முறைப்படி தியானமிருப்பவர்களுக்கு ஏற்படும் “உள் உணர்ச்சி”

Image

INTUITION.jpg

முறைப்படி தியானமிருப்பவர்களுக்கு ஏற்படும் “உள் உணர்ச்சி”

 

இப்பொழுது முறைப்படி நாம் தியானமிருக்கிறோம் என்று சொன்னால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெறுவதற்குத்தான்.

அதற்கடுத்து ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானிக்கப்படும்போது இந்தக் காற்றிலே படர்ந்திருகின்ற மகரிஷிகளின் அருள்சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும். “அந்த அருள் சக்தியாலே “உங்கள் துன்பம் போகும்…” என்று யாம் உபதேசிக்கின்றோம்.

உங்கள் உணர்வுக்குள் பதிவு செய்த இந்த உணர்வை ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியவுடன் அந்தக் காற்றிலிருந்து அந்தச் சக்தியை எடுத்து உங்கள் மனம் சஞ்சலப்படும் இந்த நிலையை அது அடக்கும்.

காரணம் சதா உங்களிடம் யாம் வாக்குகளைச் சொன்னாலும் அதை நீங்கள்

1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து

2.உங்கள் உடலைக் கோயிலாக மதித்து

3.அவன் வீற்றிருக்கக்கூடிய கோயிலில்

4.அங்கே நல்ல வாசனையைப் போட்டால் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும்.

அதைப்போல உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும். உங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெறவேண்டும். உங்கள் மனமும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அந்த “நல்ல மணங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்” என்று யாம் தியானிக்கின்றோம்.

அதே சமயத்தில் அதற்கு வேண்டிய அந்தச் சக்தியை எடுத்து உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இன்றும் யாம் ஜெபித்துக் கொண்டேயிருக்கின்றோம். அப்படி யாம் உங்களை எண்ணும் பொழுது அந்த சக்திகள் கிடைக்கும்.

சில நேரங்களில் நெற்றியிலே “குறு குறு” என்று இருக்கும். சில நேரங்களில் பார்த்தால் உங்கள் உடல்களில் “ஒரு விதமான புது உணர்வுகள்” தோன்றுவதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் சங்கடமோ சஞ்சலமோ வரப்படும்போது

1.மனம் நொந்து இருக்கக்கூடிய நேரங்களில் கூட

2.யாம் எடுத்துக்கொண்ட இந்த ஜெபம்

3.உங்கள் உடலில் சில உணர்ச்சிகளைத் தூண்டும்.

அந்த நேரமாவது நீங்கள் பார்த்து உணர்ந்து சுதாரித்து ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ‘மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் அந்தச் சக்தி உங்களுக்குள் இணைந்து அந்த மனக்கலக்கத்தைத் தீர்க்க இது உதவும்.

“நீங்கள் எண்ணி எடுத்தால்தான்” அந்தச் சக்தி கிடைக்கும்.

ஆகவே ஒவ்வொருவரும் ஆத்மசுத்தி என்ற இந்த ஆயுதத்தை பயன்படுத்திப் பழகிக் கொள்ளவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைக் கவர வேண்டிய முறை

Image

DSC00317.JPG

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைக் கவர வேண்டிய முறை

உதாரணமாக கருடன் கடலுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும். கடல் நீருக்குள் மீன் இருக்கும். மீன் கடலுக்கடியில் உள்ளிருந்து மேலே நீர் மட்டத்திற்கு வருவதற்கு முன்னால்

1.கருடன் மீனின் மணத்தை நுகர்ந்தறிந்து,

2.அந்த மீனை “லபக்…” என்று கவ்விக் கொண்டு செல்கின்றது.

3.மீன் தண்ணீருக்குள் இருக்கின்றது. மீனின் உணர்வின் மணத்தை நுகர்ந்தவுடனே “சடாரென்று பாய்ந்து..,” மீனைப் பிடித்து செல்கின்றது.

ஆனால் நாமோ கடலுக்குள் போனாலும் மீனைப் பிடிக்க முடிவதில்லை. ஆக கருடனின் உணர்வுகள் எப்படி இருக்கும்?

இது போன்றுதான் நமது உணர்வின் இயக்கங்கள் எதன் வலிமையைச் சேர்த்ததோ அதன் வலுவைப் பெருக்க உதவி செய்கின்றது.

இதை எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக மான் புலியைப் பார்க்கின்றது. புலியோ மானைத் துரத்துகின்றது. மான் “தீமையிலிருந்து தான் தப்ப வேண்டும்” என்று புலியின் வலுவான உணர்வை நுகர்கின்றது.

1.புலியின் தாக்குதலில் மானின் தசைகள் புலிக்கு இரையானாலும்

2,மானின் உயிரான்மா புலியின் ஈர்ப்பிற்குள் சென்று

3.புலியின் உணர்வைக் கவர்ந்து வளர்ந்து

4.புலியின் ரூபமாக புலிக்குக் குட்டியாகப் பிறக்க நேருகின்றது.

இது சந்தர்ப்பம்.

இப்படித்தான் “தீமையிலிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்…” என்ற உணர்வுகளை எடுத்து எடுத்து பரிணாம வளர்ச்சியில் தீமைகளை வென்றிடும் ஆறாவது அறிவு கொண்ட மனிதனாக நம்மை உருவாக்கியது நமது உயிர்.

கண்களால் பார்த்துத்தான் உணர்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. ஆகையால் கண்ணன் “பிரம்மத்தைச் சேர்ந்தவன்” என்று கூறுகின்றனர்.

நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குச் செலுத்தி எண்ணிப் பாருங்கள்.

1.அந்தப் பேரருள் உணர்வை

2.உங்களுடைய கண் உங்களிடத்தில் உருவாக்கும்.

ஞானிகள் காண்பித்த அருள் வழியில் தம்முள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கித் தீமைகள் தம்முள் வராது காத்துக் கொள்ளுங்கள்.

பேரின்ப உணர்வுகளை வளர்த்து என்றும் பதினாறு என்ற பெருவீடு பெரு நிலை பெறும் நிலையாக அழியா ஒளி சரீரம் பெறும் நிலையாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு”

 

Light world.jpg

“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு”

நட்சத்திரங்களின் சத்து பூமியில் மண்ணுடன் கலந்து புவி ஈர்ப்பில் அது சிறுகச் சிறுக வளர்ந்து வைரமானபின் அது வெடித்து தனித்தன்மையாக வெளி வந்துவிடுகின்றது.

இதைப் போன்றே அந்த ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது “அறிவின் வளர்ச்சி, அறிந்திடும் வளர்ச்சி”, வருகின்றது.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவதைப் போன்று,  நமது ஜீவ அணுக்களின் துணை கொண்டு கண்களின் வழி ஒரு உணர்வின் அறிவினை அறியும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்கள் எப்படி மின்னுகின்றதோ அதைப்  போன்று நமது உயிர் மின் அணு போன்று இயங்கிக் கொண்டே இருக்கின்றது, அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின் அணுக்களாக இயங்குகின்றது.

எப்படி மேட்டூரில் மின் அணுவினை உருவாக்கும் பொழுது நம் வீட்டில் எந்தெந்தப் பொருள்களில் அதை இணைக்கின்றோமோ அந்த மின் அணு அதை இயக்கி அதன் வழி காண்கின்றோம்.

இதைப் போன்றுதான் நமது உயிரின் துணை கொண்டு உடலுக்குள் ஜீவ அணுக்கள் இயங்குகின்றது. சூரியனின் இயக்கத் தொடரில் நாம் வாழ்ந்தாலும் நமது உயிரே சூரியனின் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றது.

நாம் எப்படி ஊருக்கு ஒரு துணை மின் நிலையம் வைத்துள்ளோமோ அதைப் போன்றே நமது உயிரும் அந்த  நிலை பெறுகின்றது. சூரியனின் துணை கொண்டு அந்த மின் அணுக்கதிர்கள் நம் உடலில் உள்ள மின் அணுக்களை இயக்குகின்றது.

இருப்பினும் பல உணர்வின் தன்மை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் கொண்டு மனித உடலில் விஷத்தினை வென்றவன் அகஸ்தியன்.

விஷத்தை வென்றிடும் ஆற்றல் கொண்டு உணர்வினை ஒளியாக்கும் திறன் பெற்று,ஒளியாக இருக்கும் அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி அருள் மணம் பெற்று ஒளியாக இருக்கும் உயிரைப் போலவே உயிரணுக்களை வளர்த்து துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

27  நட்சத்திரங்களும், கடும் விஷத்தன்மை கொண்டது. அதன் துகள்கள் பூமியில் பட்டால் வைரங்களாக விளைகின்றது. அந்த வைரத்தினைப் பொடி செய்து சாப்பிட்டால் மனிதனைக் கொன்றுவிடும், அவ்வளவு விஷம் கொண்டது.

ஆனால்  விஷத்தின் உணர்வினை ஒளியாகக் காண முடிகின்றது. வெளிச்சமாக அது தெரிகின்றது. விஷமே உலகத்தை இயக்குகின்றது.

இன்றைக்கும் சூரியன் இயங்குகிறது என்றால், விஷத்தின் தாக்குதலால்தான் வெப்பத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றது.

நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால்தான் துடிக்கும் தன்மை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இதைப் போன்று ஒவ்வொரு அணுக்களிலும் கலந்திருப்பதால்தான் இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளதை நாம் அறிதல் வேண்டும்

நமது ஆறாவது அறிவால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் எளிதில் பெறுவது என்றால் மிகவும் கடினம். குருவின் துணை இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.

நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் சக்தியைப் பெற முடிந்தது. நமது குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.

ஆகவேதான் உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.
1.நாம் ஒவ்வொரு நாளும்
2.உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது
3.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று  உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
1.உயிரின் துணை கொண்டு  துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது
2.குருநாதர் எனக்கு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது
3.நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

உங்களுக்குள் நீங்கள் உண்மையின் இயக்கங்களை உணர வேண்டும் என்பதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு இதை உபதேசிப்பது.

ஆகையினால் மனதினை ஒன்றாகக் குவித்துப் பழகுதல் வேண்டும்.

ஒரு பாலின் நறுமணங்கள் ஒன்றாக இருந்தால் ஒரே மணமாக இருக்கும். பாலில் ஒரு பக்கம் காரம் உப்பு போன்ற நிலைகள் இருந்தால் அது  காரத்தின் சுவையாக மாறும். பாலின் தரத்தின் சத்தைக்  காண முடியாமல் போய்விடும்.

நாம் எத்தனையோ கோடி  உடல்களில் இன்னலைச் சந்தித்தோம். ஒன்றுக்கு இரையானோம். நாமும் மற்றொன்றைத் துன்புறுத்தி உணவாக உட்கொண்டோம்.

இப்படிப் பல நரக வேதனைப்பட்டு தீமையான நிலைகளில் இருந்து மீளும் வண்ணம்  மனித உடல் பெற்றது நமது உயிர்.

இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனான  இந்த உடலுக்குப் பின்
1.உயிர் நம்மை உருவாக்கியது என்று
2.எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு
3.என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.

இந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது, அதைத் தடுக்கும் ஞானம்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை.

அதைப் பெறும் நிலையாகத்தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

ஆகையால், நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டுதான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது

1.நாம் இந்த உடலை  விட்டு  எந்த நிலையில் சென்றாலும்
2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் (சப்தரிஷி மண்டலம்)
3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில் நாம் இணைந்திடல் வேண்டும்.

அங்கே இணைந்து விட்டால் அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.

எத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது.., “இந்த மனித உடலில்தான்”.

ஆனால் நம்முடைய இந்த சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால் நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது.

நாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம்.

“கண்ணன்…” வெண்ணையைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான் – விளக்கம்

Image

krishna-janmashtami.jpg

“கண்ணன்…” வெண்ணையைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான் – விளக்கம்

நாம் பாலைத் தயிறாக்கிக் கடைந்து அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணையை நாம் எடுத்து அந்தச் சத்தை நாம் உணவாக உட்கொள்கின்றோம்.

கண்ணன் வெண்ணையைத் திருடி எல்லோருக்கும் கொடுக்கின்றான். கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு மாடு மிரண்டு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

1.அப்பொழுது அது சுவாசித்த உணர்வின் அணுவிற்குள் இருக்கக்கூடிய

2.“அந்த நுண்ணிய அலையை”

3.வெண்ணெயைத் திருடுகின்றான்.

அதை நம் கண்கள் கவர்ந்து அதனின் வலிமையை (வெண்ணையை) உணர்த்தி “மாடு மிரண்டு வருகிறது… நீ விலகிச் செல்” என்று கண்கள் நம்மை வழி நடத்துகின்றது.

உதாரணமாக இன்று ஒருவன் தான் சம்பாதித்து வீட்டைக் கட்டித் தன் வீட்டிற்குள் பணத்தை வைத்திருக்கிறான். ஆனால், மற்றொருவன் பணம் இருப்பதை அறிந்துணர்ந்து அதைக் கொள்ளையடிக்க வருகின்றான்.

அப்பொழுது கொள்ளையடிக்கக் கூடியவன் அந்த வீட்டை நோக்கி வரும் பொழுது, “அந்த வீட்டிற்குரியவன் எப்படி இருக்கிறான்?” என்று தன் நினைவில் எண்ணிப் பார்க்கிறான்.

அங்கு அந்த ஆள் இருப்பதைப் பார்த்தவுடனே…, “அந்த வீட்டிற்குள்… அந்தப் பணத்திற்குரியவன் இருக்கிறான்” என்று இந்தக் கண்ணனே உணர்த்துகின்றான்.

அதே சமயம் அவன் உடலிலே

1.அந்த வீட்டுக்காரர் இருக்கிறார் என்ற உணர்வில்

2.“அவன் மறைந்து நம்மைப் பிடிக்க வேண்டும்” என்று எண்ணுவான் என்பதை

3.“திருடன்” என்ற நிலையில் இவன் எண்ணுகின்றான்.

அந்த உணர்வின் சக்தியைத் திருடனுக்கு அந்தக் கண் தான் காட்டுகின்றது.

வீட்டுக்காரன் இருக்கிறான்.., நீ அந்தப் பக்கம் போகாதே என்கிற நிலையைத் திருடச் செல்பவனுக்குச் சொல்லி “நீ இந்தப் பக்கம் போ” என்று வழி காட்டுகின்றது.

1.ஆனால் அந்த வீட்டுக்காரனுக்கோ,

2.“திருடன் வருகிறான்.., அவனை எப்படிப் பிடிப்பது?” என்று

3.முக்கிய ஆலோசனையைக் கண்ணன் சொல்கின்றான்.

4.ஆக, அவன் எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் இருக்கக்கூடிய வெண்ணையை கண்ணன் இவனுக்கும் கொடுக்கின்றான்.

திருடப் போகக்கூடிய இந்த உணர்வின் சத்தை இந்தக் கண் திருடனுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையையே அங்கே வீட்டுக்குச் சொந்தக்காரனுக்கும் உணர்த்துகின்றது.

இந்த உணர்வின் சேர்க்கையிலே உடலுடன் பிணைந்த நம் வாழ்க்கைக்காக வேண்டி

1.நாம் எந்தெந்த உணர்வைச் செலுத்தி

2.கண்கள் வழியாக நம் உடலுக்குள் எதை இணைக்கின்றோமோ

3.அந்த உணர்வைச் சுவாசிக்கின்றோம்.

சுவாசித்து அந்த உணர்வின் அலையை நமக்குள் அணுக்களாகச் செலுத்தினால் அதை நாம் எண்ணும் பொழுது அதே உணர்வலைகள் கண்ணிலே பட்டவுடனே நம் குணத்தைப் பாதுகாக்கும்.

இதுவெல்லாம் வியாசகரால் கண்டுணரப்பட்டு காவியமாக உணர்த்தப்பட்டுள்ள பேருண்மைகள். அந்த ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

ஞானிகள் உணர்வுடன் காவியத்தைப் படித்தீர்கள் என்றால் அதில் உள்ள மூலங்களை அறிந்து “நாம் யார்?” என்ற நிலையில் நம்மை நாம் அறிய முடியும்.

நமக்குள் எது இயக்குகின்றது. எதை நமக்குள் இயக்கச் சக்தியாக மாற்றிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த உடலுக்குப் பின் என்ன என்பதை அறிந்து அந்த ஞானிகளுடன் ஒன்றிட முடியும்.

Image

Divine - Inner glow.jpg

அனைவரும் மகிழ்வதைக் கண்டு “நீ அருள் பேரானந்தப் படவேண்டும்.., உன்னில் காண்… உன்னில் நீ பார்… உன்னை நீ பார்…” என்றார் குருநாதர்

பிறர்படும் துயரங்களிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும் என்று நாம் நினைவாக்கப்படும்போது அந்த நினைவின் ஆற்றலே தீமைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் சக்தியாகும்.

உன்னில் வந்த தீமைகளை அகற்ற பல முறை உன்னைச் சோதித்தேன். தீமைகள் எவ்வாறு சாடுகின்றதென்றும் தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தையும் உன்னிலே பாய்ச்சுகின்றேன் என்றார் குருநாதர்.

இந்த உணர்வின் துணை கொண்டு நீ விண்ணின் ஆற்றலை எப்படிப் பருகுகின்றாய்? இந்த மண்ணுலகில் உனக்குள் சேர்ந்த தீமையை எவ்வாறு நீக்குகின்றாய்? என்ற உணர்வினை

1.“உன்னில் காண்”,

2.“உன்னில் நீ பார்”,

3.“உன்னை நீ பார்”

என்ற இந்த உணர்வினை குருநாதர் உபதேசித்து அந்த உணர்வின் வழிப்படி எமக்குள் பதிவாக்கி இந்தப் பேருண்மையை எமக்குள் வளர்க்கும் திறனைப் பெருக்கினார்.

அத்தகைய உணர்வின் ஆற்றலைத்தான் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.

இந்த உணர்வினை நீங்கள் எண்ணத்தால் வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற அருள் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்களை அறியாது வந்த இருளை நீக்கிடும் சக்தியை உங்கள் உயிரே உருவாக்குகின்றது.

நீங்கள் எண்ணியது எதுவோ அதன் வழிப்படி உங்கள் உயிர் அதை உருவாக்குகின்றது. நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ இந்தக் கண்கள் அதை வழி நடத்துகின்றது.

ஒருவன் தீமை செய்கின்றான் என்றால் அதனின் உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கிவிட்டால் தீமை செய்கின்றான் என்று உணர்கின்றோம். அதன் அணுவாகவே நமது உடலில் உருவாகிவிடுகின்றது.

ஆகவே அத்தகைய தீமை செய்யும் அணு நமக்குள் உருவாகி விட்டால் அதனின் உணவுக்காக அது உணர்ச்சிகளைத் தூண்டி அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்போது நம்மை அறியாமலேயே நாம் தீமை செய்வோராக ஆகி விடுகின்றோம். தீமையை செய்யும் சக்தியின் அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட

1.தீமைகளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை

2.நீங்கள் கேட்கும் பொழுதும் இதைக் கூர்ந்து கவனித்துப் படிக்கும் பொழுதும்,

3.அருள் ஞானிகளின் உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை பெறும்போது

4.அதை உங்களுடைய கண்கள் உற்றுப் பார்த்து உணர்வினை நுகரச் செய்து

5.உணர்வின் தன்மையை அணுவாக்கி  உங்கள் உடல்களில் நல்ல உணர்வின் அணுக்களைப் பெறச் செய்வதற்கே

குருநாதர் காட்டிய அருள் ஒளியை யாம் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் – அவர் கண்ட பேருண்மையையும் அகண்ட நிலையும் அவருக்குள் கண்டறிந்த உணர்வினை…,

1.நான் கண்ட உண்மையின் உணர்வை உனக்குள் உணர்ந்து கொள்

2.உன்னை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து நீ விடுபடு

3.அந்த உண்மையின் உணர்வை நீ உனக்குள் பெருக்கு

4.ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளில் இதைப் பெருக்கு

5.அதன் உணர்வினை இந்த  நாட்டிலே பெருக்கு

6.அதைக் கவர்ந்தோர் உணர்வுகளிலே இருள் நீங்கி மெய்ப் பொருள் காணும் சக்தி பெறட்டும் என்பதற்கே

7.“உன்னில் இதைப் பதிவு செய்கின்றேன்” என்று இதைச் சொன்னார்.

இவ்வாறு அவர் எமக்குள் பதிவு செய்ததை யாம் நினைவு கொண்டு உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றோம்.

அவர் சொன்ன உணர்வினை யாம் வெளிப்படுத்தும் பொழுது இந்த உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

இந்த உணர்வுகளை நீங்கள் அனவரும் திரும்பத் திரும்பக் கேட்டு உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

அப்படிப் பதிவாக்கும் பொழுது அன்று “வான்மீகி மகரிஷி” கண்ட உண்மைகளையும் அன்று “வியாசக பகவான்” கண்டுணர்ந்த உண்மைகளையும் இதற்கு முந்தி அன்று “துருவ மகரிஷி” கண்டுணர்ந்த உண்மைகளையும் நீங்கள் “தொடர் வரிசையில்” காணலாம்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தையும் நாம் பெற்றால் இருளை உருவாக்கும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஆறாவது அறிவை ஏழாவது நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனி பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்.

நாம் அடைய முடியுமென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி

1.உங்களுக்குள் பதிவாக்கி நீங்களும் அதை நினைவாக்கி

2.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உங்களுக்குள் பெருக்கும்போது

3.அதைக் கண்டு யாம் மகிழ்ச்சியடைந்து அதனை மீண்டும் எமக்குள் பெருக்கி

4.உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்ற ஆசையைக் கூட்டி

5.அருள் ஒளியை அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வினை வெளிப்படுத்தி

அந்த உணர்வைக் கண்டு ஒவ்வொருவரும் மகிழ்வதைக் கண்டு “அருள் பேரானந்தப் படவேண்டும்” என்று குருநாதர் காட்டினார்.

அகஸ்தியன் எப்படித் துருவ நட்சத்திரமானான்…?

lightning

அகஸ்தியன் எப்படித் துருவ நட்சத்திரமானான்…?

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் நம் பூமியின் துருவத்தின் ஆற்றலை அறிந்தான்.

அவன் செய்யும் அதிசயமான செயல்களைக் கண்டு அவனுடன் வாழ்ந்தவர்கள் “காட்டு ராஜா” என்றே அவனைக் கொண்டாடுகின்றார்கள்.

புவிக்குள் உருவாகும் தாவர இனங்களுக்கு உணவு எங்கிருந்து வருகிறது என்று உற்று நோக்குகின்றான். அவனுக்குள் விளைந்த உணர்வுகள் அவ்வாறு அவனைச் சிந்திக்கும்படி செய்கின்றது.

வானுலக ஆற்றல் நம் பூமிக்குள் துருவப் பகுதியின் வழியாக எப்படி வருகின்றது என்பதை அறிகின்றான்.

துருவத்தின் வழியாக வரும் உணர்வுகள் விஷத் தன்மையாக இருந்தாலும் இவன் நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் ஒளிக் கதிர்களை மாற்றுகின்றான்.

இன்றும் நாம் விண்ணிலே “மின்னல்களைப் பார்க்கலாம்”.

அதாவது நட்சத்திரங்கள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் எதிர் நிலையானால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது சுக்குநூறாகி அலைகள் மாறும்.

அலைகளாக மாறி வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வரும் பொழுது அதனுடைய கலவைகளில் பல வித்தியாசமாக வரும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை “மின்னலைப் பாருடா மின்னலைப் பாருடா..,” என்று சொல்வார்.

எனக்குப் பயமாக இருக்கிறது. என் கண்கள் குருடாகிவிடும் என்று சொல்வேன். எனக்கும் அவருக்கும் இதனால் தர்க்கமாகும்.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மைகளை அடக்குகின்றது. அதே சமயத்தில் அந்த மின்னல்கள் கடும் விஷத் தன்மை கொண்டது

1.ஆனால், அகஸ்தியன் அவனுக்குள் இதை அடக்கிடும் உணர்வை எடுத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவன்.
2.அகஸ்தியன் மின்னலின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து எப்படி அடக்கினான்?
3.மின்னல் எப்படி அவனுக்குள் அடங்குகிறது? என்பதனை அங்கே உணர்த்துகின்றார் குருநாதர்.

அந்த நட்சத்திரங்களிலிருந்து வருவது எதற்குள் இந்தக் கலவைகள் சேருகின்றதோ அதற்குத்தக்கவாறு அந்த உணர்ச்சிகளை ஊட்டி அது செயல்படுத்தும் சக்தி பெற்றது என்று காட்டுகின்றார்.

குருநாதர் என்னை அந்த மின்னலையும் பார்க்கச் சொல்லி அகஸ்தியன் எப்படி விஷத்தை அடக்கினான் அந்த மின்னணுவின் தன்மையைத் தனக்குள் ஒளியாக்கினான் என்பதையும் காட்டினார்.

செடியின் மேல் மின்னல் தாக்கினால் செடி கருகிவிடுகின்றது. அதிலுள்ள சத்தை எடுத்துவிடுகின்றது. இதே போல
1.விஷத்தை ஒடுக்கிடும் உணர்வு வரப்படும் பொழுது
2.கதிரியக்கப்பொறிகளாக வருவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும் இதை ஒடுக்கி
3.அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றுகின்றான்.
4.இதையெல்லாம் குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

அப்படி மாற்றியமைத்த அவன் உடலில் உருவானதுதான் அகண்ட அண்டத்தில் வரும் எதையுமே மாற்றிடும் சந்தர்ப்பம் வருகின்றது.

அகஸ்தியன் துருவன் என்று வரப்படும் பொழுது 27 நட்சத்திரங்களிலிருந்து வரும் பல கோடி மின்னல்களையும் பார்க்கின்றான்.

அதையெல்லாம் அடக்கி “ஒளியின் அணுவாகத் தனக்குள் மாற்றும் நிலை” பெறுகின்றான்.

அகஸ்தியன் “பல கோடி மின்னல்களைக் கவர்ந்து” அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றினான்…, துருவ நட்சத்திரமானான்

அகஸ்தியன் எப்படி ஒளியாக மாற்றினான் என்ற அந்த உணர்வின் சத்தை உங்களுக்கு ஊட்டுகின்றோம். அதை நீங்கள் பெற்றால் உங்கள் வாழ்க்கையிலும் அவன் நஞ்சை மாற்றி ஒளியாக ஆனது போன்று மாற்றிடும் ஆற்றல் பெறுவீர்கள்.

அகஸ்தியன் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் இணைந்து வாழலாம்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளை உங்களுக்குள் தெளிவாக்குவதற்கே இதைச் சொல்கின்றேன்.

 

“அருட் பெருஞ்சோதி நீ தனிப்பெருங்கருணை” – நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது, இந்த உடலிலேயே ஒளியாக வேண்டும்

Image

Ramalinga adigal - vallalar.jpg

“அருட் பெருஞ்சோதி நீ தனிப்பெருங்கருணை” – நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது, இந்த உடலிலேயே “ஒளியாக வேண்டும்”

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் வரக்கூடிய துயரங்களையும் சங்கடங்களையும் நமக்குள் வராதபடி ஒவ்வொரு நிலைகளிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டே வந்தால் இது விஷ்ணு தனுசாகின்றது”.

1.விஷமென்ற நிலைகள் சிவ தனுசு தாக்கிவிட்டால் அடுத்த உடலைப் பெறுகின்றோம்.

2.அருள் ஒளி என்ற உணர்வை எடுத்தால் இன்னொரு உடல் பெறுவதில்லை.

3.உயிருடன் சேர்த்து உணர்வின் தன்மை தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெறுகின்றது,

4.அதுதான் விஷ்ணு தனுசு.

சூரியன் அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழிவதில்லை. அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும் அழியாது.

இந்தப் பிரபஞ்சம் ஏகமாக ஒளியின் சரீரமாக மாற எத்தனையோ கோடி ஆண்டுகளாகும். ஆனால், இப்பொழுது மனிதனாகி ஒளியாகின்றது.

முதலில் இருண்ட உலகமாக இருந்தது. அது கோள்களை உருவாக்கி மனிதனானபின் இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அருள் ஒளி என்ற நிலை அடைகின்றது.

அது என்றும் ஏகாந்த நிலை.., “பெருவீடு பெரு நிலை” நாம் வளர்ந்து கொண்டே போகலாம்.

கூட்டுத் தியானங்களில் வெளிப்படுத்தும் உணர்வுகளெல்லாம் இந்த பூமி முழுவதும் படருகின்றது. அதே சமயத்தில் இந்த உபதேச உணர்வுகளைப் படிப்போர் அவர்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் மீண்டும் இதை எண்ணும்போது அந்த அருள் உணர்வுகளும் படர்கின்றது.

1.இத்தகைய அருள் உணர்வுகள் ஒவ்வொரு நாளும் கூடக் கூட

2.மனிதர்கள் வெறித்தனமாகவும், சங்கடமான நிலைகளில் வாழ்வதும் குறையும்.

3.அதே சமயம், துருவ நட்சத்திரம் நம்மை ஒளி உடல் பெறச் செய்யும்.

நம் வாழ்க்கையில் என்னதான் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்தாலும், நம்முடன் வரப்போவதில்லை. ஆகவே, அருள் உணர்வுடன் பிறவியில்லா நிலை அடைவதுதான் கடைசி நிலை.

அந்த அகஸ்தியன் வழியில் வந்தவர்கள் அநேகம் பேர்கள் உண்டு. இதைத்தான் அன்று இராமலிங்க அடிகள் தெளிவாகப் பாடியுள்ளார்.

1.நான் இன்னொரு பிறவிக்குப் போகக்கூடாது.

2.இந்த உடலிலேயே ஒளியாக வேண்டும்.

3.“அருட் பெருஞ்சோதி, நீ தனிப்பெருங்கருணை” நீ உயிராக இருக்கின்றாய்,

4.என் உணர்வுகள் அனைத்தையுமே ஒளியாக மாற்று என்று பாடியுள்ளார்.

நம் உயிர் அருட்பெருஞ்சோதியாகிறது. நீ தனிப் பெருங்கருணையாக இருக்கின்றாய்.

நீ ஒளியாக இருப்பது போல் என் எண்ணங்களெல்லாம் ஒளியாக வேண்டும்.

1.பிறருடைய தீமைகள் எனக்குள் வரக்கூடாது.

2.பிறருக்கு நல்லது செய்யக் கூடிய உணர்வே எனக்குள் வரவேண்டும்.

3.அந்த “அருட்பிரசாதம்..,” இல்லை… என்று சொல்லாதபடி

4.என்றுமே பசியை ஆற்றக் கூடியநிலை (சாப்பாட்டுப் பசி அல்ல) அருட்பசி மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.

5.இருளிலிருந்து விடுபட்டுப் பெரும் ஜோதியாக பேரொளியாக மக்கள் அனைவரும் ஏகாந்த நிலை பெறவேண்டும்.

6.(அதை) யாருக்கும் நான் இல்லை என்று சொல்லக் கூடாது.

7.எல்லோருக்கும் அந்த அருள் சக்திகளை நான் கிடைக்கச் செய்யவேண்டும் என்றுதான் அவர் பாடல்களில் பாடியுள்ளார்.

யாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்தால் “மகரிஷிகள் வாழும் எல்லைக்கே” அது அழைத்துச் செல்லும் – நீங்கள் ஞானியாக ஆவீர்கள்

Meditation-Transparent.png

யாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்தால் “மகரிஷிகள் வாழும் எல்லைக்கே” அது அழைத்துச் செல்லும் – நீங்கள் ஞானியாக ஆவீர்கள்

உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை மறைத்திருக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.

இந்த விஞ்ஞான உலகில் இனி வரும் பெரும் தீமைகளிலிருந்து விடுபடவேண்டும்.

குருநாதர் எமக்குக் கற்றுக் கொடுத்த நிலைகளை எல்லாம் என்னுடன் வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருந்தால் என்னாகும்?

எனக்குள் மறைந்துவிடும்.

ஆனால், உங்களுக்குள் இதை உணர்த்தப்படும் பொழுது உங்களுடைய பார்வையால் சொல்லால் பேச்சால் மூச்சால் பலருடைய தீமைகளை மீட்டிடும் சக்தி உங்களுக்குள்ளும் வளர வேண்டும் என்ற “ஆசையில் தான்” சொல்கிறேன்.

சிந்தனையை மறைக்கச் செய்யும் நிலைகளை மாற்றியமைத்துத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வாக அந்த ஞானத்தின் வழிகளில் ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்.

நாம் நல்ல குணம் கொண்டு இருந்தாலும் நம் சந்தர்ப்பம் ஒரு அச்சுறுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நல்ல குணத்துடன் சேர்ந்து அது பதிந்து விடுகின்றது.

அந்த அச்சுறும் உணர்வுகள் நமக்குள் விளைந்து விட்டால் நல்ல குணங்களைக் காக்கும் செயலை இழந்து விடுகின்றது. அந்த அச்சுறுத்தும் உணர்வின் தன்மையை மாற்றிடும் உணர்வைச் சொல்லாக இங்கே உபதேசிக்கின்றேன்

சொல்லாகச் சொல்கிறேன் என்றால் அந்த அருள் ஞானிகள் நுகர்ந்த அந்த எல்லையில் என்னுடைய நினைவாற்றல் சென்றது. அதை நான் பெற முடிந்தது. பெற்று அதை வளர்த்துக் கொண்டேன்.

1.யாம் பெற்ற நிலையில் அந்த ஞானிகள் பெற்றதை யாம் இங்கே நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.உங்கள் நினைவாற்றல் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அந்த எல்லைகளுக்கே சென்று
3.அங்கே உருவான அந்த அருளாற்றல்களை நீங்களும் நுகர முடியும்.

உதாரணமாக ரோட்டில் இன்ன இடத்தில் ஆக்சிடென்ட் ஆனது என்று கேள்விப்பட்ட உடனே “ஆ…” என்று பதிவாகி விடுகின்றது. பின் அதை யாராவது சொன்னால் மீண்டும் நினைவு வந்து அந்த இடமே தெரிய (படம் போல்) ஆரம்பித்துவிடும். இதைப் போல
1.குருநாதர் கொடுத்த அந்த அருள் வழியில் யாம் உபதேசிப்பதை
2.நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுதெல்லாம்
3.அவர் கண்டுணர்ந்த பல தீமைகளை வென்ற அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
4.அப்பொழுது உங்களுக்குள் சித்திரை – சிறு திரையாக நல்லதை மறைத்து கொண்டிருக்கும்
5.அந்த நல்லதை அறிய விடாது செய்யும் நிலைகளை மாற்றி
6.உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வின் அணுவாக மாற்றிடல் வேண்டும் என்பதற்கே இதை நினைவுபடுத்துகின்றேன்.

பள்ளியில் படித்த பின் படித்தை நினைவு கொண்டார்களா என்பதை தேர்வில் பரீட்சித்துப் பார்க்கின்றனர்.

படித்தது நினைவு வந்தால் தேர்வில் எழுதிவிடுகின்றார்கள். நினைவுக்கு வந்தால் சிந்திக்கும் தன்மை வருகின்றது. சிந்தித்துச் செயல்படும் அந்தச் செயலாக்கத்தின் படி தேர்வில் தேர்ச்சி பெறுகின்றார்கள்.

அதைப் போன்று தான் யாம் உபதேசிப்பதை நினைவுக்குக் கொண்டு வந்து தீமைகளை எப்படி மாற்றுவது என்ற சிந்தனை கொண்டால் சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானம் உங்களுக்குள் வருகின்றது.

அந்த ஞானத்தால் உங்கள் தீமைகளை எளிதில் போக்கிக் கொள்ள முடியும். ஆகவே
1.தீமையை நீக்கிடும் அந்த அருள் சக்திகளை நீங்கள் பெறவேண்டும்
2.உங்கள் உணர்வுகள் உங்கள் சொல்லைக் கேட்போருக்கும் ஞானத்தை ஊட்டி
3.அவர்களுக்குள் தீமைகளை மறைத்திருக்கும் சிறு திரையை அவர்களும் நீக்கி
4.நீங்கள் பெற்ற அருள் உணர்வை அவர்களும் பெற்று அவர்களும் தீமைகளை நீக்க வேண்டும்.
5.நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும் என்பற்குத்தான் உங்களுக்குள் இதைத் தெளிவாக்குகின்றேன்.

கருவித்தை மூலம் கிளி எலி மாடு ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாம் மந்திர ஒலிகளே…!

HOROSCOPE.jpg

கருவித்தை மூலம் கிளி எலி மாடு ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாம் மந்திர ஒலிகளே…!

விஞ்ஞான அறிவு வருவதற்கு முன் மந்திர ஒலிகளே அதிகமாக இருந்தது. (இன்றும் உள்ளது).

மந்திர ஒலிகளின் உணர்வின் தன்மை கொண்டுதான் உணர்வின் எண்ணங்கள் எப்படி? என்று நூற்றுக்கணக்கில் அவர்கள் ஓதுவார்கள்.

அப்படித் திரும்பத் திரும்ப ஓதும் போது இந்த பூமியைப் பிளந்து (உணர்வலைகள்) அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மையை தனக்குள் விளையவைத்து விளையவைத்து இந்த உணர்வால் தனக்குள் அறிந்திடும் உணர்வுகள் வருகின்றது.

ஜோதிடம் சொல்வதும் நாடி சாஸ்திரங்கள் எழுதுவதும்  இவையெல்லாம்

1.இவன் கற்பித்த உணர்வும் இதனுடன் இணைத்துக் கொண்ட உணர்வும் எதுவோ
2.எவர் பதிவு செய்து கொண்டாரோ அந்தப் பதிவு செய்தோர் கொண்ட உணர்வு இங்கே இயக்குகின்றது.
3.அதிலே நன்மை என்ற நிலைகள் வராது
4.தீமை என்ற உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டது. தீமையின் நினைவாற்றலைத்தான் கூட்டும்.
5.தீமை செய்யும் உணர்வே தான் வருமே தவிர ஞானிகள் தீமையைப் பிளந்த உணர்வுகள் இங்கே சிறிதளவும் வராது.

நீங்கள் எண்ணுகின்ற நாடி சாஸ்திரமானாலும் சரி சாஸ்திர விதிப்படி ஜாதங்கள் குறித்தாலும் சரி இப்படி உருவாக்கப்பட்ட நிலைதான்.

இயற்கையில் ஒரு மனிதனுக்கு ஜாதகம் இல்லை. ஜாதகம் கணிப்பது “மனிதன் எண்ணத்தில்தான்”.

இவர்கள் சொன்னது மாதிரி
1.எதை எதையோ கூட்டிக் கழித்து
2.எந்த உணர்வின் எண்ணங்களைப் பதிவு செய்தார்களோ
3.அந்தப் பதிவின் நிலைகளை நாம் “தலைவிதியாக” வைத்து
4.அதனை மீண்டும் “விதியாக” மாற்றி அதன் வழிகளிலே தான் நாம் வருகின்றோம்.

நமக்குள் பழக்கப்படுத்திவிட்டால் நீங்கள் ஆயிரம் தான் சொல்லுங்கள். மீண்டும் ஜாதகத்தைத் தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா? கெட்ட நேரம் வருகின்றதா? என்றுதான் தேடிச் செல்ல முடியும்.

நேரத்தை உங்களால் மாற்ற முடியாது. இந்த உடலுக்கு நல்ல நேரம் வேண்டும் என்று தேடி அலைவீர்கள். பதிந்த உணர்வுகளில் ஆசை ஓங்கிக்கொண்டு இருக்கும்.

அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக்கொண்டுதான் இருக்கும். தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும். பின் அதனின் நிலைகள் மனித உருவைச் சீர் குலையச்செய்யும் நிலைதான் வரும்.

1.ஒருவருக்கு மிகவும் உடல் நிலை சீர்கெட்டது என்றால் நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா…?
2.விபத்து நடந்த இடத்தில் அடிபட்டவர்களை நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா…?
3.மருத்துவமனைக்குச் சென்றபின் நல்ல நேரம் பார்த்து அந்த நல்ல நேரத்தில் தான் நோயாளியையும் அடிபட்டவரையும் மருத்துவர் பார்க்கின்றாரா…?

நமக்குப் பசிக்கும்பொழுது உணவை உட்கொள்கின்றோம். உடலிலிருந்து வெளிப்படும் கழிவுகளையும் உடனே கழிக்கின்றோம். இதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்கின்றோமா…?

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆகவே, நாம் எதை நமக்குள் பதிவாக்கியிருக்கின்றோமோ அதுதான் இயக்குகின்றது.

அதே மாதிரி எலி ஜோதிடம் கிளி ஜோதிடம் சில பேர் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் மனித உடலிலிருந்து எடுத்துக் கொண்ட மந்திர ஒலி எடுத்து கரு எடுத்து அதற்குக் கொடுப்பார்கள்.

அந்தக் கருவைக் கொடுத்தவுடன் எலியோ கிளியோ இவன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ஒரு நெல்லைக் கொடுத்து இது பண்ணியவுடனே என்ன செய்வான்? தன் விரலைக் காட்டி அதைக் கண்ணிலே பார்ப்பார்கள்.

1.அந்தக் கிளி இவனை நேராகப் பார்க்கும்.
2.விரலை அசைத்தவுடனே இங்கே பார்க்கும்.
3.பார்த்தவுடனே அந்த சீட்டை விட்டுவிட்டு அடுத்த சீட்டை எடுக்கும்.
4.எடுத்தவுடனே அதைப் படித்துக் காட்டுவார்கள்.

இதே மாதிரி எலியை வைத்தும் சீட்டை எடுக்கச் செய்வார்கள். அவர்கள் கண்ணில் பார்ப்பார்கள். அதே மாதிரி உணர்வுகள் வேலை நடக்கும்.

(நாம் அவர்கள் கண்ணிலேயும் கை விரலிலேயும் இதைப் போல எத்தனையோ நிலைகளில் செய்வதை நாம் கவனிக்க மாட்டோம். அது நமக்குத் தெரியவும் செய்யாது)

இது எல்லாம் உலகம் முழுவதற்கும் மாந்திரீக நிலைகளில் மக்களை ஏமாற்றுகின்றார்கள். இதிலிருந்தெல்லாம் நாம் மாறவேண்டுமா இல்லையா?

ஆக மொத்தம் நம்மை நாம் நம்பாமல் யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று தான் எண்ணிக் கொண்டுள்ளோம்.

அன்று அரசர்கள் காட்டிய வழியில் சரணாகதி என்ற தத்துவத்தில் “எல்லாம் அவன் செயல்” என்று சொல்லி சாங்கிய சாஸ்திரங்களைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.

நம் எண்ணத்தால் வந்த தீமைகளை நம் எண்ணத்தாலேயே எடுத்துப் போக்க முடியும். “அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் உண்டு” என்று ஞானிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

ஆகவே, உங்களுக்கு வரும் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட முடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும். “உங்களால் முடியும்”

ஆலயத்தில் நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டிய ஆற்றல்களை 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கரர் உணர்த்தியுள்ளார்

 

Adi shankara.jpg

ஆலயத்தில் நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டிய ஆற்றல்களை 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கரர் உணர்த்தியுள்ளார்

 

சூரியன் இந்த உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உணர்வையும் தனக்குள் கவர்ந்து ஒவ்வொன்றுக்கும் அதன் மணத்தால் உணர்வால் அதனை வளர்த்து வருகின்றது.

அதைப் போல நாமும் அந்தத் தெளிவு பெறவேண்டும் என்பதற்குத்தான் அன்று ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

1.சூட்சமத்தில் இருக்கும் சக்தியை
2.ஆலயத்தில் அந்த உருவத்தைக் காட்டும் பொழுது
3.காவியமாகப் படைத்ததை எண்ணத்தில் பதிவு செய்து
4.நம் எண்ணம் கொண்டு தான் எடுக்க வேண்டும் என்று
5.அன்று 2000 ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர் உணர்த்தினார்.

அந்த ஆலயத்திற்குச் சென்று “எல்லோரும் நலம் பெறவேண்டும்” என்று நாம் எண்ணினால் “எல்லோரையும் நலமாக்கும் சக்தியாக…, நமக்குள் உருவாகிறது” என்று தான் ஆதிசங்கரர் சொன்னார்.

அவருக்குப் பின் வந்த சீடர்கள் என்ன செய்தார்கள்? (யாரையும் நான் குறை கூறவில்லை).

குருவை மறந்தார்கள். மதத்தைக் காக்க எண்ணினார்கள். மடாதிபதியானார்கள்.

அதன் வழிகளில் தான் இன்றும் தெய்வத்திற்கு அபிஷேகத்தைச் செய்து ஆராதனை செய்துவிட்டு யாகங்களைச் செய்துவிட்டு அப்படிச் செய்தால் “அதற்காக மகிழ்ந்து தெய்வம் நமக்குச் செய்யும்” என்ற உணர்வை நமக்குள் பரப்பிவிட்டார்கள்.

ஆதிசங்கரர் உணர்த்திய மூலம் காலத்தால் மறைந்து போய்விட்டது. மெய்ப் பொருளை நாம் பெறும் தகுதியும் இழந்துவிட்டோம்.

1.உயிரைக் கடவுளாக்கி
2.நம் உடலை ஆலயமாக்கி
3.உணர்வைத் தெய்வமாக்கி அதுவே இறைவனாக்கி
4.அதன் வழியில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும்? என்று தான் நம் சாஸ்திர நிலைகள் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஞானிகள் காட்டிய வழிப்படி நாம் ஆலயத்தில் வழிப்படுவோம். அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ சக்திகளை நாம் பெறுவோம். நமக்குள் தெய்வ குணங்களை வளர்ப்போம். உலகைக் காக்கும் எண்ணங்களை நமக்குள் வளர்ப்போம்.

நம் மூச்சும் பேச்சும் “உலக நன்மை பயக்கும் சக்தியாக” வளரட்டும்.

உலக மக்கள் அனைவரும் அவர்கள் உயிரைக் கடவுளாக மதித்து மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று நாம் ஏகோபித்த நிலையில் இந்த உணர்வைப் பரப்புவோம்.

ஆலயங்களுக்குச் சென்று உலக மக்கள் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிப்போம் பிரார்த்திப்போம் தவமிருப்போம்.

ஆதிசங்கரர் சொன்னது போன்று சூட்சமத்தில் இருக்கும் ஆற்றல்மிக்க அருள் சக்திகளை எல்லோரும் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் தெளிந்து வாழ்ந்திட எண்ணுவோம்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை ஒளியின் சுடராக ஆக்குவது போல நாமும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக ஆக்கிடுவோம்.

உலக மக்கள் அனைவரும் பேரருள் பெற்று பேரொளியாகி மரணமில்லாப் பெருவாழ்வாக அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்று வேண்டுவோம்.

ஆதிசங்கரரின் அருளாற்றல் மிக்க சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.