்ல நேரும்.

ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் என்ன செய்கிறது…? தீமைகளின் உணர்வை வளர்க்கச் செய்கின்றது. நன்மையின் உணர்வை அது இழக்கச் செய்கின்றது.

அதே போல் நாம் ரோட்டில் சென்று கொண்டிருப்போம். நமக்கு முன்னாடி ஒருவன் போய்க் கொண்டிருப்பான். அவன் சிந்தனை எங்கோ இருக்கும்.

எதிர்த்து வரும் வண்டியைப் பார்க்காதபடி அதன் மேலே மோதப் போவான். போகிறான் பார்…! ரோட்டிலே எப்படிப் போகிறான்…? என்று அவன் செயலைக் கண்டு நாம் நுகர்ந்து அறிகின்றோம்.

அதை நுகர்ந்து அறியப் போகும் போது அதே உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது… நம்மை ஆளுகின்றது…! அவன் அருகிலே சென்று “ஏனப்பா கொஞ்சம் பார்த்துப் போகக் கூடாதா…” என்று நாம் சொல்ல நேரும்.
1.அப்பொழுது அங்கே எது நம்மை ஆட்சி புரிகின்றது…?
2.அவனுடைய சிந்தனையற்ற உணர்வு நம்மையும் இயக்கி ஆள்கிறது.

ஒரு குடும்பத்தில் சண்டையிடுகின்றனர். அதைக் கேட்டு நுகர்கின்றோம் நுகர்ந்த பின் என்ன சொல்கிறோம்…?
1.பக்கத்து வீட்டிலே பார்…!
2.எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் சண்டை போட்டு கொண்டே இருக்கிறார்கள்…! என்று சொல்லி விட்டு
3.அவர்கள் சண்டையிடும் உணர்வை எடுத்துக் கொள்கிறோம்.

இந்த உணர்வை எடுத்து அடுத்தவர்களுக்குச் சொல்லப்படும் போது அதை நமக்குள் வளர்த்து அதிகமாகப் பெருக்கிக் கொள்கின்றோம். இப்படி நமது வாழ்கையில் ஒவ்வொரு உணர்வையும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு நாளும் நமக்குள் உருவாக்குகின்றோம்.

ஆனால் நாம் எதை உருவாக்க வேண்டும் என்று சிந்திக்கின்றோமா…?

ஆகவே மனிதனின் வாழ்கையில் நம்மை அறியாமல் இயக்கும் இதைப் போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து
2.அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாக
3.அருள் ஒளியின் உணர்வுகளாக நமக்குள் உருவாக்கிடல் வேண்டும்.

ஞானிகள் சொல்லும் ஓசோன் என்ற பாதுகாப்புக் கவசம்

 

ஞானிகள் மகரிஷிகள் நஞ்சினை நீக்கிடும் உணர்வினைத் தனக்குள் விளைய வைத்துத் தீமைகளைப் பிளந்திடும் சக்தியாக இந்த மனித உடலில் இருந்து தான் அவன் பெற்றான். அந்த நிலை நமக்குள்ளும் உண்டு.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் குணங்களுக்குள் அதைக் கலந்து இணைக்கச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.

சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கண்டுணர்ந்து தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக விளைந்து அதனின் செயலாக்கமாக வருவது போல்
1.மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்களுடன் இணைத்து
2.அந்த இணைத்த சக்தி கொண்டு சப்தரிஷிகளின் இயக்கமாக அதை மாற்றும்.
3.உருப்பெற்ற நிலையாக உங்களைச் சப்தரிஷிகளாக ஆக்குவது.
4.சப்தரிஷி மண்டலங்களாக அவர்களுடன் இணையும் பொழுது எதனையும் வென்றிடும் நிலைகள் வருகின்றது.

நாம் வாழும் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் அதுவும் மடிந்திடும் சமயம் வரும்… அத்தகைய நிலை அதற்கு உண்டு. அதனுடைய வயது முதிர்ச்சி அடையும் பொழுது மடிந்திடும் நிலையே வருகின்றது.

காரணம் இதற்கு உறுதுணையாக இருந்த நட்சத்திரங்கள் தனது தனது நிலைகள் விளையச் செய்யும் பொழுது இதற்குக் கிடைக்கும் உணவு தடைப்பட்டால் சூரியன் ஒளி மங்கும்… பின் இருள் சூழும்.

இது கரைந்து இதனின் உணர்வுகள் திக்கற்று இதனுடன் விளைந்த கோள்கள் அனைத்தும் திசை மாறிச் சென்று விடும்.

அப்படிக் கரைந்து வந்த ஒரு கோள்… அது ஓடிவரும் பாதையில் ஊடுருவி நம் வியாழன் கோளில் கோளுக்குள் பாய்ந்து அதனின் சுழற்சி வட்டத்தில் கரைந்தது (சுமார் 30 வருடங்களுக்கு முன்).

இதைப் போல பேரண்டத்தில் விளைந்த மற்ற கோள்கள் திசை மாறி வந்து விட்டால் சூரியன் ஈர்ப்புக்குள் வரும் பொழுது பூமியை இடைப்பட்டால் இந்தப் பாறைகள் பூமியில் விழுந்து விடும்…. விழுந்தால் பூமி சுக்கு நூறாக ஆகிவிடும்.

இருப்பினும்… பூமியின் சுழற்சி வேகத்திற்குள் கரைந்த வெப்பம் போக மிச்சங்கள் அதற்குள் கரைந்து விடும். கரைந்தது போல மீதி இருக்கும் நிலைகள் பூமியிலே சாற்றிவிடும்.

1.இதைப் போன்று பிற சூரிய குடும்பங்களில் ஏற்படும் விபத்துக்கள் ஏராளம் ஏராளம்.
2.பேரண்டம் 2000 சூரியக் குடும்பம் என்றால் அதில் வீழ்ச்சி அடையும் பல சூரியன்களும் உண்டு.
3.அதிலிருந்து திசை மாறி வரும் கோள்கள் எதனின் பிடிப்பும் இல்லாது நகர்ந்து வரும் போது அதனின் வேகத் துடிப்புகள் இருக்கும்.
4.எதனின் ஈர்ப்பின் துணையிலிருந்ததோ அந்தக் காந்தப் புலனறிவு இல்லை என்றால் அது தன் சக்தியை இழந்து விடும்.

இதைக் கண்டுணர்ந்துதான் ஞானிகள் ஓசோன் திரை என்ற நிலையில் எந்தத் தீமையும் தன்னைத் தாக்கிடாத நிலைகள் கொண்டு பாதுகாப்புக் கவசமாக அமைத்தார்கள்.

அது தான் விநாயகர் சதுர்த்தி…!

நாம் கேட்டுணர்ந்த மற்ற மனிதர்களின் நஞ்சின் உணர்வுகள் பதிவானாலும் அந்தப் பதிவின் ஈர்ப்பைத் தடைப்படுத்திட வேண்டும்.

மனிதரிலிருந்து வெளிப்பட்ட பிறரை அழிக்க வேண்டும் என்று எண்ணிய உணர்வுகளோ… பழி தீர்க்கும் உணர்வுகளாக ஒருவருக்கொருவர் விளைந்து வந்ததோ… அதையெல்லாம் அகற்றிடும் நிலையாகத் தடைப்படுத்தும் நந்நாள் தான் விநாயகர் சதுர்த்தி.

ஆகவே… மற்ற மனிதர்கள் மேல் உள்ள வெறுப்பின் நிலைகளைத் தடைப்படுத்திட வேண்டும்.

அவ்வாறு எல்லோரும் நிறுத்திவிட்டால்…
1.அத்தகைய உணர்வலைகள் இங்கிருந்து விலகி… திக்கற்றுச் சென்று…
2.பூமியின் சுழற்சி வட்டத்தில் இருக்கக்கூடிய கடலின் ஈர்ப்புக்குள் சிக்கி
3.நமக்குள் பதிவான பகைமை உணர்வுகளை மனிதனை வீழ்த்திடச் செய்யும் அந்தச் சக்திகள் கடலுக்குள் அமிழ்த்தி அங்கே பொசுங்கிவிடும்.

நாமும்… நாம் வாழும் இந்தப் பூமியும் பரிசுத்தம் ஆகும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் மனிதராக வாழும் அனைவரும் நாம் ஒருவருக்கொருவர் அருள் ஞானத்துடன் வாழ்தல் வேண்டும். ஒருவருக்கொருவர் மகிழ்ந்து வாழும் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எல்லோரும் பெற வேண்டும்.
2.அவர்கள் வாழ்கையில் அறியாது இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும்.
4.அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்.
5.அவர்கள் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். அருள் ஞான வாழ்க்கை வாழ்தல் வேண்டும்.
6.இருளை அகற்றிடும் மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி நம் பூமியில் வாழும் மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று
7.நாம் எல்லோரும் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு நாம் தியானிக்கும் எல்லோருடைய உணர்வுகளும் ஒன்றாகச் சேர்த்தால் என்ன ஆகும்…?

தீமையான உணர்வுகளை மனிதர்களான நாம் ஈர்க்கும் சக்தி குறைந்தால் இந்தக் காலையில் 6 மணிக்கு எல்லாம் சூரியன் தனக்குள் இழுத்துச் சென்று அதை எல்லாம் அங்கே கரைத்து விடும். ஒளியாக மாற்றும்.
1.நம்முடைய ஆன்மா தூய்மையாகின்றது.
2.நாம் வாழும் இந்தப் பூமியான பரமாத்மாவும் தூய்மையாகின்றது.

உதாரணமாக… அடுப்பிலே வைத்து எரிக்கப்படும் ஒரு விறகானது பல விதமான உணர்வுகள் வைத்து அது எரிகின்றது. விறகு எரிந்து நெருப்பாக மாறுகின்றது… ஒளியாக மாறுகின்றது.

விறகோ கருகிவிடுகிறது. ஆனால் அதற்குள் இருக்கும் அந்த மணங்கள் பிரிந்து விடுகின்றது. அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் சூரியன் கவர்ந்து ஒளியாக மாற்றிக் கொள்கின்றது.

அந்த விறகிலிருந்து வந்த ஆவியின் தன்மை எதன் உணர்வு பெற்றதோ புவியின் ஈர்ப்பின் தன்மை கொண்டு எந்த வித்தின் தன்மை இங்கு பெறுகின்றதோ அதே மரத்தின் அதே வித்தாக (அந்த விறகின் மணங்கள்) இணைந்து மீண்டும் விளைகின்றது.

ஆகவே எதன் எதன் உணர்வின் தன்மை எது எது விளைகின்றதோ அது எல்லாம் இயற்கையில் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது. (ஆவியாக இருப்பது திடப்பொருளாகின்றது… மீண்டும் அது ஆவியாகிறது… மீண்டும் திடப்பொருளாகிறது)

ஆனால் நாம் “என்றுமே மாறாத நிலைகள் பெற வேண்டும்…!” என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆறாவது அறிவு பெற்ற மனிதன் நஞ்சினை வென்று ஏழாவது நிலையாக உணர்வுகளை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலை அடைந்த
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் அனைவரும் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
2.நம் உடலுக்குள் அதைப் பெருக்குதல் வேண்டும்.
3.அதை அழியாச் செல்வமாக நமக்குள் மாற்றி அமைத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும்… சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைதல் வேண்டும்.

கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி

 

விஷமான உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி…! என்றார்.

அதாவது எங்கேயோ தோன்றிய… பேரண்டத்தில் இருந்த நிலைகள் கோடிக் கோடியாக மாறுகின்றது.
1.பல கோடிக்குள் மற்ற உணர்வின் அணுக்கள் சேர்த்து
2.மனிதனாக வருவதற்குக் கோடியில் கோடி… எத்தனையோ கோடியில் கோடி… கோடியில் கோடி… கோடி கோடி…!

நான் எண்ணமாகப் பேசுகிறேன் என்றால் வான் வீதியில் இருக்கக்கூடிய உணர்வுகள் இங்கே வருகின்றது. இதைத்தான் மனித உணர்வுக்குள் இது பட்டபின் அதனின் நிலை தனக்கொத்ததாக மாறுகின்றது.

1.இதை உணர்த்துவதற்குத் தான் குருநாதர் எனக்கு அடியைக் கொடுத்து
2.பிரமை பிடித்த மாதிரிச் செயல்படுத்தி விண்ணை நோக்கி ஏகும்படிச் சொன்னார்.

குருநாதர் எனக்கு அடி கொடுத்தார்… உங்களுக்கு சொல்லடி கொடுக்கின்றேன். இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிகின்றது… சீதாராமா. அந்த ஞானியின் உணர்வுகள் அம்பாகப் பாய்கின்றது.

கோபத்தால் சொல்லும் பொழுது இந்தச் சொல் உங்கள் உணர்வுகளைத் தூண்டுகின்றது. எதிர் பதிலாக அதுவே வருகின்றது.

இதைப் போல் தான் கோடியில் கோடி என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் உணர்வினை ஒளியாக மாற்றி… குருநாதர் கண்டுணர்ந்த உணர்வை அடியால் கொடுத்து… உணர்வின் தன்மை அங்கே உந்தச் செய்து உணர்வின் அளவுகோலை அறியும்படிச் செய்தார்.

1.எனக்கு அடி கொடுக்கும் பொழுது அவருடைய சக்தி எப்படி எனக்குள் உறைகின்றதோ இதைப் போன்று தான்
2.அந்த விண்ணின் ஆற்றலும் அது உருவாகும் மாற்றமும்
3.மண்ணுலகில் வரப்படும் பொழுது “கோடி கோடி கோடி கோடி…” என்ற இந்த நிலையைக் கொண்டாருகின்றார் குருநாதர்.

விண்ணின் ஆற்றலை எனக்குள் அவர் பதிவு செய்த பின்… உடல் எங்கே இருக்கின்றது… உதைத்த உணர்வுகள் அவருடன் ஒன்றும்… ஒன்றிய உணர்வுகளை விண்ணிலே பறக்கச் செய்வார்…!

பரவிய உணர்வுகள் அங்கே அடையும்.
1.அடைந்த உணர்வுகளும் இங்கே அடித்த உணர்வுகளும் இழுக்கும்… இழுத்த உணர்வு கொண்டு தான் எனக்கு அறிவித்தார்.
2.நீ யார்…? எப்படி வந்தாய்…? எந்தெந்த வழிகள் எல்லாம் வந்தாய்…? என்று கனா காண்பது போன்று
3.அணுவாகத் தோன்றி உயிரணுவாக… உன் உயிரே எப்படி உண்டானது…? என்று அறியச் செய்தார்.

விண்ணிலே உயிர் உண்டாவதற்கும் இதிலேயும் பல கோடி கோடி கோடி கோடி. பார்த்தால் உயிரின் துடிப்பு ஒன்றாக இருக்கும். ஆனால் எத்தனை கோடி உணர்வுகள் கலந்து உயிரின் துடிப்புக்குள் இணைந்து அது இயக்கமாக உருவாகின்றது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார்.

ஒரு அணுவின் தன்மை மற்ற கோளின் தன்மை வரப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மை கோடி… கோடி கோடி… கோடி கோடி.

காரத்தின் தன்மையோ கசப்பின் தன்மையோ அதுஎப்படி வந்தது…? எத்தனை கோடி சேர்ந்து கசப்பானது…? காரமானது…? என்று சுவையின் உணர்வுகளும் மணத்தின் நிலைகள் எது இணைந்ததோ அது மணமாக எப்படி மாற்றுகின்றது…?

இவையெல்லாம் சேர்த்துத் தான் கோடி கோடி… கோடி கோடி… கோடி கோடி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் நல்ல நறுமணங்கள் கொண்ட உணவுகளை உட்கொண்டாலும் அந்த நறுமணத்தை வீரியமாக இயக்கச் செய்யும் நஞ்சு அதிலே உண்டு. அத்தகைய நஞ்சினை எல்லாம் நம் உடல் பிரிப்பதனால் நம் மலம் நாற்றமான நிலையில் வருகின்றது.

நம்முடைய ஆறாவது அறிவு… நல்ல உணர்வின் சத்தை எல்லாம் நம் உடலாக மாற்றி நஞ்சை நீக்கிடும் நல்ல உணர்ச்சிகளாகத் தூண்டுகின்றது ஆகவே தான் இதைப் பரசுராம் என்று கூறுகின்றார்கள்.

மனிதனாக இருக்கும் நாம் இன்று விஷமான பொருள்களை நாம் உட்கொண்டாலும் அதன் சக்திக்குத் தகுந்தவாறு
1.நம்முடைய கிட்னி (KIDNEY – சிறுநீரகங்கள்) என்ற உறுப்பு இரத்தத்தில் வரும் அந்த நஞ்சினை வடிகட்டி விடுகின்றது.
2.அதைப் போல நம் குடல் உறுப்புகளிலும் சில நஞ்சினைப் பிரிக்கும் தன்மை வருகின்றது.
3.இரத்தத்தில் வரும் நஞ்சினைப் பிரிக்கப்படும் பொழுது விஷ அணுக்கள் உருவாக்காதபடி தடுத்துவிடுகின்றது.

அதே சமயம் நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் நஞ்சு கலந்த உணர்வு வந்தாலும் அது உடலுக்குள் செல்வதற்கு முன் நமது பெரு மூளை வடிகட்டிவிடுகின்றது. அதைச் சளியாக மாற்றிவிடுகின்றது.

நமக்குள் தீமைகளை அகற்றிடும் சக்தி இப்படி விளைந்தாலும் சம அளவாக இருக்கும் பொழுது எல்லாமே சீராக இயங்குகின்றது. ஆனால் விஷத்தின் அளவு அதிகரித்துவிட்டால் நம் கிட்னி சரியாக வேலை செய்யாது.

அது சரியாக வேலை செய்யவில்லை என்றால்
1.விஷத் தன்மை கொண்ட அணுக்கள் அதிகமாகப் பெருகத் தொடங்குகின்றது.
2.நம் உடலில் சர்க்கரைச் சத்து அதிகரித்து விடுகின்றது
3.வாத நோய் அதிகரித்து விடுகின்றது… உப்புச் சத்தும் அதிகமாகின்றது.

கிட்னி பிரிக்கும் தன்மை இழந்த பின் உப்புச் சத்து அதிமாகி விட்டால் நம் உடலில் உள்ள எலும்புகள் அனைத்திலும் அது ஊடுருவிவிடும். எலும்புகளைப் பலவீனப்படுத்திவிடும்.

சாதாரணமாக உப்பை வெளியிலே ஒரு இடத்தில் வைத்திருந்தால் அது கசியும் தன்மை வரும்.

இதைப் போல் நம் உடலுக்குள் அந்த அதிகப்படியாக இருக்கும் உப்பு கசியும் தன்மை வந்துவிட்டால் சுவாசப்பைகளில் மூச்சுத் திணறல் அதிகரித்துவிடும். சுவாசிப்பதே மிகவும் கடினம் ஆகின்றது.

இதைப் போன்று நமக்குள் வந்துவிடுகின்றது. இதை மாற்றுவதற்கு என்ன சக்தி வைத்திருக்கின்றோம்…?

மிருகங்கள் அனைத்துமே நஞ்சின் தன்மை கொண்ட வலுவான உடலாகப் பெற்றிருக்கின்றது. நஞ்சின் தன்மையைத் தன் உடலாக்கும் நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பான நிலைகளாக மாறுகின்றது.
1.ஆனால் மனிதனுக்கோ நஞ்சை நீக்கினால் தான் பாதுகாப்பு.
2.நஞ்சு அதிகரித்து விட்டால் நம் உடலுக்கு பாதுகாப்பற்ற நிலையாக ஆகிறது.

ஆனால் அருள் மகரிஷிகள் அனைவருமே தன் வாழ்க்கையில் இத்தகைய நஞ்சுகளை எல்லாம் வென்று உணர்வை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக ஆக்கியவர்கள்.

வைரம் எவ்வாறு நஞ்சினை உள்ளடக்கி ஒளியின் சிகரமாக இருக்கின்றதோ இதைப் போல மகரிஷிகள் தன் உயிரின் நிலைகள் கொண்டு தன் வாழ்க்கையில் வந்த…
1.நஞ்சினை ஒடுக்கிடும் ஆற்றல்மிக்க சக்தியினை தனக்குள் எடுத்துப் பொருள் அறிந்திடும் நிலையும்
2.இருள் நீக்கிடும் நிலையும் தனக்குள் மகிழ்ந்திடும் ஆற்றல் மிக்க ஒளியின் சிகரமாக உணர்வினை மாற்றியமைத்து
3.இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல்கள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அந்த மெய் ஞானிகள் உணர்த்திய உண்மைகளை குருநாதர் காட்டிய வழியில் உபதேசித்து உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அந்தப் பதிவின் துணை கொண்டு அருள் ஞானியின் உணர்வின் சத்தைப் பெறும் வித்தாக உங்கள் எண்ணங்களில் பதிவு செய்து உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அதைப் பருகும் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.

இதை நீங்கள் செம்மையாகப் பயன்படுத்தினால் உங்கள் உடலுக்குள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஊடுருவி நஞ்சான வித்துகளை எல்லாம் வலுவிழக்கச் செய்ய முடியும்.

நோயிலிருந்து விடுபடவும் முடியும்…!

நம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்ய வேண்டும்…! – ஞானிகள் சொன்ன உட்பொருள்

 

பக்தி என்பதை எதிலும் பொருதலாம். நான் கறி (மட்டன்) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் கறி மேல் பக்தி இருக்கின்றது. ஆனால் காய்கறிகளைச் சாப்பிடுகிறேன் என்றால் அதன் மேல் பக்தி வருகின்றது. எதை விரும்பிச் சாப்பிடுகிறோமோ அதன் வழி அந்த பக்தி வருகிறது.

இதைப் போன்று தான்
1.ஞானிகளால் காட்டப்பட்டது தான் பக்தி என்பது.
2.அதாவது மகரிஷிகளால் உணர்த்தப்பட்ட நிலை ஞானிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.

அரசன் மதங்களாக உருவாக்கினாலும் அதில் பக்தி நல்ல ஒழுக்கங்களைக் கடைபிடிக்கச் செய்கின்றது.

பெண்கள் கோலமிடுகின்றார்கள் என்றால் தன் உணர்வைச் செலுத்தி… தவறு இல்லாதபடி எத்தனையோ அழகாக அதைப் போடுகின்றார்கள். ஆனால் அவர்கள் செய்கிறார்கள் என்று ஆண்கள் நாம் செய்ய முடியுமா…?

ஒவ்வொரு புள்ளிக்கும் ஒவ்வொன்றையும் இணைத்து எப்படி அதை அழகுபடுத்துகின்றோமோ அதைப் போல்
1.மனிதனின் வாழ்க்கையில் ஒரு புள்ளி…! ஒரு கோபம் ஒரு வெறுப்பு ஒரு சாந்தம் என்ற நிலையில் எத்தனையோ புள்ளிகள் உண்டு.
2.இதை அனைத்தையும் இணைத்து அலங்காரமாக எடுத்துப் போடுவதற்கு…
3.அதாவது மனதைச் சாந்தப்படுத்திப் பொறுமைப்படுத்தி பக்தி கொண்டு கோலமிடுவது என்ற அந்த நிலை.

அதே போல்… பொதுவாக மார்கழி மாதம் எடுத்துக் கொண்டால் அதிகாலையில் சூரிய ஒளிக்கு முன் எழுந்து உடலைத் தூய்மைப்படுத்தி
1.வீட்டு வாசலை மெழுகிச் சுத்தப்படுத்துகின்றோம்.
2.ஆக… வீட்டையும் அதன் வாசலையும் மட்டும் தூய்மை செய்வதல்ல
3.நமது வீடு உடல்… நமது வாசல் என்பது ஆன்மா…!
4.இதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதை ஞானிகள் அன்று உணர்த்தினார்கள்… இது பக்தி…!

உடலைத் தூய்மைப்படுத்துவது போல நம் உணர்வுகளை எண்ணங்களை மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

வீட்டு வாசலைத் தூய்மைப்படுத்துவது போன்று
1.மற்றவர்கள் தீமையான செயல்களை நமக்குச் செய்தாலும்
2.அந்தத் தீமை தனக்குள் வராதபடி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.நம் ஆன்மாவையும் உடலையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
4.பக்தி என்பது இது தான்…!

ஏனென்றால் இதை எல்லாம் அடிக்கடி உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். ஞானிகள் கொடுத்த உண்மை நிலைகள் இது தான்.

அதனால் தான் உங்களை அடிக்கடி ஆத்ம சுத்தி (ஆன்மாவைச் சுத்தம்) செய்யச் சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதன் தவறு செய்வதில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு அவனை இயக்கி விடுகின்றது. அதுதான் அவனை ஆட்சி புரிகின்றது. ஆனால் “சந்தர்ப்பத்தை…” ஏற்படுத்தக் கூடிய நிலை பெற்றவன் தான் மனிதன்.

மற்ற உயிரினங்கள் வலு கொண்ட மிருகத்தைக் கண்டு “அது தன்னத் தாக்கிவிடும்…!” என்று அதையே நினைத்து அதனிடமிருந்து தப்ப வேண்டும் என்று எண்ணுகின்றது.

அதே போல நமக்கு யாராவது தொல்லை செய்கிறார்கள் என்றால் அவர்களையே நினைத்து “எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றான்…!” என்று எண்ணி வாழுகிறோம்.
1.அவன் தொல்லை கொடுத்த உணர்வு நமக்குள் வரும் போது
2.அந்தத் தொல்லையே மீண்டும் மீண்டும் வருகின்றது.

தொழிலின் நிமித்தம் நாம் கடன் கொடுத்து வாங்குகின்றோம். ஒருவருக்குக் கொடுத்த பின் சந்தர்ப்பம் அவர்களால் திரும்பக் முடியவில்லை என்றால் “நான் கொடுத்தேன்… எனக்குத் திரும்பக் கொடுக்கவில்லை…!” என்ற வேதனையைத் தான் எடுக்கின்றோம்.

அந்த வேதனை உணர்வை எடுத்து இங்கே நம் உடலுக்குள் சமைத்து வேதனையை வளர்க்கப்படும் போது அடுத்து யாரிடம் பேசினாலும் அந்த வேதனை உணர்வுடனே பேசுகிறோம்.

அப்பொழுது அவர்கள் நல்ல மனதையும் கெடுக்கச் செய்கின்றது… நம்மையும் கெடுக்கின்றது. ஆக மொத்தம் அந்த வேதனை என்ற உணர்வே நம்மை ஆட்சி புரியத் தொடங்குகின்றது.

நம்முடைய திறமைகள் எவ்வளவு இருப்பினும்… முதலில் நல்ல குணங்கள் இருக்கும் போது செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த வேதனை அதிகமான பின் “அந்தச் செல்வத்தையே காக்கும் திறன் அற்றுப் போகிறது…”

செல்வத்தில் சுகமாக வாழ்ந்த நிலையில் அடுத்தவர்களுக்குப் பணத்தைக் கொடுத்திருந்தாலும் அது திரும்ப வரவில்லை என்றால் அவர்களிடம் கேட்டுச் சண்டைக்குப் போகிறோம்.

கடன் வாங்கிவரோ… என்னிடம் பணம் இல்லையே… நான் எப்படிக் கொடுப்பேன்…? நான் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று தானே நினைக்கின்றேன்… நான் என்ன தரமாட்டேனா…? என்ற வாதம் அவரிடமிருந்து வரும்.

ஆனாலும் பணம் வரவில்லையே…! என்ற நிலையில் வேதனை உணர்வுகளை எடுத்து எடுத்து அது நம்மை அறியாமலேயே பெரும் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும்.

அப்பொழுது வேதனையான அணுக்கள் நமக்குள் வளரத் தொடங்கி விடுகின்றது. அது நல்ல உணர்வை நமக்குள் அணுக விடாது செயல்படுத்தும்.

அதிலிருந்து நாம் எப்படித் தப்புவது…?

இதைத் தான் மகாபாரதத்தில் கௌரவர்கள் என்று காட்டியிருப்பார்கள். ஒவ்வொரு செயலிலும் நல்லது செய்து கொண்டு இருப்பீர்கள்.
1.வேதனை என்ற வந்த பின் அந்த வேதனையோ மிகவும் வலு பெற்றது.
2.அதையே அடிக்கடி எண்ண வேண்டியது வரும்.
3.நல்லதை யார் சொன்னாலும் உங்களால் கேட்க முடியாது.
4.அவர் சொல்வார்…! அவருக்கென்ன தெரியும்…? நான் படுகிற கஷ்டம் எனக்குத் தானே தெரியும்…! என்று நல்லதை எண்ண விடாது.

அந்தக் கௌரவர்கள் வலு கொண்ட நிலையில் நாம் நல்லதைச் செய்ய விடாதபடி சிந்தனை இல்லாத சில செயல்களைச் செயல்படுத்தச் செய்கின்றது.

ஆகவே… இதிலே நாம் எத்தகைய நல்லதை எண்ணினாலும் நம் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் இவைகள் எல்லாம் நம் உடலில் வளர்ந்து விளைந்து விட்டால் அவைகளுடைய வலுவால் “நம்மை நல்லதை நுகர விடாது…”

அதாவது நமக்குள் இருக்கக்கூடிய கௌரவர்கள்… “என்னை இப்படித் திட்டினான்… திட்டினான்…!” என்ற உணர்வு வரும் போது
1.நல்லதை உள்ளுக்குள் விடுவது இல்லை.
2.நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை.
3.கோபம் வந்தால்.. நீங்கள் நல்லது யார் சொன்னாலும் கேட்கின்றீர்களா…?
4.கோபமான உணர்வுகள் உங்களுக்குள் தூண்டப்பட்டிருந்தால் அந்த நேரத்தில் நல்லது ஏதாவது கேட்பீர்களா…?

கோபமான உணர்வுடன் நீங்கள் இருக்கப்படும் போது ஒரு சந்தோசமான உணர்வையோ ஒரு ஆடல் பாடலையோ ஒரு நல்ல சம்பவங்களையோ சொன்னால் என்ன ஆகும்…? அந்த உணர்வின் தன்மை கொண்டு இதை அழிக்கத்தான் செய்யும்… அழிக்கத்தான் உதவும்.

அதைத்தான் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்…! எனறு சொல்வது.

ஏனென்றால் நமக்குள் எடுத்து கொண்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் தன்னை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குதான் அது செயல்படுத்தும். ஆகவே அதிலிருந்து நாம் மீள்வதற்கு என்ன செய்வது…?

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பமும் காந்தமும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வைக் கவர்கின்றது.
1.நாம் அந்த அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் பெருக்க வேண்டும்.

நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவால் நுகர்ந்தோமோ ஒளியின் சுடராக நமக்குள் இங்கே விளைகின்றது. இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அந்தச் சக்தியை நமக்குள் பெறச் செய்கின்றது.

1.அதிலே அர்ஜுனன் என்பது துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிரின் வலிமை.
2.நாம் நுகர்ந்த பின் அந்த ஒளியின் உணர்வை ஊட்டுவது பீமன். அதாவது வலுக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு எதையுமே அலட்சியமாகத் தூக்கும்…! என்பது.
3.நகுலன் என்பது நாம் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் (உடலிலே) ஒவ்வொன்றுடன் இணைந்து அதனுடன் “தன் உணர்வை உயர்த்தும்…!” என்று பொருள்.
4.சகாதேவன் என்பது இருளை அகற்றி அதைத் “தன்னுடைய பண்புடன் அரவணைத்துக் கொள்வது…!”
5.தர்மன் என்பது அந்த அருள் உணர்வின் தன்மையைத் “தனக்குள் ஏற்றுக் கொள்வது…!” என்பது பொருள்.

அப்படி ஏற்றுக் கொண்ட நிலையில்
1.நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றும்…
2.“நம்மைப் பேரொளியாக மாற்றும்…!” என்பது பொருள்.

மகரிஷிகள் உணர்வை நமக்குள் புகுத்தி… அவர்களுடன் இணைந்திருப்பதே மேல்…!

 

சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது.

நாம் எதனை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது பதிவாகி அதனின் கணக்குப் பிரகாரம் தான் நமக்குள் வளர்கிறது. ஆகவே எதனின் கணக்கை நாம் கூட்ட வேண்டும்…?
1.நாம் மெய் ஞானிகள் உணர்வு கொண்டு என்றும் பிறவா நிலையை அடைந்திட
2.அவன் அருளுடன்… அவன் உணர்வை நமக்குள் புகுத்தி… அவனுடன் இணைந்து இருப்பதே மேல்…!

அந்த நிலைகள் எல்லோரும் பெற வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகள் எத்தனையோ எத்தனையோ…! அதற்கு மத்தியில் அந்த மகரிஷிகளின் உணர்வை இணைத்து வலு ஏற்றுகின்றேன்.

தாவர இனங்களுக்கு நாம் உரச் சத்தை ஏற்றும் பொழுது ஒரு முறை முதலிலே ஏற்றுகின்றோம். அதை ஏற்றுக் கொண்ட பின் அடுத்த முறை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு வருகின்றோம்.

இப்படி அது இணைத்துக் கொண்ட்தற்குத் தக்கவாறு தான் “புது வித்துக்களாக…” நாம் உருவாக்க முடியும். ஏனென்றால்
1.ஒரு வித்தினை நேரடியாக மாற்றிக் கொண்டு வர முடியாது.
2.அதனைப் பல முறைகள் கொண்டு இணைத்து இணைத்து
3.மாற்றுப் பொருளாக மீண்டும் மீண்டும் உருவாக்கி
4.சீராக அதனுடன் ஒன்றி இயக்கும் நிலைகள் கொண்டு தான் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வர முடியும்.

காரணம் நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்… பகைமை உணர்வால் வளர்த்துக் கொண்ட வித்துக்கள் ஏராளம் ஏராளம்… தன்னை காத்துக் கொள்ளும் கோப குணம் ஆக இருந்தாலும் அதுவும் ஏராளம் ஏராளம்…!

இத்தகைய வித்துகள் நமக்குள் அதிகமாகப் பெருக்கி இருக்கும் நேரத்தில் இது அனைத்தும் ஒருக்கிணைந்து
1.இதையெல்லாம் இணைத்து அரவணைத்து அதை அடக்கிடும் நிலைக்காக
2.அருள் ஞானிகள் உணர்வினை உங்களிடம் இருக்கும் குணங்களுடன் இணைத்து இணைத்து
3.அதை இரண்டு முறை மூன்று முறை பிணைத்துப் பிணைத்து உங்கள் குணங்களுடன் ஒன்றச் செய்து
4.நினைவு கொண்டு அதை நீங்கள் பெறும் ஆற்றலை… அந்தத் தகுதியைப் பெறச் செய்கின்றோம்.

அது அல்லாதபடி நாம் செய்தோம் என்றால் அது முழுமை சேர்க்க முடியாது.

பாடப் புத்தகத்திலே படித்துவிட்டு “ஆகா நன்றாக இருக்கிறது…” என்று சொல்லிவிட்டு அதற்குப்பின் அதை நாம் ஓரம் கட்டி விடுகின்றோம். அடுத்து அதை மீண்டும் படிப்போம் என்ற நிலை வராது.

அதைப் போன்று அல்லாதபடி யாம் பதிவு செய்யும் உணர்வுகள் உங்கள் நினைவாற்றலுக்குள் அது ஓங்கி வளர வேண்டும். ஆகவே இதைக் கேட்டுணர்ந்த அனைவரும் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு எது சொந்தம்…?
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெருக்குங்கள்… அதைச் சொந்தமாக்குங்கள்.
2.பிறருடைய குறைகளை உங்களுக்குச் சொந்தமாக்க வேண்டாம்.
3.அந்தச் சொந்தத்தை நீங்கள் கொண்டாடவும் வேண்டாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சபையில் வைத்துத் தன் மனைவியை திரௌபதையை அவமானப்படுத்தினாலும் அதே சமயத்தில் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை வரவில்லை. “அவர்களும் அறிந்து உணரட்டும்…!” என்ற உணர்வு பெறுகின்றது.

ஏனென்றால் இவை அனைத்துமே கண்களால் கவர்ந்த உணர்வுகள் தான். திரௌபதி யார்…? கண்ணனின் சகோதரி தான்.
1.கண்கள் தான் மற்றதைக் கவர்ந்து நமக்குள் உணர்த்துகின்றது.
2.நாம் கண்ணால் பார்கின்றோம்…
3.கண்ணின் நிலைகளில் காந்தப்புலன் அறிவு கவர்ந்து உயிருடன் இணைக்கப்படும் போது திரௌபதி
4.புலனறிவு ஐந்தின் வலு எதுவோ அதற்குத் தக்கவாறு அது இயக்கிக் காட்டுகிறது (ஐந்து பேருக்கு ஒருத்தி).

இவைகளை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணனின் சகோதரியை அர்ச்சுனனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அர்ச்சுனன் வலிமையான நிலைகள் கொண்டாலும் அதன்படி இந்தப் புலனறிவு ஐந்தும் கண்களால் நுகர்ந்த வலுவான உணர்வுப்படி உடலாக்கப்படும் போது பீமன் ஆகின்றான்.

அடுத்து நகுலன் ஆகும் பொழுது மற்ற உணர்வுகளைச் சிந்திக்கும்படி செய்கின்றான். சகாதேவன் ஒன்றுக்கு உதவி செய்யும் தன்மைக்கு வருகின்றான்.

நுகர்ந்தது அனைத்தும் சாந்தத்தின் நிலைகள் கொண்டு உள் அடங்கி அதன் வழி தீமைகளை எண்ணாதபடி தனது உணர்வின் தன்மை பெறுகின்றான் தர்மன். தீமைகளை நுகரவில்லை… நல்ல உணர்வின் தன்மையை அவன் நுகர்கின்றான்.

இந்தப் பஞ்ச பாண்டவர்கள் தீமை என்ற எண்ணம் உட்புகாதபடி தடுத்து நிறுத்திப் போர் முறை கொண்டு அவைகள் எந்த வகையிலும் செயல்படாதபடி மற்ற தீமைகள் எதுவோ அது வராதபடி தடுத்து நிறுத்துகின்றார்கள்.

அதாவது நம் வலிமையை எதிலே கொண்டு வரவேண்டும்…? என்பதைத்தான் மகாபாரதத்தில் அங்கே காட்டுகின்றனர்.

திரௌபதியை சூதிலே வைத்து ஆடிவிடுகின்றான். ஏனென்றால் வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலிலேயும் மனிதன் சிக்கி விடுகின்றான். சிக்கிக் கொண்டபின் என்ன ஆகின்றது.

அங்கே அவமானப்படுத்துகின்றான். யாரை…? திரௌபதியை…! சபையில் வைத்து நிர்வாணப்படுத்துகிறார்கள். அப்பொழுது தன் உணர்வின் தன்மை கொண்டு எண்ண செய்கிறது..?
1.அங்கே நிர்வாணப்படுத்துவதை திரௌபதி எண்ணவில்லை
2.உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை அங்கே செலுத்துகின்றது
3.தன்னை அவமதிக்கிறார்கள்…! என்று திரௌபதி எண்ணவில்லை.

எதற்காக இப்படிக் காட்டுகிறார்கள்…?

நமது வாழ்க்கையில் யார் நம்மை அவமதித்தாலும் “நம்மை அவமதிக்கிறார்…!” என்ற உணர்வின் தன்மையை நமக்குள் வகுத்தால்
1.அதன் உணர்வே நமக்குள் விளைந்து விடும் என்பதையும்
2.அதை நாம் எப்படி மறுத்துப் பழக வேண்டும்…? என்று அங்கே தெளிவாகக் காட்டப்படுகின்றது.

இதையே இராமாயணத்திலேயும் காட்டுகின்றனர். அதாவது இராமன் வாலியை நேரடியாகப் பார்க்கவில்லை.

அதே சமயத்தில் அவன் அருள் உணர்வைத் தனக்குள் எடுத்துக் குகை மேல் இருக்கும் பாறையை வைத்து வாலி வெளி வராதபடி மூடி விடுகின்றான். வாலியின் உணர்வை வலு குறைக்கச் செய்கிறான்.

மகாபாரதத்தில் திரளபதை – நாம் நுகரும் சக்திகள் அவமதிக்கும் உணர்வுகள் இருப்பினும்
1.அந்த அவமதிப்பவன் உணர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.
2.ஏனென்றால் ஒருவர் நம்மை அவமதித்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ளாத வரையிலும் நம்மை ஒன்றும் பாதிக்காது.
3.ஆனால் உள்ளே விட்டு விட்டால் என்றுமே அது நம் நல்ல குணங்களை மூடி மறைத்துவிடும்.

ஆகவே வலு கொண்ட உணர்வு கொண்டு நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்குதான் இவ்வாறு மகாபாரத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

மகாபாரதத்தின் இறுதியில் கண்ணனும் அவனுடைய வலு இழந்து விடுகிறான். பீமனும் என்ன செய்கின்றான்..? இந்த உயிரான நிலைகள் கண்ணன் இறந்த பின் இவனுக்கு உணவு கிடைக்காது இவனும் மடிகின்றான்.

தர்மனுடன் எது சேர்ந்து செல்கின்றது…? கடைசியில் அந்த நாய் தான் கூடப் போகின்றது என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள். ஆகவே எது விசுவாசமாக இருந்தது…? வளர்த்த நாய் தான் செல்கின்றது.

நாயை ஏன் அங்கே மோட்சத்திற்குக் கொண்டு போகவேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நம்முடைய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுகின்றோம்.

நம்மை அறியாது வந்த தீமைகளை எல்லாம் அடக்கி நல்ல உணர்வுகளாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கின்றோம்.
1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் போது அங்கே போகின்றோம்.
2.நுகர்ந்த உணர்வுகள் நம்முடன் இணைந்து பிறவி இல்லா நிலை அடைகின்றது.
3.தன்னுடன் அது விசுவாசமாக இருந்ததால் அது தன்னைப் பாதுகாத்தது.
4.”நாம் சுவாசித்ததே.. நாம் நுகர்ந்ததே.. அந்த மோப்பம் தான் நம்மைக் காக்கின்றது…”
5.(அதனால் தான் நாய் என்று அதைக் காண்பித்து… தன்னுடன் கூடவே மோட்சத்திற்கு வருகிறது என்று தெளிவாக்குகின்றார்கள்.)

நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மைப் பாதுகாக்கின்றது. அந்த உணர்வின் தன்மை வலு இழக்காதபடி தன்னைப் காக்கின்றது. வீரிய தன்மை எடுக்கப்படும் பொழுது பிறருடைய துயரங்களை இது எடுத்துக் கொள்வது இல்லை. யாருடைய ஈர்ப்புக்கும் செல்லாதபடி “ஏகாந்தமாக விண் செல்கிறது…” என்று தெளிவாக்குகின்றார்கள்.

இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்களுக்குச் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

 

ஒருவர் மிகவும் கடினமாக வேதனைப்படுகின்றார் என்று நாம் பார்க்க நேருகின்றது. அப்போது நன்மை செய்யும் பருவத்தில் அவருக்கு உபகாரம் செய்கின்றோம்.
1.இப்படிப் பதிவான உணர்வுகள் சித்திர புத்திரன். அதாவது…
2.அவருடைய எண்ணம் நமக்குள் பதிவாகின்றது… நம்முடைய எண்ணம் அவர்கள் உடலில் விளைகின்றது.

சந்தர்ப்பத்தால் அந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் அவர் உடலில் விளைந்த உணர்வுடன் நம் உடலுக்குள் அது வந்து விடுகின்றது.

உடலுக்குள் வந்தபின் அவர் உடலில் விளைந்தது நமக்குள் ஊன்றிப் பதிவாகி விடுகின்றது. ஒன்றிய குணங்கள் இருப்பதனால் நம்மை அறியாமலே இப்படி ஆகின்றது.

மனித வாழ்க்கையில்… இதைப் போன்று இன்னொரு ஆன்மா மனிதனுக்குள் வந்து தான் அடுத்து அது மனிதனாகப் பிறக்க வேண்டும்.

பரிவால் பண்பால் இரக்கத்தால் ஈகையால் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்தாலும் அவர்களிடம் விளைந்த நஞ்சின் தன்மை…
1.நாம் கேட்டறிந்த அந்த உணர்வுகள் பதிவான பின்… தன் இனத்தால்
2.நம் உடலில் இருப்பது அந்த நினைவாற்றல் வெளி வரும் பொழுது
3.இந்த உணர்வின் துணை கொண்டு நம் உடலுக்குள் வந்தே தீருகின்றது.

எவ்வளவு பழகினாலும் சரி… இந்த உணர்வின் துணை கொண்டு இங்கே வந்து விடுகிறது. வந்து விட்டால் கோடாங்கியோ ஜோதிடமோ மற்ற மந்திரங்களாலோ அதை வெளியேற்ற முடியாது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்றால் உங்களுடைய எண்ணத்தை அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பால் செலுத்தி
1.அதனின்று வெளிப்படும் அருள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்
3.எனக்குள் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஜீவான்மா என்பது இன்னொரு உயிரில் விளைய வைத்த அது நமக்குள் சுவாசம் செய்யும் நிலை. ஜீவ அணு என்பது எந்தக் குணத்தை நாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் ஜீவித்து அந்த அணுவின் மலமாக நம் சரீரம் ஆகிறது.

எந்த உடலில் இருந்து ஜீவான்மா வந்ததோ அந்த நோயின் தன்மை கொண்டு நமக்குள் பரப்பி… அந்த உணர்வின் நினைவாற்றல் ஆக நம் ஜீவணுக்களையும் அதுவாக மாற்றிவிடும்.

அதைப் பெருக்க விடாது தடுக்க வேண்டும்.
1.நம் உடலில் எத்தகைய ஆன்மாக்கள் புகுந்திருந்தாலும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற நாங்கள் வேண்டும்…
2.எனக்குள் இருக்கும் ஜீவான்மாக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று “அடிக்கடி…” எண்ணுதல் வேண்டும்.

ஜீவான்மா என்கிற பொழுது உயிருடன் ஒன்றிய அந்த நிலைகள் ஒன்று சேர்ந்து இயங்கும் நிலை. மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

எனக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் அந்த ஆன்மாக்களுக்கு “அந்தச் சக்தியை ஏற்றிக் கொடுக்க வேண்டும்…”

ஒருவர் சாபமிடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்… அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
1.எந்த மனித உடலில் இருந்து அந்தச் சாப அலைகள் தொடர்ந்ததோ அதை அந்த அணு உணவாக எடுக்கும்.
2.அந்த உடல் இல்லை என்றாலும் அலைகள் இங்கே இருக்கும்… அதை எடுக்கும்.

ஒரு மரம் பட்டுப் போய்விட்டாலும் அதில் விளைந்த சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்திருப்பது போல மனிதன் வெளிவிட்ட அந்த சாப அலைகள் இந்தக் காற்றில் பரவியே இருக்கும்.

அதில் விளைந்த வித்து… மீண்டும் அந்தச் சத்தை எடுத்து அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

நம் மூதாதையர்கள் ஒருவருக்கொருவர் பிடிக்காது சாபம் இட்டிருப்பார்கள். அதை நாம் கேட்டறிந்தால் வம்சத்தில் அது வரும். பின் தொடர்ந்து இங்கே வம்ச வழியில் வந்து கொண்டே இருக்கும். அது வளர வளர அதனுடைய தீமைகளைச் செய்து கொண்டிருக்கும்.

மரம் அழிந்தாலும் அதிலே விளைந்த வித்து மீண்டும் தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து வளர்வது போல மனித உடலில் விளைந்த சாப அலைகள் வித்துக்களாகப் பெருகிக் குடும்பத்தில் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அதையெல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி யாம் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞானி வான்வீதியில் எந்தக் கோள் எங்கே செல்கின்றது…? என்பதைப் பதிவாக்குகின்றான். கம்ப்யூட்டர் மூலம் ஆயிரம் மடங்கு அதைப் பெருக்குகின்றான்.

பெருக்கிய பின் அந்த உணர்வின் அதிர்வுகளை எடுத்துக் கொண்ட பின் எந்தக் கோளின் உணர்ச்சியோ “அதை எலக்ட்ரானிக்காக…” மாற்றுகின்றான்.

அதை நாடாக்களில் பதிவு செய்து ஒரு ராக்கெட்டின் முகப்பில் வைத்து உந்து விசையால் உந்தச் செய்து விண்ணுக்குச் செலுத்துகின்றான்.
1.வேறு பாதையில் செல்லாதபடி…
2.எந்தக் கோளின் உணர்வலைகளைப் பதிவாக்கி வைத்துள்ளனரோ அந்த அலைகள் வான்வீதியில் வரும் பொழுது
3.அதன் திசைப் பக்கம் அழைத்துச் செல்கிறது.

அந்த உணர்வின் அழுத்தமான பின் ராக்கெட் அதைத் தொடர்ந்து செல்கின்றது. அந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் அனைத்தையும் தரை மார்க்கத்தில் இங்கிருந்து அதை எடுக்கின்றனர்… பார்க்கின்றனர்.

இதைப் போலத் தான் அன்றைய மெய் ஞானிகள் மனிதனின் வாழ்க்கையில் நாம் எதைப் பெற வேண்டும்…? பிறவி இல்லா நிலைகள் அடைந்து எப்படி விண் செல்ல வேண்டும்..? என்ற நிலையைத் தெளிவாக்கினான்.

இதை உணர்த்துவதற்குத்தான் விநாயகர் தத்துவத்தையே காட்டினார்கள். ஒரு உயிரின் தன்மை பல கோடிச் சரீரங்களை எடுத்து அதிலே வளர்ச்சி அடைந்து மனிதனாக எப்படி உருவாக்கியது…? என்றும் அதிலே உணர்த்தினார்கள்.

சிலையை மேற்கே பார்த்து வைத்து… நாம் கிழக்கே பார்க்கும்படி வைத்து நீர் நிலை இருக்கும் பக்கம் விநாயகரை வைத்தார்கள்.

நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் சென்று கணங்களுக்கு அதிபதியாகிப் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வளர்ந்து வந்தோம்.

மனிதனான பின் நாம் உணவுகளை எப்படிச் சுவைமிக்கதாகப் படைத்து உட்கொள்கிறோம்…? என்ற உணர்வுகளைக் காட்டி இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விகுறி வைத்துச் சிந்திக்கும்படி செய்கிறார்கள்.

காலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் நாம் குளித்து உடல் அழுக்கைப் போக்குகின்றோம். துணி அழுக்கைப் போக்குகின்றோம். கரை ஏறி வந்த பின் இந்த விநாயகரை உற்று பார்க்கும்படி… நீர் நிலை இருக்கும் இடத்தில் விநாயகரை வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

ஆதிமூலம் என்ற இந்த உயிர் பல பல உணர்வின் தன்மை தனக்குள் விளைந்து உயிர் ஈசனாக நின்று மனிதனை எப்படி உருவாக்கியது…? என்று தன்னை அறிவதற்காக்க் கணங்களுக்கெல்லாம் ஈசா.. “கணேசா…!” என்று நம் உயிரை வணங்கும்படி செய்தார்கள்.

வான இயல் புவியியல் உயிரியல் அடிப்படையில் பேருண்மைகளை எல்லாம் உணர்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியும் ஒன்றென இணைந்து விண்ணுலக ஆற்றலை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை நினைவாக்கி அதைப் பதிவாக்கி “நினைவினை விண்ணை நோக்கி ஏங்கும்படிச் செய்கின்றார்கள்…”

1.இங்கே டி.வி ரேடியோவை அது எந்த ஸ்டேசனோ… எந்த அலைவரிசையோ அதை வைத்து எப்படிக் கவர்கின்றோமோ
2.அதைப் போல் அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பதிவாக்கி
3.நம் எண்ணத்தால் அதைக் கவரும்படி செய்தார்கள் ஞானிகள்.

அந்த அகஸ்தியன் தனக்குள் வரும் நஞ்சினை எல்லாம் அவன் வென்றான். நாமும் அந்த நஞ்சினை வெல்லும் சக்தியைப் பெறுவதற்காக விநாய்கரை வைத்தான்.

காலையில் எழுந்த உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்கச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ பகைமை உணர்வுகளையும் தீமைகளையும் துன்பங்களையும் பார்த்து… கேட்டு… நுகர்ந்திருப்போம்.

நுகர்ந்தது அனைத்தும் நம் உறுப்புகளில் அந்த அணுக்களில் இருக்கும். இரத்தத்தில் இருந்து தான் அந்த உணர்வின் தன்மையைப் பகிர்ந்து கொள்கின்றது. அந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் வராதபடி நல்லதாக்க வேண்டும்.

இராமாயணத்தில் காட்டியிருப்பார்கள். இராமன் காட்டுக்குள் செல்லும் போது குகனை நண்பன் ஆக்கிக் கொண்டான் என்று.

அதைப் போல அருள் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் சேர்த்து நம் இரத்தங்களில் கலக்கச் செய்து உடல் முழுவதும் சுழலச் செய்தால் பகைமை உணர்வுகள் ஈர்க்கும் தன்மை குறைக்கப்பட்டு அனைத்து அணுக்களையும் நண்பனாக்கும் நிலையைக் கொண்டு வருகின்றது.

இராமாயணத்தின் நிலைகளை நீங்கள் தெரிந்து கொண்டால் மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்ற உண்மையை உணர முடியும்.

இந்த உடலுக்குப் பின் இனி நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை அதிலே நிலை நிறுத்திக் காட்டினான் அந்த மெய் ஞானி.

உங்களுக்குத் தன்னம்பிக்கை கொடுக்கத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்

 

நாம் செய்ய வேண்டிய அற்புதம் எதுவாக இருக்க வேண்டும்…?
1.நமது பார்வை பிறருடைய தீமைகளை நீக்க வேண்டும்
2.நமது பார்வை அவர்களுக்குள் ஞானத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.

இதை நாம் வளர்த்தோம் என்றால் என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற முடியும்.

அந்த மகரிஷிகள் அருள் ஒளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். என்னைப் பார்ப்பவருக்கு மன மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று நாம் செயல்படுத்த வேண்டும்.

“மன மகிழ்ச்சி” கிடைக்க வேண்டும் என்றால் வேதனைப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி பெறுவதல்ல.
1.என் (நம்முடைய) சொல்லால் பேச்சால் செயலால் பார்வையால்…
2.நான் நல்லதானேன்… எங்களுக்கு நல்லதானது…! என்று அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வர வேண்டும்.
3.உங்கள் பார்வை பிறரைப் புனிதப்படுத்தும் நிலையாக வர வேண்டும்.
4.உங்கள் உணர்வின் தன்மை தூய்மைப்படுத்தும் உணர்வின் ஆன்மாவாக மாற்ற வேண்டும்.

சப்தரிஷி மண்டலம் என்பது தீமை தனக்குள் வராதபடி ஒளியாக மாற்றிக் கொண்டது தான்.

நமது பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் மற்ற பிற மண்டலங்களில் வருவதை ஒடுக்கி துகள்களாக பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அது தூசிகளாக மாறுவதைக் கோள்கள் எடுக்கின்றது. அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து துகள்களாக மாற்றுகின்றது… பின் அதனின் ஓட்டத்தில் தூசிகளாக மாறுகின்றது. அதனைச் சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான்
1.மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் வலுக் கொண்டதாக மாற்றி…
2.பால்வெளி மண்டலங்களாக உங்களிடம் இருக்கும் எண்ணிலடங்காத குணங்களில் இணைத்து இணைத்து
3.எத்தகைய நிலையிலும் அது உங்களுக்குள் தூய்மைப்படுத்திடும் சக்தியாக நீங்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் தான்
4.எமது குருநாதர் காட்டிய அருள் வழியினை உங்களுக்குக் காட்டுகின்றேன்.

ஆகவே… தீமையை அகற்றித் தூய்மை பெறும் உணர்வின் தன்மையை நீங்கள் விளைய வைத்து இந்த உடலை விட்டு அகன்றால் அழியாச் செல்வமான பேரருள் பேரொளியாக நீங்கள் நிச்சயம் வருவீர்கள் என்ற “தன்னம்பிக்கையைக் கொடுக்கத்தான் இதைச் செய்கின்றேன்…”

அருள் செல்வம் நீங்கள் பெறுவீர்கள்… அருள் ஞானம் பெறுவீர்கள்… இந்த அருள் உணர்வு உலகம் முழுவதும் பரவட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்கு கடவுள் யார்…? நம்மை உருவாக்கியது யார்…? நமது அன்னை தந்தை உயிரே ஈசன். அவர்களுடைய எண்ணங்களால் தான் தனக்குள் எடுத்து நம்மை உருவாக்கினர்.

தாய் தந்தையர் கடவுளாக இருந்து தெய்வமாக நம்மைக் காத்தார்கள்…! எப்படி…?

1.நாம் பாம்பாக இருந்திருப்போம் அல்லது கொசுவாக இருந்து அவர்களின் இரத்தத்தை குடித்திருப்போம்.
2.அடித்த பின் அவர்கள் உடலுக்குள் போயிருப்போம்.
3.வீட்டில் எறும்பு தொல்லை கொடுத்தது என்று நசுக்கி இருப்பார்கள்.
4.நம் உயிர் அந்த உடலுக்குள் போயிருக்கும். அந்த உடலிலிருக்கும் உணர்வை எடுத்து மனிதனாக பிறக்கும் தகுதி பெறும்.

ஆகவே மனிதனாக நம்மை உருவாக்கியது யார்…? கடவுள் எங்கே இருக்கின்றான்…? நமது தாய் தந்தை தான் கடவுள். நம்மை மனிதனாக உருவாக்கிய அவர்கள் தான் கடவுள்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அவர்கள் மனிதன் ஆனார்கள். பல இன்னல்களைக் கடந்து வந்து இன்னலிலிருந்து மீண்டிடும் நிலை பெற்றார்கள். இன்னலிலிருந்து மீள்வதற்காக ஒன்றை அடித்துக் கொன்றார்கள். அந்த உயிர் அங்கே சென்றது. மனிதனாக உருவானது.

ஆகவே நமக்கு மனித உரு கொடுத்தது யார்..? நம்முடைய தாய் தான். தெய்வமாகக் காத்ததும் நம் தாய் தான்.

கர்ப்பிணியாக இருப்பவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகிறார்கள்…? குழந்தை பிறந்த பின் அந்தத் தாய் படுகிற அவஸ்தையைப் பார்த்தால் தெரியும். குழந்தைக்குத் தலை வலிக்கிறது என்றால் தாய் என்ன செய்கிறது…?
1.உடனே பதறுகின்றது… குழந்தைக்கு என்ன ஆயிற்றோ…? என்ற உணர்வை நுகர்கின்றது,
2.காக்கும் உணர்வைக் கொண்டு வருகின்றது.
3.அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலேயும் பதிவாயிருக்கின்றது.

குழந்தைப் பருவத்தில் அதை எண்ண முடியவில்லை என்றாலும் வளர்ந்த பின் “தாயின் காக்கும் உணர்வை எண்ணினால்… எத்தகைய தீமையாக இருந்தாலும் நாம் காக்கப்படுவோம்…”
1.“தாயின் உணர்வு நம்மைக் காக்கும்…!” என்ற நிலையை நாம் மறந்தே விட்டோம்.
2.விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாகக் கூறப்படுகின்றது.

இன்று தாயைத் திட்டுவதும் பேய் என்று விரட்டுவதும் அவஸ்தைப் படச் செய்வதும் தான் பெரும்பகுதிக் குடும்பங்களில் இருக்கிறது.

வேதங்களைக் கற்றுவந்த பின் யாக சாலைகளில் மந்திரங்கள் ஓதி பல உணர்வுகளைத் தீயிலே போட்டுப் பொசுக்கிப் பிற ஆன்மாக்களைத் தனக்குள் கைவல்யம் ஆக்கி மந்திரமாக்கிக் கொண்டு நான் கடவுளையே கை வசம் வைத்திருக்கிறேன் என்று தான் உலக மதங்கள் கூறுகின்றது.

இதிலிருந்தெல்லாம் நாம் என்று மீளப்போகிறோம்…? முழுமையாக அழியும் தருணத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்..!

இன்று கடலில் உள்ள மணலில் இருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து அணுகுண்டாகவும் ஹைட்ரஜன் குண்டுகளாகவும் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை எல்லாம் பரீட்சாந்திரமாக விண்வெளியிலும் வெடிக்கச் செய்துள்ளார்கள்.

வான் வீதியில் உள்ள நிலைகளைத் தெரிந்து கொள்ள இராக்கெட்டுகளை உந்து விசையால் அனுப்புகிறார்கள். அவைகள் வெளிப்படுத்திய கதிரியக்கச் சக்திகள் அனைத்தும் அங்கேயும் கலக்கப்பட்டு விட்டது.
1.சூரியன் அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றும் போது
2.நம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களிலும் அந்த விஷக் கதிரியக்கங்கள் கலந்து விட்டது.

உதாரணமாக இரண்டு மின்சாரம் (PHASE TO PHASE) ஒன்றானால் என்ன ஆகும்…? வீட்டில் உள்ள பல்புகள் பீஸ் ஆகிறது. அதைப் போன்று மனிதனின் சிந்தனைகள் அனைத்தும் சிதறப் போகின்றது. அந்த ஒரு நொடிக்குள் மனிதர்கள் மிருகம் ஆகிறார்கள்.

அதாவது மனித உடலாக இருந்தாலும் சிந்தனைகள் சிதறி மிருகங்களைப் போன்ற இயக்கமாகிவிடும். (ஏற்கனவே சில இடங்களில் அப்படித்தான் இருக்கிறது)

இந்த நிலையில் தான் நாம் அனைவரும் இருக்கின்றோம். ஒரு நொடிக்குள் மாறி விடுகிறது. நமக்கே தெரியாது. மனிதனுக்கு மனிதன் கொல்லும் நிலை வருகின்றது.

கடவுளின் அவதாரம் வராக அவதாரம் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வின் தன்மையை எடுப்பது போல் விஷமான உணர்வுகள் கலந்திருக்கும் இந்த உலகிலிருந்து மீண்டிட அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். அத்தகைய தீமைகள் வருவதற்கு முன் நுகர்ந்து பழகுங்கள்.

காலையில் விழித்தவுடன் “வானை நோக்கி ஏங்கி”
1.தன் கணவருக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.
2.தன் மனைவிக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.
3.அவர் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்.
4.அந்த அருள் என்றும் எனக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று “இருவருமே எண்ண வேண்டும்…”

இந்த மனித வாழ்க்கையில் நாம் என்றுமே தீமைகளைப் பற்றிடாமல் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி… பிறவி இல்லா நிலைகள் அடைதல் வேண்டும்.

குருநாதரும் மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்ததைப் பதிவு செய்கின்றேன்

 

மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் அதை வளர்த்துக் கொள்ளுங்கள். அருள் ஞானச் செல்வமான ஞானிகள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அழியா ஒளி உடலைப் பெறுங்கள்.

1.பூமியில் மீண்டும் உடல் பெறும் உணர்வுகள் நமக்கு வேண்டாம்.
2.காரணம் இந்தப் பூமி நிலை தடுமாறும் நிலைகள் வந்துவிட்டது… ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள்.

ஆயிரம் ஆண்டு நாம் வாழ்வதில்லை. ஆனாலும் இந்த உயிரின் தன்மை கொண்டு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால்
1.மனித நினைவு இருக்காது…. அதிலே சிக்கினால் நரக வேதனையைத் தான் அனுபவிக்க நேரும்.
2.1000 ஆண்டுகளில் சூரியன் பிரிந்து சென்று விட்டால் பிரபஞ்ச வாழ்க்கையும் முடிந்தது.
3.பூமி பனிப் பாறைகளாக மாறி… வியாழன் கோள் போல் ஆகிவிடும். இந்தச் சூரிய குடும்பம் சிதறுண்டு ஓடி விடும்.

இதிலே இருக்கக்கூடிய 27 நட்சத்திரங்களும் அதனுடைய குடும்ப நிலைகளாக வளர்ச்சிக்குப் போகும். அது முழுமை பெற்று சரி பகுதிக்கு மேல் பிரிந்து சென்று விட்டால் சூரியக் குடும்பங்களாக மாறி “ஒரு வட்டமாக 2000 சூரியக் குடும்பத்துடன் இணைந்து விடும்…”
1.நமது குருநாதரும் மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்ததை உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.
2.என்றும் அழியா பெரு வாழ்வு என்ற… நிலையான ஒளிச் சரீரம் பெறுவோம்.

நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றி என்றும் நாம் நிலைத்திருப்போம்… அந்த எல்லையை அடைவோம் என்று சபதம் எடுப்போம்.

இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும்
1.எத்தகைய தீமைகளையும் உங்களுக்குள் அணுக விடாதீர்கள்.
2.அருள் ஞானிகள் உணர்வைக் கொண்டு அதைத் துரத்தி அடியுங்கள்… அந்தப் பழக்கத்திற்கு வாருங்கள்.

ஆகவே அருள் ஞான உணர்வை அழியாச் சொத்தாக நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். அது என்றுமே நிலைத்திருக்கும்.

குணச் செல்வம் இருப்பினும் கூட சிறிது காலம் தான் இருக்கும்… அதுவும் அழிந்துவிடும். ஆனால் அழியா ஒளிச் சரீரம் பெற்று விட்டால் அது என்றுமே அழிவதில்லை. அதன் வழியில் நாம் அனைவரும் செல்வோம்.

கேட்டுணர்ந்தவர்கள் இதைப் பெற முயற்சி செய்யுங்கள்… நிச்சயம் பெறுவீர்கள். வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துங்கள். நம் அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் வர வேண்டும்.

ஒரு பிரபஞ்சம் எவ்வாறு இயக்குகின்றதோ அதை போல்
1.நாம் அனைவரும் குரு வழியில் குருநாதரின் இயக்கத்திற்குள் ஒரு பெரிய பிரபஞ்சமாகி
2.உலகில் உள்ள தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் நமக்குள் விளைந்து
3.தீமை வராது நம்மைக் காத்திடும் உணர்வுகளாக வளர வேண்டும்.

ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். உலகைக் காத்திடும் உணர்வை விளைய வைப்போம். இந்த உலகைத் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் நிலையாக வளர்ப்போம்.

நீங்கள் இதைக் கடைப்பிடியுங்கள். வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் தூசியாக மாறிவிடும் எத்தகைய நஞ்சானாலும் தூசியாக மாறிவிடும். அருள் ஞான சக்திகள் என்றுமே உங்களுக்குள் விளைந்து விடும். பேரானந்த நிலைகள் பெறும் தகுதியை இந்த உடலிலேயே பெற்றிடுவோம்.
1.அருள் செல்வம்… அருள் ஞானம் இந்த உலகம் முழுவதும் பரவட்டும்
2.மகரிஷிகள் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் பரவட்டும்… மெய் உணர்வுகள் மலரட்டும்.

இந்த மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு உலகைக் காத்திடும் உணர்வுகள் எல்லா இடங்களிலும் பரவட்டும். அதை நமக்குள் விளைய வைப்போம் என்று எல்லோரையும் வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாட்டை நாம் வீட்டில் வளர்க்கின்றோம். உதாரணமாக ஒருவர் அந்த மாட்டைப் பார்த்து “அதை மிரட்டுகின்றார்…!” என்று வைத்துக் கொள்வோம்.

மாடு அவரைப் பார்த்த உடன் அந்த மிரட்டும் உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு “மிரண்டு துள்ளும்…!”

ஆனால் அதே சமயத்தில் சாந்தமான நிலைகளில் அந்த மாட்டைப் பார்த்துப் பேசப்படும் போது “வாடா ராஜா… நீ இப்படிப் போ.. உட்கார்…! என்று சொல்லிப் பதிவாக்கினால் அந்த மாடு சாந்தமாக வரும். ஏனென்றால்
1.மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகளும் எண்ணங்களும் மிகச் சக்தி வாய்ந்தது.
2.மற்றொன்றை இயக்கக் கூடிய சக்தி பெற்றது.

புலி மற்றதைப் பார்க்கும் போது கொடூர நிலை கொண்டு இயக்கப்படும் சக்தி பெற்றது. அதை நாம் நுகரப்படும் போது அஞ்சி ஓடுகின்றோம் அல்லவா…!

இதைப் போல மனிதன் கோபமான உணர்வுடன் பார்க்கப்படும் போது மாடு அந்த உணர்வை நுகர்ந்த பின் அதற்குள் வலுவாகின்றது. வலுவான பின் நம்மைக் கண்டு அஞ்சி ஓடும் உணர்வுகள் வந்து அதுவே கூர்மையாகின்றது.

அந்தக் கோபப்பட்டோரின் உணர்வுகள் மாட்டிற்குள் பதிவாகி விளைந்த பின் அந்த மாடு இறந்தாலும் அதே மனிதனின் உடலுக்குள் தான் போகும். (மாட்டின் உயிரான்மா கோபித்தோர் உணர்வின் வலிமையை எடுத்து மனித உணர்வுக்குள் வரும்)
1.மனித உடலுக்குள் வந்து
2.மனிதனாகப் பிறக்கும் கருத் தன்மை பெறுகின்றது.

மாட்டின் ஆன்மா கருவாகி இந்த உடலுக்குள் வரப்படும் போது இங்கே விளைந்து அந்தக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும் அணுவின் தன்மை அடைகின்றது.

முதலில் அந்த மனிதர் கோபமாகப் பேசியிருந்தாலும் இந்த மாட்டுக்குள் விளைந்த கோப உணர்வுகள் இங்கே மீண்டும் தோன்றி இவருக்குள் வந்து இந்த உணர்வுகளைத் தூண்டி அதே உணர்ச்சியின் தன்மை கொண்ட மனிதனாகப் பிறக்கும் உருத் தன்மை பெறுகின்றது.

அது மனிதனாகப் பிறக்கும் தகுதி பெற்றாலும் இந்த வீரிய உணர்வுகள் அதற்குள் பட்ட பின் அது பிறக்கும் போதே குழந்தையின் நுண்ணிய நாளங்களை அது இழந்துவிடும். பிறக்கும் போதே அந்தக் குழந்தை இறந்துவிடும்.

உங்களுக்குள் தெளிவாக்குவதற்காக மீண்டும் சொல்கிறோம்.
1.ஒருவர் கோபமான நிலையில் மாட்டை அதிவேகமாகத் தாக்கியிருந்தால்
2.அதனுடைய உணர்வுகளை எடுக்கப்படும் போது மாடு இறந்தபின்
3.யார் விரட்டினார்களோ அதே உடலுக்குள் வந்து அவருடைய உணர்வை எடுத்து இங்கே கருவாகும்.
4.மனிதனாகப் பிறக்கும் தகுதி ரொம்ப சீக்கிரமாக வருகின்றது.

இப்படி உருவான அந்தக் கருவின் உந்து வேகம் மற்றதைத் தள்ளிவிட்டு முதலில் கர்ப்பத்திற்கு வரும் தகுதியும் வருகின்றது. அப்படிப் பெற்றதனால் கருவிலேயே அதனுடைய நுண்ணிய நாளங்கள் இழந்து பிறக்கும் பொழுதே இறந்து விடுகின்றது.

இவையெல்லாம் இந்த உணர்வுகளுடைய இயக்கங்கள் எவ்வாறு…? என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டினார்.

ஆக மாட்டிடம் கோபமாகப் பேசிய உணர்வுகள் இப்படி வருகிறது. ஆனால் அந்தக் குழந்தை இறந்து விடுகின்றது. அந்தக் குழந்தை இறந்து விட்டால் அந்தத் தாயின் ஈர்ப்புக்குள்ளே வந்து விடுகின்றது.

குழந்தை இறந்துவிட்டதே…! என்று தாய் பாசத்தால் எண்ணும் பொழுது அந்தக் குழந்தையின் உயிரான்மா தாயின் ஈர்ப்புக்குள் வந்து அது தன்னுடைய சுழற்சியில் இன்னொரு பிறவிக்கு வருகின்றது.

சாந்தம் கொண்டு இந்தப் பாசமான உணர்வுகள் அடுத்து வரப்போகும் போது அது மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது. இதில் இத்தனை வித்தியாசங்கள் இருக்கின்றது…!

ஆனால் அதே சமயத்தில் அந்த மாட்டைச் சாந்தமான நிலைகள் கொண்டு வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மாடு இறந்த பின் பாசமாகப் பழகிய அந்த மனித உடலுக்குள் மாட்டின் உயிரான்மா சென்று கருவாகி மனிதனாக உருபெரும் தகுதியைப் பெறுகின்றது.

இந்த உணர்ச்சிகள் அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு நல்ல ஞானத்தின் நிலைகள் கொண்டு பிறக்கும் அந்தக் குழந்தையாக வருகின்றது.

இவர் வளர்ந்து கொண்டு இருந்தாலும் அல்லது இறந்து விட்டாலும் இவர் யாரிடம் நட்புடன் பண்பு கொண்டு அதிகமாகப் பழகுகின்றாறோ அந்த உடலை விட்டுச் சென்றபின் அந்தப் பண்பு கொண்ட மனிதனின் ஈர்ப்புக்குள் மாட்டின் உயிரான்மா செல்லும்.
1.பின் அதனுடைய வரிசைத் தொடரில் வளர்ச்சி பெற்று
2.ஏழு சரீரங்களுக்குச் சென்ற பின் அது மனித உருவைப் பெறும் தன்மையாக முழுமை பெறுகின்றது.
3.ஏழு ஜென்மங்கள் என்று சொல்வார்கள்.

இதையெல்லாம் ஞானிகள் தெள்ளத் தெளிவாகக் கண்டு உணர்ந்து உணர்த்திய பேருண்மைகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை உணர்த்துகின்றோம்.

உங்களை அகண்ட பேரண்டத்துடன் இணைத்து… “அந்த மகரிஷிகளுடன் ஒன்றும்படி செய்கிறோம்…”

 

ஒரு வாடிய செடிக்கு எப்படி உரம் இடுகின்றோமோ அதைப் போலத் தான்
1.அந்த மகரிஷிகளின் உரச் சத்தை
2.அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வினை உங்களுக்குள் உரமாக இணையச் செய்கின்றோம்.

சாதாரணமானதல்ல…! அகண்ட அண்டத்தின் விரிவான நிலையை அறிந்த ஞானி தனக்குள் அதை தெளியச் செய்து அந்த உணர்வால் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு முழுமை அடைந்துள்ளான்… கல்கி.

அந்த நிலையை நாம் அனைவரும் பெற முடியும். அதை நாம் எல்லையாக வைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

1.உங்கள் வாழ்க்கையில் வாடிய உணர்வுகள் எத்தனையோ எத்தனையோ…!
2.அப்படிப்பட்ட நிலையில்… கோடிக்கணக்கான குணங்கள் உங்களுக்குள் இருப்பினும்
3.அவை எவ்வாறு உருவானது…? என்ற நிலையை உங்களுக்குள் நினைவுபடுத்தி
4.அதை அண்டத்துடன் பேரண்டத்துடன் இணைத்து
5.மனிதனான நாம் அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் இணைத்து இணைத்து
6.அவ்வாறு இணையும் தன்மையைத் தனக்குள் பெருக்கப்படும் பொழுது தான் அது வலுப் பெறும்.

ஒவ்வொரு செடிகளுக்கும் அதற்குண்டான உரத்தை இடுவது போன்று தான் அருள் ஞானிகளுடைய உணர்வுகளை மிகச் சக்தி வாய்ந்த உரமாக உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.

இந்த உணர்வின் துணை கொண்டு என்றும் அருள் ஞான உணர்வின் தன்மை கொண்டு “இருளைப் பிளந்து பொருள் காணும் பொறிகள்…” உங்களிடத்தில் உருவாக வேண்டும் என்பதற்குத்தான் இதை இணைத்து இணைத்துத் தொடர்ந்து இணையச் செய்கின்றேன்.

காரணம்… இந்த உடலில் யாரும் நீண்ட நாள் இருப்பது இல்லை. யாரும் இருந்தது இல்லை. ஆனால் நீண்ட நாள் என்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.
1.இந்த உடலை வைத்துத் தான் உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
2.விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக நிலை கொண்டுள்ளார்கள்.
3.பேரானந்த பெரு நிலை என்ற நிலையில் முழுமை அடைந்தவர்கள் அவர்கள்.
4.நாம் அனைவரும் அதைப் பெற வேண்டும்.

மனிதனான பின் தீமையை நீக்கி விட்டு தனக்குகந்ததாக பல பொருள்களை உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள் தான் நாம். இதையெல்லாம் உங்களுடன் இணைத்து இணைத்துப் பேசுகின்றேன். மெய் ஞானிகளின் உணர்வுகளை அறிந்து கொண்டால் போதும்.

மெய்ஞானி உயிருடன் ஒன்றி என்றுமே அழியாத நிலை கொண்டான்…!

ஆஅனால் விஞ்ஞானியோ இந்த உடலுக்காக வேண்டி சகல சொர்க்கத்தையும் கொடுத்தான். பேரின்பத்தைக் கொடுக்கக்கூடிய நிலைகளுக்கும் அந்த விஞ்ஞான அறிவு வந்தாலும்… அது உடலுடன் சரி.

உடல் மடிந்த பின் எத்தகைய அறிவு கொண்டாலும் பூதகணமாக இயங்கி இன்னொரு மனித உடலுக்குள் கொண்டு போய்… பேயாக உருவாக்கும் நிலையே வருகின்றது.

எந்த மனித உடலில் எந்த வேதனையைக் கடைசியிலே வளர்த்துக் கொண்டானோ எதனைக் கொண்டு அழிக்கத் துணிந்தானோ அந்த உணர்வுகள் மனித உடலில் விளைந்து சிறிது கோபம் வந்தால் போதும்.

என்ன வாழ்க்கை…? என்று உடலை அழிக்கச் செய்து விடுகின்றது. மற்றவனை எப்படி அழிக்க வேண்டும்…! என்று வருகின்றது.

கோடிக்கணக்கான சொத்துகளைச் சம்பாதித்தாலும் அனைவரையும் அழித்துக் காலி பண்ணுகின்றேன் பார்…! இந்த ஊரை அழிக்கின்றேன்… அனைத்தையும் உருக்குலையச் செய்கின்றேன்…! என்ற உணர்வு தான் விஞ்ஞானத்தினால் இன்று வருகின்றது.

அதையெல்லாம் மாற்றிட
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் மீண்டும் மீண்டும் விண்வெளி சென்ற அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பருகிப் பருகி
2.வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றிடும் திறனை உரமாக ஊடடுவதற்குத் தான் இந்த உபதேசமே…!.

வீண் என்ற பேச்சு இல்லை… விரயமாகும் தன்மை இல்லை…!

அருள் ஞானிகள் அவர்கள் எவ்வாறு விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்தார்களோ “அந்த மகரிஷிகளின் சக்தியை உங்களுக்குள் இணைத்து இணைத்து இணைத்து…” இந்த இணைப்பின் வலு கொண்டு உரமாக்கி விட்டால்…
1,எண்ணத்தால் வளரும் பருவம் வந்து விட்டால்… உங்கள் நினைவின் ஆற்றல் அகண்ட அண்டத்திற்கு வருகின்றது.
2.பேரானந்தப் பெரும் செல்வத்தை உங்களில் வளர்த்திட இது உதவும்.

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான நிலைகள் இருப்பினும்…
1.அந்த மகரிஷிகள் உணர்வுகளை உங்கள் ஏங்கிடும் உணர்விற்குள் இணைத்து
2.அதை உற்று நோக்கி அந்த மகரிஷிகளுடன் ஒன்றச் செய்வது தான் இந்த உபதேசத்தின் நோக்கம்.

அதைத்தான் தொடர்ந்து யாம் செய்து கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் தன் தாய் கருவிலே சிசுவாக இருக்கும் பொழுது நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெற்றான்.

ஏனென்றால் அவனுடைய தாய் காடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் மிருகங்களிடமிருந்தும் மின்னல்களிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள பல தாவர இனங்களையும் மூலிகைகளையும் பச்சிலைகளையும் தன் உடலிலே அரைத்துப் பூசிக் கொண்டது.

தன் உடலிலே பூசிய அந்தத் தாவர இனங்களின் மணங்களை அந்தத் தாய் சுவாசிக்கும் பொழுது இரத்தத்தின் வழியாகக் கருவிலிருக்கும் சிசுவுக்கும் போய்ச் சேர்கின்றது.

அத்தகைய சத்துக்களைப் பெற்ற அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்தபின் வானத்தை நோக்கிப் பார்த்துப் படுத்திருக்கின்றது. ஆனால் சூரியனுக்குள் நடக்கும் அதிசயங்களைப் பார்க்கின்றது… அந்த உணர்வை நுகர்கின்றது.

ஏனென்றால் அந்தக் குழந்தையின் தாய் தந்தையர்கள் மிருகங்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றச் “சூரியன் கடவுளாக வருகிறான்…!” என்று சூரியனை அக்காலத்தில் வணங்கியவர்கள்.

அது விஷத்தின் தன்மை உமிழ்த்திக் கொண்டிருக்கும் அந்தச் சக்தியை அவர்களால் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்தக் குழந்தையால் பார்க்க முடிகின்றது.

அவர்கள் சூரியனைக் கடவுள் என்று வணங்கினார்கள். இங்கே அந்தச் சூரியனின் அதிசயங்களைக் காணுகின்றது இந்தக் குழந்தை.

1.இருப்பினும் இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடையப்படும் போது
2.அகஸ்தியன் அருகிலே வரும் எந்த விஷ ஜந்தும் மற்ற மிருகங்களும் அவனைக் கண்டு அது அஞ்சியே நிற்கின்றது
3.இதைக் கண்ணுற்ற தாயும் தந்தையும் இது கடவுளின் அவதாரம் என்ற நிலைகளில் அந்தக் குழந்தையைப் போற்றித் துதித்தார்கள்.
4.அங்கிருந்த அந்தக் காட்டுவாசி மக்களும் குழந்தையைக் கண்டு அதிசயிக்கின்றார்கள்.

ஏனென்றால் அந்தக் காலங்களில் மிருகங்களிடமிருந்து தப்பிக் கொள்ள இந்த மனிதனுக்கு ஒரு சிறு புத்தி உண்டு.

தன் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் தான் கண்டுபிடித்த உணர்வைக் கொடுப்பார்கள். அடுத்தவர்களுக்குக் காண்பிக்க மாட்டார்கள். இதைப் போன்ற நிலைகள் இன்றும் உண்டு… அன்றும் உண்டு…!

ஆகவே அந்த அகஸ்தியன் குடும்பத்தில் மட்டும் இந்த நிலைகள் பெற்றபின் அந்தச் சுற்றுள்ள வட்டாரங்கள் அனைத்தும் இதனுடைய அதிசயங்களைப் பார்க்கின்றது. இதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர்.

இருந்தாலும் அந்த வட்டாரங்களில்
1.அகஸ்தியன் நுகர்ந்த உணர்வுகள் வெளிவரப் போகும் போது
2.அதை உற்றுப் பார்த்தபின் இந்த உணர்வின் தன்மை
3.அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கும் இது தெரிந்திடும் அறிவாக விளைகின்றது.

இவனுக்குள் விளைந்த அலைகள் உற்றுப் பார்த்துக் கூர்மையாக பார்க்கப்படும்போது “இவன் காணும் அதிசயங்கள்…” மற்றவர்களுக்கும் இந்த உணர்வுகள் உணர்ச்சியைத் தூண்டும் நிலை பெறுகின்றது.

அன்று அகஸ்தியன் வெளிப்படுத்திய அந்த ஆற்றல்கள் இன்றும் உண்டு. அதை எல்லோரும் பெற முடியும்.

அதற்காக வேண்டித்தான் அந்த அகஸ்தியன் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் பெரும் பகுதி நான் (ஞானகுரு) சுற்றுப் பயணம் செய்து வந்தது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் சுமார் பத்து வருடம் காடு மேடெல்லாம் அலைந்தது.

1.அகஸ்தியர் எந்தப் பகுதிக்குச் சென்றாரோ அந்தப் பகுதி எல்லாம் என்னை அலையச் சொன்னார் குருநாதர்.
2.அவர் பதித்த அந்த உணர்வினை அங்கங்கு சென்று அதைப் பதிவாக்கியபின்
3.எது உண்மை…? எது பொய்…? என்ற நிலையில் அறியும் அந்தப் பருவத்தைக் கொடுத்தார்.

இன்று நீங்கள் எல்லோரும் அதை நுகர முடியும்.

இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டு அந்த அகஸ்தியனை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தியானித்தால் அதைப் பெற முடியும்.

அதை நுகர்வதற்குதான் மீண்டும் மீண்டும் அந்த அகஸ்தியர் பெற்ற உணர்வுகளை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

January உபதேசம் – 2026

உயிர் உணர்வு உடல் – இயக்கம்

 

ஒரு மரம் பட்டு அதனுடைய சத்தெல்லாம் இழந்தாலும்… அதில் விளைந்த சத்தினைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து சேமித்து வைத்துக் கொள்கின்றது.
1.சேமித்த உணர்வின் தன்மை பூமியின் பரத்தில் பரமாத்மாவில் அலைகளாகத் தொடர்கின்றது… பரமாத்மாவாக இருக்கின்றது.
2.மண்ணிலே ஊன்றப்பட்ட வித்து தன் தாய் மரத்தின் உணர்வை நுகர்ந்து மரமாக விளைந்து மீண்டும் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றது.

இதைப் போல தான் சூரியனால் உருவான இந்த உணர்வுகள் அதனுடைய அலை வரிசைகள் தொடர்ந்து எதன் எதன் வழிகளில் அது கவர்ந்ததோ அந்த இன வித்துக்கள் மாறுவதும்… மரம் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது மரத்தின் இனங்கள் மாறுவதும்… தாவர இனங்களும் மாறுகின்றது.

இதைப் போன்று… நம் உடலுக்குள் இருக்கும் உயிர் “நாம் எண்ணியது எதுவோ… அதை ஜீவ அணுக்களாக மாற்றி…” அந்த உணர்வின் மலமாக உடலாக மாற்றி அமைக்கின்றது.

சூரியனைப் போல உயிர் மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.இந்தப் பூமியில் காற்றுடன் கலந்துள்ளது
2.ஆனால் நம் உடலில் ரத்தத்துடன் கலக்கின்றது.

நாம் எண்ணியது எதுவோ அது அனைத்தும் ஜீவ அணுக்களாக ரத்தங்களிலே உருப் பெறுகின்றது.

பல கோடி வித்துக்களாக உருப்பெற்றாலும் அந்தந்த மரம் காற்றிலே மிதந்து வரும் தன் இனத்தின் சத்தை எடுத்து விளைவது போல நமக்குள்ளும் விளைகின்றது.

ஒருவன் தீமையாகப் பேசுகின்றான்…! அவனிடமிருந்து சொல்லாக வருகின்றது… அவனில் விளைந்த வித்தாக அது வெளிப்படுகின்றது. நாம் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாக நமக்குள் பதிவாகின்றது. வினை தான் வித்து என்பது.

ஒரு வித்து தன் சத்தைக் காற்றிலிருந்து எவ்வாறு கவர்கின்றதோ அதைப் போல்
1.நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்த ஊழ்வினை மீண்டும் தன் உணர்வின் சத்தை ஆன்மாவாக மாற்றுகிறது.
2.மாற்றிய பின் சுவாசித்து உயிரிலே பட்டு அது தான் எண்ணமாக மாறுகின்றது.
3.அது உடலுக்குள் செயல்படும்போது அந்த உணர்வின் உந்து விசையால் நம் உடல் அங்கங்கள் அதற்குத்தக்க அசைகிறது.

நாதத்தின் சுருதி கொண்டு வாத்தியங்களை இசைக்கிறார்கள். அதைக் கேட்டு… அந்த இனிமை கலந்த உணர்வுகளை ஒரு தரம் பதிவாக்கி விட்டால் அந்த ராக இணைப்பிற்கு அந்த இசையின் வாசிப்பிற்கு நம்முடைய அங்கங்கள் இசைந்து இயக்குகின்றது.

வாசிக்கத் தெரியவில்லை என்றால்… சீராகப் பதிவு செய்யவில்லை என்றால் என்னதான் வாத்தியம் வாசித்தாலும் அது வராது.

இனிமை கொண்ட வாத்தியத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் பதிவு செய்யும் பொழுது அது பதிந்த பின் தன்னிச்சையாக அவருடைய அங்கங்களை அசைப்பதும் மீண்டும் ரசனையை அவர்கள் கூட்டும் பொழுது அதற்கு தகுந்தாற் போல் அந்த வாத்தியங்கள் மிகவும் நயமாகவும் பிறரை மகிழ்விக்கும் நிலையும் ஆட்டிப்படைக்கும் நிலைகளும் வருகின்றது.

இதைப் போன்று தான்
1.ஒரு மனிதன் கோபித்த உணர்வின் தன்மையைப் பதிவு செய்து கொண்டால்
2.அந்த உணர்வின் நாதங்கள் நமக்குள் கோப உணர்ச்சிகளைத் தூண்டி இந்த உணர்வுக்கொப்ப நம் அங்கங்களை இயக்குவதும்
3.அதே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மற்றவரை அழித்திடும் நிலையோ… இம்சிக்கும் நிலையாகவோ அது நமக்குள் தோன்றும்.

அவ்வாறு தோன்றிய உணர்வுகள் நம் உடலுக்குள் இம்சைப்படும் உணர்வுகளாகவே உருப்பெறுகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக உருவான இந்த உடல் நலியும் தருணம் வருகின்றது.

பிரபஞ்சத்தில் சூரியன் இயக்குவது போல
1.நாம் எண்ணிய உணர்வுகள் எவையோ அவை அனைத்தையும்
2.உயிர் உடலுக்குள் அணுக்களாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் மற்றொருவரை வேதனைப்படுத்துகிறார் என்று உற்றுப் பார்க்கின்றோம். “பாவிப்பயல்…! இப்படி வேதனைப்படுத்துகின்றானே…!” என்று எண்ணுகின்றோம்.

பிறரை வேதனைப்படுத்தும் போது அதை நாம் கூர்மையாகப் பார்க்கும் போது அந்த மனிதனை நம் கண்ணின் கரு விழி ருக்மணி படமாக்கி எலும்புக்குள் ஊனாகப் ப்திவாக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் அந்த மனித உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படுத்தும் உணர்வலைகள் வெளிப்படுகின்றது. இதைச் சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி இந்தக் காற்றிலே வைத்துக் கொள்கின்றது.

ஒரு செடியிலிருந்து வெளிப்படும் மணத்தை (அதாவது அதனின் சத்தை) சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கிறது.

அதே சமயம் அந்தச் செடியில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றும் போது சூரியனால் ஏற்கனவே கவரப்பட்ட அந்தச் சத்தினை இந்த வித்து தனக்குள் கவர்ந்து அதே செடியைப் போன்று விளைகின்றது.

இதைப் போன்று தான்… வேதனைப்படும் உணர்வுகள் ஒரு மனிதனுக்குள் விளைந்து அது சொல்லாக வெளிப்படும் போது நாம் அவனைக் கூர்மையாக பார்த்து அவன் உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நமக்குள்ளும் அதே உணர்ச்சியைத் தூண்டுகிறது.
1.வேதனைபடுபவனைப் பார்த்து நாம் அனுசரிப்போம். அவன் வேதனையால் அழுவான்.
2.அதை வைத்து வேதனைப்படுத்துபவனைப் பார்த்து “ஏன் இப்படிச் செய்கிறாய்…?” என்று நாம் கேட்கத் தொடங்குகின்றோம்.
3.அப்பொழுது வேதனைப்படுத்தும் உணர்வும் வேதனைப்படும் உணர்வும் நம் உயிருக்குள் படுகிறது.
4.இந்த இரண்டு உணர்வும் கலந்த பின் இது பிரம்மமாக (சிருஷ்டி) உருவாகிறது.

வேதனைப்படுபவன் வேதனைப்படுத்துவனை எண்ணி அந்த வேதனை ஒன்றைத்தான் நினைக்கின்றான். அதனால் வேதனைப்படும் உணர்ச்சி அவனுக்குள் தூண்டுகின்றது.

வேதனைப்படுத்துபவனோ வேதனைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றான். அந்த உணர்ச்சிகளை அவனுக்குள் தூண்டுகிறது.

ஆனால்…
1.அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இந்த இரண்டையும் நுகர்ந்து சிந்திக்கும் பொழுது
2.நமக்குள் இது புது குணமாக… புது அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.

வேதனயால் வாடுபவனை அங்கே காக்க எண்ணுகின்றோம். அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக நமக்குள் உருவாகின்றது. அந்த நேரத்தில் நியாயத்தையும் பேசுவோம். ஆனால் நாம் வேதனைப்படவும் செய்வோம்.

வாழ்க்கையிலே நான் நியாயத்தைப் பேசுகிறேன்…! என்று சொல்லலாம். அதே மாதிரி அயோக்கியத்தனம் செய்கின்றான்…! என்றும் சொல்லலாம்.

அயோக்கியத்தனம் செய்பவனையும் அதனால் வேதனைப்படுபவனையும் இந்த இரண்டையும் சேர்த்து நாம் நுகர்கின்றோம். இந்த இரண்டையும் சேர்த்துத் தான் நாம் நியாயத்தை வாதிக்கின்றோம். இந்த வலு நம்மிடம் வந்து விடுகிறது.

அடுத்து நாம் மற்றவர்களிடம் சொல்லும் பொழுது எப்படிப் பேசுவோம்…? நம்மை அறியாமல் இந்த இரண்டு உணர்வையுமே சொல்வோம்.
1.வேதனை உணர்வையும் சொல்வோம்…
2.வேதனைப்படுத்துவது நியாயமா…? என்று அதையும் அதிகமாகச் சொல்வோம்.

இரண்டும் இப்படிக் கலந்து வந்த பின் நம் உடலுக்குள் அணுவாக விளைந்து விட்டால் அதற்கு உணவு தேவை.

உதாரணமாக… ஒரு செடிக்குள் மற்ற செடியின் ஜீன்களை (GENE) இணைத்து விட்டால் இது இரண்டும் கலந்து எந்த ஜீன் அதிகமாக வளர்ந்துள்ளதோ அதற்கொப்ப அந்த மலரின் தன்மையும் அதிலே விளையும் காயின் சுவைகளும் மாறுகின்றது.

இதைப் போல உயிரினங்களில் எடுத்துக் கொண்டாலும் ஒரு உயிரினத்திலிருக்கும் அணுக்களின் சிசுக்களை எடுத்து இன்னொரு உயிரினத்தில் இணைக்கப்படும் போது இரண்டு சிசுக்களும் ஒன்றாகி
1.புதுவிதமான உடலின் அமைப்பைப் பெறுகின்றது….
2.குணத்தின் தன்மைகளும் மாறுகின்றது…!

விஞ்ஞான அறிவில் பார்க்கலாம்… கொடூர குணம் கொண்ட மிருகங்களைச் சாந்தமான மிருகமாக மாற்றுகின்றார்கள். பரிணாம வளர்ச்சியில் இப்படி வருகிறது…!

இதைப் போல நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எந்தெந்தக் குணங்களை எண்ணி எடுக்கின்றோமோ அத்தனையும் நமக்குள் கலந்து…கலந்து கலவையாகிப் புதிய குணங்களாக அணுக்கள் உருவாகிறது. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாறாது காக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் ஞானிகள் உணர்வை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்.

வீட்டிற்குள் தூசி வந்தால் மீண்டும் மீண்டும் அதைத் தூய்மையாக்கிக் கொண்டே இருப்பது போல்
1.அன்றாட வாழ்க்கையில் நமக்குள் நாம் நுகர நேரும் எல்லாக் குணங்களுக்குள்ளும்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

அவ்வாறு இணைத்தால் உடலில் உள்ள பல கோடி உணர்வுகளையும் ஒன்றாக்கிப் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து பேரொளியாக நாம் மாற முடியும். அழியாத ஒளியின் சரீரம் பெறலாம்.

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிதல்ல… தெரிந்த பின் உடனே அதை நீக்க வேண்டும்

 

நாம் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருப்பினும்… ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்காமல் இருக்க முடியாது. அவர் சொல்லைக் கேட்காமல் இருக்க முடியாது.

ஒருவன் குற்றம் செய்கிறான் என்றால் அதைப் பார்க்காமல் இருக்க முடியாது. குற்றம் செய்தவர்களால் நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனைப்படுவதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.

1.அதையெல்லாம் அறிவால் அறிகின்றோம். அறிந்த உணர்வு நமக்குள் பதிவாகின்றது.
2.எத்தகைய உணர்வுகளைப் பார்த்தாலும் அறிந்து தெரிந்து கொண்டாலும்
3.கார்த்திகேயா என்று தெரிந்திடும் அறிவு இருந்தாலும் “அதை நீக்கிடும் அறிவு வேண்டும்…”

நம் உடல் ண்ஹாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருக்கும் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வினை உடலாகச் சேர்க்கின்றது. அந்த நல்ல உணர்வால் நாம் இடும் மணத்தால் நல்ல எண்ணங்கள் கொண்டு தீமையை அகற்றிடும் நிலைகளை உருவாக்குதல் வேண்டும்.

1.நல்லவைகள் எதுவாக இருப்பினும்
2.தீமைகளைப் பற்றித் தெரிந்திடும் அறிவு இருந்தாலும்
3.தெரிந்த பின் அந்தத் தீமையை நீக்க வேண்டும் அல்லவா.

வேலை செய்கின்றோம்… கை அழுக்காகின்றது. அதை நாம் கழுவாதபடி அடுத்து உணவை உட்கொள்வோமா…? அப்படி உட்கொண்டால் அழுக்கின் சுவையே தான் வரும்… உணவு சுவையற்றதாக மாறி உடலுக்கும் தீங்கு விளைவிக்கின்றது.

இதைப் போன்று தான் மகிழ்ச்சி கொண்டு மற்றவர்கள் கஷ்டத்தைக் கேட்டறிந்தாலும்… அதைத் தெரிந்து கொள்ளும் அறிவு இருந்தாலும்…
1.அவருடைய தீங்கு நம் நல்ல அறிவுடன் இணையும் பொழுது
2.அதைத் துடைக்கவில்லை என்றால் அவரின் தீமையின் உணர்வே நமக்குள் விளையும்.

துடைக்கா விட்டால் உடலில் நோயின் தன்மையாகிவிடும். மீண்டும் நல்ல உணர்வை எடுக்க முடியாதபடி தவிக்கும். அப்பொழுது சிந்தனைகள் சிதறும். சிதறும் பொழுது உடலில் நடுக்கமும் நடுக்கத்தால் வரும் கோபமும் சிந்தனையற்ற செயல்களாக நம்மை இயக்கி விடுகின்றது.

இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.

ஆகவே… சந்தர்ப்பத்தால் எத்தகைய தீமைகள் புகுந்தாலும் அந்தத் தீய வினைகளை உடனுக்குடன் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குத் தியானமும் ஆத்ம சுத்தி பயிற்சியும் கொடுக்கின்றோம்.

எந்த நேரம் ஆனாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து
2.உடனுக்குடன் தீமை செய்யும் உணர்வுகளை நீங்கள் அகற்றிட முடியும்.
3.உங்கள் நல்ல எண்ணங்களை உணர்வுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த ஞானிகள் பெற்ற அறிவின் ஞானத்தையும் நாம் நமக்குள் வளர்த்து இந்த வாழ்க்கையில் என்றுமே பொருளறிந்து செயல்படும் திறனாக அருள் வழியில் வாழ முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தாவர இனங்கள் மேல் ஒரு சில பூச்சிகள் பட்டாலே மடிந்துவிடும். அதே சமயத்தில் சில உயிரினங்களை நுகர்ந்து அதனால் உருவான செடிகளின் மீது குருவியோ மற்றொன்று ஏதாவது உட்கார்ந்தால் அப்படியே “பட்…!” என்று மூடி விடும்.

மின்சாரம் பாய்ந்தால் எப்படி இழுத்துக் கொள்கிறதோ அதைப் போல் அதில் உள்ள காந்தப் புலன் அறிவு எடுத்துக் கொள்ளும். அதற்கு அந்தச் சக்தி உண்டு.
1.காந்தத்தின் சக்தியை எடுத்துக் கொண்டால் அந்தக் குருவி மடிந்து விடுகின்றது.
2.காந்தத்துடன் கலந்த இரத்தத்தையும் எடுத்து விடுகின்றது.

ஆனால் இந்த மாதிரி அதிசயத்தை எல்லாம் நீங்கள் பார்க்க முற்பட்டு விடாதீர்கள். காடு மேடெல்லாம் நான் (ஞானகுரு) கஷ்டப்பட்டுப் பார்த்தேன். இதை உங்களிடம் வந்து சொல்கிறேன்.

இமயமலை அஸ்ஸாம் பகுதி வங்காளம் இந்தப் பக்கம் எல்லாம் அத்தகைய செடிகள் உண்டு. அஸ்ஸாம் காட்டுப் பகுதியில் அதிகமாக உண்டு. அக்காலங்களில் இத்தகைய தாவர இனங்கள் நிறைய உண்டு.

பச்சைப் பாம்பை எடுத்து விளக்கெண்ணெய் வித்தோடு சேர்த்து இந்த இரண்டு நிலைகளை ஊற வைத்து அதற்குப் பின் இந்த வித்தை முளைக்க வைத்து அதிலிருந்து வரும் வித்தை ஆட்டி எண்ணெயைக் கொடுத்தீர்கள் என்றால் எங்கே பார்த்தாலும் பச்சைப் பாம்பாகத் தெரியும்.

இதே மாதிரி பல பல கலவைகளைச் சேர்த்து அதிசயப்படுகிற மாதிரி எத்தனையோ செய்து காட்டலாம். அப்புறம் சாமி (ஞானகுரு) பெரிய சக்தி வாய்ந்தவராக மாறி விடுவார். அதிசயத்தையும் காட்டுகிறார் அற்புதங்களையும் காட்டுகிறார் என்று எல்லாம் போற்ற முடியும்.

ஏனென்றால்
1.சில வித்துக்களில் சில உயிரினங்களின் செல்களை எடுத்து அதை இணைத்து அதனுடைய வளர்ச்சிக்குத் தக்கவாறு செய்தோம் என்றால்
2.இதன் மணத்தை நுகர்ந்தாலே மடியும் தன்மை வருகின்றது.
3.மயக்கப்படும் நிலையும் வருகின்றது.
4.அந்த உருவமும் வருகிறது.
5.இது எல்லாம் தாவர இனங்களில் உள்ள வீரிய சக்தியின் நிலைகள்.

அத்தகைய சக்திகளைத்தான் ஒரு உயிரணு நுகர்ந்து அது வளர்ச்சி பெற்ற அணுவாக மாறுகின்றது. அந்த விஷச் செடியை அது உணவாக உட்கொண்டு விஷத்தையே தான் ஆட்கொள்ளும் சக்தியாக அது வளர்கின்றது.

இப்படி அந்த உயிரணு எதை நுகர்ந்து தன்னுடைய நிலைகளை வளர்த்ததோ அதன் வரிசையில் எப்படி வளர்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் தான்
1.உங்களுக்குள் இந்த உபதேசத்தையே பல காலம் பல வருடம் கழித்து
2.சிறுகச் சிறுக சிறுகச் சிறுக உங்களிடம் சொல்லுவது.

அது தான் ஓ..ம் நமச்சிவாய…. சிவாய நம ஓ..ம்..!

யாம் உபதேசிப்பதை எல்லாம் நீங்கள் கேட்டால் “ஓ..ம் நமச்சிவாய…!” அந்த உணர்வின் தன்மையை அதிகமாக வளர்த்துக் கொண்டால் சிவாய நம ஓ…ம்.
1.இந்த உண்மையின் உணர்வை நீங்கள் அறியலாம்.
2.பிறருடைய தீமையை போக்கவும் உங்களால் முடியும்.
3.நான் (ஞானகுரு) மட்டும் கெட்டிக்காரர் அல்ல.

குருநாதர் கொடுத்தார். அந்த உணர்வை வளர்த்தோம். அதே உணர்வை உங்களுக்குள்ளும் வளர்க்கச் சொல்றோம். வளர்த்துக் கொண்டால் நீங்களும் அதைச் செய்யலாம்.

ஏனென்றால்
1.பிறர் தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை நீங்கள் வளர்த்தால்
2.உங்களுக்குள் தீமையை நீக்கிடும் சக்தி வளர்கின்றது.

பிறருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணினால் அந்தத் தீமையின் உணர்வு நமக்குள் நல்ல அணுக்களை கொல்கின்றது. அப்பொழுது அந்தத் தீமை செய்யும் உணர்வே நமக்குள் விளையும்.

தீமை செய்பவனை வேடிக்கையாகப் பார்த்து அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்தாலே அந்தத் தீமை செய்யும் அணுவின் தன்மை விளைகின்றது.

ஆக வேடிக்கையாகப் பார்த்தாலும் அந்தத் தீமை செய்யும் அணுக்கள் நமக்குள் வரும் போது அதற்கு ஆகாரம் தேவை. அந்த உணர்வை நுகரும் போது உயிரிலே பட்டு அந்த எண்ணங்கள் வந்து அதே செயலைத்தான் நாமும் செய்வோம்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள்

 

ஒருவருடைய செயலைப் பார்த்து “மோசமானவர்…” என்று அவரை நினைக்கின்றோம் அந்த மோசமான உணர்வு நமக்குள் வளர்ந்த பின் நாமும் அதை போன்ற செயலைச் செய்ய தொடங்கி விடுகின்றோம்.

நம்மை அறியாமலே அது இயக்கும்…!
1.நாம் தவறு செய்யவில்லை என்று நினைக்கின்றோம்.
2.ஆனால் “தவறு செய்கின்றான்…” என்று எண்ணியவுடன் அந்தத் தவறின் இயக்கம் நம்மை இயக்கி விடுகின்றது.

அதை மாற்றும் சக்தி இருந்தாலும் முடியாத நிலை ஆகி விடுகிறது.

அந்தத் தவறிலிருந்து விடுபடும் முறைக்கே உங்களுக்குள் ஞானிகள் உணர்வைப் பதிவாக்குகின்றோம். எண்ணியவுடனே அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.

நாம் பல விதமான உணர்வுகளைப் பதிவாக்கியுள்ளோம். அதிலே வேதனைப்படும் சொல்களைக் கேட்டவுடன் அந்த உணர்வுகள் உந்திய பின் அதைச் சுவாசித்து நம் உடல் சோர்வடைந்து விடுகின்றது. வேதனையான அணுக்கள் வளர்ந்து விடுகின்றது.
1.இரண்டு நாளைக்கு இந்த உணர்வுகள் சேர்த்தால்
2.இரத்த நாளங்களில் இது கலக்கப்படும் பொழுது மற்ற அணுக்களையும் செயலற்றதாக மாற்றும்.

நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது. காற்று மண்டலத்தில் எப்படிக் கலக்கின்றதோ இதைப் போன்று தான் இரத்தத்தில் கலக்கப்படுகிறது.

இரத்தம் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணவை எடுத்துச் செல்கின்றது. அதில் இருக்கும் உணர்வின் சத்தை எடுத்துத்தான் உடலில் உள்ள அணுக்கள் விளைகின்றது.

நாம் நுகர்ந்தது உயிரிலே ஆவியின் தன்மை அடைந்த பின் நம் உடலில் ரத்தத்தில் கலந்த பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு செயலாகிறது.

நாம் உணவாக உட்கொள்ளும் போது அதிலே நீரைப் பிரித்து விட்டு அதில் இருக்கக்கூடிய சத்தை இரத்தமாக மாற்றுகின்றது நம் உடல் உறுப்புக்கள்.

இரத்தத்தின் தன்மை கொண்டு வரும் பொழுது அணுக்களின் ஆகாரம் அதன் வழியில் பெறப்படுகிறது. நல்ல உணவைப் படைத்துச் சாப்பிட்டாலும் நல்ல உணர்வை எண்ணினால் நல்ல அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கிறது.

அதே சமயத்தில் நல்ல உணவை உட்கொண்டாலும்
1.வேதனையான உணர்வைச் சுவாசித்தால் இந்த உணர்வின் தன்மை இதற்குள் ஆன பின்
2.வேதனை உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது நல்ல உணவையே உட்கொள்ள முடியாதபடி ஒதுக்கிவிடும்.

ஏனென்றால்
1.நாம் எண்ணும் உணர்வுகளை உயிர் அதை அணுக்களாக மாற்றுவதும்
2.உணர்வின் செயலாக்கங்களாக நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி இருவருமே தியானிக்க வேண்டும். ஏனென்றால் நம் உயிரும் சிவ சக்தியாகத் தான் வாழ்கின்றது.

கணவன் தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுக்க வேண்டும். அதே போல் மனைவி தான் பெற்ற சக்தியைக் கணவனுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
1.ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்று இரண்டு பேருமே இவ்வாறு எண்ண வேண்டும்.
2.உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் இரண்டு பேருமே ஏங்கி எடுக்கும் உணர்வுகள் கருவாகின்றது.

இன்றும் பார்க்கலாம்…! சாதாரணமாக மந்திரவாதிகள் – குடுகுடுப்புக்காரர்கள் இருப்பார்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து தான் இந்த மந்திரத்தின் நிலைகளில் செயல்படுத்துவார்கள்.

மந்திரத்தால் கணவனுக்கு ஏதாவது ஆனாலும் உடனே மனைவி அதை எடுத்து அதைச் சரி செய்யும். அதாவது… ஏவல் பில்லி சூனியங்களால் கணவன் தாக்கப்பட்டால் உடனே மனைவி எடுத்துச் சரி செய்வார்கள்.

இரண்டு பேரும் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அங்கே ஒன்றும் வேலை ஆகாது. தன் மாமன் மச்சானிடம் கொடுக்க மாட்டார்கள். இது மந்திரத்தின் செயல்கள்.

இதைப் போன்று தான் அக்காலத்தில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் பூமியின் துருவத்தை உற்று நோக்கி (வானிலே) துருவத்தின் வழியாக வரும் உணர்வின் தன்மை இருவருமே தனக்குள் பெற்று வானவியலின் உணர்வையே மேற்கொண்டு பார்க்கும் நிலைகள் வருகின்றது.

1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் தன்மையைத் தனக்குள் கவருகின்றார்கள்.
2.அந்த உணர்வின் வலிமையைப் பெறுகின்றார்கள்.
3.அது மற்ற கோள்களுடன் கலந்து வருவதையும் அதைச் சூரியன் பெறுவதையும் கணவன் மனைவி இரண்டு பேருமே நுகர்கின்றார்கள்.

அப்படிப் பெற்ற உணர்வுகள் தான் நம் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக அறிந்து அதைத் தனக்குள் பெருக்கி வளர்த்து கொண்டார்கள்.

இரண்டு உயிர்களும் இரண்டு உடல்களும் இரண்டு பேருமே ஒன்றாகச் சேர்க்கப்படும் போது தான் வசிஷ்டரும் அருந்ததியுமாக அவர்கள் வளர்ந்தனர். நளாயினியைப் போல ஒருவரை ஒருவர் மதித்து நடந்தனர்.

கணவன் மனைவியை மதித்து நடப்பதும் மனைவி கணவனை மதித்து நடப்பதும்
1.இந்த இரு உணர்வும் வந்தவுடனே “சத்தியவான் சாவித்திரி…!”
2.இந்த உயிர் சத்தியமாகின்றது
3.தன்னுள் இணைந்து கொண்ட சக்தி அது உண்மையின் உணர்வாக ஒளியாக மாறுகின்றது.
4.அதைத் தான் சத்தியவான் சாவித்திரி என்று சாவித்திரி எமனிடம் இருந்து தன் கணவனை மீட்டினாள் என்று காட்டப்பட்டது.

(இன்று ரொம்பப் பேர் வீட்டிலே பார்க்கலாம். சத்தியவான் சாவித்திரி நிறையப் பேர் இருப்பார்கள். ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டு நீயா…? நானா…? என்ற வகையில். இன்று இதைத் தான் அதிகமாகப் பார்க்க முடிகின்றது. அகஸ்தியனும் அவன் மனைவியும் பெற்ற நிலைகள் இல்லை)

அகஸ்தியனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைத்து இன்னொரு உடலுக்குள் சேராதபடி உணர்வுகளை ஒன்றாக இணைந்து எந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்றுப் பார்த்து நுகர்ந்தார்களோ அந்த உணர்வின் தன்மை வலிமை கொண்டு இந்த உடலை விட்டுச் சென்ற பின் அந்த எல்லையை அடைந்தார்கள்.

நம் பூமிக்கு வரும் உணர்வினை ஒளியாக மாற்றி ஒளிக் கதிராகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள். இது ஒரு குடும்பம். அகஸ்தியனுடைய தாய் தந்தை அவர் உடலிலே இருந்தார்கள். அவர்களும் அதே ஒளியின் சரீரமாக அவனுடன் இருக்கின்றார்கள்.

அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள். அன்னை தந்தை அரவணைப்பில் ஒளியாகச் சென்று சப்தரிஷி மண்டலங்களில் இருப்போரும் பல உண்டு.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் அன்னை தந்தையரின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும். அவர்கள் உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னவர்கள்
1.அவர்கள் தனித்துச் சென்றாலும் அந்தக் கூட்டமைப்பில்
2.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் அழியா ஒளியின் சரீரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இதைப் பார்க்கலாம்…! அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் நம் கண்ணுக்கு புலப்படாத எண்ணிலடங்காத ஒளியான நிலைகள் நிறைய உண்டு.

1.டெலஸ்கோப் (TELESCOPE) வைத்து நீங்கள் பார்த்தாலும் ஒரு சில தான் தெரியும்.
2.அதைக் காட்டிலும் நுண்ணிய அலைகள்… அந்தக் காலத்தில் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் அவன் பின் சென்றவர்களும் பல உண்டு.

சப்தரிஷி மண்டலமே மனிதன் அடைய வேண்டிய கடைசி எல்லை..!

நாம் எப்பொழுதும் “துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டே” இருக்க வேண்டும்

 

நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் நடக்கின்றது. நான் போனேன்… போகும் போது “அந்த இடத்தில் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது…” என்று ஒருவர் நம்மிடம் சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

உடனே ஆ…! என்று அதிர்ச்சியோடு நாம் கேட்போம். இந்த உணர்வுகள் நமக்குள் படப்பட்டு
1.“அவர் எந்த வகையில் அந்த விபத்து ஏற்பட்டது…” என்று சொன்னாரோ
2.அதே உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நம்மை அறியாமல் அது இயக்கும்.
3.ரோட்டில் நடந்து சென்றால் அறியாமலே நம்மை நடுரோட்டிற்கு அழைத்துச் சென்று விடும் ஓரத்தில் ஒதுங்கிச் சென்றாலும் கூட…!

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாதபடியே இவ்வாறு அழைத்துச் சென்று விடும்.

இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்பட்டால் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து “அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்… அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் பெற வேண்டும்…” என்ற எண்ணங்களை நமக்குள் உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் நல்ல குணத்துடன் நாம் பார்க்கும் பொழுது தான்… பிறருடைய தீமைகளை நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் இனி எப்படி வாழ்வது…? என்ற நிலைகளில் பல திசைகளுக்கு நம்மை ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் உடனடியாக நாம் ஆத்ம சுத்தி செய்தோம் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொண்டே இருக்கின்றோம்.
2.அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிக் கொண்டே வருகின்றோம்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால்… அத்தகைய அணுக்கள் நமக்குள் வளர்ந்து விட்டால் நம்மை அறியாமலே “அந்தத் துருவ நட்சத்திரத்தின் சொல் வரும்…”

உதாரணமாக ஒரு பாடலை பாடிக் கொண்டே இருக்கின்றோம். அது ஆழமாகப் பதிவாகி விட்டால் பாடல் தொடர்ச்சியாக சரியாக வரும்.

ஆனால் பாடிக் கொண்டிருந்தாலும் இடைமறித்து அதிலே ஒன்றை தனியாகச் சொல்ல வேண்டும் என்று குறுக்காட்டினால் இரண்டாவது தடவை அது சரியாக நினைவுக்கு வராது.

மீண்டும் முதலில் இருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால்
1.வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது அதனுடைய தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கிவிட்டால் அந்த நினைவு நமக்குள் வராது.
3.காரணம் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அடுத்தடுத்து அந்த அடுக்குகளிலேயே அது வருகின்றது.

இதனால்தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது. சந்தர்ப்பத்தால் நாம் பார்க்கும் தீமைகள் உள்புகாதபடி விழித்திருந்து பழகுதல் வேண்டும்.

இதைத்தான் சிவன் ராத்திரி அன்று விழித்திரு என்று சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.

பிறருடைய கஷ்டங்களும் நஷ்டங்களும் எப்பொழுது பார்த்தாலும்
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
2.நம் நல்ல குணங்களை வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை அகஸ்தியனுக்குப் பின் அதிகம் வெளிப்படுத்தியவர் வியாசகர்.

அவருக்குக் கல்வி அறிவு இல்லை எனும் பொழுது அவர் வெளிப்படுத்திய உண்மையின் உணர்வுகளை “பிருகு.. அத்திரி…” என்று ஏழு பேர் பாட நூல்களாக எழுதுகின்றார்கள்.

பிருகு… நட்சத்திரத்தின் ஒளிக் கதிரை எடுக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை அவர் நுகர்ந்து அதைப் பற்றும் நிலைக்கு அவர் செல்கின்றார்.

அத்திரியோ ஆலம் விருட்சம் போன்று மற்ற நிலைகளைக் கூட்டி தன் அரசை எப்படி நடத்துவது…? என்று அவர் திட்டம் போடுகின்றார். தன் அரசைக் காக்கும் வழிகளும் மந்திர ஒலிகளை வைத்து எதைப் பெற வேண்டும்…? என்று இப்படித் தான் செயல்படுத்தினார்கள் பிருகும் அத்திரியும்.

வியாசகர் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியதை ஒவ்வொருவரும் தங்கள் உடலின் இச்சைக்காக மாற்றி அதன் வழியில் அமைக்கப்பட்ட நிலைகள் கொண்டு தான் இன்று அரசுகளாக வந்தது.

மனிதனின் உடலில் ஆசைப்படும் உணர்வுகள் எப்படி எல்லாம் வந்தது…? என்றால்
1,மந்திரங்கள் தந்திரங்களை மனிதனுக்குள் பாய்ச்சுவதும்
2.அவர்கள் ஆன்மாக்களைக் கைப்பற்றுவதும் கைவல்யப்படுத்துவதும் என்ற நிலைகள் கொண்டு
3.தங்கள் அரசாட்சிகளை நடத்தும் நிலைகளுக்குக் கொண்டு சென்றனர்.

அவர்கள் செய்த நிலை தான் இன்று உலகம் முழுவதற்கும் மதங்களாக உருவாக்கப்பட்டதும் மதங்களுக்குள் இனங்களாக உருவாக்கப்பட்டதும்,

1.ஆதியிலே அன்று அகஸ்தியரால் தோற்றுவித்த உணர்வுகளை மற்றவர்கள் கவர
2.அந்த உணர்வின் தன்மை அவர்கள் சொல்ல இவர்கள் தனக்குகந்த சாதக நிலையைக் கொண்டு வர
3.அதன் பின் இந்த மூலத்தைத் தேட வேண்டும் என்று இன்று தேடிக் கொண்டும்
4.சாதுக்களாகக் குடும்பத்தைத் துறந்து வருவதும் மதங்களுக்கு மத குருவாக வருவதும் மதத்தைக் காக்கும் சாமியார்களாக வருவதும்
5.இதைப் போன்ற நிலைகளையே பெரும் பகுதி உருவாக்கப்பட்டு
6.ஆட்சி செய்த அரசனை நிலை நாட்ட விழுதுகளாகப் பாய்ச்சப்பட்டு
7.பெரும்பகுதியான நிலைகள் இன்று உலக நாடுகள் அனைத்தும் சிதைவுண்டும்
8.மனிதன் மீண்டும் தேய்பிறையான நிலைகள் செல்லும் கலியின் தன்மையில் உள்ளோம்.

“கலி…” என்றால் அவரவர்கள் உருவாக்கும் தன்மைகள். அவரவர் உருவாக்கிய நிலைகள் கொண்டு நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்… நான் தான் கடவுள்…! என்ற நிலைகளில்
1.”நான்” என்ற அகங்கள் உருவாக்கப்பட்டு
2.தான் செய்தது தான் நல்லது… தான் செய்வது தான் சரி.. மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு…! என்ற நிலைகளில்
3.இப்படி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற தீமைகளை நீக்கும் நிலைகளே நரசிம்மா…! என்பது.

“தாயை வேதனைப்படுத்தினால்…” அந்த அலைகள் நம்மைக் கடுமையாகச் சாடும்

 

இது என்னுடைய இளம் வயதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிகழ்ச்சி. பக்கத்து வீட்டில் நானும் என் நண்பனும் விளையாடுவோம். எனக்கும் அவருக்கும் 6 மாதம் தான் வயது வித்தியாசம்.

ஆனால் படிப்பிலே நான் மட்டம். அன்று அவர் எஸ்எஸ்எல்சி வரைக்கும் படித்தார். நான் சரியாகப் படிக்காததனால் அவருடைய அப்பா என்னுடன் சேரக்கூடாது என்று அவரிடம் சொல்வார். நான் அந்த வீட்டிற்குள் சென்றால் “நீ உள்ளே வரக்கூடாது ஓடு…!” என்பார் அவருடைய அப்பா.

இவர் அமீனாவில் வேலை செய்தார். இளம் வயதில் விளையாட்டுக்கு அவர்கள் வீட்டுக்குத் தான் நான் செல்வேன். ஆனால் அவருடைய அப்பா என்னைத் துரத்தி விடுவார்.

நண்பர் படிப்பிலே நன்றாகத் தேறி சர்வேயர் ஆகித் தமிழ் நாட்டு அளவில் உயர்ந்த சர்வேயராகக் கடைசியில் வளர்ச்சி பெற்று ரிட்டயர் ஆனார். அவருக்குப் பெண் குழந்தைகள் ஆறேழு பேர்.

அந்த பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொடுக்க வைத்திருந்த பணத்தைச் செலவழித்தார். பையன்கள் இருவர்…
1.ஆனால் அவர்களுக்குப் புத்தி கொடுக்கவில்லை.
2.அவர்கள் செலவழித்துக் கடனை உருவாக்கி விட்டார்கள்.

அவருக்குப் பென்ஷன் வருமானம் 5000 ரூபாய் வருகின்றது. ஆனாலும் பையன்கள் இப்படிக் கடனாளியாக ஆக்கிவிட்டார்களே…! என்று என்ற எண்ணங்கள் வந்துவிட்டது.

அவர்கள் வாங்கிய கடன் ஒரு லட்சத்திற்கு மேல் சென்று விட்டது. தான் குடியிருக்கும் வீட்டையாவது சமாளித்து விற்று விட்டுக் கடனை அடைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றார்.

ஆனால் “தாய் தந்தையர் சம்பாதித்த இந்தச் சொத்து இப்படி ஆகிவிட்டதே…” என்று எண்ணுகின்றார்… வேதனைப்படுகின்றனர்…
1.அதையே வளர்த்துக் கொள்கிறார்.
2.வீட்டை விற்ற பின் எண்ணங்கள் சுருங்குகின்றது. நான்கு மாதத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார்.

காரணம் ஏழு எட்டு பெண்கள் இவருக்குக் குழந்தைகளாக இருக்கப்படும் பொழுது இவருடைய தாயை இவர் சரியாகக் கவனிக்கவில்லை.

நான் அவரிடம் செல்லும் பொழுது அந்த அம்மா என்னிடம் சொல்லும்.
1.அவனை நன்றாகப் படிக்க வைத்தேன் எல்லாம் செய்தேன் ஆனால் என்னைத் தெருவிலே விட்டுவிட்டானே…!
2.அதனால் தான் அவனுக்குப் பெண் பிள்ளைகளாகக் கிடைத்தது…
3.அவன் செலவழித்துப் பார்த்தால் தெரியும்… அவன் அனுபவிக்கின்றான் என்று சொல்கிறது.

காரணம் தன்னுடைய தாய்க்குச் செலவுக்குச் சிறிதளவு கூடப் பணம் கொடுக்கவில்லை. வீடு இருக்கின்றது எல்லாம் இருக்கின்றது. ஆனால் ஆப்பம் சுட்டு அதை விற்று வாழுகின்றது. அதை வைத்துத் தான் அது ஜீவனம் நடத்துகின்றது.
1.தாயினுடைய அந்த மனக்குமுறல் இங்கே விளைகின்றது.
2.ஏனென்றால் பையன் ஒரே பையன் தான்… வேற யாரும் இல்லை.

“இந்த அலைகள் இங்கே வரும் பொழுது…” தொடர்ந்து அதே உணர்வைத் தான் அவருடைய பையன்களும் அவருக்குச் செய்கின்றார்கள்.

பென்ஷன் வந்தது… இருந்தாலும் கடனாகி “வீட்டை விற்று விட்டோம்… பையன்கள் இப்படி செலவழித்து விட்டார்கள்…” என்ற உணர்வுகள் விளைந்து சீக்கிரம் ஆளை முடித்துவிட்டது.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.உலக மக்கள் அனைவரும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற
2.இந்தச் சக்தியை நாம் முதலில் பெற வேண்டும்.

குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் ஆத்ம சுத்தியை அவசியம் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை அவர் ஜீவாத்மா பெற வேண்டும் என்று கணவன் மனைவியை நினைக்க வேண்டும். அதே போல் மனைவி கணவனை நினைக்க வேண்டும்.

இந்த உணர்வின் நிலைகள் இருவருடைய நிலைகள் ஒரு நிலை கொண்டு சரியான முறையில் யாம் சொல்லும் தியானத்தைச் செய்து வந்தால் இதில் நீங்கள் சொர்க்க பூமியைக் காணலாம்.

ஒரு குடும்பத்திற்குள் கணவன் மனைவி இரண்டு பேருமே மகிழ்ச்சியாக இருந்தால்தான் அது சொர்க்கலோகம். ஆகவே கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து ஒற்றுமை என்ற நிலைகளை இங்கே உருவாக்க வேண்டும்.

குழந்தைகளிடம் சில குறைபாடுகள் இருப்பினும் அவர்கள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும் என்று குழந்தைகளுக்கு இந்த ஆசியை ஊட்ட வேண்டும். நம்முடைய நினைவு அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

1.குழந்தைகள் கல்வியில் சிறந்த திறன் இல்லை என்றாலும்
2.மகரிஷிகளின் அருள் உணர்வு அவன் பெற வேண்டும்
3.கல்வியில் சிறந்தவனாக அவன் வளர வேண்டும் வாழ வேண்டும் என்ற உணர்வை அவன் மேல் கூர்மையாகப் பாய்ச்சி
4.அதைப் போல் அந்தக் குழந்தைகளையும் எண்ணி ஏங்கும்படிச் செய்ய வேண்டும்.

அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… நாங்கள் கல்வியில் சிறந்த நிலைகள் பெற வேண்டும் என்று குழந்தைகளை எண்ணச் செய்து அந்த உணர்வை ஒன்று சேர்த்து இணையுங்கள்.

அப்படி இணைக்கக் கற்றுக் கொண்டால் இந்த உணர்வின் சக்தி நிச்சயம் குழந்தைகளுக்குள் கல்வியில் சிறந்த ஞானமாக வளரும். கருத்தறிந்து செயல்படும் திறன் பெறுவார்கள். ஆகவே குழந்தைகள் மீது இப்படித்தான் நாம் பாசம் வைக்க வேண்டும்.

காரணம் இன்று தெரிந்தோ தெரியாமலோ விஞ்ஞான அறிவிலே சிக்குண்ட நாம் ரேடியோ டி.வி. இதைப் போன்ற நிலைகளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
1.குறிப்பாகக் கர்ப்பமுற்றிருக்கும் காலங்களில்
2.பகைமை உணர்வுகளையும் குரோத உணர்வுகளையும் மற்ற தீமையின் உணர்வுகளையும் அதிகமாகப் பார்க்க நேர்ந்தால்
3.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் பதிவாக்கி விட்டால்
4.பிறக்கக்கூடிய குழந்தைகள் நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய (டி,வி.மூலம்) நிலைகளைத்தான் செய்யும்.

ஆகவே ஞானக் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்றால் கர்ப்ப காலங்களில் டி.வி. பார்ப்பது போன்ற நிலைகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அகஸ்தியன் கண்ட மெய் உணர்வுகள் எல்லாம் என் கருவிலிருக்கும் குழந்தையிடம் வளர வேண்டும்
3.வியாசகர் எப்படி விண்ணுலக ஆற்றலைக் கண்டாரோ அந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைய வேண்டும்
4.இதை எல்லாம் குழந்தை அதை அறியும் ஆற்றல் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு வான இயல் புவி இயல் உயிரியலை அறிந்தானோ அந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே விளைய வேண்டும் என்று அதிகாலை துருவ தியான நேரத்தில் விண்ணை நோக்கி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். கர்ப்பத்தில் இருக்கும் கருவுக்குள்ளும் இதை ஊட்டுங்கள்.
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
2.அந்த உணர்வுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் அது பாயும்.
3.நம் உடலில் வளர்ச்சியாகும் அணுக்களும் இந்தச் சக்தியைப் பெறும்.

நம் கண்ணின் பார்வைக்கு அந்த வீரிய ஆற்றல் (ANTENNA POWER) உண்டு. அது தான் பரமாத்மா என்பது.
1.நம்முடைய நினைவை இந்தப் பிரபஞ்சத்திற்குள் எங்கே செலுத்தினாலும்
2.அதை ஈர்க்கும் சக்தி நம் கண்ணுக்கு உண்டு.
3.அத்தகைய ஈர்க்கும் சக்தியைத்தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்
4.ஆகவே உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணிலே செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) அதைக் கொடுத்ததால்தான் அந்த வலிமை கொண்டு அதைப் பெறும் சக்தியும் அதை அறிந்திடும் உணர்வையும் அதை வளர்த்திடும் உணர்வையும் பெற்றேன்.

அதை நீங்கள் எல்லோரும் பெற முடியும்…! என்ற “முழு நம்பிக்கையுடன்…” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஆகவே
1.நாம் அந்த மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெற்று
2.நம்மைச் சார்ந்தோரின் பகைமை உணர்வுகளையும் தீமை உணர்வுகளையும் அகற்றும் சக்திகளைப் பெறுவோம்
3.பேரானந்தப் பெரு நிலை பெறுவோம்.

உயிர் – மெய் – மெய்ப்பொருள்

 

சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள மெய்ப்பொருளை நாம் உணர்வோம். “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் அடிக்கடி முழக்கம் இடுகின்றோம். இந்த முழக்கத்தின் உட்பொருளைப் புதிதாக வந்தவர்களும் ஏற்கனவே உள்ளவர்களும் தெளிந்து கொள்ள… தெரிந்து கொள்வதே நல்லது… நலமும் கூட…!

உயிர் நமக்குள் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ
1.அந்தக் குணங்கள் அனைத்தையும் ஓ… என்று பிரணவமாக்கி
2.ம்… என்று நம் உடலாக்கி ஜீவணுக்களை இயக்கிக் கொண்டே உள்ளது நம் உயிர்.
3.அதனால் தான் ஓ…ம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.

நாம் எத்தகைய எண்ணங்களை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாக நம் உடலுக்குள் உறையச் செய்து கொண்டே உள்ளது.

நாம் எண்ணியது அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது. நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ உயிரின் இயக்கத்தால் அந்த உணர்வினைப் பிளந்து அதனின் அறிவின் இயக்கத்தையும் நம்மை அறியச் செய்கின்றது… மெய்ப்பொருளாக…!

கோபப்படுகிறோம் என்றால் அந்தக் கோபத்திற்குண்டான உணர்வின் செயலை அதன் உணர்வின் உண்மையை உணர்த்துகின்றது நமது உயிர்.

அதே போல்
1.மெய்ப்பொருளை… எத்தகைய பேரண்டத்தின் இயக்கமாக இருப்பினும்
2.நமது உயிர் அதனின் உள்பொருளையும் அகப்பொருளையும் மூலப் பொருளையும் பிரித்து
3.நமக்குள் அறிவின் இயக்கமாக இயக்கி நம்மை அறியச் செய்கின்றது… உணரச் செய்கின்றது… இயக்கச் செய்கின்றது…
4.உடலாக்கிக் கொண்டே உள்ளது… மெய் நமது உயிர்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.

அதே சமயத்தில் அன்னை தந்தையரை எண்னி முதல் தெய்வமாக வணங்கிட வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் முதலில் நம்மை மனிதனாக உருவாக்கியவர்கள். நமக்கு அறிவும் தெளிவும் ஊட்டியது நம் அன்னை தந்தையே. நமக்கு குருவாக இயக்கிக் கொண்டிருப்பதும் அன்னை தந்தையரே.

1.அன்னையின் உயிரே மெய்ப்பொருளாகி அதனின் வாழ்க்கையைக் கண்டுணர்ந்து மனிதனாக உருவாக்கி
2.அந்த மனிதன் நிலையில் தனக்குள் “தன் இனம் வளர வேண்டும்…” என்ற ஏக்க உணர்வின் உண்மைப் பொருளை உணர்த்தி
3.அதன் வழியில் நம்மை மனிதனாக உருவாக்கியது நமது தாய் தந்தை.

உயிர் கடவுள் என்றும் உணர்வால் அறிந்துணர்ந்த தன்மை கொண்டு தன் இனம் என்ற நிலைகள் தன் மக்கள்… உயிர் என்று அறிவுறுத்தப்பட்டு நம்மைக் காத்து நல்வழி காட்டி நல் உணர்வுகளை ஊட்டி நமது வாழ்க்கையை உயர்த்துவதற்கும்… மகிழ்ந்திடவும்… மனிதன் என்ற உண்மையை உணர்த்துவதற்கும்… நம் தாய் தந்தையே உயிர் கடவுளாக இருந்து… தெய்வமாக இருந்து நமக்கு நல்வழி புகட்டியது… அவர்கள் தான் முதல் குரு

ஆகவே நாம் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று முழக்கமிட்ட நிலைகளில் அவரவர்கள் தாய் தந்தையரை எண்ணி “அவருடைய அருள் பெற வேண்டும்…” என்று ஏங்குதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அமெரிக்காவில் ஒரு ஐந்து வயதுக் குழந்தை “கணக்கு ரொம்பத் தெளிவாகப் போடுகிறது…!” என்று சொல்வார்கள்.

கணக்கின் தன்மை போட்ட ஒரு நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அந்த ஆன்மா சந்தர்ப்பவசத்தால் ஒரு குழந்தையின் உடலுக்குள் சென்று விட்டால்
1.கணக்குகளைத் தன்னாலே ஒன்றுமே பார்க்காது
2.மள…மள… என்று போட்டுக் கொண்டே இருக்கும்.

இதைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன சொல்வார்கள்…? போன பிறவியில் இந்த மாதிரி இருந்தது. அதனால் இந்தப் பிறவியில் இப்படிக் கணக்குப் போடுகின்றது…! என்பார்கள்.

ஆனால் ஒரு ஆன்மா இந்த உடலுக்குள் சென்ற பின் தான் இது எல்லாம் நடக்கும். இன்னொரு ஆவி உடலுக்குள் போய்விட்டால் அது கற்றுணர்ந்த உணர்வுகளை அந்த உடலிலே செயல்படுத்திக் காட்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் இதைப் பார்க்கலாம். பள்ளியில் படிக்கும் போது மாணவர்கள் இரண்டு பேர் சந்தோசமாகப் பழகுகிறார்கள்.

சந்தோசமாக இருந்த மாணவர்களுக்குள் ஒரு மாணவன் தன் குடும்பத்தில் ஏதோ காரணத்தால் குறையாகி மனது வேதனைப்பட்டு அதனால் விஷத்தை உணவாக உட்கொண்டு இறந்து விடுகின்றான்.

அதைக் கேள்விப்பட்ட அவனுடைய நண்பன் பாசத்தால் “போய்விட்டாயே நண்பா…!” என்று எண்ணினால் விஷம் குடித்து இறந்த ஆன்மா இவன் உடலுக்குள் புகுந்துவிடும்.

ஆக அவன் எப்படித் தன் குடும்பத்தில் வெறுப்பின் தன்மை அடைந்து விஷத்தை குடிக்கச் சென்றானோ இந்த உணர்வுகள் எல்லாம் நண்பனுக்குத் தோன்றும்.
1.அவனும் தாய் தகப்பனை வெறுக்க ஆரம்பிப்பான்.
2.விஷத்தைக் குடிக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றும்
3.இப்படி மாணவ மாணவிகள் நிறையப் பேர் உண்டு.

அதே போல ஒரு தீய மாணவனுடைய உணர்வுகள் உடலிலே புகுந்து விட்டால் அவன் என்னென்ன குற்றச் செயல்களைச் செய்தானோ அதே குற்றத்தை இயக்கும் அணுக்கள் புகுந்த உடலுக்குள் இங்கேயும் விளைந்துவிடும்.

அவன் விடும் சுவாசத்தை இவனும் வளர்ப்பான். ஏன் என்றால் பாசத்தால் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் இதை வளர்க்கும். இது எல்லாம் இயற்கையின் நியதிகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறோம்.

விஞ்ஞானிகள் கண்டறியும் வழியும் மெய் ஞானிகள் கண்டறியும் வழியும்

 

விஞ்ஞான அறிவில் இன்று எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகள் வருகிறது. கற்றறிந்த உணர்வுகள் பதிவாக்கப்படும் பொழுது நினைவின் ஆற்றலால் நுகர்ந்தறிந்து அந்தந்த உணர்வுக்குத்தக்க “எத்தனையோ நுண்ணிய நிலைகளில் செயல்படுத்தித் தான் புதிதாகக் கண்டு பிடிக்கின்றார்கள்…”

இதைப் போன்று தான்
1.ஒவ்வொரு நிலைகளிலும் மனிதன் எப்படி இயங்குகின்றான்…?
2.ஆதியிலே காட்டு விலங்குகளுடன் மனிதன் எப்படி வாழ்ந்தான்…?
3.அவன் விண்ணின் ஆற்றலை எப்படி எடுத்தான்…?
4.அன்று அகஸ்தியன் எவ்வாறு விண்ணின் ஆற்றலைப் பெற்றான்…?
5.அவனுடைய வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனான்…?

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையில் பரவும் நிலைகள் கொண்டு நாம் அந்தப் பேராற்றல்களை நுகர்ந்தால் அந்த உணர்வினை உயிர் அணுவாக மாற்றுகின்றது.

கருத்தன்மை அடைந்து அணுத் தன்மை அடைந்தால் அந்த அணுவாக உருப்பெற்ற பின் அது உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகின்றது.
1.எந்த உயிரால் உணர்வுகள் நுகர்ந்து இந்த அணுவின் தன்மை பெற்றதோ
2.இந்த உணர்வின் எல்லை கடந்து அங்கே விண்ணுக்கே செல்கின்றது.

உயிருடன் ஒன்றிய பின் எந்தக் கண்களால் கவர்ந்து தன் உடலுக்குள் கவரும் சக்தி பெற்றதோ அதே கண்ணுக்கு மீண்டும் ஆணை இடும் பொழுது கண்ணின் காந்தப் புலனறிவு இந்த பூமியில் படர்ந்திருக்கும் சக்திகளை பரவி இருப்பதை நமக்கு முன் குவித்து ஆன்மாவாக்குகிறது.

அதிலிருந்து சுவாசித்து உயிரிலிருக்கும் காந்தப் புலனில் பட்டபின் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு உணவைக் கொடுத்து… அந்த உணர்வினை வளர்க்கவும்… அதை இயக்கவும் செய்கின்றது.

இயற்கை இவ்வாறு தான் இயக்குகின்றது.

இதைத்தான் குருநாதர்
1.உன்னை நீ அறிந்து பார்…! நீ இயக்குகின்றாயா…? நுகர்ந்த உணர்வு உன்னை இயக்குகின்றதா…?
2.எதை எண்ணி நீ நுகர்கின்றாயோ அதன் உணர்வு தான் உன்னை இயக்குகின்றது.
3.ஆகவே நீ எதை நுகர வேண்டும்…?

சந்தர்ப்பத்திலே பகைமையான உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்ச்சிகள் தாக்குகின்றது. உடலிலிருக்கும் நல்ல அணுக்களைச் சரியாக இயக்க விடுவதில்லை.

தீமையான அணுக்கள் உருவாகி விட்டால் இதனுடைய பெருக்கம் அதிகமாகும் பொழுது நல்ல அணுக்கள் சுருக்கம் அடைகின்றது. நல்ல அணுக்கள் குறையப்படும் பொழுது தீய அணுக்கள் வலிமை பெறுகின்றது.

அது வலிமை பெற்றால் அதனுடைய செயலாக்கங்கள் எதுவோ அதனுடைய அமிலங்கள் உடலில் படரப்படும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட தசையின் பாகங்களைக் கரைத்து விடுகின்றது.

அப்படிக் கரைந்து விட்டால் அதனால் உடல் உறுப்புகள் எப்படிக் குறைகின்றது…? அந்த உணர்ச்சிகள் வரும் பொழுது
1.வேதனை என்ற சோக ஒலிகளைக் அலைகளை கேட்டால்
2.அந்த அதிர்வே நமக்குள்ளாகி… அதன் உணர்வுகள் அணுவாக விளையத் தொடங்கி விடுகின்றது.

அந்த அணுக்களை அதிகமாக வளர்த்து விட்டால் நல்ல அணுக்களுக்கு உணவு கிடைக்காதபடி தடைப்படுத்தி விடுகிறது. மனிதனைச் சீர்குலையைச் செய்து உடலுக்குள் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது.

அத்தகைய தீமைகளை மாற்றுவதற்குத் தான் உன்னை நான் காட்டிற்குள் அழைத்துக் கொண்டு வந்தேன். இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது…? என்பதை நீ அறிந்து கொள்ள…!

அதிலிருந்து மீள எண்ணியவர்கள் எத்தனையோ பேர். அதிலே தோல்வி அடைந்தவரும் பலர்.

1.ஆனாலும் அதிலே முழுமை பெற்று விண் சென்ற துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுவதற்கே உனக்குள் இந்த உண்மைகளை உணர்த்துகின்றேன்
2.எல்லாரையும் நீ அதைப் பெறச் செய்…! என்றார் குருநாதர்.

சாதாரண மனிதன் சொல்வதற்கும் கூட்டுத் தியானத்தில் எல்லோரும் சேர்ந்து சொல்வதற்கும் உண்டான வித்தியாசம்

 

தியானத்தில் வீற்றிருக்கும் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் சேர்ந்து சொல்கின்றோம். ஒருவருக்கொருவர் பண்பட்ட நிலைகளில்
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்
2.அதே போல நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.
3.உங்கள் உடல் நோய் நீங்க வேண்டும் என்று நான் சொல்கின்றேன்.
4.அதே போல என் உடல் நோய் நீங்க வேண்டும் என்று நீங்கள் சொல்கின்றீர்கள்.

இதை அனைவரும் சொல்லப்படும் பொழுது
1.செவி வழி இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு…
2.கண்ணிலே ஈர்க்கப்பட்டு ஆன்மாவாக மாற்றிச் சுவாசிக்கச் செய்து
3.ஒன்றுபட்ட உணர்வின் தன்மை உடலுக்குள் கருவாக மாற்றும்.

கூட்டுத் தியானங்களில் இதைப் போல் எடுத்தோம் என்றால் வலிமை கூடுகிறது. தீமைகளை நீக்கும் அந்த அருள் சக்தி கிடைக்கின்றது. கூட்டமைப்பாகச் சொல்லும் பொழுது இருளைப் போக்கும்.

சாதாரண மனிதன் சொல்வதற்கும் கூட்டுத் தியானத்தில் எல்லோரும் சேர்ந்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்று
1.ஏகோபித்த வலு கொண்டு சொல்லும் பொழுது கண் நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளை உடலுக்குள் ஊட்டுகிறது… இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது
3.உடலுக்குள் அந்த அணுவின் தன்மை கருவாக மாற்றுகின்றது.

ஒவ்வொரு குடும்பதிற்கும் நாம் சென்று கூட்டுத் தியானங்களை அமைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் தொழில் நலம் பெற வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்.

நமக்குள் அந்த வலிமை பெருகுகிறது. அந்தக் குடும்பத்திலும் இந்த உணர்வலைகள் அங்கே பதிவாகும் போது அவர்களுக்கு அது நன்மையாகின்றது.

ஒருவரால் தூக்க முடியாத பொருளை நான்கு பேர் சேர்ந்து அதைத் தூக்குகின்றோம் அல்லவா…! அதே போன்று அந்த அருள் உணர்வுகளை நாம் எடுத்து அந்த வலுவைக் கூட்டி
1.எல்லோரும் சேர்ந்து மகரிஷிகளின் ஒலிகளை வீட்டிற்குள் பரவச் செய்தோம் என்றால்
2.அந்த வீட்டிற்குள் ஏற்கனவே பதிவாகியுள்ள சங்கடம் சலிப்பு போன்ற உணர்வுகள் அது ஒடுங்கும்.

இந்த உடலுக்குள் மட்டுமல்ல…! எந்த வீட்டில் நாம் வாழுகின்றோமோ நமக்குள் விளைந்த உணர்வுகள் (எல்லா விதமான உணர்வுகள்) வீட்டிற்குள்ளும் பதிவாகி இருக்கின்றது.

அந்தப் பதிவை நாம் மாற்ற வேண்டும்.
1.அதை மாற்றுவதற்குத் தான் கூட்டுத் தியானங்களை இல்லம் தோறும் வைக்க வேண்டும் என்று சொல்வது.
2.இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

தபோவனத்திலும் இது போன்று தான் கூட்டுத் தியானம் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்களின் உணர்வுகள் அங்கே ஒன்று குவிக்கப்பட்டு எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று சொல்லிப் பதிவாக்குகின்றோம்.

அந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது, எல்லோரும் வெளிவிட்ட அந்த மூச்சலைகள் அங்கே படர்ந்திருக்கப்படும் பொழுது
1.அதை எப்பொழுது எண்ணினாலும் அந்த உணர்வலைகள் நமக்கு உடனே கிடைக்கிறது
2.அதை நுகர்ந்து உடலுக்குள் இயக்க சக்தியாக மாற்றும் போது தீமையிலிருந்து நம்மை அது விடுபடச் செய்யும்.

அந்தக் கூட்டமைப்பை அவசியம் உருவாக்க வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து இந்த உணர்வின் தன்மை நமக்குள் விளைய வைத்து நம் உடலுக்குள் கலக்கப்படும் பொழுது அனைத்தும் ஒன்றாகச் சேர்கிறது.
1.ஒன்றுபட்ட இயக்கமும் தெளிவான நிலைகள் பெறுவதற்கும் உதவுகிறது
2.தீமையை அகற்றிடும் சக்தியும் நமக்குக் கிடைக்கிறது.

குரு பூஜை அன்றும் பௌர்ணமி நாட்களிலும் மற்ற கூட்டுத் தியானம் இருக்கும் போதெல்லாம் துன்பங்களைப் போக்குவதற்கும்… பேரின்பம் பெறும் அந்த உணர்வை வளர்ப்பதற்கும்… அந்த அணுக்களைப் பெருக்குவதற்கும்… தீமையான அணுக்களைக் குறைப்பதற்கும் அது உதவும்.

தீமையான உணர்வுகள் ஒரு பத்து அணுக்கள் இருக்கிறது என்றால்
1.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி சேர்த்து அதைக் கூட்டிப் பெருக்க வேண்டும்.
2.இதனின் வலு கூடும் பொழுது அது குறையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் நான் (ஞானகுரு) மங்களுரில் இருக்கும் போது ஒரு நண்பர் வீட்டுக்குப் போனேன்.
1.அவருடைய சம்சாரம் எப்பொழுது பாத்தாலும் அவரைப் பறண்டிக் கொண்டே இருக்கும்.
2.அது எதற்கெடுத்தாலும் சும்மா நய்…நய்… என்று அழுது கொண்டே இருக்கும்.

அவர்கள் எங்கே போனாலும் ஒன்றும் செயல்படுத்த முடியாது. அவர்கள் வீட்டில் எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டமாகிக் கொண்டே இருக்கும்.

எனக்குத் தோசை வாங்கிட்டு வாடா.. அது வாங்கிக் கொண்டு வாடா.. இதை வாங்கிக் கொண்டு வாடா..! என்று சொல்கிறது. எத்தனை மணியாக இருந்தாலும் வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

அது வரை இங்கே உட்கார விடுவதில்லை…! உன்னை நான் கெடுத்தே போடுவேன். நீ எந்தத் தொழில் செய்தாலும் உன்னால் முடியாதுடா…! என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.

இப்படி இருக்கும் போது இந்தப் பேயை ஒட்ட வேண்டும் என்று பல முயற்சி எடுத்தார்கள். முனியப்பன் கோவில் அந்தக் கோவில் இந்தக் கோவில் என்று பல கோவில்களுக்குச் சென்று பல ஆடுகளை எல்லாம் பலி கொடுத்தால் இதை நிறுத்தி விடலாம் என்று பார்த்தார்கள். ஆனால் முடியவில்லை.

கடைசியில் என்ன ஆனது..? ஒரு மந்திரவாதியிடம் போன உடனே அவர் நான்கு கோழியை வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். அதில் மூன்று கோழியை அடுப்பாக வைத்தார்.

ஒரு கோழியை அறுத்து அதன் மீது வைத்துச் சமைத்தார்கள். நெருப்பை வைத்து எரிக்கிறார்கள். மேலே வைத்தது வேகுகிறது. வெந்த பின்பு அதை எடுத்து அப்படியே வீசினால் அந்த பேய் எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு அப்படியே போய்விடுமாம்…!

நிலைமை என்ன ஆனது…? பத்தாயிரம் செலவழித்தது தான் மிச்சம். இது போக… இராஐஸ்தானுக்குப் போய் அங்கேயும் என்னென்னமோ செய்து பார்த்திருக்கின்றார்கள். ஆனால் ஒன்றும் ஆகவில்லை.

கடைசியில் நான் (ஞானகுரு) சித்தாகி அங்கே போயிருக்கும் போது அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு வந்தது.

இந்த எட்டிச் செடி… அது… இது… எல்லாம் போட்டால் சரியாகப் போகும் என்று “மந்திரவாதிகள் சொல்கிறார்கள்…!” என்றார்கள். அது எல்லாம் முடியாது…! என்று சொன்னேன்.

காய்ந்த மிளகாயைப் பொடி செய்து எடுத்துக் கொண்டு வாருங்கள்…! என்று சொன்னேன். நெருப்பைக் கொண்டு வாருங்கள்…! என்று சொன்னேன். அந்த நெருப்பிலே இந்த மிளகாயைப் போட்டு அந்த நெடிக்கு நேராக அந்த அம்மாவின் முகத்தை வைக்கச் சொன்னேன்.

மிளகாய்க்கு மேலே நேராக முகத்தை வையம்மா…! என்று சொன்னேன்.

எனக்கு எல்லாம் தெரியும்… நீ வை பார்க்கலாம்…! என்று என்னிடம் சொல்கிறது.

இந்த மிளகாயைப் பொடி செய்து போட்டோம் அல்லவா..! அந்த நெடி தாங்காமல் எங்கே இருந்த எல்லோரும் ஓடுகிறார்கள். பக்கத்தில் இருந்தவர்களும் விலகி ஓடுகிறார்கள். என்ன இந்த மாதிரிப் போடுகிறீர்கள்…? என்று சண்டைக்கு வந்துவிட்டார்கள்.

ஆனால் அந்த அம்மா அதற்கே நேரே முகத்தைக் காட்டிக் கொண்டு “இன்னும் போடு…! எல்லாம் ஓடட்டும்..!” என்று சொல்கிறது.

அப்புறம் அவர்களுக்கு விளக்கத்தைச் சொன்னேன். ஒரு ஆவியின் உணர்வு உடலுக்குள் சென்று விட்டால் அதை உங்களால் அப்புறப்படுத்த முடியாது என்றேன்.

உன் மனைவி உடலில் இருப்பது “உன் அண்ணனின் ஆன்மா தான்…!” என்று சொன்னேன். உன் அண்ணனை நீ எந்தந்த அளவுக்கு இம்சித்தாயோ பழி தீர்க்கும் உணர்வோடு உன் சம்சாரத்துக்குள் இருக்கிறது என்று விபரத்தைச் சொன்னேன்.

1.இந்த உடலை விட்டுச் சென்ற பிற்பாடு (அண்ணனின் உயிரான்மா) அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி பெறும் சரீரமாகப் பெற வேண்டும்.
3.இந்த உடலிலேயே நீ உயர்ந்த சக்தி பெற வேண்டும்… அந்த உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று
4.இந்தப் பெண்ணை நீ இந்த உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று தியானியுங்கள்..! என்று சொல்லி இந்த உணர்வைப் பதிவு செய்தேன்.

நான் பதிவு செய்தபடி அவர் அதைச் செய்த பின் அந்த அம்மாவிற்கு எல்லாம் நல்லதாக ஆனது. நிறைய உதவிகள் வந்தது. அந்த ஆளுக்கு ஜே..ஜே..! என்று எல்லாம் வந்தது.

அந்த வளர்ச்சிகள் வளரப்படும் போது அந்த ஆளுக்குப் புத்தி என்ன ஆனது…! பணம் வர ஆரம்பித்ததும் தவறுகள் நிறையச் செய்ய ஆரம்பித்தார். “நானே தான் ராஜா…!” என்று சொல்ல ஆரம்பித்தார்,

அண்ணணாவது… கத்திரிக்காயாவது..! அவன் தான் என்னைக்கோ இறந்து போய்விட்டானே… நீ என்ன பெரிய இது…? என்றார். அவ்வளவு தான் மறுபடியும் வந்துவிட்டது.

1.உடலுக்குள் ஆன்மா இருந்தால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைச் செருகேற்றி அதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
2.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் அடைய வேண்டும் என்ற உணர்வைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆனால் அதைச் செய்யாதபடி அதனின் உணர்வுக்குக் கொஞ்சம் இடம் கொடுத்தவுடன் என்ன ஆனது…? மறுபடியும் அது பிடித்துக் கொண்டது.

எது எது எல்லாம் நல்ல வழியில் வளர்ச்சிக்கு வந்ததோ மறுபடியும் அதை எல்லாம் வடிகட்ட ஆரம்பித்து விட்டது. எல்லாச் செல்வங்களும் கரைய ஆரம்பித்தது.

ஆக ஒரு ஆவி உடலுக்குள் வந்தால் அதனின் இயக்கங்கள் இப்படித்தான் இருக்கும்…! என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களை நாம் கேட்டறிந்து நுகர்கின்றோம். நமது சிரசின் பாகம் உயிர் இருக்கும் இடம் ஈஸ்வரலோகமாகின்றது. நாம் நுகர்ந்தது (சுவாசிப்பது) அனைத்தும் அங்கே தான் ஜீவன் பெறுகிறது.

நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அது கருவாகப்படும் போது இந்திரலோகமாக மாற்றி விடுகின்றது.

ஏனென்றால் எந்த உணர்வின் தன்மைகளை நாம் நுகர்ந்தோமோ அதன் உணர்வின் தன்மை கருவாக்கி அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அந்த வாழ்க்கை வாழச் செய்கிறது.

காரணம்… நோய்வாய்ப்பட்டவரைப் பார்த்து நாம் பரிவுடன் கேட்டறிந்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றோம். அவரைப் பற்றி எண்ணி மீண்டும் மீண்டும் அதை நாம் நுகரப்படும் போது அதனின் கருக்கள் நம் உடல்களிலே இந்திரலோகமாக உருப் பெறுகின்றது.

அந்த நோயாளியின் உடலில் எந்த நோயின் அணுக்கள் உருவாகி அவர் துயரப்பட அது காரணமானதோ அதே உணர்வு கொண்டு நம் உடலிலும் அத்தகைய நோயின் அணுக்கள் உருவாகத் தொடங்கி விடுகின்றது.

நாம் இப்படிப் பலருடைய நோய்களின் உணர்வுகளைக் கவர நேர்ந்தால் அதன் வழி கொண்டு நமக்குள் அந்த அணுக்கள் பெருக்கம் அடைந்து விடுகின்றது.
1.அது பிரம்மலோகமாக மாறிவிடுகின்றது.
2.தீமைகளை உருவாக்கும் அணுவின் தன்மையை நமக்குள் பெருக்கும் தன்மை வந்து விடுகின்றது.

இவ்வாறு தீமைகளை உருவாக்கும் தன்மை அதிகரிக்கும் போது ஒரு சிலரைப் பார்க்கலாம்… சர்க்கரைச் சத்து அதிகமாக இருக்கும். இரத்தக் கொதிப்பு அதிகமாக இருக்கும். ஆஸ்த்மா நோய் இருக்கும். T.B. இருக்கும்.

1.ஆஸ்த்மா நோய் உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்புக்கு உண்டான மருந்தைச் சாப்பிட்டால் அது ஒத்துக் கொள்ளாது.
2.அதே சமயத்தில் ஆஸ்த்மா நோய்க்குண்டான மருந்தைச் சாப்பிட்டால் இரத்தக் கொதிப்புக்கு ஒத்துக் கொள்ளாது.
3.ஆனால் சர்க்கரைச் சத்திற்குண்டான மருந்தைச் சாப்பிட்டால் அந்த இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளாது.

இப்படித் தனித்தனித் தன்மை ஆகி நம் உடலுக்குள் பல விதமான போர் முறைகளை ஆரம்பித்து விடுகிறது. எத்தகைய மருந்துக்கும் அது கட்டுபடாத நிலையாகின்றது.

அந்த மூன்றுக்கும் சேர்த்து மருந்துகளைக் கொடுக்கும்போது நமது கிட்னி – சிறுநீரகங்கள் என்ன ஆகின்றது…?

விஷம் கலந்த கடுமையான மருந்துகளை நாம் சாப்பிடும்போது கிட்னி இந்த விஷத்தையைப் பிரிக்கும் தன்மை இழந்து உப்புச் சத்தாக மாறி விடுகிறது.

உப்புச் சத்தும் சரக்கரைச் சத்தும் இரத்தக் கொதிப்பும் இதே போன்ற பல நிலைகள் வரப்படும்போது மனிதனுடைய உறுப்புகள் சீராக இயங்காது மனித உறுப்புகள் அனைத்தையும் நலிவடையச் செய்துவிடுகின்றது.

1.மனித உடலில் சீராகச் செயல்படும் உறுப்புகளை இயக்கும் அந்த அணுக்கள் பழுதடையும் போது
2.அதில் விளைந்த நுண் அணுக்களின் தன்மை விஷம் கொண்டதாக உயிராத்மாவில் சேர்கின்றது.

ஆகவே இந்த உடலில் நல்ல அணுக்கள் வளர முடியாத தன்மை ஏற்படுகின்றது. அப்படி வரப்படும்போது தான் உயிர் இந்த உடலை விட்டு வெளியே செல்கின்றது. மீண்டும் மனிதனாகப் பிறக்கும் தகுதியை இழக்கச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டும் என்றால் வாழ்க்கையில் எந்த நோயாளியைச் சந்தித்தாலும் அவர்களைப் பற்றி அறிய நேர்ந்தாலும் அதை உடனடியாக மாற்றிப் பழக வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.

அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி நோயாளிகளைப் பற்றி நுகர்ந்திருந்தாலும் அவர்கள் துன்பப்பட்ட துயரப்பட்ட வேதனையான உணர்வுகள் நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்த முடியும். அடுத்து…
1.விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் நம் கிட்னி முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
2.கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற வீரிய சக்தியை உண்டாக்க வேண்டும்.

கிட்னி தொந்திரவு உள்ளவர்கள் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் “ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை கிட்னிக்குள் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது அகஸ்தியன் எப்படி விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ அத்தகைய வலுவான நிலைகள் நம்முடைய கிட்னி பெறும்.
1.நல்ல இரத்தங்களாக உருவாக்கிடும் ஆற்றல் பெறும்.
2.உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் அதை உருவாக்கிய அணுக்களும் சீராக இயங்கத் தொடங்கும்.

சலிப்போ சோர்வோ சஞ்சலமோ வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் போது
3.தீமைகளை வடிகட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.

இதைப் பழகிக் கொண்டால் இந்த வாழ்க்கையில் நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு நம்மை இயக்காது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குரு வழியில்… மகிழ்ச்சியான உலகை நாம் உருவாக்குவோம்

 

விஷத்தை வென்றிட்ட துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்று நமக்குள் வளர்த்து
1.இனி வரக்கூடிய ஆண்டுகளை மகிழ்ச்சி பெறும் ஆண்டுகளாக குரு வழியில் நாம் உருவாக்குவோம்
2.உடலில் பேரின்பத்தைப் பெருக்கும் அணுக்களாக உருவாக்குவோம்
3.பெருக்கி உலக மக்கள் அனைவரும் அதைப் பெறும் தகுதியாக வளரச் செய்வோம்… வளர்ப்போம்.
5..உலக மக்கள் தெளிந்து வாழ வாழ்த்துவோம்… தியானிப்போம்… தவமிருப்போம்
6.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அனைவரையும் பெறச் செய்வோம்
7.மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ச்சி பெறும் நிலையினை அனைவருக்குள்ளும் உருப்பெறச் செய்வோம்
8.இந்த உலகம் முழுவதும் அதைப் பரவச் செய்து எல்லோருக்குள்ளும் வளர்க்கச் செய்து
9.அவர்களிடம் இருந்து வெளிப்படக்கூடிய அந்த உணர்வுகளை இந்த பூமி முழுவதும் பரவச் செய்வோம்.
10.அதன் மூலம் இந்தக் காற்று மண்டலத்தை பரிசுத்தப்படுத்துவோம்… அந்த பரிசுத்தமான உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம்
11.ஒன்றி வாழும் நிலையும் சகோதர தத்துவமும் சமத்துவமும் .மக்களுக்குள் வளர அருள் ஞானத்தைப் பெருக்குவோம்.

ஒன்றுபட்டு வாழ்வோம் தீமையை அகற்றுவோம் உலக மக்களைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்ப்போம்.

உலக மக்கள் என்று சொன்னாலும் “அது உயிரான ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் தான்…”

“ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும்…” என்று நாம் அன்பு கொண்டு செய்தால்… மனிதன் என்ற பகைமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ்ந்திடும் உணர்வினை வளர்த்திட… அரும்பெரும் சக்தியாக நமக்குள் அது வளரும்.

இதற்கு வலிமை சேர்க்க… கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து தியானத்தில் வலுப்பெற்றால் அது அனைத்தும் கூடி வரும். பகைமை வராது தடுக்கலாம். உலக இருளை நீக்கும். நஞ்சினை மாற்றிடும் அருள் ஞான உணர்வுகள் உருப்பெறும்.

அருள் ஞானத்தைப் பெருக்கிடும் அந்த அருள் சக்தியை நாம் பெறுகின்றோம். அருள் சக்தி பெற மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் தியானிப்போம்.

1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைப்போம்
2.அவர்கள் உடல் பெறும் நஞ்சினை அங்கே கரைத்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலையைச் செயல்படுத்துவோம்.

அவர்கள் ஒளியான உணர்வுகளை நாமும் நுகர்வோம். நமக்குள் பேரருளைப் பெருக்குவோம். அறியாது சேர்ந்து இருளை மாற்றுவோம். ஒளியான உணர்வை உருவாக்குவோம். பிறவி இல்லாத நிலை அடைவோம். பேரருளை நமக்குள் ஏங்கிப் பெறுவோம்.

நம் உடலுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெருக்கி
1.நம் உயிரான ஈசனுக்கு அந்த மகிழ்ச்சியை ஊட்டுவோம்.
2.அவன் அருளை நாம் பெற்று…
3.அவனுடன் என்றும் பிரகாசமாக… என்றும் ஏகாந்தமாக… ஏகோபித்த நிலையாக உயிருடன் ஒன்றி
4.அவன் எவ்வாறோ… அவன் வழியே… நாமும் உடல் பெறும் உணர்வுகள் ஒளியாக மாறி
5.ஏகாந்த நிலையை… ஏகாதசி என்ற நிலையை… பத்தாவது நிலையை… அந்த முழுமையை நாம் அடைவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பன்றி தன்னுடைய உடலில் தீமைகளை வென்றிடும் நல்ல உணர்வின் தன்மைகளை தன் வாழ் நாள் முழுவதும் சுவாசிக்கின்றது. சேர்த்துக் கொண்ட நல்ல உணர்வுக்கொப்ப… பன்றியை விட்டு வெளி வந்த உயிரான்மா பரிணாம வளர்ச்சியாகி மனிதனாகப் பிறக்கின்றது.

இதைப் போல நம்முடைய மனித வாழ்க்கையில் துயர் என்ற நிலைகள் வரப்படும் போது
1.அந்தத் துன்பங்களையும் தீமைகளையும் அகற்றி
2.அதையெல்லாம் ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்து தீமைகளை உருவாக்கும் அணுக்களை அடக்கி அதை மடியச் செய்யப்படும் போது எந்தத் தீமை வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் அதிகமாக அதிகமாக…
2.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வளர வளர…
3.இந்த உடலை விட்டு நாம் சென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைவோம்.

அங்கே சென்றால் இந்த உடலில் பெற்ற நஞ்சினை நீக்கி விட்டு உணர்வினை ஒளியாக மாற்றி அழியா ஒளியின் சரீரம் பெறலாம்.

இந்தப் பிரபஞ்சத்திலும் சரி… அகண்ட அண்டத்திலும் சரி… அங்கிருந்து வரும் கடுமையான விஷத் தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது தான் அந்தத் “துருவ நட்சத்திரம்….!”

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் சூரியனோ மற்றவைகளைக் கவர்ந்து பிரபஞ்சத்தை இயக்க உதவினாலும்
1.அந்தச் சூரியனே ஒரு காலம் மடிய நேரும்.
2.அதே போல் பல தீமையின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் நுகர நேர்ந்தால்
3.பிற மண்டலங்களில் இருந்து இதுவும் மடிந்து விடுகின்றது.

ஆனால் இதிலே உயிர் உருவாகி உணர்வின் தன்மையில் வளர்ச்சி பெற்ற நாம் இந்த மனிதப் பிறவியிலிருந்து தீமைகளை அகற்றத் தவறினால் தேய்பிறை என்ற நிலை வருகின்றது.

ஆரம்பத்தில் சூரியன்… தான் வளர்ச்சி அடையப் பல தீமைகளை ஒளி நிலைகளாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கும் ஆற்றலாகப் பெறுகின்றது.

சூரியன் ஒளிக்கதிராக மாற்றியது போன்று இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய ஒரு உயிரணு (நாம்) பல விதமான உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வினை ஒளியாக மாற்றும் தகுதியான மனிதச் சரீரம் பெறுகின்றது.

மனிதனான நிலையில் அறிந்து… உணர்ந்து… தெளிந்து… தெளிவாக வாழ்ந்திடும் அந்த உணர்வின் தன்மை பெற்ற பின்…
1.சந்தர்ப்பத்தால் நுகரும் தீமைகளை (முதலிலே கூறியபடி) நாம் நுகர நேர்ந்தால்
2.தீமையின் உணர்வுகளுக்கு அழைத்துச் சென்று மனிதனைத் தேய்பிறையாக ஆக்கிவிடுகிறது.

ஆனால் நாம் அந்த அருள் என்ற உணர்வினை நமக்குள் வளர்த்தால் இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் உடலுக்குள் ஒளி என்ற உணர்வினை உருவாக்கி
1.இந்த உடலைப் பிளந்து விட்டு
2.உயிர் எதனின் வலுப் பெற்றதோ அங்கே
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வினை உணவாக எடுத்து ஒளியின் சக்தியாக மாற்றிடும் சக்தி பெறுகின்றது.

சூரியன் அழியலாம்… ஆனால் உயிரணுவாகத் தோன்றி உலகின் உணர்வை அறிந்து தனக்குள் ஒளியின் உணர்வாக உருவாக்கி விட்டால் அந்த ஒளியை எவையும் அழிக்க முடியாது.

1.ஆகவே நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்ற இந்த உயிர்
2.இந்த உடலையே ஒளியாக மாற்றிடும் உணர்வின் துணை கொண்டு
3.அந்த ஒளியின் தன்மையையே உணவாக உட்கொண்டு
4.பேரொளியை வெளிப்படுத்தும் நிலை அடைகின்றது.

அந்த நிலையை மனிதனாகத் தோன்றிய நாம் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

எமது உபதேசங்களை நீங்கள் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ள வேண்டிய சரியான முறை

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்கிற போது வெறும் சொல்லாகச் சொல்வதல்ல.
1.ஓ…ம் என்பது நமது உயிர்… உடலுக்குள் இயங்கிக் கொண்டுள்ளது…
2.ஓ…! நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் சக்தி ம்…! என்று நம் உடலுடன் ஐக்கியம் ஆகிறது.

அதே போல நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் சக்தியை உடலுக்குள் இருக்கும் எலும்பு – மேக்னட் அதற்குள் இருக்கும் ஊன் அது ஊழ் வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

நாம் எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டு நாம் எண்ணக்கூடிய எண்ணத்தை நமது உயிர் “ஜீவன் பெறச் செய்கின்றது…” அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா.

குருதேவா… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் அந்த குணங்களும் நம் உடலில் இயக்கப்பட்டு அதை ஜீவன் பெறச் செய்வதற்கு மூலமாக இருந்தது நமது உயிர். ஆகவே “குருவாக இருப்பதும்…” நமது உயிரே.

அதைத்தான்…
1.ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது உயிரை ஈஸ்வரனாகவும்
2.அதே உயிர் நமக்குள் குருவாக பல உணர்வின் சக்திகளை நமக்குள் பதிவு செய்வதாக எண்ணி
3.அந்த ஏக்க உணர்வுடன் தான் அனைவரும் சொல்ல (எண்ண) வேண்டும்.

ஒரு மைக் நாம் பேசுவதை… நாடாக்களில் உள்ள முலாமும் முலாமுக்குள் மறைந்துள்ள காந்தமும் அதைக் கவர்ந்து எப்படிப் பதிவு செய்து கொள்கின்றதோ அதைப் போல நாம் எண்ணும் பொழுது கண்ணின் நினைவலைகள் புற நிலைகளில் இருந்து அதைக் கவர்கின்றது.

அதே சமயம் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் கிளர்ந்து எழுகின்றது. காற்றிலிருந்து அந்த உணர்வினை நம் உடல் கவர்ந்து தனது ஆன்மாவாக வைத்துக் கொள்கின்றது,

1.தனது ஆன்மாவாக ஆக்க வேண்டும் என்றால் நாம் எண்ணும் எண்ணம் ஊழ் வினையாகப் பதிவாக வேண்டும்.
2.ஊழ் என்பது நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எலும்புக்குள் ஊழாக இது பதிவாக வேண்டும்.
3.அப்படிப் பதிவானால்தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அது நினைவுக்கு வரும்.
4.அந்த உணர்வின் நிலையை நாம் அறிய வேண்டி வரும்.
5.நாம் எண்ணிய உணர்வின் தன்மையைச் சுவாசித்து அந்த உணர்வுக்கொப்ப நம் உயிரின் தன்மை இயங்குகின்றது.

ஆகவே… ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் அந்த உயிருடன் ஒன்றி எண்ண வேண்டும்.

இப்பொழுது யாம் எதை உபதேசிக்கின்றோமோ அதைக் கூர்மையாகக் கவனிப்போர் உணர்வுகளில் ஊழ் வினையாக எலும்புக்குள் பதிவாகிறது. அப்படிப் பதிவாகும் பொழுது நினைவுபடுத்தும் போது அந்த ஆற்றலை நீங்கள் பெற முடியும்.

மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வலைகளை
1.குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நான் எண்ணி… அதை நான் சுவாசித்து
2.அதனை ஊழ்வினையாகப் பதிவு செய்ததை மீண்டும் நினைவு கூர்ந்து விண்ணின் ஆற்றலைப் பெருக்கி சுவாசித்து
3.அந்த உணர்வின் எண்ண ஒலிகளாக இப்போது வெளிப்படுவதை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்கள் என்றால்
4.அந்த உணர்வின் சத்து உங்களுக்குள் ஊழ் வினையாகப் பதிவாகிறது.

உங்களுக்குள் அப்படிப் பதிவாகும் பொழுது மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள் என்றால் எந்த ஞானியின் அருளாற்றல் உங்களுக்குள் பதிவாகின்றதோ அதை நீங்கள் பெற முடியும்.

உங்களுக்குள் அப்படிப் பதிவாகும் பொழுது மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள் என்றால் எந்த ஞானியின் அருளாற்றல் உங்களுக்குள் பதிவாகின்றதோ அதை நீங்கள் பெற முடியும்.

ஞானிகள் அவர்கள் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் தங்களை அறியாது வந்த தீய வினைகளை அவர்கள் மாற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.
1.அவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படி இருளை நீக்கி ஒளியின் தன்மையாக வாழ்ந்தார்களோ
2.அதே உணர்வின் ஆற்றலை நாமும் பெற முடியும்… அதற்குத் தான் இதைத் தெளிவாக்குகிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வயல்களில் நாம் விளைய வைத்த நல்ல பயிர்களை அறுவடை செய்து முடிந்த பின் அந்த வித்துக்கள் அடியோடு மாய்ந்து விடுகின்றது. திருப்பி அதுவாக முளைத்து வருவதில்லை.

ஆனால் மற்ற புல் பூண்டு தாவர இனங்களின் செடிகள் பூமிக்குள் வெகு ஆழத்தில் பதிந்து இருக்கின்றது. பூமியின் வெப்பத்தால் அந்த விதைகள் அப்படியே பாதுகாக்கப்படுகின்றது.

1.மழை பெய்தால் போதும்…
2.நீர் சக்தியை நுகர்ந்து அந்தச் செடி (களைகள்) பூமியை விட்டு வெளியே வருகின்றது.
3.மழை பெய்த இரண்டு நாளுக்குள் புல் பூண்டுகள் கருவுற்று முளைத்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலில் எலும்புக்குள் தீமை என்ற நிலைகள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிந்துள்ளது. நாம் நன்மை என்ற நிலைகளில் வளர்த்திருந்தாலும் அது எளிதில் கரைந்து விடுகின்றது. அது ஆழமாக இருப்பதில்லை.

வேதனை கோபம் போன்ற உணர்வுகள் வலுவான நிலைகள் கொண்டு நமக்குள் அந்த ஆழமாக ஊடுருவியிருப்பதனால் நமது வாழ்கையில் சந்தர்ப்பத்தால் வேறொருவரின் உணர்வுகளைக் கேட்கவோ அல்லது பார்த்து நுகர நேர்ந்தால் போதும். அது மறுபடியும் ஜீவன் பெற்றுவிடும்.

உதாரணமாக குடும்பத்தில் திடீரென்று “தந்தை இறந்து விட்டார்…!” என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை எண்ணி
1.அப்பா இருந்தார்… ஆனால் இப்படிப் போய்விட்டார்…! என்றோ
2.அவர் இப்பொழுது இருந்தால் கஷ்டமெல்லாம் இருக்காது… ஆனால் அவர் இல்லையே..! என்று
3.ஏக்கமாக மீண்டும் மீண்டும் அவரை எண்ணினால் போதும்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் எப்படித் துயரங்கள் பட்டாரோ அதே உணர்வின் துயரங்களை நமக்குள்ளும் இயக்கத் தொடங்கி விடுகின்றது.
1.அவர் கடைசிக் காலத்தில் நோயால் மிகவும் அவதிப்பட்டிருந்தால்
2.அந்த நோயும் நம்மை இயக்கத் தொடங்குகின்றது.

ஏனென்றால் நாம் அவரைப் பற்றி நினைக்கும் போது “காற்றுக்குள் படர்ந்துள்ள அவரின் உணர்வுகள் கவரப்பட்டு…” அந்த உணர்வுகள் நமக்குள் வளரத் தொடங்கிவிடுகின்றது.

(1.ஏனென்றால் நமக்குள் அவரைப் பற்றிய பதிவு இருக்கிறது.
2.அவதிப்பட்ட உணர்வும் இருக்கிறது.
3.எண்ணியவுடனே அந்த வித்துக்கள் ஜீவன் பெற்று இயக்கி அது வளரத் தொடங்குகிறது)

இதை போன்ற நிலைகளை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்த தந்தையின் உயிரான்மாவை “உந்தித் தள்ளி…” அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் முதலில் இணைக்க வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதிகாலையில் துருவ தியானத்தில் எடுக்கப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் அதிகமாகப் பரவத் தொடங்குகின்றது.

அந்த வலிமை பெற்ற பின் அந்தத் தீமை என்ற உணர்வுகளைத் தள்ளி விடுகிறது.

உதாரணமாக… நெல்லை நாம் வயலில் பயிரிட்டாலும் அதனுடன் சேர்ந்து புல் பூண்டு எல்லாம் வருகின்றது. வயலிலே “தண்ணீர் அதிகமாகக் கட்டியிருந்தால்…” அந்தப் புல் பூண்டுகள் வளர்வதில்லை. ஏனென்றால்
1.நீரில்லாது காய்ந்து வறட்சியாக இருந்தால் புல் பூண்டுகள் வளர்ச்சி பெறுகின்றது.
2.தண்ணீரை அதிகரிக்கப்படும் போது வளர்ந்து வரும் தழைகள் அழுகி விடுகின்றது… களைகள் வளர்வதில்லை.

தண்ணீரை நிறுத்திய பின் நெல் வயலைப் பார்த்தால் ஏராளமாகப் பல களைகள் முளைத்து விடுகின்றது. பார்க்கலாம் நீங்கள்…!

இதைப் போன்று தான் நம் உடலிலும் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால்
1.நம் ஆன்மாவில் அதை அதிகமாகப் பெருக்கிக் கொண்டால்
2.எத்தகைய தீமையான வித்துக்களையும் வளர விடாது
3.ஒவ்வொரு நிமிடமும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.

வயல்களைப் பண்படுத்தி அந்த நெல் மணிகளை எப்படி நாம் எடுக்கின்றோமோ இதை போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பேரருள் பேரொளியாக நம் உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் “ஏற்கனவே பதிவானது அழிவதில்லை…” பேரருள் உணர்வினை நமக்குள் பெருக்கிய பின் மற்ற தீமைகளைச் சிறுத்து இந்த உணர்வினை ஒளியாக மாற்றினால்
1.உடலை விட்டு நாம் செல்லும் பொழுது
2.தங்கத்திலே திரவகத்தைச் சேர்த்துச் செம்பையும் வெள்ளியையும் கரைப்பது போன்று தொக்கிய நஞ்சுகளைக் கரைத்து விடலாம்
3.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே பேரானந்த நிலையில் ஒளியாக வாழ முடியும்.

ஒன்று அல்ல கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான் கடவுள்

 

நமது உயிர் நட்சத்திரத்தின் தன்மை பெற்றது தான். ரேவதி நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் அதனுடைய தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதி “அதிக அழுத்தமாகும் பொழுது” உயிரணுவாக உருவாகிறது.

அதே போல மின்னல்கள் ஒலிக்கற்றைகளாக வீசப்படும் பொழுது பலவாறு கல் மண் இவைகளில் அது கலந்து விடுகின்றது. அவ்வாறு கலந்து விட்டால் மண்ணிலிருந்து விளையும் தாவர இனங்களிலும் அது கலக்கின்றது.

1.நட்சத்திரங்களின் இயக்கம் எப்படி இந்த உயிரணுவிற்குள் ஒன்றுடன் ஒன்று கலவையாகித் துடிக்கின்றதோ இது போல
2.இரண்டு நட்சத்திரங்களின் துடிப்பின் உணர்வலைகள் படரப்படும் பொழுது
3.தாவர இனங்களில் எதனின் உணர்வு… எதனின் உணர்ச்சி கொண்டு அதிகரிக்கின்றதோ அதன் வலு கொண்டு தான் தாவரங்கள் விளைகின்றது.
4.கல் மண்ணும் இப்படித்தான் விளைகின்றது.

இதை நமது உயிர் இந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்து உணவாக உட்கொள்ளும் பொழுது உயிரின் துடிப்பு கொண்டு “மூன்று…” என்ற நிலை வரும்.

இரண்டு நட்சத்திரத்தின் உணர்வலைகள் எதிர்நிலையாகும் பொழுது துடிப்பின் இயக்கச் சக்தி பெறுகின்றது
1.அந்தத் தாவர இனத்தை நுகரப்படும் போது உயிரிலே படும் போது தசைகள் உடலாகின்றது.
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் எண்ணம் ஆகின்றது.
3.எண்ணத்தின் உணர்வுகள் அணுத்தன்மையாக நம்மை இயக்கத் தொடங்குகிறது.

இப்படித்தான் இயற்கையின் இயக்கங்கள்… மாற்றங்கள் வருகின்றது.

1.கடவுள் என்ற தன்மை எதுவும் ஒன்று இல்லை…!
2.அதாவது ஒன்று அல்ல கடவுள்… பலவும் சேர்த்து ஆனது தான் கடவுள்.

அதாவது… மூன்று நிலைகள் கொண்ட உணர்வின் சத்தாகும் பொழுது அது எந்தச் சத்தைக் கவர்ந்ததோ அதனை… அதே உணர்வை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

இப்படிப் பல உணர்வுகள் சேர்த்துத் தனக்குள் வருவதை அகஸ்தியன் தன் வாழ்நாளில் அந்த நட்சத்திரங்களின் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து
1.உயிர் எப்படி உருவானதோ அதே போல
2.அந்த 27 நட்சத்திரங்களின் உணர்வினைத் தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுக ஏற்றி
3.மின்னல்கள் வெளிப்படும்போது அதை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து உடலில் மாற்றினான்.

உயிரைப் போல உணர்வின் அணுக்களை மாற்றி அமைத்துத் தான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அதற்கு உணவு எது…?

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவதைத் தான் உணவாக எடுத்துக் கொள்கிறது. அதன் வழியில் தான் இன்றைக்கும் நஞ்சினை மாற்றி ஒளிச் சுடராக வீசிக் கொண்டுள்ளது.

சூரியனோ தனக்குள் இருக்கும் பாதரசத்தால் நஞ்சினை மோதிப் பிரித்து விடுகின்றது. மனித உடலோ உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது.

1.நஞ்சினை நீக்கிவிட்டால் நல் உணர்ச்சிகளை ஊட்டும் ஒளியின் உணர்வுகள் நமக்குள் மிஞ்சுகின்றது.
2.சர்வத்தையும் அறிந்து கொள்ளும் சக்தி பெறுகின்றது… அது தான் கார்த்திகேயா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய விஞ்ஞான உலகத்தில் எந்த நாடு விஞ்ஞானத்தில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதோ “அந்த நாடு” மற்ற நாடுகளை அடக்கி ஆட்சி புரிய வேண்டும்…! என்ற உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அதற்காக அணு குண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் நியூட்ரான் என்ற சில விஷத் தன்மையான குண்டுகளையும் விஷக் கிருமிகளைப் பரப்பக்கூடிய குண்டுகளையும் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

1.தங்களுடைய நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியாக அதை எல்லாம் ஒரு நாடு செய்தாலும்
2.மற்ற நாடுகளும் அதே போல ஆயுதங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று
3.உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் அந்த ஆயுதங்களைத் தயார் செய்து கொண்டுள்ளார்கள்.

அப்படி எல்லா நாடுகளிலும் அணு ஆயுதங்களை உருவாக்கப்படும் போது அதனால் வெளி வரும் விஷத் தன்மைகளை எல்லாம் சூரியனின் காந்தப் புலன் அறிவு கவர்ந்து பூமி முழுவதும் அலைகளாகப் பரவச் செய்து கொண்டுள்ளது.

அப்படிப் பரவும் ஒரு விஷத் தன்மைக்கும் மறொரு விஷத் தன்மைக்கும் எதிர் நிலை ஆகும் போது பெரும் கொண்ட “சூறாவளியாக மாறுகின்றது…!”

அதனால் ஆயிரம் மைல் வேகத்தில் அது சுழலும் தன்மை பெற்றுக் கட்டிடங்களையும் மரங்களையும் அனைத்தையும் “தூசி போல பறக்கச் செய்ய கூடிய நிலைகள்” உலகெங்கிலும் உருவாகிக் கொண்டு உள்ளது.

அதே சமயம்
1.ஒவ்வொரு நாட்டிலேயும் “அரசாங்க நிர்வாகம் சரி இல்லை…” என்ற நிலை கொண்டு
2.மதங்களின் அடிப்படையில் அல்லது அரசியல் கட்சியின் அடிப்படையில் தீவிரவாதம் என்ற நிலைகள் உருவாகிக் கொண்டுள்ளது.

அப்படி உருவாகும் தீவிரவாதங்களால் அமைதி கொண்டு வாழும் மக்களிடையே மீளாத் துயர்படும் நிலையும் மக்களுடைய வாழ்க்கையில் எந்த நிமிடம் எப்போது மடிவோம்…! என்ற நிலையில் அச்சம் ஏற்படும் நிலையும் உருவாகிக் கொண்டு வருகின்றது.

ஏனென்றால்… புலன் அடங்கித் தூங்கிக் கொண்டு இருக்கும் போது எதிர்பாராத அதிர்வுகளை ஏற்படுவத்துவதும் கட்டிடங்களை நொறுக்குவதும் கூட்டம் நெரிசல் இருக்கும் இடங்களில் கார் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்து மக்களைக் கொலை செய்வதும் போன்ற இரக்கமற்ற நிலைகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் முதலில் சொன்ன அந்த விஷத் தன்மைகள் உலகம் முழுவதற்கும் பரவியது தான். இத்தகைய சூழ்நிலை எல்லா இடத்திலும் உருவாகிக் கொண்டு உள்ளது.

இதைப் போன்ற விஷத் தன்மைகள் பரவும் இந்த நேரத்தில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் பெருக்கி
2.எந்த விஷத் தன்மைகளும் நம்மைத் தாக்கிடாது பாதுகாத்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிக் கொண்டே இருந்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையை நாம் பெறுகின்றோம்.

நம் உயிரான்மா இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து “அழியா ஒளிச் சரீரமாக வாழத் தொடங்கும்…”

இன்னல்களைச் சந்திக்கும் போது நாம் எதை எண்ண வேண்டும்…?

 

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…! இந்த நிலையில்லா உலகத்தில் “எதை நீ சதம் என்று எண்ணுகின்றாய்…?” என்று இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் வைத்து குருநாதர் எம்மைக் கேட்கின்றார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் போகும் இடங்களில்… துயரமான நிலைகளைச் சந்திக்கும் போதெல்லாம் இத்தகைய உணர்வை எனக்குள் ஊட்டிக் கொண்டே வந்தார்.

ஆகவே நினைவு கொள்ளுங்கள்…! இந்த வாழ்க்கையில் நாம் தேடும் செல்வம் நமக்கு நிலையானதா…? இந்த உடல் நமக்கு நிலையானதா…? உடலில் இருக்கும் பொழுது எதைப் பற்ற வேண்டும்…?

1.என்றும் ஏகாந்த நிலை பெற்ற அருள் மகரிஷியின் ஒளியை நான் பெற வேண்டும்
2.என் மனைவி அதைப் பெற வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும்
3.எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும் இரு உயிரும் ஒன்றிட வேண்டும்
4.எங்கள் பார்வை இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

துன்பங்களைச் சந்திக்கும் நேரத்தில் உன் மனைவி மக்களை நீ எண்ணுகின்றாய். ஆகவே மனைவிக்கு எது வேண்டும்…?

1.மனைவிக்கு அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.என்னுடன் இணைந்த நிலையில் அருள் வழியில் வர வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… அருள் ஒளி பெறும் தகுதி பெற வேண்டும்
4.மனைவியின் பார்வை குழந்தைகளைக் காக்கும் அருள் சக்தியாக வளர வேண்டும்.
5.அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வைப் பாய்ச்சும் நிலை தான் வர வேண்டும்.

அதற்குப் பதிலாகத் துன்ப்ப்படும் நேரத்தில் வேதனையான உணர்வை நுகர்ந்து மனைவி மக்களை நினைத்தால் வேதனைப்படும் உணர்வே வளருகின்றது
1.உன் சிந்தனை சிதறும் தன்மை வருகின்றது
2.உயிர் வெளி சென்று விட்டால் உடல் இல்லை. அப்போது நீ எதை நினைக்கப் போகின்றாய்…?

உடலுக்குள் விளைய வைத்த வேதனையான உணர்வு கொண்டு பாசத்தால் உன் பையனை நீ எண்ணினால் அவன் உடலிலேதான் புக முடியும். வேதனை என்ற உணர்வை நீ எடுக்கும் பொழுது அங்கே நோயைத்தான் உருவாக்க முடியும்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் வேதனை உருவாக்கப்படும் பொழுது “விஷம் என்ற உணர்வுகள்…” உனக்குள்ளும் அந்த உடலிலிருந்து அவனால் நீ மீண்டும் பெறுகின்றாய்.

உன்னால் அவன் உடல் பெற்றான். உன்னுடைய நினைவுகள் அவனுக்குள் வளரப்படும் பொழுது அவன் நினைவு உனக்குள் வளர்கின்றது. ஆனால் நீ அவனுள் செல்கின்றாய்… இந்த உணர்வின் தன்மை அவனை அழிக்கிறது.

அதாவது… உன் குழந்தைக்குள்ளும் அந்த வேதனை உருவாக்கப்பட்டு அவனையும் காக்க முடியாத நிலையில் நீ எமலோகத்துக்குத்தான் அழைத்துச் செல்ல முடியும். இந்த உடலின் தன்மையை (அவனையும்) அழிக்கின்றது.

அவனை விட்டு வந்தபின் நீ எந்த வேதனைப்பட்டாயோ வேதனைப்படும் உணர்வின் தன்மை கொண்டு உடலை விட்டபின் உன் எண்ணமே எமனாகின்றது… எமலோகம் செல்கின்றாய்.

மனிதன் என்ற சிந்தனை இல்லாதபடி கொன்று குவிக்கும் அசுர உணர்வு கொண்ட பாம்பாகவோ தேளாகவோ புலியாகவோ நீ பிறக்கப் போகின்றாயா…? உனக்கு எது தேவை…? என்ற நிலையில்
1.அங்கே இமயமலையில் வைத்து எனக்கு உணர்த்துகின்றார் நமது குருநாதர்.
2.எதை…?
3.“துன்பத்திலும் இன்பம்” எவ்வாறு காண வேண்டும்…? என்று.

ஆகவே… அருள் ஒளி என்ற உணர்வினை உனக்குள் பெறு, துன்பம் என்ற நிலைகள் மறைந்து பேரின்பம் என்ற நிலை பெற்ற அருள் மகரிஷியின் உணர்வை உனக்குள் கவர்ந்து கொள்.

நீ எண்ணியது எல்லாம் இந்தப் பரலோகத்தில்தான் உண்டு. அதை நீ சிவலோகமாக மாற்று. சிவலோகத்திற்குள் அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இந்திரலோகமாக மாறுகின்றது.

1.அப்போது ஏகாந்த நிலை என்ற பேரானந்த நிலை பெறும் “பரமபதம்” அதாவது அழியா ஒளிச் சரீரம் நீ பெறுவாய்.
2.அருள் ஒளி பெறுவாய்… அருள் ஆனந்தம் பெறுவாய்… அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கு.

அந்த உணர்வுகள் உனக்குள் கலந்திருக்கும் மற்றவர்களின் உணர்வுகளுடன் இணைகின்றது. ஒளியின் தன்மையாக மாறுகின்றது. பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டுகின்றது.

உனக்குள் இருக்கும் அணுக்களில் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கும் போது அதுவும் ஒளி பெறுகிறது. பகைமையற்ற நிலை வருகிறது.

இந்திரலோகத்தில் வரும் போது ஏகாந்த நிலை என்ற எதுவுமே வெறுப்பில்லாத நிலையில் சொர்க்கலோகத்தை நீ உருவாக்குகின்றாய். பரலோகத்திலிருந்து இந்த உடலின் சிவலோகத்திற்கு மாற்றி இந்திரலோகமாக இருந்து சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

ஆனால் வேதனை வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது நரகலோகத்தைத்தான் உருவாக்குகின்றாய்.
1.மீண்டும் வேதனைப்படும் உடலை உருவாக்குகின்றாயா…?
2.அல்லது அருள் ஒளி என்ற உணர்வை உனக்குள் உருவாக்குகின்றாயா…?

பேரொளி பெற்றுப் பேரானந்தம் பெற்று ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து அருள் ஒளி பெற்று, இரு உயிரும் ஒன்றெனெ இணைந்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்து வருகின்றானே… “அந்த ஏகாந்த நிலையை நீ பெறுகிறாயா…?” என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

உனது வாழ்க்கையில், நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆகவே நீ அந்த துருவ மகரிஷியின் அருள் பெற வேண்டும். உன் குடும்பம் நலம் பெற வேண்டும். உலகம் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வை நீ எடுத்தால் நீ நுகர்ந்த உணர்வு உனக்குள் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது.

1.அந்த அருள் ஒளி பெறுவாய் பேரின்பம் பெறுவாய் பெருவாழ்வு வாழ்வாய்
2.பார்ப்போர் அனைவரும் பேரின்பம் பெறவும் பெரு வாழ்வு வாழச் செய்யும் “அந்த அருளை நீ பெறுவாய்” என்று
3.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு ஆசி கொடுத்தார்.

நமது குரு அருளை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் அருள் சக்தி நீங்கள் பெற்றுப் பேரின்ப வாழ்வென்ற நிலைகள் நுகர்ந்து சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக மாற்றிச் சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்.

பேரின்பம் என்ற அழியா ஒளி சரீரம் நீங்கள் அனைவரும் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காரமான பொருள்களைத் தனியாக உட்கொள்ளும் போது அந்தக் காரத்தின் உணர்ச்சி தான் முன்னிலையில் நிக்கும். காரம்… காரம்… என்று தான் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

ஆனால் இந்தக் காரத்தை அடக்க “சப்…” என்று இருக்கும்…
1.மற்ற காரம் இல்லாத பொருள்களை இதனுடன் இணைக்கப்படும் போது
2.காரத்தின் தன்மை குறைந்து சுவை மிக்க நிலைகளாக உருவாகின்றது.

நமது வாழ்க்கையில் வெறுப்போ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ இத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது உயிரான ஈஸ்வரலோகத்தில் அவை எல்லாம் உருவாக்கப்படுகின்றது.

ஏனென்றால்… பிறருடைய துயரங்களையும் துன்பங்களையும் கேட்டறிந்து
1.அவர்களுக்கு உதவிகள் செய்தாலும்
2.கேட்டறிந்த அந்த உணர்வுகளை நாமும் நுகர நேர்கின்றது.
3.அந்தத் துயரப்படும் உணர்வுகள் நமக்குள் வந்த பின் நம்மையும் துன்பப்படச் செய்கிறது
4.அப்பொழுது நாம் நுகர்ந்த அந்தத் துன்பமான உணர்வுகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!

அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் கேட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

முதலில் சொன்ன மாதிரி தனிக் காரத்தை அடக்கப் பல நல்ல சரக்குகளைச் சேர்த்து அதைச் சுவைமிக்கதாக மாற்றுவது போன்று
1.நாம் கேட்டறிந்த துன்பமான துயரமான உணர்வின் தன்மையை அடக்க
2.வலுவான அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைக் கூட்டி விட்டால்
3.நாம் நுகர்ந்த தீமைகளைத் தணியச் செய்து நல்ல உணர்வின் அணுக்களாக மாற்றும்.

நாம் நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனைப்படும் உணர்வின் தன்மை அதிகரித்து நல்ல குணத்தின் வலிமையை அது குறைந்து விடுகின்றது.

ஆகவே நம்முடைய நல்ல குணத்தின் தன்மையை நாம் அதிகமாக வலு பெறச் செய்ய வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவசியம் நாம் நுகர வேண்டும்.

அப்பொழுது உயிரான ஈஸ்வராலோகத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உருவாகத் தொடங்குகிறது.

“பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…!” என்ற நிலையில் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உருவாகாதபடி அருள் உணர்வுகளை உருவாக்கிடல் வேண்டும்.

தீமை என்ற உணர்வுகளைக் குறைத்துத் தீமைகளை அகற்றிடும் வலிமை கொண்ட உணர்வின் அணுக்களாக எடுக்கும் போது
1.ஈஸ்வரலோகத்தில் அந்த உணர்வுகள் உருவாக்கப்பட்டு
2.நம் இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது அது இந்திரலோகத்தில் கருத்தன்மை பெற்று
3.தீமைகளை மாற்றிடும் வலிமை பெற்ற பிரம்மலோகமாக… நல்லதைச் சிருஷ்டிக்கும் பிரம்மலோகமாக (உடலாக) மாறுகின்றது.

இத்தகைய நிலைகளை நம் உடலுக்குள் உருவாக்கினால் தீமையை அகற்றிடும் வலிமை பெற்று இந்த உடலை விட்டுச் சென்ற பின் நமது உயிரான்மா ஞானிகள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்கிறது.

உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளியின் சரீரமாக நாம் ஆகின்றோம்…!

எதையுமே சீர்படுத்த “துருவ நட்சத்திர தியானம் மிகவும் அவசியம்…”

 

இன்று விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்த நிலையில் மருத்துவ ரீதியில் மனிதனுக்கு வரக்கூடிய நோய்களை மருந்தைக் கொடுத்துக் குணப்படுத்துகின்றார்கள்.

இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதில் என்னென்ன நிலை இருக்கின்றது…? என்று கண்டுபிடித்து அதற்குத் தக்க மருந்துகளைக் கொடுக்கின்றார்கள்.
1.உடலுக்குள் இரத்தத்தின் வழி மருந்து சென்று
2.அந்த நோய்க்குக் காரணமான கிருமிகளை வலு இழக்கச் செய்கின்றது… கொல்கிறது.

ரத்தத்திலே அல்லது உறுப்புகளில் அந்தக் கிருமிகள்… வைரஸ் எவ்வாறு உருவாகின்றது…? எந்த மருந்தினைக் கொடுத்தால் அந்த வைரஸ் செயலிழக்கும்…? என்று அவர்கள் கண்டறிந்து அந்த மருந்தைக் கொடுக்கின்றார்கள்… உடலைச் சரி செய்கின்றார்கள்.

மருத்துவர்கள் நாடி பிடித்துப் பார்த்து… இதைச் சாப்பிட்டால் சரியாக வரும் என்று இப்படி எல்லாமே கொடுக்கின்றார்கள். ஆனால் இதில் சிறிதளவு எதிர்மறை ஆகிவிட்டால் வேறு நோய் வந்து விடுகின்றது.

அதாவது… மருந்தைச் சாப்பிட்டேன் என் வாய் எல்லாம் புண்ணாகி விட்ட்து. உடலில் சில இடங்களில் கொப்புளித்து விட்டது என்றெல்லாம் சொல்வார்கள்.

வீரிய மருந்தைக் கொடுத்துக் கேன்சரை நீக்குகிறேன் என்பார்கள். ஆனால்
1.அந்த மருந்து உடலுக்குள் சென்ற பின் கேன்சர் அணுக்களைக் கொல்வதைக் காட்டிலும்
2.உடலில் இருக்கக்கூடிய மற்ற நல்ல அணுக்களை எல்லாம் கொன்று விடுகின்றது,

காரணம்… நோய் கடுமையான பின் அதனின் நாடித் துடிப்பு பற்றிச் சரியாகத் தெரியாதபடி மருந்தைக் கொடுக்கப்படும் பொழுது என்ன ஆகிறது…?
1.எந்த நோய் முதலில் உண்டானதோ அதைக் குணமாக்கும்.
2.ஆனால் மற்ற நல்ல அணுக்களுக்கு ரியாக்ஷன்… எதிர் நிலையாகி அதை மாற்றி விடுகின்றது.

ஆக… எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் ஒரு நூல் தவறினால் மறு பக்கம் தீமைகளை உண்டாக்கி விடுகின்றது. உடல் நலம் பெறச் செய்ய இது போன்று நாம் செயல்பட்டாலும் கூட அதைச் சமப்படுத்த வேண்டும்.

அதைச் சமப்படுத்துவதற்கு
1.யாம் சொல்லும் தியானத்தை எடுத்துக் கொண்டு
2.ஆத்ம சுத்தியைச் சரியான முறையில் வலு சேர்த்துக் கொண்டால் சீராக்க முடியும்.
3.எதிர்மறையான நிலைகளையும் தடுத்து நிறுத்த முடியும்.

அதற்குத் தான் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் பெறுகின்றோம்.

மனிதனாக இருந்து அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலைப் பெற்றான்… துருவனானான். அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றினான். ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அதிலிருந்து வரும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.
1.துருவ நட்சத்திரம் பூமியின் துருவத்தின் நேர் பகுதியில் இருப்பதால்
2.முதல் பங்காக இங்கே கவர்ந்து நமக்கு முன் கொண்டு வருகிறது.
3.அதைத் தான் உங்களை நுகரும்படி அடிக்கடி சொல்கிறோம்.

ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்தால்… அது நமக்குள் வந்து விடுகிறது. இருவர் சண்டையிடுகிறார் என்று உற்றுப் பார்த்தால் அதை நுகர்ந்தால் நமக்குள் அது வந்து விடுகின்றது.

ஒரு தடவை வந்து விட்டால் மீண்டும் எண்ணமாகி நினைவாகி அது வரத் தொடங்குகிறது. இப்படி மனிதனுக்கு மனிதன் உற்றுப் பார்த்த உணர்வுகள் கவரப்பட்டு இப்படி நமக்குள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. தீமை செய்யும் அணுக்களாக உடலுக்குள் உருவாகின்றது.

ஆனால் இது போன்ற தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி எடுத்து நமக்குள் சேர்க்க வேண்டும்… ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

நம் ஆன்மா மட்டுமல்ல… நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

1.இந்தக் காற்று மண்டலம் விஷத்தன்மை அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அடிக்கடி எடுத்து நமக்குள் தீமை புகாது… நோய் வராது… தடுக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வானத்தில் வால் நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம். அதே போல் எரிகற்களையும் பார்க்கின்றோம். இது எல்லாம் எங்கிருந்து வருகிறது…?

மற்ற பிரபஞ்சங்களிலிருந்து வரும் கழிவுகள் எதிலேயுமே பிடிப்பில்லாத நிலையில் அப்படி வருகிறது. அத்தகைய நிலைகளைத் தான் நமது சூரியன் இழுக்கின்றது.

சூரியனுக்குப் போகும் பாதையில் நமது பூமி இடைமறிக்கும் பொழுது துருவப் பகுதியின் வழியாக நமது பூமி கவர்ந்து கொண்டபின் காற்று மண்டலம் அழுத்தத்திற்குள் வந்தவுடன் சூடேறிக் கரைந்து விடுகின்றன

அப்படி அது கரையவில்லை என்றால்… அத்தனையும் பூமிக்குள் அப்படியே விழுந்தால்… நாம் யாரும் இங்கே வாழ முடியாது…!
1.நம் பூமியில் தினமும் எரிகற்கள் விழுந்து கொண்டுதான் உள்ளது.
2.நமது பூமியின் காற்றழுத்தத்திற்குள் வரும் போது கரைத்து விடுகின்றது
3.கரைக்கத் தவறிய ஒரு சில பெரிய பாறைகளும் பூமியில் விழத்தான் செய்கின்றது.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளை அதை நமக்குள் ஈர்க்கும் சக்தி அனைத்தும் நீக்கி விட்டால்
1.நமக்கு முன்னாடி வரும் அந்தத் தீமையின் உணர்வுகளை
2.எந்தப் பிடிப்பும் இல்லை எனும் பொழுது
3.காலையில் சூரியன் அதை அழைத்துச் சென்று விடுகின்றது

அதனால்தான் அதிகாலையில் முக்கியமாகத் துருவ தியானத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைத் தூய்மை செய்து கொள்ளச் சொல்கிறோம்.

துயரமோ சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ இதைப் போன்ற நிலைகள் வரப்படும்போதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரான அந்த ஈஸ்வரலோகத்தை எண்ணுங்கள்.

அந்தத் துருவ நடசத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று அவனிடமே கேட்டு ஏங்குங்கள். அப்போது இந்த உணர்வுகள் அதிகரித்து தீமையின் உணர்வுகளை மாற்றி அதை அடக்கும் சக்தியாக வரும்.

ஒரு குழம்பில் காரம் புளி உப்பு மற்ற எல்லாப் பொருள்களையும் போட்டபின் சுவையாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல சுவைமிக்க உணர்வுகளாக ஒளியான அணுக் கருக்கள் நம் இரத்தத்தில் இந்திரலோகமாக மாறுகிறது

இவ்வாறு மாற்றப்படும் போது தீமை என்ற உணர்வின் தன்மையை ஈர்க்கத் தவறுவதால் தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி தவறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாக இழுத்துக் கொண்டால் தீமையான அணுக்கள் உணவு இல்லாதபடி அது சோர்வடைகின்றது. அது மட்டுமல்லாது தீய அணுக்கள் உடலுக்குள் உருவாகாதபடி தடுக்கப்படுகின்றது.

மண்ணிற்குள் மறைந்துள்ள விஷ வித்துக்கள் மழை பெய்த பின் உடனே எப்படி முளைத்து வருகின்றதோ இதைப் போல
1.நம் உடலில் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவான தீமையான அணுக்கள்
2.இந்த உடல் இருக்கும் வரை அதனுடைய வேலைகளைத் தொடர்ந்து செய்யும்.

ஆனால் அந்த உணர்வின் அணுக்களைப் பெருக்கி விட்டால் அது விளைந்து அதற்குத் தகுந்த உடலுக்குள் உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும்.

ஆகவே அத்தகைய ஊழ்வினை என்ற நிலைகளை உருவாக்காதபடி உணர்வின் ஒளிக் கற்றைகளாக மாற்றிடல் வேண்டும். இந்த உடலை விட்டு நாம் செல்லும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து தொக்கிய உணர்வுகளைக் கரைத்து விடலாம்.
2.கரைத்த விஷத் தன்மைகளை எல்லாம் சூரியன் கவர்ந்து என்று விடுகின்றது
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் அறிவு அங்கே துருவ நட்சதிரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் விளைகின்றது
4.துருவ நட்சத்திரம் விளைய வைக்கும் அந்த விஷமற்ற உணர்வை உணவாக உட்கொண்டு அதன் தன்மை கொண்டு நாம் வளர்ச்சி அடைவோம்.
5.இதுவே ஒளியான ஓர் பிரபஞ்சம்…!

நாம் சூரியக் குடும்பம் எப்படி இருக்கின்றதோ இதே போல அதன் அமைப்பிலே நாம் சேர்க்கப்படும்போது துருவ நட்சத்திரமும் வலு அடைகின்றது. அதனின் ஈர்ப்பு வட்டமும் “ஒளி மயமாகின்றது…!”

உலகில் இது பரவப்படும்போது இருள் சூழும் நிலைகளில் இருந்து விடுபட்டு ஒளி மயமாக மாற்றும் சக்தி பெறப்படுகின்றது

ஆகவே நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய வழிகளில்… இன்னொரு பிறவிக்குச் செல்ல நீங்கள் விரும்பாதீர்கள். இந்த உடலில் பற்றை வைக்காதீர்கள்.

எத்தகைய குறைகளைக் காணினும் அதை அகற்ற முயற்சி எடுங்கள். குறை என்ற உணர்வு தோன்றிய பின் அது நமக்குள் உருவாகாதபடி தடைப்படுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா என்று அந்த உணர்வை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அதன் உணர்வை உடலான இந்திரலோகத்தில் பெருக்கச் செய்யுங்கள். அதன் உணர்வு பெருகினால் நமக்குள் தீய அணுக்கள் சிறுக்கும். நமக்குள் மன பலமும் மன வலிமையும் வரும்.

கண்களால் உருவான அணுக்களுக்கு அதே கண் கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறச் செய்ய முடியும்

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… ரத்தங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் அடிக்கடி கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அதாவது மற்ற உணர்வுகள் நம் உடலுக்குள் அணுவாக உருவாகாதபடி முந்தி இதைச் செய்ய வேண்டும்.
1.காரணம் உடலுக்குள் உருவான அணுக்கள் அனைத்துமே கண்கள் பதிவானது தான்…
2.கண்கள் வழி நுகர்ந்து தான் உடலில் அணுக்கள் உருவானது.

அதே கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ரத்தங்களிலே இணைக்கப்படும் பொழுது அது வலுவாகின்றது.
1.கண்கள் மூலம் எளிதில் அந்த அணுக்களுக்கு அந்த ஆற்றலைப் பாய்ச்ச முடியும்.
2.ரத்தத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வட்டமாக வலுவாக அமைத்து விடுகின்றது.

ஞானிகள் கண்ட உண்மைகள் இது.

பின்… தீமையான உணர்வுகளை நாம் ஈர்க்க மறுக்கப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் அந்த அணுக்களும் ஈர்க்க மறுத்தால் தீமைகள் அனாதையாகி விடுகின்றது. அனாதையாகி விட்டால் சூரியன் கவர்ந்து செல்கின்றது.

2000 சூரியக் குடும்பங்களில் “ஒதுங்கிய தூசி மண்டலம்” வால் நட்சத்திரமாக ஆவது போன்று நம் உடலில் இந்த மண்டலங்கள் ஏற்பட்டு ஒதுங்குகின்றது… அதைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து கொண்டு சென்று விடுகின்றது.

நம் ஆன்மா பரிசுத்தம் ஆகின்றது… ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பரிசுத்தம் அடைகின்றது. ஜீவான்மாக்கள் பரிசுத்தமானால் பரிசுத்தமான ஜீவணுக்களாக உருவாகி உயிரான்மா ஒளியாக ஆகிறது.

உயிருடன் ஒளியான உணர்வுகள் ஆன்மாவாகும் பொழுது
1.எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு ஒளியான அணுக்களாக ஆன்மாவாக மாறியதோ
2.உயிர் வெளியே சென்றால் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பெருக்கினோமோ அது பெருகி
3.துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றது நம் உயிர்.

அங்கே சென்றபின் தொக்கியுள்ள விஷத்தைக் கரைக்கின்றது… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நிலை கொள்ளச் செய்கின்றது.

பிரபஞ்சத்திலும் சரி பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய நிலைகளும் சரி… பூமியின் துருவத்திற்கு நேராக வரும் அவைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளிமயமாக மாற்றி விடுகிறது. உயிரைப் போன்றே ஜீவணுக்களை உருவாக்கி ஒளியாக மாற்றி விடுகின்றது.

மனிதன் ஒருவன் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்க்க முடியும்.

1.குருநாதர் எனக்குள் இதைப் பதிவு செய்தார்.
2.எனக்குள் எடுக்கப் பழக்கச் செய்தார்… எடுத்து எனக்குள் வளர்க்கச் செய்தார்
3.அதன் உணர்வைத் தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிவாக்குகின்றேன்.

அந்தப் பதிவை நினைவாக்கி உங்களுக்குள் வளர்த்து அந்தப் பேரருள் பேரொளியாக நீங்கள் அனைவரும் உருவாக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

நம் விலா எலும்புக்குள் இருக்கும்… “பதிவாக்கும் பவர் அதிகமானது…!”

 

சில பண்பற்ற குடும்பங்களை நாம் பார்க்க நேர்ந்தால் “என்ன இப்படிச் சண்டை போடுகிறார்கள்…?” என்று எண்ணுவோம்… அதைக் கவர்ந்து விடுவோம். ஆக… சந்தர்ப்பத்தால் நாம் எதை இப்படி உற்று நோக்குகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.

இதை இராமாயணத்தில் வசிஷ்டர்… பிரம்ம குரு என்று காட்டுவார்கள்.
1.நாம் எதை அறிந்து கொள்ள விரும்புகின்றோமோ அதைக் கவர்கின்றோம்.
2.உயிரிலே பட்டால் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் பிரம்மமாகிறது… அது அணுவாக மாறுகிறது.
3.அணுவாகிவிட்டால் அது எந்தக் குணமோ அந்த உணர்வின் சக்தியாகத் தான் அது இயக்கும்… அது தான் அருந்ததி.
4.திருப்பி எண்ணும் பொழுது அவர்கள் எதைச் செய்தார்களோ அந்த உணர்வைத் திருப்பிச் செயல்படுத்தும் குரு தான் அது.

அதைத்தான் வசிஷ்டர் பிரம்மகுரு அவரின் மனைவி அருந்ததி என்று சொல்வது.

அதாவது… யார் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உணர்வின் சக்தியை மீண்டும் எண்ணும் போது அதனுடைய இனத்தைப் பெருக்கும் பிரம்மமாகிறது. அந்த அசுத்தத்தை வளர்க்கும் சக்தியாகவே பெறுகின்றது.

ஆகவே… நாம் எதை ஆசைப்படுகின்றோமோ அதுவே வளர்கின்றது. ஆனால் நாம் ஆசைப்பட வேண்டியது எது…?

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதை விடுத்து விட்டு
1.தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற ஆசைப்பட்டால்
2.அது நமக்குள் பிரம்மாகி அதன் வளர்ச்சியில் நாம் அதுவாக மாறுகின்றோம்.

அதற்குத் தான் அடிக்கடி யாம் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம் உங்களுக்குள் அதை நினைவுபடுத்துகின்றோம். எந்த அளவுக்கு இதை உற்று நோக்கிக் கவனிக்கின்றீர்களோ
1.உங்கள் நெஞ்சின் எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் இது பதிவாகின்றது… ரெக்கார்ட் செய்கின்றது.
2.முதுகு பக்கம் இருக்கும் எலும்பின் நிலை வேறு… முன்பக்கம் உள்ள எலும்புகளின் இருப்பது வேறு
3.விலா எலும்புகளில் முன்னாடி தான்… அதில் அனைத்தையும் ரெக்கார்ட் செய்கின்றது.
4.அதிலே உள்ள பவர் அதிகமானது… எதைப் பதிவாக்குகின்றதோ அதைக் கவரும் சக்தி பெற்றது.
5.ஆகையினால் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே பதிவாக்குகின்றேன்.
6.அதை நினைவு கூர்ந்து கவரும்… அந்த வலிமை பெறும் சக்தியைத் தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் தியானத்தின் மூலம் பெறுவோம் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அதைப் பாய்ச்சுவோம்… அந்த ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவோம்.

அதைச் சுத்தப்படுத்தும் போது நம் ஆன்மா தூய்மை அடைகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து அணுக்களின் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவோம்.

இப்படித் தூய்மைப்படுத்திக் கொண்டே வந்தால் வாழ்க்கையில் எந்த நேரம் எது வந்தாலும் “உடனடியாக… ஈஸ்வரா என்று உயிரின்பால் நினைவைச் செலுத்தி…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களை அறியாது சேர்ந்த பகைமைகள் அகல வேண்டும் என்று நாம் இதை எண்ணி எடுக்க முடியும்.
1.நமக்குள் பகைமை வராது தீமைகள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.
2.என்றென்றும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குடும்பத்தில் யாராவது உடலை விட்டுப் பிரிந்து விட்டால் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் சேர்ந்து அவர் உயிராத்மாவை அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து ஒளியின் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஆனால் தனித்து அவரை மட்டும் எண்ணக் கூடாது….!

1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்தல் வேண்டும் என்ற
4.இந்த வலுவைக் கூட்டிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்தவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு சப்தரிஷி மண்டலத்தை எண்ணும் பொழுது அவர்கள் ரிஷியின் தன்மை அடைந்து விடுகின்றனர். சப்தரிஷிகளுடன் சப்தரிஷியாகி விடுகின்றார்கள். மனித உணர்வின் ஆசைகள் கொண்டு அங்கே செலுத்திடல் வேண்டாம்.

“அவர்கள் அங்கே ஒளியின் சரீரமாக இருக்கும் நிலையில்…” ஒவ்வொரு நாளும் அவர் அருள் நமக்குள் வளர வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று இதனைக் கவர்ந்து இந்த வாழ்க்கையில் இருளை அகற்றும் தன்மையை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

குடும்பத்தைச் சார்ந்தோர் அடிக்கடி அவர் ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று அவருடைய நினைவு வரும் பொழுதெல்லாம் இவ்வாறு செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர் உணர்வு உங்களுக்குள் உண்டு. இந்த உணர்வினை மாற்றியமைத்தல் வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் ஏகாந்த நிலைகள் கொண்டு பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அவர்கள் என்றுமே பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்தல் வேண்டும் என்ற “இந்த உணர்வினைத்தான் கூட்டுதல் வேண்டும்…!”

இந்த உணர்வுகள் நமக்குள் வளர வளர அவர்களுடைய உணர்வைப் பெற்ற அணுக்கள் நம் உடலிலே இருந்தால் அதைச் சிறுத்துப் பேரின்பம் என்ற உணர்வின் அணுக்களாக நமக்குள் மாற்றிக் கொள்ள முடியும்.

1.அதே சமயத்தில் குடும்பப் பாரம்பரியத்தில் அணு செல்கள் சென்று
2.உடலை விட்டுப் பிரிந்தவர்கள் உடலில் வந்த நோய்களை
3.மற்ற தனது சந்ததிகளுக்கு உருவாக்காதபடி மாற்றியமைக்கவும் உதவும்.

ஏனென்றால் அவருடைய இன விருத்தியில் வந்த அந்தக் கருக்களில் இத்தகைய நிலைகள் கலந்து விட்டால் பின் வரும் நிலைகளில் அது தொடர்ந்து விடுகின்றது.

அதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும்…! எல்லோரும் அருள் வழி வாழ்ந்து அழியாத பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக பாலில் விஷம் பட்ட பின் அதை நாம் குடித்தால் மயக்கம் தான் வரும். சிந்திக்க முடியுமா…? அதே மாதிரி பாலில் காரம் பட்டு விட்டது என்றால் அதிலே இனிப்புப் போட்டிருந்தாலும் குடித்தால் ருசி வருமா…? வராது.

இதைப் போல் தான் நாம் நல்ல மனதுடன் இருந்தாலும் பிறருடைய தீமையான செயல்களைப் பார்க்கப்படும் பொழுது அது நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் நாம் அமைதி இழக்கின்றோம்.

அந்தத் தீமையின் இயக்கத்திலிருந்து காத்துக் கொள்வற்குத்தான் இந்த அதிகாலைத் துருவ தியானத்தையே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் இந்தத் தீமைகள் நடக்கிறது என்றால் அது நடக்காமல் தடுத்து நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும். அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

அதைச் சேர்க்கப்படும் பொழுது பிறிதொரு தீமை நம்மை இயக்காதபடி அதை அடக்கிச் சிந்திக்கும் தன்மை வரும்.

அப்பொழுது…
1.தீமை செய்பவர்களுக்கு எப்படி நல்லதைச் சொல்ல வேண்டும்…? என்ற ஞானமும் கிடைக்கும்.
2.அவர்கள் எற்றுக் கொள்ளும்படியான சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பருவமும் நமக்குள் வரும்.

உதாரணமாக நாம் சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது சரியாக வேகாமல் தாளித்தால் எப்படி இருக்கும்…? சரியான முறையில் வெந்து இறக்கப்படும் பொழுது அதைச் செய்தால் அது ருசியாக வரும்.

காய்கள் வேகப்படும் பொழுது வேகுவதற்கு முன்னாடி அதிகமான உப்பைச் சேர்த்து விட்டால் சில காய்களும் அதனுடன் இணையும் தன்மையைப் பிரித்துவிடும். உப்பு அதிகமாகிவிடும். குழம்பின் ருசி மாறிவிடும். இந்த மாதிரிச் சிலர் குழம்பு வைத்தார்கள் என்றால் ருசியே மாறிவிடும்.

1.பருவம் தெரியாதபடி உப்பைக் கலப்பதனால் குழம்பின் ருசி மாறிவிடும்.
2.அந்தப் பருவம் இதனுடன் இணைந்திடும் சந்தர்ப்பம் வரும் பொழுது உப்பை நாம் கலக்கலாம்.

சில மசால்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்க வைக்கப்படும் பொழுது அந்தச் சூட்டிலே சமமாகப் போய்ச் சேரும். ஆனால் இந்த உப்பென்ற நிலைகள் வரும் பொழுது முன்னணியில் இருந்து தடுத்துவிடும்.

அது தடுத்து விட்டால் அந்தக் காய்கறிகள் ருசி இருக்காது. உப்பு தான் முன்னாடி இருக்கும். குழம்பின் நிலைகள் மாறிவிடும். இவைகள் எல்லாம்
1.அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் செய்யக்கூடிய உணர்வுகள் எதுவோ
2.அது கலப்பதற்குத் தகுந்த மாதிரித்தான் அந்த ருசி வரும்.

ஆகவே ஒருவர் தவறு செய்கிறார்… என்று எண்ணும் பொழுது “அவர்களை அறியாமல் அது இயக்குகிறது…!” என்பதை நாம் உணர்தல் வேண்டும். அதற்காகத் தான்
1.நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
2.உடலைக் கோவில் என மதிப்போம்
3.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என்று துதிப்போம் என்று சொல்வது.

ஈசனால் உருவாக்கப்பட்ட ஆலயம் தான் அந்த உடல். அவர்களை அறியாமலே அந்தச் செயல்களும் அந்தச் சொல்களும் வெளிப்படுகிறது என்று சொன்னால்
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
2.அந்த நேரத்தில் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் நம்முடைய நல்ல உணர்வுகளும் காக்கப்படுகின்றது. நம் மனதில் அமைதியும் கிடைக்கின்றது. அருள் சக்திகளும் நமக்குள் கூடுகின்றது. நம் சொல்லைக் கேட்கும் மற்றவருக்கும் நல்லதாகின்றது.

எண்ணிலடங்காத தெய்வ ரூபங்களை ஞானிகள் நமக்குக் காட்டியதன் உட்பொருள்

 

ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு சக்தி உண்டு. அதைக் காட்டுவதற்குத் தான் காளி மாரி சாமுண்டீஸ்வரி சண்டாளேஸ்வரி என்றார்கள். கொடிய தீமைகளை உருவாக்கும் குணங்களை “சண்டாளேஸ்வரி…” என்று கூட அதற்குக் காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.

அதன் இனத்தைப் பெருக்கும் சக்தியைப் பெறுகிறது என்று சிவனுக்குள் சக்தியாக உருவாக்குகின்றது. அதாவது… உடலான சிவத்திற்குள் அணுக்களின் தன்மைகள் கொடூர உணர்வுகளைக் கொடூரம் என்று உணர்ந்து நுகர்ந்தாலும்… நல்ல உணர்வுகள் விலகிச் செல்லக் காட்டினாலும்… அந்த உணர்வு இயக்கி உணர்ச்சியைத் தூண்டி “நம்மை மாற்றும் நிலைக்கு…” உருவாக்கி விடுகிறது.

இப்படி நுகர்ந்த உணர்வுகள் கடினமாக்கப்படும் பொழுது
1.இந்த உடலான சிவத்தையும் நுகர்ந்த அந்தச் சண்டாள உணர்வுகள்… சக்தி சிவனை வீழ்த்தி விடுகின்றது.
2.இதைத்தான் சிவனைத் திரிசூலத்தால் தாக்கிக் கீழே காலில் மிதித்து வைத்திருக்கிறார் என்று கூறுவார்கள்.

நாம் நுகர்ந்த உணர்வே சிவமாகின்றது என்ற நிலையும் செயலற்ற நிலையில் நாம் அதன் கீழ் அடங்கி விடுகின்றோம். அதன் வழி கொண்டு நாம் செயல்பட முடியாதபடி ஒடுங்கப்படும் பொழுது எதன் உணர்வின் தன்மையோ அதனை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஞானிகள் காவியங்களைப் படைத்தாலும் ஒவ்வொரு குணத்திற்கும் உருவத்தைக் கொடுத்து அதற்குண்டான நிறத்தைக் கொடுத்து அதனுடைய செயலாகங்களைக் காவியமாக படைத்து… அதனை உற்று நோக்கப்படும் பொழுது ஒவ்வொன்றையும் நாம் அறியும் வண்ணமாகக் காட்டி உள்ளார்கள்.

1.நம்மை அறியாது நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் விளைந்து விட்டால் என்ன செய்யும்…?
2.அதனுடைய ரூபங்கள் எப்படி மாறும்…?
3.நுகர்ந்த நிறங்கள் எப்படி மாறும்…? என்று அவர்கள் காட்டிய வழிகளில் நாம் நுகர்கின்றோமா…?

பல பல நிறங்கள் சிவப்பு கருப்பு நீலம் மஞ்சள் என்று வந்தாலும் அவைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது அதனுடைய நிறங்கள் மாறுகின்றது. அதிலே உருவாகும் உணர்ச்சிகள் மாறுகின்றது.

வித்தியாசமான நிற ஆடையை அணிந்தால் உடனே சோர்வாகும். நீலக் கலரைப் பார்த்தால் இருட்டடையும் நிலை வருகின்றது. மஞ்சள் நிறத்தைப் பார்த்தால் பளிச் என்று இருக்கும் இளம் மஞ்சளைப் பார்த்தால் கொஞ்சம் வெளிச்சம் ஆகின்றது. அது ஒளியாகக் காட்டும் போது தெளிவாகின்றது மனம்.

வெள்ளைத்துணி அணிந்து இருப்பவரைப் பார்த்தால் பளிச்சென்று தெளிவாகும். இளம் மஞ்சளைப் போட்டிருந்தால் மகிழ்ச்சியூட்டும் நிலைகள் வரும்.

பளிச் என்று வெள்ளை நிறம் வந்தாலும் கண் கூசும் நிலையும் வருகின்றது.

ஆடையில் கருப்பும் சிவப்பும் வெள்ளையும் கலந்து இருந்தால் உற்றுப் பாருங்கள். அவர் முகத்தையும் பாருங்கள்… இருண்ட நிலை இருக்கும் நுகரும் பொழுது நம் மனமும் இருண்டு விடுகின்றது.

கருப்புச் சட்டையைப் போட்டுக் கொண்ட பின் திரும்பிப் பார்த்தால் சிந்திக்கும் திறன் இழந்து அந்த உணர்வின் நிலை கொண்டே நம் எண்ணங்களும் செயல்படுவதைப் பார்க்கலாம்.

ஆடைகளின் நிறத்திற்குள் இவைகள் எல்லாம் அடங்கியுள்ளது.

இதைத்தான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.கறுப்பு நிறத்தைப் பார்த்தபின் நம் மனதை இருளடையச் செய்யும் நிலை வருகின்றது. சிந்திக்கும் திறனை இழக்க செய்கின்றது.
2.நுகர்ந்ததை இருள் சூழும் உணர்வின் அணுவின் கருவாக உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

அணுவின் இயக்கம்… அதனின் வளர்ச்சி எவ்வாறு…? என்று ஞானிகள் தெளிவாக்கியுள்ளார்கள். இதை எல்லாம் உங்களிடம் இப்போது சொல்கிறேன் என்றால் “எனது பாக்கியம்… குருநாதரால் நான் அறிய முடிந்தது…”
1.அவர் உணர்த்தியதை உங்களிடம் வெளிப்படுத்தும் போது
2.உங்களுக்குள் இயக்கும் உணர்ச்சியின் நிலைகள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதை உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.

ஆகவே… ஆறாவது அறிவின் துணை கொண்டு இதையெல்லாம் தெளிவாக்கப்படும் பொழுது “இதைப் பெற வேண்டும்…” என்ற ஏக்கம் கொள்வோருக்குள் இது பதிவாகின்றது.

மீண்டும் நினைவு கொண்டால் அதனுடைய ஞானத்தை உங்களுக்குள் பெருக்க முடிகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என் (ஞானகுரு) பெரியப்பாவின் தங்கைக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். அது முதல் மனைவியாகப் போய் இருந்தது. அவர்களுக்குள் ஏதோ கருவாகி உள்ளது. திருமணமாகி அந்தக் கருவாக இருக்கும்போது (பெரியப்பாவுடைய) தங்கையின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஏனென்றால் அந்தக் காலத்தில் இரண்டு கல்யாணம் மூன்று கல்யாணம் பண்ணிக் கொள்வது சர்வ சாதாரணமாக இருந்தது. திடீரென்று சொந்தத்தில் பெண் என்ற நிலை வரும் போது அவர் இரண்டாவது கல்யாணத்தைச் செய்து கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் போது “இப்படி இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டாரே…!” என்று அவர்கள் சொன்னார்கள்.

இப்பொழுது உள்ள சட்டம் எல்லாம் அன்றைக்குக் கிடையாது.

நான் பிரியபட்டேன்…. நான் கல்யாணம் செயது கொண்டேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்…? வேண்டாம்… என்றால் நீங்கள் விலகிப் போகலாம் என்று அவர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டினார்.

ஊர் நாட்டாமைகள் எல்லாம் சேர்த்து பஞ்சாயத்துச் செய்யும் பொழுது அந்த அம்மா தன் கர்ப்ப காலங்களில் கடும் வேதனையும் சங்கடமும் பட்டது.

எந்த அளவுக்குக் கடும் வேதனையும் சங்கடமும் பட்டதோ அந்த உணர்வுகள் எல்லாம் கருவிலே இணைந்து அது பெண் குழந்தையாகப் பிறக்கிறது.

1.பிறந்த பின் அந்தக் குழந்தைக்கு எந்தச் சிந்தனையும் இல்லை.
2.வாய் பேச வரவில்லை… வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டே இருக்கும்.
3.மூளை வளர்ச்சி இல்லாதபடி அதுபாட்டிற்கு இருந்தது.
4.அது வயதுக்கு வந்து பருவம் ஆகும் வரையில் கூட அப்படியே தான் இருந்தது.

இந்த மாதிரி ஆனதால் அந்த அம்மா தன் சொத்தைப் பிரித்துக் கொண்டு வந்து விட்டார்கள், இருந்தாலும் என் வாழ்க்கையை நீங்கள் எல்லோரும் சேர்ந்து நாசமாக்கி விட்டீர்களே…! என்று தன் அண்ணனைப் (என் பெரியப்பாவை) பிடித்துப் பேசும்.

நீங்கள் எல்லாம் சேர்ந்து தானே இந்தக் கல்யாணத்தை அனுமதித்தீர்கள் என்று…!

ஆக… அந்த அம்மா பேசிய சாப அலைகள் பெரியப்பா குடும்பத்தில் சாடியது. அவருக்கு ஒரு பையன் மூன்று பெண் பிள்ளைகள்.

கர்ப்பம் என்று சொல்லப்படும் போது தன் பிள்ளைக்கு எப்படி ஆனதோ அதே போல் அவருடைய குழந்தைகளுக்கும் ஜன்னி மாதிரி வந்தது. காக்காய் வலிப்பும் வந்தது… மூளை வளர்ச்சி இல்லாது போனது.

ஒரு பையனுக்குக் கால் வராமல் இருக்கிறது. பெண்கள் கல்யாணம் பண்ணிக் கொடுத்து அந்த குழந்தையோட அது அவஸ்தைப்படுகிறது.
1.அந்தச் சந்தர்ப்பத்தால் குடும்பமே இத்தகைய நிலைகள் உருவாக்கப்பட்டு இந்த நிலை ஆகிவிட்டது.
2.இதை எல்லாம் நடைமுறையில் குருநாதர் அனுபவரீதியாக எமக்குக் காட்டுகின்றார்.

அதே மாதிரி என் மனைவி வழியில் எடுத்துக் கொண்டாலும் என் மனைவியின் சின்னம்மா (அதுவும் இரண்டாம் தாரமாக வந்தது தான்). அது எங்கள் சிறிய பாட்டி மகள்.

அந்த அம்மாவுக்குக் கொஞ்சம் வாய்த் துடுக்கு…! யாரும் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வரவில்லை என்று. தன் தம்பி மகனுக்கே இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொடுத்து விட்டார்கள். அது கண்டபடி சாபம் இடும்.

எங்கள் பாட்டி என்ன செய்தது…? (என் மனைவியை) எங்கள் குடும்பத்திலேயே கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கொண்டு வந்தது.

அதனாலே என் அண்ணன் கட்டிக் கொள்ள வேண்டியதை என்னைக் கட்ட வைத்துவிட்டார்கள்… வாரிசு என்று, என் மனைவியின் சின்னம்மா அவர்கள் அப்பாவைப் பேசிய பேச்சு கொஞ்சம் நஞ்சம் இல்லை. கண்டபடி பேசும். இவ்வளவு தான் என்று இல்லை.

என் மனைவி குடும்பத்தில் இந்த அம்மாளின் சாபத்தால் பிறந்த ஆண் வாரிசும் இறந்து விட்டார் (என் மனைவியின் சகோதரன்). ஆனால் என் மனைவி மீது அந்த அம்மாவுக்குக் கொஞ்சம் பிரியம்.

அதே சமயத்தில் என் மனைவியின் அப்பாவை (என் மாமனாரை) ரோட்டிலே போய் உட்கார்ந்த கொண்டு கேவலப்படுத்தும்.

நான் (ஞானகுரு) கல்யாணம் முடித்து வந்த புதிதில் இந்த அம்மா இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தது. வாசல் படி மேல் உட்கார்ந்து கண்டபடி பேசிக் கொண்டிருந்தது.

நான் என்ன செய்தேன்…?

பெரிய அம்மிக் கல்லைத் தூக்கிக் கொண்டு போய் உன்னை இந்த மட்டோட குளோஸ் (CLOSE) செய்கிறேன் என்று சொல்லித் தலைக்கு மேலே தூக்கி “டபால்…” என்று அந்த அம்மாவின் பின்னாடி போட்டேன்.

அய்யய்யோ… என்னைக் கொல்ல வந்து விட்டானே… எங்கள் அண்ணன் பையன்…! என்று சப்தம் போட்டது. அன்றிலிருந்து பேசுவதை விட்டு விட்டது. அதற்கப்புறம் அது இறக்கிற வரையில் என்னிடம் பேசவில்லை.

ஆனால் என்ன செய்தது…? பார்…! என்னைச் சீரழித்தாய் அல்லவா…! உன் குடும்பத்தையே எப்படி ஆட்டி படைக்கிறேன்…? என்று சொன்னது.

நடந்த நிகழ்ச்சி இது.

அது இறந்த உடனே என் மனைவி உடலுக்குள் வந்து படுத்தின பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. கண்டபடி ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. நான் சித்தான பிற்பாடு ஒரு சமயம் வந்து கேட்கிறது.

என்னுடைய சிறிய வயதில் நடந்த சம்பவங்கள் எல்லாம் என் மனைவிக்குத் தெரியாது. ஆனால் இந்த உடலில் அந்த அம்மா இருந்து கொண்டு “போடா எங்க அண்ணன் மகனே.. எனக்கு எல்லாம் தெரியுமுடா…!” என்று சொல்கிறது.

போடா என் அண்ணன் மகனே… எனக்கு என்ன தெரியாதா…! போய் வெத்திலை வாங்கிக் கொண்டு வாடா…! பாக்கு வாங்கிக் கொண்டு வாடா…! என்று “என் மனைவி உடலிலிருந்து கேட்கிறது…”

அந்த அமமாளுக்கு வெத்திலை போடும் பழக்கம் இருந்ததால் அப்படிக் கேட்கிறது. போடா… வாடா…! என்று பேச ஆரம்பித்து விட்டது. “நான் தானடா உன்னைத் தூக்கி வளர்த்தேன்…!” என்று பேச ஆரம்பித்தது.

ஒரு சமயம் என்னுடைய சிறிய வயதில் எனக்கு அம்மை வார்த்து இருக்கும் போது இட்லி சாப்பிட வேண்டும் என்று கேட்டு அழுகிறேன். இந்த அம்மா என்ன செய்தது…? உடனே அரிசியை நல்ல சாதமாக ஆக்கி இட்லி மாதிரிச் செய்து கொண்டு என்னிடம் கொடுத்தது.

அப்படிக் கொடுத்தவுடனே அந்த இட்லியை எடுத்து அந்த அம்மா மேலேயே அடிச்சிட்டேன். இது இட்லி இல்லை என்று சொல்லி…!

அதை என் மனைவி உடலிலிருந்து நினைவுபடுத்திச் சொல்கிறது. என் மனைவிக்கு இது தெரியாது. ஆனால் அந்த உணர்வுகள் உடலிலிருந்து பேசுகிறது

இதை எல்லாம் மிகவும் தெளிவாக அனுபவரீதியாக எனக்குக் காட்டினார் குருநாதர்.
1.”ஒரு உடலில் விளைந்த உணர்வுகள் என்ன எல்லாம் செய்யும்…?” என்று உங்களுக்குத் தெரியாது.
2.இப்பொழுது அதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.

தியானத்தில் சக்தி கூட்ட வேண்டிய சரியான முறை

 

குருவின் துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை பெற எண்ணி ஏங்கித் தியானிப்போம். உணர்வுடன் எண்ணி ஏங்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.

ஏனென்றால் புருவ மத்தியைத் தாண்டித்தான் உயிருக்குள் மோத நேரும்.
1.காலையிலிருந்து நாம் எடுத்த வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் இதெல்லாம் முன்னாடி இருக்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வைப் புருவ மத்தியில் இணைத்து விட்டால் இது முகப்பிலே வந்து விடுகிறது.
3.நம் உடலுக்குள் அந்த்த் தீமைகள் புக விடாதபடி நாம் தடுத்துக் கொள்கிறோம்.

புருவ மத்தியில் இவ்வாறு தடுத்துப் பழகிய பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று உணர்வை வேகமாக உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

நாம் புருவ மத்தியில் தடுத்து உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்த்து வலுவாக்கப்படும் பொழுது…
1.அவன் இப்படிச் செய்தான் இவன் இப்படிப் பண்ணுகின்றான் தொழிலில் இப்படி ஆனது குடும்பத்தில் இப்படியானது என்ற
2.இந்த உணர்வுகள் எல்லாமே அனாதை ஆகி விடுகிறது.
3.அனாதையான பின் சூரியனுடைய காந்த சக்தி அவைகளை இழுத்துக் கொள்கின்றது. நம் ஆன்மா சுத்தமாகிறது…!
4.ஆன்மாவைச் சுத்தமாக்கும் முறை தான் இது… இப்படித் தான் செயல்படுத்த வேண்டும்.

அப்படி இல்லாதபடி என் பையன் நோயாக இருக்கின்றான் உடல் நலம் பெற வேண்டும் என்ற “இந்த ராகம் பாடினால்…” நோய் தான் அங்கேயும் வளரும் இங்கேயும் வரும். இதை நீக்க முடியாது.

சில பேர் இப்படித்தான்… என் பையன் நோய் நீங்க வேண்டும்… நோய் நீங்க வேண்டும்…! என்று தான் தியானித்தேன் என்பார்கள். ஏனென்றால் இந்த உணர்வை எண்ணும் பொழுது அந்த வேதனை தான் இங்கேயும் வரும். அதை மாற்ற முடியாது.

அவன் படிக்கவில்லை… படிக்கவில்லை என்று சொல்லிவிட்டு… படிக்காமல் இருக்கின்றானே… படிக்காமல் இருக்கின்றானே…! என்று இதைத்தான் தியானம் செய்வார்கள்.
1.அப்பொழுது அவன் மீது வெறுப்பு தான் வருகின்றது… அந்த வெறுப்பு தான் இங்கு தியானம் ஆகின்றது.
2.இது எல்லாம் முறையற்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் பையன் உடல் முழுவதும் படர வேண்டும்… ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும். அவன் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் இப்படித்தான் எண்ண வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்யாதபடி அந்தப் பையனுடைய உணர்வுகள் இப்படி இருக்கின்றானே என்று குறுக்கே வந்தால் தியானத்தில் நெளித்துப் பார்ப்பார்கள். ஒன்றும் முடியாது. அந்தப் பையனின் உணர்வு தான் முன்னாடி வரும். தியானத்தில் அருள் உணர்வை எடுக்க முடியாது.

அப்பொழுது அந்த மாதிரி நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?

உடனே கண்களைத் திறந்து… “நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்துற்குக் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி விட்டுக் கண்களை மூட வேண்டும். உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.

இப்படி நமக்குத் தொல்லை கொடுக்கும் வெறுப்பு வேதனை போன்ற பிற உணர்வுகள் வந்தால்
1.கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி கண் வழி கவர்ந்து
2.பின் கண்களை மூடி உயிர் வழி உள்ளுக்கே செலுத்துங்கள்… இந்த உணர்வை வலுவாக்குங்கள்.
3.இதைச் செய்து பாருங்கள்… தியானத்தில் நிச்சயம் சக்தி உங்களுக்குள் கூடும்.

இந்த முறைப்படி செய்ய வேண்டும்.

உங்களுக்குள் அழுக்கு அதிகமாக இருக்கின்றது. அதை மாற்றுவதற்கு நாம் இந்த முறையைக் கையாள வேண்டும். உங்களால் முடியும்.

சிறிது நாள் முயற்சி எடுத்துச் செய்தால் அந்தப் பழைய உணர்வுகள் எல்லாம் மாறும். “ஒரு புதுமையான சக்தி கிடைக்கும்…”

நல்ல நிலைகள் கொண்டு நல்ல செயல்களைச் செயல்படுத்தும் போது பிறருடைய தீமையான உணர்வுகளைக் கேட்டறிந்தால் அந்த உணர்வு நமக்குள் புகுந்து நோயாக எப்படி உருவாகின்றதோ அதே போல
1.தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்க எடுக்க
2.அது நமக்குள் புகுந்த தீமைகளை மாற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தாய் வயிற்றில் நான் (ஞானகுரு) கருவாக இருக்கும்போது என்னுடைய பாட்டி என்ன் செய்தது…? என் அப்பாவுக்கு இரண்டாவது கல்யாணம் செய்ய முயற்சி செய்தது.

எனக்கு முன்னாடி மூன்று பேர் பிறந்திருக்கின்றார்கள். இருந்தாலும் என் அப்பாவிற்கு இரண்டாவது கல்யாணம் செய்ய வேண்டும் என்று என் பாட்டி என் அம்மாவை மிகவும் துன்புறுத்தியது.

நான் பிறந்த பிற்பாடு என் அம்மா என்னிடம் சொன்னது:
எப்படியாவது இரண்டாம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று பாட்டி (என் அம்மாவின் மாமியார்) நிர்பந்தம் செய்தது.

அப்பொழுது நான் வேண்டாத தெய்வம் இல்லை. என் கணவருக்கு இரண்டாம் கல்யாணம் செய்யக் கூடாது…! என்று கோயில் குளம் எல்லாம் போய்ச் சுற்றி வந்தேன். என் குலதெய்வம்… மூதாதையர்களை எல்லாம் வேண்டினேன். (மூதாதையர்கள் – ஞானகுருவின் பாட்டனுடைய பாட்டன் கொஞ்சம் மந்திர சக்தி கற்றுக் கொண்டவர்கள்)

இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன். “நீ கர்ப்பத்தில் இருக்கும்போது தான் இதை எல்லாம் வேண்டினேன்…”
1.அதுதானப்பா உனக்கு (ஞானகுரு) இந்த உயர்ந்த சக்தி கிடைத்தது.
2.நம் குலதெய்வங்கள் எல்லாம் பக்கபலமாகச் சேர்ந்து நின்றது என்று அம்மா சொல்லியது.

என் அண்ணன் என்னுடைய அப்பா பெற்ற பாட்டியைத்தான் அம்மா என்று கூப்பிடுவார். என் அம்மாவை அம்மா…! என்று கூப்பிட மாட்டார். என் அம்மாவை மதிக்கவே மாட்டார்.

இது எல்லாம் நடந்த நிகழ்ச்சி.

என் அத்தைக்குப் பிள்ளை இல்லை. அதனால் அந்தச் சொத்தை என் அண்ணனுக்கு எழுதி வைக்கலாம் என்று ஏற்பாடு செய்தார்கள். சொத்து போய்விடக் கூடாது என்று இதை எல்லாம் செய்தார்கள்.

ஆனால் என் அம்மாவின் மீது எங்கள் பாட்டிக்கு வெறுப்பு. இதை எல்லாம் குருநாதர் எமக்குத் தெளிவாக உணர்த்திக் காட்டுகின்றார். அனுபவத்திலே குருநாதர் கொடுத்த உண்மையின் உணர்வுகள் தான் இது.
1.ஆகவே உன் குடும்பத்திலே எப்படி இருக்கிறது…?
2.இப்படி ஒவ்வொரு குடும்பங்களிலும் எப்படி இருக்கும் பார்…! என்று காண்பித்தார்.

நான் பிறந்த பிற்பாடு என் பாட்டி எங்கம்மாவைத் திட்டியதோ கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அதற்கு பின் இரண்டு பையன்கள் பிறந்து இறந்து போனார்கள்.

அதற்காக வேண்டி என் பாட்டி என்னைச் சாமி கும்பிடச் சொல்லிக் கழுத்திலே சூடு போட்டது. எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது.

ஏனென்றால் அந்தக் காலத்தில் தெக்கத்தி நோய் (காக்காய் வலிப்பு போல் ஒரு நோய்) என்று சொல்வார்கள். அதற்கு இந்த மாதிரிப் போட்டோம் என்றால் “அடுத்து அந்த நோய் வராது…” என்று அந்தக் காலத்தில் ஒரு மூட நம்பிக்கை.

ஏனென்றால் நான் முன்னாடி சொன்ன மாதிரி என் பெரியப்பா வீட்டில் அந்தப் பிள்ளைக்கு வந்தது போல் இங்கே அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக எனக்குத் தம்பி பிறந்த அன்று என் பாட்டி சூடு போட்டது.

தம்பி பிறந்திருக்கின்றான்… சாமியைக் கும்பிடுடா…! என்று சொல்லியது. அந்தக் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளை நீங்களும் தெரிந்து கொள்வது நல்லது.

என் பாட்டி அடிக்கடி திட்டிக் கொண்டிருந்ததால்… ஒரு சமயம் என் அம்மா கிணற்றில் போய் விழுந்து விட்டது.

அங்கே எல்லாம் சிறிய வயதிலேயே நீச்சல் கற்றுக் கொடுத்துவிடுவார்கள். எனக்கு ஏழு வயது இருக்கும். அன்றைய தினம் லீவு வேறு. வீட்டிலும் யாரும் இல்லை.

கிணற்றில் குதித்து என் அம்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினேன். அதிலே இருந்து அம்மாவுடனே நான் எப்பொழுதும் இருப்பேன்.
1.என் அம்மாவின் ஆசிதான் எனக்கு இந்தக் குரு அருள் கிடைத்தது.
2..என் அம்மா அது எடுத்துக் கொண்ட உணர்வு
3..அவர்கள் தெய்வத்தை வேண்டிய அருள் உணர்வுகள்
4.கருவில் விளைந்த அந்தப் பூர்வ புண்ணியம் தான் எனக்கு இந்த அளவுக்குச் சக்தி கிடைத்தது.
5..குரு அருளால் ஓரளவுக்கு எல்லோருக்கும் சேவை செய்யக்கூடிய நிலை எனக்கு (ஞானகுரு) வந்திருக்கிறது.
6.என் அண்ணனுக்கோ என் தம்பிக்கோ என் தங்கைக்கோ ஒருவருக்கும் இந்த ஞானம் கிடைக்கவில்லை.

ஏனென்றால் அனுபவபூர்வமாகக் குருநாதர் இந்த உணர்வுகளை எல்லாம் எனக்கு நினைவுபடுத்தி “நீ எப்படி ஞானம் பெற்றாய்…? என்றும் உன் குடும்பப் பாரம்பரியம் எப்படி வந்தது…?” என்ற நிலையும் உணரச் செய்தார்

ஒவ்வொரு குடும்பங்களிலும் தவறுகள் இல்லாமலேயே சந்தர்ப்பத்தால் பாசத்தால் நுகர்ந்த நிலைகளில் தொல்லைகளும் சங்கடங்களும் எப்படி வருகிறது…? என்று இப்படி நிதர்சனமாகக் காட்டினார்.

இதைப் போல உண்மையின் நிலைகளை விளக்கச் செய்து மனிதன் என்ற பண்பை வளரச் செய்ய வேண்டும் என்றால்
1.அந்த அகஸ்தியன் பெற்ற அருள் உணர்வுகளைப் பெற்று
2.வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் இருளை அகற்ற வேண்டும் என்று குருநாதர் எமக்கு உபதேசித்தருளினார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அந்த அருள் உணர்வுகளைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனைவருக்குள்ளும் பொங்கச் செய்வோம்

 

பொங்கல் நாளில் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.

இருளை நீக்கிடும் அருள் நாளாக அது அமைந்து அருள் வழியில் மகரிஷிகளின் உணர்வுகளை நம் உடலில் சேர்த்து அருள் உணர்வுகளை பொங்கச் செய்து இருளை அகற்றி… நம் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் நலம் பெறச் செய்யும் சக்தியாகவும்… நமது குடும்பங்களில் அருள் உணர்வுகளைப் பொங்கி அருள் வழி வாழ்ந்து… மகிழ்ந்து வாழும் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்ப்போம்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை இருளை நீக்கிடும் நிலையாக எப்படி வளர்க்கின்றதோ இதைப் போல்
1.நம் உடலுக்குள் இருக்கும் எத்தனையோ கோடி உணர்வுகளையும் (அணுக்களில்)
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு நமக்குள் சுவைமிக்க உணர்வின் ஞானத்தைப் பொங்கும்படி செய்து
3.அருள் வழி வாழும் பிறவி இல்லா நிலை அடையும் அருள் உணர்வுகளை நாம் பொங்குவோம்.

இன்றிலிருந்து…
1.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்
2.அருள் வழியில் வாழ்வோம்
3.இருளை அகற்றுவோம்
4.மெய்ப்பொருளைக் காண்போம் மெய் வழி வாழ்வோம்
5.அனைவரையும் அரவணைத்து வாழ்வோம்
6.அன்புடன் வாழ்வோம்… பண்புடன் வாழ்வோம்
7.பரிவுடன் வாழ்வோம் என்ற இந்த உணர்வுடன் நம் மனதை நிறைவுபடுத்தி அருள் வாழ்க்கை வாழ்ந்திடுவோம்.

இந்த நாளை அருள் ஞான நாளாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துப் பொங்கும் மங்களமாக… என்றும் நமக்குள் அது வளர்ந்து அருள் மணம் தவழும் அருள் ஞானத்தை நமக்குள் பொங்கச் செய்வோம்.

நம் பேச்சும் மூச்சும் கேட்போரை மகிழ்ந்து வாழச் செய்வோம்.
1.நமது குரு அருள் நமக்குள் பரவி
2.அந்த உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்.

உலக மக்கள் அருள் ஞான வழியில் அருள் வழியில் வாழ்ந்திடும்… மலரைப் போன்ற மன மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தியை நாமும் பெறுவோம்.

நம் உடலில் அதை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரையும் அதைப் பெறச் செய்வோம். அவர்களை மகிழச் செய்வோம் உலக மக்களை மகிழ்ந்து வாழச் செய்வோம் என்று உறுதிப்படுத்துவோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்குவோம்… பொங்கச் செய்வோம்.
1.எல்லோருக்குள்ளும் அதைப் பொங்கச் செய்வோம்
2.அந்த அருள் மணத்தை எல்லோருக்குள்ளும் வளர்க்கச் செய்வோம்.

நாம் இதையே தியானிப்போம் தவமிருப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியனுக்காக வேண்டிப் பொங்கல் வைக்கிறோம், வீட்டில் வேப்பிலையும் பூளைப்பூவும் வைத்து நாம் எல்லோரும் சாமியை வரவேற்கிறோம்.
1.அதாவது வேப்பிலையும் பூளைப்பூவும் வைத்தால் தீமைகள் வராது…
2.வேப்பிலையை வைத்தால் கசந்த வாழ்க்கை வராதபடி “மாரியாத்தா வந்து காப்பாற்றுவாள்…” என்று சொல்கிறோம்.

மாரியம்மன் கோவிலில் வேப்பிலை இருக்கும். ஆகையால் மாரியாத்தா வந்து நம்மைக் காப்பாற்றுவாள். வேப்பிலையை வைத்துத் தீமைகள் வராது “காப்புக் கட்டிக் கொள்கிறோம்…!” என்கிறார்கள்.

அடுத்த நாள் என்ன செய்வது…? பொங்கலை வைக்கிறோம். அதற்கு அடுத்த நாள் என்ன செய்வது…? ஆடு மாடு எல்லாவற்றையும் வெட்டிச் சாப்பிட வேண்டியது…!

அதாவது…
1.ஆடு மாடுகளுக்கெல்லாம் பொங்கலை உணவாகக் கொடுத்து விட்டு…
2.அதற்குப் பின் அதையே வெட்டிச் சாப்பிடுவது..!

அப்பொழுது நம்முடைய சாஸ்திரங்கள் எப்படி இருக்கும்….?

இதோடு மட்டும் அல்ல. மாட்டு பொங்கல் முடிந்து அடுத்த நாள் ஜல்லிக்கட்டு. ஒவ்வொருவரும் தன்னுடைய வீர தீரங்களைக் காட்டுவதும் அதை வேடிக்கை பார்த்து ரசிப்பதும் என்ற நிலையில்
1.ஒருவர் குடலைக் குத்தித் தூக்கி எறிந்த பின்
2.ஆகா…! அந்த மாடு நல்ல மாடு…! என்றும்
3.அந்த மாட்டுக்குச் சொந்தக்காரரைப் பார்த்து “நல்ல உயர்ந்த ரக மாடு வைத்திருக்கிறார்…!” என்று போற்றி துதிப்பதும்
4.இப்படிப்பட்ட வீரிய விளையாட்டுகள் தான் வருகிறது.

ஆனால்
1.வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றினான்
2.அருள் ஒளியைத் தனக்குள் பெருக்கினான்
3.எல்லோரையும் அரவணைத்து வாழும் உணர்வை வலுப்படுத்தினான்.
4.வாழ்வில் வந்த இருளை அகற்றினான்.
5.மெய் பொருளைக் கண்டுணர்ந்தான்.
6.இனி பிறவி இல்லா நிலையை அடையும் அந்தச் சக்தியைப் பெற்றான் என்று
7.ஏதாவது ஒரு சொல்லைப் பார்க்க முடிகிறதா…? கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்…!
8.யாரிடமிருந்தும் “அந்தச் சொல் மட்டும் வராது…”
9.ஜல்லிக்கட்டு வீரியத்தைத் தான் “பத்திரிக்கையிலும் டி.வி.யிலும் காட்டச் சொல்லும்…”

ஆகவே இதன் வழிகளில்
1.என் தெய்வத்தைக் காக்க அதிலே தீவிரவாதம்.
2.எங்கள் கடவுளைக் காக்கத் தீவிரவாதம்.
3.எங்கள் இனத்தைக் காக்கத் தீவிரவாதம்.
4.என் மதத்தைக் காக்கத் தீவிரவாதம்.
5.என் மொழியைக் காக்கத் தீவிரவாதம்.
6.எங்கள் தெருவைக் காக்கத் தீவிரவாதம்
7.எங்கள் ஊரைக் காக்கத் தீவிரவாதம்.

இப்படித் தான் தீவிரவாதம் என்ற நிலைகளில் விவாதங்களுக்குச் சென்று என் தெருவைக் காக்க வேண்டும் என்றாலும் அடுத்தவனைக் கொல்லும் நிலை தான்…! என் தெய்வத்தைக் காக்க வேண்டும் என்றால் அடுத்தவனைக் கொல்லுவது தான். என் மதத்தைக் காக்க வேண்டும் என்றால் அடுத்த மதத்தைக் கொல்வது தான்.

இத்தகைய தீவிரவாதங்கள் அதிகரித்து இன்று மனிதனின் உணர்வுகள் முழுமையாகவே மறைந்து போகும் நிலைகள் உருவாகிவிட்டது.

ஆனால் ஞானிகள் நமக்குச் சொன்னது என்ன…?

1.நாம் அனைவரும் ஒரே மகிழ்ச்சி கொண்டு…
2.ஒவ்வொரு உள்ளங்களில் அறியாது சேர்ந்த அழுக்குகள் நீங்கி
3.மெய்ப் பொருள் காணும் உணர்வுகள் வளர வேண்டும் என்று எல்லோரும் எண்ணினால்
4.இதே சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அது பரவுகின்றது.

நாம் அனைவரும் இத்தகைய உணர்வலைகளை நமக்குள் சமைத்து நாம் வெளியிடும் மூச்சலைகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது வீட்டிற்குள்ளும் தெருவிற்குள்ளும் நாடு முழுவதும் படரச் செய்கின்றது. நமது உடலுக்குள்ளும் படர விடுகின்றது.

“மகரிஷிகள் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்று நாம் விடும் மூச்சலைகள் அந்த உணர்வை அனைவரும் கூட்டாக எடுக்கும்போது
1.பகைமைகள் அனைத்துமே மறைகின்றது… ஒன்றி வாழும் உணர்வுகள் வளர்கிறது…!
2.ஒருவருக்கொருவர் சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட வேதனையான நிலைகள் மறைகின்றன.

ஆகவே வாழ்க்கையில் வந்த நஞ்சினை நீக்கி நம்மைச் செயலற்றதாக்கச் செய்யும் எத்தகைய தீய உணர்வுகளையும் மாற்றி அமைப்பதற்குத்தான் “மெய் ஞானிகள் வருடத்திற்கு ஒரு நாளாக இதைத் தேர்ந்து எடுத்து… நாம் எண்ண வேண்டிய நல் உணர்வை உணர்த்தினார்கள்….”

சதுர்த்தி

 

சதுர்த்தி என்றால் “நிறுத்துதல்…” என்று பொருள். ஒரு தவறு நடக்கின்றது என்று பார்த்து என்ன… ஏது…? என்று அதை நுகர்கிறோம் என்றால் உடலுக்குள் அணுவாக உருவாகதபடி அதை நிறுத்திப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களில் கலக்க வேண்டும் என்று உள்ளே செலுத்தி விட வேண்டும்.

1.இந்த ரத்தம் தான் உடலில் உள்ள எல்லா உறுப்புகள் முழுவதும் சுற்றி வருகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் முன்னக்கூடியே செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு அணுவின் முகப்பிலும் அந்தக் காந்தப்புலன் இருக்கும். இதன் துணை கொண்டு அங்கே எண்ணப்படும் பொழுது ரத்தத்தில் இந்தச் சக்தி கலக்கின்றது.

உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் ரத்தத்தின் வழி தான் உணவை எடுத்து வாழ்கிறது.
1.காற்றில் இருக்கும் தன் இனமான சத்தைச் செடி கொடிகள் எப்படி எடுத்துக் கொள்கிறதோ
2.அதே மாதிரி உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் இரத்தத்தின் வழி தன் உணவை எடுத்துக் கொள்கின்றது.

இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் முன்னக்கூடியே அந்த அணுக்களுக்குச் செலுத்தி விடுகின்றோம்.

நாம் முதலில் நுகர்ந்த தீமை சிறிதளவு தான் உள்ளே சென்றிருக்கும். அதே சமயத்தில்
1.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த ரத்தம் எல்லா இடங்களுக்கும் செல்லும் பொழுது…
2.முதலில் புருவ மத்தியில் தடுத்தது போல உள்ளேயும் நாம் தடுத்துக் கொள்கின்றோம்.

அதற்குப்பின் கண் கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கருமணி தான் நாம் பார்ப்பதையெல்லாம் படமாகப் பதிவாக்குகின்றது.

அதனுடன் இணைந்த நிலையில் தான் நரம்பு மண்டலம் உள்ளது அதிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வின் செய்திகள் கண் கருமணி வழி… அதனுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் வழி தான் எல்லா அணுக்களுக்கும் செல்கின்றது.

1.அந்தக் கண் கருமணியுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலம் முழுவதும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இப்படி இணைக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியை எல்லோரும் நீங்கள் எடுக்க முடியும். ஒன்றும் சிரமம் இல்லை. ஒருவன் திட்டினான் என்றால் அவனைத் திரும்ப எண்ணுகின்றோம் அதே போல இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால் தீமை நமக்குள் வராது தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து… அதை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதை நீங்கள் செய்து பழகுங்கள்… தீமைகள் வராதபடி நாம் தடுக்கின்றோம்… அது தான் விநாயகர் சதுர்த்தி.

ஒவ்வொரு நிம்டமும் நாம் நுகர்வது உடலுக்குள் வினையாகின்றது. ஆனால் தீயவினை உருவாக்காதபடி அதை நாம் நிறுத்திப் பழக வேண்டும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. அறியாமல் தான் அத்தகைய உணர்வுகள் தீயவினைகள் நம் உடலுக்குள் நுழைந்து எத்தனையோ கலாட்டா செய்கின்றது.

அதை நாம் தடுத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. சுண்ணாம்புச் சத்தை எல்லாம் எடுத்து எலும்பாக மாற்றிக் கொள்கின்றது. அதற்குள் இருக்கக்கூடிய அணுக்கள் ஆகாரமாக எடுக்கிறது.

ஆனால் வேதனை அதிகமானால் அந்த விஷம் எலும்பை உருவாக்கிய அணுக்களை உணவாக எடுக்கத் தொடங்குகிறது. டி.பி. என்று சொல்வார்கள்.

அந்த விஷமான உணர்வுகள் எலும்புகளைத் தாக்கி விடாதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எலும்பை உருவாக்கிய அணுக்களுக்கு இணைத்து விட வேண்டும்.

இவ்வாறு…
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுக்களிலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைச் சேர்த்து
2.தீமைகள் புகாத வண்ணம் ஒரு அடைப்பாக… அணைப்பாக… நாம் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு பேர் நண்பர்களாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஆகிச் சண்டை இட்டுக் கொண்டார்கள் என்றால் என்ன ஆகின்றது..?

ஒருவரின் செயலைப் பார்த்து “நீ இப்படிச் செய்து விட்டாயே…!” என்று பழிச் சொல்லாக மாறுகிறது. அதைக் கேட்ட பின் பதிலுக்கு அவரும் “நீ மட்டும் ரொம்ப யோக்கியமா…?” என்று சொல்வார்.

இராமன் அம்பை எய்தான்…! என்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். ஆகவே அப்பொழுது அந்த இரண்டு நண்பர்களுக்குள் “தவறு செய்தவர் யார்…?” என்ற முடிவு தெரியாது. ஆனால் சந்தர்ப்பம் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகிறது.

இந்த உணர்வுகள் ஊட்டப்படும் போது இருவருக்குள்ளும் பழிச் சொல்லாக மாறுகின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் நம்மை எது இயக்குகின்றது…?

இரண்டு பேரில் யார் தவறு செய்தார்கள் என்று அந்த இருவருக்குமே தெரியாது. கோபப்பட்டுச் சண்டை போட்டார்கள் என்றால்
1.நான் ஒன்றும் செய்யவில்லை.. அவர் தான் செய்தார்…! என்பார்
2.இரண்டமாவர் நான் ஒன்றும் செய்யவில்லை அவர் தான் அப்படிப் பேசுகிறார்…! என்பார்
3.ஆக இதிலே அந்த முடிவையே காண முடியாது… காண முடிகின்றதா…?

அதே சமயத்தில் இதைக் கேட்டு நியாயம் பேசுவதற்காக ஒருவர் வருவார். இரண்டு பேருக்கும் சார்பாக வந்து
1.சரி போங்கள்…! என்று உண்மையை எடுத்துச் சொன்னால்
2.உடனே அவர்கள் மேலேயும் பகைமை ஆகும்.
3.எப்படியும் “ஒருவரிடம் பகைமை ஆகிவிடும்…”

இரண்டு பேரும் சமாதானமாகப் போங்கள்… என்று மத்தியஸ்தம் சொனால் “அவருக்கு என்ன…? அவருக்கு வேண்டியர் போல இருக்கிறது. அதற்காக இப்படிப் பேசிவிட்டுப் போகிறார்…!” என்பார்கள்.

அதாவது…
1.ஒர் உணர்வின் தன்மை ஒன்றிலே மாற்றப்படும் போது “அந்த மாறுபட்ட உணர்வு…”
2.நம் நல்ல குணங்களை அது சீராக இயக்க விடாதபடி செயல்படுத்துகின்றது.

எது…?

நீங்கள் காரத்தை எடுத்து அதை எதிலே கொண்டு போய்க் கலந்தாலும் அதனுடைய ருசி கெடத்தான் செய்யும். ஆனால் மற்ற “சப்…” என்று இருக்கும் பொருளிலே அந்தக் காரத்தைச் சேர்த்தால் உணர்ச்சியைத் தூண்டி அந்தச் சுவையின் உணர்வுகளை நமக்குள் உணரச் செய்கின்றது.

இதைப் போல தான் வாழ்க்கையில் அறியாது வரக்கூடிய தீமைகளிலிருந்து நமது சொல்லின் நிலைகளைப் பக்குவப்படுத்தும் அந்த நிலைகளைப் பெறுதல் வேண்டும்.

அந்தப் பக்குவ நிலை பெறச் செய்வதற்காக வேண்டித்தான் பகைமைகளை அகற்றி ஏகாந்தமாக வாழும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களைப் பெறச் செய்கின்றோம்

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் சென்றால்
1.எது நம்மை இயக்கியது…?
2.தவறான சொல்கள் எப்படி வருகிறது…?
3.பகைமை எதனால் வருகிறது…?
4.பகைமைகளை அகற்றி எப்படி ஒன்றி வாழ வேண்டும் என்ற உண்மைகளை உணர்த்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

“பதிவின் இயக்கம்…” என்பது சாதாரணமானதல்ல…!

 

யாம் தெரியாமல் எதையும் உபதேசிக்கவில்லை.

உடலுக்குள் சூட்சமமாக என்னென்ன நடக்கின்றது…? என்பதைத் தெரிந்து கொள்வதற்குத் தான் குருநாதர் பல இடங்களுக்கு எம்மை அனுப்பினார்.

கூடுமான வரையிலும்… குருநாதர் எம்மைப் பல வகைகளிலும் கஷ்டப்படுத்தித் தான் உண்மைகளை எல்லாம் தெரிய வைத்தார்.

ஆனால் நீங்கள் கேட்கலாம்… குருநாதர் ஏன் என்னைக் கஷ்டப்படுத்தினார் என்று…?

1.என் உடலுக்குள் எத்தனை தீமைகள் என்னைக் கஷ்டப்படுத்துகின்றதோ அந்தத் தீமைகளிலிருந்து நான் விடுபட வேண்டும்.
2.அது போல் ஒவ்வொரு மனித உடலிலும் விளைந்த உணர்வுகள் கஷ்டத்தை எப்படித் தூண்டுகின்றது…? சந்தர்ப்பத்தால் ஏற்படுத்துகின்றது…?
3.அதிலிருந்து அவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பதற்குத் தான் அதைச் செய்தார் குருநாதர்.

நான் சிறு வயதில் இருக்கும் பொழுது அறியாத நிலைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கின்றேன். அது பதிவாக்காமல் நினைவு இல்லை.

வளர வளர செய்த தவறுகளை மறந்து மறந்து வருகின்றேன். மறந்து வந்தாலும் உணர்வுகள் சந்தர்ப்பத்திலே அதனின் வேலையைத் தான் செய்யும்.

சிறு வயதில் கோலி விளையாண்டிருந்தால் வயதான பின்பும்… இங்கே பையன்கள் கோலி விளையாண்டு கொண்டிருந்தால் “ஏய்… நானும் கோலி விளையாடுகிறேன்…” என்று இந்த உணர்வுகள் தோன்றி அங்கே செல்வோம்.
1.பெரிய மந்திரியாக இருந்தாலும்…
2.பார்த்தால் அது இழுத்துக் கொண்டுதான் போகும்.

பம்பரத்தைச் சுற்றுகிறார்கள் என்று பார்த்தால் என்ன செய்வோம்…?

நானும் சிறு வயதில் பம்பரத்தைச் சுற்றி விளையாண்டேன் என்று அந்த ஆசை தூண்டப்பட்டு… “என்னிடம் கொடு… நானும் சுற்றுகிறேன்…!” என்று இந்த உணர்வுகள் இயக்கத் தான் செய்யும்… நம்மைத் தூண்டிக் கொண்டுதான் இருக்கும்.

எது பதிவோ… அந்த நிலை நிச்சயம் வந்தே தான் தீரும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எதைக் கூர்மையாகப் பார்க்க வேண்டும்…? எதைப் பதிவாக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கூர்மையாக விண்ணிலே செலுத்த வேண்டும்.

1.அகஸ்தியன் ஒளிச் சுடரான உணர்வு உங்களுக்குத் தெரிய வரும்.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளிக் கற்றைகள் வந்து கொண்டிருக்கின்றது… இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.
3.அதை நுகர்ந்து உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களிலும் சேர்க்க வேண்டும்.

விஷத்தை ஒடுக்கிய பின் அத்தகைய நீல ஒளியாகத் தான் அது காட்டும். கார்த்திகை நட்சத்திரமும் இதே போன்று தான் ஒளி வீசும்.

ஆகையினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை நாம் செலுத்துதல் வேண்டும். அதைக் கூர்மையாக எண்ணி எடுக்க வேண்டும்.

1.அதை அதிகமாக எடுத்தால் உயிர் அதன் அவதாரமாக நம்மை ஒளியாக மாற்றும்.
2.இதிலே ஒன்றும் சிரமப்பட வேண்டியது இல்லை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“மௌன விரதம் இருக்கிறோம்…” என்று சொன்னால்
1.எப்போதுமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் படர வேண்டும்.
2.அந்த அருள் ஞானம் நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
3.அந்த அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ வேண்டும் என்ற
4.இந்த உணர்வோடு தான் தியானம் இருக்கிறேன் (ஞானகுரு).

ஏனென்றால் என்னை நினைப்பவர்கள் எல்லோரும் “அந்தக் கஷ்டம்… இந்தக் கஷ்டம்…! என்று தான் சொல்கிறார்கள். அந்த மாதிரி இல்லாதபடி நான் எப்படி உங்களுக்குச் சொல்கிறேனோ அதே போல் நீங்களும் செயல்படுத்த வேண்டும்.

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். நாங்கள் பார்த்த குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று இப்படி நீங்களும் எண்ண வேண்டும்.

உடலில் நோய் இருக்கிறது என்று சொன்னால் அதை விடுத்து விட்டு அருள் மகரிஷியின் உணர்வுகள் எங்கள் உடலிலே படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும். நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானம் செய்தாலே போதும்.

நீங்கள் நலம் பெற வேண்டும் என்று யாம் உங்களுக்குக் கொடுக்கும் இந்த வாக்கின் உணர்வுகளை நுகர்ந்தால் தொடர்ந்து உங்கள் சர்க்கரைச் சத்து குறையும். சர்க்கரைச் சத்தை மாற்றும் வலிமையும் உங்களுக்குக் கிடைக்கின்றது.

1.மருந்தால் இல்லை…!
2.ஏனென்றால் நீங்கள் எடுத்துக் கொண்ட எண்ணத்தால் தான் முதலில் அந்த நோய்கள் வந்தது.
3.ஆகவே எண்ணத்தால் தான் இதை மாற்றும் வல்லமையையும் நீங்கள் பெறவேண்டும்
4.விஞ்ஞானத்தில் இனி வரும் விஷமான தன்மைகளிலிருந்து உங்களை மாற்றிக் கொள்வதற்கும் இது உதவும்.

என்னுடைய தியானமே… என்னுடைய தவமே.. நீங்கள் எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். நஞ்சான நிலைகளை அடக்கி ஒளியாக மாற்றும் ஆற்றல் பெற வேண்டும். உலகுக்கு நல்ல வழி காட்டிகளாக வர வேண்டும் என்பது தான்.

இவ்வாறு யாம் கொடுக்கும் இந்த வாக்கைப் பதிவு செய்து கொண்டு “விழித்திரு..!” என்ற நிலையில் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின் பால் செலுத்திச் சீராகத் தியானித்து அந்த அருளை வளர்த்துக் கொண்டால்
1.உங்கள் பிணிகளைப் போக்க முடியும்
2.தீமைகள் புகாது தடுத்துக் கொள்ள முடியும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்று… வளர்த்துத் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்

 

இயற்கையின் நிலைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… மனிதனாக உருப்பெற்ற பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் நுகர்ந்து நமக்குள் அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்… நாம் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.

1.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அந்த உணர்வினை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3.துருவ மகரிஷியின் அருள் சக்தியை நாம் பெறுவதற்கு துருவ தியானம் இருந்து பழகுதல் வேண்டும்.

கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்போது பார்த்துணர்ந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று இதைக் கலந்து… கேட்டறிந்த தீமை வலுப் பெறாதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை வைத்துத் தீமைகள் வளராது தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால்
1.பல கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
2.அதன் வழியில் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

மனித உடலிலிருந்து வெளிப்படும் மணம் கார்த்திகேயா என்றும்… தீமை என்று தெரிந்த பின் அந்தத் தீமை புகாது தடுக்கும் நிலை தான் சேனாதிபதி ஆறாவது அறிவு என்றும்… முருகன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வருவது “நஞ்சினை வென்றிடும் சக்தி…? என்று அதை அறிகின்றோம் கார்த்திகேயா. அதை நமக்குள் நுகர்ந்து உருவாக்கினால் தீமை புகாது அதனை அடக்கி… “ஒளியின் சிகரமாக மாற்றும் சக்தி வரும்…”

மனிதனான பின் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்றிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து அதன் அறிவாக அறிந்திடும் அறிவைச் சேர்த்துச் சேர்த்து இன்று நாம் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறோம்.
1.அந்த ஆறாவது அறிவைத் தான் கார்த்திகேயா என்றும்
2.சேனாதிபதி என்றும் தீமைகள் புகாது பாதுகாக்கும் நிலை என்றும்
3.பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டியுள்ளார்கள்.

இத்தகைய நிலைகள் வளர்ச்சி பெற்று அதிலே முழுமை அடைந்தவன் தான் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக உள்ளார். அதனின்றி வெளிப்படும் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

அதை உங்களுக்குள் பதிவாக்கி நீங்கள் அதை எடுக்கும் நிலைக்குத் தான் உபதேசித்து வருகிறோம்.
1.அதன் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று ஊழ்வினை என்ற வித்தாக வைத்து
2.அதை மீண்டும் நினைவு கொண்டு அருள் ஒளி என்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

அது உங்கள் எண்ணத்தில் தான் இருக்கின்றதே தவிர… யாரோ வந்து அந்தப் பிறவி இல்லாத நிலை நம்மை அடையச் செய்வார் என்று எண்ணுதல் வேண்டாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று எடுத்துக் கொண்டால் விஷத் தன்மையால் பெரும் சூறாவளிகள் கிளறப்பட்டுக் கட்டிடங்கள் எல்லாம் தூசிகளைப் போலப் பறக்கும் நிலையும்… அதே சூறாவளி கடலில் தாக்கப்படும் பொழுது அது நீர் நிலைகள் அனைத்தும் ஊருக்குள் கொண்டு வருவதும்… இப்படிப் பேரழிவுகள் வந்து கொண்டிருக்கின்றது.

எந்த விஞ்ஞானத்தைச் செயல்படுத்தினார்களோ அந்த விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத்தின் தன்மைகள் அடர்த்தி அடைந்து அது வலுவாகிய நிலையில் அதை எல்லாம் சூரியன் கவர்வதனால்
1.ஒன்றுக்கொன்று எதிர்நிலை கொண்டு மோதி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையும்
2.நாம் தேடிய செல்வங்களும் இந்த உடல்களும் எப்பொழுது எந்த நிமிடத்தில் அழியும் என்ற நிலைகளை
3.நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலைகள் கொண்டு… உலகையே அழிக்கும் நிலைக்கு வந்து விட்டது.

இதற்குள் நம் உணர்வின் தன்மை எதிலும் அழியாத உணர்வு கொண்ட ஒளியின் உணர்வாக ஒளியாக மாற்றச் செய்வதே இந்தத் துருவ தியானத்தின் நோக்கம்.

1.இந்த உலகில் வரும் விஷத் தன்மைகள் நம்மைப் பாதிக்காது…
2.“விஷத்தின் தன்மை தாக்குதலால் ஏற்பட்ட உயிர் ஒளியாக மாறுவது போல்…”
3.எத்தகைய விஷத் தன்மை தாக்கினாலும்… அந்த உணர்வுகள் ஒளியாக மாறி
4.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த விஷத்தை அடக்கி ஆட்சி புரியும் தன்மைக்கு வர வேண்டும்.

நமது உடலில் நஞ்சு கலந்த உணர்வுகள் இருப்பினும் உடல் அதை மலமாக மாற்றுகின்றது. ஆனால் அதிகமான நஞ்சுகள் உடலில் கலந்தால் அது மனிதனையே வீழ்த்துகின்றது.

சூரியனோ இத்தகைய விஷத் தன்மை கொண்ட எல்லாவற்றையும் மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குகின்றது. அதைப் போல நஞ்சான உணர்வு வருவதைப் பிரித்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் இதைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.

இல்லை என்றால் நம் வாழ் நாளில் மீண்டும் கீழான உடலுக்குள் தான் போக வேண்டியதிருக்கும.
1.இந்தப் பூமி இருக்கத்தான் செய்யும்… ஆனால் மாற்றங்கள் இருக்கும்…!
2.இந்த மனித உடலில் உணர்வுகள் மாறும் பொழுது மனித உடல்கள் மாறும்.
3.இன்று மனித உடலாக இருந்தாலும் அடுத்து மனித உடல் அல்லாத நிலைகள் தான் உருவாக்க முடியும்.
4.வேதனை என்ற உணர்வுகளிலிருந்து மீள முடியாத துயர் நிலையே தான் இருக்கும்.

ஏனென்றால் இந்த மனித உடலில் “கோடிக்கரை…” என்ற நிலைகளில் கடைசி நிலையில் நாம் இருக்கின்றோம். இந்த உயிருடன் ஒன்றி இனிப் பிறவியில்லா நிலை என்ற முழுமையைப் பெற நாம் முயற்சிப்போம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.சதா அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.ஓ…ம் நமச்சிவாய… ஓ..ம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே வருவோம்.

நமது வாழ்க்கையில் எதிர் வரும் தீமைகளை
1.நமக்குள் சாராது
2.நமக்குள் அதை வளர்ந்திடாது
3.நமக்குள் அதைப் பெருக்கிடாது தடுத்துப் பழகுவோம்.

இந்த உடலான கோடிக்கரையிலிருந்து “தனுஷ்கோடி…!” எல்லாவற்றையும் அடக்கிடும் அந்த ஒளியின் தன்மையை நாம் பெறுதல் வேண்டும்.

நம்மால் நிச்சயம் முடியும்…!

நாம் ரிஷியின் தன்மை பெற வேண்டும்

 

ஒருவன் என்னைப் பழித்துப் பேசி விட்டான் என்றால்… பதிலுக்கு “அவனை நான் அழித்து விடுவேன்…” என்ற அசுர உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.

ஆனால் அவனை அழித்து விடுவேன் என்று எண்ணும் போது
1.உயிரான நிலைகளில் இங்கே பழித்து… அழிக்கும் சக்தியை நமக்குள் வளர்த்து
2.அவனை நாம் “நீ தொலைந்து போவாய்…” என்று சொல்லும் பொழுது
3.முதலில் அந்தத் தொலையக்கூடிய உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது.
4.இந்த உணர்வை அவன் கேட்டறிந்த பின் அவனையும் தொலைக்கிறது.

அதற்குப் பின்… இப்படிச் சொன்னானே இப்படிச் சொன்னானே என்று எண்ணும் பொழுது அது நம் உடலுக்குள் நோயாக மாறுகிறது. அதே போல் இப்படிச் சொன்னானே… அவன் உருப்படுவானா…? இப்படிச் சொன்னானே… அவன் உருப்படுவானா…? என்று அங்கேயும் விளைகிறது. அந்த வித்தாக ஊன்றப்படுகின்றது.

இதைத் தடைப்படுத்துவது தான் நரசிம்மா…! நரசிம்ம அவதாரம். நரசிம்மன் என்ன செய்கின்றான்…? வாசல்படியில் வைத்துக் கொல்கின்றான். நாராயணன் நரசிம்ம ரூபம் எடுத்து வாசல்படியில் வைத்துப் பிளக்கின்றான்.

1.நமக்கு வாசல்படி எது…? மூஷிகவாகனா… நாம் சுவாசிக்கும் வழி.
2.ஒரு கெட்டதைப் பார்த்தால் அது தனக்குள் வராதபடி அதைத் தடைப்படுத்துவதற்குப் பழக வேண்டும்.
3.அந்தத் திறன் நமக்குள் பிறக்க வேண்டும்.

அந்த திறன் பிறக்க வேண்டுமென்றால் அதற்கு எது வேண்டும்…?

அந்த மகரிஷிகள் ஞானிகள் உணர்வை நாம் எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உறுப்புகளிலும்… அதை உருவாக்கிய அணுக்களிலும்… அந்தச் சக்தியை இணைக்க வேண்டும்.

இந்த உணர்வின் “மணம்…” வரப்படும் பொழுது கெட்டது வந்தால் பிளக்கும்.

பன்றி எப்படிச் சாக்கடையைப் பிளந்து அதற்குள் நல்லதை எடுக்கின்றதோ அதைப் போன்று நரசிம்ம அவதாரம்…!
1.நம் சுவாசத்திற்குள் வரக்கூடிய எதுவாக இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு
2.மெய் ஒளியின் தன்மை நமக்குள் சேர்த்து “உயிருடன் ஒன்றிய ஒளியாகச் செல்வதுதான் கடைசி கல்கி…”

இயற்கையில்… ஒரு பொருளின் தன்மை தனக்குள் இணைக்கும் சந்தர்ப்பம் பிரம்மா… சிருஷ்டி. உலகிலேயே மனிதனின் ஆறாவது அறிவுக்குள் சிருஷ்டிக்கும் எண்ணங்கள் உண்டு. ஒவ்வொன்றையும் படைக்கும் சக்தி பெற்றவன் தான் மனிதன்.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை ஜோதிடம் இல்லை…! நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தின் நமக்குள் சிருஷ்டித்து அந்த உணர்வின் பாதையிலேயே தான் நாம் நடக்கின்றோம்.

அந்த ஞானிகள் சொன்ன மெய் உணர்வை நமக்குள் எடுத்து அதைச் சிருஷ்டிக்க வேண்டும் ரிஷி. ஆறாவது அறிவின் தன்மை… “ஏழாவது சப்தரிஷி…”

நாதங்கள் கொண்டு உணர்வின் தன்மை பாய்ச்சப்படும் பொழுது அந்த உணர்வுகள் அங்கே இயக்குகின்றது. அது தான் சப்தரிஷி என்பது. ஏழாவது அறிவு கொண்டு உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் விண்ணில் இருக்கக்கூடிய நிலைகளைத் தான் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வது.

1,மனிதனுக்குள் விளைந்த உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றி
2.என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறும் நிலை தான் அது.
3.அந்த ரிஷியின் தன்மையை நாம் பெற வேண்டும்
4.அதைப் பெறுவதற்கு நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் சிருஷ்டிக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஏங்கித் தியானித்து வருகின்றோம்.

கண்ணின் நினைவைப் பூமியின் வடதுருவத்தின் வழியாக விண்ணிலே செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் விண்ணிலிருந்து நுகர்வோம் என்றால் அதை உயிர் “ஓ…ம் நமச்சிவாய…!” என்று நம் உடலாக மாற்றுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகப் பெருக
1.நம் உடலில் அறியாது சேர்ந்த இருளை அது மாற்றுகின்றது
2.நம்மைத் தெளிந்த மனம் பெறச் செய்கின்றது
3.தெளிவான வாழ்க்கை வாழ முடிகின்றது
4.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் திறன் பெறுகின்றோம்
5.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற முடிகின்றது.
6.இந்த வழியில் பேரின்ப நிலை பெறும் தகுதி பெற்று இந்த உடலில் என்றும் பேரின்ப நிலையை அடைய முடிகின்றது.
7.இந்தப் பிறவியிலேயே துருவத்தின் ஆற்றலை நாம் நுகர முடிகின்றது.
8.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்க முடிகின்றது.
9.இந்த உடலில் அந்த உணர்வின் சத்தைப் பெறச் செய்தால் ஓ..ம் நமச்சிவாய… என்று ஒளியின் சரீரமாக மாறுகின்றது.
10.இப்புவியின் பற்றை அகற்றுகின்றது.
11.இப்புவியில் நஞ்சைப் பற்றற்றதாக மாற்றுகின்றது.
12.பேரருளைப் பெற்று “என்றும் பேரொளி…” என்ற நிலைகளை நாம் அடைய முடிகின்றது.
13.என்றும் ஏகாந்த நிலை அடைய முடிகின்றது.
14.ஏகாந்த வாழ்க்கை என்றும்… ஏகாதசி என்றும்… என்றும் பத்தாவது நிலையாக கல்கி என்று நிலை கொள்ள முடிகின்றது.
15.எந்தத் தீமையும் நம்மை அணுகாது
16.பேரொளி உணர்வுகள் என்றுமே நம்மை அணுகி வருகின்றது… ஒளியின் சரீரமாகப் பெற முடிகின்றது.
.
ஆகவே அந்த நிலையைப் பெற நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளை நாமும் நுகர்வோம்.
1.நமக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை உருவாக்குவோம்.
2.நம்மை அறியாது வந்த இருளை அகற்ற நாம் தியானித்து அரும் பெரும் சக்திகளை நாம் சுவாசிப்போம்.
3.நம் உடலில் அறியாது வந்த இருளை அகற்றுவோம்.
4.என்றும் ஏகாந்த நிலை பெறும் சக்தியை நாம் சதா தியானிப்போம்.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

தியானத்தில் நம் நினைவுகள் திசை மாறினால் என்ன செய்ய வேண்டும்…?

 

நாம் தியானம் எடுக்கும் பொழுது சில நேரங்களில் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலும் கூட அந்த எண்ணங்கள் திசை மாறிப் போகும். இது எதனால் ஏற்படுகின்றது…?

நம் உடலில் இதற்கு முந்தி நாம் நுகர்ந்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது தீய அணுக்களாக மாறும் பொழுது “அதற்கு அந்த உணவு தேவை…”

நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதை எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தால்
1.தனக்காக வேண்டி அந்த எல்லா அணுக்களும் சேர்த்து அதனதன் உணர்வை நுகரப்படும் பொழுது
2.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடியாதபடி அது தடுக்கும்.
3.வெறுப்போ வேதனையோ சலிப்போ சங்கடமோ பிறர் மேல் ஆத்திரமோ அந்த உணர்வுகள் தான் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.அதன் வழி நம் உடலில் உள்ள அந்தத் தீய அணுக்கள் உணவை எடுத்து வளரும்.

அதைத் தடுப்பதற்கு “உடனடியாக கண்களைத் திறந்து…” துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று மீண்டும் அதை எண்ணி எங்கள் உடலுக்குள் இருக்கும் ரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சிறிது நேரம் ஆன பின் கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானியுங்கள்.
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதன் வழி உணவை எடுக்காதபடி
2.கண்ணின் நினைவை உயிரில் செலுத்தி அங்கே புருவ மத்தியிலே அடைத்து… விண்ணிலே நினைவைச் செலுத்தி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து ரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.

காரணம்… எத்தனையோ விதமான தீய அணுக்கள் உடலுக்குள் இருப்பதால் அதனுடைய உணவுக்கு “அதனுடைய வலுவை அது காட்டத்தான் செய்யும்…”

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய இரத்த நாளங்களில் கலக்கச் செய்யும் பொழுது அது வலிமை பெறுகின்றது.

உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது “அதை இழுக்கும் சக்தி கிடைக்கின்றது…”

உதாரணமாக ஒரு தவறு செய்பவரைக் கண்ணிலே நினைத்தபின் எப்படி அந்த உணர்வின் நிழல் படம் தெரிகின்றதோ அந்த நேரத்திலே நம்முடைய உணர்ச்சிகள் பல விதமாக வெறுப்பாகத் தோன்றுகின்றது. கண் வழி நுகர்ந்து தான் ஏற்கனவே அது அணுவின் தன்மையாக அடைந்தது.

அதே கண் வழியாக உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்து
2.ஏற்கனவே உருப்பெற்ற அணுக்கள் இரத்தத்தின் வழி நுகர்வதை மாற்றி
3.துருவ நட்சத்திரத்திச் சக்தியை ஈர்க்கும் சக்தி பெற்று நல்ல அணுக்களாக அதை மாற்றும் சந்தர்ப்பம் வருகின்றது.

தியானம் இருந்தேன்… என் நினைவுகள் எங்கேயோ இழுத்துக் கொண்டு போகிறது…! என்று அப்படிச் சொல்லி விட்டு விடாதீர்கள்.

யாம் சொன்ன முறைப்படி அதை மாற்றி மாற்றி… உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.
1.இரத்தங்களிலே அதைப் பெருக்கி பழகுங்கள்.
2.இப்படி… இந்த வலிமையைத் தான் நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் சுவாசித்த உணர்வின்படி நமக்குள் வெறுப்போ சலிப்போ இதற்கு முன் உடலுக்குள் நுழைந்த அந்த உணர்வுகளின் தன்மையால் நோயாக உருவாக்கப்பட்டு அதனால் வேதனைப்படுகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அந்த அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் வலுவாக்கும் போது அந்த நோயையும் அதனால் வரும் வேதனையின் வளர்ச்சியையும் குறைக்கலாம்.. வளராது தடுக்கலாம்….!

நோய்க்குக் காரணமான அந்த ஊழ்வினை என்ற வித்துக்கள் உடலுக்குள் அதிகமாக இருக்கும் போது
1.அது தன் இனத்தை விருத்தி செய்யாதபடி அருள் என்ற உணர்வை நமக்குள் சேர்த்து
2.இருளை உருவாக்கும் உணர்வினை மாற்றித் தெளிந்த மனதை நாம் உருவாக்க முடியும்.

வாழ்க்கையில் மனக் கவலையோ மனச் சோர்வோ மற்ற நிலைகளோ நமக்குள் தோன்றும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்துக் கொண்டால் அந்தத் தீமைகள் வளராது தடுக்கப்படுகிறது.

நாம் நுகராது விட்ட அந்தத் தீமையான உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து சென்றுவிடும். நம் ஈர்ப்பிலிருந்து விலக்கிச் சென்றுவிடும். நம் ஆன்மா சுத்தமாகும். அப்பொழுது நமக்குள் இருக்கும் தீமையான உணர்வுகளுக்கு உணவு கிடைக்காது தடைப்படும்.

இவ்வாறு நமது வாழ்கையில் தொடர்ந்து இப்பணிகளைச் செய்தல் வேண்டும்.
1.இந்த உடலை விட்டுச் செல்லும் வரையிலும்
2.அருள் ஒளி என்ற உணர்வினை நாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் எப்படி இருந்தாலும் இந்த உடலை விட்டு எப்படியும் இந்த உயிர் சென்றே தான் ஆகும். ஆனால் எதன் உணர்வின் தன்மையை முடிவாகத் தனக்குள் வளர்த்து கொண்டதோ அதற்குத்தக்க உணர்வு கொண்ட அடுத்த உடலை எடுக்கும்.
1.ஆகவே ஒளி என்ற உணர்வின் தன்மை நாம் எடுக்கும் போது
2.ஒளி என்ற உடலினை உருவாக்குகிறது.

இருள் சூழ்ந்த ஒரு உடலுக்குள் (மனிதனுக்குள்) அறிவு என்ற நிலைகளில் இருந்தாலும் உடலினின்றே இயக்குகின்றது. அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை தான் இது.

ஆனால் ஒளியாக வாழும் சப்தரிஷி மண்டலத்தில்… அங்கே அப்படி அல்ல.
1.அது அனைத்து உணர்வினையும் ஒளியாக மாற்றும் நிலை பெற்றது. (அறிந்து அறிவின் தன்மையாக இயக்குவது அல்ல)
2.சப்தரிஷி மண்டலத்தின் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்தால் நம் உணர்வினை ஒளியாக மாற்றும்.
3.அதை நுகர்வோருடைய இருளை எல்லாம் அகற்றி அறிவென்ற நிலையில் தெளிவாக்கும் தன்மை பெறும்.

முழுமுதற் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் கூறியது போல உயிர் மனிதனாக உருவாக்கிய பின் முழுமையாக உருவாக்கும் சக்தி பெற்றது

1.இப்படிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் உருவாக்கினால்
2.அந்த ஒளியின் தன்மை கொண்டு நுகர்வோர் உணர்வுகளிலும் தீமையை அகற்றி
3.”ஒளி என்ற உணர்வை உருவாக்கும் கடவுளாக…” நாம் ஆக முடியும்.
4.இதன் தொடர் வரிசையில் தீமைகளை அகற்றிப் பகைமையை மாற்றி நல் உணர்வை இயக்கி
5.ஒவ்வொரு மனிதனையும் நல் வழிபடுத்தும் நிலையாக நமக்குள் வரும்.

தீமைகள் வரும் நேரத்தில் அதை நன்மை பயக்கும் செயலாக மாற்றும் வழி முறை

 

நல்ல உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நாம் செயல்பட்டாலும் சந்தர்ப்பத்தால்… பிறருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வந்து நல்ல அணுக்களில் அது திரை போட்டு விட்டால் என்ன ஆகின்றது…?
1.நம் சிந்திக்கும் நிலைகளுக்கு அதுவே தடையாக வந்து சேர்ந்து விடுகின்றது.
2.இதைத் துடைக்க வேண்டும்.

அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

என் பார்வை அவர் இருளைப் போக்கும் அருள் சக்தியாக மாற வேண்டும். என் சொல் அவருக்குள் உண்மையை உணர்த்தும் சொல்லாக வரவேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இந்த உணர்வின் ஒலிகள் படப்பப்படும் பொழுது நம்மை அவர் எண்ணும் பொழுது “இந்த உணர்வு அவருக்குள் ஊடுருவும்…”
2.எந்த காரணத்தைக் கொண்டு நாம் அந்த நல்லதைச் சொன்னோமோ
3.அவருடைய தீமையான உணர்வுகளுக்குள் இது சேரும் போது அங்கே இது முன்னாடி இருக்கும்.

அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே நமக்கு முன்னணியில் இருக்கும். அருள் உணர்வுகளை எடுத்து அதையே நாம் சொல்லப்படும் பொழுது
1.நாம் சொல்லும் உணர்வுகள் அவனைத் திருத்தும்
2.இல்லை என்றால் நமக்கு முன்னணியில் இருக்கும் “அவர் உணர்வு” நம்மை மயக்கிவிடும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் உண்மையைச் சொல்கின்றோம். அவர் தீமையைச் சுட்டிக் காட்டுகின்றோம். தீமையான உணர்வுகள் முன்னிலையில் வருகின்றது அவருக்கு. இந்த உணர்வுகள் முன்னணியில் இருக்கப்படும் பொழுது அவர் அதை மறுக்கின்றார். அவருக்கு அது எதிர் நிலை.

அதாவது
1.தீமையின் உணர்வுக்கு நாம் சொன்ன நன்மையின் உணர்வு அங்கே மறைத்திருக்கின்றது.
2.அவரிடமிருந்து உருவான தீமையான சொல்களை நாம் கேட்டவுடன் நல்ல உணர்வுக்கு இங்கே திரைமறைவாகின்றது.
3.இருவருக்குமே மறைக்கிறது… அதை மாற்ற வேண்டுமல்லவா…!

அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்தத் தீமையைத் துடைத்து விட்டு அந்த மகரிஷிகளின் நினைவலைகள் கொண்டு சொல்லாகச் சொல்லப்படும் பொழுது தன்னிச்சையாக அங்கே அவருக்குள் அது ஈர்க்கப்படும்.

பெரிய மனிதர் மாதிரி சொல்ல வந்து விட்டார் என்று முதலில் நினைப்பார்.
1. பின் நாம் வெளிப்படுத்திய அந்த மகரிஷிகளின் உணர்வு சிறுகச் சிறுக அவருக்குள் போகும்.
2.இந்த உணர்வுகள் அங்கே புகுந்து அங்கே ஒரு இக்கட்டான நிலை வரும்.
3.அப்பொழுது பதில் சொல்ல முடியாது திணறுவார்.
4.அன்று அவர் சொன்னது சரியாகப் போய்விட்டது என்று திருப்பத்திற்கு வரும் பொழுது நம்மைத் தேடி வருவார்கள்.

இந்த உணர்வின் தன்மை அங்கே இப்படி முடக்கப்படும் பொழுது சிந்திக்கும் தன்மை நிச்சயம் வரும்.

செய்து பாருங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியான வழியினைக் கடைப்பிடிப்பவர்கள் யாராவது கொஞ்சம் குறையைச் செய்தாலும் உடனே அவருக்குக் கோபம் வரும். சாமி (ஞானகுரு) சொன்ன முறைக்கு மாறாக யாராவது குற்றங்கள் செய்ய ஆரம்பித்தாலும் உடனே அந்தக் குற்றத்தை உணர்த்தி… அதைச் செய்யக் கூடாது…! என்பார்.

1.நாம் எதற்காக இந்தத் தியான வழிக்கு வந்தோம்…?
2.நாம் எப்படி இருக்க வேண்டும்..?
3.குருநாதர் (ஞானகுரு) சொன்ன நிலைகள் என்ன…? என்பதை உறுதிபட எடுத்துச் சொல்வார்.

பிறருடைய குறைகளை வளர விடாதபடி… குறையைக் கண்டாலே உடனே அவருக்குக் கோபம் வந்திடும். கோபம் வந்தது என்றால் உடனே என்னிடம் (ஞானகுரு) வருவார்.

சாமி…! அவர்கள் தவறு செய்கிறார்கள். அதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் வந்து விட்டது.
1.ஆனால் எனக்கு அந்தக் கோபம் வரக்கூடாது
2.குரு அருள் எனக்கு வேண்டும்.
3.குரு அருளால் எனக்கு அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும்.
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் எப்பொழுதும் பெற வேண்டும்.
5.என்னுடைய கோபம் குறைய வேண்டும் என்பார்.
(என்னுடைய உபதேசத்தை அடிக்கடி கேட்டுக் கொள்வார்.)

குழம்பு வைக்கும் போது காரத்தை எந்த அளவுக்குச் சமப்படுத்தி அளவாகப் போடுகிறோமோ அந்த அளவுக்கு ருசியாக இருக்கிறது. அதே மாதிரி எனக்குக் கோபம் வந்தாலும்… அதை நல்ல வழியில் செயல்படுத்தக் கூடிய நிலை வர வேண்டும்…! என்று என்னிடம் கேட்பார்.

அவருடைய மனைவி மீது கூட அடிக்கடி கோபித்து கொள்வார். அதே சமயத்தில் குழந்தைகளிடமும் கூட திடீரென்று எதிர்பாராத நிலைகளில் கோபமாகப் பேசுவார்.

உணர்ச்சிவசப்பட்டு அந்தக் கோபம் அவருக்கு வருவதன் காரணம்… அவர் ஆரம்ப நிலைகளில் பலவீனமான நிலைகள் கொண்டு எத்தனையோ விதமாக பயமான உணர்வுகளை எடுத்து வளர்த்துள்ளார்.

பயத்திலிருந்து ஓரளவுக்குத் தப்பி வந்தாலும் “குற்றம்…” என்று பார்த்ததும் அதனால் மேலும் தவறுகள் ஏற்பட்டு விடுமோ…! என்று அந்தப் பய அலைகளை எடுத்துவிடுகின்றார்.

அந்தப் பயங்கள் வரும்போது அவர் சிந்திக்கும் தன்மை இழக்கின்றார். சிந்திக்கும் தன்மை இழக்கும் போது கோபம் என்ற நிலை வருகிறது. அவர் உடலிலே அதிகமான நிலைகளில் பயம் அலைகளையும் கோப அலைகளையும் பதிவு செய்ததனால் அதை உடனடியாக அவரால் குறைக்க முடியவில்லை

இந்தத் தியான வழிக்கு வந்த பின் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகக் குறைத்து ஓரளவுக்கு அமைதி என்ற நிலைக்கு வந்து சேர்ந்தார். தன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்… நம் தபோவனத்திற்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்றார்.

தன்னுடைய வாழ் நாளில் அவர் குரு அருளைத் தன்னுடைய சேவையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். “அந்த மகரிஷிகள் பெற்ற உயர்ந்த சக்திகள் எல்லோரும் பெற வேண்டும்…” என்ற ஆர்வமும் அவரிடம் அதிகமாக இருந்தது.

இருந்தாலும் அவர் உடலில் சேர்த்துக் கொண்ட பழைய உணர்வுகள் தூண்டப்பட்டு பிறிதொருவர் தவறு செய்யும் பொழுது அதை நுகர்ந்து தன் ஆன்மாவில் சேர்க்கப்படும் போது சில நேரங்களில் அவருக்கு அந்த கோபம் வந்துவிடுகின்றது.

ஆனால் கோபம் வந்தால் முதலில் பயப்படுவார். அதே சமயத்தில் அந்தக் கோபம் என்ற நிலை வரப்படும்போது வீரியம் என்ற வலுவும் வருகிறது. பயம் வரும் போது சிந்திக்கும் தன்மை இழக்கின்றது. ஒரு குற்றத்தைக் கண்டபின் கோபம் அதிகமாக வரப்படும்போது இதுவும் சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.
1.ஆனால் அந்தப் பயம் என்ற நிலைகள் மாறுகின்றது.
2.பயம் என்ற நிலை மாறும்போது “எனக்கு ஏன் கோபம் வந்தது…?” என்ற நிலைகளில் திருப்பி அவர் சிந்திக்கும் போது
3.“தன்னை அறியாமலே கோபம் வருகின்றது…! அதை எப்படி மாற்றுவது…? என்ற எண்ணத்தில் உடனே என்னிடம் (ஞானகுரு) வந்துவிடுவார்.

நான் வெளியூரில் இருந்தாலும் சரி… என்னிடம் சொல்லி அதைக் கேட்டு “சாமி நான் திருந்த வேண்டும்…!” என்பார். எனக்கு ஏன் கோபம் மீண்டும் மீண்டும் வருகிறது..? அந்த உணர்வுகள் மறுபடியும் எப்படி இயக்குகிறது…? என்ற விளக்கங்கள் கேட்பார்.

அதற்குண்டான விளக்கங்களை எடுத்துச் சொல்லி உணர்ச்சிவசப்படும் அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் ஒளியை எப்படி எடுக்க வேண்டும்…? அந்தக் கோபத்தின் வலுவைக் குறைத்துச் சிந்திக்கும் வலுவை எப்படிக் கூட்ட வேண்டும் என்றும் தெளிவாக்குவேன்.

அதன் வழியில் அதைக் கடைப்பிடித்து அந்தக் கோபத்தை மேலும் மேலும் குறைத்து வந்தார்.

நம் எண்ணங்கள் எந்த அலைவரிசையில் இருக்க வேண்டும்…?

 

இனபேதத்தினால் வரக்கூடிய உணர்வுகள் மனிதனிலிருந்து அது விளைந்தது தான். உற்றுப் பார்த்து அந்த உணர்வுகள் பதிவானது. பதிவு மீண்டும் நினைவாகும் பொழுது எது வலுவோ அது தான் நம்மை இயக்கும்… நம்மையும் அந்தப் பேத உணர்வு இயக்கும்.

சந்தர்ப்பத்தால் வரும் இது போன்ற ஒரு தீமைகளை மாற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். குருநாதர் எனக்குக் கொடுத்தது போன்று உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

அதனை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.இந்தக் காற்று மண்டலத்திலே யார் எந்த வகையில் நச்சுத் தன்மைகளைப் பரவச் செய்திருந்தாலும்
2.நமது குரு அருளின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து உடலுக்குள் அருள் ஞானத்தை உருவாக்க முடியும்.
3.அவ்வாறு உருவாக்கினால் என்றும் ஏகாந்த நிலை அடைய முடியும்.
4.அது தான் கல்கி ஒளி உடலாக மாற்ற முடியும்… இதிலே சிரமம் ஒன்றுமில்லை.

உங்களுக்குள் பதிவு செய்ததை மீண்டும் எண்ணத்தால் எண்ணி எடுத்தால் இந்தக் காற்றிலிருக்கும் அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு கொண்டு டிவி.யை இன்னென்ன அலைவரிசையில் என்று அதை வைக்கப்படும் பொழுது ஒவ்வொரு ஊரிலிருந்து வெளிப்படுத்துவதை அது கவர்ந்து நமக்குக் காட்டுகின்றது.

ஆங்காங்கு ஒளிபரப்பு செய்வதை அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்து எடுத்துக் கொள்கின்றோம்.

இதைப் போலத்தான்
1.மக்கள் பேசிய தவறான உணர்வுகளும் நமக்குள் பதிவு உண்டு.
2.அவர்களை எண்ணினால் அந்த அலைவரிசையில் நமக்குக் கோபம் வரும் வெறுப்பு வரும் சங்கடம் வரும் இத்தனையும் வரும்.

ஆனால் அது அத்தனையும் நீக்கியது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் குரு துணை கொண்டு கவர்ந்து நமக்குள் எடுத்துக் கொண்டால்
1.”அந்த அலைவரிசை…”
2.தீமைகளை நீக்கும்… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக வரும்… நம் வாழ்க்கையை உயர்த்தும்.

இந்த உயர்ந்த உணவுகள் வரும் பொழுது இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை என்ற நிலையை நாம் அடைய முடியும். அந்த நிலை நீங்கள் அடைய வேண்டும். அத்தகைய ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்.

1.உங்கள் பார்வையால் சர்வ தோஷங்களும் நீங்க வேண்டும்
2.உங்கள் பார்வை சர்வ பிணிகளையும் போக்க வேண்டும்
3.உங்கள் பார்வை அனைவரையும் ஞானிகளாக ஆக்க வேண்டும்.
4.இத்தகைய கூட்டம் அமைய வேண்டும்.
5.இத்தகைய கூட்டங்கள் அமைந்தால் தான் மனிதனுக்குள் இருக்கும் பேதங்களை மாற்ற முடியும்.

குரு அருளை நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்கள்.

இதைப் படிப்போர்… இதைக் கேட்போர் அனைவரும் இதன்படி செயல்பட்டால் பல ஆயிரம் பேராக மாற்றலாம். அந்த ஆயிரம் பேர் “பல லட்சக்கணக்கான பேராக மாற்ற முடியும்…” இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தலாம்.

வேம்பின் கசப்பான உணர்வுகள் வரும் பொழுது மற்ற உணர்வலைகள் எப்படி அது விலகி ஓடுகின்றதோ இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை காலை துருவ தியான நேரத்தில் நமக்குள் சேர்க்கப்படும் பொழுது… தீமை செய்யும் உணர்வலைகளை “விலகி ஓடச் செய்யலாம் அல்லது அது இயங்காதபடி தடைப்படுத்தலாம்…”

சாதாரணமாக… நம் உடலுக்குள் பல வகைகளிலும் பலருடைய உணர்வுகள் பதிவாகி இருப்பதனால் அதை இழுக்கக்கூடிய திறன் வருகின்றது. உடலில் கெட்ட அணுக்கள் வளரக் காரணம் ஆகின்றது.

துருவ தியானத்திலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அதை உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமை உள்புகாது தடுக்க வேண்டும்.

அப்படித் தடுத்தால் காலை ஆறு மணிக்குச் சூரியன் உதயமாகும் பொழுது நாம் இழுக்கத் தவறும் அந்த உணர்வுகளை அது மேலே அழைத்துச் சென்று மாற்றி அமைக்கின்றது. நமது ஆன்மா சுத்தமாகின்றது.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்திலே தொல்லை என்று அடிக்கடி வந்தால் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் வலு சேர்த்து தீமை உள்புகாது தடுத்துப் பழக வேண்டும்.

இதைத் தான் ஆத்ம சக்தி என்று உங்களுக்குத் தெளிவாகக் கொடுக்கின்றோம். நம் குரு எப்படி அருள் வழியில் செயல்பட்டாரோ அது போன்று நாமும் செயல்பட முடியும்.
1.அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுடன் குருநாதர் செயல்பட்டார்.
2.ஒவ்வொரு உயிரையும் ஈசன் என்று மதித்தார்.
3.அதற்குத் தான் போஸ்டிலே கல்லைக் கொண்டு தட்டுகின்றேன்.
4.எல்லோருக்கும் அந்த ஞானம் வரட்டும் அந்த உயர்ந்த உணர்வுகள் பெருகட்டும் என்று சொன்னார்.

ஆகவே நாம் அனைவரும் நம் குரு காட்டிய அருள் வழியில் செல்வோம். விஞ்ஞான உலகில் வரும் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து மக்களை விடுபடச் செய்வோம்.

அந்த அஞ்ஞான வாழ்க்கையின் உணர்வுகள் நமக்குள் புகுந்து நம்மை இயங்கிடாதபடி “மெய் ஞான உலகை நமக்குள் சிருஷ்டிப்போம்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்கையில் இந்த உடலின் இச்சையின் வாழ்கையில் நுகர்ந்த உணர்வெல்லாம் அந்தந்த உணர்வின் எண்ணங்களாக நமக்குள் பாய்கின்றது.

ஒருவனைக் கெடுக்க வேண்டும் என்றால் இது உடலில் இருந்து ஏற்பட்ட அந்த எண்ணத்தின் உணர்வுகள் நினைவாக்கப்படும் போது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. இதற்குப் பெயர் சிவ தனுசு. அந்த உணர்ச்சியின் இயக்கமாக மற்ற ஒருவனைத் தாக்கும் நிலை வருகின்றது.

ஆக சிவ தனுசு என்றால்… இந்த உடலைப் பாதுகாக்கும் நிலைகள் பரசுராம். எந்தக் குணத்தின் உணர்வைப் பெருக்கினோமோ இந்த உடலின் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தைத் தேடவும் அதே சமயத்தில் தீமைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.

அத்தகைய உணர்வுகள் வரப்படும் போது அது நமக்குள் செயலாக்கி அந்தச் சொல்லையும் அந்தச் செயலையும் செயல்படுத்தச் செய்து சிவ தனுசாக மாறுகின்றது.

1.சிவம் என்றால் நமது உடல் என்றும்
2.எதை எண்ணுகின்றோமோ “அந்த உணர்ச்சிகள் நமக்குள் பாய்ந்தும்…”
3.அது இயக்கச் செய்யும் பொழுது “தனுசு” என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

தன்னைக் காத்துக் கொள்ள மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும் அவர்களை நம்மிடம் அணுகாத நிலைகள் செயல்படுத்துவது தான் சிவ தனுசு என்றும் இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கபட்டுள்ளது.

இதைப்போல அன்று அரசர்கள் தனுர் வேதத்தைப் பயன்படுத்தினார்கள். தனுர் வேதம் என்றால் இன்னொரு மனித உடலில் இருந்து அந்த உணர்வுகளைப் பிரித்து அந்த உணர்வின் தன்மையைத் தான் நுகர்ந்து மற்றவர்கள் மீது பாய்ச்சுவது தான்.

1.யாக வேள்விகளை நடத்தி அதர்வண வேத அடிப்படையில் மந்திரங்களைச் சொல்லி ஏவுவதும்
2.மந்திர ஏவலால் மற்றவர்களைச் செயல் இழக்கச் செய்வதும்
3.மற்றவர்களைச் செயலற்றவராக மாற்றுவதும் போன்ற நிலைகளைச் செயல்படுத்தி வந்தார்கள் அரசர்கள்.

அந்தத் தனுர் வேதம் இல்லாதவர்கள் எந்தப் போர் முறைகளையும் வெற்றி பெற முடியாது என்ற நிலை தான் அக்காலங்களில்.

கொடூர நிலைகளும் கொதித்து எழும் உணர்வுகளும் பிறரை இரக்கமற்றுத் தாக்கும் உணர்வுகளை மனிதனின் வாழ்க்கையில் இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் போது இது சிவ தனுசாக மாறுகின்றது. அதாவது
1.உடலில் இருந்து எழும் உணர்ச்சிகள் அந்த உடலை வீரியமாக இயக்கச் செய்து
2.அந்த வீரிய உணர்வு கொண்டு ஒரு மனிதரைத் தாக்குவதும் அவனை மடியச் செய்வதும்
3.அல்லது அவனைக் காணாமல் போகச் செய்வதும் அவர் சொத்துக்களை விரயமாக்குவதும் அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும்
4.தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை தான் அது…!

உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் அமெரிக்கா தன் ஆயுத நிலைகள் கொண்டு மற்ற நாடுகளை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்றும் அவர்களைப் பலவீனப்படுத்தினால் தான் “தன் நாடு காக்கப்பட முடியும்…!” என்று இன்று செயல்படுகிறது.

இதைப் போன்று சீனாவும் அதனைக் காட்டிலும் வல்லமை கொண்டது என்றும் அதே போன்று ரஷ்யாவும் அடுத்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் ஒன்றைப் பார்த்து ஒன்று
1.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை கொண்டு
2.பிறரை வலிமை இழக்கச் செய்ய வேண்டும்..! என்றும் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

இத்தகைய உணர்வுடன் மனிதன் இயங்கி கொண்டு இருக்கும் நிலையில் விஞ்ஞான அறிவு கொண்டு கடும் விஷத் தன்மைகளை எப்படிப் பரப்புவது…? ஒவ்வொரு நாட்டையும் எப்படி அழிப்பது…? மக்களை எப்படிச் செயலற்றவர்களாக மாற்றுவது…? என்று இன்று வந்து விட்டார்கள்.

ஒரு மனித உடலுக்குள் இருக்கும் உணர்வினை எடுத்து அதை மந்திரங்களாகச் சொல்லிப் பாய்ச்சி ஏவுதல் அழித்தல் கொலை செய்தல் என்று இத்தகைய நிலைகளை வைத்துத் தான் அன்றைய அரசுகள் செய்து வந்தனர்.

இன்று அந்த அரசுகள் எல்லாம் மடிந்து விட்டது. ஜனநாயகம் என்ற மக்கள் ஆட்சி வந்து விட்டது.

அரசர்கள் வீழ்ந்து மக்கள் ஆட்சி என்று வரப்படும் போது ஆட்சி பீடத்திற்குத் தான் வந்த பின்
1.அந்த ஆட்சியில் தனக்கு அடிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
2.தான் தான் எப்போதும் உயர்ந்து இருக்க வேண்டும்
3.உலக நிலைகளிலேயே நாம் புகழ் பெற வேண்டும் என்று போற்றித் துதிக்கும் உணர்ச்சிகள் அங்கே தூண்டப்பட்டு
4.நாட்டு மக்களைச் சீர்படுத்தும் நிலைகள் அற்று அவர்களைச் சீர் கெடச் செய்து அதற்குக் கீழ் அவர்களை வலு இழக்க செய்து
5.அதன் வழியில் அவர்கள் ஆட்சிகள் புரியும் காலமாக வந்து விட்டது…!

இது சிவ தனுசாக உருவாகும் இந்த நிலை.

இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் “விஷ்ணு தனுசைப் பயன்படுத்த வேண்டும்…”

நமது உயிர் விஷ்ணு. விஷ்ணு என்ற நிலையில் இந்த உயிரின் தன்மை கொண்டு உயிரைப் போன்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரத்திரமாக இருக்கும் அதனின்று வரும் உணர்வுகள் சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்டு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பிரபஞ்சத்தில் பரவுகிறது.

அப்படிப் பரவி வரும் அந்த அலைகளை நான்கு மணியில் இருந்து நமது பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவர்ந்து நமது பூமிக்குள் பரவச் செய்கின்றது.

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணத்தால் ஏங்கும் போது அந்த உணர்வுகள் நம் உயிரிலே படுகின்றது. இதற்குப் பெயர் தான் விஷ்ணு தனுசு.

1.துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வுகள் தீமைகளை அழிக்கும் சக்தி கொண்டது… நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றது.
2.இந்த உணர்வினை நாம் நுகர்ந்து அறியப்படும் போது அதன் வீரிய உணர்வுகள்
3.நம் உடலுக்குள் தீமை செய்யும் உணர்ச்சிகளை அடக்கவும் தீமையான செயல்களைத் தடைபடுத்தவும்
4.அருள் ஒளியைப் பெருக்கச் செய்யவும் என்று அந்த அருள் வழியில் அது வருகின்றது.

பரசுராமன் சீதாராமன் இருவருக்கும் போர் நடந்தது என்றும் பரசுராமன் உடலைச் சமப்படுத்தும் சிவ தனுசை எடுத்தான் என்றும் இராமன் உயிருடன் ஒன்றி ஒளியாக்கும் விஷ்ணு தனுசை எடுத்ததால் இராமன் வென்றான் என்றும் காட்டினார்கள்.

வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளை மாற்றி ஒளி என்ற ஒரே நிலையில் மாற்றுவது தான் விஷ்ணு தனுசு. ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றது தான் நமது உயிர்.

நமது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் உருவாக்கி உடலுக்குள் அதைப் பெருக்கினால் இது விஷ்ணு தனுசு.

பூமிக்குள் பரவி வரும் விஷத் தன்மைகளை நமக்குள் வராது தடுத்து நமது உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போல ஒளியின் தன்மையைப் பெறச் செய்து
1.ஒரு கூட்டமைப்பாகத் துருவ நட்சத்திரத்திம் ஒளிர்வது போல
2.நாமும் இந்த உடலுக்கு பின் ஒளிரும் நிலை பெறுதல் வேண்டும்.

“தியானமே எனக்கு வரவில்லை…” என்று யாரும் சொல்ல வேண்டியதில்லை

 

இயற்கையின் நிலைகளாக… மெய் ஞானிகள் கூறிய “உயிருடன் ஒன்றி ஒளியாகும் உணர்வினை…” யாரும் பின்பற்றவில்லை. இப்பொழுது சொன்னாலும் கூட அதை ஏற்றுக் கொள்வோர் குறைவாகத்தான் உள்ளார்கள்.

தெய்வத்திற்குக் காசைக் கொடுத்தால் தெய்வம் நமக்கு வரம் தரும்… எல்லாம் சரியாகப் போய்விடும்…! என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.

நாம் உணவாக உட்கொண்ட நிலைகள் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட நிலைக்கொப்பத்தான் சத்து ஏற்படும். அதைப் போன்று தான் உயர்ந்த உணர்வுகளை நாம் கவர்ந்து வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற வேண்டும் என்று எண்ணினால் அது நமக்குள் பதிவாகும்.

திட்டியவனை எண்ணும் பொழுது சோர்வும் சஞ்சலம் எப்படி நமக்குள் வந்து
1.தவறான வழிகளில் நம்மை அழைத்துச் செல்கின்றதோ அதே போன்று
2.அருள் உணர்வுகள் நமக்குள் பதிவான பின் அது “ஞானிகள் வழியில்” நம்மை அழைத்துச் செல்லும்.

வாழ்க்கையில் எண்ணங்கள் தடுமாறி… கோபமோ வெறுப்போ வேதனையோ சலிப்பு சஞ்சலமோ வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற வேண்டும்.

1.அப்போது சஞ்சலங்களை அது மாற்றும். சிந்திக்கும் தன்மை வரும்… முகமும் அழகாகும்.
2.வேதனைப்படும் பொழுது இந்தத் தியானத்தை எடுத்துப் பாருங்கள்.
3.முகத்தில் ஒரு விதமான மலர்ச்சி ஏற்படும்… சிந்திக்கும் ஆற்றல் வரும்… தெளிவான வாழ்க்கையும் வாழ முடியும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றி அருள் உணர்வைப் பெறுங்கள்.

சிறிது காலம் இவ்வாறு எண்ணினால் போதுமானது. பின் தன்னிச்சையாக வரும்.

“தியானமே எனக்கு வரவில்லை…” என்று சொல்ல வேண்டியதில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் கண்களைத் திறந்தபடியே நினைவினை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் அந்த சக்திகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்.

இப்படிப் பயிற்சி எடுத்துக் கொண்டால் நாளடைவில் உணர்வின் தன்மை வலிமையான பின் எந்தத் தீமையும் உடலுக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

சிலர் பிராணயாமம் என்று சொல்வார்கள். மந்திரங்களைச் சொல்லி பிற உணர்வுகளை நுகர்ந்த பின் “கம்…” என்று இருண்ட நிலை ஆகிவிடும். விடுபட்டால் அந்த உணர்வின் விஷத்தன்மையே இயக்கும்.

மந்திர ஒலிகள் கொண்டு தெய்வங்களை எண்ணி ஜெபிக்கப்படும் போது அது நமக்குள் பதிவாகி இறந்த பின்… அதன் உணர்வை வேறு எவர் எடுக்கின்றனரோ அதே வழிகளில் (அந்த மனிதன் சென்ற வழி) அவரையும் அழைத்துச் செல்லும்.

ஆனால் இயற்கையின் உண்மை நிலைகள்
1.ஒளியின் உணர்வைப் பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றுப் பழகினால்
2.இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றும்.

ஏனென்றால் “வேண்டிய சக்திகள்…” நமக்கு முன் இந்தப் பூமியிலே பரவி உள்ளது. அதைப் பதிவாக்கி அதை எடுத்து உங்கள் இருளை நீக்கி உயிருடன் ஒன்றி உயிருடன் ஒன்றி வாழும் உணர்வைப் பெறச் செய்ய வேண்டும். அதை நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

1.குருநாதர் எனக்கு அப்படித்தான் கொடுத்தார்… பல அனுபவங்களைக் கொடுத்தார்.
2.அருள் உணர்வுகளை எடுக்கும் முறைகளைக் கொடுத்தார்… அதை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
3.உங்கள் எண்ணத்தால் கவரலாம்… தீமைகளை அகற்றலாம்… பிறவியில்லா நிலை அடையலாம்.
4.குடும்பத்தில் வரும் கலக்கங்களை மாற்றலாம்… ஒன்றுபட்டு வாழ முடியும்.

கணவன் மனைவி எப்பொழுதுமே ஒன்றி நிலைகள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற வேண்டும் என்று கணவனும் கணவன் பெற வேண்டும் என மனைவியும்
1.எவரொருவர் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி வளர்க்கின்றார்களோ
2.நிச்சயம் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள்… அரும்பெரும் சக்திகளையும் பெறுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாம் (ஞானகுரு) உபதேசித்ததைக் கேட்டுணர்ந்த நீங்கள் அடுத்து என்னைப் பார்க்கும் பொழுது
1.நான் நன்றாக இருக்கின்றேன்
2.நீங்கள் சொன்னபடி நான் எடுத்தேன்… என் உடலில் இருக்கும் நோய்கள் அகன்றது நன்றாக இருந்தது என்று
3.இந்தச் சொல்லை கேட்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி.

உங்களைத்தான் சதா நான் பிரார்த்தனை செய்கிறேன்…! நீங்கள் எத்தனையோ கோவிலுக்குப் போவீர்கள். ஆனால் உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி… உங்கள் உடலைக் கோவிலாக எண்ணி… உங்கள் உடலில் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வங்களாக எண்ணி…
1.அந்தக் கோவிலில் அனைத்தும் மகிழ்ச்சியாகச் செயல்பட வேண்டும்.
2.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று உங்களைத் தான்
3.நான் பார்த்த கோவில் அத்தனையும் “ஒவ்வொருத்தராக…” நான் தியானம் செய்து கொண்டிருக்கின்றேன்.

அதிகாலை 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்தனை செய்கிறேன். இதைக் கேட்டு பதிவு செய்தவர்களுக்கெல்லாம் அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும்.

அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த உணர்வுகள் நமக்கு நல்லது செய்யும் ஆற்றலாகப் பெற முடியும். அதைப் பெறச் செய்யும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆகையினால் முழு நம்பிக்கையாக உங்களை நம்புங்கள்…!

ஏனென்றால்
1.உங்களிடம் அவ்வளவு சக்தி இருக்கின்றது… உங்களுக்கு முன்னாடி உயர்ந்த சக்திகள் இருக்கின்றது
2.அதை நினைத்தீர்கள் என்றால் உங்களுக்குள் கூடும்… நல்லதைப் பெற முடியும்… மெய் ஒளி காண முடியும்
3.மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை… ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

சாமி சொன்னார் என்று சொல்லி சாமி சொன்ன சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். “சாமி செய்து கொடுப்பார்…” என்று எண்ண வேண்டாம்.

நான் உங்களை எல்லாம் பிரார்த்தனை செய்கின்றேன். அந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று உங்களுடன் உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனின் காந்த அலைகள் படுகின்றது… பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் முடியும். பிரபஞ்சத்தில் காற்றிலே பல சக்திகள் படர்கின்றது போகும் பாதையில் தான் ஈர்த்துக் கொண்டால் தான் பூமி வளர முடியும்

இதைப் போன்று தான் நீங்கள் எல்லோரும் ஞானிகள் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று யாம் எண்ணுகின்றோம். அந்த அருள் ஒளியை “நீங்கள் ஈர்த்துக் கொண்டால் தான்…” செயல்படுத்த முடியும்.

அதன் வழி நீங்கள் செயல்பட்டு நான் நன்றாக இருக்கின்றேன்; எல்லாம் நன்றாக இருக்கின்றது; என் உடல் நன்றாக இருக்கின்றது; காற்றிலிருந்து நல்ல சக்திகளை என்னால் பெற முடிகின்றது…! என்று
1.ஒவ்வொருவரும் அந்தச் சந்தோஷமான செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும்
2.அதை நான் கேட்க விரும்புகின்றேன்…!

ஏகாந்த வாழ்க்கை

 

உலக வழக்கில் நாம் என்ன செய்கிறோம்…?

கண்களால் பார்க்கப்படும் போது… ஆணா பெண்ணா…? நல்லவரா கெட்டவரா…? வேண்டியவரா வேண்டாதவரா…? இங்கே நடப்பது எல்லாவற்றையும் பார்த்து விட்டு நான் சும்மா எப்படி இருப்பது…? என்று
1.பிறர் உணர்வை மட்டுமே நுகர்கிறோம்
2.அவர்கள் உணர்வு தான் நம்மை இயக்குகிறது
3.ஈஸ்வரபட்டரின் உணர்வு அல்லது ஞானிகள் உணர்வு நம்மை இயக்குவதில்லை.

ஞானிகள் காட்டியது,..!
ஏகாதசி:-
1.எதுவுமே எதிர்ப்பு இல்லாத நிலை
2.நாம் ஏகாந்தமான நிலைகளில் இருப்பது

வைகுண்ட ஏகாதசி:-
1.பிறருடைய தீமைகளை எண்ணாதபடி
2.நமக்குள் சந்தோசமான நிலையிலேயே இருப்பது.

ஞானகுரு நமக்குக் கொடுப்பது:-
எத்தனையோ கோடிச் சரீரங்களில் இன்னலைக் கடந்து இந்த இன்னலை நீக்கக் கூடிய வலிமையான மனித உடலைப் பெற்றுள்ளோம். ஆறாவது அறிவையும் பெற்றுள்ளோம்.

அப்படிப் பெற்ற நிலையில்
1.நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.இந்த உயிரணு எதைப் பெற வேண்டும்…?
3.ஆறாவது அறிவை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்று
4.ஞானிகள் உணர்த்திய உண்மைகளைத்தான் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஈஸ்வரபட்டரின் ஏகாந்த வாழ்க்கை நிலை:-
1.யார் தவறு செய்கின்றார்கள்…? என்று நான் பார்ப்பதில்லை
2.எப்படிச் செய்கின்றார்கள்…? என்பதை நான் சிந்திப்பதில்லை.
3.நான் அதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.

காரணம்… உலக மக்கள் பித்துப் பிடித்துப் பித்தனாக உள்ளனர். இதிலிருந்து நான் விடுபட்டே செல்கின்றேன்…!

நாம் செய்ய வேண்டியது:-
நாம் ஈஸ்வரபட்டரைப் போன்று ஏகாந்த நிலை பெற வேண்டும் என்றால் அடுத்தவர்கள் யார்…? அவர்கள் என்ன செய்கிறார்கள்…? ஏன் இப்படிச் செய்கிறார்கள்…? என்று
1.பிறர் உணர்வுகள் எதையுமே நுகராதபடி
2.சாமி (ஞானகுரு) சொன்னதை மட்டும் நாம் செய்ய வேண்டும்.
3.நான் செய்கிறேன்… அடுத்தவர்கள் செய்யவில்லையே…! என்று மீண்டும் அப்படி எண்ண வேண்டியதில்லை.

“உங்களுக்குத் தெரியாமலே…” தீமை நீக்கும் சக்தி கொடுக்கின்றேன்

 

கையில் வைத்திருக்கும் செல்ஃபோனில் நமக்குத் தேவையான எத்தனையோவற்றைப் பதிவு செய்கின்றோம். யார் பேசியது…? என்று தெரிந்து கொள்கின்றோம். பின் நாம் அதைப் பதிவாக்கி அந்த நம்பர் வந்தவுடன் இன்னார் தான்…! என்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.

அதாவது யார் பேசுகின்றார்கள்…? யாரிடம் பேச வேண்டும்…? என்று எல்லாவற்றையும் நாம் அறிந்து அதைப் பயன்படுத்துகின்றோம்.

இதைப் போன்று தான்… “நமது கண்” அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கிறது,
1.ஒருவர் வேதனைப்படுகிறார் என்று திரும்ப எண்ணினால் அந்த வேதனை நமக்கு வருகின்றது.
2.அவர்கள் என்னென்ன செய்தார்களோ அந்த நினைவுகள் வருகின்றது.
3.எனக்கு இடைஞ்சல் செய்தானே… அது எல்லாம் நியாயமா…? என்ற எண்ண ஓட்டங்கள் வருகின்றது.

நியாயத்தைப் பேசுவோம்…! ஆனால் இடைஞ்சல் செய்கின்றார்…! என்று சொல்வோம். அப்பொழுது நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் ரத்தத்தில் கலந்து அணுவாக வளர்ச்சி பெற்றுப் பெருகத் தொடங்குகிறது.

இரத்தத்தில் வேதனை என்ற அணுக்கள் பெருகி விட்டால் அது செல்லும் பாதைகளில் உள்ள… நல்ல அணுக்களுடன் எல்லாம் போர் செய்யத் தொடங்கும்.

தலை வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது வயிறு வலிக்கின்றது கால் வலிக்கின்றது என்றெல்லாம் சொல்வோம். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. அந்த அணுக்கள் பெருகுகிறது.

1.ஒரு நான்கு நாள் வேதனைப்பட்டுப் பாருங்கள்.
2.இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தால் அந்த விஷமான அணுக்கள் இருக்கிறது என்று காட்டுவார்கள்.

அது அதிகமாகி விட்டால் மூச்சுத் திணறல் கூட வந்துவிடும். நுரையீரலில் வலி கல்லீரலில் வலி கிட்னியில் ஒரு விதமான வலி இருதயத்தில் வலி என்று வரும்.

ஏனென்றால் இரத்தம் போகும் பாதையில் எந்தெந்த உறுப்புகளுக்குள் எல்லாம் செல்கின்றதோ… அங்கெல்லாம் வலி வரத் தொடங்குகிறது.

மருத்துவர்கள் அந்த இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்து விஞ்ஞான அறிவுப்படி அந்த விஷமான அணுக்கள் எதிலே மடிகிறது…? என்று அதற்குத்தக்க மருந்து கொடுக்கின்றார்கள்.

முன்பிருந்த மருத்துவம் வேறு… ஸ்கேன் வைத்துப் பார்த்துப் பொதுவான மருந்து கொடுப்பார்கள். இப்பொழுது
1.அந்த இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதில் எத்தகைய ரூபமான அணுக்கள் இருக்கின்றது…?
2.அதற்கு இந்த மருந்தைக் கொடுத்தால் எப்படி மயக்கமடைகிறது…?
3.அல்லது அது முட்டையிடாமல் எப்படித் தடுப்பது…? அதை மலடாக்குவது எப்படி…?

ஒரு அணு சென்று விட்டது… அதை மலடாக்க வேண்டும். அப்போது அது தன் இனத்தைப் பெருக்காது.
1.இனத்தைப் பெருக்கவில்லை என்றால் இங்கே கெடுதல் வராது.
2.இப்படி ஆராய்ச்சி செய்து செயல்படுத்துகின்றனர்.

ரொம்பக் கடுமையாகி விட்டது என்று அதைக் கொல்ல மருந்து கொடுத்தால் நல்ல அணுக்களும் விஷத்தன்மையாகி அது கெட்டுப் போய் விடுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்…? அந்தக் கெட்டது உருவாகாதபடி இரத்தத்தில் அந்த அணுக்களை மலடாக்கி அது முட்டையிடாதபடி தடுக்கின்றார்கள்.

ஏனென்றால் நமக்குள் நடக்கும் இயக்கத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் ஈஸ்வரன்… அதற்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… ஈர்க்கும் காந்தம் லட்சுமி… விஷ்ணுவின் மறு அவதாரம் சீதா ராமன். நாம் சந்தோஷமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட எண்ணங்கள் உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி நம் உடலில் அணுக்களாக மாறுகிறது.

உயிரைப் போன்றே அணு உண்டாகிறது… சுவைக்கொப்ப உணர்ச்சிகள் தோன்றுகிறது… அந்த எண்ணங்கள் வருகின்றது. சந்தோஷமானது நான் சீதா. அதிலிருந்து வரக்கூடிய உணர்ச்சி தான் எண்ணங்கள்.
1.அது தான் சீதா ராமா…! ராமா சீதா என்று வராது.
2.உயிர் அந்த உணர்வின் தன்மை ஆகும் போது அந்த எண்ணங்கள் வருகிறது.

அகஸ்தியன் உலகை அறிந்து கொண்டான்… உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துத் தீமைகளை நீக்க வேண்டும்.

உங்கள் நினைவை அங்கே கொண்டு செல்லும் போது அந்த உணர்வு உங்களுக்குள் உமிழ் நீராக மாறி அந்தச் சத்து உங்கள் உடலில் ஒளியான அணுக்களாக விளையும். நீங்கள் ஒளியாக வேண்டும் என்பதற்குத்தான் இதை ஞாபகப்படுத்துகின்றேன்.

கூர்ந்து கவனிக்கும் பொழுது யாம் சொல்லக்கூடிய உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

1.உங்களுக்குத் தெரியாமல் தான் தீமைகள் வருகின்றது.
2.அதே போல் உங்களுக்குத் தெரியாமலே தீமை நீக்கக்கூடிய சக்தியை உபதேசத்தின் வாயிலாகக் கொடுக்கின்றேன்.

ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள காவியத்தின் “மூலக் கருத்து”

 

கேள்வி:-

வான்மீகி மாமகரிஷி உணர்த்திய ராமாயணத்தில், தசரத சக்கரவர்த்தி, கைகேயியின் குறுகிய எண்ணங்களால், இராமன் காட்டிற்கு சென்ற நிலையும், இந்த பிரிவின் நிலையைத் தாங்காது, தசரத சக்கரவர்த்தி இறந்த நிலையை காண்பிக்கின்றார்.

நமது ஞானகுரு உணர்த்திய அருள் வழியில், பத்தாவது நிலையை அடையக்கூடிய இந்த உடலை ஆளும் இந்த உயிரின் நிலை “தசரத சக்கரவர்த்தி” பத்தாவது நிலையை அடையக்கூடியது.

இந்த உடலுக்குள், எண்ணத்தின் நிலைகளை பிரதானமாக வைத்து வான்மீகி மகரிஷி உணர்த்தி, இந்த மனித உடலின் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என அருளியுள்ளார்.

இதில் தசரத சக்கரவர்த்தியின் செயலாக்கங்கள் இறந்த நிலையாகக் காண்பிக்கின்றார்கள். இதற்கு விளக்கம் வேண்டும்.

பதில்:-

எந்த ஒரு ஞானியாக இருந்தாலும் அவரவர்கள் கண்ட பேருண்மைகளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலைக்கொப்பத் தான் வெளிப்படுத்துவார்கள். வான்மீகியும் அப்படித்தான் “உயிரை அரசனாக வைத்துக் காட்டியுள்ளார்…”

நமது ஞானகுரு அதை நமக்கு வெளிப்படுத்திய விதம்
1.இன்றைய காலகட்டத்திற்கொப்ப… அதே சமயத்தில் எல்லாவற்றையும் சேர்த்து
2.எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும்படியான விளக்கத்தைத் தான் கொடுத்துள்ளார்கள்.

தசரதன் இறக்கின்றான் என்றால் இங்கே உயிர் இறக்கவில்லை. அதாவது
1.உயிரில் இருள் சூழ்கிறது… நஞ்சு சூழ்கிறது…
2.”உயிரான்மா நஞ்சாகிறது…” என்று தான் பொருள்.

சிறுகச் சிறுகப் பரிணாம வளர்ச்சி அடைந்து நஞ்சைக் குறைத்து மனிதனாக உருவாக்கிய நிலையில்… மனித சிந்தனை இழப்பதைத் தான் அவ்வாறு காட்டப்பட்டது.

மகாபாரத்திற்கும் இராமாயணத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

அங்கே “சகுனி” சூழ்ச்சி செய்கிறான்… பஞ்ச பாண்டவர்களும் (கடைசியில் திரௌபதையும் – உயிரின் உணர்ச்சிகள் நஞ்சாகிறது) அதிலே சிக்கி விடுகிறார்கள்.

இங்கே “கூனி” சூழ்ச்சி செய்து கைகேயி மூலமாக உயிரின் உணர்வுகள் நஞ்சாகிறது.

அங்கேயும் காட்டுக்குத் தான் செல்கிறார்கள்… பின் போர் நடக்கிறது.

இங்கேயும் காட்டுக்குத் தான் செல்கிறார்கள். பின் போர் நடக்கிறது.

1.இந்த உடல் தான் காடு.
2.உயிரான்மாவை நஞ்சிலிருந்து மீட்கும் நிலை தான் போர்.

போர் முடிந்து வந்தாலும் ராமனும் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியவில்லை. சீதாவைப் பிரிகின்றான்.

அங்கே மகாபாரதத்தில் பாணடவர் பிள்ளைகள் அனைத்தும் மடிகின்றனர். கடைசியில்… தர்மன் மட்டும் எஞ்சியதாகக் காட்டி…
1.சுவாசத்திற்கு மோட்சம் கேட்டு (ஒளியான உணர்வுகள் – மகரிஷிகளின் சக்தி)
2.அதன் பின் விண் செல்வதாகக் காட்டுகிறார்கள்.

இங்கே சீதா (உடல்) மண்ணுக்குள் செல்கிறது, ஆனால் அதிலே உருவானதை
1.லவா குசா என்று (ஒளியான உணர்வுகள் – மகரிஷிகளின் சக்தி) அதைக் காட்டி…
2.அவர்கள் மூலமாக உயிருடன் ஒன்றி விண் செல்வதாகக் காட்டுகிறார்கள்.

இரண்டிலுமே… மனித வாழ்க்கையில் வந்த “நஞ்சை வென்று உணர்வை ஒளியாக்கும் சூட்சமம் தான்…” காட்டப்பட்டுள்ளது.

இன்னும் புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு குளவியால் தாக்கப்படும் புழு… “(புழுவின் உயிர்)”
1.அடைபட்ட இடத்திலிருந்தே (உடல் – காடு) குளவியின் உணர்வைச் சுவாசித்து (நஞ்சாகி)
2.புழுவின் உயிரான்மா குளவியின் உயிரான்மாவாக “வளர்ச்சி” அடைகிறது.

அதே போல் மனித வாழ்க்கையில் பிறரை வீழ்த்த வேண்டும் (கைகேயி) என்று வீழ்த்திய அந்த உணர்வு தன்னை வீழ்த்திடும் நஞ்சாக மாறுகிறது.

அதிலிருந்து உயிரான்மாவை மீட்ட “ஒளியான உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்…” என்பது தான் காவியத் தொகுப்பின் உள் கருத்து.

1.தசரதன் இறக்கிறான் என்றால் உயிரான்மா நஞ்சாகிறது – அமாவாசை (மீண்டும் பூமிக்குள் உடல் பெறும் நிலை)
2.அதுவே… ஒளியான உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் போது – அது பௌர்ணமி (பிறவா நிலை)

அதாவது… சீதா (ஒளியான உணர்வுகள் – நாம் தியானத்தின் மூலம் இப்பொழுது எடுப்பது) விஷ்ணுவுடன் (உயிர்) இணைந்து ஒளிச் சரீரம் பெறுவது.

விண்ணிலே உதித்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்று… மனித உடலில் முழுமை பெற்று முதிர்ச்சி பெறுவது தான் “படைப்பின் வளர்ச்சி…”

1.அதனுடைய பருவங்களைத் தான் கதாபாத்திரங்களாகக் காட்டப்பட்டு… நிகழ்ச்சிகளாக விவரித்து
2.பின் வளர்ச்சி அடைய வேண்டிய “சரியான பாதையைக் காட்டி…” தான் அந்த வழியில் பயணம் செய்து
3.பிறவா நிலை என்ற எல்லையை அடைவதாக… முழுமை பெறுவதைக் காட்டினார்கள் ஞானிகள்.

கேள்விக்குண்டான பதிலின் மொத்தச் சுருக்கம்:-

1.புழுவாகிய நான் வீழ்கிறது – குளவியான நான் வளர்கிறது… அது போல்
2.மனிதனான நான் (தசரதன்) வீழ்கிறது – ஒளியான நான் வளர்கிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேதனை என்றாலே விஷம் தான்…!

ஆக இந்த மனித வாழ்க்கையில் “வேதனை… வேதனை…” என்று எதை எடுத்தாலும் துயரப்படும் நிலைகள் கொண்டோர் உணர்வுகளில்
1.அதாவது அத்தகைய விஷத்தின் தன்மை கொண்டோர் அனைவருமே
2.பெரும் பகுதி “அமாவாசைப் பக்கம்” தான் ஜாஸ்தி இறப்பார்கள்.
3.அந்த விஷ அலைகள் பரவும் நேரங்கள் தான் அந்த ஆன்மா வெளியிலே செல்லும்.

இந்த உடலை விட்டு அப்படி வந்தது என்றால் பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக எடுத்துக் கொள்கிறதோ அதைப் போல் அந்த விஷமும் இங்கே இந்த உடலில் சேர்த்துக் கொண்ட விஷமும் ஒத்த நிலைகளாகின்றது.

1.அதன் வழி கொண்டு இந்த மனித உடலைச் சவமாக்கி
2.விஷத்தின் தன்மை கொண்ட உணர்வின் அணுக்களாகப் படும் இந்த உயிர்
3.அந்த பாம்பின் ஈர்ப்புக்கு அழைத்துச் சென்று நம்மை பாம்பாகச் செயல்படுத்தும்.

அதே சமயத்தில் ஆடு மாடு மற்ற இவைகள் எல்லாம் ஓர் விஷத்தின் தன்மையைத் தனக்குள் உடலாக்கி அதாவது தான் உணவாக உட்கொண்ட நிலைகளில் இருக்கும் நஞ்சை உடலாக்கிக் கொண்டு அதனுடைய சாணத்தை நல்லதாக மாற்றுகிறது.

இத்தகைய தன்மையில் இந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் விஷத்தின் உணர்வைக் கவர்ந்து அதன் வலிமையின் தன்மை கொண்டு மாடு ஆடாகவோ பிறக்கச் செய்யும்.

ஆனால் மிகவும் அதிக விஷமானால் விஷத்தை பாய்ச்சும் வலுக் கொண்ட பாம்பாகும் நிலை வருகிறது.
1.ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்து மற்றொருவர் ரசித்துச் சந்தோஷப்பட்டால்
2.நிச்சயம் அவர்கள் அடுத்துப் பாம்பாகத் தான் பிறப்பார்கள்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அல்லது வேதனைப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால் அடுத்த கணமே அந்த வேதனையை மறக்க “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ண வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று வேதனைகளை அடக்கிய நஞ்சை வென்று ஒளியாக மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். புருவ மத்தியில் தடுத்துப் பழக வேண்டும்.

அதே போல் வேதனைப்படுவோர் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

வேதனைப்படும் சமயங்களில் எல்லாம் இத்தகைய உணர்வின் வலுவை எடுத்து வலுவாக்கிக் கொண்டால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நமக்குள் வலு கூடி
2.நம் உயிரான்மாவில் அது பெருகி
3.இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கிறோம்.
4.அழியாத ஒளி உடல் பெறுகின்றோம்.

நாம் விண்ணிலே செலுத்திய உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணந்ததை எப்படி உறுதிப்படுத்துவது…?

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் முதலில் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும். வலு ஏற்றிக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் விண்ணிலே உந்திச் செலுத்த வேண்டும். அவருடைய உணர்வு தான் நம் உடல்.

அங்கே சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின் நஞ்சைக் கரைத்த உணர்வுகளில் இந்த ஆன்மாக்கள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.
1.உயிரும் உணர்வும்… நாம் எடுத்துப் பாய்ச்சிய உணர்வின் தன்மை கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.

இருந்தாலும்… இதற்கு முன் நாம் செய்யத் தவறி விட்டோம். இன்னொரு உடலுக்குள் அவர்கள் புகுந்திருக்கலாம்.

காலை துருவ தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இந்த உணர்வுகளைக் கூட்ட கூட்ட
1.அவர்கள் எந்த உடலில் இருந்தாலும் நாம் செலுத்தும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் சேர்க்கப்பட்டு
2.துரித நிலைகள் கொண்டு அவர்களுக்கு நலம் பெறும்.

ஏனென்றால்… இவர் உடலை விட்டுப் பிரியும் போது எந்த நோயின் தன்மை பெற்றாரோ இந்த உணர்வின் இயக்கமாகத் தான் புகுந்த உடலிலே செயல்படுத்தும்.

சார்புடையவர்கள் அந்த ஆன்மா விண் செல்ல வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அவர் உணர்வு இங்கே இருப்பதால் வேறு உடலில் இருந்தாலும் இந்த உணர்வுகள் கலக்கப்பட்டுக் கொண்டே வரும்.

நாளடைவில் வெளிவந்த பின்… துருவ தியானத்தில் நாம் எண்ணி உந்திச் செலுத்தப்படும் பொழுது “எளிதில் அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும்…”

இதிலே அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்தியது… அதற்குண்டான உணர்வுகள் வரும்.
1.அங்கே சொர்க்கம் அடைந்த உணர்வினை உங்களுக்குத் தெளிவாக உணர்த்துவார்கள்.
2.”நான் சொர்க்கத்தில் இருக்கின்றேன்…” என்ற உணர்வினை கனாக்களில் வந்து சொல்வார்கள்… சிலருக்கு அது தெரியும்.

சொர்க்கம் அடையவில்லை என்றால் உடலை விட்டு வந்தபின் என்னை ஏன் நீ அனுப்பவில்லை…? என்று உங்களுக்குள் அந்த உணர்வினை ஊட்டி நினைவுபடுத்தும்.

ஏனென்றால் உடலின் உணர்வுக்குள் ஆசை என்ற உணர்வின் உணர்ச்சியால் நமக்குள் அறியச் செய்யும் உணர்வின் தன்மையும் உண்டு.

அதே போல்… உங்கள் முன்னோர்கள் யாராவது சப்தரிஷி மண்டலம் சென்று விட்டால் அவர் உணர்வு உங்களுக்குள் இருந்தால்
1.இன்னொரு உடலை விட்டு ஆன்மா வெளி வந்தபின்
2.என்னை ஏன் நீ அனுப்பவில்லை…? என்ற உணர்ச்சி உங்களுக்குள் இயக்கப்பட்டு
3.நினைவு கூர்ந்து அவர்களையும் விண்ணுக்குச் செலுத்த முடியும்

ஆனால் இதற்கு முன்னாடி நாம் அவர்களை எல்லாம் பேயாகத்தான் மாற்றி வைத்திருக்கின்றோமே தவிர நல்ல வழியில் செயல்படுத்தவில்லை.

இப்போது நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மறைந்த நிலைகளைக் காட்டி… விண் செலுத்தும் மார்க்கத்தினைத் தான் உங்களைச் செயல்படுத்தச் சொல்கிறோம்.

இது பெரும் சொத்து…! கோடிக்கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத சொத்து

 

அருள் ஞானச் சக்கரத்தை யாம் கொடுத்தால் சிலர் அதிலிருந்து விபூதி வருமா…? மருந்துகள் வருமா…? என்று கேட்கின்றார்கள். எதன் மீது ஆசை போகிறது…?
1.துருவ நட்சத்திரத்தின் அருள் வரும்
2.இருளைப் போக்கும் அருள் சக்தி கிடைக்கும் உண்மைகளை அறியலாம் என்று நான் சொன்னால்
3.விபூதி வராதா…? மருந்து வராதா…! என்று கேட்கின்றார்கள்.

ஏனென்றால் பழைய அன்பர்களுக்கு ஆரம்பத்தில் அப்படிக் கொடுத்த நிலையினை எண்ணிக் கொண்டு அந்த ஆசையிலே கேட்கின்றார்கள்.

அருளைப் பெற வேண்டும் என்று தான் வர வேண்டும். இருளை நாடக்கூடாது.
1.ஆசை என்று வரும் பொழுது இருள் தான்.
2.ஆசையிலே பொருள் வந்தால் மற்றதைச் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது.
3.இருளுக்குள் தான் செல்கிறோம்.

அந்த அருளைப் பெற வேண்டும்… தெரிந்து கொள்ளும் அறிவைப் பெற வேண்டும் என்றால் ஒளிக்குச் செல்கின்றோம்.

ஆகவே… ஆயுள் கால மெம்பர்களாக இருக்கக்கூடிய நமக்கு எது தேவை…? இது பெரும் சொத்து…! கோடிக்கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத சொத்து.

அந்தக் கோடிக்கணக்கான உணர்வின் தன்மை இந்த உடலுக்குப் பின் என்றும் ஏகாந்த நிலை. ஏகாதசி… வைகுண்ட ஏகாதசி…!
1,எதுவுமே நம்மை அழித்துவிட முடியாது
2.என்றுமே நிலையானது அந்த ஒளிச் சரீரத்தைப் பெறுவது தான்.
3.மனிதனின் கடைசி நிலை பிறவி இல்லா நிலை தான்.

அதைத்தான் இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள். கடைசியில் சீதா எங்கே போகின்றது…? நாம் சாப்பிட்டது எல்லாம் சேர்த்து இந்த உடல் பூமிக்குள்… மண்ணுக்குள் தான் போகின்றது.

“மண்ணுக்குப் போகும் உடலுக்காக…” ஏன் இந்த மாதிரி அவஸ்தைப்பட வேண்டும்…? என்று இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

உணர்வின் தன்மை சீதா…!
1.ஒளியின் அறிவாகவும் இருளுக்குள் சிக்காத தன்மை கொண்டு விஷ்ணுவுடன் இணைந்தது.
2.அப்பொழுது அங்கே சொர்க்கம் அடைகின்றது… இது தான் அங்கே காட்டப்பட்டுள்ளது.

இதைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்களிடம் எதைச் சொல்லி நிரூபிப்பது…? சீதா அவஸ்தைப்படுகிறது… இராமன் சந்தேகப்பட்டான்…! என்று சந்தேக உணர்வைத் தான் கொடுக்கின்றார்கள். ஆனால் அதற்குள் எத்தகைய மூலம் இருக்கிறது…? என்பதை அறிய முடியவில்லை.

ஆகையினால் ஆயுள் கால மெம்பர் ஆக வேண்டும் என்றால் பேருக்கு அல்ல… இயற்கையிலே ஆயுள் மெம்பராக வேண்டும். துருவ நட்சத்திரத்துடன் இணைந்தே இருக்க வேண்டும்.

உங்கள் குடும்ப வாழ்க்கையிலோ நண்பருடைய குடும்ப வாழ்க்கையிலோ… எல்லோரும் அருளைப் பெற்று இருளைப் போக்க கூடியவர்களாக மாற வேண்டும்.

1.உங்கள் சொல் பிறருடைய தீமைகளை நீக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
2.உங்கள் சொல்லின் தன்மை சிந்திக்கும் தன்மையை ஊட்டி அவர்களைச் சிக்கலிலிருந்து மீட்டக் கூடிய சக்தியாக மாற வேண்டும்.
3.ஒவ்வொருவரும் அந்த வளர்ச்சிக்கு வர வேண்டும்… அது தான் ஆயுள் கால மெம்பர் என்று சொல்வது.

பிறிதொரு தீமை நமக்குள் புகாதபடி அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் சக்தி வர வேண்டும்.

ஆகவே நீங்கள் மன உறுதி கொண்டு அருள் சக்தியைப் பெறுங்கள். இருளை நீக்குங்கள் உயர்ந்த ஞானத்தைப் பேசி ஒவ்வொரு குடும்பத்தையும் பரிபக்குவ நிலை பெறச் செய்யக்கூடிய சக்திகளாக நீங்கள் மாற வேண்டும்.

அவர்களைப் பக்குவப்படுத்தும் பொழுது அவர்கள் உணர்வு நமக்குள் வராது.

பாசத்தால் உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தால் அந்த வேதனை நிச்சயம் நமக்குள் வரும்.
1.ஆனால் வேதனையை நீக்கக்கூடிய சக்திகளாகத்தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர அதை வளர்க்கும் நிலை வந்து விடக்கூடாது.
2.அருளைப் பெருக்குங்கள்… இருளைப் போக்குங்கள்.

அந்த வழியில் ஆயுள் கால மெம்பராக நீங்கள் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக… ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பயமும் கோபமும் நுகரப்படும் பொழுது அந்தப் பயத்தினால் சிந்திக்கும் தன்மை இழந்து அதனால் வேதனை என்ற உணர்வாகின்றது.

அதே சமயத்தில் வேதனை என்ற உணர்வுகளுடன் கோபம் என்ற உணர்வு அதிகமாகப்படும் பொழுது உடலில் உள்ள உறுப்புகள் சீராக இயங்காதபடி திணறல் வரும் பொழுது தான் அது “ஆஸ்த்மா…” நோயாக வருகின்றது.

ஏனென்றால் அவர் தாய் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது தாய் அதே போல் உணர்வை எடுத்திருக்கும்.
1.வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் கோபம் என்ற உணர்வுகளை அந்தத் தாய் சுவாசித்து
2.சுவாசித்த உணர்வுகள் தாய் உடலில் இரத்தங்களில் கலக்கப்படும் பொழுது
3.அங்கே ஒரு குணத்திற்கும் மற்றொரு குணத்திற்கும் ஒத்துக் கொள்ளாது போர் முறைகள் வரப்படும் பொழுது
4.கருவில் இருக்கக்கூடிய அந்தக் குழந்தைக்கும் இத்தகைய ஆஸ்த்மா நோய் வரக் காரணமாகின்றது.

அந்த நோய் அந்தத் தாய் உடலில் ஒரு தடவை வளர ஆரம்பித்தாலும் அடுத்த குழந்தை அந்தத் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது
1.வேறு வலுவான நல்ல உணர்வை அந்தத் தாய் எடுத்திருந்தால்
2.அந்த வலுவான உணர்வுகளைக் அந்தக் குழந்தையும் பெற்றிருந்தால்
3.அந்தக் குழந்தையின் குடும்பத்தில் இந்தப் பாரம்பரிய ஆஸ்த்மா நோய் வராது.

ஆக அந்தக் குடும்பத்தில் நான்கு குழந்தைகளில் ஒருவர் தாய் கருவில் இருக்கும் பொழுது வலிமை பெற்று அந்த ஆஸ்த்மா நோய் வராதபடி வலிமையான நிலைகள் பெற்றாலும் அவன் வளர்ந்து வரப்படும் பொழுது இந்தக் குடும்பத்தின் பாரம்பரிய நிலைகள் கொண்டு அவனுடைய எண்ணம் அந்தக் கலந்த உணர்வு கொண்டு அடுத்து அது திருமணமானால் அங்கே கருவில் வரக்கூடிய அநக் குழந்தைக்கு ஆஸ்த்மா வரும்.

அது எப்படி…?

ஏனென்றால் அடிக்கடி குடும்பத்தில் வந்த அந்த ஆஸ்த்மா நோயைப் பற்றிப் பேசத் தொடங்கினால் போதும்…!
1.நான் அவரைப் பார்த்தேன் இப்படி இருந்தார்கள்…. இவரைப் பார்த்தேன் இப்படி இருந்தார்கள்…! என்றும்
2.எங்கள் பாட்டிக்கு ஆஸ்த்மா இருந்தது எங்கள் தாத்தாவிற்கு இப்படி இருந்தது என்றும்
3.அந்த நோய்களைப் பற்றி எண்ண ஆரம்பித்தால் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால்
4.அந்தப் பாரம்பரிய நோய் அவர்களின் குழந்தைக்கு நிச்சயம் வந்துவிடும்.
5.அதாவது அவருடைய தாய்க்கு ஆஸ்த்மா நோய் இருக்கும் இவருக்கு அந்த நோய் இருக்காது ஆனால் அவருடைய குழந்தைக்கு அந்த நோய் வரும்.

சொல்வது அரத்தமாகிறதல்லவா…!

இதைப் போலத் தான் நாம் நுகரும் உணர்வுகளுக்கொப்ப நம்முடைய உடல்கள் மாற்றம்… குணங்கள் மாற்றம்… இதைப் போன்ற நிலைகள் எல்லாம் அதிகரித்து விடுகின்றது.

தாய் கருவில் பெற்ற உணர்வுகள் எப்படி எல்லாம் நம்மை இயக்குகிறது என்பதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

சந்தர்ப்பத்தால் வரும் இத்தகைய தீமைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத்தான் நம் குருநாதர் காட்டிய மெய் வழியை உங்களுக்கு உணர்த்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறும்படி செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படர வேண்டும் என்று அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து வந்தால் அத்தகைய நோய்களையும் தீமைகளையும் அகற்ற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு நோயாளியை உற்றுப் பார்த்து “இப்படி ஆகிவிட்டதே…!” என்று அதை நுகர்ந்தறிந்து அவருக்கு உதவி செய்தாலும் அவன் உடலில் வந்த நோயின் விளைவுகள் இங்கே காற்றிலே உண்டு. நமக்குள்ளும் பதிவாகி இருக்கின்றது.

மீண்டும் அவனை எண்ணும் பொழுதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து நமக்கும் நோயாகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

நோயாளியைப் பார்த்து உதவி செய்தோம். மற்றவர்கள் வேதனைப்படுகின்றார்கள் என்று பார்த்து அதை அறிந்து கொள்கின்றோம். அப்படிக் கஷ்டப்படுபவர்களுக்கு எல்லம் நாம் உதவி செய்து கொண்டே தான் இருக்கின்றோம். (அந்த வேதனைகளை நாம் துடைப்பதில்லை)

1.ஆனால் அவர்கள் உடலிலுள்ள வேதனைகளைத் தெரிந்து கொண்ட பின்
2.இப்படி ஒரு பத்துப் பேருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் அறிந்து உதவி செய்தால்
3.உதவி செய்தவருக்கே அந்த நோய் வருகிறது.

உதவி செய்தவருக்கு நோய் வந்த நிலையில் கடைசியில் என்ன சொல்வார்.
1.நான் எல்லோருக்கும் உதவி செய்தேன்
2.என்னை ஆண்டவன் சோதிக்கின்றார்..! என்பார்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. நாம் எண்ணியதை எல்லாம் உடலாக்குகின்றது. அதைத்தான் நம் உயிர் ஆண்டவனாக இருந்து ஆள்கின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

1.ஆண்டவன் எங்கேயோ இருக்கின்றான்…! என்ற நிலையில் சாங்கியங்களைச் செய்து… அர்ச்சனை செய்து…
2.அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்…! என்றால் அது அல்ல அர்ச்சனை.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது
1.உயிரிலே படுகின்றது… அபிஷேகம் நடக்கின்றது.
2.அந்த உணர்ச்சியின் ஒலி அலைகள் உடலிலே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி எடுத்த உணர்வுகள் அந்த உணர்ச்சியின் அலைகளாக நமக்குள் சேர்கின்றது.
4.இது தான் உண்மையான அர்ச்சனை.

மனிதனின் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும்…? என்று ஞானிகள் கற்பித்த இந்த உணர்வுகளை நாம் எப்படிப் பழகுதல் வேண்டும்…?

நம் பூமியின் வடதுருவப் பகுதியில் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளி வரும் உணர்வலைகளைச் சூரியனின் காந்தப்புலன் கவர்கின்றது. அலைகளாக மாற்றி வருவதை நம் பூமி துருவத்தின் வழி கவர்கின்றது. நமக்கு முன்னாடி இங்கே வருகின்றது.

அவ்வாறு வரும் அந்த உணர்வின் தன்மைகளை நுகர்ந்து நம் உடலிலே சேர்க்க வேண்டும். ஆகவே அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் அந்தத் துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி ஏங்கிப் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.. எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்தி அதை பல முறை தியானிக்க வேண்டும்.

அப்பொழுது அந்த அகஸ்தியன் எதைக் கண்டானோ அதை எல்லாம் நாம் நுகர்கின்றோம். இப்படி அந்த அருள் சக்திகளை அதிகாலையில் பெற்றுப் பழகிக் கொண்டால்
1.அதற்குப் பின் எப்பொழுது வேண்டும் என்றாலும்
2.அதை எடுத்து நல்லதாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

நமது இலட்சியம்

 

என்னுடைய முழுமையான தியானமே… பிறரின் தீமைகளைப் போக்கும் சக்தி பெற்ற மகான்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும். அதைக் கண்டு தான் எனக்குச் சந்தோஷம்.

இந்த உடல் இச்சைக்காக யாரும் அதை மாற்றி விடக்கூடாது.

யாம் கொடுக்கும் சக்தியைப் பெற்ற நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைகளில் மக்களுக்கு வழி காட்டியாக வரவேண்டும்.

எம்முடைய உபதேசத்தின் உட்கருத்துக்களை நீங்கள் உணர்ந்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களுக்கு…
1.அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது…?
2.அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்ற உபாயத்தைக் கூறிப் பதிவு செய்து
3.அந்த பதிவின் மூலம் அவர்கள் எண்ணத்தால் தீமையிலிருந்து விடுபடுவதும்
4.அதே போல் தீமை செய்வோர் தீமைகளை நிறுத்திக் கொள்வதும்
5.ஆக… நன்மை செய்யும் உணர்வுள்ள மக்களாக மாற்றும் திறன் நீங்கள் பெற வேண்டும்.

இன்றைய உலகில் கடுமையான விஷத்தன்மைகள் சுழலப்படும் பொழுது தேடிய செல்வங்கள் இருந்தாலும் அதைக் காக்கும் திறன் நமக்கு இல்லை.

உடலைக் காக்கும் திறன் முதலில் வரவேண்டும். உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலை அடைய வேண்டும் அந்த முழுமையின் தன்மை நாம் அடைதல் வேண்டும். இது தான் நமது லட்சியமே…!

இந்த லட்சியத்துடன் நாம் சென்றால் செல்வத்தை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை… அது தன்னாலே வந்து சேரும். ஆனால் செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அந்த ஆசையின் நிலையில் உடல் பற்று தான் வரும்.

1.எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சப்படும் பொழுது அவர்களை நல்லவராக மாற்ற முடியும்.
2.அவருடைய தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் வராதபடி தடுக்க முடியும்.

சந்தர்ப்பத்தில்… நம் காதுகளில் படும் படியாகக் கூட சிலர் நிறைய குறை பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல மனம் வர வேண்டும்… நல்ல நிலை பெறட்டும்…! என்று தான் எண்ண வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்கின்றார்கள்… பதிலுக்கு ஏதாவது செய்து பார்க்கலாமா…? நம்மைத் திட்டுகின்றார்களே…! பதிலுக்கு நாம் கஷ்டத்தை அவர்களுக்கு உண்டாக்கலாமா…? என்று எதையும் செய்யக் கூடாது.

அவர்கள் திருந்தி வாழத்தான் நல் உணர்வைப் பாய்ச்ச வேண்டுமே தவிர கஷ்டத்தை உண்டாக்கக் கூடாது.
1.அவர் எடுக்கக்கூடிய உணர்வுகள் அதைத் திரும்பிப் பார்க்கப்படும் பொழுது
2.”அவர்களாகத்தான் திருந்தி வர வேண்டுமே தவிர…” அவர்களுக்கு நாம் கஷ்டத்தை உண்டாக்கவே கூடாது.

காரணம்… அந்தத் தவறுகள் நமக்கும் துன்பத்தைக் கொடுத்துவிடும். அவர்கள் நல் வழியில் திருந்தி வர வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் வளர்க்க வேண்டும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அந்த உணர்வின் தன்மை ஆகின்றாய். நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் அரங்கநாதன். ஆகவே எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வைக் கொண்டு நம்மை ஆளுகின்றது.
1.நம் சொல்லைக் கொண்டு பிறர் தீமைகளைப் போக்கும் ஆட்சியாக வர வேண்டும்.
2.நம் சொல் பிறரின் தீமைகளைப் போக்கி… உண்மைகளை அவர்கள் அறியும் நிலையாக அது வர வேண்டும்.

ஆனால்… கேட்கவில்லை என்றால் அந்த உடலில் இருக்கக்கூடிய தீமைகள் நன்மையைப் பெற விடாது தடுக்கின்றது என்று பொருள்.

இருந்தாலும்… எப்படியும் அவர்களுக்குள் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற நிலையும் அவர் உடலை அறியாது சேர்ந்து அசுத்தங்கள் நீங்க வேண்டும் என்ற உணர்வைத் தான் நாம் செயல்படுத்த வேண்டும்.

இருபது வருடம் நான் பட்ட அவஸ்தைகள் இன்னது தான் என்று சொல்ல முடியாது. காரணம் மனிதர்கள் ஒவ்வொருவரும் எத்தனையோ வேதனைப்படுகிறார்கள். குடும்பத்தில் எத்தனையோ அவஸ்தைப்படுகிறார்கள்… அவர்களுக்கு வழி காட்டுவது யார்…? என்று குருநாதர் என்னை உணரும்படிச் செய்கிறார்.

ஆக… இந்த உயிரே மனித உடலை உருவாக்கியது. அறியாத நிலைகளில் தீமைகள் உடலில் புகுந்து விடுகின்றது… தெளிவான நிலையில் செயல்பட விடாதபடி தடுக்கிறது.

1.அவர்களுக்கு உயர்ந்த நிலைகளை ஊட்டிக் காத்திடும் செயலாகச் செயல்படும் பொழுது அந்தக் காத்திடும் உணர்வு நமக்குள் வருகின்றது.
2.அதன் மூலம் இந்தப் பூமியான பரமாத்மாவிலும் நல்ல நிலைகள் பரவுகின்றது.

அது பரவும் பொழுது… தீமையை மாற்றிடும் சக்தியாக ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெற்று அதே உணர்வுகள் ஒவ்வொருவரிடம் இருந்து வெளிப்படும் பொழுது “இந்தப் பூமியும் பரிசுத்தமாகின்றது…”

நம் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் நல்ல உணர்வுகள் இந்தப் பூமியைச் சொர்க்கபூமியாக மாற்றி அமைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு அன்பர் ஞானத்தின் வழியில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தனக்குள் தீமையின் பலன்கள் அதிகமாகப் பெருகுகிறதே…! என்ற நிலையில்
1.அதிலிருந்து நாம் எப்படியாவது விடுபட வேண்டும்
2.இனி நாம் பிறவி இல்லா நிலை தான் அடைய வேண்டும். என்ற ஏக்கத்தில்
3.தன் உயிரை ஈசனாகத் துணிவுடன் மதிக்கத் தொடங்கினார்.

இந்த உயிரான ஈசன் வெளியே சென்று விட்டால் தன் உடலான சிவம் இது சவம் தான்…! பின் எந்த விதமான மதிப்பும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

இந்த உயிரின் நிலைகளில் தான் நுகர்ந்த உணர்வு கொண்டுதான் இந்த உடலை அமைத்தது. தன் உடலுக்குள் வேதனை பயம் சஞ்சலம் சலிப்பு போன்ற பல உணர்வுகள் வரப்படும் போதுதான் இந்த உடலான சிவத்தில் (தன் உடலில்) கடுமையான நோய்களும் பல இன்னல்களும் வந்தது என்பதை அவரே உணர்ந்தார்.

1.நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்…! உயிரை நாம் எப்படி மதித்தல் வேண்டும் என்றும்
2.தீமை என்ற நிலைகளை எப்படி அகற்ற வேண்டும் என்றும்
3.தன் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும்
4.யாம் (ஞானகுரு) கூறிய வழிப்படி தியானம் இருந்தார்… தன் உயிரை மதித்தார்.

ஆகவே இந்த உடலில்… அதாவது சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகளை அதிகமாக நுகர நேர்ந்தால் அதனால் தன் உடலில் எப்படி நோயின் தன்மை வலிமை பெறுகின்றது என்பதை நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… உணர…உணர… தனது வயதின் நிலைமையையும் உணர்ந்து தன்னுடைய குழந்தைகளை அவர் எண்ணிப் பார்க்கவும் செய்தார்.

அப்போது என்னைத் தேடி வந்து உபதேசம் கேட்பார்…! அதற்கு நான் அவரிடம் சொன்னது..

நான் (ஞானகுரு) இருக்கிறேன் என்றால் ஈஸ்வரபட்டரை நான் சந்திப்பதற்கு முன்னாடி… இந்தத் தியானத்தை நான் செய்வதற்கு முன்னாடி… “என் உடலில் எத்தனையோ விதமான உணர்வுகள் உண்டு…!”

என்னை எத்தனையோ பேர் சந்தித்து அவர்கள் கஷ்டம்… நஷ்டம்… துன்பம்.. வேதனை.. சங்கடம்.. என்று எல்லாவற்றையும் சொல்கிறார்கள். அதை எல்லாம் காதில் கேட்ட உடனே அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…?

உடலில் உள்ள அந்த வெறுப்பான அணுக்களும் தீய அணுக்களும் அதனால் ஏற்பட்ட உணர்வுகள் அது உணவாக எடுத்து அது பெருகத் தொடங்கிவிடும்.

அந்த மாதிரி ஆகாதபடி
1.ஈஸ்வரபட்டர் எனக்கு உபதேசித்த வழிப்படி உடனக்குடன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஆத்ம சுத்தி செய்து அதை எப்படி குறைக்க வேண்டும்..,.? என்று தெரிந்து கொண்டேன்.

அப்படிக் குறைத்து நல்லதாக்கிய என்னுடைய அனுபவத்தை அவருக்கு எடுத்துச் சொன்னேன். அதே வழியினை நீங்களும் கடைப்பிடியுங்கள்…! என்று சொன்னேன்.

அதன் வழியினை அவரும் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் குரு அருளும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் உள்ளோர் தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்கை வாழ வேண்டும் என்பார்
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். குரு காட்டிய அருள் வழியில் நடந்து அந்த நெறியைத் தவறாது பின்பற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி என்னிடம் கேட்பார்.

தன் வாழ்கையில் வந்த கடுமையான நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை அனைவரும் பெற வேண்டும்… பெற வேண்டும் என்றும்
1.திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் அவருக்குள் விளைகின்றது.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் அவருக்குள் பெருகுகின்றது.
3.இந்த உடலில் பற்று வராது அருள் உணர்வுகளை அவர் பற்றுடன் பற்றினார்.

சில நேரங்களில் அவருக்குக் கோபம் வரும்… வெறுப்பான உணர்வு வரும்… வீட்டில் சண்டை வரும்..! ஏதாவது தவறாகச் சொல்லி விட்டால் உடனே கோபம் வரும்.

அப்பொழுது அந்தக் கோபம் வந்துவிட்டதே…! என்று என்னிடம் வந்து “சாமி… எனக்கு இந்த உடல் பற்று வருகிறது…! அதை மாற்ற வேண்டும்…!” என்று கேட்பார்.

வெளியிலே யாராவது ஏதாவது தவறுகள் செய்தாலும் உடனே அவருக்குக் கோபம் வரும். உடனே என்னிடம் வந்து சொல்வார்.
1.அந்தக் கோபம் என்னை இயக்குகிறது… அதிலிருந்து நான் தப்பிக்க வேண்டும்.
2.அதற்கு குருநாதரின் அருள் சக்தி “எனக்கு அதிகமாக வேண்டும்…”
3.குரு அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் அதிகமாகப் பெற்று
4.எனக்குள் இருக்கும் அந்த இருள் எல்லாம் நீங்க வேண்டும்.
5.நான் ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

இது தான் அவர் என்னிடம் பேசும் பேச்சு…!

இந்த உடல் பற்று இருக்கும் போது அதை மாற்றச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு அரை மணி நேரமாவது தியானம் செய்து… அதைக் குறைக்க வேண்டும் என்ற முயற்சி எடுப்பார்.

சாதாரணமாக நம் கையில் ஒரு அழுக்குப் பட்டால் உடனே அதை நாம் துடைக்கின்றோம் அல்லவா…! இதைப் போலத் தான் அவர் வாழ்கையில் ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் அதீதமான நிலைகள் இருந்தாலும் அதைத் தடைபடுத்தி நல்லதாக்கும் முயற்சிகளை அவர் எடுப்பார்.

1.தன் உடலில் முதலில் உருவான தீமை செய்யும் அணுக்கள் தன் உணவுக்காக உணர்ச்சிகள் உந்தப்படும் போது
2.அந்த உணர்வுகள் அதிகரித்து விட்டால் இவருடைய நல்ல சிந்தனைகள் குறைவதும்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடியாத நிலை வருவதும்
4.அதை உணர்ந்து கொண்ட நிலையில் அதை எப்படித் தெளிவாக்கி நல்லதாக்கிக் கொள்ள வேண்டும் என்று உடனே என்னிடம் நேரடியாக வருவார்.
5.இப்பொழுது எனக்குள் என்ன நடக்கிறது…? இதை நல்லதாக மாற்ற உடனே நான் என்ன செய்ய வேண்டும்…? என்று கேட்பார்.

நீங்கள் அங்கே இருந்த இடத்திலிருந்தே இந்த அருள் சக்தியை எடுக்கலாம் என்று நான் சொன்னேன்.

இருந்த இடத்திலிருந்து எடுக்கிறேன். ஆனாலும் குருவிடம் (ஞானகுரு) நல்ல வாக்கைக் கேட்டோம் என்றால் எனக்கு அந்த வலிமை கிடைக்கும். “அதற்குத் தான் நான் வந்தேன்…!” என்பார்.

கோபம் வரும்போதெல்லாம் நீங்கள் சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்பேன். அந்த அருள் சக்தி என் உடலில் படர வேண்டும் என்று வலுவேற்றிக் கொண்டு எனக்குள் வரக்கூடிய கோபத்தையோ சலிப்பையோ சஞ்சலத்தையோ நான் குறைப்பேன் என்பார்.

நடந்த நிகழ்ச்சி இது.

“விதி…” உண்டு…! என்றால் அது எப்படி…?

 

தாய் கருவிலே சிசு வளரப்படும்போது தாய் எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வினைப் பதிவாக்குகின்றதோ அதுவே அந்தக் குழந்தைக்குப் பூர்வ புண்ணியம் ஆகிறது.
1.அந்த உணர்வே விதியாகி வளர்ச்சியாகிக் கொண்டிருக்கும்.
2.அந்தத் தருணம் வரப்படும் பொழுது அதன் பயனாக இயக்கிவிடும்.

உதாரணமாக… ஒரு தாய் நோயாளியை உற்றுப் பார்க்கிறது… அந்த உணர்வுகள் பதிவானது. நோயாளியின் உணர்வுகள் தாய் இரத்தத்தின் மூலமாகக் கருவிலே வளர்ச்சியடைந்து குழந்தையாகப் பிறக்கப்படும் பொழுது அந்த விதிப்படி அவனுக்கு நோய் வந்தே தான் தீரும்.

அதை மாற்ற ஜோதிடம் பார்த்தேன் அதைச் செய்தேன் மருத்துவரிடம் சென்றேன் என்றாலும் விதிப்படி நடக்கத் தான் செய்யும்.

மருத்துவர் கொடுக்கக்கூடிய மருந்துகள் ஒட்டாது. அந்தத் தருணம் வந்தபின் அந்த மருத்துவர் கொடுத்த மருந்தில் உள்ள நஞ்சைத் தன்னுடன் இணைத்து இணைத்து அதுவும் பெருகி அவனை வீழ்த்திய தீரும்.
1.சிறிது நாளைக்கு வலியிலிருந்து வேண்டுமென்றால் தப்பலாம்.
2.அந்த விஷத்தைத் தனக்குள் எடுத்து… மற்ற உறுப்புகளை வீழ்த்தி விதிப்படி அவன் மடிந்தே தீருவான் – விதி…!

விதி என்ற ரூபம் இப்படித்தான் வருகிறது.

பிறந்த பின் வருவதெல்லாம் அது விதியாகாது…! தாய் கருவிலே வளர்க்கப்படும் பொழுது அது எதை எதையெல்லாம் தனக்குள் உருவாக்கி உள்ளதோ “இந்த விதியின் பலனே நடக்கும்…”

தாய் கருவுற்றிருக்கும் போது ஒரு தத்துவத்தைப் பேசி உயர்ந்த ஞானத்தைப் பேசி அதன் வழி “இந்த மகான் உயர்ந்தார்…” என்ற ஏக்கத்துடன் ஏங்கி இருக்கலாம்.

சந்தர்ப்பத்தில்… குடும்பத்திலே சிக்கல்கள் அதிகமாகும் பொழுது
1.தாய் மகான்களை எண்ணி அந்த மகானின் உணர்வு தன் குடும்பத்தில் படர வேண்டும் என்று
2.அந்த எண்ணத்தைத் தாய் ஓங்கிச் செயல்படுத்தி இருந்தால் அந்த உணர்வுடன் இருக்கும் நிலையில்
3.யாரோ ஒரு சாது அன்று அந்த வீட்டிற்கு வரப்படும் பொழுது அந்த மகானின் அருள் பெற வேண்டும் என்று எண்ணும் நிலையில்
4.அவருக்குச் சக்தி இருக்கின்றதோ இல்லையோ…
5.அவரை மகானாக எண்ணி அந்த உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது “அந்த உயர்ந்த உணர்வு…” பதிவாகி விடுகிறது.

யாசகத்திற்கு இந்த தாய் அவருக்கு உணவு கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். “நீ நன்றாக இரம்மா… உன் குடும்பம் நன்றாக இருக்கும்…” என்று அவர் சொல்லி அதை இவர் பதிவாக்கப்படும் பொழுது
1.இந்த உணர்வின் தன்மை கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு “அது விதியாகின்றது…”
2.அந்த விதிப்படி அதனின் வளர்ச்சிகள் அவன் வளர வளர எதிர்பார்க்காதபடி குடும்பத்தில் காரியங்கள் சித்தியாகும்.

ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் ஒருவன் செல்வங்களைத் தொலைத்துக் கொண்டிருப்பான். ஒருவன் வளர்த்துக் கொண்டிருப்பான்.

குடும்பம் தரித்திரமான நிலையில் இருக்கும். தாய் கருவுற்றிருக்கும் போது நோயாளியைப் பரிவுடன் பார்த்து.. அவர் உணர்வை எடுத்துக் கொண்ட பின் குழந்தை பிறந்த பின் நலிந்து கொண்டேயிருப்பான்.

அவனை எண்ணும் பொழுதெல்லாம் தாய் வேதனைப்பட்டு கொண்டிருக்கும். இந்த வேதனை குடும்பத்தில் அனைத்தையும் மாற்றிக் கொண்டேயிருக்கும்.

ஆனால்…
1.மகானின் உணர்வு பதிவாகி வளர்ச்சி பெற்ற குழந்தை தீமைகளை வென்றிடும் சக்தியாக அவன் வருவான்
2.இது எல்லாம் விதிப்படி நடப்பது என்று சொல்வது.

அதனால் தான் மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.

உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் ஒரு தீமையைப் பார்க்கின்றோம் அந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக உருவாகிறது. அந்த வித்து முளைக்காதபடி தடுப்பது மதி.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மதி கொண்டு அதைத் தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
2.அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் வளராதபடி “முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றது…”

புளியங்கொட்டையை நாம் தூக்கிப் போட்டாலும் அது குப்பையில் தான் விளையும். பின்… அது வளர்ச்சி அடைந்து வீட்டின் அருகில் வந்து விட்டால் விழுதுகளைப் பரப்பிப் அது பெரும் விருட்சமாக மாறுகின்றது.

வளர்ந்த பின் அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றால்… வெட்டுவதற்கு நிறைய பந்தோபஸ்து செய்ய வேண்டும் பெரிய கோடாலி எல்லாம் வேண்டும்.

வெட்டும் பொழுது தெரியாமல் வீட்டிலே சாய்ந்து விட்டால் கட்டிடத்தை நொறுக்கிவிடும். ஆகவே அதைச் சிறுகச் சிறுக வெட்ட வேண்டும். அதாவது… நாம் மதி கொண்டு வீடு இடியாமல் நாம் வெட்ட வேண்டும்.

மதி கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காகத் தான் ஞானிகள் மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவு செய்து கொண்டு வருகிறோம்.
1.அதை நீங்கள் எந்த நேரமும் எண்ணி எடுத்து
2.அவ்வப்போது தீமைகள் உங்களுக்குள் புகாது… அது உடலில் விதியாக வளர்ந்திடாது மாற்றிட முடியும்.

விதியை மதியால் மாற்ற முடியும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கேள்வி:-
தியானத்தின் மூலம் என் தந்தையை விண் செலுத்தினேன். அதனுடைய பலன் என் சகோதரர்களுக்குக் கிடைக்குமா…? ஆனால் அவர்கள் என்னைப் போன்று இந்தத் தியானத்தைச் செய்யவில்லை… அதிலே ஈடுபடவும் இல்லை

பதில்:-
இந்தத் தியான வழியினை நீங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்… அந்தச் சக்தி உங்களுக்குள் கூடிக் கொண்டிருக்கிறது
1.உங்கள் தந்தையின் உணர்வுகள் தான் உங்கள் உடல்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற தந்தையின் உயிரான்மாவைத் தியானத்தின் மூலம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றீர்கள்.
3.அவர் உடல் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைக்கப்படுகின்றது
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக தந்தையின் உயிரான்மா சுற்றிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தாய் இங்கே உடலுடன் இருக்கின்றார்கள். அவர்கள் பிரியும் போது இதே முறை கொண்டு தாயின் உயிரான்மாவையும் விண் செலுத்தினால் இரண்டு பேரும் ஒன்று சேர்த்து ஒரு உணர்வின் கருவாக உருவாகி… என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பார்கள்.

அதே சமயத்தில் அவர் வாழ்ந்த காலங்களில் வெளிப்படுத்திய சில இருளான தன்மைகள் இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறப்படும் பொழுது அந்தச் சக்தி எளிதில் கிடைக்கின்றது.

அதாவது…
1.தீமைகளை நீக்கக்கூடிய சக்தியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.
2.எனக்குக் கிடைக்கின்றது… குடும்பத்தில் என்னுடன் பிறந்த சகோதரர்களுக்கு அது ஏன் கிடைக்காமல் போகும்…? என்று நீங்கள் கேட்கலாம்.

அவர்களுடைய உணர்வு இதன் மேல் பற்று இல்லை.

உதாரணமாக… ரேடியோ டிவி அலைகளை ஒலி… ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ… அதைத்தான் அது இழுத்துக் கொண்டு வரும். அதைத்தான் நாம் பார்க்க அல்லது கேட்க முடியும்.

ஏனென்றால் இந்தக் காற்றிலே எல்லாமே இருக்கின்றது.

அது போல் தந்தையை நீங்கள் தியானத்தின் வழியில் விண் செலுத்தும் போது… “விண் செலுத்திய வலுவான உணர்வு” உங்களுக்குள் இருக்கின்றது அப்பொழுது எளிதில் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று உங்களுக்குள் வரக்கூடிய சிரமங்களைப் போக்கிக் கொள்ள முடிகிறது.

போக்கிக் கொண்ட பிற்பாடு உங்களுடன் பிறந்த சகோதரர்கள்… அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் அந்த திறன் பெற வேண்டும்… என்று “பிரார்த்திக்க வேண்டியது உங்களுடைய கடமை…!”

ஆனால்…
1.தியானிக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறோம்… சகோதரர்கள் கேட்கவில்லை என்று வேதனைப்பட்டால்
2.நீங்கள் இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சக்தியையும் இழக்க நேரும்.

ஏனென்றால் விஷத்தின் தன்மை வரப்படும் போது சிந்திக்கும் தன்மை இங்கே இழக்கப்படுகின்றது. உங்களை அறியாமல் அவர்கள் நிலைக்குத் தான் செல்கிறீர்கள்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…!

அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… இந்த அருள் வழியில் வாழ வேண்டும் என்ற ஆசையை ஊட்டலாம் சகோதரர்களுக்கு…!
1.ஆனால் அவர்கள் பெறவில்லை… கடைப்பிடிக்கவில்லையே… என்று வருத்தப்பட வேண்டியதில்லை
2.அவர்கள் அதை பெற்று வளர வேண்டும் என்று நமக்குள் ஆசையைக் கூட்டுவதால் தவறில்லை.

இதைச் செய்யவில்லை என்கிற போது உங்கள் தந்தைக்கு எந்த நோய் வந்ததோ அது அவர்களுக்கு வரும். அது மட்டுமல்ல… அவர்கள் குழந்தைகளுக்கும் வரும்… பரம்பரை நோய் என்று…!

ஆனால் “நீங்கள் செய்யக்கூடிய தியானம்…” உங்களுக்கும் சரி… உங்கள் சார்புடையவர்களுக்கும் சரி… அந்தப் பரம்பரை நோய் வராதபடி தடுக்கும்.

முறைப்படி உங்கள் தாய் தந்தையரை விண் செலுத்தும் போது சப்தரிஷி மண்டலங்களின் சக்தி எளிதில் கிடைத்து அதன் மூலம்
1.சிந்திக்கக் கூடிய சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
2.தீமை என்றால் அதை முன் கூட்டியே உணர முடியும்.
3.தீமைகள் வராது தடுத்துக் கொள்ளக்கூடிய அந்த ஞானமும் உங்களுக்குள் வளரும்.

தாய் தந்தையரை விண் செலுத்தி அதன் தொடர்பு கொண்ட உணர்வுகள் உங்களுக்குள் வளரப்படும் பொழுது நாளடைவில்
1.உங்கள் குலதெய்வங்கள்… உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் இருந்தாலும்
2.தொடர்ந்து விண் செலுத்தும் உணர்வுடன் நீங்கள் செயல்படும் போது
3.அதனுடன் ஈர்க்கப்பட்டு… “என்னையும் நீ விண் செலுத்து…” என்று கேட்கும் உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்… பார்க்கலாம்.
4.அவர்கள் விண் சென்றதையும் நீங்கள் உணரலாம்… அதைக் காட்சியாகவும் கூடக் காண முடியும்.

சென்று விட்டார்களா…! இல்லையா…? என்று நீங்கள் தனித்துப் பார்க்க வேண்டியது இல்லை. தொடர்ந்து இந்த உணர்வுகளைச் செயல்படுத்தி வந்தால் “நான் விண்ணிலே இருக்கின்றேன்…! என்று உங்களுக்குக் கனாக்களில் உணர்த்துவார்கள்…”

ஆகவே இத்தகைய விண் செலுத்தும் மார்க்கம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது உங்களுடைய கடமை…! அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். மற்றவர்கள் செய்யவில்லை என்ற எண்ணம் உங்களுக்குத் தேவையில்லை.

முன்னோர்களைக் கனியாக்கி… நாமும் கனியாகி… சந்ததியினரையும் கனியாக்கும் (ஒளியாக்கும்) முறை

 

உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்…!

சொந்த பந்தமாக இருந்தாலும்… தன் குடும்பத்தாராக இருந்தாலும்… அவர்கள் உடலை விட்டு ஆன்மா பிரிகிறது என்றால்… அடுத்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி
2.அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்துங்கள்.

பின்…
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வமான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெருநிலை என்ற நிலை அடைதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால்… அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் இதை வலுப்படுத்தி இந்த வலுவின் துணை கொண்டு அந்த ஆன்மாவை… சூட்சம சரீரத்தை விண் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தினால்…
1.நாம் மேல் நோக்கி விண் செலுத்திய அந்த உணர்வின் தன்மையை… நாம் மீண்டும் நுகரப்படும் பொழுது
2.இங்கே அந்த (முன்னோர்ளைப் பற்றிய) ஈர்ப்பின் சக்தியை… அந்த உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து கொள்கின்றது
3.அவ்வாறு அது கவர்வதனால்… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா நமக்குள் உட்புகாது தடுத்து நிறுத்துகின்றது.

ஏனென்றால்… அவர்கள் உணர்வுகள் நமக்குள் இருக்கும் நிலையில்
1.நாம் விண் செலுத்தத் தவறினால்… நம் ஆன்மாவில் வந்து விட்டால் “நம் சுவாசத்தின் வழி…” உடலுக்குள் நிச்சயம் சென்றுவிடும்.
2.ஆகவே இதன் வழி அடைத்துவிட்டு உணர்வினை ஒளியாக்குதல் வேண்டும்.

மாறாக… மேலே சொன்னபடி விண்ணுக்கு அனுப்பினால் அந்த உணர்வுகளைச் சூரியனுடைய காந்தப் புலனறிவு… அதை அங்கே தனக்குள் கவர்ந்து சென்றுவிடும்.

இந்த உடலிலே பெற்ற நோயின் உணர்வை… அந்த உணர்ச்சிகளை அங்கே கரைத்து விடும்.

ஆகவே உயிருடன் ஒன்றிய நிலைகளில்
1.”தான் வாழ வேண்டும்…” என்ற உணர்வின் தன்மை அங்கே ஒளியாகின்றது.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை “அது உணவாக எடுத்து…” அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழலும்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்த கோள்கள் எப்படி அதனைச் சுழன்று வாழ்கின்றதோ இதைப் போல துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் வலுவாக்கி விட்டால்… அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் அடுத்து நம் மூதாதையரின் உயிரான்மாக்கள் அங்கே செல்கின்றது.

அதே போல… நண்பன் என்று நாம் பழகிய நிலைகள் அவர் சந்தர்ப்பத்தால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் (இறந்தவர் யாராக இருந்தாலும்… நாம் கேள்விப்பட்டால்) அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைய வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்டு
2.”இத்தகைய அடைப்பாக நாம் அமைத்துக் கொண்டு…” அந்த ஆன்மாக்கள் நமக்குள் புகாதபடி இங்கே தடுக்க வேண்டும்.

இதைத்தான் இராமாயணத்தில் வாலியை… இராமன் மறைந்திருந்து தாக்கினான்…! என்று சொல்வது. அதாவது… துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து நமக்குள் அடைத்து விட்டால் “எந்த ஆன்மாவும் உள்ளே செல்லாது…”

இவ்வாறு நம் முன்னோர்களை விண் செலுத்தி விட்டால் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியையும் நாம் எளிதில் பெற அது உதவுகின்றது.

அவர்கள் முதலிலே மனிதனாளர்கள்… அடுத்து நம்மை அவர்கள் தான் மனிதனாக உருவாக்கினார்கள்.

உதாரணமாக…
1.ஒரு விழுதின் தன்மை மரமாக வளரப்படும்போது… விழுது எப்படி அதைக் கனியாக்குகின்றதோ
2.இதைப் போன்று நாம் முன்னோர்களைக் கனியாக்க வேண்டும்
3.ஏனென்றால் கனியாக உருவாக்குவது அதன் விழுதுகளே…!
4.(மரம் – முன்னோர்கள்… விழுது – நாம்)
5.ஆகவே… நாம் இதை முறைப்படுத்திச் செய்தால் அவர்கள் கனியாகின்றார்கள்.

கனி என்பது… உயிர் ஒளி. குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த உயிருடன் ஒன்றும் “அனைத்தும் ஒளியாக்கப்படும் பொழுது…” கனியாகின்றது…!

கனியின் தன்மை அடைந்த பின்… அதாவது விழுதுகளான நாம் அதை உருவாக்கப்படும் பொழுது
1.அந்தக் கனியின் தன்மையை நாம் விழுங்கும் பொழுது…
2.அது எப்படிக் கனியானதோ… அதை (அதே) முறைப்படுத்தி நாமும்…
3.நம் உணர்வுகள் (உயிருடன் ஒன்றுவது) கனியாகி… பிறவி இல்லா என்ற நிலை அடைகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மனிதன் நோயால் மிகவும் வாடுகின்றான். அவன் வேதனைப்படுகின்றான். ஆக நல்ல உடலாக ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் சந்தர்ப்பத்தால் குடும்பத்திலோ அல்லது மற்ற வகைகளிலோ எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடந்து அதனால் வேதனை என்ற விஷங்கள் அதிகரித்து விட்டால்
1.நல்ல உடல் அதனுடைய வலுவை இழக்கின்றது.
2.உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சுருங்கத் தொடங்குகின்றது.

காரணம் விஷத்தின் ஆற்றல் உடலில் அதிகரித்து விட்டால் நல்ல உணர்வின் சத்தைக் கவர்ந்த உறுப்புகள் அனைத்தும் நலியத் தொடங்குகின்றது.

அந்த நோயாளி மீது அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அதிகப் பற்று வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய நோயை எண்ணி நுகர்ந்தறியும் பொழுது இரத்தங்களில் அந்த விஷத் தன்மைகள் கலந்து நோயாளியின் உடலில் வந்த அதே நோய்.. “பற்று கொண்டவர் உடலிலும் வரத் தொடங்குகின்றது…”

உதாரணமாக ஒரு நூறு பேர் அந்த நோயாளியைப் பார்க்கிறார்கள். “அவர் நல்லவர்… ஆனால் இப்படி ஆகிவிட்டார்…!” என்ற உணர்வை நுகர்ந்து அறிந்து அவருக்கு உதவிகளும் செய்கின்றனர்.

ஆனாலும் அந்த நூறு பேரில் ஒருவர் அவர் மேல் அக்கறை அதிகரித்து அவருக்கு வேண்டிய உபகாரத்தைச் செய்து கொண்டிருந்தால் நோயாளியின் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆன்மா எங்கே செல்லும்..?

குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம்…? நாற்பத்தெட்டு நாள்களுக்கு (ஒரு மண்டலம்) அல்லது சிறிது நாளைக்காவது இறந்தவர் விரும்பிச் சாப்பிட்ட உணவை எல்லாம் படைத்து அவரை நினைத்து அழுவார்கள்.
1.ஏனென்றால் அவர் நம்முடன் வாழ்ந்தார்
2.அவருக்கு நாம் கொடுக்க வேண்டும் என்று அப்படிச் செய்வார்கள்.

அவர் உடலுடன் இருக்கும் பொழுது உட்கொண்ட அதே நினைவு கொண்டு மற்றவர்களும் பந்துக்களும் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அந்தப் பதார்த்தங்களை வைத்து இறந்தவரின் நினைவு நாளைக் கொண்டாடுகின்றார்கள்.
1.எங்களுடன் இருந்தீர்கள்…! ஆனால் இன்று போய்விட்டீர்கள்…!
2.அதனால் நான் உங்களுக்கு இதை எல்லாம் (படையல்) செய்கின்றேன் என்று எண்ணுவார்கள்.

இதெல்லாம் எந்தக் காலத்தில் செய்வார்கள்…? அமாவாசைக் காலங்களில் தான் பெரும்பகுதி செய்வார்கள். அந்த நாளில் சூரியனின் கதிரியக்கங்கள் அதிகமாக வராது.

சூரியனின் கதிரியக்கங்கள் அவருடைய உடலில் விளைந்த நோயின் உணர்வைக் கவர்ந்து இந்தப் பூமியில் அலைகளாகப் பரவச் செய்து வைத்துள்ளது.

ஒரு மான் தன்னைத் தாக்க வரும் புலியின் உணர்வை அதிகமாக நுகர்ந்த பின் அந்த மானின் உடலை விட்டுப் பிரியும் உயிரான்மா புலியின் உடலுக்குள் சென்று புலிக் குட்டியாக மாறுகின்றது.

அதைப் போன்று அந்த நோயாளியின் வேதனையான உணர்வுகள் வலுவானது. அவருடைய குடும்பத்தைச் சார்ந்தோர்களோ அல்லது நண்பர்களோ
1.அவர் மேல் அதிகப் பற்று கொண்டு அவரின் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்திருந்தால்
2.அவர் இறந்த நாற்பத்து எட்டு நாளுக்குள் அவரை நினைத்துக் கும்பிடுகின்றேன்…! என்ற நிலையில்
3.அந்த ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிடும்.
4.ஆனால் முதலில் தெரியாது… அது சிறுகச் சிறுக விளையும்.

அந்த நோயாளி இறக்கப்படும் பொழுது எந்தத் தெய்வத்தை அதிகமாக நேசித்து வந்தாரோ… அர்ச்சனை அபிஷேகம் எல்லாம் செய்தாரோ அந்த உணர்வுகள் எல்லாம் அவர் உடலில் இருக்கின்றது.

கடைசி நிமிடத்தில் அவர் இறக்கப்படும் பொழுது அவர் எந்தெந்த தெய்வத்தை நேசித்தாரோ அந்தத் தெய்வத்தின் உணர்வுடனே அந்த உயிர் வெளியே செல்லும்.

அப்பொழுது அந்தத் தெய்வத்தின் பேரைச் சொல்லி “இன்னார்…!” எனக்குத் தக்க நேரத்தில் நல்ல உதவிகளைச் செய்தார் என்ற உணர்வுடன் கடைசி நிமிடம் அந்த ஆன்மா வெளியிலே வந்தால் யார் அதிகமாக அவரை நேசித்தாரோ அந்த உடலுக்குள் வந்துவிடும்.

அப்படி வந்த பின் அவர் உடலில் வந்த நோயெல்லாம் இங்கேயும் உருவாக்கி அவர் தெய்வ பக்தி கொண்டது போல் இவர்களையும் பக்தி கொள்ளச் செய்து அதே நோயை விளைவித்து இவர் மீண்டும் இறந்து விட்டால் இந்த உயிரான்மா இவரைச் சார்புடையோர் உடல்களுக்குள் போகின்றது.

இப்படி ஒவ்வொரு உடலிலும் சேர்க்கும் விஷங்கள் அதிகரித்த பின் அடுத்து மனிதனாக வராது. பாம்பு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் உண்டு. புலிக்கு ஒரு விஷம் மாட்டுக்கு ஒரு விஷம் மானுக்கு ஒரு விஷம் யானைக்கு ஒரு விஷம் என்ற அந்த உணர்வின் கலவைகள் கொண்டு அதற்குத்தக்க உடலைப் பெறுகின்றது.

1.அதாவது மனித உடலை விட்டு வெளியே வரும் அந்த உயிரான்மா
2.தான் சேர்த்துக் கொண்ட வேதனைக்கொப்ப (விஷத்திற்கொப்ப)
3.எந்த உடலில் அந்த விஷம் இருக்கிறதோ அந்த உடலுக்குள் சென்று
4.அந்த உணர்வைக் கருவாக்கி பாம்பு என்றால் பாம்பினம். புலி என்றால் புலி இனமாக மாறிவிடும்.

இதை எல்லாம் மாற்றுவதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒரு ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தாலே அந்த நாற்பத்தி எட்டு நாளைக்குள் அந்தக் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறோம்.

அவரும் ஒளி நிலை அடைகின்றார். அவருக்குப் பின்னாடி நாமும் அந்த ஒளி நிலை அடையலாம். மெய் ஞானிகள் காட்டிய வழியே இது தான்.

December உபதேசம் 2025

விண்ணுலகில் “ஒளிச் சரீரமாக வாழும் நிலை” எப்படிப்பட்டது…?

 

நமது பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் உண்டு. ரேவதி நட்சத்திரத்திலிருந்தும் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்தும் துகள்கள் வரப்படும் பொழுது சூரியன் தன் உணவுக்காக அவைகளை எடுத்துக் கொள்கிறது. இடைமறித்து மற்ற கோள்கள் கவர்ந்து அதனின் மாற்றங்கள் ஆகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிக வலிமை பெற்றது… ஆண்பால். ஆணைக் கண்டு பெண் எப்படி ஒதுங்கிச் செல்கின்றதோ அதைப்போல ஒதுங்கிச் செல்லும் நிலைகள் பெற்றது ரேவதி நட்சத்திரத்தின் நிலைகள்.

இருப்பினும்… இதன் உணர்வின் அழுத்தம் அதிகமான பின் ரேவதி நட்சத்திரத்தின் உணர்வலைகள் விலகிச் செல்கிறது. விலகிச் செல்லும் மார்க்கத்தில் வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய ஆவியின் தன்மை ஊடுருவி விட்டால் சுழற்சியாகி… வேகம் அதிகமாகின்றது.

சுழற்சியின் வேகம் அதிகமாகும் பொழுது இதன் அருகிலே வந்த அந்தக் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து இரண்டும் மோதி விடுகின்றது.

இப்படி மோதி விட்டால்
1.ஆண் பெண் என்ற உணர்வுகளில் ரேவதி நட்சத்திரத்தின் உண்ர்வுகள் அதிகமானால் பெண்பாலை உருவாக்கும் சக்தி வருகின்றது.
2.கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிகமானால் ஆண்பாலை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஆகவே… ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் உயிரிலே இயக்குகின்றது.

அதைப் போல் இந்த அருள் வழியில் கணவன் மனைவி இருவரும் ஒத்த உணர்வு கொண்டு இயக்கினால் “எதனையும் வெல்லக்கூடிய சக்தி பெறுகின்றது…”
1.இங்கிருந்து நாம் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொன்று தான்…!

இதிலே தெளிவாக்கி உணர்வின் தன்மை இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் சக்தி மனித உடலில் பெற்ற பின் ஆறாவது அறிவு ஏழாவது ஒளியாக மாறுகின்றது. அது தான் சிருஷ்டித்துக் கொண்டது என்று சொல்வது.

தீமைகளை… பகைமைகளை… நஞ்சினைத் தனக்குள் வராதபடி மாற்றியமைக்கும் திறன் மனித உடலில் பெற்றதனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்கின்றோம்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் இணைப்புடன் வாழ்ந்தால்
2.பூமியில் நண்பர்கள்… உறவினர்கள்… என்று இருந்தாலும் அதை அறிந்து கொள்ளும் நிலை இல்லை.
3.ஆனால் ஒன்று சேர்ந்து வாழும் இயக்கச் சக்தியாக மாறும்.
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து துருவ நட்சத்திரத்தில் உணர்வைக் கவர்ந்து வாழும் தன்மை வருகிறது.

நமது பிரபஞ்சம் பிற நிலைகளிலிருந்து எடுத்தாலும் சூரியன் எப்படி வளர்கின்றதோ இதைப் போலத் தான் சப்தரிஷி மண்டலங்களில் நாம் இருக்கப்படும் பொழுது “மனிதனுக்கு மனிதன்…” அறிந்திடும் நிலை வராது.

இருளை அகற்றிடும் வலிமை பெறும்… ஏழாவது ஒளி நிலை பெறும். அதை நாம் நுகர்ந்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் பகைமைகளை அகற்றிச் சிந்திக்கும் தன்மை பெறச் செய்யும்.

அதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது. தான் சிருஷ்டித்து கொண்டது தான் ரிஷி.

கணவனும் மனைவியும் இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அதைப் பின்பற்றிய அனைவரும் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி… சப்தரிஷிகள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள்…! என்று பொருள்… உணர்வின் ஒளி அலைகள் கொண்டு.

வேப்ப மரத்தின் கசப்பை நாம் நுகர்ந்தால் ஓய்… வெளியே வருகின்றது. ரோஜாப் பூவின் மணத்தை நுகர்ந்தால் ஆகா..கா… என்று இணைந்து செயல்படும் உணர்வுகள் வருகின்றது.

அதைப் போல் நாம் ஒளிச் சரீரம் பெற்று விண்ணிலே வாழும் நிலைகளில்
1.அதற்கு மாறான உணர்வுகள் அங்கே சென்றால் இந்த உணர்வைப் பிரித்து விட்டுத் தன் உணர்வினை ஒளி என்று தான் உருவாக்கும்.
2.அங்கே பண்பும் அன்பும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்.
3.துருவ நட்சத்திரத்துடன் இணைத்து வாழும் உணர்வுகள் வரும் போது அதைப் பங்கிட்டு ஒளியின் தன்மை பெறும்.
4.விண் சென்ற பின் தன் நண்பன் என்று அறியாது.

ஆக அப்படி அறியக்கூடிய பருவம் வந்தால் மனித நிலைக்குத்தான் வரவேண்டும்.

விண் சென்ற நிலையில்… என்றுமே இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை ஊட்டி ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும். ஒளிக்குள் ஒளியாகும் பொழுது அகத்தின் ஒளியாகும் பொழுது இருளை வெல்லும் தன்மையும் நஞ்சை வெல்லும் தன்மையும் பெறுமே தவிர “அதற்குப் பின் இங்கே (பூமிக்குள்) வர முடியாது…”

என்றும் ஏகாந்த நிலையாக… எதுவுமே பகைமை இல்லாத நிலையும் பகைமையை மாற்றி அமைக்கும் சக்தியை இந்த மனித உடலில் பெற்றுத்தான் நாம் அங்கே செல்ல முடியும். இது தான் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி சப்தரிஷி – சிருஷ்டித்துக் கொண்டது.

கணவன் உயிராக இருந்தாலும் அதற்குள்ளும் பெண்பால் உணர்வுகள் உண்டு. மனைவி என்ற நிலையில் இருந்தாலும் அந்த உயிரில் ஆண்பால் என்ற உணர்வு உண்டு.

செடி கொடி கல்லானாலும் மலையானாலும் இதைப் போன்று நட்சத்திரத்தின் உணர்வுகள் எது கலவையானதோ அதற்குத்தக்க வளர்ச்சி இருக்கும்.

பெண்பால் உணர்வுகள் அதிகமானால் மலைகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதும் ஆண்பால் உணர்வுகள் இருந்தால் வளர்ச்சி கம்மியாக இருப்பதும் உண்டு.

வெறும் ஆண்பால் என்ற உணர்வு வரப்படும் போது தன் இனத்தை விருத்தி செய்து வளர்க்க முடியாது.

அதே போல் பப்பாளி மரத்தில் ஆண்பால் என்ற உணர்வுகள் செல்லும் பொழுது தான் பெண் பப்பாளி தன் இனத்தை விருத்தி செய்யும் வித்துக்களை உருவாக்குகின்றது. ஆண்பால் என்ற அந்த பப்பாளி மரம் இல்லை என்றால் அந்த அமிலம் படவில்லை என்றால் பப்பாளி மரத்தின் வளர்ச்சி குன்றும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதன் உணர்வு கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக மாற்றப்படும் பொழுது நம் உயிர் அங்கே பகைமை என்ற நிலை இல்லாது ஒருக்கிணைந்த நிலைகளில் வாழ முடியும்.

1.பகைமையற்ற நிலைகள் கொண்டு என்றும் ஒளியாக வாழ…
2.ஒன்று சேர்த்த இயக்கத்தை நமக்குள் உயிர் என்ற நிலை இருக்கும் போது
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது தனுசுகோடி.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளை நீக்கி நீக்கி வந்தது… கோடிக்கரை. ஆகவே அந்த உடல் பெறும் உணர்வுகள் சிவ தனுசு.

ஆனால் அதே சமயத்தில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அந்த உணர்வினை நமக்குள் பெருக்கி விட்டால் தனுசுகோடி. தீமைகளை வென்று உணர்வின் தன்மை ஒன்றாக்கி
1.உயிரைப் போன்ற உணர்வு ஒன்றாக்கப்படும் பொழுது
2.”ஒன்றென்ற நிலைகள் இயக்குவது தான்… தனுசுகோடி…” என்று கூறப்படுகின்றது.

பகைமைகளை அகற்றி அருள் உணர்வைக் கூட்டி உயிருடன் ஒன்றி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது… கணவன் மனைவியாக அதை உருவாக்கப்படும் போது சப்தரிஷி.

இருளை அகற்றி நல்ல உணர்வினைச் சேர்க்கும் தன்மை… அதாவது “விஷத்தை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது…” என்பதனை நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மீகத்தில்… ஒன்றுபட்ட கூட்டமைப்பைக் எப்படிக் கொண்டு வர முடியும்…?

 

மற்றவர்கள் செயலை நேருக்கு நேர் பார்த்து “நீ தவறு செய்கின்றாய்…” என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? கேட்க மாட்டார்கள்…!
1.சொல்லால் சொல்லி யாரையும் திருத்த முடியாது.
2.மனதிற்குள் வைத்து அவர்கள் திருந்தி வாழ வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட்டி…
3.”நீங்கள் பார்த்துச் செய்யுங்கள்…” என்று கூறினால் சரியாகும்.

டேய் என்னடா செய்கின்றாய்…? இப்படியே நீ தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறாய் என்று சொல்லும் போது அதனின் அர்த்தம் என்ன ஆகிறது…?இத்தனை பேர் இருக்கின்றார்கள்… இப்படியே செய்து கொண்டிருக்கிறீர்கள்… சாமி என்ன சொல்கின்றார்…? என்று இதையும் கலந்து கொண்டே தான் வருவோம்.

இதனால் என்ன ஆகின்றது…? நன்மை விளைவதில்லை.

அறியாத நிலைகள் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும்
1.நாம் அருளைப் பாய்ச்சி அவர்கள் அறியும் தன்மை வரவேண்டும் என்ற இந்த உயர்ந்த உணர்வை நாம் எடுத்துச் செயல்பட வேண்டும்.
2.நிச்சயம் உணர்வார்கள்… வருவார்கள்… என்று இந்த எண்ணத்துடன் தியானித்துப் பாருங்கள். தேடி வருவார்கள்.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

இதைத்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர… நாம் சொல்லும் “நல்லதைக் கேட்க யாரும் வரவில்லை…” என்ற எண்ணத்திற்கு நாம் செல்ல வேண்டியதில்லை.

ஆனால் இத்தனை பேர் இந்தத் தியான வழியில் வந்தார்கள் ஆனால் இப்பொழுது போய்விட்டார்களே…! என்று வேதனையோடு சொல்லப்படும் பொழுது… உங்கள் மேல் “இவர் என்ன…? சும்மா எப்பொழுது பார்த்தாலும் நச் நச் என்று நச்சுப் பிடித்துவராக இருக்கின்றார் என்று வரும்…!

பாலிலே விஷத்தைப் போட்டு அதைச் சாப்பிட்டால் மயக்கம் தான் வரும். இதைக் கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்…? சிந்தனை அங்கே சரியாக வராது.

இதைப் போன்று நாம் எடுக்கும் உணர்வுகள் விஷத்தன்மை ஆகும்பொழுது நம்மை அறியாமலே வேதனைப்படும் நிலையும் நாம் செல்ல வேண்டிய மார்க்கத்தைத் தவற விட்டு மற்றவர்களையும் பெற விடாதபடி தடைப்படுத்தும் நிலையாகத் தான் வரும்.

இவர் என்ன எப்பொழுது பார்த்தாலும் சும்மா வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று உங்கள் மீது குறை கூறும் உணர்வுகள் வந்துவிடும்.

ஆனால் உயர்ந்த பண்புகளுடன் வேதனை உணர்வு கலந்து சொல்லும் பொழுது உடலும் பலவீனமாகும். உயர்ந்த மார்க்கமாக இருக்கின்றது… இப்படி இருக்கின்றார்களே அல்லது இப்படிச் செய்கின்றார்களே…! என்று வந்துவிடும்

கண்ணாடி நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் அழுக்குப் படிந்து விட்டால் முகம் தெரியுமா துடைக்க வேண்டும் அல்லவா.

ஆன்மீகம் என்பது
1.வலிமை கொண்ட உணர்வைப் பாய்ச்சி…
2.மற்றவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…! என்று எண்ணினால் நிச்சயம் ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும்.

ஆகவே அருள் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும்… ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எடுத்தால் அது சீராக வரும்.

அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் தீமையை நீக்கும் அருள் சக்தியைப் பெறுங்கள்

 

பாலில் பாதாமைப் போட்டால் சத்துள்ளது தான். ஆனால் அறியாதபடி ஒரு துளி விஷம் அதிலே பட்டு விட்டால் பாலுக்குச் சக்தி இல்லை.

இதைப் போல்தான் நாம் உயர்ந்த உணர்வு கொண்டு இருந்தாலும்
1.பிறர் செய்யும் தவறுகளையும் பிறர்படும் வேதனைகளையும் இப்படிச் செய்கின்றார்களே என்று அறிந்து கொண்டாலும்
2.நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் தெய்வ ஆணை ஆகி அந்த உணர்ச்சிகள் நம் உடலில் சேர்க்கப்பட்டு
3.நம் சொல்லும் செயலும் அதன் வழி அமைந்து “அந்த உணர்வு அமிலமாகி” உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவுகள் பாழ்படுகிறது.
4.நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பகைமை உணர்வு கொண்டு எதிர்நிலையால் தாக்கப்படும் பொழுது சீராக உணவு உட்கொள்ள முடிவதில்லை. ஆனால் பசி எடுக்கும்… உணவை உட்கொள்ள முடியாது.

பசியின் தன்மையால் “பித்தம் அதிகமானால்” உமட்டல் அதிகரிக்கும்.

மனிதனின் சகஜ வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமைகளையோ குடும்பத்தில் ஏற்படக்கூடிய சில வேதனையான நிலைகளாலோ வேதனை அதிகமானால் உடலுக்குள் அஜீரணக் கோளாறு ஆகிவிடும்.

வயிறு உப்புசமாகும்… வாயு அதிகமாக உருவாகும்… ஜீரண சக்தி குறையும்…! அதனால் புளிப்பின் தன்மை ஏற்படும் போது ஜீரண உறுப்புகளில் பாதுகாப்பாக இருக்கும் அமிலங்களைச் செயலற்றதாக ஆக்கி அதனால் எரிச்சலாகி உணவை உட்கொள்ள மறுக்கச் செய்வதும் இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்.

இதை போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமல்லவா.

தவறு செய்கிறார்கள் என்று மற்றவர்கள் உணர்வுகளை எப்படி நுகர்கின்றோமோ அதைப் போல் அதை நீக்க ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். அதை அவ்வப்பொழுது நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுங்கள். அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் நஞ்சினை அவன் வென்றவன். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அவன் அருளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

1.மாமமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.
2.அகஸ்தியன் இருளை அகற்றி நஞ்சினை வென்று துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று
3.சிறிது நேரம் இந்தச் சக்தியை உடலுக்குள் கூட்டினால் அந்த உணர்வுகள் நமக்குள் வலுப்பெறுகின்றது.

துணியில் பட்ட அழுக்கை நாம் சோப்பைப் போட்டு நுரையேற்றி அந்த அழுக்கினை எப்படி நீக்குகின்றமோ இதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அதிகரித்து அதை வலுவாக்கி
1.தீமை என்ற உணர்வுகள் சுவாசத்திற்குள் நுழையாதபடி
2.முன் பகுதியில் நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டால்
3.நாம் எடுக்கக்கூடிய உயர்ந்த உணர்வுகளால் சிந்திக்கும் தன்மையும்
4.உடலுக்குள் தொக்கி உள்ள விஷத்தின் தன்மையைத் தணித்து உடல் நலம் பெறச் செய்யும்.

அதற்குத்தான் உங்களுக்குள் அருள் உணர்வைப் பெறச் செய்கின்றோம். எப்போதெல்லாம் குறைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். சிறிது நேரம் அதைச் சுவாசியுங்கள். அந்தத் தீமைகளை அகற்றிடும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அதைப் பெற வேண்டும் என்ற வலுவைக் கூட்டி இதை நீங்கள் பெருக்கிப் பாருங்கள்.
1.உங்களுக்குள் அமைதி கிடைக்கும்… சிந்திக்கும் தன்மை வரும்
2.கோபத்தைக்த் தணிக்கும்… படபடப்பை நீக்கும்.
3.அருள் உணர்வுகள் பெருகும் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.

ஆகவே… இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு கருடன் தன் இரைக்காகப் பாம்பை எடுத்துத் தூக்கிச் செல்கின்றது. ஏற்கனவே அது விஷம். இருந்தாலும் இந்தக் கருடன் அந்தப் பாம்பைத் தூக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக வேதனைப்படும்படி செய்து அதை உணவாக எடுத்துச் சாப்பிடுகின்றது.

ஆனால் பாம்போ கூர்மையாக அந்தத் கருடனையே உற்றுப் பார்த்து வேதனை உணர்வைக் கவர்ந்து தன் உடலில் உள்ள அணுக்களுக்குள் அதிகமாகச் சேர்கின்றது.
1.மரணம் அடையும்போது இந்தப் பாம்பின் உயிரான்மா கருடனுக்குள் சென்று
2.அதன் உணர்வைக் கவர்ந்து அதற்குத் தக்கவாறு கருடனாக மாறுகிறது.

அதனால் தான் இந்த மாதிரி விஷத் தன்மையான உணர்வுகளைக் கருடன் சாப்பிட்டாலும்
1.இந்தக் கருடனாக உடல் மாறும் பொழுது
2.விஷம் கொண்ட பாம்புகள் அதைத் தீண்டினாலும் கருடன் மடிவதில்லை.

அதே சமயத்தில் அது உடலில் இருந்து எடுத்துக் கொண்ட உணர்வுகள் உதாரணமாக… ஒரு பாம்பு கீழே போகிறது என்றால் கருடன் பறக்கும் போது அதனுடைய இறக்கையின் காற்றலைகள் பட்டாலே அந்தப் பாம்பிற்கு ஒரு மாதிரி மயக்கம் வரும். இதைக் குருநாதர் காட்டியுள்ளார்.

இதைப் போன்று தான் நம் உடலில் எத்தனையோ பல உணர்வுகள் உண்டு. அதிலே வேதனையான உணர்வுகளை உடலில் உள்ள அணுக்கள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு இருக்கும் போது அடுத்து நாம் நல்ல உணர்வின் தன்மை பெற்றாலும் கூட நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதாவது ஒருவர் மிகவும் வேதனைப்படுகிறார்… சங்கடப்படுகிறார் சலிப்பான நிலைகளில் இருக்கிறார்…! என்றால் அவர்களிடமிருந்து வெளிப்படும் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு நிச்சயம் மயக்கம் வரும்.
1.ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அது வாயுவாக மாறுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றது.

அது பரவப்படும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாகும் போது விஷத்தின் இயக்கமாக இருப்பினும் அதிகமான விஷத்தின் தன்மை வரப்படும் போது நல்ல அணுக்கள் மயங்கத் தொடங்கி விடுகின்றது.

ஆக கருடனுடைய உணர்வுகள் பரவப்படும் போது பாம்பினம் கீழே செல்லப்படும் போது அதனுடைய காற்றலைகள் பட்டவுடன் பாம்புக்கு மயக்கம் வருவது போல நமக்கும் அந்த நிலைகள் ஏற்படுகின்றது.

நம் உடலில் உள்ள உணர்வுகள் வேதனைப்படுவோரைக் கூர்மையாகப் பார்த்து அந்த விஷத்தின் தன்மையைக் கவர்ந்த பின்
1.அது நம் உடலில் முட்டையாகின்றது… வேதனை என்ற உணர்வுகள் அந்தக் கருத்தன்மை வளர ஆரம்பிக்கிறது.
2.வேதனைப்படும் உணர்வுகளை அதிகமான ஆகாரமாக அந்தக் கருக்கள் எடுக்கும் பொழுது
3.அது வேதனையான அணுக்களின் பெருக்கங்களாக ஏற்படுகிறது.

அதைக் குறைப்பதற்காக வேண்டித்தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் சக்தியை உடலுக்குள் சேர்த்துச் சிறுகச் சிறுகக் கலக்கும்படி செய்கின்றோம்.

உதாரணமாக வர்ணங்கள் கொடுக்கும் இடங்களில் ஒரு கலருடன் பல விதமான கலரைச் சேர்க்கின்றோம். அதிலே எந்தக் கலரை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்தக் கலரின் ரூபங்களாக மாற்றுகின்றது.

நீலமும் மஞ்சளும் சேர்க்கப்படும் போது அது ஒரு விதமான பச்சைக் கலராக வரும். நீலமும் ஆரஞ்சும் சேர்த்தால் காப்பிக் கலராக வரும். அதனுடன் வெள்ளையைச் சேர்க்கும் பொழுது வித்தியாசமாக வரும்.
1.இதைப் போன்று தான் நமது சுவாசங்களில் கலர்களின் ஓட்டங்கள்
2.வித்தியாசமாகக் கலந்து பல பல நிலைகள் மாறும்.

அப்படிக் கலக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள அணுக்களுக்கு எதிர் நிலையான மாற்றமாகி
1.நம் அணுக்களும் வித்தியாசமாக மாறும்.
2.நம் குணங்களும் வித்தியாசமாக மாறும்.

எந்தெந்த குணங்கள் அதிகமாகின்றதோ அதெல்லாம் நம் ஆன்மாவில் சேர்ந்து விடுகின்றது. மொத்தமாகச் சேர்த்துச் சுவாசிக்கும் பொழுது எதன் வலு அதிகமாக இருக்கிறதோ அதன் வழி நம் உடல்களில் வித்தியாசங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்பொழுது நம் குணங்களும் வித்தியாசமாக மாறும்.

இதையெல்லாம் மாற்றுவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துப் பழக வேண்டும்.
1.உபதேச வாயிலாகக் கொடுத்த சக்தியை வைத்து
2.அவ்வப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் சேர்த்துச் சேர்த்து
3.உடலுக்குள் வரும் உணர்வுகளை மாற்றப்படும் போது
4.தீமையான அணுக்களை அதிகமாக வளர விடாது தடுக்க முடியும்.

நம் குணங்களும் எண்ணங்களும் மாறாது எப்பொழுதும் நல்ல உணர்வாக ஒரே நிலையாகக் கொண்டு செல்ல முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத்தான் பாதரசமாக மாற்றி இந்த உலகையே ஒளிமயமாக ஆக்குகின்றது சூரியன்.

அதே போல இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வுகளால் விளையப்பட்ட தாவர இனங்களின் உணர்வையெல்லாம் எடுத்து இந்த உயிர் என்ன செய்கிறது…? உணர்வின் ஒளியாக மாறுகின்றது.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வால் விளைந்த தாவர இனத்தின் உணர்வை உயிர் உணர்ச்சியின் எண்ணங்களாக ஆக்கப்பட்டு உணர்ச்சிக்கொப்ப நாம் இயங்குகின்றோம். (மனிதனாக்கப்பட்ட நிலை)

1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒளியின் உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன்.
2.விஷத்தின் தன்மையை முறித்தவன்,
3.உணர்வின் தன்மையை ஒளியாக்கி ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக ஆனவன் அகஸ்தியன்.

மனிதனாகப் பிறந்த ஞானிகள் அகஸ்தியன் வழியில் இருபத்தியேழு நட்சத்திரங்களின் கதிரியக்கங்களைத் தங்கள் உடலிலே சேர்த்துக் கொண்டனர். ஒளி உடல் பெற்றனர்.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து ஒளியின் உடலான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாமும் எடுத்து நமக்குள் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.

இருபத்தியேழு நட்சத்திரங்களின் உறுதுணை கொண்டது வியாழன் கோள். அதே இருபத்தியேழு நட்சத்திரத்தின் சக்திகளையும் முழுமையாகப் பெற்றது சூரியன்.

இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தி பெற்று அதனின் உணர்வை இணைத்துத் தான் நம் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழச் செய்யும் சக்தி பெற்றது.

இருபத்தியேழு நட்சத்திரத்தின் சத்தை முழுமையாக எடுத்துப் பாதரசமாக சூரியன் மாற்றி உலகை உருவாக்குவது போன்றுதான் இதே உயிர் பல விதமான உணர்வுகளை எடுத்து மனிதனாகும் பொழுது அது முழுமை அடையும் பருவத்திற்கு வருகின்றது.

ஆனால் மனிதனின் நிலைகள் வேதனை என்ற விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் மனித நிலையிலிருந்து இழி நிலையான சரீரமாக உயிர் மாற்றிவிடும்.

ஆகவே அதைப் போன்று ஆகாதபடி
1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று
2.ஒளியின் உடலாக இருக்கும் அதனை நாம் சிறுகச் சிறுக நுகர்ந்து
3.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
4.அவ்வாறு செய்தால் ஒளியின் உடலாக உயிரின் துணை கொண்டு உணர்வை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
5.மகரிஷிகளைப் போன்று நாமும் ஒளி உடல் பெற முடியும்.

எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்

 

நான் சம்பாதித்தேன்… பிள்ளையை வளர்த்தேன்… நாளை அவன் என்ன செய்வானோ…! இப்பொழுதே என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான்…! என்று உணர்வுகளைச் சேர்த்து விட்டால் அவன் உடலில் விளைந்த “ஏமாற்றும் உணர்வுகள்…” இந்த உடலிலே நோயாக மாறும்.

நோய் முற்றி இறந்த பின் பிள்ளையின் உடலுக்குள் தான் செல்வோம். ஆக… மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டி வருகின்றது. விண் செல்லும் உணர்வை இழந்து விடுகின்றோம்.

அது போன்று ஆகாதபடி
1.இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எத்தகைய சிரமங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பாருங்கள்.
2.அதை உங்களால் மாற்றிக் கொள்ள முடியும்.
3.எதைப் பற்றியும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற அந்த சிந்தனை வேண்டாம்.
4.அருளைப் பெறுவேன் இருளை நீக்குவேன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவேன் என் இரத்த நாளங்களிலே அதைக் கலக்கச் செய்வேன்.
5.உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வேன் என்று எண்ணுங்கள்.

அகஸ்தியன் தன் வாழ் நாளில் பல பல விஷத்தன்மைகளை முறித்து வலுப்பெற்றவன். அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட அந்தச் சக்திகள் நமக்கு முன் பரவி உள்ளது. உங்களுக்குள் அதைத்தான் இப்பொழுது பதிவு செய்கின்றேன்.

அதை உங்கள் எண்ணத்தால் மீண்டும் கவர முடியும்.

அகஸ்தியன் பெற்ற “மூலிகை மணங்களையும் அவன் பெற்ற நஞ்சினை வென்றிட்ட அந்த அருள் சக்தியும்…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்தே ஏங்குங்கள்.

உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். அந்த ஏக்கத்துடன் கண்களை மூடுங்கள்.
1.அப்படி மூடும் பொழுது அந்த அகஸ்தியன் பெற்ற மூலிகைகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகச் சுரப்பதைக் காணலாம்.
2.உடலுக்குள் செல்லப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து இரத்தத்தில் கலந்து விடுகின்றது.
3.விஷத்தன்மைகளை மாற்றும் சக்திகளை நீங்களே பெறுகின்றீர்கள். காற்றிலே உண்டு… நீங்கள் அதை நுகர்கின்றீர்கள்.

ஒருவன் வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வுகள் நமக்குள் வந்து இரத்தங்களிலே கலந்து விஷத்தன்மை ஆகி நம் நல்ல அணுக்கள் செயலிழக்கின்றது. அப்பொழுது வெறுப்பும் வேதனையும் வருகின்றது.

இதைப் போலத் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை உபதேசமாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
1.இதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசித்தால் போதுமானது.
2.எத்தகைய தீமையையும் நீங்கள் நீக்க முடியும்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்.
3.தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்… உங்களால் நிச்சயம் முடியும்…!

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

 

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய விஷமான சக்திகளைத் தனக்கு உணவாக எடுத்து அதை மாற்றி அமைத்துத் துகள்களாக அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கொன்று எதிர்மறையானால் பூமிக்குள் வரும் போது மின்னல்களாகப் பாய்கின்றது.

கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகின்றது. அதே விஷத்தின் தன்மை மற்ற தாவரங்களில் எதிர்நிலையாகும் பொழுது அது கருகுகின்றது. இதன் உணர்வுகள் பூமியின் ஈர்ப்புக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது. பின் நிலநடுக்கம் ஆகின்றது. இது எல்லாம் மின்னலால் ஏற்படக்கூடிய நிலைகள்.

1.ஆனால் இத்தகைய நஞ்சையும் தாய் கருவிலே பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்திகளால் அடக்கியவன் அகஸ்தியன்.
2.அவன் கண்ட உண்மையின் உணர்வின் தன்மை மின்னல்களில் இருந்து வரக்கூடிய ஆற்றல்கள் அவனுக்குள் தணிகின்றது.

மின்னல்கள் பிரபஞ்சத்தில் பாயும் பொழுது அதை வெள்ளிக் கோள் கவர்ந்து கொள்கின்றது.
1.அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் நுகர்ந்து உடலுக்குள் பெருக்கி
2.உயிரைப் போன்றே உணர்வின் அறிவை வளர்த்துக் கொள்கின்றான்.

மின்னல் கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகிறது. ஆனாலும் அந்த மின்னலின் வீரிய உணர்வுகள் பாயும் பொழுது… சந்தர்ப்பம் மீன்கள் அதன் அருகில் சென்றால் அந்த ஒளிக்கற்றைகள் அதற்குள் பாயப்பட்டு அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

மின்னல் தாக்கும் பொழுது எப்படி ஒளிக்கற்றைகள் பரவுகின்றதோ மீன் இனங்களுக்குள் இது பட்டபின் அது நீருக்குள் உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.
1.இயற்கையின் நிலைகள் இப்படி மாறுவது போல
2.அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாம் நுகர்ந்தால் “நாமும் ஒளியாக முடியும்…”

அவன் துருவனானான். பின் பதினாறாவது வயதில் திருமணம் ஆகின்றது. தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். மனைவியும் அதையெல்லாம் தனக்குள் பதிவாக்குகின்றது.

பதிவான நிலைகள் கணவன் மேலும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அகஸ்தியன் தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவி பெற வேண்டும் என்று… இப்படி அந்த இரண்டு பேருமே இந்த உணர்வை வளர்த்து ஒரே உணர்வாக எண்ணப்படும் பொழுது ரிஷித்தன்மை பெறுகின்றார்கள்… துருவ மகரிஷியாகின்றார்கள்.

அந்த ரிஷி என்ற நிலை வரவேண்டும் என்றால் “கணவன் மனைவியாக இருந்தால் தான் முடியும்…”

செடி கொடிகளில் ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் தன் இன வித்துக்களை உருவாக்க முடியும். உயிரினங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் இனத்தின் தன்மை விருத்தி செய்ய முடியும்.

தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அகஸ்தியன் எப்படித் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானானோ கணவன் மனைவி ஒன்றி ஒளி நிலை பெற்றார்களோ அதிலிருந்து வெளிப்படும் சக்திகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.

உங்களுக்குள் அதைத்தான் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை எண்ணி நீங்கள் பெற்று உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண்களை மூடிப் புருவ மத்தியில் எண்ணி உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் “மின் அணுக்கள் உருவாகும்…”
3.நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலுக்குள்ளும் ஒளியான உணர்வுகள் தோன்றும்.
4.உடலிலிருந்து வெளிச்சங்கள் வெளி வரும்… சிலருக்கு இது தெரியும்.
5.சிலருக்கு மகிழ்ச்சியான உணர்வுகளை ஊட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு வந்துவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்தச் சந்தர்ப்பத்தில் பாம்பை அடித்தால்
2.பாம்பின் உயிர் அடித்தவர் உடலுக்குள் வந்து மனிதனாகப் பிறக்கும் சந்தர்ப்பம் வருகின்றது,

அதே சமயத்தில் பாம்பு மனிதனைத் தீண்டிவிட்டால் அந்தச் சந்தர்ப்பம் விஷம் உடல் முழுவதற்கும் பரவி விடுகின்றது. எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று மனிதனாக வந்த நிலையில் பாம்பின் விஷத் தன்மை மனிதனுக்குள் கலந்து விடுகின்றது.

உடல் முழுவதற்கும் விஷம் படர்ந்த பின் இந்தச் சந்தர்ப்பம் மனித நினைவே இழந்து பாம்பின் நினைவே ஆக்கிரமிக்கின்றது.
1.மனித உடலை உருவாக்கிய இந்த உயிரில் விஷம் கலந்ததனால் நினைவு இழந்து
2.பாம்பின் ஈர்ப்புக்குள் சென்று மனிதன் பாம்பாகப் பிறக்கும் சந்தர்ப்பமாக வருகின்றது.

இதே போல மனிதனின் வாழ்க்கையில் கடும் வேதனையால் ஒருவருக்குக் கேன்சர் நோய் வந்துவிடுகின்றது. மற்றவர்கள் அவருடன் நெருங்கிப் பழகப்படும் பொழுது அந்தச் சந்தர்ப்பம் வேதனை என்ற விஷங்கள் அது தொடர்ந்து இந்த உடலில் படரப்படும் பொழுது நாளடைவில் இந்தக் குடும்பத்திலும் பரம்பரை என்ற நிலையில் கேன்சர் நோய் வளரத் தொடங்குகின்றது.

ஒரு இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவரின் உணர்வுகளை அதிகமாக உற்றுப் பார்த்துக் கவர நேர்ந்தால் அந்தப் பரம்பரை என்ற இரத்தக் கொதிப்பு வந்து விடுகின்றது.

ஆஸ்த்மா போன்ற நோய்கள் வந்தால் அது தொடர்ந்து வரப்படும் பொழுது பரம்பரை என்ற நிலைகள் கொண்டு ஆஸ்த்மா நோய் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு குடும்பத்தில் சர்க்கரைச் சத்து அதிகமானால் இது பரம்பரையாக வந்து அந்தக் குடும்பத்தில் சர்க்கரைச் சத்துகள் தொடர்ந்து விடுகின்றது.
1.இதுகள் எல்லாம் தொடர் வரிசைகளில்…
2.இப்படி வருவது எல்லாமே சந்தர்ப்பம் தான்.

காரணம்… நமது சந்தர்ப்பம் சொந்த பந்தம்… நண்பர்கள்.. மற்ற பந்துக்கள் என்ற நிலையில் பழகப்படும் பொழுது பாசத்தால் அவர்கள் சிரமப்படும் உணர்வை நாம் நுகர்கின்றோம்… உதவியும் செய்கின்றோம். ஆனால் இத்தகைய உணர்வுகள் நமக்குள் வந்து விடுகின்றது.

பந்துக்களானாலும் சரி… நண்பர்களானாலும் சரி.. சந்தர்ப்பம் சந்திக்கும் பொழுது இதைப் போன்ற உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து விட்டால் நம்மை அறியாமலேயே பல நோய்களுக்கும் அது காரணமாகின்றது.

ஆனால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை நம் குருநாதர் காட்டிய தியான வழியின் முறைப்படி விண்ணிலிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் எல்லோரும் ஒளி உடல் பெறுகின்றார்கள்.

எப்படித் தான் இருந்தாலும் பழக்க தோஷத்தில் நாம் எல்லோருடனும் நாம் பழகித் தான் ஆகின்றோம். உடலை விட்டுப் பிரிந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தோரும் அவருடன் பழகியிருப்பவர்களும் முறைப்படி தியானித்து அந்த அருள் உணர்வுகளை எண்ணி எடுக்கும் பொழுது தீமைகள் வராதபடி பாதுகாத்துக் கொள்ள முடியும். பரம்பரை நோயிலிருந்து விடுபட முடியும்.

1.அதே சமயத்தில் நம் முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தில் ஒளியின் உடலாக இருப்பதனால்
2.அங்கிருந்து வரும் உணர்வை நமக்குள்ளும் பெருக்கி உயிருடன் ஒன்றிடும் நிலையாக
3.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாறும் திறனாக மாற்றும் இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான்.
4.இதன் வழி குடும்பத்தில் அனைவரும் சென்றால் அந்த அகஸ்தியனைப் போன்று
5.என்றுமே ஏகாந்தமாக ஒளியாக வாழ முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வேதனை கோபம் ஆத்திரம் என்ற அணுக்கள் நம் உடலுக்குள் அதிகமான வளர்ச்சி அடைந்தால் கடுமையான நோய்கள் வரும்.

தேடிய செல்வம் எது இருப்பினும் வைத்தியத்திற்குச் செலவழித்து உடலைப் பாதுகாத்தாலும்
1.உங்கள் உடலில் அந்தக் கடைசி நிமிடம் எது உணர்வோ
2.அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறொரு உடலை அதாவது கீழான பிறவியாக மாற்றிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுதே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வளர்த்து வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைவதே நம்முடைய கடைசி எல்லையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையோ நஷ்டங்களையோ எண்ணி வளர்க்கக் கூடாது.
1.பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனைப்படுவதோ
2.தொழிலில் சிறிது குறைபாடுகள் இருந்தாலோ
3.குடும்பத்தில் ஒற்றுமை இல்லாதிருந்தாலோ
4.அதைப் போன்ற மற்ற உணர்வுகளை நுகர நேர்ந்தாலோ உடனே அதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

எதை வைத்து…? – நம் ஆறாவது அறிவை வைத்து.

ஆறாவது அறிவு “கார்த்திகேயா…!” என்றாலும் அது சேனாதிபதி. இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர வேண்டும்.
1.புருவ மத்தியில் உயிரின் நிலைகளில்
2.அதை இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்

வாழ்க்கையில் வரும் மற்ற உணர்வுகளைக் கண் வழி கவர்ந்தாலும்
1.கண்ணின் நினைவை உயிரிலே இணைக்கப்படும் பொழுது
2.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும் திறன் வரப்படும் பொழுது
3.மூக்கு வழி செல்லும் (சுவாசத்தின் மூலம்) தீமையான உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றது.

பின் நம்முடைய நினைவாற்றலை உடலுக்குள் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லா அணுக்களுக்கும் செலுத்தப்படும் பொழுது அதுவும் வலுப் பெற்றுவிடுகின்றது.
1.நம் உடலுக்கு முன் முகப்பில் உள்ள விஷத் தன்மைகளைத் தூர ஒதுங்கிச் செல்லும்படித் தள்ளிவிடுகின்றது.
2.நம் ஆன்மா தூய்மையாகி விடுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றுக்கும்
1.ஒரு ஆன்மா உண்டு.
2.ஒரு வட்டம் உண்டு
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வால் அப்பொழுது அந்த ஜீவான்மாக்களும் சுத்தமாகின்றது.
4.அந்த அணுக்கள் எல்லாம் உயிரைப் போலவே ஒளியின் அறிவாக ஒளியான அணுக்களாக வளர்ச்சி பெறும் சக்தி பெறுகின்றது.
5.அப்பொழுது அந்த உணர்வுகள் முழுவதும் ஒளியாக்கப்படும் பொழுது உயிருடன் இணைந்து பேரொளியாக மாறுகின்றது.

இப்படி நம் உடலில் இருக்கும் எள்லா அணுக்களையும் சிறுகச் சிறுக மாற்றி இந்த உடலுக்குப் பின் நாம் ஒளியின் உடலாக மாறுவதே கடைசி நிலை.

நாம் எந்தத் துருவத்தின் வழி துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தோமோ அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்லும் நம் உயிர்.

அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்

 

சில மலைப் பகுதிகளுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று “அக்காலங்களில் அகஸ்தியன் அமர்ந்த பாறைகளை…”
1.பாபநாசத்தில் பெரும்பகுதி சுழன்ற இடங்களையும்
2.தலைக்காவிரியில் அகஸ்தியன் சுழற்சி வட்டம் ஜாஸ்தி… அந்த இடங்களையும்
3.இமயமலையில் அவன் சுழன்ற இடங்களையும் அகஸ்தியன் வந்து சென்ற இடங்களையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.வேகாக்கலை என்ற நிலைகள் கொண்டு அழிந்திடாத நிலைகளாக அவன் வெளிப்படுத்தியது இன்றும் அங்கே உண்டு.

ஆனால் சாகாக்கலை என்று மந்திர ஒலிகளால் செயல்பட்டவர்கள் உணர்வுகள் பூமிக்குள் படர்ந்திருந்தாலும் அது எல்லாம் அழிந்து விடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலையில் விஷத்தன்மையே படர்கின்றது என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

வேகாநிலை அடைந்த மகரிஷிகள்… உயிர் ஒளியின் துடிப்பாக எப்படி இருக்கின்றதோ…? அதைப் போல தன் உணர்வினை உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக… நஞ்சினை அடக்கி ஒளியாக்குகின்றார்கள்.

வைரம் நஞ்சினை அடக்கி ஒளிச்சுடராக இருப்பது போன்று
1.உடலில் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும்
2.வாழ்க்கையில் வரும் நஞ்சான உணவுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும்
3.அந்த ஞானி விண்ணுலக ஆற்றலை எடுத்து அதன் மேல் “அடுக்கடுக்காகப் பரப்பி…” நஞ்சினை ஒடுக்கி
4.இந்த உணர்வின் தன்மையை மேலோங்கச் செய்து இந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் ஒன்றி
5.துருவத்தைக் கண்டுணர்ந்து… துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
6.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி… அதனின் துணை கொண்டு ஒளியின் சிகரமாகி
7.அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து… அந்தத் துருவத்தில் வரும் உணர்வையே ஒளியாக மாற்றி
8.எந்த துருவத்தின் வழியில் ஈர்ப்பாகச் சக்திகளை எடுத்தானோ பூமிக்குள் வரும்… அந்த நஞ்சினை மற்றது விளையாது
9.அதையே தனக்குள் ஒளியின் சிகரமாக மாற்றி அமைத்து இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றான்…
10.அகஸ்தியன் துருவ மகரிஷியாக… துருவ நட்சத்திரமாக என்று…! இதையெல்லாம் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

அவனைப் பின்பற்றிவர்கள் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாகத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கிறார்கள்…? என்பதையும் காட்டுகின்றார்.

மனிதனின் நிலைகளில் முழுமை பெற்று “உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரமாக எவ்வாறு அங்கே சென்றடைந்தார்கள்…?” என்று உணர்த்திவிட்டு அவர்கள் சென்ற எல்லையை நாம் அனைவரும் அடைய வேண்டும் என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கையில் “நமக்கு இப்படியெல்லாம் ஒருவன் துரோகம் செய்தான்… அவனை விடுவதா…?” என்று இறுக்கப் பிடித்துக் கொண்டால் இந்த உடலுக்குப் பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்வோம்.
1.அந்த உடலுக்குள் சென்று நோயைத்தான் உருவாக்குவோம்.
2.பின் அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலை நம் உயிர் உருவாக்கிவிடும்.

அதே போல் நம் பையன் மேல் அதிகப் பற்றும் பாசமாக இருந்தால் அவன் வழியில் அவன் உடலுக்குள் சென்றுவிடும். ஏனென்றால் தன்னுடைய குழந்தைகளின் மீது மிகுந்த ஆசையாக இருக்கும் பொழுது சந்தர்பப்பத்தால் ஏற்பட்ட இன்னல்களால் “தன்னால் முடியவில்லை” என்ற நிலையில்… தாங்காதபடி தற்கொலை செய்து கொண்டால்…” அந்த நிலை ஆகிவிடும்.

எந்தக் குழந்தை மீது பாசமாக இருக்கின்றதோ அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று தற்கொலை செய்யும் பொழுது “எத்தனை வேதனை இருந்ததோ” அதை எல்லாம் அந்தக் குழந்தை உடலிலும் உருவாக்கும்.
1.குழந்தைகளைக் காக்க வேண்டும் என்று உருவான அந்த நல்ல உணர்வுகள்
2.கடைசியில் குழந்தையைக் காக்க முடியாது போய்விடுகின்றது.
3.இதை எல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் இன்று தீவிரவாதம் என்ற நிலையில் உலகம் முழுமைக்குமே விஷத் தன்மை பரவியிருக்கும் நேரத்தில் வெறித் தன்மையாகப் பிறரைத் தாக்கிக் கொல்லும் உணர்ச்சிகளே அதிகமாகின்றது.

அந்தக் கொல்லும் உணர்ச்சிகள் உடலிலே சேர்க்கப்படும் பொழுது மனித நிலையையே இழக்க நேர்கின்றது. மிருகங்கள் மற்றதை அசுரத்தனமாகத் தாக்கிக் கொல்வது போல் இந்த அசுர உணர்வுகளை உடலில் சேர்த்தவுடனே அசுர உணர்வின் அணுக்கள் நமக்குள் அதிகரித்துவிடுகின்றது.
1.மனிதனுடைய சிந்தனை இழக்கப்பட்டு
2.மனிதனும் மிருகச் செயல்களைச் செயல்படும் தன்மைக்கே இன்று மாறிவிட்டான்.

இன்றைய விஞ்ஞான அறிவால் ஏற்பட்ட உணர்வுகள் அனைத்தும் அதே சமயத்தில் மதம் இனம் மொழி என்ற நிலைகளால் தீவிரவாதம் என்று ஏற்பட்ட விளைவுகளாலும் உடலுக்குப் பின் நாம் மிருகங்களாகப் பிறக்கும் தன்மையே வருகின்றது.
1.இன்று நாம் மனிதனாக இருந்தாலும் மனிதனின் உணர்வுகள் இழக்கப்பட்டு
2.மிருகத்தின் உணர்வுகளாக மனிதன் இப்பொழுது இயக்கும் காலமாக மாறி விட்டது.

இதைப் போன்ற நிலைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான்கிலிருந்து ஆறு மணி வரையிலும் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வினை முறைப்படி துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை எடுத்து வாழ்க்கையில் அவ்வப்பொழுது வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தால் அது நமக்குள் உட்புகாது தடுத்துப் பழக வேண்டும். அதுவே துருவ தியானத்தின் நோக்கம்.

ஆகையினால் ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் கஷ்டங்களைக் கேட்டறிந்தால் அறிந்தபின் உடனே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் செலுத்திவிட்டு
2.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
3.எங்கள் உடலில் உள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்கி ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்தித் தியானித்தால்
4.நம் உடலில் உள்ள அணுக்கள் மற்றவர் சொல்லும் கஷ்டமான உணர்வுகளை நம் உடலில் சேராது அது நீக்கிவிடும்… சுத்தப்படுத்திவிடும்…!

அதற்குப் பின் யார் கஷ்டம் என்று சொன்னார்களோ அவர் உடலிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாய்ந்து அவர் உடலில் உள்ள கஷ்டங்கள் நீங்கி அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் குடும்பம் நலமாக வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும்.

1.இதை நாம் வைராக்கியமாகச் செயல்படுத்துதல் வேண்டும்.
2.இப்படிச் செய்தால் அவர்களுக்கும் நல்லதாகின்றது.
3.அதே சமயத்தில் நமக்கும் நல்லதாகின்றது.
4.நாம் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்து விடுகின்றது.
5.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நிலை பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தசரதச் சக்கரவர்த்தி தினமும் ஒரு கல்யாணம் செய்து கொள்கிறார் என்றும் கங்கணமே கழட்டவில்லை என்றும் காவியத்தில் சொல்வார்கள். அதாவது
1.விண்ணிலிருந்து வந்த ஒரு உயிரணு
2.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்தியைத் தனக்குள் கவர்ந்து
3.தன்னுடன் சேர்த்துக் கொண்டே உள்ளது என்பதை அவ்வாறு காட்டுகின்றார்கள்.

தசரதச் சக்கரவர்த்தி என்றால் நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றி மனிதன் ஆனபின் “பத்தாவது நிலை (கல்கி – ஒளி நிலை) அடையக்கூடிய பருவம் பெற்றவர்…” என்று பொருள்.

நாம் எண்ணக்கூடியது அனைத்தையும் நம் உயிர் ஜீவ அணுவாக மாற்றி அந்தச் சக்தியைத் தன்னுடன் இணைத்து தன்னுடன் இயங்கச் செய்கின்றது.

அதனால் தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தருணத்தில் அவர் என்ன ஆனார் என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.
1.ஏனென்றால் அவருக்குள் எத்தனையோ விதமான குணங்கள் இருக்கின்றது
2.அது எல்லாம் அவருடன் சேர்ந்து இயக்கும் சக்தி (மனைவி) என்று பொருள்.

இராமனின் தாயோ எல்லாவற்றையும் அது பரிவுடன் பண்புடன் அரவணைக்கும் சக்தி கொண்டது. அதனால் அந்தச் சக்தியின் துணை கொண்டு அதனின்று உருவாகும் இந்த உணர்வின் அணுக்கள் மற்றவர்களை அரவணைக்கும் சக்தி கொண்டது என்று உணர்த்துவதற்காக
1.இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்து
2.அவனிடம் இந்தச் சாம்ராஜ்யத்தை ஒப்படைக்கலாம்…! என்பது தசரதச் சக்கரவர்த்தியின் எண்ணம்.

தனக்குள் எடுக்கும் நல்ல குணம் கொண்டு அந்த நல்ல குணத்தைக் கொண்டே இந்த உடலை ஆட்சி புரிய வேண்டும் என்ற எண்ணங்கள் கொள்கின்றார் தசரதன்.

அந்த நல்ல குணங்கள் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எண்ணுகின்றார். இருப்பினும்
1.பரதனின் தாயாரோ தனக்குள் ஆசை கொண்டது.
2.தன் பையனுக்கே பட்டத்தைச் சூட்ட வேண்டும் என்று அது பிடிவாதம் பிடிக்கின்றது.

(உயிர் – தசரதன்; உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் – மனைவியாக இணைகிறது; அதனால் தான் தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவிகள் என்று சொல்வது.)

அப்படிப்பட்ட அந்த உயிரின் இயக்கத்தில்
1.எந்த உணர்வின் தன்மை வலிமை பெறுகின்றதோ
2.அந்தக் குணத்தின் தன்மை – தன் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகின்றது.
3.அதனால் உடலுக்குள் உருவான மற்ற நல்ல அணுக்களுக்கெல்லாம் கலக்கங்கள் ஏற்படுகின்றது என்பதைக் காட்டுகின்றனர்.

இருந்தாலும் உடலுக்குள் சகோதரத்துவமாக வளர்ந்த பரதனோ அண்ணனே (இராமனே) ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்பினாலும் “தன் குழந்தைக்கே பட்டம் சூட்ட வேண்டும்…” என்ற இந்தப் பிடிவாத குணங்கள் அங்கே கைகேயிக்கு எப்படி உருவாகின்றது என்பதைக் காட்டுகின்றார்கள்.

நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமையான உணர்வுகள் நம் உடலுக்குள் வந்த பின் அது விளைந்து
1.அதனுடைய பருவ காலம் வந்த பின்
2.நல்லதையே இயக்கவிடாது எப்படித் தடுக்கிறது…? என்பதையே அங்கே தெளிவாக்குகின்றார் வான்மீகி.

தீமை என்று அறிந்த கணமே அதை நமக்குள் சேராது அது நம் உடலுக்குள் விளையாது தடுக்க வேண்டும். அதற்குத்தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உடலுக்குள் இப்படிச் செலுத்தினால் இதற்குப் பெயர் ஆத்ம சுத்தி.

நஞ்சை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலுக்குள் சென்று அது அணுவாக விளைந்து அதிலிருந்து வெளிப்படும் மணம் தீமைகளை வேக வைத்து அதை ஒளியாக மாற்றிவிடும். தீமைகள் அனைத்தும் செயலற்றதாகின்றது.

தெய்வீக அன்பைத் தான் நாம் வளர்க்க வேண்டும்

 

பாசத்தால் நாம் அதிகமாக வேதனையைத் தான் நுகர்கின்றோம்… எதை…? விஷத்தை…!
1.எவர் மேல் பாசம் அதிகம் ஆகின்றதோ
2.அப்போது வேதனை என்ற நஞ்சையும் அதனுடன் இணைத்துக் கூடவே சாப்பிடும்.

நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் அவன் சேர்ந்து சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் நமக்குள் கலந்துவிடும்.

அவனை எண்ணி எண்ணி இந்த உடலே கரைந்து விடும். விஷத்தைச் சாப்பிட்டால் எப்படியோ இந்த உணர்வுகள் நோயாக மாறுகின்றது. அந்த நோயின் தன்மை பேயாகவே மாறுகிறது.

1.இப்படிச் செய்கின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின்
2.உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் ஒரு உடலுக்குள் பேயாகப் போய் நோயாகவே உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.உங்கள் உயிருடன் எப்பொழுதெல்லாம் ஒன்றுகின்றீர்களோ
3.அந்தச் சக்தியை அப்பொழுது நீங்கள் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
4.அதற்குத்தான் இந்த உபதேச வாயிலாக ஆழமாக ஞான வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

விரயமில்லாதபடி எந்த நிமிடமும் நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கலாம்.

யாம் கொடுக்கக்கூடிய சக்தியை நீங்கள் அனைவரும் பெற்று நீங்கள் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வளர்த்துக் கொண்ட நிலையில்
1.உங்கள் பார்வை உங்கள் சொல் உங்கள் மூச்சு காற்றலையில் பரவினாலும்
2.யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக வேதனைப்படும் ஒருவரைப் பார்த்தால் அந்த உணர்வு நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் அந்த விஷத்தின் வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

பின் நம் உடலில் உள்ள உணர்வுகள் எந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் வெளி வந்ததோ அதை அனைத்தையும் நம் கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.

அப்படி மோதச் செய்யும் பொழுது அந்த வேதனையான உணர்ச்சியின் இயக்கமாக… எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளில் நமக்குள் இயங்கத் தொடங்குகின்றது. எப்படி…?

சிறு குடல் பெரும் குடல்:-
1.அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறும் பொழுது
2.சிறுகுடல் பெரும் குடலில் உள்ள அணுக்களை மயக்கமடையச் செய்கின்றது
3.நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் நஞ்சாகக் கலந்து அங்கே நஞ்சான அமிலங்களாக மாறி விடுகின்றது.
4.அப்பொழுது நமக்குக் குடல் உபாதைகள் எல்லாம் வந்துவிடுகின்றது.

கணையங்கள்:-
இதைக் கடந்து இந்த அமிலங்கள் அடுத்த உறுப்புக்குள் சென்றால் நம் கணையங்களை உருவாக்கிய அணுக்களில் அங்கேயும் சிறு வேதனை வரும்.

கல்லீரல் மண்ணீரல்:-
கணையங்களைச் சீர்படுத்தும் நிலை இல்லை என்கிற பொழுது அந்த அமிலங்கள் நம் கல்லீரலிலும் மண்ணீரலிலும் கலக்கின்றது. அப்பொழுது அங்கிருக்கும் அணுக்களும் இந்த விஷத்தால் சரியாக இயங்காதபடி வரும். கல்லீரலிலும் மண்ணீரலிலும் வேதனைகள் வரும்.

நுரையீரல்:-
நுரையீரலில் இது கலந்தால் அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் அனைத்தும் இதைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் சளி உருவாகின்றது.

நெஞ்சுச் சளி போன்ற நிலைகளும் ஆஸ்த்மா போன்ற நோய்களும் வேதனை அதிகமானால் டி.பி. போன்ற நோய்களும் உருவாகிவிடுகின்றது.

கிட்னி – சிறுநீரகங்கள்:-
1.அந்த வேதனை என்ற அமிலம் கலந்த உணர்வுகள் கிட்னிக்கு வந்தால்
2.அது இரத்தத்திலிருக்கும் நீரைப் பிரிக்கும் சக்தி இழந்து
3.இரத்தத்துடன் நீர் கலந்து சென்று உடல் முழுவதும் புஸ்… என்று உப்பிப் போகும்.
4.நாம் உடல் உப்பி இருக்கிறோம் என்று நினைப்போம்.
5.ஆனால் நமக்குள் சென்ற பின் இரத்தத்தில் கலந்து ஓர் நீர் சத்துள்ள இரத்தமாக மாற்றிவிடும்.
6.அதனால் பல உபாதைகளும் வருகின்றது… சோக நீர் போன்று ஆகி சோக நோய் உடலில் உருவாகிவிடுகின்றது.
7.சர்க்கரை உப்பு போன்றவற்றைச் சரியாகப் பிரிக்க முடியாதபடி அந்த குறைபாடுகளும் ஆகின்றது.

இருதயம்:-
அடுத்து அந்த உணர்வுகள் நம் இருதயத்தில் கலக்கப்படும் பொழுது இருதயம் பலவீனமாகி விடுகின்றது. நம் எண்ணம் சொல் செயலைச் சீராக இயக்காதபடி ஆகிவிடுகின்றது.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இந்த நிகழ்ச்சிகள் நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளை எல்லாம் பாழாக்குகின்றது.

கண்களின் கருமணிகள்:-
அதே சமயத்தில் நம் கண்ணில் கவர்ந்த விஷத் தன்மை கருமணிகளில் தோய்ந்து விடுகின்றது.

வேதனப்படுவோரைப் பார்த்துவிட்டு
1.ஒரு நல்ல கணக்கை எழுத வேண்டும் என்றாலும்
2.ஒரு நல்ல தொழிலைச் செய்ய வேண்டும் என்றாலும்
3.அந்த கருமணிக்குள் வேதனை என்ற விஷம் கலந்த பின்
4.அந்த நல்ல எண்ணங்களை எண்ணும் பொழுது சிந்திக்கும் வலு இழக்கப்படுகின்றது… சிந்தனையும் குறைகின்றது.

நரம்பு மண்டலம்:-
கண்களின் வழி அந்த வேதனை என்ற விஷம் நரம்பு மண்டலங்களில் அதிகரிக்கும் பொழுது விஷத் தன்மை தோய்ந்து கை கால் குடைச்சல் என்ற நிலை வருகின்றது.

எலும்பு மண்டலம்:-
அதே உணர்வுகள் எலும்பு மண்டலங்களில் இது படரப்படும் பொழுது அந்த எழும்புகளுக்குள்ளும் இனம் தெரியாது வேதனைகள் வருகின்றது. எலும்புகள் தேய்மானம் போன்ற நிலை ஏற்படக் காரணம் ஆகின்றது.

தசை மண்டலம் தோல் மண்டலம்:-
அதே சமயத்தில் நம் தசை மண்டலங்களிலும் விஷத் தன்மை ஆகி தசை வலிகள் வருகின்றது. தோல் மண்டலங்களில் வரும் பொழுது இனம் புரியாத அரிப்புகளும் தோல் வியாதிகள் போன்ற நிலையும் வந்துவிடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் கூர்ந்து கவனித்த உணர்வுகள்
1.நம் நெஞ்சு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகிவிட்டால்
2.எந்தக் கண்ணால் வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அவர்களைப் பார்க்கும் பொழுது நினைவும்
3.அந்த நினைவானால் காற்றிலிருந்து சுவாசித்து நம் இரத்தங்களில் மாசுபடும் உணர்வே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்குத்தான் இந்தத் தியானம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்தத் தியானத்தின் மூலம் உருவாக்குகின்றோம்.

1.நாம் கண் வழி எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.கண்ணிலிருந்து நரம்பு மண்டலம் வழியாக எல்லா உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பால்
3.உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய முடியும்.
4.மாசுபடும் இரத்தங்களை மாற்றிப் பரிசுத்தமாக்கி ஒவ்வொரு உறுப்பையும் சீராக இயக்க முடியும்.
5.நோய் வராதபடியும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் நிச்சயம் பெற முடியும்.

எதுவும் கெட்டது அல்ல…! எப்படி…?

 

குருக்ஷேத்திரப் போர்…! ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள் அது உடலுக்கு குரு. ஓ…ம் என்பது பிரணவம்…. அதாவது நாம் எண்ணுவது ஜீவன் பெறுகின்றது.

ஆகவே… உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
2.குருக்ஷேத்திரத்தில்… உயிரிடம் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருங்கள்.

நீங்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் கொடுக்கும் வாக்குகள் உங்களுக்குள் அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாகப் பெற்று யாம் உபதேசித்த ஆற்றல்மிக்க சக்தியை… “நீங்கள் எண்ணிய போது… எண்ணிய நிலைகள் கொண்டு…” உங்களுக்குள் கிடைக்கச் செய்கின்றேன்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்தத் துன்ப உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் தான் பணியச் செய்வதே எமது ஆசி.

ஆகவே அந்த உணர்வுடன் நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதி கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மேல் நோக்கி விண்ணிலே நினைவைச் செலுத்தி உயிரிடம் வேண்டுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயல் புனிதம் பெற வேண்டும் நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும் பார்ப்போர் அனைவரும் நல்லதாக இருக்க வேண்டும் என்று இதை மட்டும் எண்ணி ஆசி பெறுங்கள்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டும் சக்திகள் அனைத்தும் தாள் பணிந்து…
1.உங்களுக்குள் ஒத்துழைத்து உங்கள் உயர்வான எண்ணங்களுக்கு வழிகாட்டியாக அது அமையட்டும்.
2.எது…?
3.எதுவும் கெட்டது அல்ல…! உங்களுக்குள் வலுவூட்டவும் வழிகாட்டியாகவும் அது இருக்கும்.

கெட்டது என்று அது தான் நமக்குக் காட்டுகின்றது. அதை நாம் நீக்கிவிட்டுச் செல்ல விரும்புகின்றோம். கெட்டது என்று அது வழி காட்டினாலும் அந்த உணர்வு எனக்குள் சேர்ந்து விடுகின்றது.
1.ஆனால் வழிகாட்டிய நிலைகளும் எனக்குள் அது பணிந்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
2.ஆக… வழிகாட்டிய அந்த விஷமே என்னை ஆட்கொண்டு விடக்கூடாது.
3.ஆகையினால் தான் அத்தகைய நிலைகளை “ஆசீர்வாதம்…” என்பது
4.உயர்ந்த சக்தியாக… ஞானத்துடன் கூடிய… “மெய் வழி பெறும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்…” என்று ஆசி கொடுக்கிறேன்.

அந்த வழியில் ஆசி வாங்கிப் பழகுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே.. அண்டமே… அகண்ட நிலைகள் கொண்டிருப்பினும் அது “இருண்ட நிலைகள் கொண்டது தான்…!”

1.ஒரு வீட்டைத் தொடர்ந்து சில நாள்கள் அடைத்து வைத்திருந்தால்
2.அதற்குள் தன்னிச்சையாக வெப்பமாகி அதில் ஓர் ஆவி போல் உருவாகும்.
3.அந்த ஆவி நாளடைவில் ஒரு நெடி கலந்த… “விஷத் தன்மை” அடைகின்றது.

இதைப் போல் தான் பேரண்டம் அகண்ட நிலைகளில் இருக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது. அந்த வெப்பத்தின் தணலால் அது ஆவியாக மாறி “அடர்த்தி ஆகி விஷத்தின் தன்மை” அடைகின்றது.

அடுத்தடுத்து இந்த விஷத்தின் தன்மை ஆகி அதனால் ஆவியின் தன்மைகள் வரப்படும் பொழுது
1.இந்த விஷத்தின் தன்மை மீண்டும் தாக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது.
2.வெப்பத்தின் தன்மை அடையும் பொழுது நகர்ந்து ஓடுகின்றது.
3.ஓடும் பொழுது ஈர்க்கும் காந்தம் என்ற நிலை வருகின்றது.

முதலில் வெப்பம்… பின் ஆவியின் நிலை நாளடைவில் விஷமாகி… மீண்டும் சாந்த நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது இது அணுக்களாகப் பிரிந்து சென்ற பின்
1.வெப்பம் காந்தம் விஷம் என்ற இந்த மூன்று நிலை பெறுகின்றது.
2.இதைத் தான் மும்மலம் என்று சொல்வது.
3.ஆதிபராசக்தி என்பது வெப்பம்… ஆதிலட்சுமி என்பது காந்தம்… ஆதிசக்தி என்பது விஷம்.
4.விஷத்தின் தன்மை கொண்டு இப்படி மூன்று சக்திகளாக இயங்குகின்றது.

இருப்பினும் அணுத் தன்மை பெற்ற பின் இதைப் போன்று ஒரு உணர்வின் சத்து உருவாகிறது என்றால் காந்தம் தன்னுடன் அதை இழுத்த பின் மோதுகின்றது.

மோதிய நிலைகள் கொண்டு அது தன்னுடன் இணைத்த பின் அந்தச் சத்தின் தன்மை இரண்டறக் கலந்து விடுகின்றது.
1.அந்தச் சத்திற்குப் பெயர் சீதா என்றும்
2.அந்த மணத்திற்குப் பெயர் ஞானம் என்றும்
3,.இந்தச் சத்து தன்னுடன் இணைத்து இரண்டறக் கலந்து கொண்டால் பரப்பிரம்மம் என்றும்
4.”பிரம்மா உருவாக்குகின்றான்…!” என்றும் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் சத்து ஞானம் என்று இப்படி ஐந்து நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது. எந்த மணத்தை இதனுடன் இணைத்ததோ “புலனறிவு ஐந்து…!” என்று ஆகின்றது.

எதற்குள் சென்றாலும் அதன் வலு கொண்டு தனக்குள் இருக்கும் அந்த மணத்தை இயக்கும் என்று பொருள்படும்படியாக நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. இப்படி உருவானது தான்… எல்லாமே…!

ஏனென்றால் கடவுள் எப்படி இருக்கிறான்…? என்ற நிலையில் நாம் தெரிந்து கொள்வதற்குத்தான்…
1.கடவுள் எங்கேயோ இருக்கின்றார்…
2.அவரே தான் நம்மைக் காக்கின்றார்…! என்ற நம்பிக்கை தான் மனிதர்களிடத்தில் இருக்கின்றது.

ஆனால்
1.உணர்வின் தன்மை ஒன்றுக்குள் ஒன்று “உள் நின்று இயக்கும்” நிலை தான் கடவுள் என்றும்
2.ஒன்றினுள் ஒன்று இணைக்கப்படும் பொழுது உருவாவது ஈசன் என்றும்
3.ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் பொருள் பரப்பிரம்மம் என்றும்
4.இப்படி இயற்கையின் நிலைகள் எப்படி உருவாகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்கியது ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் தான்.
5.அந்த அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து தான் இப்பொழுது அதை நான் (ஞானகுரு) பேசுகிறேன்.

அகஸ்தியன் தனக்குள் கண்டறிந்து அவனுக்குள் விளைந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இங்கே படர்ந்திருக்கின்றது.

அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. நீங்களும் அதை நுகரலாம்.
1.இந்த உலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப் பதிவு செய்து
2.அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது பெற முடியும்.
3.அதைத்தான் “தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…? என்று சொல்வது.
4.தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லோராலும் பெற முடியும் என்பதே அதனின் தத்துவம்.

இப்பொழுது ஒருவர் திட்டிவிட்டார் என்றால் “என்னைத் திட்டுகிறான்…! என்ற எண்ணத்தைப் பதிவு செய்துவிட்டால் மீண்டும் என்ன செய்கிறீர்கள்…?

என்னைத் திட்டினான்.. திட்டினான்… திட்டினான்…! என்றால் அந்த உணர்வுகள் வளர்ச்சியாகி அவன் மேல் வெறுப்பாகி நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்குள்ளும் வெறுப்பின் தன்மை கலந்து இரத்தக் கொதிப்பு போன்ற பலவிதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.

ஆகவே ஒரு திட்டியவனின் உணர்வைக் கவர்ந்து பதிவாக்கி அதை நினைவாக்கும் பொழுது நோயாக உருவாவது போல்
1.ஆதியிலே அகஸ்தியன் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.இயற்கை எப்படி விளைகின்றது…? என்ற உண்மைகளையும் பதிவாக்கிக் கொண்டு
3.மீண்டும் அதை நாம் நினைவுக்குக் கொண்டு வந்தால்
4.நாமும் அந்த அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உருவாக முடியும்.

அதற்காக வேண்டித்தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஆயிரெத்தெட்டு… நூற்றியெட்டு… என்றெல்லாம் நாமாவளி சொல்கிறோம்… ஏன்…?

 

கௌரவர்கள் 100 பேர் என்று மகாபாரதத்தில் காட்டுவார்கள். 100 விதமான கௌரவர்கள் நமக்குள் உண்டு. ஒன்றுடன் ஒன்று என்ன செய்யும்…?
1.நாம் நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அதைத்தான் அது இயக்கும்… கௌரவர்கள்.
2.தான் எடுத்துக் கொண்ட உணர்வு… தனக்குள் ஏற்கனவே இருப்பதற்கு மாறாக வந்தால் அது விடாது.

மந்திரத்தைக் கற்றுக் கொண்டவர்களிடம் நல்லதைச் சொன்னால் மந்திரக்காரன் ஏற்றுக் கொள்வானா…? கௌரவம் என்ற நிலை வருகின்றது.

நல்ல சத்தின் தன்மை எடுத்துக் கொண்டால் நல்லது என்று வராதபடி கௌரவர்கள் அதனதன் வளர்ச்சிக்குத் தான் இயக்கும்.

இப்படி ஒரு மனித உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அவனில் அந்த உடலில் எப்படி 100 குணங்கள் எப்படி இயக்குகின்றது…?

கோவில்களில் நாமாவளி சொல்வார்கள். கடவுளின் அவதாரம் 10 என்றால் தெய்வத்தின் அவதாரம் 10 என்ற நிலை வருகிறது. அது எதனதன் நிலைகள் வளர்ந்தது என்று நிலையும் வரும்.

அன்ன வாகனம் யானை வாகனம் சர்ப்ப வாகனம் மயில்வாகனம் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் வைப்பார்கள் 10 வாகனங்களை. அந்த வாகனங்கள் எதற்கு…?

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உட்கொள்கின்றது. மயிலும் தனக்குள் மற்றதை உட்கொண்டு விஷத்தை மாற்றுகின்றது. இப்படி
1.பரிணாம வளர்ச்சியில் ஒன்றை ஒன்று கொன்று ஒன்றை ஒன்று தின்று
2.பத்தும் சேர்த்து ஒன்றாக ஒரு குணமாக மாறுகின்றது.

அதனால் தான் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்களை வைத்து எதனதன் நிலையில் வளர்ச்சி அடைந்தது…? என்று ஒவ்வொரு சாமிக்கும் இவ்வாறு வைத்திருப்பார்கள்.

இப்படி நூறு விதமான குணங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் பத்து. இந்த நூறும் சேர்த்தால் ஆயிரம் ஆகும். அஷ்டதிக்கும் அறியும் உணர்வு வரப்படும் போது எட்டு…! அதாவது
1.ஆயிரெத்தெட்டு என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள்… அதே போல நூற்றியெட்டு…
2.எதன் உணர்வின் தன்மையோ இதன் உணர்வுக்கொப்ப அஷ்டதிக்கும் அது உணர்வின் தன்மை எப்படி எடுக்கிறது…? என்று
3.இந்த உணர்வின் குணங்கள் மாறுவது எப்படி…? இந்த உணர்ச்சியின் செயல்கள் எப்படி மாறுகின்றது…?
4.இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் எந்தக் குணத்தின் தன்மையை நாம் எடுக்கின்றோமா… உதாரணமாக சர்க்கரைச் சத்து என்ற குணத்தை வைத்துக் கொண்டு சர்க்கரையைச் சாப்பிட்டால் எதிர்நிலையாகின்றது.

சர்க்கரை அதிகமாகி விட்டால் அனைத்தையும் வெள்ளணுக்களாக மாற்றி விடுகின்றது. கோப உணர்வு அதிகமாகி கார உணர்வானால் அந்த உணர்ச்சிகளை அதிகமாகத் தூண்டுகின்றது… பின்னாடி இரத்தக் கொதிப்பால் வாத நோயாகி கை கால்களைச் சுண்டி விடுகிறது.

1.இப்படி ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு எதிர் நிலையாகும் பொழுது உடலுக்குள் எப்படிப் போர்கள் நடக்கின்றது…?
2.மனிதனுடைய நிலை எப்படி இருக்கின்றது…? எதன் வழியில் அது வருகிறது…? என்பதைக் குருநாதர் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் கோயில்களில் யாகங்கள் செய்வதைப் பார்ப்போம். தெய்வத்திற்கு யாகங்கள் செய்து கும்பாபிஷேகம் செய்து சக்தி ஊட்டுவார்கள்.

1.அங்கே சொல்லும் மந்திரம்… வாசிக்கும் இசை…
2.நெருப்பில் போடும் புகை… அதில் என்னென்ன மணங்கள் வருகிறதோ…
3.அதை எல்லாம் யாகத்தில் உட்கார்ந்து இருப்போர் நுகர நேர்கிறது.

கோயில்களில் இருக்கும் இந்தத் தெய்வத்திற்கு இன்ன சக்தி இருக்கின்றது என்று இப்படி மக்கள் மத்தியிலே அதன் உணர்வுகளை உருவாக்குகின்றனர்.

அடுத்து அந்தத் தெய்வத்திற்கு இன்னென்ன அர்ச்சனைகள் செய்தால் நம்முடைய குறைகளை எல்லாம் நீக்கி நலமாக இருப்போம் என்று அதையும் ஆழமாகப் பதிவு செய்து கொள்கிறோம். அந்த உணர்வுகளை அங்கே ஊட்டுவார்கள்.

ஆனால் அத்தகைய யாகத்தில் உட்கார்ந்து நாம் கேட்டு நமக்குள் அங்கே செய்வதை எல்லாம் பதிவாக்கினால் இதற்குப் பெயர் “வசியம்…” சில கோயில்களில் பனிரண்டு வருடம் ஆகிவிட்டால் மீண்டும் இத்தகைய யாகத்தைச் செய்து மனித உடலிலே பதிவு செய்து அந்தக் கோயிலுக்குக் கூட்டமாக வருவார்கள்.

அக்காலங்களில் இதைப் போன்ற நிலைகள் நிறைய உண்டு.

ஏனென்றால் அந்த மந்திரங்களை எல்லாம் பதிவு செய்து பக்தி கொண்ட நிலையில் தெய்வத்தை எண்ணி வாழ்ந்து இறந்தபின் அரசர்கள் இந்த மாதிரி ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கவர்ந்து கொள்வார்கள்.

1.ஆக மொத்தம் உடலுடன் இருக்கும்போது அரசனுக்குச் சேவை செய்கின்றோம்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் அவன் செய்யும் வேலைகளுக்குப் பயன்படுவோம்.

ஆலயத்தில் அரசன் வழிப்படுத்திய முறைப்படி மந்திரங்களை நாம் பதிவு செய்து கொள்கின்றோம். (பெரும் பகுதி இன்று மந்திரம் சொல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்)

மந்திரங்களைப் பதிவு செய்து கொண்ட ஆன்மாக்களை வசியம் செய்து அடுத்து அவர்கள் இறக்கப்படும் போது இந்தக் குறிப்பை எடுத்துக் கொள்வார்கள். அதற்குத்தான் குடுகுடுப்புக்காரன் வருகின்றான்.

இவர்கள் எல்லாம் அக்காலங்களில் அரசருக்கு “ஐந்தாம்படை…” என்று சொல்வார்கள். காடு ஆறு மாதம் நாடு ஆறு மாதம் என்று தனித் தனிக் கூட்டமாக (BATCH) வருவார்கள்.

ஒரு கூட்டம் இந்த வருடம் காடுகளில் வளர்ந்து மந்திரங்களை செய்வதும் அடுத்து அதே மந்திரத்தைக் கொண்டு வந்து நாட்டுக்குள் வந்து இரவிலே வீடு வீடாக வந்து நல்ல நேரம் வருகின்றது.. கெட்ட நேரம் வருகின்றது… அது வருகிறது… இது நடக்கப் போகிறது…! என்று சொல்வார்கள்.

அப்படி வரும் பொழுது நம் வீட்டு வாசல் படியில் இருக்கின்ற மண்ணை எடுத்துக் கொள்வான். ஏதாவது ஜோசியத்தைச் சொல்லி துணி மணிகள் கொடுங்கள்…! என்று கேட்பான்.

அந்தக் குடுகுடுப்புக்காரன் கேட்டவுடனே புதுத் துணியை எடுத்துக் கொடுப்பீர்கள்.

அவன்… வேண்டாங்க..! பழைய துணி கொடுங்கள்…! என்பான். அப்புறம் ஏதாவது சொல்லி நம்முடைய தலைமுடியை எடுத்துக் கொள்வான். கேட்டால்… தோஷத்தை நீக்க வேண்டும் என்பான்.

இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் அதற்கென்ற அரசனிடம் ஒப்படைப்பான். இந்தத் தேதியில் இத்தனை மணிக்கு இந்த நிலைகளில் இறந்தார்கள்…! என்று எல்லாவற்றையும் கூறுவான்.

அந்த அதர்வண வேதத்தைக் கற்றுணரந்தவர்கள் இதை அடிப்படை ஆதாரமாக வைத்து மந்திரங்களை ஜெபித்து இந்த ஆன்மாவை எல்லாம் அங்கே கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

ஆக உடலோடு இருக்கும் போதும் அரசனுக்கு அடிமை. உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின்னும் அந்த ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தி அடிமையாக்கி… அடுத்த நாட்டின் மேல் ஏவல் செய்வார்கள்.
1.ஒவ்வொரு அரசனும் அவனுக்கு வேண்டிய குலதெய்வம் என்ற நிலையை உருவாக்கி
2.அவன் நாட்டு மக்களுக்குள் இதை பதிவு செய்வான்.

நம்மை ஆட்சிப் புரிந்து வந்த கடந்த கால அரசர்கள் குலதெய்வம் என்று வைத்து அதன் வழியில் குடிமக்கள் இப்படிச் செய்வார்கள்…! என்று பதிவாக்கிக் காலம் காலமாக வைத்துள்ளார்கள்.

குலதெய்வம் என்ற நிலைகள் கொண்டு அந்த மக்கள் இறந்த பின் அந்த ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள். எதிரிகள் போர் முறை என்று வரப்படும்போது கைவல்யப்படுத்திய ஆன்மாக்களைப் பில்லி சூனியம் ஏவல் என்ற நிலைகளுக்கு எதிரிகளை வீழ்த்திடவும் அவர்களைப் புத்தி பேதமாக்கவும் பயன்படுத்துவார்கள்.

இன்றைய கால கட்டத்தில் விஞ்ஞான அறிவை எடுத்துக் கொண்டாலும் கூட
1.ஒரு நாட்டில் உளவாளிகளாக (SPY) வைத்து
2.அங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்..? என்ற நிலையை
3.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் அறிந்து இயக்கி
4.அதை வைத்து உலகம் முழுவதற்கும் பல வகைகளிலும் தீமைகளைப் பரப்புகின்றனர்

அதே சமயத்தில் விஞ்ஞானத்தில் முதிர்ந்திருந்தாலும் கர்த்தர் தான் தன் கடவுள் என்று சொல்பவர்களும் அந்த அதர்வண வேதத்தைக் கற்றிருப்பார்கள்.

மற்ற மதத்தில் உள்ளவர்களும் அங்கிருக்கும் உணர்வுகளை அந்த ஆன்மாக்களைச் சேர்த்துப் பக்தி கொண்ட நிலையில் மற்றவர்களை இயக்குவார்கள்.

அத்தகைய ஆன்மாக்களைத் தேர்ந்தெடுத்துத் “தன் மதம் தான் பெரிது…!” என்று இயக்குவார்கள். உலகம் முழுவதுமே இன்று பார்க்கலாம். இனப்போர் மொழிப்போர் மதப்போர் என்று இரக்கமற்றுத் தாக்கும் நிலை வருகின்றது.

இதுகள் எல்லாம்
1.மனித உடலில் ஒரு ஆவி புகுந்து கொண்டால் அதன் நிலையையே செயல்படுத்துகின்றது.
2.அந்த ஆவி எந்தெந்த நிலைகளில் அந்த உடலில் இருக்கும் போது இடைஞ்சல் செய்ததோ
3.இன்னொரு உடலுக்குள் புகுந்தாலும் அதே தீயவினைகளைச் செய்கின்றது
4.அதற்கு நாம் மருத்துவம் பார்த்தாலும் எந்த வேலையும் ஆவதில்லை.

ஆனால் மந்திரங்களைச் செய்து… யாகங்கள் செய்து… சக்கரங்கள் வைத்து நீக்கி விடுவோம்…! என்ற நிலையில் செய்கின்றனர். அது நீங்காது.

1.அந்த உடல் இறக்கும் பொழுது தான் “அந்த ஆன்மாக்களும் வெளியில் வரும்…”
2.வந்த பின் அடுத்து மனிதனல்லாத மிருக உடலோ ஊர்ந்து செல்லும் உயிரினமாகவோ தான் அது பிறக்கும்.
3.அல்லது இன்னொரு மனிதன் பற்று கொண்டான் என்றால் மீண்டும் அங்கே செல்லும்.

ஆக எப்படிப் பார்த்தாலும் அமாவாசை அன்று சாங்கியங்களையும் யாகங்களையும் செய்து மறுபடியும் மனிதனில்லாத பிறப்பிற்குதான் நாம் கொண்டு வருகின்றோம்.

1.இந்த உடலைச் விட்டு சென்ற பின்
2.”பிறவியில்லா நிலை அடையும் மார்க்கங்கள்…”
3.இன்று.. இது வரையிலும்… மத அடிப்படையில் இல்லை.

கூட்டமைப்பாக இருந்து… ஒவ்வொரு குடும்பத்திற்கும் “நாம் செய்ய வேண்டிய அருள் சேவை…”

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

மனிதர்களாக வாழக்கூடிய நாம்…
1.பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடலை வளர்த்த உணர்வுகள்
2.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு மேலே சொன்ன உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பப்படும் போது இது அனைத்திலும் கலந்து
3.எந்தெந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொண்டோமோ அதற்குள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து சர்வ தீமைகளையும் அகற்ற உதவும்.

தீமைகள் வரப்படும் பொழுது… அது எப்படி நமக்குள் கலக்கின்றதோ… அந்தத் தீமை எப்படி இயக்குகின்றதோ… இதைப் போன்றே
1.அந்தத் தீமை செய்யும் உணர்வுகளுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்கப்படும் பொழுது
2.மழை மேகங்களுக்குள் அருள் சக்திகளைப் பரப்பப்படும் போது அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றன.

அதே சமயத்தில் ஆங்காங்கு கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன…?

ஒருவர் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் தியானமிருப்போர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர் உடலில் படர்ந்து… அவரை அறியாது தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்கி… அவர் உடல் நலம் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும் என்று “பல முறை சொல்லுங்கள்…”

1.இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும் பொழுது இந்த உணர்வு எல்லோருடைய செவிகளிலும் பட்டு…
2.இந்த உணர்வை அவரும் நுகரப்படும் பொழுது அவர் நோயின் கடுமை குறைவதைப் பார்க்கலாம்.

இதை மீண்டும் மீண்டும் அவர் எண்ணத் தொடங்கினால்… அனைவரும் சேர்ந்து அவர் உடல் நலம் பெற செய்ய வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் அவருக்குள் ஓங்கி வளர்ந்து அந்த கடுமையான நோயைத் தணிக்க இது உதவும்.

இதையெல்லாம் நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும்.

தியானம் செய்து கொண்டிருந்தாலும்… ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ சாப அலைகள் உண்டு. நாம் தியானத்திற்குச் செல்லும் போது
1.அங்குள்ள சாப அலைகள் நீங்கி தீய வினைகள் நீங்கி அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்க வேண்டும்.
2.நாம் இப்படி வலுவான நிலைகள் கொண்டு பதிவாக்கும் இந்த உணர்வலைகளை வீடுகளில் உள்ள காந்தப்புலனறிவு கவர்ந்து கொள்ளும்.
3.இந்த உணர்வுகள் அந்த வீட்டில் உள்ளோருக்கு மீண்டும் நினைவூட்ட உதவும்….
4.தீமை அகற்றும் எண்ணங்கள் அங்கே தோன்றுகின்றது.

அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இந்த உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது “ஒவ்வொரு நிமிடத்திலும் நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது…”

ஒரு குடும்பத்தில் அதிகமான சிரமம் என்று கேள்விப்பட்டால் தியானம் செய்யும் இருபது பேர் அங்கே சென்று அமர்ந்து தியானித்து மகரிஷிகளின் உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

அப்போது அவர்கள் தொழில் வளம் பெறவும் கடும் பிணிகளில் இருந்து மீளவும் அருள் ஞானம் பெருகவும் ஞானத்தின் வழியில் அவர்கள் வழி நடக்கவும் இது உதவும்.

அந்த வலிமையான உணர்வுகளை நாம் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். “குடும்பம் நலம் பெற வேண்டும்…” என்ற உணர்வின் ஏக்கம் கொண்டு ஆங்காங்கு கூட்டமைப்பாகச் செயல்படுத்துங்கள்… நன்மை பயக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதைச் செயல்படுத்தி… அவர்கள் மகிழ்ந்து வாழ்வதைக் கண்டு “மகிழ்ச்சியான உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்…”

1.இதை அனைவரும் செயல்படுத்துங்கள்
2.அருள் ஞானம் பெறுங்கள்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையுங்கள்.
3.அருள் வழிகளிலே இந்த வாழ்க்கையை வழிநடத்துங்கள்.
4.அருள் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்
5.அருள் ஞான உணர்வுடன் ஒன்றி வாழ்ந்து அந்த மகரிஷிகள் சென்ற அந்த இடத்திற்கு நாமும் செல்வோம்.

அனைவரும் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்

 

வீட்டை அழகாகக் கட்டுகின்றோம்… தூசி பட்டால் தூய்மைப்படுத்துகின்றோம். ஆடைகளை அழகாக அணிகின்றோம்… அழுக்குப் பட்டால் துவைத்து விடுகின்றோம். நம் உடலில் அழுக்குப்பட்டாலும் குளித்து விடுகின்றோம்.

அப்போது நம் ஆன்மாவில் அழுக்குப்பட்டால் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…! அதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். உபதேசத்தைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம் உபகாரமும் செய்கின்றோம் அவர் வேதனைப்படுவதை நம் கண்கள் பதிவாக்குகின்றது மீண்டும் நினைவாக்கும் பொழுது கண் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

ரேடியோ டிவி இவைகளுக்கு ஏரியல் ஆண்டன்னா இருப்பது போன்று
1.நமது கண்கள் இந்த உடலுக்கு ஆண்டென்னாவாகச் செயல்படுகின்றது.
2.பதிவு செய்ததை மீண்டும் எண்ணும் பொழுது காற்றிலிருந்து கவருகின்றது.
3.அதனால் தான் அதைப் பரமாத்மா என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
4.கண்களைக் கண்ணன் என்று பெயர் வைத்தாலும் “கண்ணன் – திருடன்…” என்று விளக்க உரை கொடுக்கின்றார்கள்.

ஒருவன் நல்லதைச் செய்கின்றான். நாம் உற்றுப் பார்த்தால் நல்லது செய்யும் உணர்வினைக் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ அவன் உடலிலிருந்து வெளிப்படும் அந்த நல்ல உணர்வை நுகர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது.

மோதிய உணர்வுகள் அந்த நல்லது நம் ரத்தத்தில் கலக்கின்றது. நல்லது செய்யும் உணர்வுகளை இதே கண்கள் தான் கவர்கின்றது… திருடுகின்றது. அதே உணர்ச்சிகள் மீண்டும் இயக்கப்பட்டு “நல்லது செய்ய வேண்டும்…” என்று எண்ணம் வருகின்றது.

ஒருவன் கோபமாகப் பேசுகின்றான். கருவிழி ருக்மணி அந்த கோபக்காரனைப் பதிவாகிய பின் அந்தக் கோபத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இதே கண்கள் தான் அந்த காரமான உணர்வினைத் திருடுகின்றது.

அதனால் தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகிறான் என்று காட்டுகின்றார்கள். இப்படிப் பிறருடைய தீமைகளை எடுக்கப்படும் பொழுது அதை கவர்ந்து நம் உடலுக்குள் சேர்த்து விடுகின்றது.

நாம் எத்தகைய மனிதனாக இருப்பினும் கண் கொண்டு ஒருவரை உற்றுப் பார்த்தால்
1.அந்த உயர்ந்த குணங்கள் வரும் பொழுது உணர்வின் தன்மை பதிவாக்கி நாமும் உயர வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகின்றது.
2.ஆனால் தவறு செய்கிறான் என்ற உணர்வினை நுகர்ந்து கொண்ட பின் அதே உணர்வு நமக்குள் வந்து நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.

அந்த வெண்ணையைத் திருடிய பின் அதன் உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. இது எல்லாம் கண்களுக்குள் நடக்கக்கூடிய இயக்கங்கள்.

அது தான் பரமாத்மா…!
1.நமக்கு முன் பரவிக் கிடக்கக்கூடிய நிலையினைக் கண்கள் இழுத்துக் கவர்ந்து
2.நமக்குள் ஒவ்வொன்றையும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றான் என்பதைக் கண்களுக்குக் காரணப் பெயர் வைத்துத் தெளிவாக்கி உள்ளார்கள்.

அடிக்கடி வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை நுகர நேர்ந்தால் என்ன ஆகும்…? வேதனை என்ற அந்த விஷத்தின் தன்மையால் நரம்புகள் வழி கூடி நல்லதைச் சிந்திக்கும் தன்மைகள் இழக்கப்பட்டு கண்கள் இருண்டு விடுகின்றது… குருடாகி விடுகின்றது.

வேதனைகளை அதிகமாகச் சுவாசித்தால் உயிரிலே பட்டு நம் ரத்தத்தில் கலந்து உடலில் விஷத்தின் தன்மை பாய்ந்து விடுகின்றது. இது தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்று இதே உணர்வுகள் வரப்படும் பொழுது அதற்குத் தக்க இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

கண்கள் இருண்டு விட்டால் நாம் எதைப் பார்க்க முடியும்…? பார்க்க முடியாது. இது எல்லாம் எதனால் வருவது…? நாம் சுவாசித்ததனால் வருவது. சுவாசித்ததை உயிர் தான் உருவாக்குகின்றது.

அதை மாற்ற வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் உடல் நஞ்சை எப்படி மலமாக மாற்றியதோ… ஆறாவது அறிவு வாழ்க்கையில் வந்த நஞ்சினைப் பிரிக்கும் சக்தி பெற்றது.
1.விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சையும் வென்று ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாற்றுகின்றது. துருவத்தின் வழி பூமி கவருகின்றது.

அதைப் பெறச் செய்வதற்கு தான் இத்தனை உபதேசங்களையும் கொடுக்கின்றோம். அதை ஆழமாகப் பதிவு செய்த பின் நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்யக்கூடிய பயிற்சியாக அமைத்துக் கொள்ள வேண்டும். எத்தகைய வேதனையாக இருந்தாலும் தீமையான உணர்வாக இருந்தாலும் அதை ஒடுக்கி தீமை புகாது நீங்கள் தடுத்துக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று விஞ்ஞான உலகில் தான் இருக்கின்றோம். விஞ்ஞானத்தின் மூலம் அண்டத்தையும் கம்ப்யூட்டர் என்ற சாதனைத்தின் மூலம் அளந்தறிகின்றனர்.
1.உலக இயக்கத்தையும் அறிகின்றனர்.
2.எங்கேயோ (COSMOS) காணாத இடத்திலிருப்பதையும் அந்த உணர்வுகளை நுகர்கின்றார்கள்.
3.அதை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் இங்கே பதிவாக்கிப் பல ஆயிரம் மடங்கு பெருக்குகின்றார்கள்
4.அந்தக் கோள் எங்கே இருக்கின்றதோ அதே உணர்வை இங்கே பதிவாக்கி உந்து விசையால் இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை ஏவுகின்றனர்
5.விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது அதிலே பதிவான உணர்வு… தன் இனத்தைக் கண்டதும் செயற்கைக் கோளை அதன் வழி அழைத்துச் செல்கிறது.
6.அங்கே இருக்கக்கூடிய நிலைகளை எல்லாம் தரையிலே இங்கே அறிய முடிகின்றது.

இதைப் போன்ற நிலையில் விஞ்ஞான அறிவு இன்று இருக்கும் இக்காலத்தில் நாம் பக்தி மார்க்கத்தில் எப்படி இருக்கின்றோம்…?

யாரோ செய்வார்… சாமியார் செய்வார்… சாமி செய்யும்… ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்… வேள்விகள் செய்யும்…! என்ற நிலைகளில் அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய பேருண்மை என்ன…?

தீமை என்ற நிலைகள் நமக்குள் இருப்பினும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிர் அதை “ஓ…” என்ற ஜீவ அணுவாக உருவாக்கி “ம்…” என்று நம் உடலாக மாற்றும்.

அதே வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைத் திரும்ப எண்ணும் பொழுது
1.அது நமக்குள் நன்மை பயக்கும்..
2.நம் உடலுக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்…
3.நம் சொல் கேட்போருக்கும் நலம் பெறும் சக்தியாக மாறும் என்பதைத்.தெளிவாகக் கூறியிருப்பினும்
4.அதை நாம் யாரும் இது வரை பின்பற்றவில்லை.

சாமி (ஞானகுரு) வந்தார் என்றால் அவரிடம் பெரிய சக்தி இருக்கின்றது… “அவர் தான் நமக்குச் செய்வார்…!” என்ற இந்த ஆசை தான் வருகின்றது.

சாமி உபதேச வாயிலாகக் கொடுக்கும் அந்த அருள் உணர்வின் சக்தியை நமக்குள் பதிவு செய்து மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால்
1.அந்த உயர்ந்த குணத்தை நாமும் பெற முடியும்
2.நமக்குள் தாழ்மைப்படுத்தும் உணர்வை.. தீமை செய்யும் உணர்வை மாற்ற முடியும்
3.நாம் சொல்லாகச் சொல்லி வெளிப்படுத்தும் உணர்வுகள் பிறரைப் புனிதமாக்கவும் உதவும்
5.நமக்குள்ளும் புனிதமாக்கும் உணர்வுகள் விளையும்…! என்ற இந்தத் தன்னம்பிக்கை வருதல் வேண்டும்.

இதைத்தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

மனிதனுக்கு அடுத்த அந்தத் தெய்வ நிலையை அடையும் மார்க்கங்களைத் தான் நம்முடைய ஆலயங்கள் அனைத்திலும் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்தல் வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய வழியில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு சமயம் நான் (ஞானகுரு) பத்ரிநாத் போய் விட்டு வந்து கொண்டிருந்தேன்.

எனது நண்பர் என்ன செய்தார்…! சென்னைக்குப் போகலாம்…! என்று சொல்லி என்னைக் கூட்டிக் கொண்டு போகிறார். என் கையில் பணம் இல்லை.

டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். விமானம் டெல்லியை விட்டுப் புறப்பட்டு மேலே பறந்து சென்று சிறிது நேரம் தான் இருக்கும்.

அந்த விமானிக்கும் தெரியவில்லை. அந்த நேரத்தில் எப்படி… என்ன ஆனது…? என்று தெரியாதபடி “கிர்…ர்ர்…” என்று எவ்வளவு உயரத்தில் மேலே போனதோ அதே வேகத்தில் “கிர்…ர்ர்…” என்று விமானம் கீழே இறங்குகிறது.

அப்பொழுது குருநாதர் அங்கே அதனுடைய இயக்கங்களைச் சொல்கிறார். இயற்கையின் நியதிகளில் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த இருபத்தியே ஏழு நட்சத்திரங்களும் இருபத்தியேழு விதமான உணர்வுகளை எடுத்துக் கொள்கிறது.

ஒரு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் துகளும் இன்னொரு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் அது பிரபஞ்சத்தில் பூமிக்கு வெளியே மோதினால் அது ஆவிகளாக மாறப்படும்போது எந்தெந்தக் கோள் அந்தப் பாதையில் வருகின்றதோ அதனின் சத்தை அது எடுத்துக் கொள்கின்றது

ஆனால் எதிர்நிலையான நட்சத்திரங்களின் துகள்கள் வரப்படும்போது அது ஒன்றோடு ஒன்று மோதினால் என்ன ஆகின்றது…?

நம் பூமியில சூறாவளி என்று சொல்கிறோம் அல்லவா…! இதே போல் நம் பிரபஞ்சத்திற்குள்ளும் சூறாவளி உண்டு. அதைத்தான் அங்கே காட்சியாக உணர்த்துகின்றார் குருநாதர்.

பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் மேலே செல்லப்படும் பொழுது அங்கே அனுபவரீதியிலே காட்டுகின்றார்.
1.அங்கே எதிர்மறையான நட்சத்திரங்களின் உணர்வலைகள் அதிகமாகப் பரவி இருக்கும்போது
2.ஈர்க்கும் காந்தம் அங்கே குவிந்திருக்கின்றது.
3.விமானம் அந்த இடத்தின் அருகிலே சென்றதும் குவிந்த நட்சத்திரத்தின் அலைகள் கிர்…ர்ர்..! என்று கீழே இழுத்துக் கொண்டு போகிறது. (அந்த நேரத்தில் காட்டுகின்றார் குருநாதர்)

அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அத்தனை பேரும் அப்படியே கதிகலங்கிப் போனார்கள்.
1.எல்லோரும் சத்தம் போட்டார்கள்…!
2.நான் அசையாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றேன்.

ஏதாவது அசம்பாவிதங்கள் ஆனால் விமானத்தை ஓட்டுகிறவர்கள் பயணிகளுக்குத் தைரியத்தைச் சொல்வார்கள். ஆனால் திடீரென்று இப்படி ஆனவுடனே விமானி (PILOT) முதல் எல்லோரும் கதிகலங்கிப் போனார்கள்.

வானியலை முன் கூட்டியே அறிந்து தான் விமானத்தை ஓட்டுகின்றனர். ஆனாலும்
1.சில பகுதிகளில் மற்ற நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகரித்து
2.அதாவது… எதிர்மறையான நட்சத்திரத்தின் துகள்கள் நம் பூமியின் உணர்வுக்குள் ஈர்க்கப்பட்டால்
3.அது மின் கதிர்களாக மாற்றப்படும் போது இது எதிர் நிலை ஆகிச் சுழல் காற்றாக மாறுகின்றது.
4.அப்படிப்பட்ட சுழல் காற்றுக்குள் நேராக விமானம் போகும் போது
5.ஒரு நொடியில் கீழே இறக்குகின்றது…! என்பதை அனுபவமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

நம் குருநாதர் சாதாரணமானவர் அல்ல…!
1.பைத்தியக்கான் தான்…!
2.கிழிந்த வேஷ்டியைத் தான் கட்டி இருந்தார்.
3.ஒவ்வொரு நொடியிலும் இந்த நிலையைக் காட்சி கொடுத்து உபதேசித்துக் கொண்டே வந்தார்
4.அந்தச் சந்தர்ப்பம் நான் தெளிவாகிக் கொண்டேன்… அதனால் சிரித்துக் கொண்டே இருந்தேன்.

கடைசியில் விமானம் வர வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாக வந்து இறங்கியது. அங்கே இறங்கியவுடன் எல்லாரும் சேர்ந்து என்னிடம் வந்து
1.நீங்கள் ஏன் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்…? என்று கேட்டனர்.
2.நீங்கள் சிரித்துக் கொண்டு உட்கார்ந்ததைப் பார்த்தால்
3.நீங்கள் எங்கள் கூட வந்ததால் தான் நாங்கள் தப்பித்தோம்…! என்றனர்.

விமானத்தில் வந்த எல்லோரும் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். விமானத்திலிருந்து நான் கீழே இறங்கி வர முடியவில்லை.

ஐயா…! எனக்கு ஒன்றும் தெரியாது…! என்று நான் சொன்னேன்.

இல்லை இல்லை…! விமானம் கிர்… என்று கீழே இறங்குகிறது. நீங்கள் மட்டும் சிரிக்கிறீர்கள்.. உங்களிடம் ஏதோ சக்தி இருக்கிறது…! என்று என்னைப் பிடித்து கொண்டார்கள்

ஆனால் எனக்குத் தெரியாமல் குருநாதர் என்னை அப்படி அங்கே இயக்கினார். அனுபவரீதியில இதை அந்தச் சந்தர்ப்பத்தில் உணர்த்திக் காட்டினார்.

விமானத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு நுட்பமாகச் செயல்பட்டாலும் சந்தர்ப்பத்தில் இதைப் போன்ற விபத்துக்கள் நிறைய ஏற்பட்டு விடுகிறது.

குருநாதர் காட்டிய வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பாதுகாப்புக் கவசமாக்கிக் கொண்டால்
2.”நாம் எடுத்துக் கொண்ட அந்தச் சக்திகள்…” நம்மை நிச்சயம் காக்கும்…!

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இந்த அனுபவத்தை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி இன்றும் ஒளியின் சரீரமாகவே இருக்கின்றான். அவன் ஆரம்பத்திலே எடுத்துக் கொண்ட உணர்வு எது…?

அகஸ்தியனின் தாய்
1.கொடூர மிருகங்களிடம் இருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி
2.பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் குகைகளில் பரப்பி வைத்துக் கொள்கின்றார்கள்.

அன்று வீடு வாசல் கிடையாது… குகைகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். யானைகள் போன்ற கொடூர மிருகங்கள் வந்து விடும்… தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் குகைகளில் படுத்துத் தூங்கியவர்கள்.

இப்பொழுதும் நாம் காணுகின்றோம் பாம்பாட்டி கையிலே ஒரு வேரை வைத்துக் கொள்கின்றான். படமெடுக்கும் பாம்பு அப்படியே நின்று விடுகின்றது.

தேனை எடுத்துப் பழகியவர்கள் கையிலே ஒரு பச்சிலையைத் தடவிக் கொண்டு செல்கின்றார்கள். சும்மா கையை விட்டுத் தாராளமாகத் தேனை எடுக்கின்றார்கள்.

ஆனால் நாம் கையை வைத்தால் “கொட்டு… கொட்டு…” என்று கொட்டி நம்மைக் கொன்றுவிடும்.

அந்தப் பச்சிலை மணம் கண்ட பின் தேனீக்கள் ஒடுங்குகின்றது. தேனை லேசாக எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இந்தப் பச்சிலைகளுக்குச் சில கடுமையான விஷங்கள் ஒடுங்குகின்றது.

யானை மிரட்டி என்று ஒரு பச்சிலை இருக்கின்றது. அதைக் கையிலே தேய்த்துக் கொண்டு நாம் சென்றால் இந்த மணத்தை கண்டால் யானை பிளிறிக் கொண்டு ஓடும்.

காடுகளில் புலையர்கள் பச்சிலையின் நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள் கையிலே கசக்கிக் கொண்டு யானைக் கூட்டத்திற்குள் செல்வார்கள். இவர்களைக் கண்டாலே அது ஒதுங்கிவிடும்… அருகில் வராது.

புலி போன்ற மிருகங்களுக்கும் அதற்கென்று பச்சிலைகளை உபயோகித்தார்கள் என்றால் அதுவும் ஒன்றும் செய்வதில்லை… விலகிச் சென்று விடுகின்றது.

அகஸ்தியனின் தாய் தந்தையர் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் காலங்களில் கர்ப்பமுறுகின்றார்கள்.
1.விஷத்தை முறிக்கும் மணங்களை இவர்கள் உடலில் பூசியது குகைகளில் பரப்பியது இவர்கள் சுவாசத்திலே நுகரப்பட்டு
2.கருவிலிருக்கக்கூடிய அகஸ்தியனுக்குள்ளும் இது பதிவாகின்றது.
3.விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி அந்தக் குழந்தைக்குத் தாய் கருவிலே வளரும் பொழுதே கிடைக்கின்றது.
4.அந்தப் பச்சிலைகளின் சக்தி அதற்குக் கிடைக்கின்றது.

அந்தச் சக்திகள் எல்லாம் விளைந்து தான் அகஸ்தியன் குழந்தையாகப் பிறக்கின்றான். அவன் பிறந்த பின் ஈயோ கொசுவோ தேளோ பாம்போ புலியோ நரியோ யானையோ இவன் மணத்தைக் கண்டால் அப்படியே பதும்பி விடுகின்றது. ஒன்றும் செய்வதில்லை.

இன்று விஞ்ஞான அறிவில் கூட சில நிலைகளைச் செயல்படுத்துகிறார்கள். காட்டு விலங்குகளுக்கு எதிர்மறையான இன்ஜெக்ஷனைத் தன் உடலில் போட்டுக் கொள்கின்றார்கள். போட்டுக் கொண்டு இவர்கள் காட்டிற்குள் தாராளமாகச் செல்கின்றார்கள்.

புலியோ யானையோ இவர்கள் அருகில் வருவதில்லை. ஏனென்றால் அதற்கு எதிர்மறையான மருந்தை உடலில் செலுத்திக் கொள்கின்றார்கள்.

சிலர் இது போன்ற அதிசயமான செயல்களைச் செய்வதாக டிவியில் காண்பிப்பார்கள். காட்டிற்குள் சென்று விஷப் பாம்புகளைக் கையில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு காண்பிப்பார்கள்.
1.நமக்குப் பார்த்தால் பயமாக இருக்கும்.
2.ஆனால் அந்த இன்ஜெக்ஷனைப் போட்டுக் கொண்டுதான் அதைக் கையில் எடுக்கின்றார்கள்.
3.இந்த வாசனையைக் கண்டு அது ஒன்றும் செய்வதில்லை.

விஞ்ஞான அறிவில் இன்று இதைச் செயல்படுத்துகின்றார்கள்.

நல்ல பாம்பு அல்லது அதைக் காட்டிலும் கடுமையான விஷம் கொண்ட பாம்புகளைக் கூடப் பிடித்து அதனுடைய விஷங்களைச் சேமித்து எடுக்கின்றார்கள்.

ஒரு விஷத்திற்கு ஒரு விஷம் ஆகாது அதை எடுத்து மற்ற மருந்துகளுடன் சேர்த்து நோயை நீக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றார்.

பாம்புகளிலேயே ஒரு பாம்புக்கு இன்னொரு பாம்புக்கும் ஆகாது… ஒன்று மற்றொன்று விழுங்கி விடும். ஆனால் இந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் நல்ல பாம்பு தன் உடலில் தானே கொத்திக் கொண்டால் விஷம் பாய்ந்து அது மரணம் அடைந்து விடும். உடலின் உணர்வுகள் வேறு… உடலில் இருக்கக்கூடிய விஷங்கள் வேறு.

பாம்பினுடைய பற்களிலே இருக்கக்கூடிய விஷம் தனித் தன்மையாகி எதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அது விரும்புகிறதோ அந்த உயிரினத்தில் இந்த விஷத்தைப் பாய்ச்சுகின்றது.
1.அதைச் சாப்பிட்ட பின் அதற்குச் சீக்கிரம் ஜீரணம் ஆகின்றது.
2.அந்த விஷமே அதற்குப் பாதுகாப்பாகின்றது.
3.ஆனால் அந்தப் பாம்பு தன் உடலில் தானே கடித்துக் கொண்டால் மரணம் அடைந்து விடும்.

உடலுக்கும் விஷத்திற்கும் சம்பந்தமில்லை… உற்பத்தியாகும் விஷத்தை உணவாக உட்கொண்டால் ஒன்றும் செய்வதில்லை.

பாம்பின் விஷத்தை மனிதர்கள் சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட பின் யாரையாவது நகத்தால் கிள்ளினால் போதும். இந்த விஷம் அங்கே பாய்ந்து அவர் இறந்து விடுவார்.

பாம்பு விஷத்தைக் குடிக்கும் பொழுது உடலுக்குள் புண் இருக்குமானால் நாமும் இறந்து விடுவோம். ஏனென்றால்
1.ஜீரணிக்கக் கூடிய பாதையில் செல்லும் நிலைகள் வேறு…
2.நேரடியாக ரத்தத்தில் கலக்கும் நிலைகள் வேறு…!

நல்ல பாம்பு கடித்து விட்டது என்றால் டக்… என்று வாயிலே உறிஞ்சுவார்கள். உடலுக்குள் மேலே ஏறாதபடி உறிஞ்சித் துப்பி விடுவார்கள். ஆனால் வாயிலே அவர்களுக்குப் புண் இருந்தால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள்.

ஆனால் விஷத்தை விழுங்கினாலும் ஒன்றும் செய்யாது. அதை ஜீரணிக்கக் கூடிய நிலையாக வந்து விடும். இயற்கையின் நிலைகள் இப்படி எத்தனையோ வித்தியாசமான நிலைகள் வருகின்றது.

1.இதை எல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால்
2.கருவிலேயே விஷத்தை முறித்திடும் சக்தியாக வந்தவன் தான் அந்த அகஸ்தியன்.

ஒரு தாய் இங்கே வந்திருந்தார். அந்த அம்மாவிற்கு இரண்டு குழந்தைகள். அவர் குடும்பத்திலே யாருக்கும் சர்க்கரை வியாதி கிடையாது. ஆனால் அவரின் சொந்தக்காரருக்குச் சர்க்கரை நோய் இருந்தது,

இரண்டாவது குழந்தை அதன் கருவில் இருக்கப்படும் பொழுது அந்தச் சர்க்கரை நோயாளிக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் அந்தத் தாய் செய்கின்றது.
1.பரிதாபப்பட்டு அந்த நோயாளியின் உணர்வுகளை இது நுகர்கின்றது.
2.நுகர்ந்த பின்… கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த உணர்வுகள் இணைந்து
3.பிறந்த பின்பு பார்த்தால் சர்க்கரை நோய் வந்து விட்டது.

மூன்று வயதிலேயே சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்படுகின்றது. இரண்டு நேரம் இன்சுலின் ஊசி போட வேண்டும். போடவில்லை என்றால் ஒன்றும் ஆவதில்லை. திடீரென்று அந்தக் குழந்தைக்குப் பசி எடுக்கும்.

குழந்தை தவறு செய்ததா…? இல்லை. சர்க்கரைச் சத்து உள்ள நோயாளியைத் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தது. கருவிலே பூர்வ புண்ணியமாகக் குழந்தைக்கு அது சேர்கின்றது.

தாய்க்கு ஊழ்வினை என்ற பதிவாகிறது. என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே இப்படி ஆகிவிட்டதே என்று அது வேதனைப்படுகின்றது. பின் அதற்கும் அந்தச் சர்க்கரை நோய் வரும்.

தாய்க்கு முதலில் வரவில்லை… குழந்தைக்குத் தான் வந்தது. ஆனால் நாளடைவில் பையனுக்கு இப்படி இருக்கிறது என்று தனக்குள் எண்ணி அது வளர்ச்சியாகும் போது தாய்க்கும் அந்த நோய் வருகிறது.

சில குடும்பங்களில் இயற்கையில் இப்படி நடக்கும் பொழுது இது “பரம்பரை நோய்…” என்று சொல்வார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அதே எண்ணினால் எல்லோருக்கும் சாடத் தொடங்கி விடுகிறது.

இங்கே யார் தவறு செய்தது…?

1.கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய் எந்தெந்த உணர்வுகளை ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் உற்று நோக்கி
2.தனக்குள் கூர்மையாகப் பதிவு செய்கின்றதோ அதற்கொப்பத்தான் குழந்தையினுடைய குணாதிசயங்களும் உடல் நலமும் மற்ற எல்லாமே…!
3.அதைத் தான் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“எலெக்ட்ரானிக்…” என்ற நிலைகள் சீராக இயங்கிக் கொண்டிருந்தாலும்
1.அதற்குள் மாறுபட்ட உணர்வுகள் (அழுத்தம்) கலந்து விட்டால்
2.அந்த எலெக்ட்ரானிக் கருவியே முழுவதும் செயலிழந்து விடுகின்றது.

அதைப் போன்று தான் இன்றைய நிலைகளில் சூரியனின் மாற்றம் எலெக்ட்ரிக்கை அதிகமாக உருவாகும் சக்தியாக வளர்ந்து விட்டது.

காரணம்… மனிதன் அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி வான் வீதியில் பரீட்சித்துப் பார்த்த இந்த உணர்வுகள் மற்ற கோள்களுக்குள்ளும் சென்று அதிலிருந்து உமிழ்த்தியது சூரியனுக்கு அருகே வரும் நிலைகள் வந்துவிட்டது.

அதிலே மோதல் ஏற்பட்டால் என்ன ஆகும்…?

உதாரணமாக மின்சாரம் இரு மடங்காக வந்தால் பல்புகள் ஃப்யூசாகிவிடும் (FUSE)… மோட்டார்கள் எல்லாம் எரிந்துவிடும். அதைப் போல சூரியனுள் உருவாகும் அதீத மின்சாரம் இரு மடங்காகப்படும் பொழுது (SUN FLARE EMISSION)
1.நம் உயிரின் தன்மை துடிப்பு அதிகமாகும்.
2.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அதே நிலையாகும்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருந்தாலும் எதிர் நிலையின் மோதல்கல் ஆகும் போது கம்ப்யூட்டர் செயல் இழந்துவிடும்… கன்ட்ரோல் (CONTROL) இல்லாது போகும்.

அப்படிப்பட்ட நிலையானால் விஞ்ஞானத்தால் உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை பரவும் நிலை இருக்கின்றது. விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கண்டுபிடித்த உணர்வுகள் உடலுக்கு நல்லது என்றாலும்
1.அடுத்த நாட்டை அழிக்க விஷத் தன்மைகளை உருவாக்கித் தன்னைப் பாதுகாக்கச் செய்த நிலையில் பரவச் செய்த அலைகள்
2.சூரியனால் அந்த விஷத் தன்மைகள் பூமிக்குள் பரவிப் பிரபஞ்சத்திலும் பரவி
3.மீண்டும் சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லப்படும் பொழுது “இரு மடங்கு மின்சாரம்…” அதிகமாக உருவாக்கும் தன்மை வந்து விடுகின்றது.

அப்பொழுது காடுகளில் இருக்கும் விலங்குகள் போல் மனிதனின் சிந்தனைகள் தவறிவிடும்.
1.உயிரின் துடிப்பு அதிகமாகும் பொழுது ஈர்க்கும் சக்தி அதிகமாகி
2.நரம்பு மண்டலங்கள் எல்லாம் இயக்கங்கள் மாறி
3.பித்துப் பிடித்தவன் போல்… சிந்திக்கும் தன்மை இல்லாது பைத்தியம் பிடிக்கும்.

இதைப் போன்ற இந்த உணர்வின் வலுவாகி விட்டால் மனிதனுக்கு மனிதன் தாக்கும் நிலைகளும் சிந்தனையற்ற நிலைகளும் வருகின்றது.

பூமிக்குள் வங்கிட்டுக் குடி கொண்டுள்ள மற்ற உயிரினங்கள் நில நடுக்கம் வரும் பொழுது அதை அறிந்து கொள்கிறது. உடனே வெளியேறுகின்றது. (மனிதனுக்கு அது தெரிவதில்லை).

இதைப் போன்ற இயற்கையின் உண்மைகளை அறிந்து இயக்கம் பரிணாம வளர்ச்சியில் வருவதை உணர்வின் அதிர்வுகளைக் கண்டு மற்ற உயிரினங்கள் தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்கின்றது.
1.மனிதனுக்கு அப்படி இல்லை…!
2.வந்து தாக்கும் பொழுது தான் தெரிந்து கொள்கின்றான்.

இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்றால் 2004ல் ஆரம்பித்து அதற்கு மேல் சென்றால் மிகக் கடினமான காலங்களாக வருகின்றது.

இப்பொழுது பத்திரிக்கை டி.வி.யில் பார்க்கின்றோம். மதம் இனம் என்று மனிதனுக்கு மனிதன் வெறி கொண்டு தாக்குவதைப் பார்க்கின்றோம். இவன் அவனைத் தாக்க… அவன் இவனைத் தாக்க… என்ற இந்த நிலைகள் தான் வருகின்றது.

மனித இனமே அழித்திடும் உணர்வுகளாக இன்று விளைந்து அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு
1.மதத்தின் அடிப்படையிலும் சரி
2.இனத்தின் அடிப்படையிலும் சரி
3.தெய்வ பக்தியின் அடிப்படையாக இருந்தாலும் சரி
4.விஞ்ஞான அறிவிலும் சரி
5.இதுகள் எல்லாம் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து
6.மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் நிலைகளாக விஷத் தன்மைகள் கூடி
7.அதற்குள்ளேயே நாம் வாழும் தருணமாக இன்று வந்துவிட்டது.

இதிலிருந்தெல்லாம் நாம் மீள்தல் வேண்டும் என்பதற்குத்தான் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் தெளிவாகக் கூறி ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.
1.அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்
3.”உங்கள் எண்ணம் நிச்சயம் உங்களைக் காக்கும்…!”

“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்

 

ஒரு வித்து முளைத்து அதனுடைய நுனி வெளி வந்தபின் அதன் துணை கொண்டு காற்றிலிருந்து தன் இனமான சக்தியை எடுத்து வளரும். ஆனால் முளையிலேயே அதைக் கிள்ளி எறிந்து விட்டால் அதனுடைய சத்தையும் எடுக்காது… தொடரையும் எடுக்காது.

இதைப் போன்று தான் பிறருடைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக வளர்ந்து விட்டால் தீமையின் இயக்கமாக இயக்கிவிடும். ஆனால் அவ்வாறு உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன்பே அதைத் தடைப்படுத்த முடியும்.

ஏனென்றால்
1.வாழ்க்கையில் இடைமறித்து நல்ல உணர்வுகளைத் தடைப்படுத்தும் நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக ஆக்கும்
2.அது போன்ற நிலைகளை வராதபடி தடைப்படுத்த வேண்டும்.
3.அதாவது… தீமை என்று வந்தால் அதை எப்படித் தடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் ஃபிட்டர்களை (FITTER) வைத்திருப்பார்கள்.

தொழிற்சாலையில் பொருள்களை உருவாக்குவார்கள். ஆனால் அந்த இயந்திரங்களில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் ஃபிட்டர் வந்து அதை சரி செய்து தருவார்… இயந்திரத்தை உற்பத்தி செய்பவரிடம் நாம் செல்வதில்லை…!

அதைப் போன்று தான் அந்த ஃபிட்டரை நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும்.
2.அதற்குண்டான உபாயத்தை அது சொல்லும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.

அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழும் உணர்ச்சிகளை ஊட்டும்.

நம்மை உருவாக்கக்கூடிய சக்தியாக உயிர் இருந்தாலும் அவனிடம் நாம் போவதில்லை. தீமைகளை மாற்றி அமைத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது அதற்குண்டான உபாயங்கள் வரும்.

தொழிற்சாலைகளில் ஓடும் இயந்திரங்களை உற்பத்தி செய்தவன் எங்கேயோ இருப்பான். ஆனால் அந்த இயந்திரத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் அதைச் சரி செய்பவன் இங்கேயே இருப்பான். உற்பத்தி செய்பவரைத் தேடிச் செல்வதில்லை.

அதற்குத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன். நமக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது

குறைகள் என்று வந்துவிட்டால்
1.“சாமி சொன்னாரே…!” என்று எண்ணி இதை எடுத்தால் அதைச் சீர்படுத்தும் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
2.அதற்குத்தான் மணிக் கணக்கிலே உபதேசங்களைக் கொடுப்பது… நினைவுபடுத்துவது… நினைவின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்வது.

அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைச் சீர்படுத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அந்த ஞானிகள் உணர்வுகள் அதைச் சீர்படுத்தும் சக்தியாக வரும்.

அதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இயந்திரம் கோளாறாகிய பின் ஃபிட்டரைத் தேடவில்லை என்றால் என்ன ஆகும்…? நாமாக அதைச் சரி செய்ய முடியாது. நாம் எதையாவது செய்யப் போனால் இன்னும் கொஞ்சம் ரிப்பேராகிவிடும். ஆனால் ஃபிட்டரைக் கூப்பிட்டால் உடனே அதைச் சரி செய்து விடுவார்.

ஆகவே உங்களுக்குள் அந்தச் சீர்படுத்தும் உணர்வு கொண்ட அந்த அறிவை பதிவாக்குகின்றேன்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் தீமையை நீக்கும்.
1.அந்த உணர்வு உங்களுக்குள் ஞானமாக இயக்கும் ஞானத்தைப் பெறும் தகுதியும் வரும்.
2.உங்களை அறியாது வரும் இருளைப் போக்க வழி வகுக்கும்.

அதற்குத்தான் இதைச் சொல்வது. நமக்கு முன் எல்லா உயர்ந்த சக்திகளும் உண்டு. அதை நாம் நுகர்ந்தறிய வேண்டும்.

அது தான் கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம்…! ஒன்றைப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது. அதனுடைய வலிமை அதிகமாகும் பொழுது வராகன்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கூர்மையாகப் பதிவு செய்து விட்டால்
2.தீமையை அகற்றக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வாக உங்களுக்குள் அது வளர்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரணுவாகத் தோன்றி பல உடல்கள் பெற்று மனித உடல் பெறுவதை முதல் காண்டமாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த பின் அடுத்துப் பல உணர்வுகள் எடுத்து அறுபது வயது ஆகும் பொழுது அது இரண்டாவது காண்டம்.

1.இரண்டாவது காண்டத்திற்குள் நாம் எடுத்து நுகர்ந்து கொண்ட உணர்வுகள் மாற்றம்…!
2.ஆக இரண்டு காண்டங்கள் கவர்வதே மனிதனுக்கு மிகவும் சிரமம்.
3.இடைப்பட்ட நேரங்களில் (அறுபது வருடத்தில்) நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு மாறுகிறது..? என்ற இந்த நிலையைக் காவியங்களில் உணர்த்துகின்றனர்.

இராமாயணத்தில் பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்ற தசரதன்
1.தனக்குள் எடுத்துக் கொண்ட ஆசை தன் மகனுக்குக் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பினாலும்
2.அந்த நல்லவனுக்குச் (இராமனுக்கு) செயல்படுத்த முடியவில்லை என்று வேதனை உணர்வுகள் ஆன பின் அவன் மடிகின்றான்.

இதை எல்லாம் மனிதன் தெளிந்து… அறிந்துணர்ந்து எப்படி வாழ வேண்டும்…? என்பதற்காகத்தான் காவியப் படைப்புகளை இப்படிக் கொடுத்துள்ளார்கள்.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் மாற்றங்கள் ஏற்படும் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரண்டறக் கலந்து மனதைக் குவித்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றென இணைந்து (இராமலிங்கமாக) அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

நம் சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாது வாழும் சக்தி பெறுகின்றது

இயற்கையின் உண்மையின் இயக்கங்கள் எவ்வாறு உருவானது…? என்ற நிலையை உணர்ந்து… தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி… ஒளியின் சரீமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

அதாவது மூன்றாவது காண்டமாக…
1.அந்த அருள் மகரிஷிகளின் அருளுணர்வைத் தனக்குள் சேர்த்து
2.உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அடுத்துப் பிறவியில்லா நிலையை அடைய வேண்டும் என்று
3.ஞானிகள் தெளிவாக மூன்று காண்டங்களையும் காண்பித்துள்ளார்கள்.

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…?

 

போகன் கண்டறிந்த தத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பழனியில்… மலை மீது நாம் ஏறுகின்றோம். ஏறும் போது மேல் நோக்கி எப்படி எண்ண வேண்டும் என்ற நிலையை சற்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

1.படியின் கீழ் இருந்து நாம் மேல் நோக்கிச் செல்லும் நிலையில்
2.அந்த போக மாமகரிஷியை எண்ணி “அவன் அருளைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள்… மேல் நோக்கி வருகின்றது…”

கீழிருந்து மேலே முருகனைப் பார்க்கின்றோம். ஏனென்றால் குன்று தோறும் அமர்ந்திருக்கும் முருகா…! என்று நாம் பாடலைப் பாடுகின்றோம். உயரமான குன்றில் சிலையை வைத்த நிலையில்… அவன் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குகிறோம்.
1.சூரியனின் காந்த சக்தி ஞானிகள் உணர்வைப் புவியில் (தரையில்) படரச் செய்யாது மேலே மிதக்கச் செய்கின்றது.
2.நாம் மேல் நோக்கி எண்ணும் பொழுது அந்த மலை முகட்டில் இருக்கக்கூடிய காந்தப்புலனறிவு
3.நம் உயிருடன் ஒன்றி இயக்கத் தொடங்கி விடுகின்றது.
4.இந்த உணர்வுகள் மூன்றும் சேர்த்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
5.தன்னிச்சையாகவே அந்த உணர்வை (நாம் எதை எண்ணுகின்றோமோ) உயிரின் வழி உள்ளுக்கே நுகரும் தன்மை வருகின்றது.

சாதாரண மனிதனும் எளிதில் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறும்படி வைத்துள்ளார்கள்.

நினைவை நாம் மேல் நோக்கி அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று கூட்டப்படும் பொழுது அந்த வலிமை பெற்ற உணர்வுகள் நமக்குள் இணைந்து “நம் உடலில் நோய் இருந்தாலும்… அதை மறக்கச் செய்கின்றது…”

மலை மீது ஏறும் போது இந்த உணர்வின் வலிமை எல்லாம் அதற்குள் சென்று விடுகின்றது. நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி அதனின் உணர்வைத் தனக்குள் சிறுகச் சிறுகச் சேர்க்கும் போது
1.உடலில் இருக்கும் எதிர்ப்புணர்வுகள்… அதாவது பகைமை கொண்ட உணர்வின் அணுக்களுக்கு
2.ஞானிகளின் உணர்வை ஈர்க்கப்படும் பொழுது பகைமை உணர்வுகள் தணிகின்றது.

அந்த அணுக்களின் வீரிய சக்தி ஒடுக்கப்படும் பொழுது இங்கே வலுக்கூட்டி மலை மீது ஏறும் தன்மை வருகின்றது.

சில பேர் தரையில் கூட நடக்க முடியாமல் இருப்பார்கள். ஆனால் மலை மீது போகும் பொழுது முருகா…! என்று அவன் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்த உணர்வுகள் உள்ளே புகுந்த பின் நான்கு அடி எடுத்து வைக்கும் பொழுது ஒரு மாதிரியாக இருக்கும்.

இந்த உணர்வுகள் உள்ளே சென்ற பின் மனித உடலில் பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளைத் தணியச் செய்கின்றது. பின் தாராளமாக ஏற முடியும். இதைப் பார்க்கலாம்.

1.ஏறும் போது மேலே நோக்கி மட்டும் எண்ணிப் பாருங்கள்.
2.மூட்டு வலி… என்னால் ஏற முடியவில்லை என்பதெல்லாம் மாறும்.

இதே மாதிரி அங்கு மட்டுமல்ல…! உங்கள் வீட்டின் மாடிப்படிகளிலோ மற்ற உயரமான இடங்களில் ஏற முடியவில்லை என்றாலும் ஈஸ்வரா…! என்று மேல் நோக்கி ஞானிகளை எண்ணி அந்த உணர்வை எடுத்தால் இரண்டு படி ஏறுவது சிரமமாக இருக்கும் மூணாவது படி நாலாவது படி தாராளமாக ஏற வரும்.

விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்று மனிதன் உயர்ந்த நிலை அடைவதற்குத் தான் இத்தனை நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
1.நாம் எடுக்கக்கூடிய அந்த விண்ணினுடைய ஆற்றல்
2.நம் உடல் உறுப்புகளில் சேர்ந்து அதைச் சீராக இயங்கும்படி செய்கின்றது.

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அடிக்கடி ஒருவரைக் குறை கூறிக் கொண்டே இருந்தோம் என்றால் அதே குறையான செயல்களைச் செயல்படும் நிலையாக (குறையானவர்களாக) நாமும் மாறுகின்றோம்.

ஒருவர் மற்றொருவரை அடிக்கடி வேதனைப்படும்படி சொல்லிக் கொண்டு இருந்தார் என்றால் அவரின் வேதனைப்படும் உணர்வுகள் வேதனைப்படுத்தியவரின் உடலுக்குள் விளைந்து “ஜயோ எனக்கு மேல் வலிக்கிறதே…! கால் வலிக்கிறதே…!” என்பார்

ஆனால் அவர் என்ன நினைப்பார்…? எல்லோருக்கும் நான் நல்லது செய்தேன். அவன் தப்பு செய்தான்… அதைத் தானே நான் சொன்னேன்…! என்பார்.

அதாவது தன்னை நியாயப்படுத்தி வேதனைப்படும்படியாகப் புண்படும்படியாக ஒரு சொல்லைச் சொல்வார். அந்த உணர்வின் தன்மை இவர் உடலுக்குள் விளைந்த பின்
1.ஐயோ… மேல் வலிக்கிறதே கை வலிக்கிறதே…!
2.நான் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்… ஆண்டவன் என்னை ஏன் இப்படிச் சோதிக்கின்றான்…? என்று தெரியவில்லையே…! என்பார்.

ஆனால் தெய்வத்திற்குப் பூ மாலைகளைச் சூட்டுவதும் அபிஷேகம் செய்வதும் ஆராதனை செய்வதும் இப்படி எல்லாமே செய்தாலும் பெரும் பகுதி இப்படிப் பிறரைக் குறை கூறிப் பேசும் உணர்வுகள் கொண்டு
1.(முதலிலே) தன்னைத் தான் எண்ணாது
2.அவர் தவறுகளைச் செய்து கொண்டே இருப்பார்.

ஏனென்றால் நுகர்ந்தது எதுவோ அதை உயிர் அணுவாக மாற்றி… அதை உடலாக மாற்றி.. அந்த உணர்வின் சக்தியாகத்தான் “நமக்குள் இயக்கும்….!’ என்பதை மறந்து விட்டனர்.

ஆகவே இதை எதற்குச் சொல்கிறோம் என்றால்
1.இயற்கை எப்படி விளைந்தது…?
2.கடவுள் எப்படி இருக்கின்றான்…? என்பதைத் தெரிந்து கொள்ளத்தான்..!

தனித்து ஒருவன் கடவுள் இல்லை. ஐந்து நிலைகள் சேர்த்துத் தான் கடவுள் ஆகின்றது. வெப்பம்.. காந்தம்.. விஷம்… மணம்… அந்த சத்து… என்ற இந்த ஐந்தும் சேர்ந்த இயக்கத்தின் நிலைகளில் உருவாக்குகின்றது.

கடவுள் ஒருவன் (ஒன்று தான்) என்றால் அது எப்படி நியாயமாகும்…? ஒரு செடியானாலும் கல்லானாலும் உயிரினங்களாக ஆனாலும் அதே தான்.

ஐந்து புலனறிவு கொண்டு தான் எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் நிலைகளில்
1.ஒன்றுக்குள் சென்று உள் நின்று இயக்குவது தான் கடவுள் என்றும்
2.ஒரு உயிரணு இதை நுகர்ந்த பின் அதை உருவாக்குவது ஈசன் என்றும்
3.உருவான பிறகு பிரம்மம் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா உருவாக்குகிறான் என்றும் ஞானிகள் தெளிவாக்குகின்றனர்.

உயிரின் துடிப்பு ஈசன் என்றாலும்… இயக்கத்திற்குள் இயக்கும் வெப்பம் விஷணு என்றும்… இதற்குள் இணைந்து நுகர்ந்ததை அணுவாக மாற்றுவதை விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும் காரணப் பெயர் வைத்து இயற்கையின் உண்மையின் இயக்கங்களை உணர்த்துகின்றனர்.

நாம் எந்த குணத்தை நுகர்கின்றோமோ அந்த குணத்தின் சக்தியாக உருபெறும் நிலை ஆகி அதே குணத்தின் சக்தியாக அது இயக்கும். அது தன் உடலாக மாறும் போது பார்வதி…!
1.நம் பார்வையில் எதைப் பார்த்தோமோ அதன் உணர்வுகள் எல்லாம் உடலாக இணைந்து கொள்கின்றது.
2.சிவனின் மனைவி பார்வதி – நம் பார்வையில் பார்த்து நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி
3.தன்னுடன் (உடலுடன்) இணைத்துக் கொள்ளும் என்பதற்கு “பார்வதி” என்று காரணப் பெயர் வைத்து
4.நம்மை அறிந்து செயல்படும் சக்தியாக நாம் செயல்பட வேண்டும் என்று நமது காவியங்கள் தெளிவாக்குகின்றது.

தில்லை அம்பலத்தாண்டவா

 

அன்று திருமூலர் பதஞ்சலியாக இருந்து கூடு விட்டுக் கூடு பாய்ந்து மாடு மேய்ப்பவன் உடல் மூலமாக அவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது
1.அவன் மனைவி கணவனை எப்படி வரவேற்கிறது…?
2.மரியாதை கொடுத்து எப்படிஉபசரிக்கிறது…! என்பதைப் பார்த்த பின் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

ஆனால் பதஞ்சலியாக… அரசனாக இருக்கப்படும் பொழுது
1.தன்னுடைய சேனாதிபதிக்குப் பயப்பட வேண்டும்
2.தன்னுடைய மனைவி இன்னொரு நாட்டு அரசனுடைய மகள் அவளுக்குப் பயப்பட வேண்டும்
3.தான் சட்டங்களை இயற்றினாலும் மக்களுக்குப் பயப்பட வேண்டும்
4.பின் எதிரிகளுக்குப் பயப்பட வேண்டும் என்று
5.இப்படிப் பயந்த உணர்வுகளே கொண்டு வாழும் நிலைகளே தனக்குள் வந்தது.

இதிலிருந்து தப்பிக்க உயர்ந்த சக்திகள் கொண்டு கூடுவிட்டுக் கூடு பாயும் சக்திகள் பெற்றிருந்தாலும்… அப்படிச் சென்ற பின் தன் உடலை வீழ்த்தி விட்டால் தான் எவ்வாறு மீள்வது…? வழியில்லையே…!

பாம்பினத்திற்குள் சென்ற பின் அங்கங்கள் கொண்டு செயல்படும் வழியில்லை… அப்பொழுது தான் எப்படிச் செயல்படுத்துவது…? என்று இந்த உணர்வின் நினைவு வருகின்றது.

பாம்புக் கூட்டுக்குள் இருந்து விஷத்தைப் பாய்ச்சி இன்னொரு உடலுக்குள் போகும் திறன் தான் உண்டு. எந்த உடலைத் தேர்ந்தெடுக்கின்றோமோ மனித உடலாக இருந்தால் அறிவின் தன்மை இயக்க முடியும்.

இதை உணர்ந்த அந்தப் பதஞ்சலி
1.தான் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு அந்த மாடு மேய்ப்பவன் உடலைத் தீண்டி அதற்குள் புகுந்து
2.அறிவு வளர்ச்சி இல்லாததாக இருந்தாலும்… “இவன் உணர்வால்” அங்கே வலிமை பெற்று அந்த உடலை இயக்குகின்றான்.

தில்லை நடராஜா…! இந்தப் பூமி அதனுடைய இயக்கத்தில் நிற்காமல் ஓடுகின்றது. அது எவ்வாறு இயக்குகிறது…? என்றும் அதிலே விளைந்தது தில்லை அம்பலதாண்டவா.
1.இந்த உடலான எல்லையில் உயிராக நின்று
2.என்னை ஆண்டு கொண்டு இருக்கும் நிலைகள் தில்லை அம்பலத்தண்டவா…!
3.நான் சுவாசிக்கும் உணர்வு எதுவோ அதை நீ ஆளுகின்றாய்.
4.நான் எதன் உணர்வை எடுக்கின்றேனோ அந்த உணர்வுக்குத் தக்க என்னைக் குறுக்குகின்றாய்
5.என்னை ஆட வைக்கின்றாய்… ஆட்டங்களை ஆட வைக்கிறாய்…!
6.அந்த உணர்வின் இசைக்கொப்ப என்னை இயக்குகின்றாய் என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

அது தான் தில்லை நடராஜா…! என்று நடனக் கலையிலே சிறந்தவன் என்று கூறுவார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை சக்தியாகி உணர்வின் தன்மை உடலை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? இன்று ஆடுகின்றோம்…! (நம் செயல்கள்)

இந்த உணர்வை வளர்த்த பின் அதற்குத் தக்க அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது என்ற நிலையை… உணர்வின் இயக்கங்கள் தன் உடலில் வரப்படும் பொழுது எவ்வாறு என்று நடனக் கலையாகக் காட்டினார் அன்று திருமூலர்.

தில்லை நடராஜா என்று நிற்காமல் ஓடும் பூமியின் செயலும்… அதற்குள் உராயும் உணர்வுகள் தனக்குள் விளையும் அணுக்களின் மாற்றங்களும்… எதனின் உணர்வு மாறுகின்றதோ அதன் உணர்வின் செயலாகத் தாவர இனங்களும்…
1.நுகர்ந்த உணர்வுகள் தனக்குள் எண்ணங்களாக எப்படி ஆகின்றது…?
2.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உருவங்கள் எப்படிப் பெறுகின்றது…?
3.அதனுடைய கலைகள் எப்படி இருக்கின்றது…? என்று தெளிவாக “அவர் பாடல்கள் மூலமாக…” உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளர்.

தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா…!
1.நான் எண்ணும் உணர்வின் தன்மையை
2.அதாவது… என்னை நீ (உயிரான ஈசன்) எப்படி இயக்குகின்றாய்…? என்ற நிலையை அவன் உணர்த்தினாலும்
3.பின் வந்தவர்கள் “திருமூல மந்திரம்…” என்று திரித்து விட்டார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஆமையை ஒரு நரி விழுங்க வருகின்றது. அப்பொழுது ஆமையின் கருவிழி ருக்மணி அந்த நரியை உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது.

அதே சமயத்தில் இந்த ஆமையை நரி விழுங்க எண்ணும் உணர்வுகள் நரியிடமிருந்து வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி அதை கவர்ந்து எடுத்து வைத்துக் கொள்கிறது. இது சீதா – சுவை.

ஆமை நரியை உற்றுப் பார்க்கும் பொழுது கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா… சூரியன் எடுத்து வைத்துக் கொண்ட அந்த நரியின் உணர்வை நுகரும் பொழுது ஆமையின் உயிரிலே உராயச் செய்கின்றது. உயிரிலே பட்ட பின் “நரி உன்னை விழுங்கப் போகின்றது…” என்ற உண்மையை (சத்தியத்தை) உணர்த்துகின்றது.

ஏனென்றால்
1.உயிரிலே உராயும் பொழுது சீதா…! அந்த உணர்வின் எண்ணங்களாக வருகின்றது.
2.ஹரி கிருஷ்ணா…! ஹரி இராமா…! ஹரி என்றால் சூரியன்.
3.நமக்குள் பதிவாக்கும் உணர்வு “ஹரி ராமா” – அந்தச் சூரியனின் நிலைகள் கொண்டு எண்ணங்களாக அது எப்படித் தோன்றுகிறது…? என்ற
4.உண்மையின் நிலையைத் தெளிவாகக் கூறுகிறது நமது சாஸ்திரங்கள்.
5.இதில் எதுவும் தப்பில்லை.

ஆமை கூர்மையாக நரியை உற்றுப் பார்த்த பின் நரியின் உணர்வைத் தனக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா அதை இழுத்து
1.“நரி உன்னை விழுங்க எண்ணுகிறது…!” என்ற நிலையை உணர்த்திய பின்
2.அந்த உணர்வைக் கண்ட பின் பார்த்தசாரதி…! ஆமை அங்கிருந்து நகர்ந்து செல்கிறது.
3.,நரியிடம் சிக்காதபடி ஆமை தன் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது.

இருந்தாலும் நரி… இது தன் இரைக்கு உகந்தது…! என்று பார்க்கின்றது. “பார்த்தசாரதி…! ஆமையை விடுவேனா என்று துரத்துகிறது… நரியின் கண்கள்.

இது உன் உணவுக்கு உகந்தது… என்று காட்டுகின்றது நரியின் கண்களின் காந்தப் புலன் சத்தியபாமா. ஆக கருவிழி பதிவாக்கிய பின் அதன் செயலாக்கங்களாக இயங்குகின்றது. இது பார்த்தசாரதி.

இவ்வாறு இயக்கினாலும் அதன் வரிசையில் எப்படி இயங்குகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

நரி போய்விட்டதா இல்லையா…! என்று அடிக்கடி ஆமை அந்த நரியைப் பார்த்துப் பார்த்து எண்ணங்களை எடுக்கும் போது… தன் உடலுக்குள் அந்த நரியின் உணர்வுகள் வலுவாகின்றது.

அப்பொழுது அர்ச்சுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றான்.

நரியைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள் ஆமைக்குள் வரும் பொழுது அதனின்று தப்பிக்கும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. அந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது.

இந்த உணர்வுகள் அதற்குள் வளர வளர சிரசை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் ஆமை தான் இரை தேடப் போக முடியாத நிலை ஆகின்றது. ஆமைக்கு உணவு இல்லை.

அப்பொழுது அந்த நரியையே எண்ணி இது மரணமடையப்படும் பொழுது
1.எதைக் கூர்மையாகப் பார்த்ததோ அந்த உணர்வின் தன்மை வந்த பின்
2.ஆமையின் உயிரும் அதனுடன் சேர்த்த அணுக்களும் எந்த நரியின் உணர்வை இதற்குள் சேர்த்ததோ இந்த உடலின் தன்மை வலு பெறுகின்றது
3.நரியின் உடலுக்குள் ஆமையின் உயிரான்மா செல்கிறது.

அது தான் அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் சென்றான்…!

இந்தக் கண் எதைக் கூர்மையாகப் பார்த்ததோ இந்தக் கண்ணின் தன்மை கொண்டு அது பதிவானது. அந்த உணர்வின் தன்மை கொண்டு நரியின் உடலுக்குள் செல்கிறது.

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். அதனின் உணர்வை வலுவாக்கப்படும் பொழுது அதன் நிலைக்கே அது அழைத்துச் செல்கிறது என்பதனைக் காட்டி எதைக் கூர்மையாகப் பார்த்ததோ அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்…! என்று உணர்த்துகின்றனர்.

அப்பொழுது கண்ணன் சொல்கிறான்.
1.அந்த வியூகத்தைத் தகர்த்து (நரியின் வியூகம்) அதனுள் சென்று நீ அதுவாகு
2.ஆக இந்த உடலை (ஆமையின் உடல்) இழக்கின்றாய். அதன் உணர்வை இதற்குள் வளர்க்கின்றாய்.
3.அதனுள் (நரிக்குள்) சென்று நீ அதுவாகும் பொழுது அது உன்னை அரவணைக்கும்.
4.ஆகவே ஒளியும் இடத்தைக் கண்ணன் இப்படிக் காட்டுகின்றான்…! என்று மிக மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

காரணம்… கண்ணன் துகிலை உறிகின்றான்…! கண்ணனின் செயலாக்கங்களை உயிரிலே கண்ட பின் நன்மை தீமை என்ற உணர்வுகளைப் பிளந்து காட்டுகின்றது நமக்குள்.

அதனால் தான் கண்ணன் துகிலை உறிகின்றான்…! என்று இப்படி ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர்களை வைத்துத் தெளிவாக்குகின்றார்கள் ஞானியர்கள்.

நாம் என்ன நினைக்கின்றோம்…! கண்ணன் பெண்கள் குளிக்கும் பொழுது அவர்கள் உடைகளைத் தூக்கிக் கொண்டு சென்றான்…! வேடிக்கை பார்த்தான்…! என்று இப்படித்தான் சொல்கிறோம்.

ஏனென்றால் இதெல்லாம் ஒரு உணர்வுக்குள் மறைந்த உட்பொருளைப் பிளந்து
1.அந்த உணர்வின் சக்தி எதுவாக இயக்குகிறது…? என்றும்
2.தான் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின்
3.அந்த இரண்டு உணர்வுகளையும் சேர்ந்த பின் உண்மையின் இயக்கத்தை அது எப்படிப் பிரித்துக் காட்டுகிறது…? என்று
4.காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர் சாஸ்திரங்களில்…!

ஆமையின் உயிர் நரியின் உடலுக்குள் சென்று நரியின் ரூபமாக மாறுகின்றது. கண் கூர்மையாகப் பார்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு உடலை மாற்றுகின்றது. அது தான் கூர்மை அவதாரம்…! என்பது.

எதிர்த்துத் தாக்கும் உணர்வு கொண்டால் நம்மைக் காக்கும் நல்ல உணர்வுகளை இழந்துவிடுவோம்

 

நாம் எந்தத் தவறும் செய்ய வேண்டியதில்லை. ஒரு குழந்தை தவறிக் கீழே விழுந்து விட்டால் பாசத்தாலே அதை உற்றுப் பார்க்கின்றோம். அவன் அடிபட்டு வேதனைப்பட்டு வெளிப்படுத்தும் மூச்சலைகளைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது
1.அந்த உணர்வுகளை நம் சுவாசத்தின் வழி இழுத்துக் கொள்ள நேர்கின்றது.
2.அவன் பட்ட வேதனை நமக்குள் வந்தபின் அவன் அடிபட்ட உணர்ச்சி நம்மை இயக்கி நம்மையும் வேதனைப்படச் செய்கின்றது.

காரணம் அவன் வெளிப்படுத்தும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நினைவு கொண்டு அதைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வு எனக்குள் ஊடுருவி வேதனையைத் தூண்டச் செய்து அதைக் காட்டி அவனைக் காக்கும்படிச் செய்கின்றது.

அதே சமயத்தில் அங்கே ஒரு போக்கிரி வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்… அவன் அசுர குணங்கள் கொண்டு இந்தக் குழந்தை அடிபட்டதைப் பார்த்தபின் மகிழ்ச்சி அடைகின்றான். இவனுக்கு இப்படித்தான் வேண்டும் என்று சொல்கின்றான். நல்லதைக் காக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.

ஆனால் அதைப் போல எண்ணம் கொண்டவன் ரோட்டிலே நடந்து செல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராது திடீரென்று ஒரு பஸ் வேகமாக வருகின்றது. இவனை மோதி விடும் என்ற நிலை வரும் பொழுது
1.இவனுக்குள் இருக்கும் அசுர சக்தி என்ன செய்கின்றது…?
2.அவன் என்னை ஏற்றி விடுவானா…? என்று முரட்டுத்தனமாகப் பார்ப்பான்.
3.ஆனால் அந்த பஸ் இவன் மீது மோதி அடித்த பிற்பாடு தான் இவன் உணர்வான்.
4.ஏனென்றால் எதிர்த்து நிற்கும் சக்தி தான் இது… தன்னைக் காக்கும் சக்தி அங்கே இருக்காது.

முரட்டு குணத்தின் தன்மை கொண்டு இரக்கமற்ற நிலைகளைச் செய்யும் பொழுது “அந்த இரக்கமற்ற உணர்வு… இவனைக் காக்க அவன் எண்ணமே உதவாது…!”

ஆனால் பாசத்தால் குழந்தையில் பால் இரக்கப்பட்டு அவன் வேதனையைச் சுவாசித்து உதவி செய்தாலோ… வேதனையான சத்து இங்கே உடலுக்குள் வந்து விடுகின்றது.

இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் விஷத்தை மலமாக மாற்றுகின்றது. கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் சக்தி பெற்றது தான் ஆறாவது அறிவு.

அதைச் செம்மையான நிலைகள் பயன்படுத்துவதற்குத் தான் யாம் சொல்லும் இந்தத் தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி அதை உடலுக்குள் கண்ணின் நினைவு கொண்டு நாம் செலுத்தக்கூடிய நிலைதான் ஆத்ம சுத்தி என்பது.

தியானம் என்பது ஒரு நாளைக்கு பத்து நிமிடம் இருந்தால் கூடப் போதுமானது. ஆனால்
1.எப்பொழுது துன்பம் நேருகின்றதோ அந்தத் துன்பம் உடலுக்குள் புகாதபடி
2.அதை நாம் இந்த வாழ் நாள் முழுவதும் சுத்தி செய்து மகரிஷிகள் உணர்வு கொண்டு அதைத் தடுத்துப் பழக வேண்டும்

நரசிம்ம அவதாரம் என்பது இதுதான்.

துன்பம் வரும் பொழுது அந்தச் சுவாசம் உடலுக்குள் சென்று அது உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையைக் குறைப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதை உங்களுக்கு வாக்குடன் கூடித்தான் ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எத்தகைய துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கும் பொழுது அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்து அதை நீங்கள் சுவாசிக்க நேர்கின்றது.

சுவாசிக்க நேரும் பொழுது சங்கடமான எண்ணம் உடலுக்குள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதை இது ஊடுருவி அதை அமிழ்த்துகின்றது.

அதற்கு இந்த ஆத்ம சுத்தி அவசியம் தேவை.

செடி கொடிகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்திகளை எடுத்துக் கொள்கின்றது. பாக்கி நாள் முழுவதும் காற்றில் இருக்கக்கூடிய தன் இனமான சக்திகளை எடுத்துத் தன் இனமாகப் பெருக்கிக் கொள்கின்றது.

இதைப் போல் தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் பெறுவதற்கு நமக்கு அந்த ஆற்றல் தேவை
2.அந்த ஆற்றலைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமனைக் கும்பிட்டால் நமக்கு ஒன்றும் கொடுக்க மாட்டான்…. விஷ்ணுவைக் கும்பிட்டால் நமக்கு ஒன்றும் கொடுக்க மாட்டான்…! என்று சிவ தத்துவத்தில் சொல்வதும் சிவனைக் கும்பிட்டால் உனக்குச் சோறு கிடைக்காது..! என்று பதிலுக்கு விஷ்ணு தத்துவத்தைச் சார்ந்தவர்கள் சொல்வதும் இப்படி நமக்குள் இயற்கையின் நிலைகளைத் திருத்தித் தான் வாழ்கின்றோமே தவிர உண்மையின் தன்மையை அறிந்து வாழவில்லை.

ஏனென்றால் காசுக்காக வேண்டிப் பக்தி என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு
1.இந்தத் தெய்வத்தை வணங்கினால்தான் உனக்கு எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டு
2.தூதுவனாக இருந்து காசு வாங்கி அவன் அவன் பிழைப்பதற்குத்தான் ஆகின்றது.
3.ஆண்டவனிடமிருந்து இவன் வரம் வாங்கித் தரப் போகின்றான்…! என்று தவறான பாதையில் சென்று
4.உண்மையின் இயற்கையின் உணர்வுகளை நாம் அறியவிடாது தடைபடுத்தி விட்டனர்… இன்றும் தடைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

மதங்கள் என்ற போர்வையில் மதத்தின் நிலைகளில் அரசன் என்றும் அரசனுக்குக் கீழ் பக்தி என்றும் பக்தி என்ற நிலைகளில் அவன் உருவாக்கியதை நாம் உடலுக்குள் சேர்த்து விட்டால் “அதுவே தெய்வம்” என்றும் உருவாக்கப்பட்டு விட்டது.

1.அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு அந்த உணர்வின் தன்மையை நாம் மீண்டும் எண்ணும் போது “தெய்வம் காக்கின்றது” என்றும்
2.ஆனால் அவர்கள் காட்டிய உணர்வுக்கு மாறாக எடுத்தால் “தெய்வ தண்டனை கிடைக்கும்….!” என்று இப்படி மக்களை அச்சுறுத்திவிட்டனர்.
3.மக்களுக்கு உண்மை தெரியாது… அறியவிடாது… அன்றைய அரசர்கள் செய்த பிழை இது.

இப்படி மதம் என்ற நிலையில் போர் என்ற நிலைகள் வரப்பட்டு உலகம் முழுவதற்குமே மனிதனுக்கு மனிதன் கொன்று குவிக்கும் நிலை தான் வந்தது.

என் மதத்தை காக்க… என் மதத்தைக் காக்க…! என்று போர் முறைகள் தான் வருகிறது. இன்றும் பார்க்கிறோம்.
1.மதத்தின் அடிப்படையில் மக்களை அழிக்கும் உணர்வுகள் தான் விளைகின்றதே தவிர
2.மக்களைக் காக்கும் மதம் எதுவும் இல்லை…!

விஷ்ணு மதம் சிவ மதம் இராமன் மதம் முருகன் மதம் ஜயப்பன் என்று பக்தியின் நிலைகள் வரப்படும் போது ஜயப்பன் கோவிலுக்குப் போகிறவர்களும் முருகன் கோவிலுக்குப் போகிறவர்களும் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
1.பக்தி என்ற நிலையில் நாம் அஞ்ஞான வாழ்கை வாழ்கின்றோம்.
2.மெய் ஞான உணர்வை நாம் பெறவில்லை.

இதைப் போல ஒரு சாமியைக் கும்பிடுகிறவர்களும் இது என் சாமி.. இது உன் சாமி…! என்று இனங்களை வைத்து கோயிலில் இருக்கக்கூடிய மாரியம்மனைக் கும்பிட்டாலும் என்னுடைய இடத்தின் பக்கம் அந்தச் சாமி வந்துவிடுமா… பார்க்கலாம்…! என்ற நிலையில் ஒருவருக்கொருவர் தாக்குவதும்
1.அந்த நல்ல உணர்வுகளை எடுக்க முடியாது தடைப்பட்டு
2.மனிதனுக்கு மனிதன் மடியும் நிலையே வருகின்றது.
3.தெய்வம் நம்மைக் காக்கின்றதா… தெய்வத்தை நாம் காக்கின்றோமோ…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மை அது உணர்ச்சியாகச் செயலாக்கப்படும் போது தெய்வம். அந்த உணர்வின் சக்தி நமக்குள் எடுக்கும் போது அது வித்து… “வினை…”

அந்த உணர்வின் சக்தி நமக்குள் வரும் போது உணர்ச்சிகளாக எண்ணமாகத் தோன்றுகிறது. எந்தச் சுவையின் தன்மை வருகிறதோ – சீதா ராமா…!

1.அந்தந்தச் சுவைக்கு ஒப்ப நம் எண்ணத்தின் உணர்ச்சிகள் இயக்குகிறது என்றும்…
2.இயற்கை நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையையும்…
3.தன்னை அறிந்து கொள்வதற்குத் தான் அத்தனை தத்துவங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்தார்கள்.

இன்று மனிதன் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பெயர் வைக்கிறார்கள் அல்லவா…! மோட்டாருக்கு ஒரு பெயர்.. T.V.க்கு ஒரு பெயர்.. கம்ப்யூட்டருக்கு ஒரு பெயர்.. பின் அதனுடைய உபபொருட்களுக்கு என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரை வைத்து அதை எல்லாம் இணைத்தால் அது இணங்கி இயக்கும்…! என்று தெளிவாக்குகின்றார்கள் அல்லவா…!

இதைப் போன்று மனிதனின் வாழ்கையில் எதை எப்படி இணைக்க வேண்டும் என்ற நிலைகளுக்கு ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர்களை வைத்து மனித உடலுக்குப் பின்… விண் செல்லும் மார்க்கங்களைக் காட்டினார்கள்…! அன்றைய மகரிஷிகள்.

விண் சென்ற ஞானிகள் மூச்சலைகளை நாம் நுகர்ந்து இனி வரும் சந்ததியினருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்

 

இந்த மனித உடல் நமக்கு நிலையானது அல்ல. நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் செல்வதே மனிதனின் கடைசி எல்லை. நீங்கள் இந்த உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். இந்த நச்சுத்தன்மையான உலகத்தில் இருந்து விடுபட வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில்… மனிதன் சீர்குலைந்த நிலையில் செயல்படக்கூடிய நிலைகளும் மனித உருவையே குறைக்கக் கூடிய நிலைகளாகவும் விஷத்தன்மைகள் பரவிக் கொண்டு வருகின்றது.

இனி எந்த நேரம் எது நடக்கும்…? என்று சொல்ல முடியாது. அதற்குள் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நிலையான ஒளிச் சரீரமாகப் பெற வேண்டும்.

1.மெய் ஒளியினைப் பெருக்கி அந்த மெய் ஆற்றல்களை உங்களுக்குள் விளைய வைத்து
2.நீங்கள் இடும் மூச்சலைகள் ஒவ்வொன்றும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு விஞ்ஞானத்தால் வரக்கூடிய விஷத்தினை அது மாய்த்து
3.நல்லதை எண்ணி ஏங்கி வருவோர் உள்ளங்களுக்குள்ளும் ஞானத்தின் உணர்வுகளை விதைத்து
4.அடுத்து வரும் சந்ததியினர் மெய் ஒளியின் தன்மை கொண்டு நிலையான சக்திகளைப் பெறச் செய்வதற்கு உங்கள் மூச்சலைகளே உதவும்.

அதாவது… மெய் ஞானிகள் இட்ட மூச்சலைகள் இன்று நமக்கு எப்படி உதவுகின்றதோ அதே போல வரும் சந்ததியினருக்கு அதைக் கிடைக்கச் செய்ய முடியும்.

ஏனென்றால் இந்த உலகம் மாறப் போவது நிச்சயம். அதாவது மனித உலகம் நினைவிழக்கப் போகின்றது.

ஆதிகாலத்தில் காட்டுமிராண்டிகளாக மனிதன் எப்படி வாழ்ந்தானோ அதைப் போன்று உருப்பெறும் நிலைகளாகி… மனிதனுக்கு மனிதன் தர்மம் என்று ஒன்றை வைத்துக் கொண்டு… ஆனால் மற்றவரை வீழ்த்தும் நிலையே வளர்ந்து கொண்டிருக்கின்றது.

அதனால் நச்சுத்தன்மைகள் அதிகமாகி விஷத்தன்மைகளாகப் பரவிக் கொண்டுள்ளது. அணுகுண்டுகள் ஹைட்ரஜன் குண்டுகள் எல்லாம் சாதாரணமாகப் போய்விட்டது… அவை மற்றவர்களைச் சுட்டுப் பொசுக்கும்.

ஆனால் அதைக் காட்டிலும்
1.தாவர இனங்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் போட்டு
2.அந்தப் பூச்சிகளைக் கொன்று விட்டு நாம் வாழ வேண்டும் என்று எப்படி விரும்பினோமோ இதைப் போல
3.இந்த உலகத்தில் உள்ள கோடான கோடி நிலைகளையும் மாய்த்துக் கொல்லக்கூடிய
4.விஷமான சக்திகளை ஒவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கின்றார்கள்.

ஆக… பூச்சிகளைக் கொன்று தாவர இனங்களை வளர்த்து நாம் வாழ்வதற்காக என்று அதைச் செய்திருந்தாலும்
1.இன்று அதை எல்லாவற்றையுமே போர் ஆயுதங்களாக உருவாக்கி விட்டார்கள்.
2.எந்த நிமிடத்திலும் அத்தகைய ஆயுதங்கள் வெடிக்கலாம்.

அப்படி வெடித்தால் மனிதனுடைய உணர்வுகள் நஞ்சின் தன்மை ஆகி மனிதனுடைய நினைவலைகள் பூரணமாக அழிகின்றது. மனித உரு இருக்கும். ஆனால் மனிதனின் சிந்தனைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு புத்தி இல்லாத நிலைகளாகத் தான் செயல்பட வேண்டி வரும்.

குரங்குகளுக்கு மனிதனைப் போன்ற அங்கங்கள் கை கால் உண்டு. மனிதனைக் காட்டிலும் எங்கும் எதிலும் தாவிச் சென்று ஏறக்கூடிய வலிமை இருந்தாலும் மனிதனை ஒத்த… சொல்களைச் சொல்லி மற்றவர்களுக்குப் புரியக்கூடிய நிலையில்… அதை வைத்துத் தன் நிலைகளைப் பெருக்கிக் கொள்ளும் நிலைகள் கிடையாது.

மனிதனோ சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற்றவன். ஆக மனிதனை ஒத்த குரங்குக்கே அந்த நிலை இல்லை. ஆக மற்ற உயிரினங்கள் எப்படி…? என்று பார்த்துக் கொள்ளலாம்.

மிருகங்கள் எப்படிக் காட்டுமிராண்டித்தனமாகச் செயல்படுகின்றதோ அது போன்று மனிதனுடைய சிந்தனைகள் பூண்டோடு அழித்திடும் நிலையாகச் சென்று கொண்டு இருக்கின்றது.

குரங்கிற்கு ஒரு ஆகாரத்தைப் போட்டாலும்… தன் வாய் நிறைய அதை வைத்திருந்தாலும்… மற்ற குரங்குகளை அது அடித்து விரட்டிக் கொண்டுதான் இருக்கும்.

அதைப் போன்று மனிதர்களுக்குள்ளும் மற்றவர்கள் எதையும் பெற விடாதபடி தானே அனுபவிக்க வேண்டும் என்று ஈவு இரக்கமற்றுச் செயல்படும் நிலைகளாக வந்து கொண்டிருக்கின்றது.

ஆகவே இது போன்ற நிலைகளை உணர்ந்து மெய் வழியைப் பெறும் தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.
1.இப்பொழுது நாம் சொல்வது உங்களுக்கு லேசாகத் தெரியலாம்.
2.போகப் போகத்தான் யாம் சொல்லக்கூடிய உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.

எப்படிச் செடி கொடிகளுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு உரத்தைப் போட்டவுடன் மரத்திற்குள் அது ஐக்கியமாகி… காற்றிலிருந்து தன் இனமான சக்திகளை எடுத்து அது நல்ல மணிமுத்துகளைக் கொடுக்கின்றது.

அது போல்… அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை உரத்தைப் போன்று நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றோம். உங்கள் நல்ல குணங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அதற்கு யாம் சொன்ன முறைப்படி அந்த்த் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் தியானித்துப் பழகிக் கொள்ளுங்கள்.

பழகிய பின்…
1.அடுத்து எப்பொழுது கஷ்டம் வருகின்றதோ அந்தக் கஷ்டம் நிலைத்திருக்காதபடி
2.துன்பமான விஷமான குணங்களை எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உண்டு பொசுக்கி விடலாம்.

ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அந்த சக்தி எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று இப்படி ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரேடியோ டிவியில் ஸ்விட்சைப் போட்டவுடன் அந்த அலைவரிசையை எடுத்து அதைச் செயல்படுகின்றதோ அதே போல ஞானிகள் அருளாற்றல் மிக்க அருள் சக்தியை நீங்கள் பெறக்கூடிய தகுதிக்கே இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.அதற்கு ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் பத்து நிமிடமாவவது தியானிக்க வேண்டும்.
2.தியானமிருந்தால் தான் அந்தச் சக்தியைக் கூட்ட முடியும்… உங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று இருக்கக்கூடிய உலகம் விஷ உலகமாக இருக்கின்றது. அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்கு
1.ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்ற மாதிரி மெய் ஞானிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
2.அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் காற்றிலிருந்து அந்த அரும்பெரும் சக்திகளை எடுக்கலாம்.
3.உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்கும்.
4.சாமி (ஞானகுரு) வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று எண்ணினால் இதெல்லலாம் தவறு.

ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

ஏனென்றால் உயிர் எண்ணியதைத்தான் உருவாக்குகின்றது. எண்ணிய சக்திகளை உங்களைப் பெறச் செய்வதற்காகத்தான் ஞானிகளின் உணர்வை உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவானால் என்ன நடக்கின்றது…?

உதாரணமாக பள்ளிக்குச் சென்று படிக்கின்றோம் என்றால் ஆசிரியர் இது இன்னது… இன்னது தான்…! என்று சொல்கிறார். அவர் சொன்னபடி நாம் எடுத்துக் கொண்டால்
1.அந்தக் கணக்குப் பிரகாரம் இயந்திரத்தைச் செய்யலாம்… இயக்கலாம்
2.கணக்கீடுகளைச் (CALCULATION) செய்யலாம்
3.இந்தந்தப் பொருள் இப்படி இயங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதற்குப் பதில் ஆசிரியரே வந்து எனக்கு எல்லாம் செய்து கொடுப்பார் என்றால்… எப்படி…? நீங்கள் வீட்டுக்குப் போன பின் ஆசிரியர் வந்து எப்படிச் சொல்லிக் கொடுப்பார்…?

சொல்லிக் கொடுப்பார்… எழுதிக் கொடுத்து அதையும் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தால் ஆசிரியர் வேலை அன்ன ஆவது…?

ஆகையினால் நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்…? என்றால் சாமியார் செய்து தருவார்… சாமி செய்யும்.. ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்…! என்று இப்படித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றோமே தவிர
1.மனிதனான பின் தனக்குள் நாம் எண்ணியதைச் செயலாக்கும் சக்தி
2,“நம் உயிர் தான்…!” என்பதை மறந்தே இருக்கின்றோம்.

கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் மட்டும் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். நல்லதை மட்டும் எண்ணவே முடியவில்லை…!

காரணம்… ஒரு விஷம் கொண்ட பொருளுக்குள் நல்ல பொருளைப் போட்டால் அந்த நல்ல பொருளும் ஒடுங்கி விடுகின்றது.

விஷம் கொண்ட உலகமாக இருக்கும் பொழுது… விஷம் கொண்ட இயக்கமாக இருக்கும் பொழுது… இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அந்த உணர்வின் செயலாக்கமே நம் நல்ல உணர்வை அறிய விடாது தடைப்படுத்துகின்றது.

நல்ல உணர்வுகளை அறிய வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் கூறும் உபாயத்தைக் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.அடுத்து பிறவியில்லா நிலையை நிச்சயம் அடைய முடியும்.
4.இந்த விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்.

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்

 

அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்று அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றார். அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி உங்கள் நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி
1.அதனுடன் சுழன்று உங்கள் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
2.அகண்ட அண்டத்தில் வருவதையும் உங்கள் உணர்வுக்குள் அது பெறும் உணர்ச்சியின் நிலையை
3.அணுவாக மாற்றும் நிலையாக உருப்பெற்று விட்டால் தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.
4.உங்களால் நினைத்த நேரத்தில் அகண்ட அண்டத்தினையும் அதன் செயலாக்கங்களையும் காண முடியும்.
5.அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பகைமை உணர்வு வராது “பேரின்ப உணர்வினை” உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது.

எமது அருள் குரு அருளால் கிடைத்தது. குரு அருள் பேரருளைக் கவர்ந்து அவர் உணர்வு என்னைப் பக்குவப்படுத்தியது போல் உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன்.

இதில் எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும்… அடுத்து என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும் இது உதவுகின்றது.

1.குறுகிய காலமே இருக்கும் இந்த உடலுக்கு வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும்
2.உயிருக்கு அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.

இது தான் வாழ்வின் கடைசி எல்லை.

ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஆறாவது அறிவின் துணை கொண்டு “நம் அணுக்களை ஒளியின் உணர்வாக உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான்” பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது… அதே சமயத்தில்
1.அந்த உணர்வுகள் உடலுக்குள் அணுவாகும் பொழுது
2.உயிரைப் போன்றே ஆக்கப்படும் பொழுது நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது.
3.இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து இது தவறு இது கெட்டது என்று உணர்வினை நுகர்ந்து நுகர்ந்து இதனைக் கலந்து கலந்து இந்த உடலினை உருவாக்கியது உயிர்.

1.அவனே நம்மை உருவாக்கினான்… ஈசனாக இருந்து உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான்,
2.கடவுள் என்ற நிலையில் நாம் எதனை நுகர்ந்தோமோ அவை நம்முள் நின்று அதனின் துணை கொண்டு அங்கே இயக்குகின்றது.
3.அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை… அவன் தான் உருவாக்குகின்றான்.
4.ஆகவே அமைதி கொண்டிருக்கும் நேரத்தில் உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.

நம் குருநாதர் என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து
1.உங்கள் கண்ணின் நினைவை என்னிடத்தில் செலுத்தினாலும் நீங்களும் அண்டத்தில் மிதக்கின்றீர்கள்.
2.அதனின் உணர்வை நினைவை கொள்ளும் பொழுது அதன் அருளை நீங்களும் பெற முடியும்.

அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு. அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன்.

அவன் துருவனாகி துருவ நட்சத்திரமானான். அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றுகின்றான். அதன் உணர்வின் தன்மை இந்தப் பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

நீங்கள் சிறிதளவே இருப்பினும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்தப் பூமியிலும் பரவுகின்றது. அதன் உணர்வின் நினைவு கொண்டு கவருங்கள்.

சூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு… ஏழாவது ஒளி. இதைத்தான் சூரிய பகவான் வருகின்றான் என்று வேக ஓட்டத்தைக் காட்டி, ரதத்தைக் காட்டியது.

அந்த ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால் நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும். ஆகவே
1.மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும் போது ஏழாவது ஒளியின் நிலைகள் அடைதல் வேண்டும்.
2.இதுதான் “ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்” என்பது.
3.அவன் தனி உலகமாக ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான். அவன் ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.

சூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு. ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு. மற்றதைத் தெளிந்து உணர்ந்து ஒளியாக மாற்றுவது ஏழு.

காவியங்களில் ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன் என்று சொல்கின்றனர். மனிதனுக்குள் உணர்வுக்குள் இந்த ஏழு லோகத்திற்குள் தேடி நாம் காணுதல் வேண்டும். மேலே ஏழு என்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு. ஆக நமக்குள் தேடினால் உண்டு.

அகண்ட அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்தில் உண்டு. ஆகவே நாம் விண்ணின் ஒளியாக மாற்றும் உணர்வு பெற்று உயிர் என்ற நிலை பெற்று உணர்வின் ஏழாவது ஒளியாக மாற்றும் திறன் பெற்று இருப்பினும் இருள் சூழும் நிலைகளிலிருந்து மீள்தல் வேண்டும்.

ஒளியாக ஒன்றாக இருக்கின்றது. பல வர்ணங்கள் ஒளியின் நிலையை மறைத்திடும் பொழுது அந்த வர்ணத்தைத்தான் காட்டுகின்றது.
1.நமக்குள் எந்த குணத்தின் தன்மை வருகின்றதோ அந்த வர்ணத்தின் செயலாகத்தான்
2.இருள் சூழ்வதும் சிந்திப்பதும் சிந்தனையற்ற நிலைகளும் வருகின்றது.
3.ஆகவே பேரருள் என்ற உணர்வினை எடுத்து நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை உங்களில் உருவாக்கத்தான் இந்த நிலை.

யாரும் குற்றவாளியல்ல. குற்றத்தைச் செய்பவரும் அல்ல. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வே நம்மை அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. நுகர்ந்தது நமக்குள் விளையாது அருள் ஒளி என்ற உணர்வைக் கொண்டு இருளை நீக்கப் பழக வேண்டும்.

இதற்குத்தான்
1.அதிகாலை நேரத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை நீங்கள் நுகர்ந்து
2.இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வைப் பெற வேண்டும் என்று தியான நிலைகளிலேயே உபதேசத்தைக் கொடுத்து
3.உங்களை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இமயமலையில் வைத்து எனக்கு (ஞானகுரு) அனுபவங்களைக் கொடுத்தார். பனிப்பாறைகளுக்கு மத்தியில் நடந்து செல்லும் பொழுது நான் வந்த பாதையில் உள்ள பாறைகள் திடீரென்று இடிந்து விழுந்தது.

இடிந்ததும் நான் எப்படித் திரும்பப் போவது…? என்ற பயம் வந்து விட்டது. என் மனைவி குழந்தைகளின் மீது எண்ணம் வந்து விட்டது.

அப்பொழுது குருநாதர் சொல்கிறார். இன்று நீ பத்ரிநாத் கேதார்நாத் எல்லாம் போய்விட்டு வந்தாய். பல நிலைகளை அங்கே நீ தெரிந்து கொண்டாய்.

ஆனால் அந்தத் தெரிந்த உணர்வு கொண்டு வந்தாலும் இங்கே இந்தப் பாறையை கடந்து செல்லப்படும் பொழுது பனிப் பாறைகள் நொறுங்கி விழுந்துவிட்டது.

1.நொறுங்கிய பின் நீ எப்படித் திரும்பப் போவது என்று பயப்படுகின்றாய்.
2.அதனால் உனக்குள் ஒரு புயலே வந்துவிட்டது.
3.தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.
4.உன் மனைவியையும் உன் மக்களையும் நீ எண்ணத் தொடங்கி விட்டாய்.
5.பாசத்தால் அப்படி எண்ணும் போது இந்தக் குளிரிலிருந்து உன்னால் தப்ப முடியவில்லை.
6.(ஏனென்றால் குருநாதர் அந்தக் குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக நட்சத்திர உணர்வுகளை என்ன எண்ணச் சொல்லியிருந்தார். அதனால் குளிர் பாதிக்கவில்லை – பாச உணர்வால் மனைவி மக்களை எண்ணியதும் குரு சொன்னதை நான் எண்ண முடியவில்லை)
7.நீயே தப்ப முடியவில்லை என்றால் நீ போய் யாரைக் காப்பாற்றப் போகிறாய் என்று கேட்டார்…!

ஆகவே
“மனமே இனியாகிலும் மயங்காதே…
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…
நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமோ
நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ…? என்ற பாடலைப் பாடினார்.

நீ இந்த உடல் ஆசையை வைக்காதே. எது நடக்க வேண்டுமோ… அது நடக்கும். ஆனால் தீமைகள் நடக்காது தடுப்பதற்கு… உனக்கு நான் கொடுத்த சக்தி… “அந்தத் துருவ நட்சத்திரத்தை பற்றிச் சொல்லி உள்ளேன்…”

ஒரு சந்தர்ப்பம் நீ விமானத்தில் செல்லப்படும் போது அந்த விமானம் கவிழும் தருணத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அப்பொழுது ஒரு நொடிக்குள் அங்கே நீ செலுத்தினாய்.
1.நீ விமானத்தில் உள்ளோரையும் காத்தாய்… உன்னையும் காத்துக் கொண்டாய்.
2.இது உனக்குள் இருக்கக்கூடிய எண்ண வலு…!

அதே சமயத்தில் எல்லோருமே ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்வோர் தான். அதிலிருந்து யாரும் தப்புவது இல்லை.

1.நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி…
2.பெரிய மகான் என்று மக்கள் அனைவரும் போற்றிக் கொண்டு இருந்தாலும் சரி…
3.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்… ஏனென்றால் எதனுடைய அழுத்தம் அதிகமாகிறதோ அப்பொழுது உயிர் இந்த உடலை விட்டுப் பிரியத் தான் செய்யும்.

இந்த உடல் இச்சையை நீ பட்டு “என் மனைவி… என் குழந்தை…!” என்று நீ எண்ணினால் இந்த உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய். இப்பொழுது உன் உயிரான்மா பிரிந்தால்
1.உன் குழந்தையின் ஈர்ப்புக்குள் போவாய்… அல்லது உன் மனைவியின் ஈர்ப்புக்குள் தான் போக முடியும்.
2.அங்கே சென்ற பின் அந்த குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க விடுவாயா..?

நீ இங்கு இறந்து விடுகின்றாய் என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையோடு இருக்கப்படும் போது இதே உணர்வுகள் அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக ஆக்கி அவர்களையும் நோயாக்கி விடுகின்றாய்.

உன்னை நம்பிய அனைவருக்கும் இதே வேதனைகள் உருவாக்கபட்டு அவர்களையும் துரித நிலையில் மடியும் தன்மையை உருவாக்குகின்றாய். ஆகவே…
1.அந்த வேதனையைத் தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும்.
2.நீ அவர்களைக் காக்க முடியாது.
3.பாசத்தால் நீ எண்ணிய உணர்வுகள் கொண்டு அந்த உணர்வுடன் மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய்
4.அவர்களையும் அழித்து விடுகின்றாய்…!

உடலுக்குப் பின் எந்த வேதனையையும் துயரத்தையும் நீ பட்டாயோ உன் உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும்.
1.இன்று நீ மனிதனாய் இருக்கின்றாய்.
2.அடுத்து நீ எங்கே போகின்றாய் தெரியுமா..? என்று கேட்கின்றார் குருநாதர்.

உன் உடலில் எந்த வேதனைகளை அதிகமாக எடுத்தாயோ அந்த விஷம் (வேதனை என்றாலே விஷம்) என்ற நிலையைத் தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் உன்னை உன் உயிர் அழைத்துச் செல்லும்.

பாம்பாகவோ மற்ற விஷமான ஜெந்துக்களாகவோ உன்னை அதற்குத் அங்கே உருவாக்கி விடும் என்று இமயமலையில் வைத்து அனுபவபூர்வமாகக் காட்சியாகவே தருகின்றார் குருநாதர்.

ஆனால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகரித்து விட்டால்
2.இந்த மனித உடல் என்ற இச்சையில் இருந்து விடுபட்டு
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலிலே ஒளியான அணுக்ககளாக விளைந்து
4.உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது.
5.உடலை விட்டு எந்த நேரம் உயிர் பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்கு உயிர் அழைத்துச் சென்று
6.உன்னைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும்… நீ அழியா ஒளியின் சரீரம் பெறலாம்…! என்று தெளிவாக எனக்கு உணர்த்தினார்.

விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!

 

அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படித்தான் இருந்தாலும் பிறருடைய துன்பங்களைப் பார்க்கவோ கேட்கவோ நேர்கின்றது. சுவாசத்தின் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வந்து விடுகிறது. அதை நீக்குவது யார்…?

1.எதிலே எடுத்துக் கொண்டாலும் “விஷம்…” எல்லாவற்றிலுமே ஊடுருவி இயக்கும்.
2.நல்ல குணங்களாக இருந்தாலும் ராமா லட்சுமணா என்று தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.லட்சுமணா…! என்றால் விஷத்தின் இயக்கச் சக்தி.

மனித உடலுக்குள் விஷத்தை நீக்கி விட்டு இந்த உணர்வின் சத்தான நிலைகள் சீதா ராமனாக நல்ல குணங்கள் இங்கே படைத்திருந்தாலும் அதே குணத்தைச் சுவாசிக்கும் பொழுது காற்றிற்குள் இருக்கக்கூடிய
1.அதாவது இந்த விஷம் கலந்திருந்தால்தான்
2.நாம் சுவாசித்து அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையாக வருகின்றது.

வேதனை என்ற உணர்வு லட்சுமணா என்ற இயக்கமாக வருகின்றது. இதைப் போல நமக்குள் அது இருக்கின்றது.

பேரண்டம் பெரும் நிலைகள் கொண்டு உருவானாலும்
1.இந்த அசுர சக்திகளால் தான் மற்றொன்றை இயக்க முடிகிறது.
2.பூமிக்குள் இருக்கக்கூடிய விஷத்தினுடைய ஆற்றல் தான் இந்தப் பூமியையே சுழலச் செய்கின்றது.

அதே போல சூரியன் இவ்வளவு பிரகாசமாக ஆக வேண்டுமென்றால்
1.விஷத்தின் தாக்குதல் கொண்டு தான் சூரியன் வேகமாக இயங்கி
2.ஒளிப் பிளம்பாக மற்றொன்றை “ஊடுருவிச் செல்லும்…” அதாவது அந்த வேகம் துடித்து எழுகின்றது.
3.ஆகவே இந்த விஷம் முக்கியத்துவம் வாய்ந்தது…!

அதற்குத்தான் அன்று ஒரு சிறு கதையை எழுதிக் காட்டினார்கள் அசுரன் என்பவன் ஈரேழு பதினாலு லோகத்திலும் “எனக்கு யாரிடத்திலும் இறப்பு வரக்கூடாது…” என்று வரம் கேட்கின்றார்.

ஈரேழு பதினாலு லோகம் என்றால் சூரியனிலிருந்து வரக்கூடிய ஆற்றல் ஏழு… மனித உடலுக்குள் ஏற்படும் உணர்வின் நிலைகள் ஏழு.

ஈரேழு பதினாலு லோகம் சூரியனால் உற்பத்தியாகும் எந்த நிலைகளிலிருந்தும் எனக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது. மனிதனுக்குள் வரக்கூடிய விஷத்தின் தன்மை எதுவும் என்னை அழித்துவிடக் கூடாது என்று வரத்தைக் கேட்டு வாங்கிக் கொள்கின்றான்.

விஷ்ணுவும் சரி என்று கொடுத்து விடுகின்றார்.

மிருகத்தாலும் மனிதனாலும் பரந்த வெளியிலும் பேரண்டத்தில் எது இருந்தாலும் இந்த ஈரேழு பதினாலு லோகத்தில் எங்கேயுமே எனக்கு இறப்பு வரக்கூடாது என்ற வரத்தை வாங்குகிறான்.

1.நாம் சுவாசிக்கும் சுவாசத்திற்குள்ளும் இந்த அரக்க குணம் உண்டு.
2.அந்த உணர்வின் வேகம் இல்லை என்றால் துடிப்பு இல்லை.
3.எந்த இடத்திலும் விஷத்தின் தன்மை படரவில்லை என்றால் இயக்க முடியாது.
4.அப்படிப்பட்ட ஆட்சி புரியக்கூடிய நிலைகள் தான் அது.

நரசிம்ம அவதாரம்… என்று வாசல்படியில் வைத்து அசுரனைக் கொல்வதாகக் காட்டுகின்றார்கள். சிங்க முகத்தையும் மனித உடலையும் வைத்து நரசிம்ம அவதாரம் என்று காட்டுகின்றார்கள்.

உதாரணமாக ஒருவர் கெடுதல் செய்கின்றனர்… என்னைத் திட்டுகின்றார். அதை நாம் சுவாசித்தால் என்ன செய்கிறது…?

என் உடலுக்குள் அந்த அசுர சக்திகள் சேர்ந்து… அந்த வேகத்தைக் கூட்டி… அவருடைய கெட்ட குணத்தை எனக்குள் உண்டாக்கி.. என்னை அதன் வழிக்கு இழுத்துச் செல்கிறது.

இதைத் தடுப்பதற்கு…
1.ஈஸ்வரா என்று உயிர் வழியாக மெய் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது வாசல்படி ஆகிறது.
2.முன்னாடி இருக்கும் அந்தக் கெட்ட சக்தி உள்ளே புகாதபடி தடுக்கும் ஆற்றல் வருகிறது.

இதைத்தான் நரசிம்ம அவதாரம் என்பது.

வராகன் கெட்டதை எண்ணாது நல்லதை எப்படி எடுத்துக் கொண்டதோ அதைப் போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு கெட்டதை நீக்கிவிட்டு நல்லதை உருவாக்க வேண்டும்.

கெட்டது தனக்குள் வராதபடி எவர் ஒருவர் இப்படித் தடுக்கின்றார்களோ அது நரசிம்ம அவதாரம். கேட்டது அழிக்கப்பட வேண்டும் என்று வாசல்படியில் வைத்து அழித்து விடுகின்றார்கள்.

பிறர் யார் எப்படித் திட்டினாலும் கேவலமாகப் பேசினாலும் அந்த உணர்வு அப்படியே இயக்கினால் “இனி என்ன வாழ்க்கை…!” என்று நம்மை அது அழித்து விடுகிறது. அந்த அசுரனிடம் சிக்கிவிடுகின்றோம்.

அதே சமயத்தில் திட்டுகிறார் என்று கோபம் நமக்கு வந்தால் “இரு நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்று அவரை அங்கே அழிக்கச் செல்வோம். ஆனால் அழிக்க வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நல்ல குணங்களை அழித்து உடலில் நோயாக மாற்றுகின்றது.

ஆகவே…
1.அந்த அசுர சக்தி இப்படித் தான் எல்லா வகைகளிலும் ஊடுருவும் என்று
2.அவன் எங்கேயும் எனக்கு சாவு வரக்கூடாது என்ற வரத்தை வாங்கி அந்த அசுர சக்தி மற்றதைக் கொல்வதாகச் சாஸ்திரம் காட்டுகின்றது.

ஆனால்
1.நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அந்தச் சுவாசத்தை எடுக்கப்படும் பொழுது அசுர சக்திகள் செயலிழக்கப்படுகின்றது.

நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காப்பதற்குத் தான் நரசிம்ம அவதாரத்தை அன்று காட்டினார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் தன் பாதரசத்தால் தான் கவர்ந்தாலும் மற்ற உணர்வலைகள் வரப்படும்போது மோதி இது நெருப்பாகி கவர்ந்தவற்றில் உள்ள விஷத்தைப் பிரித்து விடுகின்றது. அதனுடைய சந்தர்ப்பத்தால் அது செயல்படுத்துகின்றது

அதே போல் நம்முடைய சந்தர்ப்பம் தீமை என்ற உணர்வுகளை கண்ணால் கவர்ந்து அந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்துதான் இந்த மனித வாழ்க்கையை நடத்துகின்றோம். அப்படி வரக்கூடிய தீமையான உணர்வுகளை நாம் தடுத்துப் பழக வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி
2.எங்கள் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்ற உணர்வை
3.உள்முகமாக உடல் முழுவதற்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்த வேண்டும்,

அப்படி எடுத்துக் கொண்டால் நம்மைப் பயமுறுத்தும்… அச்சுறுத்தும்… கோப்படுத்தும்… வேதனைபடுத்தும்… இதைப் போன்ற உணர்வுகளை எல்லாம் நமக்குள் புகாது தடுத்துக் கொள்ளலாம்…! என்று அனுபவபூர்வமாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் (ஞானகுரு) காட்டுகின்றார்.

எங்கே வைத்து..?

டெல்லியிலிருந்து விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது விமானம் கவிழும் சந்தர்ப்பத்தில் இந்த உபதேசத்தைக் கொடுக்கின்றார்.

“கவிழப் போகிறது…!” என்ற நிலை ஆன பின் விமானத்தில் உள்ள பிரயாணிகள் எல்லோரும் பயந்தார்கள். ஆனால் நீ ஏன் பயப்படவில்லை..?
1.நீ இந்த உடலின் இச்சைப்படவில்லை
2.நீ உயிரின் இச்சைப்பட்டாய்…!
3.ஏனென்றால் உயிர் ஒளியானது… அறியும் தன்மை ஆனது…!
4.அதே அறியும் தன்மையை நீ அச்சம் இல்லாமல் எடுப்பதனால் உனது காக்கும் சக்தியும் அதிலே சேரலாம்…! என்று சொன்னார்.

அத்தனை பேர் பயந்தாலும் “நீ ஒருவன் இந்த உயர்ந்த உணர்வுடன் வலிமையாக இருந்ததால்… விமானம் கவிழாது காக்கப்பட்டது..!” என்று காட்டுகின்றார்.

ஆக இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று அங்கு காட்டுகின்றார்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகள் எப்படி இயங்குகின்றது…? என்பதை குருநாதர் இப்படி எமக்குப் பல வழிகளிலும் காட்டினார்.
1.எல்லாவற்றிலும் தப்பும் உணர்வுகள் மனிதனுக்கு உண்டு.
2.எல்லாவற்றிலும் தப்பிய மனிதன்தான் அகத்தியன்.

அவன் துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பெற்றான்… துருவ நட்சத்திரமானான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வை நமக்குள் அதிகமாக்கினால்… நம் ஆன்மாவில் பெருக்கிக் கொண்டால்… “தீமையான உணர்வுகள் எது வந்தாலும் அதை விலக்கித் தள்ளிவிடும்…!”

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால் உங்கள் எண்ணத்தால் உங்களைக் காத்துக் கொள்ள முடியும். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

பிரம்மா – உருப்பெறச் செய்யும் சக்தி

 

சூரியனிலிருந்து தோன்றிய அதீத வெப்பத்தை உண்டாக்கும் ஒரு அணுவும் நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய கதிரியக்கமும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது
1.இயற்கையின் நிலைகள் ஒன்றாக இணைந்து உயிரின் துடிப்பாகும் பொழுது ஈஸ்வரா.
2.அந்த இயக்கத்திற்குள் இருக்கக்கூடிய வெப்பம் விஷ்ணு.
3.நாராயணன் விண்ணிலே சர்வேஸ்வரனாக உருப்பெறும் பொழுது ஒற்றைப்படையில் இங்கே ஈஸ்வரா என்று உருவாகின்றார்.

அதாவது நாராயணன் மறு அவதாரமாக விஷ்ணுவாகத் தோன்றுகின்றது.

பிரபஞ்சத்திற்குள் தோன்றிய இந்த உயிரணு தான் பூமிக்குள் வந்தபின் தாவர இனச் சத்தை இது சுவாசிக்கின்றது.

உயிரான ஒளி இதுவும் சக்தி தான்… ஆனால் உற்பத்தி செய்யக்கூடிய சக்தி…! தாவர இனச் சத்தை இழுத்த உடனே அது உறைந்து சிவமாகிறது… “சிவசக்தி” ஆகிறது.

இந்த உயிர் தாவர இனச்சத்தைச் சேர்த்து புழுவாகும் பொழுது அந்தப் புழுவிற்குள் அந்த உணர்வின் சக்தியாக வினையாகச் சேருகிறது. வினையாகச் சேர்த்த நிலையில் தான் எடுத்துக் கொண்ட வினைக்கு நாயகனாகப் புழுவாகத் தோன்றுகின்றது… “விநாயகா…”

தாவர இனத்தைத் தனக்குள் சேர்க்கும் பொழுது சக்தி சிவம் ஆகின்றது… சிவத்திற்குள் சக்தி இயங்குகின்றது.

உதாரணமாக வேப்ப மரத்தின் சத்து இதற்குள் இணைந்து புழுவாகும் பொழுது சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த உடல் பெறுகிறது.

வினைக்கு நாயகனாக உடல் பெற்றாலும் வேப்ப மரத்தின் தன்மை கசப்பு. இந்த உயிரின் தன்மை தான் ஈர்த்து எடுத்துக் கொண்ட இந்தச் சக்தியோ லட்சுமி.

காந்தம்… “லட்சுமி நாராயணா” என்று அங்கே சூரியனை வளர்த்தது. உயிருக்குள் இருக்கக்கூடிய இந்த இயக்கம் ஈஸ்வரன். இயக்கத்துக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஈர்ப்பு சக்தி லட்சுமி.

ஒரு பொருளின் தன்மை இதனுடன் இணைந்து உருப்பெறப்படும் பொழுது “பராசக்தி…” எந்த மணத்தை அதனுடன் இணைக்கின்றதோ அந்த மணத்தை வெளிப்படுத்தும் போது ஞானம் “சரஸ்வதி…”

இணையக்கூடிய சந்தர்ப்பம் “பிரம்மா…” ஆனால் அந்த மணம் பிரணவம் ஜீவன்…! அந்தக் குணத்திற்குத் தக்கவாறு இயக்கம். இந்த உணர்வின் தன்மை ஊட்டுவதற்கு அந்த உயிர் தனக்குள் சேர்த்து உருப் பெறும் சக்தியாக மாறுகின்றது.

உயிரில் இருக்கக்கூடிய காந்தம் தாவர இனச் சத்தை இழுக்கின்றது. லட்சுமி. இந்த வெப்பத்திற்குள் ஆனபின் உடலாக உருப் பெறச் செய்கின்றது பராசக்தி.

ஆனால் வேப்ப மரத்தின் கசப்பான சத்து வரப்படும் பொழுது மணம் ஞானம். இது பிரணவம். அந்த மணத்தின் நிலை கொண்டு இது ஜீவன் பெறுகின்றது.

1.தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் நிலைகள் பிரணவம் என்கிற பொழுது ஓ…
2.அந்த வாசனையை எடுத்து ம்… என்று தனக்குள் சேர்க்கப்படும் பொழுது “சிவம்… ஓம் நமச்சிவாய…!”

அந்த உயிர் தனக்குள் அதனுடைய சக்தியாச் சேர்க்கின்றது. ஆனாலும் இதில் இருக்கக்கூடிய இந்த காந்தம் வேப்ப மரத்தின் சத்தை இழுத்து தனக்குள் இணைந்து வளர செய்யக்கூடிய சக்திக்குப் பெயர் “சீதா ராமா…”

சீதா என்பது சுவை. லட்சுமிதான் தனக்குள் எடுத்துக் கொண்ட அந்த சுவையின் சத்தைத் தனக்குள் சேர்த்த வினையாக அந்த உடலுக்குள் விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமன் ஆகின்றது.

நாராயணன் மறு அவதாரம் விஷ்ணுவாகத் தோன்றி நான் ராமனாகப் பிறக்கப் போகின்றேன் என்ற நிலை வரப்படும் பொழுது இந்த ராமன் யார்…? சீதா ராமா.

தான் கவர்ந்து கொண்ட இந்தச் சக்தி… தன் உடலாகி உடலுக்குள் விளைந்து அந்த உணர்வின் சத்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது சீதா ராமா. அந்தச் சுவையால் எடுத்துக் கொண்டு விளைந்த அந்த வித்து.

அத்வைதம் துவைதம் காயத்ரி என்று சொல்வார்கள். காயத்ரி என்றால் என்ன…?

இந்த பூமியான பரத்திற்குள் சகல சக்திகளும் இருக்கின்றது. ஒரு வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்த அலைகள் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

கவர்ந்து கொண்ட இந்த சக்தியை இதே வேப்ப மரத்திலிருந்து எடுத்துக் கொண்ட அந்தப் புழு இதைச் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை மோதி.. தான் அறியும் சக்தியாகப் பெறுகின்றது. புழுவிற்கு அது ஞானம்.

1.வேப்ப மரத்தின் கசப்பு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பூமியின் பரத்திலே பரவச் செய்கிறது… இது “பரமாத்மா…”
2.அதை இந்தப் புழு இழுத்துத் தன் உடலுக்கு அருகில் வரும் பொழுது அதனின் “ஆத்மா…”
3.பரமாத்மாவிலிருந்து சுவாசித்து அதனின் ஆன்மாவாக்கி உடலுக்குள் சென்ற உடனே “ஜீவாத்மா…”
4.உடலுடன் சேர்த்து விளைந்தது உயிருடன் இணையும் போது “உயிரான்மா…!”
5.பிரம்மாவிற்கு நான்கு தலையைப் போட்டிருப்பார்கள்… நான்காக உருப்பெறச் செய்வது.
6.எடுத்துக் கொண்ட சக்தி அது முழுமையாகின்றது – காயத்ரி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மிளகாய் காரமாக இருக்கின்றது. ஆனால் குழம்பு வைக்கிறோம் என்றால் அந்தக் காரத்தைச் சேர்த்தவுடன் ருசியாக இருக்கிறது. உப்பு கைப்பாக இருக்கிறது. அதைக் குழம்பில் அளவோடு சேர்க்கப்படும் போது ருசியாக இருக்கிறது.

விஷமோ மனிதனைக் கொன்று விடுகிறது, ஆனால் எந்த வைத்தியமாக இருந்தாலும் சரி
1.நல்ல மருந்துடன் அந்த அளவு கோல்படி விஷத்தைச் சேர்த்த பின்
2.அது அந்த மருந்துக்கே வீரிய சக்தியாகின்றது.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதைக் குடித்தால் மனிதனைக் கொல்கின்றது. ஆனால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விட்டால் விஷம் தணிந்து அந்தப் பாலுக்கே அது வீரிய சக்தி கொடுக்கின்றது.

இதே போல் தான் நல்ல மருந்துக்குள் விஷத்தைக் கலந்தால் வேகமாக ஊடுருவிச் செல்லும். அந்த விஷத்தின் தன்மை சேர்த்தபின் அந்த மருந்தும் வலுவாகிறது.

மருந்தை நாம் உட்கொண்டால் நம் உடலில் விஷத்தன்மை கொண்ட அணுக்களுக்கு இது எதிர்மறையாகி மறைவிடமாகும்போது அதற்கு உணவு போகாதபடி தடுக்கின்றது.

கெட்ட அணுக்களுக்குச் சிறிது காலம் உணவு கிடைக்கவில்லை என்றால் அது ஆகாரம் இல்லாமல் மடிகின்றது. இதைப் போன்ற நிலையில் மனிதன் தனக்குள் உண்மையின் உணர்வை அறிந்து செயல்டும் ஆற்றல் பெற்றவன்.

சந்தர்ப்பத்தால் நமக்குள் சேரும் விஷத்தின் தன்மைகளை மாற்ற அருள் ஞானியின் உணர்வை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது விஷத்தை அடக்கி தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

நாகப்பாம்பு போன்ற பாம்பினங்கள் தன் உடலிலே இருக்கக்கூடிய விஷத்தை மற்ற உயிரினங்களின் மீது பாய்ச்சுகின்றது. அதையே உணவாக எடுக்கின்றது. இருந்தாலும் தன் உடலில் விஷத்தின் தன்மையைச் சேமிப்பாக்குகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு உடலிலும் விஷத் தன்மை உண்டு.
1.பாம்பு அதனைத் தனக்குள் ஜீரணித்து
2.அந்த உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதும் போது “நாகரத்தினமாக…!” மாறுகின்றது.

அத்தகைய பாம்பினங்கள் சுமார் நூறு வருடம் வாழ்ந்தால் அதன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் பெறுகிறது. ஒளித் தன்மை அடைகின்றது. ஆனாலும் அதற்கு வளர்ச்சி இல்லை.

ஆனால் மனிதனாகத் தோன்றிய நிலையில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.
1.உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மைகள் மோதலாகும்போது
2.ஜீவணுக்களாக மாற்றி ஒளியின் சரீரமாக மாற்றுகின்றது துருவ நட்சத்திரம்
3.நம் பிரபஞ்சத்தில் வரும் விஷத்தைத் துருவப் பகுதி வழியாக நம் பூமி நுகரப்படும் போது
4.அதனைக் கவர்ந்து ஒளியாக மாற்றுகின்றார் துருவ மகரிஷி துருவ நட்சதிரத்திரமாக…!

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பலராம்… பலருடைய எண்ணங்கள் இருந்தாலும் கோபப்படுவதோ வேதனைப்படுவதோ சலிப்பு அடைவதோ இது எல்லாம் வாலி. அதை எல்லாம் எடுத்துக் கொண்டால் இருள் சூழ்ந்துவிடுகின்றது.

1.இருளாக இருக்கும் நிலையில் அங்கே என்ன சாமான் இருக்கின்றது…? அறியாதபடி தத்தளிக்கின்றோம்
2.ஆனால் வெளிச்சத்தைக் கண்டபின் இன்ன பொருள் அங்கே இருக்கின்றது என்று அறிகின்றோம்
3.ஆக நமக்குள் மகிழ்ச்சி பெறச் செய்வதும் ஒரு பொருளை அறியச் செய்வதும் ஒளி (வெளிச்சம்).

அந்தத் துருவ மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்து “ஈஸ்வரா…” என்று அவனிடம் வேண்டி… அது எங்கள் உடல் முழுதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்தும் போது இதன் உணர்வின் வலிமை பெறுகிறது. ஒளியாக மாற்றுகின்றது.

அப்பொழுது மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற உணர்வை உணர்ந்தாலும் நமக்குள் அந்த நினைவு வருவதில்லை.

இதைத்தான் கடவுளின் அவதாரத்தில் ஒன்பதாவது “நரசிம்ம அவதாரம்…” என்று காட்டப்படுகின்றது.
1.இந்த மனிதனின் வாழ்க்கையில் தீமைகளைத் தனக்குள் புகாது எவர் தடுக்கின்றனரோ
2.அவரே உயிருடன் ஒன்றி கல்கியின் தன்மை பிறவியில்லா நிலை அடைகின்றனர்.

ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்

 

சாப்பாடு போடுகிறார்கள்… நன்றாகத் தான் இருக்கிறது என்று மட்டும் சொல்லி விட்டால் போதுமா…?
1.அந்தச் சுவையான உணவை உட்கொண்டால் தானே நல்லது.
2.ஆகவே போடக்கூடிய உணவை நல்ல முறையில் சாப்பிட வேண்டும்.
3.அப்பொழுது அந்த ருசியின் தன்மை தெரியும்.

இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருக்கின்றது…!” என்று சொல்கிறார். எப்படி இருந்தது…? நன்றாக இருந்தது…!

நன்றாக இருந்தது என்றே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி நன்றாக இருக்கிறது…? என்று சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்.

ஏனென்றால் யாம் அடிக்கடி உபதேசித்த உணர்வுகளில் உள்ள உட்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக உடலிலே ஒரு புண் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். வேதனையாக இருந்தாலும் மருந்தைப் போடுகின்றோம். முதலில் மருந்தைப் போட்டாலும் சிறிது வேதனையாகத் தான் இருக்கும்.

புண் ஆற வேண்டும் என்று ஆசையுடன் அந்த மருந்தைப் போடுகின்றோம்.
1.ஆனால் மருந்தைப் போட்ட பின் கடுகடுப்பாகிவிட்டால் என்ன இப்படி வேதனை வருகின்றது…? என்று
2.மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமோ…?

அது போல் தான் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ விதமான வேதனைகள் தோற்றுவிக்கின்றது. அது எத்தனை தோன்றினாலும் அதை மாற்றி அமைத்த அருள் ஞானிகள் உணர்வுகளை அடிக்கடி எடுத்து நுகர்தல் வேண்டும். அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது.

நான் “என்ன தான் இப்பொழுது உங்களுக்குச் சக்தியை கொடுத்தாலும்…”
1.அதை நீங்கள் “எடுத்துக் கொள்ளக்கூடிய முறைகளில் தான் இருக்கிறதே தவிர…”
2.நான் கொடுத்தவுடனே நீங்கள் அதைப் பெறுவது என்பது அல்ல.
3.ஆனால் எவ்வளவு பெரிய சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்.

ஆனால் அந்தச் சக்தியைப் பற்றி… அதன் வலிமையைப் பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? ஜீபூம்பா வேலை எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

ஏனென்றால் ஆரம்பத்தில் நான் கொடுத்த நிலைகள் இப்படித்தான் ஆகிவிட்டது.
1.எனக்கே சக்தி இருக்கின்றது… சாமியினுடைய தயவு என்ன வேண்டி இருக்கின்றது…? என்று
2.பெரும்பகுதியானவர்கள் பிய்த்துக் கொண்டு சென்று விட்டார்கள்.

எல்லோருக்கும் இதைத் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக இந்த அற்புதங்களை எல்லாம் அவர்களைச் செய்யும்படி செயல்படுத்தினேன்… அது உலகுக்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…! என்று நினைத்தேன்.

கடைசியில் எல்லோரும் ஆசையை வளர்க்கும் நிலையாகவே சென்று விட்டது. ஆக மொத்தம்…
1.ஒருவருக்குப் புரியக்கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அதை அடுத்தவர்கள் புரிந்துவிடக் கூடாது என்று மடக்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஆரம்பத்தில் பவானியில் இப்படித்தான் ஒரு அம்மாவிற்குக் காட்சிகளை எல்லாம் காண்பித்தேன். பெற வேண்டும் என்ற ஆசை அந்த அம்மாவிடம் இருந்தது.

அந்த அம்மா மூலமாகவே மற்றொருவருக்கு நோய்களைப் போக்கும்படிச் செயல்படுத்தியது. அங்கு ஆசையை ஏற்படுத்தியது. ஆசை ஏற்பட்ட பின் அதன் வழி தியானத்திற்கு வருகின்றது.

தோஷங்களை எப்படி நீக்குவது…? என்று தான் ஆரம்பத்தில் சொல்லிக் கொடுத்தது. அடுத்து என்னைக் கேட்காமலே பல வேலைகளைச் செய்யத் தொடங்குகிறது.
ஆனால் கடைசியில் தன்னிச்சையாக அதைச் செயல்படுத்திய பின் அணிந்திருக்கும் சேலை எல்லாம் ஓட்டை ஓட்டையாக விழுந்து விட்டது… உடலில் காயமாகவில்லை.

அதற்குப் பின் அந்த அம்மாவிடம் சொன்னேன். ஆரம்பத்தில் உனக்கு எல்லாம் தெரிய வைத்தேன். அதை வைத்துத் தோஷங்களை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாய்.
1.ஆனால் அது எப்படி உன் வழியில் திரும்ப வருகின்றது பார்…
2.அதிலிருந்தெல்லாம் காக்கக்கூடிய குருவினுடைய சக்தி உனக்கு வேண்டும் அல்லவா என்று தெளிவாக்கினேன்.

உதாரணமாக… ஒருவருடைய நோயைப் பற்றிக் கேட்டு விசாரிக்கின்றோம். நமக்குள் பதிவாகி விட்டால் நம்மையும் அந்த நோயின் உணர்வு இயக்குகின்றது.

அதே போன்று
1.யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்மையாக நீங்கள் கேட்டுப் பதிவாக்கிய பின் அதைப் பெறும் தகுதி உங்களுக்கு தகுதி வருகிறது.
2.அந்த தகுதி உங்களுக்கு வரவேண்டும் என்பதற்குத் தான் உபதேசிப்பது.

எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அது எனக்குள் மகிழ்ச்சி வளர்கின்றது. அதே போன்று நீங்களும் செய்தீர்கள் என்றால் அந்த மகிழ்ச்சி உங்களுக்கும் தோன்றும்.

கடும் தவமிருந்த அந்த மகா ஞானிகளுடைய ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற வேண்டும்… பேரின்பத்தைப் பெற வேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்கின்றேன். அதை நீங்கள் எளிதில் பெற முடியும்.

1.ஒன்று பதிவு
2.மீண்டும் நினைவு…!
3.அந்த நினைவு கொண்டு நீங்கள் அதை வளர்க்க முடியும்.
4.ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றேன்… அதை நீங்கள் வளர்க்க வேண்டும்.

ஆக வாழ்க்கையில் எது வந்தாலும் அதை நான் சீர்படுத்துவேன் என்று வலுப் பெறுங்கள்… அதைச் செம்மைப்படுத்த முடியும். ஆசை ஒரு பக்கம் எண்ணம் ஒரு பக்கமாக சென்று கொண்டிருந்தால் முழுமை பெறுவது கஷ்டம்.

ஆகவே கொடுத்த ஞான வித்தை வளர்க்கும் நிலைக்கு… அந்த வளர்ச்சிக்கு நீங்கள் கொண்டு வர வேண்டும். இருளைப் போக்கும் அருள் சக்தியைப் பெருக்க வேண்டும்.
1.அந்த அருள் வழியிலேயே வாழ வேண்டும் என்று
2.நாம் என்றைக்குச் செயல்படுத்துகின்றோமோ… அதை நிச்சயம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் சக்திகள் (துகள்கள்) சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதினால் “மின்னலாக” மாறுகின்றது.

அந்த மின்னல் புவியின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது ஒரு மரத்தில் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம். எந்த நட்சத்திரமோ அதனைச் சேர்ந்த இனமாக அந்த மரம் இருந்தால் விழுந்தால் இந்த மரத்தை அப்படியே பொசுக்கிவிடும். ஆனால் பக்கத்தில் இருக்கும் மரத்தை (வேறு இனம்) ஒன்றும் செய்யாது.

ஏனென்றால் தன் இனத்தை எடுத்துப் பூமிக்குள் ஊடுருவுகின்றது. அது பூமிக்குள் சென்ற பின் வெப்பங்கள் அதிகமாகி அது கொதிகலனாகிறது.

நாளடைவில் சேமித்துச் சேமித்து உஷ்ணம் அதிகமான பின் நிலநடுக்கமாகி ஆவித் தன்மை (GAS) உண்டாகி அந்த வாயுக்கள் அனைத்தும் அப்படியே வெடிக்கின்றது.

வெடித்த பகுதி அப்படியே கீழே இறங்குகிறது. அந்தப் பகுதியில் மட்டும் தான் நிலநடுக்கம் வருகின்றது. உள்ளே சென்ற பின் அடங்கி விடுகின்றது.

ஆனால் நட்சத்திரத்தின் மின்னணுக்களின் நிலைகள் அதாவது மின்னல் கடலில் படும் பொழுது என்ன ஆகின்றது…?
1.அது உப்பு நீர்…!
2.மின்னல் பூமிக்குள் ஊடுருவாதபடி கடலில் பட்டபின் மணலாக மாறுகின்றது
3.நட்சத்திரங்களின் உணர்வின் சக்தி பட்ட பின் அது யுரேனியமாக மாறுகின்றது.

எந்தெந்தப் பகுதி எந்தெந்த நட்சத்திரங்களின் சக்திகள் படர்கின்றதோ அதனின் வலுவிற்குத் தகுந்த மாதிரி யுரேனியங்கள் எத்தனையோ விதமான நிலைகள் உருவாகின்றது. விஞ்ஞானத்தில் அதற்குப் பல பெயர்களை வைத்து அழைக்கின்றார்கள்.

அப்படி மாறியதை விஞ்ஞானி பிரித்து எடுத்து என்ன செய்கின்றான்…? அணுவைப் பிளக்கின்றான். அந்தக் கதிரியக்கப் பொறிகளை அடக்குகின்றான்.
1.கடல் நீரில் உள்ள ஹைட்ரஜனின் துணை கொண்டு
2.அதனின் அழுத்தத்தைக் கொண்டு வெடிக்காதபடி பாதுகாக்கின்றான்.

ஹைட்ரஜன் என்று இருந்தாலும் அதனின் அடர்த்தியின் தன்மைகள் ஒளிக் கதிர்களைச் சேர்த்து மீண்டும் அந்த ஹைட்ரஜனை வெடிக்கச் செய்வார்கள்.

ஏனென்றால் சனிக்கோளிலிருந்து வரக்கூடிய நிலைகள் ஒவ்வொரு அணுக்களிலும் (எல்லாவற்றிலும்) கலந்திருக்கும். அதே சனிக் கோளிலிருந்து தான் வடிக்கப்பட்டுக் கடலாக (நீராக) மாறுகின்றது.

இந்த உணர்வின் தன்மை கொண்டு ஹைட்ரஜன் வரப்படும் பொழுது இதனின் நிலைகள் வான்வீதியில் வெடித்த பின் தன் இனத்தின் தன்மை ஜீவ சக்தியை இழக்கச் செய்கிறது.

இங்கே வரும் மற்ற தாவர இனச் சக்திகளுக்குச் செல்வதும் அதற்குள் இருக்கும் கதிரியக்கப் பொறிகளும் வெகு தொலைவில் பரவப்பட்டு அந்த ஜீவ சக்தியையே எடுக்கச் செய்வது அந்த ஹைட்ரஜனின் வேலைகள். விஞ்ஞான அறிவால் இதை எல்லாம் கண்டு கொண்டுள்ளார்கள்.
1.நான் (ஞானகுரு) மூன்றாம் வகுப்பு முழுமையாகப் படிக்காதவன் இதைச் சொல்கிறேன்.
2.இதை நீங்களும் பார்க்க முடியும்… தன்னம்பிக்கை வேண்டும்.

இந்த இயற்கையின் உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டர் மூலமாக மனிதன் (விஞ்ஞானி) தனக்குள் கண்டுணர்ந்து பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உள்ள அதிர்வின் ஒலிகளைக் கண்டு அதனின் இயக்கப் பொறிகளைப் படமாக வரைகின்றான் – அந்த உருவத்தையே…!

1.ஏனென்றால் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற உணர்வுகள் பாயப்படும் பொழுது
2.உணர்வுகள் எப்படி இயங்குகிறது..? என்ற நிலையைத் தெளிவாகக் காணுகின்றான் விஞ்ஞானி.

அதைப் போல் தான் அன்று மெய் ஞானியான அகஸ்தியன் உணர்வின் இயக்கத்தின் தன்மையை அணுவின் ஆற்றலைப் பிளந்து அதனின் தூண்டுதலைப் பார்த்தான்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அது எப்படி உருவாகிறது…? என்ற நிலையை அவனால் கண்டுணர்ந்தது தான் வான இயல் புவியியல் உயிரியல் எல்லாமே…!

1.அவனுக்குப் பின் வான்மீகி கண்டான்.. பின் வியாசகன் கண்டான்.
2.அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட நிலைகளை அந்த உண்மையின் உண்ர்வை எடுத்து அவர்கள் வளர்த்துக் கொண்டனர்.
3.இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துத் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வுகளைத் தான்
4.இப்பொழுது உங்களுக்குள் சிறுகச் சிறுக ஊட்டிக் கொண்டு வருகின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உருவாக முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்

 

ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அந்த வேதனையான உணர்வு தனக்குள் புகாது தடுத்தல் வேண்டும். தடுப்பதற்கு என்ன செய்வது…?

1.தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம்.
2.அதை நுகர்ந்தால் உயிரிலே பட்டு இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
3.ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது
4.அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டுத் தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது… தீமை வராதபடி தடுக்கும் சக்தி பெறுகின்றது.

மற்றவர்கள் துயரப்படுவதை நாம் பாசத்தால் பார்க்கப்படும் பொழுது கண்ணின் கரு விழி அவர்களைக் கவர்ந்து படமாக்குகின்றது. பதிவான பின் கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அந்த உடலிலிருந்து வரக்கூடிய உணர்வினை உயிரிலே மோதச் செய்கிறது. அப்போது நாம் வேதனையை அறிகின்றோம்.

அதனால் தான் கண்களை… அதாவது “கண்ணனைத் திருடன்…” என்று சொல்வது. எதை எடுத்தாலும் அவன் திருடிக் கொள்வான்.

ஒருவர் நோயால் அவதிப்படுகிறார் என்று வரும் பொழுது கண்ணிலே பதிவாக்கிய பின் அந்த உணர்வின் தன்மை தனக்குள் வடிக்கப்பட்டு உயிருடன் மோதப்படும் பொழுது அந்த வலிமை நம் உடலுக்குள் சென்று விடுகின்றது.

அவர் வேதனைப்படுகிறார் என்று தெரிந்து கொள்கின்றோம். ஆறாவது அறிவு கார்த்திகேயா…! தனக்குள் அது தீமையை விளைவிக்கும் என்று தெரிந்து கொண்டபின்
1.தீமையை நீக்கும் சக்தியை… துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் ஆறாவது அறிவால் எடுத்து அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2.அப்போது உள்ளே செல்லாதபடி அதைத் தடைப்படுத்துகின்றது.

கண்ணின் நினைவுகளை உயிருடன் ஒன்றச் செய்யப்படும் பொழுது
1.கண்களிலும் காந்தம் உண்டு… உயிரிலும் காந்தம் உண்டு…! கவரும் சக்தி கொண்டதுதான்.
2.கண்ணின் நினைவை உயிரிலே மாற்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.உயிருடன் உராயப்படும்போது இந்த உணர்வுகள் உள்முகமாகச் செல்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தின் சக்திகள் உள்ளே சென்று அது அழுத்தமாகி
5.வெளியிலிருந்து வரக்கூடிய தீமை உள்ளே போகாதபடி அந்தத் தீமையைத் தள்ளி விடுகின்றது.

உடலில் உள்ள அணுக்களைத் தனித்தன்மை கொண்டு “இங்கே அடைத்து வைத்த பின்…” தீமையை ஈர்க்கும் சக்தி குறைகின்றது. பின் அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

இப்படித் தள்ளிவிட்டால் நம் ஆன்மாவிலிருந்து “அதனுடைய வேகமான இயக்கத்தைத் தடைப்படுத்துகின்றது…!”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த வலிமையை நாம் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

வலிமையான பின்… யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்… அங்கே உடல் நோய் நீங்க வேண்டும் என்று இப்படி நாம் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

தீமை என்று அறிந்து கொண்ட பின் இப்படி மாற்றி… தனக்குள் அதை உருவாக்கி உயர்ந்த உணர்வின் சொல்லாக நாம் வெளிப்படுத்த வேண்டும்.

1.அதைத்தான் ராமனின் பக்தன் ஆஞ்சநேயன் என்று சொல்வது.
2.இந்த உணர்வுகள் வாயுவாகச் சென்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் கழிவாகப் பிரித்து விட்டு நல்லதை…
1.நறுமணம் கொண்ட உணர்வாகவும்
2.நறுமணத்தை அறியும் அறிவாகவும்
3.நறுமணத்தை நுகரும் தன்மையாகவும்
4.நறுமணத்தின் உணர்வு கொண்டு நற்செயலைச் செயல்படுத்தும் உணர்வாகவும் உடல் மாற்றுகின்றது.
5.உடலின் மணங்கள் இவ்வாறு இயக்குகின்றது

ஆனால் மற்ற உயிரினங்கள் விஷத்தின் தன்மையைத் தனக்குள் சேர்த்துக் கொண்டு தன் உடலில் வலிமை பெறுகின்றது நல்ல உணர்வின் தன்மைகளை நஞ்சாக (கழிவாக) மாற்றுகின்றது.

உடல் வலிமை கொண்டு சிந்திக்கும் செயல் இழந்து ஒன்றோடு ஒன்று போர் முறை கொண்டு அது மற்றொன்றைத் தாக்கி மற்றவைகளின் உணவைப் பரிமாறிக் கொள்கின்றது.
1.இது மிருக உணர்வுகளின் இயக்கங்கள்.
2.ஆக நஞ்சின் வலிமை கொண்டு வரும் பொழுது சிந்திக்கும் தன்மை அவைகளுக்கு இல்லை.

ஆனால் மனிதனோ சிந்தித்துச் செயல்படும் தன்மை பெற்றவன். அந்த நஞ்சினை அடக்கும் உணர்வு கொள்ளும் பொழுது
1.அண்டத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் உணர்வின் தன்மையையும் எட்டிப் பிடித்து
2.அகண்ட அண்டத்தில் அந்த அருள் ஒளியின் சுடராக அறியும் வல்லமை பெற்றது “மனிதனின் ஆறாவது அறிவு…”

அகண்ட அண்டத்தின் உணர்வுகளை நம் பிரபஞ்சம் கவர்ந்து சூரியன் ஒளிச் சுடராக மாற்றுகிறது. அதைப் போல
1.நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரம் பெறும் அறிவின் தன்மையைத்தான் கார்த்திகேயா என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
3.கார்த்தி என்றால் வெளிச்சம்.

அகண்ட அண்டத்தையும் அறியும் தன்மையும்… அண்டத்தில் உருவான நம் பிண்டத்திற்கு (உடலுக்கு) உண்டு. அகண்ட அண்டத்தின் ஆற்றலை நமக்குள் பெறும் தகுதியும் உண்டு.

ஆகவே எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதை வென்றிடும் உணர்வு பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து என்றுமே நமக்குள் பேரின்பம் என்ற நிலையை உருவாக்கிடல் வேண்டும்.

அத்தகைய அருள் ஞானத்தை கணவன் மனைவி இருவருமே பெற்றுப் பழக வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் இரு மனமும் ஒன்றாகி இரண்டறக் கலந்து உணர்வின் ஒளியாக மாற்ற வேண்டும்.

கணவனும் மனைவியும் அருள் ஞான சக்தி பெற்று… நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… சாவித்திரியைப் போன்று இரு உயிரும் ஒன்றி… வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெற வேண்டும். உலக ஞானம் பெற்று இந்த உலகைக் காத்திட வேண்டும்.

உலகில் தான் நாம் வாழ்கின்றோம். நம் உடலுக்குள் உலக உணர்வுகள் அனைத்தும் உண்டு. ஆகவே அந்த உலக உணர்வைப் பகைமையற்ற நிலையாக்கிப் நம்மிடம் பகைமை வளராது தடுக்க வேண்டும்.

ஒளியின் சுடரான அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்தால்
1.உலக ஞானம் பெறலாம்… பகைமைகளை அகற்றிடலாம்.
2.அருள் ஒளியின் சுடராகப் பேரருள் வாழ்க்கை வாழ்ந்து
3.மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று
4.நம் பேச்சும் மூச்சும் பிறரை மகிழச் செய்யும் உணர்வாக வளரும்.
5.இந்த உடலுக்குப் பின் அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத வாழ்க்கை வாழலாம்.

வியாழன் கோளுக்குண்டான சிறப்பு

 

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாகி ஒளிக் கற்றைகளாக வரும் பொழுது வியாழன் கோள் அதைக் கவர்கின்றது.

சூரியன் எப்படி 27 நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்டதோ அதே போல…
1.வியாழன் கோளும் தனக்குள் அந்த உணர்வின் தன்மையை எடுத்து எடுத்து எடுத்து வளர்ச்சி அதிகமாகி
2.தன் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் உபகோள்களை வளர்த்துக் கொள்கின்றது. வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு.
3.அதை வைத்து 27 நட்சத்திரங்களின் சக்திகளை ஒன்றாகச் சமைத்து ஆவியாக மாற்றி உறைபனியாக தனக்குள் மாற்றுகின்றது.

அது கவர்ந்து கொண்ட உணர்வுகள் வெளிவரப்படும் பொழுது…
1.வியாழனின் சுழற்சி வேகம் அதிகமாக இருப்பதால் எல்லாவற்றையும் தனக்குள் இணைத்து
2.புது விதமான அணுக்களாக… “இணைத்துக் கொள்ளும் பாலமாக…” அமைகின்றது.

நமது உயிர் உடலுக்குள் இயங்கிக் கொண்டிருந்தாலும் எந்த உணர்வின் தன்மை நுகர்கின்றோமோ… (உதாரணமாக) வேதனை என்று வந்தால் அந்த உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது… அது வலுவானால் அதன் வழி இங்கே வேதனையின் இயக்கமாக மாற்றுகின்றது.

ஆகவே… இந்த உடலான கோளுக்கு… “உயிர்” குருவாக இருக்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் பிரபஞ்சத்திற்குச் சூரியன் இயக்கச் சக்தியாக ஆனாலும் வியாழன் கோள் இந்தப் பிரபஞ்சத்திற்கு குருவாக இருக்கின்றது. அதனால் தான் வியாழனை “குரு…” என்று அழைப்பார்கள்.

வரும் சக்திகளைத் தனக்குள் இணைக்கப்பட்டு மோதப்படும் பொழுது இரண்டும் இணைந்து புது விதமான அணுக்களாக மாறுகின்றது. இதற்குள் ஊடுருவும் மின்னலின் கதிர்கள் ஆண் பெண் என்ற நிலையில் உருவாக்கப்படும் பொழுது அத்தகைய அணுக்கள் வளர்ச்சி அடைகின்றது.

வளர்ச்சியடைந்து செல்வதைத் தான் சூரியன் கவரும் தன்மை வருகின்றது. கவரும் பாதையில் மற்ற கோள்கள் கவர்ந்து தனக்குள் அதை எடுத்துக் கொள்கிறது.

27 நட்சத்திரத்தின் சக்தியை வியாழன் தனக்குள் எடுத்துத் தனது சுழற்சி வேகத்தில் வெப்பத்தின் தணல் கூடி ஆவியாக மாற்றி மேல் பகுதியில் பாறையாக உறையும் தன்மை வருகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஐஸ் பெட்டியாகவும் (FRIDGE) உருவாக்குகின்றோம் அதே மின்சாரத்தை உபயோகித்து சூடாகவும் (HEATER) உருவாக்கிக் கொள்கின்றோம் அல்லவா…!

இதைப் போன்று தான் வியாழன் கோள்…
1.பல விதமான உணர்வின் தன்மை கொண்டு அமைதிப்படுத்தி
2.போர்முறை இல்லாதபடி அந்த உணர்வின் தன்மை வேக வைத்து
3.அமைதித் தன்மையாக எதிர்ப்பு இல்லாத நிலையாக உருவாக்குகின்றது.

27 நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றது இது ஜாதகங்களில் எல்லாம் வரும் ஆனால் இந்த உண்மை எதிலிருந்து வருகிறது…? என்று தெரியாது.

கோள்களைப் பிரித்து எழுதிக் கொள்ள முடியும். சூரியனுக்கு நேராக வரும் பொழுது ஒரு கோளின் தன்மை இணைந்து சுழல் வட்டத்தில் வரும் பொழுது அதைத் தான் தனித்தனியாகப் பிரித்துக் காட்ட முடியும்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளைச் சொல்ல முடியாது…!

இவர்களுக்குகந்த நிலையில் மனிதனுக்கு ஜாதகக் குறிப்புகளை… “மதத்திற்குத் தக்கவாறு குறித்து…” இந்த நேரத்தில் இதைச் செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது என்று சொல்லி… ஆண்டவன் தான் இதை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் என்பார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் அவரவர்களுக்குத் தக்கவாறு ஜாதகத்தை எடுத்துச் சொல்லப்படும் போது
1.எது ஆழமாகப் பதிவாகிறதோ அந்தப் பதிவு தான் மனிதனை இயக்குகிறது.
2.ஆக… கோள்களின் இயக்கத்தில் மனிதன் இல்லை.

கோள்கள் இயக்கத்தால் காற்றலைகள் வரப்படும் பொழுது அது தாவர இனங்களுக்கு அந்தச் சக்திகள் தேவை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பூமிக்குள்ளும் வெளியிலும் அணுகுண்டை வெடித்ததால் வெளிப்பட்ட கதிர்வீச்சுகள் வான்வீதியிலே சிதறப்பட்டு நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்களில் இணைக்கப்பட்டு சூரியனுக்குள்ளும் சென்று விட்டது.

அணுகுண்டை வெடித்த பின் கதிரியக்கங்கள் பரவி எல்லாவற்றையும் புகை மண்டலங்களாக மாற்றி அதன் இனத்தைப் பிரித்து விடுகின்றது. அந்தக் கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாக் கோள்களும் கவர்ந்து வைத்துள்ளது.

1.எல்லாக் கோள்களிலும் கலந்த அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது
2.சூரியனிலே இது மோதலானால் எலெக்ட்ரிக் உற்பத்தி செய்வதை இரு மடங்காக உருவாக்கிவிடும்.
(3.மின்சாரம் வரும் வயர்களை ஒன்றாக இணைத்தால் மின் ஆற்றல் அதிகமாகி எல்லாவற்றையும் கருக்குவது போன்று சூரியனிலே உண்டாகும்)

ஆக இரு மடங்காக அந்த எலெக்ட்ரிக்கின் தன்மை உருவாக்கப்படும் பொழுது அதனின் விளைவுகள் எப்படி இருக்கும்…?

சாதாரண நிலைகளில் கம்ப்யூட்டரோ மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களோ இயக்கப்படும் பொழுது அதில் உள்ள எலெக்ட்ரிக் ஒரு சம நிலையில் இருக்கின்றது.

நம் உயிரின் துடிப்பும் மின் இயக்கம் கொண்டது. மின் ஆற்றல் கொண்டு தான் இயக்கி உடலை உருவாக்குகின்றது. அந்த உணர்வுக்கொப்பதான் உணர்ச்சியின் வேகத் துடிப்பும்… மற்ற நம் உடலை இயக்குவதும் எல்லாமே…!

ஆனால் அங்கே சூரியனுக்குள் மோதல் ஏற்பட்டு இரு மடங்கு காந்தப் புலன் அதிகமாக்கப்படும் பொழுது
1.நம் உயிரின் துடிப்பும் அதிகமாகும்
2.உணர்வின் துடிப்பும் அதிமாகும்.
3.மற்ற உயிரினங்களின் உயிரின் துடிப்பும் அதிகமாக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகளும் மாறுகின்றது.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட இந்த நிலை “ஹைட்ரஜன்” அதிகமாக விரிவாக்கப்படும் பொழுது அதனுடைய உணர்வின் தன்மையை அது இழக்கச் செய்கின்றது.

ஆகவே இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் மாறப் போகின்றது…!

கம்ப்யூட்டரின் துணை கொண்டு தான் இராகெட்டுகளும் செயற்கைக் கோள்களும் மற்றவைகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய அந்தக் கம்ப்யூட்டர்களும் செயல் இழக்கப் போகின்றது,

அதே போல் விஷத் தன்மையை இயக்கும் இயந்திரங்களையும் இரசாயணங்களையும் அந்தக் கம்ப்யூட்டரின் துணை கொண்டு பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர்.

மின் உற்பத்தி இரு மடங்காக ஆக்கப்படும் பொழுது கம்ப்யூட்டர்கள் தாறுமாறாக இயங்கிப் பாதுகாப்பு இழந்து அது அது வெடிக்கப் போகின்றது. காற்று மண்டலம் முழுவதுமே நச்சுத் தன்மையாகின்றது.
1.நம் சொத்தெல்லாம் நிலைக்குமா…?
2.ஆக மொத்தம் இந்த உடலே இருக்கப் போவதில்லை.

விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழும் மனிதனின் ரூபத்தை அழித்திடும் இந்தக் காலத்தில் தொழில்… அது… இது…! என்று இருந்தாலும் நமக்குள் எதைச் சேர்க்க வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தொழில் வளம் பெற வேண்டும் என்றாலும் அந்த அருள் ஞானம் தேவை. அந்த அருள் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்தால் நஞ்சின் தன்மையை நீக்கிவிடும்.

கடவுளின் அவதாரத்தில் எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நஞ்சினை நீக்கி விட்டு நல்ல உணர்வின் தன்மையை அது எடுத்ததோ அதைப் போல்
1.இந்தக் காற்று மண்டலமே நஞ்சாக மாறினாலும்
2.நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியையும்
3.அடிக்கடி எண்ணி எடுத்து உங்கள் உடலில் பெருக்கிக் கொண்டே வந்தால்
4.விஷத் தன்மைகள் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்கள் உங்களுக்குள் வரும்.

ஆகவே அனைவருமே ஏகோபித்த நிலைகளில் “துரித நிலைகள் கொண்டு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்துப் பெருக்கிக் கொள்ளுங்கள். அப்படிப் பெருக்கினால் உங்களை காத்துக் கொள்ளலாம்.

பாதுகாத்தாலும்… எந்த அருள் ஒளியை நமக்குள் வலுவாக்கிக் கொண்டோமோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவியில்லா நிலை அடையலாம்.

சூனிய மண்டலம் – சூனியக் காலம்

 

அண்ட சராசரங்களைக் கடவுள் எப்படி உருவாக்கினார்…? கடவுள் யார்…? என்ற இந்த உண்மைகளை எல்லாம் பல முறை சொல்லி உள்ளேன். எதன் வழி உலகம் உருவாகின்றது…? என்று வேத நூல்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதனை அறிந்து கொள்ளும் பொழுது
1.நாம் யார்…? எப்படி மனிதனானோம்…?
2.மனிதரான பின் உயிரின் உணர்வுகள் எப்படி ஒளியாகின்றது…? என்ற உண்மையையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒளியாகும் தன்மை பெற்றது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா. நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தினோம் என்றால்… நாம் அறிந்து கொள்ளும் உணர்வுகளில் அடுத்து இந்த உடலுக்குப் பின் உயிரைப் போன்றே உணர்வின் அணுக்கள் ஒன்றாகின்றது.

இவை அனைத்தும்… அகஸ்தியனால் கூறப்பட்டு அவனுக்குப் பின் வந்த வரிசைத் தொடரில் ஞானிகளால் வெளியிடப்பட்ட பல உண்மைகள் இந்த உலகெங்கிலும் பரவி உள்ளது.

அகண்ட அண்டம் என்பது சூனியம் நிலைகள் கொண்டது. இது சூனியக்காலம் என்று சொல்வார்கள். குண்டலினி யோகா ராஜ யோகம் செய்பவர்கள்
1.சூனியக் காலத்திற்குப் போகிறோம் என்பார்கள்.
2.சூனியக்காலம் என்பது இருண்ட உலகம்.
3.இருண்ட உலகில் தான் சிவன் இருக்கின்றார் என்று அவர்கள் உணர்வைச் செலுத்துகின்றார்கள்.

சூனியக் காலம் என்றால் என்ன…? என்பதைப் பற்றி அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளார்.

இப்பொழுது நாம் காணும் அனைத்து நிலைகளும் “சூனியத்திலிருந்து உருவானது…” அது இருண்ட நிலைகள் பெற்றது.
1.நாளடைவில் அது ஆவித்தன்மை அடைந்து அந்த ஆவித் தன்மை அடைவதற்கே முதலில் வெப்பம் என்ற நிலை வருகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் பொழுது அசையும் நிலை அதாவது இயக்கும் தன்மை வருகின்றது.
3.வெப்பத்தன்மை வருவதற்கே சூனியம் தான் காரணம்… சூனியம் உருவாவதற்கு விஷம் தான் காரணம்.

அகண்ட அண்டம் இருண்ட உலகமாக இருந்ததால் அதைச் சூனிய உலகம் என்று சொல்வார்கள். வேதங்களில் இதைத்தான் சூனிய உலகம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… அது விஷமாக மாறி
1.விஷம் அடர்த்தி அடையப் படும்பொழுது விஷமற்றதைத் தாக்கி மோதலாகி வெப்பம் உருவாகின்றது.
2.வெப்பம் என்ற நிலை வரும் போது… வெப்பமான பின் விரிந்து ஓடும் சக்தி பெறுகின்றது.
3.விரிந்து ஓடும் சக்தி வரும் பொழுது அதிலே ஈர்க்கும் காந்தமே வருகின்றது.

இதை உங்களிடம் பதிவு செய்கிறேன். பதிவு செய்ததை அடுத்து எண்ணி நீங்கள் தியானிக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் உங்கள் உணர்வுகள் எல்லாம் வான்வீதியில் அகண்ட காலத்திற்கு சூனியக் காலத்திற்குச் சென்று
2.சூனியம் எப்படி உருவானது…? என்பதை நீங்கள் அறிதல் வேண்டும்.

சூனியத்திலிருந்து எப்படி வெப்பமானது…? வெப்பத்திலிருந்து அணுக்கள் எப்படி சுக்கு நூறாகச் சிதறி ஓடுவதும் அதிலே ஈர்க்கும் காந்தம் எப்படி உருவானது என்ற நிலையை நீங்கள் அறியலாம்.

குருநாதர் எமக்குக் கொடுத்த உண்மையின் உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி அந்த நினைவினை நீங்கள் கூட்டிச் செல்லும் பொழுது இந்த முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

ஏனென்றால்
1.ஆதி… அந்த ஆரம்ப நிலையை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.
2.உலக இயக்கத்தின் உண்மைகளை நீங்கள் அறியும் சந்தர்ப்பம் வருகின்றது.
3.அதே சமயத்தில் அந்தச் சூனியம் எப்படி ஒளிமயமாகின்றது…? என்பதையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும்.

இயற்கையின் உண்மை நிலைகளை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

காரணம் வாழ்க்கையின் நிலைகளை மட்டும் தான் அடிக்கடி பேசுகின்றோம்.

சூனியத்தைப் பற்றிப் பேசினாலும் அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லை…! என்னமோ சாமி சொல்கின்றார்…! என்று சிலர் எண்ணத்தால் இதை மறுக்கின்றார்கள். மனத்தால் மறுத்து… சீக்கிரம் எதாவது சொன்னால் நாம் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் அந்தச் சக்தியைப் பெறலாம் என்று தான் மனதை ஓட்டுகின்றார்கள்.

ஆகவே… சூனியத்திலிருந்து தோன்றப்பட்டது தான் “இயற்கையின் சக்திகள் அனைத்துமே…” என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் நல்ல நிலையில் இருக்கின்றோம். நல்ல உணவைத்தான் உட்கொள்கின்றோம். ஆனாலும் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வை உற்றுப் பார்த்து அடிக்கடி அவன் உணர்வை எடுத்தால் அது விஷமான அணுக்களை நம் உடலுக்குள் உருவாக்கும் நிலை வந்து விடுகின்றது.

நமக்குள் இருக்கும் எலும்புகள் மேக்னட் (காந்த சக்தி கொண்டது). அதே சமயத்தில் எலும்புக்குள் இருப்பது ஊண். வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது
1.நம் கண்ணில் உள்ள கரு விழி
2.எலும்புக்குள் உள்ள ஊணில் முதலில் அதைப் பதிவாக்கி விடுகின்றது.

அந்த வேதனப்படும் உணர்வை நம் ஆன்மாவாக (நம்முடைய ஈர்ப்பு வட்டம்) மாற்றுகின்றது. அதிலிருந்து நாம் இழுத்துச் சுவாசித்த உடனே இந்த உணர்வை எலும்பில் ஒட்ட வைக்கின்றது.

வேதனை உணர்வு எங்கே எப்படி அணுவாக ஆனதோ நமக்குள் உருவாக்கி மனித உடலில் எலும்பை உருவாக்கியது அல்லவா… அதை அது சாப்பிடத் தொடங்கும். அதாவது அந்த அசைவத்தை அது சாப்பிடும்.

ஏனென்றால் அது வளரும் தன்மை வளர்ச்சி பெற்றது. எலும்பை உருவாக்கிய அணுக்கள் அது மடிகிறது. அப்பொழுது எலும்புகள் எல்லாம் வளர்ச்சி குன்றத் தொடங்கும். அதை டி.பி. என்று சொல்கிறோம்.

அதை மாற்ற மருத்துவத்தில் என்ன செய்கிறார்கள்…?
1.விஞ்ஞான அறிவு கொண்டு கிருமிப் போர் என்ற நிலையில் மருந்தை இஞ்செக்சன் (INJECTION) செய்கிறார்கள்.
2.எதிர்மறையான அணுக்களை உடலுக்குள் உருவாக்குகின்றார்கள்.
3.அந்த உருவை உருவாக்கப்படும் பொழுது அது டி.பி. அணுக்களை உணவாக உட்கொண்டாலும்
4.அதிகமாகச் சாப்பாடு கொடுத்து நல்ல அணுக்களை உருவாக்கி
5.டி.பி. அணுக்களைக் கொன்று டி,பி. நோயையும் இன்று சுலபத்தில் குணப்படுத்துகின்றார்கள்.

ஆனால் கேன்சர் நோய் வந்தது என்றால் அதை மாற்றுவது அவ்வளவு சுலபமானது அல்ல…! வேதனை… வேதனை… என்ற உணர்வு ஆன பின் நம் உடலில் விஷத் தன்மையான அணுக்களின் பெருக்கமாகின்றது.

இந்த விஷமான அணுக்களானால்
1.“மரத்தில் விழுதுகள் பாய்ச்சுவது போல்…” கேன்சரை உருவாக்கும் அந்த அணு
2.உடல் முழுவதும் அதனின் விழுதுகளைப் பாய்ச்சும்.
3.மற்ற நல்ல அணுக்களை இயக்கும் விஷத் தன்மைகளை எல்லாம் அது எடுத்துக் கொண்டு ஒரு பக்கம் குவியும்.
4.கேன்சர் அணுக்களைக் கொல்வதற்கு மருந்து கொடுத்தாலும் கூட நல்ல அணுக்களும் மடிந்திடும்.
5.ஆகவே கேன்சருக்கு மருந்து கொடுத்து அதைக் கொல்வது என்பது சாதாரணமாக முடியாது.

அதனால் தான் விஞ்ஞான அறிவில் என்ன செய்கிறார்கள்…? கேன்சர் உருவான அந்தப் பாகத்தில் எலெக்ட்ரிக் (மின்சாரத்தை) வைத்துக் கருக்குகின்றார்கள்.

கருக்கினாலும் கூட அது நொந்து போனால் அழுகிய உணர்வு கொண்ட அணுக்கள் டி.பி. போன்று உருவாகும். மீண்டும் நல்ல அணுக்களை உணவாக உட்கொள்ளும் நிலைகள் வரும். அந்தப் பாகம் அவஸ்தைப்பட்டது தான் மிச்சம்.

ஆக கேன்சர் நோயை நீக்க முடிகின்றதா…? என்றால் இல்லை.

ஆனால் அதை தியானத்தால் போக்க முடியும். எப்படி…?
1.மஞ்சள் விஷத் தன்மையை அடக்கக்கூடியது.
2.வேப்பிலையையும் மஞ்சளையும் இரண்டையும் சமமாக வைத்து அரைத்துத் தண்ணீர் போல் கரைத்துக் கொடுக்க வேண்டும்.

கேன்சர் என்று தெரிந்து விட்டாலே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் பெறவேண்டும் ஈஸ்வரா..! என்று ஒரு நாளைக்கு “ஐம்பது முறையாவது…” எண்ணி வலுவாகத் தியானிக்க வேண்டும்.

தியானித்த பின் மனைவியும் இதே உணர்வை எடுத்து
1.“என் கணவனுக்கு உடல் நலம் சரியாக வேண்டும்” என்று எண்ணத்தில்
2.அந்த மருந்தைக் (மஞ்சள் வேப்பிலை) கொடுத்தால் இந்தக் கேன்சர் நோயை நீக்க முடியும்.

உங்களுக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது. இந்த முறைப்படி தியானம் எடுத்துக் கொண்டவர்கள் உங்கள் எண்ணத்தினால் கேன்சர் நோயைப் போக்க முடியும்.

“எல்லோரும் உயர வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு நாம் வந்தால் தான் நாமும் உயர முடியும்

 

தும்கூர் அருகே ஒரு மலைக் காடு இருக்கின்றது… கரடி இருக்கின்றது. ஆரம்பத்தில் நான் உலக அனுபவம் பெறுவதற்காகச் சுற்றுப்பயணம் சுற்றிக் கொண்டு வந்த இடத்தை எல்லாம் காட்டி
1.இந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த உணர்வை நுகந்தால் நீங்களும் எப்படி உலகை அறிய முடியும்…? என்ற காட்சிகளைக் கொடுத்தேன்.

ஆரம்பத்தில் குரு வழியில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு (சத்தியத்தின் சக்தி நிலை) அதைக் காட்டித்தான் செயல்படுத்தியது. அதே போன்று
1.ஐவர் மலையில் பழைய காலக் குகைகள் எப்படி இருக்கின்றது…?
2.அங்கிருக்கக்கூடிய சில உண்மைகளையும் பிரார்த்தனை பண்ணித் தெரியும்படி செய்தேன்.
3.அந்த இடத்தில் மின்கதிர்கள் பாயப்படும் பொழுது அது எப்படி…? என்றும்
4.மின் ஒளிகள் எப்படியெல்லாம் அங்கே வருகின்றது…? என்றும்
5.அங்கே ஒளி வட்டங்களை எல்லாம் சுற்றும்படி செய்தேன்.

இத்தனை வேலைகளையும் செய்தேன். ஆரம்பத்தில் இதை எல்லாம் செய்து காட்டினாலும்… ஒன்றுக்கும் பயனில்லாது போய்விட்டது. இதெல்லாம் மனித உடல் இச்சைக்குத்தான் சென்றது.

பல அற்புதங்களைக் காட்டினாலும் உடல் ஆசை வந்து விடுகின்றது. “நான் தெரிந்து கொண்டேன்…!” என்ற நிலை வந்து விடுகின்றது,

அதை எல்லாம் விடுத்து விட்டு இப்பொழுது உங்களை அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்கின்றேன்.
1.சிறிது பேராவது நீங்கள் தயாராகி விட்டால்
2.கோடிக்கணக்கான மக்களை நல் வழியில் நீங்கள் வளர்க்க முடியும்.

அருள் உணர்வு கொண்டு நீங்கள் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஞாபகப்படுத்துகின்றேன். காரணம் குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம் இந்த உடலுக்குப் பின் நாம் எந்த நிலை அடையப் போகின்றோம்…? என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். அந்த நிலை அனைவரும் பெற வேண்டும்.

செல்வம் எவ்வளவு தேடி வைத்திருந்தாலும் அதைத் தட்டிப் பறிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது. கடைசியில் தேடிய சொத்தெல்லாம் போய்விட்டதே என்று வேதனையைத் தான் வளர்க்க முடியும்.

இதிலிருந்தெல்லாம் மீள வேண்டும்… பேரருளை எப்படியும் நாம் பெற வேண்டும். நீங்கள் அனைவரும் தயாராகி விட்டால் எனக்கு கொஞ்சம் சிரமம் குறைவாக இருக்கும். இல்லையென்றால் நான் இன்னும் சிரமம்தான் பட வேண்டி வரும்.

அந்தச் சிரமத்திலிருந்து நான் மீள்வதற்கு
1.ஒவ்வொருவரும் உங்கள் பார்வையில் சர்வ பிணிகளும் போக வேண்டும்
2.உங்கள் பேச்சு மூச்சும் பிறருக்கு நல்ல வழிகாட்டியாக அமைய வேண்டும்.
3.மற்றவர் குடும்பத்திலே சிக்கலை நீக்கக் கூடிய சக்தியாக வளர்ச்சிக்கு வர வேண்டும்.

மற்றவர்களால் முடியவில்லை என்கிற பொழுது… தியானம் செய்யக்கூடியவர்கள் செயல்படுத்தி உங்கள் பார்வையால் மூச்சால் எல்லா வகைகளிலும் மற்றவருக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்.

அந்த நிலையத்தான் நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்…!

இதில் “நான் பெரிது… நீ பெரிது…” என்ற நிலை இல்லாதபடி
1.எல்லோரையும் பெரியவராக்க வேண்டும் என்று உணர்வுக்கு வரவேண்டும்… அதன்படி நாமும் அந்த உயர் நிலை பெற முடியும்.
2.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் நாமும் உயர்கின்றோம்.

இதிலே சிறு குறை கூட வராதபடி குரு காட்டிய அருள் வழியில் நாம் வளர்ந்து காட்ட வேண்டும். அதைத்தான் நாம் செய்து கொண்டு வருகின்றோம்.

பல அற்புதங்களையும் நிகழ்ச்சிகளையும் காட்டத் தொடங்கினால் இந்த ஞானத்தையே கடைசியில் பேச முடியாதபடி அது தடையாகிவிடும்.

எமது அருள் உபதேசங்கள் ஒலி நாடாக்களில் வெளி வருகின்றது.
1.கூடுமான வரையிலும் ஒவ்வொருவரும் அதை எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
2.இந்த உணர்வின் ஞானம் உங்களுக்குள் வரட்டும்.
3.உணர்வின் தன்மை ஆழமாகப் பதிவாகும்… உங்களுக்குள் மெய் ஞானம் வளரும்.

காலங்கள் மிகக் குறுகியதாக இருக்கின்றது அதற்குள் நாம் அனைவரும் வளர்த்து தயாராக வேண்டும். அழியாச் செல்வமான ஒளிச் சரீரம் பெறும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துவது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யப்படும் போது பம்பாயில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். தாயின் முக்கியத்துவத்தைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது அவர் தாயாவது… கத்தரிக்காயாவது…? என் தாய் எனக்குத் துரோகம் செய்கிறது.. அது செய்கிறது… இது செய்கிறது…! என்று சொன்னார். இன்ஜினியரிங் படித்திருக்கின்றார். ஆனால் நான் சொல்வதை எதிர்த்து அப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

தன் மனைவியின் சொல்லை ஓங்கி வளர்த்துக் கொண்டார். அவருடைய அம்மா தன் மனைவிக்கு மிகவும் தொல்லை கொடுத்தது என்று சொன்னார். ஆகையினால் நான் சொல்வதை அவர் எடுத்துக் கொள்ளவில்லை.

பெரிய வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அன்றைக்கே (சுமார் 40-45) ஆண்டுகளுக்கு முன்) முப்பது ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவருடைய மனைவியும் குழந்தைகளும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அவரிடம் சொல்லி விட்டு நான் கல்கத்தா பக்கம் சென்றுவிட்டேன். அவருடைய சந்தர்ப்பம் ஒரு நாள் காட்டுக்குள் போய்க் கொண்டிருந்தார். தன் மனைவியையும் பிள்ளைகளையும் கூட அழைத்துச் சென்றிருந்தார்.

கேமரா வைத்து ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அதிலேயே கவனமாக இருந்து முன்னாடி பார்த்துக் கொண்டிருந்ததில் பின்னாடி யானை வந்ததைக் கவனிக்கவில்லை.

யானை அவரை “லபக்…” என்று தூக்கி விட்டது. தூக்கிய உடனே அதைப் பார்த்த அவருடைய குழந்தையும் அவர் மனைவியும் “அம்மா…….!” என்று சப்தம் போட்டார்கள்.

தன் மனைவியும் குழந்தையும் அம்மா…! என்று சப்தமிட்டதைக் கேட்டு இவரும் “அம்மா…” என்று சப்தம் போட்டிருக்கின்றார். அந்தச் சப்தங்களைக் கேட்டதும் யானை அவரை அப்படியே வைத்திருக்கிறது.

கொஞ்ச நேரம் வைத்திருந்துவிட்டு அப்படியே அவரைக் கீழே இறக்கிவிட்டுச் சென்று விட்டது. அவரை அடிக்கவில்லை. “தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…!” என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்,

இந்தச் சக்தியின் உண்மையின் நிலையை அவர் உணர்ந்த பிற்பாடு அவர் என்னைத் தேடி வந்தார். காசியில் நான் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது அவர் என்னைத் தேடி வந்து… என் தாய்க்குண்டான சக்தியை யானையிடமிருந்து தப்பிய அன்றைக்குத் தான் உணர்ந்தேன்… என்று சொன்னார்.
1.இதை எல்லாம் ஏன் சொல்கிறேன்…? என்றால்
2.இந்த மனித வாழ்க்கையில் “தாயை மறந்தால் மனிதன் இல்லை…!”

ஒரு நாய் நம்மைக் கடிக்க வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அம்மா……! என்று சப்தம் போடுங்கள். அப்படியே அந்த நாய் நிற்கும். உங்களைக் கடிக்காது.

ஆனால் அடி…! என்று சொன்னாலும் கடிக்கும்… முருகா…! என்றாலும் கடிக்கும். அப்பொழுது தாய்க்கு எவ்வளவு சக்தி இருக்கிறது…! என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் தாயை நாம் எத்தனை பேர் மதிக்கிறோம்…? தாயை மதிப்பது இல்லை.
1.அதே சமயத்தில் நம் பிள்ளையும் தாயை மதிப்பதில்லை தந்தையையும் மதிப்பதில்லை.
2.இப்படித்தான் நம் பிள்ளைகளையும் வளர்த்துள்ளோம்…!

நாம் சிறிய குழந்தையாக இருக்கும் பொழுது பல சேட்டை செய்கின்றோம். குறும்புத்தனம் எல்லாமே செய்கின்றோம். தாய் என்ன செய்கிறது..?

நம்மைத் வெளியிலே தூக்கி போட்டுவிடுகிறதா… இல்லையே…!” எதையோ சொல்லி அரவணைத்துப் பிள்ளை எத்தனை சேட்டை செய்தாலும் “இந்தாடா கண்ணு… அதைச் சாப்பிடுடா இதைச் சாப்பிடுடா… ஏன்டா இப்படி இருக்கிறாய்…? என்று தான் கெஞ்சிக் கேட்கும்.

ஆனால் வளர்ந்த பின் தாய் ஒரு சொல்லைச் சொன்னது என்றால் “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகிறாய்…!” என்று தாயைப் பேசுகிறவர்கள் தான் நாம் இருக்கிறோம். தாயை மறுக்கும் நிலையே வருகிறது.

ஒரு பித்துப் பிடித்த தாயாக இருந்தாலும் சரி… உன் குழந்தையை அடித்துவிட்டார்கள்..! என்று யாராவது சொல்லட்டும். பிள்ளை மேல் கவனம் இல்லை என்றாலும் “அடித்து விட்டார்கள்” என்றால் உடனே பதறி அழும்.

ஆனால் அதே பித்துப் பிடித்த தாயை இன்னொருவர் அடித்தார் என்றால் “கிரகம்…! அதற்கு அப்படித்தான் வேண்டும்…” என்று பிள்ளையின் உணர்வுகள் அந்த வழிக்குத்தான் செல்கின்றது. தாயை இணைக்கும் நிலை இல்லை.

1.தாயை இணைக்கும் நிலை வந்து
2.அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில் தாயை எந்த அளவிற்குப் போற்றித் துதிக்கின்றோமோ
3.அந்த உணர்வின் தன்மை என்றுமே நமக்கு உறுதுணையாக இருக்கும்

தாயின் உணர்வே நம் உடல். நாம் அம்மா…. என்று எண்ணி ஏங்கினால் நம்மை அந்தத் தாயின் உணர்வுகள் பாதுகாக்கும். ஒரு காரியம் நடக்கவில்லை என்றால்
1.“அம்மா…!” என்று சொல்லி அம்மாவின் அருளைப் பெறுங்கள்
2.மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்
3.உடனடியாக அது நடக்கும்… இதைச் செயல்படுத்திப் பழகுங்கள்

விநாயகரைக் காட்டும் பொழுது ஞானிகள் அதைத்தான் காட்டுகின்றார்கள். தன் தாய் தந்தையை நினைவுபடுத்தி அங்கே வணங்கும்படிச் செய்கின்றார்கள்…?
1.நீ இதை உனக்குள் வினையாக்க வேண்டும்
2.அருள் ஒளியைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்…! என்று தெளிவாக்குகின்றார்கள்.

உலகம் சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!

 

விஞ்ஞான உலகத்தால் வரக்கூடிய பேரழிவும்… மனிதன் ஆசையின் நிலைகள் கொண்டு வரும் பொழுது ஒன்றைக் காக்க என்று தீவிரவாதமும் மதத்திற்குள் மதம் தீவிரவாதமும்… இனத்திற்குள் இனம் தீவிரவாதம்… வீட்டிற்குள்ளேயே தீவிரவாதம்… தெருவிற்குள்ளும் தீவிரவாதம்… வளர்ந்து விட்டது.

என்னமோ பெரிய இவன் மாதிரிப் பேசுகின்றான் என்று இது போன்ற தீவிரவாத உணர்வுகள் எல்லோருக்குள்ளும் பெருகி வரப்படும் பொழுது
1.நல்லதைக் காப்பது யார்…? நல்லதை காக்கும் ஆள் இல்லை…!
2.ஆக… இந்த உலகமே சூனியத்திற்குப் போகும் நேரத்தில் தான் இது போன்ற சந்தர்ப்பங்களில் தான்… “மகான்கள் தோன்றுவார்கள்…!
3.நம் குருநாதர் கொடுத்த அருள் உணர்வு கொண்டு ஒவ்வொரு திசையிலும் மகான்களை நாம் தோற்றுவிக்க வேண்டும்.

ஒரு சமயம் நபிகள் நாயகம் தோன்றினார் அரக்க உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் என்று இயேசு கிறிஸ்து தோன்றினார்.

இங்கே தீமையின் நிலைகள் அதிகரிக்கப்படும் பொழுது அதை மாற்ற வியாசகர் வந்தார்… அதே போல் வான்மீகி மகரிஷி வந்தார். மகாத்மா காந்தி வந்தார். தீமையிலிருந்து விடுபட இராமலிங்க அடிகளும் தோன்றினார்.

இராமகிருஷ்ண பரமகம்சரும்… பக்தி மார்க்கங்களில் எத்தனை அதர்மங்கள் நடக்கின்றது…? அதிலிருந்து மக்கள் மீள வேண்டும்…! என்று அவர் உணர்த்திச் சென்றார்.

1.இப்படிப்பட்ட மகான்கள் தோன்றி வளர்ச்சி பெற்றாலும் அது நிலைத்திருக்கிறதா…?
2.அது தோன்றி உருப்பெற்ற இடங்களில் இன்று பார்த்தால் “நான் பெரியவன்… நீ பெரியவனா…?” என்று தான் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
3.இராமகிருஷ்ணருக்குச் சீடராக வந்த விவேகானந்தருடைய தத்துவங்களையும் மாற்றி விட்டார்கள்.

கடவுளைக் காட்டுகின்றாயா…? என்று விவேகானந்தர் கேட்கின்றார். கடவுளைக் காட்ட முடியாது… ஆனால் உணர முடியும் என்று இராமகிருஷ்ணர் உணர்த்துகின்றனர்.

உனக்குள் உள் நின்று இயக்கும் உணர்வு எதுவோ… எதை நீ நுகர்கின்றாயோ அந்த உணர்வின் இயக்கமாக உடல் இயங்குகின்றது.
1.உள் நின்று இயக்குவதே கடவுளாகின்றது.
2.எதன் உணர்வு வலுவோ அதுவே உன் உடலில் இருந்து இயக்குகின்றது என்று தெளிவாக்குகின்றார் இராமகிருஷ்ணர்.

இதைத்தான் ஒவ்வொரு மனிதனும் எப்படி இயக்க வேண்டும் என்று… ஒரு மனிதனை நல்லவனாக்க வேண்டும் என்றால் “அந்த நல்ல உணர்வை நுகரப்படும் போது என்னை நல்லதாக்குகின்றது…” ஒவ்வொரு மனிதனுடைய எண்ணங்களையும் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது அது எந்த வகையில் ஒன்று சேர்த்து இணைகின்றது என்று விவேகானந்தர் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.தாவர இனம் சைவம்.
2.நாம் உணவாக உண்பது அணுவாக ஆவது அசைவம்.
3.செடி இருந்த இடத்தில் இருந்து தன் சக்தியை எடுத்துக் கவர்வது சைவம்.
4.ஆனால் அந்தச் செடியின் சத்தை நுகர்ந்து அந்தச் செடி இருக்கும் பக்கம் நகர்ந்து சென்று அதை உணவாக எடுத்து செல்லும் உயிரினங்கள் அசைவம்
5.இருந்த இடத்தில் உணவாக உட்கொண்டால் சைவம்.
6.நகர்ந்து சென்று அதை உணவாக உட்கொண்டால் அசைவம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆனால் நம் உணவுக்காக மற்ற அசைவத்தைச் சாப்பிடுகிறோம். ஆட்டைச் சாப்பிடுகிறோம். ஆடு விஷத்தின் தன்மை கொண்டு உடலாக ஆனது.

அதை நாம் சாப்பிட்டு உடலில் சேர்ந்தால் என்ன செய்யும்…? என்று நினைக்கிறீர்கள்…! அந்த அணுக்கள் எல்லாம் நம் உடலாக உருவாகிறது. அப்போது ஆட்டுக் கறியையே தான் மீண்டும் கேட்கத் தோன்றும்.

அந்த ஆட்டுக் கறி மேல் ஞாபகம் அதிகமான பின் அதனின் விஷத் தன்மை நமக்குள் கூடி மனித உணர்வுகள் இங்கே குறைய ஆரம்பிக்கின்றது.
1.குறைந்த பின் சாகப் போகும் போது ஆட்டுக் கறி மீது தான் ஞாபகம் வரும்.
2.ஆக எதை விரும்பிச் சாப்பிட்டோமோ அந்த ஞாபகம் வரும்.

உயிர் பிரியச் சிரமப்படுகிறது என்றால் பெரியவர்கள் என்ன சொல்வார்கள்…? கறியை நிறையச் சாப்பிட்டிருக்கின்றார். இரண்டை வேக வைத்துக் கொடுங்கள். சீக்கிரமே உயிர் போகும்…! என்று சொல்வார்கள்.

அந்த நினைவுடன் உயிர் வெளியில் போனால் அப்புறம் நேராக ஆட்டின் உடலுக்குள் தான் போகும். அந்த உடலுக்குள் போய் நம்மை ஆடாகப் பிறக்கச் செய்யும்.

இன்றைக்கு மனிதனாக இருந்து ஆட்டை ருசித்துச் சாப்பிட்டால் நாளைக்கு ஆடாகி மே…மே…! என்று கத்த வேண்டியது தான்.

ஆனால் உங்களை நான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. சாப்பிட்டால் உயிர் உங்களை இப்படித் தான் மாற்றும். ஒன்றை விழுங்கி வருவது தான் அசைவம்.

1.ஆக மொத்தம் நமக்குள் சைவமாக இருக்கக்கூடியதை
2.நாம் உணவாக அணுவாக உருவாக்குதல் வேண்டும்.
3.சைவத்துக்கு போய்விடுவோமா… செடி கொடிக்குப் போவோம் என்று நினைக்காதீர்கள். அப்படிப் போக முடியாது.

சில சாமியார்கள் என்ன சொல்வார்கள். நான் வேக வைத்ததைச் சாப்பிட மாட்டேன். நான் செடிகளில் விளைந்ததையும் காய் கனிகளையும் பச்சையாகத்தான் சாப்பிடுகிறேன்.

இந்த நிலைகளில் நான் பரிசுத்தமாக இருக்கின்றேன்…! என்று பச்சையாகச் சாப்பிட்டால் என்ன செய்யும்…? அந்தச் செடி கொடியில் இருக்கின்ற மணமே (வாசனை) இவர்கள் உடலிலும் ஆன்மாவிலும் உயிரிலும் சேரும்.

அதில் உள்ள உணர்வின் தன்மை பெற்ற பின் இந்த உயிர் வெளியிலே சென்ற பின் அந்தச் செடி கொடிகளுக்குத் தான் செல்லும்.
1.நான் வேக வைத்ததைச் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால்
2.செடி கொடிகளுக்குள் சென்று புழுவாகவோ பூச்சியாகவோ தான் பிறக்க வேண்டும்.

மாமிசத்தை வேக வைத்து எடுத்தாலும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாகும் போது அசைவத்தை உணவாக உட்கொள்ளும். மீண்டும் மிருக இனங்களுக்குள் தான் செல்வோம்.

ஆகையால் இத்தகைய நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும். மனிதனான பின் வேக வைத்து மாற்றி அருள் ஒளியை நீங்கள் கூட்டிக் கொண்டால் வேகா நிலை பெறலாம்.

அருள் ஒளியின் உணர்வாகச் சுடராக நமக்குள் மாற்றப்படும் போது நாம் வேகா நிலை பெறுகின்றோம்.
1.அதாவது போகாப்புனல்
2.இன்னொரு சரீரத்திற்குள் போவதில்லை…!

கருவுற்ற காலத்தில்… சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வால் நடக்கும் சில விசித்திர நிகழ்வுகள்

 

உயிரினங்களில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையும் கர்ப்பமாக இருக்கும் உயிரினங்களில் மற்ற உயிரினம் துரத்தி வரப்படும் பொழுது அந்த உணர்வினை நுகரும் பொழுது
1.கருவுக்குள் இருக்கும் அந்தச் சிசுவுக்குள் இந்த உயிரினத்தின் உணர்வுகள் ஒட்டிய பின்
2.கருவிலேயே எப்படி எல்லாம் மாற்றமாகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.

குரங்கை எடுத்துக் கொண்டால் அதில் எத்தனையோ மாற்றங்கள் உண்டு, மற்ற மிருக இனங்கள் இதைத் துரத்தி வரும் நிலையில் உற்றுப் பார்க்கும் பொழுது கர்ப்ப நிலைகளில் அந்த உணர்வுகள் படப்பட்டுப் பரிணாம வளர்ச்சியிலும் அதனுடைய வளர்ச்சி தொடர்கள் எவ்வாறு வருகிறது…? என்று உருமாற்றங்கள் எப்படி ஆகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

மனிதர்களாக நாம் வாழுகின்றோம். கர்ப்பமாக இருக்கும் தாய் ஒரு ஊனமுற்ற குழந்தையை உற்றுக் கூர்மையாகப் பார்த்து அதனுடைய க்ஷேமத்தை விசாரித்து…
1.பரிவு கொண்டு அந்த குழந்தையைப் பற்றி அறியும் நிலையில் ஊனமுற்ற உணர்வினை நுகர்ந்து விட்டால்
2.தன் கருவில் இருக்கும் குழந்தையும் ஊனமான குழந்தையாக மாறும்.

இதைப் போலக் கருவிலே வளரும் உயிரினம் தன் தாய் கவரும் உணர்வுகள் கொண்டு எவ்வாறு விளைகிறது…? என்று கீதையிலே தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

அதாவது கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…!

கண்கள் மற்ற உணர்வினை நுகர்ந்து அந்தத் தாய்க்கு இந்த உணர்வைக் கொண்டு இயக்கினாலும் கருவில் வளரக்கூடிய சிசுவிற்கும் இந்த உணர்வுகள் பதிவாகி அந்த உணர்வு பதிவான பின்
1.கண்ணால் பதிந்த நிலைகள்… அந்த உணர்வின் இயக்கமாகத் தொடரப்படும் பொழுது
2.அந்த அறிவின் தன்மை அங்கே வருகிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்கு
3.வியாசகர் கண்ணின் இயக்க நிலைகளை அப்படித் தெளிவாகக் காட்டியுள்ளார்.

பல கோடிச் சரீரங்களில் உயிர் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த நிலைகளையும்… அதிலே வளர்ச்சி பெற்று வந்த மனித நிலைகளையும்… ஊனமுற்ற குழந்தைகள் அது எவ்வாறு உருவாகிறது…? என்ற நிலையையும் குருநாதர் காட்டுகின்றார்.

உதாரணமாக காட்டில் ஒரு புலி கர்ப்பமாக இருக்கின்றது. ஆனால் அடிபட்டு நோய்வாய்ப்பட்டு இருக்கின்றது. அதே சமயத்தில் தன் இரைக்காக ஒரு மானை அந்தப் புலி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் அடிபட்டு நகர முடியாத நிலையில் இருக்கிறது. ஆனால் கர்ப்பமாக இருக்கின்றது. தன் இரைக்காக எண்ணிப் பார்க்கின்றது.

அந்த மானையே எண்ணி எண்ணிக் கண்களால் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் அந்தப் புலியின் கருவிலே விளையத் தொடங்குகிறது.

அந்தப் புலிக்கும் மானுக்கும் உண்டான வித்தியாசங்கள் இருந்தாலும்…. அந்தப் புலி ஏக்கத்தால் மானையே எண்ணி ஏங்குகின்றது.
1.இந்த உணர்வின் சத்து கருவில் இருக்கக்கூடிய உயிரணுக்களில் இது இணைக்கப்பட்டு
2.அதற்குள் எவ்வாறு விளைகிறது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

இதை உங்களிடம் லேசாகச் சொல்கிறேன். ஆனால் என்னைக் குருநாதர் பட்டினியாக இருந்து அதைக் காணும்படி செய்தார். எந்தப் பக்கமும் நகர விடவில்லை.

உயிரினங்களில் தான் நுகர்ந்தறிந்த உணர்வுகள்… கண்ணால் பார்த்து உணர்வை நுகர்ந்த உயிர் தனக்குள் உணர்வாக அமையப் பெற்று அந்த உணர்வின் அறிவாக இயக்கப்பட்டு உடலுக்குள் உணர்வுகள் பதிந்த பின் “கருவில் வளரும் சிசுக்களுக்கு எவ்வாறு அது ஒட்டுண்ணி போன்று உணர்வுகள் இயக்கப்படுகிறது…?” என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இரைக்காகத் தேடினாலும் புலியின் உணர்வுக்குள் மானையே எண்ணி ஏங்குகிறது. ஏனென்றால் உடலில் அடிபட்டிருப்பதால் தன் இரையைப் பிடிக்க முடியவில்லை.

கண் கொண்டு மானையே பார்த்து ஏக்கத்தின் உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய புலிக் குட்டிக்குள் இது படப்பட்டு இந்த உணர்வுகள் அதனுடைய ரூபம் எப்படி மாறுகின்றது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

அந்தப் புலி குட்டி போடும் வரையிலும் இந்த இடத்தை விட்டு நகர விடவில்லை. அதனின் உணர்வும் வளர்ச்சியும் அறிவதற்காக அங்கேயே அமர்ந்து தியானிக்கும்படி செய்தார்.

ஜோசியம் பார்ப்பவர்கள் மற்றொருவர் உணர்வினை நுகர்ந்து “அவர்கள் என்னென்ன நினைத்தார்கள்…?” என்று சொல்கின்றார்கள் அல்லவா…!

இதைப் போலத் தான் அந்த உணர்வின் இயக்கமும் அதனின் அலைகள் எவ்வாறு தொடர்ந்திருக்கின்றது…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படி இந்த உணர்வின் அறிவை எனக்கு ஊட்டினார்.

அந்தக் கருவிலிருக்கக்கூடிய குட்டிக்கு மானின் உணர்வுகள் அதிகமாகப் பட்டபின்… மானின் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகள் இந்த புலி உடலுக்குள் எப்படி அடைகின்றது…?

அதைப் புலி சுவாசித்த பின் இரத்தத்தில் கலந்து வரும் பொழுது
1.கருவிலே விளையக்கூடிய சிசு புலியின் ரூபம் மாறி மானின் நிலைகள் எவ்வாறு இணைகின்றது…?
2.இரண்டும் கெட்டானாக அது விளைகின்றது… இதை நேரடியாகவே தெரியப்படுத்துகின்றார் குருநாதர்.

நீங்கள் பத்திரிகையில் பார்த்திருக்கலாம். உலகத்தில் சில இடங்களில் ஆட்டுத் தலையுடன் குழந்தை பிறந்தது. ஆனால் மனித உடல் இருந்தது… மனிதனின் தலையும் மிருக உடலும் இருந்தது என்றால்லாம் பார்த்திருப்பீர்கள்.

காரணம்… ஏக்க உணர்வு கொண்டு பிறிதொன்றை உற்றுப் பார்த்து நுகரப்படும் பொழுது கருவுக்குள் அப்படி எல்லாம் மாறி விளைகின்றது.

ஆகவே… விஞ்ஞான அறிவால் இன்று எத்தனையோ உண்மைகளை நாம் அறிகின்றோம். ஆனால் மெய் ஞானிகள் ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் கண்டுணர்ந்து புலனறிவாலேயே தனக்குள் விண்ணின் ஆற்றலைப் பருகி அவர்கள் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதை குருநாதர் காட்டினார்.
1.என் கண் புலனறிவிற்கு அந்த ஊட்டச்சத்தை ஊட்டி அந்தப் புலனின் நிலையைக் கொண்டு உற்றுப் பார்த்து
2.அதனின் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று அறியம்படிச் செய்தார்.

அந்த அனுபவத்தைத் தான் இப்பொழுது சொல்கின்றேன்.

நான் கல்வியறிவு அற்றவன். குருநாதர் உணர்வின் வலுப் பெற்று அந்த உணர்வின் துணையால் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை
1.நீங்கள் அனைவரும் இதை அறிந்து கொண்டால்
2.நமது சாஸ்திரம் எத்தகைய நிலைகள் மெய் உணர்வை நமக்கு உணர்த்தி உள்ளது…? என்று அறியலாம்.

மகாபாரதமோ இராமாயணமோ கந்த புராணமோ சிவபுராணமோ இவை அனைத்திலும்… அதிலே கொடுக்கப்பட்ட உண்மைகள் சாஸ்திரப்படி மெய்.

இந்த உண்மைகளை மனிதன் உணர்ந்தால் அந்த ஞானிகள் சென்ற பாதையில் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை பெறுவது திண்ணம். நாம் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதை குருநாதர் தெளிவாக்கினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“பிரதோஷம்…” என்பது
1.பிறருடைய உணர்வுகள் வராதபடி
2.பிறருடைய சங்கடங்கள் வராதபடி
3.பிறருடைய ஆவிகள் வராதபடி
4.பிறருடைய பற்று வராதபடி இருப்பது தான் பிரதோஷம்….!

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் ஏதாவது சாங்கியங்களைச் செய்தால் பிரதோஷம் நீங்கிவிடும் என்று செய்வார்கள். இதனால் பலன் ஏதும் இல்லை.

1.பிறருடைய உணர்வுகள் நமக்குச் சாராதபடி இருக்க வேண்டும் என்று சொன்னால்
2.”அவர்களுடைய உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பிரதோஷம் ஆக்குகின்றோம்…”

பிரதோஷம் அன்றைக்குப் பழங்கள் எல்லாம் வைத்துச் சாமி கும்பிட்டு அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து தோஷம் வராமல் தடுக்க வேண்டும் என்றால் இது முடியாது.

ஆக மொத்தம் பிறருடைய உணர்வுகளை நமக்குள் இயக்கவிடாது “பிறருடைய அந்தத் தோஷத்தைத் தடுக்க வேண்டும்…!” என்ற எண்ணமே வருவதில்லை. பிரதோஷம் என்றால் அன்றைக்கு மந்திரங்களைச் சொல்லி இன்னொரு தோஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

ஏனென்றால்
1.எந்த மந்திரத்தைச் சொல்லிப் பதிவு செய்து உள்ளீர்களோ
2.பிரதோஷம் அன்றைக்கு எவ்வளவு மந்திரத்தைக் காதில் கேட்டீர்களோ
3.இந்த உணர்வின் தன்மை இங்கே வந்தபின் கடைசியில் இறந்தபின்
4.அதே மந்திரத்தைச் சொன்னால் நம் ஆன்மாவை இன்னொருவர் கைவல்யம் செய்து கொள்வதற்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு நோயைப் போக்குவதற்காக என்று சொல்லி அந்த மந்திரத்தைப் பதிவு செய்து கொண்டு போனால் அதே உணர்வை எடுக்கும் போது
1.இறந்த பின் இந்த ஆன்மாவைக் கைவல்யம் செய்து கொண்டு
2.இன்னொரு உடலுக்குள் நோய் தீருவதற்காக
3.இந்த ஆவியை ஏவல் செய்வார்கள்… அதற்குத் தான் பயன்படும்.

மனிதன் உடலுக்குள் விளைவதை இத்தனை மந்திர ஜாலம் செய்து பல வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படி ஒரு மனிதனுக்குள் விளைந்தது தான் எத்தனையோ உணர்வுகள். அதைத்தான் கரையான் மந்திரம் என்பது.

கரையான் என்ன செய்கிறது…? கட்டைக்குள் கரையான் சென்ற பின் அதிலே அதன் மலம் பட்டபின் கட்டையே மண்ணாகப் போய்விடும். அந்த மாதிரி கட்டையைச் சீக்கிரம் நம்மால் கரைக்க முடியுமா..! என்றால் முடியாது.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் போது வேதங்களில் (அதர்வண) மூலத்தின் மூல நிலைகள் உண்டு.
1.இந்த உணர்வின் தன்மை இரண்டும் உராயப்படும் போது
2.இறந்தபின் அதைப் பிரித்து இன்னொரு மனிதனுக்குள் பாய்ச்சிச் செலுத்தியபின்
3.அந்த உடலுக்குள் இருக்க வேண்டும் என்றால் இந்த உணர்வைக் கரைத்துவிடும்.
4.பின் ஆவியுடன் (காற்றுடன்) கலக்கும்.

மீண்டும் அதற்குண்டான எதிர்மறையான நிலை ஆனபின் பொருளாக வந்துவிடும். ஒரு டப்பாவுக்குள் சிறு துவாரம் (ஊசி அளவு) வைத்தால் அதன் வழியாக அதற்குள் வந்துவிடும். மீண்டும் மாற்றினால் அது ஆவியின் நிலையாக மாறும்.

இது எல்லாம் மனிதனுக்குள் உருவான நிலைகள்…!

இதே போல பல உயிரினங்களும் உண்டு. மந்திரங்களை எடுத்து அந்த உயிரினங்களைக் கேட்க வைத்துப் பின் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தபின் அதை வைத்துப பல தீமைகளைச் செய்பவரும் உண்டு.

“ஒடியர்கள்…!” என்று இருக்கின்றார்கள். இந்த அசுர உணர்வு கொண்டு பறந்து போகும் காக்காயை அவர்களின் ஒடிய மொழியில் சொன்னால் அதனின் இறக்கை பிய்ந்து துண்டாக விழும்.
1.அந்த ஒலி அதிர்வுகள் (ஒடியன் மந்திரம் என்பது) அங்கே அவ்வாறு மாற்றும்
2.எப்படி ஒரு மின்னல் தாக்குகின்றதோ அதைப் போல உணர்வின் இயக்கங்கள் கொண்டு செய்வார்கள்… இது எல்லாம் உண்டு…!
3.செய்வினை தோஷம் என்பதெல்லாம் உண்மை தான்..!
4.ஒருவருக்கொருவர் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் செய்வினை தோஷங்கள் செய்திருப்பார்கள்.

அதிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால்… “அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலமாக எடுத்து…எடுத்து….எடுத்து….” இந்தத் தோஷங்கள் உங்களுக்கு வராதபடி காக்க முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் வலுவை உங்கள் ஆன்மாவில் பெருக்கி விட்டால்
2.எந்தத் தோஷங்களும் உங்களைத் தாக்காது
3,நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் தீமையை நீக்கும் சக்தியை நீங்களே பெறுகின்றீர்கள். நீங்கள் தீமையை நீக்கிப் பழகி விட்டால் அடுத்து என்ன செய்யலாம்…?

யாராவது சங்கடத்தில் வருகின்றார்கள் என்றால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நல்லதாகிப் போகும்.
2.“உங்கள் குடும்பம் நல்லாகும்…!” என்று நீங்கள் இதைச் சொன்னால்
3.உங்கள் சொல் அவர்களையும் நல்லதாக்கும்.

3,நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

லேசர் இயக்கம்

 

கண்ணின் நினைவுகளை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்…? வெகு தொலைவில் இருப்பான் எதிரி. அவனைக் கோபமாக நினைத்தவுடன் என்ன நடக்கின்றது…?

இந்தத் தீமையின் உணர்வுகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவன் செயலற்றவனாக ஆகின்றான், அவன் உணர்வு நமக்குள் இருப்பதால் கண் வழி நம் உணர்வைச் செலுத்தும் பொழுது இந்த லேசர் இயக்க ஒளிகள் அங்கே தாக்குகின்றது.

அன்று ஈராக்கில் யுத்த நேரத்தில் பாதாளத்தில் அவர்கள் மறைந்திருந்து பல வேலைகளைச் செய்தார்கள். ஆனாலும் அதைக் கண்டு கொள்வதற்காக லேசரைச் செயல்படுத்தினார்கள்.

மின் கதிர்களால் இயக்கப்பட்டது தான் சில நிலைகள். கதிரியக்கப் பொறிகளை அந்த இடத்திலே பாய்ச்சப்படும் பொழுது அங்கே உள்ளே இருக்கக்கூடிய நிலைகளைப் படங்களாக எடுத்துக் காட்டுகின்றது.
1.எக்ஸ்ரே எப்படி உடலுக்குள் ஊடுருவி படமாகக் காட்டுகின்றதோ இதே போன்று
2.லேசர் இயக்கங்களை பயன்படுத்தி அங்கே ஈராக்கில் மறைந்திருந்த நிலைகளைக் காணுகின்றார்கள்.

குண்டுகளைப் போட்டாலும் எதிர்த்துத் தாக்கும் தன்மையும் அதைத் தாங்கக்கூடிய கான்கிரீட்டுகளாகவும் அவர்கள் போட்டு வைத்திருந்தார்கள்.

எதிர்நிலை எக்கோ… பதிவு செய்யக்கூடிய நிலை இருந்தாலும் அதையும் அறிந்து லேசர் மூலம் வலுவாக இயக்குகின்றார்கள். அந்த லேசரைப் பாய்ச்சி அதன் துணை கொண்டு ஊடுருவி… கதிரியக்கங்களை உள்ளே பாய்ச்சி… அந்த கம்பிகளை உருவாக்கும் சக்தி கொண்டு வருகின்றான்.
1.பின்பு தான் குண்டுகளைப் போட்டு பாதாளத்தில் இருக்கும் அந்தச் சுரங்கங்களைக் கண்டறிகின்றார்கள்
2.ஏனென்றால் இப்படித்தான் அன்று யுத்தம் செய்தார்கள்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதையெல்லாம் யாம் கண்டது தான், தெரிந்து கொண்டோம் என்றால் உங்களைப் பாதுகாப்பதற்கு வேண்டுமல்லவா…!

எத்தனையோ அடுக்குகளை வைத்துத் தான் எதிலும் நொறுங்கிவிடாதபடி அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். அதற்காக வேண்டி ஒவ்வொரு அடுக்கிலும் எதிர்ப்புணர்வை வைத்திருந்தார்கள்.

லேசர்… எதிர் நிலையை மாற்றி அந்த தாக்குதலை நிறுத்தக்கூடிய நிலைகளையும் கண்டுபிடித்துச் செயல்படுத்தினார்கள். ஆனால் லேசர் மூலம் ஒளி அலைகளைப் பாய்ச்சி அங்கிருக்கும் படத்தைப் பதிவாக்குகின்றார்கள்.

பூமிக்கு அடியில் இருப்பதை எப்படிக் காணுகின்றார்கள்…?

1.மேலே விமானத்தில் பறந்து கொண்டே உணர்வலைகளைப் பாய்ச்சி மோதப்படும் பொழுது
2.அது அப்படியே கோடு போட்டுக் கொண்டே செல்கின்றது.

அதை வைத்து இந்த இடத்தில் நீர் இருக்கின்றது இன்ன இடத்தில் எண்ணெய் இருக்கின்றது இன்ன இடத்தில் பழைய காலத்து உலோகங்கள் இருக்கின்றது இங்கே பல மிருகங்கள் இருக்கின்றது என்பதை விமானத்தில் பறந்து செல்லும் பொழுதே எதிர் நிலைகளை வைத்து லேசர் இயக்கத்தின் மூலம் தான் கண்டுபிடிக்கின்றார்கள்.

விஞ்ஞானி இப்படித்தான் கண்டு கொள்கிறான். ஆனால் மெய்ஞானி “தன் எண்ணத்தால்… அகண்ட அண்டத்தையும் அளந்தறிந்தான்…”

நாம் இந்தச் சூரிய குடும்பத்தில் தான் வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம் ஆனால் இதைத் தாண்டி வெளியே செல்ல வேண்டும் என்றால் ராக்கெட்டில் எவ்வளவு காலம் பிடிக்கிறது…?

நம் குருநாதர் என்ன செய்தார்…?
1.எண்ணத்தின் மனோநிலை ஆனாலும் நாம் எண்ணும்போது உடனடியாக அங்கே டச் ஆகின்றது (இணைக்கின்றது).
2.2000 சூரியக் குடும்பத்திற்கும் மனதைப் பாய்ச்சும்படிச் செய்கின்றார்.
3.ஒவ்வொரு சூரியக் குடும்பமும் என்ன செய்கிறது…? அதிலே ஒதுங்கிய தூசிகள் என்ன செய்கின்றது…?
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து எப்படி வாழ்கின்றது…? என்பதை எல்லாம் குருநாதர் காட்டுகின்றார்.

மரம் செடி கொடியாக இருந்தாலும் தனித்து வாழ முடியாது. ஒரு செடி உருவானாலும் “அதைத் தொடர்ந்த தாவர இனங்கள் மடிந்தால்…” இதற்குச் சத்து குறையும் இதுவும் வீழ்ச்சி அடையும்.

சில தாவர இனங்கள் கலந்து புதுப் புதுச் செடிகளாக உருவாகி இருக்கும். ஆனால் கலந்த செடிகள் மடிந்து விட்டால் சிறிது நாளைக்குத் தான் இந்தப் புதியதாக உருவான செடிகள் வளரும். கடைசியில் அதுவும் மடிந்துவிடும்.

இது எல்லாம் குருநாதர் தெளிவாக எமக்குக் காட்டிய நிலைகள்.
1.காடுகளுக்கு மேடுகளுக்கும் எம்மை அனுப்பி இந்த உண்மைகளை உணரும்படிச் செய்து
2.ஞானிகள் காட்டிய வழியில் மனிதன் எப்படி வாழ வேண்டும்…? என்ற வழியைக் காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தால் நாம் சாங்கிய சாஸ்திரங்களுக்குப் போக வேண்டியது இல்லை. விநாயகர் தத்துவத்தில் சொல்லப்பட்டது போல
1.நாம் எதை வினையாக்க வேண்டும்…?
2.நாம் எதைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்…? என்பதை
3.அந்த அருள் ஞானிகள் காட்டிய வழியில் சென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் வரும் தீமைகளிலிருந்து மீளலாம்.

வாஸ்து என்றால் என்ன செய்கிறார்கள்…? வீட்டில் ஏதாவது கஷ்டங்கள் வந்துவிட்டது என்றால் வீட்டில் உள்ள சில நிலைகளை (வாசலையோ சுவரையோ) மாற்ற வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால் முதலில் அதே வீட்டில் நன்றாகத் தான் வாழ்ந்திருக்கின்றார்கள். இப்பொழுது தான் கஷ்டம் வந்திருக்கிறது.

வீட்டில் இருக்கும் பழைய வாசல்படியை எடுத்து விட்டு அதை வேறு பக்கம் வைத்தால் அந்த வாஸ்து சாஸ்திரப்படி உனக்கு நல்லதாகும்…! என்று இப்படிக் கொண்டு போகின்றார்கள்.

“வாஸ்து சாஸ்திரம் என்பது உண்மை…!” என்ற நினைவில் அதை ஆழமாகப் பதிவாக்கிய பின்… “வீட்டு வாசலை மாற்றி விட்டால் நமக்கு நல்ல காலம் வரும்..!” என்ற இந்த உணர்வைப் பதிவு செய்கிறார்கள்.

அதன்படி வாசலை மாற்றி வைக்கின்றோம்.

அப்படி வளர்ந்து வரப்படும் போது சந்தர்ப்பத்தில் தன் பையன் வெளியிலே ஏதாவது சேட்டை செய்கிறான் அல்லது பக்கத்து வீட்டுக்காரன் நமக்கோ மற்றவர்களுக்கோ ஏதாவது தொல்லை கொடுக்கிறான் என்று வைத்து கொள்வோம்

அதை உற்றுப் பார்த்து… கேட்டு அந்த உணர்வின் தன்மைகளை எடுத்துக் கொண்ட பின்
1.நமக்குத் தொந்தரவு கொடுக்கிறான்…
2.இன்னொருத்தருக்கும் தொல்லை கொடுக்கிறான்…
3.பாவி இப்படிச் செய்கின்றானே.. இப்படி இருக்கின்றானே..! என்ற உணர்வை எடுத்துக் கொள்வோம்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும்
1.நம் உடலிலும் பட்டு… “நம் வீட்டிலும்” பதிவாகி விடுகின்றது.
2.இந்த உணர்வின் தன்மை பதிவான பின் அதே நினைவாகி அதைக் மீண்டும் மீண்டும் கூட்டிக் கொள்கிறோம்.
3.ஒருத்தருக்கு ஒருத்தர் அந்தப் பகைமை உணர்வுகள் வளரத் தொடங்குகிறது.

வாஸ்து சாஸ்திரப்படி வாசலை மாற்றினாலும் கொஞ்ச நாள் நன்றாக இருக்கும். அப்புறம் நாம் எடுக்கும் உணர்வுகள் மாறும் போது அந்தச் சாஸ்திரம் செல்லுமா…?

வாஸ்து சாஸ்திரத்திப்படி வீட்டையோ வாசலையோ சுவரையோ மாற்றி வைக்கின்றார்கள் அல்லவா…! அந்தக் குடும்பங்கள் எல்லாம் பின்னாடி என்ன ஆகிறது என்று பாருங்கள். பணத்தைச் செலவழித்தது தான் மிச்சம்…!

ஏனென்றால் இது எல்லாம் மனிதனுக்குள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டு அதைப் பதிவாக்கி அதன் வழி இயக்குவது.

ஆனால் வேதங்கள் கூறியது ரிக்… சாம… அதர்வண… யஜூர்.. மீண்டும் சாம. உடல் ரிக். அதிலிருந்து வரக்கூடிய உணர்வு சாம.

ஆகவே அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கஷ்டம் என்ற நிலை போய்…
2.இவர் ஏதோ உயர்ந்ததைச் சொல்கிறார்… என்ற நிலையில்
3.அந்தக் கஷ்டமான உணர்வின் தன்மையை அடக்குகின்றது அதர்வண
4.அப்பொழுது அந்த உணர்வின் எண்ணம் கொண்டு கொஞ்சம் துயரத்தை மறக்கின்றார். அவர் சொல்லும் உணர்வு யஜூர் (யஜூர் என்றால் வித்து) ஆகிறது.
5.பின் மீண்டும் சாம…! அதாவது வாஸ்து சாஸ்திரப்படி சரி செய்து விட்டோம்…! என்று அவரை எண்ணும் போதெல்லாம் சிறிது நாளைக்கு நல்லது வருகிறது.

ஆனால் முதலில் சொன்ன மாதிரி பக்கத்து வீட்டுக்காரன் தொல்லை கொடுக்கின்றான்… பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… என்ற உணர்வுகளை எடுத்து வேதனைப்பட்டால் அந்த வேதனை என்ன செய்கிறது…?

மீண்டும் இந்த நல்லதை அடக்குகிறது அதர்வண.. பின் மீண்டும் யஜூர்…! கஷ்டப்படும் நிலைக்கே அழைத்துச் செல்கிறது. மீண்டும் தீமைதான் நடக்கும்.

ஆகவே அத்தகைய தீமைகள் நடக்காது நிலைகள் வரவேண்டும் என்றால்
1.அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் கோவிலுக்குச் சென்று
2.அங்கே உணர்த்தப்பட்டுள்ள அந்தத் தெய்வ குணத்தையும் அதை அருளிய மகரிஷிகளின் அருள் உணர்வுகளையும் எடுத்து
3.எந்தப் பகைமை உணர்வுகளும் நமக்குள் உட்புகாது தடுத்துக் கொண்டால் அதற்குப் பெயர் கல்யாண ராமா…!
4.தீமைகள் நம்மை இயக்காது மகிழ்ச்சி (சீதா) என்ற உணர்வை அரவணைக்கும் தன்மையாக நமக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நாம் எடுத்தால் வேகா நிலை. இந்த உலகில் துருவ நட்சத்திரத்தை எதுவுமே வேக வைக்க முடியாது.

நீங்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெற்று வேகா நிலை பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புதிதாகத் திருமணமான கணவன் மனைவி உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் சிறு குறைகள் ஏற்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

திருமண நாளில் உங்களுக்கு ஆசீர்வதித்தார்கள் அல்லவா…!
1.அந்த அனைவரின் ஆசீர்வாதமும் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு
2.கணவனுக்கோ மனைவிக்கோ இந்தக் குறைபாடுகள் வந்தாலும் அந்தக் குறைகளை எண்ணாதபடி
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்… நாங்கள் தெளிந்த மணம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

மனைவி பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று மனைவி பால் உள்ள குறைகளை கணவன் இப்படி எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கணவன் பால் இத்தகைய குறைகள் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று கணவன் பொருளறிந்து செயல்படும் சக்தியும் மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.

என்னை அரவணைக்கும் அந்த அருள் ஞானம் என் கணவர் பெற வேண்டும்… அந்த அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மனைவி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.ஏனென்றால் மனிதன் என்ற வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலேயும் சிறு குறைகள் வரத்தான் செய்யும்
2.அந்தக் குறைகளை உடனடியாக நீக்கிப் பழக வேண்டும்.

கணவன் மனைவி இருவருமே எந்தக் குறைகளைக் கண்டாலும் முதலில் தன் தாய் தந்தையரை எண்ணி “உங்கள் திருமண நாளை எண்ணி…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் என் கணவர்/மனைவி பொருளறிந்து செயல்படும் அருள் சக்தியும் மலரைப் போல் மணம் பெறும் சக்தி பெற்று அருள் ஞானம் பெறும் அந்த அருளாசி எனக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

வெளியிலே எங்கே சென்றாலும் அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… “எங்கள் காரியங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும்…” என்று எண்ணித் தியானிக்க வேண்டும்.

கணவன் வெளியிலே எங்கே சென்றாலும் மனைவியிடம் சொல்லி
1.உன்னுடைய அருளாசி எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
2.எல்லோரும் என்னை மதிக்க வேண்டும்
3.அந்த அருள் சக்தி உன்னிடம் தான் இருக்கின்றது…
4.எனக்கு அந்த அருளாசி கொடு…! என்று எண்ணிவிட்டு வெளியிலே செல்ல வேண்டும்.

அதே போல மனைவியும் கணவனை எண்ணி என் அன்னை தந்தையரின் அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவர் பெற வேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் அவர் பார்ப்போருக்கெல்லாம் நல்ல நிலை கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

விவசாய நிலங்களுக்குச் செல்லும் பொழுதும் மனைவி தன் கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் அவர் பார்வையில் அந்தப் பயிரினங்கள் செழித்து வளர வேண்டும் அந்தச் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொல்லுதல் வேண்டும்.

எங்கே வெளியில் சென்றாலும் கணவன் மனைவியிடம் சொல்லி
1.என் காரியம் சித்தியாக வேண்டும்
2.உன் அருள் வேண்டும் என்று மனைவியிடம் கேட்டுச் செல்ல வேண்டும்.
3.ஏனென்றால் இருவரும் வேறல்ல… சக்தி இல்லையேல் சிவமில்லை… சிவம் இல்லையேல் சக்தியில்லை….!

ஆகவே இந்த வாழ்க்கையில் எப்பொழுதுமே அன்னை தந்தையரின் அருளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி வாழ்ந்தால் வாழ்க்கையில் என்றுமே பேரின்பம் கிடைக்கும்.

1.சாதாரணமாக… “மனைவி தான்” என்று எண்ணிவிடக் கூடாது.
2.”அருள் தெய்வம்…!” என்ற எண்ணத்திலேயே நாம் வருதல் வேண்டும்.
3.மகாலட்சுமி…! என்று கூட நீங்கள் எண்ணலாம் – சர்வத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றது.

பெண்களுடைய வாக்கை என்றுமே ஆண்கள் தொடர்ந்தால் எதை வாழ்த்தி அனுப்புகின்றார்களோ அந்த வாக்கின் பிரகாரம் அந்தக் காரியங்கள் நல்லதாகும்.

கணவன் மனைவி திருமணமாகும் பொழுது இரு மனமும் ஒன்றாக ஆனது போல
1.என்றுமே இந்த வாழ்க்கையில் எண்ணினால்
2.என்றுமே பிரியாத நிலைகள் கொண்டு உங்களுக்கு இனிப் பிறப்பே இல்லை.

இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இந்த வாழ்க்கையில் எப்பொழுது நீங்கள் பேரின்பம் பெறுகின்றீர்களோ அந்த அருள் வாழ்வு என்றுமே இருக்கும். அடுத்து உடல் இல்லை. இதே உடலின் உணர்வுகள் ஒளியாகிப் பேரின்பமாக வாழ முடியும்.

உடலை வளர்க்க… கௌரவத்தை வளர்க்க… தன்னையே தான் மெச்சிக் கொள்ள… யாம் சக்தி கொடுக்கவில்லை

 

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் இணைத்து விட்டால்
1.அது இந்த மனித வாழ்க்கையின் நிலைகளைத் தணித்து
2.அருள் உணர்வு என்ற நிலையை நமக்குள் பெருக்குகின்றது.

அது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

நான் இதையெல்லாம் உங்களிடம் சும்மா கொடுக்கவில்லை.
1.ஈஸ்வரபட்டர் எனக்குச் சும்மா கொடுக்கவில்லை.
2.அவர் உணர்வின் தன்மையைப் பதிவாக்கினார்.
3.அந்த நினைவின் தன்மை தான் நாம் எடுக்கின்றோம்.

இந்த உடலில் இச்சைக்காக வாழ கற்றுக் கொண்டோம் என்றால்
1.உடலை வளர்க்கவும்… அதிலே கௌரவத்தை வளர்க்கவும்
1அதை வைத்து என்னை மெச்சிக் கொள்ளவும் என்று நான் இருந்தேன் என்றால் “உடலின் இச்சைக்குத் தான் வாழ முடியும்…”

உடலுக்குப் பின் குருநாதர் கொடுத்த சக்தி பயனற்றதாகப் போய்விடுகின்றது.

ஆகவே உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் “உடலின் இச்சைக்கு என்று இல்லாதபடி…” எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த ஆசையைத் தூண்டுதல் வேண்டும்.

நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அதை நான் பெறுகின்றேன். உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் நான் அதைப் பெறுகின்றேன்.

இதைத்தான் குருநாதர் எனக்குள் உருவாக்கினார்.

ஆகவே இந்தப் பேருண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி அந்தப் பதிவை நீங்கள் வளர்ப்பதற்குத் தான் “தொடர்ந்து உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டு வருகின்றேன்…”

ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையே தியானமாக அமைக்க வேண்டும் என்று சொல்வது அதுதான்.

இறைவனை அடைய வேண்டும் என்று “ஒரே நிலையில் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டுள்ளவர்கள் நிலை…”

 

ஆண்டவனின் நாமத்தையே மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டிருந்தால் “இறைவனை அடையலாம்…” என்று பலர் அக்காலத்தில் முயற்சி செய்துள்ளார்கள்.

சிவ தத்துவத்தில் எடுத்துக் கொண்டால் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று தொடர்ந்து அந்த ஒலிகளை எழுப்புகின்றார்கள். இந்த உணர்வின் இயக்கத்தின் தொடர் கொண்டு
1.தன் உடலில் உள்ள அணுக்களை தன்னுடன் இணைந்து இயங்கக் கற்றுக் கொள்கின்றார்கள்.
2.அந்த உணர்வின் ஒளி கற்றைகளாக ஆன நிலையில் சரீரத்தை மூடிவிட்டாலும்
3.அதே உணர்வுகள் நுகரப்பட்டு வெப்பத்தின் துணை கொண்டு உடலில் அது இயங்கிக் கொண்டே இருக்கும்.
4.அந்த உணர்வுகள் கடைசி நிமிடத்தில் எதுவோ எல்லாவற்றிலும் இந்த உயிரைப் போலவே இந்த உணர்வுகள் அடங்கி விடுகின்றது.
5.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற இந்த ஒலி மீண்டும் அது வந்து கொண்டே இருக்கும்… அதன் இயக்கமாக அது மாற்றி விடுகின்றது.
6.இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் தன் உடலில் உள்ள அணுக்களுக்கு ஆன பின்
7.உடல் இருக்கும் ரசங்கள் குன்றும்… உடல் நலியும்… உயிர் உள்ளேயே இருக்கும்.

இதை நேரடியாக எனக்குக் காட்டுவதற்காக இமயமலைச் சாரலில் இரண்டு மூன்று இடங்களுக்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

முதலிலேயே ஹரித்வார் அருகில் மரத்துக்கடியிலே ஜெபித்துக் கொண்டிருந்தவரைக் காட்டினார். பெரிய வெள்ளத்தை வரவழைத்து கரைக்கச் செய்தார். கரைந்த பின் ஓ…ம் நமச்சிவாய…! என்று அங்கே சப்தம் வருகின்றது

அதை ஜெபித்தாலும் இந்த உடலுக்குள் தான் சிறைப்பிடித்து இருக்கின்றார். அதற்கு மேல் அவர் விண் செல்லவில்லை. உடலின் உணர்வுக்கே செல்கின்றார்.

ஆனால் கரைத்த பின் வேறு வழி இல்லை அடைப்பட்ட நிலையில் இருந்து எதிரொலி… உணர்வின் ஒலி வரப்பப்படும் பொழுது அவருக்கு மிகக் கஷ்டமாகி விட்டது.

அப்பொழுது குருநாதர் நேரடியாக நீ அவரைப் பார்க்கக் கூடாது என்றார். ஏனென்றால் அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். நீ அவரை எண்ணி அந்த சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்தாய் என்றால் இது அவருக்குள் சேரும் என்றார்

காலை நான்கு மணிக்கு “துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர் பெற வேண்டும்…” என்று இந்த உணர்வின் ஒலிகளை அங்கே பரப்பப்படும் பொழுது
1.அதன் ஈர்ப்பால் அந்த ஆன்மா வெளி வருகின்றது.
2.ஒளியின் சரீரமாக இருளுக்குள் அடைப்பட்டிருந்த நிலை ஒளியாக மாறி விண் செல்லும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
3.அதன்படி அந்த ஆன்மாவை நீ விண் செலுத்து என்றார் குருநாதர்.

இதே மாதிரி இன்னொரு இடத்திலே ஜோஸ்மெட்டுக்கு மேலே ஒருவர் புதையுண்டு இருக்கின்றார். அங்கே இராணுவப் பாதுகாப்பு இருக்கின்றது.

ஒரு பெரிய ஓடை வருகின்றது. அந்த ஓடைக்குள் திட்டுகள் இருக்கின்றது. மழை பெய்தால் தண்ணீராக வரும். ஆனால் கரையின் ஓரத்தில் திட்டுக்குள் அடங்கி இருக்கின்றார்.

ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! என்று இதையே சொல்லிக் கொண்டிருக்கின்றார். அதாவது ஹரி ஓம் நமோ நாராயணா என்றால் “சூரியனின் இயக்க நிலை…”

அந்த உணர்வின் தன்மையை எடுத்து ஒளியின் உணர்வாக அவரும் இந்த உடலுக்குள் தான் அடங்கி இருக்கின்றார்.

அதை எல்லாம் நேரடியாகவே எமக்குக் காட்டுகின்றார். உடலுக்குள் அடங்கியிருக்கின்றது… செவி கொண்டு அந்தச் சப்தத்தை நீ கேள் என்றார் குருநாதர்.

இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் வந்து என்ன செய்கின்றீர்கள்…? என்ன பார்க்கின்றீர்கள்…? என்று கேட்கின்றார்.

அங்கே நான் காதை வைத்து அந்தச் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் அல்லவா. ஆனால் இதையெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டாம் என்று குருநாதர் சொல்லி விட்டார்.

நான் ஊரைச் சுற்றி பார்க்க வந்தேன். இங்கே மலைப்பிரதேசமாக இருக்கின்றது நிலநடுக்கம் ஏதும் வருகின்றதா…? என்று சும்மா பார்க்கின்றேன் என்று சொன்னேன்.

அதிலே தமிழர் ஒருவர் இருந்தார். அப்படிங்களா…! என்றார்.

ஆனால் அங்கே குளிர் அதிகமாக இருக்கின்றது அவர்களெல்லாம் சட்டை போட்டிருக்கிறார்கள். நான் வெறும் கோவணத் துணியைத் தான் கட்டி இருக்கின்றேன்.

என்னுடைய நிலையைப் பார்த்து அந்த மிலிட்டரிக்காரர்கள் எல்லாம் ஆசீர்வாதம் கேட்கின்றார்கள். என்னிடம் விபூதி எதுவும் இல்லை. அங்கிருக்கும் மண்ணை எடுத்துப் பிரார்த்தனை செய்து அதைத் தான் அவர்களுக்குக் கொடுத்தேன். நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்… உங்களுக்குத் தக்க உபாயமாகும் என்று சொன்னேன்.

ஏனென்றால் பேரீச்சம் பழம் பிஸ்கட் மட்டும்தான் அங்கு கொண்டு சென்றேன். விபூதியைக் கொண்டு செல்லவில்லை. ஆனால் நான் கொடுத்ததை அவர்கள் சந்தோஷமாக வாங்கிச் செல்கின்றார்கள்.

அங்கே ஜெபித்துக் கொண்டிருப்பவர்கள் சூரியனுடைய இயக்கமாக இருந்தாலும் கூட்டை விட்டு வெளியே வந்தால் இதே சூரியனால் கவரப்பட்டுத் தான் சுழல முடியும்.

அப்படிக் கவரப்படும் போது அவர் எந்த ஒலியினைத் தனக்குள் ஓங்கி வளர்த்தாரோ எப்படி இங்கே கூட்டுக்குள் ஒடுங்கினாரோ இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அவரையும் இது போன்றுதான் உட்கார வைக்கும்.

நாராயணன் செயல் என்ன…? என்று அங்கே தியானமிருக்கும்படி சொன்னார் குருநாதர்.
1.அதன்பின் சில உணர்வின் ஒலிகளை எடுத்து அங்கே பரப்பும்படி செய்தார் குருநாதர்.
2.அந்த உணர்வுகளை அவர்கள் எடுத்தார்கள் என்றால் அதைச் சுவாசித்து அவர்களும் விண் செல்ல உதவும் என்று
3.உணர்வின் எக்கோவாக (ECHO) அங்கே அதைப் பரப்பச் சொன்னார்.
4.அவர் சொன்ன முறைப்படி செயல்படுத்தினேன்.

ஏனென்றால் அந்த இமயமலைச் சாரலில் இது போன்று ஏராளமானோர் உண்டு. இன்னும் அந்தக் கூட்டுக்குள் தான் இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாதாரணமாக நாம் எல்லோருமே மந்திரங்களைச் சொல்லி பழக்கப்பட்டவர்கள் தான். இறந்த பிற்பாடு என்ன செய்கிறோம்…? சுட்ட சாம்பலை எடுத்துப் பாவத்தைப் போக்குவதற்காகக் வேண்டிக் கொண்டு போகிறோம்.

எங்கே…?

கங்கையில் கொண்டு பாவத்தைக் கரைத்து விட்டால் போய்விடும் என்று கரைப்போம். அடுத்து அந்த மந்திரத்தைச் சொல்லி மோட்சத்துக்கு அனுப்பிவிட்டதாக அங்கே சொல்வார்கள்.

வீட்டுக்கு வந்தவுடனே நாம் என்ன செய்கிறோம்…? எல்லோரும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகி அப்புறம் புத்தாடைகளை உடுத்தி விநாயகர் கோவிலில் கொண்டு போய் மாவிளக்கு வைத்து நெய் தீபம் இட்டு தீபாரதனை காட்டுவோம். அப்படிக் காட்டினால் மோட்ச தீபம்.

அங்கே அப்படிச் செய்த பின் அமாவாசை அன்றைக்கு என்ன செய்கிறோம்…? அம்மா அப்பா உணர்வுகள் எல்லாம் நம் உடலில் இருக்கும். அவர்களை நாம் எண்ணுவோம். எப்படி…?

அவர்கள் பிரியமாகச் சாப்பிட்ட உணவுகளை எல்லாம் வைத்து நாம் கூப்பிடுவோம். எங்களுடன் இருந்தீர்கள். இதை எல்லாம் சாப்பிடுவீர்கள். உங்களுக்குப் பிடித்த துணிமணிகளை எலலம் வைத்திருக்கின்றோம் என்று சொல்லுவோம்.

இந்தச் சாப்பாடு வைத்த உடனே அவர்கள் உணர்வு நம்மிடம் இருப்பதால் இந்த உணர்வு ஆன்மா (மணம்) ஆனபின்.. அது இங்கே வரும். நாம் இங்கே இதைச் செய்வோம்.

ஆனால் குடுகுடுப்புக்காரன் என்ன செய்வான்…?

நம் வீட்டு வாசல் படியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு போவான். தலை முடியையும் எடுத்துக் கொள்வான்.

நமக்கு ஆகியவர்கள் ஆகாதவர்கள் என்று எந்தத் தெய்வத்தை எண்ணி மந்திரங்கள எல்லாம் சொன்னோமோ அதை எடுத்துக் கொள்வான்.

இது எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வார்கள். எந்த இடத்தில் அவர்களைப் (நம் முன்னோர்களை) புதைத்தார்களோ அல்லது எரித்தார்களோ அந்த இடத்திற்குக் கொண்டு போவார்கள்.

நம் பாதம் பட்ட மண்… தலை முடி… துணி… (இதில் எல்லாம் நம் உணர்வின் எண்ணங்கள் உண்டு) இந்த மூன்றையும் வைத்து அந்த இடத்தில் சில மந்திரத்தைச் சொல்வார்கள்.

மந்திரங்களை ஜெபித்த பின் அந்த மண்ணை எடுத்துக் கெடுதலான நிலைகளுக்கு அதைத் தூவி விடுவார்கள். ஆனால் நமக்குத் தெரியாது. மண்ணிலே பாதம் பட்ட பின் இந்த உணர்வின் தன்மை எந்த ஆவியோ அது இங்கே வந்து குவியும்.

அடுத்தாற்போல் என்ன செய்வான்…? நல்ல காலம் வருகிறது…! என்று குடுகுடுப்புக்காரன் சொல்லுவான்.
1.இந்த உணர்வின் ஒலி/ஒளி கொண்டு நம் உணர்வின் அறிவை எடுத்து
2.நம் குடும்பத்திலே உள்ள நிலைகள் எல்லாம் எப்படி எப்படி இருக்கிறது…? என்று கட…கட… என்று சொல்லிக் கொண்டே வருவான்.
3.இது ஒரு வகை.

இது எல்லாம் அன்றைய அரசர்களுக்குத் தூது சென்ற நிலைகள். ஒரு குடும்பத்திலே இன்னென்ன நடக்கிறது என்ற உணர்வின் செயலாக்கங்களை இருந்த இடத்தில் இருந்து அரசனுக்குத் தூது செல்லும் முறை. அரசனால் உருவாக்கபட்ட “ஐந்தாம்படை” என்று அக்காலங்களில் வந்த நிலை.

நாடி சாஸ்திரமும் இதே நிலை தான். ஒரு அரசன் ஆன பின் மந்திரங்களை உருவாக்கித் தன் குடிமக்களுக்குத் தெய்வ பக்தி என்ற நிலையில் பதிவாக்கி விடுவார்கள்.

அத்தகைய மந்திரங்களை மக்கள் தங்களுக்குள் கவர நேர்கின்றது. இப்படிப் பல மந்திரங்களைத் தனக்குள் சேர்த்த பின் அந்தக் குடிமகன் அரச பக்தி என்ற நிலையில் இருப்பான்.

அரசன் சாகாக்கலையாக நாடி சாஸ்திரம் என்ற பெயரில் செயல்பட்டு மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அவனுக்குள் போகும். குடிமகனுக்குச் சொன்ன நிலையெல்லாம் சொல்லும். உருவாக்கும் சக்தியை எல்லாம் சொல்லும்.

அந்த நாடி சாஸ்திரத்தை வாசித்த பின் இவன் இன்னொரு கூட்டுக்குள் போவான். ஆசைப் பட்டு விடுவான் என்று அந்த நாடியில் எழுதி இருக்கும்.

இந்த உணர்வின் தொடர்பு கொண்டவன் இதை எத்தனை காலம் வைத்திருக்கலாம் என்ற இந்த நிலை எல்லாம் அதிலே வரும். அடுத்து இன்னாரிடம் கொடுத்து விடு…! என்று போட்டிருக்கும். ஆனால் அந்த மாதிரிக் கொடுக்க இன்று யாரும் இல்லை.

எனக்கு… அது தெரியும் இது தெரியும்..! என்று குடும்பச் சொத்தாக வைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட இவனுடைய ஆசை நிலை கலக்கப்படும் பொழுது அந்த அரசனும் வீழ்ச்சி அடைகின்றான்.

கூடு விட்டுக் கூடு பாயும் தன்மை இவனுக்குள் எடுத்துக் கடும் பேயாக மாறுகின்றான். ஆக மொத்தம் இந்த நாடி நாஸ்திரம் பார்த்த குடும்பம் எல்லாம் பாருங்கள். தொலைந்து போய்விடும். சொல்வது அர்த்தம் ஆகிறதா…?

1.அந்த அரசனுடைய நிலையில் அவன் சொன்ன மாதிரி மந்திர ஒலிகளைச் செலுத்தப்படும் போது
2.அரசனுக்கு வந்த ஆசைகள் எல்லாம் நம் உடலுக்குள்ளும் வரும்.. தப்ப முடியாது…!

ஆகவே இது சாகாக்கலை.

ஆனால் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டால் அது வேகா நிலை. இந்த அண்டத்தில் உள்ள எதுவுமே நம்மை வேக வைக்க முடியாது.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கு தான் துருவ நட்சத்திரத்தைப் பற்றியும் சப்தரிஷி மண்டலங்களைப் பற்றியும் அந்த மாமகரிஷிகளைப் பற்றியும் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.
1.எந்தக் காரணம் கொண்டு நாம் சாங்கிய சாஸ்திரங்களுக்குப் போக வேண்டியதே இல்லை.
2.இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!

November 2025 உபதேசம்

கண்கள் தோன்றிய விதம்

 

உடல் என்பது திரேதா தான். திரேதா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்.
1.வாசுதேவன் – சுவாசித்ததை உருவாக்கக் கூடியவன்.
2.தேவகி – பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள்.

சந்தர்ப்பத்தில் தீமையான உணர்வு மோதினால் அதிர்ச்சி என்ற நிலை வருகின்றது. அதிர்ச்சி என்ற நிலை வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

எந்தச் செடியின் சத்தை அது (கண்ணில்லாத புழு) எடுத்து வளர்த்ததோ அதன் உணர்வின் தன்மை இழக்கப்படுகின்றது. விஷமான செடியின் சத்தை நுகர்ந்த பின் சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.

ஆனால் மோதிய பின் அதன் வழியாகத் தெரியப்படுத்துகின்றது. எதை…?

1.”அறிய வேண்டும் என்ற உணர்வுகள்…”
2.துவாரகா இந்த உடலுக்குள் அதைச் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.ஒளிக்கற்றைகள் சிறுகச் சிறுக மின் அணுவாக மாறி… அணுக்களாகி அது அறியச் செய்யக்கூடிய கற்களாக மாறுகின்றது.
4.உறையும் தன்மை வரும் பொழுது கருவிழி என்ற உணர்வுகள் அணுத் தன்மை அடைந்து
5.நரம்பு மண்டலங்கள் இழுப்பதை ஒளிப் படலமாகப் பார்க்கும் தன்மை வருகின்றது.

இந்த ஒளிப் பிளம்புகள் கரு விழியிலே மறைந்து விட்டால்… ஒளிப் படலங்கள் அதாவது கண் பார்வை தெரியாது.

கண்ணில்லாத புழு “பார்க்க வேண்டும்…” என்று தான் எண்ணிய உணர்வு கொண்டு கற்களாக கருவிழியாக கண்கள் எப்படி உருவானது…?
1.சுவாசிப்பதை உருவாக்கக் கூடியவன் உயிர் அதனால் தான் வாசுதேவன்.
2.தேவகி… பார்க்க வேண்டும் என்ற தேவைக்கு வரும் போது அது (கண்களாக) வருகின்றது.

இந்த மனித உடலுக்குள் நாளை என்ன செய்வோம் என்று கற்பனை செய்கின்றோம்…? அதன் உணர்வின் தன்மை வடிவமைக்கின்றோம். வடிவமைத்தது தனக்குள் பதிவாகின்றது.

துவாரகா… புறத்தால் கண்களானாலும்
1.அகத்திற்குள் முதலிலே அதைப் படமாக்குகிறது.
2.படமாக்கிய பின் புறத்திலே எழுதுகின்றோம். உடலுக்குள் பதிவாகவில்லை என்றால் எழுதவே முடியாது.

உணர்வின் தன்மை பதிவாகும் பொழுது பதிவின் நினைவுகளை நினைவாக்குகின்றோம். துவாரகா இந்த உடலுக்குள் சிந்தனைகள் எடுத்துத் தான் மனிதன் தன் செயல்களைச் செயல்படுத்த வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு தான் இதையெல்லாம் உங்களுக்கு உணர்த்துவது.

பதிவைத் தான் மீண்டும் எழுத்தில் கொண்டு வருகின்றோம். புறத்தால் நாம் எழுதினாலும் அதில் குறைகள் வந்தால் திருத்துகின்றோம்.

இதைப் போல் தான் துவாரகா யுகத்தில் தீமைகளிலிருந்து மீண்டிடும் சக்தியாகத் தன்னுடைய நிலைகள் வருகிறது… கண்களாகின்றது. (சிறைச்சாலைக்குள் இருக்கும் தன் அன்னை தந்தையரைத் தவறிலிருந்து மீட்கக் கண்கள் வருகிறது)

ஒரு படத்தை (சித்திரம்) பார்க்கின்றோம்… பிழை என்ற நிலை வருகிறது. ஒருவன் தவறு செய்கிறான் என்ற நிலைகளில் கண்கள் அதைப் பார்க்கின்றது. ஆனால் அவனின் அந்தத் தவறுகள் நமக்குள் பதிவாகக் கூடாது.

தவறு செய்பவன் உடல் கிரேதா. அவன் செய்யும் தவறை நாம் நுகரும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வு திரேதா யுகத்தில் நம் உடலுக்குள் செல்கிறது.

அப்போது அந்தந்த உணர்வின் உணர்ச்சிக்கொப்ப வைரஸ் (கிருமி) என்று சொல்கிறோமே அத்தகைய அணுக்கள் உருவாகின்றது.

அந்த அணுக்களின் உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் வருகிறது. அதன் மலத்தின் தன்மை கொண்டு இரத்தத்தில் வருகின்றது. தீமையின் விளைவாக நோயாகிறது.

ஆனால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நம் இரத்தத்திலே கலக்கப்படும் போது நம் உடலில் உள்ள உறுப்புகளை அது சீராக்குகிறது. அப்போது அந்த ஞானிகளின் உணர்ச்சியின் எண்ணங்கள் நமக்குள் வரும்.

1.தீமை செய்வோன் அவன் திருந்தி வாழ வேண்டும்
2.தெளிந்து வாழ வேண்டும்
3.தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
4.அமைதி பெற வேண்டும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணி
5.இதன் உணர்வைக் கொண்டு நாம் தெளிவாக்க வேண்டும்.

இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே கிரேதா திரேதா துவாரகா என்ற நிலையில் நம் உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு நிலையையும் வேதங்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது. அதை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அங்கே தீபாராதனை காட்டும் பொழுது அங்கிருக்கும் பொருள்கள் அனைத்தும் தெளிவாகத் தெரிகின்றது.

ஆகவே ஒரு விளக்கைக் காட்டினால் அங்கு பல பொருள்கள் தெரிகின்றது. அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்..?
1.பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.புருவ மத்தியில் உயிரை எண்ணிச் சுவாசிக்க வேண்டும்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் இச்சக்தி பெற வேண்டும். நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும், வியாபார நிமித்தம் எங்களிடம் தொழில் செய்வோரும் அவர்களது குடும்பமும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் ஒரு அவசரம் நிமித்தமாகக் கொஞ்ச நேரம் கால தாமதமாகி விட்டது என்றால் நாம் என்ன செய்கிறோம்..?

உடனே கோபிக்கின்றோம். ஏன்டா இவ்வளவு நேரம்…? என்று குழந்தைகளை அதட்டுகின்றோம்… மிரட்டுகின்றோம்..!

அடுத்தாற்போல் ஏதாவது ஒரு காரியத்திற்காக உட்கார்ந்து இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். உட்கார்ந்து வெகு நேரம் ஆனால் உடனே நம்மையறியாமல் வேதனைப்படுகின்றோம்… கோபப்படுகின்றோம்…!

யாரை நினைத்து இந்த வேதனை உணர்வை நுகர்கின்றோமோ அவரை எண்ணும் போதெல்லாம் வெறுப்பும் குறைபாடுகளும் வந்து விடுகின்றது. நம்மை அறியாமலே இப்படி வந்து விடுகின்றது

அப்படி வராமல் தடுப்பதற்குத் தான் ஆலயங்களில் விளக்கைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.. தீப ஆராதனையும் காட்டுகின்றார்கள்.

அதாவது
1.“என்ன நிமித்தமோ…! அதனால் நேரம் ஆகிவிட்டது…
2.சரி பரவாயில்லை… அவர்கள் சீக்கிரம் வரவேண்டும்…! என்ற இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்
3.நமக்கு யார் மீதும் வேதனையும் வராது… வெறுப்பான உணர்வுகளும் வராது.
4.ஒன்றுபட்டு வாழும் தன்மையும் சங்கடங்கள் வளராத நிலைகளும் நமக்குள் வரும்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் குடும்பத்தில் கணவன் மனைவியாக வாழும் நீங்கள் வாழ்க்கையில் சில குறைபாடுகள் வந்தாலும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தியைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

குழந்தைகளினாலோ உறவினர்களினாலோ அல்லது நண்பர்களினாலோ சிறு குறைகள் வந்தாலும் அது எது சந்தர்ப்பமோ..
1.அவர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.வாழ்க்கையில் தெளிந்து நடக்க வேண்டும்
3.நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுக்க வேண்டும்.

இப்படி இருந்தால் இல்லற வாழ்க்கையில் என்றுமே தெளிந்த மனம் கொண்டு வாழலாம்… மகிழ்ந்து வாழ்ந்திடவும் இது உதவும்.

“உங்கள் கண்களை…” மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுகிறோம்

 

இன்று சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களை வைத்து வெகு தொலைவிலிருந்து ஒளிபரப்பு செய்வதையும் வீட்டிலே டிவி மூலம் நேரடியாக… மிகவும் தெளிவாக அதை நாம் காணும்படி செய்கிறார்கள்.

அதைப் போல விண்ணிலிருந்து ஒலிபரப்பாகும் மகரிஷிகள் ஞானிகள் உணர்வுகளை அந்த விண்ணினுடைய ஆற்றல் வெளியிலே படர்ந்தாலும் அங்கிருந்து வரக்கூடிய நிலைகளைக் கவர முடியும். நீங்கள் அதைப் பெறுவதற்குத் தான் உணர்த்துகின்றோம்.
1.இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வுகளை எந்த அளவுக்கு நினைவு கொண்டு கூர்ந்து கவனித்துக் கேட்கின்றீர்களோ
2.அதை உணரச் செய்யும் கண் ஈர்ப்பு நிலைகள் உங்கள் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்கிறது
3.அதன் மூலம் கவர முடியும்.

அதாவது… மெய் ஞானிகள் ஆற்றலைக் கவரும் விதமாக… “உங்கள் கண்களை மிக மிகச் சக்தி வாய்ந்த ஆண்டென்னா போன்று மாற்றுவதற்குத் தான்…” இதை உபதேசிப்பது.

எமது குருநாதர் எமக்கு உபதேசிக்கும் போது
1.எவ்வாறு அவர் சொல்லும் உணர்வைக் கூர்ந்து கவனித்தேன்
2.என் நினைவை அவர்பால் செலுத்தி அந்த ஆற்றலை நான் நுகர்ந்தேன்
3.அதனின் நிலைகள் கொண்டு கண் புலனறிவு ஆற்றல் மிக்கதாக மாறியது
4.அவர் உபதேசித்த உணர்வுகள் ஊழ்வினையாக எனக்குள் பதிவானது

அதை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுதெல்லம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியை குருநாதர் எனக்கு ஏற்படுத்தினார்.

நீங்களும் அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம். உபதேசிக்கும் போது யாரெல்லாம் நினைவு கொண்டு கூர்ந்து கேட்கின்றீர்களோ
1.அந்தச் சக்திகள் உங்கள் கண்களுக்கு உரமாக ஏறி
2.ஆற்றல்மிக்க சக்தியாக “ஆண்டென்னா பவர்” கூடுகின்றது.

சாதாரண ஆண்டனாவை டிவியில் இணைக்கப்படும் பொழுது அருகில் இருக்கக்கூடிய ஸ்டேஷன்களை அது கவர்ந்து ஒளிபரப்பு செய்கின்றது. அதே சமயம் சக்தி வாய்ந்த ஆண்டனாவைப் பொருத்தப்படும் பொழுது வெகு தொலைவில் இருக்கக்கூடியதைக் கவர்ந்து டிவியில் அதைக் காட்டுகின்றது.

இராக்கெட்டுகளை ஏவிப் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய கோள்களைப் பற்றி அறிந்தாலும்… அந்த உணர்வின் தன்மையைக் கீழே தரையில் வைத்திருக்கக் கூடிய ஆண்டென்னா கவர்ந்து தெளிவாகக் காட்டுகின்றது.

அதே போல் மகரிஷிகள் காட்டிய உணர்வினை “இந்த உபதேசத்தின் மூலம் கேட்டறியப்படும் பொழுது…”
1.விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான
2.சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிவரும் உணர்வினை நீங்கள் நுகர்ந்து எடுக்கும் ஆற்றலை
3.உங்கள் கண்களுக்கு ஆற்றல்மிக்க ஈர்ப்பு சக்தியாக அதைப் பெற முடியும்.

இந்த உபதேசத்தினை எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அதனின் ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.

அதைப் பெருக்கி நம் எண்ணத்தை விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கும் சக்திகளை…
1.நாம் எண்ணும் பொழுதெல்லாம் சுவாசித்து உடலுக்குள் வினையாகச் சேர்த்து
2.நம்மை அறியாது வந்த தீய வினைகளைத் துடைத்து விடலாம்.வ்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நண்பர்களாக உள்ள நாம் “எனக்கு நன்மை செய்தான்” என்று எண்ணும் பொழுது நண்பன் அப்பொழுது அமெரிக்காவில் இருந்தாலும் அவனுக்கு விக்கலாகின்றது.

ஆனால் நண்பர்களுக்குள் பழகி ஒருவருக்கொருவர் மன வருத்தமாகி வேற்றுமையாகிக் கோபத்துடன் ஏசிப் பேசிக் கடுமையான சொற்களால் அந்த இருவரின் உணர்வுகளும் பட்டுவிட்டால் என்ன ஆகிறது..?

ஒரு சமயம் அதை நினைவுபடுத்தி
1.நமக்குத் துரோகம் செய்தான் பாவி… அவன் எல்லாம் உருப்படுவானா…?” என்று சொல்லும் பொழுது
2.அங்கே அமெரிக்காவில் இருந்தாலும் அவனுக்குப் புரை ஓடுகின்றது.

அப்படி வெறுப்படையும் பொழுது நமக்கும் அந்தத் தீமை என்ற உணர்வாகின்றது. நண்பனுக்கும் அந்த நிலை ஆகின்றது. உதாரணமாக அந்தச் சமயத்தில் ஒரு காரை ஓட்டிக் கொண்டிருந்தார் என்றால்
1.வெறுப்படையும் நிலைகள் கொண்டு பேசினால் சிந்தனை சிதறும்.
2.தன்னை அறியாமல் விபத்துக்களும் உண்டாக்கும்.
3.நீரிலே குளித்துக் கொண்டிருந்தால்… பாவி இப்படித் தொந்தரவு செய்தான் என்று எண்ணினால் புரையோடி நீருக்குள் மூழ்கிவிடுவான்.
4.எவ்வளவு திறமை வாய்ந்த நீச்சல்காரராக இருந்தாலும் இப்படி உருவாக்கிவிடுகின்றது.

நம் தாய் தன் பிள்ளையைப் பேரன்புடன் வளர்த்திருக்கின்றது. என் மகன் ரொம்ப தூரம் போயிருக்கின்றான். எப்படி இருக்கின்றானோ…! எதுவாக இருக்கின்றானோ…? என்று இந்தத் தாய் தன் மகன் மீது சோர்வடைந்த உணர்வுடன் எண்ணினால்
1.அங்கே ஒரு இயந்திரத்தில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும்
2.அந்தத் தொழிலில் சிந்தனை குறைந்து விபத்துக்குள்ளாகும்.
3.இது அன்பினால் வரக்கூடிய தொல்லைகள்.

இதே மாதிரிக் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது என் பையன் இப்பொழுது என்ன செய்கிறானோ…? என்ற இந்த வேதனையுடன் எண்ணினால் அந்த வாகனம் விபத்துக்குள்ளாகும். இது பாசத்தால் உருவாகி விடுகின்றது.

ஆகவே பேரன்பு கொண்டு வளர்க்கும் இந்தத் தாய்மார்கள் தன் பிள்ளைகளைப் பற்றி எண்ணும் பொழுது
1.அவன் உயர்வான நிலைகள் பெற வேண்டும்.
2.அவன் தெளிந்த மனம் பெற வேண்டும்
3.சிந்திக்கும் ஆற்றல் பெற்றுத் தெளிவான நிலையில் வாழ வேண்டும்
4.அவன் மகிழ்ந்த உணர்வுடன் வாழ வேண்டும் என்று எண்ணினால்
5.உங்கள் எண்ணம் அந்தக் குழந்தைகளுக்கு நல்லவைகளை ஊட்டும்.

ஏனென்றால் இவை எல்லாம் “நம்மை அறியாமலே” இயக்கக்கூடிய நிலைகள்.

பொதுவாக தாய் எப்பொழுதுமே தன் பிள்ளைகள் நலம் பெற வேண்டும் நலம் பெற வேண்டும் என்று எண்ணுகிறது. பிள்ளைகள் தாய்க்குத் தொல்லைகள் கொடுத்தாலும் என் பையன் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் அந்தத் தாய் எண்ணுகின்றது.

கருவிலே பத்து மாதமும் தாய் தூக்கிச் சுமந்து பத்து மாதம் கழித்து
1.குழந்தை பிறக்கும் பொழுதும் வேதனைப்படுகின்றது.
2.குழந்தையை வளர்க்கும் பொழுதும் வேதனைப்படுகின்றது.

இப்படிப் பலவிதமான இன்னல்கள் பட்டாலும் தன் மக்களை அன்புடன் அரவணைத்து அவர்கள் பண்புடன் வளர வேண்டும் என்று பேரன்பைத்தான் தாய் ஊட்டுகின்றது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் தாய் ஊட்டிய அந்த நல்ல உணர்வுகள் அனைத்தும் நமக்குள் பதிவுகளாக உண்டு. அதை எண்ணி எடுத்தால் அது நம்மைக் காக்கும்.

1.ஆகவே மனிதர்கள் நாம் அனைவரும் நம் தாயைக் கடவுளாக மதிக்க வேண்டும்.
2.அவர்களைத் தெய்வமாக மதித்தல் வேண்டும். குருவாக மதித்தல் வேண்டும்.

எந்தக் காரியங்களுக்குச் சென்றாலும் அன்னை தந்தையரை எண்ணி
1.அவர்கள் அருளால் என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்
2.என் சொல் நல்லதாக இருக்க வேண்டும்.
3.என் செயல் அனைத்தும் போற்றும் தன்மைக்கு வளர வேண்டும்
4.என் தாயின் அருள் உணர்வு என்றும் என்னுடன் இருக்க வேண்டும் என்று இபப்டி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

அதே சமயத்தில் தாய் உடலில் சேர்ந்த எங்களுக்காகப் பட்ட வேதனை உணர்வுகள் அனைத்தும் நீங்கி என் தாய் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட சக்தி

 

மனித வாழ்க்கையில் அதிகமாக சண்டையிடுவரையோ கலவரம் நடக்கும் சில செயல்களையோ நாம் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதே உணர்வுகள் நமக்குள் பதிவாகி நம் ஆன்மாவில் பால்வெளி மண்டலமாக ஆகிவிடுகிறது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் பதிவானாலும்
1.பதிவான உணர்வுகளை அப்போதே நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.ஓ…! என்று ஜீவ அணுவாக மாற்றும் கருத்தன்மையாக ஒரு இயக்கச் சக்தியின் அணுவாக மாற்றும் தன்மை பெறுகின்றது.
3.அப்படிப் பெற்ற அந்த உணர்வுகள் நம் ரத்தத்தில் கலந்தவுடனே அது கருத்தன்மை அடையும் தன்மை வருகின்றது

செடியில் இருந்து வரும் சத்தினைச் சூரியன் கவர்ந்து பரமாத்மாவிலே பரவச் செய்தால் அது மற்ற தாவர இனத்தை ஜீவன் ஊட்டும் சக்தியாக மாறுகின்றது.

இதே போலத் தான் நம் உடலில் பதிவான உணர்வுகள் பதிவான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்ட பின் நம் ஆன்மாவாக மாற்றி… எதன் பசி அதிகமோ அதன் வலு அதிகமாக இயக்கப்படும் பொழுது… அதன் குணத்தின் தன்மை கொண்டு தான் நாம் இயக்குகின்றோம்.

நாம் நினைக்கின்றோம்…! இவன் கோபக்காரன்… அவர்கள் இப்படி… இவர்கள் இப்படி என்று…! ஆனால் சந்தர்ப்பத்தில் பதிவான இந்த உணர்வு தான்… அது எதன் வலுவோ அதைக் கொண்டு இயக்குகின்றது.

எதன் உணர்வு நம் உடலுக்குள் அதிகமாகின்றதோ உள் நின்று இயக்குவது அதன் தன்மை. அதனால் தான் இராமாயணத்திலே தசரதச் சக்கரவர்த்திக்கு “வசிஷ்டர் பிரம்மகுரு…” என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் சண்டை இடுகிறான் என்றால் “என்ன…?” என்று வேடிக்கை பார்க்க மனதினைச் செலுத்தினால் அதைக் கவர்கிறோம் என்று பொருள். அது தான் வசிஷ்டர் என்பது.
1.நாம் எதை உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை கவர்கின்றோமோ
2.அப்படிக் கவர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு உணர்ச்சிகள் இயக்கப்பட்டாலும்
3.அந்த உணர்வுகள் நமக்குள் பிரம்மம் ஆகி விடுகிறது… அதனால் தான் வசிஷ்டர்.

நாம் கவர்ந்து கொண்ட உணர்வுகள் ரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக்கும் தன்மை பெறுகின்றது என்பதைத்தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்று காட்டுகின்றார்கள்.

நாம் தீமைகளைச் சந்தர்ப்பத்தில் பார்க்க நேர்ந்தால்…
1.என்ன செய்கின்றான்…? ஏது செய்கின்றான்…? தவறு செய்கின்ரானா…?
2.குற்றங்கள் செய்கின்றானா…? ரொம்பவும் பிழை செய்கின்றானா…?
3.வேதனைப்படுத்துகின்றானா…? என்ற எண்ணங்கள் கொண்டு அந்த மனிதனை உற்று நோக்கினால்
4.அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகி உயிரிலே பட்டு இயங்கத் தொடங்குகிறது
5.ஆகவே கவர்ந்து கொண்ட அந்த சக்தி வசிஷ்டர்…!

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம்… காந்தம் விஷத்தைக் கவர்ந்து கொண்ட பின் வசிஷ்டர். கவர்ந்து கொண்ட அதே காந்தம் ஒரு சத்தினைக் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர். ஆண்பாலாக மாறுகின்றது ஆண்பாலுக்குப் பிரம்மம் என்று பெயர்.

பிரம்மாவின் மனைவி அங்கே சரஸ்வதி. எந்தச் சத்தின் தன்மை கொண்டு இயக்குகின்றதோ அந்த ஞானத்தின் வழி அந்த அணுக்கள் இயக்கும்…! என்று பொருள்.

இன்று உலகம் எப்படி இருக்கிறது…? என்பதை நாம் தெரிந்து கொண்டோம். ஆனால்
1.இயற்கை நம்மை எப்படி இயக்குகின்றது…? எதன் வழி நாம் செல்கின்றோம்…?
2.நாம் குற்றவாளியா… அல்லது குற்றமற்றவர்களா…?
3.குற்றமற்றவராக இருப்பது குற்றமான செயல்களைச் செய்வது எப்படி…?
4.குற்றத்தை முன்னிலைப்படுத்தி இயக்குவது எது…? என்று
5.நம்மை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பல தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான உணர்வுகளை எடுத்துத்தான் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

ஒரு முயல் என்ன செய்கிறது…? நாயிடமிருந்து தப்ப எண்ணுகிறது. அதே சமயத்தில் அந்த நாய் நரியிடமிருந்து தப்ப எண்ணுகிறது.
1.அப்பொழுது “தப்ப வேண்டும்…” என்ற அந்த எண்ணங்களைச் சுவாசித்து
2.அந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் பெருக்கிக் கொள்கிறது.
3.இப்படித்தான் எல்லா உயிரினங்களும் வளர்ச்சி அடைந்து வந்தது.

ஒரு மான் சாந்தமானது. புலியோ கொடூரமானது. அந்தப் புலியிடமிருந்து மான் தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கின்றது.

இப்படிச் சிறுகச் சிறுக எண்ணி அந்த உணர்வு பெற்ற பின் கடைசியில் என்ன நடக்கின்றது…? அதாவது பல கோடி உடல்களை எடுத்துப் பல தீமைகளிலிருந்து நீக்கிடும் அருள் சக்தி பெற்ற இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.

அதைத்தான் தீமைகளிலிருந்து விடுபடும் எண்ணத்தை உருவாக்கி வந்ததை “இராமேஸ்வரம்” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இராமன் என்றால் எந்தச் சுவையை எடுக்கின்றோமோ அந்த எண்ணங்கள் வரும். அது தான் சீதாராமா என்பது. எதன் சுவையோ அதன் அந்த உணர்ச்சிகளின் எண்ணங்கள் வருகிறது,

ஆகவே இதைப் போல தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வுகள் எடுத்துக் “கோடிக்கரை” என்ற நிலையில் இருக்கின்றோம்.
1.அதாவது நாம் எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று
2.இன்று நாம் கடைசி உடலாக இருக்கின்றோம்.

கோடிக்கரை என்ற கடைசி உடலில் இருக்கப்படும் பொழுது இனிமேல் நாம் என்ன செய்ய வேண்டும்..?

தனுசு கோடி…! அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி மனித வாழ்க்கையில் வந்த இந்தத் தீமைகளை எல்லாம் நீக்கியவன். நாம் அகஸ்தியன் அடைந்த நிலையை அடைய வேண்டும்.

கோபப்படுவோரைப் பார்த்தவுடன் “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுத்தப்படுத்தி முடிந்தவுடனே என்ன செய்ய வேண்டும்…?

கோபமாகப் பேசிவர்களுக்குள் சாந்தமும் ஞானமும் விவேகமும் வர வேண்டும். நல்லது செய்யக்கூடிய அந்த உணர்வுகள் வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இப்படி நாம் எண்ணினால் அவன் கோபித்த உணர்வு நமக்குள் வருவதில்லை.
2.நமக்குள் நாம் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

ஒரு குழம்பை வைக்கும் பொழுது அதை எப்படி ருசியாக மாற்றுகின்றோமோ நம் உடலில் அந்தத் தீமைகள் புகாது… தீமைகள் வளர்ந்திடாது தடுத்துக் கொள்கிறோம்.

இல்லை என்றால் அந்தக் கோபப்படுவோரின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் அடுத்தாற்போல் வரப்படும் பொழுது… அவனைப் பார்த்தாலே “அவன் மோசமானவன்…” என்று நம்மைச் சொல்ல வைக்கும்.

யாராவது அவனைப் பற்றிச் சொன்னார்கள் என்றால் அல்லது அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் இதே நிலை வரும். அந்த நேரத்தில் எல்லாம் நமக்குள் பல கெடுதலான நிலைகள் வந்துவிடுகின்றது.

பின் நோயாகின்றது… பரிணாம வளர்ச்சியில் வந்த இந்த மனித உடலை வீழ்த்தி விட்டுத் தேய் பிறையாகிக் கீழே செல்ல வைக்கின்றது.

அதைத் தடுப்பதற்காகத்தான் இதை எல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கிறோம்.

யாம் (ஞானகுரு) உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நீங்கள் எப்பொழுது எண்ணினாலும் அந்தச் சக்தி கிடைக்கும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கப்படும் பொழுது
1.உங்கள் உடலில் உள்ள பல கோடி உணர்வுகளுக்குள்ளும் அது ஒன்றாகித் தனுசு கோடி ஆகின்றது.
2.அழியா ஒளிச் சரீரம் பெற ஏதுவாகின்றது.

மற்றவர்களைக் காக்கும் நிலை வந்தால் தான் நம்மைக் காக்கும் நிலை வரும்

 

1.மகரிஷியின் அருள் சக்திகளைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்கும் சில குறிப்புகளை எழுத வேண்டும்.
2.இருள் நீங்க வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சிறிது நேரமாவது நோட்டில் எழுதுங்கள்.
3.தொழில் வளமாக இருக்க வேண்டும்… நண்பர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள்.
4.நாம் எழுதினோம்… இப்பொழுது அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள் என்ற நிலை உங்கள் அனுபவத்தில் வரும்.

இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

குடும்பத்தில் ஏதாவது கேள்விப்பட்டால் நான்கு பேர் ஒன்று சேர வேண்டும். அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதற்கு 100 பேரைக் கூப்பிட வேண்டியதில்லை.

இந்த நான்கு பேரும் சேர்ந்து…
1.முடிந்த மட்டும் மகரிஷிகளின் எண்ண அலைகளை அங்கே பரப்புங்கள்.
2.அந்தக் குடும்பம் ஓரளவுக்கு சீரானால் அவர்களும் திரும்பிப் பார்ப்பார்கள்.

அந்த வீட்டில் நல்ல அலைகளைப் பரப்புகின்றோம். அதன் மூலம் எல்லோரும் நலமாக வேண்டும் என்று இந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பொழுது அது நல்ல வளர்ச்சிக்கு வரும்.

ஒருவரால் கனமான பொருளைத் தூக்க முடியவில்லை என்கிற பொழுது நான்கு பேர் சேர்ந்து தூக்கினால் எளிதாகத் தூக்க முடிகின்றது.

நண்பர்களுக்குள் மிகவும் அவஸ்தைப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்டால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாக எடுத்து அங்கிருக்கும் எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.

அந்தக் குடும்பத்தில் அந்த அருள் சக்தி படர வேண்டும் மகிழ்ச்சி பெறும் நிலைகள் அங்கே உருப் பெற வேண்டும் தொழில் வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இந்த மாதிரிச் செய்தால் தான் நாம் அதைப் பெற முடியும்… வளர்க்க முடியும்.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கச் சக்திகளை எடுத்தாலும் சூரியன் அதை எடுக்கும் பாதையில் மற்றவைகளுக்கும் அதை உணவாகக் கொடுத்து அதனின் உணர்வைத் தனக்குள் எடுத்து அதிலே வந்த நஞ்சைப் பிரித்து ஒளியின் சுடராக மாற்றுகின்றது.

இதைப் போலத் தான்
1.பிறிதொருவருவர் எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது ஞானிகள் எண்ண உணர்வை நமக்குள் வலுப்பெறச் செய்து
2.தீமைகளைப் பிளந்து தீமைகளைப் பிளந்திடும் உணர்வை வளர்த்து ஒளியாக மாறும் உணர்வை நாம் வளர்க்க வேண்டும்.

உங்களுக்குள் ஆழமாக இதைப் பதிவு செய்கின்றோம். இது நம் குருநாதர் காட்டிய வழி இது. இதை நிச்சயம் நாம் அனைவரும் பெற முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் செல்வதற்குத் தியானமும் தவமும் தேவை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற அந்தத் தவம் இல்லை என்றால் நாம் தியானத்தில் எடுக்கும் சக்திக்கு வேலை இல்லை. தவமிருந்தால் தான் உங்களுக்கும் அது கிடைக்கும். இந்தப் பண்புகளை நாம் வளர்க்க வேண்டும்.

உலகம் முழுவதும் நலம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எத்தனையோ அரசியல்வாதிகள் வந்தாலும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எல்லோரும் அந்த நன்மை பெறும் சக்தி பெற வேண்டும் என்று இதை ஓங்கி வளர்க்க வேண்டும்.
1.உலகம் நன்றாக இருக்க வேண்டும்… காற்று மண்டலம் நன்றாக இருக்க வேண்டும்.
2.நாம் பார்ப்போர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதைக் காட்டிலும் முக்கியமானது ஒன்று உண்டு…!

வீட்டிலே திருமணம் ஆகிப் கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டால்… முதல் அந்த மூன்று மாதத்திற்குள் அவர்களை அணுகி எமது உபதேச நூல்களைக் கொடுத்து அதைப் படித்துக் கேட்கும்படிச் செய்து அதை எல்லாம் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் உள்ளோர் தியானமிருந்து கருவிலிருக்கும் சிசு அகஸ்தியன் பெற்ற அருள் சக்தியைப் பெற்று “ஞானக் குழந்தையாக வளர வேண்டும்…” என்று தவம் இருங்கள்.
1.அந்தத் தவம் உங்களைக் காக்கும்.
2.அருள் ஞானி பிறக்கும் அது உலகத்தைக் காக்கும்
3.அப்படிக் காக்கக்கூடிய நிலைகள் உருவாக வேண்டும் என்று தவத்தை நாம் இருக்க வேண்டும்.
4.இந்த உணர்வை வளர்த்தோம் என்றால் தான் இந்த உலகை நாம் மீட்க முடியும்… உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக நாம் பெற முடியும்.
5.இந்த உடலான உலகத்திலிருந்தும் நாம் மீள முடியும்.
6.மீண்டும் உடல் பெறும் நிலைகளிலிருந்து நாம் மீள முடியும்.

இதைச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டு நாம் செயல்படுவோம். குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பத்தாவது நிலையை அடையக் கூடிய தகுதி பெற்றது தான் இந்த மனித உடல். நம் உடலில் எத்தனையோ நல்லவைகள் இருப்பினும் கோபம் வெறுப்பு சலிப்பு வேதனை சஞ்சலம் சங்கடம் இவை எல்லாம் நம் உடலில் அரக்க குணங்களாக இருக்கிறது,

அதைக் காட்டுவதற்காகத்தான் இராமாயணத்தில் பத்துத் தலை இராவணன் என்று காட்டுகின்றார்கள். இராவணன் என்ன செய்கிறான்…? சீதாவைச் சிறை பிடிக்கின்றான்.

ஆக ஒருவர் செய்யும் தவறைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வருகிறது. கோபம் வரும் பொழுது…
1.நம் உடலில் நல்ல குணங்கள் இருந்தாலும் அந்தக் குணத்தைச் செயலற்றதாக மாற்றி
2.தவறு செய்பவனை உதைக்க வேண்டும்…! என்ற எண்ணங்கள் தான் வரும்.

அதே மாதிரி ஒருவனை வேதனைப்படுத்துகிறான் என்றால் அவனை நினைக்கும் போது…
1.அந்த வேதனைப்படுத்தும் உணர்வு காற்றிலே இருக்கிறது.
2.நாம் நுகர்ந்து அறியப்படும் போது அதே உணர்வு நம்மையும் வேதனைப்படுத்தும் செயலைச் செயல்படுத்துகின்றது.

ரேடியோ TV அலைகளை எந்த அலைவரிசையில் ஒலிபரப்பு செய்கின்றனரோ அந்தந்தச் சுவிட்சைப் போட்டவுடன் அதே நிலை வருகின்றது.

அதே போல் தான்…
1.மனித வாழ்கையிலும் ஒவ்வொரு ஸ்டேசனாகப் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.
2.திட்டியவர்கள்… வெறுப்புடன் போனவர்கள்… சண்டை போட்டவர்கள்… என்று
3.அவர்களை நாம் நினைக்கும் போதெல்லாம் காற்றிலிருந்து இழுத்து நமக்கு அந்தந்த உணர்வுகள் தான் வருகின்றது.

நாம் இதே வழியில் போனால் அதை எல்லாம் துடைக்க வேண்டும் அல்லவா.. அதற்குச் சக்தி வேண்டுமல்லவா…! ஏனென்றால் இத்தகைய தீமையின் நிலைகளை எல்லாம் நீக்கிப் பழகியவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி உணர்வுகளைத் தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கிறோம்.

பின் பதிவான அந்தச் சக்தியை தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய திறனையும் உங்களுக்கு உண்டாக்குகிறோம்.

காலை துருவ தியானம்… மதியம்… இரவு நேரம் தியானம்…! செய்வதன் மூலம் அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கி வைத்துக் கொண்டால் தீமைகள் வரும் பொழுது மாற்றிக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு கோபப்படுபவனை நாம் பார்த்தால் நம் உயிரிலே அந்தக் கோப உணர்ச்சிகள் பட்ட பின் நமக்கும் கோபம் வரும். அப்பொழுது
1.அந்த நேரத்தில் நாம் கோபிக்கின்றோமா…
2.நாம் நுகர்ந்த அந்த உணர்வு நம்மைக் கோபிக்கச் செய்கிறதா…? என்று சிந்தித்துப் பாருங்கள்…!

நாம் கோபப்படவில்லை.. நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகிறது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆனால் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்தக் கோபப்படும் உணர்வுகள் உமிழ் நீராக மாறி அது நம் சாப்பாடுடன் சேர்த்து இரத்தமாக மாறும் போது அதிலே கார உணர்ச்சியைத் தூண்டும் கருத்தன்மை அடைகிறது.

ஒரு தடவை கோபப்பட்ட பின் அடிக்கடி அதே மாதிரிக் கோபமாக எண்ணினால் அந்த அணுக்கள் நம் உடலிலே பெருகத் தொடங்கினால் இரத்தக் கொதிப்பு வந்துவிடும்.

அந்த இரத்தக் கொதிப்பை மாற்றுவது யார்…?

1.டாக்டரிடம் சென்று மருந்தைச் சாப்பிட்டுச் சௌகரியம் செய்யலாம்.
2.ஆனால் அந்த கோபக்காரனைக் கண்ணால் பார்த்த உணர்வு நம் உடலின் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக இருக்கிறது.
3.அதிலிருந்து அது மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கும்.

அதை எப்படி மாற்றுவது…?

அந்த மாதிரி வராதபடி அப்போதைக்கு அப்பொழுது நாம துடைக்க வேண்டும் என்றால் உடனே ஈஸ்வரா…! என்று சொல்லிப் புருவ மத்தியில் உயிரை எண்ணித் தடுக்க வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அனுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் அந்த உணர்வைச் செலுத்தி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இப்படிச் செய்தால் அந்தக் கோபமான வித்திற்குப் பக்கத்திலேயே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகும். இது வலுவான பின் கோப உணர்வின் வித்துக்கு உணவில்லாதபடி அதைச் செயலிழக்கச் செய்துவிடும்.
1.இப்படிச் செய்தால் தான்
2.எந்த ஒரு தீமையான வினையிலிருந்தும் நாம் விடுபட முடியும்…!

ஞானம் எதிலே தோன்றியது…? அதை எல்லோருக்கும் எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் குருநாதர் காட்டினார்

 

ஞானிகள் உணர்வைப் பெறுகின்றோம்… அதை நமக்குள் வளர்க்கின்றோம். நம்மைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஏனென்றால் உயிர் கடவுளாக இருக்கின்றது
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்திலே சந்தர்ப்பத்திலே தீமைகள் புகுந்து வாட்டுகின்றது.
2.தீமையிலிருந்து விடுபட மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று…
3.மகரிஷிகளின் அருளைத் தியானித்து அந்த வலுவை ஏற்றி எல்லோரும் பெற வேண்டும் என்று நாம் தவம் இருக்க வேண்டும்.

அப்பொழுது உயிரான ஈசனிடத்திலிருந்து மகிழ்ந்திடும் உணர்வுகள் விளைந்து வருகின்றது. அந்தத் தவத்தின் பலனை நாம் பெற முடியும்.

இந்த மூலக்கூறை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டவன் எங்கோ இருக்கின்றான் என்ற நிலை இல்லாதபடி நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் தான் அந்த ஈசன். அதைத் தியானித்து எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த தவத்தின் பயனாக நல்ல விளைவினை நுகர்ந்து அந்த உணர்வை நாம் பெறுகின்றோம்.

மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் இது தியானம். மகரிஷிகள் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணம் அனைவரும் பெற வேண்டும் என்று எடுத்தால் தவம்.

1.மற்ற எத்தனையோ பேர் ஞான மார்க்கங்களைக் காட்டுகின்றார்கள்… ஆனால் அதிலேயே நின்று விடுகின்றார்கள்.
2.ஞானம் எதிலே தோன்றியது…? ஞானத்தை எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் நமது குருநாதர் காட்டினார்.

ஆகையினால் எல்லோருடனும் ஒன்றி இந்த உணர்வை வளர்க்கச் செய்வதற்கும் நாம் எதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதைத்தான் செயல்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

புகழ் தேட வேண்டும் என்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம்… புகழ் வரும்.
1.ஆனால் மெய் ஞானக் கருத்துக்களை யாரும் அறிய முடியாது.
2.நமக்குள் அதை விளைய வைக்கவும் முடியாது.

இந்த உடலில் இச்சைக்காக எதை வேண்டும் என்றாலும் பெறலாம்… நொடியில் பெற முடியும். ஆனால்
1.என்றைக்கும் நிலைத்திருக்கும் அழியாத நிலையான
2.பிறவி இல்லா நிலை அடைய வேண்டுமென்றால் அதற்குக் கொஞ்சம் பொறுப்பும் பொறுமையும் தேவை.

இந்த உடலுடன் யாரும் இருந்ததில்லை மகரிஷிகளும் சரி ஞானிகளும் சரி. ஆகவே… இந்த உடலிலிருந்து அடுத்து இன்னொரு பிறவிக்கு நாம் வரக்கூடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குழம்பு வைக்கும் பொழுது ஒரு மிளகாய் அதிகமாகப் போய்விட்டது என்றால் நம்மால் சாப்பிட முடிவதில்லை. காரம்…காரம்…! என்று தான் சொல்வோம்.

உதாரணமாக ஒரு கோபக்காரனைப் பார்த்துவிட்டுப் பெண்கள் வந்து குழம்பு வைத்தால் அதிலே இரண்டு மிளகாயை அதிகமாகப் போட்டுத் தான் ஆவார்கள்.

அதே சமயத்தில ஆண்கள் அந்தக் கோபப்படுவோரை வேடிக்கை பார்த்து விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தால் உணவை வாயிலே வைத்ததும் ஒரு எரிச்சல் உண்டாகும். எரிச்சலானதும் நமக்கும் உடனே அதே கோபப்படக்கூடிய உணர்வைத் தூண்டும்.

மிளகாயை அதிகமாகப் போடச் செய்வதும் எரிச்சலடையச் செய்வதும்
1.இதை எல்லாம் யார் செய்வது….? நாம் கோபப்படுகிறோமா…?
3.அந்தச் சந்தர்ப்பத்தில் பார்த்த அந்த உணர்வுதான் நம்மை அப்படிச் செயல்படுத்துகிறது.

அதே போலத்தான் ஒரு வேதனைப்படுவோரைப் பார்க்கிறோம். நம்முடைய சந்தர்ப்பம் அடிக்கடி அந்த வேதனைப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால் அதை நுகர நுகர… வேதனையை உருவாக்கும் விஷத் தன்மைகள் நம் இரத்தத்தில் கலக்கும்.

பின் அதனால் வாத நோய்… சரவாங்கி நோய்… மூட்டு வாதம் வந்து விடுகின்றது. வாத நோய்களில் எத்தனையோ வகையான நிலைகள் உண்டு.

ஆனால் நாம் தப்பு செய்யவில்லை…!

ஆகவே இந்த மாதிரிப் பிறருடைய கஷ்டத்தையோ பிறர் படும் வேதனையோ பிறர் கோபத்துடன் சண்டையிடுவதையோ நாம் நுகர நேர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.அடுத்த நிமிடமே ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்…
3.அது எங்கள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும் கலக்க வேண்டும்
4.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
5.கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் உள் முகமாகச் செலுத்திச் சுத்தப்படுத்த வேண்டும்.

பின் எந்தக் கோபப்படுவோரைப் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்தோமோ அவர்களுக்குள் சாந்தமும் ஞானமும் விவேகமும் வர வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் வழியில் வாழக்கூடிய சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

அதே போல் வேதனைப்படுவோரைப் பார்த்திருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று அவர்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கி வேதனையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இப்படித்தான் நாம் எண்ணுதல் வேண்டும்.

விஷமான கருணைக் கிழங்கை வேக வைத்து அதிலே காரத்தைச் சேர்த்துப் புளியைக் கரைத்து மற்ற பொருள்களை எல்லாம் சேர்த்து அதை ருசியான குழம்பாக மாற்றுவது போல் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம் மீது வந்து மோதும் மற்ற உணர்வுகளை நல்லதாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

அப்படி மாற்றினால்…
1.நாம் நுகரும் இத்தகைய உணர்ச்சிகள் நம் உணவுடன் சேர்த்து நல்ல இரத்தங்களாக மாறிவிடுகிறது
2.நோய்கள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

“மகரிஷிகளின் அருள் சக்தி” எங்கும்… எதிலும்… பரவ வேண்டும் என்பதை நாம் சொந்தமாக்க வேண்டும்

 

சாமி நன்றாகப் பேசுகின்றார்… உபதேசிக்கிறார்…! என்று கேட்டு விட்டு இதை அப்படியே நீங்கள் விட்டு விடாதீர்கள். அப்படி ஆகிவிடக்கூடாது.
1.காரணம் எல்லோரும் நீங்கள் தயாராக வேண்டும்.
2.அவரவர்கள் இதைப் பெற முயற்சி எடுங்கள்.
3.இந்தக் கருத்துக்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்… அதை நீங்கள் எழுத வேண்டும்.

யாம் சொல்லும் போது பல நிலைகள் தெரிய வரும்.
1.அந்தக் கருத்துக்களை எழுதிப் பதிவு செய்யும் பொழுது ரெக்கார்டு ஆகும்.
2.எதை நீக்க வேண்டும்…? எதைச் செயல்படுத்த வேண்டும்…? என்று எண்ணும் போது அந்த உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
3.இந்த உணர்வின் வளர்ச்சி நம்மைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டே வரும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நோக்கத்தில் தான் இதை எல்லாமே பதிவு செய்கின்றேன். அதை நீங்கள் வளர்த்துப் பழக வேண்டும். இது உங்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தரும்.

இங்கே கேட்டுவிட்டு… அடுத்தாற்போல் வெளியிலே சென்றால் புற உணர்வுகள் இதை மறைக்கும். அப்படி மறைத்ததை மீண்டும் தெளிவாக்க நேரமாகிறது. “நம்மால் முடியவில்லையே…” என்று ஒரு பலவீனமான… விரக்தியான எண்ணங்கள் வந்துவிடும்.

தலையில் அதிகமான சுமையை ஏற்றி விட்டால் தூக்க முடியாமல் போகிறது அல்லவா. அது போன்று வருவதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே நீங்கள் அருள் உணர்வுகளை வளர்த்து உங்களுக்குள் அதைப் பெருக்கி உயர்ந்த உணவுகளை எடுத்துச் சொல்லி உங்களை அணுகி வருபவரையும் தயார் செய்ய வேண்டும்.

1.எத்தகைய தீமைகள் வந்தாலும் “அதை மாற்றுவதற்குண்டான வழி எதுவோ…”
2.அதை நாம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்… இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…! “இதை நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டே வரவேண்டும்…”

வெறுமனே தியானம் மட்டும் செய்தால் பத்தாது. நாம் தொழில் செய்யும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய எதிர்மறையான சிக்கல்களிலிருந்தும் விடுபட்டுப் பழக வேண்டும்.

காரணம்… ஆர்வத்தில் இங்கே வருவார்கள் குறைகளைக் கண்ட பின் எம்முடைய உபதேசத்தை (தியானத்தை) விட்டு விடுவார்கள். குறைகளை வளர்த்து விடுவார்கள்.

தொடர்ந்து தியானிக்கும் போது “நீங்கள் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவ்வப்பொழுது அதைச் சுட்டிக்காட்டி…” அந்தக் குறைகளை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும்…? என்ற உணர்வை அது மாற்றிக் கொடுக்கும்.

அதை உருவாக்கினால் தான் அந்த உணர்வின் அனுபவம் உங்களுக்கு எழுத்து வடிவம் கொண்டுவர ஏதுவாக இருக்கும். உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி விளைய வைக்கவும் முடியும்.

விவசாயப் பண்ணைகளில் பல சத்துகளை ஒன்றாக இணைத்து வீரிய செடியாக உருவாக்கினார்களோ மாற்றியமைத்தார்களோ இதைப் போன்று நாம் ஞானிகள் உணர்வை இணைத்து வீரிய சக்தியாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு உடலிலும் வந்த உணர்வுகளை மாற்றி அதற்கொப்ப பரிணாம வளர்ச்சியில் எப்படி உடல்கள் பெற்று வந்தோமோ… நம் உயிர் மாற்றியதோ இதைப் போலத்தான் நம் தொழில் செய்தாலும் வேலை செய்தாலும் அதன் மூலமாக
1.ஒவ்வொரு நொடியிலும் அதற்குள் அருள் உணர்வைப் பெருக்கி அதை மாற்றி அமைத்து
2.வாழ்க்கையே தியானம் என்ற நிலைகளுக்கு நாம் வளர்ச்சியின் பாதையில் கொண்டு வர வேண்டும்.

உடல் வாழ்க்கைக்கு நாம் தொழில் செய்ய வேண்டி இருக்கின்றது. ஆனாலும் தொழிலில் வரக்கூடிய சிக்கல்கள் நாம் போகும் பாதையை அது தடைப்படுத்தி விடக்கூடாது.

ஆகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வைப் பெருக்கிடும் நிலையாக நம்முடைய வளர்ச்சி என்றுமே அந்த மகரிஷிகள் காட்டிய வழியில் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் ஞாபகப்படுத்துவது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரணு தோன்றி இப்பொழுது நாம் பரசுராமனிலிருந்து நவமி… ஒன்பதாவது நிலைகளில் இருக்கிறோம். எது…? அதாவது பத்தாவது நிலையை அடையக்கூடிய மனித உடலில் நாம் இருக்கிறோம். அதுதான் தசரதச் சக்கரவர்த்தி என்பது.

மனித வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு நோயாளியைப் பார்க்கிறோம். அல்லது ஒரு கோபப்படுபவனைப் பார்க்கிறோம். பார்த்தவுடனே என்ன… ஏது…? என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.

அதுதான் வசிஷ்டர்… (வசிஷ்டர் என்றால் கவர்ந்து கொண்ட சக்தி)
1.தசரத சக்கரவர்த்திக்குத் தான் தெரிந்து கொள்ள விரும்பிய உணர்வுகள்
2.அது கவர்ந்து கொண்ட சக்தியாக – வசிஷ்டர்
3.உயிரிலே பட்டு உணரும் தன்மை ஆகும்போது தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்ம குரு.

கவர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலே பிரம்மமாகி அவன் எதைப் பேசினானோ
1.அவன் கோபமாப் பேசினால் நாமும் கோபமாகப் பேசும் சக்தி வருகிறது
2.அவன் வேதனைப்பட்டால் அந்த வேதனை உணர்வைத் திருப்பிச் சொல்வோம்.
(அது தான் வசிஷ்டர் பிரம்மகுரு)

பிரம்மகுருவின் மனைவி யார்…?
1.வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட உணர்வுகள் அணுவாக உருவானால் அதன் சக்தியாக அருந்ததி…!
2.கோபமாப் பேசிய உணர்வு இருந்தால் அதனுடன் இணைந்து
3.அந்தக் கார உணர்வுகளை நம் உடலிலே உருவாக்கும் என்பதைத் தான் இங்கே தெளிவாக்குகின்றார்கள்.

அதனால் தான் தசரதச் சக்கரவர்த்தி என்கிற போது ஒவ்வொரு தீமையிலிருந்தும் நாம் இச்சைப்பட்டுத் தப்ப வேண்டும்… அதாவது
1.இச்சைப்பட்டு அந்த உணர்வைச் சேர்த்து இயங்கும் நிலைகள் என்பதை
2.”இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவன் தசரதச் சக்கரவர்த்தி…” என்று உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

நம் சாஸ்திரங்களில் எவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்று புரிந்து கொண்டால் போதும். மனிதன் உயர்ந்த நிலை பெற இராமாயணத்தில் எவ்வளவு பெரிய உண்மைகள் உள்ளது என்பதையும் உணரலாம்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரும் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்று இச்சைப்பட்டு அப்படித் தப்பி வந்தது தான் இந்த உயிர்… “பத்தாவது நிலை அடையக்கூடியது…!”

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே கடவுள் யார்…? நம் உயிர் தான் கடவுள்…! நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ உள் நின்று அதை இயக்குகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறரைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகர்கின்றோம். அந்த உணர்வுகள் நம்மையும் வேதனைப் படச்செய்கிறது.

1.இருந்தாலும் நாம் எல்லோரையும் காப்பாற்றிவிடுகிறோம்.
2.காப்பாற்றிய பின் அவர்களுக்கு வந்த நோய் நமக்கு வந்தவுடனே என்ன நடக்கின்றது…?
3.ஐயோ… அவர்களை எல்லாம் காப்பாற்றினோமே…! எனக்கு இப்படி நோய் வந்து விட்டதே…! என்று புலம்புகிறோம்.

அப்படி வேதனைப்படும் சமயங்களில் யாராவது சந்தோசமாச் சிரித்து பேசினால் நீங்கள் பொறுத்து இருப்பீர்களா…? நான் இருக்கும் நிலையைப் பார்த்து உனக்குக் கிண்டலாக இருக்கிறதா என்போம்…! இதே நிலைமை உங்களுக்கும் வந்தால் தான் தெரியும்…! என்று சொல்வோம்.

அதே மாதிரி ஒருவர் திட்டினார்… வேண்டாத பேச்சுகளைப் பேசினார் என்று சொன்ன பிற்பாடு “அட… திட்டி விட்டுப் போகிறார்… விடுங்கள்…!” என்று சொன்னால் நமக்குக் கோபம் வருகிறதா இல்லையா…?

அப்பொழுது என்ன செய்கிறீர்கள்…? உங்களிடம் சந்தோஷத்தை ஊட்டக் கூடிய நிலையை எதையாவது பாரக்க முடிகிறதா…? ஆக மொத்தம் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் ஆகும்போது என்ன நடக்கிறது…?

1.நம் உயிர் பத்தாவது நிலையை அடையக்கூடியது.
2.இந்த மனித உடல் தசப்பிரியன்.
3.சீதா என்பது உடலுக்குள் சந்தோஷத்தை ஊட்டக் கூடிய நிலைகள்.

நீங்கள் கோபமாக இருக்கும் போது மற்றவர்கள் சிரித்துப் பேசினால் சந்தோஷம் வருமா…? கிண்டல் செய்கிறீர்களா…? என்று சொல்லி அவர்களை உதைக்கத் தான் செல்வீர்கள்.

அதே மாதிரி நீங்கள் வேதனைப்படும்போது யாராவது சிரித்தால் என்ன ஆகும்…? நாம் படுவதைப் பார்த்தால் அவர்களுக்குச் சிரிப்பு வருகிறது…! என்று பொறுமுவோம்.

உங்கள் பையனே குறும்புத்தனம் செய்தாலும் அவன் நல்லவனாக வரவேண்டும் என்று சொல்லி மற்றவர்கள் சிரித்துக் கொண்டு இருந்தால் “அங்கே பார்…! அவன் சேட்டை செய்வதைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்… அறிவு இருக்கிறதா…? என்று கேட்போம்…!
1.அந்த நேரத்தில் சந்தோஷம் என்பதே வரவில்லை.
2.அதைக் காட்டுவதற்காகத்தான் பத்துத் தலை இராவணனைத் தசைப்பிரியன் என்று காட்டுகின்றார்கள்.

நாம் எத்தனையோ கோடி உடல்களில் வந்த தீமைகளை எல்லாவற்றையும் நீக்கி மனிதனாக வந்திருக்கின்றோம். ஆனால் இப்பொழுது நம்முடைய சந்தர்ப்பம்
1.நம் பார்வையில் படும் உணர்வுகள் உடலுக்குள் வந்தவுடன்
2.அந்த அரக்க உணர்வுகள் இந்த மனித உடலையே அழித்துக் கொன்று தின்கிறது என்று காட்டுகிறார்கள்

மற்ற உயிரினங்கள் எப்படி ஒன்றை ஒன்று கொன்று தின்றதோ அதே மாதிரி நம் உடலுக்குள்ளும் பல பல குணங்களின் உணர்வுகள் வந்து மனித உடலை உருவாக்கிய அணுக்களைக் கொன்று தின்கிறது.

உதாரணமாக கோபம் என்ற அந்தக் காரமான உணர்ச்சி வந்தால் நமக்குள் உள்ள நல்ல சாந்தமான அணுக்களைக் கொன்று திங்க ஆரம்பிக்கிறது. அப்பொழுது சரியானதைக் கேட்க வேண்டும் என்றால் கேட்க முடியாது.

அதே சமயத்தில் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எண்ணினால் அந்த விஷத் தன்மை உடலுக்குள் பரவும் பரவிய பின் கை கால் வலிக்கும். அந்த நேரத்தில் உங்களிடம் சந்தோஷம் வருமா…?

ஆக சந்தோஷப்படும் அந்தச் சீதாவை (மகிழ்ச்சியை) இராவணன் இலங்கையில் (உடலுக்குள்) சிறைப்பிடித்து வைத்து விடுகிறான்…! என்று எவ்வளவு அழகாக இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

உயிரணு தோன்றிய பின் பல உணர்வின் தன்மைகளை எடுத்துக் கடவுள் அவதாரம் “வராகன்” என்று வந்த பின் தீமையை நீக்கி தீமையை நீக்கக்கூடிய உடலாகப் பெறுவது “பரசுராம்…” (மனித உடல்)

மனிதனான பின் வரும் தீமைகளைச் சமப்படுத்த வேண்டும் என்று எண்ணினாலும் அதைச் சீராகப் பயன்படுத்தாதபடி பலருடைய உணர்வுகளைத் தெரிய வேண்டும் என்று விரும்பி நுகர்கிறோம் “பலராம்” (பல எண்ணங்கள் – பலராமன்).

பல எண்ணங்களை எடுத்துத் தீமை என்ற உணர்வு ஆனபின் அதைத் தடுக்க வேண்டுமல்லவா…! அது தான் நரசிம்மா…!
1.அந்தத் தீமைகளை உடலுக்குள் உருவாக விடாதபடி
2.மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன் அந்த இரண்யனைப் பிளந்தான்
3.ஆகவே அந்த ஒன்பதாவது நிலைகளில் தீமை புகாது தடுத்தால் தான் நாம் இங்கிருந்து தப்ப முடியும்
4.பத்தாவது கல்கி என்ற அழியாத ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகத்தை அடைய முடியும்.

ஞானிகளால் படைக்கப்பட்ட காவியங்களில் உள்ள உட்பொருளை அறிந்து கொண்டால் நாம் விண் செல்வது சுலபம்.

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”

 

விநாயகர் சதுர்த்தி அன்று அருள் மகரிஷிகள் உணர்வுகளை நாம் அனைவருமே நமக்குள் எடுத்துப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஆனால்
1.ஏற்கனவே எண்ணத்தால் நுகர்ந்த பிற தீமையான உணர்வுகள் அணுக்களாக இருக்கின்றது.
2.அதைத் தடைப்படுத்தி விட்டால் ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அது பாட்டுக்கே விலகிப் போய்க் கொண்டே இருக்கும்.

இந்தப் பூமியின் சுழற்சியின் தன்மையில் கடலின் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கடல் பக்கத்திலே இருந்து பாருங்கள்.
1.அருகில் சென்றோம் என்றால் நம்மை உள்ளே இழுக்கும்.
2.அலைகள் மாறி மாறி வரும் பொழுது மோதி… மறுபடியும் உள்ளே தனக்குள் இழுக்கும்.

இதைப் போன்று இந்த உணர்வின் தன்மை எந்தெந்த மனிதர் பால் எண்ணி எடுத்து வைத்திருக்கின்றோமோ அது வளர்ந்த பின் “அந்த உணர்வுகள்”
1.எதிலும் சிக்கவில்லை என்றால் செடி கொடி மரங்கள் இருக்கும் பக்கம் செல்லாது.
2.அங்கே சென்றால் செவுட்டில் அடித்த மாதிரி அடித்து விலக்கித் தள்ளிவிடும்.

மரம் செடி கொடி அவைகள் வெளிப்படுத்தும் உணர்வின் சத்து தான் நமக்குள் எண்ணங்களாகத் தோன்றி வளர்ந்து வந்தது. ஆனால் தீமையான உணர்வுகள் கலந்து மனிதனுக்குள் விளைந்தது.

ஆகையினால் மனிதனால் உருவாக்கிய தீமையான அலைகள் தாவரங்கள் அருகே அங்கே போகாது போக முடியாது.

விண்ணிலே சூரிய குடும்பத்தில் உருவான கோள்கள் சூரியனின் பிடிப்பில் இல்லை என்றால் திசை மாறிச் சென்று எங்கே போய் மடிகின்றது என்று சொல்ல முடியாது. பெரிய சுழல் இருக்கும்… அதிலே கரைந்து விடும்.

இதைப் போன்று தான் சுழற்சியின் ஈர்ப்பு வட்டம் பெரிய கடல்… அது பூமியில் முதலிலே உருவானது. அதிலே கரைந்து தனக்குள் கரைத்து மீண்டும் வெளிப்படுத்தும்.

இதே போல தான் “மனிதர்கள் ஈர்க்காத உணர்வுகள்…” கடலின் ஈர்ப்புக்குள் சென்று மூழ்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத் தான் சதுர்த்தி என்று உருவாக்கப்பட்டு… தீமை செய்யும் உணர்வுகளை இப்படித்தான் கரைக்க வேண்டும் என்று சிலையைப் புறத்தில் காட்டி
1.மக்களுக்குள் விளைந்த தீமையான வினைகளைp பிறர் பால் பற்று கொண்டு எண்ணி எடுத்த உணர்வுகளைத் தனக்குள் பதிவாக்காதபடி
2.அவர்களை நலமாக்க வேண்டும் என்ற உணர்வினை எடுத்துப் பகைமை உணர்வுகள் இங்கே நிற்காது அப்புறப்படுத்த வேண்டும்.

இங்கே யாரும் எடுக்கவில்லை… நாமும் எடுக்கவில்லை… அவர்களும் எடுக்கவில்லை என்றால் நாம் வாழும் இடத்திலே அது நிற்காது.

விநாயகர் சதுர்த்தி அன்று உலக மக்கள் அனைவருமே
1.இது போன்று அருள் உணர்வுகளை ஏகோபித்த நிலையில் எடுத்துப் பகைமை உணர்வுகளை இழுக்கவில்லை என்றால்
2.இது எல்லாம் ஒதுங்கி கடலுக்குள் சென்று அமிழ்ந்துவிடும்.

அதாவது ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்ளவில்லை என்றால் அந்த உணர்வுகளுக்கு இங்கே இடமில்லை. அப்பொழுது அந்த உணர்வுகள் அது பாட்டுக்கே நகர்ந்து சென்று கடலுக்குள் சென்று மூழ்கிவிடும்.

1.விநாயகர் சதுர்த்தி என்றால் தீமைகளை நிறுத்து…!
2.உனக்குள் தீமையின் வளர்ச்சியைத் தடைபடுத்து…
3.அதைக் கரைத்து விடு…! சாஸ்திரப்படி இது உண்மை.

உயிராத்மாவைக் காக்கும் வலிமைமிக்க சக்தியே வள்ளி

 

கேள்வி:-

ஓம் ஈஸ்வரா குருதேவா… 🙏

நமது உயிரணு நம் புவியின் ஈர்ப்புக்குள் வந்து, பல பல தாவர இனங்களை நுகர்ந்து, உடல் பெற்றாலும்…. சந்தர்ப்பத்தால் ஓர் விஷச்செடியின் மணத்தை நுகர்ந்து விட்டால், அந்த மணத்தின் தன்மை அந்த உடலுக்குள்… எதிர் நிலையாகி, தான் நுகர்ந்து கொண்ட விஷத்தின் ஆற்றல், அந்த உடலுக்குள் வங்கிட்டு அதன் வளர்ச்சியின் கதியில் அடுத்த சரீரம்…. மற்ற உயிரினங்களை உட்கொள்ளும் உயிரினங்களாக உருப்பெறுகின்றது.
ஆனால், பரிணாம வளர்ச்சியில் தன்னைக் காட்டிலும் வலுவான உயிரினங்களிடமிருந்து தன்னை அவற்றிடமிருந்து காத்துக் கொள்ளும் நிலை பெற்றாலும்… அதன் உடலிலிருந்து வெளிப்படும் ” வலிமையான உணர்வை ” நுகர்ந்தோ அல்லது அதன் உடலுக்குள் சென்று “அதன் உணர்வைக் கவர்ந்தோ” வலிமையான உடல் பெறுகின்றது.

அதாவது நமது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும், வலிமையான சக்தியை நோக்கி சென்று, அதை நுகர்ந்து, வலிமையான உடல் கொண்ட உயிரினங்களாக உருவாக்குகின்றது.

இதில், தான் நுகர்ந்து கொண்ட “வலிமையான சக்திதான்” ஒவ்வொரு சரீரத்திலும் தன்னை தற்காத்துக் கொள்ளும் நிலைகள் பெற்றது.

இதில்
1) ராமாயணத்தில் உணர்த்தப்பட்ட வலிமையான சக்தி, கைகேயி… மனிதனான பின் இந்த வலிமையின் சக்தியின் செயலாக்கங்கள் ராமனை அதாவது நல்ல எண்ணங்களை ஒதுக்கிடும் நிலைகளை உருவாக்குகின்றது.
2) கந்த புராணத்தில் வலிமையான சக்தியைக் காட்டி அதை ஆறாவது அறிவான முருகன் காதலிக்கின்றான் என்று உணர்த்தப்பட்டுள்ளது.

அதற்கும் இதற்கும் உண்டான வித்தியாசம் என்ன சாமிகளே…?

நாம் மனிதனான பின் நமது உயிரான ஈசனுக்கு, இந்த பிரபஞ்சத்திலேயே… வலிமையான சக்தியான “துருவ நட்சத்திரத்தின் உணர்வை” நமது உயிருடன் ஒன்றி… நமது உயிர் வழியாகக் கவர்ந்து, நமது உயிரால் உருவாக்கப்பட்ட அணுக்களையும் பெறச் செய்யும் தியானத்தை நமது ஞானகுருவும், சற்குருவும் அருளியுள்ளார்கள்.

நமது ஞானகுரு ஓர் உபதேசத்தில் “நான் துருவ நட்சத்திரத்தை காதலிக்கிறேன்” என்று உரைத்துள்ளார்.

ஆகவே ராமாயணத்தில் காட்டப்பட்டுள்ள வலிமையான சக்திக்கும், கந்த புராணத்தில் காட்டப்பட்டுள்ள வலிமையான சக்திக்கும் உள்ள வேறுபாடு என்ன..?

பதில்:-

நமது குருநாதர் (ஞானகுரு) பரிணாம வளர்ச்சியைப் பற்றிச் சொல்லும் பொழுது மனிதனுக்கு என்று சில வழிமுறைகளை தனியாகக் காட்டியுள்ளார்.

ஏனென்றால் மற்ற உயிரினங்கள் அனைத்துமே மனிதனைக் காட்டிலும் அறிவின் வளர்ச்சி குறைவு. அவைகள் தன்னைக் காட்டிலும் வலிமையான சக்தியை நுகரப்படும் பொழுது பரிணாம வளர்ச்சியாகின்றது.

ஆனால் மனிதனுக்கோ வலிமை எது…? என்று சாஸ்திரங்கள் கூறியிருந்தாலும் அது எல்லாம் அரசர்கள் காலத்தில் மறைக்கப்பட்டு விட்டது.
1.ஆகையினால் வலிமை என்று எண்ணினாலே மனிதன் தன்னுடைய உடல் வலிமை தான் என்றும்
2.அதனுடன் இணைந்த எத்தனையோ மற்ற செயல்களோடு இணைத்து அதைத்தான் வலிமை என்று எடுத்துக் கொள்கின்றான்
3.அதனால் தான் ராமாயணத்திலே அந்த வலிமையைக் காட்டுவதற்கு கைகேயி என்று பெயர் வைக்கின்றார்கள்
4.கை+கேயி – மனிதனுடைய கை மிக மிக சக்தி வாய்ந்தது… அதனால் செய்யக்கூடிய வேலைகளும் எண்ணில் அடங்காது
5.கைகேயி என்று சொல்லும் பொழுது கையால் செய்யக்கூடிய செயல்கள் தான் (மற்ற உயிரின்ங்களுக்குக் கையே இல்லை)
6.குருநாதர் காட்டிய வழியிலே பார்க்கப்படும் பொழுது மற்றொன்றை வீழ்த்திடும் உணர்வாக
7.மூன்று உலகத்தையும் “அடக்கிடும் சக்தியாக” அது வருகின்றது.

இங்கே மூன்று உலகம் என்று சொல்வது உருவாக்குதல் காத்தல் அழித்தல் என்ற நிலையில் அனைத்தையுமே தனக்குக் கீழ் கொண்டு வரும்… அதை அடிமைப்படுத்தும் அத்தகைய செயலைத்தான் “அதாவது கையிலே சாதிக்கக்கூடிய இந்த வல்லமையைத் தான் கைகேயி” என்று பிரித்துக் காட்டுகின்றார்.

ஆனால் கந்த புராணத்தில் காட்டப்பட்ட வள்ளி வலிமை என்பது பரிணாம வளர்ச்சியினுடைய “முக்கிய மூலக்கூறான வலிமை…”
1.அதாவது தன்னைக் காட்டிலும் வலிமை எது என்பதை அது உற்றுப் பார்த்து
2.அதை நுகர நேர்ந்து வலிமைமிக்க அந்த உணர்வைச் சேர்த்துச் சேர்த்து தன்னைக் காத்திடும் உணர்வாக வளர்ச்சிக்கு வருகின்றது.

கைகேயி என்ற வலிமையோ… தன்னைக் காக்க என்று சொல்லிக் கொண்டு மற்றதை வீழ்த்துகின்றது.

ஆனால் வள்ளி என்ற வலிமைமிக்க சக்தி
1.தன்னைக் காத்திடும் நிலையாக வளர்ச்சியின் பாதையிலே
2.வளர்ச்சிக்கு உகந்த உணர்வை நுகர்கின்றது.

மனிதனுடைய அறிவு இன்று தேய்பிறையாகி பரிணாம வளர்ச்சி என்ற வழிகளில் செல்லாதபடி அரசன் காட்டிய வழியில் மற்றதை வீழ்த்திடும் உணர்வாக அது சென்று கொண்டிருக்கின்றது என்பதைத் தான் (முதலில் சொன்ன்படி) குருநாதர் அடிக்கடி பிரித்துக் காட்டுவார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்
1.நம்மை காக்கும் சக்தி தான் வள்ளி
2.நம்மை வீழ்த்திடும் சக்திதான் கைகேயி

பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு அடுத்த நிலை என்பது தெய்வ நிலை பெறுவது தான். ஆனால் தெய்வத்தையும் மனிதனையும் பிரித்து அரசர்கள் சரணாகதி தத்துவமாகக் காட்டியதால் “மனிதனுக்கு அடுத்த வளர்ச்சியே எது…?” என்ற அந்த ஞானமே மறைந்து போய்விட்டது.

மறைந்து போனதைத் தான் குருநாதர் காவியங்களில் உள்ள சூட்சுமங்களை நமக்குத் தெளிவாக எடுத்துப் பிரித்துக் காட்டுகின்றனர்

மனிதனாகப் பிறந்து நாம் எதையும் அடக்கி ஆட்சி புரிய வரவில்லை.
1.நமக்குள் ஆட்சி புரியும் உயிருடன் ஒன்றி ஒளியின் சுடராக
2.பிறவியில்லா நிலை பெறுவது தான் பரிணாம வளர்ச்சி.

உயிரைப் பற்றிய அறியாத உயிரினங்கள் வலிமையானதை நுகர்ந்து வளர்ச்சிக்கு வருகிறது. ஆனால் மனிதனோ தான் வலிமையானவன் என்று எண்ணிக் கொண்டு மற்றதை வீழ்த்தினால்தான்… தான் வாழ முடியும் என்று அரசன் வழிகளிலே (சத்ரிய தர்மம் என்ற பெயரில்) சென்று விட்டான். ஞானிகள் காட்டிய நிலைகள் மாறிவிட்டது.

1.தனக்குள் ஆட்சி புரியும் உயிரைப் பற்றிய உண்மையை அறியக்கூடிய தகுதி மனிதனுக்கு மட்டும்தான் உண்டு
2.அப்படி அறிந்தவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக அழியாத நிலையில் வாழுகின்றான்.

அதனால் தான் குருநாதர் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை… அந்த வலிமையான சக்தியை… மனிதனுடைய ஆறாவது அறிவு என்று சொல்லுகின்றோமே… முருகன் அதைக் காதலிப்பதாக “கந்த புராணத்தில் உள்ள உண்மையை” துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் காதலிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகின்றார்கள்.

ஆகவே… கைகேயி என்பது பாதுகாக்கும் சக்தி அல்ல. தன்னைக் காக்க மற்றதை வீழ்த்தும் சக்தி. அது மனித உருபெற்ற எண்ணத்தையே ஆட்சிக்கு வராது செய்கிறது என்று இராமனைக் காட்டிற்கு அனுப்பச் சொல்கிறது.

1.ஆனால் வள்ளி என்பது பாதுகாக்கும் சக்தி… எதை…?
2.மனிதனுடைய நிலையில் உயிரான்மாவைக் காக்கும் சக்தி.

மற்ற உயிரினங்கள் உடலைக் காக்கும் சக்தியில் பரிணாம வளர்ச்சி அடைகின்றது. மனிதன் ஆறாவது அறிவு கொண்டு உடலை உருவாக்கிய உயிரை உணரக்கூடிய சக்தி பெற்றவன்.

இந்தப் பாதையைத்தான் குருநாதர் நமக்குக் காட்டி உயிரான்மாவைக் காக்கும் சக்தியாகக் கார்த்திகேயா என்று காட்டி அந்த வலிமையான சக்தியை “வள்ளியை அவன் காதலித்தான்…” என்று காட்டுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமாயணத்தைக் கற்றுக் கொண்ட இராகவேந்திர சுவாமிகள் இராம நாம ஜெபத்தைப் பாடிக் கொண்டே “நான் சொர்க்கம் அடைய வேண்டும்” என்ற நிலை பெற்றவர்.

இராமனுடைய பாடல்களை… இராம ஜென்ம பூமி என்ற நிலைகளில் இராமாயணக் காவியங்களைப் பாடிக் கொண்டவர்.

சங்கர பீடங்களில் இராம நாம ஜெபத்தைத் தினமும் ஆயிரம் முறை எழுதிக் கொண்டிருந்தால் “உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்…!” என்று இன்றும் சொல்வார்கள். இராமன் யார் என்றே அறிய முடியாதபடி அந்த நிலைகள் அவ்வாறு இருக்கிறது.

இராகவேந்திரரின் மனைவி என்ன செய்கிறது…?

நீ இராமனையே பாடிக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றாய்…! எனக்குச் சாப்பாட்டுக்கு இல்லையே…! என்று கேட்கிறது.

நீ என் கூட வந்தால் பிசாசு…! நீ வரக்கூடாது என்கிறார். நான் இராமனையே பாடிச் சொர்க்கம் அடையப் போகிறேன்…! என்று உலகிற்குச் சொல்கிறார்.

தன் மனைவியைக் கூட வரவிடாதபடி துரத்திவிடுகின்றார். ஆனால் உலகிற்கு இராம நாம ஜெபத்தைப் பாடுகின்றார்.

மனைவியோ இராம நாமத்தைப் பற்றிச் சொல்ல முடியாதபடி அவர் உணவுக்கு வழி இல்லை.

ஆக மொத்தம் திருமணமாகிக் கணவனும் மனைவியும் ஆன பிற்பாடு இங்கே அனாதையாக விட்டுவிட்டு… “நான் போகின்றேன்…!” என்றால் என்ன ஆகிறது…?

அப்பொழுது மனைவி பின்னாடியே வருகின்றது. எனக்கு எப்படியும் உணவைக் கொடு… இல்லை என்றால் உன் கூடவே நானும் பாடுகிறேன்…! என்று சொல்கிறது.

1.நீ (மனைவி) வந்துவிட்டால் எனக்கு உன் மீது ஆசை வந்துவிடும்.
2.அதனால் நரகத்திற்குத்தான் போவேன்…! என்று இப்படிப்பட்ட நம்பிக்கையில் அவர் சொல்கிறார்.

அவரை இன்று கடவுளாகத் துதிக்கலாம். ஆனால் அவர் தன் மனைவியைத் துறந்துவிட்டு இப்படிப் போகிறார். அவருடைய மனைவியும் பின்னாடியே துரத்திக் கொண்டே போகின்றது.

நான் இராமனைப் பாடுகிறேன். நீ பிசாசு… வரக்கூடாது…! என்றே சொல்கிறார்.

நான் பிசாசாகி உன்னிடமே வருவேன்…! என்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறது. வெளி வந்த அந்த ஆன்மா அங்கே அவருக்குள் போகிறது.

அதற்குப் பின் அவரால் பாடல்கள் பாட முடியவில்லை. அப்பொழுது என்ன செய்கிறார்…? அந்தக் காலத்தில் “ஜீவ சமாதி” என்பார்கள்.

இனி என்னால் முடியாது என்று சொல்லிக் குழியைத் தோண்டச் சொல்லி அந்த இராமனைப் பாடிக் கொண்டே ஜீவ சமாதிக்குள் சென்று அதற்குள் ஐக்கியமாகின்றார்.

ஆனால் மனைவியின் ஆன்மா அவர் உடலுக்குள் தான் போனது. போய் இந்த நிலை (ஜீவ சமாதி) ஆன பிற்பாடு உயிர் எங்கே போகிறது…? விண் செல்லவில்லை.

சோறு மேல் தான் ஆசை வந்தது…! இராகவேந்திரர் சாமிகள் கும்பிடுபவர்களை எல்லாம் பெரும்பகுதி பாடல்களைப் பாடி விட்டு சாப்பாடு போட்டார்கள்… சாப்பாடு போட்டார்கள்…! என்று தான் சொல்வார்கள்.

அதனின் உணர்வின் ஆசை இருக்கும் பொழுது அதிலே சிக்கிக் கொண்டு செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொத்து வேண்டும்…! என்று தான் போவார்கள்.

அர்ச்சனை என்று எல்லாக் காசுகளும் போட்டு இந்த ஆசைகளில் தான் கும்பிடுகின்றார்கள். “மோட்சம் அடைய வேண்டும்” என்ற எண்ணம் இல்லை.

இராகவேந்திர சுவாமிகள் பக்தியின் நிலைகளில் அவர் தர்மத்தைப் பேசும் பொழுது
1.அந்த ஞானிகளின் அருளைப் பெற வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைத்தார்.
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
3.ஆனால் தன்னை அணுகி உள்ளவரை (மனைவியை) மறந்துவிட்டார்.

இராகவேந்திரரின் ஆன்மா பல காலம் திரிந்து மும்முடிவாரத்திலிருந்த பாலயோகீஸ்வரரின் உடலில் புகுந்தது.

அவருடைய உடலில் இராகவேந்திர சுவாமிகளுடைய உணர்வுகள் பதியச் செய்யும் பொழுது பாலயோகியினுடைய உடலில் இருந்துதான் இந்த உணர்வின் சக்தியை மெய் ஒளியைப் பெற முடிந்தது.

ஒன்றுமறியாத பாலயோகியினுடைய உடலிலிருந்து மெய் ஒளியைக் காணும் நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை கொண்டு எவ்வாறு ஜீவ சமாதி ஆனாரோ
1.முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் அவருடைய உயிராத்மாவும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் அடைந்தது.

“உயிர் வழியாக (புருவ மத்தி) எடுத்துத் தான்” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்

 

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது அங்கிருக்கக்கூடிய தெய்வச் சிலையை உற்றுப் பார்த்து “அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும்…” என்று ஞானிகள் காட்டிய வழியில் எண்ணினால் நாம் தெய்வமாகின்றோம்.

ஆனால் அப்படி நாம் நுகர்வதில்லை. யாரும் நமக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்கவும் இல்லை.

தெய்வத்திற்குச் சந்தனத்தை அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் “அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெற வேண்டும்” என்று நினைக்கின்றோமா…? என்றால் இல்லை.

சாமி மேல் பல விதமான மலர்களைப் போட்டிருக்கின்றார்கள். அப்பொழுது “மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?” என்றால் இல்லை.

சாமிக்கு மலரைப் போட்டு அலங்கரித்து அர்ச்சனை செய்யும் பொழுது நமக்குள் இருக்கும் “கஷ்டங்கள் எல்லாம் கிளர்ந்து எழுகின்றது…”

உதாரணமாக ரோஜாப்பூ நறுமணமாக இருக்கப்படும் பொழுது மற்ற தீமையான மணங்களை அதன் அருகிலே விடுவதில்லை. அதே போல தீமையான உணர்வுகள் நம் ஆன்மாவிலே பெருகி இருக்கப்படும் பொழுது நல்ல மணங்களைக் கண்டால் அருகே விடுவதில்லை. கண்களிலே தண்ணீர் தான் வருகின்றது.

சாமி மேல் போட்டிருக்கும் ரோஜாப் பூவைப் பார்த்தாலும் சரி மற்ற அர்ச்சனை அபிஷேகங்களைப் பார்த்தாலும் சரி பார்த்தவுடனே கண்ணிலே தண்ணீர் தான் வருகின்றது.

ஏனென்றால்
1.எதிர்மறையான உணர்வுகள் மோதியவுடன்
2.இப்படி எல்லாம் எனக்குக் கஷ்டம் வந்துவிட்டதே…! என்று தன்னை அறியாமலே கண்ணில் நீர் பெருகும்.

அங்கே தெய்வச் சிலையை பார்க்கப்படும் பொழுது அந்த நல்ல உணர்வு வருவதில்லை. நமக்கு இடைஞ்சல் செய்தவர்கள் உணர்வுகள் முன்னணியில் வந்துவிடுகிறது.

காரணம் இந்த ஆன்மாவிலே நாம் சுவாசித்த உணர்வுகள் இருக்கப்படும் பொழுது இதுவே கண்களிலும் வருகின்றது.
1.ஆன்மாவிலே பட்டதை நுகரப்படும் போது உயிரிலே பட்டு உணர்வுகள் புலனறிவில்…
2.உடலுக்கும் சரி
2.கண்ணுக்கும் சரி
3.சொல்லுக்கும் சரி
4.வாசனைக்கும் சரி
5.நல்ல வாசனையை அது எடுக்க விடாது.

தெய்வ குணம் பெற வேண்டும்… தெய்வமாக நாம் ஆக வேண்டும்…! என்று ஞானிகள் காட்டிய முறைப்படி ஆலயத்தில் யாரும் நினைப்பதில்லை.

உயர்ந்த சக்திகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எப்படி எப்படியோ ஞானிகள் நமக்கு வழிபடுத்தி உள்ளார்கள்.
1.அந்த ஞானிகள் உணர்வை நமக்குள் பதிவு செய்யப்படும் பொழுது
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காற்றிலிருந்து அந்த அருள் சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்.
3.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
4.புருவ மத்தி வழியாக எண்ணி உடலுக்குள் கொண்டு சென்று தீமைகளைப் பிளத்தல் வேண்டும்.

அப்படிப் பிளந்தால் தான் தீமைகள் அகலும்.

தீமைகளை அகற்றிடும் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்கும் முறை என்பதே…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி
2.அதன் வழி கூடி உடலுக்குள் அந்த ஆற்றலைச் செலுத்தி எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித உடல் நமக்கு நீடித்த நாள் இருப்பதில்லை. ஆனால் இந்த உடலை வைத்துத்தான் பிறவியில்லா நிலையை அடையும் சக்திகளைப் பெற முடியும்.

இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்த துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்… இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் அவைகள் அழியாது.

அகண்ட உலகில் வருவதைத் தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்று அவர்கள் வளர்ந்து கொண்டே உள்ளார்கள். அதைத்தான் “மரணமில்லாப் பெரு வாழ்வு” என்பது.

1.இதைப் போல் மனிதனாகி அதிலே உயர்வு பெற்று
2.ஒளி நிலை பெற்ற தன்மைகள் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உண்டு.
3.இவை அனைத்தும் ஐக்கிய உணர்வாக அங்கே வளரும் தன்மை பெற்று வளர்ந்து கொண்டே உள்ளது.

வான மண்டலத்தில் பார்த்தால் சில பகுதிகளில் ஒளிக் கதிர்களாக மின்னுகின்றது. பல பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளது.

அகண்ட (அண்டத்தின்) பாதையில் சுழற்சியின் வேகத்தால் வரும் ஒளி அலைகள் தான் இவையே தவிர இதைப் போன்ற வளர்ச்சியின் தன்மை வரும் பொழுது ஒளியின் கதிராக அது வாழும்… வளரும்… அந்த நிலைகளில் சக்தி பெறுகின்றது.

ஆகவே அத்தகைய நிலையை இந்த மனித உடலில் நாம் நினைவிருக்கும் பொழுதே பெறுதல் வேண்டும். நினைவு இழந்து விட்டால் எதனைக் கொண்டு நினைவிழக்கச் செய்கின்றதோ அதன் வழியில் சென்றுவிடும்.

மனிதனின் வாழ்க்கையில் எது அவனை நினைவிழக்கச் செய்கின்றதோ அதை மாற்றிட அருள் சக்திகளைப் பெற்று அருள் வழியில் சிந்தித்தால் அவனும் ஒளியின் தன்மை பெறுவான்.
1.நம் உடல் சதமானது அல்ல…! உயிர் தான் என்றும் சதமானது…!
2.இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நாம் நெருப்பில் விழுந்து விட்டால் இந்த உடல் கருகி விடுகின்றது. கருகிய நிலையில் வேதனையுடன் இந்த உடலை விட்டு உயிர் பிரியும் போது இந்தத் தசைகளும் உடலில் உள்ள அணுக்களும் கருகி விடுகின்றது. ஆனால் உயிர் மட்டும் கருகுவதில்லை.

கருகிய உணர்வுகள் உயிருடன் ஒன்றுகின்றது. இந்த உடலில் வாழும் காலத்தில்
1.யார் மேல் பற்று கொண்டு வாழ்ந்ததோ
2.அந்த நட்பான நிலைகளில் அவர்களும் இதைப் பதிவு செய்திருந்தால்
3.அந்த உடலுக்குள் எரிந்தவனின் ஆன்மா சென்று அங்கேயும் எரிகிறதே… எரியுதே..! என்று கத்தும்.. கதறும்…!
4.அவன் மடிந்த நிலைகள் அதே நினைவாற்றல் கொண்டு அங்கேயும் மடியச் செய்யும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப் போன்ற எத்தனையோ நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதைப் பெற வேண்டும்..? எவ்வாறு நாம் வாழ்க்கை வழி நடத்த வேண்டும்..? என்று எண்ணுதல் வேண்டும்.

வீடு அழகாகக் கட்டுகின்றோம். தூசி படர்கின்றது. பெருக்கிச் சுத்தப்படுத்துகின்றோம். வீட்டைக் கூட்டிப் பெருக்கவில்லை என்றால் நாம் எவ்வளவு ஆடைகள் அலங்காரமாகப் போட்டிருந்தாலும் தூசி நம் மீது ஒட்டத்தான் செய்யும்.

ஆகவே வீட்டில் அவ்வப்பொழுது வரும் தூசிகளைக் கூட்டிப் பெருக்கித் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டை அழகுபடுத்திக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

இதைப் போன்று தான்…
1.மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளை மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு
2.அந்த அசுத்தங்களைத் துடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
3.அருள் ஒளியை நமக்குள் பெருக்கி உடலில் உள்ள தீமைகளைத் தூய்மையாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.

இந்த உணர்வின் வளர்ச்சி பெறும் பொழுது தான் நாம் பிறவி இல்லா நிலையை அடைய முடியும். இது முக்கியமானது…!

தொட்டுக் காட்டுதல்

 

யாம் உபதேசிக்கும்போது கூர்மையாகக் கவனிக்கின்றீர்கள்.
1.இந்த உணர்வைக் கண்ணின் கரு விழி உங்களுக்குள் படமாக்குகின்றது… பதிவாக்குகின்றது.
2.சொல்லக்கூடியதைக் காந்தப்புலன் அறிவுகள் உள்ளே இழுக்கின்றது.

அன்று நான் குருநாதரைச் சந்தித்துப் பெற்ற உணர்வுகளை எடுத்து உங்களுக்குச் சொல்லும் பொழுது “கண் வழியாகவும் சொல்வழி கூடியும்…” வெளிப்படுகின்றது. “மூலக்கூறுகளை…” குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

இங்கே வந்து எம்மைச் சந்தித்தவர்களுக்கு மட்டுமல்ல…! இதைக் கேட்டுணர்ந்தோர்… படித்துணர்ந்தோர்… பல பாகங்களில் மற்றவருடன் பழகப்படும் பொழுது
1.சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லம் எங்கே எந்தக் குறைகளை நீங்கள் கண்டாலும்
2.நம் குரு அருளின் தன்மை அங்கே குறைகளை நிவர்த்திக்கும் உணர்வலைகளாகப் பாயும்.
3.குறைகளை அணுக விடாது… உங்களுக்குள் அருள் உணர்வுகளைப் பெறச் செய்யும்.

அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

உதாரணமாக ஒருவர் நம்மைக் கேவலமாகப் பேசுகிறார்கள். அந்த உணர்வு நமக்குள் பதிவாகி விட்டால் அவர்கள் உணர்வை மீண்டும் நமக்குள் கவரத் தொடங்கும். அப்பொழுது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

அந்தத் தடைகளை விதிப்பதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று நம்முடைய எண்ணம் அவர்களுடைய உணர்வு நமக்குள் வராதபடி அதைத் தணிக்க வேண்டும்.

1.அதற்காகத்தான் இயக்கத்தின் உண்மை நிலைகளை விரிவாக்கப்பட்டு உங்கள் நினைவாற்றலுடன் இதைப் பதியச் செய்வது.
2.இது தான் தொட்டுக் காட்டுதல் என்பது.

பொட்டிலே தொட்டுக் காட்டுதல் என்று மற்றவர்கள் சொல்லும் பொழுது “அவர்கள் தொட்டுக் காட்டுகின்றார்கள்…! அங்கே பதிவாகின்றது…” ஆனால் தொட்டுக் காட்டிய “மனிதனுடைய நினைவு தான்” அங்கே வரும்.

ஆனால் நாமோ குருநாதர் கொடுத்த அந்த உணர்வின் சக்தியை
1.மகரிஷிகள் ஞானிகள் எதைப் பெற்றார்களோ அதை ஒவ்வொரு உணர்வுகளிலும் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைப் பதிவு செய்கின்றோம்.
2.நமக்குள் எத்தனையோ கோடி குணங்கள் உண்டு… அதில் எத்தனையோ வகைகள் உண்டு.
3.அதற்குள் ஞானிகள் உணர்வை இணைக்க வேண்டும்
4.அப்படி இணைத்தால் உங்களுக்குள் அது கருவுற்று ஞானிகள் உணர்வோடு வளர்வதற்கு இது உதவும்.

ஏனென்றால் பத்திரிக்கையையோ டிவியையோ பார்த்தால் உடனே மனம் மாறுகிறது. பக்கத்து வீட்டுக்காரருடைய செயலைப் பார்த்தால் மனம் மாறுகின்றது.

தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம் அவர்கள் வீட்டிற்குள் சென்றால்… வீட்டிலே வேறு விதமாக இருப்பார்கள். எல்லோரும் அங்கே ஒன்று சேர்ந்திருப்பார்களா…? யாரோ ஒருத்தர் எதிர்மறையாக இருப்பார்.

தியானத்திற்குப் போகின்றாராம்… ஏதோ அள்ளிக் கொட்டுகின்றாராம்…! என்று நாம் அங்கே போய் உட்கார்ந்திருக்கும் பொழுது பேசுவார்கள்.

என்னடா…! இப்படிப் பேசுகின்றார்கள்…? என்ற உணர்வுகள் வந்து விட்டால் நாம் எதன் மீது பற்றாக இருக்கின்றோமா… அதைக் குறை கூறும் பொழுது இந்தக் குறைகள் அதிகமாக வளர்ந்து விடுகிறது.

நம்முடைய வளர்ச்சிக்கு அதுவே தடையாகின்றது. இப்படியும் நமக்குள் வருகின்றது.

ஆகவே இந்தத் தீமையின் விளைவுகள் உங்களுக்குள் வராதபடி தடுக்க
1.மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் செலுத்தி இதை வலுப்பெறச் செய்து
2.அவர்கள் எப்படியும் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த நினைவாற்றல் நமக்குள் உருவாக வேண்டும்.
3.அப்பொழுது நம் நினைவலைகள் அங்கே படரும்… நம்மையும் பாதுகாக்கும்
4.அவர்கள் நம்மை எண்ணினால் அங்கே ஊடுருவி அவர்களை மாற்றும் நிலைக்கும் வரும்.
5.அவ்வாறு மாற்றும் சக்தியைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நல்ல சக்தியாக பூமியிலே பரப்பவும் செய்யும்.

மற்றவர்களுக்கும் அது நல்ல உணர்வை ஊட்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சீதாவை இராவணன் சிறைப்பிடித்துச் சென்று “எத்தனையோ கொடுமைப்படுத்தினான்..!” என்று வேதனைப்படுகின்றோம். ஏன் இராமனே கர்ப்பிணியான சீதாவைக் காட்டில் கொண்டு போய் விட்டான்..! என்று வேதனைப்படுகிறோம்.

இராமன் நான் மக்களுக்காக வேண்டி இதைச் செய்கிறேன்…! மக்கள் என்னைக் குறையாகச் சொல்கிறார்கள் நீ போ….! என்று கர்ப்பிணியான சீதாவைக் காட்டில் தள்ளி விட்டால் அது என்ன செய்யும்…?

இராமாயணக் காவியத்தைப் படித்துப் பாருங்கள். ஏனென்றால் நாம் நுகரும் உணர்வுகள் சீதாராமா. அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் நமக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். நாம் தூண்டுகின்றோமா…?

1.கண்ணிலே பார்ப்பது துவைதம்
2.நுகர்ந்து (சுவாசித்து) அறிவது அத்வைதம்
3.சுவாசித்தது நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் தன்மை விசிஷ்டாத்வைதம்.

தூய்மையான உணர்வை உன் உடல் ஆக ஆக்கு. இது தான் கோவிலின் தத்துவம். ஆனால்
1.கோவிலுக்குப் போய் எத்தனை பேர் அழுகாமல் வருகின்றார்கள்..?
2.அங்கே குறைகளைச் சொல்லாதவர்கள் யார்…?

“சரணாகதித் தத்துவம்” என்று ஒன்றை மட்டும் பழகி வைத்திருக்கின்றோம். காசைக் கொடுத்து அபிஷேகம் எல்லாம் செய்து பழம் மற்ற பொருள்களை எல்லாம் கொடுத்து அங்கே குறைகளைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

கோவிலை மதிக்கின்றோமா…? நம் உடலைக் கோவிலாக மதிக்கின்றோமா…? உயிரை ஈசனாக மதிக்கின்றோமா…? ஆக கோவிலுக்குச் சென்று எதை அபிஷேகம் செய்கிறோம்…?

குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் சொல்லி உயிரால் உருவாக்கப்பட்ட உடலான ஆலயத்தை அசுத்தப்படுத்துகின்றோம். நன்மை ஏதாவது செய்கிறோமா…!

சில குடும்பங்களில் அண்ணன் தம்பிக்குள் ஒற்றுமை இல்லாது போய்விடுகிறது. எத்தனையோ பேர் பஞ்சாயத்துப் பண்ணினாலும் ஒன்றும் அது முடியவே முடியாது

ஒருத்தருக்கு ஒருத்தர் அண்ணன் தம்பிக்குள் வீராப்பு செய்து கொண்டு கடைசியில்…
1.தன் உடலில் நோய்களைத் தான் உருவாக்கிக் கொள்கிறார்களே தவிர
2.இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே போக வேண்டும்…? என்பதை மறந்து விட்டார்கள்.

ஆனால் நாம் நுகர்ந்த அந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் படைத்தே தீரும். அதை நாம் அனுபவித்தே தான் தீர வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வை எல்லாம் நம் உயிர் இயக்கிக் காட்டுகிறது. அப்பொழுது நம் ஆறாவது அறிவை வைத்து வரும் தீமைகளைத் துடைக்க வேண்டுமா… இல்லையா,..?

1.தீமைகளைத் துடைப்பதற்கு.. நம் ஆறாவது அறிவை எப்படிப் பயன்படுத்துவது…? என்பதைத்தான்
2.ஆலயங்களிலும் காவியங்களிலும் ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிடும் ஆறாவது அறிவைச் சரியான நிலையில் பயன்படுத்துவதற்காக உருவம் அமைத்து தெய்வச் சிலைகளுக்குப் பாலபிஷேகம் சந்தனம் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் செய்து அதைக் காட்டுகின்றனர்.

அதைப் (துவைதம்) பார்த்ததும்…
1.எங்கள் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்திலுள்ளோர் எல்லோரும் ஒரு ஆனந்த நிலை பெற வேண்டும்
3.எங்கள் வீட்டிற்கு வரும் அனைவரும் ஆனந்த நிலை பெற வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அந்தப் பாலை போல மனம் பெற வேண்டும்
5.ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தியும் பண்புடன் வாழும் அருள் சக்தியும் எல்லோரும் பெற வேண்டும் என்று
6.சாமிக்கு அந்த அபிஷேகம் செய்யும் பொழுது இப்படி எல்லாம் எண்ணினால் (அத்வைதம்) ஒன்றுபட்டு வருமா வராதா…?

அந்த உயர்ந்த உணர்வுகள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் விளையும் (விசிஷ்டாத்வைதம்). இதைத் தூண்டுவதற்குத் தான் ஞானிகள் சிலையை வைத்தார்களே தவிர
1.அங்கே போய் கஷ்டத்தை எல்லாம் சொல்லி
2.நான் அந்த அத்தனை நேரம் உனக்கு விரதம் இருந்தேன்… என்னை ஏன் இன்னும் சோதிக்கின்றாய்…? என்று அழுது புலம்புவதற்காக அல்ல…!

ஆகவே நம்மைச் சுத்தப்படுத்துவதற்காக ஞானிகள் கட்டிய கோவிலை நாம் அசுத்தப்படுத்தலாமா…?

என் பையனுக்கு அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும். அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அருள் ஞானம் பெறவேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எண்ண வைப்பதற்குத்தான் கோவிலைக் கட்டினார்கள்.

அரசர்கள் நமக்குள் உருவாக்கி வைத்துள்ள கலாச்சாரத்திலிருந்து நாம் மாற வேண்டும்

 

காலம் காலமாக… கலாச்சார அடிப்படையில் இயக்கிய உணர்வுகள் நமக்குள் (உடலுக்குள்) செல்கள் ஏராளமாக விளைந்திருக்கின்றது. நம் தாய் தந்தையரிடமிருந்து… மூதாதையர்களிடமிருந்து… வளர்த்துக் கொண்ட அணு செல்கள் கலாச்சாரத்தில் மாறி உள்ளது.

கலாச்சார அடிப்படையில் மதங்களை உருவாக்கினாலும்
1.மதங்கள் மாறிய கலாச்சாரத்தில் பாருங்கள்… அதுவும் தொன்று தொட்டு ஊடே வந்து கொண்டேயிருக்கும்.
2.இந்தக் கலாச்சாரமும் ஊடே ஊடுருவியே இருக்கும்… இதை “மதங்களுக்குள் இனங்கள்…” என்று சொல்லலாம்.

கராச்சியை (பாகிஸ்தான்) எடுத்துக் கொண்டால்… முஸ்லிம் மதமாக இருந்தாலும் கலாச்சார நிலைகள் அங்கே வலுப்பெறும் போது எதிரியாகின்றது.
1.போர் முறையினால் அங்கே கலாச்சாரமே தன்னையும் வளர்க்க முடியவில்லை… பெருக்கிக் கொள்ளவும் முடியவில்லை.
2.தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மற்றவரை எதிரியாகக் கருதி வீழ்த்தத் தான் செய்கின்றது. ஒன்றுக்கொன்று
3.இன்றும் அங்கே போர் செய்வதால் தன்னையும் அது வீழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது.

அதே கலாச்சாரம் தான் மதம் இனம் என்ற நிலையில் தன்னை வளர்ப்பதற்காக வேண்டிப் போர் முறைகளாகி… மனிதன் அன்றைய அரசன் வழிகளில் தேய்பிறையாகவே உலகமெங்கும் இன்றும் வந்து கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து மீள்வதற்குத் தான் மகரிஷிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை…! அந்தப் பழமொழிக்கொப்ப மகரிஷிகள் ஞானிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டார்கள். வளர்த்துக் கொண்டது “அறிவின் ஒளியாக…” மாறிக் கொண்டே போகின்றது.

ஆனால் காட்சிகளாக எத்தனையோ பார்க்கின்றோம், தியான ஆரம்பத்தில் நிறைய பேருக்குக் காட்சியும் யாம் கொடுத்துக் கொண்டு வந்தோம். அந்தக் காட்சியின் பெருமையைத் தான் அவர்களால் காண முடிகின்றதே தவிர காட்சிகளுக்குண்டான உண்மையைப் பார்க்க முடியவில்லை.
1.நம்முடைய உணர்வின் கிளர்ச்சிகள் எந்த அளவுக்கு இருக்கின்றதோ
2.”அதே தொடர்பு கொண்ட அலைவரிசையில்…” மனிதனில் விளைய வைத்த அலைகளை அது இழுக்கும்.

குளவி தன் உணர்வைப் புழுவின் மீது பாய்ச்சும் போது அந்தக் குளவியின் உணர்வலைகள் வரும் அதே அலைவரிசையில் தான் காட்சியாக அது இழுத்துப் புழுவின் உடலில் விளைகின்றது… குளவியைப் பற்றிய காட்சிகளைப் புழு எடுத்துத்தான் அதுவும் குளவியாக மாறுகிறது.

ஏனென்றால் சில பேர் “தியானத்தில்… காட்சி…காட்சி…” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அந்தக் காட்சியை… எதன் அடிப்படையில் நாம் பார்க்கின்றோமோ அதன் நினைவாக அது வரும்.

நாம் எந்தெந்தப் பக்தியில் தெய்வத்தின்பால் பற்று கொண்டுள்ளோமோ இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

அதாவது… எந்தெந்த ஒலிகளை நமக்குள் பரப்பி இருக்கின்றார்களோ நாதங்கள் சுருதிகள் வாத்திய இசை மலர்களின் மணங்கள் சோம பானம் இது போன்ற உணர்வு எல்லாம் கலந்து தான் அந்த ஒரு இசையாக அமைத்து அந்த உணர்வுகளைப் பதிவு செய்கின்றனர் “கடவுளாக…!”

எல்லா மதங்களிலும் இப்படித்தான் செய்கின்றார்கள். வெறும் சொல்லாக இருக்கலாம். உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பலாம் அதனுடைய நிலைக்கு அது காட்சியாக வரும்.

ஆனால் யாம் இப்பொழுது
1.உங்கள் அணுக்களில் குருநாதருடைய உணர்வுகளையும் அவர் கண்டுணர்ந்த உணர்வுகளையும் இணைத்து
2.அந்த உணர்வை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
3.இதை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் நல்ல வளர்ச்சி அடைவதற்குச் சரியாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய உலகில் நாம் தவறே செய்ய வேண்டாம்…! நாம் தவறு செய்யாமலே அந்தத் தவறுக்கு நாம் ஆளாகும் சந்தர்ப்பங்கள் வந்து விடுகின்றது.

அதற்கு மூலம் எது..? நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!

அந்த உணர்வை இயக்குவது யார்…? நம் உயிர் தான்…!

நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் இயக்கப்படும் போது மனிதனை உருவாக்கிய அணுக்கள் எத்தனை பாடுபடுகின்றது..? எத்தனை வேதனைப்படுகின்றது…? இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா…?

மனிதன் வாழ்வது கொஞ்சம் நாள் தான். நூறு வருடம் அல்லது நூற்று இருபது வருடம் அதற்கு மேல் யாரும் வாழ்கிறார்களா…? எப்படி இருந்தாலும் இந்த உடலை விட்டுப் போய்த் தான் ஆக வேண்டும்…!

அப்பொழுது யாருடன் செல்ல வேண்டும்..? நுகர்ந்த உணர்வுக்கொப்ப உயிருடன் தான் நாம் இப்பொழுது செல்கின்றோம்.

ஆனால்
1.வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி
2.நுகர்ந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக்கி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் தான் நாம் சென்றாக வேண்டும்

ஏனென்றால் அன்று ஆண்ட அரசர்களால் இந்த உலகம் அழியும் தருணத்திற்கு வந்துவிட்டது. இன்றும் அதிக மோசமான நிலைகளில் போய்க் கொண்டு இருக்கின்றது

பணத்தைச் சம்பாதித்துக் கொண்டு வந்தாலும் அது வீடு வரைக்கும் வந்து சேருமா…? கையில் பணம் கொண்டு வருவது தெரிந்தாலே தட்டிப் பறிக்க எத்தனையோ வழிகளில் இன்று இருக்கின்றார்கள்.

சேர்த்த பணத்தை வீட்டில் மறைத்து வைத்து விட்டுப் போனால் தப்ப முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. சரி… பாங்க் லாக்கரில் வைத்தால் தப்ப முடிகிறதா..? என்றால் அதுவும் இன்று கேள்விக் குறி தான்…!

அந்த அளவுக்கு நிலைமை மோசமாக ஆகிவிட்டது

ஆக எல்லா ஆசைகளும் இருந்தாலும் செல்வத்தைப் பாதுகாத்து வைப்பதற்குள் போதும்…போதும்..! என்று ஆகி நிம்மதி இல்லாது வேதனைப்பட்டு நமக்குள் நோயாகவே வருகின்றது. இதிலிருந்து தப்ப முடியாத நிலைகள் தான் இன்று இருக்கின்றது.

1.ஆகையினால் செல்வத்தைக் காக்க என்று யாரை எண்ணி ஏங்குகின்றோமோ மீண்டும் பிறவிக்கே இங்கே வந்துவிடுன்றோம்.
2.பிறரைக் காக்க வேதனைகளை எடுத்தாலும் மீண்டும் பிறவிக்குத் தான் வருகின்றோம்.

ஆனால் விஷத்தை எல்லாம் வென்று ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் ஓங்கி வளர்த்தோம் என்றால் “உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது…!”

அப்பொழுது உயிர் அதை இயக்கி நம்மை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே கொண்டு போய் நிறுத்தும். நாம் அழியாத ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.

ஏனென்றால் நமக்குள் எத்தனையோ “ஊழ்வினை” என்ற வித்துக்கள் உண்டு. முந்தி தெரியாது… இப்பொழுது அது எல்லாம் தெரிய வரும். அந்த வித்துக்களை எல்லாம் நாம் ஒளியாக மாற்றிக் கொண்டே வருதல் வேண்டும்.

குளவி புழுவைத் தன் இனமாக மாற்றுவது போல் தான் இயற்கையின் செயலாக்கங்களும்

 

ஒரு குளவி ஒரு புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து அதைத் தன் இனமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றது.

இன விருத்திக்கான உமிழ் நீரைச் சுரக்கும் பொழுது அதை மண்ணிலே போட்டுப் பிசைகின்றது. மண்ணிலே போட்டுப் பிசையும் பொழுது ஒரு நிறம் இருக்கிறதென்றால் தனக்குகந்த மண்ணை எடுத்துச் சுண்ணாம்பினால் அதைக் கலந்து எடுத்துக் கொண்டு வருகின்றது.

அதிலே இருக்கக்கூடிய காந்தப் புலனறிவிலே தன் உமிழ் நீரைப் பாய்ச்சுகின்றது. பாய்ச்சி உருண்டையை எடுத்து வந்து கூடாகக் கட்டுகின்றது. அதற்குள் புழுவைக் கொண்டு வந்து அடைக்கிறது.

1.தன் இனவிருத்தியின் உணர்வின் நோக்கம் கொண்டு புழுவைத் தாக்குகின்றது.
2.தாக்கியவுடன் புழுவின் உணர்வின் செல்கள் வெளியிலே போகாதபடி அது மறைத்து விடுகின்றது.
3.முதலில் கவசமாகக் கட்டி விடுகின்றது…. அதிலிலுள்ள விஷத்தின் தன்மை புழுவின் தோலைச் சருகாக மாற்றி விடுகின்றது.

அதற்கு அந்தச் சக்தி இருக்கின்றது.

அப்பொழுது புழுவின் உடலை உருவாக்கிய உயிரும்… உயிரால் உணர்வால் ஆக்கப்பட்ட, உடலுக்குண்டான அணுக்களிலும்… இந்த விஷத்தின் தன்மை பாய்ந்து விஷமாக ஆகின்றது.
1.விஷத்தன்மை பாய்ந்த நிலையில்
2.புழுவிற்கு அந்தக் குளவியின் நினைவாற்றல் தான் அதிகமாக வருகின்றது.
3.அந்த நினைவாற்றல் அதிகரிக்கப்படும் பொழுது உடல் சருகாகுகிறது.

மீண்டும் அந்தக் கூட்டின் மேலிருந்து குளவி “ரீங்கார ஒலிகளை” எழுப்புகின்றது.

அந்த உணர்வின் இயக்கமானபின்…
1.இதே நினைவலையில் அந்த உணர்வின் செல்கள் மாறி விடுகின்றது.
2.இந்தக் கூட்டின் வழியாக அந்த உமிழ் நீரைச் சேர்த்தபின்… அந்த ஒலி அலைகளைப் புழு எடுக்கின்றது.

உதாரணமாக… நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கங்கள் பூமிக்குள் ஊடுருவி… அந்தக் காந்தப் புலனறிவு இயக்கும் காந்தம் அதிகமாகும் பொழுது… பூமியின் நடுவிட்டம் வரை ஊடுருவிச் செல்லும்.

ஊடுருவிச் செல்லும் பொழுது மரங்கள் மேல் தாக்கப்பட்டால் மரங்கள் கருகி விடுகின்றது. அப்படி ஊடுருவிப் பூமிக்குள் சென்றவுடனே, வெல்டிங் (welding) வைத்தால் எப்படி ஓட்டை ஆகின்றதோ அதே போல பாறைகளில் ஊடுருவி “அதற்குள் சில நுண்ணிய அலைகளைப் பாய்ச்சுகின்றது…”

அது தனக்குள் சேர்த்து…
1.மொத்தத்தில் வடித்துக் கொண்ட உணர்வுகளை ஆவியாக மாற்றும் பொழுது
2.அதன் வழி பூமிக்குள் பல மாற்றங்களைக் கொடுக்கின்றது.

பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத் தன்மையை நட்சத்திரங்கள் அது தனக்குள் உருவாக்கி… அது உமிழ்த்தும் அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டபின் அந்த அலைகளின் வீரியம் வருவதும்
1.நம் பூமியின் ஈர்ப்புக்குள் நுழைந்து கொண்டபின்
2.அது ஈர்த்து நடுமையத்தில் கொண்டு சேமித்துக் கொள்கின்றது.

அதைப் போல் நாம் சுவாசிக்கும் நிலைகள்… எந்தந்த உணர்வுகளை உடலுக்குள் பாய்ச்சினாலும்
1.உடலில் விளைந்த அந்த உணர்வுகள் எல்லாவற்றையும்
2.உயிரிடமே கொண்டு வந்து உயிராத்மாவாகச் சேர்த்து வைத்துக் கொள்கின்றது.

உயிரின் இயக்கங்களில் ஊடுருவி…
1.உணர்வின் அணுக்களைப் பெருக்கித் தன் நினைவுடன் இயக்கச் செய்து
2.தன்னுடன் ஒன்றச் செய்து ஒரே இயக்கமாகக் கொண்டு வருகின்றது.

இதற்கும் அதற்கும் (பூமிக்கும் உயிருக்கும்) உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.
எனக்குப் படிப்பறிவு இல்லாததால் “நேர்முகமாகவே…” இதையெல்லாம் காட்டுகின்றார். இந்த உணர்வின் இயக்கங்கள் பூமியின் நடுமையும் அடைவதை காட்டுகின்றார்.

ஆனால் நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் ஊடுருவும் பொழுது ஒவ்வொன்றையும் எப்படி இடைமறித்துக் கருக்கச் செய்கின்றது…? வெல்டிங் அடிக்கும் போது ஓட்டை விழுவது போன்று எப்படி ஆகின்றது…? என்று காட்டுகின்றார்.

மின்னல் தாக்கிய பின் மரங்கள் கருகின்றது. மின்னல் ஊடுருவி பூமிக்குள் செல்கின்றது. இப்படி… 27 நட்சத்திரங்கள் நிலைகள் அங்கே பூமிக்கடியில் ஒன்று சேர்த்துக் கொதிக்கலனாக மாறுகின்றது. அதிலிருந்து… கலவைகள் ஆவியாக மாறி தனது நிலைக்குப் பூமி மாற்றுகின்றது.

இதைப் போல் தான்
1.குளவியின் விஷத்தன்மை கூட்டிற்குள் அடைபட்ட புழுவின் உடலுக்குள் பாய்ந்து
2.அது தன்னுடைய வேகங்களை எடுத்து அணுக்களில் பட்ட பின்
3.புழுவின் உயிர் குளவியை எண்ணியே அதனின் உணர்வலைகளை எடுத்து
4.உடலின் செல்களை மாற்றிப் “புழு குளவியின் ரூபமாகின்றது…”

இது பரிணாம வளர்ச்சி.

அகண்ட அண்டத்தின் ஒளிர் ஞான தத்துவ அடக்கமே… “பேரருள் பேரொளி”

 

(1) முடிவே இல்லாதது…!
1.ஒன்றுடன் ஒன்று மோதி 2.ஒன்றுடன் ஒன்று கலவையாகி உருவாகி
உருமாற்றமாகிக் கடைசியில் ஆவியாகி 3.மீண்டும் திடமாகி
மீண்டும் அதே சுழற்சி 1,2,3.. 1,2,3

(2) என்றுமே அழிவில்லாதது
1.விண்ணிலே தோன்றும் உயிர்
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிய மகரிஷிகள்

(3) நிலையானது…! (4) சத்தியமானது…!
ஆதிசக்தியின் இயக்கம்…! வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் சேர்ந்து எதைக் கவர்கிறதோ அதனின் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

5) ஒளிர் ஞான தத்துவ அடக்கமே…! பேரருள் என்பது.
ஆதிசக்தியின் இயக்கத்தின் நோக்கமே அனைத்தையும் ஒளியாக ஒளிரச் செய்வது… ஒளியின் வளர்ப்பாக முதிர்வடையச் செய்வது தான். அது தான் பேரருள்.
அப்படிப் பேரருளாக முதிர்ந்து ஒளியாக ஒளிரச் செய்து ஒளியின் வளர்ப்பை வளர்க்கும் போது பேரொளியாகிறது. அவர்கள் தான் மகரிஷிகள். துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் போன்றவைகள்.

மேலே சொன்ன ஐந்தையும் உள்ளடக்கிய தத்துவம்

ஆதிசக்தியின் படைப்பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆன பின் ஞானத்தின் வழித்தொடரைத் தனக்குள் விளைய வைத்து உடலை விட்டு அகன்றால்
1.பேரண்டத்தில் எத்தனை தீமையின் நிலைகள் நஞ்சாக இருப்பினும் தன்னை அணுகாது
2.அதை அடக்கிடும் நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றிடும் நிலைகள் வருகின்றது.

அப்படி ஆனவர்கள்தான், இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள், சப்தரிஷிகள்.
1.ஆக ஒவ்வொரு பூமியின் தொடர் கொண்டும் வாழுகின்றார்கள்
2.அந்தந்த பிரபஞ்சம் இறந்தாலும், இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டு
3.தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும்
1.உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து
2.தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து
3.பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.

இந்த அகண்ட பேரண்டத்தில், இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு. ஆக, மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
1.மனிதர்களாகிய நாம் அனைவரும்
2.அதிலே இணைந்தால்தான் நல்லது.

முழுமையான விரிவாக்கம்

பேரண்டம், முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது,
1.ஒன்றுடன் ஒன்று மோதி சுழற்சி வேகம் கொண்டு சூரியன்களாக விளைந்து நட்சத்திரங்களாக விளைந்து
2.அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து, உயிரணுக்களாக விளைந்தது.

உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து நுகர்ந்து
1.உணர்வின் தன்மை உடல் பெற்று
2.எண்ணத்தின் நிலைகள் கொண்டு இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு
3.தன்னைக் காத்திடும் காத்திடும் நிலைகள் கொண்டு வந்தது.

இப்படி இந்த உயிரின் நிலைகள் உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும்,
1.இந்த உயிருடன் ஒன்றி
2.ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள் தான் மகரிஷிகள்.

ஆகவே அது அனைத்தும் நாம் பெற முடியும்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலைக் காண அதைப் பெறும் பாக்கியத்தை இன்று நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எதிர்பாராத விதமாக சில சிக்கல்களில் மாட்டுபவர்கள் கடைசி நேரம் அபயக் குரலை எழுப்புகிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள்…! என்கிறார்கள்.

நாம் நல்ல எண்ணத்தில் இருக்கின்றோம். அவர்களைக் காக்கவும் முயற்சி செய்கின்றோம். அந்த விபத்திலிருந்து கூடுமானவரை தப்பிக்க வைத்து விடுகின்றோம்.
1.அந்த உடலை அந்த நேரத்தில் காக்கின்றோம்.
2.ஆனாலும் அந்த விதி வேலை செய்யும்.

“விதி வேலை செய்கிறது…” என்று மீண்டும் அதை எடுத்துக் கொண்டால் அதனுடைய “எதிர் அலைகள்” ஏராளமாக வரும். அப்பொழுது இந்த உடல் பற்று தான் வரும்.

விதிப்படி நாம் மீண்டும் பிறப்பிற்கு வருகின்றோம். பல துன்பங்களை அனுபவிக்கின்றோம்.
1.அந்த உணர்வின் தன்மை அதிகமாக வளர்த்து விட்டால்
2.இதே போல பல இம்சைகள் உருவாகக்கூடிய ஒரு உயிரணுவாகத்தான் மாற்றும்.

இப்படி நம் உடலில் எத்தனையோ விதிகள் உண்டு…!
1.அதனதன் நிலைகள் வரப்படும் பொழுது
2.நாம் செய்த நிலைகளுக்கு இது “கழிகிறது…!” (இது மிகவும் முக்கியம்)

சரி…! இனிமேல் நாம் அந்த அருள் ஒளியை அதிகமாகக் கூட்ட வேண்டும் என்ற நிலைகளில் எடுத்துப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் எதுவாக இருந்தாலும் தெரிந்தோ… அல்லது தெரியாமலோ அது பட்டிருந்தாலும்… நம் உயிர் அதை இயக்கத்தான் செய்யும்.

சமையல் செய்யும் பொழுது அடுப்பில் பாத்திரத்தை வைக்கின்றீர்கள். நான் தானே சமையல் செய்தேன். நான் அதிலே போடாமல் அது எப்படி அதற்குள் ஒரு பூச்சி வரும்…! என்று கேட்டுக் கொண்டிருந்தால் என்ன ஆகும்…?

1.நாம் போடவில்லை…!
2.காற்றிலே பறந்து வந்த ஒரு விஷப் பூச்சி சமையல் பாத்திரத்திலே விழுந்து விடுகின்றது.
3.நான் போடவில்லையே..! என்று சொல்லிக் கொண்டு
4.நான் போட்டால் தானே அப்படி வரும்…! என்று சொன்னால் அது எப்படி…?

நெருப்பைக் கூட்டிப் பாத்திரத்தை அதன் மீது வைத்து அதிலே எந்தச் சரக்கைப் போடுகின்றோமோ அதை அந்த நெருப்பு வேக வைக்கும்.
1.இதைப் போன்று தான் இந்த உயிருடைய வேலை நெருப்புக்குச் சமம்
2.எந்த உணர்வை நுகர்ந்தோமோ… சுவாசித்தோமோ… அதை அணுவாக உருவாக்கி உடலாக உருவாக்கிவிடும்
3.எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாக ஒரு விதியாக உருப்பெற்று விடுகிறது
4.உயிருடைய வேலை அது தான்…!

அப்படியானால் தெரிந்தோ தெரியாமலோ உயிரிலே படும் தீமைகளை எல்லாம் மாற்றியமைக்கக்கூடிய சக்தி யாரிடம் இருக்கிறது..,?

நம் ஆறாவது அறிவுக்குத் தான் இருக்கின்றது. ஆறாவது அறிவு கொண்டு மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்திய அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்தால் உயிர் அதனின் இயக்கமாக நம்மை மாற்றும். விதியை மதி கொண்டு நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஆனால் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் விதியின் வழியாகச் சென்று மீண்டும் தேய்பிறையாகக் கீழான பிறவிகளுக்குப் போய்விடுவோம்.

சாகாக்கலை பெரிதல்ல

 

ஒரு சில வைத்தியர்கள்… ரசமணி போன்று செய்யக்கூடியவர்கள் என்னிடம் வந்து “சாகாக்கலை…” உங்களுக்குத் தெரியுமா…? என்று கேட்டார்கள்.

தெரியவில்லையே என்று சொன்னேன்…!

என்னங்க… நீங்கள் பெரிய சாமி ஆகி விட்டீர்கள்…? என்னென்னமோ சொல்கின்றீர்கள்…! எதை எதையோ சொல்கின்றீர்கள்…! சாகாமல் இருப்பதற்கு வழி உண்டா…? சாகாக்கலை உங்களுக்குத் தெரியுமா…?

பயங்கரமாக அவர் அடித்துப் பேசுகின்றார். பல பல மருந்துகளைப் பற்றிப் பேசுகிறார்.

பின்பு கடைசியில் அவரிடம் நான் சாகாக்கலை என்றால் உங்களுக்கு என்ன தெரியும்…? என்று கேட்டேன்.

என்ன நீங்கள் இப்படிக் கேட்கின்றீர்கள்…! உங்களுக்கு இந்த விவரமே தெரியவில்லை…! எனக்கு விவரம் தெரியவில்லை என்று அவர் பேசுகின்றார்.

மனித வாழ்க்கையில் எதை எதை எல்லாம் நீங்கள் உடலில் விளைய வைக்கின்றீர்களோ அது சாவதில்லை. இந்தக் கலைப்படி
1.ஒருவனைக் கொல்ல வேண்டும் கொல்ல வேண்டும் கொல்ல வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால்
2.அந்தக் கொல்லும் உணர்வு உங்களைக் கொல்லும்… இது சாகாக்கலையாக மாறும்.
3.அடுத்தாற்போல் மற்றதைக் கொன்று சாப்பிடக்கூடிய சாகாக்கலையாக மாறி
4.மற்றதை இம்சைப்படுத்திய உணவாக உட்கொள்ளும் உயிரினமாக உருவாக்கிவிடும்.

இதற்குப் பெயர் தான் சாகாக்கலை என்று சொன்னேன்.

அவர் உடனே என்னங்க…! இப்படி சொல்கின்றீர்கள்…! என்றார்.

வேகாநிலை…! மனிதனைத் தூக்கித் தீயிலே போட்டால் உயிர் வேகின்றதா…? வேகுவது இல்லை.

ஆனால்… இந்த உடலிலே எவ்வளவு காலம் வளர்த்துக் கொண்டது இருக்கின்றதோ அது அனைத்தும் “ஐய்யயோ… அம்மம்மா…!” என்று அலறுகின்றது. அந்த நேரத்தில் தன்னுடைய தாயை நினைத்தால் இந்த உயிரான்மா தாயின் உடலுக்குள் செல்கின்றது.

ஐயோ… அண்ணே…! என்று அந்த இட்த்தில் எதிரிலே கண்ணிலே படும் நண்பர்களையோ மற்றவர்களையோ எண்ணினால் இந்த உணர்வுகள் பதிவாகி “உடலெல்லாம் எரிகின்றதே… எரிகின்றதே… என்னைக் காப்பாற்றுங்கள்…” என்ற ஓலத்தை எழுப்பி
1.கண்ணில் இந்த உணர்வுகள் ஆழமாகப் பதிவாகி விட்டால்
2.உடலை விட்டுச் சென்ற பின் சாகாக்கலையாக அவர் உடலுக்குள் சென்று இயக்கத் தொடங்கும்.

உயிர் வேகுவது இல்லை. ஆனால் உடலும் உணர்வுகளும் கருகுகின்றது. இந்தக் கருகிய உணர்வுடன் இங்கே உருவாக்கிய நிலையை அந்த உடலுக்குள்ளும் சென்று
1.அடுத்து “அம்மம்மா… ஐயோ எரிகின்றதே… எரிகின்றதே…” என்று அவரும் சொல்லத் தொடங்குவார்.
2.சீக்கிரம் எதையாவது மேலே போட்டு அல்லது ஊற்றி அவரும் தீயை வைத்துத் தன்னை எரித்துக் கொள்வார். இதைப் பார்க்கலாம்.

ஆக எந்தெந்த உணர்வு கொண்டு இறக்கின்றார்களோ இன்னொரு உடலுக்குள் சென்றால் இதே வேலையை அங்கேயும் செய்யும்.

ஒருவர் ஹார்ட் அட்டாக்கினால் வேதனைப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு உதவி செய்த நண்பர்கள் யாரையாவது அவர் நினைவில் அதிகமாக வளர்த்திருந்தால்… இவர் இறந்தால் இது சாகக்கலையாக மாறி அந்த உடலுக்குள் சென்று விடும்.

அங்கே சென்ற சிறிது காலத்தில்
1.“நண்பர் இவ்வாறு ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார்…” என்று கேள்விப்பட்டபின் இதே உணர்வுகள் இயக்கி
2.அவருக்கும் இதே நோய் வந்து அதனால் இறந்து விடுவார்… இதற்குப் பெயர் சாகாக்கலை.

எதன் எதன் அடிப்படையில் வருகின்றதோ இது எல்லாம் சாஸ்திரங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆனால் “சாங்கிய சாஸ்திரம்…” என்று இதையெல்லாம் மூடி மறைத்து விட்டார்கள்… மறைக்கப்பட்டு விட்டது.

ஆகையினால்… இந்த மனித வாழ்க்கையில் வெறுப்பையும் வேதனையையும் வளர்த்தால் இது சாகாக்கலை. சாகாமல் அது வளர்ச்சியாகிக் கொண்டே இருக்கும்.

ஆனால் வேகா நிலை என்றால் என்ன…?

1.மகரிஷிகள் அனைவரும் வேகா நிலை அடைந்தவர்கள்
2.இந்த உலகிலே… பேரண்டத்திலே எத்தகைய நிலைகள் வந்தாலும் அவர்களை அது சுட்டுப் பொசுக்க முடியாது.
3.எதிலேயும் அவர்களை வேக வைக்க முடியாது… ஒளியின் சுடராகவே இருக்கும்.. அது தான் வேகாநிலை என்பது.

இந்தப் பேருண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். என்றுமே நாம் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் நாமும் அந்த நிலை பெற முடியும்.

அந்த நிலையை அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம் என்றும் வராக அவதாரம் என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஒவ்வொரு உடலையும் உற்றுப் பார்த்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வலிமை கொண்டு
1.தீமைகளிலிருந்து விடுபட… எந்த உடலைக் கூர்மையாக உற்று பார்த்ததோ
2.அதனின் உணர்வை வளர்த்து அடுத்து அதே உடலாக உருவம் பெறுகின்றது அந்த உடலுக்குள் சென்று…!

இப்படித்தான் தீமையில் இருந்து விடுபடும் உடலின் வலிமை பெற்று வளர்ந்த நிலைகள் கொண்டு வராகனாக உடல் பெறுகின்றது. வராகனாக உடல் பெற்ற பின் என்ன செய்கிறது…?

தன் வலிமையான உணர்வைப் பாய்ச்சித் தீமையைப் பிளந்து சாக்கடைக்குள் மறைந்துள்ள (நறுமணத்தை) நல்ல உணர்வை நுகர்ந்து உணவாக உட்கொள்கிறது.

நாற்றத்தைப் பிளந்து நல் உணர்வை நுகரும் தன்மையைத் தன் வாழ் நாள் முழுவதும் பெருக்கி இந்தத் தீமையான உடலைப் பிளந்துவிட்டு தீமையைப் பிளந்திடும் உணர்வுகள் விளைந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.

மனிதனான பின் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள தீமை விளைவிக்கும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு நஞ்சை மாற்றிடும் சக்தியாக “ஆறாவது அறிவு வருகின்றது…!”

ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஞானிகள் காட்டிய வழியில் இந்தக் காற்றுக்குள் மறைந்துள்ள அருள் மகரிஷியின் உணர்வை வலுப் பெறச் செய்து எண்ணத்தால் அதனை நுகர்ந்தறிந்தால் வாழ்க்கையில் இருள் சூழச் செய்யும் நிலைகளை எல்லாம் ஒளியாக மாற்றிட முடியும்.

1.இதனை எவர் ஒருவர் சீராகச் செயல்படுத்துகின்றாரோ அவரே அடுத்து பிறவியில்லா நிலை அடையும் தகுதி பெறுவர்.
2.அந்த மகரிஷிகளின் அருளாற்றலை உங்கள் குடும்பங்களிலும் பரவச் செய்து மரணமில்லாப் பெரு வாழ்வாக வாழ முடியும்.

ஏனென்றால் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கோணத்தில் உங்களுக்குள் பதிவு செய்கிறேன் (ஞானகுரு). அந்தப் பதிவின் நினைவாற்றலை நீங்கள் கொண்டு வந்து தீமையை அகற்றிடும் சக்தியாக விளைய வேண்டும்.

இன்று காற்று மண்டலங்களில் கடுமையான நச்சுத் தன்மைகள் பரவினாலும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டி நீங்கள் இடும் மூச்சலைகள் இந்த உலகம் முழுவதும் பரவி தீமைகள் புகாத நிலையில் தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த உபதேசம்.

1.ஆக… நான் ஒருவன் (ஞானகுரு) இருந்து இதை ஒன்றும் செய்ய முடியாது.
2.நான் செய்வேன்..! என்று சொன்னால் அது நானாக அகந்தையாகப் பேசிக் கொள்ளலாமே தவிர
3.நான் செய்வேன் என்றால் இது அகந்தைக்குரியது தான்…!
4.நானாக ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு நெல் என்றுமே ஒருவருக்குப் பசியைத் தீர்த்தது இல்லை. அதை விதைத்துப் நெல் குவியலாக உருவாக்கிய பின் அளவுகோல் அளந்து அதற்குத் தக்கவாறு ஒவ்வொருவரது பசியையும் போக்கவும் முடியும்.

ஆகவே அதைப் போல நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு அந்த அருள் மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி அழுத்தமான நிலைகள் கொண்டு அந்த மூச்சலைகளை இந்தக் காற்று மண்டலத்திலே பெருக்க வேண்டும்.

நம்மையும் காத்து மக்களையும் காக்கும் சக்தியாக வளர வேண்டும்.

“ஐயோ… பாவம்…!” என்று இரக்கப்படுவதில் உள்ள பின் விளைவுகள்

 

உதாரணமாக இரயிலிலே நாம் பிரயாணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள். அங்கே பயணம் செய்பவர்களில் ஒருவர் கடுமையாக வேதனைப்படுகிறார் என்று பார்க்கிறோம்.

அவரை நமக்குத் தெரியாது… அவர்களிடம் நாம் வேறு உணர்வு கொண்டும் பழகவில்லை. பிரயாணம் செய்யும் பொழுது தான் பழக்கம். அவர் சிரமப்படுவதை… இரக்க மனம் கொண்டு என்ன… ஏது…? என்று பார்க்கின்றோம்.

ஆனால் அவருடன் வந்தவர்களோ சலிப்பாகச் சஞ்சலமாகவே அவரிடம் பேசுவார்கள். ஏனென்றால் அடிக்கடி அவரிடம் கவலைப்பட்டுப் பழகியவர்கள் அல்லவா. இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இவ்வாறு செய்து கொண்டிருக்கிறாய்…? என்று அடிக்கடி பேசுவார்கள்.

ஆனால் நாமோ…
1.ஏன் இப்படி…? என்று இரக்கத்தோடு இந்த செயலைக் கவனிக்கின்றோம் ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே பழகுகிறோம்.
2.ஆகையினால் ஏன் இந்த மாதிரிச் செய்கிறீர்கள்…! உங்களுக்கு என்னம்மா வேண்டும்…? ஏதம்மா வேண்டும்…? என்று இப்படிப் பதிவு செய்கிறோம்.

இப்படிப் பண்போடு சொல்லப்படும் பொழுது அவர்களுக்கு வேதனை கொஞ்சம் தணிகிறது. “இந்த உணர்வு…” அந்த வேதனைப்படுவர் உடலிலே ஆழமாகப் பதிவாகி வலுப் பெற்று விடுகின்றது.

நாம் என்ன நினைக்கின்றோம்…! இந்தப் பெண்மணி இவ்வளவு கஷ்டப்படுகின்றது… ஆனால் இரக்கமில்லாதபடி சமுதாயம் பேசுகிறது பார்…! என்று “அவர்கள் உணர்வை…” நமக்குள் பதிவு செய்கின்றோம்.

அடுத்து அவர் ஊருக்குப் போய்ச் சேருகின்றார். அவரைச் சார்ந்தவர்கள் உணர்வு வரும் பொழுது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது…
1.பார்… எத்தனை நல்லது செய்தோம்…? எத்தனை வசதி கொடுத்தோம்…? நம்மை இப்படித் தான் பேசுகிறார்கள்.
2.ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது “அந்த மகராசி… என்ன உபச்சாரம்…!” என்ற இந்த உணர்வு அங்கே வலுப்பெறுகின்றது.

ஆனால் நாமோ அவர்கள் வேதனையைப் பதிவு செய்கின்றோம். அதாவது
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…!
2.நம்முடைய உடலிலே பதிவான உணர்வுகள் அங்கே…!
3.அதே சமயத்தில் அங்கே வேதனைப்படுவருடைய வீட்டிலோ அவருக்கு வெறுப்பு.

உடலை விட்டுப்பிரியும் போது அவரின் உணர்வுகள் “இரயிலில் தனக்கு ஆதரவாகப் பேசியவர் மேல் நினைவு வருகின்றது…!” விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்.

உயிர் பிரியும் பொழுது அந்த ஆன்மா எந்த உணர்வைக் (எண்ணங்களை) கடைசியிலே வலுவாக எடுத்துக் கொண்டதோ…
1.நாம் இங்கே இருந்தாலும் நம் மீது அந்த நினைவுகள் வந்து உடலுக்குள் புகுந்துவிடுகிறது.
2.நம் உடலில் அந்த ஆன்மா புகுந்தது நமக்கே தெரியாது.

ஆனால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களை எண்ணும் போது… பாவிகள் என்று பதிவு செய்து அந்த எண்ண அலைகளை அங்கே பரப்புகின்றது. இவ்வாறு பதிந்த எண்ணங்கள் கொண்டு இதிலே மடிந்து விடுகின்றது.

சாப அலைகள் அந்தக் குடும்பத்தைச் சாடுகிறது. இறந்த உடலில் விளைந்தது அனைத்துமே அந்தக் குடும்பத்திற்குப் பாய்கின்றது.

ஆனால் இங்கே பற்று கொண்ட நிலையில் மகராசி எனக்கு ஆதரவாகப் பேசியது என்ற அந்த எண்ணத்துடன் அந்த ஆன்மா இங்கே வந்து விடுகின்றது.

விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்கும்…? அந்த மாதிரி
1.அவர் வேதனைப்பட்ட உணர்வுக்குள் இந்த உணர்வின் தன்மை கலந்து இங்கே இயக்கச் சக்தியாக மாறுகிறது.
2.அந்த உடல் எவ்வாறெல்லாம் வேதனைப்பட்டதோ… தன் குடும்பத்தாரை வெறுப்புடன் எப்படிப் பேசியதோ…
3.இங்கே வந்தபின்… தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வெறுப்பாகப் பேச வைக்கும்.

பார்க்கலாம்… சில குடும்பங்களில் நேற்று வரை அவருடைய பேச்சு பழக்க வழக்கம் எல்லாமே… நல்லதாக உதவி செய்வதாக இருக்கும். ஆனால் இந்த ஆன்மா புகுந்த பின் பார்த்தால் எல்லோரையும் வெறுத்துப் பேசும்.

நேற்று வரை எல்லோருக்கும் நல்லதைத்தான் செய்தார் ஆனால் இப்பொழுது இப்படிப் பேசுகின்றாரே…! என்னமோ தெரியவில்லை…! என்பார்கள்.
1.அந்த உடலிலே விளைந்த உணர்வின் செல்கள் நோயாக மாற்றிவிடும்.
2.பெரும்பகுதி இப்படித்தான் மனிதன் வாழ்க்கையில் தேய்பிறையாகச் சென்று கொண்டிருக்கின்றான்.

ஆனால் இது எல்லாம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதைத்தான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு வயது 95. அப்பொழுது எனக்கு (ஞானகுரு) ஏழு வயது இருக்கும்.

எங்கள் வயலுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் ஒரு சுடுகாட்டைத் தாண்டித் தான் போக வேண்டும். குளம் எல்லாம் இருப்பதால் நான் அங்கே எங்கள் வயலுக்குத் தினமும் போய் வருவேன். அப்படி ஒரு பழக்கம் அந்த வயதில் எனக்கு இருந்தது.

என் சொந்தக்காரர் அந்தப் பெரியவர் 95 வயது என்ன செய்தார் தெரியுமா…? எல்லாச் சொந்தக்காரர்களுக்கும் தகவல் சொல்லிக் கூப்பிடுகின்றார்.
1.எனக்காக வேண்டி இனி என்ன செய்யப் போகிறீர்கள்…?
2.நான் சாவதற்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கிறது…! என்று சொல்கிறார். அப்படியே சொல்கிறார்…!

வந்தவர்களிடம் எல்லாம் நான் பத்து நாளில் போய்விடுவேன் டேய்… நீங்கள் எல்லோரும் நன்றாக இருங்கடா..!

ஒரு நாள் போய் விட்டது… இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கிறது. நீங்கள் என்னென்ன ருசியாக வேண்டுமோ சாப்பிடுங்கள். எல்லோருக்கும் சாப்பிடக் கொடுங்கள்…!

ஒவ்வொரு நாளும் இப்படியே சொல்லிக் கொண்டே இருந்தார்.

பத்தாவது நாளும் வந்தது.
1.இனி ஒரு மணி நேரம் இருக்கிறது…. அரை மணி நேரம் இருக்கிறது
2.கால் மணி நேரம் இருக்கிறது… பத்து நிமிடம் இருக்கிறது
3.இன்னும் ஒரு நிமிடம் இருக்கின்றது… சொல்லிக் கொண்டே போகிறது.
4.சொல்லிக் கொண்டே இருந்தார்… அப்படியே உயிர் பிரிந்தது…!

அவர் எந்த வழியில் எப்படி இருந்திருப்பார் பாருங்கள்…!

கடைசியில் அவரைச் சுடுகாட்டில் வைத்துத் தகனம் செய்கின்றார்கள் நான் அன்றைக்குத்தான் சுடுகாட்டில் எரிப்பதைப் பார்க்கின்றேன். அங்கே அவருடைய உடல் எரிந்து கொண்டிருக்கின்றது.

எரிந்து கொண்டிருந்த உடல் என்ன செய்தது…?
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வினுடைய வேக நினைவுகள் எவ்வளவு வலுவாக இருந்ததோ
2.அந்தச் சரீரம் அப்படியே எழுந்து உட்கார்கிறது…!

தொப்….தொப்..! என்று போட்டு அடித்து மறுபடியும் கட்டையைப் போட்டு எரிக்கின்றார்கள். இதைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனது…?

சுடுகாட்டில் அன்றைக்குத் தான் பேயைப் பார்த்த உணர்வு போல் பயந்து போய் விழுந்தடித்து ஓடத் தொடங்கினேன். ஏழு வயதில் எனக்கு அந்தப் பயம் வருகிறது. நடந்த நிகழ்ச்சி நேரிலேயே இதைப் பார்த்தது. ஆனால் செத்தது அவர்.

இந்த உணர்வுகள் அதை எல்லாம் நீக்கினாலும் கூட அந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அந்த மாதிரி இயக்குகிறது. பார்த்த உண்மை நிலை இது…!

பக்தியின் நிலைகள் அன்று காட்டியிருந்தாலும்…
1.தாய் கருவிலே விளைந்த இந்த உணர்வுகள் மெய் ஒளியைப் பெற்று அங்கே அழைத்துச் செல்லும்.
2.அவர்களுக்குத்தான் இந்த மாதிரியான நினைவுகள் வரும்…!

உங்கள் ஒவ்வொருவருக்கும் (இன்னார் இன்னாருக்கு) இதெல்லாம் நான் செய்தேன். நீங்கள் இப்படிச் செய்து கொள்ளுங்கள்…! நான் உடலை விட்டுப் போகிறேன்…! என்று சொல்லிவிட்டே போகிறார்கள்.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

இரவிலே படுக்கைக்குச் செல்லும் பொழுது “ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

 

குழந்தைகளை நாம் வளர்க்கின்றோம், நாம் சொன்னபடி அவர்கள் கேட்கவில்லை என்றால் என்ன ஆகிறது…?
1.நம் பையன் தான்… ஆனால் வெறுப்பின் உணர்வைப் பதிவு செய்து விட்டால்
2.இவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருப்பான்…! என்று இந்த உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்.

ஒரு தரம் பதிவாக்கி விட்டால் பல காலம் நான் நாம் அவன் மீது பேரன்பு வைத்திருந்தாலும் ஒரு தடவை எடுத்த இந்த உணர்வுகள் முன்னணியில் வந்து விடுகின்றது.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெறுப்பின் எண்ணங்களே வரும். அது வளர்ச்சியாகும். அவனை நல்லதாக மாற்றும் நிலைகளே நமக்குள் மாறி விடுகின்றது. அவன் மீது நாம் வைத்திருக்கும் பற்றைத் தான் மாற்றுகிறது.
1.அவன் மீது பற்று கொண்டு…
2.தீமையிலிருந்து அவனை நல்வழிப்படுத்தும் உணர்வு நமக்குள் வராது.
3.காரணம்… உணர்வின் இயக்கங்களில் தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…!

ஆகவே… இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுதெல்லாம் இது போன்ற உணர்வுகளை நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஆத்ம சுத்தி செய்தாலும் கூட
1.தூங்கச் செல்லும் பொழுது குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது நம் நினைவைத் துருவ மகரிஷியுடன் ஒன்றச் செய்து
2.அடுத்து சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து… சப்தரிஷிகளுடன் நாம் இணையச் செய்ய வேண்டும்.

ஒருவர் மட்டும் நாம் குறி வைத்து எண்ணுவதல்ல. பலரும் சேர்ந்துதான் அது ஒன்றாக ஆனது. இது தான் அடிப்படைக்குறி என்றால் ஒன்றை மட்டும் எடுத்து ஒன்றாக எதுவும் இணைந்ததில்லை.

துருவத்தை முதலில் நுகர்ந்து விண்ணிலே ஒளியாகச் சென்றது துருவ மகரிஷி. அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

ஆனால் அவர்கள் அனைத்தும் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள் மகரிஷிகள். மனிதனாக இருக்கும் பொழுது சிருஷ்டித்துக் கொண்டது.
1.இந்த உணர்வை நாம் பருக வேண்டும்.
2.இதையெல்லாம் வலுப்படுத்தி அவர்கள் ஆன நிலையை எடுத்துத் தான் நமக்குள் பெருக்க வேண்டும்.
(சப்தரிஷிகள் சப்தரிஷி மண்டல உணர்வை முதலில் எடுத்துத் தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திர உணர்வை வலுவாக்க வேண்டும்)

அதைப் பெறச் செய்வதற்குத் தான் பௌர்ணமியன்று கூட்டுத் தியானங்களில் எல்லோரும் சேர்ந்து “சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலுவாக்கச் சொல்வது…”

அந்த வலுவை நமக்குள் கூட்டி இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் ஆன்மாவைச் சிறிது நேரமாவது தூய்மைப்படுத்த வேண்டும்.

உதாரணமாக… சமைப்பதற்காக வேண்டி பாத்திரத்தை நாம் உபயோகப்படுத்துகின்றோம்… பின் தூய்மைப்படுத்துகின்றோம் ஆனால் அதிலே ஒன்றிய நிலைகள் சில இடங்களிலே அழுக்கு அதிகமாகப் படிந்துவிடும்.

அதை நாம் நீக்க முயற்சித்தால் தேய்க்கத் தேய்க்க பாத்திரமே ஓட்டையாகி விடுகிறது. ஒரு பக்கம் மேடாகி ஒரு பக்கம் தேய்மானமாகி மேடு பள்ளம் ஆகி சமமில்லாத நிலையாகி விடுகிறது.

இதைப் போன்று தான் அவ்வப்போது (அன்றன்று) தூங்கச் செல்லும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்துத் தூய்மைப்படுத்துகின்றோம்.

அதில் சில தொக்குகள் இருந்தாலும்
1.இரவிலே மீண்டும் முழிப்பு வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
2.மறுபடியும் அந்த எண்ணத்தைக் கூட்டித் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் ஆன்மாவிலே அந்த அணுக்களுக்குக் கிடைக்கக் கூடியதைத் தடைப்படுத்தும் போது தன்னாலே மாறிவிடும்.

ஆகவே இரவிலே எப்படி இருந்தாலும் “படுக்கைக்குச் செல்லும் பொழுது ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”

உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்

 

நீங்கள் தர்ம சிந்தனையுடன் அன்பு, பரிவு, பாசம், ஞானம், தைரியம், சாந்தமாக வாழ எண்ணி உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலும், ஒருவர் மற்றொருவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும்போது என்ன நடக்கின்றது…/

நீங்கள் அவரைப் பார்க்கும் பொழுது…
1.உங்கள் புலனறிவால் கோப உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள ஈர்ப்பு காந்தத்தில் இணைந்தவுடன்
2.உடல் காற்றில் கலந்துள்ள கோப உணர்வலைகளை ஈர்ப்பதனால் உங்கள் சுவாசத்துடன் கலந்து உயிரில் உராய்வதனால்
3.ஆத்திர உணர்வின் எண்ணம் உங்களை அறியாமலேயே ஆத்திரத்துடன் பேசவோ கேட்கவோ தூண்டுகின்றது.

அச்சமயம் உங்கள் உமிழ் நீரும் மாறுபட்டு நீங்கள் உட்கொண்ட ஆகாரத்துடன் கலப்பதால் குடலில் ஒருவித எரிச்சல் ஏற்படுகின்றது. அப்பொழுது எதைச் சாப்பிட்டாலும், சுவை குன்றியே இருக்கும்.

அதனால் ஆகாரம் குறைத்துச் சாப்பிட்டு உடல் சோர்வடையக் காரணமாகின்றது.
1.கோப ஆத்திர உணர்வலைகளை இரத்தம் வடித்துக் கொள்வதனால்
2.இரவில் உறங்கும் பொழுது “இரத்தம் தசைகளாக மாறும் சமயம்…”
3.உடலில் ஒருவித எரிச்சலும் தூக்கமின்மையும் ஏற்படக் காரணமாகின்றது.

உதாரணமாக… நீங்கள் வயலைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்து அதிலே நெல் முளைத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம். காற்றில் மிதந்து வந்த, வேண்டாத வித்துக்கள் வயலில் வீழ்ந்து களைகளாக முளைத்து விட்டால் நெல்லிற்கு இட்ட உரத்தைக் அந்தக் களைகள் எடுத்துக் கொண்டு களைகள் பெருகுகின்றன.

களைகளை நீக்கவில்லையென்றால் நெல் பயிர் வளர்ச்சி குன்றி நெல்லின் தரம் குறைந்து விடும்.

இதைப் போன்று
1.நீங்கள் சுவாசித்த கோப குணங்களின் உணர்வலைகளின் நுண் அணுக்கள் உங்கள் இரத்தத்தில் பெருகி
2.தசைகளாக மாறும் பொழுது தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் பெருகி மேல் வலி, தலை வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதும்
3.அதனால் உடல் சோர்ந்து “எச்செயலையும் சோர்வுடன் செய்யக் காரணமாகின்றன…”

நீங்கள் உலக நிலைகளை அறிந்து கொள்ளும் வண்ணம் பத்திரிக்கையைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே “இரவு 8.00 மணியளவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என்று கொள்ளையர்கள் வீடு புகுந்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அடித்துப் படுகாயப்படுத்திப் போட்டுவிட்டு வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள்” என்று படிப்பீர்கள்.

அப்பொழுது உங்களையறியாது, பயம் கலந்த வேதனை உணர்வுகளைச் சுவாசிப்பதனால் அவை உங்கள் இரத்தத்தில் கலந்து விடுகின்றன.

அன்று இரவு… நீங்கள் அமைதியாகப் படுத்திருந்தாலும், வேறு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலும் எதிர்பாராது சன்னல் கதவின் ஓசை “டப்…” என்று உங்கள் செவிகளில் கேட்டவுடன், உங்களையறியாது பய உணர்வு உந்தப்பட்டு உடல் சிலிர்த்து, பய உணர்வலைகளை சுவாசித்து, மேலும் மேலும், பய உணர்வுகள் பெருகக் காரணமாகின்றன.

இது போன்று அடிக்கடி நேர்ந்தால் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் மனத்தில் ஒருவிதப் பயத்துடன் செயல்படும் நிலை ஏற்படுகின்றது,

நீங்கள் வேலையின் நிமித்தம், தெருவில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெருவின் முனை அருகில் செல்லும் சமயம் ஒரு கார் திடீரென்று திரும்புகையில் உங்கள் மீது மோதும் நிலையை நீங்கள் பார்க்க நேர்ந்தால்…
1.கண்களின் ஈர்ப்பு காந்தத்தில் பாய்ச்சுவதால் உங்கள் உடல் துரித நிலையில் பய உணர்வுகளை அதீதமாகச் சுவாசித்து
2.துரிதமாக இயங்கி, உடல் நடுக்கமாகி உங்களைக் காக்கும் எண்ணம் உருப்பெற்று
3.விபத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.

அதே சமயத்தில் அதீதமான பயத் துடிப்புடன் ஓட்டுநரைப் பார்க்கும் பொழுது ஆத்திர உணர்வுகள் உந்தப்பட்டு, ஆத்திர உணர்வுகளையும் சுவாசிக்க நேருவதால் பயத் துடிப்புடன் ஆத்திர உணர்வலைகள் உயிரில் உராய்வதால் புலன்களின் பொறிகள் இயக்கப்பட்டு “ஆத்திரத்துடன் பேசுவதும்… அதற்குரிய செயலையும் செய்விக்கின்றன…”

நீங்கள் விபத்திலிருந்து தப்பியதைப் பார்த்தவர்கள் உங்களைப் பார்த்து “நீங்கள் செய்த தர்மத்தால் உங்களைத் தெய்வம் காப்பாற்றியது…” என்று ஆறுதல் கூறுவார்கள்.

ஆனால் நீங்கள் சுவாசித்த அதீத பய ஆத்திர உணர்வலைகளின் நுண் அணுக்கள் “இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுகின்றன…”

வயல்களைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்துப் பயிராக முளைத்து வரும் நிலையில் எங்கோ காற்றில் கலந்து வந்த வித்துகள் வயலில் வந்து வீழ்ந்தால் அதுவும் முளைத்து விடுகின்றது.

நீங்கள் எதிர்பாராது அதீத பய உணர்வுடன் ஆத்திர உணர்வையும் சுவாசித்ததால்
1.அவைகள் இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுவதும்
2.தசைகளில், பய உணர்வுகளின் அணு திசுக்களும் ஆத்திர உணர்வுகளின் அணு திசுக்களும் உருப்பெற்று
3.அதன் இயக்கத்தால், தசைகளில் அமிலங்கள் சுரந்து
4.இந்த அமிலங்கள் உடலை இயக்கும் நரம்புகளில் ஈர்க்கப்பட்டு
5.நரம்புகள் இயங்குவதால் நரம்புகளில் உள்ள அமிலங்களின் உணர்வுகளின் சத்தை எலும்பின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு
6.எலும்பினுள் “ஊனாக” வடித்துக் கொள்கின்றன
7.இந்த ஊனைத்”தான் ஞானிகள் “ஊழ்வினை” என்று பெயர் வைத்தார்கள்.

எடுத்துக்காட்டாக வேப்ப மரத்தை எடுத்துக் கொள்வோம்.

வேம்பின் வித்து எத்தனை வகையான உணர்வின் சத்தில் வித்தானதோ அது நிலத்தில் முளைத்து வரும் பொழுது அதன் உணர்வுகளின் சத்தில் கலந்துள்ள ஈர்ப்பு காந்த சக்தியால் நிலத்தில் உள்ள நீரையும், காற்றில் இருந்து வரும் தன் இனமான உணர்வுகளின் சத்தையும் ஈர்த்துக் கொண்டு… ஈர்த்துக் கொண்ட வெப்பத்தினால் நீரில் கலந்துள்ள உணர்வின் சத்துகள் அனைத்தும் உறைந்து விடுவதால் வெப்பத்தின் இயக்கத்தினால் நீரில் வேப்ப மரமாக வளர்கின்றது.

இதைப் போன்று…
1.அதீத பய குணத்தின் சத்தையும் ஆத்திர குணத்தின் சத்தையும் எலும்புக்குள் ஊனாக வடித்து வைத்துவிடுகிறது.
2.அவ்வாறு வடித்து வைப்பதனால் உயிரின் இயக்கத்தால் எலும்பின் காந்த ஈர்ப்பினால்
3.உடல், காற்றில் பரவி இருக்கும் பய உணர்வலைகளையும் ஆத்திர உணர்வலைகளையும் ஈர்க்கின்றது.

வேப்ப மரம் தன் உணர்வான கசப்பான சத்தை ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொண்டு தான் வளர்த்துக் கொண்ட கசப்பான உணர்வுகளின் மணத்தை வெளிப்படுத்தும் பொழுது அதை நீங்கள் நுகர்ந்தால் அதன் கசப்பான உணர்வலைகள் உங்கள் முகத்தைச் சுளிக்கச் செய்கின்றன.

அதைப் போன்றே… உங்கள் உடல் ஈர்க்கும், பய குணத்தின் உணர்வுகளையும் ஆத்திர குணத்தின் உணர்வுகளையும் நீங்கள் சுவாசிக்கும் பொழுது “முகம் கடுகடுப்பு அடைகின்றது…”

வேம்பின் இலைகளைச் சாப்பிட்டால் கசப்பின் உணர்வுகள் குடலில் இயங்கி, குமட்டல் ஏற்படும் பொழுது, வாந்தி வந்து விடும் என்ற பயம் கலந்த எண்ணம் தோன்றுகின்றது.

இதைப் போன்று, உங்கள் உடல் ஈர்க்கும் பய குணத்தின் உணர்வுகளையும், ஆத்திர குணத்தின் உணர்வுகளையும், நீங்கள் சுவாசித்துக் கொண்டு இருப்பதனால் இரத்தம் வடித்துக் கொண்டதால்
1.பய ஆத்திர குணங்களின் உணர்வலைகள் இரத்தத்தில் நுண் அணுக்களாக வளர்ச்சி பெற்று
2.இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் வரக் காரணமாகின்றது.

மேலும், அதனால் அதிர்ச்சியான பேச்சைக் காதில் கேட்டால் பயமான எண்ணம் தோன்றுவதும்… அச்சமயத்தில், பயத்தினால் சிந்திக்கும் திறன் இழந்து கோபப்படுவதும்…
1.ஏதாவது ஒரு பொருள், கீழே விழும் ஓசையைக் காதில் கேட்டால்
2.உங்களை அறியாது உடல் சிலிர்ப்பதும் அதனால் பயமான எண்ணங்கள் தோன்றுகின்றது.

இதைப் போன்று, எச்செயலை நீங்கள் செய்ய முற்பட்டாலும், உங்களை அறியாது அவசர ஆத்திர உணர்வுடன் செயல்படத் தூண்டுகின்றது. ஆனால் சிறிது தடைப்பட்டாலோ கோபமான எண்ணம் உருப்பெற்று விடுகின்றது.

இரத்தம் தசைகளாக உடல் உறுப்புகளாக மாறும் பொழுது அதில் பய, ஆத்திர குணங்களின் அணு திசுக்களாக வளர்ச்சி பெற்றுத் தசைகளிலும், உடல் உறுப்புகளிலும் தசைவாதம் குடல்வாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் வரக் காரணமாகின்றது.

அதே போல் தசைகளில் உருவான அமிலங்களை உடல் உறுப்புகளை இயக்கும் நரம்புகள் ஈர்த்துக் கொள்வதால் அதனால் கீல்வாதம் மூட்டுவாதம் முடக்குவாதம் போன்ற நோய்கள் உருப்பெறக் காரணமாகின்றது.

இப்படி… நாம் நமது வாழ்க்கையில் நல்ல குணங்களின் உணர்வுடன் சுவாசித்து உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தாலும் எதிர்பாராது பய குணங்களின் உணர்வையோ, கோப குணங்களின் உணர்வையோ, வேதனையின் குணங்களின் உணர்வையோ, ஆத்திர குணங்களின் உணர்வையோ, குரோதமான குணங்களின் உணர்வையோ, சோர்வான குணங்களின் உணர்வையோ, சஞ்சலமான குணங்களின் உணர்வையோ, சந்தர்ப்பவசத்தால் சுவாசிக்க நேர்ந்தால்…
1.நல்ல குணங்கள் பலவீனமாகி தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் நோய்கள் உருப்பெற்று
2.அதில் விளைந்த நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று
3.உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்குவதும்
4.உயிராத்மா வளர்ச்சி குன்றி உடலை விட்டு உயிராத்மா பிரிந்து செல்கின்றது.
5.இவ்வாறு பிரிந்த உயிராத்மா மறு பிறவியில் மனித உருப் பெறும் தகுதியை இழக்கின்றது.

இவ்வாறே, சாதாரண மனிதர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு ஒப்ப சந்தர்ப்பவசத்தால் கண்களால் காதுகளின் புலனறிவால் ஈர்க்கப்பட்ட, கோபம், குரோதம், ஆத்திரம், அதீத பயம் போன்ற குணங்களின் உணர்வலைகளைச் சுவாசித்து உடல்களில் பதிவாகி நோய்கள் உருப்பெறுகிறது. அதை இன்றைய மருத்துவம் குணப்படுத்துகிறது.

ஆனால் நோய்களினால் உடலில் விளைந்த நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று
1.உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்கிக் கொண்டிருக்கும்
2.அந்த “உணர்வுகளின் அணுசிசுக்களை” மாற்ற விஞ்ஞானிகளால் முடியாது.

விஞ்ஞான முன்னேற்றத்தினால் மனித உடல்களைப் பாதுகாக்க முடியுமே தவிர… அவர்களின் உடலை இயக்கும் “உயிராத்மாவை ஒளி நிலையாக மாற்றும் ஆற்றல்…” விஞ்ஞானிகளுக்கு இல்லை.

ஞானிகள், மகரிஷிகள் தங்கள் தபோவலிமைகளினாலும் தியானங்களினாலும் பேரண்டத்தில் பரவிக் கிடக்கும், பேராற்றல்களின் உண்மை நிலைகளைக் கண்டறிந்து தங்களின் புலனறிவால் அதை உடலில் சேர்த்து வளர்த்துக் கொண்டதால்
1.சந்தர்ப்பவசத்தால் தீய கோப குரோத ஆத்திர குணங்கள் போன்ற உணர்வலைகளைச்
2.தங்களுக்குள் சுவாசிக்க நேர்ந்தால் அவைகளை மாய்த்து விடுகின்றனர்.

அவ்வாறு தங்களின் உடல்களில் பேராற்றல் மிக்க உணர்வலைகளை வளர்த்துக் கொண்டு உயிராத்மாவை ஒளியாக மாற்றித் தங்கள் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பேராற்றல்கள், ஒளியலைகளாகக் காற்றில் பரவிக் கொண்டிருக்கிறது.

உயிராத்மாவை ஒளியாக மாற்றிக் கொண்டு உடலை விட்டு விண்ணைச் சென்றடைந்து இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கின்றார்கள்.

அதிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒலி, ஒளியின் ஆற்றல் மிக்க உணர்வலைகள் பரவெளியில் பரவிக் கொண்டே இருக்கின்றன.

மேற்கூறிய நிலைகளை…
1.எம் குருநாதர் காட்சியாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும், உணர்த்தி உபதேசித்து அருளியதை யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
2.மெய்ஞானிகள் மகரிஷிகள் உபதேசித்து அருளிய ஒளியான உணர்வுகளையும்
3.சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரும் ஒலி ஒளியான ஆற்றல் மிக்க உணர்வுகளையும்
4.நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று
5.உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் தவறு செய்தால் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டி வழி காட்டாமல் இருக்க முடியுமா…? அதே போல் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம் என்றால் அந்த வேதனை நமக்குள் உணர்த்தப்படும் பொழுது தான் அவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணமே வருகிறது.

ஆனால் ஒரு சிலருக்கு அவர் ஆகாதவராகப் போய்விட்டால் “அவனுக்கு அப்படித் தான் வேண்டும்…!” என்று சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்குள் அந்த உணர்வு விளைகிறது.

ஆனால் அவரைக் காக்க வேண்டும் என்று நாம் பாசத்துடன் எண்ணினால் இங்கே உடலில் அவருடைய வேதனை வந்துவிடுகிறது.

1.ஆகாதவன் எந்த ரூபத்திலாவது அந்த நோயாளிக்கு அப்படித்தான் வர வேண்டும் என்று ரசிக்கின்றான்.
2.பண்பு கொண்ட மனிதனோ தன் உடலில் பாசத்தால் இழுத்துக் கொள்கிறான்.

காரணம்… நாம் உதவி செய்கிறோம். அந்த உணர்வுகள் இங்கே விளைகிறது. மகராசன்…! “எனக்கு நன்மை செய்தான்…!” என்று நோயாளி எண்ணுகிறான். இந்த இரண்டும் கலக்கிறது. அதிலிருந்து தப்பிக்க முடிகிறதா..? என்றால் இல்லை.

அந்த உணர்வை விளைய வைத்தால் அவர் (நோயாளி) உடலை விட்டுப் பிரியும் சமயம் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடுகிறது. எந்த உடலில் அந்த வலு இருக்கிறதோ அந்த உடலுக்குள் வந்துவிடுகிறது.

1.உதவி செய்தாலும் உயிர் இந்த மாதிரி இயக்கி நம்மை இந்த நிலைக்கு ஆக்குகிறது
2.இதற்கு என்ன செய்வது…?

உணவு நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தில் சாப்பிடுகிறோம். ஆனாலும் அந்தச் சாப்பாடு “அளவுக்கு மேலே அதிகமாகிப் போனால்” என்ன செய்யும்…? அதிகான அளவில் சாப்பிட்டால் உடல் ஏற்றுக் கொள்கிறதா…?

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். ஆகவே அப்பொழுது அதை ஜீரணிக்கும் சக்தி நமக்கு வேண்டும்.

ஜீரணிக்க வேண்டும் என்றால் தீமைகளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்துப் பழக வேண்டும். அந்தச் சக்தியைப் பெற்றால் அது ஞானம் என்ற ஒரு வித்தாகிறது. மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது அந்த ஞானத்தின் சக்தியே உங்களுக்குள் விளையத் தொடங்குகிறது.

எப்படி ஒரு சோப்பைப் போட்டவுடன் எண்ணைச் சத்தை நீக்கி விடுகிறதோ இதைப் போல விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானிகளின் உணர்வுகள் கலந்த பின் அவர்கள் எப்படி ஒளியாக மாற்றினார்களோ அதே போல் நமக்குள்ளேயும் ஒளியாக மாற்றும்.

நமக்குள் வலுவான பின்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
2.அவர் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்.
3.விஷத் தன்மை நீங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.
4.அப்பொழுது அவன் அந்த உணர்வை எடுத்துக் கொண்டால் அவனும் நல்லவனாகின்றான்.

இதற்கு மாறாக ஒரு தடவை நாம் வெறுத்து விட்டால் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த வெறுப்பு வருகிறது, அவன் நம்மைப் பார்க்கும் பொழுது அவனுக்கும் வெறுப்பாகி இரண்டு பேருக்குள்ளும் பகைமையாகிவிடும்.

ஆகவே அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து அவன் நல்லவனாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும் பொழுது
1.உங்களைப் பார்க்கும் பொழுது முதலில் முறைத்துக் கொண்டிருந்தவன்
2.அவன் மனம் மாற வேண்டும்… மாற வேண்டும்…! என்று எண்ணும் பொழுது
3.இந்த உணர்வு அவனுக்குள் இது சென்று அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும்.

ஆகவே இந்த மாதிரியான கஷ்டமோ பகைமையையோ துன்பமோ வந்தால் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அவர்களால் நீங்கள் நலம் பெறுகின்றீர்கள்… உயர்ந்த ஞானிகளின் சக்தியும் பெறுகின்றீர்கள்.

அதற்காகத்தான் “ஆத்ம சுத்தி…” என்ற அவ்வளவு பெரிய ஆயுதத்தைக் கொடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியையும் இந்த உபதேச வாயிலாகவே கொடுக்கின்றோம்.

நீங்கள் இதை எண்ணினால் உங்கள் உயிர் அதை எல்லாம் உங்களுக்குள் உருவாக்கும்.

ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகும் போது சில உண்மைகளைப் பிரித்துக் காட்டும்

 

நாம் சும்மா இருக்கின்றோம்… அப்போது ஒருவரைப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பார்த்தவுடனே…
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நமக்குள் நினைவோட்டங்கள் திடீரென்று ஓட ஆரம்பிக்கும்.
2.ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன் அங்கிருக்கும் பொருள்கள் எப்படித் தெரிய வருகின்றதோ இது போன்று
3.இந்த உணர்வின் ஓட்டங்கள் வரும்… இன்னது தான் என்று…!
4.காரணம் ஞானிகள் உணர்வு நமக்குள் வரப்படும் பொழுது அந்த உண்மைகளை உணர முடியும்.

நாம் இங்கே தொழிலில் இருப்போம்… ஆனால் இது இரண்டையும் பிரித்துக் காட்டும் பொழுது நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்ட உடனே எழுத்து வடிவிற்கு வேண்டிய நிலையில் நமக்கு வேண்டிய அந்த பாஷை இந்தியோ… தமிழோ… ஆங்கிலமோ… பிரித்துக் கொடுக்கின்றார்கள்.

அந்த அழுத்த உணர்வுக்குச் (COMMAND) சென்றவுடன் அதனதன் நிலைகளில் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.

இதைப் போன்று தான்… நமது உயிர் சூரியன் காந்த சக்தி கவர்ந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக) மாற்றுகின்றது.
1.மாற்றியவுடன் அதனுடைய பிரிவு… அளவுகோல் எதுவோ
2.அதற்குத் தகுந்த மாதிரி அந்த உணர்வின் இயக்கமாக நம் உடலை இயக்கும்.

நம்முடைய உயிரின் வேலை காந்தத்தை இழுக்கின்றது. அதிலே வந்த அந்த உணர்வு நம் அழுத்தம் எதுவாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்தாற் போல் எலக்ட்ரானிக்காக மாற்றும்.

மாற்றிய அந்த உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது
1.அதனுடைய இன இயக்கங்கள் அந்த அதிர்வுகளைக் கொடுத்து உடலை இயக்கிக் காட்டும்.
2.அதற்குத் தகுந்த சிந்தனையும் அதற்குண்டான செயல்களையும் நமக்குள் இயக்கும்.

கம்ப்யூட்டரில் மின்சாரத்தை மையமாக வைத்து உணர்வின் செல்களுக்கு எலக்ட்ரானிக்காக… இந்த மாற்ற உணர்வுகளைக் கொடுக்கின்றார்கள். கடிகாரத்தில் பார்க்கலாம் அந்தந்தக் கால பருவம் வந்தபின் அதை நமக்கு (அலாரம்) அறிவுறுத்துகின்றது.

அதில் இருக்கக்கூடிய பேட்டரி செல்கள் இந்த வேலையைச் செய்கின்றது அதில் எதை ஆணையிட்டு வைத்திருக்கின்றோமோ அதன் உணர்வின் கருக்களை மாற்றி மாற்றி அளவுகோல் பிரகாரம் இயக்கும்.

ஆனால் சிறிதளவு அதிலே நீர் பட்டு விட்டால் அளவுகள் மாறிவிடும்… அதனின் இயக்கமே மாற்றமாகிவிடும். நீரில் உள்ள காந்தப்புலன் அதை அழிக்கும் திறன் கொண்டது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நம் உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் வலு செல்கள் எப்படி இருக்கின்றதோ அதன் இயக்கமாக உடலை இயக்குகின்றது.

விஞ்ஞான அறிவுப்படி எலக்ட்ரானிக் இயந்திரத்தை இயக்குகின்றது. இயக்கிய நிலையோடு விஞ்ஞானம் சரி. அதில் வளர்ச்சி பெற முடியாது தேய்வு தான் உண்டு. ஆனால்… மெய்ஞான அறிவுப்படி
1.உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் இயக்கப்படி நம்மை இயக்கும்.
2.இயற்கையின் நிலைகள் கொண்டு இந்த உணர்வின் அணுக்களை வளர்ச்சி பெறும் தன்மை பெற்றது
3.இதில் எந்தெந்தத் தன்மையோ அதனதன் அளவுகோல் கூடக் கூட அணுக்களின் உணர்வுக்கொப்ப வளர்ச்சி பெருகிக் கொண்டே வரும்.

அதனுடைய முடிவு எதை எடுத்து உருவாக்கியதோ அந்த உணர்வுக்கொப்ப செல்களை மாற்றி உருவத்தையே உயிர் மாற்றிவிடும். சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் அருளை “உயிரில் அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்

 

நம் உயிரான ஈசனை வணங்கி… தாய் தந்தையரை வணங்கி… ஞானகுரு சற்குரு சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி
1.ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கி
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
3.நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கிச் செலுத்தி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று “வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்…”

அவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் “ஊடுருவிச் செலுத்தி…”
1.நமது கண்களின் காந்தப் புலனறிவால்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து
3.”உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்.

“இப்பதிவின் துணை கொண்டு…” மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி ஏக்கமான நிலையில் அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என எண்ணி
1.நம் உடலுக்குள் “அலை அலையாகப் படரச் செய்ய வேண்டும்…”
2.இதுவே துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் கொண்டு வரச் செய்யும் தியானம்… மற்றும் ஆத்ம சுத்தி.

“உயிரை…” நாம் இறுகப் பிடித்துக் கொள்வோம்

 

எமன் என்பது என்ன…? எமன் என்பது நமது எண்ணம்தான், அதாவது வேதனையான உணர்வை நாம் தொடர்ந்து சுவாசித்தோமானால் அது நமக்குள் பாசக்கயிறாக மாறுகின்றது.

எருமை எவ்வாறு அறிவில்லாமல் இருக்கின்றதோ அதனின் அறிவில்லாத செயலைப் போன்று
1.நாம் எடுக்கும் வேதனையான உணர்வால் நமது எண்ணங்கள் சிந்தித்துச் செயல்படும் திறனை இழந்து விடுகின்றன.
2.நாம் சிந்திக்கும் திறனை இழந்து அறியாமையால் உழலப்படும் பொழுது நமது எண்ணங்கள் வலுவிழந்து
3.நம் வாழ்வில் துன்பங்களும், துயரங்களும் சூழ்ந்து கொள்கின்றன.

அதாவது… எருமை எனும் அறியாமையை வாகனமாகக் கொண்டு எமன் எனும் எண்ணம் நமக்குத் தண்டனை கொடுக்கின்றது என்பதை நமக்கு உணர்த்தவே… அன்று மகரிஷிகள் எமனுக்கு எருமையை வாகனமாக வைத்து எமன் சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் மனிதருக்குத் தண்டனை வழங்குகின்றான் என்று காண்பித்தருளினார்கள்.

அருள் ஞானிகளுடைய உணர்வுகளை நாம் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்த எண்ணம் நமக்குள் சித்திரபுத்திரனாக இயக்கம் பெறுகின்றது.

இந்தச் சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் நம்முடைய எண்ணம் இருளைப் போக்கும் எமனாக நின்று தீமையை அகற்றிடும் செயலாக அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் மலர்கின்றது. நாம் உயர்ந்த எண்ணங்களை எண்ணுகின்ற பொழுது அவைகள் நமக்குள் சித்திரபுத்திரனாகின்றன.

1.கண்களால் நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ அவை நமக்குள் புகுந்து புத்திரனாக (அணுக்களாக) விளைகின்றன.
2.நாம் ஈர்க்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம்மிடத்தில் உள்ள
3.இருள் சூழ்ந்த அசுரத்தனமான நிலைகளைக் கொல்கின்றன… தீமையை அகற்றுகின்றன.
4.தீமையில்லாத உலகத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கிறது
5.என்றும் ஒளிச்சுடராக நிலைத்திருக்கும் “பெருவீடு பெருநிலை” என்ற நிலையை அடையச் செய்கின்றது.

ஆக… நாம் “பிறவா நிலை” அடைகின்றோம்.

“மார்க்கண்டேயனை…” நோக்கி எமன் பாசக்கயிறை வீசுகின்றபோது மார்க்கண்டேயன் “சிவலிங்கத்தை” அணைத்துக் கொள்கின்றான். இதில் “லிங்கம்” என்பது உயிர்… ஆவுடை என்பது உடல்.

அங்கே மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடித்துக் கொள்ளாது லிங்கத்தை இறுகப் பிடித்துக் கொள்கின்றான். அதாவது “உயிரை இறுகப் பிடித்துக் கொள்கின்றான்…”

ஆகவே நமக்கு இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும்
1.நாம் எண்ணியது அனைத்தையும் இந்த உயிர்தான் இயக்குகின்றது என்றும்
2.நாம் எண்ண வேண்டியது எது…? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒளியாக நின்று நாம் எண்ணியது அனைத்தையும் அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு இயக்கிக் காட்டி, அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணரச் செய்வதும்… இயக்குவதும்… அதை நமக்குள் அடையச் செய்வதுமாக இயங்கிக் கொண்டிருக்கும் நமது உயிரில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணி நம் கண்ணின் நினைவு கொண்டு பார்த்து அதை ஏங்கி எடுத்தோமென்றால் அது சித்திரபுத்திரனாகச் செயல்படுகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் சக்தி வாய்ந்ததாகச் சேர்கின்ற பொழுது, அருள் ஞானிகள் அவர்களுக்குள் இருந்த தீமையை அகற்றிய அதே உணர்வுகள் நமக்குள்ளும் வளர்கின்றது.

“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும்…” என்ற நினைவை உங்கள் உடலுடன் இணைக்கப்படும் பொழுது “என்றும் பதினாறு” என்ற நிலைத்த ஒளிச் சரீரத்தை நீங்கள் அடைய முடியும்.

வாழ்வில் சஞ்சலம், சலிப்பு, வெறுப்பு, கோபம், போன்ற உணர்வுகள் உங்களிடத்தில் தோன்றும் பொழுது உங்கள் உயிரை எண்ணி ஆத்ம சுத்தி செய்து தீமைகள் அருகில் வராது உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

1.மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடிக்கவில்லை
2.லிங்கத்தை… அதாவது “உயிரை இறுகப் பிடித்துக் கொண்டான்…”

அது போன்றே நீங்கள் அனைவரும் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா’ என்று உயிரை எண்ணி ஒளியின் சரீரமான அந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கும் பொழுது உங்களுக்குள் தீமையை அகற்றிடும் சக்தியாக ஒளியின் சுடராக விளைகின்றது.

இத்தகைய நிலைகள் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக எமது அருள் உரைகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
1.நீங்கள் எந்த அளவிற்கு இந்த உபதேசங்களைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
2.அந்த அளவுக்கு ஆழமாக யாம் கொடுக்கும் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகின்றன.

யாம் கொடுக்கும் உபதேசங்களை அடிக்கடி நினைவு கூர்ந்து, வாழ்வில் கடைப்பிடித்து “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி ஏங்கும்போது அங்கே உங்களுக்கு உடனடியாக அந்தச் சக்தி கிடைத்து உங்களிடத்தில் தீமைகள் சேராது காக்கப்படுகின்றீர்கள்.

இந்த உபதேசத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளும் அனபர்கள் அனைவரும்…
1.இருள் சூழ்ந்த இவ்வுலகில் நஞ்சினை நீக்கி நன்மைகளைப் பெறும் விதமாக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.மெய்ஞானிகள் காட்டிய உண்மைகளை அறிந்து
3.மார்க்கண்டேயனைப் போன்று “என்றும் பதினாறு” என்ற நிலைத்த ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டும் என்று நெஞ்சில் அவா கொண்டு
4.நம் குருநாதர் காட்டிய மெய்வழியைக் கடைப்பிடித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும்
5.“எமது அருளாற்றலைப் பூரணமாக வழங்குகின்றோம்…!” (ஞானகுரு)

மனித ரூபம் உருப்பெறும் தகுதியும்… அது இழக்கப்படும் சந்தர்ப்பமும்

 

கொசு நம்மைக் கடிக்கின்றது… நம் இரத்தத்தை உணவாக உட்கொள்கிறது. மனிதனின் உணர்வுகள் கொசுவின் உடலில் பரவுகின்றது. ஆனால் அது மனிதனைப் போன்ற ரூபம் ஆவதில்லை.

இரத்தம் அதற்கு உணவாகின்றது. மனித இரத்தத்தில் உள்ள உணர்வுகள்
1.மனிதனுக்குண்டான சிந்தனைகள் எதுவோ அது அனைத்தும் அந்தக் கொசுவுக்கு வருகிறது.
2.அதாவது… மனிதனின் நினைவே அதற்குள் வருகின்றது.

அந்த இரத்தத்தின் உணர்வுகள் கொண்டு அது சிறிது காலமே வாழ்ந்தாலும் உடலை விட்டுப் பிரியும் அதனுடைய உயிரான்மா மனிதன் ஈர்ப்பிற்குள்ளே வருகின்றது.

பரிணாம வளர்ச்சியில் ஒரு மான் புலியை உற்றுப் பார்த்து அதனுடைய கொடூர உணர்வினை நுகரப்படும் பொழுது புலியின் உணர்வுகள் மானுக்குள் அதிகமாகின்றது… மான் இறந்தால் புலியின் ஈர்ப்புக்குள் சென்று மான் புலியாக மாறுகிறது.

கொசு மனிதனின் இரத்தத்தைக் குடிக்கின்றது. மனிதனின் உணர்வு அதிகமாகிறது. ஆனால் நினைவு மனிதன் மேல் வரும் பொழுது
1.அந்தக் கொசு மனிதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கப்பட்டு நம் சுவாசத்தின் வழி உள்ளே சென்று
2.மனித உணர்வை மீண்டும் தனக்குள் எடுத்துக் கருவாகி முட்டை மாதிரி ஆகி விடுகிறது.

அதே போல் ஒரு எறும்பை நசுக்குகிறோம் என்றால் நம்முடைய நினைவு கொண்டு அந்த உயிர் நமக்குள் வந்துவிடும். ஒரு ஆட்டை இம்சித்துக் கொல்கிறோம் என்றால் அது வேதனைப்படும் நினைவுகள் கொண்டு மனிதனுடைய ஈர்ப்பிற்குள் அந்த உயிரான்மா வந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. பரிணாம வளர்ச்சிக்கு அது வருகின்றது. மனிதன் உணர்வுகள் அதிகமாக இருப்பதால் அந்த உயிரணுக்கள் மனிதனில் உருப்பெறும் “அணு திசுக்களாக..” விளையத் தொடங்கி விடுகின்றது.

எந்த மனிதருக்குள் அந்த உயிரான்மா வந்தாலும் அந்த கால நிலைகளுக்கொப்ப உடலை விட்டு உயிர் வெளியேறி விட்டால் அந்த உயிரான்மா அதாவது எறும்பு ஆடோ அதனுடைய உயிரணுக்கள்
1.வாழ்ந்தவர்… யாருடன் நட்பாக அல்லது உறவு கொண்டு அதிகமாகப் பழகினாரோ
2.அந்த எண்ணம் கொண்டு இந்த ஆன்மாக்கள் அந்த உடலுக்குள்ளே திரும்பச் சென்றுவிடும்.
3.இப்படி ஏழு மனித உடல்களிலே இது மாறி மாறி வந்து மனிதனின் நிலைகளில் முழுமை பெறும் அணுக்களாக விளையப்பட்டு
4.ஏழாவது மனிதனுக்குள் வரும் பொழுது மனிதனாக முழுமை பெறும் வளர்ச்சிக்கு வருகின்றது.

அப்படிப்பட்ட நிலைக்கு வந்தாலும் அதில் பெண்பால் ஆண்பால் என்ற கரு முட்டைகளும் யார் யாருக்குள் இது கலக்கின்றதோ அவைகளுக்கு ஒப்ப மனிதனாக உருப்பெறுகின்றது.

பெண்பாலுக்கும் அந்த முட்டை உருவாகின்றது… ஆண்பாலுக்கும் அந்த முட்டை உருவாகின்றது. ஆனால் இரண்டும் சேர்த்து இணைந்த நிலைகள் மோதும் பொழுது தான்… கரைந்து… ஒன்றை விழுங்குகின்றது அதற்குள் இணைகின்றது. கரு வளர்ச்சிக்கு வரும் தன்மை அடைகின்றது.

எத்தனையோ கோடி உயிரணுக்கள் உடலுக்குள் இருந்தாலும் அங்கே கருவுக்குள் சென்று மனிதனாகப் பிறக்கும் தன்மை உயிரணுக்களுக்குத் தோன்றுகின்றது.

இருந்தாலும் ஒரு உடலிலே மனிதனாகப் பிறந்து மனிதன் இறந்த பின் “அவன் வளர்ச்சி இல்லாத நிலைகளில்…” இன்னொரு உடலுக்குள் இந்த ஆன்மா சென்று விட்டால் இது…
1.பல மனிதச் சரீரங்களில் புகுந்த உயிரான்மாக்கள் இந்த உடலுக்குள் புகுந்தால்
2.அங்கே மனித உருப் பெறாதபடி தடைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால்… மனிதனான பின் அதில் வளர்ச்சியற்று விபத்திலேயோ… அல்லது வெறுப்பான நிலைகள் கொண்டு தற்கொலையோ… வளர்ச்சி பெறும் தன்மையைத் தன் எண்ணத்தால் குறைத்து விட்டால்
1.அந்த ஆன்மா எந்த மனித உடலுக்குள் சென்றாலும் அங்கே கருக்களை வளர விடாதபடி தடுக்கும்.
2.உயிரணுக்கள் மனிதனாகப் பிறக்கும் தகுதி அங்கே இழக்கப்படுகிறது.
3.அதாவது “குழந்தை உருவாகும்… குழந்தையை உருவாக்கும் ஆற்றல்” அங்கே தடுக்கப்படுகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கண்ணின் கருவிழிக்குள் இருக்கும் கருமணிகள் தான் நாம் பார்ப்பதை எல்லாம் நமக்குப் படமாக்கிக் கொடுக்கிறது. கண் நம் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களிலும் பொருதி இருக்கிறது.

வேதனை… வேதனை… என்ற உணர்வை அதிகமாக எடுத்துக் கொண்டால் கருவிழியில் அது பட்டு நாளடைவில் மாசுபட்டு விடுகின்றது. வேதனை என்பது விஷம்.
1.அது முன்னணியில் இருந்தால் நம் கருமணி விஷத் தன்மை அடைந்து விடுகின்றது.
2.நம்மை அறியாமலே விஷத் தன்மைகள் நம் உடலுக்குள் பரவப்பட்டு நம் உடலிலே கடும் நோயையும் உருவாக்குகிறது.

கண்ணின் கருவிழிக்குப் பின் இருக்கும் அந்த நரம்பு மண்டலங்களில் இந்த விஷத் தன்மை கவர்ந்து கொண்டபின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமானமாகி நம் கண்களே மங்கி விடுகின்றது அல்லது கண் பார்வை தெரியாமலே போய்விடுகிறது

ஆனால் பரிணாம வளர்ச்சியில் நாம் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து… “தான் பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…!” என்ற வலுவான உணர்வு கொண்டு தான் கண்களே உருவானது.

நம் கண்களைத் தூயமைப்படுத்திக் கொண்டால் கண்கள் மாசுபடும் தன்மையை மாற்றலாம். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் இணைத்துப் பழக வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

பின் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

ஆனால்… கஷ்டத்தையும் நஷ்டத்தையும் எண்ணக் கூடாது.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று சொன்னபடி
1.எதுவாக இருந்தாலும் அந்த எண்ணம் கண்ணுக்குத் தான் வரும்.
2.அந்தக் கருவிழி அதைத் தான் கவரும்

நல்லதை எண்ணினாலும் வேதனை கோபம் வெறுப்பு போன்ற உணர்வுகள் வலிமை ஆகிவிட்டால் கண்கள் மாசுபட்டு விடுகிறது.

இது போன்ற நிலைகளில் இருந்து தப்புவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள். இதைத் தியானப் பயிற்சியாகவே கொடுக்கிறோம்.

கண்களுக்குப் பாதிப்பாக ஆனது போல் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களில் இந்த விஷத் தன்மை பரவி விட்டால் சரவாங்கி நோய்… வாத நோய்… போன்ற நோய்கள் வந்து விடுகின்றது.

நரம்புகளை உருவாக்கிய அணுக்கள் அதனின் செயலாக்கங்கள் மடிந்து விட்டால் நரம்பு மண்டலம் சீராக இயங்காது.

அதே சமயத்தில் எலும்பு மண்டலங்களிலும் நாம் அடிக்கடி வேதனை என்ற உணர்வு எடுக்க எடுக்க நம் எலும்பை உருவாக்கிய அணுக்களும் பலவீனமாகிவிடும்.

சில நேரங்களில் என்ன ஆகிப் போகும்…?

ஒன்றுமே செய்ய வேண்டாம். வெறுமனே எங்கேயாவது கையை ஊன்றினால் போதும்… கை ஒடிந்து விட்டது…! என்று சொல்வார்கள். நடந்து தான் போனேன்… என் கால் ஒடிந்து போனது என்பார்கள்…!

எலும்பை உருவாக்கிய அணுக்களுக்குள் வேதனை வேதனை என்ற உணர்வால் அதனின் வலிமை இழக்கப்படும் பொழுது எலும்புகளின் பலம் குறைந்து விடுகிறது.

எல்லாவற்றிற்கும் மூலம் நம் எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன் தான்.

நிலத்திற்குள் மண் வளம் மறைந்து உள்ளது. அதற்குக் கீழ் ஆழத்தில் நீரும் இருக்கின்றது.
1.குறைந்த காலம் வாழும் தாவர இனங்கள் (சில செடி கொடி புல் பூண்டுகள்)
2.நிலத்தில் பரவி இருக்கும் நிலங்களிலிருந்து நீரை எடுக்கிறது.
3.நிலத்தின் ஆழப் பகுதியில் ஓடும் நீரை எடுப்பதில்லை.

ஏனென்றால் நிலத்திற்கு அடியில் பாறைகளும் உண்டு கல்களும் உண்டு. சிறிது காலமே வாழும் தாவர இனங்களுக்கு அந்தச் சக்தி இல்லை. அதனால் நிலத்தின் மீது நீர் இல்லை என்கிற பொழுது உடனே வாடிவிடுகிறது. ஆனால்
1.மரமாக வளரும் பட்சத்தில் அந்த மரம் தன் விழுதுகளைப் பாய்ச்சி
2.அந்த நீரை எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தி அதற்கு இருக்கின்றது.

அதைப் போன்று அந்த அருள் ஞானிகளின் அருளாற்றல்களை நம் எழும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக்கி
1.என்றுமே… எங்கிருந்தும்… எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தியாக
2.நாம் நமக்குள் பதிவாக்க வேண்டும்

அப்படிப் பதிவாக்கிய நிலைகள் கொண்டு நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருக்கும் துருவ நட்சதிரத்தின் உணர்வுகளை அதிகமாகக் கவர முடியும்.

ஒரு நோயாளியை உற்றுப் பார்த்தால் நம் கண்ணில் உள்ள கருவிழி நம் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்குகிறது அது பதிவானால் தான் நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறிய முடிகின்றது.

நம் உடலோடு இணைத்துக் கொள்ளும் நிலையாகப் பதிவு (RECORD) செய்வது தான் கண்ணின் கருவிழியின் வேலை. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ எது பதிவானதோ அதனின் உணர்வுகளைக் காற்றிலிருந்து கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகிறது.

ஆன்மாவிலிருந்து நாம் சுவாசிக்கும் பொழுது உயிரின் காந்தப்புலன் கவர்ந்து அது உயிரான்மாவாக மாற்றுகின்றது. ஆகவே இதில் எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் “சேர்க்கை…!”
1.இப்படி எத்தனையோ வருடங்கள் சேர்த்து வைத்த உணர்வுகள் அனைத்தும்
2.ஊழ்வினை என்ற வித்தாக உடலிலே இருக்கிறது.

கோபம் வேதனை வெறுப்பு பயம் போன்ற வித்துக்கள் ஊழ்வினையாக உடலிலே இருந்தால் நமக்குள் தீமையான உணர்வுகளையே தூண்டி அதையே சுவாசிக்கச் செய்து தீமையின் விளைவாகவே ஊழ்வினைப் பயனாகிவிடும்.

ஒரு நிலம் கெட்டுப் போனால் அதிலே நல்ல பயிர்களை நாம் வளர்க்க முடியாது. ஆனால் அந்த நிலத்தைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்தால் நல்ல பயிர் இனங்களை அதில் வளர்க்க முடியும்.

அதைப் போல நம் உடல் என்ற நிலத்தைப் பண்படுத்த
1.துருவ நட்சதிரத்தின் உணர்வை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி அதைப் பண்படுத்தி
2.நல்ல உணர்வுகளைப் பதிவாக்கும் நிலைகளுக்கு நாம் ஊழ்வினையை மாற்ற வேண்டும் (இது முக்கியம்).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என் (ஞானகுரு) வாழ்க்கையில் சிறிய பிள்ளையாக நான் இருந்ததிலிருந்து செய்த தவறுகளை எல்லாம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டுகின்றார்.

ஒடக்கானைப் பிடித்து அது கண்களில் மிளகாய் பொடியைப் போட்டு “அது ஆடுகிறதைப் பார்த்து நீ ரசித்திருக்கின்றாய்…!” எத்தனை தடவை இந்த மாதிரிச் செய்தாய்…?

அதே மாதிரி குருவியை உயிருடன் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தீயை வைத்து எரித்து வாட்டியிருக்கின்றாய். கிணற்றில் குஞ்சு பொரித்த மைனாக் குஞ்சுகளின் கால்களில் கயிறைக் கட்டி இழுத்து அதன் கால்களை உடைத்திருக்கின்றாய்…! என்று இதை எல்லாம் சொல்கிறார் குருநாதர்.

நான் (ஞானகுரு) கல்யாணம் பண்ணிய புதிதில் ஒரு இடத்தில் நான் நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது அப்படியே கிறு…கிறு… என்று தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டேன்.

அதை ஞாபகப்படுத்தி நிதானம் இல்லாமல் இன்ன இடத்தில் விழுந்தாய்…! என்று சொல்கிறார்.

அப்புறம் கல்யாணம் ஆன புதிதில் நானும் என் மனைவியும் போகும் பாதையில் ஒரு சிறிய பாலத்தில் ஒரு ரயில்வே தண்டவாளப் பகுதியைத் தாண்டிப் போக வேண்டியிருந்தது.

அந்த நேரத்தில் இரயில் வந்து கொண்டிருக்கின்றது. அதைப் பார்த்ததும்.. ஒதுங்கி ஓரத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக வேண்டி என் மனைவியிடம் “இந்தப் பக்கம் வாம்மா…!” என்றேன்.

கீழே குனிந்து பார்த்தால் ஒரே அசூசையாக அசிங்கமாக இருந்தது. ஐய்யய்யோ..! என்று சொன்னதும் என் மனைவி என்னைப் பிடித்து மீண்டும் இரயில் தண்டவாளத்திற்கே இழுத்தது.

ஆனால் வண்டியோ மிகவும் பக்கத்தில் வந்துவிட்டது. ஒதுங்க வேறு இடம் இல்லை. அப்புறம் அப்படியே தள்ளி விட்டபடி நானும் கீழே விழுந்தேன். இரயில் போய் விட்டது. நாங்கள் இரண்டு பேரும் எதை அசிங்கம் என்று சொன்னோமோ அதிலேயே விழுந்தோம்.

அதையும் குருநாதர் சொல்கிறார். அத்தகைய உணர்வின் இயக்கங்கள் அந்தச் சத்து உனக்குள் இருக்கப்படும் பொழுது அது “விதியாக” உனக்குள் அமைகிறது.

“டேய்…! அன்றைக்கு நான் தான்டா உன்னைக் காப்பாற்றினேன்..” என்று சொல்கிறார் குருநாதர்.

1.முன்னொரு சமயம் ஒரு பிறவியில் இருக்கும் போது நீ எனக்கு உதவி செய்திருக்கின்றாயடா…!
2.இப்பொழுது நான் இந்த அருள் சக்தியைப் பெற்றிருக்கிறேன்.
3,இப்பொழுது உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்கிறார் குருநாதர்

இதை எல்லாம் வரிசைப்படுத்தி மறைந்த உணர்வுகளை எல்லாம் குருநாதர் காட்டுகிறார்.

எனக்கு இரண்டு வயதில் அம்மை நோய் வந்திருந்தது. நான் இட்லி வேண்டும்..! என்று கேட்டு அழுகின்றேன். என் மனைவியுடைய சின்னம்மா (அப்பொழுதே சொந்தக்காரர்கள் தான்) வந்து என்ன செய்கிறது…? சோற்றைப் பிசைந்து இட்லி மாதிரி செய்து கொண்டு வருகிறது.

ஏனென்றால் அந்தக் காலத்தில் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தான் இட்லி எல்லாம் செய்வார்கள். இல்லை என்றால் வேறு எந்த வீட்டிலாவது செய்து வைத்திருந்தால் சிறிய பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பார்கள்.

சோற்றைப் பிசைந்து இட்லி மாதிரி செய்து கொடுத்தவுடன் நான் அந்த அம்மா மீதே “அதை வீசிவிட்டேன்…!” அதையும் குருநாதர் என்னிடம் சொல்கிறார்.

இந்த மாதிரி ஒவ்வொரு நிகழ்வையும் சுட்டிக் காட்டுகிறார். என் வாழ்க்கையில் என்னென்ன…? எப்படி நடந்தது… என்னென்ன நிலைகள் இருந்தது…? என்று சொல்கிறார்.

நீ இளமையில் உன்னை அறியாது செய்த தவறுகள்
1.நீ எண்ணியதை எல்லாம் உன் உயிர் அதை ஜீவ அணுவாக மாற்றியது.
2.அதன் வழிப்படி ஒவ்வொரு தவறையும் நீ செய்யச் செய்ய அது பெருகிக் கொண்டே வருகிறது.
3.அந்த உணர்வுகள் பெருகிய பின் உடலில் உள்ள அந்தத் தவறான உணர்ச்சிகள்
4.உன்னை எப்படிக் கொண்டு போகும் தெரியுமா…? என்று கேட்கிறார்…?

இன்றும் சில சிறிய குழந்தைகள் பூச்சிகளைப் பார்த்தாலே அதை அடித்துக் கொன்று கொண்டே இருக்கும். பார்க்கலாம் நீங்கள்…! ஆக அறியாமல் செய்தாலும் நாம் எதைச் செய்கிறோமோ உயிர் அதை நுகர்ந்து நம் உடலுக்குள் தான் சேர்க்கிறது.

இதை எல்லாம் அறிந்து கொண்ட நிலையில் மனிதனின் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்..? என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

குருநாதர் காட்டிய வழியில் அதைத் தான் உங்களிடமும் அதைப் பின்பற்றச் சொல்கிறோம். ஏனென்றால் எது இருந்தாலும் அப்போதைக்கு அப்போது இது கழியும். (விதியின் விளைவுகள்)

நான் (ஞானகுரு) எல்லாருக்கும் நன்மை தானே செய்திருக்கின்றேன். எவ்வளவோ உயர்ந்த சக்திகளை எல்லாம் பெற்றிருக்கின்றேன்.
1.எனக்கு ஏன் கையில் எலும்பு முறிகிறது…?
2.என்னை ஏன் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) இப்படி எல்லாம் சோதிக்கிறார்..? என்று சொன்னால் என்ன ஆகும்…!
3.நான் செய்த பாவத்தின் நிலைகளை அனுபவித்துத் தான் தீரனும்.

ஆனால் அனுபவித்தாலும் மீண்டும் அந்த உயர்ந்த நிலை பெறும் போது மேலே பட்ட தூசிகளைத் தட்டி விட்டுத் துடைப்பது போல் துடைத்துக் கொண்டே தான் போக வேண்டும்.

1.அதாவது இந்த உடல் பற்று இல்லாதபடி
2.அந்த அருள் பற்றுடன் போனால் இந்தப் பற்று வராது.
(இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.)

ஒரு சமயம் நான் குமாரபாளையத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும்போது ஒரு அம்மா வந்தது. அது உடலில் ஒரு தீயில் எரிந்த ஆவி இருந்தது. அதனால் ஐய்யய்யோ…! எரியுதே…எரியுதே… என்று குதிக்கும். அந்த அம்மாவின் வயது 45 இருக்கும்.

மேல சேலையைப் போட்டாலே குதிக்கும். ஐய்யய்யோ… எரியுதே என்னைக் கொல்கின்றீர்களே கொல்கின்றீர்களே..! என்று போட்ட துணியை வீசிவிட்டு ஒடும். ஏனென்றால் அந்த அம்மாவினால் அந்த எரிச்சலைத் தாங்க முடியவில்லை.

அங்கே சுற்றுப்பயணத்தில் வரப்படும் போது நம்மிடம் கூட்டி வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் துணியைப் போடமுடியவில்லை. அப்புறம் நான் சொன்னேன்.

அந்த அம்மாவைச் சுற்றித் துணியைக் கட்டி மறைத்துக் கொண்டு வாருங்கள். திரைக்கு பக்கம் அந்தப் பக்கம் பின்னாடி போகச் சொல்லுங்கள். துணியைப் போடாதீர்கள் என்று சொன்னேன்.

அதன்படி கூட்டிக் கொண்டு வந்தார்கள். அங்கே கூட்டுத் தியானம் இருக்கும்படி சொன்னேன். பின் அந்த நேரத்தில் அந்த அம்மாவுக்காக நான் பாய்ச்சும் அலைகள் எப்படி அங்கே பாய்கிறது…? என்று குழந்தைகளை வைத்துப் பார்க்கச் சொன்னேன்.

அப்படிப் பார்க்கும் பொழுது அந்த அம்மா உடலில் இருந்த தீ பிடித்த ஆன்மா (ஆவி) வெளியில் போகிறது. உடனே அந்த அம்மா எழுந்து உட்கார்ந்தது. துணியைக் கொடுத்துப் போடச் சொன்னார்கள்.

மறுபடியும் அந்த ஆன்மா வந்தவுடன்… “ஐய்யய்யோ எரியுதே… எரியுதே…!” என்று பல நிகழ்ச்சிகள் ஆகி அப்புறம் கடைசியில் அந்த அம்மா நன்றாக ஆனது. அந்த ஆவியின் செயல்கள் ஒடுங்கிவிட்டது.

அந்த நேரத்தில் குருநாதர் என்ன செய்தார்…? அங்கே அந்த அம்மாவுக்கு எரிச்சல் எப்படி அது உடலில் எரிகிறது…? என்று நீ பாருடா…! என்றார்.

பார்த்ததும் எனக்கு அப்படியே கப..கப.. என்று எரிகிறது.

ஆக அந்த உடலில் இருந்த ஆவியின் தன்மையை அடக்கினாலும் அந்த எரிச்சலான உணர்வலைகளை நான் கவரப்படும் போது நான் நுகர்ந்தறிந்த உணர்வுகள் எனக்குள் பதிவாகிறது.

அது உடலிலிருந்து எரிந்த அந்த ஆவியின் உணர்வலைகள் வந்ததை நான் சுவாசிக்கப் போகும் போது எனக்குள் கொஞ்ச நேரத்தில எரிய ஆரம்பிக்கின்றது.

இப்படி எரிகிறது என்றால் எரியக் காரணம் என்ன..? என்ற நிலையில் உடலிலே விளைந்தால் இது மாதிரித் தான் எரியும்…! என்று சொல்லிவிட்டு இன்னொன்றும் சொன்னார்..!

1.டேய்…. உன் சிறு வயதில் நீ குருவிகளை எப்படியடா சாப்பிட்டாய்…?
2.எத்தனை குருவிகளை உயிருடன் கம்பியில் கட்டித் தீயில் சுட்டுத் தின்றாய்…?

இங்கே இந்த அம்மா உயிருடன் இருக்கும் போது எரிகிறதே என்று நன்மை செய்யப் போனாய். தீயில் வெந்த ஆவி அந்த உடலில் இருக்கிறது. ஆனால் நீ அதை அடக்க வேண்டும் என்கிற போது அந்த வேதனை உணர்வைச் சூரியனின் காந்தப்புலனறிவு இழுத்துக் கொண்டு வருகிறது

நீ கவரும் பொழுது அந்த உணர்வுகள் உனக்குள் வந்துவிட்டது.
1.காரணம் அந்தக் குருவிகள் எப்படித் தீயில் எரிந்ததோ அந்த அணுக்கள் உன் உடலில் இருக்கிறது.
2.அதற்கு அது சாப்பாடு தேவை.
3.அதை எடுப்பதால் உனக்கு எரிச்சல் தெரிகிறது என்று விளக்கமாகச் சொன்னார் குருநாதர்.

நடந்த நிழச்சி இது. அனுபவித்துத் தான் உங்களிடம் சொல்கிறேன்.

நான் என் சிறிய வயதில் செய்த தப்பு அது ஒரு விதியாக இருக்கிறது. அந்த நேரத்தில் அந்த அம்மாவைப் பார்த்தால் எரிச்சல் ஆகிறது. ஆனால் அவர்களைக் காப்பாற்றுகிறேன். எனக்குள் கொஞ்சம் மறைகிறது.

இப்படி நமக்குள் எத்தனையோ விதிகள் உண்டு இதை எல்லாம் மாற்ற வேண்டும். சொல்வது அர்த்தம் ஆகிறதா…?

1.நான் தினம் தியானம் செய்கிறேன்…?
2.எனக்கு ஏன் கஷ்டம் வருகிறது..? எனக்கு ஏன் நோய் வருகிறது என்று சொன்னால்
3.நாம் இந்தப் பூமிக்குள் தான் இருப்போம். விண் செல்ல முடியாது.

ஆகையினால் தான் உங்கள் வாழ்க்கையில் எந்தக் கஷ்டம் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுத்தோம் என்றால் நாம் அங்கே போகலாம்.

சில பேர் என்ன சொல்வார்கள் என்றால் என்னை எல்லோரும் சேர்ந்து எப்படி எல்லாம் பேசினார்கள்…! பாவிகள்… அவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…! என்று சொல்வார்கள்.

இப்படிப்பட்ட உணர்வுடன் இந்த உடலை விட்டுப் போனால் யாரை நினைத்தோமோ அதனால் நோயாகி அந்த உடலுக்குள் போய்ச் சேர்ந்து மீண்டும் பிறவி நிலைக்குத் தான் வரும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் தப்ப வேண்டும்…!

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று வெறும் சொல்லாகச் சொல்லக் கூடாது

 

நமது உயிரை “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று ஞானிகள் அழைத்தார்கள். “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் சொல்லும் பொழுதெல்லாம் அது வெறும் சொல்லாக இல்லாமல் “புருவ மத்தியில்” நினைவைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

அவ்வாறு பழகிக் கொண்டால்
1.நமது உயிரை குருவாகவும் நாம் எண்ணியதை ஈசனாக உருவாக்கக் கூடிய நிலையை நாம் உணர முடியும்.
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அது உடலுக்குள் ஊடுருவது நமக்குத் தெரிய வரும்.

நம் உடலில் ஜீவ அணுக்களை இயக்கும் “உயிர்…” நம் நெற்றியின் புருவ மத்தியில் உட்புறமாக இருந்து கொண்டு உடலை இயக்கும் மூலக்கருவாக… குருவாக இருக்கின்றது.

உடலில் விளைந்த அனைத்து குணங்களின் உணர்வலைகளையும் உயிர் தன் ஈர்ப்பில் அணைத்துக் கொண்டு “மறு உடல் உருப்பெறச் செய்யும்…” கருவினையாகச் சேர்த்துக் கொண்டு இருக்கின்றது.

நமது கண்கள் ஒன்றைப் பார்க்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதிலிருக்கும் உணர்வுகளைக் கண்கள் கவர்ந்து, நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. மூக்கு வழியாகச் சுவாசித்த பின் உயிரில் பட்டு அந்த உணர்வுகளை நாம் அறிகின்றோம்.

“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று சொல்லுகின்ற போதெல்லாம் புருவ மத்தியில் உயிரை எண்ணி அதைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டோமென்றால் நாம் அதன் வழி (உயிர் வழியாக) உணர்வுகளை உடலுக்குள் செலுத்தலாம்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது மூக்கு வழி சுவாசித்து, உணர்வுகளை உடலுக்குள் செலுத்துவது. இதை அறிந்து கொண்டாலும்…
1.தீமையான உணர்வுகள் உள்ளுக்குள் செல்லாதபடி
2.அடுத்த நிமிடம் “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி அதை இடைமறிக்க வேண்டும்.

ஏனென்றால்… நம்முடன் எவ்வளவு நல்லவர்கள் பேசினாலும் அந்த உணர்வில் அவர்கள் குடும்பக் கஷ்டம் உடல் நோய்கள் போன்ற உணர்வுகள் கலந்து சொல்லாக வரும்.

அவர்களைக் கண்ணால் பார்க்கும் பொழுது, நமது ஆன்மாவில் கலந்துவிடும். அவர்கள் பேசும் பொழுது, இந்த உணர்வுகள் கலந்தே வரும். இருந்தாலும்
1.அந்த நிலையிலும் “ஈஸ்வரா…” என்று சொல்லி உணர்வை இடைமறித்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
2.அவ்வாறு “ஈஸ்வரா…” என்று சொல்லும் நிலைகள் வலுப் பெறும் பொழுது தீமையை அது மாற்றும்.

அதே சமயத்தில் அவர் பலவீனமான நிலைகளைச் சொல்லும் பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும், என்று நாம் எண்ண வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் சமைத்து அதை எடுத்துப் போட்டால் தான் அது ருசியாக இருக்கும்.

கஷ்டம் என்று ஒருவர் சொல்லும் பொழுது “அடடா… உங்களுக்குக் கஷ்டமாகப் போய்விட்டதா…?” என்று நாமும் சொன்னோம் என்றால் அதையே தான் சமைத்து மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம் என்று பொருள்.

அதனால் இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இன்று பெரும்பாலோனோர் “ஏதோ ஒரு தெய்வம்தான் நமக்கு அனைத்தையும் செய்கின்றது…” என்று கருதுகின்றனர். ஆனால் நம் செயல்கள் நிகழ்வது அனைத்தும் நம் உயிரான கடவுளால் தான் என்பதை அறிய வேண்டும்.

“மகரிஷிகளின் அருள சக்தி நான் பெற அருள்வாய் ஈஸ்வரா…” என்று தியானித்திடும் பொழுதும் சரி… அல்லது “ஐயோ…! என் வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளா…? எனது கஷ்டங்கள் தீராதா…?” என்று வேதனைப்பட்டாலும் சரி
1.அங்கே சாதனைகளையும் அல்லது சோதனைகளையும் உண்டாக்கிக் கொடுக்கின்ற குருவாக இருப்பது
2.நமது உயிர் தான்…! என்று அறிய வேண்டும்.

எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாகி விடக்கூடாது…”

 

எந்த மரத்திலிருந்து வித்தாக உருவானதோ அந்த வித்தைப் பூமிக்குள் பதியச் செய்யும் போது அதன் அறிவின் தன்மையாக அதே மரமாக அதை வளர்க்கச் சூரியன் உதவுகிறது.

இதைப் போல் தான் நமது உயிர்
1.உடலுக்குள் எது அணுவின் தன்மையாக உருவானதோ
2.அதற்கு இந்தக் காற்றிலிருந்து அதே இனமான சத்தைக் கவரும்படி செய்து உணவாகக் கொடுத்து வளர்க்கின்றது.

எந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எண்ணி ஏங்குகின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் கூட்டப்படும் பொழுது “அந்த உணர்வின் அலையாக நமக்குள் மாறுகின்றது…”

1.யார் வேதனைப்படும்படியான சொல்லை நம்மிடம் சொல்கின்றார்களோ நம் ஆன்மாவாக அது மாறும் பொழுது
2.மறைந்திருந்து இந்த மகரிஷியின் உணர்வு அதைத் தாக்குகின்றது.

வாலியை இராமன் நேரடியாகப் பார்க்கவில்லை… மறைந்திருந்தே தாக்குகின்றார்.

ஒருவன் வேதனைப்படும் சொல்களைச் சொல்லப்படும் போது அவனை நேரடியாக நீங்கள் பார்த்தால் என்ன ஆகும்…?
1.வேதனை என்பது வலிமையானது
2.நல்ல குணங்களை எல்லாம் வலு இழக்கச் செய்துவிட்டு அந்த உணர்வின் இயக்கத்திற்கே நம்மைக் கொண்டு செல்லும்.

பாவிப் பயல் இப்படிச் சொல்கிறான் பார்…! நான் ஒன்றுமே சொல்லவில்லை… இவன் இப்படிச் செய்கின்றானே…! என்று என்ன தான் சொன்னாலும் “அது எப்படி நீங்கள் ஒன்றுமே சொல்லாமல் அவர் உங்களைச் சொல்வார்…?” என்று அடுத்தவர்கள் கேட்பார்கள்.

சும்மா இருக்கும் போது யாராவது சொல்வார்களா…? என்று இதே சொல் வரும். இராமன் அம்பை எய்தானென்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான்.

நாம் எதனைக் கலந்து சொல்லாகச் சொல்கின்றோமோ இந்த உணர்வின் தன்மை அங்கே கலந்து அதன் வினாவாக மீண்டும் எழும்பும்.

எவ்வளவு தான் “நான் தவறே செய்யவில்லை…” என்று சொன்னாலும் தவறு செய்யாமல் யாராவது உங்களைச் சொல்வார்களா…? என்பார்கள். எதனை உருவாக்கி எந்தச் சொல் அம்பாகப் பாய்கின்றதோ அந்த சொல்லின் நிலைகள் இப்படித்தான் வரும்.

ஒரு கம்ப்யூட்டரில் எதை ஆணையிட்டு அதை எலக்ட்ரானிக்காக மாற்றி இயக்கும்படிச் செய்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை பதிவாக்கப்படும் பொழுது
1.மீண்டும் அது எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் வலுக் கொண்டு “மற்றதைத் தனக்குள் பிரித்துக் காட்டும்…”
2.அதைப் போன்று தான் உயிர் நாம் சுவாசித்த உணர்வின் சொல்லை எலக்ட்ரானிக்காக மாற்றி விட்டது என்றால்
3.அதே இடம் வரும் பொழுது அது மாற்றும்.

அதாவது… ஒரு மனிதனின் எண்ண வலு நமக்குள் அதிகமாகி விட்டால் அது வாலியாக மாறி விடுகின்றது. நம்முடைய நல்ல எண்ணங்கள் வலு இழக்கப்படுகிறது.

இதைத்தான் வாலியை எவரொருவர் நேரடியாகப் பார்க்கின்றார்களோ அந்த வலுவிலே சரி பகுதி அவனுக்குச் சென்று விடும் என்று “இவ்வளவு காரண காரியத்தோடு…” சாஸ்திரங்களை நமக்குக் காட்டி உள்ளார்கள் ஞானிகள்.

ஒருவன் வேதனைப்படும்படி சொல்லைச் சொன்னால் நம் நல்ல குணங்கள் வலு இழந்து விடுகின்றது அல்லவா…!

அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த உணர்வினைத் தனக்குள் ஏற்றி அந்த வேதனை நம்மைத் தாக்கிடாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்று உங்கள் கையிலே அதை ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாக ஆகிவிடக்கூடாது…”

உயிரால் வளர்க்கப்பட்ட மனிதன் நீ. எனவே அவனிடமே வேண்டி அந்த அருளைப் பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த மெய்ஞானியின் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது
2.அதுவாகவே ஆகின்றோம்… நாம் ஞானியாகின்றோம்.

நாரதன் கொடுக்கும் ஞானக்கனியின் விளக்கம்

 

ஒரு மாங்கனி அது இனிப்பாக இருக்கும்பொழுது, அந்தச் சுவையின் மணத்தையே வெளிப்படுத்தும். காயாக இருக்கும் பொழுது புளிப்பின் உணர்ச்சியைத் தூண்டும்.

இதைப் போல மனிதனாக இருக்கும் நாம் காயின் பருவத்தில் இருக்கும் பொழுது கனியாகும் உணர்வின் தன்மையை நாம் கவர்ந்தால் கனியும் தன்மையை அடைகின்றோம்.

ஆனால் கனியாவதற்கு முன் வெப்பத்தின் தணல் அதிகமாக இருந்தால் வெம்பி மரத்திலிருந்து விழுந்து விடும். வெம்பிய நிலைகள் கொண்டு வித்து உருவாகாது… அதனுடைய சத்தும் நமக்குள் நல்லது ஆகாது.

ஆகவே “வெம்பாத நிலைகள் கொண்டு…”
1.கனியின் தன்மையை அடைந்த கனியைப் போல
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மெய்ஞானியின் உணர்வைத் தனக்குள் வளர்த்து
3.உணர்வுகள் அனைத்தும் கனியாகி உயிருடன் ஒன்றிய கனியின் தத்துவமாக
4.ஏழாவது நிலையாக ஒளிச் சரீரம் பெற வேண்டும்..

இதைத்தான் கந்த புராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.

நாரதன் கனியைக் கொண்டு வந்து, சிவனிடம் கொடுக்கின்றான். சிவன் யார்…? நமது சரீரமே.

நாரதன் கனியைச் சிவன் கையில் கொடுத்து உலகை எவர் ஒருவர் முதலில் வலம் வந்து விடுகின்றாரோ அவருக்கு இந்தக் கனியைக் கொடுத்துவிடு என்று சொல்கின்றான்.

அப்பொழுது… ஆறாவது அறிவின் தன்மை உலகை அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டு…
1.எண்ணத்தில் விரிவடைந்து புற உலகத்தை எண்ணுவோமேயானால்
2.”உலகைச் சுற்றத்தான்…” அந்த உணர்வு செல்லும்.

இந்த ஆறாவது அறிவு “தெரிந்து கொண்டேன்…” என்ற நிலை வரப்பபடும் பொழுது “எனக்கு வசதி இருக்கிறது…” என்று எண்ணத்தால் எண்ணினாலும் ஒன்றை மறந்து விடுகின்றான்.

எவ்வாறு மறந்து விடுகின்றான்…? ஞானம் இருந்தும், தான் உணர முடியாத நிலைகள் எவ்வாறு ஆகுகின்றது…? என்று காட்டுகிறார்கள்.
1.‘நான் ஒரு நொடியில் உலகை வலம் வந்து விடுகின்றேன்’ என்று
2.எண்ணத்தால் வேகமாகச் சென்று விடுகின்றான் முருகன் (ஆறாவது அறிவு).

அதே சமயம்… சிவன் அருகில் விநாயகன் இருக்கும் பொழுது
1.பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தைதான்.
2.பேரண்டம் சுழல்வதற்கும்… அந்தப் பேரண்டத்தின் ஆற்றல் உன் அன்னை தந்தைக்குள் இருக்கின்றது.
3.இது தான் உனக்கு உலகம்.
4.அவர்களைச் சுற்றி… நீ இந்த வினையாகச் சுற்றி… நிலைக்கு வந்து சேர்.
5.அந்தக் கனியின் தன்மையை நீ பருகலாம்…! என்று நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

கனி – நாரதன் என்று உணர்த்தப்படுவது என்ன…?

ரிஷியின் மகன் நாரதன். மனிதனின் உயர்வின் தன்மை கனியாக்கியவன் அந்த மகரிஷி. அந்தக் கனியின் தன்மை அங்கிருந்து வரப்படும் பொழுதுதான்… “நாரதனைக் கனியாக்கி”
1.கனியினைச் சிவனிடம் கொடுக்கப்படும் பொழுது பேரண்டமும் பேருலகமும் அன்னை தந்தை
2.அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நீ அந்தக் கனியைப் பெறு.
3.அதனைக் கொண்டு நீ கனியாகு.

உன் ஆறாவது அறிவு கொண்டு… “எங்கே இருக்கும்…?” என்றும் “எங்கோ இருக்கும்…!” என்றும் கடவுளைத் தேடாதே…!

உனக்குள், உயிரான நிலைகள் அன்னையாகவும் தந்தையாகவும்… அதனின் உணர்வின் சத்து உனக்குள் தாயாகவும் சிவசக்தியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உடலை மறவாதே…!

சிவனையும் நமக்குள் இருக்கும் சக்தியையும் நமக்கு எவ்வளவு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்…? எதை வினையாகச் சேர்க்க வேண்டும்…? விநாயகன் யார்…?
1.அந்த ஞானியின் உணர்வை உனக்குள் வினையாக்கி அதை நீ கனியாக்கு
2.கனியானவன் அவன்…! என்று தெளிவாக எடுத்துரைத்தான் அந்த மகாஞானி.

நாம் இங்கே என்ன செய்கின்றோம்…? அந்த உட்பொருளைக் காணாதவாறு, கதையைக் கதையாகத்தான் காணுகின்றோமே தவிர… மெய்ப்பொருளைக் கண்டுணரும் ஆறாவது அறிவைத் தனக்குள் செலுத்தி… உட்பொருளைக் கண்டுணரும் நிலைகள் இல்லை.

மெய்ப்பொருளைக் கண்டுணர வேண்டும் என்று கவிப்புலமை கொண்டு, உணர்வின் வேட்கை கொண்டு நாதங்களின் சுருதியாக அதற்குள் பிரித்தாலும்… கவிப்புலமைகள் பல வந்தாலும்… புலமை பெற்றவருக்கே தெரியும்.

அருணகிரிநாதர்… “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…” என்று பாடினார்.
1.உடலுக்குள் எந்த உணர்வின் தன்மையை எடுத்தோமோ நமது உயிருக்குள் சேர்க்கப்படும் பொழுது அது ஆவியாகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை நமது உடலாகும் பொழுது “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…!”

நாம் எதையெல்லாம் எடுக்கின்றோமோ எந்த குணத்தை எடுக்கின்றோமோ
1.அந்த உணர்வின் சத்து உடலுக்குள் சேர்க்கும் பொழுது, “ஆதி…”
2.உடலாகச் சேர்க்கும் பொழுது “நமோ நமோ…”

பாடலின் உட்பொருள் தெரியாமல் பாடிக் கொண்டு போய் விடுகின்றோம். இவையெல்லாம் நமது ஞானிகள் கண்ட பேருண்மைகள். நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மதுரை வெங்கட்ராமன் வீட்டிற்கு நான் (ஞானகுரு) வரப்போகும் பொழுது இது நடந்த நிகழ்ச்சி. அவர்கள் வீட்டிற்கு அருகிலே அவர்கள் சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள்.

அதிலே ஒரு கணவன் மனைவிக்குக் குழந்தை இல்லை என்று எம்மைச் சந்தித்து ஆசீர்வாதம் செய்த பின் அவர்களுக்குக் குழந்தை கிடைத்தது.

அந்தக் குழந்தைக்குப் பேர் வைக்க வேண்டும் என்ற நிலையில் மீண்டும் நான் வெங்கட்ராமன் வீட்டிற்கு வந்த சமயம் தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அங்கே வருகின்றனர்.

அவர்களுக்கும் குழந்தை இல்லை. அது மட்டுமல்ல..! “குழந்தை பாக்கியமே இல்லை..” என்ற ஏக்கம்…! விபரம் கேட்கும் பொழுது
1.குழந்தை இல்லை என்று ஏற்கனவே நாங்கள் சாமியைச் சந்தித்தோம்
2.அவர் ஆசியால் எங்களுக்குக் குழந்தை கிடைத்தது.
3.சாமியிடம் சென்று இன்றைக்குத்தான் குழந்தைக்குப் பேர் வைக்கப் போகிறோம் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

அதைக் கேட்டதும் அல்லி நகரத்தில் இருந்து வந்தவர்களுக்கு ஆசை.

சாமியிடம் போனால் உங்களுக்கும் குழந்தை கிடைக்கும் என்றார்கள். அப்பொழுது இவர்கள் தன் குழந்தைக்குப் பேர் வைக்கும் பொழுது அல்லி நகரத்தைச் சேர்ந்தவர்களும் கூட வருகின்றார்கள் எம்மைச் சந்திக்க…!

1.இந்த உணர்வு வேகம் அலைகள் எப்படி வருகின்றது…! என்று சொல்கிறேன்.
2.அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
3.அதைக் கேட்டதும்… இந்தத் தம்பதியருக்குத் தங்களுக்கும் குழந்தை வேண்டும் என்ற அந்த உணர்ச்சிகள் வருகின்றது.

அந்த உணர்வைச் சுவாசித்ததும் என்ன நடக்கிறது…?
1.குழந்தை இல்லை என்று இவர்களுக்குக் கிடைத்தது.
2.”குழந்தை கிடைத்த அந்த உணர்வை…” வாக்காலே சொல்லப்படும் பொழுது
3.அந்த ஒலி அலைகள் பட்டவுடன் “உற்றுப் பார்த்து அந்த உணர்வுகளைச் சுவாசிக்கின்றனர்…”
4.அந்தக் கரு உருவாகும் பருவம் அப்பொழுது உருப்பெறுகின்றது.

இது நடந்த நிகழ்ச்சி…!

சாமி எங்களுக்கு எல்லாம் இருக்கிறது… நிறைய மருத்துவர்களையும் பார்த்து விட்டோம்.
1.எங்களுக்குப் புத்திர பாக்கியம் வேண்டும்…! என்று
2.அவர்கள் சொல்லிக் கொடுத்த மாதிரியே “வேண்டும்…” என்று எம்மிடம் கேட்கிறார்கள்.
3.”இல்லை…!” என்ற அந்தக் குறையான சொல்லே அவர்கள் வாயிலிருந்து வரவில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் மனைவி இருவரும் பெறுவீர்கள்…! என்று ஆசீர்வாதம் கொடுத்தேன். பேர் வைக்கக் குழந்தையை எடுத்து வாருங்கள்..! என்று சொல்லி அனுப்பினேன்.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் எண்ண வேண்டும்.
3.புத்திர பாக்கியம் பெறும் அணுக்கள் எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் ஈஸ்வரா என்று
4.கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நெற்றியைப் பார்த்து எண்ணுங்கள்..! என்று சொன்னேன்.

ஒரு ஒன்றரை வருடம் கழித்து மீண்டும் அந்தப் பக்கம் வந்தேன். அந்தக் கணவன் மனைவிக்குக் குழந்தைப் பாக்கியமே இல்லை என்று பரிசோதித்த டாக்டரும் அங்கே வந்திருந்தார்.

அந்த டாக்டர் என்னிடம் சில விபரங்கள் கேட்க வேண்டும் என்று வந்தார்,
1.குழந்தை கிடைக்கும்..! என்று நீங்கள் ஆசீர்வாதம் கொடுத்தவர்களுக்குக் குழந்தை கிடைத்திருக்கின்றது.
2.இவர்களுக்குக் குழந்தை எப்படிக் கிடைத்தது..? என்று எனக்குத் தெரிய வேண்டும்.
3.மருத்துவத் துறையில் நாங்கள் நிறையப் படித்திருக்கின்றோம்.
4.இவர்களும் எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்திருக்கின்றார்கள்.
5.குழந்தைக்கு வாய்ப்பு இல்லாத ஒரு சூழ்நிலையில் இவர்களுக்குக் குழந்தை எப்படிக் கிடைத்தது..?
6.வழக்கமாகக் கர்ப்பப் பையில் தான் குழந்தை உருவாகியிருக்கும்.
7.ஆனால் இவர்களுக்குக் கர்ப்பப் பைக்கு வெளியே குழந்தை எப்படி உருவானது,..?
8.கர்ப்பப் பை சிறுத்திருக்கின்றது… ஒன்றும் செய்ய முடியாது… என்று நாங்கள் சொன்னோம்.
9.ஆனால் நீங்கள் மருந்தும் கொடுக்கவில்லை. ஒன்றும் செய்யவில்லை…! எப்படிக் குழந்தை உருவானது…?

“குழந்தையைப் பேர் வைக்க எடுத்துக் கொண்டு வாருங்கள்…” என்று தான் சொன்னீர்கள்…! என்னால் இது நம்ப முடியவில்லை. யார் சொன்னாலும் நம்ப மாட்டேன்…! நான் நேரடியாகப் பார்த்த அனுபவம்.

இவர்களுக்குப் பிரசவமும் நானே தான் பார்த்தேன். ஆபரேஷன் செய்து தான் குழந்தையை வெளியில் எடுத்தோம். ஆனால் குழந்தை கர்ப்பப்பைக்கு வெளியில் இருக்கின்றது. இது எப்படிச் சாத்தியமாகும்…? என்று அந்த டாக்டர் என்னிடம் (ஞானகுரு) கேள்வியைக் கேட்டார்.

அப்பொழுது நான் சொன்னேன்…! அவர்கள் எண்ணி ஏங்கி எடுத்துக் கொண்ட உணர்வின் இந்த அணு செல்கள் வெளியில் வரப்படும் பொழுது
1.கர்ப்பப்பைக்கு அருகிலேயே அதனுடைய ஜீவ அணுக்கள் துடிப்புக்குக் கொண்டு வரும்.
2.அப்பொழுது புதுக் கருப்பை அதிலிருந்து உருவாகிறது. அதற்குள் குழந்தை உருவானது.

ஆனால் பிறக்கும் பாதை வழியாக வர முடியாது ஆபரேஷன் செய்து தான் குழந்தையை எடுக்க முடியும். ஒரே குழந்தைதான், அதற்குப் பிறகு வராது என்று முழு விபரத்தையும் டாக்டரிடம் சொன்னேன்.

இது அல்லி நகரத்தில் நடந்த நிகழ்ச்சி இது. ஏனென்றால் “தியானம் என்றால் என்ன…?” என்ற நிலையில் அந்த மகரிஷிகளைப் பற்றிய எண்ணங்களை உங்களுக்குள் பதியச் செய்வதற்குத்தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

மந்திர நிலைகளை விடுத்து விட்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்

 

கோவிலில் இந்தத் தெய்வத்திற்கு இந்த மந்திரம் என்று சிருஷ்டித்துக் கொண்டால் அடுத்து இதே மந்திரத்தைத் திரும்பத் திரும்ப மற்றவர்கள் ஜெபித்தால் அங்கே முருகனாகக் காட்சி தருவேன்.

நான் நல்லது செய்ய வேண்டும் என்று எதையெல்லாம் எண்ணினேனோ அந்த உணர்வுடன் சுவாசிக்கப்படும் பொழுது மந்திரத்தைச் சொன்னவுடன் உடலுக்குள் போய் இரண்டு மடங்காகச் சேர்ந்து கொள்ளும்
1.மற்றவர் உடலில் இருக்கக்கூடிய நோய்களைக் கவரும்.
2.ஆனால் மற்றவர்களுக்கு நோய் தீரும்.

காரணம் அவருடைய வலு கொண்டு தான் மந்திரம் சொல்லி இறந்த ஆன்மா அங்கே சென்றது. மந்திரத்தைச் சொல்லி நோயை இழுத்துக் கொள்வார் உள்ளே சென்ற பின் அந்த நோயெல்லாம் அங்கு இயக்க ஆரம்பிக்கும்.

முருகனின் அருள் பெறப் போகின்றேன் என்று தவமிருந்தேன்
1.அதற்காக மந்திரத்தைச் சொன்னேன் என்ற நிலையில்
2.அடுத்த உடலுக்குள் சென்று அவரையும் வளர விடாதபடி… தானும் வளராதபடி ஆகிவிடும்.

அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற்றுத் தான் இருளை நீக்க வேண்டும்.

ஒளி கொண்டு உணர்வின் தன்மை இருளை நீக்கினான் நரசிம்மா…! தீமைகள் நீக்கி ஒளியைத் தனக்குள் பெற்றான்… “சப்தரிஷி…!”

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தனக்குள் செலுத்திடல் வேண்டும்.

சந்தர்ப்பத்தில் “ஒரு இருளான நிலையைப் பார்க்கின்றோம்… அறிகின்றோம்…” அதை அறிந்த பின் அதற்குண்டான காரியங்களை நாம் செய்கின்றோம்.

ஆனால் நாம் பார்த்த அந்த இருளை மாற்றுவதற்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது எடுத்து உடலுக்குள் செலுத்தி அதை வலுவாக்க வேண்டும்.
1.ஏனென்றால் பிறிதொரு ஆன்மா அறியாது உடலுக்குள் வந்து இயக்கினாலும் இயக்கிவிடும்.
2.அதை நாம் தடைப்படுத்த வேண்டும்.

நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் நாங்கள் பார்ப்போரெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும் நாங்கள் வியாபாரம் செய்யும் இடத்திலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

எங்கள் குழந்தைகள் கல்வியிலே சிறந்த ஞானம் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று நல்ல ஞாபக சக்தி பெற வேண்டும். அவர்கள் எதிர்காலம் நலமாக இருக்க வேண்டும்.

குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். “புத்திர பாக்கியம் பெறக்கூடிய சக்தி வேண்டும்…” என்று இப்படித்தான் நாம் எண்ணி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலே சொன்னபடி…
1.அந்தச் சக்தி பெற வேண்டும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி வளர்த்துக் கொண்டால்
2.அதுவே ஜெபம் ஆகின்றது… எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியே நமக்குள் வருகின்றது.

சந்தர்ப்பத்தில் குறையான உணர்வுகளை நாம் எடுத்து விட்டால் அந்தக் குறையே இங்கே வளர்ந்து விடுகின்றது. கணங்களுக்கு அதிபதி கணபதியாக அது மாறி விடுகின்றது.

ஏனென்றால் இந்த உடலிலே எதை அதிகமாகச் சேர்க்கின்றமோ அதுவே அதிபதியாக ஆகின்றது…!

இன்றைய செயல் நாளைய சரீரம். இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! என்று கேள்விக்குறியைப் போட்டு முச்சந்தியில் வைத்து நம்மைச் சிந்திக்கும்படிச் செய்கின்றார்கள்.
1.விநாயகர் தத்துவமே “நான் யார் தான் யார்…?” என்பது தான்.
2.உயிரின் தன்மை கொண்டு எண்ணி இயக்கப்படும் பொழுது நான் ஆகின்றது
3.அந்த உணர்வின் சக்தி உடலுக்குள் செல்லும் பொழுது தானாகின்றது… உயிரும் உடலும் தானாகின்றது.
4.உடலில் விளைந்து உயிருடன் சேர்க்கப்படும் பொழுது எண்ணமாக வரும் பொழுது நானாகின்றது.
5.அந்த நானின் தன்மை அடையப்படும் பொழுது எதன் உணர்வோ அதுவாகின்றது.

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆக கண்களிலே எதைக் கூர்மையாக உற்று நோக்கி எண்ணி எடுக்கின்றோமோ அதையே பெறுகின்றோம்.

ஆகையினால் இந்த உடலில் வரக்கூடிய வினைகள் “நாம் செய்தது அல்ல…”

நல்ல எண்ணங்கள் கொண்டு நாம் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் பிறர் துன்பப்படும் உணர்வுகள் நமக்குள் அது கவரப்பட்டு தீய வினைகளாக விளைந்து நம் நல்ல குணங்களை அது அமிழ்த்திவிடுகிறது.

அதை நீக்குவதற்குத் தான் நரசிம்ம அவதாரம்… தியானம் என்பது. யாம் உபதேசித்த உணவின் துணை கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஜீவணுக்கள் பெற வேண்டும்
4.நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குழந்தை பாக்கியம் இல்லை என்று எம்மிடம் (ஞானகுரு) ஆசீர்வாதமும் வாங்கிக் கொண்டு… குழந்தை கிடைத்த பின் பெருமையும் பட்டு.. அதன் பின் அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா…?

எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று கூப்பிட்டார்கள். கலசம் வைக்க வேண்டும் என்றார்கள். வைத்துக் கொடுத்தேன். அதற்கப்புறம் வாருங்கள் என்று சொன்னேன்.

ஒரு நாள் ஒரு பொழுது கூட இந்தப் பக்கம் வரவே இல்லை. அப்பொழுது எம்முடைய உபதேசம் எல்லாம் என்ன ஆகிறது…?

உங்கள் எண்ணங்கள்… உங்களுக்குள் அந்த உணர்வுகள்… எதை… எப்படிப் பதிவாக்குகிறது..? பதிவின் நிலைகள் எப்படி உங்களை இயக்குகிறது…? அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் இந்த நிலைகள் “நான் செய்தேன்…!” என்று நீங்கள் எண்ண வேண்டாம்…!”
1.சாமி செய்தார்… என்றால் சாமியிடம் என்ன சக்தி இருக்கிறது…?
2.உங்கள் எண்ணத்தால் தான் அது உருவானது
3.உங்கள் எண்ணத்தின் உணர்வு கொண்டு உங்கள் உயிர் என்ன செய்கிறது..? என்று சொல்கிறோம்.
4.அதற்குண்டான ஒரு நல்ல கருவை… ஞானத்தைக் கொடுக்கின்றோம்.
5.அந்த ஞானத்தின் தொடர் கொண்டு நீங்கள் வளர்ந்து அதே வரிசையில் வரவேண்டும் அல்லவா…?

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்
1.மனம் ஒத்த நிலைகள் ஒத்து வரப்படும் பொழுது
2.நமக்குள் அந்த இணக்கங்கள் வந்து நல்வழியை உயர்த்தும்.

இதைத்தான் குருநாதர் “ஈஸ்வரபட்டர்” எமக்குச் சொன்னார்.

நீங்கள் எல்லோரும் என்னைப் போற்ற வேண்டும்…! என்று நான் நினைத்தேன் என்றால்
1.தவறுகள் கூடிக் கொண்டே தான் இருக்கும்.
2.நல்லவைகள் மறைந்து கொண்டு தான் இருக்கும்.

ஆகவே அனுபவரீதியில் இதைக் கொண்டு வருவதற்குத்தான் இதை எல்லாம் தெளிவாகவே சொல்லிக் கொண்டு வருகின்றோம். சிறிது பேராவது இதை உணர்ந்து கொண்டால் தெளிவாகும்.

நம் குடும்பத்தில் ஒருவருக்கு நோயாகின்றது. அவரைப் பாசத்துடன் உற்றுப் பார்க்கின்றோம். அவரிடமிருந்து வேதனைப்படும் சொல்கள் வெளி வருகின்றது.

வேதனையான சொல்களைக் கேட்டு அவர்கள் கஷ்டங்களை நாம் நுகர்ந்தால் அந்த நோய் நமக்கும் வந்துவிடுகிறது. அந்தச் சொல்கள் ஒன்று தான்,

அதே போல் நீங்கள் அருள் ஒளி பெற்று உங்களால் நன்றாக ஆகும் பொழுது
1.நல்லதாக ஆனது…! என்ற இதே சொல்லை நீங்கள் சொன்னீர்கள் என்றால்
2.உங்கள் சொல்லைக் கேட்கும் பொழுது மற்றவர்கள் தீமைகள் நீங்கும்.

ஞானிகள் கொடுத்த அரும்பெரும் சக்திகளை நான் விளம்பரம் செய்யாததன் நோக்கங்களே அது தான்..! ஏனென்றால்
1.ஆசையை ஊட்டிவிட்டோம்.. என்றால் அங்கே அறிவு இழக்கப்படுகின்றது.
2.எதைக் குறிக்கோளாக எண்ணி ஆசைப்பட்டு வருகின்றார்களோ அதுவே நிலைக்கின்றது.
3.அதன் நிலைக்கே வந்தவுடனே… அது கிடைத்த பின் தன்னைப் பாதுகாக்கும் சக்தி இழக்கின்றது.

சொல்வது அர்த்தமாகின்றதா…? ஆசைப்பட்டுத் தேடி வந்தது கிடைத்ததும் தங்களைப் பாதுகாக்க முடியாமல் போகின்றார்கள்.
1.அவர்களும் அருள் ஞானிகளின் அருள் சக்திகளை வளர்ப்பதில்லை.
2.மற்றவர்களுக்குப் பயன்படுவதும் இல்லை.

ஆரம்பத்திலிருந்து எத்தனையோ பேரை யாம் (ஞானகுரு) சந்தித்திருக்கின்றோம். அவர்களின் ஆசையின் உணர்வுகள் எப்படிப் போனது…? அதிலிருந்து எப்படி மீள வேண்டும்…? என்பதைத்தான் திரும்பவும் உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

நான் (ஞானகுரு) அந்த அருள் ஞானிகள் பெற்ற அழியாச் சொத்தைத்தான் எனக்குள் தேடி வைத்திருக்கின்றேன். அதிலிருந்து ஞானத்தின் உணர்வுகளைத்தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

உங்களுக்குக் கோடிப் பணம் வாங்கித் தருகிறேன்.. உங்கள் நோயை எல்லாம் நீக்கித் தருவேன்… உங்கள் குறைகளை எல்லாம் நான் நீக்குவேன்…! என்று சொல்ல வரவில்லை.

1.அருள் ஞானத்தைப் பெற்றால்
2.உங்களைத் தேடி எல்லாமே வரும்.
உடலுக்குப் பின் ஒளியின் சரீரமாகி அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் நீங்கள் ஐக்கியமாகலாம்…!

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் “ஈஸ்வரபட்டர் எனக்குச் சொன்ன உபாயங்கள்”

 

உடலை விட்டு குருநாதர் வெளியிலே செல்லும் பொழுது பல உண்மைகளை எமக்குத் தெளிவாக்கினார்.

1.என்னை (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ பேர் அணுகினார்கள்.
2.பல அற்புதங்களை நான் காட்டினேன். அதற்கு மயங்கி இருந்தோர் பலர் உண்டு..
2.எனக்குச் சொத்து வேண்டும் சுகம் வேண்டும் உடல் நலம் வேண்டும் என்று தான் கேட்டார்கள்.

வருவோர் அனைவரும் எனக்கு அந்த அருள் வேண்டும் இந்த அருள் வேண்டும் என்று தான் கேட்டார்களே தவிர
1.மெய்ப்பொருள் காணும் திறன் வேண்டும்… உலகம் நலமாக இருக்க வேண்டும்
2.என் பார்வையில் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.என் பேச்சால் மூச்சால் நான் பார்ப்போர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று
4.இதை எண்ணிக் கேட்பார் எவரும் என்னிடம் வரவில்லை.

இப்படி தனக்குத்தான் என்னிடம் கேட்டார்கள் தவிர எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற கேள்வியே அவர்களிடம் எழவில்லை.

இந்த உலகில் உள்ள எல்லோரும் அந்த அருள் ஞான சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணினேன்… அதைப் பெற்றேன் அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.

ஆனால்
1.நீ எதை எண்ணப் போகின்றாய்…? எதை நீ பெறப் போகின்றாய்…?
2.நீ பெற வேண்டிய தகுதிகள் எது…? நீ அதை எப்படிப் பெறுவது…?
3.உடலை விட்டுச் சென்ற பின் என்னுடன் இணைந்து நீ வர வேண்டும் என்றால் நீ எதை எண்ண வேண்டும்…? என்று
4.வைகுண்ட ஏகாதசி வருவதற்கு ஒரு மாதம் முன்பு என்னிடம் இந்த கேள்விகளைத் தான் குருநாதர் எழுப்பினார்.

அதைத் தெளிவாக்கவும் செய்தார்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி என் குருநாதர் பெற வேண்டும்… அவர் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… அருள் வழியில் அவர் செல்ல வேண்டும்… அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… அந்த அருள் ஒளி என் குரு பெற வேண்டும் என்று “இப்படி நீ எண்ணினால் அந்த குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்…!”

உங்களுக்குச் சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…! இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்…!

1.நான் சொன்ன முறைப்படி எண்ணும் பொழுது தான்…
2.”நீ எதை எண்ணுகின்றாயா நீ அதுவாகின்றாய்…” என்று இப்படித்தான் சொன்னார் குருநாதர்.

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் அதற்குச் சில உபாயங்களைச் சொல்லி துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெறும் நிலையும் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் நிலையும்… அதைப் பெற்று குருவை எப்படி விண் செலுத்த வேண்டும்…? எதை நீ குருவாக்க வேண்டும்…? என்ற பேருண்மைகளை எல்லாம் உணர்த்தி விட்டுத் தான் “வைகுண்ட ஏகாதசி என்று ஈஸ்வரபட்டரின் ஆன்மா பிரிகின்றது…”

உடலை விட்டுச் சென்ற பின் குருவின் நினைவும் இங்கே அந்த உணர்வின் விளைவும்…
1.சப்தரிஷி மண்டல உணர்வையும் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் கொண்டு வரப்படும் பொழுது
2.அதன் தொடர் கொண்ட அந்த அருள் மகரிஷி அதன் வழியில் அங்கே சென்று ஒளியின் சரீரமாகப் பெறுகின்றார்.

ஆக அவர் சென்ற அந்த வழியில் அந்த வரிசை ஒன்றை வைத்துத் தான் ஒன்று செல்ல முடியும்.
1.அந்த வழியை நீ பெறு… மற்றவருக்கு வழிகாட்டும் பொழுதும் இந்த நிலையை உணர்த்து.
2.அதை அவர்கள் பெற வேண்டும் என்று ஏங்கு… அந்தத் தகுதியை அவர்களையும் பெறும்படி செய்.
3.நீ அதன் வழி செல்லும் பொழுது அடுத்தவர்கள் எண்ணும் பொழுது நீயும் எளிதில் விண் செல்கின்றாய்,
4.உன் சொல்லைக் கேட்பவர்களும் அந்த வழியினைப் பெறுகின்றார்கள்.

ஆகையினால் இதனை நீ வழிப்படுத்து…! என்று விண் செல்லக்கூடிய மார்க்கங்களை ஈஸ்வரபட்டர் எமக்குத் தெளிவாக உணர்த்தி மற்றவர்களுக்கும் இதைக் காட்டும்படி சொன்னார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அந்தக் காலத்தில் தன்னுடன் வாழ்ந்த சகாக்களின் நோயை நீக்கப் பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் தாவரங்களின் விழுதுகளையும் அகஸ்திய மாமகரிஷி கண்டுணர்ந்து அதை வைத்து நோய்களை நீக்கியுள்ளார்.

அன்றைக்கும் கேன்ஸர் நோய் வந்துள்ளது. அந்தக் கேன்ஸருக்கு நேரடியாக விழுதைக் கொடுத்தவுடன் அல்லது கட்டி இருக்கும் இடத்தில் அந்தத் திரவத்தை வைத்தவுடனே சர்ர்ர்ர்… என்று கரைத்துக் கொண்டு போகும். விஷ நீர்களை எடுத்து விட்டு அந்தக் கேன்சரைக் குறைக்கும்.

அதே மாதிரி இன்னொரு பச்சிலை இருக்கிறது. இப்பொழுது எப்படி கத்தியை வைத்து அறுவை சிகிச்சை செய்து பின்பு அதை எப்படி மூடுகிறார்களோ பச்சிலையை அரைத்துத் தேய்த்தால் அந்தத் தோல் அப்படியே மூடிவிடும். அக்காலத்தில் செய்த வைத்திய முறை.

இது எல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரால் எமக்கு (ஞானகுரு) உணர்த்தப்பட்ட நிலைகள்.

ஒரு சமயம் நான் சுற்றுப் பயணம் செய்யும் பொழுது இது நடந்த நிகழ்ச்சி. ஒருவருக்குக் காலில் ஆணி இருந்தது. அவரால் நடக்க முடியவில்லை. அந்தக் காலில் உள்ள ஆணியை எடுப்பதற்காக வேண்டி “காலை நீட்டுங்கள்…!” என்றார்கள்.

அந்தப் பச்சிலையை வைத்துத் தேய்க்கிறார்கள். தேய்த்தவுடன் அந்த ஆணி அப்படியே ஆழமாக இருப்பதை எடுக்கிறார். அந்த வலி தெரியவில்லை. இப்பொழுது நடங்கள் பார்க்கலாம்… என்கிறார். ஆணியை எடுத்தவுடனே அவர் தாங்கித் தாங்கி நடக்க ஆரம்பித்தார்.

அப்பொழுது நான் சொன்னேன் வலியை மறக்கச் செய்து எடுக்கின்றீர்கள். இன்னும் கொஞ்ச நேரம் போனால் அவருக்குக் கடுமையான வலி வரும். வலி வந்தது என்றால் தாங்க முடியாது என்று சொன்னேன்.

கேட்டு விட்டு அப்படியே போய் விட்டார். ஏனென்றால் ஆணியை எடுக்க இவர் பணம் குறைவாக வாங்கினார்.

எழுந்திரிக்க முடியாதவர் நல்லதாக ஆனவுடன் இவன் சொன்னதைக் கேட்டு அவர் ஒரு கொலையைச் செய்கிறார். அந்த மாதிரி ஆனவுடன்… “பிறரைக் கொல்வதற்கு நீ வருவாய்…!” என்றேன்.

அவனை அறியாமலேயே இவனுக்குள் செய்கிறான் அவனைக் கொல்லவும் செய்கிறான்… இவன் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லவும் செய்கின்றான்.

ஆக இவனால் விளைந்த உணர்வுகள் அணுக்களாக மாற்றப்படும் போது எத்தனை பேர் உடலுக்குள் இது உருவாகிறது…? இந்த உணர்வுகள் எல்லாம் இங்கே மனிதனுக்குள் படர்கிறது. “இதை நீ கரைப்பது எப்பொழுது…?” என்று கேட்டேன்…!

ஏனென்றால் சித்தான புதிதில் முதலில் இதெல்லாம் யாம் (ஞானகுரு) செய்தோம். அதிலே எத்தனை பேர் இங்கே வந்திருக்கிறார்கள்…? தனக்கு நன்றாகி விட்டால் அதற்கு அப்புறம் எங்கேயோ போகிறார்கள்…? யாம் சொல்லும் அருள் வழியைச் சிந்தித்துப் பார்ப்போர் இல்லை.

ஆக மேலே சொன்ன மாதிரி எத்தனையோ எதிர்பார்ப்பிலே வருகின்றார்கள். யாம் உபதேசிக்கும் அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் எல்லாவற்றையுமே நல்லதாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் எண்ணியபடி நல்லதாக ஆகவில்லை என்றால் என்ன செய்கிறார்கள்…? வேறு ஒருவரைப் பார்க்கலாம்…! கடைசியில் இந்தச் சாமிக்கு சக்தி இல்லை…! என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

ஆக இவர்கள் தவறு செய்து கொண்டே இருப்பார்கள். அதற்கெல்லாம் நான் உடந்தையாக இருந்து கொண்டே இருக்க வேண்டும்….! அது எப்படி என்னால் (ஞானகுரு) முடியும்…?

1.உங்களுக்குள் ஒரு தவறாகிறது….
2.அந்தத் தீமைகளிலிருந்து அருள் சக்தியை எடுத்து மாற்றிக் கொள்ளுங்கள்…! என்று நாம் விவரமாகச் சொல்கிறோம்
3.நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் அல்லவா..!

அதைச் செய்யவில்லை என்றால் மற்றவர்கள் தவறு செய்வதற்கு மறைமுகமாக யாம் ஒரு பெரிய குற்றவாளி ஆகிக் கொண்டே இருக்க வேண்டும்.

1.உங்கள் குற்றத்தை இயக்கும் நிலைகளிலிருந்து மீட்டிட மறைமுகமாக நல் உணர்வுகளைச் செலுத்துவது நல்லதா…?
2.என் புகழுக்காக வேண்டி… ஆகா கடவுள் நீயே தான்…! என்று நீங்கள் என்னைப் போற்றித் துதித்ததும் உடனே உங்களை நான் உயர்த்துவதா..?
3.ஏனென்றால் என்னை நீங்கள் போற்றினீர்கள் என்றால் அந்தப் போற்றுதலின் மறைவில் என்ன ஆகிறது…?
4.உங்களையும் கெடுக்கின்றேன்… நானும் கெட்டேன்… அடுத்தவர்களையும் கெடுக்கச் செய்யும்
5.ஞானிகள்… மகரிஷிகள்… கொடுக்கும் சக்தியை எப்படி விரயமாக்குவது…?

சிலர் நினைக்கலாம் இந்தச் சாமி என்ன என்று..?
1.நீங்கள் சாமிக்கு என்ன பெரிய சக்தி இருக்கிறது…? என்று கேட்டவுடன்
2.நான் ரோசப்பட்டு ஏதாவது செய்வதா…?

இயற்கையின் உண்மை நிலைகளை உணர்த்தி அந்த உணர்வால் தான் எத்தகைய நிலையாக இருந்தாலும் மாற்றப்பட வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் அதைத் தான் இன்றும் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய் ஞானிகளின் ஞான வித்துக்களை உங்களுக்குள் அழுத்தம் திருத்தமாகப் பதிவாக்குகின்றோம். அதை நீங்கள் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை வளர்த்தால் உங்களை அது மெய் ஞானியாக நிச்சயம் உயர்த்தும்…!

இன்றைய உலக நடப்பு

 

மனிதன் எவ்வளவு சிந்தனை கொண்டு விஞ்ஞானத்தின் அறிவினால் இன்று எலக்ட்ரானிக் கருவிகளைக் கண்டுபிடித்துச் செயல்பட்டாலும் இது எல்லாம் இன்று எதற்கு உதவுகின்றது…? தன் நாட்டைப் போற்றிடும் நிலையாக மற்றவனை அழித்திடத் தான் உதவுகின்றது.

எலக்ட்ரானிக் வளர்ச்சியையும் அதன் பயன்பாடுகளைப் பற்றியும் நாம் ஆச்சரியப்படலாம். உலக நடப்புகளை அடுத்த கணமே தெரிந்து கொள்ளலாம்.
1.அறிந்துணர்ந்து அதை இயக்கப்படும் பொழுது அழித்திடும் சக்திகள் தான் வளர்கின்றது
2.அழித்திடும் எண்ணங்கள் தான் ஓங்கி வளர்கின்றது.

அதை வளர்த்து விட்டால் பின் எங்கே செல்வோம்…? என்று சற்று சிந்தியுங்கள்.

நாம் வளர்த்த அந்த அழித்திடும் உணர்வுகள் அனைத்துமே சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு நமக்கு முன்பு தான் பரவிக் கொண்டுள்ளது.
1.திடீரென்று உணர்ச்சிவசப்பட்டால் அந்த உணர்வு இயக்கி… மீண்டும் தன் எதிரிகளை அழித்திடும் எண்ணங்களே நமக்குள் தோன்றி
2.அந்த சிந்தனைகளே ஓங்கி வளர்த்து… நம்மை அழித்திடும் நோயாக மாறி “வைத்தியமே இல்லாத நிலையாகிவிடுகிறது…”

அது மட்டுமல்ல…! இதைக் கேட்போர் உணர்வுகளிலும் இயக்கப்பட்டு அவர்களையும் அழித்திடும் நிலையாகவே வளர்ந்து கொண்டே வருகின்றது.

இன்று குழந்தைகளைக் காணோம் முதியவர்களைக் காணோம் என்றெல்லாம் செய்திகள் வருகின்றது. அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் விற்றுக் கண்களைப் பிடுங்கி… உடல் உறுப்புகளைப் பிடுங்கி… வியாபாரம் செய்கின்றார்கள்.

காசே இல்லை என்றாலும் ஒன்றும் கவலை இல்லை. குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய் அதற்கென்று கூட்டங்களில் ஒப்படைத்து விட்டு விட்டால் இவனுக்குக் காசு கிடைக்கின்றது.

இவன் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றால்… அவன் உடல் உறுப்புகளைப் பல லட்சக்கணக்கில் விற்று வியாபாரம் செய்கின்ற அந்த அளவிற்கு விஞ்ஞானமும் சரி… பக்தி என்ற நிலையிலும் சரி… மதத்தின் சார்புடைய நிலைகளும் சரி… இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

தன் மதத்தாரைப் பிடிக்க மாட்டார்கள். அடுத்த மதத்தாரைக் கடத்திக் கொண்டு வந்தால் அது பாவம் இல்லை. இப்படித் திருடிக் கொண்டு போய் மிருக நிலைகள் கொண்டு அரக்கத்தனமான செயலாகப் போய்க் கொண்டுள்ளது.

ஆனால் இதனுடைய முடிவு எப்படி எங்கே சென்றடையும்…? என்பது சிலருக்குத் தெரியாது.

உடலில் இருக்கும் பொழுது உணர முடிகின்றது. இந்த உடலில் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் ஒலிகள் “உயிருடன் சேர்க்கப்படும் பொழுது…”
1.அந்த அணு செல்கள் ஒவ்வொரு நொடியிலும் வேதனையுடனே தான் துடித்துக் கொண்டிருக்கும்.
2.இதை மாற்றுவதற்கு எவராலும் முடியாது.

ஏனென்றால் மனிதனாக உருப்பெற்ற பின் அது வளர்ச்சி பெற்றது. உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இந்தத் துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும். யாரும் காப்பாற்ற முடியாது…!

இந்த மனித உடலில் இருக்கும் போது தான் துன்பத்தை நீக்க முடியும். அதை நீக்குவதற்குண்டான எண்ணங்களை எடுத்துச் செயல்படுத்தவும் முடியும்.

ஆனால் மனித உடலை விட்டுச் சென்றால் இந்த உடலில் எந்தத் தீய வினைகளைச் சேர்த்தோமோ அது இன்னொரு உடலுக்குள் சென்று “இதே உணர்வைத் தான்…” அங்கேயும் செயல்படுத்தும்.

உதாரணமாக ஹார்ட் அட்டாக்கில் இறந்திருந்தால் இன்னொரு உடலுக்குள் சென்று அங்கே குழந்தையாக அது பிறப்பதில்லை. மனிதன் இறந்தாலும் இன்னொரு உடலுக்குள் சென்று தான் மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும்.

ஆனால் ஹார்ட் அட்டாக்கில் இறந்திருந்தால் அடுத்த உடலுக்குள் சென்ற பின் இதே உணர்ச்சியைத் தூண்டி அங்கேயும் அதே நோயை உருவாக்கி அதையும் சீக்கிரம் கொல்லத்தான் செய்யும்.

பின் எப்படி அங்கே குழந்தையாகப் பிறப்பது…?

பக்தியின் நிலைகளில் வாழ்ந்தாலும் கடைசியில் வேதனைப்பட்டு ஏங்கிக் கொண்டிருந்தால் எந்தெந்த மதத்தின் அடிப்படையில் பக்தி கொண்டு வந்தாலும் இறந்து விட்டால் அதே பக்தி கொண்ட ஒரு மனிதன் ஈர்ப்பு இருந்தால் அங்கே சென்று இந்த வியாதியைத்தான் அங்கே உருவாக்க முடியும்.

அங்கேயும் குழந்தையாகப் பிறப்பதில்லை. அதையும் நசுக்கச் செய்கின்றது.

தற்கொலை செய்து கொண்டாலும் இதே போன்று தான். அடுத்த உடலுக்குள் சென்று அதையும் வீழ்த்தத்தான் செய்யும்.

ஏனென்றால் இயற்கையின் நியதிகளைச் சொல்கின்றோம்…! “இதிலிருந்து மீள வேண்டும்…” என்பதற்குச் சொல்கின்றோம். காலங்கள் மிகவும் குறுகியிருக்கின்றது.

விஷத்தின் தன்மைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆக இந்தப் பூமிக்குள் நமக்கு முன் சாக்கடையாகத்தான் அது இருக்கின்றது. இங்கே தான் வாழுகின்றோம்.

1.ஆனால் இதே காற்று மண்டலத்தில் தான் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்திய அருள் உணர்வுகளும் மறைந்துள்ளது.
2.நம் குருநாதர் காட்டிய வழியில் அதை நாம் நுகர்ந்து எடுத்து நமக்குள் வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
3.நம்மை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து அப்பொழுது நாம் விடுபட முடியும்.
4.இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லாத நிலை அடைய முடியும்… அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று சொல்லி ஏங்கிக் கண்ணின் நினைவினை உங்கள் இரத்தநாளங்களில் செலுத்தித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்கள் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா என்று இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

ஏனென்றால் நாம் நுகர்ந்தது ஜீவ அணுவாக இரத்தத்தில் உருவாகின்றது. ஜீவான்மா என்பது இன்னொரு மனிதன் மேல் நாம் பிரியப்பட்டு இருந்தால் அவர் இறந்த பின் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்தால் நம் இரத்தத்தில் தான் தங்கியிருக்கும்.

ஏனென்றால் நண்பனை உற்றுப் பார்த்து பாசத்துடன் பழகியிருந்தால் அவன் இறக்கும் போது கேள்விப்பட்டதும் “நண்பா போய்விட்டாயா…!” என்று ஏக்கத்துடன் கண்ணால் நுகரப்படும் பொழுது அந்த ஆன்மா நம் இரத்தத்தில் தான் வந்து குடிகொள்ளும்.

அந்த இரத்தத்தின் மூலமாக உணவை எடுத்துத் தான் அது அந்த அணுவாக வளரும். அந்த ஜீவான்மா நம் உயிர் பாகம் செல்லும் போது அதனுடைய உணர்ச்சிகளை உந்தி அது உணவாக எடுத்துக் கொள்ளும். நமக்குத் தீமையை விளைவிக்கும்.

1.ஆக அதன் உணர்வுகளைத் தான் அது செயல்படுத்த முற்படும்.
2.அதை மாற்ற அந்த ஆன்மாவால் முடியாது.

ஆகையினால் அத்தகைய ஆன்மாக்களால் முடியாததை நம் இரத்தங்களில் ஜீவான்மாக்கள் எது இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் அது பெற வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது அந்த ஜீவான்மாக்கள் ஒளியின் உணர்வாகப் பெறும். நல்ல ஜீவ ஆன்மாவாக நாம் ஆக்க முடியும்.

அதே சமயத்தில் ஜீவ அணுக்கள் என்றால் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது அது எல்லாம் ஜீவ அணுக்களாகத்தான் நம் இரத்தங்களில் உருவாகின்றது.

உதாரணமாக ஒரு பட்டாம்பூச்சி ஒரு பூவிலே தன் முட்டையை இட்டால் அந்தப் பூவின் உணர்வை நுகர்ந்து அந்தப் பூவின் நிறத்திற்குத் தக்க பட்டாம்பூச்சியாக மாறி அதன் கலரிலே வருகின்றது.

அதைப் போல் நாம் சந்தர்ப்பத்தால் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது அது கருத்தன்மையாகி முட்டையாகின்றது. மீண்டும் அதற்கு வளர்ச்சி கொடுத்தால் விளைந்து விடுகிறது.

இதைப் போல மற்ற வேதனைப்பட்டோரின் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து இருந்தாலும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் இரத்தங்களில் சேர்த்து
2.அருள் ஒளி என்ற உணர்வாக ஊட்டி
3.ஒளியின் அறிவாக இயக்கும் அந்த உணர்வை நாம் கண்ணால் செலுத்தப்படும் பொழுது இரத்தத்தில் நல்ல கருவாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.மிகச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது
2.உங்கள் உடலுக்குள் ஒரு மின்சாரம் பாய்வது போன்று உணர்ச்சிகள் வரும்.
3.அப்பொழுது அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
4.சிலருக்கு அந்தத் தீமை என்று உணர்வுகள் இரத்தத்திலே இருந்தால் அது அடங்கப்படும் பொழுது அது கொஞ்சம் சோர்வடையும்.

தியானிக்கும் பொழுது இதை உணர முடியும்.

நாம் இன்று கடைப்பிடிக்கும் சாஸ்திர விதிகள் எப்படி வந்தது…?

 

மதங்களின் அடிப்படையில் எடுத்துக் கொண்டால்… ஒவ்வொருவரும் எதை அடிப்படையாக வைத்து
1.இதுதான் கடவுள் என்ற நிலைகளில் சட்டங்களை வகுத்துப் பதிவு செய்து கொள்ளும் பொழுது
2.அந்த எண்ணத்திற்கு மாறி நடந்தால் “அது தெய்வ நிந்தனை…” என்ற நிலைகளில் கொண்டு போய் விடுகின்றார்கள்.

மதங்கள் தனக்குள் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தான் இந்த நிலைகளைச் செய்தார்கள். அன்றைய அரசர்கள் தான் வாழ்வதற்காகச் செய்து கொண்ட முறைகள் தான் இவை.

அரச காலங்களிலே ஒவ்வொரு கூட்டமும் பிரிவாக அது வளரும். இன்று போக்குவரத்து வசதிகள் மிகவும் சுலபமாக இருக்கின்றது. ஆனால் அன்று இந்த வசதிகள் கிடையாது.

அரசன் “ஒரு குலதெய்வத்தை ஏற்படுத்தி” அதன்படி சட்ட நியதிகளை ஏற்படுத்தி இருந்தால் அரசனுக்குக் கீழ் மக்கள் கட்டுப்பட்டு அதை ஏற்றுக் கொள்கின்றோம்.

சந்தர்ப்பத்தால் அரசர்களுக்குள் போர் முறை வரும் பொழுது அங்கே போர்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றார்கள்.

போர் வெகு தொலைவில் நடக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அங்கே சென்ற பின் அதிலே “நமது இனம் நமது குலம்…” என்று காட்டிக் கொள்வதற்காக உள் பிரிவுகளில் சிலதுகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்… ஒரு சாஸ்திர விதி…!

முதலில் போருக்குச் செல்லும் போது குடும்பத்தில் தன் குழந்தை சிறிதாக இருக்கின்றது. ஆனால் வெகு நாட்கள் ஆனபின் தனது பையன் தானா என்று நமக்கே அடையாளம் தெரியாமல் போய்விடும். அப்பொழுது அதற்கு வேண்டிய நிலைகளைச் சொல்ல வேண்டி வரும்.

போர் நடக்கும் இடங்களில் அதைத் தெரிந்து கொள்ள முடியாது.
1.நம் இனம் நம் குலம் என்று அதைத் தெரிந்து கொள்வதற்காக வேண்டி உணவாக உட்கொள்ளும் உணவுகளில்
2.காய்கறிகளில் ஏதாவது ஒன்றை… மறைமுகமாக இது நமக்கு ஆகாது என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள்.
3.அந்தக் காயைச் சாப்பிட்டால் வயிற்றுக்கு அஜீரணமாகும்… வயிற்றால் போய்விடும் என்று சொல்லிவிடுவார்கள்.
4.அதனால் அதைச் சாப்பிட மாட்டார்கள்…. ஒதுக்கி விடுவார்கள்.

இது மாதிரிப் பழக்கங்களை ஏற்படுத்திவிடுகின்றார்கள்.

வெகு தூரத்துக்குச் சென்று போரில் ஈடுபடும் போது அது முடிந்து தன் நாடு திரும்புவதற்குக் காலமாகின்றது. தன் குழந்தைகள் வளர்ச்சி ஆகிவிடுகின்றது.

நாடு திரும்பும் பொழுது தன் இனத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அத்தகைய சாஸ்திர விதியை உருவாக்கினார்கள்.

உதாரணமாக வெண்டைக்காயை ஒதுக்கி வைக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். எங்கேயாவது விருந்து வைக்கப்படும் பொழுது அந்த விருந்திலே இந்தக் காயை அவர்கள் ஒதுக்குவார்கள்.

அந்தக் காயை ஒதுக்கும் போது தான்… ஓஹோ…! நம் இனம் என்று தெரிந்து துப்பு விசாரிப்பார்கள். அவர்களுக்குள் சாஸ்திர விதிப்படி என்னென்ன செய்வீர்கள்…? என்று கேட்பார்கள்.

நாங்கள் இன்னென்ன முறைப்படி செய்வோம் என்று சொன்ன பின் அதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின் “இது நம் ஆள்…” என்று கண்டு கொள்வார்கள்.

இதற்காக வேண்டித்தான் சாஸ்திர விதிகளை அன்றைய அரசர்கள் உருவாக்கினார்கள்.

அதாவது அரசனுடைய ஆணைப்படி குலதெய்வம் என்று ஒன்றை அடிப்படையாக வைத்து… அந்த வழிகளில் சென்று ஒருவருக்கொருவர் இனம் கொண்டுள்ளக் கூடிய நிலைக்கு வைத்தார்கள்.
1.என் குலத்திற்கு இன்ன காய்… கத்திரிக்காயோ வெண்டைக்காயோ ஆகாது
2.எங்கள் குலதெய்வத்திற்கு இது ஆகாது என்றும் சொல்லிவிடுவார்கள்.

ஏனென்றால் அப்படி இந்தக் காய்கள் ஆகாது என்று தெரியப்படும் பொழுது தன் இனம் என்பதைக் கண்டு கொள்வதற்காகச் சில வித்தியாசமான நிலைகளை செய்து உருவாக்கி வைத்துக் கொள்கின்றார்கள்.

1.அன்றைய அரசர்கள் வகுத்த வழிப்படித் தான் இன்றும் நாம் சாஸ்திர விதிகளைக் கடைப்பிடித்துக் கொண்டுள்ளோம்.
2.ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லவில்லை.

ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் குருநாதர் உணர்த்தியதால் உங்களுக்கும் இதை இப்பொழுது தெரியப்படுத்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் அனைவரும் பெறக்கூடிய சக்திக்குத்தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன். பதிவாக்கினாலும் அதை மீண்டும் பெறுவதற்கு நினைவுபடுத்துகிறேன்,

ஏனென்றால் பல நிலைகள் உங்களை மூடி மறைக்கின்றது.

இப்பொழுது இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் படிக்கும் பொழுது உடனே அது வீரியம் பெறும். இங்கே நல்லதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அடுத்தாற்போல் ஒரு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் என்ன சொல்வீர்கள்…!

1.பார்…! சாமி (ஞானகுரு) என்ன சொல்கிறார்…?
2.இங்கே இப்படிச் சண்டை போடுகிறார்கள்..! என்று நான் சொல்வதை உடனே விட்டுவிடுவீர்கள்…!
3.சண்டையிடுபவர்களின் உணர்வுகளை எடுத்துக் கொள்வீர்கள்.
4.அப்பொழுது அந்தத் தீய அணுக்களுக்குச் சாப்பாடு நிறையக் கொடுக்கின்றோம்.

ஏனென்றால் அதற்கு ஏற்கனவே வீரியம் அதிகம். ஆகவே அந்த அணுக்கள் நமக்குள் அதிகமாக இருக்கும் பொழுது அதை மாற்றும் சக்தியை எடுத்து… அதை வலுவாக எண்ணி… சண்டையிடுபவர்களின் உணர்வுகளை அடக்கச் செய்ய வேண்டும்.

அப்படி என்றால் அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும் (துருவ தியானம்). அதை வைத்துத் தான் தீமைகளை அடக்க வேண்டும்.

சண்டை செய்கிறார்கள் என்றால் நாம் கண்ணில் பார்க்கின்றோம். அந்த மனிதர்களைப் பதிவாக்கி விடுகின்றோம். தவறு செய்கிறார்கள் என்று பார்க்கிறோம்… அந்த உணர்வை நுகர்கின்றோம்… அதே அணுவாக நம் உடலில் மாற்றி விடுகின்றது.

இங்கே உபதேசத்தைக் கேட்கின்றீர்கள்.
1.ஆனால் நான் ஒருவன் தானே இங்கே சொல்கிறேன்.
2.அந்தப் பக்கம் நீங்கள் பார்த்தால் ஆயிரம் பேர் ஆயிரம் விதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள் அல்லவா..!
3.அதைப் பார்த்ததும் அது தான் உங்களுக்குள் பெருகுகின்றது. (நான் சொல்வது சிறுத்துவிடுகின்றது).

கோவிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுகின்றோம். அங்கே மற்றொருவரும் வந்து கும்பிடுகின்றார்.

நாம் கும்பிடும் பொழுது அவரைப் பார்த்தவுடன் அவர் பல தவறுகள் செய்பவர் என்று தெரிகிறது. அர்ச்சனை செய்து… அந்தப் பரிவட்டம் கட்டி… அபிஷேகம்… ஆராதனை…! என்று பல நிலைகள் அவருக்கு நடக்கின்றது.

1.எத்தனையோ கொலை செய்கின்றான்… அவனுக்குச் சாமி எல்லாம் கொடுக்கின்றது… உதவி செய்கின்றது பார்..!
2.கோவிலையே அந்த நேரத்தில் வெறுக்கின்றீர்கள்… இல்லையா…?

ஆக கோவிலுக்குப் போன இடத்தில் ஒரு தவறு செய்பவன் அபிஷேக ஆராதனை செய்து அவனுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தவுடன் உங்களுடைய எண்ணம் எப்படி வருகிறது…?

மற்றவர்கள் செய்யும் தவறைப் பார்த்தவுடன் “என்றைக்குத் தான் இது நல்லதாகப் போகிறதோ…? தெரியவில்லையே…! என்று எண்ணுகின்றீர்கள். அப்பொழுது அந்த எண்ணத்திற்குத்தான் சக்தி கொடுக்கின்றீர்கள்.

அந்த நேரத்தில் நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்து அதை மாற்ற முடிகின்றதா…? என்றால் இல்லை..! அந்த உணர்வுகளே வருவதில்லை.

அதை எல்லாம் மாற்றுவதற்காக வேண்டித்தான் இந்தக் காலை துருவ தியானத்தை முக்கியமாக உங்களைச் செய்யச் சொல்கிறோம்.

1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…! என்று எண்ணி
4.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த கோபம் வெறுப்பு வேதனை போன்றவைகளை உடனே துடைத்துப் பழக வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும், இங்கே வருவோர் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் காணும் சக்தி இந்த ஆலயம் முழுவதும் படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தச் சோர்வு வராது. மன பலம் கிடைக்கும். தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் ஆற்றலும் கிடைக்கும்.

தூப ஸ்தூபி

 

மாரியம்மன் கோயிலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் திரும்பும் பக்கமெல்லாம் ஊருக்குள் வைத்திருப்பார்கள்.

நாம் நல்லதைத்தான் ஒவ்வொரு நிலையிலும் நினைக்கின்றோம். ஆனால் நம்மை அறியாமலே வேதனைகள் புகுந்து விடுகின்றது. அந்த விஷமான உணர்வுகள் வந்து நோயாகி விடுகின்றது.

அதை நீக்குவதற்காக வேண்டி… மெய் ஞானிகள் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று மாரியம்மனைப் பார்த்து அதை எடுக்கும்படி சொல்கின்றார்கள். அதாவது…
1.பேரண்டத்தின் பேருண்மையைக் காட்டிய…
2.தீயதைச் சுட்டெரித்து ஒளியின் சுடராகச் சுழன்று கொண்டிருக்கும்
3.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும் என்று நினைவுபடுத்தினார்கள்.

நமக்கு யாரும் இதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது யாம் சொன்னாலும் கேட்பதற்கு ஆள் இல்லை

மாரியம்மனுக்கு ஆட்டைக் கொடுத்து கோழியைக் கொடுத்து கருவாட்டுக் கறியை வைத்து வணங்குபவர் உண்டு. எந்தெந்த அசிங்கமான பொருளைச் சாப்பிடக் கூடாதோ ஒரு சில இடங்களில் இதையும் செய்கின்றார்கள்

கெட்டுப் போன பொருளை உபயோகப்படுத்தினால் என்ன செய்யும்…?

அது நம்மைக் கருவாடாக வாட்டிவிடும்… கெட்ட நாற்றங்களை நமக்குள் உருவாக்குகின்றது. கெட்ட பேச்சுகளைப் பேச வைக்கிறது… கெட்ட உணர்வுகளை நமக்குள் தூண்டுகின்றது. நம்மை அறியாமலே அந்த தீமைகள் நம் நல்லவைகளை அழித்து விடுகின்றது.

அதைச் சுட்டுப் பொசுக்க… மெய் ஞானிகள் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று
1.அங்கே தூப ஸ்தூபியை வைத்துக் கவட்டையை வைத்து அக்கினிச் சட்டியைக் காண்பித்து
2.திறந்த வெளியிலே விண்ணை நோக்கி ஏங்கி அந்த அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

யாராவது அப்படிச் செய்கின்றார்களா…?

காரணம்… அந்த நல்ல வினையை நாம் சேர்க்க வேண்டும். அதாவது தனக்குள் வரும் தீமையான வினைகளைச் சுட்டுப் பொசுக்கும் அந்த நல்ல வினைகளை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

இனி எதிர்காலத்திற்காக வேண்டி இதை நீங்கள் செயல்படுத்துங்கள். ஆலயம் என்பது நம்மைப் பண்படுத்தும் இடம் அது.

அங்கே அர்ச்சனை செய்து நல்ல பலகாரங்களை வைத்து யாகத் தீயில் பல பொருள்களைப் போட்டு புகையைப் போட்டு வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் குறைகளையும் சொல்வதற்குண்டான இடம் அது அல்ல.

1.நமது உயிர் ஒரு நெருப்பு நமது உடல் ஒரு குண்டம்.
2.இந்தக் குண்டத்திற்குள்… மெய்ப் பொருளைத் தனக்குள் போட்டு
3.அதன் வழி இந்த உடலுக்குள் வரக்கூடிய மணத்தைப் பார்வையாலும் சொல்லாலும் செயலாலும்
4.உலகம் முழுவதற்கும் தன் உணர்வின் சக்தி கொண்டு மக்களை மகிழ்விக்கும் செயலை உருவாக்குவது தான் இந்த யாகக் குண்டம்.

ஆகவே… அந்த ஞானி காட்டிய வழியில் அக்கினியை மூட்டுங்கள். அந்த அக்கினியை மூட்டிக் கொண்டிருப்பது “ஓங்காரம்…”

கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே உயிரிலே செருகப்பட்டு “ஓ…..ம் என்ற உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வுகளைத் தடுத்து விட்டு…” மெய் ஒளியான அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்வதற்கும் வாழ்க்கையில் அறியாது தத்தளித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் “நல்ல உணர்வுகளை மீண்டும் செம்மையான நிலைகள் செயல்படுத்துவதற்கே…” இந்த உபதேசம்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமும்…
2.பிரபஞ்சத்திற்குள் உருபெற்ற சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் எண்ண அலைகளையும் உங்களுக்குள் கலவையாகச் சேர்த்து
3.சப்தரிஷிகள் அருள் ஒளி இங்கே படர்ந்து கொண்டிருப்பதை
4/நீங்கள் நினைத்தவுடன் எடுக்கும் நிலைகளுக்குத் தான் உபதேசிக்கின்றோம்.

சாதாரண மனிதருடன் நாம் கலந்து உறவாடும் போது… பத்து வருடத்திற்கு முன் ஒருவன் துன்பம் செய்தான் என்று இருந்தாலும் திடீரென்று அதை இப்பொழுது நாம் எண்ணினால் நம் மனதை அது துடிக்கச் செய்கின்றது.

அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய காரியங்களைத் தடைப்படுத்துகின்றது. உணவையும் அஜீரணமாக்கி நஞ்சாக ஆக்குகின்றது.

அதைப் போல ஒவ்வொரு நிமிடமும் துன்பங்கள் நேரும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.துன்பத்தை விளைய வைக்கும் தீமைகளை அது கருக்கிவிட்டு
2.நல்ல உணர்வின் தன்மையை ஊட்டுவதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.
3.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப இணையச் செய்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக சிலர் சங்கடமாகப் பேசுகிறார்கள்… அல்லது அவசியமில்லாததைப் பேசுகிறார்கள்… இதை எல்லாம் சந்தர்ப்பத்தால் பார்க்க நேருகின்றது,

அப்பொழுது உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…? ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் சாக்கடை நீர் போகின்றது. கல்லைக் கொண்டு எவனோ எறிகின்றான். சாக்கடையில் விழுந்து நம் மீது அது பட்டு விடுகிறது.

அல்லது ஒரு பன்றி சாக்கடைக்குள் இருந்து எழுந்து போகிறது. வாலை வீசிக் கொண்டு போகிறது. நம் மீது அந்த அழுக்கு பட்டுவிடுகிறது…?

நல்ல சட்டை போட்டுச் சுத்தமாகப் போனேனே… இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்லி விட்டு
1.அடுத்து என்ன செய்கின்றோம்…?
2.அதைத் துடைக்கத்தானே முயற்சிக்கின்றோம்…!

ஐய்யய்யோ.. இப்படிப் பட்டு விட்டதே…! ஐய்யய்யோ…! இப்படிப் பட்டு விட்டதே…!” சொல்லிக் கொண்டே மட்டும் இருக்கின்றோமா…? இல்லை. புறத்தில் அழுக்குப் பட்டால் உடனே அதைத் தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா…!

அதே போல அகத்திற்குள் வரும் அழுக்குகளைத் துடைக்க வேண்டும் என்பதற்குத்தான் அரும் பெரும் சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்திச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் கண் கொண்டு பார்த்த தீமையான உணர்வு நம் ஆன்மாவிற்குள் (நம் நெஞ்சுப் பகுதிக்கு முன்பாக) வருகின்றது. ஆன்மாவிலிருந்து மூக்கு வழி சுவாசிக்கும் பொழுது உயிரிலே படுகின்றது. உயிரிலே பட்டதும் உணர்ச்சிகளாகி இந்த உணர்வுகள் தான் அறியச் செய்கிறது. உடல் முழுவதும் பரப்பச் செய்கிறது.

அப்பொழுது உங்கள் நினைவை எங்கே கொண்டு வரச் சொல்கிறேன்…?
1.யாம் உபதேசித்து உங்களிடம் பதிவாக்கிய உணர்வுகள் இங்கே இருக்கின்றது
2.ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவை உயிரிடம் ஒன்றிப் புருவ மத்தியில் நினைக்க வேண்டும்
3.கண்ணின் நினைவை உயிருடன் சேர்த்தால் “அகக்கண்…!”
4.அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்த இடத்தில் அடைக்கப்படும் பொழுது
5.தீமைகள் எதுவுமே புகாதபடி தடுக்கப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று மேலே சொன்ன மாதிரி இடைமறித்து இப்படி உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் யாரும் தவறு செய்வதில்லை. ஆனால் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் நம்மைக் குற்றவாளியாக ஆக்குகின்றது. இது நிச்சயம்…!

உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதைத் துடைத்துவிட்டு
1.யாரை நாம் பார்த்தோமோ அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.அவர்கள் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இதைக் கலந்து
3.இந்த அருள் உணர்வின் ஒளியைப் பரப்பி விட வேண்டும்
4.நமக்குள் வருவது இப்படி மாற்றம் அடைந்து விடுகிறது.
5.இதை நாம் பாதுகாப்புக் கவசமாகக் கொண்டு வருகின்றோம் நமக்கு முன் உள்ள ஆன்மாவில்…! (இது முக்கியம்)

ஏனென்றால் அவன் நினைவு வந்ததும் எடுத்துக் கொடுப்பது ஆன்மாவாக இருந்தாலும் நாம் இப்படி மாற்றிப் பழகியவுடன்
1.அவன் நினைவை நமக்கு\ள் இழுக்காதபடி
2.துருவ நட்சத்திரத்தின் நினைவு வந்து நமக்குப் பாதுகாப்பு கொடுக்கும்.

இது அரும் பெரும் சக்தி… நாம் அதை எடுத்து…எடுத்து…எடுத்து…! இதைக் கூட்டிப் பழக வேண்டும். நாம் எல்லோருமே இதைப் பழக வேண்டியது மிகவும் அவசியம். (பெரும்பகுதியானவர்கள் புருவ மத்தியை நினைப்பதில்லை – அதை மாற்ற வேண்டும்).

“உங்கள் துன்பங்கள் அகல வேண்டும்…” என்பதே என்னுடைய பிரார்த்தனை

 

உங்கள் வாழ்க்கையில் மற்றவர்களிடம் பேசும் பொழுது சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் இது போன்ற உணர்வுகள் வளர்ந்து உங்கள் நல்ல குணங்கள் அடைபட்டு விடுகின்றது.

அடைபட்டுக் கிடந்த அந்த நல்ல குணங்களை மீட்டத் தான் யாம் உபதேசித்தது. உபதேசித்த அந்த உணர்வுக்கு வலுக் கூட்ட உங்களுக்குள் காந்த சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

1.உங்கள் எல்லா குணங்களிலும் சப்தரிஷி மண்டல உணர்வுகளையும் நட்சத்திரங்களுடைய உணர்வுகளையும் தூண்டி
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து
3.எல்லோருடைய உள்ளங்களிலும் அதைப் பதிவு செய்கின்றோம்.

ஏனென்றால்… எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் வந்திருப்பீர்கள்.

ஒருவருக்கு வீட்டிலே கஷ்டமாக இருக்கும்… ஒருவருக்குத் தன் பிள்ளை சொன்னபடி கேட்காதபடி இருக்கும்… ஒருவருக்கு நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… ஒருவருக்கு உதவி செய்து அதனால் தொழிலில் தொல்லைகள் அனுபவித்து அதனால் கஷ்டமாக இருக்கும்… ஒருவாருக்கு வியாபாரத்தில் மந்தமாக இருந்திருக்கும்… எதை எடுத்தாலும் எனக்குத் தொல்லையாகவே இருக்கிறது…! என்றும் இப்படி எத்தனையோ பேர் வந்திருப்பீர்கள்.

இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்குள் உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் உபதேசத்தைக் கொடுத்து
3.மகரிஷிகளின் அருள் சக்தியை அந்த இடத்தில் அடைத்து வைத்து உங்களுக்குள் சக்தி கூடும்படிச் செய்கின்றோம்.

குழம்பிலே புளிப்பு காரம் கசப்பு துவர்ப்பு உப்பு இவையெல்லாம் போட்டு அதை எப்படி ருசியாகக் கொண்டு வருகின்றோமோ இதைப் போன்று
1.எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த அருள் உணர்வுகளை நுகரும்படிச் செய்து
2.அதைப் பெறுவதற்குண்டான உணர்ச்சிகளைத் தூண்டும்படிச் செய்து
3.இந்த உணர்வினை ஒலிகளாக எழுப்பும்படி செய்து அதைச் சூரியனுடைய காந்த சக்திகள் கவரும்படிச் செய்து
4.கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளிலே ஊடுருவச் செய்து
5.ஊடுருவிய உணர்வின் தன்மையை உங்களுக்குள் இருக்கும் 1008 குணங்களிலும் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் அந்தச் சக்தி எளிதில் கிடைக்கும்.

எனது குருநாதர் எனக்கு எப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ அதே போலத்தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளை தூண்டும்படிச் செய்து… அதைத் தட்டி எழுப்பி துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் உடலிலிருந்து நீங்க வேண்டும் என்று… மகரிஷியின் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி… தீமைகள் அகன்று நன்மையை உருவாக்கச் செய்கிறோம்.

உங்கள் அனைவரையும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பும்படி செய்து அந்த மகரிஷிகள் உணர்வுகளை உங்களுக்குள் நிரப்பி அந்த அடிப்படையில் நீங்கள் தியானம் எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உங்கள் உடலில் வந்த துன்பங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

எனக்குத் துன்பத்தைக் கொடுத்துத் தான் குருநாதர் எல்லாமே தெரிய வைத்தார். ஆனால்
1.உங்களுக்குத் துன்பம் வரும் பொழுது இந்த முறைகளைக் கையாண்டு
2.மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்றுத் தீமையிலிருந்து மீண்டு உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.

மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்தேன் என் துன்பம் நீங்கியது நான் நன்றாக ஆனேன் என்று நீங்கள் சொல்ல முடியும்.
1.கஷ்டம் இல்லாது நீங்கள் பெறுகிறீர்கள்.
2.ஆகையினால் நான் லேசாகச் சொல்கிறேன் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
3.வாக்குடன் கூடி உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்… அந்த வாக்கை நீங்கள் மீண்டும் எண்ணினால் சீக்கிரம் நல்லதாகும்.

எனக்குத் தொல்லை கொடுத்தாய்… “நீ உருப்படுவாயா…?” என்ற அடுத்தவர் சொல்லை வாங்கிக் கொண்டோம் என்றால் அது பதிவான பின் வியாபாரத்தில் மந்தம் உடலில் கை கால் குடைச்சல் என்று உங்கள் உடலை எப்படி அது கீழே கொண்டு போகின்றதோ இதே மாதிரி அந்தத் துன்பத்தைத் துடைப்பதற்கு
1.சாமி சொன்னார்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைத்து
2.அதை எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்தச் சக்தி உங்களுக்கு உதவி செய்யும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.எல்லோரும் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணும் பொழுது கல்யாணராமா…! (மகிழ்ச்சியைப் பெருக்கச் செய்யும் நிலைகள்)
2.அந்த மகிழ்ச்சியை உருவாக்குவதற்குத் தான் கோவில்களில் தெளிவாகக் காட்டுகிறார்கள்.

அரசன் மதத்தின் அடிப்படையில் அரசு ஆட்சி புரிவதற்கு மக்களை ஒன்று திரட்டினாலும் மக்கள் மத்தியிலே அதே மதத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து செய்யும் நிலையில் வருகிறார்கள்.

அரசன் தன் ஆசையின் நிலை கொண்டு இதை எல்லாம் செய்தாலும் அந்த அரசனுக்குக் கீழ் தான் மக்கள் இருக்கிறார்கள். அரசனால் உருவாக்கப்பட்ட மதமாக இருந்தாலும்…
1.ஞானிகளோ சாதாரண மக்களும் அவர்கள் தத்துவத்தைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தினார்கள்.
2.அப்படி உருவாக்கப்பட்டது தான் ஆலயத்தின் சாஸ்திரங்கள்.

எல்லோருடைய பகைமைகளையும் அந்த ஆலயத்தில் மறக்கச் செய்கின்றார்கள். ஒற்றுமை ஏற்படும்படிச் செய்கிறார்கள்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகத் துருவ நட்சத்திரமாக ஆனது. துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் பேரருள் உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதை நம் பூமி துருவப் பகுதியின் வழியாகக் கவர்ந்து நமக்கு முன்னாடி பரவச் செய்கிறது. அதிகாலை 4.30லிருந்து 6.00 மணி வரை நம் புவிக்குள் பரவச் செய்கின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருந்தால் காலையில் 4 மணிக்கு எழுந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் பரவ வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

எல்லோரும் ஏகோபித்த நிலையில் அவ்வாறு எண்ணினால் மனிதர்கள் ஈர்க்க மறுத்த… மனிதர்கள் பிடிப்பில்லாத மற்ற தீமையான உணர்வுகளை எல்லாம்.. காலை 6 மணிக்குச் சூரியனின் ஒளிக்கதிர்கள் கவர்ந்து மேலே கொண்டு சென்று பின் கடலுக்கடியில் அமிழ்த்தி விடுகின்றது
1.நம் ஆன்மா தூய்மை அடைகின்றது.
2.நமக்கு முன்னாடி இருக்கும் இந்தக் காற்று மண்டலம் (பரமாத்மா) தூய்மை அடைகின்றது.

அதற்குத் தான் விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்த்து அதிகாலையில் வணங்கும்படிச் செய்கிறார்கள்.

அங்கே இருக்கும் ஆற்றிலே உடல் அழுக்கையும் போட்டிருக்கும் உடைகளின் அழுக்கையும் போக்குகின்றோம். அப்படியும் போகவில்லை என்றால் சோப்போ மற்றதையோ போட்டுத் தூய்மையாக்குகின்றோம்.

தூய்மையாக்கிய பின் அந்தப் பிரம்ம முகூர்த்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி எடுக்கும்படிச் செய்கிறார்கள்.
1.நாம் அந்த அருள் ஒளியின் உணர்வைத் தன்னுடன் இணைத்துக் (திருமணம்) கலந்து கொண்டால்
2.அந்தச் சக்தி நம்முடன் இணைந்து செயல்படும் தன்மையாகின்றது
3.அந்த ஒளியின் கதிராக தனக்குக் கீழ் அதை மற்றதை இயக்கும் சக்தியாகப் பெறும்.

அந்த ஆற்றலை வைத்து பூமியில் உள்ள ஓசோன் திரை கிழிந்ததையும் அடைக்க முடியும். எப்படி…?

ஓசோன் திரை கிழிந்து அதனுடைய விளைவுகள் என்னென்ன செய்கிறது…? விண்வெளியிலிருந்து வரும் விஷத்தன்மைகள் அதன் வழி கூடி நம் பூமிக்குள் பரவிக் கொண்டே உள்ளது.

ஆனால் அது எல்லா இடத்திலும் நிற்காது. அதாவது விஷத்தன்மையாகப் பூமியில் பரவினாலும்…
1.தன் இனத்தை எடுத்து அங்கங்கே ஒரு குவியலாக வரும்.
2.குறிப்பிட்ட பகுதியில் இருக்கும். எல்லா இடத்திற்கும் போகாது.

நாம் வசிக்கும் தெருவையும் ஊரையும் காக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லோரும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
1.ஒவ்வொருவர் உள்ளங்களிலும் இந்த அலைகளைப் பரப்பினால்
2.இந்த அலைகள் அடர்த்தியாக வந்தவுடன்
3.அந்த விஷத் தன்மைகளை விலக்கி விட்டுவிடும்.
4..இந்த ஒரு பகுதியாகவது கொஞ்சம் காக்கப்படும்
5.அப்படிக் காக்கப்பட வேண்டும் என்பதற்கு தான் இதைச் சொல்கிறோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் ஏங்கித் தியானியுங்கள்.

நுரையீரல்:-
கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் அங்கே பெறச் செய்தால் அதில் உள்ள ஆஸ்த்மா டி.பி. போன்ற அணுக்களை மாற்ற உதவும்.

ஜீரண உறுப்புகள்:-
கண்ணின் நினைவை இப்பொழுது உங்கள் குடல்களில் செலுத்துங்கள்.

குடல்களில் வேதனை என்ற விஷத்தன்மைகள் இருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குடல்களில் உள்ள அணுக்கள் வீரியமாகின்றது… உற்சாகம் அடைகின்றது.

அப்பொழுது அந்த விஷத்தின் தன்மையை அடக்கி குடல் உறுப்புகளைச் சீராக இயக்கக்கூடிய அணுக்களாக மாறுகின்றது.

கல்லீரல்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் கல்லீரல் பெற வேண்டும் என்று எண்ணினால் அதில் உள்ள விஷத்தன்மை குறைந்து சீராக வடிகட்டும் தன்மையும் நம் உடலில் ஆரோக்கியமான நிலையையும் உருவாக்கும். நம் உடலில் உள்ள மண்ணீரலுக்கும் இதைப் போன்று செயல்படுத்துங்கள்.

மண்ணீரல் (பித்த சுரப்பிகள்):-
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் நுகர்ந்து மண்ணீரலுக்குள் செலுத்தப்படும் பொழுது அந்தப் பித்த சுரப்பிகளில் விஷத்தைத் தணித்திடும் அருள் சக்தி அங்கே பெற முடியும்.

எப்படி ஒரு நாகம் விஷத்தைப் பாய்ச்சி தன் உணர்வை எடுத்து நாகரத்தினமாக மாற்றுகின்றதோ இதைப் போல்
1.நம் உடலில் விஷம் இல்லை என்றால் ஜீரணிக்கும் சக்தியும் இல்லை.
2.அளவுக்கு அதிகமாக ஆனாலும் நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களிலும் விஷத் தன்மையாக மாறுகின்றது,

ஆகவே விஷத்தை மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் பித்த சுரப்பிகளில் சேர்க்கப்படும் பொழுது
1.அது சம அளவாக மாறி சாந்தம் கொண்ட அணுக்களாகி
2.நல்ல ஜீரணிக்கும் சக்தியாக உருவாகின்றது,

இதைப் போல் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் செலுத்திக் கொண்டு வாருங்கள்.

கிட்னி (சிறுநீரகங்கள்):-
அடுத்து உடலில் உள்ள கிட்னிக்கு (சிறுநீரகங்கள்) அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பரவச் செய்யுங்கள்.

கிட்னியில் விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டால் கிட்னியை உருவாக்கிய அணுக்கள் பலவீனமடைந்து விடுகின்றது. அது பலவீனமடைந்து விட்டால் விஷத் தன்மைகளை வடிகட்டும் தன்மை இழந்துவிடும்.

1.வடிகட்டாத அந்த விஷத் தன்மைகள் இரத்தத்தில் கலந்து விட்டால்
2.அது விஷம் தோய்ந்த இரத்தமாகி எல்லா உறுப்புகளையும் சீராக இயக்காதபடி
3.உப்புச் சத்து… சர்க்கரைச் சத்து… போன்ற நிலைகள் அதிகரித்து விடும்… சமப்படுத்தும் தன்மையையும் இழந்துவிடும்.

அதைப் போன்ற நிலைகள் உருவாகாதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை கிட்னியை உருவாக்கிய அணுக்களில் பாய்ச்சி அதை வீரியமாக்கி விஷத்தை வடிகட்டும் சக்தி வாய்ந்த கிட்னியாக உருவாக்குங்கள்… உங்களால் முடியும்…!

இருதயம்:-
கண்ணின் நினைவை இருதயத்தில் செலுத்தி அந்த நரம்புகள் பலவீனம் அடைந்திருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்க்கப்படும் பொழுது இருதயத்தை இயக்கும் அந்த நரம்புகளுக்கு வலு சேரும்.

1.அதிலே அடைப்புகள் இருந்தால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அங்கே அதிகரிக்கப்படும் பொழுது
2.இரத்தத்தின் அழுத்தம் அதிகமாகி அதை எல்லாம் கரைத்துவிடும் சக்தி கிடைக்கின்றது.
3.கரைத்துவிடும்… அல்லது அந்த அடைப்புகள் அகன்றுவிடும்.

ஆகையினால் இதைப் போல் நீங்கள் எண்ணி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியை பெறச் செய்து அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் வலுப் பெறச் செய்யுங்கள்.

1.நோய்கள் வராது தடுக்க முடியும்
2.ஒளியான அணுக்களை உடலில் உருவாக்க முடியும்.
3.நாம் நுகரும் உணர்வுகளை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து ஒளியின் உடலாக நாம் பெற முடியும்.

திருச்சிற்றம்பலம்

 

பதஞ்சலி அரசனாக இருக்கும் போது அறிதல் அழித்தல் காத்தல் என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் பயந்தே வாழ வேண்டியிருக்கின்றது. என்ற இந்த நிலையைச் சிந்திக்கின்றான்.

எப்போது…?

ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர்.
1.ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை.
2.கூடு விட்டுக் கூடு பாயும் போது பிறிதொருவர் கையில் இவன் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.

உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாக பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள்…? என்று பல செயல்களைக் காண விரும்பினார்.

மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.

அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.

எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டித் தன் உடலைப் பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற உண்மையை… பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான் செய்த தவறை உணர்கின்றான்.
2.ஏழ்மையான மாடு மேய்ப்பவனின் உடலில் புகுந்த பின் அதை முழுமையாக அறிகின்றான்

மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.

ஆக… திருமூலர் என்று சொல்பவன் ஒரு அரசனுடைய உயிரான்மா தான். மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் வந்த பிற்பாடு தான் உண்மைகளை எல்லாம் அவன் அறிகின்றான் – நடராஜா…!

நடராஜா என்று திருமூலர் தான் பெயர் வைக்கின்றார். நடராஜா என்றால் எது…? நமக்குத் தெரியாது.
1.இங்கே உருவம் கிடையாது நடராஜாவை வைத்திருக்கின்றார்கள்.
2.நம் பூமி நிற்காமல் அது ஓடிக்கொண்டே இருக்கின்றது… இதற்குப் பெயர் நடராஜா.
3.அதாவது அதற்குள் தோன்றிய நடனங்கள் பல.

பூமி நிற்காமல் ஓடுகின்றது அதற்குள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் தன்மையும்… அது மோதும் நிலைகள் கொண்டு ஒவ்வொரு அணுக்களின் செயல்கள் எப்படி இருக்கின்றது…?

ஒலி ஒளி…! என்ற நிலைக்கு இந்தப் பூமியின் தன்மை மாறிய பின் பல ஆயிரம் உடல்களாக எடுத்து ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்குகிறது.
1.புலிக்குக் கோபம்
2.மானுக்குச் சாந்தம்
3.எருமை மாட்டிற்கு அசுர குணங்கள் என்று
4.தனக்குள் வளர்த்துக் கொண்ட அது அனைத்தையும் 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு
4.1008 நடனங்களைக் காட்டுகின்றார் – சிவ நடனம்.

நடராஜா இந்த பூமி ஓங்கார நர்த்தனம்…! அது சுற்றும் பொழுது சுற்றும் வேகத்தில் ஓங்காரக் காளி… தீய சக்திகள் அனைத்தையும் அழிப்பதை… அசுரனைக் காலிலே போட்டு மிதிப்பதாகக் காட்டுகின்றார்கள்.

உருவத்தைக் காட்டும் போது… பூமி சுழலும் பொழுது அதில் ஏற்படக்கூடிய விஷத்தின் சக்தி தனக்குள் வருவதை அது நசுக்கி தீயதை மிதிகும் நிலைகளுக்குக் காட்டப்பட்டுள்ளது. அசுரனைக் காலிலே மிதிப்பதாகக் காட்டுகிறார்கள்.

அதைப் போல மனிதனுக்குக் கோபம் வரும் பொழுது சுவாசித்த உடனே உயிரிலே பட்டு எரிச்சலாகின்றது. அதே சமயம் அந்த உணர்வின் சக்தி நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்திலும் பட்டு எரிச்சலான உடனே
1.உடலான சிவம் ஓங்கார நடனமாகி…
2.இரு… நான் உன்னை அழித்து விடுகின்றேன்…! என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.

சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என்றால் இந்த உணர்வின் சக்தியான நிலைகள் “ஒலி ஒளி…”

அதாவது… தாவர இனங்களுடைய மணம் – அதனுடைய குணம்…! அதனுடைய உணர்வு – இயக்கம்.

மிளகாயை வாயிலே போட்டால் காரமான அந்த உணர்ச்சி “ஆ…” என்று அலறச் செய்கின்றது. கசப்பை வாயிலே போட்டால் உமட்டலாகி… “ஓய்…” என்று சப்தம் வருகின்றது.

இதைப் போன்று தான் பூமி நடராஜா என்று நிற்காமல் சுழல்வதனால்
1.அதிலே ஜீவன் கொண்ட நாம் எப்படி இயங்குகிறோம் என்பதே இந்த ஸ்தல புராணத்தின் தத்துவம்.
2.சிதம்பரத்தில் தான் இருக்கின்றோம்… இந்த ஸ்தல புராணத்தின் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அன்று பதஞ்சலி மந்திரங்களைக் கற்றுக் கொண்டு தன்னுடைய சுகபோகத்திற்காக எத்தனையோ பாவங்கள் செய்தாலும் பாம்பு உடலில் வந்த பின் மாடு மேய்ப்பவனைத் தீண்டுகின்றான்.

தீண்டி அந்த உடலில் வந்த பின்
1.அங்கே அந்த ஏழ்மையான குடும்பத்தில் மகிழ்ச்சியான ஆனந்தமான உணர்வைக் கண்ட பின்
2.அரச நிலையின் உண்மைகளை உணர்ந்து அரசைத் துறக்கின்றான்
3.இந்த உடலிலிருந்தே மெய் ஒளியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றான்.

தான் பாம்பாக இருக்கும் போது விஷத்தால் தீண்டி அந்த (மூலனின்) உயிரை வெளியேற்றினாலும்… அதையும் தன் அணைப்பின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மை தான் செயலாக்கி வந்தது தான் “நடராஜன்” என்ற திருச்சிற்றம்பலம்…!
1.உடலுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு இந்த உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்
3.திருச்சிற்றம்பலம் என்பது சிறு உடலுக்குள் நின்று அங்கே இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினார் திருமூலர்

அந்தத் திருச்சிற்றம்பலத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

1.நடராஜா என்கிற பொழுது நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை இங்கே இயக்குகின்றது.
2.விநாயகர் தத்துவத்தில் மூஷிகவாகனா… நீ எந்தக் குணத்தைச் சுவாசிக்கின்றாயோ அது இந்த உடலை அந்த நிலைகளுக்கு ஆளாக்குகின்றது.
3.கீதையினுடைய தத்துவமோ நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!

உடலான பிரபஞ்சத்தை “ஒளிப் பிரபஞ்சமாக உருவாக்குங்கள்…”

 

நாம் எப்படி வந்தோம்…? நாம் இனி எங்கே போக வேண்டும்…? என்று கண்டு கொண்ட ஞானிகள் விண்ணிலே உள்ளார்கள். அவன் உணர்ந்த ஒளி அலைகளை இங்கே பூமிக்குள் அனுப்புகின்றான். அந்த அலைகள் இங்கே உண்டு. அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் தான் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.
1.உங்களை அறியாது இயக்கக்கூடிய விஷமான நிலைகளுக்குள் அதை இணைப்பதற்கு
2.உங்கள் நல்ல எண்ணங்கள் எதுவோ அதற்குள் இதை பதியச் செய்ய வேண்டும்.
3.நீங்கள் நல்லதை எண்ணும் பொழுது அதற்கு வலுவூட்டவே இதை உபதேசிக்கின்றோம்.

சந்தர்ப்பத்தால் வேதனையான உணர்வுகளைக் கண்டுணரும் பொழுது அதை அறிகின்றீர்கள். அப்படி அறிந்து மற்றவர்களைக் காப்பாற்றினாலும் நுகர்ந்த அந்த வேதனை நல்ல குணத்திற்குள் சுழன்று கொண்டு மீண்டும் அந்த நல்லதை எழாத வண்ணம் செய்து விடுகின்றது.

ஆகவே அதிலிருந்து மீள அந்த மெய் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கச் செய்து… புலனறிவுக்குள் நுகரும்படி செய்து… நல்ல உணர்வுகளுக்கு வலு சேர்ப்பதற்கே இப்பொழுது உபதேசிப்பது. அதாவது உங்களுக்குள் செல்களாக அந்த ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.

மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிடும் சக்தி பெற்ற நிலையில்
1.வாழ்க்கையில் தன்னை அறியாமல் சேரும் நஞ்சான உணர்வுகளை நீக்குவதற்கு
2.அந்த மெய் ஞானிகள் உணர்வை வினையாகச் சேர்த்து தனக்குள் வரும் தீய வினையை நீக்கி
3.தன் நிலை அடைந்து ஒளியின் சரீரமாகப் பெறச் செய்வது தான் அது.

சூரியன் கோள்களின் ஆற்றலை எடுத்து அந்த விஷத்தை மாற்றி ஒளியின் சுடராக இந்த பிரபஞ்சத்தை எப்படி உருவாக்குகின்றதோ இதைப் போன்றே
1.உயிரின் நிலைகள் கொண்டு இந்த உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையைப் பல நட்சத்திரத்தின் நிலைகள் இருந்தாலும்
2.மெய் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து இந்த உடலான பிரபஞ்சத்தை ஒளியான சரீரமாக்கி… ஒளிப் பிரபஞ்சமாகி
3.விண்ணிலிருந்து வரும் உணர்வினை எடுத்து ஒளிச் சரீரமாக மாற்றும் நிலை தான் மனிதனின் கடைசி நிலை.

அப்படி மாற்றிய நிலைகள் தான் என்றும் 16 என்ற நிலையான ஒளிச் சரீரம் பெற்று பெரு வீடு பெரும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலம்.

அங்கிருந்து உமிழ்த்திக் கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மை மனிதனாக வாழ்ந்த காலங்களில் அவர் உடலில் விளைய வைத்து வெளியிட்ட மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியிலே படரச் செய்துள்ளது.
1.அதைக் கவர அதை ஒத்த மணம் நமக்குத் தேவை. அந்த ஆற்றல் நமக்குத் தேவை.
2.அதைப் பெறுவதற்குத் தான் மெய் ஞானிகளின் அருள் வாக்கை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

நஞ்சை முறித்து விண் சென்ற ஞானியின் ஆற்றல்மிக்க எண்ண அலைகள் பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சக்தியை உங்கள் சுவாசத்திற்குள் செலுத்தச் செய்கின்றோம்.

உங்களைச் சூழ்ந்து துன்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும்… நல்லதைச் சிந்திக்க விடாது தடைப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வின் தன்மையை… அந்த நஞ்சினை விலக்கி “உணர்வை ஒளியாக மாற்றும் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்…” என்று தான் உபதேசிப்பது.

சந்தர்ப்பத்தால் நீங்கள் சுவாசித்த குணக் கேடான உணர்வுகள் அனைத்தையும் வலுவிழக்கச் செய்ய “நல்ல உணர்வுகளைத் தட்டி எழுப்பி…” மெய் ஞானிகளுடைய ஆற்றலைப் பெறச் செய்யும் பக்குவ நிலை ஏற்படுத்துவதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் எனக்குள் மெய் உணர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்கி… நல்ல குணங்களைத் தட்டி எழுப்பி… “ஒவ்வொரு உணர்விற்குள்ளும் ஞானிகள் உணர்வை எப்படிப் பதிவு செய்தாரோ…” அதை நான் நினைவு கொண்டு கூர்ந்து எண்ணத்தைச் செலுத்தி… காற்றிலே பரவியுள்ள மெய் ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்து என்னைப் பக்குவப்படுத்தினேனோ… அதே நிலைகளைத் தான் உங்களுக்கும் ஊட்டுகின்றேன்.

1.உங்களை அறியாது தீய நிலைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள்
2.நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் பெறுவீர்கள் என்ற இந்த வாக்கினைக் கொடுக்கப்படும் பொழுது
3.அதை ஏற்றுக் கொண்டோர் உள்ளங்களில் ஊடுருவி அது உங்கள் துன்பத்தை விலக்க உதவுகின்றது.

“தீமை உங்களுக்குள் என்றுமே வராதபடி…” நல்ல உணர்வுகளைத் தட்டி எழுப்பி உங்களை வாழ வழி வகுக்கச் செய்கின்றோம்.

ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் நாம் உபதேசித்து வந்தாலும் சிலர்… கோவிலுக்குச் செல்ல வேண்டாம் சாமியே கும்பிட வேண்டாம் என்று “சாமி சொல்கிறார்…” என்று இப்படி அர்த்தம் எடுத்துக் கொள்கின்றார்கள்.

நம் உடல் ஒரு கோவில்…! நம் உடலில் இருக்கக்கூடிய ஆந்த நல்ல குணங்களைத்தான் ஆலயத்திலே காண்பிக்கப்பட்டுள்ளது. அதை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று தான் அன்று ஞானிகள் சொன்னார்கள். அரசனுக்கும் டிமிக்கி கொடுத்து அதைச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

திருமூலர் சொன்ன திருமூல மந்திரத்தின் நிலைகளை “வெறும் மந்திரமாகத்தான்…” மாற்றிக் கொண்டார்கள்.
1.திருமூலம் – திரு என்பது உயிர்… மூலம் என்பது உயிர்
2.மூலத்திற்குள் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒலி ஒளியாக எப்படி இயங்குகின்றது…? என்று தான் அவர் உணர்த்திச் சென்றார்.

பதஞ்சலியாகப் பாம்பின் உடலிலிருந்து மீண்டு இன்னொரு மனித உடலுக்குள் சென்ற பின் மெய் உணர்வின் தன்மையை உணர்கின்றார்.
1.அந்த ஏழ்மையான சரீரத்திற்குள் வந்த பின்பு தான் உயர்வையும் தாழ்மையையும் இரண்டும் இணைக்கின்றது.
2.அப்படி இணைத்துப் பார்க்கப்படும் பொழுது பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்துணர்ந்து
3.அந்தப் பக்குவ நிலையைத் திருமூலர் காட்டுகின்றார்.

அவர் உணர்த்திய மெய் உணர்வுகளை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தினசரி வாழ்க்கையில் குறைகளைக் காணும் பொழுது தான் விலகிச் செல்கின்றோம். குறையை உணர முடியவில்லை என்றால் அதிலேயே வீழ்ந்து மடிவோம்.

மற்ற உயிரினங்கள் எல்லாம் வருகின்றது, ஒரு விளக்கு (தீ) எரிவதைக் கண்டு வருகிறது. வேகமாக வந்தவுடனே கருகுகின்றது. அதற்குத் தெரியாது. ஆனால் மனிதர்கள் நாம் தெரிந்தவர்கள்.

இதைப் போல் நம்முடைய தூய்மைப்படுத்தும் எண்ணங்களும் உணர்வுகளும் நஞ்சால் கருக்கப்படுகின்றது. எப்படி…?

மற்றொரு மனிதனின் வேதனையை நுகரப்படும் பொழுது உணர்வின் வேகத்தால்… ஆசையின் நிலையாலே…
1.நாம் சரியாக இல்லை என்றால்
2.நம்முடைய நல்ல உணர்வுகளை அது கருக்கிவிடுகின்றது.

விஷம் தாக்கப்பட்டுத் தான் வெப்பம் உருவாகின்றது. அதே விஷத்தின் தன்மை நம்மைத் தாக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை ஆவியாக மாற்றிவிடுகின்றது.

இந்த விஷம் நெருப்பாக மாறுகின்றது. ஆக விஷத்தால் கவரப்படும் பொழுது என்ன செய்கிறது…? எதிலே பட்டாலும் அந்த விஷம் அதைக் கெடுக்கின்றது.
1.அந்த மாதிரி ஆகாதபடி தடுப்பதற்குத்தான்…
2.உங்களுக்கு இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையே கொடுக்கின்றோம்.

நாம் இந்த உடலிலே எவ்வளவு நாள் இருக்கின்றோம்…? கோடிப் பணம் பெற்றாலும் இங்கே சரியான மனம் இல்லை என்றால் என்ன செய்யும்…? அந்தச் சொத்தையே பாதுகாக்க முடியாது…! சிதறிப் போகும்.

உங்கள் சொத்தைக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் உழட்டிக் கொண்டிருந்தால் அதைத் திருப்ப முடிகின்றதா…? பெரியவர்களால் சம்பாரிக்கப்பட்டது தான்…! இருந்தாலும் அதை இவர்களால் பாதுகாக்க முடிகின்றதா…?

அவர்களை எண்ணி நீங்கள் என்ன செய்கின்றீர்கள்..? படித்திருக்கின்றீர்கள்…! ஆனாலும் இந்தத் தியான மார்க்கத்தில் வரும் பொழுது
1.இப்படி இருக்கின்றதே..! என்று நீங்களும் உங்களுக்குள் வேதனையைக் கலக்கின்றீர்கள்.
2.அப்பொழுது அந்தச் செல்வம் நமக்கு வேதனைக்குரியதாக ஆகின்றது.

ஒரு நகரையே ஆட்சி புரியும் அந்தக் கால ஜமீந்தாராக இருந்தாலும் அது சிற்றரசருக்குச் சமம். அதனின் விளைவுகள் அந்த ஞானம் இல்லை என்கிற பொழுது இது பகைமை உணர்ச்சியைத்தான் ஊட்டும். பகையை வளர்க்க முடிகிறது. நல்லதை வளர்க்க முடியவில்லை.

அதற்குத்தான் காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும். உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை சேர்த்துப் பழக வேண்டும்.

இதை எடுத்துப் பழகுவதோடு மட்டுமல்லாதபடி அந்தத் துருவ தியானத்தில் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியையும் வலு கூட்டிப் பழக வேண்டும். அந்தச் சக்தி பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நாம் பாட்டன் பூட்டன் முன்னோர்கள் மூதாதையர்கள் உடலை விட்டுப் போயிருந்தால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைய வேண்டும் என்று அங்கே கரைக்க வேண்டும்.

அவர்களை அங்கே இணைத்து நம்முடைய தூதுவர்களாக ஆக்கிய பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியை எளிதில் பெற முடியும்.
1.அவர்கள் முதலில் ஒளிச் சரீரம் பெற்றுச் சப்தரிஷிகளாக ஆகின்றார்கள்.
2.அவர்களைத் தொடர்ந்து நாமும் அந்த எல்லையை அடைய முடியும்.

இதற்கு முன் பழக்கமில்லை. இப்பொழுது அதை நாம் செய்து வாழ்க்கையில் வந்த தீமைகளிலிருந்து விடுபட்டுப் “பிறவியில்லா நிலையை…” அடைதல் வேண்டும்.

உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று காட்டியது “சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்…”

 

“கண்ணன் கீதா உபதேசம் செய்தான்…” என்றால் நாம் ரோட்டில் செல்லும் பொழுது இங்கே பள்ளம்… இங்கே மேடு… இது தீமையானது… இது கெட்டது…! என்று கண்கள் தான் நமக்கு வழி காட்டுகின்றது.

இதனால் தான் கீதையிலே கண்ணன் அர்ஜுனனுக்கு வழி காட்டிச் செல்கின்றான் என்று சொன்னது. கண் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றான்…?

இங்கே மாடு வருகிறது… இங்கே மனிதன் வருகின்றான்… அவன் தகாத செயலைச் செய்கின்றான்.

நாம் காரை ஓட்டிச் செல்லும் பொழுது எத்தனையோ சந்தர்ப்பங்களைப் பார்க்கின்றோம். ஒருவன் குறுக்கே வருகின்றான்… அவன் மேல் மோதிவிடுவோம் என்று இந்தக் கண் தான் நமக்கு உபதேசிக்கின்றது. ஆகையினால் வண்டியை நீ இப்படி ஓட்டு…! அந்த உணர்வின் இயக்கமாக அங்கங்களை இயக்குகிறது.

நம்முடைய கண் பார்க்கின்றது அந்த உணர்வை இழுக்கின்றது சுவாசிக்கச் செய்கின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் இயங்குகிறது. நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது இயங்கினாலும் இந்த உணர்வுகள் இங்கே வடிகட்டப்படுகின்றது.

இதைப் போல அவன் கொடுக்கும் உபதேசத்தின் தன்மையை
1.தன்னைக் காக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.
2.ஆனால் ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கும்போது அவனைத் தாக்கும் நிலைகளுக்கே என்னை அழைத்துச் செல்கின்றது.
3.அந்த நேரத்தில் அழிக்கும் நிலையாக நல்லதைச் சிந்திக்க முடியாதபடி அந்த வேதனையால் என் நல்ல குணங்களையும் அது அழித்து விடுகின்றது.

ஆகையினால் கீதையில் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். விநாயகர் தத்துவத்தில் நீ அதைச் சுவாசிக்கின்றாய். நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவாகின்றாய்.

இது தான் ருத்ரதாண்டவம்…!

தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இங்கே எப்படி அங்கங்கள் துடிக்கின்றதோ இதைப் போல
1.நீ எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அங்கங்கள் எப்படிப் பாசமாக அணைக்கின்றதோ…
2.நீ எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படி…? என்ற நிலையும்…
3.நடனத்தைப் பற்றி… அபிநயம் – தான் எடுத்துக் கொண்ட இனிமையின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
4.நரம்பியல்கள் – நாதத்தின் தன்மை கொண்டு எப்படி இயங்குகின்றது…? என்பது தான்.

அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலையும்… ஒரு தாவர இனத்திற்குள் தான் எடுத்துக் கொண்ட மணமும்… அந்த உணர்வின் தன்மை மோதும் பொழுது இலையின் ரூபங்களும்… நாதத்தைப் பற்றி… நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் காட்டி இருக்கின்றார் என்றால் “ஒலி ஒளி என்பதற்குள் உட்பொருள் எவ்வளவோ அடங்கியுள்ளது…”

ஒலியைப் பற்றிப் பல வியாக்கியானங்கள் செய்யலாம் இந்த உணர்வுகள் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்ற மெய் ஒளியைக் காட்டியது “சிதம்பரம் என்ற இந்த ஸ்தலத்தில் தான்…”

1.விண்ணிலே தோன்றிய உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது
2.அங்கே ஓங்காரமாகிப் பல நிலைகளாகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்கினாலும்
3.தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்டவுடன் இலையின் ரூபங்கள் விரிவடைவதும்… உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்
4.அதைச் சுவாசிக்கும் உயிரணுக்களுடைய இயக்கமும் அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
5.இந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருவமும் உருமாற்றமும் அந்த உணர்வுக்குள் ஒலியின் மகிழ்ச்சியும்
6.அந்த உணர்வின் ஒலி கொண்டு ஒளியாக நீ எவ்வாறு ஆக வேண்டும்…? என்று
7.திருமூலர் பாடிய இந்த ஸ்தலத்தின் உண்மைப் பொருளை நாம் இன்றும் காண முடியாத நிலையில் இருக்கின்றோம்.

நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளில் இருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்குத் தான் இதை எல்லாம் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிர் ஒரு நெருப்பு. அதிலே அருள் உணர்வைச் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகள் உடலில் பரவுகிறது. நம் மூச்சு வழி… சொல் வழிக் கூடி அந்த நல்ல உணர்வலைகள் வெளிப்படுகின்றது. கேட்போர் உணர்வுகளை இது மகிழச் செய்கின்றது.

ஆனால் யாகத் தீயில் நீங்கள் நல்ல சரக்கைப் போட்டால் அங்கே புகை மண்டலமாக வருகின்றது. அந்தப் புகை கண்ணிலே பட்டால் எரிச்சலாகி சுவாசித்தால் நெடியாக வருகிறது.

ஆக யாக மண்டலத்தில் என்ன இருக்கிறது…?
1.புற நிலையைக் காட்டி அதனுடைய நிலைகளை
2.அக நிலைக்கு ஊட்ட முடியாது.

கண்கள் புறக் கண். நம் உயிரோ அகக் கண். புறக் கண்ணால் பார்ப்பதும் உயிரிலே அது வரப்படும் பொழுது அகக்கண்ணாக இருந்து உள் நின்று நம்மை இயக்குகிறது… என்ற நிலையை ஆலயத்தில் காட்டப்படும் பொழுது இது துவைதம்.
1.அதாவது உருவம்…
2.அதை எண்ணத்தால் எண்ணும் பொழுது அருவம்…!
3.அந்த அருவம் என்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அதனுடைய உணர்ச்சி..,!

அந்த உணர்ச்சி என்று இயக்கும் பொழுது தான் துவைதம்… அத்வைதம்… விசிஷ்டாத்வைதம்…! தனக்குள் மறைந்து இயக்கும்… இங்கே உணர்ச்சி.

உதாரணமாகக் கண்ணில் பார்த்ததும் என்ன செய்கின்றோம்…? ஒரு பாம்பைப் பார்த்ததும் அந்த உணர்ச்சி தூண்டி “ஐயோ… பாம்பு…!” என்று குதிக்கின்றோம். அதே சமயத்தில் ஒரு அழகான பொருளைப் பார்த்தவுடனே ஆஹா…! என்று நினைக்கின்றோம்.

1.அப்பொழுது அது துவைதம்… உருவம்.
2.அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அத்வைதம்.
3.உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சி.
4.எந்த உணர்வின் தன்மையோ அதனின் உணர்ச்சியை ஊட்டும் நம் உயிர்
5.அதை உடலுக்குள் அணுவாக மாற்றுகின்றது.
6.கோவிலில் காட்டப்பட்டது உருவம். ஆகவே அந்த நல்ல… உயர்ந்த… தெய்வீகக் குணங்களை உன் உருவமாக்கு…!
7.இது தான் ஞானிகள் காட்டிய பேருண்மைகள்.

ஒரு வேதனைப்படுபவரை நுகர்ந்து நமக்குள் அதை உருவாக்கப்படும் பொழுது நம் உடல் நலிந்து போகின்றது. சரீரத்திற்குள் மாற்றமாகின்றது.

இது சித்தாந்தம் என்று உடலுக்குள் ஆகும் நிலைகளை சாதாரண மக்களும் உணர்ந்து கொள்ளும் நிலைக்காக அதன் வழியில் தான் ஆலயங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டது.

சாமி மேல் இருக்கும் வைரக் கிரீடத்தைக் கண்களில் பார்த்ததும் நாம் எதை எண்ண வேண்டும்…? அந்த வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ அதே மாதிரி என் சொல்லை மற்றவர் கேட்கும் பொழுது அவர்களுக்கு அந்த ஜொலிப்பு வர வேண்டும்… சந்தோஷம் வரவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணுதல் வேண்டும்.

சாமிக்குப் போட்டிருக்கும் தங்க நகைகள் எப்படி மங்காதிருக்கின்றதோ அதைப் போல் என் மனது எப்பொழுதுமே மங்காது நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எல்லோருடைய மனதும் தங்கத்தைப் போல் மங்காது இருக்க வேண்டும் என்று உங்களை நான் உயர்த்துகின்றேன். நானும் உயருகின்றேன்.

இதே போல் அந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் எண்ணினால் எப்படி இருக்கும்…? நாம் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று உணர்த்துவதே ஆலயத்தின் பண்புகள்.

யாம் பாய்ச்சும் சக்திகள் உங்களைப் பின் தொடர்ந்து… உறுதுணையாக இருந்து… உங்களைக் காக்கும்

 

1.எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
3.நாம் முதலிலே நலமாக இருக்கின்றோம்.

அந்த மெய் ஒளி நமக்குள் வளர்ந்து சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது. நம் சொல்லைக் கேட்போர் உள்ளங்களையும் மகிழச் செய்கின்றது.

1.அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர்கள் பக்குவமாக என்னுடன் இணைந்து செயல்படும் தன்மையும்
2.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிப்படுத்துவதும்
3.தடையின்றி வியாபாரம் நடப்பதும்… தடையின்றி மகிழ்ச்சி பெறுவதும்… தடையற்ற நிலையாக நமக்குள் உருவாகின்றது.

ஆகையினால் இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுது துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். நாங்கள் நலமும் வளமும் பெற வேண்டும். எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயலெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று இப்படி வியாபாரத்திற்கோ மற்ற எங்கே சென்றாலும் இதைச் செயல்படுத்துங்கள்.

1.யாம் கொடுக்கும் இந்த அருள் உணர்வுகள் எப்பொழுதும் உங்களைப் பின் தொடர்ந்து உறுதுணையாக இருந்து உங்களைக் காக்கும்
2.உங்களுக்குள் உயர்வை ஊட்டும்… மெய் ஒளியின் தன்மை எட்டச் செய்யும்.

அதை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆகையினால் நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்து எம்மைப் பார்க்கும் பொழுது… சாமி…! நீங்கள் சொன்னபடி நாங்கள் எடுத்தோம்… நாங்கள் நன்றாக இருக்கின்றோம் எங்கள் உடல் நலமானது என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

அதிலே தான் எனக்கு மகிழ்ச்சி…!

காரணம் சதா உங்களைத்தான் நான் பிரார்த்தனை செய்கின்றேன். உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி உடலைக் கோவிலாக எண்ணி உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தெய்வமாக எண்ணி
1.அந்தக் கோவிலில் மகிழ்ச்சியான நிலைகள் உருவாக வேண்டும்.
2.அந்தக் கோவிலில் இருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று
3. உங்களைத் தான் – நான் பார்த்த கோவில்களை “ஒவ்வொருத்தராக நான் தியானம் செய்கின்றேன்…”

அதிகாலையில் 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்தனை செய்கின்றேன். அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

அதைப் பெறும் போது உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே உங்களுக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகள் மாறி… அது நல்லது செய்யும் ஆற்றலாக வரும்.

1.அதைப் பெறச் செய்வதற்கு உங்களுக்கு அந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.ஆகையினால் முழு நம்பிக்கையுடன் உங்களை நம்பி நீங்கள் செயல்படுங்கள்.

சாமியை நம்புகின்றீர்கள் சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகிறீர்கள் மந்திரத்தை நம்புகின்றீர்கள் ஆனால் “உங்களிடம் அத்தனை சக்தியும் இருக்கின்றது…”

“உங்களுக்கு முன்னாடியே… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது…” அதை எண்ணினால் உங்களுக்குள் அது கூடும். நல்லதைப் பெற முடியும்… மெய் ஒளியைக் காண முடியும்.

மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை.

ஆகவே… உங்களை நம்பி இதைச் செயல்படுத்துங்கள்.
1.சாமி சொன்னார் என்று சொல்லி…
2.சாமி சொன்ன சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சாமி செய்து கொடுப்பார் என்று எண்ண வேண்டியதில்லை.

உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் மகரிஷிகளின் அருளைப் பாய்ச்சுகின்றேன். அது கிடைக்க வேண்டும் என்று உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனிலிருந்து காந்த அலைகள் வெளி வருகின்றது. பூமி அதை எடுத்துக் கொண்டால் தான் வளர முடியும். பிரபஞ்சத்தில் காற்றிலே பல சக்திகள் படருகின்றது. போகும் பாதையில் அதை ஈர்த்துக் கொண்டால் தான் பூமி வளர முடியும்.

இதைப் போன்று தான் மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
1.அந்த அருள் ஒளியை நீங்கள் ஈர்த்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது.
2.அதன் மூலம் நீங்கள் மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்
3.காற்றிலிருந்து அந்த மகரிஷிலளின் அருள் சக்தியை நீங்கள் கவர முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகள் அவர்கள் பார்வையில் தீமைகளை எப்படி அகற்றினரோ… எப்படி மகிழ்ச்சி பெறச் செய்தனரோ.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று அந்த உணர்வை ஒவ்வொருவரும் தனக்குள் சேர்த்துக் கொள்வதற்கே ஆலயம்.

மகரிஷிகள் அல்லாது நல்லதைக் காக்க முடியாது.

ஏனென்றால் அவர்கள் அத்தகைய பேராற்றல்களைத் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள். அதை நமக்குள் இணை சேர்க்கவில்லை என்றால் கோவிலில் நல்ல சக்திகளைப் பெற முடியாது.

அதற்காக வேண்டி ஒவ்வொரு கோவிலிலும் இன்ன ரிஷி செயல்படுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த ரிஷியைப் பற்றிச் சொல்கிறார்களா…? என்றால் இல்லை.

அன்று ஆண்ட அரசர்கள் மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையை எடுத்து ஆலயம் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

பழனியிலே “முருகா…!” என்று சொன்னால் அந்த ஆறாவது அறிவின் தன்மை தான் அது. ஆக உருவாக்கத் தெரிந்து கொண்டவன் போகன். அவனைப் பற்றி யாராவது நினைக்கின்றீர்களா…?

ஏதோ போய்ச் சாமியைப் பார்த்தோம் என்று வேடிக்கை பார்த்து வரும் நிலை தான். அங்கே பத்தோ ஐம்பதோ கொடுத்துவிட்டு அர்ச்சனை செய்தால் போதும்.

போகர் இங்கே தான் இருந்தார். அந்தக் காலத்தில் செப்புத் தகடில் எழுதி வைத்திருந்தார் என்பார்கள். ஆனால் போகன் வாழ்ந்த காலத்தில் எழுத்தே கிடையாது. ஆனால் இவர்கள் எழுதி வைத்திருப்பார்கள்.

1.ஏனென்றால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி எழுத்து கிடையாது.
2.அந்த எழுத்து எழுத வேண்டும் என்றால் கிரந்தம்.
3.கிரந்தம் என்றால் ஒரு செடி என்றால் அந்தச் செடியின் ரூபம்.

அந்தந்தச் செடியின் வடிவத்தைக் காட்டப்படும் பொழுது அதனதன் உணர்வை எடுத்து அதன் வழியே தான் இந்த உணர்வின் மணம்… எண்ணம் இதனுடைய குணம்… என்று இப்படிக் காட்டுகின்றார்கள்.

இதைத்தான் கிரந்தம் என்ற நிலையை அந்தக் காலத்தில் காட்டினார்கள்.
1.எதைக் கிரகித்ததோ அதனுடைய அந்தம்.
2.அதனின் இயக்கம் தான் கிரந்தம்.
3.அது தான் அதனுடைய முடிவு.

அந்தக் கிரந்தத்திற்கு இப்பொழுது வேறு வேறு வடிவம் (வட மொழி) கொடுப்பார்கள். கிரந்தம் என்று சொல்வதற்கு ஒரு செடியின் சத்து எங்கே எப்படி இருக்கிறது…? ஆக அதனின் மணம் குணம் தான் எண்ணம்.

1.மிளகாயைச் சாப்பிட்டால் ஆ…! என்ற சொல்லைச் சொல்கிறோம்.
2.அப்பொழுது அந்த எண்ணம் தான் வருகின்றது.
3.அந்தக் கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது
4.அதைச் சொன்னவுடன் அந்த எண்ணம் வருகின்றது.

சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…! கிரந்தம் என்றால் கிரகித்ததைப் பற்றி அன்று ஞானிகள் சொல்லியிருந்தால் இன்று அதை ஒரு மொழி என்று எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

இப்படித்தான் ஞானிகள் கொடுத்த பேருண்மைகள் எல்லாம் காலத்தால் மாற்றப்பட்டு விட்டது. ஆக
1.ஞானிகளையும் மகரிஷிகளையும் எண்ணாது
2.உருவத்திற்குள் அவர்கள் காட்டிய அருவத்தின் சக்தியைப் பெற முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மறைந்த அந்த உண்மைகளைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இப்பொழுது உங்களுக்குள் உணர்த்திக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

நாம் குடியிருக்கும் வீடுகளில் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகளவில் படரச் செய்ய வேண்டும்…”

 

உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது உள் புகுந்த விஷமான சக்திகளை… அதனுடைய வலுவை இழக்கச் செய்வதற்குத் தான் கூட்டு தியானங்களில் யாம் உங்கள் எல்லோர் குரல்களையும் எழுப்பச் சொல்லியது.

அவ்வாறு வெளிப்படும் அந்த குரலின் தன்மைகளைக் காந்த புலன்கள் கவர்ந்தாலும்
1.வீட்டிற்குள் புவியின் ஈர்ப்புக்குள் அந்தக் காந்தப் புலன்கள் சங்கடம் சலிப்பு வேதனை இவைகள் பதிந்திருப்பதை
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு கூட்டு தியானத்தில் எல்லோரும் குரல்களை எழுப்பப்படும் பொழுது
3.அந்தத் துன்ப அலைகளை இது வீழ்த்தி நல்ல உணர்வுகளைப் படரச் செய்வதும்
4.நாம் எடுத்துக் கொண்ட அந்த உயர்ந்த உணர்வுகள் வீட்டுச் சுவர்களில் இருக்கும் காந்தப் புலன்கள் கவர்ந்து
5.வீட்டிற்குள் எப்பொழுதும் உங்களை மகிழ்ச்சியூட்டும் உணர்வாகப் பெறச் செய்யும்.

அதற்குத்தான் வீடுகள் தோறும் கூட்டுக் குடும்பத் தியானங்களைச் செயல்படுத்தும் படிச் சொல்வது.

சூரியன் எப்படிப் பிரபஞ்சத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒளியின் தன்மையாகத் தனக்குள் எடுத்துச் செயல்படுத்துகின்றதோ அதைப் போல நாம் ஒருங்கிணைந்த நிலையில் செயல்படுத்துவதற்கு அன்றைய ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி குரலை எழுப்பிக் கூட்டுத் தியானத்தைச் செயல்படுத்தும் படிச் சொல்கின்றோம்.

காரணம்
1.தனி ஒரு மனிதன் மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது.
2.பல அலைகளை உணரும்படி செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு தான்
3.நாம் கூட்டுத் தியானத்தில் எடுக்கக்கூடிய சக்தியின் மூலமாக ஒலிகளைப் பரப்பச் செய்து
4.வரக்கூடிய விஞ்ஞான நச்சுத்தன்மைகள் நம்மை அணுகாதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

பூமிக்குள் பிற விஷத்தின் தன்மைகள் உள்ளே புகாது ஓசோன் திரை எப்படி அமைகின்றதோ அதைப் போன்று
1.எத்தகைய நிலைகள் வந்தாலும் உங்களுக்குள்ளும் உங்கள் குடும்பத்திற்குள்ளும் அந்தத் தீமை புகாது பாதுகாப்புக் கவசமாக
2.ஆற்றல்மிக்க உணர்வுகளை உங்கள் ஆன்மாவிலே பெருக்கச் செய்வதற்கே இதைச் செய்கின்றோம்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஏதோ சாதாரணமாக இது கிடைக்கின்றது சாதாரணமாக விளக்கம் சொல்கின்றார் சாதாரண நிலைகள் பெறுகிறோம் என்று சாதாரணமாக எண்ணி விட்டு விடாதீர்கள்.

ஏனென்றால் எவ்வளவோ பணத்தைச் செலவழித்துப் பெற முடியாத சக்தியை இவர் சாதாரணமாகச் சொல்கின்றார் நாம் அப்படிப் பெற்றுவிட முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வில் தான் இதைக் கொண்டு வருகின்றேன். ஆகவே கூட்டுக் குடும்பத் தியானத்தினுடைய அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாகத் தியானியுங்கள்.

நாள் முழுவதற்கும் உழைக்கின்றோம்.
1.ஒரு பத்து நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துப் பெருக்கி உங்கள் வீடுகளிலும் பெருக்கி
2.எல்லோரும் அதே போல் கூட்டமைப்பாகப் பெருக்கப்படும் பொழுது மிக உயர்ந்த சக்தியாக மாறுகின்றது.
3.உங்களைக் காக்கின்றீர்கள்… குடும்பத்தைக் காக்கின்றீர்கள்

இப்படி ஒவ்வொரு குடும்பமும் தங்களைக் காத்துக் கொள்ளும் நிலைக்கே இதை உணர்த்துகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது அதைச் சொன்னதும் நமக்கும் அந்தக் கோபமான எண்ணம் வருகின்றது. அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது. அது சமயம்…
1.ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொன்னோம் என்றால் ஒன்றுமில்லை.
2.ஏய்…ய்..! ஏண்டா இப்படிச் செய்கிறாய்…? என்றால் வெறுப்பு தன்னாலே வருகின்றது.
3.காரத்தின் தன்மை அதிகமாகின்றது.
4.ஆகவே சூடாகச் சொல்லும் பொழுது வெறுக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொல்லும் பொழுது அந்த உணர்ச்சி “ஏதோ தவறு செய்து விட்டோம்… போலிருக்கிறது…!” என்று வருகிறது.

சாதாரணமாகச் சொல்லும் பொழுது அரவணைக்கும் தன்மையாக வருகின்றது.
1.ஆக இந்தக் கோபம் சுவையை ஊட்டுகின்றது.
2.தன்னைத் திருந்தச் செய்கிறது.

இதைத்தான் நம்முடைய உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்பதைத் தெளிவாக்கப்படுகின்றது. ஆலயங்களில். இந்த உடல் ஒரு ஆலயம். அதிலே எத்தனையோ குணங்கள் நமக்குள் இருக்கின்றது.

இரண்டு பேர் சண்டை போட்டால் அதை நாம் பார்த்தால் அந்த உணர்வு நமக்குள் வந்து பதிவாகி விடுகின்றது. உள்ளுக்குள் புகுந்து விடுகின்றது.

ஒருவன் கோபத்துடன் செயல்பட்டு மற்றவரை வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வைப் பார்த்ததும் அதே உணர்வு கோபத்துடன் அடுத்தாற்போல் வேதனைப்படும் சொல்லாகவும் வேதனைப்படும் செயலாகவே நமக்குள்ளும் மாறுகின்றது.

அங்கே சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல…! இங்கே நம் உடலிலேயும் வேதனையை உருவாக்கும் அணுவாகி உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லும் அணுவாக மாறுகின்றது.

எப்படிக் காடுகளில் புலி கரடி பாம்பு போன்ற பிராணிகள் மற்றவைகளைக் கொன்று சாப்பிடுகின்றதோ அது போல் நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமை செய்யும் அணு மற்றதைக் கொல்கிறது.

ஏனென்றால் நம் உடல் ஒரு பெரிய காடு. எந்தெந்தத் தாவர இனங்களின் சத்தை வளர்த்ததோ அதனின் மணம் அந்தக் குணம் அந்த அணுவின் தன்மையாகி ஒன்றுக்கொன்று போர் முறையாகி விட்டால்
1.ஐயோ… பளீர்.. என்று இங்கே (ஊசி குத்துவது போல்) மின்னுகிறதே
2.இங்கே உடலில் வலிக்கின்றதே… வயிறு வலிக்கிறதே… இது எல்லாம் வரும்.

போர் முறை வரப்படும் பொழுது அதைச் சீராக ஜீரணிக்கும் சக்தி இல்லாது போய்விடுகின்றது. உடல் உறுப்புகளின் இயக்கங்கள் தடைப்படுகின்றது.

ஒரு அரசன் ஒரு கிராமத்திற்குப் போகும் பொழுது அதை அடக்கி அங்கே தன் நிலைகளை எப்படிச் செயல்படுத்துகின்றானோ இதே மாதிரி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலுக்குள் அது போகும் பாதைகளில் அங்கே இருப்பதை எல்லாம் துரத்திக் கொண்டே செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! இதுகள் எல்லாம் எதிலிருந்து வந்தது..? என்று ஞானிகள் தெளிவாக்கியிருக்கின்றார்கள்.

எந்த உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருகின்றதோ அது சீதாலட்சுமி… (சீதா என்றால் சுவை) அந்தச் சுவையை வளர்க்கும் சக்தியாக வளருகின்றது.

அதாவது கோப குணத்தை வெளிப்படுத்தினால் அது சீதா..! சூரியனின் காந்த சக்தி கோபத்தை எடுத்து வைத்துக் கொண்டு சீதாலட்சுமியாக மாறுகின்றது.
1.கோபிப்பவரைப் பார்த்ததும் சீதாராமா…
2.அந்தக் கோபத்தின் உணர்ச்சியின் வேகமாக அதே எண்ணங்கள் நமக்குள்ளும் வருகின்றது.

ஒருவன் கசப்பான செயலைச் செய்கின்றான். அந்த உணர்வுகள் சீதா லட்சுமியாக மாறுகின்றது. சுவாசித்ததும் சீதாராமனாக அதே கசப்பான வெறுப்பின் எண்ணங்கள் வருகின்றது. இது தனித் தன்மை.

அதே போல் பண்பு கொண்ட தெய்வீக உணர்வுகளை ஆலயத்தில் காட்டப்படும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்தால் சீதா…! அந்தத் தெய்வ குணங்களை… அந்தச் சுவையை எண்ணுகின்றோம். அப்பொழுது சீதாராமனாக நமக்குள் வருகின்றது.

அது எப்படி வருகிறது..?
1.இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்…
2.ஆலயத்தில் காட்டிய தெய்வ குணத்தை எல்லோரும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இத்தகைய உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது அதே உணர்வலைகளை எடுத்து எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதைக் கலவையாக்கி நீங்களும் இதே மாதிரிச் சொல்கிறீர்கள்.

அப்பொழுது இந்த உணர்வலைகள் அந்த ஆலயம் முழுவதும் படர்கிறது. கோவிலுக்குள் இந்த உணர்வுடன் சென்றால் மகிழ்ச்சி ஊட்டும் உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.

ஆலயங்களை உருவாக்கியதன் நோக்கமே அது தான்.

October 2025 உபதேசம்

ஓ…ம் என்றால் பிரணவம்… ஜீவன் கொடுப்பது

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம். ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.

ஒவ்வொரு கோவிலிலும் ஓ..ம் போட்டு வைத்திருக்கின்றார்கள்… அங்கே பிரசாதம் வைத்திருக்கின்றார்கள். மற்ற எத்தனையோ நிலைகளைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

கூடுமான வரையிலும் அங்கே சென்று தெய்வத்தை வணங்குகின்றோம். ஏன் வணங்குகின்றோம்…? எதற்காக வணங்குகின்றோம்…? எப்படி வணங்குகின்றோம்…? அப்படி வணங்குவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கிறது…? என்பதை யாரும் சொல்லித் தரவில்லை.
1.உனக்குக் கஷ்டம் வந்தால் தெய்வத்திடம் உன் குறையை எல்லாம்… முழுவதையும் சொல்லிவிடு.
2.அதைச் சொல்லி மனம் உருகி அழுகும் பொழுது அந்தத் தெய்வம் உதவி செய்யும் என்று தான் சொல்லி வைத்திருக்கின்றனர்.
3.எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம். ஈஸ்வரன் என்றால் எங்கேயோ இருக்கின்றான் என்று நினைக்கின்றோம். எங்கேயோ இருந்து நம்மைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணம் தான் நமக்கு இருக்கின்றதே தவிர அந்த ஈஸ்வரன் யார்…? என்று அறியவில்லை.

ஓம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம்… அது தான் ஜீவன்… “ஜீவன் உள்ளது…” என்று எல்லோரும் வாதிடுகிறார்கள்.

உதாரணமாக… ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து அடிபட்டு விடுகின்றான். நான் பாசமாக இருக்கின்றேன் என்னிடம் இருக்கும் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது அவன் படக்கூடிய துன்பத்தைக் கண் பார்க்கின்றது
1.அதே சமயத்தில் அவன் வேதனைப்பட்டு வெளிப்படுத்துவதை என் கண் இழுக்கின்றது.
2.அதைச் சுவாசித்த உடனே உயிரிலே பட்டு எனக்கும் வேதனை தெரிகின்றது.

அவன் கீழே விழுந்தான்… உடலில் வேதனையாகின்றது. அவன் வேதனை தாங்காது வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய காந்த சக்திகள் அதைத் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

அந்தப் பையனை எண்ணி… “அவன் வேதனைப்படுகின்றானே…” என்று கண்ணிலே பார்த்தவுடனே அந்தக் கண் அதே உணர்வலைகளை எனக்குள் இழுக்கின்றது.

நான் இப்பொழுது பேசுகிறேன் என்றால்… “இந்த மைக்..” நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுக்கின்றது. அதே போல் அந்தப் பையன் இடக்கூடிய சப்தத்தை என் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கின்றது… அந்த உணர்வின் ஒலியைத் தட்டுகிறது.

கண் பார்க்கின்றது… கரு விழி பார்த்தாலும் அந்த அலைகளை இழுக்கின்றது. கரு விழியில் படம் தெரிகின்றது கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தம் அந்த அலைகளை இழுக்கின்றது. அதை இழுத்த உடனே நான் சுவாசிக்கிறேன்.

நல்ல குணம் கொண்டு நான் போகும் பொழுது இந்தப் பையன் கீழே விழுகின்றான். பார்த்தவுடனே அவன் வேதனைப்படுவது எனக்குத் தெரிகின்றது. வேதனையால் வெளிப்படுத்தும் ஒலியைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து எனக்குள் கொண்டு வந்து வைக்கின்றது.

ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்புச் செய்கின்றார்கள் வெப்ப காந்தங்கள் அதைக் கவர்கின்றது. இங்கே நாம் வீட்டிலே அதே ஸ்டேஷனைத் திருப்பி வைக்கப்படும் பொழுது அங்கே வெளிப்படுத்தக்கூடிய ஒலி அலைகளை… பாடல்களை இங்கே ரேடியோவில் பாடுகின்றது… நாம் கேட்கின்றோம்.

இது விஞ்ஞானம்… செயற்கையில் செய்தது. அதற்கு ஜீவன் இல்லை… ஒலி அலைகளை மட்டும் எடுத்துக் கொள்கின்றது.

1.ஆனால் நான் பார்த்த… அந்த வேதனையான உணர்வலைகள் உயிரிலே படுகின்றது.
2.சுவாசித்து இழுத்து உயிரிலே பட்ட பின் அவனிடமிருந்து வெளிப்பட்ட
3.வேதனையான உணர்வின் சக்தி என் உயிரிலே பட்ட பின் “ஜீவன்…” பெறுகின்றது.
4.அதற்குப் பெயர் தான் ஓ… என்று சொல்வது.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பை மூட்டி வைத்தால் தண்ணீர் சூடாகிக் கொதித்து “தத… புதா…” என்று சத்தம் போட ஆரம்பிக்கின்றது.

காரணம் அது கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியிலே படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் அதிலே பட்ட பின் இழுத்து அந்தச் சப்தத்தைக் கொண்டு வருகின்றது. இது இயற்கை…!

தண்ணீர் தான்… ஆனால் “தத… புதா…” என்று சத்தம் போடுகின்றது. அப்படிக் கொதிக்கும் நேரத்தில் நாம் எந்தப் பொருளை (பலசரக்கை) அதனுடன் இணைக்கின்றோமோ அந்த வாசனை வெளி வருகின்றது.

ஏனென்றால்
1.கொதிக்கும் பொழுது கலந்து ஆவியாக வெளியே அனுப்பும்போது அதைச் சூரியனின் காந்த சக்தி தனக்குள் கவர்ந்து கொண்டு வருகின்றது.
2.என் கண்ணிலே பார்த்தவுடனே… சத்தியபாமா உண்மையை எடுத்து இழுத்து எனக்குள் உணர்த்துகின்றது.
3.என் உயிருக்குள் பட்ட உடனே அது பிரணவம்… ஜீவன் பெறுகின்றது.
4.ஆக… உயிர் அங்கே எப்படி இயங்குகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உயிர் நெருப்பு.

விஞ்ஞானம் எப்படி இருக்கிறது…? மெய் ஞானம் எப்படி இருக்கின்றது…? இயற்கை எப்படி விளைகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஜனகச் சக்கரவர்த்தி அவர் உழுகும் பொழுது அதிலிருந்து ஒரு பெண் குழந்தை கிடைக்கின்றது. அதைத் தத்துக்கு எடுத்துத் தன் குழந்தையாக அவர் வளர்க்கின்றார்.

ஜனகச் சக்கரவர்த்தி என்றால் சூரியன். மற்ற உணர்வுகள் விஷத் தன்மையைப் பெற்ற பின் அந்தத் தீமைகளை அகற்றி நல் உணர்வைச் சமைக்கும் தன்மை பெற்றது.

நாம் என்ன செய்கின்றோம்…? உழுது பயிரிட்டு நமக்கென்று நல்ல சத்துள்ள பொருள்களை விளைய வைக்கின்றோம்.

அதனால் தான் உழுகும் பொழுது கிடைத்தது குழந்தை என்று சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் இராமாயணத்தில் அக்காலத்தில் இதைத் தெரியப்படுத்துகின்றனர்.
1.உழுது பயிரிட்டால் தானே நல்ல பயிரினங்களை விளைய வைக்க முடியும்.
2.உழுகவில்லை என்றால் தன்னிச்சையாக என்னென்னமோ விளைந்து விடுகின்றது அல்லவா…!

மனிதனை வளர்க்க ஜனக சக்கரவர்த்தி உழுது பயிரிடும் நிலையிலிருந்து அந்தச் சத்தை எடுத்து வைத்திருக்கின்றது… சூரியனின் காந்த சக்திகள்.
1.இந்த உயிர் வாழும் மக்களை உயர்த்த எண்ணுகிறது
2.மனிதனைக் காக்க எண்ணுகிறது என்ற இந்த உண்மையைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.தீமையற்ற நிலை அது.

காவியப்படி அந்தக் குழந்தை வளர்ந்த பின் அதற்குத் திருமணம் வைப்பதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார்கள். அங்கே அவரவர் திறமைகளைக் காட்டுகின்றார்கள்.

தன்ன்னுடைய வில்வித்தைகளை எல்லாம் காட்டுகின்றார்கள். வில்லை எடுத்து நாணை ஏற்றி அம்பால் குறி வைத்துத் தாக்குகின்றார்கள். குறி வைத்துத் தாக்கும் பொழுது அவரவர் திறமைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

1.ஆனால் இராமன் என்ன செய்கின்றான்…?
2.அவனுடைய வல்லமையை எப்படிக் கொண்டு வருகின்றான்..?
3.பிறருக்குத் தீமை செய்யும் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்.

வில்லில் நாணை ஏற்றி அம்பைப் பாய்ச்சினால் தானே பிறரைத் தாக்க முடியும். அந்த வில்லையே ஒடித்து விட்டால் எதிலே அம்பை எப்படி ஏற்ற முடியும்..? அதை எப்படிப் பாய்ச்ச முடியும்..? அப்பொழுது அது பிறருக்குத் தீங்கு செய்யாது.

தீமை செய்யும் அந்த வில்லையே இராமன் முறித்துவிடுகின்றான்.
1.அதனுடைய உட்பொருள் என்ன என்றால்
2.பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணங்களைத் தனக்குள் நீக்குகின்றான்.

கோவிலில் என்ன செய்கிறோம்…?

பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணங்கள் தனக்குள் இருப்பதை ஒடித்துவிட்டு அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறார்கள். “எல்லோரும் அப்படி எண்ண வேண்டும்…” என்று உணர்த்துகின்றார்கள்.

1.தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்துவிட்டால் எல்லோரையும் அரவணைக்கும் சக்தியாக வருகின்றது. அது தான் கல்யாணராமா.
2.எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்த எண்ணங்கள் நமக்குள் வர வேண்டும்.
3.கோவிலுக்குள் சென்றால் நாம் இப்படித்தான் எண்ணி எடுக்க வேண்டும்.

நம் ஞானிகள் கொடுத்த காவியங்களுக்குள் அத்தனை பேருண்மைகள் உள்ளது.

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை

 

மரத்திற்கு வேண்டிய உரத்தைப் போடுகின்றோம். அதை ஏற்றுக் கொண்டு நல்ல சக்திகளை எடுத்துக் கொள்கின்றது.

அதே சமயத்தில் சில நச்சுத்தன்மைகள் அந்த மரத்தினுடைய வேரிலே பட்டு அது ஊடுருவி விட்டால் அந்த விழுதிலே நஞ்சு கலந்து மரம் கெட்டு விடுகிறது.

இதைப் போல
1.நம்மை அறியாமல் இருளான உணர்வுகளைச் சுவாசிக்க நேரும் பொழுது
2.அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இட்ட அந்த உணர்வின் சத்தான நிலைகள் உண்டு.
3.அந்தச் சத்தைத்தான் உங்கள் உணர்வுகளுக்குள் ஏற்றிக் கொடுக்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எது எல்லாம் உங்களுக்குள் தேய்மானம் ஆகிச் சிந்திக்க முடியாமல் இருந்ததோ சிந்தித்துச் செயல்பட முடியாமல் இருந்ததோ
1.அதை மாற்றியமைக்க மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க நிலைகளை
2.செவிப்புலன் கொண்டு கேட்கச் செய்கின்றோம்.

எனக்கு என் குருநாதர் எப்படி உண்மைகளைக் காட்டினாரோ அதைப் போன்று தான் உங்களுக்கும் சொல்கிறோம்.

எந்தெந்த நல்ல மனதுடன் எல்லோருக்கும் நன்மைகளைச் செய்தீர்களோ… பிறருடைய துன்பத்தை இழுத்து உங்கள் நல்ல குணத்தைச் செயல்பட முடியாதபடி உங்கள் உடலுக்குள் தொல்லையும் துன்பமும் ஏற்படுத்திக் கொண்டிருந்ததோ…
1.அந்தத் துன்பத்தை நீக்க நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி உங்களை இந்த அருள் உணர்வைக் கேட்கும்படி செய்து
2.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற உணர்ச்சியின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.அந்த உணர்வாலே சுழன்று கொண்டிருந்த விஷத்தின் தன்மை நீங்கி
4.மெய் ஒளியின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து நீங்கள் இழுத்துச் சுவாசித்து
5.அந்தச் சத்தான நிலைகள் பெற்று உயிரின் நிலைகள் ஒளியாக மாற்றி
6.குருநாதர் எப்படி ஒளியின் சரீரமாகச் சென்று விஷம் தனக்குள் எதுவும் அணுகாத நிலை பெற்றாரோ
7.எனக்கு குருநாதர் காட்டிய அந்த நிலையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.

காரணம் நமக்குள் எதைப் பதிவு செய்து கொள்கின்றோமோ… நாம் நல்லதைப் பெற வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். ஆனால் நாம் அறியாதபடி அந்த உணர்வுக்குள் விஷம் பட்டு விஷத்திலிருந்து எழ முடியாத நிலைகள் வந்து விடுகின்றது.

அந்த விஷத்தை நீக்கும் ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆவலில் தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

அந்த ஆற்றல் மிக்க சக்தியைப் பெறச் செய்வதற்குத் தியானத்தின் முறையை குருநாதர் எனக்கு எப்படி வழி காட்டினாரோ அதே வழியில் நீங்களும் தியானத்தைச் செய்து கொண்டால் இந்த காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும்.

மரத்திற்கு உரமான சத்தைக் காட்டிய பின் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு காற்றில் மறைந்திருக்கும் தன் சத்தினை எடுத்துத் தான் எப்படி வளர்த்துக் கொள்கின்றதோ இதைப் போன்றே
1.உங்கள் நல்ல உணர்வின் தன்மையைக் காக்க மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை நீங்கள் சுவாசித்து
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காத்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் மூச்சுக்குள் உடலுக்குள் நலமும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பத்தைப் போக்கும் நிலையும் ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெறும் நிலையும்
4.இந்த உடலிலிருந்தே உயிரின் தன்மை உணர்வுகள் ஒளியாக மாறி
5.என்றும் பதினாறு என்ற ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை நீங்களும் பெற முடியும்.

அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு விண் சென்றார்களோ அதே போன்று நீங்களும் அந்த மெய் ஒளியின் சுடரின் நிலைகள் கொண்டு அந்த மெய் வழியில் செல்லக்கூடிய தகுதியைப் பெறுவீர்கள்.

குருநாதர் காட்டிய வழியில் தான் யாம் உங்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு அழுக்குத் தண்ணீரில் நந்நீரை விட்டது போல் உங்கள் கண்ணின் நினைவினை எல்லா உறுப்புகளிலும் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்யுங்கள்.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.சிறுகச் சிறுக உடல் உறுப்புகள் அனைத்திற்கும் உணவாகக் கொடுக்கும் அந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எலும்பு மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் எலும்புக்குள் இருக்கும் எலும்பை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை எங்கிச் செலுத்துங்கள்.
1.இப்பொழுது எலும்புகளில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் வரும்.
2.கூச்சப்படுவது போன்ற உணர்ச்சிகள் தோன்றும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் படர்ந்து ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் உணர்வினைச் செலுத்துங்கள்.

எக்ஸ்ரே கருவிகளில் அனுப்பப்படும் பொழுது எப்படி அது ஊடுருவி எலும்புக்குள் இருக்கக்கூடிய நிலைகளைப் பிளந்து கொடுக்கின்றதோ இதைப் போல எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பரவச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதி கொண்ட அணுக்களாகப் பதிவாக்குங்கள்.

1.செல்ஃபோன்களில் நமக்கு வேண்டியதைப் பதிவாக்கிக் கொண்டு
2.எப்படி அவ்வப்பொழுது அதை எடுக்கின்றோமோ
3.அதைப் போல நம் உடலில் துருவ நட்சத்திரத்தின் செல்களைப் பதிவாக்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்படிப் பதிவாக்கிக் கொண்டால் அந்த நினைவுகள் நமக்குள் ஆகி
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நம்மை நுகரச் செய்து
2.அந்த ஞானத்தின் வழி நாம் செயல்படுத்த இந்தத் தியானம் உதவும்.

உடலில் எடுக்கக்கூடிய “மெய் ஒளியைத் தான் நான் சிந்தித்தேன்…” என்றார் குருநாதர்

 

வைகுண்ட ஏகாதசி அன்றுதான் என் குருநாதர் உடலை விட்டு வெளியே சென்று ஒளியாகப் போனார். குருநாதர் எனக்குக் காட்டி உணர்த்தியது…
1.இந்த உடலிலே நான் எப்படி ஒளியாக மாறி வெளியே செல்கின்றேன்…?
2.வெளியில் சென்றபின் மற்ற மனிதர்களுடைய உணர்வுகள் எப்படி எல்லாம் கவருகின்றது…?
3.அப்படிக் கவரும் பொழுது உயிரான்மா அதனுடைய சுழற்சியின் நிலைகள் என்ன செய்கின்றது…?
4.தன்னை அணுக விடாதபடி சுழற்சியின் நிலைகள் கொண்டு விலகுகின்றது…!

விஷத்தைக் கழித்து விட்டு நல்ல உடலாக மாற்றிக் கெட்டதை நீக்கக்கூடிய எண்ணத்தின் நிலைகள் சிருஷ்டிக்கும் தன்மை கொடுத்த இந்த மனித உடலில் அதைப் பெறுவதற்கு குருநாதர் காட்டிய நிலைகள் இது.

குருநாதர் அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் வெறும் துண்டைத்தான் கட்டியிருப்பார். “டிச்சியின்…” அருகில் தான் படுத்திருப்பார்.

குளிர்காலம் என்று நல்ல வேஷ்டியை கொடுத்துக் கட்டச் சொன்னால் அதை எல்லாம் கிழித்து கையிலும் காலிலும் கட்டிக்கொண்டு பாருடா… எவனோ கிழித்து விட்டுச் சென்றான்…! என்பார்.

என்ன சாமி…? இப்படிச் சொல்கிறீர்கள்…! என்றால் கிழித்து விட்டுச் சென்றான் நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன்… அவன் கிழித்து விட்டுச் சென்றான் என்பார்.

1.அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை.
2.இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் அவர் சிந்தித்தார்.

பைத்தியக்காரர் போன்ற நிலையில் நான் அவரை பார்க்கும் பொழுதெல்லாம்… “அய்யய்யோ பெரிய தொல்லையாக இருக்கின்றது… இவரிடம் சிக்கிவிட்டோமே…!” என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஏனென்றால் அவருடைய செயல்களைப் பார்க்கும் பொழுது அப்படித்தான் என்னால் எண்ண முடிந்தது.

ஆனால் உடலை விட்டுச் செல்லும் போது… குருநாதர்… நான் எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது பளீர்.ர்ர்… பளீர்.ர்… என்று மற்ற எல்லாவற்றையும் தள்ளி விட்டு விண்ணுக்கு எப்படிப் போகின்றது…? அப்படிச் சென்றாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் அந்த உயிரான்மா என்ன செய்கின்றது…? பார்…!

அதற்கு முன்பே எனக்கு அதைச் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

உயிராத்மா இங்கேயிருந்தாலும் அன்று வாழ்ந்த மகரிஷிகள் ஞானிகள் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியிலே போனாலும் பிறிதொரு ஈர்ப்புக்கு வராது தடுத்தாலும்
1.இந்த உணர்வுக்கு ஒத்த விழுது இந்தப் பூமியிலிருந்து உந்தி ஆன்மாவை மேலே தள்ள வேண்டும்.
2.அதனால் தான் எவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனிடத்தில் வருகின்றார்கள்.
3.அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு உடலுக்குள் மகிழ்ச்சியை ஊட்டி
4.அவனிடமிருந்து வரக்கூடிய மூச்சைத் தன் உடலுக்குள் சேர்த்து அந்தச் சந்தோசமான உணர்வை நுகர்ந்து தான் விண் சென்றார்கள்.

குருநாதர் அதை எல்லாம் காட்டும் பொழுது
1.உயிராத்மா வெளியிலே சென்ற பின் எவ்வாறு…? எதன் நிலை கொண்டு என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் அதிலே வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று காட்டினார்.
அவர் காட்டிய உண்மையைத் தான் உங்களுக்குச் சொல்லி நீங்களும் அதைப் பெற முடியும் என்ற இந்த உணர்வினை உங்களுக்குள் “செல்களாகப் பதிவு செய்கின்றேன்…”

மெய் ஒளியின் தன்மை… இயற்கையில் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் இயக்கமாக மாறி மனிதன் வரை ஏப்படி வந்தது…? என்று எனது குருநாதர் காட்டினார்.

மனிதனிலிருந்து அவன் ஒளியின் சரீரமாகப் பெற்றுச் சப்தரிஷி… சிருஷ்டிக்கும் தன்மையாகப்
1.பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷம் வந்தாலும் அதை தனக்குள் ஒளியாக மாற்றி
2.உணர்வின் தன்மை மகிழ்ச்சியாக நின்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் நமது சாஸ்திர விதிகள் “அம்மி மிதித்து… அருந்ததியைப் பார்..!” என்று கல்யாணக் காலங்களில் சொல்லிக் காட்டுகின்றார்கள். ஆனால் எதற்காகப் பார்க்கச் சொன்னார்கள்..,? ஏன் பார்க்கச் சொல்கின்றார்கள்…? என்று தெரியாது.

கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்த நிலையில் தனக்குள் எடுத்துக் கொண்டதை உருவாக்கச் செய்யும்.

கணவன் மனைவி என்பதே…
1.உயிர் கணவன் ஆகின்றது
2.தான் எடுத்துக் கொண்ட சக்தியின் தன்மை தான் அது மனைவியாகின்றது.

எந்தச் சக்தியின் தன்மை கொண்டு இந்த உயிர் தாவர இனச் சத்தைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் சத்தை அணுத் திசுக்களாக மாற்றி அந்தச் சத்திற்குள் இருந்த உயிரின் துடிப்பு… அந்த உணர்வின் மலமாகித் தான் அது உடல் பெறுகின்றது.

அதைப் போல கடந்த கால ஞானிகள் சொன்ன முறைப்படி கணவன் மனைவி இருவருமே ஒன்றிய நிலைகள் கொண்டு
1.ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் மெய் ஒளியை எடுத்துக் கொண்டால்
2.அந்த இரு சக்தியும் ஒன்று சேர்ந்து விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக அது உருப் பெறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு மனிதன் வேதனைப்படுவதை நாம் காண நேர்ந்தால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அதிலே மோதி அதே உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் படர்கிறது.

அந்த மனிதன் மேல் நாம் இரக்கமாக இருந்தால் அவன் படும் அதே வேதனை உணர்ச்சிகள் நமக்குள்ளும் தோற்றுவிக்கிறது.

அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி விடுகின்றது. ஏனென்றால் ஓ.. என்று அது பிரணவமாகி ம்.. என்று உடலாக அடங்குகிறது.

ஒரு செடியின் சத்தை வேக வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.வேக வைக்கும் பொழுது ஆவியாக வெளி வருகின்றது
2.மேலே பச்சை (குளிர்ந்த) நீரை ஊற்றி விட்டோம் என்றால் அந்த ஆவியை… செடியின் சத்தை “ரசமாக…” இறக்கிவிடும்.

இதே போல் தான் நம் உயிரிலே மோதும் உணர்ச்சிகள் அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக எல்லாவற்றிலும் மோதி இயக்கச் செய்கிறது. அதற்குத்தக்க நம் எண்ணம்… சொல்… செயல்… என்ற நிலைகளில் இயக்குகின்றது.

அதே சமயத்தில் சுவாசித்த (வேதனை) உணர்வுகள் (ரசமாகி) உமிழ் நீராக மாறி நம் உடலிலே சேர்த்து நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது.

நாம் வயிறு நிரம்ப சத்துள்ள ஆகாரத்தைச் சாப்பிட்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.இந்த வேதனை என்ற விஷம் நம் குடலில் ஜீரணிக்கக்கூடிய அணுக்களில் பட்டவுடனே
2.அது மயக்கம் அடைந்து சரியாகச் ஜீரணிப்பதில்லை.
3.சிறிது நேரம் ஆனவுடன் புளித்து விடுகிறது… அப்பொழுது எதிர்த்துத் தாக்க ஆரம்பித்து விடுகின்றது.
4.அதனால் குடலுக்குள் ஒருவிதமான எரிச்சல் வருகின்றது.

இப்படி ஆனதும் நம் ஆகாரத்தை நல்ல சத்துள்ளவைகளாக மாற்றுவதற்கு மாறாக… ஒரு பழம் அழுகி விட்டால் எப்படி அதனின் ருசி கெட்டுப் போகுமோ… அதே மாதிரிச் சுவைத்துச் சாப்பிட்ட அந்த ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றுவதற்கு மாறாகச் “சுவை கெட்ட இரத்தமாக” மாறுகின்றது.

அப்படி இரத்தமாக மாறிய பின் அந்த மனிதன் உடலில் எந்த உணர்ச்சிகள் இயக்கியதோ அதே உணர்ச்சி நம் இரத்தத்தில் பட்டவுடன் அது கருவாகி விடுகின்றது.

அந்த மனிதன் உடலில் எந்த நோய் விளைந்ததோ அதே நோய் இங்கேயும் விளையக் கூடிய சக்தி பெறுகின்றது. நமக்குள் அந்த ஊழ்வினை என்ற வித்தாக இருப்பதனால்
1.அதைக் கண் கருவிழி பதிவாக்கிய நிலையில்
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அந்த மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி
3.உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் அவன் வேதனைப்படுகின்றான் என்று உணர்த்துகின்றது.

அவன் (உடலில்) எப்படி… வேதனைப்படுகின்றான்…? எதனால் வேதனைப்படுகின்றான்…? என்று உற்றுப் பார்க்கின்றோம். உயிரிலே மோதும் பொழுது உணர்வால் அறிகின்றோம். அந்த உணர்ச்சியாக இயங்குகின்றோம்.

நம் கண்கள் புறக் கண்… உயிரோ அகக் கண்.
1.என்ன தான் கண்ணில் பார்த்தாலும்
2,அந்த உணர்ச்சிகள் உயிரிலே இயக்கவில்லை என்றால் அது என்ன…? ஏது…? என்றே தெரியாது (இது முக்கியமானது)
3.உங்களுக்கு முன்னாடியே (கை நீட்டி) அவனை அடித்தாலும் கூட உங்களுக்குத் தெரியாது.
4.அடி வாங்கியவன் வேதனைப்பட்டால் கூட உங்களால் அறிய முடியாது.
5.ஆனால் அந்த உணர்வுகள் உயிர் பாகம் போகப்படும் பொழுது தான்… உயிரிலே மோதினால் தான்… அந்த உணர்ச்சிகளையே ஊட்டும்.
6.வேதனையோ கோபமோ ஆத்திரமோ அதை அப்பொழுது தான் உணர முடியும்.

இப்படிக் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்தது அத்தனை உணர்வுகள் இயக்கினாலும் அந்த வினை இயக்கமாக நம் இரத்தத்தில் கலந்து கொண்டே தான் இருக்கும்.

ஒருவன் வேதனைப்படுகின்றான்.. ஒருவன் கோபப்படுகின்றான்… ஒருவன் குரோதப்படுகின்றான்… என்றாலும் அது அது தனித் தனிப் பிரிவாக நம் இரத்தத்திற்குள் வேலை செய்யும்.

காட்டிலே எத்தனை இலட்சம் மரங்கள் இருக்கின்றது…? அதிலிருந்து வரக்கூடிய சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் எந்த மரத்தின் சத்து அதிகமாகின்றதோ அந்த மரத்தின் வாசனை அதிகமாக வரும்.

இதே மாதிரி நாம் ஒரு நிலத்தில் ஊன்றுவது போல் நம் உடலில் கோபமோ வேதனையோ வெறுப்போ பயமோ எல்லாமே ஊழ்வினை என்ற வித்துக்களாக உருவாகிவிடுகின்றது.

அவர் உடலில் பட்ட உணர்வுகள் அனைத்தும் அது தீய வினைகள். அவர் வேதனைப்பட்ட உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது தீய வினைகள். இதே மாதிரி கோபப்படுவோரைப் பார்க்கின்றோம். அதுவும் தீய வினைகள்.

சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற எத்தனையோ வகை உணர்வுகளை உற்றுப் பார்த்தோம் என்றால் அவைகள் எல்லாம் நம் எலும்புக்குள் பதிவாகி அந்தத் தீய வினைகள் நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

நம் உடலில் வினைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. இதை எல்லாம் அன்றாடம் நீக்குகின்றோமா என்றால் இல்லை…! அதை எல்லாம் நீக்கி நல்ல வினைகளாகச் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஞானிகள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாகச் சுவாசித்து உடலிலே சேர்த்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் ஒளியின் அணுக்களாக மாறும்.

இந்த உடலுக்குப் பின் நாம் அழியாத நிலை பெறலாம்.

மனிதனைப் போன்று உருவாக்கப்பட்ட சிலையின் மகத்துவம்

 

போகன் எதைக் கருத்தில் கொண்டு முருகன் சிலையைச் செய்தானோ மக்கள் யாரும் அதை நினைவில் கூடக் கொண்டு வரவில்லை.

பிரபஞ்சம் எவ்வாறு சூரியனால் உருப்பெறுகின்றது…? அது ஒவ்வொன்றிலும் கருவாகி எப்படி உருவாகின்றது…? நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து தனக்குள் தன் ஒளிக் கதிர்களை வீசி அது எவ்வாறு நட்சத்திரத்தின் தன்மை பெறுகின்றது…?

அது அது சுழலும் பாதையில் ஒவ்வொரு கோளும் அதற்குண்டான பாஷாணங்களை விஷத்தன்மைகளைத் தனக்குள் எப்படிச் சேமிக்கின்றது…? என்ற உண்மையை உணர்ந்தவன் போகன்.

அது உமிழ்த்தி வருவதைச் சூரியன் கவர்ந்து பிரிக்கின்றது… பாதரசமாக மாற்றுகின்றது. அதிலிருந்து தூவும் உணர்வுகள் தான் விந்து என்றும் அது எதைக் கவர்கின்றதோ அதன் வழி கொண்டு மற்றது உருவாகிறது என்று தெரிந்து… மற்ற எத்தனையோ நிலைகள் ஆகி மனிதனாக இது உருவாக்கி இருக்கிறது என்ற நிலையைக் காட்டித்தான் முருகன் சிலையை வடிக்கின்றான்.

1.பாதரசத்தையும் நவக் கோள்களில் விளைந்த பாஷாணத்தையும்
2.நட்சத்திரங்களின் வைரக் கல்களையும் அது விளையும் பருவம் கொண்டு வெடிக்காது பிஞ்சின் தன்மை அடைந்த வைரங்களை இதனுடன் இணைத்து
3.தாவர இனத்தின் தன்மையும் பாதரசத்தையும் அவன் இடும் புடத்தால் இரண்டறக் கலந்து முருகன் சிலையை உருவாக்கினான்.

மனிதன் எந்தெந்த உணர்வை உட்கொண்டானோ தீமைகளை அகற்றினானோ அதை… அந்தத் தாவர இனங்களைச் சாரணையாக சிலைக்குள் கொடுத்தான். மனிதனைப் போன்று தண்டாயுதபாணி என்று உருவாக்கி வைத்தான்.

அக்காலங்களில் அந்தச் சிலை மீது பாத்திரத்தை வைத்து நீரை ஊற்றி வைத்திருப்பார்கள்.
1.சிலை மீது அந்த நீர் பட்டவுடன் அதிலே ஒரு விதமான வெப்பங்கள் வரும்
2.வியர்வை வரும்… அதிலிருந்து ஆவிகள் வரும்…!

ஒரு மனிதன் கோபமாகப் பார்க்கும் பொழுது அவன் உடலில் இருந்து வெளிப்படும் மணங்களை நுகரும் போது நமக்கு நோயாக மாறுகின்றது.

அதே போன்று… மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளை எடுத்திருந்தாலும் “அதை அகற்றிடும் சக்தியைப் பெற…”
1.இங்கே முருகன் சிலையைப் பார்த்து “அதிலிருந்து வரும் மணங்களைச் சுவாசிக்க..”
2.விண்ணை நோக்கி (மலை மீது ஏறி) ஏகும்படிச் செய்கின்றான். ஏனென்றால் மலை மீது முருகன் ஆலயம் இருக்கின்றது.

போகன் காட்டிய அந்த நெறிகளையும் அவன் வகுத்துக் கொண்ட நிலைகளை எண்ணத்தில் எண்ணி “அந்த மகா மகரிஷி காட்டிய அருள் வழியில் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தைத் தனக்குள் எடுத்து நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி ஏகும் பொழுது கதிரவனின் காந்த ஒளியலைகள் அங்கே பரவுவதும்… அந்த நினைவுடன் விண்ணை நோக்கி எண்ணி எடுக்கும் பொழுது அது வருவதும்… இந்த நினைவாற்றல் அந்த ஆற்றலைப் பருகுகின்றது.

1.அப்போது தன் உடலில் வந்த தீமைகளை மறக்கின்றான்.
2.விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளை உந்தும்படிச் செய்கின்றான்.
3.ஆறாவது அறிவின் உண்மையை உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்திகளை ஈஸ்வரா என்று ஏங்கி நுகரும்படிச் செய்கின்றான்.

சோர்வையோ அதனால் உடலில் வந்த வலிமைக் குறைவையோ அதை மாற்றி… அந்த மெய் ஞானிகளுடைய உணர்வுகளைச் செருகேற்றி அதை நுகரும்படிச் செய்து… படி மீது ஏறி மேலே செல்லும்படிச் செய்கின்றான். மேலே ஏறி அங்கே கிரிவலம் வரும் பொழுது மகரிஷிகளை எண்ணத்தால் நாம் எண்ணி அதை நுகரும்படிச் செய்தான்.
அங்கே ஒரு தூப ஸ்தூபியும் உண்டு. அதிலே அக்கினியைப் போட்டு வைத்திருப்பார்கள்.

ஒளியின் சுடராக அங்கே வைத்து அந்த ஞானியின் ஒளிச் சுடரைப் பெறுவதற்காக விண்ணை நோக்கி ஏகி… அந்த உணர்வினை ஏங்கிப் பருகும்படி செய்து…
1.எந்த ஞானி காட்டினானோ இந்த உணர்வினைத் தனக்குள் செருகேற்றி
2.நினைவாற்றலை விண்ணிலே சேர்த்து அந்த உணர்வினைப் பெற வேண்டும் என்று காந்தப் புலனறிவைக் கூட்டும்படிச் செய்தான்.

அதே ஏக்க உணர்வுடன் நாம் உள்ளே செல்லும் பொழுது அந்தச் சிலை மீது நீர் படுவதை உற்றுப் பார்த்தால்
1.எந்த நல்லதை எண்ணி ஏங்கி வந்தோமோ அந்த உணர்வுடன் அதை நுகரப்படும் பொழுது
2.நம் உடலுக்குள் அந்த மணம் சென்று நம்மை அறியாத வந்த தீமைகளை அது பொசுக்குகின்றது.

ஆனால் அதை நாம் நுகர (சுவாசிக்க) வேண்டும்…!

அவன் சொன்ன முறைப்படி நுகர்ந்து நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்ற இந்த ஏக்க உணர்வுடன் பார்த்து நாம் சுவாசித்தால் உடலில் வந்த கடுமையான பிணிகளும் நீங்குகின்றது.

போகன் அதைத் தனக்குள் நேசித்தான். இந்த உணர்வின் சக்தியைப் பருகினான். தன்னில் தன்னைத் தான் அறிந்தான். விண்ணின் நிலையை உணர்ந்தான்… விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகினான்.

இந்தப் பிரபஞ்சத்தில் இயக்கிய உணர்வின் தன்மை கொண்டு மனிதன் உருவான நிலையை உணர்ந்தான். மனிதனுக்குள் அறியாத வந்த தீமைகளை எப்படி நீக்குவது…? என்று என்ற உபாயத்தை உணர்ந்தான். அதைச் சிலையாக வடித்து வைத்தான்.
1.அந்த அருள் ஞானம் பெறும் நிலையும் நமக்குள் மறைத்திருக்கும் நஞ்சினை கொல்லும் உணர்வினைச் சுவாசித்து
2.தீய அணுக்களைக் கொல்லும் மார்க்கங்களைக் கொடுத்தான்.

நாம் எப்படி வாழவேண்டும்…? தன்னை அறியாது வந்த தீமைகளை எப்படி அகற்ற வேண்டும் என்று நம் உடலைக் கோவிலாக மதித்தான் போகன். உயிரைக் கடவுளாக மதித்தான். அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று எண்ணினான். அதற்குள் மனிதனாக உருவாகிய குணங்களை அரும்பெரும் சக்திகள் என்று எண்ணினான்.

அந்த மனிதன் மகிழ்ந்தான் என்றால் அந்த மகிழ்ச்சியைத் தான் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நான் கண்டறிந்த நிலையை உருவாக்கினான்.
1.இதைக் கண்டு எத்தனை பேர் மகிழ்கின்றார்களோ அந்த மகிழ்ச்சியின் தன்மையை ஏங்கி
2.மனிதனுக்குள் உருவான உணர்வின் சத்தை அன்று உணர்வாகப் பெறுகின்றான் போகன்.

அதைப் பெறுவதற்கு… தாவர இனச் சத்தை இந்த உடலிலேயே மாற்றிக் காயகல்பாகப் பெறும் பாக்கியம் வரையிலும் இன்னொரு உடலுக்குள் புகாது இந்த உடலிலிருந்தே செயல்பட்டான்.

அவன் காட்டிய உணர்வின் சத்தை மற்ற மக்கள் எடுக்கும் உணர்வின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கி… அந்த மெய் ஞானியின் உணர்வைத் தனக்குள் ஒளியாக்கி… அந்த நினைவின் ஆற்றல் கொண்டு உடலை விட்டு “விண் செல்லும் மார்க்கத்தைக் கண்டு கொண்டான்…”

இது தான் போகன் செய்த நிலைகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் நல்ல குணத்துடன் தான் இருக்கின்றீர்கள். ஆனால் சந்தர்ப்பத்தில் பகைமையாகி அதனால் வேதனையான உணர்வை நுகர்ந்த பின் உங்கள் மனதிற்குள் என்ன நடக்கிறது…?

உள்ளுக்குள் மனப் போராட்டமாகி (மனதிற்குள்) சண்டை போட்டுக் கொண்டு மேல் வலிக்கிறது… தலை வலிக்கிறது… என்று சொல்வீர்கள்.

அப்பொழுது உங்களுக்குச் சரியான சிந்தனை இல்லை. ஒரு வேலையின் நிமித்தமாக உங்கள் பையனைக் கூப்பிடுகின்றீர்கள். கூப்பிட்டதும் அவன் வரவில்லை என்றால் “கூப்பிடுகிறேன் பார்… உடனே வர மாட்டேன் என்கிறானே…!” என்ற இந்த உணர்வு தான் வரும்.

கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றீர்கள். வியாபாரம் நன்றாக இருக்கும் இடத்தில் முதலில் சொன்ன மாதிரி மனதில் கொஞ்சம் வெறுப்பாகி விட்டால் என்ன நடக்கிறது…?

கடைப் பையனைக் கூப்பிட்டு இந்தச் சரக்கை எடுத்து வா என்று சொன்னாலும் அவன் வரவில்லை என்றால் “நான் சொல்லிக் கொண்டேயிருக்கின்றேன்… உனக்கு என்ன காது கேட்கவில்லையா…?” என்று இப்படிக் கேட்டு இந்த வம்புக்குப் போவோம்.

அந்த உணர்வுகள்… அங்கே தாங்கவில்லை என்றால் “நாம் சொன்ன சரக்கை அவன் எடுத்துக் கொண்டு வரட்டும்…!” என்று பொறுமையாக இருக்க முடியாது. “தான் சொன்னதை ஏன் அவன் செய்யவில்லை…?” என்ற வேகம் தான் வரும்.

நாம் சொன்ன நேரத்தில் அவன் வேறு ஒரு சரக்கைக் கட்டிக் கொண்டிருப்பான். அதைப் பார்த்ததும் ஏம்பா…! நான் சொல்வதைக் கேட்கவில்லையா…? என்று அழுத்தமான சொல் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளின் இயக்கங்கள் எப்படி…? என்ற நிலையை அறிந்து ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதை எப்படிச் செய்ய வேண்டும்..? என்று தெளிவாக உணர்தல் வேண்டும்.

1.மாறுபட்ட எண்ணங்கள் நமக்குள் வரும் பொழுதெல்லாம்
2.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.உடலுக்குள் அதைச் செலுத்தி ஆத்ம சுத்தி செய்தால் “அவன் ரிஷியின் மகன் நாரதனாகின்றான்…!”

மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிடும் சக்தியாக அவன் உருவாக்கிக் கொண்டவன். அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் அது நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன். (சூரியன் என்றால் நாராயணன்)

அவன் (சூரியன்) எப்படி உலகை இரட்சிக்கின்றானோ அதே போல் சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் மகரிஷிகளின் உணர்வின் தன்மையைக் கவர்ந்தால்
1.இரட்சிக்கும் அலைகளாக அந்த உணர்வின் இசைகள் நம்மை நல் வழிக்கு மாற்றும்.
2.அதனால் தான் நாரதன் கையில் இசைக் கருவி இருக்கும்.
3.அது சுழன்று சீராகினால் இங்கே மகிழ்ச்சியின் தன்மை வந்து அறியாது வந்த இருளைப் போக்குகின்றது.

சரஸ்வதி கையில் என்ன இருக்கிறது…? வீணை. ஒவ்வொரு உணர்வின் மணமும் அந்த இசையை ஊட்டுகின்றது. எதனின் குணமோ அதனின் ஞானமாக அது இயக்கும். அந்த உணர்வினை ஒளியாக அது இயக்கும். உணர்வை அது ஊட்டும்… உணர்வை அது வளர்க்கும்…!

1.அதைத் தான் இங்கேயும் சுருதி ஏழு…. அங்கேயும் சுருதி ஏழு…! என்று போட்டுக் காட்டியிருப்பார்கள்.
2.ஆறாவது அறிவு ஏழாவது நிலை பெறுவது.
3.ஆக ஞானத்தின் தன்மை ஏழாவது நிலை அடைந்தவன் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரம்…!

இதை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்து விட்டு சாமி (ஞானகுரு) நன்றாகச் சொன்னார் என்று விட்டுவிடாதீர்கள்…! சொன்ன முறைப்படி அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அருளைப் பெருக்கி இருளை அகற்றும் சக்தியாக உங்களுக்குள் வளர்க்க வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்விலும் அவர்கள் இருள் நீங்க வேண்டும்.

அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் தன்மையை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

இரத்தம் போகும் பாதையில் அடைப்புகளை அகற்றும் எளிய பயிற்சி

 

நம்முடைய சுவாச நாளங்களில் இரத்தம் போகும் பாதைகளில் அடைப்புகள் இருக்கலாம் சந்தர்ப்பத்தில் நாம் சுவாசிக்கும் போது புகையிலை… அதாவது
1.சில புகை பிடிப்பவருடைய அந்தப் புகையை நாம் சுவாசித்து இருந்தாலும்
2.நாம் புகை பிடிக்கவில்லை என்றாலும் கூட அவர்கள் பிடிக்கின்றார்கள் என்று எண்ணினால் போதும்
3.சுவாசத்தின் வழி கூடி சுவாசப் பையிற்குள் சென்று இரத்தம் போகும்… அந்த நாளங்களிலே உறைந்து விடும்.

இப்படி உறைந்து விட்டால் அந்தப் பக்கம் இரத்தம் போகவில்லை என்றால் இன்னொரு பக்கம் போகும். அங்கேயும் அடைபட்டால் அடுத்த பக்கம் போகும்.

இப்படி மூன்று பாகமும் அடைபட்டால் நிரையீரலுக்கோ மற்ற உறுப்புகளுக்கோ இரத்தம் போகாதபடி இருதய வலி வருகின்றது நெஞ்சு வலி அதிகமாகின்றது மடியக் கூடச் செய்து விடுகின்றது.

ஆகவே… இருதய வலி இருந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்து சிறிது நேரம் பின்னுக்குச் சாய்ந்து
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவாற்றலுடன் மூச்சை எடுத்து… அடக்கி… மீண்டும் அந்த மூச்சை விடுங்கள்.
2.மூச்சை இழுங்கள் ஒரு நொடி நிறுத்துங்கள்
3.பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த மூச்சை வெளியில் விடுங்கள் “மெதுவாக..”

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டுமென்று சுவாசத்தை எடுத்து உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும். இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை அதை நீக்கிவிடும்.

அதிகமான தொல்லையாக இருந்தால் ஒரு நான்கு அல்லது ஐந்து பேர் தியானம் செய்யக்கூடியவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள். விபூதியையோ நீரையோ முன்னாடி வைத்துத் தியானித்து
1.அவருக்கு இருதய வலி நீங்கி இருதயம் சீராக இயங்கி அவர் நலம் பெற வேண்டும் என்று அதைக் கொடுங்கள்.
2.அதை அவர் குடிக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும் என்று உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.
3.அவர் இருதயம் சீராக இயங்க வேண்டும் அவர் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதையெல்லாம் சீர்படுத்த வேண்டும். ஏனென்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று அவர்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அது நல்லதாகும்.

இந்தப் பயிற்சிகளை ஒரு ஐந்து நிமிடம் செய்யலாம். பயிற்சி முடித்த பின் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண அலைகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்த வேண்டும்.

நம் உடல் அப்பொழுது தூய்மையாகும். பற்று மகரிஷிகள் பால் செல்கின்றது. உடல் நலம் பெறுவதற்கு இந்த முறைப்படி செய்து கொண்டோம் என்றால் அது நல்லதாகும். கூட்டுத் தியான்ங்களில் இதைச் செயல்படுத்துங்கள்; (ஆனால் கர்ப்பமாக இருப்பவர்… ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக்கூடாது.)

குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தால் அருள் ஞான நூல்களை எடுத்து அதிலுள்ள கருத்துக்களைப் படியுங்கள். மகரிஷிகள் அருள் சக்தி கருவில் வளரும் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

தாய் தந்தையரும் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களும் தியானம் செய்துவிட்டு
1.அந்தக் குழந்தைகள் ஞான குழந்தைகளாக வளர வேண்டும் என்று ஆசி கொடுத்தால்
2.அந்த மகரிஷியின் உணர்வுகள் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமையும்.
3.குடும்பத்திலே அந்த அருள் ஞானி உருவாவான். இதை நாம் செயல்படுத்துவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தலை வலி.. மேல் வலியுடன் வருவார்கள்.. காசுக்காக வேண்டி கட்டிட வேலைக்கு வருவார்கள். அவர்கள் வீட்டில் அங்கே அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கலில் சண்டை இருக்கும்.

இங்கே கட்டிட வேலைக்கு வந்தவுடன் தன் வேலைக்காக ஒரு அரைச் செங்கலை எடுத்துக் கட்ட வேண்டும் என்றால் அது தனியாக இருந்தாலும் அதை எடுக்க மாட்டான். ஒரு முழுச் செங்கலை எடுத்து உடைப்பான்.

சில கொத்தனார்களைப் பார்த்தால் அவர்கள் அந்த வெறுப்பான நிலையில் இருந்தார்கள் என்றால் இப்படித்தான் செய்வார்கள். கீழே கிடைக்கும் அரைச் செங்கலை எடுக்கச் சொல்ல மாட்டான். முழுதாக இருப்பதையே எடுத்து உடைப்பான்.

அட.. ஏம்பா…? என்று நாம் கேட்டால் நம்மை முறைத்துப் பார்ப்பான். இயற்கை…! அந்த உணர்வுகள் எதைச் செய்யும் என்றால் இப்படித் தான்.

இப்படிக் கட்டப்பட்ட கட்டிடத்திற்குள் நாம் உட்கார்ந்தால் அதிலே மேக்னட் உண்டு. அந்தக் காந்தப் புலன் தான் ஈர்க்கும். பார்த்தது.. பேசியது… எண்ணியது… சண்டையிட்டது… எல்லாவற்றையும் இழுத்து அதற்குள் பதிவாக்கி இருக்கும். இதிலே எந்த உணர்வு கொண்டு வந்தாலும் தாங்க முடியாது.

ஆனால் அந்தக் காந்தம் இல்லை என்றால்
1.நீங்கள் கட்டிடத்திற்குத் தண்ணீர் விட்டால் உள்ளுக்குள் போகாது.
2.அந்தக் காந்தம் இல்லை என்றால் இந்தக் கலவையின் தன்மை இரண்டையும் சேர்த்து ஒட்டாது.
3.இதிலேயும் காந்தப் புலன் உண்டு… அதிலேயும் காந்தப் புலன் உண்டு.
4.நீருக்குள் காந்த நிலை இல்லை என்றால் ஒன்றுக்குள் இணைந்து வேலை செய்யாது.

நமக்குள் காந்தப் புலன் ஒற்றுமை இல்லை என்றால் உணர்வின் தன்மை ஒன்றி வராது. ஆக ஒன்றுடன் ஒன்று எதிர்நிலை ஆகப்படும் பொழுது தான் அது விரிவடையும் தன்மை வந்து உடலையே குறைக்கிறது… உடலைச் சிறுக்கச் செய்கிறது… கரைக்கிறது…!

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கட்டிடத்தில் வேலை செய்பவர்கள் அவர்கள் சிரமப்பட்டுத் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்வது தொழில்.
1.இருந்தாலும் அந்தத் தொழில் செய்யும் இடத்தில்
2.பல குறை உணர்வுகள் பதிவாகும் பொழுது அது சாக்கடையாகின்றது.

குடும்பத்திலோ தொழில் செய்யும் இடத்திலேயோ நண்பர்களிடமோ காசு கொடுத்தது சரியானபடி திரும்ப வரவில்லை என்றால் என்ன செய்வோம்..? அந்தக் கோபத்தில் தான் இருப்போம்.

இங்கே கட்டிட வேலைக்குச் சிமெண்ட் வேண்டும். ஆனால் இல்லை என்கிற பொழுது அது வருவதற்குக் கொஞ்சம் காலதாமதமாகி விட்டால் வேலை பார்ப்பவர்களிடத்தில் வந்து சாடுவோம்.

சிமெண்டைச் சிந்தினாலே உடனே நமக்குக் கோபம் வரும். சீக்கிரம் கட்டி முடிக்கலாம் என்று சொன்னால் சிமெண்ட் கிடைக்கவில்லை என்பான். அதே மாதிரி ஜல்லி வேண்டும் என்று சொல்லியிருப்போம். அன்று அந்த ஜல்லி வரவில்லை…! என்றால் மனம் ஒடுங்கிவிடுகிறது.

இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது வெறுத்துச் சொல்வோம். இந்த உணர்வு எல்லாம் கலந்து தான் அவன் கட்டிடம் கட்டுவான்.

இந்த மாதிரிக் கட்டிய சில வீட்டுகளில் பாருங்கள். வீட்டுக்குள் போனால் நிச்சயம் சண்டை இருக்கும். இதைப் போன்ற நிலைகளை எல்லாம் யார் தூய்மைப்படுத்துவது…?

சிறு துளிகளாக மழை பெய்தாலும் ஒன்று சேர்ந்து அது பெரும் வெள்ளமாக வரும் பொழுது சாக்கடையை எல்லாம் அடித்துச் சென்று விடுகின்றது.
1.அதாவது அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை
2.நாம் எல்லோரும் சேர்ந்து கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து
3.இந்தப் புது மனைக்குள் பாய்ச்சப்படும் பொழுது அது தூய்மைப்படுத்தப்படுகின்றது.
4.எங்கள் புதுமனை முழுவதும் தரையிலும் சுவரிலும் மகரிஷிகள் அருள் சக்தி படரவேண்டும்.
5.இந்த வீட்டில் படர்ந்துள்ள தீமையான எண்ணங்கள் நீங்க வேண்டும்.
6.இந்த வீட்டிற்கு வருபவர்களுக்கெல்லாம் சந்தோஷம் ஏற்படவேண்டும்,

இந்த வீட்டில் குடியிருப்பவர்களும் இந்த வீட்டிற்கு வருகை புரிபவர்கள் எல்லோரும் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும். என்று இப்படி அவசியம் கூட்டுத் தியானம் செய்யவேண்டும்.

ஆனால் நாம் வழக்கமாக கிரகப்பிரவேசம் அன்று எல்லோரையும் வரச் சொல்கிறோம். யாகத்தை வளர்த்து அதில் பல பொருள்களைப் போட்டு புகையை மூட்டுகிறோம். நெய்யை ஊற்றுகிறோம். பஸ்பத்தைப் போடுகிறோம். சில குச்சிகளைப் போடுகிறோம். இதைத்தான் செய்கிறோம்.

நீங்கள் கூட்டுத் தியானம் செய்து உயர்ந்த குணங்கள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து சுவாசித்து அந்த அலைகளை நீங்கள் எல்லோரும் சேர்ந்து வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள்.
1.இது உங்களுக்கு உயர்வைக் கொடுக்கும்.
2.இதை நீங்கள் செய்து உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யாகங்கள் செய்த வீடெல்லாம் நன்றாகத் தானே இருக்க வேண்டும். “நன்றாக இருக்க வேண்டும்..!” என்று தானே புதுமனை புகும் பொழுது யாகத்தைச் செய்கிறோம்.

அதே மாதிரி ஜாதகம் பார்த்த பின் தானே கல்யாணம் செய்கின்றோம். அவர்களும் நன்றாகத் தானே இருக்க வேண்டும். ஜாதகத்தைக் குறி வைத்து நாம் பார்க்கப்படும் பொழுது கணவன் மனைவி நன்றாகத் தானே இருக்க வேண்டும்.

ஆனால் ஜாதகத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்தாலும்… அதற்குப் பின் எத்தனை பேர் எத்தனை குடும்பங்கள் பிரிந்திருக்கின்றது…?

திருமணமானாலும் முழுமையாக ஒற்றுமையாக இருப்பார்கள் என்று தானே ஜாதகப் பொருத்தம் பார்த்துச் செய்கிறார்கள். இடைவெளியில் ஏன் மடிந்துவிடுகின்றார்கள்…? இதற்கு எங்கே போவது…?

மனச் சாந்திக்கு வேண்டுமானால் பார்க்கலாம். அவன் சொன்ன உணர்வை எடுத்து நாம் என்ன செய்வோம்…? ஐயோ.. ஜாதகம் பார்க்கவில்லை என்றால் தப்பு வந்துவிடும்..! என்ற பய உணர்வு வந்துவிடும்.

அப்படி எண்ணவில்லை என்றாலும்
1.ஜாதகப்படி எடுத்துக் கொண்டால் இரண்டு எதிர்ப்பு நிலையும் ஒன்றாகும்.
2.அப்பொழுது எதிர்மறை இரண்டும் ஒன்றாகும் பொழுது
3.எதிரியின் நிலையாக ஒருவருக்கொருவர் கோபக்காரராக இருந்தால் இரண்டும் ஒத்துப் போகும்.
4.ஆனால் ஒருவர் சாந்தமாக இருப்பார்.. ஜாதகப்படி சாந்தம் என்றும் இருக்கும். இவரோ கோபக்காரராக இருப்பார். இது இரண்டும் ஒத்து வராது என்பான்.
5.அடிக்கடி வேதனைப்படுத்தக்கூடியவர் அதே மாதிரி இன்னொருவர் வேதனைப்படுபவர் இவர்கள் இரண்டும் வந்தால் ஜாதகப்படி பொருந்தும் என்பான்.
6.கல்யாணம் செய்த பின் அங்கே வேதனைப்படுத்தும் நிலைகள் தான் மிஞ்சும்.

ஆக ஜாதகப் பொருத்தம் எதிலே இருக்கிறது…?
1.இந்த உணர்வின் நினைவு வரப்படும் பொழுது அதுவும் விஷத் தன்மை இதுவும் விஷத் தன்மை.
2.இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளும்… இப்படித் தான் பொருத்தம் பார்ப்பது இருக்கிறது.

பொருத்தம் பார்த்துச் செய்த வீடுகளில் எல்லாம் எப்படி இருக்கிறது…?

அதுவும் அங்கே திருமணம் செய்யும் பொழுது இத்தனை மணிக்கு.. இந்த நிமிடத்திற்குள் செய்ய வேண்டும்…! என்று சொல்லிவிடுவான்.

இங்கே அலங்காரம் செய்து உட்கார்ந்து யாகம் எல்லாம் முடிக்கும் பொழுது தாலி கட்டும் முன்னாடி இன்னும் இரண்டு நிமிடம் தான் இருக்கின்றது… ஒரு நிமிடம் தான் இருக்கின்றது…! என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

நேரமாகி விட்டது என்ற இந்த நினைவுடனே தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாப்பிள்ளை வீட்டிலும் பெண் வீட்டிலும் பாருங்கள்… அலங்காரம் செய்து வருவதற்கு முன்னாடி… அந்த நேரம் வரும் பொழுது எதைப் பார்க்கின்றார்கள்…?

ஒரு நிமிடம் தான் இருக்கிறது.. அதற்குள் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றார்களே…! என்ற வேகத்தில் கொட்டு மேளம் வாசிப்பவர்களைப் பார்த்துக் “கொட்டுய்யா… கொட்டுய்யா…! மேளத்தைத் தட்டுய்யா.. தட்டு…!” என்று சப்தம் போடுவார்கள்.

அங்கே அந்த மந்திரம் சொல்வது முழுமையாகச் சொனனர்களா…? இல்லை. அந்தப் பரபரப்பு தான் வருகிறது. தாலி எடுத்துக் கொடுத்துக் கட்டச் சொல்லும் பொழுது என்ன செய்கிறார்கள்…?

இங்கே பணம் எவ்வளவு கொடுப்பார்கள் என்று நினைப்பான். ஏழ்மையான வீட்டில் இப்படி நினைப்பான். பணக்கார வீட்டில் நிறையக் கொடுப்பார்கள் என்பதால் அதைப் பற்றி எண்ணுவதில்லை.

தாலி எடுத்துக் கொடுக்கும் முன் அவனுக்கு ஒரு நூறு ரூபாய்த் தாளைக் கொடுங்கள். உடனே அவனுக்கு ஒரு மகிழ்ச்சி வரும். அதற்காக வேண்டித் தான் தாலியை மற்றவர்கள் எடுத்துக் கொடுப்பதற்குப் பதில் இவனே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பான்.

அதே சமயத்தில் கட்டும் பொழுது அந்த உணர்வுகள் ஒலியாகப் பாய்ச்சப்பட்டு அவன் கையில் தான் கொடுக்கின்றோம். இந்த மந்திர ஒலியைப் பாய்ச்சிய பின் இறந்தால் அதே மந்திரத்தை ஜெபித்தால் அதன் வழியில் கைவல்யப்படுத்திக் கொள்ளத் தான் இந்த மந்திரம் உதவும்.

நல்லதானாலும் சரி கெட்டதுக்குப் பயன்படுத்தினாலும் சரி. இந்த உணர்வுகளைப் பதியச் செய்து இந்த நிலை ஆக்கப்படுகின்றது.
1.ஆனால் இதைத் தானே நம்புகிறோம்
2.ஜாதகம் பார்த்து மந்திரம் சொல்லிக் கல்யாணம் முடிக்க வேண்டும் என்று தானே விரும்புகிறோம்.
3.அதன் வழி இப்படித்தான் இருக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கம் இந்த எண்ணங்களைப் பற்றி சீதாராமா…! எண்ணங்கள் எப்படி உருப்பெறுகிறது…? எண்ணத்தின் உணர்வுகள் எப்படி ஆகிறது…? எந்தக் குணமோ அந்தச் சக்தி எப்படி இயக்குகின்றது…?

இராமனைப் பற்றியும் ஒற்றுமையைப் பற்றியும் கல்யாணராமனையும் எங்கே பார்ப்பது…? அதற்கு மாறான எண்ணங்களைத் தான் அங்கே (யாகத்திலும் சரி ஜாதகக் குறிப்பிலும் சரி) உருவாக்குகின்றான்.

தாலி கட்டும் முன் ஒவ்வொருவரும் பரபரப்பாகப் பார்ப்பார்கள். நேரம் ஆகிவிட்டது… ஆகிவிட்டது…! என்றே எண்ணுவார்கள்.

ஏனென்றால் இத்தனை மணிக்குள் முடிக்க வேண்டும். இருந்தாலும் அவருடைய சொல்லின் நிலைகளே இங்கே மாற்றம் ஏற்படும்.
1.இதிலேயும் பகைமை…
2.நல்ல உணர்வுகளைச் சேர்த்து இன்னொரு உணர்வையும் சேர்த்தவுடன் இப்படிப் போராட்டம்.

இந்தப் பகைமை உணர்வுகள் தனக்குள் வந்த பின் இந்த மாதிரிச் செய்துவிட்டார்களே…! என்று இதற்குள் கச..கச…கச..கச….! என்று அந்த உணர்ச்சிகள் மாறிவிடும்.

ஒரு நான்கு பேர் அந்தப் பற்றுடன் எண்ணினால் போதும். அந்தக் கசகசப்பு வரும். அப்படியானால் திருப்பூட்டும் பொழுது எந்த உணர்வை ஊட்டுகிறோம்…?

ஆனால் திருப்பூட்டும் பொழுது எப்படி இருக்க வேண்டும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோருடைய உணர்வுகளையும் ஏகோபித்த நிலைகள் கொண்டு வரச் செய்து
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததி போல் நாங்கள் வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றிட வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ண வைக்க வேண்டும்.

பின் இந்த இரு மனமும் ஒரு மனதாகும் இந்தத் தம்பதியர்கள்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்
2.வசிஷ்டரும் அருந்ததி போல் மணமக்கள் ஒன்றி வாழ வேண்டும்
3.நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும்
4.சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி வாழ்ந்திட வேண்டும்
5.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும்
6.அவர்கள் அன்னை தந்தையரின் அரவணைப்பில் அவர்கள் இருவரும் வாழ வேண்டும்
7.அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும்… மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இருவருக்குள்ளும் விளைய வேண்டும்
9.இருவரது எண்ணமும் இரண்டற ஒன்றி அவர்கள் கருவிலே வளரும் குழந்தை அருள் ஞானக் குழந்தையாக வளர வேண்டும்
10.இந்த உலகைக் காத்திடும் உத்தமக் குழந்தையாக வாழ்ந்திட வேண்டும்
11.அந்தப் பண்பு கொண்ட அருள் ஞானக் குழந்தையாக வாழ்ந்திட வேண்டும் என்று
12.திருமணத்திற்கு வந்த உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லோருடைய வாக்கையும் இப்படிப் பதியச் செய்ய வேண்டும்.

இப்படி நடக்கும் இந்தத் திருமண நாளை அந்தத் தம்பதிகள் எண்ணினாலே முப்பத்தி முக்கோடி தேவாதி தேவர்கள் வாழ்த்தினார்கள்…! என்ற நிலைக்கு வரும்…! எப்படி…?

நமக்குள் இருக்கும் நல்ல குணம் கெட்ட குணம் அத்தனையும் என்ன செய்கிறது..? இதற்குள் ஒடுங்கிவிடுகின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் எல்லோருடைய வாழ்த்தும் அங்கே சேர்க்கப்படும் பொழுது அந்த வாழ்த்தின் தன்மை அங்கே பதிவாகி அந்த மகிழ்ச்சியின் தன்மை அங்கே உருவாகின்றது.

இந்த மாதிரி வாழ்த்துகளின் உணர்வு பதிவான பின் அங்கே “குழந்தை இல்லை…” என்ற சொல்லே வராது…!

இதே மாதிரித் திருமணம் நடைபெறுகிறது என்றாலும் இதைப் போன்று தியானவழி நண்பர்களைக் கூப்பிட்டு சிறிது நேரம் தியானம் இருக்கச் செய்யுங்கள்.

தியானம் இருந்தபிறகு அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போல இந்த மணமக்கள் வாழ வேண்டும். அன்னை தந்தையரோடு அரவணைத்து வாழ வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

தொழில் வளம் பெருக வேண்டும். அவர்கள் மற்றவரை மதித்து நடக்கும் அந்தச் சக்தி மணமக்களுக்குக் கிடைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் இருவரும் பெற வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் இந்தெந்த வழிகளில் நடக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு பத்து பேர் சேர்ந்து அந்த இடத்தில் தியானமிருங்கள்.

நீங்கள் அக்னி குண்டம் வளர்த்து வேள்வி நடத்தித் திருமணம் செய்கிறீர்கள் அல்லவா. நீங்கள் ஒரு பத்துப் பேர் சேர்ந்து இந்த தியான முறைப்படி சொல்லி வாழ்த்துக் கூறுங்கள்.
1.தாய் தந்தையரிடம் தாலியை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கள்.
2.அந்த மணமக்களை (உங்கள் குழந்தைகளை) வாழ்த்துங்கள்.

பெண் வீட்டாரும் பிள்ளை வீட்டாரும் மற்றவர்களும் இணைந்து நாங்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி வாழ்ந்தோம்.
1.எதிர்காலத்தில் மணமக்கள் நீங்கள் இருவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் குறைகளை நீக்கி வாழுங்கள். தெரிந்துணர்ந்து வாழுங்கள்.
3,உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று இத்தகைய உயர்ந்த எண்ணத்தைச் செலுத்தித் திருப்பூட்டச் செய்யுங்கள்.

அதே நேரத்தில் தியானமிருந்தவர்கள் அனைவரும் யாகம் வளர்ப்பதற்குச் சமம். யாகம் வளர்க்க வேண்டும் என்றால் புற நிலை. ஆனால் நீங்கள் இதை அகத்திற்குள் இருந்து உயர்ந்த அலைகளைப் பாய்ச்சுகின்றீர்கள்.

மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும். வசிஷ்டரும் அருந்ததியும் போல மணமக்கள் வாழ வேண்டும். அவர்கள் இருவரும் என்றென்றும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். அவர்கள் குழந்தைகள் ஞானக் குழந்தையாக எதிர்காலத்தில் வளர வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். அந்த அலைகள் அங்கே படரும்.

இது தான் ஞானிகள் காட்டிய திருப்பூட்டும் முறை…!

சிதம்பரத்தைச் சாதாரணமாக நினைக்கின்றோம்…!

 

தில்லையம்பதி என்ற நிலையில்… சிதம்பரத்தில் ஆலயம் அமைத்திருக்கும் இடத்தைப் பற்றிய “உண்மையை (சரித்திரத்தை)” நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை உணர்த்தியவர் யார்…? திருமூலர்.

1.”மூலத்தின் உண்மைகளை…” ஒவ்வொரு அணுவின் இயக்கத்தின் உண்மைகளை அறிந்தவன் என்பதற்குத்தான் திருமூலர் என்று பெயர் வந்தது.
2.அண்டத்தின் இயக்கம் பிண்டத்தில் இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்று அவர் கூறியுள்ளார்.

அது இந்த ஸ்தலத்திலே… தில்லையம்பதியிலே காட்டப்பட்டது.

பதஞ்சலியாக அரசாட்சி பரிந்து கொண்டிருக்கும் பொழுது யாகங்களையும் கேள்விகளையும் பல மந்திர நிலைகளையும் செய்து வரும் போது “கூடுவிட்டு கூடுபாயும்…” உணர்வுகளைக் கற்றுக் கொண்டவன் அவன்.

பதஞ்சலி அரசனானக ஆட்சி செய்து வந்தாலும் அந்த உடலை மற்ற அரசர்கள் இறக்கும்படி செய்தால்… அதிலிருந்து தப்பி இன்னொரு உடலுக்குள் தாவிச் செல்லும் வித்தையை கற்றுக் கொண்டவன் அவன்.

“தன்னுடைய சுகத்தை எதிலேயுமே மறையாது…” பல உடல்களில் தாவி மகிழ்ந்து வாழ முடியும்…! என்று பதஞ்சலி அதைச் செயலாக்கி அதன் வழி அவன் அரசாட்சி செய்து வந்தான்.

1.அவனுடைய மனைவி இன்னொரு அரசனுடைய மகள்தான்… அவளுக்கு அஞ்ச வேண்டும்
2.நாட்டைக் காக்கும் சேனாதிபதிகள் பலர் இருந்தாலும் அவன் உதவியை நாட வேண்டும்.
3.அரசன் இட்ட சட்டத்தை மக்களுக்குப் புகுத்தினாலும் போர் முறை வரும் பொழுது
4.சேனாதிபதி எதிராகத் திரும்பி விட்டால் அவனுக்கு அஞ்சி அவளிடம் நயந்தே செயல்பட வேண்டும்.
5.தான் சட்டத்திற்கு மாறாக நடந்தால் மக்கள் கொதித்து எழுவார்கள்… ஆக மக்களைக் காக்கும் எண்ணம் வர வேண்டும் என்று
6.இப்படிப் பல நிலைகளிலிருந்து தன்னைக் காத்திடும் நிலைக்காகக் கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்தினான்.

அதிலே இரு வகை உண்டு.

உருவாக்கிக் கொண்ட மந்திர ஒலிகளை ஒருவர் சொல்வார் என்றால்… உடலுக்குள் அவன் சொன்ன நிலையில் எடுக்கப்படும் பொழுது இந்த ஆன்மா அந்த உடலுக்குள் சென்று அந்த உடலைச் செயல்படுத்தும்… இது ஒரு முறை.

அதே சமயம் யாருடைய தயவும் இல்லாதபடி நஞ்சு கொண்ட பாம்பின் உடலுக்குள் புகுந்து… நகர்ந்து சென்று வேறு ஒரு உடலின் மீது இந்த விஷத்தைப் பாய்ச்சி அந்த உடலைச் சுருங்கச் செய்து… அதன் வழி கொண்டு அந்த உடலை ஆட்சி புரியும் நிலை… இது ஒரு முறை.

இப்படித்தான் பதஞ்சலி செய்து கொண்டான்.

எதிரிகள் வரும் பொழுது எதிரிகளிடமிருந்து மீள்வதற்காகப் பதஞ்சலி தன் சேனாதிபதியிடம் விவரத்தைச் சொல்கின்றான்.

போர்ப்பயிற்சியாக நான் செல்கிறேன்… என்னுடைய சரீரத்தை ஒளித்து வைத்துவிடு. இந்த உடலை விட்டு நான் பாம்பின் உடலுக்குள் ஏவி வெளியில் செல்கின்றேன்.

இந்த உடலை நீ பாதுகாத்து வைத்திருப்பாய் என்றால் நான் மீண்டும் இந்த உடலுக்குள் வர உதவும். இன்னென்ன பக்குவத்தில் நீ வைத்துக் கொள்…! என்று சேனாதிபதியிடம் பதஞ்சலி சொல்கின்றான்.

சரி… என்று சொன்னவுடன்… பதஞ்சலி அந்த உடலை விட்டு வெளிவந்து பாம்பின் உடலுக்குள் செல்கிறான். ஆனால் அவ்வாறு சென்ற பின் சேனாதிபதி அரசனின் உடலைப் பொசுக்கி விடுகின்றான்.

இப்படி… பதஞ்சலி மீண்டும் தன் உடலுக்குள் வர முடியாத நிலை ஆன பின்பு தான் நாடு முழுவதும் அவன் சுழன்று வந்து “தில்லையம்பதியில்… சிதம்பரத்தில் வந்து சேர்கின்றான்…!

இங்கிருக்கக்கூடிய ஆலயத்தில் விநாயகர் கோவில் ஒன்று உண்டு. அந்த ஆலயத்திற்குள் அங்கே பாம்பின் உடல் கொண்டு வருவதும் போவதுமாக இருந்தான்.

இப்பகுதியில் அக்காலத்தில் நந்தவனம் என்றும் உண்டு. பதஞ்சலி அவைகளைச் சுற்றி வருவதும் காடு மேடுகளில் அலைவதும் மற்றவர் கண்களுக்குச் சிக்காது அலைந்து கொண்டிருந்தது.

எப்படியும் மனித ரூபம் பெற வேண்டும் என்று அதற்குண்டான சந்தர்ப்பத்தை எடுத்து… ஒரு மாடு மேய்ப்பவனைத் தீண்டி இந்த விஷத்தின் துணை கொண்டு அந்த உடலுக்குள் புகுகின்றது.

அப்பொழுது மாடு மேய்ப்பவனுடைய உணர்வுகள் பலவீனம் அடைகின்றது இவனுடைய உணர்வு அந்த உடலை ஆட்சி புரியத் தொடங்குகிறது.

ஆட்சி புரிந்தாலும் இதன் நிலையில் கொண்டு மாடு மேய்ப்பவனுடைய வீட்டுக்குச் சென்ற பின்… அவனுடைய மனைவி இவனுக்கு வேண்டிய உபகாரங்களையும்… சுடு தண்ணீர் வைத்துப் பணிவிடைகளையும் செய்கின்றது.

அதைப் பார்க்கும் பொழுது தான் அவன் திகைக்கின்றான்…!

அரசு வாழ்க்கையில் தான் அரசனாக இருக்கும் பொழுது அரசிக்கு அஞ்சியும் சேனாதிபதிக்கு அஞ்சியும் தான் இட்ட சட்டத்திற்கு மக்களுக்காக வேண்டி அஞ்சியும் எதிரியான அரசனிடமிருந்து தப்ப அஞ்சி வாழ வேண்டிய சூழ்நிலைகளே வந்தது.

1.ஞானிகள் காட்டிய விண்ணுலக ஆற்றலை தன் சுயநலங்களுக்காக மாற்றிய உணர்வுகள் எவ்வாறு ஆனது…? என்று
2.இங்கே மாடு மேய்ப்பவனின் உடலிலிருக்கும் போது… அவன் மனைவி பணிவிடை செய்யும் பொழுது இவனுக்கு அந்தச் சிந்தனைகள் வருகிறது.

அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை தில்லை நடராஜா…! தில்லை என்பது நமது பூமி. அது நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கின்றது.

இந்தப் பூமியின் செயலாக்கங்களில் அந்தச் சுழற்சியின் வேகத்தினால் இங்கே மற்ற உயிரினங்களும் தாவர இனங்களும் எவ்வாறு விளைந்தது…? என்று கற்றுணர்ந்தது தான் தில்லை நடராஜா.

தில்லையம்பலத்தாண்டவா…!
1.இந்த உடலான தில்லையை ஆண்டு கொண்டிருப்பவன் உயிர் என்றும்
2.தில்லை அம்பலம் என்ற இந்த உடலின் தன்மையை உணர்வின் குணங்களால் இயக்கும் நிலைகளும்
3.குணங்களுக்கொப்ப உடலின் இயக்கம் நடனம்… என்று இந்த நடனக் கலையைக் காட்டியவன் திருமூலர்
4.உணர்வுக்கொப்ப உடலின் இசையும் இசைக்கொப்ப உடலின் இயக்கம் என்றும் தெளிவாகத் தெரிந்து மக்களுக்கு வெளிப்படுத்தினார் திருமூலர்.

அவன் சொன்ன தத்துவம்… நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றியது என்பது.

ஆதியிலே… பேரண்டத்தில் விஷத்தின் தாக்குதல் விஷமற்றதைத் தாக்கப்படும்போது வெப்பமாகின்றது. வெப்பம் தாங்காது அணுக்களாகச் சிதறுண்டு ஓடுகின்றது. அந்த ஓடும் நிலைகள் ஈர்க்கும் நிலையில் தான் காந்தம் வருகின்றது.

இது தான் திருமூலம் ஆதியிலே உருப் பெற்ற உணர்வின் தன்மையைத் தெளிவாகக் காட்டுகின்றான்.

இந்த இடம்… தில்லையைப் பற்றிச் சாதாரணமாக நினைக்கின்றோம்…! ஆனால் எவ்வளவு பெரிய சரித்திரத்தைப் படைத்த இடம்…! என்று உணர்ந்தால் சிதம்பரத்தில் இந்த ஆலயத்தில் வணங்கும் முறைகளை நாம் பார்க்கலாம்.
1.தன்னை உணர்தல் என்றும்
2.தான் எடுக்கும் (சுவாசிக்கும்) உணர்வின் இயக்கம் என்றும்
3.வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? என்றும் காட்டிய நிலைகள் தான்
4.தில்லை நடராஜா என்றும் தில்லை அம்பலத்தாண்டவா என்றும் காட்டினார்.

பேரண்டத்தில் இத்தகைய நிலைகள் வரும் பொழுது ஆதி சக்தி என்பது விஷம்… அதனால் தாக்குண்டு வெப்பமாக உருவாகும் பொழுது ஆதி பராசக்தி… வெப்பத்தின் தணலால் தான் நகர்ந்து செல்லும் பொழுது ஈர்க்கும் காந்தமாக விளையும் நிலை ஆதிலட்சுமி…!

திருமூலர் காட்டிய இந்த நிலைகளை…
1.காரணப் பெயரும் காரணத்துடன் இயற்றப்பட்டதையும் நாம் உணர்ந்தால்
2.அந்த மகா ஞானி அமர்ந்த இந்த இடத்திலிருந்து அவருடைய ஆற்றல்களைப் பெற முடியும்.

தன் வாழ்க்கையில் அரசனாக இருக்கும் பொழுது ஆசையுடன் வாழ்ந்த நிலைகளை உணரப்படும் போது… எவ்வாறு அது இழக்கப்பட்டது…? என்றும் நாம் அந்த மெய்யை எதனால் இழந்தோம்…? அதை மீண்டும் எப்படிப் பெற வேண்டும்…? என்று தன்னில் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வைத் தான் அவன் அங்கே வெளிப்படுத்துகின்றான்..

மெய்ப்பொருளைக் கண்டறிந்த அந்தத் திருமூல மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் எடுத்தால் “வாழ்க்கையில் வரும் தீமைகளை…” நீக்க முடியும்.

அதே சமயத்தில்…
1.அந்த மகரிஷியின் உணர்வுகளை அனைவரும் பெற வேண்டும்… பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
2.இந்த வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று
3.சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது இந்த முறைப்படி தியானியுங்கள்.
4.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தவம் இருங்கள்.

ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்தால் இது தான் தவம்.

வெறுமனே ஆண்டவனை அடையப் போகின்றேன் அவன் அருளைப் பெறப் போகின்றேன் என்று அவனையே எண்ணுவதற்குப் பெயர் தவமல்ல…!

ஒவ்வொரு மனிதனையும் ஆண்டு கொண்டிருப்பது உயிர். ஆண்டவனாக இயக்கிக் கொண்டிருப்பதும் எண்ணியதை ஈசனாக உருவாக்கிக் கொண்டிருப்பதும் உணர்வின் சக்தியை அணுவாக உடலாகச் சிவமாக மாற்றிக் கொண்டிருப்பதும் சிவத்திற்குள் சக்தியாக இயக்கிக் கொண்டிருப்பதும் “உயிரே…”

இந்த உடலை ஆள்பவன் யார்…? ஆண்டவன் (உயிர்).
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் மகிழ்ந்திடும் உணர்வை நாம் ஊட்டி
2.மகிழச் செய்யும் பொழுது அந்த ஆண்டவன் அருளை நாம் பெற முடியும்.
3.அதன் வழியில் அனைவரும் மகிழ வேண்டும் என்று நாம் எண்ணினால் அது தவம்.
4.அந்த மகிழ்ச்சி நமக்குள் போற்றும் நிலையாக வந்தால் அந்தத் தவத்தின் பலனை நாம் பெறுகின்றோம்.

ஆலயத்தில் இந்த முறைப்படி நீங்கள் செயல்படுத்துங்கள். ஞானிகள் காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்துவோம். காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுவோம்.

நமக்குள் உள்ள அறியாது புகுந்த நஞ்சின் தன்மையை வளராது தடுப்போம்… உலக மக்களைக் காப்போம்…!

1.அடுத்து வரும் சந்ததியினரின் கருவில் வளரும் குழந்தைகளுக்கு அருள் ஞானிகள் உணர்வைப் போதிப்போம்.
2.அதைப் பூர்வ புண்ணியமாக அமைப்போம்… பிறந்த பின் உலகைக் காக்கும் ஞானிகளாக வளர்ப்போம்.

இதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும். அதே போல நாம் பார்ப்பவருக்கெல்லாம் அதைப் பெற வேண்டும் என்று ஏற்றுக் கொண்டு இதைச் செயலாக்க வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

முதலிலே மூதாதையர்கள் மனிதனாகப் பிறந்தார்கள். தாய் தந்தையரை உருவாக்கினார்கள். தாய் தந்தையர் நம்மை உருவாக்கினார்கள். அந்தக் குல வழியில் தான் நாம் இன்று வந்துள்ளோம்.

நம் உயிர் ஒளியாக ஆனது. நுகரும் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற மனித உடலைப் பெற்ற நாம் நம் மூன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்தச் சூட்சமச் சரீரங்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும். இது தலையாயக் கடமை…!

ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் அவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள். ஒளியின் அறிவாக நிலைத்தவர்கள். பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்.

நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல அருள் ஒளியுடன் ஒன்றி வாழச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்திட நம்முடைய உணர்வுகள் உறுதுணையாக இருந்திடல் வேண்டும்.

உதாரணமாகச் சிலர் எண்ணலாம். இது எப்படிச் சாத்தியப்படும் என்று…!

இன்று விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டரில் அதில் உள்ள நாடாக்களில் எதெனெதன் உணர்வைப் பதிவு செய்கின்றோமோ அதை எல்லாம் சீராக இயக்கிக் காட்டுகின்றது. மற்ற இயந்திரங்களையும் இயக்கும் ஆணைகளையும் அது இடுகிறது. இதை ஒரு இராக்கெட்டில் உள்ள செயற்கைக் கோளுடன் பொருத்திவிடுகின்றனர்.

உதாரணமாக ஒரு கோள் இருக்கிறது என்றால் அல்லது நட்சத்திரம் இருக்கிறது என்றால் எதன் திசைப் பக்கம் இந்தச் செயற்கைக் கோள் அது செல்ல வேண்டுமோ அந்த நாடாக்களில் இங்கே பதிவு செய்துவிடுகின்றனர்.

அந்த நாடாக்களில் பதிவு செய்து இயந்திரத்தில் போட்ட பின் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
1.எத்திசையின் தன்மை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றதோ
2.அந்தத் திசையில் உள்ள கோள்கள் உமிழ்த்தும் உணர்வுகள் இதற்குள் பட்ட பின்
3.அதன் பாதையிலே அது அமைத்து அந்தக் கோளைச் சென்றடைகின்றது இவர்கள் இராக்கெட் மூலம் அனுப்பும் செயற்கைக் கோள்.

அங்கே வட்டமிட்டு அந்தக் கோளின் உணர்வுகளை நுகர்ந்தறிகின்றது. அங்கே தனக்குள் பதிவு செய்யும் அந்த நாடாவின் மூலமாக
1.தரையிலிருப்போர்கள் அதை ஆண்டென்னா போன்று கவர்ந்து இங்கே பதியச் செய்து
2.அதனின் பாதையைச் சீராக அமைத்து உருவாக்குகின்றார்கள்.
3.இப்படித்தான் விஞ்ஞானிகள் செயற்கைக் கோள்களைச் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களுக்கும் அனுப்புகிறார்கள்.

இதைப் போன்று தான் நம் மூதாதையர்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அதனின் துணை கொண்டு அவர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

அந்த அருள் ஞானியின் சக்திகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் “உந்தித் தள்ளி…!” இணையச் செய்ய வேண்டும்.

அங்கே சென்ற பின் இந்த உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது. வழி காட்டிடும் அறிவின் ஒளியாக நிலை கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு அதற்கு வருகின்றது.

1.அதன் வழி கொண்டு அதன் வழியில் நம் முன்னோர்கள் அங்கே வளர
2.அவர்களின் உணர்வுகளை நமக்குள் பெருக்க
3.அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் அருள் ஒளி கொண்டு நம் இருளைப் போக்க நமக்கு உதவுவார்கள்.

இதற்கு முன் நாம் செய்யத் தவறிய நிலைகள் இருந்தாலும் பாசத்துடன் பண்புடன் நம் உடலுக்குள் அந்த உயிரான்மாக்கள் புகுந்து இருப்பினும் அதனை நாம் இந்த வழியில்..
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று
2.நாம் எண்ணும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
3.நமக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்களுக்கும் அது கிடைக்கின்றது.
4.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைய இதனின் வளர்ச்சி அருள் ஒளிச் சுடராக நம்மையும் வாழச் செய்யும்.
5.அதுவும் வளர்ந்து அதனின் உணர்வு கொண்டு நாம் வெளியே சென்ற பின் அந்த ஆன்மாவும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
6.நாமும் அந்த வழியிலேயே சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் தருணம் பெறுகின்றோம்.

இதிலே சொன்ன முறைப்படி செய்வோர் நிச்சயம் இதனை உணரும் பருவம் பெறுவார்கள்.

“நம் குருநாதர் காட்டிய கலாச்சாரத்தை” நாம் உருவாக்க வேண்டும்

 

இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் எத்தனையோ பேரைப் பார்க்க நேருகின்றது… சந்திக்க நேர்கிறது. “அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று நாம் தவம் இருக்க வேண்டும்.

“என்னைப் பார்ப்போருக்கெல்லாம்… நான் பார்ப்போருக்கெல்லாம்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இந்த நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

என் பையன் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்ற நிலையில்
1.கஷ்டத்தை நினைத்துச் சொன்னீர்கள் என்றால் முதலில் இந்தக் கஷ்டம் வரும்.
2.இது கலந்த உடனே மீண்டும் அந்த நினைவைத் தான் தூண்டும்.

ஒருவர் இடைஞ்சல் செய்கின்றார் என்றால்…
1.அந்த இடைஞ்சல் செய்தவனுக்கு மகரிஷிகள் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவன் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால்
2.விஷத்துடன் கலந்து மீண்டும் அவன் செய்தது தான் நினைவுக்கு வரும்.

ஆகவே அதை நாம் மறக்க…
1.மகரிஷிகள் அருள் சக்திகளை முதலிலே எண்ணி எடுத்து
2.நாம் பார்ப்போருக்கெல்லாம் என்னைப் பார்ப்போருக்கெல்லாம்
3.நான் நினைப்பவர்களுக்கெல்லாம் என்னை நினைப்பவர்களுக்கெல்லாம்
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் இப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் எண்ணியவுடன் அந்தச் சக்தி கிடைக்கும்படியாகத் தான் குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

எனக்கு எந்தெந்த சக்திகளைக் குருநாதர் எப்படிக் கொடுத்தாரோ அந்த முறைப்படித் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

முன்பெல்லாம் சிறுகச் சிறுகச் சொல்லி நினைவாற்றலை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பெறும் தகுதியாக ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது
1.அது அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒருமித்த நிலைகளாக நினைவாற்றல் கொண்டு
2.உங்கள் வாழ்க்கையில் குரு அருளால் மகரிஷியின் அருள் ஒளியைப் பெற்று இருளைப் போக்கி
3.மெய்ப்பொருள் காணும் நிலைகளாக அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

ஆலயத்திற்குச் சென்றாலும் அல்லது மற்ற குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் அங்கே நாம் களைத்துப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். போய் அமர்ந்த உடனே அந்தக் களைப்பால் “உஸ்ஸ்ஸ்… அப்பா…!” என்ற பெருமூச்சாகச் சோர்வின் தன்மையை வெளிவிடுகின்றோம்.

அப்பொழுது அந்த நேரத்தில் அந்த இடத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து
2.இந்த இடம் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்.
3.இந்தக் குடும்பங்கள் முழுவதும் மகிழ்ச்சி படர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

எந்த நோயாளியைப் பார்க்கச் சென்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து விட்டு அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் குடும்பத்தில் மகிழ்ந்திடும் செயல்கள் உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.

காலையில் எழுந்திருக்கும் பொழுதும் மற்ற அலுவல்களுக்குச் செல்லும் பொழுதும் தொழில் செய்யும் பொழுதும் இரவு படுக்கப் போகும் முன்பும் ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

தொழில் செய்யும் இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அங்கே மகிழ்ந்த நிலை உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள். எந்தத் தொழில் செய்தாலும் இதைப் போல் நினைவில் கொள்ளுங்கள்.

1.உணவு உட்கொள்ளும் பொழுதும் அந்த உணவுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி படர்ந்து
2.அந்த உணவு எனக்குள் “உடல் நலம் பெறும் சக்தியாகப் பெருக வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

மற்றவர்களின் கஷ்டங்களைப் பார்க்க நேர்ந்தால் அல்லது கேட்க நேர்ந்தால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.நம்மை யார் துன்புறுத்தினாலும் அவர்களுடைய உணர்வு நமக்குள் பதிவாகாதபடி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டு
3.என்னைப் பார்ப்பவருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்
4.என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்
5.எல்லோரும் போற்றும் நிலையாக அவர் வளர வேண்டும் என்று எண்ணத்தைப் பரப்புங்கள்.

உடலில் உபாதைகள் எது இருந்தாலும் அந்த உபாதைகளை எல்லாம் மறந்து விடுங்கள்…!

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.புருவ மத்தியில் எண்ணி உணர்வுகளை உடலுக்குள் கொண்டு போங்கள்.
2.உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

நம் இன்னொன்றையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று வாழ்ந்த ரிஷிகள் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து குடும்பத்தில் கர்ப்பமற்றிருக்கும் காலங்களில் தத்துவங்களைப் போதித்தும்
1.விண்ணுலக ஆற்றலை… அந்த அகஸ்தியன் கண்டறிந்த உணர்வைச் சிலரும்
2.வியாசகர் காட்டிய தன்மையைச் சிலரும் “கருவிலே வளரும் குழந்தையிடத்தில் உருவாக்கினார்கள்…”

பண்டைய காலத்தில் இவ்வாறு வளர்ந்தவர்கள் அனைவரும் “தவயோகிகளாகவும் பெரும் ரிஷிகளாகவும் உருவாக்கப்பட்டு…” அந்தக் குழந்தைகள் வளர்ச்சியாக வளர்ச்சியாக அதை வளர்த்த தாய் தந்தையர் பிறவா நிலை அடையவும் அதுவே காரணமாக அமைந்தது.

தன்னால் முடியவில்லை என்றாலும் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட சக்தியை அன்று உருவாக்கினார்கள்.

1.இதைப் போன்ற கலாச்சாரத்தை நாமும் நம் குடும்பத்தில் கொண்டு வந்து
2.அருள் ஞானிகளை உருவாக்கி அவர்கள் துணையால் நாமும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.
3.இனி வரக்கூடிய எதிர்கால சந்ததியினரும் அந்த வழியிலேயே வளரும்படி நாம் செய்தல் வேண்டும்.

ஆகவே
1.நம் குரு காட்டிய வழிகளில் அவர் ஆற்றலை நமக்குள் பெற்று
2.எல்லோருக்கும் மகிழ்ந்திடும் நிலைகள் பெற நாம் தியானிப்போம்
3.எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தவமிருப்போம்.

அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை எப்படிப் பெற்றான்…?

 

ஆதியிலே அகஸ்தியரின் தாய் தந்தையர்கள் விஷ ஜந்துக்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் விஷ முறிவு வேர்களையும் அரைத்து உடலில் பூசுகின்றார்கள்.

சந்தர்ப்பத்தால் கருவுறும் பொழுது அந்த விஷ முறிவு வேர்களின் மணங்கள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகச் சேர்கின்றது.

பிறந்த பின் அவனுடைய வளர்ச்சி வர வர இவனைக் கண்டாலே மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகிறது.

அதே சமயத்தில் கடும் விஷத்தன்மை கொண்ட தாவர இனங்களை அவன் தாய் தந்தையர் நுகரும் பொழுது அந்த அதிகமான விஷம் கலந்து உடல் ஏற்றுக் கொள்ளாத நிலையில் மடிகின்றனர்.

1.கருவிலே வளரும் சிசுவிற்கு இந்த உணர்வின் தன்மை கலந்த நிலைகள் வளர்ச்சியின் தன்மை பெறுகின்றது.
2.ஆனால் தாய் தந்தையருக்கோ… மனிதனாக உருப்பெற்ற முழுமையான நிலைகள் விஷத்தன்மை ஆன பின் செல்கள் குறைகின்றது… மடிகிறது.
3.அகஸ்தியனுக்கு ஐந்து வயதாகும் போது அவர்கள் இருவருமே இறந்து விடுகின்றார்கள்.

தாய் தந்தையரை அகஸ்தியன் ஏக்கத்துடன் எண்ணுகின்றான். அவர்களோ இப்படி ஆகிவிட்டது… குழந்தை தனித்து இருப்பானே…! என்ற எண்ணத்தில் அந்த இரண்டு ஆன்மாக்களும் இவன் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

ஏக காலத்தில் இறந்து இரண்டு ஆன்மாக்களும் பிள்ளை மீது இருக்கும் பற்றால் காத்திடும் உணர்வு கொண்டு இங்கே வந்து விடுகின்றது. அதன் வழி தான் அகஸ்தியன் விண்ணை நோக்கி ஏங்கிப் பார்க்கின்றான்.

உதாரணமாக…
1.மிளகாய்த்தூளை (நெடி) சில பேய் பிடித்தவர்களுக்கு முன் போட்டு… உற்றுப் பார்க்கச் சொல்லுங்கள்… அது தும்மாது.
2.அதே போல் விஷமான பொருள்களை நுகரச் செய்தாலும் அதற்கு ஒன்றும் செய்யாது.

ஏனென்றால் அது விஷத்தைக் குடித்து அதனால் இறந்து இன்னொரு உடலுக்குள் புகுந்திருந்தால் “இந்த விஷத்தைக் காண்பித்தால் அதற்கு ஆனந்தமாக இருக்கும்…”

இதைப் போன்று தான்
1.அகஸ்தியன் உடலில் இந்த இரு ஆன்மாக்கள் இருக்கப்படும் பொழுது தான் விண்ணின் ஆற்றலை அவன் பருகுகின்றான்.
2.சூரியனைப் பார்க்கும்போது அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு டேப்பிலே பதிவு ஆவது போன்று அவனுக்குள் பதிவாகின்றது.

அதிலிருந்து பரவும் நிலைகளையும்… அதன் தொடர் வரிசை நிலைகளில்… இந்தப் பிரஞ்சத்தையே உற்றுப் பார்க்கும் உணர்வின் ஆற்றல் முதல் மனிதன் அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது.

அதனால் தான் “அணுவின் ஆற்றலை அறிந்தவன் அகஸ்தியன்…” என்று சொல்வது. அவன் கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அனைத்துமே இந்தப் பூமியிலே பரவி உள்ளது

அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக அறிகின்றான்.
1.விண்ணை நோக்கி ஏகும் பொழுது நம் பூமி விண்ணிலிருந்து துருவத்தின் வழி கவரும் சக்தியைப் பூமியிலிருந்து உற்றுப் பார்க்கின்றான்.
2.அது கவரப்பட்டுப் பூமிக்குள் பரவுவதையும் காண்கின்றான்… ஆனால் அதை இவன் நுகர்கின்றான்.
3.அதன் உணர்வை அறிவாக அறிகின்றான்… அந்த உணர்வின் அணுக்கள் அவனிலே விளைகிறது.

அத்தகைய விண்ணின் ஆற்றல் வலுப்பெற்ற பின் அதே உணர்வுகள் இவனை அறியாமலேயே “நஞ்சின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாறும் நிலை வருகின்றது…”

காரணம்… தாயின் கருவிலேயே நஞ்சினை தன்மை அடக்கும் தன்மை வந்ததால் அந்த உணர்வு வரப்படும் பொழுது தாய் தந்தையரே இவனுக்குக் கடவுள் ஆகின்றார்கள்.

இதன் வழி கொண்டு தான் அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்று இவன் துருவ மகரிஷியாகின்றான். விண்ணின் ஆற்றலைப் பெற்று… இந்த உயிரான்மா அது வலுப் பெற்ற பின் அங்கே போகின்றது.

அகஸ்தியன் தாய் தந்தையரோ குழந்தை மீது பாசமாக வரும் பொழுது குழந்தையின் உடலுக்குள் வருகின்றது.
1.பின் இவன் விண்ணுக்குச் செல்லப்படும் பொழுது தன் தாய் தந்தையை விண்ணுக்கே அழைத்துச் செல்கின்றான்.
2.இது இயற்கையின் இயக்கம் என்று குருநாதர் காட்டினார்.

ஆகவே… மனிதர்களாக இருக்கும் நாம் இப்பொழுது எதைச் செய்ய வேண்டும்…? என்பது தான் முக்கியம்.

பக்தி கொண்டு நல்லவர்களாக இருப்பினும் பிறருடைய கஷ்டங்களை அதிகமாகக் கேட்டுணர்ந்தால் நம் நல்லது மறைகின்றது. கஷ்டம் அதிகமாக வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் மாற்றமாகின்றது.

இப்படி… சந்தர்ப்பத்தால் தீமைகள் நம் உடலுக்குள் புகுந்து அது விளைந்து நோயாக எப்படி மாறுகின்றதோ இதைப் போன்று ஒரு அழுக்குத் தண்ணீரில் நன்னீரை விடும் பொழுது அழுக்கு நீர் குறைகின்றது.

பல காலம் நம் வாழ்க்கையில் பலருடைய கஷ்டங்களைக் கேட்டு வந்த நாம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அடிக்கடி நுகர்ந்தோம் என்றால் அந்தத் தீமை சிறுகச் சிறுகக் குறையும்.
2.பின் அது வலுப்பெற தீமையை நீக்கிடும் ஆற்றலே நமக்குள் பெருகுகின்றது.

வராகன் சாக்கடையைப் பிளந்து தன் வாழ்க்கையில் நல்லதை நுகர்ந்து நுகர்ந்து… தீமையைப் பிளந்திடும் உடலாக மனிதனாக வளர்ச்சி பெற்றது.

இதைப் போல… தீமைகளைப் பிளந்த அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து அதை எல்லையாக வைத்து அங்கே துருவ நட்சத்திரமாக நிலை கொண்டிருக்கும் அதனைப் பின்பற்றியவர்கள் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்.

அதனைப் பின்பற்றினால் அந்த ஈர்ப்பு வட்டத்திற்கு நாமும் செல்கின்றோம். உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது.

ஏனென்றால் எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலிலே நீடித்த நாள் நாம் இருக்கப் போவதில்லை. ஆகவே… எது நிலையானது…? அந்த மகரிஷிகளின் அருள் ஒளி தான்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எப்படியும் பெற வேண்டும். அவர்களைப் பின்பற்றி நீங்கள் செல்ல வேண்டும்.

காரணம்…
1.வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள் நம்மை எப்படியெல்லாம் மாற்றுகின்றது…?
2.உயர்ந்த நிலைகள் பெறுவதை எப்படி அது மாற்றியமைக்கின்றது…? என்பதை உணர்ந்து
3.நீங்கள் அந்த அருள் வழியில் என்றும் வாழ வேண்டும் என்பதற்கே தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு பக்கம் காற்று மண்டலத்தில் ஒரு விஷம் கலந்த பொருளை விஞ்ஞானத்தால் உருவாக்குகின்றனர்.

ஒரு பேட்டரி செல் தனக்குள் காந்தத்தை உருவாக்கும் சக்தி பெற்றது. அதை எலெக்ட்ரான் (மின்சாரம்) ஆக மாற்றக்கூடிய சக்தி பெற்றது. அதிலே கலந்த இந்த விஷத் தன்மை கொண்ட பொருளை நீக்குவதற்காக நெருப்பிலே இட்டுப் புகையாக மாற்றுகின்றார்கள்.

இந்தப் புகையின் தன்மை வெளி வரும் பொழுது சூரியனின் காந்தப் புலன் அறிவு அதைக் கவர்கின்றது.
1.அது எந்தத் திசை நோக்கிச் செல்கிறதோ அந்தத் திசையில் நாம் செல்வோம் என்றால்
2.அந்த உணர்வை நாம் சுவாசிக்கப்படும் பொழுது நம் சுவாசப் பைக்குள் சென்று
3.அந்தக் கெமிக்கல் நமக்குள் இருக்கும் உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்களை மடியச் செய்கின்றது.
4.அப்படி மடிந்து விட்டால் அந்த உறுப்புகளின் திறன் இழக்கப்படுகின்றது.

இது நம்மை அறியாமலேயே சுவாசத்தின் வழி வரக்கூடிய தீமைகள்.

நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் நமக்குள் மூச்சுத் திணறலும் கடும் நோய்களும் உருவாகின்றது.

ஆனால் நாம் சுவாசித்த கெமிக்கலின் உணர்வுகள் இரத்த நாளங்களுக்குள் சென்று இரத்தத்தில் கலந்து விட்டால்
1.இரத்தத்தைச் சுத்திகரிக்கும் கிட்னிக்குள் இந்த இரத்தம் புகுந்து வடிகட்டப்படும் பொழுது
2.அதிலிருந்து வெளியே வரும் பொழுது அந்த வடிகட்டும் திறன் இழந்து கிட்னியைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது
3.நாம் சந்தர்ப்பத்தால் சுவாசித்த கெமிக்கல்.

இப்படி இரத்தத்தைச் சுத்திகரிக்கும் நிலை தவறி விட்டால் நம் இரத்த நாளங்களில் தெளிவாக்கும் நிலைகள் இழந்து விடுகின்றது. இதைப் போல் நம் உடலில் நம்மை அறியாமலே வாழ்க்கையில் நுகரும் சக்திகளால் தீமைகள் உருவாகின்றது.

நமக்குள் உருவான இந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது இது நம் சிறு மூளை பாகம் வரையிலும் சுழன்று கொண்டேயிருக்கும்.

இதனின் உணர்வின் தன்மை வளர்ச்சி அடைந்த பின் இந்த வளர்ச்சி நம் உடல்களிலே ஒவ்வொரு நிமிடமும் தன் பசிக்காக ஏங்கும்.. எப்படி ஒரு கோழி கருவுற்ற பின் கேறுகின்றதோ இதைப் போல தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.

ஒரு மனிதன் தனக்கு வேண்டிய காரியம் நடக்கவில்லை என்றால் திரும்பத் திரும்ப அந்த வேதனை உணர்வுகளை நுகர்கின்றார். இந்த உணர்வின் தன்மை 48 நாள் ஆகிவிட்டால்
1.கோழி கருவுற்று தனக்குள் முட்டையாக மாறுவது போல்
2.நாம் நுகர்ந்த உணர்வு கருவுற்று அதனின் முட்டையாக உடலுக்குள் மாறுகின்றது.

முட்டையாக ஆன பின் அதனின் செயலாக்கங்கள் அது உள்ளுக்கே அடைபட்டிருக்கின்றது. நம் இரத்த நாளங்களிலே அது சுழலப்படும் பொழுது அது சிறுகச் சிறுக நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் ஊடுருவி இரத்தத்தின் வழியாக எல்லாவற்றுக்கும் உணவாகக் கொடுக்கும் நிலை பெறுகின்றது.

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அது இரத்த நாளங்களில் செல்லும் பொழுது நல்ல அணுக்கள் இதை ஏற்க மறுக்கின்றது. அதனின் வட்டத்தில் சென்ற பின் நல்ல அணுக்களும் சோர்வடைகின்றது.
1.அவ்வாறு சோர்வடையத் தொடங்கிவிட்டால்
2.நம் உடலும் சோர்வடைகின்றது… நம் எண்ண வலுவும் குறைந்து விடுகின்றது.

எதனைப் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோமோ… அந்த உணர்வை நுகர முடியாது சென்று விட்டால்… உடலுக்குள் நல்ல உணர்வுகளை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

சோர்வடைந்தால் மீண்டும் அது நலிவடைந்து கொண்டேயிருக்கும்.

சிலரை நீங்கள் பார்க்கலாம். சாப்பாடு நிறையச் சாப்பிடுவார்கள். இருந்தாலும் சோர்வின் தன்மை வரப்படும் பொழுது உறுப்புகளில் அஜீரணச் சக்தி ஏற்படும்.
1.இந்த உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உடல் நலியும் தன்மையே வரும்.
2.ஏனென்றால் நல்ல அணு செல்கள் அது வாடும் தன்மை வருகின்றது.
3.இது எல்லாம் இந்த இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள்.

ஆகவே இதைப் போன்று நாம் எடுக்கும் இந்த உணர்வுகள் அது வந்த பின் இது இடைமறித்துச் செல்லும் பொழுது நம் இருதய வாயில்களில் இது ஊடுருவுகிறது.

நம் இருதயமோ மற்ற இடங்களுக்கெல்லாம் அழுத்தம் கொடுத்து எல்லா உறுப்புகளுக்கும் இரத்தங்களை அனுப்புகின்றது.

1.வெறுப்படையும் உணர்வைக் கொண்ட ஒரு அணுக் கரு
2.அந்த இருதயத் துடிப்பிற்குள் சென்று அதனின் நுழைவாயிலில் அது புகுந்து விட்டால் போதும்.
3.அணுவாக மாறிய நிலையில் வெறுப்பான உணர்ச்சிகளை அதன் வழி கொண்டு பரப்பிக் கொண்டேயிருக்கும்.

இப்படிப் பரப்பும் பொழுது
1.சிறுமூளைக்குள் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டும்.
2.தூண்டும் பொழுது (அந்த உணர்ச்சி) உயிரான காந்தப் புலன்களுக்குள் அந்த அறிவின் தன்மையை இயக்குகின்றது.
3.பின் கண்… காது… மூக்கு… உடல்.. என்ற நிலைகளில் இந்த உணர்ச்சிகளை நம் உயிர் ஒலி அலைகளாக மாற்றுகின்றது.

அதன் வழிக் கொண்டு நாம் இதை மூச்சாக வெளியிட்ட சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அதே இனமான சக்திகளை ஈர்க்கும் சக்தி பெறுகின்றது. நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

ஆன்மாவாக மாற்றிய நிலைகளிலிருந்து எப்படி ஒரு கோழி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சுகளாக வந்த பின் அதற்குக் கூவி இரையை எடுக்கும்படிக் கற்றுக் கொடுக்கின்றதோ அதே போல்
1.நமக்குள் உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும் பொழுது
2.நம் உயிர் அதற்கு உணவை ஊட்டிச் சாந்தப்படுத்துகின்றது.

உதாரணமாக நாம் வேதனை கொண்ட உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்ட பின் நீங்கள் “இதெல்லாம் வேண்டாம்… மகிழ்ச்சி கொண்ட நிலைகள் பெறவேண்டும்…! என்று எண்ணினாலும் அதன் உணர்வின் தன்மை வேகத் துடிப்பு கூடும்.
1.அந்த வேதனை உணர்வின் வேகம் அதிகரிக்கும்.
2.எந்தப் பாகத்தில் அந்த உறுப்புகளுக்குள் அது தேங்குகின்றதோ
3.அந்த உறுப்புகளில் வேதனையான ஒலிகளை எழுப்பிக் கொண்டேயிருக்கும்.
4.அதனால் நாம் சிந்தனையும் இழந்துவிடுவோம்.
5.அங்கங்களை இயக்கக்கூடிய சக்தியும் குறைந்து விடும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. ஆனால் நாம் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து சுவாசிக்கும் உணர்வுகள் இப்படிப் பல நிலைகளையும் நோய்களையும் உருவாக்கிவிடுகின்றது.

இதிலிருந்து மீள வேண்டுமா இல்லையா…?

வள்ளி திருமணத்தில் உள்ள முக்கியமான தத்துவம்

 

சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காகச் சாஸ்திரங்களிலே “வள்ளி திருமணத்தைக் காட்டுகிறார்கள்…”

வள்ளி திணைக் காட்டினைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறாள். தான் விளைய வைத்த பொருளை பறவைகள் கொத்தித் திங்காதபடி பாதுகாப்புக்காகக் காவல் புரிகின்றாள்.

அவள் யார்…? வேடுவனின் மகள்.
1.நாம் பல கோடிச் சரீரங்களில் வேட்டையாடி… அதில் விளைந்த சக்தி தான் மனித உடலிலிருந்து வெளிப்படக்கூடிய சக்தி வள்ளி
2.வல்லவன்… வல்லவி – வல்லி என்று பெண்பாலைக் காட்டுகின்றார்கள் வள்ளி என்று.

அதைத் தனித்துப் பிரித்துக் காட்டி வள்ளி திருமணம் என்ற காவியமாகப் படைத்து “எது தன்னுடன் இணைந்து செயல்பட வேண்டும்…?” என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நாம் நினைப்பது அது காவியம் என்று…! ஆனால் சாதாரண மக்களுக்கும் புரியும் தன்மைக்குத் தான் அதைக் காட்டுகின்றார்கள்.

வேடுவன் என்றால் பல கோடிச் சரீரங்களில் நாம் வேட்டையாடி அதிலே விளைந்த சக்தி தான் உடலில் உருப் பெற்ற ஆறாவது அறிவு. அது தான் வள்ளி.

திணைக்காட்டிலே காவல் இருக்கின்றது. தான் விளைய வைத்த பொருளை மற்ற உயிரினங்கள் எடுத்துச் செல்லாது பாதுகாக்கின்றது. வெகு தூரத்திலிருந்து கவண் கொண்டு வீசுகின்றது.

நமக்குள் இருக்கும் இந்தப் பாதுகாக்கும் நிலை வள்ளி.
1.அந்த வள்ளியை முருகன் காதலிக்கின்றான்…
2.அதாவது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு வலிமைமிக்க சக்தியைத் தனக்குள் நேசிக்க வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்டு உடல் பெற்றவன் முருகு. நாம் மாற்றியமைக்கும் உடல் பெற்றவர்கள். அதைத் தான் முருகன் என்றும்
1.தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்று காவியப் படைப்பு வருகின்றது.
2.தன்னைப் பாதுகாக்கும் உணர்வை நேசித்தோம் என்றால் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

திணைக்காட்டில் குருவியை விட்டு விட்டோம் என்றால் அதிலே விளைவதைத் தின்றுவிடும். அது போல் நம்மை ஏசுவோரையோ மற்றவர்களையோ நாம் எண்ணுகிறோம் என்றால் அந்த உணர்வுகள் நம்முடைய நல்ல உணர்வைத் தின்றுவிடும்.

நாம் வேதனைப்படும்படியான சொல்லை ஒருவன் சொல்லிவிட்டால் அந்த உணர்வின் சத்து நமக்குள் வந்து… நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களை நல்ல அணுக்களை அது தின்றுவிடும்.

வேதனை என்று எடுத்துக் கொண்டால் உடலில் டி.பி.நோய் வருகின்றது நல்ல அணுக்களை அது தின்று விடுகிறது.

அதனால் தான் வள்ளி…!
1.நம்மைப் பாதுகாக்கும் உணர்வினை நாம் நேசித்தால் உடலுக்குள் சென்ற பின்… உயிர் அதைத் தெய்வ ஆணையாக
2.நமக்குள் அந்தக் காத்திடும் உணர்வின் செயலாக இந்த உடலை இயக்குகின்றது… அது தான் தெய்வானை.

இச்சா சக்தி…! தன்னைப் பாதுகாக்கும் நிலைகளை இச்சைப்படும் பொழுது இந்த உணர்வு நம் உடலுக்குள் சென்று கிரியை. எதன் எண்ணத்தால் நாம் இச்சைப்படுகின்றோமோ அதன் ஞானமாக இந்த உடலை இயக்கும்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி என்று தெளிவாக நமக்குச் சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

என்னை இப்படிப் பேசி விட்டானே என்னைக் கேவலப்படுத்துகின்றானே என்ற நிலையில் அதை நாம் இச்சை பட்டால் அவனை விடுவேனா என்ற நிலைகள் அதைக் கூட்டும் பொழுது உடலுக்குள் இது தெய்வ ஆணையாகச் சென்று விடுகின்றது.

அவன் எந்தெந்தக் கெடுதல் செய்தானோ அது நமக்குள் புகுந்து அதன் வழி நம்மை இயக்குகின்றது அதன் ஞானமாக நம் செயலும் உணர்வும் அணுக்களும் உடல் உறுப்புகளும் விளைகின்றது.

நாம் வள்ளி திருமணத்தைச் சாதாரணமாகப் பார்த்துச் சிரிப்பதிலும் கைதட்டுவதிலும் தான் இருக்கின்றோமே தவிர சாதாரண மக்களும் உள்பொருளைப் புரிந்து வாழ்க்கையில் நீ எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உண்மையைக் காட்டக்கூடிய காவியத் தொகுப்பு தான் அது.

ஆகவே நாம் எதை இச்சைப்பட வேண்டும்…?

1.ஆறாவது அறிவின் வலிமையால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இச்சை அது மேலே பட வேண்டும்.
2.அந்த உணர்வின் சக்தி நமக்குள் இருக்கும் பொழுது தெய்வ ஆணையாக நமக்குள் செயல்படும் சக்தியாக வரும்
3.அதன் ஞானமாக அந்த உணர்வுகள் இந்த உடலில் இயக்கப்பட்டு அந்தப் பண்பு கொண்ட நம்மை அந்த வழியிலே அது அழைத்துச் செல்லும்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி…! சொல் அது மூன்று தான் ஆனால் எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அதன் செயலாகக் கிரியை ஆகி அதன் ஞானமாக நம்மை வளர்க்கும் என்ற பொதுச் சொல்லாகக் காட்டினார்கள்.

ஆகவே… எதிலேயும்… நாம் எதை இச்சைப்பட வேண்டும்…? என்ற தத்துவம் அங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தன்னைக் காக்கும் வழிமுறை எது…? என்று அன்று ஞானிகள் சொன்னார்கள்.

ஆலயத்திற்கு சென்று நம் குறைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் அங்கே சொல்லி அதை வளர்க்கக்கூடாது.

ஆறாவது அறிவின் துணை கொண்டு… இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்… அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நாம் யாரையோ குறை கூறுகின்றோம்
2.எவரையோ குறை கூறுகின்றோம் என்று இருக்கலாம்.
3.ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவாக அந்தக் குறையான உணர்வுகளை நம் உடலில் உயிர் உருவாக்கிவிடும்.

யாரைக் குறையாக எண்ணினோமோ அந்தக் குறை உணர்வின் அணுக்களாக மாறுகின்றது. அது நாளடைவில் நம் இரத்தத்தில் கருவின் முட்டையாக மாறுகின்றது.

அது முட்டையாக மாறி…
1.எந்தெந்த உணர்வுகளில் எந்தெந்த உறுப்புகளில் தேங்கி வெடித்து அணுவாக மாறுகின்றதோ
2.அதனின்றே உணர்வின் தன்மை இது இருப்பிடமாக வைத்து
3.அதன் துணை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி இந்த இரத்தநாளங்களின் வழியாக உயிருக்கு அனுப்புகின்றது.

உயிருக்குள் தூவப்படும் பொழுது நாம் யாரைக் குறையாக எண்ணினோமோ அவை அனைத்தையும் உணவாகக் கொடுத்து இந்த உடலின் உறுப்புகளைக் குறையாக மாற்றி நம்மை வேதனைப்படச் செய்யும்.

பின் அந்த வேதனையிலிருந்து நாம் தப்புவதே மிகவும் கடினம். ஆகவே தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஒருவரைப் பற்றி அந்தக் குறையின் உணர்வு வரப்படும் பொழுது அவர் வாழ்க்கையிலேயும் ஒரு தொழில் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நிலைகளிலோ மேல் வலி… நோய்… மற்ற குறை… எல்லாமே இருக்கும். அவரில் விளைந்த உணர்வுகள் இங்கே இருக்கின்றது.

அவரைக் குறையாக எண்ணிக் கொண்டிருந்தால் அந்தக் குறையைத்தான் இதிலிருந்து நாம் நுகர முடியும். அவர் முதலில் நம்முடன் அன்பு கொண்டு பாசம் கொண்டு பழகியிருந்தால் அந்தக் குறைகளை வேகமாக இழுத்துவிடும்.

ரேடியோ டி.வி.க்களில் ஒலி, ஒளி அலைகளைப் பரப்பப்படும் பொழுது அதிலே எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ அந்த ஸ்டேசனைத் தான் எடுக்கும்.

அதைப் போல் தான் ஒருவருடன் நாம் பழகப்படும் பொழுது அந்தப் பதிவின் துணை கொண்டு நமக்குள் அவருடைய உணர்வுகள் எளிதாக வந்துவிடும்.

சுவை மிக்க பாலாக இருந்தாலும் அதற்குள் விஷத்தைக் கலந்து விட்டால் குடித்தால் அந்தப் பாலுக்கு வலு ஏது…? அந்த விஷத்தின் தன்மை போல் தான் உணர்வின் எண்ணங்கள் தூவப்பட்டு அங்கே விஷத் தன்மையை வளர்த்துவிடும்.

இன்றைய செயல் நாளைய சரீரமாகிவிடும். அதைத் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று தெளிவாக்குகின்றார்கள்.

நாம் எடுக்கும் உணர்வுகள் அணுவின் தன்மை அடைந்து விட்டால் தன் உணவின் தன்மையை அது எடுத்துத் தன் இனத்தின் தன்மையைப் பெருக்கப்படும் பொழுது அதன் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் அதிகரித்து நமக்குள் உருப்பெறும் உணர்வுகளை அது உருவாக்கி
1.நாம் எதை எண்ணினோமோ
2.அந்த எண்ணத்தின் வழியாகவே… அடுத்த சரீரத்தைப் பெறச் செய்யும்.

ஆகையினால் பிறரைப் பற்றிக் நாம் குறை கூறும் நிலையோ பிறருடைய நிலைகளை எடுத்து கொண்டால் “தான் உயர்ந்தவன்…!” (நல்லவன்) என்ற நிலைகள் இருப்பினும் அதை மாற்றிவிடும். அதாவது
1.பாதாம் உயர்ந்ததாக இருப்பினும்
2.அதை விஷத்தில் துவட்டி உணவாக உட்கொண்டால்
3.நம்மை மடியச் செய்துவிடும்… பாதாமிற்குச் சக்தியில்லை.
4.ஏனென்றால் விஷத்தின் தன்மையே ஆற்றல் கொண்டது.
5.ஒரு விஷத்தின் இயக்கமே உலகத்தின் இயக்கம்.

சூரியன் விஷத்தின் நிலையால் சுழற்சியின் வேகம் கூடினாலும் அதிலே உருவாகும் உணர்வுகள் நஞ்சினைப் பிரித்திடும் நிலை வருகின்றது.

சூரியன் தன் சுழற்சியால் ஏற்படும் உணர்வுகள் கொண்டு அந்த நஞ்சின் மேல் மோதப்பட்டு வெப்பத்தின் தணல் கூடப்படும் பொழுது விஷத்தைப் பிரித்து விடுகின்றது. (சூரியன் என்றால் நாராயணன்)

விஷத்தைப் பிரித்த பின் அது சிதறி ஓடினாலும் இந்த வெப்பத்தால் உருவான நிலைகள் “ஈர்க்கும் காந்தம்…” என்ற நிலைகள் வருகின்றது. அந்தக் காந்தத்திற்குப் பெயர் லட்சுமி.

காந்தமாகப்படும் பொழுது நகர்ந்து சென்று கோள்களின் விஷத் தன்மையைத் தனக்குள் (லட்சுமி) கவர்ந்து கொண்டாலும் விஷத்தை இந்தக் காந்தம் கவர்ந்து கொண்டால் அது “இலட்சுமணா…”. அது தான் ஒரு அணுவிற்குள் இருக்கும் இயக்கச் சக்தி…!

காந்தத்தால் கவர்ந்து கொண்ட நிலையாக இவ்வாறு ஒரு அணுவின் இயக்கமாகச் சூரியனிலிருந்து வெளிப்படுவதை (நாராயணன்) இந்த உலகத்தில் தன் ஒளியை அனுப்பிக் கொண்டேயிருக்கின்றது.

இப்பொழுது நான் (ஞானகுரு) பேசுகின்றேன் என்றால் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் சீதாலட்சுமியாக மாறுகின்றது. விஷம் அந்தச் சத்தின் (நாம் பேசியதை) மணத்தை வெளிப்படுத்தும் பொழுது அது ஞானமாகின்றது. அந்த ஞானத்தின் வழி கொண்டு தான் அந்த அணுவின் இயக்கம் இருக்கும்.

எதன் வழி கொண்டு எதனில் உருவானதோ அதன் வழி கொண்ட ஈர்ப்புக்குள் சென்று அதை வளர்க்கும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! ஒரு அணுவிற்குள் இருக்கும் விஷத்தின் இயக்கத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதைப் போல் தான் நாம் எண்ணும் எண்ணங்கள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.வேதனை என்ற உணர்வுகளோ
2.ஒருவரை வேதனைப்படுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டு தன்னை மறந்து அதைச் சொன்னோம் என்றால்
3.நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்கி இரத்த நாளங்களில் சுழலச் செய்கின்றது.

அதே போல்..
1.பிறரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணங்களோ
2.பிறரைத் துன்பப்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களோ
3.பிறர் துன்பப்படுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணங்களை எவர் எடுத்தாலும் சரி
4.நானே பெரிய சக்தி பெற்றவனாக இருந்தாலும் அந்த விஷத்தை உருவாக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது
5.எனக்குள் இருக்கும் நல்ல குணங்களை உருவாக்கிய அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும் நிலைகளே வரும்.

நல்லவைகள் எதைச் செய்தாலும் விஷத்தின் ஈர்ப்புக்குள் சென்று அந்த அணுக்களும் (விஷத்தை) உட்கொள்ளா நிலைகள் மறுத்து அந்த அணுக்கள் சோர்வடையத் தொடங்கிவிடும்.

அது சோர்வடைந்து விஷத்தின் தன்மை ஆட்கொண்டால் அனைத்தும் விஷத் தன்மை கொண்டதாக மாறிவிடுகின்றது. விஷத் தன்மையாக மாறிய பின் நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் விஷமான உயிரினங்களாகத் தான் பிறக்க நேரும்.

அதைப் போன்ற நிலைகள் ஆகாது தடுக்க வேண்டும் என்பதற்குத் தான்
1.விஷத்தை ஒடுக்கிய… நஞ்சினை வென்ற…
2.அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.உங்களுக்குள் மீண்டும்… மீண்டும்… மீண்டும்… மீண்டும்… ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி எடுத்து உங்களுக்குள் சேர்த்து உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.
1.இது ஒன்றும் கஷ்டமில்லை.
2.சிறிது நாள் பழகி விட்டால் பின் தன்னாலேயே இது வரும்.

அகஸ்தியன் உணர்வுகள் மீண்டும் இந்தத் தென்னாட்டிலே தழைக்கின்றது

 

மனிதருக்குள் பதிவான அசுரத் தன்மைகளை மாற்றுவதற்குக் குருநாதர் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் சொல்லும்… நமது நாட்டில் தோன்றிய முதல் மனிதன் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்தான். உணர்வின் தன்மை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் நிலை கொண்டுள்ளான்.
1.இருளைப் போக்கி ஒளியின் சிகரமாக என்றும் அவன் வாழ்வது போன்று நம் தென்னாட்டிலே மீண்டும் இது தழைக்கின்றது.
2.மற்ற நாடுகளில் இல்லை… தென்னாட்டில் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கலந்த இந்தக் கலாச்சாரங்கள் விளைகின்றது.
3.அதன் அடிப்படையில் தான் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு அந்த அகஸ்தியன் உணர்வை உணர்த்துவதும்… உணரச் செய்வதும்.
4.அவர்கள் வளர்ந்தால் அந்த மெய்ப் பொருளின் நிலைகளில் அவருடைய வளர்ச்சியில் நாமும் பெறலாம்.
5.அந்த உணர்வுகளை இங்கே படரச் செய்யவும் முடியும்…. ஆகவே அதை நாம் வளர்த்தல் வேண்டும்.

தியானத்தில் இருப்பவர்கள் எந்தக் குடும்பத்தில் தொடர்பு கொண்டாலும் அங்கே கர்ப்பம் என்று தெரிந்தால் கருவில் உருவாகும் அந்தக் குழந்தைகள் “அருள் ஞானக் குழந்தைகளாக வளர வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

அழகான சாமி படங்கள் எத்தனையோ இருக்கின்றது. அது போன்ற அழகான குழந்தையாக வளர வேண்டும். மகாலட்சுமி போன்று… மகா சரஸ்வதி போன்று சர்வ ஞானம் பெற வேண்டும்.

ஆறாவது அறிவின் தன்மை பெற்ற நிலையில் இருளைப் போக்கும் மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லி அந்த ஞானிகள் காட்டிய வழியினைச் சொல்லுங்கள்.

குடும்பத்தில் மகரிஷிகள் உணர்வுகள் படர வேண்டும். குடும்பத்தை ஒற்றுமையாக்கும் சக்தி கருவில் வளரும் இந்தக் குழந்தை பெற வேண்டும். உலகில் ஒன்றி வாழும் இந்த உணர்வின் சக்தி அந்த குழந்தையின் கருவிலே விளைய வேண்டும் என்று எண்ணிச் சொல்லுங்கள்.

1.அந்தக் குழந்தை வளர வளர வளர தென்னாட்டில் வளரும் அத்தகைய குழந்தைகள் எந்நாட்டவரையும் காக்கும் சக்தியாக வரும்.
2.அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்தது போல எந்நாட்டவரும் அந்த ஆற்றலைப் பெறும் தன்மையும்
3.அதன் வழியில் மண்ணுலகில் வரும் நஞ்சினை வெல்லும் சக்தியும் பின் வரும்.
4.நாம் முன் செல்கிறோம்… பின் வருவோரின் நிலைகளூம் அதே வழியில் செல்லும்.
5.ஏனென்றால் இனம் இனத்தைத் தான் வளர்க்கும்.

எதிலே எடுத்துக் கொண்டாலும் ஒரு செடி வளர்ந்தால் தன் இனத்தை வளர்க்கின்றது. தன் இனத்தின் சத்தை தன் வித்திற்கே உணவாகக் கொடுக்கின்றது.

இதைப் போல தான் தீமைகள் மனிதனுக்குள் விளைந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை தன் இனத்திற்கு அதையே உணவாக ஊட்டி தீமையின் விளைவாகவே இயக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எல்லோரையும் மீட்க வேண்டும். பன் மடங்கு ஞானிகளை உருவாக்க வேண்டும். உங்கள் சொல்லால் செயலால் இதை வழிப்படுத்துங்கள்.

இரவிலே தூங்கும் போது ஆத்ம சுத்தியை எடுத்துக் கொண்டு
1.முடிந்த மட்டும் இந்த உலகம் அந்த அகஸ்தியன் சென்ற அருள் வழியில் இப்படித்தான் வரவேண்டும் என்று தியானியுங்கள்.
2.தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்…? என்று யாம் சொன்ன இந்த உபதேசத்தின் உணர்வைக் கருத்தில் கொள்ளுங்கள்.
அந்த நினைவினை எண்ணி வளர்த்துக் கொள்ளுங்கள். இது எல்லோராலும் சாத்தியமானது தான்.
1.சிறிது நாளைக்குச் சொல்லிப் பாருங்கள் தன்னாலே வந்துவிடும்.
2.அப்பொழுது உங்கள் உணர்வுகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் உலாவலாம்.

“இந்த அற்புதங்களை…” மற்றவர்களுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். உங்கள் சொல்லைக் கேட்டு மற்றவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.

1.சாமி மட்டும் பார்த்தேன் என்ற நிலைகளை…
2.சாமி பார்த்ததை எங்களாலும் பார்க்க முடியும்.
3.சாமி பார்வையால் தீமைகள் போகும்… “சாமி சொன்ன வழியில் என் பார்வையால் தீமைகள் போகும்…” என்ற நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.

அந்த வளர்ச்சியை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

உங்கள் மூச்சு சாதாரணமானதல்ல…! அந்த உணர்வுகள் இந்த உலகில் படரும்.
1.நீங்கள் ஒவ்வொருவரும் தவக்கோலம் பூண்டு உலக மக்கள் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இதைப் பதிவு செய்யுங்கள்.
2.அவர்களுக்குள்ளும் அது விளைகின்றது… அவர்களுக்குள் விளைய வேண்டும் என்ற எண்ண அலைகள் இங்கே பரவும்.
3.இதனுடைய பெருக்கம் கூடக் கூட உலகில் எதிர்காலத்தில் வரும் தீமைகள் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து விலகும்.

நமக்குள் முந்திய உணர்வின் தன்மை ஒடுங்கும்… எது நமக்குள் சேர்ந்திருந்ததோ அது கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்கும்.

இதை எல்லாம் நிச்சயம் பெற முடியும் என்ற இந்த நம்பிக்கையுடன் நீங்கள் செய்ய வேண்டும். குரு அருள் உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆடு மாடு மற்றவைகள் எல்லாம் தனக்குள் உருவாகும் விஷத்தின் தன்மை கொண்டு கடினமான தட்டைகளை (தாவர இனங்களை) தனக்குள் உருவாகும் உணர்வின் தன்மை அதை அடிமைப்படுத்தி பிஸ்கெட் போலக் கரைத்து உணவாக்கிக் கொள்கின்றது.

கரைத்துத் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் அதற்குள் இருக்கும் விஷம் கலந்த உணர்வின் சத்தையும் தனக்குள் எடுத்து
1.வலுவான உடலாகத் தன் உடலை மாற்றுகின்றது.
2.ஆனால் அதே சமயத்தில் அதிலிருந்து வெளிப்படும் மணம் சாணம் நல்லவைகளாக இருக்கின்றது.

பல பல விஷ மூலிகைகளையும் ஆடு உணவாக உட்கொள்கின்றது. பின் அந்தச் சாணத்தை அது வெளியிடும் பொழுது எடுத்து நாம் நுகர்ந்து பார்த்தால் நமக்குள் இருக்கும் நஞ்சுகளை அது முறித்து அதை அடக்கிடும் அந்தச் சக்தி பெறுகின்றது.

1.அந்தச் சாணத்தில் வெளிப்படும் மணத்தை நாம் நுகரப்படும் பொழுது
2.நம் இரத்தங்களிலே இது கலக்கப்பட்டு
3.நம்முடைய சுவாசப்பைகளிலேயோ மற்ற உறுப்புகளிலேயோ இருக்கும் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கிடைக்கின்றது.

இதை நீங்கள் பார்க்கலாம்.

அதே சமயத்தில் அந்தச் சாணத்தை வைத்து நம் வீட்டை மெழுகும் பொழுது புவியின் வெக்கையால் அலைகள் வெளிப்படும். அதன் மீது நடந்தால்
1.வீட்டில் இருக்கும் துன்பமான உணர்வுகளை
2.நம் பாதத்தால் கவரப்படும் இந்த உணர்வுகளை அடக்கும் சக்தி பெறுகின்றது.
3.அதனுடைய மணங்களுக்குத் தீமைகளை அடக்கும் சக்தி வருகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் மனித உடலிலோ நாம் சுவைமிக்க உணவை உணவாக உட்கொண்டாலும் நம் உடலுக்குள் சென்ற பின் நம் உடலின் தன்மையோ நஞ்சைப் பிரித்துவிட்டு நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.

அப்படி நல்ல அணுக்களாக மாற்றப்படும் பொழுது தான் நாம் எதனையும் நிதானித்து தெரிந்து கொள்ளும் தன்மையை அடைகின்றோம்.

ஒரு விளக்கு அது எரியப்படும் பொழுது வெளிச்சமாக இருக்கின்றது. அதன் மீது ஒரு கருப்பான பொருளை ஒட்டிவிட்டால் கருப்பின் நிறமே வருகிறது. சிவப்பான பொருளை ஒட்டிவிட்டால் சிவப்பின் நிறமே வருகின்றது.

இதைப் போல் தான் நம் கண்களின் வழியாக வேதனை என்ற உணர்வின் தன்மையைக் கவர்ந்து விட்டால் இந்தக் கண்கள் அந்த வேதனையைத் தான் கவரும் திறன் பெறுகின்றது. அதன் உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அது வருகின்றது.

வேதனை என்ற நிலைகளை நீக்க விஷத்தை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிருடன் வேண்டி அந்த உணர்வை ஏங்கப்படும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் ஒளியின் அறிவாக நமக்குள் கண்கள் காட்டுகின்றது.

அந்தக் கண்ணின் நிலைகளில் கொண்டு நாம் எந்தத் தீமையை வென்ற உணர்வை எண்ணுகின்றோமோ இந்தக் காற்றிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினால் நஞ்சினை மாற்றிடும் சக்தி பெறுகின்றது.

ஆகவே நாம் எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை ஒளியாக மாற்றும் அந்தப் பருவம் பெறுதல் வேண்டும்.

இனி வரக்கூடிய காலங்களில் “எல்லோரையும் காக்கக்கூடிய உணர்வை…” நமக்குள் வளர்க்க வேண்டும்

 

ஒவ்வொரு குடும்பத்திலும்
1.அவர்களுடைய கஷ்டங்களைப் பார்த்தால் தியானிக்க வேண்டும்…
2.அவர்கள் நலம் பெற வேண்டும் என்று தவம் இருக்க வேண்டும்.
3.நலமாக வேண்டும் நலமாக வேண்டும் என்ற இந்தத் தவம் அது நமக்குள் நல்லதாக்குகின்றது.

ஆகவே சரியாக்க வேண்டும் என்று தான் நாம் எண்ணுகின்றோம். கெட்டுப் போய்விட்டது கெட்டுப் போய்விட்டது என்று சொல்ல வேண்டியதில்லை

வியாபாரம் குறைவாக இருந்தாலும் எப்படியும் அதைச் சீர்படுத்த வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தி அதன் மேல் நாட்டத்தைச் செலுத்தினால் அதைச் சீர்படுத்த முடியும்.

உடலிலே நோய் வந்து விட்டால்…
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் சீக்கிரம் குணமாக வேண்டும் என்ற வகையில் எண்ண வேண்டும்.
2.”நோயைப் பற்றி எண்ணக்கூடாது…”
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

வியாபாரத்தில் பணம் வரவில்லை என்றால் மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கும் தொழில் வருமானம் வர வேண்டும்… நமக்குப் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்று இதை நாம் பெருக்கிக் கொண்டு வர வேண்டும்.

பணம் வரவில்லையே…! என்று எண்ணினால் அந்த உணர்வு என்ன செய்யும்…? யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
1.இந்த எண்ணத்தை அங்கே பாய்ச்சினால்
2.ரிமோட் கண்ட்ரோல் போன்று பணம் வரவு வருவதைத் தடுத்துவிடும்.

நண்பர்களுக்குள் நன்மை என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது. எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணினால் புரையோடுகின்றது. பாசத்திலே பையனை எண்ணி அவனுக்கு என்ன ஆனதோ…? ஏதானதோ…? என்று எண்ணினால் அதே உணர்ச்சிகள் தூண்டி அவன் முன்னாடி பாதை தெரியாதபடி பள்ளத்திலே காலை வைத்து அடிபடுகின்ரான்.
1.பாசத்தாலும் இயக்குகின்றது… வெறுப்பாலும் இயக்குகின்றது.
2.இந்த மாதிரி நாம் வெகு தூரத்தில் இருந்தாலும் நம்முடைய உணர்வுகள் இப்படி எல்லாம் இயக்கத் தான் செய்கின்றது.

பணம் ஒருவர் தரவில்லை என்றால் அவர் தரவில்லை என்று சொல்லாதீர்கள். அவருக்கு வரவு வர வேண்டும் நமக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த உணர்வுகளை உந்திப் பாருங்கள் நாளடைவில் அவருக்கும் வருமானம் வரும்… நமக்குப் பணத்தையும் திரும்பக் கொடுப்பார்கள்.

ஆகவே
1.சந்தர்ப்பத்தால் ஏற்படும் குறைகளை நிவர்த்திக்கும் நிலைக்குத் தான் நம் எண்ணங்களை மாற்றிக் கொண்டு வர வேண்டுமே தவிர
2.”கஷ்டம்…” என்று எண்ணி… “அதை மீண்டும் உருவாக்கக் கூடாது…”

எங்கள் தொழில் வளர வேண்டும்… வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஒரு கெட்டவனே நம்மிடம் வந்து வேலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் திருடனாக இருக்கின்றான் என்றால் “அவன் திருடன்… திருடன்…” என்று சொல்ல வேண்டியதில்லை.

நீ எங்கேயாவது சென்று நல்லவனாய் இரு… நல்லது செய்…! என்று அவனைப் போகச் சொல்லி விட வேண்டும்.

அவன் திருடுவதைப் பார்த்து விட்டோம்.
1.பின் அந்த உணர்வே வளர்ந்து கொண்டிருக்கும்.
2.அடுத்தவரிடம் நாம் இவன் மோசமானவன் என்று சொல்வோம்.
3.இவன் செய்ததை பின் அவனும் செய்யத் தொடங்குவான்.

ஆகவே… நாம் அவனைப் பற்றித் தெரிந்து கொண்டோம்.

நீ செய்வது தவறு என்று தெரிகின்றது… தவறைத் திருத்திக் கொள்…! நல்லபடி நடந்து கொள்… எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நல்வழியைக் காட்டிச் செயல்படுத்துங்கள்.

1.அதிலே அவன் திருந்தவில்லை என்றால்
2.நீ எங்கேயாவது சென்று நல்லவனாக இரு…! என்று அவனை அனுப்பி வைத்து விட வேண்டும்.

கட்டுச் சோற்றுக்குள் எலியைக் கட்டி வைத்தால் என்ன செய்யும்…? அந்தச் சோறையெல்லாம் அது தின்றுவிடும்.

அது போல் அவனைத் திருடன் திருடன் என்று சொல்லும் போதெல்லாம் நம் நல்ல குணங்களை எல்லாம் அது தின்று கொண்டே இருக்கும். நம்முடைய செயலும் அதுவாக மாறிவிடும்.

இந்த வாழ்க்கையில் ஒருவருக்கு நோய் என்று வந்தாலும் அல்லது தெரிந்தாலும்
1.நோய் போக வேண்டும் என்று நினைக்காதீர்கள்
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.இது வளர அது போகும்.

நல்ல தண்ணீரை ஊற்றினோம் என்றால் அங்கிருக்கும் அழுக்கு அகலத்தான் செய்யும். ஆகவே ஞானியின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது தீமையின் நிலைகள் அகலுகின்றது.

இந்தப் பழக்கத்திற்கு நாம் வந்து விட வேண்டும்.

ஒவ்வொரு சமயத்திலும் குருநாதர் எனக்கு எப்படி ஞானத்தைப் போதித்தாரோ அதை உங்களுக்கும் போதிக்கின்றோம்… அந்த மகரிஷிகள் உணர்வு கலந்து.

வாழ்க்கையில் அந்த மாதிரி நேரங்களில் இதுவே நல்ல வழியைக் காட்டும். அருள் ஞானத்தைப் பெறச் செய்யும். இருளைப் பிளக்கச் செய்யும் பொருளைக் காணச் செய்யும்.

ஒரு தவறு நடந்தது என்றால் அதில் உள்ள பொருளை நாம் காண முடியும். அந்த இருளைப் பிளந்து விடும். அந்த உணர்வுகளை நாம் அறிய முடிகின்றது.

நம் ஆன்மாவில் மறைத்துக் கொண்டிருக்கும் தீமைகளை இது பிளந்து விடும். பொருளைக் காணும் திறன் நான் பெறுகின்றோம். வாழ்க்கையில் சிறிது காலம் இதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்.

காற்று மண்டலம் நச்சுத்தன்மையாக இருக்கின்றது என்று அதைப் போன்ற நிலைகளைப் பதிவு செய்துவிட்டால் அதைச் சீக்கிரம் இழுக்கும்.
1.ஐயோ நச்சுத் தன்மையாக இருக்கின்றதே என்று பதிவு செய்துவிட்டால்
2.அடுத்து நச்சுத்தன்மைகள் நம் உடலுக்குள் வந்து சேரும்.

அப்படி எண்ணாது…
1.மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்
2.எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று
3.அவர்கள் வாழ்க்கையில் உயர்வு கிடைக்க வேண்டும் என்று இதை எண்ணி இந்தக் காற்று மண்டலத்தில் பரப்புங்கள்.

நச்சுத்தன்மை என்று எண்ணினால் அந்த உணர்வை இழுக்கின்றது. நம் ஆன்மாவாக மாற்றுகின்றது. நம்மை அது மாற்றுகின்றது. இது போன்ற நிலையிலிருந்து விடுபட்டு “மெய்ப்பொருள் காணும் நிலைகளுக்கு…” நீங்கள் வரவேண்டும்.

குரு அருளை உங்களுக்குள் திரு அருளாக மாற்றும் நிலைக்கே இதை யாம் உபதேசித்தது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என் வாழ்க்கைக்காகத் தொழில் செய்கின்றேன்… அதிலே எனக்கு இலாபம் இல்லை… நஷ்டமாகிறது…! என்ற வேதனையை எடுத்தால் நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை நஷ்டப்படச் செய்து இந்த உடல் உறுப்புகளும் நலிகின்றது.
1.வேதனை என்ற இருள் சூழும் பொழுது நம் சிந்திக்கும் திறனும் குறைகின்றது.
2.என்ன வாழ்க்கை…? என்று வெறுக்கும் தன்மை வருகின்றது.
3.தற்கொலை செய்யும் நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
4.இந்த உடலை உருவாக்கிய உயிரை மதிக்காது உடலை அழித்துவிடும் எண்ணங்கள் வருகின்றது.

எதன் பால் இந்த உணர்வின் தன்மை பற்றாகியதோ தன்னால் முடியவில்லையே…! என்று எண்ணத்திலேயே வேதனையுடன் இறந்தால்
1.அவருடன் பழகியவர்கள் “அடடா…! நன்றாக இருந்த மனிதன் இப்படி ஆகிவிட்டாரே..!” என்று எண்ணினால்
2.எண்ணியவர் உடலுக்குள் அவர் ஆன்மா சென்று பேயாக ஆட்டிப் படைத்து
3.நன்றாக இருப்பவரையும் மடியச் செய்யும். அதற்குத்தான் இது உதவும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் மாறுதல் வேண்டும். நமக்கு எந்த ஆசை வேண்டும்…? பேய் மனம் இல்லாது அருள் மணம் நமக்குள் வர வேண்டும்.

இதைப் போன்ற நிலைகளை உணர்துவதற்குத்தான் அன்று பல்லாங்குழி விளையாடுவார்கள். அந்த விளையாட்டை அமைத்ததின் நோக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

1.தனக்குள் கூட்டிப் பெருக்கும் உணர்வு கொண்டு
2.தன் வாழ்க்கையில் எப்படி வளர வேண்டும்…? என்ற நிலையை உணர்த்துவதற்குத்தான் அந்த விளையாட்டை உருவாக்கினார்கள்.

அதன் மூலம் ஒவ்வொரு நிலையிலும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தனக்குள் இலாபத்தை ஏற்றிக் கொள்ளும் நிலை வருகின்றது.

வாழ்க்கையின் நிலையில்…
1.சந்தர்ப்பத்தால் ஒருவர் “நான் தோற்றுவிட்டேன்…” என்ற நிலைகள் வரும் பொழுது
2.”உன்னைத் தோற்கச் செய்கிறேன் பார்…!” என்ற நிலைகள் இருக்கக் கூடாது.

அதாவது அவனும் வளர வேண்டும்… அவன் சிந்தனையும் வளர வேண்டும்…! என்ற நல்ல எண்ணத்தில் பல்லாங்குழி விளையாண்டால் அந்தக் குழந்தை நன்றாக இருக்கும்.

ஆனால் பல்லாங்குழி விளையாடும் பொழுது நான் ஜெயித்து விட்டேன் என்று சொன்னவுடனே அடுத்தவர் தோற்றுவிட்டால் “நம்மைக் கேவலமாக நினைப்பார்களே…!” என்று முகம் வாடும்.

குழந்தையாக இருந்தாலும் இந்த உணர்வின் தன்மை அந்த விளையும் பருவத்தில் வரப்படும் பொழுது தோல்வியைச் சந்தித்த பின் வெறுப்பின் தன்மை வரும்.

1.ஆனால் ஞானிகள்… மனோதத்துவரீதியில்
2.மனிதன் தன்னைத் தான் எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும்…? என்று தான் இதைக் கொண்டு வந்தார்கள்.

நாம் தொழிலைப் பற்றி எண்ணும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் உணர்வுகளை வலிமையாக எடுத்துக் கொண்டு
1.எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
2.நாங்கள் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்
4.எங்கள் சொல்லைக் கேட்டோர் நலம் பெற வேண்டும் என்றும் இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஞானிகளால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தவிடுபொடியாகி விட்டது. மாறாக எண்ணங்களை மாற்றி விடுகின்றனர்.

ஆனால் நாம் நுகர்ந்ததை எல்லாம் நம் உயிர் உடலுக்குள் அணுவாக மாற்றுகின்றது. அதை மீண்டும் மீண்டும் எண்ணப்படும் பொழுது உருவான அந்த அணுவின் தன்மை தன் இனத்தைப் பெருக்கி விடுகின்றது.
1.இது தான் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…
2.மூஷிகவாகனா…! நாம் சுவாசித்தது எதுவோ (நம் மூச்சு) அதன்படித் தான் இந்த வாழ்க்கையில் நடக்கின்றது.

ஒருவரை நாம் அடிக்கடி வேதனைப்படும்படிச் செய்து அதைப் பார்த்து ரசித்தால்… நமக்குள் அந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி… நமக்கும் அதே வேதனையை உருவாக்கிவிடும். தப்ப முடியாது.

நாம் நினைக்கின்றோம் தப்பிவிட்டோம் என்று. இந்த உடலில் கடும் நோய்களாகும் பொழுது அது முன் சேர்த்துக் கொண்ட வினை…!

அந்த வினைகள் இருப்பினும் நாம் அதைக் கடந்து அருள் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு இருளை மாற்றும் திறனைப் பெற வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைக் கூட்டினால் பழைய தீய வினைகள் அனைத்தும் அகன்று அது சுத்தமாகின்றது.

கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்

 

திடீர் சாமிகள் (தெய்வங்கள்) இன்று உருவாவதைப் பார்க்கலாம்.

தனக்குப் பணம் வேண்டும் என்று சொன்னால் எதையாவது ஒரு சிலையை அவர் ஆற்றுக்குள் புதைத்து வைத்து விடுவார். பின்பு… இரவு கனவிலே வந்து ஆண்டவன் கோவில் கட்டச் சொன்னார் என்று ஒரு நாலைந்து பேரிடம் சொல்வார்கள். இதைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி உருவாக்கிய பின் “என்னால் இம்சை தாள முடியவில்லைங்க…!” என்று இவர் சொல்வார்.

நாலைந்து பேருக்குச் சொன்ன நிலைகள் பின் ஊரில் உள்ளவருக்கெல்லாம் சொல்லி
1.எப்படியோ பார்க்க வேண்டும் என்று சொல்லி… “தெரியாத மாதிரி… அலைகிற மாதிரியே…” செய்து கொண்டே இருப்பார்.
2.அப்புறம் கண்டுபிடித்துப் போகிற மாதிரி இந்த இடத்தில் இருக்கின்றது அந்த இடத்தில் இருக்கின்றது சொல்வார்கள்.
3.அப்படிச் செய்யும் போது ஆஹா… வந்தாயிற்று…! கனவில் சொன்ன மாதிரியே சிலை கிடைத்து விட்டது…!

இந்தச் சிலையை எடுத்துக் கோவிலைக் கட்டி அங்கே பிரதிஷ்டை செய்தால் செய்தால் உனக்கு இன்னென்னது கிடைக்கும் என்று இவர் எதைச் சொல்கின்றாரோ அது நடக்கும்.

இவர் சொன்ன ஆசைகளை வைத்து அந்த முருகனுக்குக் கோலாகலமாக விசேஷங்கள் நடக்கும். அப்போது யார் இதைச் சொன்னார்களோ அவர்களுக்குப் பணம் கிடைக்கும்.
1.எண்ணிய ஆசைகள் இங்கே வளரும்.
2.பின் சிறிது நாள் சென்று விட்டால் அந்தச் சாமியும் போய்விடும்.

இது நடந்த நிகழ்ச்சி. சில இடங்களில் இப்படியும் நடக்கிறது.

இதே மாதிரி எந்த ஆசையை உருவாக்கிப் பிறரிடத்தில் பதிவு செய்கின்றோமோ அந்த உணர்வு தான் வருகின்றது.

ஒரு இடத்திலே… “கற்பூரத்தைக் கொளுத்தி ஆயிரம் ஆடுகளை வெட்டுகிறார்கள்…!” என்று சொன்னவுடன் அங்கே கூட்டம் போய்க்கொண்டே இருக்கின்றது.

மனிதனுடைய ஆசை எப்படி இருக்கின்றது…?

எனக்கு என் காரியம் ஜெயித்தது…! அவன் தவறான வழியில் போய்க் கொண்டிருக்கின்றான். அவனை மடக்க ஆயிரம் ஆடுகளை நான் வெட்டுகின்றேன் என்று இப்படிச் செய்கின்றார்கள்.

இதைக் கேள்விப்பட்ட பின் வேடிக்கை பார்க்க அங்கே கூட்டம் அதிகமாகின்றது.
1.காரியமில்லாமலா அங்கு செல்கின்றார்கள்…! என்று இந்த உணர்வு பதிவான பின்
2.நான்கு ஆண்டு மூன்று ஆடு அவரவர்கள் வசதிக்குத் தக்கவாறு அங்கே வெட்டுகின்றார்கள்.

மனிதன் தனக்குள் உருவாக்கக்கூடிய உணர்வுகள் இப்படி வந்த பின் இது எல்லாமே நடக்கின்றது.

அதே சமயத்தில் அந்த இடத்திலே அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் யார் கடை வைத்தது வியாபாரம் செய்தாலும் அவர்களுக்குப் பங்கு கொடுக்க வேண்டும்.

கற்பூரம் இந்த இடத்தில் தான் வாங்க வேண்டும் என்பார்கள். இவர்கள் வாங்கி அதைக் கொடுப்பார்கள். அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி அதற்கு மேல் வைத்து விற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த இடத்தில் இல்லாதபடி சிறு தூரத்தில் கடை இருந்தாலும் கூட அவர்களுக்கு நன்றாக வியாபாரம் நடந்தால் எங்களுக்கு நீங்கள் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றார்கள்.

1.ஏனென்றால் நான் வைத்திருக்கும் சாமியைப் பார்க்கத்தான் இந்தக் கூட்டம் வருகின்றது
2.அந்தக் கூட்டத்தால் தானே உனக்கு வியாபாரம் ஆகிறது.
3.ஆகையினால் எனக்குப் பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றார்.
4.இப்படித் தெய்வங்களை உருவாக்குபவர்கள் ஏராளம்.
5.மனிதனுடைய ஆசைகள் எதுவோ அதற்குத் தகுந்த மாதிரி கடவுளை உருவாக்கி
6.கடவுள் மறைவிலே பிழைப்பதற்கு நிறைய வந்து விட்டார்கள்.

ஆகையால் இது போன்ற இடங்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும்.

இரவு கனவிலே வந்தார்… விநாயகர் சிலையை இங்கே வைக்கச் சொன்னார். இன்ன இடத்தில் இருக்கிறது என்று காட்டினார்.

நான் திருடிக் கொண்டு வந்து வைத்தேன். அதற்கு மாலை எல்லாம் போட்டுப் பூஜை செய்தால் நன்மை கிடைக்கும் என்று சொன்னார். இதே போன்று அதை வணங்குபவர்களுக்கு இன்னதெல்லாம் கிடைக்கும் என்று சொன்னார் என்று இப்படிப் பதிவு செய்து விடுகின்றார்கள்

இந்த அடிப்படையில் தான் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று நாம் பக்தியில் வணங்கிக் கொண்டுள்ளோம்.

“இந்தச் சாமியினால்…” தனக்கு ஏதாவது லாபம் கிடைக்குமா…? என்ற இந்த நிலைகளுக்கு வந்து விட்டார்கள்.
1.நம்மால் பிறருக்கு நன்மை கிடைக்குமா…? என்ற
2.நல்ல சிந்தனைகள் அனைத்தும் காலத்தால் அறவே மறைந்து விட்டது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் செய்து முடிந்த பிற்பாடு “நாம் தான் தியானம் செய்துவிட்டோம் அல்லவா…!” என்று இருக்கக் கூடாது.

வாழ்க்கையில் எந்த நேரமாக இருந்தாலும் சரி…
1.சங்கடமோ சலிப்போ கோபமோ வெறுப்போ தொழிலில் சோர்வோ இதைப் போல் வந்தால்
2.அது நம்மை இயக்காமல் உடனடியாகத் தடுக்க வேண்டும் (இது மிகவும் முக்கியமானது).

அம்மா அப்பாவை நினைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை நினைத்து ஒரு நிமிடம் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று கண்களில் ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கி உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்த வேண்டும்.

இப்படி எடுத்துக் கொண்டால் பிறருடைய சங்கடமோ கோபமோ வெறுப்போ பிறருடைய நோயோ நமக்குள் வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
1.எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் எல்லோருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் என்று எண்ணி வந்தாலே போதும்.

இது தான் ஆத்ம சுத்தி…!

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்த “நீங்கள் எண்ணியவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்கும்…!”

எப்படி…?

1.ஒருவன் நம்மைத் திட்டினான் என்று நமக்குள் பதிவாக்கிய பின்
2.அவனை நினைக்கும் பொழுதெல்லாம் அந்தத் திட்டிய உணர்வுகள் வருகிறது அல்லவா…!
3.பாவி எனக்குத் துரோகம் செய்தான்..! என்று எண்ணிக் கொண்டிருந்தால் அன்றையக் காரியங்கள் கெடுகிறது.
4.நமக்கும் கெடுகிறது… அவனுக்கும் கெடுகிறது…!

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் சிந்தித்து நீங்கள் தெளிந்து அந்த அருளைப் பெற்றிடும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டால் உங்கள் எண்ணம் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்.

1.பிறருடைய தீமையான செயல்களைப் பார்த்து
2.இப்படிச் செய்கிறார்களே…! என்று எப்பொழுதும் எண்ணவே வேண்டாம்…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்தங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மாறாக “இப்படிச் செய்கிறார்களே…!” என்று எண்ணினால் அந்தத் தீமைகள் நமக்குள் வந்துவிடும். “நம் வாழ்க்கையும் அது கெடுக்கும்…!” (இது முக்கியம்)

அது நமக்குள் வராதபடி இந்த மாதிரித் தடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்படிச் செய்து பாருங்கள்.. பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது.

சண்டை போடுகிறார்கள் என்று பார்க்கின்றீர்களா…! உடனே இந்த மாதிரி சுத்தப்படுத்திவிட்டு அவர்களுக்குள் நல்ல உணர்வுகள் தோன்ற வேண்டும்.. இருவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…! என்று எண்ணிவிட்டு வந்துவிடுங்கள்.

1.ஏன் இப்படிச் செய்கிறார்கள்…? என்று அதையே அழுத்தமாக எண்ணினால்
2.அவர்கள் உணர்வு நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டை போடும் உணர்வுகளே விளையும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஏனென்றால் இப்படித்தான் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் வந்துவிடுகிறது. அதை மாற்றுவதற்கு இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானம்…!

கையில் அழுக்குப் பட்டால் உடனே கழுவி விடுகின்றோம் அல்லவா…! உடுத்தியிருக்கும் துணியில் ஏதாவது கொஞ்சம் அசிங்கமானால் உடனே கழுவுகிறோம் அல்லவா…!

இதே மாதிரி அவ்வப்பொழுது தூய்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்திகளைக் கொடுக்கின்றோம். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் ஜோதிடம் தேவையில்லை.. ஜாதகம் தேவையில்லை… மந்திரமோ மாயமோ எதுவுமே தேவையில்லை..! எல்லாமே உங்களால் மாற்றியமைக்க முடியும்.

எந்தத் தொழில் செய்தாலும் அல்லது வியாபாரம் செய்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.சரக்கு வாங்குபவர்களுக்கு இந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.இங்கே நம் குடும்பத்திற்கு வருபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் எண்ணிப் பாருங்கள்.

உங்கள் தொழிலும் வியாபாரமும் பெருகும்… குடும்பத்தில் மகிழ்ச்சி என்றுமே இருக்கும்.

அரச உணர்வு நம்மை இயக்கக் கூடாது… ஞானிகள் உணர்வே நம்மை இயக்க வேண்டும்

 

அரசர்களைத் தழுவிய நிலைகள் தான் காவியப் படைப்புகள் வந்தது. அதன் வழியில் தான் உலக மக்கள் அனைவரும் வாழ்ந்து வந்திருக்கின்றோம்.
1.மகரிஷிகள் ஞானிகள் கொடுத்த தத்துவங்களை
2.அரசன் தனக்குச் சாதகப்படுத்திக் கொண்டான்.

இன்று உலகிலே எந்த அரச சபைக்குச் சென்றாலும் அரசனைப் புகழ் பாடும் புலவர்களுக்குத் தான் மதிப்பு. அரசன் செயலைச் சிறிது குறை கூறினாலும் அவன் சிரசு இல்லை.

தர்மத்தையும் நியாயத்தையும் அந்த அரசனைத் தழுவிய நிலைகள் கொண்டுதான் புலமைகள் பாடிப் பொருள்களைத் தேடினார்கள். புலமை அவனுக்கு உதவியதே தவிர அரசனைக் காக்க உதவியதே தவிர மக்களுக்கு அது உதவவில்லை.

இந்த அடிப்படையிலே தான் சிற்றரசர்கள் பேரரசர்கள் என்ற நிலையில் காவியங்களைப் பார்க்கும் பொழுது இந்த நிலை.

சோழ மன்னனை எடுத்துக் கொண்டால் “நீதிப்படி அவன் நடந்தான்…” என்று காட்டுவார்கள். தன் மகனே என்றாலும் தன் சொல்லுக்குக் கட்டுப்படவில்லை என்றால் “தன் புகழுக்காக”
1.அவன் தவறு செய்தானா…? இல்லையா…? என்று சிந்திப்பதற்கு இல்லாதபடி
2.தன் மகனையே தேரை ஓட்டிக் கொன்றான் என்று நீதிகள் சொல்லப்படுகின்றது.

அரசனுடைய மகன் தேரை ஓட்டிச் செல்கின்றான். ஒரு கன்று தவறிப் போய் ஊடே வந்து விடுகின்றது… அடிபட்டு இறந்தது. மனிதனாக இருக்கின்றாய்… மற்ற உயிரினத்தை நீ கொன்றாய் என்று நீதி சொல்லப்படும் பொழுது அவனைக் கொன்று விடுகின்றான்.

ஆனால் பாதையில் புழுவோ பூச்சியோ மற்றவைகளோ வந்தால் அதன் மீது தேர் போகாதா…?

அரசன் என்ற நிலையில் இருந்தாலும் தன் மகனையே அதே போன்று தேரை ஓட்டச் செய்து அவனைக் கொன்று நீதியை நிலை நாட்டினான் என்று பெருமை பேசுகிறார்கள்.

இதே நீதி கொண்டவர்கள் மாற்று அரசனிடம் என்ன செய்கிறார்கள்…?

இவர்கள் செல்லும் பொழுது அவருடைய மகளையோ அவன் விரும்பிய இடத்தையோ கேட்டு அனுப்புகின்றான். இவனை மதித்து அதைத் தருகிறேன் என்று சொன்னால் அவனை மெச்சி மகிழ்கின்றான்.

இல்லையென்றால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு
1.இரு நான் உன்னை அழிக்கிறேன்… என்ற நீதிகள் தான் அங்கே பேசுகின்றது. ஆக… அரசினுடைய நீதி எது…?
2.நான் யாரிடம் எதைக் கேட்டாலும் மதிக்க வேண்டும்… மதிக்கவில்லை என்றால் போரிட்டு உன்னை அடக்கி மதிக்கும்படிச் செய்வேன்.

இது தான் அன்றைய அரசு நீதி…!

இந்தப் போர் முறைகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அமெரிக்கா என்ன செய்கின்றது…?

அவன் அணு குண்டுகளைச் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் அவன் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் உன்னை அழித்து விடுவேன் என்று அவன் மிரட்டுவான்.

இன்று ஜனநாயகம் என்று இருந்தாலும் அதிலே தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளும் அதே அரசு நீதியைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். எந்த அரசு இதைக் கடைப்பிடித்ததோ அதன் வழியாகத் தான் ஆட்சி செய்கின்றார்கள்.
1.ஆக அரசர்களுடைய நீதி அவனைக் காக்கத் தான் வருகின்றதே தவிர
2.மக்களைக் காக்க என்று அல்ல.

அவனுடைய செயல் மாறிவிட்டால் தன் மக்களை.. தன்னை விசுவாசிப்பவர்களை ஏவல் செய்து பலிகடாக்களாக ஆக்குகின்றார்கள்… தன் கௌரவத்தைக் காக்க.

மேலை நாடுகளில் எடுத்துக் கொண்டாலும் ஒருவனுக்கு எத்தனையோ மனைவி என்று வைத்துக் கொள்கின்றார்கள். அதில் எந்த மனைவியின் பக்கம் தன் சார்பு உள்ளதோ அந்த மைந்தன் சொல்வது தான் நியாயம் என்று சொல்வார்கள்.

அதில் பிடிக்காத மனைவியின் மகன் என்று ஆகிவிட்டால் அவனைக் குற்றவாளியாக்கி அரச நீதியில் பொதுமக்கள் மத்தியில் அவன் சிரசை வாங்குகின்றார்கள் முஸ்லீம் நாடுகளில்.

இது என்னுடைய நீதி…!
1.எனது மகனாக இருந்தாலும் தன் மதத்திற்கும் கடவுளுக்கும் அவன் துரோகம் செய்தான்.
2.எனது பிள்ளையாக இருந்தாலும் இந்தத் தவறை எவரும் செய்யக்கூடாது என்று மக்களுக்கு உணர்த்தவே
3.மக்களுக்கு மத்தியில் நீதியை இப்படி நிலைநாட்டுகிறோம் என்பார்கள்.
4.கடவுளின் ஆணைப்படித் தான் இதைச் செய்கிறேன் என்று அரசு நீதி இதைச் செய்கின்றது.

அரசனுக்குக் கீழ் குடிமக்கள் கட்டுப்பட வேண்டும். மாற்று அரசர்களும் இவனை மதிக்க வேண்டும். மதிக்கவில்லை என்றால் அவனை அடக்க வேண்டும்… என்ற அதே நீதி தான் இன்று “மக்கள் மத்தியிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளது…”

ஓரளவுக்கு வலுகொண்டவனாக இருக்கின்றேன். நான் கேட்ட உடனே நீ உதவி செய்ய வேண்டும். உதவி செய்யவில்லை என்றால் என்ன தொல்லை கொடுக்க வேண்டுமோ அதை நான் கொடுப்பேன்.

வழி வழியாக இவ்வாறு தான்… மனிதன் தன் உடல் இச்சைக்குத் தான் அரசர் வழிகளில் வந்து கொண்டிருக்கின்றோமே தவிர ஞானிகள் காட்டிய வழி செல்லவில்லை.

ஏனென்றால்… ஞானிகள் காட்டிய அருள் வழியில் பார்த்தோம் என்றால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வே அவ்வாறு இயக்குகிறது.

அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள்…
1.எதிர்பாராதது சந்தர்ப்பத்தால் ஒரு தவறினை நாம் நுகர்ந்து விட்டால்
2.அதனால் உடலில் உருப்பெறும் தீமையான அணுக்களின் தன்மையை தனக்குள் எதிரியாக்காதபடி
3.அந்தத் தவறு எனக்குள் இயக்காதபடி தவறை அழித்த ஞானியின் உணர்வைத் தனக்குள் புகுத்தி
4.தவறின் செயலாக்கங்களை நீக்குதல் வேண்டும் என்பதுதான் விநாயகர் தத்துவம்.

மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றவன் மகரிஷி. ஆறாவது நிலையை ஏழாவது நிலையாக ஒளியாகப் பெற்றவன் சப்தரிஷி.

அந்த நிலையைத் தான் நாம் அனைவரும் அடைய வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் ஆரம்பிக்கும் பொழுது முதலில் தாய் தந்தையரின் அருளையும் குருவின் அருளையும் பெற வேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் அம்மா அப்பா தான் நமக்குக் கடவுள். நாம் நன்றாக இருக்க வேண்டும்…! என்ற நிலையில் குருவாக இருந்து நம்மைத் தெய்வமாகக் காத்தவர்கள் அவர்கள் தான்..!

தியானத்திற்கு மட்டுமல்ல…! எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் அம்மா அப்பாவை எண்ணி அவர்கள் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளைப் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். ஏனென்றால் அவருடைய துணை கொண்டு தான் விண்ணுலக ஆற்றலை நாம் பெற முடியும்.

குருவின் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1). உயிர் வழி சுவாசம்
“ஈஸ்வரா..!” என்று சொல்லும் பொழுதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்த வேண்டும்.

தியானத்தின் மூலம் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்..! என்ற ஏக்கத்தை
1.உங்கள் கண்ணின் கருமணிக்குக் கொண்டு வாருங்கள்
2,உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
3.இப்பொழுது உங்கள் கண்கள் ஒருவிதமான கனமாக இருக்கும்.
4.மெதுவாகக் கண்களை மூடுங்கள்… பின் உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைச் செலுத்தி உங்கள் நினைவனைத்தையும் “உயிர் வழி” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியிலிருந்து இழுக்கும்.
2.புருவ மத்தியில் கொஞ்சம் கனமாக இருக்கும்… இழுக்கும் பொழுது…!
3.துருவ நட்சத்திர அலைகள் உயிரில் மோதும் பொழுது ஒரு வெளிச்சம் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கும் போது உங்கள் உயிரிலே அந்த அருள் சக்திகள் மோதும். அப்பொழுது அந்த உணர்வுகள் வலுவாகின்றது.

இப்பொழுது சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை கோபம் குரோதம் போன்ற எத்தனையோவிதமான குணங்கள் உடலுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது.

இப்படி எண்ணும் பொழுது தீமைகள் உள்ளுக்குள் போகாமல் தடுக்கப்படுகின்றது. இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உங்கள் உயிரிலே வலுப் பெறுகின்றது.

2). இரத்த நாளங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் இரத்தத்தில் செலுத்துங்கள்.

ஏனென்றால் நாம் கேட்டது பார்த்தது இது அத்தனையும் ஜீவ அணுக்களாக இருக்கின்றது. வேதனைப்பட்ட உணர்வுகள் யாராவது ஜாஸ்தி பட்டிருந்தால் அவர்கள் மீது நாம் பாசமாக எண்ணியிருந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும். அப்படி வந்து விட்டால் அந்த ஜீவ ஆன்மா அதனால் மாற்ற முடியாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இரத்தத்தில் கலக்கச் செய்து அந்த ஜீவ ஆன்மாக்களையும் அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தங்கள் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இரு நிமிடம் ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் இரத்தத்தில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் பாயும். உங்களால் அதை உணர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் படர்ந்து எங்கள் உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உங்கள் உடல் முழுவதற்கும் இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.

உங்கள் உடல் முழுவதற்கும் ஒருவிதமான புது உணர்ச்சிகள் ஏற்படும்.

3). சிறு குடல் பெரும் குடல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவை குடலுக்குள் பாய்ச்சுங்கள்.

1.இப்பொழுது உங்கள் குடலில் ஒரு வித்தியாசமான உணர்வுகள் தூண்டுவதை நீங்கள் உணரலாம்.
2.ஏனென்றால் அந்த அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏற்றுகின்றோம்.
3.இந்த மாதிரிச் செய்தால் உங்கள் ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.

4). கணையங்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.

நாம் உட்கொண்ட உணவிலிருந்து ஆவியாக வருவதை அது இரசாயணமாகப் பிரித்து எடுக்கும். அந்தக் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் நல்ல சக்தியாக இப்பொழுது பெறும்.

அப்படிப் பெறவேண்டும் என்பது தான் இதன் நோக்கம். எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

5). கல்லீரல் மண்ணீரல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரலை மணணீரலை உருவாக்கிய அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். கண்ணின் நினைவைக் கல்லீரலிலும் மண்ணீரலிலும் செலுத்துங்கள்.

கல்லீரலைப் பார்க்கவில்லை என்றாலும் இப்பொழுது அந்த உணர்வுகள் பாயும் பொழுது அந்த உணர்ச்சிகளை ஊட்டுவதை உணரலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் கல்லீரல் மண்ணீரலில் படர்வதை நீங்கள் உணரலாம்.

6). நுரையீரல்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நுரையீரலில் ஆஸ்த்மா சளி டி.பி. போன்ற நோய்கள் இருந்தால் அது குறையும். மூச்சுத் திணறல் இருந்தால் அதுவும் குறையும். அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால் அந்த நுரையீரல் நல்ல வீரியமடைந்து மன வலிமையையும் கொடுக்கும்.

7). சிறுநீரகங்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.சிறுநீரகத்தில் வரும் விஷத்தைப் பிரித்து நீராக மாற்றிவிட்டு
2.நல்ல இரத்தமாக மாற்றும் திறன் கொண்டது அந்த உறுப்பு.

8). இருதயம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிக் கண்ணின் நினைவை இருதயத்தில் செலுத்துங்கள்.

இருதயத்தில் இப்பொழுது வலி இருந்தாலும் இருதயத்தில் அசுத்தமான நிலை இருந்தாலும் அது மாறி நல்ல உற்சாகமான இருதயமாக மாறும்.

9). கண்ணின் கருமணிகள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் கண்ணிலே பாய்ச்சுங்கள்.

கருமணியில் படர்ந்துள்ள வேதனை வெறுப்பு கோபம் குரோதம் போன்ற விஷத் தன்மைகள் இப்பொழுது அகலும். கருமணியில் இப்பொழுது நல்ல வெளிச்சங்கள் வரும். கருமணி தூய்மையாகும்.
1.துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
2.அந்தப் பேரருளும் பேரொளியும் உங்கள் கருமணியில் பட்டு அந்த உணர்வுகள் உங்கள் நரம்பு மண்டலங்கள் வழி செலுத்தி
3.உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் அந்தத் தூய்மையின் உணர்வை உணர்த்தும்.

10). நரம்பு மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து எங்கள் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

11). எலும்பு மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து எங்கள் எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவை எலும்பு மண்டலத்தில் சேர்த்து ஏங்கித் தியானியுங்கள்.

12). நெஞ்சின் பாகம் உள்ள ஊன்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சு எலும்புக்குள் ஊனாக உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை நெஞ்சுக்குள் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
1.உங்கள் நெஞ்சின் பாகம் முன்னாடி அந்த வெளிச்சம் வரும்.
2.ஏனென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் குவிக்கப்படும் பொழுது அந்த வெளிச்சமான உணர்வுகள் தெரிய வரும்.

13). தசை மண்டலம்.. தோல் மண்டலம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலங்கள் முழுவதும் படர்ந்து தசை மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தோல் மண்டலங்கள் முழுவதும் படர்ந்து தோல் மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படி இந்தத் தோல் மண்டலத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகப் பதிவாக்கி விட்டால்
1.காற்றிலிருந்து வரும் கெட்டதை நம் உடலுக்குள் ஈர்க்காது தடைப்படுத்த இது உதவும்.
2.காற்றிலிருந்து வரும் தீமையான உணர்வுகளை அருகில் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

14). தவம்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

தாய் தந்தையரின் உணர்வு தான் நம் உடல். தாய் தந்தையரின் உணர்வால் தான் இந்த உடல் வளர்க்கப்பட்டது. தாய் தந்தையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது.

தாய் தந்தையர் நம்மை வளர்ப்பதற்காக எடுத்துக் கொண்ட சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் இருப்பினும் அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இவ்வாறு தியானிப்பதால்
1.நம் உடலில் நல்ல அணுக்களை உருவாக்க இது உதவும்.
2.அதே சமயத்தில் அவர்கள் உடலில் உள்ள தீய வினைகளும் அகலும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது இரத்த நாளங்களிலும் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தியானமிருக்கும் இந்த இல்லம் முழுவதும் படர்ந்து இங்கு குடியிருப்போர் அனைவரும் இந்த வீட்டிற்கு வருவோர் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற்று… அருள் வழியில் அவர்கள் தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வும் பெற்று.. தெளிந்து… தெரிந்து… வாழும் அருள் ஞான சக்தி பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் படர்ந்து தொழில் வளம் பெருகி அருள் ஒளி பெருகி அருள் வழியில் தொழில்கள் சீராகி வாடிக்கையாளர்கள் பெருகிட அருள்வாய் ஈஸ்வரா.

15). குலதெய்வங்கள்
சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலங்களின் ஒளி வட்டத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

16). மழை வேண்டித் தியானம்
அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி மேகங்களில் படர்ந்து நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அனைவரையும் அமைதி பெறச் செய்ய அருள்வாய் ஈஸ்வரா…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

விண்ணிலே தோன்றிய நாம்… மீண்டும் விண்ணுக்கே செல்கின்றோம்

 

ஞானிகள் காட்டியது போல தீப ஒளித் திருநாள் அன்று தனக்குள் வரும் இருளை நீக்கி ஒளி பெறுவோம் என்று நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

உயிர் விண்ணிலே தோன்றியது ஒளியின் சுடராக…! அந்தத் தீப வழிப்படி நாம் விண் செல்லும் நிலையாக
1.இந்த உடலான ஆறாவது அறிவிலிருந்து மெய் ஒளியுடன் ஒளியாக
2.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் சுடராக இணைத்து
3.ஒளிச் சரீரமாக உயிருடன் இணைந்து விஜயதசமி… பத்தாவது அவதார நிலையை நாம் பெறுகின்றோம்.

ஏழாவது என்பது ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணைக்கும் திறன்.

ஒருவன் திட்டி விட்டால்… அவன் இடைஞ்சல் செய்கின்றான் என்று எண்ணும் பொழுது அவன் பேசிய பேச்சை எல்லாம் நாமும் பேசுகின்றோம்.

அந்தப் பேச்சு தனக்குள் இயங்காத வண்ணம் தடைப்படுத்துவதற்குத் தான் நாம் தியான வலுக் கொண்டவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கின்றோம்.

அப்பொழுது…
1.இடைஞ்சல் செய்தான் என்ற உணர்வுகள் தன்னை இயக்காதபடி தடுத்து நிறுத்தி
2.“சிந்திக்கச் செய்யும் நிலையை…” அது செயல்படுத்தும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் சேர்த்து விளையச் செய்யும் பொழுது எட்டாவது நிலை ஆகிறது. அது உயிருடன் இணைக்கப்படும் பொழுது ஒன்பதாவது நிலை ஆகிறது.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லாவற்றிலும் இணைக்கப்படும் பொழுது இருளைத் தடைப்படுத்தி அதை ஞானமாக்கி ஒளி பெறும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.

உயிர் ஒளியாக இருக்கின்றது. உணர்வுகள் ஒளியாகி இந்த உடலை விட்டுச் சென்ற பின் பத்தாவது தசமி.

மனிதனாக இருக்கும் நாம் இப்பொழுது செடி கொடி தாவர இனங்களில் விளைந்தவற்றை நாம் உணவாக உட்கொள்கின்றோம்.

ஆனால் இந்தப் பூமியில் இருந்து விண் செல்லும் நிலையில் பல பேரண்டங்களிலிருந்து வரக்கூடிய சக்திகளைப் பெறும் தன்மையாக… இந்தச் சூரிய குடும்பமான… பிரபஞ்சத்திற்கு வெளியே தான் இந்த உயிரான்மா ஒளியாகச் செல்கிறது.

இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பை விட்டு வெளியிலே சென்று
1.மற்ற பேரண்டங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக்கி
2.எந்தப் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சக்தி பெற்றோமோ அங்கே இந்த உயர்ந்த சக்திகளை அனுப்பி
3.இந்தச் சூரிய குடும்பத்திற்கே ஒளி காட்டும் வழியாகவும்
4.அதே சமயம் பேரண்டத்திலிருந்து வரக்கூடிய சக்திகளை ஒளியாக மாற்றி
5.பேரண்டத்திற்கே வழிகாட்டும் உணர்வின் அலைகளாக அதைச் சேர்க்கும் நிலைகள் பெற்றது தான் மனிதனின் கடைசி நிலை.
6.”தீப ஒளி…” என்ற அத்தகைய வழிகளில் நாம் செல்வோமேயானால் விண்ணிலே தோன்றிய நாம் மீண்டும் விண்ணுக்கே செல்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து உன் குறைகளை எல்லாம் சொன்னால் அவன் தீர்த்துத் தருவான்…
2.அதற்காக வேண்டி நீ காணிக்கை போடு… அதைப் போடு இதைப் போடு..
3.நேர்த்திக் கடனைச் செய் அதைச் செய்…! என்று சொல்லி விட்டார்கள்
4.பழனிக்குப் போனாலும் இது தான்… திருப்பதிக்குப் போனாலும் அது தான்.

ஆனால் அந்தக் கோவிலின் பண்புகளை நமக்கு யாரும் எடுத்துச் சொல்லவில்லை.

“ஏழு கொண்டலவாடா…” என்று தெலுங்கில் சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக “ஒளியாக மாற்ற வேண்டும்” என்று பொருள்.
1.ஏனென்றால் இந்த ஆறாவது அறிவை இயக்குவது உயிர்
2.ஆக இந்த உடலை ஆள்வது “பெருமாள்…”

திருவேங்கடாசலபதி…! இங்கே இந்த உடலில் இருப்பது எல்லாவற்றையும் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றான் என்ற தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

அதை நாம் யாராவது புரிந்து கொண்டோமோ…? என்றால் இல்லை. தத்துவத்தை நமக்குத் தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்… யாரும் அதை மதிப்பதில்லை.

இங்கிருந்து அங்கே திருப்பதிக்குப் போய்க் காணிக்கையைப் போட்டால் “அவன் நமக்கு எல்லாம் செய்வான்…!” என்ற நம்பிக்கை தான்.
1.சாமிக்கு விலங்கு போட்டால் ஐய்யய்யோ…! என்பார்கள்
2.காசு குறைவாக இருப்பதால் விலங்கு போட்டுவிட்டு அப்புறம் சாமியை ஜெயிலிருந்து மீட்டுகிறார்களாம்…!

இப்படி நம்மை முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள்…!

இங்கே உபதேசத்தை நீங்கள் கேட்கிறீர்கள்…! எப்பொழுது உங்களுக்குள் என்ன நடக்கிறது…?

“அரங்கநாதன்…” நல்ல (ஞானிகளின்) உணர்வுகளை நீங்கள் கேட்கும் பொழுது உங்கள் உடலான அரங்கத்திற்குள் உயிர் என்ன செய்கிறது…? நாதங்களாக வெளிப்படுத்துகிறது. (அரங்கம் + நாதம்)

அந்த நாதங்கள் என்ன செய்கிறது..? சந்தோஷமான உணர்ச்சிகளை ஊட்டுகிறது. அது தான் அரங்கநாதன்,

அரங்கநாதனின் மனைவி யார்…? ஆண்டாள். அந்த உணர்ச்சிகள் தான் நம்மை ஆள்கிறது. ஆண்டாள்…! என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.

கோபமான உணர்வை நுகர்ந்தால் அரங்கநாதன் என்ன செய்கிறது…? அந்தக் கோபமான உணர்ச்சி தான் நம்மை ஆளும் ஆண்டாள்.

ஆனால் எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வைச் சுவாசித்தால் அரங்கநாதன். இந்த அரங்கத்திற்குள் மகிழ்ந்து வாழும் அந்த உணர்வுகள் நம்மை ஆளும்.

1.காரணப் பெயரை வைத்துத் தெய்வங்களை உருவச் சிலைகளாக வைத்து
2.நாம் நம்மை அறிந்து வாழ்வதற்கு ஞானிகள் எவ்வளவு பெரிய சக்தியை ஊட்டியிருக்கின்றார்கள்…?
3.அதை நாம் உணர வேண்டுமல்லவா…!

ஏனென்றால் இந்த உடலில் கொஞ்ச நாள் தான் நாம் வாழ்கிறோம். சிறிது காலமே வாழும் இந்த மனித வாழ்க்கையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வாழ்க்கையில் வரும் பகைமைகளை எல்லாம் அகற்றிடல் வேண்டும்.

எந்தப் பகைமையையும் நாம் இழுக்காதபடி வாழ்ந்து வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குப் போய்ச் சேர்கின்றோம். இராமலிங்கமாக ஆனது தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அங்கே சென்றால் பிறவியில்லா நிலை அடைகின்றோம். அந்தப் பிறவியில்லா நிலை அடையக்கூடிய சக்தியைத் தான் ஞானிகள் நமக்குக் கோவிலில் காட்டியிருக்கின்றார்கள்.

தீப ஒளித் திருநாள்

 

ஒரு ரைஸ் மில் இருக்கிறது என்றால் நெல்லை அதிலே அதிகமாகப் போட்டுவிட்டால் “லோடு தாங்காது…” அதை இழுத்து இயக்கக்கூடிய மோட்டாரில் உள்ள காந்தம் குறைந்து விடுகிறது.

இப்படிச் சிறுகச் சிறுக அது தேய்மானம் ஆகிவிட்டால் சிறிதளவு நெல்லைப் போட்டாலும் கூட அரைக்க முடியாத நிலை ஆகி விடுகிறது.

இதைப் போல நம் உடலில் இருக்கக்கூடிய காந்த சக்திகள் அனைத்தும்
1.கோபம் வெறுப்பு வேதனை போன்ற குணங்களை அதிகமாக எடுக்கப்படும் பொழுது
2.அதைச் சரியான முறையில் ஜீரணிக்கக் கூடிய திறன் இழந்து விடுகிறது.

அதனால்… அந்தக் கோபம் வேதனை போன்ற உணர்வுகள் அனைத்தும் நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் அது விஷம் கலந்ததாக மாறிவிடுகிறது.
1.அந்த விஷங்கள் கலந்த பின்
2.அடுத்து மகிழ்ச்சியைப் பற்றி எண்ணவே முடிவதில்லை.

ஆனால் நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் இருக்கக்கூடிய விஷத்தை இந்த உடல் மலமாக மாற்றி விட்டு உடலை நல்லதாக ஆக்கச் செய்கின்றது… உடலிலிருந்து வெளிப்படக்கூடிய மணம் ஆறாவது அறிவு.

உதாரணமாக கருணைக்கிழங்கில் விஷம் இருக்கிறது என்றால் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு அதை நீக்கிவிட்டுச் சுவையாகச் சாப்பிடக்கூடிய நிலை வருகிறது.

அதே சமயம் ஒருவன் தவறு செய்கின்றான் என்று கண்ணிலே பார்த்த பின் எரிச்சல் ஆகிறது. அவனால் பொருள் விரயம் ஆகின்றது என்கிற பொழுது வேதனையாகின்றது.

இந்த இரண்டையும் நாம் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வான சத்துக்கள்… எரிச்சலும் வேதனையும் நமக்குள் வடிக்கப்பட்டு ஆகாரத்துடன் 1.
இது இரண்டும் உயிரில் சேர்க்கப்படும் பொழுது இதற்குப் பெயர் காளி…
2.மிகவும் துரித நிலைகள் கொண்டு செயல்படும் தன்மை வந்து விடுகிறது.

அவ்வளவு சக்திகள் நமக்குள் தோன்றிய பின் அதைக் கழிக்கும் திறனை இழக்கச் செய்து விடுகிறது. விஷம் இவ்வாறு கலந்த பின் சிந்திக்கும் திறன் (ஆறாவது அறிவின் தன்மை) இழந்து விடுகின்றது.

கருணைக்கிழங்கில் உள்ள விஷத்தை எப்படி வேக வைத்து நீக்குகின்றோமோ அந்த நீக்கும் எண்ணம் இருந்தாலும்… வாழ்க்கையில் ஒருவன் தவறு செய்வதிலிருந்து இந்த வேகங்கள் நமக்குள் ஆக்கிரமித்துக் கொண்டால் அதை நாம் கழிக்க முடியாத நிலையாகி உடலுக்குள் சேர்த்து விடுகின்றது.

நமது உயிர் ஒளியாக இருக்கின்றது. உடல் பெற்ற பின் அறிய வேண்டும் என்று எண்ணி கண் தெரிந்து… கெட்டது என்ற நிலை வந்தாலும் அதைச் சுவாசித்த பின் உடலுக்குள் அது வந்து… விஷத்தை ஊட்டிவிடுகிறது.

சிந்தனையைக் குலைக்கச் செய்யும் அந்த உணர்விலிருந்து மீட்டிக் கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த ஆறாவது அறிவை அப்போது அது செயலிழக்கச் செய்துவிடுகின்றது.

இப்படி விஷங்கள் கலந்து சிந்திக்கும் செயல் இழக்கப்படும் போது இதிலிருந்து நாம் எப்படித் தப்புவது…? என்ற இந்த உண்மையை உணர்த்துவதற்குத் தான் அன்று சூரசம்காரத்தைக் காட்டித் தீய சக்திகளில் இருந்து மீட்கப்பட வேண்டும்…! என்று காட்டினார்கள்.

ஏனென்றால் தவறு செய்பவன் அவனாக இருக்கின்றான். ஆனால் பொருள் போய்விட்டதே என்று நாம் வேதனைப்படும் பொழுது விஷமாகி விடுகின்றது. தவறு செய்தவனைப் பார்த்த உடனே எரிச்சலாகின்றது. இந்த உணர்வை நாம் சுவாசித்து விட்டால் உடலில் நோயாக மாறுகின்றது.

ஆரம்பத்தில் கண்ணில்லாத புழுவாக இருக்கும் போது அது பசியின் ஏக்கத்தில் இருந்தது. நகர்ந்து சென்று வேதனையான பின் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்… பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளைச் சுவாசித்தது.

அதற்குப்பின் கண் தெரிந்தது.

அப்பொழுது கெட்டதை நீக்கி நல்லது எது என்று அறிந்துணர்ந்து செயல்படும் அந்த வழியில் நாம் வளர்ச்சி அடைந்து வந்த பின் கெட்டது என்று தெரிகின்றது… கருணைக்கிழங்கில் புறநிலையில் இருப்பதை விஷத்தை வேக வைத்து நீக்குகின்றோம்.

அதே சமயம் ஒருவன் தவறு செய்கின்றான் என்று அறிய உதவுகின்றது. பொருள் சேதமாகிவிட்டால் எவ்வளவு நஷ்டம் ஆகி விடுமே என்ற நிலையில் வேதனை அடையச் செய்து சிந்தனையை இழக்கும்படி செய்கின்றது.

அத்தகைய வேதனை உணர்ச்சிகள் தோன்றி அது செயலாக்கிய பின் இந்த உணர்வுகள் நம் ஆகாரத்துடன் சேர்ந்து விடுகின்றது.
1.இப்படிச் சிறுகச் சிறுக நமக்குள் அந்த விஷம் உருப்பெறுகின்றது.
2.அதைத் தடைப்படுத்துவது எப்படி…?
3.தீமை அணுகாத நிலைகள் கொண்டு எப்படி மீட்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத் தான் சூரசம்காரம் என்று காட்டுகின்றார்கள்.

ஏனென்றால் அதன் வழி சென்றவர்கள் மெய்ஞானிகள். அவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக இன்று இருக்கின்றார்கள். நம் பூமிக்குள் அங்கிருந்து பல ஆற்றல்மிக்க சக்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட மூச்சலைகளும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பூமிக்குள் சுழன்று கொண்டிருக்கிறது.

அதே போல வெறுப்பு வேதனையுடன் நாம் பேசிய எண்ண அலைகளும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அதுவும் காற்றிலே மிதந்து கொண்டுள்ளது.

விஞ்ஞான அறிவால்… ஒன்றும் அறியாத நாடாக்களில் பூசப்பட்ட உலோக முலாமுக்குள் பதிவு செய்து அதை மீண்டும் ஒரு இயந்திரத்தில் போட்டு அந்த உணர்வின் ஒலியைப் பரப்பச் செய்யும் பொழுது காந்தப் புலன்கள் தனக்குள் கவர்ந்து அலைகளாக அனுப்புகின்றது.
1.டிவியில் அதே ஸ்டேஷனைத் திருப்பி வைக்கப்படும் பொழுது
2.காற்றுக்குள் மறைந்திருக்கக்கூடிய நுண்ணிய அலைகளைக் குவித்த பின் அங்கே எந்தப் புகைப்படத்தைப் பதிவு செய்தார்களோ அதை ஈர்க்கின்றது.
3.டிவியைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சாதனம் சரியாக இருந்தால் அந்தப் படத்தை ஒழுங்காகக் காட்டுகிறது,

இதே போன்று தான் நம்மை அறியாதபடி சலிப்பு சஞ்சலம் வேதனை போன்ற உணர்வுகள் நம் நல்ல குணங்களுக்குள் கலந்த பின்… “நல்லதை எண்ணி இழுக்கும் திறன் இழந்து விடுகின்றோம்…!”

பாலுக்குள் காரத்தைக் கலந்தால் அதைக் குடிக்கும் பொழுது வெறுக்கச் செய்கின்றது. இதைப் போல நம் நல்ல மனம் கொண்டு நாளுக்கு நாள் ஒவ்வொன்றையும் பார்க்கப்படும் பொழுது
1.பிறர் தவறு செய்வதை நுகர நேருகின்றது அந்த உணர்வை அறிந்து கொள்கின்றோம்…
2.ஆனால் அவை நமக்குள் தீங்கு விளைவிக்கும் சக்திகளாக மாறுகின்றது.

அந்த சமயம் அந்தச் செயலை நீக்கிவிட்டாலும்… உடலுக்குள் சேர்ந்த அந்த விஷமான சத்தை நீக்கும் திறன் இழந்து இருக்கின்றோம். அதைத் கழிப்பதற்குத் தான் தீபாவளி திருநாளை வைத்தார்கள்.

மனிதனான நாம் அனைத்தும் அறியக்கூடிய வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் ஞானிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான் “தீபாவளி நாள்…”

ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த தீய சக்திகளை எல்லாம் மாற்றி உணர்வை ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டு ஜீவன் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
1.அவர்கள் பேசிய உணர்வலைகளை நாம் நுகர்ந்து
2.அவர்கள் எந்த வழிகளில் விண் சென்றார்களோ அந்த நிலையை நாமும் பெறுதல் வேண்டும்.

உயிர் ஒளியாகத் தோன்றியது… உணர்வை ஒளியாக மாற்றினார்கள். அந்த வழியிலே ஒளியாக இன்றும் வாழ்கின்றார்கள்.

இதைத்தான் ஓர் உயிர் ஒளியாகத் தோன்றி பூமிக்குள் விஜயம் செய்து நவராத்திரி என்று காட்டுகிறார்கள். அதாவது… பல உணர்வின் சக்திகள் உடலுக்குள் கொலு வீற்றிருந்து… இருளுக்குள் நின்று ஒளியை அறிந்து… தனக்குள் வழியறிந்து உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றவர்கள் சப்தரிஷிகள்.

1.அந்த மகரிஷிகள் காட்டி அருள் வழிப்படி நாம் அனைவரும் ஒளியின் உணர்வாக உருப் பெறுவோம்
2.அந்தத் தகுதியை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் தான் தீப ஒளித் திருநாள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புதிதாகக் கட்டிய வீட்டில் குடி புகும் முன் யாகத்தை வளர்த்துத் தீயைப் போட்டு மந்திரத்தைச் சொல்லி காசை வாங்கிக் கொண்டு செய்கிறார்கள். யாகம் நடத்துபவரிடம் காணிக்கை கொடுத்து அவரிடம் பொட்டு வைத்துக் கொண்டு செல்வார்கள்.

புகையைப் போட்டு அங்கே சுற்றிக் கொண்டு இருந்தால் புது வீட்டில் உள்ள தோஷம் நீங்கிப் போகும்…! என்று அவர்கள் சொல்லி விட்டுப் போவார்கள். தோஷம் எப்படிப் போகும்…?

அந்தப் புகையைப் போடும் பொழுது உங்கள் மனது எப்படி இருக்கிறது…?
1.கண்ணிலே தண்ணீர் வருகிறது.
2.அப்பொழுது வெறுப்பான உணர்வைத் தான் செலுத்துகின்றீர்கள்.
3.நல்ல உணர்வைச் செலுத்துகின்றீர்களா…?

ஏனென்றால் நெருப்பில் போட்டால் இது எல்ல்லாம் நீங்கிப் போகும் என்று “சாங்கிய சாஸ்திரங்களைத்தான்…” கொண்டு வருகின்றார்களே தவிர உண்மையான சாஸ்திரம் இல்லை.

எல்லோரும் தியானத்தில் அமர்ந்து
1.இந்த வீட்டிற்குள் வரும் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து
3.அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி அந்த ஒலி அலைகளைப் பரப்பினால் எப்படி இருக்கும்…?

ஏனென்றால் நம் உயிர் ஒரு நெருப்பு இந்த உயிரிலே பட்ட உணர்ச்சிகள் சொல்லாக வெளிப்படுகிறது. நம் உடலுக்குள் விளைந்து அது மூச்சாக வெளிப்படுகிறது.

நாம் இப்படித் தியானித்து வீட்டிலுள்ளோர் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து இந்த மூச்சின் தன்மை வெளிப்படுத்தி அருள் உணர்வின் எண்ணங்களைப் பதியச் செய்யப்படும் பொழுது வீட்டிற்குள் வந்தாலே சந்தோஷமாக இருக்கும்.

அப்பொழுது தான் வீடு கட்டும் போது பதிவான தோஷங்கள் அகலும்.

ஆனால் வழக்கில்… புது வீட்டில் யாகம் செய்தார்களே… அதற்கு என்ன சீர் செய்தார்கள்…? எதைச் செய்தார்கள்..? என்ன சாங்கியம் செய்தார்கள்..? இதை எல்லாம் கேட்டுத் துருவுவார்கள்.

1.அவர்கள் யாகம் செய்வது புறத் தீ…!
2.ஆனால் நாம் செய்வது அகத்திற்குள் இருக்கக்கூடிய தீ..!
3.அக உணர்வைச் செலுத்தி இருளைப் போக்கக்கூடிய நிலைகளுக்கு நாம் சொல்கிறோம்.
4.நாம் செய்யக்கூடிய இந்தத் தியானம் உண்மையான யாகமாகிறது.
5.இந்தத் தீயை அவர்கள் உணரவில்லை… இந்தத் தியானமோ உணர்வின் இயக்கமாக இருக்கிறது.
6.அது விகார உணர்வைத் தோற்றுவிக்கிறது… உங்களுக்குக் கண் எரிச்சலும் இருமலும் அது தான் வரும்.

யாகம் வளர்க்கிற வீட்டிலே பாருங்கள். எத்தனை சங்கடப்படுகிறார்கள்…? வருகிறதா… இல்லையா..? புறத்தால் சாங்கியத்தைச் செய்து எந்தத் தோஷத்தையும் போக்க முடியாது. மனத் திருப்திக்குத் தான் அது உதவும்.

மனிதனுக்குள் அகத்தீக்குள் (உயிருக்குள்) அந்த வலிமையான ஞானிகளின் உணர்வைப் படைத்து அந்த உணர்வின் நினைவலைகளைப் பரப்பினால்
1.வீட்டில் உள்ள தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகிறது.
2.நமக்குள்ளும் ஆழமாகப் பதிவாகிறது.
3.வீட்டிற்கு வருபவர்களுக்கும் நல்ல உணர்வு கிடைக்கிறது.

ஏனென்றால் அதிலுள்ள மேக்னட் இதைக் கவர்ந்து வைத்துக் கொள்ளும்.

சில பேர் அவர்கள் வீட்டில் உள்ள சங்கடத்தையும் கஷ்டங்களையும் சொல்வார்கள். நீங்கள் “உம்…” கொடுத்துக் கேட்டால் போதும். அவர்கள் வீட்டுக் கஷ்டத்தை எல்லாம் இங்கே ஓடி ஓடி வந்து சொல்வார்கள்.

அதை எங்கே உட்கார்ந்து கேட்கின்றீர்களோ அந்த வீட்டில் படரும்.
1.அடுத்தாற்போல் நீங்கள் சந்தோஷமாக இருந்த இடத்தில் என்ன ஆகும்…?
2.ஒரு இனம் தெரியாதபடி எங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோமோ…
3.”அங்கேயே…” இழுத்துக் கொண்டு வந்து உட்கார வைக்கும்.

அப்பொழுது இனம் புரியாமல் கவலைப்படுவீர்கள். ஏன் கவலைப்படுகிறோம்..? எதற்காக வேண்டிக் கவலைப்படுகின்றோம்…? என்பது தெரியாது.

ஏனென்றால் இந்த உணர்வின் இயக்கங்கள்..! நாம் தவறு செய்யவில்லை. நாம் அதைப் புரிந்து கொள்வதில்லை.

புரியாத நிலைகளில் சாமி காப்பாற்றும்… சாமியார் காப்பாற்றுவார்… ஜோதிடம் காப்பாற்றும்… மந்திரம் காப்பாற்றும்… வாஸ்து சாஸ்திரம் காப்பாற்றும்…! என்று சொல்லிக் கொண்டு இப்படித் திசை திருப்பி விட்டார்கள்.

ஆனால் நாம் எந்த உயர்ந்த எண்ணத்தை எண்ணுகின்றோமோ இந்த உணர்வு நம்மையும் காக்கும்.. நம்முடைய எண்ணம் மற்றவரையும் காக்கும் இந்த உடலில் நல்ல உணர்வுகளையும் ஊட்டும். என்றைக்கு இந்த நிலையை மனிதன் நம்புகிறானோ அது வரையிலும் இது வரும்.

விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்…? புதுப் புது உயிரினங்களை உருவாக்குகிறார்கள். புதுப் புதுத் தாவர இனங்களை உருவாக்குகிறார்கள். நாம் பார்க்கின்றோம் அல்லவா..!

அன்றைக்கு மெய் ஞானி என்ன சொன்னான்…?
1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகள் வந்தால்
2.தீமையை நீக்கிய உணர்வுகளை உனக்குள் நுகர்ந்து நல்ல அணுக்களை உருவாக்கு…! என்று தெளிவாகச் சொன்னான்.

கோவிலுக்குப் போய் ஞானிகள் காட்டிய வழியில் அந்த உயர்ந்த எண்ணங்களை எடுத்தால் நமக்குள் நல்ல அணுக்களை உருவாக்குகின்றது. அதே மாதிரி…
1.நம் வீட்டிற்குள் இருக்கும் பொழுது அந்த நல்ல எண்ணங்களை எண்ணி உருவாக்கினால் எப்படி இருக்கும்..?
2.உருவாக்க முடியுமல்லவா…! உங்களை நீங்கள் நம்புங்கள்…!

எதிரி எங்கே இருக்கின்றான்…?

 

ஒவ்வொரு மனிதனும் தான் தவறே செய்யவில்லை என்றாலும் திடீரென்று மற்றவர்கள் எதையாவது சொல்லிவிட்டால் அது நமக்குள் ஆழமாகப் பதிந்து விடுகின்றது… அவரவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு…!

அப்படிப் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… என்னை இப்படிச் சொன்னானே…!” என்ற உணர்வுகள்
1.நமக்குள் அது எதிரியை வளர்த்துக் கொண்டே வருகின்றது.
2.நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை.
3.நல்ல குணங்கள் வலு இழக்க நாமே காரணமாகின்றோம்.

ஆகவே அந்த நல்லதைக் காப்பதற்குத்தான் தத்துவ ஞானிகள் சாதாரண நிலையிலும் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தார்கள். இது அகஸ்தியனால் காட்டப்பட்டது.

1.அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் பெறுவதற்காக இம்முறையை வகுத்தான்.
2.அவன் துருவ மகரிஷியாகத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
3.எத்தகைய தீமையைக் கண்டுணர்ந்தாலும் மாற்றிக் கொள்ளலாம்.

ஒருவர் திட்டி விடுகின்றார் என்றால்… இதே உயிர் தான் இழுத்து இந்த உணர்வினை உணர்ச்சிகளாக இயக்கி… செயலுக்குக் கொண்டு வருகின்றது. இதே உயிர் தான் அதை அணுவாகவும் மாற்றி விடுகின்றது.

அவன் எவ்வளவு வேதனைப் படும்படிச் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது. இது தான் விஷ்ணு (உயிர்) வரம் கொடுக்கின்றான்… விஷ்ணுவுக்கு பிறந்த பிரம்மா அதை உருவாக்குகின்றார். அதாவது வேதனை என்ற விஷத்தின் தன்மை உருவாகி விடுகின்றது. அது தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… எந்த வேதனையை உருவாக்கும்படிச் சொன்னானோ அதனால் உருவான உணர்வுகள் பிரம்மனாக தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றதனால் “அந்த ஞானத்தின் வழிகளில் செயல்படும்…!”

இயற்கையின் உண்மை நிலைகளை நாம் கண்டு கொள்ள இவ்வளவு கருத்துடன் இதைக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஒரு விஷச் செடி காற்றிலிருந்து தன் இனமான விஷத்தையே நுகர்ந்து விஷச் செடியாக வளர்கின்றது.

அதைப் போல் உடலில் உருவான அந்த வேதனைப்படச் செய்யும் அணு…
1.எந்த மனிதன் வேதனைப்படச் செய்தானோ அவனின்று வரும் இந்த உணர்வை நமக்குள் அதைக் கிளர்ந்து சுவாசித்து
2.அதனுடைய மலத்தை நம் உடலிலே இடும்பொழுது தான் நல்ல அணுக்களுக்கும் அது வேதனை தாங்காது
3.அதனுடைய செயலைக் குறைக்கச் செய்து உடலிலே நோயாக வருகிறது.

என்னை வேதனைப்படச் செய்கின்றான்… அவனை விடுவேனா…? என்று கோபத்துடன் பதிலுக்குச் செய்தாலும் விஷத்தன்மையான அணுக்கள் மீண்டும் அவர்களை எண்ண எண்ண நோயாகவே விளைகின்றது.

அப்பொழுது எதிரி எங்கே இருக்கின்றான்…?
1.நமக்குள் எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோம்…
2.நம்மை மறந்து விட்டோம் என்ற நிலை தான் வருகின்றது.

குருநாதர் எனக்கு இதை அனுபவபூர்வமாகக் கொடுத்ததனால் அதை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் அதன் வழி தியானித்தல் வேண்டும்.
1.எத்தகைய வேதனைப்படும் நிலைகள் வந்தாலும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.

அதன் பின் நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் வராது நாம் இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நம்மைப் பெற்றெடுத்த தாயை… அந்தக் காப்பாற்றிய தெய்வத்தை மறந்தால்
2.நமக்கு நல்ல வழியைக் காட்டிய குருவை மறந்தால் எங்கே சென்றாலும் நல்லதை எடுக்க முடியாது.
3.“இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்…!”

தாய் தந்தையர் இன்று எத்தனை பேர் என்ன செய்கிறார்கள்…? வளர்ந்து சம்பாதித்துச் சொத்தைச் சேர்த்த பின் அனாதை இல்லத்தில் தான் இருக்கின்றர்கள்,

அங்கே இருந்தாலும் கூட பென்சன் (PENSION) வாங்கப் போனால் உனக்கு எதற்கு இவ்வளவு காசு…? ஐநூறு அறுநூறு பத்தாதா..? என்று சொல்லி அந்தப் பணத்தையும் தட்டிப் பறிப்பதற்குத் தான் குழந்தைகள் இருக்கின்றார்கள்.

உழைத்தேன்… பிள்ளைகளை வளர்த்தேன்… படிக்கச் செய்தேன் என்று தாய் தகப்பன் இருந்தாலும் இன்று இந்த மாதிரி நிறைய நடக்கின்றது.

நான் ஆடம்பரமாக வாழ வேண்டும்.. உனக்கு என்ன வேலை…? என் பிள்ளைகளை வளர்க்கப் பணம் வேண்டியிருக்கிறது உனக்கு எதற்குப் பணம்..? என்று கேட்பார்கள்… கொடுக்கவில்லை என்றால் உதைப்பதற்கு வந்துவிடுவார்கள்.

ஒரு தகப்பன் பணத்தைச் சம்பாரித்துப் போட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுத்து விட்டு கொடுத்த பிற்பாடு மூன்று இலட்சம் பணம் அவர் கையில் இருக்கிறது…!

அந்தப் பணத்தால் உனக்கென்ன வேலை..? உனக்கு மாதம் தர வேண்டிய பணத்தை நான் தருகிறேன். ஆகையினால் அதைக் கொடுத்துவிடு என்று கேட்கிறது பிள்ளை.

கொடுத்தால் அதற்கப்புறம் அவருக்குச் சோறு போடுவார்களா…? இந்த மாதிரியே சொல்கிறார்கள். இது நடந்த நிகழ்ச்சி. இது எல்லாம் இன்று கொடுமையிலும் கொடுமை…!

ஏனென்றால் இந்த அரக்க உணர்வுகள் தாய் தந்தையை மறக்கச் செய்கிறது.

யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி தாய் தந்தையரை வணங்கி எண்ணினால் ஒரு காட்டுக்குள்ளேயே சென்றாலும் புலியே தாக்க வந்தாலும் அம்மா…மா…! என்று சொன்னால் போதும். அந்தப் புலி உங்களைத் தாக்காது… அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல..! நீங்கள் இருக்கும் தெருவுக்குள் ஒரு நாயே வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐய்யய்யோ ஐய்யயோ முருகா…! என்று சொன்னாலும் கூட “லபக்” என்று பிடிக்கும்.

நாய் கடிக்க வரும் பொழுது அம்மா…! என்று சொல்லுங்கள். உங்களைக் கடிக்கிறதா…? என்று பாருங்கள். பரிசீலித்துப் பாருங்கள். யானையே வந்தாலும் சரி…!
1.அந்தத் தாயின் பாச உணர்வுகள் உங்கள் உடலில் இருக்கிறது.
2.உடனே குவித்து உங்களுக்கு முன்னாடி வரும்.
3.யானை அந்தத் தாய்ப் பாசம் கொண்டது..
4.இந்த உணர்வுகளின் மணம் பட்டவுடன் உங்களைத் தாக்காது.

உங்கள் தொழிலிலே பெரும் சங்கடமாக இருந்தால் எந்தச் சாமியாரையோ நினைப்பதைக் காட்டிலும் யாம் சொன்ன முறைப்படி உங்கள் தாயை வணங்கினால்…
1.அம்மா…மா…! என்று சொல்லி ஏங்கி
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபடும் வலிமையும் அந்தச் சிந்திக்கும் ஆற்றலும் கிடைக்க வேண்டும் என்று உங்கள் தாயை எண்ணிப் பாருங்கள்.
3.அந்தத் தாயின் உணர்வுகள் உங்களுக்குள் எவ்வளவு வேலை செய்யும் என்று நீங்கள் காணலாம்.
4.தாயைப் பேணிக் காக்கும் முறைகளைத் தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அம்மா அப்பா அருளால் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்படி ஞானிகள் சொல்லியிருந்தாலும் அதை எல்லாம் மறந்தே தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கோவிலுக்கு வாப்பா…! என்று சொன்னாலும் “உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது… நீ போ…!” என்று சொல்லக்கூடிய காலமாக இன்று உள்ளது.

அரக்க உணர்வு மனிதரிலிருந்து தாயையே இரக்கமற்றுக் கொல்லும் நிலை வருகிறது. இரக்கமற்றுத் துன்புறுத்தும் தன்மை வருகிறது… இதை எல்லாம் நாம் பார்த்துக் கண்ணீர் விடும் நிலை இருக்கின்றது.

ஒரு தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது எத்தனை அவஸ்தைப்படுகிறது..? பிறந்த பின் அந்தக் குழந்தையை வளர்க்க எத்தனை அவஸ்தை…? வளர்ந்து வரும் நிலையில் அவனைக் காக்க எத்தனை அவஸ்தை..? பிள்ளை கல்வி கற்க எத்தனையோ கடனை வாங்கிச் சிரமப்பட்டுப் படிக்க வைக்கின்றார்கள்… அதில் எத்தனை அவஸ்தை…?

இருந்தாலும் தன் பையன் கற்ற பின் அவனுடைய நிலைகளைப் பார்க்கும் பொழுது அந்தத் தாயின் நிலைகள்… கண் கொள்ளாத நிலைகள்.

ஞானிகள் காட்டிய நிலைகளைத் தவிர்த்ததனால் இன்று இதிலே படக்கூடிய வேதனைகள் ஏராளம்… ஏராளம்…!

என் (ஞானகுரு) அம்மாவைப் பற்றி நான் நினைக்கும் பொழுது எனக்கு (ஞானகுரு) அழுகை வந்துவிடும். காரணம்…
1.அந்தத் தாய் என்னைக் காத்த நிலைகள் கொண்டுதான்
2.இதை எல்லாம் (அத்தனை மெய் ஞானிகளையும்) அறிய முடிந்தது,
3.தாயின் உணர்வைச் சேர்த்துக் கொண்டதனால் தான் வருகிறது.

என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் பெண் பிள்ளை மாதிரி நான் தான் சமைத்துக் கொடுப்பேன். எதுவாக இருந்தாலும் என் தாயுடன் ஒட்டியே இருப்பேன்.

என் அம்மாவுக்கும் பாட்டிக்கும் (அப்பாவைப் பெற்றவர்) சண்டை வந்துவிடும். என் பாட்டி அம்மாவைக் கண்டபடி பேசும். ஒரு சமயம் என் அம்மா அதைக் கேட்டுக் கோபித்துக் கொண்டு கிணற்றில் விழுந்துவிட்டது.

எனக்கு ஒன்பது வயது இருக்கும். ஓடிப் போய்க் கிணற்றில் குதித்து என் அம்மாவைக் காப்பாற்றித் தூக்கிக் கொண்டு வந்தேன். அதற்கப்புறம் என் அம்மாவை நான் பிரிந்திருக்கவில்லை. ஏனென்றால் ஏதாவது சொன்னால் மறுபடியும் விழுந்துவிடுமே என்று…! தாயின் பாசத்தை தாய் எனக்கு உணர்த்தியிருக்கின்றது.

அந்த உணர்வின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது ஒவ்வொருவரும் கடவுளைத் தேட வேண்டியதில்லை.
1.நம்மை உருவாக்கிய தாய் தான் கடவுள்…!
2.நம்மைத் தெய்வமாகக் காத்தது இந்தத் தாய் தான்…!
3.குருவாக இருந்ததும் தாய் தான்.

அதனால் இதை எல்லாம் நீங்கள் மனதில் வைத்து இன்று விஞ்ஞான உலகம் அஞ்ஞான வாழ்க்கையில் போய்க் கொண்டிருக்கும் பொழுது மெய் ஞானிகள் காட்டிய அருள் வழி கொண்டு தாயின் பேரன்பு கொண்டு அதை உங்களுக்குள் சேர்த்துப் பழகுங்கள்.

எதிலேயும் எந்த நிலையானாலும் அம்மா அப்பா அருளால் இந்தச் செயல் நன்றாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து செய்து வாருங்கள்.
1.சிக்கல் வரும் பொழுது அம்மாவை எண்ணுங்கள்
2.இந்தச் சிக்கலிலிருந்து விடுபட எனக்கு ஒரு நல்ல உபாயம் வேண்டும் என்று எண்ணுங்கள்.

அந்தத் தாயின் உணர்வு இருப்பதால் அதே உணர்வு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்
1.தாய் நம்மைப் பேணிக் காத்த உணர்வு நமக்கு ஞானத்தை ஊட்டி
2.தப்பிக்கும் உபாயத்தையும் மார்க்கத்தையும் காட்டும்.

யாராவது நமக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்றால் இதே உணர்வு வந்து ஊக்கம் ஊட்டி நம்மை அவர்கள் தாக்காதபடி காக்கவும் செய்யும். எதிரிகள் எத்தனையோ நிலைகள் இருந்தாலும் தாய் எண்ணியிருந்தால் தாக்கக்கூடிய உணர்வையே மறைக்கக்கூடிய சக்தி இருக்கின்றது.

அதே போல் தாய்மார்களும் என்ன செய்ய வேண்டும்…?

குழந்தைகளுக்கு ஞானத்தை ஊட்ட வேண்டும். ஏனென்றால் பிள்ளைகள் தவறி விடுகிறது. அதை எல்லாம் எண்ணியபின்
1.பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று கோவிலில் போய் வேதனையைத் தான் படுகின்றோம்.
2.அவனை எண்ணி வேதனையைத் தான் வளர்க்கிறோம்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் மாற்றி என் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று.. கல்வியில் சிறந்த ஞானம் பெற்று… உலக ஞானம் பெற்று… “உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக வளர வேண்டும்…” என்று இன்று விஞ்ஞான உலகிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு நாம் இந்த முறைப்படி அவசியம் எண்ணித் தான் ஆக வேண்டும்.

நம் உடலில் உருப் பெறும் அணுக்களை நல்லதாக மாற்றும் பயிற்சி

 

நாம் கெட வேண்டும் என்று யார் எண்ணினார்களோ அவர்களை நாம் எதிரியாகக் கருதும் பொழுது “எதிரியைத்தான்…” உடலுக்குள் வளர்க்கின்றோம்.

இதை மாற்றுவதற்குத் தான் ஞானிகள் காட்டிய விநாயகர் தத்துவத்தின்படி
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நல்ல குணங்களுக்கு ஊக்கச் சக்தியைக் கொடுப்பதும்
2அவர்கள் தீமையான உணர்வுகளைச் சொல்லும்போது மகரிஷிகள் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும் என்றும் சொல்வது.

காரணம் கண்களிலே பார்த்தது நமது ஆன்மாவாகின்றது. சுவாசித்த பின் உயிரிலே படுகின்றது… அந்த உணர்வு இயக்கப்படும் பொழுது ஜீவணுவாக மாறுகின்றது.

முதல் அணு உருவாகி விட்டாலும் அடுத்த நிமிடம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.

ஏனென்றால்
1.கண் இப்படி முன்னாடி வருவதை எடுத்து அதன் வழி நேரடியாகப் பேசுகின்றது.
2.ஆனால் கண்களால் மகரிஷிகள் உணர்வை எண்ணி அதை எடுத்து இடைமறித்து உயிரிலே (புருவ மத்தியிலே) இணைக்க வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் திரும்பத் திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். காரணம் என்ன என்றால் மறந்து விட்டுத் தீமைகளை எப்படி மாற்றுவது…? என்று தெரியவில்லை என்று திரும்பக் கேட்பாரும் உண்டு.

அதனால்தான் ஞாபகப்படுத்துவது…!

வாழ்க்கையில் வரும் தீமைகளை இடைமறித்து அருள் ஞானிகள் உணர்வை உள்ளே செலுத்தப்படும் பொழுது தீமைகளை அகற்ற முடிகின்றது.

தங்க நகைகளைச் செய்கின்றோம்… செம்பு வெள்ளியை அதனுடன் இணைத்துத்தான் செய்கின்றோம். ஆனால் அதை வைத்து அடுத்த நகை செய்யும் பொழுது திரவகத்தை ஊற்றிச் சுத்தப்படுத்துகின்றோம்.

1.தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிய “அந்த வலுப்பெற்ற உணர்வுகள் மகரிஷிகளுடையது…”
2.அதை நாம் நுகர்வதற்குத் தான்… பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்… நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் “தியானம்…”

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது இது தியானம். மகரிஷிகள் அருள் சக்திகளை உடலுக்குள் செலுத்தச் செலுத்த உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அது உரம் ஆகின்றது.

1.பிறர் செய்த தீமைகள் நம் உடலுக்குள் உருவாவதற்கு முன்பு அந்த மகரிஷியின் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது
2.தீமையான அணுவாக அது வளர்வதற்கு முன் “அந்த அணுவையே…” நமக்குச் சாதகமான நிலைகளாக மாற்றிவிடும்.
3.தீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்யும் பொழுது “ஒவ்வொன்றிலும் நமக்கு வலுப்பெறுகின்றது…”

இரண்டு தரம் கெட்டதைக் கேட்டோம் அல்லது சொன்னோம் என்றால் நல்லது செய்வதை அது தடைப்படுத்துகின்றது. ஆனால் அதே சமயத்தில் அது போல் ஆன பின் அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை இணைத்து விட்டால்
1.அந்த அணு நம் வழிக்கே இணைந்து வருகின்றது.
2.அப்பொழுது நம்மைக் காக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது.

அதற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் நமக்குள் எதை வினையாக்க வேண்டும்…? வினைக்கு நாயகனாக எதை இயக்க வேண்டும்…? என்று கேள்விக்குறி போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

உதாரணமாக… வேதனைப்படும் நிலையாகி விட்டால் அது வேதனையை அதிபதியாக்கும் அணுவாக விளையத் தொடங்குகிறது. அந்த அணுவின் செயலாக்கங்களையே கொண்டு வருகின்றது.

அதே சமயம் இதை அடக்கிய மகரிஷிகள் உணர்வை அங்கே இணைக்கப்படும் பொழுது
1.அந்த அணுவிற்குள் ஞானியின் உணர்வுகள் அதிபதியாகத் தொடங்கி விடுகின்றது.
2.பின் ஒளியான அணுக்களாகவே உருப்பெறத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் நாம் அந்த மெய்ஞானியின் உணர்வை வினையாக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று இப்படி எண்ணினால்
1.நாம் யாரையுமே எதிரியாக ஆக்குவதில்லை.
2.நமக்குள் எதிர்மறையான அணுக்களும் உருவாகாது
3.ஒன்று சேர்ந்து வாழும் நிலைகள் உருவாகின்றது… மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வீட்டில் பையன் குறும்புத்தனம் செய்து கொண்டேயிருக்கின்றான்.. சொன்னபடி கேட்கவில்லை… சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான்…! என்றால் அவனை எண்ணும் பொழுதெல்லாம் வேதனை அதிகமாகின்றது.

அப்பொழுது சிந்தனை இழந்து கோபமாகி குடும்பத்திலும் கலவரங்கள் வருகின்றது. அப்புறம் யாரிட்ட சாபமோ…? யார் என்ன செய்தார்களோ…? என்று இப்படிப் பல எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது.
1.நம்மை அறியாமல் இயக்குகிறது என்று தெரிகிறது.
2.அதை உடனே போக்க வேண்டுமல்லவா…! அதற்கு வழி..?

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வெல்லாம் வினையாகின்றது (வினை என்றால் வித்து – உடலுக்குள் அணுவாகின்றது). அது வினைக்கு நாயகனாக நம்மை இயக்கத் தொடங்குகிறது.

ஒரு பருப்பை நாம் வேக வைத்தால் முளைக்குமா…? முளைக்காது. அதைப் போல் நமக்குள் வந்த வினையை வேக வைக்க வேண்டும். அதற்காக வேண்டித்தான் விநாயகரை வட மேற்கிலே வைத்து வடகிழக்கிலே பார்த்து நம்மை வணங்கும்படிச் சொல்கிறார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரம் வடகிழக்கிலிருக்கின்றது. துருவ நட்சத்திரம் காலை நான்கு மணிக்கு உதயமாகி அதிலிருந்து அலைகள் வருகிறது.
1.அந்த நேரத்தில் நாம் முழித்து “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி
2.அப்பா அம்மாவை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று
3.நம் உடலுக்குள் பதிவு செய்து பழகிக் கொள்ள வேண்டும்.
4.அப்படிப் பதிவு செய்து பழகுவதற்குத்தான் விநாயகரை வட மேற்கிலே வைத்துள்ளார்கள்.

ஆக வடகிழக்கில் துருவ நட்சத்திரம் உள்ளது. நாம் விநாயகரைப் பார்க்கும் நிலையில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை
2.தன்னிச்சையாகப் பெறும்படி செய்தனர் ஞானிகள்.

விநாயகருக்கு முன்னாடி என்ன வைத்துள்ளார்கள்..?

புல்லைத் தின்றோம்… தழைத் தாம்புகளைத் தின்றோம்.. கனிகளைத் தின்றோம்…! இன்று மனிதனாக ஆன பின் இன்று சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம் என்று கொழுக்கட்டையை வைத்துக் காண்பித்து
1.இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! என்று
2.கேள்விக் குறியே போட்டுச் சொல்கிறார்கள்.

ஆனால் நாம் அந்தக் கேள்விக் குறியைப் போட்டுக் கணக்கு எழுதுவதும்.. வீட்டு வரவு செலவு கணக்குப் பார்ப்பதும்… நல்ல நேரம் பார்ப்பதும்.. அதற்காக வேண்டித் தான் அதைப் போட்டு ஆரம்பிக்கின்றோம். வேறு எதுவும் இல்லை.

ஆகவே மனிதனான பின் வேக வைத்துச் சாப்பிடுகிறோம். வேக வைத்தால் அது மீண்டும் முளைக்காது. இதே போல் பையன் அறியாத நிலைகளில் செயல்படுகிறான்… என்றால் அந்த வேதனை என்ற விஷம் நமக்குள் முளைக்காது தடுக்க வேண்டும்.

பையன் அறியாது செயல்படுத்தக் கூடிய அந்த வேதனையான உணர்வு நம் உயிரிலே மோதியவுடனே அது தீய வினையாக நமக்குள் சேர்கிறது. ஏன்…?
1.பல கோடிச் சரீரங்களில் முதலில் தீய வினைகளை நீக்கித் தான் மனிதனாக வந்தோம்.
2.இப்பொழுது இது தீய வினைகளாக நமக்குள் மாறுகின்றது
3.அப்படி மாறுவதைத் தடுக்க வேண்டுமல்லவா…!

இதைத்தான் இராமாயணத்தில் வாலி என்று காட்டுகின்றனர். அவனுடைய தவறான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது “வாலி” வலிமையாகி விடுகின்றது. நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி விடுகின்றது.

அவனுடைய தவறான உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள் கணங்களுக்கு அதிபதியாகிவிடுகின்றது. அவன் எந்தத் தவறு செய்தானோ அதே தவறை நம்மைச் செய்யும்படித் தூண்டுகிறது. அவன் செய்த தவறையே நம்மைச் செய்யும்படித் தூண்டுகிறது.

1.அவன் தவறு செய்துவிட்டான் என்று நாம் நினைக்கின்றோம்.
2.அவன் ஒரு மடங்கு தவறு செய்தான் என்றால் அதற்குப் பதில்
3.பல மடங்கு அவனைக் கோபித்துத் திட்டுகிறோம்… அடிக்கப் போகிறோம்… தள்ளி விடுகிறோம்.

நம் பையன் என்று தெரிகிறது. அவனுக்குப் புத்திமதி சொல்ல முடிகிறதா…? அது அதிபதியாகி விடுகின்றது. அதன் வழி தான் நாம் நடக்கின்றோமே தவிர நம் நல்ல குணத்தைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடிகிறதா…? முடிவதில்லை.

பையன் குறும்புத்தனம் செய்தால் “காலையில் எடுத்துப் பதிவாக்கிப் பழகிய…” நல் வினையானை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணினோம் வினைக்கு நாயகனாகத் தீமையை நீக்கும் உணர்வுகள் நமக்குள் வளரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து விட்டால் உள்ளுக்குள் போவதில்லை.

“உயிரிலே பட்டால் தான் இந்த உணர்வுகள் வரும்…!” (இது முக்கியம்). கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி இழுத்துப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும்.

1.அந்த உணர்வைச் சேர்த்தவுடனே
2.எதை வலு கொண்டு கண்ணிலே பார்க்கிறோமோ…
3.உயிரிலே… அதை இழுக்க ஆரம்பித்துவிடுகிறது.
4.அப்படி இழுக்க ஆரம்பித்தவுடனே குறும்பு செய்தான் அல்லவா…
5.அந்த உணர்வை உள்ளுக்குள் போகவிடாமல் தடுக்கிறது.

இப்படித் தடுத்து… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும் என்று முதலிலேயே அனுப்புகின்றோம்.

ஏனென்றால் அவன் செய்த வேதனை என்ற உணர்வுகள் சாப்பாட்டுடன் கலந்து அப்புறம் தான் இரத்தமாக மாறும். இரத்தத்தில் கலந்த பின் அணுவாக மாறும்.
1.அப்படிக் கலந்து வருவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும்… இரத்தங்களில் கலக்க வேண்டும்…! என்று செலுத்திவிடுகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி விடுகின்றோம்.

இப்படிச் செலுத்திப் பழக வேண்டும். இப்படிப் பழகிக் கொண்டால் பையனால் நமக்குள் வேதனையோ கோபமோ ஆத்திரமோ வெறுப்போ வராது. மாறாக அவனுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல சிந்தனை வருகிறது.

அதன்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உனக்குக் கிடைக்கும்.. நீ தெளிவாக வருவாய்… உன் செயல்கள் எல்லோருக்கும் நல்லதாகும்…! என்ற நல்ல வாக்கினை பையனுக்குக் கொடுக்க வேண்டும்.

இந்த உணர்வுகள் அவனுக்குள் சிறுகச் சிறுகச் செல்ல அவனை அறியாது இயக்கிய குறும்புத்தனங்கள் மாறி நம் சொல்லைக் கேட்கும் தன்மைக்கு வருவான்.

செய்து பாருங்கள்…!

நான் செய்தேன்…! இப்படி இருக்கின்றதே…! என்ற வேதனைப்படக் கூடாது

 

1.எக்காரணத்தைக் கொண்டும்… இந்த வாழ்க்கையில் எத்தகைய அச்சுறுத்தும் உணர்வுகள் வந்தாலும்…
2.அந்த மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதை வளர்க்கப்படும் பொழுது
3.நம்மை அச்சுறுத்தும் அந்த உணர்வுகள் ஒடுங்கும்.
4.மகரிஷிகள் உணர்வுகள் அதை அச்சுறுத்தும்…!

ஆகவே… ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க நீங்கள் பழகிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வாழும் இடங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… எங்கள் தெரு முழுவதும் படர வேண்டும்… தெருவில் இருப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமாக இருக்க வேண்டும்…! என்ற தவத்தை மேற்கொள்ளுங்கள்.

நண்பர்களாக இருக்கின்றோம். சந்தர்ப்பத்தால் அந்தக் குடும்பத்தில் இன்னல்கள் படுகின்றார்கள் என்று தெரிந்து கொண்டால் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானியுங்கள்.

அந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் அந்தக் குடும்பத்தில் உள்ளோர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்… குடும்பம் நலமாக இருக்க வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும் என்று இந்தத் தவத்தை எடுங்கள்.

இது உண்மையான தவம் ஆகிறது.

1.இதைச் செயல்படுத்தினீர்கள் என்றால் நமது குரு அருளை உங்களுக்குள் காணலாம்
2.பேரண்டத்தின் நிலைகளையும் உங்களுக்குள் காண முடியும்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

யார் கஷ்டப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்டாலும் கூட உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். உடலுக்குள் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று நினையுங்கள். அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற தவத்தை எடுங்கள்.

இதைப் பெருக்குங்கள். இதையெல்லாம் நீங்கள் செய்து பழக வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று கூட்டுத் தியானமிருங்கள். அனைவரது குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று தவம் இருங்கள்.
1.எல்லோரும் அப்படிச் சொல்லி… அதைப் பெற வேண்டும் பெற வேண்டும் என்று
2.எல்லோருடைய தவமும் ஒன்று சேரும் பொழுது நல்ல பலனைக் கொடுக்கும்.

இதனை வரிசைப்படுத்தி நாம் கொண்டு வருதல் வேண்டும்.

நான் செய்தேன்…! இப்படி இருக்கின்றதே…! என்ற நிலைகளை எடுக்கக் கூடாது. தொழில் செய்யும் இடங்களிலும் இதைச் செய்து பழகிக் கொள்ளுங்கள். இந்தத் தவத்தை மேற்கொள்ளும் பொழுது அங்கே தவறுகள் மறையும்.

ஏனென்றால் இந்தத் தவறை வளர்த்துக் கொண்டால் நமக்குள்ளும் தவறுகள் விளையும். அந்த உணர்வே மீண்டும் இயக்கச் சக்தியாக வரும்.

தவறு செய்கின்றான்… தவறு செய்கின்றான்..! என்று தவறு செய்தவனைச் சொல்லிக் கொண்டிருந்தால் இது எங்கெல்லாம் சொல்கின்றோமோ இந்த உணர்வு அங்கே விளைந்து எல்லோரையும் இந்தத் தவறையே செய்ய வைத்துவிடும்.

பின்… “எங்கே பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றது…” என்று மீண்டும் அதைத்தான் வளர்க்க ஆரம்பித்து விடுவோம்.

1.குருநாதர் எந்த வகையிலெல்லாம் எனக்குக் கொடுத்தாரோ
2.அதையெல்லாம் துணுக்குத் துணுக்காக உங்களுக்குக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
3.அதன் வழியில் ஒவ்வொரு நிமிடமும் தியானித்துப் பழகுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நம் குடும்பத்தில் எல்லோரும் பெற வேண்டும் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற இந்தப் பழக்கத்திற்கு நாம் அனைவருமே வந்துவிட வேண்டும்.

குரு வழியில் இப்படிச் செயல்படுத்தினால் இந்த உலகையும் காக்கின்றோம்… நம்மையும் காக்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம். அந்தக் கஷ்டமான அலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்திருக்கின்றது.

அதை மாற்றக் கூட்டுத் தியானங்களிலிருந்து எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று அந்த ஞானிகள் உணர்வு இங்கே வரப்படும் பொழுது தீமைகள் ஒடுங்குகின்றது.

நம்முடைய எண்ணங்கள் அதிகமாக இதைப் பிரதிபலிக்கும் பொழுது காற்றில் கலந்துள்ள நச்சுத்தன்மையை ஈர்க்கும் நிலை இழக்கப்பட்டு அந்த உணர்வுகள் அகன்று சென்று விடுகிறது.

நாம் வசிக்கும் தெருவிலே இது போன்ற அலைகளைப் பாய்ச்சப்படும் பொழுது அதை மாற்றி அமைக்கும் சக்தி நமக்குக் கிடைக்கின்றது.

1.குரு அருளை நமக்குள் வளர்த்து… நாம் எல்லாம் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த உலகைக் காக்கும் சக்தியாக வர வேண்டும்.
2.எல்லா இடங்களிலும் இதைப் பரப்பி பழகுதல் வேண்டும்.
3.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை வழி நடத்திக் கொண்டு போக வேண்டும்.

இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் இதைச் செயல் வடிவுக்கு கொண்டு வந்தால் போதும்.

“சிரமம்…” என்ற அந்தச் சொல்லே நமக்கு வேண்டியதில்லை. உடனுக்குடன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானியுங்கள். இந்தக் குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தவமிருந்தால் “அந்தத் தவம்…” நமக்குள் வளர்கின்றது.

அதே சமயத்தில் குடும்பம் நன்றாக வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணும் போது “அந்தக் குடும்பங்களின் கஷ்டங்கள் நம்மைச் சாடாது…”

1.இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நாம் பார்க்க விரும்பிய சப்தரிஷி மண்டலமும்
2.எப்படியெல்லாம் அந்த ஞானிகள் உணர்வை ஒளியாக மாற்றி உருபெற்றார்களோ அதையும் நீங்கள் பார்க்கலாம்.
3.நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்… நீங்களும் பார்க்கலாம்.

சில பேருக்கு இப்பொழுதும் தெரிகின்றது. தெரிந்தாலும் நிஜமா… பொய்யா..? என்று சந்தேகம் உள்ளுக்குள் மாற்றிக் கொண்டே இருக்கும். நாம் பார்ப்பது நிஜமா…? என் எண்ணம் தான் இவ்வாறு இயக்குகின்றதா…? என்ற இந்த வினாக்கள் இருக்கும்.

உதாரணமாக… அச்சுறுத்தும் உணர்வுகளைக் கேட்கப்படும் பொழுது இரவிலே தூங்கும் பொழுது அந்த உணர்வு எப்படி இயக்குகின்றதோ… அதே போன்று மெய்ஞானிகள் உணர்வை நாம் எடுக்கப்படும் பொழுது அந்த அச்சுறுத்தும் உணர்வை அடக்கி அந்த ஞானி உணர்வுகளை நாம் காண முடியும்.
1.அச்சுறுத்தும் உணர்வுகள் தெரிவது போல் தான்
2.மெய் ஞானிகளையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

யாரும் தவறு செய்யவில்லை. தெரிந்து யாரும் ஞானியாக ஆகவில்லை நான் ஞானியாக வேண்டும் என்று “தெரிந்து… அப்படி ஆகவில்லை…”

1.மற்றவர்கள் நலம் பெற வேண்டும் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது தான் ஞானி ஆகின்றார்கள்.
2.பிறர் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணும் போது தான் ஞானியாக முடிகின்றது.

ஞானிகளைப் போன்று நாமும் வாழ்க்கையில் அதைக் கடைபிடித்துச் செயல்படும் பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைகின்றோம்.

அந்த உயர்வான நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று உங்கள் எண்ணத்தை உயர்த்தி… எல்லோரையும் அந்த உயர்ந்த நிலையை நீங்கள் பெறச் செய்ய முடியும்
1.உங்கள் பார்வையால் உலகில் உள்ள நஞ்சின் தன்மையை மாற்ற முடியும்.
2.இங்கே 50 பேர் தான் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று எண்ண வேண்டாம்… இது ஐம்பது இலட்சமாகவும் ஐம்பது கோடியாகவும் மாறலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு பயந்தவரின் உணர்வை நமக்குள் பதிவாக்கி விட்டால் என்ன ஆகும்…? அதாவது இந்த இடத்தில் தான் கோரமான விபத்து ஆனது… அதை நான் நேரடியாகப் பார்த்தேன்… பயந்து விட்டேன்…! என்று அவர் சொன்னால் போதும்.

நீங்கள் அந்த இடத்திற்குப் போனால் தன்னாலே அந்தப் பய உணர்வுகள் தூண்டும். அந்த உணர்வு வந்தவுடனே உங்களை அறியமலே கிடு..கிடு…கிடு…! என்று நடுங்கச் செய்யும்.

இந்த உணர்வுகள் இயங்குவதைப் போல் தான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே அருள் உணர்வுகளைப் பாய்ச்சுகின்றேன். ஏனென்றால்
1.குருநாதர் எனக்குத் தெரியாமல் தான்
2.எனக்குள் (ஞானகுரு) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அறிமுகப்படுத்தினார்
3.அதைப் போல் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சகதிகளை “நீங்களும் பெற வேண்டும்…” என்ற ஆசையில்
4.தொடர்ந்து இதைக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆக… இனம் இனத்தைத் தான் பெருக்கும். அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளிலே எல்லோரும் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆகையினால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எமக்கு ஊட்டிய அருள் உணர்வுகளை எல்லாம் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் ஒன்றாக இணைய வேண்டும் என்று
1.அவர் காட்டிய அருள் வழியில் உங்கள் உயிரை ஈசனாக மதித்து
2.உங்களுக்குள்… உங்கள் உணர்வுக்குள் தொட்டுக் காட்டுகின்றோம்.

இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் சொல்வார்கள்…. தன் ஆசையின் நிலை கொண்டு என்ன செய்கிறார்கள்…? இங்கே “தட்டி” அதை எண்ணியவுடன் அவர்கள் உணர்வுகள் எல்லாம் இங்கே வந்துவிடும்.

அந்த ஆசையின் உணர்வுகள் வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள். அந்த மந்திரத்தின் உணர்வுகள் வந்த பின்
1.இங்கே பார் வந்துவிட்டது… என்று
2.ஆக்கினையைத் தொடு…! என்று காட்டுவார்கள்.

அவர் ஆசையின் உணர்வுகள் இந்த உடலிலும் இயக்கும். இதே போல் சில மனிதரின் உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும். தொட்டவுடன் அவர்களுக்குக் “கிர்…ர்ர்ர்…!” என்று வரும்.

இபப்டித் தொட்டுக் காட்டிவிட்டால் அவர்களுக்கு அந்த உணர்வே தான் பழக்கம் வரும். “கிர்…ர்ர்ர்…!” என்று நெற்றி வலிக்க ஆரம்பித்துவிடும். பல நிலைகள் எல்லாம் ஆரம்பித்துவிடும். இது அல்ல..!

சாதாரணமாக ஒரு சிறிய பையனைத் தொட்டு “உனக்குள் இப்பொழுது மின்சாரம் பாய்கிறதா பார்…!” என்றால் அந்த உடலில் இருப்பதெல்லாம் இங்கே வரும்.

இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் நிலையும் ஆகும். அதைப் போன்ற நிலைகளில் எல்லாம் யாரும் சிக்காதீர்கள்…!

ஆனால் நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காண்பிப்பது என்பது எப்படி…?

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்குள் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரும் அந்த உணர்வுகளை இணைக்கும் நிலையாக
1.இந்த உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது (படிக்கும் போது)
2.அது எப்படி ஆனது என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது உங்கள் உடல் அணுக்கள் அனைத்துக்கும் இது தொட்டுக் காட்டுவதாகும்.

நான் பேசுவது இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாய்கிறது. அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “உங்கள் எண்ணத்தாலேயே…” நீங்கள் அந்தத் துருவ நடசத்திரத்தின் அருள் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அதை நீங்கள் எண்ணி வளர்க்க வளர்க்க உங்களுக்குள் பேரொளியாக மாறும். நீங்களே அதை உணர முடியும்,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பண்புள்ள மனிதன் அதைப் பார்க்கும் நிலையில் அந்த வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் இவனுடைய உணர்வுகளும் இருன்டுவிடுகிறது.
1.அவனைக் காக்க எண்ணுகின்றான்
2.ஆனால் அதே உணர்வு இங்கே இருண்டு விடுகின்றது.
3.அந்த உண்மையை அறிய முடியாத நிலைகளில் இவன் உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஊடுருவி விடுகின்றது.

ஆனால் பலருக்கும் இதைப் போல உதவி செய்யும் நிலையில் பிறருடைய துயரங்களை எண்ணி ஏங்கும் பொழுது அவர்கள் படும் துயரமெல்லாம் இங்கே வந்து இவன் சிந்திக்கும் தன்மையும் குறையத் தொடங்குகிறது.

ஏற்கனவே நல்லது செய்திருந்தாலும் அதைச் செய்ய முடியாத நிலைகளில் “எல்லோருக்கும் நல்லது செய்தேன்… என்னை ஆண்டவன் சோதிக்கின்றானே…!” என்று சொல்லிக் கொண்டு அவன் நல்லதைச் செய்வதையே மறக்கின்றான்.

எதைச் செய்து என்ன புண்ணியம்..? அப்படியே நாசமாகப் போகட்டும்..! அவன் கடைசி உணர்வாக இதை எடுத்துக் கொள்கின்றான்.

ஆகவே இதைப் போன்ற உணர்வு வரப்படும் பொழுது எந்த நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினார்களோ பிறருடைய வேதனைப்படும் உணர்வை நுகரப்படும் பொழுது நல்ல குணங்கள் அனைத்தும் மடிந்து விடுகின்றது.

பின் அவனைப் போல் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து நமக்குள் நோயாகும் நிலையும் தவறு செய்பவனாகவும் மாற்றிக் கொண்டே இருக்கும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமல்லவா..!

இதை எல்லாம் மாற்றி அமைத்தவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வை எடுத்து நம் உடலிலே அடிக்கடி பெருக்குதல் வேண்டும்.

கடும நோயாக இருந்தாலும் இப்பொழுது பதிவு செய்த இந்த உணர்வின் வலு கொண்டு இந்தக் காற்றிலுள்ள நல்ல மணத்தை நுகரலாம்.

செடி கொடிகள் எந்த உணர்வின் சத்தைப் பெற்றதோ அந்த உணர்வின் துணை கொண்டு அந்தத் தாய்ச் செடியின் மணத்தைக் காற்றில் கலந்திருப்பதனால் அதிலே விளைந்த வித்து புவியின் துணை கொண்டு அது கவர்ந்து அதே உணர்வுகள் அதே மணம் அதே குணமாக வளர்க்கின்றது.

இதைப் போல…
1.அன்று வாழ்ந்த அகஸ்தியன் தன் உடலிலே பல பச்சிலை மூலிகைகளை எடுத்து
2.அவன் உடலிலே விளைய வைத்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்தப் பூமியில் அலைகளாகப் படர்ந்துள்ளது
3.அதை எல்லோரும் பெற முடியும்… அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் இப்பொழுது உபதேசிக்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு உங்கள் நினைவைக் கூட்டினால் அகஸ்தியன் பல நோய்களைப் போக்கிய உணர்வை இந்தக் காற்றிலிருந்து நீங்களும் பெற முடியும்.
1.அந்த அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தால்
2.அதிசயக்கத் தக்க நிலைகளில் உடல் உறுப்புகளை மாற்றமடையச் செய்யும்…
3.அறியாது வந்த நோய்களையும் மாற்றியமைக்கலாம்.
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கி இந்த உடலுக்குப் பின் ஒளியின் சரீரமும் பெறலாம்.

அதே சமயத்தில் உடலில் சில உபாதைகள் இருக்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ண முடியாது போய்விடுகின்றது. அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் வரும் பொழுது தீய அணுக்களைத் தான் நமக்குள் வளர்க்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட இப்பொழுது அந்த அகஸ்தியனின் உணர்வைப் பதிவாக்குகின்றோம்… பயிற்சியும் கொடுக்கின்றோம்.

இங்கே சொல்லும் நிலைகளில் நீங்கள் பெற்றதை
1.ஞானகுரு நமக்குச் சொன்ன வழியில் நாம் இதைப் பெற்றோம்…
2.தீமைகளையும் நோய்களையும் நீக்கிடும் அந்த வலிமை பெற்றோம்…
3.அருளைப் பெற்றோம் இருளை நீக்க முடியும்…
4.பிறவியில்லா நிலையை அடைய முடியும்…! என்று உங்கள் ஊக்கமான உணர்வுகளை
5.உங்கள் நண்பர்களிடத்திலேயோ சொந்தபந்தங்களிடத்திலோ அவர்களுக்குள்ளும் பதிவு செய்யுங்கள்.
6.அந்த நினைவு அவர்களுக்கும் வரட்டும்… அவர்களும் அந்த உயர்ந்த நிலைகளை பெறட்டும்.

இதை எல்லாம் நீங்கள் பழக வேண்டும். ஏனென்றால் இன்று உலகம் முழுவதுமே விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த விஷத் தன்மைக்குள் மறைந்து தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வும் இருக்கின்றது. அதைப் பிரித்து எடுப்பதற்குத்தான் உங்களுக்கு இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு).

எத்தனை விதமான உணர்வுகள் இருந்தாலும் ரோஜாப்பூ தன் நறுமணத்தை எடுத்துக் கொள்கின்றது. எத்தனை விதமாக இருந்தாலும் கருகப்பிள்ளைச் செடி தான் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்கொப்ப அது காற்றிலிருந்து பிரித்து எடுத்துக் கருகப்பிள்ளைச் செடியாக மாறுகிறது.

இப்படி ஒவ்வொரு தாவர இனங்களும் அது அது தன் தன் சத்தைப் பெறுவது போல உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் அருள் உணர்வைப் பெருக்கப்படும் பொழுது விஷத்தின் தன்மையைத் தடுக்கும் தன்மை உங்களுக்குள் வரும்.

நீங்கள் இதைப் பழகிக் கொண்டால் உங்கள் ஆன்மாவில் இதைப் பெருக்கப்படும் பொழுது “ரிமோட்…!” உள்ளுக்குள் புகாதபடி செய்யும்.

ஈஸ்வரா…! என்று எண்ணினால் இதன் வழி உள்ளுக்குள் போகாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு வலுக் கொண்டதாக நிற்கும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். நமக்குள் நல்ல உணர்வை நாம் பெருக்க முடியும்.

கொஞ்ச நாள் இந்தப் பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வை நாம் பெறலாம். இந்த உடல் வாழ்க்கைக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடையலாம்.

இந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்களுக்கு உபதேசித்த உணர்வை நீங்கள் பெறுவதற்குத்தான் உங்களுக்கு அனுபவரீதியில் கொண்டு வந்தது.

இதை ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண்களை விழித்தவுடனே (குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை) உங்கள் ஆன்மாவில் உள்ள நாற்றத்தை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலிலே சேர்த்தால் உங்கள் ஆன்மா தூய்மையாகின்றது. நல்ல நறுமணங்களும் மகிழ்ச்சியும் வரும்.

இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்தப் “பச்சிலை மூலிகைகள்” அவனில் விளைந்து அந்த அருள் சக்தி படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் நுகர்கின்றீர்கள். அந்த அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

அகஸ்தியன் பெற்ற விஷத்தை நீக்கிய அந்தப் “பச்சிலைகளின் மணங்கள்” நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சிறிது நேரம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிருடன் ஒன்றி ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் பெற்ற அவன் அறிந்துணர்ந்த அந்தப் “பச்சிலை மணங்கள்” நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது…
1.அந்தப் பச்சிலையின் மணங்கள் வரும்…
2.உங்களால் நுகர முடியும்… நுகர முடிகிறது என்றால்
3.உங்கள் வாயிலே உமிழ் நீராக மாறும் பொழுது உணர முடியும்…!

அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் நமக்கு முன் படர்ந்துள்ளது. அவன் பெற்ற உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்துள்ளோம். அதனின் நினைவு கொண்டு இதனைப் பிரித்து எடுங்கள்.

ரேடியோ டி.வி அலைகள் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ… அதைப் பிரித்து எடுக்கிறது. அதைப் போல் அகஸ்தியனின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்பட்டுள்ளது.

அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள். அவன் நுகர்ந்த பச்சிலையின் மணங்களை நுகர்ந்து எப்படி இருளை அகற்றினானோ அந்த உணர்வை நீங்கள் பெறுவதற்கு மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

1.அகஸ்தியன் கண்டுணர்ந்த பல பச்சிலைகள் மூலிகைகளின் மணங்கள்… அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அகஸ்தியன் தனக்குள் இருளை அகற்றிடும் உணர்வை விளைய வைத்து… அவனின்று வெளிப்பட்ட அந்த உணர்வுகளையும்
3,நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
4.இப்பொழுது அந்தப் பச்சிலையின் மணங்கள் உங்களுக்குள் வரும்.
5.நுகர்ந்த அந்த மணங்கள் உங்களுக்குள் உமிழ் நீராக மாறும்… வாயிலே அந்தச் சுவைகளை உணரலாம்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கே இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன் (ஞானகுரு). எல்லோரும் பெற வேண்டும் என்று உங்களுக்குள் அந்த ஆசையைத் தூண்டுகின்றேன்.

நம் பூமியிலே எத்தனையோ வகையான மலர்கள் உண்டு. மனிதர்களின் பிணியைப் போக்கக்கூடிய மலர்களும்… மகிழ்ந்து வாழச் செய்யும் மலர்களும் உண்டு.

அதிலிருந்து வளர்ந்த உணர்வினை நறுமணங்களை சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. ஆகவே அந்த மலர்களின் மணங்களை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் ஈசனிடம் ஏங்கிக் கண்களை மூடித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களுக்கு…
1.மல்லிகை மணமோ
2.மனோரஞ்சித மணமோ
3.ரோஜாவின் மணமோ
4.தாமரையின் மணமோ கிடைக்கும்.

மலரைப் போல் மணம் பெற வேண்டும்… அந்த மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா..! என்று ஏங்கித் தியானியுங்கள். இப்பொழுது…
1.மருக்கொழுந்தின் வாசனையும் சந்தனத்தின் நறுமணமும் கிடைக்கும்.
2.அதே சமயத்தில் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் வாயிலே உமிழ் நீராகவும்
3.அந்தந்த மலரின் சத்தும் சுவையாகக் கிடைக்கும்.

இதை எல்லாம் இந்தக் காற்றிலிருப்பதை நாம் ஈர்க்கும் தன்மை அது கிடைக்கின்றது. இதை எல்லாம் பழகிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில்
1.அவ்வப்பொழுது நறுமணங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்தால்
2.அந்த நேரத்தில் எல்லாம் உடனே கிடைக்கும்.

சிலருக்குச் சங்கடமும் சலிப்பும் இருந்தால் அவர்களுக்கு இதைத் தடைப்படுத்தும். அதை எல்லாம் மாற்றி அமைக்க என்ன செய்ய வேண்டும்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெற வேண்டும் அகஸ்தியன் பெற்ற பேரருளை நாங்கள் பெற வேண்டும் அந்த மலர்களின் மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதனின் உணர்வை அடிக்கடி பெருக்கிப் பழக வேண்டும்.
1.காற்றில் இருப்பதை நாம் நுகர்ந்து
2.நம் உடலிலுள்ள இரத்த நாளங்களிலே கலந்து பழக வேண்டும்.

கனி வகைகளில் வெளிப்பட்ட மணங்கள் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது. கனியின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களுக்குள்
1,மாம்பழங்களின் மணமும்
2.கொய்யாவின் மணமும்
3.பலாப்பழத்தின் மணமும் வந்து கொண்டே இருக்கும்.

இந்தக் காற்றிலே பலவிதமான கனிகளின் மணங்கள் படர்ந்துள்ளது. அந்தக் கனிகளின் மணங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். இதன் மூலம் கனிகளின் மணங்களையும் நாம் நுகர முடியும்.

ஏனென்றால் இந்தக் கனி வர்க்கங்களையும் நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் உணவாக உட்கொண்டு வளர்ந்து வந்தவர்கள் தான் பல நிலைகளில். அதனால் வந்த அணுக்களும் நமக்குள் உண்டு.

அதனின் உணர்வின் தன்மை பெறப்படும் பொழுது இப்பொழுது மனிதனாக ஆன பின் அந்த உணர்வை நுகர்ந்தறிய முடியும். இந்தப் பிறபஞ்சத்தின் உண்மையையும் உணர முடியும்.. அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் ஆற்றலையும் அறிய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு இப்படித்தான் காட்டினார். அதன் வழிகளிலேயே தான் உங்களுக்கும் பெறச் செய்கின்றோம்.

இயற்கையின் உண்மைகளை “குருநாதர் எனக்குக் காட்டிய விதம்…”

 

நம் இந்திய நாட்டிலே அரசர்கள் ஆட்சி செய்யும் பொழுது எத்தனையோ போர் முறைகள் ஏற்பட்டது. அதிலே மதப் போர்களும் இனப் போர்களும் நடந்தது.
1.அதனால் எண்ணிலடங்காத கொலைகளும் தகாத செயல்களும் நடந்தது.
2.இது எல்லாமே அந்தந்த இடங்களிலே பதிவாகியுள்ளது
3.எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டது… எரிந்த உணர்வின் அலைகளும் ஆங்காங்கு பதிவாகி உள்ளது.

மெய் ஞானத்தால் அந்த அணுக்களைப் பற்றி அறிய முடியும். ஆனால் உயிரினங்களில் ஜீவணுக்களாக வளர்ந்து விடுகின்றது.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு எலக்ட்ரானிக் என்ற முறைப்படி (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) அந்த அலைகளைக் கவர முடியும்.
1.விஞ்ஞான அறிவால் அதை எல்லாம் அறிய முடிந்தாலும் அதனால் அவர்களுக்குப் பயனில்லை.
2.காரணம் அத்தகைய நிலை வருவதற்கு முன்னாடி… கண்டுபிடிக்கக் கூடியவர்கள் அழிந்து விடுவார்கள்.

விஞ்ஞான அறிவுகள் (எலக்ட்ரானிக்) அந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டது.

இதைப் போன்று தான்
1.நமது உயிரும் எலக்ட்ரானிக்காக இருந்து ஒவ்வொரு நிலைகளையும் காட்டிக் கொண்டிருக்கின்றது.
2.கரண்டை உற்பத்தி செய்கிறது… எடுத்துக் கொண்ட உணர்வுகளை அலைகளாக இயக்குகின்றது.

இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் காடு மேடேல்லாம் எம்மை அலைய வைத்தார்.

அக்காலங்களில் தவம் இருக்கச் சென்றவர்களும்
1.அகஸ்தியன் எவ்வாறு எல்லாம் தாவர இன மூலிகைகளைத் தனக்குள் நுகர்ந்தறிந்தான்…? என்ற நிலையும்
2.அதே வழியில் போகர் எவ்வாறு எடுத்தார்…? என்ற நிலைகளையும்
3.அவர்களைப் பின்பற்றிக் காட்டுப் பகுதியில் அரசர்கள் சென்ற நிலைகளையும்
4.அது எல்லாம் எப்படி ரெக்கார்டு (பதிவு) ஆகி இருக்கின்றது…? என்பதைக் காட்டுகின்றார்.
5.அந்த அலைகளை எடுத்துத்தான் எனக்கு அதையெல்லாம் குருநாதர் உணர்த்துகின்றார்.
5.அதை எல்லாம் தெரிந்து தான் உங்களிடம் இப்பொழுது சொல்கின்றேன்.

நான் தெரிந்த மாதிரி நீங்களும் தெரிய வேண்டும் என்றால் சிறிது நாளாகும். ஆனால் தெரிய முடியும்…!
1.தெரிந்தாலும் நமது வாழ்க்கைக்கு இதை விலக்கி விட்டு
2.மெய் ஞானிகள் உணர்வைப் பெறுவதாகவும் அதை வளர்ப்பதாகவும் வர வேண்டும்.

தெரிந்து கொண்டேன் என்ற நிலையில் “ஆசை…” உடலின் இச்சைக்கு அதிகமாகி இதிலே சிக்கிவிட்டால் “நான் பெரிய மகான்…!” என்ற நிலையில் உடல் பற்றுக்கே அழைத்து விடும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!

அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அதை நீங்கள் பெற்று வளர்த்துக் கொண்டால் அங்கே செல்லலாம். காரணம் இதையெல்லாம் கண்டுபிடிக்கலாம் என்று வந்து விட்டால் இந்த உலக ஆசைகள் வளர்ந்து விடும்.

அன்றைக்கு காந்திஜி அவர் இங்கிலாந்தில் வட்டமேசை மாநாட்டிற்குப் போகும் போது “முதலில் அவரை உள்ளே விடமாட்டேன்…” என்கின்றார்கள்

இந்தியாவைப் பற்றிப் பேசப் போகும்போது “அரை வேஷ்டியைக் கட்டிக் கொண்டிருக்கின்றார்…” என்று உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள் அவர்களைப் போல கோட் சூட் அணிந்து வந்தால்தான் அரசனைப் பார்க்க முடியும்

ஆனால்… காந்திஜி அவர் எப்படியோ சாதித்து உள்ளே போய்விட்டார் அப்பொழுது அங்கே அவர் பேசும் பொழுது அவருக்கு மரியாதை கொடுக்கின்றார்கள்.

இருந்தாலும் அவர்கள் ராஜதந்திரத்தில் என்ன செய்கின்றார்கள்…? ஒரு டெலஸ்கோப்பைக் கையில் கொடுத்தார்கள்

இது எனக்குத் தெரியாது. ஆனால்… குருநாதர் இதை எனக்கு ஞாபகப்படுத்துகின்றார்.

மாநாட்டிற்குப் போய்விட்டுத் திரும்பிக் கப்பலில் வரும்போது நிறைய நாட்களுக்குப் பிறகு அந்த டெலஸ்கோப்பை எடுத்துக் கடலுக்குள் பார்க்கிறார் காந்திஜி.

அப்பொழுது ஆழ் கடலில் உள்ளுக்குள் மீன்கள் போவதெல்லாம் அதிசயமாகத் தெரிகிறது. “ஆ…! அந்த மீன் போகிறது பார். ஆகா… இங்கே இந்த மீன் போகிறது பார்..,” என்று ஆச்சரியப்படுகிறார்.

இப்படிச் சொன்னவுடனே காந்திஜி கூட வந்த தேசாய் காந்தி… அபுல்கலாம் ஆசாத்… இந்த இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடனே “எனக்குக் கொடு… உனக்குக் கொடு…” என்று வாங்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

கடலுக்குள் இருக்கும் அந்த அதிசயங்களைப் பார்க்கும் ஆசையில் ஒருவருக்கொருவர் “வெடுக்…” என்று அதை வாங்குவது – தான் பார்ப்பது என்று… கப்பலில் வரும் பொழுது இத்தனை நிலைகளும் அந்த மூன்று பேருக்குள்ளும் நடக்கின்றது

காந்திஜி ஒரு மகான்…! எல்லோருக்கும் உபதேசித்து வந்தாலும்… அப்பொழுது அந்த இடத்தில் அந்த அதிசயத்தைப் பார்க்கும்போது இவருக்கு ஆசைகள் உருவாகின்றது.

அப்பொழுது அவர் என்ன செய்தார்…?

இப்படிப்பட்ட ஆசைகள் உருவான பின்பு இனி நம் கையில் இந்த டெலெஸ்கோப் இருந்தால்
1.நாம் மூன்று பேரும் நிச்சயமாக நண்பர்களாக இருக்க மாட்டோம்.
2.”பகைமையாகி விலகி விடுவோம்…” என்று டெலெஸ்கோப்பை வாங்கி அதை வேகமாகத் தூக்கி கடலில் போட்டுவிட்டார் காந்திஜி.
3.இது நமக்கு வேண்டாம்…! என்று இப்படிச் செய்கிறார்.

இது நடந்த நிகழ்ச்சி.

காங்கிரஸில் நான் ஆர்வமாக ஈடுபட்டிருந்தாலும் எனக்கு இது தெரியாது. ஆனால் குருநாதர் இதைக் காண்பிக்கின்றார். அவர் காண்பித்த பிற்பாடுதான் எனக்கு இது தெரிகின்றது.

குருநாதர் இதைத் தெளிவுபடுத்துகின்றார். ஏனென்றால்
1.இயற்கையின் பேருண்மை நிலைகளை நான் உனக்குக் காண்பிக்கின்றேன்.
2.நான் உனக்குக் காண்பித்த நிலைகளை “மற்றவர்களுக்கும் நீ சொல்வாய்…”
3.எல்லோரும் “பார்க்க வேண்டும்…” என்று ஆசைப்படுவார்கள் என்று இதை எச்சரிக்கை செய்கிறார்

பார்க்க வேண்டும் என்ற அந்த ஆசையில் “எல்லாம் தெரிய ஆரம்பித்தவுடன்…”
1.அவர்கள் அதிலேயே ஆசைப்பட்டு “இந்தப் பூமியின் நிலையில்தான் இருக்க வேண்டும்…” என்று எண்ணுவார்கள்.
2.வந்தவர்கள் அனைவரும் இந்தப் புவியின் பற்றின் உணர்வைப் பெருக்கி விட்டார்கள் என்றால்
3.அப்புறம் – நீ போக வேண்டும் என்ற காட்டிய பாதைக்கு அவர்கள் போக மாட்டார்கள்.

நான் அதைப் பார்த்தேன்…! இதைப் பார்த்தேன்…! என்ற இந்த உணர்வு ஒன்றியவுடனே ஆசையின் உணர்வுகள் வளர்ந்துவிடும் என்று குருநாதர் உணர்த்துகிறார்.

ஆகவே அதை விடுத்து விட்டு…
அந்த மெய் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வினை நீங்கள் வளர்த்து, அதை உங்கள் உடல்களிலே பெருக்கி எல்லா அணுக்களிலும் சேர்த்தால்… உயிருடன் ஒன்றிடும் நிலையாக ஒளியின் சரீரமாக அங்கே போகலாம். ஏனென்றால்
1.இந்த உடல் பற்றை அகற்றி உயிர் பற்றை வளர்த்தவர்கள் ஞானிகள்.
2.உடலுக்காக வாழாமல் நம் உயிருக்காக வாழ வேண்டும்
3.அப்பொழுது அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய முடியும்.

குருநாதர் இப்படித்தான் அனுபவபூர்வமாக அனைத்தையும் எமக்கு உணர்த்தினார்.

சிதம்பரத்தில் வைத்து… யாம் உபதேசித்ததன் நோக்கம்

 

1.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
2.எப்பொழுதுமே நம் நினைவைப் புருவ மத்திக்கே கொண்டு போய்ப் பழக வேண்டும்.

நம் உயிரே குருவாகவும் நாம் எண்ணியது ஈசனாகவும் அது உருவாக்கக்கூடிய நிலையை நாம் உணர முடியும். இந்த உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “எதை எண்ணுகின்றோமோ…” உடலுக்குள் இந்த உணர்வுகள் ஊடுருவது நமக்குத் தெரிய வரும்.

சாதாரணமாக மூக்கின் வழி கூடித்தான் சுவாசிக்கின்றோம். கண்கள் பார்க்கின்றது… மற்ற உணர்வுகளை எடுக்கின்றோம் ஆன்மாவாக மாறுகின்றது. மூக்கு வழி கூடிச் சுவாசித்து உயிரிலே பட்டு இந்த உணர்வுகளைப் பின்னாடி அறிகின்றோம்.

நாம் ஓம் ஈஸ்வரா என்று அடிக்கடி சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணிப் புருவ மத்தி வழி கூடி எடுக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். அதன் வழி கூடித் தான் நாம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி… மூக்கு வழி சுவாசிப்பதும் என்று அதை அறிந்து கொண்டாலும் கூட
1.தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
2.அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று எண்ணி அதை இடைமறிக்க வேண்டும்.

நாம் எவ்வளவு நல்லதைப் பேசினாலும் கூட பிறிதொருவருடைய நிலைகள்… குடும்பக் கஷ்டமோ அல்லது நோயோ அதனுடன் கலந்த சொல்லாக வெளி வரும்.

அவரைக் கண்ணுற்றுப் பார்த்துக் கவரும் பொழுது ஆன்மாவாகிச் சுவாசிக்க நேரும். எனக்கு இந்த மாதிரிக் கஷ்டமாக இருக்கின்றது என்று சொல்லும் பொழுது இந்த உணர்வு கலந்து விடுகின்றது.

இத்தகைய உணர்வுகள் வந்தாலும் கூட
1.ஈஸ்வரா…! என்று இடைமறித்து அதைப் பலவீனப்படுத்தி
2.மகரிஷியின் உணர்வுகளை உயிர் வழி கூடி எடுத்து வலுப்பெறும் போது அவரிடமிருந்து கேட்டறிந்த தீமையை மாற்றுகின்றது.

அவர் பலவீனமான நிலையில் வெளிப்படுத்தும் போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்… அவர் நலம் பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுக்க வேண்டும்

ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் சமைத்து அதற்கப்புறம் அதை எடுத்துப் போட்டால் தான் ருசியாக இருக்கும்.

அதைப் போல மற்றவர்கள் கஷ்டம் என்று சொல்லும் பொழுது “அடடா… உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்ற நாம் எண்ணினால் அதைத்தான் சமைத்து அதையே தான் அவர்களுக்கு மீண்டும் எடுத்துக் கொடுக்கின்றோம்.
1.ஆகவே இதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
2.அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதைக் கலந்து தான் நாம் வெளிப்படுத்த வேண்டும்.

தியானத்தில் 27 நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும்… நவக் கோள்களின் சக்தி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் சக்தி பெற வேண்டும்… சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…! என்று சொல்கின்றோம்.

ஏன்…?

அவைகளில் இருந்து விளைந்தது… அந்தச் சக்திகளை எல்லாம் நாம் பெற்றவர்கள்.

27 நட்சத்திரங்களுடைய உணர்வுகள் எல்லாவற்றிலும் உண்டு. அதில் எந்த நட்சத்திரத்தினுடைய சக்தி கூட்டல் கழித்தல் என்று அதிகமாக அல்லது குறைவாக இருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகளைத் தூண்டுவதும்… எண்ணங்கள் இயக்குவதும் எல்லாமே அமைந்திருக்கின்றது.

1.எல்லாவற்றையும் நாம் ஐக்கியப்படுத்தி நமக்குள் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது பிரிவு இல்லை.
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

ஆக… நமது குருநாதர் காட்டிய வழியில் தியானத்தில் அமர்ந்திருக்கும் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

1.முதலில் அந்த 27 நட்சத்திரங்களுடைய சக்தி பெற வேண்டும் என்று சொல்லும் பொழுது
2.எல்லோருடைய எண்ணங்கள் நமக்குள் பிரதிபலித்து “ஒன்றாகிறது…”

அடுத்து… நவக்கோளின் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதனுடன் சப்தரிஷி மண்டலங்கள்… மனிதனான அந்த உணர்வுகளை இதனுடன் கலக்கின்றோம். பார்வையால் எடுக்கின்றோம்… எண்ணத்தால் எடுத்து இங்கே கொண்டு வருகின்றோம்.

நம் ஆன்மாவிலே அதைக் கலந்து கொண்டே வருகின்றோம். சப்தரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைக்கின்றோம். இது எல்லாமே கலக்கின்றது.

அவர்கள் உடலில் விளைந்ததும் கோள்தான்… அவர்கள் எண்ணமும் நட்சத்திரம்தான்.
1.முதலிலே… அவர்கள் வாழ்க்கையில் அந்தச் சக்திகளைப் பெறும் தகுதி பெற்ற உணர்வுகள் உண்டு.
2.இதை எல்லாம் ஐக்கியப்படுத்தித் தான் அந்த உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்காக… 27 நட்சத்திரங்களைப் பற்றிச் சொல்வது.

குருநாதர் இதையெல்லாம் காண்பித்தார். அதைப் பதிவு செய்யும்போது அந்த எண்ணங்கள் வருகின்றது. எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். எல்லோரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று தியானிக்கும் போது இந்த எண்ண அலைகள் பரவும்.

அப்பொழுது ஐக்கிய உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.

இதற்கு முன்பும் இதைப் பற்றிச் சொல்லி இருக்கின்றேன். ஆனால் அர்த்தங்கள் உங்களுக்குச் சரியாக ஆகியிருக்காது. இப்பொழுது அதை விளக்கிக் கொடுக்கின்றேன்.

27 நட்சத்திரத்தின் நிலைகள் அது எது எதில் கலந்திருக்கின்றதோ செடியில் கலந்தாலும் அந்தச் சக்தி கலக்கப்படும் பொழுதுதான் அந்த உணர்வுக்குத் தக்கவாறு தாவர இனத்தை உருவாக்குகின்றது.

பூமியில் செடி கொடிகள் இருந்த இடத்திலிருந்து எப்படி அதனுடைய சக்திகளைப் பெறுகின்றதோ இதே போன்று நாம் சுவாசித்து உடலில் உருபெற்ற அணுக்கள் அந்தந்த இடத்திலிருந்து விளைகின்றது.

உதாரணமாக மலைப் பகுதியில் விளையும் செடிகள் கீழே தரையில் விளைவது இல்லை. அதே போல் தரையில் விளைவதை மலையில் வைத்தால் அங்கே அது விளைவது இல்லை.

இதைப் போன்று தான் நம் உடலில் அந்தந்தக் காலப் பருவம் அதனுடைய நிலைகள் வரப்படும் பொழுது அணுக்கள் விளைகின்றது. அது அது அதற்குத் தக்கவாறு சுவாசத்தை எடுத்து வளர்கின்றது. இருந்த இடத்திலிருந்தே அது பெறுகிறது.
1.இத்தனைக்கும் சாப்பாடு கொடுப்பது நமது உயிர் தான்… உருவாக்குவதும் உயிர் தான்.
2.பிரபஞ்சத்தில் சூரியனும் இதைப் போன்று தான் சந்தர்ப்பத்தில் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு வித்தை உருவாக்குகின்றது.

விளைந்த பின் எதை எதை எடுத்து அது வித்தாக உருப்பெற்றதோ புவியின் ஈர்ப்பின் துணையை வைத்து அதற்குண்டான சத்தைக் கொடுத்து அதைச் செடியாக வளர்க்கின்றது. அது சந்தர்ப்பம்.

நாம் நல்ல குணங்களுடன் இருந்தாலும் பிறருடைய உணர்வுகளைக் கவர்ந்து அவர்களுக்கு உதவி செய்கின்றோம். அவர்கள் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வு நம்முடைய எண்ணங்களுடன் கலந்து உயிரணுக்களாக மாறும் பொழுது புதுப் புது குணங்களாக உருவாகின்றது.

ஒருவரைப் பார்த்து… இவர் நேற்று நன்றாகப் பேசினார் இன்று மோசமாகப் பேசுகின்றார் என்போம். அதே போல்… நேற்று மோசமாக இருந்தார்… இன்று நன்றாகப் பேசுகிறார் என்று சொல்வோம்.

ஏனென்றால் அவர் அடிக்கடி யாரிடத்தில் அதிகமாகப் பழகுகின்றாரோ அந்த உணர்வின் இயக்கங்கள் அவருக்குள் வளர்ச்சி பெறுகின்றது. அத்தகைய அணுக்கள் வளரப்படும் போது அதற்குத் தக்கவாறு தான் அவருடைய மணங்கள் மாறிச் சொல்களும் வெளி வருகின்றது.

ஆரம்பத்தில் எல்லாவற்றையும் யாம் பொதுவாகச் சொல்லிக் கொண்டு வந்திருந்தாலும்
1.அதை எப்படி உங்களுக்குள் இணைத்துக் கொடுப்பது…? என்கிற வகையில் முதலிலே சொல்லவில்லை.
2.பொது இடத்திலே (PUBLIC) அதைப் பெற முடியாது… அப்படிக் கொடுக்க முடியாது.
3.குருநாதர் உடலில் விளைந்த அந்த அருள் உணர்வுகள் எனக்குள் இருக்கிறது.
4.அதைப் பெற்று விளைவித்து உங்களிடம் திரும்பச் சொல்லும் போது உங்களுக்குள் அதை இணைத்துக் கொண்டு வர முடிகிறது.
5.அதற்குத் தான் இங்கே சிதம்பரத்திற்கு உங்களை எல்லாம் வரச் சொல்லித் தெளிவாக்குகிறோம்.

அப்பொழுது… குருவால் பெற்ற உணர்வுகள் எனக்குள் விளைவதும்… அடுத்து அது உங்களுக்குள்ளும் விளையத் தொடங்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ரோட்டிலே போகிறோம். நம் சந்தர்ப்பம் ஒரு தீமையான உணர்வை உற்றுப் பார்க்க நேர்கிறது…! என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது என்ன செய்ய வேண்டும்..?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்க வேண்டும் என்று உள்ளுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

அப்படிப் பாய்ச்சிய இரத்தம் நம் உடல் முழுவதும் படர்கின்றது. எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று முன்னாடியே அந்த வலுவைப் பாய்ச்சி விடுகிறோம்.

அதாவது அந்த முகப்பில் இருக்கக்கூடிய காந்தப் புலன் எப்படி அந்தத் தீமை செய்பவரை உற்றுப் பார்த்து எண்ணினோமோ அவரால் வந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி இருக்கிறது.

இதன் துணை கொண்டு…
1.அநதத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எண்ணப்படும் பொழுது
2.அந்த இரத்தத்தின் வழி எல்லா அணுக்களும் உள்ளுக்குள் அந்த அருள் உணர்வுகள் சாப்பாடாகக் கிடைக்கிறது.

அதாவது… இந்தக் காற்றிலிருந்து செடி கொடிகள் அதனதன் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறதோ இதே மாதிரி நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் அந்த இரத்தமாக மாறுவதிலிருந்து… இரத்தத்திலிருந்து தான் சாப்பாடு எடுத்துக் கொள்கிறது.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இதே மாதிரி எடுத்து உடலுக்குள் செலுத்த வேண்டும். இப்படி முன்னக்கூடியே (முதலில்) செலுத்திவிட வேண்டும்.

முதலில் சிறிதளவு தான் நாம் பார்த்த அந்தத் தீமை போயிருக்கும்.

ஆனால் யாம் இப்பொழுது சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்த பின் அந்த் இரத்தம் இந்த மாதிரி எல்லா இடங்களுக்கும் போனவுடனே என்ன ஆகிறது…?
1.அந்தச் சிறிதளவு போன தீமையை இங்கேயே தடுத்து விடுகிறோம்…!
2.சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

அதே சமயத்தில் நம் கண்ணில் இருக்கக்கூடிய கருவிழியில் இருக்கக்கூடிய அந்த கண்மணி… அந்த கண்ணின் மணியிலிருந்து தான் நாம் பார்க்கும் படங்களை எல்லாம் தெரிந்து கொள்கிறோம்.

அதிலே அந்தக் கண் மணிகளிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும். ஏனென்றால்…
1.அந்தக் கருமணி வழிக்கூடித் தான்…
2.கண்ணுடன் சேர்ந்த நரம்பு மண்டலம் வழியாக
3.உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் நாம் பார்த்த… கேட்ட.. நுகர்ந்த… உணர்வுகளைப் பரவச் செய்கிறது.

அந்தக் கண்ணை இணைத்த நரம்பு மண்டலம் வழி உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று செல்கிறது.

நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் படர்கிறது. நல்ல உணர்வுகள் வலிமையாகின்றது. தீமைகள் சிறுத்துவிடுகிறது.

இந்த முறைப்படி எல்லோரும் இதை எடுத்து உடனுக்குடன் தூய்மைப்படுத்தலாம்… இதில் ஒன்றும் சிரமமில்லை…!

திட்டியவனைத் திரும்ப எண்ணுகிறோம்… அடுத்த கணம் அது நமக்குள் வராமல் இப்படித் தடுத்துக் கொள்கிறோம். இதை நீங்கள் செய்து பழக வேண்டும்.

எங்கள் உடலில் உள்ள நரம்பு மண்டலம் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும்… நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று நினைவைக் கொண்டு வர வேண்டும்.

1.ஆக… ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வினையாகிறது.
2.அந்தத் தீய வினைகள் நமக்குள் சேராதபடி இப்படித் தடுக்க வேண்டும்.
3.தீமைகளைத் தடுத்து அதை நிறுத்திப் பழக வேண்டும்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி…!

ஆதிசங்கரர்

 

காசி கங்கைக் கரையின் எதிர்த் திசையில் இருக்கும் கரைக்கு குருநாதர் என்னைப் போகச் சொன்னார். அங்கிருக்கக்கூடிய அரண்மனைக்கு அருகில் தான் ஆதிசங்கரருக்கும் துவைதவாதிகளுக்கும் அத்வைதத்திற்கும் வாக்குவாதம் நடந்தது.

ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து வயிற்று வலியை வரவழைத்தார்கள். யாக வேள்விகளை எல்லாம் செய்தால்தான் இந்த வயிற்று வலி போகும்… நீ அதைச் செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

ஆதிசங்கரர் அதற்கு விளக்கம் கொடுத்து
1.மெய் ஞானிகள் காட்டிய உணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் உயிரான நெருப்பிலே இட்டு இந்த உணர்வினைப் பரப்பி
2.நீ ஏவல் செய்ததை என்னால் சுட முடியும் என்று அதை எடுத்துச் சேர்த்துத் தன் வயிற்று வலியை நீக்குகின்றார்.

ஏவல் செய்ததை நீக்கிய பின்பு தான் இவரை இப்படியே விட்டு விட்டால் மீண்டும் நமக்குத் தொல்லைகள் வரும் என்று எண்ணி… ஆதிசங்கரரை ஆற்றின் மறு கரையில் கொண்டு போய் விடுகிறோம் என்று படகிலே அழைத்துச் செல்லும் பொழுது கங்கையிலே கவிழ்த்து அவரை நீர் சமாதி வைத்து விடுகின்றார்கள்.

அதிலிருந்து ஆதிசங்கரருடைய (சரித்திரம்) உண்மை நிலைகள் தெரியாது. போனார்… வந்தார்… என்று இருக்கும். சங்கரர் உடலை விட்டு எப்படிப் பிரிந்தார்…? என்று இருக்காது.

இந்த உண்மையைச் சொல்லி அவர் எடுத்துக் கொண்ட ஆற்றலை எனக்கு உணர்த்துகிறார் குருநாதர்.

சாங்கிய சாஸ்திரத்திலே மூழ்கிய நிலைகள் கொண்டு துவைதத்தின் படி உருவத்தைக் காட்டிச் சாங்கியம் செய்து கடவுளிடம் வரம் கேட்பதும் அத்வைதப்படி உண்மையின் உணர்வின் சக்தியை நினைவில் கொண்டு கவர்ந்து தனக்குள் அந்த உணர்வின் தன்மை உறையச் செய்வதும் உணர்வின் நினைவாற்றல் நாம் எவ்வாறு பெற வேண்டும்…? என்ற அந்த வாக்குவாதத்தன்மை அங்கே நடந்ததைக் குருநாதர் உணர்த்துகின்றார்.

அத்வைதம் துவைதம் என்று சொல்கிற பொழுது
1.சூட்சம நிலைகளில் நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை உடலாக்குகின்றது.
2.அந்த உணர்வின் அணுவாக இயக்கப்படும் போது விசிஷ்டாத்வைதம்
3.தனக்குள் இந்த உணர்வின் கிளர்ச்சிகள் தூண்டப்பட்டு இந்த உணர்வின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்று…!

ஆனால் ஆதிசங்கரருக்கு ஏன் கடைசியில் அந்தக் கதி…? என்று வரும் பொழுது
1.அவருக்கு உடல் பற்று இல்லை… விண்ணின் பற்றைத் தன் குருவான கோலமாமகரிஷியின் உணர்வுகளைப் பெற்றவர்.
2.அவரோ கோள்களின் தன்மைகளை அறிந்தவர்.
3.அதை உணர்ந்த நிலையில் தனக்குள் விளைய வைத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணியவர்.
4.இந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கியவர்.
5.அதை எவ்வாறு பெற வேண்டும்…? என்ற நிலையை உணர்ந்தவர்.
6.விண்வெளியின் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வைப் பற்றுடன் பற்றியவர் என்று
7.அந்த இடத்திலே வைத்து குருநாதர் எனக்கு இந்த விளக்கத்தைக் கொடுக்கின்றார்கள்.

கோலமாமகரிஷி… தான் வாழ்ந்த காலத்தில் அவர் பெற முடியாத இந்தச் சக்தியை ஆதிசங்கரர் உடலுக்குள் புகுந்து அத்வைதத்தின் தத்துவத்தைப் பரப்பியவர். அதன் வழி தனக்குள் விண்ண்ணின் ஆற்றலைப் பெருக்கியவர். அதன் துணை கொண்டு ஆதிசங்கரருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்தவர்.

ஆதிசங்கரர் என்ன செய்தார்…? கோலமாமகரிஷி என்ன செய்தார்…? என்று நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். இந்த உண்மைகளை எல்லாம் அங்கே குரு உணர்த்துகின்றார்.

அவர் உடலைப் பற்றவில்லை. அந்த அருள் ஞான உணர்வை எடுத்து ஏவலால் உண்டான வயிற்று வலியை நீக்குகின்றார். பின் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் செல்கிறார்.
1.அவர்கள் இருவருமே சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டார்கள்.
2.ஆதிசங்கரருடைய அருள் உணர்வுகளை நாமும் பெற முடியும்.
3.அவர் கண்ட மெய் ஒளியையும் நாம் பெற முடியும்.

தாய் வழியில் தான் அவருக்கு அந்தச் சக்தி கிடைத்தது. கங்கைக் கரையில் வைத்து குருநாதர் இதை எல்லாம் எனக்கு உணர்த்துகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோடிப் பணம் இருந்தாலும் கோடி… கோடி… செல்வங்கள் இருந்தாலும்…
1.நமது வாழ்க்கையில் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள்
2.கடும் நோய்களாக நமக்குள் உருவாகிவிட்டால் இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை.

கோடிக்கணக்கில் செலவழித்து பங்களாவை அமைத்தாலும் இந்த உயிர் இந்த உடலை விட்டுச் சென்றபின் இந்த உடலிலே எதைச் சேர்த்துக் கொண்டதோ அதன் நிலை கொண்டு அடுத்த உடலுக்குள் தான் செல்கின்றது.
1.ஆக இந்தச் சொத்து எதுவும் நமக்குப் பயன்படுவதில்லை.
2.நமது பிள்ளைகளும் அதை பெறப் போவதில்லை.

அதற்காக இந்த சொத்திற்கும் மற்றவற்றிற்கும் போர்முறைகள் வைத்து வேதனை வெறுப்பு இதைப் போன்ற நிலைகள் நம் உடலில் உருவாக்காதபடி அதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே நமக்குப் பெரும் சொத்து… அழியாச் சொத்து… என்றும் நிலையான சொத்து எது…?

நாம் காலை துருவ தியானத்தில் எடுக்கும் (துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும்) பேரின்பப் பெருவாழ்வு என்று சொத்தும்… பிறவியில்லா நிலைகள் அடையும் சொத்துமே ஆகும். மனிதனாகப் பிறந்த பின் நமது எல்லை பிறவியில்லா நிலை தான்.

1.பிறவியில்லா நிலைகள் அடைந்து…
2.அகண்ட அண்டத்தில் வருவதையும் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டிருக்கும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

ஆறாவது அறிவு ஏழாவது நிலையாகத் தனக்குள் சிருஷ்டிக்கும் உணர்வின் வளர்ச்சியின் பாதையில் சென்று நாம் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து வாழ்வதே “கடைசி நிலை…”

நமது சூரியக் குடும்பத்தில் நம் சூரியன் செயலிழக்கும் தருணம் வந்து விட்டது. அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் கோள்களும் மறைந்துவிடும்.

ஏனென்றால்… சூரியனுக்கு உணவாக எடுத்துக் கொடுக்கும் 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நம் சூரியனைப் போன்றே அது ஒரு பிரபஞ்சமாக மாறி விலகிச் சென்று கொண்டிருக்கின்றது.

கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் இப்படிச் சில சில நட்சத்திரங்கள் சூரியக் குடும்பம் போல மாறுவதனால் நமது சூரியக் குடும்பத்திற்கு வரும் சக்திகள் இழக்கப்படுகின்றன.

இப்பொழுது, நமது வாழ்க்கையில் நமக்குக் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்கள் ஒரு தனிக் குடும்பமாகப் பிரிந்து செல்கின்றனர்,

அவர்கள் பிரிந்து செல்லப்படும்பொழுது நாம் பலவீனமடைகின்றோம். நாம் பலவீனமடையும் பொழுது நம் குழந்தைகளிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்க முடிவதில்லை.

இதைப் போன்று தான் இந்தச் சூரியன் அழியலாம். ஆனால்
1.இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிர் (நாம்)
2.அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த வழியில் நாம் செல்வோம் என்றால் “என்றும் வேகா நிலை…”

இப்பொழுது நெருப்பில் இட்டால் நமது உயிர் வேகுவது இல்லை. நமது உணர்வின் அணுக்கள் வெந்து விடுகின்றது. ஆகவே
1.வேகா நிலை என்ற நிலையை நாம் உருவாக்கி
2.அகண்ட அண்டத்திலும் அழியா நிலை என்ற நிலையை நாம் பெறுதல் வேண்டும்.

இது தான் பிறவியில்லா நிலை.

இந்த உடலில் இப்பொழுது நாம் இதை உருவாக்கத் தவறினால் “அடுத்த சந்தர்ப்பம் எப்பொழுதோ…?” என்று நமக்குத் தெரியாது.

புழுவாக பூச்சியாக இருந்து மனிதனாக உருவாக்கிய உயிரை, உயிரைக் கடவுள் என்று அறிந்து கொண்டபின்… உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நமக்குள் சேர்க்க வேண்டும்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் நாம் சென்றோமென்றால்… அதன் எல்லையில் நாம் என்றும் நிலையாக வாழலாம்… பிறவில்லா நிலைகள் அடையலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்…
1.எதனின் சேர்க்கையில் இன்று இந்தத் துருவ நட்சத்திரம் இருக்கின்றதோ
2.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் அகண்ட அண்டத்தில் நாம் சுழன்று சென்று,
3.வரும் உணர்வுகளை உணவாக மாற்றி ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

அகண்ட அண்டத்தில் “என்றும் பதினாறு…” என்று சிறிதாகவே நாம் இருப்போம். என்றும் பதினாறு என்ற நிலையில் வளர்ச்சியின் பருவத்திலே பல கோடி ஆண்டுகள் வாழும் நிலைகள் வருகின்றது.

இந்த அண்டமே ஒளியின் சரீரமாக முழுமையாக அடைய… அது எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றது.

அகண்ட அண்டத்தில் எத்தனையோ கோடி சூரியன்கள் உண்டு… எத்தனையோ கோடி கோள்கள் உண்டு…! இப்படி எண்ணிலடங்காத நிலைகள் இருக்கும் பொழுது அதன் உணர்வுகளை நாம் நுகர்ந்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுதல் வேண்டும்.

மாறிய நிலைகளில்… நமக்குள் உருவாகும் அந்த உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது
1.அதைப் பல சூரியன்கள் எத்தனையோ கவர்கின்றன
2.அந்தச் சூரியக் குடும்பங்களை உருவாக்கும் மனித இனங்கள் உண்டு.
3.அவைகளுக்கு நம் உணர்வுகள் பயன்படும்… அவர்கள் தீமைகளை வென்றிடவும் இது உதவும்.
4.நாம் உலகைக் காத்திடும் கடவுள்களாக என்றும் நிலை கொண்டு வாழ முடியும்.

ஒன்றுக்குள் ஒன்று சென்றிடும் நிலையாக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடலுக்குள் சென்ற பின்… நமக்குள் தீமையை வென்றிடும் அருள் சக்தியான கடவுளாக நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

நாம் எண்ணியதை… அந்த ஒளியின் சரீரமாக உருவாக்கும் ஈசனாக நமது உயிர் அமைகின்றது.
1.நமது உயிர் அப்படி அமைவது போல
2.நுகர்ந்த உணர்வின் அணுக்கள் அதன் வழிகளிலே என்றும் ஒளியின் சரீரமாக
3.நமக்குள் உருவாக்கும் கடவுளாக ஈசனாக உருபெறச் செய்கின்றது.

“உயிரே கடவுள்…” என்று தான் முதலிலிருந்தே யாம் சொல்லிக் கொண்டு வருகிறோம்

 

1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் “தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது…”
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும்…! என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.

அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் “அந்த வலிமையான உடலுக்குள் சென்று… பரிணாம வளர்ச்சி அடைகின்றது…”

ஆனால் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம்…
1.தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்… தீமை செய்வோரையே எண்ணி…
2.அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.

அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால்…
1.நாம் எதை எண்ணிக் கொடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது…
2.அணுவாக உருவாக்குகின்றது… உணர்வின் சத்தைத் தனக்குள் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.

ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அது உருவாக்குகின்றது. உருவாக்கியதை… மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது.

அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவைப் பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா…!

1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும்…? இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்…!
2.அது போல் தான் தியானம் இருந்தோம்… ஆத்ம சுத்தியும் செய்தோம்…
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்…? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நாம் எண்ணியதை உயிர் அணுக்களாக மாற்றும் பொழுது
1.அதைக் காக்கும் காவல்காரனாக இருப்பதும் உயிரே…
2.அந்த உணர்வுக்கு உணவு கொடுப்பதும் உயிரே…
3.அந்த உணர்வை இயக்கிக் கொண்டிருப்பதும் உயிர்தான்…!

ஆறாவது அறிவு கொண்டவர்கள் நாம் இதைத் தெரிந்து கொள்கின்றோம். அந்த மெய்ஞானிகள் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் பொழுது அதையும் காப்பது ஆண்டவனாக இருப்பதும் உயிர் தான்.

ஆகவே…
1.எண்ணியதை இறையாக்கி இறைவனாக இருப்பதும் உயிரே.
2.இறையின் உணர்வே செயலாக்கும் பொழுது தெய்வமாக ஆக்கிக் கொண்டிருப்பதும் உயிரே.
3.ஆண்டவனாக இருப்பதும்… ஈசனாக இருப்பதும் உயிரே.

இதனால் தான்
1.முதலிலேயே… உயிரே கடவுள் என்பதைச் சுருக்கமாகக் காட்டி உணர்வின் செயலாக்கங்களை
2.உயிரே கடவுள்…! என்ற நிலைகளைக் குருநாதர் எம்மிடம் சொல்லி வந்தது.

உயிர் கடவுளாக இருக்கின்றான்… ஆண்டவனாக இருக்கின்றான்… எண்ணியதை இறையாக்குகின்றான்… இறையின் உணர்வைச் செயலாக்கும் பொழுது தெய்வமாக இருக்கின்றான்.

உறையும் உணர்வின் தன்மையைச் சிவமாக உடலாக்குகின்றான். எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை வினையாக்கி
1.வினைக்கு நாயகனாக இயக்கிக் கொண்டிருக்கின்றான்… அது தான் விநாயகா…!
2.இவ்வளவு பெரிய பேருண்மையை நமது குருநாதர் அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வை நேரடி அனுபவத்தில் எனக்குக் கொடுத்துக் காட்டினார்.

ஆனால் இதை எவ்வளவோ கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன்… அதைப் பெற்றேன்.

நம் குருநாதர் அவர் உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரம் பெற்றார். இருந்தாலும் அவர் உடலில் விளைந்த உணர்வலைகள் எப்படி இருக்கின்றது…? அவர் எதை எதை எல்லாம் தன் உடலில் விளைவித்தாரோ இந்த உணர்வலைகள் அனைத்துமே இங்கே உண்டு.

ஏனென்றால்… சில பேருக்குக் காட்சிகள் கிடைத்த உடனே “குருநாதர் எனக்கு வந்து சொல்கின்றார்…” என்று சொல்வார்கள். உனக்கு இதையெல்லாம் செய்கின்றேன்… எனக்கு இதைக் கொடு…! என்று சிலர் கேட்கின்றார்கள்.

அந்த ஆசையால் நுகர முடிகிறது. அவர் உருவத்தைக் காண முடிகிறது. அவர் பைத்தியக்காரராக எப்படிச் செயல்பட்டாரோ இந்த உணர்வுகளை எல்லாம் அது இயக்கும். அதையெல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்

அதே சமயத்தில் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்று சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்.
1.அதாவது… உடலிலே உணர்வை ஒளியாக மாற்றி உணர்வின் அறிவாக மாற்றிய அலைகளும் உண்டு.
2.நாம் இதைத் தான் பிரித்து எடுக்க வேண்டும்…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நம்மிடம் ஒருவர் சண்டையிடுகிறார்… திட்டுகிறார்..! என்றால் அதற்குப் பின் நாம் தியானத்தில் அமர்ந்தால் “அந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்…!” அதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அதைச் சுவாசியுங்கள்.

இந்த உணர்வுகளைச் சுவாசித்துக் கண்களை மூடுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்பொழுது எவரால் நமக்குள் அந்தத் தீமையான உணர்வுகள் உந்தப்பட்டு நாம் தியானிக்க முடியாமல் இருக்கின்றதோ அவர்களுக்கும் அறியாத இருள் நீங்கி அவர்களும் பொருள் கண்டுணரும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிடுங்கள்.

அப்பொழுது அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவது தணிந்து விடும். அதாவது எப்படிச் செடிகளுக்கு உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு இவ்வாறு சக்தி ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மாற்றவில்லை என்றால்..
1.அவர்கள் உணர்வுகள் நமக்குள் விளைந்து..
2.அந்த அணுக்கள் – சண்டையிட்ட அவர் திட்டிய அந்த உணர்ச்சியை உந்தித் தனக்கு உணவாக எடுத்துக் கொள்கிறது.

மேலும் நீங்கள் தியானத்தில் அமர்ந்தாலே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்… இப்படிச் செய்தார்கள்…! என்ற எண்ணங்கள் அதிகமாகி குறையாகப் பேசிய அணுக்கள் அதிகமாகி நம் நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கும்.

1.அப்பொழுது நமக்குள் மனக் கலக்கம்… மன நோய்… போன்ற நிலைகள் எல்லாம் வரும்.
2.பின் உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
3.ஆக நமக்குள் மனிதன் என்ற ஆறாவது அறிவின் நிலைக்கே எட்டாதபடி நாம் ஐந்தாவது அறிவுக்கே திருப்பிக் கொண்டு போவோம்.

இதை எல்லாம் நாம் மாற்றியமைத்துப் பழக வேண்டும். நம் வாழ்க்கையே இப்படித் தியானமாக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு முதலில் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து பழகிய பின் அடுத்து மணிக்கணக்கில் உட்கார்ந்து தியானத்தில் நான் சக்தி பெறுவேன் என்றால் அடுத்த கணம் நாம் வாழ்க்கையில் செல்லும் பொழுது முதலில் சொன்ன மாதிரி வரும்.

ஏனென்றால் இன்றைய மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சியான செய்திகளையோ பிறர்படும் கஷ்டங்களையோ இப்படி எத்தனையோ நாம் கேட்கிறோம். காணாததற்கு பத்திரிக்கையும் டி.வி.யும் பார்க்கின்றோம்.

அதைப் பார்க்கும் பொழுது அரசியலில் பற்று இருந்தால் இப்படிச் செய்கிறார்கள்..! என்று வெறுப்படைவோம்.

இதை எல்லாம் பேசிக் கலந்து உரையாடினாலும் அடுத்த கணம் இந்த உணர்வுகள் மாறாதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நாம் எதைக் கேட்டோமோ அதெல்லாம் நலம் பெற வேண்டும்…
2.நாடு நலம் பெற வேண்டும்…
3.அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…
4.தெளிந்த மனம் பெற வேண்டும்…! என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

பிறருடைய உணர்வுகள் இப்படி வந்தாலும் நமக்குள் அது வளராது மாற்றியமைத்து இப்படி நல்ல அணுக்களை நாம் பெருக்கலாம்.

அந்த அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணங்கள் வரும் பொழுது இது சிறுத்து விடுகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருகி விடுகிறது…! அப்பொழுது அது நமக்குள் அடங்கி வந்து விடுகிறது.

அதே போல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் வந்துவிடும். ஒரு விபத்து நடந்து விட்டது…! என்று ஓடி வந்து ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உடனே ஆ…! என்று கேட்டுக் கொண்டே இருப்போம்.

1.இந்த உணர்வுகள் நமக்குள் பட்ட பின்
2.அவர் எந்த வகையில் விபத்தில் சிக்கினார்…! என்று சொன்னாரோ அதே உணர்வுகள் நமக்குள் தூண்டப்பட்டு
3.நாம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தால் ஓரத்தில் போகவிடாமல்
4.நம்மை அறியாமலே நடு ரோட்டுக்கு அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலே இவ்வாறு அழைத்துச் செல்லும். ஆகவே இந்த மாதிரி “விபத்து மற்ற அதிர்ச்சியான விஷயங்களைக் கேள்விப்பட்டால்…” அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தை எண்ணி ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்,

அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் அது பெற வேண்டும் என்ற எண்ணங்களை நாம் நமக்குள் அதை உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் அதை எல்லாம் நாம் நல்ல குணங்களுடன் பார்க்கும் பொழுது… பிறருடைய தீமைகளை நாம் நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி… நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் ஆகி… எப்படி வாழ்வது…? என்ற நம் நிலையாகிப் பல திசைகளுக்கும் ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு அதன் ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுகின்றோம்.

இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் நாம் பற்றற்றதாக மாற்றுகின்றோம். இது ஒரு பழக்கத்திற்கு வந்து… அந்த அணுக்கள் நமக்குள் பெருகி விட்டது என்றால் நம்மை அறியாமலே அந்த நல்ல சொல்கள் வந்துவிடும்.

ஒரு பாடலைப் பாடுகிறோம் என்றால் அது பதிவாகி விட்டது என்றால் அந்தப் பாடல் சீராக வரிசையாக வரும்.

ஆனால் பாடல் முழுவதுமாகப் பாடுகின்றார்கள் என்றாலும் இடைமறித்து ஒரு வரியை மட்டும் தனித்துச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டாவது தரம் அந்தப் பாடல் நமக்கு நினைவுக்கு வராது. மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டே வர வேண்டும்.
1.அந்த வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது நமக்குள் அதனின் தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கி விட்டால் நமக்கு அந்த நினைவு வராது.
3.ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அதன் அடுத்தடுத்து அடுக்குகளில் வருகின்றது.

இதனால் தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்… தீமைகள் புகாதபடி விழித்திருந்து பழக வேண்டும்…! என்று சொல்வது.

சிவன் இராத்திரி அன்று விழித்திரு…! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்தே இது தான்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்

 

உங்கள் எல்லோருக்கும் சக்தி கொடுத்திருக்கின்றேன். ஓரளவுக்கு அதை எல்லாம் செய்து வந்தாலும்… வீட்டிலேயோ நண்பர்கள் மத்தியிலோ தொழில் செய்யும் இடத்திலோ சிறிதளவு சோர்வு வந்தால் இதை விட்டு விடுகின்றீர்கள்.

அப்புறம் என்ன செய்கின்றீர்கள்…?

1.சோர்வான அணுக்களாக விளைந்த பின் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு ஆன்மாவிலே அதிகமான பின்
2.மகரிஷிகள் அருள் சக்திகளை எடுப்பதை இது தடைப்படுத்துகின்றது.

அதனால்தான் அடிக்கடி ஆத்ம சக்தி செய்ய வேண்டும் என்று சொல்லித் துரிதமாக உங்களுக்கு அதற்குப் பயிற்சி கொடுப்பது.

1.வாழ்க்கையில் எது வந்தாலும் அல்லது எதைக் கேட்டாலும்
2.ஒரு நிமிடம் ஆத்ம சுத்தி செய்வதற்குண்டான நேரத்தை ஒதுக்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று இப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

கையிலே மண்ணை எடுத்து வேலை செய்கின்றோம். ஆனால் அடுத்து உணவு உட்கொள்ளச் செல்கிறோம் என்றால் கை கழுவாமல் செல்வோமா…?

அல்லது கையிலே அழுக்குப் பட்டு விட்டது. ஒரு நோட்டில் எழுத வேண்டி இருக்கின்றது என்றால் கையைக் கழுவாமல் நோட்டில் எழுதுவோமா…? தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்தினாலும் கையைத் துணியில் துடைத்து விட்டுத் தானே எழுதுகின்றோம். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் ஆகிறதல்லவா…!

அந்த மாதிரி… மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியைப் பெற்ற பின் ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய நிலைகளைப் பார்த்தாலும் கூட… கேட்டு நுகர்ந்தாலும் கூட
1.அதற்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்து
2.அந்தத் தீமையின் உணர்வுகளை அடக்கும் உணர்வோடு நமக்குள் கலக்க வேண்டும். கலந்தால் தான் அதைத் தடைப்படுத்த முடியும்.

ஏனென்றால்… எப்படித்தான் இருந்தாலும் வாழ்க்கையில் பிறிதொரு தீமையை நீங்கள் பார்க்காமல் இருக்க முடியுமா.

நானே இருக்கின்றேன்… எல்லோருக்கும் நல்லதைச் செய்கிறேன். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் எனக்கு உடல் முடியவில்லை என்றால் “சாமிக்கு என்ன ஆனது…?” என்று தான் மிகவும் ஆர்வமாகக் கேட்பீர்கள்.

எனக்குள் விளைந்தது பல நிலைகள் அந்த வேதனை. என் மீது உள்ள பாசத்தில் எடுக்கப்படும் பொழுது வேதனையைத்தான் நுகர்வீர்கள். வேதனை நீங்க வேண்டும் என்ற எண்ணம் வராது.

சாமி சொன்ன வாக்கு உங்களுக்கு நல்லதாகின்றது ஆனால் சாமிக்குள் பல நிலைகள் சந்தர்ப்பத்திலே அது முந்தைய நிலைகள் விளைந்து வந்தாலும் இந்த உடலின் கடைசி முடிவு அது தான்.
1.அந்தக் கடைசி முடிவு வரப்படும் பொழுது பாசத்தால் வேதனையை நுகர்ந்து விடக்கூடாது.
2.நுகர்ந்தால் அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து…
3.சாமிக்கும் அந்த மகரிஷியின் அருள் உணர்வு வளர வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.சாமி தான் நமக்குச் சக்தி கொடுக்கின்றார். நாம் எப்படி அவருக்குச் சொல்வது…? என்று எண்ணக்கூடாது.

தபோவனத்தில் இப்பொழுது தைலம் காய்ச்சிக் கொடுக்கின்றோம். ஆரம்பத்தில் எல்லாம் நான் என்ன செய்வேன்…?

உடலில் குறைபாடுகளைச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தால்… அந்தத் தைல பாட்டிலை அவருக்குக் கொடுப்பேன். அதற்குள் குருநாதர் இருப்பார்.

பாட்டிலில் யார் வந்திருக்கின்றார்கள்…? பாருங்கள் என்பேன். குருநாதர் இருக்கின்றார் என்பார்கள். இப்பொழுது யார் வந்திருக்கின்றார்…? காளி வந்திருக்கின்றார்கள். இப்பொழுது யார் வந்திருக்கின்றார்கள்…? முருகன் வந்திருக்கின்றார்.

1.போ…! உன்னிடம் இருக்கும் கெட்டது எல்லாம் காளி மாய்த்து விடும்
2.குரு அருளால் எல்லாம் நல்லதாகிவிடும் என்று சொல்லிக் கொடுப்பேன்.
3.முந்தி அனைவருக்கும் இப்படித்தான் கொடுத்தேன். வாங்கிச் செல்வார்கள் எல்லாம் நன்றாகிவிடும்.

வாத சம்பந்தப்பட்ட நோய்களுக்கோ இரத்தக் கட்டுகளுக்கோ மற்ற எந்த நோயாக இருந்தாலும் இதைக் கொடுத்து யார் வந்திருக்கின்றார்கள்…? பாருங்கள் என்று காண்பிப்பேன். பாட்டிலில் எல்லாமே தெரியும்.

இப்பொழுதும் அப்படிக் காண்பிக்க முடியும். ஆனால் அந்த ஆசையைத் தூண்டி விட்டால் எல்லாம் போய்விடும். உங்கள் எண்ணம் எல்லாம் “உடல் பற்றுக்கு வந்துவிடும்…”

ஆகையினால் இப்பொழுது அதை எல்லாம் சுத்தமாக நிறுத்தி விட்டேன்.

1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
3.இந்த உணர்வை மட்டும் எடுத்து நீங்கள் ஆத்ம சக்தி செய்து கொண்டே வந்தால் போதுமானது. எல்லாம் நன்றாகும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது (ரோட்டின் ஓரமாக) வயல்களிலே ஒரு வயரை இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்குண்டான ஆயுதங்களையும் இயந்திரங்களையும் வைத்து மண்ணைத் தோண்டி உள்ளே அதைப் பதிக்கிறார்கள்.

சில இடங்களில் கடும்பாறைகள் வந்துவிடுகிறது.
1.பாறையாக இருக்கிறது என்று விட்டு விடுகிறார்களா…?
2.விடுவதில்லை… அதை வெடிக்க வைத்து எடுக்கின்றார்கள்.

அதே மாதிரி புதிதாக ஒரு ரோடு போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு இடத்தில்
1.சதுப்பு நிலமாக இருக்கின்றது. அதை அப்படியே விட்டு விடுகிறார்களா…?
2.இல்லை… அதற்கு வேண்டிய கருங்கல்களைப் போட்டு அந்தச் சதுப்பைத் தாங்கக்கூடிய அளவிற்கு ரோடு போடுகிறார்கள்.

இதைப் போலத்தான் நமக்குள் எத்தனையோ “மேடு பள்ளங்கள்” உண்டு.

காடுகளில் வாழும் மிருகங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு ஒன்றை ஒன்று கொன்று புசிக்கின்றதோ அதைப் போல இத்தனை மிருகங்களாக இருந்து வந்தவர்கள்தான் நாம்.

ஒன்றை ஒன்று கொன்று புசித்து அதனின் நிலைகளில் வலு கொண்டு நாம் மனிதனாக இன்று வந்துள்ளோம். அதே மாதிரி நாம் பல கோடித் தாவர இனச் சத்தை உணவாக உட்கொண்டுள்ளோம்.

அந்தத் தாவர இனச் சத்துக்கள் அனைத்தும் நமக்குள் பெரும் காடாக இருக்கிறது. அதிலே…
1.புலியும் யானையும் பாம்பும் பூனையும் இருக்கிறது என்ற நிலையில்
2.அந்தக் குணங்கள் நமக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இவை அனைத்தும் நமக்குள் நின்றே தீமைகளை விளைவிக்கிறது. இதெல்லாம் கடும் சாபங்கள். இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் தப்பிக்க வேண்டும்.

நரி தன் இரையைப் பிடிக்க வேண்டும் என்றால் தந்திரமாக வேலை செய்யும். அதாவது
1.தன் வாலை உள்ளே விட்டுவிடும்.
2.வங்கிற்குள் உள்ள நண்டு அதைக் கடித்தவுடன் வெளியே எடுத்துப் போட்டு நரி அதைச் சாப்பிடும்.

அதே மாதிரி, நாம் எங்கிருந்தாலும் சாப அலைகள் நம்மை அறியாதபடி அந்தப் பழி தீர்க்கும் உணர்வாக இயங்கிக் கொண்டிருக்கும். இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள்வதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

1.நான் தியானத்திற்கு வந்தேன்…. இதெல்லாம் செய்தேன்
2.ஆனால் எனக்கு இப்படியெல்லாம் ஆகிறதே… போகிறதே…! என்று விட்டு விட்டீர்கள் என்றால் அது வலு கொண்டுவிடும்.

சாப அலையின் வலு கூடிவிட்டால் ஆத்ம சுத்தியைச் செய்யவிடாத நிலைகள் ஆகிவிடும். அப்படி ஆத்ம சுத்தி உங்களால் செய்ய முடியவில்லை என்றால்
1.நீங்கள் கண்டிப்பான முறையில் கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
2.தியானம் செய்கின்ற நண்பர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் இதைச் சொல்லி
3.எங்களை அறியாது இயக்கும் சாப அலைகள் நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

உங்கள் உடலில் பதிந்த அந்த சாப அலைகளின் உணர்வுகள் வீட்டிலும் பதிந்திருக்கும். தியானமிருக்கும் நண்பர்களை வீட்டுக்குக் கூட்டி வந்து கூட்டுத் தியானமிருக்கச் செய்யுங்கள்.

இந்தக் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும். இந்த வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். இங்கிருக்கும் சாப அலைகள் அனைத்தும் அகல வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும் என்று நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

உதாரணமாக ஒரு கல்லை நாம் தூக்க முடியவில்லை என்றால் பலரும் சேர்ந்து அதைத் தூக்குகிறோம்.

அதைப் போன்று உங்களால் அந்தத் தீமைகளைத் தாங்க முடியாத நிலைகள் இருப்பினும்
1.கூட்டமைப்பை உருவாக்கிக் கூட்டுத் தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டி
2.உங்கள் வாழ்க்கையில் இடர்படும் எத்தகைய தீமைகளையும் அகற்றிக் கொள்ளுங்கள்.

இங்கிருந்து எங்கேயோ போய் யாகத்தைச் செய்வதற்கும் மந்திரத்தைச் செய்வதற்கும், எந்திரம் செய்வதற்கும் நீங்கள் பணத்தைச் செலவழிக்கிறீர்கள் அல்லவா.

இங்கே தியான வழியில் உள்ள உங்கள் நண்பர்களைக் கூட்டி
1.எங்கள் குடும்பத்தில் உள்ள சிரமங்கள் நீங்க வேண்டும்,
2.எங்கள் தொழில்கள் சிறக்க வேண்டும்
3.எங்கள் அறியாது சேரும் இருள்கள் நீங்க வேண்டும்
4.எங்கள் சாப அலைகள் நீங்க வேண்டும்
5.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும்
6.எங்கள் குடும்பத்தில் ஒன்று சேர்ந்து நாங்கள் வாழ வேண்டும்
7.கணவன் மனைவி ஒற்றுமையுடன் நாங்கள் வாழ வேண்டும்
8.அதற்காக எங்கள் வீட்டிற்கு வந்து தியானமிருங்கள் என்று அழைக்க வேண்டும்.

இத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்க வேண்டும். இந்தச் சக்திகள் உங்களுக்குள் விளையும். உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். நீங்கள் விடும் மூச்சலைகளும் உங்கள் குடும்பத்தில் நன்மை செய்விக்கும் சக்தியாகப் பெருகுகிறது.

ஆகவே… சாப அலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட “கூட்டுத் தியானம் செய்யுங்கள்…” தீமைகளை அகற்றும் அருள் சக்தியைப் பெறுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து மகிழ்ந்து வாழுங்கள்.

“மெய் ஒளியைத் தான்…” நாம் என்றுமே நாட வேண்டும்

 

எனக்குக் காட்சி கொடுத்தார்… வந்தார்… நல்லதானது…! என்று சொல்வார்கள். காட்சி கொடுத்தார் நல்லதாகும் என்ற நிலை அது சில நாளைக்குத் தான் இருக்கும். மீண்டும் காட்சி கொடுத்தார் என்று நிறையப் பேர் சொல்லலாம்.

நானும் ஆரம்பத்தில் இவ்வாறு தான் நிறையக் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
1.இவைகள் எல்லாம் கூடாது…! என்று நிறுத்தி விட்டேன்
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டுமே தவிர இந்த உடலில் விளைந்த உணர்வை நீங்கள் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!

நமது குருநாதர் காட்டிய வழிகளை எடுத்து இங்கே வளர வேண்டுமே தவிர இந்த உடல் என்றுமே மடிவது என்று அறிதல் வேண்டும்.

இந்த உடலில்… மெய் ஞானியின் உணர்வைப் பெற்றதை வலுப்படுத்தி அதை எடுக்கத் தொடர வேண்டுமே தவிர… “இவர் தான்…” என்ற நிலைகளுக்கு இந்த உடலின் உணர்வை எடுக்கக் கூடாது. இந்த உடலில் வரக்கூடியது அனைத்துமே வரும்… புவியின் ஆசைதான் வரும்.

உருவங்களைக் காட்சியாகக் கொடுத்தாலும்
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்
2.அந்த ஒளியின் நிலைகள் பெற வேண்டும் என்று அந்த மெய் ஒளியுடன் இணைத்து அந்த வலுவைப் பெற வேண்டுமே தவிர
3.சாமி வந்தார்… எனக்குக் காட்சி கொடுத்தார்…!
4.எனக்கு உடல் நலமானது… அது நல்லதானது… இது நல்லதானது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத்தான் மாறும்.

அதைத்தான் யாம் வன்மையாகக் கண்டிப்பது. அந்த நிலையில் இருந்து நாம் மாறுபட வேண்டும். அந்த மெய் ஒளியை நாம் பெற வேண்டும். நம்முடைய பார்வையால் மற்றவர்கள் தீமைகள் நீங்க வேண்டும்.

சாமி செய்தார்…! என்பதற்குப் பதில்
1.சாமி பார்வை பிறருக்குப் பட்டு மற்றவருடைய தீமைகள் எப்படி அகன்றதோ…?
2.அதே உணர்வு உங்களால்… நீங்கள் அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக பெற வேண்டும்.
3.அதைப் பெற்றால் தான் சாமி சக்தி பெற்றதாக அர்த்தம்…!
4.இல்லை என்றால் அதில் அர்த்தமே இல்லை. அந்த வளர்ச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

ஏனென்றால் அந்த மெய் ஒளியை நீங்கள் பெறும் பொழுது தீமைகளை அது அகற்றுகின்றது. உங்கள் பார்வையும் சொல்லும் அவருக்குள் நுழையப்படும் பொழுது அவருக்குள் இருக்கும் தீமைகள் அகற்றப்படுகின்றது.

நமது வாழ்க்கையில் பிறர்படும் துயரத்தைக் கேட்கும் பொழுது நமக்குள் நின்று துயரத்தை உருவாக்குகின்றது. சாதாரண வாழ்க்கையில் இதைத்தான் நாம் உருவாக்குகின்றோம்.

ஆனால் எதை உருவாக்க வேண்டும்…?

பிறருடைய தீமைகளை நீக்கும் உணர்வுகள்… நாம் வளர்த்துக் கொண்ட அந்த உணர்வுகள் நம் பார்வையால் அங்கே வித்தாகப் பதிய வேண்டும்.

யாராவது தீமைகளைச் செய்தார்கள் என்றால் அதை நாம் கேட்டுத் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணமே… ஈஸ்வரா என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.
1.என் பார்வை அவரைத் தீமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்.
2.அவர்களும் மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இந்த உணர்வைப் படைத்து அங்கே அனுப்ப வேண்டும்.
3.நமக்குள் அது வராதபடி அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்க்க வேண்டும்.

அந்தந்த நிமிடத்தில் எந்தத் தீமை வந்தாலும் அது வேலை செய்யாது. இந்த உணர்வை நம் பார்வையால் அங்கே செலுத்தும் பொழுது
1.நம்மால் அவர்கள் பயனடைகின்றார்கள்.
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது நம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றோம்.

இந்த இரு நிலையும் வேண்டும்.

துப்பாக்கியை எடுத்து அதிலே மருந்தினைக் கெட்டிக்கப்படும் பொழுது எங்கேயாவது உராய்ந்து விட்டால் வெடித்து விடும். அப்போது யார் அதைச் செய்கின்றாரோ அவரை அல்லவா அது காலி செய்து விடும்.

அப்பொழுது அதைப் பாதுகாப்பாகச் செயல்படுத்திக் குறி வைத்துத் தாக்கும் போது அங்கே வெடிக்கும் நிலை கொண்டாருகின்றார்கள்.

அதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.நம்முடைய எண்ணப் பார்வையில் அவருடைய தீமைகளைப் பிளந்திட வேண்டும்.
2.அவர்களைக் காக்கும் உணர்வு தான் நமக்குள் விளைய வேண்டும்.

நமக்குள் அந்த மகரிஷிகள் உணர்வுகள் விளைந்தால் அவர்களைக் காக்கும் உணர்வு நமக்குள் வருகின்றது. நம்மைக் காக்கும் உணர்வு நமக்குள் வளரும்.

ஒவ்வொரு நொடியிலும் இதை நாம் செய்தாக வேண்டும்…!

கடலில் போகிறோம் என்றால் எத்தனையோ அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. நாம் எந்தத் தீவுக்குப் போக வேண்டுமா அதை எல்லையாக வைக்கின்றோம்.

இடைப்பட்ட அலைகள் அனைத்தையும் விலக்குகின்றோம். பெரிய அலை சிறிய அலை இதையெல்லாம் விலக்கிச் சென்று தான் அந்த எல்லையை அடைகின்றோம்.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நமது எல்லை எது…?

1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான எல்லை தான்… முடிவான நிலைகள் பேரானந்தப் பெரு நிலையான எல்லை.
2.அதை அடைய நாம் முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கையிலே பாச அலை வருகின்றது… வெறுப்பு அலை வந்து மோதுகிறது… கோப அலைகள் வருகிறது… பகைமை அலைகள் வந்து தாக்குகிறது. இப்படி எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது.

இந்த மோதலில் பாசத்தினால் நாளைக்கு என் பையன் என்ன செய்யப் போகிறான்…? என்ற இந்த உணர்வு வந்தால் இந்த அலையிலேயே மூழ்கி விடுகின்றோம்.

பையனின் நினைவாற்றலே வருகின்றது. அவனுக்குள் சென்று விடுகின்றோம்.

ஒருவன் மீது வெறுப்படைந்து… எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கிறான்… அவனை அப்படியே விடலாமா…? என்று எண்ணினால் நாம் போக வேண்டிய எல்லையை மறந்து விடுகின்றோம்.

இப்படியே இடைஞ்சல் செய்கின்றான் என்று அவனுடைய எண்ணத்திலேயே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.
1.அவனைத் திருத்தும் நிலைகளுக்கு நாம் அங்கே சென்றுவிட்டால் அதிலே மூழ்கி விடுகின்றோம்
2.அவனுடைய உணர்வு வளர்ந்த பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்கிறோம்.

வாழ்க்கையில் பல விதமான அலைகளில் சிக்குண்டு மீள முடியாத நிலை வருகிறது. ஆகவே அந்த அலைகள் வரப்படும் போது மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுத்து அந்த அலைகளைப் பிளக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும். அவன் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டும்.. அவன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எடுக்கும் போது அவன் பாச அலையைப் பிளக்கிறது.
1.இந்தப் பாசம் அவனை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
2.உயர்ந்த எண்ணம் கொண்டு கண்ணிலே நாம் பார்க்கும் போது அவனை ஒழுக்கமாக்குகிறது.

இதைப் போல் பலர் பகைமை கொண்டு பேசுவார்கள். நாம் நல்லதைச் செய்தாலும் இன்னொரு கெடுதல் செய்த ஆவி அந்த உடலுக்குள் இருந்தால் அது அவர்களுக்குப் பிடிக்காது. நம்மைக் கண்டாலே எதிரியாகக் கருதி இல்லாததை எல்லாம் சொல்வார்கள்.

தியானம் செய்கிறீர்கள்…! என்றாலே “என்னை ஏதோ செய்கிறான்…!” என்று சொல்ல ஆரம்பித்துவிடும். நான் ஒன்றுமே சொல்லவில்லை… என்னை இப்படிச் சொல்கிறான்…! என்று நீங்கள் நினைப்பீர்கள்.

ஒரு உடலுக்குள் ஆவி இருக்கப்படும் போது அது செயல்பட்டால்
1.நான் எதுவுமே சொல்லாதபடி “என்னைக் குறையாகச் சொல்கிறான் பாவிப்பயல்…” என்ற இந்த அலையில் சிக்கிவிடுகிறோம்.
2.அந்த அலைகளிலிருந்து விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.அவனுக்குள் இருக்கும் ஆவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அங்கிருந்தே நன்மை செய்யும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதிலே நமக்குத் துணிவு வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்பது.

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா. அந்த இடத்தில் துணிவு இருந்தால் தான் செய்ய முடியும்.

குருநாதர் கொடுத்த நிலைகளில் ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்.
1.நன்மை செய்ய வேண்டும்
2.நன்மைகள் வளர வேண்டும் என்றால் “அதற்குத் துணிவு வேண்டும்…”

நன்மைகள் செய்யப் போகும் நிலையில் அவருக்கு (உடலில் ஆவி உள்ளவருக்கு) உதவி செய்ய வேண்டும் என்று செல்லும் பொழுது… ஐய்யய்யோ…! பாவிப் பயல் எனக்கு ஏதோ செய்கின்றான் மருந்து வைக்கின்றான் விஷம் வைக்கின்றான்…! என்று சொல்வார்கள் பார்க்கலாம்.

அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு அவர் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவருக்குள் இருந்தே நன்மைகள் செய்யும் நிலை வளர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து செயல்பட வேண்டும்.

நல்லது செய்கின்றோம்… ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலிலே இன்னொரு ஆன்மா இருக்கும்.

ஆன்மா இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் அவர்களுக்கு நம்மைக் கண்டவுடனே வெறுப்பாக இருக்கும். உடலிலே எரிச்சல் ஆகும்.

சிலருடைய வீடுகளுக்குள் சென்றால் அந்த எதிர்ப்பு நிலைகள் வரும். நம்முடைய மணம் பட்ட உடனே அங்கே எதிரியாக மாறுகின்றது.
1.அதற்குக் காரணம் அந்த மனிதன் அல்ல.
2.அந்த மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு இதைக் கண்ட பின் எரிச்சல் ஆகிறது.

நாம் இவ்வளவு தியானம் செய்கின்றோம்… நம்மை ஏன் இவ்வாறு சொல்கின்றார்கள்…? என்று நினைக்கின்றோம்.

அந்த இடத்தில் தான் நமக்குத் துணிவு வேண்டும் என்று சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வினை அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால்
1.அவர் செயலைப் பார்த்த பின் இது வளர்ந்து விடுகின்றது.
2.ஆன்மாவிலே அது முன்னாடி அதிகமாகப் பெருகி விடும்.
3.இது பெருகி விட்டால் இதைச் சுவாசித்து அந்த உணர்வு இயக்க ஆரம்பித்து விடும்.

உயிரிலே பட்டவுடன் அதை வெளிப்படுத்துவது இந்த உயிர் தான். அது போன்ற நிலைகள் வந்தாலும்… “இடைமறித்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று இங்கே கொண்டு வர வேண்டும்.

எங்கே…?

1.நம் கண்ணின் நினைவைப் பல முறை உயிருடன் ஒன்றச் செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா… என்று இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் இருக்கக்கூடிய ஆன்மாவிற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைத்து அவர்களுக்கு அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும். இந்த இடத்திலே இதைச் செய்ய துணிவு ஜாஸ்தி வேண்டி இருக்கின்றது.

ஆனால் நாம் என்ன நினைப்போம்…? சாதாரணமாக நாம் ஒன்றுமே செய்யவில்லை…! ஆனால் நம்மை கண்டாலே அவர்களுக்கு எப்படித் தான் இருக்குமோ…? ஏன்னை இந்த மாதிரி எல்லாம் சொல்கின்றார்களே…!

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியாமலே அது இயக்கும்.

இந்தத் தியான வழியில் நாம் செல்லும் பொழுது இதையெல்லாம் தெரிந்து கொண்டால் தான்… அவ்வப்போது கொடுத்த இந்தச் சக்திகளை வலுப்பெறச் பயன்ன்படுத்த முடியும்.

1.நமக்குள் எத்தனையோ எண்ணங்கள் இருக்கிறது… அதனால் உருவான அணுக்களும் இருக்கின்றது.
2.ஒவ்வொரு நிமிடமும் அந்த அணுக்களுக்கு ஞானிகள் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து விட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதைச் செலுத்தினோம் என்றால் அதைத் தடைப்படுத்திவிடும். வளர்ந்த பின் இதை நீக்கிவிடும். அதற்குச் சத்து கிடைக்காதபடி மகரிஷிகள் உணர்வு வலுப்பெற்ற பின் தீமைகளைக் குறைக்கும்.

உங்கள் அனுபவத்தில் நன்றாக இதைத் தெளிவாகவே தெரிந்து கொள்ள முடியும்.

1.முதலில் சிரமமாகத் தெரியும்… சிறிது நாள் சென்றால் அதை நீக்கிவிடும்.
2.இப்படி நாம் வளர்க்க வளர்க்க நம்முடைய பார்வையே பிறருடைய தீமைகளை நீக்கும் சக்தியாக வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிர் ஒரு தனி நட்சத்திரம் அல்ல…!

ஜோதிடம் பார்ப்பவர்கள்… உதாரணமாக நீ கார்த்திகை நட்சத்திரக்காரர்…! என்று “ஒரு” நட்சத்திரத்தைச் சொல்வார்கள். அது பிழை.

ரேவதி நட்சத்திரத்துடன் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியும் ஆண் பெண் என்ற நிலைகளில் கலந்தால் தான் உயிரணு தனக்குள் ஒன்றை நுகர்ந்து உருவாக்க முடியும்.

நட்சத்திரங்கள் ஆண் பெண் என்று ஒன்றுடன் ஒன்று மோதித் துகள்களாக மாறும் பொழுது நம் பூமிக்குள் அவைகள் வரும் பொழுது அதிலே
1.ஆண் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் பாறைகள் அங்கே ஜாஸ்தி “வலுப் பெற்றதாக…!” இருக்கும்.
2.பெண் பால் நட்சத்திரத்தின் சக்தி அதிகமாக இருந்தால் அந்தப் பாறை அங்கே வேகமாக வளரும்… அது “தன் இனத்தைப் பெருக்கும்…!”

இதைப் போல் தான் செடிகளிலும் ஆண் செடி பெண் செடி என்று உண்டு. ஆண் செடிகள் இல்லை என்றால் பெண் செடிகளில் இராசி பலன் இல்லை.

நெற் பயிர்களில் பார்த்தோம் என்றால் ஆண் பெண் விகிதாச்சாரம் குறைவாக இருந்தால் அங்கே பலன் இருக்காது… நல்ல மகசூல் காண முடியாது.

மரங்களிலும் அதே போல் தான். பனை மரங்களிலும் ஆண் பெண் என்று உண்டு. பப்பாளி மரத்திலும் ஆண் பெண் உண்டு. ஆண் பப்பாளி மரம் இல்லை என்றால் பெண் பப்பாளியில் கருவுறாது… பலன் கிடைக்காது.

ஆகவே இதைப் போல் ஆண் பெண் என்ற நிலையில் தான் எல்லாமே வருகின்றது. இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்தவன் அகஸ்தியன்.

1.கணவனும் மனைவி இருவரும் தனித்து இருந்தாலும் ஒன்றாக இணைக்கும் பருவம்
2.மனிதனான பின் இதைச் செயல்படுத்த முடியும் என்று உணர்ந்தவன் அகஸ்தியன்.

மற்ற மிருகங்கள் தான் தப்பி வாழத் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சுவாசித்துப் பரிணாம வளர்ச்சியில் வருகின்றது,

மனிதனாக ஆனபின் கணவன் மனைவி இரண்டு உயிரின் நட்சத்திரங்களும் வேறு வேறு ஆக இருந்தாலும்… இந்த நட்சத்திரங்கள் சேர்க்கப்படும் பொழுது ஒரு உருப்பெறும் தன்மை வருகின்றது.

ஆண்பால் என்ற கார்த்திகை நட்சத்திரத்திற்கு ரேவதி நட்சத்திரம் என்ற பெண் பால் நட்சத்திரம் இருந்தாலும் இதே மாதிரிப் பெண்களுக்கு ஆண் பால் நட்சத்திரத்தின் உணர்வும்
1.இப்படி நான்கு நிலை வரப்படும் பொழுது தான் பிரம்மம் என்ற நிலையே உருவாகின்றது.
2.இந்த நான்கு நட்சத்திரங்களும் இரண்டு உயிருடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது தான்
3.எதைக் கவர்ந்தனரோ… அந்த ஒளியின் கற்றையாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்த நிலைகளில் தான் நட்சத்திரங்களின் விஷத் தன்மைகளை முறிக்கும் தன்மை பெற்ற அகஸ்தியன்
1.”மின்னல்களைக் கண்ட பின் ஆனந்தமான நிலைகளில் அதைக் கவர்ந்து கொண்டான்…”
2.அந்த உணர்வின் தன்மையை எடுத்து உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும் மாற்றிக் கொண்டான்
3.அதாவது உயிரைப் போலவே (நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளாக) மாற்றினான்.

இதை வைத்துத் தான் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) என்னிடம் சொன்னார். ஏய்.. மின்னல் பாய்வதைப் பாருடா…! என்பார். அப்பொழுது எங்கள் இரண்டு பேருக்கும் சண்டை வரும்.

நான் (ஞானகுரு) மின்னலைப் பார்க்கும் பொழுது என் கண்கள் போனால் யார் சாமி கொடுக்கிறது..? நாம் பிள்ளை குட்டிக்காரன்..! என்பேன்.

அவர் என்ன சொல்வார்…? நான் சொல்வதை எல்லாம் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா…!

சாமி… நான் கண் இல்லாமல் போனால் என்ன செய்வேன்…? என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும்.

அந்த மின்னலின் இயக்கங்கள் வரப்படும் பொழுது அந்தத் துகள் என்ன ஆகின்றது..?
1.நான் இருக்கிறேன் அல்லவா…
2.நான் உன்னைத் தொடுகிறேன் அல்லவா…! என்பார் குருநாதர்.

அதாவது.. அவர் கையால் என்னைத் தொட்டு எர்த் செய்து (ELECTRICAL WIRE EARTH போல) “இப்பொழுது மின்னலைப் பாருடா…!” என்கிறார் குருநாதர்.

அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதியவுடன் இது எந்த நட்சத்திரத்திலிருந்து வந்தது…? இது எதனுடன் மோதும் பொழுது இந்த மின் கதிர்கள் எப்படி மாறுகிறது…? என்பதையெல்லாம் காட்டுகின்றார்.

அதற்குப் பின் தான் நான் துணிந்து பார்க்க ஆரம்பித்தேன்…!

குருநாதர் என்னைத் தொட்டுக் காண்பித்தது போல் தான் அந்த உணர்வுகளை எல்லாம் உங்கள் எல்லோரிடமும் உணர்வால் தொட்டுக் காண்பிக்கின்றேன்.

இந்த உணர்வுகள் தொடும் பொழுது உங்கள் உடலுக்குள் என்ன செய்கிறது…? ஊடுருவுகிறது…! ஒளியாக மாற்றும் பருவம் பெறுகின்றீர்கள்..!
1.நீங்களும் அந்த உணர்வினைக் கவர்ந்து ஒவ்வொரு அணுக்களையும்
2.இந்த உயிரைப் போல ஆகும் அந்தத் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களிடம் சொல்கிறேன்.

யாகத்தைச் செய்… கண ஹோமம் செய்…! என்று சொல்கின்றார்கள்… கண ஹோமம் என்றால் என்ன…?

 

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எல்லாம் உயிரிலே படுகின்றது. இதற்குப் பெயர் அபிஷேகம். பொருள்களை நெருப்பிலே போட்டு எரிக்கின்றோம் இது யாகம்.

கனிகள் மற்றவைகளை எல்லாம் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து சந்தனத்தையும் பன்னீரையும் ஊற்றுவார்கள்.
1.சந்தனத்தைப் போல் மணம் நாங்கள் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும்
3.பன்னீரைப் போன்று எனக்குள் நறுமணங்கள் பெற வேண்டும்
4.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று இப்படி எண்ணினால் இது அபிஷேகம்.

ஆனால் அந்தப் பொருள்களை எல்லாம் எடுத்து யாகக் குண்டத்திலே நெருப்பிலே போட்டால் “கண ஹோமம்…!” அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்…? என்று வேண்டுமல்லவா…!

யாரையும் நான் தவறாகச் சொல்ல வரவில்லை. காலத்தால் மாற்றப்பட்ட நிலைகள் தான் இவையெல்லாம். நம்மை அறியாமலே நம்மை அழித்துக் கொண்டிருக்கும் இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்.

காரணம்
1.யாகக் குண்டம் என்றால் நம் உயிர் ஒரு நெருப்பு… இது ஒரு குண்டம்.
2.நாம் எந்த மெய்ஞானியின் உணர்வை உயிரிலே போடுகின்றோமோ அது அபிஷேகம் ஆகின்றது.
3.அதில் இருக்கக்கூடிய வெப்பத் தணல்கள் ஆவியாக அலையாக உடலுக்குள் மாறி
4.ஒவ்வொரு அணுவிலும் இணைந்து நறுமணமாக வீசச் செய்கின்றது. இதுதான் கண ஹோமம் என்பது… கணபதி ஹோமம்..!

எத்தனையோ பொருள்கள் பால் தயிர் மற்ற கனிவர்க்கங்கள் அதை எல்லாம் தீயிலே போட்டு எரித்து… கடைசியில் நெய்யை ஊற்றி இப்படித்தான் காசைக் கொடுத்து யாகம் நடத்துகின்றோம்.

அப்போது நல்லதை எண்ணுகின்றோமா…? நல்லதை எண்ணி எடுத்து நமக்குள் சேர்க்கின்றோமா…?

அந்த உயர்ந்த சக்தியை உயிரான யாகக் குண்டத்திலே போட்டு அந்தச் சத்தின் தன்மை உயர்ந்த உணர்வின் தன்மையை உனக்குள் உருவாக்கு… இது தான் ஹோமம் என்பது. இப்படி யாரும் செய்வதில்லை.

1.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று யாராவது எண்ணி எடுக்கின்றார்களா…?
2.யாகத்தில் அமர்ந்து சொல்பவரும் நினைப்பதில்லை…! மற்றவர்களை அப்படி நினைக்க விடுவதுமில்லை.

ஜாதகக்காரன் சொன்ன குறிப்பை ஏற்றுக் கொண்டு அதற்குப் பரிகாரம் செய்வதற்காக இப்படிக் கண ஹோமம் செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று காசுக்காகத் தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

கோயிலுக்குள் செல்லும் பொழுது விநாயகரை உற்றுப் பார்த்து அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்துச் சுத்தப்படுத்திவிட்டு ஆலயத்திற்குள் சென்று
1.அங்கே சாத்தியிருக்கும் மலரை பார்த்து மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
3.அந்தச் சந்தனத்தைப் போல மணம் பெற வேண்டும் என்று நம் உயிரான நெருப்பிலே போட்டால்
4.அது கண ஹோமமாக மாறுகிறதா இல்லையா…? என்று நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்… மகிழ்ச்சியான உணர்வுகள் உங்களுக்குள் தோன்றும்.

கோவில் என்றால் அதன் தத்துவம் என்ன…? என்று சுருக்கமாகவும் காட்டுகின்றார்கள். சிறிய சிலையை வைத்து நமக்குள் உள் நின்று இயக்கும் உயிரைப் பற்றிய இயக்கத்தையும் காட்டியுள்ளார்கள்.
1.பெரிய தேரை வைத்திருக்கின்றார்கள்
2.அதிலே இந்தச் சிறிய சிலையை வைத்து… எல்லோரும் சேர்த்து வடம் பிடித்து இழுக்கும்படிக் காட்டுகின்றார்கள்.

ஆனால் அந்தத் தேரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு இழுத்தால் என்ன ஆகும்…? தேர் எல்லை வந்து சேருமா…?

கோவிலில் இத்தகைய சிலையை வைத்து அங்கே செல்பவர்கள் எல்லாம் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்
1.இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்
2.என் பேச்சும் மூச்சும் அனைவரையும் நலமாக்க வேண்டும்
3.நான் தொழில் செய்யும் இடங்களில் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று
4.எல்லோரும் இப்படி போற்றக்கூடிய நிலையாக ஒன்று போல் இந்த ஆலயத்திற்கு வந்து சொல்லப்படும் பொழுது
5.இந்த உணர்வின் சக்தி அந்தக் கோவிலில் அலை அலையாக நல்ல குணங்களாகப் படர்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் என்னிடம் வெறுப்போ வேதனையோ இருக்கின்றது என்றால் இங்கே ஆலயத்திற்குள் வரப்படும் போது
1.எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.எல்லோரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது
3.அந்த எல்லோருடைய வலுவான சக்தியால் அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றது.

நாம் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படும் போது தான் தேரை எல்லை சேர்க்க முடிகின்றது. அதைப் போன்று நல்ல குணங்கள் கொண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து… “அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று எல்லோருடைய ஆசியும் பெற்று… ஒன்று சேர்ப்பதற்குக் கோயிலை வைத்தார்கள் ஞானிகள்.

அவ்வளவு பெரிய தேரை இழுப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆனால் தேரை இழுக்கின்றோம். ஞானிகள் நமக்கு உணர்த்திய இந்த உண்மைகளை யாராவது நினைக்கின்றோமா…? அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட நிலைகளைச் செயல்படுத்துகின்றோமா…?

காரணம்… ஒரு சிறிய சிலையைத் தான் அவ்வளவு பெரிய தேரில் வைத்து எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே எண்ணத்தில் இழுக்கும்படிக் காட்டுகின்றார்கள். அந்தத் தேரை வைத்து இழுப்பதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டோமா…?

அந்தக் கடினமான தேரை அனைவரும் ஒன்று சேர்ந்து எப்படி இழுக்கின்றோமோ அதைப் போன்று அந்த அருள் ஞானிகளின் வாய்ந்த உணர்வுகளை எல்லோரும் சேர்த்து எண்ணி எடுக்க வேண்டும்.

1.எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.எல்லோருடைய உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.இந்தத் தெய்வ நிலைகள் அனைவரும் பெற வேண்டும்.
4.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று அனைவரையும் எண்ணும்படி
5.இதையெல்லாம் ஆலயத்திலே புறத்திலே துவைதமாகக் காட்டி
6.அகத்திற்குள்… ஒவ்வொருவருக்குள்ளும் சேர்க்கப்பட வேண்டிய உயர்ந்த உணர்வுகளை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய மனித வாழ்க்கையில் ஆசை என்று வரும் பொழுது “ஒன்றைப் பெற வேண்டும்…!” என்று எத்தனையோ வழிகளில் நாம் எப்படி எப்படியோ செல்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் தப்புவதற்காக… குருநாதர் எனக்கு அனுபவரீதியில் தான் எல்லாமே கொடுத்தார்.

குருநாதர் காட்டிய வழியில் நான் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் சுற்றும் பொழுது எனக்கு ஒரு கஷ்டமும் தெரியவில்லை. அப்பொழுது ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

ஆனால் இங்கே நாட்டுக்குள்ளும் நகருக்குள்ளும் வந்து “நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும்…! என்று நான் சொல்லும் பொழுது என்ன நடக்கின்றது…?”

எல்லோரும் பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அப்பொழுது ஏற்றுக் கொள்ளாத நிலைகளில் அவர்கள் அந்தப் பண்பினைப் பெற முடியாத நிலை ஆகும் பொழுது “வருத்தமாகின்றது…!”

தியானத்திற்கு வந்து எல்லாமும் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.
1.திடீரென்று அந்த உணர்வை மாற்றிக் கொண்ட பின்னாடி
2.அதைக் கேள்விப்பட்டவுடன் நமக்கு மனக் கஷ்டமாக இருக்கும்.
3.ஏனென்றால் அந்த உணர்வு நாம் எண்ணிய ஆசைகள்…
4.அங்கே அவர்களுக்குள் விளைந்த வேறு விதமான உணர்வு நம்மைத் தாக்கும் பொழுது நமக்கு இந்த நிலை மாறுகின்றது.

அதனால் தான் இதை எல்லாம்
1.சந்தர்ப்பத்திலே எப்படி வரும்…?
2.அதை நீ எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்…? என்று
3.குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு உணர்த்திக் கொண்டே இருப்பார்.
4.அவர்கள் எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீ எண்ணு.
5.அவர்களை அறியாது இயக்கும் அந்தத் தீமை “உனக்குள் ஒட்டக் கூடாது…” என்பார்.

உதாரணமாக நாம் தோசை சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடுப்பிலே தணல் அதிகமாகி விட்டால் என்ன ஆகின்றது…? ஒரு பக்கம் தோசை கருகி விடுகின்றது.

கருகியவுடன் நாம் தோசையை எடுக்க வேண்டும் என்றாலும் கைக்கு வராது.
1.மறுபடியும் எண்ணையையும் தண்ணீரையும் போட்டு சமமாக்கிய பின்
2.அடுத்து மாவை ஊற்றினால் சட்டியில் தோசை ஒட்டாமல் சீராக வரும்.
3.இதை நாம் ஒரு முயற்சியாக எடுத்துச் செய்கின்றோம் அல்லவா…!

இதே மாதிரித் தான் பல தீமையின் உணர்வுகள் வந்தாலும் “அது நம்மிடம் ஒட்டாமல் இருப்பதற்காக…” நமக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமல்லவா…!

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ வேதனையோ இதைப் போன்ற நிலைகளை நாம் பார்க்கப்படும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வினை வலுப் பெறச் செய்து கொள்ள வேண்டும்.

நம் பையனோ பிள்ளையோ சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் பெற வேண்டும். கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் அருள் ஆற்றலும் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தாலும் அந்த அருள் சக்தியை எடுத்து நமக்குள் பெருக்கி அவர்களுக்குள் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும். இப்படிப் பெருகி வந்தால் அந்த நோயோ வேதனையோ நமக்குள் வளராது.

இதை எல்லாம் நாம் பழகிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது…!

புருவ மத்தி வழியாகத் தான் (உயிர் வழி) விண்ணின் ஆற்றலை நாம் நுகர வேண்டும்

 

1.பிற மண்டலங்களிலிருந்து (2000 சூரியக் குடும்பம்) வரும் சக்திகளை நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்கள் தான் கவருவதும்
2.நட்சத்திரங்களிலிருந்து துகள்களாக மாறுவதும் பிரபஞ்சத்தில் பரவுவதும் கோள்கள் கவர்வதும் அதிலிருந்து வருவதைச் சூரியன் ஈர்ப்பதும்
3.வான்வீதியின் உணர்வுகளை வான மண்டலத்தின் அதிசயங்களை உங்களுக்குள் நுகரும் ஆற்றலாக அறிந்து
4.இதைப் புலனறிவுகளில் காட்சிகளாகக் காண முடியும்.

அதிலிருந்து வரும் பல வர்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பல வகையாக அவை மாறிக் கொண்டே இருப்பதையும் காணலாம்.

கேது:-
நட்சத்திரத்திங்களுக்கு அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை எவ்வாறு கவர்கின்றது…? என்பதையும் விஷமான அணுக்கள் மோதும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் ஊடுருவி… மின்னல்கள் தாக்குவது போன்று ஒளிக் கதிர்களாக ஊடுருவிப் பாய்வதைக் காணலாம்.

இராகு:-
கேதுவின் அருகிலே இருக்கும் ராகுக் கோள் இந்த விஷத்தின் தன்மை வான் வீதியின் ஒளித் தன்மையைத் தனக்குள் கவர்ந்தாலும் அந்த விஷத் தன்மை தாக்கப்படும் போது “கரும் நீலமாக…” இது உருமாறுவதைக் காணலாம்.

சனி:-
இதனின் தாக்குதலில் மற்ற நட்சத்திரங்களில் வரும் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று பல பொறிகளாக மாறி மோதலில் ஆவியாக மாறுவதும் எடையற்ற நிலையில் மாறுவதை உறை பனியாக… சனிக்கோள் தனக்குள் எடுத்து உறை வட்டங்களாக மாற்றிக் கொள்கின்றது.

எப்படி மலைப் பிரதேசங்களில் உறை பனியாக மாற்றுவது போன்று தன்னுடைய சுழற்சி வட்டத்தில் உறைவிடமாக மாறுகின்றது… அது தான் “சனியின் வளையங்கள்…” என்று சொல்வது. அவைகள் மீண்டும் கரைந்து இந்தப் பிரபஞ்சத்திற்குள் பரவுகிறது

வியாழன்:-
மின் அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து அதைச் சனிக்கோள் தனக்குள் எடுத்தாலும் அதிலிருந்து வரக்கூடியதையும் மற்ற விஷத்தின் தன்மை தனக்குள் கவர்வதும் அதை வியாழன் கோள் கவர்ந்து அந்த உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்வதும் “மின்னலின் கதிர்களைக் கதிரியக்கப் பொறியாக…” வியாழன் மாற்றுவதையும் காணலாம்.

வெள்ளி:-
மின் அணுவின் தன்மை தனித்தன்மையாக ஆன பின் அந்த ஒளி அலைகளை வெள்ளிக் கோள் தனக்குள் கவர்ந்து “மிகச் சக்தி வாய்ந்த ஒளியின் சுடர்களாக…” வெளிப்படுத்துவதை நீங்கள் காணலாம்.

புதன்:-
சூரியன் அருகில் இருக்கும் புதன் கோள் சூரியனின் எதிர்நிலை கொண்ட தாக்குதலால் அதைக் கவரும் புதன் கோள் ஒரு பகுதி வெப்பமும்… தான் பிரபஞ்சத்தில் ஈர்க்கும் மற்ற நிலையில்… “உலோகத் தன்மையாக மாற்றிக் கொண்டிருப்பதையும்…” காணலாம்.

செவ்வாய்:-
உலோகத் தன்மை வாய்ந்த்தை உமிழ்த்திக் கொண்டிருக்கும் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் வரப்படும் பொழுது அதனின் காந்தப்புலனறிவு இதனுடன் மோதுண்டு பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதும் அதைச் செவ்வாய்க் கோள் கவர்ந்து “ஓசைகள்…” வருவதைக் காணலாம்.

அதனுடன் மோதப்படும் பொழுது அந்த ஒலிகள் எழுப்புவதைக் காணலாம். ஒன்றுடன் ஒன்று மோதும் போது “சிகப்பு நிறமாக…” அந்தக் கோள் காணப்படும். ஒன்றுடன் ஒன்று மாறி புகை மண்டலமாகவும் மற்ற நிலை வரும் போது ஒளியின் தன்மைக்குள் சிகப்பு நிறமாகத் தோற்றுவிக்கும்.

திங்கள்:-
இவை பிரபஞ்சத்தில் கலந்து பரவிக் கொண்டிருப்பதை நமது பூமி தனது ஈர்ப்பில் வரப்படும் பொழுது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் திங்கள் தனக்குள் கவர்ந்து கொண்டிருப்பதையும் அதிலே மிதப்பதையும் அது கவரப்படும் பொழுது திங்கள் கோளில் தூசிகளாகப் படர்வதைக் காணலாம்.

பூமி:-
மற்றவை அனைத்தும் பூமியின் துருவப் பகுதியில் கவர்ந்து உள்ளே ஈர்க்கும் பொழுது… கோழி முட்டை வடிவில் உருண்ட நிலையாகவும் நீண்ட நிலைகளாக “நம் பூமி சுழல்வதைக் காணலாம்…”
1.துருவப் பகுதியில் ஈர்க்கும் தன்மையை
2.நாம் இருக்கும் எல்லையிலிருந்தே அதைக் காண முடியும்.

வியாழன் கோள் தான் பெருகுவதற்கு அதன் உபகோள்கள் அது எவ்வாறு கவருகின்றது…? அதிலிருந்து உமிழ்த்தும் தூசிகள் வியாழன் கோளைச் சுற்றிப் படர்வதும் அது நுகர்வதும் தனக்குள் மாற்றம் ஆவதும்… அந்த அற்புத நிகழ்ச்சிகளை நீங்கள் காணலாம்.

அதே போல் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் உபகோள்கள் வளர்வதும் அது கவர்ந்து தூசிகளாக வெளிப்படுவதை… அவை உமிழ்த்தும் உணர்வுகளைச் செவ்வாய்க் கோள் தனக்குள் எடுத்து மற்ற கலர்கள் ஆவதையும் காணலாம்.

வான மண்டலத்தில் பல பல நிறங்களும் அணுக்கள் மாற்றமாகி அகண்டு செல்வதும் அது ஒவ்வொன்றும் பரவி அந்த நிறங்கள் மாறிக் கொண்டே செல்வதைக் காணலாம்.

1.நம் பூமியின் துருவத்தின் வழி வரக்கூடியதைத்
2.துருவ நட்சத்திரம் கவர்ந்து “ஒளி அலைகளாக மாற்றுவதைக் காணலாம்…”

நம் பூமிக்குள் பரவி வருவதை பூமியின் பரப்புகளில் தூசிகளாகப் பரவுவதும் பூமிக்குள் ஊடுருவி பூமியின் வெப்பத் தணல் கூடுவதும் கலர்கள் மாற்றமடைவதையும்
1.அந்த அருள் ஞானி கண்டறிந்த உணர்வுகளை உங்கள் நினைவாற்றல் கொண்டு பூமியின் “நடு மையத்தையும்…” நீங்கள் உணரலாம்.
2.அங்கே நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைக் காணலாம்.

அண்டத்தில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் இந்தப் பிண்டத்திற்குள் உணர்வின் நிறங்கள் மாறிச் சுவாசத்திற்குள் சென்று ஒவ்வொரு உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் பரவி… அதன் நிலைகள் பூமிக்குள் எவ்வாறு மாற்றம் அடைகின்றதோ உடலுக்குள்ளும் அந்த அணுக்கள் கவர்ந்து அதன் வளர்ச்சியின் தன்மை எதுவோ… உடலுக்குள் “பல வர்ணங்கள் மாறுவதும்… பல வண்ணம் கொண்ட உணர்வுகளை எடுப்பதையும்…” காணலாம்.

1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதைக் கவர்வதைப் பார்க்கலாம்.
2.அந்த உணர்ச்சிகள்… உதாரணமாக குருவிக் குஞ்சுகள் அது எப்படி உணவுக்காக ஏங்குகின்றதோ…?
3.அதனுடைய துடிப்பின் உணர்வுகள் எப்படி வருகின்றதோ அதைப் போன்று
4.உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் தன் இரைக்காக உணர்ச்சிகளைத் தூண்டி
4.அது பெறும் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் பரப்படும் பொழுது “மெர்குரி போன்று…” உங்கள் உணர்வுகள் மகிழ்ச்சி பொங்கும் தன்மையை ஈர்த்து… உங்கள் உடலுக்குள் ஒளியின் தன்மை அடைவதை உணரலாம்.

ஒவ்வொரு அணுக்களிலும் இதனுடைய மாற்றங்கள் ஆவதை நீங்கள் காணலாம்.

இப்பொழுது அந்தச் சக்திகளை நீங்கள் நுகர்ந்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களில் இணைக்கப்படும் பொழுது
1.உங்களை அறியாது சேர்ந்த விஷத்தன்மை கொண்ட அணுத்தன்மைகள் மறைவதும்
2.உடல் நோய்… அந்த விஷத்தன்மை ஆவியாக மாறுவதையும்… உடல் இலகுவாகுவதையும் உணரலாம்.

இப்பொழுது உங்கள் நினைவினைப் பிற மண்டலங்களிலிருந்து கவரும் 27 நட்சத்திரங்களுடன் இணைத்து… “அங்கே உங்கள் நினைவாற்றலைச் செலுத்துங்கள்…”

வான மண்டலத்தில் பல வர்ணங்கள் மாறி மாறி மாற்றம் அடைந்து கொண்டிருப்பதை நீங்கள் காண்கின்றீர்கள்.
1.அவை நம் துருவப் பகுதிக்கு வரப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரம் அதைக் கவர்ந்து அதை எவ்வாறு ஒளியாக மாற்றுகிறது…? என்ற நிலையினை உங்களால் உணர முடியும்
3.அதிலிருந்து உணர்வுகள் வெளிப்படுவதையும் காணலாம்.

இவை அனைத்தையும்
1.உங்கள் புருவத்தில் எண்ணத்தைச் செலுத்தி அதன் வழி தான் அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரப்புதல் வேண்டும்.
2.அதன் வழி தான் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற வேண்டும்.

நம் பூமிக்கு வருவதை இடைமறித்து…
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அதனுடைய மாற்றங்களை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கின்றது…? என்ற நிலையை நீங்களும் உணர்ந்து
2.உங்கள் உடலுக்குள் அதைப் பெறும் சந்தர்ப்பமும் இப்பொழுது கிடைக்கின்றது.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி “ஒவ்வொரு அணுக்களிலும் அது படர்ந்து… மகரிஷிகளின் அருள் ஒளியைக் காணும் திறன் பெறுவீர்கள்…” இருள் நீக்கிப் பொருள் காணும் உணர்வுகள் உங்கள் உடலிலே விளையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் உயிரான ஈசனை வேண்டித் தியானியுங்கள்.

உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணியதை உருவாக்கிக் கொண்டுள்ளது. ஆகவே உயிரை ஈசனாக எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் மனிதனான பின்…
1.இந்த இயற்கையின் உண்மைகளை வானஇயல் புவியியல் உயிரியல் தத்துவப்படி அறிந்தான்.
2.நஞ்சினை வென்றான்.. இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான்…!
3.அவனில் விளைந்த உணர்வுகள் அனைத்தும் நம் பூமியில் படர்ந்துள்ளது.
4.அந்த அகஸ்தியன் உணர்வைத் தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

அந்த அகஸ்தியன் நஞ்கினை வென்று இருளை அகற்றி மெய்ப் பொருள் கண்ட அந்த உணர்வுகளை நாம் பெற இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டிக் கண்ணை மூடி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் வேண்டி ஏங்கிக் கேளுங்கள். இப்பொழுது அந்த உணர்வின் சத்தை நீங்கள் நுகர்கின்றீர்கள்.

அப்படி நுகரும் உணர்வுகளை…
1.அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் உணர்வை உங்கள் உயிர்
2.உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.
4.“ஓ…” என்று ஜீவ அணுவாக உருவாகும் கருத் தன்மை அடையச் செய்யும்,

நம் உடலிலே அந்தக் கருக்கள் பெருகி அணுவாக ஆன பின் அந்த அகஸ்தியன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அந்த உணர்ச்சியை உந்தும்.

அப்படி உந்தி அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகளையும்… மற்ற நஞ்சுகளையும் நீக்கிடும் ஆற்றலையும்… மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தியைப் பெறும் தகுதியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் இரத்த நாளங்களில் கலந்து… எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி உடல் முழுவதும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருளைப் பரவச் செய்யுங்கள்.
1.அகஸ்தியன் பெற்ற அந்தப் பேரருள் உங்கள் இரத்தங்களிலே கலந்து உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவுகிறது
2.அதை நீங்களும் உணரலாம்… மகிழ்ச்சியூட்டும் உணர்வாக அது வரும்.

திருமணமான பின் அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து பேரருள் பெற்றுத் துருவ மகரிஷியாக ஆனார்கள். அந்தத் துருவ மகரிஷியின் உடலிலிருந்து வெளிப்படுத்திய அந்த அரும்பெரும் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

1.இவை அனைத்தும் புருவ மத்தியிலேயே எண்ணி ஏங்குங்கள்.
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி இப்பொழுது உங்கள் இரத்த நாளங்களில் சுழன்று வரும்.
3.உடல் முழுவதும் புதுவிதமான உணர்ச்சிளைத் தோற்றுவிக்கும்.

துருவ மகரிஷியின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகியிருப்பதனால் நீங்கள் சுவாசிக்கும் பொழுது…
1.பேரின்பம் பெறும் அருள் மணங்கள் கலக்கப்பட்டு
2.பெரும் மகிழ்ச்சியின் உணர்வின் தன்மையாக உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் வரும்.
3.பற்பலவிதமான நறுமணங்கள் வரும்.
4.நஞ்சினை வென்றிடும் அருள் மணங்கள் கிடைக்கும்.
5.அருளானந்தம் பெறும் அருள் சக்தியும் உங்கள் சுவாசத்தில் கிடைக்கும்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து துருவ நட்சத்திரமாக ஆனார்கள். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரிடம் வேண்டுங்கள்.

உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்குங்கள்.

இப்பொழுது…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் புருவ மத்தியில் மோதி
2.பேரொளி என்ற நிலைகளாகக உங்கள் உடல் முழுவதும் பரவும்
3.உங்கள் உடலில் உள்ள ஆன்மாவும் இதைப் போல இருளை வென்றிடும் அருள் ஒளியாகப் பெருகும்.

உங்கள் உயிருடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் மோதும் பொழுது.. அருள் ஒளி உங்கள் புருவ மத்தியில் தோன்றும். நீங்கள் இதற்கு முன் சுவாசித்த தீமை என்ற நிலைகளைப் புக விடாது அதை வெளிக் கடத்தும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் நினைவை உயிரான ஈசனிடம் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

அந்த பேரருளைப் பெறும் அருள் உலகமாக…
1.உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
2.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளை உங்கள் புருவ மத்தியில் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப ஏங்கித் தியானியுங்கள்.

1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் பொழுது
2.மின்னல்கள் எப்படி மின்கற்றைகளாக வருகின்றதோ
3.இதைப் போல் உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி
3.இருளை அகற்றி உங்கள் உடலுக்குள் ஒளியாக உருவாகும்.

உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுத்து இருளை அகற்றிடும் அருள் ஒளி என்ற உணர்வுகளாக உங்கள் ஆன்மாவில் பெருக்கும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கணவன் தன் மனைவி உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இதே போல அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மனைவி தன் கணவன் உடல் முழுவதும் படர்ந்து கணவனின் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் எண்ணி இரு மனமும் ஒன்றி அந்தப் பேரருள் உணர்வினை உருவாக்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து தாய் தந்தையர் இரத்த நாளங்களிலே கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருளையும் பேரொளியையும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி
1.உங்கள் நினைவு அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து
2.அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.சப்தரிஷி மண்டல அருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள்…
1.உங்கள் நினைவுக்கு எத்தனை பேர் வருகின்றனரோ…
2.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
3.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து… பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து
4.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று “உந்தித் தள்ளுங்கள்…”

உங்கள் குலதெய்வங்களின் உணர்வுகள் உங்கள் உடலிலே இருப்பதனால்… நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றதனால்… அதனின் வலுவின் துணை கொண்டு உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.

இதற்கு முன் இதைச் செய்யத் தவறியிருந்தாலும்… இன்னொரு உடலுக்குள் அவர்கள் ஆன்மாக்கள் சென்றிருந்தாலும்… இந்த உணர்வுகளை நாம் பாய்ச்சப் பாய்ச்ச… அந்த உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் ஊடுருவி.. அந்த உடல் மடிந்த பின் உடலை விட்டு வெளியில் வரும் ஆன்மாவை.. தினமும் செய்யும் துருவ தியானத்தின் மூலம் விண் செலுத்தி விடலாம்… அவர்கள் பிறவி இல்லா நிலை அடைவார்கள்…!

நாம் இந்த மாதிரிச் செய்தோம் என்றால் மூதாதைகள் ஒருவருக்கொருவர் சந்தர்ப்பத்தால் சாப அலைகளோ மற்றதுகள் விடுத்திருந்தாலும்
1.அந்த மரபு அணுக்கள் நம்மை அறியாது நம் உடலுக்குள் இருந்தாலும்
2.அந்த மரபு அணுக்களை மாற்றிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் பெருக்க முடியும்
3.பரம்பரை நோயை அகற்ற முடியும்.

இருளை அகற்றி விட்டுப் பேரருள் என்ற… அருள் ஒளி என்றுமே வளர்ந்து கொண்டே இருக்கும் அந்த உணர்வை அவர்களையும் பெறச் செய்யலாம்.

இவ்வாறு செய்து வந்தால்…
1.உங்கள் குடும்பத்தில் சமீப காலத்தில் உடலை விட்டு யார் பிரிந்திருந்தாலும்…
2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பதை நீங்கள் உணரலாம்.

துருவன் கண்டுணர்ந்த 27 நட்சத்திரங்களின் ஆற்றல்கள்

 

அகஸ்தியர் ஐந்து வயதாகும் பொழுது நம் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்றதால் துருவன் என்ற காரணப் பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினார்கள்.

அதன் வழிப்படி
1.தனது 5 வயது முதலே விண்ணுலகில் என்ன அதிசயங்கள் நடக்கின்றது…? என்ற நிலையை
2.சிறுகச் சிறுக அதன் உணர்வின் வளர்ச்சியைத் தனக்குள் கண்டுணர்ந்து நமது பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதையும் கண்டார்.

பிரபஞ்சம் என்று சொல்லும் பொழுது 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து வருவதை எப்படிக் கவர்கிறது…? என்பதை அறிகிறார்.

ஒரு நூலாம்படைப் பூச்சி வலை விரித்து… மற்ற ஈயோ வண்டுகளோ அதிலே சிக்கும் போது தன்னுடைய மூக்கின் நுனி கொண்டு இஞ்செக்சன் போன்று அதற்குள் இருக்கும் ஊனைக் கரைத்து உணவாகக் குடித்து விடுகின்றது.

பின் தன் இனவிருத்திக்காக மற்ற ஈக்கள் கிடைத்தால் தனக்குள் உருவாகும் சில அமிலம் கலந்த மலத்தை வெளியாக்கி அந்த ஈயைக் காற்றுப் புகாதபடி முழுமைக்கும் சுற்றித் தன் உடலில் ஊறும் உணர்வின் சத்தை அந்த ஈக்குள் பாய்ச்சப்படும் பொழுது
1.ஈக்குள் இருக்கும் ஈயை உருவாக்கும் அணுக்களில் இது படர்ந்து
2.நூலாம்படைப் பூச்சி போன்ற உணர்வுகள் அங்கே வளர்ந்து… தன் இனத்தையே உருவாக்குகின்றது.

அதே போன்று… குளவி ஒரு புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த விஷத்தன்மை அதற்குள் இணைந்த பின் புழுவின் துடிப்பைக் குறைக்கச் செய்து உமிழ் நீரால் மண்ணை உருட்டி கூடைக் கட்டி அந்தக் கூட்டிற்குள் இந்தப் புழுவைச் செலுத்தி “நூலாம் படைப் பூச்சி போன்றே…” தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை அதற்குள் பாய்ச்சி அந்தக் கூட்டை மூடி விடுகின்றது.

இந்த விஷத்தின் தாக்குதலால் புழுவின் உடல் தோல் சருகு போன்று ஆகிவிடும். அவ்வாறான பின் உடலை உருவாக்கிய அணுக்கள் நூலாம்படைப் பூச்சி தன் அமிலங்களால் ஈயைத் தன் இனமாக எப்படி மாற்றியதோ அதே போன்று புழுவை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் கூழ் போல் ஆகி விடுகின்றது.

புழுவின் உயிர் குளவியின் உமிழ்நீரால் கட்டப்பட்ட அந்தக் கூட்டின் வழி கூடி புறத்தில் இருக்கும் சூரியனின் காந்தப் புலனறிவைத் தனக்குள் எடுத்துக் கோழி தன் முட்டையை எப்படி அடைகாக்கின்றதோ இதைப் போல
1.குளவியின் உணர்வுகள் அதற்குள் பாய்ச்சப்பட்டு சிறுகச் சிறுக புழுவின் உடல்
2.அந்த அணுக்கள் மாற்றமடைந்து புழு குளவியின் ரூபமாக மாறுகிறது.

இது இயற்கையினுடைய சில நியதிகள்.

இவ்வாறு வளர்ச்சி பெற்றது போன்று தான் பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்திரங்கள் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றித் தூசியாக மாறுவதை உணவாக எடுத்துக் கொள்வதும் தூசியாக வருவதை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அணுக்களாக மாற்றித் தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் அதை எடுத்துக் கொள்கிறது.

இப்படி இந்த 27 நட்சத்திரங்களும் இடைவெளி விட்டு பிற மண்டலங்களிலிருந்து எடுத்ததைப் பால் வெளி மண்டலங்களாக அமைக்கப்படும் பொழுது ஒரு கூட்டமைப்பு போன்று ஆகி
1.பூமிக்கு “ஓசோன் திரை” எவ்வாறு முக்கியமாக இருக்கின்றதோ
2.சூரியனுக்கு இந்தப் “பால்வெளி மண்டலம்” பிற மண்டலங்களிலிந்து வருவதைக் கவர்ந்து தன் சக்தியை எடுத்துக் கொள்கின்றது.

இவ்வாறு அந்த 27 நட்சத்திரங்களும் ஆண் பெண் என்ற நிலையில் அது உருப்பெறுவதை ஐந்தாவது வயதில் துருவன் சூரியக் குடும்பத்தின் முக்கிய நிலைகளைக் காணுகின்றான்.

நாம் எப்படிக் கண்களிலே ஒன்றைப் பார்க்கின்றோமோ இதைப் போல அந்த உணர்வின் தன்மை தன் உயிரில் நுகர்ந்து
1.அந்த உணர்வின் வலிமைகளை அணுக்களாகப் பார்க்கும் தன்மையும்
2.இந்தப் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது…? எப்படி வளர்கின்றது…? எப்படி வாழ்கின்றது…? என்ற நிலையை அவன் பார்க்கின்றான்.

உங்களுக்குள் இப்பொழுது அதைப் பதிவு செய்கின்றோம். அடுத்து நீங்களும் இதைக் காண முடியும். அவன் கண்டதை நீங்களும் காணும் நிலை வரும்.

டிவி.யில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதன் அலை வரிசைகளில் ஒளிபரப்பாவது காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருப்பதைக் கவர்ந்து நமக்கு அது படமாகக் காட்டுகின்றது.

இதைப் போல் விஞ்ஞானிகள் கருவிகளை வான மண்டலத்தில் அனுப்பி அங்கிருப்பதைப் படமாக்கி… அந்த உணர்வின் அணுக்களைப் பல மடங்கு பெரிதாக்கி மனிதன் தனக்குகந்த அந்த உணர்வின் தன்மை எதுவோ அதைக் கண்டறிகின்றான்.

ஆனால்… “தன் தாயின் கருவிலே இருக்கும் போது வளர்ந்த ஆந்த உணர்வுகள்…” விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை அகஸ்தியனுக்கு ஏற்படுத்தியதால் அதனுடைய வளர்ச்சியால் சூரியக் குடும்பத்தின் உண்மைகளைத் தனக்குள் கவர்ந்து… அதை அறியும் ஆற்றலும்… அதன் இயக்கச் சக்தியைக் காணும் சந்தர்ப்பமும் அந்தத் துருவனுக்குக் கிடைக்கின்றது.
1.ஏனென்றால் துருவத்தின் வழி தான் இதையெல்லாம் பார்க்கின்றான்.
2.நம் பூமிக்குள் வருவதை… அந்தத் துருவத்தின் எல்லைப் பகுதியிலிருந்து
3.எப்படி… எங்கிருந்து… எதற்குள் கலக்கின்றது…? என்ற அதிசயங்களைப் பார்க்கின்றான்.
4.தனக்குள் நுகர்ந்து அதைச் சேர்த்துக் கொள்கின்றான்.

பால்வெளி மண்டலங்களிலிருந்து தூசிகளாக வருவதை நட்சத்திரங்கள் உணவாக உட்கொள்கின்றது. அதனுடன் இணைந்த நிலைகள் சேர்ந்து சுழலும் பரிமாணம் உள்ள துகளாக ஒரு திடப்பொருளாக மாறுகின்றது.

பின் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழற்சி பெற்று அந்த நட்சத்திரம் முதலிலே கோளாக இருந்து எப்படி நட்சத்திரமானதோ இதன் ஈர்ப்பு வட்டத்தில் கோள்களாக வளர்ச்சி பெறுகின்றது.

இதன் வரிசையில் அகண்ட வெளியில் மற்ற நிலைகள் இருக்கப்படும் பொழுது ஒவ்வொன்றும் அது எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ஒவ்வொரு உணர்வு கொண்ட நிலையாக மாறுகின்றது.

பிரபஞ்சத்தில் எப்படிச் சூரிய குடும்பத்திற்குப் பல விதமான கோள்களும் 27 நட்சத்திரங்கள் வருகின்றதோ இதைப் போல அங்கேயும் அமைப்புகள் உருப் பெறுகின்றது.

1.இதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வரும் பொழுது அதனதன் வளர்ச்சிகள் அது வருவதும்
2.அது வளர்ந்து உமிழ்த்தும் நிலைகள் துகள்களாகத் தூசிகளாக வருவதும்
3.சூரியன் அதைத் தனக்குள் எடுக்கும் பொழுது மற்ற கோள்கள் இடைமறித்துத் துருவத்தின் வழி கவர்வதும்
4.இவை அனைத்தும் ஆண்பால் பெண்பால் என்ற நட்சத்திரங்கள் உணர்த்துவதை அது எதனுடன் எது இணைக்கின்றதோ
5.அதனதன் உணர்வு கொண்டு அணுக்களின் தன்மை மாற்றம் அடைவதும்
6.ஒன்றுடன் கலந்து அதே இனத்தைத் தனக்குள் உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது… பாறையானாலும் மற்ற எதுவாக இருந்தாலும்.

பிரபஞ்சத்தில் உருவாகும் இந்த நிலையை துருவன் ஊடுருவிப் பார்க்கின்றான். நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றது…? என்பதைப் பார்த்தாலும் சூரியக் குடும்பத்தில் கோள்கள் இயங்கி வருவதையும் நட்சத்திரங்கள் தன் ஈர்ப்பு வட்டத்தில் கோள்களை எப்படி வளர்க்கின்றது…? என்பதையும் அதன் வரிசையில் நட்சத்திரங்கள் எப்படி வளர்ச்சி அடைகிறது…? என்பதையும் காணுகின்றான்.

ஒரு குடும்பத்தில் குழந்தைகள் உருவாகி அது வளர்ச்சி பெற்று வரும் பொழுது திருமணம் ஆகித் தன் இனத்தின் நிலைகளை உருவாக்குவது போன்று இந்தப் பிரபஞ்ச இயக்கத்தில் கோள்கள் உருவாகி நட்சத்திரங்களாக வளர்ச்சி அடையும் பொழுது இதைப்போல ஒரு குடும்பமாக அந்த உணர்வின் சக்தி பெறப்படும் போது தனிப் பிரபஞ்சமாக ஒரு சூரியக் குடும்பமாகப் பிரிந்து சென்றுவிடும்.

பேரண்டத்தில் ஒன்று சேர்த்து வாழ்ந்தாலும் அகண்டு செல்லப்படும் பொழுது… முதலில் உள்ள சூரியக் குடும்பம் அதனதன் வளர்ச்சியின் தன்மையைத் தானே எடுத்து வளரப்படும் பொழுது முதலில் உருவான சூரியன் செயலிழந்து மங்க நேரும்.

பின் அது திசை மாறி ஓடும் நிலையில் கரைவதும் மற்றொன்றுடன் மோதுவதும் அதனுடைய சுழற்சி மையங்கள் மீண்டும் கரைந்து மற்றவைகளுக்கு இரையாகின்றது.

மனிதன் உருப் பெற்று வாழ்ந்த பின் அவர்கள் மடிந்தார்கள் என்றால் தன் இனங்கள் தான் விருத்தி ஆகின்றது, இவர்கள் மடியப்படும் பொழுது அந்தச் சரீரம் கரைக்கப்படுகின்றது. அதைப் போன்று தான்
1.சூரியன் அழிந்தாலும் அது கரைந்து விடுகின்றது,
2.இவ்வாறு பேரண்டத்தில் உள்ள சூரியக் குடும்பங்கள் அனைத்தும் தன் இனங்கள் நட்சத்திரங்கள் உருப் பெற்று
3.அவைகள் பிரபஞ்சமாகத் தனித்துத் தனித்து உருவாகத் தொடங்கினால்
4.முதலில் உருவான சூரியநுக்குக் கிடைக்கும் அந்தப் பங்கு கிடைக்கவில்லை என்றால் அது செயலை இழந்து விடுகின்றது.

இதை ஐந்தாவது வயதிலிருந்து துருவன் நுகர்ந்து தனக்குள் அது விளைந்து தன் எண்ணத்தால் வெளிப்படுத்திய… அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வுகள் இன்றும் நம் பூமியில் படர்ந்துள்ளது… அழியவில்லை…!

இதைத்தான் நமது குருநாதரும் நுகர்ந்தார்.
1.அவர் பெற்ற உணர்வின் தன்மையை எனக்குள் பதிவு செய்து அதை நீ எவ்வாறு பெற வேண்டும்…? என்ற நிலையில்
2.நீ எண்ணி ஏங்கி அதை எடுக்கப்படும் பொழுது… நீ நுகரும் பொழுது உன் உயிரிலே அது உராயப்பட்டு
3.அந்த உணர்வின் அலைகள் உனக்குள் எப்படி அந்த உண்மைகளை உணர்த்துகின்றது…?
4.அதன் தொடர் கொண்டு நீ எப்படி அறிகின்றாயோ அதே போல்
5.மற்றவர்களுக்கு நீ இதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்களுக்கும் அறியும் ஆற்றல் வருகிறது.

உதாரணமாக… கோபம் வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விட்டால் அதைச் சொல்லாக மற்றவரிடத்தில் பதிவு செய்யும் பொழுது கோபமாக சொன்னவரைத் திரும்ப எண்ணும் பொழுது இந்த உணர்வு எப்படி அவர்கள் உடலில் வளர்ச்சி பெறுகின்றதோ இதைப் போன்று தான் துருவன் கண்ட உணர்வுகள் அவன் வளர்ச்சியில் வளர படும்பொழுது அதை நீ நுகருகின்றாய் உனக்குள்ளும் இது விளைகின்றது.

அந்த உணர்வின் சொல்லாக நீ சொல்லப்படும் பொழுது வளர்ச்சியின் தன்மை கேட்போருக்குள்ளும் பதிவாகி அவர் இதை நினைவு கொண்டு எடுப்பார்கள் என்றால் இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வுகளை அவர்களும் அறிகின்றார்கள்.

மனிதனாக இருக்கும் பொழுது பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்ற நிலையில்
1,ஆறாவது அறிவின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெருக்கப்படும் பொழுது
2.தனக்குள் புது உருவாக உருவாக்குகின்றார்கள் என்று பொருள்படும்படிச் சொல்கின்றார் குருநாதர்.

அதை எல்லாம் மனிதர்கள் நாம் தான் எண்ணத்தால் எடுக்க முடியும். மற்ற உயிரினங்கள் அதைக் கவர்ந்து எடுப்பதற்குண்டான வாய்ப்புகள் இல்லை.

தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட மிருகங்களைப் பார்க்கப்படும் பொழுது அதன் வலிமையை நுகர்ந்து பதிவாக்கி அந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் உணர்வை நுகரப்படும் பொழுது சிறுகச் சிறுக விளைந்து இந்த உடல் மடிந்தபின் உயிரான்மா வெளி சென்று அதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று அந்த மிருகத்தின் உணர்வைக் கலந்து அதன் ரூபமாக மாறுகின்றது.

இப்படித்தான் நாம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்துள்ளோம் என்ற உண்மையைத் தெளிவாக்கிப் பிரபஞ்சத்தின் இயக்கங்களும் நட்சத்திரங்களுடைய மாற்றங்களும் அதை இளமைப் பருவத்திலிருந்து கண்டுணர்ந்த துருவன் அவன் எவ்வாறு பெற்றான்…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.
1.தியானத்தில் இதையெல்லாம் நீங்கள் காணப் போகின்றீர்கள்
2.அந்த உணர்வை உங்களுக்குள் சேர்க்கப் போகின்றீர்கள்.

அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டாயிரம் சூரிய குடும்பங்களில் துருவ நட்சத்திரங்கள் உண்டு. அதன் வளர்ச்சியில் சப்தரிஷி மண்டலங்களில்… அதில் குறைவாக இருப்பவர்களும் உண்டு. நம் பிரபஞ்சத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக உண்டு.

ஆனால் இதிலும் இந்த மூவாயிரம் ஆண்டுகளுக்குப்பின் நம் சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக யாரும் விண் செல்லவில்லை.
1.இப்போது நாம் அதற்கு வேண்டிய உணர்வை எடுத்து ஆன்மாக்களை விண்ணுக்கு அனுப்புவதனால்
2.இதன் நிலையில் கொஞ்சம் இப்போது சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.

நம் உடலில் இருக்கும் என்பது உயிரான்மா “ஊசி முனையின் அளவு” எவ்வளவோ அந்த அளவுதான்.

இங்கிருந்து இன்றைக்கு விண்ணுக்குச் செல்லக் கூடியவர்களுக்கு இந்த உணர்வின் தன்மை வளர்த்து அதனுடைய வளர்ச்சி வரப்படும் போது ஊசி முனை அளவுதான்.

அது மின் அணுவின் தன்மை வரும் பொழுது, ஒளியாக வரும். அது எடுத்துக் கொண்ட ஆன்மா நிலைகள் உடல் கருகிய நிலை கொண்டு ஒளி தான் இருக்கும். அது ஓரளவுக்குக் கொஞ்சம் விரிவடைந்திருக்கும்.

இப்பொழுது ஒரு கடுகை எடுத்து கொண்டால் இதில் மூன்றில் ஒரு பாகத்தைப் பிரித்தால் எப்படி ஒரு பாகம் ஊசி முனை போல் இருக்குமோ…
1.உயிரின் உணர்வின் அலைகள் கொஞ்சம் அதனுடைய அலைகளை வீசும்.
2.இது அதற்குப் பின் அதனுடைய வளர்ச்சிகள் இருக்கும்.

ஆனால்… சிவசக்தியாக கணவன் மனைவியாக அவர்கள் இணைந்திருந்தால் அதனுடைய வளர்ச்சி வேகமாக வளரும். அது, தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி.

1.அப்படி அல்லாதவர்கள் மின் அணு போன்றுதான்.
2.மனைவி அவர்களோடு இணைந்தால் அது நன்றாக வளர்ச்சி பெறும்.

பெண்களை அங்கு அனுப்பியிருந்தால் அதில் ஆண்களுடைய உணர்வு இணைந்தால்தான் இரண்டு உணர்வும் சேர்ந்து உணர்வைத் தனக்குள் எடுத்து வளரும் பருவம் அடையும்.

இதில் இத்தனை பக்குவம் இருக்கிறது, ஒன்று, இரண்டு அல்ல.

அவர்கள் பிறவியில்லா நிலை அடைகின்றார்கள். நாம் அவர்களுடைய உணர்வில் தொடர்பு கொண்டு இருக்கிறோம். நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணும் போது, நமக்கு அந்த அலைகள் கிடைக்க முடிகிறது.
1.நம் முன்னோர்கள் முன் சென்றால் பின் நமக்கு அந்த அலைகள் கிடைக்கிறது.
2.அந்த மாதிரி அனுப்பினால்தான் கிடைக்கும்… இல்லை என்றால், நாம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அலைகளை எடுக்க முடியாது.

நாம் அதைப் பெறுவதற்குத் தான் நமது குருநாதர் கொடுத்த “அந்த நட்சத்திரத்தின் உணர்வை” உங்கள் உணர்வின் நினைவுகளில் கொடுக்கின்றோம்.

அதே மாதிரி…
1.இந்த உடலை விட்டுச் சென்ற “அந்த ஆன்மாக்களின் முகப்புகளில்…”
2.சப்தரிஷி மண்டலங்களின் உணர்வைச் சேர்த்து விடுகின்றோம்.
3.இந்த ஆன்மா மேலே போனால் அந்தத் திசையின் கோடியில் இழுத்துக் கொண்டு போகும்.
4.அங்கே சென்ற உடன் உடல் பெறும் உணர்வுகள் கருகி விடும்.
5.ஒளி பெறும் அறிவு நிலைத்திருக்கும்.

இப்பொழுது, ராக்கெட்டை இங்கிருந்து ஏவுகிறார்கள். அப்படி ஏவும் பொழுது, அதில் இந்த இடத்திற்குப் போக வேண்டும் என்கிறார்கள்.
1.அதில் வைத்திருக்கக்கூடிய செயற்கைக் கோள்,
2.அந்தக் கம்ப்யூட்டரில் இந்தக் கோளின் நிலையைப் பதிவு செய்திருந்தால் அந்தப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
3.இல்லையென்றால்… கோளின் அடையாளம் தெரியாது.

ஆகவே அதே மாதிரித்தான் உங்களுக்குள் இந்த நிலையைப் பதிவு செய்கின்றோம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஊனில் பதிவு செய்யும் நிலைகள் கொண்டு
1.எந்த ஞானத்தின் முகப்பை உங்களுக்குள் பதிவு செய்கின்றோமோ இதன் நினைவு கொண்டு உங்கள் நினைவாற்றல் வரும்.
2.அப்பொழுது அந்த ஆன்மாவின் முகப்பில் அது இணைந்தது என்றால்
3.விண் சென்றபின் அந்தச் சப்தரிஷி மண்டல அலைக்கு அது செல்லும்.
4.இல்லை என்றால் வான் வீதியில் வீசி விடும். எங்கு போகும் என்றே தெரியாது…!
5.ஆகவே அதற்கு வழி தெரிய வேண்டும்.

இல்லையென்றால் அத்தனை சாதாரணமாக அனுப்ப முடியாது. இதையெல்லாம், நாம் தெரிந்து கொள்ள வேண்டும். விஞ்ஞான அறிவில் எப்படி “டெக்னிக்கல்…” இருக்கிறன்தோ இந்த மெய்ஞான அறிவில் இதைத் அறிந்து கொள்ள வேண்டும்.

1.சாதாரணமாக வாயிலே சொல்லிவிட்டு விண்ணுக்கு அனுப்பி விடலாம் என்று சொன்னால்
2.அதுவெல்லாம் ஒன்றும் நடக்காது… அத்தனை சிரமம் இருக்கின்றது.

ஆனால் அவர்கள் வாயில் சொல்வதில்… அதைப் பெறுவதற்கு யாம் சொல்லும் இந்தத் திசைகள்… இந்த உணர்வுகள்… எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

புவியின் ஈர்ப்புக்குள் சிக்காது… “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் இணைக்கச் செய்வதற்கே துருவ தியானம்…!”

 

இந்த வாழ்க்கையில் மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட நிலையில் எப்படியும் பொறாமை வெறுப்பு வேதனை அன்பால் பண்பால் கவர்ந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருப்பினும்
1.அந்தப் பதிவுகள் நமக்குள் நிலைக்காது அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்து
2.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் வெளிப்படுத்தும் போது
3.எத்தனை பேரின் உணர்வுகளை நாம் பதிவு செய்து வைத்திருக்கின்றோமோ
4.அந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது… அந்த மனிதரின் உணர்வை சந்தர்ப்பத்தால் நாம் சேர்த்த…
5.நமக்குள் உருப்பெற்ற அந்த அணுக்களுக்குள் மகரிஷிகள் உணர்வை இணைத்துப் பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுவது தான் தியானம்.

ஒரு மனிதன் நோயாக இருக்கின்றான் என்றால் அந்த நோயைக் கவர்ந்த பின் நல்ல உணர்வுடன் அது கலந்து நல்ல உணர்வுகளால் உருப்பெற்ற அணுக்கள் மாற்றமடைகின்றது.

நல்ல உணர்ச்சியை வளர்க்கும் அந்த அணுக்கள் குன்றும் பொழுது நல்ல உடலை உருவாக்கிய அணுவின் தன்மை பலவீனம் அடைகின்றது.

பலவீனமடையாது காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

நம் உடலுக்குள் இருக்கும் அந்த அணுக்கள்… அதாவது எத்தனை பேரை நாம் எண்ணினோமோ அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எத்தனை பேருடைய நல்லதை எண்ணி அவர்களின் வேதனையை கவர்ந்தோமோ… அது நம் நல்ல உணர்வுடன் கலந்து நம் நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்துவதை
1.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் எண்ணி அந்த உணர்வினை நமக்குள் இணைக்கப்படும் பொழுது
2.இன்னொரு மனிதனில் விளைந்த தீமையின் உணர்வு “நமக்குள் விளையாது” அதை குறைக்கச் செய்யும்.

அதைத் தான் இந்நேரம் வரை உங்களுக்குள் உபதேசித்து அருள் மகரிஷிகள் உணர்வைச் சிறுகச் சிறுக அவர்கள் வளர்ச்சி பெற்றதை உங்களுக்குள்ளும் சேர்ப்பிக்கச் செய்த்து.

1.அகஸ்தியன் அந்த இளம் பருவத்திலிருந்து வளர்ச்சி பெற்ற உணர்வை
2.அந்தக் காலப்பருவத்தின் வயதை (துருவன் – ஒரு வயதிலிருந்து ஐந்தாவது வயது வரை பெற்றதை) உங்களுக்குள் சொல்லி
3.அவர் உடலில் விளைந்த உணவுகள் இங்கே பரவி இருப்பதை
4.அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும்5. வானியல் தத்துவத்தைக் கண்டுணர்ந்த உணர்வையும் உங்களுக்குள் இணைத்து உபதேசித்து
5.இந்த உணர்வின் ஆற்றலை ஈர்க்கும் தன்மையாக தியானிக்கப் போகின்றோம்.

அந்த வானியல் உணர்வுகள் தனக்குள் அறிவாக எப்படி அகஸ்தியனுக்குள் இணைந்ததோ… துருவத்தை நுகர்ந்தறிந்து ஒளியின் சிகரமாக எப்படி மாற்றி அமைத்தாரோ…
1.அந்தத் துருவனின் வளர்ச்சியின் தன்மையை நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்குத் தியானிப்போம்.
2.குருநாதர் எனக்குள் படிப்படியாக அதை எப்படிக் கொண்டு வந்தாரோ…
3.அதை வைத்து நீங்கள் தியானிக்கும் போதெல்லாம் அந்தச் சக்தி உங்களுக்கும் கிடைக்க வேண்டும்.

அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்.

உங்கள் கண்ணின் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்துங்கள்.
1.நம் பூமி “துருவத்தில் கவரும் அந்தச் சக்தி” நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் ஏங்கித் தியானியுங்கள்.
2.இப்பொழுது உங்களுக்குள் மிதக்கின்ற மாதிரி அந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து துருவ நிலைகள் ஈர்க்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தியானத்தில் அமர்ந்திருக்கும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி “ஏங்கிச் சுவாசியுங்கள்…”

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று “உங்களை மிதக்கும்படி செய்யும்…” உடல்கள் இலகுவாகும்.
1.துருவத்துடன் நாம் தொடர்பு கொள்ளும் பொழுது… “இது அதிகமாக அதிகமாக…”
2.இந்த உணர்வுகள் வலுப்பெற்றால் “புவியின் ஈர்ப்புக்குள் வராது…”
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும்.
4.அந்த ஈர்ப்பு வட்டத்தில் விளைந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை இணையச் செய்யும்.

ஏனென்றால் மனிதர்களாக இங்கே வாழ்ந்தவர்கள் தான் அங்கே சென்றது. அதனால் “இடைமறித்து அந்த உணர்வுகளை உங்களுக்குக் கொடுத்து” அதைப் பெறும்படி செய்தது.

1.துரித நிலையில் அந்தச் சக்திகளை எல்லாம் உங்களைப் பெறச் செய்வதற்கும்
2.அதன் மூலம் நீங்கள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் நல்லதைச் செய்வேன்… அதைச் செய்வேன்.. இதைச் செய்வேன்…! என்று சொல்லி நாம் நல்லதையே எண்ணுவோம்…! இருந்தாலும்
1.ஒருவர் வேதனைப்படும் பொழுது அந்த ரெக்கத்தில் நாம் பரிபக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
2.நம் சொல்லைச் சொல்லும் பொழுது பிறரை வேதனைப்படும் நிலைக்கு உருவாக்காதபடி அதிலே பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

நோயுடன் ஒருவர் மிகவும் சிரமப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்தப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் வலுக் கூட்டி எடுத்துக் கொண்டு
1.அந்த அருள் ஒளி அவர் பெறவேண்டும்
2.அவர் உடலில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணினால் இது “பரிபக்குவம்…!”

வடையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். எண்ணெய் சரியாகச் சூடு ஆகாதபடி மாவைத் தட்டிப் போட்டால் என்ன ஆகும்..? எண்ணையைப் பூராம் குடித்துவிட்டு வடையின் ருசி கெட்டுப் போகும்.

இதைப் போல் தான் நாம் நல்ல மனம் கொண்டு ஒரு மனிதன் நோயால் வாடுகின்றான் என்று உதவி செய்தாலும் அவரின் வேதனையைப் பக்குவம் தவறி நாம் கேட்டுணர்ந்தால்
1,அந்த உணர்வுகள் நமக்குள் சென்று நம் உடலுக்குள்ளும் நோயைத் தான் உருவாக்கும்.
2.நம் நல்ல மனமும் சுவை கெட்டுப் போகும்.
3.நல்ல குணத்தின் இயக்கமும் கெட்டுவிடும்.

ஆகவே நாம் என்ன செய்ய வேண்டும்..?

காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டு உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று இந்த உணர்வைக் கூட்டி அதைச் சுவாசித்து நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் அவருடைய வேதனையை நாம் முதலில் கேட்டறிந்தோம். இந்த உணர்வுகள் நமக்குள் போகாதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த வலுவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர் உடலில் படர வேண்டும்… அவர் நோய் நீங்கி உடல் நலம் பெறவேண்டும்…! என்றால் இது பக்குவ நிலை கொண்டு அவருடைய மனதைத் திருத்தவும் நமக்குள் அந்தச் சுவை மிக்க உணர்வை நமக்குள் உருவாக்கவும் உதவும்.

வாழ்க்கையில் அதைச் (நல்லதை எல்லாம்) செய்வேன்…! சொல்லி விட்டுத் திடீரென்று என்ன செய்வார்கள்…? எல்லாம் செய்து கொண்டே இருப்பார்கள். கடைசியில்…
1.நான் எல்லா நன்மையும் அவனுக்குச் செய்தேன்…
2.ஆனால் பதிலுக்கு இப்படிச் செய்கிறான் பார்…! என்று நாம் கோபமாக மாறும் பொழுது
3.இது எல்லாமே போய்விடுகின்றது… இருள் சூழ்ந்துவிடுகிறது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை வராதபடி இந்த வாழ்க்கையிலே நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

அதாவது “நல்லதைத் தான் செய்வேன்…!” என்ற பாட்டைப் பாடிவிட்டு மற்றவர்களின் குறைகளையும் வேதனைகளையும் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ளும் அந்தப் பரிபக்குவ நிலையை எனக்கு அருள் செய்வாய் ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டிக் கேட்க வேண்டும்… அந்த அருளைப் பெற்றுப் பழக வேண்டும்.

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…!

அதாவது…
1.நாம் இந்த வாழ்க்கையில் அதைச் செய்ய வேண்டும்… இதைச் செய்ய வேண்டும்… அப்படிச் செய்ய வேண்டும்… என்றெல்லாம் விரும்புவோம்
2.அந்த ஆசையினால் நாம் என்ன செய்கிறோம்..?
3.நமக்குள் தீமை என்ற உணர்வுகளும் வந்து சேர்ந்து விடுகின்றது.

தீமை என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகின்றோம்…
1.இந்த உடலின் ஆசை தான் நமக்குள் வருகின்றது.
2.நமக்குள் உயிரான ஈசன் இருக்கின்றான்..! என்ற நிலையையே மறந்து விடுகின்றோம்.

வேதனை என்ற உணர்வை எடுக்கும் பொழுது அந்தச் சிவனாக உருவாக்கிய இந்த உடலில் கடும் வேதனையை உருவாக்குகின்றது.

ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் என்ற கோவிலில் அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர
1.அந்த ஈசனான நிலைகளை நாம் வணங்க மறுக்கின்றோம்.
2.அவன் அறிவை எடுத்து நாம் தெளிவாகும் நிலையை இழந்து விடுகின்றோம்.

ஆகவே நாம் இந்த உடலின் இச்சைக்கு வாழாதபடி
1.இருளை அகற்றும் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
2.எனக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும் என்றும்
3.உயிர் எவ்வாறோ… நீ எப்படி ஒளியாக இருக்கின்றாயோ… என் உணர்வுகள் அனைத்தும் அந்த ஒளிமயமாக மாறுதல் வேண்டும் என்றும்
4.உயிருடன் ஒன்றிடும் நிலையாக நம்முடைய வாழ்க்கையை அமைத்து
5.என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டிக் கேட்க வேண்டும்.

துருவன்… துருவத்தின் ஆற்றலை ஜீரணித்து ஒளியானவன்

 

அகஸ்தியன் துருவத்தின் வழி வானுலக ஆற்றலைத் துருவத்தின் வழி நம் பூமி பெறுவதை இடைமறித்து அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தறிந்தான்.

அந்த உணர்வுகளை நாமும் பெற…
1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி
2.அந்த துருவத்தினை எண்ணி ஏங்கித் தியானிப்போம்.
3.நமது பூமி சுழல்வதும்
4.பிரபஞ்சத்தில் உருவாகும் நிலைகள் பூமி செல்லும் பாதையில் அணுக்களாக இருப்பதை
5.துருவப் பகுதியில் அதை ஈர்க்கும் சக்தியாக வருவது உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
6.கண் வழி தான் இந்த நினைவின் ஆற்றலை உயிருடன் ஒன்றச் செய்து
7.அகக்கண் வழிகொண்டு நுகர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்த வேண்டும்.

புறக்கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கின்றோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்த்தன் துணை கொண்டு
1.உங்கள் உயிருடன் ஒன்றி அகக்கண்ணுடன் இணைத்து நினைவினைப் பூமியின் துருவப் பகுதிக்குச் செலுத்தினால்
2.துருவப் பகுதியில் கவரும் அந்த நிலையை பூமி சுழன்று கொண்டிருப்பதையும்
3.இந்த எல்லையிலிருந்து வானுலக ஆற்றலின் சத்து அந்தத் துருவப் பகுதி வழியாக எப்படி வருகிறது…? என்பதும் காட்சியாகத் தெரியும்.

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து… துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் ஜீரணிக்கும் சக்தி பெற்றவன் அதன் உணர்வே ஒளியாக மாறும் நிலை அவனுக்கு வருகின்றது.

பூமி தான் சுழலும் பாதையில்… நட்சத்திரங்களும் கோள்களும் உமிழ்த்தக் கூடிய உணர்வலைகள் ஒவ்வொரு பகுதிக்குப் பரவி வருவதையும்… மின்னிக் கொண்டு பல கலர்களாக மாறுவதையும்… நம் பூமியின் துருவத்தின் ஈர்ப்பிற்குள் வருவதையும் உங்களால் கவர முடியும்.
1.நுகரும் பொழுது புது விதமான உணர்ச்சிகள் உங்கள் உடலில் பரவும்.
2.சிறிது நேரத்தில் நெடி கலந்த நிலைகளும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும் நறுமணம் கொண்ட உணர்வுகளும் வந்து கொண்டே இருக்கும்.

உணர்வுகள் உயிருடன் ஒன்றி உடலுக்குள் சென்று நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணங்களிலும் அது மோதும் பொழுது
1.உடலுக்குள் பல அதிசயங்களாக… பல பல மகிழ்ச்சி பெறும் உணர்வுகளும்
2.ஒரு ஆனந்தமான ஒளி வெளிச்சமாக நமக்குள் வந்து கொண்டிருக்கும்… மாறிக் கொண்டே இருக்கும்.

சாதாரண எண்ணெயில் ஒரு திரியைப் போட்டு விளக்கை ஏற்றினோம் என்றால் அதிலே ஒரு எரிச்சல் கலந்த நிலையாகத் தெரியும். ஒரு பெட்ரமாஸ் லைட்டை எரிக்கப்படும் பொழுது எண்ணெயின் சக்தியை ஆவியாக மாற்றி அது குளிர்ந்த ஒளியாக மாற்றும்.

அதைப் போல
1.இந்நேரம் வரை உபதேசித்த உணர்வுகள் துருவ மகரிஷியின் அருள் உணர்வுடன் படப்பட்டு
2.எண்ணையின் வாசனையை மாற்றி விட்டுக் குளிர்ந்த ஒளியாகக் காணுவது போன்று
3.உடலுக்குள் மகிழ்ச்சி பெறும் ஒளியின் தொடராகப் பரவும்.

உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களில் மீது மோதும் பொழுது
1.அந்த ஞானியின் உணர்வு உங்கள் உடலுக்குள் பளீர்…ர் பளீர்…ர் என்று மகிழ்ச்சி பெறும் உணர்வாகத் தோற்றுவித்துக் கொண்டே வரும்.
2.உடலில் மாற்றங்கள் பெறுவதைக் காணலாம்

வெல்டிங் வைக்கப்படும் பொழுது பளீர்…ர் என்று மின் ஒளிகள் வரும். அது எரிச்சல் கலந்ததாக இருக்கும் ஆனால் பெட்ரமாஸ் லைட்டை எரிக்கப்படும் பொழுது அது எப்படிக் குளிர்ந்ததாகக் கண்ணுக்குப் புலப்படுகின்றதோ அதைப் போல
1.நம் உடலுக்குள் அருள் மகரிஷிகள் உணர்வுகள் கலந்து மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக
2.நம் உடலில் ஒளித்தன்மை படர்வதைக் காணலாம்… உணரலாம்.
3.ஒரு சுவை மிக்கதாக மாறி வரும்.

புருவ மத்தியில் எண்ணி நினைவினைத் துருவ மகரிஷிகள் பால் செலுத்தி துருவ மகரிஷியின் ஆற்றல் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தப்படும் பொழுது…
1.ஒரு ஒளி விளக்கைக் காட்டி அதன் மூலம் உட்பொருளைக் காணுவது போன்று உங்கள் உடலுக்குள் வெளிச்சங்கள் ஊடுருவுவதையும்
2.ஒவ்வொரு உணர்வின் அலைகள் மோதும் பொழுது மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்களுக்குள் தோன்றுவதையும்
3.ஒளி கண்ட பின் இருள் மறைவது போன்று உங்கள் உடலில் ஒவ்வொரு அணுவிலும் ஆற்றல்மிக்க சக்தியாக இது இணையும்.
4.துருவ மகரிஷியின் உணர்வுகள் உயிருடன் மோதும் பொழுது மெர்குரி போன்று உயிரிலே வெளிச்சம் வரும்.
5.இளம் நீலமாக ஒளி அலைகள் புருவ மத்தியில் கண்களுக்குப் புலப்படும்.

இந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற நினைவைச் செலுத்தப்படும் பொழுது உடலில் மகிழ்ச்சி பெறும் நிலை உருவாகும்.

1.இதற்கு முன்பு அறியாது சேர்ந்த பல தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்க இது உதவும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் வளர்ந்து மன பலம் பெற இது உதவும்.

விண்ணுலக ஆற்றல் பூமியின் ஈர்ப்பால் துருவத்தின் வழியாகக் கவரப்பட்டு நடு மையத்திற்குச் சென்று எப்படி அடைகின்றது…? அதனின் அடர்த்தி மின் அணுக்களாக பூமிக்குள் சென்று குவித்தவுடன் ஒன்றுக்கொன்று மோதும் பொழுது கொதிகலன் எப்படி உண்டாகின்றது…? அதிகமான வெப்பம் அங்கே எப்படி உண்டாகிறது…? என்று குருநாதர் காட்டுகிறார்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு அணுகுண்டைப் போட்ட பின் அணுக்கதிரியக்கங்கள் மற்ற பொருள்களுடன் தன் இனமான நிலைகளுடன் மோதி… இது வளர்த்துக் கொண்ட உலோகமானாலும் கல்லானாலும் மண்ணானாலும் அதை ஆவியாக மாற்றி ஒரு புகை மண்டலமாக மாறுகின்றது. மற்றொன்றை அழித்துத் தன் இனமாகப் பெருக்கி அதன்பின் அது மடிந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நம் பூமிக்குள் வளர்ச்சிகள் அடைகின்றது என்ற நிலையைக் குருநாதர் காட்டுகின்றார்.

இது அனைத்தையுமே… வானுலக ஆற்றலைத் தன் உடலுக்குள் காணுவது போல தன் உடலுக்குள் இருந்த உணர்வை இந்த மண்ணுலகிலும் (புவியியல்) ஊடுருவிச் செலுத்தித் துருவன் காணுகின்றான். அதிலே தாவர இனங்களின் வளர்ச்சியையும் காணுகின்றான்.

உயிரணுக்கள் நீர் வாழ் நிலைகளாக… மீன் இனங்களாக உருவாக்கப்பட்டு அதனின் கருமுட்டைகள் புயல் காற்றிலே சிக்கப்பட்டு மேக மண்டலத்துடன் கூடி நிலப்பரப்பில் விழுகப்படும் பொழுது… எதன் எதன் கலவைகள் அதற்குள் கலந்திருக்கின்றதோ அதற்குத் தக்கவாறு இங்கே தரைவாழ் உயிரினங்களாக உருவாகின்றது.

ஏனென்றால் இதையெல்லாம் தனித்துத் தனித்துப் பிரித்துச் சொல்ல வேண்டும் என்றால் ஆயுளும் பத்தாது… நேரமும் பத்தாது…! சுருக்கமான நிலைகளில் அவர்கள் கண்ட உணர்வினை குருநாதர் காணும்படிச் செய்தார். நீங்களும் அதைக் காணும் நிலைகள் வரும்.

துருவன் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலையில்… அதனைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக எப்படி அழியாது பேரின்பம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ அதைப் போல நாம் அனைவரும் அந்த அழியா நிலைகள் பெறலாம்.

இந்த உயிரில் எது இணை சேர்த்து வளர்க்கப்படுகின்றதோ அதை உயிர் அணுத்தன்மையாக மாற்றுகின்றது என்ற நிலையை அறியச் செய்வதற்குத் தான்
1.நம் குருநாதர் கொடுத்த இந்தச் சக்தியை நீங்களும் பெற்று உடலுக்குள் வளர்ச்சியாகி
2.அந்த அணுத் தன்மையாக வளர்த்து அதையே நாம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

ஆனால் அகஸ்தியன் தன் தாய் கருவிலே இருக்கும் போது விஷத்தன்மையை அடக்கி… அதன் வலுவின் தன்மைகொண்டு மற்றதை அறியும் ஆற்றல் அவனுக்கு வந்தது போன்று…
1.எல்லோருக்கும் அந்தச் சந்தர்ப்பம் வருவதில்லை.
2.ஒருவரால் உருவாக்கப்பட்டு அதிலே விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டு
3.அதே இன மக்களால் சந்தர்ப்பத்தால் கவரப்பட்டு வெளிவருவது தான்… எல்லோரும் அந்த வழியில் செய்ய முடியாது.

குருநாதர் எத்தனையோ தவத்தைச் செய்தார். அதன் வழியில் நானும் சென்றேன். அவர் பதிவு செய்த நிலைகளை அறிவதற்காக காடு மேடு அனைத்தும் அலைந்தேன். உண்மையை உணரும்படி செய்தார். எனக்குள் வளரும் நிலையை உருவாக்கினார்.

அதே போன்று நீங்கள் எல்லோரும் காட்டிற்குள் சென்றால்… தொழில் செய்வது எங்கே…? சாப்பிடுவது எங்கே…? குடும்பம் எங்கே அப்படி இருக்க முடியும்…? முடியாது…!

“யாராவது ஒருவர் விளைய வைக்கும் நிலையில் தான் செயல்படுத்த வேண்டும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் வாழும் நாம் நம் குழந்தையை எண்ணி.. நான் சம்பாரித்து வைத்திருக்கின்றேன்… அவன் எனக்குப் பின்னாடி அதை என்ன செய்யப் போகின்றானோ…? சொத்தை எல்லாம் காப்பாற்றுவானா..? என்ற நிலைகளில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?

அவன் உணர்வை நமக்குள் வளர்த்து நாம் மடிந்த பின் அவன் நினைவாகவே வெளி வந்தால் அவன் உடலுக்குள் தான் செல்வோம்.

அங்கே சென்ற பின் உடலுடன் இருக்கும் பொழுது நாம் எப்படிக் கலக்கப்பட்டோமோ இந்த உணர்வு அவனுக்குள் இயக்கப்பட்டு
1.நாம் தேடிச் சம்பாரித்த சொத்தையும் அவன் கலக்கத்துடன் அழித்திடும் நிலை தான் வருமே தவிர
2.அவனைக் காத்திடும் நிலை வருவதில்லை.

ஆகவே கடைசியில் நாம் என்ன ஆகின்றோம்..? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். குழந்தை மேல் இந்த மாதிரிப் பாசமாக இருந்தால் இப்படி ஒரு நிலை வந்துவிடுகின்றது.

ஆக அந்த உணர்வுக்குள் பட்ட பின் இந்த உடலில் எந்தெந்த நோய் வந்ததோ அந்த நோய் அங்கே விளையும். அந்த நோய் விளைந்த பின் அந்த உடலையும் வீழ்த்தி விடுகின்றது.

ஆனால் பத்தாவது நிலை என்றால் என்ன…?
முதலிலே சூரியன்…
இரண்டாவது உயிர் விஷ்ணு..
மூன்றாவது எண்ணங்கள் இராமன்…
நான்காவது கண்கள் கண்ணன்.

துவாராகயுகத்தில் கூர்மையாகப் பார்த்து உடலின் அமைப்பு அவதாரம் ஆகி இப்படிப் பல தீமைகளை நீக்கி நீக்கி அவதாரங்களாக மாற்றி தீமைகளை நீக்கிடும் தன்மை பெற்றவன்.

கண்கள் தோன்றிய பின் கூர்மையாகப் பார்க்கின்றது ஐந்தாவது நிலை இந்தக் கூர்மை அவதாரம்

ஆறாவது நிலை – வராகன் அந்த வலிமை மிக்க நற்சக்தி பெற்றுப் பன்றி என்ன செய்கிறது…?

1.சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளக்கின்றது.
2.அதற்குள் மறைந்த நல்ல உணர்வுகளை நுகர்கின்றது.
3.பின் பன்றியின் உடலில் தொக்கியுள்ள நஞ்சினை நீக்கிவிட்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வுகள் விளைகின்றது.
4.அடுத்து மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது… பரசுராம்…! ஏழாவது நிலை. பல தீமைகளைச் சமப்படுத்தும் நிலை வருகின்றது.

பின் பலராம் (எட்டாவது நிலை) பலருடைய எண்ணங்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து நரசிம்மா… (ஒன்பதாவது நிலை). தீமை என்ற நிலை வந்த பின் நம் உடலுக்கு:ள் புகாது தடுத்து நிறுத்தும் நிலை தான் நரசிம்மா.

தீமைகள் நமக்குள் புகாது நாம் தடுக்கவில்லை என்றால் அதனால் நாம் எண்ணும் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் இரண்யனாகின்றது,

ஆக இரண்யனான பின்
1.மற்றதைக் கொல்லும் நிலைகளை நாம் மாற்றி விட்டால் கல்கி.
2.இந்த உயிர் ஒளியானது. அதே ஒளியின் உணர்வின் தன்மை அந்தப் பத்தாவது நிலை ஆகும் பொழுது தான் கல்கி.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பை விடுத்து அது விண்ணுலகம் செல்கிறது… பறந்து செல்கிறது…
4.தன்னை எதுவும் தடுக்காது குதிரை மீது சென்று வாளை வீசித் தப்பித்துச் செல்வதாக உருவ அமைப்பைக் கொடுத்து
5.அந்த அருவத்தின் சக்திகளை நாம் எப்படிப் பெறுவது…? என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

வான்வீதியில் தோன்றிய உயிர் மனிதனாக ஆன பின் இனிப் பிறவியில்லாத நிலைகள் அடைவதே கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி நம் வாழ்க்கையில் அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அங்கே செல்கின்றோம்.

இப்படி நமக்குள்
1.மகிழ்ச்சி என்ற உணர்வு வரும் பொழுது சொர்க்கலோகம்…!
2.இதை உருவாக்குவது யார்..? உயிர்.
3.நமக்கு வாசல் எது…? உயிர்.
4.ஆகவே இது சொர்க்கவாசல்.

இந்த உடலிலே உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றினால் அந்த ஒளியின் தன்மை கொண்டு இந்த வாசல் வழி கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற ஏகாதசி… பத்தாவது நிலை எதுவுமே எதிர்ப்பில்லாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இது தான் ஏகாதசி பத்தாவது நிலை என்பது.

தாய் கருவிலே… குழந்தைகள் பெறும் பூர்வ புண்ணியம் பற்றிய உண்மைகள்

 

1.பூமி தன் துருவப் பகுதி வழியாக விண்ணிலிருந்து கவர்ந்து வருவதைத் தன் ஐந்தாவது வயதில் துருவன் கண்டுணர்ந்து
2.வானஇயல் தத்துவம் புவிஇயலாக மாறுவதைத் தன் தாய் தந்தையரிடம் சொல்லிக் கொண்டேயிருக்கின்றான்.

அந்தக் கால பாஷையில் அவன் வெளிப்படுத்தும் போது… அதற்காக வேண்டி ஒவ்வொன்றையும் பொருள்களை ஜாடையில் காட்டி அதைச் சொல்கின்றான். அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே வருகின்றது.

இருந்தாலும் ஐந்து வயது நிரம்பும் போது தன் குழந்தையின் அறிவைக் கண்டு தாய் தந்தையர் மிகவும் ஆனந்தப்படுகின்றார்கள்.

ஆனந்தப்பட்டாலும்… அவர்கள் பூசிக் கொண்ட விஷத்தன்மையான மூலிகைகளினால் உடலில் அணுக்கள் உருவாகி… அது வளர்ச்சி பெற்று விஷத்தின் தன்மையாக நுகரப்படும் பொழுது அவர்கள் உடலில் நோயாக மாறுகின்றது.

அகஸ்தியன் தாய் தந்தையர் உடலில் அந்த விஷத்தன்மைகள் பெருகி மனிதனாக உருவாக்கிய அணுக்களுக்கு எதிர்நிலையாக ஆகிறது. கடும் வியாதியாக மாறி அவர்கள் மரணம் அடைகின்றார்கள்.

ஆனால் தாய் கருவிலிருக்கப்படும் பொழுது
1.அகஸ்தியனுக்கு விஷத்தின் ஆற்றலை மாற்றிடும் அணுக்கள் வளர்ச்சி பெற்று
2.விஷத்தை அடக்கிடும் சக்தியாகப் பூர்வ புண்ணியமாக அவனுக்குக் கிடைக்கின்றது.

தாய் தந்தையருக்கோ… அவர்கள் உடலில் வளர்ச்சி பெற்ற… மனிதனைத் தெளிவாகும் அத்தகைய அணுக்களில்
1.விஷத் தாவர இனங்களை ஆவியாக மாற்றிச் சுவாசிக்கப்படும் பொழுது அவர்கள் உடலில் பரவி
2.மிருகங்கள் இந்த வாசனையை நுகர்ந்தபின் அஞ்சி ஓடியது போல்
3.இவர்கள் உடலில் அந்த வாசனைகள் சிறுகச் சிறுகப் புகுந்து நோயாக மாறுகின்றது.

உதாரணமாக ஒரு தாய் கெமிக்கல்களை வைத்துத் தொழில் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். வேலை செய்யும் போது அங்கிருக்கக்கூடிய விஷத்தன்மைகளைத் தாய் நுகர்கிறது.
1.கருவிலிருக்கும் குழந்தையும் அதை நுகரப்படும் பொழுது
2.அந்தக் குழந்தை “விஷத்தன்மையைத் தாங்கும் சக்தியாக” வளர்கிறது.

ஆனால் தாய் நுகர்ந்த கெமிக்கல் உடலுக்குள் சென்ற பின் தாய்க்குக் கடும் நோயாக ஆகி அது மடியும் தன்மை வருகிறது.

அதே சமயம் தந்தை… இந்தக் கெமிக்கலின் விஷத்தன்மையை அதிகமாக நுகர்ந்து அதிலே உருப்பெறும் கருவின் தன்மை பெண்பால் நிலைகள் கொண்ட சுக்கிலத்துடன் கலக்கப்படும் பொழுது… ஆணில் விளைந்த விஷத்தின் தன்மை அது இரண்டும் கலந்து கரு முட்டையுடன் இணைக்கப்படும் பொழுது
1.கருவிலே உருப்பெரும் குழந்தை உடலில் விஷத் தன்மை பெருகி
2.அதற்குக் “கடும் நோயாக இது உருவாகிவிடுகிறது…”

ஏனென்றால் இதனுடன் இணைந்த உணர்வுகள் கருவாக வளர்க்கப்படுவதற்கு “அந்தக் கெமிக்கல்” உணவு கொடுக்கின்றது… உடலை உருவாக்குகின்றது. ஆக அந்த விஷத்தன்மை திடப்பொருளாக உடலாக மாற்றப்படும் பொழுது நோயாகி விடுகின்றது.

தாய் அந்தக் கெமிக்கல் கலந்த உணர்வைத் தான் சுவாசிக்கப்படும் பொழுது அது தாய் உடலில் நோயாகிறது. கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு அந்த உணர்வு பட்டபின் நோயாக அது மாறுவதில்லை.

அதே சமயம் ஒரு நோயுற்ற குழந்தை வேதனைப்படுவதைத் தாய் உற்று நோக்கி அந்த உருவத்தினை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் தாய் நுகர்ந்த உணர்வுகள் கருவிலே இணையப்படும் பொழுது அந்த நோயுற்ற உடலில் விளைந்த உணர்வுகள் சுவாசிக்கப்படும் பொழுது… கருவிலிருக்கும் குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகிறது.

1.அந்தக் குழந்தை உடலில் எந்த நோய் உருவானதோ
2.அதே நோய் கருவிலே உருவாகும் குழந்தைக்கும் வந்து விடுகின்றது.

ஏனென்றால் இந்த மூன்றுக்கும் உண்டான வித்தியாசங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களுக்குச் சொல்கிறேன்.

மற்ற விஷத் தன்மைகளைப் பார்க்கும் பொழுது தான் சுவாசித்த உணர்வுகள் இந்த அணுக்களில் வளரப்பட்டு தாய் கருவிலே விளையப்படும் பொழுது விஷத்தை வெல்லும் சக்தி பெறுகின்றது.

உதாரணமாக தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது தேள் கொட்டி விட்டால் அந்த விஷத்தன்மை கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் ஊடுருவி விடுகின்றது. குழந்தை பிறந்த பின் தேளை வைத்திருந்தாலும் “அந்தத் தேளின் விஷம் குழந்தையைப் பாதிப்பதில்லை…”

அதே போல ஒரு விஷமான பாம்பு தாயைத் தீண்டிவிட்டால் மருத்துவரிடம் சென்று அந்தத் தாய் பிழைத்து விட்டால் பாம்பினுடைய விஷம் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குள் ஊடுருவி… “அந்த விஷத்தை வெல்லும் சக்தியாக அந்தக் குழந்தை பெறுகின்றது பூர்வ புண்ணியமாக…!”
1.பல விதமான நிலைகள் கொண்டு
2.கருவில் உருவாகும் சிசுக்களுக்கு இப்படி உருவாகின்றது.

பரிணாம வளர்ச்சியில் வளரக்கூடியது மற்ற உயிரினங்கள். பரிணாம வளர்ச்சியில் வளர்ச்சி அடைந்த மனிதனின் உணர்வுக்குள் விளைந்தது… இன்னொரு உடலுக்குள் புகுந்த பின் வளர்ச்சி அடைந்த நிலையில் “மீண்டும் அது வளர்ச்சியடையும் தொடருக்கு வருகின்றது… விஷத்தின் தன்மை…”

இந்த இரண்டுக்கும் உண்டான வித்தியாசத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் நல்லது.

ஏனென்றால் ஒரு சிலர் குழந்தையைப் பார்த்த பின் சுறுசுறுப்பாக இருப்பார்கள். தாய் உற்றுப் பார்க்கப்படும் பொழுது தனக்குள் இது ஊழ்வினையாக மாறுகின்றது… அணுக்களாக மாறுகின்றது.

அந்த அணுவின் தன்மை மாற்றப்படும் பொழுது அதன் உணர்வு அதிகமாக விளைந்து கருவில் விளையும் குழந்தைக்கு வித்தாக மாறுகின்றது. ஆனால் கண் கொண்டு எந்த மனிதனைத் தாய் உற்றுப் பார்த்ததோ அங்கே விளையும் நோயின் அணுக்கள் தாயின் உடலில் விளையும்.

தாயின் கருவில் விளையும் சிசுவிற்கு இந்த விஷத் தன்மை வளரப்படும் பொழுது மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் இங்கே வீரியமடைந்து அதைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே கருவில் வளரப்படும் பொழுது அந்தத் தாய் உயர்ந்த ஞானத்தை எடுத்துக் கொண்டால் உதாரணமாக…
1.யாம் இப்பொழுது போதிக்கும் உணர்வுகள் அகஸ்தியன் கண்டுணர்ந்த விண்ணின் ஆற்றலை
2.பிரபஞ்சத்தை உற்று நோக்கி அவன் பெற்ற சக்திகளை
3.தன் கருவிலிருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும் என்று கருவிலே நினைவைச் செலுத்தினால்
4.அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் கருவில் விளையும் சிசுவிற்குக் கிடைக்கிறது.

அகஸ்தியன் உடலில் உருப்பெற்ற உணர்வுகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உருவாகிக் கொண்டே உள்ளது. அகஸ்தியன் ஒரு உணர்வினை நுகர்ந்த பின் இந்த உணர்வின் எண்ணங்கள் எப்படி வருகிறது…? என்ற நிலையைத் தாயிடம் சொல்கின்றான்.

தான் கற்றுணர்ந்ததைத் தன் அருகிலிருக்கும் சகாக்களுக்கும் சொல்லப்படும் பொழுது அவர்கள் செவிகளில் இது படுகின்றது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்.

1.அப்படிக் கேட்டுணர்ந்த உணர்வுகள் அவர்கள் உடலில் விளைகின்றது… நேருக்கு நேர் விளைகின்றது.
2.அக்காலத்தில் அகஸ்தியனைச் சூழ்ந்து வாழ்ந்தவர்களும் இதே சக்தியைப் பெறுகின்றார்கள்.

நம் தெருவிலே ஒரு போக்கிரிப் பையன் இருந்தால் அவன் செய்யும் சேட்டை எல்லாம் அவனுடன் பழகக் கூடிய மற்ற பையன்களுக்கும் இணைந்து… அவர்களும் போக்கிரியாக மாறுவார்கள். ஒரு பையன் கூட நல்ல பையனாக வரமாட்டான்.

குழந்தைப் பருவத்தில் நல்லவனாக இருந்தாலும் ஒருவன் ரொம்ப சேட்டை செய்கிறான் என்று அதை உற்றுப் பார்த்தால் அவன் செய்யக்கூடிய உணர்வுகளை எல்லாம் நுகரப்படும் போது இங்கேயும் மாற்றங்கள் ஏற்படும்.

அக்காலங்களில் அகஸ்தியன் வாழ்ந்த தென்னாடு எல்லாம் கடலுக்குள் சென்று விட்டது. அகஸ்தியன் உருபெற்ற அந்த மலை எல்லாம் கடலுக்குள் தான் இருக்கின்றது… மேவி விட்ட்து.

அதற்குப் பின் வெளிவந்த பூமி தான் இப்பொழுது நாம் கண்ணிலே காணக்கூடிய நிலை எல்லாம். அக்காலங்களில் மலைப்பகுதிகளுக்கும் பல காட்டுப் பகுதிகளுக்கும் வந்துள்ளான்.

1.வானுலக ஆற்றலைத் தனக்குள் அவன் எடுத்ததால்
2.தனக்கு நீர் வேண்டும் நினைக்கும் பொழுது எப்பகுதியில் இருந்து எந்தெந்த உணர்வுகளைச் சுவாசித்தானோ
3.இந்த உணர்வுகள் அந்தப் பாறையில் படுகின்றது… அங்கே நீர் உருவாகின்றது.

மலைப்பகுதியில் சில பாறைகள் இருக்கக்கூடிய இடங்களில் எல்லாம் மேகமூட்டமாக மாற்றி அந்த மலைப்பகுதியில் நீராக மாற்றும் சக்தி வரும்.

சில இடங்களில் மலை உச்சியில் பார்த்தோம் ஒன்றுமே இருக்காது… நீர் ஊற்றாக அங்கு வந்து கொண்டிருக்கும். ஆனால் கீழே தரையிலே சமமான இடத்திலே நீர் இருக்காது.

சில இடங்களில் மேலே வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் காந்தப் புலனறிவு சூரியனுடைய கதிரியக்கங்களை அதிகமாகக் கூட்டினால் அதிலிருந்து எக்கோ வரும். எக்கோ வரக்கூடிய இடங்களில் மேகங்களை இழுக்காது… கலைத்து விட்டு விடும். அங்கே நீர் இருக்காது.

ஏனென்றால் அந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மைப் போகும்படிச் சொல்லி
1.வானஇயல் ஆற்றல்கள் புவிஇயலுக்கு மாறும் பொழுது
2.மனிதனான பின் மனித நிலையிலிருந்து பதிந்த அந்தக் காந்தப்புலன் எப்படிப் படுகின்றது…? என்று காட்டுகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோலமாமகரிஷி “ரிஷி நிலையை” எப்படிப் பெற்றார் என்று உணர்வதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் (ஞானகுரு) ஆறு வருடம் தியானமிருந்து வந்தோம். மழைக் காலம் வரும் பொழுதெல்லாம் அங்கே செல்வோம்.

கோள்களின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவர் அதனால் தான் அவரைக் கோலமாமகரிஷி என்பது. அவர் கண்டறிந்த உண்மைகளை அறிவதற்காக குருநாதர் அங்கே என்னை அனுப்பி வைத்தார்.

இரவும் பகலும் அந்தக் கோள்களின் இயக்கங்களை அங்கிருந்து தியானித்தேன்.

இதை எல்லாம் பார்த்து அறிந்து உணர்வதற்காக வேண்டி மங்களூரில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருப்பேன். அப்பொழுது, அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்து போனார்கள்.

இரண்டு பேரும் இறந்தவுடன் பையனுடைய பாட்டி என்ன செய்கிறது…? நீ பிறந்ததும் அப்பாவையும் அம்மாவையும் தூக்கி விழுங்கி விட்டாய்… நாசமாகப் போகிறவனே…! எங்கேயாவது தொலைந்து போடா…! என்று அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அந்தப் பையனுடைய அக்காவோ… ஏன் பாட்டி…! பிறந்ததிலிருந்து அவனுக்கு என்ன தெரியும்…? அதற்காக வேண்டி அவனைத் திட்டுகிறாயே,..! என்று சொல்கிறது.

உனக்கு ஒன்றும் தெரியாது. இவன் பிறந்த நேரத்தில் தான் எல்லோரையும் விழுங்கி விட்டான்… இந்தக் கழுதையை எங்கேயாவது குப்பையில் போடு..! என்று பாட்டி பேசிக் கொண்டே உள்ளது.

இதெல்லாம் நடக்கும் பொழுது நான் அவர்கள் வீட்டிலே போய் அவர்களுடன் இருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே என்ன… ஏது… அது எப்படி நடக்கின்றது…? என்பதை அறிந்து கொள்வதற்காக குருநாதர் சொன்ன வழியில் அங்கே சென்று கொண்டிருக்கின்றேன்.

அங்கே சென்று அவர்களுடன் பழகிக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பையன் பேசுவதும்… அந்தப் பாட்டி பேசுவதும்… இப்படியே போராடிக் கொண்டே இருந்தார்கள்.

அந்தப் பாட்டி இறந்தது. ஆனால் தன் பேத்தி மீது பற்றாக இருந்தது. ஏனென்றால் அந்தப் பாட்டி தான் குடும்பத்தை முழுவதுமாக ஆதரித்து வந்தது.
1.தன் பேத்தி மீது மிகவும் பிரியமாக இருந்ததால்
2.இறந்த பின் பாட்டியின் உயிராத்மா பேத்தியின் உடலுக்குள் வந்து விட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் அக்காவும் பேசத் தொடங்கினார்கள்.

தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில் தம்பியைப் பார்த்து, “தொலைந்து போகிறவனே.. எல்லோரையும் தூக்கி வாரி விட்டாய்… நாசமாகப் போடா…!” என்று சொன்னாள். அதன்படியே தம்பியை விரட்டி விட்டாள்.

இது நடந்த நிகழ்ச்சி…!

1.ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்குள் சென்ற பின் அது எப்படி இயக்குகிறது…?
2.உடலுடன் இருக்கும் பொழுது இந்த உணர்வுகள் மாறியதும்
3.அவர்கள் எப்படி இயங்குகின்றனர்…? என்பதை அனுபவபூர்வமாக என்னால் அங்கே அறிய முடிந்தது.

இந்த மாதிரி குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு இதை எல்லாம் சொல்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிற்கும் பிச்சை எடுப்பது மாதிரி வேஷ்டியும் துண்டும் மட்டும் தான் போட்டுக் கொண்டு போவேன்.
1.அங்கங்கே என்ன நடக்கிறது…
2.அந்த உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…?
3.சாப அலைகள் என்ன செய்கிறது…?
4.நோயின் உணர்வுகள் எப்படி வருகிறது…? இறக்கச் செய்கிறது…? என்று
5.எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்குத்தான் காட்டிற்குள்ளும் நகரத்திற்குள்ளும் குருநாதர் அனுப்பினார்.

பாட்டி இறந்த பின் அந்தப் பெண் குழந்தையிடம் நான் சொன்னேன்…!

ஏம்மா…! பாட்டி தான் உன் தம்பியைத் திட்டிக் கொண்டிருந்தது. இப்பொழுது நீ உன் தம்பியைத் திட்டுகிறாயே…! என்றேன்.

அட… நீ… போய்யா….! என்று இப்படி என்னைச் சொல்கிறது.

அந்தப் பாட்டி எப்படிச் சொல்லுமோ அதே மாதிரி என்னிடமும் “அட போய்யா…!” என்கிறது.

கூட வந்த நண்பர் அந்தப் பெண்ணிடம் “சாமியை நீ இப்படிப் பேசலாமா…?” என்று கேட்டார்.

சாமியாவது… பூதமாவது…? என்று இப்படியே “வெடுக்..” என்று பேசுகிறது. அந்த உணர்வுகள் அதே மாதிரி வேலை செய்கிறது.

ஏனென்றால் ஒரு உடலுக்குள் இந்த உணர்வுகள் எதை வளர்த்ததோ அதே உணர்வின் செயலாக எப்படிச் செயலாக்குகிறது என்பதை யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை அந்த வீட்டிற்கு அனுப்பினார்.

இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… இதனுடைய நிலைகளை நீ பார்…! என்று சொல்லியிருந்தார் குருநாதர். அவர் சொன்னது போன்றே நடந்தது.

உங்கள் உடலை உருவாக்கிய “ஒவ்வொரு அணுவிலும்…” அகஸ்தியன் உணர்வுகள் இணையும்

 

அகஸ்தியன் பிறந்தபின் குழந்தைப் பருவத்தில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது விண்ணைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்.

அவருடைய தாய் தந்தையர் எதையெல்லாம் எண்ணிப் பெற்றார்களோ அவை அனைத்துமே கருவிலேயே வளர்ச்சி பெற்றதும் பல விஷ அணுக்கள் தன்னை அணுகாதபடி பாதுகாத்துக் கொள்ள விஷத்தை முறிக்கக்கூடிய பச்சிலைகளை உடலில் பூசிக்கொண்டு அந்த மணத்தை வெளிப்படுத்தும் பொழுது நுகர்ந்து தன் உணவுக்காகத் தேடி வரும் மற்ற உயிரினங்களோ கொசுக்களோ விஷ ஜந்துக்களோ இவை அனைத்துமே அவரை அணுகாது இருந்தது.

சூரியனை உற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.சூரியனின் முகப்பில் தன் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்கள் பிரிக்கப்பட்டு
2.அந்த உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒளிக்கதிர்களாக வீசிக் கொண்டிருப்பதும்
3.சூரியனின் முகப்பில் பிரிக்கப்பட்ட அந்த விஷத்தன்மை பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதையும்
4.அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் விஷத்தை வென்றிடும் முலாம்களை உடலில் பூசியதனால் அதைக் காணுகின்றார்கள்.

அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் உடலில் பதிவானாலும் கருவிலே வளரும் அந்தச் சிசுவுக்குத் தாய் ரூபத்தில் பதிவாகின்றது. இவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்தச் சிசுவோ… பிறந்த பின் தாய் கண்ட உணர்வுகள் அனைத்தையும் மல்லாந்து படுத்திருக்கப்படும் பொழுது அந்தச் சூரியனின் இயக்கங்களைக் காணுகின்றது.

நட்சத்திரங்களில் இருந்து வெளிப்பட்டதைக் கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் பொழுது அதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து முகப்பிலே அதைப் பிரித்து விட்டு தனக்குள் ஒளிக்கதிர்களாக மாற்றி அமைப்பதை
1.இந்தக் குழந்தையும் பார்க்கின்றது. ஆனால் சொல்லால் சொல்ல முடியவில்லை.
2.தான் கவர்ந்ததைச் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில்.

அதே சமயத்தில் இந்தக் குழந்தை பிறந்த பின் தனியாக இருந்தாலும் கொசுக்களோ விஷ வண்டுகளோ இவன் அருகில் வருவதில்லை. இவன் உடலிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் பொழுது அந்த வண்டுகள் மயங்கி விடுகின்றது. விஷ ஜந்துக்களோ இதற்கு அப்பால் விலகிச் சென்று விடுகின்றது.

சூரியன் எப்படி தன் ஒளிக்கதிர்களால் அதில் விளைந்த உணர்வுகள் கொண்டு மோதும் பொழுது விஷத்தைப் பிரித்து விட்டு வெப்ப அலைகள் உருவாகின்றது என்ற நிலையை அகஸ்தியனின் தாய் தந்தையர் முதலில் காணவில்லை. ஆனால் இந்தக் குழந்தை “ஆரம்பத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வருகின்றது சொல்ல முடியாத நிலையில்…”

மற்ற உயிரினங்களையோ மிருகங்களையோ கூசாது பார்க்கின்றது. ஆனால் அந்த உயிரினங்கள் இவனைக் கண்டால் மயங்கி விடுகின்றது. மயக்கத்திற்கு அஞ்சி ஓடி விடுகின்றது.

இப்படித்தான் அந்த இளம் பருவத்தில் வரும் பொழுது தாய் தந்தையர்கள் தன் குழந்தை உடலிலிருந்து வெளிப்படக்கூடிய இந்த ஆற்றல்களைப் பார்த்த பின் “கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…” என்று எண்ணத் தொடங்குகின்றார்கள். அக்காலத்தில் அதைத்தான் அவர்களால் எண்ண முடியும்.

ஏனென்றால் இப்பொழுது உங்கள் எல்லோரையும் அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியே தான் அங்கே அழைத்துச் செல்கின்றேன்.

இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகும். இந்த நினைவுகள் மீண்டும் தியானிக்கும் போது அவர் கண்ட உணர்வுகளை… பூமியில் பரவி உள்ளதை நுகரப்படும் பொழுது அதைக் காண முடியும். அந்த உணர்வின் தன்மையை வளர்க்க இது உதவும்.

அதற்குத்தான் இதைப் பதிவாக்குவது.

1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படிப் பதிவு செய்தாரோ அதைப்போல இதை உங்களுக்குள் பதிவாக்கி
2.இதை நீங்கள் நினைவாக்கும் பொழுது அந்த அகஸ்தியன் கண்ட பேருண்மையை நாமும் கண்டுணர்ந்து
3.இந்த மனித உடலில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு வேகாநிலை அடைந்து
4.இன்றும் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷியின் உணர்வை நாமும் எளிதில் பெற முடியும்.

அந்த வளர்ச்சியை நாம் இப்பொழுது… “இந்த வாழ்க்கையிலேயே அடைய முடியும்” என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதை உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருவது.

பிற மண்டலங்களில் இருந்து வரும் சக்திகளை… 27 நட்சத்திரங்கள் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதை இந்தப் பிஞ்சு உள்ளம் பார்க்கின்றது. ஆனால் சொல்லத் தெரியவில்லை.

உதாரணமாக… பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது ஜீனியைப் போட்டு அந்த இயந்திரத்தைச் சுழற்றிய பின் வெப்பத்தால் அது பஞ்சு போல் உருவாவது போன்று
1.இந்த நட்சத்திரங்கள் சுழலும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் மணங்கள் பிற மண்டலத்தில் இருந்து வரும் சக்திகளை இணைத்து
2.ஒரு நூலாம்படை போலக் கவர்ந்து உறைந்து விடுகிறது.

உறைந்த பின் இந்த நட்சத்திரம் சுழலும் பொழுது இதனுடன் சேர்ந்து சுழலப்படும் பொழுது தூசிகளாக மாறுகிறது.

அதே சமயம் சூரியனுடைய காந்த சக்திகள் கவரப்படும் பொழுதும் இந்த நட்சத்திரங்கள் சுழலும் பொழுதும் அந்தத் தூசிகளைக் கவர்ந்து அதை உணவாக எடுத்துக் கொள்வதும் அதிலிருந்து மீண்டும் வலை விரித்து மற்றதைச் சேர்த்துக் கொண்டும் வருகின்றது.

உதாரணமாக… ஒரு நூலாம்படைப் பூச்சி தன் உமிழ் நீரால் வலையை விரித்து வைக்கின்றது. அதற்குள் ஒரு ஈ சிக்கி விட்டால் அதை உணவாக எடுப்பதற்குத் தன் மூக்கின் நுனி கொண்டு ஈயின் உடலுக்குள் ஊடுருவச் செய்து அதற்குள் இருக்கும் ஊனைக் கரைத்து உணவாக உட்கொள்கின்றது. ஆனால் ஈயின் உடல் அப்படியே இருக்கும் முழுதாக.

அதே சமயம் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்றால்… “அந்த உணர்ச்சியால் உருவாகும் அமிலத்தை” இன்னொரு ஈயைக் காற்று புகாது சுற்றிவிட்டு அதன் உடலுக்குள் அதைச் செலுத்தி விடுகின்றது.

உடலுக்குள் இது சேர்த்த பின்…
1.அந்த ஈயின் உயிரான்மா வெளியே செல்ல முடியாதபடி
2.அந்த ஈயை உருவாக்கிய அணுக்கள் பூராமே இது கலந்த பின் எண்ணிலடங்காத நூலாம்படைப் பூச்சிகளாக அது உருமாறுகின்றது.

இன்று விஞ்ஞானிகள் ஆண்களைப் பெண் உறுப்பு கொண்டவர்களாக மாற்றுவதற்காக “ஹார்மோன்களை” ஆண் உடலில் செலுத்துகின்றார்கள். பெண்கள் போலவே அந்த உறுப்புகள் மாறி உருவாகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு மனிதனுக்குள் சேர்க்கும் இந்த உணர்வு போலத் தான் ஈயின் உடலில் சேர்க்கப்பட்ட அமிலத்தால் அதனின் கருத்தன்மை உருமாறி… தன் இனம் எதுவோ அந்த உணர்வுகள் மாறி… நூலாம் படைப் பூச்சியின் ரூபமாக அது மாறிவிடுகின்றது.

அது போல நட்சத்திரங்கள் தூசிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் அதை “உணவாக உட்கொண்டாலும்…” இதனுடன் சேர்த்துக் கொண்ட இதனின் ஈர்ப்பு வட்டத்தில் சேர்ந்து சுழலும் அந்தப் பால்வெளி மண்டலத்தில் சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து… அந்த அமிலத்தைத் தனக்குள் சேர்த்துச் சேர்ந்து சுற்றும் நிலை வரப்படும் பொழுது… சூரியனுக்கு அருகில் கோள்களாகவும் வெகு தூரத்தில் நட்சத்திரங்களாக இருப்பது போலவும்… ஒவ்வொரு நட்சத்திரமும் தான் உமிழ்த்தும் பால்வெளி மண்டலத்தில் இதைப் போன்ற உணர்வுகளைச் சேர்த்து விடுகிறது.

அதனுடைய வளர்ச்சியில் நட்சத்திரங்கள் உருப்பெற்று விட்டால் மற்ற மண்டலங்களிலிருந்து வருவதை இது சுவாசித்து நட்சத்திரங்களாக அமைந்து அதன் வளர்ச்சி பெற்று… அதனுடன் இணைந்த நட்சத்திரங்களுக்கு இது உணவாகச் சேர்ந்து… அந்த உணர்வை இது எடுத்து இப்படி வளர்ச்சிகள் பெற்றுக் கொண்டே வருகின்றது.

நட்சத்திரங்கள் இப்படி 27 நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலையில் அது எடுக்கும் துகள்களும்… அல்லது தூசிகள் ஒன்றாக இணைக்கப்படும் பொழுது… “கரு இரண்டற உருவாகி ஒரு பொருளை உருவாக்கும் தன்மை அடைகின்றது…”

இதைப் பிஞ்சு உள்ளமாக இருக்கும் அகஸ்தியன் ஒன்றாவது வயது கடந்து இரண்டாவது வயதில் காணத் தொடங்குகின்றான்.
1.அதை உணர்ந்து அவனால் சில சொற்களைச் சொல்லும் நிலை வருகின்றது.
2.இந்த உணர்வின் எதிரொலி எக்கோ வருகின்றது… அதை குருநாதர் காட்டுகின்றார்.

தான் காணும் உணர்வுகளையெல்லாம் தன் தாய் தந்தையருக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றான். அவன் உடலில் விளைந்த உணர்வின் எண்ணங்களைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்திருக்கின்றது என்பதை
1.குருநாதர் சுட்டிக்காட்டி இந்த உணர்வைப் பதிவு செய்து எடுக்கும்படி சொல்கின்றார்.
2.அப்பொழுது அந்தக் குழந்தைப் பருவத்தில் அவன் சொல்லும் மழலைச் சொல்லுக்குள்
3.அந்த உண்மையின் தன்மை எப்படி உருவாகிறது என்பதை எனக்குள் கவர்கின்றேன்.

மீண்டும் அதை நினைவு கொள்ளும் பொழுது
1.அகஸ்தியன் அந்த இளம் பருவத்தில் எப்படிக் கண்டுணர்ந்தானோ அதை நானும் காண முடிகின்றது.
2.ஏனென்றால் நானும் அந்த இளம் பிஞ்சு வயது தான் “புதிதாகத் தெரிய வரும் பொழுது…”

இப்பொழுது காட்சி தெரிந்தால் “என்ன…? ஏது…?” என்று திண்டாடுகிறோம் அல்லவா. அது வழியில் தெரிந்தாலும் கூட… “என்னமோ ஏதோ…” என்று சொல்வது போல அன்றைக்கு அகஸ்தியன் தனக்குக் கிடைத்ததைத் தன் தாய் தந்தைக்குச் சொல்கின்றான்.

1.அவனிடமிருந்து சொல்கள் வெளி வருகிறது… அதே உணர்வுகளை உனக்குள் பதிவு செய்கிறேன்.
2.நினைவு கொண்டு அவன் எதைப் பார்த்தான்…? எதைச் சொன்னான்…? என்ற நிலையை நீயும் பார்…! என்றார் குருநாதர்.
4.உங்களுக்குள் இப்பொழுது அதைத் தான் பதிவு செய்கின்றேன். அதை நினைவு கொள்ளுங்கள்.

அதை இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.

அகஸ்திய மாமகரிஷி கண்ட அந்த நட்சத்திரங்களும் அது கவர்ந்த உணர்வுகளௌயும்… அதே போல் கோள்களும் அது கவர்ந்த உணர்வலைகளும்… அது எவ்வாறு இயங்குகின்றது…? என்ற இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை தியானத்தின் மூலம் நாம் பார்ப்போம்.
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
2.பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் கண்ட “ஞான ஒளி” நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி ஒரு நிமிடம் இருங்கள்.

இப்படித் தொடர்ந்து கொண்டு போனால் அடுத்தடுத்து சொல்லும் போது உங்களுக்குள் பதிவாக்குவதற்கும்… பதிவு செய்த உணர்வினைத் தியானிக்கும் போது நினைவாக்குவதற்கும்… கவர்வதற்கும்… எளிதாக இருக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு எப்படி இந்த நிலையைப் பார்க்கச் சொன்னாரோ அதே போல் குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி… அதனின் துணை கொண்டு
1.நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை
2.உங்களுக்குள் அந்த உணர்வைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

கண்களை மூடி… “அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தில் விண்ணை நோக்கி நினைவைச் செலுத்துங்கள். அகஸ்தியன் தனக்குள் உணர்ந்த அந்தச் சக்தியை இப்போது நீங்களும் நுகருங்கள்.

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிலிருந்து கவர்ந்து அது பால்வெளி மண்டலங்களாக அமைத்து அதிலிருந்து தூசுகளை எப்படிக் கவர்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

இருபத்தேழு நட்சத்திரங்களும் அடுக்கு வரிசையில் நம் சூரியனைச் சுழன்று… பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்ந்து அது தூசுகளாக வெளிப்படுத்துவதை… ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கலர்களை வெளிப்படுத்தும். பல வித வர்ணங்கள் தெரியும்.

அதனுடன் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற கோள்கள் திடப் பொருளாக அது தெரியும். அதனுடைய வரிசைத் தொடர்கள் தெரியும்.

அகஸ்தியன் உணர்வின் துணை கொண்டு அந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை இப்பொழுது நாமும் காணும் சக்தி பெறுகின்றோம்.

நட்சத்திரங்கள் உமிழ்த்தும் தூசிகளைச் சூரியனின் காந்தப்புலன் அறிவுகள் கவர்ந்து இது வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று மோதும் போது பல வர்ணங்களாக மாற்றமடைவதைப் பார்க்கலாம்.

அப்படி மாறும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அதன் எடையற்ற ஆவிகள் பிரிந்து செல்வதைப் பார்க்கலாம். நம் பூமியில் மேக மண்டலங்களைப் பார்க்கும் போது பல வர்ணங்கள் தெரிகிறது அல்லவா. இதைப் போல எடையற்ற ஆவிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேக மண்டலங்கள் கூடுவதைப் பார்க்கலாம்.

கேதுக் கோள்:-
நட்சத்திர மண்டலங்களின் அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் நுகர்ந்து கரும் நீல நிறமாகக் காட்சி தருவதைப் பார்க்கலாம்.

இராகுக் கோள்:-
நட்சத்திரங்களில் இருந்து வருவதும் கேது கோளிலிருந்து வருவதும் கலவையாகி இராகுக் கோளை அடைந்த பின் கருப்பு நிறமாக மாறுவதைப் பார்க்கலாம். கருப்பாக இருந்தாலும் கருப்புக்குள் ஒளியின் தன்மை அதிலே வரும்.

சனிக் கோள்:-
மேகக் கூட்டங்களாக அமையும் அதற்கு மத்தியில் சுழன்று கொண்டு இருக்கும் சனிக்கோள் தன் சுழற்சியின் நிலைகளைத் தான் கவர்ந்து கொண்ட நிலைகளை உறை பாறைகளாக மாற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

சனிக் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் இந்த மேக மூட்டத்திற்குள் மற்ற கோள்களைப் போன்றே அதனுடன் சுழன்று கொண்டு வருவதைப் பார்க்கலாம். ஆவிகள் உறை பனியாகி வட்டப்பாதை போல (வளையங்கள்) அமைத்து வருவதைப் பார்க்கலாம்.

அந்த வட்டப் பாதையில் துகள்களும் தூசிகளும் உறைபனி போலப் பரவி வருவதையும் மற்ற நட்சத்திரங்களுடைய துகளுடன் கலக்கப்படும் போது வித்தியாசமான உருக்களைப் பெறுவதைப் பார்க்கலாம். துகள்கள் ஒவ்வொன்றும் ரூபங்கள் வித்தியாசமாக இருக்கும்.

வெள்ளிக் கோள்:-
இதன் அடுத்த வரிசையில் வெள்ளி தன் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கண்ணாடியில் ஒரு வெளிச்சம் பட்டால் எப்படி அதனுடைய ஒளிக் கதிர்கள் பாயுமோ அதைப் போன்று
2.வெள்ளிக் கோளின் சக்திகள் மின்னிக் கொண்டு இருப்பது தனித் தன்மையாகத் தெரியும்.

வியாழன் கோள்:-
இவை அனைத்தையும் வியாழன் கோள் தனக்குள் கவர்ந்து பனிப் பாறை போல் மாறிக் கொண்டே வளர்ந்து வருவதைப் பார்க்கலாம்.

வியாழன் கோள் கவரும் நிலையும் உறையும் தன்மையும் அதனுடைய சுழற்சியால் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உறை கட்டிகள் (உபகோள்கள்) வளர்ந்து அந்த வியாழன் கோள் அருகில் சனிக் கோள் எப்படிச் சுழல்கின்றதோ அது போல உபகோள்கள் சுற்றிவரும்.
1.நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் போன்று
2.வியாழன் கோளிலிருந்து மின் அலைகளாக வெளி வருவதைக் காணலாம்.

புதன் கோள்;-
சூரியனின் அருகில் இருக்கும் புதன் கோளிலிருந்து ஆவி போன்ற நிலைகள் வெளிபட்டு மீண்டும் சூரியன் கதிரியக்கங்களால் கவரப்பட்டு மின்னிக் கொண்டு பிரபஞ்சத்தில் பரவுவதைக் காணலாம்.

செவ்வாய்க் கோள்;-
இப்படிப் பிரபஞ்சத்தில் பலவிதமான வர்ணங்களாக மாறிக் கொண்டே வரும். செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் மோதும் போது அதிலே ஒரு விதமான நாதங்கள் வருவதைக் காணலாம். கலரும் வித்தியாசமாகச் சிவப்பாக மாறும்.

இவ்வகையில் கலவைகளாகிப் பிரபஞ்சத்தில் பல பல அணுக்களின் நிறங்கள் மாறியும் அணுக்களின் உருவங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் காணலாம்.

நமது பூமி:-
துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து கொண்டு இருக்கும் இந்த உணர்வுகளின் மோதலில் ஏற்படும் (சூரியனைப் போன்று) சில ஆவியின் நிலைகள் ஒரு கரு நீலமாகவும் சிவப்பாகவும் பிரிந்து செல்வதைக் காணலாம்.

இவை அனைத்தும் கலவையாகித் துருவப் பகுதியில் நுகர்ந்து உறைபனிகளாக உறைவதையும் அது கரைந்து கடல்களாக மாறுவதையும் காணலாம்.

சூரியனின் ஒளிக் கதிர்கள் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்து இந்த ஆவியின் தன்மையைப் படரச் செய்து மற்ற மண்டலங்களிலிருந்து எடுத்து நமது பூமிக்குள் பரவிக் கொண்டு இருக்கும் சில நிலைகளைக் காணலாம்.

சந்திரன்:-
பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் திங்கள் இதிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்திகளைக் கவர்ந்து சுழற்சியின் தன்மை குறைந்து அதற்குள் மேக மண்டலங்கள் குவிந்து கொண்டு இருப்பதையும் காணலாம் (தூசிப் படலங்கள்).

இவ்வாறு அகஸ்தியன் தனது ஐந்து வயது வரையிலும் நம் பூமி பெறும் சக்திகளையும் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றதென்ற நிலையைக் கண்டுணர்ந்த உண்மைகளை அது
1.மின் அணுக்கள் போன்று ஒன்றுடன் ஒன்று மோதுவதும்
2.ஆவிகள் வெளிப்படுவதும் அணுக்களினுடைய நிலைகள் மாறுவதுமாக
3.உங்களுக்குள் காட்சியாகக் கொடுத்து கொண்டே இருக்கும்.

நமது பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு இருக்கும் நிலையும் வான மண்டலங்களின் இயக்கங்களின் மாற்றங்களும் பல அணுக்களின் ரூபங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் அவைகளை நட்சத்திரங்கள் கோள்கள் கவர்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

27 நட்சத்திரங்களில் இருந்து வரும் கதிரியக்கப் பொறிகளும் மற்ற நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்க நிலைகளும் மற்ற கோள்கள் உமிழ்த்தும் அதனுடன் ஊடுருவி ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.அது மின் அணுக்களின் நிலைகள் மாறுவதும் ரூபங்கள் மாறுவதும்
2.இதைப் போன்ற வானத்தில் நடக்கும் பல பல அதிசயங்களைக் காணுங்கள்.

உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் அகஸ்தியன்பால் செலுத்துங்கள். இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வுகள் அனைத்தும்
1.உங்கள் உடல்களிலே நுகரும் ஆற்றலாக மாறி
2.உங்கள் உடலுக்குள் ஒரு புத்துணர்வுகள் உருபெறுவதைக் காணலாம்.

வான மண்டலக் காட்சிகளுடன் உங்கள் உடலுக்குள் ஒளியின் சுடராக ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றிலும்
1.அகஸ்தியன் உணர்வுகள் இணையும்.
2.தெளிந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு சமயம் ஒரு வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

குருநாதர் சொன்னபடி அங்கே அந்த வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் குடும்பத்தில் உள்ள பெரியவர் ஒருவர் “எனக்கு இப்படிச் செய்கிறார்களே… இந்தப் பாவிகள்…!” என்று சொல்லிச் சாபமிட்டுக் கொண்டே இருந்தார்.

அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நோய் தாங்காதபடி அவர் சொல்கிறார். ஏனென்றால்
1.அவர் நினைக்கிறபடி அந்த வீட்டில் உள்ளவர்கள்
2.அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை…! என்று சாபமிட்டுக் கொண்டே இருக்கின்றார்.

ஆனால் அந்தக் குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம் தான்…! இவருடைய சாப அலைகள் இந்தக் குடும்பத்தில் சேர்ந்து பின் விளைவுகளுக்கு வந்து அவர் இறந்த பிற்பாடு… அந்தக் குடும்பமே அப்படியே மொத்தமாக நொறுங்கிப் போனது…!

அவர் உடலுடன் இருக்கும் வரை ஓரளவுக்கு ஒருவிதமாக இருந்தனர். ஆனால்
1.அவர் இறந்த பிற்பாடு என்ன ஆகிறது…? என்கிற வகையில்
2.அந்த உண்மைகளை எல்லாம் காண்பதற்காகத்தான் குருநாதர் அங்கே பார்க்கச் சொன்னார்.

பல அனுபவங்கள் பெறுவதற்காக வேண்டி குருநாதர் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அப்பொழுது எனக்குச் சரியான சாப்பாடு இல்லை.

வெறும் பேரீட்சம்பழம் தான் எனக்குச் சாப்பாடு. ஒரு நான்கு பழத்தைச் சாப்பிட வேண்டியது. தண்ணீரை வயிறு நிறையக் குடிக்க வேண்டியது.
1.குருநாதர் சொன்னபடி சில சுவாசங்களை எடுத்துக் கொள்வது.
2.வயிறு கம்…! என்று இருக்கும்… வேறு எண்ணமே வராது.
3.நான்கு பழத்தை உறித்துப் போட்டுத் தண்ணீரைக் குடித்தோம் என்றால் நன்றாக இருக்கும்… ஒன்றும் செய்யாது.

எனக்கு வேறு ஒரு உணவும் கிடையாது.

இதெல்லாம் குருநாதர் யாம் ஒவ்வொன்றையும் அனுபவரீதியாக அறிந்து கொள்வதற்காகப் பல இடங்களுக்கு என்னைச் சென்றுவரச் செய்தார்.

குருநாதர் இப்படிப் போகச் சொன்ன பக்கம் ஒரு இடத்திற்குப் போனால் அங்கே (ஏற்கனவே) யாரோ ஒருவரை அடித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்.

அவரின் இரத்தங்கள் அங்கே மண்ணில் பதிவாகி இருக்கின்றது. அதே மண்ணில் அவருடைய உணர்வுகளும் பதிந்திருக்கின்றது.

ஆனால் குறித்த நேரம்…
1.அதாவது அவர் எந்த நேரம் கொல்லப்பட்டாரோ…
2.அந்தக் கொல்லும் பொழுது எந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ..
3.அதே நேரத்தில் என்னைப் போகச் சொன்னார்,

யாம் போன சமயம் “அடப் பாவிகளா…! என்னைக் கொல்கின்றீர்களேயடா… என்னைக் கொல்கின்றீர்களேயடா…!” என்று சப்தம் போடுகிறது.

அங்கே போனவுடன் இறக்கும் பொழுது சொன்ன அதே உணர்வு வருகிறது.
1.அந்த ஒலி அலைகள் மண்ணில் பட்டவுடன் இந்த உணர்வுகள் எப்படி உராய்கின்றது…?
2.இது எந்தெந்த நிலையைச் செய்கின்றது…?
3.உடலில் விளைந்த உணர்வுகள் இறந்த பின் அங்கே எப்படிப் பதிவாகிறது..? என்று அதை எல்லாம் பார்க்கும்படிச் செய்தார் குருநாதர்.

அனைத்தையும் அனுபவரீதியாக அறிந்து கொள்ளும்படிச் செய்தார் குருநாதர்.

ஒரு மனிதரின் ஆவி இன்னொரு உடலிற்குள் எப்படிச் செல்கிறது…? சென்றபின்… புகுந்து கொண்ட உடலில் எப்படிப்பட்ட அணுக்கள் உருவாகின்றது…? இது போன்ற உணர்வுகள் என்னவாகும்…? என்பதையெல்லாம் குருநாதர் பல இடங்களுக்கு எம்மைச் சென்றுவரச் செய்து… பல இன்னல்களைச் சந்திக்கச் செய்து… அதிலிருந்து தெரிந்து கொள்ளும்படி செய்தார்.

அவ்வாறு பெற்ற அனுபவங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை எல்லாம் சொல்கிறேன்.

“அகஸ்தியனாக நீங்கள் மாறுவதற்கு” முதல் நிலையாக உங்களுக்கு இதைக் கொடுக்கின்றேன்

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
1.வெறும் சொல்லாக இல்லாது உயிருடன் ஒன்றி ஒலிகளை எழுப்ப வேண்டும்
2.நமது நினைவை “உயிருக்குள் செலுத்தி” அதை ஏங்குதல் வேண்டும்.

யாம் உபதேசிப்பதைக் கூர்மையாக நீங்கள் கேட்கின்றீர்கள்… பதிவாகின்றது. அதை உடலுக்குள் உருவாக்க… தனக்குள் இயக்கச் சக்தியாக மாற்ற… ஓ…ம் ஈஸ்வரா என்று நாம் உயிரோடு ஒன்றி அதைக் கவர்தல் வேண்டும்.

ஓ…ம் ஈஸ்வரா என்றால் அது நமக்குள் இயங்குகிறது என்று பொருள். என்னை ஜீவனுள்ளவனாக இயக்கிக் கொண்டுள்ளாய்… நான் எண்ணுவதை எனக்குள் இயக்குகின்றாய் எனக்குள் உருவாக்குகின்றாய்…! என்பது.

குருதேவா என்று சொல்லும் பொழுது நம் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் “புருவ மத்தியிலே… துடிப்பின் நிலைகள் வலு அதிகமாகும்…”

ஆகையினால் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று உயிருடன் நினைவைச் செலுத்தி இந்தக் குரலை நாம் எழுப்புதல் வேண்டும்.
1.ஓ…ம் ஈஸ்வரா என்று சொல்லும் போதெல்லாம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்த நினைவோடு நாம் அருள் சக்திகளை எண்ணி எடுக்க வேண்டும்.

தியானம் இருக்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வின் ஒலி அலையை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது “அந்த அதிர்வின் நிலைகள்” செயலாகும்.

எத்தனை பேர் சேர்ந்து நாம் இதைச் சேர்ந்து சொல்கின்றோமோ எத்தனை வகையான குணங்கள் இருந்தாலும்… நம்முடைய நினைவில் இந்த ஆற்றல் பெருகும்.

அகஸ்தியன் தாய் கருவிலே உருப்பெற்ற உணர்வுகளையும் குழந்தைப் பருவத்திலே பெற்ற உணர்வுகளையும் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
1.அதை நினைவாக்கி மீண்டும் சுவாசிப்பதற்கு முதல் படியாக இதைக் கொண்டு வருகின்றோம்.
2.இதற்கு முன் பரவலாகச் சொல்லி இருந்தாலும் அந்த உண்மை உணர்வுகளைச் சொல்லி
3.இதிலிருந்து உங்களை வளர்ச்சி பெறச் செய்வதற்கே இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

அணுவின் ஆற்றலை அறிந்த அகஸ்திய மாமகரிஷியை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.அகஸ்தியர் தாய் கருவிலே பெற்ற சக்தியும் பிறந்த பின் அவர் பெற்ற உணர்வலைகளையும்
2.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாக தனக்குள் உருப்பெற்றதையும்
3.நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏகித் தன் உணர்வலைகளை தனக்குள் வளர்ச்சி பெறச் செய்த “அந்த முதல் நிலையை…”
4.புருவ மத்தியில் எண்ணி ஏங்கிப் பெறுங்கள்.

அகஸ்திய மாமகரிஷி முதல் நிலைகளில் குழந்தைப் பருவத்தில் தாய் கருவில் பெற்ற உணர்வின் நினைவு கொண்டு விண்ணை நோக்கிப் பார்க்கும் பொழுது… சூரியனை உற்றுப் பார்த்து அதன் இயக்கத்தைக் காணுகின்றார்… உணர்கின்றார்.
1.அதை நாம் பார்க்க வேண்டும்… உணர வேண்டும்… நுகர வேண்டும்
2.அகஸ்தியன் கண்ட சூரியனின் செயலாக்கங்களைக் காண வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் புருவ மத்தியில் சூரியனின் மின் அணுக்களின் கதிர்களைப் பார்க்கலாம். உயிரிலே மோதும் பொழுது புருவ மத்தியிலே கனமும்… அந்த ஒளிக்கதிர்களும்… அதை உணரும் சக்தியும் கிடைக்கும்.

நமது பிரபஞ்சத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மற்ற இருண்ட கோள்களின் மீது பட்டு அந்தக் கோள்களும் மின்னணுக்களைப் போன்று தோன்றுவதைக் காணலாம்.

உங்கள் நினைவின் ஆற்றல் இப்போது விண்ணிலே இருக்கின்றது. வானத்தில் நாம் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம் அல்லவா. அதைப் போன்று சூரியனின் ஒளிக்கதிர்கள் கோள்களில் தாக்கப்படும் பொழுது அது மின் அணுக்களாக உங்களுக்குத் தோற்றமளிக்கும்.
1.அன்று அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் விண்ணை நோக்கிப் பார்த்தான் அல்லவா…
2.அதே உணர்வுகள் உங்களில் இப்பொழுது தெரியும்.

மறந்திடாது உங்கள் உயிருடன் ஒன்றி… உயிர் வழியாக விண்ணிலே நினைவைச் செலுத்தி… வான் வீதியிலே பரவி வரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் தாக்கி அது மின்னுவதை… இப்பொழுது உங்கள் உடலுக்குள்… நினைவுக்குள்… அந்த உணர்வின் அலைகள் பாயும் பொழுது “காட்சிகளாக…” அதை உணரலாம்.

இரவிலே நட்சத்திரங்கள் வான மண்டலத்தில் எப்படி மின்னுகின்றதோ அதே உணர்வுகள் உங்களுக்குக் காட்சிகளாக அந்த மின்னணுவின் தன்மையைக் காண முடியும்.

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் விண்ணின் ஆற்றலைக் கண்டு
1.அவன் தனக்குள் பெற்ற மகிழ்ச்சி பெறும் உணர்வுகள்
2.உங்கள் உடலுக்குள் உள்ள அணுக்கள் அனைத்தும் ஒரு புத்துயிர் பெற்றது போன்று மகிழ்ச்சியான உணர்வுகள் தோன்றும்
3.உங்கள் உடல்களில் ஊடுருவி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாகத் தோன்றும்.
4.உங்கள் நெற்றியில் ஒளியின் சுடராகத் தெரிய வரும்.

இப்பொழுது அகண்ட வெளியைப் பார்த்தது போன்று உங்கள் உடலுக்குள் இந்த உணர்வலைகள் படர்ந்து வருவதை உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் ஒளியின் சுடராக ஊடுருவதை உணர முடியும்.

சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் எப்படி மற்ற கோள்களில் படும் பொழுது அது மின்னுகின்றதோ உங்கள் உயிரின் உணர்வுகள் இதன் வழி கொண்டு உங்கள் உடலுக்குள் அது மின்னுவதைக் காண முடியும். உங்கள் உடலுக்குள் அந்த ஒளியின் சுடர் தெரியும்.

இப்பொழுது
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்… தனக்குள் விளையச் செய்து அந்த உணர்வின் அலையை எமக்குள் பாயச் செய்து
2.நம் குருவின் உணர்வலைகள் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருப்பதை
3.குரு அருளின் துணையால் அகஸ்தியன் உணர்வுகளைப் பெறும் அந்த தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அந்த உணர்வின் அறிவு உங்கள் உடலுக்குள் பதிவாகி அதனின் நினைவாக
1.நீங்கள் எண்ணும் போதெல்லாம் மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் சக்தி பெறுகின்றீர்கள்.
2.இப்பொழுது உங்கள் புருவ மத்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் உடலுக்குள் பரவுவதை உணர முடியும்… ஒளியின் சரீரம் ஆவது போன்று…!

அகஸ்தியன் குழந்தையாக இருக்கும் பொழுது தாய் தந்தையரைப் பார்த்து நுகர்ந்த…
1.அவர்கள் உடல்களிலிருந்து வெளி வந்த அந்த பச்சிலை வாசனைகளை இப்பொழுது நீங்கள் நுகர்வீர்கள்… நுகரும் ஆற்றல் பெறுவீர்கள்.
2.இது உங்கள் உடலில் உள்ள பல பிணிகளைப் போக்க உதவும்.

அகஸ்தியன் தன் நினைவினைத் தாய் தந்தையர் பால் செலுத்தும் பொழுது அவர்கள் உடலிலிருந்து வந்த மணங்களை நுகரும் பொழுது
1.அவன் மகிழ்ச்சி பெற்ற உணர்வுகள் அது எவ்வாறோ அதைப் போன்று
2.அந்த மணங்கள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று “கடும் தீமைகளை அடக்கி…”
3.மகிழ்ச்சி பொங்கும் உணர்வாக… அந்த மகிழ்ச்சியின் பெருக்காகப் பெருகுவதை உணரலாம்.

நாம் மலைப் பகுதிகளுக்குச் சென்றால் ஆங்காங்கு இருக்கும் தாவர இனங்களின் மணங்களை நுகர்வது போன்று
1.நம்முடைய சுவாசத்தில் நம் உடலுக்குள் இப்பொழுது அந்த நஞ்சை வெல்லக்கூடிய மூலிகை மணங்கள் சென்று
2.பல அற்புத மணங்களாக உங்கள் உடல் முழுவதும் படரும்
3.உங்கள் நினைவுகள் அனைத்து மகிழ்ச்சி பெறும்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த அண்டத்தினை… அதன் அறிவின் தொடராக அறிந்துணரும் சக்தி தியானத்தில் அமர்ந்துள்ளோர் அனைவரும் பெற்று… அகஸ்தியன் வழியில் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

இது அனைத்துமே முதல் தடவையாக இந்த உணர்வுகள் உங்களுக்குள் கொடுக்கப்பட்டது…! பதிவாக்கி இருக்கின்றேன்…! ஈர்க்கும் சக்தி வரும் பொழுது நினைவுபடுத்தி அதை ஏங்கிப் பெறுகின்றீர்கள்… அதை உணர்கின்றீர்கள்.

பாடநூல்களைப் படித்த பின் இன்னதுதான் என்ற நிலையில் ஒரு பொருளை இணைத்து விஞ்ஞான அறிவில் காண்பது போன்று
1.அகஸ்தியன் கண்டதை எல்லாம் நீங்கள் காணும் நிலை பெறுகின்றீர்கள்.
2.அந்தச் சக்தியாக நீங்கள் மாறுகின்றீர்கள்… மாறுவதற்குத் தான் முதல் நிலையாக இதை உங்களுக்குள் கொடுக்கின்றேன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என்னைக் (ஞானகுரு) காசிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் சொன்னார் குருநாதர். மோட்சம் கொடுக்கும் இடம் என்று சொல்வார்கள். ஆனால் பார்த்தால் நரகத்தைச் சிருஷ்டிக்கும் இடம் என்று சொல்லலாம்.

கங்கையில் காலையில் பார்த்தோம் என்றால் தலை ஒன்று கால் ஒன்று இதெல்லாம் பாதையில் இழுத்துக் கிடக்கும்.

நாற்பத்து எட்டு நாள் அங்கே இருக்க வேண்டும் என்றும்… அங்கு நடப்பதை எல்லாம் நீ பார்க்க வேண்டும் என்றும் குருநாதர் சொல்லி விட்டார்.

அங்கே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள் என்ன…? என்கிற பொழுது காசிக்கு வருபவர்கள் “இறந்தவர்களை மோட்சத்திற்கு அனுப்ப வேண்டும்..!” என்று பிண்டங்களை வைத்துச் சாங்கியம் செய்கிறார்கள்.

அங்கே பூராம் பண்டாக்கள் இருக்கிறார்கள்… எல்லாம் தாதாக்கள் தான். உதவி செய்பவர்கள் ஈசனுக்கு நைவைத்தியம் செய்யக் கூடியவர்கள்

ஈசன் பிறந்த இடம் என்கிற வகையில் எல்லோருக்கும் மோட்சத்தைக் கொடுக்கின்றான்…! என்று சொல்லி எல்லாம் நடக்கிறது.

காசி விஸ்வநாதன் கோவிலுக்கு முன்னாடி கீழே சுரங்கம் மாதிரிப் போகிறது (UNDER GROUND). நான் போன நேரத்தில் உள்ளே பார்த்தால் பிரேதம் மிதந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றது. தண்ணீர் அதிலே அடித்து மேலே பொங்கிக் கொண்டு வருகிறது.

பார்த்தால் இன்னொரு மடத்திலிருந்து பிரேதத்தைத் தண்ணீரில் தள்ளி விட்டிருக்கின்றார்கள். இங்கே வந்து பாதையில் அடைத்துக் கிடக்கின்றது. அப்புறம் அதை எடுக்கின்றார்கள்.

இதே மாதிரி மடங்களில் இருந்தாலும் அங்கே தள்ளிய பின் கங்கைக்கு வந்து விடுகின்றது. இப்படி எல்லாம் தவறுகள் செய்யக்கூடிய சொர்க்க பூமியாக இருக்கின்றது.

இரவிலே என்ன செய்கிறார்கள்…? என்றால் சிவன் உடுக்கையை வைத்து ஆடினான் என்று சொல்லி ஊ…ம் ஊ….ம் ஊ…ம்..! என்று சிவ பூஜை செய்கிறார்கள்,

உடுக்கையை அடித்து அந்த உணர்வுகளைப் பாய்ச்சுகின்றார்கள். அவர்கள் என்னென்ன செய்தார்கள்..? என்ற வகையில் அனைத்தும் தெரிந்து கொண்டேன்.

கடைசியில் என்ன செய்கிறார்கள்…?

தண்ணீரை எடுத்து வந்து சிவலிங்கத்தில் ஊற்றிய பின் பதார்த்தங்களைக் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். அது எல்லாம் பின்னாடி மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது,

அதே மாதிரி சிவனுக்கு ஆராதனைக்காகப் போடப்படும் பூக்களும் மறுபடியும் கடைக்கு வியாபாரத்திற்குப் போகிறது. இப்படி எல்லாம் அங்கே தவறுகள் நடக்கின்றது.

சிவன் எப்படி இருக்கின்றான்…? என்று தெரியாது. சொர்க்கத்திற்குப் பதில் நரகமே நடக்கின்றது. பல விபரீத நிலைகள் நடக்கிறது.

நான் (ஞானகுரு) முதலிலே இரயிலில் இங்கிருந்து செல்லப்படும் பொழுது காசியில் காலடி எடுத்து வைத்தவுடனே தமிழிலேயே பேசுகிறான் சாப்பிட வாருங்கள்…! வெறும் எட்டணா தான்…! என்கிறான்.

பரவாயில்லையே… இந்த ஊரில் எட்டணாவிற்குச் சாப்பாடு போடுகிறானே…! என்று நினைத்தேன். ஊரெல்லாம் சுற்றிக் காட்ட என்று என் கூட இரயிலில் ஒருவர் வந்திருந்தார். இரண்டு பேரும் சேர்ந்து அங்கே போனோம்.

சாப்பிட ஆரம்பித்தோம். டால் (பருப்பு) என்று எல்லாம் வைத்தான். பில்லைக் கொடுத்தான். சாப்பாடு எட்டணா…! காய் பருப்பு எல்லாம் வைத்தது என்று சொல்லி முப்பது நாற்பது ரூபாய் என்று பில் போட்டான்,

கடைசியில் பில் முந்நூறு ரூபாய். “எட்டணா சாப்பாடு” என்று சொல்லி இப்படிப் போட்டான். எனக்கு முந்நூறு கூட வந்த ஆளுக்கு ஐந்நூறு ரூபாய் பில். நான் முழித்துப் பார்த்தேன்.

அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் இதே மாதிரி ஒருவன் பில் அதிகம்…! என்று கேட்கிறான். அவனை அடிக்கிறான்.

நீ சாப்பிடுவதற்கு முன்னாடி அல்லவா கேட்க வேண்டும்… சாப்பிட்டு விட்டுக் கேட்கிறாயே…! என்று சொல்லி அந்த ஓட்டல்காரன் அவனை அடிக்கிறான்.

இதைப் பார்த்ததும் நாம் ஏதாவது கேட்டால் நம்மையும் உதைத்து விடுவான் போல… என்ற எண்ணம் வருகிறது. பேசாமல் உட்ககார்ந்திருந்தேன்.

மற்றவர்கள் எல்லாம் பயப்படுகின்றார்கள்.. கேட்ட காசை அப்படி அப்பபடியே கொடுக்கின்றார்கள்.

நான் வந்தேன்… இந்தக் காசை வைத்துக் கொள்..! என்றேன். உன் சாப்பாட்டைப் பார்… எடுத்துச் சாப்பிட்டுப் பார் என்றேன்.

கசக்கிறது…! என்றான்.

எல்லாச் சாப்பாட்டையும் சாப்பிட்டுப் பார்…! என்றேன்.

கசக்கிறது…! என்றான்.

“கசப்பாக இருப்பதற்கு” நான் எவ்வளவு ரூபாய் கொடுப்பது…! என்று கேட்டேன். அது போக அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் “எல்லாம் கசக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

எல்லோரும் கசக்கிறது… கசக்கிறது… என்று சொன்னவுடனே இந்தக் காசை வைத்துக் கொள் நான் போகிறேன்…! என்று சொல்லிக் கிளம்பினேன்.

பாபுஜி மாப் கரோஜி…! பாபுஜி மாப் கரோஜி…! (மன்னிப்பு) என்று தன் காதுகளைப் பிடித்துச் சொல்லிக் கொண்டே என் பின்னாடியே ஓட்டல்காரன் வருகின்றான்.

விஸ்வநாதனிடம் போய்ச் சொல்…! நான் அவனைப் பார்க்கத்தான் இங்கே வந்தேன் அவன் தான் உனக்கு ஏதோ செய்திருக்கின்றான் ஆகையால் அவனைப் போய்க் கேட்டுக் கொள்..! என்றேன்.

நான் போகும் பொழுதே அவன் (அந்த ஓட்டல்காரன்) பின்னாடியே வந்தான். அங்கே இருப்பவன் என்ன சொல்கிறான்…?

உஸ்ஸ்க்…! உன் கழுத்தை அறுத்துப் போடுவான்… அவன் பின்னாடி போகாதே… என்கிறான்.

கங்கை எங்கே இருக்கிறது…? என்று கேட்டேன். சொன்னான்…! அங்கே போய்க் குளித்தேன். குளித்த பின்னாடி விஸ்வநாதன் எங்கே இருக்கிறான்…? என்றேன்.

இந்தப் பக்கம் இருக்கிறது என்று சந்துக்குள் கூட்டிக் கொண்டு போனான். பாபுஜி மாப் கரோஜி…! என்று சொல்லிக் கொண்டே வந்தான். கசப்பாக இருப்பதை எல்லாம் மாற்றிக் கொடுங்கள்…! என்று கேட்டுக் கொண்டே வருகின்றான்.

நீ வா… விஸ்வநாதனிடம் போய்க் கேட்கலாம்…! என்றேன். அங்கே போனதும் நீ “பேடா” வாங்கிக் கொண்டு வா..! என்றேன்.

பேடாவை விஸ்வநாதனுக்குக் கொடு… நீ சாப்பிட்டுப் பார்… எப்பொழுது இனிப்பு வருகிறதோ அப்பொழுது நீ போகலாம்…! என்றேன்.

அங்கே ஓட்டலில் ஏமாற்றிக் காசு எவ்வளவு வாங்கினானோ அதுவரையிலும் பேடாவை எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டே இருந்தான்.

போட்டால் அந்தச் சாமியார் வாங்க மாட்டேன் என்கிறான். இது எதற்குடா வம்பு..? என்று தூக்கித் தூக்கி எறிகிறான். அங்கே இருக்கும் பண்டாக்கள் இப்படிச் செய்கிறார்கள்.

திருப்பித் திருப்பி திருப்பி வைத்துக் கடைசியில் நன்றாக ஆனது. சரி விஸ்வநாதன் மன்னிப்புக் கொடுத்தான். நீ இனிமேல் யாரிடமும் ஏமாற்றிக் காசு வாங்க மாட்டேன் என்று சொல்லி விட்டுப் போ….! என்றேன்.

யாரையாவது நீ உதைத்துத் தப்பான வழிகளில் காசு சம்பாரித்தாய் என்றால் உன் வியாபாரமே போய்விடும்..! என்றேன்.

இனிமேல் இந்த மாதிரிச் செய்ய மாட்டேன்…! என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். இது காசியில் நடந்த சமாச்சாரம்.

September 2025 – உபதேசம்

எமது உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்

 

உங்களுடைய துன்பங்கள் நீங்க அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கின்றேன்.

என்னை உங்களுடைய கண் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது…
1.சாமி சொன்ன நிலைகளை நாம் சரியாகக் கேட்க வேண்டும்
2.அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் கேட்டுக் கொண்டிருந்தால் தான் “இது கூர்மையாகின்றது…”
3.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது.

ஏனென்றால்…
1.துன்பத்தை நீக்கும் உணர்வுகளைப் பெற்றவர்கள் மகா ஞானிகள்.
2.துன்பங்களின் இயக்கத்தின் தன்மையை அறிந்துணர்ந்தவர்கள் அந்த மகா ஞானிகள்.

அந்தத் துன்பத்தின் விஷத்தின் தன்மை நீக்கி தன் உணர்வினை ஒளியாக மாற்றி… இந்த உடலையே ஒளிச் சரீரமாக மாற்றி இன்றும் விண்ணுலகில் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருக்கின்றார்கள்.

அவருடைய வாழ்க்கையில் வந்த இன்னல்களை எப்படி நீக்கினார்கள்…? அவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் எப்படி வந்து சேர்ந்தது…? என்பதை அறிந்தார்கள்.

அவ்வாறு அறிந்த உண்மையைத்தான் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அந்த உண்மையின் சக்தியைத் தான் யாம் இப்பொழுது உங்களுக்குச் சொல்வது.

நன்மையின் தன்மை கொண்டு நாம் காரியங்களை எண்ணிச் செய்தாலும் நாம் தவறு செய்யாமலேயே பிறருடைய துன்ப உணர்வுகள் நமக்குள் எப்படி வந்து சேருகிறது…? என்ற நிலையை “அந்த ஞானிகள் சொன்ன வழிப்படி” உங்களுக்குள் சொல்லும் பொழுது இது பதிவாகின்றது.

பாலுக்குள் காரம் பட்டபின் அந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகளை நாம் உணர முடிகின்றது. ஆனால் அந்தச் சுவையை உணர முடியாத நிலை ஆகிவிட்டால் “அதை நாம் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது…”

ஒரு விஷத்தின் தன்மையைக் குடிக்கப்படும் பொழுது அதனால் சிந்திக்கும் செயல் இழந்து விடுகின்றோம்… அறிய முடிவதில்லை. செயலற்ற நிலை ஆகிவிடுகின்றோம். அது போல்…
1.நாம் தவறு செய்யாமலேயே “குறைகள் எனக்குள் வருகின்றதா…?” என்ற மனம்
2.அது எண்ணமாக உங்களுக்குள் தூண்டச் செய்யும் நிலையே சந்தர்ப்பங்களில் மறைந்து விடுகிறது.

ஆனால் அந்த மகா ஞானிகள் அதிலிருந்தெல்லாம் விடுபட்டுப் பழகியவர்கள்.
1.சக்திவாய்ந்த ஆற்றலைத் தனக்குள் கூட்டி தீமையைக் குறைத்து அந்த உணர்வின் ஆற்றலால்
2.உயிர் எப்படி ஒவ்வொரு குணத்தையும் அது உணரச் செய்து… அறியச் செய்து அந்த இயக்கத்தை இயக்கச் செய்வது போல
3.கெட்டதை நீக்கி நல் உணர்வின் தன்மையை உயிருடன் ஒன்றச் செய்து
4.ஒளியாக மாறும் உணர்வினைத் தனக்குள் வளர்த்து அழியா ஒளிச் சரீரம் பெற்றவர்கள்.

அவர்கள் வெளிப்படுத்திய சொல்களை… அவர்களை எண்ணும் பொழுது அந்த மணம் எனக்குள் உணர்வின் செயலாக சொல்லாக அது இயங்குகின்றது. அந்த மணத்தின் தன்மை உடலுக்குள் கிரியை ஆகி என்னை இயக்குகின்றது.

சிவகாமி…! அந்த ஞானியின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று “கவர்ந்த சக்தி” உடலுக்குள் சென்று சிவம்… தான் கவர்ந்து கொண்ட சக்தி எனக்குள் கிரியையாகி “அதனின் சொல்லாக (உபதேசமாக) வருகின்றது…”

1.இதையெல்லாம் நீங்கள் கூர்மையாகக் கவனிக்கும் பொழுது இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் பதிவாகும்.
2.பதிவானதை மீண்டும் எண்ணத்தால் எப்படி எடுக்க வேண்டும்…? என்று நினைவூட்டும் சக்தியாகவும் இது செயல்படும்.
3.அதற்குத்தான்… வேறு நினைவுகள் இல்லாதபடி உங்களைக் கூர்ந்து கவனித்து இதைப் பதிவாக்கும்படி சொல்வது

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) சித்தான பிற்பாடு ஒரு சமயம் ஒரு ஊரில் ஒருவருக்கொருவர் பகைமையில் என்ன செய்கிறார்கள்…? ஒருவரை வெட்டி வாழை மரத்திற்கு அடியில் புதைத்து விடுகிறார்கள்.

அங்கே புதைத்த பின் இதிலே எதிரிகளிடம் இருக்கும் பொழுது ஒரு கூலி ஆளிடம் வேலை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருப்பது பழக்கம்.

இறந்தவரின் ஆவி கூலி ஆளிடம் பழக்கமாக இருந்ததால் அவன் உடலுக்குள் போய்விட்டது. அவன் உடலுக்குள் போனவுடனே என்ன செய்கிறது…?

ஐய்யய்யோ…! என்னை வெட்டிப் போட்டார்களே… வாழை மரத்தடியில் புதைத்து விட்டார்களே…! என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

பைத்தியம் பிடித்த மாதிரி இப்படிச் சொல்லிக் கொண்டேயிருப்பார் என்று ஊர்க்காரர்களே சொல்கிறார்கள். நான் சித்தான புதிதில் அந்த ஆள் இங்கே வருகிறார்.

1.என்னை வெட்டிப் போட்டார்கள்..
2.வாழை மரத்தில் புதைத்து விட்டார்கள்…
3.என் துணி எல்லாம் இங்கே இன்ன இடத்தில் இருக்கிறது
4.அவர்கள் வெட்டிய அரிவாள் எல்லாம் இன்ன இடத்தில் இருக்கிறது
5.என்னைப் புதைத்தவர்கள் இன்னார் என்று அவர்கள் பேரை எல்லாம் சொல்கிறது.
6.இன்னென்ன இடத்தில் இப்படி இருக்கிறது என்று விபரம் சொல்கிறது.

அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாடி தான் நான் இருக்கின்றேன். அங்கிருக்கும் சப் இன்ஸ்பெக்டர் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

அவருடை மனைவியின் தங்கை கேரளாவில் இருக்கிறது. அங்கே அந்தப் பெண்ணுக்கு யாரோ செய்வினை செய்து விட்டார்கள்.

அந்தப் பெண் சேலை கட்டினால் அது கிழிந்து போகும். வெளியிலே வர முடியாது. இரவு நேரத்தில் பார்த்தால் முகத்தை எல்லாம் பிறாண்டி வைத்திருக்கும்.

அதை எல்லாம் பார்த்த பின் அந்த சப் இன்ஸ்பெக்டர் என்னை அங்கே கூட்டிச் சென்றிருந்தார். ஏனென்றால் அந்தப் பெண்ணை வெளியிலே கூட்டி வர முடியவில்லை “நீங்கள் வர வேண்டும்…!” என்று என்னை அங்கே கூட்டிச் சென்றார்.

அந்தப் பெண் அவஸ்தைப்படுகிறது… என்ன செய்வது…? என்று தெரியவில்லை என்று சொன்னார்.

நான் போய்ப் பார்த்தேன். மாந்திரீக வேலை செய்து ஏவல் செய்துள்ளார்கள் என்று சொன்னேன். அதற்குச் சுருட்டும் மதுவும் வைத்திருப்பார்கள்.

அதை எல்லாம் ரூமில் நீங்கள் வைத்து சில பதார்த்தங்களையும் வைக்கும்படி சொன்னேன். வைத்தவுடனே அதை எல்லாம் எடுத்துக் கொண்டது. அன்றைக்கு இரவு எதுவும் நடக்கவில்லை.

சேலை எல்லாம் அப்படியே இருக்கிறது. முகத்தில் காயம் இல்லை. சுயநினைவு வந்தவுடன் இங்கே கூட்டி வந்தார்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் மகரிஷிகளின் அருள் சக்தியும் எடுத்துக் கொண்டு வா..
2.அது உனக்குப் பாதுகாப்பாக வரும் என்று சொன்னேன்.
3.சொன்ன மாதிரிச் செய்ததும் அதிலிருந்து அந்தப் பெண்ணுக்கு நன்றாகி விட்டது.
4.செய்வினையின் செயல் அதற்கப்புறம் இல்லை.

அதிலிருந்து அந்த சப் இன்ஸ்பெக்டர் வந்தார் என்றால் என்னிடம் சிறிது நேரம் அமர்ந்து இங்கே நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்படிப்பட்ட நேரத்தில் தான் முதலில் சொன்ன ஆள் வந்து உருள்கிறான்.. என்னை வெட்டிப் போட்டார்கள்… என்று சொல்லி…!

இது என்ன…? என்று இதைக் கவனித்த சப் இன்ஸ்பெக்டர் போய் இது நிஜமா… பொய்யா..? என்று பார்க்கத் தொடங்கினார். அது இத்தனாவது வாழை மரம் என்று சொல்லி போய்த் தோண்டினால் அங்கே அந்தப் பிரேதம் இருக்கிறது.

அந்தத் துணிகள் எல்லம் யார் யார் வீட்டில் இருக்கிறது..? வெட்டிய ஆயுதங்கள் எங்கே இருக்கிறது…? என்று எல்லாமே சொல்கிறது. அதை எல்லாம் தேடிப் பிடித்து எடுத்து வந்துவிட்டார்கள்,

எடுத்ததும் மற்றவர்கள் தலைமறைவாகி விட்டார்கள். கடைசியில் அவர்கள் என்னையே கொலை செய்ய வந்து விட்டார்கள். இந்த ஆள் தான் சொல்லி இந்த மாதிரி ஆகிவிட்டது…! என்று என்னைத் தேடி வருகின்றார்கள்.

தேடி வரும் பொழுது போலீஸ் அவர்களைப் பிடித்துக் கொண்டு போனார்கள். கடைசியில் அவர்களுக்கு மரண தண்டனையே கிடைத்தது.

இருந்தாலும் முதலில் அந்தச் சந்தர்ப்பம் அதைச் சொல்லப்படும் பொழுது “எனக்கு எவ்வளவு பெரிய ஆபத்தைக் கொண்டு வருகிறது…? என்ற வகையிலே குருநாதர் காட்டுகிறார்.

அவர் சில உணர்வுகளை எனக்கு உணர்த்தி…
1.கொலை செய்ய வருபவர்களின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
2.ஆபத்திலிருந்து உன்னைக் காப்பதற்கு நீ இந்த மாதிரிச் செய் என்றார்.

அவர் சொன்னபடி அவர்கள் மனதை மாற்றி அந்த இடத்தில் தப்பித்துக் கொண்டேன்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இது எப்படி நடக்கிறது என்பதை
1.இறந்த ஒரு ஆன்மா எப்படி எங்கே செல்கிறது…?
2.இன்னொரு உடலுக்குள் சென்றால் என்ன செய்கிறது…?

இதை எல்லாம் அறிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைப் பார்த்தது. இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சுழி முனை – எண்ணம் தோன்றும் இடம்

 

ஒரு மணத்தின் தன்மை அணுவிற்குள் சேர்க்கப்படும் பொழுது சீதா என்ற சுவையானாலும் அந்த உணர்வின் தன்மை அது எண்ணமாக எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் கண்டுணர்வதற்கு அந்த ஞானிகள் சுழிமுனை என்று காட்டினார்கள்.

1.இந்த உயிர் தனக்குள் அதை (சீதா) எடுத்து
2.இந்த உணர்வின் தன்மையைத் தான் பிரித்து
3.அந்தச் சத்தின் உமிழ் நீராக உடலுக்குள் இணைத்து விட்டு உணர்வின் அலைகளை அதற்குள் இயக்கச் செய்கிறது.

இது தான் சுழிமுனை என்று சொல்வது. எதை நாம் எண்ணுகின்றோமோ சுழி முனை அதை இயக்கும். தியானம் செய்கின்றோம் என்கிற போது சுழி முனை வழியாக உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது எண்ணங்கள் என்ன செய்கின்றது…?

எவ்வளவு தான் நல்லதை எண்ணினாலும் முடிவதில்லை. ஏன்…?

மற்றவர்களின் வெறுப்பான உணர்வுகளை உடலுக்குள் இருந்தால் இந்த உணர்வுகள் ஆங்கே பாயும்.

உங்களை யாராவது திட்டி இருந்தார்கள் என்றால் அல்லது ஒரு பையனை வேலைக்குச் சொல்லி இருந்தோம் நேரத்திலே அந்த வேலையை அவன் செய்து முடிக்கவில்லை என்றால் அந்த உணர்வு அழுத்தமாக ஓங்கி வந்து விடும்.

1.அந்த அலைகள் எல்லாம் முன்னாடி இருக்கும் அப்பொழுது
2.சுழி முனையை நீங்கள் நினைத்துக் கட்டாயப்படுத்தி எண்ணினால் என்ன ஆகும்…?
3.ஒருநிலைப்படுத்த முடிவதில்லை…!

சுழி முனையில் நிலை நிறுத்துவதற்காக என்ன செய்கின்றார்கள்…? “பிராணயாமம்… வாசியோகம்…” என்று மூச்சை இப்படி இழுத்து இப்படி விட்டீர்கள் என்றால் சுழி முனையில் நிறுத்தலாம் என்கிறார்கள்.

அடுத்தாற்போல்… தொட்டுக் காண்பித்தல் என்றும் சொல்வார்கள் ஒருவருடைய எண்ணத்தை… மூலாதாரத்தைத் தட்டி எழுப்புகிறோம் என்று முதுகுத் தண்டிலே தட்டி எழுப்பி அவருடைய எண்ணத்தைச் செலுத்தப்படும் பொழுது அந்த உடலிலிருந்து வரும் உணர்வுகளை நாம் சுவாசித்து ஏதோ குறு…குறு… என்று ஏறுகின்றது. ஏதோ சக்தி கொடுக்கின்றார் என்ற நினைவு வரும்.

யாராக இருந்தாலும் தொட்டுக் கொடுத்துவிட்டு மூலாதாரத்தை நான் தட்டி எழுப்புகின்றேன் நுகர்ந்து பாருங்கள் என்று சொன்னால் அந்த எண்ணத்திற்கு வரும் பொழுது அவருடைய எண்ணங்களை நுகரப்படும் பொழுது அவர் சொன்ன வழியிலேயே அது இயக்கும்.

1.மூலம் என்பது நமது உயிர்…
2.ஆதாரம் என்பது நமது ஆன்மா.
3.அதனால்தான் ஆதிமூலம் என்று விநாயகருக்குப் பெயர் வைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் புழுவாக உடல் பெறும் பொழுது ஒரு செடியின் சத்தைத் தான் முதலில் அது எடுத்தது.

அதாவது… சூரியனிலிருந்து வெளிவந்த வெப்ப காந்தம் அந்தச் செடியின் சத்தைக் கவர்ந்தது. சூரியனிலிருந்து வந்த வெப்ப காந்தம் இந்தச் செடியின் சத்தினைக் கவர்ந்து சீதா லட்சுமி ஆக மாறி அது அந்தப் புழுவிற்குள் வரும் போது சீதாராமனாக மாறுகின்றது.

1.புழுவாக உடல் பெற்ற நிலையில் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் சீதா ராமனாக மாறுகின்றது… எண்ணங்கள் தோன்றுகின்றது
2.அந்தச் சுவையின் சத்தாக அதிலிருந்து வெளிப்படும் மணம் எண்ணமாக
3.அந்த எண்ணம் உணர்ச்சிகளைத் தூண்டி அம்புகளாகப் பாய்ந்து இயக்கச் சக்தியாக மாறுகிறது… சீதாராமா…!

ஆகவே ராமஜென்ம பூமி எங்கே உருவாகின்றது…? ஒருவர் என்னைத் திட்டுகின்றார் என்கிற பொழுது அந்த உணர்வைச் சுவாசிக்கின்றேன். அதைச் சுவாசித்தால் சுவை சீதா.

அந்த உணர்வின் தன்மை எனக்குள் வந்து அந்த உணர்வான சத்தை உடலுடன் சக்தியாகச் சேர்ந்து கொள்கின்றது. அதிலிருந்து சொல்லாக வரும் பொழுது சீதாராமன் ஆகின்றது.

அந்தச் சொல்லின் நிலைகள் ராமன் அம்பை எய்கின்றான்.
1.ராமன் எங்கே பிறக்கின்றான்…? ராமஜென்ம பூமி எது…?
2.நம் உடல் தான்.

சீதா லட்சுமி ஆக வந்து உடலுக்குள் வரும் பொழுது சீதாராமனாகப் பிறக்கின்றான் ராமா சீதா என்று சொல்கின்றார்களா…? சீதாராமா என்று சொல்கின்றார்களா…?

சீதாராமா என்று வரிசைப்படுத்தித் தானே சொல்கின்றார்கள்.

நாம் அணுவின் தன்மையாக உருப்பெற்றதிலிருந்து ஒவ்வொரு சரீரத்தையும் பெற்று வளர்ச்சியில் மனிதனாக எப்படி வந்தோம்…? என்பதை உணர்த்துவதற்குத் தான் இந்த இயற்கையின் சக்தியைக் கண்டுணர்ந்த ஞானிகள் விநாயகரை ஆதிமூலம் என்று காண்பிக்கின்றார்கள்.

1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இன்று மனிதனாகப் பிறந்திருக்கின்றோம் என்று
2.யானைத் தலையை மனித உடலில் இணைத்து “விநாயகா” என்று மனித உடலைக் காட்டுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவன் நம்மைத் திட்டினால் அவனின் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது, பதிவான உணர்வை மீண்டும் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அந்தத் திட்டிய உணர்வுகள் வந்து
1.நம் உடலிலே அத்தகைய அணுக்கள் பெருக்கி விட்டால்
2.இதற்கும் நமக்குள் இருக்கும் நல்ல குணத்திற்கும் இரண்டுக்கும் போர் முறையே வரும்.
3.பளீர்…ர்ர் பளீர்…! என்று உடலிலே மின்னும்.

ஆனால் நமக்கு அது என்ன என்று தெரிவதில்லை. ஏனென்றால் நமக்குள் அணுக்கள் உருவாக்கப்படும் பொழுது எதிர் நிலையான உணர்வுகள் பாய்ச்சப்படும் பொழுது நம் தசைகளில் சில நேரங்களில் பளீர்… பளீர்… (ஊசி குத்துவது போல்) என்று மின்னும்.

இவை எல்லாம் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மையே அங்கே அப்படி வருகின்றது.

ஆகவே நம் உயிரை ஈசன் என்று உணர்ந்து கொண்ட பின் ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நாம் எப்படிக் கோவிலாக மதிக்க வேண்டும்…? இந்த உடலான சிவனை எப்படி மதிக்க வேண்டும்…? என்ற நிலையில் நாம் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த மனிதனின் நிலையில் உயர்ந்தவன் “அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்தோம் என்றால் நமக்குள் வரும் தீமையை நீக்கி நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றது,
1.தூய்மையான உணர்வுகள் வளர வளர
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் அதிகரிக்கின்றது.

அத்தகைய பற்று வளர்ந்தால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் எதனை வளர்த்துக் கொண்டோமோ இந்த உயிர் அங்கே அழைத்துச் சென்று அதிலிருந்து வரக்கூடிய உணர்வை எடுத்து ஆறாவது அறிவாக உள்ள நிலையை ஏழாவது ஒளியாகப் பெறச் செய்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் நாம் அன்பு பண்பு பாசம் என்று வளர்த்தாலும் பிறருடைய துயர்களை நாம் கேட்டறிந்து தான் உதவி செய்கிறோம்.

அந்தத் துயரமான உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது துயரத்தை ஊட்டும் அணுத் தன்மையை நம் உயிர் உருவாக்கி விடுகின்றது.

மீண்டும் மீண்டும் அவர்களை நாம் எண்ணும் பொழுது அந்த அணுக்களின் தன்மை பெருகி
1.நம்மையறியாமல் நல்ல அணுக்கள் மடிந்து விடுகின்றது.
2.நம்மை அறியாமலே நம் நல்ல குணத்தையும் காக்க முடியாமல் போய்விடுகின்றது,
3.நம் உயிரான ஈசனையும் மறந்துவிடுகினறோம்
4.அதனால் மனித உடலில் வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்த மறந்து விடுகின்றோம்.
5.பற்றால் நமக்குள் வரக்கூடிய தீமைகளிலிருந்து நமக்கு விடுபடத் தெரியவில்லை.

“விடுபட வேண்டும்” என்றால் என்ன செய்ய வேண்டும்..? என்பதற்குத் தான் இப்பொழுது ஒவ்வொரு நிலைகளிலும் தெரிந்து அந்த அருள் சக்திகளைப் பெறக்கூடிய உணர்வுகளை உங்களுக்குள் கொடுக்கின்றோம்.

இதைத்தான் “தொட்டுக் காட்டுவது…!” என்று சொல்வது.

நுகர்ந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள் எப்படி இயங்குகிறது…? உங்களுக்குள் தீமைகள் விளைவது எப்படி…? என்று அறிந்து
1.அந்தத் தீமைகளிலிருந்து விலகும் அருள் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது
2.இது இரண்டையும் கலந்து நீங்கள் நுகர்கின்றீர்கள்.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுவாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது,
4.இந்த அணுக்கள் பெருகி விட்டால் உங்கள் உடலுக்குள் தீமை என்ற உணர்வின் அணுக்களை இது வளராது தடுத்துவிடும்.

மனிதனின் சுவாச நிலை

 

உடலுக்கு நம் கண் ஆண்டென்னாவாக இருக்கிறது. எப்படி…?

ஒருவர் ஒன்றைச் சொல்லும் பொழுது நாம் அவரை உற்று நோக்குகிறோம்… அவரைப் படமாக்குகின்றோம்… பதிவாக்குகின்றோம்.

அதே சமயம் அவர் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து வைத்திருக்கின்றது. சுவாசித்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகிறது.

அது எங்கே…? எப்படிப் பதிவாகின்றது…?

1.உடலில் இருப்பது – காந்தம் “எலும்பு”
2.நாம் எண்ணிய சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் வடித்து எதையும் கிரகிக்கக் கூடிய சக்தியாக
3.”ஊழ்வினை” – நம் எலும்புக்குள் ஊனாக இருக்கிறது… உடல் அனைத்திலுமே இந்த ஊன் இருக்கும்.

காந்தம்… உடலில் இப்படி இருக்கும் போது “எதையாவது நாம் உற்றுப் பார்க்கிறோம் என்றால்… அந்த உணர்வை எடுத்து ரெக்கார்ட் செய்து விடுகின்றது….!”
1.மற்றவர்கள் சொல்வது போன்று மூளையில் பதிவாக்குவதில்லை
2.உடலில் தான் பதிவாக்குகின்றது…!

ஒரு மைக்கை வைத்து நாம் பேசுகிறோம் என்றால் ஒரு டேப் (TAPE) அதைப் பதிவாக்குகிறது. அந்த நாடாவிலே தான் அது பதிவாகின்றது.

மைக்கில் பேசுகிறோம்… இருந்தாலும் அதற்கு முன்னாடி ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய வயர் வழியாகப் பிரித்து (AMPLIFIER)… ஒலி பெருக்கிக்குக் கொண்டு செல்கின்றது. அப்பொழுது பேச்சை நாம் கேட்க முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் என்னைத் திட்டுகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால்… “உடனே” நான் உங்களைக் கூர்ந்து கவனிக்கின்றேன்.

அப்பொழுது உங்கள் உடலில் இருந்து எது வெளிப்படுகிறதோ… வெளிப்படும் அந்த எண்ணங்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ருக்மணி… உங்களுடைய உருவத்தை எனக்குள் படமாக்குகின்றது.

உங்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ண அலைகளைச் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொள்கின்றது. அப்பொழுது அவரைப் பார்க்கப்படும் பொழுது எதைக் கண் படம் எடுத்ததோ அதை இழுக்கப்படும் போது சத்தியபாமா…! என்னைத் திட்டுகின்றீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.

இப்படிப் படம் எடுக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய செல்கள் அதைப் பதிவாக்குகின்றது. அதாவது ஒரு நாடாவிலே பதிவாக்குவது போல்
1.ஊழ்வினை என்று உடலில் உள்ள எலும்புக்குள் பதிவாக்கி (டேப்பில் பதிவு செய்வது போல்) விடுகிறது.
2.இப்படி ஆயிரக்கணக்கானவரை நாம் பார்த்துப் பதிவாக்குகின்றோம்.

இதிலே கவனங்கள் எப்படி இருக்கிறதோ… ஒருவர் திட்டுகிறார் என்றால் கூர்மையாக அதை உற்று நோக்கிய பின் “இரு நான் பார்க்கிறேன்…!” என்றால் அதை மறக்க முடியாது.

ஆனால் சாதாரணமாக சந்தர்ப்பத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது “நாளைக்கு இந்த இடத்திற்கு வாருங்கள்… இன்னதைத் தருகிறேன்…” என்று சொன்னால்
1.அது நமக்குத் தேவைப்பட்ட முக்கியமான பொருளாக இருந்தால்
2.”அவரிடம் போய் வாங்க வேண்டும்” என்ற எண்ணம் இருக்கும்.

அப்படி இல்லாது இருந்தால்… நாளைக்குப் பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னாலும் அது நமக்குள் சரியாகப் பதிவாகாது… நினைவும் சரியாக வராது. இரண்டு நாட்கள் கழித்து “என்னங்க…? நான் வரச் சொன்னேன்… வரவில்லையே…” என்று அவர்கள் கேட்பார்கள்.

ஆனால் இந்தப் பக்கம் வந்தால் உன்னை உதைத்து விடுவேன்…! என்று சொன்னால்
1.அது “சுருக்…” என்று பட்டு விடுகின்றது… ஆழமாகப் பதிவாகி விடுகிறது
2.இப்படிப் பதிவான பிற்பாடு அவரை நினைத்தவுடனேயே அந்த ஆத்திரமும் வெறுப்பும் வருகிறது

இந்த இடத்திற்கு வா பார்க்கலாம்… என்று சொன்ன பிற்பாடு
1.அங்கே போன பின் உணர்ச்சி வேகம் குப்..குப்.. என்று வரும்.
2.ஆனால் போக்கிரியாக இருக்கிறான் என்றால் நம் மனது பட..பட..பட.. என்று அடிக்கும்.

போக்கிரி இல்லாதபடி நம்மைப் போன்று சமமானவர்களாக இருந்தால் அவர் பேசிய பேச்சுக்கு (அவரின் உணர்வு தாக்கியவுடன்) நம்முடைய வலு கொண்டு “அவன் என்ன செய்வான்…? பார்க்கலாம்…!” என்ற நினைவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்… மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

1.அவர்களை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நினைத்த உடனே அதைக் குவிக்கும்
2.டிவி.க்களிலே படம் எப்படித் தெரிகின்றதோ அதே மாதிரி அந்த நினைவலைகளை இழுத்து உருவமாகக் காட்டும்… உடனே அது தெரியும்
3.பரவலாக இருக்கக்கூடிய அலைகளை இழுத்துக் கண்ணுக்கு முன்னாடி புலனறிவுக்குள் “அதைக் காட்டிக் கொண்டே இருக்கும்…”

அதே உணர்வின் செயல் உயிருக்குள் பட்டு அதனுடன் தொடர் கொண்ட சிறு மூளைக்குள் சென்றவுடன்
1.ட்ரான்சாக்ஷன் ஆகி… எந்த உணர்வோ… நமக்குள் பதிவானது அந்த செல்களில் எடுத்து… அது இயங்க ஆரம்பிக்கும்.
2.அதே அலைகளை எடுத்து எடுத்து… நாம் பேசும் பொழுது தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

நாம் எடுக்கக்கூடிய வார்த்தை நம் சிறுமூளை உயிரிலே பட்டு…
1.அந்தச் சுவாசத்தின் வழி எடுக்கக்கூடிய காற்றை… காந்தத்தைப் பிரித்து… உணர்வின் சத்தைப் பிரித்து
2.அந்த அலைகளை ட்ரான்சாக்சன் செய்து சிறுமூளை உடலுக்குள் உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை உமிழ் நீராக மாற்றி விடுகின்றது… சாப்பிட்ட ஆகாரத்துடன் அது கலந்து விடுகிறது.
1.நம் கண்ணுக்கு “நாம் எண்ணுவது தெரிவதில்லை…!”
2.நினைவுகள் எடுக்கும் பொழுது அது உமிழ் நீராக அது மாறுகின்றது.

எப்படி…?

வெயில் காலத்தில் மாங்காயையும் உப்பையும் தொட்டுச் சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்தப் புளிப்பு அவர்களுக்கு மிகவும் ரசிப்பாக இருக்கின்றது. மாங்காய் புளிப்பு தான்… ஆனாலும் அதை ரசிக்கின்றார்கள்.

அதைப் பற்றி நான் சொன்னாலும்… மாங்காயையே இப்பொழுது நீங்கள் பார்க்கவில்லை… ஆனால் உமிழ் நீர் உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…?

மாங்காய் என்று சொன்னவுடனே கப..கப.. என்று உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…! அந்தப் புளிப்பின் நிலைகள் கொண்டு உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… நினைவலைகளைத் தூண்டுகின்றது.

மாங்காயைப் பார்க்கவில்லை… ஆனால் அந்தச் சுவையின் தன்மை கொண்டு உமிழ் நீரைக் குவிக்கின்றது.

இதற்கு முன்னாடி உமிழ் நீர் ஊறவில்லை..! ஆனால் சொன்னவுடனே எப்படி உமிழ் நீர் ஊறுகின்றதோ இதே மாதிரித் தான் எரிச்சலாக ஒருவர் பேசுகிறார் என்றால் அதைப் பார்த்து நுகர்ந்ததும் அதே எரிச்சலான உணர்வு நமக்குள் வருகிறது. சொல்கிறது அர்த்தமாகிறதல்லவா…!

எரிச்சலான உணர்வு கொண்டு பேசுகிறார்… நாம் உற்றுப் பார்க்கின்றோம் அந்த எரிச்சலான உணர்வு நமக்குள் வருகின்றது
1.”சுழி முனை” என்பதற்கு விளக்கம் சொல்கின்றேன்
2.சுவாசித்த உடனே அதை ட்ரான்சாக்ஷன் செய்கின்றது
3.கண்ணினுடைய நினைவுகள் வரப்படும் பொழுது “மேக்னெட்… அந்த சுவிட்சைக் கிளைத்து விடுகின்றது…”
4.நம் உடல் மொத்தமாக அதை இழுக்க ஆரம்பிக்கும்
5.எந்த குணத்தி(ன்)ல் சுவிட்சைப் போடுகின்றமோ அதை இழுக்கின்றது

ரேடியோ டிவி பெட்டிக்குள் பல ஸ்டேஷன்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசயைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலையைக் காற்றிலிருந்து பிரித்து இங்கே எடுத்துக் கொண்டு வருகிறது.

இதே மாதிரி நம் உடலில் ஆயிரக்கணக்கான அலைவரிசை உண்டு. எந்த அலைவரிசையை இழுத்துப் பேசுகிறோமோ… அந்த அலைவரிசை “தன்னாலே பேசும்…”

எண்ணும்போது அந்த அலைகளை எடுத்து நம்மால் உணர முடிகின்றது… நுகர முடிகின்றது… செயல்படுத்த முடிகின்றது.
1.அந்த உணர்வின் அலைகளைச் சுழி முனை சுழற்றி
2.சிறு மூளை ட்ரான்சாக்ஷன் செய்து பிரித்து அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சுற்ற வைக்கின்றது.

அப்போது அதே உணர்வு தான் நமக்குள் வேலை செய்யும்…!

ஆகவே… நாம் எண்ணக் கூடியதை எல்லாம் எலும்பிற்குள் அந்த மேக்னெட்டில் பதிவு செய்து விடுகின்றது. மீண்டும் நினைத்தவுடன்…
1.அந்த எண்ணங்கள் வீரியமடைந்து கண்ணின் நினைவுகளுக்கு வருகின்றது
2.காற்றில் இருப்பதை இழுக்கிறது… இழுத்தவுடனே சுவாசத்திற்குள் கொண்டு வருகின்றது
3.சுவாசிக்கும் பொழுது எதை எதை நாம் பதிவு செய்திருக்கின்றோமா
4.நம் உடலில் இருக்கக்கூடிய செல்கள் மொத்தமாக இழுத்துப் பிரித்து ஆத்மாவாகக் கொண்டு வருகின்றது.
5.அதைத்தான் நாம் சுவாசிக்கின்றோம்… அதுதான் நம்மை ஒவ்வொரு நொடியிலும் இயக்குகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு உடலை விட்டு ஒரு ஆன்மா பிரிந்தால் சடங்குகள் என்ற நிலையில் சாஸ்திரங்கள் செய்து அந்த உடலைச் சுட்டுச் சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைத்து விட்டால் பாவங்கள் போய்விடும்..! என்று செய்கின்றனர்.

அதே சமயத்தில் புதைத்து விட்டால் அதற்காக மாவில் ஒரு பொம்மையைச் செய்து அவர் இந்த நிலையில் இருந்தார் என்று அவர் பேரைச் சொல்லி மந்திரங்களைச் செய்து மாவைக் கரைத்தால் (பிண்டத்தை) அவருடைய பாவங்கள் போய்விடும் என்று சாங்கிய சாஸ்திரங்கள் கூறுகின்றது.

பத்தாவது நாள் அல்லது பதினாறாவது நாள் அந்த வீட்டிலே சொந்த பந்தம் எல்லாம் அனைவரும் வந்து அவர் என்னென்ன பிரியப்பட்டுச் சாப்பிட்டாரோ அந்தப் பலகாரங்களைச் செய்து கொடுத்து விட்டு
1.எங்களுடன் நீ வாழ்ந்தாயே.. நீ இப்படிப் போய்விட்டாயே…
2.எங்களுடன் நீ இல்லாமல் இப்படிப் போய்விட்டாயே… என்று சொல்லி
3.எல்லாரும் அழுது கொண்டிருப்பது தான் வேலை.
4.ஆக அந்தத் துயரத்தை அதிகமாகக் கூட்டி அவரை ஒளிச் சரீரம் பெற முடியாத நிலையாக்கத்தான் முடிகிறது.

பதிமூன்றாவது அல்லது பதினாறாவது நாள் இதெல்லாம் செய்த பிற்பாடு சாதத்தை ஆக்கிக் காக்காய்க்குக் கொண்டு போய்க் கொடுத்தால்
1.அந்தக் காகம் சாப்பிட்டுவிட்டால்…
2.பாவ விமோசனம் ஆகிவிடும் என்று சாங்கியங்களைச் செய்து கொண்டுள்ளோம்.

பின் எண்ணையைத் தேய்த்து தலை முழுகி விட்டுச் சொந்தபந்தங்கள் எல்லாம் புதுத் துணியைக் கொடுத்துக் கட்டச் செய்து எல்லாம் பெருமைப்படும்படி செய்வார்கள்.

அவர் போய்விட்டார்…! ஆனால் உங்களுக்கு நாங்கள் ஆதரவாகப் பாதுகாப்பாக இருக்கிறோம்… துணிமணிகளைப் போடுகிறோம்…! என்று இந்த மரியாதைகளை எல்லாம் செய்வார்கள்.

தலைமகனைக் கூப்பிட்டு மாவிளக்கு செய்து… நெய் தீபம் இட்டு… முக்காடிட்டு… அந்தத் தீபத்தை அணையாமல் கொண்டு போய் விநாயகர் கோவிலில் காட்டி அங்கே அர்ச்சனை அபிஷேகம் செய்தால் “மோட்ச தீபம்…” என்று இப்படி சாங்கிய சாஸ்திரங்கள் கொண்டாடுகின்றனர்.

அடுத்து வரும் அமாவாசை அன்றைக்கு என்ன செய்வார்கள்…?

அவர் உடுத்திய துணி… அவர் சாப்பிட்ட உணவு… எல்லாம் போட்டுப் படைத்து அவருக்குச் சாப்பாடு கொடுத்து
1.எங்களுடன் வாழ்ந்தாய்… சொத்தெல்லாம் சம்பாரித்துக் கொடுத்தாய்
2.உங்களுக்கு ஆக்கிக் கொடுத்து விட்டு நாங்கள் சாப்பிடுகிறோம் என்று
3.சாப்பாட்டை வைத்துக் கும்பிடுவது தான் இன்றைய வழக்கில் உள்ளது.

அடுத்து… சடங்கின் பிரகாரம் மந்திரங்களைச் சொல்லிப் பாவத்தைக் கரைக்க வேண்டும் என்ற நிலையில் செருப்பு குடை காய்கறி அவர் உட்கொண்ட பதார்த்தங்கள் எல்லாம் தானமாகக் கொடுப்பார்கள். சில வசதி படைத்தவர்கள் பசு மாட்டையும் கொடுப்பார்கள்.

1.பசு மாட்டைக் கொடுத்து அதன் வழி கொண்டு பாவத்தைப் போக்கியதால்
2.அந்தப் பசு மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு அப்படியே சொர்க்கத்துக்கே கொண்டு போய்விடுமாம்.
3.இப்படி எல்லாம் சொல்லி நம்மைச் சர்வ முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள் (அன்றைய அரசர்கள்)
4.அரசர்கள் கொடுத்த சாங்கிய சாஸ்திரங்களைத் தான் இன்று நாம் செய்து கொண்டு வருகின்றோம்.

ஏனென்றால் அந்தச் சாங்கிய சாஸ்திரங்களை அரசர்கள் ஏற்படுத்தினார்கள் அல்லவா..! அதற்கென்று ஒரு கூலி ஆளை வைத்திருப்பான். (அவர்கள் தான் இன்று குடுகுடுப்புக்காரராகவும் மந்திரவாதியாகவும் உள்ளார்கள்)

சாங்கியம் எல்லாம் செய்து தனித்துப் பிரித்து வைத்த பிற்பாடு முச்சந்தியில் இருக்கும் வீட்டு வாசல்படி மண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

இறந்த உடலை எங்கே கொண்டு புதைத்தார்கள்… அல்லது சுட்டார்கள்…? என்று அறிந்து கொள்வார்கள். அங்கே சென்று இறந்த ஆன்மா எந்தச் சாமி மேல் அவர் பக்தியாக இருந்தாரோ… எந்தெந்த வழிகளில் அதை வழிபட்டாரோ… அதை எல்லாம் வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டே வருவான்.

இன்ன தெய்வத்தின் மேல் பற்று கொண்டார் என்ற நிலை வரும் பொழுது இறந்தவருடைய வீட்டில் அமாவாசை அன்று அப்பாவை (இறந்தவரை) நினைத்துக் கூப்பிடுவார்கள்.
1.அவர்கள் பாத மண்ணை வைத்து இவன் மந்திரத்தைச் சொல்லி இறந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான்
2.பின் அந்த ஆன்மாவை வைத்துப் பல பல வேலைகளைச் செய்வான்.
3.குட்டிச் சாத்தானாக மாற்றுவான்… பில்லி சூனியத்திற்குப் பயன்படுத்துவான்..
4.மற்றவர்கள் நோய்களைப் போக்கவும் பயன்படுத்துவான்.

கர்ப்பமான ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் அதை எடுத்துக் கொள்வார்கள். அதே போல் ஆஸ்பத்திரிகளில் உடைநீர் என்று எடுத்துக் கொள்வான். இது எல்லாம் மந்திரவாதிகள் செய்யக்கூடிய வேலைகள்.

அதை எல்லாம் எடுத்து வைத்து அதற்கென்று மந்திரத்தைச் சொல்லி கரு சிதைந்ததோ உடைநீரோ அந்த ஆன்மாக்களை வைத்து
1.கரு வித்தைகளைச் செய்வதும்
2.ஜோதிடங்கள் பார்ப்பதும்
3.சில குடும்பங்களைக் கெடுப்பதும்
4.தனக்கு ஆகாதவரைக் கெடுப்பதும்
5.குட்டிச் சாத்தானை வைத்துச் செய்யும் வேலைகளை எல்லாம் செய்வார்கள்.

இத்தகைய சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்கள் எல்லாம் பேயாகப் போய்… நோயாகப் போய்… அவர்கள் “சர்வ நாசமாகும் நிலைகளுக்கு…” அங்கே செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவர் அந்த உடலை விட்டுப் போன பிற்பாடு சாங்கிய சாஸ்திரப் பிரகாரம் நாம் சாப்பாடு வைத்துக் கூப்பிடுகின்றோம். ஆனால் கடைசியில் அவர்கள் நிலை என்ன ஆகிறது…?

இன்னொரு உடலுக்குள் போய் அவஸ்தைப்பட்டுப் அந்த உடலை விட்டுப் போன பின் தேளாகவோ பாம்பாகவோ பூச்சியாகவோ தான் இந்த ஆன்மா பிறக்கும்.

வீட்டுப் பக்கம் குடுகுடுப்புக்காரன் வருவான். பெரும்பகுதி அவர்கள் வீட்டிலே புது துணி கொடுத்தாலும் வாங்க மாட்டான். “கொஞ்சம் பழைய துணி இருந்தால் கொடுங்கள்…!” என்று அதைத் தான் கேட்பான்.

1.ஏனென்றால் உடலில் இருக்கக்கூடிய மணம் அதிலே இருக்கும்.
2.மந்திரங்களை அவன் ஜெபித்தவுடனே என்னென்ன செய்திருக்கின்றீர்களோ அந்த மணம் பட்டு
3.உங்கள் வீட்டுக்குள் அடுக்குப் பானையில் இருக்கும் சங்கதி எல்லாம் கூடச் சொல்வான்.

நமக்கு ஆகாதவர்கள் யார்..? என்று தெரிந்து கொள்வான். அங்கே போய் ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு “அவர்கள் தான் இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள்…!” என்று நம்மிடம் சொல்வான்.

அடப்பாவிகளா..! என்று நாம் நினைப்போம்.

இதை எல்லாம் வெளியிலே சொல்லக் கூடாது ஏனென்றால் ஆபத்தான விஷயங்கள் இருக்கிறது என்று நம்மிடம் “சத்தியம்” வாங்கிக் கொள்வான்.

ஆகாதவர்களின் தலை முடி… துணி… ஏதாவது எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சிநேகிதமாகப் பேசுவது போல் எல்லாம் கேட்டு வாங்கிக் கொள்வான்.

தலை முடி… துணி… அவன் வைத்திருக்கும் அந்தக் கருவையும் வைத்து சில மந்திரங்களைச் சொல்லி எடுத்து வைத்திருக்கும் பாத மணலில் போட்டு வீட்டில் தெளித்து விடுவான்.

1.மணல் பட்டதும் சில வீடுகளில் கை கால் வராமல் போகலாம்
2.பெண்கள் கருவுற்றிருந்தால் கரு சிதைந்து போகும்
3.இந்த மாதிரி எல்லாம் சில குடும்பங்களில் நிறைய நடக்கிறது… (சாங்கிய சாஸ்திரங்களில் சிக்கிய குடும்பங்களில்…!)

காசைக் கொடுத்து மோட்சத்திற்கு அனுப்பலாம் என்று செய்யலாம். ஆனால் அப்படிப் போக முடியாது…!

இதை எல்லாம் தெரிந்து அறியாமல் இயக்கும் மந்திர தந்திரங்களிலிருந்து நீங்கள் விடுபடுங்கள்..!

ஆதியிலே அகஸ்திய மாமகரிஷியாகத் தோன்றியது எமது குருநாதர் தான்…!

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எனக்கு உபதேசித்ததை உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.
1.மாமகரிஷி ஈஸ்வரபட்டா… எமது குருநாதர் – ஆதியிலே “அகஸ்திய மாமகரிஷியாகத் தோன்றிய அவர்…”
2.தனக்குள் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலை
3.துருவப் பகுதியின் ஆற்றலை நுகர்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்

அவர் எவ்வாறெல்லாம் சக்தி பெற்றார்…? என்ற நிலையை எனக்கு உபதேசித்தார்… உபதேசித்தது மட்டுமல்ல…!
1.அந்த அகஸ்திய மாமகரிஷி கடந்த காலங்களில் எங்கே தோன்றினார்…?
2.ஆற்றல் மிக்க சக்திகளை அவர் எவ்வாறு பெற்றார்…? என்பதை எல்லாம்
3.அகஸ்தியர் சுழன்ற அந்தந்த இடங்களுக்குக் குருநாதர் என்னை அழைத்துச் சென்று காட்டினார்.

இன்று நாம் கதைகளில் படிக்கக்கூடிய அகஸ்தியர் அல்ல… அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர் அவர்.

ஒன்றுமறியாத காட்டுவாசியாக இருந்தாலும் அவர் எவ்வாறு சக்திகள் பெற்றார்…? என்பதை…
1.அவர் சக்தி பெற்ற ஒவ்வொரு இடத்திற்கும் என்னை அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டி
2.அந்த உண்மைகளை எல்லாம் அறியும்படி செய்தார்.

அன்று அகஸ்தியர் பெற்ற அத்தகைய சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
1.27 நட்சத்திரங்களின் சக்திகளையும் நவக் கோள்களின் சக்திகளையும்
2.சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல்களையும் சப்தரிஷிகளின் அருள் சக்திகளையும் உங்களைப் பெறும்படி செய்கின்றேன்.
3.இதை அலட்சியமாக எண்ண வேண்டாம்.

27 நட்சத்திரம் என்பது இந்தப் பிரபஞ்சத்திற்குள் “27 விதமான உணர்ச்சிகளைத் தூண்டும்” நிலைகள் பெற்றது. பேரண்டத்தில் இருந்து வரும் மற்ற சத்துக்களை இந்த 27 நட்சத்திரங்களும் ஊடுருவி… அதனுடைய செயலாக்கத்தைத் தணியச் செய்து… நம் பிரபஞ்சத்திற்கு ஒத்ததாக மாற்றி அனுப்புகின்றது.

எந்தெந்த நட்சத்திரம் அந்தச் சக்திகளை வீழ்த்தி அந்த அலைகளைப் பரப்புகின்றதோ… அதற்கடுத்து இருக்கக்கூடிய கோள்கள் அதைக் கவர்ந்து தன் உணர்வின் சத்தாக அதை வளர்த்துக் கொள்கின்றது.

அதனின்று உமிழ்த்தி வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதில் கலந்துள்ள நஞ்சைப் பிரித்துவிட்டு “வெப்ப காந்த அலைகளாக” உலகைச் திருஷ்டிக்கும் நிலையாக மாற்றுகின்றது.

அதனின்று இந்தப் பிரபஞ்சத்திற்குள் பூமி தோன்றி…
1.பூமிக்குள் கல் மண் உருவானாலும் அதிலே தாவர இனங்கள் உருவாகி
2.அந்த உணர்வின் சத்தை உயிரணுக்கள் பருகி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாகி
3.சூரியனைப் போன்று மனிதனும் தன் உணர்வின் தன்மை கொண்டு
4.எண்ணங்களால் (முகப்பில் உள்ளது) கெட்டதைத் தனக்குள் வராது தடுக்கும் ஆற்றல் பெறுகின்றான்.

தன் எண்ணத்தின் முகப்பு என்றால்… உதாரணமாக கோபம் என்றால் அந்தக் கோபத்தை வைத்துச் சமப்படுத்தும் நிலையாக உடலுக்குள் அணுமதிக்கின்றது.

அதே போன்று இந்த எண்ணங்கள் என்பது நட்சத்திரங்கள். நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்வுகள் உயிருடன் படும்பொழுது அது ஜீவன் பெற்றுத் தசைகளாக (கோள்கள்) மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வலைகள் தசைகளுக்குள் விளைந்து… அதிலே விளைந்தது உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உடலுக்குள் உயிர் சூரியனாகின்றது.

எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அதற்குள் விளைந்து மாற்று உடலை அமைக்கும் திறன் அது பெறுகின்றது. இவ்வாறு மனித நிலைகள் பெற்று வந்தாலும்
1.மனித உடலுக்குப் பின் “மாற்று உடல் பெறாது” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியவர்கள்
2.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடியதை எண்ணத்தால் இயக்கி… ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து… 27 நட்சத்திரங்களுடைய சக்திகளையும் கோள்களின் சக்தியையும் இணைத்து சூரியனின் காந்த சக்தியாக இருக்கும் நெருப்புக்குள் இணைக்கச் செய்வதே தியானத்தின் முக்கியப் பொருள்.

என்ன…? பெரியதாக 27 நட்சத்திரங்கள் சக்தியைப் பெறச் சொல்கிறார்…? என்று எண்ண வேண்டியதில்லை. ஏனென்றால் 27 நட்சத்திரங்களுடைய சக்தியைப் பருகும் சக்தியைக் குருநாதர் எனக்குக் கொடுத்ததால்
1.எந்த வழியில் அதனைக் கவர வேண்டும்…?
2.அந்த நினைவலைகளை எப்படி எடுக்க வேண்டும்…?
3.சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளை அதிலே எந்த அளவுகோல் கொண்டு கலக்க வேண்டும்…?
4.மற்ற கோள்களின் சக்திகளை எந்த அளவிற்கு நினைவு கொண்டு வர வேண்டும்…? என்ற எண்ணத்தைப் பரப்பி
5.அந்த உணர்வின் நினைவலைகளை ஓர் எண்ண வலுவாகக் கூட்டச் செய்து
6.அதனை உங்கள் உணர்வுக்குள் பாய்ச்சச் செய்து அந்தச் சக்தியை நீங்கள் பருக வேண்டும் என்றும்
7.பிரபஞ்சத்தில் விளைந்ததை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை இதற்குள் கலந்து
8.ஞானிகள் மனித வாழ்க்கையில் வந்த இருளை நீக்கிப் பெற்ற ஆற்றலையும்
9.ஒளிச் சரீரமாக மாறி விண் சென்ற அந்த உணர்வுகளையும் உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம்.

குருநாதர் உபதேசித்த அந்த அருள் வழிப்படி…
1.எதனை எதனின் அளவுகோல் எடுத்துக் கொள்ள வேண்டும்…?
2.எதை உபதேசிக்க வேண்டும்…? எப்படி உபதேசிக்க வேண்டும்…? என்று
3.அவர் சொன்ன வழி முறைப்படி உங்களுக்கு உபதேசித்து வருகின்றேன்.
4.உங்களை அறியாது வரும் தீமைகளை மாற்றவல்ல சக்தியாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

எப்படிப் பிறர் செய்யும் தீங்கான உணர்வுகள் தீய வினைகளாகி உடலில் நோயாக வருகின்றதோ இதைப் போல் “அந்த நோயை மாற்றவல்ல” அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை “உங்களை அறியாமலே அந்த நல்வினைகளை ஓங்கச் செய்கின்றேன்…”

அதை நினைவு கொண்டு நீங்கள் எடுக்கும் போது இருள் நீக்கிப் பொருள் காணும் உணர்வாக உங்களுக்குள் விளைந்து… பொருள் கண்டுணர்ந்த அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் நீங்கள் சென்று… பெருவீடு பெரு நிலை என்ற நிலையாக “ஒளிச் சரீரம் நீங்கள் பெற வேண்டும்” என்ற இச்சையில் தான் இதை உபதேசிக்கின்றேன்.

கீதையிலே சொல்வது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…! நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் உங்களுக்குள் பெருக வேண்டும் என்ற இந்த உணவின் நோக்கம் கொண்டு தான் இதை வெளிப்படுத்துகின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த நீங்களும் இதையே பின்பற்றினால் அதன் வழி கொண்டு
1.பிறர் வாழ வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
2.அந்த வாழ வேண்டும் என்ற உணர்வு உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து
3.உங்களுக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் சக்திகள் அது ஒடுங்கி
4.மெய் உணர்வைக் காணும் சக்தியாக உங்கள் பேச்சு மூச்சும் வெளிப்பட்டு
6.விஞ்ஞான உலகால் ஏற்படுத்தப்பட்ட நஞ்சினை வென்று
6.இந்தப் பூமியிலிருந்து நஞ்சினை அகற்றிடும் ஆற்றலாக நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

அத்தகைய ஆற்றலை இந்தப் பூமிக்குள் உருப் பெற்ற ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும். அத்தகைய மூச்சலைகளாக உங்கள் மூச்சு வெளிப்பட வேண்டும்.

அந்த நிலை பெற வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகள் உணர்வைப் பெற்றால் ஒழிய இனி வரக்கூடிய தீமையான விளைவுகள் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம்.

ஆகவே இனி வரும் நிலையில்
1.இந்த உலகிற்கு அருள் வழி காட்டக்கூடிய அரும் பெரும் சக்திகளாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கணவன் இறந்தால் சாங்கிய சாஸ்திரப்படி மனைவியின் மாங்கல்யத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால்
1.“கணவனை இழந்தவள்…” என்று தெரிந்து கொள்ள வேண்டுமாம்.
2.அந்த மாங்கல்யத்தைக் கழட்டி விட்டால் தான் தன் குழந்தைகள் மீது பற்று வருமாம்.

இப்படிச் செய்கின்றனர்.

மாங்கல்யத்தைத் தான் தூக்கி எறிந்து விடுகின்றார்கள். வாழ்க்கையில் என்று திருமணம் ஆனதோ அவருடன் கலந்து உறவாடிய உணர்வுகள் உடலுடன் இருக்கின்றதே அதை என்றைக்குத் தூக்கி எறிவது…?

சொல்லுங்கள் பார்க்கலாம். தூக்கி எறிய முடியுமா…? அவர் சம்பாரித்த சொத்தைத் தூக்கி எறிகின்றீர்களா..?

“கணவர் தன்னுடன் இருக்கின்றார்…!” என்ற நிலைகளை எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் கணவரின் உயிரான்மா இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற உணர்வுகளை மனைவி எண்ணி எடுக்க வேண்டும்.

அங்கே சப்தரிஷி மண்டலங்களில் இணைத்த பின் அவரை “ரிஷி” என்ற நிலைகளில் நாம் எண்ணி அந்த அருள் பெற வேண்டும் எங்கள் குடும்பத்தில் அறியாது வந்த இருளை நீக்க வேண்டும் என்று மனைவி அதை எண்ணி வளர்த்தால் அந்த அருள் உணர்வுகள் இங்கே வரும்.

மாறாக… கணவன் மேல் பற்று கொண்டு “என்னை விட்டுப் போய்விட்டாயே…!” என்று எண்ணினால்
1.கணவனின் உயிரான்மா மனைவியின் உடலுக்குள் தான் வருகின்றது.
2.அவர் உடலில் வந்த நோய்கள் தான் இங்கே விளைகின்றது.

மீண்டும் இந்தப் பற்றின் தன்மை கொண்டு “போய்விட்டார்” என்று எண்ணி என் குழந்தைகளை நான் எப்படிக் காப்பேன்…? என்ற உணர்வுகளை எடுக்கும் பொழுது வேதனை என்ற விஷத்தைத்தான் வளர்க்க முடிகின்றது.
1.கணவனையும் பாதுகாக்க முடியவில்லை.
2.ஆக நம்முடைய உணர்வையும் நாம் காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட விஷத்தின் தன்மை பெற்றால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் நாம் விஷத் தன்மை கொண்ட உடலாகத்தான் மாற்றுகின்றோம்…! என்ற நிலையை எல்லோருமே மறந்து விடுகின்றனர்.

ஆனால் நம் ஞானிகள் நமக்கு உணர்த்திய பேருண்மை என்ன…?

மனிதன் பல கோடிச் சரீரங்களில் விஷத்தை நீக்கி… நீக்கி… நீக்கி… விஷத்தை நீக்கிடும் அரும் பெரும் சக்தியாக இந்த மனித உடலை உருவாக்கியுள்ளான்..! என்பதைச் சாதாரணமாக “ஒரு கல் சிலையை வைத்து…!” நமக்குத் தெளிவாக்குகின்றனர்.

1.யானைத் தலையை வைத்து மனித உடலைப் போட்டு
2.நாம் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக
3.இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

“ஆதிமூலம்” – நம் பூமிக்குள் ஆதியிலே வந்த இந்த மூலமான உயிர் தன் வாழ்க்கைக்குச் சுவாசித்த உணர்வு மூஷிகவாகனா… அதாவது
1.சுவாசித்த உணர்வு கொண்டு வாழ்க்கை நடத்தி
2.தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசித்துக் கணங்களுக்கு அதிபதியாகி
3.பரிணாம வளர்ச்சியாகி நஞ்சு கொண்ட உணர்வுகளிலிருந்து விடுபட்டு
4.இப்படித் தான் நாம் மனிதனாகப் பெற்றோம் என்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

மிருகங்கள் அனைத்துக்கும் உடல் வலிமை உண்டு. ஆனால் மனிதனுக்கு எண்ண வலிமை உண்டு என்று காட்டுவதற்காகத் தான் யானைத் தலையைப் போட்டு மனித உடலைப் போட்டு விநாயகரைக் காட்டினான் ஞானி.

ஆக… ஆதிமூலம் என்ற உயிர் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் எல்லாம் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது விநாயகா…!

இந்த வினைகளுக்கெல்லாம் நாயகா… விநாயகா என்று மனிதனாகப் பெற்ற பின்
1.இந்த உடலை மதிக்கும்படி செய்கிறான்
2.இந்த உடலை உருவாக்கிய கணங்களுக்கெல்லாம் ஈசா… கணேசா என்று
3.உயிரான ஈசனை வணங்குபடிச் சொல்கிறான்.

இந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை எல்லாம் அகற்றி விட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நல் வினைகளாகச் சேர்த்து ஒளியாக மாறி “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நீ ஆக வேண்டும்…” என்பது தான் விநாயகர் தத்துவத்தின் மூலம்…
1.ஞானிகள் காட்டிய சாஸ்திரம் இது தான்.
2.அகஸ்தியனால் காட்டப்பட்டது தான் விநாயகர் தத்துவம்.

ஆகவே நேற்றைய செயல் இன்றைய மனித உடல்… இன்றைய உடல் நாளைய ஒளி உடலாக நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து அதன் வழி கொண்டு நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

கண்ணுக்குத் தெரியாதபடி… “அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி” யாரும் எதையும் செயல்படுத்த முடியாது

 

உதாரணமாக… சோர்வான எண்ணத்தை நாம் எடுக்கிறோம் என்றால் இந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் பாய்ச்சப்படும் பொழுது… “ஹூம்… என் உடலுக்கே முடியவில்லை…” என்று வந்து விடுகிறது.
1.சோர்வை வலுவாந பின் உடலுக்கு முடியாது போய் விடுகின்றது.
2.மீண்டும் அதிகமான நிலைகளில் வேதனையை ஊட்டும்

அந்தச் சோர்வின் வலிமை வரும் பொழுது அது அர்ஜுனன். அந்த உணர்வினைக் கண்களுக்குக் கொண்டு வரப்படும் பொழுது…
1.அங்கே அந்த வேலைக்குப் போக முடியாது…! சரி நீ இரு…! என்று
2.இந்த உணர்வினை உபதேசித்து அதாவது இந்த உடலுக்கு தக்கவாறு அந்த அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றார்.

நாம் எடுத்துக் கொண்ட நினைவின் அலைகள் எதுவோ அதிலே எதிர் நிலைகள் தாக்கப்படும் பொழுது அந்த நிலை வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் மகிழ்ச்சியாக இருந்து ஒரு காரியத்தைச் செயல்படப் போகும் போது “ஒரு வேண்டாத எதிரி அங்கே வருவான்…” என்றால் அவர் உடலில் இருந்து வரக்கூடிய உணர்வு
1.மகிழ்ச்சியான உணர்வுடன் மோதப்படும் பொழுது ஆத்திரத்தைத் தூண்டுகின்றது.
2.என் வலுவான எண்ணங்கள் கொண்டு “அயோக்கியன் போகின்றான் பார்…” என்ற எண்ணத்தை எனக்குள் உணர்த்தி உபதேசிக்கின்றது.
3.அவரிடம் போனால் ஏதாவது செய்துவிடுவான் அதனால் நீ இப்படித் தப்பிச் சென்று விடு…! என்று வழிகாட்டுகின்றது.

ஒருவன் பால் எதிரியாக இருக்கிறோம் என்றால் அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் அலையைப் பார்த்த பின் “எதிரி போகின்றான்” என்ற நிலையும் தனக்குள் வலுவான… தன்னைக் காக்கும் எண்ணங்களைக் கண்கள் ஊடுருவி “நீ இப்படிக் காத்துக் கொள்…” என்ற நிலையை இந்த ஞானத்தைப் போதித்து இந்த உணர்வின் தன்மை இயக்குகின்றான்.

இது தான் கீதா உபதேசம் என்று சொல்வது.

1.நமக்குள் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வும் அர்ஜுனன்…! அவன் சகலகலா வல்லமை பெற்றவன்…! என்று
2.உடலுக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொன்றும் அதிலே எதை எண்ணுகின்றோமோ அதனதன் வல்லமையை அது காட்டும்.

அந்த வல்லமைக்குத் தக்கவாறு எண்ணிய நினைவில் இந்தக் கண்ணன் வழிகாட்டி அதனுடைய நிலைகள் எப்படிச் செயல்படுகிறது…? என்பதைக் கண்ணின் இயல்பான நிலையும் நம் உடலுக்குள் அது இயக்குவதையும் வியாசக பகவான் காட்டுகின்றார்.

நம் உடலின் உறுப்புகளில் கண்ணின் நிலைகள் புழுவிலிருந்து வரப்படும் பொழுது அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து அதை வளர்த்து அந்த உணர்வின் தசையாக நமக்குள் உருவாகி அந்த மணத்தின் தன்மை கொண்டு நாம் எப்படிச் செயல்படுகின்றோம்…? என்ற நிலை தான் கீதா உபதேசத்தின் தெளிவான நிலைகள்.

கண்ணன் மகா ஞானி என்று சொல்கின்றோமே தவிர இந்தக் கண்ணன் யார்…? நமக்குள் சாரதியாக இருப்பது யார்…?

ரோட்டிலே சென்றாலும் நம் கண்கள் தான் சாரதியாக இருந்து வழி காட்டுகிறது.
1.இது மேடு… இது பள்ளம்…!
2.இங்கே வேகமாக வண்டி வருகின்றது… அங்கே மாடு மிரண்டு வருகின்றது… ஆகவே இந்தப் பாதையில் நீ செல்
3.இங்கே உன்னுடைய எதிரி வருகின்றான்… அங்கே உன் நண்பன் வருகின்றான் அவனிடம் நீ அணுகு
4.அவருடைய உதவி உனக்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்வது யார்…?
5.நம்முடைய கண்ணான கண்கள் தான் ஒவ்வொரு நொடியிலும் அதை உபதேசிக்கின்றான்.

நமக்குள் இருக்கக்கூடிய குணம் கொண்டு கண்ணால் நாம் பார்க்கப்படும் பொழுது எதிரியின் வேகமான உணர்வுகளைக் கண் இழுத்தாலும் நமக்குள் இருக்கும் வலுவான எண்ணங்களுக்குள் அதைச் சமப்படுத்தும் பொழுது
1.அந்த உணர்வின் நினைவைத் தூண்டி… வலுவான எண்ணங்களைக் கூட்டி
2.அதனுடன் இயக்கச் செய்யும் இந்த ஞானத்தை ஊட்டுகின்றது நமது கண் தான்.

அதைத்தான் கண்ணன் கீதா உபதேசம் செய்தான் என்று அவன் ஒரு பெரிய மண்டலத்தையே நமக்குள் அமைத்திருக்கின்றான். புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பேரண்டத்தின் நிலைகள் இங்கே செயல்படுகின்றது என்று காட்டினார்கள்.

அதனால் தான் கண்ணன் சொல்கின்றான்…! “என்னை அறியாது…” எச்செயலும் யாரும் செயல்படுத்த முடியாது என்று…!

நம் கண்ணுக்குத் தெரியாதபடி அந்தக் கண்ணின் நினைவு இல்லாதபடி யாரும் எதையும் செயல்படுத்த முடியாது.
1.எதைக் கூர்ந்து கவனித்தோமோ அந்த உணர்வின் சக்தியைப் படமாக்கி
2.அந்த உணர்வின் சக்தியை உடலாக்கி
3.அந்த உணர்வின் எண்ணங்களை உருவாக்கி வைப்பது இந்தக் கண்கள் தான்.

ஆகவே தான் கண்கள் தோன்றிய பின் ஒவ்வொன்றையும் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அதைப் படம் எடுத்து அந்த உணர்வின் சக்தி தனக்குள் வலுக் கூடி கூர்மை அவதாரமாக நாம் எண்ணிய நிலைகள்… அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் உருமாற்றிக் கொண்டு வந்தது.

ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நம்முடைய கூர்மை அவதாரம் எதில் இருக்க வேண்டும் என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் எனக்கு உபதேசித்து உணர்த்தினார்.

கீதாச்சாரம் என்ற நிலையில் அன்று வியாசக பகவான் எதை உணர்த்தினாரோ
1.அந்த உணர்வலைகள் நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.
2.அவர்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட அந்த உயர்ந்த சக்திகள் அனைத்தையும் நாம் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒவ்வொன்றும் அது கலவையாகும் பொழுது அது எப்படி எல்லாம் மாறுகின்றது…? அதிலே ஒளிக் கதிர்களாக இருப்பது தங்கமாக எப்படி மாறுகிறது..? என்று இதை எல்லாம் வரிசைப்படுத்திக் காட்டினார் குருநாதர்.

27 நட்சத்திரத்தின் சக்திகளை ஒவ்வொரு கோள்களும் எப்படி எடுக்கிறது…? அதற்குள் எனென்ன மாற்றங்கள் ஆகிறது…? என்று ஒவ்வொன்றாகக் காட்டினார்.

செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் சிவப்பு நிறமான நிலைகளும்… அதிலிருந்து வருவதும்… எப்படி இருக்கின்றது…?

புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகிறது…? 27 நட்சத்திரங்களின் சக்திகள் இதனுடன் கலவையாகப்படும் பொழுது புதன் கோள் எடுத்து எத்தனையோ வகையான உலோகத் தன்மை கொண்டதாக எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது..?

அதே சமயத்தில்
1.வியாழன் கோள் எடுக்கும் பொழுது
2.அந்த நட்சத்திரங்களின் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி
3.ஒரு பொருளுக்குள் ஊடுருவி “இணைக்கும் சக்தியை” எப்படிக் கொடுக்கின்றது…?

இதிலே ஆவித் தன்மையாக ஆன பின் சனிக்கோள் எப்படி அந்த ஆவியான நிலைகளை எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது…? இதை எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் கொடுக்கின்றார்.

ஒவ்வொரு கோளும் தனக்கென்று உபகோள்களாக வளர்க்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எடுத்து வளர்கிறது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டுக் கோள் பத்துக் கோள் பன்னிரெண்டு கோள் என்று உப கோள்கள் உண்டு.

வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு. அந்த 27 கோள்களும் 27 நட்சத்திரத்தின் சக்திகளைக் கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாக மாற்றுகின்றது.

அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான நிலைகளில் வரும்.

வியாழனின் உபகோள்களிலேயே
1.ஒன்று இந்தப் பக்கம் சுற்றும்
2.ஒன்று அப்படியே மாற்றிச் சுற்றி வரும்.
3.விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
4.அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையிலிருந்து வருகிறதா…!
5.இது என்ன…? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் உள்ளார்கள்.

அந்த 27 உபகோள்களும் அது சுழன்று கொண்டு தான் இருக்கிறது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து இதற்குள் அதை எல்லாம் சேர்த்து ஒரு கலவையாகி இந்த உணர்வின் தன்மை “ஒரு புதுவிதமான கதிரியக்கமாக…” மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படி அது உறைபனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோள் உறையும் பனியாக மாற்றுகின்றது. இன்றும் அவ்வாறு ஆக்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.எதிர் காலத்தில் இந்த உண்மைகளை நீங்களும் அறிய வேண்டும்.
2.நான் மட்டும் தெரிந்தால் போறாது… எத்தனை காலம் இந்த உடலில் இருக்கப் போகின்றேன்…!

ஆகவே அந்தப் பேருண்மைகளை நீங்கள் எல்லோரும் உணர்ந்து… நீங்களும் தெளிந்து… “இந்த உலகில் வரும் இருளை மாய்க்கக்கூடிய சக்தியாக வரவேண்டும்…!”

அதுவே என்னுடைய (ஞானகுரு) தவம்.

ஒளியின் சரீரத்தை நமக்குள் “விடாப்பிடியாக உருவாக்கச் செய்யும் சக்தி”

 

முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது இந்த மனித உடலை உருவாக்கிய சக்திகள் தான். இந்த உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியாகச் சேர்த்து
1.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்பது விண்ணுலகம் சென்ற அந்த மெய்ஞானிகள் நிலையை
2அவர்கள் கண்டுணர்ந்த அந்தச் சக்தியைத் தான் நாம் இன்று தியானத்திலே எடுப்பது.

தாவர இனச் சத்தில் விளைந்ததை நாம் புசிக்கின்றோம். அதனின் சத்தை ஆவியாக மாற்றிப் பாலாக எடுத்து இந்த உணர்வின் சத்தை வடிகட்டி ஒவ்வொரு நிலைகளிலும் பார்க்கின்றோம்.

பாலை வைத்து இறக்கி தாவர இனச் சத்தின் நிலைகள் அது ஒரு நிறமாக இருந்தாலும் அதை நீக்கிவிட்டு அதற்குள் வெள்ளையான ரசத்தை எடுத்து அதை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை இயக்குகின்றது.

இதைப் போன்று தான் தாவர இனத்திலே விளைந்த சத்துகள் மனித உடலானாலும் இந்த உடலுக்குள் நின்று மெய்ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி அந்த உணர்வின் தன்மையை
1.ரசத்தை எப்படி இறக்குகின்றார்களோ இதைப் போன்று மனித உடலில் இருந்து மெய் ஞானிகளின் அருள் வித்தின் நிலைகளைக் காட்டி
2.உடலில் இந்தத் தாவர இனச் சத்தின் தசைகளை நீக்கி அந்த தசைக்குள் விளைந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக அன்று உருவாகியது சப்தரிஷி.

ஆறாவது அறிவு சரஹணபவா குகா நாம் உணவாக உட்கொள்ளும் நிலைகளில் மறைந்திருந்த விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நல்ல சத்தினையும் நல்ல குணத்தினையும் நமக்குள் எண்ணமாகக் கொண்டு நல்லதை உருவாக்கும் ஆற்றல் பெற்று
1.அதனின் நிலைகள் நல்லதைச் செய்யும் நிலைகள் யாம் எழுப்பும் ஒலியின் நிலை சப்தம்
2.உங்களுக்குள் சொல்லும் உணர்வுகள் அந்த மகிழ்ச்சியூட்டும் நிலைகளில் அதை உருவாக்கச் செய்து
3.அந்த மகிழ்ச்சியைத் தோன்றச் செய்வது தான்… ஆக அது சப்தரிஷி…!

ஒளியின் தன்மை பெற வேண்டும் என்று அந்த ஒலியின் நாதத்தால் ஏழாவது அறிவைக் கொண்டு இயக்குவது தான் சப்தம் நாதமும்… ஏழாவது நிலையும் இரண்டற ஒருக்கிணைந்து சப்தரிஷிகள் என்பது.

மனித உடலில் மெய் ஒளியாகச் சிருஷ்டித்தவர்கள் தான் சப்தரிஷி என்பது. சப்தரிஷி மண்டலம் என்பது ஏழு அல்ல. எண்ணிலடங்காத நிலைகள் கொண்டு மனிதனிலிருந்து உருப்பெற்றது தான்.

மனித வாழ்க்கையில் எண்ணிலடங்காத குணங்கள் இருந்தாலும் ஏழாவது அறிவின் தன்மை கொண்டு தான் நாம் தெளிவாக உணர முடிகின்றது… அதைச் செயல்படுத்த முடிகின்றது. அதற்குத்தான் அப்படிப் பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.

உணர்வினை ஒளியாக மாற்றிய தன்மையைத் தான் ரிஷியின் மகன் நாரதன் என்று சொல்வது. நாரதனோ அவன் ஒரு முனிவன். அவன் கலகப்பிரியன்.

மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை வென்று உணர்வின் சத்தை ஒளியாக மாற்றித் துருவம் சென்றடைந்து அதன் பின் அதிலிருந்து விளைந்து சப்தரிஷி மண்டலங்களாக உருபெற்றது.
1.ஒளியின் தன்மையாகப் பேரண்டத்தின் உண்மைகளை அறிந்து
2.தீயதை நீக்கி மெய் ஒளியைத் தனக்குள் எடுத்து ஒளியின் சரீரமாகப் பெற்று
3.விண்ணிலே வரக்கூடிய விஷத்தின் தன்மையை அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் நுகர்ந்து அதை ஒடுக்கி ஒளியாக மாற்றினார்கள்.

வைரம் விஷத்தைத் தனக்குள் ஒடுக்கி ஒளியின் தன்மையாக என்றும் நிலையாகப் பிரகாசிக்கின்றது. இதைப்போல இந்த மனித உயிராத்மா ஒளியின் சரீரம் பெற்று விஷத்தை உள்ளடக்கிய பின் அந்த விஷமே ஒளியாக மாறுகின்றது.

அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகள் ஊடுருவி வரப்படும் பொழுது
1.அதை நம் எண்ணத்தால் நுகர்ந்து உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.இந்தப் புவியிலிருந்த ஆசைகளைக் கலகமாகக் கலக்கிவிட்டு அந்த மெய் ஞானிகள் பெற்றது போல நாமும் ஆற்ரலைப் பெற முடியும்.

அதாவது… நாம் பாலைக் கடையும் போது வெண்ணை திரண்டு வருகிறது. அதை உருக்கப்படும் பொழுது அதனுடைய சக்தி நெய்யாக வடிவது போல
1.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாம் நுகரப்படும் போது மனித வாழ்க்கையில் வந்த விஷமான பிடிப்புகள் அகன்று
2.அந்த விஷத்தின் தன்மையே சத்தான நிலைகள் வடித்து மெய் ஞானிகள் ஒளியாக ஆனது போல நாமும் பெற முடியும்.

ஆனால் நாரதன் கலகப் பிரியன் கலகமோ நன்மையில் முடியும் அவன் ஒரு முனிவன்.
1.தான் பெற்ற ஒளியின் சரீரத்தை “விடாப்பிடியாக” அவன் நமக்குள்ளும் சிருஷ்டித்து விடுவான்… அது தான் முனி என்பது
2.அந்த உணர்வான சக்தியை நமக்குள் சேர்த்து அந்த வலுவான நிலைகளை உருவாக்கச் செய்வது தான் முனி என்பது.

ஆகவே மெய் ஞானிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் நம்மை அறியாயது வரும் தீமைகளைச் சுட்டுப் பொசுக்கிவிட்டு அவன் ஒளிகளிலேயே நாமும் விண் செல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் உனக்குத் தங்கம் செய்யத் தெரியுமாடா…? என்று என்னைக் (ஞானகுரு) கேட்டார்..?

எனக்கென்ன சாமி தெரியும்…! என்று சொன்னேன்.

ஈயக்கட்டியை வாங்கிக் கொண்டு வா… ஒரு இரும்புக் கரண்டியைக் கொண்டு வா… என்றார். வாங்கிக் கொண்டு வந்தேன்.

காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனார். அங்கே “சில மரங்களுக்கு முன்னாடி இருக்கும் குப்பைகளை எல்லாம் காண்பித்து…” இதை எல்லாம் எடுத்துக் கொண்டு வா..! என்றார்.

அதை எல்லாம் அள்ளிப் போட்டு நெருப்பை வைத்துக் கொளுத்துடா என்றார். குப்பை எரிந்த பிற்பாடு பார்த்தோம் என்றால் அதிலே இருக்கும் சத்துகள் எல்லாம் ஈயத்தில் இறங்கி அடுத்தாற்போல் பார்த்தால் “தங்கமாக” இருக்கிறது.

குருநாதர் இந்தப் பக்கம்… அந்தப் பக்கம்… என்று பல இடத்திலிருந்து எனக்குத் தெரியாமல் தான் குப்பையை அள்ளச் சொன்னார். நானும் அதை எல்லாம் குறித்து (அடையாளம்) வைத்துக் கொண்டேன்.

எல்லாம் செய்த பிற்பாடு தங்கக் கட்டியாகி விட்டது. குருநாதரிடம் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாத்தியார் ஆசாரியார் எல்லாம் என்னிடம் பழக்கமானவர்கள் இருந்தார்கள்.

குருநாதர் செய்த தங்கக் கட்டியை விற்கச் சென்றேன். அப்பொழுது அந்தத் தங்கக் கட்டியின் தரம் எப்படி இருக்கிறது… பாருங்கள்..! என்றேன்.

நீ பைத்தியக்காரரிடம் (ஈஸ்வரபட்டர்) ஏன் சுற்றுகிறாய்…? என்ற காரணம் இப்பொழுது தான் தெரிகிறது என்றார்கள் அவர்கள். நீ சரியான “காரியப் பைத்தியம் தான்…” என்றார்கள்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தைச் செய்து கொண்டு வா.. நான் வாங்கிக் கொள்கிறேன்…! என்றார் அந்த ஆசாரி.

முதலில் குருநாதர் தங்கம் செய்த மாதிரியே அவருக்குத் தெரியாமல் நானும் செய்து பார்த்தேன். தங்கம் வந்துவிட்டது…! அதைச் செய்த பிற்பாடு ஆசாரியிடம் கொடுத்த பிற்பாடு அவர் என்ன செய்தார்…?

அட அடா… எனக்குக் கொஞ்சம் வழி கொடுத்தால் நான் எத்தனையோ செய்வேன்.. அடுத்து வாத்தியார் என்ன செய்தார்…? அட.. நீ செய்யாமல் போனால் பரவாயில்லையப்பா…! என்று அந்த வாத்தியார் என்னைச் சுற்றி சுற்றி வந்தார். நான் போகும் பக்கம் எல்லாம் வந்தார்.

கொஞ்சம் போல.. ஒரு கோடி மட்டும் காட்டிவிடு…! என்றார். நீ பாவம் செய்ய வேண்டாம் நான் அதைச் செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டிய கட்டடம் எல்லாம் கட்டித் தருகிறேன்.

அடேயப்பா..! அவர் என்னைச் சுற்றியே வந்தார். இப்படித் தங்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ரொம்பப் பேர் என்னைச் சுற்றி வந்தார்கள் சிறிது காட்டிக் கொடுங்கள் என்று…!

தங்கமே எனக்குச் செய்யத் தெரியாது என்றேன்.

இல்லை… நீங்கள் தங்கத்தை விற்று வந்திருக்கின்றீர்கள்… அது எப்படி…? மிகவும் நயமான தங்கம் என்று எல்லோரும் சொல்கிறார்களே…! என்று கேட்டு நான் எங்கே போனாலும் துரத்திக் கொண்டே வருகின்றார்கள்.

காரணம்… குருநாதர் ஒவ்வொரு தாவரத்திலும் என்ன சத்து அடங்கி இருக்கின்றது…? என்று காட்டினார்.
1.ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வும் எப்படி மாறியது…?
2.அந்தத் தாவர இனச் சத்துக்களைச் சூரியன் எப்படி எடுத்து வைத்திருக்கிறது…?
3.அதை எடுத்து அலைகளாக மாற்றும் பொழுது நட்சத்திரங்கள் இரண்டு மோதும் பொழுது இந்த உணர்வுகள் எப்படி அதிலே இணைகிறது…?
4.அது இணந்த பின் அதனுடைய மாற்றங்கள் எப்படி மாறுகிறது…? என்கிற வகையிலே குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதை எல்லாம் உங்களுக்குச் சொல்லால் சொல்லி நிரூபிக்க வேண்டும் என்றால் உங்கள் மனதில் வைத்திருக்க முடியாது.

ஆனால் செய்து காண்பித்தோம் என்றால் சாமி சொல்லி விட்டார் அல்லவா… நாமும் செய்து பார்ப்போம் என்று
1.இந்த ஆன்மீக நிலையை எடுப்பதற்குப் பதில்
2.இந்த வாழ்க்கைக்குத் தேவை என்று “பணத்தின் மீது” ஆசை வைத்து விடுவீர்கள்.

அந்த மாதிரிப் போனவர்கள் நிறைய உண்டு… இன்றும் இருக்கின்றார்கள்.

“சாயிபாபா” லிங்கத்தை எப்படிக் கக்கி எடுத்துக் கொடுக்கின்றார்…! என்று ஒரு பையனுக்கு எடுத்துக் காண்பித்தேன். அவன் செய்தான்… அதற்குப் பின்னாடி அவன் பெரிய கடவுளாக மாறிவிட்டான்.

சிலருக்கு இந்த மாதிரி விவரங்கள் எல்லாம் சொன்னவுடனே தனித் தனிக் கடவுளாக மாறி
1.ஈஸ்வரபட்டர் தனித்து (SPECIAL) அவர்களுக்குக் கொடுத்தார் என்று
2.இந்தக் குருநாதரை மறந்து விட்டார்கள்.

உலகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்று சிலருக்குக் காண்பிக்கப்படும் பொழுது அதிலேயும் “எல்லாம் தெரிந்து விட்டது…!” என்று சில பேர்
1.இன்னும் கொஞ்சம் தானே…
2.அப்புறம் பிடித்தால் போய்விட்டது என்று
3.எம்மை (ஞானகுருவை) மறந்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

இப்பொழுதும் அப்படி குருவை மறப்பவர்கள் உண்டு. ஏனென்றால் தனித்து இந்த உடலின் ஆசை தான் வருகிறது.

மேற்கொண்டு அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற நிலையோ இயற்கை எப்படி இருக்கிறது….? அதிலே நீங்கள் எப்படி வளர வேண்டும்…? என்ற உண்மையைச் சொன்னாலும் கூட இந்த உடல் இச்சையே வருகிறது.

அந்தப் பேரின்பப் பெருவாழ்வு என்ற அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்ற ஆசை வருவதில்லை.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாக அந்த உண்மைகளை உணர வேண்டும் என்பதற்கே அனுபவமாகக் கண்டதை வெளிப்படுத்துகின்றேன்.

எல்லோரையும் காக்க வேண்டும் என்ற நிலை மாறி… “அழிக்க வேண்டும்” என்ற உணர்வே வளர்ந்து விட்டது

 

இந்த மனித வாழ்க்கையில் இந்த ஆசை அந்த ஆசை என்று இருந்தாலும் அதனின் வளர்ச்சியில் உலகெங்கிலும் எத்தனையோ வகைகளில் எத்தனையோ நிலைகளில் போர்க்களங்கள் ஆகிக் கொண்டுள்ளது.

அதனால் ஆங்காங்கு வாழும் மக்களின் நிலை என்ன ஆவது…?

ஒவ்வொருவரும் தன்னைக் காக்க எத்தனையோ விஷமான குண்டுகளைப் பாதுகாப்பாக வைத்து
1.தன் நாட்டைக் காக்கப் போகின்றேன்… அதை வைத்து எதிரியை வீழ்த்தப் போகின்றேன் என்ற இந்த உணர்வை ஓங்கி வளர்த்து
2.அதேபோல மற்ற நாட்டவரும் எதிரிகளிடம் இருந்து காக்க அவனை அழிக்க வேண்டும் என்று அதை நுகர்ந்து
3.தன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை அழித்து விடுகின்றான்.

இவன் உடலில் இருக்கக்கூடிய நல்ல எண்ணத்தை இவன் அழித்தும்… பதிலுக்கு எதிரியை அழிக்க வேண்டும் என்ற உணர்வுகளை நுகர்ந்து தனக்குள் இருக்கும் நல்ல குணங்களை அவன் அழித்திடும் நிலையாகவும் தான் செயல்படுகின்றனர்.

1.ஆக… யாரைக் காக்க வேண்டும் என்று இப்படி எண்ணினார்களோ அவர்கள் யாரையுமே காக்க முடியாது
2.அனைவருமே நல்ல குணங்களை இழந்து மண்ணுடன் மண்ணாக மடியும் நிலைதான் வருகின்றது.
3.மடிந்தாலும் விஷ பூச்சிகளாகப் பிறக்கும் நிலை தான் உருவாகிக் கொண்டுள்ளது.

எப்படி… எதனால்…?

விஷமான ஆயுதங்களைத் தயார் செய்து வைத்துள்ளார்கள் அதை வெடிக்கும் போது சுட்டுப் பொசுக்கிப் பாதிப்பாகும் பொழுது அதனால் ஏற்படும் வேதனையான உணர்வுகள்
1.எந்தெந்த விஷத்தின் தன்மையைப் பாய்ச்சுகின்றனரோ அதற்கொப்ப இறந்து விடுவோமே என்ற வேகத்தில் அதை எல்லாம் சுவாசிக்கப்படும் பொழுது
2.குண்டுகளாக் நம்மை அழித்து விடுவான் சுக்குநூறாக ஆக்கி விடுவான் என்ற இந்த எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டு
3.அதனின் பய உணர்வுகள் கொண்டு அதனால் தாக்கப்படும் பொழுது இந்த உடலை அழித்து
4.அந்த உணர்வு தாங்கிய தன்மையாக மனிதன் இறந்த பின் விஷப் பூச்சிகளாகத் தான் இனி பிறக்க வேண்டி வரும்.

“யுத்தங்கள் நடக்கும் பகுதிகள் அனைத்திலும்” மனிதர்களாக இருப்பவர்கள் அங்கே இறந்து விட்டால் விஷப் பூச்சிகளாகப் பிறக்கும் நிலையைத் தான் அடைகின்றார்கள். யாராக இருந்தாலும் சரி…!

ஏனென்றால் பாலிற்குள் விஷத்தை ஊட்டினோம் என்றால் அதைக் குடித்தால் நம்மை நினைவை இழந்து மடியச் செய்கின்றது.

இதைப் போன்று தான் மனிதனுடைய ஆசை அலைகள் அனைத்துமே அழிந்து இனி எந்த நிலை ஆகப்போகின்றோமோ என்ற நிலையில் எதிரிகளின் பால் நினைவைச் செலுத்தி அவர்கள் வீசும் குண்டுகளினால் தன்னை அழித்து விடுவான் என்ற நிலையில் நல்ல உணர்வுக்குள் இத்தகைய விஷமான உணர்வு இணையப்படும் பொழுது அதன் அறிவுகள் உடலுக்குள் இது ஊடுருவித் தாக்கப்பட்டுச் சுக்குநூறாக்கிவிடுகிறது.

இந்தக் குறுகிய காலத்திலே விளைந்த இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தின் ஆற்றல் கொண்ட ஈர்ப்புக்குள் சிக்கப்பட்டு அதன் வழி உடலாகப் பெறப்படும் பொழுது
1.அடுத்து நல்ல உடல் பெறுவது எக்காலம்…? என்று சொல்ல முடியாது
2.இந்தப் பூமி விஷமான நிலையிலிருந்து நல்ல நிலை பெறுவது எக்காலம்…? என்று சொல்ல முடியாது
3.அப்படி நல்ல நிலை பெற்று அதிலே மீண்டும் மனிதர்களாக வரக்கூடிய எக்காலம்…? என்றும் சொல்ல முடியாது.

இப்பொழுது இருக்கக்கூடிய காலத்திலே எத்தனை சுகபோகங்களை அழித்தோமோ எத்தனை வேதனைகளை அனுபவித்தோமோ எந்த வேதனையை வளர்த்துக் கொண்டோமோ வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மைகள் இந்த உயிரிலே ஒன்றிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்தாலும் “வேதனைப்பட்ட நிலையிலிருந்து நாம் மீளவே முடியாது…”
1.உயிருடன் இந்த வேதனை துடித்துக் கொண்டு தான் இருக்கும்.
2.அந்த வேதனையின் உணர்வின் இயக்கங்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கும்.

இப்பொழுது உடலில் இருக்கும் பொழுது உணர முடிகின்றது உடலின் துணை கொண்டு. சந்தர்ப்பத்தால் அதை மாற்றி அமைக்கவும் முடிகின்றது மனிதனாக இருக்கும் பொழுது தான் மாற்றவும் முடியும்.

ஆனால் மனித உடலில் நீக்க முடியாத நிலை ஏற்படும் பொழுது அந்த வேதனையான விஷம் உயிராத்மாவிலே சேர்க்கப்படும் பொழுது எப்பொழுதுமே விஷத்தன்மை கலந்ததாக இயக்கி “நம்மை வேதனையால் துடிக்கும்படி செய்து விடும்…”

அப்படிப்பட்ட உலக சூழ்நிலையில் தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து
1.நல்ல நினைவிருக்கும் பொழுதே மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற்று விஷத்தன்மைகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.
2.அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவால் பேரழிவுகள் வருகின்றது. அந்த அறிவிலிருந்து நீங்கள் மீள வேண்டும். மற்றவர்களையும் மீட்க வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இந்த உடல் இருக்கும் பொழுதே நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும். ஏனென்றால்
1.எத்தனை நிலை இருந்தாலும் கோடிச் செல்வங்கள் நாம் வைத்திருப்பினும்
2.நமக்கு அந்தச் செல்வம் உறுதுணையாக இருப்பதில்லை.

ஏன்..?

“நம் உடல் நலம் சரியில்லை…!” என்றால் செல்வத்தைக் கொண்டு வந்து நமக்கு முன்னாடி வைத்தால் அதன் மீது வெறுப்பு தான் வரும்.

அந்தச் செல்வத்திற்காகவும் சொத்தின் பாகங்களைப் பிரிக்கும் பொழுதும் ஒருவருக்கொருவர் சகோதரர்களுக்குள் சண்டையாகிப் பகைமையாகி அதனால் எடுத்துக் கொண்ட வெறுப்பு உணர்வுகள் நோயின் தன்மையாக அடைந்த பின் அந்தப் பணத்தைப் பார்த்தாலே வெறுப்பு தான் வரும்.
1.இதனால் தான் எனக்குப் பகைமையானது…
2.இதனால் தான் எனக்கு நோயே வந்தது…
3.சனியன்…! அதன் முகத்திலேயே நான் முழிக்கக் கூடாது…! என்று சொல்வார்கள்.

அதே சமயத்தில் புறப் பொருளைப் பற்றித் தெரியாதபடி அருளைப் பற்றி நாம் தெரிந்து… அதை வளர்த்துக் கொண்டால்… பொருள் மேல் ஆசையே வராது. (அனுபவத்தில் பார்க்கலாம்)

ஆகவே… அருள் ஞானத்தின் மீது ஆசை வரப்படும் பொழுது அருள் சக்தியை வைத்துக் கிடைக்கக்கூடிய பொருளைச் சிதறாதபடி எடுக்கப்படும் பொழுது மன நிம்மதி கிடைக்கும்…!

போதுமான நிலைகளில் நமக்கு வேண்டியது நிச்சயம் வந்து கொண்டே இருக்கும். இதையும் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

உதாரணமாக நான் (ஞானகுரு) யாரிடத்திலும் தபோவனத்திற்காகப் பணத்தைத் தேடிப் போவதில்லை. ஆனால் தபோவனத்தின் வளர்ச்சி அதுபாட்டுக்கு வளர்கிறது.

எப்படி…?

1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்..! என்று
2.குருநாதர் இட்ட கட்டளைப்படி அருள் சேவையைச் செய்து கொண்டேயிருக்கின்றேன்.
3.பணம் எப்படி வருகிறது… எப்படி நடக்கிறது…? என்பது இங்கே என்னுடன் கூட இருப்பவர்களுக்கே தெரியாது.

ஆனால் வெளியில் இருந்து பார்க்கிறவர்கள்.. இந்தச் சாமி என்ன கள்ள நோட்டு அடிக்கிறாரா..? என்று கேட்கிறார்கள்…! அதற்கு என்ன செய்வது..?

காசு வருகிறது… எந்த வழியில் காசு வருகிறது…! என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம். எனக்கே கூடச் சந்தேகம் தான்.

“காசு இல்லை…!” என்று நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அடுத்த நாள் பார்த்தால் எந்த வகையிலாவது பணம் வந்து விழுகிறது.

காரணம்…
1.இந்த இயற்கையின் உணர்வுகள் எதை எண்ணுகின்றோமோ…
2.அதை மக்கள் மத்தியிலே ஒன்று சேர்த்து.. அந்த உணர்வின் தன்மை
3.“நாம் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும்…!” என்ற இந்த உணர்வு ஒன்று சேர்க்கப்படும் பொழுது
4.அது தான் தன்னிச்சையாக எடுத்து அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.
5.நான் (ஞானகுரு) அல்ல…!

எல்லோரது மனமும் அந்த உறுதியாக்கப்படும் பொழுது அந்த ஒளியின் உணர்வை நமக்குள் உறுதியாக்கும் சக்தியாகச் செயல்படுகின்றது.

இங்கே எம்முடன் பத்து இருபது வருடமாகப் பழகியவர்கள் இதை எல்லாம் அறிந்திருக்கலாம். எப்படி வளர்ச்சி அடைகிறது… எப்படி எப்படிச் செயல்படுகிறது..? என்ற நிலையைச் சிலர் உணர்ந்தும் இருக்கலாம்.

யாம் ஆசீர்வாதம் கொடுக்கும் பொழுது காசு ஏன் உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் இதற்குத்தான். மற்றவர்கள் யாரும் இப்படிக் காசு கொடுக்க மாட்டார்கள்…!

அருளைப் பெருக்குங்கள்.. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள்… அழியாச் செல்வம் உங்களைத் தேடித் தேடி வரும்…!

நம் எண்ணத்தின் கூர்மை எதிலே இருக்கிறது…! எதிலே இருக்க வேண்டும்…?

 

நம் பிள்ளை பேர் வாங்க வேண்டும் என்றால் நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்துக் கோவிலுக்குச் சென்று ஆடும்படி செய்கின்றோம். “ஆண்டவன் சன்னிதானத்தில் ஆடியது…” என்று எல்லோரும் சேர்ந்து போற்றப்படும் பொழுது நம் பிள்ளைக்கு நல்ல ஆசி கிடைக்கும் என்று செயல்படுத்துகின்றோம்.

ஆனால் இப்படி எண்ணிக் கொண்டிருந்தாலும் கூட யாராவது ஒருவர் “நண்டு மாதிரி இருந்து… எப்படி நன்றாக ஆடுகின்றது பார்…?” என்று பொறாமைக் கண்களோடு பார்த்தால் என்ன நடக்கின்றது…?

1.நல்லதாகச் சொன்னது அனைத்துமே விடுத்து விட்டு இந்த உணர்வுகள் பாய்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடும்.
2.பிள்ளைக்குக் கண் திருஷ்டி பட்டுவிட்டது என்ற நிலை ஆகிவிடுகிறது.

நாட்டியத்தைப் பார்த்த அத்தனை பேரும் நன்றாகச் சொன்னாலும் கூட ஒருவருடைய பார்வை… “இந்த வயதிலேயே இந்த மாதிரி ஆடுகின்றது பார்…” என்று வெறுப்பான எண்ணங்களை ஊட்டப்படும் பொழுது
1.ஆயிரம் பேர் சேர்ந்து நல்ல எண்ணங்களை ஊட்டினாலும்
2.இந்த வெறுப்பான உணர்வு பார்வையாகப் படப்பட்டு அந்த நல்லதை வீணாக்கி விடுகின்றது.

உதாரணமாக இசைக் கருவிகளை வாசிக்கப்படும் பொழுது… அதிலே ஒரு வாத்தியத்தின் இசை கொஞ்சம் குறையாகி விட்டால் போதும்.

மற்ற எல்லாம் சீராக இருந்தாலும் கூட ஒன்று குறையாகி விட்டால்…
1.“அச்சச்சோ போய்விட்டதே…” என்று நல்லதாக வாசித்த அத்தனையுமே நாம் விட்டு விடுவோம்.
2.சுருதிகள் மாறி நன்றாக இருந்த இசை இப்பொழுது கெட்டுப் போய்விட்டது என்று வந்து விடுகின்றது.

அதே போன்றுதான் குழந்தை நன்றாக நாட்டியம் ஆடினாலும் அது வளர்ந்த நிலைகள் கொண்டு நாம் என்ன செய்கின்றோம்…?

குறையாகப் பேசியவருடைய உணர்வை வளர்த்துக் கண் திருஷ்டி பட்டது… கண் திருஷ்டி பட்டுவிட்டது… எல்லாமே கண் திருஷ்டி ஆகிவிட்டது என்று தனக்குள் விளைந்து அதையே எண்ணி எடுத்து குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது இந்த உணர்வினை ஊட்டிக் கொண்டிருப்போம்.

ஒருவர் தான் கண்களால் வெறுப்பாகப் பார்த்தார். ஆனால் அதைத் தாய் தந்தையும் சேர்த்து எடுத்துக் கொள்கின்றோம். குழந்தை நன்றாக நாட்டியம் ஆடியது… ஆனால் கண் திருஷ்டி பட்டு விட்டது என்ற எண்ணத்தை எடுத்து வருவோர் அனைவரிடமும் இதைத்தான் சொல்வோம்.

ஆக அந்த உணர்வை எடுத்துத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த விஷம் எதிலே கலந்தாலும் அது ஊடுருவி இயங்கி விடுகின்றது.
1.இதைத் தடைபடுத்த நாம் ஏதாவது செய்கின்றோமா…? இல்லை…!
2.சிறிதளவு குறையைக் கண்டால் போதும்… அந்தக் குறையத்தான் வளர்க்கின்றோம்.
3.எவ்வளவு மகிழ்ச்சியான நிலையில் இருந்திருந்தாலும் அந்த மகிழ்ச்சியைக் காக்கும் நிலை வருவதில்லை.

அதைப் போன்ற உணர்வின் தன்மை தான் “கூர்மை அவதாரம்…” அதாவது நாம் எண்ணியது அனைத்துமே உயிர் அவதார புருஷனாக “நம்மை அதுவாக ஆக்கி விடுகின்றது…”

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து நம்முடைய கூர்மை எதுவாக இருக்க வேண்டும்…? என்று சற்று சிந்திக்க வேண்டும்.

1.எப்பொழுதுமே அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திலே அதைக் கூர்மையாக்கி
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் செயல்பட்டோம் என்றால் அந்த உணர்வு நமக்குள் வளர்ந்து அதுவாக நம்மை ஆக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் நாம் பிறருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய தவறான உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்பதை நாம் அறிந்திட வேண்டும். (இது முக்கியம்)

அங்கிருந்து வந்தவுடனே… நீ மோசமான ஆள்..! இப்படிச் செய்தாய்… அப்படிச் செய்தாய்..! என்று ஒருவர் நம்மிடம் சொல்லும் பொழுது என்ன ஆகிறது…?

என்ன..? நம்மைப் பற்றி இப்படி எல்லாம் சொல்கிறான்…!
1.நான் ஒன்றுமே சொல்லவில்லை… ஆனாலும் இந்த மாதிரிச் சொல்கிறானே..! என்ற
2.இந்தக் கோப உணர்வுகள் வந்தவுடனே அவன் உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது.
3.இருடா… இரண்டிலே ஒன்று பார்க்கிறேன் பார்…! என்ற இந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து விடுகிறது.

ஆக… அவன் செய்யும் அல்லது சொல்லும் தவறான உணர்வை நாம் ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது
1.நமக்குள் (உடலுக்குள்) உள்ளே அது நின்று அணுவாக மாறி
2.அவன் நினைவை நமக்குள் கூட்டி
3.அந்த அணுக்கள் பெருக்கப்பட்டு
4.நம்மை எப்படிக் குற்றவாளி என்று முதலில் அவன் ஆக்கினானோ
5.அவனுடைய உணர்வுகள் நமக்குள் நின்று அதே குற்றவாளியாக ஆகிவிடுகின்றோம்.

அதாவது…
1.அவன் சொன்னபடி அவன் உணர்வை நாம் ஏங்கி எடுக்கும் பொழுது
2.நமக்குள் (தவறாக) அதுவாக மாறிவிடுகின்றது.

இதெல்லாம் எப்படி…? என்றால் இதைப் போன்ற நிலைகளை எல்லாம் இன்று கண்கூடாகப் பார்க்கலாம். இன்றைய அரசியலில் எப்படியெல்லாம் வேஷங்கள் போடுகிறார்கள் என்று…!
1..நேற்று வரையிலும் எதிரியாக வைத்துப் பேசுவார்கள்
2.ஆனால் இன்றைக்கு அதையே வித்தியாசமாக மாற்றுவார்கள்.

ஆகவே இதைப் போல உணர்வுகள் கலந்து கலந்து வாழ்க்கையிலே எத்தனையோ விதமான உணர்வுகள் அங்கே படுகின்றது.

எப்படி இருந்தாலும் அவர்கள் கலந்து கொண்ட உணர்வுகள் இந்த உடலின் இச்சைக்குத்தான்…! ஆக
1.இந்த நாட்டையும் காக்க முடியாது
2.வீட்டையும் காக்க முடியாது…
3.தன்னையும் காக்க முடியாது.

அரசியல் பேதம் கொண்டு பேருக்கும் புகழுக்கும் வேண்டும் என்றால் இவர்கள் ஆட்டம் ஆடலாம். இந்த உடலுக்குப் பின் என்ன ஆகிறது…! என்று இத்தனை நிலையும் அவருக்குப் புரியாத நிலைகளில் கடைசியில் மடிந்து விடுகின்றனர். பிறரிடத்தில் இடும் சாப அலைகளும் பாவ அலைகளும் அவருக்குள் ஊடுருவி இயக்கிவிடும்.

இன்று மனிதனாக இருப்பினும் பிறரை எளிதில் சிரமப்படச் செய்வோர் வேதனைப்படச் செய்வோர் அனைவரையுமே இந்த உடலுக்குப் பின் அசுர உணர்வு கொண்ட மிருகங்களாக இந்த உயிர் உருவாக்கிவிடும்…! என்ற நிலைகளை யாரும் மறந்திட வேண்டாம்.

ஒவ்வொரு நொடியிலேயும் பிறருக்குத் தீங்கு செய்யும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம் உடலுக்குள் நல்லவைகளைக் கொன்று குவிக்கும் தீய அணுக்களாக உருவாகி
3.மீண்டும் நம்மை நரகலோகத்தைச் சந்திக்கும் நிலைகளுக்கு அனுப்பி விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றிடத் தான் அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை “அது எப்படி வளர்ந்தது…? எப்படி இயக்குகிறது…?” என்ற நிலைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டே வருகின்றோம் (ஞானகுரு).

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞானத்தின் வழித் தொடர் கொண்டு நீங்கள் செயல்பட்டு
3.இருளை வென்று ஒளியாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.. தீமைகள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்றும் தெளிவாக உணர முடியும்.

உணர்ந்த நிலையில் தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி என்ற உணர்வுகளை எடுத்து ஒளியான அணுக்களாக உங்களுக்குள் உருவாக்க வேண்டும்.

யாம் கொடுக்கும் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்

 

ஆரம்பத்தில் எத்தனையோ காட்சிகளை எல்லோருக்கும் நான் கொடுத்துக் கொண்டு வந்தேன்… சில உண்மைகளை அறியும் படியும் செய்தேன் – புவியின் ஈர்ப்புக்குள்.
1.அதிலே மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டது… உடலின் இச்சைக்குள் நிகழ்ந்தது…
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.

ஆகவே… அதை எல்லாம் நிறுத்தி விட்டு இப்பொழுது உங்களுக்குள் அந்த மெய் உணர்வைப் பெறும் ஆற்றலாக உபதேசிக்கின்றேன்,

விஞ்ஞான அறிவால் வரும் காற்று மண்டலம் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது மனிதன் அதை நுகர்ந்து சிந்தனையற்றவனாகச் செயல்படும் உருப்பெறும் அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள நம் சிந்தனையை விண்ணில் செலுத்தி மகரிஷிகள் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும்.

1.அதனைப் பெற்று நம் உணர்வு கொண்டு தன் அருகில் வரும் மனிதனின் தீமைகளிலிருந்து விடுபடவும்
2.நுகர்ந்த உணர்வுகள் மற்றவரைக் காக்கவும் தன்னைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப் பெருக்கவும்
3.உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைய இது உதவும்.

இந்த உடல் நமக்குச் சதமல்ல. ஆனால்… வாழ்க்கையில் இந்த உடலின் இச்சைகுகந்த உணர்வுகளைப் பெறப்படும் பொழுது எந்தத் தெய்வம் செய்யும் என்ற உணர்வுகளைப் பதிவு செய்தனரோ அதே தெய்வச் சிலையாகப் பார்த்துணர்ந்த உணர்வுகள் மடிந்த பின் அதே உணர்வலைகளை அதே ஏக்கம் கொண்டவர்கள் “இன்ன தெய்வத்தைக் கண்டேன்…” என்று சொல்வார்கள்.

இதுகளெல்லாம் மனிதனுடைய இச்சைக்குள் வளர்த்துக் கொண்ட நிலைகள்.

ஆகவே இந்தத் தெய்வக் காட்சிகள் என்பது… மனிதனில் உருவாக்கி வேஷமிடப்பட்டு அதனைப் படமாக்கி மீண்டும் அலைகளாக அனுப்பி (விஞ்ஞான அறிவிலே) அதை நுகரப்படும் பொழுது அதையே எப்படிக் காட்சியாகக் காணுகின்றமோ இதைப் போலத் தான் கண் புலனறிவுகளில் சிலையை உற்று நோக்கி ஆடைகளை அலங்கரித்த அதன் உணர்வை நமக்குள் பதிவாக்கிய பின்… உடலை விட்டுச் சென்ற பின் அந்த அலையின் ரூபமாகச் செல்லும்.
1.அதை மீண்டும் குவிக்கப்படும் பொழுது
2.எதனை வலுவாகச் சேர்த்தோமோ அந்த ரூபமாக முருகனாகவும் காளியாகவும் காட்டும்.

கொடூர உணர்வின் தன்மை கொண்டு ஒரு பூதகணையைக் காட்டி (துஷ்ட தெய்வங்கள்) கோரப் பல்களைக் காட்டி இதுதான் காக்கும் என்றும் அதற்குப் பல உயிரினங்களைப் பலியிடப்பட்டு அதனை நேசித்துத் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று ஒரு மனிதன் நுகர்ந்து மடிந்திருந்தால் அதே உணர்வலைகளை உற்று நோக்கி அச்சத்தால் நுகர்ந்தால் கோரப்பல் கொண்ட அந்தச் சிலையின் உணர்வுகள் ரூபங்கள் பட்டு அதைக் கோர உருவமாகக் காட்டும்.

கோரமான உருவம் பற்களுடன் வருகிறது என்று சிலர் சொல்வதையும் கேட்கலாம். என் வாய் பேசாது தடுக்கின்றது என்றும் சொல்வார்கள். அச்சம் கொண்ட நிலையாக வேறு எந்தச் செயலையும் செய்ய முடியாதபடி செயலாற்றதாகவும் அது மாற்றும்.

மனிதனில் உருவாக்கப்பட்ட உணர்வுகள்… இதை எல்லாம் காட்சிகளாகக் காணக்கூடாது. மெய் வழி சென்று மெய் உணர்வைத் தனக்குள் பெற்ற அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பெறுவதற்குக் காலத்தால் இந்தக் காட்சியின் தன்மை சிறுகச் சிறுக குறைத்து விட்டேன்.

ஆரம்பக் காலங்களில் சில நேரங்களில் பக்தியின் நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது சில உணர்வின் இயக்கங்கள் “பொருட்கள் எப்படி வருகின்றது…?” என்று அதை எல்லாம் காட்டினேன்.

நான் குடியிருந்த தெருவில் முதலில் யாரும் நம்ப மாட்டார்கள். ருக்மணி என்ற அம்மாள் வீட்டிலே பூஜை புனஸ்காரம் செய்து கொண்டிருக்கும் போது இந்தப் பக்கம் இருக்கக்கூடிய விநாயகர் அந்தப் பக்கமாக நகர்ந்து செல்லும். அந்த விநாயகர் மீது பல விபூதிகள் வரும். பல பொருள்கள் மாறி மாறி வரும்.

அதையெல்லாம் கண்டபின் “சாமி மிகவும் சக்தி வாய்ந்தவர்” என்று அதற்குப் பின்னால் தான் நம்புகின்றார்கள். இந்த அடிப்படையில் தான் என் தெருவிலிருப்பவர்கள் நம்பி இங்கே பலர் வந்தார்கள்.

எங்கள் வீட்டில் குடியிருந்தவர்கள் எங்களுக்கும் அந்த விபூதி வேண்டும் என்றார்கள். உங்களுக்கு “ஒரு சக்கரம்” தருகிறேன் என்று கொடுத்தேன்… பின் அதிலிருந்து விபூதி வந்தது,

இதைக் கண்டு ஒரு ஐந்து ஆறு பேர் சாமி எங்களுக்குச் சக்கரம் வேண்டும் என்று கேட்டார்கள். சக்கரத்திலிருந்து விபூதி வந்தவுடனே இந்தப் பக்தி என்ன செய்கிறது…?

சாமி நமக்குப் பெரிய சக்தி கொடுக்கின்றார்… அருள் கொடுக்கின்றார்… வரம் கொடுக்கின்றார்…! என்று இப்படித்தான் எம்மை உணர்ந்தார்கள்.
1.ஆனால் இது எப்படி இயக்குகிறது…? என்று அதை அறியும் பற்றினைச் செலுத்தவில்லை.
2.அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் யாம் காட்டப்படும் பொழுது
3.இதிலே தான் சக்தி இருக்கின்றது கடவுளே உருமாற்றி உதவி செய்கிறார் என்று இந்த உணர்வுகளைத் தான் அவர்களால் வளர்க்க முடிகின்றது.

ருக்மணி பல பேரைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து… பூஜை அறையில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டி… பாருங்கள்…! சாமியை நாம் என்னமோ மோசமாக நினைக்கின்றோம்… ஆனால் விபூதி எல்லாம் வந்திருக்கிறது…! என்று தெருவில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டுக் காண்பித்தது.

அதற்குப் பின் தான் தெருவில் உள்ளவர்கள்… “ஓஹோ…! சாமிக்கு நிறைய சக்தி இருக்கிறது என்று… நான் அங்கே வரும்பொழுது எல்லாம் விபூதி வாங்குவதற்கு வருவார்கள். இப்படித்தான் அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

இது எல்லாம் தன் உணர்வின் சக்திகள் வளர்ந்திருப்பதை நுகரும் ஆற்றலை அது எப்படி உருவாகின்றது மந்திர ஒலிகளால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் எப்படி அந்த அணுக்களாக மாறுகின்றது…? என்று
1.இந்த நினைவின் ஆற்றலை அவர்கள் கண்களின் பதிவையே அங்கே ஊட்டி…
2.அவர்கள் எண்ணங்கள் மூலமாகவே விபூதியாக எப்படி அங்கே வருகிறது…? என்று
3.அன்று நான் அப்படிச் சொல்லவில்லை (அதாவது உண்மையைச் சொல்லவில்லை).

“சாமிக்குச் சக்தி இருக்கிறது…” என்று எதை ஏங்கிப் பெறுகின்றனரோ இந்த உணர்வின் எண்ணங்கள் அங்கே பதிவாகும் பொழுது… அவர்களாலேயே அதனை அங்கே இயக்கும்படிச் செய்தது. குருநாதர் காட்டிய நிலைகள் அங்கே சில அற்புதங்களையும் செயல்படுத்திநேன்.

ஏனென்றால் நான் செய்தேன் என்று இவர்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் நினைவின் ஆற்றலை அவர்கள் கண்களுக்கு முன்னாலேயே அந்த உணர்வு குவிக்கப்படும் பொழுது…
1.சேர்த்து விபூதியை வரவழைப்பதும் அந்த சிலைகள் நகரும்படி செய்வதும்
2.அவருக்குள் அந்த உணர்வின் சக்தியைக் கொடுத்துத் தான் அதை அறியும்படி செய்தேன்.

அவருடைய எண்ணங்கள் வளர்ச்சி எதுவோ அதனின் உணர்வலைகள் பாயப்படும் பொழுது அதில் உள்ள காந்தப்புலன் நினைவாற்றலை அங்கே குவிக்கும்… அதன் வழி எல்லாமே நடக்கும்.

ஆனால் அதற்குப் பிற்பாடு அது எதுவும் வரவில்லை… நடக்கவில்லை. காலத்தால் பல உண்மையின் உணர்வுகளைச் சொல்லச் சொல்ல… உண்மையின் நிலைகள் அங்கே வளர வளர அவை எதுவும் வராது.

ஏனென்றால் சாமிக்குச் செய்யத் தெரியாது என்று அல்ல. எல்லாவற்றையும் கவர்ச்சி செய்வதற்கு வந்தார் என்று என்னைப் பெரிய ஆளாகக் காட்டி என்னைப் போற்ற வைக்கவும் முடியும்.
1.அதனால் எனக்கு என்ன பலன்…?
2.உங்களுக்கு என்ன பலன்…? – ஒன்றும் இல்லை.

ஏனென்றால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வைத் தனக்குள் எடுத்து இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுடன் ஒன்றி மனிதனின் எல்லையான சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும்.

1.ஞானிகள் சென்ற பாதையிலே நாம் செல்ல வேண்டும். அந்த உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.இருள் சூழ்ந்ததை நீக்கிடும் ஆற்றலை நமக்குள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
3.உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் மனிதனில் தீமைகளை வென்று ஒளியாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் செல்லும்படி செய்து
4.அங்கிருந்து வரும் உணர்வலைகளை நுகர்வதற்குப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

அதைத் தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று காட்டியது. மனிதனான அகஸ்தியன் ஒளியாக மாறித் துருவ நட்சத்திரமாக உருப்பெற்றுள்ளார்.

அதிலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து உருவான உணர்வின் தன்மையை யாரெல்லாம் நுகர்கின்றார்களோ அவர்களுக்குள் அது நாரதனாகச் சென்று
1.தீமைகள் அகற்றும் உணர்வாக ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் சென்று அந்த உணர்வினை அடக்கி
2.தீமைகளை அடக்கிடும் சக்தியாக இந்த உணர்வு எப்படி இயக்குகின்றது என்று தான் காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அது எல்லாம் இன்று “அந்த நிஜம் பொய் ஆகிவிட்டது… பொய் நிஜமாகிவிட்டது…”

இப்பொழுது பொய்யைக் காட்சியாகக் காணும் போது அதை நிஜமாகக் காணுகின்றீர்கள் அல்லவா…!
2.அதே சமயத்தில் உங்கள் உணர்வின் நினைவாற்றலை உங்களை நம்பாது பொய்யாக்கி விடுகின்றீர்கள்.

உணர்வின் ஆற்றலைப் பெறும் தகுதியை இழந்து… “சாமி சொல்கிறார் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே…!” என்று ஏக்கமாகும் பொழுது நம்மால் முடியவில்லை…! என்று “உங்கள் சக்தியைப் பொய்யாக்கி விடுகின்றீர்கள்…”

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட்டு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மனிதன் தீமைகளை வென்று ஒளியின் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கூர்மையாக நுகர்ந்தறிந்து அதனை வளர்த்து… இருள் சூழ்ந்த உணர்வை நீக்கி அருள் பெறும் உணர்வின் தன்மையை என்றும் பேரின்ப பெருவாழ்வு என்ற நிலையில் வாழும் அந்த நிலையை “இந்த மனித சரீரத்திலேயே நீங்கள் பெற வேண்டும்…”

இத்தகைய கூர்மை அவதாரத்தை நீங்கள் எடுத்தால் ஒளியின் சரீரமாக மாறலாம்.

ஒவ்வொரு உயிரினமும் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட மற்ற உயிரினங்களை கூர்மையாக உற்றுப் பார்த்து அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில் அதனின் வலுவை எடுத்து வளர்ச்சி பெற்றுத் தான் ரூபங்கள் மாறியது.

அகஸ்தியனும் அவன் மனைவியும் விண்ணின் ஆற்றலை துருவத்தின் வழிக் கூர்மையாக ஏங்கிப் பெற்றனர். தீமை அகற்றும் வலிமை பெற்றனர்… இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி ஒளியின் சரீரம் ஆனது.

இந்தப் பிரபஞ்சத்தில் வருவது அனைத்தையுமே ஒளியின் சரீரமாகத் தனக்குள் கருவாக்கி உருப்பெற்று அகண்ட பேரண்டத்தில் என்றும் 16 என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதைக் கூர்மையாக எண்ணி அதன் வலிமையை பெற்றோம் என்றால் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி “என்றும் பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையில் நாமும் வாழ முடியும்.

ஆகவே… மனிதனின் கடைசி எல்லை என்பது… உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் எல்லையை நாம் அடைவதுதான்.

ஆனால்… உடலில் ஆசை கொண்டு அந்த உணர்வு உயிருடன் ஒன்றி விட்டால் அந்த உணர்வுக்கொப்ப இன்னொரு கூட்டுக்குள் அழைத்துச் சென்று அந்த ரூபமாக நம்மை மாற்றி அதன் உணர்வாக நம்மை இயக்கிவிடும். இது அனைத்தும் உயிரின் செயல்களே.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதனையே அது உருவாக்குகின்றது… அதன் செயலாக நம்மை இயக்குகின்றது… அதன் ரூபமாக நம்மை மாற்றுகின்றது.

“தனக்குள் பயமோ வெறுக்கும் நிலையோ தீமைகள் செய்து அது வலுப்பெற்ற பின்”
1.அத்தகைய வலுவை நாம் நுகர வேண்டியதில்லை.
2.அருள் ஞானிகள் உணர்வை நாம் பெறுவோம்.
3.நமது பார்வையில் பிறருடைய இருளை நீக்கிடும் சக்தியாக மாற்றுவோம் என்ற இந்த வலிமையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பிறருடைய தீமை நம்மைத் தாக்காது. இந்த உணர்வு அவர்களுக்குள்ளும் ஊடுருவி அவர்களும் உண்மையை உணரும்படி செய்யும்… தீமையிலிருந்து விடுபடுவார்கள். நமக்குள் வரும் தீமையைத் தடுக்கும் ஆற்றலும் வருகின்றது.

அதனைப் பெற வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை அனைவரும் எளிதாகப் பெறும்படி வழிகாட்டுகின்றோம்.

அகஸ்தியர் காட்டிய விநாயகர் தத்துவத்தை முன்னணியில் வைத்துக் காலை துருவ தியானத்தில்… கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைக் கணவன் மனைவி நீங்கள் இருவரும் பெற்று இரு உடல்களிலும் வளர்த்து இரு உணர்வையும் ஒன்றாக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும் சக்திகளாக நீங்கள் பெற்றுப் பழகுங்கள்.

பிறவி இல்லா நிலையை இந்த உடலிலேயே பெறுவோம் என்ற உணர்வுடனே இந்தப் பயணத்தைத் தொடருங்கள். இந்த அலையின் தொடர் கொண்டு உங்களுக்குள் தீமைகளை அகற்றும் சக்தியாக வளரும். அதை நீங்கள் காணலாம்.

“பயத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்” அச்சுறுத்தும் உணர்வு கொண்ட நிலை இருந்தால் அந்தப் பயமான உணர்வு வந்து அது அச்சுறுத்தும் உணர்வாகக் குவிந்து உயிரிலே மோதப்படும் பொழுது இரவிலே அறியாதபடி புலனறிவிலே சொப்பணங்களைக் காணுவதும் காணாத உருவங்களைக் காண்பதும் அந்த அச்சத்தினால் உடல் நடுக்கம் ஆவதும் உடல்கள் வேர்ப்பதும் அஞ்சி எழுந்து ஓடும் நிலைகளும் கூட வரும்.

1.அத்தகைய அஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் இருப்பினும்
2.அந்த அச்சத்தை நீக்கிடும்… அச்சமான இருளைப் போக்கிடும்…
3.அந்த மகரிஷியின் அருளை கணவன் மனைவியாக நீங்கள் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
3.திருமணமாகாதவர்கள் அன்னை தந்தை உணர்வோடு இணைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அருள் ஞானம் பெற வேண்டும் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள். அதை எல்லாம் மாற்றி அமைக்கும் மன பலம் பெறுவீர்கள் மன உறுதி பெறுவீர்கள் தெளிந்த நிலை பெறுவீர்கள்

“அத்தகைய சக்தி உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தான் குருநாதர் எனக்குக் காட்டிய அனைத்தையும் உங்களுக்கு அப்படியே எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆகவே அருள் உணர்வுகளை வளர்த்து அருள் வாழ்க்கை வாழுங்கள் “அருளானந்தம் பெறுவீர்கள்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு அன்பருக்குத் தியானத்தில் கிடைத்த காட்சி:
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நான் புருவ மத்தியில் எண்ணித் தியானிக்கும் பொழுது பல பாம்புகள் எனக்குள் செல்வது போல் தெரிகின்றது.

பாம்புகள் உள்ளே சென்று அனைத்தும் தன் வாயிலிருந்து நாகரத்தினங்களை உமிழ்கின்றன. ஒளியாகத் தெரிகிறது. இதற்கு ஞானகுருவின் விளக்கம் தேவை.

ஞானகுருவின் விளக்கம்:
அவருக்குக் கிடைத்த காட்சிப் பிரகாரம் தன் உடலுக்குள் பலவிதமான பாம்புகள் செல்கிறது என்றால்… உடலுக்குள் பல விதமான விஷத் தன்மைகள் ஊடுருவுகின்றது. அப்படி ஊடுருவும் பொழுது என்ன நடக்கிறது..?

நாகப் பாம்பின் உடலுக்குள் பல விஷத் தன்மைகள் உறைந்து உறைந்து நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ இதைப் போல விஷத் தன்மைகள் நமக்குள் சென்றாலும் உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலால் அதை எல்லாம் எப்படி ஒளியாக மாற்றுகின்றது என்ற நிலைதான் அவருக்குக் காட்சியாகக் கிடைத்தது.
1.ஏனென்றால் நாம் எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும்
2.விஷம் இல்லாத உணர்வின் இயக்கமே கிடையாது.

ஆகவே தான் நமக்குள் பல விஷத் தன்மைகள் (எதிர் நிலையான உணர்வுகள்) சென்றாலும் நமக்குள் அந்தப் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து இது அனைத்தும் ஒருக்கிணைந்து ஒளியின் சக்தியாக மாற்றிடல் வேண்டும்.

ஒவ்வொரு பாம்பினங்களுக்கும் ஒவ்வொரு விதமான கற்கள் உருவாகும். நாகரத்தினம் என்பது மிகவும் ஒளி கொண்டது. கட்டுவீரியன் உடலில் விளைந்தது என்றால் அது வேறு விதமாக இருக்கும்.

நாகம் பல உயிரினங்களின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி அந்த உடல்களின் விஷத்தைத் தனக்குள் சேமித்து அதன் விஷங்கள் கூடிக் கூடி நாகரத்தினமாக எப்படி மாறுகின்றதோ அதே போல் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் ஒளியின் சக்தியாக மாற்றும் காட்சிகளைத் தான் பாம்பினமாக அவர் காண முடிந்தது.
1.ஏனென்றால் உருவ அமைப்பில் பாம்பு என்றாலும்
2.அதன் உணர்வின் சக்தி விஷம்…! என்பதை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காட்சிகள் கிடைத்தது.

சாஸ்திரங்களில் ஆமையை வைத்துக் கூர்மை அவதாரத்தைக் காட்டுகின்றனர். பன்றியை வைத்து வராக அவதாரத்தைக் காட்டுகின்றனர்.

ஆகவே நமது வாழ்க்கையில் எந்தெந்த உணர்வுகளை நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோமோ அதனின் உணர்வுகள் வளர்ச்சி அடைந்து அடைந்து அதற்குத் தக்க பரிணாம வளர்ச்சி அடைந்தோம்.

கூர்மையாகப் பார்த்துத் தீமை என்ற உணர்வுகளை நீக்கி நீக்கித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வைப் பெற்றது பன்றி என்றும்… ஆக தீமையை நீக்கக்கூடிய வல்லமை பன்றிக்கு உண்டு என்றும்… சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து அதற்குள் மறைந்த நறுமணங்களை நுகர்கின்றது…! என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்று தான்…
1.நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள்
2.அந்தத் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி ஒடுக்கி “உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மை…”

இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எத்தகைய விஷத் தன்மையான நிலையையும் நாம் மாற்றியமைத்து உயிருடன் ஒன்றி ஒளியான நிலைகள் பெற வேண்டும்…! என்பது தான் சாஸ்திரங்களின் மூலக் கருத்து.

அந்தக் காட்சியின் தன்மையைத்தான் அவர் பார்க்க நேர்ந்தது.

ஏனென்றால் இதனின் விளக்க உரைகளை இப்பொழுது யாம் (ஞானகுரு) கொடுத்தபின் தியானத்தில் உங்களுக்குக் காட்சிகள் கிடைத்தால்
1.மீண்டும் எண்ணத்தைச் செலுத்தி
2.அதனின் உண்மையின் உணர்வு எது…? என்று நீங்கள் அறியும் உணர்வைச் செலுத்தினால்
3.ஆக்கபூர்வமான நிலைகளில் அந்த ஞானத்தை அறிந்து
4.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் எது..? என்பதை அறிந்திட முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு நிலைகள் வரும் பொழுது அதிலிருக்கும் உண்மைகளை உங்களால் உணர முடியும். அதன் மூலம் ஒரு தெளிவான உணர்வை உங்களுக்குள் எப்படி உருவாக்குகிறது..? என்ற நிலையையும் பார்க்கலாம்.

ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகள் உதாரணமாக ஒரு வெறுப்படைந்ததாகவோ அல்லது ஒரு புலமை பெற்ற மனிதனின் உணர்வாகவோ இருந்தால்
1.அவரின் உணர்வுகள் மடிந்த பின் அந்த உணர்வுகளை நாம் பெற்றால்
2.அந்த மனித உடலில் உருவான கற்பனை உணர்வுகள் இங்கே வரும்.

ஆனால் அந்த அருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளோ இருளை அகற்றி ஒளியின் தன்மையாக மாற்றிடும் உணர்வுகள் கொண்டது. அது நமக்குள் வரும் பொழுது இருளை அகற்றிடும் சக்தியாக நமக்குள் விளைகின்றது.

1.சூரியன் எப்படி ஒளிக் கதிராக மாற்றுகின்றதோ…
2.நாகம் எப்படி அந்த நாகரத்தினமாக மாற்றுகின்றதோ…
3.அந்தப் பாம்பு இறந்தாலும் அதிலே விளைந்த ஒளிகள் எப்படிக் கூடுகின்றதோ…
4.இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் என்றும் பிரகாச ஒளியாக நின்று
5.தீமைகள் நமக்குள் புகாது… இருள் சூழாது… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக அது நமக்குள் உருப்பெறும் என்பதை நீங்கள் உணர முடியும்.

எல்லோரும் தெளிவாக உணரக்கூடிய அருளை நீங்கள் காட்சியாக வெளிப்படுத்தினீர்கள்… இது எல்லோருக்கும் நன்மை பயக்கும்…! என்று கருதுகின்றேன். அனைவரும் அந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்… எமது அருளாசிகள்..!

மனிதனின் கடைசிக் கடமை

 

யாம் உபதேசித்த உணர்வின் வழிப்படி நினைவை விண்ணிலே செலுத்தி கடவுளின் அவதாரம் என்று கூறிய அகஸ்தியன்…
1.அவன் எவ்வாறு மெய் ஞானம் பெற்றான்…? என்ற நிலையும்
2.அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட அவனில் விளைந்த உணர்வுகளை வியாசகர் தனக்குள் பெற்றதையும் நாம் பார்ப்போம்.

அவனில் (வியாசகர்) விளைந்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அவன் கண்டுணர்ந்த உணர்வை அறிய நாம் தியானிப்போம்.

வியாசகர் சந்தர்ப்பத்தால் தன்னை மீன் காத்ததை எண்ணி ஏங்குகிறான். காரணம்… எதைக் கொன்று அவன் புசித்தானோ “அதுவே தன்னைக் காத்தது” என்ற நிலையில் நினைவினை விண்ணிலே செலுத்துகின்றான். விண்ணின் ஆற்றலைப் பெறுகின்றான்… அகஸ்தியன் உணர்வைப் பெறுகின்றான்.

அந்த உணர்வின் அறிவை தனக்குள் எவ்வாறு கண்டான்…? என்ற அந்த வியாசகர் பெற்ற மெய் ஞானத்தை நாமும் பெறுவோம்.

மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து பாற்கடலைக் கடைந்தான் என்ற பேருண்மையை அவனுள் கண்டறிந்ததை… அவன் தெளிவாக்கிய உணர்வினை உருவமாக்கி… அருவத்தின் தன்மை தனக்குள் பெறும் சக்தியாகப் பின் வந்த ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

அதை அறிவதற்கு
1.வியாசகர் கண்டறிந்த அந்த உணர்வின் சத்தை நாம் ஏங்கிப் பெறுவோம்.
2.அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைப் பின் வந்தோருக்கு வழி காட்டிய உணர்வையும் உயிரின் இயக்கத்தையும் நாம் காண
3.நம் வலிமையைக் கூட்டி… கூர்மையாக அவன் காட்டிய உணர்வுடன் எண்ணி ஏங்கித் தியானிப்போம்.
4.அதன் உணர்வின் அறிவாக நாமும் அறிந்திட நம் நினைவைச் செலுத்துவோம்.

பல அணுக்களின் சேர்க்கையாக மேரு என்ற மலை போல் அது உருப்பெற்று விஷத்தன்மையால் தாக்குண்டு இயக்கும் அந்த வரிசைத் தொடர் அணுக்களின் தாக்குதலால் பூமி எவ்வாறு சுழல்கிறது…? துருவப்பகுதி வழியாக எவ்வாறு நுகர்கின்றது…? பூமி தனக்குள் ஒவ்வொன்றையும் தாவர இனங்களை எப்படி உருமாற்றுகிறது…? என்ற உணர்வின் நிலையை
1.வியாசகர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை நாமும் காண்போம்.
2.வியாசகர் தனக்குள் உணர்ந்த உணர்வின் தன்மை விளைய வைத்த அந்த உணர்வினை நாம் நுகர்வோம்.
3.அதன் அறிவாக அவன் கண்டறிந்த உணர்வினை நாமும் அறிவோம்.

சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் சுழல்வதும் துருவப் பகுதி வழியாக நுகர்வதும் பூமிக்குள் பல உணர்வுகள் தனக்குள் மற்றதுடன் இணைத்து தாவர இனங்களாக உருவாக்குவதையும் அந்த மகா ஞானி கண்டுணர்ந்து… அவனின்று வெளிப்பட்ட உணர்வுகளை நாமும் காண்போம்.

பூமி துருவப் பகுதி வழியாக நுகர்வதை… அந்தத் துருவப் பகுதியில் தன் பார்வையில் சிக்கியதைத் பூமி தனக்குள் இணைக்கப்படும் பொழுது “பார்வதிக்கும் சிவனுக்கும் திருமணம்…” என்று உணர்த்திக் காட்டினான் அன்று வியாசகன்.

பிரபஞ்சத்தில் மிதக்கும் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து உணர்வின் இயக்கமாக… ஆலகால விஷத்தைச் சிவன் தன் கழுத்திலே நிறுத்திக் கொண்டான் என்ற நிலையில் துருவப் பகுதியில் விஷத்தின் தன்மை அடக்கி அதைச் சிறுகச் சிறுகப் படரச் செய்கின்றான்.

ஏனோ சிவன் இந்த உலகைக் காக்க விஷத்தைத் தனக்குள் அடக்கிக் கொண்டான் என்று காவியத் தொகுப்பில் இதனை முன் மொழிந்திருப்பார்கள்.

விண்ணிலிருந்து வரும் சக்திகளை நுகரப்படும் பொழுது…
1.நமது பூமி நீள வடிவமாக அது வளர்ந்து கொண்டே செல்வதைக் காணலாம்.
2.துருவப் பகுதியிலே உறை பனியாக உறைந்து அடுக்கு வரிசையாக வரும்.

அதை உங்களுக்குள் இப்போது பதிவு செய்யும் நிலையில்
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து உங்கள் உணர்வுகள் அனைத்தும்
2.நமது பூமியை மேலிருந்தே பார்க்கும் நிலையாக இந்த உணர்வுகள் தோன்றும்.
3.நமது உணர்வுகள் மிதக்கும் தன்மை அடையும்… அங்கிருந்து பூமியைப் பார்க்கும் சந்தர்ப்பம் உருப் பெறுகின்றது.

உறைந்த பனிகள் கடலாக மாறி… வெப்பத்தினால் ஆவியாக மாறி மேகங்களாகக் கூடுவதும் இதிலே தாவர இனங்கள் உருப்பெறுவதும் தாவர இனங்கள் உருமாறுவதும் அதில் உயிரினங்கள் உணவாக உட்கொண்டு அது அது சேர்த்த நிலைகள் கொண்டு தன்னை வளர்த்திடும் நிலையாக… இதையெல்லாம் கண்டறிந்த அகஸ்தியன் உணர்வுகளை நாம் நுகர்வோமென்றால் அவன் கண்ட பேருண்மையை நமக்குள்ளும் நாம் காணலாம்.

வியாசக பகவான் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.தியானத்தில் அமர்ந்துள்ள அனைத்து உயிராத்மாக்களும் வியாசக பகவானின் உணர்வுகள் பெற்று
2.வியாசகரின் அருள் ஞானமாகத் தனக்குள் வளர்த்துத் தீமைகளை அகற்றிப் பேருண்மையின் உணர்வை உணர்ந்து
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

அந்த அருள் ஞானி கண்டறிந்த உணர்வுகளைப் பின் வந்த அரசர்கள் யாக வேள்விகளை நடத்திச் சிலைகளை உருவாக்கி உணர்வின் தன்மை பதிவாக்கி பதிவின் அலைகள் மனிதனுக்குள் உருப்பெறச் செய்தார்கள்.

அந்த மனிதன் உடலை விட்டு அகன்ற பின் அதே உணர்வின் அலைகள் இங்கே படர்ந்திருப்பதும்… அதே தெய்வத்தினைப் பக்தி கொண்டு செல்வோர்கள் எண்ணி ஏங்கும் பொழுது… அந்தச் சிலையின் உணர்வைத் தனக்குள் வளர்க்கப்பட்டு… சிலைக்கு அலங்கரிக்கப்பட்ட ஆடைகளும் அலங்காரங்களும் படங்களாக உருவாக்கப்பட்டு அதனின் உணர்வலைகளாக வெளிப்படும் பொழுது… “அதனை மீண்டும் குவித்து” டிவிக்களில் நாம் உருவங்களாகக் காணுவது போன்று காணலாம்.

அதாவது… மனிதனுக்குள் பக்தி என்ற உணர்வை வளர்த்து எந்தச் சிலையை உருவாக்கினோமோ அதனை மனிதனின் உடலில் எந்தப் பக்தி கொண்டு எடுத்தார்களோ அது எல்லாமே “அலைகளாக இன்றும் உள்ளது…”

உதாரணமாக “முருக பக்தி கொண்டு” உடலை விட்டு வந்த அந்த உணர்வலைகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை
1.இப்போது நீங்கள் வானை நோக்கி எண்ணி…
2.ஆறாவது அறிவின் உணர்வாக வளர்த்துக் கொண்ட அந்த முருகனைக் காண வேண்டும் என்று உற்றுப் பாருங்கள்.
3.அந்த அலைகள் குவிந்து முருகனாகக் காட்சி தெரியும்… மேல் நோக்கிப் பாருங்கள்.

“காட்சி…” என்றால் மனிதனுக்குள் எந்தெந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டு இந்தப் பூமிக்குள் அலைகளாகப் பரப்பப்பட்டதோ “அதைக் குவிக்கப்படும் பொழுது”
1.அந்தந்த உருவங்களை மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது
2.டிவிக்களில் காணுவது போன்று குவிந்து உருவமாகக் காட்டும்.

வியாசகரும் அகஸ்தியரும் வானுலக ஆற்றலைத் தனக்குள் வளர்த்து இந்த உண்மையின் தன்மை உணர்த்தி அவர் உடலில் பெருக்கப்பட்டு அருள் ஞான ஒளியாகக் கண்டிருக்கும் அந்த உணர்வினை நாம் எடுக்கப்படும் பொழுது… வியாசகர் கண்ட உணர்வுகள் “பூமி விஷத்தின் தன்மையால் சுழல்வதும்… துருவப் பகுதி வழி கவர்வதும்… உணர்வுகள் தனக்குள் மாற்றம் அடைவதும் தாவர இனங்களாக உருப்பெற்றதும்… அதை மற்ற உயிரினங்கள் உருவாக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு அது எப்படி உருவாகிறது…? என்ற நிலையையும்…” காண முடிந்திருக்கும்.

இந்த்த் தியானம் இருக்கும் பொழுது மேரு என்ற மலையை மத்தாக வைத்து என்று சொல்லும் பொழுது இந்தப் பூமியினுடைய இயக்கத்தைச் சிலர் காட்சியாகப் பார்த்திருக்கலாம்.

இது எல்லாம் வியாசகர் அன்று கண்டறிந்த உணர்வுகள்…!

அகஸ்தியன் கண்டறிந்த அலைகளை அவன் கவர்ந்து பூமியின் செயலாக்கங்களைக் கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த உணர்வை… அக்கால மொழி கொண்டு வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.

ஆகவே நாம் காண வேண்டியது எது…?

அகஸ்தியன் துருவ மகரிஷியாகி ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்… ஒளி அலைகளாகப் பரவிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.

இவ்வாறு எண்ணி ஏங்கப்படும் பொழுது
1.துருவ மகரிஷியாகும்போது கணவனும் மனைவியும் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பாய்ச்சி இருவரும் பரிமாறிக் கொண்டதை
2.அவர் உடலிலிருந்து அந்த அலைகள் வந்து படர்ந்து இருப்பதை நாம் காண்போம்.

வானை நோக்கி உற்றுப் பாருங்கள்…!

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளைப் பரப்பும் பொழுது
1.அந்தக் காலத்தில் வாழ்ந்த அவர்கள் உடலின் அமைப்பு
2.அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.

துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக அவர்களுக்குள் இணைந்து ஒளியின் சரீரம் பெற்று எங்கே நிலை கொண்டார்களோ அந்த எல்லைக்குச் சென்று துருவ நட்சத்திரமாக உருப்பெற்றதையும் நீங்கள் காணலாம்.

துருவ மகரிஷியும் அவருடன் இணைந்த அருந்ததி அக்காலத்தில் வாழ்ந்த நிலைகளும்
1.அவர்கள் இரு உணர்வும் ஒன்றாகி ஒளியின் சரீரமாகத் துருவப் பகுதி வழியாகச் சென்றதைக் காணலாம்.
2.துருவ நட்சத்திரத்தினுடைய ஒளியையும் காண முடியும்.

இந்த உணர்வினைப் பதிவாக்கிக் கொண்ட பின்…
1.துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இரவிலே படுத்தால்
2.அந்த உணர்வுகள் கலந்து உயிருடன் ஒன்றிப் பெருகி… அந்த உணர்வின் ஆற்றலைப் புலனறிவிலே காண முடியும்.

ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு கவர்ந்து நம்மை எப்படிக் காணச் செய்கின்றார்களோ… இதைப் போலத்தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த உடலில் இருந்து வெளி வந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாற்றி வைத்துள்ளது… நாமும் அதைக் காண முடியும்.

1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வை எமக்குள் பதிவாக்கி உணர்வின் நினைவை எடுக்கச் சொல்லி
2.அருள் ஞான வித்தாகக் கேட்போருக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து வினைக்கு நாயகனாக ஆக்கி
3.நினைவு கொள்ளும் பொழுது படர்ந்திருக்கும் அந்த உணர்வலைகளைக் கவர்ந்து கண் புலனறிவில் நிச்சயம் காண முடியும்.

இருந்தாலும்… சில உண்மைகள் படக் காட்சிகளாகத் தெரிய ஆரம்பித்தால் திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது உருவத்தைக் கண்டால் அஞ்சி ஓடுவோர் பலர் உண்டு.

பயத்தின் நிலை அடைந்து விடுவார்கள். ஆகையினால் அத்தகைய உணர்வின் தன்மை காட்சியாகக் கிடைக்கக் கூடாது என்பதற்கும்
1.ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின் உணர்வினை உங்களுக்குள் வளர்ப்பதற்கும் தான் இதைச் செய்வது.
2.சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று யாரும் எண்ண வேண்டாம்.
3.நாம் காண வேண்டியது… பெற வேண்டியது… உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிடும் திறனைப் பெறுவது தான்

மனிதனின் கடைசிக் கடமை அது தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம்.
2.நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணினால் தவம்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொன்னால் அது தவம்.

என்னை ஒருவன் வேதனைப்படுத்துகின்றான்… வேதனைப்படுத்துகின்றான் என்று எண்ணினால் இதுவும் தவம் தான். அந்த வேதனைப்படுத்துவோரை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அந்தத் தவத்தின் வழி கொண்டு நமக்குள் வேதனைபடுத்தும் தன்மை வரும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் பேரருள் எல்லோரும் பெற வேண்டும் என்று அந்தத் தவத்தை எடுத்துப் பழக வேண்டும்.

தவம் என்றால் என்ன…? தியானம் என்றால் என்ன..? என்றே தெரியாதபடி சிலர் தவமிருக்கிறேன் என்று சொன்னால் எதைத் தவமிருக்கப் போகிறார்கள்…? என்று தெரியவில்லை.

தியானமிருக்கிறேன் என்ற நிலைகளில் எதைத் தியானம் செய்கிறார்கள்…? என்று தெரியவில்லை. யோகா பயிற்சிகளிலும் பல வித்தியாசமான நிலைகளில் கொண்டு செல்கிறார்கள்.

எதனால்… எதை.. எப்பொழுது.. எந்த நிலைகளில் எடுக்க வேண்டும்…? என்ற உணர்வுகளைக் காட்டியிருந்தாலும் ஞானிகள் காட்டிய மரபுகளை மாற்றி இவர்களுக்குகந்த நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜனகச் சக்கரவர்த்தி சீதாவுக்குத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அதை எல்லோருக்கும் பறைசாற்றுகின்றார்கள்.

சீதாவைத் திருமணம் செய்ய எல்லோரும் வருகின்றார்கள். அவர்வர்கள் குறி வைத்து ஒன்றைத் தாக்கும் நிலைகளுக்குச் செயல்படுத்துகின்றனர். அவரவர்களின் வல்லமையைக் காட்டுகின்றனர்.

அதே சமயத்தில் இராமன் தீமை செய்யும் அந்தத் தனுசையே (வில்லை) ஒடித்து விடுகின்றான். தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்த பின் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கின்றான்… “கல்யாணராமா…!”

1.அதாவது சந்தோஷமான உணர்வுகளை நமக்குள் அரவணைத்துக் கொண்டால்
2.தீமை செய்யும் எண்ணங்களை நீக்கிவிட்டால் நமக்குள் அனைத்தும் ஒன்று சேர்த்து வாழும்.

என்னை அப்படிச் செய்தானே… இப்படிச் செய்தானே… என்று வேதனைப்பட்டால் உடலிலே நோய் ஆகிவிடுகின்றது.

அப்படி வராதபடி நம் எண்ணங்கள் அனைத்தும் எப்படி ஒன்று சேர்த்து வாழ வேண்டும்…? என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்…? என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்…? என்ற நிலையும் கோவிலில் இதை நமக்கு அழகாகச் சொல்கிறார்கள்.

உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.

உதாரணமாக… சூரியனின் பிள்ளை தான் சுக்ரீவன். ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்து வளர்க்கின்றது அதனதன் அறிவாக இயக்குகின்றது உதவிகள் செய்கின்றான் சுக்ரீவன்.

வாலி என்ன செய்கிறான்..? இந்த நோயாளியின் உணர்வை எடுத்துக் கொண்டால் வலிமைமிக்க நிலைகள் வருகிறது. நுகர்ந்தால் நம் நல்லதை வலுவிழக்கச் செய்கிறது. இதுவும் சூரியனின் புத்திரன் தான்.

ஆனால் அதை மாற்ற நாம் உயர்ந்த குணங்களைச் சொல்லப்படும் பொழுது நல்ல நிலைகளில் வாயுவாகச் சென்று இயக்கிக் காட்டுவது ஆஞ்சநேயன். அவனும் சூரியனின் பிள்ளை தான். அவன் மந்திரியாக இருக்கின்றான்.

அருள் உணர்வுகள் உடலுக்குள்ளே சென்றவுடன் இந்த உண்மையை உணர்த்தித் நன்மை தீமை என்ற நிலைகளைச் செயல்படுத்துகிறது என்ற நிலைகளை
1.இப்படி மூன்று பிரிவாகக் காட்டி (வாலி சுக்ரீவன் ஆஞ்சநேயன்)
2.இந்தச் சூரியன் எதைச் செய்கிறது…? என்றும்
3.நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்றும் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே அறியாது புகும் அந்தத் தீமையான எண்ணங்களை நீக்கிப் பழக வேண்டும் என்பதற்குத்தான் கல்யாணராமா…! நமக்குள் ஒன்று சேர்த்து வாழக்கூடிய நிலைகள் வளர வேண்டும். கோவிலில் இப்படி வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

அதன்படி நாம் தீமையை நீக்குகின்றோம் என்ற நிலையில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்…! என்று வாழக்கூடிய நிலை வருகிறது.

சூரியன் என்ன செய்கிறது…? தனக்குள் வரும் உணர்வை நஞ்சினை நீக்கிவிட்டு உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

மனிதன் என்ன செய்கின்றான்…? நஞ்சினை நீக்கி விட்டு உணர்வின் அறிவாகத் தெரிகின்றான். இந்த அறிவின் துணை கொண்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையே மாற்றியமைக்கும் சக்தி தான் மனிதனின் ஆறாவது அறிவு.

அப்படி மாற்றியமைக்கும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் புருவ மத்தியின் வழியாக எடுத்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதை எல்லோரும் பெற்று அவர்களும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணினால் இது தான் உண்மையான தியானமும் தவமும்..!

“தன் இனம்” பெருக வேண்டும் என்பதற்குத்தான்… ஞானிகள் தான் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள்

 

விஞ்ஞானிகள் இன்று மண்ணுக்குள் பதிந்திருப்பதை “காந்தப் புலனறிவு கொண்ட ஒரு டப்பாவில்” வைக்கின்றான். இது… பூமியில் இருக்கும் இந்த உணர்வுகள் எதனுடன் கலந்ததோ “அதன் இனத்தைக் காற்றிலிருப்பதை அது ஈர்க்கும்…”

அதைக் கண்டு கொள்வதற்காக மேலே விமானத்திலே பறந்து
1.அதிலிருந்து உணர்வலைகளை ஊடுருவிப் பாய்ச்சப்படும் போது ஈர்க்கும் சக்தியை அதிகமாகின்றது.
2.அதற்குள் இருக்கும் அளவுகோல் மானிகளை இதனுடன் இணையச் செய்து
3.பூமிக்குள் இன்ன இடத்தில் இத்தனை அடி ஆழத்தில் “இன்னது இருக்கிறது” என்பதை விஞ்ஞானி அறிகின்றான்.

ஆனால் அன்று ஆதியிலே… அகஸ்தியன் “தாய் கருவிலேயே” விஷத்தை அடக்கும் உணர்வுகள் கொண்டு விளைகின்றான். பிரபஞ்சத்தில் உருவாகும் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை பெற்றான்… துருவன் ஆனான்.

1.வானஇயலையும் புவிஇயலையும் உயிரியிலையும் கண்டறிந்த பின் உயிரியலின் ஆற்றலைப் பெருகும் நிலையும்
2.நம் பூமியில் பரவிக் கிடந்த பல கோடித் தாவர இனங்களின் வலிமை கொண்டு அந்த எண்ணங்கள் கொண்டு தன்னை அறியும் ஆற்றலும்
3.இது எந்த வகையில் வந்தது என்று “துருவத்தினை நுகரப்படும் பொழுதுதான்” விண்ணின் ஆற்றலைத் துருவன் நுகர்கின்றான்.
4.இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகிறது…? என்பதையும் காண்கின்றான்
5.இந்தப் பிரபஞ்சத்திற்கு மூல காரணமாக எது எது இயக்குகிறது…? என்று தனக்குள் அறிகின்றான்.

அதே சமயத்தில் இந்தப் பேருண்மைகளை நம் குருநாதர் எப்படி அறிந்தார்…?

1.துருவத்தைப் பின்பற்றுகின்றார்… துருவனின் உணர்வைக் கவர்கின்றார்.
2.கவர்ந்த உணர்வின் தன்மை அவருக்குள் அறியும் ஆற்றலாக வருகின்றது.

அதன் உணர்வை வளர்த்துக் கொண்ட நிலை தான் எமது பாலும் அந்த உணர்வின் கருக்களைப் பதியச் செய்து அந்தக் கருவின் வித்தினை நினைவு கொள்ளும் பொழுது அதன் உணவை நானும் நுகர முடிகின்றது… அறிய முடிகின்றது.

அதிலே விளைந்த உணர்வின் வித்தை இப்பொழுது சொல்லாகச் சொல்லப்படும் பொழுது
1.அதை நீங்கள் கேட்கும் போது ஊழ்வினை என்ற வித்தாக உங்களுக்குள் பதிவாகின்றது.
2.அந்தப் பதிவினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது உலகை அறிய முடிகின்றது… உங்களைக் காக்கும் உணர்வும் வருகின்றது.
3.இந்த இரண்டையும் பிணைத்துத்தான் இப்போது உபதேசமாகக் கொடுக்கின்றோம்.
4.குருநாதர் எமக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதன் வழியே தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.

ஏனென்றால்… மனிதனாகப் பிறந்த பின் கார்த்திகேயா பல கோடி உணர்வுகளிலிருந்து எதிரி வருகிறது என்று அந்த உணர்வால் அறிகின்றது… உணர்வின் வலுவை அறிகின்றது… அதனின் உணர்வைத் தனக்குள் கவருகின்றது… விளைந்த பின் அதிலிருந்து தப்பிக்க எண்ணுகின்றது… அதன் வலுவும் கூடுகின்றது.

இவை அனைத்தும் இணைந்து எதனை உற்றுப் பார்த்துக் கூர்மையானதோ அதனின் வலிமை இதற்குள் விளைகின்றது. இந்த நினைவு ஓங்கி வளர்கின்றது.

வலிமையாகி உடலை விட்டுச் சென்ற பின் எதைக் கூர்மையாக எண்ணியதோ அதன் உடலுக்குள் சென்று… “அதன் வலிமை கொண்டு அதனின் உருவமாக மாறுகின்றது” என்று இதையெல்லாம் காவியங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரத்தில் உயிரின் உணர்வுகள் எதைக் கூர்மையாகக் கண்களால் உற்று நோக்கி வலிமையாக்கிக் கொண்டதோ… அதன்படி அந்த வலிமை பெறுகிறது என்று வியாசகர் அதை உணர்த்துகின்றார்.

கண்ணின் உணர்வுகள் அனைத்துடனும் இணைக்கப்பட்ட நிலையில்
1.அதனின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதனை நினைவுபடுத்துவதற்குத் தான் வியாசகரைப் பகவான்… என்றார்கள்.
2.காரணம் அதைக் கண்டுபிடித்து உருவாக்கியவன் அவன்.

கண்ணைக் கண்ணன் என்றாலும் கண்கள் பெற்ற உணர்வினைத் தனக்குள் நுகர்ந்தறிந்து பரமாத்மா. இந்தப் பரமில் உள்ள அனைத்திலும் கலந்துள்ளது. ஒவ்வொரு உயிரினங்களும் கண்ணின் நினைவாற்றல் கொண்டு கவர்ந்து அந்த உணர்வின் நிலையாக விளையச் செய்தது… பரமான பூமியில் பரமாத்மாவாகக் கலந்துள்ளது.

கண்ணின் செயலாக்கங்கள் உருவாக்கப்பட்டு
1.மீண்டும் இந்தப் பூமியில் படர்ந்திருப்பது மனிதனுக்குள் பரமாத்மாவாக மாறுகின்றது.
2.பூமிக்குப் பரமாத்மாவாக மாறுகின்றது… நமக்குள் பரமாத்மாவாக இயக்குகின்றான்.

வியாசகரால் உணர்த்தப்பட்ட உண்மை இது…!

காரணம் ஞானிகள் கொடுத்த காரணப் பெயர்கள் அனைத்துமே தெளிவானதே. தான் கண்டுணர்ந்ததைத் “தன் இனங்கள் பெருக வேண்டும்” என்று இப்படிக் காட்டுகின்றார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனாகப் பிறப்பதற்கு முன் நாம் பாம்பாகவோ தேளாகவோ இருந்திருப்போம்…! நம்முடைய அம்மா அதை அவர்கள் பார்த்துத் தங்கள் பாதுகாப்பிற்காக அடித்துக் கொன்றிருப்பார்கள்.
1.நம் உயிர் அவர்கள் உடலுக்குள் சென்றிருக்கும்.
2.போனவுடன் இந்த உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி பெறுகிறது.

தேளாக இருந்தவர்கள் கருவான பிற்பாடு நம் தாய் என்ன செய்கிறது..? மனிதனாக உருவாக்குகிறது…! என்று குருநாதர் எமக்குத் தெளிவாக்குகின்றார்.

ஆகவே நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்..? நம் அம்மா அப்பாவின் உயிர் தான். கடவுளாக இருந்து நம்மை மனிதனாக உருவாக்கியது அவர்கள் தான்.

அப்பொழுது கடவுள் யார்…?

அம்மா அப்பாவை முதலில் தெய்வமாக வணங்கிப் பழக வேண்டும். யாராவது அப்படி நினைக்கின்றோமோ…? என்றால் இல்லை.

தாயைத் திட்டுபவர்கள் நிறையப் பேர் உண்டு. பெண் பிள்ளையாக இருந்தாலும் கூட ஏதாவது எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் தாயைக் கோபித்துத் திட்டுபவர்கள் உண்டு. ஆண்களிலும் தன் அம்மாவைத் திட்டுபவர்கள் நிறைய உண்டு.

இத்தகைய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும். பத்து மாதம் அந்தத் தாய் சிசுவைச் (நம்மை) சுமக்கின்றது. அந்த உண்மையை உணர வேண்டும்.

இப்பொழுது நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு நாளைக்குத் தலையில் கல்லை வைத்துப் பாருங்கள். சுமக்க முடிகின்றதா…?

ஆனால் நம் தாய் நம்மைப் பத்து மாதம் சுமக்கிறது. சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் இந்த உணர்வுகளை எடுக்கின்றது.

இத்தனை அவஸ்தைப் பட்டு நாம் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. பிறந்த நிலையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.

விவரம் தெரிவதற்கு முன்னாடி ஏதாவது நாம் செய்தோம் என்றால்
1.உதாரணமாக ஒரு நெருப்பையே தொடுகின்றோம் என்றால் அடடா.. டேய்.. நெருப்புடா…! என்று பதறி
2.நம்மை உடனே அந்தத் தெய்வமாக இருந்து காக்கின்றது.
3.குருவாக இருந்து நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பது நம் தாய் தான்…!

இன்று நாம் எத்தனை பேர் தாயை மதிக்கின்றோம்..? பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றோம்… இப்படி இருந்தாலும் தாயை மதிப்பவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

திடீரென்று ஒரு எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் தாயைக் கோபிக்கக்கூடியவர்கள் தான் இருக்கின்றார்கள்.

தாயை நினைத்து வணங்கி..
1.அந்தத் தாய் அருள் வேண்டும்
2.எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

இத்தகைய நிலைகளை நாம் வளர்த்துக் கொண்டால் எங்கே போவோம்…? என்று சிந்தித்துப் பாருங்கள்.

எத்தனையோ துன்பப்பட்டு என்னை வளர்த்தாய்…! என்ற நிலையில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெற வேண்டும்
2.எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்திட வேண்டும்
3.மலரைப் போல் மணமும் அந்த மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும்
4.என்றென்றும் எனக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று தாய் தந்தையை இப்படி வணங்க வேண்டும்.

இந்த மாதிரி எண்ணினீர்கள் என்றால் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆழமாக நமக்குள் பதிகின்றது.

எவ்வளவு துயரப்பட்டாலும் சரி…
1.அம்மா…! எனக்கு இந்த நோய் நீங்க வேண்டும்
2.அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

தாய் இதே மாதிரி “என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்…!” என்று தான் எண்ணுகிறது.
1.இந்த உணர்வை நீங்கள் நுகர்ந்தீர்கள் என்றால்
2.உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.

சந்தர்ப்பத்தில் ஒரு காட்டுக்குள்ளேயே நீங்கள் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புலியோ யானையோ துரத்தி வருகிறது என்றாலும் “அம்மா…!” என்று நீங்கள் சொன்னால் போதும்.

அந்தப் புலியானாலும் யானையானாலும் உங்களைத் தாக்காது.

என்னைக் (ஞானகுரு) காட்டுக்குள் போகச் சொல்லி தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

நான் போய்க் கொண்டேயிருப்பேன். பாதையில் திடீரென்று புலி வந்தது என்றால் ஐய்யய்யோ..! என்று சப்தம் போடுவேன். அப்பொழுது அந்த இடத்தில் உடனடியாக உணர்த்துவார் குருநாதர்.

டேய்… உன் அம்மா எங்கேயடா.. போய்விட்டது…? என்பார். உன் அம்மாவை நினைடா…! என்பார்.

அவர் சொன்னதும் “அம்மா…!” என்று சப்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வருகிற புலி அப்படியே நிற்கிறது. இப்படி… எல்லாவற்றையும் அனுபவத்தில் தான் குருநாதர் கொடுத்தார்.

நீங்களும் உங்கள் தாயை நினைத்து அவர்களின் அருளைப் பெறுங்கள்..
1.மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியையும் நீங்கள் பெறுவீர்கள்…!

உடலில் உள்ள “ஒவ்வொரு அணுவிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வை” நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

 

தீமைகளை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகளைக் கூர்மையாக வலிமை கொண்டு பதிவாக்கி அதைப் பெற வேண்டும் என்று மீண்டும் எண்ணப்படும் பொழுது அது நம் உடலுக்குள் செல்கின்றது.

தீமையை வென்றவன் சுக்ரீவன்… அவன் வாலியின் சகோதரன்… இளையவன்.

விஷத்தின் தன்மை கொண்டு வளர்ச்சி பெற்றுத் தான்
1.பல கோடிச் சரீரங்களில் அது எடுத்துக் கொண்ட வலிமை கொண்டு,,, பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக உருவாக்கியது.
2.மனிதனான பின் விஷத்தின் தன்மை ஒடுக்கி அந்த உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவன் துருவ மகரிஷி.
3.ஆகையினால்… பின் தான் இதனுடைய வளர்ச்சியின் தன்மை பெற்றவன் என்றும் சுக்ரீவன் வாலியின் சகோதரன் என்றும் இளையவன் என்றும்
4.பின் வந்த நிலையை நாம் அறிவதற்காக நமக்குக் காட்டியுள்ளார்கள் இராமாயணக் காவியத்தில்.

கடும் வேதனைகளை அடக்கியவன் சுக்ரீவன். பல கோடிச் சரீரங்களில் உருவான இந்த உணர்வைத் துருவன் அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்து நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றுகின்றான்.

உதாரணமாக ஒரு விஷமான பாம்பு உணவுக்காகத் தனக்குள் விளையும் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதனை உட்கொள்ளும் பொழுது இந்த விஷமே அந்த உடலைக் கரைக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

துரித நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பாக இந்த விஷம் விளைந்தாலும் எதை உட்கொள்கின்றதோ அந்த உடலிலும் விஷம் உண்டு. அந்த விஷத்தையும் தன்னுடன் கலந்து அதை ஜீரணிக்கும் சக்தி வரப்படும் பொழுது
1.மீண்டும் விஷத்தினை வளர்த்து விஷம் உருவாக்கும் அந்தப் பையில் (பாம்பின் உடலில்) அதை நிரப்பும்.
2.பையில் நிரப்பப்படும் பொழுது அதில் சிறுகச் சிறுகச் சேர்த்து வளர்ச்சியின் தன்மை வரும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது.
3.விஷப் பைகளில் வளர்ச்சியின் தன்மை பெறும் பொழுது ஒளியின் சுடராக மாறுகின்றது.

அதே போல் தான்
1.ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வினைப் பெற்று ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ மகரிஷி.
2.அந்தத் துருவ மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்வோமென்றால் அது உடலுக்குள் சென்று நம்மை அறியாது சேர்ந்த வேதனைகளை அடக்குகின்றது.

எந்த உணர்வு நம்மைச் சோர்வடையச் செய்ததோ… அந்த உணர்வுகள் விஷத்தின் தன்மையை மீண்டும் நுகர்ந்து சோர்வடையாதபடி… அந்தத் துருவனின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் போது… அந்த விஷத்தினை ஒடுக்குகின்றது.

அதனால் தான் வாலியை இராமன் “சுக்ரீவன் துணை கொண்டு அடக்கினான்…” என்று சொல்வது.

நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வே எண்ணங்களாக இயக்குகின்றது என்றும் “அருள் ஒளியின் உணர்வாக இயக்கப்பட வேண்டும்” என்றும் காட்டுகின்றார்கள்.

அதாவது பிராணயாமம் என்று சொல்வார்கள்.

ஆனால்… மூக்கு வழி கூடிச் சுவாசித்து உணர்வினை உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வை ஜீவனாக்குவது அல்ல பிராணயாமம்.

1.புருவ மத்தியில் உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணிலே செலுத்தி
2.அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் ஊடுருவச் செய்து
3.அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்து… அதனின் இயக்கமாக நமக்குள் இயக்கச் செய்வதே பிராணயாமம் என்பது.

ஏனென்றால் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வு நம் உடலுக்குள் சென்று… அந்த உணர்வின் இயக்கமாகத் தொடரப்படும் பொழுது எதனின் வலுப் பெறுகின்றதோ அதன் இயக்கமாக அது நம்மை “ஒளியான நிலைகளாக…” மாற்றி அமைக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் கரையான் புற்று அருகிலே என்னை அமரச் செய்தார் குருநாதர்.

கரையான் என்னுடைய தசைகளை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நான் போட்டிருந்த வேஷ்டி டிராயர் எல்லாமே மண்ணாகிவிட்டது.
1.கையில் தொட்டால் கரையான் நசுங்கிவிடுகிறது
2.ஆனால் அந்தக் கரையானுக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அதிலே விளைந்த அமிலச் சத்து உன் உடமைகளில் பட்ட பின் அது கரைந்து எவ்வாறு சுக்குநூறாகத் தெறிக்கிறது…! என்று காட்டுகிறார்.

என் உடலை ஒன்றும் செய்யவில்லை என்றாலும் இந்த நகங்கள் கரைகின்றது. கரையானில் எதனில் வலிமை இருக்கின்றது…? என்று சற்று சிந்தித்துப் பார்…! என்றார் குருநாதர்.

அந்தக் கரையான் உணர்வுகள் காற்றிலே கலந்துள்ளது. அந்தக் கரையானின் உணர்வுகளைப் பல நிலைகள் உனக்குள் சேர்த்து இதை இன்னென்ன வழியில் இன்னென்ன உணர்வுகளுடன் இணைத்து அதை நீ கவர்ந்து இந்த உணர்வின் தன்மை உனக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.இதனின் உணர்வின் ஒலி அலைகளை (உதாரணமாக) ஒரு பொருளுடன் இங்கே இணைத்து
2.ஒரு ஆயிரம் முறை அதை வெளிப்படுத்தும் பொழுது
3.இந்தப் பொருளுக்குள் இந்த உணர்வுகள் அது செலுத்திவிடுகின்றது.

மீண்டும் வேறொரு பக்கம் சென்று அங்கே அமர்ந்து அதற்குண்டான உபாயத்தைச் சொல்லி இந்த உணர்வுகளை… ஒலிகளை… “நீ ஈர்க்கும் தன்மையில் இந்த ஒலிகளை எழுப்பு…!” என்றார்.

அப்பொழுது அங்கே கரைந்த அவ்வளவு பெரிய பொருள் இங்கே சிறு துவாரத்தின் வழியாக அது எப்படி நுழைந்து வருகிறது…? அது உருபெறுகிறது…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

இது தான் “கரையான் மந்திரம்…!” என்பது.

ஆகவே அந்தப் பொருளில் பாய்ச்சிய இந்த உணர்வுகளை அதிலுள்ள காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்ட பின்
1.மீண்டும் இந்த ஒலிகளை எழுப்பப்படும் பொழுது இதனுடைய அளவுகோல் இது கூடிய பின்
2.எத்தகைய உலோகத்தையும் அது கரைத்து ஆவியாக மாற்றுகின்றது.
3.மீண்டும் அதற்கு எதிர்மறையான உணர்வுகளை இணைத்த பின்
4.ஒரு ஊசி புகும் அளவு துவாரம் உள்ள பெட்டிக்குள் அணுக்களாகச் சென்று
5.பொருளாக எப்படி உறைகிறது…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

வேதங்களில் அதர்வண வேதம் என்ற நிலைகளில் இன்று மந்திரம் தந்திரம் என்று இதைச் சொல்வார்கள்.
1.கடவுளையே நான் கைவல்யப்படுத்தியுள்ளேன் என்று பொருள்களை வரவழைத்து
2.மக்களை மதி மயக்கச் செய்து பல மாயாஜாலங்களைக் காட்டி
3.இந்த உடலின் இச்சைக்கே அவர்கள் செய்கின்றார்கள் என்று இங்கே தெளிவாக உணர்த்துகின்றார்.

ஏனென்றால் இந்தக் கரையானின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து கொண்ட பின் அதிலே சில ஒலி அலைகள் – நுண்ணிய அலைகளை வெளிப்படுத்தி அதையும் எனக்குக் காட்டுகின்றார் குருநாதர்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு எலெக்ட்ரிக்குடன் நுண்ணிய அலைகளாக ஒலிபரப்புச் செய்யப்படும் பொழுது இந்த ஓசையைக் கண்டு கொசுக்கள் இங்கே வராது அஞ்சி ஓடுகின்றது.

இதைப் போல் தான்…
1.மெய் ஞானக் கரையான் உணர்வைக் கண்டுணர்ந்த நம் குருநாதர்…
2.ஈஸ்வரபட்டர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்தக் கரையான் உன் ஆடைகளை எப்படிக் கரைத்ததோ… உன் நகத்தைக் கரைத்ததோ… இதைப் போல் அதிலே உள்ள உணர்வின் ஒலி அலைகளை நீ கவரப்படும் பொழுது எதனுடன் இணைக்கின்றாயோ அது கரையும்.

ஏனென்றால் பூமியிலே உலோகத் தன்மையிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அது தாவர இனங்களாக வளர்ந்து
1.அதனின் சத்தின் தன்மை மறைந்து
2.அதை உணவாக உட்கொண்டு ஜீவ அணுக்களாக உருவாகும் நிலைகள் எப்படி வந்தது…?
3.இது எல்லாம் எவ்வாறு உருமாறுகிறது… உருபெறுகிறது… உருமாற்றமாகின்றது…! என்று காட்டினார் குருநாதர்.

அது தான்.. ரிக் சாம அதர்வண மறுபடியும் யஜூர் மீண்டும் சாம. அந்த உணர்வின் தன்மைகள் எவ்வாறு மாறிக் கொண்டு வருகிறது என்ற நிலைகளைத் தான் நம்முடைய வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

சாதாரண மக்களும் தன்னை அறிந்திடச் செய்யும் அவ்வளவு பெரிய வேத சாஸ்திரங்களுக்குள் தன் சுயநலன்களுக்காகக் கடும் தவறுகளை உருவாக்கி அதற்குள் இருக்கும் மூலங்களையே மறைத்து விட்டார்கள்.

இந்த உடலின் இச்சைக்காக உபயோகப்படுத்திய அவனும் மடிந்தான்… அவனைப் பின்பற்றிய அனைவரும் இன்றும் மடிந்து கொண்டே உள்ளார்கள். எதனின் ஆசையைத் தனக்குள் வளர்த்தனரோ அதன் வழிகளிலே தான் இன்றும் உள்ளார்கள்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

போகன் உருவாக்கிய “மனோசிலை… காயகல்பம்…!”

 

மனித உடலில் எடுத்த உணர்வின் ஒலிகளைப் பாய்ச்சி அந்த வலுவைக் கூட்டி மந்திர ஒலிகளால் பதிவான பின் அந்த மனிதன் மடிந்து விட்டால் அந்த உணர்வின் ஒலிகள் கொண்டு பல நிலைகளை அறியலாம்.

அதாவது இப்பொழுது நாம் பேசும் உணர்வுகளைப் போல ஒவ்வொரு உலோகத்திற்கும் தனித்த ஒலியின் நாதங்கள் உண்டு. அதனைத் தனக்குள் எடுத்து அந்த நாதங்களைப் பாய்ச்சி அந்த உணர்வுகளைத் தனக்குள் எந்தெந்த நிலை என்று ஒலியைப் பாய்ச்சி விட்டால்
1.எந்த மனிதன் இறந்தானோ அதனைத் திருப்பி எடுத்து நினைவு கொண்டு
2.பூமிக்கடியில் உள்ள பொருள்களை அறியும் நிலை கொண்டு பாய்ச்சப்படும் பொழுது
3அங்கே அடியில் உள்ள உலோகங்களைக் காண முடிகின்றது.

ஏனென்றால் பல கோடி உணர்வின் தன்மை பெற்றவன் மனிதன். இதற்குள் இணை சேர்க்கப்பட்டு உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கொடுக்கப்படும் பொழுது
1.அதிலிருந்து கிளம்பும் அதிர்வுகளைப் பாய்ச்சியபின் தூரத்தின் தன்மை தனக்குள் கணக்கிடப்பட்டு
2.இந்த இடத்தில் நீர் உள்ளது… இந்த இடத்தில் உலோகங்கள் உள்ளது என்று
3.மனிதனின் உணர்வின் துணை கொண்டு அறிந்தார்கள் அக்காலத்தில்.

அதன் வழி கொண்டு தான் மனிதனுக்குள் பெற்ற வலிமையின் உணர்வுகள் அதைக் கண்டறியப்படும் பொழுது உலோகக் காலங்களாக மாறுகின்றது… மந்திரக் காலங்கள்.

உலோகக் காலங்கள் வரப்படும் பொழுது… பூமிக்குள் மறைந்த எதிர்நிலை கொண்ட மண்ணில் விளைந்த மனோசிலை கந்தகம் மற்ற பொருள்களைக் காணுகின்றார்கள்.

அதாவது… அது மண்ணில் விளைந்த உப்புச்சத்து. சூரியனுடைய காந்த சக்தி மண்ணிலே அமிலங்களாகக் கலக்கப்படும் பொழுது ஒரு வெட்கையின் தன்மை வரும்.
1.அதை மீண்டும் வேக வைத்து அந்த உப்பை உறையச் செய்து கந்தகத்துடன் அளவுகோல் கொண்டு இணைக்கச் செய்து
2.மோதும் பொழுது வெடிக்கும் தன்மையாக அதற்குண்டான நிலைகளைச் (வெடி பொருள்களை) சேர்க்கின்றான் அன்று போகன்.
3.மனோதத்துவ ரீதியில் உணர்வின் தன்மையை நீக்குவதற்கு மனோசிலை என்று கொண்டு வந்தான் போகன்

வைத்திய ரீதியிலே மருந்துகளை உலோக நிலைகளை எடுத்து விஞ்ஞானிகள் சேர்க்கை சேர்ப்பது போன்று மெய்ஞானியான போகர் பல நிலைகளைத் தனக்குள் உருவாக்கி “மனோசிலை” என்று உருவாக்குகின்றார்.
1.அதை மனித உணர்வின் எரிபொருளுடன் கலக்கப்படும் பொழுது அது உடலுக்குள் ஊடுருவி வெடிக்கும் தன்மையாக வந்து
2.அந்த அதிர்வால் தீமை செய்யும் அணுக்களை மடியச் செய்தான் அன்று.

பாறைகளைப் பிளக்க வேண்டும் என்றால் அதே மனோசிலை வைத்து எதிர் நிலையான நெருப்புகளை உருவாக்கப்படும் பொழுது அந்தப் பாறைகள் தகர்த்து எறியப்படுகின்றது.

அதே போல் அந்த மெய்ஞானியான அவன்… மனோசிலை கந்தகம் போன்ற பல பொருள்களை அளவுகோல்படி இடப்பட்டு
1.மருந்தின் தன்மையாகக் கொண்டு வரப்படும் பொழுது அழியாத் தன்மையும்
2.வெடித்த பொருள் போகத் தொக்கி நிற்பது… தீமையான அணுக்களுக்கு எதிர்நிலையாகிக் கொன்று விடுகின்றது உணர்வின் அதிர்வுகள்.

அப்போது நமக்குள் உணரலாம்.

ஆகவே இதைக் கண்டுணர்ந்தவன் போகன். இதைப் போல எத்தனையோ வகைகளில் ஒவ்வொரு நிலைகளைப் பெற்றவன் அவன்.

போகனைக் கண்டவுடன் குருநாதர் “திருடன்… திருடன்…” என்று சொல்வார். ஏன் சாமி…? அவனைத் திருடன் என்று சொல்கிறீர்கள் என்று நான் கேட்பேன்.

1.அவன் எல்லாவற்றையும் திருடும் சக்தி பெற்றவன்.
2.தாவர இனத்திலிருந்து வரக்கூடிய சத்தை நுகர்வான்… அதைத் திருடுவான்.
3.அதைத் தனக்குள் எடுத்து… தனக்குச் சாதகமான நிலையை உருவாக்குவான்.
4.இப்படி அவன் எல்லாச் சக்தியையும் திருடுகின்றானப்பா…! என்பார் குருநாதர்.

ஒரு தாவர இனச் சத்து என்று இருந்தால் அதை நுகர்வான். அதைத் தன் உடலுடன் போகிக்கின்றான். அதனால் தான் போகர் என்று சொல்வது. அதை “மோகிக்கின்றான்… போகிக்கின்றான்…” ஒரு பொருளின் சத்தை அறிய வேண்டும் என்று மோகம் கொள்கிறான் அந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து இரண்டற இணைத்துப் போகிக்கின்றான்.

அதனால் தான் “போகர்…” என்று அந்தக் காரணப் பெயருக்குண்டான விளக்கத்தைக் குருநாதர் சொல்கிறார்.

கரு உருவாக்கப்படும் பொழுது இதனின் உணர்வின் தன்மை உதிரங்கள் நீக்குவதுண்டு. கரு உருவாக்கும் இதற்குத் தடையாக இருக்கும் உணர்வினை நீக்கப்படும் பொழுது கழிவின் தன்மை வருகின்றது.

அதனுடைய கருவின் தன்மை உருவாகப்படும் போது இந்த உணர்வின் அணுக்கள் ஹார்மோன் அதிகமாக இருக்கும் பெண்களின் உணர்வுகள் இது விந்தானாலும் அதனுடைய நிலைகள் மனோதத்துவப் பிரகாரம் பெண்களின் உணர்வுகளை இதனுடன் சேர்த்து அணுக்களின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

அது எவ்வாறு உருவாக்குகிறது…? என்ற நிலையை உணர்ந்தவன் அதைச் சொன்னாண்.

கருக்களின் உருக்களில் சீனாவின் பக்கம் நெருங்கப்படும் பொழுது “அங்கிருக்கும் சீதோஷ்ண நிலைகளால்” அணுக்களின் கருக்கள் மனிதனுக்குள் ஏராளமாக உருவாகின்றது.

இதைக் கண்டுணர்ந்து
1.அந்த அணுக்களின் மோக உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அந்த எண்ணங்களை உருவாக்கும் பொழுது தான் அபின்களைக் கொடுக்கின்றான்.
2.அதைக் கொடுத்துத் தன் நிலையை மறக்கச் செய்து மோகத்தை உருவாக்கப்படும் பொழுது
3.அதனால் ஈர்க்கும் அணுக்களின் தன்மையைத் தாவர இனங்களை அதில் இணையச் செய்கின்றான்.

அவன் அன்று செய்தது.

சாதாரண அணுக்கள் வந்தது என்றால் மனிதனுக்குள் எடுத்து அது புழுக்களாக எப்படி உருவாகின்றதோ இதைப் போல பல அணுக்களின் தன்மை கொண்டு ஒவ்வொரு குணங்கள் கொண்ட நிலையும் அதற்குத் தக்க பச்சிலைகளை விரிக்கின்றான்.

இந்த மோகம் கொண்டு உணர்வின் தன்மை கவரப்படும்போது அதன் உணர்ச்சிக்குத் தக்க பச்சிலைகளில் அது ஒட்டுகின்றது. அந்தப் பச்சிலைகளில் ஒட்டும் பொழுது தான் இந்த உணர்வின் தன்மை ஜீவன் பெறும் தன்மையே வருகின்றது.
1.ஜீவன் வரப்படும் பொழுது தான் நாத விந்துகள் என்று கணக்கிடப்பட்டு
2.அந்த உணர்வினைத் தனக்குள் எடுத்துக் “காயகல்பமாக” அவன் மாற்றுகின்றான்.

அவன் சொன்ன முறைகள் வேறு. அதற்குப் பின் வந்தவர்கள் கற்றுணர்ந்த கவியின் புலமைகள் வேறு. ஒருவன் கற்றுணர்ந்த நிலையில் கற்பனையில் தான் மற்ற நிலைகளைச் செய்தார்களே தவிர அந்தப் போகன் அன்று சொன்ன நிலைகளை இவர்கள் செய்யவில்லை.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு எம்மைத் தெளிவாக்கினார்.

எதனையும் ஊடுருவித் திருடும் பழக்கம் பெற்றவன் போகன்….! இச்சையின் நிலைகள் கொண்டு ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அதை எப்படித் திருடுகின்றோமோ இதைப் போலத் தான் போகனும் எதனையும் கண்டுணரப்படும் பொழுது மோகம் கொள்கின்றான்.

அந்த உணர்வின் தன்மை கருவின் தன்மை தனக்குள் திருடுகின்றான்.
1.உலகெங்கிலும் பறக்கும் தன்மை கொண்ட அணுக்களைத் தனக்குள் சேமிக்கின்றான்.
2.ஒரு நொடிக்குள் இயக்கப்படும் போது கவன உணர்வின் அணுக்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டபின் “பறந்து செல்கிறான்…”

மந்திரக்கோலை வைத்து எவ்வாறு ஒரு பொருளின் தன்மை இணைத்துக் கொண்ட பின் கரையான் மந்திரம் என்று செயல்படுத்துவார்கள்.

கரையான் தன் மலத்தை இட்டபின் இயற்கையில் விளைந்த மரத்தின் சத்தை ஆவியாக மாற்றி உணவாக எடுத்துக் கொள்கின்றது. இயற்கையில் \மண்ணில் விளைந்த மரத்தை மீண்டும் மண்ணாக மாற்றுகின்றது. நம்மால் அவ்வாறு ஒரு மரத்தைச் சீக்கிரம் கரைத்து மண்ணாக மாற்ற முடியுமா…?

இதைப் போல உயிரணு அதற்குள் சேர்ந்த அமிலங்கள் இந்த மரத்தைத் துரித நிலை கொண்டு கரைகின்றது.

அதில் விளைந்த உயிரணுவையும் தன்னுடன் இணைத்து ஒன்று எளிதில் கரையக்கூடியதும் மற்றொன்றை உருவாக்கும் நிலைகள் பெற்று… இவர்கள் உருவாக்கும் நிலைகள்… மாந்திரீகமாக மாற்றுகின்றார்கள்.

உணர்வின் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் இணைக்கச் செய்து அந்த அணுவின் தன்மை உருவாக்கப்பட்டு மீண்டும் அதே ஒலிகள் வரப்படும் பொழுது அது கரைக்கப்படும்.

கரையான் மந்திரம் என்பது இதுதான். மனிதன் சில நிலைகளை எவ்வாறு செயல்படுத்துகின்றான் என்று குருநாதர் காட்டுகின்றார்.

ஆனால் போகன் கவனக் குளுவின் நிலைகள் கொண்டு எதனதனை உருவாக்கப்பட்டு எந்த எல்லையில் உருவாக்கப்பட்டதோ அதை எடுத்து உணர்வின் ஒலி அலைகள் பாய்வதைத் தனக்குள் இணைத்து நினைவின் ஆற்றலைக் கொண்டு ஜீவணுக்களை உருவாக்கப்படும் பொழுது பறவையின் உணர்வின் தன்மையைத் தனக்குள் கவர்கின்றான்.
1.அந்த உணர்வு வரப்படும் பொழுது எதனின் எண்ணங்களை எடுக்கின்றானோ உடல் எடையற்றதாக மாறுகின்றது.
2.குறித்த இடங்களுக்குச் அந்த எல்லையைச் சென்றடைகின்றான்.

அவன் உடலுக்குள் எடுத்துக் கொண்ட சக்திகள்…
1.ஒவ்வொரு இடங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை எப்படி வளர்க்க வேண்டும்…?
2.எதனைப் பெருக்க வேண்டும்…? என்று 5000 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தியவன் போகன்.

இதைப்போல் ஒவ்வொரு ஞானிகளும் பெற்ற சக்திகளைச் சுட்டிக் காட்டினார் குருநாதர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக வெளியிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சண்டை போடுவதைப் பெண்கள் நீங்கள் வேடிக்கை பார்த்து விட்டு வந்து சமையல் செய்தால் என்ன ஆகும்…?

இந்தக் கார உணர்ச்சியால் இரண்டு மிளகாயை அதிகமாகப் போடச் சொல்லிவிடும். அப்புறம் அந்தக் குழம்பை ஊற்றிச் சாப்பிடும் பொழுது நாம் காரமாக இருக்கிறது என்று பேசாமல் அடக்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்.

தெரியாமல் மிளகாயைப் போட்டதால் குழம்பு அதிகமாகக் காரமாக இருக்கிறது என்று நம்மிடம் கேட்டவுடனே
1.அந்தக் கார உணர்ச்சி (சண்டையைப் பார்த்த உணர்வு) கொண்டு என்ன சொல்வீர்கள்…?
2.ஏதோ தவறிப் போனது என்று சொன்னாலும்…
3.என்றைக்கும் வைக்கிற மாதிரித்தானே இன்றும் வைத்தேன்
4.உங்களுக்குத் தான் எதை வாயிலே வைத்தாலும் இப்படிக் காரமாகத் தெரிகிறது..! என்று
4.கணவனிடம் சொன்னால் அங்கே வம்பு வந்தாயிற்று.

ஆனால் அதே சமயத்தில் சண்டை போடுபவரைக் கணவன் பார்த்துவிட்டு வந்தால் என்ன ஆகிறது…?

வீட்டில் வந்து சாப்பிட உட்காரும் பொழுது அந்த எரிச்சலான உணர்வு நாக்கிலே இருக்கும். முதலில் ஒரு வாய்ச் சாப்பாட்டை எடுத்து வைத்தவுடனே எரிச்சல் வரும். “என்ன நீ குழம்பை இப்படி வைத்திருக்கிறாய்…?” என்ற சண்டை வரும்.

இதை எல்லாம் இந்த உணர்வுகள் நாம் நுகர்ந்ததற்கொப்ப எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் போதும். ஏனென்றால்…
1.நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலே நுகர்ந்தது எப்படி இயங்குகிறது..?
2.அதை நாம் அதிகமாகத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் தீய அணுக்கள் கொண்டு நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது….?
3.அவ்வப்பொழுது அதைத் துடைக்கத் தவறினால்
4.நம் உடலில் எத்தனை தீங்குகள் விளைகிறது…? என்பதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கோபம் வருகிறது என்றால் உடனே அதை மாற்றிக் கொள்கிறீர்கள்.
1.மாற்றத் தெரிந்தவர்கள் இந்தக் கோபத்தை விடாதபடி
2.அதை எப்படி எப்படிச் சமாளிக்க வேண்டும்..? என்ற ஞானம் உடனே வந்துவிடுகிறது.

இல்லாவிட்டால் சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் ஒரே சண்டையாக இருக்கும். அப்புறம் அந்த உணர்வு வந்த பிற்பாடு… யார் அதைப் பஞ்சாயத்துச் செய்தார்கள் என்றாலும் அவர்களுக்கும் சரி பாதி இது போகும்.

உங்கள் பிழைப்பே எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் இருக்கும்..! என்பார்கள்.

அவரும் அந்தச் சலிப்பாக எடுத்துவிட்டுக் கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றால் அங்கே அவர்கள் வீட்டிலும் இந்தச் சண்டை வரும். இதே உணர்வுப்படி தான் வரும்.

பஞ்சாயத்துச் செய்யும் குடும்பங்களில் எல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

இந்த உணர்வுகளைத் தனக்குள் எடுத்து வீட்டில் இரண்டு தரம் இவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால்
1.நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்
2.உன் பிழைப்பே இப்படித்தான் இருக்கிறது..! என்று சொல்லிச் சண்டை போடுவார்கள்.

ஏனென்றால் நுகர்ந்த அந்தத் தீமையின் உணர்வுகள் தான் நம்மை இயக்குகிறதே தவிர நாம் இயங்கவில்லை.

ஆகவே நம்மை எது இயக்குகிறது..? என்ற நிலைக்குத் தான் அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கலக்கச் செய்கிறோம்.

இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்கள் எண்ணங்கள் கூர்மையாக இதைக் கவர்ந்து ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்
1.அதிகாலை துருவ தியானத்தில் அந்தச் சக்திகளைப் பெறுவதற்கு உங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
2.அப்பொழுது இந்தப் பதிவின் தன்மையை மீண்டும் எண்ணும் பொழுது அது உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார் என்றால் கேட்டறிகின்றோம். அறிந்த பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்..?

அந்த உணர்வு தனித்து நம் உடலிலே விளைந்து விடக்கூடாது. மிளகாய் தனியாக இருக்கிறது. எடுத்துத் தனியாகச் சாப்பிட்டால் நம் வாயிலிருக்கும் எச்சில் எல்லாம் காணாமலே போய்விடும்.

ஆனால் அதே மிளகாயைக் குழம்பிலே சீராகப் போட்டு இணைத்தவுடனே அந்த உணர்ச்சிக்குத் தகுந்த மாதிரி எச்சில் உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது.

1.தனித்த மிளகாய் உமிழ் நீரைக் காணாது ஆக்குகிறது.
2.மற்ற பொருளுடன் சேர்க்கப்படும் பொழுது உமிழ் நீரைச் சுரக்கச் செய்து அந்தச் சுவையை ஊட்டுகிறது.

இதைப் போல் தான் ஒரு வேதனையோ கோபத்தையோ நாம் காண நேர்ந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று அதனுடன் இணைத்திட வேண்டும்.

அடுத்த நிமிடம் நம் எண்ணங்கள் அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்.

எண்ணங்கள் அங்கே சென்று அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி வேதனைப்படுவோர் பெற வேண்டும்… அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும். அவர் குடும்பத்தில் அருள் ஞானம் பெருக வேண்டும்…! என்ற இந்த உணர்வை நாம் எடுத்து விட்டால்
1.அந்த வேதனை என்ற தீமையை நீக்கக்கூடிய சக்தி
2.நமக்குள் அணுவாக உருவாக்குகிறது.,

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய். நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் தன்மைதான் அதுவாக நம்மை மாற்றுகின்றது நம் உயிர்.

ஆனால் இப்படி வேதனைப்படுகிறாரே…! என்று அதை எண்ணி விட்டால் நாம் அதுவாக ஆகின்றோம். தனித்த மிளகாயைச் சுவைத்த உணர்வு போன்று தான் வரும்.

ஆகவே குழம்பிலே அதைப் போட்டு எப்படிச் சுவையாக மாற்றிக் கொள்கிறோமோ இதே போல் தீமையான உணர்வுகளை நுகர்ந்த பின் அதனின் வலிமை நமக்குள் போகாது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சி..!

யாம் உங்களுக்குக் கொடுக்கும் “திருப்புமுனை…”

 

விஞ்ஞானி ஒரு பொருளைச் செய்கிறான் என்றால்… அதிலே இயக்கம் தடைப்படும் பொழுது
1.அந்தத் தடைக்குண்டான காரணத்தைக் கண்டறிவான்.
2.அதை நீக்க முயற்சி எடுப்பான்.

ஆனால் தொழில் செய்து கொண்டுள்ளவர்கள் அதைச் சரியாக இயக்கவில்லை என்றால் “எல்லாம் போய்விட்டது… என்ன செய்வது…?” என்று விட்டு விடுவார்கள். பின் அதைத் தெரிந்தவர்கள் வந்து தான் சரி செய்ய முடியும்.

இதைப் போல
1.உங்களுக்குள் அந்த அருள் ஞானத்தின் உணர்வுகளை அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை பதிவான பின்…
2.அந்த நினைவைக் கொண்டு வந்தால்…
3.வாழ்க்கையில் வரும் எந்தக் குறைகளோ அதை நீக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெறுகின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிப்பது.

குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் காடு மேடல்லாம் அலையச் செய்து… ஒவ்வொன்றும் எப்படி உருவானது…? என்று அந்த அகஸ்தியனைப் பற்றிக் கடைசி வரையிலும் கொண்டு வந்து… துருவன் அகண்ட உலகத்தைக் கண்டபின் இந்த உணர்வுகள்
1.“உலகம் எப்படி உருவானது…?” என்ற நிலையைக் காட்டப்படும் பொழுது என் நினைவுகள் இழந்து விட்டது.
2.”விட்டு அடித்தால்” (அந்த நேரத்தில் குருநாதர் எம்மை அடிக்கின்றார்) என் உடலில் “ஜிர்ர்…ர்ர்…” என்று சுருதி ஏறுகின்றது.
3.அவரின் நினைவுகள் வருகிறது… மற்ற தீமைகளை அகற்றும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.

இப்பொழுது நீங்கள் கூடச் சொல்லலாம். உங்கள் கஷ்டத்தை என்னிடம் சொல்லும் பொழுது எனக்கு “ஜிர்ர்…ர்ர்…” என்று கோபம் வரும். அந்த உணர்வு என்ன செய்கிறது…?

1.நீங்கள் சொல்லக்கூடிய கஷ்டம் எனக்குள் புகாதபடி முதலிலே தடைப்படுத்துவது.
2.தடைப்படுத்திய பின் அதே உணர்வின் தன்மை தீர்க்கப்படும் பொழுது
3.அவன் அறியாது இடும் சாப அலைகளை உணர்வான்… அவன் நொறுங்கிப் போவான் என்ற நிலைகளைச் சொல்வது.
4.இந்த உணர்வுகள் அங்கே தாக்கப்படும் பொழுது… “கஷ்டம் என்று சொல்பவருடைய” உணர்வின் வேகத்தைக் கூட்டுவது.

அதாவது…
1.கஷ்டமான உணர்வுகளை எனக்குள் வராது தடுப்பதும்
2.உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு நான் அழுத்தமாகச் சொல்லும் பொழுது
3.எதைக் குறை கூறுகின்றாரோ அவருடைய நினைவைக் கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது
4.“இந்த உணர்வுகள் ஆழமாகப் பதியும்…! சொல்வோர் உணர்வுகளில்…!”
5..அடுத்து… யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்யும் பொழுது அங்கே நல்லதாக வளர்ச்சி பெறும்.

ஆகவே… “யாம் வெளிப்படுத்தும் இந்த வேகத் துடிப்பு” யார் எதைச் செய்தாலும் உடனடியாக அதை நல்லதாக மாற்றும்.

ஸொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆனால் இதைப் பார்த்த பின்… என்னடா…? சாமிக்குக் கோபம் வராது என்று சொல்கின்றார்கள். சாமிக்கே இங்கே “இப்படிக் கோபம் வருகிறது என்று…!”

“எனது கோபம்” எதைத் தடுக்கிறது…? தீமைகள் உங்களுக்குள் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பாக வருகின்றது.

ஆனால் “உங்களுடைய கோபமோ…”
1.மற்றவர்கள் எந்தத் தீமையைச் செய்தாரோ அந்த தீமையே உங்களுக்குள் விளைந்து
2.அவர்களைப் பொசுக்க வேண்டும் என்ற உணர்வாக வருகின்றது.

மீண்டும் தெளிவாக்குகின்றேன்…! தீமை எனக்குள் வராது தடுப்பதும்… அந்த நினைவாற்றல் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பை அருள் மகரிஷிகள் உணர்வுகளைச் சொல்லித் தீமைகள் வராது தீமை செய்வோர் எவரோ அவர்கள் உணர்வார்கள் என்று சொல்லப்படும் போது…
1.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அங்கே திருப்பம் வரும்.
2.எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற உணர்வுகள் வரும் பொழுது திரும்பும்.

ஆனால் நம்முடைய உணர்வுகள் (தியானம் செய்த) அங்கே பாய்ச்சப்பட்டு… அவன் அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்ற வரிசைத் தொடரைச் செய்யப்படும் பொழுது சிறுகச் சிறுகப் போய் அவன் உடலிலே விளையும்.
1.தீமைகளின் பாதிப்பால்… திரும்ப நன்மையை எண்ணி ஏங்குவான்.
2.அப்பொழுது நாம் இங்கே எண்ணி… அது யாரோ… அந்த உணர்வின் தன்மை எடுத்துக் கலந்து வெளியிட்டது அங்கே சென்ற பின்…
3.அவர்களுக்கு ஒரு “திருப்புமுனையாக” மாறும்.

அவர்கள் திரும்பி அதை ஏங்கிப் பெறும் அந்தத் தகுதி ஏற்பட்டால் அங்கே வருகின்றது. இல்லை என்றால் என்னதான் சொன்னாலும் அங்கே எடுபடாது.

காரணம்…
1.விஷத்தால் ஒடுங்கப்படும் பொழுது தப்பிக்கும் உணர்வுகள் வருகின்றது
2.தப்பிக்க ஏங்கும் நிலையில் அவர்கள் உணர்வு நமக்குள் பதிவான நிலையில்
3.”அதிலிருந்து விடுபட வேண்டும்” என்ற உணர்வை நாம் கூட்டக் கூட்ட
4.இந்த உணர்வுகள் அங்கே மறைந்திருந்து தன் (அவர்கள்) உணர்வை மாற்றி அது திருப்புமுனையாக மாறும்.

அதனால் தான் சில நேரங்களில் உங்களிடம் யாம் கோபமாகப் பேசுவது.

ஆனால் வேறு விதமாக இதை எடுத்துக் கொள்கின்றார்கள் சாமிக்கே இப்படிக் கோபம் வருகிறது… சாமிக்குக் கோபம் வரலாமா…? இப்படிப் பேசுகிறார் என்று…!

1.என் கோபம் யாரையும் கெடுதலாக ஆக்காது.
2.தீமையான உணர்வுகள் உள்ளே போகாது தடுக்கும்.
3.இந்த உணர்வின் தன்மை அழுத்தமாகப் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வுகளை இயக்காது தடைப்படுத்தும்.

குருநாதர் அவருக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் “நான் அடி வாங்க வேண்டி வரும்…” என்னை அடித்த பின் அவர் சிரிப்பார். அப்புறம் விளக்கம் சொல்வார்.
1.உனக்குள் அந்தக் கெட்டது வராமல் இருப்பதற்காகத் தான் நான் கோபித்தேன்
2.என் உணர்வு உனக்குள் புகுந்து… கெட்டது நுழைய விடாது பாதுகாக்கும் என்பார்.

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய நிலைகளில் (நீங்கள்) கோபமாகப் பதிவு செய்து விட்டால்… இந்த உணர்வின் தன்மை எதிரியாகக் கருதி விட்டால் எதிரியின் தன்மையாகத் தான் வரும்.
1.ஆனால் அந்தக் கோபத்தின் தன்மை (சாமியின் கோபம்)
2.தன் இருளை நீக்க உதவும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தால் இருளை நீக்கும்.

ஆகவே ஒவ்வொருவரும்
1.எதை இணை சேர்த்து
2.எதனுடன் கொண்டு வந்தால் எதன் நிலை வருகின்றது…? என்று அறிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தீ (நெருப்பு) சுடுகின்றது. அந்தத் தீயை வைத்துத்தான் பல ஆக்கப் பொருள்களைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கின்றோம். அந்த உணவுப் பொருள் சுடச் சுட வெந்து வருகிறது.

ஆனாலும் அதை அப்படியே சூடாகச் சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆசை வருகின்றது…! கையை வைத்தால் சுரீர் என்று சுடுகின்றது. இருந்தாலும் அதை ஆற்றி ஆற்றி உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு அப்படிச் சாப்பிடுகின்றோம்.

இதைப் போன்று தான்
1.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது சில மோதல் தன்மை வரும்.
2,அது நன்மை செய்யும் சக்தியாக வருகிறது என்பதை உணர்தல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாமி…! என்ற எண்ணத்தில் என்னைத் (ஞானகுரு) தேடி வருவார்கள். இரண்டு நாளைக்குப் பார்ப்பார்கள். அப்புறம் என்ன…?

இந்த மாதிரி ஒருவர் என்னைத் தேடி வந்தார். மருத்துவர் போட்ட ஊசியினால் (INJECTION – SEPTIC) செப்டிக்காகி மூன்று வருடமாக நடக்க முடியாமல் இருந்தவர்.

மற்ற யாரிடமோ கேள்விப்பட்டு இங்கே தபோவனத்திற்கு வந்தார். ஒரு வாரம் இங்கே இருந்து தியானம் மற்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டவுடன் நடக்க முடியாமல் இருந்தவர் நன்றாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தார்.

நடந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா…?

சாமி…! எங்கள் ஊரில் இருக்கும் கூட்டம் எல்லாம் இங்கே வந்து குவியப் போகிறது…! என்றார் என்னிடம்.

எதற்கப்பா…! என்றேன்.

பாருங்கள்… நான் எப்படி நடக்கிறேன்…! எங்கள் ஊரிலே இதைக் காண்பித்துச் சொன்னவுடன் எத்தனை பெரிய கூட்டம் வரும் பாருங்கள்…! என்றார்.

எனக்குத் தொல்லை கொடுப்பதற்கா…? என்று கேட்டேன்.

இல்லை…. சாமி….! எனக்குக் கால் நன்றாக ஆனது. அது போல் எல்லோருக்கும் நன்றாக வேண்டும் என்ற நிலையில் வருவார்கள்…! என்றார்.

சரிதானப்பா..! என்றேன்.

ஊருக்குப் போய்விட்டு நான் வருகிறேன்… என்று சொல்லிப் போனார். ஆனால் அதற்குப் பின்னாடி பத்துப் பதினைந்து நாள் ஆனது. ஆளையே காணோம்…!

அதற்குப் பின்னாடி ஒரு மூன்று வருடத்தில் காய்க்கும் தென்னை மரக் கன்றையும் ஒரு சீதா மரக் கன்றையும் வாங்கிக் கொண்டு இங்கே வந்தார்.

சாமி… நான் நன்றாக நடந்தேன் அல்லவா…! திருப்பதி வெங்கிடாசலபதிக்கு நான் வேண்டியிருந்தேன். “கால் நன்றாகி நான் நடந்தேன்” என்றால் அங்கே வந்து காணிக்கை போடுகிறேன் என்று வேண்டியிருந்தேன். ஒரு ஐம்பதினாயிரம் வரை அந்தப் பணம் இருந்தது.

இங்கிருந்து நிறையப் பேரைக் கூட்டிக் கொண்டு அங்கே போனேன். அவர்களுக்காகச் செலவழித்தேன். மீதி இருந்த இருபத்தி ஐந்தாயிரம் பணத்தை உண்டியலில் காணிக்கையாகப் போட்டேன்.

உங்களுக்கு ஞாபகார்த்தமாக இந்த தென்னை மரத்தையும் சீதா மரத்தையும் கொண்டு வந்துள்ளேன். இது மூன்று வருடத்தில் காப்புக் காய்க்கும்…! என்று சொல்லி என் கையாலே இங்கே ஊன்ற வேண்டும் என்றார்.

(அவர் ஊன்றி வைத்தார்… ஆனால் அடுத்து அது சரியாக வளரக்கூட இல்லை)

கட்டாயமாக அந்த மரக் கன்றுகளை ஊன்ற வேண்டும் என்று வைத்தார். அப்புறம் போனார்… வந்தார்.

சாமி… நடக்க முடியாத காலத்தில் நான் வெங்கிடாசலபதிக்குக் கோரிக்கை வைத்திருந்தேன்.
1.பாருங்கள்… நான் கால் சரியானவுடனே மலை மீது கிடு…கிடு…கிடு.. என்று ஏறிப் போனேன்.
2.எப்படிப் போனேன்…! என்று எனக்கே ஒன்றும் தெரியவில்லை.
3.எல்லோருக்கும் தாராளமாகச் செலவழித்துக் கூட்டிக் கொண்டு போய்விட்டு என் கோரிக்கையை நிறைவேற்றி வந்தேன் என்றார்.

மிகவும் நல்லதப்பா.. வெங்கிடாசலபதி தான் இதைச் செய்தார்… நீ அவனுக்குத் தான் செய்ய வேண்டுமப்பா…! என்றேன்.

அந்த வெங்கிடாசலபதி யார் என்று தெரியுமாப்பா..? என்றேன்.

என்னங்க..! “ஏழுமலையான்…” என்றார் அவர்.

ஏழுமலையான் என்றால் யார் தெரியுமா…! என்று கேட்டேன். ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக “ஒளியாக இங்கே பள்ளி கொண்டான் வெங்கிடாசலபதி…” என்று காரணப் பெயரை வைத்துள்ளார்கள்.

திருவேங்கிடம்…!
1.நமக்குள் இயக்குபவன் இந்த உயிர் தானப்பா..!
2.உன் உயிர் தான் இந்த நிலைகளை எடுத்து உருவாக்குகிறதப்பா…!
3.இவனை மறந்து விட்டாயே..!
4.நீ அங்கே கொண்டு போய் அல்லவா எல்லாம் செய்திருக்கிறாய்…! எத்தனை கஷ்டப்பட்டாய்…? என்றேன்.

இப்படிச் சொன்ன பிற்பாடு.. ஹும்…! உச்…! என்னமோ நான் கோரிக்கை வைத்திருந்தேன்… அதைச் செய்யவில்லை என்றால் அது என் மனைதை உறுத்திக் கொண்டேயிருக்கும். “அவனால் ஆனது” என்ற நம்பிக்கை இருந்தது… அதனால் அப்படிச் செய்தேன்…! என்றார்.

சரியப்பா.. போறும்…! என்றேன். இந்த மாதிரி நடந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பேர் இப்படி உண்டு…!

இங்கே வந்து சௌகரியமான பின் வெங்கிடாசலபதி காப்பாற்றினார்.. காளி காப்பாற்றினாள்… என்று அங்கே மொட்டை எடுத்துக் காணிக்கை செலுத்தி விட்டு வந்தேன் என்று சொல்கிறார்கள். ஒரு ஆட்டைக் கூட வெட்டிப் பலி கொடுத்தேன்…! என்பார்கள்.

ஆட்டை வெட்டிப் பொங்கல் வைக்கிறேன் என்று நான் நேர்த்திக் கடன் வைத்திருந்தேன். அதனால் அதைச் செய்தேன்…! என்று
1.தன் பாவத்தைப் போக்க இன்னொரு பாவத்தைச் சேர்க்கும் நிலை தான் உள்ளது.
2.இந்த நிலைகளில் தான் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

அடங்கப்பா..! நீ பாவம் செய்யாதே..! என்று இங்கே சொன்னால் பாவத்தை அல்லவா மீண்டும் சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள்.. என்று சொல்கிறோம்.

ஆனால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு தான் உள்ளது. ஏனென்றால் இன்னமும் பரம்பரை வழக்கங்கள் இங்கே இருந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் பிரகாரம் தான் நம்முடைய உணர்வுகள் இயக்குகிறது.

இதை எல்லாம் நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும்.

1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்துப் பழக வேண்டும்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை நீங்கள் கோவிலாக மதித்துப் பழக வேண்டும்.
3.மனிதனாக உருவாக்கிய அந்த அரும் பெரும் சக்தியான நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்துப் பழக வேண்டும்.

வேதனையோ சலிப்போ சஞ்சலமாகவோ அந்த உணர்வுகள் இந்த உடலான கோவிலுக்குள் போகாதபடி நாம் எப்படிக் கோவிலைச் சுத்தப்படுத்துகின்றோமோ அந்த மாதிரி அருள் மகரிஷிகளின் அருள் ஒளியை நம் உடலுக்குள் செலுத்தி நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நீங்கள் செய்யக்கூடிய சேவை..!

இன்றைய உலகில் பலருடன் பழகுகிறோம். எத்தனையோ விதமான உணர்வுகளை நீங்கள் பார்க்க நேர்கிறது. அந்தத் தீமையான உணர்வு உங்களுக்குள் வந்தால் அந்தத் தீமை தான் உங்களை இயக்குகிறது.

உதாரணமாக ஒருவன் உங்களைத் திட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். “என்னைத் திட்டினான்…திட்டினான்…!” என்று அதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால் உங்கள் ஆண்டவனுக்குத் தீங்கு செய்கிறீர்கள்…! என்று தான் பொருள்.

1.அதற்குப் பதில் திட்டியனுக்குள் இருக்கும் அறியாத இருள் அகல வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்
3.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
4.மனப்பூர்வமாக எண்ணினால் நீங்கள் அங்கே தெய்வமாகின்றீர்கள்.
5.உங்கள் எண்ணம் உங்களை உயர்த்துகிறது. உங்கள் மூச்சு அவர்களுக்கும் நல்லதாகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சிவன் இராத்திரி அன்று விரதம் இருப்பார்கள்.
1.ஆனால் எது விரதம்…?
2.தீமைகளை நுகராமல் இருப்பது தான் விரதம்.

சாப்பாடு சாப்பிடாமல் விரதம் இருக்கின்றேன் என்று உடலில் உள்ல நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அது எல்லாம் சோர்வடையும்.

சோர்வடைந்த நிலையில் என்ன நடக்கும்…?

ஏதாவது ஒரு சாமானை எடுத்து வரச் சொல்லியிருந்தால்.. அல்லது பிள்ளையிடம் சொல்லிக் கடையில் போய் வாங்கிக் கொண்டு வா..! என்று சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே பையன் வரச் சிறிது காலதாமதமாகி விட்டால் என்ன ஆகும்…?

டேய்… நான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றாயேடா…! என்று வேகமாகக் கோபம் வந்துவிடும்.

நீங்கள் விரதம் இருக்கும் பொழுது வெளியில் போய் ஒரு சாமானை வாங்கச் சொல்லி உங்களிடம் வந்து சொன்னால் உடனே… “உனக்கு இந்த நேரம் தான் கிடைத்ததா…? போடா…!” என்று விரட்டுவோம்.

அப்பொழுது எதை விரதமாக இருக்கின்றீர்கள்…!
1.நல்லதை வளர்க்காதபடி நாம் விரதம் இருக்கின்றோம்.
2.ஆக விரதம் என்றாலே நாம் என்ன என்றே தெரியாமல் இருக்கின்றோமே…!

விரதம் என்பது எது..? தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்து தீய அணுக்களாக விளையாதபடி தடுக்க வேண்டும். நல்ல அணுக்களுக்கு நாம் ஆகாரம் கொடுத்தல் வேண்டும்.

எதை…?

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்திலும் அந்த அருள் சக்தி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உடலுக்குள் செலுத்தி நல்ல அணுக்களுக்கு இந்த உணவைக் கொடுக்க வேண்டும்.

சண்டை போட்ட குடும்பங்கள் இருக்கும். அவர்கள் உணர்வை நாமும் நுகர்ந்திருப்போம். சண்டையிட்டதை நுகர்ந்தது நமக்குள்ளும் இருக்கும். அப்பொழுது அவர்களும் நாமும் பிரிந்து இல்லை.

அதே மாதிரி ரோட்டில் போகும் பொழுது ஒரு பிச்சைக்காரன் அவஸ்தைப் பட்டிருப்பான். பரிவுடன் அதைக் கேட்டறிந்து அவனைக் காப்பாற்றியிருப்போம்.

அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நாம் நுகர்ந்த பின்னாடி ஓ…ம்… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலில் சேர்த்து விடுகிறது. அப்பொழுது அவனும் நாமும் பிரிந்தில்லை.

அப்பொழுது அந்த உணர்வுகள் அணுவாகி விட்டால் அவன் உணர்வுகள் இங்கே வந்ததும் என்ன செய்யும்…? நம் உடலிலும் அந்த அவஸ்தைப்படும் அணுக்களைப் பெருகத் தொடங்கிவிடும்.

நாம் உதவி தான் செய்தோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. ஆனால் அதை நமக்குத் துடைக்கத் தெரியவில்லையே…!

நல்லது செய்யும் நிலையில் நம்மை அறியாமல் இந்த மாதிரி நமக்குள் வரும் தீமைகளைத் துடைப்பதற்குத்தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள்.

1.நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…? என்பதற்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள்
3.உலகிலேயே வேறு எங்கும் இத்தகைய நிலைகள் கிடையாது,
4.இயற்கை எப்படி இயங்குகிறது… எப்படி விளைந்தது…? என்று
5.சூட்சம நிலைகள் (கண்ணுக்குத் தெரியாதது) நம்மை எப்படி இயக்குகிறது என்று
6.உருவம் அமைத்து அருவ நிலைகளை நாம் எப்படி நுகர வேண்டும் என்பதை
7.நினைவுபடுத்தும் ஆலயமாகத் தான் அன்றைய ஞானிகள் அதற்குள் உருவங்களை வைத்தார்கள்…!

ஆனால் அந்த உருவங்களை நாம் இன்று அவமதிக்கின்றோம். தெய்வங்களைப் பார்த்து ஆசைகளைத் தான் பெருக்குகின்றோமே தவிர
1.தன்னை அறியாது வந்த தீமைகளைப் போக்கும் ஆலயம் என்று எண்ணுவதில்லை.
2.தீமைகளைத்தான் சேர்த்துக் கொள்கின்றோமே தவிர தீமைகளை நீக்கும் அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் இல்லை.

சிவன் இராத்திரி அன்று நாம் என்ன செய்ய வேண்டும்…?

முதலில் சொன்ன மாதிரி ரோட்டில் எத்தனையோ உணர்வுகளைப் பார்த்திருப்போம்… ஒருவருக்கொருவர் சண்டையிட்டவர்களைப் பார்த்திருப்போம்… அந்த நினைவுகள் வரும்.
1.அவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
2.அவர்களை அறியாது இயக்கும் இருளிலிருந்து விடுபட வேண்டும்.
3.மகிழ்ந்து வாழும் சக்தி அவர்கள் பெற வேண்டும்.

இப்படி இந்த நினைவுகளை எல்லாம் அன்றைய நாள் முழுவதும் கூட்டி நல்லதாக நமக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமைகளையே நுகராதபடி… விரதம் இருப்பது என்பது இது தான்…!

மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் “ஞானப் பாதை” அடைபட்டுவிடும்

 

நட்பாக இருக்கிறோம் என்றால் நம்மிடம் ஆயிரம் கஷ்டத்தைச் சொல்வார்கள். அதையெல்லாம் உ…ம் கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்போம். அது நம் நல்ல அறிவை மூடிவிடும்.

1.கஷ்டத்தைக் கேட்டுக் கொண்டிருந்தால் என்றால் அது இருள் சூழ்ந்த நிலைகள்.
2.யாம் பதிவு செய்த ஞானிகள் உணர்வுகளை மூடி மறைத்து விடும்… நினைவுக்கு வராது.

ஆகவே… யாம் பதிவு செய்த ஞானிகள் உணர்வு உங்கள் நினைவுக்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்று அருள் ஞானியான அகஸ்தியன் தனக்குள் எடுத்த உணர்வின் தன்மை
1.அவன் இருண்ட உலகையும் கண்டான்… அது ஒளி பெற்ற உணர்வையும் கண்டான்… இந்தப் பிரபஞ்சத்தையும் கண்டான்.
2.அவனில் விளைந்த உணர்வுகள் அந்தந்தத் தொகுதிகளில் இதை இணைத்து விட்டால்
3.அவன் எவ்வாறு தன் தன் தொகுதிகளில் தீமைகளை நீக்கினானோ
4.ஒவ்வொரு வளர்ச்சியின் நிலைகள் ஒன்றோடு இணைக்கப்படும் போது வளராது தடுக்கும் நிலைகளை அவன் அகற்றினானோ
5.தனக்குள் தன்னைக் கண்டு உணர்வின் ஆற்றலாக எப்படிப் பெருக்கினானோ அதை நாமும் பெற முடியும்.

அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குவது.

ஆக… மற்றவர்கள் படும் வேதனைகளை நுகரக் கூடாது. மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் அவர்கள் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் அவர் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று
1.“அவர் பெற வேண்டும்” என்று எண்ணினால்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சி பெறுகின்றது.

பாசத்தால் பரிவால் பண்பால் அதைக் கேட்டறிந்தோம் என்றால் அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தால்… மூச்சே விடாதபடி கஷ்டத்தையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இந்நேரம் வரை யாம் பதிவு செய்ததை மறந்து விடுவீர்கள். நல்ல அணுக்களின் தன்மையை மாசுபடுத்தி விடும்.

குப்பைக்குள் மாணிக்கம் மறைந்திருந்தால் வெளியிலே வெளிச்சம் தெரியுமோ…? காரணம் அந்தக் குப்பை அடர்த்தி ஆகிவிடுகின்றது.

சூரியனின் ஒளிக் கதிர்கள் வெயில் அடிக்கும் பொழுது தெரிகின்றது. ஆனால் இங்கிருக்கும் தூசிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அதை மறைத்து விட்டால் சூரியனின் வெளிச்சம் தெரிவதில்லை… இருண்டு விடுகின்றது.

இதைப்போல் உயிரால் உணர்வின் ஒலிகள் நமக்குள் வரப்படும் பொழுது பிறர்படும் துயரத்தை அதிகமாகக் கேட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் தூசி போன்று நம்முடைய ஒளியையும் மங்கச் செய்கின்றது.

யாராவது உங்களிடம் கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள் என்றால்
1.அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்களுக்குள் பொருள் காணும் சக்தி பெருகும் உங்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெறுவீர்கள் என்று சொல்லி விடுங்கள்…
3.திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்…. உங்களுடைய உணர்வுகள் தான் அங்கு அதிகமாக வர வேண்டும்,
4.இந்த உணர்வுகள் பதிவானால் அவருடைய இருளைப் போக்க உதவும்.

இல்லை என்றால் அந்தக் குப்பை நம்மை மூடி விட்டால் நம்முடைய ஒளியை அது மங்கச் செய்துவிடும்.

நான் எவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வைப் பதிவு செய்தாலும் மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் இப்படி வந்துவிடும்.

குடும்பங்களில் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து இருப்பார்கள். சந்தர்ப்பத்தில் அவர்கள் இம்சைப்படுவார்கள். கணவன் அவருடைய சாப அலைகளால் நன்மை ஏற்பட விடாதபடி மனைவிக்குப் பல தீமைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.

அந்தச் சாப அலைகளின் இயக்கம் வரும் போது பெண்களை மகிழ்ச்சியாக அங்கே வாழ விடாது செய்யும். நாம் கட்டிக் கொடுத்த பெண் அங்கே வேதனைப்பட்டால் நம் நிலை எப்படி இருக்கும்…?

அந்த உனர்வின் வேகங்கள் கூடும் போது பொழுது நான் இருளைப் போக்கும் நிலையாக உயர்ந்த சக்தியைக் கொடுத்தாலும் அதை மறைத்து விடும். நல்லதை எடுக்கும் திறன் இழந்து விடுவோம்.

நான் செய்தேன்… இருந்தாலும் என்னால் எங்கே முடிந்த்து…? எதை எடுப்பது…? என்ன செய்வது…? என்று முடியாத நிலைகள் வந்த பின்… அடுத்தாற்போல் என்ன நினைப்பார்கள்…!

செத்த பிற்பாடு என்ன ஆகப் போகின்றோம்…? போகட்டும் போ…! என்று இந்த உணர்வின் தன்மை சோர்வடைந்து சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது. ஆகவே… இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே வருகின்றது.

மற்றவரிடத்திலோ நண்பரிடத்திலோ உறவினர்களிடத்திலோ இதைச் சொல்லும் பொழுது இந்த உணர்வின் வேகங்கள் கூடும். அந்த நண்பன் தியான வழியில் இருந்தாலும் இந்த வளர்ச்சி அதிகமாகப் போகும் பொழுது இதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்துவிடும்.

இந்நேரம் வரை உபதேசித்த உணர்வின் ஆற்றலை…
1.அகண்ட உலகையும் இருண்ட நிலைகளை நீக்கிய உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியை இவ்வளவு தூரம் உபதேசித்து
2.பல வருடம் யாம் கஷ்டப்பட்டு வளர்த்த உயர்ந்த வித்தை உங்களுக்குள் ஊன்றினாலும் இதை அது மறைத்து விடும்…
3.சோர்வும் விரக்தியும் தான் ஏற்படும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குக் “கூடுமானவரை மற்றவருடைய துன்பங்களைக் கேட்டறிவதைத் தவிர்க்க வேண்டும்…”

அப்படி அவர்கள் சொன்னாலும் அடுத்த கணமே மகரிஷியின் அருள் ஒளி நீங்கள் பெறுவீர்கள் குடும்பத்தில் இருள் நீங்கும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெறுவீர்கள் என்ற இந்த உணர்வினைத் திரும்பத் திரும்ப எண்ணி எடுத்தல் வேண்டும்.
1.நாம் எடுத்த நல்ல உணர்வை அவர்கள் உணர்வு மறைத்திடாது
2.நினைவு கொண்டு அதை நாம் மாற்றுதல் வேண்டும்.

ஒரு சிலர் கஷ்டம் வந்து விட்டால் அதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். உங்களுக்குள் அது வரப்படும் போது அதனால் சோர்வடைந்து நீங்கள் போகும் பாதையை தடைப்படுத்தி விடும்.

அவ்வாறு ஆகாதபடி தடுப்பதற்குத் தான்
1.யாம் உபதேசம் கொடுக்கப்படும் பொழுது அந்த இருளான நிலைகளை இது மறைக்கும்.
2.அப்படி மறைத்துத் திரும்ப இந்த உயர்ந்த உணர்வுகளை அதனுடன் இணைத்து மீண்டும் இயக்குவது.
3.தீமை உங்களுக்குள் அடைத்திடாது அதை அகற்றும் உணர்வுகளை “அடுக்கடுக்காகச் செயல்படுத்திக் கொண்டே வருவது…”

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு எம்முடைய உபதேசங்களை அடிக்கடி நீங்கள் கேட்டுப் பதிவாக்கி… உங்கள் நல்ல அறிவை எந்த்த் தீமையும் மறைத்திடாது… வளர்ச்சியின் பாதையிலே தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதற்குத்தான் “திரும்பத் திரும்ப இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…”

“வேதனை அதிகமாக இருக்கும் நேரத்தில் தான்” பேராற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்க முடியும்

 

அன்று மெய் ஞானியான அகஸ்தியன் மனித உடல் அது எப்படி உருப்பெற்றது…? என்பதனைத் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் கொண்டு ஒவ்வொன்றாகத் தனக்குள் வளர்ச்சியாகித் “தன்னை அறிந்தான்…” தனக்குள் விளைந்த உணர்வின் வலுக் கொண்டு “அகண்ட பேரண்டத்தையும் அறிந்தான்…”

அவனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அதனை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது இயற்கையின் உண்மையின் வளர்ச்சியை உங்களுக்குள் வலுவாக்கி அதன் உணர்வால் உருவாக்கும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.

1.நமது குருநாதர் அவர் உருவாக்கியது போல அவர் நமக்குள் உருவாக்கிட
2.அவரைப் போன்றே நினைவினை நான் செலுத்தப்படும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை கருவாக்கி உருவாக்கும் அந்த வலிமை பெறுகின்றது.
4.அதே வலிமையின் உணர்வுகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகச் சொல்லப்படும் பொழுது
4.நீங்கள் கூர்மையாகக் கவனித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி இந்த நினைவினை உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.
5.ஆகவே… நம்முடைய நினைவாற்றல் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவன் வழி செல்ல வேண்டும்.

நம்முடைய எல்லை எது…?

துருவன் பெற்ற அந்த எல்லையை அடைய வேண்டும் என்ற நினைவைக் கூட்டினால் இதனின் வரிசைத் தொடரில் அது வளர்ச்சியாகி பிறவி இல்லாத நிலை அடைந்து அந்த எல்லையை நாம் அடைகின்றோம்.

இல்லை…! என்னை இப்படிப் பேசினான்… அப்படிச் செய்தான்…! என்ற இந்த உணர்வினை வளர்த்துக் கொண்டால் இதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி… இந்த வேதனை நம்மை மீண்டும் கீழான நிலைகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.

இதனின் வளர்ச்சி அதிகமாகி விட்டால் இப்போது உபதேசித்த இந்த உணர்வுகளை அது மேலே மூடிவிடும்.

ஆக… அப்படி ஆகாதபடி ஊழ் வினையாக இந்த உபதேச வாயிலாக அதை அமுக்கச் செய்து… இந்த உணர்வினை அணுவாக்கப்படும் பொழுது உங்களுடைய நினைவின் ஆற்றல் அந்த மெய் ஞானி சென்ற பாதையில் செல்லும்.

இந்தக் காற்று மண்டலத்தில் மனிதனின் இச்சை கொண்ட உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.உங்கள் உடலுக்குள் தீமை இயக்காது அதை இது மறைத்துவிடும்.

குப்பைக்குள் ஒரு மாணிக்கம் கிடந்தால்… மாணிக்கம் இருக்கிறது என்று கண்களுக்குத் தெரியுமா…? அந்தக் குப்பையை நீக்கி விலக்கிப் பார்த்தால் தான் அதற்குள் இருக்கும் ஒளிகளை நாம் காண முடியும்.

இதே போல இப்பொழுது உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அருள் ஒளியின் உணர்வுகளை…
1.குப்பையைப் போன்று வாழ்க்கையில் அதனைக் கொண்டு மூடி மறைத்து விட்டால்
2.அந்த ஒளியின் தன்மை மின்னும் நிலையோ அதன் உணர்வின் தன்மை பளிச்சிடும் நிலையில்
3.அதன் அருகில் இருக்கக்கூடிய பொருளைக் காணும் நிலையோ தடுக்கப்படுகின்றது காண முடியாது.

ஆகவே அதைக் காணும் ஆற்றல் கொண்ட ஞானிகள் உணர்வினை இப்பொழுது பதிவாக்கி… அகண்ட பேரண்டத்தின் நிலைகளையும் துருவன் கண்ட நிலைகளையும் அவனில் அறிந்துணர்ந்ததையும் பெற்று… இனி எந்த இருளிலும் சிக்காது ஒளியின் தன்மையாக மாற்றிய உணர்வுகள் உங்களில் விளைய வேண்டும் என்பதற்குத் தான் உபதேசிக்கின்றேன்.

குருநாதர் எமக்குள் அதனை உருவாக்கினார்… அதை வளர்த்துக் கொண்டே இருக்கிறேன்.
1.அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கின்றேன்.
2.நான் பெற வேண்டும் என்று அல்ல நீங்கள் பெற வேண்டும் என்று…!

“அந்த உணர்வின் ஒளியாக நீங்கள் பெற வேண்டும்” என்று ஏங்கப்படும் பொழுது
1.உங்களிடம் இருக்கக்கூடிய தீமைகளை நான் எண்ணுவதில்லை.
2.உங்களை அறியாது இயக்கும் கஷ்டங்களை நான் எண்ணுவதில்லை.
3.உங்களை அறியாத வந்த நோய்களை நான் எண்ணுவதில்லை.

யாம் உபதேசித்த வழியில் நீங்கள் அந்த அருள் ஞானத்தைப் பெற்றால் அந்தத் தீமைகள் அனைத்தும் அகன்று ஓடிவிடும்.

1.உங்களுக்குள் இருக்கும் கஷ்டத்தையும் துன்பத்தையும் நான் அறிய முற்பட்டு அதை அறிந்து கொண்டிருந்தால்
2.இந்த உணர்வின் தன்மை எனக்குள் இது தான் அதிகமாக வளரும்.

ஆகவே நாம் எண்ண வேண்டியது என்ன…? “தனக்குள் நோய் வந்தாலும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை வளர்த்தல் வேண்டும்.

அதே சமயத்தில்
1.எது எவ்வளவு வேதனையாகின்றதோ அந்த நேரத்திலே
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
3.இருளாக்கும் தீய வினைகள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் தனக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குருநாதர் அவர் ரிக் வேதத்தைத் தெளிவாகத் தலைகீழாகப் பாடுவார். வேதங்கள் என்றால் என்ன…? என்பதை தெளிவாகச் சொன்னார். அவரும் பிராமணர் தான்.

இதை எனக்குத் (ஞானகுரு) தெரியப்படுத்துவதற்காக ஒரு நாள் குருநாதர் என்ன செய்தார்…?

ரிக் வேதத்தைச் சொல்லிக் கொடுக்கும் ஒரு வாத்தியார் நாங்கள் இருக்கும் தெருப் பக்கமாக நடந்து வந்தார்.

வந்தவுடனே… இங்கே வாடா…! என்று கொச்சையான வார்த்தையால் அவரைத் திட்டி அப்படியே குடுமியைப் பிடித்துத் தூக்கினார் குருநாதர்.

அடுத்து… ஏண்டா இப்படித் தப்பு செய்தாய்…? என்று ஓங்கி ஒரு அறை கொடுக்கின்றார்…! அந்த ஆள் முழிக்கின்றார். அவர் முழித்தவுடனே…
1.அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாய் அல்லவா…?
2.அது எப்படி என்று இப்பொழுது திருப்பிச் சொல்லு… என்கிறார் குருநாதர்.

வாத்தியார் பெ…பே…! பெ… பே…! என்கின்றார்.

சொல்லத் தெரியவில்லை என்றதும்… குருநாதரே சொல்கின்றார்
1.அப்படியே சொல்லித் தலைகீழாக கட…கட..வென்று மறுபடியும் மேலே ஏற்றுகிறார்.
2.ஒரு சொல் கூட… அந்த நாதம்… சுருதி மாறாமலே பாடியவுடனே
3.அந்த வாத்தியார் திரு…திரு…திரு… என்று முழிக்கின்றார்.

ஆனால் எனக்கு இது எல்லாம் ஒன்றும் தெரியாது. என்னமோ சொல்கின்றார்… என்னவோ உளர்கின்றார்..! என்று தான் நான் (ஞானகுரு) நினைக்கின்றேன்,

ஏனென்றால் அந்த வேதங்களைப் பற்றிப் பேசுவது அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரிகிறது. அடிவாங்கிய பின் இனிமேல் தப்பு செய்யக் கூடாது…! என்று சொன்னவுடன் சரி…! என்று அவர் போய்விட்டார்.

இவன் திருட்டுப் பயல்… காசு வாங்குவதற்காக மந்திரத்தையே தப்புத் தப்பாகச் சொல்கின்றான்…! என்றார் குருநாதர்.

பின்பு அடுத்த நாள் அந்த ஆள் அடி வாங்கியவர் என்னிடம் வந்தார்.
1.சாமி…! இவர் மனிதனே இல்லை… இவர் ஒரு ரிஷி பிண்டம்…
2.எப்படி நீங்கள் இவரைப் பெற்றீர்கள்…?
3.இந்த வேதத்தை யாரும் சொல்லவே முடியாது
4.சொற் பிழை இல்லாமல் அந்தச் சுருதியுடன் சொல்கின்றார்…!

“அவர் என்னை அடித்தார்………! நான் செய்த தப்பெல்லாம் ஓடியே போய்விட்டது………!” இனிமேல் நான் இந்த மந்திரம் சொல்லும் வேலைக்குப் போகவே மாட்டேன் என்றார்.

அந்த ஆள் உடுப்பி. நான் என் ஊருக்கே செல்கிறேன் என்றார்.

உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம்… அவரைக் (ஈஸ்வரபட்டரை) குருவாக நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்…! என்று கூறிவிட்டு எனக்கு நீங்கள் ஆசிர்வாதம் கொடுங்கள்… நான் ஊருக்குச் சென்று ஏதாவது வேறு தொழில் செய்து கொள்கின்றேன்…! என்றார்.

நான் சமையல் செய்து ஒரு ஓட்டல் கடை வைக்கலாம் என்று விரும்புகிறேன். நான் செய்யும் சாப்பாடு ருசியாக இருக்க வேண்டும் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள் சாமி…! என்றார்.

அப்புறம் அவரிடம் ஆசீர்வாதம் செய்து ஒரு ரூபாயைக் கையில் கொடுத்துவிட்டுப் போய்விட்டேன். இது நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால்…
1.குருநாதர் அத்தனை நிலைகளையும்
2.அவர் எந்தெந்த வழியில் தெரிந்து இருக்கின்றார் என்ற நிலையை
3.நான் அறியவில்லை என்றாலும் என்னை அறிய வைக்கின்றார்.

அதே சமயத்தில் குருநாதர் என்ன எல்லாம் செய்வார் தெரியுமா…!

டெலிபோன் கம்பத்தை அடிப்பார்… எலக்ட்ரிக் கம்பத்தில் அடிப்பார் இந்த லயன்… அந்த லயன்.. இந்த லயன்.. அந்த லயன்…! (LINE) என்று சொல்லிக் கொண்டே வருகின்றார்.

இவர் என்னத்தைக் “கிரகத்தைச் சொல்கிறார்… பைத்தியம் பிடித்தது போல் எதையோ கூறுகின்றார்…!” என்று நான் எண்ணிக் கொண்டிருப்பேன்.

ஒன்றும் புரியாது.

டேய்…! மிளகாய் ஒரு லட்சம் கோடி…! கோடி..கோடி…கோடி…! என்று சொல்வார். குருநாதர் தெலுங்கு மற்றும் எல்லா பாஷைகளிலும் பேசுவார்.

கோடி இங்கே இருக்கின்றது சாமி…! என்றேன்.

டேய் அந்தக் கோடி இல்லைடா… “ஈ கோடிடா…” என்பார். இப்படி மிளகாய் கோடி… அந்தக் கோடி… காரம் கோடி…! அது…இது… என்று என்னனென்னமோ கோடி… கோடி…! என்று சொல்லுவார்.

எனக்கு அர்த்தம் புரியவே இல்லை. இந்த லயன் அந்த லயன் இந்த லயன் அந்த லயன்…! என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அப்புறம் அந்த உணர்வுகள் எல்லாம் சொன்ன பிற்பாடு…
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் (ஒளிக் கற்றைகள்) ஒன்றோடு ஒன்று கலந்து
2.அந்த உணர்வுகள் எத்தனை “கோடியாக” மாறுகின்றது…?
3.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது…?
4.எதன் செயலை இது மாற்றுகின்றது…? (அப்படி என்றால் அது “அந்த லயன் – LINE)

மின்னலாக வெளிப்படும்போது இந்த உணர்வுகள் எதனுடன் எது எப்படிச் சேர்கின்றது…? உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையை “உள்ளுணர்வில் உணர்த்துகின்றார்…!”
1.அதாவது முதலில் சொல்கின்றார் (புரியாதபடி)
2.பின்பு புரிய வைக்கின்றார்.

இப்பொழுது உங்களிடம் அதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கின்றேன். எனக்குக் குருநாதர் எப்படிச் சொல்லிப் பதிவு செய்தாரோ… அதை உங்களிடமும் பதிவு செய்கின்றேன்.

உங்களுக்குச் சந்தர்ப்பம் வரும் பொழுதெல்லாம் இந்த நினைவுகள் வரும். தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இது உங்களுக்குள் வரும்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகத்தில் உலகமே விஷத் தன்மையாக மாறும் இந்த நேரத்தில் அந்த விஷத்தையே வெல்லக்கூடிய சக்தியாக நீங்கள் பெற வேண்டும். உங்கள் மூச்சு பிறரைக் காக்க வேண்டும்.

அத்தகைய சக்திகளைப் பெறுவதற்குத்தான் இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை
2.குருநாதர் உணர்வுதான் பேசுகின்றது
3.அந்த உணர்வு தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றது.

இதை நிலைநிறுத்தி… உங்களுக்குள் அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால்
1.உங்களையும் காக்கின்றீர்கள்
2.நாட்டையும் காக்கின்றீர்கள்
3.மக்களையும் காக்கின்றீர்கள்
4.இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்…!

உங்களுக்குள் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தினை மீண்டும் மீண்டும் நீங்கள் எண்ணினால் உங்களுக்குள் நிச்சயம் அது வரும்… வளரும்…!

எமது உபதேசங்களைப் படித்து… அதனின் நினைவாற்றலைக் கூட்டிக் கொண்டு தியானிக்க வேண்டும்

 

தாய் கருவிலே வளர்ந்த அந்த உணர்வின் ஆற்றல் தான் நஞ்சின் தன்மையை அடக்கும் சக்தியாக சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து…
1.அகண்ட பேரண்டத்தில் வரும் நஞ்சின் இயக்கத் தொடரைக் காணும் திறன் பெற்றான் துருவன் (அகஸ்தியன்).
2.அவனில் விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
3.ஒவ்வொரு நொடியிலும் உங்களைச் சாடும் தீமையான உணர்வுகளை அது மாற்றிக் கொண்டே இருக்கும்.

இப்பொழுது இதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். அடுத்து நீங்கள் வேறு பக்கம் செல்லும் பொழுது என்ன நடக்கிறது…?

யாரும் உங்களைத் திட்டவே வேண்டாம். சும்மா இருக்கும் போது ஒருவன் மற்றவனைக் கடுமையாகச் சாடிப் பேசுகின்றான். அதை நாம் கேட்க நேர்கின்றது அந்த ஒலிகள் பட்டு அதைச் சுவாசித்த பின் நம்மை அறியாமலே அதே உணர்வுகள் இயக்கி விடுகின்றது… அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

இது ஒரு பக்கம்.

இன்னொருவன் கடுமையான ஆயுதத்தைக் கொண்டு மற்றவனைத் தாக்குகின்றான். அடிபட்டவன் அலறி ஓடுகின்றான். அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குப் பதட்டமாகின்றது. நம்மை அறியாமலே நடுக்கமும் பயமும் வருகின்றது.

அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. ஆனால் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் ஓ… என்று ஜீவணுவாக மாற்றித் தன்னுடன் அரவணைத்துக் கொள்கிறது.

பின் அவனில் விளைந்த உணர்வின் தன்மை நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கப்படும் பொழுது வினைக்கு நாயகனாக… நினைவு வரும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் தூண்டிக் கொண்டே இருக்கின்றது.

நினைவு வரும் போது இயக்கினாலும் நினைவு இல்லாத பொழுது அதனுடைய வலிமை என்ன செய்யும்…?
1.புலனடங்கிச் சாந்தமாக… வேலை இல்லாது அமைதியாக ஒரு இடத்திலே உட்கார்ந்து இருந்தோம் என்றால்
2.இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அது வலிமை பெற்றுவிடும்.
3.அடுத்து எந்த வேலைக்கும் போக விடாது…! பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடும்
4.நுகர்ந்த உணர்வு அதனுடைய வளர்ச்சி அதிகமாகும் பொழுது இப்படி இயக்கத் தொடங்குகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

சில குடும்பங்களில் வளர்ச்சி பெறும் குழந்தைகளின் உள்ளங்களில் இது போன்ற உணர்வுகளைக் கண்டு விட்டால் அது இயக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.

நீங்கள் நுகர்ந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து… யாருடன் பேசினாலும் கேட்போர் உணர்வுகளிலும் அந்த அருள் உணர்வுகள் பதிவாகி அவர்களையும் இருள் சூழ்ந்த நிலையிலிருந்து மீட்டிடல் வேண்டும்.

அத்தகைய நிலைகள் உங்களுக்குள் வந்தால் பிறிதொரு உணர்வுகளை உங்களுக்குள் இந்தத் தீமை நம்மை இயக்கிடாது அதை அடக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான்
1.அருள் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினையாக உங்களுக்குள் பதிவாக்கி
2.அந்த உணர்வின் வலிமை பெறச் செய்வது.

இந்த நினைவை நாம் வளர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

கூட்டுத் தியானங்களில் யாம் வெளிப்படுத்திய உபதேசக் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களை எடுத்து அடிக்கடி படிக்க வேண்டும். கேட்டது நினைவில் இல்லை என்றாலும் அது வலுப்பெறுவதற்கு
1.அந்த அருள் ஞான நூல்களை மீண்டும் படிக்க வேண்டும்… நினைவாற்றலை மீண்டும் பெருக்க வேண்டும்.
2.கூட்டமைப்பில் மற்றவர்கள் செவிகளிலும் இது கலக்கப்பட வேண்டும்.
3.தியானத்தில் ஒருவர் இன்று படித்தார் என்றால் அடுத்து மற்றொருவரைப் புத்தகத்தைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அவருக்குள் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் கலக்கின்றது. கூட்டமைப்பில் எல்லோரும் சேர்த்துத் தியானிக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட பயத்தால் ஒரு சிலர் பயமான உணர்வுடன் இருப்பார்கள். அப்போது மனிதனை உருவாக்கிய மகிழச் செய்யும் அணுக்கள் பலவீனம் அடையப்படும் பொழுது… தனக்குள் இனம் புரியாதபடி நோய்கள் வருவதும் பிறர் வேதனைப்படும் உணர்வுகள் சிறுகச் சிறுக வந்து கடும் நோயாக விளையச் செய்து… நம்முடைய நினைவுகளை திசை மாற்றிக் கொண்டிருக்கும்.

அது போன்ற நிலைகளை நாம் அடக்க வேண்டும் என்றால்… அதற்கு அவசியம் யாம் வெளிப்படுத்திய அருள் ஞானப் புத்தகங்களை எடுத்துப் படியுங்கள்.
1.ஒரு பத்து பேர் இருந்தாலும் படிக்க வேண்டும்… ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் படியுங்கள்.
2.ஒருவரே என்று இல்லாதபடி தினமும் ஒருவரைப் படிக்கச் சொல்ல வேண்டும்.

அது போன்ற கூட்டமைப்பாக அமைத்துத் தியானித்து முடிந்த பின் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்… அவர் உடலில் அறியாது சேர்ந்த தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வினை அனைவரும் சேர்த்து அந்தப் பயந்தவரின் செவிப்புலனில் இயக்கப்படும் பொழுது வலிமை மிக்கதாக இது மாறி அவர் உடலில் இருக்கக்கூடிய பிணிகளை நீக்கும்.

தனித்த நிலையில் யாரும் இதைச் செய்ய வேண்டாம். காரணம்… ஒருவருக்குக் கடுமையான நோய் இருந்தாலும் அல்லது இன்னொரு ஆவி உடலுக்குள் புகுந்து இருந்தாலும் அதனுடைய வேகம் அதிகமாக இருக்கும்.

அதனுடைய உணர்ச்சிகளை பார்க்கப்படும் பொழுது அங்கிருக்கும் வெறுப்படைந்த உணர்வுகள் வேகத்தின் உணர்வுகள் அதற்கு வலு ஜாஸ்தி.
1.நமக்குள் நல்லதை எடுக்க விடாது முன் பகுதி இருந்து கொண்டு தடைப்படுத்தும்.
2.நல்ல உணர்வுகளை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது…?
3.இதைப் போன்ற வருவதைத் தடைப்படுத்துவதற்கு கூட்டமைப்பின் தன்மைகளை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

நாம் நுகரும் உணர்வின் தன்மை உயிலே பட்டுத் தான் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் செல்லும். ஆக அந்த்த் தீமை புகாது தடுப்பதற்குத் தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வலுப்பெறச் செய்து உங்கள் வலிமையைக் கூட்டுகின்றோம்.

ஆனால் இந்த வலிமை வருவதற்கு முன் தீமையின் வலு சேர்ந்து விட்டால் நல்லது நமக்குள் வராதபடி ரிமோட்… தள்ளிவிட்டுக் கொண்டே இருக்கும். அப்போது நல்லதை நுகர்வது எங்கே…? அந்த அறிவின் ஞானம் வருவது எங்கே…? இந்த வலிமையைப் பெறுவது எங்கே…?

ஆக நாம் எண்ணியதை உயிர் எவ்வாறு இயக்குகின்றது…? என்பதை நீங்கள் அறிவதற்குத் தான் அகஸ்தியனைப் பற்றிச் சொல்வது. அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அணுவின் ஆற்றலை அறிந்தவன்… நஞ்சை ஒடுக்கியவன்… ஒளியின் சுடராக இருப்பவன்…! அதை நாமும் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். சாமி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று எண்ணுவார்கள்.
1.உங்களுக்குள் அதை இணைத்து “அவர்கள் பெற்ற வளர்ச்சியை” உங்களுக்குள் நினைவுபடுத்தியே ஆக வேண்டும்.
2.அப்போது அந்த உணர்வின் “தொடர்வரிசையாக” மீண்டும் உங்களுக்குள் அது இயங்கும்.

பலகாரம் சுடுபவர்கள் ஒரு தரம் மாவைப் போட்டுப் பிசைந்தார்கள் என்றால் அடுத்தடுத்து அதே மாவைப் போட்டுப் பிசைந்து சுட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஏன் இப்படி திரும்பத் திரும்ப மாவைப் பிசைகின்றார்கள் என்று சொல்லக்கூடாது. முதலில் போட்ட அதே அளவுகளை மீண்டும் போட்டு அதைக் கொண்டு வரும் பொழுது தான் அதே ருசி… அதே மணம்… எல்லாமே ஒன்று போல் வரும்.

அவர்கள் எப்படிப் பலகாரங்களை மீண்டும் மீண்டும் சுவையாகச் சுடுகின்றார்களோ இதைப் போன்று தான் ஒவ்வொரு சமயத்திலும்
1.அந்த அருள் உணர்வுகளைச் சுவை மிக்கதாக வளர்த்ததை உங்களுக்குள் இணைத்து
2.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டி
3.அதை வளர்க்கச் செய்வபதற்குத் தான் திரும்பத் திரும்ப யாம் சொல்வது.

அதாவது… பிறிதொரு உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே கலந்துவிடாதபடி
1.அருள் உணர்வுகளைக் கூட்டி மற்ற தீமையின் வலுவைக் குறைக்கச் செய்வதற்கு தான் இவ்வாறு செய்வது.
2.எமது குருநாதர் எனக்கு இப்படித்தான் செய்தார்… அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்வதும் திரும்பத் திரும்பச் சொல்வதும்.

ஏனென்றால்
1.இந்த மனித உடல் நமக்குச் சதமானது அல்ல.
2.உயிர் தான் சதம் என்று நமக்குத் தெரிகின்றது.
3.அதனுடன் உணர்வுகளைச் சதமாக்கி இன்னொரு உடலுக்குள் புகுந்து விடாது அழியா ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

அதற்குத் தான் பல வகைகளிலும் உங்களுக்கு விளக்க உரையாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

யுதர்கள் ஆதாம் ஏவாள் என்ற நிலைகளைச் சொல்கின்றார்கள். ஆதாம் என்றால் பூமி… ஏவாள் என்றால் இயக்கம்…!

ஆண் பெண் என்று இங்கு பூமியிலே ஆதியில் தோன்றினார்கள். ஆண் பெண் ஆன பின் விஷத் தன்மை இருக்கும் பக்கம் போக வேண்டாம்..! என்று ஆண்டவன் கூறினார்.

ஆனால் அந்த விஷத்தை உறிந்த பின் அதற்குத் தண்டனையாக பாம்புகளாகப் பிறந்தார்கள்… அதுவாகப் பிறந்தார்கள்…! என்று அவன் சொல்கின்றான்.

ஏனென்றால் இதே தத்துவத்தை இங்கே நம் நாட்டிலே அன்றே சொன்னார்கள். சக்தி சிவமாகின்றது என்று…!

ஆதியிலே ஒரு சமயம் அகஸ்தியன் வாழ்ந்து வளர்ந்த காலங்களில் பூமியின் தன்மை முட்டை வடிவில் வருகின்றது… எப்படி…? அதாவது பனிப்பாறைகள் அங்கே உறையப்படும்பொழுது அது பூமி திரும்பும் தன்மை வருகின்றது எடை கூடும்போது…!

அப்பொழுதுதான் தெற்கில் போ…! என்று அகஸ்தியனைப் போகச் சொன்னதாகக் காவியங்கள் உண்டு.

அந்த உணர்வுக்கொப்ப சூரியனை எண்ணி ஏங்கி இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உறைந்த பனிப்பாறைகளைக் கரையும்படி செய்கின்றான்… அகஸ்தியன். ஏனென்றால் அந்த உணர்வின் வலிமையை அவன் பெற்றதனால் அவ்வாறு மாற்றிச் சமநிலைப்படுத்தினான்.

அதற்கு அப்புறம் இப்பொழுது விஞ்ஞானி வந்துவிட்டான்.

ஒரு பக்கத்தில் அணுகுண்டை வெடிக்க வைத்தான் என்றால் அதனால் புகை மண்டலங்கள் பெருகினால் மேலே ஈர்க்கக் கூடிய தன்மை எல்லாம் போய்விடும். இப்போது உறைபனி அதிகமானால் டபக்… என்று பூமி திரும்பிவிடும்.

அன்று மெய் ஞானியான அகஸ்தியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு முட்டை வடிவில் வந்த பூமியை அது திரும்பாதபடி சமப்படுத்தி வைத்தான்… இன்றளவும் சீராக ஓடிக் கொண்டுள்ளது.

அதை நமக்குப் புரியச் செய்வதற்காக சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் என்று குட்டிக் கதையாகப் போட்டு விளக்குகின்றார்கள்.

சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆகின்றது. அதனால் கூட்டங்கள் அங்கே நிறையச் சேர்ந்துவிடும்.
1.அதை நீ சமப்படுத்தத் தெற்கே போ… என்று
2.சிவன் அகஸ்தியனுக்குக் கட்டளையிட்டான்
3.அகஸ்தியன் அவ்வாறு போனான்…!

சிவனும் பார்வதியும் என்றால் பூமி சுழலும் போது துருவப் பகுதியில் தன் பார்வையில் சிக்குவதை எடுத்து அது வழியாக பூமியாகின்றது.
1.அதனால்தான் பார்வதி பஜே
2.இந்த உணர்வின் சக்தி எதுவாகுதோ அதன் வழி இயக்குகின்றது.
3.ஆகவேதான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்
4.சக்திகள் வந்து உறைந்து உடலாகும்போது இரண்டும் இணைந்து பூமியாகின்றது என்பதைக் காட்டுவதற்காக
5.இப்படி ஒரு சாஸ்திரத்தை தெளிவாகக் கூறுகின்றார்.

நீ தெற்கில் போ…! என்று வரும்போது தெற்கில் தான் வெப்பத்தின் தன்மை அதிகம். அப்போது அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் எடுத்து அதைச் சமப்படுத்துவதற்காக திசைத் திருப்புகின்றான்.

அப்போது திசை திருப்பும்போது இதன் உணர்வுகள் மாறி எடையற்ற நிலைகளும் இது சேர்க்கப்படும்போது சமநிலை வருகின்றது.

இப்படி அகஸ்தியன் மாற்றியமைத்தான்…! என்ற நிலைகளைச் சாஸ்திரங்கள் மறைமுகமாக மனிதன் அறிந்து கொள்வதற்குத் தெளிவான நிலைகள் கூறுகின்றது.

அன்று அகஸ்தியன் சமப்படுத்திய உணர்வுகள் எல்லாம் பூமியிலே படர்ந்துள்ளது. அவனுக்குள் விளைந்த பேராற்றல்களும் இங்கே பரவி உள்ளது.

நான் (ஞானகுரு) மட்டும் இதைக் கண்டுணர்ந்து சொல்கிறேன் என்று இல்லை. இதையெல்லாம் நீங்களும் தெரிய முடியும்… தெரிந்து கொள்ள வேண்டும்.

தெரிந்தால் தான் இந்த நாட்டில் படர்ந்து கொண்டிருக்கும் விஷத் தன்மையை மாற்ற முடியும். ஏனென்றால் அகஸ்தியனின் தத்துவங்கள் காலத்தால் மறைந்துவிட்டது.

இந்தச் சூரியனும் அழியும் தருணம் வந்துவிட்டது. ஆனால் சூரியன் அழிவதற்கு முன் இந்த உயிரினங்களின் மாற்றங்கள் அதிகரிக்கும்.

நாம் மனித இனமாக இன்று நல்ல நிலையில் இருக்கும்போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று சேர வேண்டும்.

ஏனென்றால் இனம் இனத்தை வளர்க்கும்…!

1.குருநாதர் அந்த உயர்ந்த உணர்வைப் பெற்றார்
2.இந்த இனம் வளர வேண்டும் என்று எனக்குள் பதிவு செய்தார்.
3.அதே குருவின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யும் போது
4.அருள் என்ற உணர்வைச் சேர்க்கப்படும்போது இது பெருங்கூட்டமாக மாறுகின்றது…!

அருள் உணர்வுகளை நீங்கள் பெறப்படும் போது “பளீர்ர்…” என்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சம் வரும்

 

அகஸ்தியன் கண்டதை… துருவன் கண்டதை… எல்லோரும் காண முடியும். அந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது நமக்குள் அது வளர்ந்து நம்மை அறியாமலே அதைக் காணும்படி செய்யும்.

எப்படி…?

உதாரணமாக கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் ஒருவன் துர்மரணம் அடைந்ததையும் சிதைந்து கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டதையும் நாம் கேட்டுணரப்படும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது.

துர்மரணம் அடைந்தவன் வேகமாகவும்… கோபத்துடன் தாக்கும் உணர்வுகள் செயல்பட்ட்தையும்… அப்படிப் பதிவான உணர்வலைகள் இரவிலே தூங்கப்படும் பொழுது “கொடிய உணர்வின் சத்து…”
1.அந்த ஆவியின் அலைகளை உடல் அதை ஈர்த்துச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டு
2.புலனடங்கித் தூங்கும் நிலையில் முன் பின் பார்க்காதவர்களின் ரூபங்களைக் காணுவோம்.

தலை சிதைந்து அல்லது தலை இல்லாத மனிதனோ… அதாவது கொலை செய்யும் பொழுது தலை இல்லாத நிலையில் ஓடும். அந்த உடலில் இருந்து சிதைந்த உணர்வுகள் அணுக்களாக மாறியதை… பிறர் சொல்வதை நாம் கேட்டிருந்தாலும் கூட அது பதிவாகி இந்த நினைவுகள் அலைகளாக நம் சுவாசத்தில் புகுந்து கொடிய உணர்வுகள் சேர்க்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று அப்படி ரூபங்கள் தெரிய வரும்.

இரவிலே தூங்கும் பொழுது பார்த்தால் அது கையில்லாததாக இருக்கும் காலில்லாது இருக்கும். ஒருவரை ஒருவர் தாக்க எண்ணும் இந்த உணர்வுகள் நம் உடலில் இருக்கும் நல்ல அணுக்களில் மோதியவுடன் நம்மை அறியாமல் வியர்த்து விறுவிறுத்து திடீரென்று முழிப்பாகி எழுந்து விடுவோம்.

இந்த உணர்வுகள் எப்படி நம் உடலை இயக்குகின்றதோ இதைப் போலத் தான்
1.இயற்கையின் நிலைகளைத் துருவன் கண்டுணர்ந்து தனக்குள் படிப்படியாக அவன் நுகர்ந்த ஆற்றல்மிக்க சக்திகளை
2.ஒன்றில்லாது ஒன்றில்லை என்ற நிலையில் அவனிடமிருந்து வெளிப்பட்ட தீமையை நீக்கிய உணர்வுகள் படர்ந்திருப்பதை
3.நினைவு கொண்டு அந்த உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால்
4.இரவில் தூங்கும் பொழுது சிலருக்கு அவர்களை வான மண்டலத்திற்கே அந்தப் பதிவான உணர்வுகள் அழைத்துச் செல்வதையும் காணலாம்.

இந்தத் தியான வழியினைக் கடைப்பிடிப்போர் வானிலே மிதந்து கொண்டிருப்பதாகவும்… மிதந்து கொண்டே செல்வதாகவும் அந்த வான மண்டல இயக்கங்களைக் காணவும் முடியும்.

ஒரு சிலர் இரவிலே இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். மிதந்து கொண்டே அதைப் பார்த்த உடனே இதிலே அச்சப்படுவோரும் உண்டு.

பூமிக்குள் வராது அப்படியே மேலே சென்று விடுவோமோ…? வீட்டிலே பெண்டு பிள்ளைகளை எல்லாம் விட்டுவிட்டுச் சென்று விடுவோமோ…? என்ற இந்த உணர்வுகள் கலந்து விட்டால் திடீரென்று உடலிலே வியர்வையாகி “பூமிக்குத் திரும்ப மாட்டோமோ…” என்று திடுக்கிட்டு… முழிப்பவர்களும் உண்டு.

ஏனென்றால் இந்த உணர்வின் வலிமை புவியின் ஈர்ப்புக்கு வரும் பொழுது இப்படியும் கனாக்கள் பல நிலைகளில் வருவது உண்டு.

கனாக்கள் வருவதே…
1.எதை நுகர்கின்றோமோ அந்த உணர்வுகள் உயிருடன் உராய்ந்து
2.உடலுக்குள் சேர்த்து அது மோதுவது தான் நினைவாற்றலாக வருகின்றது.

குருநாதர் எனக்குள் பதிவு செய்த… துருவன் கண்டுணர்ந்த உணர்வினை… அந்த நினைவின் ஆற்றலை நான் பெறுவதற்கு எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

இந்த உணர்வுகள் உன்னை எப்படி இயக்குகின்றது…? அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்ற உண்மையைச் சொல்லப்படும் பொழுதுதான் அவர் வழியில் துருவன் பெற்ற ஆற்றல்களை… அவன் எவ்வாறு எல்லாம் தனக்குள் வந்ததை மாற்றி அமைத்தானோ “அதையும் நான் பெறும் தகுதியாக குருநாதர் ஏற்படுத்தினார்…”

அவர் எவ்வழியில் உணர்த்தி இதைப் பெறும் தகுதியை எனக்கு ஏற்படுத்தினாரோ அதன் வழியில் உங்களுக்குள்ளும் இதைப் பதிவாக்கி அந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.

1.அகண்ட அண்டத்தையும் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இந்த உணர்வுகள் உருவானது என்ற நிலையையும் நினைவுபடுத்தி
2.அதனின் வலிமை கொண்டு நீங்களும் இதை அறிந்து உங்களுக்குள் இது விளைந்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி
3.உங்கள் சொல்… கேட்போர் உணர்வுகளிலும் ஆழமாகப் பதிந்து
4.அவருக்குள் விளைந்த தீமைகளை அகற்றிடும் நிலையாக இது உருவாக வேண்டும்.
5.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் வளர்ந்து விட்டால் பதட்டத்தையும் மற்ற தீமைகளையும் அடக்கி “வெளிச்சமாக…” உங்கள் உடலிலிருந்து வரும்.

பழனியில் இருக்கும் ஒருவருக்கு இது போன்று கிடைத்தது. அவர் எதையுமே கூர்மையாக உணரக்கூடியவர். இந்த உபதேசத்தைக் கொடுக்கப்படும் பொழுது கூர்மையாகக் கவனித்தார். இப்படி எல்லாம் நடக்குமா…! என்று ஆச்சரியக் குறியுடன் எண்ணினார்.

இரவிலே தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது பளீர்ர்… என்று ஒளிகள் அவர் உடலிலிருந்து வெளிப்படுகின்றது. அவர் அரண்டு எழுந்திருக்கின்றார்… சப்தமிடுகின்றார்.

சப்தத்தைக் கேட்டு அவர் மனைவியும் எழுந்து பார்க்கின்றது. கணவர் உடலிலிருந்து வரும் வெளிச்சத்தை அதுவும் பார்க்கின்றது. அந்த இடமே வெளிச்சமாக மாறுகின்றது.

இந்த வயதிலேயே இதையெல்லாம் கண்டு விட்டால் நான் இனி என்ன செய்வது என்று தனக்குத் தானே அச்சுறுத்திக் கொண்டு என்னிடம் வந்து இதைக் கேட்டார்.

1.வெளிச்சத்தைப் பார்த்த நாளிலிலிருந்து எனக்குப் பயமாக உள்ளது.
2.மனிதனாகப் பிறந்தேன்… என் ஆசை எல்லாம் போய் விட்டால் நான் என்ன பண்ணுவது…? என்று அவர் இதைப் பிடிவாதமாகப் பிடிக்கின்றார்.
3.உண்மைகளை அவர் நுகர்ந்தாலும் அவருடைய பிடிவாத உணர்வுகள் அது இயக்கிக் கீழே அழைத்துச் சென்றது.

அவரின் பிடிவாதத்திற்குக் காரணம் என்ன…?

இந்த மனித வாழ்க்கையில் மற்றவர்களின் பழக்க வழக்கங்களைச் சேர்க்க விரும்புகின்றார். நண்பர்களுடன் அதிகமாகச் சேர்ந்து “மது குடிக்கும் பழக்கம் இருக்கின்றது…”

மதுப் பழக்கம் உள்ளவருடன் இணைந்து வரும் பொழுது அது அதிகமாகி விட்டது… தன் ஒழுக்கம் அவரிடம் மறைந்தே விட்டது.

1.உயர்ந்த சக்திகளைக் கொடுத்தும் இதை அவர் வலு சேர்க்கவில்லை.
2.தன் உடலின் இச்சை வரப்படும் பொழுது அதனுடைய மாற்றங்கள்…
3.மற்றவன் தான் செய்யும் உணர்வு வரப்படும் பொழுது அவருடைய நிலை ரொம்பவும் மோசமான நிலைக்குப் போய்விட்டது.
4.உயர்ந்த உணர்வுகல் கிடைத்தும் அவருக்குப் பலனில்லை.

ஏனென்றால் இந்த உணர்வின் வலிமை உடலின் இச்சைக்குத் தான் வருகின்றது. உடலின் இச்சைக்கு வந்தாலும் பல செயல்களைப் பார்த்துப் பலவீனம் அடையப்படும் பொழுது மன நிலை குழம்புகின்றது.

அதை அடக்குவதற்கு மதுவைக் குடிக்கின்றார்… தன் நிலையை மறக்கின்றார். மறக்கும் உணர்வுகள் தனக்குள் வளர்க்கப்படும் பொழுது தன் நிலையையே இழக்கச் செய்கின்றது.

1.ஏனென்றால் இது எல்லாம் மனிதனுக்குள் வரும் ஆசையின் உணர்வுகள்…!
2.அது வளர்ந்து விட்டால் நான் உயர்ந்த உணர்வுகளைக் கொடுக்கும் போது
3.அதை நீங்கள் “பயனற்றதாக ஆக்கி விடக்கூடாது… என்பதற்குத் தான் “உங்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கின்றேன்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இனி நாளைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. 2004க்கு மேல் செல்லும் பொழுது இயற்கையே நம்மை அழித்துவிடும்.

இன்றைய கால கட்டத்தில் மனிதன் தான் வாழ செயற்கைக்கு மாற்றி… கடும் விஷத் தன்மைகளைக் கொண்டு வந்ததால் மனிதனுடைய நல்ல குணங்களையே சீர்குலைக்கும் தன்மையாக இந்தப் பூமியில் பரவிக் கொண்டுள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்ல… உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தான்…!
1.ஆனால் இந்த நாடு ஒன்று தப்பும்…
2.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று
3.அந்த அகஸ்தியன் பிறந்த நாட்டில் தான் இங்கே மீண்டும் முளைக்கின்றது.

அந்த அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக ஆனான். அதனின் உணர்வைத் தான் இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

1.விஜய தசமி… நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்தது
2.தசமி பத்தாவது (ஒளியாக) நிலை அடையக் கூடிய மனித உடல்.
3.உயிர் உடல் பெற்று மனிதனாகும் பொழுது மகாசிவன் இராத்திரி என்று
4.இப்படியெல்லாம் காரணப் பெயர் வைத்து ஞானிகள் அவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

அந்த ஞானிகள் கொடுத்ததை மதிக்கின்றோமா..? அரச வழியைப் பின்பற்றி தவறுகளைச் செய்யத் தான்… இந்த உடலுக்காகத்தான்… இச்சைப்படுகின்றோம்.

சாகாக்கலை என்ற நிலையில்… “அரசன் தான் எப்பொழுதும் வாழ முடியும்…!” என்ற நம்பிக்கையில் இருந்தான். அந்த ஆசையிலே கடும் பூதங்களாகி மற்றதை எத்தனை இம்சை செய்தானோ அத்தகைய அரசன் எவனும் இருந்ததில்லை.

அன்று ஆங்கிலேயர்கள் உலக நாடுகள் பலவற்றை அடக்கி மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தார்கள். இருந்தாலும் இன்று அவர்கள் நாட்டிலே அங்கே எத்தனையோ நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்…!

இதைப் போன்ற சாம்ராஜ்யங்களை ஆண்ட அரசர்கள் எல்லாம் எந்த நிலை ஆனார்கள்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அடக்கி ஆள வேண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் இருப்பினும் “எதை வைத்து… எதை அடக்க வேண்டும்…?”

தீமை செய்யும் நிலைகளைத் தான் நாம் அடக்க வேண்டும்.
1.அந்த அருள் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால்
2.தீமைகளை அடக்கி ஆட்சி புரியலாம்… அனைத்தையும் ஒளியாக மாற்றலாம்.

மனிதனின் வாழ்க்கையில் எது வலிமையோ அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கும்.

சாந்தமும் ஞானமும் விவேகமும் இன்று இருப்பினும் ஒரு கோபக்காரனைப் பார்த்தால் அந்த வலிமை நமக்குள் பயப்படும்படிச் செய்கிறது.

வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த வேதனை நம்மை நடுங்கச் செய்கிறது… நம்மைச் சோர்வடையச் செய்கிறது. அந்த வலிமை தான் முன்னணியில் இருக்கின்றது.

இத்தகைய தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட “கார்த்திகேயா…” என்று எல்லாவற்றையும் மாற்றியமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.இந்த உபதேசத்தின் வாயிலாக துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பாய்ச்சுகின்றோம்
2.கண்களால் ஏங்கிப் பெறச் செய்து உங்களுக்குள் நுகரச் செய்கின்றோம்
3.இப்படிப் பதிவாகும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நீங்கள் எளிதில் பெற்று உங்களைக் காத்திட முடியும்..
4.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்
5.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று என்றுமே அழியாத வாழ்க்கை வாழ முடியும்.

அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலை அனவரும் பெற முடியும்

 

அகஸ்தியரும் அவர் மனைவியும் தனக்குள் அறிந்த உணர்வுகளை இருவருமே ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்ற நிலையில் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்தனர்.

1.உயிர் எவ்வாறு மின்னல் போன்ற மின்னிக் கொண்டிருந்ததோ இதைப் போல
2.தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்து எதனின் ஈர்ப்பிலும் சிக்காது
3.இரு உயிரும் ஒன்றாகி இரு உடலில் விளைந்த உணர்வுகளும் ஒன்றாகி
4.இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் சக்திகள் அனைத்தும் நம் பூமிக்குள் வரும் அந்தத் துருவதிலே நின்று அதனை ஒளியின் கருவாக உருவாக்கி
5.இன்றும் தங்கள் வாழ்க்கையில் அழியாத நிலைகள் கொண்டு “துருவ மகரிஷியாக…” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்

அந்தத் துருவ மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து அவர்கள் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம். துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி நாம் ஏங்கித் தியானிப்போம்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.

சப்தரிஷி மண்டலங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் அதிலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வலைகள்
1.உங்கள் புலனறிவுக்குள் ஈர்க்கப்பட்டு உங்கள் உடலுக்குள் ஊடுருவதும்
2.அதனைப் பின் தொடர்ந்து துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியும் உங்கள் புலனறிவிலே ஈர்க்கப்பட்டு
3.உங்கள் உடலில் உள்ள அணுக்களில் அது இணையும்.

அந்த உணர்வின் ஒளிகள் இணைந்து வருவதை உங்கள் நினைவிலே உணர முடியும். உங்களுடன் இணை சேர்க்கும் பொழுது அதன் உணர்ச்சிகளை உங்கள் உடலில் உணர முடியும்.

உங்கள் எண்ண உணர்வுகள் அனைத்தும் இணைந்து துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்தி உங்கள் ஈர்ப்பிற்குள் வருவதும்… உங்கள் நினைவலைகள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வருவதையும்… அங்கிருந்து உங்கள் உடலுக்குள் பாய்வதையும் உணரலாம்.

1.மீண்டும் மீண்டும் உங்கள் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்திற்குள் சுழன்று வருவதும்
2.அந்த உணர்வுகளை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் சுவாசங்களில் பல ஆற்றல்கள் உயிரிலே ஈர்க்கப்பட்டு
3.நுகரும் போது அந்த அகஸ்தியன் பெற்ற அரும்பெரும் சக்தி உங்கள் உடலுக்குள் ஊடுருவி அனைத்து அணுக்களிலும் அது கவரப்படும் பொழுது
4.துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகளை விண்ணிலே எப்படிக் காண முடிகின்றதோ அதைப்போல
5.உங்கள் உடலுக்குள்ளும் அந்த உணர்வுகள் ஒளியாகப் பரவுவதைக் காணலாம்… காட்சியாகவும் தெரிய வரும்.
5.இப்பொழுது சப்தரிஷி மண்டலங்களின் சக்தியும் காட்சிகளாக உங்கள் உணர்வுகளிலே தென்படும்.

வான மண்டலத்தில் வெளிப்படும் பல வர்ணங்களைக் காட்சியாகவும் உங்கள் உணர்வுகளில் நுகர்ந்து அது மாற்றி அமைக்கும் சக்திகளை உங்களுக்குள் உணரலாம்.

யாம் உபதேசித்த உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய நிலையில்… அண்டத்தில் நமது பிரபஞ்சம் நட்சத்திர இயக்கங்களுடன் சுழன்று தனிப் பிரிவாகச் சுழல்வதை இப்பொழுது நுகர முடியும். உங்களுக்குள் அந்த உணர்வு தென்பட்டிருக்கும் என்று எண்ணுகின்றேன்.

பிற மண்டலங்களில் இருந்து வருவதை நட்சத்திரங்கள் ஈர்த்து ஒளிப்பிளம்புகளாக வெளிப்படுத்தும் போது பல வித வர்ணங்களாக வருகின்றது.

அந்த நட்சத்திரங்கள் உமிழ்த்தித் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வுகள் மோதப்படும் பொழுது பல பல வண்ணங்கள் உருமாறி பல பல வண்ணங்களாக மாற்றமடைந்து
1.அணுத்தன்மையாகப் பிரபஞ்சத்தில் மிதந்து வருவதையும் அதைக் கோள்கள் நுகர்வதையும்
2.கோள்கள் நுகர்ந்து வெளிப்படுத்துவதைச் சூரியனின் காந்த சக்தி கவருவதையும்
3.சூரியன் கவர்ந்து அதிலுள்ள நஞ்சினைப் பிரித்துவிட்டுத் தன் ஒளிப்பிளம்பாக மாற்றும் நிலைகளையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

வான மண்டலங்களில் நட்சத்திரப் பொறிகளின் இயக்கத்தையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். பல வர்ணங்களில் வெளி வந்ததைப் பார்த்திருப்பீர்கள்.
1.அந்த வர்ணங்கள் பூமிக்குள் புகுந்து பாறைகளுக்குள் ஊடுருவதையும்
2.பிளந்து… அதாவது ஒரு குகைக்குள் நாம் நுழைவது போன்று நினைவாற்றல் வந்திருக்கும்.

அதே சமயத்தில் பூமிக்குள் கொதிகலனாகச் சேர்ந்து மாற்றம் அடைந்து இருப்பதையும் பூமியில் எதிரொலிகள் உள்ளே நிலநடுக்கங்கள் வருவதையும் உணர்ந்திருக்கலாம்.

அதனின் விரிவாக்கங்கள் உங்கள் உடலுக்குள் ஊடுருவி
1.அண்டத்தில் இருப்பது பிண்டத்திற்குள் அணுக்களாக மாற்றமாகி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது பளீர்ர்… என்று வெளிச்சமாக உங்கள் உடலுக்குள் தெரிந்திருக்கும்.

இது எல்லாம் தெரியவில்லை என்று யாரும் சோர்வடைய வேண்டாம். எல்லோரும் இதைத் தெரிந்து கொள்ள முடியும் எல்லோருக்கும் இந்த உணர்வுகள் கிடைக்கும்படி அதை இணைத்து அந்த வளர்ச்சிக்குக் கொண்டு வருகின்றோம்.

செடிக்கு உரமிடும் பொழுது அதைத் தன்னுடன் இணைத்துத் தன் இனமான சக்தியைக் கவரும் பொழுது அது சீராக வளர்கின்றது. அதைப் போல்
1.அனைவரும் அகஸ்தியன் கண்ட விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.
2.அந்த நம்பிக்கையில் தான் சொல்கிறேன்.

எமது குருநாதர் அண்டத்தின் ஆற்றலைப் பெற எமக்குப் பயிற்சியாகக் கொடுத்தார். அவர் காட்டிய வழியில் அண்டத்தையும்… பிரபஞ்சத்தையும்… புவியின் ஈர்ப்பையும்…
1.அண்டத்தில் இருப்பது இந்தப் பிண்டத்திற்குள் அணுக்களாக எப்படி மாற்றம் அடைகின்றது என்பதையும்…
2.துருவ மகரிஷி தனக்குள் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றியதையும்
3.அதன் உணர்வைப் பின் வந்த மனிதர்கள் ஏழாவது நிலையாகப் பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழண்று கொண்டிருப்பதையும்…
4.இந்தப் பிரபஞ்சத்திற்குள் தனி சுழற்சியாக அது சுழன்று கொண்டிருப்பதையும் காண முடியும்.

நாளுக்கு நாள் உங்களுக்குள் தெளிவடையும் நிலையாக இது வளர்ச்சியடையும். அதை அறிந்திடும் அறிவும் வளரும்.

தியானமிருக்கும் பொழுது உங்கள் அனைவருக்குமே ஒரு மிதப்பது போன்ற உணர்ச்சி தோன்றி இருக்கும் வான மண்டலத்தை நோக்கி மேலே மிதப்பது போன்று தோன்றியிருக்கும். புவியீர்ப்பின் பிடிப்பைக் கடந்து எடை குறைந்ததாகத் தெரியவரும்.

அகஸ்தியன் தான் பெற்ற சக்திகளைத் தன் மனைவிக்கு எப்படிப் பெறச் செய்தாரோ மனைவி பெற்ற நிலையை மீண்டும் அவர் பெற்று இருவரும் ஒன்றாக இணைத்து மாற்றமடையச் செய்த அந்த அருள் சக்தியைத்
1.தியானத்தில் அமர்ந்திருக்கும் கணவன் மனைவி இருவருமே பெற்று நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்த முடியும்.
3.விண் செலுத்தி அந்த ஆற்றலைப் பெறும் பொழுது கணவன் ஒளிச் சரீரம் பெற்றதும் அதே போல் மனைவி ஒளிச் சரீரம் பெற்றதும் தெரிய வரும்.

ஏனென்றால் கணவன் உணர்வுகள் மனைவியிடம் உண்டு மனைவியின் உணர்வுகள் கணவனிடம் உண்டு. யாரும் பிரிந்தில்லை.

அதன் வழி எடுக்கும் அந்த ஆற்றல் பெருகும் போது அதன் துணை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்து மனித வாழ்க்கையில் கணவன் மனைவி எவ்வாறு ஒன்றி வாழ்ந்தார்களோ அதைப் போன்று “இரு உயிரும் ஒன்றாகிப் பெரு வாழ்வு வாழும் ஒளியின் சரீரமாக வாழும் நிலையாக மாற்றிக் கொள்ள முடியும்…”

இந்தத் தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு இரவு முழுவதும் வான மண்டலத்தில் உங்கள் நினைவுகள் சஞ்சரித்து
1.வானஇயல் புவியியல் உயிரியல் என்ற அடிப்படையில் நினைவு கொள்ளும் பொழுது பல அற்புதங்கள் விளையும்.
2.உங்கள் உடலில் உள்ள பிணிகள் குறையும்… மன பலம் பெறுவீர்கள்… அருள் ஞான உணர்வுகள் வளர்ச்சி பெறும்

அந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்…? பல விதமான ஆராய்ச்சிகளைச் செய்கின்றார்கள். பல மரபணுக்களை எடுத்து உயிரினங்களை மாற்றுகின்றார்கள். மனித உடலிலும் எத்தனையோ வகையான உறுப்புகளை மாற்றுகின்றார்கள். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார்கள்.
1.ஆனால் இந்த உயிரின் தன்மையை
2.உணர்வை ஒளியாக மாற்றும் திறன் அவனுக்கு இல்லை…!

உடல்களை மாற்றிக் கொள்ள முடியும் இவனுடைய சிந்தனைகளை எடுத்துக் கொள்வான். இந்த ஆராய்ச்சி இவனுக்குள் வரும். ஆட்டை மாட்டாக ஆக்கினான் என்றால் அந்த உணர்வுகள் வந்தபின் இந்த உடலைவிட்டுச் சென்ற பின் இந்த ஞானத்தின் தொடர் கொண்டு புது விதமான உடலைத் தான் அவன் பெறுவான்.

எதை மாற்ற வேண்டும் என்று எண்ணினானோ இந்த உணர்வுகள் தன் உயிரிலே வளர்க்கப்பட்டு இந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு பெரிய தத்துவம் ஆனாலும் இந்த உணர்வின் தன்மை அணுவாக்கப்படும்போது இறந்தபின் எதன் உணர்வை மாற்றி அமைக்கச் செய்தானோ அதே உணர்வு கொண்ட உடல்களில் புகுந்து விடுவான்.

1.ஆட்டின் மேலே ஞாபகம் வைத்தான்…
2.ஆட்டை மாற்றியமைக்க எண்ணினான்…
3.இதே உணர்வு கொண்டு உடலைவிட்டுச் சென்றபின் இந்த விஞ்ஞானி அதோடு மடிந்துவிடுகின்றான்.
4.எந்த உணர்வின் தன்மையைப் பெருக்கினானோ அந்த உணர்வின் தன்மை இங்கு வருகின்றது.

ஆகவே இதையெல்லாம் வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிடும் அந்த உணர்வை எவர் பெறுகின்றனரோ மீண்டும் உடல் பெறாதபடி அதை மாற்றி அமைக்க முடியும்.

இதையெல்லாம் நாம் சாதாரணமாக அலட்சியப்படுத்தி விடுகின்றோம். காவியங்களில் அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். நாம் அதையெல்லாம் இழந்துவிட்டோமே…!

இப்பொழுது என்ன செய்கின்றோம்…? யாகங்களைச் செய்து பாவங்களைத் தான் ஜாஸ்தியாகச் செய்கின்றோமே தவிர பாவத்தைப் போக்கும் மார்க்கம் இல்லை.

உடலில் நோய் வந்துவிட்டது என்றால் காளி கோவிலிலோ மற்ற கோவில்களிலோ யாகத்தைச் செய்து அந்தப் பாவத்தை எல்லாம் போக்க முற்படுகின்றோம்.

அடுத்ததாக… அதாவது சாகா நிலை கொண்டு வரக்கூடிய நிலையாக அறுபதாவது வயது வந்த பின் “சஷ்டியப்த பூர்த்தி…” செய்கிறோம். வயதைக் குறைக்காமல் வாழ வேண்டும் என்ற அந்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி அதைப் பூர்த்தி செய்கிறார்கள்.

1.ஆனால் அதைப் பூர்த்தி செய்ய மந்திரம் சொல்கின்றார்களே
2.மந்திரம் சொல்பவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா…?

சாகாமல் இருப்பதற்காக வேண்டிச் சில கோவில்களில் ஒரு யாகத்தைச் செய்கின்றார்கள். அந்த யாகத்தைச் செய்பவன் உயிரோடு இருக்கின்றானா என்றால் இல்லை…!

இதுகள் எல்லாம் நாம் ஆசையின் நிலைகள் கொண்டு காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் ஆசைகளைத் தான் வளர்த்துக் கொள்ள முடிகிறது. எந்த யாகத்தை வளர்த்தோமோ செத்த பிற்பாடு “எந்த மந்திரக்காரன் சொன்னானோ” அவனிடம் கைவல்யமாகிப் போய்விடுவோம்.

இது சாகாக்கலையாக இன்னொரு உடலுக்குள் போய் இதே உணர்ச்சிகள் கொண்டு இதே நிலையைத் தான் உருவாக்கும். ஆனால் வேகா நிலை அடைவதில்லை.

உதாரனமாக நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் வேகுவதில்லை… அழிவதில்லை. அது போல்
1.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்து விட்டால்
2.எதிலேயும் இது சிக்காது ஒரே ஒளியாக மாறுகின்றது
3.இது தான் வேகாநிலை… எதுவுமே இதை அழிக்க முடியாது.

ஆகவே நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கிக் கொள்தல் வேண்டும்.

ஜாதகத்தைப் பார்த்தவுடனே ஆயுள் கம்மியாக இருக்கின்றது என்று தெரிந்தவுடனே ஆயுளைக் கூட்டுவதற்காக வேண்டி ஆயுள் ஹோமம் செய்து பல யாகங்களைச் செய்து மந்திரங்களைச் செய்வார்கள்.

அறுபதாம் கல்யாணம் முடிந்தவுடனே சில கோவில்களில் எல்லாம் இந்த ஆயுள் ஹோமத்தைச் செய்வார்கள். ஆனால் ஆயுள் ஹோமம் செய்து தருபவன் சாகாமல் இருக்கின்றானா என்றால் இல்லை…! அப்பொழுது அவனிடம் போய் ஆயுள் ஹோமம் செய்தால் எப்படி இருக்கும்…?

நமக்குத் தெரியும்… அவனே சாகப் போகின்றான் என்று…! இருந்தாலும் அவன் ஆயுள் ஹோமம் செய்து நம் ஆயுளைக் கூட்டித் தருவான் என்ற ஆசை. சாங்கியங்களைச் செய்து கொஞ்ச நாளாவது வாழ முடியாதா…?

ஆயுள் ஹோமம் செய்து முடிந்த பிற்பாடு என்ன நடக்கின்றது..? சில கஷ்டங்கள் வந்தபின் இப்படி ஆகிவிட்டதே…! என்று இந்த வேதனையை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த வேதனையான உணர்வு அதிகமான பின் துடுக்கு… துடுக்கு… என்று கடைசியில்
1.“இத்தனை சம்பாரித்தேனே… எல்லாம் போய்விட்டதே…!
2.இத்தனை சம்பாரித்தேனே… ஆண்டவன் என்னை ரொம்பவும் சோதிக்கின்றானே…! என்று
3.இந்த வேதனைகளையே உருவாக்கிக் கொண்டு வரும்.

அப்பொழுது இந்த உடல் குறுக… குறுக… வேதனை என்ற உணர்வை வளர்க்க… வளர்க்க… இந்த உடலின் ஆயுள் என்ன ஆகின்றது…? ஆயுள் ஹோமம் செய்து இந்த வேதனையை வளர்த்தது தான் மிச்சம்…!

ஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…?

ஆயுள் ஹோமம் என்றால்
1.அந்த அருள் மகரிஷிகளின் ஒளியான உணர்வுகள் எனக்குள் பெற வேண்டும்
2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்
3.இந்த உடலின் தன்மை நீங்கிய பின் என்றும் ஒளியாக நாம் இருக்க முடியும்…!

யாம் கொடுக்கும் சக்தியை “நீங்கள் எண்ணி எடுத்தால்…” அதை உணரும் வழி

 

1.எப்படி இருந்தாலும் உடலை விட்டு நம் உயிர் பிரிந்து தான் ஆகும்.
2.கோடிச் செல்வம் இருந்தாலும் உடலுக்குள் உயிர் இருக்காது.

செல்வத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டி “அவன் என்ன செய்வான்…? இவன் என்ன செய்வான்…?” என்ற இந்தப் பயம்தான் வரும் பயத்தைத் தான் வளர்க்க முடியும்.

இதிலிருந்து நாம் எந்த நிலையிலும் தீமைகள் தன்னைத் தாக்காது மன உறுதி கொள்ள வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்க்க வேண்டும்.

மன உறுதி கொண்டிருந்தாலும் அதிர்ச்சியான நிலைகளில் ஒருவன் தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்த பின் நம் உடலுக்குள் வந்த உடனே பயம் ஏற்படுகின்றது.

ஏனென்றால்
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு எதிர் நிலையாகும் பொழுது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்
2.அந்த அதிர்வுகள் நமக்குள் வருகின்றது.

அந்த அதிர்வான உணர்வுகள் நமக்குள் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்த பின்… பயத்தை ஊட்டும் உணர்வின் தன்மை உடலில் தசைகளில் ஏற்பட்டு விடுகின்றது. அல்லது இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களுடன் சேர்த்துப் பயத்தை ஊட்டுகின்றது அந்த உணர்வின் அதிர்வுகள் தான்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து தப்ப நாம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் 20 வருடம் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அவரிடம் பெற்ற அனுபவங்களைத் தான் இப்பொழுது உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

எத்தனை பேர் இதை எடுத்துக் கொள்கின்றார்கள்…! எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதே வழியில் எத்தனை பேர் ஆசைப்பட்டு எடுக்கின்றார்கள்…?
1.கொஞ்சப் பேர் தான் வருகின்றார்கள்
2.அவர்களும் கூட… ஏதோ தொழிலுக்காக என்று எண்ணித்தான் வருகின்றார்கள்
3.நினைத்தது நடக்கவில்லை என்றால் இந்தச் சாமியிடம் என்ன இருக்கிறது…? என்று போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
4.யார் எதைச் செய்தாலும் இந்த உடலில் என்ன வைத்திருக்கிறோம்…? என்று தெரியாது…!

ஆகவே… உயர்ந்த சக்திகளை நீங்கள் எடுத்து இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலை அடைய வேண்டும்.

ஜோதிடம் பார்த்து எல்லாம் பார்த்து “எல்லாம் போய்விட்டது” என்று வேதனையைத் தான் வளர்க்க நேரும். கடைசியில் பேயாசையாக அது வருகின்றது.

அந்த உணர்வுடன் இறந்தால் இதே போன்று ஆசை கொண்ட இன்னொரு உடலுக்குள் புகுந்து அங்கே போய்ப் பேயாகத் தான் ஆட்ட முடியும். அந்த உடலை வீழ்த்திய பின் மற்றதை மிரட்டி வாழும்… பார்த்த உடனே அச்சப்படச் செய்யும் அத்தகைய உடலமைப்பாகத்தான் உயிர் உருவாக்கி விடும்.

இன்று மனிதனாக இருக்கின்றோம்… நாளை அந்த நிலை ஆகிவிடும்…!

டாக்டர்கள் எப்படி இன்ஜெக்ஷன் செய்து உடனடியாக மருந்தை ரத்தத்தில் கலக்கச் செய்து விஷ அணுக்களைத் தணியச் செய்து உற்சாகமூட்டி உடல் நலம் பெறச் செய்கின்றார்களோ அதே போல் தான்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஆத்ம சுத்தி மூலம் உங்களைப் பெறச் செய்கின்றோம்.
2.உங்கள் கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து
3.உயிரின் நினைவு கொண்டு அருள் சக்திகளை உடலுக்குள் பாய்ச்சினால் “சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…”

நாம் புறக்கண்ணால் பார்க்கின்றோம். அதை நுகர்ந்து உயிரான அகக்கண்ணால் உணர்கின்றோம்.
1.புறக்கண்ணால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு ஏங்கி
2.நம் அகக் கண்ணான உயிருடன் மோதச் செய்து
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதை ஈர்க்கும் சக்தி கொண்டு வந்தால்
4.உயிரில் உள்ள காந்தம் கண்ணின் தன்மை கொண்டு வந்து அதை இழுக்கும்.

நாம் அப்படி இழுக்கக் கற்றுக் கொண்டால் தீமை என்ற அணுக்கள் உடலில் இருக்கின்றதல்லவா… அதற்கு ஆகாரம் செல்லாதபடி முதலில் தடைப்படுத்தும்.

தடைப்படுத்தப்படும் பொழுது தீய உணர்வுகள் அதற்குக் கிடைக்காமல் போனால் அந்த அணுக்கள் சோர்வடையும். சோர்வடையும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்ற ரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பரிதாபப்பட்டு ஒருவருக்கு உதவி செய்கின்றோம். இறக்கும்போது அவன் என்ன செய்கின்றான்…? “மகராசன்…!” நல்ல நேரத்தில் எனக்கு உதவி செய்தான் என்று எண்ணுவான்.

அப்போது அந்த உணர்வுகள் கொண்டு அந்த ஆன்மா இந்த உடலுக்குள் தான் வந்து சேரும்… ஜீவான்மாவாக மாறிவிடுகிறது.
1.அவன் எப்படி வேதனைப்பட்டானோ துயரப்பட்டானோ அந்த உணர்வு உங்கள் ரத்தத்திலிருந்து அதனுடைய உணர்வை எடுக்கும்.
2.ரத்தத்தில் தான் அதனின் ஜீவிதமே இருக்கும்… தன் உணர்வை வளர்க்கும்.
3.உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது… போகும் இடமெல்லாம் உடலில் குடைச்சல் வரும்.

அதே சமயத்தில் ரத்தத்தின் உணர்வுடன் சேர்த்து உயிர் பாகம் சென்றால் உணர்ச்சிகளாக இயக்கி அதன் இயக்கமாக நம் நினைவை இழக்கும்படி செய்துவிடும்.

உடலில் எந்தக் கோளாறும் இருப்பதில்லை. ஆனால்… ஐயோ என்னை அடிக்கின்றான்… பிடிக்கின்றான்…! என்று சொல்பவர்கள் இன்று எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் பழி தீர்க்கும் உணர்வைச் சேர்த்து “உன்னை நான் விடமாட்டேன்… நான் கொன்றே தீருவேன்… எனக்கு இப்படித் தொல்லை கொடுத்தார்கள்” என்று பூதகணங்களாக வளர்ந்து உடலுக்குள் வந்தால் உடலையே அழித்திடும் நிலையாக வரும்.
1.ஆக எதன் உணர்வைச் சேர்த்ததோ ரத்தத்திலிருந்து அதனுடைய வேலையைச் செய்யத்தான் செய்யும்.
2.அப்பொழுது அதை மாற்றுவது யார்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியிலே எண்ணி அந்த ஜீவான்மாக்களுக்கு உணவு சேராதபடி தடைப்படுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

கண்ணின் நினைவை உடலுக்குள் அப்படிச் செலுத்த வேண்டும்.

நண்பர்களுக்குள் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று எண்ணும் போது உடலை இயக்குகின்றது.

அதே துரோகம் செய்த உணர்வு நமக்குள் இருக்கும் பொழுது அவனை எண்ணும் போது நமக்கு பதட்டமும் இப்படிச் செய்தானே என்று ஆத்திரத்தை ஊட்டும் உணர்வுகள் வரும் பொழுது… நாம் மற்றவர்களையும் சந்தேகப்பட்டு இங்கேயும் வெறுக்கும்படி செய்து “நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாதபடி” தடுத்து விடுகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஜீவணுக்களின் நுனியிலும் இந்தக் காந்த சக்தி உண்டு. கண்ணால் கவரப்பட்டு உணர்வின் தன்மை கரு முட்டையாகி அது அணுவாக மாறுகின்றது.
1.அதனால் அந்த அணுக்களில் அந்த அருள் சக்தியை மோதச் செய்ய வேண்டும்.
2.கண்ணின் நினைவை நேரடியாக இணைக்கப்படும் பொழுது நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் காந்தத்தைச் செலுத்துகின்றோம்.

சிறுகச் சிறுக இப்படிச் சேர்த்துப் பழகினால் இன்னொரு உடலில் இருந்து நம் உடலுக்குள் தீமை செய்ய வந்தாலும் “அதை நாம் அருள் ஒளி கொண்டு மாற்றலாம்…”

இல்லை என்றால் எந்த இன்ஜெக்ஷனுக்கும் அது கட்டுப்படாது. அதன் உணர்வையே நமக்குள் செயல்படுத்தும். மற்ற எதையும் வைத்து அதை மாற்ற முடியாது.

மந்திரத்தை வைத்து இன்னொரு ஆவியை ஏவலாம். இரண்டு மாதம் மூன்று மாதம் அமைதியாக இருக்கும். மறுபடியும் அந்த ஆவியின் தன்மை வேலை செய்யும்.

இது போன்ற தீமையிலிருந்து நாம் தப்ப வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெற வேண்டும் உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் இருந்து விடுபட வேண்டும் அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும் இந்த உடலைக் காக்கும் ஞானமும் உலகைக் காக்கும் அருள் ஞானமும் பெற வேண்டும் என்று தான் என்னுடைய பிரார்த்தனையே இருக்கின்றது.

ஒரு வெறுப்படைந்தவனுடைய உணர்வு எப்படி இயக்குகின்றதோ அதைப் போன்று
1.நீங்கள் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது
2.இந்த உணர்வுகள் உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டிக் கொண்டே இருக்கும்.
3.சில நேரங்களில் நீங்கள் அதைக் கவனிக்கலாம்.
4.அந்த நேரத்தில் சிந்தனையைச் செலுத்தி… அந்த உயர்ந்த சக்திகளை எடுத்தால் நன்மை பயக்கும் சக்தியாக அதைப் பெற முடியும்.
5.ஏதோ ஒரு விதமான உற்சாகம் கிடைக்கின்றது என்று சொல்வீர்கள்… அடுத்து அந்த நினைவால் உயர்ந்த சக்தியை எடுக்கலாம்.
6.சில நேரங்களில் உங்களுக்கு அந்த நல்ல வாசனைகள் வரும். இனம் புரியாத ஒரு உற்சாகம் வரும்.
7.அன்று சந்தோசமாக இருக்கும்.. காரியங்கள் சீராக நடக்கும்.

இது எல்லாம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கிறேன். அதையே பயிற்சியாகக் கொடுத்து உங்கள் உடலில் இருக்கும் அணுக்களுக்கு கண்ணின் நினைவு கொண்டு அருள் ஞான உணர்வைப் பதிவு செய்கின்றேன்.

கண்ணால் பதிவு செய்யும் பொழுது எலும்புக்குள் ஊழ் வினையாகப் பதிவாக்கி விடுகின்றது.

செல்ஃபோன்களில் பதிவாக்கிய பின் அழைத்தால் அந்த நம்பர் எப்படித் தெரிய வருகின்றதோ அதைப்போல அந்த அருள் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால்
1.மீண்டும் நினைவாக்கும் போது அந்தச் சக்தியை நீங்கள் பெற முடியும்.
2.அருள் உணர்வுகளை உங்களால் நுகர முடிகின்றது அறிய முடிகின்றது.
3.ரத்தத்தில் அது சேர்ந்து கெட்டதை அகற்றுகின்றது… நல்லதை உருவாக்க ஜீவன் கொடுக்கின்றோம்.

ஆனால் வீணாகக் கவலைப்பட்டு சஞ்சலப்பட்டு சங்கடப்பட்டு வெறுப்படைந்து வேதனைப்பட்டால் மீண்டும் அதை வளர்த்து மனித உடலிலே நோயாகி… அடுத்து மனிதனல்லாத உடலை உருவாக்கத்தான் அது உதவும்.

ஜோசியம் ஜாதகம் நல்ல நேரம் கெட்ட நேரம் எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. காரணம்… தீமையை நீக்க வேண்டும் என்று எந்த நேரத்தில் எண்ணுகின்றீர்களோ அதுவே உங்களுக்கு நல்லது.

1.தீமை வரும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைப் பயன்படுத்தி
2.என் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எப்பொழுது எண்ணுகின்றீர்களோ “அது எல்லாம் நல்ல நேரமாகின்றது…”

மனிதனுக்கு ஜாதகம் இல்லை… அவன் உருவாக்கும் சக்தி பெற்றவன். நல்லதை உருவாக்கப்படும் பொழுது நல்ல நேரம் வருகின்றது… நல்ல செயல் நடக்கின்றது… மன பலம் கிடைக்கின்றது… மன உறுதி கிடைக்கின்றது.

“எனக்குத் துரோகம் செய்தான்… தொல்லைப்படுத்தினான்” என்று எண்ணினால் அந்த நேரம் கெட்ட நேரம் ஆகின்றது. தொழில் செய்து நஷ்டம் ஆகிவிட்டது பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று எண்ணினால் அது எல்லாம் கெட்ட நேரம் தான்.

என் பையன் நல்ல ஒரு தெளிவானவனாக வரவேண்டும் தொழில் சீராக வேண்டும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பிள்ளைக்கு நல்ல நேரம்… நமக்கும் நல்ல நேரம் ஆகின்றது…!

நல்ல நேரமாக ஆக்க வேண்டும் என்றால் அதற்கு வலு வேண்டும் அல்லவா. சாதாரணமாக நினைக்க முடியாது.
1.அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கின்றோம்.
2.அதை நீங்கள் பெற்று உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டால் அதை நினைக்கும் போதெல்லாம் நல்ல நேரம் ஆகின்றது.

வேதனை என்று வரப்படும் பொழுது சர்க்கரைச் சத்து ரத்தக் கொதிப்பு ஆஸ்மா போன்ற நோய்கள் கடுமையாகின்றது. நான் நாளை என்ன செய்வேன்…? என்ற திகைப்பானால் வேதனை வெறுப்பானால் சளியாக உருமாறும் நிலையும் வந்து விடுகிறது. அடிக்கடி சலிப்பும் சஞ்சலமும் உருவானால் உப்பு சத்து உருவாகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு “எதிர்ப்பான நிலை வரும் பொழுது… அது செயலற்றதாக மாறி…” இந்த உடலையே சீர்குலைக்கச் செய்கின்றது.

அதைப் போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் விடுபடுவதற்குத் தான்
1.எப்படியும் அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் குடும்பத்திலும் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்ச வேண்டும்
3.அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
4.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உயர வேண்டும்
5.உங்கள் பார்வை பிறருடைய தீமைகள் வராது தடுக்க வேண்டும் என்று இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“கருநொச்சி” என்று தபோவனத்தில் வைத்திருக்கின்றோம்.

நீங்கள் இங்கே தபோவனம் வரும் பொழுது அதிலே ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீடுகளிலோ அல்லது அங்கே இடம் இல்லை என்றால் பக்கத்து வீட்டிலேயோ ஊன்றி வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.ஏனென்றால் அந்த நொச்சி மரத்தில்
2.மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைப் பாய்ச்சி வைக்கப்பட்டுள்ளது.

அது முளைத்து வரும் பொழுது ஒரு ஐந்து இலைகளை எடுத்து அதை நீங்கள் காய்ச்சி ஒரு அரை டம்ளர் சாப்பிட்டால் போதும். சாப்பிட்ட பின் இது இரத்தத்தில் கலக்கின்றது.

நாம் நுகர்ந்த… சுவாசித்த உணர்வுகளில்… வைரஸ் என்ற அணுக்கள் இரத்தங்களிலே உருவாகி இருந்தால் அதிலே இது (நொச்சி) பட்ட பின் அது பலவீனம் அடைகின்றது.

1.நம் உடல்களில் சளி என்ற நிலைகள் வந்தாலும் சரவாங்கி நோய் (மூட்டு நோய்) என்று வந்தாலும் அதை எல்லாம் குறைத்து நமக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்.
2.இரவு படுக்கப்போகும் பொழுது அரை டம்ளர் குடியுங்கள். இருதயத்தில் இருக்கக்கூடிய, நுரையீரலில் இருக்கக்கூடிய சளி எல்லாம் கட்டி கட்டியாக வெளியே வந்துவிடும்.
3.காய்ச்சல் வந்தால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அந்த வைரஸ் கிருமிகள் அழிந்துவிடும். உஷ்ணம் அதிகம் இருப்பதால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய காய்ச்சலைத் தடுக்கும்.
4.அதே போன்று தும்மலுக்கு… மூக்கில் தொடர்ந்து தண்ணீர் வருபவர்களுக்கு மஞ்சள் நொச்சி இலை வேப்பிலை பச்சையாகப் போட்டு புகையைப் போடுங்கள்…! அதை நுகருங்கள்…! சரியாகப் போகும்.
5.ஆஸ்த்மாவிற்கு வாத நோய் எல்லாவற்றுக்குமே இந்த நொச்சி இலையைச் சாப்பிட்டாலே சரியாகும்.

அதே சமயத்தில் நோயாளிகளை நீங்கள் பார்த்து விட்டால் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்… கண்ணின் நினைவைச் செலுத்தி…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானியுங்கள்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளியின் உடலில் படர வேண்டும் அவர் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

1.அவர் உடலில் எதை எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அதை எல்லாம் உங்கள் உயிர் இங்கே உருவாக்குகின்றது
3.அதாவது உடலிலே அணுத் தன்மை ஆகும் கருவாக உருவாக்குகின்றது.

இப்படி நாம் ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தத் தீமையின் நிலையைத் தணிக்கச் செய்து அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டச் செய்து நமக்குள் நல்லதாக்க வேண்டும்.

முன்னோர்களுக்குச் சாப்பாடு இன்று எப்படிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்…?

 

முன்னோர்கள் உடலை விட்டு உயிர் பிரியும் பொழுது வேதனையுடன் தான் வெளியில் செல்கின்றது. அந்த வேதனையை நமக்குள் கவர்ந்து கொண்ட பின் வேதனையை உருவாக்கும் அணுவாக நமக்குள் மாறுகின்றது.

அந்த அணுவிற்குச் சாப்பாடு எங்கே…?

மூதாதையர்கள் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட அந்த உணர்வுகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமிக்குள் பரவி இருக்கின்றது.
1.அதை எடுக்கப்படும் பொழுது மூதாதையரின் நினைவும் அவர் பட்ட கஷ்டமும் நமக்கு நினைவு வருகின்றது.
2.அந்த உணர்வைச் சேர்க்கப்படும் போது அவர் உடலிலே எப்படி நோய்கள் உருவானதோ
3.நமக்குள்ளும் அதே நோய் உருவாகும் நிலை வந்து விடுகின்றது.

அதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்…?

பூரண நிலா அன்று துருவ நட்சத்திரம் நமக்கு நேராக வருகின்றது. அந்த நேரத்தில் முன்னோர்கள் உயிரான்மாக்களை ஒளியின் சரீரமாக்கி… நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகளுக்கு அந்த ஒளியை உணவாகக் கொடுக்க வேண்டும்.
1.ஏனென்றால் வேதனைப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் இருக்கின்றது.
2.அதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.அதன் வழி வேதனைகளை நீக்கப் பழக வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்த பின்… அந்த உணர்வு எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும்.

1.மூதாதையர்கள் பெற்ற உணர்வு எனக்குள் இருந்து அது உயர்ந்த உணர்வு பெற்று
2.நல் உணர்வை உருவாக்கும் அந்த அணுத்தன்மை எனக்குள் பெருக வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.அப்பொழுது அதற்கு உணவு கொடுக்கின்றோம்…! என்று பொருள்.

“எனக்கு இப்படித் துரோகம் செய்தான்” என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் உண்டு. அவனை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் சுவாசித்து வெறுப்பான உணர்வு ஆகி அந்த வேதனையான உணர்வு நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சாப்பாடாகச் சேருகின்றது.

அந்த அணுவின் மலம் உடலாக்கப்படும் போது உடலில் நோயாக வருகின்றது. சாதாரண நிலைகளில் இது நடக்கின்றது.

அது போல் நம்முடைய மூதாதையர்களின் உடலில் எத்தனை வகையான நோய்வாய்ப்பட்டார்களோ அதன் வழி வெளியில் செல்கின்றனர்.

அவர்களை நாம் எண்ணும் பொழுது… எங்களை வாழ வழி வகுத்துக் கொடுத்தீர்கள்…! ஆனால் நோயுடன் உடலை விட்டுப் பிரிந்தீர்கள்…! என்று எண்ணினால் அதே உணர்வு “பரம்பரை நோய் என்ற நிலையும் பரம்பரை குணம் என்ற நிலையும்” அத்தகைய உணர்வாக நமக்குள் வளர்ச்சி பெறுகின்றது.

முதலிலே குடும்பம் நன்றாக இருந்திருக்கும். எல்லோரையும் காக்க அவர் வேதனைப்பட்டு இருப்பார். அவர் இறந்த பின் அந்த உணர்வு வழி வழி வரப்படும் பொழுது அந்தக் குடும்பத்தில் பின் தொடர்ந்து தொல்லைகள் தான் அதிகமாகும்.

காரணம்… அவர் வேதனைப்பட்ட உணர்வுகளைப் பாசத்தால் நமக்குள் வளர்த்துக் கொண்டால் பரம்பரை நோயாகவும் பரம்பரை குணமாகவும் பரம்பரை செயலாகவும் மாறி விடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களுடைய ஆன்மாக்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவர்களை விண் செலுத்த வேண்டும்.

எங்களை வளர்ப்பதற்காக எத்தனையோ தொல்லைகள் பட்டீர்கள் அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களை இப்படி விண் செலுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
1.எங்களுக்குள் இருக்கும் மூதாதையரின் அத்தனை அணுக்களுக்கும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.ஏனென்றால் அவையெல்லாம் நமக்குள் ஜீவணுவாக இருக்கும்.
3.அந்த அணுக்களுக்கெல்லாம் இந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் செலுத்தி அதற்கு உணவு கொடுக்க வேண்டும்.

முன்னோர்கள் ஒளி உணர்வு பெற்றதை நாம் எண்ணி நம் உடலில் உள்ள அந்த ஜீவணுக்களுக்கு அந்த அருள் உணர்வுகளைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில நேரங்களில் இனம் புரியாத நிலைகளில் நமக்கு வேதனையான உணர்வுகள் தோன்றுவதன் காரணம் என்ன என்றால் நமக்குள் முந்தைய நிலைகளில் சந்தர்ப்பத்தால் கவரப்பட்ட வேதனைகள் உணர்வுகள் வெளிப்பட்டு அந்த நிமிடம் அது உடலில் இருந்து வேதனையைத் தரும்.

அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் உணர்ச்சிகள் ஆன பின் கண்ணின் நினைவு உயிருக்கு வருகின்றது.

உதாரணமாக காலில் முள் குத்தினால் உடனே உயிருக்குத் தான் அந்த உணர்வுகள் வரும். கண் என்ன செய்கிறது…? அது முள்ளா அல்லது வேறு எது குத்தியது…? என்று தேடுகிறது.

அப்பொழுது இந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது
1.அதைக் கூர்ந்து கவனிக்கும் தன்மை வருகின்றது…
2.அதை நுகர்கின்றது…
3.அதை உற்றுப் பார்த்துக் காலில் ஏறிவிட்டதா…! என்ன…? என்கிற வகையில்
4.அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.

இதைப் போன்ற நமக்குள் முந்தைய நிலைகள் பெற்ற இந்த உணர்வுகள் அந்த அணுக்கள் அது தன் பசிக்காக உணர்ச்சிகளைத் தூண்டும்.

உடலில் வலி இருக்கிறது…! என்றால் “சந்தோஷமாக இருங்கள்” என்றால் உங்களால் இருக்க முடியுமோ…? நம் உடலிலே ஏற்கனவே பெற்ற அந்த அணுக்கள் தன் பசிக்கு அதன் உணர்ச்சிகளை உந்தும்.

அந்த வேதனையான உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளும் அந்த வேதனையின் நிலையை நாம் அறிய முடிகின்றது.

அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிருடன் தொடர் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

ஏனென்றால்…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

பின் கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ…
2.அங்கே உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தித் திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வாருங்கள்.

இப்படிச் செய்ய…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே பட…
2.அந்த விஷத் தன்மைகள் அங்கே குறைந்து…
3.நமக்குள் இருக்கும் அந்த வலியைக் குறைக்க உதவும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து உடலில் செலுத்தச் செலுத்த வேதனையை உருவாக்கும் அணுக்கள் சிறுகச் சிறுக வீரியத் தன்மை இழந்து உடலில் உள்ள நல்ல அணுக்கள் வலிமை அடையக்கூடிய சக்தி பெறுகின்றது.

அதற்குத்தான் இதைச் செய்யச் சொல்கிறோம்…!

உலகம் உருவாகும் விதமும்… ஒளியான உலகை உருவாக்கும் விதமும்…!

 

சந்தர்ப்பத்தில் மிகவும் வேதனையான உணர்வு நமக்குள் வருகின்றது. அப்பொழுது எதை நினைக்கின்றோம்…? அதை நிவர்த்திக்க…
1.எத்தனை தெய்வங்களை நினைத்தோமோ… எத்தனை கடவுள்களைப் பற்றிச் சொன்னார்களோ…
2.அங்கே தான் போய்ப் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

வேதனையான உணர்வுகள் வந்த பின் உடலுக்குள் என்ன நடக்கின்றது…? தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்ச்சிகள் மேலோங்குகின்றது. அந்தக் காப்பாற்றும் உணர்ச்சி தூண்டப்படும் பொழுது உயிருக்குத் தான் தெரிய வருகின்றது… அங்கே தான் அறிவாகின்றது.

உடலுக்குள் சென்றபின் பிரம்மமாக உருவாகின்றது. அப்பொழுது சிவன் என்ன சொல்கின்றான்…! நான் என்ன செய்வேன்…? விஷ்ணு வரம் கொடுத்து விட்டான்… ஆகவே விஷ்ணுவிடம் கேட்போம் என்று அழைத்துச் செல்கின்றார்.

அதாவது இந்த உடலின் உணர்ச்சிகள் எல்லாம் “உயிரிடமே எண்ணும் எண்ணங்களை இயக்குகின்றது” என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.

உயிரான விஷ்ணுவே… எனக்கு வரம் தான் கொடுக்கத் தெரியும்…! என் மகனான பிரம்மா “அதனால் உருவான இந்த அணுக்கள் அவனுக்குத் தான் அது தெரியும்… எனவே பிரம்மனிடம் செல்வோம்…” என்று அழைத்துச் செல்கின்றார்.

ஆனால் பிரம்மனோ என் தந்தை சொல் தட்டாது நான் இதை இயக்குகின்றேன். அதன்படி உருவாக்கவில்லை என்றால் உலகம் உருவாகாது. விஷ்ணு வரம் கொடுக்கவில்லை என்றால் உலகத்தில் உருவாகும் தன்மை எதுவும் இருக்காது.

உருவாகும் உணர்வுகள் அது அணுவானால் உடலான சிவன் அரவணைக்கவில்லை என்றால் ஒரு உருவின் தன்மை வராது. மும்மலம் என்ற நிலையில் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

எல்லோரும் சேர்ந்து இப்படிக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வேதனையிலிருந்து நிவர்த்திக்க கூடிய வழி எவருக்கும் தெரியவில்லை.

1.விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான்
2.உள்ளே சென்ற பின் பிரம்மன் அணுவாக உருவாக்கி விடுகின்றான்.
3.அணுவின் மலம் உடலாகின்றது சிவன் அரவணைத்துக் கொள்கின்றான் என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.

இப்பொழுது என்ன செய்வது…? என்று உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் எங்களைக் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…! என்று உணர்வின் ஒலியை எழுப்புகின்றார்கள்.

உடலின் வழி உயிருக்கும் உயிரின் தன்மை பிரம்மனுக்கும் எட்டப்படும் பொழுது இதுவெல்லாம் யாருக்குத் தெரியும்…? யாரிடம் கேட்டால் வேதனையை நீக்குவதற்குண்டான வழி கிடைக்கும்…? என்று விஷ்ணுவும் பிரம்மனும் சிவனும் கூட்டுச் சேர்ந்து ஆலோசனை செய்கின்றார்கள்.

கண்ணனுக்குத் தான் இது எல்லாமே தெரியும்…
1.கண்ணுக்குத் தான் எல்லாம் தெரியும்…!
2.கண்ணால் பார்த்து அதன் வழி தான் உணர்வின் தன்மை பதிவானது.
3.ஆகையினால் அவனிடம் போவோமா…? என்று கேட்கின்றார்கள்.

கண்ணனிடம் சென்று எல்லோரும் முறையிடுகின்றார்கள்.

அப்பொழுது கண்ணன் கேட்கின்றான். விஷ்ணு நீ வரம் கொடுக்கவில்லை என்றால் இந்தத் தொல்லை வராது அல்லவா. அது எப்படி…? நான் வரம் கொடுக்கவில்லை என்றால் எதுவும் உருவாகாதே என்று விஷ்ணு சொல்கிறான்.

பிரம்மனிடம் கேட்கின்றான்… நீ உருவாக்காமல் விட்டுவிடலாம் அல்லவா என்று. என் தந்தை சொல்படி நான் உருவாக்கவில்லை என்றால் உலகம் எதுவும் உருவாகாது என்று பிரம்மன் சொல்கிறான்.

கண்ணன் சிவனிடம் கேட்கின்றான். வேதனையை உடலுக்குள் வராதபடி… அரவணைக்காதபடி நீ விட்டு விட்டால் தொல்லை வராதல்லவா. உடலுடன் அரவணைக்கும் போது தானே தொல்லை வருகின்றது தெளிவாகக் கேட்கின்றான்.

வருவோரை நான் அரவணைக்கத்தான் தெரியும் அதுதான் என்னுடைய வேலை என்று சிவன் சொல்கிறான். இப்படி மூன்று பேரும் மூன்று வேலைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

வேதனையிலிருந்து விடுபட ஏதாவது வழி வேண்டும்…? என்று எல்லோரும் கண்ணனிடம் கேட்கின்றார்கள்.
1.அதாவது கண்ணிலே இந்த எண்ணங்கள் வருகின்றது… சிறிது நேரம் யோசிப்போம் என்று கண்ணன் சொல்கின்றான்.
2.சிறிது நேரம் வானை நோக்கிப் பார்க்கின்றான். யார்…? இந்தக் கண்கள்.
3.அப்படிப் பார்க்கும்போது “அதோ வருகின்றான் ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் அவனிடம் கேட்போம் என்று சொல்கிறான்

ரிஷி என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெற்றது துருவ நட்சத்திரம். அது தான் ரிஷி.

ஏனென்றால் எல்லாவற்றையும் சிருஷ்டித்துக் கொண்டது உயிர்தான்.
1.ஆறாவது அறிவால் தீமைகளை நீக்கிடும் உணர்வு கொண்டு ஒளியாகி ஒளியின் சரீரம் பெற்றது… ஏழாவது நிலை பெற்றது சப்தரிஷி.
2.சப்தரிஷி என்றால் உணர்வின் நாதங்களால் இயக்கப்பட்டு
3.அந்த நாதத்தின் இயக்கமாகத் தீமைகள் தனக்குள் வராதபடி இயக்கும் சக்தி பெற்றது என்று தெளிவாகக் கூறுகின்றார்கள்.

நம்முடைய காவியத் தொகுப்புகளில் தவறில்லை.

வேதனைப்படும் உணர்வைச் சூரியன்… அந்த நாராயணன் வெப்பம் காந்தம் விஷம் என்று இயக்க அணுக்களை அனுப்பி அதைக் கவர்ந்து தனக்குள் எடுத்து இயக்கச் சக்தியாக மாற்றிக் கொண்டே இருக்கின்றான்.

வேதனைப்படும் உணர்வினை எடுக்கும் பொழுது அந்த வேதனையின் தொடர்கள் நமக்குள் வருகின்றது. ஆனாலும்…
1.அந்த வேதனையை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றியவன் துருவ நட்சத்திரம்.
2.அதிலிருந்து ஒளி அலைகள் வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது.
3.வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் அதைக் கவர்ந்து கொண்டால் இருளை நீக்கி
4.ஒளி என்ற உணர்வின் அறிவாக இயக்கும் இயக்க அணுவாக அது மாறுகின்றது.

இதையும் தெளிவாக்குகின்றது நமது சாஸ்திரங்கள்.

அதோ வருகின்றான் நாரதன் என்று கண்ணன் சொன்னபின் மற்ற எல்லோரும்…
1.ஐயோ அவன் கலகப் பிரியன் ஆயிற்றே…! பல தொல்லைகள் கொடுப்பானே…!
2.அவன் பரிசீலனைக்கெல்லாம் நாங்கள் தப்ப வேண்டுமே…! என்ன செய்வது…? என்று இந்த மூன்று பேரும் சொல்கின்றார்கள்.

“கலகம் நன்மையில் தானே முடிகின்றது” என்று கண்ணன் சொல்கின்றான்.

ஓருவன் வேதனைப்படுகின்றான் என்றால் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது நாமும் வேதனைப்படுகின்றோம்.

வேதனை உணர்வுகள் நமக்குள் போன உடனே உயிரிலே படும் போது குருக்ஷேத்திரப் போராக மாறுகின்றது.

அதாவது உயிரிலே படும் பொழுது விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான் உடலுக்குள் சென்ற பின் அது அணுவாகப் பிரம்மம் ஆகி விடுகின்றது. அந்த உணர்வின் தன்மை சிவமாகி விடுகின்றது.

அவன் எப்படி வேதனைப்பட்டானோ அந்த உணர்வு நம் உடலாக மாறும் பொழுது
1.வேதனை எப்படி இயக்குகின்றது…? என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது சாஸ்திரங்கள்.
2.இது எல்லாம் ஞானிகளால் நமக்குக் கொடுக்கப்பட்டவை தான். இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்…?

கண்களால் கவர்ந்து கொண்ட உணர்வுகள் என்ன செய்கிறது…? என்று கண்ணனிடத்தில் கேட்ட பின் சொல்கின்றான். புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்
1.கண்களால் தான் அறிந்து தப்பும் உணர்வுகளைக் கொடுத்து தீமையிலிருந்து விடுபடும் மனித உடலாக உருவாக்கியது
2.அதனால் தான் கண்கள் அதோ வருகின்றான் நாரதன் என்று சுட்டிக் காட்டுகின்றது.

தியானத்தில் நாம் என்ன செய்கின்றோம்…?

சூரியன் காந்த சக்தி கவர்ந்து வெளிப்படுத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை “நமது குரு காட்டிய வழியில் அந்தச் சக்தியைப் பெற வேண்டும்” என்று கண்களால் ஏங்கப்படும் பொழுது அந்த உணர்வு இங்கே பதிவாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அந்த வேதனையை மாற்றி அமைக்க முடிகின்றது.

வேதனைப்பட்டவனையோ நோய்வாய்ப்பட்டவனையோ பார்த்தால் நாம் என்ன சொல்கின்றோம்…? நல்ல மனிதன் “இப்படி ஆகிவிட்டானே வேதனைப்படுகின்றானே…” என்று சொல்கின்றோம்.

அதே சமயத்தில் ஒருவன் நம்மை வேதனைப்படுத்துகிறான் என்றால் “எனக்குத் தொல்லை கொடுக்கின்றான் பாவி…” என்று அவன் மீது விடாப்பிடியாக இருப்போம்.

நல்ல மனிதன் கஷ்டப்படுகின்றான் என்று
1.அந்த வேதனையைத் தான் சொல்ல முடிகின்றதே தவிர
2.அதை மாற்றியமைக்கும் உணர்வு நமக்குள் வருவதில்லை.

அதை மாற்றுவதற்குத் தான் இந்தத் தத்துவத்தைச் சொல்வது. “அதோ வருகின்றான் நாரதன்…” என்று சாஸ்திரங்கள் நமக்கு வழிகாட்டுகின்றது.

ஆதன் வழிப்படி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் அங்கே இணைத்து விட்டால் தீமை என்ற உணர்வுகள் உள்ளே போகாது அது தடுத்து விடுகின்றது. தடுத்தபின் வேதனை உணர்வுகள் நிறுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் செலுத்தப்படும் பொழுது எல்லா அணுக்களுக்கும் அதை இணைக்கப்படும் பொழுது நாரதன்…! தீமை உள்ளே புகாதபடி எல்லா அணுக்களும் வலுவாகின்றது.

சிறிது நேரம் இவ்வாறு எண்ணி ஏங்கி எடுக்கப்படும் பொழுது “உடலுக்குள் வேதனையை ஈர்க்கும் சக்தி அங்கே குறைகின்றது…” அப்பொழுது நமக்கு முன் இருக்கும் அந்த தீமை “அனாதையாகின்றது…”

அனாதையாக இருப்பதைச் சூரியனுடைய காந்த சக்தி அது தன் ஈர்ப்பால் கவர்ந்து இழுத்துச் சென்று விடுகின்றது
1.நம் ஆன்மா தூய்மை அடைகின்றது
2.ஆன்மா நலமாகும் பொழுது உடலும் நலமாகின்றது
3.உயிரான்மாவும் புனிதம் (ஓளி நிலை) பெறுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மை எப்படி வாழ்த்திட வேண்டும்…? நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும்…? என்றும் பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும்,,,? பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்…? என்ற நிலைகளையும் நாம் அறிதல் வேண்டும்.

நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு… எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும்…! என்ற உண்மையின் நிலைகள் வாழ்த்துவது வேறு.
1.ஆனால் உங்களைப் போற்றித் துதித்துவிட்டு
2.அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகச் செயல்படுத்தி (ஏமாற்றி) போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு.

இதைப் போன்ற நிலைகள் அல்லாது “போற்றல்…” என்பது எப்படி இருக்க வேண்டும்…?

ஒருவருடைய உயர்ந்த நிலையைப் பார்க்கும் பொழுது அவர் உணர்வால் “நாம் அதைப் பற்றி…” நமக்குள் நாம் போற்றிக் கொள்ள வேண்டும்.

1.அவர் உயர்ந்தார்…! அந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் பெருமைப்படும் சக்தியாக நுகர்ந்தோம் என்றால்
2.“அவருக்குள் வளரும் உணர்வுகள்…” நமக்குள் நின்று நாமும் வளர்வோம்.

ஆனால் சிலர் மற்றவருக்கு எல்லா உதவியும் செய்வார்கள்.

அவரிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்..,
1.பார்…! அன்றைக்கு எல்லா உதவியும் செய்து அவனை வளர்த்து விட்டேன்
2.இன்றைக்கு அவன் என்னை மதிக்கின்றனா…? பார்…! என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.
3.செய்த நன்மையை மறைத்துத் தனக்குள் “கௌரவம்” என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.
4.“தன்னை மதிக்கவில்லையே…!” என்ற உணர்வு கொண்டு
5.தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள்.

பின் என்ன ஆகும்…?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும்.
1.செய்த நன்மையை நினைவு கொள்ளாது
2.செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக
3.நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

ஆகவே இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். உங்களுடைய உணர்வுகள் எல்லாம் தெளிந்த மனம் கொண்டு பேரருள் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

2004க்கு மேல் செல்லும் பொழுது கடும் விஷத் தன்மைகள் வளரத் தொடங்குகின்றது. அதிலே சிக்கிடாது அந்தப் பேரருள் என்ற உணர்வை உங்களுக்குள் சேர்த்து இருள் என்ற உணர்வுகளைக் கவர்ந்திடாது மெய் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்து இருளை அகற்றிடும் வல்லமை உங்களிலே பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குத் தெளிவாக்குவது.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உணர்வை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.அவர் அறிந்த மெய் உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

குருநாதர் பெற்ற உண்மையின் துணை கொண்டு இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் திரும்பச் சொல்லி உங்கள் நினைவாற்றலைப் பெருக்கச் செய்கின்றோம்.

மாரி

 

நமது சகஜ வாழ்க்கையில் பண்பும் பரிவும் அன்பும் பாசமும் கொண்டு நாம் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் நோயுடன் வேதனைப்படுகிறார் என்றால் அதைக் கண்ணுற்றுப் பார்த்து அதை நுகர்ந்து உணர்ந்து அவருக்கு நாம் உதவி செய்கின்றோம்.

அவ்வாறு உதவி செய்யப்படும் பொழுது…
1.அவர் உடலில் இருந்து விளைந்த நோயை நாமும் நுகர்ந்தறிவதனால் அதே உணர்வின் சக்தி நமக்குள் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.
2.அது மாறி (மாரி) நமக்குள் தாயாக வந்து விடுகின்றது.

நாம் அடிக்கடி அந்த நண்பனை (நோயாளியை) எண்ணும் பொழுது நமக்குள் அந்த உணர்வின் வளர்ச்சி ஏற்பட்டு நமக்குள்ளும் அதே நோய் உருவாகும் சக்தியாக வந்து விடுகின்றது.

அது தான் மாரியம்மாள்…!
1.ஏனென்றால் அவர் கசந்த வாழ்க்கை வாழ்ந்தார்
2.அவருடைய உணர்வை நுகரப்படும் பொழுது நம் வாழ்க்கையையும் கசந்த வாழ்க்கையாக உருவாக்கி விடுகின்றது.
3.ஆகையினால் தான் மாரியம்மன் கோவிலில் “வேப்ப மரத்தை” ஸ்தல விருட்சமாக வைத்திருப்பார்கள்.

கசந்த வாழ்க்கையில் இருந்து நாம் மீள வேண்டுமென்றால் நோயாளியைப் பார்த்தபின் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியின் உணர்வை உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமையான உணர்வுகளைக் கருக்கிடல் வேண்டும்.

அந்த நோயாளிக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். அந்த உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சுதல் வேண்டும்.

இது போன்று
1.நமக்குள் எத்தனையோ வகையான உணர்வுகளை கேட்டறிகின்றோம்.
2.அதை நுகர்ந்த பின் அந்த உணர்வுகள் மாறி (மாரி) தீமைகள் நமக்குள் விளையாயாது தடுப்பதற்குத் தான்
3.மாரியம்மன் ஆலயத்தில் அக்னி குண்டத்தை வைத்திருப்பார்கள்.

பகைமையான உணர்வை நுகர்ந்தால் நமக்குள் அது தீமையாக விளைந்துவிடும். அதிலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்…? என்பதனை உணர்த்துவதற்குத் தான்
1.இந்த வாழ்க்கையில் தீமையோ துன்பங்களோ நோயோ அதையெல்லாம் கேட்டறியும் பொழுது
2.அந்த உணர்வுகள் நமக்குள் விளையாது தடுப்பதற்கு அன்றைய ஞானிகள் “துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெறும்படி செய்கின்றனர்…”

இதன் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் நாம் எவரைப் பார்த்தாலும் அந்தத் தீமையின் உணர்வு தனக்குள் வளராது தடுக்க அந்தப் பேரருள் பேரொளி என்ற உணர்வை உருவாக்குதல் வேண்டும்.

இல்லை என்றால் பிறருடைய தீய உணர்வுகள் அது மாறி(ரி) நமக்குள் நோயாக வருவதைத் தடுக்க முடியாது. ஆனால் தடுக்க வேண்டும் என்றால் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அந்த அருள் உணர்வுகளைப் பெருக்கினோம் என்றால் தீமைகளிலிருந்து விடுபடலாம்… நம்மையும் காத்திடலாம் என்று இந்தப் பொது விதிகளை அமைத்தனர்.

நம் சகஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் நோய்களைப் பற்றியோ பகைமைகளைப் பற்றியோ கேட்டறியும் பொழுது நுகரப்படும் பொழுது அது வளர்ந்து விடுகின்றது.

பகைமை கொண்டால் அவரை அழிக்க வேண்டும் என்றும்… கொடூர நிலை கொண்டு கொலை செய்வதும் போன்ற கொடுமைகள் செய்யும் உணர்வுகளாக உருவாகி விடுகின்றது.

இத்தகைய தவறான நிலையில் இருந்து நாம் தப்ப வேண்டுமென்றால் மாரியம்மன் ஆலயத்திற்குள் வரப்படும் பொழுது அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் சந்திப்போர் அனைவரது உடல்களிலும் படர வேண்டும்
2.எங்களை அறியாது சேர்ந்த பகைமை உணர்வுகள் மாற வேண்டும்
3.அருள் ஒளி எங்களுக்குள் பெருக வேண்டும்
4.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் பேரின்பம் பெற வேண்டும் என்று அனைவரும் ஏகோபித்த நிலைகளில் செய்தால்
5.நாம் எடுத்துக் கொண்ட அருள் மகரிஷிகள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது… நமக்குள் வந்த தீமைகளைப் பொசுக்குகின்றது.

அதற்குப் பின் இந்த ஊரும் உலகமும் உலக மக்களுக்கும் இந்த அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணி நாம் பரவச் செய்தல் வேண்டும்.

எங்கள் தெரு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் ஊரில் படர்ந்துள்ள பகைமை உணர்வுகள் மாற வேண்டும்… சகோதர உணர்வுகள் வளர வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்.

எங்கள் தெரு மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ வேண்டும். மத பேதம் இல்லாது இன பேதம் இல்லாது மொழி பேதம் இல்லாது அரசியல் பேதம் இல்லாது வாழும் அந்தச் சகோதர உணர்வுகள் எங்கள் ஊர் முழுவதும் உலகம் முழுவதற்கும் படர வேண்டும் என்று அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் எண்ண அலைகளைப் பரப்புவோம் என்றால்
1.நமக்குள்ளும் அந்த வளர்ச்சி பெறுகின்றது
2.பகைமை உணர்வை நீக்கிடும் ஞானமும் கிடைக்கின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் வலிமையும் பெருகுகின்றது.
4.தன்னை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றோம்.

பாலிலே பாதாமைப் போட்டால் அது நல்ல சத்தாக மாறுகின்றது. ஆனால் அதிலே ஒரு துளி விஷம் பட்டால் பாதாமினுடைய சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.

இது போன்று… நல்ல குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் பகைமை உணர்வுகள் உள்ளே புகுந்து விட்டால் அது தீமையான உணர்வின் அணுக்களாக விளைந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்காக… ஏகோபித்த நிலைகள் கொண்டு சமுதாயத்தில் மக்கள் அனைவரும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதைக் கடைப்பிடிப்போர் அனைவரும்
1.அவர்தம் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றி
2.வாழ்க்கையில் பேரின்பம் பெரு வாழ்வு பெற எமது அருளாசி உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள். அவர்களுடைய செயலைப் பார்த்தவுடனே நமக்கும் கோபம் வருகிறது.

அப்படிக் கோபம் வரும் பொழுதெல்லாம்…
1.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
2.புருவ மத்தியில் நிறுத்திடல் வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பின் சண்டை போடுபவர்கள் அவர்கள் அறியாது செயல்படும் நிலையிலிருந்து விடுபட்டுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட்டுச் “சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வுகள்” அவர்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினோம் என்றால்…
1.அவர்கள் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாகாது.
2.நம்முடைய உணர்வுகள் இதை மாற்றி நம்முடைய நல் எண்ணத்தின் தன்மையிலேயே கருவாக்குகின்றது.
3.அவர்களைப் போன்ற குரோத உணர்வுகளோ சண்டையிடும் உணர்வுகளோ நமக்குள் வராது.

ஆனால் ஆத்ம சுத்தி செய்யாது… அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நுகர்ந்து அணுவாகி விட்டால் திடீரென்று அந்த உணர்ச்சிகள் நமக்குள் உந்தி நம்மை அறியாமலே கோபப்படச் செய்யும். “யாராக இருந்தாலும்… அவர்களிடம் சண்டைக்குப் போகச் சொல்லும்…!”

ஒருவன் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான்… என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த (அவன்) உணர்வுகள் என்ன செய்யும்…? அந்தத் தவறு செய்த உணர்வுகள் எல்லாம் நம் உடலிலே விளைந்து நாமும் தவறு செய்பவராகப் போய்விடுவோம்.

ஒருவன் நம்மிடம் கோபிக்கின்றான்… கோபிக்கின்றான்… என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அதே உணர்வுகள் நாமும் கோபிக்கும் தன்மை வந்துவிடும்.

அந்த அணுக்கள் பெருகப் பெருக அதற்கு அந்தச் சாப்பாடு தேவை. தன் உணர்ச்சிகளை உந்தி அதனுடைய உணவை எடுத்துக் கொண்டு தான் இருக்கும்.

நமக்குள் இப்படிப் பகைமை உணர்வுகளைச் சேர்க்கச்… சேர்க்க…
1.எப்படி நாம் வெளியிலே சண்டை போடுகிறோமோ இதைப் போல்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும்
2.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த (மேலே சொன்ன) கோபம் குரோதம் வேதனை போன்ற அணுக்க்ளுக்கும் போர் நடக்கும்.

இங்கே உடலுக்குள் பளீர்…ர்ர்ர்…! என்று மின்னும்.

கை காலில் மின்னும். இடுப்பிலே வலிக்கும். எந்தெந்த உறுப்புகளில் இந்த உணர்வுகள் போர் முறைக்கு வருகின்றதோ அங்கெல்லாம் பளீர்…ர்ர்… பளீர்…ர்ர்…! என்று மின்னும்.

ஆகவே நம் உடலில் வேதனையும் வலியும் எல்லாமே தோன்றும்…!

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாக்காதபடி நாம் எப்பொழுதுமே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்ற நிலையில் ஒவ்வொரு நொடியிலேயும் தீமைகளைக் காண நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

1.ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர் கொள்ளுங்கள்.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை ஒரு நிமிடம் நிலை நிறுத்தி ஏங்குங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தப் பேரருள் உணர்வை உணவாகக் கொடுத்து… தீமை செய்யும் அணுக்களை அடக்கி…
1.இணைந்து வாழும்…
2.இணைந்து வாழச் செய்யும் சக்தியாக… மாற்றிக் கொள்ளுங்கள்.
3.மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் அணுக்களாக உருப்பெறச் செய்யுங்கள்.

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு)… இதை மறவாது செயல்படுத்துங்கள்.

கோடி உணர்வுகளை ஒளியாக்கும் “தனுசுகோடி”

 

1.மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமைகளை எல்லாம் நீக்கும் உணர்வு பெற்றவன் கார்த்திகேயா.
2.தீமை என்று தெரிந்து கொண்டபின் சேனாதிபதி பாதுகாக்கக் கூடியவன்.
3.முருகு மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன்… இந்த ஆறாவது அறிவு என்று இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளது நமது சாஸ்திரங்கள்.

யாரும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் முறைப்படுத்தி அதைக் காட்டுகின்றோம். இது இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது.

கோடிக்கரை…! நாம் பல கோடி உடல்களை எடுத்துக் கடைசிக் கரையாக இருக்கின்றது மனித உடல்.
1.தீமைகளை நீக்கும் உணர்வுகள்… தீமைகளை நீக்கும் சக்தி பெற்றது தனுசுகோடி.
2.கடைசி நிலையில் நின்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் கவர்ந்தோமென்றால் தீமையை நீக்கும் சக்தி வருகின்றது.
3.எப்பொழுதெல்லாம் தீமைகள் வருகின்றதோ அதை நீக்கும் போது பல கோடித் தீமையை நீக்கும் உணர்வாக (தனுசுகோடி) நமக்குள் வருகின்றது.

வேதனைப்படும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அது எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வுகளைச் செலுத்தப்படும் பொழுது வாழ்க்கையில் வரும் பல கோடி உணர்வுகளிலிருந்து… தீமையிலிருந்து விடுபடும் சக்தி பெற்றது கோடிக்கரை… மனிதன் அதைப் பெற முடியும்.

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் ரத்த நாளங்களில் கலந்து என் உடல் முழுவதும் படர்ந்து உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்செலுத்தினால்… இப்படி வாழ்க்கையில் வரும் எத்தனையோ கோடி உணர்வுகளை மாற்றினால் அது தனுசுகோடி.

இராமேஸ்வரத்தில் கடலோரப் பகுதியில் துருவ நட்சத்திரத்தை நேரடியாகக் காண முடிகின்றது. எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இராமேஸ்வரம் இந்த மனித உடல். எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று கோடிக்கரையாக வந்துள்ளது மனித உடல்.

1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது ஒவ்வொரு நொடியிலும் தனுசு
2.தீமையிலிருந்து விடுபடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
3.அந்த தனுசைப் பாய்ச்சி ஒவ்வொரு தீமையையும் நீக்க வேண்டும் தனுசுகோடி.

இதை உணர்த்துவதற்குத் தான் மனித உடலில் நேரம் ஆகிவிட்டது என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றார்கள். ஏனென்றால் சிறிது காலமே இந்த உடலில் வாழுகின்றோம்.

ஆகையினால் மணலைக் குவித்துச் சிவலிங்கமாக உருவாக்கி இராமன் அதைப் பூஜித்தான். அதற்கு என்ன அர்த்தம்…?

இந்த மனித வாழ்க்கையில் தீமை என்று வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் தெளிந்த மனம் பெற வேண்டும் ஏன்று இதை எடுத்து
1.ஒவ்வொரு நிமிடமும் உடலுக்குள் செலுத்தி தீமை வராது தடுக்கும் அந்த தனுசை வைத்து நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
2.உடலில் அந்த அருள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்திற்குள் இந்த அரும்பெரும் சக்திகளைச் சேர்த்தோம் என்றால் நம் மனது ஒன்றாகின்றது. பகைமை இல்லாது ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.
1.அருள் உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியாகி இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணையும் நிலை உருவாகின்றது.

அதற்குத்தான் இந்த தத்துவங்களை எல்லாம் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் (மகரிஷியாக) ஆவதற்கு முன் அவனுடைய தாய் தந்தையர்கள் நுகர்ந்தறிந்த பச்சிலை மணங்கள் இப்பொழுது வெளிப்படுகிறது. வெளிப்பட்டுள்ள அந்த மணங்களை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க நாம் இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.

1.அதை நீங்கள் நுகரும் பொழுது இப்பொழுது அவர்கள் காலத்தில் (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்)
2.எப்படி நஞ்சினை வென்ற உணர்வுகளை அகஸ்தியன் கவர்ந்தானோ
3.அதே சக்தியை நாமும் பெற முடியும்.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் பல பச்சிலைகளை அரைத்துத் தன் உடலில் முலாமாகப் பூசினாலும் அந்த உணர்வுகளை அவர்கள் நுகர்ந்து கருவில் இருக்கும் அணுக்களுக்கு இந்தச் சக்திகளைக் கொடுத்தார்கள்.

அதையும் இப்பொழுது உங்களுடைய உணர்வுகளை நினைவாக்கி நினைவு கொண்டு அதைப் பெறத் தியானிக்கப் போகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழி நீங்கள் நுகரப்படும் பொழுது…
1.நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறப் போகின்றீர்கள்.
2.உங்கள் உடலிலே வளர்ந்து வரும் அந்த அணுக்களும் இதை நுகரப் போகின்றது.
3.அதன் வழி அன்று அகஸ்தியன் பெற்ற… அவன் வளர்ந்த… வளர்ச்சி பெற்ற அந்தத் திறனை எல்லாம்
4.நாம் அனைவரும் பெறப் போகின்றோம்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற நினைவினை உங்கள் உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அதை நாம் நுகரப்படும் பொழுது அனைவருக்கும் அவர்கள் பெற்ற (அகஸ்தியன், அவன் தாய் தந்தையர்) அருள் சக்தியிலிருந்து வெளிப்பட்டதை நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

அந்த மணங்களை இப்பொழுது நீங்களும் உணர முடியும்.

மணத்தை உணர முடியவில்லை என்றால் உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவுவதை (சக்கரம் போல் சுழல்வதை) உணரலாம்.
1.உங்கள் உடலில் தீங்கினை விளைய வைக்கும் அணுக்கள்
2.அது ஒடுங்குவதையும் உங்களால் உணர முடியும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அந்தச் சக்தி இங்கே படர்கின்றது… தியானிக்கும் உணர்வுகளில் அதை ஈர்க்கும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் திருமணமான பின் துருவ மகரிஷியாகப் பருவம் பெற்ற
1.அவர்கள் கணவனும் மனைவியும் துருவத்தை உற்று நோக்கி…
2.இருவரும் ஒன்றாக நுகர்ந்தறிந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் இப்பொழுது பரவி
3.உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அந்தச் சக்தியைப் பெறும்.

அதன் வழி உங்கள் நினைவின் ஆற்றல்… “துருவப் பகுதியில்” செல்லும். அங்கிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் நுகர்வீர்கள்… அந்த உணர்வுகள் உங்கள் உடலிலே பரவும்… உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெறும். உங்கள் இரத்தநாளங்களில் இவை அனைத்தும் கருவாக உருப்பெறும்.

1.உங்கள் புருவ மத்தியில் இளம் நீல நிற அலைகள் வரும்
2.அந்த உணர்வுகள் உயிரினின்று உடலுக்குள் பரவும் உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள்… காணலாம்…!

துருவத்தில் நிலை கொண்டு… துருவ நட்சத்திரமாக வானுலக ஆற்றலைக் கவர்ந்து இன்றும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் நினைவாற்றல் அனைத்தும்… துருவ நட்சத்திரத்தை எல்லையாக வைத்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி… அதன் வழி கவர்ந்து… உங்கள் உடல்களில் இரத்தநாளங்களில் கலக்கச் செய்யுங்கள்.

1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியில் பளீர்…ர்ர்…! என்று இளம் நீல அலைகள்
2.உங்கள் உயிர் ஈர்க்கும் நிலையை உணரலாம்… காணலாம்
3.உங்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் பரவுவதையும் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து வரும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்று உணர்வுகள் வரும்.

அரும் பெரும் காட்சியாக வானுலகம் உங்கள் உடல்களிலும் உணர்வுகளிலும் காண முடியும். வளர்ந்து வரும் உணர்வினை உங்களால் அறிய முடியும்.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற “குலதெய்வங்களின் உயிரான்மாக்கள்…” சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளி பெறும் சரீரம் பெறவேண்டும் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றும் அவர்களை உந்திச் செலுத்துங்கள்.

எமக்கு குருநாதர் வழி நடத்திச் சென்ற அதே வழிப்படித்தான் இதை இந்த அதிகாலையில் தியானிக்கும்படிச் செய்தது. அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதியச் செய்து அதை நீங்கள் நுகர்ந்து உடலில் பதியச் செய்யும் நிலையும் உருவாக்கியது.

1.அந்த அகஸ்தியன் பெற்ற விஷத்தை வென்றிடும் ஆற்றலும்
2.விண்ணுலக ஆற்றலைப் பெற்ற நிலைகளும் நீங்கள் இப்பொழுது நுகர்ந்திருந்தால்
3.அந்த மணங்கள் நுகர்ந்தவர்கள் அதை அறியும் பருவம் பெறுகின்றீர்கள்.

அகஸ்தியரை எண்ணித் தியானிக்கும் பொழுது “அவன் பெற்ற மகா பச்சிலைகளின் மணங்களை…” நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள்.

வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து துருவ எல்லையை துருவ மகரிஷிகளை எண்ணும் பொழுது
1.புருவ மத்தியில் இளம் நீல ஒளிக்கதிர்கள் – ஈர்ப்புடன் ஈர்ப்பு வட்டமாக
2.அந்த உணர்ச்சிகள் அந்த ஒளி அலைகள் தெரிந்திருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வரும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நுகரும் பொழுது வானில் மிதப்பதைப் போன்று அந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள். உங்கள் உடலில் அந்தச் சக்திகள் படர்ந்திருக்கும்.

இதுகள் எல்லாம் அகஸ்தியன் கருவிலிருந்து அந்த உணர்வுகளைப் பெற்று அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து அலைகளாகப் படரச் செய்துள்ளது.

இதனை நீங்கள் வரிசைப்படுத்தி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினோம்.

அதன் வழி கொண்டு காற்றிலிருக்கும் அந்த அரும் பெரும் சக்திகளை நீங்கள் நுகர்ந்து அறியும் ஆற்றலும் அகஸ்தியன் வளர்ந்து வந்த அந்த அருளாற்றல் உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.

அவர்கள் துருவ மகரிஷியாகி அதனின்று வெளிப்பட்ட உணர்வுகளை அவர்கள் சென்ற பாதையில் நீங்களும்
1.இதைக் கணவனும் மனைவியுமாகக் கவர்ந்து உங்களில் வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்கும்…
2.அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒருவரை ஒருவர் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் வெளிப்படுத்தியதை உங்களில் பெறச் செய்வதற்கும்..
3.உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்வதற்கும்
4.உங்கள் இரத்த நாளங்களிலே இரத்தங்களில் கலக்கச் செய்வதற்குமே இதைச் செய்தது.

பூமியின் ஈர்ப்பை விடுத்துச் சென்று துருவ நட்சத்திரமாக எல்லை கொண்டு பூமிக்கு வரும் அனைத்துச் சக்தியும் ஒளிக்கதிர்களாக மாற்றிக் கொண்டும் ஒளிச் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றோர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி உயிர் தோன்றி அகஸ்தியன் வழியில் நாம் செல்லும் பொழுது அடுத்து நம்முடைய எல்லை பிறவியில்லா நிலை தான்…!

எல்லையில்லாத அகண்ட அண்டத்தில்… என்றும் நிலையான உணர்வுகள் கொண்டு… அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலையைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானித்து… உங்களுக்குள் பதியச் செய்து அதை ஞான வித்தாக ஊன்றியுள்ளோம்.

1.பதிந்த சக்தியின் துணை கொண்டு
2.நீங்கள் தியானிக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு நிலைகளிலும் அந்தச் சக்தி கிடைக்கும்.
3.ஆகவே இந்தக் காலை துருவ தியானத்தை ஒரு பத்து நிமிடமாவது அவசியம் இருக்க வேண்டும்.

மாங்கல்யத்தைக் கழற்றுவது என்பது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்

 

மனிதனின் சகஜ வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தாலும் பண்பு பரிவு பாசம் கொண்டு வாழும் பொழுது பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து அதை அறிந்துணர்ந்த பின் அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களின் வேதனையான உணர்வுகளைத் தனக்குள் அதிகமாக நுகர்ந்து விடுகின்றோம்.

அப்படி நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் அதிகமாக வளர்ச்சி அடைந்து இந்த நோயாளியின் உடலை விட்டு உயிரான்மா பிரிந்து சென்றால் கேட்டறிந்த நமது உடலுக்குள் வந்து விடுகின்றது.
1.அவ்வாறு வந்துவிட்டால் தீமையின் உணர்வுகள் இந்த உடலுக்குள் விளைந்து
2.மனிதன் என்ற பண்பையும் இழக்கச் செய்து விடுகின்றது.

கணவனும் மனைவியும் இருவருமே அந்த வேதனை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். வேதனை உணரவைப் பகிர்ந்து கொண்டாலும் எந்த வேதனையைக் கவர்ந்து கொண்டார்களோ இந்த உடலின் நிலை கொண்டு இன்னொரு ஆன்மா இங்கே சேர்ந்து விடுகின்றது. ஆக கணவனுக்கு மனைவி இல்லை.

கணவனும் இதைப் போன்று பல தீமையான உணர்வுகளைப் பரிவுடன் கேட்டறிந்தாலும் தீமை அதிகரித்து விட்டால் அதன் வழி இந்த உடலிலே கடும் நோய்கள் உருவாகி விடுகின்றது.

இதன் வழி பெற்றாலும் தன் வாழ்க்கையில் அந்த விஷத்தின் தன்மை அதிகரிக்க இந்த உடலை விட்டுச் சென்றால்
1.இன்னொரு விஷத் தன்மை கொண்ட உடலாகத் தான் உருவாகுமே தவிர மனித உடல் பெறுவது என்பது முடியாத நிலை.
2.கணவனும் மனைவியும் இங்கே பிரிக்கப்படுகின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் கணவனின் உயிரான்மா உடலை விட்டுப் பிரிந்தால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வைத் தனக்குள் வலுவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பின்… உடலை விட்டு பிரிந்து சென்ற கணவனின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அங்கே உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
1.என்னுடன் இணைந்து வாழ்ந்த பண்பு கொண்ட பரிவு கொண்ட உணர்வுகள் நிலைத்த அறிவாக பேரொளியாகப் பெற்று
2.பெரு வீடு பெரு நிலை என்று நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று மனைவி கணவனை இவ்வாறு எண்ணுதல் வேண்டும்.

இதைப் போல மனைவியினுடைய உயிரான்மா பிரிந்து விட்டால் கணவன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வினைத் தனக்குள் சேர்த்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுப்பெற்றோமோ
2.சூட்சும நிலை அடைந்த அந்த ஆன்மாக்களை அங்கே செலுத்தி விடலாம்.

அங்கே செலுத்திய பின் என்றென்றும் ஒளியின் சுடராக எங்கள் குடும்பத்திற்குள் இருளை அகற்றும் அருள் சக்தியாக வர வேண்டும் என்று எண்ணி ஏங்கிடல் வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால்… ஞானிகள் காட்டிய அருள் வழியில் கணவன் மனைவியும் “இரு உயிரும் ஒன்றாக இணைந்து இரு உணர்வும் ஒன்றாக இணைந்து வாழ்வீர்கள்…”

இந்த உணர்வுகள் இருக்கப்படும் போது அந்த உணர்வின் வலுவால் “நீங்கள் என்றுமே பிரிவதில்லை…” உடலை விட்டுப் பிரிந்தாலும் அவருடைய உணர்வுகள் உங்கள் உடலில் உண்டு.

1.கணவர் உடலை விட்டுப் பிரிந்தால் பெண்கள் மாங்கல்யத்தைக் கழற்றி விடுகின்றார்கள்.
2.அவ்வாறு செய்வது ஞானிகள் காட்டிய வழியில் தவறான வழியாகும்.

கணவனுடைய உணர்வுகள் தனக்குள் உண்டு. சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழ்ந்திடும் உணர்வுகள் எங்கள் குடும்பத்தில் வரும் அறியாது சேர்ந்த இருளை நீக்கி எங்கள் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று மனைவி கணவன் உயிரை உயர்ந்த நிலை கொண்டு எண்ணினால் இந்த உணர்வு இங்கேயும் வளர்கின்றது… குடும்பத்திற்குள் அறியாது வரும் தீமைகளை அகற்றிடும் வல்லமையும் பெறுகின்றது.

மனைவி கணவனை இவ்வாறு எண்ணுவதும் கணவன் மனைவியை இவ்வாறு எண்ணுவதும் இதைப் போல் இணைந்தால் இதன் வழி வரும் சந்ததியினருக்கும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகள் படரப்பட்டு தீமையிலிருந்து விடுபடும் சக்தி பெறுகின்றார்கள்.

ஞானிகள் காட்டிய இந்த அருள் வழிப்படி நடந்தால்
1.இந்த உடலுக்குப் பின் யார் முந்திச் சென்றாலும் அவர் ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.
2.அதே உணர்வைப் பற்றுடன் பற்றும் பொழுது எளிதில் அங்கே சென்று இணைந்து இரு உயிரும் ஒன்றாக இணைந்து ஒளியைப் பெருக்க இது உதவும்.

பெண்கள் மாங்கல்யத்தை நீக்குவது என்பது கணவனை நீக்குவது என்பதாகும். மாங்கல்யம் இங்கு இருந்தால்தான் அவருடைய நினைவே வரும்.

அவர் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து அதன் வழி கொண்டு இரு உணர்வும் ஒன்றாகச் சேர்த்து அருள் வழி வாழவும் இதைப் பின் தொடர்ந்து வரும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கு அருள் ஞானத்தை ஊட்டவும் அருள் உணர்வுகளை வெளிப்படுத்தவும்
1.அவர்களும் இதைப் பின்தொடர்ந்து வரப்படும் போது உங்கள் ஆன்மா வெளிப்பட்டாலும்
2.குழந்தைகள் இதே முறைப்படி செயல்படுத்தும் போது இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய உதவும்.
3.ஆகவே பெண்கள் மாங்கல்யத்தை நீக்காது கணவனின் நினைவு கொண்டு அந்த மாங்கல்யத்தை எடுத்து
4.“நாங்கள் அருள் வழி பெற வேண்டும்… ஒன்றி வாழும் அந்த அருள் சக்தி எங்களிலே வளர வேண்டும்…” என்று எண்ணுங்கள்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் இவ்வாறு செய்தீர்கள் என்றால் இந்த பிறவியின் முழு பயனையும் நீங்கள் அடைகின்றீர்கள். சிந்திக்கும் வலிமை பெற்று நம் குரு அருளைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் வளமாக வாழ்ந்திட எமது அருளாசி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா

 

ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம் அந்த வேதனையான உணர்வை நுகர்ந்தோம் என்றால் “உயிரான விஷ்ணு உள்ளே புக வரம் கொடுக்கின்றான்…”

ஆனால் உள்ளே சென்ற பின் வேதனைப்படுத்தும் அணுவாக உருவாகி விடுகின்றது. அந்த வேதனைப்படும் உணர்வின் உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
1.மனிதனை உருவாக்கிய அணுக்களுக்குள் அது கலந்து விடுகின்றது.
2.மனிதனை உருவாக்கிய அணுக்கள் தான் தேவாதி தேவர்கள் என்பது.

மனித உடலை உருவாக்கிய தேவர்கள் வேதனை என்ற உணர்வைக் கண்ட பின் “எங்களால் எதையும் செயல்படுத்த முடியவில்லை…” என்ற வேதனையுடன் சிவனிடம் வருகின்றனர்.

இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து எங்களுக்குத் தொல்லைகள் கொடுக்கின்றான் “எங்களைக் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…!” என்ற உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றார்கள்.
1.வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால்
2.முதலில் உடலிலே தான் அந்த வேதனை தெரிய வரும்.

மனித உடலை உருவாக்கிய அனைத்து நல்ல குணங்களும் தேவாதி தேவர்கள் என்று நாம் அறியும்படி காரணப்பெயர் வைத்து அழைக்கின்றார்கள்.

சிவனிடம் எல்லோரும் வந்து முறையிடும் பொழுது “நான் என்ன செய்வேன்…? வருவோர் அனைவரையும் வரவேற்பது தான் என்னுடைய செயல்…”

இவை அனைத்தும் விஷ்ணு வரம் கொடுத்து விட்டான். நாம் விஷ்ணுவிடம் கேட்போம் என்று எல்லா உணர்வுகளும் சேர்த்து உயிரான விஷ்ணுவிடம் வேண்டும்படி வருகின்றார்கள்.

விஷ்ணுவிடம் கேட்டாலோ “எனக்கு வரம் கொடுக்கத் தான் தெரியும்… பிரம்மன் அல்லவா உருவாக்குகின்றான்… அவனிடம் கேட்போம்…!” என்று அங்கே வருகின்றார்கள்.

பிரம்மாவோ என் தந்தை சொல்படி நான் உருவாக்கித் தான் ஆக வேண்டும்.
1.அப்படி உருவாக்கவில்லை என்றால் “உலகம் எப்படி உருவாகும்…?” என்று
2.நாம் எல்லாம் தெரிந்து கொள்வதற்கு காரணப்பெயர் வைத்து இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்.

இருப்பினும் இதிலிருந்து விடுபட யாரிடம் கேட்பது…?

விஷ்ணுவும் பிரம்மாவும் சிவனும் மூன்று பேரும் சேர்ந்து இந்த உடலுக்குள் இருக்கும் தேவாதி தேவர்கள் மனித உடலை உருவாக்கிய அனைத்து உணர்வும் ஒன்று சேர்த்து யாரிடம் கேட்பது…? என்ற நிலைகளில் எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

கண்கள் தோன்றிய பின்பு… அந்தக் கண்களால் தான் உற்றுப் பார்த்துப் பல தீமைகளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருப்பவன் துருவ மகரிஷி.

தீமைகளை எல்லாம் அகற்றி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால்
1.அது “ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…!”
2.அவனிடம் கேட்டால் வழி கிடைக்கும் என்று நம் கண்கள் (கண்ணன்) உணர்த்துவதாகக் காட்டுகின்றார்கள்

வேதனையான உணர்வுகளை நுகர்கின்றோம்… நமக்குள் அந்த வேதனை வருகின்றது. இதை நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்தால் வேதனை என்ற அந்த விஷத்தை நீக்க முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.

அதாவது…
1.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதைச் செலுத்தப்படும் பொழுது
2.வேதனையான உணர்வு வராது தடுக்கும்… நம்மைச் சிந்திக்கும்படி செய்யும்.

உடலுக்குள் வரும் வேதனையை அடக்கி எந்த வேதனையான உணர்வுகளை உற்று நோக்கிக் கவர்ந்தோமோ அவர்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் அந்த வேதனைப்படும் அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றுகின்றது.

ஆகவே… வேதனையை அடக்கிடும் அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான்.
2.உடலுக்குள் அது சென்று தீமையை வென்றிடும் பிரம்மனாகி விடுகின்றது.
3.தீமையை அகற்றிடும் உணர்வின் வலுவாகும் பொழுது சிவனான உடலுக்குள் மகிழ்ச்சி என்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றது.

இதனைத் தெளிவாக்குவதற்குத் தான் குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று காட்டினார்கள்.

குரு விஷ்ணு நம் உயிர் எல்லாவற்றிற்கும் குருவாக இருக்கின்றது. குரு பிரம்மா நாம் எதையெல்லாம் எண்ணி எடுக்கின்றோமோ அந்த குணத்தின் தன்மைகள் குருவாக இயக்கும். குரு சாட்சாத் மகேஸ்வரா எல்லாவற்றையும் உருவாக்கும் அந்தச் சக்தி மனித உடலுக்குள் உண்டு என்பதை
1.மனிதனானவன் அவன் தன்னைத்தானே தான் வணங்கி தனக்குள் எவ்வாறு உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும்…? என்று
2.குரு விஷ்ணு குரு பிரம்மா குரு சாட்சாத் மகேஸ்வரா என்று இதைத் தெளிவாக்கி நாம் தெரிந்து கொள்ளும் சக்தியாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.

இதன் வழி உங்கள் வாழ்க்கையில் “உங்களை நீங்கள் அறிந்து” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வளர்ந்து… தீமைகளை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெற எமது அருளாசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கையில் சொத்து சுகம் என்ற நிலைகள் வரப்படும் பொழுது இந்த உடலின் பற்றே அதிகரிக்கின்றது.

அந்த உடல் பற்றினால் சந்தர்ப்பத்தில் நம் காரியங்கள் தடைப்பட்டால் வேதனைப்படுகின்றோம்.

தொடர்ந்து வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது அதையே…
1.நாம் பிடிவாதமான முறையில் அந்த வேதனை உணர்வுகளை அடைகாத்து
2.வேதனையை உருவாக்கும் அணுக்களை வளர்த்து
3.யாரால் வந்தது…? என்று அந்த எதிரிகளை எண்ணியபடி நம் தொழிலைப் பலவீனப்படுத்தி
4.அதனால் நம் நல்ல எண்ணங்களையும் தடைப்படுத்தி
5.கடைசியில் ஒருவரிடத்தில் உதவிக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூட
6.நாம் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள் எல்லாம் சேர்த்து “நமக்கே எதிரியாகின்றது…”

உதவி செய்வோரின் நிலைகளிலிருந்தும் மாறுபடச் செய்கின்றது. இதைப் போல் நாம் செயல்படும் உணர்வுகள் நமக்குள் அந்த் எதிரியை உருவாக்கும் தன்மை தான் வருகின்றது.

அதை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை உடலுக்குள் அந்தக் கருவாக உருவாக்க வேண்டும்.

இந்த உணர்வை நாம் வளர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் இந்த வாழ்க்கையில்…
1.நாரதன் கலகப் பிரியன்… கலகம் நன்மையில் முடியும்…!
2.அதாவது நமக்கு இப்படித் தீங்கு செய்துவிட்டானே… என்ற இந்த எண்ணங்கள் வளராது அதைத் தடைப்படுத்தும்
3.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்க்க வளர்க்க இது வலு பெறும்.
4.எனக்கு இப்படிச் செய்கிறானே…! என்ற கோபமான வேதனையான எண்ணத்தை விடுத்துவிடும் அல்லது விடுக்கும்படிச் செய்யும்.
5.அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் அதிகமாக வளர்க்கும்படி செய்யும்.
6.நாம் எடுக்கும் இத்தகைய எண்ணங்கள் நமக்கு எவர் தீங்கு செய்கின்றாரோ அவர்களுக்குள் பாய்ந்து அதை நினைவுக்குக் கொண்டு வரும்.
7.நம்மை எண்ணும் பொழுதெல்லாம் அவர்களைப் பலவீனப்படுத்தும்… தீங்கு செய்யும் நிலைகளை மடக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளைத்தான் நாரதன் கண்ணனிடம் செல்வார்… இந்திரனிடம் போகின்றார்… அசுரனிடமும் போகின்றார்… எல்லோரிடமும் போகின்றார்… என்று இந்திரலோகத்தையே சொல்லிக் காட்டுகின்றார்கள்.

ஒவ்வொருவரிடமும் இந்த உண்மைகளை உணர்த்திச் சொல்லி அந்த உணர்வுகளை எப்படிச் சீர்ப்படுத்துகிறார் என்ற நிலைகளை விளக்கவுரைகளாகக் காட்டுகின்றார்கள்.

ஆக நமக்குள் இருக்கக்கூடிய பிடிவாதமான குணங்களுக்கு அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை ஒவ்வொன்றும் படரச் செய்து அது மட்டுமல்லாதபடி…
1.எதிரி தீங்குகளையும் தவறுகளையும் செய்கிறான் என்றால்
2.இதே உணர்வுகள் கண்கள் கொண்டு பார்க்கப்படும் பொழுது
3.இந்த எண்ணம் அவர்கள் நுகரப்படும் பொழுது ஊடுருவி
4.பிடிவாதமாக இருப்பதையும் தொந்தரவு செய்வதையும் உணர்த்தி
5.அதனால் உங்களுக்கு என்ன விளைவு ஏற்படுகிறது…? என்றும் அவர்களுக்குள் உணர்த்தச் செய்கின்றது.

இதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் அவன் கண்ணனிடத்திலும் செல்கிறான்… மும்மூர்த்திகளிடமும் செல்கிறான்… மற்றவர்களிடத்திலும் செல்கின்றான்… என்ற நிலையில்
1.அந்த நாரதன் என்ற மகரிஷியின் அருள் உணர்வுகள்
2.நாம் பகைவர்களை எண்ணும் பொழுது கூட
3.கண்ணன் அங்கே அழைத்துச் சென்று அங்கே பதியச் செய்து இந்த உணர்வை ஊட்டுகின்றான்.

அதாவது நாம் எதைக் கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வலைகள் படரச் செய்யப்படும் பொழுது இந்தக் கண்களின் நினைவாற்றல் கொண்டு அவர்கள் நம்மை எண்ணும் பொழுதெல்லாம்
1.அதே கண்கள் அங்கே அழைக்கப்பட்டு இந்த நாரதன் உள்ளே சென்ற பின்
2.அவர்கள் செய்யும் தவறான உணர்வுக்குள் நாரதன் கலகப் பிரியனாகி
3.அந்தக் கலகமோ நன்மையில் முடியும்… அப்பொழுது அந்த உணர்வுகள் சென்ற பின் அது அங்கே அடக்குகின்றது.

அவர்கள் அறியாது செய்யும் இச்சைகளும் வெறுப்பான நிலைகளில் அவர்கள் செய்யப்படும் பொழுதும் அவராலும் சந்தோஷத்தை அனுபவிக்க முடிகின்றதா… அதனால் தொல்லைகள் அனுபவிக்கின்றனர்… வெறுப்பலைகளைச் சுவாசிக்கின்றனர்…! அவர்களுக்கும் இந்த நோய் வருகின்றது…! என்பதை முழுமையாக உணர்த்திக் காட்டுகின்றான் என்று காவியங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நாரதனை மையமாக வைத்துக் காட்டினாலும் அந்த நாரதன் யார்..? அகஸ்திய மாமகரிஷி அவர் உயர்ந்த சக்தி பெற்று இன்று துருவ நட்சத்திரமாக இருப்பதும் அதனைப் பின்பற்றிச் சென்றோர் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் சக்திகளைத்தான் ரிஷியின் மகன் நாரதன் என்று காட்டுகின்றார்கள்.

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அந்த அரும்பெரும் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொண்டு கண்ணிலே எண்ணும் பொழுது
1.யார் தவறு செய்தாலும் அவர்கள் திருந்த வேண்டும்
2.அவர்கள் அறியாமை நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வைச் செலுத்திப் பாருங்கள்.
3.இந்த உணர்வை நாம் செலுத்தப்படும் பொழுது அவர்களின் தீமையின் உணர்வுகள் நமக்குள் விடுவதில்லை.

அவர்கள் தீமை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் எண்ணும் பொழுது இது ஊருவும். உதாரணமாக… எப்படித் தீங்கு செய்தான் என்று எண்ணும் பொழுது புரை ஓடுகின்றதோ அதைப் போல் இந்த அலைகளை நாம் எடுத்துக் கொண்டால்
1.அங்கே அவர்கள் தீங்கும் செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றது
2.நம் உணர்வுகள் அவர்களைத் திருத்தவும் உதவுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நமக்கு ஒருவர் தீங்கு செய்கிறார் என்றால் அதைத் தடைப்படுத்த என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கிக் கொண்டு
2.என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும்…! என்று எண்ணினால் போதும்.

நமக்கு யார் தீமை செய்தாலும் சரி… இவ்வாறு தான் எண்ண வேண்டும்.

நாம் வளர்த்துக் கொண்ட அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள்
1.அவர்கள் தீமையை எண்ணும் பொழுதெல்லாம்
2.நமக்குத் தீமை செய்ய எண்ணும் பொழுதெல்லாம்
3.சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக அவர்கள் உடலிலே இது ஊடுருவப்பட்டு
4.அங்கே இருக்கும் தீமையின் உணர்வுகள் – நம் பேரில் இருக்கக்கூடிய அந்த அணுக்களை இது தணியச் செய்யும்.

அதே சமயத்தில் நமக்குள் அந்தத் தீமையின் அணுக்கள் வளராது… நோய் வராது… அவைகளைத் தடைப்படுத்தும் தன்மை வருகின்றது.

நாம் ஒரு காரியத்திற்கே செல்கிறோம்… திரும்பத் திரும்பச் செல்கிறோம்… என்றால் அதனால் அடிக்கடி சோர்வு என்ற நிலைகள் வரும். அப்பொழுது அதுவே நமக்கு எதிரியாகிவிடுகின்றது.

அப்படி எதிரியாகாதபடி தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டுதல் வேண்டும்.

அந்தத் துருவ மகரிஷியை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

ஏனென்றால் தீமைகளைக் காட்டிலும் இது வல்லமை பெற்றது.. அதை அடக்கும் சக்தி கொண்டது.

ஆகவே அருள் உணர்வின் தன்மையை இப்படிக் கவரும் பழக்கம் வந்து விட்டால்
1.அந்தத் தீமையான உணர்வுகளையோ மற்ற துன்பங்களையோ எண்ணும் பொழுது
2.நாம் அதை எண்ணி எண்ணி அடைகாக்காதபடி.. அதை வளர்க்காதபடி தடைப்படுத்துகின்றோம்.

இது எல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அப்படிப் பழக்கத்திற்கு வந்தபின் ஒரு காரியத்தை நாம் சரியான முறையில் செய்ய முடியவில்லை என்றாலும் அதை அடுத்து…
1.நாம்… இப்படித்தான் நடக்க வேண்டும்…! என்ற மகரிஷிகளின் அருள் உணர்வைத் தனக்குள் வளர்த்து
2.இந்தக் காரியங்கள்… “இப்படித்தான் சித்தியாக வேண்டும்…!” என்ற அந்த உணர்வினை
3.மகரிஷிகளின் அருள் வட்டத்துடன் இணைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது நமக்குள் அந்த அருள் ஞானத்தை வளர்க்கும் சக்தியும் அருள் ஒளியை வளர்க்கும் சக்தியும் பெருகுகின்றது. நம் காரியங்களும் சீராகின்றது. மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றது.

செய்து பாருங்கள்..!

அகஸ்தியன் எந்த வழியில் விண் சென்றானோ “அதே வழியில் தான்” நாமும் செல்ல வேண்டும்

 

செடி கொடிகள் வாடிவிட்டால் அதற்குத் தக்க உரங்களை இடும் பொழுது அது வலுவாகி அது தன் இனத்தின் சத்தைச் செழிப்பாக உருவாக்குகின்றது.

இதைப் போல
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உரமாக அறிவின் தெளிவாக இணைத்து விட்டால்
2.மனித வாழ்க்கையில் தீமையை வென்றிடும் உணர்வின் சத்தாக அது விளைந்து அதன் வித்தாக நமக்குள் உருவாகி
3.அந்த அருள் ஞானிகள் எவ்வாறு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்து வாழ்கின்றார்களோ அதைப் போல
4.அவர்கள் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் சென்று பேரானந்தப் பெரு நிலை என்று அழியா ஒளிச் சரீரம் பெற்று நாம் வாழ முடியும்.
5.”அவன் எந்த வழியில் சென்றானோ அவ்வழியில் நாம் செல்வதற்குத் தான்”
6.தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொன்னார்கள்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றிப் போற்றிப் பாடிக் கொண்டிருக்கும் அந்தத் தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் தன்னை அறிந்து விண்ணுலகை அறிந்து நம் பூமி நுகரும் அந்தத் துருவப் பகுதியிலே அமைந்து துருவப் பகுதியிலிருந்து ஆற்றல்களை நுகர்ந்தான்.

நமது பூமி பல தாவர இனங்களாக அதனின் சத்தை மாற்றி உயிரணுக்கள் அதை நுகர்ந்து அதில் வரக்கூடிய எண்ணங்கள் கொண்டு பல கோடிச் சரீரங்கள் ஆகி “மனிதனாக நம்மை உருவாக்கியது உயிர்” என்ற நிலையில் தன்னை அறிந்தவன் அகஸ்தியன்.

1.வட துருவத்தில் உருவாகும் உணர்வினை இடைமறித்துத் தனக்குள் அதை நுகர்ந்து
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றான்.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளைக் கவர்ந்து பால்வெளி மண்டலங்களாக அமைக்கின்றது. பின் சூரியனின் சுழற்சி வட்டத்தில் அது சுழலப்படும் போது தூசிகளாக மாறுகின்றது.

தூசியின் தன்மைகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது நம் பூமியின் அருகில் வரப்படும் பொழுது துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து சூரியனின் வெப்பக் கதிர்களையும் கவர்ந்து அலைகளாக நம் பூமிக்குள் பரவச் செய்கின்றது.

விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை
1.துருவப் பகுதி வழியாக நுழைவதை… இந்த வாயில் வழியாக அதை அகஸ்தியன் கவர்ந்து தனக்குள் சிருஷ்டித்து
2.உடலில் உள்ள தீய அணுக்கள் அனைத்தையும் கருக்கி விட்டு ஒளிச் சுடராக மாறும் உணர்வின் ஒளியின் கூறாக இந்த உடலிலே விளைய வைத்து
3.எந்தத் துருவத்தின் வழி தன் எண்ணத்தால் எடுத்தானோ அந்த உணர்வின் வலிமை கொண்டு
4.உடலை விட்டுச் சென்ற பின் இன்றும் துருவ நட்சத்திரமாக துருவ மகரிஷி அமர்ந்துள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்தியினைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அந்தச் சக்தியினை நம் பூமி தனக்குள் கவர்ந்து வந்து கொண்டுள்ளது.

இதைத் தான் நாம் கிழக்கே பார்த்து வணங்கும்படி செய்து… மேற்கே பார்க்க விநாயகரை வைத்து நாம் வணங்கும் முறைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

ஏனென்றால் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஏற்றால் அதன் வழியில் எந்த நாட்டவராக இருந்தாலும் ஒளியின் சரீரமாக ஆக முடியும் என்று தான் கருத்தினை அக்காலங்களில் இப்படிப் பதிவு செய்துள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.எதிரிகளை எதிரிகள் என்று எண்ணாது
2.அந்த எதிரியின் உணர்வு நமக்குள் வளராதபடி முதலில் பாதுகாத்தல் வேண்டும்.

அப்படிப் பாதுகாக்க வேண்டும் என்றால் காலை துருவ தியானத்தில் கொடுக்கும் இந்தச் சக்தியை வலு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சுவாசிக்க வேண்டும்.

அதன் உணர்வின் தன்மையை நீங்கள் வளர்க்க வளர்க்க அவர்கள் உணர்வுகள் உங்களை இயக்காது. அதே சமயத்தில்…
1.யார் நமக்குத் தீங்கு செய்கின்றார்களோ என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும்.
2.தவறு செய்ததை அவர் சிந்திக்கும் தன்மை வர வேண்டும் என்று
3.இந்த உணர்வைப் பதிவாக்கி நம் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

அதாவது அவர் நமக்குத் தீங்கு செய்கிறார்…! என்ற உணர்வை நமக்குள் வளர்த்து “நம்மைப் பலவீனப்படுத்துவதற்குப் பதில்…”
1.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்திடும் நிலையாகக்
2.கண் வழி கொண்டு தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் (நாரதன்) உணர்வைக் கவர்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மை அங்கே சென்ற பின் அங்கே அவர் செய்யும் தீங்கினையும் மற்ற உணர்வினையும் அது வெளிப்படுத்துகின்றது. அப்பொழுது நம் மீது வரக்கூடிய இந்த உணர்வினைப் பலவீனைப்படுத்துகின்றது.

இதைப் போல் நாம் அடிக்கடி அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எண்ணங்கள் கொண்டு அதை இரத்தநாளங்களில் பெருக்கப்படும் பொழுது நம் உடலில் முந்தைய தீய வினைகளையும் அடக்கிட முடியும்.

ஏனென்றால் இதற்கு முன்னாடி நாம் எடுத்துக் கொண்ட சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ வேதனையோ கொண்ட உணர்வால் நம் உறுப்புகள் நல்ல உறுப்புகளில் இந்த இரத்தநாளங்களில் கண்டு இந்தக் கருக்களை அடைகாத்து அணுவாக ஆன பின் நம் உறுப்புகளில் தீங்கு விளைவிக்கின்றது.

ஆகவே அந்தத் தீங்கு விளைவிக்கும் உணர்வைத் தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ மகரிஷியின் அருள் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் என்று கருக்களாக உருவாக்கப்படும் பொழுது இரத்தநாளங்களிலே இது பெருகுகின்றது.

உடலுக்குள் இந்த இரத்தம் போகாத இடமே இல்லை.

ஏனென்றால் இதனின் உணர்வுகள் நம்முடைய எண்ணமே எதனின் உணர்வின் தன்மையோ பாதுகாப்பான நிலைகள் அழைத்துச் சென்று அங்கே பகைமை உணர்வைத் தடுக்க உதவுகிறது.

இதைத்தான் இராமனுக்குப் படகோட்டியான குகன் தன் படகின் மூலம் நதியைக் கடக்க உதவி செய்கின்றான்…! என்று காட்டினார் வான்மீகி.

1.ஆக நம் எண்ணங்களின் நிலை கொண்டு
2.இந்த உணர்வுகள் எல்லாவற்றையும் அந்த அருள் உணர்வின் எண்ணமே கருவாகி
3.கருவின் உணர்வாக உருவாகி அதன் செயலாக்கங்கள் எப்படி இருக்கின்றது..? என்றும் இதைக் காட்டுகின்றனர் ஞானிகள்.

இப்படி நம் உடலுக்குள் பகைமை உணர்வைச் சாராத நிலைகள் கொண்டு பாதுகாக்க வேண்டும் என்றால் இதைப் போன்று அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பித்தல் வேண்டும்.

அதே சமயத்தில் யார் நமக்குத் தீங்கு செய்தார்களோ அவர் தீங்கு செய்தார் என்ற எண்ணங்கள் வருவதற்கு முன்
1.என் மீது தீங்கு எண்ணும் அந்த எண்ணங்கள் அங்கே மறைய வேண்டும்
2.என்னை நினைக்கும் பொழுதெல்லாம் தீங்கு செய்யும் அந்த எண்ணங்கள் மடிந்திட வேண்டும் என்ற உணர்வினை
3.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வினை எண்ணிவிட்டு அந்த எண்ணத்தைப் பாய்ச்ச வேண்டும்.

“கண்ணால் இந்த உணர்வைப் பாய்ச்சி…” இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் நினைவாற்றல் கொண்டு ஊடுருவிச் செலுத்தப்படும் பொழுது
1.இதே உணர்வுகள் அங்கே நாரதனாகச் சென்று
2.மற்றவர்கள் தீங்கு செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்தும் நிலைகள் வருகின்றது.

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா

 

பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் நம் பூமியான பரமாத்மா கவர்ந்து தனது ஆன்மாவாக மாற்றுகின்றது. அப்படி மாற்றும் பொழுது தனது சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் தனக்குள் பலவையும் பல கலவையாகிப் பாறைகளாகவும் உலோகங்களாகவும் மற்ற நிலைகளாகவும் உருவாக்குகின்றது.

1.அது உருவாக்கி உமிழ்த்தி வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால்
2.மீண்டும் இந்தப் பரமாத்மாவில் பல கலவைகளாக மாறுகின்றது.

ஆகவே இந்த ஆன்மாவில் விளைந்து கூட்டமைப்பாக வெளிப்பட்ட அந்த உணர்வின் ஆவியின் தன்மையைச் சூரியனின் காந்த புலனறிவு கவர்ந்து பரமாத்மாவாக மாற்றுகின்றது.

இந்தப் பரமாத்மாவில் ஒன்றுடன் ஒன்று பலவிதமான உணர்வுகள் சேர்த்துத் தாவர இனங்கள் விளைகின்றது. தாவர இனங்கள் விளையப்படும் போது அதுவும் பல பல கலவை கொண்டு உருவாகின்றது.

உதாரணமாக ஒரு விஷச் செடியை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து வெளிப்படும் உணர்வினைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது. அந்தச் சத்தினைப் பரமாத்மாவாக மாற்றுகின்றது.

பரமாத்மாவாக பூமியிலே படர்ந்து கொண்டிருக்கப்படும் பொழுது இந்த விஷச் செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றினால்… இந்தப் பரத்தில் ஊன்றினால்… பரத்தின் துணை கொண்டு பரமாத்மாவில் இருக்கும் விஷச் செடியின் சத்தினை அது நுகர்ந்து தன் இனத்தின் வித்தினை வளர்க்கின்றது… அந்தச் செடி வளர்கின்றது.

இதைப் போல் தான் எண்ணிலடங்காத தாவர இனங்கள் உருமாறி அது அது வெளிப்படுத்தும் உணர்வினைச் சூரியன் கவர்ந்து பரமான இந்தப் பரமாத்மாவாக மாற்றிக் கொண்டுள்ளது.
1.இந்தப் பரமாத்மாவில் இருந்து தான் சகல தாவர இனங்களும் வளர்ந்து
2.தன் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டுள்ளது இதே பரமாத்மாவில்.

உயிரணு தோன்றி பூமிக்குள் வந்த பின் தாவர இனச் சத்தை நுகர்ந்தால் ஜீவாத்மாவாக மாறுகின்றது. ஜீவான்மாவாக மாறிய பின் தன் உணவுக்காக ஏங்கப்படும் பொழுது… இந்தப் பரமாத்மாவிலிருந்து தனது உடலைச் சுற்றி வரும் ஆன்மாவாக மாறுகின்றது.

தனது ஆன்மாவாக மாறிய பின்… உயிர் உடலில் இருக்கும் ஜீவான்மாவிற்கு உணவைக் கொடுத்து வளர்க்கின்றது.

வேதனைப்படுபவரை… சங்கடப்படுபவரை… சலிப்புப்படுபவரை… வெறுப்பப்படுபவரைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் அனைத்தும் பரமாத்மாவிலே கலக்கின்றது.
1.உற்றுப் பார்த்து நுகர்ந்தறிந்தால் அதே உணர்வின் அணுவாக நம் உடலில் ஜீவான்மாவாக உருவாக்கி விடுகின்றது.
2.ஜீவான்மாவாக உருவாக்கி விட்டால் உயிரின் துணை கொண்டு பரமாத்மாவிலிருந்து தனது ஆன்மாவாக மாற்றி
3.தனக்குள் விளைந்து தன் உடலுக்குள் இருக்கும் ஜீவான்மாக்களை வளர்க்கின்றது.

ஒரு செடி விளைந்தால் எப்படித் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றதோ இதைப் போல நமது சகஜ வாழ்க்கையில் எத்தகைய நல்ல குணங்கள் பெற்றிருப்பினும் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு குரோதம் கோபம் பகைமை உணர்வுகள் இதைப் போன்ற நிலைகள் அதிகமாக நமக்குள் வளர்ச்சியாகி விளைந்து விட்டால் “விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களின் பெருக்கமாகிவிடும்…”

ஏனென்றால் நமது ஜீவான்மாக்கள் தீமையின் உணர்வை வளர்க்கப்படும் பொழுது நம் உடலான பரத்தில் பல தீமைகள் உருவாகி… மனித உடலான இந்தப் பரதத்தில் அதை மாற்றும் சக்தியாக வருகின்றது.

1.எப்படி ஒரு வித்து முழுமையான பின் அதைக் கொண்டு மற்ற நிலைகள் விளைகின்றதோ…
2.பல கலவை கொண்டு அக்ரிகல்ச்சரில் வித்துக்களை உருவாக்குவது போன்று…
3.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் தீமையின் விளைவுகள் அதிகமானால்
4.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் சேர்த்து உயிரான்மாவாக மாறுகின்றது.

உடலை விட்டு உயிரான்மா சென்றால் இதே வேதனை கொண்ட உடலைப் பரமாக்கி… வேதனை உணர்வைத் தனது ஆன்மாவாக்கி… அதன் வழியில் வாழ்க்கையின் வழித் தொடர ஆரம்பித்து விடும்.

இதிலிருந்து நாம் மாற்றுவதற்கு துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் இந்தப் பரமாத்மாவிலே தான் படர்ந்துள்ளது.
1.அதை நமக்குள் பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கி உடலில் பெருக்கிக் கொண்டால்
2.நமது ஆன்மாவும் தூய்மையாகின்றது மன வலிமையும் பெறுகின்றது நமது உடலும் நலமாகின்றது.
3.உடலுக்குள் இருக்கும் ஜீவான்மா தெளிவடைகின்றது… ஒளியின் தன்மை பெறத் தொடங்கி விடுகின்றது.

நட்சத்திரங்களில் இருந்து வரும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது மின்னலாக வெளிப்படும் அந்த ஒளிக் கற்றைகளைத் துருவ நட்சத்திரம் கவர்ந்து ஒளியின் அலைகளாக மாற்றுகிறது.

1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துக் கொண்டால்
2.நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நாமும் நகர்ந்து
3.நம் உடலுக்குள் இருக்கும் நஞ்சினை மாற்றிடும் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தப் பேரருள் உணர்வுகளைப் பெற்று நம் உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்றிப் “பிறவி இல்லாத நிலை அடைந்திட உயிரான்மாவை ஒளிமயமாக மாற்றி ஒளிச் சரீரம் பெற்றிட” குரு அருளும் எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகாபாரதப் போர் என்றும் குருக்ஷேத்திரப் போர் என்றும் அந்தக் குருக்ஷேத்திரப் போரைக் கண்ணன் எப்படி வழி நடத்திச் செல்கிறான் என்ற நிலைகள் காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

1.நமது கண்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும்
2.நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக உடலுக்குள் எப்படி உருவாகிறது…? என்றும்
3.அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உயிர் ஆணையிடும் பொழுது சிறு மூளை பாகம் சென்று
4.அதே சமயத்தில் உயிரிலே இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பி
5.கண்ணுக்கும் செவிக்கும் உடலுக்கும் நம் மனத்திற்கும் இந்த உணர்வுகள் இயக்கி
6.நமக்குள் எப்படி அறிவிக்கச் செய்கிறது என்ற நிலையை வியாசகர் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

தீமையான உணர்வுகளை ஒரு தடவை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி விடுகின்றோம். மீண்டும் அதனின் நினைவை எடுக்கப்படும் பொழுது நம் உயிருடன் சேர்த்து அந்த உணர்வுகள் அந்தப் போரை… சங்க நாதம் எழுப்புகின்றது நம் கண்கள்.

அதாவது தீமை செய்பவர்களை நினைத்து நாம் சுவாசித்த பின் அது நம் உயிரிலே படும் பொழுது அந்த உணர்வுகள் இயக்குகின்றது.
1.உணர்வின் ஒலி அலைகள் பட்ட பின் நம்மைக் காத்திடும் உணர்வுகள்
2.நாம் எதை எண்ணினோமோ – நியாய அநியாய உணர்வுகள்
3.அந்த வலுவின் தன்மை கொண்டு எதிர்த்து உள்ளே போராடச் சென்று விடுகின்றது.

ஒரு வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நம்மைப் பலவீனம் அடையச் செய்து விடுகின்றது. நம் செயல்களைச் சீராகச் செய்ய முடியாதபடி ஆக்குகின்றது.

உதாரணமாக… தன் பையன் மீது வெறுப்பின் தன்மை வந்துவிட்டால் பையனுக்காக வேண்டிச் சேர்த்த சொத்தையும் அல்லது நாம் சேமித்து வைத்த மற்ற பொருளையும் எடுத்து அடித்து நொறுக்கும் தன்மை தான் வருகின்றது.

நொறுக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது நாம் எதை எண்ணினோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். அதைத்தான் கீதையிலே கண்ணன் கூறுவது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று வியாசகர் அதைத் தெளிவாக்குகின்றார்.

வியாசகர் என்றால் கல்வியறிவு இல்லாத மூடனாக இருந்தாலும்
1.வியாபித்திருக்கும் உணர்வுகளைத் தனக்குள் அறிந்துணரும் சந்தர்ப்பம் பெற்ற பின் அவர் அனைத்தையும் அறிந்தார்.
2.அதனால் வியாசகர் என்ற காரணப் பெயரைச் சுட்டிக் காட்டினார்கள் அக்காலங்களில்.

பகவான்…! என்றால் தன்னுடைய நிலைகளில் எல்லா உணர்வையும் நுகர்ந்தார்… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தார். அதற்குப் “பரமாத்மா…” என்று வியாசகர் ஒரு பெயரை வைத்தார்.

பரத்தில் இருக்கக்கூடிய ஆத்மாவைத் தனக்குள் எடுத்துத் தனக்குள் வளர்த்தார் என்பதற்குத்தான் “வியாசக பகவான்…!” என்ற பெயர்களை வைத்தார்கள்.

ஆக…
1.மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் மறைமுகமாக எப்படித் தீங்குகள் விளைகின்றது…?
2.நம்மை அறியாது தீமைகளை எப்படி விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகளை எப்படித் தூண்டுகின்றது
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிக்கும் அது தூண்டப்பட்டு அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…?

நமக்கு ஒருவர் அடிக்கடி தொந்திரவு செய்கிறார் என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அதே சமயத்தில் எதிரிகளின் உடல்களிலும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

நமக்குள் வெறுக்கும் உணர்வுகளே தூண்டுகிறது. அந்த வெறுக்கும் உணர்ச்சிகளைத்தான் அது ஊட்டும். நமக்குள் அதனதன் உணவுக்காகப் போராடும். அதனதன் உணர்வுக்கு அங்கே போராடும்.
1.எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்
2.அங்கேயும் எதிரிகளை வளர்க்கும் சக்தியே வருகின்றது.

ஆனால் இதை எல்லாம் தடைப்படுத்தும் உணர்வுகள் பெற்றவன்… இதை வென்றவன் துருவ மகரிஷி. அவன் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்,

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால்
1.அதை நாம் நுகர்வோம் என்றால் நமக்குள் அது நாரதனாக இயக்கத் தொடங்குகிறது.
2.நாரதனாக நமக்குள் சென்ற பின் “நாம் எதைப் பிடிவாதமாக வைத்திருக்கின்றோமோ…” அந்த உணர்வைத் தணிக்கச் செய்கின்றது.

அப்பொழுது நாம் யார் மீது வெறுப்படைந்தோமோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தி
1.நம் கண்களின் நினைவாற்றலை அங்கே செலுத்தப்படும் பொழுது
2.கண்ணன் (கண்கள்) நாரதனுக்குண்டான நிலைகளை இங்கே சொல்லி
3.கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது எதிரியின் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை அந்த நாரதர் வேலையைச் செய்யும்.

பகைமையாக்கும் உணர்வுகளுக்குள் இந்த அருள் ஞானியின் உணர்வுகள் சென்ற பின் அங்கே சற்று சிந்திக்கச் செய்யும் சக்தி வருகின்றது.

அதைத்தான் நாரதன் கண்ணனிடம் செயலாக்கிய பின்
1.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
2.கண்களுக்கும்… நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு செய்கிறது…? என்று
3.வியாசகர் எவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கிறார் என்ற நிலைகளை நாம் தெரிந்து கொண்டால் போதும்.

விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டும் பேருண்மை

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் சுவாசிப்பது மூஷிகவாகனா. ஒருவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அதைச் சுவாசித்தால் உயிரிலே பட்டு அந்த உணர்வின் வேகமாகத் துடிக்கும் பொழுது காளி.

காளி கோவிலிலே புலியைத்தான் வாகனமாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.
1.மனிதன் தவறு செய்கிறான் என்றால் அதனைப் பார்க்கும் பொழுது நமக்குக் கோபம் வருகிறது.
2.அந்த கோபத்தைச் சுவாசித்தால் உயிரிலே பட்ட பின் காளியாக அது மாறுகின்றது.
3.உடலான சிவனோ ருத்ர தாண்டவமாக… “இருடா நான் பார்க்கின்றேன்” என்று இது போன்ற ஆட்டங்கள் ஆடுகின்றது.

அந்தக் கோபத்தின் உணர்வுகளால் அழிக்கும் செயலாக வந்தபின் அவன் பதிலுக்கு எதிர்த்து விட்டால் மீண்டும் அதே வேகங்கள் வருகின்றது.

அந்த வேகத்தால் அவனை அடித்து உதைக்கும் உணர்வைச் சுவாசித்தால் அத்தகைய அணுக்களின் தன்மை இந்த உடலிலே பெருகிச் சிறுகச் சிறுக விளைந்து இரத்தக் கொதிப்பாக மாறி விடுகின்றது.

1.அதன் அடிப்படையில் அடிக்கடி கோபங்கள் வந்தே தீரும்.
2.அவ்வாறு கோபமாகப் பேசப் பேச… கோபத்தை ஊட்டும் உணர்வின் அணுக்கள் உடலிலே விளைந்து நல்ல அணுக்களைக் கொல்லும்.

உதாரணமாக ஒரு விஷச் செடியின் மணத்தை மனிதன் நுகர்ந்து விட்டால் அது விஷமான அணுக்களாக உடலிலே விளைந்து விடுகின்றது. அத்தகைய விஷ அணுக்கள் நல்ல அணுக்களைக் கொன்று புசிப்பது போல…
1.கோபமான உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து விட்டால் அந்த உணர்ச்சிகள் மேலோங்கி
2.நம் உடலில் உள்ள நல்ல குணங்களுக்கும் அதற்கும் போர் முறையாகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தோரைப் பாருங்கள். மேல் வலிக்கின்றது கை வலிக்கின்றது தலை வலிக்கின்றது தலை சுற்றுகிறது என்று எல்லாமே வரும்.

இது எல்லாம் மூஷிகவாகனா…! சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் நின்று அது வாகனமாக அமைந்து இத்தகைய உணர்வுகளை விளையச் செய்து விடுகின்றது.

அதற்குத்தான் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

புலி தனக்கு வேண்டிய இரை கிடைத்து விட்டது என்றால் சாந்தமாக அதைச் சாப்பிடும் நிலை இல்லை. ஆவேச உணர்வு கொண்டு தான் அந்த உணவை உட்கொள்ளும்.

இதைப் போன்று தான் கோபப்படும் ஒரு செயலை நுகர்ந்தோம் என்றால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது கொன்று விழுங்கும் நிலை வருகின்றது.
1.நல்ல உணர்வுகளுக்குச் செல்லும் உணவைத் தடைப்படுத்துகின்றது.
2.அப்படித் தடைப்படுத்தும் பொழுது கை கால்கள் சுருங்கி விடுகின்றது… அதனின் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.

இதே போன்று தான் வேதனை வேதனை என்று வேதனைப்பட்டுக் கொண்டே இருப்போம் என்றால் இந்த வேதனை உணர்வுகள் உடல் முழுவதும் பரவிவிடும்.

ஒரு விஷத்தை உணவாக உட்கொண்டால் உடல் எப்படித் துவண்டு விழுகின்றதோ அதைப் போன்று இந்த வாழ்க்கையில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது… உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் சோர்வடைந்து கை கால்கள் செயலற்றதாக மாறுகின்றது.

வேதனையை அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது நமது சிறுநீரகங்களிலும் விஷத்தன்மை அதிகமாகி அதுவும் சீராக இயங்குவதில்லை. அது சீராக இயங்கவில்லை என்றால் சர்க்கரைச் சத்தையும் உப்புச் சத்தையும் சரியாக அது பிரித்துச் சமப்படுத்தாது.
1.உணவாக உட்கொள்ளும் அந்தச் சத்துகள் அனைத்தும் அப்படியே இரத்தத்தில் கலந்து அதனதன் வலு அதிகரிக்கப்படும் பொழுது
2.தீமையை விளைவிக்கும் அணுக்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது.
3.உறுப்புகள் செயலற்றதாக மாற்றிவிட்டால் கடும் நோயாக மாறி விடுகின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டி உள்ளார்கள். அதிலே எதை நமது உடலாக ஆக்க வேண்டும் என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

விநாயகருக்கு அருகே அரச மரத்தை வைத்திருப்பார்கள். ஏன்…?

ஒரு குருவி அரசம் பழத்தை உணவாக உட்கொண்டு அது தன் மலத்தைக் கழிக்கும்போது அதனுடன் கலந்து வந்த அரசமர வித்து பாழடைந்த கட்டிடத்தில் விழுந்தால் போதும்.
1.காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை நுகர்ந்து அது செடியாக வளர்ந்து
2.விழுதுகளைப் பரப்பி நீர்களை உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது… செழித்து வளர்கின்றது.
3.வளர்ந்த பின் அந்தக் கட்டிடத்தையே கூட வீழ்த்துகின்றது.

இதைப் போன்று தான் அந்த அரச மரத்தின் நிலைகளுக்கொப்ப… தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்…
1.தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் பூமியின் துருவப் பகுதியில் நின்று துருவத்தின் வழி
2.பூமிக்குள் வரும் சக்தியைத் தனக்குள் எடுத்துத் தன் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான்.
3.அதிலிருந்து வெளிப்படுத்தும் விழுதுகள் நம் பூமியிலே பரவிக் கொண்டே உள்ளது.

எந்த மனிதனின் நிலைகள் தொடர்பு கொண்டோமோ மனித உடலில் விளைந்த உணர்வுகள்… அவர்களை (மகரிஷிகளை) நாம் எண்ணி ஏங்கும் பொழுது நமக்குள் அது விளைந்து… நாமும் அவனின் அரவணைப்பில் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

ஏனென்றால் அதன் வழியினைப் பின்பற்றிச் சென்றவர்கள் தான் இன்றும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

அதுவே மனிதனின் கடைசி எல்லை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நண்பர்களாகப் பழகுகின்றனர். பழகிய நிலைகள் கொண்டு சந்தர்ப்ப பேதத்தால் வெறுப்படைகின்றது. வெறுப்படையும் பொழுது தொழிலில் நஷ்டம்.

இரண்டு பேருமே…
1.எனக்குத் துரோகம் செய்தார் என்று இவரும் எண்ணுகின்றார்
2.துரோகம் செய்தார் என்று அவரும் எண்ணுகின்றார்.

சந்தர்ப்பத்தால் சிறு பிழைகள் வரப்படும் பொழுது பலவீனமான நிலையை உருவாக்கி விடுகிறது. அதை நுகரப்படும் பொழுது அந்தப் பலவீனத்தை ஏற்படுத்தும் அணுக்கள் உடலுக்குள் அந்தக் கருக்களாக உருவாகத் தொடங்கிவிடுகின்றது.

இவ்வாறு அதிகமாகி விட்டால் அது தன் உணர்ச்சியைத் தூண்டும்.

அப்பொழுது சந்தேகம் என்று வந்துவிட்டால் அதை வளர்க்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் கண்களிலே பாய்ச்சும்.
1.கண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
2.நல்லவராக இருந்தாலும்… சந்தேகப்பட்டுப் பார்த்த பின் என்ன ஆகும்..?

இந்தப் பார்வையைக் கண்ட பின் அவர் தலைகள் ஆடுவதும் உடலை அசைப்பதையும் வித்தியாசமான நிலைகள் வரும்.

நல்லவராகவே இருக்கட்டும் சந்தேகப்பட்டு ஒருவரை எண்ணிப் பாருங்கள்.
1.உங்கள் பார்வை பட்டவுடனே… ஏன் இப்படிப் பார்க்கிறார்…? என்ற நிலையில்…
2.நான் நினைத்தேன் அந்தச் சந்தேகம் சரியாகப் போய்விட்டது என்ற இந்த உணர்வுகள் அங்கே இயக்கி விடுகின்றது.

இதைப் போல அந்த உணர்வுகள் இயக்கத் தொடங்கினால் அது வளர்ச்சி அடைகின்றது. அந்தச் சந்தேகத்தின் நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் “பகைமை” வளர்கின்றது.

அந்தப் பகைமை வளர்ந்த பின்னாடி வெகு தூரத்தில் ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ்ந்தாலும் இரண்டு பேரிடமும் பழகிய ஒரு நண்பன் வருகின்றான்.

அவன் வந்தவுடனே சொல்கிறான். இந்த மாதிரி உன் நண்பரை அமெரிக்காவில் பார்த்தேன் என்று…!

அவனா…? துரோகி.. உருப்பட மாட்டான் அவன்..! என்ற இந்த உணர்வுடன் சொல்கள் வெளி வருகின்றது. ஏனென்றால் அவனை நினைவுபடுத்தியவுடனே “கண்ணின் நினைவு” அங்கே செல்கிறது.

கண்ணின் நினைவு அங்கே செல்லப்படும் பொழுது ஏற்கனவே உள்ள அந்தப் பகைமை உணர்வுகள் என்ன செய்கிறது…? பதிவாகின்றது.

பதிவான உணர்வுகளுடன் அது மோதியவுடனே
1.அங்கே அவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இது ஊடுருவி
2.உறுப்புகளை இயங்கவில்லை என்றால் “புரை” என்ற நிலையில்
3.ஒரு சோற்றுப் பருக்கை நுரையீரல் பக்கம் இந்த மூச்சு இழுக்கும் பொழுது உள்ளுக்குள் போனால் அவ்வளவு தான்…!

ஏனென்றால் புரைகளில் இது மிகவும் விசித்திரமானது…! உணவு உட்கொள்ளும் பொழுது இந்த மாதிரிப் புரைகள் ஏற்பட்டால் அந்த ஆகாரம் நுரையீரலுக்குள் சென்றுவிடும்.

சிறிது தேங்கிவிட்டால் அங்கே நாளடைவில் அழுகும். அந்த அணுக்கள் அங்கே பெருகி டி,பி. போன்ற நோய்களை உருவாக்கும் தன்மை வந்துவிடும். அந்த நுரையீரலையே ஓட்டை போடும் அளவுக்கு ஆகிவிடும்.

ஒரு பழத்தை வெளியிலே அப்படியே வைத்திருந்தால் எப்படி அது அழுகிப் புழுக்களாகிப் பின் வெடித்துவிடுகின்றதோ அதைப் போல உடல் உறுப்புகளைச் சிதைக்கும் தன்மை வந்துவிடும்.

நாம் நினைக்கின்றோம்… சாதாரணமாகத் தான் நினைத்தோம்..! என்று. ஆனால் இயற்கை… இந்த உணர்வுகள் எப்படி மாறுகிறது…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்.

ஒரு காரை ஓட்டிச் சென்றாலும் கூட முதலில் சொன்ன மாதிரி துரோகம் செய்தான் பாவி..! என்று எண்ணினால் புரை ஓடுவது போன்று ஆனால்
1.எதிரிலே வரக்கூடிய வாகனங்களைக் கண் கவர்ந்து சொல்லும் நிலைகளை இது இடைமறித்து
2.அவர் அதைச் சுவாசித்து விட்டால் காரை பிரேக் போடுவதோ ஸ்டீரிங்க் திருப்புவதையோ இழக்கின்றார்
3.விபத்துக்குள்ளாகி விடுகின்றது…!
4.துரோகம் செய்தான் பாவி என்று எண்ணப்படும் பொழுது இவ்வாறு இயக்கிவிடுகின்றது.

சந்தர்ப்பத்தில் நம்முடைய பழக்கவழக்கங்களில் நம்முடைய எண்ணங்களே நமக்கு எதிரியாகின்றது. ஆக அவர்கள் எண்ணும் சந்தர்ப்பமும் நாம் செயல்படும் சந்தர்ப்பமும் இந்த வெறுப்பின் உணர்வு வந்துவிட்டால் அங்கே விபத்துக்குள்ளாக்கி விடுகின்றது.

நாம் எங்கே சென்றாலும் இந்த ஆத்ம சுத்தியை மறவாது செய்து கொள்ள வேண்டும். ஆத்ம சுத்தி செய்து..
1.என்னுடைய பார்வை அனைவரையும் நல்லவராக்க வேண்டும் என்ற
2.இந்த எண்ணங்கள் கொண்டு நாம் செல்லப்படும் பொழுது
3.அந்தத் தீமையின் உணர்வுகள் நம்மை இயக்காது தடைப்படுத்த முடியும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்துக் கொண்டே வருதல் வேண்டும்.

ஒருவர் நம்மிடம் வந்து இந்த மாதிரி உனக்குத் தீங்கான நிலைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றான் உன்னுடைய நண்பன் என்று சொன்னால் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்..?

ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை உடலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அவர் அங்கே சொல்லப்படும் பொழுது
1,என்னை நினைக்கும் பொழுதெல்லாம் அவன் நல்லவனாக வேண்டும்
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினக்கும் பொழுதும் அவனுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்ற
4.இந்த உணர்வின் நினைவை வைத்து கண் கொண்டு நாம் பார்க்கப் போனால்
5.கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கிறான் என்று காவியத்தில் உணர்த்தியது போல்
6.நம் உணர்வின் தன்மை தாங்கிச் செல்லும் தன்மை நாரதன் என்ற உணர்வு கொண்டு அங்கே ஆணையிடப் போகும் பொழுது
7.இந்த உணர்வுகள் அவர்கள் உணர்வுக்குள் ஊடுருவி அங்கே இருக்கும் பிடிவாதமான குணங்களை அகற்றுகின்றது.
8.நமக்கும் நல்லதாகின்றது… அவர்களையும் நல்வழிப்படுத்தும் சந்தர்ப்பமாகின்றது.

ஆகவே நாம் எண்ணும் எண்ணங்கள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குடும்பத்தில் பெண்களின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?

 

நான் கொடுக்கக் கூடிய உபதேசங்களைப் பெண்கள் ஆசையுடன் அதைப் பெற வேண்டும் என்று கூர்ந்து கவனித்தால் ரெக்கார்ட் ஆகிவிடும்.
1.பெண்கள் அதிகமாக அவ்வாறு நினைக்கப்படும் பொழுது
2.மகரிஷிகளின் சக்தியை அணுத்தன்மையாக மாற்றக்கூடிய சக்தி உங்களுக்கு உண்டு.

கணவர் தொழிலின் நிமித்தம் பல நிலைகளைச் சந்திக்கப்படும் பொழுது அதிலே பல உணர்வுகள் அவர் மீது மோதினாலும்
1.என் கணவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.சிந்திக்கும் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்
3.அவர் பார்வை எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
4.இதை உங்களில் வலுவாக்கி கணவருக்கு இது பெற வேண்டும் என்று பாய்ச்சினால் நிச்சயம் அது அவருக்கு நல்லதாகும்.

ஏனென்றால் தொழிலின் நிமித்தமோ அல்லது மற்ற எத்தனை அலுவல்களுக்குச் சென்றாலும் அதற்குள் எத்தனையோ எதிர்ப்புகள் இருக்கின்றது எத்தனையோ உணர்வுகளை அவர் சுவாசிக்க நேர்கின்றது.

ஆனால் அப்போதெல்லாம் பெண்கள் தன் கணவருக்கு உயர்ந்த சக்திகள் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தினால் “அவரைத் தெளிந்த மனிதனாக மாற்ற முடியும்…!”

அதே சமயத்தில் அவர் செயலைப் பார்த்து என்ன…? உன் கணவர் இப்படி இருக்கின்றார்…! என்று யாராவது சொன்னால் என்ன ஆகிறது…?

இப்படி இருந்தால் என்ன பண்ணுவது…? என் தலைவிதி இவருக்கு என்னைக் கட்டிக் கொடுத்து விட்டார்கள்…! என்று பெண்கள் இந்த வேதனையை எடுப்பார்கள்.

இந்த வேதனைப்படும் உணர்வோடு கணவனை எண்ணினால் என்ன செய்யும்…?
1.வெளியிலிருந்து அவர் வரும் பொழுதே உணர்வுகள் மாறிவிடும்… அவர் உள்ளே வரும் பொழுது உற்றுப் பார்ப்போம்.
2.கணவர் பார்க்கும் பொழுது என்ன…! மனைவியிடம் ஒரு வித்தியாசமான பார்வை தெரிகிறதே என்று
3.இந்தக் கண்கள் கணவருக்கு இப்படிக் காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த உணர்வின் இயக்கம் ஆன பின் ஓஹோ…! இப்படியே இருந்து கொண்டிருந்தால் என் வாழ்க்கை என்னாவது…? அடுத்து ஒரு வார்த்தையைச் சொன்னால் போதும்.

வீட்டுக்கு வந்தவுடன் இது தானா வேலை…? என்று இந்த வெறுப்பு அங்கே விளைந்து இந்த உணர்வு ஒலியாகி (சொல்) கசப்பின் தன்மையாக வந்து விடும்.

ஆகவே மற்றவர் வாயிலாகக் கணரைப் பற்றிப் பிறிதொன்றைக் கேட்டாலும்…
1.கணவருக்கு அந்த அருள் பெற வேண்டும்… அந்தப் பேரருள் பெற வேண்டும்
2.என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
3.அனைவரும் போற்றும் அந்த அருள் சக்தி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆனால்… இப்படி எத்தனை பெண்கள் நீங்கள் எண்ணுகின்றீர்கள்…?

சம்பாதித்துக் கொடுத்தால் என் கணவர் மாதிரி யாருமே இல்லை என்று சொல்வோம்.. ஆனால் கொடுத்துக் கொண்டே இருக்கும் பொழுது அதிலே தடையாகி விட்டால் “எனக்கு எல்லாம் தெரியும்…! வர வர எனக்கு ஒன்றுமே கொடுப்பதில்லை…!” என்று இரண்டு தரம் இப்படி ஆகிவிட்டால்…
1.இப்படி செய்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் என்ன மிச்சம் பிடிப்பது…?
2.குழந்தை குட்டிகள் எல்லாம் இருக்கின்றது… குடும்பத்தை என்னத்தைக் கவனிக்கின்றீர்கள்…? என்று வந்து விடும்.

இது எல்லாம் எப்படி வருகின்றது…?

எதைக் கூர்ந்து கவர்கின்றோமோ அந்த உணர்ச்சிக்கொப்ப உணர்வின் செயல்கள் நமக்குள் வருகின்றது. எதைப் பதிவு செய்தோமோ கவர்ந்தது உயிரிலே படுகின்றது ரத்தத்தில் கலக்கின்றது. ஆக… தீமையை உருவாக்கும் சக்தியாக நமக்குள் உருப்பெறுகின்றது.

இந்த வாழ்க்கையில் எப்படித் தெரிந்து வாழ வேண்டும் என்பதற்கு எவ்வளவோ சாஸ்திரங்களை ஞானிகள் நமக்குக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எத்தனையோ விதமான குணங்களை உருவங்களை வைத்துச் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.

1.நல்லதைச் செய்யப்படும் பொழுது நமக்குள் அது தெய்வமாகச் செயல்படுகின்றது.
2.அதன் வழியில் என் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்
3.வசிஷ்டரும் அருந்ததி போன்று நாங்கள் இணைந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று
4.தனது ஆசை “கணவரை உயர்த்த வேண்டும்” என்ற நிலைக்கு வருகிறது

ஒரு சில குடும்பம் ராஜ குடும்பமாகவே இருக்கும். ஆனால் மேலே சொன்னது போன்ற சிக்கல்கள் அங்கே வந்தே தீரும். பையனுக்கு ரொம்பச் செல்லம் கொடுத்து இந்த மாதிரியே ஆக்கிவிட்டார்கள் என்று வந்துவிடும்.

அல்லது சொந்தத்தில் யாராவது கஷ்டப்படுகின்றார்கள் என்று உதவி செய்தால் அப்பொழுது அதிலேயும் ஒரு சிக்கல் வரும்.

செல்வம் இருந்தாலும் நிம்மதி இருக்கின்றதா என்றால் இல்லை…!

உணர்வின் தன்மை இது போன்று எதிர் நிலையாகும் பொழுது எதைக் கலந்து எது உருவானதோ அதன் வழியே நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

எத்தனையோ தீமைகளிலிருந்து விடுபட்ட இந்த உடல் தீமைகளை நீக்கும் உணர்வு பெற்ற இந்த மனித உடலில் தீமையை அகற்றும் சக்தியை இழந்திருக்கின்றோம்.

எதன் வழியில்…? ஆசையை நிமித்தம் கொண்டு…!

1.எதையோ ஒன்றை ஆசைப்படும்போது மற்றொன்றை இழந்து விடுகின்றோம்.
2.ஆசையின் தன்மை பெறப்படும் பொழுது காக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்.
3.இது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் ஏற்படுகின்றது.

அதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்பதற்குத் தான் உபதேச வாயிலாக அருள் ஞானத்தை உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக எடுத்துக் கொண்டால்… என்ன…! சாமிக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…! தபோவனத்தில் இருப்பவர் இந்த மாதிரிச் செய்துவிட்டாரே என்று..! சில பேருக்கு இந்த எண்ணம் வரலாம்.

எனக்கு (ஞானகுரு) இந்த உடலைப் பற்றிய நினைப்பே இல்லை.

இந்த மனித வாழ்க்கையில் எப்பொழுது நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் ஆன்மா அந்த ஒளியின் நிலை பெறுகின்றது.

1.அவன் தீங்கு செய்துவிட்டான்… (தபோவனத்தில்) என்ற எண்ணங்கள் வரப்படும் பொழுது
2.அதை எடுத்துக் கொண்டால் பழி தீர்க்கும் எண்ணங்களாக வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எனக்குப் பல சக்திகளையும் கொடுத்துள்ளார். கை விரலை நீட்டினால் ஒரு மரத்தையே தூக்கி எறியச் செய்யும்.

எண்ணத்தால் எண்ணி.. இவன் மடிந்துவிடுவான்.. அல்லது இப்படித்தான் ஆகிவிடுவான்…! என்றால் இந்த உணர்வின் தன்மை பதிவாகி அவனுக்குள் வேலை செய்யும். துரித நிலையிலும் மடிந்து விடுவான் (தீங்கு செய்தவன்).

நாம் ஏன் சொல்வானேன்…? அவனை ஏன் நாம் வீழ்த்துவானேன்…! அவன் எண்ணிய உணர்வுகள் அவனுக்குள் வீழ்த்தும்… அறியும் தன்மை வரும்.

இப்படித்தான் நாம் இருக்கின்றோமே தவிர குருநாதர் பல சக்திகளையும் கொடுத்துள்ளார். ஆனால் அது பயன்படுத்துவதற்கு அல்ல…!

ஆஹா… எங்கள் சாமி எப்படிப்பட்டவர் பார்…! கெடுதல் செய்தான்… விரலை நீட்டினார்… விழுந்து விட்டான்… என்று நீங்கள் பெருமை பேசலாம்…!

அப்படிச் செய்தால் இது…
1.அவன் உடலில் உள்ள மற்ற நல்ல அணுக்களையும் சேர்த்துக் கொன்றதாகத் தான் அர்த்தம்.
2.அவனுக்குள் இருக்கக்கூடிய தீமையின் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைந்ததாகத் தான் பொருளாகுமே தவிர
3.அவன் தீங்கின் செயல் நமக்குள் வந்து
4.அவன் உணர்வு வலிமையாகி நம்மை இயக்கும் பொழுது
5.அவன் தான் தவயோகியாகின்றான்.

அப்பொழுது நமக்குள் என்ன இருக்கின்றது…?

ஆகவே இந்த அருள் ஞானத்தின் வலிமை கொண்டு தாங்கும் சக்தி வர வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதைத் தான் வலிமையாக்க வேண்டும். அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இன்றைய செயல் நாளைய சரீரம்…!

1.அருள் ஒளியின் உணர்வு கொண்டு ஒளியின் சரீரமாக
2.இனி அகண்ட அண்டத்தில் என்றும் நாம் வாழ முடியும் என்ற நிலையை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

மனிதனாக ஆன நாம் இதைச் செயலாக்கும் தன்மைக்கே வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கைக்காகச் செல்வம் தேவைப்படுகின்றது, ஆனாலும் நாம் சேர்த்து வைக்கும் செல்வம் எதுவுமே நம்முடன் கடைசியில் வருவதில்லை.

பொருளில்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை… அருளில்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை…! என்கிற பொழுது அருளை வளர்க்கப்படும் பொழுது அந்த உலகம் அமைகின்றது. பொருள் இருக்கும் பொழுது இந்த உலகத்தில் மகிழ்ச்சியின் தோற்றம் வருகின்றது.

1.பொருள் குறைந்து விட்டாலோ மதிப்பு இழக்கப்படுகின்றது
2.அன்றே நமக்குள் சோகம் குடிகொண்டு விடுகின்றது
3.வேதனை என்ற உணர்வே வளர்கிறது.
4.இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் கடந்து பழக வேண்டும்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் மக்களுக்கு இந்த அருள் ஞானத்தைப் பற்றி எடுத்துச் சொல்தல் வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும்…
1.நம் குருநாதராக மாற வேண்டும்
2.அகஸ்தியராக மாற வேண்டும்
3.துருவ மகரிஷியாக மாற வேண்டும்
4.துருவ நட்சத்திரமாக அந்த ஒளிச் சரீரம் பெறும் தகுதி பெற வேண்டும்.

ஆகவே இதன் வழிப்படி உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். ஏனென்றால் இன்றைய உலகம் மிகவும் விஷத் தன்மை கொண்டதாகப் பரவிக் கொண்டிருக்கின்றது… மனிதனை அழிக்கும் நிலையாக வந்து கொண்டிருக்கின்றது.

அந்த விஷம் நம்மை வீழ்த்தி விடாதபடி இனி இந்த உடலே ஒளியின் சரீரமாக… என்றென்றும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் தன்மை வர வேண்டும்.

1.இந்த விஞ்ஞானத்தின் விளைவுகளால் உலகம் தவிக்கப் போகின்றது.
2.மனிதனுடைய சிந்தனைகள் காட்டு விலங்குகளைப் போன்றே சிந்தனைகள் வந்துவிடப் போகின்றது
3.(இதை ஞானகுரு உபதேசித்த வருடம் 1997 – இன்று அந்த நிலை வந்துவிட்டது)

இதிலே எல்லாம் நாம் சிக்கிடாதபடி ஒவ்வொருவரும் அகஸ்தியராகிடல் வேண்டும்… ஒவ்வொருவரும் துருவ மகரிஷியாகிடல் வேண்டும். மக்களுக்கு நல் உணர்வுகளை எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது.

அவர்கள் எப்படியும் வளர வேண்டும் என்ற எண்ணங்களை நாம் எடுக்க வேண்டும். நாம் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்ட பின்
1.வாய் கொண்டு சொல்லக்கூட வேண்டியதில்லை.
2.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அருள் ஞானம் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற எண்ணங்களை எடுத்துப் பாய்ச்சி
4.நமக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

நாளடைவில் வளர்க்கப்படும் பொழுது அவர்களும் நம்மை அணுகுவர். அவர்கள் அணுகினால் அவருக்கு இலாபம். அணுகவில்லை என்றால் நாம் “வருத்தப்பட வேண்டியதில்லை…”

1.ஆகவே அவர்கள் எப்பொழுதும் பெறுவார்கள்…! என்ற உணர்வை மட்டும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் போதும்.
2.இந்த நல்ல செய்தியை யாரும் எடுத்துக் கொள்ள மாட்டேன்..! என்கிறார்கள் என்ற எண்ணத்தை
3.நமக்குள் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அனைவரும் பெறும் தகுதியைப் பெறும் காலம் வரும்…! என்ற முழுமையான நிலையை… “அந்த நம்பிக்கையுடன்…” நாம் இருத்தல் வேண்டும்.

பொதுவாகப் பெண்கள் நீங்கள் ஒவ்வொரு இடத்திலேயும் அணுகும் பொழுதெல்லாம் நீங்கள் அகஸ்தியராக மாறவேண்டும். குறைகளை வளர்த்திடவே கூடாது. குறைகள் இருந்தால் அதை நீக்கும் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும் பண்புகளை வளர்க்க வேண்டும். அவர்கள் எல்லாம் அப்படித்தான்…! என்ற நிலைகளில் உடனே சொல்லிவிடக்கூடாது.
1.குறைகளை நாம் கேட்டாலும்..
2.மனதில் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் ஒருவர் நம்மிடம் ரொம்பவும் பழகி விட்டார் என்றால் அவர் சொல்வதை மட்டும் அதிகமாக வைத்துக் கொள்வோம். அப்புறம் அவர் சொல்வதை வைத்து அடுத்தவரைக் கணித்தோம் என்றால் அவரைக் குற்றவாளியாக்குவோம்.

ஆகவே அவர்கள் இருவருக்குள்ளும் ஒற்றுமை ஏற்படும் உணர்வையே நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். “ஒன்றி வாழும் நிலையே வளர வேண்டும் ஈஸ்வரா…! என்று இப்படிப்பட்ட உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எல்லாம் ஒன்று என்ற நிலைகள் உணர்தல் வேண்டும். யாரும் பிரிந்து வாழவில்லை.

நண்பர் நன்றாக இருக்க வேண்டும்…! என்று நாம் எடுத்துக் கொண்டால் அந்த நல்ல சக்தியும் வளர்கின்றது.

ஆனால் நண்பர் இப்படித் தியான வழியில் இருந்தும் குறையாகி விட்டார்…! என்று அந்தக் குறையின் உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் அந்தக் குறையின் உணர்வே நமக்குள்ளும் வளர்கின்றது.

1.நண்பர் உயர வேண்டும்…!
2.அதன் வழி குரு அருள் அங்கே அவருக்குக் கிடைக்க வேண்டும்
3.தியானத்தின் மூலம் அவர் எடுத்துக் கொண்ட நல்ல பலன் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதை
4.இப்படித்தான் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

August 2025 – உபதேசம்

உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”

 

நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டோம் என்றால் அந்தப் பொருளின் மணமே அதிலிருந்து வரும். அதைப் போன்று நம் உயிரிலே எந்தச் சத்தைப் போடுகின்றோமோ அந்தச் சத்தின் மணமே வெளிப்படும்.
1.நமது உயிர் நெருப்புக்குச் சமம்.
2.மனிதனான பின் இந்த உயிரை “நம்முடைய வசத்திற்கு இயக்கலாம்…”
3.உயர்ந்த உணர்வு வரும் போது அது நமக்குள் அது திரும்பி வர வேண்டும்.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அந்த உணர்வு தான் நம் உடலுக்குள் பாய்ந்து அந்த வேதனையின் இயக்கமாக இங்கேயும் மாறுகின்றது.

அதே சமயத்தில் வேதனையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தோம் என்றால்… நம் வேதனை நீங்கி ஒளி என்று அறிவாகும் தன்மையாக… நமக்குள் நஞ்சு கலக்காது நஞ்சு வளராது தடுத்துக் கொள்ளும் சக்தியாக அது வருகின்றது.

மனிதனில் இப்படி வளர்ந்தவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது. அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நீங்கள் எடுத்துப் பழகுவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்.
1.”ஏராளமாக…” அங்கிருந்து விளைந்து வருகின்றது.
2.எடுத்துப் பழகினால் உங்களுக்கு நல்லதாகும்.

வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றி… தீமைகளை அடக்கி நமக்குள் மகிழ்ந்து வாழும் சக்தியாக என்றும் ஏகாந்த நிலையாகப் பெறச் செய்யும். ஏகாதசி என்றால் எதுவுமே நம்மைத் தாக்காத நிலை பெறலாம். ஏகாதசி விரதம் என்றும் சொல்வார்கள்.

நாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும். நாம் பார்த்த குடும்பம் எல்லாம் பேரருள் பேரொளி பெற வேண்டும். இருளை அகற்றிப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எல்லோரும் நினைக்கும் பொழுது
1.எல்லோருடைய உணர்வு நமக்குள் இருக்கின்றது.
2.அவர்கள் பகைமையை நாம் எடுப்பதில்லை.
3.நமக்குள் இருக்கும் அந்த அணுக்களுக்கு அருள் உணர்வுகளை இணைத்துக் கொண்டே இருக்கும்.

நோய் என்று வரும் பொழுது எப்படி டாக்டர்கள் இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்தில் கலக்கச் செய்கின்றார்களோ இதைப் போன்றே உயிர் வழி கவர்ந்து நம் உடல் உறுப்புகளில் இணைக்கப்படும் போது அந்த அணுக்களை நாம் நன்மை செய்யக்கூடியதாக மாற்றியமைக்க முடியும்.

எப்படி இன்ஜெக்ஷன் செய்கின்றார்களோ அதைப் போன்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்தால் “அது தான் முக்கண்…!”
1.நாம் புறத்தால் பார்க்கின்றோம் அதையே… உயிருடன் சேர்த்து எண்ணப்படும் பொழுது உயிர் வழி நாம் இயக்க முடியும்.
2.அதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வை இயக்கப்பட்டு எளிதில் பெறுவதற்கு இப்படிக் கொடுப்பது.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை. எனக்கு அந்த நினைவு வருகின்றது இந்த நினைவு வருகிறது என்று எதையும் பற்றி நீங்கள் எண்ண வேண்டியதில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினாலே போதுமானது. இந்த உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும். உடலில் வரும் சிரமங்களைப் போக்க முடியும்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும் இந்த உடல் அழியக் கூடியது தான்.
1.உயிர் அழிவதில்லை…! அழியா உயிருடன் ஒன்றி அழியா உணர்வு பெற்ற அந்த மகரிஷியின் உணர்வுகளை எடுத்து
2.வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தப் பேர்ருள் பேரொளி உணர்வைக் கவர்ந்து நமக்குள் சேர்த்தால்
3.உடலின் ஆசைகளை விடுத்து ஒளி என்ற உணர்வின் தன்மை இணைத்து பிறவி இல்லா நிலை அடையும் சக்தி பெறுகின்றோம்.

நம்முடைய மோப்ப சக்தி எதுவாக இருக்க வேண்டும்…?

 

நாம் நன்றாகத்தான் இருக்கின்றோம். இரு நண்பர்களுக்குள் ஆகவில்லை. ஆனால் அவரிடம் நாம் பழகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

என்னங்க…! நீங்கள் இவ்வளவு உதவி செய்கின்றீர்கள்… உங்களைப் பற்றி அவன் கேவலமாகப் பேசுகின்றான்…! என்பார்கள்.

நாம் “அப்படியா” என்போம்.

அவர்களுக்கு அந்த நண்பன் ஆகவில்லை.
1.நாம் செய்யும் உதவி அவனுக்குக் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதற்காக நம்மிடம் இப்படிச் சொல்கிறார்கள்.
2.ஆனால் சொன்னவுடன் நாம் மோப்பம் பிடிக்கின்றோம்.

கருப்பண்ணசாமிக்கு முன் என்ன இருக்கின்றது…? நாய் இருக்கின்றது… கையிலே அரிவாள் இருக்கின்றது.

நம்மைத் தவறாகச் சொல்கிறான் என்று அவர் சொன்ன தீமையான உணர்வுகளை நாம் கேட்டபின் “உடனே நம் மனம் இருண்டு விடுகின்றது…”

நாய் என்ன செய்கின்றது…? யார் அதை வளர்த்தார்களோ அதற்கு விசுவாசமாக இருக்கின்றது.
1.எதன் உணர்வை மோப்பம் பிடித்ததோ உடலுக்குள் சேர்த்துக் கொண்டதோ
2.அதன் உணர்வின் தன்மைக்கு விசுவாசமாக இருக்கின்றது.

இவர்களைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவன் சொன்னான். ஆனால் நாமோ “இருக்கட்டும் பார்க்கின்றேன்…” என்ற இந்த உணர்வை… நல்லதை நீக்கிவிட்டு அந்தப் பகைமையான உணர்வுகளை உருவாக்கி விடுகின்றது.

பரசுராம் என்று வரும் பொழுது தீமைகளை நீக்கிச் சமப்படுத்தும் ஆற்றல் பெற்றவன் மனிதன் என்ற நிலையினை ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

இருந்தாலும்… மனித வாழ்க்கையில் அவன் சுகத்திற்காக இவ்வாறு தீமைகளைச் செய்யப்படும் பொழுது… நுகர்ந்த உணர்வு நம்மை அறியாமலேயே நமக்குள்ளும் தீமைகளை உருவாக்கி விடுகின்றது.

அந்த நேரங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவரும் பெறட்டும்… தெளிந்த மனம் பெறட்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர் பெறட்டும் என்று எண்ணி விட்டோம் என்றால்
3.அவர் சொன்ன உணர்வு நமக்குள் குரோதமாக ஆக்காது.

இப்படி மாற்றவில்லை என்றால்… அவர் சொன்னதைப் பதிவாக்கிய பின் அவரைப் பார்த்தாலே மோப்பம் பிடிப்போம். பிறகு எதையாவது பேசினோம் என்றாலும்… இந்த மாதிரிச் சொன்னீர்கள் அல்லவா… என்று அந்தப் பதிவு நினைவாகி “மீண்டும் பகைமையை உண்டாக்கிவிடும்…”

இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாது சந்தர்ப்பத்திலே ஊருவாகுவதைக் காட்டுவதற்குத் தான்
1.கருப்பணசாமியை வைத்து அந்த உணர்வின் இயக்கங்களை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
2.இருண்ட நிலையாக நமக்குள் உருவாகிவிடுகிறது என்பதை இப்படிக் காட்டுகின்றார்கள்… நல்லதைக் காக்க முடியாது போய் விடுகின்றது.

மேலும் கருப்பண்ணசாமிக்கு ஆட்டைப் பலி கொடுப்பதும் மற்றதையும் செய்தால் அவன் நம்மைக் காப்பான் என்று… ஞானிகள் கொடுத்த உண்மையின் உணர்வுகள் எல்லாம் “தலை கீழாக மாறிய நிலையில் தான் இன்று உள்ளது…”

“அபிஷேகத்தின் தத்துவம்” சாதாரணமானதல்ல

 

கோவிலில் தெய்வச் சிலையை அலங்காரம் செய்வதற்கு முன்னாடி அபிஷேகம் செய்கின்றார்கள். சிலை மீது பாலை ஊற்றுகின்றார்கள் சந்தனத்தை ஊற்றுகின்றார்கள் கனி வர்க்கங்களைக் கரைத்து ஊற்றுகின்றார்கள் கடைசியில் நன்னீரை விட்டுக் கழுவுகின்றார்… அப்புறம் பன்னீரை ஊற்றுகின்றார்கள்.

சிலைக்கு எதற்காக இதைச் செய்கின்றார்கள்…? ஆனால் அப்போது நாம் என்ன செய்கின்றோம்…?

இங்கே வீட்டிலே கோரிக்கை வைக்கின்றோம். எப்படி…?

என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்று பாலாபிஷேகம் செய்யப் போகிறோம். விவசாயம் சரியாக வரவில்லை… என்னிடம் வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பத் தரவில்லை என்று அதற்காக வேண்டி ஆண்டவனுக்குப் பஞ்சாமிர்தத்தை ஊற்றி அபிஷேகம் செய்து… குறைகளை எல்லாம் அங்கே சொன்னால் “அவன் பார்த்துக் கொள்வான்” என்று அவனை (தெய்வத்தை) திருப்திப்படுத்துவதற்காகச் செயல்படுத்துகின்றோம்

இருந்தாலும்… இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று தான் சிலையாக அங்கே வடிக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலை மீது தான் இத்தனையும் ஊற்றுகின்றார்கள்… பார்க்கின்றோம். ஏன்…?
1.ஊற்றுவது பால் என்று தெரிகிறது… பாலைப் போன்ற மனம் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
2.மகிழ்ந்து வாழும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.என் பையனுக்குத் தீமையை நீக்கிடும் பாலைப் போன்ற அந்தத் தெளிந்த மனம் பெற வேண்டும்.
4.கணவன் மனைவிக்குள் சில குறைபாடுகள் இருக்கும். என் கணவருக்குப் பாலை போன்ற தெளிந்த மனம் பெற வேண்டும்.
5.அவர் சொல்லிலே இனிமை வர வேண்டும். சந்தனத்தைப் போன்ற நல்ல நறுமணம் பெற வேண்டும் என் கணவருக்கு.
6.இந்த ஆலயம் வருவோர் குடும்பங்கள் அனைவருக்கும் அந்தப் பாலை போன்ற மனம் பெற வேண்டும் என்று
7.பாலாபிஷேகம் செய்யும் பொழுது யாராவது இப்படி நினைக்கின்றீர்களா…?

ஏனென்றால் அப்படிச் சுவாசித்தால் நம் உயிருக்கு அந்த அபிஷேகம் நடக்கின்றது. இந்த உணர்வுகள் இரத்தத்திலே கலந்து அமுதாக… உடலை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரமாக அது கிடைக்கின்றது. நல்ல வீரிய சக்தியாகக் கிடைக்கின்றது.

1.கண்களிலே பார்ப்பது துவைதம்.
2.அதிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்தால் அத்வைதம்.
3.நுகர்ந்து உயிரிலே பட்டால் விசிஷ்டாத்வைதம்.

நாம் எந்த மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணினோமோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு ஆகாரத்துடன் சேர்த்து உடலாக மாறுகின்றது. உயர்ந்த குணங்களை உனக்குள் உருவாக்கு… “துவைதம் உடல்…”

தெரியாத மக்களுக்குத் தெரிய வைக்க… “சூட்சுமத்தில் நடக்கும் உண்மைகளை” உருவம் அமைத்து அந்த உணர்வின் சக்தியை நாம் பெறுவதற்கு ஞானிகள் அதை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

யாராவது கொஞ்ச நேரம் இவ்வாறு எண்ணி எடுக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

என் கணவருக்குப் பாலை போலச் சந்தனத்தைப் போல பன்னீரைப் போன்ற தெளிந்த மணம் பெற வேண்டும். எனக்கும் அந்த தெளிந்த மணம் பெற வேண்டும். கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் இப்படி எண்ணி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த மணம் கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணி எடுக்கும்படி… ஆபிஷேகிக்கும்படிச் சொல்லி உள்ளார்கள்.

யாருக்கு…? “நம் உயிருக்கு…!”

அதற்குத்தான் இந்தத் தெய்வம் நல்லது செய்யும் என்று காட்டியுள்ளார்கள். காரணப் பெயரை வைத்துச் சிலையை வைத்து ஊற்றும் பொழுது அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் எண்ணி ஏங்குவதற்குத் தான் நறுமணமானதை அங்கே ஊற்றினார்களே தவிர… ஊற்றி முடித்த பின் அந்தத் தீர்த்தத்தைப் பிடித்துச் சென்று குடிப்பதற்கு அல்ல… அதை பிடித்து நம் வீட்டிற்குக் கொண்டு வருவதற்கு அல்ல…!

இதை நமக்குள் எடுத்து இந்த உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்துவதற்குச் செய்தான் ஞானி.

இன்று டாக்டர்கள் என்ன செய்கின்றார்கள்…? நோய் என்று தெரிந்தால் இன்ஜெக்க்ஷனைப் போட்டு இரத்தத்தில் தான் அந்த மருந்தைக் கலக்கும்படி செய்கின்றார்கள்.

அது ஜிர்ர்… என்று போய் நல்ல அணுக்களுக்கு வீரியத்தை ஊட்டுகின்றது. அதற்குண்டான உணவைக் கொடுத்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது அதனுடன் இணைத்து நோய்க்குக் காரணமான அணுக்களை வலு இழக்கும்படி செய்கின்றார்கள்.

ஆனால் ஞானிகள் என்ன செய்தார்கள்…? அங்கே தெய்வத்திற்கு அபிஷேகம் செய்யும் பொழுது
1.உற்றுப் பார்த்து அந்த உயர்ந்த மணத்தை நாம் சுவாசித்து
2.உயர்ந்த சக்திகளை நம் இரத்தத்திலே எப்படிக் கலக்க வேண்டும்…? என்று அபிஷேகம் செய்து காட்டுகின்றார்கள்.

அவ்வாறு அதை நுகர்ந்து எடுத்தால் நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் ஆகின்றது. மகிழ்ச்சியூட்டும் உணர்வின் உணர்ச்சிகளாக அதன் வழி நம்மை இயக்குகின்றான்.

நாம் இப்படி எண்ணும் உணர்வுகள் நினைவாக்கப்படும் பொழுது உயிரிலே படும் பொழுது அரங்கநாதன். எந்த உணர்ச்சியின் உணர்வோ ஆண்டாள். “அந்த உயர்ந்த உணர்வுகள் நம்மை ஆளத் தொடங்குகிறது…”

“நம்முடைய எண்ணமே நம்மை ஆளுகின்றது” என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

1.நமது சாஸ்திரங்களில் பொய்யில்லை.
2.ஆனால் நாம் மெய்யைப் பொய்யாக்கி விட்டு… பொய்யைத் தான் இன்று மெய்யாகச் செய்து வாழ்ந்து கொண்டுள்ளோம்.

ஞானக்கனியாக நமக்குள் விளைய வைக்க வேண்டும்

 

நாம் பல விதமான குணங்கள் உடையவரைச் சந்திக்கின்றோம். அடிக்கடி கோபமாகப் பேசுவோரைப் பார்க்கின்றோம். அவர் உடலில் அந்தக் கோப உணர்ச்சிகள் கனியாகி முழுமை அடையப்படும்போது வித்தாகி விடுகின்றது. (வினை – வித்து)

ஆனாலும் நமக்குள் நன்மைகள் செய்யும் உணர்வுகள் இருப்பினும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் வேதனையையும் இவையெல்லாம் நாம் நுகர்ந்து அறிந்து கொண்டேயிருக்கின்றோம்.

1.நுகர்ந்த உணர்வோ நம் உடலில் வித்தாகி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி
3.அதன் உணர்வுகள் நம் உடலில் அணுவாகி
4அணுவான பின் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

இதற்கு முன்னாடி நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங்கள் இருப்பதால் நாம் நன்மையைச் செய்கின்றோம். ஆனாலும் நன்மை செய்வதற்கு முன் அவர்களுடைய கஷ்டங்களைக் கேட்டறிகின்றோம்.

அவர்கள் சொல்லும் கஷ்டத்தை நாம் கேட்டறிந்தால் நாம் நுகரப்படும் போது அந்த உணர்ச்சிகளே நமக்குள் இயக்கி நம் உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதற்கும் பரவுகின்றது.

1.பரவப்படும்போது நம் உடல் ஒரு அரங்கம்.
2.சுவாசித்த உணர்வுகள் (உயிரிலே மோதினால் நாதம்) நம் உடலிலே படரும் போது “அரங்கநாதன்…”
3.அதே சமயத்தில் அந்த உணர்ச்சிகளே நம்மை ஆளுகின்றது “ஆண்டாள்…”

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகளை உயிர் அதை அந்த உணர்ச்சிகளை அறிந்து உடலில் மீண்டும் அந்த அணுத்தன்மை வித்தாகி நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

ஏனென்றால் மற்றவர்கள் கஷ்டம் என்ற உணர்வுடன் வரப்படும்போது அது அங்கே கனியாகி வித்தாகி விடுகின்றது. கனியாகாமல் எதுவுமே வித்தாவதில்லை. விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் அது மீண்டும் முளைக்கின்றது.

இதைப் போன்று ஒவ்வொரு மனித உடலிலும் பிறர் உடலில் இருக்கக்கூடிய கஷ்டங்களை உற்றுக் கேட்டால் அவையெல்லாம் வித்தாக நமக்குள் முளைக்கின்றது.

மற்றவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி நாம் அடிக்கடி எண்ணும்போது அதை நாம் வளர்த்து நம் உடலில் வளர்த்து விடுகின்றோம். அப்பொழுது அதே வித்து நம்மிடத்திலும் விளையத் தொடங்குகின்றது.

1.ஒரு வித்தை ஊன்றியபின் அதே செடியாக வளர்ந்து
2.பல வித்துகளை உருவாக்குவது போல
3.நம் உடலில் அதீதமான வித்துக்கள் உருவாகி விடுகின்றது.

ஒரு வித்து செடியாகி வளரும் வளர்ச்சியில் மலர்கள் உருவாகின்றது. மலரானபின் மணத்தைப் பரப்புகின்றது. அதே போல பிறர் உடலில் விளைந்த (உணர்வுகளை) வித்துக்களை நாம் கேட்டறிந்து நம் உடலில் நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

பதிவான பின் மீண்டும் அதை எண்ணி அவர் உடலில் விளைந்த அதே நோயை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அல்லது அவர்களின் வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர்கள்படும் வேதனைகளைச் சொன்னால் நாம் அதைக் கேட்டறிகின்றோம். அதன் பின் தான் உதவி செய்கின்றோம்.

“கடைசியில்…” நம் உடலிலும் வேதனையாகிவிடும்.

நாம் அடுத்தவர்களிடம் போய்
1.இந்த மாதிரி… எல்லாருக்கும் உதவி செய்தேன்… எல்லாம் செய்தேன்…
2.“ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…” என்று
3.நமக்குள்ளே அதே வித்தை நாம் உருவாக்குகின்றோம்.

உருவானதை நம் நண்பர்களிடம் சொல்வோம். “நான் இத்தனையும் செய்தேன்…” என்று சொல்லும் போது அவர்களும் காதில் கேட்கிறார்கள். அவர்கள் உடலிலும் பதிவாகி விடுகின்றது.

1.ஒரு நல்ல வித்தை நமக்குள் உருவாக்கி நல்லதை எதாவது சொல்கின்றோமோ என்றால் இல்லை.
2.அந்த “நல்லது சொல்வது” என்பது சிறிது காலம் இருந்தாலும்
3.அடுத்தவர்கள் கஷ்டங்களைக் கேட்டு நமக்குள் எடுத்து
4.அவருடைய அந்த வேதனையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றதே தவிர
5.நமக்குள் இருக்கும் நல்ல குணத்தை வளர்த்துக் கொள்ளக்கூடிய நிலையே அற்றுப் போய்விட்டது.

ஆக முதலில் நாம் நன்மை செய்பவர்களாக இருப்போம்.

பிறருடைய கஷ்டங்களும் குறைகளும் அவர்களின் கஷ்டத்தினால் ஏற்பட்ட வேதனைகளும் நமக்குள் வித்தாகி வளர்ந்த பின் கனியாகி நம்மையும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுக்குள் வரும் இத்தகைய தீமைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும். அதைத் தான் “விநாயகர் சதுர்த்தி” என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

சதுர்த்தி என்றால் “நிறுத்தி” என்று பொருள்.

1.தீமையான வினைகள் (வித்துக்கள்) நமக்குள் விளையாமல் “நிறுத்தி”
2.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து “அதை வினையாக்கி”
3.”ஞானக்கனியாக” நமக்குள் விளைய வைக்க வேண்டும் என்பதே ஞானிகள் உணர்த்திய விநாயகர் தத்துவம்.

எம்மிடம் வரும் போது… “கஷ்டம்” என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்

 

1.என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
2.என் பையன் ஞானியாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
3.என் குழந்தைகள் உடல் நலமாக இருக்க வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும்
4.என் தொழில் வளமாக வேண்டும் அந்த அருள் சக்தி வேண்டும் என்று
5.இதைத் தான் நீங்கள் என்னிடம் வாக்காகக் கேட்டுப் பெற வேண்டும்…. கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

ஆனால் இப்படிக் கேட்பதற்குப் பதில் கஷ்டம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால் முதலில் இருளாகிவிடும். அப்போது நான் சொல்லும் உயர்ந்த வாக்குகள் உங்களுக்குக் கிடைப்பது கஷ்டம்.

இதை எதிர்த்துத் தள்ளி விடுகின்றது. கஷ்டம் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நல்ல வாக்குகளை அது உள்ளே விடுவதில்லை. ஏனென்றால் அது வாலியாக மாறி விடுகின்றது.
1.உங்கள் எண்ணமே நல்லதைப் பெற முடியாதபடி தடுக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.
2.இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு நல்லதை வேண்டிக் கேட்டுப் பெறும் ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வீக குணம் பெற வேண்டும் கொவிலுக்கு வரும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். கோயிலை அவமதிக்காதீர்கள்.

நம்மைத் திரிந்து வாழச் செய்யும் நிலையில் நமக்குள் நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதும் பகைமையிலிருந்து மாறவும் ஒன்றுபட்டு வாழ்வதற்கும் தான் கோவில் என்ற நிலையில் அதை மதித்து நடங்கள்.

ஆகவே நான் சொல்வதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.உங்களுடைய நினைவு கொண்டு தான் மீண்டும் அதை எண்ணி எடுக்க வேண்டும்.

திட்டியவனை நினைத்தவுடன் அவனுடைய உணர்வுகள் உடனடியாக உங்களுக்கு வருகிறது அல்லவா. கோபம் வருகிறது காரியமெல்லாம் கெடுகிறது… அங்கேயும் புரையோடுகிறது காரியங்கள் கெடுகிறது.

பிள்ளை மீது பாசமாக இருந்து என்ன ஆனதோ…? ஏதானதோ…? என்ற துன்பப்பட்டால் அந்த வேதனையால் உங்கள் செயல்கள் தடுமாற்றம் ஆகின்றது.

நீங்கள் அந்த வேதனையுடன் சமையல் செய்தீர்கள் என்றால் சூடாக இருக்கும் பாத்திரம் பொங்கி வரும் போது சரியான முறையில் ஆதைக் கையாளாதபடி உடுத்தியிருக்கும் துணியில் தீ கூடப் பிடித்து விடும்.

காரணம்…
1.சிந்தனை இல்லாத உணர்வு கொண்டு அவசரப்பட்டு இயக்கப்படும் பொழுது நமக்கே அது தீங்கு விளைவிக்கும் சக்தியாக வந்து விடுகிறது.
2.ஏனென்றால் வேதனை என்பது விஷம்… சிந்திக்கும் தன்மையை அது இழக்கச் செய்து விடும்.

ஆகவே அடுத்தடுத்து அடுத்தடுத்து “கஷ்டம் என்ற நிலையினை உள்ளே விடாதபடி” மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நான் பார்ப்பதெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமை உணர்வுடன் உடல் நலத்துடன் வாழ வேண்டும் எங்களுக்குள் அருள் ஞானம் வளர வேண்டும்… என்று அதிகாலையில் இப்படி எண்ணி எடுத்துப் பாருங்கள்.

பகைமைகள் அகலும்… மனம் ஒன்றாகும். இருளைப் போக்கும் அருளைப் பெருக்கும். பேரருள் பேரொளியாக வளர்த்துக் கொள்ள முடியும். அத்தகைய ஆனந்தத்தை நீங்கள் பெறுங்கள்.

நான் பதிவு செய்த நிலைகள் கொண்டு எண்ணி எடுத்துப் பாருங்கள்.

தங்கத்திலே திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் எப்படிக் கரைகின்றதோ அதைப் போல் அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்த்தால் அது உங்கள் கவலையையும் வேதனைகளையும் கரைத்து உங்களைச் சிந்திக்கச் செய்து ஆற்றல் மிக்க வலிமையைக் கொடுக்கும்.

அந்த வலிமை பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு கோவில்
2.அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் வெளிப்படுத்துகின்றேன்.
3.அதே ஆசையுடன் நீங்கள் அருள் சக்திகளை நுகர்ந்தால் அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக வரும்.
4.சிந்திக்கும் தன்மை வருகின்றது… அருளைப் பெருக்க முடிகின்றது… அருள் வாழ்க்கை வாழ முடிகின்றது…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பெரருள் பேரொளி பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்திகள் படர வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் தியானம் செய்கின்றோம்…!

சிலருக்கு அந்த அணுக்கருவின் தன்மை வலுவாக வளர்ந்திருக்கும். ஆகவே அந்த வளரும் பருவத்தில் இருக்கும் பொழுது அவர்களால் துருவ நட்சத்திர ஒளி அலைகளைக் காண முடிகின்றது. நுகரும் பொழுது அபூர்வ மணங்களையும் சுவாசிக்க முடிகின்றது.

இருந்தாலும் சிலரால் இதை உணர முடியாத நிலைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள்
1.தியானத்தில் நமக்கு ஒன்றும் தெரியவில்லையே… கிடைக்கவில்லையே…! என்ற எண்ணத்தையே விட்டுவிடுங்கள்.
2.நாம் நிச்சயம் பெறுகின்றோம்… பெற்றுக் கொண்டிருக்கின்றோம்…!

ஒரு தோசையைச் சுடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அடியில் தணல் அதிகமாகிவிட்டால் ஒரு பக்கம் தோசை கருகி விடுகின்றது. கருகிய பக்கம் நாம் தோசையைப் பிரட்டினால் சட்டியில் ஒட்டிக் கொள்கிறது… சீராக நாம் தோசையை எடுக்க முடிவதில்லை.

அதற்கு நாம் என்ன செய்கின்றோம்…? நீரைத் தெளிக்கின்றோம். ஒட்டிய இடங்களில் எண்ணையைப் போட்டுத் தேய்த்து எண்ணைய் பசையைக் கொண்டு வருகின்றோம்.

அப்பொழுது அந்தச் சூட்டின் தன்மையை அங்கே சமப்படும் பொழுது அடுத்து தோசையைச் சுடும் பொழுது கருகாதபடி சட்டியில் ஒட்டாதபடி சீராக வருகின்றது.

இதைப் போன்று தான் வாழ்க்கையில் சிலருக்கு எத்தனையோ விதமான கொதித்தெழும் உணர்வுகள் உடலிலே வளர்ந்திருக்கும்.

1.என்னை மோசம் செய்தார்கள்…
2.என்னை எப்படியெல்லாம் சங்கடப்படுத்தினார்கள்…? கேவலப்படுத்தினார்கள்..?
3.இன்றும் எப்படி எப்படித் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்…? என்ற
4.ஆவேச உணர்வுகள் தொடர்ந்து உள்ள அவர்கள் உடல்களில்
5.தியானத்தில் ஒளி அலைகளையோ… மணங்களையோ… அறிவது கொஞ்சம் கடினம்.

ஏனென்றால் தியானம் இருக்கும் பொழுதே அந்தத் தியான நினைவே இருக்காது. டக்… என்று வேறு வேறு பக்கம் நினைவுகள் சென்றுவிடும்.

இரண்டு வார்த்தை மூன்று வார்த்தை சொல்லும் பொழுது இருக்கும் நினைவுகள் அடுத்து… அதற்கப்புறம் தொடர்ந்து… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகரவிடாதபடி அசையாது நிறுத்திவிடும்.

இல்லை என்றால் தியான நினைவு வரப்படும் பொழுது ஏற்கனவே பட்ட சங்கட அலைகளோ வெறுப்பு அலைகளோ ஊடுருவும்.

தியானமிருக்கும் பொழுது
1.அடுத்து அங்கே போக வேண்டும்…
2.இதைப் பார்க்க வேண்டும்… அதைச் செய்ய வேண்டும்… தொழிலைச் சீராக்க வேண்டும்…
3.குடும்பத்தில் பையனோ பிள்ளையோ இப்படி இருக்க வேண்டும் என்ற இந்த அலைகள் வந்தால்
4.அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வராது தடுத்துக் கொண்டே இருக்கின்றது என்று பொருள்…!

தியானத்தில் இப்படி ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட அடுத்து நாம் தியானிக்கும் பொழுது மீண்டும் கண்களைத் திறந்து கண்ணின் நினைவு கொண்டு அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த நினைவை மறக்காது எடுத்துப் பழக வேண்டும்.

மீண்டும் மீண்டும் அந்த உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

உங்கள் அனைவருக்குமே அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் தான் யாம் (ஞானகுரு) தொடர்ந்து உபதேசிக்கின்றோம்.. தவமிருக்கின்றோம்.

உபதேசிக்கும் இந்த உணர்வுகளை யாரெல்லாம் உற்று நோக்கி உணர்வைக் கூர்மையாக எண்ணுகின்றார்களோ அவர்கள் உடலில் உள்ள ஊன்களில் ஞான வித்தாகப் பதிவாகிவிடுகின்றது.

1.“பதிவானதை மீண்டும் மீண்டும் எண்ணினால்…”
2.உங்கள் நினைவாற்றல் அங்கே துருவ நட்சத்திரத்திற்கே செல்லும்.
3.அந்த ஒளி அலைகளையும் மணங்களையும் நுகர முடியும்… காண முடியும்.

ஆகவே ஞானிகளைப் பற்றிய பதிவுகள் என்பது மிகவும் முக்கியம்…! “ஞான வித்து நம் உடலிலே ஊனிலே பதிந்திருந்தால் தான்…” அந்தச் சக்திகளைக் கவர முடியும்.

நஞ்சைப் போக்கும் ஆற்றல் மிக்க ஞானிகள் தான் “இப்பொழுது தேவை”

 

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கின்றேன்.

நம்மால் முடியவில்லை என்றாலும்… வீட்டில் கர்ப்பமானால் அந்தப் பத்து மாதமாவவது அமைதியாக இருந்து
1.அகஸ்தியன் பெற்ற அருள் கருவிலே இருக்கும் சிசு பெற வேண்டும்
2.உலகை அறிந்த அகஸ்தியனுடைய அருள் கருவில் வளரும் சிசு பெற வேண்டும்
3.துருவத்தின் ஆற்றலைp பெற்ற அந்த அருள் சக்தி கருவிலிருக்கக்கூடிய சிசு பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரமாக ஆன அந்த ஒளியான உணர்வுகளைக் கருவிலிருக்கக்கூடிய சிசு பெற வேண்டும் என்று
5.காலையில் 6:30 மணிக்குள்ளாவது ஒரு பத்து நிமிடமாவது எண்ணிப் பாருங்கள்.

வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் பகைமைகளை மறந்து விடுங்கள்… ஞானிகளை உருவாக்குங்கள். அவன் உருவாக உங்கள் குடும்பத்தில் சாப அலைகளோ பாவ அலைகளோ பூர்வ ஜென்ம அலைகளோ அத்தனையும் நீக்கும் மகரிஷியாக அவன் உருவாகின்றான்.

விஞ்ஞான உலகில் காற்று மண்டலத்தில் பரவி உள்ள நச்சுத்தன்மையை நீக்க… பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கியது போன்று… வளர்ச்சியில் மனிதனாக எப்படி அது உருவானதோ…
1.ஞானி அவன் வாழ்க்கையில் தனக்குள் வந்த இருளை நீக்கி ஒளியாக எப்படி மாற்றினானோ அதன் உணர்வை
2.கருவில் வளரும் அந்தச் சிசுவிற்கு ஊட்டினால் அவன் இருளை அகற்றி ஒளியான உணர்வை நமக்கு ஊட்டுவான்… இந்த உலகைக் காப்பான்.

ஆகவே உலகைக் காத்திடும் மகரிஷிகளை நாம் உருவாக்குதல் வேண்டும்

அகஸ்தியன் தெரிந்து அந்த ஆற்றல்களைப் பெறவில்லை. தாய் கருவிலே நுகர்ந்த உணர்வு தான் அவனை இயக்கியது.

அவன் பெற்ற சக்தியை எடுத்துக் கர்ப்பிணியின் செவிகளிலே ஓதுங்கள். கர்ப்பிணியை எண்ணி எடுக்கும்படி செய்யுங்கள்… சுவாசித்து உமிழ் நீராக உருவாக்குங்கள்… அதைக் கருவில் இருக்கும் சிசுவிற்கு ஊட்டுங்கள். அருள் ஞானியை உருவாக்குங்கள்.

இப்படி உருவாக்கினால் விஞ்ஞான உலகில் வரும் அசுரத் தன்மைகளை நீக்க முடியும். காரணம்… இன்று உலகெங்கிலும் நரமாமிசத்தைச் சாப்பிடும் அளவிற்கு மனிதனுடைய எண்ணங்கள் உணர்வுகள் சென்று விட்டது.

குழந்தைகள் கருச் சிதைவானால் சிதைந்த உடலை எடுத்து வியாபாரம் செய்கின்றார்கள் சீனாவிலே. அதை முதியவர்கள் சாப்பிட்டால் வலிமை பெறுவார்கள் என்று இப்படி நம்பிக்கையை ஊட்டி தாய்லாந்து நாட்டிலும் மற்றும் நீக்ரோக்கள் வாழும் நாடுகளிலும் ரஷ்யாவிலும் ஏன் அமெரிக்காவிலும் கூட இப்படி அறிவிலிகளாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால்… இந்த உடல் எத்தனை காலம் வாழ்கிறது…? என்று எண்ணுகின்றான்…! அதே சமயத்தில் விஞ்ஞானி பல உணர்வுகளைச் சேர்த்து மனிதனை 1500 வருடம் வாழ வைக்க முடியும் என்று நினைக்கின்றான்,

அவ்வளவு காலம் வாழ்ந்தால் இவனுடைய எண்ணங்கள் ஆசையின் பால் சென்று நிராசையாகி வேதனையின்பால் செல்லப்படும் பொழுது “அந்த வேதனையைத் தான் வளர்க்க முடியும்…” என்பதை மறந்து விட்டார்கள்.

இது போன்று உலகம் சென்று கொண்டிருக்கும் இத்தகைய நிலையில் இருந்து மக்களை மீட்ட அருள் ஞானிகளை நாம் ஒவ்வொருவரும் உருவாக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அதிகாலையில் எடுத்துப் பழகுங்கள். உங்களுக்குள் பதிவான நிலைகள் கொண்டு கருவிலே இருக்கும் சிசுவிற்கு இந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.அகஸ்தியன் பெற்ற அருளை அவன் பெற வேண்டும்
2.அவன் துருவத்தின் ஆற்றல் பெற்றதை இந்தக் குழந்தை பெற வேண்டும்
3.இருளை நீக்கி ஒளி என்ற உணர்வாகப் பிறவி இல்லாத நிலை அடைந்த அந்த அருள் சக்தி பெற வேண்டும்
4.உலக இருளை நீக்கும் ஞானியாக வரவேண்டும்
5.அனைவரும் தெளிந்த மனம் கொண்டு வரும் அந்த மகரிஷியாக வேண்டும் என்று
5.”இது போன்ற ஆயிரம் அகஸ்தியர்களை நாம் உருவாக்க வேண்டும்…”

அன்று ஒரு சமயம் பூமி நீளவாக்கிலே வளர்ந்து வரும் பொழுது தலைகீழாக்க் குடை சாயும் நேரத்திலே அகஸ்தியன் அவனுடைய திறமையால் பூமியைத் திசை திருப்பிச் சமப்படுத்தினான்… சீராக்கினான்.

தென் துருவம் வட துருவம் சில பகுதிகளில் உறை பனி உருவாவதைச் சமப்படுத்தி இன்று வரை இந்த பூமியைச் சீராக இயங்கும்படி செய்துள்ளார்.

இரண்டு நட்சத்திரத்தினுடைய சக்திகள் எதிர்மறையாகி மோதலாகி மின்னலானால் மரத்தைக் கருக்குகின்றது. கடலில் பட்டால் மணல் ஆகின்றது. பூமிக்குள் ஊடுருவினால் கொதிகலனாக மாறுகின்றது.

ஆனால் கடலில் இவ்வாறு விளைந்த மணலை விஞ்ஞானி எடுத்து யுரேனியமாகப் பிரித்து எதிர்நிலையான உணர்வுகள் மோதம்படி செய்து மீண்டும் மின்னலைப் போல கதிரியக்கங்களை உருவாக்கச் செய்து மின் கதிர்களாக மாற்றுகின்றான்.

மனித உடலுக்குள் இது மோதும்படிச் செய்து மனிதனையே கரைக்கும் தன்மையும் மரத்தைக் கரைக்கும் நிலையம் கல் மண் அனைத்துமே அதற்குள் தாக்கப்பட்டு அதிலிருக்கக்கூடிய கதிரியக்கங்கள் ஒன்று சேர்ந்து கரைந்து போகும் படி செய்கின்றான்.

அந்த அளவுக்கு இன்று விஷத்தன்மைகள் வளர்ந்து விட்டது.

1.மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் நம் பிரபஞ்சத்தில் சூரியனால் அது கவரப்பட்டு
2.பூமி கொதிகலனாகி நிலநடுக்கம் ஆவது போன்று சூரியனுக்குள்ளும் எதிர்நிலையாகிக் கரும் புகைகளைக் கக்கிக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய விஷத்தன்மைகள் மோதப்படும் பொழுது மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் சூரியனுக்குள் பரவி இரு நிலையான மோதலாகி… எப்படி மின்சாரம் செல்லும் வயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் இரு மடங்கு மின்சாரமாகின்றதோ இதைப் போன்று சூரியனுக்குள் அது இரு மடங்கு இயக்கச் சக்தியாகி….
1.இந்த விஞ்ஞானமும் அழியப் போகின்றது.
2.மனிதன் உயிரின் துடிப்பும் அதிகரிக்கப் போகின்றது… சிந்தனைகள் கருகப் போகின்றது.
3.மிருக உணர்வு கொண்ட நிலையில் விஷத்தன்மை கொண்ட மனிதர்களாகத் தன் இனத்தைப் புசிக்கும் அளவிற்கு வந்துவிடும்.

தான் வாழ வேண்டும் என்ற நிலையில் அனைத்தையும் அடித்து நொறுக்கி விட்டு அதைக் கண்டு ஆனந்தப்படும் நிலையாக வந்துவிட்டது.

எங்கே சென்றாலும் இது போன்ற விஷ உணர்வுகள் படர்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் எந்தச் செல்வத்தைத் தேடப் போகின்றோம் எதைக் காக்கப் போகின்றோம்…?

அழியாச் செல்வமான அந்தப் பேரருளை நீங்கள் பெற்று இருளை மாய்த்திடும் தன்மை பெற்று வீட்டிலே கர்ப்பமாக இருக்கும் அந்த கருவில் வளரும் சிசுக்கள் மகானாக வேண்டும் என்று அவர்களை மகரிஷியாக உருவாக்குங்கள்.

இது போன்ற ஆயிரம் குழந்தைகளை உருவாக்கினால் நீங்கள் வாழும் ஊருக்குள் விஷத்தன்மை புகாதபடி தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரம் எப்படி விஷத்தை ஒளியாக மாற்றுகின்றதோ இதைப் போன்று இந்தக் குழந்தைகள் விஷத்தை மாற்றிடும் உணர்வின் அறிவாகப் படரச் செய்யும் பொழுது தொக்கி உள்ள மனிதர்களைக் காக்க முடியும்… தப்புவிக்க முடியும்.

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்… நம்பிக்கையுடன் நீங்கள் செயல்படுங்கள்.

கர்ப்பம் என்று தெரிந்தாலே அந்தக் குடும்பத்தில் யாரும் சங்கடமே படக்கூடாது
1.சந்தோசம் வரவேண்டும்… ஞானி உருவாகின்றான் என்று…!
2.உலகைக் காக்கப் போகின்றான்
3.இருளை அகற்றப் போகின்றான்
4.மெய்ப்பொருளைக் காணப் போகின்றான்
5.அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லப் போகின்றான்
6.அவன் பார்வையில் சர்வ பிணிகளையும் நீக்கப் போகின்றான்
7.அத்தகைய கரு குடும்பத்தில் உருவாகின்றது என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்…
8.அந்தக் கர்ப்பிணியிடம் இதைச் சொல்லிப் பாருங்கள்… அற்புதம் நடக்கும்.

இன்றைய உலகம் இருக்கக் கூடிய சூழ்நிலை என்பது தலைக்கு மேல் கத்தியை தொங்க விட்டிருப்பது போன்று தான் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தாலும் அவர்கள் வெடிக்கவில்லை என்றாலும் தானாக வெடிக்கும் வாய்ப்புகள் வருகின்றது.

அவை வெடித்தால் பூமியே முழுமையாக நஞ்சின் தன்மையாகிவிடும். மனிதனுடைய உடலையே மனிதப் பிறவியை அழிக்கக்கூடிய நிலைகளாக வந்துவிடும். மனிதனல்லாத பிறவிக்குத் தான் செல்ல நேரும்.

ஆனால் அதற்குள் ஞானிகளை உருவாக்கி விட்டால்…
1.அவனுடைய நிழலால் நாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்… அவன் மடிய மாட்டான்… நம்மை உந்தித் தள்ளுவான்.
2.நம்மை ஒளியாக்குவான்… பிறவியில்லா நிலையை அடையச் செய்வான் இருளைப் போக்குவான்.

ஆகவே… நஞ்சைப் போக்கும் ஆற்றல் மிக்க ஞானிகள் தான் இப்பொழுது தேவை. ஞானிகள் உலகமாக நாம் உருவாக்க வேண்டும். காலம் குறுகிக் கொண்டிருக்கின்றது.

அன்று அகஸ்தியன் கொடுத்த தத்துவங்கள் பெரும்பகுதி மறைந்து விட்டது. விஞ்ஞான உலகம் அழியும் தருணத்தில் உங்களுக்கு ஞானிகள் அருள் உணர்வுகளை உபதேசமாகக் கொடுக்கின்றேன்.

உடலை விட்டு அகன்று ஒளியாக நான் சென்றாலும்
1.எனக்குக் கிடைத்த சக்தி உங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் .என்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றேன்.
2.நீங்கள் அனைவரும் ஞானியாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
3.நீங்கள் அவ்வாறு உருவானால் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் செயலாக அமையும்.

உங்கள் உயிரை ஈசனாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… குரு வழியில் நீங்கள் எல்லோரும் அந்த நிலை பெற வேண்டும் என்று தான் உபதேசிக்கின்றேன். அதன் வழி செயல்படுத்துங்கள் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மீன்களை ரசித்துச் சாப்பிடுவார்கள். சில மீன்களை வாங்கிச் சமையல் செய்யும் பொழுது பெண்கள் அதை அப்படியே உயிருடன் உராய்வார்கள்… போட்டுச் சுரண்டி அதை நரக வேதனைப்படுத்தி பின் வேக வைத்துச் சாப்பிடுவார்கள்.

1.எவ்வளவு தூரம் மீனை உராய்ந்து அதை இம்சை செய்தோமோ
2.உற்றுப் பார்த்துச் சுவாசித்ததை நம் உயிர் சும்மா விடுவதில்லை…!
3.அதன் உணர்வின் கருவாக நம் இரத்தத்தில் முட்டையாகி அது நாளடைவில் அணுவின் தன்மை அடைந்தால்
4.உராயும் பொழுது அதற்கு (மீனுக்கு) எப்படி எரிச்சலானதோ அந்த எரிச்சல் பெண்களுக்கு நிச்சயம் வரும்.

மீன் குழம்பை வைத்தவர்களுக்கு எல்லாம் பெரும்பகுதி மீனை உயிருடன் உராய்ந்திருந்தால் உடலில் எரிச்சல்… கை காலிலும் எரிச்சல் வரும்.

எம்மா… எரியுதே…எரியுதே…! என்று சொல்லிக் கொண்டு டாக்டரிடம் சென்றாலும் அதற்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்துச் சரி செய்ய முயன்றாலும் மீனை உயிருடன் போட்டுச் சுரண்டி உராய்ந்தவர்களுக்கு வரும் எரிச்சலை எந்த மருத்துவத்தாலும் நிறுத்த முடியாது.

நான் இந்த டாக்டரிடம் சென்றேன்… கேட்கவில்லை.. அடுத்த டாக்டரிடம் போனேன்…! அதுவும் கேட்கவில்லை.. என்று தான் சொல்வீர்கள்.

ஆக நம்மை அறியாமலே எரிச்சல் ஊட்டும் நிலைகள் கொண்டு நாம் ரசித்ததை இந்த உடலில் நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.

அத்தகைய உணர்வின் அணுக்கள் உடலிலே பிறந்து விட்டால் இதன் வழி உடலை விட்டு நாம் வெளியிலே சென்ற பின் அதற்குத் தகுந்த உடலைத் தேடி நம் உயிர் அழைத்துச் சென்று அதன் படியே அங்கே வளரும். அந்த உருவாகத் தான் உயிர் நம்மை உருவாக்கும்.

நாம் நினைக்கின்றோம்… கடவுள்… எங்கே இருக்கின்றான்..? நாம் திருட்டுத்தனமாகச் செய்வதை அவன் எப்படிப் பார்ப்பான்…? அவனுக்கு என்ன தெரியப் போகிறதா என்று…!

ஆனால் நமக்குள் இருந்து ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பவன் உயிரே…!

நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குவதும் அதை ஆண்டு கொண்டிருப்பதும்
1.நாம் எண்ணிபடி இந்த உடலை இயக்குவதும்
2.நாம் எதை வளர்க்கின்றோமோ அதன் வழி நீ அனுபவி…! என்று தான் நம்மைச் செலுத்துவான்.

அதே சமயத்தில் ஆறாவது அறிவு பெற்று வளர்ந்த நாம் இதைப் போன்ற கொடிய தீமைகளை எல்லாம் அப்புறப்படுத்தி அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்ப்பித்தால் அதையும் நம் உயிரே உருவாக்குகின்றான்.

நாம் எண்ணியது எதுவோ அந்த அருள் ஒளிகளை உருவாக்கி நமக்குள் சொர்க்கலோகத்தையே அமைக்கின்றான். இந்த உடலிலேயே சொர்க்கலோகத்தை உருவாக்குகின்றான்.

இந்த உடலை உருவாக்கிய பின்…
1.பழைய உடலைப் பிளந்து விட்டு
2.என்றும் பதினாறு என்ற நிலையை ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றான்.

இதை யார் உருவாக்குவது…? நம் உயிர் தான்,

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நோய்கள் வரும். அது எல்லாமே நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைவதனால் வருவது தான்…!.

1.தெரிந்து செயல்படும் உணர்வுகளும் நமக்குள் அணுக்கருவாக மாறுகின்றது.
2.நம்மை அறியாமல் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததும் அணுக்கருவாக மாற்றுகின்றது நம் உடலில்.
3.இப்படி நுகர்ந்தது (சுவாசித்தது) அனைத்தையும் உருவாக்கும் திறன் பெற்றது தான் நம் உயிர்.

ஆகையினால் “விஷ்ணு…” வரம் கொடுக்கின்றான் என்று இதைக் காட்டுகின்றார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால் அணுவாகின்றது.

அணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அது தன் உணவை எடுக்கின்றது. பின் தன் இனத்தைப் பெருக்குகின்றது. இது தான் “பிரம்மா…” உருவாக்குகின்றான்.

அதே சமயத்தில் உடலான “சிவன்..” அரவணைத்துக் கொள்கின்றான். உடலுக்குள் எது எல்லாம் வருகின்றதோ அந்த உணர்வுகள் அனைத்தையும் அது அரவணைத்துக் கொள்கின்றது.

1.எக்குணத்தின் செயலாக நாம் எடுத்தோமோ அந்த அணுவின் சக்தியாக நமக்குள் இயக்குகின்றது.
2.ஆகவே இந்த சக்தியின் தொடர் கொண்டு தான் சிவனின் இயக்கமே இருக்கின்றது.

உடலில் வலி ஏற்பட்டால் அம்மம்மா… அப்பப்பா..! என்று நாம் துடிக்கின்றோம் அல்லவா…! அப்பொழுது சக்தி சிவனை ஆட்டிப் படைக்கின்றது என்று சிவ நடனத்தைக் காட்டுகின்றனர்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதன் வழி உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது
1.சக்தியின் கீழ் தான் சிவன் அடிமையாகி இருக்கின்றான் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.
2.சிவனைச் சக்தி தன் திரிசூலத்தால் தாக்குகின்றாள் என்றெல்லாம் உருவாக்கிக் கொடுத்திருப்பார்கள்.

நாம் ஒருவரைத் தாக்கும் உணர்வு (எண்ணம்) கொண்டு நுகர்ந்தால்.. நம் உயிரின் தன்மை அதை உருவாக்கும் அந்தச் சக்தியாக உருவாகி நம் உடலான சிவமாக அது மாறியே விடும்.

பின் அதனின் கடுமையான வேகங்கள் கூடப்படும் பொழுது.. இந்த உடலைச் செயலற்றதாக மாற்றி… அதன் கீழ் தாக்கும்..! என்ற நிலையையும் “படமாக்கிச் சித்தரித்து…” அதன் காவியத் தொகுப்பையும் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை

 

ஒரு விலை உயர்ந்த பொருளை வாங்கிக் கொண்டு வருகின்றோம்… திடீரென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றது. உடனே நமக்கு அதிர்ச்சி வருகின்றது… வேதனை வருகின்றது.

சந்தர்ப்பத்திலே இந்த வேதனை அதிகமாக நுகரப்படும் பொழுது இந்த உணர்வு நம் ஆகாரத்துடன் கலக்கின்றது.
1.அந்த அதிர்ச்சியான உணர்வுகள் நம் இருதயத் துடிப்பிலே பட்டு விட்டால் அங்கே படபடப்பு அதிகமாகி
2.நம் சுவாசத்தை கட்டுப்படுத்தும் பயத்தின் தன்மையாக வரும்… பதட்டம் வந்து விடுகின்றது.

பதட்டாமன உணர்வுகள் சிறிது காலம் அது இருந்தால் உமிழ் நீராகி ஆகாரத்துடன் கலந்து அதே உணர்வு வளரப்படும் பொழுது நடுக்கவாதம் வரும்.

இது எல்லாம் நம்மை அறியாமல் வரக்கூடிய நிலைகள். இதைப் போன்ற நிலையில் இருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

கை தவறிப் பொருள் கீழே விழுந்து விட்டாலும் அந்த ஆசையினால் “பொருள் போய்விட்டதே…” என்ற அந்த வேதனை உணர்வைத் தடுப்பதற்கு ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

1.சுவாசத்திற்கு மேலே செல்லாதபடி (உயிரிலே படாதபடி) தடுத்து நிறுத்தும் நிலையாக
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று மன உறுதி கொண்டு அந்தச் சக்தியை எடுத்து
4.சரி… “நாளை சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும்…”

இப்படி நமது வாழ்க்கையில் எத்தனை தீமைகள் வந்தாலும் அதை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமையை நாம் பெறுதல் வேண்டும்.

நம் பிள்ளை மீது பிரியமாக இருப்போம். பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் வேதனைப்படுவோம். அவன் வேதனைப்படுகிறான் என்றால் நமது சிந்தனையும் குறைந்து விடுகின்றது வேதனையுடன் சொல்லப்படும் பொழுது அவனும் சிந்தனை இழந்து விடுகின்றான்.

எல்லாம் ஆனபின் நமக்குக் கோபம் வருகின்றது. இப்படி நமக்குள் ஒன்றின் பின் ஒன்று தொடராக… “நாம் சுவாசிக்கும் உணர்வுகள்” நம் உடலில் தீய விளைவுகளை உருவாக்கும் தன்மையாக வந்து விடுகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பரிணாம வளர்ச்சியில் தீமைகளை நீக்கிய நாம்… சந்தர்ப்பத்தால் இதைப் போல் வாழ வேண்டும் என்று எண்ணிச் செயல்படும் பொழுது “மேலே சொன்னது போன்ற தீமைகள்” வந்து விடுகின்றது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உயிரான ஈசனிடம் வேண்டி விட்டு அந்தச் சக்தி நம் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த உணர்வைச் செலுத்தி உள்ளுக்குள்ளே வலிமை ஆக்கினால்… தீமை செய்யும் சக்திகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்துக் கொள்ளலாம்.

வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அது வாலி. உடலுக்குள் அந்த வேதனையான அணுக்கள் நல்ல அணுக்களுடன் சேர்ந்து விட்டால் இரண்யன்.

அந்த இரண்யனை மடி மீது வைத்து வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் பிளக்கின்றான். சூரியன் எப்படித் தன் மீது மோதும் நஞ்சினைப் பாதரசத்தால் பிளக்கின்றதோ அதைப் போல்
1.கார்த்திகேயா என்று மனிதன் தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.ஒளியாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவோம் என்றால் தீமைகளைப் பிளக்க முடியும்.

நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தி வலுவாகும் போது தீமைகள் அனாதையாகி விடுகின்றது… ஈர்க்கும் சக்தி குறையும் பொழுது சூரியன் அந்த தீமைகளைக் கவர்ந்து சென்று மாற்றி அமைத்து விடுகின்றது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது…!

ஆகவே நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி நாம் எதையுமே நல்லதாக மாற்றிட முடியும்.

1.கோலமாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்
அவரவர்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணி, மிகவும் சக்தி வாய்ந்த சப்தரிஷிகளின் அருள்சக்தி, கோலமாமகரிஷி அவர் வளர்த்த இச்சக்தி, நம்முன் படர்ந்து கொண்டிருப்பதை நாம் கவர்ந்து, நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று நமக்குள் இணைப்போம்.

அவ்வாறு, நமக்குள் இணைத்து, அந்தத் தத்துவ மகரிஷி, உலகவியல்களை எவ்வாறு கண்டுணர்ந்தார்? அவருக்குள் எப்படி விளைய வைத்தார்? அதைப்போன்று, அந்தக் கோலமாமகரிஷி, அவருக்குள் விளைந்த, அருள்ஞான வித்தை உங்களில் பதிவு செய்து, உண்மையான மெய் உலகில், நாம் அவர்கள் சஞ்சரித்த அவ்விடங்களில் நாமும் சென்றடைய இது உபயோகமாக இருக்கும்.

ஆகவே, இங்கே கொல்லூரில் வந்து நாம் தியானிக்கிறோம். ஏனென்றால், அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தனக்குள் கண்டுணர்ந்தான். ஆனால், கோலமாமகரிஷியோ
1.“அழியாப் பெருவாழ்வு என்ற நிலை பெற வேண்டும்”,
2.“அவர் எண்ண வலுவால், தனக்குள் நுகர்ந்தறிய வேண்டும்”,
3.“இன்னொரு சரீரம் வேண்டியதில்லை” என்ற வலுவான எண்ணத்தை அவர் கொண்டு,
4.“என்றும் அந்த சப்தரிஷிகளுடன் நாம் இணைந்திடல் வேண்டும்” என்று தன் எல்லையை வகுத்து
5.அவர் தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி, மெய்ஞானிகளின் உணர்வைத் தனக்குள் வளர்த்து, அவர் விண்ணுலகம் சென்றார், மிகக் குறுகிய காலங்களில்தான்.

இவையெல்லாம், 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சி. ஆகவே சமீபத்தில் அவருக்குள் விளைந்த உணர்வுகள், அவர் எங்கெங்கு தவமிருந்தாரோ, அந்த அலைகளின் தன்மை இங்கே படர்கிறது.

அதை நாம் பருகுவோமென்று பிரார்த்தித்து, உயிரான ஈசனை வேண்டி, நாம் அனைவரும் தியானிப்போம்.

2.கொல்லூருக்கு நாம் எதற்கு வருகிறோம்…?
நாம் மனிதனாக இருக்கிறோம். கூட்டாக இருக்கிறோம். கூட்டாக இருக்கும்போது, எதைப் பெறுகின்றோம்? அந்த மெய் ஒளியை எப்படிப் பெற வேண்டுமென்று எண்ணுகிறோம்?

மெய்வழி எப்படி என்ற நிலையை, அறிய முற்படுகிறோம். அப்பொழுது இங்கேயும் தேடி வருகிறோம். நாம் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும், மெய்யுணர்வைப் பெறவேண்டுமென்ற நிலைக்குத்தான், இங்கே தேடி வருகிறோம்.

இதைப்போலத்தான் கோலமாமகரிஷி அவர்கள் கண்டுணர்ந்த நிலைகளை, துருவத்தை உற்று நோக்கினார்கள். அதன் வழிகளில் துருவத்தின் ஆற்றல் பெற்ற, அந்த துருவ மகரிஷியின் உணர்வுகளை இவர்கள் அறிகின்றார்கள். அதன்வழி கோள்களைப் பார்க்கின்றார்கள், இல்லையென்றால் இவர்கள் அறிய முடியாது.

நாமும் இந்த உணர்வை நுகரப்படும்போது, அகஸ்தியன் அணுவின் ஆற்றலை கோள்களக மாற்றிச் சென்றபின், இந்த உணர்வின் அலையை, நாம் அதனுடன் தொடர்பு கொண்டு வருவதற்குத்தான், எல்லாவற்றையும் கலந்து, ஒவ்வொரு உணர்வையும் கொடுக்கிறோம்.

துருவத்தை நுகர்ந்து பழகிக்கொண்டால், அதனின் ஆற்றலில், விண்ணின் ஆற்றல்களை நாம் பார்க்க முடியும்.

விண்ணின் ஆற்றலைப் பார்க்க முடியுமென்றால், நம் உணர்வின் தன்மை, சப்தரிஷி மண்டலத்தின் உணர்வின் தன்மையுடன் நாம் ஒன்றுகிறோம். அப்பொழுது, இந்த உடலைவிட்டு நாம் சென்றோமென்றால் நமக்கு இருப்பிடம் அதுதான். அதை எல்லையாக வைக்கிறோம்.

யாம், குறைந்தது ஆறு வருடங்கள் இங்கே இருந்தோம். முதலில், 1½ வருடம் இங்கே வந்து போய்க் கொண்டிருந்தோம். பின் இங்கே தங்கியிருந்த காலங்களில்தான், பாக்கி விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இவைகளெல்லாம் சொல்வது, உங்களுக்குள் பதிவு செய்வதற்குத்தான்.

ஏனென்றால் அவர் பெற்ற உணர்வுகள் இங்கே இருக்கிறது. இருந்தாலும், இங்கு வந்து உபதேசிக்கும் போது, எளிதில் நீங்கள் இதைப் பெற முடியும்.

நாம் இங்கிருந்து சொல்கிறோம் என்றால், இந்த உணர்வுகள் இங்கே பதிந்து இருக்கின்றது. அப்படி அவரைப் பற்றி சொல்லும் போது, உங்களுக்குள் பதிவாகின்றது. மூலமாகின்றது.

நஞ்சுக்கு மிக சக்தி வாய்ந்த நிலை உண்டு. ஆனால், மனிதனுக்குள் உள்ள மிகச்சக்தி வாய்ந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு, அந்தச் சக்தியை நீக்க முடியும். இதைப் பயன்படுத்தவேண்டும்.

மனிதனுக்குள் விளைந்த சக்தி, ஆறாவது அறிவு, மிக சக்தி வாய்ந்தது. ஆனால் நஞ்சுக்கோ மிக சக்தி உண்டு. நஞ்சின் சக்தி மிக அதிகமாக இருப்பினும், மனிதனின் ஆறாவது அறிவின் சக்திக்கு, எல்லாமே அடிமை. அதைச் சீராகப் பயன்படுத்தினால், நஞ்சினையும் நாம் ஒடுக்க முடியும்.

அணுகுண்டை உருவாக்கியவனும் மனிதன்தான். அதே சமயத்தில், அதை அடக்கி வைத்து வெடிக்கச் செய்வதும் மனிதன்தான். இதைப்போல அன்று அரசனாக இருந்த “கோலமாமகரிஷி” தன் தவத்தின் நிலைகள் வரப்படும்போது, இவன் செய்த தவறுகள் எத்தனையோ. அவை அனைத்தும் இவனுள் அலைகளாக வருகின்றது.

இவர் யாக வேள்விகள் நடத்தப்படும்போது, பல அசுரர்கள் பல நிலைகளில் இடையூறு செய்தார்கள் என்று காவியத்தில் சொல்வார்கள். அதற்காகத்தான், இந்தக் கோவிலில் ஒரு பக்கம் முருகனும், இன்னொரு பக்கம் வீரபத்திர சாமியும், காவல் தெய்வமாக இருக்கிறார்கள்.

ஆக, வலுவான என்ணங்கள் கொண்டு, நஞ்சினை நீக்கிப் பழகவேண்டும். இந்த தத்துவமெல்லாம் புரிந்துவிட்டது அல்லவா! முருகன் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொன்னால், அர்த்தம் என்ன? கோவிலில் ஒரு பக்கம் முருகன், மறு அக்கம் வீரபத்திரசாமி.

ஆறாவது அறிவின் (முருகன்) துணை கொண்டு, தனக்கு இணையாக, வலுவின் (வீரபத்திரன்) துணை கொண்டு, எதற்குமே அஞ்சாநெஞ்சன், துணை கொண்டு வெல்ல வேண்டும்.

ஆகவே உயர்ந்த நிலைகள் எதுவோ, அதைத்தான் அவர் கைப்பற்றினார் என்ற நிலையும் அதிலே கண்டுணர்ந்த சக்திதான் இங்கே ஆறாவது அறிவு, என்று தெளிவாகக் காட்டினார். இங்கே கோவிலில் பார்த்தால், அதுதான் இருக்கும்.

இதைப்போல அரசனாக இருக்கும்போது, பல கொடூரச் செயல்கள் செய்தது இங்கே பதிந்திருக்கிறது. தன் ஆன்மாவில் வந்து, பல எதிர்ப்பு சக்திகள் கொடுக்கிறது.

தவம் என்பது உயிர். யாகம் என்பது, உயிரின் நெருப்பில், தன் எண்ணத்தால் விண்ணின் ஆற்றலைப் போடும்போது, இந்த அசுர குணங்கள் தனக்குள் வராது தடுப்பது எவ்வாறு? என்பதுதான், அவர் சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று.

3.மூகாம்பிகையில் வந்து நாம் எந்த ஞானத்தைப் பெற வேண்டும்?
மூன்று சக்தியின் நிலைகள் – வெப்பம், காந்தம், விஷம். நமக்குள் ஈர்க்கப்பட வேண்டியது எது? நம்முடைய மனதில், ஞானம் பெற வேண்டியது எது? என்கிற நிலையை அறிவற்குத்தான், எமது குருநாதர் இங்கே அழைத்துவந்தார்.

இங்கே வந்து அமர்ந்து தியானிக்கும்போதுதான், அதற்கான விளக்கங்கள் கிடைப்பதற்கும், மனிதனின் உணர்வுக்குள் என்ன செய்கிறது? அது எதற்காக வேண்டி, கோலமாமகரிஷி செயல்பட்டார் என்ற நிலையும், தெரிய வந்தது.

அவரின் செயலாக்கத்தில், மனிதனுக்குள் சேர்ந்த உணர்வுகளை ஆட்சி புரிவதற்காக, பலகாலம் தனக்குள் பதிந்துகொண்ட நிலைகளை, இது பிளக்க, ”துருவத்தின் நிலைகளை” அதிகமாக எடுத்துத் தவமிருந்தார், கோலமாமகரிஷி.

துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பருகும்போதுதான், தான் வளர்ந்து வர வர, இவர் வயதும் முதிர்ந்து விடுகிறது. அதிலிருந்து இவர் ஆன்மா வெளிவந்தபின், அவர் அதற்குத் தகுந்த உடலாக, அன்றைக்கு “ஆதிசங்கரர்” உடலைத் தேர்ந்தெடுத்தார்.

மற்றவர்கள் உடலின் இச்சை கொண்டு, ஆதிசங்கரரை கங்கையிலே மூழ்கடிக்கும் போது, இந்த உடலின் பற்று இல்லாதபடி, எதைப் பற்றியதோ, ஆதிசங்கரர் உடலுக்குள் சென்ற கோலமாமகரிஷியின் உயிரான்மா, விண்வெளி செல்கிறது. ஆதிசங்கரரின் உடலிலிருந்துதான் விண் சென்றது.

ஆகவேதான், எமது குருநாதர் எம்மைக் காசிக்குப் போகச் சொன்னார். அந்த காசியிலே இருக்கப்படும்போது, அன்று, ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து அவருக்கு வயிற்றுவலி வரவைத்து, ஒரு விநாயகர் கோவிலில் “அர்ச்சனை, அபிஷேகம், யாகங்கள் செய்ய வேண்டும் என்றும், வேள்விகள் செய்தால்தான், உன்னுடைய வயிற்றுவலி நீங்கும்” என்றும், அதிலிருந்து “நீ யாகத்தைச் செய்யவில்லையென்றால் தப்பமுடியாது” என்று துவைதவாதிகள், ஆதிசங்கரரை மிரட்டிய நிலைகளை எமக்குக் காண்பித்தார், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால், ஆதிசங்கரர் அத்வைதத்தைப் பற்றிப் பேசுகிறார். சூட்சும நிலைகள் எப்படி இயக்குகிறது? எந்த மணத்தை நுகர்கின்றாயோ, அது ஞானம். அது சூட்சமத்தில் உனக்குள் எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையையும், வசிஷ்டாத்வைதத்தையும் அங்கே எடுத்துரைக்கிறார்.

“வசிஷ்டாத்வைதம்” என்பது, தான் கவர்ந்து கொண்ட சத்து, தனக்குள் மறைந்து எவ்வாறு இயங்குகிறது என்ற நிலை தான்.

இவர் அத்வைதத்தை எடுத்தாலும், நீ கவர்ந்து கொண்ட “வசிஷ்டாத்வைதம்”, உனக்குள் எப்படி இயங்குகிறது? என்று உணர்த்தினார்.

அவ்வாறு சொல்லப்படும்போதுதான், அன்று அரச காலங்களில் துவைதத்தை வைத்து வணங்கியவர்கள், சிலையை வைத்து வணங்கி, யாக வேள்விகளைச் செய்யக் கூடியவர்கள் அனைவரும் சேர்ந்து, இவர் யாகம் வளர்த்து, மற்ற வேள்விகளைச் செய்தால்தான், உண்மையான பக்தி என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆதிசங்கரர், இம்முறையைச் செய்வது தவறு என்று வாதிட்டார். உண்மையான நெருப்பு உயிர் என்று உபதேசித்தார். ஆக இது வசிஷ்டாத்வைதம். தனக்குள் நெருப்பின ஈர்ப்பான அந்தக் காந்தத்தால் கவரக்கூடிய நிலையையும், கவர்ந்து கொண்ட நிலையையும் என்றார்.

1.நாம் எதை எண்ணுகின்றோமோ,
2.அதனின் உணர்வு நமக்குள் கவரப்படும்போது, தன்னுள்,
3.தனக்குத் தெரியாமலே அதன் இயக்கங்கள் இருக்கும்… “வசிஷ்டாத்வைதம்” என்ற நிலையை அவர் உணர்த்துகின்றார்.

இவ்வாறு அந்த நிலையை உணர்த்தினாலும், “இது உண்மையல்ல” இந்தச் சிலையிலிருந்துதான் நீ எல்லா நிலைகளும் பெறுகின்றாய். இந்தச் சக்தியை, இந்த தெய்வத்தின் நிலைகளிலிருந்துதான் நீ பெற முடிகின்றது” என்று இவர்கள் சொல்கிறார்கள்.

ஆதிசங்கரர், இதுவல்ல உண்மை,
1.”உயிர் நெருப்பு”
2.புறத்தீயிட்டு நீ வேகவைப்பது உன்னுடைய இச்சைக்கு இருக்கும். இந்த இச்சையை எண்ணினால், “உனக்குள் எரிக்கும் சக்திதான் வரும்”.
3.“தீமைகளினுடைய நிலைகளைத்தான் உனக்குள் வளர்க்க முடியும்”,
4.“இந்த நல்ல ஜீவனுள்ள அணுக்களை இழக்கின்றாய், அழிக்கின்றாய்”
5.“நல்ல வாசனையான பொருட்களைப் போட்டு, நீ அழிக்கின்றாய்”.

ஆக, உயிரான நிலைகளில், உன்னுள் தீமையான உணர்வுகளைப் போட்டு உனக்குள் பொசுக்கு என்று விவாதிக்கிறார், அன்று ஆதிசங்கரர்.

“உயிர்களைப் பலியிடப்படுவது யாகம்” அதிலிருந்து உணர்வுகளை வெளிப்படுத்தி எடுப்பது தனக்குச் சாதகம் என்ற நிலைகளில், அந்த இடத்தில் வாக்குவாதம், பட்டிமன்றம் நிறைய நடக்கிறது.

காசிக்குச் சென்று கங்கைக்கரையில், விநாயகர் கோவிலில் அமர்ந்து யாம் தியானிக்கும்போது, இவருள் இருந்து என்ன செய்கிறது என்பதை உணர முடிந்தது.

இவர்களுக்குள் வாதிக்கும்போது, ஆதிசங்கரரை “நாஸ்தீகன்” என்ற நிலைகளில் பட்டம் கட்டினார்கள். இதனுடைய உண்மை நிலைகளைத் தெரிந்து கொண்டபின் தான், யாம் அங்கு சென்றோம்..

அவ்வாறு பட்டிமன்றம் நடக்கும்போது “இது உண்மையில்லை”, இது உன்னையும் “நாஸ்தீகனாக்கும்” எந்த மனிதன் உணர்வைக் கொண்டு நீ எடுத்தாயோ, அது உன் சொல்லைக் கேட்போரையும், நாஸ்தீகனாக்கும் என்ற நிலைகளில், ஆதிசங்கரரை நாஸ்தீகன் என்று பட்டம் சூட்டினார்கள்.

1.“புறத்தீயிட்டு, எந்த நிலைகளில் நீ வேக வைக்கின்றாயோ” இங்கே பொருட்கள் கருகுகின்றது. நறுமணம் அழிகின்றது.
2.இதனுடன் நெருப்பில் இடப்படும்போது அதனின் உணர்வு அங்கே கருக்கப்படுகின்றது.
3.ரோஜாப்பூ போட்டாலும், கருகத்தானே செய்கிறது எந்த நறுமணத்தைப் போட்டாலும் கருகுகின்றது.

ஆனால், உயிரான நெருப்பில், நாம் அந்த நறுமணங்களைப் போடும்போது, இது அலைகளாகப் படருகின்றது. இது வசிஷ்டாத்வைதம். அந்த நறுமணத்தின் தன்மையை நீ கவரப்படும் பொழுது, இந்த உணர்வுகள் உனக்குள் நறுமணமடைகின்றது.

இதை உணர்த்துவதற்கு, கண்ணால் கவரப்படும் உணர்வுகளுக்குக் காட்சியாக வைத்ததுதான்.
1.ஆனால், எண்ணத்தால் எவ்வாறு எடுப்பது? என்ற அளவில்
2.அங்கே பட்டிமன்றம் நடக்கின்றது… அந்த அளவுக்கு வாக்குவாதம் நடக்கிறது.

அங்கே தியானத்தில் அமரும்போதுதான், குருநாதர் எமக்கு இதை ஏல்லாம் உணர்த்திக் காட்டினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.உண்மையின் உணர்வைப் பெற வேண்டும் என்றும்
2.தெய்வீகப் பண்பையும் கடவுளை அடைய வேண்டும் என்றும்
3.அவனிடமே இணைந்து வாழ வேண்டும் என்று தான்
4.எல்லா மதங்களும் சட்டங்களை இயற்றிச் செயல்படுகின்றது.

அதன் வழி கடைப்பிடித்துக் கொண்டு வந்தாலும் “கடவுள்…” எங்கே… எப்படி இருக்கின்றான்…? என்று யாருக்கும் தெரியாது.

மதங்கள் காட்டிய உணர்வை வளர்க்கப்படும் பொழுது அதே போல் அந்த மதத்தின் சார்புடையவர்களாகப்படும் பொழுது மற்ற மதத்தினைக் கொன்று குவிக்கும் நிலைதான் இன்று வருகின்றது.

ஒரு மதத்தின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அதை வழி நடத்திச் செல்வோர் நிலைகளில் மக்கள் இருவரோ நான்கோ ஆகி விட்டால் அதைப் பங்கிடப்படும் பொழுது அதற்குள் “தன் இனம்…” என்ற நிலைகள் இனப் போர்களே துவங்குகிறது.

அந்த அரச சாம்ராஜ்யம் அழிந்த பின் அடுத்து அது ஒரு இனமாகத் தனியாகப் பிரிக்கப்பட்டுத் தனது சாம்ராஜ்யத்தைத் தொடர்கின்றது.

மற்றவர்களைக் கொன்று குவித்துத் தனக்குக் கீழ் கொண்டு வந்து
1.“தான் ஆட்சி புரியும்…!” அந்த ஆசையின் தொடர் கொண்டே செயல்படுகின்றனர்.
2.ஞானிகள் கொடுத்த உணர்வுகளை எல்லாம் மறையச் செய்துவிட்டனர்.

இராமாயணம் மகாபாரதத்தைப் போன்ற காவியங்களில் ஞானிகளால் காட்டப்பட்ட உணர்வுகள்
1.ஒன்று ஒன்றுடன் இணைத்தால் ஒன்றின் செயலாக்கங்கள் எப்படி உருவாகின்றது…?
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே எப்படிக் கலக்கின்றது…. உடலில் அணுவாக எப்படி மாறுகின்றது…?
3.தாவர இனங்களின் வித்துக்களில் மற்ற வித்துக்களின் உணர்வைக் கலக்கப்படும் பொழுது தாவரங்கள் எப்படி உருமாறுகின்றது…?
4.அதிலே சுவைகளை மாற்றுகின்றது…? வித்துக்களை எப்படி மாற்றுகின்றது என்று உணர்த்தியுள்ளார்கள்.

அதை எல்லாம் அரசக் காலங்களில் மனித உடலில் உருவாக்கிய இந்த மந்திர ஒலி கொண்டு தான் அறிந்து இந்த உணர்வின் தன்மை கொண்டு மாற்றியமைக்கும் தன்மையாக வந்து விட்டது.

இப்படி வளர்ச்சி அடைந்து வந்த இந்த உலகம் தான் ஆசையின் உணர்வாக வளர்த்த உணர்வுகள் இங்கே அதிகமாக வளர்ந்து அரசனுக்குக் கீழ் வந்த மக்களும்… “தானும் வளர வேண்டும்…” என்ற ஏக்கம் கொண்டு வந்து விட்டனர்.

1.தான் வாழ தன் அருகிலே உள்ளவர்களை வீழ்த்தினால் தான் சரிப்படும் என்றும்
2.ஒருவர் வியாபாரம் செய்தால் ஆரம்பித்தால் அந்த வியாபாரத்தைக் கெடுத்துவிட வேண்டும் என்றும்
3.அவனை வீழ்த்தினால் தான் என் வியாபாரம் பெருகும் என்றும்
4.வியாபார முறையிலே போர் முறை வந்தது.

அதிலே நெருக்கடி வளர வளர இன்று எடுத்துக் கொண்டால் தள்ளுபடி (DISCOUNT) என்ற பெயரில் கணக்கு வழக்கு இல்லாமல் கொடுத்து மக்களை ஏமாற்றிடும் நிலை வந்து விட்டது.

தள்ளுபடி என்ற பெயரில் மக்களைக் கவர்ந்து தன் வியாபாரத்தைப் பெருக்குவதும் மற்ற வியாபாரத்தை வீழ்த்துவதும் உண்மைகளை உணரவிடாதபடி “வியாபாரமே இன்று தலைகீழாக மாறிவிட்டது…!”

ஆசையின் உணர்வின் தன்மை வளர்ந்து கொண்ட பின் அந்த ஆசைகளாலேயே தான் நாம் இன்று வாழ்கின்றோம்.. வளர்கின்றோம்.
1.அங்கே போனோம்.. போனதற்கு 50% தள்ளுபடி கிடைத்தது
2.தள்ளுபடியில் வாங்கிய சேலை கிழிந்தால் பரவாயில்லை… போனால் போகிறது போ..
3.அதற்கு இனாமாக இன்னொரு சேலை கொடுத்தார்கள் அல்லவா..! என்று
4.இப்படித்தான் பெண்கள் அங்கே மடிகின்றார்கள்.

ஆக மொத்தம் நாம் ஏமாற்றப்பட்டோம்… ஏமாற்றப்படுகின்றோம்…! என்ற நிலை வருவதே இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் பொழுது உண்மையின் நிலைகள் அந்தச் சரக்கின் தன்மையும் தெரிகின்றது.
1.சரக்கின் தன்மையைத் தெரிந்தே… அவன் குறைவாகக் கொடுக்கின்றான்…! என்றால்
2.எதன் அடிப்படையில் அப்படி நல்ல சரக்கைக் கொடுக்க முடியும்..! என்று இல்லாதபடி
3.நாம் ஏமாற்றமே அடைகின்றோம்…! இன்றைய மனிதனின் வாழ்க்கையில்..!

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நலம்…!

புலஸ்தியர் அகஸ்தியர்

 

தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு அவன் வளர்ச்சி அடையும் பொழுது காரணப்பெயராக “அகஸ்தியன்” என்று வைக்கின்றார்கள்.

அவருடைய தாய் தந்தையர் செடி கொடியின் மணத்தைப் புலனறிவால் நுகர்ந்து அறிந்ததனால் “புலஸ்தியர்” வம்சத்தில் வந்தவர்கள் அவர்கள்.

ஆனால் தாய் கருவிலே சக்தி பெற்றுப் பிறந்ததால்
1.அணுவின் இயக்கத்தை அறியும் ஆற்றல் பெறுகின்றான்
2.அகத்தின் இயக்கங்களை அறிந்ததனால் அகஸ்தியன்.

செடியின் மணத்தை நுகரப்படும் பொழுது அந்த உணர்வின் அதிர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான்… “இந்தச் செடி இன்னது தான் செய்யும் என்று…” அதனுடைய விஷத்திற்கு எல்லா விஷத்தையும் இயக்கத் தெரிந்தாலும் “உணர்வின் அதிர்வுகளைத் தெரிந்து கொள்கின்றான்…”

மனிதனின் சிறுநீரை எடுத்து அதிலே சில கெமிக்கல்களைப் போட்டால் அதில் இரத்தத்தில் இருக்கக்கூடிய பலவிதமான சத்துக்களை விஞ்ஞான அறிவு கொண்டு இன்று அறிகின்றார்கள்.

இரத்தக் கொதிப்பிற்குண்டான அணுக்கள் இருக்கின்றதா…? சளி இருகின்றதா…? உப்புச் சத்து இருக்கின்றதா…? சர்க்கரைச் சத்து இருக்கின்றதா…? என்று பிரித்துக் காணுகின்றார்கள்.

ஆனால் அகஸ்தியன் எல்லாவற்றையும் கடந்து தாய் கருவிலேயே ஆற்றல்களைப் பெற்றதனால் ஒவ்வொரு தாவர இனத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றான்.

அப்படிப் பெற்ற ஆற்றல் தான் அவன் வாழ்நாளில் அவன் வளர வளர
1.நோய் வந்தவர்களுக்கு ஒரு பச்சிலையைக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்கின்றான்…
2.நோய் நீங்குகிறது. அகஸ்தியன் குழம்பு என்று சொல்வார்கள்.
3.அவன் அறிந்த உணர்வு கொண்டு அக்காலங்களில் பல நோய்களைப் போக்கவும் காரணமாகின்றான்.
4.அதே சமயத்தில் இவனைக் கண்டாலே மற்ற மிருக இனங்கள் இவன் அருகில் வராது விலகிச் சென்று விடுகிறது.

பச்சையாக வேப்பிலைகளைச் சாப்பிட்டால் உடலில் கசப்பின் மணம் வரும். வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டால் உடலில் வெங்காய வாசனை வரும். கத்திரிக்காயைச் சாப்பிட்டால் அந்தக் காரல் வாசனை வரும்.

இது எல்லாம் இயற்கையின் உண்மையின் உணர்வுகள். உயிரின் இயக்கத்தால் அறியும் ஆற்றல் வந்து விடுகின்றது.

இதை எல்லாம் அகஸ்தியன் அறிந்ததனால் அன்று மனிதனுக்குகந்த புதுப்புது தாவர இனங்களை உருவாக்குகின்றான்.
1.உருவாக்கினாலும் அதை வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றான்.
2.வேக வைக்கப்படும் பொழுது “அதனின் இயக்கங்கள் மாறுகின்றது” என்று உணர்கின்றான்.

அதே சமயத்தில் மற்ற பொருள்களை இணைத்து அதைச் சுவையாகவும் உருவாக்க முடியும் என்றும் காணுகின்றான். அத்தகைய சக்தி பெற்ற முதல் மனிதன் அகஸ்தியன் “உணவை எப்படிச் சமைக்க வேண்டும்…?” என்று தெரிந்து கொள்கின்றான்.

இன்றைய விஞ்ஞானிகள் செய்வது போன்று அக்காலத்திலே மனிதனுக்குகந்த பல பயிரினங்களையும் அகஸ்தியன் உருவாக்குகின்றான்.

இப்படி அவன் வாழ் நாளில் அவன் வளர்ச்சி அடையப் படும்போது தாவர இனங்களுக்கு எங்கிருந்து எப்படி உணவு கிடைக்கின்றது…? என்று அவன் அறிகின்றான்.

பிரபஞ்சத்திற்குள் இருந்து வரும் சக்திகளை நமது பூமி துருவத்தின் வழி கவர்ந்து… பூமிக்குள் பரவச் செய்து நீராகவும் மண்ணாகவும் கல்லாகவும் வளர்ந்து அதனுடைய கலவை கொண்டு தாவர இயல்கள் உருவாகி… தாவரவியல் உருவாக்கப்படும் பொழுது அதை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு உடல்கள் பெற்று மனிதனாக எப்படி உருவாக்கியது…? என்று இந்த பூமிக்குள் வளர்ச்சியான சகலத்தையும் அறிகின்றான்.

இதையெல்லாம் அறிந்து கொண்ட முதல் மனிதன் அகஸ்தியன் மனிதனான பின்
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று பழகியவனும் அவனே.
2.இந்த உண்மைகளை எல்லாம் தனக்குள் அறிந்து பூமிக்குள் வரும் விஷத்தை அடக்கும் தன்மையும் பெறுகின்றான்.

பிரபஞ்சத்தில் இருக்கும் விஷத்தன்மைகள் துருவத்தின் வழி பூமிக்குள் வந்தாலும் தாவர இனங்களில் அது இணைந்து விடுகின்றது. ஆனால் மனிதனாகி விஷத்தை ஒடுக்கியதால் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து அந்த விஷத்தை ஒடுக்கும் தன்மை வரும் போது விஷத்தின் இயக்கத்தையும் அறிந்து கொண்டான்.

அவனுடைய வளர்ச்சியில் காலப்பருவம் வரும் பொழுது திருமணம் ஆகின்றது. தான் கண்ட அனைத்தையுமே தன் மனைவிக்கு எடுத்து உணர்த்துகின்றான்.

மனைவிக்குள் இது பதிவான பின் கணவன் தெரிந்து கொண்ட நிலையைத் தானும் அறிய வேண்டும் என்று அதன் வழி பெற்று
1.மேலும் தன் கணவன் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும்
2.அதே போன்று அகஸ்தியனும் தன் மனைவி அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றான்.

அவர்கள் இருவரும் வசிஷ்டர் அருந்த்தியும் போன்று வாழ்ந்து தான் தெரிந்த உண்மையை மனைவிக்கும் மனைவி தெரிந்த உண்மையைக் கணவனுக்கும் இருவரும் ஒன்றாக இணைந்து வானுலக ஆற்றலை அறியும் பருவம் பெறுகின்றனர்.
1.எதை எல்லையாகக் குறி வைத்து அந்த ஆற்றல்களை எல்லாம் வளர்த்துக் கொண்டார்களோ
2.அங்கேயே அவர்கள் சென்று துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்கின்றார்கள்… வளர்கின்றார்கள்… அழியாத நிலைகள் கொண்டு…!

அதிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்தாலும் அவர் மற்றவர்களின் குணங்களையும் செயல்களையும் அது எப்படியெல்லாம் அவர்களை இயக்குகிறது…? என்று அறியத் தொடங்கினார்.

1.ஒரு மனிதன் கொலை செய்துவிட்டு அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்பதற்காக வேண்டி
2.பணத்தைக் கொடுத்து வாதிடச் சொல்வதும்
3.தவறைச் செய்துவிட்டு பணத்தைக் கொண்டு அந்தத் தவறை மறைப்பதற்காக இவர்களை அணுகி வருவதையும்
4.வழக்கறிஞராக மாறிய பின் விவேகானந்தர் நேரடியாகக் காணுகின்றார்.

ஆனால் அவருடைய தாய்… “தெய்வமோ… கடவுளோ… எப்படி இருக்கின்றது…?” அந்த உண்மையின் உணர்வைக் கொண்டு உணர்த்திய உணர்வுகள் இவருக்குள் இயக்கப்பட்டு… தன் தொழிலில் வரக்கூடிய சமுதாயத்தையும் உணர்கின்றார்.

கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் மற்றவர்களுக்குத் தோன்றப்பட்டு… கொலையையும் செய்துவிட்டு.. கொலையிலிருந்து மீள்வதற்காக
1.பணத்தைக் கொடுத்து அவன் எப்படி மாற்றுகின்றான்..? என்ற நிலைகளையும்
2.அவன் எண்ணியதை அவன் உயிர் எப்படி இயக்குகின்றது..? என்ற நிலைகளையும் விவேகானந்தர் உணர்கின்றார்.

“ஒருவனைக் கொலை செய்ய வேண்டும்…!” என்று எண்ணும் போது அதே உயிர் அந்த உணர்வை ஊட்டிக் கொலை செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டி… ஆளை வைத்துக் கொல்லும் நிலை வருகின்றது.

அதே சமயம் “ஒருவன் வாழ வேண்டும்…!” என்று பல உயர்வினைக் காட்டி அதற்கென்ற உகந்த நிலைகளைச் செய்கின்றான் என்று சொல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து வாழ வைக்க வேண்டும்…! என்ற எண்ணங்களை ஊட்டி வாழச் செய்கின்றது.

ஆகவே இப்படி எண்ணியதை எல்லாம் உருவாக்குவது யார்…? “உயிரே கடவுள்…” என்ற நிலையை உணர்கின்றார் விவேகானந்தர்.

1.எண்ணியதை உருவாக்கும் உயிர் ஒவ்வொரு உடலிலும் இருக்கும் பொழுது
2.அங்கே ஆட்சி புரியும் சக்தியே பெரும் சக்தி என்றும்
3.அவர்கள் எதை நுகர்கின்றனரோ அதையே இயக்குகிறது.

உதாரணமாக ஒருவர் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வை எண்ணினால்… அந்த உயிரே அங்கே அந்த நிலைகளைச் செய்கின்றது என்பதையும் உணர்கின்றார் விவேகானந்தர்.

இருந்தாலும் இதை எல்லாம் எப்பொழுது உணரத் தொடங்கினார்…? “நீ கடவுளை எங்கே பார்க்க வேண்டும்..?” என்ற இந்த உணர்வு விவேகானந்தருக்கு எப்பொழுது வருகின்றது…?

இராமகிருஷ்ண பரமகம்சரிடம் வருகின்றார்…!

1.கடவுள் எப்படி இருக்கின்றான்…?
2.நீ கடவுளைக் காட்டுகின்றாய்…! என்று சொல்கின்றார்கள்.
3.கடவுளை நீ பார்க்கின்றாயா…?
4.நானும் அந்தக் கடவுளை எனக்குள் பார்க்க வேண்டும் என்று
5.இப்படிப்பட்ட வினாக்களை இராமகிருஷ்ணரிடம் எழுப்புகின்றார் விவேகானந்தர்.

அப்பொழுது பரமகம்சர் விவேகானந்தரிடம் கூறுகின்றார்…!

கடவுளைக் காண முடியாது…!

1.நீ எண்ணும் உணர்வுகள்… உன் உள் நின்று… அதுவே கடவுளாக நின்று உணர்த்துகின்றது…
2.அதன் வழியே நீ செயல்படுகின்றாய்..! என்று இராமகிருஷ்ணர் தெளிவாக அவருக்கு உணர்த்துகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமகிருஷ்ன பரமகம்சர் காளி கோவிலில் பூஜை செய்து வரும் வேளையில் அங்கே இரவிலே நடக்கும் சம்பவங்களை அறிய நேர்ந்த பின் தனக்குள் உண்மையையும் சத்தியத்தையும் எண்ணி ஏங்குகின்றார்.

ஏற்கனவே இந்த உண்மைகளை எல்லாம் உணர வேண்டும் என்று நல்லதுக்காக ஏக்கம் கொண்டு மடிந்தவனின் ஆன்மா அதே ஏக்கம் கொண்ட இவரின் உடலில் புகுகின்றது. அதன் பின் அவரை அறியாமலே சில செயல்களைச் செய்கின்றார்.

இராமாயணத்தைக் எடுத்துக் கொண்டால் குரங்கு எப்படித் தாவுகின்றதோ இதைப் போல் தன் எண்ணத்தின் தன்மை கொண்டு எப்படி இயக்குகிறது என்ற நிலைகளை உணர்த்திக் காட்டுவார்.

அதாவது குரங்கின் ரூபம் இட்டு
1.ஒரு உணர்வின் தன்மை கொண்டு எக்குணத்தைக் கொள்கின்றோமோ
2.அதன் வழி தான் அது நமக்குள் இயக்குகிறது என்பதைக் குரங்கைப் போன்று ஆட்டிக் காட்டுவார்.

மரத்தில் ஏற்றிப் பார்ப்பார்… ஆக…
1.நம் உணர்வின் தன்மை எதைப் பறிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ
2.அதன் உணர்வின் தன் எண்ணத்தால் வரும் போது அதை அவ்வாறு ஏற்றிக் காட்டினார் இராமகிருஷ்ணர்.

இதைப் போல் இறந்த சரீரங்களைப் புதைத்திருந்தால் அங்கே அமர்வார். அதனின் எண்ணங்கள் எவ்வாறு…? என்ற நிலையை உணர்வார்.

இப்படித் தன்னை அறியாமலேயே தனக்குள் இயக்கும் இன்னொரு ஆன்மாவின் தன்மை கொண்டு… அங்கே… ஏங்கி எடுக்கும் பொழுது… தான் கண்ட உண்மை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.

அவரை அறியாமலே “பல ஆச்சரியப்படும் செயல்களை…” இயக்கிக் காட்டினார்.

அதைக் கேள்விப்பட்ட பெரும் பெரும் மந்திரவாதிகளும் பிறரைக் கைவல்யப்படுத்தக்கூடிய சாமர்த்தியசாலிகளும் இங்கே தேடி வருகின்றனர்.
1.ஒரு பித்தன் போல் இருக்கின்றான்… இவனுக்கு எப்படி இந்தச் சக்திகள் வந்தது…?
2.உண்மைகளை உரைக்கின்றான்…. அவை அனைத்தும் நடக்கின்றது.
3.இவன் செயலாக்கங்கள் எல்லாம் தெளிவாகின்றது என்ற நிலைகளில் அவரை நாடி வருகின்றார்கள்.

இமய மலைச்சாரலில் ஒரு பெண்… அது மகா மந்திர சக்திவாய்ந்தது. மனிதனையே தன் மந்திர சக்தியால் மாய்க்க வல்லமை பெற்றது. மனிதனுக்குள் தன் உணர்வைப் பாய்ச்சப்பட்டு அவன் உடலில் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தச் செய்து அதை அறியக்கூடிய வல்லமை பெற்றது.

அந்தத் தாயும் ராமகிருஷ்ண பரமகம்சரை அணுகி அவரின் உண்மையை உணர்வதற்காக வருகின்றது. ஆனால் அவரால் இவரின் உண்மைகளை அறிய முடியவில்லை.

1.அவரின் அறியும் சக்தியை இவருக்குள் (ராமகிருஷ்ணர்) பெற்ற சக்தி அதைத் தடுக்கும் சக்தியாக வரப்படும் பொழுது
2.அறியும் வன்மை கொண்டு அந்தத் தாயிடம் மாறுகின்றது.
3.பின்.. “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்றும்
4.உண்மையின் நிலைகள் கொண்டு “இப்படித்தான் வாழ வேண்டும்…” என்றும் புத்தி கூறுவது போல உணர்வுகள் வந்த பின்
5.எந்த மந்திரத்தால் அறிய வேண்டும் என்று வந்த அந்த மந்திர சக்தி கொண்ட தாயும் மனம் மாறுகின்றார்.

இப்படி பல தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகள் கொண்டவர்களும்… அன்று இராமகிருஷ்ண பரமகம்சரைச் சந்தித்த பின்
1.அவரின் செயலைப் பார்க்கும் பொழுது… அவருக்குள் விளைந்த உணர்வை நுகர்ந்த பின்
2.மாற்றம் அடைந்தே அவர்கள் சென்றார்கள்.

இது எல்லாம் ஈஸ்வரபட்டர் எம்மைக் (ஞானகுரு) கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டிய நிலைகள்.

கோலமாமகரிஷி

1. கடும் தவமிருந்து சக்தி பெற்றவர்
கோலமாமகரிஷி, கர்நாடகா கொல்லூர் என்ற ஊருக்கு அருகில், “குடசாஸ்திரி” இறக்கத்தில் காட்டுக்குள் போய் தனித்து ஜெபமிருக்கிறார். ஜெபம் செய்து கொண்டிருந்தாலும், இவர் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு இந்த அணுக்கள் ஆவியின் நிலைகள் எதிர்ப்பணுக்கள் அதிகமாயிற்று.

அரச காலங்களில் பேருண்மையினுடைய நிலைகளை கற்றுக் கொண்டதினாலே, அதையே பற்றி தன் வலிமையினாலே
1.இந்த உடலை விட்டுச் சென்றால்…
2.ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டிய பின்தான்
3.அவர் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்படிச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான், “மூகாம்பிகை” என்று, கொல்லூரில் அந்தச் சிலையை வடித்தார்.

நமது பூமி சுழலும் போது வரக்கூடிய வெப்பம் “விஷ்ணு”. நமது பூமியை சிவம், சீவலிங்கம் என்றார். அதாவது, நமது பூமி சுழலும்போது எடுக்கக்கூடிய காந்தமும் பிரபஞ்சத்திலேயுள்ள காந்தமும் இரண்டும் உராயப்படும்போது ஏற்படக்கூடியது வெப்பம்.

அந்த வெப்பத்தால் வரக்கூடிய உணர்வின் தன்மை, நாதம், “ஓ” என்று வந்தாலும் “ம்” என்று பூமியின் ஈர்ப்புக்குள் வந்து, பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற சத்துக்களுடன் இருக்கக்கூடிய வெப்பகாந்தங்களுடன் மோதியவுடன், இந்த பூமி வெப்பமாகிறது.

அப்போது அந்த வெப்பம், சுழற்சியிலே பூமியின் நடுவிட்டத்திற்குச் செல்கின்றது.

ஒரு தம்ளரில் தண்ணீர் வைத்து, ‘கிர்’ என்று சுற்றினால், கடைசி பாகம் ஒட்டிய இடத்திலேயே நிற்பது போல, விண்ணிலே தோன்றக்கூடிய
1.இந்த வெப்பத்தின் நிலைகள் பூமியின் நடுமையத்தில் தேங்கி
2.வெப்பத் தணல்கள் அதிகமாகக் கூடிக் கொண்டே வரும்.

அப்படிக் கூடும்போது, அதன் அலைகள் சிறுகச் சிறுக மேலே வரும்போது பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற பொருட்கள் அனைத்துமே, ஜீவன் பெறக்கூடிய சக்தி உண்டாகிறது.

அதனால்தான் “ஓம்” என்ற பிரணவத்தை அங்கே சொல்லி, இது ஜீவன் உண்டானாலும், சிவலிங்கம் இந்த பூமி ஜீவன் உள்ளது. எல்லாவற்றையும் இயக்கக்கூடிய சக்தி பெற்றதும், சீவலிங்கம் என்று பெயர் வைத்தார்கள்.

கொல்லூரில் வைத்திருப்பது சிவலிங்கம்தான். அந்த சிவலிங்கத்தில் சரிபாதி விஷ்ணுசக்தி, சரிபகுதி சிவசக்தியினுடைய நிலை என்று சொல்வார்கள்.

கோலமாமகரிஷி என்ற பெயர் வந்ததின் காரணமே, கோள்களின் ஆற்றலின் பேருண்மையை நிலையை அறிந்தவர் அவர். ஆகையினாலேதான் கோலமாமகரிஷி.

2. கோலமாமகரிஷி இப்பொழுது பாய்ச்சும் ஆற்றல்
கோலமாமகரிஷி கடும் ஜெபமிருந்து, அந்த ஆதிசங்கரருடைய இளமைப் பருவத்திலே அவருக்குள் புகுந்திருக்கும் பொழுது, அவர் எண்ணத்தால் சுழன்று வந்த நிலையைத்தான் இப்பொழுது எடுத்து உபதேசிக்கின்றோம்.

ஆதிசங்கரர், அன்று காசியிலிருந்து, ஒவ்வொரு பாகமும் யாத்திரை செய்யப்படும் பொழுது, தன் உயிரை வேண்டி அந்த உணர்வை எடுத்து, ஒவ்வொரு மக்களையும் வருந்தி அந்த ஆற்றல் மிக்க சக்திகளைப் பற்றிப் பேசினார்.

ஏனென்றால், மக்கள் அனைவரும், அவர்கள் எண்ண அலைகளாலே, அவர் அறியாத நிலைகள் மனிதனால் வளர்க்கப்பட்ட இந்த ஆசை அலைகள் உள்ளே சென்று
1.அவர்கள் நல்லதை எண்ணினாலும் கூட,
2.முடியாத நிலைகளில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அந்தச் சக்தியை மாற்றுவதற்காக,
3.அத்வைதத்தின் தத்துவத்தை (சூட்சமம் – கண்ணுக்குப் புலப்படாத நிலை) ஒவ்வொரு மக்களுடைய நிலைகளிலும் ஊடுருவச் செய்தார்.

மக்கள் அனைவரும் எத்தனையோ அவஸ்தைகள்பட்டு, தொல்லைகள்பட்டு, அவர்கள் சிந்திக்க முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள். நல்லதை நினைக்கின்றார்கள், நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை.

பக்தியின் நிலையில் இருக்கப்படும் பொழுது, அந்த உணர்வலைகளால் ஈர்க்கப்பட்டு, அது திடீரென்ற நிலைகளில் அவர்களைச் சிந்திக்க முடியாத நிலைகள் செய்துவிடுகின்றது.

இதைப் போன்று, எந்தெந்த பக்தியின் வசத்தில் நாம் சிக்கினோமோ, இந்த உணர்வின் தன்மை கொண்டு, நம்மையறியாமல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது என்ற நிலையும், அந்த உணர்வின் நிலையில் சிக்கி, நாம் எந்தெந்த உணர்ச்சி வசப்பட்டோமோ, அந்த உணர்வுகளே நம்மை இட்டுச் செல்கின்றது.

நாம் ஆசாபாசத்துடன் இருக்கப்படும் பொழுது, அந்தப் பாசத்திற்குள் நமக்குத் தெரியாத நிலைகளில் நம்மை அறியாமலேயே, சில நிலைகளில் தவறுகள் செய்ய வைத்துவிடுகிறது.
1.நாம் தவறு செய்யவில்லை.
2.அந்தத் தவறு இல்லாத நிலைகளில் எத்தனையோ இன்னல் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு சொல்லின் தொடர் வந்துவிட்டதென்றால், அதைப் பின் தொடர்ந்து முடியாத நிலைகளில், பலர் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களெல்லாம் மீள வேண்டுமென்றுதான், இந்தக் கோலமாமகரிஷியினுடைய அருள் சக்தியின் நிலைகள் எடுத்து, அவர் எந்த அலையின் தன்மை கொண்டு எல்லோரும் பெறவேண்டுமென்று, விரும்பினாரோ, அதை யாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இப்பொழுது யாம் பேசுகின்றோம் என்று எண்ண வேண்டாம்.
1.இவை அனைத்துமே, அன்று கோலமாமகரிஷி எப்படி ஆதிசங்கரருடைய உடலிலிருந்து வெளிப்படுத்தினாரோ
2.அதே உணர்வின் தன்மையை அவர்கள்தான் வெளிப்படுத்துகின்றார்கள்.
3.அந்த உணர்வின் ஆற்றலைத்தான், யாம் உங்களுக்குள் இப்பொழுது பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம்.

ஆக, பாய்ச்சும் இந்த உணர்வினை நீங்கள் துருவ தியானத்தின் நிலைகள் கொண்டு ஆத்ம சுத்தி செய்யும் பொழுது, உங்கள் உடலில் இருக்கக்கூடிய எத்தகைய நோயானாலும், எந்தக் கவலையானாலும், குடும்பத்தில் எந்தச் சிக்கல் இருந்தாலும் அது நிவர்த்தியாகும்.

கோலமாமகரிஷி, ஆதிசங்கரருடைய உடலிலிருந்துதான் மெய் ஒளியைப் பெற்று, விண் சென்றார். ஆதிசங்கராச்சாரியருடைய உயிராத்மாவும் விண்வெளி சென்றுவிட்டது.

அவர்களெல்லாம், இன்று விண்வெளியில் நட்சத்திரமாக இருக்கின்றார்கள். அவர்கள் உணர்த்திய இந்த அருள் வழியை, நாம் ஒவ்வொரு நிமிடமும் பெற வேண்டும்.

3. கொல்லூரில் எடுத்து வளர்த்த சக்தி
நம்மை அறியாமலேயே, நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான், தக்க ஆயுதத்தை “மிஷின் கண்” (MACHINE GUN) போன்று, உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.

ஏனென்றால், இதை உங்களுக்கு யாம், வாக்குடன் கூடி, கொடுக்கும் நிலைகள். நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.

இந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை, சரியான முறைகளில், உங்களுக்குக் கொடுப்பதற்கு, இந்த உணர்வின் தன்மையை, யாம் கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து, வளர்த்து, “அந்த வாக்கின் ஒலியை” உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

இப்படிப் பதியச் செய்ததை,
1.யாம் சொல்லும் இந்த முறைப்படி யார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ,
2.அவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும், நிச்சயம் நீங்கிவிடும்.

பழனியம்பதியின் தத்துவம்

 

மாமகரிஷி போகன் இந்தப் பிரபஞ்சத்தின் நிலையில் மனிதனாக உருப்பெற்ற நிலையைக் கருவாக உருவாக்கினான்.

சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய பாதரசத்தை அவன் கவர்ந்து 27 நட்சத்திரங்கள் உமிழ்த்தும் சக்தி வைரக்கல்களாக உருப்பெற்றதை எடுத்து நவக்கோளின் பாசாணக் கற்களையும் பூமியில் விளைந்ததைத் தனித்துப் பிரித்து எடுத்து “அனைத்தையும் ஒன்று சேர்த்து” ஒரு சிலையாக மனிதனைப் போன்று உருவாக்கினான்.

புழுவிலிருந்து நாம் மனிதனாக உருவாகும் வரையிலும் எந்தெந்தத் தாவர இனத்தை உணவாக எடுத்து வளர்த்துத் தன்னை அது காத்திட்டதோ
1.தீமையை அகற்றிடும் நிலையாக வளர்ச்சி பெற்ற அந்தத் தாவர இனங்களை எல்லாம்
2.முருகன் சிலைக்குள் அதையும் சாரணையாக ஏற்றினார் அந்த மாமகரிஷி.

இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உணர்வின் சத்து உயிரணுவாகித் தோன்றி மனிதன் வரை வளர்ச்சி பெற்ற நிலையில் தீமைகளை நீக்கிடும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு வாழ்ந்தாலும் நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிட அருள் ஞானி அவன் கண்டுணர்ந்த நிலைகளை வெளிப்படுத்தினான்.

ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக மதித்து… அவன் அமைத்த ஆலயம் என்று இந்த உடலை மதித்து… அந்த ஆலயத்தில் தீமைகள் புகுந்தால் அதை அகற்றிடும் சக்தியாக முருகன் சிலையை உருவாக்கி
1.எண்ணிலடங்காத தாவர இனச் சத்துக்களை அதற்குள் சாரணையாக்கி
2.மனிதனின் ஆறாவது அறிவில் புகுந்த தீமைகளை அகற்றிட… சிலையாக அவன் வடித்து வைத்தான்.

அக்காலங்களில் அந்தச் சிலை மீது சொட்டு சொட்டாக நீரை விழும்படி செய்திருப்பார்கள்.
1.நெகட்டிவ் பாசிட்டிவ் என்று அதற்குள் இது எதிர்மறையாக இயக்கப்படும் பொழுது அந்த நீரின் தன்மை ஆவிகளாக வெளிப்படும்.
2.நம் உடலில் வெப்பத்தால் எப்படி வியர்க்கின்றதோ அதைப் போன்று அந்த முருகன் சிலையிலிருந்து “உயர்ந்த மணங்கள்” வெளிப்படும்.
3.அதை நுகரப்படும் போது தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது நமக்குள் வரும்.

கீழிருந்து நாம் படியேறி அங்கே மேலே செல்லப்படும் பொழுது… நம் எண்ணங்கள் அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம்மைக் காத்திடும் நிலையாக… போகன் தனக்குள் விளைய வைத்த உணர்வினைப் பெறும் நிலையாக விண்ணை நோக்கி ஏகி… அந்த நினைவினைப் பற்று கொண்டு வெளியில் இருந்து வரும் தீமைகளுக்கோ நஞ்சுகளுக்கோ இடம் கொடுக்காது விண்ணிலிருந்து வரும் உணர்வின் சத்தைப் பெறும்படி செய்தான் போகன் பழனியம்பதியில்.

அதே சமயத்தில் இடைமறித்துச் சோர்வடையப்படும் நேரத்தில் தீமைகள் வரும் போது அதை அகற்றிட இடும்பன் என்றும் அங்கே வைத்தார்.

தொழில் செய்யும் பொழுது வலுக் கொண்டு செயல்பட்டாலும் சோர்வடையும் சமயத்தில் இடைமறித்துத் தீமைகள் நமக்குள் வந்து விடுகிறது என்ற நிலையை உணர்த்துவதற்காக இடும்பனை வைத்துக் காட்டியுள்ளான்.

நமக்கு எப்பொழுதெல்லாம் சோர்வு வருகின்றதோ அப்போது அமர்ந்து ஈஸ்வரா என்று உயிரை எண்ணி… போக மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி… ஏங்கி அவன் ஊட்டிய உணர்வை உடலுக்குள் வலு சேர்த்து ஆறாவது அறிவைக் காத்திட்ட அந்த அருள் ஞானியின் உணர்வைப் பெற வேண்டும்.

1.அறிவின் தன்மையாக இருக்கும் “முருகு” மாற்றி அமைக்கும் அந்தச் சக்தியை
2.ஒளிச் சுடராக உருவாக்கும் நிலை நாம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் மேல் நோக்கிச் செல்லும்படி செய்தான் போகன்.

ஒரு மனிதன் வேதனைப்படுவதைப் பார்த்தபின் அது நம்மைச் சோர்வடையச் செய்கின்றது. அதே சமயத்தில் அந்தச் சோர்வான உணர்வுகள் நம் நல்ல உணர்வுடன் கலந்து விடுகின்றது.

இதைப் போன்ற தீமைகளை அகற்றிடும் நிலையாக முருகன் சிலையை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் சத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த அழுக்கினைத் துடைக்க தீமைகளை அகற்றிட அத்தகைய நிலைகளைச் செய்தான் போகன்.

மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த நினைவுடன் கண் கொண்டு அந்தச் சிலையைக் கூர்ந்து நோக்குவோம் என்றால் அவன் வடித்த உணர்வின் தன்மையை நாமும் நுகர முடியும்.

உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து அதற்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து
1.ஆன்மாவில் அறியாது புகும் தீமைகளைச் சுத்தப்படுத்தும் மார்க்கமாகத் “தன்னை வணங்கும்படி” அந்தச் சிலையை உருவாக்கினான் அன்று போகன்.
2.அவன் காட்டிய வழிப்படி அதைச் செய்தோம் என்றால் இது தான் “பஞ்ச அபிஷேகம்” என்பது.

கண் காது மூக்கு இவைகள் கொண்டு ஒருங்கிணைந்து அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது… ஒலி கொண்டு அதைக் கேட்டாலும்… கண் புலனறிவால் உற்று நோக்கப்படும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் மணங்களைச் சுவாசிக்கும் போது நறுமணமும்… இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறும் பொழுது சுவையாகவும்… நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் செய்து இந்த உணர்வின் ஆற்றலைப் பருகும் நிலையாக அந்தச் சிலையை உருவாக்கினான் போகன்.

பல கனிகளை அபிஷேகித்து அதை உணவாக உட்கொண்டால் நம் தீமை அகலும் என்று எண்ணுகின்றோமே தவிர இது புறநிலைக்கு உகந்தது… அகநிலைக்கு உதவாது.

அகநிலைகளுக்குள் எடுக்கும் சக்தியை உணர்ந்து அறியாமல் புகுந்த தீமைகளை அகற்றிட… பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் அதைச் செய்தாலும் அதே போன்று…
1.ஆறாவது அறிவின் தன்மையை இயல்பாகக் கொண்டு தனக்குள் ஞானத்தைக் கண்டுணர்ந்து
2.தீமைகளை அகற்றிடும் சக்தியாக ஒவ்வொன்றிலும் உயர்ந்த சக்திகளைப் போகித்தான் மோகித்தான்…
3.இந்த உணர்வினைத் தனக்குள் இணைத்தான் போகன் ஒவ்வொரு சக்தியாக.

இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி அவன் கண்டறிந்த உணர்வின் சத்தைத் தனக்குள் தெரிந்து… சரீரத்தையும் காத்து முழுமை அடைந்து… உயிருடன் ஒன்றி சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தான்.

அவன் வாழ்ந்த காலம் 5000 ஆண்டுகளுக்கு முன். ஆனால் காலத்தால் இது மறைக்கப்பட்டு விட்டது.

பல கோடித் தாவரங்கள் மூலிகைகளைப் பச்சிலைகளை நுகர்ந்தான். அந்தச் சத்தியினைத் தனக்குள் இணைத்தான் உணர்வினை அறிந்தான் தீமை அகற்றிடும் ஆற்றலை கண்டான் அந்தச் சக்திகளைத் தான் சிலைக்குள் சாரணையாக ஏற்றினான்.

1.நல்லதைக் காத்திடும் நிலையாக “தீமைகளை அகற்றிடும் ரிமோட் கண்ட்ரோல் போன்று”
2.அந்தச் சிலையை உற்று நோக்கப்படும் பொழுது நம்மை அறியாது வந்த தீமைகளை அகற்றிடும் நிலைக்கே அதை உருவாக்கினான்.

பழனியம்பதியின் தத்துவம் இதுதான்.

அவன் வெளிப்படுத்திய உணர்வலைகள் இங்கே படர்ந்துள்ளது. அதை நுகர்ந்தால் இந்த மனிதப் பிறவியின் முழுமையை அடையலாம்.. தீமைகளை அகற்றலாம்.

இன்று விஞ்ஞானிகள் தாவரங்களின் சத்தை இணைத்துப் புது விதமாக எப்படி உருவாக்குகின்றார்களோ அதைப் போன்று
1.மெய் ஞானிகள் உணர்வுகளை நமக்குள் இணைத்திடும் சக்தியாக அந்த அரும்பெரும் சக்திகளை ஆலயத்தில் வணங்கிப் பெற முடியும்
2.போக மாமகரிஷியின் அருளை இணைத்து நமக்குள் உருவாக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பதார்த்தங்கள் அனைத்தையும் நாம் சுவையாகச் செய்து வைத்து கடைசியில் ஒரு விஷம் கொண்ட பொருளை அதிலே இணைத்து விட்டால் உட்கொள்வோரை நிச்சயம் மடியச் செய்துவிடும்.

அது போல் உலகில் தோன்றிய மகான்கள் எல்லோருமே உயர்ந்த தத்துவங்களைக் கூறியிருந்தாலும்
1.அங்கே அந்த மகான் காட்டிய உணர்வுக்கு மேல் இன்னொன்றாக
2.தீமை செய்வோர்களை அழித்திடும் கடுமையான உணர்வைத்தான் கடைசியில் சேர்க்கின்றோம்.

இது எல்லாம் காலத்தால் அரசர்களால் உருவாக்கப்பட்டது…!

ஏனென்றால் மகான்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த நிலைகள் அனைத்தும் அரசு காலங்களில் அந்தப் பேருண்மைகள் மறைந்து விட்டது… இன்று நமக்கு அதைக் கிடைக்கவிடாதபடியே செய்து விட்டார்கள்.

அந்த மகான் காட்டிய வழிகள் வரப்படும் பொழுது அன்றைய அரசர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள்…?

1.தீமை என்ற நிலை வந்தால் அதை உடனே அழித்துவிட வேண்டும் வேட்கைகள் தூண்டுகின்றது.
2.தனக்கு அல்லது தன் மதத்திற்கு விரோதமானவர்கள் எல்லாம் “நம் கடவுளுக்கு விரோதமானவர்கள்…!”

ஞானிகள் காட்டிய வழி தவறி… கடைசி நிமிடத்தில் நீ எதிரிகளை (கடவுளுக்கு விரோதமானவர்களை) வீழ்த்திட வேண்டும்… தவறு செய்பவர்களை அழித்திட வேண்டும்… என்ற உணர்வு கொண்டு இந்தத் தாக்குதல் வரப்படும் பொழுது அந்தத் தாக்கிடும் உணர்வே கடைசியில் விளைகின்றது.

“கடவுளுக்கு விரோதமானவர்கள்…” என்று சொல்லிக் கொண்டு அந்தக் கடவுளின் தன்மையில் தான் பல மதங்களை உருவாக்கி விட்டார்கள். உலகிலுள்ள அனைத்து மதங்களும் இப்படித்தான்…!

இந்து மதமானாலும் சரி முஸ்லிம் மதமானாலும் சரி புத்த மதமானாலும் சரி கிறிஸ்தவ மதமானாலும் சரி இதைப் போல “தனது கடவுளுக்கு எதிரியானவர்கள்…” என்று எதிரிகளை உருவாக்கி
1.நல்லவைகளைப் பேசினாலும்
2.மற்ற மதங்களைச் சாடும் பொழுது எதிரி என்ற நிலையும்
3.பிசாசு என்ற நிலைகளில் உருவாக்கி விடுகின்றனர்.

இப்படி உலக நிலைகளில்… மற்றவர்கள் பிசாசை வணங்குபவர்கள் என்று சாரார் சொல்லப்படும் பொழுது மற்ற மதங்களும் இதைப் போல “அவர்களும் பிசாசை வணங்குபவர்கள்…” என்று சொல்வதும்
1.உயர்ந்த குணங்களை எல்லாம்
2.அந்த ஆவேச உணர்வு கொண்டு தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

அன்று நபிகள் சொன்னது:-
1.மனிதனை மனிதன் நீ மதித்து நட
2.மனிதனை உயர்த்த வேண்டும் என்று நீ எண்ணினால் நீ உயர்வாகின்றாய்.
3.மனிதன் பேரன்பைப் பெற்று அனைவரின் தன்மையும் உயர வேண்டும்

ஒரு மனிதன் பசியால் வாடப்படும் பொழுது… அந்தப் பசியைத் தீர்க்கும் எண்ணங்கள் உனக்குள் வந்தால்… அந்தப் பசி தீர்க்கும் உணர்வே உனக்குள் விளையும்… பசி தீர்க்கும் உபாயம் உனக்குள் கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் உண்மையின் சொரூபம் கொண்டு
1.பொய் பேசாதே
2.பொய்யான செயல்களைச் செய்து பிறரை ஏமாற்றாதே
3.தவறான உணர்வுகளை உனக்குள் சேர்க்காதே
4.தவறின் உணர்ச்சிகளை உனக்குள் இயக்கி விடாதே என்று நபிகள் தெளிவாகக் கூறியுள்ளார்.

அவர் வெளிப்படுத்திய பேருண்மையை யாரும் அதைத் தெளிவாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் வந்த அரசர்கள் அவர்கள் நியாயத்தை முன் வைத்து அதன் வழிகளில் தான் இவர்கள் ஆட்சி புரிந்தனர்

நபிகள் காட்டிய அந்தக் கடவுளைக் காணும் நெறியை இவர்கள் முன் வைத்துக் கொள்வார்கள். அதே சமயத்தில் இவர்கள் இயற்றும் சட்டத்தைக் கொண்டு இதற்கு மாறாக நடந்தால்
1.அவர்களை ஆண்டவனின் எதிரி என்று மக்கள் மத்தியில் பலியிடுவார்கள்.
2.ஆண்டவனுக்கு விரோதமாக இருந்ததனால்… நீ தவறு செய்ததனால்.. நீ பொய் பேசியதனால்…
3.உன் கைகள் துண்டிக்கப்படும்.. உன் அங்கங்கள் அவமதிக்கப்படும்… உன் சிரசு துண்டிக்கப்படும்…! என்று
4.இப்படி அரசு சட்டங்களை நீதியாக்கி அதை “ஆண்டவன் கட்டளை…” என்று செய்தார்கள்.

அதே உணர்வுகள் தான் இன்றும் உள்ளது.

ஆனால் அந்த அருள் ஞானிகள் தீமைகளைப் பற்றிக் கூறியது என்ன…?

தவறான உணர்வுகள் உனககுள் இருந்தால் அந்த உணர்வின் தன்மை அரக்க உணர்வுகளாக உனக்குள் விளைந்துவிடும். அதனால் உன் அங்கங்கள் சீர்கெடுகின்றன… உன் குணங்கள் மாறுபடுகின்றது… நீ எண்ணிய உணர்வுகள் உனக்குள் மாறுபடச் செய்கின்றது..!

1.உனக்குள் இருக்கும் அந்தத் தவறின் நிலைகளை எல்லாம் அகற்றிவிடு… அருள் ஒளியைக் கூட்டி விடு…
2.ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ வேண்டும் என்று நீ எண்ணு.
3.அவன் பசியைத் தீர்க்கும் உணர்வை ஏங்கு
4.அந்த உணர்வு உனக்குள் இருந்து பேரன்பாக வளர்கின்றது என்று தான் மகான்கள் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஞானிகள் கூறியதை யாரும் பின்பற்றவில்லை…! இன்றைய உலக நிலை இது தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கொடூரத் தெய்வங்களை வணங்கித் தன் பாவத்தைப் போக்கவும் தன் எதிரிகளை வீழ்த்தவும் ஆடு கோழிகளைப் பலியிட்டு அந்தத் தெய்வங்களை வழிபட்டு அதே சிந்தனையிலிருந்து விட்டால் அந்த உணர்வின் அலைகள் வெளிப்படுவதை நுகர்ந்த பின் எப்படிக் கொடூரத் தன்மை பெற்றதோ இந்த உணர்வின் தன்மை வழிபட்டோர் உடல்களுக்குள் சென்றுவிடும்.

அந்த உணர்வுகளைப் பெற்ற பின் அவர் இறந்துவிட்டால் பயத்தால் இத்தகைய ஆவியின் தன்மைகள் ஒரு உடலுக்குள் புகுந்து விட்டால் அவர்களுக்குக் காட்சி தரும்.

எப்படி…?
1.அந்தக் கொடூரப் பற்கள் கொண்ட அந்தத் தேவி வந்துவிட்டாள்…!
2.இந்த அச்சத்தால் வரும் பொழுது நரம்புகள் இயங்காது. பேசவும் வராது.
3.என்ன…? என்ற நிலைகள் வரப்படும் பொழுது..
4.கொடூரப் பற்கள் கொண்டு என்னைத் தாக்க வருகின்றது…! என்று அவர் ஒரு வார்த்தை சொன்னாலும்
5.அடுத்த கணம் இந்த உணர்வின் தன்மை வாய் அடைத்துவிடும்.

தெய்வத்திற்குப் பலி கொடுத்துப் பல உணர்வுகளை வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இப்படித்தான் வரும்.

இதைப் போன்று எந்த மதத்திலும் சரி…! அவர்கள் வழிப்படுத்திய நிலைகள் கொண்டு அது ஏங்கிப் பெறும் உணர்வுகள் இவ்வழியில் அங்கே சென்றுவிட்டால் இதே நிலை வரும்.

இதைச் சைத்தான் என்பார்கள் பல நிலைகளில். நாம் பேய் என்போம். இப்படிப் பல உணர்வுகள் நமக்குள் திரண்டு அதன் வலுவாக நமக்குள் இயக்குகின்றது.

1.நாம் எண்ணியது எந்த உணர்வோ அதன் உணர்வு கடவுளாக நின்று
2.அந்தச் சக்தியாக நம் உடலில் இயக்கி
3.நாம் மடிந்த பின் இந்த நிலைகளை உருவாக்குகின்றது.

நாம் பார்க்கும் ரூபங்களில் எந்தத் தெய்வமும் அப்படி இல்லை…!

நாம் உணர்வதற்காகத்தான் அவரவர்களின் மதத்தின் அடிப்படையில் இன்னென்னது என்ற நிலைகளை உருவாக்குகின்றார்கள்.

மெக்காவில் எடுத்துக் கொண்டாலும் கடைசியில் மெக்காவிற்குச் சென்ற பின் சைத்தானை ஓட்ட வேண்டும் என்று கற்களை எடுத்து வீசுவார்கள்.

தாக்கும் உணர்வு கொண்டு வரும் பொழுது போர் முறை கொண்டு இதிலே போட்டி கொண்டு தாக்குவார்கள்.
1.அந்தச் சைத்தானை விரட்டும் நிலைகள் கொண்டு கற்களைக் கொண்டு எறியப்படும் பொழுது
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரப்படும் பொழுது அதிலே சிலர் மடிவார்கள்.

வருடா வருடம் மெக்காவிற்குச் செல்லப்படும் பொழுது அந்த ஞானிகள் காட்டிய உணர்வை மறந்து விட்டு
1.வெறியின் ஆசை கொண்டு நான் தீமைகளை வெல்லப் போகிறேன் என்று
2.இத்தகைய தீமையின் வெறி கொண்ட உணர்வுகளை இவர்கள் சுவாசிக்கும் பொழுது
3.அறியாமலே வெறி கொண்ட உணர்வுகள் வந்து அது இயக்கும் தன்மை வருகின்றது.

பாவத்தைப் போக்கவும்.. அருள் ஞானத்தைப் பெறவும்… அங்கே சென்றாலும் கடைசியில்…
1.வெறி கொண்டு தாக்கும் பிசாசுகளை ஒட்டும் உணர்வு கொண்டு
2.அந்தக் கற்களை எடுத்து வீசப்படும் பொழுது
3.இந்த உணர்வின் “வேகத் துடிப்பு…” வருகின்றது.

நம் நாட்டிற்குள் எடுத்துக் கொண்டாலும் இது போல சில நிலைகள் உண்டு. ஒருவனின் நிலைகளில்…
1.இவன் ஆண்டவனுக்கு விரோதமானவன்.. இவனைத் தாக்கிவிட வேண்டும்… அழித்துவிட வேண்டும்.
2.இல்லை என்றால் ஆண்டவனைப் பறைசாற்றுபவனை இவன் அழித்துவிடுவான்… என்ற
3.வெறி கொண்ட உணர்வுகளிலும் சில நிலைகள் உருவாகின்றது.

ஆகவே இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அது உள் நின்று அதன் வழியே செயல்படுத்துகின்றது.

அருள் ஞானியான அந்த நபிகளோ…
1.“தீமைகள் தனக்குள் வராதபடி…”
2.தன் எண்ணத்தின் தன்மை கொண்டு
3.தன் அருகிலே வராதபடி தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தன் பாவங்களைப் போக்கி அந்த அருள் ஒளிகளைத் தமக்குள் கூட்டி அந்த உணர்வு கொண்டு “இந்த உலகமே உய்ய வேண்டும்…” என்று விரும்பினார். அந்த அருள் ஞானி ஊட்டியபடி மெக்காவிற்குச் சென்றால் அது நலமாக இருக்கும்.

ஆனாலும் பின் வந்தோர்கள் அவருக்குப் பின் அதை உருவங்களாக வடிவமைத்துப் பிசாசு என்ற எண்ணங்களை ஓங்கி கற்களால் அதை நீ எறிய வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

மெக்காவிற்குச் சென்று திரும்பும் பொழுது இதே உணர்வுகள் தான் கடைசியில் தாங்கி வருகின்றார்கள்.

நான் தியானிப்பது யாரை…?

 

குருநாதர் பித்தரைப் போன்று இருந்து சாக்கடை அருகே எம்மை அமரச் செய்து…
1.அந்தச் சாக்கடையை நீக்கி நல்ல உணர்வுகளை எவ்வாறு பெற வேண்டும்…? என்று
2.உபதேசித்த அருளைத் தான் “நீங்களும் நிச்சயம் பெற முடியும்” என்று உபதேசித்து வருகின்றோம்.

அந்த அருள் ஞானிகள் அவர்களுக்குள் விளைய வைத்த ஆற்றல்கள இங்கே நமக்குன் முன் படர்ந்திருப்பதை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.

நாம் எண்ணியதை நம் உயிர் படைக்கின்றது என்ற நிலையில் நாம் எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றோம். கீதையில் சொன்னது போன்று நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

கண் காட்டிய வழியில் நிச்சயம் அந்த அருளை நீங்கள் பெற முடியும்.

1.யாம் உபதேசித்த உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று “நான் தியானிப்பது யாரை என்றால்… உங்கள் உயிரைத் தான்…!”
2.உயிரால் அமைக்கப்பட்ட இந்த உடலான ஆலயத்திற்குள்…
3.மனிதனாக உருவாக்கப்பட்ட அரும்பெரும் சக்திகள் நல் உணர்வுகளாகத் தெய்வமாக இருக்கும் நிலையில்
4.அறியாத உட்புகந்து தீமைகள் செய்யும் அந்த நிலையை அகற்ற வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தியான பயிற்சி.

ஒருக்கிணைந்த நிலையில் தியானிக்கப்படும் பொழுது உங்களுடைய நினைவலைகள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணும் போது… “உங்கள் உயிரை நான் தியானிக்கின்றேன்…”

1.என் குரு காட்டிய நிலைகள் கொண்டு உங்களுக்கு உறுதுணையாக
2.உங்கள் உயிரை ஈசனாக மதித்து அவன் கட்டிய ஆலயத்திற்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று தியானிகின்றேன்.

மனிதனாக உருவாக்கிய அரும்பெரும் சக்தியான அந்தத் தெய்வ நிலைகள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அங்கே அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று தான் உங்களை நான் தியானிக்கின்றேன்.

நீங்கள் இதை எண்ணித் தியானித்து அந்த ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளலாம்.

இந்த உபதேச வாயிலாக உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலைக் கோவிலாக மதித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் இணைய வேண்டும் என்று உங்களை தியானிக்கும் பொழுது
1.நீங்களும் அதே போன்று எண்ணினால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவரும் சக்தி பெற்று
2.உங்கள் ஆன்மாவிலே கலக்கப்பட்டு… உங்களுக்குள் சக்தி வாய்ந்த ஞான வித்துக்களாக ஊன்றப்படுகின்றது.

இந்த உணர்வின் நினைவு கொண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்த்து தியானத்தில் அமர்ந்திருக்கும் “அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்ற வாக்கினைப் பதியச் செய்கின்றோம்.

அதன் வழியில் உடல் நலம் மன நலம் மன பலம் மன வளம் தொழில் வளம் பெறவும்… யாம் கொடுக்கும் வாக்கின் தன்மையால் ஒற்றுமையான உணர்வுகளை வளர்க்கவும் இது உதவும்.

இந்த உணர்வின் துணை கொண்டு உங்களுக்குள் அதை வலுப் பெறச் செய்வதற்கே குருநாதர் காட்டிய அருள் வழியில் மீண்டும் மீண்டும் உபதேசித்து உங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.

அந்த அருள் ஞானியின் சக்திகளைப் பருகும் தகுதி பெற வேண்டும் என்பதற்குத்தான் கூட்டுத் தியானத்தைச் செய்வது.

கூட்டுத் தியானம் இருக்கக் கற்றுக் கொண்டவர்கள்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எந்த நிமிடத்தில் என்று எண்ணினாலும்
2.உடனுக்குடன் அதை நீங்கள் பெற முடியும்… தீமைகளிலிருந்து விடுபட முடியும்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தியைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் சகஜ வாழ்க்கையில் எப்பொழுது தீமையும் கொடுமையும் நாம் நுகர நேர்கின்றதோ… அறிய நேருகின்றதோ… “அறிந்துணர்ந்தாலும்…” நமக்குள் அது வளராது தடுத்துப் பழக வேண்டும்.

தடுக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நம் உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும். அதை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் பகைமை என்ற உணர்வுகள் வளராது நல்லதாக்க முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நாம் கூர்மையாக எண்ணி ஏங்கிப் பெறும் பொழுது அது கூர்மை அவதாரமாகி… ஒளியான உணர்வின் அணுக்களாக மாற்றி ஒளியின் சரீரமாக முடியும்.

1.எதன் வலிமையைப் பெற்றோமோ…
2.இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.

அங்கே அதனின் உணர்வின் தன்மை கொண்டு இருளை வென்று உணர்வின் ஒளியாக மாற்றி என்றும் ஒளியின் சரீரமாகப் பெறுகின்றது.

நாம் எண்ணத்தால் உருவாக்கிய உணர்வுகள்… எண்ணம் சீதாராமா. எந்தச் சுவை கொண்டு நாம் நுகர்கின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக நமக்குள் தூண்டுகின்றது.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகள் நமக்குள் சேரும் பொழுது சீதா…! உணர்ச்சிகள் சீதாராமனாகத் தோன்றுகின்றது.
1.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நம்மை இயக்கி
2.அந்த உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகும் பொழுது இராமலிங்கம்.

சீவலிங்கமாகக் கோள்கள் உருவாகின்றது. ஆனால் அதே சமயத்தில் ஜீவ அணுக்களாக ஜீவ ஆன்மாவாக நாம் விளைகின்றோம். ஜீவ ஆன்மாக்களாக எதை விளைவிக்கின்றோமோ சிவமாக (உடலாக) மாறுகின்றோம்.

உயிரின் தன்மை நமக்குள் இயக்கவில்லை என்றால் இந்த உடல் சவமாகின்றது. எந்த உணர்வை எடுத்தோமோ அதற்குத் தகுந்த அடுத்த ரூபத்தை உயிர் மாற்றுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

மனிதனாக ஆன பின் கார்த்திகேயா… இதை அறிந்திடும் பக்குவம் பெற்றவர்கள் நாம்… இந்த உடலினின்றே இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். பிறவியில்லா நிலை அடைந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் அணுவாக மாற்றுதல் வேண்டும்.

ஆகவே தான்…
1.அந்த ஞானிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்குகின்றோம்.
2.அந்த உணர்வின் சத்தாக உங்களை நுகரச் செய்கின்றோம்.
3.அந்த அணுவின் கருவாக உங்களுக்குள் உருவாகச் செய்து
4.உங்கள் இரத்தநாளங்களில் பெருக்கும்படி செய்கின்றோம்.

இதையே நீங்கள் அடைகாத்தது போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று காலை துருவ தியானத்தில் ஏங்கினால் அந்த உணர்வின் அணுக்கருக்களுக்கு ஜீவன் ஊட்டுகின்றீர்கள். ஒளியான அணுக்களின் பெருக்கமாகின்றது.

நாம் எந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர வேண்டும் என்று எண்ணினோமோ அந்த அணுக்கள் தனக்கு வேண்டிய உணவைப் பற்றி ஏங்கும் பொழுது
1.அதே அருள் உணர்வுகளை நுகரச் செய்து
2.ஞானத்தின் உணர்ச்சியாக நம்மை இயக்குவதும்
3.ஞானிகள் சென்ற வழியில் செயல்படும் தன்மையும் வருகின்றது.

அதே சமயத்தில் நம் உடலில் உள்ள எல்லா அணுக்களும் அதைப் பருகி அந்த ஒளியின் சுடராகத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிட்டால் இதன் உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலிலே ஏற்கனவே இருந்த இருள் சூழ்ந்த நஞ்சு கொண்ட அணுக்கள் மடிந்துவிடுகின்றது.
1.அது மடியும் தன்மை வரும் பொழுது ஒளியின் அணுவாக மாறுகின்றது
2.மாறிய உணர்வு கொண்டு வெளியே சென்றால்
3.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் ஒளியின் சரீரமாக மாறுகின்றோம்.

அதற்குத்தான் இந்த உபதேசமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மற்றவர் (யாரோ) நமக்குச் செய்வார்கள் என்ற ஏக்கத்தில் செல்லப்படும் பொழுது தான் “அவர்கள் மகா சக்தி பெற்றவர்கள்” என்ற நிலைகள் கொண்டு அவர் வலையில் சிக்கி… நம் புத்தியை இழந்து… அவர்களிடம் நாம் அடிமையாகின்றோம்.

பாதிப்படைந்த பின்… “தப்ப வேண்டும் தப்ப வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வருகின்றோம்.

உதாரணமாக இந்தத் தொழிலைச் செய்தால் அதிலே நீ அதிகமான லாபம் பெறலாம் என்ற உணர்ச்சிகளை ஒருவர் தூண்டி விட்டால் போதும். அவர்களைப் பற்றிய புகழாரம் அனைத்தும் பாடத் தொடங்குவார்கள்… அவர் உதவி செய்வார்… உதவி செய்வார்… என்று…!

அவர் உதவி செய்வார் என்ற எண்ணத்தில் ஏக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு நூறு ரூபாய் வேண்டும் என்பார்கள். அதாவது புகழ்ந்து பேசிய பின் இப்படிக் கேட்பார்கள்.

கொடுத்து விடுவீர்கள்…!

சிறிது நாள் கழித்து கொடுத்ததைக் கேட்கலாம்… என்று சென்றாலும் “நீங்கள் தக்க நேரத்தில் உதவி செய்தீர்கள்…! இன்னும் ஒரு நூறு ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை…” என்பார்.

இப்படிப் புகழ்ந்து பேசுபவருடைய நிலைகளுக்கு நாம் அடிமையாகி விட்டால் இப்படிப் பேசிப் பேசியே நம்மிடமிருந்து காசை வாங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் கஷ்டமாக இருக்கும் பொழுது நாம் கேட்டால் நம்மைப் புகழ்ந்து பேசியவர் “ஐயோ…!” இப்பொழுது என்னிடம் காசில்லையே…! என்பார்.
1.ஆனால் நாம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்க மாட்டார்.
2.நம்மிடம் பணம் கேட்பதையும் நிறுத்த மாட்டார்
3.நாம் பணம் இல்லை… என்று சொன்னாலோ உடனே பகைமையை ஊட்டிவிடுவார்.
4.காசைத் திருப்பிக் கேட்கிறார் என்றும் அடுத்தவரிடம் நம்மைப் பற்றிச் சொல்லிச் சீண்டிவிடுவார்.
5.இவருடைய செயல்கள் இப்படி…! என்று கற்பனையாக உருவாக்கி கற்பனையான சொல்களைச் சொல்லி இடையூறுகளை ஊட்டுவார்.

கடைசியில் கொடுத்ததை எல்லாம் கேட்டால் “என்னிடம் எப்பொழுது பணம் கொடுத்தீர்கள்…!” என்பார். இப்படியெல்லாம் புகழாரம் பாடுவோர் கையில் நாம் சிக்கிவிட்டால் இந்த மனித வாழ்க்கையில் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

ஆகவே…
1.நாம் ஒருவருக்கு உபகாரம் செய்வது என்றால் திருப்பிப் பெறும் நிலைகள் இருக்கக் கூடாது
2.திருப்பிப் பெறாத நிலைகள் செயல்படுத்த வேண்டும்
3.ஒன்று இரண்டு ஏதோ அவர்களுக்கு.. எப்படியோ நன்றாக இருக்கட்டும்…! என்ற நிலைகளில்
4.புகழ் பாடுவோர் கையில் கொடுத்து விட்டால் போதும்…!
5.கொடுத்ததைத் திரும்பக் கேட்கும் நிலையற்ற நிலையில் இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு தரம் உதவி செய்தாலும் மீண்டும் அவர்கள் கேட்பார்கள். உதவி செய்யவில்லை என்றால் பழியைச் சுமத்துவார்கள். அதனால்…
1.நம்மை அறியாமலே நண்பர்களுக்குள் பகைமை உருவாகின்றது.
2.இன்றைய உலகம் இப்படித்தான் இருக்கின்றது…!

இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைச் சுவாசித்து உடலுக்குள் கருவின் தன்மையை உருவாக்கி அந்தக் கருவை நமக்குள் அணுவாக வளர்த்திட வேண்டும்.

அதன் வளர்ச்சி கொண்டு இந்த அருள் உணர்வின் வலிமை பெற்று
1.என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும்
2.சிந்திக்கும் தன்மை அவருக்கு வர வேண்டும்
3.என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவருக்கு நல்ல உணர்வு தோன்ற வேண்டும் என்ற
4.இப்படிப்பட்ட உணர்வினைக் கருவாக்கி உணர்வின் தன்மை பெற்றுவிட்டால்
5.உற்று நோக்கி நம்மை ஏமாற்றுவோரும் இந்த உணர்வுகளை நுகர்ந்த பின்
6.அந்த ஏமாற்றும் தன்மையே அவர் உடலிலிருந்து மறைந்து விடுகின்றது.

ஆகவே இன்றைய உலகில்… பிறிதொரு பகைமையோ ஏமாற்றும் உணர்வுகளோ வராதபடி நாம் மாற்றியமைத்தல் வேண்டும். அதே சமயத்தில் நாம் நுகரும்… அல்லது நுகர்ந்த அருள் சக்திகள் நமக்குள் வளர்ந்து அரும் பெரும் சக்தியாக மலர்கின்றது.

இதையே நமக்குள் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் மெய் ஒளி பெறுகின்றோம்.

“உந்து விசை” இல்லை என்றால் என்றும் எப்பொழுதும் விண்ணுலகம் செல்ல முடியாது

 

தாய் தந்தையர் நம்மைக் காத்திட எத்தனையோ வேதனைகளை அனுபவித்து உடலில் அதை நுகர்ந்துள்ளார்கள். அவ்வாறு நம்மைக் காத்திட நஞ்சின் தன்மையாக விளைய வைத்த நிலையில் அன்னை தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து விட்டால்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் விண்ணை நோக்கி ஏகி… அந்த உணர்வின் துணை கொண்டு
2.என் அன்னை தந்தைக்கு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்.
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும்.
4.என்னை ஈன்ற அந்த அன்னை தந்தையர் பிறவா நிலை பெற வேண்டும்.
5.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று உடல் பெறும் அந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் அனைத்தும் கரைந்து விட வேண்டும்.

என்னை வளர்த்திட்ட “உயர்ந்த உணர்வின் ஒலிகள்” உயிருடன் ஒன்றி என்றும் நிலைத்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி… அழியா ஒளிச் சரீரமான பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்திட வேண்டும் என்று
1.”விண்ணை நோக்கி உந்தி” இந்த உணர்வின் வேட்கை கொண்ட பின்
2.எந்தத் தாயின் சரீரத்தில் இருந்து நாம் உருவானமோ அவர்களை விண்ணை நோக்கி உந்தித் தள்ள வேண்டும்.

ஆகவே… தாய் தந்தையர் உடலை விட்டுப் பிரிந்தால் இன்னொரு உடலுக்குள் புகாது… நஞ்சு கொண்ட உணர்வுகளை அவர்கள் வாழ்ந்த காலத்தில் சேர்த்திருந்தாலும்… அதிலே அவர்கள் சிக்காது அடுத்த கணமே விண் செலுத்தும் படி தான் ஞானிகள் நமக்குக் காட்டியுள்ளார்கள்.

அவ்வாறு செலுத்தி விட்டால் சப்தரிஷி மண்டலத்தில் அவர்கள் உயிரான்மாக்கள் இணைந்து “சப்தரிஷிகள் உமிழ்த்தும் உணர்வை உணவாக எடுத்து” ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருப்பார்கள்.

ஆனால் இன்று ஐதீகம் என்று சொல்லி இறந்தவர்களின் சுட்ட சாம்பலைக் கங்கையில் கொண்டு கரைத்து விட்டால் “செய்த பாவம் போய்விடும்” என்று இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

அவர்களுக்குப் பிரியப்பட்ட பதார்த்தங்களை எல்லாம் செய்து கொடுத்து விட்டால் அவர்கள் மகிழ்ந்து விடுவார்கள்… சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள்…! என்று தான் நமக்குக் காட்டியுள்ளார்கள்.

எது சொர்க்கம்…? எவ்வாறு அங்கே அனுப்ப வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய உண்மைகள் காலத்தால் மறைந்து விட்டது.

ஆகவே ஞானிகள் காட்டிய வழிப்படி உடலை விட்டுப் பிரிந்த முன்னோர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணை வேண்டும் என்று
1.உந்து விசை கொண்டு தான் அங்கே செலுத்த வேண்டும்.
2.உந்து விசை இல்லை என்றால் என்றும் எப்பொழுதும் விண்ணுலகம் செல்ல முடியாது.

ஈர்ப்பால் கவர்ந்த தாவர இனச் சத்து நம் உடலாக விளைந்த நிலைகள் கொண்டு புவியின் ஈர்ப்பிலே தான் இருக்கும். அதே சத்தின் துணை கொண்ட நிலையில் மனிதருடன் பற்று கொண்டால் “அந்தப் பற்றின் ஈர்ப்பின் நிலைகளுக்கே மீண்டும் உடல் பெறும் நிலைகளுக்கே வந்துவிடும்…”

எதன் மீது பற்று அதிகமானதோ… அந்த நஞ்சு கொண்ட உணர்வு இணைக்கப்படும் பொழுது அதனின் நிலைகள் கொண்டே உயிரினங்களுடைய ரூபங்கள் மாறத்தான் செய்யும்.

குருநாதர் இதையெல்லாம் நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

ஆகவே அவர் காட்டிய அருள் வழிப்படி உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் உயிரான்மாக்களை “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உந்தித் தள்ளி” அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்.

அதன் மூலமாக சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை எளிதில் பெற்று மூச்சும் பேச்சும் பிறருடைய தீமைகளை அகற்றும் நிலையாக வருகின்றது.

நீங்கள் இதனைச் செயல்படுத்தும் போது… விஞ்ஞான உலகில் ஏற்பட்டுள்ள நஞ்சினை உங்கள் மூச்சலைகள் துரத்தி விட்டு… மெய் ஞானிகள் உணர்வுகளைக் கூட்டச் செய்து… மெய் உணர்வினை இந்த உடலுக்குள் சேர்த்து உடலை விட்டு அகன்றாலும் மெய் ஞானியின் உணர்வுடன் நாம் ஒன்றிட முடியும்.

ஆகவே… உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

1.எண்ணியதை இயக்குவது உயிரே
2.எண்ணியதை இறையாக்குவதும் உயிரே
3.எண்ணியதை உடல் ஆக்குவதும் உயிரே
4.எண்ணியதை உடலுக்குள் விளையச் செய்வதும் உயிரே
5.நம்மை ஆண்டு கொண்டிருப்பதும் உயிரே
6.எண்ணியதைப் பிரம்மமாகச் சிருஷ்டிப்பதும் உயிரே
7.எடுத்துக் கொண்ட உணர்வின் ஞானமாக இயக்குவதும் அவனே.

இதனை நினைவு கொண்டு அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உயிர் குருவாக நின்று… நாம் எண்ணியதை எல்லாம் ஈசனாக இருந்து… அந்த உணர்வுகளை எல்லாம் நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றது.

அதே சமயத்தில் அத்தகைய கருவின் தன்மை பெறச் செய்வதற்கு உயிரே குருவாக இருக்கின்றது.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இப்பொழுது ஏங்கித் தியானிப்போம். நமது குரு ஈஸ்வரபட்டரின் அருள் சக்தி பெற்று அவர் வழியில் இதை நாம் எண்ணி நுகர வேண்டும்.

அப்படி நுகரப்படும் பொழுது…
1.குரு வழியில் அகஸ்தியன் அருளை எளிதில் பெறலாம்.
2.அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான
3.அந்த உணர்வின் வழி நடந்து சென்ற ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சென்ற
4.சப்தரிஷி மண்டலமாக அடையும் நிலையை நீங்கள் பெறலாம்.

அகஸ்தியனைப் பற்றி உபதேசிக்கும் பொழுதும்… பேசும் பொழுதும்…
1.அவன் பெற்ற சக்திகள் உங்கள் அருகிலேயே வந்தது போல் இருக்கும்.
2.அவன் நுகர்ந்த அந்த மகா பச்சிலையின் மணங்கள் உங்களுக்குள் வரும்.
3.அந்த மணங்கள் உங்கள் உடலுக்குள் புதுமையான நிலைகளில் ஊர்ந்து செல்லும்.

உங்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் வல்லமை பெற்ற சக்தியாக… நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வாக… நீங்கள் நுகரும் தன்மை பெறுகின்றீர்கள். அந்த அணுவின் தன்மையை உடலுக்குள் கருவாக உருப்பெறச் செய்யும் சக்தியும் பெறுகின்றீர்கள்.

கருவுறும் அந்த உணர்வின் கருவிற்கு ஞானிகளின் உணர்வைச் செருகேற்றி… ஞானிகளைப் பற்றி யாம் உபதேசித்த பல கலவைகளையும் சேர்க்கும் பொழுது அதுவும் அணுக்கருக்களாக உங்கள் இரத்த நாளங்களில் கலந்து பரவும்.

இப்படிப்பட்ட அரும் பெரும் சக்திகளை உங்கள் இரத்த நாளங்களில் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து இயக்கிடும் சக்தியாக வருகின்றது.

அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. நினைக்கும் பொழுதெல்லாம் அந்தச் சக்திகளை நீங்கள் பெறலாம்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இப்பொழுது யாம் (ஞானகுரு) பதிவு செய்த எண்ணத்தால் உருவாக்கப்பட்டது அனைத்தும் உங்களுக்குள் நின்று அது வலுவாக இயக்கும்.

1.அந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது
2.அகஸ்தியனைப் பற்றிய எண்ணங்கள் கண்ணிற்கே நினைவு வருகின்றது.

அதாவது… யாம் சொல்லும் சொல்லின் நிலைகளை உங்கள் கண் பதிவாக்கி அந்த உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது கண்ணால் தான் பதிவாகின்றது.

1.அது தான் ஹரி…! – அறியக் கூடிய அறிவு
2.சூரியனால் இயக்கப்படுகின்றோம் – ஹரி கிருஷ்ணா
3.கிருஷ்.. என்றால் பதிவாக்கக்கூடிய நிலை.

அப்படிப் பதிவான பின் அந்த உணர்வுகள் எண்ணமாகும் பொழுது “ஹரிராமா” அந்த எண்ணத்தை எண்ணி மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வந்தால் “ஹரிகிருஷ்ணா”

1.கண்ணின் நினைவு கொண்டு எண்ணத்தால் உள்ளுக்குள் பதிவாகி
2.மீண்டும் எண்ணத்தில் வரப்படும் பொழுது அந்தப் பதிவின் நிலையே நுகர்ந்து
3.உடலுக்குள் அணுவின் கருவாக மாற்றும் திறன் வருகின்றது.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா எனறு ஏங்குங்கள்

உபதேசிக்கும் உணர்வுகள் உங்கள் உடலில் இருக்கும் எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது கண் வழி அதை நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் அணுவாக மாறி இரத்த நாளங்களிலே கருத்தன்மை அடையும் கருக்களாக அது உருவாக்கப்படுகின்றது.

அந்த அகஸ்திய மாமகரிஷ்யின் அருள் சக்திகளை ஏங்கிப் பெறும் நோக்கத்துடன் தியானிக்க வேண்டும்.
1.தியானம் என்பது வெறும் சொல்லாகச் சொல்லி அப்படியே விட்டிடாது
2.அவருடைய அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் ஏங்கியே தியானியுங்கள்.

அந்த அருள் மகரிஷி நஞ்சினை வென்றிடும் தாவர இனச் சத்துக்களை நுகர்ந்து நஞ்சினை வென்றிடும் அணுவின் தன்மையாக விளைந்து
1.அவனின்று வெளிப்பட்ட மூச்சலைகள்…
2.உங்கள் உடலுக்குள் ஊடுருவும் பொழுது
3.உயர்ந்த சக்திகளின் உணர்ச்சிகளை ஊட்டி
4.அதை நுகர்ந்தறியும் அறிவின் ஆற்றலாகப் பெறுவீர்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அதையே திரும்பத் திரும்ப ஏங்கி உங்கள் உடலுக்குள் இரத்த நாளங்களில் கருவாக உருவாக்குங்கள்.

உங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.
1.அவன் உணர்வுகள் உங்களுக்குள் படும் பொழுது – அந்த உணர்வின் அலைகள் உங்கள் வாழ்க்கையில்
2.நுகரும் சக்தியும்
3.அறியும் சக்தியும்
4.வளர்க்கும் சக்தியும்
5.வளர்ந்திடும் சக்தியும் கிடைக்கும்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி உங்கள் அருகிலே சுழன்று… நீங்கள் சுவாசிக்கும் சுவாசத்திற்குள் சென்று.. உங்கள் உடலுக்குள் செல்லும் நிலையை இப்பொழுது இந்தச் சந்தர்ப்பம் உருவாக்குகிறது.

அகஸ்தியன் நுகர்ந்த அந்த மணத்தின் தன்மையைக் கவர்ந்து அந்த உணர்வின் ஆக்கச் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அகஸ்தியன் நுகர்ந்த மணத்தை இப்பொழுது நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் கணவனும் மனைவியும் வானுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கி துருவ மகரிஷியாகி அவர்கள் உருவாக்கிய சக்தி இங்கே பரவி இருக்கிறது.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.. அது எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் உள்ள அணுக்களில் மோதும் பொழுது
1.புருவ மத்தியில் அந்த ஒளிக்கதிர்கள் தெரியும்
2.உங்கள் உடலுக்குள் அந்த உணர்வின் ஒளி அலைகள் பாயும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் நினைவனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அதனுடன் தொடர் கொண்டு… அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி அதை இழுத்துக் கவர்ந்து கவர்ந்து சுவாசியுங்கள்… உடலுக்குள் செலுத்துங்கள்…!

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்
2.அந்த உணர்வின் அலைகள் உங்களை அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே சேர்க்கும்.

பிராணயாமத்தின் மூலக்கூறு

 

ஆண்டென்னாக்களை வைத்து அதில் பல சக்திகளைக் கூட்டி அதனின் ஆற்றல் கொண்டு அதைத் திசை திருப்பி வைக்கப்படும் பொழுது வெகு தொலைவில் இருப்பதை… எங்கிருந்தாலும் அந்த அலைகளை இழுத்துக் கவர்ந்து கொண்டு வருகின்றது.

இதைப் போன்று
1.நாம் அந்த அருள் ஞானிகள் வித்தை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து
2.அதனின் நினைவைக் கண்ணுக்குள் கொண்டு வரப்படும் பொழுது
3.உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நினைவினைக் கூட்டப்படும் பொழுது
4.மகரிஷிகளின் அருளாற்றல் நமக்கு முன் பரவிக் கொண்டிருப்பதைக் கவர்ந்து
5.நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் சக்தியாக உருவாக்கச் செய்வது தான் அது.

அன்றாட வாழ்க்கையில் உடல் அழுக்கைப் போக்குகின்றோம் ஆனால் அதே போல் வாழ்க்கையில் நம் நல்ல உணர்வுகளில் படும் அழுக்கைப் போக்குகின்றோமா…?

அன்புடன் பண்புடன் பணிவுடன் மற்றவருடைய துயரைக் கேட்டு அவர்களுக்கு நன்மைகளை செய்திருந்தாலும் அவருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது அதைத் துடைத்திடும் நிலையாக ஆன்மாவைத் தூய்மை செய்தல் வேண்டும்.

தங்க நகை செய்யும் பொழுது தெரிந்து தான் செம்பும் வெள்ளியையும் இணைக்கின்றோம். அதைப் போல் வாழ்க்கையில் நாம் சென்றாலும் மற்றவர்கள் குறைகளைக் கேட்டுத் தான் அதை நிவர்த்தி செய்ய வேண்டி இருக்கின்றது.

ஆக… அதை நுகர்ந்து உணர்ந்து அதன் பின் பல நன்மைகள் செய்திருந்தாலும் நமக்குள் அவர்களின் உணர்வின் சத்து நம் நல்ல குணத்துடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.

தீமைகளில் இருந்து அகற்றிடும் நிலையாகத் தன்னைக் காத்திடும் நிலையாகப் பரிணாம வளர்ச்சியில்
1.தனக்குள் வலுக் கொண்ட நிலைகளை நுகர்ந்தாலும்
2.அதனின் உணர்வுகள் இதற்குள் வலுவாகி அதனின் மணத்தை நுகர்ந்து அதனின் ஈர்ப்புக்குள் சென்று
3.“அப்படித்தான் பரிணாம வளர்ச்சி என்பதே வளர்ந்தது…”

அப்படிப் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த நாம் மனிதனாக வாழ்ந்து உயிரோடு ஒன்றி ஒளியாக மாற்றிய அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் தான் அவன் தீமையை அகற்றியது போன்று நாமும் நம்மை அறியாத உட்புகந்த தீமைகளை அகற்ற முடியும். அதைத் தான் விநாயகர் தத்துவமாகக் காட்டினான் அன்று அகஸ்தியன்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை உடலுக்குள் செலுத்தும் பொழுது “அதற்குப் பெயர் பிராணயாமம்…”

ஒரு பானையிலே பொருளைப் போட்டு நெருப்பைக் கூட்டி வேக வைத்துச் செயல்படுத்தினோம் என்றால் அது வெந்து ஆவியாக வெளியாகி வருவது போல
1.நாம் உயிரோடு ஒன்றி நினைவை விண்ணிலே செலுத்தி
2.உயிர் வழி மகரிஷிகளின் அருள் சக்திகளை இந்த உடலுக்குள் கவர்ந்தோமென்றால்
3.உடலில் அந்த மணங்கள் வெளிப்படுகின்றது… தீமைகளைப் பிளக்கின்றது… ஆன்மாவிலிருந்து அதை அகற்றுகின்றது.

ஒரு பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தை எண்ணாது தன்னுடைய வலுவால் அதைப் பிளந்து அதற்குள் இருக்கும் நல்லதை எடுப்பது போன்று அருள் ஞானிகள் உணர்வை விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் ஆற்றலைப் பதிவு செய்து நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எண்ணி எடுத்துக் கொண்டால் இது பிராணயாமம். அந்த மகரிஷிகளின் உணர்வு உடலுக்குள் சென்று நமக்குள் கலக்கப்படும் பொழுது ஆன்மாவில் இருக்கக்கூடிய தீமைகளைப் பிளக்கின்றது.

இதைத் தான் நரசிம்ம அவதாரம் என்று ஞானிகள் காட்டினார்கள்.

நாம் விண்ணை நோக்கி ஏகி… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரின் துணை கொண்டு வலு சேர்க்கப்படும் பொழுது… வாசல்படி மீது அமர்ந்தான் நர நாராயணன். மடி மீது அமர்த்தி இரண்யனைப் பிளக்கின்றான்.

இரண்யன் என்பது இந்த வாழ்க்கையில் கேட்டறிந்த வேதனையான உணர்வுகள் நல்ல குணங்களைக் கொல்லும் திறன் பெற்றது. நம் ஆன்மாவிலே அது கலந்து நல்ல சிந்தனைகள் செய்யக்கூடிய உணர்வின் அலைகளைச் செயல்படுத்தத் தடைப்படுத்துகின்றது.

இதைத்தான் நாராயணன் மடி மீது இந்தத் தீமைகளை வைத்து அது உள் புகாது பிளந்தான் வாசல்படி மீது அமர்ந்து…! என்று சொல்வது.
1.நமக்கு இந்த மூக்கு தான் வாசல்படி…. அந்த வாசல்படிக்கு மேல் பகுதியில் தான் நமது உயிர் அமைந்திருக்கின்றது.
2.அங்கே நம் நினைவைச் செலுத்தி அதன் வழி அருள் ஞானிகளின் உணர்வை உடலுக்குள் செலுத்தினால் இது நரசிம்ம அவதாரம் ஆகின்றது.

உயிர் வழி மகரிஷிகளின் உணர்வுகளை உள் செலுத்தி அதன் வழி இயக்கச் சக்தியாகக் கொண்டு வரும் பொழுது உடலுக்குள் இருந்து அந்த அருள் ஞானியின் உணர்வுகள் “அருள் மணங்களாக வெளிப்படும் பொழுது” நம் முன் படர்ந்து இருக்கும் தீமையான உணர்வுகளைப் பிளக்கின்றது… சிந்திக்கும்படி செய்கின்றது.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதில் கலந்துள்ள செம்பு பித்தளை எப்படி ஆவியாக மாறுகின்றதோ… அது போன்று நமக்குள் இரண்டறக் கலந்த தீமை செய்யும் உணர்வின் சத்தை அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகள் வலு இழக்கச் செய்கின்றது.

1.அன்றைய ஞானிகள் மகரிஷிகள் எவ்வாறு தங்களுக்குள் வந்த தீமைகளை வலுவிழக்கச் செய்தார்களோ
2.அந்த ஆற்றலைப் பெறுவதற்குத் தான் இந்த விநாயகர் தத்துவமே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் தன் தாய் தந்தையரின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்தாலும் அவன் இளம் குழந்தையாக ஐந்து வயது இருக்கப்படும் பொழுதே தாய் தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து விடுகின்றனர்.

அவர்கள் ஆன்மாக்கள் பிரியும் பொழுது தன் குழந்தையின் பால் நினைவைச் செலுத்தி அதே ஏக்கத்திலேயே பிரிந்ததால் அகஸ்தியன் உடலில் புகுந்து விட்டனர்.

அகஸ்தியன் உடலுக்குள் வந்த நிலையில்
1.அகஸ்தியன் தாய் தந்தையர் எந்தெந்த வழியில் அவர்கள் தங்கள் செயல்களைச் செயல்படுத்தினார்களோ
2.அதை எல்லாம் அகஸ்தியன் உடலிலிருந்து அந்த உணர்வைப் பெறும்படி செய்து அந்த உடலை இயக்கினார்கள்.

அகஸ்தியன் அவன் வளர்ந்த நிலையில் பதினாறாவது வயதில் திருமணமான பின் இருவரும் கணவனும் மனைவியுமாக நம் பூமியின் துருவத்தின் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்து வளர்த்துக் கொண்டார்கள்.

துருவத்தின் ஆற்றலைப் பெற்று அதனின் வலுவின் துணை கொண்டு வளர்ச்சி அடைந்த பின்
1.அவர்கள் இருவரது ஆன்மாக்களும் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது
2.அவருடைய தாய் தந்தை ஆன்மாக்களும் கலந்தே விண் செல்கிறது.
3.இப்படி நான்கு பேருடைய உணர்வுகள் கலந்து உருவானது தான் “துருவ நட்சத்திரம்…”

அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றி நுகர்ந்தறிந்த ஆன்மாக்கள் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது ஒளியாகப் பெற்றவர்கள் துருவ நட்சத்திரதின் ஈர்ப்பு வட்டதிற்குச் சென்று என்றுமே ஒளியின் சரீரமாக “சப்தரிஷி மண்டலங்களாக” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

1.இப்படி அந்த அகஸ்தியன் காலத்தில் அவனுடன் இணைந்த நிலையில் விண் சென்றவர்கள் ஏராளம்…!
2.அது தான் முப்பத்து முக்கோடி தேவர்கள் – சப்தரிஷி மண்டலம் என்று சொல்வது.

உதாரணமாக இந்த மனித வாழ்க்கையில் குடும்பங்களில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பற்றுடன் வாழும் நிலையில் மனைவி மேல் பற்று கொண்ட நிலையில் கணவன் உடலை விட்டுப் பிரிந்தால் மனைவியின் உடலில் சேர்ந்து இந்த உணர்வுகள் ஒன்றி வாழும்.

அதே போல் கணவன் மீது பற்று கொண்ட நிலையில் மனைவி உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மா கணவன் உடலுக்குள் சேர்ந்து ஒன்றி வாழும்.

இப்படிப் பற்று கொண்டு வாழும் நிலையில் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானம் செய்து ஒன்று சேர்ந்தால் அடுத்து…
1.கணவன்/மனைவி ஆன்மா பிரியப்படும் பொழுது
2.கணவனுடன்/மனைவியுடன் இணைந்தே சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது.
3.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைக்கப்பட்டு
4.இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து
5.விண்வெளியிலிருந்து வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றார்கள்.
6.என்றும் பிறவியில்லா நிலை அடைந்து அகண்ட அண்டத்தில் “என்றும் பதினாறு” என்ற நிலையை அடைய முடிகின்றது.

கணவன் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அந்த ஆன்மா மனைவியின் உடலுக்குள் செல்வதும் மனைவியின் ஆன்மா பிரிந்த பின் கணவனின் உடலுக்குள் செல்வதும்
1.இதைப் போன்ற பற்றுதல் இருந்தால்
2.அந்த ஆன்மாக்கள் எளிதில் ஒளியின் சரீரங்களைப் பெற்றுவிடுகின்றது.

ஆனால் இன்றைய வழக்கப்படி செய்யும் சாங்கிய சாஸ்திரங்களால் இந்த நிலையை அடைய முடிவதில்லை. பற்று கொண்ட நிலையில் மீண்டும் பிறவிக்கே வருகின்றது.

ஆகவே இதைக் கேட்டுணர்ந்தோர் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானத்தில் இருக்கும் பொழுதும் சரி… அதிகாலை துருவ தியானத்திலும் சரி…
1.கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழும்
2.இதைப் போன்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்வது மிகவும் நலம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நெசவுத் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு கணவன் மனைவி அவர்களுக்கு நான்கு குழந்தைகள். ஒரு சமயம் ஆஸ்த்மா நோயால் கணவர் மிகவும் அவதிப்பட்டார்.

ஓரளவுக்குச் செல்வத்தைச் சம்பாரித்து எளிய குடும்பமாக இருப்பினும் தன் மனைவி மீது இருந்த அந்தப் பற்றின் தன்மையும் குழந்தை மீது இருந்த பற்றின் தன்மையும் கொண்டு தான் அவர் வாழ்ந்தார்.

ஆனால் தன் நோயினால் அதைத் தாங்காத நிலைகள் கொண்டு விஷத்தை உணவாக உட்கொண்டு விட்டார். அவரின் ஆன்மா பிரிந்து விட்டது.

பிரியும் பொழுது தன் மனைவியின் நினைவாகவே ஆன்மா சென்றதால் மனைவியின் உடலுக்குள் சென்றுவிட்டது.

ஆன்மா மனைவி உடலுக்குள் சென்ற பின் அவர் விஷத்தைக் குடித்த பின் அவர் உடல் எப்படித் துடி துடித்ததோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்த பின் மனைவிக்கும் அதே துடி துடிப்பு வந்துவிட்டது.

1.அந்த ஆன்மா மனைவியின் இரத்தநாளங்களில் சுழன்று வரப்படும் பொழுது
2.சிறுமூளை பாகம் சென்ற பின் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி
3.அதே உணர்வு அதே சொல் அதே செயலாக வருகின்றது.

இப்படித்தான் அந்த உடலை இயக்கிக் கொண்டிருந்தது.

என்னிடம் (ஞானகுரு) அவரை அழைத்து வந்தார்கள். தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள்.

இதற்கு முன்னாடி ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிறிது நேரம் அந்த உணர்வின் இயக்கம் இருக்கும். பின் சரியாகப் போகும் ஆனால் இப்பொழுது இந்த இரண்டு நாட்களாக மிகவும் மோசமாகிவிட்டது என்றனர்.

ஆவிகளை ஓட்டுபவர்களிடம் எல்லாம் சென்று நாங்கள் பார்த்தோம். செல்வங்களை எல்லாம் செலவழித்தோம். வறுமைக் கோட்டில் மிகவும் வாடிக் கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது…! என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் என்னிடம் சொல்கிறார்கள்.

அப்பொழுது அந்த அம்மாவுக்கு நினைவு இல்லை. குழந்தைகளும் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

குடும்பத்தைச் சார்ந்தோருக்கு விவரத்தைச் சொல்லி இந்த முறைப்படி தியானமிருங்கள் என்று சொன்னேன்.
1.அந்த உடலில் துருவ மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும்.
2.அந்த உடலில் உள்ள ஆன்மா அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்.
3.அந்த ஆன்மாவில் உள்ள விஷத் தன்மை நீங்க வேண்டும் என்று சொல்லச் சொன்னேன்.

அதன் வழியிலே அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்களும் செய்தார்கள். என்னிடம் வந்திருக்கும் பொழுது ஒரு அரை மணி நேரம் இதைச் சொல்லிச் செய்தார்கள்.

அந்த அம்மாவிற்குச் சிறிது தெளிவாகியது. பின் எழுந்த பின் இதே போன்று அவர்களிடமும் விவரத்தைச் சொன்ன பின் அவர்களும் இதே போல் நினைவைச் செலுத்தினார்கள்.

பின் பரிசுத்தமாகியது…!

பின் அந்த அம்மாவுக்கு நல்ல நிலைகள் வந்து அவர்கள் குடும்பத்தைப் பேணிக் காக்கும் நிலையும் வந்தது.

கடைசியில் இறந்த பின்…
1.அந்த ஆன்மாக்கள் இரண்டுமே ஒன்றாக இணைந்து சப்தரிஷி மண்டலம் அடைந்தது.
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது… ஒளி பெறும் சரீரம் பெற்றது.

இது இருபத்தைந்து வருடம் முன்னாடி நடந்த நிகழ்ச்சி. (ஞானகுரு உபதேசம் செய்தது 1997).

ஆரம்ப நிலைகளில் நான் (ஞானகுரு) இந்தியா முழுவதும் சுற்றி வரும் பொழுது இத்தகைய நிலைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்தி வந்தது.

1.உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள்
2.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்படி எளிதில் சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப முடியும்.

என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது… உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்றார் குருநாதர்

 

இன்று நமது வாழ்க்கையில் எத்தகைய நிலையில் இருப்பினும் அதை நாம் சீர்படுத்துவதற்குப் பல பல முயற்சிகளை மேற்கொள்கின்றோம். மந்திரம்… எந்திரம்… யாகங்கள்… ஆலயங்களுக்குச் செல்வது… என்று இப்படி எத்தனையோ நிலைகளைச் செய்து “அதை எல்லாம் நிவர்த்தி செய்து விடலாம்…” என்ற எண்ணத்தில் தான் நாம் செல்கின்றோம்.

ஆனால் பண்டைய கால ஞானிகள் எவ்வாறு உயர்ந்த சக்திகள் பெற்றார்கள்…? என்பதை
1.நீங்களே உங்களுக்குள் உணர்ந்து…
2.அறியாது புகுந்து தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகளை நீக்கிட முடியும் என்ற நிலையை
3.பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தான் இதையெல்லாம் உணர்த்துகின்றார்.

ஆனால் நான் அவரை அணுகிச் செல்லவில்லை. அவரே தான் எம்மை அடிக்கடி அணுகி வந்து கொண்டிருந்தார். அவர் அணுகப்படும் போது அவரிடமிருந்து விலகிச் செல்லும் நிலையே ஏற்பட்டது. அப்படி நான் விலகிச் சென்றாலும் அவரிடம் இருந்து என்னால் தப்ப முடியாத நிலையில் என்னை அணுகியே சில நிலைகளைச் சொல்வார்.

அதை எல்லாம் நான் கேட்ட பின் பித்தன் என்ற நிலையில் மந்திரங்கள் தந்திரங்கள் செய்து அதில் சிக்குண்டு தவிக்கின்றார்.
1.ஆக அவரிடம் நாம் சிக்கிவிட்டால் நமக்கும் இந்தக் கதி வந்துவிடும் என்று
2.அவரை அணுகாது நான் விடுபட்டுச் சென்று கொண்டிருந்தேன்.

இருப்பினும் அவர் விட்ட பாடில்லை.

அது சமயம் என் மனைவிக்குக் கடுமையான எலும்புருக்கி நோய் வந்தது. வந்தபின் ஒட்டன்சத்திரம் ஹாஸ்பிடல் சேர்த்தோம். ஆனால் அங்கே டாக்டர்களால் ஒன்றும் முடியாத நிலை ஏற்பட்டு அவர்கள் கூட்டிச் சென்று விடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

காரணம் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் கொடுத்த மயக்க மருந்து வேலை செய்யவில்லை. ஆகையினால் “ஒன்றும் செய்ய முடியாது” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

என்னுடைய மாமனாருக்கு ஒரே பெண் குழந்தை. வீட்டுக்கு மனைவியை நான் கூப்பிட்டு வந்த நிலையில் “இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற பின் மூர்ச்சையாகி” அவர் மரணமடைந்து விட்டார்.

பின் அதற்கு வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்தேன். என் மனைவி இன்றோ நாளையோ என்று ஜீவன் பிரியும் நிலையில் இருக்கின்றது. இத்தருணத்தில் பித்தரைப் போன்று இருந்த குருநாதர் இங்கே வருகின்றார்.

அவருடைய உணர்வுகள் என்னைக் கடுமையாகச் சாடுகின்றது. “இங்கே வா” என்று என்னைக் கூப்பிடுகின்றார்… நான் மறுக்கின்றேன்.

ஏனென்றால் மாமனார் இறந்த சூழ்நிலை வேறு விதமாக இருப்பதால் நான் அவரிடம் செல்ல மறுக்கின்றேன். ஆனால் அவரோ “நீ வந்து தான் ஆக வேண்டும்…” என்று போர் செய்யும் முறையில் வருகின்றார்.

சுற்றத்தார் அனைவரும் அங்கே இருக்கப்படும் பொழுது இவருடன் அடிக்கடி தகராறு செய்தால் மற்றவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசுவார்களே என்ற நிலையில் “சரி” என்று அணுகி அவருடன் சென்றேன்.

காபி வாங்கிக் கொடுத்தார் குடித்தேன் குடித்த பின்பு… இன்று உன்னை விடவே மாட்டேன் என்று கட்டாயப்படுத்துகின்றார். பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கும் நீர் இல்லாத தெப்பக்குளத்திற்குள் அழைத்துச் செல்கின்றார்.

அங்கே என்னுடைய வாழ்க்கை வரலாறு… என் இளமைப் பருவம்… சிறு வயதில் இருந்து நடந்த நிகழ்ச்சிகளை எல்லாவற்றையும் சொல்கின்றார்.
1.நான் உன்னைப் பல காலமாகப் பின் தொடர்ந்தே வருகின்றேன்.
2.என்னை விட்டு நீ பிரிந்து விட முடியாது… உன்னை விட்டு நான் அகன்றிட முடியாது என்று சொல்கின்றார்.

என் வாழ்க்கையை முழுவதும் சொல்லி உன் மனைவி இறந்துவிடும் நிலையில் இருக்கின்றது. ஆகையினால் நான் கொடுக்கும் இந்த விபூதியையும் எலுமிச்சம் பழத்தையும் உன் மனைவிக்குக் கொடு… எழுந்து நடப்பாள் நலமடைவள்…! என்று சொல்கின்றார்.

அவர் சொன்னது போன்று செய்த பின் என் மனைவி அதிலிருந்து மீண்டது. இரண்டு நாட்களில்… இடுப்புக்குக் கீழ் அசைவில்லாது இருந்த கால்களில் அசைவுகள் கிடைத்தது. அடுத்து எழுந்து உட்காரும் நிலையும் வந்தது… உணவு உட்கொள்ளும் நிலையும் வந்தது… அதன் நடமாடும் நிலைகள் வந்தது.

ஒரு மாதம் கழித்து குருநாதர் மீண்டும் எம்மைச் சந்திக்கின்றார் அவரைச் சந்தித்த பின் அவருடன் சென்றேன்.

இப்பொழுது எனக்கு டீ வாங்கிக் கொடு என்று என்னிடம் கேட்கின்றார். வாங்கிக் கொடுத்த பின் என்னை அழைத்துச் சென்று பல உண்மைகளை உணர்த்துகின்றார்.

ஒரு சமயம் என்னைச் சாக்கடை அருகிலே அமரும்படி சொல்கின்றார். கடைக்குச் சென்று காபி டீ வாங்கி வா என்று சொன்னார். அதை வாங்கிக் கொண்டு வந்து வைத்த பின் அங்கிருக்கக்கூடிய சாக்கடையில் இருந்து அள்ளிப்போட்ட குப்பைகளை அதிலே போடுகின்றார்.

அவர் டீ குடிப்பார் நான் காபி குடிப்பேன். சாக்கடையை அள்ளிப்போட்டு என்னை குடிக்கச் சொல்கிறார். நான் மறுக்கின்றேன்…! அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

நான் சொல்வதை எல்லாம் செய்கின்றேன் என்று சொன்னாயே இப்பொழுது ஏன் மறுக்கின்றாய்…? என்று மீண்டும் கேள்வி எழுப்புகின்றார்.

இருப்பினும் எனக்கு அந்த இடத்திலே சிரமம் ஏற்படுகின்றது அங்கே வருவோர் போவோரை எல்லாம் உற்றுப் பார்க்கின்றேன். இவரையும் பார்க்கின்றேன்… மற்றவர்களையும் பார்க்கின்றேன்.

சாக்கடை அருகில் அமரச் செய்து சாக்கடையும் அள்ளிப் போட்டுக் குடிக்கச் சொல்கின்றார்… வசமாகச் சிக்கிக் கொண்டேனே…! என்று தவிக்கின்றேன்.

காரணம்…
1.என் மனைவியை எழுப்பிய பின்… நான் சொல்வதை எல்லாம் செய்கின்றாயா…! என்று
2.சரி செய்கிறேன் என்று என்னிடம் வாக்கை வாங்கிக் கொண்ட பின் இப்படிச் செயல்படுத்துகின்றனர்.

சரி அதைக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வா. வரும் பொழுது முறுக்கு கடலைப்பருப்பு பொரிகடலை வாங்கி வா என்று சொன்னார்.

வாங்கி வந்த பின் சாக்கடைக்குள் கோடுகளைப் போடச் சொல்கின்றார். அவர் சொன்ன முறைப்படி கோடு போட்ட இடங்களில் முருக்கையும் கடலைப் பருப்பையும் பொரிகடலையும் போட்டேன்.

பன்றி அங்கே வருகின்றது. சாக்கடைக்குள் அமிழ்ந்திருக்கும் கடலைப் பருப்பை நுகர்ந்து எடுத்து முதலிலே உட்கொள்கின்றது. அடுத்து முறுக்கைச் சாப்பிடுகின்றது. கடைசியில் பொரிகடலையும் சாப்பிடுகின்றது.

சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை எண்ணாது
1.பன்றி எவ்வாறு அதிலிருக்கும் நல்ல உணவுகளை எடுத்துக் கொள்கின்றது…?
2.அதற்கு அந்த நுகரும் சக்தி எப்படி வந்தது…?
3.நல்லவைகளை எப்படி நுகர்கின்றது…? தீமைகளை எப்படிப் பிளக்கின்றது…?
4.அதனுடைய வலிமை எப்படிப்பட்டது…? என்பதை இங்கே உணர்த்துகின்றார்.

கடவுளின் அவதாரத்தை அங்கு அமர்ந்தே உபதேசிக்கின்றார். வராக அவதாரம் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய் என்று சொன்னார்.

ஓர் உயிரணுவின் தோற்றமும் பல நிலைகளிருந்து மீண்டு காத்திடும் உணர்வுகளை ஒவ்வொரு சரீரத்திலும் நுகர்ந்து நுகர்ந்து… பரிணாம வளர்ச்சியில் பன்றியாகப் பிறந்து மற்ற தீமைகளை பிளந்திடும் உணர்வாக அந்த சக்தியைப் பெற்றுப் பெற்று… கெட்டதை நீக்கிடும் வலிமை கொண்டு நல்லதை நுகரும் சக்தியும் வலுவான நிலை கொண்டு அதைப் பெற்று வளர்த்து எவ்வாறு இத்தகைய செயல்களைச் செயல்படுத்துகிறது…? என்று உணர்த்துகின்றார்.

1.பின் நல்லவைகள் அதற்குள் அதிகமாக நாற்றமான உணர்வுகள் தணிய
2.நாற்றமான உணர்வுகளுக்குள் நல்ல உணர்வின் வலிமை அதிகமாக
3.அந்த நாற்றம் தணிந்து இந்த நாற்றத்தை நீக்கிடும் அந்த உணர்வின் சத்து அதிகமாக விளைந்து உடலைப் பிளந்து
4.அதில் விளைந்த வித்தின் உணர்வின் சத்தை அது கவர்ந்து வெளிவந்த பின் பரசுராம் என்று
5.அந்தத் தத்துவப் பிரகாரம் சமப்படுத்தும் உடலாக மனிதனாக உருவாக்கியது நமது உயிர் என்ற நிலையை
6.இதைத் தான் கடவுள் என்ற நிலையில் புழுவிலிருந்து மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார்.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

கல்வி அறிவு அற்றவனாக நான் இருந்தாலும் குருநாதர் பதிவு செய்த உணர்வின் சக்தி அதை நான் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அன்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சி… கணக்கிலடங்காத நிலைகளையும் அவர் உணர்த்திதை மீண்டும் நினைவு கூறும் பொழுது அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நாமும் கவர முடிகின்றது.

உங்களுக்கு அதை உபதேசிக்கும் பொழுது நீங்கள் நுகர்ந்தாலும் எனக்குள் அது விளைகின்றது. சூரியனின் காந்த சக்தி கவரு போது கேட்போர் உணர்வுகளிலும் இது பதிவாகின்றது.

பதிவை மீண்டும் நினைவு கூர்ந்து எண்ணும் பொழுது அந்த மெய்ஞானிகள் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை எப்படி அகற்றினார்களோ அதைப் போன்று
1.தனக்குள் விளையும் இந்த உயர்ந்த உணர்வு கொண்டு தீமையை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குக் கிடைக்கும்
2.கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டு வருவது.

ஆகவே பொறுமையான நிலைகள் கொண்டு மகரிஷிகள் அருள் உணர்வலைகளை எண்ணி எடுத்துத் தனக்குள் வளர்த்துக் கொள்ளுமாறு எல்லோரையும் வேண்டுகின்றேன்.

ஊழ்வினையின் இயக்கங்கள்

 

இன்று விஞ்ஞான அறிவால் ஒன்றுமறியாத நாடாக்களில் முலாம்களைப் பூசி வைத்திருக்கின்றார்கள். மைக்கை நேர்முகமாக வைத்து அதிலே நாம் பேசும் பொழுது அதில் உள்ள காந்தப் புலன்கள் கவர்ந்து அதனை அப்படியே பதியச் செய்கின்றது.

இதைப் போன்று தான்
1.இயற்கையில் ஓர் உயிரணுவாக இருந்தாலும் சரி அணுவாக இருந்தாலும் சரி
2.இவைகள் அனைத்திலும் அதில் இருக்கும் காந்தப் புலனே கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது அது பதியச் செய்கின்றது.

மனிதனாக நாம் பிறந்திருப்பினும் நம் உடலில் இருக்கக்கூடிய எலும்புக்குள் மேக்னட் சக்தி உண்டு. புழுவிலிருந்து நாம் மனிதனாக வளர்ந்து இருப்பினும் அதனதன் சேர்த்துக் கொண்ட நிலையில் ஊழ்வினையாக அந்த உணர்வுகள் வளர்ச்சி பெற்று அதிலே வளர்ந்த உணர்வின் அணுக்கள் விளைந்துள்ளது.

நாடாக்களில் பதிவு செய்வது போல நமது எலும்புகளுக்குள் இருக்கும் மேக்னட் காந்தப் புலன் ஊழ்வினையாகின்றது.
1.இப்பொழுது யாம் பேசுவதைக் கூர்ந்து கவனித்தால் அது ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
2.பதிவான பின் தான் பேசியதை அது கவர்ந்து கொள்ளும்.
3.பின் ஆன்மாவாகக் கவர்ந்து அதிலிருந்து சுவாசித்து உயிரிலே பட்ட பின் அதனின் உணர்வலைகளை அறியச் செய்கின்றது.

அந்த நாடாக்களில் எவ்வாறு பேசிப் பதிவாக்கப்படுகின்றதோ இதைப் போல இப்பொழுது யாம் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தால் அது பதிவாகும். அதே சமயம்
1.வேறு அலுவல் காரணமாக “வேலைக்கு நேரமாகிவிட்டது” என்ற எண்ணத்தைச் செலுத்தி உங்கள் நினைவினை அங்கே பாய்ச்சினால்
2.அதனின் உணர்வலைகள் தான் உங்களை இயக்கும்… நான் பேசுவது பதிவாகாது.

உதாரணமாக ஒரு நண்பன் கடுமையாக நம்மை ஏசுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதை உற்று நோக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

உடலிலிருந்து வரக்கூடிய அவனின் உணர்வலைகளைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றிச் சுவாசிக்கும் பொழுது உயிருடன் ஒன்றி அந்த உணர்வுகள் இயக்கி உடல் முழுவதும் படர்ந்து அறியச் செய்கின்றது.

அதே போல்… இங்கே யாம் பேசும் அந்த உணர்வின் சக்தியை நேர்முகமாக இருந்து கேட்டறிந்தால் போதும். குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் உபதேசிக்கும் பொழுது
1.இன்றைய நிலைகளில் பாட நிலைகள் அல்லாதபடி
2.இது என்னமோ சொல்கின்றார் என்ற நிலையில்லாதபடி
3.தெய்வத்தை நாம் வணங்கி வரும் அதற்கு மாறான நிலைகளில் சொற்பொழிவாற்றுகிறார் என்று எண்ணாதபடி நீங்கள் கூர்ந்து கவனித்தால்
4.விநாயகர் தத்துவப்படி… இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறி வைத்திருக்கும் அதனுடைய மூலக்கருத்துக்களை அறிந்து கொள்ள முடியும்.

ஆற்றல் மிக்க நிலைகளை யாம் உபதேசிக்கும் பொழுது நீங்கள் பதிவு செய்து கொண்டால் அடுத்து நீங்கள் திரும்ப எண்ணும் பொழுது… நமக்கு முன் பரவி இருக்கும் ஆற்றல்மிக்க அருள் ஞானிகளின் சக்திகளை நீங்கள் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

விஞ்ஞான அறிவால் பல நிலையில் கொண்டு ஒலி/ஒளிபரப்பு செய்யக்கூடிய பல நிலைகளையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.

விஞ்ஞானக் கருவியின் துணை கொண்டு மற்றொரு பக்கம் அதனின் சுவிட்சை இயக்கினோம் என்றால் அங்கிருக்கக்கூடிய ஆண்டெனா காற்றிலிருக்கக் கூடியதைக் கவர்ந்து டிவி மூலமாக ஒளிபரப்பு செய்கின்றது… திரைப்படமாகக் காட்டுகின்றது.

இதைப்போல இந்த மனித வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களைப் பலருடன் உறவாடப்படும் பொழுது
1.“எதை ஆழ் கருத்தாக நாம் பதிவு செய்கின்றோமோ… அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் பதிவாகி விடுகின்றது…”
2.பின் அதனின் நினைவலைகளைக் கொண்டு வரும் பொழுது கண்ணின் நினைவலைகளுக்கு வருகின்றது.

டிவிக்கு ஆண்டென்னா எப்படி முக்கியமோ இதைப் போல நமது கண் நமக்கு ஆண்டென்னாவாக இருக்கின்றது.

நாம் நினைவுபடுத்திப் பார்க்கப்படும் பொழுது நமக்கு முன் பரவிப் படர்ந்திருக்கும் இதற்கு முன் உறவாடிய உணர்வுகள் நமக்குள் அது பதிவு உண்டு.
1.நண்பர்கள் ஆனாலும் எதிரிகள் ஆனாலும் அதிலே பதிவுகள் உண்டு.
2.அது பதிந்த நிலைகள் கொண்டு நாம் பேசிய உணர்வலைகள் இங்கே படர்ந்து கொண்டே இருக்கும்.

ஆனால்… டிவி மற்ற இன்றைய எலெக்ட்ரானிக் கருவிகள் மூலமாகப் பதிவு செய்யும் நிலைகள் வேறு. மனித உணர்வுகள் இயற்கையின் இயக்கத்தின் சக்தி அதன் மூலமாக பதிவு செய்யும் நிலைகள் வேறு.

இவ்வாறு படர்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையை நண்பன் எதிரியாக கடும் சொற்களைச் சொன்னால் அதைப் பதிவு செய்து கொண்டால் திரும்ப எண்ணினால் அவன் எங்கோ இருப்பான் என்றாலும்
1.அதே உணர்வுகள் நமக்குள் கவர்ந்து நம்மை அறியாமலேயே கோபமும்
2.அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைகளும் நமக்குள் வருகின்றது.

நாம் ஒரு விதையைப் பூமியில் பதித்து விட்டால் தன்னுடைய உணர்வின் சத்தால் காற்றிலிருந்து தன் உணர்வினைச் சுவாசித்து அதனின் சத்தாக விளைகின்றது. அந்த வித்து அதன் இனமான செடியாக வளர்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் ஒரு மனிதனுடன் உறவாடினால் அந்த உணர்வின் வித்து நமக்குள் பதிவாகி… அதுவும் வளர்கிறது.
1.தாவர இனங்கள் பூமிக்குள் இருந்து எப்படித் தன் உணர்வின் மணங்களை அது கவர்கின்றதோ இதைப் போல
2.நமக்குள் பதிவான அந்த மனிதனுக்குள் விளைந்த அந்த உணர்வின் வித்து நமக்குள் பதிவாகின்றது.
3.இப்படிப் எண்ணிலடங்காத குணங்களும் எண்ணிலடங்காத உணர்வுகளும் நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

அப்படிப் பதிவாகி இருக்கப்படும் போது தன் தன் இனத்தின் நிலையில் அதனின் உணர்வின் தன்மை இயக்கும். அப்படி இயக்கப்படும் பொழுது
1.நாம் ஒருவருக்கொருவர் பேசி உறவாடிய உணர்வுகளைக் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றும்.
2.ஆன்மாவாக மாற்றப்படும் பொழுது அதிலே எது அதிகமாக இருக்கின்றதோ அது முன்னணியில் வந்துவிடும்.

உதாரணமாக… குழம்பு வைக்கப்படும் பொழுது காரம் புளிப்பு துவர்ப்பு இனிப்பு இவைகளைப் போட்டுச் சுவைமிக்கதாக ஆக்கினாலும் அதில் காரத்தைக் கூட்டிவிட்டால் காரமாகத் தான் அது இருக்கும்… உப்பு அதிகமானால் கையிப்பு அதிகமாகிவிடும்.

இதைப் போன்று தான் நமக்குள் எண்ணிலடங்காத குணங்கள் பதிவாகி இருந்தாலும் ஊழ்வினையாகின்றது. அதிலே நாம் எதை அதிகரித்துக் கொள்கின்றோமோ அந்த உணர்வின் சத்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே அது எந்த குணத்தின் அடிப்படையிலோ “கோபம் என்றால் கோபம் வருவதும்… சலிப்பு என்றால் சலிப்பு வருவதும்…” இப்படி மாறி மாறி எத்தனையோ வந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு நாம் ஊழ்வினையாகப் பதிவு செய்தது எல்லாம்
1.நமது மனம் எப்பொழுது சோர்வடைகின்றதோ அதிலே நஞ்சான உணர்வு முன்னெழுந்து
2.அதனின் உணர்வின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்திவிடும்.

இதை நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் அன்று அகஸ்தியன் கணங்களுக்கு அதிபதி கணபதி என்று பெயரிட்டு நமக்கெல்லாம் உணர்த்திச் சென்றான்.

ஆகவே நாம் நமக்குள் கணங்களுக்கு அதிபதியாக எதை ஆக்க வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் அனைவரும் நுகரும் சக்தி கொண்டவர்கள். சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் கடுமையான பகைமையாகி விட்டால் அதனால் வெறுப்படையும் நிலையே வருகின்றது.

அந்த வெறுப்புடன் “நாசமாகப் போடா…!” என்று சொல்லப்படும் பொழுது என்ன நடக்கின்றது…?

இது அவன் செவிகளில் படும் பொழுது
1.இந்த உணர்வுகள் அவன் தொழிலுக்குப் பாதகத்தை உண்டாக்கி
2.வாகனங்களில் செல்லும் பொழுது எதிர்பாராது விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றது.

ஆகவே… இன்றைய மனித வாழ்க்கையில் நாம் எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும்
1.பிறருடைய வேக உணர்வுகள் வந்து தாக்கி விட்டால்
2.நம்முடைய சிந்தனையைச் சீர்குலையச் செய்து விபத்துக்களுக்கே அழைத்துச் செல்கின்றது.

அல்லது அதே போல் சில விபரீதச் செயல்களையும் நம்மை அறியாமலே செயல்படுத்தத் தொடங்கி விடுகின்றது.

அந்தச் சாப அலைகள் பாய்ந்து விபரீதச் செயல்களைச் செயல்படுத்துவதோடு மட்டுமல்லாதபடி நம்மையே குற்றவாளியாக ஆக்கும் நிலையையும் உருவாக்கி விடுன்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்தெல்லாம் விடுபட காலை துருவ தியானத்தைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து
2.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் செருகேற்றிக் கொள்ளுங்கள்.

அப்படி வலுவாக்கிக் கொண்ட பின் இந்த வாழ்க்கையில் வந்த பிறருடைய தீமைகள் எதுவாக இருந்தாலும் அதைப் பதிவாக்கப்படும் பொழுது
1.அந்தத் தீமையான உணர்ச்சிகள் நமக்குள் தூண்டாது
2.நாம் நுகர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி அதை அடக்கிவிடும்

நம்மை யார் யார் எல்லாம் கேலி செய்தார்களோ… அவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி அவர்கள் பெற வேண்டும்
2.அவர்கள் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்
3.எனக்குத் தீங்கு செய்யும் நிலையிலிருந்து விடுபட வேண்டும்
4.உண்மையின் உணர்வை அவர்கள் அறிய வேண்டும்
5.உண்மையின் செயலாக மாற வேண்டும்
6.உண்மையை உணர்த்தும் சக்தி அவர்கள் பெற வேண்டும்
7.உண்மையின் செயலிலேயே அவர்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்த பின் நம்மைப் பார்த்து எண்ணும் பொழுதும் சரி அல்லது சார்புடையோருக்கும் சரி
1.நம் பேரைச் சொன்னாலே இந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஊடுருவிச் சென்று
2.யார் தீங்கு செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் ஞானத்தை ஊட்டும்.
3.அதாவது… நாரதன் கலகப்பிரியனாகி.. அங்கே உண்மையை வெளிப்படுத்தி அதை உணர்த்தும் சக்திகளாக வருகின்றது.

காவியங்களில் இதைத் தெளிவாக்கியுள்ளார்கள் நம் ஞானிகள்.

ஆகவே நாரதன் (துருவ நட்சத்திரத்தின் ஒளி) என்ற இந்த உணர்வை வழிப்படுத்தினால்… நம்மை அறியாது புகுந்து…
1.நமக்குள் தீங்கு விளைவிக்கும் செயல்களிலிருந்து விடுபடும் உணர்ச்சிகளை ஊட்டி…
2.நம் எண்ணமே நமக்குள் தீமைகளை உருவாக்கும் நிலையிலிருந்து முழுமையாக விடுபடச் செய்யும்.

மனித வாழ்க்கையில் அருள் ஞானிகளின் உணர்வை இப்படி நாம் தொடரப்படும் பொழுது அதைப் பற்றுடன் பற்றுகின்றோம்…. வாழ்க்கையில் வரும் தீமைகளையும் துன்பங்களையும் குறைகளையும் பற்றற்றதாக மாற்றுகின்றோம்.

மகிழ்ந்து வாழும் சக்தியையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியையும் நாம் பெறுகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோர்ட்டுகளில் பணம் கொடுத்துச் சிலர் கேஸ்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள். அந்த மாதிரி நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

காலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் எண்ணங்களைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அதை வலுவாக நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி எடுத்துக் கொண்ட பின்…
1.எனது சார்புடைய கட்டுகளை வக்கீலோ அல்லது நீதிபதியோ எடுக்கும் பொழுது
2.அவர்களுக்குள் சிந்திக்கும் திறன் வந்து…
3.உண்மையின் உணர்வை உணர்ந்து…
4.அதன் வழியில் தீர்ப்புக் கூறும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எந்த நீதிபதி முன்னாடி வாதங்கள் நடக்கின்றதோ அவர்ளுக்கு இந்த உணர்வைப் பாய்ச்சிப் பாருங்கள். அதிகாலையில் இவ்வாறு செயல்படுத்த வேண்டும்.

1.இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்து… அவருக்குள் உண்மையின் உணர்வை உணர்த்தும்.
2.அதன் பின் அவரை அறியாமலே பேசுவார்கள்
3.பணம் வாங்கியிருந்தாலும் கூட அவர்கள் அறியாமலே நல்ல தீர்ப்பைக் கூறும் நிலை வரும்.

வக்கீல்கள் எல்லாம் கொக்கி போட்டே பேசுவார்கள். எதிர் வக்கீல் அப்படி வாதாடிக் கொண்டிருந்தாலும் நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவருக்குள் பாய்ந்த பின் – நாரதன் கலகப் பிரியன் ஆகின்றது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவருக்குள் ஊடுருவிய பின்
2.அவர் தன்னை மறந்து உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார்.

நீங்கள் நாரதரைப் பற்றிய காவியங்களில் படித்திருப்பீர்கள். ரொம்பவும் நாசூக்காகச் சொல்லித் தான் அந்த நாரதன் உண்மையை வரவழைப்பான்.

அதனால் தான் “நாரதன் கலகப் பிரியன்… கலகமோ நன்மையில் முடியும்..!” என்று சொல்வது.

தீமைகளை அகற்றும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம். வாழ்க்கையில் வந்த நஞ்சு கொண்ட உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது அந்தத் துருவ நட்சத்திரம்.

ஆகவே..
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவர் நுகர்ந்தாலும்
2.தனக்குள் அறியாது சேர்ந்த உணர்வினைப் பிரித்துத் தவறு என்ற நிலைகளை உணர்த்தும்.

இந்த உணர்வின் தன்மையைக் கூட்டப்படும் பொழுது… நம்மைப் பார்த்து அந்த உணர்வுகளை நீதிபதி எண்ணும் பொழுது அவரை அறியாமலே அந்த நல்ல தீர்ப்பினைக் கூறிவிடுவார்.

செல்வத்திற்கு அடிமையானவர்கள்… பணத்தின் மீது குறிக்கோளாக வைத்துப் பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் தீர்ப்பினையே கூறுவார்கள். அவர்களிடம் நியாயமான… உண்மையான தீர்ப்பு வராது…!

இன்று சத்தியமும் தர்மங்களும் “செல்வத்தில் தான்” இருக்கின்றது.

ஆனால் நாம் அந்த அருள் செல்வத்தை வைத்து… அருள் ஞானத்தை வைத்து… நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களும் தவறில்லாத நிலைகளில் நடந்து கொள்வதற்கு…
1.தவறு செய்வோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
2.அவர்களும் உண்மையை உணர வேண்டும்… நல் வழியில் நடக்கும் செயலாக்கத்திற்கு வரவேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்ச வேண்டும்.

இப்படி ஒரு பழக்கம் வரப்படும் பொழுது மற்றவர்கள் நம்மை எண்ணும் பொழுது
1.அவர்களை அறியாது இயக்கும் உணர்வினைப் பிளந்து
2.உண்மையின் உணர்வை உணர்த்தும் சக்தியாக மாறும்

இந்தச் சக்தி உங்கள் அனைவருக்குமே உண்டு…!

நாரதனை “முனி” என்று காட்டியது ஏன்…?

 

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் இவைகளில் இருந்து வெளிப்படும் ஒளி அலைகளைத் தான் (துருவ நட்சத்திரத்தின் அணு) நாரதர் என்று காரணப் பெயர் வைத்தார்கள். ரிஷியின் மகன் நாரதன்… அவன் ஒரு முனிவன்.
1.முனி என்பது வலு கொண்டது… எதற்கும் அடங்காதது
2.விஷத்தின் தன்மை அணுகாத நிலை கொண்டது…
3.விஷத்தை ஒடுக்கும் நிலைகள் பெற்றது என்ற நிலை கொண்டு தான் முனி என்றும்
4.வீரிய நிலைகள் பெற்றவன் என்றும் அன்று பெயர் வைத்தார்கள் “அந்த அணுவிற்கு…”

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளி வரும் அந்த உணர்வலைகளை யாரெல்லாம் நுகர்கின்றார்களோ… இந்த மனித வாழ்க்கையில் தன் ஆசையின் நிலைகளைக் கலைத்து… தன்னை அறியாது ஆட்டிப்படைக்கும் தீமையான செயல்களை நீக்கிவிட்டு… “கலகப் பிரியன்” என்று அது நன்மையிலே முடியும்.

மனித வாழ்க்கையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டாலும் நம்மை அறியாது அதிலே சிறு தடை ஏற்படும் போது நாம் எண்ணியபடி அவன் வளர்ந்து வரவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம்.

வேதனை என்ற அந்த விஷமான உணர்வுகள் நமக்குள் வந்து கலக்கமாகிச் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்யும் இந்த நிலையை அவன் இப்படிச் செய்தான் இப்படிச் செய்கின்றானே என்ற இந்த ஏக்க உணர்வு கொண்டு செயல்படுத்துவோம்.

அதே சமயத்தில் பிறருக்கு உதவி செய்யும் போது… தான் எண்ணியபடி காசைக் கொண்டு வந்து அவர்கள் கொடுக்கவில்லை என்றால் அவரை எண்ணி நேரத்தில் உதவி செய்தேன் இப்படிக் காலம் கடத்துகிறார்கள் என்று ஏசி வேதனைப்படுவோம்.

இதைப் போன்ற மனித வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகள் “பற்றுடன் நமக்குள் வரும் பொழுது… பாசத்திற்கு எதிராக வரும் பொழுது” வெறித்தனமாகக் கூடி அந்த வெறியான உணர்வுகளைக் கூட்டிடும் இந்த நிலையை
1.அந்த நாரதன் என்ற உணர்வினை நுகரும் பொழுது அதை எல்லாம் பிரித்து விட்டு
2.நமக்குள் ஓங்கி நிற்கும் ஒளியாக… நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிடும் திறன் கொண்டது.

அதற்காக வேண்டித் தான் ரிஷியின் மகன் நாரதர் என்று துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் அணுவிற்குப் பெயரிட்டு அழைத்தார்கள் சாதாரணமாக நாம் புரிந்து கொள்வதற்கு…!

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அதை நுகரும் திறனுக்காக உங்களுக்குள் அந்த நினைவின் உணர்வுகளை உந்தச் செய்வதற்கும் அந்த நினைவுகளை எண்ணும் பொழுது அந்த ரிஷியின் சக்தியை நீங்கள் பெறுவதற்கும் தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

நன்மை செய்ய வேண்டும் என்ற நிலையில் பிறர் படும் துயரத்தை நுகர்ந்து பரிவுடன் பண்புடன் பண்புடன் அவருக்கு உதவி செய்தாலும் நீங்கள் நுகர்ந்த வேதனையான உணர்வுகள் உங்களுக்குள் வருவதை உங்கள் நல்ல குணங்களை அழித்திடும் அந்த உணர்வை
1.அதை அழித்திட்ட தனக்குள் அடக்கிட்ட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நுகர்ந்தால் அதை மாற்றி
2.உதவி செய்த நல்ல பண்புகளைக் காத்துப் பிறரைக் காத்திடும் நிலை கொண்ட உணர்வாக விளைய வைத்து
3.என்றும் நிலையான நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் 16 என்ற நிலையை நாம் அடைய முடியும்.

இதைத்தான் குருநாதர் பல வகைகளிலும் காட்டினார்.

பித்தரைப் போன்று அவர் வாழ்ந்தாலும் தன் உடலுக்கு அந்த உணர்வுகளை (பித்தான) கொடுக்காது தன் உடலுக்குள் மெய் ஒளியின் உணர்வுகளை உணர்த்திக் காட்டி அதன் வழி செயல்பட்டார்.

எத்தகைய நல்ல துணிகளை அவருக்குக் கொடுத்தாலும் பைத்தியக்காரனைப் போன்று “அதைக் கிழித்துக் காலில் கட்டிக் கொள்வார்… ஒவ்வொரு கட்டாக கட்டி விடுவார்…”

என்ன சாமி…? புது துணிகளை எல்லாம் இப்படிக் கிழித்துக் கட்டி விட்டீர்கள்…! என்று கேட்டால்
1.கடும் விஷம் ஏறுகிறதப்பா…! அதைத் தடைப்படுத்தப் புது துணியைக் கிழித்து நான் கட்டிக் கொள்கின்றேன்
2.இல்லையென்றால் விஷம் ஏறிவிடுகின்றது என்று இப்படித்தான் உணர்த்தினார்.

ஒவ்வொரு எண்ணங்களுக்கும் அதில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகளைக் காட்ட ஒவ்வொரு நிறத்திலே துணியைக் கட்டுவார். அதே போன்று தாவர இனங்களுடைய சக்தியை அதனுடைய திறனை அறிவதற்கு அது எப்படி விஷத்தை முறியடிக்கிறது…? எப்படி எல்லாம் தனக்குள் அந்த ஆற்றலை கவர்ந்து கொள்கிறது…? என்பதையும் காட்டுவதற்காக காலிலே துணிகளைக் கட்டுகின்றார்.

ஆனால் அந்த நேரத்தில் அவரிடம் அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் உடலை விட்டுச் சென்ற பின் மலைக் காடுகளுக்குள் நான் செல்லப்படும் பொழுது அவரை நினைவு கொண்டு துணிகளை எல்லாம் ஏன் அப்படிக் கிழித்துக் கட்டினார்…? என்று எண்ணும் போது
1.காலில் கட்டிய கிழிந்த ஆடையும்… அவர் நினைவலைகளாக நின்று அதை நான் சுவாசிக்கும் பொழுது
2.அந்த உண்மைகளை நுகர முடிந்தது… தீமைகளிலிருந்து நான் விடுபட முடிந்தது.

அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் காட்டிற்குள் அவன் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்… அவன் அன்னை தந்தையினுடைய உணர்வுகள் அவனுக்குள் எப்படிச் சென்றது…? தீய விளைவுகளிலிருந்து விஷமான ஜந்துக்களிடமிருந்து தனக்குள் வரும் பய உணர்வுகளிலிருந்து எவ்வாறு மீண்டான்…?

அவன் பெற்ற அந்த ஆற்றல்கள் அவன் அமர்ந்த இடங்களில் இந்த உணர்வலைகள் படர்ந்துள்ளது. அங்கே சென்று அதை நுகரும் பொழுது நுகர்வோர் உள்ளங்களில் அது எதைச் செயல்படுத்துகிறது…? என்ற நிலையை எனக்கு உணர்த்துவதற்காகத் தான் குருநாதர் காலிலே இது போன்று பல கட்டுகளைக் கட்டி இருந்தார்.

12 வருட காலம் காட்டிற்குள் நான் அலையப்படும் பொழுது திகைத்து நான் எந்த நிலையைச் செய்வது…? என்று உணவுக்காக நான் தவித்துக் கொண்டிருக்கும் நிலை வந்தது. உணவே இல்லாது காட்டிற்குள் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…?

எதை எதையோ சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். இருந்தாலும் அரிசிச் சோறு சாப்பிட்டுப் பழக்கப்பட்டது… அந்த நினைவு வரும் பொழுதெல்லாம் துயரங்களே ஏற்படும்.

அதைப் போன்ற நினைவுகள் வரும் பொழுது குருவைத் தான் எண்ணுவேன். அவர் உணர்வினை நுகரும் போது மெய் உணர்வுகள் எனக்குள் ஈர்க்கப்பட்டு
1.அன்று வாழ்ந்த அகஸ்தியன் சென்ற பாதையும் அவன் விஷத்தை முறிக்க எடுத்துக் கொண்ட நிலையும்
2.அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் காற்றிலே படர்ந்து இருப்பதையும் பூமியிலே இறுகிப் பதிந்திருப்பதையும்
3.அந்த இடங்களில் நின்ற பின் அந்த உணர்வின் நினைவலைகள் எனக்குள் வருகிறது என்ற நிலையை உணர முடிந்தது.

மெய் ஞானியான அகஸ்தியன் சென்ற பாதையும் அவன் உணர்வின் ஆற்றலையும் உங்களுக்கு இப்பொழுது சொல்கிறேன் என்றால் அது குருநாதர் காட்டிய வழி கொண்டு தான்.

அவர் உடலை விட்டுச் சென்ற பின் இதையெல்லாம் அறியக்கூடிய நிலையும்… நுகர்ந்தறிந்து… எனக்குள் என்னை அறியாது வந்த தீயவினைகளை அடக்கியதும்… “மெய் உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு கொண்டு ஓங்கி வளர்ந்த அந்த உணர்வின் எண்ண அலைகளே” இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றது “நான் அல்ல…!”

1.குருவை நான் நினைக்கும் போதெல்லாம் அந்த உணர்வின் தன்மை உங்களுக்குப் போதிக்கும் தன்மையாக வருகின்றது.
2.அதை நீங்கள் கூர்ந்து கேட்டு நுகரும் போது உங்களுக்குள்ளும் இது பதிவாகின்றது.

ஆகவே… குருநாதர் எனக்கு எப்படி அந்த உயர்ந்த ஆற்றல்களைப் பெறும்படி செய்தாரோ… அதற்குண்டான உபாயங்களைத் தெரியப்படுத்தினாரோ… அதே வழியில் தான் உங்களுக்கும் இப்பொழுது அந்த உயர்ந்த சக்தியைப் பெறுவதற்குண்டான தகுதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்.

அதன் வழி நீங்கள் எண்ணி ஏங்கினால் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பெற்று அவர்களைப் போன்ற உயர்ந்த நிலையைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ… அப்போது உடலில் இருந்து வரக்கூடிய மணமே உங்களுக்கு எதிரியாக மாறி விடுகின்றது அதை அடிபணியச் செய்யும் நிலைக்கே “என்னுடைய (ஞானகுரு) ஆசீர்வாதம்…”

துன்பத்தை விளைவிக்கும் நோயோ… துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ… அதெல்லாம் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அருளாசி கொடுப்பதை நீங்களும் அப்படியே எண்ணிப் பெற்றால் அந்த ஞானிகளுடைய அருள் உணர்வுகள் உங்களுக்குள் படர்ந்து துன்பங்கள் அகலும்.

உதாரணமாக மாம்பழம் வாங்க வேண்டும் என்று விரும்பினால் நுகர்ந்த உணர்வு உங்களை அந்தக் கடைக்கு அழைத்துச் செல்கிறது. அதே போல்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என் உடல் நோய் நீங்க வேண்டும்… துன்பம் நீங்க வேண்டும்
3.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… செயல் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
4.அது உங்களுக்குள் கிடைக்கப் பெறும்.

அதற்குப் பதிலாக சாமி…! என் துன்பம் என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது… “நீங்கள் தான் கடவுளாக இருக்கின்றீர்கள்…” என்று என்னை வணங்கினீர்கள் என்றால் “உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கின்றீர்கள்” என்று தான் அர்த்தம்.

நான் கொடுத்த உபதேசம் அனைத்தும் வீணாகிவிடும்.

இவ்வளவு தூரம் பெரியவர் உயர்ந்த கருத்துக்களைச் சொல்கின்றார் என்று என்னை உயர்த்தி விட்டு… உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள்
1.உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்… உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்த சக்தியைத் தாள் பணியச் செய்யுங்கள்.

எனக்கு குருநாதர் காட்டிய நிலைகள் அதுதான்…!

ஒருவர் துன்பப்படுகிறார் என்றால் “நம் சொல்” அவரைத் தீமையிலிருந்து மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்… என்று எண்ணும் பொழுது நாம் முதலில் நலமாகின்றோம் நம் சொல்லும் செயலும் நல்லதாகிறது. நம் சொல் மற்றவர்கள் உள்ளங்களை மகிழச் செய்கின்றது.

அந்த மகிழ்ச்சியால்
1.மற்றவர்கள் நம்முடன் இணைந்து செயல்படும் நிலையாக
2.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிபடுத்துவதும்
3.தடையின்றி தொழில் நடப்பதும் தடையற்ற நிலையாக நமக்குள் எல்லாமே உருவாகின்றது.

இந்த அடிப்படையில் நீங்கள் எம்மிடம் ஆசி வாங்கினால் அது உங்களைப் பின் தொடர்ந்து எப்போதுமே உறுதுணையாக அமையும்.
1.உங்களைக் காக்கும்… உங்களுக்குள் உயர்வை ஊட்டும்
2.மெய் ஒளியின் தன்மையைப் பெறச் செய்யும்… நீங்கள் அருள் ஒளி பெறுவீர்கள்.

ஆக… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; நலமும் வளமும் நாங்கள் பெற வேண்டும்; எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்; எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும்; நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்; எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் நல்ல உள்ளங்கள் வளர வேண்டும் என்ற
1.இத்தகைய உணர்வுகளை எண்ணினால் இதுவே உங்களுக்கு
2.”எம்முடைய ஆசியாகக் கிடைக்கின்றது அருள் ஞான வித்துக்களாக…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாதாரண நிலையில் இன்று உடலை விட்டுப் பிரிந்தவர்கள் அடுத்தவர்கள் உடலில் பேயாக ஆடுவதைப் பார்க்கலாம்… அருளாடுவதையும் பார்க்கலாம்… துன்பத்தை விளைவிப்பதையும் காணலாம்.

இந்த உடலில் எதை விளைய வைத்தோமோ இறந்தபின் இன்னொரு உடலுக்குள் சென்று அதைத் தான் அங்கே விளைவிக்கச் செய்ய முடியுமே தவிர குழந்தையாகப் பிறக்க முடியாது.
1.இன்றைய சூழ்நிலையில் இறந்தவர்கள் மீண்டும் மனிதனாகப் பிறப்பதற்குண்டான வழி இல்லை.
2.காரணம் காற்று மண்டலமே நஞ்சாக மாறி விட்டது.

மீண்டும் மனிதனாக வரவேண்டும் என்றால் ஆடாகவோ மாடாகவோ சென்று… இன்னொரு மனிதனின் உடலுக்குள் சென்று வந்தால் தான் முடியும்.

ஆடு மாடு நாய் என்று எத்தனையோ செல்லப் பிராணிகளை வளர்க்கின்றோம். “என் கண்ணுக்குட்டி” என்று அன்புடன் பழகுகின்றோம்.

ஆனால் அது திடீரென்று இறந்து விட்டால் “ஐய்யய்யோ… நான் ஆசையாக வளர்த்த கன்று இறந்துவிட்டதே…!” என்ற இந்த ஏக்கம் நமக்குள் வரும் பொழுது அதனுடைய உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடும். வந்த பின் நாம் உடலில் மனித உணர்வை ஈர்த்து வளர்த்து… கருவாகி குழந்தையாக உருவாகி அப்படித்தான் மீண்டும் மனிதனாக வர முடியும்.

நாயை அன்புடன் வளர்க்கின்றோம்… நான் சொன்னதை எல்லாம் கேட்கின்றது… செல்லமாக நான் வளர்க்கிறேன் என்று சொல்லலாம்.

ஆனால் இறந்தபின் செல்லமாக வளர்த்த நாய் இறந்து விட்டதே…! என்று ஏங்கினால் அந்த ஆன்மா நம் உடலின் ஈர்ப்புக்குள் வந்துவிடும். நாம் சோறு போட்டு வளர்த்த நாயெல்லாம் அதே ஏக்கமாக இருக்கும்.

யார் உணவை அன்புடன் கொடுத்தார்களோ அதே ஏக்கத்திலே தான் இருக்கும் போட்டவர்கள் இல்லை என்றால் அது இறந்துவிடும்.
1.வேறு எங்கேயாவது சென்று உடலை விட்டுப் பிரிந்தாலும்
2.யார் சோறு போட்டார்களோ அந்த உடலுக்குள் வந்து மீண்டும் மனிதனாகப் பிறக்கும்.

ஆனால் நாம் மனிதர்கள் என்ன் செய்கிறோம்…? எத்தனையோ சந்தர்ப்பங்கள் எத்தனையோ காலகட்டங்களில் நம்மை அறியாது உடலை விட்டு உயிர் பிரிகின்றது.

பிரிந்தாலும் பாசத்துடன் வாழ்ந்த நிலையில் நம்முடைய நினைவுகள் கடைசியில் எங்கே செல்கின்றது…?

எட்டுப் பிள்ளைகள் இருக்கின்றது… ஏழு பேர் அதிலே பிழைத்துக் கொள்வார்கள் ஒரு பையன் சிரமப்படுகின்றான்… கஷ்டப்படுகின்றான்… அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று வேதனையை எடுத்து அந்தப் பையன் மீது நினைவு அதிகமாக இருந்தால் இறந்தபின் அவன் உடலுக்குள் தான் செல்லும்.

அங்கே சென்று இன்னும் கொஞ்சம் வேதனையை வளர்த்து அவனையும் மண்ணுடன் மண்ணாக்கி அவனை வீழ்த்தத்தான் இந்த ஆன்மா உதவும்.

இன்னும் கொஞ்சம் அதிகமான விஷத்தன்மையைத் தானும் பெற்று தன் குழந்தையும் பெறச் செய்ய முடியும்.
1.அங்கே சென்று வேதனையை விளைவிக்கத்தான் முடியும்…
2.அவனைக் காக்கவே முடியாது… மனித உடலுக்குள் விளைய வைத்த இந்த உணர்வுகள் இப்படித்தான் இயக்கும்.

இதை எல்லாம் நாம் வடிகட்ட வேண்டும்…!

ஒவ்வொரு குணத்திற்குள்ளும் வேதனையான உணர்வுகள் அடைபட்டுக் கிடைக்கின்றது. அந்த வேதனையை நீக்கும் உணர்வின் சக்தியாக ஞானிகளின் அருள் சக்திகள் உங்களுக்குள் இப்பொழுது நிரப்பப்பட்டுக் கொண்டுள்ளது.

நான் கொடுக்கக்கூடிய ஞான வித்தை வளர்க்கும் விதமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு பத்து நிமிடவாவது எடுத்துப் பழகுங்கள்.
1.எப்பொழுது சிரமங்கள் வருகின்றதா வேதனை வருகின்றதோ துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம்
2.மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்துக் கொண்டே இருந்தால் வேதனைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக “வாழ்க்கையே தியானமாகின்றது…”.

இப்படித்தான் சிறுகச் சிறுக வளர்த்துக் கொண்டு வர முடியும்…!

நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… மகிழ்ச்சி உங்களுக்குள் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த உபதேசமே அமைகின்றது.

ஆகவே நீங்கள் அதே பிரகாரம் எண்ணினால் உங்களுக்குள் இது ஓங்கி வளர்ந்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் செயல் அனைத்தும் புனிதமும் பெறும் உங்கள் பார்வையும் நல்லதாகும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நீங்கள் எண்ணி எடுத்தாலே போதுமானது.
2.உங்களுக்குள் அது தெளிவை ஊட்டிக் கொண்டே இருக்கும்.

குருநாதர் எனக்குள் இன்னல்களை ஏற்படுத்தி அதிலிருந்து மீண்டிட ஆற்றல்களைக் கொடுத்தார். ஆக…
1.ஆற்றல் மிக்க சக்தியாக இருந்தாலும் அதை ஆக்க ரீதியிலே எப்படி நீ பயன்படுத்த வேண்டும்
2.ஆற்றல் மிக்க சக்தியை நீ பெற்றாலும் அந்தச் சக்தியின் வழித் துணை கொண்டு
3.தனக்குள் ஆற்றல்மிக்க எண்ணத்தின் ஒளி கொண்டு வரும் பொழுது
4.”எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தியாக நீ எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று
5.காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் எனக்குக் காட்டினார்.

அதைப் போன்று தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் எல்லாமே துஷ்ட மிருகங்கள் போன்று தான் உடலுக்குள் இயங்கிக் கொண்டுள்ளது. “அதை எல்லாம் மாற்றுவதற்குண்டான சக்தியாகத்தான்” இப்பொழுது ஊட்டிக் கொண்டு வருகின்றோம்.

இந்த உடலை விட்டு நாம் சென்றால் நிலையான ஒளிச் சரீரமாக நாம் மாற வேண்டும்… அது தான் நிலையானது…!

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளை “நமக்கு முன் மலை போல் குவியச் செய்ய வேண்டும்”

 

அன்று ஞானிகள் எவ்வாறு செயல்பட்டார்கள்…? அவர்கள் வழியில் எந்த வினைகளை நமக்குள் சேர்க்க வேண்டும்…? என்பதை குருநாதர் காட்டினார்.
1.அன்று அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தீமையை நீக்கும் சக்திகளை எப்படி எடுத்தாரோ…? அதைப் போல
2.சந்தர்ப்பத்தால் துன்பப்பட்டு வருவோருக்கு மெய் உணர்வுகளை உணர்த்தி… அருள் ஞானிகள் அருள் வித்துக்களை அவர்களுக்குள் பதியச் செய்.
3.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கும்படி செய்… அந்த உணர்வுகளை அங்கே வளரச் செய்
4.அவர்களை அறியாது வந்த இருளை நீங்கச் செய்
5.அவர்களுக்குள் அது வளர்ந்து அதனால் மகிழ்ந்து உறவாடுவதை நீ பார்
6.அந்த மகிழ்ச்சியான உணர்வை உனக்குள் எடுத்துக் கொள்.
7.அந்த நிலையை நீ உருவாக்கி மகிழ்ச்சியான சொல்களை நுகர்ந்து உன் உடலுக்குள் செலுத்திவிடு…! என்று குருநாதர் காட்டினார்.

நீங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். உங்களை அறியாது சேர்ந்த விஷமான உணர்வுகள் நீங்கி இருள்கள் நீங்கி மெய் ஒளிகள் பெற வேண்டும் என்று “குருநாதர் காட்டியபடி யாம் செய்து கொண்டிருக்கின்றோம்…”

உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் எண்ணும் பொழுது அவர்கள் மூலம் சப்தரிஷி மண்டல ஒளிகளை நாம் பெற முடிகின்றது… வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடிகின்றது.

உங்களுக்குள் அந்த நினைவின் எண்ணங்கள் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்குத் தான் பௌர்ணமி தியானத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலம் சென்றடைந்து என்றும் 16 என்ற நிலை அடைந்து ஒளிச் சரீரமாக அவர்கள் பெற வேண்டும் என்று “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து… உந்தித் தள்ள வேண்டும்…”

அதற்காகத் தான் யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் ஆற்றல் ஒவ்வொரு உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்து அந்த உணர்வின் உணர்ச்சிகளை ஓங்கி வளரச் செய்துள்ளோம். அனைவரும் சேர்ந்து ஒரே எண்ணத்தில் ஏங்கப்படும் பொழுது தான் “அந்த மகா ஞானிகள் ஆற்றலைப் பெற முடியும்…”

ஏனென்றால்
1.மகரிஷிகள் எந்த ஒரு மனிதனுடைய ஈர்ப்பிற்குள்ளும் சிக்காமல் தப்பிச் சென்றவர்கள்.
2.அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகளை இழுக்கக்கூடிய வலு இழந்தவர்கள் தான் சாதாரண மனிதர்கள்.

இருந்தாலும் சிறு துளி பெரு வெள்ளம் போன்று எல்லோருடைய எண்ணங்களையும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது அது வலுவடைந்து பெரும் வெள்ளமாக அமைகின்றது.

மழையினால் ஏற்படும் வெள்ளம் குப்பை செத்தைகளை அடித்துச் செல்வது போல
1.நாம் எண்ணக்கூடிய அந்த ஒவ்வொரு ஞானிகளுடைய எண்ணங்களும் சிறுகச் சிறுகப் பதிவாகி
2.இந்த எண்ணங்கள் அனைத்தையும் அவர்கள் பால் ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வலைகள் வளம் பெற்று
3.நமக்கு முன் நிற்கும் அசுத்த உணர்வுகளை… விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை அகற்றச் செய்யும்.

பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பருப்பை எப்படி நுகர்ந்து எடுக்கின்றதோ அதைப் போல நாம் அனைவரும் சேர்ந்து இந்த உணர்வின் நினைவாற்றலை விண்ணிலே ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது அந்த மாக ஞானிகளின் உணர்வலைகள் இங்கே நமக்கு முன் குவிகின்றது. செத்தை குப்பை என்ற விஷத் தன்மைகளைப் பிளந்து அப்புறப்படுத்துகின்றது.

ஆக…
1.அந்த அருள் ஞானிகளுடைய சக்திகளை அவர்களை ஒத்த நிலைகள் நாம் எண்ணும் பொழுது அது இங்கே குவிக்கப்பட்டு
2.அவரவர்கள் எண்ணிய அளவுக்குத்தக்க நமக்கும் சிறிதளவு பங்கு கிடைக்கின்றது.
3.நம் உடலுக்குள் அது வளரும் தன்மை பெறுகின்றது.
4.அதை மீண்டும் எண்ணும் பொழுது எந்த நேரத்திலும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

அதே சமயத்தில் நம் மூதாதையர்கள் அவர்கள் தவம் இருக்கவில்லை என்றாலும் வரம் வாங்கவில்லை என்றாலும் அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் உண்டு.

நாம் அனைவரும் ஒத்த உணர்வு கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று “இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது… அந்த ஒளி அலைகளுடன் அது மிதந்து அந்த விண்ணின் ஆற்றலில் நம்மால் சுழல வைக்க முடியும்…!”

இப்படித்தான் குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.

நமக்காக வேண்டி பாடுபட்ட அந்த நல்ல உள்ளங்கள் தன்னை அறியாது சேர்ந்த இருளான நிலைகளில் இருந்து விடுபட இம்முறைகள் தான் கடந்த காலங்களில் ஞானிகள் காட்டிய நிலைகள். ஆனால் பிற்காலங்களில் இது மறைந்து விட்டது.

இன்று மனிதனுடைய எண்ணங்கள் முழுமையாக அழியும் இத்தருணத்தில் அது மீண்டும் இங்கே கிளர்ந்து எழுகின்றது. குருநாதர் எம்மிடம் சொன்னது…
1.அந்த ஞானிகளின் அருளாற்றலை உனக்குள் ஓங்கி வளரச் செய்து
2.உன்னை நாடி வருவோர் (எண்ணுவோர்) அனைவருக்கும் மகரிஷியின் அருள் ஒளி படர வேண்டும் என்று ஏக்க உணர்ச்சிகளைச் தூண்டி
3.அவர்கள் துன்பங்களிலிருந்து விடுபடச் செய்து அந்த மெய் ஒளியின் மகிழ்ச்சியான நிலைகள் வெளிப்படுவதை
4.நீ நுகர்ந்து அந்த விண்வெளியின் ஆற்றலை நீ பெறு.
5.இதுதான் உனக்கு நான் கொடுக்கின்ற வரம்…! அதைத்தான் நீ வளர்க்க வேண்டும் என்று குருநாதர் காட்டினார்.

ஆகவே நீங்கள் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்ற இந்த இச்சையில் நான் எண்ணி ஏங்கிய உணர்வுகள் “என் உடலுக்குள் கிரியை ஆகிச் சொல்லாக வெளிப்பட்டதும்… என் உடலுக்குள் அந்த உணர்வுகள் கிரியை ஆகி அது இயங்கியதும்… அந்த ஞானத்தின் வழியிலே தான்…”

குருநாதரை நான் எண்ணும் பொழுதெல்லாம்… குரு வழியிலேயே அவர் காட்டிய அருள் ஞானம் எனக்குள் நான் எடுத்துக் கொண்ட இச்சையில் “இன்றும் விளைந்து கொண்டிருக்கின்றது…”
1.அந்த ஞானத்தின் சொல் தொடராக வெளிப்படுகின்றது.
2.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போதும் அதைச் சுவாசிக்க நேர்கின்றது.
3.அருள் வித்தாக அதன் சத்தைப் பெறும் சக்தியாக உங்களுக்குள் விளைகின்றது.

அதற்காக வேண்டித் தான் பொறுமையுடன் பொறுப்புடன் ஏங்கி… ஒவ்வொரு நாளும் அந்த அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். உங்களை அறியாது வந்த இருள் நீங்க வேண்டும் என்ற ஆசையில் தான் மணிக் கணக்கில் “திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பச் சொல்வது…”

காரணம்…
1.ஒவ்வொரு நொடியிலும் நல்லதையே எண்ணுவோம்…! ஆனாலும் அடுத்த கணம் சங்கடத்தை எண்ணுவோம்…!
2.இது போன்ற நிலைகள் நமக்குள் சேராத வண்ணம் தடுப்பதற்குத் தான்
3.“திரும்பத் திரும்ப நீங்கள் வளர வேண்டும்” என்று அந்த இச்சையை நான் வெளிப்படுத்துகின்றேன்.

நமது குருநாதர் உபதேசித்து உணர்த்திய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்து உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் வலுக் கொண்டதாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். உயிருடன் ஒன்றும் அனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) அனுபவரீதியிலே தான் எல்லாவற்றையும் அறியும்படி செய்தார்.
1.என் (ஞானகுரு) குடும்பத்தையே இன்னலுக்கும் ஆளாக்கினார்.
2.இந்த உணர்வு – தன்னை ஒட்டி வரப்படும் பொழுது தான் அனுபவ ரீதியில் யாம் அறிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு நொடியிலேயும் இந்த உணர்வுகள் உலகில் எப்படி இயங்குகின்றது…? உலக மக்கள் தன்னை அறியாது எப்படி இன்னல்கள் படுகின்றனர்..? எப்படி அவதிப்படுகின்றனர்…? என்ற நிலையை உணர்த்துவதற்குத்தான்
1.இருபது வருடம் என்னைக் கால் நடையாகவே இந்தியா முழுவதும் நடக்கச் சொன்னார்…
2.மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அந்தக் குடும்பங்களில் நடந்த நிகழ்ச்சிகளைக் காட்டி
3.பல அனுபவங்களைப் பெறச் செய்தார் குருநாதர்.

அறிந்த உண்மையின் தன்மையில் பார்க்கும் போது சந்தர்ப்ப பேதத்தால் எத்தனையோ பேர் அவதிப்படுகின்றனர். அதிலிருந்து மீண்டிடும் நிலையாக மெய் ஞானிகள் காட்டும் அருள் வழியில் நீங்கள் நடந்தால்
1.உங்கள் எண்ணமே உங்கள் துன்பத்தைப் போக்கும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும் என்று தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் காட்டிய மெய் வழியைக் கடைப்பிடித்து… அதை நீங்கள் அனுபவித்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்… அதைப் பற்றுடன் பற்றி உங்களை அறியாது வரக்கூடிய துன்பங்களைப் போக்க முடியும்…! என்று தான் சொல்கின்றேன்.

இதை ஏற்றுக் கொள்வார் இல்லை…!

சாமியைப் (ஞானகுரு) புகழ் பாட முடிகின்றது பாத நமஸ்காரம் செய்யத்தான் விரும்புகின்றார்கள். இது வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை.

1.அருள் ஒளியைப் பெறுங்கள்…
2.உங்களுக்குள் தீமைகள் வருவதை அடக்கிப் பழகுங்கள்…
3.உங்களால் முடியும்…! என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.

தாய் தந்தையரை உயர்த்தினால் தான் நமக்கு உயர்வு

 

விநாயகனைக் கும்பிடும் பொழுது தாய் தந்தையரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்
2.அவர் அருளால் என்னை அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஏனென்றால் அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் தாய் தந்தையர்களை எண்ணும் பொழுது அவர்களை அங்கே இணைக்கச் செய்கின்றது.

தாய் தந்தையர் முதுமை அடைந்து உடலை விட்டுச் சென்று விட்டால் அந்த உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்கள் என்றும் 16 என்ற நிலையில் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று “நாம் உந்தித் தள்ள இந்த நினைவு கொண்டு அங்கே செலுத்த முடியும்…”

அதைத் தான் கந்த புராணத்தில் காட்டப்பட்டது.

நாரதன் கனியைக் கொண்டு வந்து சிவனிடம் கொடுக்கப்படும் பொழுது சிவன் சொல்கின்றான். கலகத்தை மூட்டுவதற்காக இங்கே நீ இதைக் கொண்டு வந்திருக்கின்றாயா… என்ன…? சரி சொல் எது என்று பார்க்கின்றேன்…? என்று நமக்குத் தெளிவுபடுத்த புராணத்தில் இப்படிக் காட்டுகின்றார்கள்.

இந்த உலகை யார் வென்று வருகின்றார்களோ அவர்களுக்கு இந்தக் கனி என்று சொல்லப்படும் பொழுது
1.ஆறாவது அறிவு என்ற திறனின் தன்மை எண்ணத்தைப் பலவாறு செலுத்தி மகிழ்வாகனா…!
2.நான் எதையுமே மகிழ்ச்சியாக படைக்கும் திறமை கொண்டு உலகைச் சுழன்று வந்து விடுவேன் என்ற அகம் அங்கே வளர்கின்றது.
3.ஆனால் தாய் தந்தையரை மறந்து விடுகின்றது.

விரிவடைந்த எண்ணங்கள் கொண்டு தன் ஞானத்தாலே தன் எண்ணத்தைக் கொண்டு சக்தியின் திறனை எண்ணினாலும்… அங்கு நாரதன் காட்டுகின்றான் “நீ இந்த உடலில் சேர்க்க வேண்டிய வினை எது…?”

அன்னை தந்தை உடலில் இருந்து வினைக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றாய். ஆகவே பேரண்டமும் பெரும் உலகத்தின் தன்மையும் அவர்கள் தான்.

ஆகவே இந்தக் கனி எப்படிப் பிஞ்சாக இருந்து துவண்டு அது காயாகும் பொழுது புளித்து கனியாகும் போது எப்படி இனிப்பாகின்றதோ இதைப் போல
1.அன்னை தந்தையர் கனியின் தன்மை பெற வேண்டும்
2.அவர்கள் முழுமையின் தன்மை அடைய வேண்டும்
3.மெய் உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று மெய் உணர்வினைப் பெற்று
இந்த மனித உடலில் உயிரின் தன்மையைக் கனியாக்க வேண்டும்.

அப்படி என்றுமே சுவை கொண்டதாக விண்ணிலே திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வந்த மணம் தான் இந்த நாரதன்.

உன் அன்னை தந்தையை நேசித்து…
1.அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில்
2.இந்த வினையை உனக்குள் சேர்த்துக் கொள்…! என்று தெளிவுறக் கந்த புராணத்தில் காட்டியுள்ளார்கள்.

அன்னை தந்தையர் முதலில் நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். அவர்கள் நமக்காகப் பட்ட துயரங்களில் இருந்து அவர்கள் மீண்டு என்றும் பதினாறு என்ற நிலை பெற வேண்டும் என்று அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு அந்த ஞானி சென்ற அருள் வழியினை நுகர்ந்து தனக்குள் அதைச் சேர்த்து
1.அன்னை தந்தையருக்கு இதை ஆராதனையாகவும் அவர் ஏக்க அலைகள் உயர வேண்டும் என்று நினைத்து
2.இந்த உணர்வினை இணைத்துக் கொண்டால் தான் இந்த உடலை விட்டு நாம் சென்றாலும்
3.என்றும் அழியாத நிலைகள் கொண்டு ஒளியான சரீரத்தைப் பெறும் நிலை வருகின்றது.

அன்னை தந்தையரின் உணர்வைத் தனக்குள் வினையாகச் சேர்த்து இந்த மனித உடலை உருவாக்கிய அவர்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று “கனியாகப் பெற்ற ஞானிகளின் அருள் சத்தைத் தனக்குள் கனிந்திடும் நிலையாக எண்ணி” அதே கனியின் தன்மையைத் தாய் தந்தையரைப் பெறச் செய்ய வேண்டும் என்று உணர்த்துகின்றார்கள்.

தாய் தந்தையை விநாயகர் சுற்றி வந்து கனியைப் பெற்றார் என்பதைத் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் ஆறாவது அறிவு விரிவடைந்த தன்மை கொண்டு
1.எதையும் செயல்படுத்தி விடுவோம் என்ற உணர்வை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது
2.பொருளாக்கத்தை இழந்து எங்கோ பரந்த மனம் கொண்டு போய் விடுகின்றது.

ஆக நமக்கு முன் படைக்கும் சக்தி கொண்ட தாயின் உயிரும் தாயின் உடலும் தாய்க்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியும் மனிதனை (நம்மை) உருவாக்கி நல்வழி காட்டியது என்ற நிலையைத் தெளிவுற உணர்த்துகின்றார்கள்.

அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி… அந்த மகரிஷியின் அருள் ஒளி கொண்டு இந்த இருள் சூழ்ந்த உலகை வென்று மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் நின்று “என்றும் பதினாறு என்ற நிலையினை அனைவரும் அடைய வேண்டும்” என்று காட்டப்பட்டது.

விநாயகரை எண்ணும் பொழுது மகரிஷியின் அருள் சக்தி என் தாய் தந்தையர் பெற வேண்டும்… தாய் தந்தையரின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்… அவருடைய அருளால் எனக்குள் வரும் இருளை நீக்கி… மெய் ஞானிகள் அருள் வழியில் என்றும் நிலையான ஒளியின் சரீரம் பெறும் தகுதியைப் பெற வேண்டும் என்று ஏங்கித் தன் உணர்வுக்குள் அதைச் சேர்த்து இப்படிப் பூஜிக்கும் நிலையைச் செய்தார்கள்.

ஆதியிலே அகஸ்தியன் தன் குழந்தைப் பருவத்திலிக்கும் போது
1.தன்னை அறியாமலே தாய் தந்தையரின் ஈர்ப்பின் ஆற்றல்களைப் பெற்று விண்ணை நோக்கி ஏகி
2.வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று ஞானம் பெற்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்றான்.
3.அதே வழியில் தான் நாமும் விண் செல்ல வேண்டும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கருவிலிருக்கப்படும் பொழுது ஒரு தாய் பாசத்தால் அன்பால் பண்பால் பரிவால் ஒரு குழந்தை கடும் நோயால் அவதிப்படுவதௌ உற்றுப் பார்க்கின்றது. அடப் பாவமே…! இந்தச் சிறிய வயதில் இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணுகின்றது.

ஏனென்றால் கருவுற்றிருக்கும் காலத்தில் தாய்க்குக் குழந்தைப் பாசம் அதிகமாக வரும். கர்ப்பமாகி விட்டாலே அந்த தாயின் சுவாசமே வேறு விதமாக இருக்கும். அந்தப் பாசம் என்ற உணர்வுகள் தோன்றும்.

நோயுற்ற அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்த பின் கண்களால் பார்த்த பின் தாய் உடலில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிகின்றது.

ஆனால் அது கருவிலே விளையப்படும் பொழுது சிறுகச் சிறுகச் சேர்ந்து பிறந்த பின் குழந்தைக்கும் இது நோயாக மாறுகின்றது. நோயாக மாறிய பின் தாய்க்கும் அந்த வினையாகின்றது. குழந்தையைப் பார்க்கச் செல்வோருக்கும் இதிலே விளைந்தது (நோய்) அங்கே வருகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அதைப் போல் தான் பண்டைய காலத்தில் அகஸ்தியன் அவன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது தாய் நுகர்ந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல்கள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின்
1.அவனுடைய அபூர்வ செயலை அவனுடன் வாழ்ந்த சகாக்களும் உற்றுப் பார்க்கின்றனர்… நுகர்கின்ரனர்.
2.அப்பொழுது அகஸ்தியன் உடலில் விளைந்த பேராற்றல்கள் அவர்களுக்குள்ளும் விளைகின்றது.
3.இப்படி அக்கால மக்கள் அகஸ்தியனுடன் வாழ்ந்து அவன் வழியில் சென்றவர்கள் தான்
4.சப்தரிஷி மண்டலத்தில் அதிகமாக இருக்கின்றார்கள்.

அதன் பின் சென்றது அரசர்களாக ஆன பிற்பாடு ஒன்று இரண்டு போனது அபூர்வமாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் குருநாதர் இதை எல்லாம் காட்டிய பின் காந்திஜி இராமகிருஷ்ண பரமகம்சர் இராமலிங்க அடிகள் போன்றோரை விண் செலுத்தினோம்.

இருந்தாலும் அந்த ஞானிகள் மீது பற்று கொண்டோர் எல்லாம் அவர்களிடத்தில் ஏதோ கிடைக்க வேண்டும் என்று தான் சென்றார்கள். அவர்கள் கண்ட உண்மையின் உணர்வைப் பெற வேண்டும்… அந்த ஞானத்தைப் பெற வேண்டும்…! என்று யாரும் கேட்கவில்லை.

1.மகானிடம் சென்றால் இந்த வாழ்க்கைக்கு உதவும்
2.மகானைப் போய்ப் பார்த்தால் நம் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான்
3.இன்று வரையிலும் சந்திக்கச் செல்கிறார்கள்.

ஆனால் பிழைப்புக்குக் கிடைக்க வேண்டும்…! என்று சென்றாலும் “ஞானம் இல்லை…” என்றால் வந்த பணத்தைச் சீராக்க முடியுமா என்றால் முடியாது…!

பணமே வந்தாலும் ஞானம் இல்லை என்கிற பொழுது என்ன நடக்கிறது..?

1.ஆசை அதிகமாகின்றது
2.அதிலே ஏதாவது பிசகானால் இப்படி ஆகிவிட்டதே…! என்று மறுபடியும்
3.இதைப் பெற வேண்டும் அதைப் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டப்பட்டு… அந்த ஆசை நம்மை “விடுவதில்லை…!”

இதை மட்டும் பெற்றால் பரவாயில்லை என்போம். பின் இது நன்றாக வந்தது… இதை வைத்து இன்னொன்றைப் பெருக்கலாம்…! என்று சொல்லி அதிலே நஷ்டமானால் வேதனை தான் மிச்சமாகின்றது.

வேதனை வந்த பின்
1.முதலில் வந்த செல்வமும் போய் விடுகிறது…
2.அதற்குபின் தொழிலைச் சீராக்கி வளர்வதும் போய்விடுகிறது..

இரண்டுக்கும் சேர்த்து வேதனை என்ற அணுக்களை வளர்த்து வளர்த்து… உடலிலே நோயை உருவாக்கத்தான் நாம் தயாராகின்றோம்.

நோயாக ஆன பின்… நான் இப்படி எல்லாம் செய்தேனே.. இப்படி எல்லாம் வந்தேனே…! எல்லாம் போய்விட்டதே..! என்று புலம்புவார்கள்…!

மனிதனுடைய இன்றைய வாழ்க்கை இப்படித்தான் இருகின்றது.

உயிரினங்கள் எல்லாம் “நாங்கள் சாப்பிடுவதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டது” என்பார்கள்

 

மலேசியா போன்ற சில நாடுகளில் போதைப் பொருள்களை அவர்கள் உபயோகித்தாலும் “அதிக போதை வேண்டும் என்பதற்காக” நல்ல பாம்பை வைத்து அதன் நாக்கை நீட்டச் சொல்லி நாக்கிலே கொட்டச் செய்து இதைப் போன்று விஷத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் மனிதர்களும் உண்டு.

இங்கே குரங்கை நாம் வணங்குகின்றோம். ஆனால் சில நாடுகளில் உயிருடன் இருக்கும் குரங்கை அதன் மேலே இருக்கும் ஓட்டைத் தட்டி விட்டு மூளையைக் குழப்பி சில பொடிகளைப் அதற்குள் போட்டு “ஸ்ட்ராவை வைத்துச் சர்பத் சாப்பிடுவது போன்று உறிஞ்சிச் சாப்பிடுகிறார்கள்…”

மனிதனாகப் பிறந்தும் மிருக உணர்வு கொண்டு இப்படி இருக்கும் நிலைகள் உண்டு.

ஜப்பானை எடுத்துக் கொண்டால் விஞ்ஞான அறிவில் அவர்கள் வளர்ந்தவர்கள் தான். அங்கே “கரப்பான் பூச்சிகளைப் பிடித்து அதை எண்ணெயில் போட்டு வறுத்து ரசித்துச் சாப்பிடுபவரும் உண்டு…”

இது போன்ற உணவுகளை உட்கொள்வோர் எல்லாம் உடலுக்குப் பின் எங்கே செல்வார்கள்…?

அவர்கள் வணங்கும் ஆண்டவனை எந்த மதத்தின் அடிப்படையில் எடுத்துக் கொண்டாலும் ஆண்டவனுக்காகச் சில உயிர்களைப் பலி கொடுத்து அவைகளை எங்களுக்காகப் படைத்தான் என்ற நிலையில்…
1.உனக்கு (ஆண்டவனுக்கு) அதைக் கொடுத்துவிட்டு “உன் பெயரைச் சொல்லி நான் உட்கொள்கிறேன்” என்று சாப்பிடுகின்றார்கள்.
2.ஆனால் அப்படிச் சாப்பிட்ட உணர்வு கொண்டு அந்த மணம் இவர்கள் உடலில் சேருகின்றது.

மிருகங்கள் அனைத்துமே விஷத்தின் தன்மையைத் தன் உடலாக ஏற்றுக் கொண்டது. அப்படிப்பட்ட உயிரினங்களை உட்கொள்ளும் பொழுது இந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவிவிடும்.

அந்த மிருகங்கள் செய்யும் கொடூரத் தன்மையை அது மற்ற விஷமானவற்றை எப்படி உட்கொள்கின்றதோ இதைப் போன்ற உணர்வின் சத்து உடலுக்குள் வரும் பொழுது “அந்த உணர்ச்சிகளைத் தூண்டி”
1.நம்மைக் கேட்காமலேயே காற்றிலிருந்து அதே உணர்வுகளை நுகர்ந்து அது வளர்ச்சியாகி
2.அந்த விஷத்தின் தன்மை கொண்ட செயலை உருவாக்கி அதையே ரசித்து உட்கொள்ளும் நிலை வருகின்றது.

இதைப் போன்ற இரக்கமற்ற நிலைகள் கொண்டு எந்தெந்தக் கடவுள்களை மதத்தின் அடிப்படையில் வணங்கினாலும் அதைப் போல எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலுக்குள் சேர்ந்து… விஷமான உயிரினங்களை உட்கொண்டோர் அனைவரும் உடலை விட்டுச் சென்ற பின் அது போன்ற உயிரினமாகத் தான் பிறப்பார்கள்.

விஷப் பூச்சிகள் விஷத்தைக் கொட்டித் தன் உணவை உட்கொண்டு அதனால் எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றதோ இதைப் போன்று மனித வாழ்க்கையில் பிறிதொருவர் வேதனைப்படுவதைக் கண்டு ரசித்து அதைச் சுவாசிப்போம் என்றால் அந்த விஷத்தின் தன்மை நல்ல உணர்வுகள் அனைத்தையும் அழிந்துவிடும்.

விஷத்தின் ஈர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கும் நிலையில் மனிதனில் விளைய வைத்த இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி அது மணமாகச் சேரும்.

உயிராத்மாவில் எந்த மணத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ உடலை விட்டுப் பிரிந்த பின்… அந்த மணத்தின் நிலைகள் கொண்டு இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருந்தாலும்
1.அதற்கு ஒத்த விஷ ஜந்துக்களின் உயிரும் இந்த உயிரின் தன்மையும் அந்த உணர்வுகள் ஓங்கி வளரப்படும் பொழுது
2.அதனுடைய ஈர்ப்புக்குள் சென்று அந்த உடலின் தன்மையை அதனுடைய சத்தைக் கவர்ந்து கருவாகி முட்டையாகி
3.முட்டைக்குள் அதனின் சத்தை எடுத்து இந்த உயிர் அதனின் உடலாக இது உருவாக்கி மனிதனைப் பாம்பாக ஆக்கிவிடும்.

ஆகவே… எத்தகைய நிலைகளைச் செய்தாலும் மற்றவர்களிடம் மறைத்து விடலாம். ஆனால்
1.உடலுக்குள் உயிராக இருக்கும் ஈசனிடம் எதை நாம் எடுக்கின்றோமோ அதை நமக்குள் விளைய வைத்து
2.அந்த உணர்வின் மணத்தைத் தாங்கி அதையே அடுத்த உடலாக்கி அப்படிப்பட்ட நிலையாக உருவாக்கிவிடும் உயிர்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்… நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ விஷங்களை நீக்கி வந்த நிலையில்… மனித உடலில் விஷத்தை முழுமையாக அடக்கி ஒளியின் சிகரமாக மாற்றும் திறன் பெற்றவர்கள் மகரிஷிகள்.

விண்ணிலே படர்ந்து வரும் விஷத்தின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து அதை அடக்கி நிலையான ஒளிச் சரீரமாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலிருந்து இருந்து வெளிப்படும் ஒளி அலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
1.நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து கொண்டே இருக்கின்றது அது நிறைந்து கொண்டே இருக்கின்றது.
2.ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருளால் அதை நுகர்ந்தால் நாமும் அந்த மகரிஷிகள் அடைந்த எல்லையை அடையலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனித வாழ்க்கையில் தவறு செய்யாமலே சாப அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்பதைக் குருநாதர் சொன்ன நிலைகளில் ஒவ்வொன்றையும் பரீட்சித்துப் பார்த்ததைத் தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒரு உடலிலிருந்து வரக்கூடிய தீய வினைகள்… சாப வினைகள்… எப்படி வருகின்றது…? ஒரு தலை முறைக்கு இரண்டு தலை முறைக்கு அது எப்படிப் பாதிக்கின்றது..? என்று நேரடியாகக் காட்டுகின்றார்.

1.ஆனால் அவர்களுக்கு நீ இந்தப் பாதிப்பைப் போக்குகின்றாய் என்று வைத்துக் கொள்வோம்.
2.அதனால் அவர்களுக்கு அங்கே மகிழ்ச்சியாகும்.
3.அந்த உணர்வுகள் நல்லதாக ஆன பின் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள்.
4.இருந்தாலும் நீ சொல்லும் ஞான வழியினை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்.
5.மீண்டும் அவர்கள் செல்லும் வழியிலேயே சென்று “தவறு செய்யத் தொடங்குவார்கள்…”
6.அந்தத் தவறின் தன்மை வந்தது… அன்றைக்கு நல்லதாக ஆனது.
7.ஆனால் மீண்டும் இன்றைக்கு ஆகவில்லையே…! என்று ஏங்கிக் கொண்டு
8.நீ சொல்லும் ஞானிகள் உணர்வை அவர்கள் எடுக்கவே மாட்டார்கள்…! என்று
9.ஈஸ்வரபட்டர் எமக்கு இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்.

உடனடியாக ஒரு தரம் நல்லதாக ஆனால்… அதைப் பக்குவப்படுத்தி அந்த மெய் ஞானிகளின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் அடுத்து வரும் தீமைகளை மாற்றியமைத்துக் கொள்ள உதவும்.

அதைப் போல் குரு அருளால் நலமாக வேண்டும் என்று ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆனாலும் பதிவு செய்யும் பொழுதே என்ன செய்கின்றார்கள்…?

எங்கெங்க…? என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! பணம் வாங்கிச் சென்றவன் தர மாட்டேன் என்கிறான்…! என்று என்னிடமே திருப்பிச் சொல்கிறார்கள்.

ஒரு நோயாளிக்கே நல்ல வாக்கினைக் கொடுத்தாலும் அவர்கள் சார்புடையோர்… (அதாவது அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தவர்கள்)
1.“இவருடைய கஷ்டத்தை ஒன்றும் சொல்ல முடியாது…!” என்று இப்படி ஞாபகப்படுத்துகின்றார்கள்.
2.யாம் சொல்லும் ஞான உணர்வுகளை அவர்களைக் கேட்க விடாதபடி இடைமறித்து
3.இப்படிச் சொல்லகூடிய உணர்வுகள் தான் வருகின்றது.

அருள் வாக்கினைப் பதிவு செய்து… நினைவுக்குக் கொண்டு வந்து அவர்களை மீட்க வைக்கலாம்…! என்று நான் (ஞானகுரு) எண்ணினாலும் முடியவில்லை.

ஆனால் இதை எல்லாம் அறிந்து கொள்ள எத்தனை சிரமப்பட்டேன்…? எத்தனை அவஸ்தைப்பட்டிருப்பேன்…! காட்டுக்குள் அழைத்துச் சென்று தான் குருநாதர் இதை எல்லாம் அனுபவபூர்வமாகக் காட்டினார். நேரத்தில் சாப்பிடுவதற்கு சோறு (உணவு) இல்லை.

காட்டுக்குள் சென்றால் குருநாதர் என்ன செய்வார்…?

கத்திரிக்காய்… மிளகாய்… மாங்காய்… என்று மோரில் ஊற வைத்ததை அவர் எடுத்துக் கொடுப்பார். அதிலே அவர் எத்தனையோ பக்குவம் செய்து வைத்திருப்பார். உப்பு காரம் என்று தனியாக எதுவும் எடுத்துக் கொண்டு போவதில்லை.

இதிலேயே தான் எல்லாம் இருக்கும்.

ஒரு சிறிய டப்பா தான். அதிலே சிறிதளவு அரிசியை எடுத்துப் போட்டு நீரைக் கொஞ்சம் விட்டு அதனுடன் மோரிலே ஊற வைத்த ஒரு மிளகாய் அல்லது கத்திரிக்காயைப் போட்டு வேக வைக்கச் சொல்வார்.

பின் அது எல்லாம் வெந்த பின் குருநாதர் ஒரு அளவாகத் தண்ணீரை ஊற்றுவார். கஞ்சி மாதிரிப் பக்குவம் வரும். ஆளுக்குக் கொஞ்சம் குடித்துக் கொள்வோம்.

இது எப்படிடா… இருக்கின்றது…? என்பார் குருநாதர்.

நன்றாக இருக்கிறது சாமி…! என்பேன்.

ஒரு லிட்டர் அரிசியை வைத்து நானும் குருநாதரும் காட்டிற்குள் “இரண்டு மாதம் சாப்பிட்டுக் காலம் தள்ளியிருக்கின்றோம்…!” என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வேறு ஒன்றையும் அங்கே சாப்பிட விடமாட்டார். சாம்பாரும் அது தான்… காயும் அது தான்…! எல்லாம் அந்தக் கஞ்சியைக் குடித்துக் கொள்ள வேண்டியது தான்,

குடும்பம்… தொழில்… உணவு… எல்லாவற்றையும் விட்டுத்தான் யாம் இத்தனையும் தெரிந்து கொண்டு வந்தோம். அப்படிப் பெற்ற ஞான வித்தை உங்களுக்குள் பதிய வைக்க எத்தனையோ வழிகளைச் செய்கிறோம்.

ஆனால் அதை எத்தனை பேரால் எடுத்து வளர்க்க முடிகிறது…? தனக்குள் வந்து தீமைகளையும் சாப அலைகளையும் போக்க முடிகிறது…?

1.சாமி செய்வார்…
2.குருநாதர் செய்து தருவார்.. என்ற எண்ணத்திலேயே தான் இருக்கின்றார்களே தவிர
3.யாம் பதிய வைக்கும் ஞான வித்தை வளர்ப்பார் இல்லை…!

சாமி எதை எதையோ சொல்கிறார்… இது எல்லாம் தனக்குத் தேவையா…? என்று சிலர் எண்ணுவார்கள்

 

வாழ்க்கையில் நாம் நல்லதே எண்ணி இருந்தாலும் பிறிதொரு தவறான உணர்வுகளை… அல்லது பிறர் தவறு செய்யும் உணர்வுகளை நாம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுது அவர் உடலிலே விளையும் உணர்வை நாம் நுகர நேருகின்றது.

நுகர்ந்த உணர்வுகளை உயிர் உணர்த்திக் காட்டினாலும் அந்த உணர்வின் சத்து நமக்குள் பதிவாகி விடுகின்றது. இதைப் போன்று தான்
1.இப்பொழுது நாம் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது இந்த உணர்வின் தன்மையை நுகர நேருகின்றது.
2.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் படர்கின்றது… அப்படிப் பரவிய உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி விடுகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் தவறு செய்யாமலேயே உங்கள் உணர்வு இயக்கும் நிலையில்… அதாவது பிறிதொரு உணர்வுகள் உங்கள் உடலுக்குள் புகுந்து அது இயக்கும் நிலையில் “நீங்கள் அதைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு அதை வழிகோல் செய்வதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்…”

ஏனென்றால்…
1.இதையெல்லாம் சொல்லி நாம் கேட்டறிந்து என்ன செய்யப் போகின்றோம்…?
2.சாமி சுருக்கமாகச் சொன்னால் போதுமே என்று சிலர் எண்ணுவார்கள்.
3.நான் சுருக்கமாகச் சொல்வதற்கில்லை…!

நீங்கள் விரிவாகத் தெரிந்து கொண்டாலும் பாட நிலையாகத் தான் கற்றுக் கொள்ள முடியும்… உட்பொருளைக் காண முடியாது.

உதாரணமாக… கல்வியில் படிக்கும் பாட நிலையை எந்த மனது கொண்டு படிக்கின்றீர்களோ அந்த மனதைக் கொண்டுதான் அது முழுமையாக வரும். ஆக… தன் வீட்டில் எந்த அளவிற்கு மன நிம்மதி இருக்கின்றதோ அந்த உணர்வு முன்னணியில் இருக்கும்… நன்கு படிக்க முடியும்.

ஆனால் வீட்டிலே சிறிது சஞ்சலப்பட்டு அந்த உணர்வுகள் வந்து கொண்டேயிருந்தால்… இன்ஜினியரிங் படிக்கக் கூடியவர்கள் தன் படிப்பை அங்கே படித்தால்
1.எதைக் கூர்மையாகக் கவனித்தாலும் இந்தச் சஞ்சல அலைகள் கலந்து தான் பதிவாகும்.
2.மீண்டும் நினைக்கப்படும் பொழுது இது சரியா…! தவறா…? என்று அதைச் சரியாக நிர்ணயம் செய்ய முடியாதபடி சஞ்சல நிலைகளையே உண்டாக்கும்.

சஞ்சல நிலைகள் உண்டான பின் தேர்விலே கேள்விகள் கேட்கப்படும் பொழுது அதனின் விடையை அறிந்து கொள்வதற்காகச் சிந்தித்தாலும்…
1.அந்தக் கேள்வியைக் கண்டாலே ஒரு திகைப்பான நிலையும்
2.அதனால் பரீட்சையில் தேறாத நிலைகளாக வந்துவிடும்.

ஆனால் பரீட்சை எதற்காக வைக்கின்றார்கள்…?

தான் படித்ததை அந்தந்த நேரங்களில் (திடீரென்று) அதைச் சிந்தித்து “இது இப்படித்தான்” என்று நாம் அறிந்து கொள்வதற்காக… படித்த நிலையை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ பரீட்சை வைக்கப்படும் பொழுது… நமக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் மூலமாக நாம் படித்ததை அறிந்து தேறுவதற்காக அதை வைக்கின்றார்கள்.

ஆனால் இந்த வாழ்க்கையில் வீட்டிலே அமைதி கொண்டிருந்தாலும் வெளியிலே வரப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

நண்பர்கள் பால் உள்ள பற்றால் ஆர்வ உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் வழியில் சென்று விட்டால்… படிப்புக்கு என்று செல்லப்படும் பொழுது கல்வி கற்கும் இட்த்தில்
1.நுண்ணிய உறுப்புகளின் செயலை… இதை இப்படி இதில் பொருத்தினால் இன்னது தான் நடக்கும் என்று சொல்லிக் கொடுக்கும் போது
2.அங்கே அதைக் கூர்மையாகக் கவனிக்கும் நிலைகள் வரும் பொழுது
3.ஆர்வ உணர்ச்சிகள் தூண்டப்பட்ட நண்பர்களிடமிருந்து வந்த உணர்வு முன்னணியில் வந்து
4.அதை எண்ணிய உடனே ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது “மனதிற்குச் சிக்கலாக வரும்…”

“தனக்குள் இது சரியாக வரவில்லையே…” என்ற உணர்வு இயக்கப்படும் பொழுது
1.தன் நினைவலைகள் வரப்படும் பொழுது கண்ணின் ஈர்ப்பு சக்தி சோர்வடையும்… கண் கனமாகும்… தன்னை அறியாமலேயே தூக்கம் வரும்.
2.நான் படிக்கச் சென்றேன்… ஆனால் எனக்குத் தூக்கம் வருகிறது… என்னால் முடியவில்லை…! என்று சொல்வார்கள்.

ஏனென்றால் நுண்ணிய கருத்த்துக்கள் பாடநிலையாக வரும் பொழுது அதை எடுத்து எண்ணத்துடன் பிணைத்து அதனைத் தெரிந்து கொள்ளும் நினைவலைகளை ஊட்டப்படும் பொழுது நண்பரின் ஆர்வத்தின் உணர்வுகளைக் கொண்டு வந்த உடனே அது முடியாத நிலைகள் கொண்டு “படிக்க வேண்டியதை மறைத்துக் கொண்டே இருக்கும்…”

நண்பன் அங்கேல்லாம் சென்றார்… அழகான இடங்களைக் கண்டார் அந்த மகிழ்ச்சியூட்டும் நிலைகளைப் பார்த்தார் என்று இந்த நினைவலைகளை எண்ணப்படும் பொழுது… காரணம்
1.தொழிலிலே மிகவும் லாபமாகச் சம்பாதிக்கின்றார்கள்… அதனால் இப்படி வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள் என்று
2.இப்படிப்பட்ட ஆர்வங்கள் உந்தப்படும் பொழுது இது முன்னணியில் வரும் பொழுது கல்வியைச் சீராகக் கற்க விடாது…
3.அது பதிவானாலும் நினைவுபடுத்திச் சரியாகச் செயல்படுத்த முடியாது.

இதுகள் எல்லாம்… இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் மாறுபாடான செயல்கள் எத்தனையோ நடக்கின்றது.

ஒரு கடைக்குச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே தெரிந்தவர்கள் வந்துவிட்டால் அந்தக் கடைக்காரர் அவர்களைத்தான் முதலிலே கவனித்துச் சரக்கை எடுத்துக் கொடுப்பார்.

என்னங்க…! எனக்குச் சரக்கு கொடுங்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்போம். நாம் சொல்லச் சொல்ல நேரம் ஆக ஆக நம்மை அறியாமலே கடைக்காரர் மீது நமக்குக் கோபம் வரும்.

அந்தக் கோபத்துடன் பார்க்கப் பார்க்க நம்மைக் கடைக்காரர் பார்த்தவுடன்… “இவர் என்ன…? கொடுப்பதற்கு முன் ஆத்திரப்படுகிறார்…?” என்று இன்னும் கொஞ்சம் நம்மை நிறுத்தி விடுவார்.

நாம் பொறுமை இழந்து “ஏய்யா… ரொம்ப நேரமாக நான் நின்று கொண்டிருக்கின்றேன்…! நீ சரக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறாய்…!” என்று ஸொல்வோம்.

வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே ஒவ்வொரு செயல்களிலும் இத்தகைய உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினாலும்…
1.நல்ல குணங்களுக்குள் இது எல்லாம் கலந்த பின் எதை எண்ணினாலும் கலக்கமுடன்தான் இருக்க முடிகின்றதே தவிர
2.நிம்மதியான நிலைகள் கொண்டு எந்தச் சொல்லையும் நல்லது என்று வலு கொண்டு நிலைத்திருக்க முடியவில்லை.
3.எதை எடுத்தாலும் கவலையும் சஞ்சலமும் ஏற்பட்டு எல்லா குணங்களிலும் கலக்கச் செய்து அந்த உணர்வை நுகரப்படும் பொழுது
4.எதன் எதன் அளவைக் கூட்டிக் குறைத்துச் சுவாசித்தோமோ அதற்குத் தக்கவாறு உடல் உறுப்புகளில் நோய்கள் உருப்பெறுகின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா…! அதற்கு என்ன சக்தி வைத்திருக்கின்றோம்…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகள் இருளை வென்று உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் இன்றும் ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளார்கள். அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் சக்தி தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன்.

நாராயணன் என்றால் சூரியன். ஒளியின் சுடராக இருக்கும் சூரியன்
1.எதைத் தனக்குள் கவர்ந்தாலும் அதன் இனத்திற்கு அதன் அறிவாக ஊட்டுகின்றது.
2.அது அறியச் செய்கின்றது… அதனின் நிலையில் வளர்க்கின்றது.
3.உலகை உருவாக்குகின்றது உணர்வின் அறிவாக இயக்குகின்றது.

அதைப் போன்று தான் மனிதனாகத் தோன்றி தன் வளர்ச்சியின் பாதையில் இருளைப் போக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக நிலை கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள்… சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் உணர்வின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி தான் கவர்கின்றது. கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கிறது.
1.அந்த நினைவை நாம் நமக்குள் பதிவு செய்து வைத்திருந்தால் தான்
2.அதிலிருந்து வந்த உணர்வை அதை நகர முடியும்.
3.அதுவே நினைவில் இல்லாதபடி எடுக்க முடியுமா என்றால் முடியாது

துருவ நட்சத்திரத்தை நாம் கண்ணிலே பார்க்கும் நிலை பெற்றவர்கள். ஆனால் சப்தரிஷி மண்டலங்களை கண்ணிலே எப்படிப் பார்க்கப் போகின்றேன்…? சப்தரிஷிகளை எங்கே பார்ப்பது…? என்று சிலர் வினாக்களை எழுப்புவார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் யாம் (ஞானகுரு) வெளியிலே சொல்லவில்லை… இப்பொழுது இங்கே வெளிப்படுத்திக் காட்டுகின்றேன்

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றியவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வளர்கின்றார்கள்.

நட்சத்திரங்களும் கோள்களும் சூரியனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வளர்வது போல பிரபஞ்சத்திற்குள் உயிரணு தோன்றி மனிதனாக வளர்ச்சியாகி
1.பிரபஞ்சத்தின் உணர்வினை ஒளியாக மாற்றிய உயிரணுவின் ஒளியின் மாற்றம்
2.எந்தத் துருவத்தின் வழி நுகர்ந்து பூமி உணவாக எடுக்கின்றதோ
3.அதே துருவத்தில் நிலை கொண்டு ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றது துருவ நட்சத்திரம்.

இது தான் நமது குருநாதர் காட்டிய நிலைகள்…!

அந்த உண்மை வழிப்படி துருவ நட்சத்திரத்தினை உற்று நோக்கி அதைப் பதிவு செய்து அதிலிருந்து விளைந்த உணர்வின் ஆற்றல்கள் தான் மகரிஷிகள்… சப்தரிஷிகள்… சிருஷ்டித்துக் கொண்டவர்கள்.

ஆறாவது அறிவின் தன்மை ஏழாவது சப்தரிஷி… ஒளியின் உணர்வின் நாதங்களாகத் தனக்குள் இயக்கப்பட்டுச் சிருஷ்டித்துக் கொண்டவர்கள்
1.அந்த சப்தரிஷிகள் உருவாக்கிய உணர்வுகளை நாம் பெறுதல் வேண்டும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.அதனின்று வளர்ந்த சப்தரிஷி மண்டலங்கள்… சிருஷ்டித்துக் கொண்ட அந்த மண்டல இயக்கத்தின் நிலைகள் நாம் பெற வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதைத் தனக்குள் சேர்க்க வேண்டும்
1.இது தான் பேரின்பப் பெரு வாழ்வு
2.அழியாச் சொத்தும் அது தான்…!

நீங்கள் எல்லாம் மெய் ஞானிகளாக உருவாக வேண்டும் என்ற ஏக்கத்துடன் உபதேசிக்கின்றேன்

 

மனிதனுடைய எண்ணங்கள் இன்றைய உலகில் சீர் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது குருநாதர் இயற்கையின் உண்மை நிலைகளை “மூடனாக இருந்த என் மூலமாக வெளிப்படுத்துகின்றார்…”

பன்றி சாக்கடையை நுகராது அதற்குள் இருக்கும் நல்ல பருப்பை நுகர்கின்றது. இதே போல் சாக்கடையாக இருக்கும் இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கும்
1.நல்ல உணர்வுகளான ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்தறிந்து அதை எடுத்துச் சொல்லின் ஒலியாக நீ வெளிப்படுத்தும் போது
2.எவர் இதைக் கேட்டு உணர்கின்றார்களோ அவர்கள் வாழ்க்கையில் இருள் சூழ்ந்த நிலைகள் நீங்கி மெய் ஒளி காணும் நிலைகளாக வளரும்.

இதை நீ செய்…! அவர்கள் வளர வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது நீ வளர்கின்றாய். அவர்கள் வளர வேண்டும் என்று நீ விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்த உணர்வின் சக்தி உனக்குள் விளைகின்றது. ஆகவே
1.ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருவரையும் மெய் ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஏங்கி நீ உபதேசி.
2.அந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பச் செய்.

இதை நினைவு கொண்டோர் உள்ளங்களில் அவரை அறியாது வந்த இருள்கள் நீங்கட்டும். அவர் வாழ்க்கையில் நல்ல உணர்வுகளாக மலரட்டும். அவருடைய மூச்சும் பேச்சும் இருள் சூழ்ந்த உலகில் இருந்து அவர்களை மீட்டி…
1.மெய் ஞானிகள் சென்றடைந்த அந்த அருள் ஒளிக் கூட்டத்துடன் இந்த உணர்வுகள் அழைத்துச் சென்று
2.அவர்கள் அனைவரும் மெய் ஞானிகளாக வளரட்டும்.

இதையெல்லாம் நீ எண்ணும் பொழுது அந்த நிலையை நீ அடைகின்றாய். இதைக் கேட்டுணர்ந்தோரும் அதை அடைகின்றார்கள் என்றார் குருநாதர்.

இந்த வாழ்க்கையில் எவ்வளவு நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும்… பிறர் செய்யும் குறைகளைக் காணும் போது நம்மை அறியாது வேதனைப்படுகின்றோம்… வேதனைப்படச் செய்கின்றது.

யாம் சொல்லும் முறைப்படி விநாயகர் தத்துவப்படி எண்ணும் போது அந்தத் துன்பங்கள் மறைகின்றது.

விநாயகர் என்பது “நம் உடல்” வினைக்கு நாயகனாக இருக்கின்றது…. அதை நாம் பூஜிக்க வேண்டும். முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக மனித உடல் பெற்றாலும் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் வினையாகச் சேர்ப்பிக்க வேண்டும்.

மெய் ஞானிகள் ஒளிச் சரீரம் பெற்றது போன்று இந்த உடலில் வினைக்கு நாயகனாக ஒளிச் சரீரமாகப் பெறச் செய்யும் நிலை தான் விநாயகர் தத்துவத்தில் காட்டப்பட்டுள்ளது.

1.அவர்கள் சென்ற பாதையை நீ எண்ணுவாய் என்றால் நீயும் அதுவாகின்றாய்… கேட்டுணர்வோரும் அந்த நிலை பெறுகின்றார்கள்.
2.அவர்கள் பெற வேண்டும் என்று நீ ஏங்கும் பொழுது அவர்களுக்கு முன் நீ பெறுகின்றாய்.
3.உன் சொல்லைக் கேட்டுணர்ந்தவர்களும் உனக்குப் பின் அந்த நிலையில் வருகின்றனர்.

இதை எல்லாம் குருநாதர் எனக்கு உணர்த்தியது. இதைப் போன்றே நீங்களும் செயல்படுங்கள்.

பூமியில் மனிதனாகப் பிறந்த நிலையில் அருள் உணர்வுகளைப் பெற்று இருள் சூழ்ந்த நிலையிலிருந்து நீங்கி
1.உங்களுடைய மூச்சும் பேச்சும் உலக நன்மை பயக்கச் செய்யும் சக்தியாக வளர வேண்டும் என்ற ஏக்கத்தில் தான்
2.இதை எல்லாம் உபதேசிக்கின்றேன் “குருநாதர் காட்டிய அருள் வழிப்படி…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தினசரி காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட வலுவின் துணை கொண்டு அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தினால் நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானித்தோமோ அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்கு எளிதில் அனுப்ப முடியும்.

1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.இந்த உணர்வுகள் பட்டு உடல் பெறும் உணர்வைக் கரைத்துவிடும்.
3.ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் அனைவருமே உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைப்பது என்றால் அடுத்து காலை சூரிய உதயம் வருகின்றது. இந்த உடலிலிருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை… அந்த விஷத்தை… அது கவர்ந்து செல்கின்றது. ஏனென்றால் இதிலே பிரித்தது.

உதாரணமாக கருணைக் கிழங்கை வேக வைத்தால் அந்த விஷத் தன்மைகள் பிரிந்து செல்கிறது. பிரிந்தாலும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக அதை மாற்றி வைத்துக் கொள்கின்றது.

இயற்கையில் விளைந்த உணர்வானாலும்… நாம் வேக வைத்து விஷத்தை நீக்கினாலும்…
1.இது எதன் கலவையுடன் கலந்து இந்த உணர்வினை வெளிப்படுத்துகின்றோமோ
2.இந்த உணர்வின் அலைகள் வெளிப்படுத்திய பின் – நாம் கருணைக் கிழங்கை உணவாக உட்கொண்டாலும்
3.அந்த உணர்வின் தன்மை சூரியன் காந்த சக்தி எடுத்து வைத்திருப்பதை நம் உணர்வின் அணுக்களாக்கப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து அதை நமக்குள் வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் அதை உணவாக உட்கொள்ளும் பொழுது அதனதன் உணர்வின் தன்மை கொண்டு உடலில் அணுக்களாக உருவாகின்றது.

ஆனால் அதே சமயத்தில்
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தைப் பதிவு செய்கின்றோமோ
2.அந்தப் பதிவின் நிலை கொண்டு அந்த அணுக்கள் மாற்றம் அடைகின்றது.
3.இதை நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும் (முக்கியமானது).

இதைப் போல் நாம் எடுக்கும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் சூரியனின் காந்த சக்தி இங்கே எடுத்துக் கொள்கின்றது.

ஆனால் நாம் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியிலே செலுத்தப்படும் பொழுது அந்தக் காலையில் சூரிய உதயம் வரப்படும் பொழுது ஓசோன் திரை என்று விஷத்தின் தன்மை அடர்த்தியாகித் தன்னுடன் அந்த விஷத்தை (உடல் பெறும் உணர்வை) இணைத்துக் கொள்கின்றது.

சூரியனிலிருந்தும் மற்ற பிரபஞ்சங்களிலிருந்தும் வரக்கூடியதை நம் பூமி கவரும் நிலையில்
1.அது பூமியின் சுழற்சி வட்டத்தில் ஒரு அடர்த்தியாக ஆன பின் தான்
2.விஷத் தன்மைகள் உட்புகாது தடுக்கும் நிலை வருகின்றது.
3.அது தான் ஒசோன் திரை என்பது.

சூரியனிலிருந்து வரக்கூடியது “அல்ட்ரா வயலட்” – விஷத்தின் தன்மை கொண்டது. அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக் கதிர்கள் வெகு தூரத்தில் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது. நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத்தின் தன்மைகளைப் பிரிகின்றது.

பிரித்தாலும்… இந்த மோதலில் வெப்ப மின் அணு போன்று ஆகும் பொழுது ஈர்த்துத் தனக்குள் இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மை அடைகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வரும் போது
1.நம் பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியாக ஆன பின் (ஓசோன் திரை)
2.நம் பூமியில் ஜீவ அணுக்கள் மற்ற அனைத்தும் வாழும் தகுதி பெறுகின்றது
3.நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையும் நமக்குள் அடக்கச் சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்று தான் நாம் விண் செலுத்தும் ஆன்மாக்களின் உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் ஓசோன் திரையுடன் அதனின் அடர்த்தியில் கலந்து விடுகின்றது.

இப்படி இந்த மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் மீண்டும் அடுத்த உடலைத் தான் இந்த உயிர் இங்கே உருவாக்கும்.

அதாவது…
1.இந்த உடலில் எத்தகைய உணர்வை எடுத்துக் கொண்டதோ
2.அந்த உணர்வுக்கொப்ப உடலைத் தேடிச் சென்று அந்த உணர்வின் தன்மை கொண்ட உடலாக உருவாக்கும்.

அரச மரமும்… விண் செல்லும் மார்க்கமும்

 

அரச மரத்தை விநாயகர் அருகே ஸ்தல விருட்சமாக வைத்துள்ளார்கள். ஏன்…?

அரச மரத்தின் பழத்தை ஒரு குருவியோ மற்ற பட்சிகளோ உணவாக உட்கொள்கிறது. அது பறந்து செல்லும் போது சந்தர்ப்பத்தில் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் மீது தன் மலத்தை இட்டுவிடுகிறது.

ஆனால் அதற்குள் மறைந்திருக்கக்கூடிய அரச வித்து
1.அந்தக் கட்டிடத்தில் நீர் இல்லை என்றாலும் வறட்சியாக இருந்தாலும்
2.இரவிலே வரும் குளிரைக் கொண்டு அதைத் தனக்குள் பரவச் செய்து அந்த பாழடைந்த கட்டிடத்தில் ஜீவன் பெற்று
3.தன் இனத்தின் தன்மை எதுவோ அதைக் காற்றிலிருந்து நுகர்ந்து அந்த உணர்வின் சத்தாகச் செடியாக மலர்ந்து
4.அதன் பின் அது வளர வளர தன் விழுதுகளை அனுப்பி அந்தக் கட்டிடத்தைப் பிளந்து
5.பூமியின் நிலத்தின் ஈர்ப்புக்குக் கொண்டு வந்து தனக்கு வேண்டிய ஆகாரத்தை தேடும் நிலைக்கு அது வருகின்றது.

இதைப் போன்று தான் ஞானிகள் உயிரோடு ஒன்றித் தன் உயிரான்மாவை ஒளியாக மாற்றிக் கொண்ட பின் விண்ணுலகில் சுழலும் நிலை.

விண்ணிலே மிதந்து வருவது மிகவும் கடுமையான விஷத்தன்மைகளாக இருந்தாலும்… அந்த விஷத்தை முறித்து அதை அடக்கித் தன் உணர்வினை ஒளியாக மாற்றி அங்கே சென்ற நிலையில் “அது பாழடைந்த நிலை…”

விண்ணிலிருந்து வரும் விஷத்தின் தன்மையும் கோள்களில் இருந்து வருவதும் பேரண்டத்திலிருந்து வரும் பல விஷமான துகள்களும் “அங்கே வரும் பொழுது… எதுவுமே உற்பத்தியாகாது…”

விஷத்தின் தாக்குதலால் பல நிலைகளால் மாறிக் கொண்டிருக்கும் அப்பேர்ப்பட்ட பாழடைந்த இடத்தில் மனிதனாக இங்கிருந்து சென்றவர்கள் ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதாவது… வைரம் எவ்வாறு விஷத்தை உள்ளடக்கி ஒளிச் சுடராக வெளிப்படுத்துகின்றதோ அதைப் போல ஜீவன் கொண்ட இந்த உயிராத்மாக்கள் (மகரிஷிகள்) விண்ணிலிருந்து வரும் விஷத்தினை முறித்து அந்த உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.

ஏனென்றால் பாழடைந்த இடத்திலே தனக்கு வேண்டிய ஒளியின் சுடராக… “அங்கே சூரியனின் ஒளி இல்லை என்றாலும்”
1.தனக்குள் இருக்கும் உணர்வின் ஒளி கொண்டு
2.மற்றவைகளை ஒளியாக்கும் திறன் கொண்டவர்கள் அந்த மகரிஷிகள்.

அந்தத் துருவ மகரிஷியைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவருமே அந்த எல்லையில் தான் இருக்கின்றார்கள். அதை உணர்த்துவதற்குத் தான் இங்கே விநாயகர் அருகிலே அரச மரத்தை வைத்தனர்.

ஒரு பாழடைந்த கட்டிடத்திலே அரச மரம் எப்படித் தன் விழுதுகளை ஊன்றிக் காற்றிலே மறைந்திருக்கும் ஜீவசக்தியின் தன்மையை… அந்த உணர்வினை தனக்குள் நுகர்ந்து விளைய வைத்துக் கொள்கின்றதோ அதைப் போல
1.அந்த மகரிஷிகள் விண் சென்ற வழியில்… அவர் வழியிலே அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு
2.மனிதர்களாக இருக்கும் நாமும் சென்றால் அவர்கள் பெற்ற நிலையை நாமும் பெற முடியும்.

அதை உணர்த்துவதற்குத் தான் நீர் நிலை இருக்கும் பக்கம் விநாயகரை வைத்து… இந்த உடலுக்குப் பின் “மனிதன் விண் செல்லும் மார்க்கங்களை” மக்களுக்கு உணர்த்திச் சென்றார்கள்.

நேற்றைய செயல் இன்றைய சரீரம். இன்றைய செயல் நாளைய சரீரம்…!
1.மிருகமாகி… அதிலிருந்து மனிதனாக நாம் வளர்ச்சி பெற்று வந்த நிலையில்…
2.மனிதனுக்கு அடுத்த தெய்வ நிலை பெற வேண்டும் என்பதற்கே இதையெல்லாம் நமக்குக் காட்டினார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்திய மண்ணிலே தோன்றிய ஞானிகளால் வளர்க்கப்பட்ட ஆன்மீகத்தின் நிலைகளை எவரும் பழித்திடும் நிலை வராது… வரக்கூடாது என்பதை குருநாதர் அன்றே சொன்னார். அவர் காட்டிய வழியினைத்தான் நானும் (ஞானகுரு) இப்பொழுது சொல்கின்றேன்.

விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் மூதாதையர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும்…
1.ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது
2.எங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
3.பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குள் அவர்களை உந்தித் தள்ளுங்கள்… அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள்ளும் சேரும்.
5.அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…
6.தீமைகளை விளைய வைக்கும் “தீய உணர்வுகள் அகல வேண்டும்” என்ற உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

தத்துவ ஞானிகள் வளர்ந்து தீமைகளை அகற்றிய நாடு இது. முதல் நிலையாக உலகெங்கிற்கும் மெய் ஞானத்தை உணர்த்திய பூமி இது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நிலைகளை இங்கிருந்து தான் உலகிற்குத் தெளிவுற எடுத்துரைத்தது.
1.விண்ணுலகின் ஆற்றலை ஒளியின் சரீரமாகச் சிவமாக்கியவன் அகஸ்தியன்.
2.எந்த நாட்டவரும் அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெற முடியும்.

சீவலிங்கமாக இன்று இருக்கின்றோம். அகஸ்தியன் உணர்வை எடுத்து அதனின் துணை கொண்டு “உயிருடன் ஒன்றிய இராமலிங்கமாக” எண்ணத்தின் வழிகளிலே எண்ணத்தால் உருவாக்கப்பட்ட தன்மை கொண்டு… என்றும் ஒளிச் சரீரமாக இருக்க முடியும்.

இந்த உலகில் தீய சக்திகள் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் யாம் இதை வெளிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

தீமைகள் பரவாது தடுக்கச் செயுயும் அந்த ஞானிகள் உணர்வுகள் இங்கே அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும் எல்லோருக்கும் பேரானந்த அமுதாக இது கிடைக்க வேண்டும் என்று தான் குருநாதர் கூறினார்.

அதன் வழியில் தான் நான் இதைச் செயல்படுத்துகின்றேன் சாமி வேகமாகப் பேசுகிறார் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.

உலகில் நல்லது என்று சிந்தித்துச் செயல்படுத்தும் மக்களை வீழ்த்திடும் நிலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. எளிமையானவர்களிடமிருந்து பொருள்களைத் தட்டிப் பறிக்கும் நிலையே உருவாகிக் கொண்டுள்ளது

வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் (அங்கிருந்து) ஆணையிடுவதை சிரம் மேல் ஏற்று நடப்பவர்கள் அசுர உணர்வு கொண்டோர் இங்கே நம் நாட்டிலும் உண்டு. அதிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ண வேண்டும்.

சாஸ்திரப் பிரகாரம் நரசிம்ம அவதாரமாக தீமைகளை அகற்றிய அந்த மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து… உயிருடன் ஒன்றி… விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்ற வேட்கையைக் கூட்டி ஒருங்கிணைந்து செயல்பட்டு தீமைகளை அகற்றுங்கள்.

அதே போன்று
1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்தும் உணர்வுகளை அடிக்கடி கூட்டிக் கொண்டே வாருங்கள்.
2.அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்
3.அவர்கள் முன் சென்றால்… அடுத்து நாமும் நிச்சயம் பிறவா நிலை பெற முடியும்.

“இரக்கப்பட்டு ஊருக்கெல்லாம் உதவி செய்தாலும்…” நலிவடைந்து விட்டால் நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள்

 

குருநாதர் சொன்னது:-
வாழ்க்கையில் நல்லதை எண்ணி ஏங்கினாலும் பிறர் செய்யும் தவறுகளை கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.அதற்காக இரக்கப்பட்டோ அதற்காகப் பரிவு கொண்டோ அதை நீ ஏங்கிச் சுவாசித்து
2.உன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்தாலும் அவர்களைக் காத்திட நீ பொருளைக் கொடுத்து உதவி செய்தாலும்
3.உனக்குள் வந்த அவரின் விஷத்தின் தன்மையைத் துடைக்கவில்லை என்றால் பின் விளைவு எப்படி இருக்கும்…?
4.முதலில் புகழ் கிடைக்கும்… பேர் கிடைக்கும்… இரக்கமானவர்… நல்லவர் என்று போற்றுவார்கள்.
5.ஆனால் கடைசியில் நீ நலிந்து போகும் பொழுது “யாரும் உன்னைப் பார்க்க மாட்டார்கள்…”
6.நல்லதைச் செய்தேனே…! என்று வேதனையான குரலைத் தான் எழுப்பிக் கொண்டிருக்க வேண்டி வருமே தவிர நல்லதைச் சிந்திக்க முடியாது.

இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் மனித உடலை வெறுக்கும் நிலை வந்து மீண்டும் மனித இனத்தின் கூட்டிற்குள் சென்றாலும் அந்த உடலையும் அழித்துவிட்டு வேதனையின் விஷத்தை அதிகமாகக் கூட்டி உடலை விட்டுச் சென்ற பின் பரிணாம வளர்ச்சியில் விஷத்தைத் தாங்கிடும் உயிரினங்களின் ஈர்ப்பிற்குள் சென்று அங்கே தான் அடுத்த உடல் பெற முடியும்.

இதை எல்லாம் குருநாதர் இயற்கையின் செயல்கள் என்று காட்டினார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின்பு தான் (மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து) உங்களுக்கும் தெரியப்படுத்துகின்றோம்.

ஆக… நன்மை செய்த நிலைகளில் அந்த நல்லவர்களைக் காத்திட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு கூட்டு தியானத்திலும் இணைந்து கொண்டு அங்கே கலந்து கொண்ட அனைவருக்கும் “மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்” என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் குடும்பத்திலே மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும். அவர் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் நீங்க வேண்டும். அவர்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலம் பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெற வேண்டும். என் பார்வை அவரை நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வுகளைச் செலுத்தினால்
1.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வலுவாகின்றது.
2.இந்தச் சொல்லின் வாக்கும் உங்களுக்குள் விளைகின்றது.
3.உங்கள் வாக்கின் மூச்சு அவரை நலம் பெறச் செய்கின்றது.
4.இதை இந்த வாழ்க்கையில் பொறுமையாக இருந்து செயல்படுத்துதல் வேண்டும்.

வயலிலே காய்கறிகளின் விதைகளைப் போடுகின்றோம். அப்படிப் போட்டவுடனே அதைச் சமைக்க முடியாது. அதைப் பக்குவமாக விளைய வைத்து ஒருவர் பறிப்பர். அதை இன்னோருவர் எடுத்துக் கொண்டு போய் கடையில் வியாபாரம் செய்வார்.

நாம் கடைக்குச் சென்று அதை வாங்க வேண்டும். அதற்குப் பின் அதைச் சமைத்துப் பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக்கி அப்புறம் தான் நாம் உணவாக உட்கொள்ள முடியும்.

இதைப் போன்று தான் பக்குவப்படுத்திச் சமைத்துச் சாப்பிடுவது போன்று தான் நாம் எண்ணியதைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியானத்தின் நிலைகள்.

மெய் ஞானிகள் அருள் சக்திகளை நாம் பெற்று அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை வளர்த்துக் கொள்வதற்குத் தான் உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

1.நீங்கள் எண்ணியவுடன் அந்த மெய் ஞானிகளின் ஆற்றலைக் கிடைக்கச் செய்கின்றோம்.
2.எண்ணி எடுத்த பின் உங்கள் உடலுக்குள் வரும் துன்ப நிலைகளை நீக்கி நல்வினைகளை நீங்கள் கூட்டிக் கொள்ள முடியும்.

மாங்காய் புளிப்பாக இருப்பது கனியாகும் பொழுது அது சுவை ஆகின்றது. அதிலிருந்து அந்த மாவித்தாக வருகின்றது. அந்த வித்தினை நாம் நிலத்திலே ஊன்றினோம் என்றால் மரமாக அது மீண்டும் முளைக்கின்றது.

நம் உயிர் ஆரம்ப நிலைகளில் வித்தாக உருவாகி மற்ற செடி கொடிகளாக உருவாகி மரமாகி பூவாகி பிஞ்சாகி காயாகிக் கனியாகின்றது. பல உயிரினங்களாக நாம் இருக்கும் பொழுது அது மரமாகி… மனிதனாகும் பொழுது பூவாகி பிஞ்சாகி… அந்தப் பிஞ்சின் தன்மையிலிருந்து காயான நிலையில் இருக்கின்றோம்.

1.இந்தக் காயின் தன்மையில் இந்த உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றும் பொழுது
2.உயிருடன் ஒன்றிய கனியாக முழுமை பெறுகின்றது… கனிந்து விட்டது…!
3.உயிர் எப்படியோ அதைப் போன்று உணர்வுகள் ஒளியாகும் பொழுது நிலையான சரீரம் பெறுகின்றோம்.

அந்த நிலையான ஒளிச் சரீரம் பெற்ற மெய் ஒளியை உங்களுக்குள் சேர்ப்பிக்கச் செய்வதற்குத் தான் “திரும்பவும் ஒரு ரவுண்டு உங்களுக்குள் வந்து” நினைவின் செல்களில் பதியச் செய்கின்றேன்.

அதை மீண்டும் நீங்கள் நினைவு கொண்டு எண்ணும் பொழுது காற்றில் பதிந்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வை நீங்கள் எளிதில் பெற முடிகின்றது. “அருள் ஞானிகளாக நீங்களும் வளர முடிகிறது…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் இறந்து விட்டால் சாங்கிய சாஸ்திரப் பிரகாரம் உடலை சுட்டுக் கருக்கிவிட்டு பின் சாம்பலை எடுத்துக் கங்கையில் கரைத்து விட்டால் மோட்சம் அடைந்தார்…! என்று சொல்வார்கள்.

1.அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் எந்தெந்தக் குணங்களை அவர் எடுத்துக் கொண்டாரோ
2.இந்த உணர்வுகள் அனைத்தும் அந்த உடலுடன் உண்டு.
3.ஆனால் இந்த உடலைக் கருக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்து
4,அது அனைத்தையும் மீண்டும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து விடுகின்றது.

அதாவது இந்த உடலின் தசைகள் கரைந்தாலும் இந்த உணர்வின் தன்மையை மாற்றி விடுகின்றது சூரியன். நம் பரமாத்மாவில் (காற்றிலே) இங்கே கலக்கின்றது.

இந்த உடலை விட்டு ஆன்மா போன பின்…. சுட்ட பின்…
1.இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள்
2.இந்த உடலை உருவாக்கிய அணுக்களின் இயக்கம் தான் இதற்குள் இழுத்துச் சேர்க்கும் தன்மைகள்.
3.வெப்பத்தின் தன்மை கொண்டு இங்கே பிரிக்கப்படும் பொழுது
4.அதிலே சேர்த்துக் கொண்ட உணர்வின் உறைவிடமாக இருக்கின்றது. அந்த அணுக்களில் (உணர்வின் ஒலிகளாக)

இப்பொழுது நாம் சொல்லால் சொல்கின்றோம். இந்த உணர்வுகள் எல்லாம் அதிலே இருக்கும். அதே போல் அவர் மந்திர ஒலிகளைப் பதிவாக்கியிருந்தால் அதுவும் இருக்கும்.

இப்படி… இறந்த உடலைக் கருக்கிச் சாம்பலாக்கினாலும் இந்த உடலை உருவாக்கிய உணர்வின் நிலைகள் அனைத்தையும் சூரியனின் காந்தப் புலன் அறிவு கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

பின் அது கவர்ந்த நிலைகள் அனைத்தும் அவர் சொன்ன அதே மந்திர ஒலிகளைச் சொல்லப்படும் பொழுது இழுத்துக் கொண்டு வரும்.

எப்படி…?

ஏனென்றால் அவருடைய உணர்வின் தன்மை அங்கே சென்றது. அவர் அணிந்திருந்த ஆடையும் அவர் நடந்து சென்ற பாத மண்ணும் அவர் தலை முடியும் இந்த மூன்றையும் எடுத்தால்… அவருடைய உடலின் மணமும் பாத நிலைகளும் அதிலே இருக்கும்.

அவர் (இறந்தவர்) எந்தத் தெய்வத்தின் நிலைகள் கொண்டு பக்தி கொண்டு மந்திரங்களை ஓதித் தனக்குள் வளர்த்துக் கொண்டாரோ இறந்த பின் மாந்திரீகம் செய்பவர்கள் அந்த உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து அதை எடுத்துப் பில்லி சூனியம் ஏவல் போன்ற சில தவறான வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சாங்கியம் செய்து கரைத்து விட்டுக் கண ஹோமம் செய்து மோட்சத்திற்கு அனுப்பியதாகச் சொல்வார்கள் ஒரு சாரர்.

அதே சாங்கியங்களைச் செய்து கரைத்த பின் விநாயகர் கோவிலில் கொண்டு போய் மாவிளக்கை ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டால் மோட்ச தீபம் என்பார்கள் இன்னோரு சாரார்…!

1.இப்படி எல்லாம் சாங்கியங்களைச் செய்து வெளி வந்தாலும்
2.அந்த உணர்வுகள் எல்லாமே காற்றிலே தான் படர்ந்திருக்கும்.
3.அதை மாற்றும் வல்லமை இல்லை…!

அதை மாற்றி அமைக்க வேண்டும் என்றால்… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க வேண்டும் என்றால்… உயிருடன் ஒன்றிய உணர்வுகள் ஒளியாக மாற வேண்டும் என்றால்… என்ன செய்ய வேண்டும்…?

அதிகாலை துருவ தியானத்தில் எவர் ஒருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொள்கின்றாரோ…
1.அதன் மூலம் அவர்கள் சார்புடையோரை உந்தித் தள்ளினால் விண் செலுத்த முடியும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.

குருநாதர் காட்டிய வழியிலே உங்களுக்குத் “தொட்டுக் காண்பிக்கின்றேன்”

 

இந்த வாழ்க்கையில் நம் நல்ல குணங்களை இழக்காத வண்ணம் ஞானிகளின் அருள் உணர்வுகளைச் சேர்த்து நமக்குள் வரும் துன்பத்தை நீக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை அருள் ஞான வித்துக்களாக உங்களுக்குள் ஊன்றி வளர்க்கும்படி செய்கிறோம். ஏனென்றால் திரும்பத் திரும்பப் பல தடவை சொல்கிறேன்.

1.ஒரு தடவை சொன்னாலும்… அப்படியே சொல்லிக் கொண்டே சென்றால் அடுத்து உங்களுக்கு அந்த நினைவு வராது.
2.அதை மீண்டும் சொல்லும் பொழுது தான் ஞானிகள் உணர்வலைகள் உங்களுக்குள் பதிவாக ஏதுவாகும்.
3.பதிந்த பின் நீங்கள் மீண்டும் எண்ணும் பொழுது நினைவுக்கு வர இது உதவியாக இருக்கும்.
4.ஆனால்… சாமி இப்பொழுது தான் சொன்னார்… திரும்பவும் அதையே சொல்கிறார் என்று எண்ணி விட்டால்
5.“ஏற்கும் பக்குவம் குறைவாகி விடுகின்றது…” (இது முக்கியம்)

உதாரணமாக நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகிறோம் என்றால் வானம் தோண்டிச் சுண்ணாம்பையும் கல்லையும் வைத்துக் கட்டிக் கொண்டே போகின்றோம். அது ஈரமாக இருக்கின்றது.

சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டும் என்று செங்கலை மேலே ஏற்றி ஒரே நாளில் கட்டிட்த்தைக் கட்டினால் என்ன ஆகும்…? மொத்தமாக அமுக்கிக் கீழே விழுந்து விடும்.

கட்டிடத்தை ஆறச் செய்து நிறுத்தி அந்த ஈரம் உணரும் வரையிலும் பொறுத்திருக்க வேண்டும். கட்டியது இந்தப் பக்கம் சாய்ந்து இருக்கின்றதா…? அந்தப் பக்கம் சாய்ந்திருக்கின்றதா…? சரியாகக் கட்டியிருக்கின்றோமா…? என்பதைச் சிந்தித்துப் பார்த்து… ஈரம் காய்ந்த பின் அதன் மேல் கட்டிடத்தைக் கட்டுவது சாலச்சிறந்ததாக இருக்கும்.

அதைப் போன்று தான் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் நிலையாக என்னிடம் நீங்கள் வரும் பொழுது அந்தத் துன்பத்தைப் போக்கிடும் உணர்வின் ஆற்றலைப் பதிவு செய்கின்றேன்.

இதைத்தான் “தொட்டுக் காட்டுதல்” என்று சொல்வது.

சில பேர் வருவார்கள். நான் அங்கே சென்றேன்… அவர் முதுகில் தட்டிக் காண்பித்தார்…! நெற்றியில் தொட்டுக் காண்பித்தார்…! நெற்றியில் பார் அங்கே தெரியும்… பின் உச்சிக்கு கொண்டு போ அது தெரியும்…! என்றெல்லாம் சொன்னதாகச் சொல்வார்கள்.

திட்டியவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது. பதிந்ததை மீண்டும் எண்ணும் பொழுது உங்களுக்குக் கோபம் வருகிறது.

அதைப் போல் மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெறும் போது துன்பத்தைப் போக்கும் உணர்வுகளாக அது உங்களுக்குள் வருகின்றது. தொட்டுக் காட்டுதல் என்பது…
1.உங்கள் உணர்வுக்குள் ஆழமாக… உங்கள் உள்ளத்திற்குள் தொட்டு
2.”உள்ளத்தைத் தொடும் நிலையாக உணர்வுகளை ஒன்றச் செய்து” பதியச் செய்கின்றோம்.
3.இது குருநாதர் காட்டிய வழியிலே தொட்டுக் காட்டும் முறைகள்.

மீண்டும் இதை நீங்கள் எண்ணும் போது காற்றில் படர்ந்திருக்கக்கூடிய ஞானிகள் அருள் சக்திகளைச் சுவாசித்து… உங்களுக்குள் வரும் படபடப்பு பயம் வேதனை இது போன்ற நிலைகளைக் குறைத்திட இது உதவும்.

சாமி ஆசீர்வாதம் கொடுத்தார் என்று வெறுமனே நினைப்பதில் பயனில்லை… குருநாதர் எனக்கு எப்படி ஆசீர்வாதம் கொடுத்தார்…?
1.மெய் வழியைப் பெறும் உணர்வின் தன்மையைத் தொட்டுணரச் செய்து
2.அந்த உணர்வின் செயலை ஒவ்வொன்றும் ஆழமாக எனக்குள் பதியச் செய்து
3.அந்த எண்ணத்தை நான் நுகர்ந்தறிந்து என் உடலுக்குள் சேர்க்கச் செய்து
4.அதை எண்ணும்போதெல்லாம் அந்த உணர்வின் எண்ண அலைகளைப் பரவச் செய்து பேச்சால் மூச்சால் அது வெளிப்படுவதை
5.அந்த உணர்வுகள் எனக்குள் விளையப்படும் பொழுது “அது எனக்குப் பாதுகாப்பாக வருகிறது…”
6.அந்த உணர்வின் சத்து என் உடலில் மணமாக வரும்.

இப்பொழுது நான் பேசிக் கொண்டிருக்கின்றேன். துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னை நீங்கள் பார்க்கின்றீர்கள்.

“உங்கள் துன்பம் விலகிவிடும்…” என்று வாக்காக நான் சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் உங்கள் செவிகளிலே பட்டு ஒன்றிய பின் என்னை நீங்கள் அந்த உணர்வுடன் கூர்மையாகப் பார்க்கப்படும் பொழுது
1.எந்த மெய் ஒளியின் தன்மையை நான் பேசிக் கொண்டிருந்தேனோ
2.என் உடலிலிருந்து வெளிப்படும் அந்த மணத்தை நீங்கள் நுகர்ந்து
3.உங்களுக்குள் ஆறுதலை ஊட்டும் நிலையாக யாம் சொல்லும் வாக்குகள் பதிவாகி
4.அந்த உணர்வு வளர்ச்சியாகித் துன்பத்தைப் உணர்வுகளாக உங்களுக்குள் வரும்.
5.மறுபடி மறுபடி அதை எண்ணும் போது சிந்தித்து செயல்படும் அந்த எண்ணங்கள் உங்களில் தோன்றும்.

இதைத்தான் “தொட்டுக் காண்பிப்பது” என்று சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.எத்தனை வகையான உணர்வுகளுடன் இயங்குகின்றோமோ அத்தனை உணர்வுகளையும் தட்டி எழுப்பி
2.அந்தந்த உணர்வுகளுடன் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கச் செய்வதற்கும்
3.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வுக்குள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் செய்வதற்கும்
4.நடைமுறையில் இயக்கும் உணர்வுகளையும் உங்களுக்குள் தூண்டச் செய்து மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்வதும் தான்
5.”இயக்கமும்… உணர்வின் சேர்க்கையும்…” என்ற நிலையில் இப்பொழுது உங்களுக்குள் எம்மால் (ஞானகுரு) உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

அதன் வழியில் வளர்க்கப்படும் பொழுது அது உங்களுக்குள் வளர்ச்சி பெறும். எத்தனையோ விதமான குணங்கள் நமக்குள் இயங்கிக் கொண்டுள்ளது “அத்தனை குணங்களிலும்” நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

அது மட்டுல்ல…
1.வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் நம்மை மோதும்
2.அக்காலங்களில் மகரிஷிகள் உணர்வுகளை அதனுடன் இணைத்தல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் சேர்த்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்க்கையில் இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

ஏனென்றால் சிறு பிள்ளையாக நாம் வளர்ந்ததிலிருந்து எத்தனையோ உணர்வுகள் நமக்குள் வித்தாக ஊன்றப்பட்டு இருக்கிறது.

“ஊழ்வினை” என்று அவைகள் இருப்பினும் வினைக்கு அந்த உணர்வின் அணுவாக வளரப்பட்டு அதனின் மலமாக நம் உடலுக்குள் அணுக்களாக உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

1.அப்படி வளர்த்துக் கொண்ட அணுக்கள் அது முதுமை அடைந்து விட்டால் அதனுடைய மலம் குறையும்
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் இணையும்.
3.இணைந்து கொண்ட உணர்வுகள் உடலை விட்டுச் சென்ற பின் உயிருடன் ஒன்றும்
4.எது உயிருடன் ஒன்றுகிறதோ அது தான் நம்முடைய அடுத்த நிலைக்குக் காரணமாகிறது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நம் ஆத்மாவாகி உடலில் ஜீவாத்மாவாக விளைந்து அதிலே வடித்தது உயிராத்மாவாக மாறுகிறது.

ஏனென்றால் இந்த உடல் பெறும் உணர்வுக்கு அந்த மலம் இல்லை என்றால் அணுவின் தன்மை உடல் குறையும். ஆனால் அந்த உடலின் உணர்வின் தன்மை அணுவின் மலம் (தசைகள் உறுப்புகள்) அது முதுமை அடையப்படும் போது உயிருடன் ஒன்றி நிலைகொள்ளும். அந்த உணர்வின் அணுவே உயிருடன் ஒன்றி வெளி வரும்.
1.மீண்டும் தன் இனத்தைப் பெருக்க அதனின் செயலாக்கத்தை உருவாக்கிவிடும்
2.ஆகையினால் தான் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை எல்லாவற்றிலும் இணைத்தல் வேண்டும் என்று யாம் சொல்வது

வாழ்க்கையில் எத்தனையோ விதமான சந்தர்ப்பங்கள் வரும். அத்தனை சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது
1.அந்த மகரிஷிகளுடன் ஒன்றி நாம் ஒளியின் உணர்வாகவே நாம் வளர்கின்றோம்.
2.ஆகவே எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பேராசை கொள்ளுங்கள்.

குரு என்னை வளர்த்தது போல் தான் “உங்களையும் இப்போது வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”

 

மனித உடலில் இருந்து தீமையான உணர்வுகளை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள் மெய் ஞானிகள். அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து இந்த உணர்வின் அலைகளை நமக்கு முன் பரவச் செய்து கொண்டு தான் இருக்கின்றது.

உதாரணமாக நெருப்பின் அருகில் நாம் சென்றால் நெருப்பின் தணல் அருகில் வராதபடி நம்மை ஒதுக்கிவிடும். அதைப் போல
1.நெருப்பை ஒத்த மனிதர்கள்…
2.நெருப்பை ஒத்த அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டவர்கள் மெய் ஞானிகள்.

ஏனென்றால் இன்னொரு உடலின் ஈர்ப்பிற்குள் செல்லாதபடி உயிரின் ஈர்ப்புடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் அவர்கள் நிலையாக இருந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.

பிறவியற்ற நிலைகள் அடையும் அந்த ஆற்றல்களை நுகர்ந்திருந்தார்கள்.
1.அதை நாம் பருக வேண்டும் என்றால் “நமக்கு அந்தச் சக்தி வேண்டும்…”
2.அதற்கு என்ன செய்ய வேண்டும்…?

கடந்த காலங்களில் அன்று ஆண்ட அரசர்கள் என்ன செய்தார்கள்…? மாற்று அரசர்கள் இந்த அரசைக் கைப்பற்ற… அந்த அரசனுடைய குழந்தைகளை அது அரசனாகும் நிலைகளுக்கு வரும் பொழுது… சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொன்றிடும் நிலை வந்துவிடும் என்று தெரிந்த பின்பு…
1.அந்தக் குழந்தை… தாயின் கருவிலே கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே
2.விஷத்தை சிறுக சிறுக சிறுகச் சிறுக தலைமுடியில் தொட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தாய்க்குக் கொடுத்து “குழந்தைக்கு விஷத்தை ஏற்றுவார்கள்…”
3.பிறந்த பின்னும் பாலூட்டும் பொழுதும் சிறுகச் சிறுக விஷத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையைச் செய்து “குழந்தைக்கு விஷத்தை ஏற்றி விடுவார்கள்…”
4.அப்படி ஏற்றி விட்டால் மற்றவர்கள் வேறு எந்த விஷத்தைக் கொடுத்தாலும் இவர்களை மாய்த்து விட முடியாது.

அதே சமயத்தில் இந்த விஷத்தை உணவாகக் கொண்டபின் இந்த உணர்வுகள் அனைத்தும் குழந்தையின் உடலிலே வீரியம் கொண்டதாக மாறி விடுகின்றது. அதனால் தான் கடந்த கால அரசர்களுக்கு வலு மிகவும் அதிகம்.

1.அந்த விஷத்தின் தன்மை கொண்டு இவர்கள் வளர்ச்சி பெற்றது போன்று
2.ஞானிகளும் மகரிஷிகளும் தனக்குள் வளர்த்துக் கொண்ட சக்தியை குருநாதர் வளர்த்துக் கொண்டார்.

குருநாதர் எனக்கு இதை நேரடியாகக் கொடுக்காதபடி அதைப் புரிந்து கொள்வதற்காக பைத்தியம் போன்று அவர் இருக்கப்படும் பொழுது அவருடைய காலிலே வேஷ்டிகளைக் கிழித்துக் கட்டுவார்… வேறு நிறம் கொண்ட சில துணிகளையும் கட்டிக் கொள்வார்.

ஆனால் ஏன் இவ்வாறு செய்கிறார்…? என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் அவர் பைத்தியம் போன்று தான் நடித்துக் கொண்டிருந்தார்.

எதை எடுத்தாலும் ஒரு நிமிடம் என்னிடம் நன்றாகப் பேசுவார்… ஒரு நிமிடம் பைத்தியக்காரர் போன்று பேசுவார். அப்போது என்னுடைய எண்ணமும் அப்படித்தான் இருந்தது.

ஆனால் காலிலே கட்டிக் கொண்டு ஒவ்வொரு செடிக்கும் சென்று ஒவ்வொரு விதமான நிறம் கொண்ட துணிகளை அங்கேயும் கட்டுவார்.
1.அப்பொழுது பரிபாஷையிலே அங்கே ஒன்று சொல்வார்.
2.ஆனால் அந்த பரிபாஷையில் சொல்வது எனக்கு விளங்காது…!

துணியைச் செடியில் கட்டி விடுவார். அதை என்னிடம் காட்டி இவைகளுக்கு யார் சோறு போடுவது…? என்று கேட்பார். யார் சோறு போடுவது…? என்று எனக்குத் தெரியாது… அது சோறு சாப்பிடாது சாமி…! என்று நான் சொல்வேன்.

சோறு சாப்பிடாமல் அது எப்படி வளரும்…? என்று என்னென்னமோ பேசுவார். எனக்கு அப்பொழுது ஒன்றும் புரியாது இப்படி அவர் சொல்லிக் கொண்டே வந்தபின்… மீண்டும் என்னிடம் தெரியுமா…? என்று கேட்பார்.

தெரியவில்லை…! என்று நான் சொன்னவுடன் இரண்டு உதை கொடுப்பார்.
1.அடி வாங்கும் பொழுது அவருடைய நினைவு வரும்.
2.இப்படித்தான் அவருடைய எண்ணத்தை எனக்குள் செருகச் செய்தார்.

அவர் உடலை விட்டுச் சென்றார். அவர் காட்டிய உணர்வின்படி அகஸ்தியர் வாழ்ந்த இடங்கள்… முதலில் தலைக்காவிரிக்குச் சென்றேன். அங்கே அகஸ்தியருடைய உணர்வுகள் இருக்கின்றது.

பாகமண்டலம் என்று உண்டு. அங்கே மலை உச்சியிலே தண்ணீரை எவ்வளவு எடுத்தாலும் குறையாது. உயரமான மலை… அதற்குக் கீழ் தான் மற்ற எல்லாம் தணிந்து இருக்கின்றது.

ஆனால் மலை உச்சியிலே அந்த நீர் இருக்கக்கூடிய பள்ளம் இருக்கின்றது. அதிலே தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் குறைவதில்லை.

எங்கிருந்து நீர் அங்கே வருகின்றது…? என்பதை முதன் முதலில் அறிவதற்காக என்னை அங்கே செல்லும்படி செய்தார் குருநாதர்.

அங்கே தியானத்தில் இருக்கப்படும் பொழுது உயரமான அந்த இடத்தில் மேலே மேகங்கள் செல்கின்றது. மேகங்கள் செல்லும் பொழுது
1.மலையில் இருக்கக்கூடிய காந்தம் நீர் பசை உள்ள அந்த மேகங்களைக் கவரும் சக்தி பெறுகின்றது.
2.இதே போன்று சில மரங்களுக்கும் அந்த மேகங்களை இழுத்துக் கவரும் சக்தி வருகின்றது.
3.மேகங்கள் மரத்தால் இழுக்கப்படும் பொழுது நீரை அது உணவாக எடுத்துக் கொண்டாலும் மரத்தில் இருந்து மீண்டும் நீர் வடிந்து நீராக ஓடுகின்றது.

அதனுடைய தன்மைகள் வேறு.

மலையில் அகஸ்தியன் உட்கார்ந்து அவர் ஜெபித்த உணர்வின் சக்தி காற்றாகப் படர்ந்து செல்லும் அந்த மேகத்தை இழுத்து
1.அதை நுகரச் செய்யும் அந்தச் சக்தி அகஸ்தியன் உட்கார்ந்த இடத்திலே அந்தப் பாறைகளில் பட்டிருக்கின்றது.
2.ஆகையினால் மேகங்கள் மேலே செல்லும் பொழுது கவர்ந்து நீராக வடிந்து செல்கின்றது.

நாம் இங்கே வீட்டில் சமையல் செய்கிறோம் நீர் ஆவியாகப் போகின்றது. அதன் மீது ஒரு தட்டை வைத்து குளிர்ந்த நீரை மேலே ஊற்றினால் அந்த ஆவி நீராகக் கொட்டுகின்றது.

எந்தச் சத்தின் தன்மையை ஆவியாக மாற்றினோமோ… தட்டை வைத்துக் குறுக்காட்டப்படும் பொழுது நீரை ஊற்றிய பின் ஆவியாகச் செல்வதை நீராக வடியச் செய்கின்றது.

அந்த இடத்திலே மேகமே இல்லை என்றாலும் அந்த ஞானியின் அருள் சக்திகள்… மணங்கள் பட்டவுடன் குவித்து மேகங்களாக மாறுகின்றது. மேகங்களாக மாறிய பின் தன் உணர்வின் சக்தியை இழுத்து இதற்குள் உறைந்த பின் நீராக மாறுகின்றது.

குருநாதர் பித்தரைப் போன்று இருந்தாலும் அந்த இடங்களுக்கு நான் சென்ற பின்
1.குருநாதருடைய உருவம் தெரிகின்றது… அவர் காலில் கட்டிய துணிகள் தெரிகின்றது…
2.அங்கிருக்கக்கூடிய மரங்களிலும் இவர் கட்டிய துணிகள் தெரிகின்றது.
3.அப்பொழுது குருவின் நினைவு வருகின்றது.
4.முதலில் உடலுடன் அவர் இருக்கும் போது சொன்ன பரிபாஷையின் நிலைகள் அந்த இடத்திலே எனக்குப் புரியும் நிலை வருகிறது.
5.இந்த நீராக வடியக்கூடிய ஆற்றல் எப்படி…? என்று அங்கே அப்பொழுது நான் அறிய முடிந்தது.

உயிருடன் இருக்கும் பொழுது எனக்கு இதை உணர்த்தவில்லை.

இருந்தாலும் அடி கொடுத்தார். அந்த உணர்வின் நினைவலைகள் வரப்படும் பொழுது “அந்த எண்ணத்தில் வரும் பொழுது புரிகின்றது…” அன்று வாழ்ந்த அகஸ்தியன் ஆரம்ப காலங்களில் விண்ணினுடைய ஆற்றல் எப்படி நுகர்ந்து எப்படி அவன் பெற்றான்…? என்ற நிலையைக் காட்டுகின்றார்.

அகஸ்தியன் எங்கெல்லாம் சென்றானோ அந்த மலை இருக்கக்கூடிய பகுதிகளில் இது போன்ற நீர்கள் உற்பத்தி ஆகின்றது. மைசூரிலும் இதே போன்று நீர் நிலைகள் உண்டு… நாழிக் கிணறு என்று சொல்வார்கள்.

மற்ற இடங்களில் நீர் இருப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் மட்டும் நீர் இருக்கின்றது. எடுக்க எடுக்க அங்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் எடுத்த அளவுக்கு நீர் வந்து மீண்டும் நிரம்பிவிடும். அது உச்சிமலை… பாறை தான்… வேறு ஒன்றும் இல்லை…!

அன்று அகஸ்தியன் அவன் சென்ற இடங்களில் எல்லாம்… நான் எடுத்துக் கொண்ட ஜெப நிலைகளில்
1.ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அலைகள் எப்படி விண்ணிலிருந்து வருகின்றது…? என்ற நிலையை நேர் பார்வை கொண்டு
2.அந்த அட்சரேகையின் சுழற்சி வட்டத்திற்குள் அது வெளிப்படுத்தும் நிலையும்… அதற்கு மத்தியிலே கோள்கள் எவ்வாறு செல்கிறது…? என்றும்
3.நட்சத்திரங்கள் விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தினை அது முறியடித்து பிரபஞ்சத்திற்குள் தணிந்த அலைகளாக வரும் பொழுது
4.மத்தியிலே செல்லும் பொழுது ஒவ்வொரு கோளும் இந்த சக்தியை தனக்குள் நுகர்ந்து எப்படிச் செயல்படுகின்றது…?
5.செயல்பட்ட பின் ஓன்றுடன் ஒன்று கலந்து இந்த உணர்வின் சக்தி எப்படி மாறுகின்றது…?
6.அது வெளிப்படுத்தும் சக்தியை அதற்கடுத்துக் கீழ் வட்டங்களில் இருக்கும் மற்ற கோள்கள் இதிலிருந்து வருவதை அது எப்படிக் கவர்கின்றது…?

அதைப் போல சூரியனுக்குள் வரப்படும் பொழுது ஒன்று இங்கேயும்… ஒன்று அங்கேயும்… ஒன்று இங்கேயும் என்று இதே மாதிரி நட்சத்திரத்தின் நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாறி இருக்கும் நிலைகள் கொண்டு அது எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையை அவர் உணர்ந்தார்.

அவர் அமர்ந்த இடத்தில் குருநாதர் காட்டிய நிலையில் நானும் அங்கே அமரப்படும்போது விண்வெளியின் ஆற்றலும் மற்ற பிரபஞ்சத்தின் இயக்கமும் எல்லாமே அறிய முடிந்தது.

ஆதியிலே இதையெல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். அவன் நுகர்ந்த உணர்வின் தன்மையை அங்கே அமர்ந்து நானும் கண்டேன். அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் வரப்படும் பொழுது குரு பலத்தால் அறிய முடிந்தது.

அன்றைய அரசர்கள் விஷத்தின் தன்மையைச் சிறுகச் சிறுகச் சேர்த்து அதற்குப்பின் மற்ற விஷங்களை எடுத்துக் கொண்டாலும் அது பாதிக்காத வண்ணம் எப்படிச் செயல்பட்டார்களோ… அதைப் போன்று தான்
1.மிக மிகச் சக்தி வாய்ந்த ஞானிகளை அவருடைய சக்திகளை நாம் லகுவில் மதிப்பிட முடியாது.
2.காரணம் சாதாரண மக்களின் பிடியில் சிக்காதபடி அவர்கள் விண்ணுலகம் சென்றவர்கள்.
3.அவ்வளவு சக்தி வாய்ந்த நிலைகள் விஷம் மற்றொன்றை எப்படி வீழ்த்துகின்றதோ அதைப் போன்று
4.மகா ஞானிகள் தீய விளைவுகளைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள்.

அவர்களுடைய உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்றால் இந்தச் சாதாரண மனித வாழ்க்கையில் இருக்கும் பொழுது
1.நம்முடைய நினைவலைகளைச் சுத்தமாகவே மாற்றிவிடும்.
2.நம்மைச் செயலற்றதாக ஆக்குமே தவிர அதிலிருந்து பருகும் நிலையும் அற்றுப் போய்விடும்.
3.ஆகையினால் மனித வாழ்க்கையில் நாம் சிறுகச் சிறுக அதை எடுத்து வளர்க்க வேண்டும்.

எப்படி அரசர்களுக்கு விஷத்தைச் சிறுக சிறுகக் கொடுத்து அதைத் தனக்குள் சேர்க்கும் படி செய்து பெரும் கொண்ட விஷங்களைக் குடித்தாலும் தன்னைப் பாதிக்காத வண்ணம் எப்படிச் செயல்படுத்தினார்களோ அதைப் போலத் தான் குரு காட்டிய நிலையில் அதைச் செயல்படுத்த முடியும்.

முதலிலே அவர் எனக்கு இதை உணர்த்தும் பொழுது “வேறொரு நிலைகளாகத் தான்” உணர்த்தினார். பின் சிறுகச் சிறுக எண்ணத்தின் ஏக்கத்தை அதை நிலைப்படுத்தச் செய்து அகஸ்தியன் சென்ற மலைப் பகுதிகளுக்குச் சுற்றச் செய்தார்.

அங்கே சுற்றும் போது பல கஷ்டங்களும் இன்னல்களும் என்னைத் தாக்கும் நிலை வரும் பொழுது அங்கே அமைதி கொண்டு அமர்ந்து அந்த ஞானிகள் உணர்வை நான் எடுக்கப்படும் பொழுது தான் விஷத்தின் தன்மை முறிக்கும் அகஸ்தியன் உணர்வை நான் நுகர்ந்து “துன்பத்தைத் துடைக்கும் உணர்வுகளாக வேதனைகள் அகற்றப்பட்டு… மெய் ஒளியைக் காணும் ஆற்றலாக எனக்குள் பெருகி வந்தது…”

அப்படி எனக்குள் பெருகிய நிலைகளைத் தான்
1.நீங்கள் துன்பம் என்று வரும் பொழுதெல்லாம் உங்களுக்குள் உபதேசமாகச் சிறுகச் சிறுகச் சொல்லி வருகின்றேன்
2.அதைப் பெற வேண்டும் என்று எந்த அளவுக்கு ஏக்கத்தில் இருக்கின்றீர்களோ அதன் வழி தான் உங்களைச் சுவாசிக்கச் செய்வது.
3.சுவாசித்த உணர்வுகள் சிறுகச் சிறுக உங்கள் உடலில் வளரத் தொடர்கின்றது.

குரு என்னை வளர்த்தது போல் தான் “உங்களையும் இப்போது வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் தன் மனித வாழ்க்கையில் பல தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவனைப் பின்பற்றியோர் உணர்வுகள் பத்தாவது நிலையாக ஒளியாக ஆன பின் உடலை விட்டுச் சென்று அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்த இயற்கையின் வாழ்க்கையில் இந்தச் சூரியக் குடும்பமே ஒன்பதாவது நிலை தான்.

ஆனால்…
1.கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து
2.உணர்வின் தன்மையை ஒளியாக விளைய வைக்கும் பருவத்தை அடைந்து விட்டால்
3.நுகர்ந்த உணர்வுகள் அந்த ஒளியாக மாற்றும் திறன் வந்துவிடும்.

அந்தத் திறன் வந்து விட்டால் அண்டத்தில் எங்கு வேண்டுமானால் செல்லும் ஆற்றலும் அந்த உணர்வின் சத்தை ஒளியாக மாற்றிடும் ஆற்றலும் பெறுகின்றது.

அகண்ட அண்டம் எல்லையே இல்லாதிருக்கின்றது… இருந்தாலும் அதிலிருந்து வரும் உணர்வை நுகரும் சக்தி பெற்றால் என்றும் பதினாறு…!

அதாவது…
1.அகண்ட அண்டம் பெரிது
2.அதிலே நம் வளர்ச்சியின் தன்மையோ சிறிது தான்
3.இருந்தாலும் ஒளியாக மாற்றிக் கொண்டே வரும் இதனுடைய வளர்ச்சி வரும் பொழுது
4.என்றும் பதினாறு… என்று அதை இளமைப் பருவமாகக் காட்டுகின்றனர்…!

அப்படிப்பட்ட வளர்ச்சி வளர… வளர… அகண்ட அண்டத்துடன் ஒப்பிட்டால் இது சிறிதே…! இது இளமையானதே…! பருவமானதே… என்று இதைத் தெளிவுபடுத்துவதற்குத்தான்
1.என்றும் பதினாறு என்ற நிலையை
2.அன்று மார்க்கண்டேயன் பெற்றான்..! என்று காட்டினார்கள் ஞானிகள்.

அந்த மார்க்கண்டேயன் என்பது யார்…?

துருவ நட்சத்திரம்…!

அது “என்றும் பதினாறு” என்ற நிலைகளில் வளர்ச்சி பெறுகின்றது. அதன் வழியில் சென்றவர்கள் தான் இன்றும் அதன் நிலை சப்தரிஷி மண்டலமாகப் பெறுகின்றனர்.

ஏற்கனவே ஆதியிலே… முதன் முதலில் பிரபஞ்சம் உருவான விதத்தைச் சொல்லியிருக்கின்றேன். ஒரு அணுவின் தன்மை பல நிலைகள் அடைந்து கோளாகி… நட்சத்திரமாகிச் சூரியனாகி ஓர் பிரபஞ்சமாகின்றது.

அதே போன்ற வளர்ச்சியில் நம் உயிர் உருவாகி மற்ற நிலைகள் பல எத்தனையோ உணர்வுகள் கொண்டு இன்று மனிதனாக உருவாக்கியுள்ளது. சூரியனை ஒத்த நிலை போன்றது தான் மனிதனின் உயிரும்.

சூரியன் தனக்குள் மோதும் தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்று
1.எந்த விஷத்தால் அது உணர்வின் ஒளியாக உருவானதோ
2.அதே விஷத்தை நீக்கி விட்டுத் தன்னிச்சையாக ஒளியாக மாறும் தன்மை வருகின்றது.
3.அதன் உணர்வு எதனுடன் கலக்கின்றதோ அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக வருகின்றது.

மனிதனாக ஆன நிலையில் கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து உணர்வின் ஒளி அணுக்களை உருவாக்கும் தன்மை பெற்று விட்டால் “என்றுமே அது அழியாத் தன்மை கொண்டது.. உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது….!”

“தனித்த மனிதன்” இதை எடுத்துச் சென்றாலும் அந்த ஒளியின் தன்மை பெறுவது கடினம். ஆண் பால் என்றாலும் பெண் பால் என்றாலும் வளர்ச்சி இருக்காது.

ஆனாலும் அந்தத் தொடர் கொண்ட ஆன்மாக்களில் (கணவன் அல்லது மனைவி) ஒன்று பிரிந்து விட்டாலும் அவருடைய உணர்வுகள் நமக்குள் உண்டு.

இதற்கு முன்னாடி செய்யத் தவறி இருந்தாலும் அந்த ஆன்மாக்களைக் இப்பொழுது அதிகாலை துருவ தியான நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவேற்றிக் கொண்ட பின்
1.நம்முடன் வாழ்ந்த நினைவலைகள் கொண்டு அந்த உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவை
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே உந்திச் செலுத்துதல் வேண்டும்.

இப்படி நாம் தொடர்ந்து காலையில் செய்து வரப்படும் பொழுது இன்னொரு உடலிலிருந்து அந்த ஆன்மா (நம்மைச் சார்ந்தோர்) வெளி வந்தாலும் அவருடைய உணர்வு நமக்குள் உண்டு. அதனைக் கவர்ந்து அங்கே செலுத்தி விடலாம். உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடலாம்.

1.அவர்கள் விண் சென்ற அந்த உணர்வை எண்ணி ஏங்கும் பொழுது
2.அடுத்து இந்த உடலை விட்டு நாம் சென்றாலும்
3.அவருடன் இணைந்து வாழும் தன்மை வருகின்றது.

இத்தகைய உணர்வுகள் தனக்குள் பருகப்பட்டு அந்த உணர்வுகள் இரண்டறக் கலந்தால் வான்வீதியில் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.

1.ஒரு ஆன்மா முன் சென்றாலும்… பின் வரும் நிலைகள்
2.அதே தொடர் கொண்ட நிலைகளில் செயல்படுத்துவோம் என்றால் பிறவியில்லா நிலைகள் அடைகின்றது.

இது மனிதன் ஒருவனால் தான்… முடியுமே தவிர மற்ற மிருகங்களால் முடியாத நிலை ஏற்படுகின்றது.

அவ்வளவு பெரிய பவரை (சக்தியை) உங்களுக்குக் கொடுக்கின்றேன்

 

உங்களுக்கு எல்லா நிலைகளும் பெறுவதற்காகச் சுலபமாகச் சக்திகளைக் கொடுக்கின்றோம். அதை ஆத்ம சுத்தி செய்வதன் மூலம் எடுத்து நல்ல முறையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1.எந்த நேரம் சங்கடங்கள் வந்தாலும் சரி… உடனே ஆத்ம சுத்தி செய்யுங்கள்… உங்களிடம் அழுக்குகள் சேராது.
2.அவ்வளவு பெரிய பவரை (சக்தியை) உங்களுக்குக் கொடுக்கின்றேன்.
3.ஏனென்றால் நான் இதை எல்லாம் அனுபவித்து வந்தது.

நொடிக்கு நொடி… நொடிக்கு நொடி… என்னை இம்சை பண்ணித் தான் குருநாதர் சக்திகளைக் கொடுத்தார். உங்களுக்கு எப்போதெல்லாம் இம்சை வருகின்றதோ அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கின்றோம்.

ஆனால்… “எங்கெங்கே நேரம் இருக்கிறது…?” என்று சிலர் இதைச் செயல்படுத்துவதில்லை. யாம் எந்த அளவுக்குச் செய்கின்றோமோ அந்த அளவுக்குச் சாமிக்கே விஷம் கொடுக்க வந்து விடுகின்றார்கள்.

இரவு பூராமே சாமியை வணங்கிக் கொண்டிருந்தேன்…! “எனக்கு இப்படி இருக்கின்றதே…” என்று என்னை நினைத்து அழுது வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

சினேகிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் எண்ணினால்… நண்பர்களாக எண்ணும் பொழுது விக்கல் பாய்கின்றது. துரோகம் செய்தான் பாவி என்றால் புரையேறுகின்றது. பாசத்துடன் இருக்கிறோம் என்றால் மனது படக்கு படக்கு என்று இனம் புரியாதபடி பயத்தைத் தூண்டுகின்றது.

தாய் தன் பிள்ளைகளைப் பாசத்தால் எண்ணி… அது வெளியில் சென்று வரக் காலதாமதம் ஆகிவிட்டால் “என்ன ஆனதோ… ஏதானதோ…!” என்று சும்மா நினைத்துக் கொண்டிருந்தால் போதும்.

பிள்ளை நல்லவனாகத் தான் இருப்பான். இருந்தாலும் இந்தத் தாயினுடைய உணர்வு பாய்ந்து அவனைத் தவறான நிலைகளுக்கு அழைத்துச் சென்று விடும். இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தான் என்றால் அவனை அறியாதபடி கையை அதற்குள் கொடுத்து விடுவான்… விபத்தாகி விடும். இதெல்லாம் பாச உணர்வின் செயல்கள்.

இதே போன்று தான் சாமி மீது பக்தியாக இருந்து “இரவெல்லாம் தலை வலிக்கிறது உடல் வலிக்கிறது என்று மேல் வலிக்கிறது” என்று வேதனையுடன் புலம்பிக் கொண்டுள்ளார்கள்.

1.ஆத்ம சுத்தி செய்யுங்கள் என்று யாம் சொல்லி இருந்தாலும் அந்த நேரத்தில் அதைச் செய்வதில்லை…
2.என்னைத் தான் நினைக்கின்றார்கள்… அப்போது இவர்களுடைய உணர்வு என்னைப் பாதிக்கின்றது.

ஏனென்றால் பாசத்தால் எல்லோருடைய உயிரையும் நான் கடவுளாக மதித்து நினைக்கப்படும் பொழுது… அவர்கள் இப்படி நினைக்கின்றார்கள்.

ஒரு வீட்டிலே நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் குறைகள் இருந்தது என்றால் தாய் தந்தையரால் அதைச் சமாளிக்க முடிவதில்லை.

ஆனால் ஒரு 2000 பேர் சேர்ந்து கஷ்டம் நஷ்டம் என்று என்னை எண்ணினால் எப்படி இருக்கும்…? நான் உங்கள் மேல் பாசமாக இருக்கின்றேன். பாசத்திலே குறையாக எண்ணி என்னிடம் அந்த நினைவைச் செலுத்துகின்றார்கள். அது என்னைத்தான் பாதிக்கின்றது.

இதைச் சமாளிப்பதற்கு உயிரைக் கடவுளாக மதித்து உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் உங்கள் துன்பங்கள் அகல வேண்டும் என்று சதா தியானம் செய்து கொண்டிருக்கின்றேன்.

இதை யாரும் நினைக்க மாட்டேன் என்கிறார்கள்…!

ஒரு சமயம்… அதிகாலை மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது குழந்தைக்கு இளம்பிள்ளை வாதம் என்று எம்மைச் சந்திக்க வந்தார்கள். பக்கத்து கிராமம் தான்.

பெண் குழந்தைக்கு ரெண்டு காலுமே சுவாதீனம் இல்லை. அது படுகின்ற அவஸ்தை பார்த்தால் எவ்வளவோ இருக்கின்றது. இப்படி இருக்கிறதே…! என்று அழுது கொண்டு வருகின்றார்கள். இரண்டு வருடம் ஆகிவிட்டது ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்கள்.

ஆசிர்வாதம் கொடுத்து அந்த நரம்பின் இயக்கங்களைச் சீர் செய்த பின் அது நன்றாக ஆனது. ஆனால் அதற்கு பின் என்ன ஆனது…?

நன்றாகிச் சென்று அதற்குப்பின் எம்மை என்ன… ஏது…? என்று ஒரு முறை எட்டிக் கூட வந்து சந்திக்கவில்லை.
1.தூக்கிக் கொண்டு வந்தோம்… வைத்தியம் பார்த்தோம்…
2.சரியாகி விட்டது…! என்று அதோடு சென்று விட்டார்கள்.

யாம் உங்களுக்குப் போதிப்பது என்ன…?

ஒவ்வொரு நாளும் தீமைகள் வரும் பொழுதெல்லாம் “அந்த மகரிஷிகளின் மூச்சலைகளை எடுத்து”
1.உங்களுக்குள் அந்தத் தீமை வராதபடி காத்துக் கொள்ளுங்கள்
2.உங்கள் எண்ணத்தால் உங்களைக் காத்துக் கொள்ள முடியும் என்று தான் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஆனால்… சாமியாரையும் மற்றவர்களையும் தான் தேடிப் போக வேண்டும் என்று விரும்புகின்றார்களே தவிர
1.தனக்குள் அந்த உயர்ந்த உணர்வை எடுத்துத் தீமைகள் வராது
2.தன் எண்ணத்தினால் மாற்றிக் கொள்ள முடியும் என்று யாம் சொல்வதைக் கவனிப்பதில்லை.

அதைத் திரும்பக் கேட்டோம் என்றால் “எங்கெங்கே…? இதற்கெல்லாம் நேரமில்லை…! என்று இப்படித்தான் சொல்கின்றார்கள். “காசைச் செல்வழித்துத் தான் உடலைச் சரி செய்ய வேண்டும்” என்று விரும்புகின்றார்கள்.

மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். தன்னுடைய எண்ணத்தால் எடுத்து எத்தகைய தீமையும் மாற்றி அமைக்க முடியும் என்று பல முறை யாம் சொன்னாலும் அதை எடுத்துக் கொள்ள அவர்களால் முடியவில்லை…!

இதைக் கேட்டுணர்ந்தோர் உங்களுக்குள் அந்த முழுமையான சக்தி இருக்கிறது என்பதை நம்பிப் பழகுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறருடைய வேதனையான உணர்வை நாம் சுவாசித்தால் உடலுக்குள் வளராதபடி அதைப் பிரித்திடல் வேண்டும். பிரிக்கக்கூடிய சக்தி அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உண்டு.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி விட்டால் தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த நிமிடமே “ஈஸ்வரா…” என்று உணர்வினைச் செலுத்த வேண்டும்.

பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும். இப்படி நுகர்வது அனைத்துமே முதலில் நம் இரத்த நாளங்களுக்குள் தான் சேர்கின்றது.

தீமையான உணர்வின் வளர்ச்சி கொண்ட நிலையில் உறுப்புகள் செயலிழந்திருந்தாலும் இதைக் கண்ட பின் அந்த உணர்வுக்குள் கிளர்ந்து எழுகின்றது.

அறியாத நிலைகளில் நமக்குள் அப்படிப் பதிவான தீமைகள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் வரப்படும் பொழுது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
1.அப்பொழுது காற்றிலிருக்கும் தீமைகளை அதிகமாக நுகர நேருகின்றது.
2.அந்த உணர்ச்சிகளை நாம் எந்த அளவுக்கு நுகர்கின்றோமோ உடலும் மாறுபடுகின்றது… சொல்லும் செயலும் மாறுபடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால் அந்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால் மண்ணிலே ஒரு நல்ல பொருள் விழுந்தால் உடனே நீரை விட்டு அதைக் கழுவிக் கொள்கின்றோம். இதைப் போல் பிறருடைய தீமையின் உணர்வுகள் நம் உடலில் இரத்தங்களில் கலந்தால் அதன் வீரியத்தைத் தணிக்க “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இங்கே உபதேசிக்கும் பொழுது
1.உங்கள் கண்கள் என்னை (ஞானகுரு) உற்றுப் பார்க்கின்றது.
2.உபதேசிக்கும் சொல்லின் உணர்வுகள் செவியிலே படும் பொழுது அந்த உணர்ச்சிகளை உருவாக்குகின்றது.
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு நினைவலைகளைப் பதிவாக்குகின்றது.
4.உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிடும் அலைகளை ஆன்மாவாக மாற்றுகின்றது.
5.மாற்றிய உணர்வுகள் உயிரிலே படுகின்றது… இந்த உணர்ச்சிகளை உடலிலே பரவச் செய்கின்றது…. இரத்தநாளங்களில் கலக்கின்றது.

இந்த உணர்வைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது… இரத்த நாளங்களில் கலக்கக் கலக்க…
1.உங்கள் உடலில் தீமையை விளைவிக்கும் உணர்வுகளுக்கு
2.இந்த இரத்தநாளங்களின் வழியாக உயர்ந்த உணர்வுகள் போகும் பொழுது அதனுடைய தணிவுகள் ஏற்படுகின்றது.

நல்ல குணங்கள் இருக்கப்படும் பொழுது ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அது இரத்தத்தில் சுழலப்படும் பொழுது நல்ல அணுக்களுடைய நிலைகள் அதை நுகர மறுக்கின்றது.

அப்பொழுது இயக்கச் சக்தி குறைகின்றது…. உடல் சோர்வடைகின்றது. இப்படிச் சோர்வடையப்படும் பொழுது நல்லதை நினைக்கும் திறன் இழக்கப்படுகின்றது,

சோர்வடையும் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க அதன் உணர்வின் தன்மை நாளடைவில் அதிலே பழகி விட்டால் “எது எடுத்தாலும் அந்தச் சோர்வு தான் வரும்…”

மட்டன் சாப்பிடாதவர்கள் இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் பிறகு “கொஞ்சம் மட்டும் சாப்பிடலாம்…” என்ற உணர்வு தோன்றும். ஒரு காயை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வார்கள். பின் அதைச் சுவையாக்கி விட்டால் சரி… இப்பொழுது சாப்பிடலாம்…! என்பார்கள்.

இதைப் போன்று இந்த உணர்வுகள்…
1.எதனின் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதன் உனர்வின் தன்மை
2.அங்கே அந்த உணர்ச்சிகளைத் தூண்டத்தான் செய்யும்.

ஆனால் இதைப் போன்ற நிலைகளை அதை அடக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் பலவித கோணங்களில் உங்களுக்கு இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.

தீமைகள் எப்படிச் சாடுகின்றது..? தீமைகளை அகற்றும் வழி என்ன…? என்பதைத் தான் கலவையாக்கி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை உங்களுக்குள் இணைத்து இணைத்துப் பதிவாக்குகின்றோம்.

1.தீமைகளை அகற்றிய உணர்வைக் கலந்தே உங்களுக்குள் கொடுத்திருப்பதனால்
2.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரும் பொழுது
3.உங்களுக்குள் எத்தகைய பகைமையும் தீமையும் துன்பமும் வளராது தடுக்க இது உதவும்.

எந்தச் செலவும் செய்யாமல் உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

 

பணத்தை வைத்து வாழ்க்கையில் எதை வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம். ஆனால்
1.ஆன்மீகத்தின் மூலம் மனதைப் பெரிதாக வைத்துக் கொண்டால் உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.
2.இது மனதார எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய… கிடைக்கச் செய்யக்கூடிய பெரும் சக்தி.

பணத்தாலே செய்யக் கூடியது எதை வேண்டுமென்றாலும் உடனே சுலபமாகப் பெறலாம்.

ஒருவருடைய அன்பைப் பெறலாம். அவருக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொடுத்தால் உடனே நல்லவர் என்று சொல்லிவிடுவார். ஆனால் அடுத்து கொடுக்கவில்லை என்றால் திட்டுவார்கள்.

காசைக் கொடுக்கக் கொடுக்க… நல்லவர் என்று போற்றிக் கொண்டே வருவார்கள். காசை மற்றவர்களுக்காகச் செலவழிக்கப்படும் பொழுது நான் தவறு செய்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்து விடும்.

காசு கொடுத்து உங்களுக்காகச் செலவழித்துக் கொண்டேயிருக்கின்றேன் இருந்தாலும் தவறைச் செய்கின்றேன். அப்பொழுது நான் செய்வதை எல்லாம் சரி என்று தான் நீங்கள் சொல்ல முடியும்.

என்னங்க… இப்படித் தவறு செய்கிறீர்கள்…? என்று மீறிக் கேட்டால் என்னிடமே வாங்கிச் சாப்பிட்டு விட்டு எனக்கே துரோகம் செய்கிறான் பார்…! என்ற நிலை வந்துவிடும். வந்துவிடும் வம்பு…!
1.எந்த வகையில் தருமம் செய்தாலும் இப்படித்தான் வரும்.
2.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும்.

காரணம்… பணம் என்பது உடலுக்குத் தான் வரும்

ஆனால் மெய் ஞானிகளுடைய அருள் உணர்வுகளைக் கூட்டினாலோ வாழ்க்கையில் வரக்கூடிய இருளை மாய்க்க உதவும். இதற்கு நீங்கள் எந்தப் பணமும் செலவழிக்க வேண்டியதில்லை.

உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த ஞானிகள் அருள் பெற வேண்டும் என்னுடைய மூச்சும் பேச்சும் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று யாம் சொல்லும் ஆத்ம சுத்தியை எடுத்துக் கொண்டு வந்தால்
1.வியாபாரம் நல்லதாகும்… குடும்பத்திற்குள் சண்டையை நிறுத்தி ஒற்றுமையாக இருக்கச் செய்யும்
2.கேட்போருக்கும் நல்லதாகும் அறியாத வரக்கூடிய பகைமைகளைத் தடுத்து நிறுத்தும்
3.இதை வைத்து எத்தனையோ உயர்ந்த நிலைகளைக் கொண்டு வர முடியும்.
4.உங்களுடைய எண்ணங்கள் அண்டவெளி வரை செல்லும்.

ஆனால் இவ்வளவு சுலபமாக இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் செய்வதற்கு நேரமில்லை…! இதை யார் செய்வார்கள்…? என்று அலட்சியப்படுத்தி விடுகின்றார்கள்.

காசைக் கொடுத்து விட்டு நட்சத்திரத்திற்கு அர்ச்சனை ஆராதனை செய்வதிலே தான் குறியாக இருக்கின்றார்கள். செய்தால் தெய்வம் ஓடி வந்து செய்யும்…! என்ற இந்த நம்பிக்கையில் தான் இருக்கின்றோம்.

பணத்தைச் செலவழித்து யாகத்தை வேள்விகளையும் செய்வதற்குப் பதிலாக எந்தச் செலவும் இல்லாமலே…
1.உங்கள் தாய் தந்தையரை எண்ணி மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்து அதை உங்கள் உயிரான நெருப்பில் இணைத்துப் பாருங்கள்.
2.உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்களை வைத்து “உங்களிடம் இருக்கும் சக்திகளை” நீங்களே உணர முடியும்.

ஏனென்றால் உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா எண்ணுவது தான் என்னுடைய தியானமே. ஒவ்வொரு மகரிஷியும் ஞானியும் மனிதனைத் தான் தேடி வருகின்றார்கள்.

ஆகவே உங்களுக்குள் உங்களையே நீங்கள் தியானம் செய்யுங்கள் அந்த அருள் உணர்வுகள் சேரச் சேர… உங்களுக்குள் துன்பத்தை ஊட்டும் சகல உணர்வுகளும் விலகி விடும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காட்டிற்குள் சென்று எத்தனையோ சிரமங்கள் பட்டேன்… துன்பங்களும் பட்டேன்…! அங்கே குருநாதர் இயற்கையின் உண்மைகளை எல்லாம் அறியும்படிச் செய்தார்.

அதை அறிந்து… அந்த உணர்வைப் பதிவு செய்து… அந்த உணர்வை வளர்த்துக் கொண்டேன். அப்படிப் பெற்ற ஞானிகளின் உணர்வுகளைத்தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இதை எல்லாம் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு அதன் வழியில் இப்பொழுது முன்னுக்கு வந்தாலும் “பற்றுள்ளவர்கள்” என்ன செய்கின்றார்கள்…?

இரவு நேரத்திலே சாமி…! எனக்குத் தலை வலிக்கிறேதே… உடல் வலிக்கிறதே… நெஞ்சு வலிக்கிறதே… என்னைக் காப்பாற்ற மாட்டாயா…? என்று தான் நினைக்கின்றார்கள்.

இப்படிச் சாமியைத்தான் (ஞானகுரு) நினைக்கின்றார்களே தவிர
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெறவேண்டும்
2.அது எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களிலே கலக்க வேண்டும்
3.தீமைகளை வென்றிடும் அருள் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று
4.இப்படி எண்ணும்படிப் பல முறை நான் சொன்னாலும் அப்படி எண்ணவே மாட்டேன் என்கிறார்கள்.

நான் தான் பதிவு செய்தேன் என்று சாமியைத்தான் நினைக்கின்றார்கள். இப்படி ஒரு ஆயிரம் பேர் சேர்ந்து நினைத்தால் அந்த உணர்வு தாக்கினால் எப்படி இருக்கும்…? அந்த ஆயிரம் உணர்வுகள் என்னைத் தாக்கும் பொழுது
1.அது அத்தனையும் நான் சமாளிக்க வேண்டும்
2.என்னையும் காக்க வேண்டும்.. உங்களுக்கும் அந்த அருள் சக்தி கொடுக்க வேண்டும்.
3.குருநாதர் எனக்குக் கடுமையான வேலையைத்தான் கொடுத்தார்.

ஆக… என்னைப் பாதுகாக்க குருநாதர் அருளைக் கொடுத்தார்… அதை வளர்த்து என்னைக் காத்துக் கொள்கின்றேன்.

அதே மாதிரி உங்களுக்கும் அந்த அருள் பாதுகாப்பு என்றைக்குமே உறுதுணையாக வரும். அதை எல்லாம் நீங்கள் எளிதில் பெற முடியும்.
1.குரு அருள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும்
2.அதைக் கிடைக்கும்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.
3.சாமி ஒன்றும் கொடுக்கவில்லை என்று எண்ண வேண்டியதில்லை.

ஏனென்றால் இந்த வாழ்க்கை என்ன…? என்று அறிந்து கொண்ட பின் நாம் இனி எப்படி வாழ வேண்டும்…? என்று உணர்ந்து.. இந்த உடலுக்குப் பின் “பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும்..” என்று அதைத் தான் பெற முயற்சிக்க வேண்டும்.

இன்னொரு பிறவி என்று மீண்டும் இங்கே வந்தாலோ நரகலோகம் தான் செல்கிறோம். இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று இருப்பது அந்த நிலை தான்…!

1.மனித உடல் பெற்றாலே “சொர்க்கலோகம்” என்று சொல்வார்கள்.
2.ஆனால் அது பண்டைய காலமாகப் போய்விட்டது (இன்று நரகலோகமாகத்தான் உள்ளது)

நம் உடலுக்குள் பல வேதனையும் நரக வேதனையை உருவாக்கும் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு நொடியிலேயும் இன்று நமக்குள் போர் முறைகளே வருகின்றது.

நல்ல குணங்களுக்கும் தீமையான குணங்களுக்கும் மற்றவர்கள் செய்யும் உணர்வை நமக்குள் நுகர்ந்த பின் பெரிய போரே நடக்கின்றது.
1.இந்தப் போரினால் மனக்கலக்கங்கள் வருகின்றது.
2.உடல் நோய்கள் வருகின்றது… சிந்திக்கும் திறன் இழக்கின்றது,

அதன் வழியில் நம் உடலுக்குள் இருக்கும் நாம் நுகர்ந்த வேதனையான உணர்வுகள் எது அதிகமோ அதன்வழி நமக்குள் உணர்வு இயங்கி நம்மை அந்த வழிக்கே அழைத்துச் செல்லும்.

கடைசியில்… “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் இந்த உடலையே அழித்திடும் நிலைக்கும் திருப்பி விடுகின்றது.

இது எல்லாம் நாம் செய்யவில்லை, நாம் நுகரும் உணர்வின் இயக்கங்கள் உயிரிலே பட்டபின் எது உணர்வோ அந்த உணர்ச்சிக்கொப்ப நம்மைச் செயலாக்குகின்றது… நம் உயிரே தான்…!

ஆனால் அருள் ஒளி பெற வேண்டும் என்றும்… இருளை அகற்ற வேண்டும் என்றும்… அருள் ஞானத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதித்த பின்
1.இதை மீண்டும் மீண்டும் நினைவுக் கொண்டு வந்து
2.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
3.இந்த உணர்வின் தன்மை வாழ்க்கையில் வரும் போரினை அடக்கும்.
4.எத்தகைய போராக இருப்பினும் நம்மைப் பாதிக்காத நிலைகளுக்குக் கொண்டு வர முடியும்.

இந்த உணர்வு வலிமை பெற்றுவிட்டால் நாம் எந்த அருள் உணர்வை வலுப் பெற்றோமோ இந்த உடலை விட்டுச் சென்ற பின் நம்மைச் “சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்…!”

குரு பலன்

 

அகஸ்தியனுக்கு முன் எவரும் விண் செல்லவில்லை. அகஸ்தியன் தான் துருவத்தை அறிகின்றான்.
1.அந்த உணர்வின் தொடர் கொண்டு முதல் மனிதனாக துருவ நட்சத்திரமாக உயிராத்மா ஒளியின் நிலை பெறுகின்றது.
2.பல லட்சம் வருடங்கள் ஆகிவிட்டது… இதையெல்லாம் நுகர முடியாது.
3.நமது குருநாதர் அவரின் ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு தான் அதை நமக்கு உணர்த்துகின்றார்.

விண் செல்லும் அந்த ஆற்றல்களை அவர் நுகர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பருகிய
1.அந்தச் சக்தியின் திறன்… அவர் சொல்லும் உணர்வுகளை ஏங்கி எனக்குள் பதிவு செய்து கொண்டதனால்
2.அவரைப் பின்பற்றி அவரின் உணர்வை நினைவு கொள்ளும் பொழுது விண்வெளியின் ஆற்றலை நானும் நுகர முடிகின்றது.

ஆனால் குருநாதர் காட்டிய வழியில் அந்த விண்வெளியின் ஆற்றலை நாம் நுகர்ந்து அறிந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அதைச் சேர்த்துக் கொண்டிருந்தாலும் சாதாரண மக்கள் மத்தியில் பழகும் போது விருப்பு வெறுப்பு உணர்வுகளை நுகர நேர்கின்றது. அது போன்ற ஆயிரக்கணக்கானோர் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அது விஷத்தன்மை கொண்டது.

யார் வந்தாலும் என்னிடம் கஷ்டம் துன்பம் என்று சொல்கின்றார்கள் அல்லவா. எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… என் குடும்பத்தில் துன்பமாக இருக்கின்றது…! என்று சொல்கின்றார்கள்.

அதைக் காதிலே கேட்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் உந்தப்பட்டுத்தான் அதை அறிவாக நான் அறிந்து கொள்ள முடிகிறது.

அப்படி வந்தாலும் குரு காட்டிய நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எனக்குள் கலந்து நான் சுவாசித்து…
1.ஒவ்வொரு நாளும் அதைச் சமப்படுத்த… சமப்படுத்த… சிறுகச் சிறுக எனக்குள் அது சேர்கின்றது.
2.அந்தச் சமப்படுத்தும் உணர்வின் தன்மையை மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கும் பொழுது
3.இந்த உணர்வின் எண்ண அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.

உபதேசிப்பதைக் கேட்கப்படும் போது அதை நீங்கள்
1.எந்த அளவிற்குக் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்துகின்றீர்களோ
2.எந்த அளவுக்குக் கூர்மையாகக் கவனிக்கின்றீர்களோ
3.எந்த அளவிற்குக் கூர்ந்து பதிவு செய்து கொள்கின்றீர்களோ… அந்த அளவுக்கு ஆழமாக உங்களுக்குள் இது பதிவாகின்றது.

அப்படிப் பதிவாக்கிய பின்… அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து மெய் ஞானிகள் வழிகளிலே நாம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தைக் கூட்டினால் இந்தச் சக்தி உயர்கின்றது.

ஒவ்வொரு நிமிடமும் விண்ணை நோக்கி ஏங்கி… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று விண்ணிலிருந்து அதை ஈர்த்து… உங்கள் உடலுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நினைவலைகளைச் செலுத்தும் போது உங்களுக்குள் சிறுகச் சிறுக இது சேர்கின்றது.

பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம் என்றால் பாடங்களைச் சொல்லாக… அதாவது “அவர்கள் சொன்னதை வெறும் பாடமாகப் படிக்கும் நிலைகள் வேறு…”

அதே சமயத்தில்
1.நேரடியாக… இன்னன்னது செய்கின்றது என்று அனுபவ நிலைகள் கொண்டு “அந்தப் பாடத்துடன் சேர்த்து உணரச் செய்யும் நிலைகள் வேறு…”
2.அனுபவத்துடன் காட்டும் நிலை வரும் பொழுது பொருள் கண்டுணர்ந்து விரயமற்ற நிலைகளில் செயல்படுத்த முடியும்.

ஆனால்… புதிதாக நான் ஒன்றை கண்டுணரப் போகின்றேன் என்ற நிலை வரும் பொழுது அது “குரு அற்ற நிலை…!” வெறும் பாட நிலைகளைக் கண்டுணர்ந்த பின் அதைச் செயலாக்கும் நிலைகளில் “எந்த உணர்வின் தன்மையும் தெரிந்து கொள்ளும் பொழுது பல விரயங்கள் ஆகும்…”

ஏனென்றால் அதைத் தெளிந்துணர வேண்டிய நிலை தான் வருகின்றது.

அது போல்… வாழ்க்கையில் தடைகள் வரும் போது பிறருடைய சோர்வான எண்ணங்கள் அதில் கலக்கப்படும் பொழுது “மெய் ஒளியைக் காணும் திறன் அற்று விடுகின்றது…”

ஆனால் குரு பலன் என்பது…
1.குருநாதர் காட்டிய அருள் வழிப்படி “எண்ணத்திலே எண்ணி நான் அவரை நினைவுக்குக் கொண்டு வந்து”
2.மெய் ஒளியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகளைக் கூட்டப்படும் பொழுது
3.அவர் வழியினைக் கண்டு… அவர் உபதேசித்த உணர்வின் அலைகளைப் பின் தொடர்ந்து… அதை நான் நுகர நேர்கின்றது.
4.அவர் எதைப் பருகினாரோ “அவர் உணர்வுடன் ஒன்றி” அவர் பருகியதை நானும் பருக முடிகின்றது.
5.அதை நான் பருகப்படும் பொழுது… அந்த உணர்வின் எண்ண அலைகள் “எனக்குள் குவிகின்றது…”

அதே உணர்வின் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. இப்பொழுது நீங்கள் கேட்டுணரும் பொழுது எந்த அளவுக்குக் கூர்மையாக எண்ணுகின்றீர்களோ உங்களுக்குள் பதிவாகின்றது.

பதிவை மீண்டும் நினைவாக்கி யாம் சொல்லிக் கொடுத்த ஆத்ம சுத்தியை நீங்கள் அடிக்கடி செய்தாலே போதும்.
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்
2.அருள் ஞானம் பெற முடியும்… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்ற முடியும்.
3.பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித வாழ்க்கையில் எந்தச் செல்வமும் நமக்குச் சொந்தமாவதில்லை.
1.அந்த அருள் ஞானத்தை நமக்குள் சொந்தமாக்கி விட்டால்
2.இருளை வென்று உணர்வை ஒளியாக்கும் தன்மை பெற முடியும்.
3.அதைத் தான் இந்த மனித வாழ்க்கையில் சொந்தமாக்க வேண்டும்.

ஏனென்றால் எந்த நிலைகளீல் வாழ்ந்தாலும் இந்த உடலும் சொந்தமாவதில்லை உடலால் சம்பாரித்த செல்வமும் நின்றதில்லை.

கோடிக் கோடி செல்வம் பெற்றிருந்தாலும்… பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்துச் சுகமாக வாழ்வேன்…! என்றாலும் அப்படிப்பட்ட அரசன் எவனும் இன்று இருந்ததில்லை. அவன் பேய் மனமாகத் தான் சென்றான்…. அவன் உணர்வுகளும் பேய் மனமாக மாறியது…!

அவனைப் போன்ற ஆசையைப் பின்பற்றியவர்கள் அனைவரும் அவன் வழியிலே சென்று மத வெறி கொண்டு மனிதனை மனிதனே அடித்துக் கொன்று… அதைக் கண்டு மகிழும் நிலையே இன்று உருவாகி விட்டது.

அரசன் அவன் எதிரிகளைக் கொன்று குவித்தான். பல வகையிலும் மதம் என்ற பேரால் பேதங்களை அவன் உருவாக்கினான்.

அதே மதத்தின் அடிப்படையில் இன்று நஞ்சு கலந்த உணர்வாக மதத்திற்குள் இனம் என்ற நிலைகள் பல இனங்களாக வளர்ந்து விட்டது. அவன் அவன் “தன் இனமே பெரிது…!” என்று மற்ற இனத்தைப் பழித்துப் பேசினான். அதனால் பழி தீர்க்கும் உணர்வுகளே வளர்ந்தது.

மனிதனுக்கு மனிதன் உருக்குலையச் செய்யும் நிலைகளும்… சிந்தித்து வாழும் நிலைகளும் செயல் இழந்து… சிந்தனையற்ற செயலாகவே நாம் இன்று வாழ்ந்து கொண்டுள்ளோம்.

சிந்தனையற்ற செயலை நாம் நுகரும் பொழுது
1.நஞ்சு கொண்ட உணர்வுகள் நமக்குள் வளர்ந்து
2.நஞ்சை உணவாக உட்கொள்ளும் நிலை வளர்ந்து
3.நஞ்சின் செயலாக்கங்களாகச் செயல்படும் நிலையும்
4.நஞ்சு கொண்ட உணர்வையே வளர்த்திடும் நிலையே வளர்கின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட வேண்டும்…! என்று எமது குரு எனக்குள் பதிவு செய்திருந்தாலும் அவரை நமது குரு என்ற நிலைகளில் எண்ணி ஒவ்வொருவரும் நாம் வாழ்தல் வேண்டும்.

1.முன்பு எமது குருவாக இருந்தார்…
2.இந்த உணர்வின் தன்மை நீங்கள் நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் வழி சென்றால்
3.நமது குரு என்ற நிலையில் ஒன்று சேர்ந்து வாழும் நிலை வரும்.
4.சாமியையும் குருவையும் பிரித்து எண்ண வேண்டியதில்லை (இது முக்கியம்)
5.அருள் ஒளியின் தன்மை கொண்டு “நமது குரு…” என்ற நிலைகளில்
6.நாம் எல்லாம் ஒன்று…! என்ற நிலையில் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

குரு அருள் துணை கொண்டு உலக மக்கள் நஞ்சிலிருந்து விடுபட வேண்டும்… அருள் ஞானம் பெறுதல் வேண்டும்…! என்ற உணர்வை நாம் தியானித்து வளர்த்தல் வேண்டும்.

பகைமை என்ற உணர்வுகள் வந்தாலும் அது நமக்குள் வளராது தடுத்து அருள் ஒளியை நமக்குள் பெற்று
1.உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும் என்ற உணர்வை ஓங்கச் செய்து
2.அருள் ஞானத்தை வளர்த்திடும் புவியாக நாம் மாற்ற வேண்டும்.

அருள் ஞானிகள் பிறந்த இந்தப் பூமியில்… அருள் ஒளியின் சுடர்களை எண்ணி…
1.இந்தியா என்ற எல்லையை எண்ணும் பொழுதெல்லாம்
2.ஒவ்வொரு மனிதனின் மனமும் மாறி
3.அருள் ஒளிச் சுடராக மாறும் நிலைக்கு வளர வேண்டும்.

நாம் எல்லாம் உலகுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வளர வேண்டும்…!

ஞானிகள் உணர்வைச் சிறு குழந்தைகளைப் போல் பதிவு செய்து கொண்டால்… ஞானிகள் செய்ததை நாமும் செய்ய முடியும்

 

ஞானிகள் உணர்வைத் திரும்பத் திரும்ப உங்களுக்கு உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.
1.இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால்
2.இப்பொழுதே அதை முழுமையாகப் பெறவும் செய்யலாம்.

ஆனால் ஒரு சிலருடைய எண்ணங்கள் எப்படி இருக்கிறது…? என்றால் நான் படித்திருக்கின்றேன்… எல்லாப் புத்தகங்களையும் படித்து இருக்கின்றேன்…! ஆனால் சாமி சொல்லும் தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை…! என்று சாதாரணமாகச் சொல்வார்கள்.

நமக்கே முடியவில்லை… மற்றவர்கள் எப்படித் தெரிந்து கொள்வார்கள்…! என்பார்கள். நான் எல்லாவற்றையும் படித்திருக்கின்றேன்
1.சாமி சொல்வதை என்னாலேயே பின்பற்ற முடியவில்லை… சாதாரண ஆட்களால் எப்படி முடியும்…?
2.இப்படிப் பிறரை எண்ணித் தன்னைத் தாழ்த்திக் கொள்வோர் தான் உண்டு.

மூன்று வயது நான்கு வயது சிறு குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் படிக்கவே இல்லை. டிவி.க்கு முன் உட்கார வைத்து அந்தக் குழந்தைகள் அதைக் கூர்ந்து கவனித்தால் போதும். அதில் பாடும் பாட்டை அப்படியே பாடும்… அங்கே ஆடும் ஆட்டங்களையும் ஆடும்.

ஆனால் பெரியவர்கள் நம்மால் அப்படிச் செயல்படுத்த முடியுமா…?

1.குழந்தை கூர்மையாகக் கவனித்தது…
2.அதற்குள் அந்த உணர்வுகள் பதிவானது…
3.அதுவே மீண்டும் அங்கே செயலாக்குகின்றது.

நாம் அதைப் பார்த்துவிட்டுச் சொல்வோம். டிவி.யில் பாடிய பாட்டை என் குழந்தை அப்படியே பாடுகின்றது… அப்படியே ஆடுகிறது…! என்று எல்லோரிடமும் பெருமை பேசுவோம்… புகழ் பாடுவோம்.

ஆனால் தன்னால் அதைச் செயல்படுத்த முடிகிறதா…? என்றால் இல்லை…! குழந்தை எதைப் பதிவு செய்ததோ அந்த உணர்வுகள் அங்கே இயங்குகின்றது.

அதைப் போன்று தான் யாம் உபதேசிக்கும் இந்த நிலைகளில் நாம் அனைவருமே இப்பொழுது “குழந்தைப் பருவம் போன்று தான்…”
1.ஞானிகள் உணர்வுகளைக் குழந்தைகளைப் போல் பதிவு செய்து கொண்டால்
2.அவர்கள் செய்த நிலைகளை எல்லாம் நாமும் செய்ய முடியும்.
3.அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்.

அப்படி இல்லாது… “எங்கே…!” நான் எத்தனையோ புத்தகங்கள் படித்து இருக்கின்றேன். சாமி புதிதாகச் சொல்கிறார். அதை என்னால் கிரகிக்க முடியவில்லை… பின்பற்ற முடியவில்லை…! என்று இப்படிச் சொல்லி விடுகின்றார்கள்.

பெரும்பகுதியானவர்கள் தன்னைத் தானே தாழ்த்தி… தாழ்த்திடும் நிலைகளுக்குத் தான் கொண்டு செல்கின்றார்கள்.

காரணம்…
1.எதை எல்லாம் அதிகமாகப் படித்துப் பதிவாக்கி வைத்திருக்கின்றோமோ அந்த வழிப்படிதான் நம்முடைய எண்ணங்கள் செல்லும்.
2.இந்த உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதன் வழிக்கே தான் நம்மை இழுத்துச் செல்லும்.
3.யாம் சொல்வதை அது காலி செய்து கொண்டே இருக்கும்.
4.படித்தது மட்டும்தான் முன்னாடி நிற்கும்… சாமி என்னத்தைச் சொல்கிறார்…? என்று அதை ஒதுக்கிவிடும்.

சிறு குழந்தைகள் ஒன்றாவது வகுப்பிலே படிக்கின்றது. அடுத்து இரண்டாவது வகுப்பு வந்த பின் “முதலில் படித்ததைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றது… நான் எப்படிப் படிக்கப் போகின்றேன்…!” என்று எண்ணினால் இரண்டாவதைப் படிக்க முடியாது.

ஆக… படிப்படியாகப் படித்து வளர்ச்சியாகித் தான் எல்லாவற்றையும் தெரிந்து “விஞ்ஞானியாக ஆவதும் அதன் மூலம் தானே…!” இந்த நினைவே வருவதில்லை.

தத்துவஞானிகள் அனைத்தையும் கொடுத்துச் சென்றார்கள். ஆனால் அது ஏமாற்றுபவன் கையிலே சிக்கித் திசை திரும்பி விட்டது. பக்தி என்ற நிலையில் நினைவுகள் எல்லாம் வெளியிலே சென்றுவிட்டது.

அபிஷேகம் செய்து ஆராதனை செய்து யாகங்கள் செய்து விட்டால் எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று “காசு கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைக்குச் சென்று… அதிலே தான் நம் நம்பிக்கையும் சென்று விட்டது…”

1.ஆனால் நாம் எண்ணுவதை எல்லாம் நம் உயிர் நெருப்பாக இருந்து
2.அது தான் நமக்குள் உருவாக்குகின்றது என்ற இந்த நம்பிக்கை வருவதில்லை.

இதையெல்லாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று அன்றைய ஞானிகள் சொன்னதை நாமும் ஓதிக் கொண்டே உள்ளோம்.

நம் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான்… அண்டத்தின் ஆற்றல்களை எடுத்துப் பிண்டத்திற்குள் ஒளியாக மாற்றி இன்றும் ஒளியாகத் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எந்நாட்டவரும் பின்பற்றி அந்த அகஸ்தியன் வழிகளிலே எல்லோரும் வளர முடியும்.

1.என் நாடு… உன் நாடு…! என்று நிலை இல்லாதபடி
2.எந்நாட்டவரும் அவன் வழியிலே சென்றால்
3.அருள் ஒளியின் சுடராக அகஸ்தியனைப் போன்று முழுமை அடையலாம்.

இந்த உடலை விட்டு அகன்ற பின்… என்றும் ஏகாந்த நிலையில்… ஏகாந்த வாழ்க்கை வாழும் உணர்வைக் காட்டிய அந்த அகஸ்தியன் அருள் வழியில் நாம் திகழ்தல் வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் யார்… எதை… எப்படி… எந்த வகையில்… குறைகளைக் கண்டாலும்
2.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அந்தக் குறையை வளர்த்திடவே கூடாது.
3.அருள் ஒளி பெருக வேண்டும்…! என்ற உணர்வைத் தான் செலுத்திட வேண்டும்.

குறைகள் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.. தெளிந்திடும் மனம் வேண்டும்… தெரிந்து.. தெளிந்து… தெளிவாக வாழும் அந்தத் திறன் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் உருவாக்கிவிட்டால் “பகைமை உணர்வுகள் மாறும்…!”

இதைப் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது…
1.ஒரு காலம்… அவர்களுக்குள் இருக்கும் தவறை உணர்வார்கள்…!
2.நம்மைப் பற்றி எண்ணும் பொழுது அவர்களுக்குள் சிந்திக்கும் செயலும்… மாற்றியமைக்கும் திறனும் நிச்சயம் வரும்.

ஆகவே மனிதர்கள் நாம் இந்த அருள் ஒளியின் தன்மையைப் பெற்று மற்றவர்களுக்கும் பாய்ச்சிட வேண்டும்.

ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ அதைப் போல் ஒளியான உணர்வுகளை அவர்களுக்குள் நாம் பாய்ச்சும் பொழுது
1.பல தீமையான உணர்வுகளுக்குள் அவர்கள் அடைபட்டிருந்தாலும்
2.நம்மைத் திட்டி அவர்கள் ஏளனப்படுத்தியிருந்தாலும்
3.நாம் பதிக்கும் அருள் உணர்வுகள் ஒரு சமயம் இயக்கப்பட்டு
4.நாம் சொன்ன உணர்வின் நினைவுகள் அவருக்குள் கிளர்ந்தெழுந்து
5.அவருக்குள் இந்த ஒளியின் தன்மை பெறும் தகுதி பெறும்.
6.அவரை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் நிலையும் ஏற்படும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!