அகஸ்தியன் சிறு வயதில் செய்த ஆச்சரியமான செயல்கள்

 

Agastiyar

அகஸ்தியன் சிறு வயதில் செய்த ஆச்சரியமான செயல்கள் 

 1. அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற அதிசய சக்திகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் புலஸ்தியர் குகைகளில் வாழ்ந்து வரும் காலத்தில் புலஸ்தியரின் மனைவி கர்ப்பமாகின்றாள்.

விஷ முறிவு வேரும் மின்னலின் வீரியத்தைத் தணிக்கும் வேர்களும் கர்ப்பிணியின் கையில் கட்டி இருப்பதால் இவைகளில் இருந்து வெளிப்படும் மணத்தை அந்தக் கர்ப்பிணியும் சுவாசிக்க நேர்கின்றது.

குகையில் நோய்களைப் போக்கிடும் மூலிகையில் இருந்து வரும் மணத்தையும், கர்ப்பிணி நுகரும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

புலஸ்தியர் மனைவி கழுத்திலும் கைகளிலும் இடுப்பிலும் கட்டியிருக்கும் மின்னலின் கதிரியக்கங்களைத் தணியச் செய்யும் வேரும் விஷத்தை முறித்திடும் வேரும் புலி மிரட்டி, கரடி மிரட்டி, யானை மிரட்டி, நரி மிரட்டி, ஆகிய வேர்களிலிருந்து வெளிப்படும் மணத்தின் உணர்வுகளை கர்ப்பிணி சுவாசிக்கும் நிலை ஏற்படுகின்றது.

புலஸ்தியர் கர்ப்பிணியான தன் மனைவிக்குப் பல விதமான விஷங்களை முறித்திடும் வேர்களைக் கல்லில் உரசி உரசிய சாற்றை சிறு துளி ஆகாரத்துடன் கலந்து கொடுத்து வந்தார்.

மின்னலின் அதிர்வினை அடக்கிடும் வேர்களைக் கல்லில் உரசி சாறாகத் தன் மனைவிக்கு ஆகாரத்துடன் துளி கலந்து கொடுத்து வந்தார்.

இதைப் போன்றே பல விதமான விஷ முறிவு மூலிகைகளை நோய்களைக்  குணப்படுத்தும் மூலிகைகளை கர்ப்பிணியான தன் மனைவிக்குக் கொடுத்து வந்தார் புலஸ்தியர்.

இவ்வாறு கர்ப்பிணி நுகர்ந்த மணங்களின் உணர்வுகள், இரத்தத்துடன் கலந்துவிடுவதினால் தாயின் இரத்தத்தில் கருவில் வளரும் சிசுவின் உடலிலும்
1.விஷத்தை முறித்திடும் சக்தியும்
2.நோய்களை நீக்கிடும் சக்தியும்
3.மின்னலின் வீரியத்தைத் தணித்திடும் சக்தியும் கருவில் வளரும் சிசு பெறுகின்றது.

இது போன்று கருவில் வளரும் சிசு பத்து மாதங்களும் சக்தி பெற்று கருவில் வளர்கின்றது என்று குருதேவர் விளக்கமாகச் சொல்லி வந்தார்.

இவ்வாறு கருவில் வளர்ந்து வரும் சிசு 10 மாதங்களும் மின்னலின் கதிரியக்கங்களைத் தணியச் செய்யும் சக்தியையும் விஷத்தை முறித்திடும் சக்தியையும் மிருகங்களைப் பணிய செய்யும் சக்தியையும் பெற்று தாய் கருவில் வளர்ந்த குழந்தையாகப் பிறக்கின்றது.

இவ்வாறு பிறந்த குழந்தையின் அருகில் ஈயோ, எறும்புகளோ, விஷப் பூச்சிகளோ வராது விலகிச் சென்றுவிடுகின்றன.

இதைப் பார்த்தார் புலஸ்தியர். ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். புலஸ்தியரின் மனைவியும், குழந்தையைப் பார்த்து அதிசயப்படுகின்றார்.

குழந்தையின் வளர்ச்சியில் மற்ற குழந்தைகளைக் காட்டிலும், பார்வையிலும் செயலிலும், வித்தியாசமாகக் காணப்படுவதை புலஸ்தியரும் அவர் மனைவியும் உணர்கின்றனர்.

புலஸ்தியரும் அவர் மனைவியும் இந்தக் குழந்தைக்கு “அகஸ்தியன்” என்று பெயர் வைத்தனர் என்று விளக்கமாகக் கூறிக் காட்சியாகக் காண்பித்தார் குருநாதர்.

 1. அகஸ்தியன் சிறு வயதில் செய்த செயல்கள்

அகஸ்தியன் குழந்தையாக வளரும் பருவத்தில் பயமின்றி பூச்சிகள் தேனீ போன்ற விஷ ஜந்துகளைப் பிடித்து விளையாடுவான். ஆனால், அகஸ்தியனை விஷப் பூச்சிகளும் தேள்களும் ஒன்றும் செய்யவில்லை.

இவ்வாறு குழந்தை வளர்ந்து வரும் பருவத்தில் மூன்று வயதில் காணாமல் போகிறான். அவனைத் தேடிச் சென்று காடுகள், நீர் இருக்கும் இடங்கள் எல்லாம் தேடிப் பார்க்கின்றார்கள். அங்கும் காணவில்லை.

கடைசியில் குழந்தையைக் கண்டுபிடித்தார்கள்.

ஓநாய் இருக்கும் இடத்தில் ஓநாயைப் பிடிக்கப் போகின்றான். ஆனால் ஓநாய்  விலகிச் சென்று விடுகிறது. இப்படி அவன் செயல்களைப் பயத்துடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கின்றனர்.

புலஸ்தியரும் அவரது மனைவியும் இந்த நிலையில் அவர்கள் குழந்தையைக் கூட்டி வந்துவிடுகிறார்கள். இதை எனக்குக் காட்சியாக, அதாவது படமாகக் காணும்படி செய்கின்றார் குருதேவர்.

புலஸ்தியர் வாழ்ந்த காலங்களில், அவர்கள் பேசிய பேச்சும் அவர்களின் உடல்களில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளும் இன்றும் நம் பூமியில் பரவி உள்ளது.

1.இந்த உணர்வுகளைத்தான் உன்னை நுகரும்படிச் செய்து
2.அன்று நடந்த நிகழ்ச்சிகளை காட்சியாகக் காணும்படிச் செய்தது என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

தினமும் குழந்தை அகஸ்தியன் வளரும் பருவத்தில் அற்புதச் செயல்களைச் செய்து கொண்டு இருப்பான். மலை வாழ் மக்களுக்கு மூலிகைகளைப் பறித்து வந்து கொடுத்து நோய்களைக் குணப்படுத்தி விடுவான்.

அவன் காட்டுக்குள் போகும்போது ஏதாவது விஷப் பாம்பைப் பிடித்து வருவான். காட்டுக்குள் போகும்போது தனியாகப் போவான்.

விஷப் பாம்பை வைத்து குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவான். பின் அந்தப் பாம்பை காட்டில் விட்டு விடுவான் என்று குருதேவர் விளக்கமாகச் சொன்னார்.

அதை எம்மைக் காட்சியாகவும் காணச் செய்தார்.

இது போன்று அவன் நடந்து செல்லும் பருவத்தில் பாம்பு இனங்களை ஒடிச் சென்று பிடித்து விளையாடுவான். பயமின்றி காட்டுக்குள் சென்று விடுவான்.

அகஸ்தியனைக் கண்டதும், புலி, கரடி, நரிகள், ஓநாய்கள், யானைகள் முதற்கொண்டு விலகிச் சென்று விடுகின்றன.

அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் நிலையில் பசி எடுத்தால் அவன் கைகளுக்கு எட்டும் மூலிகைகளைப் பறித்துத் தின்று பசியைப் போக்கிக் கொள்வான்.

பல மூலிகைகளை நுகர்ந்தறிந்து பறித்து வருவான். அக்கால மக்களின் நோய்களை நுகர்ந்தறிந்து அதற்குண்டான மூலிகைகளைக் கொடுத்து நோய்களைக் குணப்படுத்தி விடுவான் அகஸ்தியன்

இதையெல்லாம் பார்த்த புலஸ்தியரும், அவரது மனைவியும், ஆச்சரியமும் அதிசயமும் படுகின்றார்கள். அவர்களது இன மக்களும், அகஸ்தியனின் செயலைக் கண்டு தெய்வீகக் குழந்தை என்று மதித்து வணங்கிச் செல்வார்கள்.

நான்கு வயது குழந்தைப் பருவத்தில் ஒரு செடியிலிருந்து வெளிப்படும் மணத்தை நுகர்ந்து அறிகின்றான். மாறுப்பட்ட செடியின் மணத்தையும் நுகர்ந்து அறிகின்றான்.

1.இரு மணத்தின் உணர்வுகள் சேர்ந்து
2.தன் உடலின் உணர்ச்சிகள் தன்னை எப்படி இயக்குகிறது என்று
3.தன் அகத்தின் இயக்கத்தை அறிவாக உணர்கின்றான்
4.அகஸ்தியன் வானை நோக்கிப் பார்த்து மேகங்களைக் கூடும்படிச் செய்து மழை பெய்யும்படி செய்வான்.

இவ்வாறு 5 வயது சிறுவனாக இருக்கும்போது இளமையில் முதுமையானவர்கள் செய்யும் செயலைச் செய்து கொண்டிருப்பான் அகஸ்தியன்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நாம் தியானிப்போம்.

 

நமக்கு மூலாதாரம் எது..? காலமறிந்து கருத்தறிந்து செயல்படுவது என்றால் என்ன…?

 

kundalini.jpg

நமக்கு மூலாதாரம் எது? காலமறிந்து கருத்தறிந்து செயல்படுவது என்றால் என்ன?

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று அரச சபையில் அன்று கவி பாடினார்கள்.

நாம் என்ன செய்கின்றோம்?

“மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை…,” என்று சொல்லிக் கொண்டு அந்தப் பாடலைப் பாடுகின்றோம். அதனின் உட் கருத்தை அறிந்தோமா…!

மூலாதாரம் என்றால் நம் உயிர். நாம் எண்ணும் எண்ணங்கள் அது நமக்குள் மோதும் பொழுது அதாவது நம் உயிரிலே மோதுகின்றது.

அப்பொழுது

1.உயிரிலே மூண்டெழும் கனலை

2.எந்தக் காரணத்தால் நாம் பார்த்தோமோ

3.அந்த உணர்வின் தன்மையை இயக்குகின்றது.

உயிரிலே பட்டதனால் தான் அது இயக்குகின்றது. படவில்லை என்றால் அது இயக்காது.

எத்தகைய நிலையாக இருந்தாலும் சரி உயிரிலே பட்டால் தான் “ஓ…, ம்…,” பிரணவமாகும்.., ஜீவன் பெறும்.

அப்பொழுது “ஓ…ம்…” அந்த வெப்பமாகி கனல் எழும்புகின்றது. நாம் நுகர்ந்த சுவாசத்தை உயிர் உணர்ச்சிகளாக எழுப்புகின்றது.

ஒரு மத்தாப்பூவை நாம் கொளுத்தினால் அது எப்படிப் பல பொறிகளைக் கிளப்புகின்றதோ அதைப் போல நம் உயிர் நுகர்ந்ததை உணர்ச்சிகளாக மாற்றுகின்றது.

1.அந்த உணர்ச்சிகள் எதுவோ

2.அது நிச்சயம் நம்மை “இயக்கும்”

3.நமக்குள் “உண்மையை உணர்த்தும்” என்று காட்டுகின்றார்கள்.

அதைத்தான் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலத்தால் அறிந்து கருத்தறியும் நிலைக்கு வரவேண்டும் என்று ஞானிகள் உணர்த்துகின்றனர்.

அதை நாம் விட்டுவிட்டோம்.

பாடலைப் பாடுகின்றோம். கருத்தை விட்டுவிட்டோம். மூலத்தையே விட்டுவிட்டோம்.

ஆக விநாயகர் அகவலைப் பாடிவிட்டுப் போகின்றோமே தவிர கருத்தினை மனதில் எண்ணிப் பார்க்கின்றோமா…!

நாம் அதை உணர்வதில்லை.

நாம் எந்த நிலைக்குக் காலத்தால் அறிகின்றோமோ அது நம் “மூலமான உயிரில்… இதை ஆதாரமாக இணைக்கப்பட்டு” அந்த உணர்வின் தன்மை கனலாக எழும்புகின்றது.

1.அதைக் காலத்தால் ஆறாவது அறிவால் அறிந்து

2.பிறிதொரு உணர்வு இயக்கும் நிலைகளை ஞானத்தால் உணர்ந்து (கருத்தை)

3.தனக்குள் கணங்களுக்கு அதிபதியாக “மகரிஷிகளின் உணர்வை” இணைத்து

4.அதை நாம் எவ்வாறு “நன்மை செய்யும்” சக்தியாகச் செயல்படவேண்டும்…? என்பதை நாம் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களில் தப்பில்லை.

இன்று சாங்கிய சாஸ்திரங்களில் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாத துயர்களிலேயே நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

ஆக “யாரோ செய்வார் எவரோ செய்வார்” என்று தான் நமக்குள் எண்ணுகின்றோமே தவிர நாம் சுவாசித்ததை உயிர் இயக்கி, அதை உணர்த்தி, இந்த உடலைச் செயல்பட வைக்கின்றது என்று ஞானிகள் கொடுத்த நிலைகளை எண்ணவில்லை.

உயிர் “மூலம்”. நாம் நுகரும் உணர்வுகள் (சுவாசம்) “ஆதாரம்”. உயிரிலே அது மோதும்போது “வெப்பம்”. மோதும் “சந்தர்ப்பத்தை” அந்தக் காலத்தை அறிந்து அதனின் “ஞானமாக நீ செயல்பட வேண்டிய நிலை” எது? என்பதைத்தான் அங்கே ஞானிகள் காட்டினார்கள்.

தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

Spiritual Meditation.jpg

தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

 

 1. நமது எல்லை – சப்தரிஷி மண்டலம் அடைவதுதான்

காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கும் இவ்வேளையில் நாம் அனைவரும் நம் குருவின் அருளின் துணைகொண்டு மகரிஷிகளின் அருள்சக்தி துணைகொண்டு நமக்குள் அந்த உயர்ந்த ஞானத்தைப் பெறவேண்டும்.

இந்த உடலைவிட்டு நாம் எந்த நிமிடம் அகன்றாலும் நாம் சப்தரிஷிகளின் அருள்வட்டத்தில் இணைந்து என்றும் பிறவியில்லா நிலைபெறும் சக்தி பெறவேண்டும்.

1.நமது எல்லை அதுதான் என்ற நிலைகள் தெளிந்து

2.நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்வோம்.

3.குறைகள் வராதபடி நிறைவாக்குவோம்.

 

2.அருள் ஞான உபதேச நூல்களை அடிக்கடி படித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்

தியான வழியில் உள்ளோர் அனைவரும் தபோவனத்தில் வெளியிட்ட நூல்களை நாம் அடிக்கடி எடுத்துப் படித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

யாம் கொடுக்கும் இந்த நூல்களை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில்தான் இருக்கவேண்டும். படித்தபின் மீண்டும் பூஜை அறைக்கே சென்றிட வேண்டும்.

வெளியிட்ட நூல்கள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் அடிக்கடி நாம் படித்து, ஒரு பாரா அல்லது இரண்டு பாரா படித்துவிட்டுத் தியானத்திற்குச் செல்ல வேண்டும்.

அதை நாம் அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும் நிலையும், கேட்கும் நிலையும் அவர்களுக்குள் அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை நாம் ஊட்டப் பழக வேண்டும்.

இதை எல்லாம் நீங்கள் பெறுவதற்காக உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்கள் உடலைச் சிவனாக மதித்து இந்த உடலுக்குள் நம்மை  மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று தியானிக்கச் சொல்லுகின்றோம்.

 

அவ்வழியே தியானிக்கும்போது குரு காட்டிய அருள் வழியில் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் போரொளியும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

 

 1. ஒற்றுமையை வளர்த்திடக் கூட்டுத் தியானங்கள் அமைத்திடல் வேண்டும்

தியானவழி அன்பர்கள் அடிக்கடி கூட்டுத் தியானங்கள் அமைத்திட வேண்டும். அந்தந்தக் குடும்பங்களில் இரண்டு பேர் சேர்த்தால் போதும். தியானம் செய்து குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிப் பழகுதல் வேண்டும்..

இந்த மாதிரி ஒற்றுமையை வளர்ப்பதற்கு குடும்பங்களில் தெளிவான நிலை வருவதற்கு இதைப் போன்று அவசியம் கூட்டுத் தியானங்கள் செய்ய வேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடுமபத்திலும் எடுத்துக் காட்டாக இந்த தியானத்தைக் கடைப்பிடித்து உங்கள் அருகில் உள்ளவர்களையும் அந்த உயர்வடையச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

 

 1. உலகில் நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டவுடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

உலக நிலைகளிலே இன்று எடுத்துக் கொண்டால் வேதனை, வெறுப்பு பயம் என்ற நிலைகள் அதிகமாக இன்று மனித உடலில் உருப்பெற்று வெளிப்படுகின்றது.

கோடிச் செல்வம் இருப்பினும் பயம் இல்லாது எவரும் இல்லை. ஆகவே ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உலகில் நடக்கும் மதம், இனம், மொழி என்ற நிலைகளில் கடும் விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் உலகம் முழுவதும் பரவி உள்ளது.

ஒவ்வொரு மனித உடலிலும் வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்திருப்பதும் T.V மூலமாகவும்,  பத்திரிகைகளில் படிக்கும் போதும் நாம் அறிய நேர்கின்றது.

1.உலகில் ஒவ்வொரு இடத்தில் நடக்கும் விபத்துக்களும் விபரீதச் செயல்களும்,

2.திருட்டு கொலை சம்பத்தப்பட்ட செய்திகளைப் பார்க்கும் பொழுதும், படிக்கும் பொழுதும்

3.மன அதிர்ச்சியும் பயமூட்டும் உணர்வுகளும் நமக்குள் அதிகமாகப் பதிவாக்கி விடுகின்றது.

பயத்தின் உணர்வுகள் அதிகரித்துவிட்டால் சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது. சிந்திக்கும் திறன் இழந்தால் ஆத்திரத்தில் நம்மை அறியாது கடும் பிழைகளைச் செய்யும் நிலைகளும் நமக்குள் உருவாகிவிடுகின்றது.

இதைப்போன்ற விபரீத நிலைகளில் இருந்து நாம் மீளவேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் ஆத்மசுத்தி செய்து ஒரு பத்து நிமிடமாவது நமக்குள் செயல்படுத்திடல் வேண்டும்.

 

 1. குறை காணுவதற்குப் பதில் அதை நிவர்த்திக்கும் செயலாக அமைதல் வேண்டும்

இதேபோன்று குறை என்பது அவ்வப்பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிகழ்ச்சி.

தொழில் செய்வோம் என்றால் நாம் ஒன்றைச் செய்து கொண்டு இருப்போம். அடுத்த கணம் இன்னொரு பக்கம் குறை உருவாகும்.

அந்தக் குறை உருவாவதைத் தெரிந்து கொண்டால், உடனே ஆத்ம சுத்தி செய்து அந்தக் குறைகளை நிவர்த்திக்கும் நிலையில் நமது செயலாக்கங்கள் அனைத்தும் அமைதல் வேண்டும்.

குறைகள் எப்பொழுது எவ்வழியில் வர நேர்ந்தாலும் மற்றவர்களின் குறையைச் சுட்டிக் காட்டுவதற்கு மாறாக மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று நாம் அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு,

1.மகரிஷிகளின் அருள்சக்தி அவர்கள் பெறவேண்டும்.

2.மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

3.குரு காட்டிய அருள் வழியில் அவர்கள் வளரவேண்டும்.

4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும்.

5.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வுகள் பெற்று அனைவருக்கும் நற்போதனை கொடுக்கும் நிலைகள் அவர்களில் உருவாக வேண்டும்.

6.அன்பும் பண்பும் பரிவும் பெறும் அந்த அருள்சக்தி அவரில் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இவ்வாறு நாம் அனைவரும் அவ்வழியில் வழி தொடர வேண்டும். பெண்கள் இந்த உணர்வினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பல கோடிகளில் பலவிதமான நிலைகளில் இருப்பினும் குறைகள் காணும்போது நாம் ஆத்மசுத்தி செய்து ஒரு பத்து நிமிடமாவது அதன் நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.

 

 1. குடும்பத்தில் கணவன் மனைவி ஒன்றுபட்டு வாழவேண்டும்

அனைவருடைய குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்தல் வேண்டும். கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து, நாளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ வேண்டும்.

சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு தெளிந்த மனதுடனும் மகிழ்ந்திடும் உணர்வுடனும் வாழ்ந்து அருள்ஞான சக்தி பெற்று தீமையை அடக்கிடும் அருள் ஒளி பெற்று மெய்ப்பொருள் கண்டிடும் அந்த அருள்ஞானம் வளர வேண்டும்.

நம் ஊரில் உள்ளோர் அனைவரும் அதைப் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். சதா இதை நமக்குள் தியானமாக்க வேண்டும்.

 

 1. குழந்தைகள் அனைவரையும் அருள் ஞானிகளாக வளர்க்க வேண்டும்

நம்  குழந்தைகளுக்கும் இதைப் போல மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். அவர்கள் அருள்ஞானம் பெறவேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று அருள் உணர்வுகளைக் குழந்தைகளுக்குச் சொல்லி நாம் தியானிக்க வேண்டும்.

குழந்தைகள் உலக ஞானம் பெறவேண்டும். உலகைக் காத்திடும் அருள்ஞானக் குழந்தையாக அவர்கள் உரு பெறவேண்டும். வளர வேண்டும் வளர்ச்சி பெறவேண்டும்.

நம் நாட்டின் பண்புகளைத் தெளிவாக ஞானிகளின் அருள்சக்திகளை எடுத்து அடுத்தவருக்குப் போதிக்கும் நிலை நம் குழந்தைகள் பெறவேண்டும்.

அவர்கள் வெளிப்படுத்தும் சொல் மற்றவரைப் பிணிகளிலிருந்தும், தீமைகளிலிருந்தும் அவர்கள் வறுமையிலிருந்தும் நீக்கிடும் அந்த வலிமை பெறவேண்டும்.

கேட்போர் உணர்வுகள் வலிமை பெற்றுத் தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை ஏற்படுத்தும் நிலை பெறவேண்டும்.

 1. கருவுற்றிருக்கும் தாயின் வயிற்றில் வளரும் சிசுக்களுக்கு அகஸ்தியன் அருளைப் பெறச் செய்யவேண்டும்

அதே போல பெண்கள் கர்ப்பமாக இருந்தால் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து அந்தக் கருவில் வளரும் குழந்தை மகரிஷிகளின் அருள்சக்தியைப் பெறவேண்டும் அருள்ஞான சக்தி பெறவேண்டும்.

1.அகஸ்தியன் பெற்றது போன்று நஞ்சை வென்றிடும் உணர்வுகள் பெற்று,

2.அருள் வழியின் உணர்வைத் தனக்குள் வளர்க்கும் ஆற்றல் பெற்று,

3.உலக இருளை நீக்கிவிட்டு அருள் ஒளிபெறும் தகுதியை கருவில் வளரும் குழந்தை பெறவேண்டும்.

4.வானுலக ஆற்றல் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெறவேண்டும்.

5.உலக மக்களை இணைத்திடும் அருள்ஞானம் அந்தக் கருவிலே விளைய வேண்டும்.

6.உலகில் நன்மைகள் செய்விக்கும் அகஸ்தியனின் அருள் உணர்வுகள் கருவிலே உருபெற வேண்டும்.

7.உலகைக் காத்திடும் அருள்ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்று

கூட்டுத் தியானங்களில் இதை முறைப்படுத்தி அந்தக் கருவில் வளரும் குழந்தைகளுக்கு நாம் அடிக்கடி இதைச் சொல்லித் தியானமிருக்க வேண்டும்.

கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு நாம் தபோவன நூல்களைப் படித்துக் காட்டிக் கருவில் இருக்கும் அந்தக் குழந்தை அருள் மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் நீங்கள் சொல்லிவிட்டு அடுத்து தியானத்தை நாம் வழிநடத்தும் முறை வரவேண்டும்.

இதைப் பார்த்தபின் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் இதைப் போன்று நாமும் வழிப்படுத்த வேன்டும் என்ற நிலைகளில் அவர்களுக்கும் இந்த உணர்வுகளை ஊட்டுதல் வேண்டும்.

 

 1. மற்றவர்களுக்கு வழி காட்டும் அளவிற்கு நாம் வளரவேண்டும்

தியானவழி அன்பர்கள் என்று நம்மை எடுத்துக்கொண்டால், எல்லாரும் போற்றும் நிலைகளுக்கு,

1,நம்மைப் பார்த்தாலே எப்பொழுதும் மற்றவர்களுக்கு,

2.அவர்களுக்கு நல்வழி காட்டும் நிலை அடைந்திடல் வேண்டும்.

 1. ஒருவருகொருவர் அந்தத் தெய்வீகப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

4.நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அந்த அளவிற்கு நாம் வளர்ந்தால்தான் அது வரும். அதனால் அதை நீங்கள் பெறுவீர்கள் என்று நினனைக்கிறேன். அதைப் பெறவேண்டும் என்று தியானிக்கிறேன் பெறவேண்டும் என்று தவம் இருக்கிறேன்.

அதை நீங்கள் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். இதை எடுத்துக்காட்டாக வளரவேண்டும். அதை நான் சொல்வதற்குப் பதில்

1.அந்த உயர்வை நீங்கள் உயர்த்திக்காட்டி

2.செயலிலே நீங்கள் வரவேண்டும் பிரார்த்திக்கின்றேன்.

அன்பர்கள் அனைவரும் குரு காட்டிய அருள்வழியைக் கடைப்பிடித்து உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்றி, அனைவரும் அறிந்திடும் நிலையாக அருள் ஞான சக்தி போதித்து, உலக மக்களைத் தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் வாழ வைக்கும் அந்தத் திறன் அனைவரும் பெறுதல்வேண்டும்.

நாம் அனைவரும் மாமகரிஷிகளின் அருள்சக்தியை நமக்குள் வளர்த்து நம் தொழிலும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நம்மிடம் தொழில் செய்பவர்கள் அதாவது நம்மிடம் வாடிக்கையாளராக வரும் போது அவர்களுக்கும் நன்மை பயக்கும் சக்தியாக வருகிறது.

அப்படி நன்மை ஏற்படும் பொழுது, நம் தொழிலும் சீரடையும்.

 

 1. உங்கள் பார்வையால், சொல்லால், பிறருடைய தீமைகள், நோய்கள் அகல வேண்டும்

உங்கள் பார்வையில் இந்தத் தியானத்தின் பலனால் மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று உங்கள் பார்வையில் “எவரேனும்.., கெட்டது என்று சொன்னாலும்” அடுத்த கணம் நீங்கள் சிறிது நேரம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் நோய் நீங்கி உடல் நலம் பெற்று, அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

எத்தகைய நோய்கள் இருப்பினும் கேட்டறிந்தால் அடுத்து ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் நோய் நீங்கி அருள்ஞான வழியில் அவர்கள் நலம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும் அவர்கள் குடும்பங்கள் மகிழ்ச்சி பெறவேண்டும் என்று எண்ணி அவர்கள் உடல் நலம் பெற

1.நாம் எடுத்த தியானத்தின் பலனால்,

2.நம் சொல்வாக்கின் தன்மை அவருக்குள் பதிவாகி

3.கடும் நோய்களையும் நீக்கும் பலன் பெறவேண்டும்

என்று நீங்கள் எண்ண வேண்டும்.

இதைப் போல அந்த அருள்சக்தியை வளர்த்துப் பேரின்பத்தை ஊட்டும் நிலைகளை உருவாக்க வேண்டும்.

எந்த நிலையிலும் நாம் அனைவரும் அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று யாருக்காவது நோய் வந்தாலும் அதை நீக்க நீங்கள் முற்பட வேண்டும்.

கூட்டுத்தியானமிருந்து மகரிஷிகளின் அருள்சக்தி அவர் உடலிலே படரவேண்டும். அவர் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும். அவர் நோய் நீங்கி நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று நாம் அவர்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லி வழி நடத்துதல் வேண்டும்.

1.அவர்கள் நலம் பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது

2.நமக்குள்ளும் நலம் பெறும் அணுக்கள் உருவாகின்றது.

3.இந்தச் சொல்லின் தன்மை வெளிப்படும்போது கேட்போர் உணர்விலேயும் நலம் பெறும் சக்தியாக உருப்பெறச் செய்யவும் முடிகின்றது.

இந்தப் பழக்கத்தை நாம் பழக முயல வேண்டும்.

 

 1. விஞ்ஞான அழிவிலிருந்து உலக மக்களைக் காக்கும் நிலையைச் செயல்படுத்த வேண்டும்

இதைப்போல உலகில் மதம் இனம் என்ற அன்னியத் துடிப்பிலிருந்து மக்களை விடுபடச் செய்து அருள் வழித் தொடராக அவர்கள் வாழ்வில் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்று

1.நாளை விஞ்ஞான உலகில் வரும் அழிவில் இருந்து

2.அவர்கள் மீளூம் மார்க்கத்தையும் நாம் உபதேசித்தல் வேண்டும்.

ஒவ்வொரு நேரத்திலேயும் நீங்கள் சொல்ல முடியவில்லை என்றாலும் இந்த உபதேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதைப் படித்து வாசித்துக் காட்டுங்கள். திரும்பத் திரும்பப் படித்துக் காட்டினால் நமக்குள்ளும் பதிவாகின்றது.

அந்த அருள் உணர்வை நாம் எண்ணிய உணர்வை நம் உயிர் அந்த அருள் சக்தியாக அணுக்களாக நமக்குள் மாற்றுகின்றது. நினைவாற்றலைப் பெருக்குகின்றது.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ வழி வகுக்கும் அந்தத் தகுதியை நமக்குள் அது பெறச் செய்கின்றது.

பூதம் காத்த புதையல் என்பார்கள்…!

புதையல்.jpg

பூதம் காத்த புதையல் என்பார்கள்…!

 

அன்று அரசர்கள் அரசப்போர் வரும்பொழுது தனது சொத்தைச் சேமிக்க பூமியில் மறைத்து வைக்கின்றார்கள்.

அடுத்த எதிரி வருவதற்கு முன் நாம் ஜெயித்துவிட்டால் எடுத்துக் கொள்வோம். நாம் ஜெயிக்காவிட்டால் இன்னார் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு பூமியில் புதைக்கின்றார்கள்.

அப்படிப் புதைத்தாலும் அன்றைய நிலைகளில் இதைச் சுரங்கமாகத் தோண்டி இதைப் புதைக்கச் செல்லும் பொழுது நான்கு பேரை அனுப்புகின்றார்கள்.

புதைத்த பின் அந்த நான்கு பேரையும் அவர்கள் மேல் குற்றத்தைச்சாட்டி அங்கேயே பலியிட்டு விடுகின்றார்கள்.

அதை மூடி மறைத்த பின் (அவர்கள்) பலியிட்டவர்கள் இங்கே வந்தபின் அவர்களைக் (நான்கு பேரை) கொலை செய்துவிட்டார்கள் என்று திட்டமிட்டு இவர்களையும் கொலை செய்துவிடுகின்றார்கள்.

இது எந்த அரசனால் ஆணையிடப்பட்டதோ அவர்கள் “தனக்கு மட்டும்தான் தெரியும்” என்று எண்ணம்.

இருந்தாலும் அரசன் இந்த நியதிகளைச் செய்தான் என்று கொலையுண்டவர்கள் உணர்வுக்குள் பதிவாகிவிடுகின்றது. இந்த பதிந்த உணர்வுகள் அரசாட்சியில் யார் அரசனாக இருந்தாலும் அவர் உடலுக்குள் செல்லுகின்றது.

சென்றபின், அரசன் உடலுக்குள் பழிதீர்க்கும் உணர்வுகள் வருகின்றது. அவன் ஆட்சிபுரியும் சட்டங்கள் எதுவாக இருந்தாலும்

1.அவன் உடலுக்குள் ஊடுருவி

2.அவனைக் கடும் வேதனைக்குள்ளாக்கின்றது.

அப்படி வேதனைக்குள்ளாக்கும் பொழுது அவனுடைய கடைசி சிந்தனை தன் பொருளின் ஆசையின் எண்ணங்கள் தோன்றி எங்கு புதைத்தார்களோ அந்தப் பொருளின் மேல் நினைவு வருகின்றது.

அந்த உடல் சுகம் எல்லாம் போய்விடுகின்றது.

இப்படி வைத்திருக்கின்றோமே தன் இனத்திற்குக் கிடைக்குமா? என்ற எண்ணத்தை வைக்கும் பொழுது இன்னாருக்குத்தான் இன்னது என்று சாசனங்களை எழுதி வைத்திருப்பார்கள்.

இவன் எண்ணம் அந்தச் சாசனத்தின் மேல் சென்றபின் அதைக் காக்கும் பூதகணங்களாகப் போய்விடுகின்றது. இவன் ஆசைப்பட்டான் ஆனால், மற்றவர்கள் மேல் போகின்றபொழுது பேயாகப் போகின்றது.

இவனுடைய ஆசையோ பூதகணங்களாகப் போகின்றது.

அந்த எல்லைக்கு யார் சென்றாலும் ஆசையின் உணர்வைத் தூண்டும். அந்த அரசன் எந்தெந்த நிலைகளில் மரணமடைந்தானோ அதே உணர்வுகள் இங்கே தூண்டச் செய்து ஆசையின் எண்ணங்கள் பெருகப்பட்டுப் “புதையல் இங்கு இருக்கின்றது” என்று பேசுவார்கள்.

1.இந்த மாதிரி இடங்களில் சிக்குண்டவர்கள்

2.நான் அந்தப் புதையலைப் பார்த்தேன்

3.அதை எடுக்க வேண்டும் என்று நிறையப் பேர் அலைவார்கள்.

ஆக அந்த அரசன் செல்வங்களையும் பொருள்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதைச் செய்தான். கடைசியில் பூதகணங்களாகத்தான் ஆகின்றான்.

அடுத்து மனிதனல்லாத உருவாகத்தான் செல்கின்றான். அதுமட்டுமல்லாது யார் யாரெல்லாம் இத்தகைய ஆசை கொண்டு செயல்படுகின்றார்களோ அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் இயங்கி கடைசியில் எல்லாவற்றையும் இழந்து எல்லை கடந்து வேதனைக்குள்ளாகி ஈன சரீரமாகத்தான் பிறக்க நேருகின்றது.

இதையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்துகின்றார்.

இந்த உடலும் நம்முடன் வரப் போவதில்லை. நாம் சேர்க்கும் எத்தகைய செல்வமும் நம்முடன் வருவதில்லை. நமக்குச் சொந்தமானது நம் உயிர் ஒன்று தான்.

அந்த மகரிஷிகள் காட்டிய மெய் வழியில்

1.உயிருடன் ஒன்றி வாழும் நிலையாக

2.அழியா ஒளியின் சரீரம் அடைவதே

3″மனிதனின் கடைசி எல்லை” என்பதை நாம் தெரிந்து கொள்வது நல்லது.

ஞானம் பெறச் சரியான பருவம் எது…?

divine-strength

ஞானம் பெறச் சரியான பருவம் எது…?  

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாழ்க்கையில் நமக்குத் துன்பம் என்ற நிலைகள் எப்போது வருகிறதோ
1.அந்தத் துன்பத்தை மனதார நாம் ஏற்றுக்கொண்டு
2.இந்த இன்பத்திற்குண்டான வழியை
3.அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் ஏற்றுக்கொண்டு
4.துன்பத்தை நீக்கும் முயற்சியை எடுப்பதற்கு
5.”இந்தச் சந்தர்ப்பத்தை எடுத்து” தியானமும் உங்களுக்கு ஆத்ம சுத்தியும் கொடுக்கின்றோம்.

“ஓம் ஈஸ்வரா” என்று உயிரான ஈசனை எண்ணிப் புருவ மத்தியில் நினைவினைச் செலுத்துங்கள்.

விண்ணிலிருந்து நம் பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்.

இவ்வாறு ஆத்ம சுத்தியை நீங்கள் எடுக்கப்படும் பொழுது வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தை நீக்கி வாழ்வினுடைய நிலைகளில் மனிதனாகப் பெற்ற புனிதத்தன்மையை நாம் பெறுகின்றோம்.

நமது வாழ்க்கையிலே நாம் சாதாரண மனிதனுக்குள் பழக்கப்பட்டுப் பழகி வரப்படும்பொழுது எதிர்பாராத சலிப்போ, சஞ்சலமோ, பயமோ, ஆத்திரமோ, கோபமோ, வேதனையோ இதைப் போன்ற உணர்ச்சிகள் தூண்டும்பொழுதெல்லாம் அடுத்தகணம் நாம் ஆத்ம சுத்தி செய்து நம் உடலில் வரக்கூடிய துன்பங்களை நாம் துடைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் எல்லை கடந்து துன்பங்கள் வரப்படும்பொழுது நாம் ஏங்கியிருக்கக்கூடிய நிலைகள்
1.நம்மை மறந்து
2.துன்பத்தை மறந்து
3.நாம் மெய் ஒளியின் தன்மை பெறவேண்டுமென்ற
4.தியானத்தின் வழி நாம் கூட்டும் இந்த உணர்வின் ஆற்றல் அதை நாம் பெருக்கப்படும்போது
5.விண்ணின் ஆற்றலை நாம் பெறமுடியும்.

ஆகவே, நாம் ஒவ்வொரு நாளும் மெய் ஒளி பெறும் தியானத்தைக் கூட்டிக்கொள்வோம்.

ஒரு நாள் முழுவதும் உடலுக்காக வேண்டி நாம் பாடுபட்டு உழைத்தாலும் மெய் ஒளி பெறும் அந்தச் சந்தர்ப்பத்தை ஒவ்வொரு நாளும் ஒரு 10 நிமிடமாவது மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறவேண்டும் என்று தியானித்து அந்த ஆற்றல் மிக்க காந்தத்தைக் கூட்டிக் கொள்வோம்.

அதை நம் உடலிலே சேர்த்துக்கொண்டு ஒவ்வொரு நிமிடமும் நமக்குத் துன்பம் வரும்போது “ஈஸ்வரா” என்ற எண்ணத்தைக் கொண்டு “மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று நாம் எண்ணி சுவாசித்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம் எதிர்பாராத சங்கடத்தில் நாம் துன்பப்பட்டு நம் உணர்ச்சிகளைத் தூண்டி
1.மிக அதிகமான கஷ்டங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பத்திலே 2.உணர்ச்சியின் வேகங்கள் உந்தி
3.நாம் விண்ணின் ஆற்றல் மிக்க நிலைகளை
4.துரித நிலைகளில் பெறும் சந்தர்ப்பமும் கிடைக்கும்.

உங்களால் மெய் ஞானியாக முடியும்.., உங்களை நீங்கள் நம்புங்கள்.

மெய்ஞானிகளால் ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள அர்ச்சனை எது?

Image

Lord siva and siddha.jpg

மெய்ஞானிகளால் ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள “அர்ச்சனை” எது?

போகமாமகரிஷி, அகத்தியமாமகரிஷி, கோலமாமகரிஷி இவர்களெல்லாம் பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளைத் தான் உணர்ந்தறிந்தவர்கள்.

அவர்கள் காட்டிய சாஸ்திரங்களைப் பின்பற்றாது புற நிலைகளில் “வேள்விகள் செய்தால்… சரியாகும்” என்று அந்த ஞானிகள் கண்டுணர்ந்த உண்மையினுடைய நிலைகளை மறைத்துவிட்டார்கள்.

பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் நாம் அனைவருமே மந்திரத்திலே சிக்குண்டு இருப்பவர்கள்.

நாம் எந்தெந்த மந்திரங்கள் உய்யப்படுகின்றோமோ அந்த மந்திரங்கள் நமக்குள் சென்ற பின் நாம் அதிலிருந்து மீளமுடியாத நிலைகளில் இருக்கின்றோம்.

1.நமக்குள் அனைத்து ஆற்றல்களும் உண்டு என்று சொன்னாலும் அதை “நம்புவார்” யாரும் இல்லை.

2.இன்றைக்கு எல்லா ஆலயங்களுக்கும் சென்றுதான் திருப்தி பெறவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம்.

3.நம் மனித உடலுக்குள் உணர்வாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலைகளைத்தான்

4.ஆலயத்தில் அனைத்து உருவங்களையும் காட்டி தெய்வ குணங்களாக அன்று மெய்ஞானிகள் சொன்னார்கள் என்று

பலமுறை யாம் சொல்லியிருக்கின்றோம்.

ஆலயங்களுக்குச் செல்லும்போது அந்த ஆலயங்களில் பூஜிக்கும் முறைகளையும் யாம் சொல்லியிருக்கின்றோம். அதையாவது சரியாகச் செய்கின்றார்களா என்றால் இல்லை.

காசைக் கொடுத்தால் தான் ஆண்டவன் தரிசனம் கிடைக்கும் என்ற நிலையும் உள்ளது. அங்கே சென்று அர்ச்சனைக்குக் காசு கொடுத்துவிட்டு நாமும் எட்டிப் பார்க்கும் நிலைகளில்தான் இருக்கின்றோம்.

அர்ச்சனை என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியின் வழியாகச் சுவாசித்தல் வேண்டும்.

சுவாசித்த அந்த உணர்வுகள் நம் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் அது படுகிறது

உயிரிலே படும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நமக்குள் எண்ணங்கள் வலுப்பெற்று நாம் எத்தகைய நல்ல காரியங்கள் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோமோ

1.அந்த உணர்வின் சக்தியைச் சுவாசித்து

2.நம் உயிரான ஈசனிடம் படும்போது

3.நாம் கோயிலுக்குள் செய்வது போன்று

4.நம் உயிரான ஈசனுக்குள் அர்ச்சனை ஆகின்றது.

அத்தகைய மணத்தின் தன்மை கொண்டுதான் நம் உடலின் உணர்வலைகள் செயலாக்கி அந்த அலைவரிசையின் நிலைகள்தான்

1.கண்களின் பார்வையும் காதின் நிலைகளும்

2.சொல்லும் செயலும் உடலின் அமைப்பும்

3.நாம் எடுத்துக்கொண்ட சத்து உடலாக அமையும்.

ஆகவே, நாம் எடுக்கும் ஆற்றல்மிக்க உணர்வுகளை உயிர் வழியாகச் சுவாசித்தால் தான் உயிரிலே உராயச் செய்தால் தான் உயிரிலே மோதச் செய்தால் தான் புருவ மத்தியில் இணைத்தால் தான் அதை நமக்குள் சிருஷ்டியாக்க முடியும்.

இல்லை என்றால் நாம் நுகர்ந்தது நமக்குள் இயக்கமாகி அதை உயிர் சிருஷ்டித்துவிடும். இதைத்தான் ஆலயங்களில் சாதாரண படிக்காத பாமர மக்களும் புரியும் வண்ணம் “அர்ச்சனை” என்று காட்டினார்கள்.

புறத்தில் செய்வதைத்தான் பழகி இருக்கின்றோமே தவிர அகத்திற்குள் செய்ய வேண்டியதை விட்டுவிட்டோம். நமக்குள் உள் நின்று இயக்கி உருவாக்கிக் கொண்டிருக்கும் உயிரை மறந்துவிட்டு அங்கே உள்ள சிலைக்கு அர்ச்சனை செய்வதால் எந்தப் பலனும் இல்லை.

இந்த விஞ்ஞான உலகத்தில் அனைத்தையும் ஒரு நொடிக்குள் அழித்துவிடும் இந்தத் தருணத்தில் நாம் இந்தச் சாமி செய்யும் இந்த ஜோசியம் செய்யும் அந்த ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் இயந்திரம் செய்யும் என்று இருப்போமேயானால் “அறியாமையிலிருந்து நாம் விடுபடவில்லை” என்றுதான் அர்த்தம்.

Our thoughts are to be directed towards the shining Souls

Image

Shining souls.jpeg

Our thoughts are to be directed towards the shining Souls

The states which are told here is to prevent the souls from whirling in the cycle for a long time with the state of characters that they have acquired to get a state in which they can get a body which will enable them to become a God with an Intelligent soul in another world.

Once we mortgage our thoughts in the grip of the whirls of this world, to redeem the same, it will take several thousands of years.

If our life is shaped in a such a way that our thoughts are directed towards the shining souls that have the power of Gnana of the Almighty by our meditation, the breath that we take enters into the realm of their thoughts.

Then we merge with the Almighty and increase the power of our circle of light by the help of the Sapdha rishis who are in the subtle state in the form of Divine light.

Then during the change that is going to take place shortly we will merge with their state and get their form of action.

It is only after we change several forms that we come to the state in which we got a human body of intelligence.

We should not proceed in the present ways of Gnana in which we are now proceeding  which makes people who are caught in the artificial ways and make the people lazy.

On the other hand we should practice the Gnana of human beings and get the Gnana which leads to it.

To clean the dust in a mirror if we use a dirty cloth, the dirt on the cloth will adhere to the mirror.

It is only with a clean cloth that we will be able to remove the dust on the mirror.

Dirt cannot be removed by dirt. The dirt in our soul is to be removed by Meditation which is the Gnana of God. Then we will be able to see the beauty of our soul.

தீமையான எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வருவதன் காரணம் என்ன…?

Meditation.jpg

“தீமையான எண்ணங்களும் கெட்ட கனவுகளும்” மீண்டும் மீண்டும் வருவதன் காரணம் என்ன? 

தினசரி வாழ்க்கையில் பகலில் நாம் எல்லோரிடமும் பழகித்தான் ஆகவேண்டும். அவர்கள் நல்லது கெட்டதை அறிந்துதான் ஆகவேண்டும். அவர்களுடைய தவறுகளை நுகரத் தான் வேண்டியதிருக்கும்.

ஆனாலும், அதிலிருந்து விலகிச் செல்லவேண்டும். ஏனென்றால் கேட்டு அறிந்து நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் வித்தாக உருவாகிவிடுகிறது. இதுதான் ஊழ்வினை என்பது.

நம் வாழ்க்கையில் எத்தகைய கெட்டதைப் பார்க்கின்றோமோ அனைத்தும் ஊழ்வினையாகப் பதிவாகிவிடுகிறது. வினைக்கு நாயகனாக இயங்கத் தொடங்கிவிடுகிறது.

இதிலே எந்த எண்ணங்கள் அதிகமாகச் சேர்கின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகி நமக்குள் செயல்படத் தொடங்கிவிடுகிறது. அந்த கணங்களுக்கெல்லாம் ஈசனாகச் செயல்படுவது உயிர்.

எந்த அணுவின் தன்மையை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதை உயிரான ஈசன் தான் உருவாக்குகின்றது. அந்த உணர்வின் தன்மை அதிபதியாக்கப்படும் பொழுதுதான் அதற்குத் தகுந்தமாதிரி சுவையின் தன்மை உருவாக்கப்படுகிறது.

மற்றவர்களைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது. ஆத்ம சுத்தி செய்கிறோம்.
1.அடுத்து குறைகளை அடுக்கடுக்காகச் சேர்க்க ஆரம்பித்து விடுகிறோம்.
2.இதுவும் அதனுடன் இணை சேர ஆரம்பித்துவிடுகிறது.
3.நாம் நன்மை செய்யும் உணர்வுகள் தணியத் தொடங்கிவிடுகிறது.

நம்முடைய உணர்வுகளில் நன்மை செய்யும் உணர்வுகள் வளர்ச்சி குன்றும் போது உடலில் நன்மை பயக்கும் உணர்வுகள் குறைகின்றது. நல்ல அணுக்களுக்கு ஆகாரம் இல்லையென்றால் உடலையும் பலவீனப்படுத்தும்.

உதாரணமாக, நாம் வேலை செய்கிறோம் என்றால் கையில் பட்ட அழுக்கை உடனுக்குடன் துடைத்துவிடுகின்றோம்.
1.அப்படித் துடைத்தாலும்
2.முழுமையாகப் போகாமல் சந்துகளில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும்.
3.நம் உடலுக்குள் போகும் பொழுது அதன் கெடுதலைக் கொஞ்சமாவது காட்டத்தான் செய்யும்.

இதே மாதிரி ஒவ்வொரு சமயத்திலும் பிறர் தீமைகளைக் கேட்கும் பொழுது ஆத்ம சுத்தி செய்து கொண்டாலும் அடுத்து இரவு படுக்கப் போகும்போது மீண்டும் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உள்ளுக்குள் எடுத்து ஆத்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அப்படிச் சுத்தப்படுத்தினாலும் கூட அந்த உணர்வின் அணுக்கள் “சாப்பாட்டிற்காக… ஏங்கும்”.

நாம் புலனடங்கித் “தூங்கினாலும்…,” அதது உணர்ச்சிகளைத் தூண்டி நம் ஆன்மாவில் கலந்து இழுக்க ஆரம்பித்துவிடும்.

இது ஏனென்றால் ஒரு நண்பரிடத்தில் பேசி இருக்கின்றோம். அவருக்காக வேண்டி அவர் கஷ்டத்தைக் கேட்டிருக்கிறோம் என்றால் அந்த உணர்வுகள் ஆன்மாவில் இருக்கும். அதன் வித்தாக இங்கு இருக்கும்.

எவ்வளவுதான் ஆத்ம சுத்தி செய்தாலும் நம் நண்பனுக்கு அவன் கஷ்ட நஷ்டங்களை நீக்க உயர்ந்த கருத்துக்களைப் போதித்தாலும் அதை நாம் வாங்கித்தான் சொல்கின்றோம்.

அவர் எப்படியும் மீளவேண்டும் என்று எண்ணத்தில் சொன்னதால் அவருக்குள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் எந்தத் தீமையில் இருக்கின்றார் என்று அறிய முடிகிறது. இரவில் கனவில் வரும்.

அவருடைய உணர்வும் நாம் சொன்ன நிலையும் இரண்டும் இணைந்து நம் ஆன்மாவில் கலந்து நாம் புலனடங்கித் தூங்கும்போது அழுக்கு அதிமாகப் படும்.

ஏனென்றால், பாசத்தால் அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று அவர்கள் கருத்தை ஏற்றுத்தான் நாம் சொல்கிறோம். அந்த உணர்வுகள் நாம் புலன் அடங்கித் தூங்கும் பொழுது உயிரிலே பட்டவுடன் உருவாமாகவே சிலருக்கு நேரடியாகவே தெரியும்

அந்த மனிதரின் நிலைகள் அவருக்கு இடையூறு செய்யக்கூடிய நிலையும் “பிசாசைப் போன்று” தெரியும். ஏனென்றால் அந்த ஆக்ரோஷ உணர்வுகள் நாம் பக்தி வழியில் கண்டுணர்ந்தபின் அவர் சொன்ன உணர்வுகள் இதனுடன் கலந்து ரூபமாகத் தெரியும்.

அவருக்குள் எதிரியாக அவர் நல்ல உணர்வுகளுக்கு எதிரியாக உருவாகிற மாதிரி காட்சியாகத் தெரியும். இந்த உணர்வின் ஓட்டங்களில் அவருக்கு ஏற்படும் நிலைகள் தொழில் நஷ்டமாவதும், கொடுக்கல் வாங்கலில் முடியாத நிலைகளும் தெரிய வரும்.

அதாவது அந்த உணர்வுகள் நம் புலனில் கலந்து நாம் எடுக்கும் அந்தத் “துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு” அதைத் தெரிய முடிகின்றது. நாம் இந்தத் தியானத்திலிருக்கும் பொழுதோ சும்மா இருக்கும் பொழுதோ கனவிலோ நினைவுகளில் வரும்.

அந்த மாதிரித் தெரிந்து கொண்டாலும்,
1.தியான வழிகளில் இது ரொம்பத் தெளிவாகத் தெரியும்.
2.தூக்கத்தில் இருந்தாலும் சும்மா படுத்திருந்தாலும்
3.நாம் அமைதியாக இருக்கும் பொழுது இந்த ஆன்மாவில் உள்ளபடி
4.நம் மனநிலையில் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.

அந்த நேரத்தில் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

நம் நினைவை துருவ மகரிஷியோடு இணைக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தோடு இணைக்க வேண்டும். சப்தரிஷி மண்டலத்தோடு இணைக்க வேண்டும்.

இதைக் கூட்டிக் கொண்டே இருந்தோமென்றால் அந்த உணர்வுகள் நமக்குள் வர வர இது ஒடுங்கும். இந்த ஆன்மாவைச் அது சுத்தப்படுத்தும்.

அதே சமயத்தில் நம் உடலில் நாம் கேட்டறிந்த தீமையான அணுக்களுக்குச் சாப்பாடு போய்ச் சேராது.

இப்படி தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி ஆத்ம சுத்தி செய்து அதை அகற்றும்படி நாம் செய்ய வேண்டும்.

நம்மைக் காக்க நாம் கையாள வேண்டிய தியானம்

 

Protected zone.jpg

நம்மைக் காக்க நாம் கையாள வேண்டிய தியானம் 

நம் சொல்லால் நம்மைக் காக்கவும், மற்றவர்களை நல்லவராக்கவும் நாம் கையாள வேண்டிய முறை

உங்களுக்குள் ஏற்கனவே பதிவு செய்து கொண்ட நிலைகளில் தவறு செய்பவர்களை உற்றுப்பார்த்தவுடன் இந்த உணர்வுகள் இயக்கச் செய்கின்றது.

அவர்களிடம் குற்றத்தின் உணர்வுகள் இருக்கின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் குற்றத்தை நமக்குள் நுழைய விடாதபடி
1.அவர் பொருளறிந்து செயல்படும் அந்த சக்தி பெறவேண்டும்
2.அவர் தெளிந்த மனம் பெறவேண்டும்” என்று எண்ணினால்,
3.அவர்களுடைய உணர்வுகள் நமக்குள் வருவது இல்லை.
இது நம்மைப் பாதுகாக்கின்றது.

இப்படி ஒவ்வொருவரும் அத்தகைய பாதுகாப்புக் கவசமாக மாற்றிக் கொண்டீர்களென்றால், “நல்லது”. இதை நாம் ஒரு வழக்கத்திற்குக் கொண்டு வந்துவிடவேண்டும்

ஒவ்வொன்றும் நம் உயிரிலே படும் பொழுது, இந்த உணர்வுகள் “குருக்ஷேத்திரப் போர்”.

நம் உடலுக்குள் சென்று விட்டதென்றால் மற்ற உணர்வுகளுடன் கலக்கப்படும் பொழுது “மகாபாரதப் போர்” கலக்கங்களும் சஞ்சலங்களும் நமக்குள் வந்து கொண்டே இருக்கும்.

அதனால் இதைப் போன்ற நிலைகளை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும்?
1.யாராக இருந்தாலும்… குற்றவாளியாக இருந்தாலும் சரி,
2.அதை விட மோசமான நிலையில் இருந்தாலும் சரி
3.வெறுப்பான நிலைகளில் தவறு செய்யக்கூடியவர்களாக இருந்தாலும் சரி,
4.”அந்த ஆண்டவன் வீற்றிருக்கக்கூடிய ஆலயம்.., அது” பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணிவிட்டீர்கள் என்றால்
5.அவர்களுடைய உணர்வுகள் சிறிதளவு கூட உங்களிடம் வராது. இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
6.ஏனென்றால் அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள் வரவே கூடாது.
7.அந்த உணர்வு நம்மை இயக்கவும் கூடாது.

அந்த ஆண்டவன் வீற்றிருக்கக்கூடிய ஆலயத்தில் அந்தத் தெய்வீகப் பண்பும் தெய்வீக அருளும் தெய்வீக நிலையும் அவர்கள் பெறவேண்டும்.

மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் அந்த சக்தி அவர்கள் பெறவேண்டும்.

அவர்கள் தெளிந்த மனம் பெறவேண்டும் தெளிவான நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணினால் நமக்குள் வராமல் இதைச் சேர்த்துக் கொள்கின்றோம்… “இதற்கு அணைப்பாகப் போட்டுக் கொள்கின்றோம்…!”

நீங்கள் எத்தனை முறை சொன்னாலும் அவர்கள் எடுக்கவில்லை என்றால் அது அவர்களுடைய நிலைகள்.
1.அவர்கள் எதை எடுக்கின்றார்களோ அதைப் பெறுவார்கள்.
2.ஆனால்… நம்முடைய கடமை ஆண்டவன் வீற்றிருக்கக்கூடிய ஆலயம் சுத்தமாக வேண்டும் என்று எண்ணுவதாக இருக்கவேண்டும்.
3.அப்பொழுது சுத்தமாக வேண்டும் என்று எண்ணினால் நமக்குள் சுத்தமாகின்றது.

ஆகவே இந்த முறையைக் கடைபிடித்துக் கொள்ளுங்கள்.

பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ கேட்டீர்கள் என்றால் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு நன்றாக ஆக வேண்டும் என்று சொல்லுங்கள்.

அடுத்து “அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் அந்த நிலை பெற வேண்டும்” என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

அதற்குப் பதில் அவர்களுடன் கலந்து “அப்படிக் கஷ்டம்.., இப்படிக் கஷ்டம் என்று உரையாடிவிட்டீர்களென்றால்
1.அந்தக் கஷ்டம் உங்களுக்குள் கலந்து (MIXER) ஆகி
2.உங்களிடம் விளைய ஆரம்பித்து விடும்.
3.ஆகையினால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கஷ்டத்தை நம்மிடம் சொல்வார்கள். நாம் எல்லாம் கேட்ட பிற்பாடு நாங்கள் ஆத்மசுத்தி செய்துவிட்டோம். உங்கள் குடும்பத்தில் மகரிஷிகளின் அருள்சக்தி படர்ந்து
1.உங்கள் குடும்பத்தில் எல்லலோரும் ஒற்றுமையாக இருப்பீர்கள்;
2.எல்லா நல்ல சக்தியும் கிடைக்கும்;
3.உங்கள் குடும்பத்தில் நன்றாக இருப்பீர்கள்;
4.தெய்வீக நிலை இருக்கும்; தெய்வீகப் பண்பு இருக்கும்;
5.தொழில் வளம் பெருகும்;
6.உங்கள் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள் என்று உங்கள் வாயினால் சொல்லுங்கள்.

இப்படிச் சொல்லப்படும் பொழுது அது அவர்களுக்கு ஒரு “உற்சாகத்தை” ஊட்டும். அதே சமயத்தில் நமக்கும் அந்த “உற்சாகத்தை” ஊட்டும்.

ஆகவே எது எப்படி வந்தாலும் நம்முடைய சொல் மற்றவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டுமே தவிர அவர்கள் பட்ட வேதனை நம்முடைய நல்லதைக் கெடுத்து விடக் கூடாது.

நாம் அதற்கு இந்த முறைப்படி செய்து கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் சித்திரக்குள்ளர்கள் தோன்றுவார்கள்

Image

Radioactive-Wallpaper-23.jpg

எதிர்காலத்தில் சித்திரக்குள்ளர்கள் தோன்றுவார்கள்

இந்த விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் உண்டான வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

விஞ்ஞானத்தில் விஞ்ஞானிகள் அவர்கள் கண்டுணர்ந்த நிலைகளால் இன்று காற்று மண்டலமே விஷத் தன்மை பரவிட்டது.

உதாரணமாக நீர் மூழ்கிக் கப்பலை (SUBMARINE) உபயோகித்துப் பல காலம் கடலுக்கடியில் அமிழ்ந்து “ஆராய்ச்சி செய்யலாம்” என்று எண்ணிச் செயல்பட்டனர்.

இந்த நாட்டைச் சேர்ந்த நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போய்விட்டது அதில் இருந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்றெல்லாம் நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள்,

இப்படி அணுக் கதிரியக்கத்தால் அவன் ஓட்டிய அந்தக் கப்பலினால் தீமைகள் விளைகின்றது என்று தெரிந்து கொண்டனர்.

அதிலே பட்ட கசிவான அணுவின் தன்மைகள் (RADIOACTIVE) மற்ற பொருள்களுடன் இணைந்தபின் இது எங்கே சென்றாலும் அந்த (தன்) நாட்டுக்கே ஆபத்து என்ற நிலைகள் உணர்ந்து கொண்டனர்.

அதை எப்படி மறைப்பது…! என்று எண்ணுகின்றார்கள்.

மறைக்க வேண்டும் என்று எண்ணினாலும் அதை அடக்குவதற்காக கடலின் கண நீரிலிருந்து ஹைட்ரஜனைத் தயார் செய்தார்கள்.

செய்தாலும் கடலுக்குள்ளே இவன் இருக்கப்படும் பொழுது சிதைந்த உடல்கள் செயலிழந்த நீர் மூழ்கிக் கப்பலின் விஷக் கதிரியக்கங்களும் அதன் கழிவுகளும் மீண்டும் கடலுக்குள் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.

அப்படிக் கசியும் அணுக் கதிரியக்கங்கள் கடல் வாழ் உயிரினங்களின் உடல்களிலும் இனப் பெருக்கங்களாகிக் கலந்து அதுவும் பெருகிவிட்டது.

இன்று மனிதன் உணவாக உட்கொள்ளும் கடல் வாழ் உயிரினங்களின் உடல்களில் அணுக்கதிரியக்கங்கள் சேர்ந்து விட்டது.

1.எந்த விஞ்ஞான அறிவு கொண்டு அணுக்கதிரியக்கங்களைக் கண்டுபிடித்தானோ

2.கசிந்ததை எப்படி மறைக்க வேண்டும் என்று முயற்சித்தானோ

3.மீனை இன்று இரசித்து உணவாக உட்கொள்ளும்போது அந்தக் கதிரியக்கச் சக்தி “மீண்டும்” மனிதனுக்கே வருகின்றது.

இந்த உணர்வின் தன்மை வளரப்படும் பொழுது இதனின் கடைசி எல்லை எது…? ஆக இப்பொழுது இருக்கும் இந்த

1.மனித உடலையே இழக்கச் செய்து

2.மனிதனின் நினைவை இழக்கச் செய்து

3,மனிதக் கருக்களை உருமாற்றி

4.மனிதனின் உண்மையான உருவத்தை மாற்றி – “சிதைவுண்டு”

5.அதனின் நிலைகள் இனி வரும் எதிர்காலம் “சித்திரக் குள்ளர்களாகப் பிறப்பார்கள்”.

இந்த அணுக்கதிரியக்கங்கள் பதிந்த நிலைகள் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக வளர்ந்து இப்பொழுதுள்ள இந்த உருவம் மாறி “சித்திரக்குள்ளர்களாக” மாறும் நிலை வரும்

ஒரு செடிக்கும் ஒரு மரத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், கதிரியக்கங்களால் பூமி கொதிகலனாகி துருவப் பகுதிகள் உருகி நீர் நிலை பெருகி இந்த நிலங்கள் குறையப்படும் பொழுது ஒரு செடியைப் பார்த்தாலே அது மரத்தைப் போன்று ஆகி அதனின் வளர்ச்சியிலே கூழையாகி செடியே மரமாகிவிடும்.

விஞ்ஞான அறிவால் மனிதன் குறுகிய நிலைகள் கொண்டு மீண்டும் இத்தகைய நிலை பெறும் தகுதியைத்தான் பெறுகின்றோம்.

இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கும் இத்தகைய நிலையில்

1.விஞ்ஞானத்தை எல்லோருக்கும் எளிதாகப் புகட்ட முடிகின்றது.

2ஆனால், மெய்ஞானத்தைப் புகட்டும் நிலைகள் வந்தால் எதிர் நிலையாகின்றது.

3.நாம் ஏற்க மறுக்கின்றோம்.

4.அந்த அளவிற்கு விஞ்ஞானத்தின் வீரிய உணர்வுகள் நம் உடலுக்குள் அணு செல்களாக வளர்ச்சி அடைந்துவிட்டது.

இதையெல்லாம் யாம் சொல்கிறோம் என்றால் “அடேயப்பா.., இவருக்கென்ன (ஞானகுரு) விஞ்ஞானத்தைப் பற்றி என்ன தெரியும்…? என்று சிலர் நினைப்பார்கள்.

அந்த விஞ்ஞான அறிவைப் பற்றி நமது குருநாதர் “அவர்கள் எப்படி இயக்குகின்றனர்…?” என்பதைக் காட்டினார்.

நாளை நடக்கும் எதிர்காலத்தை நமது குருநாதர் விஞ்ஞான அறிவால் வந்த நிலைகளை இது எவ்வாறு மாற்றமடைகின்றது என்ற நிலைகளை உணர்த்தியுள்ளார்.

ஆகவே என்ன செய்யும் என்று நமக்குத் தெரியும். இதை எப்படி அகற்ற வேண்டும் என்று நிலைகளுக்குத்தான் தொடர்ந்து அருள் ஞானிகள் பெற்ற ஆற்றல்களை யாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

எல்லோரும் இதைத் தெரிந்து கொள்வது நல்லது.