நாம் எடுக்க வேண்டிய பெரு மூச்சு (பெரும் மூச்சு)

நாம் எடுக்க வேண்டிய பெரு மூச்சு (பெரும் மூச்சு)

 

விண்ணிலிருக்கும் அருள் ஞானிகளைப் பற்றி உங்களிடம் அடிக்கடி உபதேசிக்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி மேல் நோக்கிச் சுவாசியுங்கள்.
1.எதையெல்லாம் உயர்வாக எண்ணுகின்றீர்களோ… அப்படி எண்ணும் போது…
2.உங்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்ற (பெரும் ஏக்கமான) பெரு மூச்சாகக் கிடைக்கும்.

ஆனால் எம்மைச் சந்திக்க வரும் பொழுது என் காலிலே விழுந்து பாத நமஸ்காரம் செய்யும் போது… என்ன…? இப்படிச் செய்கிறார்களே…! என்று பார்க்கும் பொழுது
1.மேலிருந்து உயர்ந்த சக்தியை எடுத்து உங்களுக்குக் கொடுப்பதற்குப் பதில் நான் கீழ் நோக்கியே பார்க்க வேண்டி இருக்கின்றது.
2.அதைச் சாதாரண மனிதனின் உணர்வைத் தான் நானும் அதைச் சுவாசிக்க நேர்கின்றது.

ஆனால் விண்ணின் ஆற்றல் எல்லை கடந்து பரவி உள்ளது.

ஆகவே அதை நோக்கி எண்ணி ஏங்கி எடுத்து அந்த சக்தி உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும்… உங்களை உயர்ந்த நிலைகள் கொண்டு நான் பார்ப்பதற்கும் அது சரியாக இருக்கும்.

பாத பூஜை… பாத நமஸ்காரம்… என்று சாதாரண வாழ்க்கையில் நாம் அடிபணிந்தே பழகி விட்டோம். நமக்குள் வரும் ஆசை… நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் “இந்த வினையின் தத்துவத்தை” நாம் அடிபணியச் செய்ய வேண்டும்.

அதாவது… மெய் ஒளியைப் பெறும் உயர்வான எண்ணங்களை நாம் எடுத்து எடுத்து தீமைகளை அடிபணியச் செய்யப் பழக வேண்டும்.

நான் யார் வீட்டுக்காவது சென்றால்… “சாமி உங்களுக்குக் கும்ப அபிஷேகம் செய்கிறோம்…” என்று குடத்தைத் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள். அந்த உயர்வு தேவையில்லை.

நமக்குள் உயர்ந்த உணர்வுகளை எடுக்க வேண்டும் அதுதான் நமக்குத் தேவை. நாம் உயர்ந்த உணர்வின் தன்மையைச் சுவாசிக்கின்றோமோ அந்த உயர்ந்த நிலைகளைப் பெறும் ஆர்வத்தின் உணர்ச்சியை நாம் தூண்ட வேண்டும்.

1.பிறரைப் போற்றுவதற்கோ… அந்தப் போற்றுதலால் தன்னை மதிக்க வேண்டும் என்ற நிலைகள் நமக்கு அறவே கூடாது.
2.விண்ணிலிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைந்து
3.பேரானந்தப் பெருவாழ்வாக வாழும் அந்த மேல் நோக்கிய சுவாசமே…
4.நமக்குள் உயர்ந்த மூச்சாக… பெரும் மூச்சாக அமைய வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply