உடல் எனக்குத் தேவையில்லை… துருவ மகரிஷியின் ஆற்றலே எனக்குப் போதுமானது என்றார் ஆதிசங்கரர்

உடல் எனக்குத் தேவையில்லை… துருவ மகரிஷியின் ஆற்றலே எனக்குப் போதுமானது என்றார் ஆதிசங்கரர்

 

அன்று ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்தில் இருந்த துவைதவாதிகள் அரசனுக்குக் கீழ் எவ்வாறு நடந்து கொண்டார்கள்…?

மந்திர ஒலிகளைப் பாய்ச்சி அதற்கு வேண்டிய உணர்வுகளை ஊட்டி அதன் வழி கொண்டு மனிதனை ஏங்கச் செய்து
1.தன் வாழ்க்கையில் நல்லதைப் பெற வேண்டும் என்று ஏக்கத்தால் அவன் ஏங்கி அது உணர்வை ஏங்கிக் கிடைக்காத நிலைகளில் அவன் மடிந்து விட்டால்
2.அதே மடிந்த மனிதனை அந்த ஏக்கத்தால் எந்த நோய்வாய்ப்பட்டு இறந்தானோ
3.மீண்டும் அந்த மந்திரத்தால் அவனின் ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி
4.அதை மற்றவர்களுக்குப் பாய்ச்சுவார்கள்… இவன் உடலில் வந்த நோய்கள் அங்கே வரும்.
5.இதை நிவர்த்தி செய்வதற்கு யாக வேள்விகளைச் செய்தால் உனக்கு இந்த நோய்கள் நீங்கும் என்று செய்பவர்களே துவைதவாதிகள்.

காசி கங்கைக் கரையில் துவைதத்திற்கும் அத்வைதம் என்ற தத்துவத்திற்கும் அன்று சர்ச்சையான நிலையில் ஆதிசங்கரருக்கும் அவர்களுக்கும் நடந்த போர் முறையைக் குருநாதர் காட்டுகின்றார்.

காசியில் கங்கைக் கரை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமாக இருக்கின்றது ஒரு அரசருடைய அரண்மனைக்கு அருகிலே இருக்கின்றது விநாயகன் சிலை.

எந்த மனிதன் எந்த நோயின் தன்மை கொண்டானோ அதே மந்திர ஒலிகளை இங்கே ஆதிசங்கரர் உடலிலே ஏவல் செய்து துவைதவாதிகளால் பாய்ச்சப்படுகின்றது.

அவ்வாறு பாய்ச்சிய பின் அவருக்கு வயிற்று வலி வருகின்றது. அப்போது தான் அவர்கள் சொல்கின்றார்கள். நீ இந்த விநாயகருக்கு கண ஹோமம் செய்து இன்னென்ன பொருட்கள் இட்டு இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் உனது வலி தீரும் என்று சொல்கின்றார்கள்.

அப்போது ஆதிசங்கரர் சிரிக்கின்றார்.

நீ சொல்வதில் உண்மை உண்டு. இந்தச் சிலையின் தத்துவம் என்ன தெரியுமா…?. இந்த விநாயகர் தத்துவத்தில் சிலையின் உண்மை என்ன என்று தெரியுமா…? என்று வினாக்களை எழுப்புகின்றார்

நீ சிலையை வடித்து இந்த ஹோமங்களைச் செய்தால் என் வயிற்று வலி நீங்கும் என்று நீ உன்னால் என்னை ஏவப்பட்டு என்னை நீ அடிமைப்படுத்தும் இந்த நிலைகளில் இருந்து நீ வெற்றி பெறுவாய் என்று எண்ணுகின்றாய்.

நீ எண்ணிய உணர்வுகள் எதுவோ அது உனக்குள் விளைந்து இதன் விளைவாகத் தான் நீ செல்வாயே தவிர உண்மையின் உணர்வை அறியும் ஆற்றல் உனக்குள் வராது.

1.உனது ஆசை எதுவோ அதன் உணர்வின் தன்மையை உன் உயிர் உருவாக்கிவிடும்.
2.இந்த விஷத்தின் தன்மை தான் உனக்குள் உருவாகும் என்று தெளிவாக்குகிறார்.
3.நாம் எண்ணுவதை உயிர் எப்படி உருவாக்குகிறது என்பதை நீ பார்…!
4.நீ ஏவிய ஏவல்கள் எப்படி மடிகின்றது…? என்று பார் என்ற நிலைகளை அப்போது சொல்கின்றார்.

ஆதிமூலம் என்ற உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்பப் பல கோடி மிருக நிலைகளைக் கடந்து பல கோடி நிலைகளிலிருந்து தப்பிக்கும் உணர்வை எடுத்து மனிதனாக உருவாக்கிய பின் கணங்களுக்கு அதிபதியாகிக் கடும் நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்ற இந்த மனித உடலைக் கணபதி என்றும், பல கோடி உணர்வுகளை வென்ற இந்த கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர் என்றும் அந்த உணர்வின் துணை கொண்டு எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலை தான் “ஐகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வவிநோதினி..” என்று அந்த நேரத்தில் பாடுகின்றார்.

ஐகிரி நந்தினி என்கிற பொழுது ஐந்து புலனறிவால்… தான் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உடலுக்குள் எவ்வாறு இந்த உயிரால் உருவாக்கப்படுகின்றது…? என்ற நிலையில் பாடலைப் பாடி அந்த இடத்தில் அவர்களுக்கு உபதேசிக்கின்றார்.

1.நீ சுவாசிக்கும் உணர்வு எதுவோ அது உயிரிலே பட்டபின் அதன் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இயக்குகின்றது…? என்று உணர்ந்து பார்.
2.இந்த உணர்வின் அறிவினை நீ இழந்து விடாதே…!
3.நீ எதை எண்ணுகின்றாயோ அதைத்தான் உன் உயிர் உருவாக்குகின்றது.
4.உன் ஆசையின் உணர்வுகள் நீ எதை எண்ணுகின்றாயோ அதை உருவாக்குகின்றது.

இப்பொழுது நான் எண்ணுவதெல்லாம் எது…?

மனிதனின் வாழ்க்கையில் இத்தகைய தீமைகளை வென்றவன் துருவ மகரிஷி… நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக அவன் திகழ்ந்து கொண்டிருக்கும் அவனின்று வரும் அந்த உணர்வின் சத்தை எனக்குள் வினையாக்கி இந்த உடலிலே கணங்களுக்கு அதிபதி ஆக்கும்போது அவன் எந்த நஞ்சினை வென்றானோ அதை வைத்து நீ ஏவிய உணர்வின் நஞ்சினை வெல்ல முடியும் என்ற உணர்வை சொல்கிறார்.

உயிரான நெருப்பில் அருள் ஞானியின் உணர்வை இங்கே இடுதல் வேண்டும். அதன் உணர்வின் தன்மையை உருவாக்கும் பொழுது அந்த உணர்வின் அணுவாக எவ்வாறு விளைகின்றது…? என்பதைப் பார் என்ற உணர்வை வைத்து அவன் ஏவல் ஏவிய அந்த வயிற்று வலியை நீக்கினார்.

நீக்கிய பின் அதற்குத்தான் இப்பொழுது வயிற்று வலி இல்லை என்று சொன்ன பின் இதற்கு உபாயத்தைத் தேடினார்கள் அன்று. அந்த கங்கைக் கரையில் இதைக் கடந்து சென்று விடுவோம் என்று நயவஞ்சகத்துடன் கங்கைக்கரையின் இக்கரைகளுக்குச் செல்லலாம் என்று அழைத்துச் சென்று கல்லால் கட்டி அவருடைய உடலை நீர் சமாதி ஆக்கிவிட்டார்கள்… மடியச் செய்த பின் அது மடிந்து விடும் என்று.

அவர் எத்தனையோ இடங்களுக்குச் சென்றாலும் உண்மையின் உணர்வை உணர்த்தும் போது அன்று அரசர்களால் மதங்களாக உருவாக்கப்பட்டு அவர்கள் ஞானிகளால் கொடுக்கப்பட்ட கடவுள் என்ற நிலைகளை உருவாக்கினாலும்
1.இதை மற்ற மக்களுக்குத் தெரியாத நிலைகளில் மறைக்கும் வண்ணம் வந்த நிலைகளை எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவுபடுத்துவதற்காக
2.இவர்கள் தன்னை மடியச் செய்வார் என்று உணர்ந்தார் ஆதிசங்கர்ர்.
3.இந்த உடல் பற்று அவர்களுக்குத் தேவை… எனக்கு இந்த உடல் பற்று தேவை இல்லாதது.
4.நீ எதை வேண்டுமென்றாலும் எண்ணு… அந்த அருள் ஞானியின் உணர்வே எனக்குப் போதுமானது.

ஆகவே… இந்த உடல் எனக்குத் தேவையில்லை… எது வேண்டுமானாலும் செய் என்று உடலைக் கொடுத்துவிட்டு ஆன்மா எதன் கூர்மையாக எண்ணியதோ அதன் வலிமை கொண்டு உடலை விட்டு அகன்ற பின் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக இணைந்தே வாழ்கின்றார்… வாழ்ந்து வருகின்றார்.

ஆனாலும் அவரின் நிலைகள் கொண்டு அவர் எதன் தொடரில் வளர்ந்தார் என்றால்…? இவருக்கு மனைவி இல்லை… திருமணம் ஆகவில்லை.

தாயின் தன்மை கொண்டு தான் வாழ்ந்து வந்தார். சந்தர்ப்பத்தால் நோயால் மடிந்த அந்தத் தாயை எண்ணி அவர் பெற்ற இந்த உணர்வுகள் அவர் உடலுக்குள் அரவணைத்திடும் சக்தியாக வந்தது.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் அரவணைத்த இனத்தின் தன்மை கொண்டு அந்தத் தாயின் உணர்வு கொண்டு ஒளியின் சரீரமாக அதன் அரவணைப்பிலேயே இன்றும் அந்த ஆதிசங்கரர் ஒளியின் சரீரமாக இருக்கின்றார்.

அன்றைய காலங்களில் திருமணம் ஆகாது மனைவி இல்லாத நிலைகளில் இருப்போரைச் சன்னியாசம் வாங்கச் சொல்லும் நிலையில்… இவருக்குள் இருக்கும் அபூர்வ சக்தி கொண்டு அவரை வெளிவிடக் கூடாது என்பதற்காக துவைதவாதிகள் ஆதிசங்கரரைச் சன்னியாசத்தை வாங்கச் சொல்லி அவர்களின் ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று பல முயற்சி செய்தாலும் அவர் எப்படித் தப்பினார்…? என்று நமது குருநாதர் இதைத் தெளிவாக்குகின்றார்.

இதையெல்லாம் யாம் புத்தகத்தில் படிக்கவில்லை. இந்த ஸ்தலங்களுக்குச் செல்லப்படும்போது தான் இதை உணர்த்தினார். இன்றும் அந்த அலைகள் உண்டு… அதை நீ நுகர்ந்து பார் என்று சொன்னார் குருநாதர்.

ஆதிசங்கரருக்கு உடல் பற்று இல்லை… அவர் தாயின் உணர்வுகள் அங்கே இருந்தது. ஏனென்றால் அனாதையாக இருக்கும் பொழுது சோற்றுக்காக அவர் தாய் பெற்ற அவஸ்தை எத்தனையோ.

நோய்வாய்ப்பட்டு அந்த உடலை விட்டுப் பிரியும் பொழுது அந்தத் தாயின் எண்ணத்தால் தனக்குள் அரவணைக்கப்பட்டு தன் குழந்தையின் மேல் பாசத்தால் அந்தத் தாயின் ஆன்மா இந்த ஆதிசங்கரர் உடலுக்குள் வரும் பொழுது அருள் ஞானத்தின் உணர்வுகள் அங்கே தொடர்கின்றது.
1.அதன் வழியே தான் கோலமாமகரிஷியின் உணர்வுகள் இவர் உடலிலே சேர்க்கப்பட்டு அருள் ஞானம் பெறப்பட்டு
2.இந்த உலகின் நிலைகள் எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிகின்றார் ஆதிசங்கரர்.

ஆகவே அவருக்குத் திருமணம் ஆகவில்லை. இருப்பினும் தாயின் உணர்வுகள் அவர் உடலில் உண்டு. இதன் வளர்ச்சியின் தன்மை கொண்டு அவர் எவ்வாறு அவர் விண் சென்றார்…? என்ற நிலையை இன்றும் தாயின் அரவணைப்பில் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளார் என்ற நிலையைத் தெளிவாக காட்டுகின்றார் நமது குருநாதர்.

அவரைக் கங்கையில் கல்லைக் கட்டி மூழ்கச் செய்யும் பொழுது அவர் சொல்கின்றார்.
1.இந்தச் சரீரம் எனக்குத் தேவையில்லை
2.அருள் ஞானியான அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றல் நான் பெற வேண்டும்… நஞ்சினை வென்றவர்கள் அவர்கள்
3.அதன் உணர்வே எனக்குள் இருளை நீக்கும்… அதன்வழி தியானிக்கும் பொழுது நீங்கள் ஏவல் செய்த நஞ்சு என்னை ஒன்றும் செய்யாது.

ஆகவே இதிலிருந்து நீங்கள் இனியாவது இதைத் தெரிந்து செயல்படுங்கள் என்று சொல்லும் பொழுது அவருடைய தத்துவங்கள் ஏறவில்லை என்பதற்காக இவரை எப்படியும் மடியச் செய்ய வேண்டும் என்று தான் கங்கையில் நீர் சமாதி வைத்தார்கள்.

நீங்கள் ஆதிசங்கரருடைய சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் காசி கங்கைக் கரைக்குச் சென்றார். அதற்குப் பின் என்ன ஆனார்…? என்று கேள்விக்குறியாக தான் இருக்கும்.

இதைத் தெளிவாகக் காட்டினார் நமது குருநாதர்.

மெய் ஞானியாக ஆக வேண்டும் என்று எவர் விரும்புகிறாரோ அவரே அந்நிலை பெற முடியும்

மெய் ஞானியாக ஆக வேண்டும் என்று எவர் விரும்புகிறாரோ அவரே அந்நிலை பெற முடியும்

 

வானியல் தத்துவத்தை நமது பூமி விண்ணிலிருந்து கவரப்படும் பொழுது… நம் பூமிக்கும் மற்ற கோள்களுக்கும் புவியியல் மாற்றங்கள் எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு.

பூமிக்குள் நடக்கும் மாற்றங்களில் “நீருடன் கலந்த உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து…” சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து மற்ற மற்ற பொருள்களை இணையச் செய்கின்றது.

இருப்பினும் தான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கடல்களில் ஒன்றுடன் ஒன்று மோதி அழுக்கின் தன்மை பல நிலைகள் உருவாகின்றது.

இருப்பினும் நட்சத்திரங்கள் மோதும்…
1.அதாவது ஒரு நட்சத்திரத்தின் சக்தியும் மற்ற நட்சத்திரங்களின் சக்தியும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகப் போர் செய்யப்படும் பொழுது
2.மற்ற கோள்கள் அதை ஈர்க்கும் தன்மை அடைந்து இரண்டும் மோதும் நிலை வந்து
3.ஒன்றுடன் ஒன்று போர் செய்து கொண்டிருக்கும் பொழுது ஈர்க்கும் தன்மை வந்து மோதலில் ஓர் உயிரணுவாக மாறுகின்றது.

இப்படி உயிரணுக்கள் மாறும் பொழுது மற்ற புவியியலின் ஈர்ப்புக்குச் சென்றால் அங்கே தாவர இனச் சத்து இல்லை என்றால் அங்கே விளையும் விஷத்தினை உணவாக உட்கொள்கின்றது.

அல்லது இத்தகைய அணுக்கள் அந்தப் பூமியில் படர்ந்திருந்தால்… சிறுகச் சிறுக நிலநடுக்கங்களும் கொதிகலனாகிக் கீழ்நிலைக்குச் செல்லப்படும் பொழுது இந்த அணுக்கள் இதனுடன் குவிக்கப்பட்டு மீண்டும் அதனுடன் உறையப்படும் பொழுது பாறைகளுக்கு இடையில் சிக்கிப் பாறைகளுக்குள் அணுக்களாக மாறுகின்றது.

நம் பூமியில் ஆதியிலே இதே போன்று ஏற்பட்ட அணுவின் தன்மைகள் பாறைக்குள் தேரையும்… பாறைக்குள் வண்டுகளும்… பாறைகளுக்குள் பல விஷத் தன்மைகளும் உண்டு.

இது போன்று மற்ற எல்லாக் கோள்களிலும் தான் எடுத்துக் கொண்ட உயிரணுக்கள் அதிலே சிக்குண்டு வளர்ச்சியற்ற தன்மையில் விஷத் தன்மை கொண்டதாக அங்கே வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால் நட்சத்திரங்களில் இவை இல்லை. சூரியனில் உண்டு.
1.விஷ அணுக்களாக உருவாக்கி இருந்தாலும் அதிலே கதிரியக்கப் பொறிகள் பெரும் மாற்றங்களை உருவாக்கும் தன்மைகள் உண்டு.
2.ஏனென்றால் சிலவற்றை உங்களுக்குத் தொட்டுத்தான் காட்ட முடியும்.

இதை ஏன் முழுமையாகச் சொல்லவில்லை…? என்று நீங்கள் எண்ணலாம்.

உங்களுக்குப் பாட நிலைகள் கொடுக்கப்படும் பொழுது முழுமையாக விஞ்ஞானியாக வரும் பொழுது தான் முழுமை வரும். .

1.முதலிலே கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுப் பார்த்து அதனுடன் இணை சேர்த்து அதைப் பதிவு செய்து
2.பின் ஒவ்வொரு பாட நிலைகளையும் ஒவ்வொரு ஸ்டேஜுக்குக் கூட்டமைப்பிற்கு வரும் பொழுது தான்
3.அதனின் மாற்றங்களைக் கல்வி அறிவில் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இதைப் போன்று தான் அந்த மெய் உணர்வுகளின் அணுக்களை உங்களுக்குள் பதிவு செய்யப்படும் பொழுது
1.நீங்களும் அந்த மெய் ஞானிகள் உணர்வுடன் ஒன்றி வளரலாம்.
2.புவியில் வரும் தீமைகளை மாற்றிடும் சக்தியை நீங்கள் பெற வேண்டும்
3.பெறலாம்.. பெற வேண்டும்…! என்பதற்குத்தான் இதை உங்களுக்கு உபதேசிப்பது.

குருநாதர் எமக்கு எவ்வாறு பயன்படுத்தினாரோ… அதே போன்றுதான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

நீங்கள் அமர்ந்து கேட்கின்றீர்கள் நான் காட்டிற்குள் சென்று அவதிப்பட்டுத் தான் பெற்றேன்.

அதை வளர்க்கும் முறைகளில் பல இன்னல்களில் இருந்து எப்படி மீள வேண்டும்…? என்று எனக்குள் அது எத்தனையோ இன்னல்கள் உருவாக்கப்பட்டு என் உடலுக்குள் அது ஊடுருவி… என் உடலிலே பெற்ற அந்த அணுக்கள் அதனால் எவ்வாறு மாற்றம் அடைகின்றது…? என்று தன்னுள் தன்னை உணரும்படி செய்தார் குருநாதர்.

உங்களுக்கு அதையெல்லாம் நான் செய்யவில்லை.

1.உயர்ந்த ஞானத்தின் சக்தியை உங்களுக்குள் பாய்ச்சப்பட்டு ஒவ்வொரு அணுக்களுக்கும் இணைத்து
2.தாவர இனங்களுக்கு எப்படி உரத்தை இட்டு அதன் வளர்ச்சியைப் பெறச் செய்வது போல்
3.ஒவ்வொரு ஜீவ அணுக்களிலும் அருள் மகரிஷிகளின் உணர்வை உரமாக்கப்பட்டு
4.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை நுகரும் ஆற்றலைப் பெறச் செய்வதற்கு
5.அதனின் உணர்வின் வழிப் பாதையில் நீங்கள் செல்லப்படும் பொழுது
6.பேரண்டத்தின் பேருண்மைகளை நீங்கள் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

இப்பொழுது இல்லை என்றாலும் இதன் வரிசையில் “எவர் ஒருவர் பின்பற்றுகின்றாரோ…” அவர் நிச்சயம் அந்த அண்டத்தின் நிலைகளைப் உங்கள் பிண்டத்திற்குள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை உணர முடியும்.

வானியல் தத்துவம் புவிஇயலுக்குள் வந்தாலும்.. உயிரியலுக்குள் வரும் நிலைகளில் அகஸ்தியன் துருவத்தின் உணர்வைத் தனக்குள் கண்டுணர்ந்து அதனின் ஆற்றலைப் பெற்று வானஇயல் தத்துவத்தைத் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றுவது போல நீங்கள் ஒவ்வொருவரும் இதைப் பெற முடியும்.

கற்காலம் – உலோகக் காலம் – விஞ்ஞானக் காலம்

கற்காலம் – உலோகக் காலம் – விஞ்ஞானக் காலம்

 

மனித இன ஞான வளர்ச்சி தன்மையின் காலம் கற்காலமாக இருந்து உலோக காலமாக வளர்ந்து இன்று அது விஞ்ஞான யுகமாக பரிணமித்துள்ளது. ஆனாலும் இதைக் காட்டிலும் இன்று விஞ்ஞான அறிவாக மெய்ஞான உணர்வுகளே மனித சமுதாயத்தில் வளர்ந்துக் கொண்டுள்ளன.

புவியின் மண்ணில் கலந்துள்ள உலோகங்களைப் பிரித்தெடுத்து அதனைப் பயன்படுத்தும் நிலையை தெரிந்து கொண்ட மனிதன் மண்பாண்டங்களைக் கைவிட்டு உலோகப் பாண்டங்களுக்கு மாறினான்.

மேலும் மனிதன் தன்னைப் பாதுகாக்க ஒரு சக்தி தேவை என்ற நிலைகளில் மனித உணர்வின் உண்மை நிலைகளை அறிந்து கொள்ளத் தொடங்கினான்.

ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனின் உயிரான்மா… தான் மனிதனாக வாழ்ந்த பொழுது எந்த நோக்கில் யார் மீது பற்று கொண்டிருந்தானோ அவரின் உடலினுள் சென்று தன்னுடைய ஆசையின் நிலைகளை அவருடைய உடலில் எப்படிச் செயல்படுத்துகின்றது என்கிற நிலைகளை மனிதன் அறிந்து கொள்கின்றான்.

இவ்வாறு மனிதன் தான் அறிந்து கொண்ட நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பான நிலைகளை அமைத்துப் பிற மனித உடல்களில் மந்திர ஒலிகளைப் பாய்ச்சி… தான் இந்த உடலை விட்டுப் பிரிந்த பின் எந்த உடலில் மந்திர ஒலிகளைப் பாய்ச்சினாரோ அதை மீண்டும் எழுப்பப்படும் போது உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாவைத் தனக்குள் கைவல்யப்படுத்திக் கொள்கின்றார்கள்.

இதனின் நிலைகள் கொண்டு தான் பிற மனிதர்களைத் தனக்குள் எப்படிக் கைவல்யப்படுத்துவது…? என்ற நிலைகளும் பல மனிதர்களின் உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் அதனின் வலிமை மிக்க சக்தி கொண்டு மற்றவர்களை எப்படி அடக்கி ஆட்சி புரியலாம்…? என்ற நிலைகளும் தான் மனிதரிடத்தில் வளர்ந்தன.

இதே ஆசையின் நிலைகள் கொண்டு தான் காடுகளில் வாழும் மக்கள் பிற உயிரினங்களைப் பலி கொடுப்பதும் தான் வாழும் இடத்தை விட்டுப் பிறிதோரு இடத்தில் வாழும் ஒருவனைப் பிடித்துக் கொண்டு வந்து கட்டி வைத்துக் குறித்த காலம் வரும் வரை கட்டி வைத்திருந்து அந்த நபரின் உடலில் பல விஷத்தன்மை கொண்ட உணர்வுகளைப் பாய்ச்சி அவனின் எண்ணங்களில் ஊடுருவச் செய்யும் பொழுது அவன் வேதனையின் தன்மை தாங்காது மடிவான்.

பின்… அதிலிருந்த ஒலிகளை மந்திரத்தால் கவர்ந்து அடக்கி வைத்துப் பிறர் மேல் பாய்ச்சுவதும் பிற நாடுகளின் மீது பாய்ச்சுவதும் மிருக இனங்களின் மீது பாய்ச்சுவதும் போன்ற நிலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டான்.

இதனின் நிலைகளை இன்றும் மலைப்பகுதிகளில் காணலாம். புலையர் எனும் இனத்தவர் இன்றும் இதனைச் செய்து வருகின்றனர்.

ஆனால் அகத்தியர் ஆரம்பத்தில் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய உணர்வுகள் வேறு. இதுவே காலம் மாற மாற அவர் உணர்த்திய பேருண்மைகள் மறைக்கப்பட்டன.

இன்று மலைப்பகுதியில் உள்ளோர் மந்திரச் செடிகளை எடுத்து அதற்குரிய மந்திரங்களை ஓதி இவன் உடலில் விளைந்ததைத் தாவர இனத்துடன் கலந்து மற்ற நிலைகளையும் அதனுடன் கலந்து உருவாக்கி இதை மற்ற ஆடு, மாடு போன்ற உயிரினங்களுக்குக் கொடுத்து அதனின் உணர்வலைகளை மாற்றித் தனக்கு உகந்ததாக இதே ஒலிகளை எழுப்பி தனக்குள் கைவல்யப் படுத்துகின்றனர்.

இந்த உணர்வைத் தனக்குள் கலந்து கொண்ட பின் இந்த உணர்வின் அலைகளை இந்த உடலுக்குள் ஆடு, மாடு, மான் போன்ற இவற்றின் உணர்வுகளைத் தனக்குள் பெற்ற பின் இந்த உணர்வுக்கு ஏற்ற ரூபங்களாக மான் போன்று, மாடு போன்று, நரி, நாயைப் போன்று மாறுவதுமான நிலைகள் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் உண்டு.

அதுவும் காலத்தால் அழிந்துவிட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் இது நடந்து கொண்டுள்ளது.

1.யாம் இருபது வருடம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்படும் பொழுது
2.அன்று ஞானிகள் கண்டறிந்து வெளிப்படுத்திய உணர்வின் தன்மைகள் எவ்வாறு உருமாறின…? என்பதையும்
3.அவைகள் இன்று மனிதனுக்கு பயனற்றவைகளாக எவ்வாறு ஆயின…? என்பதையும் குருநாதர் ?மிகவும் வருத்தத்துடன்” எம்மிடம் கூறினார்.

மனித இன ஞானத்தின் வளர்ச்சியாக உலோகக் காலம் இருந்தது. இந்த உலோகக் காலத்தில்தான் கந்தகம் மற்றும் வெடி பொருட்களை மனிதர் கண்டறிந்தனர்.

கந்தகம் மற்றும் மனோசீலை போன்ற பொருட்களுடன் வெடியுப்புக்களைக் கலந்து வெடிக்கச் செய்து அதனின் செயல் தன்மையைக் கண்டறிந்தனர்.

ஆனால் அன்று வைத்திய ரீதியில் கந்தகம் மற்றும் பிற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து மனோசீலையாக மாற்றி நோயுள்ள உடல்களில் ஊடுருவச் செய்து நோயினை போக்கும் நிலைக்கு அதனை உருவாக்கினார்கள்.

அதுவும் ஒரு காலத்தில் மறைந்து விட்டது.
1.இவ்வாறு அகத்தியர் கண்டுணர்ந்த உணர்வுகளை மனிதன் தனது சுயநலங்களுக்காகப் பயன்படுத்தி
2.நாளடைவில் கடும் தீமைகளை விளைவிக்கும் நிலையாக உருவாக்கி விட்டனர்.

காளிங்காராயனின் உணர்வு கொண்டு “உலகைக் காக்கும் சக்தியாகச் செயல்பட்ட போகன்”

காளிங்காராயனின் உணர்வு கொண்டு “உலகைக் காக்கும் சக்தியாகச் செயல்பட்ட போகன்”

 

பழனியம்பதியில் நான் (ஞானகுரு) வாழ்ந்தவன் தான். இருந்தாலும் அதனுடைய உண்மைத் தத்துவம் எனக்குத் தெரியாது. இருப்பினும் குருநாதர் எமக்கு அதைச் சுட்டிக்காட்டுகின்றார்.

போகன் தனது வாழ்க்கையில் எதையுமே மோகித்து அதைப் போகித்துத் தனக்குள் தன் வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கும் அந்த மகரிஷிகள் உணர்வைத் தனக்குள் கவர்ந்து கொண்டான்.

அவன் எப்பேர்ப்பட்டவன்…? என்று எண்ணும் பொழுது அந்தப் போகனும் தன் தாயால் வளர்க்கப்படும் பொழுது விஷம் கொண்ட பாம்பு சந்தர்ப்பத்தால் தாயாரைத் தீண்டுகின்றது.

தாயைக் காக்க எண்ணத்தால் அவன் அலைகின்றான் அலைகின்றான் பல நிலைகளைத் தேடி…! அன்று சாதாரண நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும்… பிற்காலத்தில் வந்த போகனே தான் அது.

தன் தாயைக் காக்க எண்ணித் தேடி அலையும் பொழுது காளிங்கராயன் என்ற விஷத்தன்மையை முறிக்கும் ஒரு வைத்தியரிடம் சென்று சேர்கிறான்.

தன் தாயைப் பாம்பு தீண்டி விட்டது… அதை நீ காக்க வேண்டும் என்ற ஏக்கத்தால் அவரிடம் சென்று கேட்கப்படும் போது அவர் கொடுத்த விஷத்தை முறித்திடும் சத்தினைத் தன் தாய்க்கு கொடுத்த பின் அது எழுந்து மறுமலர்ச்சி அடைகின்றது.

அப்பொழுதுதான்
1.அவர் கொடுத்த பச்சிலையும் அவர் செய்த நிலைகள் கொண்டு அவரைக் குருவாக்கி
2.அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று அங்கே அடிமையாகின்றான்.

காலத்தால் தாய் இறந்து விடுகின்றது. தாய் தன் உணர்வின் செயலால் தன்னை எப்படி மனிதன் ஆக்கியது…? என்ற நிலைகளில் அது கண்டறிந்த உணர்வால்… அகஸ்தியரின் உணர்வு அவனுக்குள் சிக்கப்படுகிறது.

தன் உணர்வின் தன்மை கொண்டு தாவர இனத்தின் சத்தைத் தன்னைக் காத்திடும் உணர்வாக அகஸ்தியரின் தாய் தந்தையர் தன் உடலில் எடுத்துக் கொண்ட பின் கருவில் இருக்கும் அகஸ்தியன் என்ற அந்த சிசுவுக்குள் இது படபட்டு நஞ்சை முறித்திடும் உணர்வாகத் தாயின் கருவிலே உருவாகிப் பிறந்தபின் அகஸ்தியன் என்ற நிலைகளில் அணுவை அறிந்திடும் நிலையாகப் பிறந்தான்.

1.அவன் நுகர்ந்த அறிவை இவன் அதைக் கண்டுபிடித்து
2.அகஸ்தியன் கண்டுணர்ந்த விண்ணுலக ஆற்றலும் தாவர இனத்தால் கவர்ந்த நிலைகளும் இவனுக்குள் எடுத்து
3.இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின் உண்மையை உணர்கின்றான் போகன்.

அப்படி உணர்ந்த நிலைகளைத் தான் தாவர இனத்தை நுகர்ந்து பல பரிணாம வளர்ச்சிகளாகி மனிதனாகப் பிறந்தாலும் மனித நிலைகளில் எவ்வாறு மனிதன் தீமைகளிலிருந்து எவ்வாறு விடுபட வேண்டும்…? என்ற நிலையைத் தனக்குள் எண்ணுகின்றான்.

அன்று மிருகங்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் தனக்குள் எடுத்துக் கொண்ட நஞ்சை வென்றிடும் சக்தி அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது.

அதை அவர்கள் தங்கள் உடலில் முலாமாகப் பூசினாலும்
1.அவ்வாறு சுவாசித்த உணர்வுகள் நஞ்சினை முறித்திடும் சக்தியாக்க் கருவுக்குள் இருந்த குழந்தைக்குப் படப்பட்டு
2.அந்த உணர்வின் துணையால் நஞ்சின் வலிமை பெற்று நஞ்சினை அறிந்திடும் ஆற்றல் பெற்று
3.விண்ணுலக ஆற்றல் நஞ்சால் இயக்கப்படுகிறது என்பதை உணர்ந்த அகஸ்தியன்
4.தனக்குள் விளைய வைத்த உணர்வின் அலைகளைப் பரப்பினான் பரப்பினான்… பல நிலைகள் கொண்டு.

அவனே நம் பூமியின் துருவத்தைக் கண்டு துருவ நட்சத்திரமாக இருப்பினும் நஞ்சினை ஒடுக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றியதை அந்தப் அகஸ்தியன் பெற்ற நிலையைப் போகன்…
1.தன் தாயின் நஞ்சினை நீக்கித் தனக்குக் குருவாக வழிகாட்டிய மனிதனைக் காத்திடும் காளிங்கராயனின் தத்துவத்தை
2.நஞ்சினை முறித்துத் தனக்குள் அதை அடக்கி ஆட்சி புரியும் காளிங்கராயன் தன்மையைத் தனக்குள் எடுத்து
3.தன் தாயைக் காத்த நிலைகள் “உலகைக் காக்க வேண்டும்…” என்று எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றான் போகன்.

இதைப் போல இத்தகைய எண்ணங்களைத் தனக்குள் போகித்து மோகித்துத் தனக்குள் தன் உணர்விலேயே அறிகின்றான். இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது…? அதில் இருக்கக்கூடிய அணுக்கள் வளர்ச்சி பெற்று மனிதனாக எப்படி உருவானது…? என்று அகஸ்தியன் காட்டிய உணர்வின் தன்மையை இவன் அறிகின்றான்.

1.தன் தாயைக் காத்த காளிங்கராயனின் நஞ்சினை வென்ற உணர்வின் தன்மையைத் தனக்குள் வலு கொண்டு எடுத்து
2.அதை அறிய வேண்டும்… மக்களைக் காக்க வேண்டும் என்ற உணர்வினை வலுக் கொண்டு தனக்குள் சேர்த்தான் போகன்.

அவ்வாறு சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தான்… சூரியன் உமிழ்த்தும் பாதரசம் ஒவ்வொன்றையும் தனக்குள் இணைத்து இரண்டறக் கலந்து தாவர இன்ங்களையும் கற்களையும் மண்களையும் வைரங்களையும் வைடூரியங்களையும் பாஷாணங்களையும் எப்படி உருவாக்குகிறது…? என்று அகஸ்தியன் தன்னில் கண்டுணர்ந்த உணர்வலைகளை நுகர்ந்தறிகின்றான் போகன்.

நாம் அடைய வேண்டிய பரிணாம வளர்ச்சியின் சூட்சமம்

நாம் அடைய வேண்டிய பரிணாம வளர்ச்சியின் சூட்சமம்

 

பல கோடிச் சரீரங்களில் தன்னைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்துத் தான் மனிதனாக வந்திருக்கின்றோம்.

உதாரணமாக ஒரு குளவி தனக்குள் ஊரும் உமிழ் நீரைக் கொண்டு தன் இனத்தைப் பெருக்க .அதற்கென்று ஒரு கூட்டினை… ஒரு கருவறையைத் தேர்ந்தெடுக்கின்றது.

விஷத்தன்மை கொண்ட மண்ணினைப் பிசைந்து வாயில் எடுத்து வந்து கூடுகள் அமைக்கின்றது. நஞ்சு கலந்த உமிழ் நீரை அதற்குள் இணைக்கின்றது.

பின் பறந்து சென்று தன் இனம் அல்லாத புழுக்களை தன் நஞ்சின் தன்மை கொண்டு கொட்டி அதனை வலுவிழக்கச் செய்து தன் உணர்வை அதற்குள் பாய்ச்சி அதைத் தூக்கி வந்து கூட்டுக்குள் இணைக்கின்றது.

1.இந்த விஷத்தன்மை புழுவின் உடலில் முழுமையாகப் படர்ந்து அது சருகு போல ஆகின்றது.
2.அதற்குள் இருக்கும் ஊணின் நிலைகளும் அது கலைந்து வர உடலை அமைத்த உணர்வுகள் அணுக்களாக மாற்றப்பட்டு
3.உயிரின் தன்மை கொண்டு இது எவ்வாறு என்ற நிலையை அதனை நினைவில் ஊட்டச் செய்து
4.புழுவைக் கூட்டிற்குள் தள்ளி மண்ணை வைத்து அதை அடைத்து விடுகின்றது.

தன் உடலில் எதைப் பெற்றதோ இதன் உணர்வைப் பதிவு செய்த பின் தன் சிறகால் அதிர்வின் தன்மை கொடுத்து புழுவின் உயிர் மடிந்து விடாது அதிர்வின் தன்மை கொண்டு இயக்கி இந்த உணர்வின் நினைவு கொண்டு அதிலே அணுக்கள் விளைந்து அதனின் தொடர் கொண்டு அது ஜீவிக்கும் நிலை வருகின்றது.

அதற்கு ஜீவன் ஊட்டிக் கொண்டேயிருப்பதற்காகக் குளவி இரைச்சல் கொடுத்து அதைக் காக்கின்றது.

கோழி தான் இட்ட முட்டைகளை அடைகாக்கின்றது. தன்னுடைய உடலின் வெப்பத்தால் அதற்குள் இருக்கும் ஜீவ அணுவைத் துடிக்கச் செய்து அதனின் கருவாக விளையும் வரையிலும் அதை அடை காக்கின்றது.

மூன்று நாட்கள் ஆனாலும் நான்கு நாட்கள் ஆனாலும் அடை காத்து
1.அதற்குள் இருக்கும் அணுக்களின் தன்மை அதனை நுகர்ந்து வரும் பொழுது
2.வெப்பத்தின் தன்மை கொண்டு தன் உணர்வலையைப் பாய்ச்சி அதன் தன்மை கொண்டு அது கோழிக் குஞ்சாக உருவாக்குவது போல
3.குளவி தான் கட்டிய கூட்டின் மேல் ரீங்காரமிட்டு அதனின் நாதங்களை எழுப்புகின்றது.
4.அந்த அதிர்வினைப் புழுவின் உடலில் இருக்கும் காந்தப்புலன் இழுத்துக் கவர்கிறது.

எந்த உமிழ் நீரின் தன்மை கொண்டு கூட்டினைக் குளவி அமைத்ததோ சூரியனின் காந்த சக்தி அதன் மீது படர்ந்தாலும் தாயினம் இடும் மூச்சலையை இதன் வழி நுகர்ந்து அதனின் உணர்வின் துணையால் அதனின் கருவின் நினைவாக குளவியாக அது உருப் பெறுகின்றது.

இதைப் போன்று தான் மனிதன் தனக்கென்று வீடு கட்ட வேண்டும் என்றாலும் ஒவ்வொன்றிலும் இது வளர்க்கப்பட்டு தான் ஒவ்வொரு இணைப்பிலும் தனக்குப் பாதுகாப்பாக இதைச் செயல்படுத்துகின்றான்.

தன்னைக் காத்திடும் உணர்வாக ஒவ்வொரு சரீரத்திலும் ஒவ்வொரு நிலைகள் கொண்டு எடுத்து அதனதன் குணங்களுக்கு அதனதன் உணர்வின் தன்மை கொண்டு தான் விளைந்து சர்வத்தையும் அறிந்திடும் நிலையும் சர்வத்தையும் இயக்கிடும் நிலைகள் கொண்டும் சர்வத்தையும் உருவாக்கும் நிலை கொண்டு உயிரின் நிலைகள் கொண்டு
1.உணர்வுகள் அழிந்தாலும் அதிலே ஒவ்வொரு உணர்வையும் இயக்கி அதை ஒளியாக மாற்றி
2.உயிருடன் ஒன்றித் தன்னுடன் இணைந்து ஒளியின் சரீரமாக மாற்றிடும் இந்த உண்மையினை அறிந்தவன் தான் “மகரிஷி…”

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்ந்தால் அவனைப் போல் ஆக முடியும். அவ்வாறு அவன் அடைந்த நிலையை நாம் அடைவதற்கே இந்த உபதேசம்.

நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் சில விஞ்ஞான அலைவரிசைகள்

நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் சில விஞ்ஞான அலைவரிசைகள்

 

இன்று விஞ்ஞான அறிவின் துணை கொண்டு எத்தனையோ பல நிலைகளை இருந்த இடத்திலிருந்தே காணுகின்றோம். எங்கோ ஒலி/ஒளி அலைகள் ஒளிபரப்பு செய்வதை வீட்டிலிருந்து நாம் டிவி மற்றும் எத்தனையோ சாதனங்கள் மூலம் காணுகின்றோம்.

அதைப் போன்று எத்தனையோ உணர்வுகள் நம் உடலுக்குள் உண்டு. அதுவும் அலை வரிசையில் தான் இயங்குகின்றது. அதில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைவரிசையை நாம் காணுகின்றோம்.

உலகில் யார் யாரையெல்லாம் நாம் சந்திக்கின்றோமோ இந்த உணர்வுகள் அது எல்லாம் ஒவ்வொரு ஸ்டேஷனாக அமைகின்றது. தீங்கு செய்தவரை எண்ணினால் அவரின் உணர்வலைகள் படர்ந்து இருப்பதை நுகர்ந்து அவர் மேல் வெறுப்பும் வேதனையும் கொள்கின்றோம்.

அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை நாம் அறிந்து கொண்டால் அதே உணர்வுகள் பதிவாக்கிய பின் அந்த ஸ்டேஷனைத் திறந்து வைத்தால் அந்த வேதனை உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

விஞ்ஞான அறிவிற்கும் இதற்கும் நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் அணுவாக விளைகின்றது…. அந்த அணுவினைப் பெருக்கி விடுகின்றது.

சாதனங்கள் மூலம் அதை அறிய முடிகின்றது… இயக்கும்போது உணர முடிகின்றது… பின் அழிந்து விடுகின்றது. அப்படி ஒளிபரப்பும் உணர்வுகள் இயந்திரத்தில் தான் இயக்குகின்றார்கள்.

இயந்திரத்தில் உருவாக்கிய உணர்வின் தன்மை நாம் அதை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் அதை உடலுக்குள் அணுவாக மாற்றி விடுகின்றது உயிர்.

தீமைகள் எங்கெல்லாம் நடக்கின்றதோ அவை ஒளிபரப்பாகிவிட்டால் இந்த உணர்வின் தன்மை கொண்டு தீமை என்று அதை எண்ணினாலும் அது வேதனை உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

வேதனையைத் தூண்டும் போது வேதனையை உருவாக்கும் அணுவாகவே உருவாகி விடுகின்றது. பின் அதனின் உணர்வை நமக்குள் வளர்க்க எதன் அலைவரிசையில் எதை வெளிப்படுத்தினார்களோ அதை மீண்டும் நாம் நுகர நேர்கின்றது.

உதாரணமாக உலகில் எங்கோ நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைப் படமாக்கி அதன் வழி வெளிப்படுத்தும் போது அதே அதிர்ச்சியான உணர்வைக் கண் கொண்டு பதிவாக்கும் பொழுது அதிலிருந்து வெளிப்பட்ட அலைகளை நாம் நுகர முடிகின்றது. அதே அதிர்ச்சியின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது.

அவ்வாறு வெளி வரும் பொழுது அழியும் சரீரங்களை நாம் பார்க்கப்படும் பொழுது உடலுக்குள் அழித்திடும் அணுக்களாக டி.பி. போன்ற கொடூர நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.

அதே போல வைரஸ் நோய்களும் ஊடுருவி உடலில் உள்ள அணுக்களைச் செயலாற்றதாக மாற்றும் நிலை வருகின்றது. எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் இது போன்று ஏற்படுகிறது.

விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் நாம் கண்டு வந்தாலும் அலைவரிசையில் வெளிப்படுத்தும் போது அதிலிருந்து நுகர்ந்த உணர்வு நமக்குள் அணுவின் தன்மையாக அடையச் செய்கின்றது நம் உயிர்.

1.இதை வென்றிட்ட அருள் மகரிஷிகள் உணர்வைக் காலை துருவ தியான நேரங்களில் கணவனும் மனைவியும் எடுத்து
2/.அதைக் கணவனுக்குக் கிடைக்க வேண்டுமென்று மனைவியும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும்
3.யாரெல்லாம் இதைச் சீராகச் செயல்படுத்துகின்றார்களோ இந்த உணர்வுகள் கூர்மையாக
4.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்தில் இருந்தும் அந்த சக்திகளை எடுக்கப்படும் பொழுது
5.அதன் அவதாரமாக இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் ஒளிச் சரீரமாகப் பிறவி இல்லாத நிலை அடைய உதவும்.

குரு வழியில் அருள் மகரிஷிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை வென்று இருளை வென்றிடும் உணர்வுகளை நீங்கள் பெற்று இருளை வென்றிடும் சக்தியாக உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியின் சுடராக ஆகி வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

மகரிஷிகள் அருள் சக்தியும் குரு அருளும் நீங்கள் பெற எமது அருள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கின்றேன்.

அண்டம் – பிண்டம் – ஒளி

அண்டம் – பிண்டம் – ஒளி

 

இன்றைய நமது வாழ்க்கையில் நாம் சந்திக்க நேரும் எத்தனையோ இன்னல்களை அன்று வாழ்ந்த மகரிஷிகளும் சந்தித்தார்கள்.

அதை மாற்ற அவர்கள் காலத்தில் அவருடைய சந்தர்ப்பம் அதை நீக்கும் உணர்வாக அவர்களுக்குள் விளைந்து அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கினார்கள்.

இந்தப் புவியின் பற்று கொண்டு விளைந்த உணர்வின் சத்தை உணவாக உட்கொண்டாலும்
1.புவியின் ஈர்ப்புக்குள் நிற்காது இதனின்று விடுபட விண்ணை நோக்கி ஏகி அண்டத்தின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெற வேண்டும் என்று
2.இந்த மண்ணுலகில் தோன்றிய பிண்டத்தின் உணர்வுக்குள்
3.அந்த அண்டத்தின் உணர்வலைகளைச் சக்தி வாய்ந்ததாக மாற்றும் எண்ணங்களை உருவாக்கினார்கள்
4.அன்று கடும் தவத்தால் தன் எண்ண வலிமையால் சந்தர்ப்பத்தால் கிடைத்த உணர்வின் துணை கொண்டு.

அவ்வாறு விளைந்தாலும் தனது வாழ்க்கையில் எதிர்படும் கோபமோ சலிப்போ வெறுப்போ சங்கடமோ சஞ்சலமோ இது போன்ற நிலைகளை அவர்கள் உடலில் செயல்படுத்தாது
1.பேரண்டத்தின் சக்தியைத் தனக்குள் கூட்டி… அது நஞ்சு கொண்டதாக அது இருப்பினும் அதனின் வலு துணை கொண்டு
2.புவியில் விளைந்த நஞ்சின் தன்மையை அடக்கி அந்த ஆற்றல்மிக்க உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துப் புவியின் பிடிப்பை அறுத்து
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்தாக ஒளியின் சிகரமாக உணர்வை மாற்றினார்கள்.

உணர்வு என்பது ஒன்றை அறிந்து கொள்ளும் நிலை தான். கோபமான உணர்வு வரப்படும் பொழுது அதை உணர முடிகின்றது. ஒருவர் தவறு செய்கிறார் என்று பார்க்கும் பொழுது அந்தத் தவறை நாம் அறிய முடிகின்றது.

இதைப் போல ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் அதன் மூலம் பல பொருள்களை அங்கே நாம் காண முடிகிறது… இது இன்னது தான் இது இன்னது தான் என்று.

இதைப் போல அந்த மகரிஷிகள் தன் ஆற்றல்மிக்க உணர்வின் சக்தி கொண்டு ஒளி கண்ட உணர்வின் தன்மையால் ஒன்றைப் பிளந்து அதற்குள் எந்தக் குணமோ இருளைப் பிளந்து அதற்குள் இருக்கும் உணர்வின் சத்தை உணர்ந்தவர்கள். ஆகவே அதை ஒளியின் சிகரமாக உணர்வுகள் அனைத்தையும் மாற்றிநார்கள்.

1.விண்ணுலகில் வரும் நஞ்சு உருவாகும் முன் இதனின் துணை கொண்டு அதைப் பலவீனமாக்கி அதனின் உணர்வை ஒளியாக மாற்றி
2.அதனின் திறன் கொண்டு மண்ணுலகில் தோன்றிய இந்தப் பிண்டத்தில் அண்டத்தின் உணர்வுகளைப் பிண்டத்திற்குள் மாற்றி
3.இன்றும் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கி உடலை விட்டு உயிரான்மா சென்றபின்
4.அண்டத்தின் உணர்வின் சத்தை அது இங்கே மண்ணுலகிற்கு மாற்றி வருவதற்கு முன் அதனையே அடக்கி அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி
5.இந்தப் பிண்டத்திற்குள்ளேயே அதை உருவாக்கினான் மகரிஷி.

அதனின் துணை கொண்டே உணர்வின் ஒளியாக ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருக்கின்றார்கள்.

நம் பூமியின் துருவப் பகுதியில் நிலை கொண்டு
1.விண்ணின் ஆற்றல் புவியின் ஈர்ப்புக்குள் நுழையும் தருவாயில் அதனையும் தனக்குள் நுகர்ந்தறிந்து அதை ஒளியாக மாற்றி
2.இந்த மனித உடலில் இப்பொழுது நாம் இருப்பது போன்று உயிருடன் ஒன்றி உணர்வின் சத்தை ஒளியின் சரீரமாக மாற்றி
3.அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றல் மற்றதை அடக்கி அடக்கிடும் ஆற்றல்மிக்க நிலைகளை அவர்கள் கணங்களுக்கு அதிபதி ஆக்கி
4.மற்ற உணர்வை அடக்கி ஒளியின் தன்மையில் பொருளைக் கண்டிடும் சக்தியாக விளைந்திட்ட
5.அந்த உணர்வின் ஆற்றல் மிக்க அருள் ஞானியின் உணர்வுகள் நம்முன் தோன்றிக் கொண்டிருக்கும் இந்நிலையில்
6.உபதேசத்தின் வாயிலாகக் கேட்டுணரும் பொழுது ஊழ்வினையாகப் பதிவாகி
7.அதனையே நினைவு கொண்டு அதனின் ஆற்றலை நீங்கள் பருகும் நிலைக்கு அதைப் பெருக்கும் தன்மைக்காக
8.கூட்டுத் தியானங்கள் மூலம் அதனை ஆற்றல்மிக்க சக்தி வாய்ந்த வித்தாக உங்களுக்குள் ஊழ் வினையாகப் பதிவாகி
9.தீமைகள் அறியாது நமக்குள் புகுந்தாலும்… அப்போது நினைத்த மாத்திரத்தில் மகரிஷிகள் அருள் ஒளியைக் கவர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
10.தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றினால் செம்பு பித்தளையை அது பிரிப்பது போன்று
11.நமக்குள் அந்த அருள் மகரிஷிகள் உணர்வைக் கணங்களுக்கு அதிபதி ஆக்கினால்
12.மனித வாழ்க்கையில் துன்பத்தையோ துயரத்தையோ வெறுப்பையோ குரோதத்தையோ உருவாக்கும் நிலையை அடக்கி
13.ஒளியின் சரீரமாக நம் உடலை அது காத்து அதுவே குருவாக நின்று நல்வழிப்படுத்தும் நிலையாக
14.இந்த மண்ணுலகில் அந்த அண்டத்தின் உணர்வை மாற்றிட்ட
15.அது இந்தப் பிண்டமான உடலுக்குள்ளேயே இருந்து அண்டத்தை எட்டிடும் ஒளியாக அதைப் பற்றி
16.அதனின் நிலைகள் கொண்டு நாம் அங்கே சென்று இந்தப் பிண்டத்தின் உணர்வுக்குள் விளைந்த நஞ்சினை அறுத்து நஞ்சினை ஒடுக்கி
17.விண் சென்ற அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைந்திடும் நிலைக்குத் தான் யாம் சொல்லும் இந்த உபதேசம்.

அந்த அருள் மகரிஷிகள் உணர்வை நாம் பற்றுடன் பற்றி… அவர்கள் ஒன்றுபட்ட நிலையில் வசிஷ்டர் அருந்ததி போன்று விண்வெளியில் ஒளிச் சுடராகச் சுழன்று கொண்டிருக்கும் அவர்கள் அருள் வட்டத்தில் நாம் சென்று
1.அண்டத்தின் நிலையைப் பிண்டத்தில் சேர்ப்பித்த அந்த மகரிஷிகளைப் போன்று
2.அவர்கள் விளைய வைத்த உணர்வின் தன்மை அண்டத்தின் ஆற்றலை அவர் அடக்கிடும் நிலையும்
3.அவர்கள் உணர்வின் துணை கொண்டு அண்டத்தின் ஆற்றலை நம் பிண்டத்திற்குள் சேர்த்து இந்த உடலை விட்டுச் சென்றாலும்
4.அண்டத்தின் உணர்வின் தன்மை தீமைகள் இருப்பினும் ஒளியின் சுடராக மாற்றிடும் செயலாக
5.ஆறாவது அறிவின் துணை கொண்டு செயல்படும் முறையைத் தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

“என்றும் மாறாத நிலையில்” வாழ்பவர்களே மகரிஷிகள்

“என்றும் மாறாத நிலையில்” வாழ்பவர்களே மகரிஷிகள்

 

மனிதனாக வாழும் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அருள் ஞானப் பற்றுடன் வாழ வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகளை ஒருவருக்கொருவர் நுகர வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அனைவரும் பெற வேண்டும்.
2.அனைவரது வாழ்க்கையிலும் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்.
4.அவர்கள் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்… அருள் ஞான வாழ்க்கை வாழ வேண்டும்.
5.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி இந்தப் பூமியில் வாழும் அனைவரும் பெற வேண்டும் என்று
6.நானும் நினைக்கின்றேன்… நீங்களும் அது போன்று நினையுங்கள்.

இது அனைத்தும் ஒன்றாகச் சேர்த்தால் என்ன ஆகும்…?

சூரியனுடைய காந்த சக்தியால் வளர்க்கப்பட்ட தீமையான உணர்வுகளை பூமியில் வாழும் மனிதர்கள் அதை ஈர்க்கும் சக்தி இழக்கப்பட்டால் காலை 6 மணிக்கெல்லாம் அந்தத் தீமைகளைச் சூரியன் கவர்ந்து சென்று அங்கே கரைத்து விடும்… கருக்கி ஒளியாக மாற்றிவிடும்.

விறகை அடுப்பிலே வைத்து எரிக்கின்றோம். அது எரிந்து நெருப்பாகின்றது ஒளியாக. அதனுடைய உணர்வின் சத்துக்கள் பிரிகின்றது. ஆனால் விறகு கருகி விடுகின்றது.

சூரியன் கவர்ந்து ஆவியாக மாற்றுகின்றது.
1.ஆவியின் தன்மை எதன் உணர்வு பெற்றதோ செடி புவியின் ஈர்ப்பின் தன்மை கொண்டு
2.எந்த வித்து இங்கே படுகின்றதோ அதே மரத்தின் அதே வித்தாக அந்தச் சத்தை எடுத்து விளைகின்றது.
3.எதனெதன் உணர்வின் தன்மை எது எது எடுத்து வளர்கின்றதோ.. இப்படி இயற்கையில் (மறுசுழற்சியாக) மாற்றிக் கொண்டே வருகின்றது.

ஆனால் நாம் மாறாத நிலைகள் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஆறாவது அறிவு பெற்றவன்… என்றும் நிலையான …என்றும் 16 என்ற நிலை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று நுகர்ந்து பழக வேண்டும்.
1.நம் உடலுக்குள் அதைப் பெருக்க வேண்டும்.
2.இதை அழியாச் சொத்தாக அழியாச் செல்வமாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

யாம் பதிவு செய்வதை எல்லாம்… “உள் உணர்வால்” அறிய வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு வாருங்கள்

யாம் பதிவு செய்வதை எல்லாம்… “உள் உணர்வால்” அறிய வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு வாருங்கள்

 

வானியல் தத்துவத்தில் 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் சக்திகளில் வெள்ளிக்கோள் ஒளியான உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. கேதுக் கோள் விஷத்தை எடுத்துக் கொள்கின்றது. கருகிய புகைகளை ராகுக் கோள் எடுக்கிறது. செவ்வாய்க் கோள் நாதங்களை எடுத்துக் கொள்கின்றது.

இந்த உணர்வலைகள் பிரபஞ்சத்திற்குள் பரவப்படும் பொழுது அதனதன் சக்தி கொண்டு அதனதன் நிலைகளை எடுத்துக் கொள்கின்றது.

இதைப் போன்று தான் மனிதர்கல் நமக்குள்ளும் ஒரு உணர்வின் தன்மை உயிருடன் மோதி ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இணைகிறது.

1.பித்த சுரப்பிகள் பித்தத்தைக் கவர்கிறது… விஷத்தன்மைகள் அனைத்தையுமே அது கவர்கின்றது.
2.நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் அந்த அணுக்கள் அதைச் சுவாசித்து அதனின் மலங்களாக அந்தக் கூட்டைக் (உறுப்பு) கட்டுகிறது.

வியாழன் கோள் சனிக் கோள் போன்று நம் உடலில் உறுப்புகள் எப்படி மாறுகின்றது…? பிரபஞ்சத்தைப் போல உடலுக்கு உயிர் சூரியனாலும் அது நட்சத்திரம் தான். இந்தப் பிரபஞ்சத்திற்குச் சூரியன் ஆனாலும் அகண்ட அண்டத்திற்கு அது நட்சத்திரம் தான் என்று குரு காட்டுகின்றார்.

இந்தப் பிரபஞ்சம் எப்படி இயக்குகின்றதோ உடல் ஒரு பிரபஞ்சம். 2000 சூரியக் குடும்பங்கள் அது ஒவ்வொரு பிரபஞ்சமாக இருக்கின்றதோ ஒவ்வொன்றும் வெளிப்படுத்துவதை ஒன்றுடன் ஒன்று கலவையாகி எடுப்பதும் இப்படி ஒவ்வொன்றும் எடுத்து வளர்த்துக் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதனை எடுத்துக் கொண்டாலும் அதுவும் ஒவ்வொன்றும் தனிப் பிரபஞ்சம் தான். அது இயற்கையில் கிரேதா யுகம்.
1.ஆனால் திரேதா யுகம் (உடலுக்குள்) பிறருடைய உணர்வுகளை நுகரப்படும் பொழுது உணர்வின் எண்ணங்கள் எப்படி மாறுகின்றது…?
2.உணர்ச்சிகள் உடலுக்குள் எப்படி மாறுகின்றது…?

நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலங்களாக மாற்றப்படும் பொழுது இந்த உணர்வுகளை மாற்றப்பட்டு சூரியன் தெளிவாக எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல் மனிதனான நாம் நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு பிறரின் உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது ஒவ்வொரு உறுப்புகளும் அந்த விஷத்தின் ஆற்றலை எடுக்கின்றது… அதனதன் உணர்வுகளைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது.

வெள்ளிக் கோள் எப்படி ஒளியின் தன்மை பெறுகின்றதோ இதைப்போல
1.நம் உணர்வின் அறிவின் தன்மையை நமக்குள் அறிவு ஒளி என்று உணர்த்தும்
2..நமது அணுக்களை உருப் பெற வைக்கும் “சிறுமூளை பாகம்…” அதை இயக்குகின்றது…
3.உணர்வின் அறிவாக எடுத்து நமக்குத் தெளிவாக்குகின்றது.

சுவாசிப்பது நுரையீரலுக்கு வரும் பொழுது அதை எப்படிச் சுத்தமாக்குகின்றது…? கல்லீரல் மண்ணீரலுக்கு வரப்படும் பொழுது பிரபஞ்சத்தைப் போன்று எவ்வாறு சீராக இயங்குகின்றது…?

சூரியன் முதலில் வளர்ச்சி ஆவதற்கு முன்… ஒரு பிரபஞ்சமாக ஆவதற்கு முன்… எப்படி உயிரணு தோன்றிப் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அங்கங்கள் உறுப்புகள் மாறி மாறி… மாறி மாறி… ஒரு பிரபஞ்சம் என்ற நிலைகள் முழுமை அடைகின்றது.

சூரியன் எப்படி நஞ்சைப் பிரித்து நல்ல உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றதோ இதைப் போல மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவு நாம் நுகருவதற்குள் இருக்கும் நஞ்சைப் பிளந்து நல்ல உணர்வாக எடுத்துக் கொள்ளும் அறிவாகப் பெற்றதுதான் இந்த உடல் என்ற நிலையைக் குருநாதர் தெளிவாக்குகின்றார்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு பிரபஞ்சம்…! ஒவ்வொரு நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதன் வழியில் எதிர்நிலையாகி இயக்கிப் பொறிகளை உருவாக்கி அதற்குத் தக்க உடல்களை மாற்றி மாற்றி வந்தது.

1.யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை உங்கள் கண் கருவிழி பதிவாக்குகின்றது.
2.அதை நுகரும் தன்மை வரப்படும் பொழுது அதை மீண்டும் எண்ணினால்
3.அதைப் பெற வேண்டும் என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது
4.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அதைக் கவரும் தன்மை வருகின்றது.
5.கவர்ந்த உணர்வு உயிரிலே படும் போது அந்த உணர்ச்சிகள் தெரியும்.

இதற்கு முந்தி… மனிதன் எண்ணத்தில் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு தெய்வங்களை வணங்கப்படும் பொழுது அது எந்தெந்த உருவத்தைக் கண்டோமோ அது அலைகளாக மாறுகின்றது.

அதே தெய்வத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது ஒரு மனிதனில் பெற்ற அந்த உணர்வினைப் பெற்றால் அதே மனித உணர்வு வரப்படும் பொழுது
1.அவனுக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வு ஆவியாகவும் பேயாகவும் தெய்வமாகவும் காட்சி தருகின்றது.
2.இது மனிதனின் உடலில் விளைந்தது.

ஆனால் இப்போது ஞானிகளால் உருவாக்கப்பட்ட சப்தரிஷி மண்டலங்களின் உணர்வினை அறிவதற்கு உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். சூரியனால் கவரப்பட்ட சூனியப் பிரதேசத்திலிருந்து அந்தச் சூரியன் எப்படி வளர்ந்தது…? என்ற நிலையில் அந்தச் சூனிய மண்டலம் ஆதியிலே எப்படி உருவானது…? என்ற நிலைகளை நீங்கள் அறிய முடியும்.

1.அதை நுகரப்படும் பொழுது அறியும் ஆற்றல் வரும்… அறிய முயற்சி எடுங்கள்.
2.அகண்ட அண்டத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அப்படி பதிவானாலும் சில நேரங்கள் சந்தர்ப்ப பேதங்களில் யாம் பதிவு செய்த உணர்வுகள் உங்களுக்குள் உண்டு. “அந்தப் பதிவின் துனை கொண்டு” நீங்கள் மீண்டும் எண்ணி எடுக்க முடியும்.

1.ஆனால் பல விதமான உணர்வுகள் ஆன்மாவிலே சேர்ந்திருக்கும் பொழுது சேர்க்கப்படும் பொழுது
2.இந்த உணர்வுகள் கலந்த பின் உடலின் ஈர்ப்பு அதிலே அதிகமான பின் பிற மண்டலங்களிலிருந்து வருவதைத் தடுக்கும்.
3.தடுத்தாலும் எப்படியும் பெற வேண்டும் என்று உள் உணர்வைச் செலுத்தி
4.அதை எல்லாம் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் நிச்சயம் நீங்கள் பெற முடியும்.
5.குருநாதர் எனக்குள் பதிவு செய்தது போன்றே உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.

இதை நீங்கள் சீக்கிரம் வளர்த்துக் கொண்டால் அகண்ட அண்டம் எப்படி ஆனது…? என்ற அந்த உண்மையின் இயக்கத்தை அதில் சூரியக் குடும்பம் ஒரு பிரபஞ்சம் எப்படி உருவானதோ…? இதைப் போன்று பல சூரியக் குடும்பங்கள் எப்படி உருவானதோ அதை எல்லாம் உங்களுக்குள் உணர்வின் அறிவாக நீங்கள் தெளிவாக இது உதவும்.

1.குருநாதர் எனக்குக் காண்பித்த முறைப்படி வழிப்படி உங்களுக்குள்ளும் இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றேன்.
2.நீங்கள் தியானத்தின் மூலம் நிச்சயம் பெற முடியும்… உணர முடியும்.

சமீபத்தில் விண் சென்ற கோலமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்

சமீபத்தில் விண் சென்ற கோலமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்

 

அம்மா அப்பா அருளால்… மிகவும் சக்தி வாய்ந்த சப்தரிஷிகளின் அருள் சக்தியையும் கோலமாமகரிஷி வளர்த்த அந்த அருள் சக்தியையும் நமக்கு முன் படர்ந்திருப்பதை நாம் கவர்ந்து நம்மில் இணைப்போம்.

அந்தத் தத்துவ மகரிஷி உலக இயல்புகளை எவ்வாறு கண்டுணர்ந்தார்…? அவருக்குள் எவ்வாறு விளைய வைத்தார்…? என்று
1.அவரில் விளைந்த அருள் ஞான வித்தை நமக்குள் பதிவு செய்து
2.உண்மையான மெய் உலகில் அவர்கள் சஞ்சரித்த அந்த இடங்களுக்கு நாமும் சென்றடையத் தியானிப்போம்.
3.அதற்குத் தான் கொல்லூருக்கு வந்து தியானிப்பது.

அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தனக்குள் கண்டறிந்தது. ஆனால் கோலமாமகரிஷியோ அழியாப் பெரு வாழ்வு என்ற நிலையைப் பெற வேண்டும் என்று அவர் எண்ண வலுவால் தனக்குள் நுகர்ந்தறிந்தார்.

இன்னொரு சரீரம் வேண்டியது இல்லை என்ற வலுவான எண்ணத்தை அவர் எடுத்துக் கொண்டு… என்றும் அந்தச் சப்தரிஷிகளுடன் இணைந்து விட வேண்டும் என்ற தன் எல்லையை வகுத்துக் கொண்டார்.

தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி மெய் ஞானிகள் உணர்வைத் தனக்குள் வளர்த்து அவர் விண்ணுலகம் சென்றார்.
1.மிகக் குறுகிய காலத்தில் இவையெல்லாம் 2000 – 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சிகள்.
2.சமீபத்தில் அவருக்குள் விளைந்த உணர்வுகள்… எங்கெங்கு அவர் தவம் இருந்தாரோ
3.அந்த அலையின் தன்மை இங்கே பரவி உள்ளது… அதை நாம் பருகுவோம்.

கோலமாமகரிஷியை எண்ணி அவர் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

அவர் தன் உடலில் பெற முடியாத அச்சக்தியை தொக்கியுள்ள காலத்தில் அதைப் பெறும் தகுதியாக ஆதிசங்கரர் உடலில் புகுந்து எஞ்சிய சக்தியைத் தான் பெற்று விண்ணுலகம் சென்றடைந்தார்… சப்தரிஷி மண்டலத்துடன் கலந்தார். அந்தச் சக்திகள் இங்கே படர்ந்துள்ளது.

1.தீவினைகளை நீக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்ட
2.அவருடைய சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.

சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… கோலமாமகரிஷி பெற்ற அந்தச் சக்தி வாய்ந்த அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம்.