மனிதன் இராமலிங்கமாக மாறும் வழி

ramalingam rameswaram

மனிதன் இராமலிங்கமாக மாறும் வழி

1.கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து உன் குறைகளை எல்லாம் சொன்னால் அவன் தீர்த்துத் தருவான்…
2.அதற்காக வேண்டி நீ காணிக்கை போடு… அதைப் போடு இதைப் போடு..
3.நேர்த்திக் கடனைச் செய் அதைச் செய்…! என்று சொல்லி விட்டார்கள்
4.பழனிக்குப் போனாலும் இது தான்… திருப்பதிக்குப் போனாலும் அது தான்.

ஆனால் அந்தக் கோவிலின் பண்புகளை நமக்கு யாரும் எடுத்துச் சொல்லவில்லை.

“ஏழு கொண்டலவாடா…” என்று தெலுங்கில் சொல்வார்கள். ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக “ஒளியாக மாற்ற வேண்டும்” என்று பொருள்.
1.ஏனென்றால் இந்த ஆறாவது அறிவை இயக்குவது உயிர்
2.ஆக இந்த உடலை ஆள்வது “பெருமாள்…”

திருவேங்கடாசலபதி…! இங்கே இந்த உடலில் இருப்பது எல்லாவற்றையும் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றான் என்ற தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

அதை நாம் யாராவது புரிந்து கொண்டோமோ…? என்றால் இல்லை. தத்துவத்தை நமக்குத் தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்… யாரும் அதை மதிப்பதில்லை.

இங்கிருந்து அங்கே திருப்பதிக்குப் போய்க் காணிக்கையைப் போட்டால் “அவன் நமக்கு எல்லாம் செய்வான்…!” என்ற நம்பிக்கை தான்.
1.சாமிக்கு விலங்கு போட்டால் ஐய்யய்யோ…! என்பார்கள்
2.காசு குறைவாக இருப்பதால் விலங்கு போட்டுவிட்டு அப்புறம் சாமியை ஜெயிலிருந்து மீட்டுகிறார்களாம்…!

இப்படி நம்மை முட்டாளாக்கி வைத்திருக்கின்றார்கள்…!

இங்கே உபதேசத்தை நீங்கள் கேட்கிறீர்கள்…! எப்பொழுது உங்களுக்குள் என்ன நடக்கிறது…?

“அரங்கநாதன்…” நல்ல (ஞானிகளின்) உணர்வுகளை நீங்கள் கேட்கும் பொழுது உங்கள் உடலான அரங்கத்திற்குள் உயிர் என்ன செய்கிறது…? நாதங்களாக வெளிப்படுத்துகிறது. (அரங்கம் + நாதம்)

அந்த நாதங்கள் என்ன செய்கிறது..? சந்தோஷமான உணர்ச்சிகளை ஊட்டுகிறது. அது தான் அரங்கநாதன்,

அரங்கநாதனின் மனைவி யார்…? ஆண்டாள். அந்த உணர்ச்சிகள் தான் நம்மை ஆள்கிறது. ஆண்டாள்…! என்று தெளிவாகச் சொல்கிறார்கள்.

கோபமான உணர்வை நுகர்ந்தால் அரங்கநாதன் என்ன செய்கிறது…? அந்தக் கோபமான உணர்ச்சி தான் நம்மை ஆளும் ஆண்டாள்.

ஆனால் எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வைச் சுவாசித்தால் அரங்கநாதன். இந்த அரங்கத்திற்குள் மகிழ்ந்து வாழும் அந்த உணர்வுகள் நம்மை ஆளும்.

1.காரணப் பெயரை வைத்துத் தெய்வங்களை உருவச் சிலைகளாக வைத்து
2.நாம் நம்மை அறிந்து வாழ்வதற்கு ஞானிகள் எவ்வளவு பெரிய சக்தியை ஊட்டியிருக்கின்றார்கள்…?
3.அதை நாம் உணர வேண்டுமல்லவா…!

ஏனென்றால் இந்த உடலில் கொஞ்ச நாள் தான் நாம் வாழ்கிறோம். சிறிது காலமே வாழும் இந்த மனித வாழ்க்கையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வாழ்க்கையில் வரும் பகைமைகளை எல்லாம் அகற்றிடல் வேண்டும்.

எந்தப் பகைமையையும் நாம் இழுக்காதபடி வாழ்ந்து வந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குப் போய்ச் சேர்கின்றோம். இராமலிங்கமாக ஆனது தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனது.

அங்கே சென்றால் பிறவியில்லா நிலை அடைகின்றோம். அந்தப் பிறவியில்லா நிலை அடையக்கூடிய சக்தியைத் தான் ஞானிகள் நமக்குக் கோவிலில் காட்டியிருக்கின்றார்கள்.

நித்திய கடனில் மூழ்கியுள்ள மனிதர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Divine satellite

நித்திய கடனில் மூழ்கியுள்ள மனிதர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்தக் காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை விஞ்ஞானிகள் எடுக்கின்றார்கள்.
1.இந்த உலகில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அம்மின் அலை இருந்தால் தான் செயல் கொள்ள முடியும்.

நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.

இந்தப் பூமி பல மண்டலங்களிலிருந்து வரும் ஒளி அலைகளையும் அந்த மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கிறதென்றால் காந்த அலையின் ஈர்ப்பினால் ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகின்றது.

நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும் ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் “காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்து தான் எல்லாமே செயல் கொள்கின்றன…”

1.மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர்.
2.இந்த உடலும் மற்ற எல்லாமே மின் அலையின் கூட்டுத்தான்.

மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்ம கூட்டை இந்த உடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துகின்றோம்.

அது மட்டுமல்லாமல் பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சியில் எல்லாம் நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.

பல கோடி கோடி உயிரணுக்களின் நிலை கொண்டு உயிர் வாழும்
1.நாம் இந்த வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கை வாழ்ந்து
2.மனிதனாக வாழ்ந்த வாழக்கூடிய செயலைப் பெற்ற நாம் இந்த எண்ணச் சுழற்சியிலும்
3.எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்.

கடமை கடமை என்று சொல்கிறோம்…! பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…? பின் அந்தப் பிள்ளைகளும் அவர்களுக்கென்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களும் இறப்பது தான் கடமையா…? இது தான் நித்தியக் கடமையா…?

தாய் தந்தையர் என்ன பலனைப் பெற்றார்கள்..? பிள்ளைகள் என்ன பலனைப் பெற்றார்கள்…? வாழும் வாழ்க்கையில்… படைப்பின் படைப்பில் “பலன் எது…?”

மனிதனாக பிறந்த நிலையில் இந்தப் பிறவிக் கடனைத் தீர்க்க வேண்டுமா இல்லையா..?

தன் சக்தி நிலை கூடக் கூட ஆத்ம பலம் வலுவேறித் தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றி தன் பலம் என்னும் உண்மை பலத்தை இந்த மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெறவேண்டும்.

“தன் பலம்” பெறத்தக்க வழி முறையை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.
1.மண் மணலாகி…
2.மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி..
3.பாறையாகி.. மலையாகி… வாழவில்லையா…?

ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக் கூடி வலுப் பெற்று வளர்ந்து கொண்டே தான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் எல்லாவற்றின் ஐக்கியமும்.

அறிவாற்றல் கொண்ட மனிதன் தன் ஞானத்தை இவ்வழித் தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற… மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி வளரப் பெறுகிறது.

உயிரணுவாக… உயிராத்மாவாக… இந்தச் சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம்… அந்த வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது
1.இயற்கையின் உயர் சக்தியான மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி
2.அவ்வுயிராத்மாவ வளர்க்கக்கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால்
3.இந்த மனிதனின் உண்மையின் உயர்ந்த பலம் கூடி உயர் நிலை பெறலாம்.

காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கிறது.

அத்தகைய செயலைப் போல் மனிதனாக வாழும் நாமும் இந்த இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது
1,நம் எண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால்
2.நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து
3.நம் உயிராத்மா பலம் கொள்ளும் நிலை வருகிறது.
4.அத்தகைய பலம் கொண்டால் அழியாத நிலைகள் கொண்டு எக்காலமும் வாழலாம் ஞானிகளைப் போல… மகரிஷிகளைப் போல…!

சந்தோஷத்தை உருவாக்கித் தரும் இடத்தில் நாம் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்…?

Rama breaking dhanush

சந்தோஷத்தை உருவாக்கித் தரும் இடத்தில் நாம் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்…?

 

கணவன் மனைவிக்குள் சண்டை வந்துவிட்டது. கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்தால் எப்படிச் செய்வீர்கள்…?

நான் கணவன் மீது எப்படியெல்லாம் பிரியமாக இருக்கின்றேன்… ஆனால் கணவன் என்னை இப்படி எல்லாம் பேசுகிறாரே… துயரத்தைக் கொடுக்கின்றாரே… உனக்கு அர்ச்சனை செய்தேனே… விரதம் இருந்தேனே… என் கணவர் இப்படிச் செய்கிறாரே…! ஆக சாமியிடம் எதைச் சொல்கிறீர்கள்..?

கோவிலில் கணவன் என்ன நினைக்கிறார்..?

மனைவி எதைச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறது… எதிர்த்து எதிர்த்துப் பேசுகிறது… ஏதோதோ பேசுகிறது..! நான் என்ன தான் செய்வது..?

1.இரண்டு பேரும் சேர்ந்து கோவிலில் எதை முறையிடுகின்றீர்கள்…?
2.அங்கே போய் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறீர்கள்.

அங்கே முறையிட்டு வீட்டுக்கு வரும் பொழுது அதே வெறுப்புடன் வருவோம். வீட்டுக்குள் வரும் பொழுது என்ன நடக்கும்…? கணவருடைய செயலைப் பார்த்தாலே ஒருவிதமான நடுக்கம் வரும். கோபமாக இருக்கிறார் என்ற நிலையில் கையில் இருக்கும் டம்ளரை மனைவி கீழே விட்டால் போதும்.

சனியன்…! எப்பொழுது பார்த்தாலும் எதையாவது போட வேண்டியது தான்… எல்லாவற்றையும் போட்டு உடைக்க வேண்டியது தான் வேலை..! என்பார்.

ஏனென்றால் நுகர்ந்த உணர்வுகள் இந்த வேலையைச் செய்யும் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்…! தவறு செய்யவில்லை. ஆனால் இந்த வேலையைச் செய்யும்.

அதே சமயத்தில் மனைவி கணவனைப் பார்த்து எப்பொழுது பார்த்தாலும் நம்மைத் திட்டுவது தான் இவருக்கு வேலை…! எப்படியோ தொலைந்து போ…!

ஆக கோவிலுக்குச் சாமி கும்பிட எதற்காகப் போகின்றோம்…? இதற்காகவா…? சிந்தித்துப் பாருங்கள்.

நம்மைச் சுத்தப்படுத்துவதற்குத்தான்…! கோவிலைக் கட்டினார்கள் ஞானிகள். எல்லோருக்கும்
1.இந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும்… தெய்வீக குணம் பெறவேண்டும்
2.மலரைப் போல் மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
3.தெளிந்த மனம் பெறவேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
4.இந்த அருள் உணர்வுகள் எனக்குள் என்றென்றும் பாய்ச்சும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
5.வைரத்தைப் போல் சொல்லும் செயலும் ஜொலிக்க வேண்டும்
6.தங்கத்தைப் போல் எங்கள் மனது மங்காமல் இருக்க வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்

இதற்குத்தான் கோவில்…! இந்த மாதிரி எத்தனை பேர் கோவிலில் எண்ணுகிறார்கள்..?

என் கணவர் தினமும் குடித்துவிட்டு வருகிறார் நீ பார்த்துக் கொண்டே இருக்கின்றாய்…! இப்படிச் சொல்பவர்கள் தான் உள்ளார்கள்.

ஆனால்…
1.என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு அந்த அருள் உணர்வு பெறவேண்டும்
2.அவர் தெளிவான நிலைகள் பெறவேண்டும் அந்த மலரைப் போல் மணம் பெறவேண்டும்
3.தெய்வீகப் பண்பும் தெய்வீகச் செயலும் என் கணவர் பெறவேண்டும்
4.வைரத்தைப் போல் அவர் சொல் செயல் வாழ்க்கை எல்லாம் ஜொலிக்க வேண்டும்
5.இருளை நீக்கும் அருள் சக்தி என் கணவர் பெறவேண்டும்
6.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் என் கணவர் பெறவேண்டும் என்று கோவிலில் வேண்டினால் எப்படி இருக்கும்..?

அந்த உணர்வுகள் உடலுக்குள் இறையாகி உணர்வின் தன்மை தெய்வமாகின்றது. அப்பொழுது இந்த உணர்வுடன் நாம் எண்ணினால் தான் நல்லதாகும்.

அதே சமயத்தில் கணவரும் என்ன செய்ய வேண்டும்…?

மனைவி வணங்குவது மாதிரியே வணங்கி
1.என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.மலரைப் போல் மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
3.தங்கத்தைப் போல் என் மனது மங்காது இருக்க வேண்டும்
4.என் செயல் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்யாமல் ஒருவருக்கொருவர் குறைகளைக் கொட்டி அழுகிறோமே தவிர நம் உடலை அசுத்தப்படுத்துகின்றோமா…? கோவிலுக்கு வருபவர்களுக்கும் நாம் எந்த உணர்வுகளை ஊட்டுகிறோம்…? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

இராமாயணத்தில் இதைக் காட்டுகிறார்கள். சீதாவைத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரம் ஏற்படுத்துகின்றார்கள், “சந்தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய இடம் கோவில்…!” என்பதைக் காட்டுவதற்குத்தான் அந்த இடத்தில் வைக்கின்றார்கள்.

நாம் வெறுப்படைந்தவர்களுக்கெல்லாம் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று இப்படி முறைப்படி செய்துவிட்டோம் என்றால்
1.அந்தத் தீமை செய்யும் வில்லை இராமன் ஒடித்து விடுகிறான் என்று காட்டுகின்றார்கள்.
2.ஆக சீதாவை அரவணைத்துக் கொண்டான் கல்யாணராமா…!
3.நம் உடலுக்குள் இருக்கும் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்கிறது… பகைமை இருக்காது.

பகைமையை நீக்கி எல்லோரும் ஒன்றாகச் சேர்க்கும் பொழுது கல்யாணராமனாகின்றது. நமக்குள் மற்றவர்களுடைய பகைமை உணர்வை மறக்கின்றோம்.

எல்லொரும் நலம் பெறவேண்டும் என்று நினைக்கின்றோம். ஆக பகைமையை நாமும் மறக்கின்றோம். பகைமையை அவரும் மறக்கின்றார் கோவிலை இதற்குத்தான் வைத்தார்கள் ஞானிகள்,

ஏனென்றால் நாம் எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது. அந்த உணர்வின் செயலாக நாம் செயல்படுகின்றோம்.

வேதனை என்று எண்ணினால் உயிர் அதை உருவாக்குகிறது. நம் உடலில் உள்ள உறுப்புகள் கெடுகிறது. ஆனால் வேதனைகளை நீக்கிடும் அருள் சக்தியைப் பெறும் பொழுது நம் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகின்றது. நம் சொல்லும் செயலும் நன்றாக இருக்கின்றது.

மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Maharishikaludan Pesungal - gnanam

மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இந்த உலக மாற்றத்தினால் இந்த உலகிலுள்ள மனித ஆத்மாக்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் உயிரணுவும்… உயிராத்மாவும்… சப்த அலைகளும்… சகல எண்ணத்தில் விட்ட சுவாச அலைகளும்… பூமியின் சுழற்சியில் சுழன்றுள்ள நிலையில் மீண்டும் கல்கி பிறந்தால் இந்த எண்ண வளர்ச்சி எங்கே செல்லும்…?

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் கலந்துள்ள இந்நிலைகள் எல்லாமே அடுத்த நிலைக்கு வர ஏதுவாகின்றதா…? என்ற வினா எழும்பலாம்..!

இதன் நிலையில் இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் சில நிலைகள் ஏற்படலாம்.

இப்பூமியில் இன்று வாழும் ஆத்மாக்களும்… பல கோடி ஜீவ ஜெந்துக்கள்… தாவரங்கள்.. இன்று பூமியில் வளர்ந்துள்ள கனி வளங்கள்… நீர் நிலைகள்.. மனித உடலை விட்டுப் பிரிந்து வாழும் அனைத்து உயிராத்மாக்கள் உயிரணுக்கள்… இது நாள் வரை நம் பூமியின் காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள சப்த அலைகள் அனைத்து நிலைகளுமே… இந்தப் பூமியின் மாற்றம் நிகழும் தருவாயில் பல நிலைகள் மாறி கலியில் இன்றளவும் வளர்ந்து விட்ட நிலையில் மாற்றம் காணப் போகிறோம்.

இந்தக் கலியில் மாறுகிறது என்றால் இந்த உலக மாற்றத்தில் ஏற்படும் அதிர்வினால் சில ஒளி அலைகள் நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் அனைத்திற்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் கலந்து விடும் நிலை பெறுகின்றது.

இன்னும் பல சப்த அலைகள் இந்தப் பூமியின் ஈர்ப்பில் இந்த அதிர்வினால் மோதுண்டு இந்தப் பூமியுடன் கலக்கும் நிலை பெறுகின்றது.
1.பல பல மாற்ற நிலைகள் இந்தக் கலி மாறிக் கல்கியில் காணப் போகின்றீர்கள்.
2.இவ் ஈஸ்வரபட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்.
3.இனிமேல் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை எல்லாம் தடுமாற்றம் கொள்ளப் போகிறது.

உலகின் பல திரையறியச் செயல்படும் கருவிகளும்… இந்தக் காற்றிலிருந்து ஈர்த்து ஓரிடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு ஒலி அலைகளைப் பரப்பி வாழும் நிலைகளும்… மற்றும் மனிதனால் செயற்கைக் கோள்களை ஏவி விட்டு அதிலிருந்து உணரும் ஒளி அலைகளும்… ஒலி அலைகளும்,,, இன்று செயலாற்றும் முறைப்படிச் செயலாகாது.

இயந்திரத்தின் துணை கொண்டு காற்று மண்டலத்தில் இவர்கள் இன்று பிரித்து எடுக்கும் நிலையெல்லாம் செயல்படுத்தும் முறையில்
1.இன்றுள்ள நிலைக்கொப்ப செயலாக்க முடியாமல்
2.அதற்காக இன்னும் பல புதிய சாதன முறைகளை மனிதன் உருவாக்கப் பார்ப்பான்.

மீண்டும் இந்தக் காற்று மண்டலத்தின் விஷத் தன்மை கூடி… ஆவி உலகில் வாழும் ஆத்மாக்களின் வெறி உணர்வும் அதிகப்பட்டு… “எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர்…” இனி வரப் போகும் காலத்தில் நிகழத் தான் போகின்றது.

மனித ஆத்மாக்களே…!
1.உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்…!
2.என்றிருந்தாலும் “மடியத்தான் போகின்றீர்கள்…!” என்று எண்ணம் கொள்ளாமல்
3.மனித ஆத்மாக்களால் தான்… நிகழப் போகும் சக்தியை மனிதன் உணர்ந்து செயல்படத்தான்… இங்கே பல நிலைகளைப் போதிக்கின்றோம்.
4.மனிதனாக அறிவு கொண்டு… அன்பு பட்டு… ஞானம் பெற்றிட வாருங்கள்.

இந்த மனித ஆத்மாவிற்குத்தான் அறிவாற்றலை வளர்க்கும் ஆற்றல் உண்டு. அறிவு நிலை கொண்ட மிருகங்கள் வாழ்ந்தாலும் மனிதனை ஒத்த ஞான சக்தி பெறும் தன்மையற்ற நிலையில் தான் மிருக இனம் உள்ளது.

தேவனாக வாழக்கூடிய மனிதன் தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்…!

புருவ மத்தியிலிருக்கும் உயிரின் முக்கியமான வேலை…! – நடந்த நிகழ்ச்சி

Spiritual Third eye

புருவ மத்தியிலிருக்கும் உயிரின் முக்கியமான வேலை…! – நடந்த நிகழ்ச்சி

 

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று விஞ்ஞானிகள் காட்டுகின்றார்கள். இன்று ஒரு காபி (HOTEL) கடையில் கூட இருக்கின்றது.
1.கையை நீட்டினால் போதும் தண்ணீர் வந்து விழுகும்.
2.எலெக்ட்ரிக்… எலெக்ட்ரானிக்… குழாயை நாம் திறக்க வேண்டியதில்லை…
3.கையை நாம் கழுவிக் கொள்ளலாம். கையை எடுத்தால் தானாக அடைத்துக் கொள்ளும்.
4.இன்னொரு இடத்தில் கையை நீட்டினால் சூடான காற்று வருகிறது. நம் கையில் இருக்கும் ஈரம் காய்ந்து விடுகிறது.

இதே மாதிரி ஒரு நாட்டிற்குள் அடுத்த எதிரி நாட்டு விமானம் வருகிறது என்றால் ராடார் அமைப்புகள் (RADAR SYSTEM) மூலம் அதனின் உணர்வுகளை நுகர்ந்து கொண்ட பின் இங்கே உடனே அறிவிக்கின்றது.

அறிவிப்பது மட்டுமல்லாதபடி அந்த ராடார் அமைப்பிலே உடனே அதை எதிர்த்துத் தாக்கும் உணர்வுகள் கொண்ட மற்ற இயந்திரங்களில் பொருதி வைத்திருக்கின்றார்கள். அது உடனே அந்த எதிரி நாட்டிலிருந்து வந்த விமானத்தைத் தாக்குகின்றது.

இதை எல்லாம் இன்றைய விஞ்ஞான அறிவால் உருவாக்கியுள்ளார்கள்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்…!
1.நம் உயிர் ஒரு எலெக்ட்ரிக்
2.நாம் நுகரும் உணர்வுகள் எலெக்ட்ரானிக் ஆக மாறுகின்றது.

உடலுக்குள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள். எதிர்பார்க்காதபடி உங்கள் பையனை ஒருவன் அடித்து விட்டான்…! என்று திடீரென்று கேள்விப்பட்டால் எப்படி இருக்கும்.

இந்த உடலுக்குள் நம் உயிர் குருவாக இருக்கின்றது. சொன்னவுடனே காதிலே கேட்டுக் கண் அந்த நினைவாற்றல் கொண்டு சுவாசித்து உயிரிலே மோதச் செய்கிறது.

உங்கள் கண்கள் என்ன செய்கிறது..?
1.கவர்ந்து உயிரிலே மோத வைக்கின்றது
2.அது தான் கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் “குருக்ஷேத்திரப் போர்” என்பார்கள்.
3.உயிரிலே பட்ட பின் அப்பொழுது இங்கே போர் நடக்கின்றது.
4.என் பிள்ளைக்கு என்ன ஆனதோ…! ஏது ஆனதோ…? என்ற உணர்ச்சியின் வேகம் வந்து விடுகிறது.
5.அப்பொழுது பாக்கி எந்தக் காரியமும் பார்க்க முடிகின்றதோ…? இல்லை…!

அந்த எலெக்ட்ரானிக்… உணர்ச்சியின் இயக்கங்கள் அதே இடத்திற்கு அழைத்துப் போய் தன் பையனைக் காப்பாற்றப் போகின்றது. பையனைப் பார்க்கிற வரையில் மன வலிமை இருக்காது.

ஒரு சமயம் என் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காகப் போயிருந்தார்கள். என் பையன் தண்டபானி கைப் பையன் (அவனாக மெதுவாக எழுந்து நடக்கக்கூடிய வயது).

நான் திருமணத்திற்குப் போகவில்லை. ஆனால் என் வீட்டில் அவனைக் கூட்டிச் சென்றிருந்தார்கள். அங்கே போனவுடன் இவனை விட்டு விட்டு அவர்கள் அங்கே இருந்தவர்களிடம் பேச.. கொள்ளவுமாக இருந்திருக்கின்றார்கள்.

கடைசியில் கிளம்பும் பொழுது அவர்வர்களுக்குண்டான வண்டி வசதி இருக்கிறது என்று இவனைக் கவனிக்காமலே அங்கேயே விட்டு வந்துவிட்டார்கள்

அங்கிருந்து எல்லோரும் வந்துவிட்டார்கள். பையனைக் கூப்பிட்டுச் சென்றவர்கள் “பையன் இவரிடம் இருப்பான்…! அவரிடம் இருப்பான்…! என்ற எண்ணத்திலேயே வந்து விட்டார்கள். (கல்யாண வீட்டிலே பையன் அனாதையாகச் சுற்றிக் கொண்டிருந்திருக்கின்றான்)

திருமணத்திற்குச் சென்று திரும்பி வந்தவர்களிடம் எங்கே தண்டபானி…? என்று நான் கேட்கிறேன்.

பிள்ளை அவரிடம் இருப்பான் என்று நினைத்தேன்… இவரிடம் இருப்பான் என்று நினைத்தேன்…! என்று சொல்லி யாரிடமும் இல்லாதபடி “காணோம்..!” என்றார்கள்.

சொன்னவுடனே குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டுகின்றார்…!

அது வரையிலும் உனக்குத் தெரியவில்லை. “பையனைக் காணோம்…”” என்று காதிலே கேட்டவுடன் உன் உணர்வுகள் எப்படி இயங்குகிறது பார்…? என்று சொன்னார்.

உடனே நான் என்ன செய்தேன். என்னிடம் இருந்ததோ பிரேக் இல்லாத சைக்கிள் தான். காலை ஊன்றிக் கொள்வது தான் பிரேக்…!

சைக்கிளை எடுத்து அழுத்திக் கொண்டு வேகமாகப் போனேன். அந்தக் கல்யாண வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் போய்விட்டார்கள்.

“இந்தப் பையன் யார்…? என்று தெரியவில்லையே.. தெரியவில்லையே…!” என்று அங்கே பாத்திரம் கழுவிக் கொண்டிருப்பவர் பேசிக் கொண்டிருக்கின்றார்.

பையன் என்ன செய்திருக்கின்றான்…? அங்கே அவர்களிடம் போவது பிறகு உள்ளே செல்வதுமாகவே இருந்திருக்கின்றான். அவனுக்கு நைனா…! என்ற சொல்லைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியாது. அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

நான் இங்கிருந்து பதட்டத்தில் போய்க் கொண்டிருக்கின்றேன். போனவுடனே… கேட்டவுடனே… “இங்கே ஒரு பையன் இருக்கின்றான் ஆனால் யார் என்று தெரியவில்லை…! என்கிறார்கள்.

பார்த்தால் என் பையன் தான்…! ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
1.ஆக அவனை நான் பார்க்கும் வரையில்
2.அந்தப் பதட்டம் எனக்குள் இருக்கின்றது… பதட்டம் நிற்கவில்லை.

பதட்டத்துடன் அவனைக் கண்டதும் தூக்கப் போனால் பையன் என்னைப் பார்த்து முறைக்கின்றான்… என்னிடம் வர மாட்டேன் என்று…! காரணம்… எல்லோரும் சேர்ந்து என்னை விட்டு விட்டுப் போய்விட்டார்கள் என்று…! வர மாட்டேன் என்கிறான்.

அப்புறம் அவனைச் சமாதானப்படுத்திச் சைக்கிளில் உட்கார வைத்து வீட்டிற்குக் கூட்டி வந்தேன். வீட்டுக்கு வந்த பின் “அந்த வயதில்” இரண்டு நாளாக என்னிடம் பேசவில்லை… என்னிடம் பேச மாட்டேன் என்கிறான்.

கல்யாணத்திற்குக் கூட்டிச் சென்றவர்கள் அவர்கள். ஆனால் நான் போய் அவனை அங்கிருந்து கூட்டி வந்தால் என் மீது கோபமாக இருக்கின்றான்.

நைனா…நைனா… என்று பிரியமாகக் கூப்பிடுபவன் அப்படிச் செய்கிறான். ஏனென்றால் இயற்கை…!
1.ஒவ்வொரு நொடிகளிலேயும் இப்படி எல்லாம் பல வழிகளில்
2.குருநாதர் உண்மைகளை உணர்த்திக் காட்டினார்.
3.நாம் நுகரும் உணர்வுகள் எலெக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக) நம் உயிர் எப்படி இயக்குகின்றது…? என்பதை
4.நாம் நம்மை அறிந்து கொள்ளலாம்.

அன்று வியாழன்… இன்று பூமி… இனி அடுத்து சந்திரனா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

view-of-jupiter

அன்று வியாழன்… இன்று பூமி… இனி அடுத்து சந்திரனா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

வரப்போகும் இந்த உலக மாற்றத்தில் இந்தப் பூமியின் குணத்தில் மாற்றம் ஏற்படப் போகும் நிகழ்ச்சி மனித ஆத்மாவினால் நிகழ்கிறது…! என்ற குற்ற உணர்வை ஏன் காணல் வேண்டும்..?
1.இயற்கையின் உந்தலினால் மனித எண்ணமே செயற்கை காண வழிப்பட்டதற்கு
2.”மனிதனைக் குற்றம் காணலாமா…?” என்ற வினா எழும்பலாம்.

ஆனால் மனிதனால் ஏற்படுத்திக் கொண்ட இந்தத் தீய அமில குணத்தினால் தான் நம் பூமியின் இயற்கை பாழ்பட்டது.

மனிதனால் அரசர்கள் என்றும் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும்
1.மனித ஆத்மாவுக்குகந்த குணத்தைப் பிரித்துக் கண்டு
2.ஒருவனை உயர்த்தி… ஒருவனை அடிமை கொண்டு… வாழ்ந்த எண்ணத்தில்
3.போட்டி பொறாமைகள் ஏற்பட்டு… பேராசையில் அதிகப் பொருள் சேர்த்து
4.ஒருவனை அழிக்க ஒருவன் வாழ்ந்து வந்ததின் நிலையினால் குண அமிலங்களில் மாறுபட்டு
5.அணுகுண்டுகளையும் அணுக்கதிர்களையும் காற்று மண்டலத்தில் கலக்கவிட்டு
6.இயற்கையைப் பாழ்படுத்திய மனிதனால் தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகிறது.

ஆக… இந்தக் கலியில் பூமியை நிலை தடுமாற வைப்பவனும் இம்மனிதன் தான். இந்தப் பூமி நிலைக்க கல்கியுகம் காணச் செயல்படுத்தப் போகிறவனும் இந்த மனிதன் தான்..!

மனிதன் மனித ஞானம் பெற்றால் மனிதனால் மனித ஆத்மாக்களைப் பலவாக நிறுத்த முடியும். நம் பூமியில் மனிதக் கரு வளர… நம் பூமியில் மனித ஆத்மாக்களை வளர்க்கும் தன்மை கொள்ள…
1.வியாழனிலிருந்து மீண்ட ஆன்மாக்கள் இருந்ததனால் தான்
2.நம் பூமி வளர்ந்த பிறகு நம் பூமியில் மனித ஆன்மாக்கள் வாழக்கூடிய கருவே வளர்ந்தது.

பல சப்தரிஷிகளும் அவர்களின் வழித் தொடர் பெற்ற பல நிலை கொண்டவர்கள் இருந்தாலும்… இந்தப் பூமியில் வாழ்ந்த மனித ஆத்மாக்களின் சக்தி நிலை உயர்ந்து தன் ஞானம் பெறும் ஆத்மாக்கள் வளர்ந்து வந்தாலும்… இந்தப் பூமியின் மாற்றக் காலத்தில் என்ன ஆகிறது…?

இந்த மனித வாழ்க்கையில் கொண்டுள்ள ஆசாபாசங்களிலும் நித்தியக் கடன்களிலும் மூழ்கியே… இந்தக் கலியின் மாற்றத்தில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள்… கலி மாறும் தருணத்திலும் அதே சுழற்சி ஓட்டத்தில் இருந்து… “தான் இதிலிருந்து மீள முடியாமல் போகிறது…!”

அத்தகைய நிலையில்… மீண்டும் அறிவு ஞானம் கொள்ளும் மனிதக் கரு வளர்ந்து… அக்கருவின் செயலிலிருந்துதான் மனித உருவங்களே இந்தச் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் வளர்ச்சியில் மனித ஆத்மாக்கள் வாழும் நிலை வரும்…!
1.அதாவது வியாழனுக்குப் பின் நம் பூமியில் மனிதர்கள் வாழுவது போல்
2.இந்தப் பூமிக்கு அடுத்து மனிதர்கள் சந்திரனில் வாழும் நிலை ஏற்படலாம்…!

நம் சூரியனின் சுழற்சியில் பல மண்டலங்கள் ஓடினாலும் நம் பூமியின் நிலைக்கொப்ப மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய இச்சக்தி மண்டலத்தின் இந்தக் கலி மாறி கல்கியுகம் பெற்று நம் பூமி சுழலும் தருணத்தில்
1.இன்றைய நிலையில் வாழும் ஆத்மாக்களின் பல கோடி எண்ணங்களை மாற்றிச் செயல்புரிய
2.பல சக்தி நிலைகள் செயல் கொண்டு செயலாற்றித்தான் கல்கியுகம் வாழ முடியும்.

அதற்குத்தான் எம்மைப் போன்ற எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயல்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளது.

எங்கேயுமே இல்லாத தத்துவங்கள் நம் ஆலயங்களில் தான் உண்டு…!

First and fore most god

எங்கேயுமே இல்லாத தத்துவங்கள் நம் ஆலயங்களில் தான் உண்டு…!

 

பரிணாம வளர்ச்சியில் நல்ல குணங்கள் கொண்டு வளர்ந்ததால் தான் நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம். ஆனால் நம் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் வந்துவிட்டால் நம் உடலில் நோயாக மாறுகின்றது.

அப்படி நோயாக மாறாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்….?

நம் உடலில் மனிதனாக உருவாக்கக் காரணமான நல்ல குணங்களைத்தான் கோவில்களிலே தெய்வமாக வைத்துக் காண்பிக்கின்றார்கள்.

1.தெய்வத்திற்கு வைரக் கிரீடத்தை வைக்கின்றார்கள்
2.தங்க நகைகளைப் போடுகின்றார்கள்
3,அழகான பட்டாடைகளையும் உடுத்துகின்றார்கள்
4.மலர் மாலைகளையும் போடுகின்றார்கள்
5.கனிகளையும் வைக்கின்றார்கள்.
6.இருட்டறைக்குள் வைத்து திரையைப் போட்டு மூடி இத்தனை அலங்காரமும் செய்கிறார்கள்
7.திரையை நீக்கியவுடன்… அங்கிருக்கும் சாமி மங்கலாகத் தெரிகிறது… சரியாக உணர முடியவில்லை.

அப்படி என்கிற பொழுது விளக்கை வைத்துக் காண்பிக்கின்றார்கள். “விளக்கைக் காட்டியவுடன்” அங்கிருக்கும் பொருள்கள் எல்லாமே தெரிகிறது.

வைரக் கிரீடம் இருக்கிறது பட்டாடை தெரிகிறது நகைகள் தெரிகிறது கனிகள் தெரிகிறது… எதனால்…? இந்த விளக்கினால்…!

அப்பொழுது நம்முடைய ஆறாவது அறிவினால் அதைத் தெரிந்து கொள்கிறோம். ஆடு மாடுகளுக்கு இவை எல்லாம் தெரியுமோ…? அங்கே உணவுப் பொருள் இருந்தால் அதை உட்கொள்ளப் போகும். அந்தக் குணத்தை அறிய முடியாது.

1.ஆகவே மனிதர்கள் தெய்வ குணங்களைத் தெரிந்து கொள்வதற்குத் தான் உருவம் அமைத்தார்கள்..
2.இது துவைதம்…! விளக்கைக் காட்டும் பொழுது உருவம் தெரிகிறது.
3.அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்…?
4.பொருளறிந்து செயல்படும் இந்தச் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணுதல் வேண்டும்.
5.(அங்கிருக்கும் பொருள் எல்லாம் விளக்கினால் தெரிகிறது அல்லவா…!)

நம் பையன் வெளியிலே இரண்டு பேருடன் பழகி விளையாண்டு கொண்டிருக்கின்றான். அப்பொழுது அவர்கள் செய்யும் அதே குறும்புத்தனத்தை நம் பையனும் செய்யத் தொடங்குகிறான்.

நாம் என்ன சொல்கிறோம்…?

ஏண்டா அவர்களுடன் சேர்ந்து கெட்டுப் போகிறாய்..? என்று தான் நம் பையனைத் திட்டத் தெரிகிறது. ஆனால் அவனை மாற்றத் தெரிகிறதா..? தெரியவில்லை…!

அப்பொழுது அவர்களுடன் சேர்ந்து அந்த மாதிரி ஆகிவிட்டான்…! என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..?

ஈஸ்வரா…! அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். அந்தப் பையன்களிடம் சேராத நிலைகளில் நல்ல உணர்வு பெறவேண்டும் என்று நாம் நல்ல உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்களுடன் சேர்ந்ததால் தான் நம் பையனும் தவறு செய்கிறான்..! என்று அறிந்து கொள்கிறோம். அதற்காக வேண்டி மேலே சொன்ன நல்ல உணர்வைப் பாய்ச்சிவிட்டு
1.இந்த மாதிரி அவன் கெட்டவனப்பா…! அவனுடன் சேராதே…!
2.அதனால் தான் உனக்கு இடைஞ்சல் வருகிறது… நீ பார்த்துச் செய்யப்பா…!
3.நீ எவ்வளவு நல்லவனாக இருந்தாய்..! அவர்களுடன் சேர்ந்ததால் உனக்கும் இந்தக் குறும்புத்தனம் வந்ததல்லவா…! என்று சொல்லி
4.அருள் உணர்வைப் பாய்ச்சி அவனைத் திருத்த வேண்டும்.

அதே போல் உதாரணமாக வீட்டில் மருமகள் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றார்கள். யாரோ வருகிறார்கள்…! என்று சொல்லி அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று செய்கிறார்கள்.

அதிலே கொஞ்சம் குப்பையை விட்டு விட்டால் போதும் மாமியார் பார்த்து என்ன செய்கிறது…? கூட்டுவதைப் பார்…! இங்கே இவ்வளவு குப்பை இருக்கிறது… அதைக் கூட்டத் தெரிகிறதா…?

மருமகள் மீது பிரியம் இருந்தால் அன்பாகச் சொல்லும். அன்பு இல்லை என்றால் இந்த மாதிரிக் குறையாகத் தான் சொல்லும்.

மருமகள் என்ன சொல்கிறது…? குப்பை இருக்கிறது…! என்று சொன்னால் நான் கூட்டி விடுகின்றேன். இதற்கு ஏன் இந்த மாதிரி வெடுக் என்று பேச வேண்டும்…? என்று மாமியாரை எண்ணுகிறது.

அப்பொழுது அந்த இடத்தில் என்ன நடக்கிறது…? ஒருவருக்கொருவர் பகைமையாகும் சந்தர்ப்பம் உருவாகிறது.

இந்த மாதிரி ஆகாமல் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் கோவிலில் விளக்கை வைத்துக் காட்டுகின்றார்கள்.

இந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும்… வைரத்தைப் போல் எங்கள் சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும்… தங்கத்தைப் போல் மங்காத மனம் நாங்கள் பெறவேண்டும்.. மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் நாங்கள் பெறவேண்டும்… கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும்…! என்று ஆலயத்தில் ஒவ்வொருவரும் எண்ணுதல் வேண்டும்…! இந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி ஆலயத்தில் காட்டியபடி மருமகள் எண்ணினால்
1.சரி… அத்தை அவர்கள் மனதில் ஏதோ நினைத்துச் சொல்கிறார்கள்.
2.அவர்களுக்கு என் மேல் நல்ல பிரியம் வர வேண்டும்
3.அரவணைத்துச் சொல்லும் அந்த நல்ல மனது வரவேண்டும் என்று எண்ணினால் அங்கே பகைமைகள் அகலுகிறது.

அதே போல் மாமியாரும் ஆலயத்தில் காட்டியபடி எண்ணினால்
1.மருமகளுக்குச் சிந்தித்துச் செயல்படும் சக்தி வர வேண்டும்
2.பொறுப்புடன் செயல்படும் சக்தி பெறவேண்டும் என்கிற பொழுது அங்கே குறைகள் அகலுகிறது.

இப்படி..
1.ஒவ்வொருவரும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்
2.பரிபக்குவ நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
3.சந்தர்ப்பவசத்தால் குடும்பத்தில் வரும் குறைகளை அகற்ற வேண்டும் என்று தான்
4.எங்கேயும் இல்லாத இந்தத் தத்துவங்களை நம் கோவில்களில் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் நடந்து பழக வேண்டும்.

இயற்கையைச் செயற்கையில் கண்டு வாழ்ந்ததால் உருவான “உலக மாற்றங்களைப் பற்றி…” ஈஸ்வரபட்டர் சொன்னது

Climate change

இயற்கையைச் செயற்கையில் கண்டு வாழ்ந்ததால் உருவான “உலக மாற்றங்களைப் பற்றி…” ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உலகிலுள்ள உண்மை இயற்கைத் தன்மைகளை மெய் ஞானம் கொண்டு விளக்குகிறோம்…! இதனை விஞ்ஞானத்தவர்களும் எடுத்து ஆராயலாம்.

நம் பூமியில் மட்டுமல்லாமல் அனைத்துக் கோளங்களுக்கும் பொதுவாக உள்ள பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில குணங்கள்
1.அதனதன் நிலைக்கொப்ப அதனதன் இனத்துடன் சென்று எப்படி ஐக்கியப்படுகிறது…?
2.ஒவ்வொரு மண்டலமும் இயற்கைக் குணத்தில் எப்படியெல்லாம் வளர்ச்சி ஏற்படுத்திக் கொண்டது…?

மழை வரும் காலங்களில் இடியும் மின்னலும் ஏற்பட… ஏற்பட… ஒவ்வொரு பூமியின் வளர்ச்சித் தன்மையும் கூடுகிறது…! என்று அர்த்தம்.

1.இரண்டு அமில குணங்கள் மோதுண்டு வான மண்டலத்தில் சுழலும் தன்மையில்
2.அதன் மேல் மழை நீர் பட்டு இடி ஏற்பட்டு அந்த இடியின் ஈர்ப்பு பூமியில் பதிந்து
3.அதன் நிலையில் வளரும் காளான்களின் வளர்ச்சியிலிருந்து புதிய புதிய இன இயற்கை வளங்கள் வளருகின்றன.

எந்நிலை கொண்டு…?

பூமியில் காளான் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு நாளில் அதன் நிலை மாற்றம் கொள்கிறது. காளானிலிருந்து வெளிப்படும் அமிலத்தினால் அந்த நிலை காற்றாக பூமியில் படரும் பொழுது அதன் அமிலம் காற்றுடன் கலக்கப்பட்டு எந்தெந்த இடங்களில் அக்காற்றினில் அவ்வமிலம் படர்கின்றதோ எங்கெல்லாம் “புதிய இன வளர்ச்சி” ஏற்படும்.

மற்றும் இக்காளான் வகைகளிலேயே கணக்கிலடங்கா குண வகைகள் வளர்கின்றன மழைக் காலங்களில். பூமியில் மட்டுமல்ல. கடல்களிலும் நீர் நிலைகளிலும் பல வகைக் காளான்கள் மழைக் காலங்களில் ஏற்படுகின்றன.

மரங்களில் வளரும் காளான் ஒன்று இரண்டு நாளில் மடிந்து அந்த மரத்தின் மீது அக்காளான் செடி அழுகிய நிலையில் படர்ந்து விடுகிறது.
1.அந்த மரத்திலிருந்து வெளிப்படும் சுவாசக் காற்று அவ்வழுகிய காளான் மேல் பட்டு
2.அக்காளானிலிருந்து ஆவியான அமிலம் மற்றொன்றின் மேல் படும் பொழுது
3.வேறு வகையான இன வளர்ச்சி தோன்றக்கூடிய உண்மை இதன் தொடரில் தான் வருகிறது.
4.இப்படித்தான் இயற்கையின் வளர்ச்சியே உள்ளது.

நம் பூமியில் சூரியன் மேலிருந்து நம் பூமிக்கு வரும் ஒளி அலை ஒன்று போல் உள்ளதா..? என்று முந்தைய கால விஞ்ஞானத்திற்கும் இன்றைய விஞ்ஞானத்திற்கும் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படுகின்றன.

உலகச் சுழற்சியில் ஏற்படும் இந்த ஒளி அலைகள் ஒன்று போல் சுழன்றாலும் பூமி எடுக்கும் விதத்தில் அதனதன் நிலைக்குகந்த ஒளி அலையைத்தான் இந்தப் பூமியினால் எடுக்க முடிகின்றது.

நம் பூமியில் சில இடங்களில் எரிமலை தோன்றுகிறது. சில இடங்களில் பனிமலைகள் உள்ளன. அந்த இடங்களில் உள்ள ஒளி அலைகளை பூமி எப்படி ஈர்க்கிறது…?

எரிமலையாகக் கக்கும் இந்த உஷ்ண பூமியில் அதற்குகந்த ஆகாரத்தை அது அதிகமாகத்தான் எடுத்துக் கொள்கிறது. இந்த ஒளி அலையின் மூலமாகத்தான் நம் பூமியின் ஜீவனே வாழ்கிறது. நம் பூமிக்கும் ஜீவனுண்டு… உணர்வுண்டு… உருவ சதைகளும் உண்டு.

நம் பூமியின் உள் நிலையை விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. பூமியின் உள் நிலையில் உள்ள சக்திகளிலும் செயற்கையின் ரூபம் காண நாம் விரயப்படுத்தி வாழ்கிறோம்.

1.வரும் இடியை இடி தாங்கியினால் தடுக்கின்றோம்.
2.இடி இல்லாவிட்டால் இன வளர்ச்சிக்குகந்த இயற்கைத் தன்மையை நாம் பெற முடியாது.
3.இயற்கையின் தாவர வளர்ச்சி அதிகம் கொண்டால் தான் நாம் இந்தப் பூமியில் வாழ முடியும்.

மனித ஆத்மாக்கள் குறுகிய காலத்திலே செயற்கைக்கு மிகவும் அடிமைப்பட்டு
1.இயற்கையைச் செயற்கையில் கண்டு வாழ்ந்து
2.இந்தப் பூமியையே நிலை தடுமாற வைக்கின்றார்கள்.

பூமியிலிருந்து எடுக்கப்படும் கனிவளங்களைக் காட்டிலும் நம் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமில சக்தியை மனிதனால் மின்சாரம் காண… காற்று அலையில் உள்ள சக்தியைக் காட்டிலும் “பூமியிலிருந்து” அதிக மின் அலைகளை எடுக்கின்றோம்.

இப்படி பூமியையே நம் செயற்கையின் சோம்பேறி நிலைக்காகக் கொண்டு போய் அதில் உள்ள பல சக்திகளையும் விரயப்படுத்துகின்றோம்.

ஆங்காங்கு உள்ள கனிவளங்களை எடுத்தாலும் வளரும் இயற்கை வளர்ந்து கொண்டே இருந்த நிலையும் இன்று செயற்கை விஞ்ஞானம் தடைப்படுத்தி விட்டது.

அதாவது… பல ஆயிரம் ஆண்டு காலங்களாகப் பூமியிலிருந்து தங்கம் வெள்ளி போன்ற உலோகங்களை எடுத்து வந்துள்ளார்கள். எடுக்க எடுக்க இவையும் வளர்ந்தன.

ஆனால் இந்தக் குறுகிய நூற்றாண்டுகளில்…
1.பெட்ரோலிய இனத் திரவத்தையும்
2.மின்சாரம் காண்பதற்காகக் காந்த அலையின் அணு சக்தியையும் நாம் உறிஞ்சி எடுத்ததனால்
3.பூமியில் வளர வேண்டிய கனி வளங்களுக்குகந்த ஆகாரமான இவ்வமில குணங்கள் எல்லாம் தடைப்பட்டவுடன்
4.அவைகளின் வளர்ச்சியும் சுத்தமாகக் குன்றிவிட்டது.

பொன் முட்டையிடும் வாத்தின் கதையைப் போல் ஆகிவிட்டது…!

வாத்து தானாகத் தினசரி இட்ட முட்டைகளைப் பேராசை கொண்டு ஒரு நாள் அந்த வாத்தை அறுத்துப் பார்த்த நிலையைப் போல் இந்தப் பூமியின் நிலையை மனிதர்கள் சிதறடித்துவிட்டனர்.

1.மனிதனின் எண்ண வளர்ச்சியிலும்… அறிவாற்றலிலும்… ஞானத்திலும் வேகமில்லை…!
2.ஆனால் நினைத்தவுடன் நினைத்தது நடக்க வேண்டும் என்ற
3.பேராசையின் வெறி… வேகம்… மனிதர்களிடம் மிகவும் துரிதப்பட்டதனால்
4.இயற்கையின் பொக்கிஷத்தை எல்லாமே அழித்து வாழ்கின்றோம்.

இதனின் விளைவைக் கூடிய சீக்கிரம் நீங்கள் உணர்வீர்கள்.

பிறருடைய தீமையான செயல்களைப் பார்த்து “இப்படிச் செய்கிறார்களே…!” என்று எண்ணவே வேண்டாம்…!

atma suthi - soul cleaning

பிறருடைய தீமையான செயல்களைப் பார்த்து “இப்படிச் செய்கிறார்களே…!” என்று எண்ணவே வேண்டாம்…!

 

தியானம் செய்து முடிந்த பிற்பாடு “நாம் தான் தியானம் செய்துவிட்டோம் அல்லவா…!” என்று இருக்கக் கூடாது.

வாழ்க்கையில் எந்த நேரமாக இருந்தாலும் சரி…
1.சங்கடமோ சலிப்போ கோபமோ வெறுப்போ தொழிலில் சோர்வோ இதைப் போல் வந்தால்
2.அது நம்மை இயக்காமல் உடனடியாகத் தடுக்க வேண்டும் (இது மிகவும் முக்கியமானது).

அம்மா அப்பாவை நினைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை நினைத்து ஒரு நிமிடம் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று கண்களில் ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கி உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்த வேண்டும்.

இப்படி எடுத்துக் கொண்டால் பிறருடைய சங்கடமோ கோபமோ வெறுப்போ பிறருடைய நோயோ நமக்குள் வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
1.எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் எல்லோருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் என்று எண்ணி வந்தாலே போதும்.

இது தான் ஆத்ம சுத்தி…!

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் மூலம் உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்த “நீங்கள் எண்ணியவுடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கிடைக்கும்…!”

எப்படி…?

1.ஒருவன் நம்மைத் திட்டினான் என்று நமக்குள் பதிவாக்கிய பின்
2.அவனை நினைக்கும் பொழுதெல்லாம் அந்தத் திட்டிய உணர்வுகள் வருகிறது அல்லவா…!
3.பாவி எனக்குத் துரோகம் செய்தான்..! என்று எண்ணிக் கொண்டிருந்தால் அன்றையக் காரியங்கள் கெடுகிறது.
4.நமக்கும் கெடுகிறது… அவனுக்கும் கெடுகிறது…!

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் சிந்தித்து நீங்கள் தெளிந்து அந்த அருளைப் பெற்றிடும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டால் உங்கள் எண்ணம் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்.

1.பிறருடைய தீமையான செயல்களைப் பார்த்து
2.இப்படிச் செய்கிறார்களே…! என்று எப்பொழுதும் எண்ணவே வேண்டாம்…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்தங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மாறாக “இப்படிச் செய்கிறார்களே…!” என்று எண்ணினால் அந்தத் தீமைகள் நமக்குள் வந்துவிடும். “நம் வாழ்க்கையும் அது கெடுக்கும்…!” (இது முக்கியம்)

அது நமக்குள் வராதபடி இந்த மாதிரித் தடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்படிச் செய்து பாருங்கள்.. பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது.

சண்டை போடுகிறார்கள் என்று பார்க்கின்றீர்களா…! உடனே இந்த மாதிரி சுத்தப்படுத்திவிட்டு அவர்களுக்குள் நல்ல உணர்வுகள் தோன்ற வேண்டும்.. இருவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்…! என்று எண்ணிவிட்டு வந்துவிடுங்கள்.

1.ஏன் இப்படிச் செய்கிறார்கள்…? என்று அதையே அழுத்தமாக எண்ணினால்
2.அவர்கள் உணர்வு நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டை போடும் உணர்வுகளே விளையும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஏனென்றால் இப்படித்தான் நம்மை அறியாமல் எத்தனையோ தீமைகள் வந்துவிடுகிறது. அதை மாற்றுவதற்கு இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானம்…!

கையில் அழுக்குப் பட்டால் உடனே கழுவி விடுகின்றோம் அல்லவா…! உடுத்தியிருக்கும் துணியில் ஏதாவது கொஞ்சம் அசிங்கமானால் உடனே கழுவுகிறோம் அல்லவா…!

இதே மாதிரி அவ்வப்பொழுது தூய்மைப்படுத்துவதற்கு இந்தச் சக்திகளைக் கொடுக்கின்றோம். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் ஜோதிடம் தேவையில்லை.. ஜாதகம் தேவையில்லை… மந்திரமோ மாயமோ எதுவுமே தேவையில்லை..! எல்லாமே உங்களால் மாற்றியமைக்க முடியும்.

எந்தத் தொழில் செய்தாலும் அல்லது வியாபாரம் செய்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.சரக்கு வாங்குபவர்களுக்கு இந்த அருள் சக்திகள் கிடைக்க வேண்டும்
2.அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
3.இங்கே நம் குடும்பத்திற்கு வருபவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் எண்ணிப் பாருங்கள்.

உங்கள் தொழிலும் வியாபாரமும் பெருகும்… குடும்பத்தில் மகிழ்ச்சி என்றுமே இருக்கும்.

மனித உடலுக்குள் உஷ்ணமாக இருப்பது பற்றியும் பூமிக்கு அடியில் உஷ்ணமாக இருப்பது பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

Heat is god

மனித உடலுக்குள் உஷ்ணமாக இருப்பது பற்றியும் பூமிக்கு அடியில் உஷ்ணமாக இருப்பது பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உடல் பொறுக்கும் சூட்டைக் காட்டிலும் நம் உடலுக்குள் உள்ள உள் உறுப்புகள் அதிகச் சூட்டை ஏற்கும் தன்மை கொண்டுள்ளன.

உடம்பின் மேல் நாம் சூடாக அருந்தும் பானத்தின் சூடு பட்டவுடன் உடம்பின் மேல் அங்கங்கள் அந்நிலைச் சூட்டைப் பொறுப்பதில்லை. ஆனால் உள் உறுப்புகள் அந்தச் சூட்டை ஏற்கின்றன.

1.ஒரே பிம்ப உடல் தான்…
2.ஆனால் ஒவ்வொரு அவயங்களின் நிலைக்கொப்ப உஷ்ணத் தன்மைகள் உள்ளன.
3.இவ் உடலிலிருந்து இச் சுவாசம் ஈர்த்து வெளிப்படுத்தும் உஷ்ண அலையின் நிலைக்கொப்ப நம் உடல் உறுப்பு உள்ளது.

தாவரங்களின் தன்மையிலும் இத்தகைய நிலையுள்ளது. நம் பூமியின் தன்மையிலும் இதுவே தான். பூமியில் உள் நிலை பூமியின் மேல் நிலையை காட்டிலும் சில இடங்களில் அந்த உஷ்ண நிலை மாறு கொள்கின்றது.

கோடை காலங்களில் பூமியைப் பறிக்கும் பொழுது அந்தப் பூமியின் உள் நிலை மேல் நிலையைக் காட்டிலும் உஷ்ணமாகவே உள்ளது. நாம் நினைக்கின்றோம்.. சூரியனின் வெக்கையினால் அந்தப் பூமியில் சூடு உள்ளதென்று.

1.பூமிக்கு உஷ்ணத்தை ஈர்ப்பதுவே
2.பூமியின் சுவாசத்தினால் தான்..!

உள் இழுத்து வெளிக்கக்கி இந்த உலகம் சுழன்று… சுழற்சியின் மோதலில் ஒளி அலையை ஈர்த்து வெளிக் கக்கும் நிலையில் அந்தந்தக் கால நிலைகளில் எந்தெந்த மண்டலங்களின் ஈர்ப்பலையின் சக்தி அதிகமாக ஈர்க்கப்படுகின்றதோ.. அதன் நிலைக்கொப்ப நம் பூமியின் கால நிலைகள் மாறுபடுகிறது.

அதே போல் உஷ்ண அலையின் தன்மையும் மாறு கொண்டே உள்ள நிலைக்கொப்ப மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறு கொண்டுள்ளன.

சனி மண்டலமானது மிகவும் குளிர்ந்த அமிலத் தன்மை கொண்ட மண்டலம். அந்த மண்டலத்தின் ஒளி அலையே நம் பூமியைப் போல் வெளிச்சமானதாக இல்லை.

வளர்ந்த மண்டலம் தான் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது. அதன் தன்மையே மிகவும் குளிர்ச்சி வாய்ந்த அமிலத்தை ஈர்த்து வெளிப்படுத்தி அதன் நிலைக்கொப்பப் பனி மண்டலமாக உருளுகின்றது.

சனி மண்டலத்தின் ஈர்ப்பலையின் காலங்களில் நம் பூமியின் வட துருவ தென் துருவ ஈர்ப்பின் நிலைக்கொப்பக் குளிர் காலங்கள் பூமியில் ஏற்படுகின்றன.

அதே போன்ற நிலை தான் நம் பூமியைக் காட்டிலும் அதிகமான உஷ்ணத்தை ஈர்த்து வெளிப்படுத்தும் ராகு கேது போன்ற சில மண்டலங்களின் தொடர்பினால் நம் பூமியில் கோடையில் ஏற்படும் உஷ்ண நிலை.

ஆகவே உஷ்ண நிலை என்பது…
1.சுவாசிக்கும் சுவாசத்திற்கொப்பவும்
2.வந்து மோதும் பிற உணர்வுகளுக்கொப்பவும் தான் என்பதை
3.நாம் அறிதல் வேண்டும்.
(கோபம் வரும் பொழுது உடலுக்குள் உஷ்ணம் அதிகமாவதையும் பயம் வரும் பொழுது உடல் குளிர்ச்சியாவதையும் நீங்கள் பார்க்கலாம்)